Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. டெஹ்ரானை மீண்டும் தாக்கிய இஸ்ரேல், அலையலையாக ஏவுகணைகளை வீசும் இரான் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல் - இரான் ஆகிய இரு நாடுகளும் மாறிமாறி தாக்குதலைத் தொடர்வதால் மத்திய கிழக்கில் ஏற்கனவே நிலவும் போர்ப் பதற்றம் நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. இரான் தலைநகர் டெஹ்ரானில் அந்நாட்டின் பாதுகாப்புத்துறை தலைமையகம், எண்ணெய் சேமிப்புக் கிடங்கு ஆகியவற்றை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. அதே நேரத்தில், இரான் ஒரே இரவில் அலையலையாக இரு முறை ஏவுகணைகளை வீசி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதல்களில் இரு நாடுகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. டெஹ்ரானில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் டெஹ்ரானில் உள்ள எண்ணெய்க் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதாக இரானிய எண்ணெய் அமைச்சகமும் கூறுகிறது. இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கை இஸ்ரேல் தாக்கியதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. அதில் எரிபொருள் அதிகமாக இல்லை என்றும் நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் அவர்கள் கூறுகிறார்கள். டெஹ்ரானில் மக்கள் வசிக்கும் இடத்திற்கு மிக அருகில் ஷாஹ்ரான் எண்ணெய் கிடங்கு அமைந்துள்ளதால், அது அதிக ஆபத்து நிறைந்தது என்று டெஹ்ரானின் தீயணைப்புத் துறை முன்பு எச்சரித்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இரானின் அணுசக்தி உள்கட்டமைப்பை தாக்கினோம் - இஸ்ரேல் ராணுவம் இரானின் அணுசக்தித் திட்டத்துடன் தொடர்புடைய டெஹ்ரானில் உள்ள உள்கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. இரானிய பாதுகாப்பு அமைச்சகத்தின் தலைமையகமும் தங்களது இலக்குகளில் அடங்கும் என்று இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது இரான் சரமாரி ஏவுகணை வீச்சு இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் மீது சரமாரியாக ஏவுகணைகளை இரான் ஏவியது. ஒரே இரவில் இரண்டு முறை அலையலையாக இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெல் அவிவ் நகருக்கு தெற்கே உள்ள பாட் யாமில் ஒரு கட்டடம் இரான் தாக்குதலுக்கு இலக்கானது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று இஸ்ரேலிய அவசர சேவைகள் பிரிவு தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES டெல் அவிவ் அருகே நடந்த மற்றொரு தாக்குதலில் 60 வயது பெண் ஒருவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அவசர சேவையான மேகன் டேவிட் அடோம் (MDA) தெரிவித்துள்ளது. அதே பகுதியில் மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர், அதே போல் யூடியன் அடிவாரத்தில் நடந்த தாக்குதலில் 24 பேர் காயமடைந்துள்ளனர் என்று MDA இன் செய்தித் தொடர்பாளர் கூறினார். இஸ்ரேலின் வடக்கே ஹைஃபா அருகே ஒரு குடியிருப்பு பகுதியை ஏவுகணைகள் தாக்கியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டதாக பல இஸ்ரேலிய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிக்கைகளை இந்த நேரத்தில் பிபிசியால் சரிபார்க்க முடியவில்லை. இஸ்ரேலுக்கு இரான் எச்சரிக்கை இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. "இஸ்ரேலில் போர் விமான எரிபொருள் மற்றும் எரிசக்தி விநியோக மையங்களை குறிவைத்து தாக்கியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்தால் இரானின் தாக்குதல் "மேலும் தீவிரமடையும்" என்று இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது. (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1j5j07l8deo
  2. 14 JUN, 2025 | 07:20 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். அதனை அடிப்படையாக்க கொண்டு நான் இனவாதத்தை தூண்டுவதாகக் குறிப்பிட்டு என்னை கைது செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. சிறையிலடைப்பதாகக் கூறியோ சுட்டுக் கொல்வோம் எனக் கூறியோ என்னை அச்சுறுத்தி என் குரலை ஒடுக்க முடியாது என முன்னாள் அமைச்சரும் பிவிதுரு ஹெல உருமயவின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்தார். சனிக்கிழமை (14) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், ஜே.வி.பி.யின் செயற்பாட்டாளர்களே என்னை கைது செய்யுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கத்தின் பல்வேறு தவறுகளை நான் ஆதாரத்துடன் நாட்டுக்கு வெளிப்படுத்துவதால் தான் என்னை கைது செய்வதற்கு தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நான் இனவாதத்தைத் தூண்ட முயற்சித்ததாகக் குறிப்பிட்டு சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சட்டத்தின் கீழ் என்னை கைது செய்ய அரசாங்கம் திட்டமிட்டு வருகிறது. இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டால் நீண்ட காலம் பிணை இன்றி என்னை விளக்கமறியலில் வைக்க முடியும் என்பதே அரசாங்கத்தின் திட்டமிடலாகும். அந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காகவே எனக்கெதிராக இரு ஆர்ப்பாட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. சோதனையின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் என்னிடம் வாக்குமூலம் பெற்று அதன் பின்னர் கைது செய்வதே இதன் நோக்கமாகும். ஆனால் அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய என்னை கைது செய்ய முடியாது. காரணம் என் மீது அவ்வாறு எந்தக் குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை. நான் எந்த வகையில் இனவாதத்தை தூண்டியிருக்கின்றேன் என்பதை இவர்கள் முதலில் தெளிவுபடுத்த வேண்டும். கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்ததாக நான் கூறியதாகத் தெரிவித்தனர். ஆனால் இது தொடர்பில் சுங்க அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் அமில சஞ்சீவவினால் தான் முதன் முதலில் சந்தேகம் வெளியிடப்பட்டது. ஜனாதிபதி தனது ஜேர்மன் விஜயத்தின் போது விடுதலைப் புலிகள் அமைப்பின் நெடியவன் என்பவரை சந்திக்கவிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியாகியிருப்பதாக நான் தெரிவித்திருந்தேன். இதனை அடிப்படையாகக் கொண்டும் என்னை கைது செய்ய முடியுமா என்று கலந்தாலோசித்து வருகின்றனர். என்னை எவ்வாறு கைது செய்வது என்பது குறித்து சிந்திப்பதை விடுத்து, வெளியாகியுள்ள இந்த செய்திகள் குறித்து உண்மையை வெளிப்படு;த்துமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக் கொள்கின்றோம். எவ்வாறிருப்பினும் அரசாங்கம் திட்டமிடுவதைப் போன்று என்னை ஒருபோதும் கைது செய்ய முடியாது. நான் ஒரு சட்டத்தரணி என்பதால் மிகுந்த அவதானத்துடன் சொற்களை அல்லது வசனங்களைப் பிரயோகிப்பேன். பிள்ளையானைப் போன்று என்னையும் சட்டத்துக்கு விரோதமாக கைது செய்து, மக்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்துவதை தடுத்து வைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருக்கக் கூடும். உதய கம்மன்பிலவை சிறையிலடைப்பதாவோ சுட்டுக் கொல்வதாகவோ கூறி மிரட்ட முடியாது என்பதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் தெளிவாகக் கூறிக் கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/217474
  3. பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு விமான விபத்தில் ஹூபர்ட் வாரன் (இடது) இறந்தார். கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா சீல்ஸ் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 1934ஆம் ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மிஸ் ஹோபார்ட் என்ற பயணிகள் விமானம் கடலில் விழுந்தது. அதில் பயணித்த 8 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் குழந்தை என அனைவரும் உயிரிழந்தனர். டாஸ்மேனியாவிற்கும் ஆஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கும் இடையில் அமைந்துள்ள பாஸ் நீரிணை பகுதியில் அந்த விமானம் விழுந்ததாக நம்பப்படுகிறது. விமானத்தின் சிதைவுகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த விமானத்தில் இருந்தவர்களில் ஒருவர் 33 வயதான ஆங்கிலிகன் மிஷனரி ரெவரெண்ட் ஹூபர்ட் வாரன். அவர் சிட்னியின் என்ஃபீல்டில் உள்ள தனது புதிய திருச்சபைக்குச் சென்று கொண்டிருந்தார். அவரது மனைவி எல்லி மற்றும் 4 குழந்தைகள் அவருடன் பயணிக்கவில்லை. தனது எட்டு வயது மகன் டேவிட்டிற்கு, ஹூபர்ட் கடைசியாக ஒரு பரிசு அளித்திருந்தார். அது ஒரு கிரிஸ்டல் வானொலிப் பெட்டி, அதை அந்தச் சிறுவன் மிகவும் பொக்கிஷமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். டாஸ்மேனியாவில் உள்ள லான்செஸ்டன் ஆண்கள் பள்ளியில் தங்கியிருந்த டேவிட் வாரன், வகுப்புகளுக்குப் பிறகு அந்த வானொலியை ஆய்வு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார். வானொலி மூலம் கிரிக்கெட் போட்டிகளைக் கேட்க நண்பர்களிடம் ஒரு பைசா என கட்டணம் வசூலித்தார். சில வருடங்களுக்குள் தான் சொந்தமாக தயாரித்த சிறு வானொலிகளை ஒவ்வொன்றும் ஐந்து ஷில்லிங் என்ற விலையில் விற்றார். டேவிட் ஒரு துடிப்பான இளைஞனாகவும் அற்புதமான பேச்சாளராகவும் இருந்தார். ஆழ்ந்த மதப்பற்று கொண்ட அவரது குடும்பத்தினர், அவர் ஒரு சுவிசேஷப் பிரசாரகர் ஆக வேண்டும் என்று கனவு கண்டனர். ஆனால் அது நடக்கவில்லை. தந்தை ரெவ் ஹூபர்ட் அளித்த அந்தப் பரிசு, டேவிட்டிற்கு அறிவியல் மீது பெரும் காதல் ஏற்பட வழிவகுத்தது. வருங்காலத்தில் பல உயிர்களைக் காப்பாற்றுவதில் அந்தக் காதல் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தது. ஏஆர்எல் ஆய்வகத்தில் ஆராய்ச்சியாளராகப் பணி பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION படக்குறிப்பு, டேவிட் பள்ளி மாணவனாக இருந்தபோது, மின்னணு சாதனங்களால் ஈர்க்கப்பட்டு, சொந்தமாக வானொலி பெட்டிகளை உருவாக்கக் கற்றுக்கொண்டார். டேவிட் வாரன் தனது இருபதுகளின் நடுப்பகுதியில், சிட்னி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பு, மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கல்வியில் டிப்ளமோ மற்றும் லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் வேதியியலில் முனைவர் பட்டம் ஆகிய படிப்புகளை முடித்தார். அவரது நிபுணத்துவம் ராக்கெட் அறிவியல். எனவே அவர் ஆஸ்திரேலியாவின் பாதுகாப்புத் துறையின் ஒரு அங்கமான விமான ஆராய்ச்சி ஆய்வகங்களில் (ARL- ஏஆர்எல்) ஆராய்ச்சியாளராகப் பணியாற்றச் சென்றார். அத்துறை விமானங்களில் கவனம் செலுத்தியது. ஏஆர்எல் துறை 1953ஆம் ஆண்டில், ஒரு முக்கியமான மர்மத்தைத் தீர்க்க முயற்சிக்கும் ஒரு நிபுணர் குழுவிடம் டேவிட்டை அனுப்பிவைத்தது. உலகின் முதல் வணிக ஜெட் விமானமும் புதிய ஜெட் யுகத்தின் பெரும் நம்பிக்கையுமான, பிரிட்டிஷ் டி ஹாவிலேண்ட் காமெட் (de Havilland Comet) விமானம் ஏன் தொடர்ந்து விபத்துகளை சந்தித்தது? என்பதே அந்த மர்மம். அதற்கு காரணம் எரிபொருள் டேங்காக இருக்கலாம் என்று டேவிட் நினைத்தார். ஆனால் பல்வேறு சாத்தியமான காரணங்கள் இருந்தன. இருப்பினும், மனித உடல்கள் மற்றும் விமான பாகங்கள் தவிர ஆதாரம் என வேறு எதுவும் இந்த விபத்துகளில் இருந்து கிடைக்கவில்லை. "விமானியின் தவறுகளா, ஊழியர்களுக்கான பயிற்சி போதவில்லையா, விமானத்தின் வால் பகுதி உடைந்ததா என எனக்குத் தெரியாத பிற விஷயங்களைப் பற்றி அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்," என்று டாக்டர் டேவிட் வாரன் 50 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை நினைவு கூர்ந்தார். "ஒரு வாரத்திற்கு முன்பாக தான், இரண்டாம் உலகப் போருக்கு பிந்தைய முதல் வர்த்தக கண்காட்சி சிட்னியில் நடைபெற்றது. அதில் நான் பார்த்த ஒரு பொருளைப் பற்றி அந்த கூட்டத்தில் யோசித்துக் கொண்டிருந்தேன். அதுதான் - முதல் பாக்கெட் ரெக்கார்டர் (Pocket recorder) என்று கூறப்படும் மினிஃபோன். ஒரு ஜெர்மன் சாதனம். அதற்கு முன்பு அது போன்ற ஒரு சாதனம் இருந்ததில்லை." பட மூலாதாரம்,DEFENCE SCIENCE AND TECHNOLOGY, AUSTRALIA படக்குறிப்பு, 1958 ஆம் ஆண்டு ஏஆர்எல் அமைப்பில் டேவிட் வணிகர்களுக்கான ஒரு 'டிக்டேஷன்' இயந்திரமாக மினிஃபோன் சந்தைப்படுத்தப்பட்டது. இந்த இயந்திரம் மூலம் ஒருவர் தனது பேச்சை அல்லது தகவலை எங்கிருந்து வேண்டுமானாலும் பதிவு செய்யலாம், பின்னர் அவர்களின் உதவியாளர்களால் அது தட்டச்சு செய்யப்படும். ஸ்விங் இசை ரசிகரான டேவிட், ஜாஸ் இசைக்கலைஞர் வூடி ஹெர்மனின் இசையைப் பதிவு செய்ய ஒரு மினிஃபோன் கிடைத்தால் போதுமென விரும்பினார். இருப்பினும், அவரது சக விஞ்ஞானிகளில் ஒருவர், கடைசியாக விபத்துக்குள்ளான காமெட் விமானம் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறிய போது, அவருக்கு ஒரு யோசனை எழுந்தது. ஒரு ரெக்கார்டர் விமானத்தில் இருந்து, அது தீ விபத்தில் இருந்து தப்பித்திருக்க வாய்ப்புகள் இல்லை. ஆனால் வானத்தில் பறக்கும் ஒவ்வொரு விமானத்தின் காக்பிட்டிலும் ஒரு மினி ரெக்கார்டர் இருந்தால்? அது சாத்தியம் என்றால், விபத்து குறித்து புலனாய்வு செய்பவர்கள் மீண்டும் ஒருபோதும் இவ்வளவு குழப்பமடைய மாட்டார்கள். ஏனென்றால் விபத்து நடந்த தருணம் வரை பதிவான அவர்களிடம் ஆடியோ இருக்கும். குறைந்தபட்சம், விமானிகள் என்ன சொன்னார்கள், என்ன கேட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த யோசனை அவரை மிகவும் கவர்ந்தது. ஏஆர்எல்-க்கு திரும்பியதும், அதைப் பற்றி தனது மேலதிகாரியிடம் சொல்ல விரைந்தார். ஆனால், மேலதிகாரி அவரது உற்சாகத்தைப் புரிந்து கொள்ளவில்லை. "இது வேதியியலோ அல்லது எரிபொருட்களோ சம்பந்தப்பட்டதல்ல. நீங்கள் ஒரு வேதியியலாளர். எனவே இந்தப் பிரச்னையை கருவிகள் குழு கையாளட்டும்" என்று தன்னிடம் கூறப்பட்டதாக டாக்டர் டேவிட் வாரன் சொல்கிறார். 'இதை வெளியே பேசினால், வேலை பறிக்கப்படும்' பட மூலாதாரம்,WARREN FAMILY COLLECTION படக்குறிப்பு, டேவிட், அவரது மனைவி ரூத் மற்றும் அவர்களது நான்கு குழந்தைகள் (1958) காக்பிட் ரெக்கார்டர் குறித்த தனது யோசனை சிறப்பானது தான் என்று டேவிட் அறிந்திருந்தார். ஆனால் அதிகாரப்பூர்வ ஆதரவு இல்லாமல், அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. அந்த யோசனையை மனதில் இருந்து அகற்றவும் முடியவில்லை. அவரது மேலதிகாரி பதவி உயர்வு பெற்று சென்றபிறகு, டேவிட் மீண்டும் தனது யோசனையை முன்வைத்தார். அவரது புதிய மேலதிகாரியும், ஏஆர்எல்-இன் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் லாரி கூம்ப்ஸும் இதில் ஆர்வம் காட்டினர். அவர்கள் அவரை அதில் தொடர்ந்து பணியாற்றுமாறு வற்புறுத்தினர் - ஆனால் ரகசியமாக. இது அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட முயற்சியோ அல்லது போரில் வெற்றிபெற உதவக்கூடிய ஒரு ஆயுதமோ இல்லை என்பதால், அதற்கென ஆய்வக நேரத்தையோ பணத்தையோ ஒதுக்க முடியாது. "இந்த விஷயத்தைப் பற்றி நீங்கள் யாரிடமாவது பேசுவதைக் கண்டால், நான் உங்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டியிருக்கும்" என்று தலைமை கண்காணிப்பாளர் தன்னை எச்சரித்ததாக டாக்டர் டேவிட் வாரன் கூறினார். மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளைஞனுக்கு அது சற்று கவலைக்குரியதாகவே இருந்தது. ஆனால் அவரது மேலதிகாரியின் ஆதரவுடன், புதிய டிக்டேஷன் ரெக்கார்டர்களில் ஒன்றை மறைமுகமாக வாங்கி, அதை 'ஆய்வகத்திற்குத் தேவையான ஒரு கருவி' என்ற பட்டியலில் சேர்த்தார் டேவிட். அதன் பிறகு உற்சாகமடைந்த டாக்டர் டேவிட் வாரன், "விமான விபத்துகள் பற்றிய விசாரணைக்கு உதவும் ஒரு சாதனம்" என்ற தலைப்பிட்ட ஒரு அறிக்கையில் தனது யோசனையை எழுதி, அதைத் துறை முழுவதும் அனுப்பினார். விமானிகள் சங்கம் அதற்கு கோபத்துடன் பதிலளித்தது, அந்த ரெக்கார்டரை ஒரு உளவு பார்க்கும் சாதனம் என்று முத்திரை குத்தியது. "இந்த உளவு சாதனம் பொருத்திக் கொண்டு ஆஸ்திரேலியாவில் இருந்து எந்த விமானமும் புறப்படாது" என்றும் வலியுறுத்தியது. ஆஸ்திரேலிய சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இந்த சாதனத்திற்கு 'உடனடி முக்கியத்துவம் இல்லை' என்று அறிவித்தனர். இத்தகைய யோசனை 'விளக்கங்களை விட அதிக அவதூறுகளுக்கே வழிவகுக்கும்' என்று விமானப்படை அஞ்சியது. அனைத்து முயற்சிகளையும் நிறுத்தி விடலாமா என்ற எண்ணம் டாக்டர் வாரனுக்கு எழுந்தது. டேவிட்டின் பிடிவாத குணம் பட மூலாதாரம்,AFP/GETTYIMAGES படக்குறிப்பு, கருப்புப் பெட்டி என்று அழைக்கப்பட்டாலும் உண்மையில் அது ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். இருப்பினும், டாக்டர் டேவிட் வாரனின் மூத்த மகனான பீட்டரின் கூற்றுப்படி, "டேவிட் பிடிவாத குணம் கொண்டவர். அவரின் சுதந்திர மனப்பான்மை, அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்திலும் ஆதிக்கம் செலுத்தியது". அந்த குணம் தான் டேவிட் வாரனை தொடர்ந்து முயற்சி செய்ய வைத்தது. தனது கேரேஜுக்கு சென்ற டேவிட், தனது 20 வருட பழைய வானொலி பாகங்களை ஒன்று சேர்த்தார். தன் மீதான விமர்சனங்கள், கேலிகள் மற்றும் சந்தேகத்தைப் போக்க ஒரே வழி, ஒரு வலிமையான முன்மாதிரி சாதனத்தை உருவாக்குவதுதான் என்று அவர் முடிவு செய்தார். அதுதான் உலகின் முதல் விமான ரெக்கார்டர் அல்லது கருப்புப் பெட்டி. ஒரு சிறிய விமான ரெக்கார்டர் உருவாக்கப்பட்டு, மேம்படுத்தப்பட்ட பிறகு, 1958ஆம் ஆண்டில், ஒருநாள் ஏஆர்எல் ஆய்வகத்திற்கு எதிர்பாராத ஒரு விருந்தினர் வந்தார். தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் கூம்பஸ், பிரிட்டனைச் சேர்ந்த ஒரு நண்பருக்கு ஆய்வகத்தைச் சுற்றிக் காட்டிக் கொண்டிருந்தார். "டேவிட், நீ என்ன செய்கிறாய் என்பதை என் நண்பரிடம் சொல்" என கூம்பஸ் கூறினார். அதைத் தொடர்ந்து டாக்டர் டேவிட் வாரன் விளக்கினார். தான் உருவாக்கிய உலகின் முதல் முன்மாதிரி விமான ரெக்கார்டர் கொண்டு, நான்கு மணிநேர விமானிகளின் உரையாடல்கள் மற்றும் கருவிகளின் தரவுகளை சேமிக்க முடியும் என்றும், அதற்கு எஃகு கம்பியைப் பயன்படுத்துவதாகவும் டேவிட் கூறினார். இது பழைய பதிவுகளை தானாகவே அழித்துவிடும் என்பதால், இந்த ரெக்கார்டர் மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியதாக இருந்தது என்பதையும் அவர் விளக்கினார். அந்த நண்பருக்கோ பெரும் ஆச்சரியம். "கூம்ப்ஸ் இதுவோரு நல்ல யோசனை. இந்த பையனை அடுத்த கூரியரில் லண்டனுக்கு அனுப்பு. இதை லண்டனில் உள்ளவர்களுக்கு காண்பிப்போம்." என்றார் அவர். இங்கு அவர் குறிப்பிட்ட கூரியர் என்பது, பிரிட்டனுக்கு வழக்கமாக பறந்துகொண்டிருந்த 'ஹேஸ்டிங்ஸ் போக்குவரத்து விமானம்'. ஆனால் அதில் ஒரு டிக்கெட்டை பெற வேண்டும் என்றால், மிகவும் சக்தி வாய்ந்த ஒருவரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்படிப்பட்ட விமானத்தின் டிக்கெட்டுகளை தன் இஷ்டத்திற்கு வழங்கும் இந்த மனிதர் யார் என்று டாக்டர் வாரன் யோசித்தார். அதற்கு பதில், ராபர்ட் ஹார்டிங்ஹாம் (பின்னர் சர் ராபர்ட்), பிரிட்டிஷ் விமானப் பதிவு வாரியத்தின் செயலாளர் மற்றும் பிரிட்டனின் ராயல் ஏர் ஃபோர்ஸின் முன்னாள் ஏர் வைஸ்-மார்ஷல். பிரிட்டனுக்கு ரகசிய பயணம் பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு மினிஃபோனுடன் டேவிட் வாரன் (2002) டேவிட்டின் வார்த்தைகளில், "ராபர்ட் ஒரு ஹீரோ. அவர் கூம்ப்ஸின் நண்பர். அவர் ஒரு இடத்தைக் கொடுத்தால், நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள்." சில வாரங்களுக்குப் பிறகு, டாக்டர் வாரன், பிரிட்டன் செல்லும் விமானத்தில் ஏறினார். ஆனால், அவர் உண்மையில் என்ன செய்யப்போகிறார் என்பதை ஆஸ்திரேலிய பாதுகாப்புத் துறையிடம் சொல்லக் கூடாது என்ற கடுமையான உத்தரவுகளுடன் அவர் பயணித்தார். நம்பமுடியாத ஒரு முரண்பாடாக, அந்த விமானம் மத்திய தரைக்கடல் பகுதியில் பயணத்தபோது அதன் ஒரு இயந்திரம் செயலிழந்தது. டாக்டர் வாரன் நினைவு கூர்ந்தார்: "விமானத்தில் இருந்தவர்களிடம் 'அன்பர்களே, நாம் ஒரு இயந்திரத்தை இழந்துவிட்டோம் - யாராவது திரும்பிச் செல்ல விரும்புகிறீர்களா?' எனக் கேட்டேன். ஆனால் துனீசியாவில் சுமார் 45 டிகிரி வெப்பநிலை நிலவியது என்பதால், அந்த நரகத்திற்குத் நாங்கள் திரும்பிச் செல்ல விரும்பவில்லை." தொடர்ந்து விமானத்தை இலக்கை நோக்கி இயக்கினால் தப்பித்துவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். தடுமாறிக் கொண்டிருந்த அந்த விமானத்தில் தான் இறந்தாலும் பரவாயில்லை, ஆனால் தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்பதற்காக மீதமுள்ள விமானப் பயணத்தை ரெக்கார்டரில் பதிவு செய்தார் டேவிட். "ஆனால் துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு எதுவும் நடக்கவில்லை. நாங்கள் பாதுகாப்பாக தரையிறங்கிவிட்டோம்." என்றார் டேவிட். பிரிட்டனில், 'ஏஆர்எல் விமான நினைவக அமைப்பு' என்ற பெயரில் ராயல் ஏரோநாட்டிக்கல் எஸ்டாப்ளிஷ்மென்ட் மற்றும் சில வணிக கருவிகள் தயாரிப்பாளர்களுக்கு தனது கண்டுபிடிப்பை முன்வைத்தார். பிரிட்டிஷ்காரர்கள் இதை விரும்பினர். பிபிசி இதை ஆய்வு செய்யும் வகையில் தொலைக்காட்சி மற்றும் வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியது. பிரிட்டிஷ் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் சிவில் விமானங்களில் இந்த சாதனத்தை கட்டாயமாக்கும் பணியைத் தொடங்கியது. மிடில்செக்ஸ் நிறுவனமான 'எஸ் டேவல் அண்ட் சன்ஸ்', உற்பத்தி உரிமைகள் குறித்து ஏஆர்எல் அமைப்பை அணுகி, உற்பத்தியைத் தொடங்கியது. இந்தக் கருவி 'கருப்புப் பெட்டி' என்று அழைக்கப்பட்டாலும், விபத்துக்குப் பிறகு அவற்றைக் கண்டுபிடிப்பது எளிதாக இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக அவை ஆரஞ்சு நிறத்தில் உருவாக்கப்பட்டன. இன்றும் அவை அப்படியே இருக்கின்றன. 'கருப்புப் பெட்டி' பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டேவிட் வாரனின் இறுதிச் சடங்கு 1958ஆம் ஆண்டு தனது தந்தை டேவிட் வாரன் பிபிசிக்கு அளித்த பேட்டியிலிருந்து 'கருப்புப் பெட்டி' என்ற இந்தப் பெயர் தோன்றியதாக பீட்டர் வாரன் நம்புகிறார். "ஒரு பத்திரிகையாளர் இதை 'கருப்புப் பெட்டி' என்று குறிப்பிட்டார். இது மின்னணு பொறியியலில் இருந்து வந்த ஒரு பொதுவான சொல், அந்தப் பெயர் அப்படியே ஒட்டிக்கொண்டது." ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் 1960 ஆம் ஆண்டு ஏற்பட்ட விவரிக்க முடியாத ஒரு விமான விபத்தில் 29 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, விமான காக்பிட் குரல் பதிவுகளை கட்டாயமாக்கிய முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆனது. நீதித்துறை விசாரணையின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பு வந்தது. அது சட்டமாக மாற மேலும் மூன்று ஆண்டுகள் ஆயின. இன்று, கருப்புப் பெட்டிகள் நெருப்பு மற்றும் கடல் நீரால் பாதிக்கப்படாத வகையில், எஃகு கவசத்தால் மூடப்பட்டு உருவாக்கப்படுகின்றன. அவை ஒவ்வொரு வணிக விமானத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன. விபத்தைச் சந்தித்த விமானங்களின் இறுதித் தருணங்களில் இருந்து கிடைத்த தரவுகள் மூலம் பல குறைபாடுகள் அம்பலப்படுத்தப்பட்டன. அதைத் தொடர்ந்து பாதுகாப்பை உறுதிப்படுத்தும் புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. இந்த கருப்புப் பேட்டி மூலம் எத்தனை பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன என்பதைச் சொல்ல முடியாது. 'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி' பட மூலாதாரம்,FAIRFAX MEDIA VIA GETTY IMAGES டேவிட் வாரன் 1983இல் ஓய்வு பெறும் வரை ஏஆர்எல் அமைப்பில் பணியாற்றினார், அதன் முதன்மை ஆராய்ச்சி விஞ்ஞானியானார். அவர் ஜூலை 19, 2010 அன்று தனது 85 வயதில் இறந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக, கருப்புப் பெட்டி தொடர்பான அவரது முன்னோடிப் பணி கிட்டத்தட்ட அங்கீகரிக்கப்படாமல் போனது. இறுதியாக 1999ஆம் ஆண்டில், அவருக்கு 'ஆஸ்திரேலிய எரிசக்தி நிறுவன பதக்கம்' வழங்கப்பட்டது, பின்னர் 2002 ஆம் ஆண்டில் விமானத் துறைக்கு அவர் செய்த சேவைக்காக 'ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா' (AO) அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் அங்கீகரிக்கப்படுவதற்கு ஏன் இவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டபோது, அவரது மகள் ஜென்னி பின்வருமாறு குறிப்பிடுகிறார்: "மந்தநிலைதான் அவரது எதிரி. அவர் ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட விஞ்ஞானி, நுட்பமாக ஆய்வு செய்யும் மனதைக் கொண்டவர், விஷயங்கள் எப்படி வெளிப்படும் என்பதை அவரால் முன்னரே கற்பனை செய்ய முடிந்தது." "அவர் 1958ஆம் ஆண்டிலேயே, 'இந்த சாதனம் இதைச் சாத்தியமாக்கும்' என்று சொல்லிக் கொண்டிருந்தார்." ஆனால், "நல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் பிரிட்டன், ஜெர்மனி அல்லது அமெரிக்கா ஆகிய நாடுகளில் தான் கண்டுபிடிக்கப்படும், வேறு இடங்களில் இருந்து வராது என்ற 1950களின் காலனித்துவ மனநிலை தான் அதற்கு காரணம்" என பீட்டர் வாரன் குற்றம் சாட்டுகிறார். ஏஆர்எல்-இன் பணியைச் சுற்றியுள்ள வரலாற்று ரகசியம், இப்போது பரவலாகப் புரிந்து கொள்ளப்படுகிறது, இது மற்றொரு சாத்தியமான காரணியாகும். 2008ஆம் ஆண்டு, குவான்டஸ் நிறுவனம் ஒரு ஏர்பஸ் A380 விமானத்திற்கு டாக்டர் டேவிட் வாரன் பெயரைச் சூட்டியது. ஆனால் 'கருப்புப் பெட்டி' தொடர்பான ராயல்டியாக ஒரு ரூபாய் கூட டாக்டர் டேவிட் வாரனுக்கு கிடைக்கவில்லை. இது குறித்து எப்போதாவது டேவிட் வாரன் வருத்தப்பட்டது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த பீட்டர், "ஆம், நான் செய்த வேலைக்கான பலன்கள் அரசுக்கு கிடைத்தது. அதே நேரம், தோல்வியில் முடிந்த எனது பல முயற்சிகளுக்கு அவர்கள் என்னிடம் பணம் கேட்கவில்லை அல்லவா?" என டேவிட் வாரன் கூறியதாகச் சொல்கிறார். விமானத்தில் பயணிக்கும் போது உங்கள் தந்தையைப் பற்றி எப்போதாவது நினைத்து பார்ப்பது உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த ஜென்னி மற்றும் பீட்டர், "ஒவ்வொரு முறையும்" என்றார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c201xd2573no
  4. ஈரான் தாக்குதலில் இஸ்ரேலில் மூவர் பலி 15 JUN, 2025 | 09:07 AM இஸ்ரேலிய தலைநகர் டெல்அவியின் தென்பகுதியில் உள்ள பட்யாம் கட்டிடத்தின் மீது ஈரான்மேற்கொண்ட தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 100க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/217479
  5. முதலிடம் பெற்ற கிருபன் அண்ணைக்கும் இரண்டாம் இடம்பெற்ற ஈழப்பிரியன் அண்ணைக்கும் மூன்றாமிடம் பெற்ற வாதவூரானுக்கும் போட்டியில் கலந்து கொண்ட 17 போட்டியாளர்களுக்கும் வாழ்த்துகள். போட்டியை சுருக்கமான கேள்விகளுடன் சிறப்பாக நடத்தி முடித்த @goshan_cheஅண்ணைக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
  6. 14 JUN, 2025 | 07:18 PM தமிழ் அரசியல்வாதிகளின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வதே. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும் இல்லாதவர்கள் இதனால் நாங்கள் அவர்கள் மீது நம்பிக்கை வைக்கவில்லை என தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில் சனிக்கிழமை (14) காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், போரின் இறுதிக் கட்டத்தின் போதும் அதற்குப் பின்னரும் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தமிழ் தாய்மார்களான எங்கள் போராட்ட பயணம் 3036 வது நாளாக, தொடர்கிறது. எங்கள் குழந்தைகளை கண்டுபிடிக்க வேண்டுமென்ற தவிப்போடு மட்டுமன்றி, இனப்படுகொலையிலிருந்து எதிர்காலத் தலைமுறையினரைப் பாதுகாக்கவும், தமிழர் இறையாண்மைக்கு சர்வதேச ஆதரவைக் கோரவும், அமெரிக்க ஐரோப்பிய ஒன்றியம் ஒரு காலத்தில் எங்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அழைப்பு விடுக்கிறோம். அரசியல் தீர்வு ஒன்றுதேவை என யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கும் அதன் பின்னணியில் இருந்த பங்களிப்பாளர்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியம், வாக்குறுதி அளித்தது. ஆனால் இன்று வரை எந்த தீர்வும் இல்லை. எங்கள் கண்ணீர் மட்டும் தொடர்கிறது. இன்று, அமைதிக்கு பதிலாக, இலங்கையின் வடகிழக்கு இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. புலனாய்வு அமைப்புகள் பொதுமக்கள் வாழ்க்கையை ஆதிக்கம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் அரசுடன் தொடர்புடைய போதைப்பொருள் வலையமைப்புகள் மற்றும் பாலியல் சுரண்டல் தமிழ் இளைஞர்களையும் பெண்களையும் அச்சுறுத்துகின்றன. நாங்கள் தமிழ் அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அவர்களின் ஒரே குறிக்கோள் பதவியில் உயிர்வாழ்வது என்று தெரிகிறது. அவர்கள் எந்த தொலைநோக்கு பார்வையையும், தைரியத்தையும், சர்வதேச ஈடுபாட்டின் மூலம் இறையாண்மையைப் பெற்ற பிற ஒடுக்கப்பட்ட நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்ள எந்த முயற்சியையும் காட்டவில்லை. அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுப்பேற்க வைக்கவோ அல்லது போருக்குப் பிறகு தமிழ் மக்கள் அனுபவித்த துரோகத்தை சர்வதேச சமூகத்திற்கு நினைவூட்டவோ தவறிவிட்டனர். எனவே தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள ஒவ்வொரு தமிழரும் எழுந்து சர்வதேச ஈடுபாட்டைக் கோர வேண்டும் என்றும் நாங்கள் அழைப்பு விடுக்கிறோம். தமிழர் இறையாண்மை மட்டுமே தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும், முழுக் குடிமக்களுக்கும் நிலையான அமைதியை கொண்டு வரும் என்றனர். https://www.virakesari.lk/article/217475
  7. தெஹ்ரானில் பொதுமக்கள் குடியிருப்பு மீது இஸ்ரேல் தாக்குதல் - 60 பேர் பலி 14 JUN, 2025 | 04:50 PM ஈரான் தலைநகர் தெஹ்ரானில் பொதுமக்கள் வசிக்கும் பகுதி மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 20 சிறுவர்கள் உட்பட 60க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஈரானின் அரச ஊடகங்கள் இதனை தெரிவித்துள்ளன. 14 மாடிகளை கொண்ட குடியிருப்பு பகுதியில் இடிபாடுகளை அகற்றுவதில் மீட்பு பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதை ஈரானின் அரச தொலைக்காட்சி காண்பித்துள்ளது. ஆறுமாத குழந்தை உட்பட 20 சிறுவர்கள் கொல்லபட்பட்டுள்ளனர் பல உடல்கள் இடிபாடுகளிற்குள் உள்ளன என செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217463
  8. கமேனி தொடர்ந்தும் ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான் பற்றி எரியும் - இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் 14 JUN, 2025 | 04:34 PM ஈரான் தொடர்ந்தும் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டால் தெஹ்ரான் பற்றி எரியும் என இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் ஹட்ஸ் எச்சரித்துள்ளார். ஈரானின் சர்வாதிகாரி அந்த நாட்டு மக்களை பணயக்கைதிகளாக்குகின்றார்,ஈரான் மக்கள் குறிப்பாக தெஹ்ரானில் வசிப்பவர்கள் இஸ்ரேல் மீதான தாக்குதலிற்காக பெரும் விலையை செலுத்தும் நிலையை அவர் உருவாக்குகின்றார் என இஸ்ரேல் அமைச்சர் தெரிவித்துள்ளார். கமேனி தொடர்ந்தும் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை ஏவினால் தெஹ்ரான்பற்றி எரியும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/217460 இரானுக்குள் இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பின் விளைவுகளை காட்டும் படங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் அணுசக்தி திட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்களைக் குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தியது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அதிகாலை இரானின் அணுசக்தித் திட்டங்களைக் குறிவைத்து தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்தது. 'ஆபரேஷன் ரைசிங் லயன்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். இதில் இரானிய அணு விஞ்ஞானிகள் 6 பேரும், இரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) தளபதி ஹொசைன் சலாமியும் கொல்லப்பட்டதாக இரானிய அரசு ஊடகம் தெரிவித்தது. இஸ்ரேலிய தாக்குதல்களில் மூத்த ராணுவ அதிகாரிகள் உள்பட 78 பேர் கொல்லப்பட்டதாகவும், 320க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் ஐ.நா.வுக்கான இரான் தூதர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் அழிக்கப்பட்ட ஒரு குடியிருப்பு கட்டடத்துக்கு வெளியே ஒரு இரானியர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்பட்டதாகவும், குழந்தைகள் உட்பட பொதுமக்களும் கொல்லப்பட்டதாக இரான் அரசு தொலைக்காட்சி கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரானில் தாக்குதலில் சேதமடைந்த கட்டடத்தில் நடந்த மீட்பு பணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சேதமடைந்த ஒரு கட்டடம். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஆபரேஷன் ரைசிங் லயன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் தாக்குதல் நடந்ததாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜூன் 13 அதிகாலை இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட இரானிய ராணுவ அதிகாரிகள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் படங்களுடன் கூடிய ஒரு போஸ்டர், இரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள ஒரு பாலத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானில் தாக்குதல்களில் சேதமடைந்த கட்டடங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் மீதான சமீபத்திய இஸ்ரேலிய தாக்குதல்கள் குறித்த இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயின் பதிவு செய்யப்பட்ட காணொளியை தொலைக்காட்சியில் பார்க்கும் ஒரு இரானியர். (இடம்: டெஹ்ரானில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு) இஸ்ரேலுக்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்திருந்த நிலையில், இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெல் அவிவ் மற்றும் மத்திய இஸ்ரேலை இலக்காகக் கொண்டு அவை செலுத்தப்பட்டன. இந்தத் தாக்குதலில் டெல் அவிவ் நகரில் சில கட்டடங்கள் சேதமடைந்தன. இரான் தாக்குதலில் காயமடைந்த 40 பேர் இஸ்ரேலிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 2 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். இஸ்ரேலை நோக்கி 2 அலைகளாக 100க்கும் குறைவான ஏவுகணைகளை இரான் ஏவியிருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் செய்தித் தொடர்பாளர் ஆட்ரே கூறுகிறார். இஸ்ரேலை நோக்கிச் சென்ற இரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த அமெரிக்க ராணுவம் உதவியிருக்கிறது. இதனை அமெரிக்க அதிகாரிகள் 2 பேர் வெள்ளிக்கிழமை (ஜூன் 13) அன்று உறுதிப்படுத்தியதாக பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி முகமையான சிபிஎஸ் நியூஸ் தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கட்டடங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் தாக்குதலில் கடுமையாக சேதமடைந்த கட்டடங்களைப் பார்க்கும் இஸ்ரேலியர்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் மீது இரான் பதிலடி தாக்குதல்கள் நடத்தியதை அடுத்து, அதைக் கொண்டாடும் விதமாக டெஹ்ரானின் வீதிகளில் கூடிய மக்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடியாக ஏவுகணைகளையும், டிரோன்களையும் பயன்படுத்தி இரான் தாக்குதல் நடத்தியுள்ளது. டெஹ்ரானின் வீதியில் இதைக் கொண்டாடும் மக்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இரான் முழுவதும் பல இலக்குகளைத் தாக்கியுள்ள இஸ்ரேல், இரானின் நடான்ஸ் நகரில் உள்ள யுரேனியம் செறிவூட்டல் ஆலையை சேதப்படுத்தியுள்ளது. ஆனால் இரான் தனது அணுசக்தி திட்டம் முற்றிலும் அமைதிக்கானது என்றும், புஷேர் போன்ற மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை உற்பத்தி செய்ய யுரேனியத்தை செறிவூட்டுவதாகவும் வலியுறுத்துகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டெஹ்ரானின் என்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் எதிர்ப்பு போஸ்டர். இஸ்ரேலின் 2 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இரானிய அரசு ஊடகங்கள் கூறுகின்றன. ஆனால், இதனை இஸ்ரேல் மறுத்துள்ளது. இரான் தலைநகர் டெஹ்ரானில் மீண்டும் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வருகின்றன. இஸ்ரேலிய தாக்குதல்களை எதிர்கொள்ள டெஹ்ரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg7r8m5ln2o
  9. 14 JUN, 2025 | 04:28 PM மட்டக்களப்பில் யானை - மனித மோதலை குறைக்கும் முகமாக முதற்கட்ட விழிப்புணர்வு வேலைத்திட்டம் வெள்ளிக்கிழமை (13) மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட தும்பாலஞ்சோலை கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ் விழிப்புணர்வு நிகழ்வு தும்பாலஞ்சோலை கிராமத்தில் இடம்பெற்றது. மட்டக்களப்பு மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள சுற்றுவட்டார பொறுப்பதிகாரி நா. சுரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் செங்கலடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், செங்கலடி பிரதேச சபை ஊழியர்கள், வனஜீவராசிகள் திணைக்கள ஊழியர்கள் உள்ளிட்டோருடன் பொது மக்களும் கலந்து கொண்டிருந்தனர். தும்பாலஞ்சோலை கிராமத்தில் யானைகள் அதிகம் வரும் காடுகளாக உள்ள வனாந்தர பகுதி சிரதானம் செய்யப்பட்டதுடன், அங்கு வீதிகளில் மின் விளக்குகளும் பொருத்தும் நடவடிக்கையும் இடம்பெற்றது. இதேவேளை, குறித்த கிராமங்களில் வீடு வீடுடாகச் சென்று யானை வருவதை தடுக்கும் முகமாக மக்களுக்கான விழிப்புணர்வு செய்யப்பட்டதுடன் , துண்டுப்பிடசுரமும் வினியோகிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/217455
  10. 'சோக்கர்ஸ்' தென் ஆப்ரிக்கா சாம்பியன்ஸ் ஆனது எப்படி? வெற்றிக்கு பாதை அமைத்த முக்கூட்டணி எது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஜூன் 2025, 14:30 GMT சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் போட்டிகளில் 27 ஆண்டுகளுக்குப்பின் தென் ஆப்ரிக்கா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை தென் ஆப்ரிக்கா கைப்பற்றியது. இது ஐசிசி சார்பில் நடத்தப்படும் போட்டிகளில் தென் ஆப்ரிக்கா வெல்லும் 2வது சாம்பியன்ஷிப் பட்டமாகும். இதற்கு முன் 1998ல் நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது. இனியும் பதற்றத்தில் தோல்வியடையும் அணி அல்ல ஐசிசி பைனல், அரையிறுதி என்றாலே தென் ஆப்ரிக்க அணி பதற்றத்தில் வெற்றியை நழுவவிடுவார்கள் என்ற அவப்பெயர் கடந்த காலங்களி்ல் அந்த அணி மீது இருந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று அது அனைத்தையும் தென் ஆப்ரிக்க அணியினர் மாற்றிவிட்டனர். தென் ஆப்ரிக்க அணியில் இருக்கும் அனைத்து வீரர்களும் 27 வயதுக்குள் இருப்பவர்கள். இவர்கள் அனைவரும் தங்கள் தேசத்தின் அணி ஐசிசி அரையிறுதியிலும், இறுதிப்போட்டியிலும் தோல்வி அடைந்ததைத்தான் பார்த்திருந்தார்கள். ஆனால், இந்த இளம் வீரர்கள்தான் முதல்முறையாக தென் ஆப்ரிக்க அணிக்கு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று கொடுத்துள்ளனர். கடைசியாக தென் ஆப்ரிக்க அணி 1998ம் ஆண்டு ஐசிசி நாக்அவுட் (சாம்பியன்ஸ் டிராபி) கோப்பையை வென்றிருந்தது. அதன்பின், 27 ஆண்டுகளாக பலமுறை ஐசிசி நடத்தும்போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டும் தென் ஆப்ரிக்க அணியால் ஒரு கோப்பையைக் கூட வெல்ல முடியவில்லை. கடந்த ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பைத் தொடரில் பைனலுக்கு முன்னேறிய நிலையில் இந்திய அணியிடம் தோற்றது. ஆனால், கால் நூற்றாண்டுக்கும் மேலாக காத்திருப்பின் பலனாக இப்போது ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை தென் ஆப்ரிக்கா அணி முதல்முறையாக வென்றது. இதுவரை நடந்த ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிக்கு அடுத்தார்போல் 3வது அணியாக தென்ஆப்ரிக்கா சாம்பியனானது. மார்க்ரம் ஆட்டநாயகன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார் எய்டன் மார்க்ரம் தென் ஆப்ரிக்க அணியின் வரலாற்று வெற்றிக்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் எய்டன் மார்க்ரம்மின் (136) ஆகச்சிறந்த ஆட்டம் மற்றும் கேப்டன் பவுமாவின்(66) பொறுப்பான பேட்டிங் முக்கியக் காரணமாகும். முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம், 2வது இன்னிங்ஸில் தனது அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டநாயகன் விருதை வென்றார். ஐசிசி இறுதிப்போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சதம் அடித்த 3வது பேட்டர் என்ற பெருமையை மார்க்ரம் பெற்றார். இதற்கு முன் கிளைவ் லாய்டு (1985), அரவிந்த டி சில்வா (1996) ஆகியோர் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஐசிசி பைனலில் சதம் அடித்திருந்தனர். அதன்பின் தற்போது மார்க்ரம் அடித்துள்ளார். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 207 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதையடுத்து, தென் ஆப்ரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 282 ரன்கள் நிர்ணயிக்கப்பட்டது. 282 ரன்கள் வெற்றி இலக்கை துரத்திய தென் ஆப்ரிக்க அணி தொடக்கத்தில் விக்கெட்டை இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி வலுவான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். மார்க்ரம் 156 பந்துகளில் சதத்தையும், பவுமா அரைசதத்தையும் நிறைவு செய்தார். இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறினர். 3வது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி, 2 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் சேர்த்திருந்தது. மார்க்ரம் 102 ரன்களுடனும், பவுமா 65 ரன்களுடன் களத்தில் இருந்து 4வது நாளான இன்றைய ஆட்டத்தைத் தொடர்ந்தனர். தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 4வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கி சிறிது நேரத்தில் கேப்டன் பவுமா கூடுதலாக ஒரு ரன் சேர்த்து 66 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 147 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். அடுத்துவந்த டிரிஸ்டன் ஸ்டெப்ஸ், மார்க்ரமுக்கு ஒத்துழைத்து ஆடவே ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்டார்க் பந்துவீச்சில் ஸ்டெப்ஸ் 8 ரன்னில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். அடுத்து பெடிங்ஹம் களமிறங்கி, மார்க்ரமுடன் சேர்ந்தார். இளம் வீரராக இருந்தாலும் பெடிங்ஹம் ஆஸ்திரேலிய பந்துவீச்சை நேர்த்தியாகச் சமாளித்து ரன்களைச் சேர்த்தார். இருவரும் சேர்ந்து அணியை மெல்ல வெற்றிக்கு அருகே கொண்டு சென்றனர். தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டநிலையில் மார்க்ரம் விக்கெட்டை இழந்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் மார்க்ரம் (136) மிட்விக்கெட் திசையில் டிராவிஸ் ஹெட்டிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். மார்க்ரம் ஆட்டமிழந்து வெளியேறியபோது, லார்ட்ஸ் மைதானத்தில் அமர்ந்திருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவரை பாராட்டினர். அடுத்து, வெர்னே களமிறங்கி, பெடிங்ஹமுடன் சேர்ந்தார். இருவரும் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பெடிஹாம் 21 ரன்களுடனும், வெர்னே 4 ரன்களுடனும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கண்ணீருடன் வெற்றிக் கொண்டாட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். தென் ஆப்ரிக்க அணி 27 ஆண்டுகளுக்குப்பின் ஐசிசி பட்டத்தை வென்ற மகிழ்ச்சியில் பெவிலியனிலும், டக்அவுட்டிலும் இருந்த தென் ஆப்ரிக்க வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டியணைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். கேசவ் மகராஜ், கேப்டன் பவுமா உள்பட பல வீரர்கள் மகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதனர். திருப்புமுனை பந்துவீச்சாளர்கள் தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு கேப்டன் பவுமா, மார்க்ரமின் சதம் எந்த அளவிற்கு முக்கியக் காரணமாக அமைந்ததோ, அதே அளவுக்கு அந்த அணியின் வேகப்பந்து வீச்சும் முக்கியப் பங்காற்றியுள்ளது. ரபாடா இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், இங்கிடி 3 விக்கெட்டுகளையும், யான்சென் 4 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். இதில் குறிப்பாக வலுவான பேட்டிங் வரிசை கொண்ட ஆஸ்திரேலிய அணியை முதல் இன்னிங்ஸில் கடைசி 5 விக்கெட்டுகளை 20 ரன்களுக்குள் தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்கள் சாய்த்தனர், அதேபோல 2வது இன்னிங்ஸிலும் 20 ரன்களுக்குள் ஆஸ்திரேலிய நடுவரிசை பேட்டர்களை ஆட்டமிழக்கச் செய்த தென் ஆப்ரிக்க பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு திருப்புமுனையாக அமைந்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததை ஒருபோதும் தென் ஆப்ரிக்க அணி தவறவிடவில்லை. கேப்டனின் பொறுப்பான ஆட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது தென் ஆப்ரிக்க கேப்டன் பவுமாவின் பொறுப்பான பேட்டிங் வெற்றிக்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது. தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு கேப்டனாகப் பொறுப்பேற்று இதுவரை ஒரு போட்டியில்கூட தோற்றதில்லை என்ற சாதனையை பவுமா தக்க வைத்துள்ளார். இந்த ஆட்டத்திலும் 2வது இன்னிங்ஸில் மார்க்ரமுடன் சேர்ந்து பார்ட்ன்ர்ஷிப் அமைத்து ஆடிய பவுமா வெற்றியை நோக்கி அணியை நகர்த்தினார். ஒரு கட்டத்தில் பவுமாவுக்கு தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு நடக்கவே சிரமப்பட்டார். இதனால் பவுமா ரிட்டயர்ஹர்ட் முறையில் பெவிலியன் வர வேண்டுமா என்ற விவாதம் வர்ணனையாளர்கள் மத்தியில் நிலவியது. ஆனால், முக்கியத்துவம் மிகுந்த இந்த ஆட்டத்தில் முதலுதவி சிகிச்சை மட்டும் செய்து கொண்ட பவுமா, நேற்றைய ஆட்டம் முடியும் வரை தசைப்பிடிப்பு வலியுடன் மார்க்ரமுடன் இணைந்து பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல காரணமாக இருந்தார். கால் நூற்றாண்டு காத்திருப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES நிறவெறித் தடையால் நீண்டகாலம் சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க தென் ஆப்ரிக்காவுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் 1992ம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் அந்த அணிக்கு தடை நீக்கப்பட்டது. அந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்து, தென் ஆப்ரிக்க மோதலில் மழைகுறுக்கிடவே வலுவான தென் ஆப்ரிக்கா டக்வொர்த் லிவிஸ் விதிப்படி தோல்வி அடைந்தது. 1998ம் ஆண்டு ஐசிசி சார்பில் முதல்முறையாக நடத்தப்பட்ட நாக்அவுட் கோப்பையை மறைந்த ஹன்சி குரோனியே தலைமையில் தென் ஆப்பிரிக்கா வென்றது. இதுதான் தென் ஆப்ரிக்கா வென்ற முதல் ஐசிசி கோப்பையாகும். அதன்பின் கடந்த 27 ஆண்டுகளாக பலமுறை போராடியும் அது தோல்வியில் முடிந்தது. 1999ம் ஆண்டு ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தோல்வியை தென் ஆப்ரிக்கா மறக்காது. அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை வெல்ல வேண்டிய நிலையில் போட்டி டையில் முடிந்தது. ஆஸ்திரேலிய அணி சிறப்பாக ஆடியிருந்த காரணத்தால் அந்த அணி பைனலுக்கு முன்னேறி, தென் ஆப்ரிக்கா வாய்ப்பை இழந்தது. கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்ரிக்காவை தோல்வி துரத்திய நிகழ்வும், பதற்றத்தில் வெற்றியை நழுவவிடும் சோக்கர்ஸ் என்ற பெயரும் வந்தது. 2015ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை போட்டியில் அரையிறுதியில் பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து பைனலுக்கு செல்லும் வாய்ப்பை தென் ஆப்ரிக்கா பறிகொடுத்தது. 2024ம் ஆண்டு டி20 உலகக் கோப்பைத் தொடரில் முதல்முறையாக இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்கா முன்னேறியது. பர்படாஸில் நடந்த பைனல் ஆட்டத்தில் இந்திய அணியிடம் 7 ரன்னில் தென் ஆப்ரிக்கா தோல்வி அடைந்தது. கடந்த 25 ஆண்டுகால வரலாற்றில் தென் ஆப்ரிக்க அணி ஐசிசி போட்டிகளில் பலமுறை அரையிறுதி, இறுதிப்போட்டிக்கு முன்னேறி கோப்பையை நழுவவிட்டிருந்தது. 27 ஆண்டுகால காத்திருப்புக்குப்பின் முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றுள்ளது. கடின உழைப்பு, நம்பிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES சாம்பியன்ஷிப் பட்டம் வென்றபின் தென் ஆப்ரிக்க கேப்டன் டெம்பா பவுமா அளித்த பேட்டியில் " எங்களுக்கு கடந்த இரு நாட்களும் சிறப்பானதாக இருந்தது, சில நேரங்களில் நாங்கள் தென் ஆப்ரிக்க என்று உணரவைத்தது. இந்த தொடருக்காக கடினமாக உழைத்தோம், தயாராகினோம், அதிகமான நம்பிக்கையுடனும், ஏராளமான சந்தேகங்களைச் சுமந்தும் வந்தோம். சிறப்பாக ஆடிய அனைவருக்கும் நன்றி. எங்களுக்கு இரு ஆகச்சிறந்த தருணம், அடுத்த இருநாட்களில் எங்களை மக்கள் மகிழ்ச்சியில் மூழ்கடிப்பார்கள். இந்த எழுச்சியைத்தான், உணர்ச்சியைத்தான் அணியினர் அனைவரும் எதிர்பார்த்தார்கள் விரும்பினார்கள். மார்க்ரமை அணிக்குள் கொண்டுவந்த போது அவரைச் சேர்த்தது குறித்து கேள்வி எழுந்தது. ஆனால் அனைத்தையும் அவரின் ஆட்டம் நொறுக்கிவிட்டது. ரபாடாவின் பந்துவீச்சு திருப்புமுனையாக இருந்தது. நாங்கள் பலவாறு சிதறி இருந்தாலும், தேசமாக ஒன்றாக இருந்து சாம்பியன்ஷிப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம், இதை ஒற்றுமையாகக் கொண்டாடுவோம்" எனத் தெரிவித்தார். சர்வதேச போட்டிகளில் ஆடாத பயிற்சியாளர் தென் ஆப்ரிக்க அணியின் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு அந்த அணியின் பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் முக்கியக் காரணம். தென் ஆப்ரிக்க தேசிய அணியில் இடம் பெறாத, சர்வதேச போட்டியில் ஆடாத சுக்ரி கான்ராட் கடந்த 2023ம் ஆண்டு டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அதுமுதல் தென் ஆப்ரிக்க அணியில் ஏற்பட்ட மாற்றங்கள், வெற்றிகள் சாம்பியன்ஷிப் வரை கொண்டு வந்துள்ளது. தென் ஆப்ரிக்க முன்னாள் வீரர் டிக்கி கான்ராடின் மகன் சுக்ரி கான்ராட் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்ரிக்காவின் மேற்கு மாகாண அணிக்காக இளமைக் காலத்தில் ஆடிய சுக்ரி கான்ராட் 13 முதல்தரப் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கேப் கோப்ராஸ், கட்டெங், ஹைவீல்ட் லயன்ஸ் ஆகிய கவுன்டி அணிகளுக்குப் பயிற்சியாளராக சுக்ரி பணியாற்றியுள்ளார். உகாண்டா தேசிய அணிக்கு 2010-2011ல் பயிற்சியாளராகவும் சுக்ரி இருந்து அதன்பின் தென் ஆப்ரிக்க தேசிய கிரிக்கெட் அகாடெமிக்கு தலைமைப் பயிற்சியாளராக சுக்ரி நியமிக்கப்பட்டார். 2023 ஜனவரியில் தென் ஆப்ரிக்க டெஸ்ட் அணிக்கு பயிற்சியாளராக சுக்ரி கான்ராட் நியமிக்கப்பட்டார். அதுமுதல் அணியை தயார் செய்த சுக்ரி, கேப்டனாக இருந்த மார்க்ரமை சமீபத்தில் மாற்றிவிட்டு, டெம்பா பவுமாவை நியமிக்க பரிந்துரை செய்தார். அதற்கான பலனும் கிடைக்கவே முதல்முறையாக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் தென் ஆப்ரிக்கா வென்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4g6n5d19kjo
  11. கிழக்கில் 304 சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோம்; கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர 14 JUN, 2025 | 07:59 PM மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 சிறுமிகள் உட்பட கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்கு உட்பட்ட 304 சிறுமிகள் 2024 ஆம் ஆண்டு பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமை மிகவும் கவலைக்குரியது என கிழக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் வர்ண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் மக்கள் பாதுகாப்பு எனும் கருத்திட்டத்தின் அடிப்படையில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான துஸ்பிரயோகத்தை தடுக்கும் 'சரோஜா' திட்டத்தை ஆரம்பித்து வைக்கு நிகழ்வு மட்டக்களப்பு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.லலித் லீலாரத்தினவின் தலைமையில் காரியாலய மண்படபத்தில் வியாழக்கிழமை (12) இடம்பெற்றது. இதன்போது இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், சிறுமிகள் மீதான பாலியல் சீண்டல்களுக்கு முதல் காரணம் அவர்களுக்கு அருகிலுள்ள உறவினர்களே ஆகும். இவ்வாறான குற்றம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாய் தந்தை பொலிஸ் நிலையத்துக்கு செல்வதில் வெட்கம் மற்றும் கௌரவம் காரணத்தால் பொலிஸ் நிலையங்களுக்கு முறைப்பாடு கிடைப்பதில்லை. ஒரு சிறுமிக்கு பாலியல் சீண்டல் நடந்த பின்னர் அதனை முறைபாடு செய்வதால் பிரயோசனமில்லை. எனவே தவறான நடத்தைக்கு உள்ளாக முதல் பாதுகாப்பது தான் சிறந்தது. அதற்கு முதலில் கிராமம் பிரதேசங்களில் எத்தனை பெண் குழந்தைகள் பாதுகாப்பு இல்லமல் இருக்கின்றார்கள் என கண்டறிய வேண்டும். சில பிள்ளைகளின் தாயார் வெளிநாடு சென்றிருப்பர் அல்லது தந்தை வெளிநாடு சென்றிருப்பார் அல்லது தாய், தந்தையினர் மதுபோதைக்கு அடிமையாகி இருப்பர்கள். இவ்வாறு பிரச்சினை உள்ள குடும்பங்களில் உள்ள பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லாததால் அவர்கள் இந்த பாலியல் சீண்டல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றனர். பெண் குழந்தைகள் பாதிக்கபடுவதற்கு முன்னர் பாதுகாப்பதே இந்த 'சரோஜா' திட்டம் எனவே மாவட்டதிலுள்ள 14 பொலிஸ் நிலையங்களின் கீழ் உள்ள கிராம சேவர் பிரிவுகளில் இவ்வாறு பாதுகாப்பற்ற குழந்தைகள் எத்தனை பேர் உள்ளனர் என கணக்கு எடுக்கப்பட்டு அவர்களை தொடர்ந்து பாதுகாப்பது தொடர்பாக நடவடிக்கைகளை முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/217452
  12. Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 12:37 PM (எம்.மனோசித்ரா) துருக்கிய கடற்படைக் கப்பலான 'டி.சி.சி. புயுகடா' உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. சனிக்கிழமை (14) நாட்டை வந்தடைந்த இக்கப்பல் இலங்கை கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது. இக்கப்பலானது 99.56 மீற்றர் நீளமும், மொத்தம் 147 அங்கத்தவர்களை கொண்டதாகும், கப்பலின் கட்டளை அதிகாரியாக லெப்டினன்ட் கமாண்டர் அனில் பில்கின் பணியாற்றுகிறார். இக்கப்பல் நாட்டில் தங்கியிருக்கும் காலத்தில் அதன் பணிக்குழுவினர் நாட்டின் பல பகுதிகளுக்குச் சென்று முக்கியமான இடங்களைப் பார்வையிடவும், இரு நாடுகளின் கடற்படைகளுக்கு இடையேயான நட்பை மேம்படுத்துவதற்காக இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டுள்ளது. மேலும் இக்கப்பல் தனது உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு திங்கட்கிழமை (15) நாட்டிலிருந்து புறப்பட உள்ளதுடன், மேலும் இலங்கை கடற்படைக் கப்பலுடன் மேற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் கடற்படைப் பயிற்சியில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/217436
  13. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தம் Jun 14, 2025 - 15:46 - நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று 14 மற்றும் 15 நாளையும் தமிழக கடற்கரையோரப் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும், எதிர்வரும் 16-ம் திகதி வரை தெற்கு தமிழக கடற்கரை மற்றும் அதனை ஒட்டிய கொமொரின் பகுதி மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் மணிக்கு 45 முதல் 65 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று வீசக்கூடும் எனவும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமான இன்று (14) முதல் எதிர்வரும் 18ஆம் திகதி வரை நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmbw2zxqw01uqqpbshhecsnve
  14. Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 07:55 PM யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபா செலவிடப்பட்டிருந்தது. எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது. இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சியில் அமைச்சர் தீவிரமாக இறங்கினார். இதற்கமைய அமைச்சர் சனிக்கிழமை (14) பொருளாதார மத்திய நிலையத்துக்கு கண்காணிப்பு பயணம் மேற்கொண்டார். வடமாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், யாழ்.மாவட்டச் செயலாளர் ம.பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர், சாவகச்சேரி பிரதேச சபையின் செயலாளர், மாகாண மற்றும் மாவட்ட விவசாயத் திணைக்களப் பணிப்பாளர்கள், பொருளாதார மத்திய நிலையத்தில் கடைகளைப்பெற்றுக் கொண்டவர்கள் ஆகியோரும் வருகை தந்திருந்தனர். அதன் பின்னர் மட்டுவிலில் பன்றித்தலைச்சி அம்மன் கோயில் அருகில் உள்ள மண்டபத்தில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதன்போதே பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகளை மீள இயற்குவதற்குரிய அனைத்து செயற்பாடுகளும் எமது ஆட்சியின்கீழ் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் கூறினார். அத்துடன், வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். அதேவேளை, பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கும் பிரச்சினை உள்ளது. எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இது மக்களின் பணம். எனவே, அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கம். வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஆகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் என அமைச்சர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/217464
  15. வடக்கில் உள்ள 10 பொலிஸ் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு (KKS) தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. குறித்த தொலைபேசி அழைப்பு கடந்த 11 ஆம் திகதி மதியம் 1.15 மணி முதல் 1.20 மணியளவில் வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இருப்பினும், வடக்கில் உள்ள பொலிஸ் நிலையங்களில் பாதுகாப்பு குறித்து மேலதிக அவதானம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmbvx38vg01uhqpbs6m6te5rt
  16. 'தோல்வியே தெரியாத தலைவன்' - தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெம்பா பவுமா 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று (ஜூன் 14) நனவாகியுள்ளது. தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய ஏக்கத்துடன் இருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. இதில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பங்களிப்பு மிக முக்கியமானது. தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய (உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி தவிர்த்து) 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது. இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை தென்னாப்ரிக்க அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் கூடுதல் உற்சாகத்தை அளித்தது என்றே கூறலாம். யார் இந்த டெம்பா பவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பவுமா தலைமையில், 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. “இன்றிலிருந்து 15 வருடங்களில் எம்பெக்கியுடன் (அப்போதைய தென் ஆப்ரிக்க அதிபர்) நான் கை குலுக்குவேன். அவரும் வருங்கால தென் ஆப்ரிக்க அணியை கட்டமைப்பதற்கு எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்.” இதை டெம்பா பவுமா ஆறாவது படிக்கும்பொழுது எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி பள்ளிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் வேலைக்கான நேர்காணல்களிலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஆனால் சிலர் மட்டும்தான் இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதிலை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா. டெம்பா பவுமா தென் ஆப்ரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது. பவுமா கேப்டன் ஆனதன் பின்னணி என்ன? 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, 2023 மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார். பவுமா, தென் ஆப்ரிக்காவின் கேப்டன் ஆனதற்கு அவர் கருப்பினத்தவர் என்பதுதான் காரணமென தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு அவர் எந்த சூழலில் தென் ஆப்ரிக்காவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 2000ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோல்பாக் ஒப்பந்தத்தினால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்பந்தத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலும் சென்று அந்த நாட்டு வீரராகவே கிரிக்கெட் விளையாடலாம் என்பதுதான் கோல்பாக் ஒப்பந்தம். அதன்படி தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேருவதற்காகச் சென்றனர். இந்த சிக்கலில் இருந்து தென் ஆப்ரிக்க அணி மீள்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் பவுமா தான் 2021 டி20 உலகக்கோப்பையின் போது இனவாதத்திற்கு எதிரான 'Black Lives Matter' முன்னெடுப்பின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முட்டியிட்டு ஆதரவு தெரிவிப்பார்கள். ஆனால், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த செயலை அதன் அணி வீரர்களுக்கு கட்டாயமாக்கியது. ஆனால், அப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார். அதனைத் தொடர்ந்து தான் பவுமா டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார். இந்த சர்ச்சையை பவுமா மிகவும் நிதானத்தோடு அணுகினார். அவரது தலைமைப்பண்பு இந்த விஷயத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பவுமா வெற்றி பெற்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தப் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு டி காக் மீண்டும் அணிக்குத் திரும்பினார். டி காக் அதன்பின்பு பவுமா குறித்து பாராட்டியே பேசினார். டி காக், “பவுமா ஒரு மிகச்சிறந்த கேப்டன். மற்றவர்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார். அதன்பின்பு பவுமாவிற்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதிலிருந்து, பவுமா தென் ஆப்ரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். மேலும் அணியை பல சிக்கல்களில் இருந்தும் வெளியே கொண்டுவந்திருக்கிறார். விமர்சனங்கள், கேலிகளை எதிர்கொண்டவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2021ம் ஆண்டு நடந்த மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் முட்டியிட்டு நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்த பவுமா முன்னதாக உலகக் கோப்பையில் கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் தென் ஆப்ரிக்காவை வழிநடத்தியுள்ளனர். இந்த வீரர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான வீரர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் தென் ஆப்ரிக்காவை வழிநடத்திய போதுதான் தென் ஆப்ரிக்காவிற்கு 'சோக்கர்ஸ்' என்ற பட்டமும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. அந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென் ஆப்ரிக்கா அணி பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டது. கோல்பேக் ஒப்பந்தம் காரணமாக பல வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர். எனவே, புதிய ஒரு அணியை உருவாக்கும் சவால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் முன்பு இருந்தது. இப்போது சிறப்பாக செயல்படும் இந்த அணியை கட்டமைத்ததில் கேப்டனாக பவுமாவின் பங்களிப்பு அதிகம். புதிய தென் ஆப்ரிக்க அணியை உருவாக்கி, உலகப் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியதில் பெரும் பங்கு வகித்துள்ளார் பவுமா. இதற்கு முன், பவுமா அவரது சராசரி பேட்டிங்கிற்காகவும் அணி தேர்வில் உள்ள ஒதுக்கீட்டு முறைக்காகவும் அவரது உயரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி ட்ரோல் செய்யப்பட்டார். 2023 உலகக்கோப்பையில், தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால், இன்று பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி, அந்த விமர்சனங்களைப் பொய்யாக்கியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crk2gpdrd4po
  17. 20 இன் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தல்; அருணோதயா வீராங்கனை நிருசிகா புதிய சாதனை - இரண்டாம் நாளில் வட மாகாணத்திற்கு 5 தங்கப் பதக்கங்கள் 14 JUN, 2025 | 11:48 AM (நெவில் அன்தனி) தியகம விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமை (13), 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை செல்வராசா நிருசிகா புதிய சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். கோலூன்றிப் பாய்தலில் 3.40 மீற்றர் உயரத்தைத் தாவியே நிருசிகா புதிய சாதனை நிலைநாட்டினார். ஒன்பது வருடங்களுக்கு முன்னர் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி வீராங்கனை எஸ்.கே. தர்மரட்ன 3.34 மீற்றர் உயரம் தாவி ஏற்படுத்திய சாதனையை நிருசிகா முறியடித்து புதிய சாதனைக்கு உரித்தானார். 20 வயதுக்குட்பட்ட கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் பாடசாலைகள் முழு ஆதிக்கம் செலுத்தி வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் சுவீகரித்தன. அப் போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீராங்கனை பரந்தாமன் அபிஷாலினி (3.30 மீ.) வெள்ளிப் பதக்கத்தையும் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை சிவரூபன் டிலக்ஷிகா (3.10 மீ.) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். போட்டியின் இரண்டாம் நாளான நேற்றைய தினம் வட மாகாணத்திற்கு மேலும் 4 தங்கப் பதக்கங்கள் கிடைத்தது. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ்ப்பாணம் ஸ்கந்தவரோதயா கல்லூரி வீரர் என். டன்ஸ்சன் 4.30 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். இதே போட்டியில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் எஸ். கஜானன் (4.10 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் முன்னாள் ஹாட்லி கல்லூரி மாணவன் எஸ். மிதுன்ராஜ் இராணுவம் சார்பாக போட்டியிட்டு 15.26 மீற்றர் தூரத்திற்கு குண்டை எறிந்து தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியை 9 நிமிடங்கள், 25.91 செக்கன்களில் ஓடி முடித்த வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் இளங்கோ விகிர்தன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்குபற்றிய ரவிகுமார் தனுஷியா (1:10:39.47) தங்கப் பதக்கத்தை வென்று அசத்தினார். 23 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் யாழ். மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்குபற்றிய ஜீவேஸ்வரன் தமிழரசி (1:07:57.46) வெண்கலபதக்கத்தையும் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் தடைதாண்டி ஓட்டப் போட்டியில் வவுனியா மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக பங்கபற்றிய எஸ். தனுசன் (9:52.58) வெண்கலப் பதக்கத்தையும் 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் வவுனியா தமிழ் தேசிய பாடசாலை வீரர் கே. கிருஷான் (50.09) வெண்கலப் பதக்கத்தையும் 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான தட்டெறிதல் போட்டியில் திருக்கோவில் மெதடிஸ்த மிஷ்ன தமிழ் மகா வித்தியாலய வீரர் வினோதன் விஹாஸ் (47.86 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். மலையக வீரர்களுக்கும் பதக்கங்கள் 23 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 10000 மீற்றர் வேகநடைப் போட்டியில் பதுளை மாவட்ட மெய்வல்லுநர் சங்கம் சார்பாக போட்டியிட்ட எஸ். விக்ணேஸ்வரன் (58:46.00) வெள்ளிப் பதக்கத்தையும் திகனை ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் டி. ஷாம்ராஜ் (59:21.71) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். https://www.virakesari.lk/article/217433
  18. இந்திய விமான விபத்து : உயிரிழந்தவர்களுக்கு சீன ஜனாதிபதி இரங்கல் Published By: DIGITAL DESK 2 14 JUN, 2025 | 12:30 PM இந்தியாவின் அகமதாபாத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின், அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கிப் புறப்பட்ட ஏர் இந்திய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் உட்பட சுமார் 265 பேர் உயிரிழந்தனர். இந்த விமான விபத்து இந்தியாவை மாத்திரமின்றி முழு உலகையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், சர்வதேச தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் மோடிக்கு தனது இரங்கல் செய்தியை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு சீன அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணமடையவும் வாழ்த்துகிறேன் என தெரிவித்துள்ளார். இதேவேளை, சீனப் பிரதமர் லீ கியாங்கும் இந்தியப் பிரதமர் மோடிக்கு இரங்கல் செய்தி அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/217437
  19. LIVE Final, Lord's, June 11 - 15, 2025, ICC World Test Championship Australia 212 & 207 South Africa (74 ov, T:282) 138 & 250/4 Day 4 - Session 1: South Africa need 32 runs. Current RR: 3.37 • Min. Ov. Rem: 72 • Last 10 ov (RR): 23/1 (2.30) 31 ஓட்டங்கள் மட்டுமே தேவை அண்ணை.
  20. ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு; இலங்கையில் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய அழைப்பு Published By: VISHNU 14 JUN, 2025 | 02:12 AM ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வெள்ளிக்கிழமை (13) முற்பகல் பேர்லினின் வெல்டொர்ப் எஸ்டோரியா ஹோட்டலில் ஜேர்மனியின் சுற்றுலா மற்றும் பயணத் தொழில் சங்கங்கள் (Tourism and Travel Industry Associations) மற்றும் வெளிச்செல்லும் பயணம்/சுற்றுலாத்துறை செயற்பாட்டாளர்கள்(Outbound Travel/Tour Operators) உடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டார். இலங்கையில் நிலைபேறான சுற்றுலாத் துறைக்காக அரசாங்கம் எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகள் குறித்து இங்கு தெளிவுபடுத்திய ஜனாதிபதி, விசேடமாக சுற்றுலா வசதிகளை அதிகரித்தல், ஊக்குவிப்புத் திட்டங்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளை சுட்டிக்காட்டி, நிலைபேறான சுற்றுலா பொறிமுறைகள் மூலம் இலங்கை ஒரு கவர்ச்சிகரமான சுற்றுலாத் தலமாக மாறியுள்ளது என்றும் தெரிவித்தார். சுற்றுலாத் துறையில் மனித வளங்களை மேம்படுத்துதல், சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பை அதிகரித்தல், கலாசார மற்றும் சூழல்சார் சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். இலங்கையில் உள்ள புதிய முதலீட்டு வாய்ப்புகள் குறித்து இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்காக முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைக்கு அதிக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் நாடுகளில் ஜெர்மனி தற்போது 4 ஆவது இடத்தில் உள்ளது. 2024 ஆம் ஆண்டில் 136,000 ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள் இந்நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், இந்த ஆண்டு மே மாதம் வரை அந்நாட்டு சுற்றுலாப் பயணிகள் 69,000 பேர் இங்கு வருகை தந்துள்ளனர். வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவர் வருணி முதுகுமாரன உள்ளிட்ட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/217412
  21. இரானை நிலைகுலையச் செய்த தாக்குதல் ஒரு தொடக்கமே - இஸ்ரேலின் இறுதித் திட்டமும் அதீத ஆபத்தும் கட்டுரை தகவல் எழுதியவர், ஃப்ராங்க் கார்ட்னர் பதவி, பாதுகாப்புத்துறை செய்தியாளர் 14 ஜூன் 2025, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆபரேஷன் ரைஸிங் லையன் என்ற பெயரில் இரான் மீது இஸ்ரேல் நடத்தியுள்ள தாக்குதல் முன் எப்போதும் இல்லாத வகையில் இருக்கிறது. கடந்த ஆண்டு இரண்டு தரப்பிலும் நடைபெற்ற ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் உட்பட முன்பு எப்போதும் இல்லாத வகையில் மிகவும் விரிவுபடுத்தப்பட்ட, ஒரு லட்சியத்துடன் நடத்தப்படும் தாக்குதலாக இருக்கிறது. 1980-88 காலங்களில் நடைபெற்ற இரான் - இராக் போருக்குப் பிறகு இரான் மீதான மிகப்பெரிய தாக்குதலாக இது உள்ளது. விடிவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதல்கள் இரானின் அணுசக்தி மையங்களை மட்டும் இலக்காக கொண்டிருக்கவில்லை. இரானின் வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தளங்கள் போன்றவற்றையும் இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது இரான் பதில் தாக்குதல் நடத்துவதற்கான திறனை கணிசமாக குறைக்கிறது. இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட்டிற்காக பணியாற்றும் நபர்களின் குழு களத்தில் இந்த தாக்குதலில் முக்கிய அங்கம் வகித்துள்ளது. இந்த குழுவே ராணுவத் தலைவர்கள் மற்றும் அணு விஞ்ஞானிகளின் துல்லியமான இடத்தை கண்டறிய உதவியதாக தெரிவிக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய ஆறு ஆராய்ச்சியாளர்களை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு: இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்ப்படையின் (IRGC) தலைவர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய புரட்சியின் பாதுகாவலர்களாக கருதப்பட்டவர்களில் ஒருவரான இவர் 1979-ஆம் ஆண்டு இரானின் ஷா ஆட்சிக்கு முடிவு கொண்டு வந்தவர்களில் முக்கியமான நபர் ஆவார். அவர் மட்டுமின்றி ஆயுதப்படைகளின் தலைவர், ஐ.ஆர்.ஜி.சியின் விமானப்படைத் தலைவர் ஆகியோரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இரான் இந்த தாக்குதலில் தன்னுடைய 6 அணு விஞ்ஞானிகளை இழந்திருப்பதாக தெரிவித்துள்ளது. இரானின் பாதுகாப்பு அமைப்பின் மையத்திற்குள் வெற்றிகரமாக ஊடுருவி, யாரும் அங்கு பாதுகாப்புடன் இல்லை என்பதை உணர்த்தியுள்ளது மொசாட். இரானின் அரசு தொலைக்காட்சி, இந்த தாக்குதலில் இதுவரை 78 பேர் கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளது. குழந்தைகள் உட்பட சாதாரண குடிமக்களும் கொல்லப்பட்டனர் என்றும் தெரிவித்துள்ளது. (இது கொல்லப்பட்டவர்களின் அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை. பிபிசியால் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை). இந்த தாக்குதலின் ஒரு பகுதியாக, இரானுக்குள் இருந்தே மொசாட் அமைப்பு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலின் முதன்மை இலக்குகள் நடான்ஸில் அமைந்திருக்கும் அணு செறிவூட்டும் மையமும், ஐ.ஆர்.ஜி.சிக்கு சொந்தமான தளங்களும் தான். இப்படியான சூழலை இஸ்ரேல் நீண்ட காலமாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. இந்த தாக்குதல்களால் இரான் அதிர்ச்சி அடைந்துள்ளது. இது முதல் அலை மட்டுமே. இஸ்ரேலின் தாக்குதல் பட்டியலில் மேலும் பல சாத்தியமான இலக்குகள் உள்ளன. சில எளிதில் அடைய முடியாததாகவும் அதேநேரத்தில் நிலத்திற்கு அடியில் உள்ள தளங்களும் இந்த இலக்குப் பட்டியலில் இருக்கின்றன. இந்த தாக்குதலை இஸ்ரேல் நடத்தக் காரணம் என்ன? அதை ஏன் இப்போது நடத்துகிறது? இரானின் அணுசக்தி திட்டத்திற்கு முடிவு இஸ்ரேலும் சில மேற்கத்திய நாடுகளும், இரான் ரகசியமாக அணு ஆயுத உற்பத்தியில் முன்னேறிச் செல்வதாக சந்தேகித்தன. அணு ஆயுத உற்பத்தியில் இருந்து பின் வாங்குவதற்கு இடமே அளிக்காத 'பிரேக்அவுட் கேபபிலிட்டி' என்ற கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது என்று அவர்கள் நினைத்தனர். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை இரான் தொடர்ச்சியாக மறுத்து வந்தது. மக்களின் தேவையை பூர்த்தி செய்யவே அணுசக்தி திட்டத்தை மட்டுமே, ரஷ்யாவின் உதவியோடு உருவாக்கி வருவதாகவும், அது அமைதிக்கான நோக்கங்களை மட்டுமே கொண்டுள்ளது என்றும் தெரிவித்தது. பத்தாண்டுகளுக்கும் மேலாக இரானின் இந்த முயற்சியை பல்வேறு வடிவங்களில் தாமதமாக்க இஸ்ரேல் முயற்சி செய்து வந்தது. அதில் ஓரளவுக்கு வெற்றியும் கண்டது. இரான் ஆராய்ச்சியாளர்கள் சிலர் மர்மமான முறையில் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டனர். 2020-ஆம் ஆண்டு டெஹ்ரானில் சாலை ஒன்றில்அணுசக்தி திட்டத்தின் தலைவராக பணியாற்றிய பிரிகேடியர் ஜெனரல் ஃபக்ரிஸாதே கொல்லப்பட்டார். ரிமோட் மூலமாக இயக்கப்படும் மெஷின் துப்பாக்கி மூலம் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் ஆயுதப்படையின் தலைவர் முகமது பகேரி (இடது) உள்ளிட்டோர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டனர் முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் சைபர் பிரிவு அதிகாரிகள் 'ஸ்டக்ஸ்னெட்' என்ற கணினி வைரஸை, இரானின் அணு ஆய்வுக் கூடத்தின் 'சென்ட்ரிஃபூயூஜஸில்' வெற்றிகரமாக செலுத்தியது. இது அந்த கருவியை கட்டுப்பாடு இல்லாமல் சுழற்றியது. இந்த வாரம் ஐ.நா.வின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்பான சர்வதேச அணுசக்தி முகமை (IAEA), இரான் அதனுடைய அணு ஆயுத பரவல் தடை உத்தரவாதத்தை( non-proliferation obligations) மீறுவதாகக் கண்டறிந்தது. இந்த விவகாரத்தை ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலுக்கு அனுப்புவதாகவும் எச்சரித்தது. 60% வரை செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (HEU) அளவுக்கு அதிகமாக இரான் சேமித்து வைக்கிறது. இதனால் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளன. மக்கள் பயன்பாட்டுக்குத் தேவையான மின்சாரத்தை வழங்கும் அணுசக்தியை உற்பத்தி செய்வதற்கு தேவையான அளவைக் காட்டிலும் யுரேனியம் அதிகமாக செறிவூட்டப்பட்டுள்ளது. அணு குண்டை தயாரிப்பதற்கு தேவையான செறிவுக்கு மிக அருகில் யூரேனியம் செறிவூட்டப்பட்டு இரானில் சேமிக்கப்படுகிறது. இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. இது 2015-ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால் அடுத்து பதவிக்கு வந்த டொனால்ட் டிரம்பால் அது 'உலகில் மிகவும் மோசமான ஒப்பந்தம்' என்ற விமர்சனத்தைப் பெற்றது. அந்த திட்டத்தில் இருந்து அமெரிக்காவை அவர் விலக்கிக் கொண்டார். அதற்கு அடுத்த ஆண்டில் இருந்து, அந்த ஒப்பந்த விதிமுறைகளுக்கு ஏற்றபடி இரான் நடக்கவில்லை. இரானைத் தவிர்த்து வேறு யாரும் அந்த நாடு அணு குண்டை வைத்திருப்பதை விரும்பவில்லை. 9.5 மில்லியன் மக்கள் தொகைக் கொண்ட, நகர்ப்புறங்களில் மக்கள் அடர்த்தியாக இருக்கும், ஒரு சிறிய நாடான இஸ்ரேல், அணு ஆயுதம் கொண்ட இரானை ஒரு அச்சுறுத்தலாக கருதுகிறது. இரானின் மூத்த தலைவர்கள் பலரும் இஸ்ரேல் அரசை அழிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்த பல அறிக்கைகளை இஸ்ரேல் சுட்டிக்காட்டுகிறது. சௌதி அரேபியா, ஜோர்டான், மற்றும் பல வளைகுடா அரபு நாடுகள் இரானின் புரட்சிகர இஸ்லாமிய குடியரசு குறித்து அதிக அக்கறை செலுத்தவில்லை. ஆனால் இரான் என்ற ஒரு அண்டை நாட்டுடன் அவர்கள் வாழ பழகிக் கொண்டனர். தற்போது அவர்களின் எல்லை வரை பிரச்னை பரவி வருவது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு நேரம் மிகவும் முக்கியமானது. இரானின் கூட்டாளிகளை லெபனான், சிரியா மற்றும் காஸாவில் தோற்கடித்துவிட்டதால் இரான் ஏற்கனவே பலவீனம் அடைந்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலின் போது இரானின் வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் பலவீனம் அடைந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாக்குதலின் ஒரு பகுதியாக மொசாட் இரானுக்குள் இருந்தே டிரோன் மூலம் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது இஸ்ரேலின் திட்டம் என்ன? ஆபரேஷன் ரைஸிங் லையன் மூலமாக, பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான ஆராய்ச்சிகளில் பின்னடைவை ஏற்படுத்த இஸ்ரேல் விரும்புகிறது. முழுமையாக இதனை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறது. இது இரானின் தலைமையை மேலும் வலுவிழக்கச் செய்து, ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வரும் என்று இஸ்ரேல் ராணுவம், அரசியல் மற்றும் உளவுத்துறை வட்டாரங்கள் நம்புகின்றன. இதன் மூலமாக இந்த பிராந்தியத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்தாத தீங்கற்ற ஆட்சி அமையும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறினார். இந்த ஞாயிறன்று மஸ்கட்டில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே அணுசக்தி திட்டம் தொடர்பாக ஆறாம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது. இந்த பேச்சுவார்த்தை மூலமாக எந்த விதமான பலனுள்ள முடிவுகளும் கிடைக்கும் என்று இஸ்ரேல் நம்பவில்லை. யுக்ரேன் விவகாரத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது போன்ற பிம்பத்தை உருவாக்கியதாக ரஷ்யா மீது குற்றச்சாட்டு உண்டு. தற்போது இரானும் அதையே செய்வதாக இஸ்ரேல் நம்புகிறது. இரானின் சந்தேகத்திற்குரிய அணு ஆயுத திட்டங்களை முடிவுக்குக் கொண்டு வர இருக்கும் சிறந்த மற்றும் இறுதியான வாய்ப்பு இது என்று இஸ்ரேல் நம்புகிறது. "இரானின் அணுசக்தி திட்டத்தை கட்டுப்படுத்துவதற்கான ஒப்பந்தத்தை உறுதி செய்ய டிரம்பிற்கு இருக்கும் வாய்ப்புகளை முறியடிக்கும் வகையில், இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் இரான் மீது தாக்குதலை நடத்தியுள்ளது," என்று எலி கெரன்மாயே தெரிவித்தார். அவர் வெளிநாட்டு விவகாரங்களுக்கான ஐரோப்பிய கவுன்சிலில் (ECFR) மூத்த கொள்கை ஆராய்ச்சியாளராக உள்ளார். "இஸ்ரேல் தாக்குல் நடத்த தேர்ந்தெடுத்த நேரமும், அதன் தன்மையும் பேச்சுவார்த்தைகளை முற்றிலுமாகத் தடம் புரளச் செய்யும் நோக்கம் கொண்டவை என்பது தெளிவாகிறது." இந்த தாக்குதலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இரானிடம் அமெரிக்கா கூறி வருகிறது. ஆனால் பதில் தாக்குதலுக்காக இரான், அந்த பிராந்தியத்தில் உள்ள ஏதேனும் அமெரிக்க தளத்தின் மீது நேரடியாகவோ அல்லது அதன் கூட்டாளிகள் மூலமாகவோ தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் நடைபெறும் மற்றொரு மோதலில் அமெரிக்காவை இழுக்கும் அபாயம் ஏற்படும். இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, இந்த தாக்குதலுக்கு கடுமையான எதிர்வினை இருக்கும் என்று கூறியுள்ளார். உண்மையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இரான் மிகவும் வலுவிழந்துள்ளது. பதில் தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன. அணு ஆயுதப் போட்டி இங்கே மேலும் ஒரு பெரிய சிக்கல் இருக்கிறது. இஸ்ரேலின் இந்த செயல்பாடு, அணு ஆயுத போட்டியைத் தூண்டலாம். இரானின் பாதுகாப்புக் கட்டமைப்பில் இருக்கும் தீவிர எண்ணங்களைக் கொண்ட தலைவர்கள் நீண்ட நாட்களாக ஒரு வாதத்தை முன்வைக்கின்றனர். அதாவது எதிர்வரும் காலங்களில் இஸ்ரேல் அல்லது அமெரிக்கா நடத்தும் தாக்குதல்களை தடுக்க அணுகுண்டு வைத்திருப்பதே சரியானது என்று அவர்கள் வாதிடுகின்றனர். லிபியா மற்றும் வட கொரியத் தலைவர்களுக்கு நேரிட்ட மாறுபட்ட நிகழ்வுகளை மதிப்பிட்டு இம்முடிவை அவர்கள் எடுத்திருப்பார்கள். லிபியாவின் கர்னல் கடாஃபி 2003-ஆம் ஆண்டு பாரிய அழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை தயாரிப்பதற்கான திட்டத்தை கைவிட்டார். 8 ஆண்டுகளுக்குப் பிறகு கால்வாய் ஒன்றில் இறந்த நிலையில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது. மேற்கத்திய நாடுகளின் வான்வழி தாக்குதலின் உதவியோடு நடைபெற்ற அரபு எழுச்சியின் முடிவில் கடாஃபி ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டார். இதற்கு முரணாக, வலிமையான அணு ஆயுதங்களை உருவாக்கவும், கண்டம் விட்டு கண்டம் தாண்டி இலக்குகளை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை உருவாக்கவும் வசதியாக வட கொரியா அனைத்து சர்வதேச தடைகளையும் மீறியது. எந்த ஒரு சாத்தியமான தாக்குதலையும் அந்த நாட்டின் மீது நடத்துவதற்கு முன்பு ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வைக்கும் சூழலை வடகொரியா உருவாக்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமையன்று, ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள இரானுக்கு இரண்டாவது வாய்ப்பு இருந்ததாகக் கூறுகிறார் இஸ்ரேலின் தாக்குதலால் எத்தகைய இழப்பை சந்தித்தாலும், இரான் அரசு வீழாமல் தப்பித்தால் அணு ஆயுதங்களை உருவாக்குவதை தீவிரப்படுத்தும். அணு குண்டு சோதனை நடத்தவும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கு முன்பும் பல தடைகளை இரான் மீறி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது நிகழும் பட்சத்தில் மத்திய கிழக்கில் அணு ஆயுதங்களுக்கான போட்டியை இது உருவாக்கும். சௌதி அரேபியா, துருக்கி மற்றும் எகிப்து போன்ற நாடுகளும் தங்களுக்கும் அணு ஆயுதம் தேவை என்ற முடிவை எடுக்கக் கூடும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd901z2ynv1o
  22. Published By: VISHNU 13 JUN, 2025 | 12:04 AM (நெவில் அன்தனி) தியகம, விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமான கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பின் முதலாம் நாளான வியாழக்கிழமை (12) 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய யாழ். வீராங்கனைகள் தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து வரலாற்றுச் சாதனை படைத்தனர். அத்துடன் கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் வரலாற்றி; இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலயத்திற்கு முதல் தடவையாக பதக்கம் ஒன்று கிடைத்துள்ளது. அதேவேளை, முதல் நாளன்று 3 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. கோலூன்றிப் பாய்தலில் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி வீராங்கனை ஜெயரூபன் ரூபிக்கா 2.60 மீற்றர் உயரத்தைத் தாவி தங்கப் பதக்கத்தையும் இதே பாடசாலையைச் சேர்ந்த குகராஜ் வைஷ்ணவி 2.50 மீற்றர் உயரத்தைத் தாவி வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர். கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் கோலூன்றிப் பாய்தலில் இப் பாடசாலை வென்றெடுத்த முதலாவது பதக்கங்கள் இவை ஆகும். இந்த நிகழ்ச்சியில் அளவெட்டி அருணோதயா கல்லூரி வீராங்கனை பி. சண்முகப்பிரியா 2.40 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கத்தை வென்றார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரத்தினபுரி, கல்லேல்ல கலைமகள் தமிழ் வித்தியாலய வீராங்கனை சசிகுமார் நிரோஷா வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார். 5000 மீற்றர் ஓட்டப் போட்டியை அவர் 19 நிமிடங்கள், 54.18 செக்கன்களில் ஓடி முடித்து 3ஆம் இடத்தைப் பெற்றார். இந்த பாடசாலை சார்பாக கனஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் பதக்கம் வென்ற முதலாவது மாணவி என்ற பெருமையை நிரோஷா பெற்று வரலாறு படைத்தார். பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரருக்கு தங்கம் 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 3000 மீற்றர் ஓட்டப் போட்டியில் வவுனியா, பூவரசங்குளம் மகா வித்தியாலய வீரர் பாங்கோ விகிர்தன் (8:37.20) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். இதே போட்டியில் திகனை, ரஜவெல்லை இந்து தேசிய பாடசாலை வீரர் பி. ஆர். விதூஷன் (8:43.70) வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வீரர் எஸ். டிரேஷ்மன் (32.41 மீற்றர்) வெண்கலப் பதக்கத்தை வென்றார். 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி வீரர் வை. துலஸ்திகன் (13.78 மீற்றர்) வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 18 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் சாவகச்சேரி இந்து கல்லூரி வீரர் ஏ. கௌசிகள் 4.00 மீற்றர் உயரத்தைத் தாவி வெண்கலப் பதக்கம் பெற்றார். ஐந்து புதிய சாதனைகள் போட்டியின் முதலாம் நாளன்று 5 புதிய சாதனைகள் நிலைநாட்டப்பட்டது. 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொறணை, தக்சிலா மத்திய கல்லூரி வீராங்கனை ஷலோமி ஜயகொடி, சம்மட்டியை 40.81 மீற்றர் தூரத்திற்கு எறிந்து புதிய சாதனையை நிலைநாட்டி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் கொழும்பு விசாகா வித்தியாலய வீராங்கனை தெவ்மினி கருணாதிலக்க (12.68 மீற்றர்) புதிய சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றெடுத்தார். 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான உயரம் பாய்தலில் இரத்தினபுரி ஜனாதிபதி கல்லூரி வீராங்கனை மிஹின்சா தெவ்மினி அபேரத்ன (1.74 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார். 16 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை டிலினி ராஜபக்ஸ (5.96 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார். 16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான சம்மட்டி எறிதல் போட்டியில் ஹொரணை தக்சிலா மத்திய கல்லூரி வீரர் எஸ். எம். கருணாரட்ன (40.68 மீற்றர்) புதிய சாதனை நிலைநாட்டினார். https://www.virakesari.lk/article/217305
  23. ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டது – அதில் என்னென்ன தகவல்கள் இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES 12 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 13 ஜூன் 2025 (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாக ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. உயிர் பிழைத்த அந்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் நேசத்திற்குரியவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே எங்களது இப்போதைய இலக்கு என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. விபத்து குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை அளித்து வருவதாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது. குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானம் அருகில் இருந்த மருத்துவர்கள் விடுதியில் மோதியதாக ஆமதாபாத்தில் உள்ள ஒரு மூத்த காவல்துறை அதிகாரி ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்துள்ளார். "ஆமதாபாத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டிய ஏர்இந்தியா AI 171 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களுக்குப் பிறகு மதியம் 1:38 மணிக்கு குடியிருப்புப் பகுதியில் (மேகானி நகர்) மோதி விபத்துக்குள்ளானது. விமானத்தில் 10 விமானப் பணியாளர்கள், 2 விமானிகள் உள்பட 242 பேர் இருந்தனர்" என சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு விபத்துக்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்கப்பட்டுள்ளது என்று இந்திய விமான போக்குவரத்து அமைச்சர் கிஞ்சரபு ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார். இந்தத் தகவலை தனது எக்ஸ் சமூக ஊடகப் பதிவில் பதிவிட்ட ராம் மோகன் நாயுடு "விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) அகமதாபாத்தில் விபத்து நடந்த இடத்திலிருந்து 28 மணி நேரத்திற்குள் விமானத் தரவுப் பதிவை (கருப்புப் பெட்டி) மீட்டெடுத்துள்ளது. இது விசாரணையில் ஒரு முக்கியமான அங்கமாக இருக்கும். விபத்து குறித்த விசாரணை நடத்துவதில் இது பெரிதும் உதவும்" என்று தெரிவித்துள்ளார் கடந்த சில மணிநேரத்தில், ராய்ட்டர்ஸ், ஏஎஃப்பி உள்ளிட்ட செய்தி முகமைகள் ஒரு கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளன. இரண்டு முகமைகளும் காவல்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி வருகின்றன. விமானங்கள் வழக்கமாக இரண்டு கருப்புப் பெட்டிகளை - சிறிய ஆனால் கடினமான மின்னணுத் தரவு ரெக்கார்டர்களை - கொண்டு செல்கின்றன. ஒன்று விமானி அறையிலிருந்து வரும் ஒலியைப் பதிவு செய்கிறது. இதனால் விமானிகள் என்ன சொல்கிறார்கள் என்பதையும், ஏதேனும் அசாதாரண சத்தங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றையும் புலனாய்வாளர்களால் கேட்க முடியும். மற்றொன்று உயரம் மற்றும் வேகம் போன்ற விமானத் தரவுகளைப் பதிவு செய்கிறது. போயிங் 787 பயன்பாட்டை ஏர் இந்தியா நிறுத்தப் போகிறதா? சில இந்திய ஊடகங்களில், அரசாங்கம் அனைத்து போயிங் 787 விமானங்களின் பயன்பாட்டையும் நிறுத்தக்கூடும் என்ற செய்திகள் வந்தன. அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள ஏர் இந்தியா நிறுவனம், அது உண்மையல்ல என்று கூறியுள்ளது. அப்போது, "இந்தச் செய்தி உண்மையல்ல. குறைந்தபட்சம் இப்போதைக்கு அதைப் பற்றி ஆலோசிக்கவில்லை," என்று ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. உயிர் பிழைத்த நபர் கூறியது என்ன? விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் அந்த போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானத்தின் 11A இருக்கையில் பயணம் செய்தவர் என்று ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. மேலும், உயிர் பிழைத்த அந்த நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் ஜி.எஸ். மாலிக் கூறியுள்ளார். விமான நிறுவன அதிகாரிகள் முன்னர் பகிர்ந்த விமானம் குறித்த அறிக்கைப்படி, 11A இருக்கையில் இருந்த பயணி விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்றும், அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர் என்றும் தெரிகிறது. "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது" என விஸ்வாஷ் கூறியதாக சில இந்திய செய்தி முகமைகள் தெரிவிக்கின்றன. விபத்தில் பலியான 15 வயது சிறுவன் – குடும்பத்தினர் பிபிசியிடம் கூறியது என்ன? ஆமதாபாத் விமான விபத்தில் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் கொண்டு வந்த மருத்துவமனையில், மிகவும் துயரமான சில கதைகளைக் கேட்க முடிகிறது. விபத்துக்குள்ளான விமானம் விழுந்த கட்டடத்தில் வசித்து வந்த ஆகாஷ் என்ற 15 வயது சிறுவன் இறந்துவிட்டதாக மருத்துவமனையில் கேள்விப்பட்டோம். அந்தச் சிறுவன் கட்டடத்தில் உள்ள உணவகத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து வந்தார் அந்த உணவகத்தில் ஆகாஷின் அம்மா சீதாபென்னும் பணிபுரிந்து வந்தார். விபத்து நிகழ்ந்ததும், தனது மகனைக் காப்பாற்ற அவர் உள்ளே சென்றபோது அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டன. சீதாபென் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகாஷின் அண்ணா கல்பேஷை சந்தித்தோம், அவர் மிகவும் சோகமாக இருந்தார். தனது தம்பி மற்றும் தாய் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்து அவர் அழுது கொண்டிருந்தார். விபத்து நடந்த இடத்திற்கு அருகில்தான் ஆகாஷின் தந்தையும் இருந்திருக்கிறார். திடீரென ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டதாகவும், உடனே அவர் அங்கு சென்றதாகவும் கூறினார். அருகில் சென்றபோது, எல்லா இடங்களில் இருந்தும் புகை வெளியேறிக் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார். அவர் அங்கு சென்றபோது, அவரது மனைவி சீதாபென் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார், தனது மகன் உயிர் பிழைக்கவில்லை என்ற தகவல் அவருக்குக் கிடைத்தது. பணி ஓய்வுக்குச் சில மாதங்களே இருந்த நிலையில் பலியான மூத்த விமானி படக்குறிப்பு, கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானி கேப்டன் சுமீத் சபர்வால் இந்த விபத்தில் இறந்தவர்களில் கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அனுபவமுள்ள ஏர் இந்தியா விமானியான கேப்டன் சுமீத் சபர்வாலும் ஒருவர். அவர் 8,200 மணிநேரத்திற்கும் மேல் விமானப் பயண அனுபவம் கொண்டவர். அத்துடன் விமானத்தில் மூத்த குழு உறுப்பினராக கேப்டன் சபர்வால் இருந்தார். அவர் ஒரு லைன் பயிற்சி கேப்டன் ஆவார். இது விமானக் குழுவினருக்கு வழிகாட்டும் பொறுப்பு. இந்தப் பணி மிகவும் அனுபவம் வாய்ந்த விமானிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது. அறுபது வயதான விமானி ஓய்வு பெறுவதற்குச் சில மாதங்களே இருந்த நிலையில், இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை அமைப்பின் முன்னாள் அதிகாரியான தனது 82 வயது தந்தையுடன் அதிக நேரம் செலவிடத் திட்டமிட்டிருந்தார் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "அவர் மிகவும் அமைதியான நபர். அவர் அடிக்கடி சீருடையில் வந்து செல்வதைப் பார்த்துள்ளோம். ஆனால், மிகவும் அமைதியானவராக இருந்தார்" என்று மும்பையில் உள்ள சபர்வாலின் அண்டை வீட்டுக்காரர் கூறியதாக அந்த நாளிதழ் செய்தி கூறுகிறது. துணை விமானி, முதல் அதிகாரி கிளைவ் குந்தர், சுமார் 1,000 மணிநேரம் விமானப் பயண அனுபவத்தைக் கொண்டிருந்தார். மேலும், விபத்துக்குள்ளான ட்ரீம்லைனரை இயக்க சான்றிதழ் பெற்றவராகவும் இருந்தார். விமான விபத்தில் இறந்த 4 வயது பெண் குழந்தை பட மூலாதாரம்,FAMILY HANDOUT இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையர் பகுதியை சேர்ந்த அகீல் நானாபாவா மற்றும் ஹன்னா வோராஜி, தங்களது நான்கு வயது மகள் சாராவுடன் விமான விபத்தில் இறந்தனர். இந்த குடும்பத்தின் சார்பாகப் பேசிய இமாம் அப்துல்லா, தாங்கள் இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாகவும், வியாழக்கிழமை அகமதாபாத்தில் நடந்தவற்றை புரிந்துக்கொள்ள முயல்வதாகவும் கூறினார். "இந்த இளம் குடும்பம் நம்பமுடியாத அளவிற்கு நெருக்கமாக இருந்தது - அர்ப்பணிப்புள்ள பெற்றோர் மற்றும் அவர்களின் அழகான இளம் மகள்," என்று அவர் கூறுகிறார். "அவர்கள் இரக்கமுள்ள, சுறுசுறுப்பான சமூக உறுப்பினர்கள், அவர்கள் எங்கள் உள்ளூர் இஸ்லாமிய பள்ளியிலும் பல்வேறு உள்ளூர் திட்டங்களிலும் தொடர்ந்து தன்னார்வத் தொண்டு செய்தனர். அவர்கள் பரவலாக நேசிக்கப்பட்டனர் மற்றும் ஆழமாக மதிக்கப்பட்டனர். அவரது அமைதியான தாராள மனப்பான்மை, அவரது அரவணைப்பு மற்றும் கருணை மற்றும் அவர்களின் மகளின் பிரகாசமான, மகிழ்ச்சியான மனப்பான்மை அவர்களை அறிந்த அனைவருக்கும் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அவள் பள்ளியில் சூரிய ஒளியின் கதிர், அவர்கள் எங்கள் வாழ்க்கையில் பலத்தின் தூணாக இருந்தனர்" என்று அவர் கூறுகிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பதிவில், "ஆமதாபாத்தில் நடந்த சோகம் அதிர்ச்சி மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட வகையில் இதயத்தை உடைக்கிறது. இந்தச் சோகமான நேரத்தில், எனது எண்ணங்கள் பாதிக்கப்பட்ட அனைவருடனும் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பாடுபடும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் இருந்தேன்" என்று கூறியுள்ளார். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டினர், ஒருவர் கனடா நாட்டைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டினர் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இந்த விமானம் பிரிட்டன் நேரப்படி மாலை 6:25 மணிக்கு (இந்திய நேரப்படி இரவு 10:55) தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்ததாக கேட்விக் விமான நிலையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கேட்விக் விமான நிலைய நிர்வாகம் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்படும்போது விபத்துக்குள்ளான AI171 விமானம், மாலை 6:25 மணிக்கு லண்டன் கேட்விக் விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டியிருந்தது என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகிறோம்" என்று தெரிவித்துள்ளது. ஷார்ட் வீடியோ Play video, "விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது.", கால அளவு 0,46 00:46 காணொளிக் குறிப்பு,விமானத்தில் 242 பேர் இருந்ததாக ஏ.என்.ஐ. செய்தி முகமை கூறுகிறது. பாதிக்கப்பட்டவர்களின் நிலை என்ன? ஏர் இந்தியா விமானம், விமான நிலையத்தின் அருகே இருந்த மருத்துவர்கள் விடுதியின் மீது மோதியதைத் தொடர்ந்து, சுமார் 50 முதல் 60 மருத்துவ மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பு (FAIMA) தெரிவித்துள்ளது. ஐந்து மாணவர்களைக் காணவில்லை என்றும், குறைந்தது இரண்டு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதாகவும் FAIMA சங்கம் கூறுகிறது. சில மருத்துவர்களின் உறவினர்களையும் காணவில்லை. அகில இந்திய மருத்துவ சங்க கூட்டமைப்பின் கூற்றுப்படி, விமானத்தில் இருந்த பெரும்பாலான பயணிகள் உயிரிழந்த நிலையிலேயே மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். ஏ.எஃப்.பி மற்றும் ஏபி செய்தி முகமைகளின் தகவல்படி, விமான விபத்தில் யாரும் உயிர் பிழைத்ததாகத் தெரியவில்லை என்று ஆமதாபாத் காவல்துறைத் தலைவர் கூறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் கூறியது என்ன? இந்த விமான விபத்திற்கு பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டாமர் இரங்கல் தெரிவித்துள்ளார். "பிரிட்டன் நாட்டினர் பலரை ஏற்றிக் கொண்டு லண்டனுக்கு சென்ற விமானம், இந்திய நகரமான ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளானது தொடர்பான துயரக் காட்சிகள் பெரும் கவலையை ஏற்படுத்துகின்றன. அங்குள்ள நிலைமை குறித்து நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இந்தத் துயரமான நேரத்தில், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பிரிட்டன் நாட்டினர் 53 பேர் பயணித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்தை அடைந்துள்ளன. விமான நிலைய பகுதிக்கு வெளியே புகை காணப்பட்டதாகவும், அதன் பிறகு மொத்த குழுவினரும் விசாரணைக்காக சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளதாகவும் ஆமதாபாத் விமான நிலையத்தின் 1வது முனையத்தின் மேலாளர் பிபிசி ஹிந்தியிடம் கூறினார். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள் என்றும், மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் அமைத்துள்ளதாகவும் ஏர் இந்தியா கூறியுள்ளது. படக்குறிப்பு,ஆமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்திற்குள்ளான இடத்தைக் குறிக்கும் வரைபடம் "விமானம் விபத்துக்குள்ளான பிறகு தீப்பிடித்தது. தீயை அணைக்க தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளன," என்று தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் காடியா தெரிவித்தார். விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் அமைப்பான 'ஃபிளைட் ரேடார் 24', "ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு சென்ற ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. அந்த விமானம் புறப்பட்ட சில விநாடிகளுக்குப் பிறகு எங்களுக்கு கடைசி சிக்னல் கிடைத்தது," என்று சமூக ஊடக தளமான எக்ஸில் பதிவிட்டுள்ளது. தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. ஃபிளைட் ரேடார் 24-இன் கூற்றுப்படி, விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787-8 ட்ரீம்லைனர் ஆகும். இரண்டாவது மாடியில் இருந்து குதித்து தப்பிய நபர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ரமிலா தனது மகன் மருத்துவர்கள் விடுதியின் இரண்டாவது மாடியில் இருந்து வெளியே குதித்து தப்பியதாகக் கூறுகிறார். அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு வெளியே பதட்டமான உறவினர்களிடமிருந்து இப்போது எங்களுக்குத் தகவல் வரத் தொடங்கியுள்ளது. அகமதாபாத்தில் உள்ள சிவில் மருத்துவமனையில் இருக்கும் பூனம் படேல், தனது மைத்துனி லண்டன் செல்லும் விமானத்தில் இருந்ததாக ANI செய்தி நிறுவனத்திடம் கூறுகிறார். "ஒரு மணி நேரத்திற்குள், விமானம் விபத்துக்குள்ளானதாக எனக்கு செய்தி கிடைத்தது. அதனால் நான் இங்கு வந்தேன்," என்று அவர் கூறுகிறார். விமானம் விபத்துக்குள்ளானபோது, தனது மகன் மதிய உணவு இடைவேளைக்காக மருத்துவர்களின் விடுதிக்குச் சென்றிருந்ததாக ரமிலா கூறுகிறார். அவர் இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்ததாகவும், ஆனால் அவர் பாதுகாப்பாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். குஜராத் முதலமைச்சர் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES ஏஎன்ஐ செய்தி முகமையின் கூற்றுப்படி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் முதல்வர், மாநில உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை ஆணையரிடம் பேசியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும் என அவர் உறுதியளித்துள்ளார். ஆமதாபாத்தில் நடந்த விமான விபத்து சம்பவத்திற்கு குஜராத் மாநில முதல்வர் பூபேந்திர படேல் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், "ஆமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவமான ஏர் இந்தியா விமான விபத்து குறித்து அறிந்து நான் வருத்தமடைந்தேன். உடனடியாக மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன்," என்று கூறியுள்ளார். மேலும், "காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காகக் கொண்டு செல்ல பிரத்யேக அவசரக்கால வழித்தடங்களை ஏற்பாடு செய்வதற்கும், முன்னுரிமையின் அடிப்படையில் மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் உறுதி செய்வதற்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன" என்றும் அவர் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,BBC/TEJAS VAIDYA ஆமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக அதன் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். "விமான நிலையம் தற்போது செயல்படவில்லை. மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து நடவடிக்கைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன" என்று அவர் கூறியுள்ளார். விமானம் விபத்துக்குள்ளானபோது வானிலை தெளிவாக இருந்ததாக விமானப் பாதுகாப்பு நிபுணர் மார்கோ சான் கூறுகிறார். METAR என அழைக்கப்படும் விமான வானிலை முன்னறிவிப்பின்படி, அந்தப் பகுதியில் மேற்பரப்பு காற்று குறைவாகவும், தெரிவுநிலை (Visiblity) ஆறு கிலோமீட்டர் தூரம் என்ற அளவிலும் இருந்தது. "அப்போது குறிப்பிடத்தக்க அளவில் மேகங்கள் இருந்ததாகவோ அல்லது மோசமான வானிலை நிகழ்வுகள் எதுவும் நிலவியதாகவோ எதுவும் பதிவாகவில்லை. அதீத காற்று, புயல் அல்லது இத்தகைய விபத்திற்குக் காரணமாக இருக்கக்கூடிய பிற பாதகமான நிலைமைகள் குறித்த அறிகுறிகள் ஏதும் இல்லை" என்று சான் கூறுகிறார். சிக்கலில் போயிங் நிறுவனம் ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில்தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் ஆறு வாரங்களுக்கு முன்புதான் விமானத் தயாரிப்பு நிறுவனம், டிரீம்லைனர் என்று அழைக்கப்படும் இந்த மாடல் ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல்கல்லை எட்டியதாகத் தெரிவித்தது. அந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், 1,175க்கும் மேற்பட்ட விமானங்களைக் கொண்ட உலகளாவிய 787 விமானக் குழு, 30 மில்லியனுக்கும் அதிகமான விமான நேரங்களை உள்ளடக்கிய கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் விமானங்களை இயக்கியுள்ளதாக நிறுவனம் கூறியது. இந்த விபத்து, அதன் 737 திட்டங்களுடன், ஆபத்தான விபத்துகள் உள்படப் பல்வேறு சிக்கல்களைச் சமாளிக்கப் போராடி வரும் போயிங் நிறுவனத்திற்கு ஒரு பெரிய அடியாக விழுந்துள்ளது. தனது பணியில் ஓர் ஆண்டு நிறைவைக் குறிக்கவுள்ள தலைமை நிர்வாக அதிகாரி கெல்லி ஆர்ட்பெக்கிற்கு இது மற்றொரு சோதனையாக இருக்கும். அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான இந்த நிறுவனத்தின் எதிர்காலம் குறித்துக் கேள்விகளை எழுப்பும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்து வைக்க அவர் இந்தப் பணியில் அமர்த்தப்பட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 1 கோடி இழப்பீடு – டாடா குழுமம் Play video, "ஏர் இந்தியா விமான விபத்து: புறப்பட்ட ஒரே நிமிடத்தில் விழுந்து நொறுங்கியது எப்படி?", கால அளவு 4,50 04:50 காணொளிக் குறிப்பு, ஏர் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரான டாடா குழுமம், இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளைக் கவனித்துக் கொள்வதோடு, பாதிக்கப்பட்ட மருத்துவ விடுதியை மீண்டும் கட்டுவதற்கும் ஆதரவளிப்பதாக டாடா குழுமம் கூறியுள்ளது. "இந்த நேரத்தில் நாங்கள் உணரும் துயரத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியாது" என்று டாடா குழுமம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஏர் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன், இந்த விபத்திற்குத் தனது "ஆழ்ந்த வருத்தத்தை" வெளிப்படுத்தியுள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில், "இந்த நிகழ்வு தொடர்பான எங்கள் ஆழ்ந்த வருத்தத்தை வெளிப்படுத்திக் கொள்கிறேன். ஏர் இந்தியாவில் உள்ள அனைவருக்குமே இதுவொரு கடினமான நாள். இப்போது எங்கள் முயற்சிகள் அனைத்தும், எங்கள் பயணிகள், பணியாளர்கள், அவர்களது குடும்பங்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் தேவைகள் மீது கவனம் செலுத்துவதில் மட்டுமே உள்ளது," என்றும் அவர் கூறியுள்ளார். ஏர் இந்தியா அவசர உதவி எண் ஏர் இந்தியா நிறுவனம், பயணிகள் தொடர்பான பிரத்யேக அவசர உதவி எண்ணை அறிவித்துள்ளது. மேலும் தகவல் பெற விரும்பும் இந்திய குடும்பங்கள் 1800 5691 444 என்ற எண்ணை அழைக்கலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4qe1dz38no
  24. நாகப்பட்டினம், காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு சேவைக்கான நிதி உதவி நீடிப்பு 13 JUN, 2025 | 08:54 PM (எம்.மனோசித்ரா) நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையே முன்னெடுக்கப்படும் பயணிகள் படகு சேவைக்கான ஒத்துழைப்பினை அதிகரிக்கும் நோக்கில், இந்திய அரசாங்கம் மேலும் ஒரு வருடத்துக்கு நிதி உதவியை நீடிக்க தீர்மானித்துள்ளது. இந்த நீடிப்பானது இரு நாடுகளுக்கும் இடையேயான பிராந்திய இணைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களிடையேயான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் இந்தியாவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டுக்கு உகந்ததாகவுள்ளது. இந்த நிதி உதவி, ஆண்டுதோறும் 300 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக (மாதத்திற்கு சுமார் 25 மில்லியன் ரூபா) வழங்கப்படுகிறது. முந்தைய ஆண்டைப் போலவே, முக்கிய தளவாட மற்றும் செயல்பாட்டு செலவுகளை ஈடு செய்வதன் மூலம் சேவையின் மலிவு மற்றும் செயல்பாட்டு நிலைத்தன்மையை உறுதி செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் மீண்டும் இந்த பயணிகள் படகு சேவை தொடங்கப்பட்டதிலிருந்து 15,000 க்கும் மேற்பட்ட பயணிகளின் போக்குவரத்து எளிதாக்கப்பட்டுள்ளது. அத்தோட இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார, பொருளாதார மற்றும் சமூக பரிமாற்றங்களையும் வலுப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல்சார் இணைப்பு புத்துயிர் பெறுவதில் இது ஒரு முக்கிய மைல்கல்லாகும். படகு சேவைக்கான நிதி உதவி தொடர்வதானது, 2024 டிசம்பரில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்திய விஜயத்தின் போதும், கடந்த ஏப்ரலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையின் போதும் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டபடி, மேம்பட்ட கடல்சார் இணைப்புக்கான பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையுடன் ஒத்ததாகவுள்ளது. இணைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்தும் மேலதிக வழித்தடங்கள் மற்றும் சேவைகளை ஆராய்வது எதிர்காலத் திட்டங்களில் அடங்கும் என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராயலம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/217363
  25. ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும் இணைய வழியில் வழங்குதல் ஜூன் 21 முதல் ஆரம்பம் Published By: VISHNU 13 JUN, 2025 | 10:42 PM ஜனாதிபதி நிதியத்தால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து சேவைகளும் ஜூன் 21 முதல் இணைய வழியில் வழங்கப்படும். ஜனாதிபதி நிதியிலிருந்து பொதுமக்களுக்கு மருத்துவ உதவி வழங்கும் சேவைக்கான விண்ணப்பங்கள் பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ளல் ஆரம்பிக்கப்பட்டன. இந்த வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருவதால், ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் இவ்வாறு விரிவுபடுத்த அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, வறுமை ஒழிப்பு நிவாரணங்கள், கல்விப் புலமைப்பரிசில் வழங்குதல், கல்வியில் சிறந்து விளங்கும் பிள்ளைகளை பாராட்டுதல், விசேட தேவைகள் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்கள், காட்டு யானைகளால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகை, தேசிய அளவில் அல்லது நாட்டிற்காக சேவை செய்தவர்களைப் பாராட்டுதல், விபத்துகள் மற்றும் அனர்த்தங்களின் போது வழங்கப்படும் நிவாரணங்கள் உள்ளிட்ட ஜனாதிபதி நிதியத்தினால் செயற்படுத்தப்படும் அனைத்து சேவைகளுக்கும், பொதுமக்களுக்கு நாட்டின் அனைத்து பிரதேச செயலகங்களின் ஊடாக இணைய வழியில் விண்ணப்பிக்க முடியும். இந்த வேலைத்திட்டத்துடன் 47 வருட காலமாக கொழும்பிற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த ஜனாதிபதி நிதியத்தின் அனைத்து சேவைகளையும், இலங்கையின் அணைத்து பிரதேச செயலகங்கள் ஊடாகவும் பெற்றுக்கொள்ள முடியும். ஜனாதிபதி தலைமையிலான ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகக் குழு மேற்கொண்ட தீர்மானத்தின் படி, பொதுமக்களுக்கு இந்த வசதிகள் செய்துகொடுக்கப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக அதிகமான மக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதன் ஊடாக ஜனாதிபதி நிதியத்தை தவறாக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன. https://www.virakesari.lk/article/217409

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.