Everything posted by ஏராளன்
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
சுனாமி அனர்த்தத்தின் 20ஆவது ஆண்டு நினைவேந்தல் Published By: VISHNU 26 DEC, 2024 | 07:21 AM இலங்கை வரலாற்றில் மாறா வடுவாக பேரழிவை ஏற்படுத்திய சுனாமி அனர்த்தத்தை எதிர்கொண்டு நாளை 20 வருடங்கள் பூர்த்தியாகின்ற நிலையில் நாடாளவிய ரீதியில் விசேட நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுனாமி அனர்த்தத்தினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) காலை 9.25 முதல் 9.27 வரை நாடு முழுவதும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துமாறு மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுனாமி அனர்த்தத்தை நினைவுகூரும் வகையில், டிசம்பர் 26 ஆம் திகதி தேசிய பாதுகாப்பு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்படுகின்றன. சுனாமி அனர்த்தத்தில் சேதமடைந்த 50 ஆம் இலக்க என்ஜினுடனான தொடருந்து ஒன்றும் வழமைபோல பெரேலியவை சென்றடையவுள்ளதோடு ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் குழுவொன்றும் அந்த தொடரூந்தில் பயணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி சுமாத்ரா தீவுக்கு அருகில் 9.1 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சுனாமி பேரலை காரணமாக, இலங்கையின் 14 கடலோர மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதுடன் சுமார் 35,000 பேர் பலியானமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202159
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
மியன்மார் அகதிகள் கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டமைக்காக காரணம் என்ன?; வெளியானது அறிவிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் கப்பல் இறங்கு துறை ஒன்று இல்லாத நிலையால்தான் மியன்மார் அகதிகள் திருகோணமலை கொண்டுசெல்லப்பட்டு மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக முள்ளியவாய்க்கால் மேற்கு வளர்மதி கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவர் ஆறுமுகம் சிவனேஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத் தீவு ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” துறைமுகம் ஒன்று இருந்திருந்தால் மியன்மார் அகதிகள் முள்ளிவாய்க்காலில் இருந்து திருகோணமலை சென்று மீண்டும் கேப்பாபிலவிற்கு அழைத்துச் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் சரியான இடத்தினை தெரிவுசெய்து இறங்குதுறை ஒன்றினை அமைக்கவேண்டும் என ஐனாதிபதி அவர்களை வேண்டி நிக்கின்றேன். மியன்மார் அகதிகள் படகு முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரைதட்டியபோது முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கம் அதிகளவான உதவிகளை வழங்கியிருந்தது. அத்துடன் இராணுவத்தினரும் கடற்படையினரும் உலர் உணவுகளை வழங்கியிருந்தனர். இதனையடுத்து குறித்த மக்களை காப்பற்றி அவர்களை திருகோணமலைக்குக் கொண்டுசென்று பின்னர் அவர்களை மீண்டும் முல்லைத்தீவு கேப்பாபிலவு விமானப்படைத்தளத்திற்கு அழைத்துச் சென்றுனர். அகதிகளாக வந்த அந்தமக்களை நல்லமுறையில் அரசாங்கம் கவனிக்கும் என்று நாங்கள் நம்பி இருக்கின்றோம்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314134
-
2024 இல் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் 554 இந்திய மீனவர்கள் கைது; 72படகுகள் பறிமுதல் எதிர்காலத்திலும் தீவிர நடவடிக்கை தொடருமென கடற்படைப்பேச்சாளர் அறிவிப்பு
Published By: DIGITAL DESK 7 25 DEC, 2024 | 11:32 PM ஆர்.ராம் 2024 ஆம் ஆண்டில் இலங்கைக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் 554 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு 72 மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் கயான் விக்கிரமசூரிய தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை தடுப்பதற்காக நாம் விசேட நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையில் இந்த ஆண்டில் மேற்கொண்ட நடவடிக்கைகளின்போது 554 பேரை எல்லை தாண்டிய குற்றத்துக்காக கைது செய்து சட்ட நடவடிக்கைகளுக்காக கையளித்துள்ளோம். அதே போன்று, எல்லை தாண்டிய மற்றும் சட்டவிரோதமான மீன்பிடி முறைமைகளைக் கொண்ட 72 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளோம். இலங்கையின் கடற்பரப்பினையும், வளங்களையும், மீனவர்களையும் பாதுகாக்க வேண்டிய பாரிய பொறுப்பு எமக்குள்ளது. அந்த அடிப்படையில் தான் நாம் அத்துமீறி எல்லை தாண்டுபவர்கள் மீது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். விசேடமாக, அத்துமீறும் இந்திய மீனவர்கள் குறித்து நாம் உயிர்ச் சேதங்கள் இடம்பெறாத வகையில் எமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எனினும், எல்லை தாண்டுபவர்கள் மீது தொடர்ந்தும் நாம் தீவிரமான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். குறிப்பாக கைது நடவடிக்கைகள், படகுகளை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட செயற்பாடுகளை முன்னெடுப்பதோடு உள்நாட்டு சட்ட நடவடிக்கைகளுக்காக அவர்களை ஒப்படைப்போம். ஆகவே, இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை கைவிடுவதோடு அத்துமீறி இலங்கை கடற்பரப்பு எல்லைக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறும் கோரிக்கை விடுகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/202149
-
கீழ்வெண்மணி: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட விவசாய கூலி தொழிலாளர்கள் - 1968, டிசம்பர் 25 அன்று இரவு நடந்தது என்ன?
பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, கீழ்வெண்மணி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் நடந்த மிகப் பெரிய வன்முறைச் சம்பவங்களில் ஒன்று கீழ்வெண்மணி படுகொலை. 1968ஆம் ஆண்டில் நடந்த சம்பவத்தில் 40க்கும் மேற்பட்ட பட்டியலினத்தோர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்களும் குழந்தைகளும். இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? 1968ஆம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இரவு. அப்போதைய கீழ் தஞ்சை மாவட்டத்தின் நாகப்பட்டினத்தில் இருந்த கீழ் வெண்மணி கிராமத்தில் பட்டியலினத்தவருக்கான நடுத்தெருவில் வசித்துவந்த ராமையன், தன் வீட்டிற்கு முன்பாக, சிலருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது கிழக்கே இருந்த இரிஞ்சூர் பக்கமிருந்து பலர் கூச்சலிட்டபடி வரும் சத்தம் கேட்டது. அதே நேரத்தில், விவசாயிகள் வசிக்கும் தெருப் பக்கமிருந்தும் சிலர் ஓடிவரும் சத்தம் கேட்டது. இதனால், அந்தத் தெருவில் வசித்துவந்த பட்டியலின மக்கள் அச்சத்தில் அங்குமிங்கும் ஓட, அங்கு வந்த குழுவினர் விரைவிலேயே தாக்க ஆரம்பித்தனர். இந்தியாவை அதிரவைத்த வன்முறை பட்டியலினத்தவரில் சிலர் தப்பிப்பதற்காக ராமையாவின் குடிசைக்குள் சென்று ஒளிந்துகொண்டனர். கலவரக் கும்பல் அந்த வீட்டைப் பூட்டித் தீ வைத்தது. இதில், அந்தக் குடிசைக்குள் சிக்கிக்கொண்ட பட்டியலினத்தைச் சேர்ந்த 44 பேர் உயிரோடு எரிந்து சாம்பலானார்கள். இவர்களில் 23 பேருக்கு 16 வயது அல்லது 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள். எனினும், நீதிமன்ற ஆவணங்கள் 42 பேர் எரிக்கப்பட்டதாக குறிப்பிடுகின்றன. தமிழ்நாட்டை மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிரவைத்தது இந்த நிகழ்வு. விவசாயத் தொழிலாளர்கள் மீது நிலவுடைமையாளர்கள் நடத்திய இந்தக் கொடூரத் தாக்குதல் அந்தப் பகுதியில் நீண்ட காலமாக நடந்துவந்த ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. மைதிலி சிவராமன்: வெண்மணி முதல் வாச்சாத்தி வரை நீதிக்காக பாடுபட்டவர் திராவிட பிரிவினைவாதமும் திராவிட ஜனசங்கமும் நக்சல்பாரி இயக்கம் 50: புதுயுகத்துக்குப் பொருந்துமா? தலித்துகளுக்கு நன்மை செய்தனவா திராவிட ஆட்சிகள்? கூலி உயர்வு கோரிக்கை தஞ்சாவூர் மாவட்டம் மிகச் செழிப்பான ஒரு மாவட்டம். ஆனால், அந்த காலகட்டத்தில் அம்மாவட்டத்தின் நிலவுடைமை பெரும்பாலும் உயர் சாதியினரிடமும் மடங்களிடமுமே இருந்தது. ஆகவே, இயல்பாகவே இம்மாவட்டத்தில் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டுவந்த நிலையில், அந்தப் பகுதியின் தொழிலாளர்களை ஒன்று திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாய தொழிலாளர் சங்கங்களை உருவாக்க ஆரம்பித்தனர். இந்தச் சங்கத்தின் மூலம், பல்வேறு கோரிக்கைகளை குறிப்பாக கூலி உயர்வு கோரிக்கைகளை முன்வைத்துவந்தனர். இந்த விவசாய சங்கத்தின் நாகப்பட்டின பிரிவின் தலைவராக முத்துசாமி என்பவர் இருந்துவந்தார். இந்தத் தொழிலாளர் சங்கம், அந்தப் பகுதியின் நிலவுடைமையாளர்களுக்கு சிக்கலாக உருவெடுத்த நிலையில், அவர்கள் தங்கள் பாதுகாப்புக்காக 1966வாக்கில் நாகப்பட்டினம் தாலுகா நெல் உற்பத்தியாளர் சங்கம் என்ற ஒரு சங்கத்தை உருவாக்கினர். இதன் தலைவராக இரிஞ்சூரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ண நாயுடு என்பவர் இருந்துவந்தார். தொழிலாளர்கள் தரப்புக்கும் நிலவுடமையாளர் தரப்புக்கும் இடையில் மோதல் முற்றும் நிலையில் அரசுத் தரப்பு, இந்த இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்துவது வழக்கமாக ஆரம்பித்தது. சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?25 டிசம்பர் 2024 மோதியுடன் மோகன் பாகவத் மறைமுக யுத்தமா? கோவில் - மசூதி பற்றிய பாகவத் பேச்சுக்கு துறவிகள் எதிர்ப்பு25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, கீழ்வெண்மணி நினைவுச் சின்னத்தில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு தரப்பினர் டிச. 25 அன்று மரியாதை செலுத்தி வருகின்றனர் இந்நிலையில், 1967ஆம் ஆண்டின் மத்தியில் தொழிலாளர்கள், நிலவுடைமையாளர்கள், அரசுத் தரப்பு ஆகியோரை உள்ளடக்கி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் ரங்கபாஷ்யம் ஒரு பேச்சுவார்த்தையை நடத்தினார். பேச்சுவார்த்தையின் முடிவில் கடந்த ஆண்டு, ஒரு கலம் நெல் அறுத்தால் கொடுக்கப்படும் கூலியைவிட அரைப்படி நெல் கூடுதலாக அளிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது. உள்ளூர் தொழிலாளர்கள் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டுவிட்டால் மட்டும், வெளியூரில் இருந்து தொழிலாளர்களை அழைத்துவரலாம் என்றும் முடிவுசெய்யப்பட்டது. 1968ஆம் ஆண்டு அக்டோபர் - நவம்பர் காலத்தில் குறுவை அறுவடையின்போது, ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதைவிட தொழிலாளர்கள் கூடுதலாக கூலி கேட்டதாக நிலவுடைமையாளர்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, நெல் உற்பத்தியாளர்கள் சங்கம், நெல்லை அறுவடை செய்ய வெளியூரிலிருந்து தொழிலாளர்களை வரவழைத்தனர். அக்கம்பக்கத்திலிருந்த ஊர்களிலும் வேலைகள் கிடைக்கவில்லை. டிசம்பர் 12ஆம் தேதி தேவூர் என்ற இடத்தில் நடந்த தொழிலாளர்களின் கூட்டத்தில், வெளியூரிலிருந்து ஆட்கள் வந்தால் தடுப்பது என தொழிலாளர்கள் முடிவுசெய்தனர். இந்நிலையில், கோவிந்தராஜ் என்பவரது நிலத்தில் வேலை செய்ய இருக்கை என்ற ஊரைச் சேர்ந்த 18 தொழிலாளர்களை நெல் உற்பத்தியாளர்களுக்கு நெருக்கமான பக்கிரிசாமி என்பவர் அழைத்துவந்தார். ஒரு கலத்திற்கு நான்கரைப்படி நெல் என அவர்களுக்கு கூலி பேசப்பட்டிருந்தது. டிசம்பர் 25ஆம் தேதியன்று இவர்கள் வேலை முடிந்து மாலை ஏழரை மணியளவில் கீழ் வெண்மணியின் கிழக்கு - மேற்கு தெரு அருகில் வந்தபோது, அவர்களை அந்த ஊரின் தொழிலாளர்கள் வழிமறித்ததாகவும் வெளியூர் தொழிலாளர்கள் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில், பக்கிரிசாமி என்பவர் வெட்டிக் கொல்லப்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்கள் கூறுகின்றன. தப்பிச்சென்ற வெளியூர் தொழிலாளர்கள் மிராசுதார்களிடம் சென்று நடந்த சம்பவத்தைத் தெரிவித்தனர். இதையடுத்து, மிராசுதாரான பக்கிரிசாமி பொறையார் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில், கீழ்வேளூர் காவல் நிலையத்தில் ஒரு முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 கஜகஸ்தான்: விமானம் பறவை மோதியதால் விபத்தில் சிக்கியதா? பயணிகள் என்ன ஆனார்கள்?25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,CPIM/FACEBOOK படக்குறிப்பு, கீழ்வெண்மணியில் 40க்கும் மேற்பட்டோர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் படம் 'ஊரே எரிந்துகொண்டிருந்தது' இதற்குப் பிறகு பெரும் எண்ணிக்கையில் திரண்டுவந்த மிராசுதார் தரப்பு ஆட்கள், கீழ்வெண்மணிக்குள் புகுந்தனர். வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டன. கண்ணில் பட்டவர்கள் தாக்கப்பட்டனர். பலர் சுடப்பட்டனர். இந்தத் தாக்குதலில் தப்ப ராமையா என்பவரின் வீட்டுக்குள் புகுந்தவர்கள் தீ வைத்து எரிக்கப்பட்டனர். நீதிமன்ற ஆவணங்களின்படி 42 பேர் கொல்லப்பட்டதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஆனால், இடதுசாரி இயக்கங்களின் சார்பில் எழுதப்பட்ட நூல்கள், 44 பேர் கொல்லப்பட்டதாகக் கூறுகின்றன. அதாவது, ராமையாவின் வீட்டிற்குள் மொத்தம் 48 பேர் புகுந்தனர். தீ எரிய ஆரம்பித்தவுடன் இவர்களில் ஆறு பேர் தப்பினர். அந்த ஆறு பேரில் இருவர் மீண்டும் தாக்கப்பட்டு அந்த வீட்டுக்குள்ளேயே போடப்பட்டனர். முடிவில் 44 பேர் இந்த வீட்டிலேயே எரிந்து சாம்பலாயினர் என்பது அவர்கள் தரப்பு தகவலாக இருக்கிறது. இந்த 25ஆம் தேதி நிகழ்வில், மொத்தம் 22 வீடுகள் எரிக்கப்பட்டிருந்தன. இது தொடர்பாக பட்டியலினத்தைச் சேர்ந்த முனியன் என்பவர் அளித்த புகாரில், கீழ் வேளூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்பட்டது. அங்கிருந்து காவல்துறை கீழ்வெண்மணிக்கு வந்து பார்த்தபோதும் அந்த ஊரே எரிந்துகொண்டிருந்தது. புகைக்கு நடுவில், ஒரு தென்னை மரத்தின் கீழ் பக்கிரிசாமி கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தது தெரிந்தது. 'மக்கள் கொல்லப்பட்டதை கவனிக்காத காவல்துறை' பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, மக்கள் எரிக்கப்பட்டிருந்ததை காவல்துறை முதலில் கவனிக்கவில்லை என, 'காஸ்ட் பிரைட்' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் மனோஜ் மிட்டா இதையடுத்து பக்கிரிசாமி கொலை தொடர்பாக ஒரு வழக்கு பதிவுசெய்யப்பட்டது. ஆனால், அந்த இரவில் 42 பேர் ஒரே வீட்டில் எரிக்கப்பட்டு கொல்லப்பட்டதை காவல்துறையினர் கவனிக்கவில்லை என தனது 'காஸ்ட் பிரைட்' (Caste Pride) நூலில் மனோஜ் மிட்டா குறிப்பிடுகிறார். அடுத்த நாள் அதிகாலை ஆறரை மணியளவில்தான் அந்த வீட்டில் சடலங்கள் குவிந்து கிடப்பது கண்டறியப்பட்டு, தீயணைப்பு வாகனங்கள் கோரப்பட்டன. காலை பத்து மணியளவில்தான் 42 பேரின் உடல்களும் மீட்கப்பட்டன. இதில் புதிதாக வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை. முனியன் அளித்தப் புகாரிலேயே இந்த விவகாரமும் சேர்க்கப்பட்டது. 12 மணி நேரத்திற்குப் பிறகு குற்றம் சாட்டப்பட்ட முதல் நபரான கோபாலகிருஷ்ண நாயுடு கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு ஜனவரி 1ஆம் தேதி உள்ளூர் காவல்துறையிடமிருந்து மாற்றப்பட்டு, சென்னையில் இருந்த மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. தண்டனையை ரத்து செய்த உயர்நீதிமன்றம் அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே பல ஆண்டுகள் தடை இருந்தது ஏன் தெரியுமா?25 டிசம்பர் 2024 இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 குறைவான தண்டனை ஆனால், இந்த நிகழ்வு தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தின. இந்த வழக்குகளில் 1969 மார்ச் 26ஆம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. நாகப்பட்டினத்தில் இருந்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி சி.எம். குப்பண்ணன் இரு வழக்குகளையும் விசாரித்தார். ஒன்று, பட்டியலினத்தினருக்கு எதிராக கீழ்வேளூர் காவல் நிலையம் பதிவுசெய்த வழக்கு. இரண்டாவது, மத்திய குற்றப் பிரிவு மிராசுதார்களுக்கு எதிராக நடத்திய வழக்கு. 42 பேர் கொல்லப்பட்ட வழக்கில் ராமையன் சாட்சியாகவும் பக்கிரிசாமி பிள்ளை கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 22 பேரில் ஒருவராக ராமையன் நிறுத்தப்பட்டார். விவசாயத் தொழிலாளர் சங்கத் தலைவர் முத்துசாமி, பக்கிரிசாமி பிள்ளை கொலை வழக்கிலும் கோபாலகிருஷ்ண நாயுடு 42 பேர் கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றம்சாட்டப்பட்டவர்களாக நிறுத்தப்பட்டனர். 1970 நவம்பர் 30ஆம் தேதி இந்த இரு வழக்குகளிலும் தீர்ப்பு வழங்கப்பட்டது. பக்கிரிசாமி பிள்ளை கொல்லப்பட்ட வழக்கில் 8 விவசாயத் தொழிலாளர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. கோபால் என்பவர் முதன்மை குற்றவாளியாகவும் ராமையன் அதைவிடக் குறைந்த குற்றங்களின் கீழும் தண்டிக்கப்பட்டனர். ஆனால், 42 பேர் எரிக்கப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 23 பேரில் யாருமே கொலைக் குற்றத்திற்காக தண்டிக்கப்படவில்லை. எட்டு பேர் மட்டும் சிறு குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டனர். அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனையே வழங்கப்பட்டது. 42 பேரை எரித்துக் கொன்றார்கள் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என நீதிபதி குறிப்பிட்டார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து மிராசுதார்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அவர்களை கொலைக் குற்றச்சாட்டிலிருந்து விடுவித்ததை எதிர்த்து அரசும் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கே. வெங்கடராமன், எஸ். மகராஜன் ஆகியோர் விசாரித்தனர். 1973 ஏப்ரல் 6ஆம் தேதி இதில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில் மிராசுதார்களின் முறையீடு ஏற்கப்பட்டு, அரசுத் தரப்பின் முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது. அதாவது, கொலை அல்லாத வேறு குற்றங்களுக்காக நாகை நீதிமன்றம் அளித்த தண்டனையையும்கூட உயர்நீதிமன்றம் ரத்துசெய்தது. பிரதமராக இருந்த சரண்சிங் அவமதித்த ஆறே மாதங்களில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானது எப்படி?25 டிசம்பர் 2024 இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?25 டிசம்பர் 2024 தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது என்ன? அந்தத் தீர்ப்பில் இடம்பெற்றிருந்த, "இந்த வழக்கில் சிக்கவைக்கப்பட்டுள்ள 23 குற்றவாளிகளும் மிராசுதார்களாக இருப்பதும் திகைக்க வைக்கும் விஷயமாக உள்ளது. இவர்களில் பெரும்பாலோர் பெருமளவு நிலத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ள பணக்காரர்கள், முதலாவது குற்றவாளி கார் ஒன்றை சொந்தமாக வைத்துள்ளார். இத்தகைய மிராசுதார்களா இடது கம்யூனிஸ்ட் விவசாயிகளை பழிவாங்கும் அளவுக்கு பலவீனமான எண்ணம் கொண்டிருப்பார்கள்? இவர்கள் தாங்களே சம்பவ இடத்திற்கு நடந்துவந்து பணியாளர்கள் உதவி ஏதும் இல்லாமல் வீடுகளுக்குத் தீ வைத்திருப்பார்கள் என்பதை நம்புவது சிரமமாக உள்ளது" என்ற வாசகங்கள் தொழிலாளர் தரப்பை அதிரவைத்தன. ஆனால், பக்கிரிசாமி பிள்ளை கொலை தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் விவசாயத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் உறுதிசெய்யப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES 1975ஆம் ஆண்டின் இறுதியில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்தது. ஆனால், இந்த வழக்கு நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது. முடிவில், இதற்கிடையில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் 4 பேர் இறந்து போயிருந்தனர். 1990ல் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் எஸ். ரங்கநாதன், கே. ராமசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. 1990ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பையே உச்ச நீதிமன்றமும் உறுதிசெய்தது. இதற்கிடையில், 1980களில் கீழ்வெண்மணி வழக்கில் முதன்மைக் குற்றவாளியாக இருந்த கோபாலகிருஷ்ண நாயுடு, சிலரால் வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மேல் முறையீட்டில் விடுதலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்திற்கு பிறகு, தமிழ்நாடு அரசு 1969ஆம் ஆண்டில், விவசாயிகளுக்கு நியாயமான கூலியை உறுதிசெய்ய 'தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர்கள் நியாய ஊதியச் சட்டம் - 1969' என்ற சட்டத்தை இயற்றியது. ஆனால், இந்தப் படுகொலை தொழிலாளர் - மிராசுதார் இடையிலான மோதலால் மட்டும் நடந்ததா அல்லது இது சாதி ரீதியான ஒடுக்குமுறையா என்பது குறித்த விவாதங்களும் இந்த வழக்கில் காவல் துறையும் நீதிமன்றமும் நடந்துகொண்ட விதம் குறித்த சர்ச்சைகளும் இன்னமும் நீடிக்கின்றன. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/c6236rvz6gyo
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
அண்ணா பல்கலை. வளாகத்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை: பிரியாணி கடை உரிமையாளர் சிக்கியது எப்படி? 26 DEC, 2024 | 09:03 AM சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடைபாதையில் பிரியாணி கடை நடத்தும் இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள கிண்டி பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு பொறியியல் பயிலும் மாணவி ஒருவர் அங்கு உள்ள விடுதியில் தங்கி உள்ளார். இவருக்கும், 3-ம் ஆண்டு மாணவர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக நட்பு இருந்து வந்துள்ளது. கடந்த 23-ம் தேதி இரவு 8 மணி அளவில் இவர்கள் இருவரும் வழக்கம்போல பல்கலைக்கழக வளாகத்தில் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளனர். கட்டுமான பணி நடந்து வரும் இடத்தின் பின்னால் மறைவான இடத்தில் பேசிக்கொண்டு இருந்துள்ளனர். அப்போது, இளைஞர் ஒருவர் மறைவான இடத்தில் இருந்து அவர்களை தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அங்கு வந்த அவர், அந்த வீடியோவை காண்பித்து, சமூகவலைதளங்களில் பரப்பி விடுவதாக கூறி அவர்களை மிரட்டியுள்ளார். பின்னர், மாணவரை தாக்கி விரட்டியுள்ளார். பிறகு, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, தப்பியுள்ளார். இதுதொடர்பாக விடுதி அறையில் உள்ள தோழிகள் மற்றும் பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளார். வெளியூரில் இருந்த பெற்றோர் உடனடியாக சென்னைக்கு விரைந்தனர். நடந்த சம்பவம் குறித்து கோட்டூர்புரம் காவல் உதவி ஆணையர் பாரதிராஜாவிடம் 24-ம் தேதி புகார் கொடுத்துள்ளனர். இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அருணுக்கு தெரிவிக்கப்பட்டது. அவரது உத்தரவின்பேரில், தென் சென்னை காவல் கூடுதல் ஆணையர் கண்ணன் நேரடி மேற்பார்வையில், மயிலாப்பூர் துணை ஆணையர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தீவிர புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக ஆர்.ஏ.புரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பத்மாவதி வழக்கு பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வளாகம் முழுவதும் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் தனிப்படை போலீஸார் துப்புதுலக்கினர். விடுதி மாணவர்கள், கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ளவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், மாணவியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவர், கோட்டூர் பகுதி நடைபாதையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இரவு நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் அடிக்கடி அத்துமீறி நுழைந்துள்ளார். மாணவ, மாணவிகளை மிரட்டி இதுபோல பலமுறை தவறான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது. மாமல்லபுரத்திலும் ஒரு வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டு, 2014-ல் வெளியே வந்துள்ளார். இவர் மீது 13 வழக்குகள் உள்ளன. அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. https://www.virakesari.lk/article/202175
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் நகரில் உள்ள எம்சிஜி மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பார்டர்-கவாஸ்கர் கோப்பையில் 5 போட்டிகளில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. காபா டெஸ்ட் மழையால் டிரா ஆனதால், அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை தூண்டியுள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் நடக்கும் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியைக் காண எம்ஜிசி மைதானத்தில் 90 ஆயிரம் ரசிகர்கள் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளைய டெஸ்ட் போட்டியில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு ரசிகர்களின் ஆதரவு பெரிய தூண்டுகோலாக அமையும். அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள் ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன மதுரை கிரிக்கெட் வீராங்கனை - 16 வயதில் சாதித்தது எப்படி? பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது? சிஎஸ்கே அணியில் அஸ்வின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? இந்திய அணியின் கவலைகள் இந்திய அணியைப் பொருத்தவரை பாக்ஸிங் டே டெஸ்ட் மிகவும் முக்கியமானது. இந்த டெஸ்டில் வெற்றி பெற்றால் மட்டுமே பார்டர் கவாஸ்கர் கோப்பையைத் தக்கவைக்க முடியும். ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றால், 10 ஆண்டுகளுக்குப் பின் இந்த தொடரை கைப்பற்றும் முனைப்பில் முன்னேறும். அதுமட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டிக்கு முன்னேறவும் இந்த டெஸ்டில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு முக்கியமானது. இந்திய அணியைப் பொருத்தவரை, அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளும் நடக்கவுள்ள மெல்போர்ன், சிட்னி ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு ஒரளவு ஒத்துழைக்கும் நிலையில் அஸ்வின் இல்லாதது உண்மையில் பலவீனம்தான். அஸ்வின் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்பும் வகையில் ஒரு வீரரை இந்திய அணிக்குள் கொண்டு வர வேண்டிய அவசியம் உள்ளது. கடந்த 3 டெஸ்ட்களிலும் டாப்ஆர்டர் பேட்டிங் கவலைக்குரியதாக காட்சி தந்தது. ஜெய்ஸ்வால் கடந்த 2 டெஸ்ட்களிலும் பெரிதாக ஜொலிக்கவில்லை. டாப்ஆர்டரில் வழக்கமாக பேட் செய்யும் ரோஹித் சர்மாவை மீண்டும் தொடக்க வீரராக களமிறக்கி ராகுலை மூன்றாவது வீரராக இறக்கவும் இந்த டெஸ்டில் முயற்சிக்கலாம். சுப்மான் கில் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் பெரிதாக ரன் ஏதும் சேர்க்கவில்லை. அவருக்குப் பதிலாக சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் தனுஷ் கோட்டியான் சேர்க்கப்படலாம். மெல்போர்ன் ஆடுகளம் கடைசி இரு நாட்களில் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறக்கூடும் என்பதால் தனுஷ் கோட்டியானுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் அல்லது ஜடேஜாவுடன் சேர்ந்து வாஷிங்டன் சுந்தருக்கு அணியில் இடம் கிடைக்கலாம் எனத் தெரிகிறது அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே ஒரு காலத்தில் தடை இருந்தது ஏன் தெரியுமா?4 மணி நேரங்களுக்கு முன்னர் சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தனுஷ் கோட்டியான் கோலி, ரோஹித் சிறப்பாக ஆடுவார்களா? நிதிஷ் குமார் ரெட்டி கடந்த 3 டெஸ்ட்களிலுமே பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். சுப்மான் கில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டால் நிதிஷ் ரெட்டி இடம் உறுதியாகும். மற்றவகையில் இந்திய அணியில் பெரிதாக மாற்றம் இருக்காது எனத் தெரிகிறது. மெல்போர்ன் ஆடுகளத்தில் சதம் அடித்த வகையில் விராட் கோலி மட்டுமே அனுபவமானவர். அவரிடம் இருந்து சிறப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், கோலி ஒரு சதம் தவிர இந்தத் தொடரில் இதுவரை பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. ரோஹித் சர்மா கடந்த 2 டெஸ்ட்களிலும் சரியாக பேட் செய்யவில்லை. இதனால் 4வது டெஸ்டில் அவர் மீண்டும் தொடக்க வீரராக களமிறங்கக் கூடும். இவர்கள் தவிர ரிஷப் பந்த், ராகுல் ஆகியோரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய நிலையில் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக மெல்போர்னில் தோற்காமல் பயணித்துவரும் இந்திய அணி அதைத் தக்கவைக்குமா என்பது பெரிய எதிர்பார்ப்பாகும். பிரதமராக இருந்த சரண்சிங் அவமதித்த ஆறே மாதங்களில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானது எப்படி?6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசி இரு நாட்கள் ஆடுகளத்தில் வரக்கூடிய விரிசல்கள், மெல்போர்னில் நிலவும் கடும் வெயில் ஆகியவை ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தக்கூடும் எனத் தெரிகிறது. ஆஸ்திரேலிய அணி எப்படி? ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர் மெக்ஸ்வீனிக்குப் பதிலாக கோன்டாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். இது தவிர லாபுஷேன், உஸ்மான் கவாஜா இருவருமே கடந்த டெஸ்ட்களில் பெரிதாக ரன் சேர்க்காததும் அந்த அணிக்கு கவலையாக உள்ளது. இந்திய அணியைப் போன்று ஆஸ்திரேலிய அணியிலும் டாப்ஆர்டர் தலைவலியாகவே இருப்பதால், மாற்றங்கள் இருக்கும் எனத் தெரிகிறது. நடு வரிசையில் ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட் நம்பிக்கையளிக்கிறார்கள். இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் முதுகெலும்பாக டிராவிஸ் ஹெட் இருந்து வருகிறார். இவரை மட்டும் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவில் ஆட்டமிழக்க செய்தால் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசை நிலைகுலைந்துவிடும். ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் அடுத்த இரு டெஸ்ட்களிலும் விலகியது அந்த அணிக்கு பின்னடைவுதான். ஹேசல்வுட்டுக்கு பதிலாக போலந்த் அல்லது ஹெய் ரிச்சர்ட்ஸன் ஆகிய இருவரில் ஒருவர் அணிக்குள் வரலாம். சுழற்பந்துவீச்சில் நேதன் லயன் தவிர வேறு எந்த வீரரையும் ஆஸ்திரேலிய அணி தேர்வு செய்யாது என்றே தெரிகிறது. கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக ஹெட்டை பயன்படுத்தலாம். ஒப்பீட்டளவில், ஆஸ்திரேலிய அணியை விட இந்திய அணி பலமாகத் தெரிந்தாலும் ஆட்டத்தின் நடுவே காய்களை நகர்த்துவதில் ஆஸ்திரேலிய அணி வேகமாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலிய அணியின் முதுகெலும்பாக டிராவிஸ் ஹெட் இருந்து வருகிறார். ஆஸ்திரேலிய அணி(உத்தேசம்) உஸ்மான் கவாஜா, சாம் கோன்டாஸ், லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கெரே, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், ஸ்காட் போலந்த் அல்லது ஹெய் ரிச்சார்ட்ஸன் இந்திய அணி (உத்தேசம்) ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல், விராட் கோலி, ரிஷப் பந்த், ரோஹித் சர்மா(கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் அல்லது தனுஷ் கோட்டியான், ஆகாஷ் தீப், அல்லது நிதிஷ் குமார் ரெட்டி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் காஷ்மீரில் உறைந்து போன தால் ஏரியில் படகில் செல்லும் மக்கள்24 டிசம்பர் 2024 சென்னை அரிய உயிரினங்களை கடத்தும் சர்வதேச மையமாக திகழ்வது ஏன்? பிடிபட்டால் என்ன செய்கிறார்கள்?24 டிசம்பர் 2024 மெல்போர்ன் மைதானம் எப்படி? மெல்போர்ன் மைதானம் பாரம்பரியமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், பேட்ஸ்மேன்களுக்கும் ஏதுவாகத்தான் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், 2017-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடருக்குப் பின் ஆஸ்திரேலியாவின் சிவப்புநிற கூக்கபுரா பந்துக்கு ஏற்றபடி, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாக முற்றிலும் மாற்றப்பட்டுவிட்டது. இந்த மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் விதத்திலும், சீமிங் செய்ய ஏதவாகவும், பந்து விரைவாக தேயாமல் இருக்கும் வகையில் ஆடுகளம் தயார் செய்யப்பட்டுள்ளது. 2016-ஆம் ஆண்டு வரை எம்சிஜி மைதானத்தில் அதிகபட்சமாக 624 ரன் வரை ஆஸ்திரேலிய அணியால் குவிக்க முடிந்தது. ஆனால், ஆடுகளத்தை மாற்றி அமைத்த பின் 400க்கும் அதிகமான ரன்களைக் கடப்பதே கடினமாகிவிட்டது. டாஸ் யார் வெல்வது? முதலில் யார் பேட் செய்வது? என்ற போட்டி இந்த மைதானத்தில் கடுமையாக இருக்கும். முதலில் பேட்செய்து ஓரளவுக்கு பெரிய ஸ்கோர் செய்துவிட்டால் ஆட்டத்தை கையில் எடுத்துவிடலாம் என்பதால் டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும், பேட்ஸ்மேனை நோக்கி பந்து வேகமாக வரும் என்பதால் பேட்ஸ்மேன்களை சோதிக்கும் களமாகவே ஆடுகளம் இருக்கும். பேட்ஸ்மேன் நிதானமாக பேட் செய்து நங்கூரமிட்டால் நல்ல ஸ்கோர் செய்யலாம். மாணவர்களுக்கு 'கணித' பயம் வருவது ஏன்? கற்றல் குறைபாட்டின் அறிகுறியா?22 டிசம்பர் 2024 உலகத்திலேயே 50 பேருக்கும் குறைவாக உள்ள ரத்த வகை எது?22 டிசம்பர் 2024 2021-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் போது ஆடுகளத்தில் 10 மி.மீ வரை புற்களை வளர விட்டிருந்தார்கள். இதனால், வேகப்பந்துவீச்சுக்கு சொர்க்கபுரியாக ஆடுகளம் மாறியது. அந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. இந்திய அணிக்கு எதிராக 6 மிமீ அளவுக்கு புற்களை விடவும் ஆடுகள வடிவமைப்பாளர்கள் முடிவு செய்துள்ளதால் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். இதில் ஒரே ஆறுதல்தரும் அம்சம், மெல்போர்னில் தற்போது 40 டிகிரி வரை வெயில் இருப்பதால், 3 நாட்களுக்குப்பின் ஆடுகளத்தில் விரிசல் ஏற்படலாம், அப்போது பேட்டிங்கிற்கு சாதகமாகவும், சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் ஆடுகளம் மாறக்கூடும். ஆடுகள வடிவமைப்பாளர் மேட் பேஜ், தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் "டெஸ்ட் போட்டியை த்ரில்லாக மாற்றும் விதத்தில் ஆடுகளத்தை மாற்றியுள்ளோம். பந்துவீச்சாளர்கள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் பிட்சை மாற்றியிருக்கிறோம். ஆடுகளத்தில் புற்களின் அளவை மாற்றி அமைத்து நாங்கள் பரிசோதித்து வருகிறோம். புற்களை லேசாக வளர அனுமதித்தால்தான் ஆட்டத்தில் சுவாரஸ்யம் இருக்கும். அதைத்தான் ரசிகர்களும் விரும்புவார்கள்" எனத் தெரிவித்தார். குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 பிபிசி செய்தியாளர் குழுவுக்கு அருகில் வந்த பனிக்கரடி – என்ன நடந்தது?22 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெல்போர்ன் எம்ஜிசி மைதானம் மெல்போர்னில் இதுவரை நடந்த போட்டிகள் எப்படி இருந்தன? மெல்போர்ன் எம்ஜிசி மைதானத்தில் இதுவரை 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடியுள்ளது. இதில் கடைசி 9 ஆட்டங்கள் பாக்ஸிங் டே அன்று நடந்துள்ளன. இந்த 14 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி 4 வெற்றிகளையும், ஆஸ்திரேலிய அணி 8 வெற்றிகளையும், 2 ஆட்டங்கள் டிராவிலும் முடிந்துள்ளன. பாக்ஸிங் டே ஆட்டங்களில் இந்திய அணி 5 தோல்விகளையும், இரு வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் பதிவு செய்துள்ளது. 2014ம் ஆண்டுகளுக்குப்பின் 10 ஆண்டுகளில் மெல்போர்ன் மைதானத்தில் இந்திய அணி தோல்வி அடையாமல் இருந்து வருகிறது. இந்த மெல்போர்ன் மைதானத்தில் இந்திய வீரர்களில் சச்சின் டெண்டுல்கர்(116), வீரேந்திர சேவாக்(195), விராட் கோலி(169), புஜாரா(106) ரஹானே(147, 112) ஆகியோர் மட்டுமே சதம் அடித்துள்ளனர். இதில் விராட் கோலி மட்டுமே தற்போது இந்திய அணியில் இருக்கிறார். 1977ம் ஆண்டு நடந்த டெஸ்டில்தான் இந்திய அணி மெல்போர்னில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது. சுனில் கவாஸ்கரின் சதம், சந்திரசேகரின் 12 விக்கெட் ஆகியவற்றால் இந்திய அணி 222 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. மெல்போர்ன் மைதானத்தில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 449 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் பும்ரா, கும்ப்ளே இருவரும் தலா 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இந்த மைதானத்தில் இந்திய அணி அதிகபட்சமாக 2014-15ம் ஆண்டில் நடந்த டெஸ்டில் 465 ரன்கள் குவித்தது. இந்த மைதானத்தில் கோலி 316 ரன்கள் சேர்த்துள்ளார், பும்ரா 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அணி வீரர்களுக்கு ஊக்கமாகத் திகழ்கிறார்கள். பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?20 டிசம்பர் 2024 கிரண் கவுர்: தாத்தாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற பாகிஸ்தான் சென்ற இந்தியப் பெண்20 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த மைதானத்தில் கோலி 316 ரன்கள் இதுவரை சேர்த்துள்ளார். பாக்ஸிங் டே டெஸ்ட் வரலாறு பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்பது கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மறுநாள் டிசம்பர் 26-ஆம் தேதி மெல்போர்ன் மைதானத்தில் நடத்தப்படும் ஆட்டமாகும். இந்த பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்க அணிகளும் நடத்துகின்றன. பாரம்பரியம் கொண்ட மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் புத்தாண்டு அன்று அதாவது ஜனவரி ஒன்றாம் தேதிதான் நடந்துள்ளன. 1950-51 ஆஷஸ் டெஸ்ட் தொடர்கூட டிசம்பர் 22 முதல் 27வரை நடந்துள்ளது. அந்த டெஸ்டில் 4வது நாள்தான் பாக்ஸிங் டே அன்று நடந்துள்ளது. 1950க்கு முன், 1953 முதல் 1967 வரை பாக்ஸிங் டே டெஸ்ட் டிசம்பர் 26ம் தேதி அன்று நடத்தப்படவில்லை. ஆனால் 1974-ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியை டிசம்பர் 26ம் தேதி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடத்த வேண்டும் என்ற நவீன பாரம்பரியம் தொடங்கியது. இதைத் தொடர்ந்து 1980-ஆம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்ட் நடத்துவதை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் முறைப்படுத்தி, அந்த போட்டியை ஒளிபரப்பும் உரிமைகளை விற்பனை செய்து கிரிக்கெட் விளையாட்டை ஊக்கப்படுத்தியது. இந்த பாக்ஸிங் டே அன்று ஆஸ்திரேலிய மக்கள் ஏராளமானோர் போட்டியை காண வருவதால், அதற்கு முக்கியத்துவம் அளிக்க முடிவு செய்து நடத்தத் தொடங்கியது. 2013-ஆம் ஆண்டு ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 4வது போட்டியைக் காண 90 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் வந்திருந்தனர். மும்பை: பயணிகள் படகு மீது மோதிய கடல் படை படகு - 13 பேர் கடலில் மூழ்கி பலி19 டிசம்பர் 2024 எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1999இல் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்ற பாக்ஸிங்டே டெஸ்டை காண வந்த ரசிகர்கள் இறுதிப்போட்டியில் இடம் யாருக்கு? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் எந்த இரு அணிகள் விளையாடப் போகின்றன என்பது இன்னும் உறுதியாகவில்லை. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் முதலிடத்தைப் பிடிப்பது யார், இரண்டாவது இடத்தைப் பிடிப்பது யார் என்பது சஸ்பென்ஸாகவே தொடர்ந்து வருகிறது. இறுதிப்போட்டியில் மூன்றாவது முறையாக பங்கேற்க இந்திய அணிக்கு வாய்ப்பிருக்கிறது. ஆனால், அதற்கு இந்திய அணி அடுத்த இரு டெஸ்ட் போட்டிகளிலும் கட்டாயமாக வெற்றி பெற வேண்டும். இரு வெற்றிகள் இருந்தால் இந்திய அணி இறுதிப்போட்டியில் பங்கேற்பது உறுதியாகும். ஒருவேளை ஒரு வெற்றி, ஒரு டிரா இருந்தால் ஆஸ்திரேலியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவுக்காக காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆஸ்திரேலிய அணியும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தீவிரமாக முயன்று வருகிறது. மெல்போர்ன், சிட்னி டெஸ்டில் அந்த அணி கட்டாய வெற்றி பெற்றால் அதற்கான வழி எளிதாகும் என்பதால் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிக்காக கடினமாகப் போராடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9q75gjwrv5o
-
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நாடாளவிய ரீதியில் தன்னார்வ தொண்டர் குழு - நளிந்த ஜயதிஸ்ஸ
25 DEC, 2024 | 05:19 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் முதன் முறையாக மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பொது மக்களை தொளிவூட்டும் நோக்கில் விசேட பயிற்சிபெற்ற தன்னார்வ சிறப்பு தூதுவர்கள் 100 பேரை உள்ளடக்கிய தன்னார்வ தொண்டர் குழு நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இரத்மலானை ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய 10 விடயங்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் பொதுமக்களை தெளிவூட்டுவற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அடிமட்ட தளத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த சிறப்பு வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் பரந்துபட்ட அளவில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஆரோக்கியமான உணவு, உடல் சுறுசுறுப்பு மிக்க ஆரோக்கியமான சமூகத்தை ஏற்படுத்திக் கொள்ளுதல், உடல் எடை, புகைப்பிடித்தல், கொலஸ்ரோல், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியவற்றை சீராக பேணுவதுடன், மன அழுத்தம் மற்றும் நித்திரை தொடர்பிலும் பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது. கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் அதனுடன் இணைந்த வைத்தியசாலையும் இணைந்து இத்திட்டத்தை ஆரம்பிக்கத் தீர்மானித்துள்ளன. மூளை சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக முன்னெடுக்கத் தீர்மானித்துள்ள மேற்படி விழிப்புணர்வு வேலைத்திட்டம் சிறந்த முயற்சியெனக் கருதுகிறேன். இதற்காக முன்னின்று உழைக்கும் தன்னார்வ சிறப்பு தூதர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். இதை இந்நாட்டின் சுகாதார சேவையின் மாற்றத்தின் ஆரம்ப புள்ளியாக காண்கிறேன். அரசாங்கம் வருடாந்தம் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைகளுக்காக பெருமளவான தொகையை செலவிடுகிறது. இவ்வாறான தன்னார்வு செயற்பாடுகளின் காரணமாக இந்நாட்டு மக்கள் நோயாளிகளாவதை தடுப்பதற்கான ஆலோசனைகளும் தெளிவூட்டல்களும் வழங்கப்படுகின்றன. ஆகையால் இது போன்ற செயற்பாடுகளுக்கு அரசாங்கம் தனது பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளது. நோய்த் தடுப்புக்கு முன்னுரிமை அளிப்பது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். உலகமக்கள் தொகையில் அண்ணளவாக 4 பில்லியன் அதாவது 3.4 பில்லியன் பேர் தற்போது மூளை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், இந்நாட்டில் இதுவரை மூளை நோயால் பாதிப்புக்குள்ளாகிய சுமார் 400 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பாரிசவாதம், டிமென்ஷியா, ஒற்றைத் தலைவலி என்பன கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய மிக முக்கியமான மூளை நோய்களாக உள்ளன. நீரிழிவு நோயினால் ஏற்படும் நரம்பு பாதிப்பு, மனித வாழ்வை அதிகம் பாதிக்கும் நோயாக கண்டறியப்பட்டுள்ளது. மூளைநோய்கள் குறித்து முறையான விழிப்புணர்வு அளிப்பதன் மூலம், 90 சதவீதத்துக்கும் அதிகமான நோய் நிலைமைகளில் இருந்து எம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/202129
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
படக்குறிப்பு, இந்திய மாணவர் சங்கத்தினர் பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை கண்டித்துள்ள தமிழக எதிர்க்கட்சிகள், சென்னையின் மையத்தில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு போதிய பாதுகாப்பு இல்லையா? என்று தமிழ்நாடு அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவிக்கு என்ன நடந்தது? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது? சென்னையில் பெண் உணவு டெலிவரி ஊழியருக்கு பாலியல் துன்புறுத்தலா? என்ன நடந்தது? திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா? "ஆண்கள் என்னை தவறான நோக்கில் அழைத்தனர்" - அடர் நிறத்தில் லிப்ஸ்டிக் பூசிய பெண்கள் கூறுவது என்ன? கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு காவல் நிலையத்தில் மாணவி புகார் சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவி ஒருவர், அந்த வளாகத்திற்குள்ளேயே திங்கள்கிழமையன்று (23.12.24) இரவு பாலியல் வன்முறைக்கு இலக்கானதாக புகார் அளித்தார். திங்கள்கிழமையன்று இரவு உணவருந்திய பிறகு மாணவர் ஒருவருடன் பல்கலைக் கழக வளாகத்திற்குள் பேசிக் கொண்டிருந்த போது அங்கு வந்த அடையாளம் தெரியாத ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அந்த மாணவி புகார் அளித்தார் இதற்கு பிறகு, கோட்டூர்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு, குற்றவாளியைப் பிடிப்பதற்கு கோட்டூர்புரம் உதவி ஆணையர் தலைமையில் நான்கு தனிப் படைகள் அமைக்கப்பட்டன. இது தொடர்பாக காவல்துறை நடத்திய விசாரணையில், கோட்டூர்புரத்தைச் சேர்ந்த 37 வயதான ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்துள்ளது. இவர் நடைபாதையில் பிரியாணிக் கடை வைத்து வியாபாரம் செய்துவருவதாகவும் குற்றம் தொடர்பாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் காவல்துறை தெரிவித்திருக்கிறது. சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே ஒரு காலத்தில் தடை இருந்தது ஏன் தெரியுமா?3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, சென்னை அண்ணா பல்கலை கழகத்திற்கு வெளியே போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனம் சென்னை நகரின் முக்கிய இடங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழக வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் இது தொடர்பாக கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக் கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்திருப்பது வெட்கக்கேடானது" எனக் குறிப்பிட்டிருக்கிறார் பிரதமராக இருந்த சரண்சிங் அவமதித்த ஆறே மாதங்களில் இந்திரா காந்தி மீண்டும் பிரதமரானது எப்படி?5 மணி நேரங்களுக்கு முன்னர் இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?8 மணி நேரங்களுக்கு முன்னர் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் "தமிழகத்தையும் பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக் கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக் கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறிவிடாதா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். படக்குறிப்பு, அண்ணா பல்கலைக்கழக வளாகம் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தே.மு.தி.க. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரும் இந்த நிகழ்வைக் கண்டித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்திருக்கிறார். "வெகு விரைவில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக் கழக அளவில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?9 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 படக்குறிப்பு, பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தினர் வலியுறுத்தினர். அண்ணா பல்கலைக் கழக பதிவாளர் விளக்கம் அண்ணா பல்கலைக் கழகத்தின் பதிவாளர் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அந்த விளக்கத்தில், "இது தொடர்பாக அண்ணா பல்கலைக் கழக உள் புகார்க் குழுவினருக்கும் தற்போது தகவல் தெரிவிக்கப்பட்டு, குழுவின் விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியாளர்கள் எப்போதும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருக்க பல்கலைக்கழக அளவில் தேவையான கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும். அண்ணா பல்கலைக் கழகத்தைப் பொருத்தவரை அனைத்து மாணவர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது" எனத் தெரிவித்திருக்கிறார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டுமெனக் கோரி, இந்திய மாணவர் சங்கத்தினர் அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr4rk4ydrn9o
-
ஈபிள் கோபுரத்தில் தீ
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ள ஈபிள் கோபுரத்தில் செவ்வாய்க்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து அங்கிருந்த சுமார் 1200 சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். எல்லோருக்கும் பிரான்ஸ் அல்லது பாரிஸ் என்றதும் கம்பீரமாக நிற்கும் ஈபிள் கோபுரம் தான் சட்டென கண்முன் வந்து செல்லும். உலக அளவில் அனைவரும் அறிந்த அடையாள சின்னமாக இருக்கும் ஈபிள் கோபுரத்தை நாள்தோறும் உள்நாடு மற்றும் வெளிநாடு என சுமார் 25,000 மக்கள் பார்வையிடுவது வழக்கம். இந்த சூழலில் தான் அதில் தீ விபத்து ஏற்பட்டது. ஈபிள் கோபுரத்தில் உள்ள லிப்ட் ஷாஃப்டின் கேபிளில் ஏற்பட்ட அதீத வெப்பம் தான் தீ விபத்துக்கு காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தீப்பற்றியதை அடுத்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து தீயணைப்பு படை வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதற்கு முன்னர் கடந்த 1956-ல் ஈபிள் கோபுரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்ய ஓராண்டு காலம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. உலகின் முதல் உயர்ந்த கோபுரம் என்ற பெருமையை தன்னகத்தே தாங்கி நிற்கிறது ஈபிள் கோபுரம். 1931-ம் ஆண்டு வரையில் உலகின் உயர்ந்த கோபுரமாக அறியப்பட்டது. குஸ்தேவ் ஈபிள் என்ற இரும்புக் கட்டுமான வல்லுநரால் உருவாக்கப்பட்டது. இரும்புத் துண்டுகளை வைத்து 984 அடிக்கு பிரம்மாண்டமாகக் கட்டப்பட்ட கட்டிட அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314122
-
அஸ்வெசும தொடர்பில் அதிரடி வர்த்தமானி
‘2025 அஸ்வெசும’ கொடுப்பனவுகளுக்கான வர்த்தமானி வெளியீடு 25 DEC, 2024 | 01:41 PM (எம்.மனோசித்ரா) நலன்புரி அனுகூலங்கள் சட்டத்தின் கீழ் நிதி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் 2025ஆம் ஆண்டுக்கான அஸ்வெசும கொடுப்பனவு குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு திட்டம் பாராளுமன்றத்தின் அனுமதி கிடைக்கும் நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அதற்கமைய 2025 ஜனவரி முதல் மார்ச் வரை 'நிலையற்றவர்கள்' என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480, 000 நபர்களுக்கு தலா 5,000 ரூபா வழங்கப்படவுள்ளது. மேலும் 'பாதிப்புக்குட்பட்டவர்கள்' என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை தலா 5,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. 'வறியவர்கள்' என்ற சமூக பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 960,000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை தலா 10, 000 ரூபா வழங்கப்படவுள்ளது. 'மிகவும் வறியவர்கள்' என்ற சமூகப்பிரிவில் உள்ளடக்கப்பட்டுள்ள 480, 000 நபர்களுக்கு 2025 ஜனவரி முதல் 2026 ஜூன் வரை 17, 500 ரூபா வழங்கப்படவுள்ளது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 அல்லது 2க்கு குறைவாகக் காணப்பட்டால் பயனாளிகளுக்கு உரிய கொடுப்பனவில் அரைவாசி மாத்திரமே வழங்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக நோயாளிகள், முதியோருக்கான கொடுப்பனவுகள் குறித்த விபரங்களும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதற்கமைய 410, 000 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி பெறுபவர்களுக்கு தலா 7,500 ரூபாவும், சிறுநீரக நோய்க்கான உதவி பெறும் 50, 000 பேருக்கு தலா 7,500 ரூபாவும் மற்றும் முதியோருக்கான உதவி பெறும் 820, 000 பேருக்கு தலா 3,000 ரூபாவும் வழங்கப்படவுள்ளது. இந்தக் கொடுப்பனவுகள் 2025 ஜனவரி முதல் ஜூன் வரை வழங்கப்படவுள்ளன. 2024 மே 17ஆம் திகதி வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்த அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு திட்டம் இரத்து செய்யப்பட்டுள்ளது. எனினும் ஏற்கனவே நலன்புரி நன்மைகளுக்காக தெரிவு செய்யப்பட்ட மேலும் பல்வேறு காரணிகளால் கொடுப்பனவு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள பயனாளிகள் மேன்முறையீடுகளை சமர்ப்பித்து தற்போது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவர்களது தகுதிக்கேற்ப 2024 டிசம்பர் 31ஆம் திகதி வரை குறிப்பிட்ட கொடுப்பனவுகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/202117
-
மகிந்தவின் பாதுகாப்பு கௌதம புத்தரிடம் - நாமல்
மஹிந்தவுக்கு கொலை மிரட்டல் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் மற்றும் விடுதலைப் புலி குழுக்களிடமிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தின் உப தலைவர் மனோஜ் கமகே தெரிவித்துள்ளார். ராஜபக்சவின் பாதுகாப்பு பிரிவிலிருந்து இராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து இப் பாதுகாப்பு கரிசனங்கள் பற்றி அவர் ஊடகங்களுக்கு தெரிவித்தார். https://thinakkural.lk/article/314125
-
பரிசு வென்றதாக வரும் தொலைபேசி அழைப்புக்கள்; மக்களே அவதானம்
பண்டிகைக் காலங்களில் இணையம் ஊடாக பண மோசடிச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த இதனைத் தெரிவித்தார். சில பரிசுகளை வென்றதாக கூறி வாடிக்கையாளர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து பண மோசடி செய்ததாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சில முறைகேடுகள் நடப்பதாக முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறான அழைப்புகள் மற்றும் சம்பவங்களில் இருந்து தம்மை பாதுகாத்துக்கொள்வதற்கு பொதுமக்கள் விசேட அவதானம் செலுத்த வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/314117
-
2024இல் சுட்டெரிக்கும் சூரியனைத் தொடப் போகும் நாசாவின் பார்க்கர் விண்கலம்
சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரெபேக்கா மோரெல் பதவி, அறிவியல் செய்தி ஆசிரியர் நாசா விண்கலம் ஒன்று சூரியனுக்கு மிக அருகில் நெருங்கிச் சென்று, ஒரு புதிய வரலாறு படைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. பார்க்கர் விண்கலம் (Parker Solar Probe) எனப்படும் அந்த ஆளில்லா விண்கலம் சூரியனின் அதீத வெப்பம் மற்றும் தீவிர கதிர்வீச்சை தாங்கிக்கொண்டு, அதன் வெளிப்புற வளிமண்டலத்தில் நுழைந்துள்ளது. அதீத வெப்பம் நிலவும் இடத்தில் இந்த விண்கலம் இருப்பதால், பல நாட்களாக இதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 28 அன்று 05:00 (GMT) மணிக்கு (இந்திய நேரப்படி காலை 10.30 மணி), இந்த விண்கலத்திலிருந்து சமிக்ஞை கிடைக்கும் என விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்கள். அதன் பிறகு தான் இது தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளதா என்பது தெரிய வரும். சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா? மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம் கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள் ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது? கிறிஸ்துமஸ் கொண்டாட அமெரிக்காவிலும் பிரிட்டனிலும் பல ஆண்டுகளுக்கு தடை நீடித்தது ஏன்?2 மணி நேரங்களுக்கு முன்னர் இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்?7 மணி நேரங்களுக்கு முன்னர் சூரியனை நோக்கிய பார்க்கர் விண்கலத்தின் பயணம் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூரியன் எவ்வாறு செயல்படுகிறது என்பதை நன்கு புரிந்துகொள்ள இந்த ஆய்வு உதவும் என்று நம்பப்படுகிறது நாசாவின் அறிவியல் துறை தலைவர் டாக்டர் நிக்கோலா ஃபாக்ஸ் பிபிசியிடம் பேசுகையில், "பல நூற்றாண்டுகளாக, மக்கள் சூரியனைப் பற்றி ஆய்வு செய்துள்ளனர். ஆனால் நேரடியாக (விண்கலத்தின் பயணம்) சென்று அதை ஆய்வு செய்யாத வரை, அதன் வளிமண்டலத்தைப் பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்துகொள்ள முடியாது" என்கிறார். "எனவே அதன் வழியாக பயணம் செய்தால் மட்டுமே, நமது நட்சத்திரத்தின் (சூரியன்) வளிமண்டலத்தை உண்மையில் உணர முடியும்" பார்க்கர் விண்கலம் 2018-ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டது. இது நமது சூரிய மண்டலத்தின் மையத்தை நோக்கி பயணிக்கிறது. இது ஏற்கனவே சூரியனை 21 முறை நெருங்கிச் சென்றுள்ளது. ஒவ்வொரு முறையும் சூரியனுடனான அதன் தூரம் குறைந்து வந்தது. ஆனால் இந்த முறை மிக நெருக்கமாக சென்று புதிய சாதனை படைத்துள்ளது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 பசையை மென்று சாப்பிட்டு ஆதிகால மனிதன் கண்டுபிடித்தது என்ன?24 டிசம்பர் 2024 சூரிய வெப்பத்தை பார்க்கர் எப்படி தாங்குகிறது? இந்த முறை, பார்க்கர் விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் இருந்து 3.8 மில்லியன் மைல் (6.2 மில்லியன் கி.மீ) தொலைவில் உள்ளது. இந்த தூரம், நமக்கு அவ்வளவு நெருக்கமானதாக தெரியவில்லை என்றாலும்கூட, நாசாவின் நிக்கோலா ஃபாக்ஸ் இதை வேறு ஒரு அணுகுமுறையில் பார்க்கிறார். "நாம் (பூமி) சூரியனிலிருந்து 93 மில்லியன் மைல்கள் தொலைவில் இருக்கிறோம். உதாரணத்திற்கு சூரியனுக்கும் பூமிக்குமான தொலைவு ஒரு மீட்டர் என்று வைத்தால், இந்த பார்க்கர் விண்கலம் சூரியனிலிருந்து நான்கு சென்டிமீட்டர் தொலைவில் உள்ளது என்று கூறலாம். எனவே அது மிக நெருக்கமாக தான் உள்ளது." என்கிறார். இந்த விண்கலம் 1,400 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையையும், அதன் மின்னணு சாதனங்களை தாக்கும் கதிர்வீச்சையும் தாங்க வேண்டியிருக்கும். இது 11.5 செ.மீ (4.5 அங்குலம்) தடிமன் கொண்ட கார்பன்-ஃபைபர் கவசத்தால் பாதுகாக்கப்படுகிறது, ஆனால் அதன் உத்தி என்னவென்றால் வேகமாக உள்ளே சென்று பின்னர் மீண்டும் வேகமாக வெளியேறுவது தான். பார்க்கர் விண்கலம், மனிதனால் உருவாக்கப்பட்ட எந்தவொரு பொருளையும் விட வேகமாக நகரும். அதாவது மணிக்கு 4,30,000 மைல் வேகத்தில் செல்லும். இந்த வேகத்தில் பறந்தால், லண்டனில் இருந்து நியூயார்க் செல்ல 30 வினாடிகளுக்கும் குறைவாகவே தேவைப்படும். பார்க்கர் விண்கலத்தின் இந்த வேகம், அது சூரியனை நோக்கி செல்லும் போது உணரக்கூடிய அபரிமிதமான ஈர்ப்பு விசையிலிருந்து வருகிறது. இந்த ஆண் திமிங்கலம் 13,000 கி.மீ. தூரம் நீந்திச் சென்றது ஏன்? வியக்கும் விஞ்ஞானிகள்23 டிசம்பர் 2024 குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு, வானில் தோன்றும் அழகான துருவ ஒளிகளுக்கு சூரிய காற்று காரணமாக உள்ளது இந்த ஆய்வின் பயன் என்ன? ஆனால், சூரியனைத் 'தொட' இவ்வளவு கடுமையான முயற்சியை ஏன் எடுக்க வேண்டும்? இந்த விண்கலம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை (Corona- கொரோனா) கடந்து செல்வதன் மூலம், நீண்டகாலமாக நிலவும் ஒரு மர்மம் தீர்க்கப்படும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். "கொரோனாவில் மிகமிக அதீத வெப்பம் நிலவுகிறது. ஆனால் அதற்கு காரணம் என்ன என்பது எங்களுக்குத் தெரியவில்லை" என்று கூறுகிறார் வேல்ஸில் உள்ள ஃபிஃப்த் ஸ்டார் ஆய்வகங்களின் வானியலாளர் டாக்டர் ஜெனிபர் மில்லார்ட். "சூரியனின் மேற்பரப்பு சுமார் 6,000 டிகிரி செல்சியஸ் அல்லது அதைவிட அதிகமான வெப்பநிலையைக் கொண்டது. ஆனால் சூரிய கிரகணங்களின் போது, நீங்கள் காணக்கூடிய இந்த கொரோனா எனும் மெல்லிய வெளிப்புற வளிமண்டலம், லட்சக்கணக்கான டிகிரி வெப்பநிலையை அடைகிறது." "அத்தனைக்கும் அது சூரியனின் மேற்பரப்பிலிருந்து தொலைவில் தான் உள்ளது. அப்படியானால் அந்த வளிமண்டலம் இந்தளவுக்கு சூடாவது ஏன் என்பது தான் கேள்வி?" என்கிறார் மில்லார்ட். சூரிய காற்றைப் (Solar Wind) பற்றி நன்கு புரிந்துகொள்ளவும் விஞ்ஞானிகளுக்கு இந்த ஆய்வு உதவும். இந்த சூரிய காற்று என்பது சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தில் இருந்து வெடித்து வெளியேறும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் ஆகும். இந்த துகள்கள் பூமியின் காந்தப்புலத்துடன் தொடர்பு கொள்ளும்போது, வானில் அழகான துருவ ஒளிகள் தோன்றும். ஆனால் இந்த விண்வெளி நிகழ்வு, மின் கட்டமைப்புகள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகளுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி, பல சிக்கல்களுக்கு வழிவகுக்கும். "சூரியன், அதன் செயல்பாடுகள், விண்வெளிச் சூழல், சூரிய காற்று, இவற்றைக் குறித்து நன்றாக புரிந்துகொள்வது, பூமியில் நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும்" என்று டாக்டர் மில்லார்ட் கூறுகிறார். 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, சூரியன் குறித்த சில மர்மங்களை தீர்க்க இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர் சமிக்ஞைக்காக காத்திருக்கும் விஞ்ஞானிகள் விண்கலம் இப்போது பூமியுடன் தொடர்பில் இல்லாத நிலையில், நாசா விஞ்ஞானிகள் கவலையுடன் காத்திருக்கின்றனர். "பார்க்கர், பூமிக்கு ஒரு சமிக்ஞை அனுப்பியவுடன், விண்கலம் சரியாக தான் செயல்படுகிறது என்பதை அதற்கு தெரியப்படுத்த விஞ்ஞானிகள் குழு 'ஒரு பச்சை நிற இதய சின்னத்தை' குறுஞ்செய்தியாக அனுப்பும்." என்று நிக்கோலா ஃபாக்ஸ் கூறுகிறார். துணிச்சலான இந்த முயற்சி பற்றி சற்று பதற்றம் இருப்பதை நிக்கோலா ஒப்புக்கொள்கிறார். ஆனாலும் பார்க்கர் விண்கலம் மீது அவருக்கு முழு நம்பிக்கை உள்ளது. "நான் விண்கலத்தைப் பற்றி சற்று கவலைப்படுகிறேன். ஆனால் மிக மோசமான நிலைமை அனைத்தையும் தாங்கும் வகையில் தான் நாங்கள் அதை வடிவமைத்துள்ளோம். ஒரு சிறிய, ஆனால் மிகமிக வலிமையான ஒரு விண்கலம் அது" என்கிறார் நிக்கோலா. இந்த சவாலில் பார்க்கர் விண்கலம் தப்பிப் பிழைத்தால், சூரியனைச் சுற்றி தனது அடுத்தகட்ட பணிகளை அது தொடரும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx26xrw23rno
-
2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்துங்கள்
சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து 20 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாளை காலை 9.25 மணி முதல் 02 நிமிடங்கள் மௌனத்தை கடைப்பிடிக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களை கோரியுள்ளது. 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி நடந்த சுனாமி பேரழிவில் 35,000 க்கும் அதிகமானோர் இறந்தனர் மற்றும் 5,000 க்கும் அதிகமானோர் காணாமல் போயினர். மேலும், மாவட்ட மட்டத்திலும் நினைவேந்தல் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/314131
-
இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் - ஆளுநர் தெரிவிப்பு
Published By: VISHNU 25 DEC, 2024 | 05:59 PM இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்துள்ளேன் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். வயாவிளான், பலாலி தெற்கு, பலாலி கிழக்கு மக்களின் அழைப்பின் பேரில் வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் விவசாய நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடலும், பூனையன்காடு இந்து மயானத்தில் மர நடுகையும் இன்று புதன்கிழமை காலை (25.12.2024) வயாவியானில் நடைபெற்றது. அந்தப் பிரதேச மக்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த உ.சந்திரகுமாரன், வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் இந்த மண்ணை நேசிக்கும் ஒருவர். நாம் தற்போது எடுத்தோம் கவிழ்த்தோம் எனச் செயற்பட முடியாது. கட்டம் கட்டமாக எமது காணிகளை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நாம் முழுமையாக நம்புகின்றோம். பலாலி வீதியில் வசாவிளான் சந்தி வரையான வீதி விடுவிக்கப்படும் என நாம் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆனால் இந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆளுநரின் கோரிக்கையால் அது நடைபெற்றது. அதேபோன்று ஏனைய இடங்களும் நாம் எதிர்பாராத நேரத்தில் விடுவிக்கப்படும் என நம்புவோம். அரசியல் கலப்பற்று ஒற்றுமையாக இது நடைபெறவேண்டும். அதைவிட எமது விடுவிக்கப்பட்ட பகுதிகளில் எம் முன்னோர்கள் நினைவாக மரங்களை நட்டு பசுமைத் தேசமாக மாற்றுவோம் என்றார். இதன் பின்னர் உரையாற்றிய வடக்கு ஆளுநர், 2015ஆம் ஆண்டு காலத்தில் யாழ். மாவட்டச் செயலராக நான் இருந்தபோது படிப்படியாக பல பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டன. விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் குடியமரவில்லை என பாதுகாப்புத் தரப்பினர் எங்களுக்கு திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் வீட்டுத் திட்டங்களை நாம் நடைமுறைப்படுத்தினோம். மக்களும் எதிர்பார்த்ததைப் போன்று மீள்குடியமர்ந்தார்கள். 2018ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் குழப்பத்தை தொடர்ந்து காணி விடுவிப்புக்கள் நடைபெறவில்லை. இந்த ஆண்டு சிறிய அளவில் காணிகள் விடுவிக்கப்பட்டிருக்கின்றன. விடுவிக்கப்பட்ட காணிகளை விவசாயபூமியாக மாற்றுவதுதான் நீங்கள் எங்களுக்கு செய்யும் உதவி. இடம்பெயர்ந்தவர்களின் வலி எனக்கும் தெரியும். நானும் இடம்பெயர்ந்த ஒருவன்தான். தற்போது யாழ். மாவட்ட இராணுவத்த தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள யஹம்பத் நேர் சிந்தனை உடைய ஒருவர். எனவே இந்த அரசாங்கத்தின் காலத்தில் படிப்படியாக காணிகளை விடுவிக்க முடியும் என நம்புகின்றோம். இங்கு காணிகள், வீதிகள் விடுவிக்கப்பட்டதும் தென்னிலங்கையிலிருந்து சில தேவையற்ற கருத்துக்கள் வெளியிடப்பட்டு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. தென்னிலங்கை மக்களுக்கு இங்கு நடைபெறுவது என்ன என்ற உண்மையை தெளிவுபடுத்துமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையை சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம் தெரிவித்திருக்கின்றேன். வடக்கு மக்கள் எல்லோருக்கும் எதிர்பார்ப்பு இருக்கின்றது என்பது எனக்குத் தெரியும். விரைவில் சாதகமான விடயங்கள் நடக்கும் என நம்புகின்றேன் என்று ஆளுநர் தெரிவித்தார். இதன் பின்னர் அந்தப் பிரதேசத்தில் வடக்கு ஆளுநரால் மரக்கன்றுகள் நடுகை செய்யப்பட்டன. இந்த நிகழ்வில் தெல்லிப்பழை பிரதேச செயலர், வலி. வடக்கு பிரதேச சபை செயலர், தெல்லிப்பழை பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர், வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஆகியோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வை வயாவிளான் மீள் எழுச்சிக்கான உதவும்கரங்கள் மற்றும் பூனையன்காடு இ;ந்து மயான அபிவிருத்திச் சபை என்பன ஒழுங்குபடுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202147
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
சீனாவின் 'பீஸ் ஆர்க்' கப்பலை பார்வையிட்ட பிரதமர் ஹரிணி 25 DEC, 2024 | 12:01 PM (நமது நிருபர்) சீன அரசாங்கத்தின் மிஷன் ஹார்மணி - 2024 திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த சீன கடற்படைக்கு சொந்தமான பீஸ் ஆர்க் என்ற மருத்துவமனை கப்பலை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பார்வையிட்டார். பீஸ் ஆர்க் என்ற இந்த கப்பல் டிசம்பர் 21 ஆம் திகதி கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததுடன், 2024 டிசம்பர் 22 முதல் டிசம்பர் 27 வரை இலங்கை மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் பரிசோதனை சேவைகளைகளை வழங்கும். இந்த சமாதானக் கப்பல் திட்டத்தின் மனிதாபிமான முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கை மக்களுக்கு இந்த நல்லெண்ணத்தை வெளிப்படுத்தியதற்காக சீன அரசாங்கத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளைப் பேணுவதற்கும் பொது சுகாதாரத் துறைக்கு ஆதரவளிப்பதற்கும் இத்தகைய முயற்சிகளின் முக்கியத்துவத்தை பிரதமர் வலியுறுத்தினார். இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் இந்த கப்பலின் பணியின் முக்கியத்துவத்தை சீனத் தூதுவர் வலியுறுத்தினார். கப்பலில் உள்ள நவீன வசதிகள் மற்றும் சேவைகள் குறித்து கப்பலின் மருத்துவக் குழுவினர் விளக்கமளித்தனர். இந்நிகழ்வில் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கொமடோர் மேஜர் ஜெனரல் ஹீ யோங்மிங், கொமடோர் மேஜர் ஜெனரல் யிங் ஹொங்போ, கப்டன் டெங் கியாங் மற்றும் சீனத் தூதரக அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202105
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
கஜகஸ்தானில் 67 பேருடன் விபத்துக்குள்ளான விமானம் - பயணிகள் என்ன ஆனார்கள்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கஜகஸ்தானில் விமானம் தரையிறங்கும் போது தீப்பிடித்து விபத்துக்கு உள்ளானது. கஜகஸ்தானின் அக்டாவ் நகரில் 67 பேருடன் சென்ற விமானம் ஒன்று புதன்கிழமையன்று (25-12-2024) விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்தாகவும், அவர்களில் 22 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிப்பதாக கஜகஸ்தானின் அவசரகால அமைச்சகம் தெரிவித்துள்ளது. அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் நிறுவனத்தால் இயக்கப்படும் இந்த விமானம் அக்டாவ் நகருக்கு அருகே சென்ற போது தீப்பிடித்தது. விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. அஜர்பைஜான் ஏர்லைன்ஸின் இந்த விமானம், அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து ரஷ்யாவின் க்ரோஸ்னி நகருக்கு சென்று கொண்டிருந்தது. பனிமூட்டம் காரணமாக அது பாதை மாறியிருப்பதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக வெளியான வீடியோ ஒன்றில், அந்த விமானம் லாண்டிங் கியர் கீழே உள்ளபடி அதிவேகமாக தரை இறங்க முயன்றமைத காண முடிகிறது. ரஷ்ய செய்தி ஊடகங்களில் வெளியான இந்த வீடியோவை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை சரிபார்த்து உறுதி செய்துள்ளது. தரையிறங்க முயற்சிப்பது போல தோன்றிய சில நொடிகளில், விமானம் வெடித்து ஒரு பெரிய தீப்பிழம்பு உண்டானது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த எம்ப்ரேயர்-190 ரக விமானத்தில் 62 பயணிகளும், 5 பணியாளர்களும் இருந்ததாக அஜர்பைஜான் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலும் அஜர்பைஜான் நாட்டை சேர்ந்தவர்கள். ரஷ்யா, கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில பயணிகளும் அதில் இருந்தனர். விபத்து நேரிட்டிருந்தாலும், அக்டாவ் விமான நிலையம் வழக்கம் போல இயங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். விமான சேவை வழங்கிய அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் மற்றும் அந்த விமானத்தை தயாரித்த எம்ப்ரேயர் நிறுவனத்தை பிபிசி தொடர்பு கொள்ள முயன்று வருகிறது. இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvgnp6y0gl7o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாவை வீழ்த்திவிட்டோம்’; இஸ்ரேல் ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம் என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 45,220-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். காசாவில் ஹமாஸ்களுக்கு எதிராக தொடங்கிய போரை இஸ்ரேல் அப்படியே மத்திய கிழக்கு முழுவதும் விரிவடையச் செய்தது. லெபனானில் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹவுத்திக்கள் என்று தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இந்நிலையில் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் அளித்துள்ள பேட்டியில்,“ஹவுத்திகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகளை செலுத்தும் இந்த நாளில் நான் சில விஷயங்களை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாங்கள் ஹமாஸ்களை, ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். ஹனியே, நஸ்ரல்லாவை கொன்றோம்; ஹமாஸ், ஹிஸ்புல்லாக்களை வீழ்த்திவிட்டோம். இன்னும் அந்த அமைப்புகளின் தலைவர்களைக் கண்டுபிடித்து அவர்கள் தலையைத் துண்டிப்போம். ஈரானின் பாதுகாப்பு அமைப்புகளை ஒடுக்கிவிட்டோம். சிரியாவில் ஆசாத் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டோம். தீவிரவாத அச்ச ரேகைக்கு பெரிய அடி கொடுத்துள்ளோம். அதேபோல் ஏமனில் உள்ள ஹவுத்திகளுக்கு கடுமையான பதிலடி கொடுப்போம். ஹவுத்திகளின் உட்கட்டமைப்பு உத்திகளை தவிடுபொடியாக்குவோம். செங்கடலில் சரக்கு கப்பல்களுக்கு அவர்கள் ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை முறியடிப்போம். பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக செயல்பட்டு அவர்கள் இஸ்ரேலுக்கு நெருக்கடி தருகிறார்கள்.” என்று கூறியுள்ளார். முன்னதாக கடந்த ஜூலை மாதம் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கச் சென்ற அவர் இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். ஹனியே கடந்த 1987 ஆம் ஆண்டு ஹமாஸ் படையில் இணைந்தார். இஸ்ரேலுக்கு எதிரான முதல் புரட்சியில் அவர் பங்கேற்றார். 1993 வரை நடந்த அந்த மோதலில் அவர் முக்கியப் பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. லெபனான் நாட்டில் கடந்த 1985-ம் ஆண்டில் ஹிஸ்புல்லா அமைப்பு தொடங்கப்பட்டது. இந்த அமைப்புக்கு ஈரானும் சிரியாவும் ஆயுத உதவி, நிதியுதவி அளித்தன. இரு நாடுகளின் உதவியால் ஹிஸ்புல்லா குறுகிய காலத்தில் வளர்ச்சிஅடைந்தது. கடந்த 2006-ம் ஆண்டில்ஹிஸ்புல்லாவுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே 34 நாட்கள் போர் நடைபெற்றது. அப்போது ஐ.நா. சபை தலையிட்டதால் போருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஈரான், சிரியாவின் ஆதரவுடன் ஹிஸ்புல்லா மீண்டும் தலைதூக்கியது. அந்த அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா, லெபனானின் ரகசிய இடங்களில் தலைமறைவாக வாழ்ந்து வந்தார். ஈரானின் மூத்த தலைவர்கள், ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர்களுக்கு மட்டுமே அவரின் இருப்பிடம் தெரியும். இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம், காசாவில் நடத்தப்பட்ட ராணுவ நடவடிக்கையில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் கொல்லப்பட்டார். இவற்றையெல்லாம் பட்டியலிட்டே தற்போது இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தீவிரவாதத்தை ஒழித்து வருவதாகப் பேசியுள்ளார். https://thinakkural.lk/article/314086
-
மூன்றாம் உலகப்போர் வருகிறதா; தீர்க்கதரிசி சலோமி கூறியதென்ன?
“வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என்று பரவலாக அறியப்படும் 36 வயதான பிரேசிலைச் சேர்ந்த சித்த மருத்துவரான அதோஸ் சலாமி, எதிர்காலத்தில் உலகளவில் நடைபெறப்போகிற நெருக்கடிகள் குறித்த தனது முன்கணிப்புகளால் பலரது கவனத்தைப் பெற்றுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில், வரவிருக்கும் மூன்றாம் உலகப் போரைப் பற்றி கடுமையான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார் சலோமி. ஆனால் இது பாரம்பரிய போர் போன்று அல்லாமல், தொழில்நுட்ப ரீதியாக இருக்கும் என்றும் கூறி பீதியை கிளப்பியுள்ளார். இதற்கு முன் கோவிட்-19 தொற்றுநோய், எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியது (இப்போது X என மறுபெயரிடப்பட்டுள்ளது) மற்றும் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவு போன்ற முக்கிய நிகழ்வுகளை முன்னரே கணித்த சலோமி, இனி நடக்கப் போகும் நவீன போரில் மனிதகுலம் மாற்றத்தின் விளிம்பில் இருப்பதாக நம்புகிறார். “இது மனிதர்களின் போர் மட்டுமல்ல, இயந்திரங்களின் போர்” என்று சலோமி கூறுகிறார். இந்தப் புதிய வடிவிலான போருக்கு முன்னோடியாக உலகளாவிய பதட்டங்கள் அதிகரித்து வருவதை, குறிப்பாக உக்ரைனுடனான போரில் டினிப்ரோ நகரத்தை குறிவைத்து ஓரேஷ்னிக் சூப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா ஏவியதை சலோமி சுட்டிக்காட்டுகிறார். சலோமியின் கூற்றுப்படி, மேம்பட்ட ஆயுதங்களின் பயன்பாடு மற்றும் தொழில்நுட்பத்தால் நவீன போர்கள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகிறது. ரஷ்யாவைத் தவிர, மத்திய கிழக்கில் நடந்து வரும் மோதல்கள் உலகளாவிய ஸ்திரத்தன்மையின் பலவீனமான நிலைக்கு பங்களிக்கின்றன. மேற்கத்திய நாடுகளின் ஈடுபாட்டுடன் இணைந்து மேற்கொள்ளபடும் இந்த பிராந்திய மோதல்கள் பெரிய அளவிலான தொழில்நுட்ப மோதலுக்கான சூழ்நிலையை உருவாக்குகின்றன என்றும் சலோமி பரிந்துரைக்கிறார். சலோமியின் முன்னறிவிப்புகள், 16-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரான நாஸ்ட்ராடாமஸின் புதிரான தீர்க்கதரிசனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகின்றன. “அழிவின் தீர்க்கதரிசி” என்று அழைக்கப்படும் நாஸ்ட்ராடாமஸ், நடக்கப்போகும் பேரழிவுகளை முன்னறே அறிவித்தது இன்று வரை ஆராய்ச்சியாளர்களையும் பொதுமக்களையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. கடந்த கால நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக அறிவிப்பதன் காரணமாக வாழும் நாஸ்ட்ராடாமஸ்” என அழைக்கப்படுகிறார் சலோமி. 2024-ம் ஆண்டில் மட்டும், எரிகற்கள் அச்சுறுத்தல் உட்பட தனது நான்கு கணிப்புகள் உண்மையாகிவிட்டதாக அவர் கூறுகிறார். உலகளாவிய மோதல்களின் வளர்ந்து வரும் தன்மையுடன் தொழில்நுட்ப முன்னேற்றங்களை இணைக்கும் அவரது திறன் அவரது கணிப்புகளுக்கு ஒரு சமகால பரிமாணத்தை சேர்க்கிறது. சலோம் கணித்தபடி எதிர்கால மோதல்கள் வழக்கமான ஆயுதங்களுக்குப் பதிலாக, சைபர்ஸ்பேஸ் மற்றும் தானியங்கி ஆயுதங்கள் மூலம் நடைபெறலாம். இந்த மாற்றம் உலகளாவிய புவிசார் அரசியலில் ஆழமான தாக்கங்களைக் கொண்டு வரும். மேலும் இன்றைய காலங்களில் தேசிய பாதுகாப்பு பற்றிய விவாதங்களில் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள், செயற்கை நுண்ணறிவு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு பாதிப்புகள் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன. சலோமின் கணிப்புகள் ஊகமாக இருந்தாலும், அவை தொழில்நுட்ப முன்னேற்றத்தால் ஏற்படும் சிக்கலான சவால்களை நமக்கு நினைவூட்டுகின்றன. “தொழில்நுட்பப் போரின்” சாத்தியம், போரில் இயந்திரங்களின் பங்கு, உலகளாவிய அமைப்புகளின் ஸ்திரத்தன்மை மற்றும் நிச்சயமற்ற எதிர்காலத்தை வழிநடத்தும் மனிதகுலத்தின் திறன் பற்றிய முக்கியமான கேள்விகளை இது எழுப்புகிறது. சலோமியின் முன்னறிவிப்புகள் நடக்கிறதோ இல்லையோ, மேம்பட்ட தொழில்நுட்பங்களின் எழுச்சி மற்றும் அதிகரித்து வரும் உலகளாவிய பதட்டங்கள் உடனடி கவனத்தை கோருகின்றன. உலகம் குறிப்பிடத்தக்க மாற்றத்தின் விளிம்பில் தத்தளித்துக்கொண்டிருக்கையில், ஒரேயொரு கேள்வி தான் கேட்கத் தோன்றுகிறது: நாளைய போர்களுக்கு மனிதகுலம் தயாராகிவிட்டதா? https://thinakkural.lk/article/314043
-
ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
பாகிஸ்தானிலும் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 Published By: VISHNU 25 DEC, 2024 | 12:08 AM (நெவில் அன்தனி) ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி எங்கெங்கு, என்னென்ன திகதிகளில் நடைபெறும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை செவ்வாய்க்கிழமை (24) உத்தியோகபூர்வமாக அறிவித்தது. பாகிஸ்தான் சம்பந்தப்பட்ட போட்டிகள் பாகிஸ்தானிலும் இந்தியா சம்பந்தப்பட்ட போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்திலும் நடத்தப்படும் எனவும் இப் போட்டிகளுக்கான வரவேற்பு நாடு என்ற உரிமையை பாகிஸ்தான் கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2017க்குப் பின்னர் மீண்டும் சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி சர்வதேச அரங்கில் அரங்கேற்றப்படவுள்ளது. இந்தியா, இலங்கை ஆகியவற்றுடன் கூட்டிணைந்து 1996 உலகக் கிண்ணப் போட்டியை நடத்திய பாகிஸ்தானில், 28 வருடங்கள் கழித்து முதல் தடவையாக ஐசிசி போட்டி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. 2017இல் நடத்தப்பட்ட சம்பியன்ஸ் கிண்ண போட்டி முறைமையே 2025இலும் பின்பற்றப்படவுள்ளது. சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் 8 அணிகள் இரண்டு குழுக்களாக வகுப்பட்டு முதல் சுற்ற லீக் முறையில் நடத்தப்படும். கடைசியாக ஐக்கிய இராச்சியத்தில் கியா ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற 2017 ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டியில் சம்பியனான பாகிஸ்தான், இரண்டாம் இடத்தைப் பெற்ற இந்தியா ஆகியவற்றுடன் நியூஸிலாந்து, பங்களாதேஷ் ஆகியன ஏ குழுவிலும் ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆபிரிக்கா ஆகியன பி குழுவிலும் இடம்பெறுகின்றன. இந்த இரண்டு குழுக்களிலும் லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். இந்தியா அரை இறுதிக்கு முன்னேறினால் அப் போட்டி துபாய் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெறும். அத்துடன் இறுதிப் போட்டியில் விளையாட இந்தியா தகுதிபெற்றால் அப் போட்டியும் துபாயிலேயே நடைபெறும். ஒருவேளை இந்தியா தகுதிபெறாவிட்டால் அப் போட்டிகள் பாகிஸ்தானில் அரங்கேற்றப்படும். இந்தியா சம்பந்தப்படாத போட்டிகள் யாவும் லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய இடங்களில் நடத்தப்படும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஆடவர் மற்றும் மகளிர் ஐசிசி கிரிக்கெட் போட்டிகள் யாவும் நடுநிலையான மைதானத்தில் நடத்தப்படும் என்பதை சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி செய்ததை அடுத்து ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு நடுநிலையான இடமாக ஐக்கிய அரபு இராச்சியம் தெரிவுசெய்யப்பட்டது. இந்தத் தீர்மானத்திற்கு அமைய அடுத்த வருடம் இந்தியாவில் நடைபெறவுள்ள மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி உட்பட 2027வரை இந்தியாவில் நடைபெறவுள்ள அனைத்து ஐசிசி கிரிக்கெட் போட்டிகளிலும் பாகிஸ்தான் பங்குபற்றினால் அதன் போட்டிகள் யாவும் நடுநிலையான மைதானத்தில் நடத்தப்படும். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான அரசியல் பதற்றம் நிலவுவதால் இருதரப்பு கிரிக்கெட் போட்டிகள் கடந்த பல்லாண்டுகளாக நிறுத்தப்பட்டுள்ளது. போட்டி அட்டவணை ஏ குழு பெப். 19: பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து (லாகூர்) பெப். 20 பங்களாதேஷ் எதிர் இந்தியா (துபாய்) பெப். 23: பாகிஸ்தான் எதிர் இந்தியா (துபாய்) பெப். 24: பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து (ராவல்பிண்டி) பெப். 27: பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ் (ராவல்பிண்டி) மார்ச் 2: நியூஸிலாந்து எதிர் இந்தியா (துபாய்) பி குழு பெப்: 21: ஆப்கானிஸ்தான் எதிர் தென் ஆபிரிக்கா (கராச்சி) பெப். 22: அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து (லாகூர்) பெப். 25: அவுஸ்திரேலியா எதிர் தென் ஆபிரிக்கா (ராவல்பிண்டி) பெப்; 26: ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து (லாகூர்) பெப். 28: ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா (லாகூர்) மார்ச் 1: தென் ஆபிரிக்கா எதிர் இங்கிலாந்து (கராச்சி) அரை இறுதிகள் மார்ச் 4: ஏ1 எதிர் பி2 (துபாய்) மார்ச் 5: பி1 எதிர் ஏ2 (லாகூர்) இறுதிப் போட்டி மார்ச் 9 லாகூர் (அல்லது துபாய்) https://www.virakesari.lk/article/202085
-
டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றதும் அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலகும் - நிபுணர்கள் தகவல்
25 DEC, 2024 | 11:30 AM அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். டிரம்ப் பதவியேற்ற அன்றைய தினமே அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் டிரம்பின் ஜனாதிபதி மாற்றகுழுவினர் ஈடுபட்டுள்ளனர். இது குறித்த கலந்துரையாடல்களில் கலந்துகொண்ட சுகாதார சட்ட நிபுணர்கள் இதனை தெரிவித்துள்ளனர். பதவியேற்ற அன்றே அல்லது அடுத்த சில நாட்களில் டிரம்ப் அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொள்ள திட்டமிட்டுள்ளார் என நம்பகதன்மை மிக்கவர்கள் தெரிவித்துள்ளனர் என வோசிங்டனின் ஜோர்ஜ்டவுன் பல்கலைகழக பேராசிரியர் லோரன்ஸ் கொஸ்டின் தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை இரண்டு நிபுணர்களை மேற்கோள்காட்டி முதலில் பினான்சியல் டைம்ஸ் தெரிவித்திருந்தது. ஐக்கிய நாடுகளின் சுகாதார அமைப்பினை டிரம்ப் நீண்டகாலமாக விமர்சித்து வருகின்ற நிலையிலேயே அமெரிக்காவை அந்த அமைப்பிலிருந்து விலக்கிக்கொள்வதற்கு அவர் தீர்மானித்துள்ளார். டிரம்பின் இந்த நடவடிக்கை அமெரிக்காவின் உலகளாவிய சுகாதார கொள்கையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் மேலும் தொற்றுநோய்களிற்கு எதிரான சர்வதேச சமூகத்தின் போராட்டத்திலிருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்தும். உலக சுகாதார ஸ்தாபனத்தை கடுமையாக விமர்சிப்பவர்களையே டிரம்ப் உயர் பதவிக்கு நியமித்துள்ளார். அமெரிக்காவின் சுகாதார மற்றும் மனித சேவைகள் திணைக்களத்தின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ரொபேர்ட் கென்னடி தடுப்பூசிகள் குறித்து சந்தேகங்களை வெளியிட்டு வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது. டிரம்ப் தனது முன்னைய பதவிக்காலத்தின் போது 2020 அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/202104
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
கஜகஸ்தானில் விமான விபத்து - பயணிகள் விமானம் விழுந்து நொருங்கியது 25 DEC, 2024 | 01:10 PM கஜகஸ்தானில் 75 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானமொன்று விழுந்து நொருங்கியுள்ளது. அக்டாவு நகரத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விமானத்தில் பயணித்த எவரும் உயிர்தப்பவில்லை என ஆரம்ப கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/202114
-
மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி; ஐநாவில் நடந்த முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உரை
மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி என்றும், தியானம் ஒவ்வொரு வீட்டுக்கும் செல்ல வேண்டும் என்றும் ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற முதல் உலக தியான தினத்தில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தெரிவித்துள்ளார். டிசம்பர் 21-ம் திகதி உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து முதல் உலக தியான தினம் இன்று உலகின் பல பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது. நியூயார்க்கவில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெற்ற உலக தியான தின கொண்டாட்டத்தின் தொடக்க அமர்வில் வாழும் கலை அமைப்பின் நிறுவனரும், ஆன்மிக குருவுமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், “இன்று தியானம் என்பது ஆடம்பரம் அல்ல, அது அத்தியாவசியமான ஒன்று. மனநலனுக்கு தியானம் மிகச் சிறந்த கருவி. பல் சுகாதாரம் (Dental Health) இருப்பது போல் மனதுக்கான சுகாதாரமும் (Mental Health) உள்ளது. தியானத்தில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியை உணர்கிறார்கள். அவர்கள் உலகத்தை மகிழ்ச்சியாக வைக்கிறார்கள். மன ரீதியிலான பிரச்சினை என்பது உலக மக்கள் தொகையில் மிகப் பெரிய எண்ணிக்கையில் இருக்கிறது. ஒருபுறம் தீவிர பதட்டம் மறுபுறம் தீவிர மனச்சோர்வு என மனநல நெருக்கடி நம் மக்களைப் பெரிதும் பாதித்துள்ளது. ஒருபுறம், நமது இளைஞர்கள் ஆக்ரோஷமான நடத்தைக்கு உள்ளாகிறார்கள். மறுபுறம், மனச்சோர்வுடன் உள்ளார்கள். இதுபோன்று இரண்டு எல்லைகளை நோக்கி இல்லாமல் நாம் அதிக மையத்தில் இருக்க தியானம் உதவுகிறது. எந்த ஒரு நாகரிக சமுதாயத்திற்கும் உணர்திறனுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இருப்பது முக்கியம். நாம் நம்மைப் பற்றியும், சக உயிரினங்களைப் பற்றியும், சுற்றுச்சூழலைப் பற்றியும் உணர்திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். தியானம் நமது சுற்றுச்சூழலைப் பற்றி அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. மேலும், நம்மைச் சுற்றியுள்ள மக்களின் உணர்வுகளைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தனக்கும் பிறருக்கும் தீங்கு விளைவிக்கும் சமூக விரோத செயல்களில் இருந்து விலகி இருக்க தியானம் நமக்கு உதவுகிறது. எனவே, இன்று தியானம் மிகவும் அவசியமானது. ஆடம்பரமானது அல்ல. தியானம் செய்வதற்காக மக்கள் மலைகளைத் தேடியும் கடற்கரைகளைத் தேடியும் சென்றார்கள். ஆனால், இன்று தியானம் ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் செல்ல வேண்டும். ஒவ்வொரு வீட்டுக்கும் தியானம் என்ற இயக்கத்தை கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 26-ம் தேதி இந்திய அரசு அறிவித்தது. ஒரு சதவீத மக்கள் அமைதியற்ற நிலையில் இருந்தால் அவர்கள் மற்ற அனைவரையும் அமைதியற்றவர்களாக மாற்றுவார்கள். அதேபோல், ஒரு சதவீத மக்கள் தியானத்தில் ஈடுபட்டு உணர்திறனுடனும் உணர்வுப்பூர்வமாகவும் இயங்கினால் அதன் பலன்களை நம்மால் கணக்கிடவே முடியாது. சுற்றுச்சூழல் மேம்படும், தொடர்புகள் மேம்படும் இன்னும் பல நூறு நன்மைகள் கிடைக்கும். எல்லையில் நிற்கும் ராணுவ வீரராக இருந்தாலும், வீடுகளில் நடக்கும் குடும்ப வன்முறையாக இருந்தாலும் அனைத்து இடங்களிலும் சூழல் மேம்படும். சமரச தீர்வுக்கான மேஜை அருகே அமர்பவர்கள், முதலில் தியானத்தில் ஈடுபட்டால் மிகப் பெரிய நன்மைகள் விளையும். உடல் சார்ந்த பிரச்சினைகள் காரணமாக சிலரால் யோகா செய்ய முடியாமல் போகலாம். ஆனால், தியானம் எங்கேயும் எப்போதும் எல்லோராலும் மேற்கொள்ள முடியும். மன ரீதியாக கட்டுப்பாடுகளை வைத்திருப்பவர்களுக்கு சர்வதேச தியான தினம் மிகப் பெரிய கதவை திறந்து வைக்கிறது. தியானத்துக்கு நாடு, இனம், வயது என எந்த எல்லையும் இல்லை. அனைத்து எல்லைகளையும் கடந்து செல்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது. எனவே, தியானம் பல வழிகளில் மிக மிக பயனுள்ளது. தியானம் செய்வது கடினம் என பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால், தியானம் மிக எளிதானது. அது நம்மை ஆசுவாசப்படுத்துகிறது. முயற்சி இல்லாமல் செய்யக்கூடியது. மனபதற்றம், பயம், தனிமை உணர்வு போன்றவற்றில் இருந்து நம்மை விடுவிக்கிறது” என்று ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குறிப்பிட்டார். உலக தியான தினமான இன்று, தியானத்தை தங்களின் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக மாற்றுமாறு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “இன்று, உலக தியான தினத்தில், தியானத்தை தங்கள் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக ஆக்கி, அதன் மாற்றும் திறனை அனுபவிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன். தியானம் என்பது ஒருவரின் வாழ்க்கையிலும், நமது சமூகம் மற்றும் பூமிக் கிரகத்திற்கும் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டுவருவதற்கான ஒரு சக்திவாய்ந்த வழியாகும். தொழில்நுட்ப யுகத்தில், செயலிகள் மற்றும் வழிகாட்டும் காணொலிகள் தியானத்தை நமது அன்றாட நடவடிக்கைகளில் இணைக்க உதவும் மதிப்புமிக்க கருவிகளாக இருக்கும்’’ என தெரிவித்துள்ளார். உலக தியான தினத்தை முன்னிட்டு சத்குரு ஜக்கி வாசுதேவ் விடுத்துள்ள செய்தியில், “மன உறுதி, சமநிலை மற்றும் ஆரோக்கியம் ஆகியவை இன்று மனிதகுலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்று. டிசம்பர் 21-ம் தேதியை உலக தியான தினமாக ஐக்கிய நாடுகள் அறிவித்தது குறிப்பிடத்தக்கது. இது பாராட்டுக்குரியது. ஐக்கிய நாடுகள் சபை, தியானத்தை மன ஆரோக்கியம், உணர்ச்சி நிலைத்தன்மை மற்றும் சமநிலையை உருவாக்குவதற்கான ஒரு கருவியாக அங்கீகரித்துள்ளது. வல்லுநர்கள் அனைவரும் ஒரு மனநல தொற்றுநோய் உருவாகிறது என கணித்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இது மிகவும் முக்கியமான படியாகும். மனித மனம் மிகப்பெரிய அதிசயம். துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான மக்கள் அதை ஒரு துன்பகரமான உற்பத்தி இயந்திரமாக அனுபவிக்கிறார்கள். அது தொடர்ந்து அவர்களுக்கு எதிராகத் திரும்புகிறது. தியானம் என்பது மனம் அதிசயமான முறையில் செயல்படுவதற்கு ஏற்ப மாற்றும் செயல்முறையாகும்” என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/314021
-
நத்தார் விசேட நள்ளிரவு ஆராதனை நிகழ்வுகள்
Published By: DIGITAL DESK 3 25 DEC, 2024 | 01:48 PM மனிதத்தினை உலகுக்கு வெளிப்படுத்திய இயேசு பிரானின் பிறப்பைக் கொண்டாடப்படும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடெங்கும் உள்ள தேவாலயங்களில் விசேட வழிபாடுகள், ஆராதனைகள் நடைபெற்றன. யாழ்ப்பாணம் யாழ். மறை மாவட்டத்துக்கான பிரதான நத்தார் நள்ளிரவு திருப்பலி யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது. மட்டக்களப்பு சீயோன் தேவாலயம் மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள சீயோன் தேவாலயத்திலும் கிறிஸ்மஸ் தின ஆராதனைகள் தேவாலயத்தின் தலைமை போதகர் ரொஷான் மகேசன் தலைமையில் நடைபெற்றன. இயேசு பாலகனின் பிறப்பை பற்றிய பாடல்கள் பாடப்பட்டு இங்கு ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதன்போது கிறிஸ்மஸ் தின கலாசார நிகழ்வுகள் நடைபெற்றன. கிறிஸ்தவ மாணவர்களுக்கு இயேசு பாலகனின் பிறப்பின் மகத்துவம் பற்றிய ஆசி உரைகளும் பிரதான போதகரால் வழங்கப்பட்டன. மட்டக்களப்பு - புளியந்தீவு புனித மரியாள் பேராலயம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் வழிபாடுகள் மற்றும் ஆராதனைகள் மாவட்டத்தின் முதல் பேராலயமான புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சிறப்பாக நடைபெற்றன. மட்டக்களப்பு தேற்றாத்தீவு மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதா திருத்தலத்தில் நத்தார் நள்ளிரவு விசேட ஆராதனை நடைபெற்றன. இந்நிகழ்வுகள் ஆலய அருட்தந்தை தேவதாஸன் அடிகளார் தலைமையில் நடத்தப்பட்டதுடன், திருப்பலியும் ஒப்பு கொடுக்கப்பட்டது. இந்த ஆராதனையில் அப்பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புத்தளம் புத்தளம் அன்னை ஷாந்த மரியாள் தேவாலயத்தில் இன்று நள்ளிரவு 12 மணியளவில் கிறிஸ்மஸ் ஆராதனைகள் நடைபெற்றன. இதன்போது ஆலய அருட்தந்தை நிலங்க நிர்மானின் தலைமையில் திருப்பலி கூட்டாக ஒப்புகொடுக்கப்பட்டது. அருட்சகோதரிகள், ஆயர்கள், கிறிஸ்தவ மத குருமார் மற்றும் கிறிஸ்த மக்கள் பெருந்திரளானோர் இத்திருப்பலியில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/202102
-
வவுனியா சிறைச்சாலையில் பொதுமன்னிப்பில் 8 கைதிகள் விடுதலை!
25 DEC, 2024 | 11:07 AM நத்தார் பண்டிகையை முன்னிட்டு வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் இருந்து 8 கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். இன்று நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் சிறு குற்றங்களுக்காக தண்டனை பெற்றிருந்த 389 பேர் நாடளாவிய ரீதியில் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்திருந்தது. அந்தவகையில் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் சிறுகுற்றங்களுக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த 8 பேர் இன்று புதன்கிழமை (25) விடுவிக்கப்பட்டனர். வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையின் பொறுப்பதிகாரி புத்திக பெரெரா தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது. https://www.virakesari.lk/article/202096