Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. இந்த மருத்துவ நிபுணர் மாலை 4 மணி வரை பணியாற்றுவதாக அங்கு பணியாற்றும் ஒருவர் குறிப்பிட்டார். இந்த காரணம் ஒன்று போதுமே?!
  2. நேரில் சந்திப்பதற்கு சந்தர்ப்பம் அளியுங்கள்; ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை 08 JUN, 2025 | 01:37 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேக்ர் இம்மாதம் நாட்டுக்கு வருகைதருவதற்கு உத்தேசித்திருக்கும் நிலையில், அவ்வாறு வருகைதரும் பட்சத்தில் முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும், தாம் நேரில் சந்தித்துக் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் உயர்ஸ்தானிகரிடம் கடிதம் மூலம் கோரியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருக்கும் நிலையில், வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளில் ஒரு தரப்பினர் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துக்கு முன்பதாக வருகைதரவேண்டாம் எனக்கோரி உயர்ஸ்தானிகருக்கு ஏற்கனவே கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளனர். அதேவேளை நாட்டுக்கு வருகைதரும் பட்சத்தில் முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யுமாறும், பாதிக்கப்பட்ட தரப்பினரை சந்திக்குமாறும் கோரி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்த நடராஜாவினால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: வட, கிழக்கு மாகாணங்களிலுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினராகிய நாம் நீதிகோரி சுமார் 3000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துவருகின்றோம். அது யுத்தத்தின்போதும், அதன் பின்னரும் அரச படையினரால் அழைத்துச்செல்லப்பட்ட எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறிந்துகொள்ளும் நோக்கில் உண்மையையும், அதற்குரிய பொறுப்புக்கூறலையும் கோருகின்ற எமது இயலாமையின் வெளிப்பாடாகும். பல ஆண்டுகளாக இப்போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 300 பேர் அதற்குரிய பதிலோ அல்லது நீதியோ கிட்டாமலே உயிரிழந்துவிட்டனர். ஆனால் எமது வயோதிபம் மற்றும் உணர்வு ரீதியான சோர்வுக்கு மத்தியிலும் நாம் நீதியைக்கோரி அமைதியான முறையில் போராடிவருகின்றோம். கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரிலிருந்து பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியிலும் நாம் ஜெனீவாவுக்குச்சென்று உரையாற்றியிருப்பதுடன், எமது எதிர்பார்ப்புக்கள் தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினருக்கு விளக்கமளித்துவந்திருக்கின்றோம். உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை அடைவதே எப்போதைக்குமான எமது அசைக்கமுடியாத இலக்காக இருந்திருக்கின்றது. அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் நீங்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி நாட்டுக்கு வருகைதரவிருப்பதனை நாமறிவோம். இருப்பினும் உங்களது இவ்விஜயம் ஜுன் மாதம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடருக்கு மத்தியில் இடம்பெறவிருப்பதனால், அது எம்மத்தியில் தீவிர கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கின்றது. குறிப்பாக ஜெனீவாவில் உங்களைச் சந்திப்பதற்கு நாம் பல தடவைகள் முயற்சித்த போதிலும், அது சாத்தியமாகாத நிலையிலேயே இவ்விஜயம் தொடர்பான எமது கரிசனைகள் வலுப்பெற்றிருக்கின்றன. இவ்வாறானதொரு பின்னணியில் உங்களது இலங்கை விஜயத்தின்போது உங்களைச் சந்திப்பதற்கு இடமளிக்குமாறு கோருகின்றோம். நாம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடரில் கலந்துகொள்வதைத் தவிர்த்து, நாட்டில் இருப்பதன் ஊடாக உங்களை நேரடியாகச் சந்தித்துப் பேசமுடியும் எனக் கருதுகின்றோம். அவ்வாறானதொரு சந்திப்பு நாங்கள் முகங்கொடுத்துவரும் யதார்த்த சூழ்நிலையையும், எமது வலிகளையும் உங்களுக்கு எடுத்துரைப்பதற்கு வாய்ப்பளிக்கும் என எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று சுமார் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருக்கக்கூடும் என நம்பப்படும் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறும் உங்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். முள்ளிவாய்க்காலுக்கான விஜயமானது மக்களின் வலிமிகு துயரம் ஏற்கப்படுவதைக் காண்பிக்கக்கூடிய வலுவான செயலாக அமைவதுடன் மாத்திரமன்றி, உண்மையை நீங்கள் கண்கூடாகப் பார்ப்பதற்கான சந்தர்ப்பத்தையும் வழங்கும். அது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதலளிப்பதுடன் நீதியை அடைந்துகொள்வதை நோக்கிய அர்த்தமுள்ள நடவடிக்கையாகவும் அமையும் என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/216927
  3. செம்மணி புதைகுழி தொடர்பில் விசேட கரிசனை கொண்டுள்ளோம்; நீதி அமைச்சர் தெரிவிப்பு 08 JUN, 2025 | 12:57 PM ஆர்.ராம் செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழு அகழ்வு குறித்து விசேட கரிசனைகளைக் கொண்டிருப்பதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் தெரிவித்துள்ளார். செம்மனி சிந்துபாத்தி இந்து மயாணத்தில் நடைபெற்றுவரும் அகழ்வில் இதுவரையில் 18 மனித எலும்புக்கூடுகள் பகுதியளவிலும், முழுமையாகவும் மீட்கப்பட்டுள்ள நிலையில் குறித்த விடயம் சம்பந்தமாக அரச தரப்பின் நிலைப்பாடு குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்படும் அகழ்வாராய்ச்சியின்போது கண்டறியப்படும் அனைத்து மனித எச்சங்களும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்படும். அதன்பின்னர் பகுப்பாய்வு அறிக்கைகளின் பிரகாரமே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து கூற முடியும். நீதிமன்றத்தின் அனுமதியில் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக அகழ்வு நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து வழக்குகளும் நீதிமன்றில் நிலுவையில் உள்ளன. ஆகவே நீதிமன்றம் தான் இறுதியான முடிவினை எடுக்கும். எவ்வாறாயினும் உண்மைகள் கண்டறியப்படுவதற்காக தொடர்ச்சியான அகழ்வுப்பணிகளுக்காக நீதி வழங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப உதவிகளையும் அரசதரப்பில் வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதோடு விசேட கரிசனைகளையும் கொண்டிருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/216925
  4. 08 JUN, 2025 | 12:27 PM (இராஜதுரை ஹஷான்) இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற தொழிற்றுறை நிபுணர்களுடான கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் எதிர்பார்க்க முடியாத அளவுக்கு இலஞ்ச ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. கொள்கைத் திட்ட வகுப்பின் ஊடாகவே பெருமளவிலான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன. முறையற்ற வகையில் ஒரு அமைச்சரவை பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, அதனூடாக அரச நிதி மோசடி செய்யும் அல்லது வீண்விரயம் செய்யும் சூழலே காணப்பட்டுள்ளது. இலஞ்ச ஊழலுடன் தொடர்புடைய கைதுகள் அனைத்தும் கடந்த காலங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் பிரதிபலனாகும். இக்காலப்பகுதியில் புதிதாக வழக்குகள் ஏதும் தாக்கல் செய்யப்படவில்லை. 2023 ஆம் 09 இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் பிரகாரம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஒருசில அரச நிறுவனங்கள் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் விருப்பம் கொள்வதில்லை. சுங்கத் திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம், மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஆகிய அரச நிறுவங்களின் இலஞ்ச ஊழல் ஒழிப்பு கிளைகளை திறக்க தயார், ஆனால் அதன்பின்னர் அங்கு ஒருசிலர் பணியில் ஈடுபடமாட்டார்கள். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவை அரசியலுடன் ஒன்றிணைத்துக் கொள்ள வேண்டாம் என்று விமர்சனங்களை முன்வைக்கும் தரப்பினரிடம் கேட்டுக் கொள்கிறோம். ஊழல் மோசடிகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமக்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் என்ற வேறுபாடுகள் கிடையாது என்றார். https://www.virakesari.lk/article/216921
  5. 08 JUN, 2025 | 12:25 PM (இராஜதுரை ஹஷான்) விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு தொடர்ச்சியாக குறிப்பிடுவது தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் அதிருப்திக்குரியன. முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார். அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்களால் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்பு ஆகியவற்றுக்கு தடையாக அமையலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் விடுவிக்கப்பட்ட 300 கொள்கலன்களில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் ஆயுதங்கள் இருந்ததாக பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ள விடயம் தொடர்பில் வீரகேசரிக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் வடக்குக்கும், தெற்குக்கும் இடையில் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. பிரபாகரன் தமது தேசிய தலைவர் என்று குறிப்பிட்டு பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார். இது அரசியலமைப்புக்கு முற்றிலும் விரோதமானது. அர்ச்சுனாவின் கருத்துக்களை அரசாங்கம் அலட்சியப்படுத்துகிறது. ஆனால் இது இனங்களுக்கிடையில் சந்தேகத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்தும். 300 கொள்கலன்களில் பிரபாகரின் ஆயுதங்கள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தமிழ் டயஸ்போராக்களிடமிருந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நிதி பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் உண்மைத்தன்மை என்னவென்பதை அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு விரும்பிய அனைத்தையும் குறிப்பிட முடியாது. அர்ச்சுனா குறிப்பிட்டுள்ள விடயங்கள் முன்னாள் போராளிகளுக்கும் உத்வேகமளிக்கும் வகையில் அமையும். நகத்தால் கிள்ளியெறிய வேண்டியதை கோடரியால் வெட்டி வீழ்த்தும் நிலையை அரசாங்கம் உருவாக்க கூடாது. அர்ச்சுனாவின் முறையற்ற கருத்துக்கள் வடக்கு காணி விடுவிப்பு மற்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடுவிப்புக்கு தடையாக அமையலாம். விடுதலை புலிகள் அமைப்பினை இவர் தனது குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும், பிரபல்யத்துக்காகவும் பயன்படுத்திக் கொள்வது தெளிவாக விளங்குகிறது என்றார். https://www.virakesari.lk/article/216916
  6. மக்கள் இவைக்கும் பெரும்பான்மை வழங்கலையே?! (ஜெயா அம்மையார் சொல்வது போல மைனோரிட்டி திமுக அரசு என குறிப்பிடுவார்!) இவர்களும் மைனோரிட்டி ஆட்சி அமைக்கலாம்! எதிர்க்கட்சிகள் ஒற்றுமையானால் ஆட்சி அம்போ தான்!!
  7. டிரம்ப் - மஸ்க் மோதல்: மிகப்பெரிய நெருக்கடியில் நாசா - 40 திட்டங்கள் நிறுத்தப்படும் ஆபத்து பட மூலாதாரம்,NASA/JOHNS HOPKINS படக்குறிப்பு, புளூட்டோவில் உள்ள இதய வடிவிலான படம் கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்புக்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையிலான மோதலின் எதிரொலி, நாசாவின் பட்ஜெட் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. டிரம்பின் "பிக், பியூட்டிஃபுல்" மசோதா தொடர்பாக, அவருக்கும் ஈலோன் மஸ்க்கிற்கும் இடையிலான கருத்து வேறுபாடு மோதலாக மாறியுள்ளது. நாசா தனது புதிய பட்ஜெட் திட்டத்தை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளது. இதில் அறிவியல் திட்டங்களுக்கான நிதி கிட்டத்தட்ட பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது மேம்படுத்தப்பட்டுவரும் திட்டங்கள் அல்லது ஏற்கனவே விண்வெளியில் இருக்கும் அறிவியல் பயணங்கள் என கிட்டத்தட்ட நாற்பது திட்டங்கள் நிறுத்தப்பட உள்ளன. ஈலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் உடனான அரசு ஒப்பந்தங்கள் திரும்பப் பெறப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார். சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பணியாளர்கள் மற்றும் பொருட்களை வழங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ராக்கெட்களை நாசா நம்பியுள்ளது. ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டைப் பயன்படுத்தி சந்திரனுக்கும் செவ்வாய் கிரகத்திற்கும் விண்வெளி வீரர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. ஓபன் யுனிவர்சிட்டியின் விண்வெளி விஞ்ஞானி முனைவர் சிமியோன் பார்பர், தற்போதைய நிச்சயமற்ற தன்மையின் தாக்கம் மனித விண்வெளித் திட்டத்தில் "எதிர்மறையான தாக்கத்தை" ஏற்படுத்தி வருவதாகக் கூறினார். "கடந்த வாரத்தில் நாம் பார்த்த வியக்கத்தக்க வார்த்தை பரிமாற்றங்கள், திடீர் முடிவுகள் மற்றும் யூ-டர்ன்கள், நமது லட்சியங்களைக் கட்டியெழுப்பும் அடித்தளத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. விண்வெளி அறிவியல் மற்றும் ஆய்வு போன்றவை, நீண்ட கால திட்டமிடல், அரசாங்கம், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பைச் சார்ந்துள்ளது" என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, நிறுத்தப்படும் ஆபத்தில் உள்ள சில விண்வெளி திட்டங்கள் அமெரிக்க அதிபருக்கும் ஈலோன் மஸ்க்குக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தவிர, நாசாவின் பட்ஜெட்டை குறைக்குமாறு வெள்ளை மாளிகையில் இருந்து வரும் அழுத்தமும் கவலைகளை அதிகரித்துள்ளன. செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் 100 மில்லியன் டாலர் திட்டத்தைத் தவிர, நாசாவின் அனைத்து திட்டங்கள் மற்றும் துறைகளுக்கான செலவினங்கள் குறைக்கப்பட்டுள்ளன. விண்வெளி ஆய்வை ஊக்குவிக்கும் பசடேனாவை தளமாகக் கொண்ட பிளானட்டரி சொசைட்டியின் விண்வெளிக் கொள்கைத் தலைவர் கேசி ட்ரேயரின் கூற்றுப்படி, இந்த பட்ஜெட் குறைப்புகள் "அமெரிக்க விண்வெளித் திட்டம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய நெருக்கடியை" குறிப்பதாக கருதுகிறார். மொத்த பட்ஜெட்டை சுமார் 25% குறைக்க விரும்புவதாக நாசா தெரிவித்துள்ளது. இதனால் சந்திரனுக்கும் செவ்வாய்க்கும் பயணிக்கும் முக்கிய திட்டங்களில் அதிக கவனம் செலுத்த முடியும் என கூறியுள்ளது. இந்த முன்மொழிவுகளை நாடாளுமன்றம் அங்கீகரித்தால், அது நாசாவின் கவனத்தை அடிப்படையிலேயே மாற்றிவிடும் என்று கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வாளர் முனைவர் ஆடம் பேக்கர், பிபிசியிடம் தெரிவித்தார். "அதிபர் டொனால்ட் டிரம்ப் நாசாவை இரண்டு விஷயங்களுக்காக மீண்டும் உருவாக்குகிறார். அது, சீனர்களுக்கு முன்பாக சந்திரனில் விண்வெளி வீரர்களை தரையிறக்குவது மற்றும் செவ்வாய் கிரகத்தில் விண்வெளி வீரர்கள் அமெரிக்கக் கொடியை நடுவது. இந்த இரண்டைத்தவிர வேறு அனைத்துமே இரண்டாம் பட்சம்தான்" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட பிறகு மக்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு குறைந்தது. 1960கள் மற்றும் 70களில் நிலவில் அப்போலோ தரையிறங்கிய பிறகு, சந்திர கிரக பயணத்தில் சோவியத் யூனியனை வீழ்த்துவதே நோக்கமாக இருந்தது. அதற்குப் பிறகு, தற்போதுதான், வெள்ளை மாளிகையின் பட்ஜெட் நாசாவிற்கு தெளிவான இலக்கை அளித்துள்ளது என்று இந்த திட்டங்களை ஆதரிப்பவர்கள் கூறுகின்றனர். அப்போதிருந்து, நாசா விண்வெளி நிறுவனம் கவனம் செலுத்தப்படாத அமைப்பாக மாறிவிட்டது எனவும் வழக்கமாக அதன் விண்வெளி பயணங்களில் பட்ஜெட்டை விட அதிகமாக செலவு செய்து வரி செலுத்துவோரின் பணத்தை வீணடித்து வருவதாகவும் நாசாவின் விமர்சகர்கள் கூறுகின்றனர் . இதற்கு மிகவும் மோசமான உதாரணங்களில் ஒன்று என, அமெரிக்க விண்வெளி வீரர்களை சந்திரனுக்குத் திருப்பி அனுப்பும் திட்டங்களுக்கான நாசாவின் புதிய ராக்கெட், விண்வெளி ஏவுதள அமைப்பு (SLS) பற்றி குறிப்பிடும் விமர்சகர்கள் இதன் வளர்ச்சி தாமதமாகி வருவதை சுட்டிக் காட்டுகின்றனர். செலவுகள் கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளதால், ஒவ்வொரு ஏவுதலுக்கும் 4.1 பில்லியன் டாலர்கள் செலவாகிறது. இதற்கு நேர்மாறாக, SpaceX இன் சமமான ராக்கெட் அமைப்பான ஸ்டார்ஷிப், மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு, ஒரு ஏவுதலுக்கு சுமார் $100 மில்லியன் மட்டுமே செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல், ஜெஃப் பெசோஸின் ப்ளூ ஆரிஜின் விண்வெளி நிறுவனத்தின் முன்மொழியப்பட்ட நியூ க்ளென் ராக்கெட்டும் செலவும் குறைவுதான். SLSக்கு பதிலாக ஸ்டார்ஷிப் மற்றும் நியூ க்ளென் ஆகியவற்றை பயன்படுத்தப்படலாம் என்றும், வெள்ளை மாளிகை SLS திட்டத்தை படிப்படியாக கைவிட்டுவிடும் என்றும் நம்பப்படுகிறது. இருப்பினும், ஸ்டார்ஷிப்பின் கடந்த மூன்று ஏவுதல்கள் தோல்வியடைந்தன என்பதையும், ப்ளூ ஆரிஜின் அண்மையில்தான் அதன் சந்திர பயணத்துக்கான ராக்கெட்டை பரிசோதிக்கத் தொடங்கியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். "கொதிக்கும் வாணலியில் இருந்து தப்பித்து, நாசா நெருப்பில் குதித்துக்கொண்டிருக்கிறதோ என்று அச்சம் தோன்றுகிறது," என்கிறார் பார்பர். "SLS-க்கு மாற்றாக இந்த மாற்றுகளை உருவாக்குவதற்கு ஈலோன் மஸ்க் மற்றும் ஜெஃப் பெசோஸ் நிதியளிக்கின்றனர். இந்த முயற்சியில் அவர்களின் ஆர்வம் குறைந்துவிட்டாலோ, ஸ்பேஸ்எக்ஸ் அல்லது ப்ளூ ஆரிஜின் தங்கள் அமைப்புகளை உருவாக்க அதிக பணம் தேவை என்று கூறிவிட்டாலோ, அதற்கான நிதியை நாடாளுமன்றம் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று பார்பர் கூறுகிறார். பிற கிரகங்களை ஆராய்வதற்கும், விண்வெளியில் இருந்து பூமியின் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை கண்காணிப்பதற்குமான 40 திட்டங்களை கைவிடுவது என்பது மிகவும் கவலைக்குரியது என்று பார்பர் கூறுகிறார். கைவிடப்படும் திட்டங்களில் பல, சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து செயல்படுபவை என்பது குறிப்பிடத்தக்கது. "இவ்வளவு காலம் எடுத்து கட்டியெழுப்பப்பட்ட ஒன்றை, மீண்டும் கட்டியெழுப்புவதற்கான திட்டம் எதுவுமே இல்லாமல், ஒரு சிதைந்த பந்தால் இவ்வளவு சுலபமாக இடித்துத் தள்ள முடியும் என்பது மிகவும் வருத்தமளிக்கிறது" என்று கவலை தெரிவிக்கிறார் பார்பர். ஏற்கனவே விண்வெளியில் செயல்படுத்தப்பட்டு வரும் டஜன் கணக்கான கிரக பயணங்களும் கைவிடப்படும் திட்டங்களில் அடங்கும். இவற்றுக்காக ஏற்கனவே மேம்பாடு மற்றும் ஏவுதல் செலவுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவற்றை இயக்குவதற்காக ஒப்பீட்டளவில் சிறிய அளவிலான தொகைதான் முன்மொழியப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, பூமியின் சுற்றுச்சூழலை கண்காணிக்கும் பல திட்டங்கள் நிறுத்தப்படும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்துடனான இரண்டு கூட்டுத் திட்டங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. நாசாவின் பெர்செவரன்ஸ் ரோவர் சேகரித்த செவ்வாய் கிரகப் பாறைகளை பூமிக்குக் கொண்டுவருவதற்கான லட்சியத் திட்டம் மற்றும் கடந்த கால வாழ்க்கையின் எச்சங்களை தேடுவதற்காக ஐரோப்பாவின் ரோசாலிண்ட் பிராங்க்ளின் ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் முக்கியமான திட்டம் ஆகியவையே இந்த இரண்டு திட்டங்கள் ஆகும். பிரிட்டன் விண்வெளி நிறுவனமான சர்ரே சேட்டிலைட் டெக்னாலஜி லிமிடெட்டின் தலைவரும், விண்வெளியின் எதிர்காலம் குறித்த ராயல் சொசைட்டி ஆய்வு அறிக்கையின் இணை ஆசிரியருமான பேராசிரியர் சர் மார்ட்டின் ஸ்வீட்டிங்கின் கருத்துப்படி , தற்போதைய நிலைமை "வரவேற்கத்தக்கதல்ல" என்றாலும், ஐரோப்பா தனது சொந்த விண்வெளி ஆய்வுத் திட்டத்திற்கு அதிக பொறுப்பை ஏற்றுக்கொள்வதால் அதன் ஆதிக்கம் அதிகரிக்கக்கூடும் என்று கூறுகிறார். ''ஒருவேளை, விண்வெளித் துறையில் நாம் நாசாவிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து நம்பியிருந்துவிட்டோமோ என தோன்றுகிறது," என்று அவர் பிபிசி செய்தியிடம் கூறினார். "ஐரோப்பா தனது விண்வெளி நடவடிக்கைகளில் சிறந்த சமநிலையைப் பெற விரும்புவதைப் பற்றி சிந்திக்க இதுவொரு வாய்ப்பாகவும் இருக்கலாம்." ஆனால், உடனடியாக ஐரோப்பாவிற்கு மேலும் பல பாதகங்கள் ஏற்படலாம். செவ்வாய் கிரக மாதிரிகள் மற்றும் ரோவரை மீட்டெடுக்கும் திட்டம் தவிர, சர்வதேச விண்வெளி நிலையத்தை நிறுத்தும் நிலை வந்தால், அதற்கான அணுகலும் குறைய வாய்ப்பு உள்ளது. மேலும் பட்ஜெட்டை குறைப்பதால், அதன் லூனார் கேட்வே திட்டத்திற்கு நாசாவின் விரிவான பங்களிப்புகளும் முடிந்து போகும். லூனார் கேட்வே திட்டம் என்பது, சந்திரனைச் சுற்றி சுற்றுப்பாதையில் செல்ல திட்டமிடப்பட்டுள்ள ஒரு பன்னாட்டு விண்வெளி நிலையமாகும். பட மூலாதாரம்,NASA ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அதன் திட்டத்தில், "விண்வெளியில் தன்னாட்சியுடன் செயல்படும் திறனை உருவாக்கவும், உலகெங்கிலும் உள்ள விண்வெளி நிறுவனங்களுடன் நம்பகமான, வலுவான மற்றும் விரும்பத்தக்க கூட்டாளியாகத் தொடரவும் முயற்சிக்கும்" என்று தெரிவித்துள்ளது. இது, நாசாவுடன் இணைந்தோ அல்லது இணையாமலோ அவ்வாறு செய்யும் என்ற உட்குறிப்பையும் அடக்கியுள்ளது. முனைவர் பேக்கரின் கூற்றுப்படி, தற்போதைய மற்றும் முன்மொழியப்பட்ட ஏராளமான பூமி கண்காணிப்பு திட்டங்களுக்கு பட்ஜெட் குறைக்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள ஸ்பேஸ்எக்ஸ் நாசாவின் பட்ஜெட் முன்மொழிவுகளை நாடாளுமன்றம் இன்னும் அங்கீகரிக்கவில்லை. பட்ஜெட் குறைப்புக்கு எதிராக வாக்களிக்கத் தயாராக இருப்பதாக, பல குடியரசுக் கட்சியினர் தனிப்பட்ட முறையில் கூறியதாக பிளானெடரி சங்கத்தின் கேசி ட்ரேயர் பிபிசி செய்தியிடம் தெரிவித்தார். ஆனால் அரசியல் மோதலால் பட்ஜெட் குறித்து ஒரு முடிவிற்கு வர முடியாமல் போகும் நிலை ஏற்படலாம் என டிரேயர் கவலைப்படுகிறார். வெள்ளை மாளிகையின் குறைக்கப்பட்ட பட்ஜெட் தற்காலிக திட்டமாக அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பின்னர் அதை எளிதில் மாற்றியமைக்க முடியாது. ஏனெனில், விண்வெளிப் பயணங்கள் நிறுத்தப்பட்டால் அவற்றை மீண்டும் தொடங்குவது கடினம் அல்லது அசாத்தியம் என்றே சொல்லலாம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly394j5k28o
  8. 32 வயது மனைவியின் தலையை துண்டித்து கொலை செய்ததால் கணவன் சாதித்தது என்ன..! திருமணம் என்பது இரு மனங்கள் இணைந்து வாழும் ஆயிரம் காலத்து பயிர். ஆனால் அந்த திருமணங்களே இன்று முறிந்து நீதிமன்ற படியேறுவதும், இரு மனங்களும் வெறுத்து ஒருவரையொருவர் குறை கூறுவதும், அடிபிடி, சண்டை, கொலை என நீண்டு செல்லும் ஒரு புதிய கலாசாரத்தை நோக்கி தமிழ் சமூகம் செல்வது தான் வேதனையான விடயம். அந்தவகையில் கடந்த செவ்வாய்கிழமை வவுனியா, நெடுங்கேணி, அனந்தர்புளியங்குளம், நொச்சிக்குளம் கிராமத்தில் இடம்பெற்ற சமபவம் முழு இலங்கையையும் உலுக்கியிருந்தது. பொலிஸ் நிலையத்தில் சரண் வவுனியா, நெடுங்கேணி, பாடசாலையொன்றின் ஆரம்பப் பிரிவு ஆசிரியரான சுவர்ணலதா என்ற 32 வயது இளம் ஆசிரியரின் தலையை வெட்டிக் கொண்டு அவரது கணவனான 35 வயதான யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவமே அது. அந்தச் சம்பவம் இடம்பெற்ற பின் சமூக ஊடகங்களில் குறித்த கணவன் தொடர்பாகவும், மரணமடைந்த ஆசிரியை தொடர்பாகவும் பல்வேறுபட்ட கருத்துக்கள் பரவி வருவதுடன், கொலையை ஊக்குவிக்கும் கருத்துக்களும் பரவி வருகின்றன. உண்மையில் நடந்தது என்ன...? யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த சுகிர்தரன் என்ற இளைஞன் மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலை வாய்ப்பு தேடி சென்றிருந்தார். அங்கு இருந்த போது சமூக வலைத்தளம் மூலம் ஏற்பட்ட நட்பின் காரணமாக சுவர்ணலதாவுக்கும் சுகிர்தரனுக்கும் இடையில் காதல் ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்திருந்தது. 5 வருடங்களுக்கு முன்னர் குறித்த திருமணம் நடந்ததாக உறவினர்கள் தெரிவித்தனர். சிறந்த தோட்டச் செய்கையாளரான சுகிர்தரன் தனது மனையின் வீட்டில் இருந்து அவர்களது காணியில் தோட்டம் செய்து வந்துள்ளார். அவர்களது வாழ்க்கை பயணம் சந்தோசமாகவே இந்நாட்களில் ஓடியிருந்தது. இருவரும் இணைபிரியாது உலா வந்தனர். தனது மனைவியை செல்லமாக ''அம்மு'' என சுகிர்தரன் கூப்பிட்டு வந்துள்ளார். அவ்வளவு தூரம் அவர்களது வாழ்க்கை சந்தோசமாகவே ஆரம்பத்தில் அமைந்திருந்தது. விதியின் விளையாட்டு ஒரு வருடத்திற்கு முன் அவர்களது கிராமத்தில் கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகத் தெரிவு ஒன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் அடிதடியில் முடிந்திருந்தது. இதன்போது சுகிர்தரனுக்கு காயம் ஏற்பட்டிருந்தது. சில நாட்கள் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றிருந்தார். அப்போது தான் அவர்களது வாழ்வில் விதி விளையாட ஆரம்பித்தது. கணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால் சிறிய உதவிகளை சுவர்ணலதா தான் முன்னர் கற்பித்த பாடசாலையில் உயர்தரம் பயின்ற அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மூலம் அவ்வப்போது பெற்றுக் கொண்டாள். ஒரே கிராமத்தவர்கள். ஒரே பாசாலையில் ஆசிரியர் - மாணவர் என்ற அடிப்படையில் அவர்களுக்குள் இருந்த நட்பின் காரணமாக குறித்த 21 வயது இளைஞர் ஆசிரியருக்கு உவிகளை செய்து இருவரும் நட்பாக இருந்துள்ளனர். சிகிச்சை முடிந்து வந்த கணவரும் மீண்டும் சந்தோசமாக குடும்பத்துடன் இருந்துள்ளார். காயம் ஏற்பட்டு சிகிச்சை செய்ததால் கடும் வெயிலில் வேலை செய்ய வேண்டாம் என வைத்தியர்களால் ஆலோசனை கூறப்பட்டிருந்தது. இதனால் சிறப்பாக தோட்டம் செய்த சுகிர்தரனின் கைகள் ஓய்ந்திருந்தது. என்னதான் உலகம் வளர்ச்சியடைந்து மேலைத்தேச கலாசாரம் எமது நாட்டில் பரவி இருந்தாலும், ஒரு ஆணும், பெண்ணும் பழகுவதை எமது சமூகம் பலவாறாக பேசும். அவ்வாறாறே குறித்த ஆசிரியைக்கும், 21 வயது இளைஞனுக்கும் இடையில் இருந்த நட்பை சிலர் பலவாறாக பேச ஆரம்பித்தனர். இது சுகிர்தரனின் காதில் பட்டதும் அன்பு பிணைப்பாக இருந்த கணவன் - மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டைகளும், ஊடல்களும் இடம்பெற்றிருந்தது. எனினும் மனைவி - கணவன் என்ற பாச பிணைப்புடன் அவர்களது குடும்பம் உருண்டோடிக் கொண்டிருந்தது. வேலை இல்லாததால் சுகிர்தரன் உறவினர்களின் வேண்டுதலின் அடிப்படையில் கொழும்புக்கு மேசன் வேலைக்காக சென்றிருந்தார். கணவன் - மனைவிக்கு இடையில் அவ்வப்போது சண்டைகளும் ஏற்பட்டு இருந்தது. இருப்பினும் கொழும்பில் வேலை செய்வது. சில நாட்கள் மனைவியை பார்க்க வருவது என சுகிர்தரனின் நாட்கள் நகர்ந்தன. பொலிஸ் நிலையத்தில் வாக்கு மூலம் இந்த நிலையிலேயே சுகிர்தரன் கொழும்பில் இருந்து வந்து தனது காதல் மனையின் தலையை துண்டிக்கும் அளவுக்கு சென்றிருந்தார். இது தொடர்பில் அவர் புளியங்குளம் பொலிஸ் நிலையத்தில் வழங்கிய வாக்கு மூலத்தில் தெரிவித்ததாவது, தனது மனைவி மூன்று மாதம் கர்ப்பிணியாக இருப்பதாகவும் அதில் ஏற்பட்ட சந்தேகமே இந்த நிலைமைக்கு காரணம் எனவும் குறிப்பிட்டுள்ளார். தான் கொழும்பில் தங்கி இருந்து கட்டிட வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள குறித்த இளம் குடும்பஸ்தர், நீண்ட காலமாக தனக்கும் மனைவிக்கும் இடையில் பல சலசலப்புகள் ஏற்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை (29.05) தனது தொலைபேசிக்கு மனைவியுடன் நட்பாக பழகும் 21 வயது இளைஞனினால் அனுப்பப்பட்ட புகைப்படங்களால் தனது கோபம் உச்சம் அடைந்த நிலையில் தான் மறுநாள் வெள்ளிக்கிழமை (30.05) கொழும்பிலிருந்து நொச்சிக்குளம் கிராமத்திற்கு வருகை தந்து என் மனைவியுடன் பல்வேறு விடயங்களில் கருத்து முரண்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் இதில் தீர்வு கிடைக்காத நிலையில் தான் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது சொந்த ஊரான யாழ்ப்பாணம், மானிப்பாய் சென்று பின்னர் திங்கட்கிழமை மீண்டும் வருகை தந்து மனைவியை தாய் சேய் பராமரிப்பு நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாக தெரிவித்த அவர், இந்த குழந்தைக்கு காரணம் யார் என்பது தொடர்பில் தனக்கு நீண்ட கால சந்தேகம் ஏற்பட்டு இருந்ததாகவும் இது தொடர்பாக தன் மனைவியிடம் கேட்டதன் பிரகாரம் எவ்விதமான பதிலும் கூறவில்லை. செவ்வாய்கிழமை (03.06) காலை அவர் அதை ஒத்துக் கொண்டதையடுத்து தனது மனைவியை புளியங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறியே அவர் சின்ன பூவரசங்குளம் காட்டுப்பாதையினால் அழைத்து வந்ததாகவும் தெரிவித்திருந்தார். அந்த காட்டுப் பாதையின் வழியே 200 மீட்டர் அளவில் சென்றதன் பின்னர் மனைவி ஏன் இந்த வீதியால் செல்கிறீர்கள் என கேட்டபோது, தான் அந்த குறித்த 21 வயது இளைஞன் இந்த பகுதிக்கு வருவதாகவும் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு காண்பதற்காக தன்னை அழைத்து வந்திருக்கிறதாகவும் கூறியதாகவும் பொலிசாரிடம் கூறி இருக்கின்றார். இதன் பின்னர் தான் கொலை செய்ததாக புளியங்குளம் பொலிசாரிடம் தெரிவித்திருந்தார். இதனையடுத்து, பொலிசார் குறித்த மோட்டார் சைக்கிளையும், தலையையும் கைப்பற்றியதோடு அவரையும் கைது செய்திருந்தனர். இதனை அடுத்து உயிரிழந்து இறந்த பெண்ணின் கணவன் சுகிர்தரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சின்ன பூவரசங்குளம் காட்டுப் பகுதிக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி இருந்தனர். வாக்கு மூலம் உண்மையானவையா? இவ்வாறு சுகிர்தரன் வாக்கு மூலம் வழங்கிய போதும் இதில் கூறப்பட்ட விடயங்கள் உண்மையானவையா என்பது குறிததும் ஆராயப்பட வேண்டியுள்ளது. 21 வயது இளைஞனும், ஆசிரியரும் நட்பாக இருந்தார்கள் என்பது உண்மை. அதனை அவர்களது உறவினர்களும் ஏற்றுக் கொள்கிறார்கள். அந்த இளைஞனால் தமது குடும்பத்திற்குள் பிரச்சனை, சந்தேகம் ஏற்பட்டதால் ஆசிரியையான சுவர்ணலதா கடந்த சில நாட்களாக குறித்த இளைஞன் உடனான தொடர்பை துண்டித்து அவரை புறக்கணித்து நடந்து வந்துள்ளார். தான், தனது கணவன், புதிதாக பிறக்கவிருக்கும் தனது குழந்தை என தமது இல்லற வாழ்வை சந்தோசமாக கொண்டு செல்வதற்காக அவள் அந்த முடிவை எடுத்திருந்தாள். ஆனாலும் அவள் கதைக்கவில்லை. தொடர்பை முறித்து விட்டதால் மனமுடைந்த இளைஞன் பல முறை ஆசிரியையுடன் தொடர்பு கொள்ள முயன்றதுடன், கணவனிடமும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். ஆனால் என்ன பேசினார் என்பது இருவருக்குமே வெளிச்சம். ஆனாலும், கணவன் கொடுத்த வாக்குமூலம் போன்று குறித்த இளைஞரிடம் இருந்து எந்த புகைப்படமோ, காணொளி அனுப்பப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. சுகிர்தரனின் தொலைபேசியில் அவ்வாறானதொரு படமோ, காணொளியோ இல்லை என்கின்றனர் புளியங்குளம் பொலிசார். அதேபோல், குறித்த இளைஞனுக்கும், மனைவிக்கும் தொடர்பு இருப்பதாக ஆசிரியையின் சகோதரனுக்கு கொலைக்கு முதல் நாள் மாலை சுகிர்தரன் தெரியப்படுத்திய போதும், அவர்களுக்கும் எந்தவொரு படத்தையோ, காணொளியோ காட்டவில்லை. ஆனால் 21 வயது இளைஞருடன் ஆசிரியைக்கு தொடர்பு என்ற கருத்தையே கூறியுள்ளார். திருமணமாகி நீண்ட காலத்திற்கு பின்னர் ஆசிரியை கர்ப்பாக இருந்துள்ளார். சுகித்தரனுக்கு அந்த கர்ப்பம் தன்னுடையதா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. அந்த சந்தேகமே கொலையில் முடிந்துள்ளது. கொல்லப்படுவதற்கு முதல் நாள் வவுனியாவில் உள்ள தனியார் மருத்துவ மனை ஒன்றுக்கு தனது மனைவியை அழைத்துச் சென்ற சுகிர்தரன், ஸ்கேன் பரிசோதனை செய்து தனது மனைவி கர்ப்பம் என அறிந்ததும், மகிழ்சியடைந்துள்ளார். குறித்த செய்தியை ஆசிரியை தனது அண்ணிக்கு தெரியப்படுத்தியதையடுத்து குறித்த மருத்துவ மனைக்கு வருகை தந்த அண்ணிக்கு சுகிர்தரன் பழங்கள் வாங்கிக் கொடுத்து சந்தோசமாக இருந்ததாக உறவினர்கள் கூறுகின்றனர். வவுனியா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரனை அதிகாரியான க.ஹரிபிரசாத்திடம் குறித்த மரணம் தொடர்பாக கேட்டபோது, மரணத்துக்கு காரணம் கழுத்துக்கு பகுதி வெட்டப்பட்டதனால் நாடி நாளங்களால் ஏற்பட்ட அதிக இரத்த போக்கே காரணம். வயிற்றில் இருந்த கரு 7 கிழமைகள். அதாவது 50 நாட்கள் முடிவடைந்துள்ளது. டிஎன்ஏ பரிசோதனை இக்கரு யாருடையது என்பதை கண்டறிவதற்காக மாதிரிகள் டிஎன்ஏ பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், டிஎன்ஏ முடிவுகள் வந்த பின்னரே உண்மை தன்மை தெரியவரும். டிஎன்ஏ முடிவுகள் வந்த பின்னர் கணவர் இது தொடர்பில் ஒரு முடிவை எடுத்திருக்கலாம். எதுவாகினும் இரு உயிர்களை பறிக்கும் உரிமை யாருக்கும் இல்லை. எந்த சட்டத்திலும் இடமும் இல்லை. பிடிக்கவில்லை என்றால் ஆதாரங்களை காண்பித்து பிரிந்து இருக்கலாம் என தனது ஆதங்கத்தை அவர் தெரிவித்துள்ளார். அன்று மாலை வரை சந்தோசமாக இருந்த அவர்களது வாழ்வில் இரவு நடந்தது தான் என்ன...? இரவு 8 மணியளவில் சுகிர்தரன் தனது மனைவியின் தந்தையிடம் சென்று கத்தியை வாங்கியுள்ளார். அந்த கத்தியால் தான் மறுநாள் தனது மனைவியை கொலை செய்துள்ளார். திங்கள் கிழமை மாலை தொடக்கம் இரவு வரை நடந்தது என்ன..? சுகிர்தரன் அவர்கள் குழப்பம் அடைந்து இந்த நிலைக்கு சென்றதற்கு காரணம் என்ன..? அந்தக் காலப்பகுதியில் அவரது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்தது யார்? அந்த அழைப்பில் பேசப்பட்ட விடயங்கள் என்ன? அவையே இந்த முடிவுக்கு காரணம்...? பிடிக்கவில்லை என்றால் பிரிந்து செல்வதற்கும், தனித்து வாழ்வதற்கும் அனைவருக்கும் உரிமை உண்டு. அல்லது சட்டப்படி விவாகரத்து கொடுத்து விட்டு வேறு திரும்ணம் செய்து விரும்பியவருடன் வாழும் உரிமை அனைவருக்கும் உண்டு. அதற்காக ஒருவரை கொலை செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. இந்த கொலையால் கணவன் சாதித்தது என்ன..? நாளை டிஎன்ஏ பரிசோதனையில் அந்தக் குழந்தை சுகிர்தரனின் தான் என்று வந்தால் அவரது மனநிலை எப்படி இருக்கும்...? கொலைக்கு பின்னர் சிறை சென்ற கணவன் இனி சாதிக்கப் போவது என்ன...? தனது வாழ்க்கையையும் கம்பிக் கூட்டுக்குள் சுருக்கிக் கொண்டது தான் மிச்சம். ஆகவே, கோபத்தில் எடுக்கும் அவசர முடிவுகள் தீர்வல்ல. அவை ஆழமாக யோசித்து சிந்தித்து எடுக்கப்பட வேண்டியவை. வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை அனைவரும் உணரவேண்டும். https://tamilwin.com/article/husband-beheads-wife-in-shocking-act-vavuniya-1749378500
  9. 08 JUN, 2025 | 12:26 PM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 59 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை (16) ஆம் திகதி ஆரம்பமாகி, ஜுலை மாதம் 9 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான அறிக்கையுடன் ஜெனீவாவில் ஆரம்பமாகவிருக்கும் இக்கூட்டத்தொடரின் விடயதான மற்றும் நேர ஒழுங்கு அட்டவணையில் இலங்கையுடன் தொடர்புடைய விடயங்கள் உள்வாங்கப்படவில்லை. அதேவேளை இக்கூட்டத்தொடருக்கு மத்தியில் எதிர்வரும் 23 ஆம் திகதி மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதர உத்தேசித்திருப்பதுடன், இவ்வருகை தொடர்பில் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளன. இந்நிலையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரிலேயே இலங்கை தொடர்பில் உயர்ஸ்தானிகரின் வாய்மொழிமூல அறிக்கை வெளியிடப்படவிருப்பதுடன், புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது குறித்தும் ஆராயப்படும். https://www.virakesari.lk/article/216919
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மக்கோச்சி ஒகாஃபோர் பதவி, பிபிசி ஆப்ரிக்கா, லாகோஸ் 58 நிமிடங்களுக்கு முன்னர் நைஜீரியாவில் சராசரியாக ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் ஒரு பெண் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார். தனது 24 வது வயதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நஃபிசா சலாஹுவும் இந்த புள்ளிவிவரத்தில் இடம் பெற்றிருப்பார். அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்த காலகட்டம் அது. மருத்துவமனையில் இருந்த போதும் கூட, சிக்கலான சூழல் எழும் போது எந்த நிபுணர்களின் உதவியும் சரியான நேரத்திற்கு அவருக்கு கிடைக்கவில்லை. பிரசவத்தின் போது அவருடைய குழந்தையின் தலை சிக்கிக் கொண்டது. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த அவரை அப்படியே படுத்திருக்கும்படி கூறியிருக்கின்றனர் அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள். அவரின் பிரசவ வலியானது மூன்று நாட்களுக்கு நீடித்தது. இறுதியில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுக்க முடிவெடுக்கப்பட்டது. மருத்துவரை தேடி கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. "நான் கடவுளுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ஏன் என்றால் நான் அப்போது இறக்கும் தருவாயில் இருந்தேன். என்னிடம் துளியும் பலம் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை," என்று பிபிசியிடம் பேசிய போது நஃபிசா கூறுகிறார். நைஜீரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் இருக்கும் கனோ மாகாணத்தில் அவர் வசித்து வருகிறார். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய குழந்தைக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை. மரணத்தின் வாசல் வரை நஃபிசா சென்று திரும்பி 11 வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பின்னரும் சில முறை குழந்தைப்பேறுக்காக அவர் மருத்துவமனை சென்றிருக்கிறார். மரண தருவாய் அனுபவத்தில் மாற்றம் ஏதுமில்லை. "ஒவ்வொரு முறையும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நான் இருந்தேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் இப்போது அச்சப்படுவதில்லை," என்று அவர் கூறினார். நஃபிசாவின் அனுபவம் ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல. குழந்தை பெற்றெடுக்க மிகவும் மோசமான சூழலைக் கொண்ட நாடாக நைஜீரியா அறியப்படுகிறது. 2023 தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, நூற்றில் ஒரு பெண் பிரசவத்தின் போதோ அதற்கு பிறகான நாட்களிலோ உயிரிழக்கிறார். இதுவே இந்த பட்டியலில் அந்த நாட்டை முதலிடத்தில் வைக்கிறது. 2023-ஆம் ஆண்டு உலக அளவில் பிரசவகாலத்தில் நிகழும் மரணத்தில் கால்வாசிக்கும் அதிகமான மரணங்கள் நைஜீரியாவில் பதிவானது. உலக அளவில் பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்களில் 29% பேர் நைஜீரியாவில் இறக்கின்றனர். அதாவது ஒவ்வொரு ஆண்டும் 75, 000 பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழக்கின்றனர். இதனை மீண்டும் துல்லியமாக கணக்கிட்டால் ஒவ்வொரு ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார். மரணத்திற்கான காரணங்கள் என்ன? அதிக எண்ணிக்கையில் நிகழும் மரணங்கள் பலருக்கும் கவலை அளித்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அதீத உதிரப்போக்கு காரணமாகவும் மரணங்கள் நிகழ்கின்றன. முறையான சிகிச்சைகள் மூலம் இத்தகைய மரணங்கள் நிகழ்வதை தடுக்க இயலும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் ஒனித்ஷா நகரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சினேன்யே வேஸே. அவருக்கு அப்போது வயது வெறும் 36. ஆனால் பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட அதீத உதிரப் போக்கின் காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டது. அவரின் மரணம் குறித்து பேசும் அவருடைய சகோதரர் ஹென்றி எடா, "மருத்துவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் தேவையான இரத்தம் இருப்பில் இல்லை. அவர்கள் இரத்தத்தை பெறுவதற்காக இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். நல்ல நண்பராக இருந்த என் சகோதரியை நான் இழந்து தவித்த நிலையை என் எதிரியும் கூட அனுபவிக்கக் கூடாது. அது தாங்கிக் கொள்ள இயலாத வலி," என்று கூறினார். பெண்கள் அங்கே இறந்து போவதற்கான இதர காரணங்கள்: பிரசவத்தின் போது குழந்தை வெளியே வராமல் இருப்பது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகள். யுனிசெஃபின் நைஜீரிய அலுவலகத்தில் பணியாற்றும் மார்டின் தோல்ஸ்டென் இது குறித்து பேசும் போது, நைஜீரியாவில் ஏற்படும் அதிகப்படியான மகப்பேறு தொடர்பான மரணங்கள் பல காரணங்களின் ஒன்றுபட்ட விளைவாக உள்ளது என்று குறிப்பிடுகிறார். அத்தகைய காரணங்களில் ஒன்று மோசமான மருத்துவ வசதி. மருத்துவர்கள் பற்றாக்குறை, விலையுயர்ந்த சிகிச்சைகள், கலாசார பழக்கவழக்கங்கள் போன்றவை நம்பகத்தன்மையற்ற மருத்துவ பணியாளர்களை நாட வழிவகுக்கிறது. மேலும் இது பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குகிறது. "பிரசவத்தின் போது எந்த பெண்ணுக்கும் இத்தகைய நிலை ஏற்படக் கூடாது," என்று மாபெல் ஒன்வுயேமேனா தெரிவிக்கிறார். அவர் வுமென் ஆஃப் பர்பஸ் டெவெலப்மெண்ட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். "கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் சிலர், மருத்துவமனைக்கு செல்வது நேர விரயம் என்று கருதுகின்றனர்," என்று அவர் விளக்குகிறார். "அப்பெண்கள் மருத்துவ உதவிகளை நாடுவதற்கு பதிலாக பாரம்பரிய மருத்துவமுறைகளை நாடிச் செல்கின்றனர். அப்போது ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், அது அவர்களின் உயிர் காக்கும் சேவைகளை அணுகுவதை தாமதப்படுத்திவிடுகிறது," என்று தெரிவிக்கிறார். சிலருக்கோ உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. ஏன் என்றால் போதுமான போக்குவரத்து வசதி இல்லை. ஆனால் சரியான நேரத்திற்கு அவர்கள் மருத்துவமனைக்கு வந்தாலும் கூட அவர்களின் பிரச்னைகளுக்கு முடிவென்பதே கிடையாது என்று மாபெல் கூறுகிறார். "பல சுகாதார மையங்களில் அடிப்படை வசதிகள், பயிற்சி பெற்ற நிபுணர்கள், மருத்துவ விநியோகம் போன்றவை இல்லாத காரணத்தால் தரமான சேவைகளை வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது." நைஜீரிய மத்திய அரசாங்கமானது தன்னுடைய வருடாந்திர பட்ஜெட்டில் 5% மட்டுமே மருத்துவ சேவைகளுக்கு ஒதுக்குகிறது. 2001-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றிய ஒப்பந்தத்தில், 15% என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இருந்து நைஜீரியா மிகவும் பின்தங்கியுள்ளது. பட மூலாதாரம்,HENRY EDEH படக்குறிப்பு, ஐந்தாண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின் போது மரணித்த சினேன்யே வேஸே தரவுகள் கூறுவது என்ன? 2021-ஆம் ஆண்டில், 21.8 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 1,21,000 செவிலியர்கள் (பிரசவம் பார்க்க) இருந்தனர். அந்த நாட்டில் நடைபெற்ற பாதிக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த மக்கள் தொகைக்கு, உலக சுகாதார மையத்தின் பரிந்துரை விகிதத்தை பூர்த்தி செய்ய, மொத்தமாக 7 லட்சம் செவிலியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். மருத்துவர்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. மருத்துவ வசதி மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக சிலர் மருத்துவ உதவியை நாடுவதை நிறுத்திவிடுகின்றனர். "உண்மையில் நான் மருத்துவமனைகளை அதிகமாக நம்புவது கிடையாது. பொது மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியமான போக்கு குறித்து நான் அதிகம் கேள்விப்படுகிறேன்," என்று ஜமீலா இஷாக் கூறுகிறார். "நான் நான்காவது முறையாக கர்ப்பமுற்றேன். பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்பட்டது. உள்ளூரில் பிரசவத்தை மேற்பார்வையிட்ட நபர் என்னை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார். நாங்கள் அங்கே சென்ற போது அங்கே ஒரு சுகாதாரப் பணியாளரும் இல்லை. வீட்டுக்குச் சென்ற நான் அங்கேயே குழந்தையைப் பெற்றெடுத்தேன்," என்று அவர் விளக்கினார். 28 வயதான, கனோ மாகாணத்தைச் சேர்ந்த இஷாக் தற்போது ஐந்தாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல விரும்புவதாக அவர் கூறினாலும் அங்கே கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவிக்கிறார். தன்னுடைய மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சின்வெண்டு ஒபியேஜெசியால் தனியார் மருத்துவமனையில் கட்டணம் கட்டி பிரசவம் பார்த்துக் கொள்ளும் பொருளாதார நிலையைப் பெற்றுள்ளார். "வேறெங்கும் பிரசவத்திற்காக செல்வதை நினைத்தும் கூட பார்க்க மாட்டேன்," என்று அவர் தெரிவித்தார். அவரின் குடும்பத்திலோ, நட்பு வட்டாரத்திலோ மகப்பேறு மரணங்கள் மிகவும் அரிதாகவே நடைபெறுவதாக தெரிவிக்கும் அவர், தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் இருந்து மகப்பேறு மரணங்கள் குறித்து கேள்விப்படுவதாக தெரிவிக்கிறார். மிகவும் செல்வ செழிப்பான அபுஜாவின் புறநகர் பகுதியில் அவர் வசித்து வருகிறார். அங்கிருந்து மருத்துவமனைகள் செல்வது எளிமையாக இருக்கும். சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. அவசர சேவைகளும் சிறப்பாக செயல்படுகிறது. நகரத்தில் வாழும் பெண்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பதால் மருத்துவமனை செல்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர். "பிரசவத்திற்கு முந்தைய மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை நான் எப்போதும் பெறுகிறேன். தொடர்ச்சியாக மருத்துவர்களிடம் பேசவும், தேவையான முக்கியமான பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்களை செய்யவும் இது எனக்கு உதவுகிறது. மேலும் என்னுடைய மற்றும் என் குழந்தையின் ஆரோக்கியத்தை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் இது உதவுகிறது," என்று ஒபியேஜெசி கூறுகிறார். "உதாரணத்திற்கு என்னுடைய இரண்டாம் கர்ப்ப காலத்தின் போது எனக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் என்று அவர்கள் நினைத்தனர். எனவே அதனை ஈடுகட்டுவதற்காக கூடுதலான இரத்தத்தை தயார் நிலையில் வைத்திருந்தனர். நல்ல வேளையாக, எனக்கு தேவைப்படவில்லை. அனைத்தும் சரியாக நடந்தது," என்று அவர் கூறினார். இருப்பினும் கூட, அவருடைய குடும்ப நண்பர் ஒருவர் ஒபியேஜெசியைப் போன்று அதிர்ஷ்டத்துடன் இல்லை. அவரின் இரண்டாவது பிரசவத்தின் போது, "பிரசவம் பார்க்கும் செவிலியரால் குழந்தையை வெளியே எடுக்க இயலவில்லை. அதனால் வலுக்கட்டாயமாக பிரசவிக்கும் வழியை தேர்வு செய்தார். ஆனால் குழந்தை இறந்துவிட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அதிக கால தாமதம் ஏற்பட்டது. இறந்த குழந்தையின் உடலை வெளியே எடுக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக் கூடியது," என்று விவரிக்கிறார் ஒபியேஜெசி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரசவம் போன்றவற்றை முறையாக மருத்துவமனைகளில் மேற்பார்வையிட போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லை குறைகளை நிவர்த்தி செய்யுமா அரசு? மருத்துவர் நானா சந்தா - அபுபக்கர் நைஜீரியாவின் தேசிய ஆரம்ப சுகாதார சேவை மேம்பாட்டு முகமையின், கம்யூனிட்டி ஹெல்த் சர்வீஸ் பிரிவின் தலைவராக பணியாற்றுகிறார். பிபிசியிடம் பேசும் போது அங்கே நிலவும் அவல நிலையை ஒப்புக் கொண்டார். மேலும் பிரசவ காலங்களில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களை நிவர்த்தி செய்ய அரசாங்கம் திட்டம் ஒன்றை அமல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார். கடந்த நவம்பர் மாதம் நைஜீரிய அரசாங்கம், மம்மி (Maternal Mortality Reduction Innovation Initiative (Mamii)) என்ற திட்டத்தை அமல்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள 33 மாகாணங்களில், குழந்தை பிறப்பு தொடர்பாக ஏற்படும் இழப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட இழப்புகளை பதிவு செய்துள்ள, 172 உள்ளாட்சி அமைப்புகளை இலக்குகளாகக் கொண்டு செயல்படுகிறது. "ஒவ்வொரு கர்ப்பிணியையும் கண்டறிந்து அவரின் மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு மற்றும் அதற்கு பிறகான நாட்களில் அவருக்குத் தேவைப்படும் ஆதரவை வழங்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது," என்று சந்தா தெரிவிக்கிறார். ''இதுவரை ஆறு மாகாணங்களில், வீடு வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 4 லட்சம் கர்ப்பிணி பெண்களை கண்டறிந்துள்ளோம். மேலும் அவர்கள் மருத்துவ ஆலோசனைப் பெறுகிறார்களா இல்லையா என்பதையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதையும், பாதுகாப்பான முறையில் குழந்தைகளை பெற்றெடுப்பதையும் உறுதி செய்யும் வகையில் அவர்களை இந்த மம்மி சேவையில் இணைப்பதே இந்த திட்டம்." உள்ளூர் போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் 'மம்மி', நிறைய பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது. மேலும் குறைந்த செலவிலான பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் இணையவும் ஊக்குவிக்கிறது. இந்த திட்டம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை தற்போது கூறிவிட இயலாது. உலக நாடுகளில் இருக்கும் போக்கை நைஜீரியாவும் பின்பற்றும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர். 2000-ஆம் ஆண்டு துவங்கி, பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்கள் 40% வரை குறைந்துள்ளது. சுகாதார சேவைகளை அணுகுவதை எளிமையாக்கியது இதற்கு ஒரு முக்கிய காரணம். நைஜீரியாவிலும் இத்தகைய மரணங்கள் குறைத்து வருகிறது. ஆனால் 13% மட்டுமே குறைந்துள்ளது. மம்மி மற்றும் இதர திட்டங்கள் நடைமுறையில் இருப்பினும் கூட, அதிக அளவு முதலீடு செய்தல் உட்பட பல முக்கிய விசயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "இத்தகைய திட்டங்களின் வெற்றியானது நிலையான நிதி, திறம்பட மேம்படுத்தும் தன்மை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது," என்று தோல்ஸ்டென் கூறுகிறார். அதே நேரத்தில், நாள் ஒன்றுக்கு 200 என்ற அளவில் பெண்கள் இறப்பது என்பது அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய சோகத்தையே ஏற்படுத்தும். ஐந்தாண்டுகளுக்கு முன்பு சகோதரியை இழந்தது எடாவுக்கு பேரடியாக இருந்தது. "சிறு வயதிலேயே எங்களின் பெற்றோர்களை நாங்கள் இழந்ததால், அவள் எங்கள் குடும்பத்தை தலைமை தாங்கி நடத்தினாள். அவள் இறந்து நீண்ட காலம் ஆனாலும் கூட, அவளை நினைக்கும் போதெல்லாம் அழுகிறேன்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9vg312yxpzo
  11. ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடாக பயன்படுத்திய அதிகாரிகளுக்கு எதிராக குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணை Published By: VISHNU 08 JUN, 2025 | 07:51 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி ஒருசில சிறைக்கைதிகள் வெசாக் தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் இவ்விடயம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது. அநுதாரபுரம் மேல் நீதிமன்றத்தால் 2025.05.02 ஆம் திகதியன்று சிறைத்தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிக்கு 2025.05.12 ஆம் திகதியன்று ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட விவகாரம் தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஜனாதிபதி செயலகம் சனிக்கிழமை (7) தெளிவுப்படுத்தல் ஊடக அறிக்கை ஒன்றை வெளிட்ட நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடளித்திருந்தது. இந்த முறைப்பாடு குறித்து பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதிக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக 2025 வெசாக் பண்டிகையை முன்னிட்டு தெரிவு செய்யப்பட்ட சிறைகைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது. இதன்போது சிறைகைதிகள் பலருக்கு முறையற்ற வகையில் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக 2025.06.06 ஆம் திகதியன்று ஜனாதிபதி செயலகம் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடளித்துள்ளது. ஜனாதிபதி செயலகம் அளித்துள்ள முறைப்பாட்டுக்கமைய, குற்றப்புலனாய்வு திணைக்களம் முறையான விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்திடம் இவ்விடயம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த ஆவணங்களை பரிசீலனை செய்து உரிய தரப்பினரிடமிருந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பொதுமன்னிப்பை முறைகேடான வகையில் பயன்படுத்தி ஒருசில சிறைக்கைதிகள் வெசாக் தினத்தன்று விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது. இந்த முறைகேடான செயற்பாட்டுடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட அதனுடன் தொடர்புடைய சகல உத்தியோகத்தர்களுக்கும் எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. முதற்கட்ட விசாரணைகளில் ஜனாதிபதி பொதுமன்னிப்பில் விடுவிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்ட சிறைக்கைதிகளுடன் அனுமதியளிக்கப்படாத அல்லது பெயர்குறிப்பிடப்படாத கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக தகவல்கள் பதியப்பட்டுள்ளன. இது தொடர்பில் விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்படும். https://www.virakesari.lk/article/216964
  12. ஐ.நா.உயர்ஸ்தானிகரிடம் மாகாணசபை தேர்தலுக்கான அழுத்தத்தை கோர வேண்டும்; கலாநிதி தயான் 08 JUN, 2025 | 12:26 PM ஆர்.ராம்- இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேக்ரிடத்தில் வடக்கு, கிழக்கு அரசியல், சிவில் தரப்பினர் கூட்டிணைந்து மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துமாறே வலியுறுத்த வேண்டும் என்று இராஜதந்திரியும், அரசியல் ஆய்வாளருமான கலாநிதி தயான் ஜயத்திலக வலியுறுத்தியுள்ளார். பொறுப்புக்கூறலை முன்னிலைப்படுத்திய கோரிக்கைளை முன்னெடுத்தால் ஆட்சியில் உள்ள அநுர அரசாங்கம் சுயாட்சிக்கோரிக்கைக்கு ஆபத்துக்களை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இம்மாத இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உயர்ஸ்தானிகருடைய விஜயம் சம்பந்தமாக கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு தீர்மானித்திருப்பது முக்கியமானதொரு விடயமாகும். அவர் அவ்வாறு வருகை தருகின்றபோது உள்நாட்டில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவது இயல்பானது. அவ்வாறான நிலையில், வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல், சிவில் பிரமுகர்கள் இந்த விடயத்தினை தமக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டியது மிக முக்கியமானதொரு விடயமாகும். தற்போதைய நிலையில் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதிகாரப்பகிர்வு தொடர்பாகவோ, பொறுப்புக்கூறல் தொடர்பாகவே எவ்விதமான கரிசனைகளையும் கொண்டிருப்பதாக வெளிப்படுத்தவில்லை. அவ்வாறான நிலையில் மாகாண சபைகளுக்கான தேர்தலே அதிகாரப்பகிர்வுக்கான ஆரம்பமாக இருக்கின்றது. அதனை எட்டு ஆண்டுகளாக நடத்தப்படாது இருக்கும் நிலையே காணப்படுகின்றது. டில்லிக்கும், கொழும்புக்கும் இடையிலான உறவுகளால் மாகாண சபைகளுக்கான வலியுறுத்தல் பிரதமர் மோடியின் விஜயத்தில் காணமாலக்கப்பட்டுள்ளது. இது மிகப்பாரதூரமான விடயமாகும். ஆகவே ஐ.நா.உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு வருகின்ற சந்தர்ப்பத்தில் இந்த நாட்டில் அனைத்துப்பிரச்சினைகளுக்கும் அரசியல் ரீதியான தீர்வு தான் அடிப்படையாக இருக்கின்றது என்பதை உணர்த்துவதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தவதற்கான அழுத்தங்களை பிரயோகிக்குமாறே கூட்டுக் கோரிக்கை முன்வைக்க வேண்டும். அதன்மூலமாகவே சுயாட்சி, அதிகாரப்பகிர்வு, பொறுப்புக்கூறல் உள்ளிட்ட தமிழ் மக்களின் நீண்டகாலக்கோரிக்கைகளை நோக்கி நகரமுடியும். இதனைவிடுத்து பொறுப்புக்கூறல் விடயத்தினை முன்வைக்கின்றபோது தென்னிலங்கையில் மீண்டும் தேசியவாத சக்திகள் தீவிரமாக தலையெடுக்கும். ஆவ்விதமான சூழல் ஏற்பட்டால் அரசங்கம் சுயாட்சி என்பதை உச்சரிக்க முடியாத அளவுக்கு கடுமையாக நடந்துகோள்வதற்கு வாய்ப்புக்களே அகதிகமுள்ளன. காரணம் பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் நிறைவேற்று அதிகாரம் அதற்கு காரணமாகின்றன. ஆகவே ஐ.நா.உயர்ஸ்தானிகரின் வருகையை எதிர்காலத்தை மையப்படுத்தி பயன்படுத்துவதற்கு தீர்மானிக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/216918
  13. ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகையை எதிர்க்கும் உள்ளக மற்றும் சர்வதேச தரப்புக்கள் 08 JUN, 2025 | 10:16 AM (நா.தனுஜா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இன்னும் இரு வாரங்களில் நாட்டுக்கு வருகைதரவுள்ள நிலையில், அவரது வருகைக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்நாட்டில் இயங்கிவரும் 104 சிவில் சமூகப்பிரதிநிதிகளின் கூட்டு, சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்களின் கூட்டு, தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் ஆகிய நான்கு தரப்புக்கள் தனித்தனியாக 4 கடிதங்களை உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைத்துள்ளன. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முடிவுக்குக்கொண்டுவரப்பட்ட மூன்று தசாப்தகால யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிகமோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. இந்நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்டு, பின்னர் காலநீடிப்பு செய்யப்பட்ட தீர்மானத்தின் ஊடாக நாட்டில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைத் திரட்டும் பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இவ்வாறானதொரு பின்னணியில் இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின்பேரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் எதிர்வரும் 23 - 26 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவ்விஜயத்தின்போது அவர் நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம், கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரின் நிலைப்பாடுகள் என்பவற்றைக் கண்காணிக்கும் அதேவேளை, அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர், சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிறுபான்மையின அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடருடன் இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முடிவுக்குவரவுள்ள நிலையில், அதற்கு முன்பதாக மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் நாட்டுக்கு வருகைதருவது செப்டெம்பரில் அவர் வெளியிடவுள்ள இலங்கை தொடர்பான அறிக்கையின் காத்திரமான தன்மையை மலினப்படுத்தும் எனும் கரிசனையின் அடிப்படையிலேயே சிவில் சமூக மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும், பாதிக்கப்பட்ட தரப்பினரும் அவரது வருகைக்குஎதிர்ப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி உள்நாட்டு சிவில் சமூகப்பிரதிநிதிகளால் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் அறிந்த இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ், இதுபற்றி சிவில் சமூகப்பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடியதாகவும், அவர்களது கருத்தைக் கேட்டறிந்ததன் பின்னர் அக்கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதன் நியாயத்துவத்தை அவர் ஏற்றுக்கொண்டதாகவும் அறியமுடிகின்றது. இது இவ்வாறிருக்க, ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் வருகை தொடர்பில் எழுந்திருக்கும் எதிர்ப்புக் குறித்து தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி மார்க் அன்ட்ரூ பிரான்ஞ்சே, உயர்தானிகரின் இலங்கை விஜயமானது எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடரில் அவர் வெளியிடவிருக்கும் அறிக்கையை எவ்விதத்திலும் மலினப்படுத்தாது எனவும், உயர்ஸ்தானிகர் அலுவலகம் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கரிசனைகளுக்கு விரோதமாக செயற்படாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய பின்னணியில், ஏற்கனவே திட்டமிடப்பட்டதன் பிரகாரம் எதிர்வரும் 23 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தருவார் என்பதை உறுதிப்படுத்தி ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இன்னமும் அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வ கடிதம் அனுப்பிவைக்கப்படவில்லை என நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது. https://www.virakesari.lk/article/216900
  14. மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டிற்கு எதிரான சதி என்று ஸ்டாலின் விமர்சிப்பது ஏன்? பட மூலாதாரம்,X/MK STALIN படக்குறிப்பு, முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 ஜூன் 2025 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2027 மார்ச் மாதம் தொடங்க உள்ளதாக, இந்திய உள்துறை அமைச்சகம் புதன்கிழமை அன்று (ஜூன் 4) தெரிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித் திட்டத்தை பா.ஜ.க வெளிப்படையாக அறிவித்துள்ளதாக விமர்சித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்பை தமிழ்நாட்டிற்கு எதிரான சதி என்று ஸ்டாலின் விமர்சிப்பது ஏன்? இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் 2027 ஆம் ஆண்டு இரு கட்டங்களாக நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. பனிப்பொழிவு பகுதிகளாக இருக்கும் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், லடாக், இமாச்சல் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய பகுதிகளில் 2026 அக்டோபர் 1 முதல் கணக்கெடுப்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு சட்டம் 1948, மக்கள்தொகை கணக்கெடுப்பு விதிகள் 1990 ஆகியவற்றின்படி இவை நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டம் பிரிவு 3ன்படி வரும் ஜூன் 16 ஆம் தேதியன்று அரசிதழில் வெளியிடப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "முன்பே எச்சரித்தேன்" - முதலமைச்சர் ஸ்டாலின் X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அதில், ' 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பைத் தொடர்ந்து, தொகுதி மறுவரையறை செய்ய வேண்டும் என அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை 2027 ஆம் ஆண்டுக்குத் தள்ளிப்போட்டு, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் சதித்திட்டத்தை பா.ஜ.க. வெளிப்படையாக அறிவித்துள்ளது' எனக் கூறியுள்ளார். தொகுதி மறுவரையறை ஆபத்து குறித்து முன்பே தான் எச்சரித்திருந்ததாகக் கூறியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், 'அது இப்போது நிரூபணமாகிவிட்டது. பா.ஜ.க-வுடன் கூட்டு சேர்ந்துள்ளதன் மூலம், இதுதொடர்பாக எதுவும் பேசாமல் எடப்பாடி பழனிசாமி அமைதி காக்கிறார்' எனவும் குறிப்பிட்டுள்ளார். நியாயமான தொகுதி மறுவரையறை என்னும் கோரிக்கையில் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்பதாகவும் இதுதொடர்பான விளக்கத்தை மத்திய அரசு அளிக்க வேண்டும் எனவும் ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு: தென்னிந்திய மாநிலங்கள் எந்த அளவுக்கு பின்னடைவை சந்திக்கும்? தொகுதி மறுசீரமைப்பு கூட்டம்: தேசிய அரசியலில் திமுகவுக்கு பலனா? தொகுதி மறுசீரமைப்பை 25 ஆண்டுகளுக்குத் தள்ளிப்போட சென்னை கூட்டத்தில் தீர்மானம் ஏன்? - முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமா? சதி என ஸ்டாலின் கூறுவது ஏன்? படக்குறிப்பு, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். "மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யும்போது தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவம் குறையும். அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலங்களின் பிரதிநிதித்துவம் கூடும்" எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். மத்திய அரசின் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை தென்மாநிலங்கள் சிறப்பாக கையாண்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய பாலச்சந்திரன், "கணக்கெடுப்புக்குப் பிறகு தொகுதி மறுவரையறை மேற்கொள்ளும்போது தென்மாநிலங்கள் வெகுவாக பாதிக்கும். இதைத் தான் சதி என முதலமைச்சர் குறிப்பிடுகிறார்" என்கிறார். மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடிந்த பிறகு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. இந்தியாவில் 1971 ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுக்கப்பட்டது. அதை அடிப்படையாக வைத்து 1973 ஆம் ஆண்டில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்பட்டது. 1975 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சியில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டது. அதேகாலகட்டத்தில், குடும்ப கட்டுப்பாடு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டன. இதன் காரணமாக அடுத்த 25 ஆண்டுகளுக்கு தொகுதி மறுவரையறையை மேற்கொள்ளாமல் இருக்கும் வகையில் அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது. "வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது (2002) தொகுதி மறுவரையறையை மேலும் 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைத்தார். தற்போது மக்கள்தொகையைக் கணக்கெடுத்தால் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யப்படும். இதன் பாதிப்பை உணர்ந்து, மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரவேண்டும் ஸ்டாலின் கூறுகிறார்" என்கிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். "1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறையை செயல்படுத்தினால் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கும் பாதிப்பு ஏற்படாது" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "தொகுதி மறுவரையறையின் மூலம் மாநிலத்தின் பிரதிநிதித்துவத்தை குறைப்பது பா.ஜ.க-வின் நோக்கமாக உள்ளது. உத்தரபிரதேசம், பிகார் போன்ற மாநிலங்களுக்கு இணையாக தமிழ்நாட்டுக்கு எம்.பி-க்கள் பிரநிதித்துவம் கிடைக்க வாய்ப்பில்லை" எனவும் குறிப்பிட்டார். "வட இந்திய மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டால், தென்மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே பா.ஜ.க ஆட்சியமைக்கும். இதைத் தான் சதி என முதலமைச்சர் குறிப்பிடுகிறார்" என்கிறார், சிகாமணி திருப்பதி. தி.மு.க முன்வைக்கும் 7.18 சதவீதம் பட மூலாதாரம்,X/MK STALIN படக்குறிப்பு,அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடத்தியது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக தொடக்கத்தில் இருந்தே தி.மு.க குரல் எழுப்பி வருகிறது. இதுதொடர்பாக கடந்த மார்ச் 5 அன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை தமிழ்நாடு அரசு நடத்தியது. அந்தக் கூட்டத்தில், '1971 ஆம் ஆண்டு மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகள் வரையறுக்கப்படும் என, 2000 ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதியளித்தார். தற்போது தொகுதி வரையறையை 2026 ஆம் ஆண்டில் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோதி உறுதியளிக்க வேண்டும். அதற்கேற்ப, அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்' எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 'நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் என்பது 7.18% உள்ளது. இதை எக்காரணம் கொண்டும் மத்திய அரசு மாற்றக் கூடாது' என்றொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பான போராட்டங்களை முன்னெடுத்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு நடவடிக்கைக் குழு அமைக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் உள்ள 543 உறுப்பினர்களின் பலத்தைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டுக்கு 7.18% என்ற கணக்கு வருகிறது. 'தொகுதிகளை மறுவரையறை செய்தாலும் இந்த சதவீதம் அளவுக்கு தொகுதிகளை ஒதுக்க வேண்டும்' எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், தொகுதி மறுவரையறை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாக இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குற்றம் சுமத்தினார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையறை மேற்கொள்ளப்படும் எனப் பிரதமர் கூறிவிட்டார். தென்னிந்திய மாநிலங்கள் உள்பட எந்த மாநிலத்துக்கும் இதனால் பாதிப்பு ஏற்படாது" எனக் கூறினார். "இரண்டாம்தர குடிமக்களாக வடக்கு மாற்றும்" பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி அதேநேரம், "தென்னிந்திய மாநிலங்களில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதைப் பற்றி அமித் ஷா விளக்கவில்லை" என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விமர்சித்திருந்தார். "தென்மாநிலங்களின் எண்ணிக்கை குறையாது என அமித் ஷா கூறினாலும் எத்தனை இடங்கள் அதிகரிக்கும் என்பதைப் பற்றி தெளிவுபடுத்தவில்லை" எனவும் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தொடர்ந்து, தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநில முதலமைச்சர்களின் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தை மார்ச் 22 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் கூட்டினார். இதில், கேரள முதல்வர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். "மக்கள்தொகை அடிப்படையில் மறுவரையறை நடந்தால் அதை தெற்கு ஏற்கப் போவதில்லை. தென்னிந்திய மாநிலங்கள் அதன் அரசியல் வலிமையை இழந்துவிடும். தங்களை இரண்டாம்தர குடிமக்களாக வடக்கு மாற்றும்" என தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி பேசியிருந்தார். "பா.ஜ.க-வின் திட்டம் இதுதான்" - பாலச்சந்திரன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாஜக "தென்மாநிலங்களின் தொகுதிகள் குறையாது என அமித் ஷா கூறினார். ஆனால், அதற்கான காரணத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. இங்கு தொகுதிகள் குறையாமல் வடஇந்திய மாநிலங்களில் மட்டும் எண்ணிக்கை அதிகரித்தாலும் பாதிப்பு ஏற்படும்" எனக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் சிகாமணி திருப்பதி. தற்போது வரை பிரதமரும் உள்துறை அமைச்சரும் இதுதொடர்பாக எந்த விளக்கத்தையும் அளிக்காமல் உள்ளதாகக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன். "அவர்களின் நோக்கம் மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய நான்கு மாநிலங்களில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டுவது தான்" என்கிறார் அவர். மேற்கண்ட நான்கு மாநிலங்களில் பெருவாரியான இடங்களைப் பா.ஜ.க வெற்றி பெற்றுவிட்டால், மக்களவையில் பெரும்பான்மை பலம் கூடும் என்பது அவர்களின் கணக்காக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். டி.கே.எஸ்.இளங்கோவன் சொல்வது என்ன? "பா.ஜ.க முடிவால், குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை முறையாகப் பின்பற்றாத உத்தரபிரதேசம் உள்பட சில மாநிலங்கள் பலனடையும். இதனை முறையாக செயல்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் பாதிப்படையும்" எனக் கூறுகிறார், தி.மு.க செய்தித் தொடர்புத் துறை தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன். இதையே சதி என முதலமைச்சர் கூறுவதாகக் குறிப்பிட்ட டி.கே.எஸ்.இளங்கோவன், "தொகுதி மறுவரையறை பிரச்னையை தொடக்கத்தில் இருந்தே தி.மு.க எழுப்பி வருகிறது" என்கிறார். "சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள்தொகைக் கணக்கெடுப்புக்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆனால், தொகுதி மறுவரையறை குறித்து எந்தத் தகவலும் வெளிவரவில்லை. அதுதொடர்பான அறிவிப்பு வெளிவரும்போது விவாதமாகும்" எனவும் அவர் தெரிவித்தார். "இது வெறுப்பு அரசியல்" - நாராயணன் திருப்பதி ஆனால், இதனை மறுத்துப் பேசும் பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, "முதலமைச்சர் எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறார் எனத் தெரியவில்லை. மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுத்த பிறகு தான் தொகுதி மறுவரையறையை மேற்கொள்வார்கள். அதற்கான குழுவை அமைத்த பிறகு பேசுவது தான் சரியாக இருக்கும்" எனக் கூறுகிறார். பிபிசி தமிழிடம் தொடர்ந்து பேசிய அவர், "மக்கள்தொகைக் கணக்கெடுப்பை எடுக்க வேண்டும் எனக் கூறி வந்த ஸ்டாலின், இப்போது எடுக்க வேண்டாம் என்கிறார். பா.ஜ.க-வை எதிர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் வெறுப்பு அரசியலைக் கையில் எடுத்துள்ளார்" என்கிறார். "மக்கள்தொகைக் கணக்கெடுப்பை நடத்துவோம் என நாடாளுமன்றத்திலேயே மத்திய அரசு கூறியது. இதை வரவேற்க மனமில்லாமல் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல" என்கிறார் நாராயணன் திருப்பதி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93l264gwdpo
  15. அறிகுறிகளே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகங்கள் - ஆபத்தை தவிர்க்க என்ன செய்யலாம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்புக்கு பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள் கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்திட்டம் குறித்து சமீபத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், "விவசாய தொழிலாளர்கள், கட்டட வேலை செய்வோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர, தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் என 2 கோடி பேர் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பால் இவர்களும் பாதிக்கப்படக்கூடும். 1.07 கோடி பேருக்கு பரிசோதனை செய்ததில் 33,869 பேருக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுவதால் சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்." என்று கூறினார். சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து நிபுணர்கள் பகிர்ந்த தகவல்கள் இங்கே… "சிறுநீரகம் சார்ந்த நோய்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, தடுக்கக்கூடிய சிறுநீரக பிரச்னைகள், மற்றொன்று தடுக்க இயலாத சிறுநீரக பிரச்னை. தடுக்கக்கூடிய சிறுநீரக பிரச்னைகள், நம்முடைய வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படுகின்றன. அதில், முதன்மையாக நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய வாழ்வியல் நோய்களால் சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இவற்றை நாம் தடுக்க முடியும். ஆனால், மரபியல் ரீதியாக ஏற்படும் சிறுநீரக பிரச்னைகளை நாம் தடுக்க முடியாது." என விளக்குகிறார் சென்னையை சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணர் சங்கநிதி. "ஆரம்பத்தில் நாம் வேட்டையாடும் சமூகங்களாக இருந்தோம். அதன்பின், வேளாண்மை செய்ய ஆரம்பித்தோம். இப்போது, கடைகள், ஹோட்டல்களில் சாப்பிட ஆரம்பித்து, வீட்டுக்கே இன்று உணவு வருகின்றது. துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோம். இப்படியான சூழலில் நம் உடலுக்கு எது சிறந்தது என்பதை அறிந்து உண்ண வேண்டும். அதுதான், நம் சிறுநீரகங்களை காப்பதற்கு நாம் செய்யும் அதிகபட்ச தடுப்பு வழியாக இருக்கும்," என்றார் மருத்துவர் சங்கநிதி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்பை தடுப்பதில் உப்பின் அளவை குறைப்பதும் பெரும் பங்கு வகிக்கிறது சிறுநீரக ஆரோக்கியம் என்று வரும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உப்பு, சர்க்கரையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். "ஏனெனில், நீங்கள் ஒரு டயாலிசிஸ் பிரிவுக்கு செல்வதாக எடுத்துக்கொள்வோம். அங்குள்ள சிறுநீரக நோயாளிகளுள் 70% மேல் நீரிழிவு நோயாளிகளாகவே இருப்பார்கள்." என்கிறார் சிறுநீரகவியல் நிபுணர் சங்கநிதி. சிறுநீரக ஆரோக்கியம் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை சங்கநிதி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார். சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவு மிக முக்கியம், அப்படியென்றால் ஒருநாளுக்கு எவ்வளவு உப்பு எடுக்க வேண்டும்? உப்பை பொறுத்தவரையில் 5 கிராம்தான் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது. ''ஒரு சிறிய டீஸ்பூன் அளவுக்கான உப்பைதான் தினமும் எடுக்க வேண்டும். அதுதவிர, நாம் அப்பளம், ஊறுகாய், ஃபிரெஞ்சு ஃப்ரை, சிப்ஸ், பிஸ்கெட், பிரெட் உள்ளிட்ட பேக்கரி உணவுகள் என, தேவைக்கு மிக அதிகமாக உப்பை எடுத்துக்கொள்கிறோம். பதப்படுத்துவதற்காகத்தான் நாம் ஆரம்பத்தில் உப்பை பயன்படுத்தினோம், உப்பின் பயன்பாடு ஆரம்பத்தில் சுவையை அதிகப்படுத்துவது அல்ல. எனவே, நம்மால் எவ்வளவு உப்பை குறைக்க முடியுமோ அவ்வளவையும் குறைக்க வேண்டும்'' என்கிறார் சங்கநிதி. கர்ப்பத்தின் போதே ஒருவர் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை, உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஏனெனில், இது இரண்டும் கருவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என கூறுகிறார் சங்கநிதி ''அதுமட்டுமல்லாமல், ஒரு குழந்தைக்கு உப்பே இல்லாமல் உணவைப் பழக்க வேண்டும். குழந்தைகளின் சுவை நரம்பை உப்பு, சர்க்கரை சுவைக்கு மட்டும் பழக்காமல், அதன் உண்மையான சுவைக்குப் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பருவத்திலே இதை பழக்கினால் எளிது. இல்லையென்றால், 40 வயதில் ஒருவர் உப்பு, சர்க்கரையை கைவிடுவது கடினமாக இருக்கும்.'' என்கிறார் அவர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்பின் தீவிர நிலை, நாள்பட்ட சிறுநீரக நோய் (சிகேடி) என அறியப்படுகிறது தண்ணீர் எவ்வளவு அருந்த வேண்டும்? ''ஒருவர் தேவையான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். சிறுநீரக கல், சிறுநீரக கட்டிகள் உள்ளவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். ஆனால், சிறுநீரக பிரச்னை ஏற்பட்டவுடன், அதை சரி செய்கிறோம் என்ற பெயரில் தண்ணீரை நாமே அதிகமாகக் குடிக்கக் கூடாது, அப்போது மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு கட்டுப்படுத்தப்படும். ஒரே நாளில் இடைவெளி விட்டு விட்டு தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரே நேரத்தில் மொத்தமாக குடிக்கக் கூடாது.''என கூறுகிறார் சங்கநிதி "ஒரு ஆரோக்கியமான நபர் சாதாரணமான நாட்களில் 3 லிட்டர் வரையும் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் 4 லிட்டர் வரையும் தண்ணீர் அருந்த வேண்டும்'' என்கிறார் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் ஜெயலஷ்மி. சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் என்னென்ன? "சிறுநீரக பிரச்னை பெரும்பாலும் அறிகுறிகளே காண்பிக்காது. ஒருவேளை சிறுநீரில் புரதம் வெளியேறினால், சிறுநீர் நுரை, நுரையாக வரலாம். ரத்தம் வெளியேறினால் சிவப்பாக இருக்கும். கல் இருந்தால் முதுகு பின்பகுதியில் இருபுறமும் வலி ஏற்பட்டு அது, சிறுநீர் வெளியேறும் பாதைக்கு பரவும். சிறுநீரில் கிரியேட்டினின் அதிகமாக இருப்பது அறிகுறிகளில் தெரியாது. கடைசி நிலையில்தான் கால் வீக்கம் ஏற்படும்." என்கிறார், மருத்துவர் சங்கநிதி. சிறுநீர் வாயிலாக வெளியே செல்லக்கூடிய பொருட்கள் வெளியேறாமல் அதனுள்ளேயே இருப்பதுதான் கிரியேட்டினின் (creatinine). பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒருவர் ஒரு நாளைக்கு தோராயமாக 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார் சிறுநீரகவியல் நிபுணர் ஜெயலஷ்மி சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் ஜெயலஷ்மி கூறுகையில், "சிறுநீரக செயலிழப்பில் அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. கால் வீக்கம் இருக்கலாம், சிறுநீர் குறைவாக வெளியேறலாம், நோய் கொஞ்சம் தீவிரமாகும்போது மூச்சுத்திணறல், ரத்தசோகை, பசியின்மை ஏற்படலாம். அந்த அறிகுறிகளே தீவிர நிலையில்தான் தென்படும். தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வது, வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தமும் சில சந்தர்ப்பங்களில் அறிகுறியாக இருக்கலாம்." என்றார். சிறுநீரக பாதிப்புகளை எப்படி கண்டுபிடிப்பது? நாள்பட்ட சிறுநீரக நோய் (chronic kidney disease - CKD) தான் சிறுநீரக பிரச்னையின் தீவிர நிலையாக கருதப்படுகிறது என்று கூறும் சங்கநிதி, இதில் ஐந்து கட்டங்கள் உள்ளதாக விளக்கினார். "கிரியேட்டினின் அளவை வைத்துதான் ஒருவர் எந்த கட்டத்தில் உள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதன் அளவு உயர்ந்தால் எந்தளவுக்கு நோய் தீவிரமாக உள்ளது என்பதை கூற முடியும். ஐந்தாம் கட்டம் என்றால் கிட்டத்தட்ட இறுதி நிலை எனலாம். அதாவது, சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்துவிட்டது என அர்த்தம். அப்போது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது தீர்வாக இருக்கும். நிரந்தரமான சிறுநீரக நோயாக மாறிவிட்டால் அதை முழுவதும் குணப்படுத்த முடியாது. தற்காலிகமாக ஏற்படும் பிரச்னைகளை மட்டுமே சரிசெய்ய முடியும்." என்றார். கிரியேட்டினின் அளவை வைத்து 'கிலாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்' (Glomerular filtration rate) என்பதை அளவிடுகின்றனர். அதாவது, கிரியேட்டினின் அளவையும் நோயாளியின் வயதையும் வைத்து இதன் மதிப்பை அளவிடுகின்றனர். '' அதன் அளவு 90க்கு மேல் இருந்தால் பிரச்னையல்ல, 90 மி.லி.க்கு கீழ் இருந்தால் நாள்பட்ட சிறுநீரக நோய் என்பதை உறுதிசெய்வோம். 15 மி.லி.க்கு கீழே சென்றால் இறுதி நிலை நாள்பட்ட சிறுநீரக நோய் என்பார்கள்.'' என்றார் சங்கநிதி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் நிபுணர்கள் "40 வயதுக்கு மேல் எல்லோருக்கும் ஜி.எஃப்.ஆர்(கிலாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்) அளவு குறையும். ஆனால், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இதன் அளவு ஆண்டுக்கு 5 மி.லி. என்ற அளவில் குறைகிறது. ஆரம்ப நோய்நிலையில், இதன் அளவு குறைவதை சற்று மாற்றியமைப்பதற்கான மாத்திரைகள் வழங்கப்படும்." என்கிறார், சங்கநிதி. சிறுநீரில் புரதம் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் ஆரம்ப நிலையில் வழங்கப்படும் என்கிறார், மற்றொரு சிறுநீரகவியல் நிபுணர் ஜெயலஷ்மி. "அவை பெரும்பாலும் நீரிழிவு, ரத்த அழுத்த மருந்துகளாகத் தான் இருக்கும்." என்றும் அவர் தெரிவித்தார். என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும்? கிரியேட்டினின் அளவை பரிசோதிப்பதற்கான ரத்தப் பரிசோதனை, ரத்தம் வெளியேறுகிறதா என்பதை சோதிக்க ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், அல்டிராசவுண்ட் மூலம் சிறுநீரகம் எப்படி இருக்கிறது, அதன் அளவு சரியாக இருக்கிறதா, கல், கட்டி உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்படும் என்கிறார் சங்கநிதி. "மேலும், கிரியேட்டினின் அதிகமாக இருந்தால், சிறுநீரகத்தைப் பார்த்தாலே அதற்கு வயதான தோற்றம் ஏற்பட்டிருக்கும். உட்புறம், வெளிப்புறம் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்போம்." என்றார். மேலும், "டைப் 1 நீரிழிவு நோயாக இருந்தால் ஆரம்பத்திலேயே தெரியும், ஆனால் டைப் 2 நீரிழிவு நோய் எப்போதாவது நாம் பரிசோதிக்கும் போதுதான் தெரியும். ஆனால், நீரிழிவு நோய் நமக்கு எப்போதிலிருந்து இருக்கிறது என்பது தெரியாது. எனவே, நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படும் போதே சிலருக்கு சிறுநீரக நோய் இருக்கலாம்." என்றும் கூறுகிறார் அவர். குஜராத்தில் இளைஞர்களிடையே அதிகரிக்கும் சிறுநீரக செயலிழப்பு - காரணம் என்ன? தடுப்பது எப்படி? பால் போல வெந்நிறத்தில் சிலரது சிறுநீர் இருப்பது ஏன்? சிறுநீரின் 6 நிறங்களும் காரணங்களும் உங்கள் சிறுநீரகத்தில் பிரச்னை இருப்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள் தோலை வெளுப்பாக்கும் சில க்ரீம்களால் சிறுநீரகக் கோளாறு: எச்சரிக்கும் மருத்துவர்கள் வருமுன் காப்பது எப்படி? இந்தாண்டு உலக சிறுநீரக தினத்தின் (மார்ச் 13) கருப்பொருளே, 'உங்கள் சிறுநீரகத்தை அறிந்துகொள்ளுங்கள்' (Know your kidney) என்பதுதான். அதில், ஏ, பி, சி, டி, இ என்கின்றனர். A என்பது ஆல்புமின், அதாவது புரதம் வெளியேறுவது, B என்பது ரத்த அழுத்தம் (blood pressure), C (கொலஸ்டிரால்), D என்பது நீரிழிவு நோய் (diabetics), E என்பது (eGFR), F என்பது குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கிறதா என்பது (family history). இந்த ஆறு அம்சங்களையும் ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார், சங்கநிதி. என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்? நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்ன மாதிரியான சரிவிகித உணவுமுறையை கடைபிடிக்கிறோமோ அதுவே நம் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் முக்கியம் என பரிந்துரைக்கிறார் சங்கநிதி. "வாஸ்குலார் (ரத்த நாளங்கள் தொடர்பான) நோய்களைத் தடுக்க பொட்டாசியம் எடுக்க வேண்டும், அதுவே சிறுநீரக பிரச்னை வந்துவிட்டால் பொட்டாசியம் சம்மந்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். உப்பை கூடுமானவரை குறைக்க வேண்டும். மேலும், புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆன்டி ஆக்ஸிடென்ட், நிறைந்த, கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்." என அவர் பரிந்துரைக்கிறார். கட்டட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது ஏன்? "இந்த தொழிலாளர்கள் வெயிலில் அதிகமாக வேலை பார்க்கிறார்கள். தண்ணீர் போதுமான அளவில் அருந்த மாட்டார்கள். கழிவறை வசதி இல்லையென்றால் தண்ணீர் போதுமான அளவில் குடிக்க மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு சுகாதாரமான கழிப்பட வசதியையும் போதுமான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்." என்கிறார் மருத்துவர் ஜெயலஷ்மி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c861e6y826zo
  16. முத்தமழை பாடல் வரிகள் பெண்: முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண்: ஜானு தம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ? பெண்: கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை ஆண்: தீம் தோம் த தீம் தன தோம் தன தோம் பெண் குழு: தீம் தன தோம் தன தீம் தன தோம் குழு: தீம் தன தோம் தன தீம் தன தோம் பெண்: காலை கனவினில் காதல் கொண்டேன் கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண் குழு: கண் விழித்தேன் அவன் காணவில்லை கண் விழித்தேன் அவன் காணவில்லை பெண்: என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வழி தீரவில்லை பெண் குழு: கண்ணான கண்ணே என் கண்ணாளா என் உள் மன காதலை கண்டாயா பெண்: கரு மை கொண்ட கண்ணோக்கி பொய் சொல்லி நின்றாயா பெண் குழு: போதும் போதும் என சென்றாயா ஆண்: காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண்: முத்தமழை இங்கு கொட்டி தீராதோ முல்லை இரவுகள் பத்தி எரியாதோ பெண்: ஜானு தம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா உறவும் நீ வேண்டியெங்கும் ஆண்: ஓ பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன் ஆண்: மோக பனி போர்வையில் கரம் கோர்கையில் காதல் சொல்வேன் காதில் காதல் சொல்வேன் பெண்: நான் காதலி காதலன் நீ வேறு எல்லாம் வெறும் வேஷம் என்பேன் ஆண்: வேஷம் என்பேன் வெறும் வேஷம் என்பேன் பெண்: காலம் யாவும் நீதானே இந்தக் காலன் வந்தால் வெல்வேனே ஆண்: மறுமொரு சூரியன் பல தாரகை மண்ணில் மின்னல் வீழாதே மண்ணில் மின்னல் வீழாதே பெண்: காதல் வந்தாலும் போனாலும் பெண்ணென்ன செய்வாயோ பெண்: இன்னும் ஒருமுறை எந்தன் கதை சொல்லவா சொல் சொல் சொல் சொல் சொல் சொல் பெண்: காதில் விழும் வரும் வரை காதல் பாடவா பாடவா பெண்: ஜானு தம் மருதங்கம் இங்கு உந்தன் கையில் சொர்க்கம் பொல்லா இரவோ சொல்லா உறவோ எல்லா ஒருவனை வேண்டியெங்கும் உசுரோ? பெண்: கண்ணாளா என்னாளா பெண்ணாளா இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை இன்னும் வரும் எந்தன் கதை https://padalvarigal.com/muththa-mazhai-song-lyrics-in-tamil/
  17. Sudharshan Subramaniam's post Thug life ஒன்பது பாடல்களில் எனக்கு மிகப்பிடித்த பாடல், முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ! முல்லை இரவுகள் பற்றி எரியாதோ! பழைய ரஹ்மான் ❤️" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t6c/1/16/2764.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> சூஃபி வடிவத்தின் அழகு இழைந்து ஓடும் பாடல். ரஹ்மான் இப்படி ஏராளமான அழகான பாடல்கள் தந்திருக்கிறார். இது Dhee குரலில் இன்னும் அழகாக இருக்கிறது. கடவுளைப் போல காதலையும் தொழலாம். கடவுளை அறியோம். ஆனால் காதலும் காமமும் இருத்தலின் கொண்டாட்டமல்லவோ! தொழுதலுக்கு உரியதல்லவோ! பொல்லா இரவோ! சொல்லா உறவோ! இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ! காலைக் கனவினில் காதல் கொண்டேன். கண்விழித்தேன் அவன் காணவில்லை.. கண்விழித்தேன் அவன் காணவில்லை. (Chant. மந்திரம் போல repeated lines) என்னோடு உன்னை ஒன்றாக்கும் வரை என்ன செய்தும் வலி தீரவில்லை. ஓ பாலை நிலத்தினில் சோலை நிழலென காதல் சொல்வேன் நான் காதல் சொல்வேன். மோகப் பனிப்போர்வையில் கரம் கோர்க்கையில் காதல் சொல்வேன். காதல் காதல் சொல்வேன். தீ குரலில் இறுதியில் தபேலா, இடைவெளியில் clap sound போலொரு ஓசையுடன் கீழ்வரும் வரிகள், அதில் காதல் எனும் இடத்தில் Dhee யின் வார்த்தை அழகுபடுத்தல். இன்னும் ஒருமுறை எந்தன் கதை சொல்லவா! காதில் விழும் வரை காதல் பாடவா. பொல்லா இரவோ சொல்லா உறவோ. இல்லா ஒருவனை வேண்டி ஏங்கும் உசுரோ. கண்ணாளா. நான் காதலி. காதலன் நீ. வேறு எல்லாம் வேஷம் என்பேன். வெறும் வேஷம் என்பேன். காதல் தான் அச்சு. மையப்புள்ளி. அதிலிருந்துதான் உலகம் விரிகிறது. Sufi whirling மாதிரி. Devinity. Beautiful 🖤" class="xz74otr x168nmei x13lgxp2 x5pf9jr xo71vjh" referrerpolicy="origin-when-cross-origin" src="https://static.xx.fbcdn.net/images/emoji.php/v9/t0/1/16/1f5a4.png" style="border: 0px; border-radius: 0px; object-fit: fill;"> (பாடல் இணைப்பு முதலாவது கமென்டில். நல்ல Sound system இல் கேளுங்கள்) https://www.facebook.com/sudha001/posts/thug-life-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4/9762230997218221/ பாடகி தீயின் குரலில் முத்தமழை பாடல்.
  18. சென்னையில் லிவ்-இன் உறவில் இருந்த பெண் சாவில் திருப்பம் - மருத்துவர் கைதானது ஏன்? இன்றைய முக்கிய செய்தி பட மூலாதாரம்,TAMIL HINDU 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று, ஜூன் 8 அன்று, தமிழ்நாட்டில் வெளியான பத்திரிகைகள் மற்றும் இணைய ஊடகங்களில் இடம் பெற்ற முக்கியச் செய்திகளின் தொகுப்பை நாம் இங்கே காணலாம். சென்னை கொடுங்கையூரில் வீட்டில் தனியாக இருந்த பெண் இறந்த வழக்கில் மருத்துவரை போலீஸார் கைது செய்தனர் என்று இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கு முன்பு, இவர் தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகின. "திருச்சியை சேர்ந்தவர் நித்யா (26). இவரும், கொடுங்கையூர் வெங்கடேஷ்வரா காலனி 6-வது தெருவைச் சேர்ந்த பாலமுருகனும் கடந்த 8 மாதங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் திருமணம் செய்துகொள்ளாமல் கொடுங்கையூர் ஆசிரியர் காலனியில் வாடகை வீட்டில் இரண்டு மாதங்களாக தம்பதியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில், கடந்த 5-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த நித்யாமர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கொடுங்கையூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று, நித்யாவின் உடலை கைப்பற்றி பிரேதப்பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த 25 பவுன் தங்கநகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது. போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் நித்யா, சில மாதங்களுக்கு முன்பு வரை சைதாப்பேட்டை சடையப்பன் சந்து பகுதியைச் சேர்ந்த மருத்துவர் சந்தோஷ்குமார் (27) என்பவரை காதலித்திருப்பதும், பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருப்பதும், சம்பவம் நடந்த அன்று சந்தோஷ்குமார் அங்கு வந்து சென்றிருப்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணை இதையடுத்து போலீஸார் சந்தோஷ்குமாரிடம் விசாரணை நடத்தியதில், நித்யா கொலை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மறுத்துள்ளார். அவர் வீட்டுக்கு வந்து சென்றது குறித்த கண்காணிப்பு கேமரா உள்ளிட்ட ஆதாரங்களை காட்டி போலீஸார் விசாரணை நடத்தியதில், நித்யாவை கொலை செய்ததை சந்தோஷ்குமார் ஒப்புக் கொண்டார். விசாரணையில் சந்தோஷ் சைதாப்பேட்டையில் வசித்து வருகிறார், ஆலந்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக வேலை செய்து வருகிறார். சமூக ஊடகம் மூலமாக கடந்தாண்டு அவருக்கு நித்யா அறிமுகமாகியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "நித்யா, தான் மென்பொறியாளர். அம்பத்தூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறேன் என்று சொன்னதை, சந்தோஷ்குமார் நம்பியுள்ளார். காதலிக்க தொடங்கிய இருவரும், திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் தம்பதிகளாக வாழ்ந்தனர். இதற்கிடையே நித்யாவுக்கு வேறு ஒரு இளைஞருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், சந்தோஷ்குமார் பிரிந்து சென்றுள்ளார். ஆனால் நித்யா, இருவரும் தனிமையில் இருந்த புகைப்படங்கள், வீடியோக்களை சந்தோஷ்குமாரிடம் காட்டி, சமூக ஊடகங்களில் அதை வெளியிட்டு விடுவேன் என மிரட்டி சந்தோஷ் குமாரிடம் இருந்து ரூ.8.50 லட்சம் பறித்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று நித்யா, சந்தோஷ்குமாரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். அன்று சந்தோஷ்குமார் சென்றதும், இருவரும் மது அருந்தியுள்ளனர். இதில் நித்யா, மதுபோதையில் இருந்தபோது தனக்கு லேசாக தலைவலிப்பதாக தெரிவித்துள்ளார். உடனே சந்தோஷ்குமார், நித்யாவின் தலைக்கு மசாஜ் செய்வதுபோல நடித்து, அவரை கொலை செய்துள்ளார். பின்னர் அந்த வீட்டின் பாதுகாப்பு பெட்டகத்தை நித்யாவின் கைவிரல் ரேகை மூலம் திறந்து, அதில் இருந்த 25 பவுன் தங்க நகையை எடுத்து கொண்டு தப்பியோடியுள்ளார். நகையை, தனது வீட்டின் எதிரே வசிக்கும் நண்பரிடம் கொடுத்துள்ளார். அந்த நகையையும் போலீஸார் தற்போது மீட்டுள்ளனர். இதையடுத்து, சந்தோஷ்குமாரை கைது செய்த போலீஸார், இந்த வழக்கில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்," என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என நீதிபதி கருத்து பூமித்தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கும் குவாரி உரிமையாளர்கள்: உயர் நீதிமன்றம் கருத்து தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர் என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது என தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. "குவாரி உரிமம் முடிந்த நிலையிலும், குவாரியை வெட்டி எடுத்த கோவை குவாரி உரிமையாளர் செந்தாமரைக்கு ரூ.32.29 கோடி அபராதம் விதிக்கப்பட்டதை எதிர்த்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜூன் 7 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் குவாரி நடத்த உரிமையில்லை. சட்டவிரோதமாக எடுத்த கனிமத்துக்கு அபராதம் செலுத்த வேண்டும் என்று அரசு தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது. அபராதம் விதிப்பை எதிர்த்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரதசக்கரவார்த்தி, "தீராத பேராசை கொண்ட குவாரி உரிமையாளர்கள் பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தம் குடிக்கின்றனர். பேராசைக்காரர்களிடம் இருந்து பூமியைக் காக்கவே சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் உள்ளது. குவாரி மூடப்பட்டதாக அறிக்கை தந்துவிட்டு மறுபுறம் குவாரி செயல்பட அதிகாரிகள் அனுமதி அளித்திருக்கிறார்கள். குவாரி உரிமம் 2023ல் முடிந்ததால் அதை ரத்து செய்ய வேண்டிய அவசியம் தற்போது இல்லை. இந்த வழக்கில் இயற்கை வளங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது. குவாரி மோசடியில் அதிகாரிகள் பங்கு குறித்து லஞ்ச ஒழிப்புத் துறை விசாரிக்க வேண்டும், "நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yxv3155kgo
  19. Published By: DIGITAL DESK 3 08 JUN, 2025 | 10:11 AM யாழ்ப்பாணம் - புத்தூர் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரை அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தண்டித்த நிலையில் மாணவன் வீடு சென்று கிருமி நாசினியை அருந்தியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவதாவது, புத்தூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் குறித்த மாணவன் தன்னிடம் அனுமதி பெறாமல் விளையாட்டு நிகழ்வு ஒன்றுக்காக சென்றமையால் ஆசிரியர் மாணவனை தண்டித்துள்ளார். அதன் பின் வீடு சென்ற மாணவன் விவசாய தேவைக்காக வீட்டில் வைத்திருந்த கிருமி நாசினியை அருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தண்டனை வழங்கிய குறித்த ஆசிரியர் ஏற்கனவே தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் மாணவனுக்கு தடியால் தாக்கிய குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டவர் என அறியவருகிறது. குறித்த விடயம் தொடர்பில் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்ட போது தான் விடுமுறையில் நிற்பதாகவும் பாடசாலை ஆசிரியர் மாணவனைப் பேசியதாகவும் பின்னர் வீடு சென்ற மாணவன் மருந்து அருந்தியதாக அறிந்ததாக தெரிவித்தார். https://www.virakesari.lk/article/216898
  20. இலங்கை வருகிறார் மனித உரிமைகள் ஆணையாளர் : யாழ்., முல்லைத்தீவுக்கு விஜயம் 08 JUN, 2025 | 09:39 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயமானது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன், 26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட அரச தரப்புகளை கொழும்பில் சந்தித்து கலந்துரையாட உள்ளதுடன், எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் என பலதரப்பையும் சந்தித்து பொறுப்புக்கூறல் முன்னேற்றங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு சென்று நேரடியாக நிலைமைகளை ஆராய உள்ளதுடன், உள்நாட்டு போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்திக்கவும், விஜயத்தின் இறுதியில் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமைகள் மீளாய்வு கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்பட உள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறித்து அரசாங்கம் கூடுதல் அவதானம் செலுத்தியுள்ளது. குறிப்பாக இறுதிக்கட்ட போரில் இடம்பெற்றதாக கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக் கூறும் வகையில் இலங்கைக்கு எதிராக வெளிக்கள சர்வதேச விசாரணை ஒன்றுக்கான தீர்மானமாக எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனிவா மீளாய்வு கூட்டத்தொடரில் முன்வைக்கப்பட உள்ளது. பிரித்தானியா தலைமையில் குறித்த தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு ஆதரவாக ஐக்கிய நாடுகள் சபையில் சிறப்பு அந்தஸ்து கொண்ட சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகள் ஆதரவளித்து வருகின்றன. இதன் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை குறித்து வலுவானதொரு தீர்மானம் பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்பட உள்ளது. இந்த நெருக்கடியை தவிர்க்கும் வகையில், நட்பு நாடுகள் பலவற்றுடன் அரசாங்கம் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது. இருப்பினும் பயங்கரவாத தடுப்பு சட்டத்தை இரத்து செய்தல், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக் கூறல், போர் குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை கண்டறிதல் மற்றும் மீள்நிகழாமையை உறுதி செய்தல் என்பன சர்வதேசத்தின் அழுத்தங்களாக உள்ளன. இதனை பின்னணியாக கொண்டு தான் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளக பொறிமுறை ஒன்றின் கீழ் இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்படும் என்று 58 ஆவது அமர்வில் கலந்துக் கொண்டு குறிப்பிட்டிருந்தார். எனவே அரசாங்கத்தினால் ஜெனிவாவில் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஆராயும் வகையிலேயே ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்கிறார். பொறுப்புக்கூறலில் இலங்கையின் முன்னேற்றங்கள் மற்றும் தாமதங்கள் குறித்து தீவிரமாக ஆராயப்பட்டு செப்டம்பரில் எழுத்து மூல அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/216893
  21. பட மூலாதாரம்,UNIVERSAL IMAGES GROUP VIA GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் 7 ஜூன் 2025 ஏப்ரல் 2025 இல், ஒரு தனியார் அமெரிக்க நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ், சின்னஞ்சிறு ஓநாய் குட்டிகளைக் காட்டும் 17 வினாடி வீடியோவை வெளியிட்டது. கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த ஓநாய் குட்டிகளுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என்று பெயரிடப்பட்டன. ரோமானிய புராணங்களின்படி, ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் இரட்டை சகோதரர்கள், ரோம் நகரத்தை நிறுவினார்கள், இவர்கள் ஒரு பெண் ஓநாயால் காப்பாற்றப்பட்டனர் என சில கதைகள் சொல்கின்றன. இந்த இரட்டைச் சகோதரர்களின் பெயர், புதியதொரு விஞ்ஞான முயற்சியில் உருவான ஓநாய் குட்டிகளுக்கு வைக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன ஓநாய் இனமான டயர் ஓநாய் இனத்தின் டிஎன்ஏவைப் பயன்படுத்தி, மரபணு பொறியியல் நிறுவனமான கொலோசல் பயோசயின்சஸ் இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது. குளோனிங் மற்றும் மரபணு மாற்றம் தொழில்நுட்பம் மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சி வெற்றியடைந்த பிறகு, இது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது. இது அவசியமா என்ற கேள்விகளும் எழுப்பப்படுகின்றன. கொலோசல் பயோசயின்சஸின் தலைமை அறிவியல் அதிகாரி டாக்டர் பெத் ஷாபிரோ, 2015 இல் தான் எழுதிய ஒரு புத்தகத்தில் குளோனிங் பற்றி விவாதித்ததைக் குறிப்பிடுகிறார். அழிந்துபோன எந்த உயிரினத்தையும் குளோனிங் செய்ய முடியாது என அவர் அன்று தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புதிய சாதனை அவரது கருத்தை மாற்றியுள்ளதாக அவர் கூறுகிறார். 'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' என்ற தொலைக்காட்சி தொடரில் டயர் ஓநாய்கள் முக்கியக் கதாபாத்திரமாக சித்தரிக்கப்பட்டிருந்தன. டாக்டர் பெத் ஷாபிரோவின் கருத்துப்படி, டயர் ஓநாய் என்பது நரிகள் மற்றும் நாய்களுடன் தொடர்புடைய ஒரு இனமாகும். தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, டயர் ஓநாய் இனத்தின் ஆரம்பகால புதைபடிவம் சுமார் 2.5 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இந்த விலங்குகள் வட அமெரிக்காவில் காணப்பட்டன. கடந்த பனி யுகத்தில், அதாவது சுமார் பன்னிரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு டயர் ஓநாய் அழிந்துவிட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது நிறுவனத்தின் கூட்டத்தில், எந்த உயிரினத்தை மீண்டும் உருவாக்கலாம் என்பது பற்றிய விவாதம் நடந்ததை டாக்டர் பெத் ஷாபிரோ நினைவு கூர்கிறார். உயிரினத்தை மீண்டும் உருவாக்குவதில், தொழில்நுட்பம், சூழலியல் மற்றும் நெறிமுறைகள் தொடர்பான சவால்களும் விவாதிக்கப்பட்டன. ரோமியோலஸ் மற்றும் ரெமுஸ் ஆகிய இரு டயர் ஓநாய் குட்டிகள், மரபணு மாற்ற செயல்முறை தொடங்கிய 18 மாதங்களுக்குள் பிறந்துவிட்டன. ஒரு உயிரினத்தின் அனைத்து டிஎன்ஏக்களின் முழுமையான தொகுப்பே மரபணுத் தொகுப்பு ஆகும். இதற்காக, கொலோசஸ் பயோசயின்சஸுக்கு டயர் ஓநாயின் டிஎன்ஏ தேவைப்பட்டது. "72,000 ஆண்டுகள் பழமையான டயர் ஓநாயின் மண்டை ஓடு மற்றும் 13,000 ஆண்டுகள் பழமையான பல் ஒன்றும் கிடைத்தது. அதிலிருந்து டிஎன்ஏ கிடைத்தது. அதைப் பயன்படுத்தி இந்த இரு டயர் ஓநாய்களின் முழுமையான மரபணு வரிசையை உருவாக்கினோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார். இந்த மரபணு வரிசை, டயர் ஓநாய் இனத்தின் நெருங்கிய இனமான சாம்பல் ஓநாய் இனத்துடன் ஒப்பிடப்பட்டது. பண்டைய டயர் ஓநாய் இனத்துடன் ஒத்த ஒரு இனத்தை உருவாக்க இந்த மரபணுவில் சில மாற்றங்களைச் செய்ததாக டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார். இந்தப் பரிசோதனையின் இறுதிக் கட்டத்தில், டயர் ஓநாயின் டிஎன்ஏவில் சாம்பல் ஓநாயின் ஜீன்கள் இணைக்கப்பட்டு கரு உருவாக்கப்பட்டது. கருவை வளர்க்க, வளர்ப்பு நாய்கள் வாடகைத் தாய்களாக பயன்படுத்தப்பட்டன. நாய்களின் கருப்பையில் கரு செலுத்தப்பட்டது. கருவுற்ற நாய்கள் அறுவை சிகிச்சை மூலம் ஓநாய்களை பிரசவித்தன. ஆனால், ஏன் சாம்பல் ஓநாய்களை வாடகைத் தாயாக பயன்படுத்தவில்லை என்ற கேள்வி எழுகிறதா? நாய்களை, வாடகைத் தாய்களாகப் பயன்படுத்துவதில் தங்களுக்கு அதிக அனுபவமும் அறிவும் இருப்பதால் இது செய்யப்பட்டது என்று கூறும் டாக்டர் பெத் ஷாபிரோ, நாய்கள் உண்மையில் சாம்பல் ஓநாய்களின் மற்றொரு வடிவம் என்று சொல்கிறார். கடந்த காலத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் பட மூலாதாரம்,COLOSSAL BIOSCIENCES இப்போது, இந்த 'டயர் ஓநாய் குட்டிகள்' உண்மையில் என்ன என்றும் என்னவாக இல்லை என்றும் பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. "அவை டயர் ஓநாய்கள் இல்லை என்பது உண்மைதான். நாங்கள் அவற்றை டயர் ஓநாய்கள் என்று அழைக்கிறோம், ஆனால் நீங்கள் அவற்றை Proxy Direwolf அல்லது Colossal Direwolf என்றும் அழைக்கலாம். நாங்கள் அவற்றுடன் சாம்பல் ஓநாயின் பண்புகளையும் சேர்த்துள்ளோம்" என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார். குளோனிங் தொழில்நுட்பத்தில் இரண்டு ஓநாய் குட்டிகள் அக்டோபர் 2024 இல் பிறந்தன, மூன்றாவது இந்த ஆண்டு ஜனவரியில் பிறந்தது. நிறுவனம் அவற்றை காட்டுக்குள் விட விரும்பவில்லை என்றும், இந்த குட்டிகள் பாதுகாக்கப்பட்ட இடத்தில் வைத்து பராமரிக்கப்படும் என்று டாக்டர் பெத் ஷாபிரோ கூறினார். இனப்பெருக்கம் செய்வதற்கு இவற்றைப் பயன்படுத்த தனது நிறுவனம் விரும்பவில்லை என்று அவர் கூறுகிறார். இந்த விலங்குகள் பாதுகாக்கப்பட்ட சூழலில் எவ்வாறு வளர்கின்றன என்பதைப் புரிந்துகொண்டு அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதே நிறுவனத்தின் குறிக்கோள் என்றும் அவர் கூறுக்றார். இந்த செயல்முறையைப் பாதுகாப்பிற்காகப் பயன்படுத்தவே நிறுவனம் விரும்புகிறது. பல அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாக்கவும் இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம் என்று நம்பப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES உயிரினங்கள் எவ்வாறு அழிந்து போகின்றன? இங்கிலாந்தின் பெல்ஃபாஸ்டில் உள்ள குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் பரிணாம உயிரியல் பேராசிரியர் டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கூறுகையில், வாழ்க்கையின் வரலாற்றைப் பார்த்தால், 3.7 பில்லியன் ஆண்டுகளில் பூமியில் இருந்த உயிரினங்களில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை அழிந்துவிட்டன. "மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், பூமியில் இருக்கும் 48 சதவீத விலங்கு இனங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதன் பொருள், இன்று பாதுகாப்பாக இருக்கும் அந்த உயிரினங்கள் அருகிக் கொண்டே வந்தால் சில தசாப்தங்களில் அழிந்துவிடும்." அழிவு என்பது பகுதியளவு நிகழ்வாகவும் இருக்கலாம், அதாவது ஒரு இனம் உலகின் ஒரு பகுதியில் அழிந்துவிடும், ஆனால் மற்றொரு இடத்தில் உயிர்வாழலாம். இருப்பினும் அந்த இனம் எல்லா இடங்களிலும் அழிந்து போகும்போது, அந்த உயிரினம் அழிந்துவிடும். உயிரினங்கள் அழிவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ சொல்கிறார். உதாரணமாக, வேட்டையாடுதல், அல்லது அவற்றை அழிக்கும் உயிரினங்களை அவற்றின் பிரதேசத்தில் குடியேற்றுதல் மற்றும் அந்த இனங்களின் மெதுவான இனப்பெருக்க விகிதம் என ஒரு உயிரினம் அழிவதற்கான காரணங்கள் பலவாக இருக்கலாம். பூமியில் உயிரினங்கள் அழிவதற்கு வழிவகுத்த பெரிய அளவிலான ஐந்து சம்பவங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். அதாவது, வெகுஜன அழிவுக்கு (பெரும்பாலான உயிரினங்களின் அழிவுக்கு) காரணமான சம்பவங்கள் இவை. "இதற்கு முன்னர் நடந்த ஐந்து பேரழிவு நிகழ்வுகள், எரிமலை வெடிப்புகள், பூமியைத் தாக்கும் விண்கற்கள் அல்லது பிற இயற்கை காரணங்களால் ஏற்பட்டவை என்பதை நாம் அறிவோம். உதாரணமாக, மெக்சிகோவை விண்கல் தாக்கியதால் டைனோசர்கள் அழிந்தன" என்று டாக்டர் டேனியல் பின்செரா டோனோசோ கூறினார். அந்த சம்பவம் சுமார் 65 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது. இதேபோன்ற நிகழ்வுகள் 205 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் 90 சதவீத உயிரினங்களை அழித்தன. இந்த ஐந்து பேரழிவு சம்பவங்களுக்கான காரணங்கள் அறியப்படவில்லை. ஆனால் தற்போது ஆறாவது பேரழிவு நம்மை நெருங்கிவிட்டது. டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோவின் கூற்றுப்படி, பூமியில் உள்ள உயிரினங்களில் குறைந்தது 70 சதவீதமாவது அழிக்கப்படும்போதுதான் வெகுஜன அழிவு ஏற்படுகிறது. அழிந்த விலங்குகளை மீட்டல் பட மூலாதாரம்,GETTY IMAGES நாம் இன்னும் அந்த நிலையை எட்டவில்லை என்றும், ஆனால் பல்லுயிர் பெருக்கம் வேகமாகக் குறைந்து வருவதாகவும், இப்போது நாம் பெருமளவில் அழிந்து வரும் காலகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் அவர் கூறுகிறார். வெகுஜன அழிவுக்குப் பிறகு, பூமியில் வாழ்க்கை மாறும் என்றும் அவர் கூறுகிறார். ஆனால் எந்த இனங்கள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன? பல பெரிய பாலூட்டிகள் அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளன என்று டாக்டர் டேனியல் பின்சேரா டோனோசோ கருதுகிறார். அவற்றில் திமிங்கலங்களில் சில வகை மற்றும் பெரிய ஆப்பிரிக்க பாலூட்டிகள் அடங்கும். ஆனால் தவளை இனங்களுக்குத்தான் மிகப்பெரிய அச்சுறுத்தல் இருப்பதாக அவர் கூறுகிறார். காலநிலை மாற்றம், நில இழப்பு மற்றும் நோய்கள் காரணமாக, தவளைகள் போன்ற நீரிலும் நிலத்திலும் வாழும் உயிரினங்கள் பிற உயிரினங்களை விட மிக வேகமாக அழிந்து வருவதாக அவர் கூறுகிறார். அவற்றின் பல இனங்கள் அழிந்துவிட்டன, மேலும் பல அழிவின் விளிம்பில் உள்ளன. ஒரு இனத்தின் அழிவு என்பது சங்கிலித் தொடர் எதிர்வினையைத் தொடங்குகிறது. அத்துடன், அவற்றுடன் தொடர்புடைய உயிரினங்கள் பலவும் அழிந்து போகத் தொடங்குகின்றன. இதைப் பல பாகங்களைக் கொண்ட ஒரு காரின் எஞ்சினுடன் ஒப்பிடலாம். எஞ்சினில் இருந்து ஒரு சிறிய திருகு கழன்று விழுந்தால், முழு எஞ்சினுமே வேலை செய்வதை நிறுத்திவிடும். இதைப் போலவே, ஒரு உயிரினம் அருகும்போதும், அழியும்போதும் அதன் சங்கிலித் தொடர் விளைவாக பல உயிரினங்களின் இருப்பும் பாதிக்கப்படும். அழிந்துபோன உயிரினங்களின் மீட்சி மரபணு எடிட்டிங் குறித்த புத்தகங்களை எழுதிய அறிவியல் பத்திரிகையாளரான டோரில் கோர்ன்ஃபெல்ட், மரபணு திருத்தம் மூலம் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்கும் குறைந்தது பத்து திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறுகிறார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன மாமூத் யானை போன்ற விலங்குகளை மீண்டும் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன அல்லது இன்று அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளை உருவாக்கும் சில திட்டங்களும் தற்போது செயலில் உள்ளன. "மீண்டும் விலங்குகள் உருவாக்கப்படும் முயற்சிகளால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். உதாரணமாக, மாமூத், டயர் ஓநாய், டோடோ பறவை மற்றும் தற்போது அழிவின் விளிம்பில் இருக்கும் வட வெள்ளை காண்டாமிருகம் ஆகியவற்றைச் சொல்லலாம். ஆனால் அறிவியலின் உதவியுடன், ஒரு லட்சம் வெள்ளை காண்டாமிருகங்கள் உருவாக்கப்பட்டு அவை காட்டில் விடப்பட்டால், வேட்டைக்காரர்கள் ஒரே வாரத்தில் அவற்றைக் கொன்றுவிடுவார்கள். உண்மையில், இதுபோன்ற விலங்குகளின் அழிவுக்கு காரணம் வேட்டை தான். இந்தப் பிரச்னை இன்னும் தீர்க்கப்படவில்லை." அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுள்ள புரட்சிகரமான மாற்றங்கள் மூலம் அசாத்தியங்களும் சாத்தியமாகின்றன என்றாலும், வேலை எளிதானது அல்ல. பனியில் உறைந்து இருக்கும் மாமூத் ஒன்று கண்டறியப்பட்டதாகவும், ஆனால் அதன் டிஎன்ஏ கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் டோரில் கோர்ன்ஃபெல்ட் கூறுகிறார். "கடுமையாக சேதமடைந்துள்ள டிஎன்ஏவை மறுகட்டமைப்பது என்பது ஆயிரக்கணக்கான கிழிந்த பக்கங்களை ஒன்றாக இணைத்து ஒரு நாவலைப் படிக்க முயற்சிப்பது போன்றதாகும்" என்று அவர் விளக்குகிறார். 1980களில், டிஎன்ஏவை மறுகட்டமைத்து ஆய்வு செய்யக்கூடிய தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டது. 1990களில், குளோனிங் மூலம் உருவாக்கப்பட்ட டோலி என்ற செம்மறி ஆடு பிறந்தது மிகப் பெரிய சாதனையாக நிரூபிக்கப்பட்டது. அதாவது ஒரு உயிரினத்தின் சரியான நகல் உருவாக்கப்பட்டது. இதைச் செய்வதற்கு உயிருள்ள செல்கள் தேவை. 2012 ஆம் ஆண்டில், மரபணு திருத்தத்திற்கான ஒரு புதிய கருவி 'CRISPER Cas9' கண்டுபிடிக்கப்பட்டது. அதன் உதவியுடன், கொலோசல் பயோசயின்சஸ் டயர் ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது. என்னென்ன சந்தேகங்கள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் கருவியின் காரணமாக, மரபணு திருத்தம் மிகவும் துல்லியமானது, புரட்சிகரமான மாற்றங்கள் சாத்தியமானது என்று கூறும் டோரில் கோர்ன்ஃபெல்ட், 'CRISPR Cas 9' விவசாய அறிவியலிலும் பயன்படுத்தப்படுகிறது என்கிறார். இதுபோன்ற தொழில்நுட்பங்கள் மற்றும் முயற்சிகளால் அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்கும் கனவு நனவாகும். ஆனால் அழிந்துபோன விலங்குகளை மீண்டும் உருவாக்க முயற்சிப்பது ஏன்? "இதற்கு முக்கிய காரணம் அறிவியல் ஆர்வம் என்று நினைக்கிறேன். விஷயங்களைப் பரிசோதித்து உலகை நன்கு புரிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக, உலகில் பல நல்ல விஷயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, அவை நமக்கு பயனளித்துள்ளதும் கண்கூடான விஷயம் தான். ஆனால் பல நெறிமுறை கேள்விகளும் இந்த சோதனைகளுடன் தொடர்புடையவை" என்று டோரில் கோர்ன்ஃபெல்ட் கருதுகிறார். அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதால் என்னென்ன சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்? அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள லூயிஸ் & கிளார்க் கல்லூரியின் தத்துவப் பேராசிரியர் டாக்டர் ஜே. ஓடென்போ, மரபணு திருத்தம் நிச்சயமாக ஒரு முக்கியமான தொழில்நுட்பம் என்று கூறுகிறார், ஆனால் அழிவு நீக்கம் செய்வதன் மூலம், அதாவது அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதன் மூலம், நாம் கடவுளாக மாற முயற்சிக்கவில்லையா? என்ற கேள்வியை அவர் முன்வைக்கிறார். "தத்துவார்த்த ரீதியில், அதன் நன்மைகள், தீமைகளை விட அதிகமாக உள்ளதா என்பதை நாம் ஆராய வேண்டும். மேலும், அதற்கு ஆதரவாகவும் எதிராகவும் வைக்கப்படும் வாதங்களை நாம் மதிப்பீடு செய்ய வேண்டும். அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உருவாக்குவதில் நெறிமுறை சிக்கல்களும் உள்ளன. இதில் பக்க விளைவுகளும் உள்ளன" என்று அவர் கூறுகிறார். இந்த விஷயத்தில் வெளிப்படுத்தப்படும் முக்கியமான கவலை என்னவென்றால், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளுக்கு பொதுமக்களின் ஆதரவு குறையக்கூடும். "ஒரு இனம் அழிந்துவிட்டாலும், அதை மீண்டும் உருவாக்க முடியும் என்று மக்கள் நம்பத் தொடங்குவார்கள், இதுவொரு கவலை. அழிவு என்பது நிரந்தரமானது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தக் கருத்து மாறக்கூடும். எனவே அழிவு நிலையில் இருக்கும் உயிரினங்களை பாதுகாக்கும் முயற்சிகளில் அதிக கவனம் செலுத்த வேண்டிய அவசியமில்லை என்று மக்கள் உணரத் தொடங்குவார்கள்" என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார். எந்த இனத்தை மீண்டும் உலகில் அறிமுகப்படுத்துவது என்பதை தீர்மானிப்பதும் முக்கியமான கேள்வி. மாமூத் போன்ற உயிரினங்களை மீண்டும் உருவாக்கலாம் என்றால் அதற்கான காரணம், அவை பனி உருகுவதைக் குறைத்து சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் என்பதாக இருக்கும் என டாக்டர் ஜே. ஓடன்போ கூறுகிறார். ஆனால் அழிவு தொடர்பான அடுத்த கேள்வி என்னவென்றால், மீண்டும் உருவாக்கப்படும் விலங்குகளின் இனங்கள் அசலானதாக இருக்காது, மாறாக அவற்றை ஒத்தது போலவே இருக்கும். இந்த நிலையில் உயிரினங்களை மீட்டெடுப்பதன் அடிப்படை நோக்கம் நிறைவடையாது என்று டாக்டர் ஜே. ஓடென்போ நம்புகிறார். மேலும், அத்தகைய உயிரினங்களின் வாழ்க்கையும் தனிமைப்படுத்தப்பட்டதாக இருக்கலாம். மரபணு திருத்தம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த உயிரினங்கள் அசல் உயிரினங்களைப் போன்றவையா இல்லையா என்பதை அறிய மக்கள் ஆர்வமாக இருப்பார்கள் என்று டாக்டர் ஜே. ஓடன்போ கூறினார். அவை பாதுகாக்கப்பட்ட கூண்டுகளில் வைக்கப்படும். இனப்பெருக்கம் செய்ய முடியாவிட்டால், அவை மீண்டும் அழிந்துவிடும். "இந்தத் திட்டம் பாதுகாப்பிற்காக அல்ல, ஆர்வத்திற்காக மட்டுமே நடத்தப்படுகிறது என்பதையே இது குறிக்கிறது. இந்தப் பணியை மேற்கொள்வது தனியார் நிறுவனங்கள் என்பதால், பிற விஞ்ஞானிகளால் இதைப் பார்க்க முடியவில்லை." இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், கொலோசல் பயோசயின்சஸ், டயர் ஓநாய் மீளுருவாக்கம் பரிசோதனை குறித்த தனது ஆராய்ச்சியை மதிப்பாய்வுக்காக ஒரு கல்வி இதழில் சமர்ப்பித்ததாகக் கூறியது. ஆனால் அது வெளியாக பல மாதங்கள் ஆகும். சரி, உயிரினங்களை மீட்டெடுப்பது சுலபமானதா? அவை அழிந்து போன உயிரினங்களாவே இருக்குமா? இந்தக் கேள்விக்கான பதில் இல்லை என்பதாகவே இருக்கும். தற்போது, Colossal Biosciences உருவாக்கி வளர்த்துவரும் ஓநாய்கள் முழுமையான டயர் ஓநாய்கள் அல்ல. இருப்பினும், இது அழியாத்தன்மையை வளர்ப்பதற்கான முயற்சிகளில் நிச்சயமாக முக்கியமானது என்று சொல்லலாம். ஒருவேளை, இதுவும் பாதுகாப்பிற்கான ஒரு புதிய ஊடகமாக மாறக்கூடும். ஆனால் அழிந்துபோன உயிரினம் ஒன்றை மீண்டும் உருவாக்குவதற்கு கடின உழைப்பும் தொழில்நுட்பமும் மட்டுமல்ல அதிக பணமும் தேவை. அதுமட்டுமல்ல, சரியா தவறா என பல தார்மீகப் பிரச்னைகளும் இத்துடன் இணைத்து பார்க்கப்படும். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது என்றும், ஆனால் இந்த அறிவியலைப் பாதுகாப்போடு பயன்படுத்துவது உலகில் பல்லுயிர் பெருக்கத்தைப் பராமரிக்க உதவும் என்றும் டாக்டர் பெத் ஷாபிரோ கூறுகிறார். 200 பாம்புக்கடி வாங்கியவரின் உடலில் இருந்து அபூர்வ 'விஷமுறிவு மருந்து' கண்டுபிடிப்பு ராஜநாகம் தீண்டி உயிர் பிழைத்தவர் செய்த ஆய்வில் உடைபட்ட 180 ஆண்டு ரகசியம் பள்ளி வகுப்பறையில் சீறிய 13 அடி நீள ராஜநாகம் - என்ன நடந்தது? - காணொளி மனிதர்களைப் போன்றே செடிகளைப் பயன்படுத்தி முதலுதவி செய்யும் சிம்பன்சிகள் - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c39xjl8zk03o
  22. Published By: RAJEEBAN 08 JUN, 2025 | 11:17 AM அமெரிக்காவின் லொஸ்ஏஞ்சல்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை பெருமளவு குடியேற்றவாசிகள் கைதுசெய்ய்பட்டதை தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் மூண்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்துவதற்கு ஜனாதிபதி டிரம்ப் தேசிய காவல்படையினரை நடவடிக்கையில் ஈடுபடுத்தியுள்ளார். அமெரிக்காவின் சட்ட அமுலாக்கல் பிரிவினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவேளை சனிக்கிழமை பாரமவுண்ட் நகரில் மற்றுமொரு ஆர்ப்பாட்டம் வெடித்தது என லொஸ் ஏஞ்சல்ஸின் ஷெரீவ் திணைக்களம் தெரிவித்துள்ளது. பராமன்ட் பவுல்வார்டின் ஒரு பகுதியில் மதியம் 12.42 மணியளவில் பெருமளவானவர்கள் போக்குவரத்தை தடை செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 400 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள ஷெரீவ் ரொபேர்ட் லூனா, இதனை தொடர்ந்து அதிகாரிகள் அதனை சட்டவிரோதமான ஒன்றுகூடல் என அறிவித்து அனைவரையும் அமைதியாக கலைந்துபோகுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் உயிராபத்தை ஏற்படுத்தாத வெடிபொருட்களை பயன்படுத்தி அவர்களை கலைக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் காயவிபரங்கள் தெரியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். பாரமவுண்டின் வீதிகளில் பெருமளவு ஆர்ப்பாட்டக்காரர்கள் காணப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. சிலர் சட்டஅமுலாக்கல் பிரிவினரின் பேருந்துகளில் ஏற முயன்றனர், சிலர் கற்களையும் ஏனைய பொருட்களையும் சட்ட அமுலாக்கல் அதிகாரிகளின் வாகனங்களை நோக்கி எறிந்தனர் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது. பாரமவுண்டிலும் கொம்டன் நகாலும் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கார் ஒன்றின் அருகில் கூடிநின்று அதனை தீயிட்டு கொழுத்தினார்க்ள் என சிபிஎஸ் தெரிவித்துள்ளது. அதிகாரிகள் தூரத்திலிருந்து பார்த்தனர், அவர்களில் சிலர் கலவரங்களை கட்டுப்படுத்துவதற்கான உடைகளை அணிந்திருந்தனர், அந்த கார் தீப்பிடித்த பத்து நிமிடங்களிற்கு பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்து தீயை அணைத்தன என சிபிஎஸ் தெரிவித்துள்ளது. இதேவேளை குடியேற்றவாசிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையத்திற்கு வெளியே மீண்டும் சிறிய கூட்டமொன்று கூடியது, 8.30 மணிவரை அவர்கள் அங்கேயே நின்றனர், பின்னர் திடீரென அங்கு தோன்றிய சட்டஅமுலாக்கல் அதிகாரிகள் கண்ணீர் புகை குண்டுபிரயோகத்தில் ஈடுபட்டனர் என சிபிஎஸ் நியுஸ் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/216911
  23. நிதி மோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு : ஜனாதிபதி, சிறைச்சாலை திணைக்களத்தின் முரண்பட்ட அறிக்கை; உண்மை எதுவென தெளிவுபடுத்த வேண்டும் என்கிறார் நிசாம் காரியப்பர் 07 JUN, 2025 | 10:28 PM நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டதாக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப" இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது. ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகின்றன. மன்னிப்பின் சட்டப்பூர்வ நிலை பற்றி தெளிவாக தகவல் இல்லாத சூழ்நிலையில், மக்கள் யாரை நம்புவது? சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. குற்றங்களை விட, அவற்றை மறைத்தல் மிகப்பெரிய சமூகத் தீமையாகும். எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/216886
  24. வாங்கோ வாங்கோ. 'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது 'தக் லைப்' ஆல்பத்தில் சின்மயி பா...'தக் லைப்' ஆல்பத்தில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் இணைப்பு'தக் லைப்' இசை வெளியீட்டு விழாவில் சின்மயி பாடிய 'முத்தமழை' பாடல் ரசிகர்களை வெகுவா கவர்ந்துள்ளது.சின்மயிவுடன் “முத்தமழை” பாடலை பாடிய இந்த பாடகி யார் தெரியுமா? பலரும் தேடிய தகவல் முத்த மழை பாடலை சின்மயி பாடிய பொழுது அவருடன் இணைந்து பாடிய பிண்ணனி பாடகி பற்றிய விவரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முத்த மழை பாடல் 38 ஆண்டுகளுக்கு பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் தக் லைஃப். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவர் இசையில் வெளியான பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. அதிலும் குறிப்பாக தக் லைஃப் திரைப்படத்தில் வரும் “முத்த மழை” பாடலை தமிழில் பாடகர் தீ பாடியிருந்தார். அந்த பாடலை அண்மையில் நடைபெற்ற “தக் லைஃப்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாடகி சின்மயி பாடி ரசிகர்களை தன்வசப்படுத்தியிருந்தார். சின்மயி குரலில் கேட்கும் பொழுது முத்த மழை பாடல் முற்றிலும் வேறுவிதமாக மாறியுள்ளது. இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவில் “முத்த மழை” பாடலை சின்மயி பாடிக்கொண்டிருந்த பொழுது அவருக்கு கோரஸ் கொடுக்கும் குழு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அமீனா ரஃபீக் யார்? அந்தக் குழுவில் பாடிய பாடகர்கள் யார் என ரசிகர்கள் இணையத்தில் தேடி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அமீனா ரஃபீக். பற்றிய பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. கோரஸ் குழுவில் நடுவில் கருப்ப நிற ஆடை அணிந்து கொண்டு பாடிய அமீனா ரஃபீக் பின்னணி பாடகி. இவர், தனியிசை கலைஞராகவும் நிறைய ஆல்பம் பாடல்களில் பணியாற்றியுள்ளார். அத்துடன் ஏ.ஆர்.ரஹ்மானின் உறவினர் என்பதால் ரஹ்மானின் பாடல்களை கேட்டு வளர்ந்தவர் மட்டுமல்லாமல் அவருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான “மைதான்” திரைப்படத்தில்வரும், என் தலைவன் சேர்ந்தான் என்னை.. என்ற பாடலையும் பாடியுள்ளார். அதே வேளையில், “காதலிக்க நேரமில்லை” படத்திலும் பாடல்கள் பாடியிருக்கிறார். அமீனா ரஃபீக் தனி யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். அதில் தானே பாடிய தனியிசை பாடல் ஆல்பங்களையும் பதிவிட்டு ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://manithan.com/article/mutha-mazhai-song-singer-amina-rafiq-details-1749191377

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.