Everything posted by ஏராளன்
-
வளமான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிப்போம் - ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து
ஒற்றுமை, நன்றியுணர்வு, சமாதானத்திற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சியுடன் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம் - பிரதமரின் நத்தார் வாழ்த்து Published By: DIGITAL DESK 3 25 DEC, 2024 | 09:55 AM நத்தாரின் உண்மையான அர்த்தமான ஒற்றுமை, நன்றியுணர்வு மற்றும் சமாதானம் என்பவற்றிற்கு முன்னுரிமை வழங்கி நத்தாரை மகிழ்ச்சி மற்றும் அர்த்தமுள்ளதாக கொண்டாடுவோம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார். வாழ்த்துச் செய்தியில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ஓர் தேசமாக மீள கட்டியெழுப்பும் இந்த மறுமலர்ச்சி யுகத்தில் தமது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிடுவது மிகவும் முக்கியமானது. ஒற்றுமையுடன் செயற்படுதல், பகிர்ந்து வாழுதல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி செய்வதன் ஊடாக எமது உறவுகளும் வலுவானதாக முன்னேற்றமடையும். ஆரோக்கியமான மக்கள் சமூகம் மற்றும் பலம்மிக்க தேசத்தை கட்டியெழுப்பும் பணியானது வீட்டிலிருந்தே ஆரம்பமாகின்றது என்பதை இதுபோன்ற கூட்டு முயற்சிகள் எமக்கு நினைவூட்டும். உள்நாட்டில் உட்பட வெளிநாட்டில் சேவையாற்றுபவர்களையும், அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட பண்டிகை காலத்தில் தமது அன்புக்குரியவர்களுடன் காலத்தை செலவிட முடியாத அனைவரையும் இந்த தருணத்தில் நன்றியுடன் நினைவுகூற வேண்டும். உலகம் முழுவதும் காணப்படும் யுத்த சூழல் காரணமாக சிறுவர்களும் மரணிக்கும் துர்பாக்கிய நிலைக்கு மத்தியில் நாம் நமது உள்ளங்களில் அமைதியை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம். குடும்பம், சமூகம் மற்றும் உலகம் என்ற அடிப்படையில் மன்னிப்பு வழங்குதல் மற்றும் ஐக்கியத்துடன் இருப்பதன் முக்கியத்துவத்தை நத்தார் பண்டிகை எமக்கு நினைவூட்டுகிறது. அத்துடன் இந்த பண்டிகை காலத்தில் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி மகிழ்ச்சியுடன் அதனை கொண்டாடுவதில் அவதானத்துடன் இருக்க வேண்டும். நமக்கு மாத்திரமன்றி ஏனையவர்களின் பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு சரியான தெரிவுகளை மேற்கொள்ளுங்கள். இந்த காலத்தில் பரஸ்பர உறவுகளை கட்டியெழுப்பவும், பொறுமையை வளர்த்துக்கொள்ளவும், ஐக்கியம் மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்தவும் கடமைப்பட்டுள்ளோம். உங்கள் அனைவருக்கும் இனிய நத்தார் வாழ்த்துக்கள்! https://www.virakesari.lk/article/202094
-
இலங்கையுடன் மிகநெருங்கிய உயர்மட்டத்தொடர்பைப் பேணத்தயார் - சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவிப்பு
Published By: VISHNU 25 DEC, 2024 | 03:05 AM (நா.தனுஜா) சீனாவும், இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும். அதன்படி இலங்கையுடன் மிகநெருங்கிய உயர்மட்டத்தொடர்பைப் பேணுவதற்குத் தாம் தயாராக இருப்பதாக சீன வெளிவிவகாரப் பேச்சாளர் மாவோ நிங் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவரது பதவியேற்பின் பின்னர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் முதலாவதாக இந்தியாவுக்கான அரசமுறை விஜயத்தை மேற்கொண்டிருந்தார். அதனையடுத்து எதிர்வரும் ஜனவரி மாதம் அவர் சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவிருக்கும் நிலையில், நேற்று முன்தினம் பெய்ஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதுகுறித்து ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 'சீனாவும், இலங்கையும் ஒருவருக்கொருவர் அவசியமான உதவிகளை வழங்குகின்ற, நீண்டகால நட்புறவைக் கொண்டிருக்கின்ற ஒத்துழைப்புப் பங்காண்மை நாடுகளாகும். இருநாடுகளுக்கும் இடையில் மிகநெருக்கமான உயர்மட்டத் தொடர்புண்டு. அத்தகைய உயர்மட்டத் தொடர்புகளைப் பேணுவதற்கும், இருநாடுகளுக்கும் இடையிலான பாரம்பரியத்தொடர்புகளை முன்கொண்டுசெல்வதற்கும், இருநாடுகளுக்கும் இடையிலான பல்துறைசார் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கும் சீனா தயாராக இருக்கிறது' எனவும் பேச்சாளர் மாவோ நிங் மேலும் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/202089
-
ஜே.வி.பி.யின் வர்க்கப் போராட்டமும், தமிழ்த் தேசிய இன விடுதலைப் போராட்டமும்
கலாநிதி க.சர்வேஸ்வரன் 1.தேசிய மக்கள் சக்தியையும் (ஜே.வி.பி.)யையும் தமிழ் மக்களின் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்களையும் ஒரே நோக்கம் கொண்டவையாக பார்க்க முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்கள் யாவும் தமிழ் மக்களின் விடுதலைக்காக மட்டுமே போராடின. அது ஓரினம் சார்ந்த விடுதலைப் போராட்டம். எமது இயக்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் செயற்பாட்டை கொண்டது. 2.”வர்க்கப் போராட்டம் என்பது இந்த நாட்டின் அல்லலுற்று- துன்பப்பட்டு அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் போராட்டமாகும். இந்த மக்கள் கூட்டத்தையே நாம் வர்க்கம் என்று குறிப்பிடுகிறோம். இந்த வர்க்கத்தில் பல இனங்கள், பல சமயங்கள், பல மொழிகள் இருக்கலாம்.” 3.” இரண்டு தரப்பும் விடுதலைக்காக போராடின. ஆனால் இவை இரண்டினதும் கொள்கைகள் ஒன்றுக்கொன்று முரணானது. மேற்கண்ட கோட்பாட்டு மற்றும் கொள்கை ரீதியான ஜே.வி.பி.யின் விளக்கம் கடந்த வாரம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது. 50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் ஜே.வி.பி. வர்க்கம் வர்க்கப் போராட்டம், தேசிய இன விடுதலைப் போராட்டம் இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்பு ஆகியவை பற்றி எந்த அளவுக்கு கோளாறான பார்வையைக் கொண்டிருக்கிறது. இது தவறான பார்வை. எந்த அளவிற்கு இந்த நாட்டின் வர்க்க விடுதலை மற்றும் தேசிய இன உரிமைகள் மீது பாதகமான தாக்கம் செலுத்தியது ஆகியவற்றை புரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். வர்க்க போராட்டம் என்பது மாக்ஸிய சித்தாந்த அடிப்படையில் தொழிலாளர் வர்க்க புரட்சிக்கான போராட்டம் ஆகும். இப் போராட்டத்தின் இலக்கு என்பது தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை கைப்பற்றுவது என்பதாகும். காரணம், உலகெங்கும் தொழிலாளர் வர்க்கம் பெரும்பான்மையாகவும் முதலாளி வர்க்கம் சிறுபான்மையாகவுமே உள்ளது. இலங்கையும் அவ்வாறே. இங்கு தொழிலாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கமாகவும் முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை சுரண்டி தனது செல்வத்தை மென்மேலும் பெருக்கும் வாய்ப்பைக் கொண்டதாகவும் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்தும் தொழிலாளி வர்க்கமாகவே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் வைக்கப்படும் பண்பை கொண்டதுமாகும். இவ்வர்க்க போராட்டம் பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதன் விளைவே உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எட்டு மணி நேர வேலை மற்றும் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள். இவற்றை வழிகாட்ட அல்லது தலைமை தாங்க உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு- செயற்பட்டுவரும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம் ஆகும். பாரம்பரியமாக உலகில் இரண்டு வகை தொழிலாளர் புரட்சிகள் நடந்தன. ஒன்று ரஷ்யாவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சி. இது முதலாளி வர்க்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்திய புரட்சி. மாற்றையது நில சுவாந்தர்களுக்கு எதிராக நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சீன புரட்சி. இலங்கையை பொறுத்தவரை இது ஓர் வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்ற வகையைச் சார்ந்தது. இங்கு வளர்ச்சி அடைந்த இந்த நாட்டு முதலாளி வர்க்கம் குறிப்பிடும் படியாக இல்லை. மாறாக இலங்கை தங்குநிலை முதலாளிகளை கொண்டது. அதாவது பொருட்களை இறக்குமதி செய்து விற்கும் முதலாளி வகை சார்ந்தது. இங்கு கட்டமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் இல்லை. இங்கு கட்டமைக்கப்பட்ட பலமான உண்மையான தொழிலாளர் வர்க்கம் என்பது தேயிலைத் தோட்ட கூலிகள் அவர். இவை தவிர அரசாங்க உத்தியோகம் சார்ந்த பல தொழிற்சங்கங்களும் சிறு முதலாளிகளின் தொழிற்சங்கங்களும் உண்டு. இவர்கள் மாத வருமானம், ஓய்வூதியம் போன்ற திடமான வருமானத்தினை கொண்ட மத்திய தர வர்க்கமாகும். எனவே இந்த நாட்டில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பவர் எவராயினும் அவர்களது உறுதியான தளம் என்பது தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்க முடியும். ஏனையவை இதற்கு பலம் சேர்க்கும் வகைகளாகவே இருக்க முடியும். ஆனால் ஜே.வி.பி.யின் புரிதலின்படி இந்த நாட்டின் அல்லலுற்று துன்பப்படும் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட மக்களையே வர்க்கம் என்கின்றனர். இவ்வகையில் பார்த்தால் இந்த நாட்டில் முதலில் அரசியல் அனாதைகளாக்கப்பட்டவர்களும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களே. அவர்களைத் தொடர்ந்து குடியரசு அரசியல் யாப்பின் பிரகாரம் தமிழ், முஸ்லிம் மக்களும் அரசியல் அனாதைகளாக்கப்பட்டனர். தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக்கப்பட்டனர். ஏனையோருக்கு இருந்த சோல்பரி அரசியலமைப்பின் 29 பி பிரிவின் சிறுபான்மை உரிமை, பாதுகாப்பு அம்சம் நீக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக்கப்பட்டனர். ஆனால் ஜே.வி.பி.யின் ஆயுதக் கிளர்ச்சியில் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம் எவரும் இல்லை. இன்றுவரை ஜே.வி.பி ஓர் தென்னிலங்கை கட்சியாக பார்க்கப்படும் வகையிலேயே உள்ளது. தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், தலைவர்கள் மிக மிக சொற்பமே. அல்லலுற்று துன்பப்படும் மக்கள் எல்லோரும் தொழிலாளி வர்க்கம் கிடையாது. முதலாளிகளும் மத்தியதர வர்க்கத்தினரும் கூட பல்வேறு காரணங்களால் அல்லலுறுவர். இவற்றுக்கு மேலாக இலங்கையில் தமிழ் – சிங்கள இன மோதலுக்கு முடிவு கட்டும் நோக்குடன் 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டபோது இவ் ஒப்பந்தத்தை எதிர்த்து மிகப்பெரிய வன்முறை போராட்டத்தை தென்னிலங்கையில் நடத்தியது ஜே.வி.பி. இதில் இவ் ஒப்பந்தத்தை ஆதரித்த பெருமளவு பாரம்பரிய இடதுசாரிகள், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் இவர்களால் கொன்றொளிக்கப்பட்டனர். மாறாக அன்று தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை மாக்சிய கண்ணோட்டத்தில் நோக்கிய ஈரோஸ் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) ஆகியன கூர்மை அடைந்த இன மோதலுக்கு சோசலிச ஈழத்தை (தமிழ் ஈழமல்ல) உருவாக்குவதன் ஊடாக தென்னிலங்கை இடதுசாரிகளை பலப்படுத்தி சோசலிச இலங்கையை உருவாக்குதல் என்னும் இலக்கை கொண்டு செயல்பட்டனர். அவர்கள் ஈழப் புரட்சியின் முன்னணி படையாக மலையக மக்களை நோக்கினர். அதனாலேயே இப்போராட்ட அமைப்புகளில் கணிசமான மலையக இளைஞர்கள் பங்கேற்றனர். மேலும், இவ்வடிப்படையிலேயே சிங்கள முற்போக்கு இளைஞர்களும் தொழிற்சங்கவாதிகளும் ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் இணைந்து செயல்பட்டனர். இங்கு ஜே.வி.பி கூறும் தமிழ் இனத்திற்கான போராளிகள் என தவறாக புரிந்து கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகியன சோசலிச இலங்கைக்கான இலக்குடன் போராடின. ஆனால் வர்க்கப் போராட்டத்தை தலைமை தாங்குவதாக கூறிக்கொள்ளும் ஜே.வி.பி., தமிழ், முஸ்லிம்களை தவிர்த்து உண்மையான தொழிலாளி வர்க்கத்தை தவிர்த்து அரசியல் அனாதைகளாக்கப்பட்ட துன்புறும் சிங்கள மக்களுக்கான இயக்கமாக சுருங்கி செயல்பட்டது என்பதே யதார்த்தமாகும். இங்கு தமிழ் இயக்கங்கள் சோசலிச இலங்கையை இலக்கு வைத்து தமிழ் மக்களை அணி திரட்டினர். அதே நோக்கத்தோடு ஜே.வி.பி சிங்கள மக்களை அணிதிரட்ட முயன்றது. இரு தரப்பும் அன்றே கைகோர்த்து இருந்தால் சோசலிச இலங்கை சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் இது ஏன் நடக்கவில்லை? காரணம் தேசிய இன விடுதலைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் முரண்பட்டவை என்ற தவறான சித்தாந்தத்தால் வளர்க்கப்பட்டமை ஆகும். இன, மத, மொழி, பேதம் கடந்து தொழிலாளர் வர்க்கம் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டாலும் ஒவ்வொரு இனமும் தனது தனித்துவமான மொழி, கலை, கலாசாரம், மதம் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொண்டோ அல்லது அவற்றின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியே ஒன்றிணைகின்றனர். எனவே ஓர் வர்க்க போராட்டம் என்பது அவ்வர்க்கத்தில் உள்ளடங்கியுள்ள தேசிய இனங்களின் தனித்துவங்களையும் தன்னாட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடத்து வர்க்க ஒற்றுமை சாத்தியமற்றது. வர்க்க அடிப்படையில் 16க்கும் மேற்பட்ட மொழிகள், இனங்கள் சோவியத்தாக ஒன்றுபட்டன. இவை ஒன்றுபட்ட அதேவேளை மொழி, பண்பாட்டு அடிப்படையில் அவை தனித்தனி குடியரசாக அங்கீகரிக்கப்பட்டு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு நாடாக செயற்பட்டனர். இது ரஷ்யா என இருக்கவில்லை. மாறாக சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் என்னும் பெயரிலேயே செயற்பட்டது. சோவியத் யூனியன் உருவாகி 70 ஆண்டுகளின் பின் ரஷ்ய மொழியாதிக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பலவீனப்பட்ட போது ஒரு துளி ரத்தம் சிந்தாமல் இப்பதினாறுக்கு மேற்பட்ட மொழி பேசும் தேசிய இனங்களும் இறைமையுள்ள தனி நாடுகளாக பிரிந்து சென்றன. எனவே வர்க்கப் போராட்டமும் தேசிய இன விடுதலைப் போராட்டமும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பது மாக்சிய லெனினிய அடிப்படைகளை புரிந்து கொள்ளாத சிறு பிள்ளைத்தனமான வாதமாகும். 50 ஆண்டுக்கு மேலாக ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தி வருவதாக கூறும் ஜே.வி.பி.க்கு இவை தெரியாதா? புரியாதா? ஏன் இந்த தவறை செய்தார்கள்.இக்கேள்விகள் ஏழாவிட்டால் தான் தவறு. எத்தனை வடிவில் வந்தாலும் “மண்டை மேலுள்ள கொண்டையை மறைக்கவில்லையே” என்ற வடிவேல் நகைச்சுவை போல் ஜே.வி.பி.யின் கொண்டை பலருக்கு தெரியவில்லை. வர்க்கப் போராட்டம் நடத்துவதாக கூறும் ஜே.வி.பி.யின் அடிப்படை கோட்பாடுகளிலேயே அதற்கு எதிரான ஆப்பை சொருகியுள்ளது. ஜே.வி.பி.யின் அடிப்படை கோட்பாடுகளை விளக்கும் ஐந்து பாடங்களில் ஒன்று இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதாகும். இந்திய பிராந்தியத்தின் பெரிய மற்றும் பலமிக்க நாடு இந்தியா. அதன் அயல்நாடுகள் அனைத்தும் மொழியாலோ, மதத்தாலோ, கலாசாரத்தினாலோ நெருங்கிய தொடர்புடையவை. எனவே இந்தியா அயல் நாடுகளை படிப்படியாக ஆக்கிரமிக்கும். எனவே இலங்கையின் இறையாண்மைக்கு இந்தியா ஆபத்தானது. இலங்கையில் தமிழர் எனப்படுவோர் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலங்கை முகவர்கள் ஆவர். எனவே அவர்களும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள். இந்த அடிப்படை கோட்பாடு என்கிற தமிழ் இன எதிர்ப்பு அடிப்படையில் போராட்டம் எவ்வாறு அனைத்து இன மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க முடியும்? எவ்வாறு தமிழ் தேசிய இன விடுதலையை அங்கீகரிக்க முடியும்? வர்க்கப் போராட்டமும் தேசிய விடுதலை போராட்டமும் கைகோர்த்துச் செல்பவை என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். எனவேதான் இவர்களது வர்க்கப் போராட்டம் குறிப்பிடத்தக்களவுக்கு மக்கள் பயப்படவில்லை. இத்தேர்தல் வெற்றிகள் இவ்வர்க்க போராட்ட கொள்கைகள், கோட்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி அல்ல. மாறாக பாரம்பரியமாக ஆட்சிகளை அலங்கரித்து வந்த கட்சிகள் மீது சிங்கள மக்கள் கொண்ட அவநம்பிக்கையாலும் தமிழ் தலைமைகள் மீது மக்கள் கொண்ட விரக்தியாலும் வேறு தெரிவின்றி விழுந்த வாக்குகளே. எனவே ஜே.வி.பி உண்மையில் இன-மத- மொழி பேதமற்ற கொள்கை கோட்பாடுகளுக்கு மாறி, தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, இணைந்த வடக்கு -கிழக்கு தமிழர் தேசம் என்பதை அங்கீகரித்து செயல்வடிவில் அவற்றை நிரூபித்தால் ஒழிய, இவை தற்காலிக சூழல் காரணமான வெற்றிகளாக மட்டுமே அமையும்.நிலைத்து நிற்க வாய்ப்பிருக்காது. https://thinakkural.lk/article/314103
-
உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுவுக்கான சட்டமூலத்தை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம்
Published By: VISHNU 25 DEC, 2024 | 02:56 AM (எம்.மனோசித்ரா) உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கு புதிதாக வேட்புமனுக்களைக் கோருவதற்கான சட்ட மூலத்தை தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. திங்களன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொது நிர்வாக, மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சிமன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சிமன்றத் தேர்தலுக்கான புதிய வேட்புமனுக்களை கோருவதற்கு அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய குறித்த சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு சட்டமா அதிபரின் அங்கீகாரமும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சட்ட மூலம் அடுத்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்கு ஏற்கனவே கோரப்பட்ட வேட்புமனுவை மீளப் பெறுவதற்கான தீர்மானத்துக்கு கடந்த 3ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. ஆனால் தேர்தல் முறைமையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படுத்தப்பட மாட்டாது என்றும் அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202088
-
வளமான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிப்போம் - ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து
Published By: VISHNU 24 DEC, 2024 | 06:18 PM சகல மக்களும் நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்துள்ளோம். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றமடைகிறது. சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். வளமான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வாழ்த்துச்செய்தில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள நத்தார் வாழ்த்துச்செய்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இயேசு கிறிஸ்து பிறந்த தினமான நத்தார் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கோலகலமாக கொண்டாடி வருகின்றனர். துன்பத்தில் இருந்து அனைவரையும் காப்பாற்ற இவ்வுலகின் அவதரித்த இயேசு கிறிஸ்து ஒருபோதும் ஏழை பணக்காரன் என்ற கண்ணோட்டத்தில் மக்களைப் பார்த்ததில்லை. அதனால்தான் அன்னார் கடவுளின் குழந்தையாக இவ்வுலகில் பிறந்த நாளில் மிகவும் ஏழ்மையான மற்றும் அப்பாவி மனித சமூகமாக இருந்த மேய்ப்பர்களிடையே பிறக்கத் தேர்ந்தெடுத்தார். இவ்வாறாகத் தான் தேவதூதர்கள் அவர்களுக்கு நற்செய்தியை கொண்டு வந்தார்கள். எனவே, நத்தார் தினத்தில் அடிப்படை அர்த்தம், வர்க்க, பேதங்களை ஒதுக்கி மனிதநேயத்தின் பெயரால் மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் செயற்படுவதாகும். நத்தார் தினத்தின் உண்மையான அர்த்தமான, அமைதியின் பின்னணியில் இருந்து இந்த நத்தார் பண்டிகையை கொண்டாடி வருவதை உளப்பூர்வமான மகிழ்ச்சியுடன் இங்கு குறிப்பிடுகிறோம். சகல மக்களும் ஒன்றாக ஒரே நோக்கத்துடன் கூட்டுப் பொறுப்பாகக் கருதி நாட்டின் எதிர்காலத்திற்காக ஒன்றிணைந்த ஒரு காலகட்டத்தை நாம் அடைந்துள்ளோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தினால் பிணைந்து பூமியில் ஒரு புதிய விடியலின் அரவணைப்பை நாங்கள் அனுபவித்து வருகிறோம். அந்த பிரகாசமே இயேசு நமக்குக் கொண்டுவந்த அன்பின் விடியலாகும். பிரிவினையின் இருளில் இருந்து விலகி அமைதியுடன் ஆட்சி செய்யும் தோழர்களின் பூமியாக நமது நாடு படிப்படியாக மாற்றப்படுவதை நாம் கண்கூடாகக் காண்கிறோம். மனித சுதந்திரம் மற்றும் நீதியின் அடிப்படையில் இயேசுநாதர் செய்த போராட்டத்தின் காரணமாக அவர் புனிதரானார். அந்த மனிதாபிமான சுதந்திரம் மற்றும் நியாயத்தை மதித்து அவருடைய வழிகாட்டுதலை உண்மையாக்க ஒரு அரசாங்கமென்ற வகையில் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். இன்று இலங்கைக்குத் தேவையான சமூக மாற்றம் என்பது பாரியதொரு சமூக மாற்றமாகும். சுதந்திரம் அடைந்து 76 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு சில துறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு அப்பாற்பட்ட முழு சமூக மாற்றமாகும். இது ஒரு மறுமலர்ச்சியாகும். அந்தத் தேசிய மறுமலர்ச்சிக்காக மிகுந்த அர்ப்பணிப்பு, பொறுமை, நிதானம், அடங்காத துணிச்சல், இடையறாத முயற்சியுடன் பணியாற்றும் நமது அரசைச் சுற்றி திரண்டிருக்கும் ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகள் எந்த வகையிலும் வீழ்ச்சியடைய விடாது அவர்கள் எதிர்பார்க்கும் 'வளமான நாடு-அழகான வாழ்க்கையை' உருவாக்கும் ஒரே குறிக்கோளுடன்,மென்மேலும் வீரியத்துடனும் உறுதியுடனும் என்னை அர்ப்பணிப்பேன் என்பதை புனித நத்தார் தினத்தில் மீண்டும் வலியுறுத்துகிறேன். சுயநலம் மற்றும் தீங்கான போட்டியை சமூக கட்டமைப்பு தள்ளப்பட்டுள்ள போதும் கிறிஸ்மஸில் வெளிப்படுத்தப்படும் மனித பண்புகளை வளர்த்து, சமத்துவத்தை மதித்து, மற்றவர்களுக்கு மரியாதை செலுத்துவதன் மூலம், சகோதரத்துவத்தையும் சகவாழ்வையும் மதிப்பதன் மூலம், அந்த சமூக கட்டமைப்பை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சிகரமான சமூகமொன்றுக்காக பிரஜைகள் என்ற வகையில் நாம் அனைவரும் கைகோர்க்க உறுதி பூணுவோம். வலுவான மற்றும் நிலையான பொருளாதாரம், சமூக நீதியை இலக்காகக் கொண்ட உண்மையான உண்மையான அரசியல் கலாச்சாரம் மற்றும் மனிதநேயம் மற்றும் சுதந்திரம் நிறைந்த ஒரு அழகான நாட்டை உருவாக்க வலுவான உறுதியுடன் நம்மை அர்ப்பணிக்க இந்தப் புனித நத்தார் தினத்தில் நாம் அனைவரும் உறுதி பூணுவோம்.இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள். https://www.virakesari.lk/article/202072
-
யாழ்.கள உறவுகளுக்கு இனிய நத்தார் தின வாழ்த்துக்கள்.
- விஜய் எம்.ஜி.ஆரைப் போல வருவார் எனச் சொல்கிறார்கள்; யதார்த்தம் அதுவல்ல' - திருமாவளவன் நேர்காணல்
படக்குறிப்பு, ''தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் புத்தக வெளியீட்டு விழாவிற்கு போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல.'' கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் சில வாரங்களுக்கு முன்பாக நடந்த, 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயுடன் கலந்துகொள்வதாக இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் அதில் கலந்துகொள்ளாதது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த விழாவில் விஜயும் அப்போது வி.சி.கவில் இருந்த ஆதவ் அர்ஜுனாவும் பேசிய பல விஷயங்களும் அரசியல் களத்தை பரபரக்க வைத்தன. ஆனால், தொல். திருமாவளவன் பிபிசியுடனான நேர்காணலில் இது தொடர்பான கேள்விகளை அமைதியாகவே எதிர்கொண்டார். பிபிசிக்கு அளித்த பேட்டியில் இந்த விவகாரம் மட்டுமல்லாமல், அதிகாரத்தில் பங்கு, விஜயின் அரசியல், தி.மு.க. கூட்டணியின் எதிர்காலம் ஆகியவை குறித்தும் திருமாவளவன் விரிவாகப் பேசினார். ஆதவ் அர்ஜுனா இடை நீக்கம்: திருமாவளவனின் முடிவுக்கு என்ன காரணம்? கூட்டணி கணக்குகள் மாறுபடுமா? திமுக மீதான மன்னராட்சி விமர்சனம்: ஆதவ் அர்ஜுனா பேச்சு வி.சி.க-வின் பலவீனத்தை காட்டுகிறதா? திமுக கூட்டணி குறித்து தொடர்ந்து விவாதங்கள் எழுவது ஏன்? - அமைச்சர் நேரு கூறியது என்ன? தலித் முதல்வர்: திருமாவளவனின் கருத்து திமுகவிற்கு வைக்கப்பட்ட குறியா? கேள்வி: புத்தக வெளியீட்டு விழா தொடர்பான நிகழ்வுகள் தி.மு.க. கூட்டணிக்குள்ளேயே சலசலப்பை ஏற்படுத்தின. அதற்கு ஆதவ் அர்ஜுனாவின் பேச்சு மட்டும்தான் காரணமா? பதில்: ''கூட்டணிக்குள் இதனால் எந்த சலசலப்பும் இல்லை. கூட்டணிக் கட்சியைச் சார்ந்த யாரும் சலசலப்பில் ஈடுபடவில்லை. சமூக ஊடகங்களில் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். தி.மு.க. தரப்பில் இருந்து யாரும், அந்த விழாவுக்குப் போகக்கூடாது என்று சொல்லவில்லை. அது நான் எடுத்த முடிவு. 'இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல, அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழா, விஜயும் அம்பேத்கரைப் பற்றிப் பேசுவார், நானும் அரசியல் பற்றிப் பேச மாட்டேன், அம்பேத்கரைப் பற்றி பேசுவேன்' என்று ஒரு மூத்த அமைச்சரிடம் சொல்லும்போது, 'அது உங்கள் விருப்பம், நாங்கள் தலையிட முடியாது' என்றுதான் சொன்னார். ஆனால், விக்கிரவாண்டி மாநாட்டில் எங்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் ஆளுங்கட்சியை தனது முதன்மை எதிரியாக விஜய் பிரகடனப்படுத்தியிருக்கும்போது அவரோடு மேடையில் நிற்பது இப்போதைக்கு சரியாக இருக்காது என நினைத்தேன். ஏனென்றால், நானும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி அது. தி.மு.கவின் அழுத்தத்தால்தான் நான் போகவில்லை என்ற கருத்து ஏற்புடையதல்ல. அது நான் எடுத்த முடிவு.'' தாலிபன் அமைப்பில் விரிசலா? தலைமையை விமர்சிக்கும் இந்த மூத்த அமைச்சர் யார்?24 டிசம்பர் 2024 உலகின் முதல் 10 பணக்கார குடும்பங்கள் பட்டியல் - அம்பானி குடும்பம் எந்த இடத்தில் உள்ளது தெரியுமா?24 டிசம்பர் 2024 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு எனக் கேட்பது குற்றமல்ல' கேள்வி: 'ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை நீங்கள் நீண்ட காலமாக முன்வைத்து வருகிறீர்கள். அதே விஷயத்தைத்தான் ஆதவ் அர்ஜுனா திரும்பவும் பேசுகிறார். அதில் ஏன் பிரச்னை வருகிறது? பதில்: ''திரும்பவும் அதை அவர் சொன்னதில் பிரச்னையில்லை. அப்படி ஒரு முழக்கத்தை வைத்தால் அது தி.மு.கவுக்கு எதிரான முழக்கம் என தி.மு.க. சொன்னதா? அல்லது நாங்கள்தான் சொன்னோமா? 'தி.மு.கவிடம் கோரிக்கையை வைக்கிறோம், தி.மு.கவுக்கு நெருக்கடி கொடுக்கிறோம்' என நாங்கள் யாரும் சொல்லவில்லை. தி.மு.கவும் வி.சி.க. 'எங்களுக்கு எதிராக பேசுகிறார்கள், எங்களிடம் பங்கு கேட்கிறார்கள்' என்று சொல்லவில்லை. இதையெல்லாம் ஊடகங்கள்தான் ஊதிப் பெருக்கினார்கள். 'இவர்கள் தி.மு.கவுக்கு மறைமுகமாக அழுத்தம் தருகிறார்கள். ஆட்சியில் பங்கு கேட்கிறார்கள். அதைக் கொடுக்கவில்லையென்றால் வெளியேறுவார்கள் போலிருக்கிறது' என இவர்களாக தங்கள் யூகத்தைப் பரப்ப ஆரம்பித்தார்கள். சமூக ஊடகங்களில் பேசக்கூடிய தனி நபர்களும் இதையெல்லாம் ஊதிப் பெருக்க ஆரம்பித்தார்கள். விஜயும் நானும் ஒரே மேடையில் ஏறப்போகிறோம் என புக்கத்தை வெளியிட்ட நிறுவனமோ, நானோ, ஆதவ் அர்ஜுனாவோ அதிகாரபூர்வமாக அறிவிக்காத நிலையில், உறுதிப்படுத்தப்படாத அந்தச் செய்தியை ஒரு தமிழ் நாளிதழ் வெளியிட்டது. அப்படியாகத்தான் அந்த விஷயத்தை அரசியலாக்கினார்கள். அவர்கள் இப்படி அரசியல்படுத்தியதால், மேடையில் நின்றாலும் அரசியல்படுத்துவார்கள், வேண்டாம் என முடிவெடுத்தேன். அதேபோல, 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' எனக் கேட்பது குற்றமல்ல. அப்படியே தி.மு.கவிடம் கேட்டாலும் குற்றமல்ல. முடிந்தால் எங்களுக்குக் கூடுதல் இடங்களைக் கொடுங்கள், அமைச்சரவையில் இடம் கொடுங்கள் என தோழமை அடிப்படையில் கேட்கக்கூடாதா? அதில் எந்தத் தவறும் கிடையாது. ஆனால், குறுக்கே நிற்பவர்கள், 'பாருங்கள் விடுதலைச் சிறுத்தைகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்' என, அது ஏதோ தவறு என்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தி.மு.க. அதற்கு எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. மத்தியில் கூட்டணி ஆட்சி இருப்பதைப்போல, மாநிலத்திலும் கூட்டணி ஆட்சி வேண்டும் என 2016 காலகட்டத்திலேயே, மக்கள் நலக் கூட்டணி உருவாகும் முன்பே ஒரு கருத்தரங்கை நடத்தியிருக்கிறோம்.'' ஒரு கையில் பைபிள், மறு கையில் துப்பாக்கி - பிரேசில் நகரை நடுங்கச் செய்யும் இவர்கள் யார்?24 டிசம்பர் 2024 ஆபாசப் படங்கள் ஆண்களின் பாலியல் இச்சைகளை எவ்விதம் மாற்றுகின்றன?24 டிசம்பர் 2024 படக்குறிப்பு, ஆதவ் அர்ஜுனா கேள்வி: ஆகவே 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்ற முழக்கத்தை வெறும் தத்துவார்த்த அடிப்படையில்தான் முன்வைக்கிறீர்களா? பதில்: ''சாதி ஒழிய வேண்டும் எனச் சொல்கிறோம். சாதியை இன்று உடனே ஒழித்துவிட முடியுமா? சாதி ஒழிப்பு என்பது எங்கள் இலக்கு. அதை நோக்கிய ஒரு பிரசாரத்தை மேற்கொள்கிறோம். எல்லோரும் அதனைப் புரிந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறோம். அதைப்போலத்தான் இதுவும். 'ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு' என்றால் விளிம்பு நிலை மக்கள் அதிகாரத்தில் பங்குபெற வேண்டுமென அர்த்தம், ஏழை, எளிய மக்கள் பங்கு பெற வேண்டும், அவர்கள் அதிகாரத்தைப் பெற வேண்டுமென அர்த்தம். அவர்கள் ஒவ்வொரு முறை வாக்களித்த பிறகும், அதே மாதிரியான வாழ்க்கை முறையில் இருக்கக்கூடாது. முன்னேற்றத்தை அவர்கள் உணர வேண்டும். இதனை ஒரு கோரிக்கையாக, கோட்பாடாக முன்வைக்கிறோம். 'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்றால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அதிகாரத்தைக் கொடுங்கள் என்ற அர்த்தமில்லை.'' பொதுத் தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகள் முன்வருவதில்லையா? கேள்வி: தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளுக்கு பொதுத் தொகுதிகளை ஒதுக்க பெரிய கட்சிகள் முன்வருவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே? பதில்: ''அது மேம்போக்காக சொல்லப்படும் குற்றச்சாட்டு. 2001ல் நாங்கள் பொதுத் தொகுதி கேட்டோம். கிடைக்கவில்லை. 2006ல் நாங்கள் பொதுத் தொகுதியை வாங்கி முகையூரில் சிந்தனை செல்வனை நிறுத்தினோம். 2011ல் பொதுத் தொகுதிகளை வாங்கினோம். உளுந்தூர்பேட்டை பொதுத் தொகுதியில் யூசுப்பும் சோழிங்கநல்லூர் பொதுத் தொகுதியில் எஸ்.எஸ். பாலாஜியும் நிறுத்தப்பட்டனர். 2021ல் இரு பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றிருக்கிறோம். 2001ல் மட்டும்தான் கிடைக்கவில்லை. 2006ல் இருந்து தொடர்ந்து பொதுத் தொகுதிகளில் போட்டியிட்டுக்கொண்டுதானே இருக்கிறோம். ஆகவே, பொதுத் தொகுதியே தர மறுக்கிறார்கள் என்பது மேம்போக்காக சொல்லப்படும் கருத்து.'' சமூகப் பொறுப்புள்ள மாற்று சினிமாவின் முன்னோடி 'ஷியாம் பெனகல்'24 டிசம்பர் 2024 பழைய காரை விற்றால் 18% ஜி.எஸ்.டி. - புதிய அறிவிப்பால் யாருக்கு பாதிப்பு?24 டிசம்பர் 2024 படக்குறிப்பு, ''தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். இது எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி'' என்கிறார் திருமாவளவன் கேள்வி: பொதுத் தொகுதிகளைப் பெற்றாலும் அதில் தலித் அல்லாதவர்களை நிறுத்தி வெற்றிபெற முடியுமா? பதில்: ''பொதுத் தொகுதியில் தலித் அல்லாதவரை நிறுத்தி வெற்றிபெற வைக்க வேண்டும் என்பது நமது ஆசை. ஆனால், யாதார்த்தத்தில் சமூக இருப்பு என்னவாக இருக்கிறது என்று பார்க்க வேண்டியிருக்கிறது. ஆட்சிக்கோ, அதிகாரத்திற்கோ வர மாட்டோம் என்றால் யாரை வேண்டுமானால் எங்கே வேண்டுமானாலும் நிறுத்தலாம். ஆனால், ஒரு கூட்டணிக்குள் சில இடங்களைப் பெற்று, ஆட்சியை, அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும் எனும் போது ஒரு தொகுதியைக்கூட எதிரிக்கு விட்டுவிடக்கூடாது என்பதுதான் முக்கியமானது. 'பாருங்கள், ஒரு பொதுத் தொகுதியில் ஒரு தலித்தை வேட்பாளராக நிறுத்திப் போட்டியிட்டோம்' என்று மட்டும் சொல்லிக்கொண்டிருக்க முடியுமா? அப்படிச் செய்தால் அந்தத் தொகுதியை எதிரிக்கு விட்டுக்கொடுத்ததைப்போல ஆகிவிடும். ஒரு வேட்பாளரை நிறுத்தும்போது கட்டாயமாக வெற்றி பெறும் சூழலை உருவாக்க வேண்டும். அதற்கான எல்லா வாய்ப்புகளும் அங்கே இருக்க வேண்டும். தோல்விதான் கிடைக்கும் எனக் கருதி முடிவெடுத்தால் அது நல்ல அரசியல் அல்ல. வெற்றிபெற்றே ஆக வேண்டுமென்றால் அதற்கேற்றபடியான கணக்குகள்தான் தேவை. சமூகத்தின் இருப்பின் அடிப்படையில் அரசியல் கட்சிகள் முடிவெடுக்கின்றன. அரசியல் கட்சிகளின் முடிவின் அடிப்படையில் சமூகத்தின் இருப்பு இல்லை. ஒரு தொகுதியில் வன்னியர்கள் அதிகமாக இருந்தாலோ, இஸ்லாமியர்கள் அதிகமாக இருந்தாலோ அங்கே வன்னியர் வேட்பாளரையோ, இஸ்லாமிய வேட்பாளரையோ நிறுத்த வேண்டியிருக்கிறது. பெரும்பான்மை மக்கள் சாதி சார்ந்து, மதம் சார்ந்து வாக்களிக்கும் பொது உளவியலையும் பெற்றிருக்கிறார்கள்.'' 'தலித் கட்சி மட்டுமல்ல பிற கட்சிகளும்தான்' கேள்வி: உத்தர பிரதேசத்தில் ஒரு ஒடுக்கப்பட்டவர் முதலமைச்சராக முடிகிறது, ஆனால், சமூக நீதி பேசும் தமிழகத்தில் துணை முதலமைச்சர் பதவி குறித்து பேசினாலே பிரச்னையாகிறது என்ற விமர்சனம் இருக்கிறது... பதில்: ''துணை முதலமைச்சர் பதவி வேண்டுமென குறிப்பிடுவதை யார் பிரச்சனையாக்கியது? எல்லாமே ஊடகங்கள்தான். தி.மு.க. கூட்டணிக்கு எதிராக இருப்பவர்கள், அந்தக் கூட்டணியைச் சிதைக்க நினைப்பவர்கள்தான் இதைச் செய்கிறார்கள். தி.மு.க. அப்படி ஏதும் சொல்லவில்லையே. துணை முதலமைச்சர் பதவியைக் கேட்க வி.சி.கவுக்கு என்ன தகுதியிருக்கிறது என யாரும் கேட்கவில்லையே.. துணை முதலமைச்சர் பதவி வேண்டுமென ஆதவ் அர்ஜுனா கேட்டது ஒரு பொதுவான கோரிக்கை. அவர் உள்நோக்கத்தோடு கேட்டதாக ஊடகங்கள் சொல்லின. ஆகவே அது ஒரு விவாதமாக மாறியது. உ.பியில் நடந்ததைப்போல இங்கே நடக்கவில்லையே என்று கேட்டால், ஒவ்வொரு மாநில அரசியலும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். தமிழ்நாட்டில் தி.மு.க. - அ.தி.மு.க. என்ற இரு துருவ அரசியல்தான் பல ஆண்டுகளாக இருக்கிறது. ஏன் தலித் கட்சி வளரவில்லையெனக் கேட்கிறீர்கள். அதே காலகட்டத்தில் உருவான பா.ம.கவும் வளர முடியவில்லையே... ஏன், ம.தி.மு.க., தே.மு.தி.க. போன்ற எந்தக் கட்சியுமே ஒரு கட்டத்திற்கு மேல் வர முடியவில்லையே. 2001லிருந்து பா.ஜ.க. இங்கே அ.தி.மு.கவுக்கோ, தி.மு.கவுக்கோ மாற்றாக வர முயற்சிக்கிறது. அவர்களாலேயே வர முடியவில்லை. ஆகவே, இங்கிருக்கும் அரசியல் சூழல் முற்றிலும் மாறுபட்டது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.'' சென்னை அரிய உயிரினங்களை கடத்தும் சர்வதேச மையமாக திகழ்வது ஏன்? பிடிபட்டால் என்ன செய்கிறார்கள்?24 டிசம்பர் 2024 தேர்தல் நடத்தை விதிகளில் திடீர் திருத்தம் செய்த அரசு - மக்களால் இனி இதை பார்க்க முடியாதா?24 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/ UDHAYSTALIN படக்குறிப்பு, ''கூட்டணியில் இருந்துகொண்டு எதற்கு விமர்சிக்க வேண்டும்? சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எதிர்க்கட்சி செய்வதை கூட்டணிக் கட்சிகளும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதே அறியாமை.'' விஜயின் அரசியல் வருகை எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? கேள்வி: நிலைமை இப்படியிருக்கையில் விஜயின் அரசியல் வருகை எம்மாதிரி தாக்கத்தை ஏற்படுத்தும்? தமிழக அரசியலில் என்ன இடம் அவருக்கு இருக்கும்? பதில்: ''விஜய் ஒரே மூச்சில் ஆட்சியைக் கைப்பற்றிவிடும் வாய்ப்பு இல்லை. ஆனால், ஊடகங்கள் அப்படி ஒரு தோற்றத்தைக் கொடுக்கின்றன. அவர் யதார்த்தத்தைப் புரிந்துகொண்டு அரசியல் செய்ய வேண்டும் என்பது எனது வேண்டுகோள். எம்.ஜி.ஆரை ஒரு உதாரணமாக காட்டுகிறார்கள். எம்.ஜி.ஆர். நீண்ட காலமாக தி.மு.கவிற்குள் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர். அவர் தி.மு.கவைவிட்டு வெளியேறும்போது அரசியல் அனுபவம் கொண்டவர்கள் அவரோடு இருந்தார்கள். அதனால் ஒரு கட்டமைப்பை உருவாக்க முடிந்தது. அதனால் அவரால் ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது. விஜய் பல லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார் என்றால் அதை அரசியல் மாநாடு என்பதைவிட ரசிகர் மன்ற மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும். அவர் ஒரு மாஸ் ஹீரோ. அவருடைய ரசிகர்கள், தங்கள் திரையில் பார்த்த ஹீரோ நேரில் வருகிறார் என்பதால் பார்க்க வந்தார்கள். ஆகவே, அது ஒரு ரசிகர்கள் மாநாடுதான். அரசியல் ரீதியாக முறைப்படுத்தப்பட்ட பிறகு எவ்வளவு பேர் வருகிறார்கள் என்பதுதான் முக்கியம். எங்கள் கட்சி மாநாட்டிற்கு வருபவர்கள் என்னைப் பார்க்க வருவதில்லை. பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சக்திகள்தான் அங்கே வருகிறார்கள். நான் பேசும் அரசியல் சரியானது என நம்புபவர்கள்தான் வருகிறார்கள். விஜய் எம்.ஜி.ஆரைப் போல வந்துவிடுவார் என உசுப்பிவிடுகிறார்கள். யதார்த்தம் அப்படியானதல்ல. அவர் கடின உழைப்பைச் செலுத்த வேண்டும். மக்களிடம் செல்ல வேண்டும்.'' எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி ரத்து - தமிழ்நாட்டில் யாருக்கெல்லாம் பொருந்தும்?23 டிசம்பர் 2024 அம்பேத்கர் சர்ச்சையால் காங்கிரஸ் பலன் அடைந்ததா? ராகுலுக்கு சவாலாக பிரியங்கா மாறுவாரா?23 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,X/ACTORVIJAY படக்குறிப்பு, ''விஜய் பல லட்சம் பேரை திரட்டி மாநாடு நடத்தினார் என்றால் அதை அரசியல் மாநாடு என்பதைவிட ரசிகர் மன்ற மாநாடு என்றுதான் சொல்ல வேண்டும்'' கேள்வி: தி.மு.க. கூட்டணியில் இருக்கும் எந்தக் கட்சியும், ஆட்சியில் உள்ள தவறுகளை போதுமான அளவுக்கு விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. பதில்: ''கூட்டணியில் இருந்துகொண்டு எதற்கு விமர்சிக்க வேண்டும்? சுட்டிக்காட்டத்தான் வேண்டும். எதிர்க்கட்சி செய்வதை கூட்டணிக் கட்சிகளும் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பதே அறியாமை. கூட்டணிக் கட்சிகள் தோழமையோடு சுட்டிக்காட்டத்தான் முடியும். சட்டமன்றத்திலோ, நேரிலோ அதைச் செய்யலாம். அறவழிப் போராட்டங்களின் மூலம் செய்யலாம். அதையெல்லாம் நாங்கள் செய்கிறோம். அ.தி.மு.கவைப்போல பேசினால்தான் விமர்சிக்கிறோம் என அர்த்தமா?'' வேங்கைவயல் விவகாரம் கேள்வி: குறிப்பாக, வேங்கைவயல் போன்ற விவகாரத்தில் நீங்கள் போதுமான எதிர்வினையாற்றவில்லை என்ற விமர்சனம் இருக்கிறது.. பதில்: ''அது அறியாமையின் உளறல். பிரச்னை நடந்த மூன்றாவது நாள் புதுக்கோட்டையில் பத்தாயிரம் பேரைத் திரட்டி போராட்டம் நடத்தினோம். அப்போது தி.மு.க. அரசு என்னை தவறாக எடுத்துக்கொள்ளும் என நினைத்தேனா? அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் இந்தப் பிரச்னை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அதற்குப் பிறகு முதலமைச்சரைச் சந்தித்துப் பேசினோம். அதற்குப் பிறகுதான் வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. ராமஜெயம் இறந்து இத்தனை ஆண்டுகளாகிவிட்டன. அவரது அண்ணன் தி.மு.க. அரசில் முக்கியமான அமைச்சர். இன்னும் குற்றவாளி கண்டுபிடிக்கப்படவில்லை. அரசு என்பது ஒரு மிகப் பெரிய அமைப்பு. அந்த அமைப்புக்குள் பல நடைமுறைகள் இருக்கும். குற்றம் செய்தவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. ஆனால், இந்தப் பிரச்னைக்காக தேர்தல் தொடர்பாக ஒரு பெரிய முடிவை நாங்கள் எடுக்க முடியுமா? அப்படிச் செய்ய முடியாது.'' கேள்வி: தமிழக சட்டமன்றம் செயல்படும் விதம் குறித்து கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார், குறைவான நாட்களே அவை நடக்கிறது, போதுமான அளவுக்கு பேச அனுமதிப்பதில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்... பதில்: ''எந்தப் பின்னணியில் அதைச் சொல்கிறார் எனத் தெரியவில்லை. எல்லாக் கூட்டத் தொடரிலும் அவர் பேசுகிறார். வி.சி.கவுக்கும் வாய்ப்புக் கிடைக்கிறது. இது போன்ற குற்றச்சாட்டுகளை, அ.தி.மு.க., பா.ஜ.க., சொல்லலாம். கூட்டணியில் இருக்கும் வேல்முருகன் சொல்கிறார் என்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அவரிடம்தான் இதைப் பற்றிக் கேட்க வேண்டும்.'' கேள்வி: 2026லும் தி.மு.க. கூட்டணி இதேபோல தொடருமா? பதில்: தொடர வேண்டும் என்பதுதான் விருப்பம். இது எல்லோரும் சேர்ந்து உருவாக்கிய கூட்டணி. இப்படி ஒன்றாக இணைந்தே தேர்தலை சந்திக்க வேண்டும் என விரும்புகிறோம். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp8n75xej20o- மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடு; அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பு
மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகக் குழுக்களை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர், இது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினர் திட்டமிட்ட வகையில் தலையீடு செய்து வருவதாக தெரிவித்தார். பாதாள உலகக் குழுக்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் என்ற ரீதியில் நாங்கள் உறுதியாக உள்ளோம். ஆனால் இது ஒரு நிகழ்ச்சி மற்றும் இரண்டு வார நடவடிக்கைகளால் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புப் படையினர் படிப்படியாக இதில் தலையிட்டு வருகின்றனர். தொடர்ந்து நடவடிக்கைகளை எடுப்போம் என மேலும் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/314114- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
குறைந்தபட்ச இடைவெளி பேணப்படாமையால் வந்தநிலை இது!!- அமெரிக்க AI துறையை வழிநடத்த போகும் சென்னை பையன்.. டிரம்ப் அரசில் மற்றொரு இந்தியர்
24 DEC, 2024 | 05:00 PM அமெரிக்க செயற்கை நுண்ணறிவு துறைக்கான கொள்கை ஆலோசகராக சென்னையை பூர்வீகமாக கொண்ட தொழிலதிபர் ஸ்ரீராம் கிருஷ்ணனை டொனால்ட் டிரம்ப் நியமித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து பல்வேறு முக்கிய பொறுப்புகளுக்கு தனது ஆதரவாளர்களை டிரம்ப் நியமித்து வருகிறார். இந்நிலையில் இந்திய - அமெரிக்க தொழிலதிபரும் எழுத்தாளருமான ஸ்ரீராம் கிருஷ்ணன் டேவிட் சாக்ஸ் உடன் இணைந்து அமெரிக்காவுக்கான செயற்கை நுண்ணறிவு கொள்கையை வடிவமைப்பார் என டிரம்ப் அறிவித்துள்ளார். தனது நியமனத்திற்கு நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீராம் கிருஷ்ணன் நாட்டிற்கு சேவை செய்யவும் AIயில்தொடர்ந்து அமெரிக்காவின் தலைமையை உறுதிப்படுத்தவும் பெருமைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் தளத்தை மஸ்க் வாங்கியவுடன் அதன் பிரதமநிறைவேற்று அதிகாரியாக ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்? ஸ்ரீராம் கிருஷ்ணன் ஒரு சென்னை பையன். சென்னையில் பிறந்து வளர்ந்த ஸ்ரீராம் 90களில் பிறந்த பெரும்பாலான இந்தியர்கள் இன்ஜினியர்களாக ஆவது போல ஸ்ரீராம் கிருஷ்ணனும் இன்ஜினியர் ஆனார். சென்னை SRMபொறியியல் கல்லூரியில் பி.டெக் படிப்பை முடித்தார். தொழில்நுட்பத் துறையில் தன்னை மேம்படுத்திக்கொண்டு உலகின் தொழில்நுட்ப ஜாம்பவான் நிறுவனங்களான மெட்டா, மைக்ரோசாப்ட், ட்விட்டர் உள்ளிட்ட பெரும்பாலான பிராண்டுகளில் பணியாற்றி இருக்கிறார். 21 வயதிலேயே அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்த இவர் தொழில்நுட்ப துறையில் இருக்கும் நுணுக்கங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துள்ளார். ஸ்ரீராம் கிருஷ்ணன் எக்ஸ் தளமாக மாறுவதற்கு முன்பே ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி இருக்கிறார். ட்விட்டரின் டைம்லைன் மற்றும் புதிய ட்விட்டர் தளத்துக்கான UI உருவாக்கம் பார்வையாளர்கள் வளர்ச்சி ஆகியவற்றிற்கு உறுதுணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல தற்போது மெட்டாவாக பெயர் மாற்றம் செய்திருக்கும் ஃபேஸ்புக்கிலும் இவர் மொபைல் அப்ளிகேஷன்ஸ் மற்றும் தயாரிப்புகளை உருவாக்குவதில் பெரிய பங்காற்றியிருக்கிறார். ஃபேஸ்புக்கில் இவரின் பங்கு என்பது இன்று காட்சி விளம்பரங்களில் மிகப்பெரிய நெட்வொர்க்காக வளர்ச்சி பெற்றிருக்கிறது. https://www.virakesari.lk/article/202053- கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
இலங்கையில் நங்கூரமிட்டிருக்கும் சீன குடியரசின் ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பல்; 27 ஆம் திகதி வரை இலங்கையர்களுக்கு மருத்துவ சேவை சீன மக்கள் குடியரசின் இராணுவ கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான ‘பீஸ் ஆர்க்’ இலங்கைக்கு சம்பிரதாயபூர்வ விஜயத்தை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. கடந்த 21 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்த குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தரித்து நிற்கும் அதேவேளை,இலங்கையர்களுக்கு மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறது. முற்றுமுழுதாக மருத்துவ சேவையை மாத்திரம் உள்ளடக்கியிருக்கும் இந்த கப்பல், கடந்த 22 ஆம் திகதி முதல் இலங்கை மக்களுக்கு இலங்கையில் உள்ள சீன தூதரகத்துடன் இணைந்து மருத்துவ சிகிச்சைகள் மற்றும் கிளினிக்குகளை கப்பலில் நடத்திவருகிறது. இச்சேவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. 178 மீ நீளமுள்ள ‘பீஸ் ஆர்க்’ மருத்துவமனைக் கப்பலில் கப்டன் டெங் கியாங்கின் தலைமையில் 310 பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு, குறித்த கப்பல் எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பிலிருந்து புறப்படவிருக்கிறது. பீஸ் ஆர்க் கப்பல் இலங்கைக்கு விஜயம் செய்வது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன்னர் 2017ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314092- சட்டவாட்சி பலம் பெற்றால் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்; சிறிநேசன்
24 DEC, 2024 | 03:42 PM ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சட்டவாட்சியைப் பலப்படுத்தப் போவதாகக் கூறியுள்ளது. குறிப்பாக, ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரையின் போது இக்கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது. அக்கருத்தின்படி சட்டவாட்சி பலமடைந்தால், பாரிய குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. என இலங்கத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான ஞானமுத்து சிறிநேசன் தெரிவித்துள்ளார். ஊடகங்கக்கு அனுப்பி வைத்துள்ள செய்தியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டடுள்ளார். அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இந்நாட்டில் நடைபெற்ற யுத்த காலத்தின்போது பல தலைவர்கள், புத்தியாளர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், போராளிகள், பொதுமக்கள் பலர் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர். அதனைச் செய்தவர்கள் தண்டிக்கப்படாமல் உள்ளதோடு மட்டுமல்லாமல், கௌரவர்களாக உலாவி வருகின்றனர். அவர்களில் பலர் அதிகார சக்திகளால் பாதுகாக்கப்பட்டும் வருகின்றனர். சட்டவாட்சி வலுப்பெற்றால், இத்தகைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது உறுதியாகும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான யோசப் பரராசசிங்கம், ரவிராஜ், சந்திரநேரு, சிவநேசன் ஆகிய தலைவர்கள் பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டார்கள். மேலும், கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தரும் பேராசிரியருமான ரவீந்திரநாத் தலைநகரில் கடத்தப்பட்டுப் பின்னர் கொல்லப்பட்டதாக அறிய முடிகின்றது. சிரேட்ட விரிவுரையாளர் தம்பையா அவர்கள் அவரது வீட்டில் இருக்கும் போது பகலில் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். பிறேமினி தனுஸ்கோடி, சதிஸ்கரன் உட்பட தமிழர் புனர்வாழ்வுக் கழக உத்தியோகத்தர்கள் சிலர் கடத்தப்பட்டு பொலன்னறுவை தீவுச்சேனையில் கொல்லப்பட்டதாக அறியப்படுகிது. மேலும் திருமலை விக்கினேஸ்வரன் சுட்டுக்கொல்லப்பட்டார். சிவராம், நடேசன், லசந்த விக்கிரமதுங்க, எக்னலிகொட, நிமலராஜன் போன்ற 40 இற்கு மேற்பட்ட ஊடகவியலாளர்கள் 2006 தொடக்கம் 2015 இற்கு இடைப்பட்ட காலத்தில் கடத்தப்பட்டும், கொல்லப்பட்டும் உள்ளனர். தேற்றாத்தீவில் பொறியியலாளர் திருமதி லோகேஸ்வரன் என்ற பெண்மணியான ஒரு பச்சைக் குழந்தையின் தாய் பெற்றோரின் கண்களுக்கு முன்னால் சுட்டுக்கொல்லப்பட்டார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் பல நூற்றுக்கணக்கான அப்பாவி பக்தர்கள் கொல்லப்பட்டனர். ஆனால் இச்சம்பவங்களுடன் தொடர்பான குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை. இதனால் நாட்டின் மனிதவுரிமைகள் சட்டவாட்சி ஜனநாயகம் போன்ற விடயங்கள் கேவலபடுத்தப்பட்டன. இவற்றுக்கெல்லாம் உரிய பரிகாரம் தேவையென்றால், சட்டவாட்சி பலப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் சட்டத்தின்முன் நிறுத்தப்பட்டு முறையாக விசாரிக்கப்பட்டுத் தண்டிக்கப்பட வேண்டும். இதன் மூலம் நாட்டின் கௌரவத்தை மீண்டும். கட்டியெழுப்ப முடியும். இதனை ஜனாதிபதியும், தேசிய மக்கள் சக்தியும் செய்தால், வரவேற்புக் கிடைக்கும். இல்லையேல் முந்திய அரசாங்கங்கள் போன்றதாக இந்த அரசாங்களும் அமைந்து விடும். என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/202014- இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 17 இந்திய மீனவர்கள் கைது 24 DEC, 2024 | 12:02 PM இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 17 இந்திய மீனவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் இரண்டு படகுகளுடன் இவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் தலைமன்னார் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்கள் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர். https://www.virakesari.lk/article/202026- தேசிய பாதுகாப்பு பற்றிய புரிதல் உள்ளதா?; நாமல் கேள்வி
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை பாரதூரமானது எனவும், அரசாங்கமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பாதுகாப்பை நீக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கிய குழுவிற்கு உண்மையில் தேசிய பாதுகாப்பு பற்றிய புரிதல் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். தலதா மாளிகைக்கு இன்றுவிஜயம் செய்து பூஜை வழிபாடுகளில் ஈடுபட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். புலனாய்வு அமைப்புகளின் அறிக்கைகளின் அடிப்படையில் அந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தால், புலனாய்வு அமைப்புகளின் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்கள் உட்பட தற்போதைய அரசாங்கமே விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டும். அத்தோடு, ராஜபக்சக்கள் எப்போதும் இந்நாட்டின் இயல்புக்கு ஏற்ப தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தரப்பினர் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/314096- இந்த ஆண் திமிங்கலம் 13,000 கி.மீ. தூரம் நீந்திச் சென்றது ஏன்? வியக்கும் விஞ்ஞானிகள்
பட மூலாதாரம்,NATALIA BOTERO-ACOSTA படக்குறிப்பு, கொலம்பியாவில் பசிபிக் கடற்கரை அருகே எடுக்கப்பட்ட படம். கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் இதுவரை பதிவான இடம்பெயர்வுகளிலேயே, மிக நீண்ட தொலைவு மற்றும் மிகவும் அசாதாரணமான இடம்பெயர்வை ஹம்பேக் (Humpback) திமிங்கலம் ஒன்று மேற்கொண்டதாக, விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது, காலநிலை மாற்றத்தால் நிகழ்ந்திருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அந்த திமிங்கலம் 2017-ம் ஆண்டில் கொலம்பியாவில் பசிபிக் பெருங்கடலில் காணப்பட்டது. அதன்பின், சில ஆண்டுகள் கழித்து 13,000 கி.மீ-க்கு அப்பால் இந்தியப் பெருங்கடலில் ஸான்ஸிபார் அருகே காணப்பட்டது. காலநிலை மாற்றம் காரணமாக உணவு இருப்பு குறைவதாலோ அல்லது இணையைக் கண்டடையும் முயற்சியாகவோ, இந்த இடப்பெயர்வை அத்திமிங்கலம் மேற்கொண்டிருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். குட்டிகளை வளர்க்க தாய்ப்புலி செய்யும் தியாகங்கள் என்ன? ஆண் குட்டிகளை மட்டும் விரட்டி விடுவது ஏன்? 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள் தந்திரமான விஷப் பாம்பு, ஊசித் தும்பி, 4 செ.மீ குட்டித் தவளை - வியப்பூட்டும் காங்கோ படுகை விலங்குகள் 'கார்' ஓட்டக் கற்றுக்கொண்ட எலிகள்; இந்த ஆய்வு முடிவுகள் தரும் மகிழ்ச்சிக்கான ரகசியம் என்ன? தான்ஸானியா செட்டாசென்ஸ் ப்ரோகிராம் (Tanzania Cetaceans Program) எனும் அமைப்பைச் சேர்ந்த எகாடெரினா கலஷ்னிகோவா கூறுகையில், "இந்த உயிரினம், அதிக தொலைவு இடம்பெயரக் கூடியது தான் என்றாலும், இந்த சாதனை உண்மையில் ஈர்க்கக் கூடியது, அசாதாரணமானது," என்றார். கீழே உள்ள அந்த திமிங்கலத்தின் புகைப்படம், 2022-ல் ஸான்ஸிபார் கடற்கரையில் எடுக்கப்பட்டது. 'அம்மா, நான் ஒருபோதும் சரணடைய மாட்டேன்' - யுக்ரேனிய போர்க் கைதிகளை தொடர்ந்து கொல்லும் ரஷ்யா23 டிசம்பர் 2024 தனியாக வசிக்கும் பெண்களுக்கு சென்னையில் வீடு கிடைப்பது சவாலாக இருப்பது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,EKATERINA KALASHNIKOVA படக்குறிப்பு, 2022-ஆம் ஆண்டில் ஸான்ஸிபார் அருகே எடுக்கப்பட்ட படம். இடப்பெயர்வுக்குக் காரணம் என்ன? இதுவரை ஹம்பேக் (Humpback) திமிங்கலங்களிடையே பதிவான இடப்பெயர்வுகளில் இதுவே மிக அதிக தொலைவு இடப்பெயர்வாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என, கலஷ்னிகோவா தெரிவித்தார். ஹம்பேக் திமிங்கலங்கள் உலகம் முழுவதும் அனைத்துக் கடல்களிலும் வாழ்கின்றன. ஆண்டு முழுவதும் நீண்ட தொலைவுக்கு அவை நீந்திச் செல்கின்றன. மிக நீண்ட தூரம் இடம்பெயரும் பாலூட்டிகளில் ஒன்றாக இவை உள்ளன. அந்த திமிங்கலங்கள் இனப்பெருக்கம் செய்யும் வெப்பமண்டல பகுதிகளில் இருந்து, உணவு ஆதாரம் இருக்கக்கூடிய கடலின் குளிர்ச்சியான இடங்களுக்கு நீந்தக் கூடியவை. ஆனால், இந்த ஆண் திமிங்கலத்தின் இடப்பெயர்வு ஆச்சர்யமளிக்கக் கூடியதாக உள்ளது. இத்திமிங்கலம் இரண்டு இனப்பெருக்க பிராந்தியங்களுக்கு இடையே இடம்பெயர்ந்துள்ளது. இத்தகைய ஹம்பேக் திமிங்கலங்கள் உண்ணக் கூடிய சிறிய க்ரில் எனப்படும் கடல்வாழ் உயிரினங்கள் மிகுதியாக கிடைப்பது காலநிலை மாற்றத்தால் மாறிவருவதால், உணவுக்காக நீண்ட தொலைவு பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது. மற்றொருபுறம், உலகளவில் இத்தகைய திமிங்கலங்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால், அவை இனப்பெருக்கம் செய்வதற்காக புதிய பகுதிகளை நோக்கிப் பயணம் மேற்கொள்வதாகவும் ஒரு கருத்து உள்ளது. "உண்மையான காரணம் என்னவென்று தெரியவில்லை. எனினும், காலநிலை, தீவிர சூழலியல் நிகழ்வுகள் (தற்போது மிகவும் அடிக்கடி ஏற்படுகின்றன) உட்பட உலகளவில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் அந்த உயிரினங்களின் பரிணாம மாற்றங்கள் ஆகியவையும் காரணமாக இருக்கலாம்," என கலஷ்னிகோவா கூறுகிறார். அம்பேத்கர் குறித்த அமித் ஷா கருத்து - இந்த சர்ச்சையால் காங்கிரஸ் ஏதேனும் பலன் அடைந்ததா? ஓர் ஆய்வு23 டிசம்பர் 2024 நியாண்டர்தால் மனிதர்களின் புத்தி கூர்மையை பசை வெளிப்படுத்தியது எப்படி?2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐந்தே ஆண்டுகளில் 13,000 கி.மீ. பயணம் அந்த திமிங்கலம், கடந்த 2013-ம் ஆண்டு கொலம்பியாவில் பசிபிக் கடற்கரையில் ஆய்வுக் கப்பலில் இருந்து எடுக்கப்பட்ட ஹம்பேக் திமிங்கலங்கள் குழுவிலிருந்த ஓர் ஆண் திமிங்கலமாகும். இந்த திமிங்கலம் அதே பகுதியில் 2017-ம் ஆண்டிலும், ஸான்ஸிபார் அருகே 2022-ம் ஆண்டிலும் தென்பட்டது. பட மூலாதாரம்,BBC/VICTORIA GILL படக்குறிப்பு, இந்த திமிங்கலம் கொலம்பிய பகுதியில் 2017-ம் ஆண்டிலும், ஸான்ஸிபார் அருகே 2022-ம் ஆண்டிலும் தென்பட்டது. இரு பகுதிகளுக்கும் இடையே 13,046 கிமீ கிரேட் சர்க்கிள் டிஸ்டன்ஸ் (Great-circle distance) தூரம் உள்ளது. அந்த திமிங்கலம் ஐந்தே ஆண்டுகளில் இவ்வளவு தூரம் கடலில் இடம் பெயர்ந்துள்ளது. எனினும், அந்த திமிங்கலம் பயணித்திருக்கும் தூரம் இதைவிட அதிகமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த பூமி கோள வடிவிலானது என்பதால், கோளத்தின் மேற்பரப்பில் உள்ள எந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையே உள்ள மிகக் குறுகிய தூரம், கிரேட் சர்க்கிள் டிஸ்டன்ஸ் எனப்படுகின்றது. இது, ஒரு கோளத்தில் இரண்டு புள்ளிகளை இணைக்கும் ஒரு வளைவுக்கு சமமான தூரமாகும். இந்த ஆய்வுக்கட்டுரையின் முடிவுகள், ஆராய்ச்சியாளர்கள் புகைப்படங்கள், திமிங்கலங்களை கண்காணிப்பவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர், happywhale.com எனும் குடிமக்கள் அறிவியல் இணையதளத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பல நூற்றுக்கணக்கான படங்களை அடிப்படையாகக் கொண்டது. இந்த ஆய்வு, ராயல் சொசைட்டி ஓபன் சயின்ஸ் எனும் இதழில் வெளியாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czd4gmr6v6zo- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று 24/12 பிறந்தநாள் கொண்டாடும் ஏராளனை வாழ்த்துங்கோ உறவுகளே!!! நீங்கள் மறந்தாலும் நாங்கள் விடமாட்டோம்!- சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடல்
இன்றைக்கும் என்றைக்கும் நீ எங்கள் நெஞ்சத்தில் மன்னவன் காவிய நாயகனே என் உயிர் தேசத்து காவலனே வாடிய பூமியில் கார்முகிலாய் மழை தூவிடும் உன்புகழ் வாழியவே அண்ணை, இந்த வரிகளை கேட்டபோது யார் உங்கள் ஞாபகத்தில் வந்தது? வரிகளை கொப்பி பேஸ்ற் பண்ண மறந்துவிட்டேன். மன்னிச்சு.- இலங்கையின் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான கட்டமைப்பு தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்
23 DEC, 2024 | 08:12 PM பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியிடலை ஒழிப்பதற்கான ஆசிய பசுபிக் குழுவின் மூலம் நடத்தப்பட இருக்கும் இலங்கையின் பரஸ்பர மதிப்பீட்டிற்கான முக்கிய தயார்படுத்தல் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (23) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் இலங்கை மத்திய வங்கியினதும் நிதியியல் உளவறிதல் பிரிவினதும் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சுக்கள், ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனங்கள் மற்றும் சட்ட அமுலாக்கல் முகவராண்மை நிறுவனங்கள் உள்ளடங்கலாக தொடர்புள்ள 24 நிறுவனங்களுக்காக வடிவமைக்கப்பட்ட அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்ட திட்டங்களை துரிதமாக நடைமுறைப்படுத்துவதன் அவசியத்தை நிதியியல் உளவறிதல் பிரிவு இங்கு வலியுறுத்தியது. நிதியியல் நடவடிக்கைச் செயலணியினால் (FATF) தயாரிக்கப்பட்டு பரிந்துரைகளை முன்னெடுப்பதற்கான சட்ட ரீதியிலான மறுசீரமைப்புகள், இயலளவு விருத்தி, முகவராண்மைகளுக்கிடையிலான மேம்பட்ட கூட்டிணைப்பு, அனைத்தையுமுள்ளடக்கிய புள்ளிவிபரங்களை பேணுதல் என்பவற்றுக்கு இந்த செயற்பாட்டுத் திட்டம் முன்னுரிமையளித்துள்ளது. இத்திட்டங்களுடன் முழுமையான இணக்கப்பாட்டினை உறுதிசெய்வதற்கு பிரத்தியேகமான குழுக்களை நியமிக்குமாறும், அதன் முன்னேற்றத்தினை உன்னிப்பாக கண்காணிக்குமாறும் நிதியியல் உளவறிதல் பிரிவு,பொறுப்புடைய அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி வலியுறுத்தினார். அத்தோடு இந்தச் செயற்பாடு தொடர்பில் ஒத்துழைப்புடன் அர்ப்பணிக்குமாறு கோரிய ஜனாதிபதி, இலங்கையின் நிதிக்கட்டமைப்பு ஸ்தீரத்தன்மையைப் பாதுகாத்து நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் சர்வதேச நம்பிக்கையினை மேம்படுத்துவதற்கும் அதன் ஊடாக சாதகமான பெறுபேறுகளை பெறவும் பணம் தூயதாக்கலுக்கெதிரான மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியீடலை ஒழிப்பதற்கு பலமான மற்றும் செயற்திறனுள்ள கட்டமைப்பொன்று அவசியம் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் ஹர்சன சூரியப்பெரும மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/202000- புதிய வரலாற்றை பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று 209.91 புள்ளிகள் அதிகரித்து புதிய வரலாற்றை பதிவு செய்திருப்பதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 15,020.61 புள்ளிகளாக பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 8.44 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, வரலாற்றில் முதற்தடவையாக கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்குகளின் விலைச் சுட்டெண் 15,000 புள்ளிகளைக் கடந்து சாதனை படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/314071- வாக்குறுதிகளை நிறைவேற்றுவது அநுரவுக்கு சவால் மிக்கது - முன்னாள் இந்திய உயர்ஸ்தானிகர் யஷ்வர்தன் சின்ஹா
24 DEC, 2024 | 10:19 AM (நமது நிருபர்) பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கது. ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன். ஏனெனில் இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா போன்ற சிறந்த அயலக நாடு இருக்கிறது என இலங்கைக்கான முன்னாள் இந்திய உயர்ஸ்த்தானிகர் யஷ்வர்தன் குமார் சின்ஹா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அண்மைய இந்திய அரசமுறை விஜயம் தொடர்பில் இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியிருப்பதாவது, இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய விஜயம் குறிப்பிடத்தக்கதொரு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் இலங்கையில் ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்கள் அண்மையிலேயே நடைப்பெற்று முடிந்திருக்கின்றன. அத்தோடு தற்போது ஆட்சிபீடம் ஏறியிருக்கும் தேசிய மக்கள் சக்தியின் பின்னணியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணி 1971 ஆம் ஆண்டு அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட வரலாற்றைக் கொண்டிருக்கிறது. அத்தோடு 1987மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் குறிப்பாக இந்திய அமைதி காக்கும் படை மற்றும் இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்பவற்றுக்கு எதிராகவும் கிளர்ச்சியில் ஈடுபட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா மிக முக்கிய அயலக நாடு என்பதை புரிந்துக் கொண்டிருப்பதும், அவரது பதவிக் காலத்தின் தொடக்கத்திலேயே இந்தியாவுக்கு விஜயம் செய்ய தீர்மானித்தமையும் மிக முக்கியமானதாகும். இவ்விஜயத்தை அடுத்து வெளியிடப்பட்ட இலங்கை - இந்திய கூட்டறிக்கை மிக முக்கியமானது. ஏனெனில் அது கடந்த அரசாங்கங்களினால் முன்னெடுக்கப்பட்ட செயற்திட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதை உறுதிப்படுத்துகிறது. இருப்பினும் என்னை பொறுத்தமட்டில் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கூட்டு செயற்திட்டத்தை தயாரிப்பது குறித்து அவ்வறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருந்த விடயமே, அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக தென்பட்டது. ஏனெனில் நானறிந்தவரை 1987 ஆம் ஆண்டின் பின்னர் இவ்விடயம் குறித்து இந்தளவுக்கு தெளிவாக இலங்கை - இந்திய கூட்டறிக்கைகளில் குறிப்பிடப்படவில்லை. அடுத்ததாக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாம் எட்கா ஒப்பந்தமாக விரிவுப்படுத்த முற்பட்ட போதிலும் அது சாத்தியமாகவில்லை. ஏனெனில் தலைமைத்துவங்கள் பொருளாதார ரீதியில் சிந்தித்ததை விட அரசியல் ரீதியிலேயே சிந்தித்ததாக நான் கருதுகிறேன். அவ்வொப்பந்தத்தின் ஊடாக எமது உற்பத்திகளுக்கு இடமிருக்காது எனவும், இந்திய வைத்தியர்கள் உள்ளிட்ட தொழிற்றுறையினரின் ஆக்கிரமிப்பு இருக்குமெனவும் ஒரு அச்சம் தோற்றுவிக்கப்பட்டது. இருப்பினும் இந்தியா அதன் அடைவுகளை அயலக நாடுகளுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறது.அதில் இலங்கைக்கு எப்போதும் தனியிடம் உண்டு. அதேவேளை ஜனாதிபதியின் உரைகளில் பல்வேறு முக்கிய விடயங்கள் இடம்பிடித்திருந்தன.குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்புக்கு எதிராக இலங்கையில் எந்தவொரு நடவடிக்கைகளும் இடம்பெறுவதற்கு தாம் அனுமதிக்க போவதில்லை என ஜனாதிபதி ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகளில் கூறியிருந்தார். இது மிக முக்கியமானதாகும். இது எவ்வாறு இருப்பினும் பொருளாதார மீட்சி மற்றும் கட்டமைப்பு ரீதியிலான மாற்றம் என்பன சார்ந்து வழங்கியிருக்கும் வாக்குறுதிகளை சாத்தியமாக்குவது இலங்கை அரசாங்கத்துக்கு சவால்மிக்கதொரு விடயமாகவே இருக்கும். ஆனாலும் அவர்களால் அதனைச் செய்ய முடியும் என நம்புகிறேன். ஏனெனில் இலங்கை மக்கள் இயல்பாகவே மீண்டெழக் கூடிய தன்மையினை கொண்டிருக்கிறார்கள். அத்தோடு அவர்களுக்கு உதவுவதற்கு இந்தியா போன்ற சிறந்த அயலக நாடு இருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/202007- வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
ஆளுநர் இவ்வாறு செய்திருக்கமாட்டார். காரணத்தோடு கூடிய இடமாற்றம்/காலம் நிறைவடைந்த இடமாற்றங்களாக வாய்ப்பிருக்கு அண்ணை.- சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு பாடல்
அண்ணை, இந்த வரிகளை கேட்டபோது யார் உங்கள் ஞாபகத்தில் வந்தது?- காசாவுக்குள் மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதைத் தடுக்கும் இஸ்ரேல்
அக்டோபரில் இருந்து காசாவுக்கு 12 லாரிகளில் மட்டுமே உணவு, தண்ணீர் மட்டுமே விநியோகிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஸ்ஃபாம் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டப்பட்ட அறிக்கையில், “வடக்கு காசாவுக்குள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்ட 34 லாரிகளில் கடந்த இரண்டரை மாதத்தில் வெறும் 12 லாரிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் வேண்டுமென்றே காட்டிய கெடுபிடிகளால் உணவு, தண்ணீரை கொண்டு செல்வதில் சிக்கல் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கெடுபிடிகளால் காசாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் ஆக்ஸ்ஃபாம் சுட்டிக் காட்டுகிறது. மேலும், “மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இரக்கமின்றி நடந்து கொள்கிறது. உணவு, தண்ணீர் லாரிகளை எடுத்துச் செல்ல அத்தனை அனுமதியும் கிடைத்த பின்னரும் கூட ஜபாலியாவில் தேவையே இன்றி லாரிகளை தடுத்து நிறுத்துகிறது. மேலும், ராணுவப் பகுதிகளில் உணவு, தண்ணீரை இறக்கிவைக்க ஓட்டுநர்களை நிர்பந்திக்கிறது. கடந்த மாதம் மட்டும் 11 லாரிகள் இவ்வாறாக நிறுத்திவைக்கப்படன.” என்று ஆக்ஸ்ஃபாம் குற்றஞ்சாட்டியுள்ளது. இதேபோல், நியூயார்க்கை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்ரேல் அதிகாரிகள் திட்டுமிட்டு காசாவுக்கு உணவு, தண்ணீர் கிடைப்பதைத் தடுத்து வருகின்றனர். இதனால் ஆயிரக்கணக்கானோர் அங்கே உயிரிழந்துள்ளனர். இஸ்ரேலின் இந்த நடவடிக்கையால் மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கும்” என்று கூறியுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் அந்த அமைப்பு இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் – காசா ஆகிய இரு நாடுகளில் இருந்து ஒலிக்கத் தொடங்கிய போர் சத்தம் இன்று வரை ஓயவில்லை. இரண்டு நாடுகளின் அதிகார மையங்களுக்கு மத்தியில் பொதுமக்கள், குழந்தைகள், பெண்கள் தங்களது இன்னுயிரை துறந்து வருகின்றனர். ஆனால், இன்னும் போரின் உக்கிரம் குறைந்தபாடில்லை. ஹமாஸை அழிக்காமல் ஓயமாட்டோம் என இஸ்ரேல் வீர முழக்கமிட்டு வருகிறது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 45,220-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதிலும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையை மேலும் மோசமடையச் செய்துள்ளது. UNHCR கவலை: இதற்கிடையில் தெற்கு காசாவின் அல் மவாஸியில் உள்ள பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்ட இடத்தைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 50-க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இதனால் இஸ்ரேல் – காசா மோதல் சற்றும் தீவிரம் குறையாமல் தொடர்ந்து வருவதாக ஐ.நா.வின் அகதிகளுக்கான உயர் ஆணையம் (UNHCR) கவலை தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/314037- வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
23 DEC, 2024 | 04:46 PM வடக்கு மாகாணத்திலுள்ள ஒரு சில அதிகாரிகளை வைத்துக்கொண்டு எங்கள் மாகாண மக்களுக்கு சேவை செய்வதென்பதும் முன்னேற்றுவதென்பதும் மிகச் சவாலான விடயமாகவே இருக்கிறது என வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வட மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், கரைச்சி பிரதேச செயலகமும், கலாசார பேரவையும் இணைந்து நடத்திய கலாசாரப் பெருவிழாவும் “கரைஎழில்” நூல் வெளியீடும் ஞாயிற்றுக்கிழமை (22) கரைச்சிப் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலர் த.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்ததாவது, கிளிநொச்சி மாவட்ட செயலராக நான் பணியாற்றியபோது இறுதிக்கட்டப் போர் ஆரம்பமானது. இந்த மாவட்ட மக்களுடன் நானும் இடம்பெயர்ந்து செல்லவேண்டியிருந்தது. அப்படியானதொரு மாவட்டத்தில் நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதில் பெரும் மகிழ்வடைகின்றேன். எந்த வசதிகளும் இல்லாமல் அன்றைய எமது பணிக்காலம் இருந்தது. ஆனாலும் மக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்கியிருந்தோம். உங்களுடைய தற்போதைய மாவட்டச் செயலர் சு.முரளிதரன் நேர்மையானவர். மக்களின் துன்பங்களை அறிந்து அவர்கள் துயர் துடைக்கக்கூடிய ஒருவர். அவர் உங்களுக்கு மாவட்டச் செயலராக கிடைத்தமை சிறப்பானது. இன்றைய இளையோர்களிடம் மற்றவர்களை மதிக்கும், உதவி செய்யும் பண்புகளைக் காண முடியவில்லை. தவறு செய்பவர்களை தட்டிக்கேட்க முடியாத நிலைமை இருக்கிறது. வீதிகளில் குப்பை போடுகிறோம். வெள்ளம் வடிந்தோடும் வாய்க்கால்களை ஆக்கிரமித்து கட்டடங்களைக் கட்டுகின்றோம். ஒழுக்கமில்லாத சமுதாயமாக நாங்கள் மாறிக்கொண்டு போகின்றோம். மிகக் கவலையாக இருக்கிறது. விழா மண்டபத்தை இந்தப் பிரதேச செயலக அலுவலர்களே அதிகமாக நிரப்பிக்கொண்டிருப்பதாக பிரதேச செயலரும், மாவட்டச் செயலரும் என்னிடம் சொன்னார்கள். உண்மையில் வேதனையாக இருக்கிறது. எமது பிரதேசத்தின் பண்பாட்டு விழாவுக்கு பெருமளவினர் வருவதில்லை. ஆனால் குத்துப்பாட்டுக்களுடன் நடக்கும் நிகழ்வுகளுக்கு அள்ளுகொள்ளையாக செல்கிறார்கள். ஏனையவர்களுக்கு உதவி செய்வதில்தான் உண்மையான சந்தோஷம் இருக்கிறது. ஆனால், இன்று எம்மில் பலர் பணம்தான் சந்தோஷம் என்று நினைக்கிறார்கள். பணம் சந்தோஷத்தை தராது. ஒருவனுக்கு நாங்கள் உதவி செய்தால் எங்களுக்கு பல மடங்கு பல்வேறு வழிகளில் திருப்பி உதவி கிடைக்கும். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் பிறருக்கு உதவி செய்யவேண்டும். அதேபோல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. மற்றையவர்களிடத்தில் நாம் அன்பு செலுத்தவேண்டும். இதேவேளை, வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலருக்கு அடுத்த நிலையிலுள்ள ஒரு அதிகாரிக்கு தொலைபேசியில் அழைப்பெடுத்து ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை சாதகமாக அணுகுமாறு கூறிவிட்டு அவர்களை அவரிடம் அனுப்பினேன். அந்த அதிகாரி தனது அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு ஆசிரியர்களை, இரவு 7 மணிக்குத்தான் அலுவலகத்தில் சந்தித்திருக்கிறார். ஆசிரியர்களை மிக மோசமான முறையில் பேசி திருப்பி அனுப்பியிருக்கிறார். இவ்வாறான அலுவலர்கள் எமது மாகாணத்தில் எனக்கு கீழ் இருக்கின்றார்கள் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது. எங்களுக்கு பதவிகள் தரப்பட்டமை மக்களுக்கு சேவை செய்யவே. அதை சகல அலுவலர்களும் மனதில் இருத்துங்கள். உங்களிடம் சேவைக்காக பொதுமக்கள் வரும்போது, அந்தப் பொதுமகனாக நீங்கள் இருந்தால் எப்படி நடந்துகொள்வீர்கள்? அப்போது உங்களுக்கு பேசுவதற்கு அல்லது மனிதநேயமற்று நடப்பதற்கு மனம் வருமா? எனவே, தற்போதுள்ள சகல வசதிகள், ஆளணிகளை வைத்துக்கொண்டு மக்களுக்கு சிறந்த சேவைகளை வழங்க சகலரும் முன்வரவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/201981- யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்களை காதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி. யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படும் தொண்டர் ஊழியர்களின் பிரதிநிதிகள் சிலரை, நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தலைமையிலான குறித்த குழுவினர் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க மற்றும் பிரதி அமைச்சர் ஆகியோரை இன்றையதினம் சந்தித்து இவ்வாறு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, குறித்த தொண்டர் ஊழியர்களுள் 28 பேர் சுகாதார அமைச்சுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதுடன், தங்களது பிரச்சினைகளை நேரடியாக அமைச்சர் உள்ளிட்ட குழுவினரிடம் முன்வைப்பதற்கான சந்தர்ப்பமும் இதன்போது ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தக் கலந்துரையாடலின் போது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் தீவிரமாக கலந்தாலோசிக்கப்பட்டதுடன், சில முடிவுகளும் எட்டப்பட்டுள்ளாக அறியமுடிகின்றது. https://thinakkural.lk/article/314062 - விஜய் எம்.ஜி.ஆரைப் போல வருவார் எனச் சொல்கிறார்கள்; யதார்த்தம் அதுவல்ல' - திருமாவளவன் நேர்காணல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.