Everything posted by ஏராளன்
-
போயிங் நிறுவனத்தின் புதிய விண்கலத்தில் விண்ணுக்கு பயணமானார் சுனிதா வில்லியம்ஸ்!
சுனிதா வில்லியம்ஸ் மார்ச் மாதம் தான் பூமிக்கு திரும்புவார் சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் சிக்கியுள்ள விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தான் திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. 2025 பிப்ரவரி மாதம் அவர் பூமி திரும்புவார் என கடந்த ஆகஸ்ட் மாதம் நாசா தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அவரது வருகை மேலும் தாமதமாகி உள்ளது. நாசா விண்வெளி வீரர்கள் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலக்ஸாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் ஸ்பேஸ் எக்ஸ் டிராகன் க்ரூ-9 மிஷனுக்கான விண்கலம் மூலம் பிப்ரவரியில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பூமிக்கு திரும்புவார்கள் என நாசா தெரிவித்தது. இந்நிலையில், தற்போது அதன் புறப்பாடு மேலும் தாமதம் அடைந்துள்ளதாக தகவல். இதை நாசாவின் கமர்ஷியல் க்ரூ திட்டத்தின் மேலாளர் ஸ்டீவ் ஸ்டிச் உறுதி செய்துள்ளார். https://thinakkural.lk/article/313979
-
அரசாங்கம் மீது ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகம் என்கிறார் சுமந்திரன்
மதுபானசாலை அனுமதிப்பத்திர விவகாரத்தில் அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது, அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தில் 361மதுபான சாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பாக அரசாங்கம் நாடாளுமன்றத்தில் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பதவிக்கு வருவதற்கு முன்னதாக, இவ்வாறான மதுபான சாலை உரிமைப்பத்திரங்கள் வழங்குவதில் அரசியல் லஞ்சம் இருப்பதாக சொல்லியிருந்தார்கள். அப்போது பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த பலரது சிபாரிசின் அடிப்படியில் ஏராளமான மதுபானசாலைகளுக்கான உருமைப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என சொல்லியிருந்தார்கள். அந்த அரசியல் லஞ்சம் என்ற விவகாரத்தில் தங்கள் பதவிக்கு வந்து மூன்று நாள்களில் வெளிப்படுத்துவோம் என்றும் கூறியிருந்தார்கள். ஆனால், இரண்டு, மூன்று மாதங்கள் ஆகியும் யார் யாருக்கு உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மாத்திரம்தான் வெளிப்படுத்தியுள்ளனர். இது அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விடயம்தான். யாருடைய சிபாரிசில் இந்த உரிமை பாத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்தினால் தான், அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டமை என்பதை உறுதி செய்யமுடியும். ஆகவே, லஞ்சம், ஊழல் அனைத்தையும் முற்றுமுழுதாக ஒழித்துவிடுவோம் என்று கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம். மதுபானசாலை அனுமதிப்பத்திர விடயத்தில் சுற்றுப் பின்வாங்குவதாக தோன்றுகிறது. ஒவ்வெரு மதுபானசாலைகளும் யாரோ ஒரு அரசியல்வாதியின் சிபாரிசின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது என்பதை, அரசாங்க கட்சியே தேர்தலுக்கு முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தது. அப்படியானால், அந்த பெயர் பட்டியலை அரசாங்கம் வெளியிடவேண்டும். இதுவொரு பாரதூரமான விடயம். இதனை நாங்கள் தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். முக்கிய முறைப்பாடு ஒன்றை தேர்தலுக்கு முன்னர் கூறிவிட்டு, அதாவது அரசியல் லஞ்சம் வழங்கப்பட்டதாக கூறிவிட்டு இப்பொழுது அந்த விடயத்திலிருந்து பின்வாங்குவது, இந்த அரசாங்கம் மீதும் ஊழல் தொடர்பான பாரிய சந்தேகம் ஒன்றை எழுப்புகின்றது. இவர்களுக்கும் லஞ்சம் கொடுத்து இந்த தகவல்கள் மறைக்கப்படுகின்றனவா என்ற கேள்விகள் எழுகின்றன என்றார். https://thinakkural.lk/article/313974
-
எம்.எம்.பி.எல் பாத்ஃபைன்டர் நிறுவனக்குழுமம் - எச்.சி.எல் எட் டெக் இலங்கை தொழில்நுட்பம், வர்த்தக நிறுவனத்துக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
20 DEC, 2024 | 03:54 PM எம்.எம்.பி.எல் - பாத்ஃபைன்டர் நிறுவனக்குழுமம் மற்றும் எச்.சி.எல் எட் டெக் இலங்கை தொழில்நுட்ப மற்றும் வர்த்தக நிறுவனத்துக்கும் இடையில் இலங்கையில் தொழில்நுட்பக்கல்வியை மேம்படுத்துவதில் ஒன்றிணைந்து பணியாற்றுவதை இலக்காகக்கொண்டு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இருதரப்புப் புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று வியாழக்கிழமை (19) கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் வெளியிடப்பட்டது. (படப்பிடிப்பு - ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/201736
-
'சிரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல் இல்லை' - கிளர்ச்சிக் குழுவின் தலைவர் அகமது அல்-ஷாரா பிபிசிக்கு பேட்டி
பட மூலாதாரம்,HAYAT TAHRIR AL-SHAM படக்குறிப்பு, சிரியாவின் கிளர்ச்சிக் குழுத் தலைவர் அகமது அல்-ஷாராவிடம் பிபிசி பேசியது கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரேமி போவென் பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி நியூஸ் சிரியா போரினால் சோர்வடைந்துள்ளதாகவும், அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது மேற்கத்திய நாடுகளுக்கோ, தங்கள் நாட்டால் அச்சுறுத்தல் இல்லை என்றும், சிரியாவின் தற்போதைய தலைவர் அகமது அல்-ஷாரா கூறியுள்ளார். சிரியாவின் தலைநகரம் டமாஸ்கஸில் பிபிசிக்கு அளித்தப் பேட்டியில், சிரியா மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். "ஆட்சி மாற்றம் நடந்த பிறகு, பொருளாதாரத் தடைகள் நீக்கப்பட வேண்டும். ஏனெனில், அவை முந்தைய ஆட்சியை இலக்காக வைத்து மேற்கொள்ளப்பட்டன. பாதிக்கப்பட்டவர்களையும் ஒடுக்குமுறையில் ஈடுபட்டவர்களையும் ஒரே மாதிரியாக நடத்தக்கூடாது," என்று அல்-ஷாரா கூறினார். இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிரிய முன்னாள் அதிபர் பஷர் அல்-அசத்தின் ஆட்சியைக் கவிழ்த்த திடீர் தாக்குதல்களுக்கு ஷாரா தலைமைத் தாங்கினார். அகமது அல்-ஷாரா, கிளர்ச்சிக் குழுவான ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாமின் (HTS) தலைவர். முன்பு அவர் அபு முகமது அல்-ஜொலானி எனும் பெயரால் அறியப்பட்டார். இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? சிரியா போர்: நாட்டின் எந்தெந்த பகுதிகளை யார் கட்டுப்படுத்துகிறார்கள்? - விரிவான விளக்கம் செட்னயா சிறை: சிரியாவின் ரகசிய 'மனிதப் படுகொலை கூடம்' சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று அகமது அல்-ஷாரா தெரிவித்தார். கடந்த 2016 இல் அல்-கொய்தாவிலிருந்து பிரிந்துவந்து தொடங்கப்பட்ட குழுவாக, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு அறியப்படுவதால், அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐ.நா. உட்பட பல சர்வதேச அமைப்புகளால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார். அக்குழுவைச் சேர்ந்தவர்கள், பொதுமக்களையோ அல்லது பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளையோ குறிவைக்கவில்லை என்று அவர் தெரிவித்தார். முந்தைய அசத் ஆட்சியில் நடந்த குற்றங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதாக அக்குழுவினர் கருதுகின்றனர். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம், ஒரு பயங்கரவாத குழு அல்ல என்று ஷாரா கூறினார் பெண் கல்வி பற்றி கருத்து மேலும், சிரியாவை ஆப்கானிஸ்தானாக மாற்ற அவர் விரும்புவதாகக் கூறப்படும் கருத்தையும் மறுத்தார். ஒவ்வொரு நாடும் வெவ்வேறு விதமான கலாசாரங்களுடன் வித்தியாசமானவை என அவர் தெரிவித்தார். ஆப்கானிஸ்தான் ஒரு பழங்குடி சமூகமாக இருந்தது. சிரியாவில், வித்தியாசமான மனநிலை இருப்பதாக அவர் தெரிவித்தார். பெண்களுக்குக் கல்வி வழங்கப்பட வேண்டும் என்பதை தான் நம்புவதாக அவர் கூறினார். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் சிரியாவின் வடமேற்கு மாகாணமான இட்லிப் பற்றி குறிப்பிடுகையில், "எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு பல்கலைக்கழகங்கள் உள்ளன," என்று ஷாரா கூறினார். அதுகுறித்து மேலும் பேசிய அவர், "பல்கலைக்கழகங்களில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பதாக நான் நினைக்கிறேன்." என்றும் அவர் குறிப்பிட்டார். யுக்ரேன் உடனான போரில் ரஷ்யாவை தொடர்ந்து முன்னேற வைக்கும் ஒரு 'பயங்கர' உத்தி இதுதான்10 டிசம்பர் 2024 சிரியா: மக்களின் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறது? அடுத்து என்ன நடக்கும்?11 டிசம்பர் 2024 சிரியா: பஷர் அல்-அசத்துக்கு புகலிடம் கொடுத்த ரஷ்யா9 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HTS படக்குறிப்பு, சிரிய மக்களுள் பலர் அகமது அல்-ஷாராவை நம்பவில்லை மது அருந்துவது குறித்து என்ன கூறினார்? மேலும், மது அருந்துவது அனுமதிக்கப்படுமா என்ற கேள்விக்கு, "பல விஷயங்கள் சட்ட ரீதியானவை என்பதால் அதைப் பற்றி பேச எனக்கு உரிமை இல்லை" என்று ஷாரா தெரிவித்தார். "அரசியலமைப்பை இயற்றுவதற்கு சிரிய சட்ட நிபுணர்கள் அடங்கிய குழு ஒன்று உள்ளது. இந்த குழு சட்ட ரீதியான பிரச்னைகள் குறித்து முடிவு செய்யும். எந்த ஆட்சியாளரோ அல்லது அதிபரோ, அந்தச் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும்" என்றும் அவர் கூறினார். ஷாரா நேர்காணல் முழுவதும் நிதானமாக இருந்தார். குடிமக்கள் அணியும் உடைகளை அணிந்திருந்தார். மேலும், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பு, அதன் கடந்த கால பயங்கரவாதத்திலிருந்து விலகவில்லை என நம்புபவர்களுக்கு, `அது உண்மையில்லை' என்று உறுதியளிக்க அவர் முயன்றார். சிரிய மக்களுள் பலர் அவரை நம்பவில்லை. அடுத்த சில மாதங்களில், சிரியாவின் புதிய ஆட்சியாளர்களின் நடவடிக்கைகள், சிரியா எந்த மாதிரியான நாடாக இருக்க வேண்டும் என்பதையும், அவர்கள் எப்படி ஆட்சி செய்ய விரும்புகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cwyxwn49gpko அசாத் அரசாங்கத்தை பதவியிலிருந்த அகற்றிய சிரிய கிளர்ச்சியாளர்களின் எதிர்காலம் என்ன? 19 DEC, 2024 | 08:58 AM சிரியாவில் பசார் அல் அசாத் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து அகற்றிய கிளர்ச்சிக்குழு கலைக்கப்படும் என அந்த குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். சிரிய கிளர்ச்சிகுழு கலைக்கப்படும் அதன் உறுப்பினர்கள் சிரிய இராணுவத்தில் இணைக்கப்படுவார்கள் என எச்டிஎஸ் அமைப்பின் தலைவர் அஹமட் அல் சரா தெரிவித்துள்ளார். அனைவரும் சட்டத்திற்கு உட்படுத்தப்படுவார்கள் பல்லின சமூகத்தை கொண்ட நாட்டில் ஐக்கியம் ஏற்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். சிரியா ஐக்கிய தேசமாக தொடரவேண்டும் என தெரிவித்துள்ள அவர் சமூக நீதி நிலவவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். யுத்தத்தினால் இடம்பெயர்ந்த சிரிய அகதிகள் மீண்டும் தாயகம் திரும்பவேண்டும் என்றால் சிரியா மீதான சர்வதேச தடைகள் நீங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201616
-
கால்நடைகளில் இருந்து எலிக்காய்ச்சல் பரவுகின்றதா? - ஆய்வு செய்வதற்கு கொழும்பில் இருந்து யாழுக்கு செல்கிறது விசேட குழு!
யாழில் விலங்குகளின் இரத்த மாதிரிகள் சேகரிப்பு யாழ்ப்பாணம், வடமராட்சி கரவெட்டி மற்றும் பருத்தித்துறை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் (19) விலங்குகளிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அண்மைக் காலமாக எலிக் காச்சல் நோயால் பாதிக்கப்பட்ட பலர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர். சிலர் உயிரிழந்தனர். இந்த நிலையில், எலிக் காச்சல் விலங்குகளில் இருந்து பரவி இருக்கலாம் என்ற அச்சத்தில், தொற்றுநோயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய விலங்குகளிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டன. கண்டி பெரதேனியாவிலிருந்து வருகைதந்த விலங்கியல் பிரிவினர் எலிக் காச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, சுற்றுச் சூழல் பகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த பகுதிகளில் உள்ள விலங்குகளில் இருந்து இரத்த மாதிரிகளையும் பெற்றுக்கொண்டனர். https://thinakkural.lk/article/313971
-
அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக போராட்டம்
20 DEC, 2024 | 02:58 PM பாலஸ்தீனத்தில் இனப்படுகொலையை நிறுத்து எனும் தொனிப்பொருளில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் கூட்டமைப்பு இணைந்து நடத்திய போராட்டம் கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்றது. (படப்பிடிப்பு – ஜே. சுஜீவ குமார்) https://www.virakesari.lk/article/201730
-
தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மாத்திரமே வழங்கப்படும் - பாதுகாப்பு அமைச்சு
20 DEC, 2024 | 12:56 PM (எம்.மனோசித்ரா) பொதுமக்களுக்கு தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும். மேலும் அது புலனாய்வவுத்துறை அறிக்கைகளுக்கமைய மேற்கொள்ளப்படும் என பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. பொதுமக்களுக்கு தற்பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை தற்காலிகமாக மீளப்பெறுதல் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது : தற்பாதுகாப்பிற்காக பொதுமக்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட அனைத்து வகையான துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை கடந்த நவம்பர் 21ஆம் திகதிக்கு முன்னர் அளவு மதிப்பாய்வுக்காக அரசாங்கத்திடம் திரும்ப ஒப்படைக்கப்பட வேண்டும் என்று பாதுகாப்பு அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ளது. இவ்வறிவிப்புக்கு அமைய, அனுமதி பத்திரம் பெற்றவர்களில் 85 சதவீதமானோர் துப்பாக்கிகளை மீள ஒப்படைத்துள்ளனர். மேலும், அவர்கள் தொடர்ந்தும் துப்பாக்கிகளை வைத்திருக்க விரும்பினால், அதன் அவசியத்தை விளக்கி ஒக்டோபர் 30 ஆம் திகதிக்கு முன்னர் பாதுகாப்பு அமைச்சிடம் மேல் முறையீடுகளை சமர்ப்பிக்கவும் அவர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டிருந்நது. அந்த மேல் முறையீடுகளைச் சமர்ப்பித்த உரிமதாரர்களின் துப்பாக்கிகளை ஆய்வு செய்வதற்கும் மறுபரிசீலனை செய்வதற்கும் துப்பாக்கிகள் மற்றும் அவற்றின் ஆவணங்களை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்ப்பிக்குமாறு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. தற்பாதுகாப்பிற்காக ஒருவருக்கு ஒரு துப்பாக்கி மட்டுமே வழங்கப்படும் என்பது பாதுகாப்பு அமைச்சின் முடிவாகும், மேலும் அது புலனாய்வவுத்துறை அறிக்கைகளுக்கமைய மேட்கொள்ளப்படும். துப்பாக்கிகள் தொடர்பான அனைத்து மேல் முறையீடுகள் மற்றும் துப்பாக்கிச் தொடர்பான ஆய்வுகள் 2025 ஜனவரி 20 அன்று முடிவடையும் என்றும், மற்றும் அனுமதி பத்திரம் அந்தத் திகதிக்கு முன்னர் துப்பாக்கிகளை ஆய்வுக்காக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கடந்த காலங்களில் இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரும் குறிப்பிடத்தக்களவு துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை வழங்கியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் அந்த துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. எனவே, அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுகிறது. குறித்த திகதிக்கு முன்னர் துப்பாக்கிகள் கணக்கெடுப்பு/ஆய்வுக்கு உட்படாத உரிமதாரர்களுக்கு எதிராக 1916 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்தின்படி, சிவில் சமூகத்தில் துப்பாக்கிப் பாவனை மற்றும் துஷ்பிரயோகத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பான சமூகத்தை உறுதி செய்வதற்காக, பாதுகாப்பு அமைச்சினால் எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கமைய, இதுவரைக்கும் ஒப்படைக்கப்படாத அனைத்து அனுமதி பத்திரம் பெற்ற துப்பாக்கிகளும் 2025 ஜனவரி 20 திகதிக்கு முன் ஆய்வுக்காக ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறினால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/201722
-
யாழ். மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் பாதிப்பு!
எலிக்காய்ச்சல் நோயால் இதுவரை 121 பேர் பாதிப்பு – 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள் யாழ் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 121 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 32 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 8 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 6 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்றுவரை ஏறத்தாழ 8300 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ் மாவட்டத்திற்கு நேற்று வருகை தந்தது. இக்குழு பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளுக்குச் சென்று கால்நடைகளிலிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு குருதி மாதிரிகளை எடுத்துள்ளனர் என்றார். https://thinakkural.lk/article/313966
-
பிபின் ராவத் பலியான ஹெலிகாப்டர் விபத்து எப்படி ஏற்பட்டது? நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES நாடாளுமன்ற பாதுகாப்புத்துறை நிலைக்குழு, மானியங்களுக்கான கோரிக்கை மீதான அறிக்கையைச் சமர்பித்துள்ளது. அதில் முப்படைகளின் முன்னாள் தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது தொடர்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அந்த விபத்து 'மனிதப் பிழை (விமானத்தை இயக்கியவர்களின் பிழை) காரணமாக ஏற்பட்டது' என்று பாதுகாப்புத்துறை நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவின் முதல் முப்படை தளபதி பிபின் ராவத் – யார் இவர்? பிபின் ராவத் மரணம்: இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல் பிபின் ராவத்: இந்தியாவில் வான் விபத்தில் உயிரிழந்த முக்கிய தலைவர்கள் மதுலிகா ராவத்: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் மனைவி – யார் இவர்? பிபின் ராவத் மரணம் கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் தேதியன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை புரிந்த பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் இதர ராணுவ வீரர்கள் சூலூர் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக உதகையில் உள்ள வெலிங்டன் ராணுவ தளத்திற்குச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். பிபின் ராவத், வெலிங்டன் ராணுவத் தளத்தில் நடைபெற இருந்த நிகழ்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு வந்திருந்தார். 12 அதிகாரிகளைக் கொண்ட எம்.ஐ. 17 ரக ஹெலிஹாப்டர் வெலிங்டனை அடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக குன்னூரில் விபத்துக்கு உள்ளானது. விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா மற்றும் 11 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஹெலிகாப்டரை இயக்கிய க்ரூப் கேப்டன் வருண் சிங் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவரும் சிகிச்சைப் பலனின்றி ஒரு வாரத்திற்குள்ளாகவே உயிரிழந்தார். அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் கருத்து: பாஜகவுக்கு என்ன சிக்கல்? கட்சியின் 'தலித் அரசியலை' பாதிக்குமா?7 மணி நேரங்களுக்கு முன்னர் அந்தரத்தில் தண்டவாளம், சுற்றி வெள்ளம் : 800 பேரின் உயிரை காப்பாற்றிய ஸ்டேஷன் மாஸ்டருக்கு உயரிய விருது43 நிமிடங்களுக்கு முன்னர் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு - 'கௌரவமாக கருதுவதாக' காங்கிரஸ் கூறியது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் நிலைக்குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிக்கா மற்றும் 11 அதிகாரிகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த அறிக்கை, கடந்த 2017ஆம் ஆண்டு முதல் 2022 வரையிலான காலத்தில் 34 பாதுகாப்புப் படை விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் விபத்துக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டுள்ளது. அறிக்கைப்படி, 2017-18 காலகட்டத்தில் 8 விபத்துகள் பதிவாகியுள்ளன. மேலும், அதிகபட்சமாக 2018-19 காலகட்டத்தில் 11 விபத்துகள் நடைபெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து 2021-22 காலகட்டத்தில் 9 விபத்துகளும் பதிவாகியுள்ளன. கடந்த 2019-20 மற்றும் 2020-21 காலகட்டத்தில் ஆண்டுக்கு தலா மூன்று விபத்துகள் என 6 விபத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 முதல் 2011 வரை ஏற்பட்ட 34 விபத்துகளில் 19 விபத்துகள் மனிதப் பிழையால் (ஏர் க்ரூ) ஏற்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது, பயணத்தின்போது விமானக் குழுவினரால் செய்யப்பட்ட தவறுகள் அல்லது தவறான மதிப்பீடுகள், விபத்துகளுக்கு வழிவகுப்பதைக் குறிக்கிறது. இதுபோக, ஒன்பது விபத்துகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பறவை மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாகவும், மற்றொரு விபத்து இன்னும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில்5 மணி நேரங்களுக்கு முன்னர் சாம்சங் இந்தியா: தொழிலாளர்கள் மீண்டும் போராட்டம் - என்ன பிரச்னை? அரசு கூறுவது என்ன?19 டிசம்பர் 2024 எண்ணூர்: 'மனிதர்கள் வாழவே தகுதியற்ற பகுதியா?' - அனல் மின் நிலைய திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு19 டிசம்பர் 2024 குறைந்த விபத்துகள் நிலைக்குழு கமிட்டியிடம் பாதுகாப்புத்துறை அமைச்சகம், இந்த 34 விபத்துகள் தொடர்பாக விபத்து நடந்த காலத்திலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது. அதோடு, இதுபோன்ற விபத்துகள் வருங்காலத்தில் ஏற்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு விசாரணைக் குழுக்கள் முன்வைத்த பரிந்துரைகள் பற்றியும் நிலைக்குழுவிடம் அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் விபத்துகள் பெரும் அளவில் குறைக்கப்பட்டு இருப்பதையும் பாதுகாப்புத்துறை அமைச்சகம் சுட்டிக் காட்டியிருப்பதாக நிலைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. அறிக்கைப்படி 2000 முதல் 2005 காலகட்டம் வரை 0.93% ஆக இருந்த விபத்துகள், 2017-22 காலகட்டத்தில் 0.27 ஆக குறைந்துள்ளது. மேலும், 2020 மற்றும் 2024 காலகட்டத்தில் விபத்துகள் 0.20% ஆகக் குறைந்துள்ளதாகவும் அமைச்சகம் அறிவித்ததாக பாதுகாப்புத்துறை நிலைக்குழு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5y8jy2zvjeo
-
05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள், இலத்திரனியல் உபகரணங்களுடன் மூவர் கைது
20 DEC, 2024 | 03:16 PM சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 05 கோடி ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்களுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மூன்று சந்தேக நபர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று வெள்ளிக்கிழமை (20) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மூவரும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் 38, 25 மற்றும் 32 வயதுடையவர்கள் ஆவார். சந்தேக நபர்களில் இருவர் இன்றைய தினம் அதிகாலை 12.30 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மற்றைய சந்தேக நபர், இன்றைய தினம் காலை 09.45 மணியளவில் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். இதன்போது விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சந்தேக நபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 309 கையடக்கத் தொலைபேசிகள் , 08 டெப்கள் , கையடக்கத் தொலைபேசிகளின் துணைக்கருவிகள்12 மடிக்கணினிகள், 20 ஸ்மார்ட் கைக் கடிகாரங்கள் , 05 ரவுடர்கள் மற்றும் பல்வேறு இலத்திரனியல் உபகரணங்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/201737
-
G-Mail க்கு மாற்றாக x மெயில்?
எலான் மஸ்க் G-மெயிலுக்கு மாற்றாக எக்ஸ் மெயிலை கொண்டு வரப்போவதாகத் தகவல் வெளியாகிவுள்ளது. விண்வெளியில் மார்ஸில் வீடு கட்டுவது தொடங்கி அரசியல் பரப்புரைகள் வரை எல்லாவற்றிலும் ஏதோவொரு பெரும் திட்டத்துடனே செயல்பட்டு வருகிறார் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளி ஆராய்ச்சிகள், ஏவுகணைகளை ஏவுதல் என மும்முரமாக இருந்த அவர், டெஸ்லா என்ற நிறுவனத்தின் மூலம் எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தினார். தற்போது G-மெயில் மென்பொருளுக்கு மாற்றாக எக்ஸ் மெயில் மென்பொருளைப் புதிதாக அறிமுகம் செய்யவிருப்பதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக அண்மையில் அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவும் வைரலாகி வருகின்றது. ஏற்கனவே அவர் ஐபோனுக்கு மாற்றாக புதிய மொபைலை கொண்டு வரப்போவதாகவும் கூறப்படுகிறது. https://thinakkural.lk/article/313950
-
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
கிசெல் பெலிகாட்: பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் - முன்னாள் கணவருக்கு 20 ஆண்டுகள் சிறை பட மூலாதாரம்,EPA 19 டிசம்பர் 2024 எச்சரிக்கை: இக்கட்டுரையில் பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரணைகள் உள்ளன. சில விவரங்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கலாம். பிரான்ஸில் தன் முன்னாள் கணவர் உட்பட 51 ஆண்களால் கிசெல் பெலிகாட் எனும் பெண் ஒருவர் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளானதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கில், அவருடைய முன்னாள் கணவர் டொமினிக் பெலிகாட் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தன் மனைவிக்கு டொமினிக் தூக்க மருந்து அளித்து, பல ஆண்களை வைத்து அவரை பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கியதாக அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தன் மகள் மற்றும் இரு மருமகள்களை ஆபாசமாக புகைப்படங்கள் எடுத்ததாக கூறப்பட்ட வழக்கிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 50 பேருக்கான தீர்ப்பும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெரும்பாலான நபர்களும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கான சிறைத் தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன. கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு அமேசான்: சட்டவிரோத தங்க சுரங்கங்களில் பாலியல் தொழில் செய்யும் பெண்களின் உண்மை நிலை திருமணம் செய்துகொள்வதாக உறுதியளித்து உடலுறவு கொண்ட பின் அதை மீறுவது சட்டப்படி குற்றமா? பெல்ஜியம்: உலகிலேயே முதன்முறையாக பாலியல் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு மற்றும் ஓய்வூதியம் மற்றவர்களுக்கு என்ன தண்டனை? இவ்வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஜீர்ன் பியர் எனும் நபருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. இவர், டொமினிக் மூலம் தாக்கம் பெற்று தன் மனைவிக்கும் தூக்க மருந்து கொடுத்து ஐந்து ஆண்டுகள் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், இந்நபர் டொமினிக்கும் தன் மனைவியை பாலியல் வன்புணர்வு செய்ய வைத்துள்ளார். இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட 50 பேரில் பத்திரிகையாளர், டி.ஜே., தீயணைப்பு வீரர், லாரி ஓட்டுநர்கள், பாதுகாவலர்கள் என பலதரப்பட்ட நபர்கள் அடங்குவர். கடந்த செப்டம்பர் மாதம் இந்த வழக்கின் விசாரணை தொடங்கியது. பட மூலாதாரம்,BENOIT PEYRUCQ படக்குறிப்பு, இன்றைய நீதிமன்ற நிகழ்வுக்கு பிறகு டொமினிக் பெலிகாட்டின் முதல் நீதிமன்ற ஓவியம் வெளியானது 72 வயதான கிசெல் பெலிகாட் இன்று பிரான்ஸின், பெண் உரிமைகளுக்காகப் போராடும் அடையாளமாக அறியப்படுகிறார். பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவருடைய முன்னாள் கணவர் டொமினிக்கால் பல்வேறு சித்ரவதைகளுக்கு ஆளானார். பெலிகாட்டிற்கு தொடர்ச்சியாக மயக்க மருந்து அளிக்கப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார். இக்குற்றச்சாட்டை டொமினிக் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார். பெலிகாட்டும், டொமினிக்கும் குடியிருந்த வீட்டின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பலதரப்பட்ட 51 ஆண்கள் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. 27 வயதில் இருந்து 74 வயது வரை உள்ள அந்த ஆண்களுக்கு இன்று (டிச. 19) பிரான்சில் உள்ள ஏவிக்னான் நகர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. `விசாரணையை எண்ணி ஒருபோதும் வருத்தப்படவில்லை' பட மூலாதாரம்,REUTERS இன்றைய நீதிமன்ற நிகழ்வு முடிந்ததும் கிசெல் செய்தியாளர்களை சந்தித்தார். "எனது வழக்கறிஞர்களுக்கு எனது நன்றியையும் மரியாதையையும் தெரிவிக்க விரும்புகிறேன்." என்றார். இந்த விசாரணையை நினைத்து, "எப்போதும் வருத்தப்பட்டதே இல்லை, இந்த விசாரணை மூலமாக இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்பதை சமூகம் பார்க்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். இதேபோல், பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கூட்டமைப்புக்கும் நன்றி தெரிவித்த கிசெல், அவர்கள் தனக்கு உறுதுணையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்த வழக்கை மிகவும் பொறுப்புடன் கையாண்ட பத்திரிகையாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார். பின்னணி என்ன? கடந்த 2011ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரையில் டொமினிக் தன்னுடைய மனைவி கிசெலுக்கு மயக்கு மருந்துகளை உணவு மற்றும் பானங்களில் கலந்து கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளார். பிறகு, ஆன்லைன் மூலமாக அறிமுகமான ஆண்களை வீட்டிற்கு அழைத்து வந்து, கிசெலை பாலியல் வன்புணர்வு சித்ரவதைக்கு ஆளாக்கியுள்ளார் டொமினிக். தொடர்ச்சியாக மயக்க மருந்துகளை எடுத்துக் கொண்டதால் ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டுள்ளார் கிசெல். கிசெலுக்கு அப்போது வயது 58. 38 ஆண்டுகள் டொமினிக்குடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் கிசெல். இருவருக்கும் கரோலின், டேவிட் மற்றும் ஃப்ளோரின் என்று மூன்று பிள்ளைகள். தற்போது அனைவரும் நன்கு வளர்ந்து இளைஞர்களாக உள்ளனர். தன்னுடைய ஓய்வு காலத்தை, பிரான்ஸின் தெற்கில் உள்ள மஸான் என்ற கிராமத்தில் செலவிட திட்டமிட்டிருந்தனர் அந்த தம்பதியினர். 1970களில் இருவரும் முதன்முறையாக சந்தித்துக் கொண்டனர். நிதி பற்றாக்குறை போன்ற சிரமங்களை அவர்கள் சந்தித்து இருந்தாலும், அவர்களின் 38 ஆண்டுகால திருமண வாழ்க்கையை அதிர்ஷ்டம் கொண்டதாக நினைத்திருந்தார் கிசெல். ஆனால், 2011ம் ஆண்டு கிசெல் வழக்கத்திற்கு மாறாக அதிகமாக தூங்கிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி என்ன நடந்தது என்ன என்பதே அவருக்கு நினைவில் இல்லை. இன்று மஸானுக்கு அருகே அமைந்துள்ள ஏவிக்னான் நீதிமன்றத்தில் கிசெலும் டொமினிக்கும் எதிரெதிராக அமர்ந்து உள்ளனர். டொமினிக் சிறை ஆடையை உடுத்தியுள்ளார். கிசெல் அவருடைய குழந்தைகள் மற்றும் வழக்கறிஞர்கள் சூழ அமர்ந்துள்ளார். பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, அந்த மாத்திரைகளை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்ட டொமினிக் அதனை கிசெலுக்கு அளித்து அவரை ஆழ்ந்த தூக்கத்திற்குக் கொண்டு சென்றார் 2014 வரை நடந்து என்ன? டொமினிக் தன்னுடைய 50களின் தொடக்கத்தில் அதிகமாக ஆன்லைனில் நேரத்தை செலவிட்டார். பாலியல் தொடர்பான இணையங்களில் பலருடன் பேசுவது, பாலியல் தொடர்பான தகவல்களை பகிர்வது போன்ற செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 2010-2011 ஆண்டுவாக்கில், செவிலியராக பணியாற்றும் ஓர் ஆண், டொமினிக்கிற்கு அந்த தளத்தின் வாயிலாக அவருடைய மனைவியின் புகைப்படங்களை அனுப்பியுள்ளார். மேலும், அவருடைய மனைவிக்கு எவ்வாறு மயக்கமருந்து கொடுத்து நினைவிழக்க வைத்தார் என்பதையும் தகவல்களாக அவர் பகிர்ந்திருக்கிறார். ஆரம்பத்தில் தயக்கம் அடைந்தாலும், டொமினிக் அதேபோன்று தன் மனைவிக்கு மயக்க மருந்தை கொடுத்தார். அந்த மாத்திரைகளை சரியான முறையில் எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக் கொண்ட டொமினிக் அதனை கிசெலுக்கு அளித்து அவரை ஆழ்ந்த தூக்கத்திற்குக் கொண்டு சென்றார். சுய நினைவில் அணிய விரும்பியிருக்காத ஆடைகளை டொமினிக் கிசெலுக்கு அணிவித்தார். மேலும், பல பாலியல் நடவடிக்கைகளில் கிசெலின் நினைவின்றி அவரை ஈடுபடுத்தியுள்ளார் டொமினிக். மொத்த நிகழ்வுகளையும் வீடியோ காட்சிகளாக பதிவு செய்துள்ளார். ஆரம்பத்தில் இந்த குற்றங்களை அவர் மட்டுமே செய்து வந்தார். 2014ம் ஆண்டு அவர்கள் மஸானுக்கு குடி வந்த பிறகு இந்த திட்டத்தை பெரிதாக்கினார் டொமினிக். கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்த்து போராடும் மக்கள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு19 டிசம்பர் 2024 சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஓய்வு காலத்தை மஸானில் கழிக்கத் திட்டமிட்டார் கிசெல் குடும்பத்தினருக்கு ஏற்பட்ட சந்தேகம் பிறகு ஆன்லைன் சாட் ரூம் மூலமாக அனைத்து வயது ஆண்களையும் கிசெலை பாலியல் ரீதியாக துன்புறுத்த அழைத்துள்ளார் டொமினிக். அதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார் டொமினிக். நீதிமன்ற விசாரணையின் போது, கிசெல் சுயநினைவின்றி இருக்கும் போது இந்த செயல்களில் ஈடுபட கடந்த 10 ஆண்டுகளில் 71 ஆண்கள் அவர்களின் வீட்டிற்கு வந்துள்ளதாக கூறியுள்ளார். தொடர்ச்சியாக பாலியல் சித்ரவதைக்கு ஆளான காரணத்தாலும் மயக்க மருந்துகள் கலந்த உணவை உட்கொண்டதாலும் சுகாதார பிரச்னைகளை எதிர்கொண்டார் கிசெல். உடல் எடை குறைந்தது. முடி கொட்டியது. அடிக்கடி மயக்கம் அடைந்தார். மன உளைச்சலுக்கு ஆளான அவர் இறக்கப் போவதாகவும் நம்பினார். அவரின் உடல் நிலையைக் கண்டு கவலை அடைந்தனர் அவரின் குடும்பத்தினர், எப்போது மொபைலில் அழைத்தாலும் டொமினிக்கே பேசி வந்தார். "அவர் எங்களிடம், பட்டப் பகலிலும் கிசெல் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறுவார். ஆனால், எங்களுடன் எங்கள் வீட்டில் இருக்கும் போது பேரக்குழந்தைகளுடன் ஓடியாடி விளையாடிய வண்ணம் இருப்பார் கிசெல்," என்று கூறுகிறார் அவரின் மருமகன் பியரி. மும்பை: பயணிகள் படகு மீது மோதிய கடல் படை படகு - 13 பேர் கடலில் மூழ்கி பலி19 டிசம்பர் 2024 மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வழக்கறிஞருடன் டொமினிக் பெலிகாட் (வலது) காவலர்களின் வருகையால் வெளிவந்த உண்மை கிசெலுக்கு சந்தேகம் ஏற்பட தொடங்கியது. ஒரு சமயத்தில், நீ எனக்கு மயக்க மருந்து ஏதும் கொடுக்கவில்லையே என்று டொமினிக்கிடம் கேட்டுள்ளார் கிசெல். "என்னை எப்படி நீ இப்படி சந்தேகப்படுவாய்?" என்று கேட்டு அழுதுள்ளார் டொமினிக். அல்சைமர் அல்லது மூளையில் கட்டி போன்ற காரணங்களால் உடல் நிலை மோசமடைகிறதா என்று சந்தேகம் அடைந்தார் கிசெல். அதனால் மருத்துவ சிகிச்சைகளை அவர் மேற்கொண்டார். ஆனால், அவருக்கு அப்படியாக எந்த பிரச்னையும் இல்லை என்று முடிவுகள் வெளியாகின. மஸான் பகுதியை விட்டு வெளியே வந்தால் மட்டுமே அவரால் நிம்மதியாக இருக்க முடிந்தது. அதுவும் சில தருணங்களில் மட்டுமே சாத்தியமானது. கடந்த 2020ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் வெளியூர் சென்றுவிட்டு திரும்பிய பிறகு, டொமினிக் அவரிடம்,"நான் ஒரு முட்டாள்தனமான காரியத்தை செய்துவிட்டேன். பெண்களின் ஆடைகளை சூப்பர் மார்க்கெட்டில் படம் பிடித்த போது மாட்டிக் கொண்டேன்," என்று கூறியுள்ளார். இதற்கு முன்பு பெண்கள் குறித்துத் தவறாக ஒரு வார்த்தை கூட பேசாத காரணத்தால் டொமினிக் மீது எந்த வருத்தமும் கோபமும் கிசெலுக்கு ஏற்படவில்லை. அதனால் அவர் டொமினிக்கை மன்னித்துவிட்டார். ஆனால், சில காலம் கழித்து சூப்பர் மார்க்கெட்டில் வைத்து டொமினிக் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து இரண்டு போன்கள் மற்றும் லேப்டாப் கைப்பற்றப்பட்டது. அதில், 20 ஆயிரம் வீடியோக்களும் புகைப்படங்களும் இருந்தன. அதில், கிசெல் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறை காட்சிகளும் இடம் பெற்றிருந்தன. '36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்18 டிசம்பர் 2024 கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு19 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, அவர்கள் மூவரும் வந்து வீட்டில் பல இடங்களை சோதித்த போது, அவர்களின் மகள் கரோலினும் இதுபோன்று மயக்க மருந்து கொடுத்த புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன தீவிரமான காவல்துறை விசாரணை "அனைத்து வீடியோக்களையும் மணிக்கணக்கில் நான் பார்க்க நேரிட்டது. அது மிகவும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அது நிச்சயமாக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று அந்த விசாரணையை நடத்திய இயக்குநர் ஜெரேமி பாஸ் ப்ளாடியர் நீதிமன்றத்தில் கூறியுள்ளார். அவருடைய குழு, அந்த வீடியோவில் இடம் பெற்றிருந்த ஆண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டிருந்தது. 54 ஆண்களை அவர்கள் அடையாளம் கண்டனர். 21 நபர்களின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. நவம்பர் 2020, 2ம் தேதி அன்று டொமினிக்கும் கிசெலும் காவல் நிலையத்திற்கு வந்துள்ளனர். அங்கே காவல்துறையினர் சூப்பர் மார்க்கெட் விவகாரத்தை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது காவலர் ஒருவர் கிசெலை அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது காவல்துறையினர், கிசெல் இரண்டு ஆண்களுடன் இருக்கும் புகைப்படம் அவரிடம் காட்டப்பட்டது. அதில் இருப்பவர்கள் யார் என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார் கிசெல். பிறகு வீட்டிற்கு வந்த பிறகு தன்னுடைய மகன் மற்றும் மகள்களை அழைத்த கிசெல் காவல் நிலையத்தில் நடந்ததைக் கூறியுள்ளார். அவர்கள் மூவரும் வந்து வீட்டில் பல இடங்களை சோதித்த போது, அவர்களின் மகள் கரோலினும் இதுபோன்று மயக்க மருந்து கொடுத்த புகைப்படங்களும் இடம் பெற்றிருந்தன. அனைத்து குடும்ப புகைப்படங்களையும் அழித்துவிட்டதாக கூறுகிறார் டேவிட். டொமினிக் தன்னுடைய குற்றத்தை ஒப்புக் கொண்டார். காவல் நிலையத்தில் அவர்கள் சந்தித்துக் கொண்ட பிறகு 2024ம் ஆண்டில் நீதிமன்றத்தில் தான் அவர்கள் மீண்டும் சந்தித்துக் கொண்டனர். அம்பேத்கர் பற்றி அமித் ஷா என்ன பேசினார்? எதிர்க்கட்சிகள் போராட்டம் ஏன்?18 டிசம்பர் 2024 மாஸ்கோவில் ரஷ்ய அணுஆயுதப் படைகளின் தலைவர் கொல்லப்பட்டது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, தனக்கு ஏற்பட்ட அநீதியில் இருந்து மீண்டு வர தன்னுடைய வாழ்நாள் காலம் போதாது என்று கிசெல் கூறியுள்ளார் வாழ்நாள் காலம் போதாது இந்த வழக்கு, உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கிசெல் தன்னுடைய அடையாளத்தை மறைத்து, இந்த வழக்கை எதிர்கொள்ளும் உரிமையை நிராகரித்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் பெண்களின் எதிர்காலம் மற்றும் அவரின் அடையாளத்தைக் கருத்தில் கொண்டு இந்த உரிமை வழங்கப்படுகிறது. மாறாக, கிசெல் இந்த விசாரணையில் தன் அடையாளத்தை வெளிக்காட்டினார். பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் இந்த விசாரணையின் தன்மையை அறிந்துகொள்ள வழிவகை செய்தார். அவர் மயக்க நிலையில் இருந்தார் என்பது எங்களுக்குத் தெரியாது என்று விசாரணையில் பல ஆண்கள் கூறியிருந்ததால் அது, 'தற்செயலாக நிகழ்ந்த பாலியல் வன்புணர்வு' (accidental rape) என்ற ஒரு பார்வை அதில் இருந்தது. ஆனால், கிசெலின் வழக்கறிஞர்கள் குழு, இதற்கு எதிராகப் போராடி, கிசெல் வீட்டில் எடுக்கப்பட்ட வீடியோக்களை நீதிமன்றத்தில் ஒளிபரப்பினர். எந்த நிலையில் கிசெல் இருந்தார் என்பதை அந்த வீடியோக்கள் வெளிப்படுத்தின. தனக்கு நடந்த அநீதியில் இருந்து மீண்டு வர அவருடைய வாழ்நாள் காலம் போதாது என்று கிசெல் கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqx8zedrxvno
-
உக்ரேன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் - ரஷ்யா
20 DEC, 2024 | 10:08 AM உக்ரேன் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எந்த நிபந்தனையும் இல்லை என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் தெரிவித்துள்ளார். நேட்டோ அமைப்பில் இணைய முயன்ற உக்ரேன் மீது ரஷ்யா 2022 ஆம் ஆண்டு போர் தொடுத்தது. இந்த போரில் உக்ரேனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் வழங்கி, பொருளாதார உதவிகளை வழங்குகின்றன. அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடுகளான சீனா உள்ளிட்டவை ஆதரவாக செயல்படுகின்றன. தற்போது உக்ரேனுக்குள் நுழைந்து ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேபோல் உக்ரேனும், ரஷ்ய படைகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றன. இந்த சூழலில் இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பலநாடுகள் முயன்றன. ஆனால் ரஷ்ய - உக்ரேன் இடையேயான போர் இன்று வரை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே தான் சமீபத்தில் இருநாடுகள் இடையேயான மோதல் சற்று குறைந்திருந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக மீண்டும் மோதல் வலு பெற்றுள்ளது. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா, பிரித்தானியா தயாரிப்பு ஏவுகணைகளை பயன்படுத்தி உக்ரேன், ரஷ்யா மீது தாக்குதல் நடத்தியது தான் காரணம். இதனால் கோபமான ரஷ்யா, உக்ரேன் மீதும் ஏவுகணை தாக்குதலை தொடங்கியது. இதனால் மோதல் மீண்டும் தீவிரமானது. இதற்கிடையே தான் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வென்ற டொனால்ட் ட்ரம்ப் போரை நிறுத்தும் முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின்போதே, தான் அமெரிக்கா ஜனாதிபதியாக இருந்திருந்தால் போர் வந்து இருக்காது. இருப்பினும் பதவியேற்ற அடுத்த 24 மணிநேரத்தில் போரை என்னால் நிறுத்த முடியும் என்று அவர் கூறியிருந்தார். மேலும் தேர்தலில் வென்ற பிறகு உக்ரேன், ரஷ்யாவிடம் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இந்நிலையில் உக்ரைன் விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள தயார் என்று ரஷ்ய ஜனாதிபதி புடின் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. https://www.virakesari.lk/article/201708
-
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து அஷ்வின் ஓய்வு!
'அவரை மன்னித்து விடுங்கள்' - ஓய்வு குறித்து தந்தையின் சர்ச்சை கருத்துக்கு அஸ்வின் பதில் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர், ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது, இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், அவருடைய ஓய்வு குறித்து அவரின் தந்தை அளித்த பேட்டியும் அதற்கு அஸ்வின் கொடுத்த விளக்கமும் கிரிக்கெட் ஆர்வலர்களிடையே விவாதப் பொருளாகியுள்ளது. "அஸ்வின் ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட விதத்திற்கு பல காரணங்கள் உள்ளன. அஸ்வின் அவமானப்படுத்தப்பட்டிருக்கலாம், அது அஸ்வினுக்கு மட்டுமே தெரியும். எவ்வளவு காலத்துக்குதான் அவரும் பொறுத்துக்கொண்டிருப்பார்." என அவருடைய தந்தை ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதற்கு,தன்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது' என விளக்கம் அளித்திருக்கிறார் அஸ்வின். அஸ்வினின் ஓய்வு விவாதமாவது ஏன்? அஸ்வின்: ஆட்டத்தின் போக்கை மாற்றி, திருப்புமுனையை ஏற்படுத்திய 5 முக்கிய தருணங்கள் இடது கை பேட்டர்களின் எதிரி: முரளிதரன், வார்னேவை விஞ்சி அஸ்வின் படைத்துள்ள சாதனை என்ன? ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - என்ன கூறினார்? இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதேபோன்றுதான் ஆஸ்திரேலியத் தொடரின் நடுவே டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். அதேபோன்ற முடிவே அஸ்வினும் எடுத்து, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென டிச. 18 அன்று அறிவித்தார். குழப்பம், சந்தேகம் அடுத்ததாக சிட்னி மற்றும் மெல்போர்னில் நடக்கவிருக்கும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் உள்ள ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பது தெரிந்த நிலையில், அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்திருப்பது பல்வேறு கேள்விகளையும், குழப்பங்களையும் கிரிக்கெட் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. அஸ்வினின் திடீர் ஓய்வு அறிவிப்பு குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள், முன்னாள் வீரர்கள் பலரும் வாழ்த்துகள் தெரிவித்துள்ள நிலையில், திடீரென இந்த முடிவை அவர் எடுத்தது ஏன் என்ற காரணத்தையும் ஆராய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18 அன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு வியாழக்கிழமை காலை சென்னை வந்தார். வழக்கமாக, இந்திய அணியில் ஒரு வீரர் ஓய்வு அறிவிப்பு வெளியிட்டால், வீரர்கள் அனைவருடன் நடக்கும் தேநீர் விருந்து, பிரியாவிடை கூட்டம் ஆகியவைகூட நடக்கவில்லை என்று சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டதை பார்க்க முடிந்தது. சர்வதேச அரங்கில் ஜொலிக்கும் தமிழக வீரர்கள்: இந்தியாவின் செஸ் மையமாக தமிழ்நாடு உருவானது எப்படி?14 டிசம்பர் 2024 குகேஷ்: இளம் வயதில் உலக செஸ் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்த பிறகு கூறியது என்ன?13 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரவிச்சந்திரன் அஸ்வின் டிசம்பர் 18 அன்று தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட நிலையில், மாலையிலேயே அங்கிருந்து புறப்பட்டு நேற்று சென்னை வந்தார் தந்தை வருத்தமும் அஸ்வினின் விளக்கமும் அஸ்வின் டிசம்பர் 19ம் தேதி அன்று காலை சென்னை வந்தபின் அவரின் இல்லத்தில் அவரின் குடும்பத்தினர் இசை வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேசமயம், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு குறித்து அவரின் தந்தை ரவிச்சந்திரன் தன்னுடைய சில வருத்தங்களை எழுப்பியுள்ளார். அஸ்வின் தந்தை ரவிச்சந்திரன் தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு அளித்தப் பேட்டியில் "என் மகன் தொடர்ந்து சீனியர் அணியில் விளையாட விருப்பமாக இருந்தார். ஆனால், அஸ்வினின் ஓய்வு அறிவிப்பு எனக்குக் கடைசி நிமிடத்தில்தான் தெரிந்தது" என்றார். "ஓய்வு பெறுவது அவரின் விருப்பம் அவரின் முடிவில் நான் தலையிட விரும்பவில்லை. ஆனால், ஓய்வு அறிவிப்பை வெளியிட்ட விதத்திற்கு பல காரணங்கள் உள்ளன" என்றும் அவர் கூறினார். அஸ்வினின் திடீர் மாற்றம், ஓய்வு அறிவிப்பு உண்மையில் அதிர்ச்சியாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார். "என்னுடைய தந்தை ஊடகங்களில் பேசி பழக்கப்பட்டவர் கிடையாது. அனைவரும் அவரை மன்னித்து, தனியே விடுங்கள்," என்று அஸ்வின் எக்ஸ் தளத்தில் அவருடைய தந்தையின் கருத்து குறித்து அறிவித்துள்ளார். பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா - ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 ரூ.1.6 கோடிக்கு ஏலம் போன மதுரை கிரிக்கெட் வீராங்கனை - 16 வயதில் சாதித்தது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது பிளேயிங் லெவனில் இடம் மறுப்பு வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் தொடர்களில் அஸ்வின் தொடர்ந்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் புறக்கணிக்கப்பட்டு வந்தார் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து தொடருக்கு அஸ்வின் தேர்வு செய்யப்பட்டாலும் அவர் அணியில் பெஞ்சில் அமரவைப்பது பல காலமாக நடந்துள்ளது. இப்போது நடந்துவரும் ஆஸ்திரேலியத் தொடரின் முதல் டெஸ்டில் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டு அஸ்வின் அமரவைக்கப்பட்டார். அடிலெய்ட் டெஸ்டில் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது, பிரிஸ்பேன் டெஸ்டில் அஸ்வினுக்குப் பதிலாக ஜடேஜாவுக்கு இடம் அளிக்கப்பட்டது. முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரும் சேனல் ஒன்றுக்கு அளித்தப் பேட்டியில், "அஸ்வின் அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதும், வாஷிங்டன் சுந்தருக்கு அளிக்கப்படும் வாய்ப்பும் கூட அஸ்வின் ஓய்வு அறிவிப்புக்குக் காரணமாக இருக்கலாம்" என விமர்சித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8ewxzdkkjeo
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் படகு திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது 20 DEC, 2024 | 09:47 AM முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பயணிகளுடன் கரை ஒதுங்கிய மியன்மார் படகு இன்று (20) காலை திருகோணமலை அஷ்ரப் துறைமுகத்தை வந்தடைந்தது. குறித்த நபர்கள் திருகோணமலை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் நாமகள் வித்தியாலயத்தில் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் அவர்களுக்கான உணவு உட்பட ஏனைய வசதிகளை திருகோணமலை பட்டணம் சூழலும் பிரதேச செயலகம் முன்னெடுத்து வருவதோடு ஏனைய அரச திணைக்களங்களும் தயார் நிலையில் உள்ளனர். முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 வெளிநாட்டு பயணிகளுடன் படகொன்று நேற்று வியாழக்கிழமை (19) கரை ஒதுங்கியிருந்தது. குறித்த படகொன்று திசைமாறி வந்து கரையொதுங்கியுள்ளதாகவும், குறித்த படகில் 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்குகின்றனர். https://www.virakesari.lk/article/201707
-
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள இஸ்ரேலியர் ஒருவர் இலங்கையில் தஞ்சம்!
பலஸ்தீன மக்களைக் கொன்ற இஸ்ரேலிய இராணுவ வீரர் இலங்கையில் இருக்கிறார் - உடன் கைதுசெய்யுமாறு இலங்கை அரசிடம் 'த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' வலியுறுத்தல் 20 DEC, 2024 | 02:05 AM (நா.தனுஜா) பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், உயிரிழந்தோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூறவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் என்பவர் கொழும்பில் இருப்பதாகவும், அவரைக் கைதுசெய்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் 'தி ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' வலியுறுத்தியுள்ளது. 'த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்' என்பது இஸ்ரேலின் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கை முடிவுக்குக்கொண்டுவருவதுடன், காஸாவில் கொல்லப்பட்ட சகலரையும் நினைவுகூரும் நோக்கில் பெல்ஜியத்தைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பாகும். குறித்த அமைப்பானது பலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டமைக்கும், அவ்வாறு கொல்லப்பட்டோரின் சடலங்கள் அவமரியாதை செய்யப்பட்டமைக்கும் பொறுப்புக்கூறவேண்டிய இஸ்ரேலிய இராணுவ வீரரான கல் ஃபெரென்புக் என்பவர் கொழும்பில் இருப்பதாக தமக்கு அறியக்கிடைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அதுமாத்திரமன்றி அவரை உடனடியாகக் கைதுசெய்வதற்கும், இவ்விவகாரத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அவ்வமைப்பு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்திருக்கும் 'த ஹின்ட் ரஜாப் பவுன்டேஷன்', குறித்த இராணுவ வீரருக்கு எதிராக சிவப்பு அறிவிப்பை வெளியிடுவது பற்றி இன்டர்போலுடனும் கலந்துரையாடியுள்ளது. https://www.virakesari.lk/article/201702
-
குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்யும் தீர்மானமில்லை - அரசாங்கம்
19 DEC, 2024 | 04:13 PM (எம்.மனோசித்ரா) விவசாய நடவடிக்கைகள் மற்றும் மக்களின் அன்றாட செயற்பாடுகளுக்கு பாதிப்புக்களை ஏற்படுத்தும் குரங்குகள் உள்ளிட்ட வன விலங்குகள் குறித்து குறுகிய காலத்தில் நடைமுறைப்படுத்தக் கூடிய திட்டங்கள் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது. எனினும் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், குரங்குகள் தொடர்பான பிரச்சினை குறித்து விவசாய அமைச்சு அவதானம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறது. தொழிநுட்ப அமைச்சு இது குறித்து அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் இது வெ வ்வேறு மட்டங்களில் சிக்கலுக்குரிய பிரச்சினையாகியுள்ளது. சூழல் சமநிலையின்மையால் இப்பிரச்சினை உக்கிரமடைந்துள்ளது. இது தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள பெரும்பாலான யோசனைகள் நீண்டகால திட்டங்களாகும். அவற்றை நடைமுறைப்படுத்தும் வரை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் காத்திருக்க முடியாது. எனவே குறுகிய கால திட்டங்கள் தொடர்பில் தற்போது ஆராயப்பட்டு வருகிறது. குரங்குகள் போன்ற மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விலங்குகளை நாட்டின் வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லல் மற்றும் இனப்பெருக்க கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. மாறாக குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வது குறித்து எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றார். https://www.virakesari.lk/article/201661
-
காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்படுமா?!
கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES உலகின் மிகப் பரந்த நிலப்பரப்பை ஆண்ட மங்கோலிய பேரரசர் கெங்கிஸ் கானுக்கும், அமெரிக்க உள்நாட்டுப் போருக்கும், பிரிட்டிஷ் மருத்துவ சேவைக்கும் தொடர்பு இருக்கிறதா? இது என்ன மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போடுவதாக இருக்கிறதே என்று எண்ணத் தொன்றுகிறதா? மேலே கூறிய மூன்றுமே ஒரே புள்ளியில் இணையவே செய்கின்றன. அவை தான் புழுக்கள். ஆம்... இறந்த விலங்குகளின் உடல்கள் மீதும், நாள்பட்ட புண்கள் மீதும் நெளியக் கூடிய, நீங்கள் அருவெருப்புடன் நோக்கும் அதே புழுக்கள் தான். 12-ம் நூற்றாண்டின் இறுதியில் உலகையே ஒரு கொடியின் கீழ் கட்டி ஆளும் வேட்கையுடன் சீற்றத்துடன் புறப்பட்ட கெங்கிஸ் கான் தன்னுடன் பெரும்படையை மட்டுமல்ல, இந்த புழுக்களையும் எடுத்துச் சென்றுள்ளார். மங்கோலியர்கள் பிறந்தது முதலே அவர்களது வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்ட குதிரைகள் மட்டுமல்ல, இந்த புழுக்களும்தான் கெங்கிஸ் கானின் வியக்கத்தக்க வெற்றிக்கு அடிகோலின என்றால் மிகையல்ல. பதின் பருவத்திலேயே போர்க்களம் கண்டு விட்ட கெங்கிஸ் கானின் மாபெரும் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் படை வீரர்களின் நலனில் அவர் காட்டிய அக்கறையும் ஒன்று. அந்த வகையில், போர்க்களத்தில் எதிரிகளால் காயமடையும் வீரர்களை குணப்படுத்த புழுக்களையே பெரிதும் பயன்படுத்தினார் கெங்கிஸ் கான். காயத்தின் மீது இந்த புழுக்களை அடைத்து கட்டினால் காயம் விரைந்து குணமடையும் என்பதை மங்கோலியர்கள் அப்போதே அறிந்திருந்தார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கெங்கிஸ் கான் வரலாறு நெடுகிலும் உற்று நோக்கினால், கெங்கிஸ் கான் மட்டுமின்றி, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் நகியம்பா பழங்குடியினரும், வடக்கு மியான்மரில் மலைவாழ் மக்களும், மத்திய அமெரிக்காவில் மாயன் பழங்குடிகளும் காயங்களை குணப்படுத்த புழுக்களை பயன்படுத்தியிருப்பதை காண முடிகிறது. உலகம் முழுவதும் ஆங்காங்கே பரவலாக காயங்களுக்கு சிகிச்சை அளிக்க புழுக்கள் பயன்படுத்தப்பட்டாலும் கூட, மருத்துவத் துறையின் ஒட்டுமொத்த கவனத்தையும் அது ஈர்க்கவில்லை. 19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவில் வெடித்த உள்நாட்டுப் போரின் விளைவாக, இந்தப் புழுக்கள் மீண்டும் பரவலாக கவனம் பெற்றன. அப்போது, டென்வில் நகர மருத்துவமனையில் பணிபுரிந்த ஜான் ஃபார்னெ ஜாக்கரியாஸ் என்ற மருத்துவர், முதன் முறையாக உடலில் சிதைந்து போன திசுக்களை அகற்ற இந்த புழுக்களை பயன்படுத்தினார். அதன் முடிவு அவருக்கு மிகவும் திருப்தி அளிப்பதாக அமைந்தது. இந்த புழுக்கள் சிதைந்த திசுக்களை மட்டுமல்ல, காயங்களில் இருந்த பாக்டீரியாக்களையும் அகற்றியதை அவர் கண்டுபிடித்தார். நவீன பாக்டீரியாவியலை தோற்றுவித்த ராபர்ட் கோச், நுண்ணியிரியலின் தந்தை என்று அழைக்கப்படுபவரும், இன்றைய தடுப்பூசிகளுக்கு முதலில் விதை போட்டவருமான லூயி பாஸ்டர் ஆகியோரின் வருகைக்குப் பின்னர், மருத்துவத் துறையில் இந்த புழுக்களின் பயன்பாடு முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES நோய்க்குக் காரணமான பாக்டீரியாக்களும், நுண் கிருமிகளும் தாமாக தோன்றுவதில்லை, அவை தொற்றாக நம்மை பற்றிக் கொள்கின்றன என்பதை கண்டுபிடித்து உலகிற்கு அவர்கள் அறிவித்தனர். சுத்தமும் சுகாதாரமுமே காயங்களையும், நோய்களையும் ஆற்ற அருமருந்து என்பதை அவர்கள் நிரூபித்தனர். நோய்த் தொற்றை ஏற்படுத்தும் பாக்டீயாக்களை கொன்று நோயை குணப்படுத்தும் பென்சிலினை கண்டுபிடித்ததன் மூலம், அலெக்சாண்டர் பிளமிங், மருத்துவத் துறையில் புழுக்களின் பயன்பாட்டிற்கு முடிவுரை எழுதினார். ஏனெனில், நோய்க் கிருமிகளை விரட்டியடித்து நோயில் இருந்து நம்மை காக்க ஒரு சிறிய மாத்திரையே போதும் என்றால், உடல் திசுக்களில் நெளியும் புழுக்களை விட யார் தான் விரும்புவார்? ஆனால், இந்த மாயவித்தை செய்யும் ஆன்டிபயாட்டிக் மருந்துகளையும் முறியடிக்க 1980-களில் புதிய வில்லன் தோன்றியது. மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் (Methicillin Resistant Staphylococcus Aureus) என்ற பாக்டீரியா ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தோற்கடித்தது. ஆன்டிபயாட்டிக் மருந்துகளை எதிர்த்து தாக்குப்பிடித்தது மட்டுமின்றி, மருத்துவமனைகள், வாழிடம், பணிபுரியும் இடம், பள்ளிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் எளிதாக மற்றவர்களுக்கு பரவியது. இதனைக் கட்டுப்படுத்த புதிய ஆயுதத்தைத் தேடிய மருத்துவ உலகத்தின் கவனம் மீண்டும் புழுக்களின் மேல் பதிந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஈக்களின் வாழ்க்கை சுழற்சியை விளக்கும் படம் கெலிபேரைடெ என்ற ஈக்களின் லார்வாப் பருவம்தான் இந்தப் புழுக்கள். வயிறும் மத்திய பாகமும் பிரகாசமான நீலம் மற்றும் பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும் இந்த ஈக்கள் இறந்த உடல்கள் மீது மொய்த்திருப்பதை நாம் காண முடியும். இந்த ஈக்களின் முட்டைகளில் இருந்து வெளிவரும் லார்வாப் பருவ புழுக்கள் குறுகிய காலகட்டத்திலேயே 100 மடங்கு வளர்ச்சியை எட்டுகின்றன. அதற்கான உணவு முழுமையுமே இறந்த திசுக்கள் தான். காயங்களில் உள்ள இறந்த திசுக்களை மட்டுமின்றி, அதில் உள்ள தீங்கு விளைவிக்கும் மெத்திசிலின் ரெசிஸ்டென்ட் ஸ்டெபிலோகாக்கஸ் ஆரெயஸ் பாக்டீரியாக்களையும் இந்த புழுக்கள் தின்றுவி டும். இதன் மூலம் முழு சுத்தம் பெறுவதால் காயங்கள் விரைந்து ஆறிவிடும். பிரிட்டிஷ் மருத்துவ சேவையில் இன்றும் இந்த புழுக்களின் பயன்பாடு இன்றியமையாததாக இருக்கிறது. பிரிட்டிஷ் தேசிய சுகாதார சேவைக்கு உட்பட்ட எல்லா மருத்துவமனைகளிலும் காயங்களை ஆற்ற இந்த புழுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காயத்தின் மீது புழுக்கள் நிரம்பிய சிறு பைகளை கொண்டு கட்டுப் போடும் சிகிச்சை முறை எனினும், நெளியும் புழுக்கள் மீதான ஒவ்வாமையைத் தவிர்க்க, சிறிய தேநீர்ப் பை அளவே கொண்ட பைகளில் இந்த புழுக்களை அடைத்து காயத்தின் மீது கட்டுகிறார்கள். அடுத்த சில நாட்களில் காயம் ஆறிய பிறகு இந்த கட்டு அவிழ்க்கப்படுகிறது. மருத்துவ உலகம் எவ்வளவோ உச்சங்களை தொட்டுவிட்ட பிறகும் கூட, காயங்களை ஆற்றுவதில் இந்த புழுக்களின் பயன்பாடு தவிர்க்க இயலாதாக தொடரவே செய்கிறது. ஆகவே, நாமும் சொல்வோம், வல்லமை மிக்க இந்த புழுக்கள் நீடூடி வாழ்க. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2jgv8x520vo
-
சந்திரிகா காலத்தில் ஜனாதிபதி நிதியத்திடமிருந்து பணம் பெற்றோரின் பட்டியலும் விரைவில் வெளியாகும் - அமைச்சரவைப் பேச்சாளர்
19 DEC, 2024 | 04:21 PM (எம்.மனோசித்ரா) ஜனாதிபதி நிதியத்திடமிருந்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும் பலர் இலட்சக்கணக்கான நிதியைப் பெற்றிருக்கின்றனர். அது தொடர்பான ஆவணங்களையும் விரைவில் நாட்டுக்கு வெளிப்படுத்தவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19) இடம்பெற்றபோது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 1978ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதிய சட்டத்தின் கீழ் 5 கட்டங்களின் கீழ் நிதியை வழங்குவதற்கு வாய்ப்புள்ளது. அதில் இறுதித் தொகுதியில் சபையால் தீர்மானிக்கப்படுபவர்களுக்கு வழங்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் கடந்த காலங்களில் உண்மையான தேவைகளுக்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது என நாம் நம்பவில்லை. நாட்டிலுள்ள சாதாரண மக்கள் ஏதேனும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டால் அதற்காக ஜனாதிபதி நிதியத்திடமிருந்து சுமார் 2 இலட்சம் ரூபாவை பெற்றுக்கொள்வதற்கு கூட பாரிய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியேற்படும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கோரப்படும் நிதி கிடைப்பதுமில்லை. ஆனால், என்னால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணத்தைப் பார்க்கும்போது முற்றிலும் தலை கீழான நிலைமையே காணப்படுகிறது. 2005 - 2024 வரையான பட்டியலையே நான் முன்வைத்திருக்கிறேன். இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க ஆட்சி காலத்திலும் இவ்வாறு பலர் நிதியைப் பெற்றுள்ளனர். என்னால் முன்வைக்கப்பட்ட ஆவணங்கள் தவிர, பிரதேச சபை உறுப்பினர்கள், தலைவர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் ஜனாதிபதி நிதியத்திலிருந்து நிதியைப் பெற்றுள்ளனர். இது உண்மையில் ஒழுக்கத்துடன் தொடர்புடைய பிரச்சினையாகும். ஒரு சிலருக்கு சுமார் 100 இலட்சம் ரூபா என்ற பாரிய தொகை கூட கட்டம் கட்டமாக அன்றி நேரடியாக முழுமையாக வழங்கப்பட்டுள்ளது. அதிகாரத்தை தம்வசம் வைத்திருந்தவர்கள் அதனை பயன்படுத்திக் கொண்டு இவ்வாறு செயற்பட்டிருக்கின்றனர். இது தொடர்பில் மேலும் பல ஆவணங்களை தேட வேண்டியுள்ளது. அதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. வெகு விரைவில் இதனை விட தெளிவாக மேலும் பல ஆவணங்களை வெளிப்படுத்துவோம் என்றார். https://www.virakesari.lk/article/201663
-
ஆய்வுக் கப்பல் விவகாரம் இராஜதந்திர போக்குடனேயே அணுகப்படும் - அரசாங்கம்
19 DEC, 2024 | 04:13 PM (எம்.மனோசித்ரா) இந்தியா, சீனா உட்பட எந்த நாட்டிலிருந்து ஆய்வுக் கப்பல்கள் வருகை தந்தாலும், அவை தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைகளுக்கமையவே அனுமதி குறித்த தீர்மானம் எடுக்கப்படும். இவ்விடயத்தை நீண்ட கால இராஜதந்திர போக்குடனேயே அணுகுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை (19) இடம்பெற்றது. இதன் போது, ஆய்வுக்கப்பல்களின் வருகைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன உயர்மட்ட தூதுக்குழுவின் கரிசணை குறித்தும், இந்தியாவின் நிலைப்பாடு குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், ஆய்வுக் கப்பல்கள் குறித்து இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுடனும் இராஜதந்திர ரீதிலேயே நகர்வுகளை முன்னெடுக்கின்றோம். இவ்வாரம் சீனாவின் மருத்துவ கப்பலொன்று இலங்கை வரவுள்ளது. அக்கப்பல் எமது சுகாதார துறைக்கு ஒத்துழைப்புக்களை வழங்கும் நோக்கிலேயே விஜயம் செய்யவுள்ளது. அதற்கு எவ்வித கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. ஆனால் ஆய்வுக் கப்பல்கள் வருகை தரும் போது, அவை எந்த நாட்டு கப்பல்களானாலும் அது குறித்து நாம் ஆழமாக ஆராய்ந்த பின்னரே அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை தீர்மானிப்போம். அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடனுடன் கலந்துரையாடி விசாரணைகளை முன்னெடுத்து தீர்மானங்களை எடுப்போம். நீண்ட கால இராஜதந்திர நோக்குடனேயே நாம் செயற்படுகின்றோம். ஆய்வுக் கப்பல் வருகை தொடர்பில் இதற்கு முன்னர் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு விடயங்கள் தொடர்பில் படிப்படியாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்கு முன்னரும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இது குறித்து அறிவித்திருக்கின்றார். ஆய்வுக்கப்பல்கள் வருவதற்கான நோக்கம் குறித்து தெளிவாக ஆராய்ந்த பின்னரே எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படும். பாதுகாப்பு தரப்பினரின் ஆலோசனைக்கமைய அதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/201662
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
19 DEC, 2024 | 06:42 PM ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக்கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இலங்கை தொடர்பான தீர்மானங்களைப் பிரேரிக்கும் மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை வேண்டுவதாக இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். கனடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ – பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனடிய அரசியல் தரப்பினருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு வியாழக்கிழமை (19) ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு கோரிக்கை கடிதமொன்றையும் கையளித்துள்ளார். அக்கடித்தில், ஈழத்தமிழர் மீது திட்டமிடப்பட்ட தொடர்தேர்ச்சியான இன அழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று நாடாளுமன்றக் குழுத் தலைவராக நான் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழர்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய திருகோணமலைப் பிரகடனத்தில் எவ்வாறு இந்தத் திட்டமிடப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசு கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதென்பதை ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தந்தை செல்வா அவர்கள் ஆரம்பத்திலேயே தெளிவாக விளக்கியிருந்தார். அதன் ஒரு வடிவமாகவே ஒற்றையாட்சி அரசியலமைப்பு தொழிற்படுகிறதென்று சர்வதேச தரப்புகளை நோக்கி இலங்கை எதிர்நோக்கும் சிக்கல் என்ற வெளியீட்டை முதல் முதலாக சர்வதேசம் நோக்கி தமிழரசுக்கட்சி முன்வைத்திருந்தது. இது தொடர்பில் அன்று தொட்டு இன்று வரை சர்வதேசத்தின் பங்கை மக்கள் பிரதிநிதிகளாக நாம் வலியுறுத்திவருகிறோம். இலங்கைத் தீவு தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் பின்வரும் மூன்று விதமாகப் படிநிலைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தோடும் ஒழுங்கோடும் அணுக வேண்டும் என்பது எமது பார்வையாக உள்ளது: 1)தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக்கூறல் 2)இதர சர்வதேசக் குற்றங்களான போர்க்குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல் 3)மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாது புரையோடிப்போயிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதும் பொறுப்புக்கூறலின் முக்கிய பெறுபேறாக அமையவேண்டும். மேற்குறித்த மூன்று முனைகளில் அர்த்தமுள்ளவகையில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதிலும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதிலும் பெருந்தொகையாகப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடான கனடா நாடானது பின்வரும் வழிகளில் காத்திரமாக உதவவேண்டும் என்று அனைத்து ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் வேண்டி நிற்கிறேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/201684
-
மனிதர்கள் நிலா மற்றும் செவ்வாயில் வீடு கட்ட வித்திடும் ஆய்வு - லடாக்கில் ஒரு விண்வெளி அனுபவம்
பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, லடாக்கில் உள்ள இந்தியாவின் ஹேப்-1 விண்வெளி அனலாக் திட்டம். கட்டுரை தகவல் எழுதியவர், கீதா பாண்டே பதவி, பிபிசி நியூஸ் மேலே உள்ள படத்திலுள்ள முட்டை வடிவிலான இந்த அமைப்புகள், வருங்காலத்தில் இந்திய விண்வெளி வீரர்கள் விண்வெளியில் வாழும் வீடுகளாக இருக்க முடியுமா? நிலத்தில் இருந்துகொண்டே விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் ஹேப்-1 என்றழைக்கப்படும் ஹேபிடட்-1 என்ற சோதனைத் திட்டத்தை முதல் முறையாக இஸ்ரோ உருவாக்கியுள்ளது. லடாக்கில் உள்ள இமயமலைப் பகுதியில் மூன்று வாரங்களுக்கு இந்த சோதனை முயற்சி நடைபெற்றது. விண்வெளி போன்ற ஒரு சூழலை உருவாக்கி இந்தச் சோதனைகள் நடத்தப்படும்போது, விண்வெளி வீரர்களுக்கும் மற்ற உபகரணங்களுக்கும் ஏற்படும் பிரச்னைகளைக் கண்டறிந்து சரி செய்ய முடியும் என்று குஜராத்தை சேர்ந்த விண்வெளி நிறுவனமான ஆகாவில் (Aaka), விண்வெளி பொறியாளராகப் பணிபுரியும் ஆஸ்தா கச்சா-ஜாலா பிபிசியிடம் தெரிவித்தார். ஹேப்-1, விண்வெளி தரத்திலான டெஃப்ளான் உலோகத்தால் தயாரிக்கப்பட்டது. இது தொழிற்சாலைகளில் பயன்படுத்தபடும் பாதுகாக்கப்பட்ட ஃபோம் (foam) அமைப்புடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு மெத்தை, வேலை செய்வதற்கான மடித்து வைக்கக்கூடிய ஒரு மேசை, தினசரி மற்றும் அவசரக்கால தேவைகளுக்கான பொருட்களை வைப்பதற்கான ஓர் இடம், சிறிய சமையலறை மற்றும் கழிவறை இருக்கின்றன. இந்தச் சோதனைக்காக மூன்று வாரங்கள் வரை விண்வெளி வீரர் ஒருவர் இங்கு தங்கியிருந்தார். "செவ்வாய் கிரகமோ, நிலவோ எதுவாக இருந்தாலும் அங்கிருக்கும் சுற்றுச்சூழலில் நிலவும் மிகக் குறைந்த அளவிலான வசதிகள் மற்றும் கட்டுமான சவால்களைக் கருத்தில் கொண்டே ஹேப்-1 கட்டமைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் தண்ணீருக்கு சிக்கல் இருக்கும் என்பதால் நீர் இன்றி இயங்கும் கழிவரையை உருவாக்கியுள்ளோம். அதில் துர்நாற்றம் வெளிவராத வகையில் கழிவை வெளியேற்றும் அமைப்பைப் பயன்படுத்தியுள்ளோம்," என்கிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா. இஸ்ரோவின் முதல் 'விண்வெளிக் குடியிருப்பை', அதாவது விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தக்கூடிய மாதிரி குடியிருப்பை லடாக்கில் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் ஜாலா ஈடுபட்டுள்ளார். விண்வெளி: கிறிஸ்துமஸ் மரம் போலக் காட்சியளிக்கும் விண்மீன் திரள் - வியக்கும் விஞ்ஞானிகள் செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல் ப்ரோபா-3: சூரியனை ஆய்வு செய்ய செயற்கையாக சூரிய கிரகணத்தை உருவாக்குவது ஏன்? அணுக்கரு கடிகாரம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள் ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப இந்தியா தயாராகி வருகிறது. இந்தச் சூழலில் விண்வெளிக் குடியிருப்புகள் குறித்த இந்தத் திட்டத்திற்கான சோதனை முயற்சிகளும் தொடங்கியுள்ளன. சுமார் 400 கி.மீ. உயரத்தில், பூமியின் குறைந்தபட்ச சுற்றுப்பாதையில் மூன்று நாட்களுக்கு விண்வெளியில் வீரர்களை நிலை நிறுத்துவதே இஸ்ரோவின் ககன்யான் திட்டம். இதற்கான அனைத்து செயல்முறையும் திட்டமிட்டபடி நடந்தால் இத்திட்டம் வரும் ஆண்டில் செயல்படுத்தப்படும். இந்தியா தனது முதல் விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. மேலும் 2040ஆம் ஆண்டிற்குள், மனிதனை நிலவுக்கு அனுப்பவும் இந்தியா திட்டமிட்டுள்ளது. நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம், ரஷ்யா, சீனா போன்ற பல்வேறு நாடுகளும், விண்வெளி ஆய்வு நிறுவனங்களும் இதுபோன்ற பல 'விண்வெளி வாழ்க்கை' தொடர்பான மாதிரி வடிவமைப்புகளை சோதனை செய்யும் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில், ககன்யான் திட்டத்தில் பங்குபெறத் தேர்வாகியுள்ள நான்கு விண்வெளி வீரர்களில் இருவருக்கு தற்போது நாசாவில் அதற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, நிலாவிலோ செவ்வாயிலோ நிலவும் சுற்றுச்சூழலில், அங்கு கட்டுமானங்களை மேற்கொள்வதில் இருக்கும் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு ஹேப்-1 வடிவமைக்கப்பட்டதாகக் கூறுகிறார் ஆஸ்தா கச்சா-ஜாலா "விண்வெளி வாழ்வனுபவம் தொடர்பாகத் தனது சொந்த திட்டங்களை இந்தியாவால் செயல்படுத்த முடியுமானால், நமது விண்வெளி வீரர்களின் பயிற்சிக்கு மற்ற நாடுகளின் விண்வெளி நிலையங்களைச் சார்ந்திருக்க வேண்டியதிலை," என்று லடாக் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப் படிப்புகளுக்கான துறைத் தலைவர் பேராசிரியர் சுப்ரத் ஷர்மா தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில் லடாக் பல்கலைக்கழகமும் கைகோர்த்துள்ளது. லடாக் பாறைகள் நிறைந்த ஒரு தரிசு நிலம் எனக் கூறுகிறார் அவர். "செவ்வாய் மற்றும் நிலவின் நிலப்பரப்புடன் லடாக்கின் நிலவியல் ஒத்திருக்கிறது. அதனால், இந்தப் பகுதி விண்வெளி ஆய்வுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் இங்கு சோதனை செய்யப்பட்டது," என்று பிபிசியிடம் சுப்ரத் ஷர்மா தெரிவித்தார். இந்தச் சோதனையின்போது சேகரிக்கப்பட்ட மண் மாதிரிகளை பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்கின்றனர். இதன் மூலம் விண்வெளியில் அந்தந்த பகுதிகளிலேயே கிடைக்கும் பொருட்களைக் கொண்டு விண்வெளியில் வீடுகளை அமைக்க முடியுமா என்பதை ஆய்வு செய்கின்றனர். நிலத்தடியில் விளையும் ஆளுயர மரவள்ளிக் கிழங்கு - பாதுகாக்க போராடும் கேரள பழங்குடி பெண்கள்18 டிசம்பர் 2024 கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?18 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,AAKA SPACE STUDIO படக்குறிப்பு, இந்தியாவின் சோதனை விண்வெளி நிலையத்தில் மூன்று வாரங்களை செலவிட்ட விண்வெளி வீரர். இந்திய- சீனா எல்லையில் உள்ள இந்த இமயமலைப் பகுதி சுமார் 3,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு வானிலை மிகவும் தீவிரமாக இருக்கும். அதாவது ஒரு நாளின் அதிகபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்தபட்சம் -18 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும். இது செவ்வாயின் வெப்பநிலைக்கோ (-153 செல்சியஸைவிட குறையலாம்) அல்லது நிலவின் வெப்பநிலைக்கோ (ஆழமான பள்ளங்களில் -250 செல்சியஸ் வரை இருக்கும்) எந்த விதத்திலும் பொருந்தவில்லை. ஆனாலும் ஒரு மனிதரால் எந்த அளவு வரையிலான வெப்பநிலையைத் தாங்க முடியும் என்பதை அறிவதற்கான முயற்சியே இந்தச் சோதனை. "ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சோதனைக்காக விண்வெளிக்குச் செல்ல முடியாது என்பதால், விண்வெளி போன்ற அம்சங்களைக் கொண்ட ஒரு சோதனை நிலையம் அவசியமாகத் தேவைப்படும்," என்றார் பேராசிரியர் ஷர்மா. மேலும், "லடாக்கில் தரிசு நிலங்கள் பறந்து விரிந்து கிடப்பதால், நீங்கள் விண்வெளியில் தனியாக இருப்பது போன்ற உணர்வு உங்களுக்குக் கிடைக்கும்," என்றார் அவர். தானும் இதே போலத்தான் உணர்ந்ததாக மூன்று வாரங்கள் இந்தக் கட்டமைப்பில் தங்கியிருந்த விண்வெளி வீரர் தெரிவித்துள்ளார். "மனித சுற்றுச்சூழல் அமைப்புகளில் இருந்து நான் முற்றிலுமாகத் தனிமைப்படுத்தப்பட்டேன். எனது அன்றாடப் பணிகள், எப்போது எழ வேண்டும், எப்போது என்ன செய்ய வேண்டும், தூங்க வேண்டும் என அனைத்துமே முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. நான் செய்யும் அனைத்து வேலைகளும் 24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிக்கப்படும். எனது செயல்பாடுகள் மற்றும் ஆரோக்கியம் குறித்த தரவுகள் சேகரிக்கப்படும்," என்று தனது பெயரைக் குறிப்பிட விரும்பாத, இந்தச் சோதனையில் பங்கெடுத்த 24 வயது நபர் ஒருவர் தெரிவித்தார். "ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக இருந்தது. ஆனால் போகப் போக செய்ததையே மீண்டும் மீண்டும் செய்வது போல் இருந்தது. இது எனது அன்றாடச் செயல்பாடுகளைப் பாதித்தது. நான் தூங்கும் முறையைப் பாதித்தது, எனக்கு கவனக் குறைப்பாட்டை ஏற்படுத்தியது." விண்வெளி வீரரின் உடலில் பயோமெட்ரிக் சாதனங்கள் பொருத்தப்பட்டு அவரது தூக்க முறை, இதயத் துடிப்பு மற்றும் மன அழுத்தம் ஆகியவை கண்காணிக்கப்பட்டன. அவரது உடல் எந்த அளவிற்கு இந்த நிலையை ஏற்றுக்கொள்கிறது என்பதை அவரது ரத்தம் மற்றும் எச்சிலை தினமும் சோதனை செய்து கண்காணித்தனர். சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா?16 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 1969ஆம் ஆண்டு பஸ் ஆல்ட்ரின் நிலவில் நடக்கும் புகைப்படம் இது. விண்வெளியில் மனிதர்களைப் பாதிக்கும் உளவியல் காரணிகளைக் கண்டறிவதும் இந்தச் சோதனைத் திட்டத்தின் முக்கிய அம்சமாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். உலகம் முழுவதும் உள்ள விண்வெளி நிலையங்கள் தங்களுடைய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப, அவர்களுக்கென நிரந்தரமான தங்குமிடத்தை இனி வரும் காலங்களில் அமைக்க முயன்று வருகின்றன. அதனால் இதுபோன்ற திட்டங்கள் விண்வெளிக்கான ஆய்வுகளிலும் பயிற்சிகளிலும் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த ஏப்ரல் மாதத்தில் விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்கள் ஒரேகன் என்ற இடத்தில் நாசாவின் லாஸீ என்ற இயந்திர நாயை நிலவின் மேற்பரப்பில் நடக்க வைப்பதற்கான சோதனைத் திட்டத்தை மேற்கொண்டனர். கடந்த ஜூன் மாதம் நான்கு பேர், டெக்சாஸில் உள்ள விண்வெளியில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும் வசதியில் தங்கியிருந்து வந்தனர். இந்தச் சோதனை பிரத்யேகமாக செவ்வாய் கிரகத்தில் இருப்பது போன்ற உணர்வை வழங்கும். எகனாமிஸ்ட் நாளிதழைப் பொருத்தவரை, நிலவின் மேற்பரப்பில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு 3D அடித்தளத்தை நாசா அமைக்கப் போகிறது. அதேநேரத்தில் சீனாவும் ரஷ்யாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து செயல்படுகின்றனர். விண்வெளித் திட்டங்களைப் பொறுத்தவரை இந்தியா பின்தங்கிய நிலையில் இருக்க விரும்பவில்லை. "லடாக்கில் சேமிக்கப்பட்ட தரவுகளை ஆய்வு செய்த பிறகு, நமது விண்வெளி வீரர்கள் விண்வெளியில் சிக்கலை எதிர்கொள்ளும்போது அவர்களுக்கு உதவ, சிக்கல்களைச் சமாளிக்க மருத்துவ தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கு இது உதவும்" என்று பேராசிரியர் ஷர்மா கூறுகிறார். "பூமியைவிட இரவும் பகலும் அதிகமாக இருக்கும் நிலவிலும் அதேபோல ஆக்சிஜன் இல்லாத விண்வெளியிலும் வாழ்ந்தால் நமது மனித உடல் எவ்வாறு செயல்படும் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்," என்று அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cgj6yqj7jz7o
-
மும்பையில் சுற்றுலா படகு மீது கடற்படை படகு மோதி 13 பயணிகள் பரிதாப உயிரிழப்பு: 101 பேர் பத்திரமாக மீட்பு
19 DEC, 2024 | 07:51 AM மும்பை: மும்பை கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு மீது, கடற்படையின் அதிவேக ரோந்து படகு ஒன்று மோதியதில் 13 பேர் உயிரிழந்தனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். அங்கு தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மும்பை அருகேயுள்ள எலிபென்டா தீவில் புகழ்பெற்ற கர்பரி குகைகள் உள்ளன. இதை பார்வையிட சுற்றுலாப் பயணிகள் மும்பை கடற்கரையிலிருந்து படகுகளில் செல்வது வழக்கம். சுற்றுலா பயணிகள் 100-க்கும் மேற்பட்டோருடன், நீல்கமல் என்ற படகு மும்பையின் கேட்வே ஆப் இந்தியா பகுதியிலிருந்து எலிபென்டா தீவு நோக்கி நேற்று மாலை புறப்பட்டது. அப்போது அந்த வழியாக கடற்படையின் ரோந்து படகு சென்றது. அந்த படகு நேற்று மாலை 3.55 மணியளவில், கட்டுப்பாட்டை இழந்து பயணிகள் படகு மீது அதிவேகத்தில் மோதியது. இதில் பயணிகள் படகு பலத்த சேதம் அடைந்து, ஒரு பக்கமாக சாய்ந்தது. இதனால் படகில் இருந்த பயணிகள் சிலர் கடலில் விழுந்தனர். இத்தகவல் அறிந்ததும் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் படகுகளில் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் விழுந்த 13 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர். படகில் சென்ற பயணிகள் 101 பேர் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்டனர். காயம் அடைந்தவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை கொண்டுசெல்லப்பட்டனர். மீட்பு பணி குறித்து இந்திய கடலோ காவல் படை ஐஜி பிஷம் சர்மா கூறுகையில், “மும்பை கடல் பகுதியில் கடலோர காவல் படை மற்றும் கடற்படை இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன. எங்களது கப்பல்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன” என்றார். இந்த விபத்து குறித்து மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “எலிபென்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளுடன் சென்ற நீல்கமல் என்ற படகு மீது கடற்படையின் அதிவேக ரோந்து படகு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 101 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்பு பணியில் கடற்படை மற்றும் கடலோ காவல் படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்பு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணைய தலைவர் உன்மேஷ் வக் அளித்த பேட்டியில், ‘‘எங்கள் துறைமுகத்துக்கு சொந்தமான பைலட் படகு விபத்து நடந்த இடத்தை நேற்று மாலை கடந்து சென்றது. அந்த படகு மூலம் 40 பேர் மீட்கப்பட்டு துறைமுக ஆணைய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்’’ என்றார். https://www.virakesari.lk/article/201614
-
சிரியா: செட்னயா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 'எலும்புக்கூடு போல் தோற்றமளித்த' மர்ம கைதி
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹுசம் அசல் பதவி, பிபிசி அரபு சேவை, அமான் நகரிலிருந்து சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பின்னர், ஜோர்டானியரான பஷீர் அல்-படாய்னே, 38 ஆண்டுகளாக சிரியாவில் காணாமல் போன தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். சிரியாவில் பஷர் அல்-அசத்தின் ஆட்சி சரிந்த பிறகு, ஜோர்டானின் இர்பிட்டை சேர்ந்த 83 வயதான பஷீர் அல்-படாய்னே, தனது மகன் ஒசாமா மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் இருந்தார். கடந்த 1986ஆம் ஆண்டு, ஒசாமா தனது பள்ளியின் கடைசி ஆண்டைத் தொடங்குவதற்கு முன், கோடை விடுமுறையில் ஒரு வாரம் சிரியாவுக்கு சென்றிருந்தார். ஆனால் அதன் பிறகு அவர் திரும்பி வரவில்லை. ஒசாமா காணாமல் போய் 38 ஆண்டுகள் ஆகின்றன. பஷீர் தனது மகனுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிக்கும் நம்பிக்கையில் அன்றிலிருந்து தொடர்ந்து தேடி வருகிறார். செட்னயா சிறை: சிரியாவின் ரகசிய 'மனிதப் படுகொலை கூடம்' சிரியா: நகரின் மையத்தில் ரகசியமாக செயல்பட்ட உளவு அமைப்பின் சித்திரவதை சிறை- அங்கு இருந்தது என்ன? இஸ்ரேல் சிரியாவை தாக்குவது ஏன்? கோலன் குன்றுகளில் என்ன நடக்கிறது? பஷர் அல்-அசத்துக்கு இரான் எத்தனை பில்லியன் டாலர்கள் கடன் கொடுத்தது? - அந்த பணம் இனி என்னவாகும்? 'எலும்புக்கூடு போல் இருந்தார்' முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அல்-படாய்னேவும் அவரது குடும்பத்தினரும் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த செய்தியை அவர் கேள்விப்பட்டார். சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்கு அருகிலுள்ள செட்னயா சிறையிலிருந்து ஒரு நபர், "நான் இர்பிட்டை சேர்ந்தவன்" என்று கூறி சிறையிலிருந்து வெளியேறும் காணொளி வெளிவந்தது. பின்னர் ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம், ஜோர்டான் நாட்டவரான ஒசாமா, சிரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் ஜோர்டான் திரும்பினார் என அறிவித்தது. அந்த நபர் தனது நினைவுகளை இழந்திருந்தார். அதன் பிறகு, அதிகாரிகள் இர்பிட்டில் விடுவிக்கப்பட்ட கைதிக்கும் அல்-படாய்னே குடும்பத்தினருக்கும் இடையே ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். "அவர் என் கையை நீண்டநேரம் பிடித்து முத்தமிடத் தொடங்கினார்," என்று அல்-படாய்னே பிபிசியிடம் கூறினார். ஒசாமாவின் தோற்றத்தை "ஒரு எலும்புக்கூடு" என்று அல்-படாய்னே விவரித்தார். மேலும் "அவர் நினைவாற்றலை இழந்துவிட்டார் என்றும் ஒசாமாவின் தோற்றம் அதிர்ச்சியளிப்பதாகவும், அவருடைய எல்லா அம்சங்களும் மாறிவிட்டன" என்றும் அல்-படாய்னே தெரிவித்தார். ஒசாமா, தனது தாயின் பெயரைக் குறிப்பிட்டது, பழைய குடும்பப் புகைப்படங்களில் தன்னை அடையாளப்படுத்தியது ஆகியவற்றை ஒசாமாவின் சகோதரி பிபிசியிடம் தெரிவித்தார். ஆனால் அப்போதுதான் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. "பந்து என்று நினைத்தோம்" - மேற்கு வங்கத்தில் குண்டுகளுக்கு இரையாகும் குழந்தைகள்17 டிசம்பர் 2024 பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா குஹா - மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜோர்டானும் சிரியாவும் 360 கி.மீ தொலைவிலான நீண்ட எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன அந்த நபர் ஜோர்டானிய தலைநகர் அம்மானில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதன் மூலம், அவருக்கும் அல்-படாய்னே குடும்பத்திற்கும் இடையே எந்த மரபணு உறவும் இல்லை என்பது தெரிய வந்தது. சமூக ஊடகங்களில் பல முரண்பாடான கருத்துகள் எழுந்ததால், அந்த மனிதரின் அடையாளத்தைச் சுற்றி நிச்சயமற்ற தன்மை வளரத் தொடங்கியது. அந்தக் காணொளியில் இருப்பவர், சிரியாவில் உள்ள டார்டஸ் நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், அவர்கள் ஒன்றாகச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் முகநூலில் ஒருவர் கூறினார். மேலும், அந்த நபர் டார்டஸ் கிராமப்புறப் பகுதியில் உள்ள கஃப்ரூன் சாதே கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், "1986இல் பெய்ரூட்டில் இருந்து, சிரிய உளவுத்துறையால் கடத்தப்பட்டதாகவும்" அவர் குறித்துப் பேசிய மற்றொரு பெண், முகநூலில் கூறினார். கிசெல் பெலிகாட்: 60 வயது பெண்ணை கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்த 51 பேர் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு5 மணி நேரங்களுக்கு முன்னர் அம்பேத்கர் பற்றி அமித் ஷா என்ன பேசினார்? எதிர்க்கட்சிகள் போராட்டம் ஏன்?18 டிசம்பர் 2024 மரபணு பரிசோதனை பட மூலாதாரம்,WHITE HELMETS படக்குறிப்பு, செட்னயா சிறைச்சாலை, மனித உரிமைக் குழுக்களால் "மனிதப் படுகொலை கூடம்" என்று குறிப்பிடப்படுகிறது லெபனான் தலைநகரில் இருந்து கடத்தப்பட்டு சிரிய சிறைக்கு மாற்றப்பட்டதாக நம்பும் ஹபீப் சாதே எனப்படும் தனது உறவினரைப் போல் அந்த நபர் இருப்பதாக கேடலினா சாதே கூறுகிறார். தனது தாத்தாவின் சகோதரரான சாதே, சிரிய அரசின் மீது குற்றம் சுமத்திய பல்லாயிரக்கணக்கான மக்களைத் தடுத்து வைக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோசமான ராணுவ வளாகமான செட்னயா சிறையில், இருப்பதாக இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்திற்குச் செய்தி வந்ததாகவும் அவர் கூறுகிறார். அந்த நபர், கைது செய்யப்பட்டு காணாமல் போன தங்கள் உறவினர்தான் என்பதை மரபணு பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியும் என்றும் அந்தக் குடும்பத்தினர் நம்புகின்றனர். "காணாமல் போன அந்த நபர், தற்போது ஜோர்டானில் உள்ளார். ஜோர்டான் அதிகாரிகளிடம் சோதனை முடிவுகளைச் சமர்பிப்போம். காஃப்ரூன் சாதே கிராமத்தில் வசிக்கும் எங்கள் தாத்தாவிடம் இருந்து பரிசோதனைக்காக ஒரு மரபணு மாதிரி எடுக்கப்படும்" என்றும் பிபிசியிடம் சாதே தெரிவித்தார். "சகோதரரைக் கண்டுபிடித்தால், தன் தாத்தா நிம்மதியாக இருப்பார்" என்றும் அவர் கூறினார். ஜோர்டானுக்கு திரும்பிய கைதியுடன் சென்ற முன்னாள் ஜோர்டானிய தொழிலாளர் துறை அமைச்சர் 'நெடல் அல்-படாய்னே' பேசியபோது, விடுவிக்கப்பட்ட அந்தக் கைதி, காணாமல் போன தங்கள் குடும்ப உறுப்பினராக இருக்கலாம் என்று எண்ணிய நபர்களிடம் இருந்து தனக்கு ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்ததாகக் குறிப்பிட்டார். தாங்கள் அந்த நபருடன் தொடர்புடையவர்கள் என நம்பும் குடும்பங்கள், மரபணு பரிசோதனை செய்து, சோதனை முடிவுகளை அனுப்புமாறு நெடல் கேட்டுக் கொண்டார். நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை - என்ன காரணம்?17 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செட்னயா சிறையில் உள்ள ஒரு ரகசிய அறை, பஷர் அல்-அசத்தின் ஆட்சி வீழ்ச்சியடைந்த பிறகு படம் பிடிக்கப்பட்டது இதற்கிடையில் விடுவிக்கப்பட்ட அந்த நபர், ஜோர்டானில் உள்ள பஷ்தாவியின் உறவினர் 'அகமது' என்று காசிம் பஷ்தாவி மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகிக்கின்றனர். அவரது உறவினர் அகமது, லெபனானில் கடத்தப்பட்டு சிரியாவுக்கு மாற்றப்பட்ட ஒரு பாலத்தீன போராளி என்று பஷ்தாவி பிபிசியிடம் கூறினார். கடந்த 1995ஆம் ஆண்டில், அகமது, செட்னயா சிறையில் இருப்பதாக, விடுவிக்கப்பட்ட கைதி ஒருவர் அவர்களது குடும்பத்தினரிடம் கூறினார். சிறையில் அவரைக் கண்டறிய முயன்றபோது, சிரியாவில் உள்ள பாதுகாப்புப் படையினரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் பஷ்தாவி கூறினார். அந்த நபர் காணாமல் போன தங்கள் உறவினரா, இல்லையா என்பதை அறிய மரபணு பரிசோதனைகளை மேற்கொள்ளவும், பஷ்தாவி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர். கேரளா: வக்ஃப் வாரியம் உரிமை கோரும் 404 ஏக்கர் நிலம், எதிர்த்து போராடும் மக்கள் - என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு6 மணி நேரங்களுக்கு முன்னர் '36 நிமிட தியானம் குபேரன் ஆக்கும்' - ஜோதிடர் பேச்சால் நாமக்கல் கோவிலில் ஆயிரக்கணக்கில் குவிந்த மக்கள்18 டிசம்பர் 2024 'கடவுளின் கருணைக்காக நாங்கள் காத்துக் கொண்டிருக்கிறோம்' படக்குறிப்பு, செட்னயா சிறைச்சாலை விடுவிக்கப்பட்ட அந்த கைதிக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று மரபணு சோதனை முடிவில் தெரிய வந்தபோது, அவரைத் தனது மகன் ஒசாமா என்று நினைத்திருந்த அல்-படாய்னே குடும்பத்தினர் விரக்தி அடைந்தனர். "எங்களால் எதுவும் செய்ய முடியாது, நாங்கள் கடவுளின் கருணைக்காக காத்திருக்கிறோம்," என்று ஒசாமாவின் சகோதரர் முகமது அல்-படாய்னே பிபிசியிடம் கூறினார். மகனைப் பற்றிய தகவல்களைப் பெற தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் அவரது தந்தை மேற்கொண்டார். மகனை நினைத்து ஏங்கி, அந்த சோகத்தின் காரணமாக, அவரின் தாய் தனது கண் பார்வையை இழந்தார். மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாய் இறந்துவிட்டார் என்றும் அல்-படாய்னேவின் குடும்பத்தினர் கூறுகிறார்கள். "அவர் கைது செய்யப்பட்டதில் இருந்து, நாங்கள் அவரைத் தேடுவதை நிறுத்தவில்லை, அவர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதைக் கண்டறிய சிரியாவில் உள்ளவர்களுடன் தொடர்புகொள்ள முயல்கிறோம்," என்றும் முகமது அல்-படாய்னே கூறினார். செட்னயா சிறையில் உள்ளவர்களின் உடல்கள் அமிலத்தில் கரைக்கப்படுவதாக ஊடகங்களில் பரவும் கதைகள் குறித்துக் கவலை அடைந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார். ஆனால், அவரது குடும்பத்தினர் தங்களது நம்பிக்கையைக் கைவிட மறுத்து, காணாமல் போன தங்கள் உறவினரைத் தொடர்ந்து தேடத் திட்டமிட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdx9ygg7d7po
-
103 பேருடன் முள்ளிவாய்க்கால் மேற்கு கடலில் கரை ஒதுங்கிய வெளிநாட்டுப் படகு !
Update : முள்ளிவாய்க்காலில் கரை ஒதுங்கிய மியன்மார் அகதிகளுக்கு உணவு விநியோகம்! 19 DEC, 2024 | 03:54 PM முள்ளிவாய்க்கால் மேற்கு கடற்கரையில் 103 பேருடன் கரைஒதுங்கிய மியன்மார் நாட்டுப்படகில், 35 சிறுவர்களும் ஒரு கற்பிணி பெண்ணும் உள்ளடங்கியுள்ளனர். குறித்த கப்பலில் இருப்பவர்களுக்கு உணவுகள், உலருணவுகளை முல்லைத்தீவு மீனவர் சங்கத்தினர் வழங்கியிருக்கின்றார்கள், அதில் சிலர் மயக்கநிலையிலும், சுகவீனமுற்று இருக்கின்றனர். இவர்களை நேரில் சென்று முல்லைத்தீவு மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர், கடற்படையினர், பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டவர்கள் பார்வையிட்டு நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்துள்ளனர். படகிலிருந்து மீட்கப்பட்டவர்களை, திருகோணமலையில் இருந்து கடற்ப்படை படகு ஒன்று வருகைதந்து அங்கு மீட்டுச் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/201658