Everything posted by ஏராளன்
-
ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை பாடும் இசைக் கலைஞர் - சவால்கள் என்ன?
ரோஜா ஆதித்யா: ஒப்பாரிப் பாடல் முதல் கர்நாடக சங்கீதம் வரை பாடும் இசைக் கலைஞர் - அன்றாட சவால்கள் என்ன? பட மூலாதாரம்,ROJA ADITYA கட்டுரை தகவல் எழுதியவர், நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் மார்கழியின் வழக்கத்திற்கு மாறான ஒரு பருவநிலையில், கொளுத்தும் வெயிலில், சென்னையில் நடைபெற்ற மார்கழியில் மக்கள் இசை நிகழ்வில், நான்கு பெண்கள் ராப் இசைக்க, "காதல் பண்ணா என்ன? குத்தமா என்ன? காதல் பண்ணா என்ன? பாவமா என்ன?" என்று பாடல் பாடிக் கொண்டிருந்தார் அந்தப் பெண். ஆணவப் படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட அந்தப் பாடலில் பாதிக்கப்படும் பெண்களின் வாழ்க்கையையும் அவல நிலையையும் வரிகளாகக் கோர்த்து பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தது அந்த இசைக் குழு. சுயாதீன பாடகரும் இசையமைப்பாளருமான ரோஜா ஆதித்யாதான் அந்தப் பெண். தருமபுரியை பூர்வீகமாகக் கொண்ட அவருக்கு பின்னணிப் பாடகியாக வேண்டும் என்று கனவு. அந்தக் கனவையும், அதற்கான வாய்ப்பையும் தேடி கடந்த பத்து ஆண்டுகளாக சென்னையில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். தனியாக வாழும் பெண்களுக்கு சென்னையில் வீடு கிடைப்பது சவாலாக இருப்பது ஏன்? நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள் ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன மதுரை கிரிக்கெட் வீராங்கனை - 16 வயதில் சாதித்தது எப்படி? ஆப்கானிஸ்தான்: தாலிபன்களின் எதிர்ப்பை மீறி காபுல் தெருக்களில் புத்தகம் விற்கும் பெண் மார்கழியில் மக்களிசை நிகழ்வில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாடிய ரோஜாவுக்கு இது இரண்டாவது வாய்ப்பு. இந்த முறை தனியாக அல்லாமல், தமிழகத்தின் முதல் பெண்கள் ராப் குழுவினரான சொல்லிசை சிஸ்டாவுடன் இணைந்து பாடினார். இத்தகைய மேடைகள் உருவாகும்போது மக்களுக்கான இசையை, சாமானிய மக்களால் உருவாக்கப்படும் இசையை, பல கட்டங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்று கூறுகிறார் ரோஜா. ஆனால் அந்தப் பயணம் எளிதாக இல்லை என்று கூறுகின்றனர் சொல்லிசை சிஸ்டா குழுவைச் சேர்ந்த பெண்கள். இசைத்துறையில் பெண் கலைஞராக ரோஜா சந்திக்கும் சவால்கள் என்ன? சாமானிய மக்களின் இசைக்கான வாய்ப்புகள் கிடைக்கின்றனவா? முழு நேர தொழில்முறை கலைஞராக அவர் வளர்வதில் தடையாக இருப்பது என்ன? 'பெண்ணைப் பற்றியும் ஆண்களே எழுதும் நிலை' "பெண்கள் சுயாதீன இசைக்கலைஞர்களாக இருப்பதே சவாலான ஒன்றுதான். இதில் வருமானம் இல்லை. இவர்கள்தான் நமக்கு ரோல்மாடலாக இருக்க வேண்டும் என்று பார்ப்பதற்கான எடுத்துக்காட்டுகளும் தமிழ்ச் சூழலில் குறைவாகவே உள்ளது. அதோடு, இது ஆண்களுக்கான உலகமாகவே இருக்கிறது. ஒரு பெண் என்ன நினைக்கிறாள் என்பதையும் இங்கு ஆண்கள்தான் எழுதுகின்றனர். இந்தத் துறையில் காலடி எடுத்து வைத்து, ஒரு பாடல் பாடுவது என்பது பலரும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாக இருக்கிறது," என்கிறார் ரோஜா ஆதித்யா. பறை உள்படப் பல்வேறு இசைக்கருவிகளை இசைக்கும் ரோஜா பெரும்பாக்கத்தில் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார். முழுநேர இசைக் கலைஞராக ஒருவர் மாறுவதற்குப் பல ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார் ரோஜா. தமிழில் பாடல்களை எழுதுவதும், இசைப்பதும்தான் அவருடைய நோக்கமாக இருக்கிறது. ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?29 டிசம்பர் 2024 அஜர்பைஜான் பயணிகள் விமானம் ரஷ்யப் படையால் சுட்டு வீழ்த்தப்பட்டதா? திடீரென மன்னிப்பு கேட்ட புதின்28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ROJA ADITYA படக்குறிப்பு, சிறுவயதில் இருந்தே பாடல்களை எழுதி வரும் அவர், ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஒப்பாரிப் பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். "பாடல் பாடுவதையும், எழுதுவதையும், அதற்கான 'ட்யூனை' உருவாக்குவதையும்தான் அதிகம் விரும்புகிறேன். ஆனால் தொழில்முறை கலைஞராக உருவெடுக்கப் பெரிய தொடர்புகள் தேவைப்படுகின்றன. பணமும், முதலீடும் தேவைப்படுகிறது. கூடவே எனது படைப்புகளின் தொகுப்பும் குறிப்பிட்ட அளவுக்குத் தேவைப்படுகிறது. இப்படி வாய்ப்பு கிடைக்கும் நேரங்களில் நான் மேடைகளில் பாடுகிறேன். ஆனால் வருமானத்திற்காக, என் பகுதியில் வசிக்கும் மாணவர்களுக்கு இசை வகுப்புகளை எடுத்து வருகிறேன்," என்கிறார் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பொறியியல் பட்டம் பெற்ற ரோஜா. ஓய்வு நேரத்தில் ஒப்பாரிப் பாடல்கள் சிறுவயதில் இருந்தே பாடல்களை எழுதி வரும் அவர், ஓய்வாக இருக்கும் நேரத்தில் ஒப்பாரிப் பாடல்களை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார். "நம்முடைய நாட்டுப்புறக் கலைகள் பன்முகத்தன்மை கொண்டவை. கும்மி, ஒப்பாரி, நடவுப் பாட்டு, தாலாட்டு என்று நமது நாட்டுப்புறப் பாடல் வடிவங்களை எண்ணிக் கொண்டே போகலாம்." என கூறும் ரோஜா, அவை முறையாக டிஜிட்டல்மயமாக்கவில்லை என வருந்துகிறார் "நமக்கு பரவை முனியம்மாவையும், கிடாக்குழி மாரியம்மாளையும், விஜயலட்சுமி நவநீதனையும் திரைப்படப் பாடல்கள் மூலமாகவே தெரியும். ஆனால் அவர்கள் திரையில் தோன்றுவதற்கு முன்பாகவே பல்லாண்டுக் காலத்திற்குப் பல அற்புதமான பாடல்களை எழுதி, மெட்டுக்கட்டிப் பாடியுள்ளனர். இருப்பினும், அவர்களின் பெரும்பாலான பாடல்கள் டிஜிட்டலில் பதிவு செய்யப்படவில்லை. அவை கேசட்டுகளாக வந்தனவா என்பதும் கேள்விக்குறிதான். இன்று யூடியூப், ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகள் எங்களைப் போன்ற சுயாதீன இசைக்கலைஞர்களுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கின்றன. ஒரு வாய்ப்பை வழங்குகின்றன," என்கிறார் ரோஜா. 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன?28 டிசம்பர் 2024 விஜயகாந்த் மீதான மக்களின் அபிமானம் தேமுதிகவுக்கு கைகொடுத்ததா? ஓராண்டில் கண்ட மாற்றம் என்ன?29 டிசம்பர் 2024 'குடும்பத்தினரின் ஆதரவு இல்லை' படக்குறிப்பு, கடந்த 10 ஆண்டுகளாகப் பாடல்கள் பாடி வந்தாலும்கூட, கடந்த மூன்று ஆண்டுகளில்தான் அவருடைய கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்து வருகிறது ரோஜாவின் கூற்றுப்படி, ஒரு பெண் கலைஞர் உருவாவதில் அவருடைய குடும்பத்தின் ஆதரவு மிக முக்கியமானது. "வெளியூர்களில், வெளிமாவட்டங்களில்கூட இசை நிகழ்ச்சியில் பாடல்கள் பாடிவிடலாம். ஆனால் உங்கள் சொந்த ஊரில் நடக்கும் கோவில் திருவிழாக்களிலும் தேர் இழுக்கும் நிகழ்வுகளிலும் பாடல் பாட வேண்டும் என்றால் அது பல நேரங்களில் கைகூடாத கனவாகிவிடும்." கடந்த 10 ஆண்டுகளாகப் பாடல்கள் பாடி வந்தாலும்கூட, கடந்த மூன்று ஆண்டுகளில்தான் அவருடைய கிராமத்தில் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் பாடும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்து வருகிறது. இங்கு பல பெண்கள் பல்வேறு வகையில் திறமையுடையவர்களாக இருக்கிறார்கள் என்றும், ஆனால் அவர்களுக்கான வாய்ப்புகளை மறுக்கும் முதல் இடமாக இருப்பது அவர்களின் குடும்பங்கள்தான் என்றும் அழுத்தமாகக் கூறும் ரோஜா, "இசை அல்லது நடனத்தில் ஒரு பெண் குழந்தைக்கு ஆர்வம் இருக்கும்போது, அதை அவர் முதலில் வெளிப்படுத்துவது தன் வீட்டில்தான். ஆனால், இன்றும் பலரும் தங்கள் குடும்பத்தினரிடம் இருந்து பல வசைகளைக் கேட்ட வண்ணம்தான் இருக்கின்றனர். குடும்பம் ஓர் ஆரோக்கியமான விவாதத்தைத்தான் வழங்க வேண்டுமே தவிர, பெண்களின் ஆசைகளை முற்றிலுமாக மறுக்கும் இடமாகக் குடும்ப உறவுகள் இருக்கக் கூடாது," என்று வற்புறுத்துகிறார். யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி?28 டிசம்பர் 2024 'வளாகம் மட்டுமல்ல, வகுப்பறையிலும் கூட பிரச்னைதான்' - அண்ணா பல்கலை. மாணவிகள் கூறியது என்ன?28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,ROJA ADITYA/INSTAGRAM படக்குறிப்பு, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இசைக் கல்லூரிகள், வகுப்புகளை அறிமுகம் செய்தால் பெண்கள் இசைத்துறையில் அதிகம் வர வாய்ப்புள்ளதாகக் கருதுகிறார் ரோஜா ஆதித்யா அதோடு, இன்றும் தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் இசைக் கல்லூரிகள், வகுப்புகளை அறிமுகம் செய்ய அரசும், தனியார் நிறுவனங்களும் முன்வர வேண்டும் என்று ரோஜா விரும்புகிறார். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய பெற்றோர்கள் தற்போது தனது கனவைப் புரிந்து கொண்டதாகக் கூறும் ரோஜா, ''இதன்மூலம் ஒருவேளை பலரின் அணுகுமுறை மாறக்கூடும்'' என்கிறார். 'தூங்க இடமும், உண்ண உணவும் கிடைப்பதே சவால்' ரோஜாவின் கனவை அவருடைய பெற்றோர்கள் புரிந்து கொண்டாலும்கூட சில நேரங்களில் "இந்தத் துறைக்கு வந்து கஷ்டப்பட்டது மட்டுமே மிச்சம். இதில் எந்தவிதமான வருமானமும் இல்லை. மேற்கொண்டு மன உளைச்சலும், அலைச்சலும் மட்டுமே மிஞ்சுகிறது. இதில் நீடிக்க வேண்டுமா என்று யோசி" எனத் தனது பெற்றோர் பேசத் தொடங்கி இருப்பதாக ரோஜா கூறினார். "என் பெற்றோர் கூறுவதும் உண்மைதான். உங்களுக்கான ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்கும் வரை தத்தளிக்கும் படகின் கதைதான். சில நேரங்களில் நாங்கள் பாடல்கள் பாட கிராமப்புறங்களுக்குச் செல்லும்போது, உண்ண உணவும், தூங்க இடமும் தரக்கூட யோசிப்பார்கள். ஒரு கச்சேரிக்கு 3,000 ரூபாய் ஒப்பந்தம் செய்திருப்போம். ஆனால் பாடல் பாடி முடித்த பிறகு எங்களுக்கு அதில் பாதிதான் வந்து சேரும்." பட மூலாதாரம்,MARGAZHIYILMAKKALISAI/INSTAGRAM படக்குறிப்பு, சில நேரங்களில், எங்கெல்லாம் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் பாடுவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டுமெனக் கேட்டிருப்பதாக ரோஜா கூறுகிறார் சென்னை, கோவை, பெங்களூரு போன்ற இடங்களில் நடைபெறும் 'ஓப்பன் மைக்' நிகழ்வுகளுக்கு ரோஜா பணம் கொடுத்து, பாடல் பாடிய நிகழ்வுகளையும் நினைவுகூர்ந்தார். "நான் யார், என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை தொடர்ச்சியாக என்னைச் சுற்றியுள்ள மக்களுக்கும், சில நேரங்களில் எனக்கும் உணர்த்திக்கொண்டே இருக்க வேண்டும். அதனால் இவ்வாறு நான் செய்வதுண்டு." உணவகங்கள் அல்லது பொதுமக்கள் கூடும் இடங்களில் இசைக் கலைஞர்கள், கவிஞர்கள், நகைச்சுவைப் பேச்சாளர்கள் தங்களின் திறமைகளை அங்கே கூடியிருக்கும் பொதுமக்களிடம் வெளிப்படுத்தும் நிகழ்வே ஓப்பன் மைக். சில நேரங்களில், எங்கெல்லாம் கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றனவோ, அங்கெல்லாம் பாடுவதற்கு ஒரு வாய்ப்பு வேண்டுமெனக் கேட்டிருப்பதாக கூறும் ரோஜா "உண்மையில் சொல்லப் போனால் இலவசமாகப் பாடல் பாடிவிட்டுத் திரும்பி வருவேன்," என்கிறார் பூமிக்கும் இரட்டைச் சூரியன்கள் வானில் இருந்தனவா? விஞ்ஞானிகள் ஆய்வில் புதிய தகவல்28 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து?28 டிசம்பர் 2024 பெண்ணியம் சார்ந்த பாடல்கள் பட மூலாதாரம்,ROJA ADITYA/INSTAGRAM ரோஜா தன்னை வெளிப்படுத்தும் இசைக்கலைஞராக அறியப்படுவதையே விரும்புகிறார். 'பறக்கவே நினைக்கிறேன்' என்ற பாடல் ஆல்பம் ஒன்றைத் தற்போது வெளியிட்டுள்ளார். இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் ஒரு திடைப்படப் பாடலைப் பாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளையில் தனது ஸ்பாட்டிஃபை தரவுகளின்படி, ஆண் ரசிகர்களே தனது பாடலை அதிகம் கேட்பதாகக் கூறுகிறார். "முதலில் என் இருப்பை உறுதி செய்தாக வேண்டும். அதற்கான பாடல்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் வழங்குகிறேன். ஆனால், நான் யார் என்பதை அறிந்த ஒரு சிறிய பெண் ரசிகர் வட்டம் உருவாகும்போது, பெண்கள் மீதான ஒடுக்குமுறை, பிரச்னைகள் என்று எனது கலைப் பயணம் பரந்துபட்டதாக விரிவடையும்," என்று நம்பிக்கையுடன் பகிர்ந்துகொண்டார் ரோஜா ஆதித்யா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cq5l9nq480jo
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
LIVE 4th Test, Melbourne, December 26 - 30, 2024, India tour of Australia Australia 474 & 234 India (71 ov, T:340) 369 & 141/7 Day 5 - Session 3: India need 199 runs. Current RR: 1.98 • Min. Ov. Rem: 21• Last 10 ov (RR): 15/3 (1.50)
-
திடீரென தீப்பற்றி தரையிறங்கிய ஏர் கனடா விமானம்
29 DEC, 2024 | 06:56 PM கனடாவின் ஏர் கனடா (Air Canada) விமானம் ஒன்று தீ பிடித்த நிலையில் ஹாலிஃபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த ஏர் கனடா விமானத்தின் லாண்டிங் கியர் செயலிழந்ததால் விமானத்தின் இறக்கை ஓடுதளத்தில் உரசி திடீரென தீப்பிடித்துள்ளது. இந்நிலையில், ஹாலிஃபாக்ஸ் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/202494
-
ஓய்வு பெறும் ஜெனரல் சவேந்திர சில்வா
பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப்பிரதானி பதவியிலிருந்து சவேந்திர சில்வா ஓய்வு? 29 DEC, 2024 | 04:54 PM ஜெனரல் சவேந்திர சில்வா பாதுகாப்புப் படைகளின் பதவி நிலைப்பிரதானி பதவியிலிருந்து 2025 ஜனவரி 01ஆம் திகதி முதல் ஓய்வு பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவேந்திர சில்வாவின் சேவைக் காலத்தை கடந்த ஜூன் முதலாம் திகதியிலிருந்து எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதி வரை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நீடித்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19ஆம் திகதி முதல் 2022 மே 31 வரை ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத்தளபதியாக பணியாற்றினார். அதன் பின்னர், தனது பதவிக்காலம் நிறைவடைய, 2022 ஜூன் முதலாம் திகதி பாதுகாப்புப் படைகளின் பதவிநிலை பிரதானியாக நியமிக்கப்பட்டார். இந்நிலையிலேயே அவரது பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிக்கப்பட்டது. அதனையடுத்து, தற்போது புதிய அரசாங்கம் அமைந்திருக்கும் நிலையில் இவரது ஓய்வு தொடர்பில் தகவல் வெளியாகியிருக்கிறது. https://www.virakesari.lk/article/202486
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
10 ஆண்டு ரகசிய திட்டம்: லெபனானில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேஜர்களை மொசாட் வெடிக்கச் செய்தது எப்படி? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடிப்புகளில் டஜன்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர் காயமடைந்தனர். கட்டுரை தகவல் எழுதியவர், ரஃபி பெர்க் பதவி, பிபிசி செய்திகள் 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் லெபனானை சேர்ந்த ஹெஸ்பொலா ஆயுதக்குழுவினர் பயன்படுத்திய பேஜர்கள் மற்றும் வாக்கி டாக்கிகள் வெடிப்புக்கு உள்ளாகின. இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டு, வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட இந்த வாக்கி டாக்கிகளை ஹெஸ்பொலா குழுவினர் 10 ஆண்டுகளாக எப்படி பயன்படுத்தினர் என்பதை இஸ்ரேலின் முன்னாள் உளவுத்துறை ஏஜென்டுகள் இருவர் வெளிப்படுத்தியுள்ளனர் இந்த வாக்கி-டாக்கிகள் மற்றும் பேஜர்கள் இஸ்ரேலால் தயாரிக்கப்பட்டவை என்று வெளிக்காட்டாமல் ஏமாற்றி எவ்வாறு இவற்றை ஆயிரக்கணக்கில் ஹெஸ்பொலா குழுவிடம் விற்கப்பட்டன என்று மொசாட்டின் முன்னாள் ஏஜென்டுகள் இருவர் சிபிஎஸ் செய்திகளிடம் கூறினர். இந்த வெடிப்பு தாக்குதல்களில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர் காயமடைந்தனர். இது ஹெஸ்பொலா குழுவினரை மட்டுமே குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதல் என்று இஸ்ரேல் தெரிவித்தது. ஆனால் இந்த தாக்குதலில் பொதுமக்களும் பாதிக்கப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் இந்த தாக்குதலை ஒரு போர்க்குற்றம் என விவரித்தார். லெபனான் வாக்கி டாக்கி வெடிப்பில் 20 பேர் பலி, 450 பேர் காயம் - ஹெஸ்பொலா, இஸ்ரேல் கூறுவது என்ன? ஹெஸ்பொலா ஆர்டர் செய்த 5,000 பேஜர்களில் மொசாட் ரகசியமாக வெடிமருந்து வைத்ததா? புதிய தகவல்கள் 'இஸ்ரேல் அமெரிக்காவை கடவுள் பழிவாங்கட்டும்' - காஸாவில் கதறும் பெண் இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? இந்த தாக்குதல் நடந்தபோது, இஸ்ரேலும் ஹெஸ்பொலாவும் மோதலில் ஈடுபட்டிருந்தனர். கடந்த 2023- ஆம் ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி அன்று ஹமாஸ் ஆயுதக்குழு இஸ்ரேல் மீது இதுவரை இல்லாத அளவுக்கு ஒரு மோசமான தாக்குதலை நடத்தியது. அதற்கு ஒரு நாளுக்கு பிறகு, ஹெஸ்பொலாவும் இஸ்ரேலின் இலக்குகளை தாக்கியது. 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி அன்று, லெபனான் முழுவதும், குறிப்பாக ஹெஸ்பொலா குழுவினர் இருக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான பேஜர்கள் ஒரே நேரத்தில் வெடித்தன. இதனை பயன்படுத்தி வந்தவர்களுடன் சேர்த்து அவர்களுக்கு அருகில் இருந்த சிலரும் இந்த வெடிப்புச் சம்பவத்தினால் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமும் குழப்பமும் நிலவியது. இது நடந்த அடுத்த நாளே, இதே முறையில் வாக்கி-டாக்கிகளும் வெடித்தன. அதிலும் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் மற்றும் காயமடைந்தனர். இந்த சம்பவங்கள் நடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் பொறுப்பு என்று ஒப்புக்கொண்டார் என்று இஸ்ரேல் ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டன. பிபிசியின் அமெரிக்க ஊடக கூட்டாளியான சிபிஎஸ் செய்திகள் உடனான ஒரு நேர்காணலில், இரு முன்னாள் மொசாட் ஏஜென்டுகள் இந்த தாக்குதல் பற்றிய விவரங்களை கூறினர். இந்த வாக்கி டாக்கிகளை இயக்கும் பேட்டரிகளுக்குள் ஒரு வெடிக்கும் சாதனத்தை இஸ்ரேலின் மொசாட் நிறுவனம் மறைத்து வைத்திருந்தது என தனது பெயர் மைக்கேல் என கூறிய ஒரு ஏஜென்டு தெரிவித்தார். பொதுவாக இந்த கருவிகளை வைத்திருப்பவர்கள் அவர்களது உடுப்பில் இதயத்திற்கு மிக அருகே அதனை வைத்திருப்பார்கள் என்றும் அவர் கூறினர். திபெத்தில் உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா திட்டம் - இந்தியாவுக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன?3 மணி நேரங்களுக்கு முன்னர் ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, பேஜர் வெடிக்கும் காட்சிகள் சிசிடிவி கேமராக்களிலும் பதிவாகின போலி நிறுவனத்தை உருவாக்கி ஏமாற்றினர் ஹெஸ்பொலா ஆயுதக்குழு 10 வருடங்களுக்கு முன்னர் ஒரு போலி நிறுவனத்திடமிருந்து 16,000 வாக்கி-டாக்கிகளை "நல்ல விலையில்" வாங்கியதாகவும் மைக்கேல் கூறினார். "இஸ்ரேலுடன் எந்த தொடர்பும் இல்லை என்று கண்டறிய முடியாத வகையில் வெளிநாட்டு போலி நிறுவனங்களை உருவாக்க எங்களிடம் பல வாய்ப்புகள் இருந்தன. விநியோகச் சங்கிலியை எங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் வகையில் பல போலி நிறுவனங்களை உருவாக்கினோம்'' என்று அவர் குறிப்பிட்டார். "நாங்கள் ஒரு போலியான உலகத்தை உருவாக்கினோம். அதற்கு கதை எழுதியது, இயக்கியது, தயாரித்தது, நடித்தது என எல்லாம் நாங்கள்தான். உலகமே எங்கள் மேடை'' முன்பு வாக்கி டாக்கிகளை மட்டுமே கொண்டிருந்த ஆப்ரேஷனில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பேஜர்களையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டது என்று சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது. அந்த சமயம், 'கோல்ட் அப்போலோ' என்ற தாய்வான் நிறுவனத்திடமிருந்து ஹெஸ்பொலா பேஜர்களை வாங்கி வந்ததைக் கண்டறிந்ததாக மொசாட் கூறியது. எனவே கோல்ட் அப்போலோ என்ற பெயரில் மொசாட் ஒரு போலி நிறுவனத்தை நிறுவி, வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்ட பேஜர்களை உருவாக்கியது. இதனை அந்த உண்மையான தாய்வான் நிறுவானத்திற்கே தெரியாமல் செய்தது. இந்த பேஜர்களை பயன்படுத்துபவரை மட்டும் காயப்படுத்தும் அளவுக்கு வெடிமருந்துகளை மொசாட் உள்ளே வைத்ததாக சிபிஎஸ் செய்திகள் தெரிவித்தது. சைபீரியா: 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மம்மூத் யானைக் குட்டியின் உடலைக் கைப்பற்றிய ஆய்வாளர்கள்28 டிசம்பர் 2024 பூமிக்கும் வானில் இரட்டை சூரியன்கள் இருந்தனவா? ஆய்வில் புதிய தகவல்28 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,MORTEZA NIKOUBAZL/NURPHOTO VIA GETTY IMAGES "குறைந்தபட்ச சேதம் மட்டுமே ஏற்பட வேண்டும் என்பதை உறுதி செய்வதற்காக எல்லா செயல்பாடுகளையும் பல முறை சோதனை செய்வதுண்டு", என்று கேப்ரியல் என்று அழைக்கப்படும் மற்றொரு இஸ்ரேலிய ஏஜெண்ட் கூறினார். பேஜரில் வரும் செய்திகளை உடனே எடுத்து பார்க்கும் அளவிற்கு மிகவும் அவசரமாக ஒலிக்கும் ஒரு குறிப்பிட்ட ரிங்டோனை மொசாட் தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறினார். விளம்பரப் படங்கள் மற்றும் பிரசுரங்களை உருவாக்கி அதனை இணையத்தில் வெளியிட்டு அதன் மூலம் ஹெஸ்பொலா குழுவினரை ஏமாற்றி, மொசாட் இந்த பேஜர்களை வாங்க வைத்ததாக கேப்ரியல் கூறினார். "இந்த பேஜர்களை ஹெஸ்பொலா எங்களிடம் இருந்து வாங்கும்போது, இது மொசாட் விற்பனை செய்தது என்று அவர்கள் கொஞ்சம் கூட தெரியவரவில்லை.'' 2024- ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள், ஹெஸ்பொலா 5,000 பேஜர்களை வாங்கியதாக சிபிஎஸ் நிறுவனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் ஹெஸ்பொலா சந்தேகம் கொள்ளத் தொடங்கியதாக மொசாட் அஞ்சியபோது, இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடவடிக்கையை தொடுத்தது. யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி?28 டிசம்பர் 2024 விஜயகாந்த் மீதான மக்களின் அபிமானம் தேமுதிகவுக்கு கைகொடுத்ததா? ஓராண்டில் கண்ட மாற்றம் என்ன?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS வெடிப்புகளுக்கு பிறகு சிதைந்த ஹெஸ்பொலா இந்த வெடிப்பு சம்பவத்தினால் லெபனான் முழுவதும் அதிர்ச்சி அலைகள் எழுந்தன. பல்பொருள் அங்காடிகள் உட்பட பேஜர்கள் கொண்டு செல்லப்பட்ட எல்லா இடங்களிலும் இந்த வெடிப்புகள் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தில் நடந்த உயிரிழப்புகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன. அவர்களில் பலர் கை மற்றும் கால்களை இழந்தனர். சில நாட்களுக்குப் பிறகு, ஹெஸ்பொலா இன்னும் இந்த வெடிப்பு தாக்குதலில் இருந்தே மீண்டு வராத நிலையில் இருந்தபோது, இஸ்ரேல் ஹெஸ்பொலா இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களை தொடங்கியது. மேலும் இஸ்ரேல் லெபனானில் தரைவழி படையெடுப்பையும் தொடர்ந்தது. இரு தரப்பினரும் கடந்த நவம்பர் 26-ஆம் தேதி அன்று போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டனர். பேஜர் மற்றும் வாக்கி-டாக்கி தாக்குதல்களை லெபனான் கடுமையாக கண்டித்தது. மேலும், இஸ்ரேல் லெபனானை "திகைக்க வைத்துள்ளது", என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் கூறினார். ''இந்த தாக்குதல்கள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தையும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தையும் மீறுவதாக இருக்கின்றன'' என்றும் அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckgzpzz5zj6o
-
மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதில் சட்ட சிக்கல்கள்; சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற NMRA நடவடிக்கை
Published By: DIGITAL DESK 7 29 DEC, 2024 | 05:56 PM (நமது நிருபர்) இலங்கையில் மருந்துகளின் விலைகளை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளுக்கு இடையூறாக இருக்கும் சட்ட சவால்களைத் தீர்ப்பதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனைகளைப் பெறுவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. மருந்து இறக்குமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் விடயத்தில் நிர்ணய விலைகள் விடயங்களில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு உரிய ஏற்பாடுகள் போதாமையின் காரணமாகவே தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை இந்த முயற்சியில் இறங்கியுள்ளது. எவ்வாறாயினும் புதிய சட்டமொன்றை இயற்றுவதா, இல்லை தற்போதுள்ள ஏற்பாடுகளை திருத்தியமைத்து முன்னெடுப்பதா என்பது தொடர்பில் இன்னமும் உறுதியான தீர்மானம் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202467
-
அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - அபாயத்தில் இருந்து தப்பித்தது
அமெரிக்காவில் கொந்தளிக்கும் எரிமலையின் விளிம்பிற்குச் சென்ற குழந்தை - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு புவியியலாளர் கால்டெராவின் விளிம்பில் வெப் கேமராவை சரிபார்க்கிறார் கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்செஸ்கா ஜில்லட் பதவி, பிபிசி செய்தி அமெரிக்காவின் ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை மிகச் சரியான தருணத்தில், ஒரு பெரிய விபத்தில் இருந்து தப்பியதைத் தொடர்ந்து பூங்கா நிர்வாகம் புதிய எச்சரிக்கையை பிறப்பித்துள்ளது. "அமெரிக்காவின் ஹவாய் தீவில் அமைந்துள்ள ஹவாய் தேசியப் பூங்காவில் ஒரு குழந்தை தனது குடும்பத்தினரை விட்டு தள்ளிச் சென்று கண்ணிமைக்கும் நொடியில் கிலாவியா எரிமலையின் 400 அடி குன்றின் விளிம்பை நோக்கி விரைந்தது" என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. "குழந்தை விலகிச் சென்றதை உணர்ந்த தாய், உரத்த குரல் எழுப்பினார். இன்னொரு அடி எடுத்து வைத்தால் லாவாவில் விழுந்துவிடும் நிலையில் இருந்த குழந்தையை அவர் பின்னோக்கி இழுத்தார். பெரிய அபாயத்தில் இருந்து குழந்தை தப்பித்தது" என்று பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனை நேரில் பார்த்த பூங்கா அதிகாரி ஜெசிகா ஃபெர்ராகேன், இந்த சம்பவத்தின் விவரங்களைப் பொதுவில் பகிர்வது "எதிர்காலத்தில் இப்படி நடக்காமல் தடுக்க உதவும்" என்று நம்புவதாக பிபிசியிடம் கூறினார். திருப்பதி: ரூ.200 கோடி மதிப்புள்ள வெளிநாட்டு பணம் திருட்டா? கையும் களவுமாக பிடிபட்டவர் என்ன ஆனார்?2 மணி நேரங்களுக்கு முன்னர் பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஹவாயின் பெரிய தீவில் உள்ள கிலாவியா எரிமலை, உலகின் மிகவும் துடிப்புடன் செயல்படும் எரிமலைகளில் ஒன்றாகும். இது அடிக்கடி வெடிக்கும் எரிமலையாகும். இந்த ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி இந்த மலையில் இருந்து எரிமலைக் குழம்பு வெளிப்ட்டது. யு.எஸ்.ஜி.எஸ் (USGS) ஹவாய் எரிமலை கண்காணிப்பகத்தின் கூற்றுப்படி, தேசிய பூங்காவின் மூடப்பட்ட பகுதியில் எரிமலை வெடிப்பு குறைவான அளவில் தொடர்ந்து நிகழ்கிறது. குழந்தை எதிர்பாராத விதமாக எரிமலையை நெருங்கிய சம்பவம் கிறிஸ்துமஸ் தினத்தன்று நிகழ்ந்துள்ளது. சில குடும்பங்கள் கிறிஸ்துமஸ் தினத்தன்று எரிமலைக் குழம்பு பாய்வதை நேரில் காண பூங்காவிற்குச் சென்றுள்ளனர். அப்போது ஒரு குழந்தை எரிமலையின் விளிம்பை நோக்கி ஓடியுள்ளது. அதில் விழுந்திருந்தால் குழந்தை இறந்திருக்கும் என்கிறார் ஜெசிகா. "இதுபோன்ற பகுதிகளில் உங்கள் குழந்தைகளை நீங்கள் எப்போதும் கவனமாக கண்காணிக்க வேண்டும். குறிப்பாக சுற்றுலா பகுதிகளில், தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம். அவர்கள் எப்போதும் உங்களுடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்." என்று பூங்கா நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர். "எச்சரிக்கைகளைப் புறக்கணிப்பவர்கள், அபாய அறிக்கைகளைக் கடந்து செல்பவர்கள், அன்புக்குரியவர்களைத் தவற விடுபவர்கள், மற்றும் தடை செய்யப்பட்டப் பகுதிகளுக்குள் சென்று எரிமலையை நெருக்கமாகப் பார்ப்பவர்கள் பெரும் ஆபத்தில் உள்ளனர்." என்று அவர்கள் கருதுகின்றனர். "இந்த தகவலைப் செய்திகளில் பகிர்வது எதிர்காலத்தில் இப்படி நடப்பதை தடுக்கும் என்று நம்புகிறோம்" என்கிறார் ஜெசிகா. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5ywrpep026o
-
திருகோணமலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை சீனத் தூதுவர் வழங்கிவைப்பு
29 DEC, 2024 | 02:05 PM சீன அரசாங்கத்தினால் "சீனாவின் சகோதர பாசம்" என்ற தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர் உணவுப் பொதிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டன. சீன தூதுவர் H.E.Qi Zhenhong திருகோணமலை மாவட்ட செயலகத்தில் வைத்து இப்பொதிகளை வழங்கி வைத்தார். திருகோணமலை மாவட்டத்தில் 700 பேருக்கு தலா 6500 ரூபா பெறுமதியான பொதிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்ட செயலகத்தில் வைத்து 200 பேருக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் ஏனையவர்களுக்கு பிரதேச செயலகங்களின் ஊடாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் சீனத்தூதுவர் H.E.Qi Zhenhong மற்றும் அவரது குழுவினர், அரசாங்க அதிபர் சமிந்த ஹெட்டியாராச்சி, மேலதிக அரசாங்க அதிபர் சுதாகரன், அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் சுகுணதாஸ், ஆளுநரின் செயலாளர் அருள்ராஜ், ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் இராஜசேகர், பிரதேச செயலாளர்கள் உட்பட அரச அதிகாரிகளும் பயனாளிகளும் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/202448
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
பும்ரா சாதனை: கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் - ஆடுகளம் நாளை எப்படி இருக்கும்? 100 ஆண்டு வரலாறு மாறுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய சாதனை படைத்த பும்ரா கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக மெல்போர்னில் நடந்துவரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் நான்காவது போட்டியான பாக்ஸிங் டே டெஸ்ட் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 4-வது நாளான இன்று ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 228 ரன்கள் சேர்த்து, 333 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் நடுவரிசை பேட்டிங்கின் முதுகெலும்பை உடைத்த பும்ரா, சிராஜ் இருவரும் டெய்லண்டர்களான போலந்த்(10), நேதன் லேயான்(41) விக்கெட்டுகளை வீழ்த்த முடியாமல் திணறினர். 173 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்த நிலையில் கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 55 ரன்களுடன் இந்திய பந்துவீச்சாளர்களைச் சோதித்து வருகிறார்கள். முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கும், இந்திய அணி 369 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இதையடுத்து, 105 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. 4வது டெஸ்ட் டிரா ஆகுமா? இந்தியா அல்லது ஆஸ்திரேலியா வெல்லுமா? என்ற எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிறச் செய்துள்ளது. 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி தவறுகளை திருத்திக் கொள்வாரா? 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில் மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா? கோன்ஸ்டாஸை வீழ்த்திய பும்ரா இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நிதிஷ் குமார் ரெட்டியின்(114) விக்கெட்டை இன்று காலை லேயான் பந்துவீச்சில் இழந்தவுடன் 369 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதையடுத்து, 105 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆஸ்திரேலிய அணி தொடங்கியது. கடந்த இன்னிங்ஸில் பும்ரா பந்துவீச்சில் ராம்ப் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஆடிய கோன்ஸ்டாஸை 8 ரன்னில் பும்ரா க்ளீன் போல்டாக்கினார். கண்ணிமைக்கும் வேகத்தில் ஸ்விங் ஆகிய பும்ராவின் பந்தை எதிர்கொள்ள முடியாமல் கோன்ஸ்டாஸ் அவுட்டானார். அடுத்த சிறிது நேரத்தில் உஸ்மான் கவாஜா 21 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஸ்மித்-லாபுஷேன் ஓரளவுக்கு நிலைத்து பார்ட்னர்ஷிப் அமைக்க முயன்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உஸ்மான் கவாஜா 21 ரன்கள் சேர்த்த நிலையில் சிராஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். கடிவாளத்தை நழுவ விட்ட ரோஹித் ஸ்மித்(13) விக்கெட்டையும் சிராஜ் கழற்றினார். சிராஜ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஸ்மித் பெவிலியன் திரும்பினார். அடுத்து களமிறங்கிய டிராவிஸ் ஹெட்(1), மிட்ச்செல் மார்ஷ்(0), அலெக்ஸ் கெரே(2) ஆகியோர் பும்ரா பந்துவீச்சில் விக்கெட்டுகளை இழந்து நடுவரிசை பேட்டிங் உருக்குலைந்தது. 80 ரன்கள் வரை 2 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 11 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஆட்டம் இந்திய அணியின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. ஆனால், இதை தொடர்ந்து எடுத்துச் செல்ல கேப்டன் ரோஹித் சர்மா தவறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கடைசி நேரத்தில் எந்த பந்துவீச்சாளர்களை பயன்படுத்துவது, எந்த பேட்டர் எதில் பலவீனம் என்பதை அறிந்து பந்துவீச்சை மாற்றுவதில் கேப்டன் ரோஹித் தோல்வி அடைந்துவிட்டார் என்று கிரிக்கெட் வர்ணனையாளர்கள் விமர்சித்தனர். லாபுஷேன் மட்டும் களத்தில் இருந்த நிலையில் கேப்டன் கம்மின்ஸ் அவருடன் இணைந்தார். இருவரும் இணைந்து, 7-வது விக்கெட்டுக்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். லாபுஷேன் 70 ரன்களில் சிராஜ் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். ஸ்டார்க் 5 ரன்னில் ரன்அவுட்டானார். கம்மின்ஸும் 41 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். கடைசி விக்கெட்டான போலந்த், நேதன் லயன் இருவரில் ஒருவரை விரைவாக வீழ்த்திவிடலாம் என்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா எண்ணினார். ஆனால், போலந்த், லேயான் இருவரும் 100 பந்துகளுக்கும் சமாளித்து 50 ரன்களுக்கும் மேல் சேர்த்தனர். இதனால், ஆஸ்திரேலிய அணி 333 ரன் முன்னிலை பெற்றது. 'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன?28 டிசம்பர் 2024 அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லாபுஷேன் அடித்தாடுகையில், மிக நெருக்கமாக பீல்டிங் செய்து கொண்டிருந்த இளம் வீரர் ஜெய்ஸ்வால் துள்ளிக் குதிக்கிறார். ஜெய்ஸ்வால் மீது கோபப்பட்ட ரோஹித் 4வது நாளான இன்று ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் மளமளவென விக்கெட்டுகளை இழந்த நிலையில் லாபுஷேன் மட்டும் நிலைத்து பேட் செய்தார். லாபுஷேன் 46 ரன்களை எட்டியிருந்த போது, நிதிஷ் குமார் வீசிய 40-வது ஓவரின்போது, கிடைத்த கிடைத்த கேட்சை ஜெய்ஸ்வால் பிடிக்காமல் நழுவவிட்டார். இதைப் பார்த்த கேப்டன் ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வாலை நோக்கி கடுமையாக பேசினார். இன்று மட்டும் ஜெய்ஸ்வால் 3 கேட்சுகளை நழுவவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லாபுஷேன் 46 ரன்னில் இருந்த போது, நிதிஷ் குமார் பந்துவீச்சில் கொடுத்த கேட்சை ஜெய்ஸ்வால் நழுவவிட்டார். நோபாலால் கிடைத்த வாய்ப்பு கடைசி விக்கெட்டுக்கு போலந்த் - லயன் பார்ட்னர்ஷிப் ஆஸ்திரேலிய அணியின் முன்னிலையை 300 ரன்களுக்கு மேல் உயர்த்தி, இந்திய அணிக்கு நெருக்கடி அளித்துள்ளனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பும் 55 ரன்களை எட்டியுள்ளது. பும்ரா பந்துவீச்சில் லயன் பேட்டில் பட்டு ராகுலிடம் 3வது ஸ்லிப்பில் கேட்சானது, அப்போதே ஆட்டம் முடிந்துவிட்டதாக எண்ணியிருந்த போது, அது நோபாலாக நடுவர் அறிவித்தார். அது மட்டுமல்லாமல் 3வது செஷனில் கடைசி நேரத்தில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பேட் செய்யாமல் ஒரு விதத்தில் ஆஸ்திரேலிய அணியும் காப்பாற்றியுள்ளது. ஆட்டம் முடிய கடைசி நேரத்தில் புதிய பந்தில் ஆஸ்திரேலியப் பந்துவீச்சில் இந்திய தொடக்க பேட்டர்கள் விக்கெட்டுகளை இழந்தால் பெரிய நெருக்கடிக்குள் தள்ளப்படும். அதை தவிர்க்கும் விதத்தில் ஆஸ்திரேலியா டெய்லண்டர்கள் களத்தில் இருந்தார்கள் என்று இந்திய ரசிகர்கள் ஆறுதல்பட்டுக் கொள்ளலாம். உலக அதி வேக சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை இரண்டாம் முறை வென்ற இந்திய வீராங்கனை கொனேரு ஹம்பி5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய வீரர் மீது மோதிய விராட் கோலிக்கு என்ன தண்டனை?26 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடைசி விக்கெட்டுக்கு போலந்த் - லயன் பார்ட்னர்ஷிப் 55 ரன்களை சேர்த்துள்ளது. பும்ரா புதிய சாதனை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்திய போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 200-வது விக்கெட் என்ற மைல்கல்லை எட்டினார். 44 போட்டிகளில் அவர் 200 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். இதன் மூலம் அலெக் பெட்சர், ரிச்சர்ட் ஹாட்லி, காகிசோ ரபாடா, ஜோயல் கார்னர், கம்மின்ஸ் ஆகியோர் வரிசையில் பும்ராவும் இணைந்தார். இவர்கள் அனைவரும் 44 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல் 200 விக்கெட்டுகளை கைப்பற்றுவதற்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 ஆயிரத்துக்கும் குறைவான (3912)ரன்களையே பும்ரா விட்டுக்கொடுத்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சு சராசரி 19.56 என்கிற அளவில் உள்ளது. அந்த வகையில், 20-க்கும் குறைவான சராசரியுடன் குறைந்த போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். பும்ராவின் ஸ்ட்ரைக் ரேட் 42.4 ஆகும். அதாவது ஒவ்வொரு 7 ஓவர்களுக்கு ஒருமுறை ஒரு விக்கெட்டை பும்ரா வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தானின் வக்கார் யூனுஸ், தென் ஆப்பிரிக்காவின் டேல் ஸ்டெயின், ரபாடா ஆகியோருக்கு அடுத்த இடத்தில் பும்ரா உள்ளார். குறிப்பாக சேனா நாடுகள் எனச் சொல்லப்படும் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிராக மட்டும் பும்ரா 142 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதாவது பும்ராவின் 202 டெஸ்ட் விக்கெட்டுகளில் 142 விக்கெட்டுகள் சேனா நாடுகளுக்கு எதிராக வீழ்த்தப்பட்டவை. பட மூலாதாரம்,GETTY IMAGES பும்ராவின் 200 விக்கெட்டுகளில் 64 விக்கெட்டுகள் அனைத்து அணிகளின் டாப்-3 பேட்டர்களுக்கு எதிராக வீழ்த்தப்பட்டவை. தொடக்க ஆட்டக்காரர்களை 50 முறையும், 3வது பேட்டரை 14 முறையும், 4வது பேட்டரை 30 முறையும் வீழ்த்தியுள்ளார். பும்ராவின் 200 விக்கெட்டுகளில் டாப்-4 பேட்டர்கள் விக்கெட்டுகள் மட்டும் 47 சதவீதமாகும். உலகளவில் பும்ராவின் இந்த பந்துவீச்சு 7-வது இடத்திலும், இந்திய அளவில் சிறந்த பந்துவீச்சாகவும் பார்க்கப்படுகிறது. பும்ரா தனது பந்துவீச்சில் அதிக முறை இங்கிலாந்தின் ஜோ ரூட்டை 9 முறையும், அடுத்தபடியாக டிராவிஸ் ஹெட்டை 6 முறையும் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். இந்த டெஸ்டில் கூட டிராவிஸ் ஹெட்டை 2 முறையும் பும்ராதான் வீழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. பரிதாப நிலையில் 'ஹிட் மேன்' ரோஹித் சர்மா 2வது டெஸ்டிலிருந்துதான் பார்டர்- கவாஸ்கர் கோப்பையில் பங்கேற்று விளையாடி வருகிறார். இதுவரை ரோஹித் சர்மா இந்த டெஸ்ட் தொடரில் 22 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளார். 70 பந்துகளை மட்டுமே சந்தித்துள்ளார். ஆனால், ஆஸ்திரேலிய அணியின் டெய்லெண்டர் பேட்டரான, வேகப் பந்துவீச்சாளர் ஸ்காட் போலந்த் இந்த டெஸ்டில் மட்டும் 101 பந்துகளைச்(முதல் இன்னிங்ஸில் 36, 2வது இன்னிங்ஸில் 65) சந்தித்துள்ளார். போலந்த் ஒரு டெஸ்டில் 100 பந்துகளைச் சந்தித்துவிட்ட நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா 3 டெஸ்ட்களிலும் சேர்த்து 70 பந்துகளுக்கு மேல் சந்திக்கவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்து வருகிறார்கள். சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி தவறுகளை திருத்திக் கொள்வாரா?25 டிசம்பர் 2024 சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியா 100 ஆண்டு வரலாற்றை மாற்றுமா? கடந்த 100 ஆண்டுகளில் மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் 4வது இன்னிங்ஸில் 332 ரன்கள்தான் அதிகபட்சமாக சேஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த ரன்களுக்கு மேல் எந்த அணியும் இதுவரை சேஸ் செய்ததில்லை. அப்படியிருக்கையில் கடைசி நாளான(நாளை) 333 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை இந்திய அணி சேஸிங் செய்தால் மெல்போர்ன் மைதானத்தில் புதிய வரலாறு படைக்கும். 1928-ம் ஆண்டு பாக்ஸிங் டே டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 332 ரன்கள் இலக்கை இங்கிலாந்து அணி சேஸிங் செய்ததுதான் இங்கு அதிகபட்சம். இந்திய அணிக்கு 333 ரன்களுக்கும் அதிகமாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதை சேஸிங் செய்தால் புதிய வரலாறு படைக்கும். முக்கியத்துவம் மிகுந்த 5-வதுநாள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுக்குமே இந்த போட்டியில் வெற்றி அவசியமாகும். ஆதலால், வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாகப் போராடும். இந்திய அணியின் முன்னணி பேட்டர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோர் சாதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமாரை முன்கூட்டியே களமிறக்கலாமா என்று கேப்டன் ரோஹித்தை சிந்திக்க வைத்துள்ளார். 5-வது நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்? மெல்போர்ன் எம்சிஜி ஆடுகளம் நாளைய கடைசி நாளை தீர்மானிக்கும் முக்கியமான காரணியாக இருக்கும். ஆடுகளத்தில் தற்போது பிளவுகள் வந்துள்ளன, நாளை வெயில் அதிகரிக்கும் போது ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக மாறக் கூடும். ஒருவேளை ஆடுகளத்தில் ரோலர் போட்டு உருட்டினாலோ அல்லது ஆடுகளத்தில் தண்ணீர் தெளித்து இறுக்கம் செய்தாலோ ஆட்டத்தின் போக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். ஆட்டத்தை சுவாரஸ்யமாகக் கொண்டு செல்வது ஆடுகளத்தின் பராமரிப்பாளர்கள் கையில் இருக்கிறது. மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா?18 டிசம்பர் 2024 இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES மைதானத்தில் குவிந்த ரசிகர்கள் மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் கடந்த 4 நாட்களில் மட்டும் ஏறக்குறைய 2.99 லட்சம் ரசிகர்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய 4-வது நாளில் மட்டும் 43 ஆயிரம் ரசிகர்கள் ஆட்டத்தை பார்த்து ரசித்துள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு மவுசு குறைந்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அதற்கு உயிர் கொடுக்கம் விதத்தில் அதிகளவு வந்து பார்வையிட்டுள்ளனர். நாளை கடைசி நாளில் கூட்டம் இன்னும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது. -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg6zqpze5vo
-
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 179 பேர் பலி !
'நான் எனது இறுதி செய்தியை தெரிவிக்க வேண்டுமா? விபத்துக்குள்ளான தென்கொரிய விமானத்திலிருந்து வந்த குறுஞ்செய்தி Published By: RAJEEBAN 29 DEC, 2024 | 06:11 PM ஞாயிற்றுக்கிழமை காலை 181 பேருடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் 179 பேராவது பலியாகியுள்ளதால் சோகம் கலந்த ஒரு அமைதியான சூழல் தென்கொரியாவில் பரவியது. பயணிகளின் கலக்கமடைந்த உறவினர்கள் நண்பர்கள் முவான் சர்வதேச விமானநிலையத்தில் அவசரமாக கூடி தங்கள் அன்புக்குரியவர்களை தேடினர். விபத்திற்கு சில நிமிடங்களிற்கு முன்னர் விமானத்திலிருந்த தங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் விமானத்தின் இறக்கையின் ஒரு பகுதியில் பறவையொன்று சிக்குண்டுள்ளது என குறுஞ்செய்தி அனுப்பினார் என விமானநிலையத்தில் காணப்பட்ட குடும்பமொன்றை சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். நான் எனது இறுதி வார்த்தைகளை தெரிவிக்க வேண்டுமா என்ற செய்தியும் அந்த பயணியிடமிருந்து வந்துள்ளது. விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிளம்பை கண்டதாகவும் வெடிப்புசத்தங்களை கேட்டதாகவும் உள்ளுர் மக்கள் தெரிவித்தனர் என தென்கொரியாவின் யொன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. விமானம் தரையிறங்குவதை நான் பார்த்தேன் அது தரையிறங்கும் என நினைத்தேன் ஒளிபோன்றை ஒன்றை கண்டேன்,அதன் பின்னர் பாரிய சத்தமொன்று கேட்டது பின்னர் வானில் புகைமண்டலம் தோன்றியது அதன் பின்னர் தொடர்ச்சியான வெடிப்புச்சத்தங்களை கேட்டேன் என விமானநிலையத்திலிருந்து 4.5 கிலோமீற்றர் தொலைவில் காணப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202493
-
தென்கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் விபத்து : 179 பேர் பலி !
தென் கொரியா: விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளான விமானம் - 85 பேர் உயிரிழப்பு பட மூலாதாரம்,REUTERS 29 டிசம்பர் 2024, 01:50 GMT புதுப்பிக்கப்பட்டது 48 நிமிடங்களுக்கு முன்னர் தென்கொரியாவில் 181 பேர் பயணித்த ஒரு விமானம் முவான் விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானது. இதில் குறைந்தது 85 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டின் தீயணைப்பு துறை தெரிவித்துள்ளது. நாட்டின் தென்மேற்கில் உள்ள முவான் சர்வதேச விமான நிலையத்தில், ஓடுபாதையிலிருந்து விலகிச் சென்ற இந்த விமானம் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதாக யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. ஜேஜூ ஏர் நிறுவனத்தின் இந்த விமானத்தில் 175 பயணிகள், 6 விமானப் பணியாளர்கள் உட்பட 181 பேர் பயணித்துள்ளனர். தாய்லாந்திலிருந்து வந்த விமானம் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார் எனவும் மீட்புப் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது எனவும் ஒரு தீயணைப்பு துறை அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். விமானத்தின் பின்புறத்தில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருவதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விமான பயணிகளில் 173 பேர் தென் கொரியர்கள் எனவும், 2 பேர் தாய்லாந்து நாட்டை சேர்ந்தவர்கள் எனவும் யோன்ஹாப் செய்தி முகமை கூறுகிறது. பட மூலாதாரம்,REUTERS விபத்துக்கான காரணம் இன்னும் தெளிவாக தெரியவில்லை. ஆனால், ஒரு பறவை மோதியதால் விமானத்தில் லேண்டிங் கியர் செயலிழந்தது என யோன்ஹாப் கூறுகிறது. இறந்த 85 பேரில் 46 பெண்கள் பேர் பெண்கள் என்றும், 39 பேர் ஆண்கள் என்றும் அந்நாட்டின் தேசிய தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள உறுதிப்படுத்தப்படாத காணொளியில், விமானம் சறுக்கிக்கொண்டே ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று சுவரில் மோதுவது தெரிகிறது. பின்னர் இந்த விமானத்தில் தீப்பிடித்தது. ஒரு விமானப் பணியாளர் மற்றும் ஒரு பயணி மீட்கப்பட்டுள்ளதாகக் கூறும் தீயணைப்புத்துறை, 80 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 30 தீயணைப்பு வாகனங்கள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS முவான் தென் கொரிய தலைநகர் சோலில் இருந்து 288 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. விமான பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் தரும் துறையாகத் தென் கொரியாவின் விமானப் போக்குவரத்துத் துறை கருதப்படுகிறது. ஜேஜூ விமான நிறுவன வரலாற்றில் இதுவே முதல் உயிரிழப்புகளைக் கொண்ட மோசமான விபத்தாகும். தென் கொரியாவின் மிகப்பெரிய குறைந்த கட்டண விமான நிறுவனமான இது 2005-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20e26w86g7o
-
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு உயிரச்சுறுத்தல் ஏதும் கிடையாது ; பாதுகாப்பை மேலும் வரையறுக்கலாம் -அமைச்சர் கிருஷாந்த அபேசேன
Published By: DIGITAL DESK 2 28 DEC, 2024 | 05:24 PM (இராஜதுரை ஹஷான்) முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எவ்வித அச்சுறுத்தலுக்கும் கிடையாதென புலனாய்வு பிரிவு வழங்கிய அறிக்கையின் பிரகாரமே இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பு அதிகம் என்று குறிப்பிடப்பட்டால் அதை 30 ஆக குறைக்கலாமென அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் கிருஷாந்த அபேசேன தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, பொருளதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு சந்தையில் நிலவும் தட்டுப்பாடுகளுக்கு தீர்வு காணப்படும். அரசியலில் இருந்து மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் போலியான பல குற்றச்சாட்டுக்களை தற்போது முன்வைக்கின்றனர். முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை தற்போதைய பிரதான பேசுபொருளாக காணப்படுகிறது. முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு எவ்விதமான அச்சுறுத்தலும் கிடையாது என்று அறிக்கை கிடைத்ததன் பின்னரே வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு மீளப் பெறப்பட்டது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு 60 பொலிஸார் என்ற அடிப்படையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அடுத்த மீளாய்வு அறிக்கையில் பாதுகாப்பு குறைக்கப்படலாம் என்று குறிப்பிடப்பட்டால் வழங்கப்பட்டுள்ள 60 பொலிஸ் பாதுகாப்பை 30 ஆக குறைக்கலாம். மக்களின் வரிப்பணத்தை வீண்விரயம் செய்ய வேண்டிய அவசியம் கிடையாது. முன்னாள் ஜனாதிபதிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் என்று ஊடகங்களில் குறிப்பிடும் தரப்பினர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான தகவல்களை பாதுகாப்பு தரப்புக்கு அளிக்க வேண்டும். அப்போது அது குறித்து உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/202392
-
ராமதாஸ் - அன்புமணி மோதலுக்கு என்ன காரணம்? பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது?
பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் "இது என்னுடைய கட்சி. நான் சொல்வதைக் கேட்காவிட்டால் கட்சியை விட்டு வெளியேறலாம். அது யாராக இருந்தாலும்..." - பாமக தலைவர் அன்புமணிக்கு எதிராக சனி அன்று (டிசம்பர் 28) அக்கட்சியின் நிறுவனத் தலைவர் ராமதாஸ் கூறிய வார்த்தைகள் இவை. கட்சியின் இளைஞரணி தலைவராக தனது மகள்வழிப் பேரனை முன்னிறுத்தியதற்கு எதிராக அன்புமணி கோபப்பட்டதால், ராமதாஸ் இவ்வாறு கூறினார். பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுவில் என்ன நடந்தது? ராமதாஸ் உடன் அன்புமணி வார்த்தை மோதலில் ஈடுபட்டது ஏன்? இதுகுறித்து பா.ம.க நிர்வாகிகள் கூறுவது என்ன? 10.5% இடஒதுக்கீட்டை விட அதிக பலன் பெற்றதா வன்னியர் சமூகம்? ஆர்.டி.ஐ மூலம் வெளியான புதிய தகவல்- பாமக கூறுவது என்ன? தமிழ்நாட்டில் தேமுதிக, பாமக கட்சிகள் பலம் பெற்றுள்ளனவா? ஓர் அலசல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: கள்ளச்சாராய மரணங்கள் முதல் படுகொலைகள் வரை - பலன் தராத எதிர்க்கட்சிகளின் பிரசாரங்கள் பாமக பொதுக்குழுவில் என்ன நடந்தது? விழுப்புரம் மாவட்டம், பட்டானூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் சனிக்கிழமையன்று (டிசம்பர் 28) நடைபெற்றது. பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் தலைமையில் நடந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் அன்புமணி, கௌரவ தலைவர் கோ.க.மணி, வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE பொதுக்குழு கூட்டத்தின் தொடக்கத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன் பிறகு கட்சியின் வளர்ச்சி குறித்து ராமதாஸ் பேசினார். பிறகு, கட்சியின் இளைஞர் அணித் தலைவராக இன்று முதல் முகுந்தன் பரசுமரான் நியமிக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்தார். "மருத்துவர் அன்புமணிக்கு உதவியாக முகுந்தன் செயல்படுவார்" எனவும் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு நன்றி தெரிவித்துப் பேசுவதற்காக கௌரவ தலைவர் கோ.க.மணி மைக்கை கையில் எடுத்தார். அவரிடம் இருந்து மைக்கை வாங்கிய அன்புமணி, "கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் ஆகின்றன. அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியா... என்ன அனுபவம் இருக்கிறது, கட்சியில் அனுபவம் வாய்ந்தவர்களுக்குப் பதவி கொடுங்கள்" என்று தெரிவித்தார். பாமக மீது குடும்பக் கட்சி என்ற விமர்சனம் இருப்பதாகவும் அன்புமணி கூறினார். இதனால் கோபம் அடைந்த மருத்துவர் ராமதாஸ், "கட்சியில் யாராக இருந்தாலும் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவ்வாறு கேட்காவிட்டால் இந்தக் கட்சியில் யாரும் இருக்க முடியாது" எனப் பதில் கொடுத்தார். "இது நான் உருவாக்கிய கட்சி" என ராமதாஸ் கோபத்தை வெளிப்படுத்த, அதற்கு அன்புமணி, "சரி" என்று மட்டும் பதில் அளித்தார். இதனால் மேலும் கோபம் அடைந்த ராமதாஸ், "மீண்டும் சொல்கிறேன். மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமன் நியமிக்கப்படுகிறார்" என்றார். மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன?28 டிசம்பர் 2024 யானை மீது ஊர்வலமாக சென்ற பிரிட்டிஷ் வைஸ்ராய் மீது வெடிகுண்டு தாக்குதல் - புரட்சியாளர்கள் திட்டமிட்டது எப்படி?28 டிசம்பர் 2024 வெளியேறிய அன்புமணி பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE அப்போது தன் கையில் இருந்த மைக்கை அன்புமணி கீழே வைத்தார். மீண்டும் அதை எடுத்துப் பேசிய அவர், "பனையூரில் அலுவலகம் ஒன்றை திறந்துள்ளேன். அங்கு என்னைத் தொண்டர்கள் சந்திக்கலாம்" எனக் கூறிவிட்டு செல்போன் எண்ணைப் பகிர்ந்தார். அப்போதே, "முகுந்தன் பதவியை யாராலும் மாற்ற முடியாது. அதில் விருப்பம் இல்லையென்றால்" என ராமதாஸ் கூட்டத்தைப் பார்த்துக் கேட்க, "கட்சியை விட்டுப் போகலாம்" என நிர்வாகிகள் தரப்பில் ஒரு சாராரிடம் இருந்து பதில் வந்துள்ளது. தொடர்ந்து, "நான் தொடங்கிய கட்சி இது. நான் சொல்வதைத் தான் செய்ய வேண்டும். இதில் விருப்பம் இல்லாதவர்கள் விலகிக் கொள்ளலாம்" என ராமதாஸ் கூறினார். சிறிது நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அன்புமணி வெளியேறினார். முகுந்தன் பரசுராமன் யார்? பொதுக்குழுவில் கட்சியின் இளைஞரணித் தலைவரின் பெயரை ராமதாஸ் அறிவித்தபோது, மேடையே நோக்கி முகுந்தன் பரசுராமன் வரவில்லை. "யார் இந்த முகுந்தன் பரசுராமன்?" என பா.ம.க நிர்வாகிகளிடம் கேட்ட போது, ராமதாஸின் மூத்த மகள் காந்திமதியின் மகன் என்றும் அவருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்த்துக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர். இந்தச் சம்பவம் பாமக தொண்டர்களிடையே விவாதப் பொருளாக மாறியுள்ளன. கூட்டத்தில் அன்புமணி பேசும் போது ஒரு சாராரும் ராமதாஸ் பேசும் போது ஒரு சாராரும் கை தட்டி தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். 'வளாகம் மட்டுமல்ல, வகுப்பறையிலும் கூட பிரச்னைதான்' - அண்ணா பல்கலை. மாணவிகள் கூறியது என்ன?28 டிசம்பர் 2024 சூரியனுக்கு மிக அருகில் பாதிப்பின்றி நெருங்கிச் சென்று வரலாறு படைத்த பார்க்கர் விண்கலம்27 டிசம்பர் 2024 கட்சியின் செல்வாக்கில் பாதிப்பு வருமா? பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் "கட்சியில் இரண்டாம் கட்டத் தலைவர்கள் இருக்கும் போது, பல்வேறு விஷயங்களைப் பேசுவதற்கான தளம் கிடைக்கும். ஆனால், இரண்டாம் கட்டத் தலைவர்களே இல்லாத கட்சியாக பா.ம.க இன்று மாறிவிட்டது" என்று கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் சிகாமணி. பாமகவின் தொடக்க காலங்களில் தலித் எழில்மலை, பேராசிரியர் தீரன் போன்றோர் கட்சியை வளர்த்ததாக கூறிய சிகாமணி, "வாரிசு அரசியலைக் கடுமையாக எதிர்த்துப் பேசிய ராமதாஸ், பிற்காலத்தில் தனது மகனை முன்வரிசைக்கு கொண்டு வந்தார்" என்கிறார். குடும்பத்துக்குள் பதவிகளைக் கொடுப்பது விமர்சனத்தை ஏற்படுத்தும் என அன்புமணி கூறியதைக் குறிப்பிட்ட சிகாமணி, "கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தருமபுரி தொகுதியில் சவுமியாவை போட்டியிட வைக்கும் போது இந்தக் கேள்விகளை அன்புமணி முன்வைத்திருக்க வேண்டும்?" என்றார். "அன்புமணியைத் தவிர ராமதாசுக்கு எதிராக வேறு யார் எதிர்த்துப் பேசியிருந்தாலும் இந்நேரம் கட்சியை விட்டு நீக்கியிருப்பார்கள். இதுபோன்ற சம்பவங்கள், வடமாவட்டங்களில் அக்கட்சியை ஆதரிக்கும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தும்" என்று சிகாமணி கூறினார். மன்மோகன் சிங்: இந்தியாவின் தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி27 டிசம்பர் 2024 நல்லகண்ணு: சிறையும் போராட்டங்களும் நிறைந்த வாழ்க்கை - முக்கிய தருணங்கள்26 டிசம்பர் 2024 பாமக நிர்வாகிகள் சொல்வது என்ன? பட மூலாதாரம்,GK MANI TWITTER PAGE படக்குறிப்பு, பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இதுகுறித்து, பாமக கௌரவ தலைவர் கோ.க.மணியிடம் விளக்கம் பெறுவதற்கு பிபிசி தமிழ் முயன்றது. அவரிடம் இருந்து பதில் பெற முடியவில்லை. "தனது பெயரைக் குறிப்பிட வேண்டாம்" என்ற நிபந்தனையுடன் பிபிசி தமிழிடம் பேசிய பாமகவின் மூத்த தலைவரும் மாநில நிர்வாகியுமான ஒருவர், "எல்லா கட்சிகளுக்குள்ளும் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்கின்றன. இது எங்கள் கட்சியின் பொதுக்குழு. அதில் தங்களின் கருத்தை சிலர் முன்வைத்துள்ளனர்" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பொதுக்குழுக்களில் தங்களின் எதிர்ப்பை நிர்வாகிகள் பதிவு செய்வது வழக்கமாக உள்ளது. பாமக பொதுக்குழுவில் நடந்ததை ஆரோக்கியமான ஒன்றாகக் கருத வேண்டும்" எனவும் அவர் குறிப்பிட்டார். "கட்சியின் சீனியர்களை மதிக்க வேண்டும் என அன்புமணி கூறுவதைக் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறிய அவர், "கட்சிக்குள் நியமனம் தொடர்பாக நடந்த கலந்துரையாடல் இது. கட்சியும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்" எனக் கூறினார். முகுந்தன் பரசுராமனை நியமனம் செய்வதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவிப்பது குறித்துக் கேட்டபோது, "இதைப் பற்றி எதுவும் பேச விரும்பவில்லை" எனக் கூறியதோடு மேலதிக கேள்விகளுக்குப் பதில் அளிக்க மறுத்துவிட்டார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c77jm5gn262o
-
மூத்த எழுத்தாளர் நா.யோகேந்திரநாதன் காலமானார்
29 DEC, 2024 | 11:11 AM ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார். கனடாவில் வசித்துவந்த இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். யோகேந்திரநாதன் எழுதிய “34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு” நாவல் அண்மையில் வெளியாகி மிகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202436
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
LIVE 4th Test, Melbourne, December 26 - 30, 2024, India tour of Australia Australia (70 ov) 474 & 189/9 India 369 Day 4 - Session 3: Australia lead by 294 runs. Current RR: 2.70 • Min. Ov. Rem: 19 • Last 10 ov (RR): 28/1 (2.80)
-
“ஆபிரிக்க நத்தைகளால் பேராபத்து”
கிழக்கு ஆப்பிரிக்க நத்தை: ஆண்டுக்கு 500 முட்டைகள் இடும் இவை இந்தியாவில் ஊடுருவியது எப்படி? என்ன ஆபத்து? கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 28 டிசம்பர் 2024, 05:23 GMT பருவமழைக் காலத்தின் ஓர் அதிகாலை வேளை அது. வேளச்சேரி ரயில் நிலையத்திற்குப் பின்புறத்திலுள்ள குடியிருப்புப் பகுதியைச் சுற்றியுள்ள அமைதியும் பசுமையும் நிறைந்த சாலை. நான்கு அடி எடுத்து வைப்பதற்குள் நான்கைந்து நத்தைகளைப் பார்த்துவிடலாம். சாலையோரத்தில் முளைத்திருந்த காக்காமூக்கு, வெள்ளெருக்கு, எருக்கு ஆகிய செடிகளில் கிளைக்கு ஏழெட்டு நத்தைகளைப் பார்க்கலாம். அவற்றின் பெயர் கிழக்கு ஆப்பிரிக்க நத்தை (Giant East African Snail). இந்தியாவில் விவசாயிகளுக்கு எதிரியாகக் கருதப்படுகின்ற இந்த நத்தை இனம், ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது. ஓர் ஆண்டுக்கு அதிகபட்சமாக 500 முட்டைகளுக்கு மேல் இடக்கூடிய இந்த நத்தையினம் இந்தியாவுக்குள் வந்தது எப்படி? இதனால் ஏற்படும் அபாயங்கள் என்ன? இவற்றைக் கட்டுப்படுத்துவது இன்னும் சவாலாகவே இருப்பது ஏன்? பெண் சிங்கம்தான் வேட்டையாடும் என்றால் ஆண் சிங்கம் என்ன செய்யும்? சிவிங்கிப்புலிகள் வந்தால் சிங்கங்களுக்காக காலி செய்த 1600 குடும்பங்களுக்கு என்ன பதில்? காட்டுயிர் விஞ்ஞானி ரவி செல்லம் இலைகளை தைத்து கூடு கட்டி விவசாயம் காக்கும் தையல்கார எறும்புகள் - எப்படி? இலைகளை தைத்து கூடு கட்டி விவசாயம் காக்கும் தையல்கார எறும்புகள் - எப்படி? கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் இந்தியாவுக்கு வந்தது எப்படி? தென்னிந்தியாவில் காணப்படும் பிற நத்தைகளைவிட அளவில் பெரிதாக வளரக்கூடிய இவை கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை. பிரிட்டிஷ் மெல்லுடலி ஆய்வாளரான வில்லியம் ஹென்றி பென்சன், 19ஆம் நூற்றாண்டில் இரண்டு கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தார் என்கிறது ஓர் ஆய்வு. மொரிஷியஸில் இருந்து அவர் கொண்டு வந்த அந்த ஒரு ஜோடி நத்தைகளை, திரும்பிச் செல்லும்போது, தனது நண்பரும் அண்டை வீட்டில் வாழ்ந்தவருமான ஒருவரிடம் கொடுத்துச் சென்றார். அந்த நபர், தன்னிடம் கொடுக்கப்பட்ட நத்தைகளை கொல்கத்தாவில் இருந்த தனது வீட்டுத் தோட்டத்தில் திறந்துவிட்டார். இதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் இந்த நத்தை இனம் பல்கிப் பெருகிவிட்டதாக 1858இல் பென்சன் பதிவு செய்துள்ளார். இப்படித்தான் இந்தியாவுக்குள் இந்த நத்தைகளின் பெருக்கம் தொடங்கியது. அதற்குப் பிறகு, வரலாற்றில் அதிகமாக ஆய்வு செய்யப்பட்ட நத்தை இனங்களில் இதுவும் ஒன்று. இவை இந்தியா முழுக்கப் பரவியதில் மனிதர்களுக்குப் பெரும் பங்கு இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணத்திற்கு, பென்சன் விட்டுச் சென்ற நத்தைகள் கொல்கத்தாவில் இனப்பெருக்கம் செய்து பல்கிப் பெருகின. கொல்கத்தாவில் இருந்து, 1960களில் செல்லப் பிராணியாக வளர்க்கும் ஆசையில் கொல்லர் ஒருவர் அதை பிகாரில் உள்ள தனது ஊருக்குக் கொண்டு சென்றார். பிறகு அவை பிகாரின் அண்டை மாநிலங்களுக்கும் பரவின. அதேபோல், விவசாயி ஒருவர் அவற்றைப் பிடித்து ஆந்திர பிரதேசத்தின் அரக்குப் பள்ளத்தாக்கில் அவருக்குச் சொந்தமாக இருந்த ஒரு தோட்டத்தில் 1996ஆம் ஆண்டு கொண்டு வந்து விட்டார். இப்படியாக நாடு முழுவதும் பரவிய கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள், 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பயிர்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் உயிரினங்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பின், உலகளவில் ஆபத்தான 100 ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலிலும் உள்ளது. குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 டைட்டானிக் கப்பலை சுற்றி ஆழ்கடலில் இத்தனை ஆபத்துகளா? ஆய்வாளர்களின் நேரடி அனுபவம்24 டிசம்பர் 2024 அளவுகடந்த இனப்பெருக்கம் பிற நத்தை இனங்களைப் போலவே, இவையும் இருபாலுயிரி பிரிவைச் சேர்ந்தவைதான். அதாவது, ஒரே நத்தையில் ஆண், பெண் இரு பாலுக்குமான இனப்பெருக்க உறுப்புகளும் இருக்கும். இதன்மூலம் இனப்பெருக்கத்தில் ஈடுபடும் இரண்டு நத்தைகளுமே கரு உருவாக விந்தணுக்களைக் கொடுப்பதோடு, விந்தணுக்களைப் பெற்றுத் தங்களது முட்டையில் கருவை உருவாக்கவும் செய்கின்றன. இத்தகைய உயிரினங்களை இருபாலுயிரி என்று அறிவியலாளர்கள் அழைக்கின்றனர். ஆனால், இது ஏன் ஆக்கிரமிப்பு உயிரினமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது? அதைப் புரிந்துகொள்ள நாம் முதலில் ஆக்கிரமிப்பு உயிரினம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட சூழலியல் அமைப்புக்குத் தொடர்பில்லாத ஓர் உயிரினம், அங்கு ஊடுருவி வேகமாகப் பரவி, அந்தப் பகுதியுடன் இயற்கைத் தொடர்பைக் கொண்டிருக்கும் பிற உயிரினங்களின் இருப்புக்கே அச்சுறுத்தலாக மாறும்போது, அந்த உயிரினம் ஆக்கிரமிப்பு உயிரினமாகக் கருதப்படுகிறது. கப்பல் போக்குவரத்து, வணிகம், அலங்காரம், வளர்ப்பு போன்ற காரணங்களுக்காகக் கொண்டுவரப்படுவது எனப் பல்வேறு காரணங்களால் ஒரு புதிய வாழ்விடத்திற்குள் நுழையும் உயிரினங்கள் அல்லது தாவரங்கள் இவ்வாறு ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறலாம். கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளைப் பொறுத்தவரை, பென்சன் இந்தியாவுக்கு கொண்டு வந்த ஒரு ஜோடி நத்தைகள், இந்திய நிலப்பரப்பை அவை ஆக்கிரமிக்கத் தொடக்கப் புள்ளியாக அமைந்தன. இந்த நத்தைகள், உள்ளூர் நத்தை இனங்களைவிட மிக வேகமாகவும் அதிகமாகவும் இனப்பெருக்கம் செய்வதால், அவற்றைவிட அதிவிரைவாகப் பரவி வாழ்விடங்களை ஆக்கிரமித்துக் கொள்கின்றன. ஒரு கிழக்கு ஆப்பிரிக்க நத்தை, ஓர் ஆண்டில் 5 முதல் 6 முட்டைத் தொகுப்புகளை இடுகின்றன. ஒரு தொகுப்பில் 150 முட்டைகள் வரை இருக்கும். இதன்படி, ஓர் ஆண்டில் அவை சுமார் 500 முட்டைகள் வரை இடுவதாகக் கூறுகிறார் பெங்களூருவில் உள்ள அசோகா சுற்றுச்சூழல் ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்த மூத்த ஆய்வாளரும் மெல்லுடலிகள் வல்லுநருமான என்.ஏ.அரவிந்த். அதோடு உணவுச் சங்கிலியில், ஒவ்வோர் உயிரினத்திற்கும் அவற்றை உண்ணக்கூடிய வேட்டையாடி உயிரினம் இருக்கும். ஆனால், "இந்த நத்தைகளுக்கு இந்திய நிலப்பரப்பில் வேட்டையாடி எதுவும் இல்லாததும் இவை பெருகி சூழலியல் சமநிலையைக் குலைக்கக் காரணமாக அமைகின்றன" என்கிறார் அவர். நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள்18 டிசம்பர் 2024 மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 விவசாயத்திற்கு ஊறு விளைவிக்கிறதா? இந்த நத்தைகள் விவசாயத்திற்குப் பெரும் எதிரியாக இருப்பதாகக் கூறுகிறார் அரவிந்த். "கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் எதை வேண்டுமானாலும் சாப்பிடும். புதர்கள், செடிகள் என இயற்கையில் வளர்ந்திருக்கும் தாவரங்களில் தொடங்கி, வாழை, பாகற்காய், வெண்டைக்காய், தக்காளி, உருளைக் கிழங்கு, பசலைக் கீரை, கொத்தமல்லி எனப் பல்வகை பயிர்ச் செடிகள் உள்பட அனைத்தையுமே சாப்பிடும்." தாவரங்கள் மட்டுமின்றி இறந்த உயிரினங்களையும் அவை சாப்பிடுவதாகக் கூறினார் அரவிந்த். இந்த நத்தை இனம், "அளவில் சுமார் 15 செ.மீ வரைக்கும் வளரக்கூடியவை." கடந்த 2020-ஆம் ஆண்டு டிசம்பரில், மதுரை மாவட்டத்திலுள்ள பரவை என்ற பகுதியில் வாழைத் தோட்டங்களில் பெருந்திரளாகப் பரவிய இந்தக் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளால் பெருமளவிலான வாழை உற்பத்தி அழிக்கப்பட்டது. கோவை மாவட்டத்தில் இவை கடந்த சில ஆண்டுகளாகவே விவசாயிகள் மத்தியில் முக்கியப் பிரச்னையாக இருந்து வருகிறது. தக்காளி, வெண்டைக்காய், பாகற்காய் போன்ற செடிகளின் மீது பரவி முற்றிலுமாக அழித்துவிடுவதால், பெருமளவிலான பொருளாதார இழப்பு ஏற்படுகிறது. இந்த நத்தைகளால் அதிகளவில் பாதிக்கப்படுவது சிறு, குறு விவசாயிகளே என்கிறார் முனைவர் அரவிந்த். "ஐம்பது ஏக்கர், நூறு ஏக்கர் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளைவிட, ஒன்றிரண்டு ஏக்கர் வைத்துள்ள விவசாயிகளே இதனால் அதிக இழப்புகளைச் சந்திக்கிறார்கள். ஏனெனில், பெருவிவசாயிகளால் ஒரு ஏக்கர் வாழை உற்பத்தியில் ஏற்படும் இழப்பை ஈடுகட்ட முடியும். ஆனால், அந்த ஒரு ஏக்கர் மட்டுமே இருக்கும் விவசாயிக்கு, தனது மொத்த உற்பத்தியுமே வீணாகும்போது இழப்பின் வீரியம் பெரிதாக இருக்கும்," என்கிறார் அவர். செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 அமேசானின் இந்த 'கொதிக்கும் நதி' சூடாவது எப்படி? மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?14 டிசம்பர் 2024 சூழலியல் சமநிலையை எவ்வாறு குலைக்கிறது? இவற்றின் வாழ்வியல் குறித்து விளக்கிய முனைவர் அரவிந்த், குளிர்ச்சியான பருவநிலையும் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும்போது மட்டுமே இவை நிலத்தின் மேல்புறத்தில் நடமாடுவதாகக் கூறினார். அதுதவிர அனைத்து நேரங்களிலும் நிலத்திற்கு அடியிலேயே அவை வாழ்கின்றன. இவை அளவில் பெரிதாகவும் எண்ணிக்கையில் அதீதமாகப் பெருகியும் வருவதால், ஒரு குறிப்பிட்ட நிலத்தில் பூர்வீகமாக வாழும் மற்ற நத்தை இனங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறுகிறார் அரவிந்த். அதோடு இந்த நத்தைகள் மிகத் தீவிரமாகச் சாப்பிடுகின்றன. பொதுவாக, ஒரு நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கும் அங்குள்ள தாவரங்களுக்கும் இடையே ஓர் இயற்கை உறவு காணப்படும். அவை ஒன்றிணைந்து பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருவதால், ஓர் ஒத்திசைவு காணப்படும். ஆனால், புதிதாக ஊடுருவும் கிழக்கு ஆப்பிரிக்க நத்தையைப் போன்ற உயிரினங்களுக்கும் அவற்றுக்கும் இடையே எந்தவித ஒத்திசைவும் இருக்காது. அதனால், இவற்றின் வேகத்திற்கும் பசிக்கும் உள்ளூர்த் தாவரங்கள் மற்றும் உயிரினங்களால் ஈடுகொடுக்க இயலாது. இதன் விளைவாக, மற்ற நத்தைகளுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்படும், அது சில நேரங்களில் இன அழிப்புக்குக்கூட வித்திடும் என்கிறார் அரவிந்த். இந்த நத்தைகளின் வாழ்வியலைப் புரிந்துகொள்வதற்காக, அவற்றின் நடத்தைகளைக் கண்காணித்துள்ளேன். பெரும்பாலும், மாலை அந்தி சாயும் நேரத்தில் இருந்து காலையில் அதிகபட்சமாக 7 மணி வரை அவற்றின் நடமாட்டத்தைக் காண முடியும். இலைகள், பழங்கள், விதைகள் என அவை பாரபட்சமின்றிச் சாப்பிடுவதைக் கண்டுள்ளேன். ஒருமுறை எருக்கஞ்செடியின் அடித்தண்டு முதல் நுனிப்பகுதி வரை நிறைந்திருந்த நத்தைகளை எண்ணிப் பார்த்தபோது கிட்டத்தட்ட 30 நத்தைகள் இருந்தன. இவை மழைக்காலங்களில் ஈரப்பதம் நிறைந்து காணப்படும்போது அதிகம் தென்படும். பிற காலங்களில் வெப்பத்தைத் தவிர்ப்பதற்காக நிலத்தடியில் சென்றுவிடுகின்றன. மழைக்காலங்களில்கூட இரவு நேரங்களில் வெளியே நடமாடும் இவை, பகலில் நிலத்தடியில் குளிர்ச்சி மற்றும் ஈரப்பதம் தேடிச் சென்றுவிடுவதாகக் கூறுகிறார் அரவிந்த். கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம்12 டிசம்பர் 2024 கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை அழிப்பதில் உள்ள சவால் என்ன? இந்த நத்தைகளின் தாயகமாகக் கருதப்படும் புருண்டி, எத்தியோப்பியா, மொரிஷியஸ், கென்யா, தான்சானியா போன்ற கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இவற்றை வேட்டையாடிச் சாப்பிடக்கூடிய நத்தைகள், பறவைகள், தட்டைப்புழுக்கள் (Flatworms) இருக்கின்றன. ''ஆனால், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் இவற்றைச் சாப்பிடக்கூடிய வேட்டையாடிகளே இல்லை. இதனால் அவை பல்கிப் பெருகுகின்றன. உதாரணமாக இந்திய நிலப்பரப்பை எடுத்துக்கொண்டால், இங்குள்ள தாவரங்கள், உயிரினங்கள் அனைத்துக்கும் இடையே இயற்கையாகவே ஓர் உறவு உருவாகியிருக்கும். இதற்கிடையே ஊடுருவும் உயிரினத்திற்கும் அதற்கும் தொடர்பிருக்காது. இந்திய நிலப்பரப்பில் வாழும் உயிரினங்கள் எதுவும் அவற்றைச் சாப்பிட விரும்பவில்லை. சொல்லப்போனால், இந்த நத்தைகளை அவை ஓர் உணவாகவே கருதவில்லை. இது இவற்றுக்குச் சாதகமான சூழலை ஏற்படுத்திவிட்டது." என்கிறார் அரவிந்த் "ஆக உணவுக்குப் பஞ்சமில்லை, வாழ்விடத்திற்குக் குறைவில்லை, அபாயங்கள் ஏதுமில்லை. இத்தகைய சொர்க்கபுரியைப் போன்றதொரு சூழலில் எந்தவோர் உயிரினமும் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்குப் பெருகவே செய்யும். அதுதான் கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் விஷயத்திலும் நடந்துள்ளது.'' என்கிறார் அவர். ஹவாய் தீவிலும் ஆஸ்திரேலியாவிலும் இவற்றை அழிப்பதற்காக, ரோஸி வுல்ஃப் நத்தை என்ற வேட்டையாடி நத்தையை அறிமுகம் செய்தனர். ஆனால், "அவை கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளை மட்டுமின்றி உள்ளூர் நத்தைகளையும் சாப்பிடத் தொடங்கியதால் பல எதிர்மறை விளைவுகள் ஏற்பட்டன," என்கிறார் அரவிந்த். நீலகிரி வரையாடு: ரேடியோ காலர் பொருத்தும் முயற்சியில் இறந்த கர்ப்பிணி வரையாடு - முழு பின்னணி11 டிசம்பர் 2024 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள்5 டிசம்பர் 2024 இதன் பரவலைத் தடுக்க வழியே இல்லையா? கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளின் பரவலைத் தடுக்க முனைவர் அரவிந்த் ஒரு திட்டத்தை முன்வைக்கிறார். "பீருடன் வெந்நிலா எசென்ஸ் கலந்து அல்லது அழுகிய வாழைப்பழங்களை ஈரத்துணியில் சுற்றி வைத்துவிட வேண்டும். மாலை வேளையில் சீரான இடைவெளியில் வெவ்வேறு இடங்களில் வைத்துவிட்டு, அடுத்த நாள் காலையில் சென்று பார்த்தால், நத்தைகள் அதை நோக்கிப் படையெடுத்து இருப்பதைக் காண முடியும்," என்கிறார் அவர். அப்படிக் கூடும் நத்தைகளில் உள்ளூர் நத்தைகளும் இருக்க வாய்ப்புண்டு. அவற்றைக் கவனமாகப் பிரித்து எடுத்துவிட்டு, ஆப்பிரிக்க நத்தைகளை உப்புநீரில் போட்டால் அவை இறந்துவிடும். ஆனால், இந்தச் செயல்முறையை அனுதினமும் செய்துகொண்டே இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் அரவிந்த். "மொத்தமாக ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் ஆப்பிரிக்க நத்தைகளே இல்லை என உறுதியாகத் தெரியும் வரை இதைச் செய்ய வேண்டும்." அவரது கூற்றுப்படி, ஒருவேளை இரண்டு நத்தைகள் இதிலிருந்து தப்பித்தாலும், அவை மீண்டும் பல்கிப் பெருகிவிடும். ஏனெனில், "இப்போது நாடு முழுக்க சூழலியல் சமநிலையைச் சீர்குலைக்கும் இந்த உயிரினம், ஆரம்பத்தில் இந்திய நிலப்பரப்பிற்குள் வந்தபோது அவற்றின் எண்ணிக்கை வெறும் இரண்டுதானே." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr56zdq83m1o
-
கஜகஸ்தானில் பயணிகள் விமானம் வெடித்து சிதறியது
விமானம் விழுந்து நொருங்குவதற்கு முன்னர் ஏதோ மோதியது போன்ற பாரிய சத்தங்கள் கேட்டன- அஜர்பைஜான் விமானத்தில் பயணித்தவர்கள் 28 DEC, 2024 | 09:33 AM அஜர்பைஜான் எயர்லைன்ஸிற்கு சொந்தமான விமானம் குரொஸ்னியை நெருங்கிக்கொண்டிருந்தவேளை ஏதோ மோதியது போன்ற ஒரு பாரிய சத்தத்தை கேட்டதாக விமானவிபத்தில் உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டுபயணிகளும் ஒரு விமானப்பணியாளரும் ரொய்ட்டருக்கு இதனை தெரிவித்துள்ளனர். அஜர்பைஜான் எயர்லைன்சிற்கு சொந்தமான விமானம் கஜகஸ்தானின் அக்டாவு நகரில் தீப்பிடித்து எரிந்து விழுந்து நொருங்கியதில் 38 பேர் உயிரிழந்தனர். இந்த விமானம் ரஸ்யாவின் தென்பகுதிக்கு அருகில் சென்ற பின்னர் தனது பயணப்பாதையை மாற்றியது. தென்ரஸ்யாவிலேயே உக்ரைனின் ஆளில்லா விமானங்களிற்கு எதிராக ரஸ்யா அதிகளவில் விமான எதிர்ப்பு தாக்குதல்களை மேற்கொண்டுவந்துள்ளது. பாரிய சத்தத்தின் பின்னர் விமானம் விழப்போகின்றது என நான் நினைக்கின்றேன் என மருத்துவமனையிலிருந்த படி பயணிகளில் ஒருவரான சுபோன்குல் ரகிமோவ் தெரிவித்துள்ளார். பாரிய சத்தத்தை கேட்டவுடன் பிரார்த்தனையில் ஈடுபடதொடங்கினேன் என தெரிவித்துள்ள அவர் விமானம் ஏதோஒருவகையில் சேதமாக்கப்பட்டுள்ளது என்பது வெளிப்படை அது முன்னைய விமானமாகயிருந்தது மது அருந்திய விமானம்போலயிருந்தது என குறிப்பிட்டுள்ளார். நானும் பாரிய சத்தத்தை கேட்டேன் என மற்றுமொரு பயணியும் தெரிவித்துள்ளார். நான் மிகவும் அச்சமடைந்தேன்,என வபா ஷபனோவா ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார்.இரண்டாவது சத்தமும் கேட்டது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/202344
-
ஐசிசி தரவரிசை - ஜஸ்பிரித் பும்ரா முதலிடம்
அஸ்வினின் வரலாற்று சாதனையை சமன் செய்த பும்ரா இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, சமீபத்திய ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய பந்து வீச்சாளராக அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார். இதன்படி இதுவரை ஒரு இந்திய பவுலர் வைத்திருந்த அதிகபட்ச புள்ளிமதிப்பீடான அஸ்வினின் சாதனையை ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக செயல்பட்டால் அஸ்வினின் ஆல்டைம் சாதனையை முறியடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தற்போது ஐசிசி தரவரிசை பட்டியலில் செய்யப்பட்ட அப்டேட்டின் படி, இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 904 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளார். பிரிஸ்பேனில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 9 விக்கெட்டுகளை எடுத்த பும்ரா, தரவரிசை பட்டியலில் 14 புள்ளிகளை கூடுதலாக பெற்றுள்ளார். இதன்மூலம் 2016-ம் ஆண்டு அதிக டெஸ்ட் புள்ளிகளை பெற்ற ஒரு இந்திய பவுலராக அஸ்வின் பதிவுசெய்த 904 புள்ளிகள் என்ற சாதனையை, ஜஸ்பிரித் பும்ரா சமன்செய்துள்ளார். ஐசிசி தரவரிசையில் பவுலராக அதிக புள்ளிகள் எடுத்தவர்கள் பட்டியலில் முன்னாள் இங்கிலாந்து பவுலர்கள் சிட்னி பார்ன்ஸ், ஜார்ஜ் லோமன், இம்ரான் கான், முத்தையா முரளிதரன், க்ளென் மெக்ராத் முதலிய ஜாம்பவான் பவுலர்கள் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர். ஐசிசி தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற பவுலர்கள்: 1. சிட்னி பார்ன்ஸ் – 932 புள்ளிகள் – இங்கிலாந்து – 1914 2. ஜார்ஜ் லோமன் – 931 புள்ளிகள் – இங்கிலாந்து – 1896 3. இம்ரான் கான் – 922 புள்ளிகள் – பாகிஸ்தான் – 1983 4. முத்தையா முரளிதரன் – 920 புள்ளிகள் – இலங்கை – 2007 5. க்ளென் மெக்ராத் – 914 புள்ளிகள் – ஆஸ்திரேலியா – 2001 6. பாட் கம்மின்ஸ் – 914 புள்ளிகள் – ஆஸ்திரேலியா – 2019 19வது இடத்தில் 904 புள்ளிகளுடன் ரவிச்சந்திரன் அஸ்வின், 20வது இடத்தில் 904 புள்ளிகளுடன் ஜஸ்பிரித் பும்ரா, 26வது இடத்தில் 899 புள்ளிகளுடன் ஜடேஜா முதலியோர் நீடிக்கின்றனர். https://thinakkural.lk/article/314190
-
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்தோனேஷிய கப்பல்
28 DEC, 2024 | 05:01 PM (எம்.மனோசித்ரா) இந்தோனேஷிய கடற்படைக்கு சொந்தமான 'க்ரி சுல்தான் ஸ்கந்தர் முடா - 367' என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (28) உத்தியோகபூர்வ விஜயமாக கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இக்கப்பல் இந்தோனேஷிய கடற்படையின் சிக்மா - கோர்வேட் ரகத்தைச் சேர்ந்ததாகும். நேற்று முற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இந்த கப்பல் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்கப்பட்டது. 120 பணியாட்களைக் கொண்ட இந்தக் கப்பல் 9071 மீற்றர் நீளமுடையதாகும். இதன் கட்டளை அதிகாரியாக கப்டன் அனுகேரா அன்னுறுல்லா செயற்படுகின்றார். இக்கப்பல் நாட்டிலிருக்கும் காலத்தில் நாட்டின் முக்கிய இடங்களுக்கு செல்லவுள்ளதோடு, திங்களன்று நாட்டிலிருந்து புறப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/202400
-
நாடளாவிய ரீதியில் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு ஆயுதப்படைகளுக்கு அழைப்பு
28 DEC, 2024 | 04:43 PM (எம்.மனோசித்ரா) நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை (27) முதல் அமுலாகும் வகையில், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் உத்தரவு அடங்கிய அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் வெளியிடப்பட்டுள்ளது. பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 12ஆவது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு இணங்க, நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் மற்றும் தொடர்புடைய உள்ளுர் நீர் வழிகளிலும் பொது ஒழுங்கை நிலைநாட்ட முப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/202396
-
ஆறுமுகம் இது யாரு முகம்?
உண்மையாக நடந்ததை அழகாக எழுதியுள்ளீர்கள் ஐயா, வாழ்த்துகள்.
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை; காஸாவில் அதிகரிக்கும் பலி எண்ணிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணயக் கைதிகளாக காஸா முனைக்கு ஹமாஸ் அமைப்பினர் கடத்திச் சென்றனர். இவர்களை மீட்கும் முயற்சியில், இஸ்ரேல் போர் தொடுத்தது. ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா உள்ளது. லெபனானில் இயங்கிவரும் இந்த ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு ஈரான் ஆதரவாக உள்ளது. இதனால் போர், கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தலைவர்கள், தளபதிகள் கொல்லப்பட்டனர். இவர்களைத் தவிர இந்தப் போரில் 45 ஆயிரத்திற்கும் (45,338) மேற்பட்டோர் உயிரிழந்தனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், போர் காரணமாக சுமார் 12 லட்சம் பேர், தங்கள் இடங்களை விட்டு வெளியேறியிருந்தனர். இந்தச் சூழலில், அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தல் மாற்றம் காரணமாக, விரைவில் இங்கு போர் நிறுத்தம் ஏற்படலாம் எனக் கூறப்பட்டது. இதற்கிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய இருநாடுகள் எடுத்த முயற்சியின் பலனாக இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே, கடந்த நவம்பர் 27ஆம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. சமீபத்தில்கூட, காஸாவில் உள்ள பாலஸ்தீனர்கள் முகாம்களில் புகுந்து இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் தாக்குதலை நடத்திவருகின்றனர். மேற்குக்கரை பகுதியில் உள்ள முகாமில் நடத்திய தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ந்த நிலையில், காஸாவில் ஒரு மணிநேரத்துக்கு ஒரு குழந்தை கொல்லப்படுவதாக பாலஸ்தீனத்துக்கான ஐ.நாவின் நிவாரணக் குழு தெரிவித்துள்ளது. மேலும், குழந்தைகள் தங்குவதற்கு இடமில்லாமல் தவிப்பதாகவும், போர் தொடங்கியதில் இருந்து 14,500 குழந்தைகள் கொல்லப்பட்டதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஐ.நா. வெளியிட்ட அறிக்கையில், குழந்தைகளைக் கொல்வதை நியாயப்படுத்த முடியாது. உயிர் பிழைத்தவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் காயமடைந்துள்ளனர். கற்றல் இல்லாமல், காஸாவில் உள்ள சிறுவர்களும் சிறுமிகளும் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர். இந்தக் குழந்தைகளுக்கான எச்சரிக்கை மணி ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் தங்கள் வாழ்க்கை, எதிர்காலத்துக்கான நம்பிக்கை இழக்கிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/314184
-
முன்னாள் பாரத பிரதமர் மன்மோகன் சிங் மறைந்தார்
மன்மோகன் சிங்: மூத்த அமைச்சர்கள் மீது புகார் எழுந்தபோது என்ன செய்தார்? பகிரும் பழனிமாணிக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் "எந்தப் பிரச்னையையும் தீர்க்க முடியாது என்ற அவநம்பிக்கை அவரிடம் எப்போதும் இருந்ததில்லை. எப்போதும் அணுகக் கூடியவராக அவர் இருந்தார்." முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடனான தனது அனுபவம் குறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பிபிசி தமிழிடம் இவ்வாறாகக் குறிப்பிட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக முரண்பட்டபோதும், கூட்டணிக் கட்சிகளை மன்மோகன் சிங் அரவணைத்துச் சென்றதாகவும் பழனிமாணிக்கம் கூறுகிறார். பிரதமர் என்பதையும் தாண்டி தமிழ்நாட்டு மக்களுக்கு உற்ற நண்பராக மன்மோகன் சிங் இருந்ததாகத் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். பிரதமராக மன்மோகன் சிங் பதவி வகித்த காலத்தில் அவரது அணுகுமுறை எப்படி இருந்தது? அதுகுறித்து திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சொல்வது என்ன? மன்மோகன் சிங்: ஏழ்மையில் பிறந்து பிரதமராக உயர்ந்தவரின் அரிய புகைப்படத் தொகுப்பு மன்மோகன் சிங்: ஏழ்மையில் பிறந்து பிரதமராக உயர்ந்தவரின் அரிய புகைப்படத் தொகுப்பு 'இந்தியா நம்பிக்கைக்குரிய மகனை இழந்துவிட்டது' - மன்மோகன் சிங் மறைவுக்கு சர்வதேச தலைவர்கள் இரங்கல் மன்மோகன் சிங்: இந்தியாவின் தாராளமய பொருளாதார சீர்திருத்தங்களின் சிற்பி கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. இந்தத் தேர்தலில் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்தது. தமிழ்நாட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி கிடைத்தது. திமுக, 16 இடங்களில் வெற்றி பெற்றது. நாடு முழுவதும் 215 தொகுதிகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கைப்பற்றியது. இடதுசாரிக் கட்சிகளும் மதிமுகவும் வெளியில் இருந்து ஆதரவு அளித்தன. தேர்தல் முடிவில் காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தது. புதிய அரசில் திமுகவுக்கு 3 கேபினட் அமைச்சர் பதவிகளும் நான்கு இணை அமைச்சர் பதவிகளும் கிடைத்தன. திமுக சார்பாக எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், ரகுபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், வேங்கடபதி ஆகியோர் இணை அமைச்சர்களாக நியமிக்கப்பட்டனர். இதில், பழனிமாணிக்கத்துக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டது. சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 இயேசுவின் குழந்தைப் பருவ வாழ்க்கை எப்படி இருந்தது? பழங்கால பிரதிகளில் கிடைத்த தகவல்27 டிசம்பர் 2024 எளிதில் அணுகக்கூடிய பிரதமர் படக்குறிப்பு, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் "மன்மோகன் சிங் தலைமையிலான அரசில் ஒன்பது ஆண்டுகள் அமைச்சரவையில் இருந்தேன். அவரைச் சந்திக்கும் போதெல்லாம் தனிப்பட்ட முறையில் அன்பு செலுத்துவார். என்னுடைய பணிகள் பற்றிக் கேட்டு ஊக்கப்படுத்துவார்" என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். மத்திய நிதித்துறை அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், உள்துறை அமைச்சர் பொறுப்பை ஏற்ற பிறகு பிரதமரின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் ஆறு மாதங்கள் தான் வேலை பார்த்ததாகக் கூறும் பழனிமாணிக்கம், "அனைவராலும் எளிதில் அணுகக் கூடியவராக மன்மோகன் சிங் இருந்தார்" என்கிறார். கடந்த 2010ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் உடன் தனக்கு ஏற்பட்ட நேரடி அனுபவம் ஒன்றையும் பிபிசி தமிழிடம் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் விவரித்தார். குக்கிராமத்தில் பிறந்து இந்தியாவின் பிரதமரானவர்: யார் இந்த மன்மோகன் சிங்?27 டிசம்பர் 2024 பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா?26 டிசம்பர் 2024 மூத்த அமைச்சர்கள் மீது புகார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மன்மோகன் சிங் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது ஆட்சியில் மூத்த அமைச்சர்கள் பலரும், இணை அமைச்சர்களுக்குப் போதுமான வேலைகளை ஒதுக்காமல் தாங்களே வைத்துக் கொள்வதாகப் புகார் ஒன்று எழுந்துள்ளது. "இதற்காக அனைத்து இணை அமைச்சர்களும் சேர்ந்து ஒரு கூட்டத்தைக் கூட்டினர். அந்தக் கூட்டத்தில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டதாக" கூறுகிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். தொடர்ந்து பேசிய அவர், "அப்போது நிதித்துறை அமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தார். என்னைப் பேசுமாறு மன்மோகன் சிங் கூறினார். நான் பேசும்போது, 'என்னுடைய துறையில் எல்லா உரிமைகளையும் பிரணாப் தருகிறார். போதுமான வேலைகளும் ஒதுக்கப்படுகிறது' எனக் கூறினேன்." "எனக்கு புதிதாக வேலைகள் தேவைப்பட்டாலும் பிரணாப் முகர்ஜி ஒதுக்குவதாகவும் அதனால் எந்தப் பிரச்னையும் இல்லை எனவும் பேசினேன்" என்ற பழனிமாணிக்கம் இதை முன்னுதாரணமாகக் காட்டி மன்மோகன் சிங் பேசியதாகத் தெரிவித்தார் குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்?22 டிசம்பர் 2024 4,000 ஆண்டுகளுக்கு முன் நடந்த பழிவாங்கும் படலம் - மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டார்களா?18 டிசம்பர் 2024 `அதிகார தோரணை கிடையாது' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மன்மோகன் சிங் கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் வென்று இரண்டாவது முறையாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் திமுக இணைந்தது. கூட்டணிக் கட்சிகளுக்கு இலாகாக்களை ஒதுக்குவது தொடர்பாக நடந்த சம்பவம் ஒன்றையும் பழனிமாணிக்கம் நினைவுகூர்ந்தார். "நிதித்துறையில் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் யாரும் இணைப் பொறுப்பை வகித்ததில்லை. எனக்கு ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் முடிந்த பிறகு, மீண்டும் இதே துறையை திமுக தலைவர் கருணாநிதி கேட்டார். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் உடனே வழங்கிய மன்மோகன் சிங், 'அவர் நல்ல இளைஞர். அவரை ஊக்கப்படுத்துங்கள்' எனப் பாராட்டினார். எனக்கு மீண்டும் அதே துறை கிடைக்கவும் மன்மோகன் சிங் காரணமாக இருந்தார்" என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். பிரதமராக நரசிம்மராவ் பதவி வகித்த காலத்தில் புதிய பொருளாதார கொள்கைகளை வடிவமைத்ததில் மிகப்பெரிய பங்களிப்பை நிதி அமைச்சராக இருந்த மன்மோகன் சிங் அளித்ததாகக் கூறுகிறார் பழனிமாணிக்கம். "அவரது அமைச்சரவையில் இருந்த காலகட்டத்திலும், நாடாளுமன்ற உறுப்பினராக மட்டும் நான் இருந்த காலத்திலும் கமிட்டி கூட்டங்களில் எந்தவிதமான அதிகார தோரணையையும் அவர் வெளிக்காட்டியது இல்லை" என்று கூறினார். டிரம்ப் கனடாவை அமெரிக்க மாகாணமாக மாற்ற விரும்புவது ஏன்? இதற்கு கனடாவின் பதில் என்ன?27 டிசம்பர் 2024 அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம்: இந்த முடிவை எடுத்தது ஏன்? விமர்சனங்கள் பற்றி என்ன கூறினார்?27 டிசம்பர் 2024 தமிழ்நாட்டுக்கு செய்தது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, திமுக தலைவர் கருணாநிதியுடன் மன்மோகன் சிங் திமுக தலைவர் கருணாநிதியோடு நல்ல நட்புடன் மன்மோகன் சிங் இருந்ததாகக் கூறும் பழனிமாணிக்கம், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கென திமுக தலைவர் கொடுத்த திட்டங்களை மன்மோகன் சிங் நிறைவேற்றிக் கொடுத்தார்" என்றார். அதுதொடர்பாக பிபிசி தமிழிடம் பட்டியலிட்ட பழனிமாணிக்கம், "தமிழ்நாட்டில் கார் தொழிற்சாலைகளில் அந்நிய முதலீட்டைக் கொண்டு வரும் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு என தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அக்கறை மிகுந்தவராக மன்மோகன் சிங் இருந்தார்" என்கிறார். இதையே தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், "தமிழ்நாட்டின் கனவுகளை மதிப்பவராக மன்மோகன் சிங் இருந்தார். தேசிய அளவிலான திட்டங்களிலும் கொள்கைகளிலும் தென்னக மக்களின் குரல்கள் எதிரொலிப்பதை அவர் உறுதி செய்தார்" என்கிறார். தமிழ்நாட்டு மக்களின் தேவைகளைப் புரிந்து கொண்டு அவற்றைத் தீர்த்து வைத்ததாகக் கூறியுள்ள ஸ்டாலின், "மன்மோகன் சிங்கின் செயல்பாடு, இந்தியாவின் வளர்ச்சி வரலாற்றில் தமிழ்நாடு வலிமையான பங்கைச் செலுத்துவதற்குத் துணை புரிந்தது" என்று தெரிவித்தார். திமுக ஆட்சியில் இல்லாதபோதும்கூட சுனாமி பாதித்த பகுதிகளில் வீடுகளைக் கட்டுவதற்கும் கடற்கரையோர பகுதிகளில் புதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதற்கும் மன்மோகன் சிங் அரசு உதவி செய்ததாகக் கூறுகிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். மன்மோகன் சிங் ஆட்சியில் இந்தியாவில் வாட் வரி அமல்படுத்தப்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த அதிமுக (2001-2006), வாட் வரிக்கான மாநில பகிர்வைக் கேட்காமல் இருந்ததாகக் கூறுகிறார் அவர். அந்தச் சூழ்நிலையில், " தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் (2006) காலம் தவறியதைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, வரிப் பகிர்வில் சிறப்பு சலுகையை வழங்குமாறு கருணாநிதி கேட்டார். அதை ஏற்று உடனே மன்மோகன் சிங் நிறைவேற்றிக் கொடுத்தார்" எனவும் அவர் கூறுகிறார். பாக்ஸிங் டே டெஸ்ட்: ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா? இன்று என்ன நடந்தது?27 டிசம்பர் 2024 காஸா: போர் சூழலில் சின்னஞ்சிறு குழந்தைகளை வளர்க்கும் ஊடகவியலாளரின் அனுபவம்23 டிசம்பர் 2024 மேற்கு மண்டலத்துக்கு கிடைத்த உதவி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2009ஆம் ஆண்டு சோனியா காந்தியின் இல்லத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் சந்திப்பில் திமுக தலைவர் கருணாநிதி கலந்துகொண்டபோது எடுக்கப்பட்ட படம். அடுத்ததாக, 2006 சட்டமன்றத் தேர்தலின்போது நடந்த சம்பவம் ஒன்றை பழனிமாணிக்கம் குறிப்பிட்டார். கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் செய்த கருணாநிதி, கைத்தறி நெசவாளர்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்திருந்தார். அவர்களின் தொழிலுக்குப் பெரும் தடையாக சென்வாட் (cenvat) வரி இருந்தது. அதை நீக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கருணாநிதி உறுதி கொடுத்திருந்தார். அதன்படி ஆட்சிப் பொறுப்பேற்றதும், மன்மோகன் சிங்கின் கவனத்துக்கு இதைக் கொண்டு சென்றார். "சென்வாட் வரியை நீக்கி கைத்தறி துணி ஏற்றுமதியாளர்களுக்கு மிகப் பெரிய சலுகையை கருணாநிதி பெற்றுத் தந்தார். அதேபோல், தமிழ்நாட்டுக்கான நெடுஞ்சாலைத் திட்டங்களில் பலவும் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில் கிடைத்தது" என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். "பொருளாதார நிபுணராகவும் சிறந்த பிரதமராகவும் இருந்தது மட்டுமின்றி, கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வதிலும் தனது சகாக்களை மதிப்பதிலும் சிறந்தவராக மன்மோகன் சிங் இருந்தார்" என்கிறார் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம். பாக்ஸிங் டே டெஸ்ட்: அபாரமாக ஆடிய ஆஸ்திரெலியா - ஜெய்ஸ்வாலை கோலி அவுட் ஆக்கினாரா?27 டிசம்பர் 2024 மன்மோகன் சிங்: ஏழ்மையில் பிறந்து பிரதமராக உயர்ந்தவரின் அரிய புகைப்படத் தொகுப்பு27 டிசம்பர் 2024 திமுகவின் நெருக்கடிக் காலத்தில் மன்மோகன் சிங் செய்தது என்ன? பட மூலாதாரம்,MKSTALIN X PAGE படக்குறிப்பு, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் இரண்டாம் பகுதியில் இறுதிக் காலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திமுக முரண்பட்டது. இதையடுத்து, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவையும் திமுக திரும்பப் பெற்றது. இதன் பின்னணியில் 2ஜி விவகாரம் பேசப்பட்டது. அப்போது திமுகவுக்கு பவ்லேறு வகைகளில் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நெருக்கடிகளின்போது மன்மோகன் சிங்கின் செயல்பாடு குறித்து பழனிமாணிக்கத்திடம் பிபிசி தமிழ் கேட்டது. "ஆட்சியின் இரண்டாம் பகுதியில் நெருக்கடிகள் ஏற்படும்போது, ஏ.கே.ஆண்டனி, குலாம் நபி ஆசாத் போன்றோர் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்படக்கூடிய நெருடல்களை தீர்ப்பதில் அக்கறையுடன் இருந்தனர். ஆனால், மன்மோகன் சிங்கை பொறுத்தவரை கூட்டணிக் கட்சிகளிடம் எந்தவகையிலும் வருத்தத்தையோ கோபத்தையோ காட்டியதில்லை" என்கிறார். அதற்கேற்ப, 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் 2017ஆம் ஆண்டு முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவை சிபிஐ நீதிமன்றம் விடுவித்தது. இதுதொடர்பாக அதே ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி மன்மோகன் சிங்குக்கு ஆ.ராசா கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'என்னை வெளிப்படையாக ஆதரிக்க முடியாமல் உங்களைத் தடுத்த நிர்பந்தங்களை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது' எனக் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்து 2018ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி கடிதம் ஒன்றை ஆ.ராசாவுக்கு மன்மோகன் சிங் எழுதியிருந்தார். அதில், 'நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டீர்கள். இறுதியில் உண்மை நின்றது என்பதில் உங்கள் நண்பர்களுக்குப் பெரிய நிம்மதி' எனக் கூறியிருந்தார். கூட்டணிக் கட்சிகள் இடையே ஏற்படும் பிரச்னைகளைத் தீர்த்து வைத்து ஆட்சியைத் தொடர வைப்பதில் மன்மோகன் சிங் தீவிர கவனம் செலுத்தியதாகக் கூறும் பழனிமாணிக்கம், "எந்தப் பிரச்னையிலும் 'தீர்க்க முடியாதது' என்ற அவநம்பிக்கையை அவரிடம் ஒருபோதும் பார்த்ததில்லை" என்கிறார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7q8qw9vg9o
-
ஆஸ்திரேலியா இந்தியா டெஸ்ட் கிரிக்கெட் தொடர் - 2024
'புஷ்பா' ஸ்டைல் ஆரவாரம்: ஆட்டத்தையே மாற்றிய நிதிஷ்குமார் முறியடித்த 122 ஆண்டு சாதனை என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புஷ்பா ஸ்டைலில் கொண்டாடிய நிதிஷ் குமார் ரெட்டி கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மெல்போர்னில் நடந்துவரும் ஆஸ்திரேலிய அணி்க்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் 3வது நாளான இன்று, நிதிஷ் குமார் ரெட்டியின் அற்புதமான சதம், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவற்றால் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பித்தது. பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, இந்தியா இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன. 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தநிலையில் 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் எம்சிஜி மைதானத்தில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு முன்னேறுவதில் சாதகமான வாய்ப்பைப் பெறும் என்பதால் ஆட்டம் உச்சக் கட்ட பரபரப்பில் செல்கிறது. சச்சினின் இந்த இன்னிங்சை பார்த்து கோலி தவறுகளை திருத்திக் கொள்வாரா? 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில் மூன்றாவது டெஸ்ட் டிரா: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு இந்தியா முன்னேற முடியுமா? சுந்தர்-நிதிஷின் நங்கூரம் ரிஷப் பந்த்(6), ஜடேஜா (4) இன்றைய ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் செஷனிலேயே ரிஷப் பந்த் 36 ரன்னில் போலந்த் பந்துவீச்சிலும், ஜடேஜா 17 ரன்னில் லேயான் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினர். 221 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க 54 ரன்கள் தேவையாக இருந்தது. நண்பகல் உணவு இடைவேளையின் போது இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 244 ரன்கள் சேர்த்திருந்தது. 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர் இருவரும் மெல்ல ஆட்டத்தை தங்கள் வசம் கொண்டு வந்தனர். மெல்போர்னில் நன்கு வெயில் இருந்ததால் ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாகவே இருந்தது. இதனால் நிதிஷ், சுந்தர் இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடும் சிரமப்பட்டனர். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சையும், சுழற்பந்துவீச்சையும் அநாசயமாக எதிர்கொண்டு பவுண்டரிகள், சிக்ஸர் அடித்த நிதிஷ் குமார் டெஸ்டில் முதல் அரைசதத்தை நிறைவு செய்தார். ஆட்டத்தின் இடையே இருமுறை மழை குறுக்கிட்டதால் சிறிது நேரம் ஆட்டம் நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கியது. நிதிஷ் குமாருக்கு முழு ஒத்துழைப்பு தந்து பேட் செய்த சுந்தர், பவுண்டரிகள் அடிக்காமலேயே அரைசதத்தை நெருங்கினார், அரைசதம் அடித் தபோது ஒரு பவுண்டரி மட்டுமே வாஷிங்டன் சுந்தர் அடித்திருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர். இருவரின் பார்ட்னர்ஷிப்பையும் பிரிக்க 6 பந்துவீச்சாளர்களை கேப்டன் கம்மின்ஸ் பயன்படுத்தியும் முடியவில்லை. ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதிஷ் குமார் ரெட்டி, 96 ரன்கள் சேர்த்திருந்த போது, போலந்த் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து முதல் சதத்தை பதிவு செய்தார். 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்திருந்த போது லேயான் பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களில் ஸ்டீவன் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த பும்ரா டக்அவுட் ஆனார். மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. நிதிஷ் குமார் 105 ரன்களுடன், சிராஜ் 2 ரன்களுடன் களத்தில் உள்ளனர். நிதிஷ் குமார் ரெட்டி 171 பந்துகளில் சதம் அடித்து, 105 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் குமார் ரெட்டிக்கு துணையாக பேட் செய்த தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் 50 ரன் எடுத்தார். 8-வது விக்கெட்டுக்கு நிதிஷ் குமார் ரெட்டி- வாஷிங்டன் சுந்தர் கூட்டணி 127 ரன்கள் சேர்த்தனர். பாக்ஸிங் டே டெஸ்ட்: ஆடுகளம் யாருக்கு சாதகம்? இந்தியாவுக்கு கவலை தரும் விஷயங்கள் என்ன?25 டிசம்பர் 2024 அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் ரெட்டி 116 ரன்கள் முன்னிலை ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 474 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இதுவரை 9 விக்கெட் இழப்புக்கு 358 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவைவிட இந்திய அணி இன்னும் 116 ரன்கள் பின்தங்கியுள்ளது. 3வது நாளில் இன்று மாலை நேரத்தில் வெளிச்சக்குறைவு, மழை வருவது போல் இருந்ததால் ஆட்டம் 70 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் முடிக்கப்பட்டது. எடுபடாத ஆஸ்திரேலியப் பந்துவீச்சு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் மெல்போர்னில் இன்று வெயில் நன்றாகவே அடித்ததால் ஆடுகளம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சுத்தமாக எடுபடவில்லை, பந்தும் எதிர்பார்த்த அளவு ஸ்விங் ஆகவில்லை. இதனால் 2வது செஷனில் இருந்து நிதிஷ் குமார், சுந்தரைப் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பல்வேறு வகைகளில் முயன்றும் முடியவில்லை. புதிய பந்து மாற்றிய பின்பும் ஸ்டார்க், கம்மின்ஸ் பந்துவீசியும் எடுபடவில்லை. ஆடுகளத்தில் லேசான வெடிப்புகள் வரத் தொடங்கி இருப்பதால், கடைசி இரு நாட்கள் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக ஆடுகளம் மாறலாம். அப்போது நேதன் லயான், வாஷிங்டன் சுந்தர், ஜடேஜா ஆகியோரின் பந்துவீச்சு இந்த ஆட்டத்தில் பெரிய துருப்புச்சீட்டாக இருக்கும். இந்தியாவுடன் மோதும் மனநிலையில் வங்கதேசம் உள்ளதா? நிபுணர்கள் சொல்வது என்ன?25 டிசம்பர் 2024 சுட்டெரிக்கும் சூரியனின் வளிமண்டலத்திற்குள் நுழைந்த நாசா விண்கலம் - அதீத வெப்பத்தை தாங்குவது எப்படி?25 டிசம்பர் 2024 அணியைக் காத்த நிதிஷ் குமார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் முகமது சிராஜ் 3வது நாளான இன்றைய ஆட்டம் முழுவதும் நிறைந்திருப்பது நிதிஷ் குமாரின் முதல் சதம், அரைசதம் அடித்து புஷ்பா பட பாணியில் அவரின் செயல், வாஷிங்டன் சுந்தரின் அரைசதம் ஆகியவைதான். பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இந்திய அணியை இக்கட்டான சூழலில் இருந்து மீட்டது நிதிஷ் குமாரின் பேட்டிங்தான். அதனால்தான் தொடர்ந்து 3 போட்டிகளிலும் நிதிஷ்குமார் ரெட்டியை அமர வைக்க எந்தவிதமான காரணமும் இன்றி தொடர்ந்து அணியில் நீடித்து வருகிறார். முதல் டெஸ்டில் இந்திய அணி முன்னிலை பெறவும் நிதிஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் காரணமாக இருந்தது. இந்த டெஸ்டில் இந்திய அணி ஃபாலோ ஆனிலிருந்து தப்பிக்கவும் நிதிஷ்குமாரின் சதம் முக்கியப் பங்காற்றியது. இந்த பார்டர் கவாஸ்கர் தொடரில் முன்னனி வீரர்கள் ரோஹித், கோலி, சுப்மான் கில், ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோரின் பேட்டிங் சராசரி 30 ரன்களுக்கு கீழ் இருக்கையில் நிதிஷ் குமாரின் சராசரி 50 ரன்களுக்கு மேல் இருப்பது அவரின் அர்ப்பணிப்பு உணர்வை வெளிப்படுத்துகிறது. நிதிஷ் குமார் ரெட்டியை 8-வது வரிசையில் களமிறக்குவது சரியா அல்லது நடுவரிசையில் களமிறக்கலாமா என்று அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ஆகியோரை சிந்திக்க வைத்துள்ளார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கம்மின்ஸ், ஸ்டார்க், போலந்த் பந்துவீச்சில் முன்னணி பேட்டர்கள் விக்கெட்டை கோட்டைவிட்டு தலைகவிழ்ந்து சென்ற நிலையில் நிதிஷ் ரெட்டி இவர்களின் பந்துவீச்சை அநாயசமாக எதிர்கொண்டு ஆடினார். கவர் டிரைவ், லாங் ஆனில் பவுண்டரி, புல் ஷாட் என அற்புதமான ஆட்டத்தை கம்மின்ஸ், ஸ்டார்க் பந்துவீச்சில் நிதிஷ் வெளிப்படுத்தினார். சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான மாணவி: எஃப்.ஐ.ஆர் வெளியானதால் அதிர்ச்சி - சமீபத்திய தகவல்கள்26 டிசம்பர் 2024 புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் காலமானார்: திரைத்துறையினர் இரங்கல்26 டிசம்பர் 2024 கவனிக்கப்படாத ஹீரோ வாஷிங்டன் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாஷிங்டன் சுந்தர் இன்றைய ஆட்டத்தின் மொத்த கவனத்தையும் நிதிஷ் குமார் தனது சதத்தால் ஈர்த்துவிட்டாலும், பேசப்படாத ஹீரோ ஒருவர் இருக்கிறார் என்றால் அது வாஷிங்டன் சுந்தர்தான். நிதிஷ் குமாருக்கு துணையாக பேட் செய்து 127 ரன்கள் பார்டனர்ஷிப் அமைக்க வாஷிங்டன் முக்கியக் காரணமாக அமைந்தார். 2021ம்ஆண்டு சிட்னி டெஸ்டை வெல்ல வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் முக்கியமாக இருந்த நிலையில் மெல்போர்ன் மைதானத்தில் இன்று வாஷிங்டன் சுந்தரின் பேட்டிங் இந்திய அணிக்கு மகுடமாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அஸ்வின் ஓய்வுக்குப் பின் அணியில் தேர்வு செய்யப்பட்ட வாஷிங்டன் சுந்தர் நிலை பல்வேறு விதங்களில் கேள்விகளை எழுப்பியது. சுப்மான் கில்லை அமரவைத்து வாஷிங்டனை தேர்வு செய்தது சரியா என்று சஞ்சய் மஞ்சரேக்கர் கேள்வி எழுப்பி இருந்தார். ஆனால், அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையில், தனது தேர்வை நியாயப்படுத்தும் வகையில் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் அடித்து அணியை காப்பாற்றியுள்ளார். 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்20 டிசம்பர் 2024 ஹெட், ஸ்மித் சதம்: வலுவான நிலையில் ஆஸ்திரேலியா - உலக டெஸ்ட் சாம்பியன் பைனலுக்கு இந்தியா முன்னேறுமா?15 டிசம்பர் 2024 122 ஆண்டு சாதனையை முறியடித்த நிதிஷ் குமார் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் மெல்போர்ன் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் ஒரு அணியில் 8-வது வீரராகக் களமிறங்கி அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற சாதனையை நிதிஷ் குமார்(105) ரெட்டி இன்று படைத்தார். இதற்கு முன் 1902ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் ரெக்கி டப் 10-வது வீரராக களமிறங்கி 102 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாக இருந்தது அதை நிதிஷ் ரெட்டி முறியடித்துள்ளார். இந்திய அணியில் 8-வது வரிசை அதற்கு கீழாக களமிறங்கி சதம் அடித்த முதல் பேட்டர் என்ற பெருமையை நிதிஷ் படைத்துள்ளார். இதற்கு முன் அனில் கும்ப்ளே 2008-ஆம் ஆண்டு அடிலெய்ட் நகரில் 87 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும். அது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8-வது வீரராக களமிறங்கி சதம் அடித்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் குமார் பெற்றார். இதற்கு முன் விருத்திமான் சாஹா ராஞ்சியில் நடந்த டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 117 ரன்கள் சேர்த்திருந்தார். வாஷிங்டன் சுந்தர் –நிதிஷ் குமார் இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 127 ரன்கள் சேர்த்தது என்பது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3வது அதிகபட்ச பார்ட்னர்ஷிபாகும். இதற்கு முன் 2013ல் சென்னையில் நடந்த டெஸ்டில் தோனி- புவனேஷ்வர் குமார் 140 ரன்களும், 2008-ஆம் ஆண்டு சிட்னி டெஸ்டில் சச்சின், ஹர்பஜன் சேர்ந்து 108 ரன்களும் சேர்த்திருந்தனர். மெல்போர்ன் மைதானத்தில் சதம் அடித்த 3வது இளம் இந்தியர் என்ற பெருமையை நிதிஷ் குமார் பெற்றார். இன்று நிதிஷ் குமார் சதம் அடித்த போது அவருக்கு 21 வயது நிரம்பி 214 நாட்கள் ஆகியிருந்தது. ஆனால், இதற்கு முன் சச்சின் 18 வயது 253 நாட்களிலும் ரிஷப் பந்த் 21 வயது 91 நாட்கள் இருந்த போது சதம் அடித்திருந்தனர். மெல்போர்ன் மைதானத்தில் முதல் சதத்தை பதிவு செய்த 2வது இந்திய பேட்டர் என்ற பெருமையையும் நிதிஷ் பெற்றார். இதற்கு முன் 1948-ஆம் ஆண்டு மன்கட் தனது முதல் சதத்தை மெல்போர்ன் மைதானத்தில் பதிவு செய்தார். அது மட்டுமல்லாமல் 2008-ஆம் ஆண்டு கடைசியாக தென் ஆப்பிரிக்க அணியின் டுமினி தனது முதல் சதத்தை மெல்போர்னில் பதிவு செய்தார். அதன்பின் இதுவரை எந்த நாட்டு வீரரும் தங்களின் முதல் சதத்தை மெல்போர்னில் அடித்திராத நிலையில் 16 ஆண்டுகளுக்குப் பின் நிதிஷ் குமார் இங்கு முதல் சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். பும்ராவை திணற வைத்த கான்ஸ்டாஸ், டாப் ஆர்டரில் 4 அரைசதம் - இந்திய அணிக்கு சிக்கலா?26 டிசம்பர் 2024 பாக்ஸிங் டே டெஸ்ட்: விராட் கோலி, சாம் கான்ஸ்டாஸிடம் செய்த செயல் - ஐசிசி அளித்த தண்டனை என்ன?26 டிசம்பர் 2024 புஷ்பா பாணியில் கொண்டாட்டம் நிதிஷ் குமார் ரெட்டி 81 பந்துகளில் இன்று முதல் அரைசதம் அடித்தார். அரைசதம் அடித்த அவரை சக பேட்டர் வாஷிங்டன் சுந்தர் தோளில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். நிதிஷ் குமார் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்த மகிழ்ச்சியை புஷ்பா திரைப்பட பாணியில் பேட்டை கழுத்தில் வைத்து சீவி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். வர்ணனையாளர்களும் புஷ்பா திரைப்பட பாணியில் நிதிஷ் கொண்டாடுகிறார் என்று சிரித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்த போது அவரின் தந்தை முதால்யா ரெட்டி ஆனந்த கண்ணீர் வடித்தார் நிதிஷ் சதத்தை கண்டு ஆனந்தக் கண்ணீர் நிதிஷ் குமாரின் ஆட்டத்தைக் காண மெல்போர்ன் மைதானத்தில் அவரின் தந்தையும் வந்திருந்தார். நிதிஷ் குமார் ரெட்டி போலந்த் பந்தில் பவுண்டரி அடித்த நிலையில் முதல் சதத்தை பதிவு செய்ததைப் பார்த்தவுடன் அவரின் தந்தை ஆனந்தக் கண்ணீர் வி்ட்டு அழுதார். கையில் தேசியக் கொடியை வைத்துக் கொண்டு நிதிஷ் குமார் ஆட்டத்தை ரசித்த அவரின் தந்தையை அருகே இருந்த ரசிகர்கள் கட்டி அணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அண்ணா பல்கலை. மாணவி வழக்கு: எஃப்.ஐ.ஆர். வெளியானது எப்படி? சிறப்பு விசாரணைக் குழுவில் உள்ள 3 அதிகாரிகள் யார்?4 மணி நேரங்களுக்கு முன்னர் மன்மோகன் சிங் உடலுக்கு இறுதிச்சடங்கு: நினைவிடம் குறித்து எழுந்துள்ள சர்ச்சை என்ன?4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆட்டம் யார் பக்கம்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா இந்த டெஸ்டில் இன்னும் ஆஸ்திரேலிய அணியின் கைதான் ஓங்கியுள்ளது. ஆஸ்திரேலிய அணியைவிட 116 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இருக்கிறது. கடைசி விக்கெட்டுக்கு நிதிஷ், சிராஜ் களத்தில் உள்ளனர். இந்திய அணி நாளை ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே முதல் இன்னிங்ஸ் சிராஜ் விக்கெட்டை இழந்தால் முடிவுக்கு வரலாம். எப்படிப் பார்த்தாலும் 100 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலியா அணி இருக்கும். இந்த 100 ரன்கள் முன்னிலையை வைத்து ஆட்டத்தின் வெற்றியை ஆஸ்திரேலியா எளிதாக தீர்மானிக்க இயலும். இன்னும் 2 நாட்கள் ஆட்டம் மீதம் இருக்கும் நிலையில் நாளை முழுவதும் ஆஸ்திரேலிய அணி பேட் செய்து 300 ரன்களுக்கு மேல் அடித்து டிக்ளேர் செய்து இந்திய அணிக்கு இலக்கு வைத்து கடைசி நாளை முழுவீச்சில் எதிர்கொண்டால் ஆட்டத்தில் ஸ்வரஸ்யம் அதிகரிக்கும். கடைசி நாளில் ஆட்டம் யார் பக்கம் செல்லும், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் பொருத்து ஆட்டத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும். இப்போதுள்ள நிலையில் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் நிலையில் ஆஸ்திரேலியஅணிதான் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c878wqv1nqzo
-
தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் - பேராசிரியர் திஸ்ஸ விதாரண
Published By: VISHNU 27 DEC, 2024 | 05:50 PM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பின் ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று குறிப்பிட்ட ரணில் விக்கிரமசிங்க சமஷ்டியாட்சி முறைமைக்கு நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தார். தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதென ஸ்ரீ லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்தாவது, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கான பணிகளை துரிதப்படுத்துவதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளமை வரவேற்கத்தக்கது. பல தசாப்தகாலமாக புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றி பேசப்படுகிறது. இருப்பினும் எந்த அரசாங்கங்களும் புதிய அரசியலமைப்பினை உருவாக்கவில்லை.முதலாளித்துவ தரப்பினர் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு விரும்பவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. யுத்தம் முடிவடைந்தவுடன் அரசியலமைப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சர்வதேசத்துக்கு வாக்குறுதியளித்தார். யுத்த வெற்றியை 2010 ஆம் ஆண்டு தேர்தலின் வெற்றிக்காக பயன்படுத்தினாரே தவிர நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு பயன்படுத்தவில்லை. அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் புதிய அரசியலமைப்பினை உருவாக்கி இந்த நாட்டின் இன ஐக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்று மஹிந்த ராஜபக்ஷ நினைத்திருந்தால் 2010 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும். ஒரு தரப்பினரது தவறான ஆலோசனைகளால் புதிய அரசியலமைப்பு குறித்து அவர் அக்கறை கொள்ளவில்லை. 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த நல்லாட்சி அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இருப்பினும் அப்போதைய எதிர்க்கட்சியாக இருந்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதற்கு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி இனவாத அடிப்படையில் செயற்பட்டது. அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து பேச்சளவில் கூட கவனம் செலுத்தவில்லை. தமிழர்களுக்கு எதிராக குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் செயற்பட்டார். இவ்வாறான இனவாத செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த அரசாங்கத்தில் இருந்து ஓரங்கட்டப்பட்டேன். 2022 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடி நாட்டு மக்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தியது. .இடைக்கால ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க ஒரு தடவை புதிய அரசியலமைப்பு உருவாக்கம் குறித்து கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது நானும் சென்றிருந்தேன். புதிய அரசியலமைப்பு ஊடாக இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும், தமிழர்களுக்கு அரசியல் உரிமைகளை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.அப்போது சமஷ்டியாட்சியாட்சி முறைமை தொடர்பில் கேள்வியெழுப்பிய போது சமஷ்டியாட்சி முறைமையை தான் எதிர்ப்பதாக குறிப்பிட்டார். 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பாரம்பரியமான அரசியல் முறைமைக்கு முடிவுக் கட்டியுள்ளது. புதிய அரசியலமைப்பினை உருவாக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார். நாட்டு மக்களின் அரசியல் சிந்தனை மாற்றமடைந்துள்ளது. ஆகவே புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்கு நாட்டு மக்கள் முழுமையான ஆதரவு வழங்குவார்கள். தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்கும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்பதை ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஏனெனில் சட்டங்களின் ஊடாகவும் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஆகவே கடந்த கால தவறுகள் புதிய அரசியலமைப்பின் ஊடாக திருத்தியமைக்கப்பட வேண்டும் .அப்போது தான் நாடு என்ற ரீதியில் முன்னேற்றமடைய முடியும் என்றார். https://www.virakesari.lk/article/202326