Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவின் உண்டியல்கள் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் சென்னை திருப்போரூர் முருகன் கோவில் உண்டியலில் விழுந்த ஐபோனை திரும்பப் பெற முடியாமல் தினேஷ் என்பவர் தவிக்கிறார். 'உண்டியலில் விழுந்த ஐபோன் முருகனுக்கே சொந்தம்' என்று அவரிடம் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். செல்போனில் உள்ள தரவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுமாறு அதிகாரிகள் கூறியதாக தினேஷ் கூறுகிறார். ஐபோனை உரியவரிடம் ஒப்படைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகளை ஆராய்வதாக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி? அறநிலையத் துறை அதிகாரிகள் சொல்வது என்ன? '36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள் கட்டடக்கலை: தமிழ்நாட்டின் பழங்கால கோவில்களில் துல்லியமாக மூலவர் சிலை மீது விழும் சூரிய ஒளி சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் கிரிக்கெட்: தீட்சிதர்கள் - விசிகவினர் இடையே என்ன நடந்தது? சென்னை அம்பத்தூர் விநாயகபுரத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தில் (சிஎம்டிஏ) பணிபுரிந்து வருகிறார். இவர்தான், திருப்போரூர் கந்தசுவாமி கோவில் உண்டியலில் ஐபோனை தவறவிட்டதாகக் கூறி தற்போது அதனை திரும்பப் பெற முயன்று வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "திருப்போரூர் முருகன் கோவிலுக்குச் சென்றிருந்த போது, என்னுடைய ஐபோன் (13 புரோ மேக்ஸ்) தவறி உண்டியலில் விழுந்துவிட்டது. இதுகுறித்து கோவில் செயல் அலுவலருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன். டிசம்பர் 19-ஆம் தேதியன்று உண்டியல் திறக்கும்போது தகவல் தெரிவிப்பதாக, கோவில் நிர்வாகம் கூறியது. அதன்படி உண்டியல் திறக்கப்பட்ட போது ஐபோன் கிடைத்தாலும் கூட, அது என்னிடம் ஒப்படைக்கப்படவில்லை. மாறாக, அறநிலையத்துறை விதிகளின்படி கோவில் உண்டியலில் எது விழுந்தாலும் அது சுவாமிக்கே சொந்தம' என அதிகாரிகள் கூறிவிட்டனர்" என்றார். உண்டியலில் ஐபோன் விழுந்தது எப்படி? "அன்றைய தினம் மதிய நேரத்தில் சாமி கும்பிடுவதற்காக கந்தசாமி கோவிலுக்கு சென்றேன். அப்போது தவறுதலாக உண்டியலில் ஐபோன் விழுந்துவிட்டது" என்கிறார் தினேஷ். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அதிகாரிகள் 'உண்டியலில் எது விழுந்தாலும் அது சுவாமிக்கே சொந்தம்' என்று கூறிவிட்டதால் நான் வீட்டிற்குச் சென்றுவிட்டேன். அதன் பிறகு அதிகாரிகள் அவர்களுக்குள் ஆலோசித்துவிட்டு, 'ஐபோனில் உள்ள தரவுகளை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள்' என்று என்னை தொடர்பு கொண்டு கூறினர். ஆனால், என்னால் மீண்டும் கோவிலுக்குச் செல்ல முடியாததால் ஐபோனில் உள்ள தரவுகளை நான் எடுக்கவில்லை." என்றார். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் தகராறு - விவாகரத்து கோரிய தம்பதியரை சேர்த்துவைத்த நீதிமன்றம்7 மணி நேரங்களுக்கு முன்னர் அம்பேத்கர், காங்கிரஸ் இடையிலான உறவு உண்மையில் எப்படி இருந்தது?6 மணி நேரங்களுக்கு முன்னர் கோவில் செயல் அலுவலர் சொல்வது என்ன? "கோவிலின் ராஜ கோபுரத்துக்கு அருகில் ஆறு அடி உயரத்தில் உண்டியல் உள்ளது. அந்த உண்டியலில் ஐபோன் தவறி, உள்ளே விழுவதற்கு வாய்ப்பே இல்லை" என்கிறார் திருப்போரூர் கந்தசாமி கோவிலின் செயல் அலுவலர் குமரவேல். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கோவிலுக்கு ஆகஸ்ட் மாதம் சாமி கும்பிடுவதற்காக தினேஷ் வந்துள்ளார். ஆனால், ஐபோனை காணவில்லை என செப்டம்பர் மாதம் தான் அறநிலையத் துறைக்குக் அவர் கடிதம் கொடுத்தார்" என்கிறார். அறநிலையத் துறைக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'உண்டியலில் செல்போன் விழுந்திருக்கலாம். நீங்கள் உண்டியலை திறக்கும் போது சொல்லுங்கள். வந்து பார்க்கிறேன்' என்று தினேஷ் குறிப்பிட்டிருந்தார். "உண்டியல் திறக்கும்போது பொதுமக்களுக்குத் தகவல் தெரிவிப்போம். அதன்படியே அவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது" என்கிறார் குமரவேல். பாகிஸ்தான் என்ன ஏவுகணையை உருவாக்கியுள்ளது? அமெரிக்கா தனக்கு அச்சுறுத்தல் என கூறுவது ஏன்?6 மணி நேரங்களுக்கு முன்னர் 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, திருப்போரூர் முருகன் கோவிலில் சாமி கும்பிட வந்தபோது, தனது ஐபோன் தவறி உண்டியலில் விழுந்துவிட்டதாக கோவில் செயல் அலுவலருக்கு தினேஷ் எழுதிய கடிதம்.. `கடவுளுக்கே சொந்தம்' கடந்த வியாழன் அன்று திருப்போரூர் முருகன் கோவிலின் உண்டியல்களை இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ராஜலட்சுமி, கோவில் செயல் அலுவலர் குமரவேல் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டது. அப்போது, 52 லட்ச ரூபாய் ரொக்கம் 289 கிராம் தங்கம், 6,920 கிராம் வெள்ளி ஆகியவற்றுடன் ஐபோன் ஒன்றும் கண்டெடுக்கப்பட்டதாக, அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "தினேஷ் கடந்த 19-ஆம் தேதி கோவிலுக்கு வரும் போதே புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பவரை தன்னுடன் அழைத்து வந்திருந்தார். ராஜகோபுரம் அருகில் உள்ள உண்டியலில் ஐபோன் கிடைத்தது. அந்த ஐபோனை கொடுக்குமாறு தினேஷ் கேட்டார். 'அப்படியெல்லாம் உடனே கொடுக்க முடியாது. உங்கள் ஐபோன் என்பதற்கான விவரங்களை ஆதாரங்களுடன் எழுத்துப்பூர்வமாக கொடுங்கள். உயர் அதிகாரிகளிடம் விவாதித்துவிட்டு பதில் சொல்கிறோம்' என்று நாங்கள் கூறினோம்" என்கிறார் கோவில் செயல் அலுவலர் குமரவேல். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?2 மணி நேரங்களுக்கு முன்னர் மோசமான ஃபார்மால் தவிக்கும் கோலி: சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து பாடம் கற்பாரா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விதிகள் என்ன சொல்கின்றன? "தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை விதிகளின்படி, காணிக்கையாக விழுந்த பொருள்கள் அனைத்தும் கோவிலின் கட்டுப்பாட்டில் இருக்கும்" என்று கூறும் குமரவேல், "உண்டியலில் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் போடலாம். அதன் பிறகு. அந்த பொருள் கோவிலுக்கு சொந்தமானதாகவே கருதப்படும். உண்டியலில் காணிக்கையாக வரும் பொருட்கள் அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும். அந்த ஐபோன் அவருடையது தானா என்பதற்கான ஆதாரங்களை எழுத்துப்பூர்வமாக கேட்டுள்ளோம்" என்கிறார். "இதற்கு முன்பு இப்படியொரு சம்பவத்தைக் கேள்விப்பட்டதில்லை. எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கு சிறப்பு விதிவிலக்காக உரியவர்களிடம் திருப்பி ஒப்படைக்கலாமா என்பது குறித்து உயர் அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்" எனக் கூறுகிறார் குமரவேல். ஆறடி உயர உண்டியலில் ஐபோன் தவறி விழுவதற்கு வாய்ப்பே இல்லை என்று கோவில் செயல் அலுவலர் கூறியது பற்றி தினேஷிடம் மீண்டும் தொடர்பு கொண்டு கேட்டபோது, "தவறுதலாக உள்ளே விழுந்துவிட்டது" என்று மட்டும் பதில் அளித்தார். மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க அவர் மறுத்துவிட்டார். தமிழ்நாடு அமைச்சர் கூறியது என்ன? ஐபோன் விவகாரம் தொடர்பாக திருவள்ளூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, "அதுகுறித்து தீர விசாரித்த பிறகு முடிவுக்கு வருவோம்" என்றார். "உண்டியலில் எதாவது பொருள் விழுந்துவிட்டால் அது சுவாமியின் கணக்கில் வரவு வைப்பது வழக்கம். இதற்கு சட்ட ரீதியாக நிவாரணம் கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆராயப்படும்" என்றார் சேகர்பாபு. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yv4ezz1kyo
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES/AFP கட்டுரை தகவல் எழுதியவர், எஸ்தர் கஹூம்பி பதவி, பிபிசி செய்திகள் 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க நீதித்துறை அதானி குழுமத்தின் மீது அண்மையில் முறைகேடு புகார்களை முன்வைத்தது. அதனைத் தொடர்ந்து கென்ய அரசு அதானி குழுமத்துடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவித்தது. ஆனால் அதற்கு முன்பாகவே, இந்த ஆண்டு ஜூலை மாதம் கென்ய மாணவர் ஒருவர் கென்ய அரசுக்கு அதானி குழுமம் வழங்கிய ஒப்பந்த முன்மொழிவு தொடர்பான தகவல்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். இது அங்கே பெரும் பேசுபொருளாக மாறியது. கென்யாவைச் சேர்ந்த, தொழில்துறை தொடர்பாக படிக்கும் மாணவர் நெல்சன் அமென்யா தான் அந்த ஆவணங்களை வெளியே கசியவிட்டது. யார் அவர்? இதனால் ஏற்பட்ட சர்ச்சை என்ன? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு. யார் அந்த மாணவர்? தனியார் நிறுவனங்களுக்கும் அரசிற்கும் இடையே கையெழுத்தாகும் ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுக்கும் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவராக இருக்கிறார் நெல்சன் அமென்யா. கென்யாவின் சமீபத்திய வரலாறு. ஊழல் நடவடிக்கைகளால் உருவான பெரியபெரிய ஒப்பந்தங்களால் நிறைந்துள்ளது. இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பதைத் தடுக்க சட்டங்கள் இருந்தாலும், தொடர்ந்து இத்தகைய ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறதா என்ற சந்தேகம் நிலவுகிறது. பிரான்ஸில் தற்போது எம்.பி.ஏ. படித்துக் கொண்டிருக்கும் 30 வயதான அமென்யா, இந்திய பன்னாட்டு நிறுவனமான அதானி குழுமத்திற்கும் கென்ய அரசுக்கும் இடையே முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தம் என்று சில ஆவணங்களை அவர் ஜூலை மாதம் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். அதானி மீதான மோசடி வழக்கு: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை பாதிக்குமா? எப்படி? அதானியை அமெரிக்கா கைது செய்ய முடியுமா? மற்ற நாடுகளிலும் அதானி குழுமத்திற்கு சிக்கல் வருமா? அதானி ரூ.1750 கோடி லஞ்சம் கொடுத்தாரா? அமெரிக்கா குற்றச்சாட்டுகளை பதிவு செய்தது ஏன்? - முழு விவரம் இது அந்த நாட்டின் மிகப்பெரிய, அந்த பிராந்தியத்தின் மிகப்பெரிய விமான நிலையமான ஜோமோ கென்யாட்டா சர்வதேச விமான நிலையம் தொடர்புடையது. மறுசீரமைப்புப் பணிகளுக்காக பல காலமாக காத்துக் கொண்டிருக்கிறது அந்த விமான நிலையம். "இதனை முதன்முறையாக பார்த்த போது, மற்றொரு அரசாங்க ஒப்பந்தம் என்று தான் நினைத்தேன். அந்த விவகாரத்தின் தீவிரம் எனக்கு தெரியவில்லை," என்று பிபிசியிடம் தெரிவித்தார் அமென்யா. ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவருடைய பிம்பம் உயர்ந்து வருகிறது. அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு ஜோமோ விமான நிலையத்தை புதுப்பித்து, நிர்வாகம் செய்வதற்கான குத்தகை ஒப்பந்த முன்மொழிவு அது. 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தை அதானி குழுமம் முன்மொழிந்திருந்தது. தொடர்ந்து அந்த ஆவணங்களை பார்த்துக் கொண்டிருந்த போது, இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், அது கென்யாவின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். அதேநேரத்தில் இந்திய பன்னாட்டு நிறுவனமே அனைத்துவிதமான லாபத்தையும் சம்பாதிக்கும் என்றும் அவர் உணர்ந்திருந்தார். இது ஒரு நியாயமான முன்மொழிவாக அவருக்கு தெரியவில்லை. அவர் அந்த ஆவணங்களில் குறிப்பிட்டிருந்ததை படித்த போது, அதிகமாக முதலீடு செய்தாலும் கூட, கென்யாவால் அதில் நிதிசார் லாபம் ஈட்ட முடியாத வகையில் அது இருந்ததாக கூறுகிறார் அமென்யா. அந்த ஆவணங்களின் உண்மைத்தன்மை குறித்து பேசிய போது, அது நிச்சயமாக உண்மையானது என்று கூற தனக்கு காரணங்கள் இருப்பதாக அவர் தெரிவிக்கிறார். "இந்த ஆவணங்கள் அரசின் அதிகாரப்பூர்வ துறைகளில் இருந்து எனக்கு கிடைத்தன," என்று அவர் தெரிவித்தார். கந்தஹார் விமான கடத்தல் - அந்த மோசமான 8 நாட்களால் பல ஆண்டுகளாக தொடரும் ஒரு மாற்றம் என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் இரான்: 'பாலியல் துன்புறுத்தல்கள் இங்கு சகஜம்', கட்டாய ஹிஜாபுக்கு எதிராக சிறை சென்ற பெண்ணின் கதை8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர் நான் கொஞ்சம் பயந்தேன் - அமென்யா அதானி குழுமம் இஸ்ரேல், அமீரகம், ஃபிரான்ஸ், தன்சானியா, ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் போன்ற நாடுகளில் , உள் கட்டுமானம், சுரங்கம் மற்றும் எரிசக்தி துறைகளில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதன் நிறுவனர் கௌதம் அதானி இந்தியாவின் முக்கிய தொழிலதிபராக திகழ்கிறார். இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நெருக்கமானவராகவும் அவர் அறியப்படுகிறார். தன்னுடைய முதலீட்டை அதானி குழுமம் 30 ஆண்டுகளில் ஈட்ட முடியவில்லை என்றால், அந்த இழப்பை கென்யா ஈடுகட்ட வேண்டும் என்கிற வகையில் ஒப்பந்தம் இருப்பதை அமென்யா கண்டறிந்தார். "அதிபர், கென்ய விமானத்துறை, அமைச்சர் போன்றோர் மக்களின் நம்பிக்கைக்கு எதிராக செயல்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் மக்களை ஏமாற்றிவிட்டனர்," என்று அவர் குற்றம்சாட்டினார். தனது கையில் உரிய ஆவணங்கள் இருந்த போதிலும் அடுத்து செய்வதறியாது தடுமாறினார் அமென்யா. அவரின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்தது. கென்யாவில் ஊழலுக்கு எதிரான செயற்பாட்டாளர்கள் பலரும் கடந்த காலத்தில் தாக்கப்பட்டுள்ளனர். சிலர் கொல்லப்பட்டனர். "நான் கொஞ்சம் பயந்தேன். அடுத்து என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. என்னுடைய பணியை, வாழ்க்கையை நான் பணயம் வைக்கிறேன். நான் அப்படி செய்ய வேண்டும்?" என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டதாக அவர் கூறுகிறார். இருப்பினும், இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது சரியல்ல என்று உணர்ந்திருக்கிறார். "கோழைகள் தான் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று உங்களுக்கு தெரியுமே" என்கிறார் அவர். அவருக்கு அனுப்பப்பட்ட ஆவணங்களை அவர் முழுமையாக ஆராய்ந்த பிறகு, அமென்யா அந்த ஆவணங்களை அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவேற்றினார். அது கென்யாவில் பெரும் போராட்டத்திற்கு வழிவகை செய்தது. ஜோமோ விமான நிலைய ஊழியர்கள், அந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 'வ.உ.சிக்காக நடந்த எழுச்சி குறித்த எந்த நினைவும் இப்போது இல்லை' சாகித்ய அகாடமி விருது வென்ற வேங்கடாசலபதி6 மணி நேரங்களுக்கு முன்னர் 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 30 ஆண்டுகள் ஜோமோ சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தி, நிர்வகிக்க அதானி குழுமம் திட்டமிட்டிருந்தது மக்கள் கருத்துக்கேட்புக் கூட்டம் நடைபெறவில்லை "இதனை நான் என் நாட்டிற்கு செய்யும் கடமையாக நினைத்தேன். நான் என் நாட்டில் இருந்து தொலை தூரத்தில் இருந்தாலும் கூட, என் நாட்டிற்காக நான் ஆற்ற வேண்டிய கடமைகள் உள்ளன. நான் கென்யா முன்னேறிய நாடாக, ஊழலற்ற நாடாக, தொழில்மயமாக்கப்பட்ட நாடாக இருப்பதை நான் பார்க்க வேண்டும்" என்று பிபிசியிடம் கூறினார் அமென்யா. அடுத்து என்னவெல்லாம் நடக்கப் போகிறது என்பதற்கான சமிக்ஞை தானா இந்த விமான நிலைய ஒப்பந்தம் என்று தான் கவலைப்பட்டதாக அவர் தெரிவிக்கிறார். அதானி குழுமத்தின் ஒப்பந்தமானது வழக்கத்திற்கு மாறான விதிமுறைகளைக் கொண்டிருந்தது. வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருந்ததால் தான் அது ஒரு எச்சரிக்கையாக மாறியது. அதில் கென்யாவின் சட்டங்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட்டிருந்தது என்றும் குற்றம் சாட்டுகிறார் அமென்யா. "இந்த அதிகாரிகள், அதானி குழுமம் தொடர்பாக முழுமையாக விசாரணை மேற்கொள்ளவில்லை. கொள்முதல் செயல்முறைகளையும் அவர்கள் முறையாக பின்பற்றவில்லை." வரி செலுத்துவோரின் பணம் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வகை செய்யும். பொது கருத்துக் கேட்பு கூட்டம் உட்பட சட்ட தேவைகளை, இந்த விவகாரத்தில் தவிர்த்துவிடலாம் என்று சில அரசு அதிகாரிகள் நம்பியதாகவும் குற்றம்சாட்டுகிறார் அவர். கென்ய விமான நிலைய ஆணையம் ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில் முன்மொழியப்பட்ட திட்டம் தொடர்பாக, பங்குதாரர்களுடன் ஆலோசிக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தது. "இது ஏப்ரல் மாதத்தில் நடந்தது. ஜூலை மாதத்தில் நான் இந்த ஆவணங்களை வெளியிட்டேன். அந்த திட்டம் தொடர்பாக எந்த பொது கருத்துக் கேட்புக் கூட்டமும் நடைபெறவில்லை. அப்போது அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக ஒரே ஒரு மாதம் மட்டுமே இடைவெளி இருந்தது," என்கிறார் அமென்யா. "நான் இந்த ஆவணங்களை வெளியிட்டவுடன், அவசர அவசரமாக போலியாக மக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் ஒன்றை நடத்த முயன்றனர். அவர்கள் கென்ய விமான நிலைய ஆணையத்தின் ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களை அழைத்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர்," என்றார் அவர். அதானி குழுமம் கூறியது என்ன? கென்யாவில் பல அரசு அதிகாரிகளும், அரசாங்கத்தின் பல்வேறு துறைகளும், இந்த ஒப்பந்த செயல்முறைகளில் முறைகேடு ஏதும் நடக்கவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை மறுக்கின்றன. அதானி குழுமத்தினரும் அமென்யாவின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று கூறுகிறது. "கென்யாவில் அரசு மற்றும் தனியார் துறை இடையிலான ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றியே திட்டம் முன்மொழியப்பட்டது. உலக தரத்திலான விமான நிலையத்தை உருவாக்குவதும், பல வேலை வாய்ப்புகளை உருவாக்கி கென்ய பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்துவதுமே அதானி குழுமத்தின் நோக்கம்" என்று பிபிசியிடம் அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஆலோசனைகள் ஒப்பந்தமாக இறுதி வடிவம் பெறவில்லை என்பதால் அங்கே ஒப்பந்தம் ஏதும் கையெழுத்திடப்படவில்லை என்று அதானி குழுமம் கூறுகிறது. எரிசக்தி தொடர்பான மற்றொரு முன்மொழிவும் ஆலோசனை கட்டத்தில் தான் இருக்கிறது என்று நிறுவனம் கூறுகிறது. "குழுமத்தின் செயல்பாடுகள் மற்றும் முன்மொழிவுகளில் கென்ய சட்டங்களை மீறியதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முழுமையாக நிராகரிக்கிறோம்," என்று அதானி குழுமம் கூறியது. இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில், "எங்களின் ஒவ்வொரு திட்டத்தையும், இணக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களை முழுமையாக பின்பற்றி அர்பணிப்புடன் நிர்வகிக்கின்றோம்," என்று குறிப்பிடப்பட்டுள்ளது . 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு5 மணி நேரங்களுக்கு முன்னர் கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எந்த சட்ட நடைமுறைகளையும் மீறவில்லை என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறது அதானி குழுமம் அமெரிக்காவின் பங்கு ஆனால் தன்னுடைய நிலைப்பாட்டை கென்ய அரசு மாற்றிக் கொள்வதற்கு அமென்யா மட்டும் காரணமில்லை. அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்த பிறகே கென்யா நடவடிக்கையைத் துவங்கியது. அதானி குழுமத்தின் பிரதிநிதிகள் அமெரிக்க அதிகாரிகள்முன் வைத்த குற்றச்சாட்டை ஆதாரமற்றவை என்று கூறி நிராகரித்தனர். கடந்த நவம்பர் மாதம், கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, அதானி குழுமத்துடனான இரண்டு திட்டங்களும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். நாடாளுமன்றத்தில் பேசிய அவர், "முறைகேடு தொடர்பான மறுக்கமுடியாத ஆதாரங்கள் அல்லது நம்பிக்கைக்குரிய தகவல்கள் இருக்கின்ற போது, நான் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்கமாட்டேன்," என்று ரூட்டோ கூறினார். விசாரணை முகமைகள் மற்றும் நட்பு நாடுகள் வழங்கிய புதிய தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு எட்டப்பட்டதாக ரூட்டோ அறிவித்ததை கென்ய மக்கள் கொண்டாடினார்கள். "இந்த அறிவிப்பு வந்த போது நான் வகுப்பில் இருந்தேன். இதை என்னால் நம்பவே முடியவில்லை," என்று அமென்யா கூறினார். "எனக்கு அழுகையே வந்துவிட்டது. நான் அவ்வளவு மகிழ்ச்சி அடைந்தேன்" என்று அவர் கூறினார். அவரை ஒரு ஹீரோவாக உணரவில்லை என்று கூறுகிறார். அவருக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பல குறுஞ்செய்திகள் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து குவிந்தன. இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?18 டிசம்பர் 2024 ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிகாரிகள் அதானி குழுமம் 250 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தது அமென்யா என்ன செய்கிறார்? வகுப்பு முடிந்து நாற்பது நிமிடங்கள் கழித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "அடியோஸ் அதானி" என்ற புகழ்பெற்ற பதிவை பதிந்தார் அமென்யா. "அது ஒரு முக்கியமான தருணம்… நான் செய்த பணிகளுக்கு பலன் கிட்டியது" பல தனிப்பட்ட ரீதியிலான அழுத்தங்களை பல மாதங்கள் எதிர்கொண்ட பிறகே இந்த வெற்றியை உணர்ந்தேன். அதானியின் விமான நிலைய ஒப்பந்த ஆவணங்களை வெளியிட்ட பிறகு அதானி குழுமமும் கென்ய அரசியல்வாதி ஒருவரும் அமென்யா மீது மானநஷ்ட வழக்கை தொடுத்தனர். தொடர்ந்து இந்த தளத்தில் இயங்குவதா என்ற கேள்வியை அவருக்குள் அது எழுப்பியது. "அரசாங்கத்திடம் இருந்து ஒரு சிலர் என்னிடம் வந்தனர். அவர்கள் எனக்கு பணம் தரவும் முன்வந்தனர். ஆனால் அவர்கள் என்னிடம் வந்து, இந்த பணத்தை வாங்கிக் கொண்டு அரசாங்கத்திற்கு எதிராக போராடுவதை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்," என்று நினைவு கூறினார் அமென்யா. அதை நான் செய்திருந்தால் அது மிகப்பெரிய தவறாக இருந்திருக்கும். அது கென்ய மக்களை ஏமாற்றும் செயல் என்றார். "விமான நிலையம் தரம் உயர்த்தப்படுவதை தடுத்து நிறுத்தியவர்களை அவர்கள் கொண்டாடுவதை நான் பார்த்தேன். அவர்கள் ஹீரோக்களா? உங்கள் நாட்டில் விமான நிலையம் வர இருப்பதை தடுப்பதால் உங்களுக்கு என்ன கிடைக்கப் போகிறது?" என்று டிசம்பர் மாதம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ கூறினார். "அது எப்படி கட்டப்படும் என்பது பற்றி உங்களுக்கு ஒன்றும் தெரியாது. இந்த விமான நிலையத்தில் கால் வைக்காதவர்கள் தான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களுக்கு எதையாவது எதிர்க்க வேண்டும்," என்றும் அவர் கூறினார். மற்றொரு புறம், அமென்யா இன்னும் மான நஷ்ட வழக்குகளை எதிர் கொண்டு வருகிறார். சட்ட உதவிகளுக்காக அவர் நிதி திரட்டிவருகிறார். கென்யாவில் அவருக்கு எதிர்காலம் இருக்குமா என்பது நிச்சயமற்றது என்றும் அவர் கூறினார். "உளவுத்துறைகளிடம் இருந்தும் அச்சுறுத்தல்கள் வந்தன. நான் செய்தது தொடர்பாக பலர் அங்கே கோபத்துடன் உள்ளனர் என்பதால் கென்ய மக்கள் நான் மீண்டும் அங்கே வர வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்," என்று அமென்யா தெரிவிக்கிறார். நியாயமான செயலுக்காக என்ன விலை கொடுக்கவும் தயாராக இருப்பதாக கூறும் அமென்யா, "நம்மை காப்பாற்ற ஒருவர் வருவார் என்று நாம் காத்துக் கொண்டிருக்க தேவையில்லை" என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c7ve809gmlqo
  3. 21 DEC, 2024 | 05:21 PM மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடுகளுக்கு இடமளிக்கப் போவதில்லை என மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டுக் குழு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இன்று (21) மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் ஏற்பாட்டில் வடக்கு, கிழக்கு இணைந்த கலந்துரையாடல் நிகழ்வொன்று நடைபெற்றது. இதில் முன்னாள் போராளிகள், மாவீரர்களின் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்துகொண்டனர். மூன்று மாவீரர்களின் தாய்மாரை மாவீரர் நாளன்று பொதுச்சுடர் ஏற்றுவதற்கு அழைத்துவரப்பட்ட பின்னர், அவமதித்து வெளியே அனுப்பிய சம்பவம் தொடர்பாக இதன்போது பேசப்பட்டது. இனி வரும் காலங்களில் மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவிக்கப்படுதல், மாவீரர் துயிலும் இல்லங்களில் அரசியல் தலையீடின்றி மாவீரர் நினைவேந்தல் அனுஷ்டிப்பது மற்றும் மூன்று மாவீரர்களின் தாய்மாரை அவமதித்தமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இக்கலந்துரையாடல் கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. அதனை தொடர்ந்து, மாவீரர் போராளி குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் தேவராசா தீபன் ஊடக சந்திப்பொன்றை நடத்தினார். இதன்போது அவர், எதிர்வரும் காலத்தில் மாவீரர் நினைவேந்தல்களை தாம் பொறுப்பேற்று செய்வதாகவும் அதற்கேற்றவாறு தாம் நிர்வாகங்களை தெரிவு செய்து இனிவரும் காலங்களில் அரசியல் தலைவர்கள் இன்றி, முன்னாள் போராளிகள் தலைமைதாங்கி மாவீரர் நினைவேந்தலை நடத்தவுள்ளதாகவும் அதற்கு முன்னாயத்த கூட்டமாக இந்த கலந்துரையாடல் நடைபெற்றது எனவும் தெரிவித்தார். அரசியல்வாதிகள் யாரும் இந்த நிர்வாகத்தை எதிர்த்து செயற்பட்டால், அவற்றுக்கு முகங்கொடுத்து எமது பணிகளை திறம்பட நிறைவேற்றுவோம் எனவும் திட்டவட்டமாக கூறினார். https://www.virakesari.lk/article/201827
  4. பட மூலாதாரம்,A.R. VENKATACHALAPATHY/ FACEBOOK படக்குறிப்பு, "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்ற நூலுக்காக ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் தமிழ்நாட்டை சேர்ந்த வரலாற்று ஆராய்ச்சியாளர் ஆ.ரா. வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது. "திருநெல்வேலி எழுச்சியும் வ.உ .சி.யும் 1908" என்று தமிழில் 2022-ஆம் ஆண்டு வெளிவந்த அவரது நூலுக்காக, ஆய்வுப் பிரிவின் கீழ் 2024-ஆம் ஆண்டுக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக இலக்கிய நூல்களுக்கே வழங்கப்படும் சாகித்ய அகாடமி விருது இந்த முறை வரலாற்று நிகழ்வு ஒன்றின் ஆய்வு நூலுக்கு வழங்கப்பட்டுள்ளது. வ. உ. சிதம்பரனாரை ஆங்கிலேய அரசு கைது செய்ததை அடுத்து, 1908-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து இந்நூல் பேசுகிறது. அப்போது நடந்த போராட்டத்தில், காவல்துறையின் அடக்குமுறை காரணமாக, நான்கு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றக்கணக்கானோர் தண்டிக்கப்பட்டனர். ''ஆனால், இந்த மாபெரும் எழுச்சி மறக்கப்பட்டுவிட்டது'' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தும் வேங்கடாசலபதி, இந்த எழுச்சிக்கான நினைவு சின்னத்தை அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். 'கப்பலோட்டிய தமிழன்' என்றழைக்கப்படும், வழக்கறிஞருமான, சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார், கடல்சார் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் கை ஓங்கியிருந்த காலத்தில், இந்தியாவின் முதல் நீராவி கப்பல் நிறுவனத்தை 1906-ஆம் ஆண்டு உருவாக்கி வெற்றி கண்டவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக உள்ள வேங்கடாசலபதி, கடந்த 40 ஆண்டுகளாக வ. உ. சி. குறித்து ஆய்வு செய்து பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். 'ஆஷ் அடிச்சுவட்டில்', 'வ.உ.சி.யும் பாரதியும்' , 'வ.உ.சி : வாராது வந்த மாமணி' உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ள அவர், மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் வரலாற்றில் முதுகலைப் பட்டமும், ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், "நாற்பதாண்டுகளாகக் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் அவர்களைப் பற்றிய ஆய்வில் மூழ்கி, அதன் விளைச்சலாக SwadeshiSteam என்ற நூலை அவர் கொண்டு வந்துள்ள வேளையில், அவரது 'திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908' என்ற நூல் சாகித்ய அகாடமி விருது பெறுவது இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது. கலகம் என்று அன்றைய ஆங்கிலேய ஆட்சியாளர்கள் குறிப்பிட்டதைத் திருத்தி, நம் 'எழுச்சி' எனப் பதிவுசெய்தவருக்கு என் வாழ்த்துகள்" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?20 டிசம்பர் 2024 டைட்டானிக் கப்பலை சுற்றி ஆழ்கடலில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளர்களின் நேரடி அனுபவம்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/@MKSTALIN தமிழக ஆளுநர் ஆர் என் ரவியும் தனது வாழ்த்துகளை எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையுடன் கூடிய இந்த விருது டெல்லியில் மார்ச் 8-ஆம் தேதி வழங்கப்பட இருக்கிறது. இந்த விருது தனக்கு கிடைத்தது எதிர்பாராதது என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்த வேங்கடாசலபதி, "சாகித்ய அகாடமி விருது கடந்த 40 ஆண்டுகளில் ஆய்வு நூல்களுக்கு வழங்கப்பட்டதில்லை. எந்தவொரு எழுத்தாளருக்கும் சாகித்ய அகாடமி விருது பெறுவது மிகப்பெரிய கனவாக இருக்கும். ஆனால் ஆராச்சியாளர்களுக்கு அந்த வாய்ப்பில்லை. அப்படி இருக்கையில் எனக்கு இந்த விருது கிடைத்திருப்பது மிகவும் எதிர்பாராதது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இது , இளம் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஊக்கமாக இருக்கும்" என்றார். தமிழர்கள் அனைவருக்கும், வ.உ.சி.க்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்ற ஆதங்கம் உண்டு, அதனால் இந்நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்திருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள்18 டிசம்பர் 2024 தலையில் சுட்ட முன்னாள் காதலன் - பாடகியாக மீண்டு வந்த பெண் (காணொளி)17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/@ARV_CHALAPATHY படக்குறிப்பு, இந்த விருது தனக்கு கிடைத்தது எதிர்பாராதது என்று கூறி வேங்கடாசலபதி மகிழ்ச்சி தெரிவித்தார். 1908ம் ஆண்டு என்ன நடந்தது? 1908-ஆம் ஆண்டு ஆங்கிலேய அரசு வ.உ.சிதம்பரனாரை கைது செய்ததை அடுத்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் மக்கள் போராட்டத்தில் குதித்தனர். சுதேசி இயக்கங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த காலம் அது. சுதந்திர போராட்ட வீரர் பிபின் சந்திர பால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டிருந்தார். அவர் விடுதலை அடைந்ததை 'ஸ்வராஜ்ய தினம்' என்று அறிவித்து, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் வ.உ.சி. பல்வேறு கூட்டங்களை ஒருங்கிணைத்திருந்தார். அரசின் தடையையும் மீறி அந்தக் கூட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து அவர் மார்ச் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். மறுநாள் மக்கள் பெரும் போராட்டத்தை நடத்தினர். "காலை 10.30 மணியளவில், திருநெல்வேலிப் பாலம் என்றழைக்கப்பட்ட வீரராகவபுரம் என்ற ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள பகுதியில் கடைகள் மூடப்பட்டன. மக்களின் நடமாட்டமும் வண்டிகளின் போக்குவரத்தும் தடைப்பட்டன. இதற்குள்ளாக மூவாயிரம் நாலாயிரம் பேர் கும்பலாகத் திரண்டு, இந்து கல்லூரிக்குள் நுழைந்தனர். பின்னர் பட்டணத்துக்குள் கூட்டம் நுழைந்தது. நகர்மன்ற அலுவலகக் கட்டடத்துக்குள் அலுவலக ஆவணங்கள் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொளுத்தப்பட்டன. கட்டடம் பெரும் சேதத்துக்கு உள்ளானது. அடுத்து அஞ்சலகத்துக்கு தீயிட்டனர், தந்தி கம்பிகள் அறுக்கப்பட்டன, நகர் மன்றத்துக்கு சொந்தமான மண்ணெண்ணெய் கிடங்கு தீக்கிரையானது. தொடர்ந்து இரண்டு மூன்று நாளுக்கு அது எரிந்துகொண்டே இருந்தது." என்று வேங்கடாசலபதி திருநெல்வேலியில் நடந்தவற்றை தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள்18 டிசம்பர் 2024 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 மேலும் தூத்துக்குடியில் நடந்தவற்றை குறிப்பிடும் போது, "சந்தையிலிருந்த கடைகள் மூடப்பட்டன. கோரல் ஆலைத் தொழிலாளர்களும் பெஸ்டு அண்டு கம்பெனியின் தொழிலாளர்களும் வேலை நிறுத்தம் செய்தனர். நகர்மன்றத் தோட்டி தொழிலாளர்களும், பிற தோட்டி தொழிலாளர்களும் வேலைக்கு போகாமல் நின்றனர். கசாப்புக் கடைக்காரரும் குதிரை வண்டிக்காரர்களும் கூட வேலை நிறுத்தம் செய்தனர். தெருக்களில் கூடிய மக்கள் தெருவிளக்குகளையும் உடைத்தனர்" என்று எழுதியுள்ளார். தங்களின் ஊதிய உயர்வு, குறைந்தபட்ச கூலி என்று பொருளாதார கோரிக்கைகள் இல்லாமல், கோரல் ஆலைத் தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தமே இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் என்று பேராசிரியர் ஆ. சிவ சுப்ரமணியன் நிறுவியுள்ளதாக, இந்நூலில் வேங்கடாசலபதி சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம்,X/@ARV_CHALAPATHY படக்குறிப்பு, இந்த நூல் ஆங்கிலத்தில் 'Swadeshi Steam' என்ற பெயரில் வெளியானது இதை ஆங்கிலேய அரசு கலகம் என்று கூறுவது தவறு என்கிறார் வேங்கடாசலபதி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கலகம் என்பது கண்மூடித்தனமாக நடைபெறுவது, இலக்கு என்னவென்று தெரியாமல் தாக்குவது, ஆனால் 1908-ஆம் ஆண்டு நடைபெற்றது தன்னெழுச்சியான, தேர்ந்த இலக்குகள் கொண்ட, மக்களின் கொந்தளிப்பாகும். ஆங்கிலேய அரசின் நீதிமன்றம், முனிசிபல் அலுவலகம், பதிவாளர் அலுவலகங்களை தாக்கி, தீ வைத்தனர். ஆங்கிலேயர்களை சீண்டினார்கள். ஒரு ஆங்கிலேயர் எதிரில் வரும் போது ஜட்கா (குதிரை வண்டி) ஓட்டுநர் வழி கொடுக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார். இது போன்ற சம்பவங்கள் நீதிமன்ற விசாரணை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இவை வெறும் சீண்டல்கள் தானே தவிர, அவர்கள் ஆங்கிலேயர்களை தாக்கவில்லை. ஒரு தலைவருக்காக இரண்டு ஊர்கள் ஸ்தம்பித்துபோனது, வரலாற்றில் சாதாரண நிகழ்வல்ல. வ. உ. சி. ஒரு அசாதாரண தலைவராக இருந்தார்" என்று குறிப்பிடுகிறார். கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 தமிழ் பாதிரியார்கள் பிரேசில் காடுகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றுவது ஏன்?17 டிசம்பர் 2024 ஜட்கா (குதிரை வண்டி) ஒட்டுநர்கள், சவரம் செய்பவர்கள், கூலி தொழிலாளர்கள், இறைச்சி விற்பவர்கள் ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட்டனர். இதனை ஆங்கிலேய அரசு கடுமையாக ஒடுக்கியது. போராட்டத்தில் பங்கேற்ற நான்கு பேர் திருநெல்வேலியில் சுட்டுக்கொல்லப்பட்டனர், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட்டனர். மேலும், மக்களுக்கான 'ஒட்டுமொத்த தண்டனை' என்று திருநெல்வேலியில் ஆறு மாத காலம் காவல்படையினர் முகாமிட்டு இருந்தனர். மக்களிடமிருந்து தண்டனை வரி வசூலிக்கப்பட்டது. "அதாவது, இனி ஒரு முறை இது போன்ற எழுச்சி உருவாகக் கூடாது என்று மக்களுக்கு பாடம் புகட்டுவது அதன் நோக்கமாகும்" என்கிறார் வேங்கடாசலபதி. சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா?16 டிசம்பர் 2024 எத்தனை வகையான செஸ் போட்டிகள் விளையாடப்படுகின்றன தெரியுமா? (காணொளி)16 டிசம்பர் 2024 "நெல்லை எழுச்சி குறித்து அதிகபட்சமாக ஒரு கட்டுரை எழுதப்பட்டிருக்கலாம். ஆனால் அது குறித்து நூல் எழுதும் அளவு ஆழமான ஆராய்ச்சியை மேற்கொண்டிருக்கிறார் வேங்கடாசலபதி. திருநெல்வேலியில் கொலை செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரி ஆஷ் உடைய வாரிசுகளை நேரில் சென்று பார்த்து வந்திருந்தார். ஒரு பிராந்திய மொழியிலும் ஆங்கிலத்திலும் புலமைப் பெற்ற வரலாற்றாசிரியர்களை காண்பது மிக மிக அரிது. அது அவருக்கான முக்கியமான பலமாகும்." என்கிறார் வேங்கடாசலபதியுடன் ஐந்து ஆண்டுகள் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பணியாற்றிய பேராசிரியரும், வேலூர் புரட்சி மற்றும் முதுகுளத்தூர் கலவரம் குறித்த வரலாற்று நூல்களை எழுதியுள்ளவருமான, கே. ஏ. மணிக்குமார் "இந்த எழுச்சி ஆங்கிலேய அரசால் மிக கடுமையாக ஒடுக்கப்பட்டது. அதன் பிறகு, காந்திய சகாப்தம் தொடங்கியது, இரண்டாம் உலகப் போர் நடைபெற்றது. இந்த எழுச்சி அனைவருக்கும் மறந்துவிட்டது" என்று கூறும் வேங்கடாசலபதி, ''இந்த எழுச்சி குறித்த எந்த நினைவும் தற்போது திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் இல்லை என்பது வருத்தமளிக்கிறது'' என்கிறார். "ஒரு தூண் அல்லது கல்வெட்டு அமைக்க வேண்டும் என்று 2002-ஆம் ஆண்டு தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்திருந்தேன். இப்போதும் அதே கோரிக்கை வைக்கிறேன். எழுச்சி தொடங்கிய இடங்களான நெல்லையில் இந்துக் கல்லூரி அருகிலும், தூத்துக்குடியில் மசூதிப்பேட்டை அல்லது வண்டிப்பேட்டை என்ற இடத்திலும் இந்த நினைவு சின்னங்களை அமைக்கலாம்" என்று தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2v0enll12o
  5. எங்களை இலங்கைக்கு அழைப்பதற்கு உதவுங்கள் - ரஷ்ய போரில் ஈடுபடுத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள் மீண்டும் கோரிக்கை 21 DEC, 2024 | 06:08 PM ஆர்.ராம் ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்காக முகவர்கள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு ரஷ்ய படையில் இணைந்து போர்க்களத்துக்கு அனுப்பப்பட்டுள்ள வடக்கு தமிழ் இளைஞர்கள் தங்களை இலங்கைக்கு அழைத்துச் செல்வதற்குரிய நடவடிக்கைகளை யாராவது முன்னெடுக்குமாறு பகிரங்கமான கோரிக்கையை மீண்டும் முன்வைத்துள்ளனர். பெல்ஜியம், ஜேர்மன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்காக முகவர்களுக்கு பணத்தை செலுத்தி இலங்கையிலிருந்து சில மாதங்களுக்கு முன்னதாக வெளியேறியிருந்த வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் ரஷ்யப் படையில் வலிந்து இணைக்கப்பட்டு உக்ரேனுக்கு எதிரான போர்க்களத்தில் நிறுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் சுயனிகாந்த் பகீரதன் மற்றும் அதிஸ்டராஜா மிதுர்ஷன் ஆகியோர் குரல் பதிவு மூலமாக விடுத்துள்ள வேண்டுகோளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாங்கள் முகவர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு ஏமாற்றப்பட்டுவிட்டோம். தற்போது ரஷ்யாவின் இராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளோம். நாங்கள் போர் நடைபெறும் எல்லைக்கு அருகில் தான் உள்ளோம். எம்முடன் பாலச்சந்திரன் என்பவரும் உள்ளார். ஒவ்வொரு நாளும் போர் உக்கிரமாக இடம்பெறுகிறது. நாங்கள் இருக்கின்ற இடத்துக்கு அருகில் ஆட்லறி எறிகணைகளும், ட்ரோன் மூலமான தாக்குதல்களும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு தான் தற்போதும் இருக்கிறோம். எங்களுடன் இருந்த 19 இலங்கையர்களில் 3 பேர் இறந்துவிட்டார்கள். ஒருவரைக் காணவில்லை. அவர்களில் பலர் இலங்கை இராணுவம், கடற்படை போன்றவற்றில் இருந்தவர்கள். அவர்கள் கூட அச்சத்துடன் தான் இருக்கின்றார்கள். எங்களால் போர் எல்லையில் தொடர்ந்தும் இருக்க முடியாது. எமது உயிருக்கு உத்தரவாதமில்லை. தயவு செய்து எம்மை மீண்டும் இலங்கைக்கே செல்வதற்கு யாராவது நடவடிக்கைகளை எடுங்கள். நாங்கள் மிகத் தாழ்மையாக இந்தக் கோரிக்கையை முன்வைக்கின்றோம். எங்களை உறவுகளுடன் இணைத்துவிடுங்கள் என்று குறிப்பிட்டுள்ளனர். முன்னதாக, குறித்த இளைஞர்களின் உறவினர்கள் ரஷ்ய தூதரகத்துக்கு மேற்படி விடயம் சம்பந்தமாக எடுத்துரைத்தபோது, ரஷ்யா இலங்கையில் இருந்து எவரையும் போருக்காக இணைத்துக்கொள்ளவில்லை என்றே பதிலளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிவிவகார அமைச்சிடம் இந்த இளைஞர்களின் விடயம் சம்பந்தமாக மகஜர் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்று வினவி வாரமொன்று கடந்துள்ளபோதும் இதுவரையில் உரிய பதில் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201836
  6. தனது கருத்துள்ள நகைச்சுவைகளால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் சின்ன கலைவாணர் விவேக். அவர் இறந்துவிட்டாலும், அப்படி ஒரு நிகழ்வு நடந்தது போலவே தெரியவில்லை என்றே கூறலாம். இப்போது வரை அவரது நகைச்சுவை பல இடங்களில் பேசுவதுண்டு, நியாபகப்படுத்துவதுண்டு. இப்படி ஒரு சூழலில் அவர் உயிரிழந்தது சினிமாவுக்கு பேரிழப்பாக உள்ளது. இந்த நிலையில் விவேக் மனைவி அளித்த பேட்டியில், விவேக் மரணம் இன்று வரை என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை. அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பார். உடலுக்கு தேவையானதை பார்த்து செய்வார். கொரோனா சமயத்தில் அனைவரும் தடுப்பூசி போட வேண்டிய கட்டாயத்தில் இருந்தோம். விவேக்கும் தடுப்பூசி போடலாமா வேண்டாமா என பலரிடம் ஆலேசானை நடத்தினார். இதனிடையே வெளிநாட்டில் சூட்டிங் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட போது, ஊடகத்தினர் முன்னிலையில் தடுப்பூசியை செலுத்திக் கொண்டார். ஆனால் மறுநாள் அனைவருக்குமே பேரிடியாக அந்த செய்தி வந்தது. கொரோனா காலக்கட்டத்தில் கூட நடைபயிற்சியை மேற்கொண்டார். வீட்டில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவர் ஏன் இறந்தார் என்பது இன்று வரை காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால் கொரோனா தடுப்பூசியை நான் குறை சொல்லவில்லை. அவர் எல்லோர் முன்பு, தடுப்பூசியை போட்டுக் கொண்டது அவர் போட்டால் எல்லாரும் போடுவார் என்ற விழிப்புணர்வுதான். தடுப்பூசி போட்டவர்கள் யாரும் இறக்கவில்லை, அதனால் விவேக் இறப்புக்கு தடுப்பூசி காரணம் என கூறமுடியாது என தெரிவித்தார். https://tamil.adaderana.lk/news.php?nid=197446
  7. Published By: DIGITAL DESK 7 17 DEC, 2024 | 10:28 AM டி.பி.எஸ். ஜெயராஜ் கடந்த வாரம் பாராளுமன்ற சபாநாயகர் அசோகா சப்புமால் ரண்வலவை பதவியில் இருந்து விலகவைத்த அவரது உயர்கல்வித் தகைமைகள் தொடர்பான சர்ச்சை விடுதலை புலிகள் இயக்கத்துடன் சம்பந்தப்பட்ட முக்கிய பிரமுகர் ஒருவர் தொடர்பிலான இதே போன்ற முன்னைய சர்ச்சை ஒன்றை நினைவுபடுத்துகிறது. ஊடகங்களில் அடிக்கடி கலாநிதி பாலசிங்கம் என்று குறிப்பிடப்பட்ட விடுதலை புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் பற்றியதே அந்த குழப்பமாகும். விடுதலை புலிகளுக்கு எதிரான இயக்கங்களின் உறுப்பினர்கள் பாலசிங்கம் ஒரு கலாநிதி அல்ல என்று பரவலாக மறுதலித்தனர். பாலசிங்கம் ஒருபோதுமே கலாநிதி பட்டத்தை பெறவில்லை என்றும் அதனால் அவர் ஒரு " பாசாங்கு கலாநிதி " என்றும் கூறப்பட்டது. அந்த நேரத்தில் நடந்தது இதுதான். இளம் பராயத்தில் ஏ.பி.ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்ட பாலசிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தில் கல்விகற்று கலைமாணி ( B.A. degree ) பட்டம் பெற்றவர்.பிறகு பிரிட்டனுக்கு சென்ற பாலசிங்கம் சவுத்பாங்க் லண்டன் பொலிரெக்னிக்கில் முதுமாணி (M.A. degree) பட்டத்தை பெற்றார். மார்க்சிசத்தின் உளவியல் ( Psycology of Marxism ) தொடர்பாகவே அவரது ஆய்வு அமைந்தது. அதற்கு பிறகு பேராசிரியர் ஜோன் ரெயிலரின் கீழ் சமூகவியலில் உடமை மாற்றம் தொடர்பான மார்க்சின் கோட்பாடு ( Marx's theory of alienation in sociology) குறித்து கலாநிதி பட்டத்துக்காக ஆய்வைச் செய்யத் தொடங்கினார். விடுதலை அரசியலில் ஈடுபடத் தொடங்கியதனால் பாலசிங்கம் கலாநிதி பட்டத்துக்கான ஆய்வை பூர்த்தி செய்யவில்லை. 1983 கறுப்பு ஜூலை இனவன்செயலுக்கு பிறகு விடுதலை புலிகள் இயக்கத்தின் அரசியல் மதியூகியாக, பேச்சுவார்த்தையாளராக, பேச்சாளராக பாலசிங்கம் இந்தியாவுக்கு வந்தார். இந்திய ஊடகங்களை தொடர்ந்து சர்வதேச ஊடகங்களும் அவரை " கலாநிதி பாலசிங்கம் " என்று குறிப்பிடத் தொடங்கின. அவர் தன்னை " கலாநிதி " என்று ஒருபோதும் அழைத்ததில்லை என்பதை நேர்மையாக ஒத்துக்கொள்ள வேண்டும். ஆனால், தன்னை கலாநிதி என்று அழைத்த ஊடகச் செய்திகளை திருத்துவதற்கு அவர் எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. பாலசிங்கம் கலாநிதி பட்டத்தை கொண்டிருக்கவில்லை என்பது பிறகு நம்பத்தகுந்த முறையில் நிரூபிக்கப்பட்டது. அது போட்டிக் குழுக்களை சேர்ந்த எதிர்பாளர்களினால் செய்யப்படவில்லை. பதிலாக விடுதலை புலிகள் மத்தியில் இருந்தவர்களே அதைச் செய்தார்கள். அந்த நாட்களில் லண்டனில் விடுதலை புலிகள் இயக்கம் இரண்டு பிரிவுகளாக பிளவுபட்டிருந்தது. ஒரு பிரிவு பாலசிங்கத்தின் கீழும் மற்றைய பிரிவு இலங்கையில் மயிலிட்டியைச் சேர்ந்த ஒரு கணக்காளரான சீவரத்தினத்தின் கீழும் இருந்தன. இரு வாரங்களுக்கு ஒரு முறை வெளியான சஞ்சிகை ஒன்றை (Tamil Voice International ) சீவரத்தினம் நடத்தினார். பாலசிங்கத்தின் கலாநிதி பட்டத் தகைமைகள் குறித்து அந்த சஞ்சிகைக்கு "வாசகர் " ஒருவர் கேள்வியை அனுப்பினார். அதற்கு ஆசிரியர்கள் அளித்த பதில் உண்மை நிலையை தெளிவாக விளக்கியது. இத்தகைய ஒரு பின்புலத்தில் இந்த கட்டுரை பாலசிங்கத்தின் 18 வது நினைவு தினத்தை ( டிசம்பர் 14 ) முன்னிட்டு அவர் மீது கவனத்தைச் செலுத்துகிறது. " பாலா அண்ணை " என்று அறியப்பட்ட பாலசிங்கம் கிளர்ச்சியூட்டுகின்ற ஆனால் அதேவேளை சர்ச்சைக்குரிய புள்ளியாக விளங்கினார். அவரை நேசிப்பவர்களும் வெறுப்பவர்களும் இருந்தார்கள். பாலசிங்கத்துடனான இந்த கட்டுரையாளரின் உறவுமுறையும் கூட நெளிவுசுழிவுகளைக கொண்டதாகவே இருந்தது. பிரச்சினைகளைப் பொறுத்து அவரை நான் கண்டித்ததும் உண்டு, மெச்சியதும் உண்டு. அதேபோன்று அவரும் கூட எனனைப் பற்றி சாதகமாகவும் பாதகமாகவும் எழுதியும் பேசியும் இருக்கிறார். இந்த மனிதனைப் பற்றியும் தமிழர் விவகாரங்களில் அவரின் பாத்திரம் பற்றியும் பல சந்தர்ப்பங்களில் நான் எழுதியிருக்கிறேன். இந்த கட்டுரையில் " பாலா அண்ணைக்கும் " எனக்கும் இடையிலான துறைசார் மற்றும் தனிப்பட்ட உறவுமுறை பற்றி கவனம் செலுத்துகின்ற அதேவேளை முன்னைய எழுத்துக்கள் சிலவற்றில் இருந்தும் விடயங்களை குறிப்பிடுகிறேன். 1938 மார்ச் 4 ஆம் திகதி பிறந்த பாலசிங்கம் பல்வேறு குணப் போக்குகளின் ஒரு கலவை. இந்துவான அவரது தந்தையார் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர். கிறிஸ்தவரான தாயார் வடமாகாணத்தவர். ஒரு கத்தோலிக்கராக பாலசிங்கம் வளர்க்கப்பட்ட போதிலும் விரைவாகவே அவர் ஒரு பகுத்தறிவாளராகவும் உலோகயதவாதியாகவும் மாறிவிட்டார். பாலசிங்கத்தின் முதல் மனைவி புரட்டஸ்தாந்து மதத்தைச் சேர்ந்த யாழ்ப்பாண தமிழ்ப் பெண்மணி. இரண்டாவது மனைவி அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த அங்ளோ -- சக்சன் மரபைக் கொண்ட பெண்மணி. பிரிட்டிஷ் பிரஜையாக இருந்த போதிலும், பாலசிங்கம் தனது " தமிழ் ஈழம் " தாயகத்தைக் காண்பதற்கு வேட்கை கொண்டிருந்தார். அது அமைக்கப்படுகின்ற ஒரு கட்டத்தில் இருந்ததாக அவர் நம்பினார். பாலசிங்கத்தின் தந்தைவழி பாட்டனார் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்டூரைச் சேர்ந்த ஒரு " சைவக் குருக்கள்." அவரது தந்தையார் மட்டக்களப்பு வைத்தியசாலையில் ஒரு மின்சார மேற்பார்வையாளர். யாழ்நகரைச் சேர்ந்த பாலாவின் தாயார் முன்னர் மார்ட்டின் வீதியில் வசித்தவர். மருத்துவமாதுவான அவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் பணியாற்றியபோது பாலாவின் தந்தையாரைச் சந்தித்து காதலித்து திருமணம் செய்துகொண்டார். கரவெட்டி அவர் கணவரிடமிருந்து பிரிந்ததுடன் இளவயதிலேயே விதவையாகியும் விட்டார். பாலசிங்கம் தனது தாயாருடனும் மூத்த சகோதரியுடனும் சிறுபிள்ளையாக வடக்கிற்கு சென்றார். வடமராட்சி கரவெட்டியில் குடியேறி அவர்கள் வாழ்க்கையை தொடங்கினர். பாலாவின் தாயார் ' அம்பம் ஆஸ்பத்திரியில் ' மருத்துவமாதாக பணியாற்றினார். நான் வீரகேசரியில் பத்திரிகையாளராக இணைந்த நேரத்தில் பாலசிங்கத்தின் இரு மருமகன்கள் விக்டரும் அன்டனும் அச்சுக்கோப்பாளர் பகுதியில் பணியாற்றினார்கள். எனது தாயாரும் கூட கரவெட்டியை சேர்ந்தவரே. துன்னாலை தெற்கு, கரவெட்டி என்பதே தபால் விலாசம். பிற்காலத்தில் பாலசிங்கம் அதை அடிக்கடி கூறி தானும் நானும் ஒரே ஊரைச் சேர்ந்தவர்களே என்று உரிமை கொண்டாடுவார். வீரகேசரி சிறுவர் பராயத்தில் பாலசிங்கம் ஏ.பி. ஸ்ரனிஸ்லோஸ் என்று அறியப்பட்டார். கரவெட்டி திருஇருதயக் கல்லூரியிலும் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் அவர் கல்வி கற்றார். அந்த நாட்களில் கரவெட்டி ஒரு இடதுசாரிக் கோட்டையாக விளங்கியது. 'ஸ்ரனி ' என்று அப்போது அறியப்பட்ட இளம் பாலசிங்கமும் இடதுசாரி கோட்பாடுகளினால் ஈர்க்கப்பட்டார். சுந்தர் என்று அறியப்பட்ட பிரபல்யமான தமிழ் கார்ட்டூனிஸ்ட் சிவஞானசுந்தரம் கரவெட்டியில் இருந்தே ' சிரித்திரன் ' என்ற பெயர்பெற்ற சஞ்சிகையை வெளியிட்டார். சிவஞானசுந்தரத்தின் முயற்சியின் காரணமாக ஸ்ரனிஸ்லோஸ் 1960 களின் முற்பகுதியில் கொழும்பு தமிழ்ப் பத்திரிகையான வீரகேசரியில் உதவி ஆசிரியராக நியமனம் பெற்றார். பெரும்பாலான நேரத்தை வாசிப்புக்கு செலவிடும் ஒரு மனிதனாக ஸ்ரனியை பற்றி பேசும்போது வீரகேசரியில் அவரின் முன்னாள் சகாக்கள் கூறுவார்கள். தனது தோற்றத்தில் அவர் அக்கறை செலுத்துதில்லை. குறிப்பாக உடைகளைப் பற்றி பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை. கிரமமாக நேரங்களில் அவர் சாப்படுவதுமில்லை. வீரகேசரியில் ஸ்ரனிஸ்லோஸ் விரைவாகவே வெளிநாட்டுச் செய்திகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டார். ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை பிரதிகளையும் வெளிவிவகாரங்கள் தொடர்பான கட்டுரைகளையும் மொழிபெயர்ப்பது அதில் முக்கிய பணியாக இருந்தது. ஆனால், பாலசிங்கம் தத்துவத்திலும் உளவியலிலும் கருத்தூன்றிய கவனம் செலுத்தினார். மனதை வசியப்படுத்தும் கலையிலும் ( Hypnotism ) ஈடுபாடு காட்டினார். கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்தில் ஒரு மொழி பெயர்ப்பாளராக ஸ்ரனிஸ்லோஸுக்கு நியமனம் கிடைத்ததும் நிலைமைகள் மாறின. நேர்த்தியான முறையில் உடைகளை அணியத் தொடங்கியதும் அவரின் தோற்றத்திலும் ஒரு உருநிலை மாற்றம் ஏற்பட்டது. புதிய தொழிலின் விளைவாக மாத்திரம் முற்றிலும் இந்த மாற்றம் ஏற்பட்டு விடவில்லை. காமனும் கணை தொடுத்தான். பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகரகத்துக்கு அருகாக பிரிட்டிஷ் கவுன்ஸிலில் பணியாற்றிய அழகான தமிழ்ப் பெண்மணி மீது பாலசிங்கம் காதல் கொண்டார். பருத்தித்துறை ஹாட்டி கல்லூரியில் படிப்பித்த இராசரத்தினம் மாஸ்டரின் மகளான பேர்ள் இராசரத்தினமே அந்த பெண்மணி. அந்த குடும்பம் எனது தாயாரின் குடும்பத்துடன் நெருக்கமான பழக்கத்தைக் கொண்டது. எனது சிறுவர் பராயத்தில் பேர்ள் அரசரத்தினத்தை நான் " பூ அன்ரி " என்று அழைத்தது நினைவிருக்கிறது. அவரின் சகோதரி ரதியின் திருமணத்தில் எனது சகோதரிகளில் ஒருவர் மணப்பெண் தோழியர்களில் ஒருவர். பேர்ளின் மூத்த சகோதரி நேசம் எனது தாயாருடன் பல வருடங்களாக ஒரே பாடசாலையில் படிப்பித்தார். பேர்ளுக்கும் அன்டனுக்கும் இடையிலான காதல் 1968 ஜூலை 16 கொள்ளுப்பிட்டி மெதடிஸ்ட் தேவாலயத்தில் திருமணத்தில் முடிந்தது. இங்கிலாந்து புது மணமகன் பாலசிங்கத்துக்கு மணவாழ்வினை மகிழ்ச்சி நீடித்ததாக இருக்கவில்லை. அவரின் மனைவி பேர்ள் கடுமையாக சுகவீனமுற்றார். அவருக்கு வெளிநாட்டு நவீன சிகிச்சை தேவைப்பட்டது. பிரிட்டிஷ் அதிகாரிகள் மிகவும் அனுதாபமுடையவர்களாகவும் பெருந்தன்மை கொண்டவர்களாகவும் இருந்தனர். பாலசிங்கத்தையும் மனைவியையும் இங்கிலாந்துக்கு செல்ல அவர்கள் அனுமதித்தனர். இருவரும் 1971 ஆகஸ்ட் 3 ஆம் திகதி இலங்கையை விட்டுச் சென்றனர். இங்கிலாந்தில் பாலசிங்கம் தனது உயர்கல்வியை தொடர்ந்தார். ஆனால், அவரின் மனைவியின் உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. பாலசிங்கத்துக்கு வாழ்க்கை இடரும் தியாகமும் நிறைந்தாக மாறியது. அவர் வேலைக்கு செல்வதுடன் படிக்கவேண்டியிருந்தது. நோயாளியான மனைவியை பராமரிக்க வேண்டியும் இருந்தது.மனைவி 1976 நவம்பரில் காலமானார். வைத்தியசாலையில் ஒரு தாதியுடன் பாலசிங்கத்துக்கு நன்கு பழக்கமேற்பட்டது. அந்த தாதியும் அவுஸ்திரேலியாவில் இருந்து பிரிட்டனுக்கு வந்த ஒரு " அன்னியரே. மனைவியை இளந்த இளம் பாலசிங்கத்துக்கு தாதி அுடல் ஆன் வில்பியுடன் இரண்டாவது காதல் மலர்ந்தது. தெற்கு லண்டனில் பிறிக்ஸ்டனில் பதிவாளர் அலுவலகத்தில் அவர்கள் எளிமையான முறையில் 1978 செப்டெம்பர் முதலாம் திகதி திருமணம் செய்து கொண்டனர். மட்ராஸ் / சென்னை பாலசிங்கம் 1978 ஆம் ஆண்டில் விடுதலை புலிகளுடன அணி சேர்ந்துகொண்டார். இந்தியாவுக்கு கிரமமாக வருகை தந்த அதேவேளை லண்டனில் இருந்து விடுதலை புலிகளுக்காக பெருமளவில் எழுதினார். 1980 ஆம் ஆண்டில் விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பிளவு ஏற்பட்டபோது பாலசிங்கம் தன்னை பிரபாகரனின் பிரிவுடன் இணைத்துக்கொண்டார். 1983 கறுப்பு ஜூலைக்கு பிறகு பாலசிங்கமும் மனைவி அடேலும் சென்னைக்கு ( அப்போதைய மட்ராஸ் ) குடிபெயர்ந்தனர். " த ஐலண்ட் " வீரகேசரி தமிழ்த் தினசரியில் 1977 ஆம் ஆண்டில் இணைந்து கொண்டதன் மூலம் பத்திரிகைத்துறையில் பிரவேசம் செய்த நான், 1981 ஆம் ஆண்டில் " த ஐலண்ட் " ஆங்கிலப் பத்திரிகை ஆரம்பிக்கப்பட்டபோது அதில் இணைந்து கொண்டேன். அந்த வேளையில் அதன் ஆசிரியராக இருந்த விஜிதா யாப்பா 1984/85 காலப்பகுதியில் இந்தியாவில் இருந்து இயங்கிய இலங்கை தமிழ்த் தீவிரவாத இயக்கத் தலைவர்களை பேட்டிகாணும் பணியை என்னிடம் ஒப்படைத்தார். தமிழ்நாட்டில் பெரும்பாலான தீவிரவாத குழுக்களை சந்தித்த எனக்கு விடுதலை புலிகளை சந்திப்பது சற்று சிரமமாக இருந்தது. இறுதியாக மரீனா கடற்கரையில் கண்ணகி சிலை ஓரமாக ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மாலை 5.30 மணிக்கு வருமாறு என்னிடம் கேட்கப்பட்டது. நானும் அதற்கு இணங்கினேன். " நான் பாலசிங்கம் " சரியாக 5.30 மணிக்கு அந்த இடத்தில் வாகனம் ஒன்று வந்து நின்றது. அதை ஓட்டிவந்த விடுதலை புலிகள் இயக்க முக்கியஸ்தரான " நேசன் " ( முன்னாள் கத்தோலிக்க குரு மாணவன் ) என்னை முன் ஆசனத்தில் வந்து ஏறுமாறு கேட்டார். காரை ஓட்டிச் சென்று இன்னொரு இடத்தில் அவர் நிறுத்தினார். சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் வந்து பின்னால் நின்றது. அதிலிருந்து ஒருவர் இறங்கிவந்து எமது வாகனத்தின் பின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். நான் திரும்பிப் பார்த்தபோது தனது கையை நீட்டி " நான் பாலசிங்கம் " என்று கூறினார். வாகனத்தை ஓட்டத் தொடங்கிய நேசன் எங்கு போவது என்று தெரியாத மாதிரி பல வீதிகளின் ஊடாக அதைச் செலுத்தினார். பாலசிங்கம் ஒரு மட்டுமதிப்பற்ற முறையில் வெடுக்கென்று என்னிடம் கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தார். ஒருவிதமான பகைமையுணர்ச்சியுடனான அவரின் கேள்விகள் என்னை அவர் சந்தேகத்துடன் நோக்குகிறார் என்பதை உணர்த்தியது. நான் கதையை மாற்றி எனது குடும்பத்தைப் பற்றியும் காலமான அவரின் மனைவியின் குடும்பத்தைப் பற்றியும் கூறத் தொடங்கினேன். " உங்களைப் போன்றே நானும் வீரகேசரியில் வேலை செய்தேன்" என்றும் அவரிடம் கூறினேன். பாலசிங்கத்தின் மனநிலை மாறியது. அவர் சிரித்துக்கொண்டு " அப்போ நீங்கள் எங்களில் ஒருவர் " என்று அவர் கூறினார். " நாங்கள் புஹாரி ஹோட்டலுக்கு போவோம் " என்று பாலசிங்கம் நேசனிடம் கூறினார். எனவே நாம் அந்த முஸ்லிம் உணவகத்துக்கு சென்று இரவு உணவாக பிரியாணி சாப்பிட்டுக் கொண்டு கடந்த்காலத்தை நினைவுகூர்ந்த வண்ணம் சமகால அரசியலையும் பேசினோம். அதுவே பாலசிங்கத்துடனான எனது முதலாவது சந்திப்பு. அதற்கு பிறகு அவரை நான் பல தடவைகள் சந்தித்தேன். கனடா 1988 ஆம் ஆண்டில் ஹார்வாட் பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறை ஆய்வு மாணவனாக நீமன் புலமைப்பரிசில் பெற்று நான் அமெரிக்கா சென்றேன். பிறகு 1989 ஆம் ஆண்டில் கனடாவுக்கு மாறி ரொரண்டோவில் 1990 ஆம் ஆண்டில் இருந்து தமிழ் வாரப் பத்திரிகையை வெளியிடத் தொடங்கினேன். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசாங்கத்துடனான போர்நிறுத்தத்தை விடுதலை புலிகள் 1995 ஏப்ரிலில் முறித்துக்கொண்ட பிறகு நான் அவர்களை விமர்சித்தேன். ரொரண்டாவில் நான் ஆசிரியராக இருந்து எனது சொந்தத்தில் நடத்திய " மஞ்சரி " தமிழ் வாரப் பத்திரிகைக்கு எதிராக கனடாவில் விடுதலை புலிகள் ஒரு பிரசாரத்தை தொடங்கியதனால் நான் பெரிய விலையைச் செலுத்த வேண்டியதாயிற்று. எனது பத்திரிகையை அவர்கள் " தடை " செய்தார்கள். தொடர்ச்சியாக கொலை அச்சுறுத்தல்கள் வந்தபோதிலும் நான் தளர்ந்துபோகவில்லை. அதையடுத்து விடுதலை புலிகள் தமிழ்ப் பத்திரிகைகளை விற்பனை செய்கின்ற தமிழர்களுக்கு சொந்தமான கடைகளையும் முக்கியமான தமிழ் விளம்பரதாரர்களையும் இலக்கு வைக்கத் தொடங்கினர். 48 பக்கங்களைக் கொண்ட அந்த ஒரு டொலர் ' ரப்லொய்ட் ' பத்திரிகை 22 பக்கங்களில் விளம்பரங்களை கொண்டு வெளியானது. 4,500 -- 5,000 பிரதிகள் விற்பனயாகின. விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக எனது பத்திரிகையை விற்பனை செய்வதை பல கடைகள் நிறுத்திக் கொண்டன. பத்திரிகை 24 பக்கங்களாக சுருங்கியதுடன் இரு பக்கங்களுக்கே விளம்பரங்கள் கிடைத்தன. விற்பனையான பிரதிகளின் எண்ணிக்கையும் நூறுகளுக்கு கண்டது. விடுதலை புலிகளுக்கு முழந்தாழிட்டு உயிர் வாழ்வதையும் விட எனது காலில் நின்று சாவதற்கு முடிவெடுத்த நான் 1996 ஆம் ஆண்டில் பத்திரிகை வெளியிடுவதை நிறுத்தினேன். ஆங்கிலப் பத்திரிகைத்துறை நானும் எனது மனைவியும் அந்த பத்திரிகைக்காக முழுநேர பணியாற்றினோம். எங்களைத் தவிர, வேறு ஒன்பது பேர் பகுதிநேர ஊழியர்களாக பணியாற்றினர். பத்திரிகையை நிறுத்தியது அந்த நேரத்தில் பாரிய நிதி நெருக்கடியை ஏற்படுத்தியது. இருந்தாலும், கெடுதியின் உருவில் வந்த நன்மையாக, நான் மிண்டும் ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தேன். கொழும்பில் தமிழில் எழுதி வீரகேசரிக்காக பணியாற்றியதன் மூலமாக பத்திரிகைத்துறை வாழ்க்கையை தொடங்கியவன் நான். த ஐலண்டுக்காகவும் பிறகு 'தி இந்து ' வுக்காகவும் பணியாற்றியதன் மூலமாக ஆங்கிலப் பத்திரிகைத்துறையில் பிரவேசித்தவன் நான். கனடாவுக்கு வந்த பிறகு முதலில் " செந்தாமரை " வாரப்பத்திரிகையினதும் பிறகு " மஞ்சரி" யினதும் ஆசிரியராக தமிழ்ப் பத்திரிகைத்துறைக்கு திரும்பினேன். மீண்டும் "த ஐலண்ட்" , பிறகு "த சண்டே லிடர்", "த நேசன்", இப்போது " டெயிலி மிறர்" , " டெயிலி ஃபைனான்சியல் ரைம்ஸ் " ஆகியவற்றுக்கு எழுதுவதன் மூலம் ஆங்கிலப் பத்திரிகைத்துறைக்கு திரும்பி வந்திருக்கிறேன். என்னை மௌனமாக்க விடுதலை புலிகள் எனது பத்திரிகையை நிறுத்தினாலும் கூட, நான் தொடர்ந்து ஆங்கிலத்தில் எழுதி பதவியில் இருந்த அரசாங்கங்களையும் விடுதலை புலிகளையும் விமர்சித்தேன். புலிகளின் ஆதரவாளர்கள் என்னை ஒரு தமிழ்த் துரோகி என்று பழிதூற்றினார்கள். புலிகளுக்கு எதிரானவன் என்று எனக்கு பட்டஞ்சூட்டினாலும், எனது பத்திரிகையாளனாக நான் தொடர்ந்து எழுதிக் கொண்டேயிருந்தேன். பாலசிங்கம் நீட்டிய நேசக்கரம் புதிய மிலேனியம் ஒரு அதிர்ச்சியைக் கொண்டுவந்தது. 2000 ஆண்டு நடுப்பகுதியில் ரொரண்டோவுக்கு வந்த தமிழக் கத்தோலிக்க மதகுரு வணபிதா எஸ்.ஜே. இம்மானுவேல் என்னுடன் தொடர்புகொண்டார். லண்டனில் இருந்த பாலசிங்கம் என்னுடன் பேசுவதற்கு விருப்புவதாக வணபிதா என்னிடம் கூறினார். இது மீண்டும் பாலசிங்கத்துடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது. நான் இலங்கையை விட்டு வெளியேறிய பிறகு அவருடனான தொடர்பை இழந்துவிட்டேன். ஆனால், 1999 ஆம் ஆண்டில் பாலசிங்கம் லண்டனில் இருந்து வன்னிக்கு திரும்பவிருப்பதை பற்றிய செய்தியை ஏனைய ஊடகங்களை முந்திக்கொண்டு நானே பிரத்தியேகமாக வெளியிட்டிருந்தேன். பல வருடங்களுக்கு பிறகு என்னுடன் பேசிய பாலசிங்கம் போரை முடிவுக்குக் கொண்டுவந்து பேச்சுவார்த்தை மூலமான ஒரு இணக்கத்தீர்வின் ஊடாக சமத்துவமான உரிமைகளுடன் சமாதானத்தை காணவேண்டியது தமிழ் மக்களுக்கு அவசியமாகிறது என்ற எனது கருத்துடன் உடன்படுவதாக எனக்கு கூறினார். நோர்வேயின் உதவியுடன் சமாதான முயற்சி ஒன்று தொடர்பாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக கூறிய அவர் எனது எழுத்துக்களின் ஊடாக அதற்கு நான் ஆதரவளிக்க வேண்டும் என்று விரும்பினார். அந்த நேரத்தில் நான் ' த சண்டே லீடர் ' பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தேன். கலந்துரையாடல் அந்த பத்திரிகையின் ஆசிரியரும் எனது நெருங்கிய நண்பருமான லசந்த விக்கிரமதுங்கவிடம் அதைக் கூறியபோது அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்து வெற்றிகரமாக இணக்கத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்கு முன்னெடுக்கப்படும் சகல முயற்சிகளையும் ஆதரிப்பதாக உறுதியளித்தார். அதற்கு பிறகு பாலசிங்கத்துடன் நான் கிரமமாக தொடர்பில் இருந்தேன். பல சந்தர்ப்பங்களில் நானும் அவரும் பத்திரிகையில் பிரசுரிக்கப்படுவதற்கு அப்பாலான விடயங்கள் பலவற்றைப் பற்றி மணிக்கணக்காக பேசியிருப்போம். அந்த சம்பாஷணைகளின் ஊடாக விடுதலை புலிகளின் அந்தரங்கமான செயற்பாடுகள், அதன் படிமுறை வளர்ச்சி பற்றி பெருமளவு விடயங்களை அறிந்துகொண்டேன். போர்நிறுத்தம் ஒஸ்லோவின் அனுசரணையுடனான போர்நிறுததம் 2002 பெப்ரவரி 23 ஆம் திகதி நடைமுறைக்கு வந்தது. ஆரம்பத்தில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஆனால், உண்மையான சமாதான இணக்கத்தீர்வுக்குை அனுகூலமில்லாத முறையில் விடுதலை புலிகள் நடந்து கொள்கிறார்கள் என்பதை விரைவாகவே நான் கண்டு கொண்டேன். பாலசிங்கத்திடம் எனது விசனத்தை வெளிப்படுத்தியபோது எனது முறைப்பாடுகளுக்கு அவர் செவிசாய்ப்பதாக இல்லை என்பதைக் கண்டுகொண்டேன். சமாதான முயற்சி ஒன்றுக்கு விடுதலை புலிகள் தங்களை பரிச்சியப்படுத்துவதற்கு அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்படவேண்டும் என்று நினைத்து நான் ஆறு மாதங்கள் காத்திருந்தேன். அது நடக்கவில்லை என்றபோது நான் விடுதலை புலிகள் செய்த எதிர்மறையான காரியங்களுக்காகவும் செய்யத்தவறிய காரியங்களுக்காகவும் அவர்களைை விமர்சிக்கத் தொடங்கினேன். சமாதானப் பேச்சுவார்த்தைகளில் விடுதலை புலிகளுக்கு உண்மையான அக்கறை இல்லை என்பதை நான் விரைவாகவே புரிந்துகொண்டேன். இந்த சிந்தனை எனது பத்திகளில் பிரதிபலித்தது. பாலசிங்கம் ஆத்திரமடைந்தார். எனது பத்திகளை பிரசுரிக்க வேண்டாம் என்றும் பிரசுரித்தால் அதனால் பத்திரிகைக்கு தமிழ் வாசகர்கள் மத்தியில் உள்ள மதிப்பு கெட்டுவிடக்கூடும் என்றும் லசந்த விக்கிரமசிங்கவுக்கு அவர் " ஆலோசனை " கூறினார். என்னிடம் அதைக் கூறிய லசந்த , மச்சான் வழமைபோன்று எழுது" என்று உற்சாகப்படுத்தினார். நான் தொடர்ந்து எழுதினேன். பிறகு பாலசிங்கம் செய்தியாளர்கள் மகாநாடுகளிலும் பொதுக்கூட்டங்களிலும் எனது பெயரைக் கூறி தாக்கத் தொடங்கினார். அவருக்கும் எனக்கும் இடையிலான தொடர்பு இல்லாமல் போனது. என்னை கடுமையாக தாக்கி எழுதுமாறு அவர் தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை கேட்குமளவுக்கு எனக்கு எதிராகச் சென்றார். தொலைபேசி அழைப்பு ஒரு சில வருடங்கள் கழித்து 2006 நவம்பர் மூன்றாம் வாரம் லண்டனில் இருந்து தொலைபேசி அழைப்பு ஒன்று எனக்கு வந்தது. பாலசிங்கம் தான் அழைத்தார். எங்களுக்கு இடையிலான அரசியல் வேறுபாடுகள் காரணமாக இருவரும் சுமார் மூன்று வருடங்களாக பேசிக்கொள்ளும் மனநிலையில் இல்லாமல் இருந்ததால் எனக்கு அதிர்ச்சியாகப் போய்விட்டது. ஆனால், " பாலா அண்ணை" யுடன் பேசுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். ஏனென்றால் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பதாகவும் அவரது நாட்கள் எண்ணப்படுகின்றன என்றும் நான் கேள்விப்பட்டேன். தனது பழைய சகாக்கள், நண்பர்கள் மற்றும் தொடர்பு வைத்திருந்தவர்கள் சிலருடன் தொலைபேசியில் பேசிவருவதாக பாலா அண்ணை தொடக்கத்தில் கூறினார். அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் கூட, விரைவில் எம்மிடமிருந்து விடைபெறப் போகின்ற ஒரு மனிதரிடமிருந்து வருகின்ற தொலைபேசி அழைப்பு அது என்பதை விளங்கிக்கொண்டேன். அவருக்கு மலவாசலில் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. அது ஒரு முதிர்ச்சியடைந்த நிலையில் இருந்தது. வைத்தியர்கள் அவர் ஒரு நான்கு தொடக்கம் ஆறு வாரங்களுக்கே உயிருடன் இருப்பார் என்று கூறிவிட்டார்கள். குதூகலமாக பகிடிவிட்டு பேசுவது பாலசிங்கத்தின் பழக்கம். நான் பேசிக்கொண்டிருந்தபோது அவர் மிகவும் கவலையடைந்திருந்தார் என்பதை உணர்ந்து கொண்டேன். அவருக்கு இருந்த அந்தக் கவலை தனக்கு நேரப்போகிற மரணத்தைப் பற்றியதல்ல. " தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை. நிலைமை படுமோசமாகுது. முழு உலகமும் சேர்ந்து புலிகளை மொங்கப்போகுது" என்று பாலா அண்ணை படபடவென்று பேசினார். தம்பி என்று அவர் கூறியது விடுதலை புலிகளின் தலைலர் வேலுப்பிள்ளை பிரபாகரனையே. போராட்டத்தின் ஆரம்பக்கட்டங்களில் பிரபாகரன் தம்பி என்றே அறியப்பட்டார். விடுதலை புலிகளின் நடவடிக்கைகளினால் சர்வதேச சமூகம் ஆத்திரமடைந்திருக்கிறது. புலிகள் தங்களது போக்கை மாற்றிக் கொண்டு ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு முறையில் செயற்பட வில்லையானால் மேற்கு நாடுகள், சீனா, ஜப்பான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா எல்லாம் ராஜபக்ச அரசாங்கத்தை ஆதரித்து விடுதலை புலிகள் இராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்டு நிராமூலம் செய்யப்படுவதை உறுதிசெய்யப் போகின்றன என்று பாலசிங்கம் சொல்லிக்கொண்டே போனார். யதார்த்த நிலையை பிரபாகரனுக்கு புரியவைத்து அதன் பிரகாரம் செயற்படவைக்க உங்களால் ஏன் முடியவில்லை என்று நான் அவரை கேட்டேன். பல தடவைகள் தான் முயன்றும் பயனில்லாமல் போய்விட்டது என்று அவர் மிகுந்த கவலையுடன் பதிலளித்தார். வடக்கில் வன்னி பெருநிலப்பரப்பில் கேப்பாபுலவில் பிரபாகரனை தனியாகச் சந்தித்து உண்மையான நிலைவரத்தை விளங்கிக்கொள்ளுமாறு கெஞ்சியதாகவும் ஆனால் பிரபாகரன் அசையவில்லை என்றும் மிகுந்த வேதனையுடனை பாலா அண்ணை கூறினார். " உனக்கு தெரியும்தானே ' வீரமார்த்தாண்டன் ' ( கோபம் வந்தால் பிரபாகரனை அவ்வாறுதான் பாலா அண்ணை அழைப்பார்) என்னுடன் எப்படி நடந்து கொள்கின்றவன் என்று " தமிழில் கூறியவாறு அவர் தொடர்ந்தார். " உண்மையான நிலைவரம் குறித்து நான் பேசிக்கொண்டிருந்த போது பிரபாகரன் திடீரென்று இடைமறித்து தமிழ்நாட்டின் பிரபல படத்தயாரிப்பாளர் சேரன் இயக்கிய " ஆட்டோகிராவ்" படம் பார்த்தீர்களா என்று என்னைக் கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும் இப்போது அந்த படத்தை நாம் பார்க்கவேண்டும் என்று கூறினார்.டி.வி.டி.மூலம் தொலைக்காட்சியில் படம் போடப்பட்டு நாம் அமைதியாகப் பார்த்தோம். படம் முடிந்ததும் நான் மீண்டும் அன்றைய நிலைவரத்தைப் பற்றி மீண்டும் பேச முயற்சித்தேன். மீண்டும் அந்த படத்தை பார்ப்போமா என்று பிரபாகரன் கேட்டார். அதனால் அதே படத்தை மீண்டும் பார்த்தோம். மீண்டும் படம் முடிந்ததும் பழைய விடயத்தை மீண்டும் நான் பேசத்தொடங்க பிரபாகரன் குறும்புச் சிரிப்புடன் ' இன்னொருக்கா பார்ப்போம் ' என்று கேட்டார். அவர் என்ன சொல்லவருகிறார் என்பதை புரிந்துகொண்டு அவரிடமிருந்து விடைபெற்றேன். பிரபாகரன் இவ்வாறு நடந்துகொள்கிறபோது அவரை இறங்கி வரச்செய்ய எதனாலும் முடியாது என்பது எனது அனுபவத்தின் அடிப்படையில் எனக்கு தெரியும்." விடுதலை புலிகளின் ஏனைய மூத்த தலைவர்களுக்கு நிலைவரத்தை புரியவைக்க முயற்சிக்கவில்லையா என்று நான் கேட்டபோது வன்னியில் உள்ள தமிழ்ச்செல்வன், காஸ்ட்ரோ, பொட்டுஅம்மான், நியூயோர்க்கில் உள்ள உருத்திரகுமாரன் போன்றவர்கள் ஒஸ்லோவின் அனுசரணையுடன் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு எனக்கு எதிராக பிரபாகரனின் மனதில் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திவிட்டார்கள் என்று பாலசிங்கம் பதிலளித்தார். மேலும், இலங்கை இராணுவத்தை தோற்கடிக்க முடியும் என்றும் ராஜபக்சவுக்கு எதிராக உலகம் விடுதலை புலிகளை ஆதரிக்கும் என்றும் அவர்கள் தவறான விடயங்களை கூறி பிரபாகரனை நம்பவைத்தும் விட்டார்கள். சூசை, 'பேபி ' சுப்பிரமணியம், பாலகுமாரன் மற்றும் பரா போன்ற மூத்த தலைவர்கள் இடர்பாட்டை விளங்கிக் கொண்டார்கள். ஆனால், யதார்த்த நிலையை கண்திறந்து பார்க்க பிரபாகரனை வழிக்குக் கொண்டுவரக்கூடிய அளவுக்கு அவர்கள் பலமுள்ளவர்களாக இருக்கவில்லை என்று பாலசிங்கம் கூறினார். நாமிருவரும் 20 - 25 நிமிடங்கள் பேசியிருந்த நிலையில் பாலசிங்கம் தொடர்ச்சியாக இரும ஆரம்பித்தார்.அவரால் தொடர்ந்து பேசமுடியவில்லை. உரையாடலை நிறுத்த வேண்டியதாயிற்று. போர் தீவிரமடைவது தவிர்க்கமுடியாததாகப் போகின்றது என்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்ததால், பாலசிங்கத்துடனான உரையாடல் எனக்கு பெரும் கவலையைத் தந்தது. வன்னி மண்ணில் உள்ள அப்பாவி தமிழ்க் குடிமக்கள் ஒரு மனதாபிமான அவலத்தை சந்திக்கப் போகிறார்கள் என்று கவலையடைந்தேன். எனது பயம் நியாயமானது என்பதை அடுத்துவந்த நிகழவுகள் நிரூபித்தன. சர்வதேச சமூகம் விடுதலை புலிகளை " மொங்கப் போகிறது" என்ற பாலா அண்ணையின் எச்சரிக்கையும் சரியென்று நிரூபிக்கப்பட்டது. கேவலமான வேலை செய்வதற்கு கொழும்பை அனுமதித்துவிட்டு சர்வதேச சமூகம் இப்போது போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறிக்கொண்டு விசாரணை நடத்த விரும்புகிறது. தப்பெண்ணம் பாலசிங்கத்துடனான இறுதி உரையாடல் எனக்கு பெருமளவு விடயங்களை தெளிவுபடுத்தவும் செய்தது. அவருடன் நான் கொண்டிருந்த ( மென்னயமாகக் கூறுவதானால்) "தப்பெண்ணம் " அவற்றில் பிரதானமானது. பாலசிங்கம் மெய்யாகவே பேச்சுவார்த்தை மூலமான இணக்கத்தீர்வு ஒன்றில் ஆழமான கரிசனை கொண்டிருந்தார் என்பதையும் ஆனால் ( பின்னர் கட்டவிழ்ந்த நிகழ்வுகள் நிரூபித்ததைப் போன்று ) பிரபாகரன் அதை நிராகரித்துவிட்டார் என்பதையும் பாலசிங்கத்துடனான உரையாடல் ஊடாக எனானால் விளங்கிக் கொள்ளக்கூடியதாக இருந்தது. என்னைத் தாக்கி ஏன் பேசினீர்கள் என்றோ அல்லது சண்டே லீடர் பத்திரிகைக்கு நான் எழுதுவதை ஏன் தடுக்க முயன்றீர்கள் என்றோ நான் அவரிடம் கேட்கவில்லை. இறக்கும் தறுவாயில் இருக்கும் மனிதரிடம் அவ்வாறு கேட்பது நயநாகரிகம் இல்லை என்று நான் உணர்ந்தேன். ஆனால், தன்னை விடுதலை புலிகள் இயக்கத்திற்குள் பாதுகாப்பதற்காகவே எனக்கு எதிராக பாலா அண்ணை பகிரங்கமாக திரும்புவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கக்கூடும் என்று உணர்ந்தேன். தமிழ்ச்செல்வனும் காஸ்ட்ரோவும் அந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்த விடுதலை புலிகள் மத்தியில் எனக்கு எதிராக கயமைத்தனமான பிரசாரம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்கள். அத்துடன் முன்னைய காலகட்டங்களில் என்னுடன் பாலசிங்கம் வைத்திருந்த நெருக்கமான தொடர்பை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது அவர் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருந்திருக்கக்கூடியது மிகவும் சாத்தியமே. தேசத்தின் குரல் அன்டன் ஸ்ரனிஸ்லோஸ் பாலசிங்கம் தெற்கு லண்டனில் உள்ள தனது வீட்டில் 2006 டிசம்பர் 14 ஆம் திகதி வியாழக்கிழமை (பிரிட்டிஷ் நேரப்படி ) பிற்பகல் 1.45 மணிக்கும் அமைதியாக காலமானர். பாலா அண்ணை இறுதிமூச்சை விட்ட தருணம் அவரது அன்பு மனைவி அடேல் ஆன் அருகே இருந்தார்.2006 டிசம்பர் 20 ஆம் திகதி லண்டனில் அலெக்சாண்டிரா பலஸில் இறுதிச்சடங்கு இடம்பெற்றது. விடுதலை புலிகளின் தத்துவவாதியும் மதியூகியுமான பாலா அண்ணைக்கு இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் " தேசத்தின் குரல் " என்ற பட்டத்தை வழங்கி அஞ்சலி செய்தார். நான் பாலா அண்ணையுடன் கொண்டிருந்த உறவுமுறை பற்றிய நினைவுகளும் சிந்தனைகளும் கடந்த 14 ஆம் திகதி அவரது 18 வது நினைவு தினம் என்பதால் மீண்டும் எழுந்தன. https://www.virakesari.lk/article/201481
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானின் ஏவுகணை, தெற்காசியாவை தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது என அமெரிக்கா தெரிவித்துள்ளது அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடான பாகிஸ்தான் நீண்ட தூரம் சென்று தாக்கும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை உருவாக்கி வருகிறது என்றும், அது தெற்காசியாவைத் தாண்டி அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட ஒரு ஏவுகணை என்றும் அமெரிக்க அதிபர் அலுவலகத்தை சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஒரு காலத்தில் பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த அமெரிக்கா தற்போது பாகிஸ்தானின் ஏவுகணை திட்டம் குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது. இந்த பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தின் நோக்கம் என்ன, பாகிஸ்தான் இதனை வைத்து என்ன செய்ய திட்டமிடுகிறது என்ற முக்கிய கேள்வி எழுந்துள்ளது என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபின்னர் கூறுகிறார். "பாகிஸ்தானின் இந்த நடவடிக்கை அமெரிக்காவுக்கு வளர்ந்து வரும் ஒரு அச்சுறுத்தலாக மட்டுமே இருக்கும் என்பதைத் தவிர வேறு எந்த வழியிலும் இதை பார்க்க முடியாது" என்று கானகி எண்டவ்மேன்ட் பார் இண்டர்நேஷ்னல் பீஸ் எனும் சிந்தனைக்குழு கூட்டத்தில் ஜான் ஃபின்னர் கூறினார். கந்தஹார் விமான கடத்தல் - அந்த மோசமான 8 நாட்கள் இந்திய நேபாள உறவுகளை மாற்றியது எப்படி? ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண் இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை ''நவீன தொழில்நுட்பம் கொண்ட ஏவுகணை திட்டத்தை பாகிஸ்தான் உருவாக்கியுள்ளது. இதில் நீண்ட தூரம் சென்று தாக்கும் பாலிஸ்டிக் ஏவுகணை அமைப்புகள் முதல் பெரிய ராக்கெட் மோட்டார்களை சோதனை செய்யும் திறன் கொண்ட சாதனங்கள் வரை அடங்கும். ஒரு சில நாடுகளிடம் மட்டுமே அமெரிக்கா வரை சென்று தாக்கும் திறன் கொண்ட அணு ஆயுதங்களும், ஏவுகணைகளும் இருக்கின்றன. இந்த நாடுகள் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. அவை ரஷ்யா, வட கொரியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஆகும்'' என ஃபின்னர் கூறியுள்ளார். குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் தகறாறு - விவாகரத்து கோரிய தம்பதியரை ஒன்றிணைத்த நீதிமன்றம்2 மணி நேரங்களுக்கு முன்னர் 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தானின் புதிய ஏவுகணை திட்டத்திற்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அன்று தெரிவித்தது. (கோப்புப்படம்) புதிய தடைகள் பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்தால் கூடுதல் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா புதன்கிழமை அன்று தெரிவித்தது. ஏவுகணைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது தொடர்பான திட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த நான்கு நிறுவனங்கள் ஈடுபட்டதாக இதற்கு முன்பு அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்தது. பாகிஸ்தானின் நீண்ட தூர ஏவுகணைத் திட்டத்தின் மூலம் தொடர்ச்சியாக ஏவுகனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் அபாயத்தைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அமெரிக்கா கூறியது. பாகிஸ்தானின் நான்கு நிறுவனங்கள் அமெரிக்காவின் 'நிர்வாக ஆணை' (EO) 13382 இன் கீழ் தடைகள் விதிப்பதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது. இந்தியா - குவைத்: 43 ஆண்டுகளுக்கு பிறகு செல்லும் முதல் பிரதமர் - மோதியின் நோக்கம் என்ன?20 டிசம்பர் 2024 அம்பேத்கர், காங்கிரஸ் இடையிலான உறவு உண்மையில் எப்படி இருந்தது?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பேரழிவு விளைவிக்கும் ஆயுதங்களை உருவாக்குதல் மற்றும் அதன் எண்ணிக்கையை அதிகரித்தல் போன்றவற்றை தடுக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. "அமெரிக்காவை தாக்கும் அளவிற்கு திறன் கொண்ட ஏவுகணைகள் பாகிஸ்தானிடம் இருக்கலாம் என்று அமெரிக்க துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் ஃபின்னர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நிறுவனங்கள் மீது அமெரிக்கா ஏன் தடைகளை விதித்தது என்பதைப் புரிந்துகொள்ள இது உதவுகிறது", என்று வாஷிங்டனை தளமாகக் கொண்டு செயல்படும் சிந்தனைக் குழுவான வில்சன் மையத்தின் தெற்காசிய நிறுவனத்தின் இயக்குனர் மைக்கேல் குகல்மேன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். பாகிஸ்தானின் பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்திற்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதில் ஈடுபட்டதாக கூறி சீனாவை சேர்ந்த ஒரு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் மேலும் பல நிறுவனங்கள் மீதும் கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா தடைகளை விதித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்20 டிசம்பர் 2024 பாலின ஈர்ப்புகளில் என்னென்ன வகைகள் உள்ளன? பொம்மைகள் மீதும் காதல் வருமா?ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதற்கு பாகிஸ்தான் எப்படி எதிர்வினையாற்றியது? "அமெரிக்கா எங்கள் நாட்டின் மீது எவ்வளவு அழுத்தம் கொடுக்கிறதோ, அவ்வளவு அதிகமாக நாங்கள் சீனாவுடன் நெருக்கமாக இருக்க முற்படுவோம். அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கமாக இருக்கும்போது, நாங்கள் சீனாவுடன் நெருக்கமாக இருப்போம். இந்தியா ஒரு புதிய வித விளையாட்டை விளையாடி வருகிறது. அது அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகள் உடனும் நெருக்கமாக இருக்கிறது", என்று பாகிஸ்தானின் சாமா தொலைக்காட்சியின் ஒரு நிகழ்ச்சியில் பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் நஜம் சேத்தி கூறினார். எவ்வாறாயினும், குவாடர் துறைமுகம் மற்றும் CPEC (China Pakistan Economic Corridor) போன்ற சில பிரச்னைகளால் பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் அவை இன்னும் தீர்க்கப்படவில்லை. மறுபுறம், இந்திய-அமெரிக்க உறவுகள் மேம்பட்டு வருகின்றன என்று நஜம் சேத்தி கூறுகிறார். "அடுத்த ஆண்டு, அதாவது 2025 ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கவனம் இரான் மீது இருக்கும் என்று நான் கருதுகிறேன். இது அங்கு ஆட்சி மாற்றம் மற்றும் இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதுடன் தொடர்புடையது. இதுவே அவர்களின் இலக்கு'' என்றும் நஜம் கூறினார். "அவ்வாறு நடந்தால், 2026-ஆம் ஆண்டில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கவனம் பாகிஸ்தான் மற்றும் அதன் அணுசக்தி திட்டத்தின் மீது இருக்கும்." "சீனா பாகிஸ்தானுக்கு ஒரு பெரிய உதவி நாடாக இருக்கிறது, இதனை அமெரிக்காவால் தடுக்க முடியாது" என்று அவர் கூறினார். கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்த்து போராடும் மக்கள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு35 நிமிடங்களுக்கு முன்னர் சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன?19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடன் அரசாங்கத்தின் பல கொள்கைகளில் பெரிய மாற்றங்களை டொனால்ட் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார் டிரம்ப் அதிபரான பிறகு என்ன நடக்கும்? சமீபத்தில், பாகிஸ்தான் மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடர்பாக, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் கட்சியின் பங்கு குறித்தும் கேள்வி எழுப்பப்படுகிறது. இக்கட்சி அமெரிக்காவிடம் லாபி செய்ததாக குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுகுறித்து நஜம் சேத்தி கூறுகையில், "இதற்கு முன்பு பலமுறை பாகிஸ்தான் மீது தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகள் வழங்குவதை அமெரிக்கா நிறுத்தியது. 1971-ஆம் ஆண்டு போர் நடந்த போதிலும் பாகிஸ்தான் மீது அமெரிக்கா தடை விதித்தது". ''1977 மற்றும் 1990-ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தானில் ராணுவப் புரட்சி நடந்த போதும் அமெரிக்கா கடுமையான தடைகளை விதித்திருந்தது.'' இது நாட்டிற்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும், பாகிஸ்தான் முன்பு செய்ததையே மீண்டும் தொடரும் என்றும் நஜம் சேத்தி குறிப்பிட்டார். ''இரான் மீது அமெரிக்கா கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது ஆனால் இரான் தனது பாதுகாப்புத் திட்டத்தை நிறுத்திவிட்டதா?'' என்கிறார் நஜம் "பைடன் நிர்வாகம் பாகிஸ்தானின் ஏவுகணை திட்டத்தின் மீது 6 அல்லது 7 முறை தடைகளை விதித்திருக்கிறது. எனவே இது ஒரு புதிய விஷயம் அல்ல. ஆரம்பத்தில் இருந்தே, பாகிஸ்தானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை குறைக்க, தடுக்க அல்லது மெதுவாக்க அமெரிக்கா முயன்று வந்தது", என்று சமா தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் நிரந்தர பிரதிநிதியான மலீஹா லோதி கூறினார். "சீனா மீது, அமெரிக்காவும் பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் அது பாகிஸ்தானுக்கு தன்னம்பிக்கையை மட்டுமே அளிக்கிறது. ஆனால் இந்த முறை விதிக்கப்பட்டுள்ள தடைகள் எங்கள் திட்டத்தை பாதிக்காது" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8dqrr9g5pqo
  9. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21) அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு 2 படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள் இவர்களது படகை வழி மறித்தது மீனவர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த மீன்கள், மீன்பிடி வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர். தாக்குதலில் இருந்து தப்பிய 3 மீனவர்களும் உடனடியாக அவசரம் அவசரமாக கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்தனர். அங்கிருந்து சக மீனவர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர். இதில் ராஜேந்திரன் என்பவருக்கு தலையில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. ராஜ்குமார் என்பவருக்கு தலையில் வெட்டுக்காயம் மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. நாகலிங்கம் என்பவருக்கும் உள்ள காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காயம் அடைந்த 3 மீனவர்களும் வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழக மீனவர்களை தாக்கிய கடற்கொள்ளையர்கள் மீன்பிடி வலை, ஜிபிஎஸ் கருவி, செல்போன், மற்றும் மீன்பிடி உபகரணங்கள் 3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறித்து சென்றுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் மீனவ கிராமங்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். -மன்னார் நிருபர் லெம்பட்- https://tamil.adaderana.lk/news.php?nid=197635
  10. 19 DEC, 2024 | 07:22 AM (நெவில் அன்தனி) கத்தார் தேசத்தின் தலைநகர் தோஹாவில் நேற்று இரவு நடைபெற்ற சர்வதேச கால்பந்தாட்ட சங்கங்களின் சம்மேளன (FIFA) விருது விழாவில் அதி உயரிய விருதுகைளை வினிசியஸ் Jr, ஆய்ட்டான பொன்மாட்டி வென்றெடுத்தனர். பிரேஸில் முன்கள வீரர் வினிசியஸ் Jr. வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராகவும் ஸ்பெய்ன் மத்திய கள வீராங்கனை ஆய்ட்டானா பொன்மாட்டி, வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தெரிவாகினர். அற்புதமான கால்பந்தாட்ட ஆற்றலைக் கொண்டுள்ள பிரேஸில் தேசிய அணி வீரரும், ரியல் மெட்றிட் கழக விரருமான வினிசியஸ் ஜூனியர் (Jr.) முதல் தடவையாக வருடத்தின் அதிசிறந்த வீரருக்கான பீபா விருதை வென்றெடுத்தார். ரியல் மெட்றிட் கழகத்தின் நட்சத்திர வீரரான வினிசியஸ் Jr., உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டிகளிலும் ஐரோப்பிய கால்பந்தாட்டப் போட்டிகளிலும் கழகத்தின் வெற்றிகளில் பெரும் பங்காற்றி இருந்தார். வினிசியஸ் ஜூனியரின் கால்பந்தாட்ட வாழ்க்கையில் 2023-24 மிகச்சிறந்த பருவகாலமாக பதிவானது. இந்த பருவகாலத்தில் ரியல் மெட்றிட் கழகத்திற்காக 39 போட்டிகளில் விளையாடிய வினிசியஸ் 24 கோல்களைப் புகுத்தியிருந்தார். பொருசியா டோர்ட்மண்ட் அணிக்கு எதிரான ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி வெற்றியில் ரியல் மெட்றிட் சார்பாக ஒரு கோலை புகுத்திய வினிசியஸ், சுப்பகோப்பா டி எஸ்பானா இறுதிப் போட்டியில் பார்சிலோனாவுக்கு எதிராக ஹெட்-ட்ரிக் முறையில் கோல்களைப் போட்டு அசத்தியிருந்தார். பிபாவின் அதிசிறந்த வீரருக்கான விருதை 2007க்குப் பின்னர் வென்றெடுத்த முதலாவது பிரேஸில் வீரர் என்ற பெருமையை வினிசியஸ் Jr. பெற்றுள்ளார். ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் மற்றும் லா லிகா ஆகிய இரண்டு சம்பியன் பட்டங்களை வென்றெடுத்த வினிசியஸ் ஜூனியர், அதிசிறந்த 2023 - 24 சம்பயின்ஸ் லீக் வீரர் என்ற விருதையும் தனதாக்கிக்கொண்டிருந்தார். அதிசிறந்த வீராங்கனை பொன்மாட்டி வருடத்தின் அதிசிறந்த கால்பந்தாட்ட வீராங்கனைக்கான பீபா வீருதை இரண்டாவது தொடர்ச்சியான தடவையாக ஸ்பெய்ன் மற்றும் பார்சிலோனாவின் சுப்பஸ்டார் ஆய்ட்டானா பொன்மாட்டி வென்றெடுத்து பலத்த பாராட்டைப் பெற்றார். தேசிய அணியிலும் கழக அணியிலும் அவர் வெளிப்படுத்திய அதிசிறந்த மற்றும் வெற்றிகரமான ஆற்றல்களுக்காகவே இந்த விருதை அவர் வென்றெடுத்துள்ளார். இந்த விருதை ஒரு தடவைக்கு மேல் வென்றெடுத்த வீராங்கனைகள் வரிசையில் மியா ஹாம், கார்லி லொய்ட், மார்த்தா, பேர்ஜிட் பிறின்ஸ், அலெக்சியா பியூட்டெல்லாஸ் ஆகியோருடன் இப்போது ஆய்ட்டானா பொன்மாட்டி இணைந்துகொண்டுள்ளார். 2023 - 24 பருவகாலத்தில் நடைபெற்ற ஐரோப்பிய மகளிர் நேஷன் லீக் கால்பந்தாட்டத்தில் சம்பியனான ஸ்பெய்ன் அணியிலும் ஐரோப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் ககால்பந்தாட்டத்தில் சம்பியனான பார்சிலோனா அணியிலும் முக்கிய பங்காற்றிய வீராங்கனைகளில் பொன்மாட்டியும் ஒருவராவார். ஐரொப்பிய மகளிர் சம்பியன்ஸ் லீக் பருவகாலத்தில் அதிசிறந்த வீராங்கனையாக 26 வயதுடைய பொன்மாட்டி தெரிவாகி விருது வழங்கப்பட்டது. அத்துடன் நேஷன்ஸ் லீக் இறுதி ஆட்ட நாயகி, சம்பியன்ஸ் லீக் இறுதி ஆட்ட நாயகி ஆகிய விருதுகளையும் வென்றெடுத்த பொன்மாட்டி, கோப்பா டி லா ரெய்னா விருது, சுப்பகோப்பா டி எஸ்பானா ஃபெமினினா விருது ஆகியவற்றையும் தனதாக்கிக்கொண்டார். ஏனைய விருதுகள் அதிசிறந்த ஆடவர் அணி பயிற்றுநர்: கார்லோஸ் அன்சிலோட்டி (ரியல் மெட்றிட்). முதல் தடவையாக இந்த விருதை வென்றெடுத்துள்ளார். ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக், லா லிகா, சுப்பகோப்பா டி எஸ்பானா ஆகிய மூன்று சம்பியன் பட்டங்களை ரியல் மெட்றிட் கழகத்திற்கு வென்கொடுத்த பயிற்றுநர். அதிசிறந்த மகளிர் அணி பயிற்றுநர்: எமா ஹெய்ன்ஸ் (செல்சி மற்றும் ஐக்கிய அமெரிக்கா). இந்த விருதை இரண்டாவது தடவையாக எமா வென்றெடுத்துள்ளார். மகளிர் சுப்ப லீக்கில் செல்சியை சம்பியனாக வழிநடத்திய எமா, பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா மகளிர் கால்பந்தாட்டத்தில் தங்கப் பதக்கம் வென்ற ஐக்கிய அமெரிக்க அணியின் பயிற்றுநராகவும் செயற்பட்டிருந்தார். ஆண்களில் அதிசிறந்த கோல்காப்பாளர்: எமிலியானோ மார்ட்டினெஸ் (ஆர்ஜன்டீனா) பெண்களில் அதிசிறந்த கோல்காப்பாளர்: அலிசா நோயர் (ஐக்கிய அமெரிக்கா) ஆண்களில் அதிசிறந்த கோலுக்கான புஸ்காஸ் விருது: அலெஜாண்ட்ரோ கானாச்சோ (மென்செஸ்டர் யுனைட்டட்). எவட்டன் கழகத்திற்கு எதிரான கால்பந்தாட்டப் போட்டியில் தலைக்கு மெலாக வந்த பந்தை நோக்கி உயரே தாவி அந்தரத்தில் இருந்தவாறு கானாச்சோ வலதுகாலால் பின்னோக்கி உதைத்து போட்ட கோல் அதிசிறந்த கோலாக தேர்வுசெய்யப்பட்டது. பெண்களில் அதிசிறந்த கோலுக்கான அங்குரார்ப்பண மார்த்தா விருது: பிரேஸில் முன்கள வீராங்கனை மார்த்தா வியரா டா சில்வா முதலாவது வீராங்கனையாக மகளிர் கால்பந்தாட்டத்தில் அதிசிறந்த கோலுக்கான விருதை வென்றெடுத்தார். இதில் ஒரு விசேடம் என்னவென்றால் தனது சொந்த பெயரில் அறிமுகமான விருதை அவரே வென்றெடுத்ததாகும். ஜெமெய்க்காவுக்கு எதிரான போட்டியில் எதிரணி வீராங்கனையால் நகர்த்தப்பட்ட பந்தை பெற்றுக்கொண்ட மார்த்தா, அதனைத் தனியாக முன்னோக்கி நகர்த்திச் சென்று இடதுகாலால் உதைத்து போட்ட கோல் அதிசிறந்த கோலாக தேர்ந்தெடுக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/201611
  11. ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது வாகனத்தால் மோதிய நபர் – சவுதிமருத்துவர்- தனித்து செயற்பட்டுள்ளார் 21 DEC, 2024 | 08:15 AM ஜேர்மனியில் கிறிஸ்மஸ் சந்தையில் பொதுமக்கள் மீது காரை செலுத்தி உயிரிழப்புகளை ஏற்படுத்திய நபர் தனியாக செயற்பட்டுள்ளார் என சம்பவம் இடம்பெற்ற சக்சனி அல்ஹாட் மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இது மாநிலத்திற்கும் அதன் தலைநகரிற்கும் துயரமான நாள்,இருவர் உயிரிழந்துள்ளனர் பலர் காயமடைந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளார் இவர் சவுதி அரேபியாவை சேர்ந்த 50 வயது நபர்,2006 இல் ஜேர்மனிக்கு வந்த இவர் நிரந்தர வதிவிட ஆவணத்தை பெற்றவர் என தெரிவித்துள்ளார். சமீபத்தில் இவர் மக்டர்பேர்க்கிலிருந்து 35 கிலோமீற்றர் தொலைவில் உள்ள பேர்ன்பேர்க்கில் மருத்துவராக பணிபுரிந்திருந்தார். எங்களிற்கு கிடைத்த தகவலின்படி அவர் தனியாக இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்,வேறு எவரும் இணைந்து செயற்பட்டதாக தகவல் இல்லை,என சம்பவம் இடம்பெற்ற மாநிலத்தின் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201779
  12. பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும் - ஜாமுனி காமந்த துஷார Published By: DIGITAL DESK 2 21 DEC, 2024 | 09:57 AM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடை அல்லது நிதியுதவி பெற வேண்டுமாயின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கும் குறைவானதாக காணப்பட வேண்டும் என்ற நிபந்தனை காணப்படுகின்ற நிலையில் பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்திய அரசியல்வாதிகளுக்கு எவ்வாறு கோடிக்கணக்கில் நிதியளிக்க முடியும். முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும் என இலஞ்ச, ஊழலுக்கு எதிரான மக்கள் அமைப்பின் தலைவர் ஜாமுனி காமந்த துஷார தெரிவித்தார். 2005 முதல் 2024 வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 10 இலட்சம் முதல் கோடி கணக்கில் நிதி பெற்றுக்கொண்ட அரசியல்வாதிகளின் பெயர் பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ அண்மையில் வெளியிட்டார். இவ்விடயம் குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (20) முறைப்பாடளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, வறுமை நிலையில் உள்ள மக்களின் நலன்புரி தேவைகள் மற்றும் வாழ்வியல் மேம்பாட்டுக்காகவே ஜனாதிபதி நிதியம் 1978 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஜனாதிபதி நிதியச் சட்டத்தில் நன்கொடை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டிய தரப்பினர் தொடர்பில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கமைய ஏழ்மை நிலையில் உள்ளவர்கள், கல்வி மற்றும் புலமை தேர்ச்சி, மத மேம்பாடு, தேசியத்துக்காக சேவையாற்றியவர்களுக்கான நன்கொடை மற்றும் ஜனாதிபதி அல்லது நிதிய சபையின் தீர்மானத்துக்கு அமைய என்ற அடிப்படையில் நன்கொடை வழங்கப்பட வேண்டும். சாதாரண மக்கள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நன்கொடையை பெற்றுக்கொள்வது இலகுவானதொன்றல்ல, நிதியத்தில் இருந்து நிதி பெறுவதற்கு எதிர்பார்க்கும் நபரின் குடும்ப உறுப்பினர்களின் மாத வருமானம் 1 இலட்சத்துக்கு குறைவானதாக காணப்பட வேண்டும், சிகிச்சைக்கு நிதி பெறுவதாயின் சிகிச்சையின் 50 சதவீதத்தை பிறிதொரு தரப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பல நிபந்தனைகள் விதிக்கப்படும். கடந்த காலங்களில் தகுதி உள்ளவர்களில் பலருக்கு நிதியத்தில் இருந்து ஒத்துழைப்பு கிடைக்கப் பெறவில்லை. 2005 முதல் 2024 ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகாலம் அமைச்சு, இராஜாங்க அமைச்சு உட்பட அரசாங்கத்தின் உயர் பதவி வகித்தவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நிதிய சபையின் தலைவர்களாக பதவி வகித்த முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் தமக்கு இணக்கமானவர்களுக்கு மாத்திரம் நிதி வழங்கியுள்ளார்கள். பல ஆண்டுகாலமாக அரசியலில் செல்வாக்கு செலுத்தும் அரசியல்வாதிகளுக்கு கோடிக்கணக்கில் எவ்வாறு நிதியளிக்க முடியும். முறையற்ற இந்த செயற்பாடு குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு வழங்கிய நிதியை மீளப்பெற வேண்டும்.கடந்த கால ஆட்சியாளர்கள் தமது அரசியல் இருப்புக்காக இவ்வாறு முறையற்ற வகையில் செயற்பட்டுள்ளார்கள் . நாட்டு மக்களும் இவர்களிடம் கேள்வி கேட்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/201751
  13. அவுஸ்திரேலிய நீதிமன்றத்தினால் குற்றஞ்சாட்டப்பட்ட இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக தவறிழைக்கவில்லை - வெளிவிவகார அமைச்சர் விளக்கம் Published By: DIGITAL DESK 7 21 DEC, 2024 | 09:15 AM (நா.தனுஜா) வெளிநாடுகளில் பணியாற்றும் இராஜதந்திரிகளால் இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லப்படும் பணியாட்களுக்கான சம்பளத்தை அரசாங்கமே வழங்கும் என்றும், அச்சம்பளம் இலங்கையில் நடைமுறையிலிருக்கும் சம்பள நிர்ணய விதிகளுக்கு அமைவாகவே தீர்மானிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டிய வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத், அதனடிப்படையில் நோக்குகையில் அண்மையில் சர்ச்சைக்குள்ளான ஹிமாலி அருணதிலகவினால் எவ்வித தவறும் இழைக்கப்படவில்லை என விளக்கமளித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது ஆராயப்பட்ட விடயங்கள் மற்றும் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பொன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பிலுள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அங்கு தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு குறித்தும், இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகவியலாளர் ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் விஜித்த ஹேரத், இராஜதந்திரிகள் வெளிநாடுகளில் பதவிகளை வகிக்கும்போது, அவர்கள் தமக்கான வீட்டுப்பணியாட்களை இலங்கையிலிருந்து அழைத்துச்செல்லமுடியும் எனவும், அப்பணியாளர்களுக்கான சம்பளம் அரசாங்கத்தினால் வழங்கப்படுமே தவிர, குறித்த இராஜதந்திரியினால் வழங்கப்படமாட்டாது எனவும் விளக்கமளித்தார். அத்தோடு மேற்குறிப்பிட்டவாறு அரசாங்கத்தினால் பணியாட்களுக்கு வழங்கப்படும் ஊதியமானது இலங்கையின் சம்பள நிர்ணயங்களுக்கு அமைவாகவே வழங்கப்படும் என்றும், இருப்பினும் அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் நிர்ணயிக்கப்பட்டிருக்கும் சம்பள அளவுகோல்களுடன் ஒப்பிடுகையில் அது மிகக்குறைவான தொகையாக இருக்கக்கூடும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 'எனவே இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுடன் தொடர்புடைய பிரச்சினை இதனடிப்படையிலேயே தோற்றம் பெற்றிருக்கிறது. மாறாக அவர் அரசாங்கத்திடம் பணத்தைப் பெற்றுக்கொண்டு, அதனை பணியாளுக்கு வழங்காமல் இருக்கவில்லை. உண்மையில் இது நாட்டின் கொள்கை சார்ந்த பிரச்சினையாகும். ஆனால் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக ஊடகங்களால் மிகமோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அவற்றினால் அவர் தனிப்பட்ட ரீதியில் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்' என்றும் விஜித்த ஹேரத் சுட்டிக்காட்டினார். மேலும் இந்த சம்பள நிர்ணய விடயத்தில் அரசாங்கம் கொள்கை ரீதியிலான தீர்மானத்தை எடுக்கவேண்டிய அவசியம் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகத் தற்போது பதவி வகித்துவரும் ஹிமாலி அருணதிலக, 2015 - 2018 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியபோது அவரது கன்பரா இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணிபுரிந்த இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன என்பவருக்கு உரியவாறு ஊதியத்தைச் செலுத்தவில்லை என்றும், ஆகையினால் அவர் பிரியங்காவுக்கு 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் என்றும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதனைத்தொடர்ந்து அண்மையில் இவ்வழக்கில் மேற்கொள்ளப்பட்ட இறுதி சமர்ப்பணத்தை அடுத்து, இராஜதந்திரிகள் எதிர்வருங்காலங்களில் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கிலும், இவ்வழக்கு தொடர்பான நீதிமன்ற செயன்முறையில் ஹிமாலி அருணதிலக உரியவாறு பங்கேற்காததன் காரணமாகவும் அவர் மேலும் 117,000 டொலரை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்தவேண்டும் என அந்நீதிமன்றம் கடந்த வாரம் தீர்ப்பளித்தமை குறிப்பித்தக்கது. https://www.virakesari.lk/article/201752
  14. 21 DEC, 2024 | 08:53 AM (இராஜதுரை ஹஷான்) மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உறுதியான தீர்மானத்தை எடுக்க வேண்டும். சுட்டிக்காட்டப்பட்டுள்ள சட்ட சிக்கலுக்கு தீர்வு பெற்றுக் கொடுத்தால் மாகாண சபைத் தேர்தலை தாராளமாக நடத்தலாம். காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளேன் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும். உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதில் எவ்வித சட்ட சிக்கலும் கிடையாது. ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள வேட்புமனுக்களை இரத்துச் செய்து மீண்டும் வேட்புமனுக்களை கோருமாறு அரசியல் கட்சிகள் வலியுறுத்துகின்றன. வேட்புமனுக்களை இரத்துச் செய்வதாயின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டம் திருத்தம் செய்யப்பட வேண்டும். ஆகவே சட்டத்திருத்தம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உரிய தீர்மானத்தை எடுத்தால் வெகுவரைவில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தலாம். மாகாண சபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்ட சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் பாராளுமன்றத்தின் ஊடாக உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தியுள்ளோம். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த காலங்களிலும் பல பரிந்துரைகளை பாராளுமன்ற தெரிவுக் குழுக்களிடம் முன்வைத்துள்ளது. காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை வெகுவிரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். ஜனாதிபதித் தேர்தல், பொதுத்தேர்தல் சிறந்த முறையில் நடத்தப்பட்டது. தேர்தல் சட்டத் திட்டங்களை பின்பற்றும் நிலையில் மக்கள் உள்ளார்கள். உள்ளூராட்சிமன்றத் தேர்தல் குறித்து எதிர்வரும் காலங்களில் அரசியல் கட்சித் தலைவர்களுடனும், செயலாளர்களுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட தீர்மானித்துள்ளோம். தேர்தலை நடத்துவதற்கான சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது அரசாங்கத்தினதும், அரசியல் தரப்பினரினதும் பொறுப்பாகும் என்றார். https://www.virakesari.lk/article/201740
  15. Published By: VISHNU 21 DEC, 2024 | 01:59 AM இந்தியாவுக்கும் இலங்கைக்குமான நோர்வே தூதுவரை H.E. May-Elin Stener, 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை சந்தித்து எமது மக்களின் பல முக்கிய விடயங்கள் மற்றும் சமகால அரசியல் தொடர்பாக தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான ம. சுமந்திரனுடன் சந்தித்து கலந்துரையாடினர். https://www.virakesari.lk/article/201775
  16. ஜனாதிபதி நிதியத்திடமிருந்து உதவித்தொகைப் பெறுவது குற்றமா? - நளிந்த ஜயதிஸ்ஸவிடம் தயாசிறி கேள்வி 20 DEC, 2024 | 05:01 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி நிதியத்திடமிருந்து மருத்துவ தேவைக்காக உதவித்தொகையைப் பெறுவது சட்டத்துக்கு முரணானதோ அல்லது கொள்ளை குற்றமோ அல்ல. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து உதவி பெறக் கூடாது என்றால் அதற்குரிய யோசனையை பாராளுமன்றத்தில் முன்வைக்குமாறும், தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் ஒருபோதும் இதிலிருந்து உதவியைப் பெறப்போவதில்லை என்று உறுதிமொழியெடுக்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர வலியுறுத்தினார். இன்று வெள்ளிக்கிழமை (20) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இதய சத்திர சிகிச்சைக்காக ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பெற்றுக் கொண்ட நிதி தொடர்பில் கடந்த பாராளுமன்ற அமர்வில் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கருத்து வெளியிட்டுள்ளார். ஜனாதிபதி நிதியத்திடமிருந்து மருத்துவ தேவைகளுக்காக பணத்தைப் பெற்றுக் கொள்வதற்கு எவ்வித சட்ட ரீதியான தடைகளும் கிடையாது. அதேபோன்று அங்கிருந்து பணத்தைப் பெற்றுக் கொள்வது கொள்ளைக் குற்றமும் கிடையாது. நாட்டிலுள்ள எந்தவொரு பிரஜைக்கும் கோரிக்கை விடுத்து ஒரு தொகை நிதியைப் பெற்றுக் கொள்ள முடியும். ஆனால் சுமார் 100 இலட்சத்துக்கும் அதிக நிதி பெற்றுக் கொள்ளப்பட்டமை தொடர்பில் பிரச்சினையுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். எனினும் இந்த பட்டியலில் சகல அரசியல்வாதிகளதும் பெயர்களை வெளியிட்டதன் ஊடாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ எதிர்பார்ப்பது என்ன? நிதியை விடுவிப்பது குறித்த தீர்மானமெடுக்கும் நிர்வாகசபையில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர், ஜனாதிபதி செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மேலும் இருவர் உள்ளடங்குகின்றனர். ஜனாதிபதி நிதிய சட்டத்தில் குறிப்பிட்டப்பட்டுள்ள காரணிகளுக்காக நிதியை விடுவிக்கும் அதிகாரம் இந்த நிர்வாகசபைக்கு உண்டு. அதற்கமையவே அரசியல்வாதிகள் உள்ளிட்டோருக்கு நிதிகள் வழங்கப்பட்டுள்ளன. அத்தோடு கணக்காய்வாளர் நாயகத்தின் பரிசீலனைக்கு உட்பட்டது என்றும் அந்த சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கணக்காய்வாளர் அறிக்கையில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ முன்வைத்த காரணிகள் தொடர்பில் எந்தவொரு விடயமும் உள்ளடக்கப்படவில்லை. அரசியல்வாதிகளுக்கு அந்த நிதியை விடுவித்தமை தவறு என்றும் எங்கும் குறிப்பிடப்படவுமில்லை. 2019ஆம் ஆண்டு அரச அங்கீகாரம் பெற்ற தனியார் வைத்தியசாலையான ஸ்ரீஜயவர்தனபுர வைத்தியசாலையிலேயே எனக்கு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. வைத்தியர் எனக் குறிப்பிடப்படும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக இவ்வாறு செயற்படுவது பொறுத்தமற்றது. எனது சத்திர சிகிச்சைக்கு 8 இலட்சத்து 65 000 ரூபா செலவாகியுள்ளது. இந்த மொத்த தொகையில் ஒரு பகுதியை மாத்திரமே நான் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பெற்றிருக்கின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மனிதாபிமான அடிப்படையில் எனக்கு அந்த உதவியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார். அரசியல்வாதிகள் என்பதற்காக 100 - 300 இலட்சம் வரை பெற்றிருப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. அதேவேளை ஏனையோர் குறிப்பிட்டவொரு தொகையைப் பெற்றிருப்பது தவறு என்றும் கூற முடியாது. மாறாக அது தவறு என்று அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிடுவாரெனில் ஜனாதிபதி நிதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறு கோருகின்றோம். அவ்வாறில்லை என்றால் எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் 159 எம்.பி.க்களும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நிதியைப் பெறப்போவதில்லை என்று உறுதிமொழியெடுக்குமாறு வலியுறுத்துகின்றோம். அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இதில் உதவியைத் தொகையைப் பெற முடியாது என்ற யோசனையை முன்வைத்து அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/201739
  17. 20 DEC, 2024 | 04:54 PM (எம்.மனோசித்ரா) சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இலங்கை மது ஒழிப்பு பேரவையின் புதிய அலுவலக திறப்பு விழாவில் இன்று வெள்ளிக்கிழமை (20) கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், சுற்றுலாத் தொழிலை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு அரசியல்வாதிகளுக்கு மதுபான உரிமப் பத்திரங்களை வழங்கிய காலமொன்று இருந்தது. இந்த கலாச்சாரம் நிறுத்தப்பட வேண்டும். நாட்டின் சமூக ஒழுங்கு குறித்து உண்மையான யதார்த்தமான புரிதலை நாம் கொண்டிருக்க வேண்டும். இதை விடுத்து வெறுமனே பேசக் கூடாது. நாட்டில் டொலருக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. அடுத்த ஆண்டு முதல் வட்டியில் ஒரு பகுதியை செலுத்த வேண்டும். பிற வெளிநாட்டு கடன்களையும் செலுத்த வேண்டியுள்ளன. இதை அடைவதற்காக நமது நாட்டின் அந்நிய செலாவனி கையிருப்புக்களை உயர் மட்டத்தில் வெற்றிகரமாக பேண வேண்டும். இதன் பொருட்டு, சுற்றுலாத் துறையானது அந்நியச் செலாவணியை ஈட்டும் முக்கிய ஏற்றுமதி வணிகங்களில் ஒன்றாகப் பெயரிடப்பட்டுள்ளது. சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் அதேவேளை, அதனால் சமூகத்தில் ஏற்படும் சமூக பாதிப்புகளைக் குறைப்பதற்கும், தடுப்பதற்கும் சமச்சீரான வேலைத்திட்டமொன்றும் முன்னெடுக்கப்பட வேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக மதுபானசாலை உரிமைப் பத்திரங்கள் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக அல்லாமல் அரசியல் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதற்காக வழங்கப்பட்டன. சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதாக கூறிக் கொண்டு, அரசியல்வாதிகளை பலப்படுத்தவும், கட்சி தாவும் நடவடிக்கையையும் மேற்கொள்வுமே இவை வழங்கப்பட்டு வந்தன. இந்தக் கலாசாரத்திலிருந்து விலகி நல்லொழுக்கமுள்ள நாகரீகமான சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். முறையான கொள்கை உருவாக்கத்துடன், கட்டளைச் சட்டங்கள் மற்றும் வரைவுச் சட்டங்கள் மூலம் மது இல்லாத சிந்தனை மற்றும் கருத்து உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் அவை செயல்படுத்தப்பட்டு, பின்பற்றப்பட்டு, கண்காணிக்கப்படவும் வேண்டும். இந்த இலக்குகளை நிறைவு செய்யும் செயற்பாட்டை வெற்றியடையச் செய்வதன் மூலம் அனைவரது அபிலாஷைகளையும் வெற்றிகொள்ள முடியும் என்றார். https://www.virakesari.lk/article/201750
  18. Published By: DIGITAL DESK 2 20 DEC, 2024 | 05:48 PM (எம்.மனோசித்ரா) இந்திய கடலோர பாதுகாப்பு படையின் 4 கப்பல்கள் கொழும்பு மற்றும் காலி துறைமுகங்களுக்கு விஜயம் செய்யவுள்ளன. இந்திய கடலோர பாதுகாப்பு படை கப்பல்களான வைபவ் மற்றும் அபிராஜ் திங்கட்கிழமை (23) கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளன. இக்கப்பல்கள் 23 - 27 வரை அங்கு நங்கூரமிடப்பட்டிருக்கும் என்பதோடு, ஏனைய இரு கப்பல்களும் 29ஆம் திகதி முதல் ஜனவரி 2ஆம் திகதி வரை காலி துறைமுகத்துக்கும் செல்லவுள்ளன. இக்கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் இலங்கை கடலோரக் பாதுகாப்பு படையின் பணிப்பாளர் நாயகம் மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளை சந்திக்கவுள்ளனர். மேலும் தீயணைப்பு, அனர்த்தங்கள், கடல் மாசடைவை எதிர்கொள்ளல் உள்ளிட்ட பல்வேறு தொழில்முறை தொடர்புகள் பற்றிய கூட்டுப் பயிற்சி ஆகியவை விஜயத்தின் போது இடம்பெறவுள்ளன. இவை தவிர யோகா நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கு எதிரான விழிப்புணர்வை நோக்கிய பயணத்தின் போது கப்பல்கள் கடற்கரையை சுத்தம் செய்தல் மற்றும் நடைபயிற்சி போன்ற சமூக செயற்பாடுகளிலும் இக்கப்பல்கள் ஈடுபடவுள்ளன. இந்திய கடலோரக் காவல்படை மற்றும் அதன் திறனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் மேம்படுத்துவதற்கும், இலங்கை கடலோர பாதுகாப்பு பணியாளர்களுக்கு அவற்றை பார்வையிட அனுமதி வழங்கப்படவுள்ளது. பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பிற்கான பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடலோர பாதுகாப்பு படையின் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பின் சாத்தியக்கூறுகளை கருத்தில் கொண்டு இந்த கப்பல்களின் விஜயம் அமைந்துள்ளது. https://www.virakesari.lk/article/201761
  19. எமது அரசாங்கம் நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் செயற்படுகிறோம் - வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ Published By: VISHNU 20 DEC, 2024 | 06:10 PM (செ.சுபதர்ஷனி) இலங்கையில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கு தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதோடு அர்ப்பணிப்புடனும் செயற்படுவதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பத்தரமுல்லையில் பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) சுகாதார அமைச்சின் தேசிய சிறுநீரக நோய் தடுப்பு மற்றும் ஆய்வுப் பிரிவு, சீன விஞ்ஞானக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆய்வு அறிக்கை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மிக முக்கியமான சுகாதார சவாலை எதிர் கொள்வதற்காக ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பை வழங்கிய சீன அரசாங்கம் மற்றும் சீன அறிவியல் அகாடமிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இலங்கைக்கு பாரிய சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ள நீண்டகால சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்த தற்போதைய அரசாங்கம் கடுமையாக உழைப்பதுடன் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு வருகின்றது. அதற்கமைய முன்னெடுக்கப்பட்டு வரும் இத்தகைய செயலமர்வுகள் மற்றும் புதிய ஆய்வுகள் அறிவையும் விஞ்ஞானத்தையும் பகிர்ந்து கொள்வதற்கான களமாக அமைகின்றன. எவ்வாறெனினும் எதிர்காலத்தில் சிறுநீரக நோயாளர்களை இனங்கண்டு சிகிச்சை அளிப்பதற்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கு இந்த ஆய்வு உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுள்ளது. மேலும் இந்த சவாலை எதிர் கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதற்குத் தேவையான தொடர்ச்சியான ஆதரவையும் தொழில்நுட்ப வழிகாட்டலையும் வழங்கிவரும் சீன அரசாங்கம் மற்றும் சீன அறிவியல் அகாடமிக்கு மீண்டு ஒரு முறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/201768
  20. முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு - வெளியானது புதிய தகவல் 20 DEC, 2024 | 06:59 PM (துரைநாயகம் சஞ்சீவன்) முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் நேற்றைய தினம் (19) கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்துக்கு கொண்டுசெல்லப்பட்டது. இந்த படகில் பயணித்த 115 பயணிகளும் அஷ்ரப் துறைமுகத்தில் தரையிறக்கப்பட்டு குருதி மாதிரிகள் பெறப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இவர்களில் கர்ப்பிணித் தாய் ஒருவர் உட்பட 39 ஆண்களும் 27 பெண்களும் 49 சிறுவர்களும் அடங்குகின்றனர். இவர்களை பிற்பகல் 3 மணியளவில் திருகோணமலை நீதிமன்ற நீதிபதி அர்யூன் அரியரெட்ணம் விஜயம் மேற்கொண்டு விசாரணைகள் மேற்கொண்டிருந்தார். மாலை 4.30 மணிக்குப் பின்னர் அவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவர்களுக்கு தேவையான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை மாவட்ட செயலகம், பிரதேச செயலகம் உட்பட அரச திணைக்களங்களும், பொலிஸாரும், தொண்டு நிறுவனங்களும் மேற்கொண்டு வருகின்றார்கள். அத்துடன் இவர்களை தங்கவைப்பதற்காக நாமகள் வித்தியாலயமும் ஒழுங்குபடுத்தப்பட்டு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உத்தரவின் பின்னர் அவர்களை தங்க வைப்பதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இன்றைய தினம் (20) இவர்களுக்கான மதிய உணவை AHRC தொண்டர் நிறுவனம் வழங்கியிருந்தது. மியன்மார் நாட்டில் 12 வருடகாலமாக தாம் புனர்வாழ்வு முகாம்களில் வசித்து வந்ததாகவும் தம்மை UN பராமரித்து வந்த நிலையில் அவர்கள் கடந்த 18 மாதங்களுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேறியதாகவும் இதனால் வாழமுடியாத சூழ்நிலையில் இலங்கை நாட்டுக்கு செல்ல முடிவெடுத்ததாகவும் தெரிவிக்கின்றார்கள். இலங்கைக்கு வருகை தரும் நோக்கில் மூன்று படகுகளில் 120 பேர் வருகை தந்ததாகவும் இடைநடுவே இரண்டு படகுகள் பழுதடைந்ததாகவும் இதனால் ஒரு படகில் மற்றைய படகில் வந்த நபர்களும் சேர்ந்து பயணித்ததாகவும் குறிப்பிடுகின்றனர். அத்துடன் வரும் வழியில் இரண்டு குடும்பங்களை சேர்ந்த ஐந்து பேர் பசியினால் உயிரிழந்ததாகவும் அவர்களின் உடல்களை கடலில் வீசிவிட்டு வந்ததாகவும் அந்த குடும்பத்தில் ஒரு சிறுமி உயிர் தப்பி தம்முடன் இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். இலங்கைக்கு வருவதற்காக தங்களுடைய சொத்துகளை விற்று தங்கள் நாட்டின் பெறுமதியில் ஒவ்வொருவரும் 8 இலட்சம் ரூபா வழங்கி படகினை கொள்வனவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 4ஆம் திகதி அங்கிருந்து புறப்பட்டதாகவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திரா இந்த நபர்களை பார்வையிட்டு அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது தொடர்பாக அரச அதிகாரிகளுடனும் பொலிஸாருடனும் கலந்துரையாடியிருந்தார். அதன்படி, படகில் வந்தவர்களை திருகோணமலை ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201762
  21. சட்டவிரோத நிதி திட்டங்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த திட்டங்கள் தொடர்பில் ஏற்கனவே சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்களில், சில நிறுவனங்கள் தொடர்பாக நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது. ஏனைய நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை ஆரம்பிக்கும் நோக்கில் சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகளால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியால் வௌியிடப்பட்டுள்ள தடைசெய்யப்பட்ட திட்டங்களுடன் தொடர்புடைய நிறுவனங்கள் பின்வருமாறு... 01. Tiens Lanka Health Care (Pvt) Ltd 02. Best Life International (Pvt) Ltd 03. Mark-Wo International (Pvt) Ltd 04. V M L International (Pvt) Ltd 05. Fast3Cycle International (Pvt) Ltd 06. Sport chain app, Sport chain zs society Sri Lanka 07. Onmax DT 08. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group 09. Fastwin (Pvt) Ltd. 10. Fruugo Oline App/Fruugo Oline (Pvt) Ltd. 11. Ride to Three Freedom (Pvt) Ltd. 12. Qnet 13. Era Miracle (Pvt) Ltd and Genesis Business School 14. Ledger Block 15. Isimaga International (Pvt) Ltd. 16. Beecoin App and Sunbird Foundation 17. Windex Trading 18. The Enrich Life (Pvt) Ltd 19. Smart Win Entreprenuer (Private) Limited 20. Net Fore International (Private) Limited / Netrrix https://tamil.adaderana.lk/news.php?nid=197582
  22. எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அநீதி இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக நான் முன் நிற்பேன் - ஜனாதிபதி Published By: DIGITAL DESK 7 20 DEC, 2024 | 05:51 PM (நமது நிருபர்) அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அரசாங்கம் என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளது. மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதாகும். தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும் புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல் அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். அத்துடன் எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம், அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக நான் முன் நிற்பேன். எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்தார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் ஃ அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது. எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளது. இருப்பினும் இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை. அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை. அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளது. சரிவடைந்திருக்கும் கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதாகும். அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை எனக்கு இல்லை. கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே எனக்கு உள்ளது. உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றது. எனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது. அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்க்கிறோம். சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளது. எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால் அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுகிறது. எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும். அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை. ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால் அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும். இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவோம். அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும். மக்கள் ஆணையின் 80 வீதம் எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில் அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல. இரண்டும் இணக்கமான குழுக்கள். அதன்படி அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால் இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளது. மேலும் மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். டிஜிட்டல் அடையாள அட்டை திட்டம் விரைவுபடுத்தப்பட்டு புதிய வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் 'ஊடநயn ளுசடையமெய' திட்டத்தை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எமது நாட்டை புதிய நிலைக்கு உயர்த்தி வைப்பதற்காக வறுமையை ஒழித்தல் டிஜிட்டல் மயமாக்கல் சமூகத்தை கருத்தியல் ரீதியாக மாற்றியமைத்தல் என்ற மூன்று துறைகளின் கீழ் 'ஊடநயn ளுசடையமெய' ஊடாக பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. அந்த பணியை நிறைவேற்றும் போது எந்தவொரு உத்தியோகத்தருக்கும் அசௌகரியம் அநீதி அல்லது அசாதாரணம் இழைக்கப்பட்டால் அந்த நபரின் பாதுகாப்பிற்காக தாம் முன் நிற்போம். எவரேனும் அதிகாரியொருவர் அந்த திட்டத்தை சிதைக்கும் நோக்கில் தாமதப்படுத்தாவாராயின் அதற்கும் நியாயமான முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய. அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி ஏ. எச். எம். எச். அபயரத்ன, அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பி. ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்க, பிரதமரின் செயலாளர் ஜி. பிரதீப் சபுதந்திரி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார, மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201758
  23. வரி திருத்தம் தொடர்பில் IMF விசேட அறிவிப்பு இலங்கையின் அண்மைய வரி திருத்தங்களை மீளாய்வு செய்யவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜூலி கோசாக் தெரிவித்துள்ளார். அதேபோல், இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்திற்கு நிறைவேற்று சபையின் ஒப்புதலைத் தொடர்ந்து பணியாளர் அறிக்கையில் முழுமையான மதிப்பீடு உள்ளடக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். https://tamil.adaderana.lk/news.php?nid=197568
  24. எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் உள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்ய நியமிக்கப்பட்டிருக்கும், புதிய குழுவின் ஊடாக அரசியல் செல்வாக்கை பொருட்படுத்தாமல், அவை தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நாரஹேன்பிட்டியில் உள்ள 'நில மெதுர' கட்டிடத்தில் அமைந்துள்ள உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் இன்று (20) நடைபெற்ற மாவட்ட செயலாளர் / அரசாங்க அதிபர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க அதிபரிலிருந்து மாவட்டச் செயலாளர் என பதவிப் பெயர் மாற்றம் பெற்ற இந்த சேவையானது 200 வருடங்கள் பழமையானது எனவும், எமது நாட்டை புதிய திசையில் வழிநடத்துவதில் பெரும் பங்காற்றியுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். இருப்பினும், இறுதி நோக்கம் மற்றும் இலக்கு தொடர்பில் திருப்தியடையும் வகையில் தற்போதைய நிலைமை இல்லை எனத் தெரிவித்த ஜனாதிபதி, அரச நிறுவனமொன்றில் நியாயமான சேவையைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று மக்களுக்கு சிறிதும் நம்பிக்கை இல்லை என்றும், அரசு என்ற வகையில் முழுக் கட்டமைப்பும் சரிவை கண்டுள்ளதெனவும் தெரிவித்தார். சரிவடைந்திருக்கும், கட்டமைப்பை மீள உருவாக்க நாம் தயாரா? இல்லையா? என்பது குறித்து எம்மை நாமே கேள்வி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். மக்கள் ஆணையின் எதிர்பார்ப்புகளுக்கு அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, அரச சேவையும் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டார். அரச சேவையில் இருக்கின்ற கதிரை தொடர்பான பிரச்சினை தனக்கு இல்லை எனவும், கதிரையில் அமர வைப்பதற்கு யார் இருக்கின்றார்கள் என்ற பிரச்சினையே தனக்கு இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். உலகில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உள்வாங்கி, அவற்றுக்கு இசைவான மாற்றங்களை செய்துகொண்டு , தமது துறைக்கு தலைமைத்துவம் வழங்கி அதனை வெற்றியை நோக்கி வழிநடத்தும் கதிரைகள் வெற்றிடமாக காணப்படுகின்றதென கூறிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது இந்திய விஜயத்தின் போது 1500 அதிகாரிகளை இந்தியாவிற்கு அனுப்பி பயிற்சி அளிக்க இணக்கம் எட்டப்பட்டது என்றும் கூறினார். அடுத்த வருடத்தில் உயர்தரத்தில் சித்தியடையும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு வெளிநாட்டில் கல்வி கற்பதற்கு அரசாங்கத்தின் புலமைப்பரிசில்களை வழங்க எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். சில நிறுவனங்கள் மற்றும் பதவிகள் எந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டன என்பது பிரச்சினையாக உள்ளதாகவும், எமது நாட்டின் அரச சேவையை முறையான அரச பொறிமுறையாக மாற்றும் சவால் எம்முன் காணப்படுவதால், அதற்கான புதிய வியூகம் ஒன்று அவசியப்படுவதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். எமது நாட்டில் தற்போதுள்ள அரச நிறுவனங்களை மீளாய்வு செய்வதற்கான புதிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அரசியல் செல்வாக்குகளை பொருட்படுத்தாமல் அவை தொடர்பிலான தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் குறிப்பிட்டார். அரச சேவையை மட்டுப்படுத்தும் எதிர்பார்ப்பு தனக்கு இல்லை எனவும், ஆனால் அரச சேவையை நடத்திச் செல்வதற்கான செலவில் பிரச்சினைகள் இருப்பதால், அரச சேவையை ஒரே நிலைப்பாட்டில் உறுதியுடன் இருந்து முறையான பொறிமுறைக்கு கொண்டு வர வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்தப் பணிகளை நடைமுறைப்படுத்த அரசியல் அதிகார அடிப்படையில் தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்குவதாகவும், அரச அதிகாரிகளின் பங்களிப்பே இந்தப் பணிகளின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். மக்கள் ஆணையின் 80% எதிர்பார்ப்புகளை அரச உத்தியோகத்தர்களே வௌிப்படுத்தியுள்ளனர் என்ற வகையில், அரசியல் அதிகார தரப்பின் பணிகளுக்கு அவர்கள் இணக்கம் மற்றும் அங்கீகாரத்தை வழங்கியுள்ளனர். எனவே, இவை இரண்டும் இருவேறு முரண்பாடான குழுக்கள் அல்ல என்பதையும் இரண்டும் இணக்கமான குழுக்கள் என்பதையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். அதன்படி, அரசியல் அதிகாரம் மற்றும் பொதுச் சேவையின் எதிர்பார்ப்புக்கள் மற்றும் இலக்குகள் சமநிலையானதாக காணப்படுவதை கடந்த மக்கள் ஆணை வௌிப்படுத்தியிருப்பதால், இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்ட பணியே எம்முன் உள்ளதெனவும் ஜனாதிபதி தெரிவித்தார். மேலும், மக்களுடன் தொடர்புபடும் திட்டங்கள் மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். https://tamil.adaderana.lk/news.php?nid=197592
  25. Published By: VISHNU 20 DEC, 2024 | 08:09 PM உள்ளுராட்சி மன்ற தேர்தல் அடுத்த வருடம் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக நடத்தப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை (20) கண்டிக்கு விஜயம் செய்த போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். மாகாண சபைத் தேர்தலும் அடுத்த வருடத்திற்குள் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டார். முதலில் மல்வத்து விகாரைக்கு சென்ற ஜனாதிபதி மல்வத்து மகாநாயக்க தேரர் வண. திப்படுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து அவரிடம் நலம் விசாரித்ததுடன் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. அதனையடுத்து மல்வத்து மகாநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதிக்கு ஆசி வழங்கினர். அதனையடுத்து அஸ்கிரிய விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஸ்கிரிய பீடத்தின் மகாநாயக்க தேரர் வண. வரகாகொட ஸ்ரீ ஞானரத்தன தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்க தேரர் வண. ஆணமடுவே தம்மதஸ்ஸி தேரர், பிரதி பதிவாளர் வண. நாரம்பனாவே ஆனந்த தேரர்,முதியங்கன ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண.முருத்தெனியே தம்மரத்தன தேரர் உள்ளிட்டோர் இதன்போது வருகை தந்திருந்ததுடன் அவர்கள் செத் பிரித் பாராயணம் செய்து ஜனாதிபதியின் எதிர்கால பணிகளுக்கு ஆசி வழங்கினர். போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திசாநாயக்க உள்ளிட்டவர்களும் இதன்போது கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/201771

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.