Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:49 PM அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல் என நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும தெரிவித்தார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்ஷண சூரியப் பெரும மற்றும் இலங்கைக்கான கொரிய தூதுவர் மியான் லீ ஆகியோருடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார மற்றும் நிதி ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கைியலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். புதிய அரசாங்கத்தின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளை தூதருக்கு விளக்கிய அமைச்சர் சூரியப் பெரும மேலும் தெரிவிக்னையில், அரசாங்கத்தின் முதன்மை நோக்கமானது, மோசடி மற்றும் ஊழலை ஒழித்தல், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படக்கூடிய குழுக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குவதன் மூலம் பொருளாதாரத்தை மீட்டெடுப்பது ஆகும். அரசாங்கத்தின் முன்னுரிமை நடவடிக்கையாக, "தேசிய ஒற்றைச் சாளர அமைப்பை" (National Single Window) நிறுவுவது மிகவும் முக்கியமானது, அதாவது, நாட்டின் குடிமக்கள், வணிகர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும் என்றார். இந்தக் கூட்டத்தில், கொரியத் தூதுவர் லீ, கொரியக் கடன்கள் மற்றும் உதவிகளின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்து விளக்கினார். மேலும், அவற்றை விரைவாகச் செயல்படுத்துவதன் மூலம் இலங்கைப் பொருளாதாரம் அதிக பொருளாதார மற்றும் சமூக நன்மைகளை அடைய முடியும் என்றும் சுட்டிக்காட்டினார். மேலும், இந்தக் கலந்துரையாடலின் போது, கொரிய அரசாங்கம் இலங்கையர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளைத் திறந்துவிட்டுள்ளதாகவும், அதன் மூலம் வெளிநாட்டுப் பணம் அனுப்புதலை அதிகரிப்பதற்கான வாய்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டது. இந்தக் கலந்துரையாடலில் கொரிய தூதரகத்தின் துணைத் தலைவர் யூன்ஜி கான், (Eunji Kan) நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பிரதிப்பணிப்பாளர் சஞ்சீவ ஹேரத், மற்றும் பிரதிப்பணிப்பாளர் உதித பெர்னாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217627
  2. உயர்தரத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியம் பாராட்டு நிகழ்வு Published By: DIGITAL DESK 2 16 JUN, 2025 | 03:40 PM 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மாகாண மட்டத்தில் பாராட்டும் நிகழ்ச்சித் திட்டத்தை ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது. அங்கு, 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் 60 மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு நிதி புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 2023/2024 பரீட்சைகள் தொடர்பாக பரீட்சைகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்ட பெறுபேறுகளை கருத்தில் கொண்டு இந்த மாணவர்கள் தெரிவு, மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாகாண மட்டத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் முதல் நிகழ்ச்சித்திட்டமாக, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற, வட மாகாண மாணவர்களைப் பாராட்டும் நிகழ்வு 2025 ஜூன் 22 ஆம் திகதி கிளிநொச்சியில் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறு பாராட்டப்படவுள்ளனர். இதேவேளை, ஏனைய மாகாணங்களிலும் விரைவில் நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/217623
  3. இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணயநிதியத்தின் இறுதி திட்டமாக தற்போது முன்னெடுக்கப்படும் திட்டம் விளங்கவேண்டும் - கீதா கோபிநாத் 16 JUN, 2025 | 12:39 PM சர்வதேச நாணய நிதியம் தற்போது முன்னெடுக்கும் திட்டத்தினை இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக மாற்றுவோம் என சர்வதேச நாணயநிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கை சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தின் இறுதி கட்டத்தில் உள்ள நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் முதன்மை பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கீதா கோபிநாத் அங்கீகாரம் மற்றும் உறுதிப்பாடு குறித்த வலுவான செய்தியை தெரிவித்துள்ளார் - இலங்கைக்கு தேவைப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் இறுதி திட்டமாக இது இருக்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அனைத்து குடிமக்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை மேம்படுத்தும் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியின் பாதையை தொடருகின்ற நிலையில் சர்வதேச நாணய நிதியம் உறுதியான பங்காளியாகயிருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க தெரிவித்தது போல இந்த நேரம் வித்தியாசமானதாகயிருக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், இலங்கைக்கு தேவைப்படும் இறுதி சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமாக இதனை மாற்றுவோம் என தெரிவித்துள்ளார். இலங்கை தற்போதைய பாதையில் தொடர்ந்தால் இது சாத்தியம் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217608
  4. விந்தணு கருமுட்டையை இனங்கண்டு நீந்திச் செல்வது எப்படி? ஆண் மலட்டுத் தன்மைக்கு தீர்வு தேடும் விஞ்ஞானிகள் படக்குறிப்பு, ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் கட்டுரை தகவல் எழுதியவர், கேத்தரின் லாதம் பதவி, 9 மணி நேரங்களுக்கு முன்னர் விந்தணுக்கள் எப்படி நீந்துகின்றன? அவை எப்படி பயணிக்கின்றன? அவை எவ்வாறு உருவாகின்றன? இரண்டாம் உலகப் போரில் ரகசிய குறியீடுகளை படித்தவருக்கும் விந்தணுவுக்கும் இடையிலான தொடர்பு என்ன? விந்தின் விந்தையான மர்மங்களைப் பற்றிய சில உண்மைகளை தெரிந்துக் கொள்வோம். ஒரு ஆணின் ஒற்றை இதயத் துடிப்பில் சுமார் 1,000 விந்தணுக்கள் உற்பத்தியாகும் என்பது ஆச்சரியமான உண்மை. அதேபோல், உடலுறவின் போது, 50 மில்லியனுக்கும் அதிகமான விந்துக்கள் வீரியத்துடன் சூறாவளியாய் நீந்திச் சென்று கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முயற்சிக்கின்றன. விந்துக்களிடையிலான பந்தயத்தில் வென்று கருமுட்டையை அடையும் பயணத்தில், கோடிக்கணக்கிலான விந்தணுக்களில் வெகுசிலவே இலக்கை வெற்றிகரமாக சென்றடைகின்றன. இதுவரையில் தான் விந்து பற்றி பலருக்கும் தெரியும். ஆனால், விந்துக்களின் வீரியமான நீச்சல் பயணமானது அறிவியலுக்கும் மர்மமாகவே உள்ளது. "விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? அது எப்படி கருமுட்டையுடன் இணைந்து கருவாகிறது எனத் தெரியுமா? " என்று இங்கிலாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தில் நீரிழிவு நாளமில்லா சுரப்பியியல் மற்றும் இனப்பெருக்க உயிரியலின் "கிளினிகல் ரீடர்" சாரா மார்டின்ஸ் டா சில்வா கேட்கிறார். விந்தணு கண்டறியப்பட்டு கிட்டத்தட்ட 350 ஆண்டுகள் ஆன பிறகும், விந்தணு தொடர்பான பல கேள்விகளுக்கு விடை காண முடியவில்லை. புதிதாக உருவாக்கப்பட்ட முறைகளைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இடப்பெயர்வு குறித்து கண்காணித்து வருகின்றனர். இதில் விந்தணுக்களின் தோற்றம் முதல், அது ஆணிடம் இருந்து கடந்து, பெண் உடலில் கருமுட்டையுடன் இணைந்து கருத்தரித்தல் வரை அனைத்தும் அவதானிக்கப்படுகின்றன. இந்த ஆய்வுகளின் முடிவுகள் விந்தணுக்கள் எவ்வாறு நீந்துகின்றன என்பதில் தொடங்கி, அவை பெண் உடலை அடையும் போது ஏற்படும் வியக்கத்தக்க பெரிய மாற்றங்கள் வரை பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிவகுத்து வருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விந்தணு எப்படி நீந்துகிறது? அது கருமுட்டையைக் கண்டுபிடிப்பது எவ்வாறு? "உடலுக்குள் வேறு எந்த உயிரணுவும் இவ்வளவு தனித்துவமான முறையில் அதன் அமைப்பை, வடிவத்தை மாற்றுவதில்லை" - ஆடம் வாட்கின்ஸ் "விந்தணுக்கள் பூமியில் உள்ள மற்ற அனைத்து செல்களிலிருந்தும் 'மிக மிக வேறுபட்டவை'" என்கிறார் மார்டின்ஸ் டா சில்வா. "அவை ஆற்றலை ஒரே மாதிரியாகக் கையாளுவதில்லை. மற்ற எல்லா செல்களிலும் இருக்கும் அதே வகையான செல்லுலார் வளர்சிதை மாற்றம் மற்றும் வழிமுறைகள் விந்துக்களில் இல்லை." விந்தணுக்களின் மிகப்பெரிய அளவிலான செயல்பாடுகள் காரணமாக, அவற்றுக்கு பிற செல்களை விட அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. விந்து வெளியேறும் போதும், பெண்ணின் யோனி வழியாக கருமுட்டையை நோக்கி பயணிக்கும் போதும், கருத்தரித்தல் வரை, சுற்றுச்சூழல் குறிப்புகள் மற்றும் மாறுபட்ட ஆற்றல் தேவைகளுக்கு இணக்கமாக இருக்க, விந்து நெகிழ்வானதாக இருக்க வேண்டும். மனித உடலுக்கு வெளியே உயிர் வாழக்கூடிய ஒரே செல்கள் விந்தணுக்கள் மட்டுமே என்று மார்டின்ஸ் டா சில்வா கூறுகிறார். "அதனால்தான், அவை அசாதாரணமான சிறப்பு வாய்ந்தவை" என்று கூறப்படுகிறது. இருப்பினும், அவற்றின் மிகச் சிறிய அளவின் காரணமாக அவற்றை அவதானிப்பது மிகவும் கடினம் என்றும் அவர் கூறுகிறார். "இனப்பெருக்கம் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்றாலும், தெரியாத விசயங்கள் அதைவிட மிகவும் அதிகமாக உள்ளது." பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, மனித உடலில் மிகச்சிறிய செல்லாக இருந்தாலும், அசாதாரணமாக சிறப்பு வாய்ந்தது விந்தணு கிட்டத்தட்ட 350 ஆண்டுகால ஆராய்ச்சியில் இதுவரை விடையறியா வினா: விந்தணு என்றால் என்ன? "விந்தணு அதிசயமான விதத்தில் சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது," என இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சி உடலியல் இணைப் பேராசிரியர் ஆடம் வாட்கின்ஸ் வியக்கிறார். "விந்தணுவை ஒரு வாலில் உள்ள டிஎன்ஏ பை என்றே நாங்கள் பொதுவாக நினைத்தோம். ஆனால், இது மிகவும் சிக்கலான செல் என்றும், அதில் பல்வேறு வகையிலான மரபணு தகவல்களும் உள்ளதை உணரத் தொடங்கியுள்ளோம்." விந்தணு ஆராய்ச்சிகளின் தொடக்கப் புள்ளி விந்தணு பற்றிய அறிவியல் ஆராய்ச்சிகள் 1677 ஆம் ஆண்டில் தொடங்கியது, டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக் வீட்டில் தயாரிக்கப்பட்ட 500 நுண்ணோக்கிகளில் ஒன்றில் விந்துக்களைப் பார்த்து, அவற்றை "விந்து விலங்குகள் " என்று அவர் அழைத்தார். 1683 ஆம் ஆண்டில், முன்பு நம்பப்பட்டது போல, முட்டையில்தான் அந்த மினியேச்சர் மற்றும் முழு மனிதனும் அடங்கியிருக்கவில்லை, ஆனால் மனிதன் "ஆண் விதையில் உள்ள ஒரு விலங்குக் கூட்டிலிருந்து" வருவதாக அவர் கருதினார். 1685 வாக்கில், ஒவ்வொரு விந்தணுவும், அதன் சொந்த "உயிருள்ள ஆன்மா" கொண்ட ஒரு முழு மினியேச்சர் நபரைக் கொண்டுள்ளது என்று அவர் முடிவு செய்தார். அதற்கு கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்குப் பிறகு, 1869 ஆம் ஆண்டில், சுவிஸ் மருத்துவரும் உயிரியலாளருமான ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், விந்து தொடர்பான மற்றுமொரு முக்கிய விசயத்தைக் கண்டறிந்தார். நோயாளிகளின் கட்டுக்களை பிரித்து மருத்துவமனைகளின் குப்பையில் வீசப்படும் சீழ் நிறைந்த கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட மனித ரத்த வெள்ளை அணுக்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, அவர் கண்டறிந்த விசயத்துக்கு "நியூக்ளின்" என்று பெயரிட்டார். "நியூக்ளின்" என்ற சொல் பின்னர் "நியூக்ளிக் அமிலம்" என்று மாற்றப்பட்டு இறுதியில் "டியாக்ஸிரிபோநியூக்ளிக் அமிலம்" என்றும் சுருக்கமாக "டிஎன்ஏ" என்றும் அழைக்கப்பட்டது. டிஎன்ஏ பற்றிய தனது ஆய்வுகளை மேலும் விரிவுபடுத்த விரும்பிய ஜோஹன்னஸ் பிரீட்ரிக் மிஷர், ஆய்வின் ஆதாரமாக விந்தணுவைத் தேர்ந்தெடுத்தார். குறிப்பாக சால்மன் மீன்களின் விந்தணுக்கள், அவற்றின் பெரிய கருக்கள் காரணமாக "அணுக்கருப் பொருளின் சிறந்த மற்றும் சுவராஸ்யமான மூலமாக" இருந்தன. சால்மன் மீனின் விந்தணுக்கள் சிதைவதைத் தவிர்ப்பதற்காக, அவர் உறைபனி தட்பவெப்பநிலையில், ஆய்வக ஜன்னல்களைத் திறந்து வைத்திருந்து பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1874 ஆம் ஆண்டில், அவர் விந்தணுவின் ஒரு அடிப்படை கூறுகளை அடையாளம் கண்டார், அதற்கு "புரோட்டமைன்" என்று அவர் பெயரிட்டார். முதன்முதலாக விந்தணுக்களை உருவாக்கும் புரதங்கள் தொடர்பான உண்மை வெளியானது என்றே சொல்லலாம். இருப்பினும், அதற்கு பிறகு 150 ஆண்டுகள் கழித்தே, விந்தணுக்களின் முழு புரத உள்ளடக்கத்தையும் விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதற்குப் பிறகு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது என்ற போதிலும், இன்னும் பல விசயங்கள் மர்மமாகவே உள்ளன என்று வாட்கின்ஸ் கருதுகிறார். விஞ்ஞானிகள் கருவின் ஆரம்பகால வளர்ச்சியை நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளதால், விந்துவானது, தந்தையின் குரோமோசோம்களை மட்டுமல்ல, எபிஜெனெடிக் தகவல்களையும் கடத்துகிறது என்பது புரிந்திருப்பதாக அவர் கூறுகிறார். எபிஜெனெடிக் என்பது, டிஎன்ஏ வரிசையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், மரபணு வெளிப்பாட்டை மாற்றியமைக்கின்றன. இது மரபணுக்கள் எவ்வாறு, எப்போது பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை நிர்ணயிக்கும் கூடுதல் தகவல் அடுக்கு ஆகும். "இது கரு எவ்வாறு உருவாகிறது என்பதையும், அந்த விந்தணுக்கள் உருவாக்கும் சந்ததிகளின் வாழ்நாள் பாதையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று வாட்கின்ஸ் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விந்தணுவைப் பற்றிய நமது புரிதல் வேகமாக முன்னேறி வருகிறது "பெண் பரிணாமம்தான் இந்த அமைப்பை இயக்குகிறது என்பது தெரியவந்துள்ளது; ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கிறார்கள்" - ஸ்காட் பிட்னிக் ஆண் பருவமடையும்போது அவரின் உடலில் உருவாகத் தொடங்கும் விந்தணு செல்கள் விரைப்பைகளுக்குள் இருக்கும் செமினிஃபெரஸ் குழாய்கள் எனப்படும் நாளங்களில் உருவாகின்றன. "விந்தணுக்கள் உருவாகும் விரைப்பைக்குள், அது வேறு எதையும் போலவே தோற்றமளிக்கும் ஒரு வட்டமான செல்லாகவே தொடங்குகிறது," என்று வாட்கின்ஸ் கூறுகிறார். "பின்னர் அது வியத்தகு மாற்றத்துக்கு உட்படுகிறது, அது வால் கொண்டதாக உருமாறுகிறது. உடலில் உள்ள வேறு எந்த உயிரணுவும் அதன் அமைப்பையோ தனது வடிவத்தையோ இவ்வளவு தனித்துவமான முறையில் மாற்றுவதில்லை." ஆண் உடலுக்குள் உருவாகும் விந்தணு முதிர்ச்சி அடைய ஒன்பது வாரங்கள் ஆகும். வெளியேறாத விந்தணுக்கள் உடலிலேயே மடிந்து, உடலாலே மீண்டும் உறிஞ்சப்படுகின்றன. வெளியேறிய அதிர்ஷ்டசாலி விந்தணுக்கள் தங்கள் சாகசப் பயணத்தைத் தொடங்குகின்றன. விந்தணு வெளியேறிய பிறகு, நுண்ணிய வடிவிலான இந்த செல்கள் ஒவ்வொன்றும் கருமுட்டையை சென்றடையும் பயணத்தில் தனது வால் போன்ற பிற்சேர்க்கைகளைப் பயன்படுத்தி முன்னோக்கி பாய்கின்றன. இந்த பயணத்தில் ஒரு விந்தணு, தோராயமாக 50 மில்லியன் போட்டியாளர்களுடன் போட்டியிட்டு முன்னேறிச் செல்கிறது. தலைப்பிரட்டையைப் போல் இருக்கும் விந்தணுக்கள் நீந்தும் வீடியோக்கள் பலவற்றை நீங்கள் பார்த்திருக்கலாம். விந்து உண்மையில் எப்படி நீந்துகிறது என்பதை முழுமையாக புரிந்துகொண்டோமா என்ற கேள்விக்கு, இல்லை, விஞ்ஞானிகள் விந்தணுக்களின் இயக்கம் குறித்து புரிந்து கொள்வதற்கான ஆரம்பகட்டத்தில்தான் தற்போதுவரை இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். முன்னதாக, விந்தணுவின் வால் - அல்லது ஃபிளாஜெல்லம், தலைப்பிரட்டையைப் போல பக்கவாட்டில் நகர்கிறது என்று கருதப்பட்டது. ஆனால், கணிதவியலாளரும், இரண்டாம் உலகப்போரில் ரகசியக் குறியீடுகளை படிப்பதில் வெற்றிகரமாக செயல்பட்டவருமான ஆலன் டூரிங் கண்டுபிடித்த வடிவ உருவாக்கத்திற்கான டெம்ப்ளேட்டை விந்தணு வால்கள் ஒத்திருக்கின்றன என்பதை 2023 ஆம் ஆண்டில், இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர் . 1952 ஆம் ஆண்டில், வேதியியல் எதிர்வினைகள் வடிவங்களை உருவாக்க முடியும் என்பதை டூரிங் உணர்ந்தார். கைரேகைகள், இறகுகள், இலைகள் மற்றும் மணலில் உள்ள சிற்றலைகள் உள்ளிட்ட இயற்கையின் மிகவும் சுவாரஸ்யமான உயிரியல் வடிவ அமைப்புகளை விளக்க, நகரும் மற்றும் ஒன்றுக்கொன்று வினைபுரியும் இரண்டு உயிரியல் ரசாயனங்கள் பயன்படுத்தப்படலாம் என்று அவர் முன்மொழிந்தார். இது, "எதிர்வினை-பரவல்" கோட்பாடு என்று அழைக்கப்படுகிறது. முப்பரிமாண நுண்ணோக்கியைப் பயன்படுத்திய பிரிஸ்டல் ஆராய்ச்சியாளர்கள் ஒரு விந்தணுவின் வால் பகுதியான ஃபிளாஜெல்லம், விந்தணு முன்னோக்கி செல்வதற்காக வால் வழியாக பயணிக்கும் அலைகளை உருவாக்குகிறது என்பதைக் கண்டறிந்தனர். ஆணின் கருத்தரிக்கச் செய்யும் தன்மையைப் புரிந்துகொள்ள விந்தணு நகர்வு விஞ்ஞானிகளுக்கு உதவும் என்பதைப் புரிந்துகொள்வதற்கு இது மிகவும் உதவியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆணிடம் இருந்து வெளிப்படும் விந்தணுக்கள், பெண்ணின் கருப்பை வாய் வழியாக, கருவறைக்குள் சென்று, ஃபெலோபியன் குழாய்கள் வழியாக, கருமுட்டையை அடைகின்றன என்பது நமக்குத் தெரியும். ஆனால் விந்தணு, கருமுட்டையை எவ்வாறு சென்றடைகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பது அறிவியலில் நாம் கண்டறியாத மற்றொரு இடைவெளியாக இருக்கிறது. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, 17 ஆம் நூற்றாண்டு டச்சு நுண்ணுயிரியலாளர் அன்டோனி வான் லீவென்ஹோக், விந்தணுக்களுக்குள் ஒரு சிறிய ஆனால் முழுமையான மனிதன் இருப்பதாக நம்பினார் ஆரோக்கியமான மற்றும் சரியான பாதையில் செல்லும் விந்தணுக்கள் அரிதானவை. பெண் உடல் என்ற பிரமையில் தவறான இடத்தை பல விந்தணுக்கள் சென்றடைவதும், இலக்குக் கோட்டுக்கு அருகில் கூட செல்லாத விந்தணுக்களுமே எண்ணிக்கையில் அதிகமானவை. ஃபெலோபியன் குழாய்களுக்குச் செல்லும் வழியைக் கண்டுபிடிக்கும் விந்தணுக்களை, பெண்ணின் கருமுட்டையில் இருந்து வெளிப்படும் வேதியியல் சமிக்ஞைகள் வழிநடத்தக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் நினைக்கிறார்கள். விந்தணுக்கள் முட்டையை அடையச் செல்லும் வழியில் "சுவைக்க" சுவை ஏற்பிகளைப் பயன்படுத்தலாம் என்பது சமீபத்திய கோட்பாடு. விந்தணு கருமுட்டையைக் கண்டுபிடித்துவிட்டால், சவால் முடிவடைந்துவிடுகிறதா? இல்லை. கரு முட்டையானது, கொரோனா ரேடியாட்டா எனப்படும் செல்களின் வரிசை; சோனா பெல்லுசிடா எனும் புரதத்தால் ஆன ஜெல்லி போன்ற மெத்தை; முட்டை பிளாஸ்மா சவ்வு என மூன்று இழை கவசங்களால் சூழப்பட்டுள்ளது. விந்தணுக்கள், கருமுட்டையின் அனைத்து அடுக்குகளிலும் போராடி உள்நுழைய வேண்டும். அவற்றின் அக்ரோசோமில் உள்ள ரசாயனங்களைப் பயன்படுத்தி, கருமுட்டையின் செல் பூச்சை செரிமானம் செய்யும் நொதிகளைக் கொண்ட விந்தணு செல்லின் தலையில் உள்ள தொப்பி போன்ற அமைப்பைப் பயன்படுத்த வேண்டும். இருப்பினும், இந்த நொதிகள் எப்படி வெளியாகின்றன என்பதற்கான காரணம் இன்றுவரை ஒரு மர்மமாகவே உள்ளது. விந்தணுக்களின் "தலைப்பகுதியில்" உள்ள ஒரு கூர்முனையைப் பயன்படுத்தி அவை கருமுட்டைக்குள் நுழைய முயற்சிக்கின்றன, தங்கள் வால்களை அடித்துக்கொண்டு வலுக்கட்டாயமாக தங்களை முன்னோக்கி நகர்த்துகின்றன. இறுதியாக, கருமுட்டை சவ்வுடன் தொடர்பு கொண்டால் மட்டுமே, அது கருமுட்டையை கருத்தரிக்கச் செய்ய முடியும். மனித செல்கள், இரண்டு முழுமையான குரோமோசோம்களைக் கொண்டுள்ள டிப்ளாய்டு வகையைச் சேர்ந்தவையாகும். ஒவ்வொரு பெற்றோரிடமிருந்தும் ஒன்று என இரு குரோமோசோம்களைப் அவை பெற்றுள்ளன. ஒன்றுக்கு மேற்பட்ட விந்தணுக்கள் கருமுட்டையுடன் இணைந்தால், பாலிஸ்பெர்மி எனப்படும் ஒரு நிலை ஏற்படும். தவறான எண்ணிக்கையிலான குரோமோசோம்களைக் கொண்ட நான்டிப்ளாய்டு வகை செல்கள், வளரும் கருவுக்கு ஆபத்தான நிலையை உருவாக்குபவை. இது நிகழாமல் தடுக்க, ஒரு விந்து செல் அதனுடன் தொடர்பு கொண்டவுடன், கருமுட்டை துரிதமாக இரண்டு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது. முதலாவதாக, அதன் பிளாஸ்மா சவ்வு விரைவாக டிப்போலரைஸ் செய்கிறது, அதாவது மேலும் விந்து கடக்க முடியாத ஒரு தடையை உருவாக்குகிறது. இருப்பினும், இந்தத் தடை சிறிது நேரம் மட்டுமே நீடிக்கும், பின்னர் இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும். இங்குதான் கருமுட்டையின் 'புறணி எதிர்வினை' வருகிறது. கால்சியம் திடீரென வெளியிடப்பட்டு, சோனா பெல்லுசிடா எனப்படும் கருமுட்டையின் "புற செல் பூச்சு" கடினமாகி, விந்தணு ஊடுருவ முடியாமல் தடையை உருவாக்குகிறது. பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும் எனவே, கருமுட்டையை நோக்கி பயணத்தைத் துவங்கும் கோடிக்கணக்கான விந்தணுக்களில், ஒன்று மட்டுமே தனது அதிகபட்ச வேலையைச் செய்கிறது. விந்தணுவின் பிரமாண்டமான பயணம் கருமுட்டையுடன் இணைவதுடன் முடிவடைகிறது. இன்றும், ஆராய்ச்சியாளர்கள் விந்தணு-கருமுட்டை அங்கீகாரம், பிணைப்பு மற்றும் இணைவுக்கு காரணமான செல் மேற்பரப்பு புரதங்களின் அடையாளம் மற்றும் பங்கைக் கண்டறிய முயற்சித்து வருகின்றனர். அண்மை ஆண்டுகளில், பல புரதங்கள் இந்த செயல்முறைக்கு முக்கியமானவை என்று, எலிகள் மற்றும் மீன்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளன, ஆனால் இதில் உள்ள பல மூலக்கூறுகளை அடையாளம் காணமுடியவில்லை. எனவே, இப்போதைக்கு, விந்தணுவும் கருமுட்டையும் எவ்வாறு ஒன்றையொன்று அடையாளம் காண்கின்றன, அவை எவ்வாறு இணைகின்றன என்பவை இன்னும் தீர்க்கப்படாத மர்மங்களாகவே தொடர்கின்றன. நியூயார்க் சைராகுஸ் பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியர் ஸ்காட் பிட்னிக் கூறுகையில், ஆராய்ச்சியாளர்கள் விந்தணுக்களைப் பற்றி புரிந்துக் கொள்ள பிற உயிரினங்களை ஆய்வு செய்வது உதவியாக இருக்கும் என குறிப்பிடுகிறார். மனித விந்தணுக்கள் நுண்ணியவை, எனவே நாம் அவற்றை வெற்றுக் கண்களால் பார்க்க முடியாது. பழ ஈ இனங்களில் சில தங்களுடைய உடலின் நீளத்தை விட 20 மடங்கு பெரிய விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றன. அது, ஒரு மனிதன் 130 அடி மலைப்பாம்பு நீளமுள்ள விந்தணுவை உற்பத்தி செய்வது போல இருக்கும். பழ ஈ விந்தணுக்களின் தலைகளை பிட்னிக் வடிவமைக்கிறார். பெண் ஈயின் இனப்பெருக்க பாதைகள் வழியாக அவற்றை செலுத்தி அவை பயணிப்பதை ஆராயும் இந்த ஆய்வு, மூலக்கூறு மட்டத்தில் கருத்தரித்தல் பற்றிய புதிய விவரங்களை வெளிப்படுத்துகிறது . "சில உயிரினங்கள் பெரிய விந்தணுக்களை உருவாக்குவது ஏன் தெரியுமா?" என்று பிட்னிக் கேட்கிறார். "அந்த இனங்களின் பெண்கள் தங்களுக்கு சாதகமாக இனப்பெருக்க பாதைகளை உருவாக்குகின்றன. அதற்கு உகந்ததாக ஆணினம் பெரிய விந்தணுக்களை உருவாக்குகிறது" என்பதே பதிலாக இருக்கும். ஆனால், "உண்மையில் இது முழுமையான பதில் இல்லை" என்று கூறும் அவர், அந்த பதிலே கேள்வியை திசைதிருப்புகிறது என்றும் சொல்கிறார். அந்தக் கேள்வி: பெண்ணினம் ஏன் இந்த வழியில் பரிணமித்தது? அது எங்களுக்கு இன்னும் அது புரியவில்லை. பட மூலாதாரம்,ALAMY படக்குறிப்பு, விந்தணுக்கள் மிகச் சிறியவை, அவற்றை அவதானிப்பது கடினமாக இருக்கும். மாதிரிகளை நுண்ணோக்கியின் கீழ் எளிதாகப் பார்க்க, வண்ணம் தீட்டலாம் உலகளவில் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது ஆனால், ஆண் உடலில் விந்தணுக்கள் இருப்பது என்பது கதையின் பாதி தான் என்பதை இதுவே நமக்கு உணர்த்துகிறது என பிட்னிக் கூறுகிறார். "அறிவியலில் வரலாற்று ரீதியாக மிகப்பெரிய பாலின சார்பு உள்ளது. ஆண்கள், ஆண்களின் குணாதிசயங்களில் கவனம் செலுத்துவது மிகவும் அருவருப்பானது. ஆனால் இந்த அமைப்பை இயக்குவது பெண் பரிணாமம் என்பது தெரியவந்துள்ளது, ஆண்கள் அதைத் தொடர முயற்சிக்கின்றனர்." பூமியின் மிகவும் மாறுபட்ட மற்றும் வேகமாக வளர்ந்து வரும் உயிரணு வகை என்ன என்றால், அது விந்தணுக்கள் தான் என்று பிட்னிக் கூறுகிறார். விந்தணுக்கள் ஏன் இவ்வளவு வியத்தகு பரிணாம வளர்ச்சியை அடைந்தன என்பது ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக உயிரியலாளர்களால் விடை கண்டுபிடிக்க முடியாமல் திகைக்க வைத்துள்ள ஒரு மர்மமாகும். "பெண் இனப்பெருக்க பாதை என்பது நம்பமுடியாத அளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்று மாறிவிடும்," என்று பிட்னிக் கூறுகிறார், "விந்தணு, பெண்ணின் உள்ளே என்ன செய்கிறது என்பது பற்றி நமக்கு அதிகம் தெரியாது. அதுதான் மறைக்கப்பட்ட மாபெரும் உலகம். பெண்ணின் இனப்பெருக்க பாதை என்பது பாலியல் தேர்வு, கோட்பாடு மற்றும் இனவிருத்தி [புதிய இனங்கள் உருவாகும் செயல்முறை] ஆகியவற்றுக்கான ஆராயப்படாத மிகப்பெரிய எல்லையாகும்" என நான் நினைக்கிறேன்." பழ ஈயின் நீண்ட வால் கொண்ட விந்தணு என்பது, மானின் கொம்புகள் அல்லது மயில்தோகை போன்ற ஒரு அலங்காரமாகக் கருதப்படலாம் என்று பிட்னிக் கூறுகிறார். ஆபரணங்கள் என்பவை "பரிணாம வளர்ச்சியில் ஒரு வகையான ஆயுதம்" என்று பிட்னிக் விளக்குகிறார். வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பது என்பதைத் தவிர, கொம்புகள் போன்ற ஆபரணங்கள் பெரும்பாலும் இரண்டு பரிணாமங்களைக் கொண்டவை. "இதுபோன்ற ஆயுதங்களில் பெரும்பாலானவை பாலினம் தொடர்பானவை. பொதுவாக ஆணுக்கும் ஆணுக்குமான போட்டி பற்றியவை. பழ ஈயின் நீண்ட விந்து ஃபிளாஜெல்லம் என்பது உண்மையில் ஒரு ஆபரணத்தின் வரையறைக்கான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறது. பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது என்று நினைக்கிறோம்." பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, பெண்ணின் யோனி பாதையானது, சில விந்தணு பினோடைப்களுக்கு ஆதரவாக கருத்தரிப்புக்கு உகந்த பண்புகளைக் கொண்டுள்ளது இனச்சேர்க்கைக்கு முந்தைய பாலியல் தேர்வைப் பற்றி நமக்கு நிறைய தெரியும் என்று பிட்னிக் கூறுகிறார். "புல்வெளியில் நடனமாடும் மானாக இருந்தாலும் சரி, மழைக்காடுகளில் காட்சியளிக்கும் பறவையாக இருந்தாலும் சரி, அதன் இயக்கம், அதன் நிறம், அதன் வாசனை போன்றவை துணையை பாலியல்ரீதியாக ஈர்க்கும்" இந்த புலன் உள்ளீட்டைச் செயலாக்குவது, ஜோடி இணைகிறதா, இல்லையா என்பதை முடிவெடுக்க வழிவகுக்கிறது என்று பிட்னிக் விளக்குகிறார். இனச்சேர்க்கைக்கு முந்தையவற்றை பற்றி நமக்கு தெரிந்த அளவு, இனச்சேர்க்கைக்குப் பிறகு பெண்ணின் உள்ளே நடக்கும் பாலியல் தேர்வு விந்தணுவின் பரிணாம வளர்ச்சியை எவ்வாறு இயக்குகிறது என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது என்று பிட்னிக் கூறுகிறார். "ஆபரணங்கள் மற்றும் விருப்பங்களின் மரபியல் பற்றி மிகக் குறைவாகவே புரிந்துகொண்டுள்ளோம்," என்று அவர் கூறுகிறார். விந்தணுவைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள, விந்தணுவின் முழு வாழ்க்கைச் சுழற்சி மட்டுமல்ல, பெண்ணின் உடலும் விந்தணுவின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்று பிட்னிக் விளக்குகிறார். "விந்தணுக்கள் விரைப்பையிலேயே முதிர்ச்சியடையாவிட்டால், அவை வளர்ச்சியடையவில்லை என்றே பொருள்." விந்தணுவுக்கும் பெண் இனப்பெருக்க பாதைக்கும் இடையில் சிக்கலான மற்றும் முக்கியமான தொடர்புகள் இருப்பதாக அவர் கருதுகிறார். "விலங்குகளின் விந்தணுக்களில் விந்தணு வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்களை அவதானிப்பதில் தற்போது நிறைய நேரம் செலவிடுகிறோம்." கருத்தரித்தல் நிறைவடைய ஒரு விந்தணு மேற்கொள்ளும் பல்வேறு மாறுபட்ட செயல்முறைகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து வரும் நிலையில், பிற ஆராய்ச்சிகள் மனித விந்தணுக்களின் தற்போதைய நிலை குறித்து உண்மையான கவலையை ஏற்படுத்துகின்றன. ஆண்கள் தங்கள் வாழ்நாளில், ஒரு டிரில்லியன் விந்தணுக்களை உற்பத்தி செய்கின்றனர், எனவே விந்தணுக்கள் சிக்கலில் இருப்பதாக கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினமாக இருக்கலாம். ஆனால், விந்தணுக்களின் எண்ணிக்கை அதாவது, ஒரு விந்து மாதிரியில் உள்ள விந்தணுக்களின் எண்ணிக்கை என்பது உலகளவில் குறைந்து வருவதாகவும், விந்தணு எண்ணிக்கை குறையும் போக்கு துரிதமாக அதிகரித்து வருவதாகவும் ஆராய்ச்சி தெரிவிக்கிறது உலக சுகாதார அமைப்பு (WHO) 2023இல் வெளியிட்ட அறிக்கையின்படி , உலகளவில் 6 பெரியவர்களில் ஒருவருக்கு மலட்டுத்தன்மை இருக்கிறது. அதில் ஆண் மலட்டுத்தன்மை சரிபாதியாக இருக்கிறது. (சமீபத்திய ஐக்கிய நாடுகளின் மக்கள்தொகை நிதி அறிக்கை அடிக்கோடிட்டு காட்டியபடி, குழந்தை வளர்ப்புக்கான செலவு போன்ற பிற காரணங்களுக்காகவும் உலகெங்கிலும் உள்ள பலர், தாங்கள் விரும்பும் அளவுக்கு குழந்தைகளைப் பெறுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது). மாசுபாடு, புகைபிடித்தல், மது அருந்துதல், மோசமான உணவுமுறை, உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் ஆகியவை ஆண்களிடையே மலட்டுத்தன்மையை அதிகரிப்பதாக கருதப்படுகிறது. இருப்பினும், கருவுறச் செய்வது தொடர்பான பிரச்னைகள் கொண்ட பெரும்பாலான ஆண்களுக்கு அதற்கான காரணம் என்ன என்பது தெரிவதில்லை. "நகரும் விந்தணுக்கள் அனைத்திலும், தவறாக நடக்கக்கூடிய பல விசயங்கள் உள்ளன," என்று இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில் தாய் மற்றும் கரு ஆரோக்கியத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஹன்னா மோர்கன் கூறுகிறார். "இது ஒரு பொறிமுறையாக இருக்கலாம்: அது சீராக நீந்த முடியாததால் கருமுட்டையை அடைய முடியாமல் போகலாம் அல்லது விந்தணுவின் தலைக்குள் அல்லது பிற பகுதிகளுக்குள் சிக்கல் இருக்கலாம். பல வழிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருந்தாலும், விந்தணுக்களில் சிறிய பல விசயங்கள் தவறாக இருக்கக்கூடும்." ஆணின் மலட்டுத்தன்மையைக் கண்டறிய ஒரு வழி, விந்தணுவின் உள்ளே ஆராய்ந்து பார்ப்பது என்று மோர்கன் கூறுகிறார். "டிஎன்ஏ எப்படி இருக்கிறது? அது எப்படி தொகுக்கப்பட்டுள்ளது? அது எவ்வளவு பிரிந்துள்ளது? விந்தணுவைப் பிரித்துப் பார்க்கக்கூடிய பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால் எந்த அளவீடு நல்லது அல்லது கெட்டது? உண்மையில் நமக்கு எதுவுமே தெரியாது." விந்தணுக்களின் மர்மத்தையும் அவை எவ்வாறு செயல்படுகின்றன என்பது போன்ற மர்ம முடிச்சுக்களை அவிழ்ப்பதன் மூலம், ஆண் மலட்டுத்தன்மையைப் பற்றியும் நாம் புரிந்துகொள்ளத் தொடங்கலாம் என்று மோர்கன் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy9098y8p32o
  5. சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறைக்கு பெரும் பாதிப்பு - ஐ.நா எச்சரிக்கை Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 05:53 PM சர்வதேச வர்த்தக போர் காரணமாக இலங்கையின் ஏற்றுமதி தொழில்துறை மிகப் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும் என ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் எச்சரித்துள்ளார். ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 59வது அமர்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் சமீபத்தைய வரிகள் குறித்தே இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ள மனித உரிமை ஆணையாளர், வர்த்தகப் போரின் அதிர்ச்சிகள் மூன்றாம் உலக நாடுகளை சுனாமியின் வலுவோடு தாக்கும் என தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் கரீபியன் நாடுகள், அபிவிருத்தி அடைந்துவரும் சிறிய தீவு நாடுகள் ஆகியவை மோசமான பாதிப்பை எதிர்கொள்ளும் என குறிப்பிட்டுள்ள அவர், இலங்கை, பங்களாதேஷ், கம்போடியா, வியட்நாம் போன்ற ஏற்றுமதி தொழில்துறையை அடிப்படையாகக் கொண்ட நாடுகள் பெரும் பேரழிவு பாதிப்புகளை எதிர்கொள்ளும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217654
  6. தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி இட ஒதுக்கீட்டிற்கு பிறகு விமர்சனங்களை கடந்து சிகரம் தொட்ட வரலாறு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெம்பா பவுமா கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் "உலகை மாற்றும் சக்தி, ஊக்கமளிக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. வேறு எதையும் விட மக்களை ஒன்றிணைக்கும் சக்தி விளையாட்டுக்கு இருக்கிறது. விரக்தி மட்டுமே இருக்கும் இடத்தில் விளையாட்டு நம்பிக்கையை விதைக்கும். விளையாட்டு, மக்களை ஊக்குவிக்கவும் ஒன்றிணைக்கவும் வேண்டுமென்றால், அது முதலில் அனைத்து மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்." - இது தென் ஆப்ரிக்க முன்னாள் அதிபர், நோபல் பரிசு வென்ற நெல்சன் மண்டேலாவின் வார்த்தைகள். கிரிக்கெட் என்பது 11 பேர் ஆடும் விளையாட்டு. இதில் திறமையுள்ள அனைத்து தரப்பினருக்கும் சமமான வாய்ப்பு வழங்கினால்தான் அது "ஜென்டில்மேன் கேமாக" இருக்க முடியும். தென் ஆப்ரிக்காவில் நிறவெறி தென் ஆப்ரிக்காவில் 1991-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை நிலவிய நிறவெறி காரணமாக அந்த அணியே சர்வதேச கிரிக்கெட்டில் தடை செய்யப்பட்டிருந்தது. அதன் பிறகு கிரிக்கெட்டில் தடம் பதித்த தென் ஆப்ரிக்கா தான் விளையாடிய முதல் ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்டிலேயே சிறப்பாக ஆடி அரையிறுதி வரை முன்னேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அந்த அரையிறுதியில்தான் தென் ஆப்ரிக்கா வெற்றி பெற 13 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ஆட்டம் மழையால் தடைபட, பின்னர் அந்த இலக்கு ஒரு ரன்னில் 21 ரன்கள் என்று மாற்றியமைக்கப்பட்டது சர்ச்சையாகி இன்று வரையிலும் பேசப்படுகிறது. பட மூலாதாரம்,CRAIG GOLDING/FAIRFAX MEDIA VIA GETTY IMAGES படக்குறிப்பு,1992 ஒருநாள் உலகக்கோப்பையில் இங்கிலாந்து - தென் ஆப்ரிக்கா அரையிறுதி ஆட்டத்தில் ஒரு காட்சி. அதுமுதல் கிரிக்கெட் உலகில் தென் ஆப்ரிக்கா வலுவான அணியாக வலம் வந்தாலும் கூட நாக் அவுட் என்றாலே அந்த அணி நெருக்கடிக்குள்ளாகி கோட்டை விட்டு விடுகிறது. லீக் ஆட்டங்களில் அனைத்திலுமே வென்றிருந்தாலும் கூட, ஐசிசி தொடர்களின் அரையிறுதி, இறுதிப்போட்டிகளில் முற்றிலும் வேறு விதமாக ஆடி தொடரை விட்டே வெளியேறிவிடுவது வாடிக்கையாகவே தொடர்ந்தது. அதனால்தான், அந்த அணி 'சோக்கர்ஸ்' (chokers) என்ற பெயரையும் பெற்றது. மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் கடந்த 1998ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றபின் 27 ஆண்டுகளாக தென் ஆப்ரிக்கா அணி ஐசிசி கோப்பைக்காக காத்திருந்தது. அந்த கனவை 27 ஆண்டுகளுக்குப் பிறகு கருப்பினத்தைச் சேர்ந்த டெம்பா பவுமா கேப்டனாகி உலகக்கோப்பையையே அந்த அணிக்கு பெற்றுக் கொடுத்துள்ளார். டி20, ஒருநாள், டெஸ்ட் என சர்வதேச அளவில் ஆடப்படும் மூன்று வகை கிரிக்கெட்டிலும் டெஸ்ட் வெற்றிகளே மிகவும் மதிப்பு வாய்ந்தவையாக கிரிக்கெட் நிபுணர்களால் கருதப்படுகிறது. அந்த டெஸ்டில் உலக சாம்பியனாக, அதுவும் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சாதித்திருப்பது தனிச்சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. பட மூலாதாரம்,CRAIG PRENTIS /ALLSPORT படக்குறிப்பு,1999 உலகக்கோப்பை சூப்பர் சிக்ஸ் சுற்றில் தென் ஆப்ரிக்கா - ஆஸ்திரேலியா ஆட்டம் டை ஆனது. தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் வந்தது எப்படி? தென் ஆப்ரிக்காவின் பூர்வீகக்குடி ஆப்ரிக்க கருப்பினத்தவர்கள்தான். ஆனால், 1652ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியில் இருந்து தென்ஆப்ரிக்காவில் ஐரோப்பிய காலனி ஆதிக்கம் தொடங்கியது. டச்சு கிழக்கிந்திய நிறுவனம் கேப்டவுனில் தடம் பதித்தது. அந்த நிறுவனம் படிப்படியாக தனது கிளைகளையும், அதிகாரத்தையும் விஸ்தரிப்பு செய்து, 17 மற்றும் 18ம் நூற்றாண்டில் ஆழப் பதித்தது. பிரெஞ்சு புரட்சி நடந்தபோதுதான், ஆங்கிலேயர் ஜேம்ஸ் ஹென்றி தலைமையில் 1795ல் கேப்டவுனை கைப்பற்றினர். இங்கிலாந்தில் விளையாடப்பட்டு வந்த கிரிக்கெட் தென் ஆப்ரிக்காவில் அறிமுகமானது. 1843-ம் ஆண்டில் போர்ட் எலிசபெத்தில் முதல் கிரிக்கெட் கிளப் தொடங்கப்பட்டது. 1889-ம் ஆண்டில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக டெஸ்ட் விளையாடும் அணியாக தென் ஆப்ரிக்கா மாறியது. தென் ஆப்ரிக்காவில் கிரிக்கெட் அணி உருவான காலத்தில் இருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக அந்த அணியில் வெள்ளையின வீரர்கள் மட்டுமே நிரம்பி இருந்தனர். 80 சதவிகிதம் கருப்பின மக்கள் வாழும் நாட்டின் தேசிய கிரிக்கெட் அணியில் அவர்களுக்கு இடம் தரப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES நிறவெறியால் தடை தென் ஆப்ரிக்காவில் சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்திய நிறைவெறி, விளையாட்டில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியது. 1956-ஆம் ஆண்டில் முதன்முதலாக விளையாட்டுக் கொள்கையை தென் ஆப்ரிக்க அரசு வெளியிட்டது. அதில் தென் ஆப்ரிக்க அணி சார்பில் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. நிறவெறிச் சட்டம் 1960களில் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டது. இந்த நிறவெறியால் ஒலிம்பிக், ரக்பி, பிஃபா ஆகியவை தென் ஆப்ரிக்க அணியை தடை செய்தன. 1970 முதல் 1990ம் ஆண்டுவரை ஐசிசி அமைப்பும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க தென் ஆப்ரிக்க அணிக்கு தடை விதித்திருந்தது. இடஒதுக்கீடு அறிமுகம் தென் ஆப்ரிக்காவில் நிறவெறி முடிவுக்கு வந்து தடைகள் விலக்கப்பட்ட போதிலும்கூட, அனைத்து விளையாட்டுகளிலும் வெள்ளையின வீரர்களே நிரம்பியிருந்தனர். 1998-ஆம் ஆண்டு நிறவெறி தடைச் சட்டமும், விளையாட்டுகளில் கருப்பினத்தவருக்கான இடஒதுக்கீடும் கொண்டு வரப்பட்ட பின்புதான் தென் ஆப்ரிக்காவில் மாற்றத்துக்கான துளிர்விட்டது. விளையாட்டில் இடஒதுக்கீடு முறை இதன் தொடர்ச்சியாக 2013-ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் வீரர்கள் தேர்வு குறித்து அந்நாட்டு அரசே வகுத்தது. அதன்படி 11 வீரர்கள் கொண்ட தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் 6 வீரர்கள் கருப்பு கலப்பின வீரர்கள் இருக்க வேண்டும், அதில் 2 பேர் ஆப்ரிக்க கருப்பின வீரர்களாக இருக்க வேண்டும், 5 பேர் வெள்ளையின வீரர்களாக இருக்கலாம். இந்த இடஒதுக்கீடு முறை வந்த பின்பே சமூகத்தின் அனைத்து பிரிவு வீரர்களும் தென் ஆப்ரிக்க அணியில் இடம் பெற்றனர். கருப்பின வீரர்கள் அணிக்குள் வந்தபோதிலும்கூட சக வெள்ளையின வீரர்களின் நிறவெறிப் பேச்சும் செயலும் தொடர்ந்ததாக சர்ச்சைகள் உண்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணியில் இடஒதுக்கீடு முறை நடைமுறைக்கு வந்தபின் அணிக்குள் வந்த முதல் கருப்பின ஆப்ரிக்க வீரர் வேகப்பந்துவீச்சாளர் மகாயா என்டினி மகாயா என்டினி குற்றச்சாட்டு தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் என்டினி, சக வீரர்களால் எவ்வாறு நிறவெறியுடன் நடத்தப்பட்டேன், கேலி கிண்டலுக்கு ஆளானேன் என்று தென் ஆப்ரிக்க ஒளிபரப்பு கழகத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். என்டினி பேசுகையில் "நான் அணிக்குள் வந்த நேரத்தில் தனிமையாகவே உணர்ந்தேன். இரவு சாப்பிட வேண்டுமென்றால் சக வீரர்கள் யாரும் என்னை உடன் அழைத்துச் செல்லமாட்டார்கள், 'சாப்பிடப் போகிறோம் வா' என்று கூட அழைக்க என் அறைக் கதவை தட்டமாட்டார்கள். என் கண் முன்னே, என்னிடம் ஆலோசனை கேட்காமலே, சக வீரர்கள் திட்டங்களை அவர்களாகவே வகுப்பார்கள். காலை உணவு சாப்பிட சென்றால் என் அருகேகூட எந்த வீரரும் அமரமாட்டார். சக வீரர்களால் புறக்கணிக்கப்பட்டு தனிமையாக இருப்பதால் சக வீரர்களுடன் பேருந்தில் செல்வதற்கு பதிலாக நடந்தே மைதானத்துக்கு செல்லலாம் எனத் தோன்றியது. என்னை எந்த வீரரும் புரிந்து கொள்ளவில்லை" எனத் தெரிவித்திருந்தார். வெள்ளையர் அல்லாத முதல் கேப்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு வெள்ளைய இனத்தவர் அல்லாத முதல் கேப்டனாக ஆஸ்வெல் பிரின்ஸ் நியமிக்கப்பட்டார். அவரும் சக வீரர்களால் நிறவெறிப் பாகுபாட்டுடன் நடத்தப்பட்டதாக ஒருமுறை வேதனையுடன் பகிர்ந்திருந்தார். தென் ஆப்ரிக்க சமூக நீதி மற்றும் தேசிய கட்டமைப்புக்கான விசாரணையில் பிரின்ஸ் பேசுகையில், "தென் ஆப்ரிக்க அணி வெள்ளையினத்தவர் அல்லாதவருக்கு தனிமையான இடம். ஒரு புதிய வீரர் வெள்ளையராக இருந்தால் வீரர்கள் உங்களை விரும்புகிறார்களா அல்லது இல்லையா என்பதை நடக்கும் சம்பவங்களை வைத்து புரிந்து கொள்ளலாம். ஆனால் வீரர் வெள்ளையராக இல்லாவிட்டால் இது எதுவுமே நடக்காது" எனத் தெரிவித்தார். தென் ஆப்ரிக்காவில் இடஒதுக்கீடு முறை கொண்டு வரப்பட்டு கருப்பின வீரர் என்டினி, கருப்பு கலப்பின வீரர்கள் ஹாசிம் அம்லா, டுமினி, ஆஷ்வெல் பிரின்ஸ் உள்ளிட்ட பல திறமையான வீரர்கள் தென் ஆப்ரிக்காவுக்கு கிடைத்த போதிலும் அவர்கள் "கோட்டா ப்ளேயர்ஸ்", அதாவது 'இடஒதுக்கீடு வீரர்கள்' என்ற விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹாசிம் ஆம்லா தொடர்ந்த நிறவெறி 2021-ஆம் ஆண்டில் தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சியாளராக இருந்த மார்க் பவுச்சர் தன்னை நிறவெறியுடன் நடத்தினார் என்ற ஆடம்ஸ் குற்றம்சாட்டினார். உலகளாவிய பிளாக் லிவ்ஸ் மேட்டர்ஸ் இயக்கத்தின் போது, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் 30 பேர் தாங்கள் எவ்வாறு நிறவெறியால் பாதிக்கப்பட்டோம் என்பதை உலகுக்கு வெளிப்படுத்தினர். கருப்பினத்தவருக்கும் வாய்ப்புகளை வழங்க இடஒதுக்கீடு முறை தீவிரமாக அமல்படுத்தப்பட்ட நிலையில், தென் ஆப்ரிக்காவின் தோல்விகளுக்கு இந்த இட ஒதுக்கீடே காரணம் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. 2015-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் நியூசிலாந்திடம் தென் ஆப்ரிக்கா அடைந்த தோல்விக்கு கருப்பின கலப்பு வீரர் பிலாண்டர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. 2007-ஆம் ஆண்டு உலகக் கோப்பைத் தொடரில் அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம், தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் வேகப்பந்து வீச்சாளர் என்டினி சேர்க்கப்படவில்லை. இந்த ஆட்டம் பற்றி கிரேம் ஸ்மித் ஒருமுறை நினைவுகூர்கையில் " நண்பர்களே, நான் விளையாடக் கூடாது என சொன்னீர்கள் என்றால் என் முகத்தைப் பார்த்து நான் விளையாடக் கூடாது என்று சொல்லுங்கள். இட ஒதுக்கீடு முறைதான் பிரச்னை என சொல்லாதீர்கள். முடிவுகள் தவறாக நடந்த போது, இட ஒதுக்கீட்டால் அணிக்குள் வந்த வீரர்கள் மீது தவறு. விஷயங்கள் சரியாக நடந்த போது, மற்றவர்கள் ஹீரோக்கள். நான் தேசிய அணிக்காக விளையாடிய வரைக்கும், அது ஒரு அணியே இல்லை. நாங்கள் ஒன்றுமில்லை" என வேதனையுடன் தெரிவித்திருந்தார். என்டினி தனது 100வது டெஸ்டுக்குப் பிறகு, முறையான மரியாதையின்றி அணியிலிருந்து நீக்கப்பட்டதாக விமர்சனம் எழுந்தது, ஒரு மாதத்துக்குள் அவரது ஒப்பந்தத்தையும் அணியிலிருந்து இழந்தார். அப்போது என்டினி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "நாங்கள் எப்போது வென்றாலும், அது மகிழ்ச்சியாக இருந்தது, ஆனால் நாங்கள் தோற்ற போதெல்லாம் முதலில் குற்றம் சாட்டப்பட்டது நான்தான்" என்று தெரிவித்தார். இடஒதுக்கீடு முறை தேவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணி நீண்டகாலம் ஐசிசி உலகக் கோப்பையை வெல்ல முடியாமைக்கு அணிக்குள் நிலவிய இடஒதுக்கீடு முறைதான் காரணம் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வந்தது. ரக்பி உலகக் கோப்பையை 1995 மற்றும் 2007ம் ஆண்டுகளில் தென் ஆப்ரிக்கா வென்ற போது அதில் பெரும்பாலும் வெள்ளையின வீரர்கள்தான் இருந்தனர், ஒன்று அல்லது இருவர் மட்டுமே கருப்பின வீரர்கள் இருந்தார்கள். இடஒதுக்கீடு முறை இல்லாத அணிதான் ரக்பி உலகக் கோப்பையை வென்றது என்ற வாதம் வைக்கப்பட்டது. ஆனால், 2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ரக்பி அணிக்கு முதல் முறையாக கருப்பினத்தைச் சேர்ந்த சியா கோலிசி கேப்டனாக நியமிக்கப்பட்டார். அணியில் 11 வெள்ளையர் அல்லாத வீரர்கள் இருந்தார்கள். இந்த புதிய மாற்றத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் இருந்த வீரர்கள் பெரும்பாலும் நிறவெறி தடைக்குப்பின் பிறந்த இளம் வீரர்கள், இவர்கள் தங்கள் தேசத்துக்காக பங்களிப்பு செய்ய கிடைத்த வாய்பை சரியாகப் பயன்படுத்தி, உலக சாம்பியன் பட்டத்தை வென்றனர். அதன் மூலம் இடஒதுக்கீடு முறையால்தான் தென் ஆப்ரிக்கா கோப்பையை வெல்ல முடியாமல் போனது என்ற வாதத்தை அவர்கள் தவிடுபொடியாக்கினர். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணிக்குள்ளும் படிப்படியாக கருப்பின வீரர்கள், கலப்பின வீரர்கள் கொண்டுவரப்பட்டு படிப்படியாக மாற்றம் நடந்தது. மாற்றத்துக்கான வெற்றி தென் ஆப்ரிக்காவின் இந்த இடஒதுக்கீடு முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு காரணமாக அமைந்ததா என்பது குறித்து விளையாட்டுப் பிரிவு மூத்த பத்திரிகையாளர் முத்துகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், "இட ஒதுக்கீட்டால் திறமையற்றவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துவிடும் என்ற வாதத்தை இந்த வெற்றி மாற்றியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கொண்டுவரப்பட்ட இடஒதுக்கீடு முறை கருப்பினத்தவர் மற்றும் கலப்பின மக்களுக்கும் சமமான வாய்ப்பளிக்கிறது, வெள்ளையின மக்களுக்கும் வாய்ப்பளிக்கிறது. தென் ஆப்ரிக்காவின் இந்த சாம்பியன்ஷிப் வெற்றியை கிரிக்கெட் வெற்றியாக, கிரிக்கெட் தொழில்நுட்பம் சார்ந்த வெற்றியாக மட்டும் பார்க்கக்கூடாது. சமூக மாற்றத்துக்கான வெற்றியாகவும் இதை பார்க்க வேண்டும். கருப்பின வீரர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டிருந்த ஒரு தேசத்தில், கருப்பின கேப்டன் தலைமையில் அந்த அணி சாம்பியன்ஷிப் வென்றது மாற்றத்துக்கான வெற்றியாகும்" என்றார். யார் இந்த பவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அணியினருடன் டெம்பா பவுமா கேப்டவுன் நகரில் உள்ள லாங்கா எனும் புறநகர் பகுதியைச் சேர்ந்த ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் டெம்பா பவுமா. முறையான கிரிக்கெட் பயிற்சிக் கூடத்துக்கு செல்ல முடியாமல் தெருக்களிலும், சாலைகளிலும் கிரிக்கெட் விளையாடி பவுமா பயிற்சி எடுத்தார். சான்டன் நகரில் புனித டேவிட் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், நியூலாந்தில் கல்லூரிப் படிப்பையும் பவுமா முடித்தார். 2008ம் ஆண்டிலிருந்துதான் பவுமாவின் கிரிக்கெட் வாழ்க்கை தொடங்கியது. கட்டெங், லயன்ஸ் போன்ற உள்நாட்டு அணிகளில் பவுமா விளையாடத் தொடங்கினார். இவரின் ஆட்டத்தைப் பார்த்து, 2012ம் ஆண்டு தென் ஆப்ரிக்க ஏ அணியில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாட வாய்ப்புக் கிடைத்தது. இந்த தொடரிலும் பவுமா சிறப்பாக செயல்படவில்லை, இருப்பினும் ஆஸ்திரேலிய ஏ, இந்தியா ஏ அணிக்கு எதிரான தொடர்களில் பவுமாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் அவரின் திறமை வெளிப்பட்டது. 2017ம் ஆண்டில் கேப் கோப்ராஸ் அணிக்காக பவுமா ஆடத்தொடங்கி, அதன்பின் லயன்ஸ், டர்பன் ஹீட், ஜோஸி ஸ்டார்ஸ் அணிகளுக்காக பவுமா விளையாடினார். 2014ம் ஆண்டில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியில் பவுமாவுக்கு வாய்ப்புக் கிடைத்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 2016ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் அடித்து, தென் ஆப்ரிக்க கிரிக்கெட்டில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பவுமா பெற்றார். 2016ம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணிக்காக பவுமா அறிமுகமாகினார். அறிமுக போட்டியிலேயே பவுமா சதம் அடித்து அசத்தி, ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் கருப்பினத்தவ வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார். டெஸ்ட் கேப்டன் பொறுப்பு 2019ம் ஆண்டில்தான் டி20 போட்டியில் பவுமா அறிமுகமானார். 2019, செப்டம்பர் 18ம் தேதி இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பவுமா அறிமுகமாகினார். 2021, மார்ச் 4ம் தேதி, தென் ஆப்ரிக்க ஒருநாள் அணிக்கு கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டார். தென் ஆப்ரிக்க அணிக்கு முழுநேர, நிரந்தர கேப்டனாக நியமிக்கப்பட்ட முதல் கருப்பின வீரர் என்ற பெருமையை பவுமா பெற்றார். 2022ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணியின் கேப்டனாக பவுமா நியமிக்கப்பட்டு, 10 போட்டிகளில் அணியை வழிநடத்தினார். இதில், 9 வெற்றிகளுடன், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளார். பவுமா இதுவரை 42 ஒருநாள் போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டு அதில் 22 வெற்றிகளையும், 25 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 15 வெற்றிகளையும் பெற்றுக் கொடுத்துள்ளார். கனவிலும் நினைக்கவில்லை சாதாரண பின்புலத்தில் பிறந்து, வளர்ந்த பவுமா இன்று கிரிக்கெட்டின் மெக்கா என்றழைக்கப்படும் லார்ஸ்ட் மைதானத்தில், தனது தேசத்துக்காக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்று அவர் அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடியது குறித்து பவுமா கூறுகையில், "லார்ட்ஸ் மைதானத்தில் நான் விளையாடுவேன் என்று கனவில் கூட நினைத்தது இல்லை." எனத் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0eqe2xjgwqo
  7. கனடாவில் தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் விளக்குகள் அழிப்பு - கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் Published By: RAJEEBAN 16 JUN, 2025 | 10:23 AM பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து கனடிய தமிழர் தேசிய அவை கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இது குறித்து கனடிய தமிழர் தேசிய அவை மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரம்டனில் உள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியை வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் ஜூன் 15 2025 இல் இடம்பெற்றமை குறித்து கனடிய தமிழர் தேசிய அவை தனது ஆழ்ந்த கண்டனத்தை தெரிவித்துக்கொள்கின்றது. தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியின் முக்கியமான அம்சங்களை வெளிச்சம்போட்டுக்காட்டும் விளக்குகள் அழிக்கப்பட்டுள்ளன. மே 27ம் திகதி இரவும் இவ்வாறான வேண்டுமென்றே சேதப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன. வேண்டுமென்றே முன்னெடுக்கப்படும் கண்டிக்கப்படவேண்டிய இந்த இழிவுபடுத்தும் நடவடிக்கைகள் தமிழ் இனப்படுகொலையின் போது பலியானவர்களின் நினைவுகளை அவமதிப்பதுடன், பன்முகத்தன்மை கொண்ட எங்கள் கனடா சமூகத்திற்கு அடித்தளமாக உள்ள உண்மையின் மதிப்புகள் நல்லிணக்கம் போன்றவற்றை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. https://www.virakesari.lk/article/217583
  8. 15 JUN, 2025 | 12:25 PM (நமது நிருபர்) உயிர்களைப் பாதுகாப்பதை தமது பொறுப்பாக கருதி வீதி விபத்துகளைத் தடுப்பதற்குப் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்றும் சட்டங்களினால் மட்டுமன்றி சிறந்த தெளிவோடு அதற்காக நாம் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கல்வி உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 'கிளீன் ஸ்ரீலங்கா' வேலைத்திட்டம் மற்றும் இலங்கை பொலீஸ் இணைந்து '' Tack care '' வீதியைப் பாதுகாப்போம்' என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி விபத்து தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார். இலங்கை பொலீஸ் உத்தியோகத்தர்கள் வீதி விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை பாடசாலை மாணவர்களுக்கு நடத்தினர். இருபத்தைந்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய வகையில் இருபத்தைந்து பாடசாலைகளுக்கு பாடசாலை வாகன ஒழுங்குபடுத்துனர்களுக்குத் தேவையான உபகரணங்களை விநியோகிக்கும் நிகழ்வும் பிரதமரின் தலைமையில் இதன்போது நடைபெற்றது. அங்குரார்ப்பண நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தத் திட்டத்தை கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தால் மேற்கொள்ளப்படும் மற்றொரு முக்கியமான திட்டம் என்று குறிப்பிடலாம். வீதி விபத்துகள் இன்று நாட்டில் பெரும் பேரழிவாக மாறியுள்ளன. இதில் கவலைதரும் விடயம் என்னவென்றால் எமக்கு தேவையும் அர்ப்பணிப்பும் இருந்தால் இவை அனைத்தும் தடுக்கப்படக்கூடியவை என்பதாகும். வீதி விபத்துகளால் தினமும் ஏழு பேர் இறக்கின்றனர். இந்த துயரத்தை நாம் நிறுத்த வேண்டும். வீதி விபத்துகளில் இறப்பவர்கள் ஊனமுற்றவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் அனைவரும் இந்த நாட்டின் குடிமக்களே. ஒருவரின் தாய் தந்தை சகோதரன் சகோதரி அல்லது குழந்தை விபத்தில் சிக்கினால் அது அவர்கள் அனைவரையும் பாதிக்கிறது. இந்த விபத்து புள்ளிவிபரங்கள் வெறும் எண்ணிக்கைகள் அல்ல. அவை ஒரு பெரிய கதையை எமக்குச் சொல்கின்றன. வீதி விபத்துகளைத் தடுப்பது என்பது சட்டத்தை கடைப்பிடிப்பது மட்டுமல்ல மற்றவர்களைப் பற்றி சிந்திக்கும் உயிர்களைப் பாதுகாப்பதை தனது பொறுப்பாகக் கருதும் இரக்கத்துடன் செயற்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவதும் அவசியம். அரசாங்கம் அத்தகைய அழகான நாட்டை உருவாக்கவே முயற்சிக்கிறது. தண்டனைக்கு முன் கல்வி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன் முன்னுதாரணம். குற்றச்சாட்டுக்கு முன் கவனம் ஆகியவை அவசியம். பெற்றோர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். சாரதிகள் உயிர்களைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும். போக்குவரத்து விதிகள் குறித்து பிள்ளைகளுக்கு தெளிவூட்டுவதைப் போன்றே சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்பு பொலிஸார் மக்களுக்கு அதுபற்றி விளிப்புணர்வூட்ட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/217501
  9. மட்டக்களப்பு நகரில் பக்கத்து வீட்டுகாரரின் நாய் கடித்ததில் காயமடைந்த பெண் ஒருவர் தனக்கு ஏற்பட்ட நட்டஈட்டை நாயின் உரிமையாளர் வழங்க வேண்டும் என பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து நாயின் உரிமையாளர் அந்த பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை செலுத்திய விசித்திரமான சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இடம்பெற்றுள்ளது. இதுபற்றி தெரியவருவதாவது, ஒய்வு நிலை கல்வி ஆசிரியர் ஆலோசகர் வீட்டில் மூன்று நாய்கள் வளர்த்து வருகின்ற நிலையில், பக்கத்து வீட்டில் வசித்துவரும் ஓய்வு பெற்ற முன்னாள் கல்வி அதிகாரியின் உறவினர்களை நாய் அடிக்கடி கடிக்க சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் பக்கத்து வீட்டாருடன் முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் சம்பவதினடான நேற்று சனிக்கிழமை (14) நாயின் உரிமையாளர் நாய்களை திறந்து விட்ட நிலையில் பக்கத்து வீடடின் பெண் ஒருவருக்கு நாய் கடித்துள்ளதை அடுத்து அவர் காயமடைந்துள்ளார். இதனை அடுத்து நாயின் உரிமையாளருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் கடிவாங்கிய பெண் முறைப்பாடு செய்துள்ளதை அடுத்து நாயின் உரிமையாளரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு இரு சாராரிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெண் நாய் கடித்ததற்கு தடுப்பு ஊசி போடவேண்டும் என தனக்கு நட்டஈடாக 40 ஆயிரம் ரூபா வழங்க வேண்டும் என கோரினார். இந்த விசாரணையை தொடர்ந்து நாய் உரிமையாளர் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு 40 ஆயிரம் ரூபாவை வழங்க இணக்கப்பாட்டுக்கு வந்ததை அடுத்து குறித்த முறைப்பாட்டை பொலிஸார் முடிவுக்கு கொண்டு வந்தனர். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmbxmbtir01voqpbsqzhlgww3
  10. உலக தந்தையர் தினம்! ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மாதம், மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, உலக தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது. உலகிலேயே முதல் முறையாக, ஜூன் 19, 1910ல், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதற்கான முயற்சிகளை எடுத்தவர், சோனாரா டாட் என்ற பெண்மணி. கடந்த, 1909ல், சர்ச் ஒன்றில், அன்னையர் தினம் பற்றி குறிப்பிட்டதை கேட்ட அவர், தந்தையர் தினமும் கொண்டாடப்பட வேண்டும் எனக் கருதினார். அடுத்த ஆண்டே அதை நிறைவேற்றினார். பின்னர், 1966ம் ஆண்டு, தந்தையர் தினத்தை அங்கீகரித்து, ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படும் என, அறிவித்தார், அமெரிக்க அதிபர் லிண்டன் ஜான்சன். அதன் பின், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு, 1972ல், ஒரு சட்டத்தின் மூலம், தந்தையர் தினத்தை, தேசிய விடுமுறை தினமாக அறிவித்தார், அதிபர் நிக்சன். https://www.dinamalar.com/malarkal/vara-malar-weekly-magazine/world-fathers-day/70901
  11. யாழ், திருமலை, கண்டிக்கு விஜயம் செய்வார் வோல்கர் ; வலுப்பெற்ற எதிர்ப்பை அடுத்தே நிகழ்ச்சி நிரலில் யாழ். விஜயம் உள்வாங்கப்பட்டதாகத் தகவல் 15 JUN, 2025 | 10:58 AM (நா.தனுஜா) அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கொழும்பில் உயர்மட்ட சந்திப்புக்களை நடத்தவிருப்பதுடன் கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் விஜயம் செய்யவுள்ளார். இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் 'பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 - 26 ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகைதரவுள்ளார். ஆனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் என்ற கரிசனையின் அடிப்படையில் அவரை இப்போது நாட்டுக்கு வருகைதரவேண்டாம் என வலியுறுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்திருந்தன. இருப்பினும் அவரது வருகை பெருமளவுக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதன்போது அவர் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், தலைநகரைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப்பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் சந்திப்புக்களை முன்னெடுக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கும் அவர் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்போது குறிப்பாக யாழ்ப்பாணத்தில் சிவில் சமூகப்பிரதிநிதிகளை சந்திக்கவுள்ள அவர், தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை இலங்கைக்கு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் செய்யுமாறுகோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த போதிலும், அவரது முள்ளிவாய்க்கால் விஜயம் இன்னமும் உறுதியாகவில்லை. மேலும் ஆரம்பத்தில் 23 - 25 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்கு திட்டமிடப்பட்டிருந்த அவரது விஜயத்தில் யாழ் விஜயம் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை எனவும், பின்னர் சிவில் சமூகப்பிரதிநிதிகள் மத்தியில் வலுவடைந்த எதிர்ப்பை அடுத்தே அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதி 26 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டு, அதில் யாழ் விஜயமும் உள்வாங்கப்பட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. https://www.virakesari.lk/article/217493
  12. நாட்டை கட்டியெழுப்புவதற்கு சகலரும் முன்வாருங்கள் - ஜேர்மனியிலுள்ள இலங்கை பிரஜைகளிடம் ஜனாதிபதி கோரிக்கை 15 JUN, 2025 | 11:02 AM வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது. எனவே இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சனிக்கிழமை (14) அங்கு வசிக்கும் இலங்கையர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு உரையாற்றினார். ஜேர்மனுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்றுமுன்தினம் ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மாநாட்டில் கலந்துகொண்டிருந்தார். இதனியடைடுத்து ஜனாதிபதி பெர்லினின் வெல்டொப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜெர்மன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ரீம் அலபலி-ரடொவனை சந்தித்து கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சந்திப்பில் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை வர்த்தகர்கள் முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் பலர் கலந்து கொண்டிருந்ததுடன் அவர்கள் ஜனாதிபதியை உற்சாகத்துடன் வரவேற்றனர். வெளிநாட்டலுவல்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்இ ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் பணிப்பாளர் நாயகம் சுகீஷ்வர குணரத்ன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். இதன்போது அங்கு உரையாற்றிய ஜனாதிபதி, இலங்கையை வளமான நாடாக மாற்றுவதற்கு எந்தவித பேதங்களும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். மேலும் நமது பொருளாதாரத்திற்கு வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வழங்கும் பங்களிப்பைப் பாராட்டுவதோடு வீழ்ச்சியடைந்துள்ள நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நமது அரசாங்கம் நிலையான ஆரம்பத்தை எடுத்துள்ளது என்றும் ஜனாதிபதி அங்கு மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/217495
  13. Keezhadi Excavation - அமர்நாத் ராமகிருஷ்ணன் அறிக்கையில் என்ன இருந்தது? சர்ச்சைகள் தொடர்வது ஏன்? கீழடி தமிழ்நாட்டின் மதுரைக்கு அருகே அமைந்திருக்கும் ஒரு தொல்லியல் களம். 2014ஆம் ஆண்டிலிருந்து இங்கே அகழாய்வுகள் நடந்துவருகின்றன. இதில் இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அமர்நாத் ராமகிருஷ்ணன் தான் மேற்கொண்ட இரண்டு அகழாய்வுகளின் ஆய்வறிக்கையை சில ஆண்டுகளுக்கு முன் தாக்கல் செய்திருந்தார். இதில் சில விளக்கங்களைக் கோரி அந்த ஆய்வறிக்கையை இந்தியத் தொல்லியல் துறை திருப்பி அனுப்பியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாட்டில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், ஆய்வறிக்கையை ஏற்க அறிவியல் பூர்வமான, தொழில்நுட்ப ரீதியிலான ஆய்வுகள் இன்னும் தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், கீழடியின் தொன்மை தொடர்பாக முன்வைக்கப்பட்டிருக்கும் முடிவுகள் என்ன? தற்போது அதில் என்ன சர்ச்சை? இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்பதை இந்த காணொளியில் விரிவாகப் பார்க்கலாம். #Keezhadi #KeezhadiExcavation #AmarnathRamakrishna இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  14. Flight-ல் ஆபத்து காலத்தில் உதவ என்னென்ன இருக்கும்? Safety பற்றி கட்டாயம் தெரிய வேண்டிய தகவல் ஆமதாபாத் விமான விபத்துக்குப் பின், இதற்கு முன்பு நடந்துள்ள விமான விபத்துக்கள் குறித்தும், விமானங்களின் தரம் குறித்தும் விவாதங்கள் சூடுபிடித்துள்ளன. விபத்துக்களுக்குக் காரணம் விமானங்களின் பராமரிப்பு குறைபாடா, மனிதப்பிழைகளா என்ற கேள்விகளும் எழுந்துள்ள நிலையில், விமானத்தின் முக்கிய பாகங்கள், அவற்றின் செயல்பாடுகள், பொதுவான விமானப் பராமரிப்பு முறைகள் குறித்து விமானவியல் துறை சார்ந்த நிபுணர்களிடம் பிபிசி தமிழ் கலந்துரையாடியது. #AirIndia #FlightCrash #FlightSafety இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  15. Published By: VISHNU 15 JUN, 2025 | 05:56 PM (எம்.வை.எம்.சியாம்) இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு சுமார் 1.4 பில்லியன் அமெரிக்க டொலரினால் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வொன்றில் வெளிக்கொணரப்பட்டுள்ளது. சீன மக்கள் வங்கியுடன் (People’s Bank of China – PBoC) உள்ள 10 பில்லியன் (அ.டொலர் 1.4) பெறுமதியான நாணய பரிமாற்றத்தை ஒதுக்கீடாக கருதியமையால் இந்த நிலைமை உருவாகியுள்ளதாக வெரிட்டே ரிசேர்ச் ஆய்வு நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இது தற்போது சர்வதேச அளவில் வெளிநாட்டு ஒதுக்கீடாக கருதப்பட வேண்டிய தரநிலையை பூர்த்தி செய்யவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அந்த நிறுவனம் மேற்கொண்டுள்ள ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ள “Balance of Payments Manual, 6th edition” அறிக்கைக்கு அமைய வெளிநாட்டு சொத்து இருப்பானது திரவத்தன்மையை கொண்டிருக்க வேண்டும் அல்லது நிபந்தனையற்ற முறையில் உடனடியாகக் கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் நாணய பரிமாற்றம் இதனை நிறைவேற்ற தவறியுள்ளது. ஏனெனில் பல்வேறு நிபந்தனைகளுக்கு உட்டுபட்டு காணப்படுகின்றது. எதிர்காலத்தில் குறித்த நிபந்தனைகள் நீக்கப்படுவதற்கான சாத்தியமும் காணப்படுகின்றது. அந்த வகையில் வெளிநாட்டு ஒதுக்கீடாக அங்கீகரிக்கப்படாத சொத்துகளைச் சேர்ப்பதனால் இலங்கையின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு ஒதுக்கீடு மிகைப்படுத்தப்பட்டுள்ளதாகவே கருதப்படுகின்றது. உதாரணமாக 2025 மே மாதத்தில் மத்திய வங்கி அறிவித்த உத்தியோகபூர்வ ஒதுக்கீடு 6.3 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. சர்வதேச தரநிலைக்கேற்ப கணக்கிட்டிருந்தால் இது சுமார் 4.9 பில்லியன் அமெரிக்க டொலராக இருந்திருக்க வேண்டும். மேலும் இந்த தவறான கணக்கீட்டைப் பயன்படுத்தி அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் இரண்டு விதமான கணக்கீடுகளை (சீன மக்கள் வங்கி) சேர்த்ததும் சேர்க்காததும் பயன்படுத்தி ஒரு காலப்புள்ளியிலிருந்து மற்றொரு காலப்புள்ளிவரை வெளிநாட்டு ஒதுக்குகளின் அதிகரிப்பை ஒப்பிட்டு மதிப்பீடு செய்ய முயற்சித்துள்ளனர். இதனால் 2022 ஏப்ரல் மாதத்திற்கு பின்னர் வெளிநாட்டு ஒதுக்கங்களின் அதிகரிப்பு தொடர்பில் தவறான தகவல்கள் பகிரப்பட்டுள்ளன. சர்வதேச தரநிலைகளுடன் ஒத்துபோகும் பரிந்துரைக்கப்பட்ட அணுகுமுறை என்னவெனில் IMF தனது ஊழியர் அறிக்கைகளில் 'பயன்படுத்தக்கூடிய வெளிநாட்டு ஒதுக்கம் ( (usable reserves)” )' எனக் குறிப்பிடும் மதிப்பை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீடு செய்வதே ஆகும். இதில் பரிமாற்ற ஒப்பந்தம் மற்றும் வெளிநாட்டு ஒதுக்க சொத்துகளுக்கான வரையறையை பூர்த்தி செய்யாத எந்தவொரு சொத்தும் உள்வாங்கப்படாது. https://www.virakesari.lk/article/217549
  16. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
  17. 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் கள் இறக்க அனுமதி வழங்கக்கோரி நடத்தப்பட்ட போராட்டத்தில் பனை மரம் ஏறி கள் இறக்கினார் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று (ஜூன் 15) தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகில் நடத்தப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwywywry9p5o
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசின் 'கடன் வழங்கும் நிறுவனங்கள் - நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' (Tamil Nadu Money Lending Entities-Prevention of Coercive Actions Act, 2025) அமலுக்கு வந்துள்ளது. கடன் வழங்கும் நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதுடன், 'பொதுமக்களிடம் இருந்து கடன் வசூல் செய்யும் போது நிதி நிறுவனங்கள் நெருக்கடி கொடுத்தால் ஐந்தாண்டு சிறைத் தண்டனை வழங்கப்படும்' என்றும் புதிய சட்டம் கூறுகிறது. புதிய சட்டத்தின்படி, கடனை வசூலிக்க எந்தெந்த வழிமுறைகளைக் கையாள்வது குற்றமாகும்? அதற்கு என்ன தண்டனை? அதனால் கடன் செயலிகள் (app) கட்டுக்குள் வருமா? கடன் தொல்லையால் தொடரும் தற்கொலைகள் கடன் தொல்லை காரணமாக, கடந்த ஜனவரி மாதம் சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த வெள்ளி வியாபாரி பால்ராஜ் தனது மனைவி, மகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரியை சேர்ந்த யுவராஜ் என்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களாக வேலையில்லாமல் தவித்த அவர், கடன் செயலியில் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பிச் செலுத்த முடியாததால் கடன் செயலி நிறுவனத்தினர் அளித்த மனஉளைச்சலால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்கிறது செங்கல்பட்டு டவுன் காவல்நிலையத்தில் பதிவான எஃப்.ஐ.ஆர். சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம் இத்தகைய சூழலில், கடன் வசூலிப்பதில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்க வகை செய்யும் மசோதாவை, கடந்த ஏப்ரல் 29-ஆம் தேதி சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தாக்கல் செய்தார். அந்த மசோதாவில், "கடன் வழங்குவோர், அடகு கடைகள் ஆகியவை அதிக வட்டி பெறுவதை ஒழுங்குபடுத்தி, தமிழ்நாடு அடகுக் கடைக்காரர்கள் சட்டம் 1943, தமிழ்நாடு பணக்கடன் வழங்குவோர் சட்டம் 1957, தமிழ்நாடு கந்துவட்டி தடைச் சட்டம் 2003 ஆகியவற்றை அரசு அமல்படுத்தியுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர், மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நடைபாதை வியாபாரிகள், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், கட்டட பணியாளர்கள் ஆகியோர் கடன் வழங்கும் நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு கடன் சுமைக்கு ஆளாகின்றனர். இந்நிறுவனங்களின் வசூல் முறைகளால் மக்கள் பாதிக்கப்படுவதால், அவர்களைப் பாதுகாப்பதற்கு சட்டத்தை இயற்றுவது அவசியமாகக் கருதுகிறது தமிழ்நாடு அரசு," என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைய தினமே விவாதங்களுக்குப் பின் இந்த மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. புதிய சட்டத்தில் என்ன உள்ளது? அந்த மசோதா ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதலுக்குப் பின் சட்டமாகியுள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனங்களின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுப்பது நான்கு வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடன் வழங்கும் நிறுவனத்தின் பதிவு (Registration of money lending Entity) கடன் வழங்கும் நிறுவனத்தை முறைப்படுத்துதல் (Regulations of money lending entity) பதிவு செய்யும் நிறுவனங்களின் அதிகாரம் (Powers of registering authority) குற்றங்களும் அபராதமும் (Offences and penalties) எவையெல்லாம் குற்றம்? ரிசர்வ் வங்கியில் பதிவு செய்யப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (NBFC), கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் தவிர அனைத்து பணம் வழங்கும் நிறுவனங்களுக்கும் புதிய சட்டம் பொருந்தும். கடன் பெற்ற நபரிடம் கட்டாய வசூல் செய்யும் நடவடிக்கையில் இறங்குதல். (வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள், கூட்டுறவு அமைப்புகளுக்கும் இவை பொருந்தும்) கடன் வாங்கிய நபரின் பெற்றோர், கணவர், மனைவி, குழந்தைகள் ஆகியோரிடம் நிறுவனமோ அதன் பிரதிநிதிகளோ கட்டாய வசூல் நடவடிக்கையில் ஈடுபடுதல் கடன் வாங்கிய நபரின் குடும்பத்தினர் மீது வன்முறையைப் பயன்படுத்துவது, அவர்களை அவமதிப்பது, மிரட்டுவது, பின்தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபடுதல் கடன் பெற்ற நபருக்கு சொந்தமான அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொத்துகளில் தலையிடுதல், அதைப் பயன்படுத்த முடியாமல் இடையூறு செய்தல் கடன் பெற்ற நபரின் சொத்துகளை பறிமுதல் செய்தல், வீடு, வேலை பார்க்கும் இடங்களுக்குச் சென்று பேசுதல் போன்றவை குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடன் செயலிகள் கட்டுக்குள் வருமா? "வங்கி மற்றும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள் (Non-Banking Financial Company) ஆகியவற்றுக்கு அரசின் சட்டம் பொருந்தும். உடனடி கடன் செயலிகளால் மக்கள் அதிக சிரமத்துக்கு ஆளாகின்றனர். ஆனால், இவை எதுவும் நிறுவனங்களாக நடத்தப்படுவதில்லை" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது ஒரு மென்பொருள். உலகில் யார் வேண்டுமானாலும் பதிவிறக்கம் செய்து கடன் பெறலாம். ஐந்தாயிரம், பத்தாயிரம் உடனடியாக கடன் கொடுத்துவிடுகின்றனர்" எனக் கூறுகிறார். கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகியவற்றில் இதுபோன்ற கடன் செயலிகள் அதிகம் உள்ளதாகக் கூறும் அவர், "ஃபேஸ்புக், யூட்யூப் ஆகியவற்றில் விளம்பரம் செய்து இந்நிறுவனங்கள் மக்களை ஈர்க்கின்றன. இதனை முறைப்படுத்த வேண்டும்" எனக் கூறுகிறார். "ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது ஆவணங்களை சரிபார்த்து நிதி நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன. ஆனால், கடன் செயலிகளுக்கு இந்த விதிகள் எதுவும் இல்லை. பணம் கொடுத்து மிரட்டிப் பணம் பெற வேண்டும் என்பதே அவர்களின் இலக்காக உள்ளது," எனக் கூறுகிறார் கார்த்திகேயன். ஆன்லைன் ரம்மியை தமிழ்நாடு அரசு முறைப்படுத்தியதுப் போல, கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,கடன் செயலிகளுக்கும் ஓர் ஒழுங்குமுறைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கையில் இறங்கலாம் என்று கூறுகிறார் சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன் "கடன் செயலியாக இருந்தாலும் பதிவு செய்வது கட்டாயம்" இதனை மறுக்கும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன், "கடன் செயலிகளை யார் நடத்துகிறார்கள் என்பது தெரிய வாய்ப்பில்லை. ஆனால், புதிய சட்டத்தின்படி தமிழ்நாட்டில் கடன் வழங்கும் தொழில் செய்வோர் அனைவரும் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்வது கட்டாயமாகிறது. அவ்வாறு பதிவு செய்யப்படாமல் இயங்கும் கடன் செயலிகளை முடக்கலாம். அதன் சார்பாக, செல்போனில் பேசி கடனை வசூலிக்க முயற்சிப்பவர்கள் மீது சைபர்கிரைம் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கலாம். கடன் செயலிக்காக நேரில் சென்று பணத்தை வசூலிக்க முயலும் நபர்களை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுக்கலாம்" என்று குறிப்பிட்டார். "அவ்வாறு பதிவு செய்யாமல் கடன் கொடுத்தால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. கடன் வழங்கும் அனைவரையும் பதிவு செய்ய வைத்து முறைப்படுத்தும் வேலையை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள உள்ளது" எனவும் சி.பி.கிருஷ்ணன் தெரிவித்தார். இதற்காக, தமிழ்நாடு அரசின் புதிய சட்டத்தில் ஒழுங்குமுறைகள் வகுக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தை ஒருவர் நடத்த விரும்பினால் அந்தந்த பகுதிகளில் உள்ள பதிவு செய்யும் அமைப்பிடம் மின்னணு படிவம் மூலம் பதிவு செய்ய வேண்டும். கடன் வழங்கும் நிறுவனத்தை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். வட்டி வீதம், இணையதள முகவரி, அலுவலக விவரங்கள் ஆகியவற்றை விளம்பர அறிவிப்புகளில் தெளிவாக கூற வேண்டும். அரசிடம் பதிவு சான்றிதழ் பெறாமல் கடன் வழங்கினால் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் 1 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் துணைத் தலைவர் சி.பி.கிருஷ்ணன் தீர்வு கிடைக்குமா? 2003 ஆம் ஆண்டில் கந்துவட்டி தடைச் சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்ததை மேற்கோள் காட்டிப் பேசிய சி.பி.கிருஷ்ணன், "அதில், எத்தனை சதவீதத்துக்கு மேல் வட்டி வாங்கக் கூடாது என்ற விவரம் இல்லை. 'மிகவும் அதிகமான', 'மனதை உலுக்கும்' ஆகிய வார்த்தைகள் மட்டும் இடம்பெற்றிருந்தன" எனக் கூறுகிறார். "கடன் செலுத்த முடியாவிட்டால் குடும்பத்தினரை தற்கொலைக்கு தூண்டுவது, பலர் முன்னிலையில் தாக்குவது போன்றவற்றை தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சாமானிய மக்களுக்கு மிகப் பெரிய தீர்வாக அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளன" எனவும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை வலியுறுத்தும் ஓய்வுபெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி, " கடன் வசூலிப்பதில் காட்டப்படும் கெடுபிடியால் தற்கொலைகள் நடக்கின்றன. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மிரட்டல்கள் குறைய வாய்ப்புகள் உள்ளன" எனக் கூறுகிறார். கல்வி, வியாபாரம் ஆகியவற்றுக்கு அதிகளவில் கடன் பெறப்படுவதாகக் கூறுகிறார், நுகர்வோர் நலன் வழக்குகளைக் கையாளும் வழக்கறிஞர் நடராஜன். கடன் தவணையைத் திருப்பிச் செலுத்தும்போது சிக்கல் ஏற்படுவதாகக் கூறும் நடராஜன், "ஒருவருக்குக் கடன் கொடுக்கும் போது அவருக்கு கடனைத் திரும்பச் செலுத்தும் திறன் உள்ளதா என்பதை நிதி நிறுவனங்கள் பார்ப்பதில்லை. அதைக் கவனித்தாலே பிரச்னைகள் குறைந்துவிடும்" என்கிறார். தொடர்பு கொள்க... நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பர்கள் அல்லது உறவினர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியிருப்பது தெரிய வந்தால் உடனடியாக சினேகா தற்கொலை தடுப்பு மையத்தின் உதவி எண்ணான 044-24640050 -க்கு அழைப்பு விடுக்கவும். மாநில சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தற்கொலை தடுப்பு மையத்திற்கு அழைப்புவிடுக்க 104 என்ற எண்ணையும் நீங்கள் தொடர்பு கொள்ளலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0j08lvzvwo
  19. கிளிநொச்சியில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு 15 JUN, 2025 | 03:49 PM கிளிநொச்சியில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்றுள்ளது. கிளிநொச்சியில் அவர்களது அலுவலகத்தில் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி யோகராசா கலாறஞ்சினி கலந்து கொண்டு குறித்த ஊடக சந்திப்பபை நடத்தியுள்ளார் இவ் ஊடக சந்திப்பில் காணாமல் ஆக்கப்பட்ட தங்களது பிள்ளைகளுக்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லை. இந்த அரசும் அதற்கான நீதியை பெற்று தருவதற்கு இது இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை. அம்பாறை தம்பிலுவில் மத்திய சந்தை பகுதியில் இயங்கி வருகின்ற அம்பாறை மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகத்தை உடனடியாக அகற்றுமாறு அதன் தலைவிக்கு மக்களின் வாக்குகளை பெற்று தவிசாளராகிய சசிக்குமார் என்பவரால் அலுவலகத்தை அகற்றுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கட்கிழமை (16) காலை அம்பாறையில் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நடைபெறவுள்ள ஐநா கூட்டத் தொடரிலே தங்களுக்கான நீதிப் பொறிமுறை விடயங்களை வலியுறுத்துவதுடன் இலங்கைக்கு விஜயம் செய்யும் ஐ.நா பிரதிநிதியிடம் காணமல் ஆக்கப்பட்ட உறவினர்களை சந்திப்பதோடு செம்மணிப்புதை குழி மற்றும் தொடுவாய் மன்னார் போன்ற புதைகுழிகளையும் பார்வையிட வேண்டும் என்றம் அது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் முன் வைக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217528
  20. 15 JUN, 2025 | 12:59 PM தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகியென முத்திரைக்குத்தப்பட்ட தரப்புடன், அதிகாரத்துக்காக கூட்டு சேர்வது சாக்கடை அரசியலாகும். அப்படியான அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் முகத்திரை தற்போது கிழிந்துவிட்டது என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். சாவக்கச்சேரியில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, நாடு தழுவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட்டு வருகின்றது. வடக்கிலும் இதற்குரிய நடவடிக்கை இடம்பெறுகின்றது. தெற்கில் கடைபிடித்த அணுகுமுறையை இதுவிடயத்தில் நாம் வடகிழக்கில் கடைப்பிடிக்கவில்லை. இங்கு நடுநிலை வகித்தோம். நாம் வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தால் இங்குள்ள தமிழ்க் கட்சிகளின் கனவு சிதைக்கப்படும். மனக்கோட்டை, மண்கோட்டையாக மாறிவிடும் என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றோம். இங்கு யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சிக்கு நாம் உதவியாக இருப்போம். ஏனெனில் மக்களுக்கு சேவை செய்வதே எமது முதன்மை நோக்கமாகும். உள்ளூராட்சி சபைகள் ஊடாக மக்களுக்கு கிடைக்கப்பெறும் சேவைகள் சரியாக சென்றடைய வேண்டும். அதற்காக எமது உறுப்பினர்கள் தீவிரமாக செயற்படுவார்கள். அதேபோல ஊழல், மோசடிகள் இடம்பெறும் பட்சத்தில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்கும் எமது உறுப்பினர்கள் செயற்படுவார்கள். மக்களை ஏமாற்றும் அரசியலை நாம் முன்னெடுக்கவில்லை. சாக்கடை அரசியல் செய்யவும் தயாரில்லை. அவ்வாறு செய்ய நினைத்திருந்தால் யாழ். மாநகரில் இன்று வேறொரு நபரே மேயராக வந்திருக்கக்கூடும். கடந்த காலங்கள் முழுவதும் தமிழ்த் தேசியப் பரப்பில் இருந்து ஓரங்கட்டப்பட்ட துரோகிகள் என முத்திரை குத்தப்பட்ட ராஜபக்சக்களுடன் நெருங்கி செயற்ப்பட்டவர் எனக் கூறப்பட்ட, மக்களுக்கு எதிராக அராஜாங்களை கட்டவிழ்த்துவிட்டவர் ஊடகவியலாளர்களைக் கொன்றவர் எனக் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுடன் கூட்டு சேரும் நிலைமை காணப்படுகின்றது. இதனை மக்களும் இன்று புரிந்துகொண்டுள்ளனர். மக்கள் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்காக அல்ல, தமது காவாலித்தனமான அரசியலை தக்கவைத்துக்கொள்வதற்காகவே இவர்கள் இவ்வாறு ஆசியமைக்கின்றனர். இப்படியானவர்கள்தான் தேசிய மக்கள் சக்தியை இனவாதகக் கட்சியெனவும், வாக்களிக்க வேண்டாம் எனவும் பிரச்சாரம் செய்தனர். ஆனால் அவர்கள் யாரென்பது தற்போது அம்பலமாகியுள்ளது. அதேபோல தெற்கிலும் கூட்டுக்களவாணிகள் கூட்டு சேர்ந்து ஆட்சியமைக்கின்றனர். கடந்த காலங்களில் ஒருவரையொருவர் எப்படி விமர்சித்துக்கொண்டனர். ஆனால் வெட்கம் இல்லாமல் அதிகாரத்துக்காக - கொள்கை துறந்து கூட்டு சேர்கின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/217500
  21. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 04:24 PM யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனை பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் நேற்று சனிக்கிழமை (14) இடம்பெற்ற மோதலில் நால்வர் காயமடைந்துள்ளனர். இரண்டு குழுக்குளுக்கிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறி வாள்வெட்டு நடைபெற்றுள்ளது. இதில் படுகாயமடைந்த நால்வர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/217533
  22. இஸ்ரேல் - இரான் மோதலில் அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்? 5 மோசமான சாத்தியக்கூறுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெள்ளிக்கிழமை இரவு இஸ்ரேலும் இரானும் சரமாரியாக வான்வழித் தாக்குதல்களை நடத்தின கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் லாண்டேல் பதவி, பிபிசி நியூஸ் 15 ஜூன் 2025, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஜூன் 13-ஆம் தேதி அதிகாலையில் இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை மேற்கொண்டதாக அறிவித்தது. இந்தத் தாக்குதல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற திட்டத்தின் ஓர் அங்கமாக நடத்தப்பட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறினார். இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும் இரானின் புரட்சிகர காவல் படை தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் கூறியது. இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்த தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறினார். இப்போதைக்கு இஸ்ரேல் - இரான் சண்டை, இந்த இரு நாடுகளுக்கும் இடையிலானது என்றே தெரிகிறது. ஐக்கிய நாடுகள் சபையிலும் மற்ற இடங்களிலும் இரு தரப்பிலும் கட்டுப்பாடு தேவை என்று பரவலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவையனைத்தும் அவர்களது காதில் விழவில்லையெனில் என்ன செய்வது? அப்படி இரு நாடுகள் இடையிலான மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது? அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்? அமெரிக்கா திட்டவட்டமாக மறுத்திருந்தாலும், அமெரிக்க படைகள் இஸ்ரேலின் தாக்குதல்களை ஆதரித்ததாகவும், குறைந்தபட்சம் மறைமுகமாக ஆதரித்ததாகவும் இரான் தெளிவாக நம்புகிறது. இராக்கில் உள்ள சிறப்புப் படை முகாம்கள், வளைகுடாவில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் பிராந்தியத்தில் உள்ள ராஜ்ஜீய பணிகள் என மத்திய கிழக்கு முழுவதும் உள்ள அமெரிக்க இலக்குகளை இரான் தாக்கக்கூடும். இரான் ஆதரவு பெற்ற ஹமாஸ், ஹெஸ்பொலா ஆகியவற்றின் பலம் குறைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இராக்கில் அதன் ஆதரவுப் போராளிகள் ஆயுதம் ஏந்தியவர்களாக அப்படியே இருக்கின்றனர். அமெரிக்கா இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கும் சாத்தியமுள்ளது என அஞ்சி, சில அதிகாரிகளைத் திரும்பப் பெற்றது. தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில், அமெரிக்க இலக்குகள் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்கா இரானை எச்சரித்துள்ளது. ஒருவேளை டெல் அவிவ் அல்லது வேறு ஏதேனும் பகுதியில் ஓர் அமெரிக்க குடிமகன் கொல்லப்பட்டால் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவேளை அமெரிக்கா நேரடியாக இந்தச் சண்டையில் பங்கெடுத்தால், அது கடுமையான, நீண்டகால மோதலுக்கு வழிவகுக்கும் டொனால்ட் டிரம்ப் எதிர்செயலாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இரானை தோற்கடிக்க உதவுவதற்கு அமெரிக்காவையும் இழுக்க முயல்வதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மீது நீண்ட காலமாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இரான் பூமிக்கடியில் நிர்மாணித்துள்ள ஃபோர்டோ போன்ற அணுசக்தி நிலையங்களை தகர்க்கக் கூடிய வகையில், கீழே ஊடுருவிச் சென்று தாக்கக் கூடிய குண்டுகள் அமெரிக்காவிடம் மட்டுமே உள்ளன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "மத்திய கிழக்கில் நீண்ட போர்களைத் தொடங்க மாட்டேன்" என்று டொனால்ட் டிரம்ப் தனது ஆதரவாளர்களுக்கு உறுதியளித்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் பல குடியரசுக் கட்சியினர் இஸ்ரேலை வலுவாக ஆதரிக்கின்றனர். இரான் அரசை அதிகாரத்தில் இருந்து அகற்ற முயல்வதற்கு இதுவே சரியான நேரம் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் உடன்படுகிறார்கள். ஒருவேளை அமெரிக்கா நேரடியாக இந்தச் சண்டையில் பங்கெடுத்தால், அது கடுமையான, நீண்டகால மோதலுக்கு வழிவகுக்கும். வளைகுடா முழுவதும் பரவுமா? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலை தாக்குவது கடினமாக இருந்தால், அதற்கு ஆதரவளிக்கும் வளைகுடா நாடுகள் மீது இரான் குறிவைக்கலாம் இஸ்ரேல் ராணுவம் மற்றும் பிற இலக்குகளை இரான் சேதப்படுத்தத் தவறும் பட்சத்தில், அதன் கவனம் வளைகுடாவில் உள்ள பிற எளிய இலக்குகளை நோக்கித் திரும்பக்கூடும். குறிப்பாகப் பல ஆண்டுகளாக அதன் எதிரிகளுக்கு உதவியதாகவும் உடந்தையாக இருந்ததாகவும் இரான் நம்பும் நாடுகளை அதன் ஏவுகணைகள் குறிவைக்கலாம். இந்தப் பிராந்தியத்தில் ஏராளமான எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் உள்ளன. கடந்த 2019-இல் சௌதி அரேபியாவின் எண்ணெய் வயல்களைத் தாக்கியதாக இரான் மீது குற்றம் சாட்டப்பட்டது. இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி படைகள் 2022-இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இலக்குகளைத் தாக்கியதையும் நினைவில் கொள்ள வேண்டியுள்ளது. அதன் பிறகு இரானுக்கும் பிராந்தியத்தில் உள்ள சில நாடுகளுக்கும் இடையே ஒரு வகையான சமரசம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த நாடுகள் அமெரிக்க விமானப்படைத் தளங்களுக்கு இடம் அளித்துள்ளன. அவற்றில் சில கடந்த ஆண்டு இரானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க உதவின. ஒருவேளை வளைகுடா நாடுகள் தாக்கப்பட்டால், இஸ்ரேலை போலவே அவையும் அமெரிக்க போர் விமானங்களைத் தனது பாதுகாப்புக்கு வருமாறு கோரக்கூடும். இஸ்ரேலின் தாக்குதல் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெஹ்ரான் மற்றும் பிற இடங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை இஸ்ரேலிய தாக்குதல்கள் சேதப்படுத்தின. ஒருவேளை, இஸ்ரேல் இரானின் அணுசக்தித் திறனை அழிக்கத் தவறினால் என்ன நடக்கும்? இரானின் அணுசக்தி நிலையங்கள் மிகவும் ஆழமாகவும், நன்கு பாதுகாக்கப்பட்டதாகவும் இருந்தால் என்ன செய்வது? இரானின், 60% செறிவூட்டப்பட்ட 400 கிலோ யுரேனியம், முழுமையாக ஆயுதமயமாவதற்கு இன்னும் ஒரு சில படிகள் மட்டுமே உள்ளன. கிட்டத்தட்ட 10 அணுகுண்டுகளை உருவாக்கப் போதுமான அந்த திறன் அழிக்கப்படாவிட்டால் என்ன செய்வது? இது ரகசிய சுரங்கங்களில் ஆழமாக மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இஸ்ரேல் சில அணு விஞ்ஞானிகளைக் கொன்றிருக்கலாம். ஆனால், எந்தக் குண்டுகளாலும் இரானின் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை அழிக்க முடியாது. ஒருவேளை இஸ்ரேலின் தற்போதைய தாக்குதல், இத்தகைய மேலதிக தாக்குதல்களைத் தடுப்பதற்கான ஒரே வழி தனது அணுசக்தித் திறனை வேகமாக நிறைவடையச் செய்வதுதான் என்று இரான் தலைமையை நினைக்க வைத்தால் என்ன செய்வது? புதிய ராணுவ தலைவர்கள் அதிக தலைக்கனத்துடனும், குறைவான எச்சரிக்கை உணர்வுடனும் இருந்தால் என்ன செய்வது? இந்தச் சூழ்நிலை ஏற்பட்டால், அது இஸ்ரேலை மேலும் தாக்குதல்களை நடத்தக் கட்டாயப்படுத்தக் கூடும். அது பிராந்தியத்தை தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் எதிர்த் தாக்குதல்களுக்கும் பிணைக்கக் கூடும். இஸ்ரேலியர்கள் இத்தகைய செயலை "புற்களை வெட்டுதல்" என்று அழைக்கின்றனர். உலகளாவிய பொருளாதார அதிர்ச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த மோதல் தீவிரமடைவது உலகளாவிய வாழ்க்கைச் செலவுகளில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம் (சித்தரிப்புப் படம்) எண்ணெய் விலை ஏற்கெனவே உயர்ந்து வருகிறது. இரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடி, எண்ணெய் போக்குவரத்தை மேலும் கட்டுப்படுத்த முயன்றால் என்ன செய்வது? அரேபிய தீபகற்பத்தின் மறுபுறத்தில், ஏமனில் உள்ள ஹூத்திகள் செங்கடலில் கப்பல் போக்குவரத்தை தாக்கும் தங்கள் முயற்சிகளை இரட்டிப்பாக்கினால் என்ன செய்வது? ஹூத்தி படையைக் கணிப்பது மிகவும் கடினமானது மற்றும் அவர்கள் ஆபத்துகளின் மீது தீராப்பசி கொண்டவர்களாக அறியப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் வாழ்க்கைச் செலவின அதிகரிப்பால் மக்கள் நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றனர். டிரம்பின் வரிக்குவரி யுத்தத்தின் விளைவாக ஏற்கெனவே உருவாகியுள்ள சிக்கலுக்கு நடுவே எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கும். கச்சா எண்ணெய் விலை உயர்வால் பயனடையும் ஒரே நபர் ரஷ்ய அதிபர் புதின் மட்டுமே. அதன் பயனாக, யுக்ரேனுக்கு எதிரான அவரது போருக்குத் தேவையான பணம் கிரெம்ளின் கஜானாவில் பில்லியன் கணக்கில் குவியத் தொடங்கும் என்பதை மறந்துவிடக்கூடாது. இரான் ஆட்சி வீழ்ந்து, வெற்றிடம் உருவானால்... பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானில் உள்ள தற்போதைய அரசாங்கத்தை வீழ்த்துவது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தக்கூடும் இரானில் ஆட்சியை வீழ்ச்சியடையச் செய்யும் தனது நீண்டகால நோக்கத்தில் இஸ்ரேல் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்? இரானின் அணுசக்தித் திறனை அழிப்பதே தனது முதன்மை நோக்கம் என்று நெதன்யாகு கூறுகிறார். ஆனால், ஜூன் 13 அன்று வெளியிட்ட அறிக்கையில் அறிக்கையில் தனது பரந்த நோக்கம் ஆட்சி மாற்றத்தையும் உள்ளடக்கியது என்பதை அவர் தெளிவுபடுத்தினார். "இரானின் பெருமை மிக்க மக்களிடம்" அவர் தனது தாக்குதல் "தீய மற்றும் அடக்குமுறை ஆட்சி மீதானது" என்று அவர் குறிப்பிட்டதில் இருந்து "அவர்கள் சுதந்திரத்தை அடைவதற்கான பாதை இது," என்பது தெளிவாகிறது. இரான் அரசாங்கத்தை வீழ்த்துவது பிராந்தியத்தில் சிலருக்கு, குறிப்பாக சில இஸ்ரேலியர்களுக்கு ஏற்புடையதாக இருக்கக் கூடும். ஆனால் அது விட்டுச் செல்லப்போகும் வெற்றிடம் என்ன? அதன் எதிர்பாராத விளைவுகள் என்னவாக இருக்கும்? இரானில் உள்நாட்டு மோதல் எப்படி இருக்கும்? வலுவான மையப்படுத்தப்பட்ட அரசாங்கம் அகற்றப்பட்ட போது இராக் மற்றும் லிபியாவில் என்ன நடந்தது என்பது பலருக்கும் நினைவில் இருக்கலாம். எனவே, வரும் நாட்களில் இந்த மோதல் எவ்வாறு பரிணாமம் பெறுகிறது என்பதைப் பொறுத்தே நிலைமை மாறும். இரான் எவ்வாறு, எவ்வளவு கடினமாக பதிலடி கொடுக்கும்? இஸ்ரேல் மீது அமெரிக்காவால் எத்தகைய கட்டுப்பாடுகளை விதிக்க முடியும்? இந்த இரண்டு கேள்விகளுக்கான பதிலைப் பொறுத்தே அடுத்து வரக்கூடிய சூழ்நிலைகளும் அமையும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8e60nz2kkxo
  23. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 12:49 PM இந்தியாவின் கேரளா மாநிலத்திலுள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று சனிக்கிழமை (14) இரவு பிரித்தானியாவுக்குச் சொந்தமான F-35 என்ற போர் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் தாங்கி போர்க் கப்பலில் இருந்து புறப்பட்டதாக நம்பப்படும் இந்த ஜெட் விமானத்தில் எரிபொருள் தீர்ந்ததால் இரவு 9.30 மணியளவில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. சீராகவும் பாதுகாப்பாகவும் தரையிறங்குவதை உறுதி செய்வதற்காக விமான நிலைய அதிகாரிகள் அவசரநிலையை அறிவித்தனர். "விமானத்தில் குறைந்தளவில் எரிபொருள் இருப்பதாக அறிவித்து விமானி தரையிறங்க அனுமதி கேட்டார். தரையிறக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாகவும் முறையாகவும் கையாளப்பட்டது என விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். விமானம் தற்போது விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசாங்கத்தில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற்றவுடன் எரிபொருள் நிரப்பப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். டைபூன் விமானத்துடன் இணைந்து இயக்கப்படும் F-35B லைட்னிங், குறுகியதூரம் சென்று செங்குத்தாக தரையிறங்கும் திறன்களுக்கு பெயர் பெற்ற ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானமாகும். இது துல்லியமான தரைத் தாக்குதல்கள், மின்னணுப் போர், கண்காணிப்பு மற்றும் வான்வழிப் போர் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆற்றுகின்றது. https://www.virakesari.lk/article/217509
  24. Published By: DIGITAL DESK 3 15 JUN, 2025 | 10:30 AM இந்தியாவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அதிகாலை 5:20 மணியளவில் ஹெலிகொப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. ஸ்ரீ கேதார்நாத் தாம் நகரிலிருந்து குப்தகாஷிக்குச் சென்று கொண்டிருந்த ஹெலிகொப்டர் ஒன்றே, கௌரிகுண்ட் அருகே விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். மோசமான வானிலை காரணமாக தெளிவற்ற நிலையில் கௌரிகுண்ட் காட்டு பகுதியில் விழுந்து விபத்து நிகழ்ந்ததாக உத்தரகாண்ட் மாநில அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217490
  25. Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 07:58 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சுமத்தியுள்ளார். மருந்து தட்டுப்பாடு தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு எதிர்க்கட்சி தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது : நாட்டில் பல அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றன. இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் விரைந்து தீர்வு காண வேண்டும். இலவச சுகாதாரம் என்பது மக்களின் மனித உரிமையாகும். இலவச சுகாதார கட்டமைப்பினுள் வினைதிறனான சேவைகளைப் பெறுவது நாட்டு மக்களுக்கு அடிப்படை உரிமையாக அமைந்து காணப்பட்டாலும், இத்தருணத்தில் நமது நாட்டின் சுகாதார கட்டமைப்பில் கடுமையான வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை உபகரணங்கள் உள்ளிட்ட மருந்துகளுக்கு கடுமையான பற்றாக்குறை நிலவுவதே இதற்குக் காரணமாகும். புற்றுநோய் நோயாளிகள், இதய நோயாளிகள், உயர் இரத்த அழுத்த நோயாளிகள், சிறுநீரக நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் மருந்துகளுக்கும், வலி நிவாரணிகள் மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகளுக்கும் கடுமையான தட்டுபாடு நிலவுகின்றன. கிடைக்கும் தகவல்களின் பிரகாரம் 180 க்கும் மேற்பட்ட மருந்துகளுக்கு இவ்வாறு தட்டுப்பாடு நிலவுகிறது. மருத்துவமனை கட்டமைப்பில் நிலவும் மருந்து தட்டுபாட்டுப் பிரச்சினைய பாராளுமன்றத்தில் நான் முன்வைத்தேன். இலவச சுகாதாரப் பராமரிப்பின் கீழ் அரச மருத்துவமனைகளுக்குச் சென்றாலும் நோயாளர்களுக்கு மருந்துகள் கிடைப்பதில்லை. தனியார் மருத்துவ நிறுவனங்கள் மூலம் அதிக விலைக்கு மருந்துகளைப் பெற வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனை இலவச சுகாதார சேவையாக கருத முடியாது. மாறாக கட்டணம் செலுத்தும் சுகாதார சேவையாகவே காணப்படுகின்றன. நமது நாட்டின் நலன்புரி பொருளாதாரம் மற்றும் நலன்புரி அரசில் இலவச சுகாதார சேவைகளை திறம்பட செயல்படுத்த அமைச்சர், அமைச்சின் அதிகாரிகள் மற்றும் ஒட்டுமொத்த அரசாங்கமும் முழு மூச்சோடு பாடுபட வேண்டும். மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு தீர்வை வழங்காமல், மக்களின் இந்த அடிப்படை உரிமையையும் மனித உரிமையையும் அரசாங்கம் மீறி வருகின்றது. அரசாங்கம் எந்த தீர்வையும் வழங்காத ஒரு கொள்கையையே பின்பற்றி வருகிறது. இது குறித்து பாராளுமன்றத்தில் வினவப்பட்டாலும், அரசாங்க தரப்பில் இருந்து இதற்கு எந்த தீர்வுகளும் வழங்கப்படவில்லை. மக்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள இந்நேரத்தில், நாட்டு மக்களை உயிருடன் வைத்திருக்கத் தேவையான மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும். பல ஆண்டுகளாக நடைமுறையில் காணப்படும் விலைமனு செயல்முறையை மட்டும் சுட்டிக்காட்டாமல், இந்த மருந்துப் பிரச்சினைக்கு அவசரத் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். மக்களின் உயிர்வாழ்வை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பாக அமைந்து காணப்படுவதனால், மனித உயிர்களைக் கருத்தில் கொண்டு இந்த கடுமையான பிரச்சினைக்கு உடனடி தீர்வு வழங்குமாறு வலியுறுத்துகின்றோம். https://www.virakesari.lk/article/217453

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.