Everything posted by ஏராளன்
-
டாக்ரரால் கள அரசியலான புல அரசியல்..
நற்செயல்....
-
அதிகரித்த உலகின் மக்கள் தொகை
2024 ஆம் ஆண்டு இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில் இந்தாண்டில் மட்டும் உலகின் மக்கள் தொகை 7 கோடியே 10 லட்சம் அதிகரித்துள்ளதாக அமெரிக்க கணக்கெடுப்புத்துறை கணித்துள்ளது. முந்தைய 2023ஆம் ஆண்டை விட மக்கள் தொகை உயர்வு 0.9% குறைவாக உள்ளதாகவும் அமெரிக்க அரசுத் துறை தெரிவித்தள்ளது. ஜனவரி மாதம் ஒவ்வொரு நொடிக்கும் சராசரியாக 4.2 குழந்தைகள் பிறக்கும் என்றும் 2 பேர் இறப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி முதல் நாளில் உலக மக்கள் தொகை 809 கோடியாக இருக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவில் குடியேற்றங்கள் அதிகரித்துள்ளன என்றும் இதனால் ஒவ்வொரு 23.2 நொடிக்கும் அமெரிக்க மக்கள் ஒரு எண்ணிக்கை அதிகரிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314276
-
'பயமோ பதற்றமோ கூடாது' - விமானிகள் அவசர சூழல்களில் எப்படி முடிவெடுப்பார்கள்? - ஒரு விமானியின் அனுபவம்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'விமானிகள் பதற்றத்தில் முடிவெடுக்கக் கூடாது'(சித்தரிப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் "வேகமாகவும் அதேசமயம் பதற்றம் இன்றியும் முடிவுகளை எடுக்க வேண்டும். என்ன நடந்தாலும், பயணிகளின் பாதுகாப்புக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்," என்கிறார், சென்னையை சேர்ந்த விமானி அன்பு. அன்பு போன்ற விமானிகளால், பல சமயங்களில் மிகவும் பொறுமையாக அமர்ந்து முடிவு எடுக்க முடியாது. அவசர நேரங்களில் இவர்கள் எடுக்கும் துரிதமான முடிவுகள், நூற்றுக்கணக்கான மக்களின் உயிருடன் பிணைக்கப்பட்டிருக்கிறது. அதேசமயம், அவர்கள் எடுக்கும் உடனடி முடிவுகள், புறச்சூழல் தரும் அழுத்தத்தாலோ, பதற்றத்தாலோ விளைந்ததாக இருக்கக் கூடாது. அனைத்தையும் யோசித்து விவேகமான முடிவுகளை எடுக்க வேண்டியவர்கள் விமானிகள். தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 29) ஏற்பட்ட விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்த சம்பவம், ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இத்தகைய விபத்துகள் உள்ளிட்ட அவசர காலங்களில் விமானிகளின் எண்ண ஓட்டம் என்னவாக இருக்கும்? அச்சமயங்களில் அவர்கள் எப்படி முடிவெடுப்பார்கள். 179 பேர் பலி: தென் கொரிய விமான நிலையத்தில் ஓடுபாதை முடிவில் கான்கிரீட் சுவர் இருந்தது ஏன்? தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன? 179 பேர் பலி: விபத்துக்கு முன் விமானத்திற்கு என்ன நடந்தது? பயணியின் கடைசி குறுஞ்செய்தியில் முக்கிய தகவல் அஜர்பைஜான் பயணிகள் விமானம் ரஷ்யப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? திடீரென மன்னிப்பு கேட்ட புதின் தனியார் விமான நிறுவனம் ஒன்றில், கடந்த ஏழு ஆண்டுகளாக விமானியாக பணியாற்றிவரும் அன்பு பிபிசி தமிழிடம் பேசினார். "அவசர காலங்களில் உடனடியாக முடிவெடுக்க வேண்டும். அந்த சூழல்களை சமாளிக்க என்னதான் பயிற்சி எடுத்தாலும் உரிய நேரத்தில் சரியான முடிவை எடுக்காவிட்டால் பெரும் விபத்து நிகழ்வதற்கான ஆபத்து உண்டு" என கூறியவர், சில ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சவாலான தருணத்தை விவரித்தார். 'பிடிவாதம் கூடாது' பிலிப்பைன்ஸில் நிகழ்ந்த அச்சம்பவம் இன்றுவரை தனக்கு நேர்ந்த சவாலான தருணம் என குறிப்பிடுகிறார் அன்பு. பிலிப்பைன்ஸில் ஒரு குறிப்பிட்ட தீவில் விமானத்தைத் தரையிறக்கும் போது காற்றின் வேகத்திலும் திசையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை 'விண்ட் ஷியர்' Wind shear என குறிப்பிடுகின்றனர். இந்த சூழல், பல விமானிகளுக்கும் இக்கட்டான சூழலாக உள்ளது. "விண்ட் ஷியர் ஏற்படும்போது குரல் எச்சரிக்கை தொடர்ந்து வரும். அப்போது, விமானிதான் விமானத்தைத் தரையிறக்கலாமா, வேண்டாமா என்பதை முடிவெடுக்க வேண்டும். அந்த சமயத்தில் விமானத்தைத் தரையிறக்கலாம் என்பது என்னுடைய முடிவாக இருந்தது. ஆனால், என் சக விமானி (Co-pilot) திரும்பி சென்றுவிடலாம் என்று கூறினார். உடனேயே அவர் கூறிய அந்த முடிவைத்தான் செயல்படுத்தினோம்," என்கிறார் அன்பு. அவர் குறிப்பிட்ட விமானத்தில் 170 பயணிகள் இருந்துள்ளனர். தன் முடிவின்படி தரையிறக்கியிருந்தால் விமானம் பெரும் விபக்துக்குள்ளாகி, உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் என்பதையும் அன்பு குறிப்பிடுகிறார். விமானிகள் தன்னுடைய முடிவில் பிடிவாதமாக இருக்கக் கூடாது என்பது தங்களுக்கான முக்கிய படிப்பினை என்கிறார் அவர். "சக விமானி என்ன சொல்கிறார் என்பதை கேட்க வேண்டும். ஒரு முடிவில் பிடிவாதமாக இருக்கக் கூடாது" என்றார். வேங்கைவயல்: 2 ஆண்டுகளாக தீராத மர்மமும் எழுப்பப்படும் சந்தேகங்களும் - பிபிசி கள ஆய்வு31 டிசம்பர் 2024 டிடிஎஃப் வாசன் சர்ச்சை: பாம்பை செல்லப்பிராணியாக வீட்டில் வளர்க்க முடியுமா?31 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'சக விமானி கூறுவதையும் கவனிக்க வேண்டும்' (சித்தரிப்புப்படம்) ஒரு விமானத்தில் விமானியை decision in command என கூறுகின்றனர். அவர்கள் முடிவெடுப்பதுதான் இறுதி. ஆனாலும், அவசர சமயங்களில் சக விமானியின் முடிவும் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணமாக திகழ்கின்றது. கடந்த 2017-ல் பயிற்சி விமானியாகவும் சில இக்கட்டான தருணங்களை அவர் சந்தித்துள்ளார். "முதன்முதலில் விமானத்தை செலுத்தியபோது இன்ஜின் செயலிழந்துவிட்டது. இம்மாதிரியான சமயங்களில் அதே இடத்தில் 180 டிகிரி விமானத்தைத் திருப்பி தரையிறக்க வேண்டும். அப்படிச் செய்வது கடினமானது. எப்போதும் காற்று எதிர்திசையில் அடிக்கும்போதுதான் விமானம் புறப்பட வேண்டும். இதனால், விமானம் லேசாக சாய்ந்து உயர பறக்கும். அதேபோன்றுதான் தரையிறங்கும்போதும் இருக்க வேண்டும். ஆனால், காற்று எதிர்திசையில் அடிக்கவில்லையென்றால் விமானம் நிலையாக இருக்காது" என்கிறார் அன்பு. அன்பு மட்டுமல்லாமல், அவருடைய சக விமானிகளும் இத்தகைய சவாலான சூழல்களை கடந்துவந்திருக்கின்றனர். இன்றைய நவீன நாட்காட்டியை உருவாக்க வரலாற்றில் தொலைக்கப்பட்ட 10 நாட்கள் பற்றி தெரியுமா?31 டிசம்பர் 2024 புத்தாண்டு உறுதிமொழியை கடைபிடிப்பதில் பலரும் தோல்வியடைவது ஏன்?31 டிசம்பர் 2024 சக விமானியின் அனுபவம் இந்தோனீசியாவில் அப்படி சக விமானி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை விவரித்தார். இந்தோனீசியாவில் காற்று எப்படி, எந்த திசையில் அடிக்கும் என்பதை எப்போதும் சரியாக கணிக்க முடியாது எனக்கூறிய அவர், ஒரு தீவிலிருந்து மற்றொரு தீவுக்கு செல்லும்போது வானிலை மோசமாகிவிட்டதாக தெரிவித்தார். அப்போது, அவர் குறிப்பிட்ட விமானியால் விமானத்தைத் தரையிறக்க முடியவில்லை. "நம்முடைய வலது, இடது என இருபுறத்திலும் காற்று அடித்தால் அதனை cross wind என்கிறோம். அந்த காற்றை எவ்வளவு தூரம் தாங்க முடியும் என்பது ஒவ்வொரு விமானத்தையும் பொறுத்தது. அந்த குறிப்பிட்ட விமானம் 20 நாட்ஸ் அளவு காற்றைதான் தாங்க முடியும் என்றால், அந்த வானிலையில் அது 120 நாட்ஸ் அளவுக்கு சமம். இன்ஜின் மிகுந்த சேதமாகிவிட்டது. அப்படியொரு இக்கட்டான சூழலில் அந்த விமானி தரையிறக்கினார்", என விவரித்தார் விமானி அன்பு. விமானம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்கிறது என்றால், நடுவில் ஒரு முக்கியமான பகுதி (critical point) ஒன்று இருக்கும். அந்த பகுதிக்குள் விமானத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால், விமானத்தைப் புறப்பட்ட இடத்திற்கே கொண்டு வந்துவிட வேண்டும் என்பது நடைமுறையாக இருக்கிறது. ஆனால், அந்த பகுதியைத் தாண்டிவிட்டால் விமானம் எங்கு செல்ல வேண்டுமோ அந்த இடத்தை அடைந்துதான் ஆக வேண்டும் என்கிறார் அவர். விமானத்தை இயக்குவது நவீனமாகிவிட்ட காலகட்டத்தில் அதன் பெரும்பாலான பணிகளை ஆட்டோ-பைலட் கருவி கவனித்துக்கொள்கிறது. எரிபொருள் கணக்கிடுவது, விமானத்தின் எடை, பயணிகள் எத்தனை பேர், விமான நிலையம் குறித்தத் தகவல்கள், விமானத்தின் மற்ற கருவிகளின் நிலையை கண்காணித்தல் ஆகிய பணிகளை விமானி அறையிலிருந்து (cockpit) விமானிகள் கவனிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எரிபொருள் அளவு, விமான பாகங்களின் நிலை என பலவற்றை விமானிகள் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது பறவைகள் மோதினால் என்ன நடக்கும்? பறவைகள் விமானத்தின் மோதி விபத்து ஏற்படுவது பரவலாக அறிந்த ஒன்றாகவே உள்ளது. தென் கொரியா விமான விபத்திலும் அதுகுறித்து விசாரிக்கப்படுகிறது. "விமானத்தின் மேல் பகுதியில் பறவைகள் மோதினால் அவ்வளவாக பாதிப்பு இல்லை. ஆனால், இன்ஜினில் மோதினால் பாதிப்பு ஏற்படும். இன்ஜின் 7,000 ஆர்.பி.எம் (Revolutions per minute) அளவில் சுற்றிக்கொண்டிருக்கிறது. அதில் சிறிய கல்லைத் தூக்கிப் போட்டால்கூட உள்ளே எல்லாமே சேதமாகிவிடும். 2,000 டிகிரி செல்சியஸில் அதன் வெப்பநிலை இருக்கும், சிறிதாக உராய்வு ஏற்பட்டால்கூட பெரும் வெடிப்பு ஏற்படும்." என, பறவைகள் ஏன் பெரும் விபத்துக்குக் காரணமாக அமைகின்றன என்பதை விளக்கினார் விமானி அன்பு. நடுவானில் டிராஃபிக் ஏற்பட்டால் என்ன செய்வார்கள்? நடுவானில் மற்ற விமானங்களால் டிராஃபிக் ஏற்படக்கூடும். இது சமீப காலமாக பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. அப்படியான சமயங்களில் திரும்பி செல்வதற்கான அறிவிப்பே தங்களுக்கு வரும் என்கிறார் அன்பு. "அம்மாதிரியான சமயங்களில் எரிபொருள் கூடுதலாக தேவைப்படும். வசதியான விமான நிறுவனங்கள், கூடுதலாக எரிபொருளை வைத்திருக்கும். ஆனால், குறைவான பட்ஜெட்டில் செயல்படும் நிறுவனங்கள் சரியான அளவிலேயே எரிபொருளை கொண்டு வரும். அப்போது, நிறுவனங்கள் நாங்கள் சரியாக தரையிறக்க வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்தும்." 'அந்த இடத்தில் இருந்தால்தான் புரியும்' - அண்ணா பல்கலை. மாணவிகள், பெற்றோர்கள் கூறுவது என்ன?31 டிசம்பர் 2024 அமெரிக்க கருவூலத்துறை கணினிக்குள் சீனா ஊடுருவியதா? என்ன நடந்தது?31 டிசம்பர் 2024 பணிநேரமும் தூக்கமின்மையும் இந்தியாவின் விமானப் போக்குவரத்து கண்காணிப்பு ஆணையத்தின் (டிஜிசிஏ) விதிகளின்படியும் சர்வதேச விதிகளின்படியும் விமானி ஒருவர், ஒருநாளைக்கு 8 மணிநேரம்தான் விமானத்தை இயக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு 30 மணிநேரமும் ஒரு மாதத்திற்கு 100 மணிநேரமும் ஒரு வருடத்திற்கு 1,000 மணிநேரங்கள் என்று வரையறுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல சமயங்களில் அதிக நேரம் பணி செய்ய வேண்டியிருக்கும், இது ஒவ்வொரு நிறுவனத்திற்கும் மாறுபடும் என்கிறார் அன்பு. "இதனால் உடல்நலம் கெடும். மன அழுத்தம், தூக்கமின்மை ஏற்படும். சரியான முடிவுகளை எடுக்க முடியாது. உடல்நலப் பிரச்னைகளும் ஏற்படும். இதனால் ஆரம்பத்தில் எனக்கு தனிப்பட்ட ரீதியாக பிரச்னைகள் ஏற்பட்டன" என பகிர்ந்துகொண்டார் அன்பு. நீண்ட நேரம், உதாரணத்திற்கு 16 மணிநேரம் விமான பயணம் என்றால் விமானிகள் இருவர், சக விமானிகள் இருவர் என நான்கு பேர் இருப்பார்கள். அவர்கள் எட்டு மணிநேரத்திற்கு தங்கள் வேலையை பிரித்துக்கொள்வார்கள் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'விமானிகள் அமைதியுடன் முடிவெடுக்க வேண்டும்' விபத்து தொடர்பான செய்திகளை பார்க்கும்போது எப்படி இருக்கும்? "எங்கள் குடும்பத்தை விமான விபத்து செய்திகள் நிச்சயம் பாதிக்கும். அடுத்த நிமிடமே நம்மை அழைத்துப் பேசுவார்கள். விமானிகளான எங்கள் நண்பர்களுடன் நாங்கள் அந்த விபத்தை எப்படி தவிர்த்திருக்கலாம் என எங்களுக்குள் ஆய்வு செய்துபார்ப்போம். பயிற்சிக் காலத்தில் பயம் இருந்தது. அதன்பின்பு, பயம் இல்லை" என்கிறார் அன்பு. 'பதற்றம் கூடாது' முன்னாள் விமானி பயிற்சியாளரும் (instructor pilot ) விமான பாதுகாப்பு ஆலோசகருமான மோகன் ரங்கநாதன், அவசர காலங்களில் விமானிகள் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசினார். "இன்ஜின் பழுதானால் என்ன செய்ய வேண்டும், மோசமான வானிலையை எப்படி சமாளிக்க வேண்டும் என எல்லா பயிற்சிகளும் விமானிகளுக்கு வழங்கப்படுகின்றன. அமைதியாக முடிவெடுக்க வேண்டும். பரபரப்பாகி விடக்கூடாது. முன்பு எல்லாமே விமானி தான் முடிவெடுப்பார். இப்போது, பெரும்பாலான விமானங்களில் சக விமானியும் ஒருவர் இருக்கிறார்." என்கிறார் மோகன் ரங்கநாதன். விமானத்தின் செயல்பாடு தற்போது அதிநவீனமாகிவிட்டதாக அவர் குறிப்பிடுகிறார். 'நாங்கள் தொடங்கிய சமயத்தில் விமானத்தில் ரேடார் இருக்காது. பின்னர், கருப்பு-வெள்ளை ரேடார், இப்போது வண்ண ரேடார்கள் வந்துவிட்டன." என்கிறார் அவர். மழை, புயல் போன்ற வானிலைகளில் வெளியே எப்படி இருக்கிறது என்பது தெரியாது என்றும் அப்போது 'காட்சி மயக்கம்' (optical illusion) ஏற்படும் என்றும் குறிப்பிடுகிறார் அவர். "அம்மாதிரியான சமயங்களில் தரையிறக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். அதற்கு சிறப்புப் பயிற்சி தேவை." என்கிறார் அவர். விமானிகளுக்கு பணியால் ஏற்படும் சோர்வு மிகப்பெரிய பிரச்னை என்றும் அவர்களுக்கு தேவையான ஓய்வை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgz09g48nko
-
இலங்கை குறித்த கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது - ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
நமது நாட்டின் தற்போதைய சவால்களை சரியாக அடையாளம் கண்டு எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்! - சஜித்தின் புத்தாண்டு வாழ்த்து செய்தி நமது தாய்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களை சரியாக அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட புது வருடத்தில் நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும். இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், கடந்த காலத்தைப் போல குறுகிய இன, மத கருத்துக்களால் பிளவுபட்ட அரசியல் திட்டங்கள் மீண்டும் தலைதூக்காமல் இருப்பது மிக முக்கியம். அத்துடன் கடந்த நான்கு வருடங்களாக நாட்டு மக்கள் எதிர்கொண்ட நிச்சயமற்ற தன்மை, ஏமாற்றங்களை முடிவுக்கு கொண்டுவந்து, மக்கள் தாய்நாட்டில் தங்கியிருக்க ஏதுவான பொருளாதார, அரசியல், சமூக சூழலை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும். இதில் நாம் செய்ய வேண்டியது அமைதியின்மையை இல்லாதொழித்து நிம்மதியை வெற்றி பெறச்செய்வதற்கான பாதையை சரியாக தெளிவுபடுத்திக் கொள்வதாகும். நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிதைந்துள்ள வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப புதிய பொருளாதார திட்டமும் செயல்முறையும் தேவை என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே நாட்டின் எதிர்காலத்திற்காக அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளை வலுப்படுத்த புது வருடத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/202653
-
இலங்கை குறித்த கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது - ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
அபிமானம் மிக்க இலங்கை என்ற நாமத்தை மிளிரச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம் - பிரதமரின் புத்தாண்டு வாழ்த்து செய்தி (நமது நிருபர்) இலங்கையர்களான எங்களுக்கு கடந்த ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும்.பேதங்கள் இன்றிஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனர். ஒவ்வொரு பிரஜையும் கண்ணியமான மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். முன்னேற்றமடையும் உறுதியுடன் அனைவரும் 2025ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என புதுவருட வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் விடுத்து புதுவருட வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற அடிப்படையில் பொருளாதாரம் தொழிற்துறை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் கடமைப்பட்டுள்ளோம். ஒவ்வொரு பிரஜையும் இனம், பாலினம் அல்லது மதம் என்ற பேதங்களைக் கடந்து அமைதியான, சுதந்திரமான, கண்ணியமான மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு கடந்த காலங்களில் எமக்கு பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. எனினும்இ குறித்த தருணங்களின் நன்மைகளை முழுவதுமாக அடைவதில் நாம் தோல்வி கண்டோம். எவ்வாறெனினும் அவ்வாறு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை தவற விடாது அவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும். இந்த நெருக்கடியான காலங்களிலும் பொதுமக்களுக்கு சேவையாற்ற அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது.முன்னேற்றமடையும் உறுதியுடன் அனைவரும் 2025ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன். சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கிய பயணம் சவால்மிக்கதாக இருந்த போதிலும் குறித்த இலக்கை அடைவதற்கென பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே மேற்கொண்டுள்ளோம்.மலர்ந்துள்ள இந்த 2025ம் ஆண்டு அனைத்து பிரஜைகளுக்கும் அமைதியும் மகிழ்ச்சியும் சுபீட்சமும் கொண்டு வரும் ஆண்டாக அமைய வேண்டும் என நான் வாழ்த்துக்கின்றேன். புத்தாண்டை வெற்றியுடன் ஆரம்பிப்பதற்கும் எமது நாட்டிற்கு நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கும் எம்முடன் இணையுமாறு புத்தாண்டை வரவேற்கும் இந்த தருணத்தில் அனைவருக்கும் நான் அழைப்பு விடுக்கின்றேன்.உலகத்தின் மத்தியில் அபிமானம் மிக்க வளமான நாடாக 'இலங்கை' என்ற நாமத்தை மிளிரச் செய்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றுவோம். https://www.virakesari.lk/article/202628
-
ஜனவரி முதல் ஆரம்பிக்கப்படும் “தூய்மையான இலங்கை” வேலைத்திட்டம்!
தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை ஆரம்பமாகியுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறுகின்றது. இதேவேளை “க்ளீன் ஶ்ரீலங்கா” நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் தேசிய விழாவை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதனைப் பார்க்கும் வசதியை அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்கும் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தூய்மையான இலங்கை உறுதிமொழியை வாசிக்க அனைத்து அரச ஊழியர்களும் நேரலையில் இணையுமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/314280
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது 2025 புத்தாண்டு!
2025: உலகின் முக்கிய நகரங்களில் நிகழ்ந்த கொண்டாட்டங்கள்- புத்தாண்டை உலகம் வரவேற்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்கள் உலகம் 2024-ஆம் ஆண்டுக்கு விடைகொடுத்து, வாணவேடிக்கைகள், வண்ண ஒளி நிகழ்வுகள் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளுடன் 2025-ஆம் ஆண்டை வரவேற்றது. பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் புத்தாண்டை எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை இங்கே காணலாம். புத்தாண்டு உறுதிமொழியை கடைபிடிப்பதில் பலரும் தோல்வியடைவது ஏன்? பிபிசி தமிழில் இந்த ஆண்டு அதிகம் பேரால் வாசிக்கப்பட்ட 5 வரலாற்றுக் கட்டுரைகள் தற்செயலாக புலப்பட்ட மாயன் நகரம் முதல், ராக்கெட் கேட்ச் வரை: 2024-ஆம் ஆண்டின் வியத்தகு அறிவியல் முன்னேற்றம் பிபிசி தமிழ் இணையதளத்தில் இந்த ஆண்டு அதிகம் பேர் படித்த டாப்-10 கட்டுரைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புத்தாண்டை வரவேற்கும் விதமாக துபாயின் புகழ்பெற்ற 'புர்ஜ் கலிஃபா' கட்டடத்தில் நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள சி.ஜி சாலையில் புத்தாண்டைக் கொண்டாட குவிந்த மக்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பையின் 'கேட்வே ஆஃப் இந்தியாவில்' புத்தாண்டைக் கொண்டாட மக்கள் ஒன்றுகூடுவது வழக்கமான ஒரு நிகழ்வு. இம்முறையும் அதுபோல மக்கள் கூடியதைக் காண முடிந்தது. பட மூலாதாரம்,SONNY TUMBELAKA/AFP படக்குறிப்பு, இந்தோனீசியாவின் பாலியில், '2024ஆம் ஆண்டின் சூரியனை விடுவித்துவிட்டு, 2025ஆம் ஆண்டின் சூரியனை வரவேற்கும்' விதமாக நடனமாடி, புத்தாண்டை வரவேற்கும் நடனக் கலைஞர்கள். பட மூலாதாரம்,BIANCA DE MARCHI/AAP IMAGE VIA REUTERS படக்குறிப்பு, நள்ளிரவுக்கு (12 மணி) மூன்று மணி நேரத்திற்கு முன்பாக, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ் மற்றும் சிட்னி ஹார்பர் பிரிட்ஜில் நடத்தப்பட்ட வாணவேடிக்கைகள். பட மூலாதாரம்,BIANCA DE MARCHI/AAP IMAGE VIA REUTERS படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில், புத்தாண்டு வாணவேடிக்கைகளை காண வேண்டும் என்பதற்காக சிட்னி நகரில் குடும்பத்துடன் முகாமிட்ட மக்கள். பட மூலாதாரம்,SAEED KHAN/AFP படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் சிட்னி ஹார்பர் பாலம் பகுதியில் நள்ளிரவில், புத்தாண்டை வரவேற்கும் விதத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்ட வாணவேடிக்கைகள். அங்கு பொறுமையாக கூடியிருந்த மக்களுக்கு கண்கவர் விருந்தாக இது அமைந்தது. பட மூலாதாரம்,BROOK MITCHELL/GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற ஓபரா ஹவுஸ் பகுதியில் வாணவேடிக்கைகளை காண குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள். பட மூலாதாரம்,ADEK BERRY/AFP படக்குறிப்பு, சீனாவின் பெய்ஜிங்கில், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு முன்னதாக சீன அதிபர் ஷி ஜின்பிங் உரை நிகழ்த்தினார். பட மூலாதாரம்,VCG VIA GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் ஜிலின் நகரில் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகளைக் காண குவிந்த சீன மக்கள். பட மூலாதாரம்,CHENG XIN/GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் சாங்கிங் நகரின் ஜீஃபாங்பே நினைவுச்சின்னம் அமைந்துள்ள பகுதியில் புத்தாண்டை கொண்டாட திரண்ட மக்கள். பட மூலாதாரம்,RUNGROJ YONGRIT/EPA படக்குறிப்பு, தாய்லாந்து நாட்டின் பாங்காக்கில் உள்ள 'சிட்டி பில்லர் ஆலயத்தில்' புத்தாண்டை முன்னிட்டு, சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள பௌத்த பக்தர் ஒருவர். பட மூலாதாரம்,RITCHIE B TONGO/EPA படக்குறிப்பு, தாய்வானின் 'தைபே 101 கோபுரத்தில்' நடந்த வாணவேடிக்கைகளை காண கூடியிருந்த கூட்டத்தை புகைப்படம் எடுக்கும் ஒரு நபர். பட மூலாதாரம்,DANIEL CENG/ANADOLU VIA GETTY IMAGES படக்குறிப்பு, தாய்வானின் 'தைபே 101 கோபுரப்' பகுதியில், புத்தாண்டு பிறப்பதற்கு சில நொடிகளுக்கு முன்பாக 'கவுண்ட் டவுன்' தொடங்கியபோது, அங்கு கூடியிருந்த மக்கள் தங்கள் 'ஸ்மார்ட்போன் டார்ச் ஒளியை' உயர்த்திக் காட்டியபோது. பட மூலாதாரம்,GENE WANG/GETTY IMAGES படக்குறிப்பு, 508 மீட்டர் உயர 'தைபே 101 கோபுரத்தில்' நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கை. பட மூலாதாரம்,RODRIGO REYES MARIN/ZUMA PRESS WIRE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, ஜனவரி 1, ஜப்பானில் ஒரு முக்கியமான தேசிய விடுமுறை தினம். புத்தாண்டை வரவேற்கும் விதமாக அங்கு வீடுகள் மற்றும் கோயில்கள் ஜனவரி 1 அன்று சுத்தம் செய்யப்படுகின்றன. பட மூலாதாரம்,JUNG YEON-JE/AFP படக்குறிப்பு, புத்தாண்டு பிறந்ததும், தென் கொரியாவின் தலைநகர் சோலில் உள்ள போசிங்கக் பெவிலியனின் மணி அடிக்கப்பட்டது. டிசம்பர் 29 அன்று நடந்த விமான விபத்தைத் தொடர்ந்து, தென் கொரியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் மந்தமாகவே இருந்தன. பட மூலாதாரம்,ELOISA LOPEZ/REUTERS படக்குறிப்பு, பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவின் நகர மையத்தில் புத்தாண்டை வரவேற்க நடைபெற்ற வாணவேடிக்கை நிகழ்ச்சி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தோனீசியாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களைக் காண நள்ளிரவில் கூடிய மக்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சிரியாவில், பல ஆண்டுகளாக நிலவிய அசாத்-குடும்ப ஆட்சி அகற்றப்பட்ட பிறகு கொண்டாடப்பட்ட முதல் புத்தாண்டு இதுவாகும். தலைநகர் டமாஸ்கஸில் நடைபெற்ற வாணவேடிக்கைகள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இராக் தலைநகர் பாக்தாத்தில் 2025ஆம் ஆண்டை வரவேற்கும் விதமாக நிகழ்த்தப்பட்ட வாணவேடிக்கைகள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்காவின் நியூயார்க் நகரின் புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெற்ற இசை நிகழ்ச்சிகள் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cjdngmvjm9jo
-
இலங்கை குறித்த கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது - ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்து செய்தி
அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், சுதந்திரத்தின் பின்னர் இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மக்கள் நேய அரசாங்கத்தை உருவாக்கி, அனைத்து மக்களும் ஒன்றிணைந்த அபிவிருத்தியடைந்த இலங்கை பற்றிய கனவை நனவாக்கும் வாய்ப்பு உங்களுக்கும் எமக்கும் கிடைத்துள்ளது. விட்டுக்கொடுக்க முடியாத இந்தப் பாரிய பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. அந்தப் பொறுப்பு குறித்து எங்களுக்கு நல்ல புரிதல் உள்ளது. இந்த நூற்றாண்டின் தவறவிட்ட சாதனைகளை மீண்டும் நாட்டுக்கு வென்று கொடுக்கவும் மக்களின் கனவுகளை நனவாக்கவும், 2025ஆம் ஆண்டு புத்தாண்டில் மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் அர்ப்பணிக்க நடவடிக்கை எடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/202623
-
மேம்பட்ட பல வசதிகளுடன் காங்கேசன்துறை நாகை படகுசேவை ஜனவரியில் மீள ஆரம்பம்!
யாழ். காங்கேசன்துறை - நாகை கப்பல் சேவை நாளை முதல் மீண்டும் ஆரம்பம்! புதிய இணைப்பு தமிழகத்தின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணிகள் கப்பல் போக்குவரத்து நாளை முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாகக் குறித்த கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் நிலவும் காலநிலையைக் கருத்திற் கொண்டு கப்பல் போக்குவரத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகக் குறித்த கப்பல் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். முதலாம் இணைப்பு நாகப்பட்டினம் (Nagapattinam) - காங்கேசன்துறை (Kankesanturai) இடையே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் சேவை புத்தாண்டு முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. தமிழகம் மற்றும் இலங்கை இடையே கப்பல் சேவை சுமார் 40 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு கடந்த 2023ஆம் ஆண்டு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழை காரணமாக தற்காலிகமாக இந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது. பயணச்சீட்டு செலவு இந்நிலையில், மீண்டும் இந்த சேவை ஜனவரி மாதம் 2ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், இதற்கான முன்பதிவு டிசம்பர் 25 முதல் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சேவை வாரத்திற்கு 6 நாட்கள் இருக்கும் எனவும், ஒரு சுற்றுக்கான போக்குவரத்து பயணச்சீட்டு செலவு 35,000 ரூபா வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கப்பல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். https://ibctamil.com/article/jaffna-kangesanthurai-nagapattinam-ferry-service-1735542938
-
2025 புதுவருட வாழ்த்து
யாழ் உறவுகள் அனைவருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துகள்.
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது 2025 புத்தாண்டு!
2025 புது வருடத்தை வரவேற்ற முதல் நாடு எது தெரியுமா! மத்திய பசிபிக் தீவு நாடான கிரிபட்டி (Kiribati) தீவில் ஆங்கிலப் புத்தாண்டு (2025) ஆரம்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 2025 புத்தாண்டை உலகிலேயே முதல் நாடாக கீரிப்பட்டி (Kiribati) , டோங்கா தீவுகள் வரவேற்று இருக்கிறது. கிரிபாட்டி (Kiribati) தீவில் புத்தாண்டை வரவேற்று மக்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். வானவேடிக்கை காட்சி அதேவேளை 2025 ஆம் ஆண்டினை வரவேற்ற முதல் தீவாக கிரிபட்டி தீவு (Kiribati) உள்ளதுடன் நியூசிலாந்திலும் புத்தாண்டு பிறந்துள்ளது. 2025 இல் நுழைந்த உலகின் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றனர். நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், சின்னமான ஸ்கை டவர் விழாக்களின் மையப்பகுதியாக செயல்பட்டது. பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் வானவேடிக்கை காட்சியுடன் திகைக்க வைத்ததுடன் ஆயிரக் கணக்கானோர் கரையோரத்தில் கூடி ஆரவாரம் செய்தும் பாடியும் வானத்தை வண்ணமயமான வண்ணங்களால் பிரகாசிக்கச் செய்ததுடன் மகிழ்ச்சியுடன் புத்தாட்டை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/kiribati-becomes-first-country-to-enter-2025-1735646134#google_vignette
-
பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்கு அமைச்சுக்களில் விசாரணைப் பிரிவுகள்
31 DEC, 2024 | 06:36 PM (எம்.மனோசித்ரா) அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கு பொறுப்பு கூறுதலை உறுதி செய்வதற்காக அமைச்சுக்களில் விசாரணை பிரிவுகளை நிறுவுவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தற்போது அரச சேவை தொடர்பில் நாளாந்தம் அதிகளவு முறைப்பாடுகள் பெயர் குறிப்பிட்டும், பெயர் குறிப்பிடப்படாமலும் ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கிடைத்து வருகின்றது. அரசு மீது மக்கள் வெளிப்படுத்தியுள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கும், குறிப்பாக அரச சேவையில் எதிர்பார்க்கப்படும் சாதகமான மாற்றங்களை மேற்கொள்வதற்காக அவ்வாறான முறைப்பாடுகள் தொடர்பாக பக்கச்சார்பற்ற வகையிலும் மற்றும் விஞ்ஞான ரீதியாகவும் விடயங்களை விசாரணை செய்ய வேண்டியுள்ளது. அதற்கமைய, முன்னைய அரசுகளின் கீழ் அரச நிறுவனங்கள் செயற்பட்டுள்ள விதம் தொடர்பிலும், தற்போது அரச நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும் முன்வைக்கப்படும் பொது மக்களின் முறைப்பாடுகள், விளக்களித்தல் மற்றும் பல்வேறு மூலங்களிலிருந்து தெரியவரும் தகவல்கள் தொடர்பான விடயங்களை விசாரணை செய்வதற்காக அமைச்சு மட்டத்தில் நாடு தழுவிய சேவையில் முதலாம் தர அலுவலர் அல்லது புலனாய்வுச் செயன்முறை தொடர்பான அனுபவமுள்ள அரச சேவையின் முதலாம் தர நிறைவேற்று அதிகாரியின் தலைமையில் விசாரணைப் அலகை நிறுவுவதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/202645
-
குடிநீர் தேக்க தொட்டியில் மலம் - புதுக்கோட்டையில் விஷமச் செயல் - போலீஸ் விசாரணை
வேங்கைவயல்: 2 ஆண்டுகளாக தீராத மர்மமும் எழுப்பப்படும் சந்தேகங்களும் - பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, வேங்கை வயல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த நிகழ்வு நடந்து இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்தது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய குடிநீர்த் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட நிகழ்வு நடந்து இரண்டாண்டுகள் கடந்துவிட்டன. குற்றவாளிகள் யார் என்பது இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. வேங்கைவயல் கிராமம் இப்போது எப்படியிருக்கிறது? திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் நெடுஞ்சாலையில், இடதுபுறம் உள்ளடங்கியிருக்கிறது முத்துக்காடு ஊராட்சிக்குட்பட்ட வேங்கைவயல் கிராமம். 2022ஆம் ஆண்டின் இறுதியில் இந்தக் கிராமத்தில் நடந்த ஒரு நிகழ்வு, தமிழ்நாட்டையே உலுக்கியது. வேங்கைவயலில் உள்ள பட்டியல் பிரிவினர் பயன்படுத்திய மேல்நிலை குடிநீர் தொட்டியில், மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரம் வெளியில் வந்தபோது ஒட்டுமொத்த தமிழ்நாடும் அதிர்ந்துபோனது. இந்தச் சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் இதனைச் செய்த குற்றவாளிகள் இன்னும் கைதுசெய்யப்படவில்லை. குடிநீர் தொட்டியில் மலம்- இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு வேங்கைவயல் நிலை என்ன? வேங்கைவயல்: மலம் மாதிரியை டி.என்.ஏ. பரிசோதனை செய்வது குற்றவாளியை அடையாளம் காட்டுமா? பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? சென்னை அடையாற்றில் செத்து மிதக்கும் மீன்கள் - நதியை மீட்க செலவழித்த ரூ.450 கோடி என்ன ஆனது? பிபிசி கள ஆய்வு அந்த ஊரை வந்தடையும் பாதைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில், வெளியூர் ஆட்கள் விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். பத்திரிகையாளர்கள் உள்ளே சென்று செய்திகளை சேகரிக்க முழுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. "இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்தது ஒருபுறமிருக்க, அதைத் தொடர்ந்து நீடிக்கும் காவல்துறையின் கண்காணிப்பு எங்கள் ஊரைத் தனிமைப்படுத்திவிட்டது. இங்கே பெண் கொடுக்கக் கூட யாரும் தயங்குகிறார்கள்" என்கிறார் இந்த ஊரைச் சேர்ந்த முருகன். வேங்கைவயல் சம்பவம் நடந்த இரண்டாம் ஆண்டு தினமான டிசம்பர் 26ஆம் தேதி, வேங்கைவயலுக்குச் செல்லும் பாதைகள் அனைத்தும் கடுமையான பாதுகாப்பிற்குள் கொண்டுவரப்பட்டிருந்தன. இந்த சம்பவம் நடந்து சில வாரங்களிலிருந்தே இந்தக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன என்றாலும், இப்போது பல கிலோ மீட்டர் தூரத்திற்கு முன்பே வெளியாட்கள் நிறுத்தி திருப்பி அனுப்பட்டனர். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சிக்கு இப்போதும் ஒரு நெருக்கடியாக இருக்கும் இந்த விவகாரத்தில் இதுவரை என்ன நடந்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம். தென் கொரிய விமான விபத்து: ஓடுபாதைக்கு அருகில் கான்கிரீட் சுவர் இருந்தது ஏன்?4 மணி நேரங்களுக்கு முன்னர் 'பயமும் கவலையும் அதிகரித்துள்ளது, மனவலிமையை குலைத்துள்ளது' - அண்ணா பல்கலை. மாணவிகள், பெற்றோர்கள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, வேங்கை வயலை அடையும் பாதைகள் அனைத்தும் காவல்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது குடிநீர் தொட்டியில் மலம் முத்துக்காடு ஊராட்சியில் வேங்கைவயல் என்பது பட்டியல் பிரிவினர் மட்டும் வசிக்கும் ஒரு மிகச் சிறிய பகுதி. 2022ஆம் ஆண்டின் டிசம்பர் மாத இறுதியில்தான் இந்த விபரீதம் நடந்தது. டிசம்பர் 21ஆம் தேதிவாக்கில் இந்த ஊரில் வசிக்கும் சதாசிவம் என்பவரின் பேரன் கோமித்திரனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. "உடல்நிலை சரியில்லாமல் போனவுடன் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தோம். அங்கிருந்த மருத்துவர்கள் குடிநீரில்தான் ஏதோ பிரச்னை இருக்கிறது என்று சொன்னார்கள். வீட்டில் பிடித்து வைத்திருந்த தண்ணீரில் ஏதாவது பிரச்னையாக இருக்கும் என நினைத்தோம். இதற்குப் பிறகு எங்கள் பகுதியைச் சேர்ந்த குழந்தைகளுக்கு அடுத்தடுத்து உடல்நலக் குறைவு ஏற்பட்டது." "இதற்குப் பிறகு டிசம்பர் 23, 24, 25ஆம் தேதிகளில் தண்ணீர் வரவில்லை. தண்ணீரை மேல்நிலைத் தொட்டியில் ஏற்றுவதற்கு மின்சாரம் இல்லை என்றார்கள். டிசம்பர் 26ஆம் தேதி மீண்டும் தண்ணீர் வந்தது. அந்தத் தண்ணீர் துர்நாற்றத்துடன் வந்தது. இதையடுத்து தொட்டியின் மீது ஏறிப் பார்த்தபோது, அதில் மனிதக் கழிவு இருந்தது. இதற்குப் பிறகு கவுன்சிலருக்குச் சொன்னோம். ஊர்த் தலைவரின் கணவர் முத்தையா வெகுதாமதமாக அங்கு வந்து சேர்ந்தார். பிறகு வெள்ளனூர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தோம். அங்கிருந்து கார்த்தி என்ற காவலர் ஏறிப் பார்த்தார்." "தண்ணீரைத் திறந்துவிடக் கூடிய காசி விஸ்வநாதன் என்ற நபரும் முத்தையாவும் எங்களை அழைக்காமல் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதற்குப் பிறகு அரசு மற்றும் காவல்துறையைச் சேர்ந்த அனைவரும் அங்கே வந்துவிட்டார்கள். தொட்டியிலிருந்து மலத்தை எடுத்த பிறகு, அதிலிருந்த தண்ணீரைத் திறந்துவிட முடிவுசெய்தார்கள். நான், சதாசிவம் போன்றவர்கள் 'அதுதான் ஆதாரம், திறந்து வெளியேற்றிவிட வேண்டாம்' என்று சொன்னோம். ஆனால், முத்தையா பேச்சைக் கேட்டு அவர்கள் தண்ணீரை திறந்துவிட்டார்கள். இதற்குப் பிறகு பல முறை டேங்க் சுத்தப்படுத்தப்பட்டது. பழைய குழாய்களை மாற்றிவிட்டு புதிய குழாய்கள் போடப்பட்டன. இதற்கு அடுத்த நாள் அதாவது டிசம்பர் 27ஆம் தேதி மாவட்ட ஆட்சித் தலைவர் கவிதா ராமு, எஸ்.பி. வந்திதா பாண்டே, டிஎஸ்பி ராகவி ஆகியோர் வந்தனர். மாவட்ட ஆட்சித் தலைவர் எங்களிடம் விசாரணை நடத்தினார்" என நினைவுகூர்கிறார் வேங்கைவயலைச் சேர்ந்த முருகன். இளைஞருக்கு மரண தண்டனை: கல்லூரி மாணவி கொலையில் தண்டனை கிடைப்பதை உறுதி செய்தது எப்படி? விசாரணை அதிகாரி தகவல்4 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிக்கெட் 2024: ஐபிஎல் முதல் உலகக்கோப்பை வரை - முக்கியமான 12 தருணங்கள்6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வேங்கைவயலைச் சேர்ந்த முருகன் இறையூர் - வேங்கைவயல் பகுதியில் இரண்டு மேல்நிலை குடிநீர்த் தொட்டிகள் இருந்தன. ஒன்று 30,000 லிட்டர் கொள்ளளவுள்ள பெரிய தொட்டி. அதில் இருந்தே அனைவருக்கும் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. சர்ச்சைக்குள்ளான மற்றொரு தொட்டி, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் வெள்ளோட்டத்திற்காகக் கட்டப்பட்டது. வெள்ளோட்டம் முடிந்த பிறகு அந்தத் தொட்டி பயன்பாட்டில் இல்லாமல் இருந்தது. சில நாட்களில் வேங்கைவயல் பகுதிக்கென தனியாக ஆழ்துளைக் கிணறு அமைக்க நிதி ஒதுக்கப்பட்டதால், சம்பவம் நடப்பதற்கு 9 மாதங்களுக்கு முன்பாக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, சிறிய தொட்டியில் தண்ணீர் ஏற்றப்பட்டது. அதிலிருந்து வேங்கைவயல் பகுதிக்கு மட்டும் குடிநீர் வழங்கப்பட்டுவந்தது. அந்தக் குடிநீர் தொட்டியில்தான் மலம் கலக்கப்பட்டது. "எல்லோருக்கும் தண்ணீர் விநியோகிக்கப் பயன்படும் பெரிய தொட்டியிலிருந்தே எங்கள் பகுதிக்கும் தண்ணீர் வழங்கப்படுவது தொடர்ந்திருந்தால், இதுபோல யாராவது செய்திருப்பார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சதாசிவம். அமெரிக்க கருவூலத்துறையின் ஆவணங்கள் ஹேக் - பின்னணியில் சீனா உள்ளதா? அமெரிக்கா கூறுவது என்ன?2 மணி நேரங்களுக்கு முன்னர் நீண்ட ஆயுட்காலத்துடன் வாழும் ரகசியத்தை சொல்லும் சிங்கப்பூர் மக்கள்4 மணி நேரங்களுக்கு முன்னர் "2 ஆண்டுகளாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை" விவகாரம் பெரிதான நிலையில், டி.எஸ்.பி. ரமேஷ் கண்ணா தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டது. தொட்டியில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. 2023ஆம் ஆண்டு ஜனவரியில் வழக்கு குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.பி.சி.ஐ.டி) மாற்றப்பட்டது. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி டிஎஸ்பி பால்பாண்டி தலைமையிலான 35 பேர் கொண்ட குழு விசாரிக்க ஆரம்பித்தது. இந்தக் குழு பலரிடம் டிஎன்ஏ பரிசோதனைகளை மேற்கொண்டது. இதற்கு நடுவில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர்நீதி மன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி சத்யநாராயணன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை அமைத்து உத்தரவிட்டது. 2023 செப்டம்பர் மாதத்தில் அந்த ஆணையம் தனது இடைக்கால அறிக்கையை அளித்தது. இந்த நிலையில், வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த பால்பாண்டி மாற்றப்பட்டு, புதிய விசாரணை அதிகாரியாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. கல்பனா தத் நியமிக்கப்பட்டார். இதுவரை மொத்தமாக 31 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைகளும் ஐந்து பேரிடம் குரல் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டுள்ளன. இருந்த போதும் இந்த வழக்கில் யாரும் கைதுசெய்யப்படவில்லை. "இரண்டாண்டுகளாக குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆரம்பத்திலிருந்தே இந்த விவகாரத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்தவர்களையே குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். ஆரம்பத்தில் எங்கள் பகுதியைச் சேர்ந்த பிரபாகர் என்பவரை குற்றவாளியாக்க முடிவுசெய்தார்கள். அதற்குப் பிறகு காவலராக இருக்கும் முரளி என்பவரை குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்கள். இதுபோலச் செய்துவிட்டு, அதே தண்ணீரைக் குடிக்க யாராவது முன்வருவார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் முருகன். தமிழ்நாட்டில் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படாதது ஏன்?30 டிசம்பர் 2024 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குச் செல்ல இந்தியாவுக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதா?6 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வேங்கைவயல் பகுதியைச் சேர்ந்த சதாசிவம் சம்பவம் நடந்து இரண்டாண்டுகள் கழிந்துவிட்ட நிலையிலும் வேறு ஊர்களைச் சேர்ந்தவர்கள் விசாரணைக்குப் பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் தற்போதுவரை உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை. "வெளியிலிருந்து வருபவர்கள் உள்ளே சென்று புதிதாக பிரச்னைகள் எதையும் ஏற்படுத்திவிடாமல் இருப்பதற்காகத்தான் வெளியாட்கள் உள்ளே அனுமதிக்கப்படுவதில்லை" என்கிறது காவல்துறை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல் இருப்பது ஒருபுறமிருக்க காவல்துறையின் கெடுபிடி காரணமாக, தங்கள் நிம்மதியே போய்விட்டது என்கிறார்கள் வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். "இரண்டு ஆண்டுகளாக நிம்மதியே இல்லை. எங்கள் பசங்களுக்கு யாரும் பெண் தருவதில்லை. வேங்கைவயல் என்றாலே தயங்குகிறார்கள். சொந்த பந்தங்கள் நிம்மதியாக வர முடியவில்லை. யார் மரணத்திற்காவது வாகனத்தில் சென்றால் மறிக்கிறார்கள். மலத்தைப் போட்டவன் மருந்தைப் போட்டிருந்தால் நிம்மதியாக செத்துப் போயிருக்கலாம் என்ற மனநிலை வந்துவிட்டது. எத்தனை ஆண்டுகள் போனாலும் டிசம்பர் 26ஆம் தேதி வந்தால், இனி இந்தச் சம்பவம்தானே நினைவுக்கு வரும்?" என்கிறார் முருகன். கோவை: தாயைப் பறிகொடுத்த குட்டி யானையை சேர்க்க மறுக்கும் யானைக் கூட்டம்30 டிசம்பர் 2024 நீங்கள் 50 வயதில் வேலையை விட்டு விலகினாலும் ஓய்வூதியம் பெறலாம் என்று தெரியுமா?29 டிசம்பர் 2024 'இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை அரசு வைக்க வேண்டும்' மாவட்ட நிர்வாகத்திடம் இது குறித்துக் கேட்ட போது, "இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகம் செய்ய வேண்டிய பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டன. தற்போது விவகாரம் காவல்துறையின் வசம் இருக்கிறது. வேறு ஏதும் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக மட்டுமே, கிராமத்தோடு சம்பந்தப்படாத நபர்கள் அங்கே அனுமதிக்கப்படுவதில்லை" என்று தெரிவித்தனர். "இதைவிட மோசமான சம்பவம் என்ன நடந்துவிடப் போகிறது? இப்போது இவ்வளவு காவல்துறையை குவிக்கிறார்களே. இன்றுதான் குற்றவாளியை பிடிக்கப் போகிறார்களா? இனிமேல் இதுபோன்ற சம்பவம் நடக்கக்கூடாது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளியை அரசு வைக்க வேண்டும்" என்கிறார் சதாசிவம். இந்த விவகாரத்தை விசாரித்து வரும் தஞ்சாவூரில் உள்ள சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா தத்தின் அலுவலகம், விசாரணை தொடர்பான எந்தத் தகவலையும் தர விரும்பவில்லை. "இது ரொம்பவும் சென்சிடிவான விவகாரம். விசாரணை நடந்து கொண்டிருக்கிறது" என்பதோடு முடித்துக்கொண்டனர். வேங்கை வயல் மக்களைப் பொருத்தவரை இந்த ஊரில் உள்ள மற்றொரு சாதியினரே இந்தச் செயலைச் செய்திருக்க வேண்டும் எனக் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், அந்தத் தரப்பிலிருந்து இது பற்றிப் பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை. ஊர்த்தலைவரின் கணவர் முத்தையாவிடம் கேட்டபோது, "காவல்துறை விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. இது குறித்து எதுவும் பேச நாங்கள் விரும்பவில்லை" என்று மட்டும் சொன்னார். உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி30 டிசம்பர் 2024 அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: போராடும் அதிமுக, பாராட்டும் பாஜக - திமுகவுக்கு நெருக்கடியா?30 டிசம்பர் 2024 படக்குறிப்பு, கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் பிரிவைச் சேர்ந்த விடுதலைக் குமரன் இந்த விவகாரத்தில் ஆரம்பம் முதல் போராட்டங்களை நடத்தியதோடு, தொடர்ந்து கவனித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சி - மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் பிரிவைச் சேர்ந்த விடுதலைக் குமரன், இது ஒரு நாளில் நடந்திருக்கக் கூடிய சம்பவமல்ல என்கிறார். "இது ஒரே ஒரு நபர் செய்த காரியமாகத் தெரியவில்லை. ஒரு நாளில் இது நடக்கவில்லை. பல நாட்கள் நடந்திருகிறது. நீண்ட விசாரணைகள் நடந்த பிறகும் வழக்கில் முன்னேற்றமில்லை. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமல்தான் காலதாமதமாகிறதா என்ற கேள்வி இருக்கிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, வெளியில் சொல்லப்படவில்லையோ என்ற சந்தேகமும் இருக்கிறது" என்கிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx26w05yqreo
-
வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் - 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா
மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் சம்பள பட்டியல் வெளியிட்டு வைப்பு; 8 மணித்தியால வேலைக்கு 2000 ஆயிரம் ரூபா Published By: DIGITAL DESK 2 31 DEC, 2024 | 05:19 PM மட்டக்களப்பில் வீட்டுவேலை தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் நாள் ஒன்றிற்கு 8 மணித்தியாலத்திற்கு 2000 ரூபாவாக நிர்ணயித்து அது தொடர்பான சம்பளம் பட்டியல் ஒன்றை வீட்டு வேலை தொழிலாளர் சங்கம் இன்று செவ்வாய்க்கிழமை (31) வெளியிட்டு வைத்தது. மட்டக்களப்பு டயஸ் லேனிலுள்ள வீட்டுவேலை தொழிலாளர் சங்க காரியாலயத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சம்பள பட்டியலைச் சங்க செயலாளர் மற்றும் உறுப்பினர்கள் வெளியிட்டுவைத்து இவ்வாறு தெரிவித்தனர். மாவட்டத்தில் 450 மேற்பட்ட வீட்டுவேலை தொழிலாளர்கள் சங்க உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த வீட்டுவேலை தொழிலாளர்களுக்குத் தொழில் வழங்குபவர்கள் ஒருவேலைக்கு அழைத்து ஏனைய வேலைகளை வாங்கிக் கொண்டு அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளங்களை வழங்காது சாப்பாட்டு பொதியை வழங்கி அத்துடன் குறைந்த ஊதியத்தை வழங்கி அவர்களை அவமதித்து நடாத்தி வருகின்றனர். இவ்வாறு வீட்டு வேலை தொழிலாளிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களின் உழைப்பிற்கு ஏற்ற சம்பளத்தைப் பெற்றுக் கொள்வதற்காகச் சம்பள பட்டியல் ஒன்றை நிர்ணயித்துள்ளோம். அதற்கமைய 8 மாணிநேர வேலைக்கு 2000 ரூபாவும், 4 மணித்தியால வேலைக்கு 1500 ரூபாவும், ஒருமணிநேர வேலைக்கு 500ரூபாவும், 8 மணித்தியாலயத்திற்கு மேல் வேலை செய்தால் ஒரு மணித்தியாலயத்திற்கு 250 ரூபாவும், தங்கி வேலை செய்வோருக்கு மாதாந்தம் 50 ஆயிரம் ரூபாவும் தொழில் வழங்குபவர்கள் வழங்கப்படவேண்டும் எனச் சம்பள பட்டியல் ஒன்றை நிர்ணயித்து அதனை இன்று துண்டுப்பிரசுரம் மூலமாக பொது இடங்களில் விநியோகிக்க உள்ளோம். எனவே எமது சங்கம் கண்டியை தலைமையுமாகக் கொண்டு பல மாவட்டங்களில் இயங்கி வருகின்றது. இந்த சங்கத்திலுள்ள வீட்டு வேலை தொழிலாளர்களின் உரிமை மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம். எனவே இந்த சங்கத்தில் இணையாத வீட்டுவேலை தொழிலாளர்கள் இணைந்து கொள்ளமுடியும் என்றனர். இதனையடுத்து சம்பள பட்டியல் துண்டுப் பிரசுரத்தை மண்முனை வடக்கு பிரதேச செயலாளரிடம் கையளித்து வெளியிட்டு வைத்த பின்னர் துண்டுப்பிரசுரங்களைப் பொதுமக்களிடம் விநியோகித்தனர். https://www.virakesari.lk/article/202639
-
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் பிறந்தது 2025 புத்தாண்டு!
உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில் விடைபெற்றது 2024! பிறந்தது புத்தாண்டு! Published By: VISHNU 31 DEC, 2024 | 08:48 PM உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தில், 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு பிறந்தது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இன்னும் ஒரு சில மணி நேரங்களில் புத்தாண்டு பிறக்கவிருக்கிறது. பல நகரங்களில் டிசம்பர் 31ஆம் தேதி மாலை முதலே புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் களைகட்டத் தொடங்கிவிடும். 2024ஆம் ஆண்டு முடிந்து 2025ஆம் ஆண்டு தொடங்கவிருக்கும் நிகழ்வை உலகமே கொண்டாடத் தயாராகி வருகிறது. பலரும் அவரவருக்கு உரிய முறையில் புத்தாண்டை வரவேற்கத் தயாராவார்கள். உலகிலேயே முதல் நாடாக நியூசிலாந்தின் ஆக்லாந்தில் புத்தாண்டு பிறந்துள்ளது. இலங்கை நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 4.40 மணிக்கு, நியூசிலாந்தில் நள்ளிரவு 12 மணி. புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, மக்கள் வாண வேடிக்கைகளுடன் புத்தாண்டு வாழ்த்துகளை பரிமாறி ஆரவாரத்துடன் புத்தாண்டை வரவேற்றனர். உலக நேரக் கணக்கின்படி, கிரிபாட்டி தீவுக்கு அடுத்த நியூசிலாந்து நாட்டில்தான் புத்தாண்டு பிறந்துள்ளது. புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் ஆக்லாந்த நாட்டின் ஸ்கை டவரில் வாண வேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202668
-
புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்வோருக்கு விடுக்கப்பட்டிருக்கும் முக்கிய அறிவிப்பு
புகையிரத இருக்கைகளை முன்பதிவு செய்யும் போது பயணிகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கம் அல்லது கடவுச்சீட்டு இலக்கத்தை உள்ளிட வேண்டும் என இலங்கை புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது. புகையிரத நிலையத்திற்குள் உட்பிரவேசிக்கும் போதும், புகையிரதத்திற்குள் அனுமதி சீட்டுகளை சரிபார்க்கும் போதும், அனுமதி சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள தேசிய அடையாள அட்டை எண் அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டு எண் ஆகியவற்றை சரிபார்த்து உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாளை முதல் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளுக்கான பயணச்சீட்டு பணத்தைத் திரும்பப் பெற விண்ணப்பிக்கும் போது பயணச்சீட்டு உரிமையாளரின் அடையாளத்தை உறுதிப்படுத்த பயணிகளின் தேசிய அடையாள அட்டை அல்லது வெளிநாட்டு கடவுச்சீட்டின் நகலைத் புகையிரத நிலையத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314252
-
முதலாம் தர மாணவர்களுக்கு 30ஆம் திகதி பாடசாலை ஆரம்பம் - கல்வி அமைச்சு
Published By: DIGITAL DESK 3 31 DEC, 2024 | 01:01 PM (எம்.மனோசித்ரா) அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற சகல பாடசாலைகளிலும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள முதலாம் வகுப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இம்மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்று செவ்வாய்கிழமை (31) அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. அதற்கமைய அனைத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் அரச பாடசாலைகளின் புதிய தரம் ஒன்று மாணவர்களுக்கு ஜனவரி 30 ஆம் திகதி வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன. இதேவேளை விடுமுறையின் பின்னர் நாளை வியாழக்கிழமை மீள பாடசாலைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. சகல பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்ட கற்றல், கற்பித்தல் செயற்பாடுகள் வியாழக்கிழமை (02) ஆரம்பமாகி, எதிர்வரும் 24ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளன. இதேவேளை இவ்வாண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் 2025 மார்ச் 17ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். பரீட்சை நேர அட்டவணை என்பதை விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202607
-
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 179 பேர் பலி !
179 பேர் பலி: தென் கொரிய விமான நிலையத்தில் ஓடுபாதை முடிவில் கான்கிரீட் சுவர் இருந்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் மெர்சர் பதவி, பிபிசி செய்தி தென் கொரியாவில் 179 பேர் பலியான விமான விபத்தில் ஓடுபாதை முடிவில் "அசாதாரணமான" கான்கிரீட் சுவர் குறித்தும் அதன் பங்கு குறித்தும் விமான நிபுணர்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஜேஜூ ஏர் விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி சுவரில் மோதி தீப்பிடித்து எரிவதை சில காட்சிகள் காட்டுகின்றன. தென் கொரியாவில் ஏற்பட்ட மிக மோசமான விமான விபத்துக்கான காரணத்தை ஆராயும் அதிகாரிகள், ஓடுபாதையின் எல்லையில் இருந்து 250 மீ (820 அடி) தொலைவில் கான்கிரீட் சுவர் உள்ள இடத்தின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து வருகின்றனர். விமான பாதுகாப்பு நிபுணர் டேவிட் லியர்மவுண்ட், 'தடை' இல்லாதிருந்தால், விமானம் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருக்கும். மேலும் அதில் இருந்தவர்களில் பெரும்பாலான மக்கள் தப்பித்திருக்கலாம். ஒருவேளை அனைவரும் கூட உயிர் பிழைத்திருப்பார்கள் என்று கூறினார். விமானம் ஒரு பறவை மீது மோதியதாக விமானி அறிவித்தார். பின்னர் தரையிறக்க வேண்டிய இடத்தில் தரையிறக்காமல், எதிர் திசையில் இருந்து தரையிறங்க அனுமதி கோரினார். விமானம் 2,800 மீட்டர் ஓடுபாதையில் கீழிறங்கியது. தனது சக்கரங்கள் அல்லது லேண்டிங் கியர் இல்லாமல் விமானம் தரையிறங்கியது. ''லேண்டிங் கியர் பயன்படுத்தப்படவில்லை என்றாலும் விமானம் நன்றாக தரையிறங்கியது. இதற்கு காரணம் விமானத்தின் இறக்கைகள் சமமாக இருந்தன, விமானத்தின் வால் போன்ற பின் பகுதியில் ஏற்படும் சேதத்தைத் தவிர்ப்பதற்காக விமானத்தின் முன்பகுதி மிக உயரமாக உயர்த்தப்படவில்லை. மேலும் ஓடுபாதையில் சறுக்கிக்கொண்டு போனாலும், விமானத்திற்கு அதிக சேதம் எதுவும் ஏற்படவில்லை'' என்கிறார் லியர்மவுண்ட். தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன? விளாதிமிர் புதின்: 25 ஆண்டுக்கால ஆட்சியில் ரஷ்யாவை எப்படி கவனித்துக் கொண்டார்? 179 பேர் பலி: விபத்துக்கு முன் விமானத்திற்கு என்ன நடந்தது? பயணியின் கடைசி குறுஞ்செய்தியில் முக்கிய தகவல் 4 மீட்டர் உயர சுவர் "இத்தனை பேர் இறந்ததற்குக் காரணம் தரையிறக்கம் அல்ல, ஆனால் ஓடுபாதையின் எல்லைக்கு அப்பால் இருந்த கடினமான தடை (சுவர்) ஒன்றில் விமானம் மோதியதுதான் " என்றும் அவர் கூறினார். லுஃப்தான்சா விமான நிறுவன விமானி கிறிஸ்டியன் பெக்கர்ட், அந்த கான்கிரீட் கட்டமைப்பை "அசாதாரணமான" கட்டமைப்பு என்று அழைத்தார். அவர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம், "பொதுவாக, விமான நிலைய ஓடுபாதையின் முடிவில் சுவர் இருக்காது"என்றும் தெரிவித்தார். இந்த கான்கிரீட் கட்டமைப்பானது விமானம் தரையிறங்குவதற்கு உதவும் லோக்கலைசர் அமைப்பைக் கொண்டுள்ளது என தென் கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது மண்ணால் மூடப்பட்ட அந்த கான்கிரீட் அமைப்பு 4 மீட்டர் உயரம் கொண்டது. ஓடுபாதையின் அதே அளவில் லோக்கலைசரை வைத்திருக்க இது உயர்த்தப்பட்டது. வழிகாட்டும் அமைப்பு சரியாக வேலை செய்வதை உறுதிசெய்ய இப்படி அமைக்கப்பட்டுள்ளது என யோன்ஹாப் கூறுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, லேண்டிங் கியர் இல்லாமல் விமானம் தரையிறங்கியது தென் கொரியாவின் போக்குவரத்து அமைச்சகம், நாட்டின் பிற விமான நிலையங்கள் மற்றும் சில வெளிநாடுகளில் கான்கிரீட் கட்டமைப்புகளுடன் உபகரணங்கள் நிறுவப்பட்டுள்ளன என்று கூறியுள்ளது. இருப்பினும், அவை எளிதில் உடைந்து விடும் அளவிலான எடை குறைவான பொருட்களால் செய்யப்பட்டிருக்குமா என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள். விபத்துக்குள்ளான விமானத்தைப் போன்ற அதே வகையான விமானங்களை ஓட்டிய 48 வருட அனுபவமுள்ள விமானி கிறிஸ் கிங்ஸ்வுட், ''ஓடுபாதையின் ஒரு குறிப்பிட்ட எல்லை மற்றும் தூரத்தில் உள்ள தடைகள் உடையக்கூடியதாக இருக்க வேண்டும், அதாவது ஒரு விமானம் அதில் மோதினால் அந்த கான்கிரீட் தடை உடைய வேண்டும்" என்று பிபிசியிடம் கூறினார். "இந்த கடினமான கான்கிரீட் கட்டமைப்பு அசாதாரணமாகத் தெரிகிறது. நான் புரிந்துகொண்டபடி, விமானம் மிக வேகமாகப் பயணித்தது, ஓடுபாதையில் நீண்ட தூரம் தரையிறங்கியது, எனவே அது ஓடுபாதையின் முடிவைக் கடந்து வெகுதூரம் சென்றிருக்கும். அப்படியென்றால் தடைகள் எங்கு வைக்கப்பட வேண்டும்? அது நிச்சயமாக விசாரிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் கேள்வி எழுப்பினார். தொடர்ந்து பேசிய அவர், "விமானங்கள் இலகுவாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அதனால் அவை திறமையாக பறக்க முடியும். விமானத்தின் நடுப்பகுதி அதிவேகமாகச் செல்லும் வகையில் வடிவமைக்கப்படவில்லை. விமானத்தின் முக்கியப்பகுதியில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் வகையில் ஏதேனும் தாக்கினால் அது பேரழிவுக்கு வழிவகுக்கும்" என்றார். மேலும் "விமானத்தின் எரிபொருள், அதன் இறக்கைகளில் வைக்கப்படுகிறது, எனவே இறக்கை உடைந்தவுடன், தீ பற்றுவதற்கான சாத்தியமும் குறிப்பிடத்தக்கது. எனவே, சுவர் இல்லாதிருந்தால், முடிவு வேறு மாதிரியாக இருந்திருக்கலாம் என்றும் பொருள் கொள்ள முடியாது" என்றும் அவர் தெரிவித்தார். மேலும் "தொழில்துறையின் தரத்திற்கு ஏற்ப அனைத்து தேவைகளையும் விமானநிலையம் பூர்த்தி செய்யவில்லை என்று தெரியவந்தால் ஆச்சரியப்படுவேன்" என்கிறார் கிங்ஸ்வுட். அஜர்பைஜான் பயணிகள் விமானம் ரஷ்யப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? திடீரென மன்னிப்பு கேட்ட புதின்28 டிசம்பர் 2024 நீண்ட ஆயுட்காலத்துடன் வாழும் ரகசியத்தை சொல்லும் சிங்கப்பூர் மக்கள்3 மணி நேரங்களுக்கு முன்னர் "பல சர்வதேச விமான நிலையங்களில் உள்ள விமானத் தளங்களை ஆராயும்போது, ஆபத்துகளை முன்வைப்பதாகக் குற்றம் சாட்டப்படும் பல தடைகளை நம்மால் கண்டுபிடிக்க இயலும் என்று நான் சந்தேகிக்கிறேன்," என்று கிங்ஸ்வுட் மேலும் கூறினார். விமானப் பகுப்பாய்வாளர் சாலி கெதின், விமானம் வழக்கமான தரையிறங்கும் திசையில் இருந்து எதிர் திசையில் தரையிறங்கியதை கருத்தில் கொண்டு, தடை இருப்பது விமானிக்குத் தெரியுமா என்று கேள்வி எழுப்பினார். "இறுதியில் இந்த கடினமான தடை இருப்பதை விமானிகள் அறிந்திருந்தார்களா?'' என்கிறார் அவர் "வழக்கமாக தரையிறங்கும் திசையில் அல்லாமல் மறு திசையில் தரையிறங்க கட்டுப்பாட்டு அமைப்புகளால் அவர்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தால், அது கருப்பு பெட்டிகளின் விசாரணையில் வெளிவர வேண்டும்" என்றார். மேலும் "பல கேள்விகள் இருப்பதாக நான் நினைக்கிறேன்"என்று சாலி கெதின் பிபிசியிடம் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c159ywkp87xo
-
100 மில்லியன் நட்டஈடு கோரி அர்ச்சுனா மீது அவதூறு வழக்கு
அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே; அர்ச்சுனா சார்பில் நீதிமன்றில் தெரிவிப்பு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தொடர்பில், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் கூறிய விடயங்கள் உண்மையே என அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் தெரிவித்துள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனிடம் 100 மில்லியன் ரூபாய் நஷ்ட ஈடு கோரி யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி யாழ். மாவட்ட நீதிமன்றில் வழக்கு தொடர்ந்துள்ளார். வழக்காளியான வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தி இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் தடுப்புக் காவலில் இருந்த போது அங்கு அவருக்கு நிகழ்ந்த விடயங்கள் தொடர்பில் அவருக்கு அவதூறாக எதிராளி வைத்தியர் இராமநாதன் அசர்ச்சுனாவினால் செல்லப்பட்ட விடயங்கள் மற்றும் கடந்த 09 ஆம் திகதி இராமநாதன் அர்ச்சுனா வைத்தியசாலைக்குள் நுழைந்து வைத்திய நிபுணர் சத்தியமூர்த்தியுடன் சில வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டு, அவருடன் பிணக்கிற்கு உட்பட்ட விடயங்கள் தொடர்பிலும், அன்றைய தினத்தில் இராமநாதன் அர்ச்சுனா தன்னுடைய முகப்புத்தகத்தில் வெளியிட்ட காணொளி ஊடாக அவதூறு பரப்பப்பட்டதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த வழக்கு நேற்று (30) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, எதிராளியான பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் கூறிய விடயங்கள் அனைத்தும் உண்மை எனவும், அவற்றை மன்றில் நிரூபிக்க தயாராக இருக்கிறோம் என மன்றில் தெரிவித்தார். அந்நிலையில் குறித்த வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314244
-
தற்செயலாக புலப்பட்ட மாயன் நகரம் முதல், ராக்கெட் கேட்ச் வரை: 2024-ஆம் ஆண்டின் வியத்தகு அறிவியல் முன்னேற்றம்
பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், டிம் டாட் பதவி, காலநிலை & அறிவியல் செய்தியாளர் முழு சூரிய கிரகணத்தை பல லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். தற்செயலாக ஒரு நகரம் அடர்ந்த காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தை அழிவின் விளிம்பில் இருந்து மீட்கும் முயற்சிகள் வெற்றியை கொடுத்தன... இந்த ஆண்டு அறிவியல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்திய முக்கிய நிகழ்வுகள் இவை ஈலோன் மஸ்கின் ஸ்டார்ஷிப் விண்வெளிக்கு சென்று திரும்புவதை மிகவும் எளிதாகவும், விலை குறைவானதாகவும் மாற்றியது. இது இந்த ஆண்டின் மிக கவனம் பெற்ற முக்கிய நிகழ்வாகும். மேலும் இந்த ஸ்டார்ஷிப் மீண்டும் பயன்படுத்தும் ராக்கெட்டை உள்ளடக்கிய கண்டுபிடிப்பாக அறியப்படுகிறது. ஆனால் அனைத்து செய்திகளும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் செய்திகள் இல்லை.2024-ஆம்ஆண்டுதான் அதிக வெப்ப நிலையை கொண்ட ஆண்டாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொண்டாட்டங்களுக்கு குறைவில்லாத மகிழ்ச்சியான செய்திகளும் நம்மை வந்து சேர்ந்துள்ளது. இந்த ஆண்டு அறிவியல் உலகில் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய 7 முக்கிய நிகழ்வுகள் என்ன? ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம் 100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன? கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள் மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம் நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள் ராக்கெட் கேட்ச் அக்டோபர் மாதம், ஈலோன் மஸ்கின் ஸ்டார்ஷிப் ராக்கெட்டின் ஒரு பகுதி எந்த ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டதோ அதே இடத்திற்கு திருப்பி கொண்டுவரப்பட்டது. ஸ்பேஸ்எக்ஸின் லோயர் பூஸ்டர் ராக்கெட் கடலில் சென்று விழுவதற்கு பதிலாக, அது எந்த ஏவுதளத்தில் ஏவப்பட்டதோ அங்கேயே திரும்பி வந்தது. ஐந்தாவது சோதனை முயற்சியின் முடிவில், அந்த ராக்கெட், மெக்கானிக்கல் ஆர்ம்ஸ் என்று அழைக்கப்படும் இயந்திர கரங்களுக்குள் லாவகமாக வந்து விழுந்தது. நிலவுக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய, விரைவாக நிலைநிறுத்தக்கூடிய ராக்கெட்டுகளை உருவாக்க வேண்டும் என்ற ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் லட்சியத்தை நிஜமாக்கியுள்ளது இந்த சோதனை முயற்சி. அந்த பூஸ்டர் பாதுகாப்பாக வந்து தரையிறங்கிய பிறகு, 'வரலாற்று புத்தகங்களுக்கான நாள் இது' என்று ஸ்பேஸ்எக்ஸ் பொறியியல் ஆய்வாளர்கள் கூறினார்கள். பிரமிக்க வைக்கும் ஈக்களின் மூளை ஈக்களால் நடக்க முடியும். மிதக்க முடியும். ஏன், ஆண் ஈக்களால் தங்களின் இணையை ஈர்க்க பாடல்களும் கூட பாட இயலும். இத்தனையும் குண்டூசியின் தலையை விட சிறிய அளவிலான மூளையை வைத்து செய்து வருகிறது ஈக்கள். இந்த ஆண்டு அக்டோபர் மாதம் பழ ஈக்களை ஆய்வு செய்து வந்த ஆராய்ச்சியாளர்கள், அவற்றின் மூளையின் வடிவம், அதில் உள்ள 1,30,000 செல்களின் இணைப்பு மற்றும் 50 மில்லியன் இணைப்புகளை வரைபடமாக்கியுள்ளனர். நம்முடைய மூளைகளைப் பற்றி அறிந்து கொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய அளவில் உதவும் என்று மூளை நிபுணர் ஒருவர் கூறியிருந்தார். சிந்தனையின் செயல்களை (the mechanism of thought) கண்டறிய இந்த ஆய்வு பெரிய அளவில் உதவும் என்று இந்த ஆய்வில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறினார். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 மனிதன் இறக்கும் தருவாயில் மகிழ்ச்சி தரும் ஹார்மான் சுரக்குமா? மூளையில் என்ன நடக்கிறது?22 ஜூன் 2024 பட மூலாதாரம்,MRC/NATURE படக்குறிப்பு, பழ ஈக்களின் மூளை 30 மில்லியன் சிக்கலான இணைப்புகளைக் கொண்டுள்ளன தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்ட மாயன் நகரம் நீங்கள் கூகுளில் ஏதோ ஒன்றை தேடப் போக, அதன் 16வது பக்கத்தில், தொலைந்து போன மாயன் நகரத்தை கண்டுபிடித்தால் எப்படி இருக்கும்? அமெரிக்காவின் டூலேன் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வரும் லூக் ஆல்ட்-தாமஸ் அப்படி ஒரு அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். கூகுளில் எதையோ தேடி, தொலைந்து போன மாயன் நகரத்தை கண்டுபிடித்தார் அவர். கூகுளில் அவர் சுற்றுச்சூழல் கண்காணிப்பிற்காக மெக்சிகோ நிறுவனம் ஒன்று நடத்திய லேசர் சர்வேயின் முடிவுகளை அவர் கண்டறிந்தார். தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தும் நுட்பங்களை பயன்படுத்தி அவர் அந்த தரவுகளை ஆய்வுக்கு உட்படுத்திய போது, பலரால் கண்டுபிடிக்க முடியாமல் போன பெரிய பழமையான நகரத்தை கண்டுபிடித்தார். கி.பி. 750 முதல் 850 காலகட்டத்தில் 30 - 50,000 மக்கள் அந்த நகரத்தில் வாழ்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மெக்சிகோவில் மரங்களால் மூடப்பட்டுள்ள அந்த நகரத்தில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் பிரமிடுகளை கண்டுபிடித்துள்ளனர். அரங்கம் மற்றும் விளையாட்டு திடல் போன்றவற்றையும் அவர்கள் கண்டுபிடித்துள்ளனர். அடர்ந்த மரங்களுக்கு அடியில் உள்ள கட்டமைப்புகளை கண்டறிய லிடார் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்திய போது இந்த பகுதிகள் கண்டறியப்பட்டன. இந்த இடத்திற்கு வலேரியானா என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்தியாவில் காணாமல் போகும் 'நீல' நகரம் எங்கே உள்ளது? என்ன காரணம்?19 அக்டோபர் 2024 அடர்ந்த காட்டுக்குள் புதைந்து போன 'மாயன் நகரம்' தற்செயலாக புலப்பட்டது எப்படி?3 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த இடத்திற்கு வலேரியானா என்று ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர். ஐ.வி.எஃப் மூலம் கருதரித்த காண்டாமிருகம் உலகில் இரண்டே இரண்டு வடக்கு வெள்ளை காண்டாமிருகங்கள் உள்ளன. இந்த விலங்கினத்தை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் வெற்றி அடைந்தன. ஐ.வி.எஃப். தொழில்நுட்பத்தின் உதவியோடு பெண் காண்டாமிருகம் கர்ப்பம் தரித்தது. இப்படியாக நடப்பது இதுவே முதல்முறை. ஆய்வகத்திலேயே உருவாக்கப்பட்ட கருவை வெற்றிகரமாக பெண் காண்டாமிருகத்தின் உடலில் பொருத்தி வெற்றி பெற்றனர் ஆராய்ச்சியாளர்கள். 13 முறை முயற்சி செய்த பிறகே இந்த வெற்றியை அவர்கள் உறுதி செய்தனர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கர்ப்பமான அந்த பெண் காண்டாமிருகம் தொற்று காரணமாக உயிரிழந்தது. உடற்கூராய்வு முடிவுகள், "அதன் வயிற்றில் வளர்ந்த ஆண் காண்டாமிருகம் 6.5 செ.மீ வளர்ச்சி அடைந்திருந்தது. மேலும் நல்ல முறையில் வளர்ந்து வந்த அந்த கரு உயிர் பிழைத்திருக்க 95% வாய்ப்புகளைக் கொண்டிருந்தது," என்பதை உறுதி செய்தது. தற்போது ஆராய்ச்சியாளர்களின் கைவசம் 30 வடக்கு வெள்ளை காண்டாமிருகத்தின் கருக்கள் உள்ளது. சில கருக்களை வைத்து மீண்டும் முயற்சியில் இறங்குவதை அடுத்த கட்ட திட்டமாக ஆராய்ச்சியாளர்கள் வைத்துள்ளனர். கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 சென்னை அரிய உயிரினங்களை கடத்தும் சர்வதேச மையமாக திகழ்வது ஏன்? பிடிபட்டால் என்ன செய்கிறார்கள்?24 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,JAN ZWILLING படக்குறிப்பு, ஆனால் துரதிர்ஷ்டவசமாக கர்ப்பமான அந்த பெண் காண்டாமிருகம் தொற்று காரணமாக உயிரிழந்தது இயற்கையின் அழிவை குறைத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் இயற்கைக்கான உலகளாவிய நிதியம் (WWF) மனித செயல்பாடுகள் உயிரினங்களின் பேரழிவுக்கு வழிசெய்கிறது என்று கூறும் நேரத்தில், இயற்கை குறித்த நல்ல செய்திகளையே நாம் கேட்காதது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். ஆனால் 10 ஆண்டுகளாக நடத்தப்பட்ட ஆய்வின் முடிவுகள், இயற்கையை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உலக அளவில் பல்லுயிர் பெருக்கத்தின் இழப்புகளை திறம்பட குறைத்துள்ளது என்று தெரிவிக்கிறது. வெவ்வேறு நாடுகள் மற்றும் கடல்களில் உயிரினங்களை பாதுகாக்க எடுக்கப்பட்ட 655 நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர் ஆராய்ச்சியாளர்கள். பல ஆராய்ச்சி நிறுவனங்களில் இருந்து வந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர். ஒவ்வொரு மூன்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் இரண்டு செயல்பாடுகள் நேர்மறையான விளைவை ஏற்படுத்தியுள்ளதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். சுனுக் சாலமன் மீன்களை பாதுகாப்பது துவங்கி, ஆக்கிரமிப்பு பாசியினங்களை அழித்தது வரை பல நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகள் நடைபெற்றது. ஆராய்ச்சியாளர்கள், அழிந்து வரும் விலங்குகள் மற்றும் தாவரங்களை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நபர்களுக்கு இது நம்பிக்கை அளிக்கும் என்று கூறுகின்றனர். இந்த ஆண் திமிங்கலம் 13,000 கி.மீ. தூரம் நீந்திச் சென்றது ஏன்? வியக்கும் விஞ்ஞானிகள்23 டிசம்பர் 2024 குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ROBIN MOORE/RE:WILD படக்குறிப்பு, இயற்கையை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் உலக அளவில் பல்லுயிர் பெருக்கத்தின் இழப்புகளை திறம்பட குறைத்துள்ளது லட்சக்கணக்கானவர்களை ஸ்தம்பிக்க வைத்த சூரிய கிரகணம் மெக்சிகோ, அமெரிக்கா மற்றும் கனடாவில் தோன்றிய முழு சூரிய கிரகண நிகழ்வை லட்சக்கணக்கான மக்கள் பார்வையிட்டனர். பூமிக்கும் சூரியனுக்கும் நடுவே நிலவு செல்லும் போது, இந்த வானியல் நிகழ்வு நடைபெறுகிறது. பூமியில் இருந்து ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை சூரிய கிரகணம் நடைபெறுவதை பார்க்க இயலும். ஆனால் பல நேரங்களில் மக்கள் தொகை குறைவான இடங்களிலேயே இவை நடைபெறுகின்றன. ஆனால் இந்த ஆண்டு ஏற்பட்ட சூரிய கிரகணத்தை டாலேஸ் போன்ற நகரங்களில் உள்ள மக்களும் பார்க்கும் வகையில் அரங்கேறியது. ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மாதம் வானில் எரிகற்கள் பொழியும் அதிசயம் பற்றி தெரியுமா?24 டிசம்பர் 2024 புவிவெப்ப ஆற்றல்: பூமியை ஆழமாக தோண்டி எடுக்கும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் சிறப்பு என்ன?11 டிசம்பர் 2024 படக்குறிப்பு, பூமியில் இருந்து ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒரு முறை சூரிய கிரகணம் நடைபெறுவதை பார்க்க இயலும். நம்பிக்கையின் மரம் இங்கிலாந்தின் ஹாட்ரியன் சுவருக்கு நடுவே வளர்ந்திருந்த புகழ்பெற்ற சிக்காமோர் கேப் மரம் 2023ம் ஆண்டு வெட்டப்பட்டது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் இந்த மரத்தை அதற்கு முன்பு பார்த்திருந்தனர். இந்த மரம் வெட்டப்பட்ட செய்தி அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம், இந்த மரத்தில் இருந்து பெறப்பட்டு பாதுகாக்கப்பட்ட விதைகள் மற்றும் கிளைகளில் இருந்து புதிய கன்றுகள் வளர்ந்துள்ளன. புகழ்பெற்ற இந்த மரத்திற்கு எதிர்காலம் இருக்கும் என்ற நம்பிக்கை அளிக்கும் வகையில் அவை அரங்கேறியுள்ளது. பட மூலாதாரம்,DAN MONK KIELDER OBSERVATORY படக்குறிப்பு, பழமையான சிக்காமோர் மரம் இந்த விதைகளை பாதுகாக்கும் நேஷனல் டிரஸ்டிற்கு சென்ற பிபிசி, அந்த புதிய நாற்றுகளை நேரில் பார்வையிட்டது. இந்த மரம் வெட்டப்பட்டபோது அதில் இருந்து கிடைத்த விதைகளையும் கிளைகளையும் பாதுகாத்து வருகிறது இந்த அமைப்பு. "நம்பிக்கையின் மரம்" என்று இந்த புதிய நாற்றுகள் தொண்டு நிறுவனங்களுக்கும், குழுக்களுக்கும், தனி நபர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8ew80k9xnxo
-
புதிய ஆண்டில் ‘முறைமை மாற்றத்தை’ நாம், எம்மில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆரம்பிக்கவேண்டும்
புதிய ஆண்டிலிருந்து எங்கள் பொதுச் சேவையை அன்பானதும் விரைவானதும் தரமானதுமாக மாற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ‘முறைமை மாற்றத்தை’ ஆரம்பிப்போம் என வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தனது புத்தாண்டு வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார். ஆளுநரின் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, புத்தாண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த வேளையில், அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஆண்டு வடக்கு மக்கள் ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்தைக் கொண்டுவரட்டும். புத்தாண்டு என்பது தனியே கொண்டாட்டத்துக்கான நேரம் மட்டுமல்ல எங்கள் சிந்தனைகளை புதுப்பித்தலுக்கான தருணமும் கூட. மகிழ்வுடன் வரவேற்கும் புதிய ஆண்டில் ‘முறைமை மாற்றத்தை’ நாம், எம்மில் ஒவ்வொருவரிடமிருந்தும் ஆரம்பிக்கவேண்டும் என்று விரும்புகின்றேன். எங்கள் நிர்வாகத்தின் முதுகெலும்பாக, மக்களின் நம்பிக்கையை வளர்ப்பதிலும் – அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் சேவைகளை வழங்குவதிலும் அரச பணியாளர்கள் ஒவ்வொருவரினதும் அர்ப்பணிப்பும் தொழில்முறையும் மிக முக்கியமானவை. நேர்மை, செயல்திறன் மற்றும் பொறுப்புணர்வோடு உங்கள் விலைமதிப்பற்ற சேவைப் பங்களிப்புகளைத் தொடரவேண்டும் என அன்புரிமையுடன் கோருகின்றேன். பொதுச் சேவையில் மிக உயர்ந்த தரங்களை நிலைநிறுத்த நாங்கள் ஒன்றாக பாடுபடுவோம். எங்கள் மக்கள் அனைவருக்கும் வளமான எதிர்காலத்தை உருவாக்க அயராது உழைப்போம். புதிய ஆண்டிலிருந்து எங்கள் பொதுச்சேவையை அன்பானதும், விரைவானதும், தரமானதுமாக மாற்றுவதற்கு நாம் ஒவ்வொருவரும் உறுதிபூண்டு ‘முறைமை மாற்றத்தை’ ஆரம்பிப்போம். இந்த ஆண்டை எமது மாகாணத்துக்கு, ஒரு குறிப்பிடத்தக்க இலக்கை அடைவதற்கான ஆண்டாக மாற்ற, அரசியல் தலைமைத்துவத்தில் உள்ளவர்கள் – அரச பணியாளர்கள் – மக்கள் என நாம் அனைவரும் ஒற்றுமையுடன் பயணிப்போம்.- என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/314234
-
கிரிக்கெட் 2024: ஐபிஎல் முதல் உலகக்கோப்பை வரை - ரசிகர்கள் மனதை விட்டு நீங்கா தருணங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2024-ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட்டிலும், சர்வதேச கிரிக்கெட்டிலும் புதிய சாம்பியன், அணிகளின் மறக்க முடியாத வெற்றிகள், அதிர்ச்சி தரும் தோல்விகள், புதிய எழுச்சி அணிகள், நட்சத்திர வீரர்களின் ஓய்வு என பல சுவாரஸ்யமான சம்பவங்களும், மறக்க முடியாத நிகழ்வுகளும் நடந்தேறின. அந்த வகையில், இந்த ஆண்டு கிரிக்கெட் உலகில் நடந்தேறிய பல முக்கியமான சுவாரஸ்யமான தருணங்களை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்க்கலாம். உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - என்ன கூறினார்? சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி? இந்திய அணி 2வது முறையாக டி20 சாம்பியன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2024ம் ஆண்டு கரிபியன் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இதில் முதலாவதாக அனைவரின் மனதிலும் நீடித்திருப்பது டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. 2007-ஆம் ஆண்டு தோனி கேப்டன்ஷியில் இந்திய அணி முதல்முறையாக உலகக் கோப்பையை வென்றிருந்தது. 2023-ஆம் ஆண்டு உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என எதிர்பார்த்திருந்த நிலையில் ஆமதாபாத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. 2024ம் ஆண்டு கரீபியன் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரில் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி இந்திய அணி 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. விராட் கோலியின் பேட்டிங், சூர்யகுமார் யாதவின் கேட்ச், ஹர்திக் பாண்டியாவின் கடைசி ஓவர், பும்ராவின் மின்னல் வேகப் பந்துவீச்சு என பைனல் ஆட்டத்தை இந்திய ரசிகர்கள் இன்னும் மறந்திருக்க மாட்டார்கள். பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா?29 டிசம்பர் 2024 பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?25 டிசம்பர் 2024 ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சியளித்த வெஸ்ட் இண்டீஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நான்காவது நாளில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. 2024, ஜனவரி 25 முதல் 28ம் தேதிவரை பிரிஸ்பேன் காபா மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியை உலக கிரிக்கெட் ரசிகர்கள் மறந்திருக்கமாட்டார்கள். வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர்களின் மின்னல் வேகப் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி 8 ரன்னில் தோல்வி அடைந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஷமர் ஜோஸப் 7 விக்கெட்டுகளை 2வது இன்னிங்ஸில் கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக அமைந்தார். கடந்த 1997-ஆம் ஆண்டுக்குப்பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கிடைத்த முதல் டெஸ்ட் வெற்றியாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் பகலிரவு டெஸ்டில் முதல்முறையாக ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்தது. உலக டெஸ்ட் சாம்பியனாக வலம் வந்த ஆஸ்திரேலிய அணியை இளம் வெஸ்ட் இண்டீஸ் அணி மண்ணைக் கவ்வ வைத்தது டெஸ்ட் தொடரை 1-1 என சமன் செய்து சென்றது. ஜெய்ஸ்வால் எழுச்சி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜெய்ஸ்வால் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கடைக்கோடி கிராமத்தில் பிறந்து, கிரிக்கெட் மீதான தீராக் காதலால் மும்பைக்கு வந்து மைதானத்திற்கு வெளியே பானிபூரி விற்பனை செய்து கிரிக்கெட் கற்றவர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். ஐபிஎல் டி20 தொடர் முதல் இந்திய கிரிக்கெட்டுக்குள் அறிமுகமான ஜெய்ஸ்வாலுக்கு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் திருப்புமுனையை ஏற்படுத்தியது. கடந்த ஜனவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஜெய்ஸ்வால் தொடர்ந்து இரு டெஸ்ட்களிலும் இரட்டை சதம் அடித்து உலக கிரிக்கெட்டையே திரும்பிப் பார்க்க வைத்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த 2வது டெஸ்டில் ஜெய்ஸ்வால் 209 ரன்களும், ராஜ்கோட்டில் நடந்த 3வது டெஸ்டில் 214 ரன்களும் சேர்த்தார். ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு தேடிக் கிடைத்த முத்தாக அமைந்தார். 2024-ஆம் ஆண்டு ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய எழுச்சியை ஏற்படுத்தி, அது ஆஸ்திரேலியப் பயணம் வரை நீடித்தது. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் தொடரிலும் முதல் டெஸ்டில் 150 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை?26 டிசம்பர் 2024 வி. ராமசுப்பிரமணியன்: தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவராக நியமிக்கப்பட்ட இவர் யார்? நியமனத்திற்கு எதிர்ப்பு ஏன்?26 டிசம்பர் 2024 ஐபிஎல் - கேகேஆர் சாம்பியன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2024ம் ஆண்டு சீசனின் சாம்பியனாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி உருவெடுத்தது. ஒருபுறம் புதிய சாம்பியன் உதயமானாலும், சிஎஸ்கே, ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் பைனலை விட உச்சக்கட்ட பரபரப்பு தந்தது. முதல் பாதியில் சொதப்பிய ஆர்சிபி அணி பிற்பாதியில் சிறப்பாகச் செயல்பட்டு அனைத்து அணிகளுக்கும் சவாலாக மாறியது. சிஎஸ்கே அணியை ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லவிடாமல் தடுத்த ஆர்சிபியின் ஆட்டம் இரு அணி ரசிகர்களையும் சமூக வலைத்தளத்தில் மோதவிட்ட ஆட்டமாக மாறியது. ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்றதைப் போன்று சிஎஸ்கை அணியை தோற்கடித்ததை ஆர்சிபி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். அது மட்டுமல்லாமல் மும்பை அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதை அந்த அணியின் ரசிகர்கள் ஏற்கவில்லை. ஒரு கட்டத்தில் ஹர்திக்கை கடுமையாக விமர்சித்து ரசிகர்கள் வசைபாடியது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆர்சிபி அணிக்கு முதல் சாம்பியன் பட்டம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஆடவர் ஐபிஎல் டி20 தொடரில் ஆர்சிபி அணி சாம்பியனாவது இலவு காத்த கிளியாக தொடர்கிறது. ஆனால், மகளிர் ஐபிஎல் டி20 தொடரில் முதல் முறையாக ஆர்சிபி மகளிர் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியை 8 ரன்களில் வென்று ஆர்சிபி அணி முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா?29 டிசம்பர் 2024 டி20 உலகக்கோப்பை - அதிர்ச்சிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுஎஸ்ஏ அணி டி20 உலகக் கோப்பை தொடரில் அதிர்ச்சிக்குரிய முடிவுகள் பல போட்டிகளில் நடந்தன. அதில் முக்கியமானது முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி முதல் சுற்றோடு வெளியேறியதுதான். அதிலும் வலிமையான பந்துவீச்சு, பேட்டிங்கை வைத்திருக்கும் பாகிஸ்தான் அணி சூப்பர் ஓவரில் முதல் முறையாக தொடரில் பங்கேற்ற அமெரிக்க(யுஎஸ்ஏ) அணியிடம் தோற்றதுதான். சூப்பர் ஓவரில் அமெரிக்க அணி 5 ரன்களில் பாகிஸ்தானை அதிர்ச்சித் தோல்வி அடையச் செய்தது. இ்ந்த உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க அணியின் பேட்டிங், பந்துவீச்சு ஆகியவை, அணியின் எழுச்சி, பெற்ற திடீர் வெற்றிகள் மறக்க முடியாததாக அமைந்தது. அது மட்டுமல்லாமல் டி20 உலகக் கோப்பை அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் அணி முதல்முறையாக தகுதி பெற்றதை அந்த நாடே கொண்டாடியது. ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் பொது வெளியில் வைக்கப்பட்டிருந்த பெரிய திரைகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று ஆப்கானிஸ்தான் மோதும் ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குள் நுழைந்ததை சாம்பியன் பட்டம் வென்றதைப் போல அந்த அணியின் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்திய அணியில் மாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சூர்யகுமார் யாதவ் இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வென்றபின் அணியின் கேப்டன்சியில் எதிர்பாராத மாற்றம் ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா ஆகியோர் டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த நிலையில் புதிய இளம் வீரர்கள் அணிக்குள் வரத் தொடங்கி, புது ரத்தம் பாய்ச்சப்பட்டு அணி தயார் செய்யப்பட்டது. ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை... சுயதீன இசைக் கலைஞர் சந்திக்கும் சவால்கள் என்ன?30 டிசம்பர் 2024 விளாதிமிர் புதின்: 25 ஆண்டுக்கால ஆட்சியில் ரஷ்யாவை எப்படி கவனித்துக் கொண்டார்?30 டிசம்பர் 2024 இலங்கை மகளிர் அணி ஆசிய சாம்பியன் மகளிருக்கான ஆசியக் கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடந்தது. இதில் தம்புலா நகரில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து இலங்கை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இலங்கை அணியின் கேப்டன் சமாரி அட்டப்பட்டு 5 போட்டிகளில் 2 அரைசதங்களுடன் 305 ரன்கள் சேர்த்து அந்த அணி புதிய ஆசிய சாம்பியனாக உருவெடுக்க முக்கியக் காரணமாக அமைந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நியூசிலாந்து மகளிர்அணி நியூசிலாந்து புதிய உலக சாம்பியன் மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடர் வங்கதேசத்தில் நடத்தப்படுவதாக இருந்தது. ஆனால், உள்நாட்டு அரசியல் குழப்பத்தால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 10 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் இறுதிப் போட்டிக்கு நியூசிலாந்து அணியும், தென் ஆப்பிரிக்க அணியும் தகுதி பெற்றன. துபாயில் நடந்த இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை நியூசிலாந்து மகளிர் அணியினர் வென்றனர். 2000-ஆம் ஆண்டில் ஒருநாள் உலகக் கோப்பையை நியூசிலாந்து வென்றபின் பெரிதாக ஐசிசி கோப்பையை வெல்லாமல் இருந்து வந்தது. டி20 உலகக் கோப்பையை வெல்ல இருமுறை நியூசிலாந்து மகளிர் அணிக்கு வாய்ப்புக் கிடைத்தும் அதை தவறவிட்டிருந்தது. ஆனால் இந்த முறை நியூசிலாந்து அணி ஐசிசி டி20 உலகக் கோப்பை சாம்பியனானது. ஜிம்மி கார்டர் காலமானார்: வெள்ளை மாளிகையில் தடம் பதித்த வேர்க்கடலை விவசாயி30 டிசம்பர் 2024 சிரியா: நெடுங்காலம் கழித்து சொந்த ஊருக்கு சென்ற பிபிசி செய்தியாளர் பார்த்தது என்ன?30 டிசம்பர் 2024 'குட் பை' சொன்ன நட்சத்திரங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திர அஸ்வின் 2024-ஆம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் பல நட்சத்திர வீரர்கள் ஓய்வு அறிவித்தனர். சிலர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்தும், சிலர் ஒட்டுமொத்தமாக கிரிக்கெட்டுக்குமே முழுக்குப் போட்டனர். இந்தியா - ஆஸ்திரேலியா இடையே பார்டர் - கவாஸ்கர் கோப்பை நடந்து வரும் நிலையில் அனுபவ வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி ஸ்டைலில் திடீரென அறிவித்தார். டி20 உலகக் கோப்பை முடிந்தபின் டி20 போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா அறிவித்தனர். ஷிகர் தவண், சித்தார்த் கவுல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் அனைத்துவிதமான போட்டிகளிலும் இருந்து ஓய்வை அறிவித்தனர். சர்வதேச அளவில் இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், நீல் வேக்னர், பாகிஸ்தானின் இமாத் வாசிம், முகமது அமீர், இங்கிலாந்தின் டேவிட் மலான்,மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ஷேனன் கேப்ரியல், மொயின் அலி ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தனர். நியூசிலாந்து ஆல்ரவுண்டர் டிம் சவுத்தி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து மட்டும் ஓய்வு அறிவித்தார். வங்கதேச வீரர்கள் மகமதுல்லா, சகிப் அல் ஹசன் இருவரும் டி20 போட்டியிலிருந்து மட்டும் ஓய்வு அறிவித்தனர். மோசமான தோல்வி இந்தியாவுக்கு பயணம் செய்து நியூசிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் ஆகி மோசமான தோல்வியை பதிவு செய்தது. நியூசிலாந்து அணி முதல்முறையாக இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று, அதுவும் ஒயிட்வாஷ் செய்து சாதித்தது. நியூசிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் மிட்ச்செல் சான்ட்னர், ஈஷ் சோதி, படேல் ஆகியோரின் துல்லியமான சுழற்பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்டர்கள் ஏமாற்றம் கண்டனர். சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றபடி, ஆடுகளத்தை இந்திய அணிக்காக அமைத்த நிலையில், அதே ஆடுகளத்தில் இந்திய அணியை புரட்டி எடுத்துச் சென்றது நியூசிலாந்து அணி. தமிழ் சினிமா 2024: கதைக்கு முக்கியத்துவம் கொடுத்த திரைப்படங்களால் கோலிவுட்டின் அடையாளம் மாறியுள்ளதா?30 டிசம்பர் 2024 தென் கொரியா: 179 பேர் இறந்த விமான விபத்துக்கு பறவைகள் காரணமா? இதுவரை தெரியவந்தது என்ன?30 டிசம்பர் 2024 ஐசிசியில் மீண்டும் இந்தியர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐ.சி.சி சேர்மன் ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் புதிய தலைவராக பிசிசிஐ முன்னாள் செயலர் ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுக்கொண்டார். இதற்கு முன் ஐசிசி தலைவராக இந்தியாவில் இருந்து ஜக்மோகன் டால்மியா, என் ஸ்ரீனிவாசன், ஷசாங் மனோகர், சரத் பவார் ஆகியோர் பதவி வகித்துள்ள நிலையில் தற்போது ஜெய் ஷா அந்த பதவியில் இருக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz9g2z4v321o
-
சங்குப்பிட்டி பாலத்தின் வேலைகளை பார்வையிட்ட இளங்குமரன் எம்.பி.
யாழ்ப்பாணம் சங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகளை தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பார்வையிட்டுள்ளார். சங்குப்பிட்டி பாலத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு தரமற்ற வேலைகள் நடைபெறுவதாக சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில், நேற்றையதினம் குறித்த பகுதிக்கு விஜயம் செய்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், வேலைகளின் தரம் குறித்து ஆராய்ந்துள்ளார். அத்துடன், மூலப்பொருட்களின் தரம் குறித்தும் அவர் பார்வையிட்டதுடன் வேலையில் ஈடுபட்டவர்களுடனும் கலந்துரையாடியுள்ளார். https://thinakkural.lk/article/314237
-
திபெத்தில் ஓடும் பிரம்மபுத்திரா நதியில் உலகின் மிகப்பெரிய அணை கட்ட சீனா ஒப்புதல்
பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், கேவின் பட்லர் பதவி, பிபிசி நியூஸ் உலகின் மிகப்பெரிய நீர்மின் அணையை கட்ட சீனா ஒப்புதல் அளித்துள்ளது. இது திபெத்தின் பகுதிகளில் உள்ள மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்து செல்வது குறித்தக் கவலைகளை அதிகரித்துள்ளது. அதேவேளையில் இந்த அணை, இந்தியா மற்றும் வங்கதேசத்தில் பாயும் ஆற்றின் நீரோட்டத்தில் ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்த கவலைகளும் அதிகரித்துள்ளன. யார்லுங் சாங்போ ஆற்றில் (இந்தியாவின் இந்த நதியின் பெயர் பிரம்மபுத்திரா) கீழ் பகுதியில் இந்த அணை அமைக்கப்பட இருக்கிறது. தற்போது உலகின் மிகப்பெரிய நீர்மின் நிலையமான, 'த்ரீ கார்ஜஸ்' அணையைவிட இந்த அணை மூன்று மடங்கு அதிக ஆற்றலை உருவாக்கக்கூடும். "இந்த அணைத்திட்டம் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் செழுமை மேம்படும். சீனாவின் காலநிலை இலக்குகளை அடைய இது வழிவகுக்கும்," என்று சீன அரசு ஊடகம் இந்தத் திட்டம் குறித்து விவரித்துள்ளது. ஆனால் மனித உரிமை குழுக்கள் மற்றும் நிபுணர்கள், இந்தத் திட்டத்தின் விளைவுகள் குறித்துக் கவலைகளை எழுப்பியுள்ளனர். சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானை குட்டியின் உடல் மீட்பு - சுவாரஸ்ய தகவல்கள் இயேசு காலத்தில் பல இறைத்தூதர்கள் தோன்றினாலும் அவர் மட்டும் பிரபலமாக இருப்பது ஏன்? விளைவுகள் என்ன? இந்த அணையின் கட்டுமானத் திட்டம் குறித்து 2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அறிவிப்பு வெளியானது. இந்த அணை கட்டப்பட்டால், அந்தப் பகுதியில் உள்ள பல சமூகங்கள் இடப்பெயர்வுக்கு உள்ளாகலாம் என்ற அச்சம் உள்ளது. அதோடு இந்தத் திட்டம், திபெத் பீடபூமியின் மிகவும் செழுமையான, பல்வகைமையான சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கடுமையாக மாற்றியமைத்து, அவற்றுக்குச் சேதம் விளைவிக்கும் என்ற அச்சமும் உள்ளது. சீனா, திபெத்தில் பல அணைகளைக் கட்டியுள்ளது. 1950களில் திபெத் சீனாவுடன் இணைக்கப்பட்டதில் இருந்து, இந்த பிராந்தியம் சீனாவின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. திபெத் மக்களையும் அவர்களது நிலங்களையும் சீனா எவ்வாறு சுரண்டியுள்ளது என்பதற்கு இந்த அணைகளே சமீபத்திய உதாரணம் என்று ஆர்வலர்கள் முன்பு பிபிசியிடம் கூறியுள்ளனர். முக்கியமாக பௌத்த மதத்தைப் பின்பற்றும் திபெத் மக்கள் மீது பல ஆண்டுகளாக ஒடுக்குமுறை நடவடிக்கைகள் தொடரப்பட்டு வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில், மற்றொரு நீர்மின் அணை கட்டுமானத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான திபெத் மக்களை சீனா அரசு சுற்றி வளைத்தது. இது கைது மற்றும் தாக்குதலில் முடிந்தது. இதனால் சிலருக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்பதை சில மக்களிடம் பேசியதன் மூலமும் சரிபார்க்கப்பட்ட காட்சிகளின் மூலமும் பிபிசி அறிந்து கொண்டது. அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: எஃப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவில் உள்ள 3 அதிகாரிகள் யார்?28 டிசம்பர் 2024 மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன?28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் ஹூபே மாகாணத்தில் இருக்கும் த்ரீ கார்ஜஸ் அணை அவர்கள் கேங்டு அணை (Gangtuo dam) மற்றும் நீர்மின் நிலையக் கட்டுமானத் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தத் திட்டங்கள் பல கிராமங்களைச் சேர்ந்த மக்களை இடம்பெயரச் செய்யும் மற்றும் தொல்பொருட்களைக் கொண்ட பழங்கால மடங்களைச் மூழ்கடிக்கும். ஆனால் சீனா, உள்ளூர் மக்களை இடம்பெயரச் செய்ய அவர்களுக்கு இழப்பீடு வழங்கியதாகவும், பழங்கால சுவர் ஓவியங்களைப் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியதாகவும் தெரிவித்தது. இந்த யார்லுங் சாங்போ அணை கட்டுமானத் திட்டம் பெரிய அளவில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாது என்று சீனா அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இந்தத் திட்டம் எத்தனை மக்களை இடம் பெயரச் செய்ய வைக்கும் என்பது குறித்து அவர்கள் எதுவும் குறிப்பிடவில்லை. 'த்ரீ கார்ஜஸ்' நீர்மின் அணை கட்டுமானத்தின்போது, 14 லட்சம் மக்கள் இடம்பெயர வேண்டிய தேவை ஏற்பட்டது. திபெத்தின் மிக நீளமான நதியான யார்லுங் சாங்போவின் நீரோட்டத்தை திசைதிருப்ப, நம்சா பர்வா மலையில் சுமார் 20கி.மீ நீளத்திற்கு நான்கு சுரங்கப்பாதைகள் அமைக்கப்பட வேண்டும் என்று செய்திகள் கூறுகின்றன. அமெரிக்கா, பிரிட்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாடவே பல ஆண்டுகள் தடை இருந்தது ஏன் தெரியுமா?25 டிசம்பர் 2024 இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 இந்தியாவுக்கு இதனால் என்ன பாதிப்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யார்லுங் சாங்போ கிராண்ட் கேன்யன் என்றும் அழைக்கப்படும் இப்பகுதி, உலகின் மிக ஆழமான பகுதிகளில் ஒன்று. யார்லுங் சாங்போ ஆறு இந்தியாவில் பிரம்மபுத்திரா என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. இந்த ஆறு தெற்கே இந்தியாவின் அருணாச்சல பிரதேசம் மற்றும் அசாம் மாநிலங்களிலும் வங்கதேசத்திலும் பாய்கிறது. பல நாடுகளின் எல்லையை கடந்து ஓடும் இந்த ஆற்றின் நீரோட்டத்தைக் கட்டுப்படுத்த அல்லது திசை திருப்ப இந்த அணை சீனாவுக்கு அதிகாரம் அளிக்கும் என்று நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர். கடந்த 2020-ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் லோவி இன்ஸ்டிடியூட் வெளியிட்ட அறிக்கையில் "திபெத்திய பீட பூமியில் உள்ள இந்த நதிகளைக் கட்டுப்படுத்துவது, சீனாவுக்கு இந்திய பொருளாதாரத்தைக் கட்டுப்படுத்த உதவும்" என்று கூறுகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டில் யார்லுங் சாங்போ அணை திட்டத்தை சீனா அறிவித்ததும், இந்திய அரசின் மூத்த அதிகாரி ஒருவர், சீனாவின் அணை திட்டத்தின் எதிர்மறையான பாதிப்பைக் குறைக்க, இந்திய அரசு அருணாச்சல பிரதேசத்தில் ஒரு பெரிய நீர்மின் அணை மற்றும் நீர்த்தேக்கத்தை உருவாக்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து கொண்டிருப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். சீனாவின் வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் கவலைகளுக்கு கருத்துகளுக்கு முன்பு பதிலளித்து. 2020-ஆம் ஆண்டில் சீனாவுக்கு ஆற்றின் மீது அணை கட்டுவதற்கு "சட்டப்பூர்வ உரிமை" இருப்பதாகவும், ஆற்றின் கீழ்ப்பகுதிகளில் ஏற்படும் பாதிப்புகளைப் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தது. சீனாவை தொடர்ந்து இந்தியாவும் இந்த ஆற்றில் அணை கட்டினால், அதனால் அதிகம் பாதிக்கப்படப் போவது வங்கதேசம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES பெரிய அணை கட்டுவதால் குடியிருப்புப் பகுதிகள் மட்டுமின்றி காடுகள் மற்றும் காட்டுயிர்களும் பாதிக்கப்படுகின்றன. அதோடு, இந்த நதி கொண்டு வரும் வண்டல் மண் கனிமங்கள் நிறைந்தது, விவசாயத்திற்கும், கடலோரப் பகுதிகளின் ஸ்திரத்தன்மைக்கும் இன்றியமையாதது. இந்த நிலையில் அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டுவது, அப்பகுதியின் பல்லுரிய வளங்களைப் பாதிக்கும். ''இதுபோன்ற திட்டங்களில், தூய்மையான ஆற்றலாக தண்ணீரைப் பயன்படுத்துவதாக சீனா கூறுகிறது. ஆனால், சீனா அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தலாம். குறிப்பாக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான எல்லையில் 2020ஆம் ஆண்டில் பார்த்தது போல சர்ச்சை அதிகரிக்கும்போது அதைச் செய்யக்கூடும்," என்கிறார் பேராசிரியர் நித்யானந்தம். ஆற்றின் நீரோட்ட திசையில் அணை கட்டும்போது, தண்ணீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய மக்கள் முன்பைவிட அதிகமாக நிலத்தடி நீராதாரங்களை நம்ப வேண்டிய சூழல் ஏற்படலாம் என்றும் இதனால் நிலத்தடி நீர்மட்ட படிப்படியாகக் குறையும் என்றும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். உதாரணமாக, மேற்கு வங்கத்தில் ஃபராக்கா அணை கட்டப்பட்ட பிறகு கங்கை நதியின் அதிகபட்ச நீரோட்டம் கணிசமாகக் குறைந்தது. நீரோட்டம் குறைவதால் இந்தியாவிலும் வங்கதேசத்திலும் மீன் இனங்களின் இழப்பு, கங்கையின் துணை நதிகள் வறண்டு போவது, நிலத்தடி நீர் உப்பாவது உட்படப் பல பிரச்னைகளுக்கு வழிவகுத்தது. ஆனால், தாங்கள் கட்டும் அணையால் தண்ணீர் வரத்து தடைபடாது என்று இதற்கு முன்பு சீனா கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 பனாமா கால்வாயை அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் எடுக்க டிரம்ப் விரும்புவது ஏன்?24 டிசம்பர் 2024 நிலநடுக்க அபாயம் உள்ள பகுதியா? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த பத்து ஆண்டுகளில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி நோக்குடன் சீனா யார்லுங் சாங்போ ஆற்றின் போக்கில் பல நீர்மின் நிலையங்களை உருவாக்கியுள்ளது. பூமியின் மிக ஆழமான பள்ளத்தாக்கு வழியாகப் பாயும் இந்த ஆற்றின் ஒரு பகுதி, 50 கி.மீ. தொலைவுக்கு உள்ளாகவே 2,000 மீட்டர் சாய்வாகப் பாய்கிறது. இதனால் இங்கு நீர்மின் உற்பத்திக்கான சாத்தியம் அதிகமாக உள்ளது. அதேவேளையில், ஆற்றின் இந்த பிரமிப்பூட்டும் நிலவியல் முக்கிய பொறியியல் சவால்களை முன்வைக்கிறது. ஆனால் சவால்கள் இருந்தபோதிலும், இந்த அணைத் திட்டம்தான் சீனா இதுவரை முன்னெடுத்த அணைத் திட்டங்களிலேயே மிகப்பெரிய ஒன்றாகவும், லட்சியம் மிக்க திட்டமாகவும் உள்ளது. இந்த அணை கட்டுமானத்திற்காகத் திட்டமிடப்பட்டுள்ள பகுதி, அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் கொண்ட கண்டத்தட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. செங்குத்தான, குறுகிய பள்ளத்தாக்கில் விரிவாகத் தோண்டியெடுத்து, அணை கட்டுவது அடிக்கடி நிலச்சரிவுக்கு வழிவகுக்கலாம் என்று சீன ஆராய்ச்சியாளர்கள் முன்பே எச்சரித்துள்ளனர். கடந்த 2022-ஆம் ஆண்டில், சிச்சுவான் மாகாண நிலவியல் பணியகத்தைச் சேர்ந்த மூத்த பொறியாளர் ஒருவர், "நிலநடுக்கத்தின் விளைவாக ஏற்படும் நிலச்சரிவுகள், மண்-பாறை ஓட்டங்கள் கணிக்க முடியாத வகையிலும் ஆபத்தானதாகவும் இருக்கும். இது திட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும்" என்று எச்சரித்தார். சோங்கி நீர்வளப் பணியகத்தின் மதிப்பீட்டின்படி இந்தத் திட்டத்திற்கு ஒரு டிரில்லியன் யுவான் (127 பில்லியன் டாலர்) வரை செலவாகும். கூடுதல் தகவல்: அன்ஷுல் சிங் இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gw58569qzo
-
சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான மாணவி, ஒருவர் கைது - என்ன நடந்தது?
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: போராடும் அதிமுக, பாராட்டும் பாஜக - திமுகவுக்கு நெருக்கடியா? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, அ.தி.மு.க. தகுந்த எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, தீவிரமான போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை என பேச்சுகள் இருந்த நிலையில், அ.தி.மு.க. இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரம் தொடர்பாக 'யார் அந்த சார்?' என்ற போராட்டத்தை நடத்திவருகிறது அ.தி.மு.க. சென்னையிலுள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் டிசம்பர் 23ஆம் தேதியன்று மாணவி ஒருவர் இரவு உணவுக்குப் பிறகு, மாணவர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தங்களை அச்சுறுத்தியதாகவும் பிறகு தனது நண்பரை அங்கிருந்து விரட்டிவிட்டு, தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்தார். இந்த விவகாரம் மாநில அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், டிசம்பர் 25ஆம் தேதி இந்த விவகாரம் தொடர்பாக 37 வயதான ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை: நடந்தது என்ன? 9 கேள்விகளும் பதில்களும் - முழு விவரம் அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: எஃப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவில் உள்ள 3 அதிகாரிகள் யார்? சென்னை மாணவி பாலியல் வன்கொடுமை: பாதிக்கப்பட்ட நபரின் அடையாளத்தை வெளியிட்டால் என்ன தண்டனை? இந்தக் குற்றம் தொடர்பாக பதிவுசெய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் இருந்த விவரங்கள் சில ஊடகங்களில் வெளியாகின. அதில், மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நபர், "சார்" ஒருவருடன் தனியாக இருக்க வேண்டும் என மிரட்டியதாகக் கூறப்பட்டிருந்தது. இதையடுத்து அந்த நபர் குறிப்பிட்டதாகச் சொல்லப்படும் 'சார்' என்பவர் யார் என கேள்விகள் எழுந்தன. இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அருண், "சார் என யாரும் கிடையாது. அந்தப் பெண்ணை மிரட்டுவதற்காகவே அந்த நபர் அவ்வாறு பேசினார்" என்று தெரிவித்தார். இருந்தபோதும், 'சார்' எனக் குறிப்பிடப்பட்ட நபர் யார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எழுப்பிவந்தன. குறிப்பாக அ.தி.மு.க. இந்த விவகாரத்தை முன்வைத்து போராட ஆரம்பித்தது. பட மூலாதாரம்,@PAKUMARTRICHY படக்குறிப்பு, தமிழகத்தின் பல இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து அதிமுக போராட்டம் நடத்தியிருக்கிறது சென்னையில் வணிக வளாகத்திற்குள் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று மாலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள வணிக வளாகத்திற்குள் திடீரென நுழைந்த அ.தி.மு.கவினர் 'யார் அந்த சார்?' என்று எழுதப்பட்ட பதாகைகளை உயர்த்திப் பிடித்தனர். மாலுக்கு வந்த பொதுமக்களிடமும் இது தொடர்பாக பேசினர். இது சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பேசு பொருளான நிலையில், சென்னையின் பல இடங்களிலும் "யார் அந்த சார்?" என்ற வாசகத்துடனான போஸ்டர்கள் பெரும் எண்ணிக்கையில் அ.தி.மு.கவின் சார்பில் ஒட்டப்பட்டிருக்கின்றன. மற்றொரு பக்கம், திங்கட்கிழமை காலையில் மாநிலத்தின் பல இடங்களிலும் அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை முன்வைத்து அ.தி.மு.க. போராட்டம் நடத்தியிருக்கிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். திங்கட்கிழமை காலை முதல் யார் அந்த சார் என்ற ஹாஷ்டாகுடன் எக்ஸ் தளத்தில் அ.தி.மு.கவினர் பதிவுகளை இட்டுவருகின்றனர். "ஞானசேகரன் குறித்து வெளிவரும் புகைப்படங்கள், தகவல்களால் தி.மு.க. அரசு இந்த வழக்கிலும் ஏதேனும் அரசியல் தலையீடு ஏற்படுத்துமோ என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுக்கிறது. அனைத்து உண்மைக் குற்றவாளிகளும் பிடிபட்டு பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை அ.இ.அ.தி.மு.கவின் போராட்டம் தொடரும்" என்று அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் பிரம்மபுத்திராவின் குறுக்கே பிரமாண்ட அணை கட்ட தயாராகும் சீனா - இந்தியா, வங்கதேசத்திற்கு என்ன பாதிப்பு?29 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 படக்குறிப்பு, அதிமுக சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, அ.தி.மு.க. தகுந்த எதிர்க்கட்சியாக செயல்படவில்லை, தீவிரமான போராட்டங்கள் எதையும் நடத்தவில்லை என பேச்சுகள் இருந்த நிலையில், அ.தி.மு.க. இப்படி ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறது. 'சார்' என ஒருவர் இருந்ததாக பாதிக்கப்பட்டவரே குறிப்பிடும் நிலையில், அந்த நபரைக் கண்டுபிடிக்கும் திசையில் விசாரணை நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தப் போராட்டத்தை நடத்தியதாகச் சொல்கிறார் அ.தி.மு.கவின் தேசிய செய்தித் தொடர்பாளரும் அக்கட்சி ஐ.டி. விங்கின் தலைவருமான கோவை சத்யன். "குற்றம்சாட்டப்பட்ட நபர் சார் என ஒருவரைக் குறிப்பிடுவதாக செய்திகள் வெளிவந்தன. யார் அந்த இன்னொரு நபர் என நீதிமன்றமும் கேள்வியெழுப்பியிருக்கிறது. கைதுசெய்யப்பட்ட நபர், இன்னொரு நபரிடம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி சொல்லியிருக்கிறார். ஆனால், ஒரு நபர்தான் அந்த இடத்தில் இருந்தார் என்பதைப் போல இந்த விவகாரத்தை மூடிமறைக்க தி.மு.க. நினைக்கிறது. அந்த இன்னொரு நபர் அதிகாரம்மிக்கவராகக்கூட இருக்கலாம். ஆகவே, அந்தத் திசையில் விசாரணை நடந்து, குற்றம்சாட்டப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி ஒரு ஹாஷ்டாகுடன் போராட்டத்தைத் துவங்கினோம். இந்த விவகாரத்தை பெண்களிடமும் எடுத்துச் செல்வதற்காகத்தான் சென்னையில் உள்ள ஒரு மாலிலும் இந்தப் போராட்டத்தை நடத்தினோம்" என்கிறார் பிபிசி தமிழிடம் பேசிய கோவை சத்யன். சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 ஆழ்கடலில் டைட்டானிக் கப்பலை நெருங்குவதில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளரின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன் திமுக விமர்சனம் ஆனால், இந்தப் போராட்டங்களைத் தி.மு.க. கடுமையாக விமர்சித்திருக்கிறது. பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக புகார் அளிக்க முன்வரும் பெண்களை அச்சுறுத்தும் விதமாக இந்தப் போராட்டங்கள் இருப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் குற்றம்சாட்டியிருக்கிறார். "இந்த ஆட்சியில் பெண்கள் உயர்கல்வி பயில்வது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதைச் சிதைக்கும் வகையில் சார் யார்? என்று இல்லாத ஒன்றைக் கேட்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார் எடப்பாடி கே. பழனிச்சாமி. பாலியல் புகார்களில் பெண்கள் காவல்துறையினரிடம் புகார் அளிக்கவே அஞ்சி நடுங்கிய நிலை மாற்றப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக புகார் தருகிறார்கள். அவர்களை மீண்டும் அச்சுறுத்தும் விதமாகத்தான் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை அரசியலையும் போராட்ட நாடகத்தையும் மக்கள் பார்க்கிறார்கள்" என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.கவின் இந்தப் போராட்டம் தி.மு.கவுக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தும் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன். "இந்த விவகாரத்தில் வெளியான முதல் தகவல் அறிக்கையை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்டோர் இதில் ஈடுபட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இப்போது, 'யார் அந்த சார்' என அ.தி.மு.க. கேள்வியெழுப்பிவரும் நிலையில், இன்னொருவர் கைதானால், அது அ.தி.மு.கவுக்கான வெற்றியாகவே பார்க்கப்படும். அப்படி நடக்காவிட்டாலும், அந்த இன்னொருவர் யார் என்ற கேள்வியை அ.தி.மு.க. தொடர்ந்து எழுப்பிவரும். இந்தப் போராட்டம் அ.தி.மு.கவிற்கு சாதகமாக அமையாவிட்டாலும்கூட, நிச்சயம் தி.மு.க. ஆட்சிக்கு ஒரு நெருக்கடியாகவே அமையும்" என்கிறார் அவர். அ.தி.மு.கவின் இந்தப் போராட்டத்தை, பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாராட்டியிருப்பதும் அரசியல் நோக்கர்களைக் கவனிக்க வைத்திருக்கிறது. https://www.bbc.com/tamil/articles/cm2lpgq9gm4o