Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 2 23 DEC, 2024 | 04:39 PM இலங்கையில் 69 தொழில் வல்லுநர்கள் புலம்பெயர்வு சட்டம் மற்றும் கொள்கை பற்றிய முதலாவது சான்றிதழ் கற்கைநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்துள்ளமையை அறிவிப்பதில் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஊடாக அமெரிக்கா பெருமை கொள்கிறது. ஆட்கடத்தலுக்கு எதிரக போராடுவதற்கென தமது சமூகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு கருவிகளையும் அறிவுகளையும் இந்த தொழில் வல்லுநர்கள் தற்போது கொண்டுள்ளனர். இந்த ஆறு மாத கால கற்கைநெறியானது, USAID இன் 'ஆட்கடத்தலுக்கு எதிராக போராடுவதற்கு சிவில் சமூகத்தை வலுவூட்டல்' திட்டம் (Empowering Civil Society to Combat Human Trafficking project – ECCT) மற்றும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திற்கு இடையிலான கூட்டு முயற்சியொன்றாகும். SAFE Foundation இந்த ECCT திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. புலம்பெயர்வு மற்றும் சட்டம் பற்றிய இந்த கற்கைநெறியானது, கட்டமைக்கப்பட்ட கல்விசார் கற்கைநெறியொன்றை வழங்குவதன் நிமித்தமான சிவில் சமூக அமைப்பொன்றுக்கும் இலங்கையிலுள்ள முன்னணி பல்கலைக்கழமொன்றுக்கும் இடையிலான முதலாவது கூட்டண்மையை குறிக்கிறது. அரச அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், இளைஞர்கள், தன்னார்வ தொண்டர்கள், மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் உள்ளடங்கலான இந்த மாணவர்கள் ஒன்லைன் கற்கைநெறி மூலம் புலம்பெயர்வு சட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்பில் தேசிய மட்டத்தில் கற்றனர். இவர்களில் 50 மாணவர்கள் சிங்கள மொழி மூலம் கற்கைநெறியை பயின்றதுடன், ஏனையவர்கள் தமிழ் மொழி மூலம் கற்றனர். இந்த மாணவர்கள் அனைவரும் நாவலையிலுள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட கற்கைகள் திணைக்களத்தில் டிசம்பர் 20 ஆம் திகதி நடைபெற்ற வைபவமொன்றில் அவர்களுக்கான சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர். 'ஆட்கடத்தல் என்பது ஒரு உலகளவிய பிரச்சினை என்கின்ற போதிலும், அதற்கு எதிரான போராட்டமானது உள்ளூரிலேயே, அதுவும் ஒவ்வொரு சமூகத்திலுமே ஆரம்பிக்கிறது,' என்று USAID இன் இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான பணிப்பாளர் கேப்ரியல் க்ராவ் தெரிவித்தார். 'புலம்பெயர்வு சட்டம் மற்றும் கொள்கை தொடர்பில் இலங்கை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் தொழில் வல்லுநர்களுடன் பங்காண்மையை ஏற்படுத்திக் கொள்வதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. இதன் ஊடாக அவர்கள் அவர்களது சமூகங்களில் பாதுகாப்பான புலம்பெயர்வை ஊக்குவிப்பதற்கும் மற்றும் ஆட்கடத்தலை தடுப்பதற்கும் பணியாற்ற முடியும்,' என்றும் அவர் குறிப்பிட்டார். புலம்பெயர்வு மற்றும் சர்வதேச புலம்பெயர்வு சூழலில் அரசின் பொறுப்பு, ஆட்கடத்தல் மற்றும் கடத்தல் வியாபாரங்களுக்கு தீர்வு காண்பதற்கான சர்வதேச சட்ட கட்டமைப்பு, முறைகேடான புலம்பெயர்வு செயற்பாடுகளின் தடுப்பு மற்றும் பாதிக்கப்பட்டோர், திரும்பிவருவோர் மற்றும் மீள் ஒருங்கிணைப்புக்கான உரிமைகள் உள்ளிட்ட தலைப்புகள் இந்த கற்கைநெறியில் உள்வாங்கப்பட்டன. ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தை அவர்களது சமூகங்களுக்கு எடுத்துச் செல்வதற்கு மேலதிகமாக, சான்றிதழலிப்பானது இந்த பட்டதாரிகள் அரசாங்க அதிகாரிகளுடனும், தனியார்துறை அதிகாரிகளுடனும் மற்றும் பிரதேச, மாவட்ட மற்றும் தேசிய மட்டங்களில் சமூகங்களுடனும் செயலாற்றுவதை இயலுமாக்கி அவர்களது நம்பிக்கையை அதிகரிக்கும். அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் பற்றிய அறிக்கையானது (Trafficking in Persons Report), இலங்கையை அதனது அடுக்கு 2 (Tier 2) நிலையில் வைத்து ஆட்கடத்தலுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கையின் முன்னேற்றத்தை அங்கீகரித்துள்ளது. ஆனாலும், ஏனைய நடவடிக்கைகளுக்கு மத்தியில் ஆட்கடத்தல் தொடர்பான குற்றங்களை விசாரிப்பதிலும் குற்ற விசாரணைக்கு உட்படுத்துவதிலும் மற்றும் புலம்பெயர் பணியாளர்கள் மத்தியில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண்பதிலும் முயற்சிகளை வலுப்படுத்துமாறும் இலங்கை அரசாங்கத்தை இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/201973
  2. ஆபிரிக்கா பெரும் நத்தைகளைக் கட்டுப்படுத்த வேண்டும் ஆபிரிக்காவைத் தாயகமாகக் கொண்ட பெரும் நத்தைகள் சமீபத்தில் பெய்த பெருமழையின் பின்னர் பல பகுதிகளில் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் ஏற்கனவே இங்கு அவதானிக்கப்பட்ட போதும் இப்போது இவற்றின் பெருக்கம் அதிகமாக உள்ளது. பயிர்பச்சைகளையெல்லாம் தின்றுதீர்க்கும் இவை, உள்ளூர் உயிரினங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு நோய்களைப் பரப்பும் காவிகளாகவும் செயற்படுகின்றன. இவற்றை இப்போதே கட்டுப்படுத்தத்தவறின் விரைவில் பேராபத்துகளை விளைவிப்பவையாக இவை அமையும் என தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆபிரிக்கப் பெரும் நத்தைகள் (African Giant Snail- Lissachtina fulica) பிரித்தானியர் ஒருவரால் பின்விபரீதங்கள் புரியாமல் இலங்கைக்குள் எடுத்துவரப்பட்ட ஓர் அந்நியஇனம். ஒரு நத்தையிலேயே ஆண், பெண் இனப்பெருக்க அமைப்புகள் இரண்டும் இருப்பதால் இரண்டு நத்தைகள் சோடி சேரும்போது இரண்டுமே முட்டைகளை உருவாக்குகின்றன. சராசரியாக 5 தொடங்கி 6 ஆண்டுகள் வரை வாழுகின்ற ஒரு நத்தை தன் ஆயுளில் 1000 இற்கும் அதிகமான முட்டைகளை இடுகின்றது. அந்நிய இனமான இவற்றை இரையாக்க இலங்கையின் இயற்கைச் சூழலில் இரைகௌவிகள் எதுவும் இல்லை. இதனால் பல்கிப்பெருகி இப்போது ஓர் ஆக்கிரமிப்பு இனமாக உருவெடுத்துள்ளது. உலகின் உயிர்ப்பல்வகைமையின் அழிவுக்கு அந்நிய ஊடுருவல் இனங்களும் ஒரு பெருங்காரணமாக உள்ளது. பகலில் மறைந்திருந்துவிட்டு இரவில் இரைதேடும் ஆபிரிக்க நத்தைகள் பயிர்கள், அலங்காரச் செடிகள், புல்பூண்டுகள் என்று எல்லாவற்றையும் தின்று தீர்த்து வருகின்றன. ஒரு தாவரத்தில் உள்ள நோய்க்கிருமிகளை இன்னொரு தாவரத்துக்குக் காவிச் செல்கின்றன. இவற்றோடு மனிதர்களில் மூளைமென்சவ்வு அழற்சியை ஏற்படுத்தும் ஒட்டுண்ணிப் புழுக்களை இவை காவித்திரிவதும் அறியப்பட்டுள்ளது. ஆபிரிக்க நத்தைகள் பயிர்ச்செய்கைக்கும், உயிர்ப்பல்வகைமைக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் இலங்கை அரசாங்கம் இதனை அந்நிய ஊடுருவல் இனமாக அறிவித்துள்ளது. ஆபிரிக்க நத்தைகளைக் கட்டுப்படுத்துவதற்குத் திணைக்களங்களுக்காகக் காத்திராமல் பொதுஅமைப்புகளும், பொதுமக்களும் முன்வரவேண்டும். உப்பு நீர்க்கரைசல் உள்ள பாத்திரம் ஒன்றில் இவற்றை அமிழ்த்துவதன் மூலம் சுலபமாக அழிக்க முடியும். ஆபிரிக்க நத்தைகள் நோய்க்காவிகளாகவும் இருப்பதால் வெறும் கைகளால் நேரடியாகத் தொடாமல் இலைகள், கடதாசிகள் போன்றவற்றால் இவற்றைப் பிடிப்பதே பாதுகாப்பானது. இதனை ஒரு சமூகக்கடமையாகக்கருதி நாம் விரைந்து செயற்படவில்லையெனில் ஏற்கனவே பாரிய பொருளாதாரச் சீரழிவுக்கும், சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கும் ஆளாகியிருக்கும் இலங்கை இந்நத்தையாலும் பெரும் சீரழிவுகளைச் சந்திக்கநேரும் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/314051
  3. பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, ஒலெக்சாண்டர் மாட்ஸீவ்ஸ்கி ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்ட பிறகு யுக்ரேனின் ஒரு முக்கிய நபராக மாறியுள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், விடாலி ஷேவ்சேன்கோ பதவி, பிபிசி மானிட்டரிங் ரஷ்ய ஆசிரியர் யுக்ரேனை சேர்ந்த ஒலெக்சாண்டர் மாட்ஸீவ்ஸ்கி துப்பாக்கிச்சூட்டில் தேர்ந்த நபர். முழுமையான ரஷ்ய போர் தொடங்கிய முதல் ஆண்டில் ரஷ்யர்களால் கைப்பற்றப்பட்டார். பின்னர், ஒரு காட்டில் அவர் தனது கடைசி சிகரெட்டை புகைப்பதைக் காட்டும் காணொளி வெளிப்பட்டது. தனது சொந்த கல்லறையை தோண்டக் கட்டாயப்படுத்தப்பட்டு, அதன் பக்கத்தில் அவர் இருப்பது போன்ற காட்சி தெரிந்தது. "யுக்ரேனுக்கு மகிமை உண்டாகட்டும்!" என்று அவர் தன்னை சிறை பிடித்தவர்களிடம் கூறுகிறார். சில நொடிகளில், அவர் சுட்டு கொல்லப்பட்டார். கொல்லப்பட்ட பலர் நபர்களில் அவரும் ஒருவர். மாஸ்கோவில் ரஷ்ய அணுஆயுதப் படைகளின் தலைவர் கொல்லப்பட்டது எப்படி? யுக்ரேனுக்கு எதிராக ரஷ்யா பயன்படுத்திய புதிய ஆயுதம் 'ஒராஷ்னிக்' எவ்வாறு செயல்படும்? புதிய ஆயுதம், அணு ஆயுத மிரட்டல்: ரஷ்யா - யுக்ரேன் போர் புது வடிவம் பெறுகிறதா? அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகள் மூலம் ரஷ்யாவுக்குள் யுக்ரேன் எங்கெல்லாம் தாக்கலாம்? இந்த ஆண்டு அக்டோபரில், பிடிபட்ட ஒன்பது யுக்ரேனிய வீரர்கள் குர்ஸ்க் பகுதியில் ரஷ்யப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அரை நிர்வாண உடல்கள் தரையில் கிடப்பதைக் காட்டும் புகைப்படம் உள்ளிட்ட வழக்கை யுக்ரேன் வழக்கறிஞர்கள் விசாரித்து வருகின்றனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவரான ட்ரோன் இயக்குநர் ருஸ்லான் ஹோலுபென்கோவை அவரது பெற்றோர் அடையாளம் காண இந்த புகைப்படம் போதுமானதாக இருந்தது. "அவரது உள்ளாடைகளால் நான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்," என்று துயருற்ற அவரது தாய் உள்ளூர் ஒளிபரப்பாளரான சஸ்பில்னே செர்னிஹிவிடம் கூறினார். "கடல் பயணத்துக்குச் செல்வதற்கு முன்பு நான் அதை அவனுக்காக வாங்கினேன். அவனுடைய தோள்பட்டை சுடப்பட்டதையும் நான் அறிவேன். அதை நீங்கள் படத்தில் காணலாம்." என்று அவரது தாய் தெரிவித்தார். கொல்லப்படுபவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. யுக்ரேனிய வீரர் ஒருவரை முதுகுக்குப் பின்னால் கட்டி, அதே நிலையில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாகவும், அவரைக் கொல்வதற்கு வாள் பயன்படுத்தப்பட்டதாகவும் வந்த புகாரை யுக்ரேனிய வழக்கறிஞர்கள் விசாரித்து வருகின்றனர். மற்றொரு சம்பவத்தில், 16 யுக்ரேனிய வீரர்கள் வரிசையாக நிறுத்தப்பட்டிருப்பதையும், சரணடைவதற்காக காட்டில் இருந்து அவர்கள் வெளியே வந்த பிறகு, தானியங்கி துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தப்பட்டதையும் ஒரு காணொளி காட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சில கொலைகள் ரஷ்யப் படைகளால் படமாக்கப்பட்டன. மற்றவை யுக்ரேனிய ட்ரோன்களால் படமாக்கப்பட்டன. அந்த காணொளிகளில் பதிவான கொலைகள் பொதுவாக அடையாளம் காண முடியாத காடுகள் அல்லது வயல்களில் நடக்கின்றன. அதனால் அவற்றின் சரியான இடத்தை உறுதிப்படுத்துவது கடினமாகவுள்ளது. இருப்பினும் பல சந்தர்ப்பங்களில் பிபிசி வெரிஃபையால் இடத்தை உறுதிப்படுத்த முடிந்தது. உயரும் எண்ணிக்கை முழுமையான போர் தொடங்கியதிலிருந்து ரஷ்யப் படைகள் குறைந்தது 147 யுக்ரேனிய சிறைக் கைதிகளை கொன்று விட்டனர். இதில் 127 பேர் இந்த ஆண்டில் கொல்லப்பட்டுள்ளனர் என்று யுக்ரேன் அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவிக்கின்றது. "வளர்ந்து வரும் இந்தப் போக்கு மிகவும் தெளிவாகவும், வெளிப்படையாகவும் உள்ளது," என்று யுக்ரேனிய வழக்கறிஞர் அலுவலகத்தின் போர் துறை தலைவர் யூரி பெலோசோவ் கூறுகிறார். "கடந்த ஆண்டு நவம்பரில் இருந்து இந்த கொலைகள் அமைப்பு ரீதியானதாக மாறியது. மேலும் இந்த வருடம் முழுவதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த கோடை மற்றும் இலையுதிர்காலத்தில் அவற்றின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை, அவை தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல என்பதை நமக்குச் சொல்கின்றன. பரந்த பகுதிகளில் அச்சம்பவங்கள் நடக்கின்றன . மேலும் அவை கொள்கையின் ஒரு பகுதியாக இருப்பதற்கான தெளிவான அறிகுறிகள் உள்ளன . இதற்கான கட்டளைகள் வழங்கப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் உள்ளன" என்றும் யூரி பெலோசோவ் குறிப்பிடுகின்றார். சர்வதேச மனிதாபிமானச் சட்டம், குறிப்பாக மூன்றாவது ஜெனிவா ஒப்பந்தம் - போர்க் கைதிகளுக்குப் பாதுகாப்பை வழங்குகிறது, மேலும் அவர்களை கொல்லுவது போர்க் குற்றமாகும். குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்?20 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யுக்ரேனியர்கள், ரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட தங்கள் வீரர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் தொடர்ந்து அணிவகுப்பு நடத்துகின்றனர். தண்டனையின்மை மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியப் பிரிவின் துணை இயக்குநர் ரேச்சல் டென்பர், யுக்ரேனிய போர்க் கைதிகள் ரஷ்ய துருப்புக்களால் கொல்லப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்கள் உள்ளன என்று கூறுகிறார். தண்டனையின்மை இதில் ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. மேலும் ரஷ்ய ராணுவம் பதிலளிக்க சில முக்கியமான கேள்விகள் உள்ளன என்று ரேச்சல் டென்பர் கூறுகின்றார். "இந்தப் பிரிவுகள் தங்கள் தளபதிகளிடம் இருந்து நேரடியாக அல்லது தனிப்பட்ட முறையில் பெற்ற கட்டளைகள் என்ன? ஜெனீவா ஒப்பந்தங்கள் போர்க் கைதிகளை நடத்துவது பற்றி என்ன சொல்கிறது என்பது குறித்து அவர்களின் தளபதிகள் தெளிவாக இருக்கிறார்களா? ரஷ்ய ராணுவத் தளபதிகள் அதுகுறித்து தங்கள் பிரிவுகளுக்கு என்ன சொல்கிறார்கள்? இந்தச் சம்பவங்களை விசாரிக்க, உயர்நிலை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர்களும் குற்றத்திற்கான பொறுப்பு ஏற்பார்களா? அவர்கள் பொறுப்பேற்கக்கூடிய நிலைமை அல்லது நிபந்தனை இருக்கின்றது என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்களா?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார். இதுவரை, யுக்ரேனிய போர்க் கைதிகளை, ரஷ்யாவின் படைகள் கொல்கின்றன என்ற குற்றச்சாட்டுக்கான முறையான விசாரணையை ரஷ்யா தொடங்கவில்லை. அதுமட்டுமின்றி, இதுபோன்ற குற்றச்சாட்டுகளைக் குறிப்பிடுவதற்கு கூட நீண்டகால சிறைத்தண்டனைகளை ரஷ்யா வழங்குகிறது. மேலும், ரஷ்யப் படைகள் யுக்ரேனிய போர்க் கைதிகளை "எப்போதும்" "சர்வதேச சட்ட ஆவணங்கள் மற்றும் சர்வதேச மரபுகளுக்கு ஏற்ப" நடத்துகின்றன என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் கூறுகின்றார். யுக்ரேனியப் படைகள் ரஷ்ய போர்க் கைதிகளை கொல்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் அத்தகைய கூற்றுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. யுக்ரேனிய வழக்கறிஞர் அலுவலகம் இத்தகைய குற்றச்சாட்டுகளை "மிகவும் தீவிரமாக" கருதி விசாரிக்கின்றது - ஆனால் இதுவரை யாரும் குற்றம் சாட்டப்படவில்லை என யூரி பெலோசோவ் குறிப்பிடுகின்றார். மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, பிப்ரவரி 2022 இல் முழு அளவிலான போரை தொடங்கியதிலிருந்து, ரஷ்யப் படைகள் "போர்க்குற்றங்கள் அல்லது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என விசாரிக்கப்பட வேண்டிய பல்வேறு மீறல்களை" மேற்கொண்டுள்ளன. ரஷ்ய ராணுவத்தின் மீறல்கள் இவ்வளவு மோசமாக உள்ளன, சில யுக்ரேனிய வீரர்கள் பிடிபடுவதற்குப் பதிலாக மரணத்தை விரும்புகின்றனர். "அம்மா, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன், ஒருபோதும். என்னை மன்னியுங்கள், நீங்கள் அழுவீர்கள் என்று எனக்குத் தெரியும், ஆனால் நான் சித்திரவதை செய்யப்பட விரும்பவில்லை" என்று ருஸ்லான் ஹோலுபென்கோ கூறியதாக அவரது தாய் கூறுகிறார். அவரது மகன் போரில் மாயமாகவுள்ளார் என அதிகாரப்பூர்வமாக வகைப்படுத்தப்பட்டுள்ளார். மேலும் சாத்தியமற்றது எனத் தோன்றும் ஒன்றை அவரது தாய் தொடந்து நம்புகிறார். மேலும் பேசிய ருஸ்லான் ஹோலுபென்கோவின் தாய், "என்னுடைய குழந்தையை மீட்பதற்கு என்னால் செய்ய முடிந்த மற்றும் செய்ய முடியாத அனைத்தையும் செய்வேன். இந்தப் புகைப்படத்தை நான் தொடர்ந்து பார்க்கின்றேன். அவர் ஒருவேளை மயக்கத்தில் இருக்கின்றாரோ? என நான் நம்ப விரும்புகிறேன். அவர் மறைந்துவிட்டார் என எண்ண விரும்பவில்லை." என்று கூறுகின்றார். https://www.bbc.com/tamil/articles/ckg1d8l98epo
  4. திடீரென பாரிய சத்தத்தையும் கண்ணாடிகள் நொருங்கும் சத்தத்தையும் கேட்டேன் - ஜேர்மனியின் கிறிஸ்மஸ் சந்தை கார் தாக்குதலை நேரில்பார்த்தவர்கள் 23 DEC, 2024 | 01:13 PM bbc ஜேர்மனியின் மக்டெபேர்க் கிறிஸ்மஸ் சந்தையில் பெருமளவில் திரண்டிருந்த மக்களை இலக்குவைத்து நபர் ஒருவர் தனது காரால் மோதிய தருணம் குறித்தும் அதன் பின்னர் அங்கு காணப்பட்ட நிலைமை குறித்தும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் ஊடகங்களிற்கு தெரிவித்துள்ளனர். ஜேர்மனியின்மக்டெபேர்க் சந்தையில் பொதுமக்கள் மீது நபர் ஒருவர் காரால் மோதிய தருணம் குறித்து 32 வயது பெண்ணொருவர் விபரித்துள்ளார். தனது ஆண் நண்பருடன் அந்த பகுதியில் நடமாடிக்கொண்டிருந்தவேளை கார் தங்களை நோக்கி வேகமாக வந்தது என அந்த நபர்தெரிவித்துள்ளார். அவரின் மீது கார் மோதியது எனது கரங்களில் இருந்து இழுத்துச்சென்றது அது பயங்கரமான நிமிடம் என 32 வயது நடின் ஜேர்மனியின் பில்ட் செய்தித்தாளிற்கு தெரிவித்துள்ளார். நடினின் ஆண் நண்பரிற்கு காலிலும் தலையிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. நான்; கிறிஸ்மஸ் கீதங்களை எனது சினேகிதியின் குடும்பத்தவர்களுடன் செவிமடுத்துக்கொண்டிருந்தவேளை பாரிய சத்தமும் கண்ணாடிகள் சிதறும் சத்தமும் கேட்டது என கியானி வார்சேச்சா என்பவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். நான் மக்கள் பதற்றமடைவதை பார்த்தேன்,காரையும் மக்கள் இரத்தக்காயங்களுடன் வீழ்;ந்து கிடப்பதையும் பார்த்தேன் காயமடைந்தவர்களில் சிறுவர்கள் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். நான் காயப்பட்டவர்களிற்கு முதலுதவியை வழங்குவதில் கவனம் செலுத்தினேன்,ஒரு சில நிமிடங்களில் மருத்துவ உதவிக்குழுக்கள் வந்துவிட்டன ஆனால் அது போதுமானதல்ல 200 பேர் வரை காயமடைந்திருந்தனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களிற்கு பொதுமக்களே அதிகளவில் முதலுதவியை வழங்கினார்கள் என அவர் பிபிசிக்குதெரிவித்துள்ளார். எங்கும் அம்புலன்ஸ்கள் காணப்பட்டன பொலிஸார் காணப்பட்டனர் தீயணைப்பு வீரர்கள் காணப்பட்டனர்,பெரும் குழப்பநிலை காணப்பட்டது நிலத்தில் இரத்தத்தை கண்டேன்,என எம்டிஆர் நிருபர் லார்ஸ் ப்ரோமுல்லர் தெரிவித்துள்ளார். பெரும் குழப்பநிலை காணப்பட்டது,நாங்கள் தரையில் இரத்தத்தை பார்த்தோம் மக்கள் ஒருவருக்கொருவர் சுற்றி அமர்ந்திருப்பதையும்,மருத்துவர்கள் முதலுதவி வழங்குவதையும்,நாங்கள் பார்த்தோம் என அவர் தெரிவித்துள்ளார். இது பெரும் அதிர்ச்சி மிகப்பெரும் அதிர்ச்சி மக்டபேர்க்கிற்கும் சக்சனி அன்ஹால்டில் உள்ள அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201954
  5. யாழ்ப்பாணம் (Jaffna) சிறப்பு பொருளாதார மத்திய நிலையத்தை இயங்க வைப்பதற்கு வடக்கு மாகாண சபையின் ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பசுந்தேசம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அது தொடர்பில் வடமாகாண ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ள கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பொருளாதார மத்திய நிலையங்கள் முழுமையாக சந்தைப்படுத்தல் மற்றும் வர்த்தக நோக்கங்களைக் கொண்டவை. ஆனாலும் அவை மொத்த சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகவும், உற்பத்திப் பிரதேசங்களை மையமாகவும் கொண்டவை. விவசாயப் பொருட்கள் உற்பத்தி சில்லறை வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்டவை என்ற வகையில் தான் யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையமானது, யாழ்ப்பாணம் விவசாயிகள் தமது உற்பத்திகளை தகுந்த விலையில் விற்பனை செய்வதற்கும், நுகர்வோர் குறைந்த விலையில் மரக்கறிகள் பழங்களை கொள்வனவு செய்வதற்குமான வசதிகளை உருவாக்கும் நோக்கில் 20.03.2022 அன்று திறக்கப்பட்டது. இந்த யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையம் இயங்கவைப்பதன் மூலம் அதிக நன்மை பெறப்போகின்றவர்கள் தமது கடின உழைப்பின் மூலம் விவசாயப் பொருட்களை உற்பத்தி செய்யும் விவசாயிகளே. யாழ்ப்பாண நுகர்வோருக்கு தேவையான தென்பகுதி உற்பத்திப் பொருட்களைப் பெற்றுக்கொள்ளவும் சகல உட்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டதாக இயங்குநிலைக்கு வருவதனை உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகளின் சார்பாக வடக்கு மாகணசபையின் ஆளுநரைக் கேட்டுக்கொள்கின்றோம் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/request-keep-jaffna-economic-center-operational-1734947324#google_vignette
  6. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் மியோடோனிக் பதவி, பசை இல்லை என்றால் நவீன உலகமே இல்லை. போன்கள் முதல் விமானங்கள் வரை, கட்டடங்கள் முதல் செருப்புகள் வரை, நம்முடைய உலகமே பசையால் பிணைக்கப்பட்டிருக்கிறது. சிக்கி முக்கிக் கல் மூலம் நெருப்பை உருவாக்கியதைப் போன்றே, பசைகளை உருவாக்கியதும் நம்முடைய முன்னோர்களின் மகத்தான சாதனைகளில் ஒன்று. அதை நாம் பல காலமாக பயன்படுத்தி வருகிறோம். தேசிய கணித தினம்: மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை துரத்தும் 'கணித' பயம், காரணம் என்ன? 100 வயதை கடந்தவர்கள் இத்தனை லட்சம் பேர் இருப்பார்களா? உடல்நல ரகசியம் என்ன? பீட்ரூட் ஜூஸ் 'அதிசய' பானமா? உடற்பயிற்சிக்கு முன் குடித்தால் உடலில் என்ன நடக்கும்? டைட்டானிக் கப்பலை சுற்றி ஆழ்கடலில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளர்களின் நேரடி அனுபவம் "பழங்காலத்தில் கருவிகளை உருவாக்க அவைகள் பயன்படுத்தப்பட்டன. கூர்மையான தகடுகளை கைப்பிடியோடு பொருத்தி கத்திகள் உருவாக்க பயன்படுத்தப்பட்டது'' என்கிறார் நெதர்லாந்தின் டெல்ஃப்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கீஸ்கே லங்கேஜன்ஸ். கைப்பிடிகளைக் கொண்டிருக்கும் கருவிகள் துல்லியமாகவும், வேகமாகவும் செயல்படக் கூடியவை. ஆனால், அதையும் தாண்டி பசைகளால் பல்வேறு விஷயங்கள் செய்ய முடிந்தது. "ஒரு சில பசைகள் நீரால் பாதிப்படையாதது. கூடைகளில் அதனை பயன்படுத்தி வலுவுடையதாகவும் அதே நேரத்தில் நீர்புகா பொருளாகவும் உருவாக்க இயலும்.'' ஆரம்பகால கலை வடிவங்களிலும் அவை பயன்படுத்தப்பட்டன. ''உங்களிடம் ஒரு நிறமி உள்ளது. அதனை உங்களின் குகையின் சுவர்களில் ஒட்ட வேண்டும் என்றால் அதற்கு நீங்கள் பிசின் போன்ற ஒன்றை பயன்படுத்த வேண்டும்'' என்று கூறுகிறார் லங்கேஜன்ஸ். எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் விளையாடுவதற்கும் அவை பயன்பட்டன. "களிமண் போன்று அது கடினமானதாக இருந்திருக்கலாம்'' மிகவும் பழமையான பசையானது 1,90,000 ஆண்டுகள் பழமையானவை என்கிறார் லங்கேஜன்ஸ். ''நியாண்டர்தால்களால் கற்களால் உருவாக்கப்பட்ட இரண்டு கருவிகளில் இந்த பசை கண்டறியப்பட்டது. அவை இத்தாலியில் கண்டறியப்பட்டது''. இதன் வரலாற்றை ஆய்வு செய்யும் போது, பசைகளில் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் பற்றிய தகவல்கள் மட்டும் கிடைக்கவில்லை கூடவே அந்த காலத்தில் வாழ்ந்த மனிதர்கள் எப்படிப்பட்டவர்கள் என்ற தகவல்களும் கிடைத்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கால மனிதர்கள் விளையாடுவதற்கும் பசைகள் பயன்பட்டன நாம் யார் என்பதை உணர்த்தும் பசை! அந்த கல் இடுக்குகளில் காணப்பட்ட பசை பிர்ச் தார். அது ஒருவகை ஒட்டும் கருப்புநிற புட்டி. இதை உருவாக்க, மரத்தின் பட்டை மிக அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்பட வேண்டும் என்று கூறுகிறார் லங்கேஜன்ஸ். "பிரச்னை என்னவென்றால், கற்கால மனிதர்கள் மத்தியில் தீயால் பாதிப்படையாத பாத்திரங்கள் இல்லை." பிறகு நம் முன்னோர்கள் அதை எப்படி உருவாக்கினார்கள்? "எனது குழுவும் நானும் அது குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டோம். பட்டையை மிகப் பெரிய சுருட்டு போல உருட்டி, தரையில் உள்ள ஒரு துளையில் வைத்து, அதை பற்றவைத்து காத்திருந்திருப்பார்கள்." அறிவாற்றல் திறன் இருக்கும் பட்சத்தில் தான், பொருட்களை முறையாக பயன்படுத்தி வெப்பத்தின் மூலமாக ஒட்டும் தன்மையை உருவாக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு மொழி ஏதேனும் இருந்திருக்குமா? அல்லது அவர்களுக்கு வெப்பம் குறித்த ஏதேனும் ஒரு யோசனை இருந்திருக்குமா? "தார் தயாரிப்பது கடினம் என்பதால், நியாண்டர்தால்கள் மிகவும் புத்திசாலிகள் என்று என்னுடைய சகாக்கள் நம்புகின்றனர்.'' பசைகள், நம் முன்னோர்கள் பற்றி நமக்கு அளித்த குறிப்புகள் இவை மட்டுமல்ல. ''பல தொல்லியல் தளங்களில் பசைகள் பயன்படுத்தப்பட்டு இணைக்கப்பட்ட பொருட்களை நாங்கள் கண்டறிந்த போது, அந்த பசைகள் நன்கு மென்றிருப்பதை நாங்கள் கவனித்தோம்'' என்கிறார் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஹான்ஸ் ஷ்ரோடர் கூறுகிறார். ''அவர்கள் ஏன் அதை மென்று சாப்பிட்டார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும் பல சந்ததியினர் தாண்டி நமக்கு உதவியாக இருக்கிறது. பிர்ச் தார் ஒரு 'டைம் கேப்சூல்' போன்றது. அது உண்மையில் டி.என்.ஏவைப் பாதுகாக்கிறது." எழுத்தப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய காலத்தை சேர்ந்த தாரிலிருந்து மரபணு மூலக்கூறுகளை பிரித்தெடுத்தார் ஷ்ரோடர். "டென்மார்க்கில் உள்ள லோலண்ட் தீவில் உள்ள ஆரம்பகால கற்கால தளத்தில் இருந்து முதல் பொருள் பெறப்பட்டது. சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, யாரோ ஒருவர் தாரை மென்று கடற்கரையில் உள்ள நாணலில் துப்பியிருக்கிறார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அதனை கண்டறிந்துள்ளார்," என்று கூறுகிறார் ஸ்ரோடர். ஆராய்ச்சியாளர்களால் அதில் இருந்து டி.என்.ஏவைப் பெற முடிந்தது. இந்த டி.என்.ஏவை கொண்ட நபருக்கு லோலா என பெயரிட்டு இது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன்பு எப்போதும் மனித எலும்புகளில் இருந்து மட்டுமே டி.என்.ஏ. எடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஆனால் முதன்முறையாக எலும்புகள் அல்லாத மற்றொரு பொருளில் இருந்து டி.என்.ஏ. எடுக்கப்பட்டுள்ளது. ஆய்வு முடிவுகள் லோலாவுக்கு கருமையான தோல், அடர் பழுப்பு நிற முடி மற்றும் நீல நிற கண்கள் இருந்ததையும், அவர் ஹேசல்நட் மற்றும் வாத்தை சாப்பிட்டதையும் வெளிப்படுத்தின. பசைகள் அவற்றைப் பயன்படுத்திய நபர்களைப் பற்றிய தகவல்களின் ஆதாரமாகவும் இருக்கலாம். மேலும் எழுதப்பட்ட வரலாற்றுக்கு முந்தைய கலைப்பொருட்களில் காணப்படுபவை நாகரிகங்கள் தோன்றிய காலத்தில் இருந்தே நம்முடன் இருந்தவை என்பதைக் காட்டுகின்றன. உண்மையில், லோலா வசித்த குளிர் பிரேதசத்திலும், அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளிலும் இது தொடர்பான ஆய்வுகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியா சீனா இடையே பல சந்திப்புகள் - எல்லையில் இன்னும் தெளிவாகாத கேள்விகள் யாவை? நிபுணர்களின் எச்சரிக்கை என்ன?22 டிசம்பர் 2024 எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,THEIS JENSEN படக்குறிப்பு, சுமார் 6,000 ஆண்டுகளுக்கு முன்பு, யாரோ ஒருவர் தாரை மென்று கடற்கரையில் உள்ள நாணலில் துப்பியிருக்கிறார். ரப்பர் எனும் அதிசயப் பொருள் மெசோஅமெரிக்காவை ஸ்பெயின் நாட்டினர் காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்த வந்த போது அவர்கள் ஒரு பொருளை கண்டறிந்தனர். அவர்களை ஆச்சரியப்படுத்திய அந்த பொருளை அவர்கள் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை. அந்த பொருள் மூலம்தான், எலாஸ்டிக் பேண்டுகள் முதல் துள்ளும் பந்துகள் வரை அனைத்தையும் உருவாக்கினார்கள். தங்களின் பாதங்களை பாதுகாக்கும் உறுதியான செருப்புகளையும் அவர்கள் அதில் இருந்துதான் செய்தனர். அந்த பொருட்கள் ரப்பர் மரத்தின் பாலில் இருந்து உருவாக்கப்பட்டன. காலனி ஆதிக்கம் செலுத்திய நாட்டினருக்கு, இப்பொருட்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தன. ஐரோப்பிய தொழில் நுட்பத்தில் இது எப்படிப் பொருந்தும் என்பதை அறியாமல் அவர்கள் தங்களின் சொந்த நாட்டிற்கு அதனை எடுத்துச் சென்றனர். ஆனால், 17ம் நூற்றாண்டில் அந்த கண்ணோட்டம் மாறத்துவங்கியது. விஞ்ஞானியும் தத்துவஞானியுமான ஜோசப் ப்ரீஸ்ட்லி காகிதத்தில் பென்சிலால் எழுதிய எழுத்துகளை அழிக்க இந்த பொருள் எவ்வளவு பயனுடையதாக இருக்கிறது என்று அவர் உணர்ந்த தருணம் அது. பலர் அந்த பொருளை வெவ்வேறு வகையில் பயன்படுத்தினார்கள். ஸ்காட்லாந்து வேதியியலாளர் சார்லஸ் மெக்கிண்டோஷ், துணிகளின் அடுக்குகளுக்கு நடுவே இந்த ரப்பரை வைத்து மெக்கிண்டோஷ் ரெய்ன்கோட்டுகளை உருவாக்கினார். ஆனால் ரப்பர் ஆடைகளில் சில குறைபாடுகள் இருந்தன. ஜீரோவுக்கும் குறைவான வெப்ப சூழலில் அவை உடையும் தன்மை கொண்டதாக இருந்தது. வெப்பம் அதிகரிக்கும் போது பிசுபிசுப்புத் தன்மை கொண்டதாகவும், நாற்றம் அடிக்கும் பொருளாகவும் ரப்பர் மாறியது. ஒரு மனிதன் இந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து, ரப்பரின் பரந்துபட்ட உபயோகத்திற்கு வழிவகை செய்தார். அவர் தான் சார்லஸ் குட்இயர். வெற்றிக்கான அவரது பாதை நீண்டதாகவும், கடினமானதாகவும் மற்றும் ஆபத்துகளை கொண்டதாகவும் இருந்தது. மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 கிறிஸ்துமஸ் மரம் போல தோன்றும் விண்மீன் திரள் உணர்த்தும் அறிவியல் உண்மைகள்18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மெசோஅமெரிக்காவை ஸ்பெயின் நாட்டினர் காலனி ஆதிக்கத்திற்கு உட்படுத்த வந்த போது அவர்கள் ஒரு பொருளை கண்டறிந்தனர். நோபல் ஒப்செசன் என்ற புத்தகத்தில் சார்லஸின் பயணம் குறித்து பேசும் ஆசிரியர் சார்லஸ் ஸ்லாக், "பல வருட தேடலில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். நிறைய இழப்புகளை சந்தித்தும், கடனாளியாக பல ஆண்டுகள் துயரமிக்க வாழ்வை அவர் வாழ்ந்து வந்தார்," என்று குறிப்பிடுகிறார். "அவர் வெவ்வேறு பொருட்களைப் பரிசோதித்தார். நைட்ரிக் அமிலத்தை சுவாசித்தார். அது அவரின் உயிரைக் கூட கொன்றிருக்கும்,". ஆனால் ரப்பர் மீது அவர் நடத்திய ஆராய்ச்சி இறுதியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது. "1839-ம் ஆண்டு அவர் ரப்பரையும் சல்ஃபரையும் கலந்தார். ஆனால் அது எப்படியோ சூடான அடுப்பில் விழுந்துவிட்டது. அவர் திரும்பி வந்து அதை பார்த்தபோது, ரப்பர் மாறிவிட்டது. அது கடினமாக இருந்தது. அதே நேரத்தில் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருந்தது. குளிர் மற்றும் வெப்பத்தின் விளைவுகளுக்கு ஆளாகாத வகையில் அந்த பொருள் இருந்தது.'' "வெப்பத்தை ஒரு தீர்வாகப் பயன்படுத்துவதை யாரும் நினைத்துகூட பார்த்திருக்கமாட்டார்கள், ஏனென்றால் வெப்பம் ரப்பரின் எதிரி. ஆனால் சல்ஃபருடன் இணைந்து ஒரு புதிய பொருளை உருவாக்கியது." பண்டைய மெசோஅமெரிக்கர்கள், சல்ஃபரைக் கொண்ட இபோமியா ஆல்பா என்ற உள்ளூர் கொடியின் சாறுடன் ரப்பர் மரப்பாலை கலந்தனர். ஐரோப்பியர்கள் ரப்பரை மட்டும் எடுத்துச் சென்றனர். ஆனால் ரகசியங்களை இல்லை. அதனால் தான் அதனை கண்டுபிடிக்க பல நூற்றாண்டுகள் ஆனது. 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குட்இயர் பெயர் நீடித்தது. அவர் கடனில் இறந்தாலும், மற்றவர்கள் அவரது கண்டுபிடிப்பால் கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்தனர் புதிய கண்டுபிடிப்பின் உதவியுடன் வல்கனைசேஷன் எனப்படும் ரப்பரைச் செயலாக்கும் முறையை உருவாக்கத் தொடங்கினார், குட்இயர். ஷாக் அப்சார்பர்கள், ஹெர்மீடிக் முத்திரைகள் மற்றும் நெகிழ்வான குழாய்கள் என்று புதிய தொழில்துறை யுகத்தில், ரப்பர் இன்றியமையாததாகிவிட்டது. இன்று அது மிகவும் சர்வ சாதாரணமாக ரப்பர் உள்ளது. ஆனால் நாம் அதை சில நேரங்களில் பாராட்ட மறந்துவிடுகிறோம். நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள்18 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 ப்ளைவுட்களின் பங்கு நாம் இடம் பெயர்வதை முற்றிலுமாக டையர்கள் மாற்றின. ஆனால் பசைகள் மேலும் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. விமானத்துறையில். விமானப் போக்குவரத்து வரலாறு முழுவதும், பசைகள் புதிய வளர்ச்சிகளுக்கு வித்திட்டது. இதனால் விமானங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாகவும், உயரமாகவும், அதிக உயரமாகவும் பறக்க வழிவகை செய்தது. மற்றொரும் ஒரு முக்கியமான பொருள் ப்ளைவுட். இது மிகவும் மெல்லிய மரத் துண்டுகளுக்கு நடுவே பசையை பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. இது பண்டைய எகிப்தியர்களின் காலத்தில் இருந்து பயன்பாட்டில் உள்ளது. இது மர வேலையில் ஒரு முக்கிய பிரச்னைக்கு தீர்வு கண்டுள்ளது. ஈரமான காலங்களில் மரங்கள் விரியும் தன்மையை கொண்டது. ஆனால் பசைகள் மரப்பலகைகளை நிலையாக இருக்க வைக்க உதவியது. இந்த தொழில் நுட்பம் பல நூற்றாண்டுகளாக செயல்பாட்டில் இருந்தது. ஆனால் 20ஆம் நூற்றாண்டில் தான் ப்ளைவுட்டின் பயன்பாடு உண்மையாகவே துவங்கியது. இலகுவாகவும், நகர்த்துவதற்கு எளிதாகவும் இருப்பதால், விமானங்களில் ப்ளைவுட்டை பயன்படுத்துவதற்கான யோசனைகள் பலருக்கு இருந்தது. குறிப்பாக முதலாம் உலகப் போர் தொடங்கியபோது, விமான வடிவமைப்பில் ப்ளைவுட் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 1930-களில், அமெலியா ஏர்ஹார்ட் போன்ற விமான நிறுவனங்கள் ப்ளைவுட் விமானங்களால் சாதனை படைத்தனர். இந்த விமானங்கள் மகத்தான வெற்றியை பதிவு செய்தாலும் கூட அது அதிக நாள் நீடிக்கவில்லை. தமிழ் பாதிரியார்கள் பிரேசில் காடுகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றுவது ஏன்?17 டிசம்பர் 2024 இந்தியாவின் 'ஹாங்காங்' திட்டத்தால் இந்த தீவில் வாழும் மக்கள் கலக்கம் ஏன்?15 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதனால் விமானங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேகமாகவும், உயரமாகவும், அதிக உயரமாகவும் பறக்க வழிவகை செய்தது கலாசார காரணங்களுக்காக மரம் கைவிடப்பட்டது. குறிப்பாக ராணுவ ஒப்பந்தக்காரர்களால் போர் காலத்தில் மரம் கைவிடப்பட்டது. அது காலாவதியான பொருளாகக் கருதப்பட்டது. விமானம் தான் எதிர்காலத்தின் தேவை என்பதை உணர்ந்தனர். மேலும் உலோகத்தால் விமானங்களை செய்ய விரும்பினர். இரண்டாம் உலகப் போரில்தான் உலோகத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. லண்டனில், ஜெஃப்ரி டி ஹாவிலாண்ட் (Geoffrey de Havilland) என்ற பொறியாளர், போருக்கு தேவையான விமானங்களை மிக விரைவாகவும், குறைந்த விலையிலும் உருவாக்கித் தர முன்வந்தார். ஹாவிலாண்ட் அன்றைய சூழலில் ஜெர்மன் போர் விமானத்தையும் விட வேகமாக பறக்கக்கூடிய ஒரு வேகமான விமானத்தை உருவாக்கினார். இதற்கு மொஸ்கிட்டோ என்று பெயர் இடப்பட்டது. இது விமான வடிவமைப்பின் வெற்றியாக கருதப்பட்டது. ஒரு போர், உளவு மற்றும் குண்டுவீச்சு விமானமாக இது செயல்பட்டது. மிகவும் வேகமாக செயல்பட்ட காரணத்தால், தற்காப்பு இயந்திர துப்பாக்கிகள் கூட அதற்கு தேவைப்படவில்லை. செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 சர்தார் வல்லபாய் படேல்: காந்தி படுகொலைக்குப் பிறகும் ஆர்.எஸ்.எஸ்.சை தேச பக்தர்கள் என்று பேசியது ஏன்?15 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹாவிலாண்ட் அன்றைய சூழலில் ஜெர்மன் போர் விமானத்தையும் விட வேகமாக பறக்கக்கூடிய ஒரு வேகமான விமானத்தை உருவாக்கினார். ப்ளைவுட், மரத்திற்கான ஒரு தரக்குறைவான மாற்றாகக் அறியப்படவில்லை. பல வடிவமைப்பாளர்கள் 1940கள் மற்றும் 1950களின் மிகவும் பிரபலமான ஃபர்னிச்சர்களை உருவாக்கினார்கள். இந்த நாட்களில் நீங்கள் சமையலறைகள் முதல் ஸ்கேட்போர்டுகள் வரை எல்லா இடங்களிலும் ப்ளைவுட்கள் பயன்பட்டதை காணலாம். இருப்பினும் விமானத்துறையில் மரங்களுக்கு பதிலாக அலுமினிய கலவைகளே பயன்படுத்தப்பட்டன. அவை வலுவான, கடினமான மற்றும் அரிப்பை எதிர்க்கும். ஆனால் அதிக எரிபொருள் திறன் கொண்ட விமானத்தை உருவாக்குவதில் அவை கைகொடுக்கவில்லை. எனவே ஒரு புதிய வகை இலகுரக பொருட்கள் வெளிவரத் தொடங்கியபோது, விண்வெளி பொறியாளர்கள் உற்சாகமடைந்தனர். எபோக்சி ரெசின்கள் எனப்படும் புதிய பசையை உயர் செயல்திறன் கொண்ட இழைகளுடன் இணைத்து, அதிக திறன் கொண்ட கட்டமைப்புகளை உருவாக்கினார்கள். சுற்றுச்சூழலுக்கு ஏற்றவாறு விமானங்ளை உருவாக்குவதற்கான சவாலை எதிர்கொண்டுள்ளதால், பசைகள் முன்னேற்றத்தின் மையத்தில் தொடர்ந்து இருக்கும். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 திண்டுக்கல் தீ விபத்து: 'புகைசூழ்ந்து கண்ணே தெரியவில்லை' - உயிர் பிழைத்தவர்கள் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு13 டிசம்பர் 2024 போர் காயங்கள் சில மணிநேரங்களில் பறந்து உலகின் மறுபக்கத்தை அடையும் சக்தியை பசைகள் நமக்கு வழங்கியுள்ளன. மேலும் உயிர்களைக் காப்பாற்றும் சக்தியும் கூட இந்த பசைகளில் உள்ளன. லாக்டைட் என்று அழைக்கப்படும் சயனோஅக்ரிலேட் சூப்பர் பசை ஒரு தற்செயலான கண்டுபிடிப்பு. வேதியியலாளர் ஹாரி வெஸ்லி கூவர் ஜூனியரின் செய்த பிழையால் உருவானது இது. அவர் 1942ம் ஆண்டு ரசாயன முறையில் உருவாக்கப்பட்ட ஃப்லிம்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஒரு விலையுயர்ந்த ஆப்டிகல் கருவி அவர் சோதித்த பொருளால் பாழடைந்தது. அதனைப் பற்றி கவலைப்படுவதற்கு பதிலாக, அதன் அற்புதமான ஒட்டும் திறனைக் கவனித்தார் அவர். அதன் ஒட்டும் வேகமும் ஆச்சரியம் அளித்தது. ஏன் என்றால் பசைகள் காய அதிக நேரம் தேவைப்படும். இந்த புதிய சேர்மங்கள் கிட்டத்தட்ட உடனடியாக செயல்படக்கூடியவை. மேலும் விரைவில் ஒட்டக் கூடியவை. இது சாத்தியமான மருத்துவ பயன்பாடுகளை கொண்டிருந்தது. ஆனால் எரிச்சல் மற்றும் நச்சுத்தன்மை காரணமாக ஆரம்ப காலங்களில் இது சாத்தியமாகவில்லை. இருப்பினும், ஒரு புதிய செய்முறை காயங்களுக்கு சிகிச்சையளிப்பதில் சிறந்தது என்பதை நிரூபித்தது. அமெரிக்க ராணுவம் அதில் தீவிர ஆர்வம் செலுத்தியது. அவர் வியட்நாம் போருக்கு சயனோஅக்ரிலேட் ஸ்ப்ரேக்களை அனுப்பினார். மிகவும் கடுமையான காயங்களை பெற்ற வீரர்களுக்கு அதனை பயன்படுத்துவதற்காக அனுப்பிவைக்கப்பட்டது. காயம் அடைந்து ரத்தம் வந்து கொண்டிருக்கும் உறுப்புகளில் நேரடியாக இதனை பயன்படுத்த முன்வந்தனர். போர் காலங்களில் இது சாத்தியமான வெற்றிகளை பெற்றுத் தந்தாலும், வழக்கமான மருத்துவ சிகிச்சையில் இதனை பயன்படுத்த முடியுமா என்பது தெளிவாக இல்லை. மேலும் இது புற்றுநோயை உருவாக்கும் என்ற கவலையும் இருந்தது. ஆனால் தொடர்ச்சியான ஆராய்ச்சிகளுக்குப் பிறகு, காயங்களை மூட இது பாதுகாப்பானவை என்று உறுதி செய்யப்பட்டது. உலகம் முழுவதும் தற்போது மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உயிர்களைக் காப்பாற்றும் சக்தியும் கூட இந்த பசைகளில் உள்ளன ஸ்மார்ட் வாட்ச் பயன்பாடு உடல்நலனை பேண உதவுகிறதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?13 டிசம்பர் 2024 மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 சவால்கள் நவீன பசைகள் மிகவும் சக்திவாய்ந்தவை. மிகவும் பலமானவை. ஆனால் அவற்றை உரிப்பது கடினம். எலெக்ட்ரானிக் பொருட்களில் அதிக அளவில் பசைகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒரே இடத்தில் வைப்பதற்கு மட்டுமின்றி நீண்ட நாட்கள் உழைக்கவும் அது பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில், இந்த பசைகள்தான் எலெக்ட்ரானிக் பொருட்களை சரி செய்யவும், மறு சுழற்சிக்கு உட்படுத்தவும் சவால்களை உருவாக்குகிறது. பல நேரங்களில் இந்த பொருட்கள் குப்பைகளில் போய் சேருகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நவீனகால செருப்புகளை மறுசுழற்சி செய்வதையும் இது கடினமாக்கியுள்ளது பசைகள் நவீனகால செருப்புகளை மறுசுழற்சி செய்வதையும் இது கடினமாக்கியுள்ளது. இறுதியில் அதிக ப்ளாஸ்டிக் குப்பைகள் அதிகரிக்க காரணமாகின்றன. அதனால்தான் பசையின் தன்மையை உடனடியாக நீக்கக் கூடிய ரிவெர்சிபிள் அதேஸிவ்கள் பற்றிய ஆய்வுகள் அதிகரித்து வருகின்றன. இது நிலைத்தன்மையை உருவாக்க பல பயன்களை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மாயாஜாலம் போல் இருக்கலாம். ஆனால் பல பிரச்னைகளுக்கு தீர்வு காண பசைகளை நாம் கண்டறிந்தோம். பதிலுக்கு பசைகள் சாத்தியமற்றதை சாத்தியமாக்கியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c9vkjk8jxewo
  7. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைகளை முன்வைக்கும் சந்தர்ப்பம் இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது. https://tamilwin.com/article/dr-archuna-ramanathan-latest-news-1734943791
  8. அங்குரார்ப்பண 19 இன்கீழ் மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் இந்தியா சம்பியனானது Published By: VISHNU 22 DEC, 2024 | 06:41 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்றுவந்த 6 நாடுகளுக்கு இடையிலான அங்குரார்ப்பண 19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இந்தியா, பாகிஸ்தான், நேபாளம் ஆகியன ஒரு குழுவிலும் இலங்கை, பங்களாதேஷ், மலேசியா ஆகியன மந்றைய குழுவிலும் மோதின. முதல் சுற்று முடிவில் ஒரு குழுவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் மற்றைய குழுவில் முதலிரண்டு பெற்ற அணிகளை இரண்டாம் சுற்றில் எதிர்த்தாடின. இரண்டாம் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றன. இரண்டாம் சுற்றில் இந்தியாவிடம் இலங்கை தோல்வி அடைந்தது. நேபாளத்துடனான போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் அத்துடன் இலங்கை வெளியேறியது. கோலாலம்பூர் பேயுமாஸ் கிரிக்கெட் ஓவல் விளையாட்டரங்கில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்ற இந்தியா சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட 19 வயதுக்குட்பட்ட இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 117 ஓட்டங்களைப் பெற்றது. ட்ரிஷா, அணித் தலைவி நிக்கி ப்ரசாத் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கொங்காடி ட்ரிஷா 52 ஓட்டங்களைப் பெற்றார். நிக்கி ப்ரசாத் 12 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் வினோத் மிதிலா 17 ஓட்டங்களையும் ஆயுஷி ஷுக்லா 10 ஓட்டங்களையும் பெற்றனர். பங்களாதேஷ் பந்துவீச்சில் முஸ்தபா பர்ஜானா ஈஸ்மின் 31 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நிஷிட்டா அக்தர் நிஷி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 118 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட பங்களாதேஷ் மகளிர் அணி 18.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 76 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீராங்கனை பஹோமிடா ச்சோயா 18 ஓட்டங்களையும் 4ஆம் இலக்க வீராங்கனை ஜுவாரியா பிர்தௌஸ் 22 ஓட்டங்களையும் பெற்றனர். மற்றைய வீராங்கனைகள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். இந்திய பந்துவீச்சில் ஆயுஷி ஷுக்லா 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சொணம் யாதவ் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாருணிக்கா சிசோடியா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி, தொடர் நாயகி ஆகிய இரண்டு விருதுகளையும் கொங்காடி ட்ரிஷா வென்றெடுத்தார். https://www.virakesari.lk/article/201909
  9. சிரியாவை ஆப்கானாக மாற்றப்போவதில்லை – பெண்கள் கல்விகற்கவேண்டும் என விரும்புகின்றேன் - சிரிய கிளர்ச்சி குழுவின் தலைவர் 22 DEC, 2024 | 11:45 AM சிரியாவால் அதன் அயல்நாடுகளிற்கோ அல்லது மேற்குலகிற்கோ பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் உருவாகாது என சிரியாவின் கிளர்ச்சிக்குழுவின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள அவர் சிரியா மீதான தடைகளை மேற்குலகம் நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். தடைகள் முன்னயை அரசாங்கத்தை இலக்காக கொண்டவை என தெரிவித்துள்ள அவர் ஒடுக்குமுறையாளனையும் பாதிக்கப்பட்டவர்களையும் ஒரே மாதிரி நடத்தக்கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு வாரங்களிற்கு முன்னர் பசார் அல் அசாத்தின் அரசாங்கத்தை கவிழ்த்த தாக்குதல்களிற்கு அஹமட் அல் சரா தலைமை தாங்கியிருந்தார். ஹயட் தஹ்ரிர் அல் சலாம் அமைப்பின் தலைவரான இவர் முன்னர் அபு முகமட் அல் ஜொலானி என அழைக்கப்பட்டார். தனது அமைப்பினை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள அவர் தனது அமைப்பு பயங்கரவாத அமைப்பில்லை என தெரிவித்துள்ளார். எச்டிஎஸ் அமைப்பினை ஐநா அமெரிக்க பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. நாங்கள் பொதுமக்களின் இலக்குகளை தாக்கவில்லை பொதுமக்களை தாக்கவில்லை மாறாக நாங்கள் அசாத் அரசாங்கத்தின் கொடுமைகளிற்கு பலியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார். தான் சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற முயல்வதாக தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள சிரியாவின் பிரதான கிளர்ச்சிக்குழுவின் தலைவர் எங்கள் நாட்டிற்கும் ஆப்கானிஸ்தானிற்கும் வித்தியாசங்கள் உள்ளன பாரம்பரியங்கள் வித்தியாசமானவை ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகம் சிரியா வேறுவிதமான மனோநிலையை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். பெண்கள் கல்விகற்கவேண்டும் என நான் நம்புகின்றேன் இட்லிப் எங்கள் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டவேளை அங்கு பல்கலைகழகங்கள் இயங்கின அங்கு கல்வி கற்றவர்களில் 60 வீதமானவர்கள் பெண்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201859
  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சொந்த கட்சிக்குள் இருந்தும் ட்ரூடோ பதவி விலகுவதற்கான அழுத்தம் அதிகரித்து வருகிறது. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, சர்வதேச அரங்கில் ஒன்றன்பின் ஒன்றாக நெருக்கடிகளை சந்தித்து வரும் நிலையில், தற்போது உள்நாட்டு அரசியலிலும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். அவரது அரசாங்கத்தை ஆதரித்து வந்த புதிய ஜனநாயகக் கட்சி (NDP), ஆதரவைத் தொடர மறுத்துவிட்டது. இந்த புத்தாண்டில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவோம் என என்டிபி தலைவர் ஜக்மீத் சிங் தெரிவித்துள்ளார். மையவாத இடதுசாரி கட்சியான என்.டி.பி அதன் பொதுவான அரசியல் செயல் திட்டங்களை கொண்டிருந்ததால் ட்ரூடோவின் அரசாங்கத்தை ஆதரித்தது. ஆனால் என்.டி.பி கட்சி தலைவரின் சமீபத்திய அறிக்கை கட்சியின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை பிரதிபலிக்கிறது. கனடாவுக்கு எதிராக டிரம்ப் எடுத்த முடிவு, சிக்கலில் ஜஸ்டின் ட்ரூடோ - இந்தியாவை பாதிக்குமா? உயிரையே பணயம் வைத்து 'அமெரிக்க வாழ்க்கை' கனவுக்காக புலம் பெயரும் இந்தியர்கள் கனடா: 1984 சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து தீர்மானம் நிறைவேற்ற திட்டம் - இதன் விளைவுகள் என்ன? ஜஸ்டின் ட்ரூடோ, ஏற்கனவே அனைத்து தரப்பிலிருந்தும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் சிக்கல்களை எதிர்கொள்ளும நிலை ஏற்பட்டுள்ளது. ட்ரூடோவை குறிவைக்கும் பிரதான கட்சிகளில் தற்போது ஜக்மீத் சிங்கின் கட்சியும் சேர்ந்துவிட்டது. எனவே நம்பிக்கையில்லா தீர்மானத்தில் ட்ரூடோ அரசு தப்புவது கடினம். கடந்த இரண்டரை ஆண்டுகளாக ட்ரூடோ அரசுக்கு என்டிபி ஆதரவளித்தது. அதனால்தான் ட்ரூடோவால் தொடர்ந்து ஆட்சியில் இருக்க முடிந்தது. ஏற்கனவே இந்த வாரம் ட்ரூடோவுக்கு மிகவும் மோசமான வாரமாக இருக்கும் நிலையில் ஜக்மீத் சிங்கின் அறிவிப்பும் வெளிவந்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ட்ரூடோவின் அமைச்சரவையில் மிக மூத்த அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே அவர் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மறுபுறம், அமெரிக்காவில் அடுத்த அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் டிரம்பின் அறிவிப்பு ட்ரூடோவுக்கு பெரிய பிரச்னையாக இருந்தது. கந்தஹார் விமான கடத்தல்: 25 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இந்தியா - நேபாள உறவில் நெருடல் ஏன்?21 டிசம்பர் 2024 'எனது உடல், ஆடை பற்றி சங்கடப்படுத்தும் வகையில் கேட்டார்' - பெண் உணவு டெலிவரி ஊழியர்களின் பிரச்னைகள்21 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜக்மீத் சிங் ஜக்மீத் சிங் எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டிருந்தார். "லிபரல் கட்சியினர் இரண்டாவது வாய்ப்புக்கு தகுதியானவர்கள் அல்ல. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அழைப்பு விடுப்போம்" என்று பதிவிட்டிருந்தார். இந்தாண்டு செப்டம்பரில் ட்ரூடோ அரசுக்கு அளித்து வந்த தனது ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்திருந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் கட்சி கடந்த பொதுத் தேர்தலில் 24 இடங்களில் வெற்றி பெற்று முக்கிய கட்சியாக இருந்தது. பல சந்தர்ப்பங்களில் ஜக்மீத் சிங் இந்தியாவை விமர்சித்து இருக்கிறார். டொராண்டோவில் உள்ள பிபிசி செய்தியாளர் நாடின் யூசுப், "கனடாவின் அடுத்த பொதுத் தேர்தல் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் அல்லது அதற்கு முன்னதாக நடைபெறும். லிபரல் கட்சியின் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் இந்த தேர்தல் முன்னதாகவே நடத்தப்பட வாய்ப்பிருக்கிறது" என்று கூறினார். கனடா நாடாளுமன்றத்தின் ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் அவை வரும் ஜனவரியில் மீண்டும் கூடும் நிலையில் 3 முக்கிய எதிர்க்கட்சிகளும் ட்ரூடோ அரசாங்கத்தை கவிழ்க்க விரும்புவதாக கூறியுள்ளன. இந்த வாரம் ட்ரூடோ அடுத்தடுத்து பல பின்னடைவுகளை சந்தித்துள்ளார். ட்ரூடோவின் அமைச்சரவையில் மிகவும் மூத்தவராக இருந்த துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் ராஜினாமா செய்தார். இப்படியான சூழலில், ஜக்மீத் சிங்கின் இந்த அறிவிப்பு அவருக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. திங்களன்று பொருளாதார அறிக்கையை வழங்குவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு ஃப்ரீலேண்ட் ராஜினாமாவை அறிவித்தது அனைவருக்கும் அதிர்ச்சியான செய்தியாக இருந்தது. 'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி19 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை19 டிசம்பர் 2024 கனடாவுக்கு எதிரான டிரம்பின் கருத்துகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றபோது, அவருக்கு ட்ரூடோ வாழ்த்து தெரிவித்தார் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பாதுகாப்பை அதிகரிப்பதில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றால், கனடா மற்றும் மெக்ஸிகோ ஆகிய இரு அண்டை நாடுகளின் அனைத்து பொருட்களுக்கும் 25 சதவீதம் வரி (இறக்குமதி வரி) விதிப்பேன் என்று கடந்த மாதம் டொனால்ட் டிரம்ப் கூறியிருந்தார். ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்றவுடன் கனடா, மெக்ஸிகோ மற்றும் சீனாவுக்கு எதிராக வரிகளை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திடுவேன் என்று டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டிருந்தார். "கனடா மற்றும் மெக்ஸிகோ எல்லைகளில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அமெரிக்காவுக்குள் நுழைகிறார்கள் என்பது அனைவரும் அறிந்ததே. போதைப்பொருளை கொண்டு வருவது போன்ற பல குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லை." என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். டிரம்ப் வெற்றி பெற்ற உடனேயே ட்ரூடோ வாழ்த்து தெரிவித்த போதிலும் இது டிரம்பின் அணுகுமுறையை மாற்றவில்லை. டிரம்ப் மற்றும் ட்ரூடோ இடையேயான உறவு கசப்பானது மற்றும் சில சந்தர்ப்பங்களில் ட்ரூடோ மீது டிரம்ப் தனிப்பட்ட தாக்குதல்களை கூட செய்துள்ளார். கனடாவின் ஏற்றுமதியில் 75 சதவிகிதம் அமெரிக்காவிற்கு செல்கிறது. டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு சிக்கல்களை அதிகரிக்கக் கூடும். இந்த வரி விதிப்பு கனடாவின் பொருளாதாரத்திற்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஆனால் டிரம்ப் இத்தோடு நிற்கவில்லை, கனடாவைப் பற்றி மேலும் கடுமையான கருத்துகளை வெளியிட்டார். இரண்டு நாட்களுக்கு முன்பு, டிரம்ப் தனது `ட்ரூத்' சமூக ஊடகப் பக்கத்தில் "ஒவ்வொரு ஆண்டும் கனடாவுக்கு 100 மில்லியன் டாலர்களை மானியமாக ஏன் தருகிறோம் என்பதற்கு யாரிடமும் பதில் இல்லை. பெரும்பாலான கனடியர்கள் 51வது மாகாணமாக மாற விரும்புகிறார்கள். அதாவது, அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாற கனடா நினைக்கிறது. இது அவர்களுக்கு வரி மற்றும் ராணுவ செலவுகளை மிச்சப்படுத்தும். இது ஒரு சிறந்த யோசனை என்று நான் நினைக்கிறேன்" என்று பதிவிட்டிருந்தார். பிரான்சில் இருந்தபடியே, கென்யாவில் அதானி ஒப்பந்தத்தை ரத்தாகச் செய்த மாணவர் - எப்படி தெரியுமா?21 டிசம்பர் 2024 404 ஏக்கருக்கு உரிமை கோரும் வக்ஃப் வாரியம், 2 மாதங்களாக போராடும் கிராமம் - கேரளாவில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு21 டிசம்பர் 2024 ட்ரூடோ பதவி விலக வேண்டும் என அதிகரிக்கும் அழுத்தம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கனடாவில் பொதுத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் விரும்புகின்றன கனடா நிதியமைச்சராக இருந்த ஃப்ரீலாண்ட் தனது ராஜினாமாவில், டிரம்பின் அறிவிப்பு கனடாவுக்கு கடுமையான அச்சுறுத்தலாக இருப்பதாகவும், பிரதமர் ட்ரூடோ நிதி நிலைமையை சரிசெய்வதற்குப் பதிலாக மலிவான அரசியலில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார். அப்போதிருந்து, ட்ரூடோ பதவி விலக வேண்டும் என்ற குரல் அவரது சொந்த லிபரல் கட்சிக்குள்ளேயே வலுத்துள்ளது. குளோப் அண்ட் மெயில் செய்தியின்படி, அக்கட்சியின் 153 எம்.பி.க்களில் இதுவரை 19 பேர் ட்ரூடோவை பதவி விலகுமாறு பகிரங்கமாக வலியுறுத்தியுள்ளனர். எவ்வாறாயினும், இந்த பொது முறையீடுகளுக்கு ட்ரூடோ இதுவரை பதிலளிக்கவில்லை. இந்த பிரச்னையை பரிசீலித்து அடுத்து என்ன செய்வது என்பது குறித்து முடிவு செய்வதாக தனது கட்சி உறுப்பினர்களிடம் கூறியதாக கூறப்படுகிறது. ட்ரூடோ வெள்ளிக்கிழமை அன்று தனது அமைச்சரவையை விரைவில் மறுசீரமைப்பதாகக் கூறினார். அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்த பல அமைச்சர்கள் விட்டுச் சென்ற காலி இடங்களை நிரப்புவதற்காக இதனை அவர் தெரிவித்தார். கனடாவில் ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் உள்ளார். 2019 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் ட்ரூடோவின் கட்சி பெரும்பான்மை பெற முடியாமல் வேறு கட்சியின் ஆதரவுடன் ஆட்சியில் உள்ளது. புகைபிடித்தல், உடல் பருமனை தாண்டியும் 100 ஆண்டுகளுக்கு மேல் சிலர் உயிர் வாழும் ரகசியம் என்ன?22 டிசம்பர் 2024 விடுதலை 2 ஊடக விமர்சனம்: வெற்றிமாறனின் கம்யூனிச கையேடா? படம் எப்படி இருக்கிறது?20 டிசம்பர் 2024 ஜக்மீத் சிங் யார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில், பர்னாலா மாவட்டத்தில் உள்ள திக்ரிவால் கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர்தான் ஜக்மீத் சிங். அவரது குடும்பம் 1993இல் கனடாவுக்கு குடிபெயர்ந்தது. மார்ச் 2022 இல் ட்ரூடோவிற்கும் ஜக்மீத் சிங்கிற்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், லிபரல் கட்சி நாடாளுமன்றத்திற்குள் முக்கியமான பிரச்னைகளில் என்.டி.பி கட்சிக்கு ஆதரவளிக்க ஒப்புக்கொண்டது. ஆனால், இதில் அதிகாரப் பகிர்வு பற்றிய விவகாரங்கள் இடம்பெறவில்லை. பெரும்பான்மை பெற முடியாவிட்டாலும், இந்த ஒப்பந்தம் காரணமாக ட்ரூடோவின் கட்சி தொடர்ந்து ஆட்சியில் இருந்தது. இதற்கு ஈடாக, என்.டி.பி கட்சியின் நோக்கங்களை நிறைவேற்ற ஜக்மீத் சிங்குக்கு ட்ரூடோ உதவ வேண்டியிருந்தது. ஜக்மீத் சிங் இந்தியாவை பல சந்தர்ப்பங்களில் விமர்சித்துள்ளார்.. ஏப்ரல் 2022 இல், ஜக்மீத் சிங், "இந்தியாவில் முஸ்லிம்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறை தொடர்பானப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பார்த்து கவலைப்படுகிறேன். முஸ்லிம்களுக்கு எதிரான உணர்வுகளைத் தூண்டுவதை மோதி அரசு நிறுத்த வேண்டும். மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்" என்றார். இந்தியாவில் 1984ஆம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான நடந்த கலவரம் குறித்து ஜக்மீத் தொடர்ந்து தன் கருத்துகளை பதிவு செய்து வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக கனடாவில் சில இயக்கங்களின் செயல்பாடுகளுக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. டிசம்பர் 2013 இல், அமிர்தசரஸ் வருவதற்கு ஜக்மீத் சிங்குக்கு இந்தியா விசா வழங்கவில்லை. "கட்சித் தலைவராவதற்கு முன்பு ஜக்மீத் சிங் காலிஸ்தான் பேரணிகளில் கலந்துகொள்வார்." என வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் குறிப்பிட்டிருந்தது. பரப்பளவில் உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் கணிசமாக வாழ்கின்றனர். கனடாவின் மக்கள் தொகையில் 2.1 சதவீதம் சீக்கியர்கள் வாழ்கின்றனர். கனடாவில் சீக்கிய மக்கள் தொகை கடந்த 20 ஆண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது. அவர்களில் பெரும்பாலோர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு போன்ற காரணங்களுக்காக இந்தியாவில் இருந்து கனடாவுக்கு சென்றுள்ளனர். வான்கூவர், டொராண்டோ, கல்கரி உட்பட கனடா முழுவதும் குருத்வாராக்கள் உள்ளன. ஜஸ்டின் ட்ரூடோ சீக்கியர்களுக்கு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருகிறார். அவர் தனது முதல் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவையை அமைத்த போது, அதில் நான்கு சீக்கியர்களை அமைச்சராக்கினார். கடந்த 2015-ஆம் ஆண்டு ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய அமைச்சரவையில் சீக்கியர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள இடங்களை விட தனது அமைச்சரவையில் அதிக இடங்கள் வழங்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். கடந்த சில மாதங்களாக இந்தியாவுடன் காணப்பட்ட கசப்பிற்கு ட்ரூடோவின் காலிஸ்தான் ஆதரவு கொள்கையே காரணம் என்று பல ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தேர்தல் அரசியலால் இரு நாட்டு உறவுகளை ட்ரூடோ ஆபத்தில் ஆழ்த்துவதாகவும், பிரிவினைவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதாகவும் இந்தியா பலமுறை குற்றம்சாட்டியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgl9gd1gdryo
  11. சேர் என அழைக்க வற்புறுத்திய வைத்தியர் அர்ச்சுனா! மனம் திறக்கும் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ். போதனா வைத்தியசாலைக்குள் அனுமதியின்றி பிரவேசித்து, தமது கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததுடன், தம்மை அச்சுறுத்தியதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக வைத்தியர் த. சத்தியமூர்த்தியினால் பகிரங்க குற்றச்சாட்டு ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இந்தநிலையில் குறித்த விசாரணைகளுக்கு அமைய, தங்களது சமர்ப்பணங்களை யாழ். நீதவான் நீதிமன்றில் பொலிஸார் முன்வைத்துள்ளனர். இந்நிலையில் இலங்கையில் வைத்தியத்துறையானது முன்னைய காலங்களில் பலராலும் பேசப்பட்டு வந்ததாக இருந்தாலும் தற்போது பலரது எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகின்றது. குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலே வைத்தியத்துறை மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி மற்றும் பிரித்தானியாவில் பணியாற்றும் அவசர சிகிச்சைப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சதானந்தன் ஆகியோர் இன்றைய லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இராமநாதன் அர்ச்சுனா தொடர்பான கருத்துக்களை முன்வைத்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், https://tamilwin.com/article/what-happen-srilanka-free-medical-sector-udaruppu-1734869196
  12. 23 DEC, 2024 | 09:55 AM பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்களை சோதனை செய்யும் நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியில் இன்று திங்கட்கிழமை (23) முதல் முன்னெடுப்பதற்கு பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. நாட்டில் அதிகரித்து வரும் வாகன விபத்துக்களை குறைக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன சாரதிகள் மது போதையில் வாகனத்தை செலுத்துவது தொடர்பில் சிறப்பு சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இதன்படி, பஸ் சாரதிகளின் கவனக்குறைவு , அதிவேகமாக வாகனம் செலுத்துதல், போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் செலுத்துதல், பொருத்தமற்ற நிலையில் உள்ள டயர்கள் அல்லது கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் உள்ள வாகனங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இவ்வாறான, குறைப்பாடுகளுடன் வாகனம் செலுத்தும் சாரதிகள் தொடர்பில் 119 அல்லது 1997 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கோ அல்லது அந்தந்த பிரிவுகளுக்குப் பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளுக்கோ அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை,வாகனங்களை சோதனையிடுவதற்கு 24 மணிநேரமும் நாடு முழுவதும் போக்குவரத்து அதிகாரிகளை சேவையில் ஈடுப்படுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/201927
  13. இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக கச்சத்தீவை மீட்க வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்படுகின்றமை மற்றும் அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுகின்றமை என்பன அவர்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. குறித்த மீனவர்களுக்கு சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படுகின்றமையினால் இரு நாடுகளுக்கு இடையே நிலவும் நல்லுறவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் திராவிட முன்னேற்றக் கழக செயற்குழு கவலை வெளியிட்டுள்ளது. இதேவேளை, தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காண்பதற்குக் கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மத்திய அரசாங்கத்தை வலியுறுத்தி திராவிட முன்னேற்றக் கழக செயற்குழுவில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314028
  14. 23 DEC, 2024 | 10:48 AM பிரேசிலின் தென்பகுதியில் தனியாருக்கு சொந்தமான விமானமொன்று விழுந்து நொருங்கியதில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பத்து பேர் உயிரிழந்துள்ளனர். பிரேசிலின் கிரமாடோ என்ற நகரத்தில் இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் விமானத்தை செலுத்திய பிரேசிலின் கோடீஸ்வரர் லூயிஸ் கிளாடியோ கலியாசி அவரது மனைவி மூன்று பிள்ளைகள் உட்பட பத்து பேர் உயிரிழந்துள்ளனர். சிறிய விமானம் கட்டிடத்தின் புகைபோக்கி மீது மோதியது வீடு கடையொன்றின் மீது விழுந்து நொருங்கியது என தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானம் விழுந்து நொருங்கியதால் வீடு கடைகளில் இருந்த 17 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த கோடீஸ்வரர் தனது குடும்பத்தினருடன் பயணித்துக்கொண்டிருந்தார் விமானத்தில் இருந்த அவரது குடும்பத்தவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளனர். மோசமான காலநிலையிலேயே விமானம் பயணித்தது என தகவல்கள்வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/201937
  15. தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா?; வல்வெட்டிதுறையில் மக்கள் போராட்டம் யாழ்ப்பாணம் – பொன்னாலை - பருத்தித்துறை வீதியை புனரமைக்கக் கோரி வல்வெட்டித்துறையில் அடையாள உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நீண்ட காலமாக புனரமைக்கப்படாது, கடல் அரிப்புக்கு உற்பட்டு வரும் சுமார் 12.8 km நீளமான வீதியினை புனரமைக்கக் கோரி குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு தமது கையொப்பத்தை இட்டுச் செல்கின்றனர். இதன்போது எமது வீதி எமக்கானது, புதிய அரசே புது வீதி அமைத்து தா?, ஓட்டுக்காக வீடு வந்தவரே வந்த வீதியை மறந்தது ஏன்?, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. மேலும், தலைவன் பிறந்த ஊர் என்பதால் நிராகரிக்கப்பட்டதா? என்று குறிப்பிடப்பட்டுள்ள பதாகைகளையும் போராட்ட காரர்கள் ஏந்தியிருந்தனர். https://thinakkural.lk/article/314000
  16. 22 DEC, 2024 | 09:49 PM இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரபாகரனின் பிறந்த நாளுக்கு சமூக வலைத்தளத்தில் வாழ்த்து தெரிவித்தவரிடம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் (ரி.ஐ.டி) விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தன்று சமூக வலைத்தளம் ஒன்றில் அவருடைய படத்தை பிரசுரித்து பிறந்த நாள் வாழ்த்துக்கள் நபர் ஒருவரால் போடப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த படத்திற்கு கீழ் அந் நபரின சமூக வலைத்தளத்தின் நட்பு வட்டத்தில் இருந்த சிலர் பிறந்த நாள் வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தனர்.' இவ்வாறு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவு செய்த வவுனியா, பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவரிடமே பயங்கரவாத புலனாய்வு பிரிவின் வவுனியா அலுவலகத்தில் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இம்முறை வடக்கு, கிழக்கு பகுதியில் பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் நாள் நிகழ்வுகள் அரசாங்கத்தின் கெடுபிடிகளற்று இடம்பெற்ற நிலையில், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற இச் சம்பவத்திற்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/201905
  17. ஆளணிப்பற்றாக்குறையே சுகாதாரத் தொண்டர்கள், தொண்டராசிரியர்கள் ஆகியோருக்கு வாய்ப்பாக அமைகிறது. தற்போது தொண்டராசிரியர் நியமனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. மேலுள்ள திரியிலும் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெளிவாக நிலைமைகளை எடுத்துச் சொல்கிறார்.
  18. இலங்கையில் சீனாவின் மிதக்கும் மருத்துவமனை கப்பல் ‘மஹா சயுரே’ மருத்துவமனை என அழைக்கப்படும் சீனாவின் ‘பீஸ் ஆர்க்’ இராணுவ மருத்துவமனை கப்பல் தற்போது கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது. மேலும், ‘பீஸ் ஆர்க்’ என்ற கப்பல், கடற்படையின் இசைக்குழு வரவேற்புக்கு மத்தியில் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டதும் சிறப்பு. உலகின் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட .ராணுவ மருத்துவமனைக் கப்பலாக இதைக் கருதலாம். கிழக்கு சீனாவின் Zhejiang மாகாணத்தில் Zhoushan இல் அமைந்துள்ள இராணுவ துறைமுகத்தில் இருந்து ஜூன் 16 அன்று கப்பல் தனது பயணத்தைத் தொடங்கியது. உலகெங்கிலும் உள்ள அவசரகால சூழ்நிலைகளுக்கு உடனடி மனிதாபிமான நிவாரணம் வழங்குவதே இந்த கப்பலின் முக்கிய பணியாகும். இந்த கப்பல் சீன மக்கள் குடியரசால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. இந்த கப்பல் 2008 முதல் மருத்துவ உதவி வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. 178 மீட்டர் நீளமும் 24 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பலில் 386 பணியாளர்கள் உள்ளனர். அவர்களில் 106 பேர் மருத்துவர்கள். கப்பலில் சிறிய படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்களும் பொருத்தப்பட்டுள்ளன. கப்பலில் 17 மருத்துவ துறைகள் மற்றும் 5 துணை நோயறிதல் துறைகள் உள்ளன. கொழும்பு துறைமுகத்தில் ஒருவாரம் தங்கியிருக்கும் கப்பல் சிங்கப்பூர் வழியாக சீனா திரும்பும். கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ள ஒரு வாரத்தில் இலங்கை மக்களுக்கும், சீன நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட சீன பிரஜைகளுக்கும் இலவச நோயறிதல் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/313997
  19. 'தூய்மையான இலங்கை' செயலணிவசம் மிகையான அதிகாரங்கள்; ஜனாதிபதி மீது நம்பிக்கையில்லை - அம்பிகா சற்குணநாதன் Published By: VISHNU 22 DEC, 2024 | 09:26 PM (நா.தனுஜா) 'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்துக்கான ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் புதிய செயலணிக்கு மிகப்பரந்துபட்ட ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன், இந்நடவடிக்கை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆலோசனைக்கமைய 'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்தை திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதற்காக அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் பிரகாரம் 18 உறுப்பினர்களைக்கொண்ட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தனது உத்தியோகபூர்வ 'எக்ஸ்' தளத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அம்பிகா சற்குணநாதன், 'தூய்மையான இலங்கை' கருத்திட்டத்துக்கென ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டிருக்கும் செயலணி பல்வேறு விதத்திலும் பிரச்சினைக்குரியதாகக் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டிருக்கும் இச்செயலணி அவருக்கு (ஜனாதிபதிக்கு) மாத்திரமே பொறுப்புக்கூறவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும், எமக்கு மற்றுமொரு செயலணியோ அல்லது ஆணைக்குழுவோ அவசியமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'இச்செயலணிக்கு மிகப்பரந்துபட்ட அளவிலான ஆணையும், அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. உதாரணமாக இந்த ஜனாதிபதி செயலணிக்கு சட்டங்களைத் தயாரிப்பதற்கும், அச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான கட்டமைப்பினை நிறுவுவதற்கும் அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஏனைய அரச கட்டமைப்புக்களுக்கான அறிவுறுத்தல்களை வழங்குவதற்கு இச்செயலணிக்கு அதிகாரம் உண்டு' என்றும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இந்த செயலணியில் தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாத போதிலும், பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார். 'இவ்வாறான செயற்பாடுகளே முன்னைய ஜனாதிபதியினாலும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போதைய ஜனாதிபதி அவற்றிலிருந்து மாறுபட்ட விதத்தில் செயற்படுவார் என்ற நம்பிக்கையை இத்தீர்மானம் ஏற்படுத்தவில்லை. அத்தோடு இப்புதிய செயலணியில் சிறுபான்மையினப் பிரதிநிதித்துவமின்றி, இராணுவ அதிகாரிகள் உள்வாங்கப்பட்டிருப்பதானது பெரும்பான்மைவாத அரசு மற்றும் இராணுவமயமாக்கல் தொடர்பில் அச்சத்தை ஏற்படுத்துகிறது: எனவும் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201912
  20. சீ சீ அவருக்கு தன்னுடைய பிறந்தநாளுக்கு உங்களை அழைத்து விருந்து அளிக்கத்தான் விருப்பம், இல்லையா @குமாரசாமி அண்ணை?!
  21. மருத்துவர்கள், தாதியர்கள், உதவியாளர்கள் பெரும் பணிச்சுமையுடன் பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஆனால் சாதாரண நோயாளியின் மனநிலை புரிந்து மருத்துவம் செய்ய வேண்டிய மருத்துவர்கள் சிலர் அவர்களோடு அன்பாக கதைப்பதில்லை. ஏதும் விளக்கம் கேட்டால் சொல்வதுமில்லை. ஒரு சிலரின் தவறுகளுக்கு எல்லோரும் குற்றஞ்சாட்டப்படும் நிலை! ஒரு சில தாதியர்களின் நடத்தை மிகமோசமானது, நோயாளிகளை அநாவசியமாக கடிந்துகொள்வது, தாங்கள் தான் எல்லாம் என்பதுபோல நடப்பது....
  22. பகுதியளவு புனரமைக்கப்பட்டுள்ளது. AB21 என்ற வீதியிலக்கமிடப்பட்ட போக்குவரத்துப் பாதையானது யாழ்ப்பாணம் பண்ணைச் சந்தியில் ஆரம்பித்து வட்டுக்கோட்டை ஊடாக பொன்னாலைச் சந்தியை அடைந்து திருவடிநிலை➡️ மாதகல்➡️ கீரிமலை➡️ காங்கேசன்துறை➡️ மயிலிட்டி➡️ பலாலி➡️ தொண்டைமானாறு➡️ வல்வெட்டித்துறை ஊடாக பருத்தித்துறை முனையை அடைகிறது. யாழ்ப்பாணத்தில் உள்ள நீண்ட AB தர வீதி இதுவென நினைக்கிறேன்.
  23. யாழ். போதனா வைத்தியசாலையில் தற்போது 1350 படுக்கைகள் உள்ளன. எனினும் படுக்கை வசதிகள் போதாமையாக உள்ளன. சில சமயங்களில் நோயாளிகள் நிலத்திலும் படுக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எதிர்வரும் நாட்களில் மேலும் மூன்று விடுதிகளை திறக்க உள்ளோம். இதன்மூலம் இந்த படுக்கை வசதிகள் ஓரளவு மேம்படும் என நினைக்கின்றேன். மகப்பேற்று கட்டட தொகுதி மற்றும் இருதய நோய் கட்டட தொகுதி அமைக்கப்படவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் தொண்டர்களுக்கு நாம் நியமனங்களை வழங்க முடியாது. சுகாதார அமைச்சே அதனை செய்யவேண்டும். யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சையை பெறுபவர்கள் பூரணமான நம்பிக்கையை கொண்டுள்ளனர். ஆனால் சமூக வலைத்தளங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு இந்த வைத்தியசாலையில் என்ன நடைபெறுகின்றது என்பது தெரியாது என்ற வகையில் வைத்தியசாலையின் சேவையை சிதறடிக்கும் வகையில் சொல்லப்படும் காரணங்கள் பூதாகரமாக வெளியில் கொண்டு செல்லப்படும். ஆகவே உண்மையை அறிந்து கொள்ளுங்கள் என்பதே எனது வேண்டுகோள் இவ்வாறு தெரிவித்தார். யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி யாழ் போதனா வைத்தியசாலையின் சேவைகள், அவர் தொடர்பில் அண்மைக்காலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனாவின் வைத்தியசாலை தொடர்பான நடத்தைகள் தொடர்பில் ஐபிசி தமிழ் சக்கரவியூகம் நிகழ்ச்சிக்கு அவர் அளித்த பிரத்தியேக நேர்காணலில் தெரிவித்த மேலதிக விடயங்கள் காணொளியில்... https://ibctamil.com/article/jaffna-teaching-hospital-director-breaks-the-truth-1734797306
  24. சாராசுருதி, ஸ்ரீகாந்த் என்றென்றும் கப்டன் உங்க Voice-ல உருகிட்டோம் சார்.. ❤️ | Endrendrum Captain |

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.