Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம் திருச்சியில் டாட்டூ ஸ்டூடியோ நடத்தி வந்த இளைஞர் ஒருவர் தனது வாடிக்கையாளர்களின் நாக்கை இரண்டாகத் துண்டித்து, டாட்டூ போடுவது, கண்களில் நிறமி பூசுவது போன்றவற்றைச் செய்துள்ளார். மேலும், அவற்றைத் தனது இன்ஸ்டா பக்கங்களிலும் பகிர்ந்துள்ளார். பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தின் பின்னணி என்ன? மனிதர்களின் நாக்கை பாம்பு போல மாற்றுவது ஏன்? டாட்டூ என்ற பெயரில் திருச்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய நபர்கள் பிடிபட்டது எப்படி? அதுகுறித்த வீடியோவில் பேசும் இளைஞரிடம் எந்தவித தயக்கமோ, அச்சமோ இல்லை. அவர் கைகாட்டும் இடத்தில் நாக்கு இரண்டாகத் துண்டிக்கப்பட்ட நபர் ஒருவருக்கு தையல் போடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. "இவ்வாறு அறுவை சிகிச்சை செய்வதை தவறு என அவர்கள் உணரவில்லை என்பதைவிட, அவர்கள் இதை ஒரு பெரிய பிரச்னையாகவே பார்க்கவில்லை" என்கிறார், திருச்சி கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி. மனு பாக்கர் ஒலிம்பிக்கில் சாதிக்க உத்வேகம் தந்த 'டாட்டூ' வாசகம் - என்ன தெரியுமா? உடலில் 500 பணிகளைச் செய்யும் கல்லீரலை பாதுகாப்பது எப்படி? 'டாட்டூ' ஆபத்தா? ரஷ்யாவில் பாதுகாக்கப்படும் லெனின் உடல் 100 ஆண்டுகள் கடந்து எப்படி உள்ளது தெரியுமா? 'ஏலியன் இமோ டாட்டூ' என்ற பெயரில் இன்ஸ்டாகிராமில் இந்த வீடியோவை பதிவேற்றம் செய்த ஹரிஹரன் மற்றும் அவரது நண்பர் ஜெயராமனை கடந்த ஞாயிறு அன்று (டிசம்பர் 15) திருச்சி போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மேல சிந்தாமணி அருகிலுள்ள பழைய கட்டடம் ஒன்றில், ஏலியன் இமோ டாட்டூ (Alien Emo tatto) என்ற பெயரில் கடை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்தக் கடையை நடத்தி வந்த ஹரிஹரன் என்பவரை இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர். 'ஹாய் ஏலியன்ஸ்' எனக் குறிப்பிட்டு, இவர் பேசும் காணொளிகளுக்கு ஒரு சாரார் மத்தியில் வரவேற்பு கிடைத்து வந்துள்ளது. ஹரிஹரனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்களுக்கு செயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்துவது, நாக்கைத் துண்டிப்பது, பல்வேறு வகை டாட்டூ போடுவது என உடல் அமைப்பு (body modification) மாற்றம் தொடர்பாக, நூற்றுக்கும் மேற்பட்ட காணொளிகள் பதிவேற்றப்பட்டுள்ளன. இதை 'கலாசாரம்' என்றே வீடியோ ஒன்றில் ஹரிஹரன் குறிப்பிடுகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல்: சாமானியர்கள் மீது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? கூட்டாட்சிக்கு எதிரானதா?8 மணி நேரங்களுக்கு முன்னர் 4,000 ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் நரமாமிசம் சாப்பிட்டதை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்4 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டு சம்பவங்கள் பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டாட்டூ கடை நடத்தி வந்த ஹரிஹரன் என்பவரை இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்து 43 ஆயிரம் பேர் பின்தொடர்கின்றனர் கடந்த டிசம்பர் 9, 11 ஆகிய தேதிகளில் இரண்டு பேருக்கு நாக்கைத் துண்டித்து ஹரிஹரன் அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகக் கூறுகிறார், கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி. இதுதொடர்பாக ஹரிஹரன் பதிவேற்றிய இரண்டு காணொளிகள், காவல் துறை மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாம்பு போல மனிதர்களின் நாக்கை இரண்டாகத் துண்டித்து, அதற்கு நிறமூட்டும் வேலைகளைச் செய்வதை ஒரு சாதனையாக வீடியோவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இதுதொடர்பாக, ஸ்ரீரங்கம் சுகாதார ஆய்வாளர் கார்த்திகேயன் கொடுத்த புகாரின்பேரில் 25 வயதான ஹரிஹரன் மற்றும் 24 வயதான ஜெயராமனை கோட்டை காவல்நிலைய போலீசார் கைது செய்தனர். பட மூலாதாரம்,ALIEN_EMO_TATTOO/INSTAGRAM தனது நாக்கையும் மும்பை சென்று துண்டித்து நிறமூட்டியதாக காவல்துறை விசாரணையில் ஹரிஹரன் தெரிவித்துள்ளார். இதற்காக 2 லட்ச ரூபாய் வரை செலவு ஆனதாகவும் அவர் கூறியுள்ளார். இவரது டாட்டூ கடையில் நடத்தப்பட்ட சோதனையில் அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் கத்திகள், பிளேடு, ஊசி, மயக்க மருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. என்னென்ன பிரிவுகளில் வழக்கு? கைதான இருவர் மீதும் 118 (1), 125, 123, 212, 223 BNS, 75, 77 ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு நபர் வேண்டுமென்றே ஆபத்தான கருவிகளைப் பயன்படுத்தி வேறு ஒருவருக்குத் தீங்கு விளைவிப்பதைக் குற்றம் என சட்டப் பிரிவு 118 (1) கூறுகிறது. பி.என்.எஸ் (பாரதிய சன்ஹிதா) சட்டப்பிரிவு 123இன்படி, ஒருவருக்குத் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் நச்சு, மயக்கம், தீங்கு விளைவிக்கும் பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துவது குறித்துக் கூறுகிறது. இந்த வகையான குற்றத்திற்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் கிடைக்க வாய்ப்புள்ளதாக சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 தமிழ் பாதிரியார்கள் பிரேசில் காடுகளில் உள்ள தேவாலயங்களில் பணியாற்றுவது ஏன்?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, டாட்டூ போடுவதற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் இந்த வழக்கு குறித்து மேலதிக தகவல்களை பிபிசி தமிழிடம் விவரித்த கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் பெரியசாமி, "டாட்டூ கடையில் வைத்தே அறுவை சிகிச்சை செய்துள்ளனர். ஆனால், அதுதொடர்பான படிப்பறிவோ, முறையான உரிமமோ ஹரிஹரனிடம் இல்லை," என்றார். "கடந்த சில நாட்களுக்கு முன்பு 17 வயது சிறுவனுக்கு நாக்கைத் துண்டாக்கும் சிகிச்சையை ஹரிஹரன் செய்துள்ளார். மைனர் சிறுவனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது தீவிர குற்றம் என்பதால் வழக்குப் பதிவு செய்தோம்" என்று நடந்ததை விவரித்தார். டாட்டூ வடிவங்களில் புதுப்புது மாதிரிகளை அறிமுகப்படுத்தி, 'ஜென் இசட்' தலைமுறையினரைக் கவர்வதற்காக இதுபோன்று ஹரிஹரன் செயல்பட்டு வந்துள்ளதாகவும் கோட்டை காவல் நிலைய போலீசார் கூறுகின்றனர். 'அபாயகரமான கருவிகள்' மாநகராட்சியில் உரிமம் பெறாமல் டாட்டூ கடையை ஹரிஹரன் நடத்தி வந்ததாகக் கூறுகிறார், திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலர் மருத்துவர் விஜய் சந்திரன். "எந்தக் கண்காணிப்பு வளையத்திலும் இந்தக் கடை இல்லை. மாநகராட்சி சட்டப்படி கடை நடத்தப்படவில்லை என்பதால் உடனே சீல் வைக்கப்பட்டுவிட்டதாக," அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். "நாக்கைத் துண்டாக்கும்போது, மயக்க மருந்தை நாக்கில் ஹரிஹரனே செலுத்தியுள்ளார். அதே ஊசியை வேறு நபர்களுக்குப் பயன்படுத்தியுள்ளாரா எனத் தெரியவில்லை" எனக் கூறுகிறார் விஜய் சந்திரன். கெங்கிஸ் கான் புழுக்களை ஆயுதமாகப் பயன்படுத்தியது எப்படி?7 மணி நேரங்களுக்கு முன்னர் கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,VIJAYCHANDRAN படக்குறிப்பு, இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கூறுகிறார், விஜய் சந்திரன் இவ்வாறு செய்வதன் மூலம் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகவும் அவர் கூறுகிறார். "கண்களுக்கு ஊசி மூலம் செயற்கை நிறங்களைச் செலுத்தி நிறமூட்டும் வேலையைச் செய்துள்ளார். நாக்கு துண்டிக்கப்பட்ட இருவருக்கும் கண்களில் நிறமூட்டூம் வேலையை அவர் செய்யவில்லை" எனக் கூறுகிறார் விஜய் சந்திரன். "உடற்பாகங்களில் துளையிட்டு டாட்டூ போடுவதற்கு மருத்துவர்கள் பயன்படுத்தும் ஊசிகள், பிளேடு ஆகியவற்றைக் கையாண்டுள்ளார். இந்தக் கருவிகளை கிருமி நாசினி மூலம் முறையாகச் சுத்தப்படுத்தவில்லை. இவை பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறக் கூடியவை என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்கிறார், மருத்துவர் விஜய் சந்திரன். பட மூலாதாரம்,ALIEN_EMO_TATTOO/INSTAGRAM படக்குறிப்பு, கத்திகள், பிளேடு, ஊசி, மயக்க மருந்து போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன மேற்கொண்டு பேசிய விஜய் சந்திரன், "நாக்கைத் துளையிடுவது, மூக்கில் வளையம் போடுவதற்கு சில கருவிகளை ஹரிஹரன் வைத்துள்ளார். அவையெல்லாம் மிகவும் அபாயகரமானவை. சற்று வேகமாக அழுத்தினால்கூட மனிதர்களின் மூக்குப் பகுதியில் பெரும் சேதம் ஏற்பட்டுவிடும்" என்றார். தன்னிடம் நாக்கை வெட்டிக் கொண்டவர்களுக்கு சில வாக்குறுதிகளை ஹரிஹரன் கொடுத்துள்ளதாகவும் மருத்துவர் விஜய் சந்திரன் தெரிவித்தார். "நாக்கைத் துண்டாக்கி அழகுபடுத்தும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் புரொமோட் செய்தால், பிரதிபலனாக திருவெறும்பூர் மற்றும் திருச்சியின் மையப் பகுதியில் புதிதாகத் தொடங்கவுள்ள டாட்டூ மையங்களை அவர்களுக்கே கொடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளார்" என்றார் விஜய் சந்திரன். நாக்கைத் துண்டிப்பதால் என்ன நடக்கும்? "சமூக ஊடகங்களில் காணொளிகளைப் பார்த்துவிட்டு, அறிவியலுக்கு மாறான செயல்களைச் செய்யும்போது அவை உயிருக்கு ஆபத்தாக முடியும்" என்று எச்சரிகிறார், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் தேரணி ராஜன். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஒருவர் பேசுவதற்கு நாக்கு மிக முக்கியம். நாக்கைத் துண்டிக்கும்போது பேச்சுத் திறன் பாதிக்கும்; சுவை உணர்வு பறிபோகும். இவ்வாறு செய்வதால் சரியாகப் பேசுவதில் குளறுபடி ஏற்படும்" என்றார். வளரிளம் பருவத்தில் உள்ளவர்களின் மனதில் இதுபோன்ற காணொளிகள் தாக்கத்தை ஏற்படுத்துவதாகக் கூறும் தேரணிராஜன், "கண்ணில் நிறங்களைச் செலுத்தும்போது பார்வைத் திறனில் பாதிப்பு ஏற்படும். விழித்திரைப் படலத்திற்குள் ஊசியைச் செலுத்தி நிறமூட்டும்போது கண் பார்வையே போய்விடும்" என்கிறார். செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 அமேசானின் இந்த 'கொதிக்கும் நதி' சூடாவது எப்படி? மனித குலத்திற்கு விடுக்கும் எச்சரிக்கை என்ன?14 டிசம்பர் 2024 டாட்டூ - உளவியல் பின்னணி என்ன? பட மூலாதாரம்,THERANIRAJAN படக்குறிப்பு, இப்படி டாட்டூ போடுவது, உயிருக்கே ஆபத்தாக முடியும் என்று எச்சரிக்கிறார், மருத்துவர் தேரணிராஜன் "தங்களின் உடலை வருத்தி டாட்டூ போட்டுக் கொள்வது உளவியல் சிக்கலுக்கு உட்பட்ட ஒன்று" என்கிறார், சென்னை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் மாலையப்பன். இயற்கைக்கு மாறாக, உடல் அமைப்புகளை மாற்றிக் கொள்வதன் மூலம் தங்களை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்ள முயல்கின்றனர் என்கிறார் மாலையப்பன். அந்த வகையில், "மிக அதிகமாக டாட்டூ குத்திக் கொள்ளும் சிலரின் பழக்கத்தை, இயல்பான நடத்தையாக (Normal behaviour) பார்க்க முடியாது" என்றும் மாலையப்பன் தெரிவித்தார். "பொதுவாகவே, தம்மை மற்றவர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது மனிதர்களின் இயல்பான குணம். அது அளவுடன் இருக்கும்போது எந்தவித பாதிப்பும் வரப் போவதில்லை" எனக் கூறுகிறார் மாலையப்பன். இந்தியாவுக்கு இலங்கை அளித்த உறுதிமொழி - தமிழர்கள் பற்றி மோதி கூறியது என்ன?17 டிசம்பர் 2024 ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு பஷர் அல்-அசத் முதல் அறிக்கை - என்ன கூறியுள்ளார்?17 டிசம்பர் 2024 படக்குறிப்பு, இயற்கையில் இருந்து பிறழும் நடவடிக்கையாக இதைக் கருதுவதாக, மாலையப்பன் கூறுகிறார். "இதை மனநோய் என்று அழைக்காமல், இயற்கையில் இருந்து பிறழ்ந்து போவதாகப் பார்க்கலாம். மற்றவர்கள் தன்னைக் கவனிக்க வேண்டும் என்பதற்காக உடல் உறுப்புகளை மாற்றிக் கொள்வதை உளவியல் சிக்கலாக அணுக வேண்டும்" என்கிறார் மாலையப்பன். அதோடு, இவ்வாறான உளவியல் சிக்கல்களுக்கு ஆளாகும் நபர்களை முறையாக மனநல ஆலோசனை வழங்கி நெறிப்படுத்தலாம் என்றும், வேறு எந்தெந்த வகைகளில் கவனத்தை ஈர்க்கலாம் என ஆலோசனை கொடுக்கும்போது அவர்கள் இதிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் விவரித்தார் அவர். டாட்டூ கடைகளில் ஆய்வு நடத்தக் குழு டாட்டூ கடைகளை முறைப்படுத்துவதற்கு திருச்சி சம்பவம் உதாரணமாக மாறியுள்ளதாகக் கூறும் திருச்சி மாநகராட்சி நகர்நல அலுவலர் விஜய் சந்திரன், "மாநகராட்சியில் கடைகளைப் பதிவு செய்யும்போது 'ஆர்ட்டிஸ்ட்' எனக் குறிப்பிடுகின்றனர். ஆனால், நேரில் ஆய்வு நடத்தும்போது, அவை டாட்டூ கடைகளாக உள்ளன" என்கிறார். திருச்சி சம்பவத்தை ஆய்வு செய்வதற்காக மருத்துவ சேவைப் பணிகள் கழகத்தில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி தமிழிடம் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn4x3p7kkydo
  2. தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் 11 வீதத்தால் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்னுற்பத்திக்காக பயன்படுத்தப்படும் எரிபொருளின் விலைகளையும் மேலும் குறைக்க முடியும் என ஆணைக்குழுவால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் கட்டணத் திருத்தம் தொடர்பில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள மாற்று யோசனைகள் குறித்த பொதுமக்களின் கருத்துகளை கேட்டறியும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது. இலங்கை மின்சார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட மின் கட்டணத் திருத்த யோசனை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தால் மின்னுற்பத்திக்காக வழங்கப்படும் எரிபொருளுக்கான விலை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் குறித்த மாற்று யோசனை தயாரிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 08ஆம் திகதி வரை எழுத்துமூலமான கருத்துகள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதுடன், மாகாண மட்டத்தில் 9 அமர்வுகள் மூலம் வாய்மொழி கருத்துகள் பெறப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த முன்மொழிவு தொடர்பான எழுத்துபூர்வ யோசனைகளை info@pucsl.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப முடியும். 076 427 10 30 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கும் பொதுமக்கள் தமது யோசனைகளை முன்வைக்க முடியும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு தபால் மூலமாகவும் முன்மொழிவுகளை சமர்ப்பிக்க முடியும். எவ்வாறாயினும், 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்கு தற்போதுள்ள மின் கட்டணத்தை மாற்றமின்றி நடைமுறைப்படுத்த மின்சார சபை தற்போது முன்மொழிந்துள்ளது. https://thinakkural.lk/article/313885
  3. அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக ஹர்ஷ டி சில்வா நியமனம் 18 DEC, 2024 | 01:00 PM அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். நேற்றையதினம் செவ்வாய்க்கிழமை (17) கூடிய பாராளுமன்ற தெரிவுக்குழுக் கூட்டத்தின்போது, நிலையியற் கட்டளை 121 இன் ஏற்பாடுகளுக்கமையவும் 2024 டிசம்பர் 06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரேரணைக்கமையவும் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக குழுவின் தவிசாளராக கலாநிதி ஹர்ஷ த சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் பணியாற்றுவதற்கான ஏனைய உறுப்பினர்களின் பெயர்களையும் சபாநாயகர் இன்று புதன்கிழமை (18) சபையில் அறிவித்தார். இதற்கமைய, கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும, ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பலிஹேன, விஜேசிரி பஸ்நாயக்க, திலிண சமரகோன், சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர ஆகியோர் அரசாங்க நிதி பற்றிய குழுவில் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/201556
  4. நாட்டுக்கு அச்சுறுத்தலான எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் தற்போதைய அரசாங்கம் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இந்தியாவுடன் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொண்டால், ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுவது சிக்கலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சியாக இருக்கும்போது தேசிய மக்கள் சக்தி கூறியது. எனினும், தற்போது, இந்தியாவுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, ரணில் விக்ரமசிங்க இணக்கம் தெரிவித்த எட்கா உடன்படிக்கையைக் கைச்சாத்திட்டார். இந்தநிலையில், இந்தியா தொடர்பிலும், எட்கா தொடர்பிலும் முன்னதாக தெரிவித்த கருத்தைத் தேசிய மக்கள் சக்தி தற்போது மீளப் பெறுமா என ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பினார். இதன்போது கருத்துரைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், உள்நாட்டில் மின்சக்தி உற்பத்தி செய்வதாகவும் மேலதிக மின்சக்தியை பிம்ஸ்டெக் அமைப்பின் பொருளாதார ஒத்துழைப்புடன் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதாகவும் நாம் முன்னதாக கூறியிருந்தோம். இதனூடாக, இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். அதனை விடுத்து, நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்தவொரு உடன்படிக்கையையும் இந்தியாவுடன் கைச்சாத்திடவில்லை. இந்தியப் பிரதமருடன் ஜனாதிபதி இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் மின்சக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகள் முன்கொண்டு செல்லப்படும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, நாட்டை காட்டிக் கொடுக்கும் எந்தவொரு உடன்படிக்கையையும் கைச்சாத்திடவில்லை என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். https://thinakkural.lk/article/313907
  5. பட மூலாதாரம்,RICK SCHULTING கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சாமர்செட் என்ற இடத்தில் நடந்த வன்முறையில் குறைந்தது 37 பேர் வெட்டிக் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும், அவர்களை மனிதர்களே உண்டிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டனில் வெண்கலக் காலத்தின் ஆரம்பம் மிகவும் அமைதியானதாக இருந்த நிலையில், இதுதான் அந்தக் காலகட்டத்தில் நடந்த மிகப்பெரிய வன்முறையாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். கொல்லப்பட்டவர்களின் எலும்புகள் 1970களில் குகைகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன. வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் இந்த எலும்புகளை வீசி எறிந்திருக்கலாம் என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். இந்தச் சம்பவம் 'பழிவாங்கும்' நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் எனவும், இதன் விளைவுகள் அடுத்தடுத்த தலைமுறைகளில் எதிரொலித்ததாகவும் கூறுகிறார், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரிக் ஷூல்டிங். இந்த வன்முறையில் இறந்தவர்களை "மனிதத் தன்மையற்றவர்களாக ஆக்கும் நோக்கிலும்" சடலங்களை "அவமதிக்கும் நோக்கிலும்" ஒரு சடங்காக உட்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி? மலையாக குவிந்த காட்டெருமை மண்டை ஓடுகள்: பூர்வகுடிகளுக்கு எதிரான இருண்ட வரலாற்றை நினைவுகூரும் புகைப்படம் வரலாற்றாசிரியர்களின் பார்வையில் திப்பு சுல்தான் ஒரு ஹீரோவா அல்லது வில்லனா? - ஓர் ஆய்வு 'சிறுபூச்சிகளை உண்டன, சொந்த பற்களை கூட விழுங்கின' - டைனோசர்கள் பற்றிய புதிரை அவிழ்க்கும் ஆய்வு முடிவுகள் எத்தனை பேர் உயிரிழந்தனர்? மூவாயிரத்திற்கும் அதிகமான எலும்புத் துகள்கள் சாமர்செட் பகுதியில் மெண்டிப் ஹில்ஸ் என்ற இடத்தில் சார்டர் வாரன் எனப்படும் குகையில் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்வாராய்ச்சியாளர்களால் சோதனை செய்யப்பட்டது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என 37 பேர் உயிரிழந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். அந்தக் காலத்தில் பிரிட்டனில் இருந்த கிராமங்களில் பெரும்பாலும் 50 முதல் 100 பேர் வரை வாழ்ந்து வந்தனர் என்றும் இந்தத் தாக்குதல் அந்த ஒட்டுமொத்த சமூகத்தையும் அழிவின் விளிம்பில் தள்ளியிருக்கும் என்றும் தெரிவித்தனர். பிரிட்டனில் வெண்கல காலம் கி.மு. 2500-2000 முதல் கி.மு. 800 வரை நீடித்தது. இந்தக் காலகட்டத்தில்தான் மனிதர்கள், ஆயுதங்கள் மற்றும் இதர பொருட்கள் கல்லில் செய்யப்படுவதற்குப் பதிலாக வெண்கலத்தில் செய்யப்படத் தொடங்கினர். புதுப்புது விவசாய வழிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன, பெரிய மற்றும் நிரந்தரமான நிலங்கள் பிரிக்கப்பட்டன. "பந்து என்று நினைத்தோம்" - மேற்கு வங்கத்தில் குண்டுகளுக்கு இரையாகும் குழந்தைகள்17 டிசம்பர் 2024 பும்ராவிடம் மன்னிப்புக் கேட்ட இஷா குஹா - மூன்றாவது டெஸ்டின் போது என்ன நடந்தது?17 டிசம்பர் 2024 கல்லால் ஆன ஆயுதங்களால் தாக்குதல் பட மூலாதாரம்,RICK SCHULTING படக்குறிப்பு, கடுமையான வன்முறைச் செயல்களில் கற்கருவிகள் பயன்படுத்தப்பட்டன இந்தத் தாக்குதல் திடீரென நடத்தப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் எந்தவித பதில் தாக்குதலிலும் ஈடுபடவில்லை என்று தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு வல்லுநர்கள் தெரிவித்தனர். எலும்புகளில் காணப்படும் கீறல்கள் மற்றும் வெட்டுகள் ஆகிய அடையாளங்கள், தாக்குதல் நடத்தியவர்கள் வேண்டுமென்றே கல்லால் ஆன ஆயுதங்களைக் கொண்டு மனிதர்களைத் துண்டுகளாக வெட்டிச் சாப்பிட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. "இந்த அடையாளங்களை ஒரு விலங்கின் எலும்பில் பார்த்திருந்தால், சந்தேகமே இன்றி இரைச்சிக்காக இவை வெட்டப்பட்டுள்ளன என்பதைக் கூறிவிடுவோம்," என்கிறார் பேராசிரியர் ஷூல்டிங். தாக்குதல் நடத்தியவர்கள் மனிதர்களை பசி மற்றும் பஞ்சம் காரணமாக உண்ணவில்லை என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏனென்றால், அருகில் இருந்த விலங்குகளின் எலும்புகள் போதுமான உணவு இருந்ததை உறுதி செய்கிறது. இதுதான் இந்தக் காலகட்டத்தில் முதன்முதலில் பதிவு செய்யப்பட்ட பெரியளவிலான வன்முறை நிகழ்வு. நாடாளுமன்றத்திற்கு வந்த பிரியங்கா காந்தியின் கைப்பையால் சர்ச்சை - என்ன காரணம்?17 டிசம்பர் 2024 நீரிழிவால் கண் பார்வை பறிபோவதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு உதவுமா?17 டிசம்பர் 2024 உறவுச் சிக்கலால் நிகழ்ந்ததா? பட மூலாதாரம்,RICK SCHULTING படக்குறிப்பு, இதிலுள்ள கீறல்கள், உறுப்புகள் துண்டிக்கப்பட்டதைக் காட்டுகிறது அந்தக் காலத்தில், வளங்களுக்கான தேடலில்தான் வன்முறை உருவானது என்பதை நிரூபிக்க மிகக் குறைந்த ஆதாரங்களே உள்ளன. இதனால், உறவுகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தகுந்த முறிவுதான் இந்த வன்முறைக்கு அடிப்படையான காரணம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். "கோபம், பயம், மனக்கசப்பு போன்ற காரணங்களால் தூண்டப்பட்டால் மட்டும்தான் ஒரு மனிதரை இப்படி பல்வேறு துண்டுகளாக வெட்டிக் கொலை செய்ய முடியும்," என்று கூறுகிறார் ஷூல்டிங். "இதை ஒரு தனிநபர் செய்யவில்லை. ஒரு சமூகத்தை அழிக்க மற்றொரு சமூகம் ஒன்றுகூடி இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்," என்றார் ஷூல்டிங். "இது தவறு என்று நினைத்தீர்கள் என்றால், இதற்காக நீங்கள்தான் ஏதாவது செய்திருக்க வேண்டும். சட்டத்திடம் சென்று நியாயம் கேட்க முடியாது," என்றார் ஷூல்டிங். இந்த விஷயத்தில் நிலைமை கையை மீறிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். இரண்டு பக்கமும் வன்முறையை அதிகரிக்கும் ஆட்கள் இருந்திருந்தால் நிலைமை இன்னும் மோசமடைந்து இருக்கும். ஒரே நாடு, ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் குழு பரிந்துரைகள் என்ன? எத்தனை கட்சிகள் ஆதரிக்கின்றன?17 டிசம்பர் 2024 ரஷ்யாவுக்கு தப்பிச் சென்ற ஒரு வாரத்திற்குப் பிறகு பஷர் அல்-அசத் முதல் அறிக்கை - என்ன கூறியுள்ளார்?17 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,RICK SCHULTING பிரிட்டனில் வெண்கல காலத்தின் தொடக்கம் பெரும்பாலும் அமைதியான வன்முறையற்ற காலமாகவே கருதப்பட்டது. ஏனெனில் தாக்குதல்களுக்கான ஆதாரம் மிகவும் குறைவாகவே கண்டறியப்பட்டது. வாள் அல்லது கோட்டைப் பாதுகாப்பு போன்ற அமைப்பு எதுவும் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை. இந்தக் கண்டுபிடிப்புக்கு முன்னர் இந்தக் காலகட்டத்தில் வெறும் 10 பேர் மட்டுமே இதுபோன்ற வன்முறைத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டதாக அறியப்பட்டிருந்தது, என்றார் ஷூல்டிங். நீட், ஐஐடி பயிற்சி வகுப்புகளுக்கு பெயர்போன 'கோட்டா கோச்சிங் தொழில்' வீழ்ச்சி அடைகிறதா?57 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள் என்ன?17 டிசம்பர் 2024 வரலாறு வன்முறை மிகுந்ததா? பட மூலாதாரம்,ANTONY AUDSLEY படக்குறிப்பு, கடந்த 1970களில் சாமர்செட்டில் உள்ள குகைகளில் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன இது ஒருமுறை மட்டுமே நடந்த தாக்குதலாக இருக்க வாய்ப்பில்லை என்றும் இந்தச் சம்பவத்திற்கு பின்விளைவுகள் இருந்திருக்கும் என்றும் கூறுகின்றனர். "ஏதோ ஒரு கட்டத்தில் மக்கள் அனைவரும் இந்த வன்முறையில் இருந்து பின்வாங்கி, சாதாரண நிலைக்குத் திரும்பியுள்ளனர்," என்றார் ஷூல்டிங். ஆனால், இதற்காகவே கடந்த காலம் வன்முறை மிகுந்து இருந்ததாக எண்ணிவிடக் கூடாது என்று எச்சரிக்கிறார் ஷூல்டிங். "வெண்கல காலத்தைத் தாண்டி மனிதனின் இயற்கை குணத்தைப் பற்றி அறிய இது நமக்கு வாய்ப்பளிக்கும் என்று நம்புகிறேன்," என்றார் அவர். இந்த ஆராய்ச்சி 'ஆன்ட்டிக்விட்டி' (antiquity) ஆய்விதழில் வெளியாகியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c1d3xrq04w0o
  6. கடைநிலை ஆட்டக்காரர்களால் ஃபலோ ஒன்னைத் தவிர்த்தது இந்தியா 17 DEC, 2024 | 04:52 PM (நெவில் அன்தனி) அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கடைநிலை ஆட்டக்காரர்களின் பொறுப்புணர்வுடனான துடுப்பாட்டங்களால் ஃபலோ ஒன்னை (Follow on) இந்தியா தவிர்த்துக்கொண்டது. பல தடவைகள் மழையினால் பாதிக்கப்பட்ட இப் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் பெற்ற 445 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் இந்தியா போட்டியின் நான்காம் நாளான இன்றைய தினம் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 252 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 4 விக்கெட் இழப்புக்கு 51 ஓட்டங்களிலிருந்து இந்தியா தொடர்ந்தது. ஒரு பக்கத்தில் விக்கெட்கள் வீழ்ந்துகொண்டிருக்க, மறுபக்கத்தில் மிகவும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய கே.எல். ராகுல் 5ஆவது விக்கெட்டில் ரவிந்த்ர ஜடேஜாவுடன் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சற்று தைரியத்தைக் கொடுத்தார். ராகுல் 84 ஓட்டங்களையும் ஜடேஜா 76 ஓட்டங்களையும் பெற்றனர். மொத்த எண்ணிக்கை 213 ஓட்டங்களாக இருந்தபோது ஜடேஜா 9ஆவதாக ஆட்டம் இழந்தார். இதன் காரணமாக இந்தியா பலோன் ஒன் முறையில் துடுப்பெடுத்தாட நிர்ப்பந்திக்கப்படுமோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், கடைநிலை வீரர்களான ஜஸ்ப்ரிட் பும்ரா (10 ஆ.இ.), ஆகாஷ் தீப் (27 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவின் பலோ ஒன்னைத் தவிர்த்தனர். பந்துவீச்சில் பெட் கமின்ஸ் 80 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மிச்செல் ஸ்டார்க் 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். அவுஸ்திரேலிய முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 445 ஓட்டங்களைக் குவித்தது. ட்ரவிஸ் ஹெட் 152 ஓட்டங்களையும் ஸ்டீவன் ஸ்மித் 101 ஒட்டங்களையும் அலெக்ஸ் கேரி 70 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஜஸ்ப்ரிட் பும்ரா 76 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களைக் கைப்பற்றினார். போட்டியில் ஒரு நாள் மாத்திரம் மீதம் இருப்பதால் இந்த டெஸ்ட் போட்டி பெரும்பாலும் வெற்றிதோல்வியின்றி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/201530
  7. 2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்து பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 25,000 மாணவர்களுக்கு 6,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின் போது பாடசாலை மாணவர்களில் 55 வீதத்திற்கும் அதிகமானோர் அதிக பொருளாதார பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தனர். கிராமிய மற்றும் பெருந்தோட்டப் பாடசாலைகளை அண்மித்த பகுதிகளில் இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சுட்டிக்காட்டினார். https://thinakkural.lk/article/313867
  8. டிம் சௌதிக்கு ஆறுதல் வெற்றியுடன் பிரியாவிடை கொடுத்து நியூஸிலாந்து 17 DEC, 2024 | 12:45 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற 3ஆவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 423 ஓட்டங்களால் ஆறுதல் வெற்றியீட்டிய நியூஸிலாந்து, அந்த வெற்றியுடன் தனது சிரேஷ்ட வீரர் டிம் சௌதீக்கு பிரியாவிடை கொடுத்தது. இந்த வெற்றியானது டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூஸிலாதின் மிகப் பெரிய வெற்றியை சமன் செய்வதாக அமைந்தது. ஆறு வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து 423 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது. நியூஸிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 658 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான வெற்றி இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து, போட்டியின் நான்காம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (17) காலை 2 விக்கெட் இழப்புக்கு 18 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்து சகல விக்கெட்களையும் இழந்து 234 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. எனினும் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றிருந்த இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட க்ரோ - தோர்ப் டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் தனதாக்கிக்கொண்டது. நியூஸிலாந்து மண்ணில் 2008க்குப் பின்னர் இங்கிலாந்து ஈட்டிய முதலாவது தொடர் வெற்றி இதுவாகும். ஜேக்கப் பெத்தெல் (76), ஜோ ரூட் (54) ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 104 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தின் வெற்றியை தாமதம் அடையச் செய்தனர். பகல போசன இடைவேளைக்கு சற்று பின்னர் இங்கிலாந்தின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் உபாதை காரணமாக துடுப்பெடுத்தாடவில்லை. பெத்தெல், ரூட் ஆகியோரைவிட கஸ் அட்கின்சன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 43 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் வேறு எவரும் 20 ஓட்டங்களை நெருங்கவில்லை. தனது கடைசி இன்னிங்ஸில் டிம் சௌதீ 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். எண்ணிக்கை சுருக்கம் நியூஸிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 347 (மிச்செல் சென்ட்னர் 76, டொம் லெதம் 63, கேன் வில்லியம்சன் 44, வில் யங் 42, மெத்யூ பொட்ஸ் 90 - 4 விக்., கஸ் அட்கின்சன் 66 - 3 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோ ரூட் 32, பென் ஸ்டோக்ஸ் 27, மெட் ஹென்றி 48 - 4 விக்., மிச்செல் சென்ட்னர் 7 - 3 விக்., வில் ஓ'ப்றூக் 33 - 3 விக்.) நியூஸிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 453 (கேன் வில்லியம்சன் 156, வில் யங் 60, டெரில் மிச்செல் 60, மிச்செல் சென்ட்னர் 49, டொம் ப்ளன்டெல் 44 ஆ.இ., ரச்சின் ரவிந்த்ரா 44, ஜேக்கப் பெத்தெல் 72 - 3 விக்., பென் ஸ்டோக்ஸ் 52 - 2 விக்., ஷொயெப் பஷிர் 170 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 658 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 234 (ஜேக்கப் பெத்தெல் 76, ஜோ ரூட் 54, கஸ் அட்கின்சன் 43, மிச்செல் சென்ட்னர் 85 - 4 விக்., டிம் சௌதீ 34 - 2 விக்., மெட் ஹென்றி 62 - 2 விக்.) ஆட்டநாயகன்: மிச்செல் சென்டனர். தொடர்நாயகன்: ஹெரி ப்றூக். https://www.virakesari.lk/article/201496
  9. 19 வயதுக்குட்பட்ட பெண்கள் ஆசிய கிண்ணம்: பாகிஸ்தானை அதிரவைத்து வெற்றியீட்டியது நேபாளம் 16 DEC, 2024 | 08:49 PM (நெவில் அன்தனி) மலேசியாவின் கோலாலம்பூரில் அமைந்துள்ள பேயுமாஸ் ஓவல் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை முற்றிலும் எதிர்பாராத விதமாக 6 விக்கெட்களால் நேபாளம் வெற்றிகொண்டது. இப் போட்டி முடிவை அடுத்து பிரதான கிண்ணத்திற்கான இரண்டாம் சுற்றில் விளையாட பி குழுவிலிருந்து இந்தியாவும் நேபாளமும் தகுதிபெற்றுள்ளன. 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் பெண்கள் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட 105 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நேபாள பெண்கள் அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. அணித் தலைவி பூஜா மஹாட்டோ 47 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 47 ஓட்டங்களைப் பெற்று அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றினார். பூஜா மஹாட்டோவும் சீமானா ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்து ஒரு ஓவர் மீதம் இருக்கையில் நேபாளத்தின் வெற்றியை உறுதிசெய்தனர். மஹாட்டோவைவிட சொனி பாக்ரின் 13 ஓட்டங்களையும் சிமானா ஆட்டம் இழக்காமல் 12 ஓட்டங்களையும் சானா பர்வீன் 10 ஓட்டங்களையும் பெற்றனர். முன்னதாக அப் போட்டியில் முதலில துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 104 ஓட்டங்களைப் பெற்றது. கோமல் கான் 38 ஓட்டங்களையும் மஹாம் ஆனீஸ் ஆட்டம் இழக்காமல் 29 ஓட்டங்களையும் ரவாய்ல் பர்ஹான் 13 ஓட்டங்களையும் அணித் தலைவி ஸூபிஷான் அயாஸ் 12 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் பூஜா மஹாட்டோ 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/201458
  10. 17 DEC, 2024 | 06:58 PM (எம்.மனோசித்ரா) இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கூட்டு அறிவிப்பை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று எட்கா ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்வதற்கான தீர்மானம் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அவர் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார். செவ்வாய்கிழமை (17) அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது : இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆகியோரால் திங்களன்று புதுடில்லியில் அறிவிக்கப்பட்ட கூட்டு அறிவிப்பில் இந்து - லங்கா ஒத்துழைப்பினை மேலும் ஸ்திரப்படுத்தி வலுப்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும். அதேபோன்று பிராந்திய வலுசக்தி மற்றும் தொழிற்துறை மையமாக திருகோணமலையை அபிவிருத்தி செய்து பொருளாதார மற்றும் தொழிநுட்ப ஒத்துழைப்பு (எட்கா) ஒப்பந்தத்துடன் முன்னோக்கி செல்வது தொடர்பான தீர்மானத்துக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/201529
  11. பட மூலாதாரம்,DEAN RAPER படக்குறிப்பு, நீரிழிவு ரெட்டினோபதியால் டெர்ரி க்வின் பார்வை இழக்க நேரிட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், Christine Ro பதவி, Technology Reporter டெர்ரி க்வின் இளம் வயதிலேயே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டார். அடிக்கடி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளையும், வழக்கமான சோதனைகளையும் அவர் எதிர்த்தார். மற்றவர்களிடம் இருந்து வித்தியாசமாக உணர அவர் விரும்பவில்லை. என்றாவது ஒரு நாள் தன் கால் துண்டிக்கப்பட்டுவிடும் என்பதுதான் அவருடைய மிகப்பெரிய பயம். நீரிழிவு நோயின் மற்றொரு சாத்தியமான சிக்கல், பார்வை இழப்பு. அதுகுறித்து க்வின் முன்பே அறிந்திருக்கவில்லை. "நான் என் பார்வையை இழக்க நேரிடும் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை"என்று மேற்கு யார்க்ஷயரில் வசிக்கும் க்வின் கூறுகிறார். ஆனால் ஒரு நாள் அவர் கண்ணில் ரத்தம் வருவதை கவனித்தார். அவருக்கு நீரிழிவு விழித்திரை நோய் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னார்கள். நீரிழிவு நோயினால் விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பு தான் நீரிழிவு விழித்திரை நோய். இதற்கு லேசர் சிகிச்சைகள் மற்றும் ஊசிகள் தேவைப்பட்டன. சிகிச்சைகள் இருந்த போதிலும், டெர்ரியின் பார்வை தொடர்ந்து மோசமடைந்தது. அவர் நடந்து செல்லும் போது சில நேரங்களில் விளக்கு கம்பங்கள் மீது இடித்துக் கொள்வார், தோள்பட்டை வலிக்கும். மகன் முகத்தை கூட அவரால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை, வாகனம் ஓட்டுவதை கைவிட வேண்டியிருந்தது. "நான் எதுவும் செய்ய முடியாத மனிதனின் நிழலைப் போல உணர்ந்தேன்" என்று அவர் நினைவு கூர்ந்தார். விரக்தியிலிருந்து வெளியேற அவருக்கு உதவிய ஒரு விஷயம், பார்வையற்றோருக்கான அமைப்பிலிருந்து கிடைத்த வழிகாட்டி நாய்களின் ஆதரவாகும். அதன் மூலம் அவர் ஸ்பென்சர் என்ற கருப்பு லாப்ரடார் நாயின் உதவி கிடைத்தது. "அவர் என் உயிரைக் காப்பாற்றினார்," என்று அந்த வழிகாட்டி நாய் குறித்து க்வின் கூறுகிறார். அவர் இப்போது வழிகாட்டி நாய்களுக்கு நிதி திரட்டுகிறார். "பந்து என்று நினைத்தோம்" - குழந்தைகளைக் கொல்லும், மாற்றுத்திறனாளியாக்கும் குண்டுகள் தென் மாநிலங்களில் குழந்தை பிறப்பு குறைவு: எம்.பி தொகுதி குறையும் ஆபத்தை தாண்டியும் காத்திருக்கும் புதிய சவால் சினைப்பையில் நீர்க்கட்டி: டயட் மற்றும் ஊட்டச்சத்து மூலம் குணப்படுத்தலாம் என்ற சமூக ஊடக டிப்ஸ்களை நம்பலாமா? பிரிட்டனில் நேஷனல் ஹெல்த் சர்வீஸ் (NHS) நீரிழிவு தொடர்பான கண் பிரச்னைகளின் ஆரம்ப அறிகுறிகளை சரிபார்ப்பதற்கும் பார்வை இழப்பைத் தடுக்க உதவுவதற்கும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நீரிழிவு கண் பரிசோதனை செய்துகொள்ள நோயாளிகளை அழைக்கிறது. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் நீரிழிவு நோய் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பின்னர் எந்தப் பிரச்னையும் இல்லை என்றால் ஆண்டுதோறும் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று அமெரிக்க வழிகாட்டுதல்கள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், பலர் இதை நடைமுறையில் பின்பற்றுவதில்லை. "பரிசோதனை செய்துகொள்வது, பார்வை இழப்பைத் தடுக்கிறது என்பதற்கு மிகத் தெளிவான சான்றுகள் உள்ளன" என்று அமெரிக்காவில் உள்ள விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக் கழகத்தின் விழித்திரை நிபுணர் ரூமாசா சன்னா கூறுகிறார். "அமெரிக்காவில் நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனைக்கான முட்டுக்கட்டைகளில் செலவு, தகவல் தொடர்பு மற்றும் அதற்கான வசதி ஆகியவை அடங்கும். பரிசோதனைகளை எளிதாக அணுகுவது நோயாளிகளுக்கு உதவும்" என்று டாக்டர் சன்னா நம்புகிறார். நீரிழிவு ரெட்டினோபதியைக் கண்டறிய, சுகாதார வல்லுநர்கள் ஃபண்டஸ் எனப்படும் கண்ணின் பின்புற உட்புறச் சுவரின் படங்களை எடுக்கிறார்கள். "அதிக முறை செய்யும் வேலையாக அது உள்ளது" என்று டாக்டர் சன்னா குறிப்பிடுகிறார். ஆனால் செயற்கை நுண்ணறிவு (AI), இந்தச் செயல்முறையை விரைவுபடுத்தும் மற்றும் செலவுகளைக் குறைக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். நீரிழிவு ரெட்டினோபதி வெவ்வேறு நிலைகளில் உருவாகும் என்பதால், இந்த நிலைகளை திறம்பட கண்டறிய செயற்கை நுண்ணறிவு (AI) உதவும். சில சமயங்களில், கண் மருத்துவ நிபுணரிடம் பரிந்துரை செய்ய வேண்டுமா அல்லது படங்களை மதிப்பாய்வு செய்யும் நிபுணர்களுடன் ஒத்துழைக்க வேண்டுமா என்பதை செயற்கை நுண்ணறிவால் (AI) மதிப்பிட முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரிழிவு நோயாளிகள் ஒவ்வொரு வருடமும் அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள் போர்ச்சுகலை தளமாகக் கொண்ட ரெட்மார்கர் (Retmarker) என்ற சுகாதார தொழில்நுட்ப நிறுவனத்தால் அத்தகைய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் அமைப்பு, சிக்கலை ஏற்படுத்தக் கூடிய ஃபண்டஸ் படங்களைக் கண்டறிந்து, அடுத்தக்கட்ட ஆய்வுக்காக மருத்துவ நிபுணருக்கு அனுப்புகிறது. "பொதுவாக, சிகிச்சை தொடர்பான ஒரு முடிவை எடுப்பதற்கு மனிதனுக்குத் தேவையான தகவலை வழங்குவதற்கான ஆதரவுக் கருவியாக நாங்கள் இதைப் பயன்படுத்துகிறோம்" என்று ரெட்மார்க்கரின் தலைமை நிர்வாகி ஜோனோ டியோகோ ராமோஸ் கூறுகிறார். புதிய தொழில்நுட்பங்கள் குறித்தான மக்களின் தயக்கம், இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியோடு இயங்கும் கருவிகளை ஏற்றுக்கொள்வதைத் தடுக்கிறது என்று அவர் நினைக்கிறார். ரெட்மார்க்கர் பரிசோதனை (Retmarker Screening) மற்றும் ஐனுக்கின் ஐஆர்ட் (Eyenuk's EyeArt) போன்ற அமைப்புகளின் உணர்திறன் மற்றும் குறிப்பிட்ட தனித்தன்மை ஆகிய இரண்டு பண்புகளும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விகிதங்களில் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உணர்திறன் என்பது நோயைக் கண்டறிவதில் ஒரு சோதனை முறை எவ்வளவு சிறந்தது என்பதை குறிக்கும். குறிப்பிட்ட தனித்தன்மை என்பது நோய் பாதிப்பு இல்லாததைக் கண்டறிவது எவ்வளவு நல்லது என்பதை குறிக்கும். பொதுவாக, மிக அதிக உணர்திறன், அதிகப்படியான தவறான முடிவுகள் கிடைக்க காரணமாகலாம். தவறான முடிவுகள், கவலையையும் செலவையும் உருவாக்குகின்றன. அதனால் மருத்துவ நிபுணர்களைத் தேவையற்று சந்திக்க நேரிடும். செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில், மோசமான தரத்தில் உள்ள படங்கள் தவறான சோதனை முடிவுகளுக்கு வழிவகுக்கும். சிரியாவின் கோலன் குன்றுகளில் இஸ்ரேலியரை குடியமர்த்த நெதன்யாகு திட்டம் - அசத் வீழ்ந்த பிறகு என்ன நடக்கிறது?16 டிசம்பர் 2024 இந்த மிகப்பெரிய மரவள்ளிக் கிழங்கை காப்பாற்ற பழங்குடி பெண்கள் போராடுவது ஏன்?17 டிசம்பர் 2024 கூகுள் மேப் பார்த்து கோவா செல்ல முயன்ற 4 பேர் நள்ளிரவில் நடுக்காட்டில் சிக்கியது எப்படி?16 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கண்ணின் பின்புறச் சுவரின் படங்களை ஆய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு உதவும் தாய்லாந்தில் இந்த அமைப்பு சோதனை செய்யப்பட்ட போது, கோட்பாடுகளின் அடிப்படையில் எதிர்பார்த்த அளவுக்கு, இந்த அமைப்பு வேலை செய்யவில்லை. ஒரு முக்கிய சிக்கல் என்னவென்றால், ஃபண்டஸ் படங்களை பகுப்பாய்வு செய்வதற்கும் நீரிழிவு ரெட்டினோபதியின் அறிகுறிகளை அடையாளம் காண்பதற்கும், கணினி பின்பற்றும் படிப்படியான செயல்முறைகள் சரியாக இருக்க வேண்டும். ஆனால் சில சமயம் , படங்கள் எடுக்கும் போது, லென்ஸ்கள் அழுக்காக இருந்திருக்கலாம். விளக்கின் ஒளி சீரற்றதாக இருக்கலாம். கேமரா ஆபரேட்டர்கள் இந்த செயல்முறை குறித்த பயிற்சியில் பல்வேறு நிலைகளில் இருக்கலாம். சிறந்த தரவுகளுடன் பணிபுரிவதன் முக்கியத்துவம் மற்றும் பலதரப்பட்ட மக்களிடம் ஆலோசனை பெறுவதன் முக்கியத்துவம் பற்றிய பாடங்களைக் கற்றுக்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கூகுள், தான் உருவாக்கியுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்பு குறித்த நம்பிக்கையுடன் உள்ளது. அக்டோபரில், தாய்லாந்து மற்றும் இந்தியாவில் உள்ள பங்குதார்களுக்கு உரிமம் வழங்குவதாக, கூகுள் நிறுவனம் அறிவித்தது. செயற்கை நுண்ணறிவு மாதிரியை பயன்படுத்துவதற்கான செலவு மற்றும் அதன் செயல்திறனை மதிப்பிடுவதற்கு தாய்லாந்து பொது சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுவதாகவும் கூகுள் கூறியது. புதிய தொழில்நுட்பத்தின் விலை அதன் மிக முக்கியமான அம்சமாக உள்ளது. ரெட்மார்க்கரின் சேவையில், ஒரு முறை பரிசோதனை செய்வதற்கு சுமார் 5 யூரோ(இந்திய மதிப்பில் சுமார் 450 ரூபாய்) செலவாகும் என்று ராமோஸ் கூறுகிறார். ஆனால் பரிசோதனை எண்ணிக்கை மற்றும் இருப்பிடத்திற்கு ஏற்ப செலவில் மாறுபாடுகள் இருக்கும். அமெரிக்காவில் மருத்துவ பில்லிங் குறியீடுகளுக்கான கட்டணங்கள் அதிகமாக உள்ளன என்றும் ராமோஸ் குறிப்பிட்டார். சிங்கப்பூரில் டேனியல் எஸ் டபிள்யூ டிங் மற்றும் அவரது நண்பர்கள் நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனையில் ஈடுபடும் மூன்று செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் செலவை ஒப்பிட்டனர். மருத்துவ நிபுணர்களின் மதிப்பீட்டுக்கும் அதிக செலவாகும். மறுபுறம், அதிக எண்ணிக்கையிலான தவறான முடிவுகளின் காரணமாக, முழுவதும் தானியங்கியாக இயங்கும் பரிசோதனை முறையும் முழுவதும் ஏற்புடையது அல்ல. மிகவும் மலிவு விலையில் செயற்கை நுண்ணறிவும், மனிதர்களும் இணைந்து செய்யும் மாதிரி உள்ளது. இந்த மாதிரியில், முடிவுகளின் ஆரம்பக்கட்ட பரிசோதனையை செயற்கை நுண்ணறிவு கையாண்டது, பின்னர் மருத்துவ நிபுணர்கள் இந்த முடிவுகளை மதிப்பாய்வு செய்து சரி பார்த்தனர். இந்த மாதிரியானது, இப்போது சிங்கப்பூர் சுகாதார சேவையின் தேசிய தகவல் தொழில்நுட்பத் தளத்துடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு வரும். சிங்கப்பூர் ஏற்கனவே நீரிழிவு ரெட்டினோபதி பரிசோதனைக்கான வலுவான உள்கட்டமைப்பைக் கொண்டிருப்பதால், செலவுகளை குறைக்க முடிந்தது என்று பேராசிரியர் டிங் நம்புகிறார். செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ்ந்தனவா? நாசா ஆய்வில் புதிய மைல்கல்15 டிசம்பர் 2024 ஆப்பிரிக்காவுக்கு வெளியே மனித குலம் தழைக்க 'நியாண்டர்தால்' அடிகோலியது எப்படி?14 டிசம்பர் 2024 கருவின் மூளைகளை 0.5 மைக்ரான் அளவில் வெட்டி மெட்ராஸ் ஐஐடி செய்த ஆய்வு - மூளை நோய்களைத் தடுக்க உதவுமா?14 டிசம்பர் 2024 பட மூலாதாரம்,BILAL MATEEN படக்குறிப்பு, பணக்கார நாடுகளுக்கு அப்பால் உள்ள பிற நாடுகளிலும் மருத்துவத் துறைக்கு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கிடைக்க வேண்டும் என்று பிலால் மதின் கூறுகிறார் எனவே இந்த செயற்கை நுண்ணறிவு முறையில் உள்ள காரணிகளான, செலவு மற்றும் செயல்திறன் பெரிதும் மாறுபடும். ஹெல்த் என்ஜிஓ PATH இன் தலைமை அதிகாரி பிலால் மதின் கூறுகையில், பிரிட்டன் போன்ற பணக்கார நாடுகளில் அல்லது சீனா போன்ற சில நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில் பார்வையைப் பாதுகாக்க செயற்கை நுண்ணறிவு கருவிகளை பயன்படுத்துவற்கு ஆகும் செலவு மற்றும் அதன் செயல்திறன் தரவு மிகவும் வலுவாக உள்ளது. ஆனால் உலகின் மற்ற பகுதிகளுக்கு அப்படி இல்லை என்று தெரிவித்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட சிலருக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் பயனளிக்கும் தீர்வுகளை உருவாக்குகிறோமா என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும். முடிவுகளை எடுக்கும்போது செயல்திறன் தரவைக் காட்டிலும் அதிகமானவற்றைக் கருத்தில் கொள்வதன் முக்கியத்துவத்தையும் டாக்டர் மேடீன் வலியுறுத்துகிறார். டாக்டர் சன்னா, அமெரிக்காவில் உள்ள சுகாதார சம பங்கின் இடைவெளியை சுட்டிக்காட்டுகிறார். இந்த தொழில்நுட்பம் அதனைக் குறைக்க உதவும் என்று அவர் நம்புகிறார். "கண் பராமரிப்புக்கு இன்னும் குறைந்த அணுகல் உள்ள இடங்களுக்கு நாங்கள் அதை விரிவுபடுத்த வேண்டும்."என்றும் அவர் தெரிவித்தார். வயதானவர்கள் மற்றும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் கண் மருத்துவர்களை சந்திக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார். நீரிழிவு கண் நோயைக் கண்டறிய, செயற்கை நுண்ணறிவு முறை வசதியாக இருந்தாலும், கண்களின் மற்ற குறைபாடுகளை கண்டறிவதன் முக்கியத்துவத்திலிருந்து, திசை திருப்பப்படாமல் இருப்பதும் முக்கியம். கிட்டப்பார்வை மற்றும் க்ளைகோமா போன்ற சிக்கல்களைக் கண்டறிவது, செயற்கை நுண்ணறிவு முறைகளுக்கு கடினமாக உள்ளது. ஆனால் அந்த எச்சரிக்கைகள் இருந்தாலும் , " செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகவும் ஆர்வமூட்டக் கூடியதாக உள்ளது " என்கிறார் டாக்டர் சன்னா. "நீரிழிவு நோயாளிகள் அனைவருக்கும் சரியான நேரத்தில் பரிசோதிக்கப்படுவதைப் பார்க்க விரும்புகிறேன். நீரிழிவு நோயின் சுமையைக் கருத்தில் கொண்டு, இது ஒரு சிறந்த தீர்வு என்று நான் நினைக்கிறேன்." என்கிறார் அவர். க்வின், மீண்டும் யார்க்ஷயரில் புதிய தொழில்நுட்பம் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் என்று மிகவும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவரது நீரிழிவு ரெட்டினோபதியை முன்கூட்டியே கண்டறிய செயற்கை நுண்ணறிவு மாதிரி இருந்திருந்தால், "நான் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டிருப்பேன்"என்றார் க்வின். https://www.bbc.com/tamil/articles/cvgmnezjyr7o
  12. 17 DEC, 2024 | 09:02 PM முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றத்தில் பேரவலத்தின் சாட்சியாக, நினைவாலயம் ஒன்று அமைக்கப்படவேண்டுமென வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். பாராளுமன்றில் செவ்வாய்க்கிழமை (17) சர்வதேச இறையாண்மை பிணைமுறி மறுசீரமைப்புதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 2024 நவம்பர் 27நாளில் எமது மக்கள் தங்களின் உறவுகளுக்கு எதுவித இடர்பாடுமின்றி, அமைதியாக தமது அஞ்சலிகளைச்செலுத்தி தமது உணர்வலைகளை வெளிப்படுத்தி ஆறுதலடைந்தனர். அந்தவகையில் ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டிற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். இலங்கைத்தீவில் காலங்காலமாக தொடர் இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டுவரும் தமிழர்கள், 2009இல் இடம்பெற்ற இறுதிப்போரில் வார்த்தைகளில்டிக்கமுடியாத துன்பத்தை அனுபவித்து இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டனர். இறுதிப்போரின் வலிகள் இன்னும் ஆறாத நிலையில் அப்போரில் தமது உறவுகளை இழந்த ஏராளமான மக்கள் இன்னும் தம் உணர்வுகளுடன் நடைபிணங்களாக வாழ்ந்துவருகின்றனர். தம்மை யாராவது காப்பாற்றமாட்டார்களா? என்ற ஏக்கத்தில் சின்னஞ்சிறியவர்கள் முதல், பெரியவர்கள்வரை ஏங்கித்தவித்த நிலை, "பசி, பசி" எனக் குழந்தைகள் அழும்போது செய்வதறியாதநிலையில் பெற்றோர்கள் கலங்கிய அவலநிலை, பதுங்குகுழிகளைவிட்டு வெளியேவந்தால் தப்பமுடியாது என்றெண்ணி பதுங்குகுழிகளுக்குள்ளேயே தங்கியிருந்தநேரம் அதற்குள்ளேயும் குண்டுகள் விழுந்து உறவுகள் மடிந்தபோது உயிரிழந்த தமது உறவுகளைப் புதைப்பதற்கு இயலாமல் உடலங்களை அவ்வாறே விட்டு ஓடிய நிலமைகள், ஆகியவற்றை எண்ணிப்பாருங்கள். இலட்சக்கணக்கில் தமிழ் உறவுகளைப்பலிகொண்ட அந்தப் பேரவலம், தமிழ்த்தேசிய இனத்தின் கூட்டு மன உளவியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. இந்தநிலையில் அங்கு உறவுகளை இழந்து, தற்போது வாழ்ந்துவருகின்ற மக்கள் தம் உறவுகளை நினைவுகூர்வதற்கு அங்கீகரிக்கப்பட்ட ஒரு நினைவிடம் தேவை என்பதை அங்குள்ள மக்கள் ஆதங்கத்துடன் கூறிவருகின்றனர். உயிரிழந்தோரை நினைவுகொள்ளும் விதத்தில் உலகின் மூத்தகுடிகளில் ஒன்றான தமிழ் இனம், மிக உயர் நாகரீக பண்பாடுகளைக்கொண்டுள்ளது. எம் இன வரலாற்றில் மிக அதிகமான மக்கள் உயிரிழந்த ஒரு அவலம். இவ்வாறு படுகொலைசெய்யப்பட்ட எம் உறவுகளை நினைவுகூர ஒரு நினைவாலயம் அமைக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகின்றது. ஆழிப்பேரலையினால் உயிரிழந்த மக்களுக்கென முல்லைத்தீவில் மட்டுமல்ல, பல இடங்களில் நினைவுமண்டபம் அமைக்கப்பட்டு அதில் உயிரிழந்த ஒவ்வொருவருடையபெயரும் குறிக்கப்பட்டுள்ளது. இது காலாகாலத்திற்கும் உயிரிழந்தோரின் உறவுகளையும், சந்ததியினரையும் நினைவுகூர வழிசமைக்கின்றது. அதேபோன்று முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் நினைவாகக் கட்டப்படும் ஆலயத்தில் உயிரிழந்தோரின் பெயர்கள் பொறிக்கப்படுவது தத்தமது உறவுகளை காலாகாலத்திற்கும் அவர்களின் சந்ததிகள் நினைவுகூர வசதியாக இருக்கும். எம் இனத்தின் பண்பாட்டையும் பிரதிபலிப்பதாகஅமையும். அந்தவகையில் தேசிய பேரவலத்தின் சாட்சியாக நினைவு ஆலயம் முள்ளிவாய்க்காலில் மே -18 நினைவுகூருமிடத்தில் அமைக்கப்படவேண்டும். இறந்தவர்களை நாங்கள் அடக்கம்செய்யும்போது கல்லறைகளை அதன்மேல் அமைக்கின்றோம். அந்தக்கல்லறைகளில் சம்பந்தப்பட்ட உறவுகள், நினைவுதினங்களில் பால்தெளித்து, படையல்களைப் படைத்து, பூக்கள் சொரிந்து, தீபங்கள் ஏற்றி தங்களுடைய மனக்கவலையை உள்ளத்திலிருந்து வெளிப்படுத்தி அழுது ஆற்றுகின்ற அந்த நிலைக்கு எமது மக்களையும் ஈடுபடுவதற்கு ஒரு நினைவாலயத்தை அமைப்பதற்கு எமது மக்களுக்கு அனுமதிதாருங்கள். இனப்பாகுபாடு பாராது, நாம் முள்ளிவாய்க்காலில் ஓர் நினைவாலயம் அமைப்பதற்கு அனுமதிதாருங்கள் எனக் கேட்டுக்கொள்கின்றேன் - என்றார். https://www.virakesari.lk/article/201537
  13. தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த அகதிகள் மீளவும் நாட்டுக்கு வரவேண்டும் என்பதே எங்களின் விருப்பமாகவும் இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தேசிய அலுவலகத் தலைவராகப் பணியாற்றிய சஞ்சிதா சத்தியமூர்த்தி, வடக்கு மாகாண ஆளுநரை, ஆளுநர் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய நிலையில் அவர் இதனை தெரிவித்தார். கடந்த காலங்களில் வடக்கு மக்களுக்கு பல்வேறு வகையான உதவிகளை யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு வழங்கியதை நினைவுகூர்ந்த ஆளுநர், அதற்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டார். குறிப்பாக இந்தியாவின் தமிழக மாநிலத்தில் தங்கியிருந்த இலங்கை அகதிகள் நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கான வாழ்வாதார உதவிகளை மேற்கொண்டதில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் பங்கு அளப்பரியது என்பதையும் ஆளுநர் சுட்டிக்காட்டினார். அத்துடன் காணி இல்லாதவர்களுக்கு காணி வழங்குதல், வீடமைப்புத் திட்டம், வாழ்வாதார உதவி மற்றும் வேலை வாய்ப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தி தமிழகத்தில் தற்போதும் தங்கியுள்ள இலங்கை அகதிகளை மீள நாட்டுக்கு அழைத்து வருவதற்கான விருப்பத்தை வெளிப்படுத்திய ஆளுநர், அதற்குரிய திட்டங்களை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாகவும் இதற்கான ஒத்துழைப்புக்களை எதிர்பார்ப்பதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/313853
  14. 17 DEC, 2024 | 07:39 PM யாழ்ப்பாணம் மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக இதுவரை 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 23 பேரும் யாழ் போதனா வைத்தியசாலையில் 6 பேரும் சிகிச்சைபெற்று வருகின்றனர் என யாழ்ப்பாண மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணிநேரத்தில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 9 நோயாளர்களும் யாழ் போதனா வைத்தியசாலையில் 5 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் இந்நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் ஏற்படவில்லை. இதுவரை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இந்நோய் காரணமாக 7 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக பருத்தித்துறை, கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலே எலிக்காய்ச்சலை பரப்புகின்ற பற்றீரியா அந்த பிரதேசங்களில் இருக்கின்ற கால்நடைகளில் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எனவே அதனை உறுதிப்படுத்துமாறு நாங்கள் கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்திடம் அனுமதி கோரியிருந்தோம். அதனடிப்படையில் நாளை கொழும்பில் இருந்து கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் ஒரு விசேட குழுவினர் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்கள். அந்தப் பிரதேசத்தில் இருக்கின்ற கால்நடைகளின் குருதி மாதிரிகளை பெற்று கொழும்புக்கு கொண்டு சென்று ஆய்வு செய்து, கால்நடைகளில் கிருமித் தொற்று இருக்கின்றதா என்பதை உறுதிப்படுத்த இருக்கின்றார்கள். 99 நோயாளர்களில் இதுவரை 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எவரும் இந்த நோயால் பாதிக்கப்படவில்லை. பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆண்கள் மருத்துவ விடுதயில் எங்களுக்கு ஒரு நெருக்கடியான நிலை காணப்பட்டது. அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அதற்காக நாங்கள் தனியான விடுதி ஒன்றையும் நாங்கள் நேற்றையதினம் (16) ஆரம்பித்துள்ளோம். எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. நேற்றுவரை ஏறத்தாழ 6000 பேருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் காய்ச்சல் நோயாளர்களை இனங்காண்பதற்காக சுகாதாரப் பணியாளர்கள் வீடுவீடாகச் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் உள்ள கால்நடைகளில் இக்கிருமித்தொற்று உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்காக கொழும்பிலிருந்து கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்திலிருந்து குழு ஒன்று யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு நாளை வருகை தரவுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/201534
  15. அண்ணை இது எனக்குத் தெரியலயே! கண்டக்ரரிடம் கட்டவேண்டுமீ!
  16. படிச்சானோ என்னவோ தெரியல! ஆனால் வேலையில சீரியஸ் ஆனவன். அண்மையில் தொடர் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் அவன் வளர்க்கும் மாடு கட்டி நின்ற இடங்கள் எல்லாம் வெள்ளம். ஒரு மாடு வழுக்கி நிலத்தில் விழுந்து விட்டது. பெரியம்மா மகனுக்கு போனடிச்சா றிங் போகுது எடுக்கவில்லை. எனக்கு போனடிச்சா மாடு விழுந்து போச்சு என்று, உடன முதியோர் சங்கத்தில இருந்த அப்பாவையும் அழைத்து பக்கத்தில இருக்கும் இளைஞர்கள் நால்வரும் சென்று மாட்டை எழுப்பி பாதுகாப்பான இடத்தில் நிப்பாட்டி புகைபோட்டு வெப்பப்படுத்தி இளஞ்சூட்டுதண்ணீர் குடிக்கவைத்து பசுமாடு காப்பாற்றப்பட்டது. அந்த நேரம் தம்பி காரைநகரில் மழைவெள்ளம் தனது உதவியாளர்களுடன் வெட்டி விட்டுக்கொண்டிருந்திருக்கிறான்.
  17. அண்ணை, வீதியின் அடிப்பகுதியில் நீரினால் ஏற்படும் அரிப்பு, நிலம் கீழிறங்குவதை தடுப்பதற்காக நெருக்கடி நேரத்தில்/யுத்த காலத்தில் இந்தமுறையை பயன்படுத்தியதாக தம்பி சொன்னான். தற்போது பொறியியலாளர்கள்/எந்திரிகள் ஓலை போட அனுமதிப்பதில்லையாம்.
  18. மணல்தறையள் தண்ணீர் நிக்கக்கூடிய இடங்களிற்கு தடிப்பான பொலித்தீன் போட்டு வீதி போடவேணுமாம். அது விலை கூட என்றபடியால் மாற்றுவழியாக ஓலைகள் போடுவார்களாம்! தொழில்நுட்ப உத்தியோகத்தர் தம்பி சொன்னதைக் கேட்டு பகிர்ந்துகொண்டேன்.
  19. நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா(Ramanathan Archchuna), யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே உள்நுழைய அனுமதிக்கப்படுவார் என்று யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது. வைத்திசாலைக்குள் உள்நுழைந்து கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தினார் என தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக யாழ். போதனா வைத்தியசாலையினரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வைத்தியசாலை நிர்வாகத்திடம் முன் அனுமதி இந்தநிலையில், குறித்த வழக்கு நேற்றையதினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்றம் அனுமதித்தது. மேலும், நோயாளர் என்பதை தவிர்த்து வேறு காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா யாழ். போதனா வைத்தியசாலைக்குள் உள்நுழைய வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் முன் அனுமதி பெறவேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில், யாழ். போதனா வைத்தியசாலைக்குள் நோயாளர் என்பதைத் தவிர்த்து வேறு ஏதேனும் காரணங்களுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா உள்நுழைய முற்பட்டால், அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு வைத்தியசாலையின் பணிப்பாளர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. https://tamilwin.com/article/dr-archuna-ramanathan-latest-news-1734414336?itm_source=parsely-api#google_vignette
  20. வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் போராட்டம்! 17 DEC, 2024 | 04:17 PM யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகர வர்த்தகர்களும், பொதுமக்களும் சாவகச்சேரி நகரசபை முன்றலில் இன்று செவ்வாய்க்கிழமை (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். சாவகச்சேரி நகர சபையால் அண்மையில் கட்டப்பட்ட புதிய கடைகளை குத்தகைக்கு வழங்குவதற்காக பகிரங்கமாக கேள்வி கோரப்பட்டுள்ளது. கடைகளை கட்ட ஆரம்பிக்கும்போது 2000 ஆம் ஆண்டு யுத்தத்தில் கடைகள் அழிவடைந்த வர்த்தகர்களுக்கு புதிய கடைத் தொகுதியில் முன்னுரிமை வழங்கப்படும் என கடைகள் வழங்கப்படும் என நகர சபையால் உத்தரவாதமளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த வாக்குறுதியை மீறி கேள்வி கோரப்பட்டுள்ளதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், விண்ணப்பதாரி நகராட்சி மன்ற எல்லைக்குள் வசிக்க வேண்டும் என்ற நிபந்தினையை உள்ளடக்க வேண்டும் எனக்கோரியுமே இந்தப் போராட்டம் இடம்பெற்றது. இதன்போது போராட்டக்காரர்கள் நகரசபையின் பிரதான நுழைவாயிலை பூட்டி போராட்டத்தை முன்னெடுத்தனர். இதனையடுத்து, அங்கு வந்த சாவகச்சேரி பொலிஸார் பூட்டை உடைத்து அகற்றியதோடு போராட்டகாரர்களை கலைக்க முற்பட்டனர். இதனால் நுழைவாயிலில் அமர்ந்தவாறு அவர்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்தனர். இத்தருணத்தில் நகரசபை வாகனங்களுக்கு பொறுப்பான அதிகாரி கழிவகற்றும் உழவியந்திரத்தால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது மோத முயற்சித்ததோடு அதை வீடியோ எடுத்த ஊடகவியலாளரையும் கடுமையாக அச்சுறுத்தினார். இதனால் அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதேவேளை, குறித்த கேள்வி கோரலை இரு வாரங்களுக்கு ஒத்திவைக்குமாறு உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/201512
  21. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்கத் தகுதியற்றவர் என தெரிவித்து புதிய சுதந்திர முன்னணியின் தலைவர் ஓஷல ஹேரத்தினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது இந்தநிலையில், இந்த மனுவை ஜனவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உண்மைகளை உறுதிப்படுத்துமாறு நீதியரசர்கள் இன்று உத்தரவிட்டனர். நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடந்த பொதுத் தேர்தலின் போது அரச வைத்தியராகக் கடமையாற்றிய நிலையில், வேட்பு மனுவை சமர்ப்பித்ததாக மனுதாரர் கோரியுள்ளார். அரச சேவையில் இருந்து விலகாமல் இவ்வாறு வேட்புமனுத் தாக்கல் செய்வது சட்டவிரோதமானது எனவும், தேர்தல்கள் சட்ட விதிகளுக்கு முரணானது எனவும் குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க தகுதியற்றவர் எனப் பிரகடனப்படுத்தி, அந்த ஆசனத்தை செல்லுபடியற்றதாக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/archchuna-disqualified-to-be-mp-1734425548
  22. 16 DEC, 2024 | 05:28 PM (இராஜதுரை ஹஷான்) அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம், மாகாண சபை முறைமை இந்த நாட்டுக்கு அவசியமா, அவசியமற்றதா,? என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும். இந்தியாவின் விருப்பத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சமஷ்டி ஆட்சி முறைமையை வலியுறுத்தி தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதம் தொடர்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் இந்திய அரசமுறை விஜயத்தின் போது கைச்சாத்திடப்படும் ஒப்பந்தங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தியுள்ளோம். இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தால் இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் வகையிலான செயற்திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவோம். அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் மற்றும் மாகாண சபை முறைமை நாட்டுக்க அவசியமா, அவசியமற்றதா என்பதை இலங்கையர்களே தீர்மானிக்க வேண்டும். எதிர்வரும் ஆண்டு இரண்டாம் காலாண்டளவில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் இந்தியாவினால் பலவந்தமான முறையில் அமுல்படுத்தப்பட்டது.ஆகவே இந்தியாவின் விருப்பத்துக்கமைய மாகாண சபைத் தேர்தலை நடத்துவது முறையற்றது. மாகாண சபைத் தேர்தல் குறித்து மக்கள் எவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளார்கள் என்பதை அரசாங்கமும், இந்தியாவும் விளங்கிக் கொள்ள வேண்டும். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டுக்கும், தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாட்டுக்கும் இடையில் பரஸ்பர வேறுபாடுகள் காணப்படுகின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கத்துக்காக நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த பணிகளை நிறைவு செய்வதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். சமஷ்டி முறைமையிலான அரசியலமைப்பு உருவாக்கத்துக்கே நல்லாட்சி அரசாங்கம் பரிந்துரைத்துள்ளது. சமஷ்டியாட்சி முறைமை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் அம்சங்களை இல்லாதொழிக்கும். ஆகவே எக்காரணிகளுக்காகவும் சமஷ்டியாட்சி அரசியலமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்க மாட்டோம் என்றார். https://www.virakesari.lk/article/201418

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.