Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தலைவனாக இன்னும் தன்னால் வெல்ல முடியாத சிலவற்றில் இந்திய அணியுடனான டெஸ்ட் தொடர் உள்ளது என பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் நவம்பர் இறுதியில் தொடங்கி ஜனவரி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடர் குறித்து அவுஸ்திரேலிய அணியின் தலைவர் கம்மின்ஸ், “இன்னும் நான் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியை வெல்லவில்லை. அது குறித்து நான் எண்ணி பார்ப்பது உண்டு. அணியில் உள்ள சிலர் வென்றிருந்தாலும் இன்னும் நான் அதனை செய்யவில்லை. அணியின் கேப்டனாக நான் எனது பயணத்தை தொடங்கிய போது எனக்கு ஆதரவு அதிகம் இருந்தது. இந்த பணிக்கு நான் சரியாக இருப்பேன் என்னை தேர்வு செய்தார்கள். அதை நானே உணரவில்லை. இந்த பாணியில் நான் நானாகவே இயங்கி வருகிறேன். யாரையும் பின்பற்றவில்லை” என்றார். இந்திய அணியுடன் 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள கம்மின்ஸ், 50 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடந்த 2020-21ல் இந்தியா ஆஸ்திரேலியா சென்ற போது 21 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றி இருந்தார். கடந்த 2023-ல் அவர் தலைமையிலான அணி இந்தியாவில் 1-2 என இழந்தது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் 2023-ல் ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்தியாவை வீழ்த்தி அவர் தலைமையிலான அணி சாம்பியன் பட்டம் வென்றிருந்தது. https://thinakkural.lk/article/310766
  2. கடந்த கால தயக்கங்களை கடந்து பொதுவான இலக்குகளை அடைவதற்கு மனோநிலையை மாற்றிக்கொள்ள வேண்டும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா வேண்டுகோள் விடுத்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான பங்காளித்துவத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள அவர் இருநாடுகளினதும் தலைவிதிகள் பின்னிப்பிணைந்தவை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். கொழும்பில் இடம்பெற்ற பட்டயக்கணக்காளர்கள் சங்கத்தின் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இருநாடுகளையும் பிணைக்கும் பகிரப்பட்ட புவியியல், வரலாறு மற்றும் எதிர்காலம் குறித்து இந்திய உயர்ஸ்தானிகர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். நாங்கள் இணைந்து வளரவேண்டும் செழிப்படைய வேண்டும், நாங்கள் வரலாறு புவியியல் மற்றும் எதிர்காலத்தினால் இயற்கையாகவே பிணைக்கப்பட்டிருக்கின்றோம் என உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். நாங்கள் ஈடுசெய்ய முடியாதவர்கள் இன்றியமையாதவர்கள் மற்றும் பிரிக்க முடியாதவர்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிளவுகளை உருவாக்கும் எந்தவொரு முயற்சியும் இருநாடுகளினதும் பகிரப்பட்ட அபிலாசைகள் மற்றும் எதிர்காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196378
  3. காதலியுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக காதலியின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமாக்கப்பட்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது; மானிப்பாய் பகுதியில் உள்ள வீடொன்றினில் நேற்று திங்கட்கிழமை இரவு அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று வீட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பெண்ணின் மோட்டார் சைக்கிளை தீ மூட்டியதுடன், முச்சக்கர வண்டி மற்றும் பட்டா வாகனம் என்பவற்றின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, வீட்டில் வசிக்கும் யுவதிக்கு இளைஞன் ஒருவருக்கும் காதல் தொடர்பு இருந்ததாகவும் தற்போது இருவரும் முரண்பட்டு பிரிந்து உள்ளமையால் காதலனே தாக்குதல் சம்பவத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து சந்தேக நபரான காதலனை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். https://thinakkural.lk/article/310776
  4. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் கடந்த 5 வருடங்களாக இடம்பெற்றுள்ள 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி தொடர்பான விசாரணைகளை மட்டக்களப்பு மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்தனர். குறித்த கூட்டுறவு சங்கத்தின் புதிய நிர்வாகம் 2024 ம் ஆண்டு பெறுப்பேற்றதையடுத்து நிதி தொடர்பாக ஆராய்ந்த போது நிதி மோசடி இடம்பெற்றுள்ளமை கண்டறியப்பட்டதையடுத்து அப்போது சங்கத்தின் பொருளாராக இருந்தவருக்கு எதிராக மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணை பிரிவு பொலிஸாருக்கு புதிய நிர்வாகம் முறைப்பாடு செய்ததையடுத்து இந்த மோசடி தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது இந்த சிக்கன நலன்புரி சங்கத்தில் வைத்தியசாலையில் கடமையாற்றும் சுமார் ஆயிரம் பேருக்கு மேலாக உறுப்பினர்களாக இருப்பதுடன் மாதாந்தம் சம்பளத்தில் ஆயிரம் ரூபாவை சந்தா பணமாக செலுத்திவருகின்றனர். இந்த நிலையில் வைத்தியசாலையில் கடமையாற்றிவரும் ஆண் பரிசாதகர் (அற்றன்டன்) கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக பெறுப்பேற்று 2019 தொடக்கம் 2023 வரையான காலப்பகுதிவரை கடமையாற்றி வந்துள்ளதுடன் சங்க நிர்வாகத்தில் கடமையாற்ற வைத்தியசாலையை விட்டு வெளியாள் ஒரு பெண் ஒருவரை நியமித்து மாதாந்த சம்பளத்துக்கு கடமைக்கு அமர்தப்பட்டுள்ளார். இதன்போது பொருளாளர் சங்கத்தின் உறுப்பினர் பலரின் பெயரில் அவர்களுக்கு தெரியாமல் கடன் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கடன் பெற்று பணத்தை மோசடி செய்து வந்துள்ளார். இவ்வாறு பொருளாளர் அவரது உதவிக்கு நியமித்த பெண் ஆகியோர் கடந்த 5 வருடத்தில் 58 இலட்சத்து 5 ஆயிரத்து 853 ரூபா நிதி மோசடி செய்துள்ளனர் என மாவட்ட விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட பல விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மோசடியில் ஈடுபட்ட சங்கத்தின் முன்னாள் பொருளாளர் மோசடி செய்த பணத்தில் 39 இலச்சம் ரூபா பணத்தை திரும்ப ஒப்படைத்துள்ளதுடன் அவருடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்ட அங்கு கடமையாற்றிவந்த பெண் 19 இலச்சம் ரூபாவை இதுவரை ஒப்படைக்கவில்லை. இருந்தபோதும் இந்த பாரிய நிதி மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளை விசேட நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் மேற்கொண்டு வருவதுடன் இந்த மோசடியில் ஈடுபட்டவர்களை கைது செய்து இவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். இதேவேளை வைத்தியசாலையில் இயங்கிவரும் இன்னொரு கூட்டுறவு சங்கத்தில் கோடிக்கணக்கான பண மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் கூட்டுறவு நலன்புரி சங்கத்தில் பொருளாளராக இருந்து மோசடி செய்தவர் அந்த சங்கத்தில் இருந்துள்ளதாகவும் சங்க யாப்பின்படி கடந்த யூலை மாதம் சங்க பொதுக் கூட்டம் கூட்டப்படவேண்டியது இன்னமும் கூட்டாமல் இருக்கின்றதாக சங்க உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளதை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/196365
  5. தமிழ் நாட்டின் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவையானது காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக 2 நாள்களுக்கு இரத்து செய்யப்பட்டுள்ளது. நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மற்றும் எதிர்வரும் வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்களுக்கு இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, கடல் சீற்றமாக இருக்கும் மற்றும் சூறைக் காற்று வீசும் என்பதாலும், கப்பலை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாலும் நாகப்பட்டினத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310782
  6. ஓம் அண்ணை, ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் வந்த அமைச்சரவைத் தீர்மானம் இது. ஆட்சி மாற்றத்தோட செப்ரம்பர் தருவதாகக் கூறிய 3000 ரூபா வராது போல!
  7. இலங்கையுடன் இணைந்து மோசடி எதிர்ப்பு சட்டங்களை அமுலாக்குவதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ஆழ்ந்த கரிசனைகளைக் கொண்டுள்ளதாக சீனத் தூதரகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சீனத் தூதரகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சீனப் பிரஜைகள் உட்பட பல வெளிநாட்டு சந்தேக நபர்களை இலங்கை பொலிஸார் கைது செய்ததாக அண்மையில் வெளியான செய்திகளை சீனா உன்னிப்பாக அவதானித்து வருகிறது. இச்சம்பவங்கள் இரு நாட்டு மக்களின் சொத்துக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மட்டுமல்லாமல், சீனாவின் அபிமானத்தையும் கடுமையாக சேதப்படுத்துகிறது. அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய நட்பையும் பாதிப்பதாகவுள்ளது. சந்தேக நபர்களின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கும் அதேவேளையில் சட்டத்திற்கு உட்பட்டு சந்தேக நபர்கள் மீதான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இலங்கை சட்ட அமுலாக்க முகவர் நிறுவனங்களுக்கு சீனத் தூதரகம் முழு ஆதரவையும் வழங்குகிறது. தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிகள் 1990 களில் சீனாவில் ஆரம்பமாகியிருந்தன. அதன் பின்னர் பெருமளவில் பரவலடைந்து நாட்டின் ஏராளமான குடிமக்களை பாதித்தது. சீன அரசாங்கம் மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறையைக் கடைப்பிடிக்கிறது, தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிக் குற்றங்களைத் தடுக்கும் பாதையைத் தொடர்ந்து ஆராய்ந்து, முன்னோடியான பல முயற்சிகளை முன்னெடுத்துச் செல்கின்றது இந்த நடவடிக்கைகள் மூலமாக 2021ஆம் ஆண்டில் சீனாவில் தீர்க்கப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஐந்து மடங்கு அதிகமாகவுள்ளது. சீனாவில் இதுபோன்ற நிகழ்வுகள் ஜூன் 2021 முதல் கடந்த 17 மாதங்களில் வெகுவாகக் குறைந்துள்ளது. உலகில், தொலைத்தொடர்பு மற்றும் இணையவழி மோசடிக் குற்றங்கள் பல்வேறு நாடுகளில் வேகமாக வளர்ந்து பரவி, உலகளாவிய பொதுவான ஆபத்தாகவும், தீர்க்க வேண்டிய உலகளாவிய பிரச்சினையாகவும் மாறியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இத்தகைய மோசடிகளை எதிர்த்துப் போராட மியான்மர், கம்போடியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளுடன் சீனா பலனளிக்கும் ஒத்துழைப்பை மேற்கொண்டுள்ளது. அதனடிப்படையில் மிகப்பெரிய குற்றக் கும்பல்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் சில குற்றவியல் குழுக்கள் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பிறநாடுகளுக்குச் சென்றுள்ளமைக்கான தகவல்கள் உள்ளன. தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு, புவியியல் அமைவிடம், சீனாவுடனான நட்புறவு போன்றவற்றில் இலங்கைக்கு உள்ள நன்மைகள் காணப்படுகின்றன. இதனை மையப்படுத்தியும் இலங்கை மக்களிடத்தில் இணையத்தள மோசடி தொடர்பில் போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தினாலும் சில இலத்திரனியல் மோசடி குற்றக் கும்பல்கள் இலங்கைக்குள் உட்புகுந்து மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இலங்கையில் அதிகரித்துள்ள இந்தப்போக்குக்கு சீன அரசாங்கம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது, மேலும் இலங்கையில் இணையவழி மோசடி எதிர்ப்பு சட்ட அமுலாக்க ஒத்துழைப்பை சீனா ஆழமான கரிசனையுடன் ஊக்குவிக்கிறது. தொலைத்தொடர்பு மோசடிகளை திறம்பட முறியடிப்பதற்கும் வலுவான தடுப்பை உருவாக்குவதற்கும், சீனாவின் பொதுப்பாதுகாப்பு அமைச்சு இலங்கை பொலிஸாருடன் இணைந்து விசேட நடவடிக்கையை மேற்கொள்வதற்காக கடந்த செப்டெம்பர் மாதம் ஒரு செயற்குழுவை அனுப்பியிருந்தது. அதனையடுத்து ஏராளமான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். சீனாவின் இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்கான ஒத்துழைப்பு இப்போது தான் ஆரம்பித்துள்ள நிலையில் அது முழுமை பெறுவதற்கான செயற்பாடுகள் இன்னமும் வெகு தொலைவில் உள்ளன. உலகமயமாக்கல் காலத்தில், எந்த நாடும் தனிமைப்படுத்தப்பட்டிருக்க முடியாது. சீனாவும் இலங்கையும் பாரம்பரிய நட்புறவைக் கொண்டிருக்கின்றன. பல்வேறு துறைகளில் மிக நெருக்கமான ஒத்துழைப்புக்களைக் கொண்டுள்ளன. இரு நாட்டு மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வருவதற்காக இரு நாடுகளும் எப்போதும் பரஸ்பரம் ஆதரவளித்து வருகின்றன. இலங்கையுடனான சட்ட அமலாக்க ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும், இந்தப் பிரச்சினையைக் கூட்டாகக் கையாள்வதற்கும் விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்கவும் சீனா தயாராக உள்ளது. இலங்கை அரசாங்கம், பொலிஸார் மற்றும் மக்களிடத்தில் சீனா புரிந்துணர்வையும் ஆதரவையும் பெறுவதற்கு எதிர்பார்க்கின்றது. - என்றுள்ளது. https://www.virakesari.lk/article/196384
  8. வலுசக்தி அமைச்சில் இன்று (15) முற்பகல் நடைபெற்ற முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கலந்துகொண்டார். ஏனைய நாடுகளில் வலுசக்தித் துறைக்கு உயர்ந்த நிலை வழங்கப்பட்டுள்ளதைப் போன்று இலங்கையிலும் வலுசக்தித் துறைக்கு முன்னணி இடம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, வலுசக்தி அமைச்சு என்பது நிதி வருமானங்களைப் பெறும் அமைச்சு எனவும், அதிக வருமானம் கிடைக்கும் போது முறைகேடுகள் இடம்பெறலாம் என்ற கருத்து சமூகத்தில் நிலவுவதாகவும் குறிப்பிட்டார். இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தமது விருப்பத்தை எதிர்பார்ப்புடன் பயன்படுத்தி யுள்ளதாகவும், அந்த ஆணைக்கு தான் பொறுப்புக் கூறக் கடமைப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். பழைய அரசியல் கலாசாரத்தின் மீதான எதிர்ப்பு, பிரஜைகள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினைகள் மற்றும் அரச சேவையின் செயற்பாடுகள் தொடர்பான பிரஜையின் அதிருப்தி காரணமாக புதிய அரசியல் சம்பிரதாயத்தினை மக்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார். நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சிக்கு மோசடி, ஊழல் மற்றும் வீண்விரயம் என்பனவே காரணமாக அமைந்ததென மக்கள் நம்புவதாகவும், அதனை தடுப்பதற்காகவே இம்முறை மக்கள்ஆணை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த ஜனாதிபதி, அரச பொறிமுறை முழுவதும் பரவியுள்ள மோசடி மற்றும் ஊழலைத் தடுப்பதற்காக மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் தான் பாதுகாப்பதாகவும் தெரிவித்தார். அரச ஊழியர்களும் தங்களின் பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற தங்களை அர்ப்பணிக்க வேண்டுமெனவும் ஜனாதிபதி கேட்டுக் கொண்டார். பொதுச் சொத்துக்கள், சமூகத்தின் சொத்தாக பாதுகாக்கப்பட வேண்டும் எனவும், அந்தச் சொத்துக்களை மோசடி அல்லது ஊழலுக்கு உட்படுத்த எவருக்கும் உரிமை இல்லை எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பிரஜைகளை திருப்திப்படுத்தும் வகையில் வினைத்திறன்மிக்க மற்றும் செயற்திறன்மிக்க அரச சேவையை உருவாக்குவதற்கு தற்போதைய அரச உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பு அவசியமானது எனவும், அதற்காக எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். இந்த முறை மக்கள் ஆணையின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச உத்தியோகத்தர் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டுமென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்குரிய அரசியல் தலைமைத்துவத்தை வழங்க தமது தரப்பு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள் மேற்கொள்ளும் மக்கள்நல அனைத்து செயற்பாடுகளுக்கும் தாம் முன் நிற்பதாகவும், செய்யக்கூடாத ஒன்றைச் செய்தால் அது தொடர்பான நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேலும் தெரிவித்தார். வலுசக்தித் துறையில் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் மற்றும் அடுத்த சில ஆண்டுகளில் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் பற்றியும் இதன்போது விரிவான மற்றும் நீண்ட மீளாய்வு நடத்தப்பட்டது. அடுத்த மூன்று ஆண்டுகளில் வலுசக்தித் துறையின் இலக்குகளை எவ்வாறு அடைவது என்பது குறித்தும், மக்களுக்கு வழங்கக்கூடிய குறுகிய மற்றும் நீண்ட கால நிவாரணங்கள் குறித்தும் இங்கு மேலும் கலந்துரையாடப்பட்டது. வலுசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதயங்க ஹேமபால,மின்சார சபைத் தலைவர் கலாநிதி திலக் சியம்பலாபிடிய, மின்சார சபை பொது முகாமையாளர் பொறிறியலாளர் கே.ஜீ.ஆர்.எப்.கொமெஸ்டர், பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் ஜனக்க ராஜகருணா உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/196354
  9. இந்தியா - கனடா உறவை மிக மோசமாக்கிய ஜஸ்டின் ட்ரூடோவின் குற்றச்சாட்டுகள் - எதை நோக்கிச் செல்கிறது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கனடா தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 15 அக்டோபர் 2024, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவம் தொடர்பாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையேயான உறவு மோசமாகி வருகிறது. கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப அழைத்துக்கொள்வதாக இந்தியா திங்களன்று கூறியது. கூடவே ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை இந்தியா நாட்டிலிருந்து வெளியேற்றியது. ஆனால் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில், தனது அரசு ஆறு இந்திய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றியதாகக் கூறினார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கு விசாரணையில் இந்திய அரசு போதுமான ஒத்துழைப்பை அளிக்காததே இதற்கு காரணம் என பிரதமர் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார். விசாரணையில் இணையுமாறும், திசை திருப்பும் அறிக்கைகளை நிறுத்துமாறும் ட்ரூடோ கடுமையான தொனியில் இந்தியாவை கேட்டுக் கொண்டார். ட்ரூடோ முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் என்ன? வன்முறை தொடர்பான நடவடிக்கைகளில் இந்திய அரசு ஏஜெண்டுள் ஈடுபட்டதாக கூறப்படும் குற்றவியல் விசாரணையில் ஒத்துழைக்க இந்தியா மறுத்துவிட்டதாக கனேடியப் பிரதமர் கூறுகிறார். "கனேடிய மண்ணில் கனேடியர்களுக்கு எதிரான குற்றச் செயல்களை ஆதரிக்கும் செயலில் ஈடுபடலாம் என்று எண்ணி இந்திய அரசு ஒரு அடிப்படைத் தவறைச் செய்தது," என்று அவர் கூறினார். கனேடிய காவல்துறையான ராயல் கனேடியன் மவுண்டட் போலீஸ் அமைப்பின் (RCMP) தலைவர் அறிக்கை வெளியிட்டதை தொடர்ந்து ஜஸ்டின் ட்ரூடோ இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். கனடாவில் கொலைகள் உட்பட ‘பெரிய அளவிலான வன்முறைகளில்’ இந்திய அரசு பங்கு வகித்துள்ளது மற்றும் பொது பாதுகாப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று RCMP தலைவர் மைக் டுஹெம் திங்களன்று, குற்றம் சாட்டினார். கனேடிய சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலையில் இந்திய ஏஜெண்டுகளுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கடந்த ஆண்டு குற்றம் சாட்டியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்தது. இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கனேடிய வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலி கனடா இதுவரை என்ன சொன்னது? கனேடிய மண்ணில் நடக்கும் வன்முறையைக் கண்டித்த ட்ரூடோ, அது கொலை, மிரட்டி பணம் பறித்தல் அல்லது வேறு எந்த வன்முறைச் செயலாக இருந்தாலும் அது ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறினார். "எந்தவொரு நாடும், குறிப்பாக சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டும் ஜனநாயகம் அதன் இறையாண்மையின் மீதான இந்த அடிப்படை மீறலை ஏற்க முடியாது," என்று அவர் கூறினார். "இந்திய தூதரக அதிகாரிகள் கனேடிய குடிமக்கள் பற்றிய தகவல்களை சேகரிக்கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு RCMP இன்று முடிவு செய்தது" என்று ஜஸ்டின் ட்ரூடோ செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். "இந்த தகவல் குற்றவியல் அமைப்புகளுக்கு கொடுக்கப்பட்டது. இது 'மிரட்டி பணம் பறித்தல் முதல் கொலை வரையிலான வன்முறை நடவடிக்கைகளுக்கு' வழிவகுத்தது,” என்றார் அவர். ஆயினும் எந்தவொரு தூதரக அதிகாரி அல்லது தூதரக பணியாளர்களின் பங்கு பற்றி ட்ரூடோ எந்த தகவலையும் வழங்கவில்லை. மேலும் இந்த விஷயங்கள் நீதிமன்றத்தின் முன் நிலுவையில் இருப்பதாகவும் அவர் கூறினார். சட்ட விசாரணை முடிவடைந்ததும் மேலும் பல தகவல்கள் தெரியவரும் என்று அவர் உறுதிபடக் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ட்ரூடோ, இந்திய அரசிடம் மீண்டும் முறையிட்டுள்ளார் செய்தியாளர் சந்திப்புடன் கூடவே கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அலுவலகத்தில் இருந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். "RCMP மற்றும் தேசிய பாதுகாப்பு அதிகாரிகள் இந்திய அரசு மற்றும் இந்திய சட்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்ற பல முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவர்கள் தொடர்ந்து அதற்கு மறுப்பு தெரிவித்தனர்,” என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். ”அதனால்தான் இந்த வாரம் கனேடிய அதிகாரிகள் முன்னெப்போதும் நடந்திராத நடவடிக்கையை எடுத்தனர்" என்றும் அவர் தெரிவித்தார். “ஆறு இந்திய அரசு ஏஜெண்டுகள் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான RCMP யின் ஆதாரங்களை பகிர்ந்து கொள்வதற்காக இந்திய அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்த முயற்சி செய்யப்பட்டது. பலமுறை கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை. ஒத்துழைப்பதில்லை என்று இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்திய அரசு ஒத்துழைக்க மறுத்து வருவதால் எனது வெளியுறவு அமைச்சர் மெலனி ஜோலிக்கு ஒரே ஒரு வழிதான் இருந்தது.” என்றார் அவர். “இன்று (திங்கட்கிழமை) இந்த ஆறு பேரையும் நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அவர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டும். அவர்கள் இனி கனடாவில் தூதாண்மை அதிகாரிகளாக பணியாற்ற முடியாது அல்லது எக்காரணம் கொண்டும் மீண்டும் கனடாவிற்குள் நுழைய முடியாது. RCMP வழங்கிய ஆதாரங்களை புறக்கணிக்க முடியாது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்," என்று ட்ரூடோ கூறியுள்ளார். விசாரணையில் ஒத்துழைக்குமாறு கனேடிய பிரதமர் இந்திய அரசிடம் மீண்டும் வேண்டுகோள் விடுத்தார். ட்ரூடோ தனது அறிக்கையில் இந்திய அரசு விசாரணையில் சேர வேண்டும், தனது பயனற்ற மற்றும் திசை திருப்பும் அறிக்கைகளுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று கடுமையான தொனியில் கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, 2023 செப்டம்பரில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள ட்ரூடோ இந்தியா வந்தார் இந்தியா இதுவரை என்ன சொன்னது? தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் கனடாவில் இருக்கும் மற்ற அதிகாரிகளை திரும்ப அழைக்க முடிவு செய்துள்ளதாக இந்தியா திங்களன்று அறிவித்தது. இதனுடன், ஆறு கனேடிய தூதரக அதிகாரிகளை வெளியேற்றவும் இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த கனேடிய தூதரக அதிகாரிகள் பின்வருமாறு- ஸ்டீவர்ட் ரோஸ் வீலர் (தற்காலிக தூதர்), பேட்ரிக் ஹெபர்ட் (துணை தூதர்), மேரி கேத்தரின் ஜாலி (முதன்மை செயலர்), இயன் ராஸ் டேவிட் ட்ரைட்ஸ் (முதன்மை செயலர்), ஆடம் ஜேம்ஸ் சூப்கா (முதன்மை செயலர்), பெளலா ஓர்ஜூலா ( முதன்மை செயலர்). அக்டோபர் 19 அன்று இரவு 11:59 மணிக்கு முன் இந்தியாவை விட்டு வெளியேறுமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளது. கனடாவின் நிலைப்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா, டெல்லியில் உள்ள கனேடிய தூதரகத்தின் மூத்த தூதரக அதிகாரியை அழைத்துப் பேசியது. கனடாவில் உள்ள இந்திய ஹைகமிஷன் மற்றும் இதர தூதரக அதிகாரிகளை ஆதாரமற்ற முறையில் குறிவைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. "ட்ரூடோ அரசின் அணுகுமுறையால் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பு ஆபத்தில் உள்ளது. தற்போதைய அரசு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இதனைக் கருத்தில் கொண்டு கனடாவில் உள்ள தூதர் உட்பட இதர தூதரக அதிகாரிகளை திரும்ப அழைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை ட்ரூடோ அரசு ஆதரிக்கும் விதத்திற்கு எதிராக பதிலளிக்க இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று கனடாவிடம் தெரிவித்துள்ளோம்,” என்று திங்கள்கிழமை மாலை இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்திய தூதரின் பெயர் குறிப்பிடப்பட்டதற்கு இந்தியாவின் வெளியுறவு அமைச்சகம் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பல சவால்களை எதிர்கொள்வதால் இந்த விவகாரம் தற்போது அரசியலுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று இந்தியா கூறியது. “கனடாவிலிருந்து எங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தூதரக தகவல் கிடைத்தது. கனடாவில் நடைபெற்று வரும் விசாரணையில் இந்திய தூதர் மற்றும் இதர தூதரக அதிகாரிகளின் தொடர்பு அம்பலமாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அபத்தமான குற்றச்சாட்டுகளை இந்திய அரசு கடுமையாக மறுக்கிறது. கனடாவின் ட்ரூடோ அரசு வாக்கு வங்கியை உருவாக்குவதற்காக இதைச் செய்கிறது,” என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,X/VIRSA SINGH VALTOHA படக்குறிப்பு, சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜர் உறவுகள் எவ்வாறு மோசமடைந்தன? ஹர்தீப் சிங் நிஜ்ஜார் 2023 ஜூன் 18 ஆம் தேதி குருத்வாராவின் வாகன நிறுத்துமிடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நிஜ்ஜார் கனடாவின் வான்கூவரில் உள்ள குருநானக் சீக்கிய குருத்வாராவின் தலைவராகவும் இருந்தார். ஹர்தீப் சிங் நிஜ்ஜார் ஜலந்தரின் பார் சிங் புரா கிராமத்தை சேர்ந்தவர். காலிஸ்தான் புலிப் படையின் தலைவராக நிஜ்ஜார் இருந்தார் மற்றும் காலிஸ்தான் புலிப் படையின் உறுப்பினர்களுக்கு செயல்பாடுகள், நெட்வொர்க்கிங், பயிற்சி மற்றும் நிதி உதவி வழங்குவதில் தீவிரமாக ஈடுபட்டார் என்று இந்திய அரசு தெரிவிக்கிறது. நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டு வருவதாக செப்டம்பர் 18 ஆம் தேதி கனேடிய நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார். 2023 அக்டோபரில் இந்தியா 40 கனேடிய தூதரக பணியாளர்களின் சிறப்புரிமையை (Diplomatic immunity) ரத்து செய்தது. இதன் காரணமாக கனேடிய தூதரகத்தின் மூன்றில் இரண்டு பங்கு ஊழியர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி நாடு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டது. சீக்கிய பிரிவினைவாதிகளிடம் கனடா காட்டும் நெகிழ்வுத்தன்மை இந்தியாவுக்கு மட்டுமல்ல, கனடாவுக்கும் நல்லது அல்ல என்று இந்தியா கூறியிருந்தது. 2024 மே மாத முதல் வாரத்தில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, நிஜ்ஜார் கொலையைப் பற்றியும் அதனுடன் இந்தியாவுக்கு இருக்கும் தொடர்பு பற்றியும் மீண்டும் ஒருமுறை குறிப்பிட்டார். இந்தியா இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தது. இந்தியா - கனடா உறவு எதை நோக்கிச் செல்கிறது? ஆறு கனேடிய தூதரக பணியாளர்களை வெளியேற்றிய பின்னர் மேலதிக நடவடிக்கைகள் தொடரும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை தெரிவித்தது. இவை என்ன மாதிரியான நடவடிக்கைகள் என்பதை அமைச்சகம் தெளிவுபடுத்தவில்லை. 2025 அக்டோபரில் கனடாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தோல்வியடைவார் என்றும் பின்னர் புதிய தொடக்கத்திற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் இந்திய அதிகாரிகள் கருதுகின்றனர் என்று வெளிவிவகார நிபுணர் ஆனந்த் சஹாய் குறிப்பிட்டார். தற்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மிகவும் மோசமான கட்டத்தில் இருப்பதாக எழுத்தாளரும் வெளி விவகார ஆய்வாளருமான பிரம்ம செல்லானி கருதுகிறார். ”கனடா தன் கடந்த காலத்திலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்று தோன்றுகிறது,” என்று செல்லானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 1985-ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பை அவர் கோடிட்டுக் காட்டுகிறார். இந்த சம்பவத்தில் 331 பேர் உயிரிழந்தனர். கனடாவின் சமீபத்திய குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேலும் மோசமடையக் கூடும் என்று கனடாவில் உள்ள கார்ல்ட்டன் பல்கலைக் கழகத்தில் கற்பிக்கும் ஸ்டெபானி கார்வின், அல்-ஜசீரா தொலைகாட்சி சேனலிடம் கூறினார். இதன் காரணமாக கனடாவும் கடினமான சூழ்நிலையில் சிக்கக்கூடும் என்று அவர் கருதுகிறார். திங்களன்று கனேடிய அரசு வெளியிட்ட அறிவிப்புகளை கனடா உலக சீக்கிய அமைப்பு வரவேற்றது. கனடாவில் இந்தியாவின் தலையீடு இன்றுதான் உலகுக்கு தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த அனுபவம் கடந்த நான்கு தசாப்த காலமாக தங்களுக்கு உள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx2mr3zgk1lo
  10. சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபவணி இன்று செவ்வாய்க்கிழமை (15) இடம்பெற்றது. "விழியிலார்க்கு வழிகாட்டுவோம் வெள்ளைப் பிரம்புக்கு மதிப்பளிப்போம்" எனும் தொனிப்பொருளில் இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த நடைபவணி இடம்பெற்றது. யாழ்.வெலிங்டன் சந்தியில் இருந்து ஆரம்பமான நடைபவணி மத்திய பேருந்து நிலையம் வரை முன்னெடுக்கப்பட்டது. பேரணியில், இலங்கை பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையத்தின் உறுப்பினர்கள், லயன்ஸ் கழக உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/196346
  11. சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை, ரக்பி வீரர் வாசிம்தாஜூதீன் மரணம், பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏற்கனவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள ஏழு சம்பவங்களிற்கு அப்பால் கடந்த காலத்தின் அனைத்து குற்றங்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்துள்ள அமைச்சரவை பேச்சாளர் குற்றவாளிகள் என கண்டுபிடிக்கப்படுபவர்களிற்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்தகால குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதை அரசாங்கம் ஒருபோதும் தவிர்க்காது. அவசியமான தகவல்கள் பெறப்பட்ட அல்லது விசாரணைகள் பூர்த்தியான அல்லது சிறியளவு விசாரணைகளை முன்னெடுக்க வேண்டியுள்ள ஏழு முக்கிய சம்பவங்கள் குறித்தே அரசாங்கம் தற்போது விசாரணைகளை துரிதப்படுத்தியுள்ளது. ஆனால் இதன் அர்த்தம் ஏழு சம்பவங்கள் குறித்து மாத்திரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதல்ல, கடந்த காலத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட அனைத்து சம்பவங்கள் குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும். பொருளாதார குற்றங்கள், படுகொலைகள் பத்திரிகையாளர்கள் காணாமல்போனமை குறித்தும் விசாரணைகளை மேற்கொள்ளுவோம். ரக்பி வீரர் வாசிம் தாஜூதீனின் மரணம், லசந்த விக்கிரமதுங்க படுகொலை, பிரதீப் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டமை குறித்தும் விசாரணைகளை முன்னெடுப்போம். ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்த விசாரணைகள் பூர்த்தியாகிவிட்டன, நீதிமன்ற வழக்கொன்று இடம்பெறுகின்றது, தற்போதைக்கு புதிய விசாரணையை ஆரம்பிக்கவேண்டிய அவசியமில்லை தேவைப்பட்டால் புதிய விசாரணைகளை முன்னெடுப்போம். https://www.virakesari.lk/article/196341
  12. 2024 ஆம் கல்வியாண்டின் மூன்றாம் பாடசாலை தவணை எதிர்வரும் 17.01.2025 இல் முடிவடையவிருந்த நிலையில், மேலும் ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதனால் மூன்றாம் தவணை மற்றும் 2024 கல்வியாண்டு 24.01.2025 அன்று முடிவடையும். மூன்றாம் தவணைக்கான தேர்வு மற்றும் தேர்ச்சி அறிக்கைகளை மாணவர்களுக்கு வழங்குதல் தொடர்பில் அதிபர்கள் விடுத்த கோரிக்கைகளை கருத்திற் கொண்டு மூன்றாம் தவணை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாம் தவணை முடிவடையும் 24 ஆம் திகதிக்குள் மூன்றாம் தவணைப் பரீட்சையை நடத்தி தேர்ச்சி அறிக்கைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என கல்வி அமைச்சு கடிதத்தில் வலியுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/310769
  13. ஈஸ்டர் தின தாக்குதல் அறிக்கைகளை மூன்று நாட்களுக்குள் ஒப்படைக்கவேண்டும்; கம்மன்பிலவுக்கு அரசு காலக்கெடு ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் தொடர்பான அறிக்கைகள் இரண்டையும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில எதிர்வரும் மூன்று நாட்களில் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே இவ்வாறு குறிப்பிட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இன்னமும் வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் ஒரு வாரகாலத்திற்குள் அரசாங்கம் வெளியிடவேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவற்றை இணையவழியில் தான் வெளியிடப்போவதாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில அறிவித்திருந்தமைக்கு பதிலளிக்கும் போதே அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் இவ்வாறு தெரிவித்தார். இந்த அறிக்கைகள் எவையும் காணாமல்போகவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310761
  14. பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலிசங் சர்வதேச நாணயநிதியத்தின் சீர்திருத்தங்களின் பாதையில் செல்லவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார். கொழும்பில் அமெரிக்க இலங்கை வர்த்தக பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. எதிர்காலத்தை கட்டியெழுப்புவது இலகுவான விடயமல்ல. சர்வதேச நாணயநிதியத்தின் ஈஎவ்எவ் திட்டம் பொருளாதார ஆட்சிமுறை சீர்திருத்தங்களையும் ஊழலிற்கு எதிரான போராட்ங்களையும் கோருகின்றது. பொருளாதார சீர்திருத்தங்கள் கடினமானவை ஆனால் இலங்கை சரியான பாதையில் பயணிக்கின்றது. எனக்கு புதிய ஜனாதிபதி புதிய பிரதமரை சந்தித்து இந்த விடயங்கள் குறித்து உரையாடுவதற்கான சந்தர்ப்பம் சமீபத்தில் கிடைத்தது. சிலநாட்களிற்கு முன்னர் யுஎஸ்எயிட்டின் நிர்வாகி சமந்தா பவர் பொருளாதார சீர்திருத்தங்களின் அவசியம் குறித்தும்இலங்கையின் பொருளாதாரத்தின் முக்கியமான பகுதியான சிறிய நடுத்தர தொழில்துறையினருக்கு நாம் எவ்வாறு உதவலாம் என்பது குறித்தும் உங்கள் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடினார். கடந்த மாதம் வாக்குபெட்டிகள் மூலம் இலங்கை மக்கள் மாற்றத்திற்கான அழைப்பை விடுத்ததை நாம் பார்த்தோம்.அவர்கள் நாட்டின் எதிர்காலத்திற்கான தங்களுடைய எதிர்பார்ப்பை நோக்கை வெளியிட்டனர்.இதனை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு நாட்டின் தலைவர்களிடம் உள்ளது. அரசாங்கத்தில் உள்ளவர்களிற்கு மாத்திரமல்லாமல் வர்த்தகம்கல்வி ஊடகம் சிவில்சமூகத்தை சேர்ந்தவர்களிற்கும் இதற்கான பொறுப்புள்ளது. அமெரிக்கா இலங்கை ஆகியவற்றின் வர்த்தகங்களிற்கு இடையிலான உறவு பலவருட பரஸ்பர நம்பிக்கைஇமற்றும் பகிரப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த உறவுகள் தொடர்ந்து செழிப்பதற்கு இலங்கை அரசாங்கம் எதிர்வுகூறக்கூடிய நிலையான நிர்வாக முறையை உருவாக்குவது அவசியம். கொள்கைகள் தெளிவானதாகவும் விதிமுறைகள் சீரானதாகவும் சூழலில் சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படும் சூழலில்இ வணிகங்கள் செழித்து வளர்கின்றன. ஒரு நிலையான நிர்வாக அமைப்பு அதிக முதலீட்டை ஈர்க்கும் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும்இபொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும். அமெரிக்க இலங்கை வணிக உறவுகளின் எதிர்காலம் குறித்து நான் நம்பிக்கை கொண்டுள்ளேன்.சர்வதேச நாணயத்தின் சீர்திருத்தங்களின் பாதையில் செல்வதன் மூலம்இஊழலிற்கு எதிராக போராடுவதன் மூலம்இஅனைவரினதும் குரல்களும் செவிமடுக்கப்படும்அனைவரும் உள்ளடக்கப்படும் எதிர்வுகூறக்கூடிய நிர்வாக அமைப்பை கட்டியெழுப்புவதன் மூலம்எங்கள் பொருளாதார கூட்டாண்மையின் முழுமையான திறனை வளர்க்க முடியும். https://www.virakesari.lk/article/196337
  15. அடுத்த மாதம் முதல் ஓய்வூதியத்துடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் … https://thinakkural.lk/article/310756
  16. யாழ்ப்பாணம், திருநெல்வேலி பால் தொழிற்சாலை கடந்த ஆகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி அன்று பரிசோதிக்கப்பட்டது. இதன்போது குறித்த தொழிற்சாலை சுகாதார சீர்கேட்டுடன் இயங்குவது அவதானிக்கப்பட்டது. தொடர்ந்து பொது சுகாதார பரிசோதகரால் இனங்காணப்பட்ட சுமார் 30ற்கும் மேற்பட்ட குறைபாடுகள் நிவர்த்தி செய்வதற்கு எழுத்து மூலமான அறிவித்தல் வழங்கப்பட்டது. இவ் அறிவித்தல் பால் தொழிற்சாலை தலைவர், முகாமையாளர் மற்றும் பணிப்பாளர் சபையினருக்கு உரிய தெளிவுபடுத்தல்களுடன் வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 12 ஆம் திகதி பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான குழுவினரால் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படாமை அவதானிக்கப்பட்டதை அடுத்து நேற்று 14 ஆம் திகதி யாழ். மேலதிக நீதவான் நீதிமன்றில் பால் தொழிற்சாலை முகாமையாளரிற்கு எதிராக பொது சுகாதார பரிசோதகரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கினை நேற்றையதினமே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதவான் பொது சுகாதார பரிசோதகரால் மன்றில் மேற்கொள்ளப்பட்ட சமர்ப்பணத்தினை கருத்தில்கொண்டு குறித்த தொழிற்சாலையினை சீல் வைத்து மூடுமாறு பணிப்புரை விடுத்தார். அத்துடன், 70,000/= தண்டப்பணமும் விதித்ததுடன், திருத்த வேலைகள் முடிந்தவுடன் பொது சுகாதார பரிசோதகரினை மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பணித்தார். இதனையடுத்து பொது சுகாதார பரிசோதகரால் பால் தொழிற்சாலை சீல் வைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/196325
  17. பாகிஸ்தானை வீழ்த்தி மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிக்குள் 2ஆவது அணியாக நுழைந்தது நியூஸிலாந்து (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (14) இரவு நடைபெற்ற ஏ குழுவுக்கான கடைசி லீக் போட்டியில் பாகிஸ்தானை 54 ஓட்டங்களால் வெற்றிகொண்ட நியூஸிலாந்து 2ஆவது அணியாக மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இக் குழுவிலிருந்து அவுஸ்திரேலியா ஏற்கனவே அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்துகொண்டிருந்தது. இதேவேளை, அரை இறுதி வாய்ப்பை இழந்த இந்தியா முதல் சுற்றுடன் நாடு திரும்புகிறது. பாகிஸ்தானுடனான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது. பாகிஸ்தானின் மோசமான களத்தடுப்பு காரணமாகவே நியூஸிலாந்து 100 ஓட்டங்களுக்கு மேல் பெற்றது. ஜோர்ஜியா ப்ளிமர் (28), சுஸி பேட்ஸ் (17) ஆகிய இருவரும் 39 பந்துகளில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரைத் தொடர்ந்து அமேலியா கேர் (9) குறைந்த எண்ணிக்கையுடன் ஆட்டம் இழக்க நியூஸிலாந்தின் ஓட்ட வேகம் சற்று குறைந்தது. எனினும் அணித் தலைவி சொஃபி டிவைன் (19), ப்றூக் ஹாலிடே (22) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 38 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஒரளவு நல்ல நிலையில் இட்டனர். ஆனால், மொத்த எண்ணிக்கை 96 ஓட்டங்களாக இருந்தபோது அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தனர். தொடர்நது மெடி க்றீன் (9), இஸபெல்லா கேஸ் (5 ஆ.இ.) ஆகிய இருவரும் மொத்த எண்ணிக்கையை 110 ஓட்டங்களாக உயர்த்தினர். பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 18 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 111 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 11.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 56 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. முனீபா அலி 15 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 21 ஓட்டங்களையும் பெற்றனர். வேறு எவரும் இரட்டை இலக்க எண்ணிக்கையைத் தொடவில்லை. நால்வர் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். பந்துவீச்சில் அமேலியா கேர் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஈடன் காசன் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஈடன் காசன் கடைசி லீக் போட்டி இங்கிலாந்துக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் செவ்வாய்க்கிழமை (15) நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டி பி குழுவிலிருந்து எந்த இரண்டு அணிகள் மகளிர் ரி20 உலகக் கிண்ண அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும் என்பதைத் தீர்மானிக்கும். இக் குழுவில் இங்கிலாந்தும் தென் ஆபிரிக்காவும் 6 புள்ளிகளைப் பெற்று நிகர ஓட்ட வேக அடிப்படையில் முதலிரண்டு இடங்களில் இருக்கின்றன. மேற்கிந்தியத் தீவுகள் 4 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் இருக்கிறது. https://www.virakesari.lk/article/196305
  18. சவூதி அரேபியாவின் தொடர்ச்சியான உலகளாவிய மனிதாபிமான உதவித் திட்டங்களில் ஒரு கட்டமாக, லெபனான் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கிடையில் நிலவி வருகின்ற யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட லெபனான் மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையில், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி மற்றும் நிவாரண மையம் (KSrelief) ஊடாக நிவாரணங்களை வழங்கும் முயற்சியைத் தொடங்கியுள்ளது. மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் மற்றும் பட்டத்து இளவரசர் மற்றும் பிரதமர் முஹம்மத் பின் சல்மான் ஆகியோரின் உத்தரவுக்கு இணங்க, KSrelief பெய்ரூத் நகருக்கு இது வரை இரண்டு விமானங்களுக்கு நிவாரணங்களை அனுப்பியுள்ளது. கடந்த 13ம் திகதி ரியாத் நகரில் உள்ள மன்னர் காலித் சர்வதேச விமான நிலையத்திலிருந்து உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் தங்குமிடப் பொருட்களை சுமந்த முதல் நிவாரண விமானம் புறப்பட்டு லெபனான் பெய்ரூத் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது, இது சவூதியின் நிவாரண உதவித் திட்டத்தின் ஆரம்ப கட்டமாகும். இக்கட்டான நிலைமையில் உள்ள லெபனான் மக்களுக்கான இந்த இன்றியமையாத ஆதரவு, பிராந்திய அளவிலும், உலக அளவிலும் தேவைப்படுபவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் சவூதி அரேபியாவின் அர்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. அக்டோபர் 14 ஆம் திகதி, ரியாத் நகரில் இருந்து இரண்டாவது நிவாரண விமானம் அனுப்பப்பட்டது. இந்த விமானத்திலும் உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய தங்குமிட பொருட்கள் ஆகியவை அடங்கியிருந்தன. இந்த மனிதாபிமான உதவித் திட்டங்கள் உலகளாவிய மனிதாபிமான கொள்கைகளுக்கு சவூதியின் பங்களிப்பையும், துன்பத்தில் உள்ள நாடுகள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதற்கான அதன் பொறுப்பையும் பிரதிபலிக்கின்றன. லெபனானுக்கான இந்த உதவித் திட்டம் சர்வதேச மனிதாபிமானப் பணிகளில் சவூதியின் தலைமைப் பங்கை அடிக் கோடிட்டுக் காட்டுகிறது. https://www.virakesari.lk/article/196315
  19. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது - சென்னையில் மழை நீடிக்குமா? கனமழை எங்கெல்லாம் பெய்யும்? பட மூலாதாரம்,IMD WEBSITE படக்குறிப்பு, வங்கக்கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதியை காட்டும் வரைபடம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதேபோல், தமிழ்நாட்டின் விழுப்புரம், கடலூர், விருதுநகர் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கனமழை தொடர்கிறது. கனமழை காரணமாக 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. இதனால், அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் கனமழை பெய்யக் கூடும்? சென்னையில் காலை முதலே கனமழை சென்னையில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் நல்ல மழை பெய்தது. இன்று காலை முதலே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்கிறது. தாம்பரம், பல்லாவரம், கும்மிடிப்பூண்டி உள்ளிட்ட சென்னையின் புறநகர்ப் பகுதிகளிலும் காலை முதல் மழை தொடர்கிறது. திருவள்ளூரில் விடியவிடிய பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. நகராட்சி ஊழியர்கள் தண்ணீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை, கும்மிடிப்பூண்டியில் பெய்த மழையால் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. தாழ்வான பகுதியான திருஆயர்பாடியில் உள்ள ரயில்வே பாலத்தின் கீழ் தேங்கிய மழை நீரால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. சோழிங்கநல்லூர் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முதல் கனமழை பெய்துவருகிறது குறிப்பாக புறநகர் பகுதிகளான மேடவாக்கம் வேளச்சேரி பிரதான சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கின்றது, குறிப்பாக பள்ளிக்கரணை பகுதிகளில் சாலைகளில் மழைநீர் தேங்கி வடியாமல் இருப்பதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர் இதேபோல் ஓஎம்ஆர் சாலை, துரைப்பாக்கம், கந்தன்சாவடி, எம்ஜிஆர் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வழக்கமாக அதிகமாக மழைநீர் தேங்கும் தாழ்வான இடங்களில் படகுகள் இப்போதே தயாராக வைக்கப்பட்டுள்ளன. கனமழையை எதிர்கொள்ள சென்னை மாநகராட்சியும் தேவையான முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, வழக்கமாக அதிகமாக மழைநீர் தேங்கும் வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட தாழ்வான இடங்களில் படகுகள் இப்போதே தயாராக வைக்கப்பட்டுள்ளன. இதற்காக, 36 படகுகளை சென்னை மாநகராட்சி வாங்கியுள்ளது. பொதுமக்கள் உதவிக்கு 1913 என்ற கட்டணமில்லா எண்ணுக்கும், 9445551913 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,X/GREATER CHENNAI CORPORATION கோவையில் மழைநீரில் மீண்டும் சிக்கிய பேருந்து கோவை மாநகரில் மாலை சுமார் 5 மணி அளவில் இருந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. காந்திபுரம், சித்தாபுதூர், சாய்பாபா காலனி, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், உக்கடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சிவானந்த காலனியில் இருந்து சாய்பாபா காலனி செல்லும் மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ரயில்வே பாலத்திற்கு அடியில் தேங்கிய மழை நீரில் அரசு பேருந்து மாட்டிக் கொண்டது. அதில் பயணித்த பயணிகள் பத்திரமாக இறக்கி விடப்பட்ட நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து கிரேன் மூலம் அந்த பேருந்து மீட்கப்பட்டது. காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்தது தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பல்வேறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ள நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 70.5 மிமீ மழையும், காஞ்சிபுரத்தில் 70 மிமீ மழையும் பதிவாகியுள்ளது. சென்னையில், அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 52.9 மிமீ மழை பதிவாகியுள்ளது, அதற்கு அடுத்ததாக நுங்கம்பாக்கத்தில் 42.6 மிமீ மழை பதிவாகியுள்ளது. பட மூலாதாரம்,IMD CHENNAI சென்னையில் 8 விமானங்கள் ரத்து சென்னை விமான நிலையத்தில் கன மழை, சூறைக்காற்று போன்றவைகளால் விமான சேவைகள் பாதிப்பு அடையாமல் இருப்பதற்காக, சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து அனுப்பி வரும் வானிலை அறிக்கையின் அடிப்படையில், விமான சேவைகளை பாதுகாப்பாக இயக்குவது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை விமான நிலையத்தில், இதுவரையில் பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும் கனமழை எச்சரிக்கை காரணமாக, பயணிகள் பலர் தங்களுடைய விமான பயணங்களை ரத்து செய்து விட்டதால், இன்று (அக்டோபர் 15) சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் போதிய பயணிகள் இல்லாமல் பெங்களூர், அந்தமான், டெல்லி, மஸ்கட் ஆகிய 4 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 8 விமானங்கள் இதுவரை ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் விமான நேரங்களில் மாற்றங்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளதால், பயணிகள் அனைவரும் தாங்கள் பயணம் செய்யும் விமான நிறுவனங்களை தொடர்பு கொண்டு, விமானங்கள் புறப்படும் நேரங்களை விசாரித்து, அதற்கு ஏற்றபடி தங்கள் பயணங்களை அமைத்துக் கொள்ளும்படி சென்னை விமான நிலையம் அறிவுறுத்தி உள்ளது. பட மூலாதாரம்,@AAICHNAIRPORT படக்குறிப்பு,சென்னை விமான நிலையத்தில் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் அவ்வப்போது தொடர்ச்சியாக நடந்து வருகிறது திருச்செந்தூரில் சுமார் 100 அடி உள்வாங்கிய கடல் திருச்செந்தூர் கடற்கரையில் நாழிக்கிணறு பகுதியில் இருந்து அய்யா கோவில் வரை சுமார் 500 மீட்டர் தூரத்திற்கு நேற்று கடல் உள்வாங்கியது. அப்போது, கோவிலுக்கு வருகை தந்திருந்த பக்தர்கள் பச்சை பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி செல்பி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். அவர்களை கோவில் கடற்கரை பணியாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். எந்தெந்த மாவட்டங்களில் விடுமுறை? கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் பள்ளிகள் மதியம் வரை மட்டுமே இயங்கும். புதுச்சேரி மாநிலத்தைப் பொருத்தவரை, புதுச்சேரி காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கதீட்ரல் சாலையில் அமைந்துள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்கா 15.10.2024 (செவ்வாய்க்கிழமை) முதல் 18.10.2024 (வெள்ளிக்கிழமை) வரை செயல்படாது என தெரிவிக்கப்படுகிறது. அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் விடுமுறை அறிவிப்பு கனமழை காரணமாக அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் எப்போதும் போல் பணிக்கு வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மறு உத்தரவு வரும் வரை தேர்வுகள் நடைபெறாது என்று பொறுப்பு பதிவாளர் பிரகாஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். https://www.bbc.com/tamil/articles/c2064q0x6y3o
  20. வேட்பாளர் விருப்பு இலக்கங்கள் நாளை வெளியாகிறது எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விருப்பு இலக்கங்கள் நாளை புதன்கிழமை வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. ஆணைக்குழு தற்போது அனைத்து மாவட்டங்களிலும் சமர்ப்பிக்கப்பட்ட எண்களை சரிபார்த்து வருகிறது, செயல்முறை முடிந்ததும் அவற்றை மீண்டும் மாவட்ட செயலாளர்களிடம் சமர்ப்பிக்கும். மேலும், ஒரு வேட்பாளருக்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச செலவு உள்ளிட்ட முக்கிய தேர்தல் விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற உள்ளது. https://thinakkural.lk/article/310749
  21. 7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடையும் என்று அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். திங்கட்கிழமையாகும் போது கடவுச்சீட்டுகள் நாட்டில் இருப்பில் இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.ஒன்லைன் கடவுச் சீட்டு தொடர்பில் நீதிமன்ற உத்தரவுக்கமையவே இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/310747
  22. யாழில் ஆறு ஆசனங்களையும் வெல்லுவோம் - வைத்தியர் அருச்சுனா யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்கள் பெற்றுக்கொள்வோம். ஒரு விளையாட்டு வீரனாக தோல்வியையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவமும் எனக்கு உண்டு என சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அருச்சுனா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (15) நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் உரையாற்றும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எங்களுடைய அரசியல் பயணம் ஏழைகளுக்கான அரசியல் பயணமாக இருக்கும். மக்களின் தேவைக்காக ஆளுமை மிக்கவர்களை ஒன்றிணைந்து, பாதை மாறி போகும் தமிழ் தேசியத்தை சரியான பாதைக்கு கொண்டுவருவோம். தமிழ் தேசியம் பேசும் போலி தேசியவாதிகளை இனம் கண்டு உள்ளோம். அதனால் சமூக பொறுப்புள்ள துடிப்புள்ள இளையோரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே தமிழ் மக்கள் மிக சிந்தித்து வாக்களிக்க வேண்டும். எமது போராட்டம் அரசியல் சார்பற்ற போராட்டமாக முன்னெடுத்தோம். அரசியல்வாதிகள் விட்ட தவறுகளை சுட்டி காட்டிய போது எனக்கு எதிராக திரும்பினார்கள். அப்போதே அரசியல்வாதிகள் எல்லோரும் மக்களை ஏமாற்றி வருகின்றார்கள் என்பதனை அறிந்து கொண்டேன். உண்மையான அரசியல் செய்ய நிதி தேவையில்லை. அரசியல் செய்ய எனக்கு இரண்டு வருடம் சம்பளம் போதும், மக்களுக்காக அரசியல் செய்ய பணம் தேவையில்லை. எனக்கு 10 கோடி ரூபாய் பெறுமதியான காணி இருக்கின்றது. அது எனக்கு போதும். மக்களிடம் பணம் பெற்றால் அது தொடர்பில் வெளிப்படை தன்மையாக செயற்படுவோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196322
  23. இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஐந்து மில்லியன் டொலர் தரை புகையிரத பாதைகள் குறித்து மீண்டும் ஆராய்கின்றோம் - இலங்கை அதிகாரி இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஐந்துபில்லியன் டொலர் வீதி புகையிரதபாதை இணைப்பு திட்டம் குறித்து மீண்டும் ஆராயப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி இந்தியாவின் மின்டிற்கு தெரிவித்துள்ளார். இதற்கான செலவை இந்தியாவே பொறுப்பேற்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ள நிலையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திசநாயக்க பொறுப்பேற்றுள்ள நிலையில் அறிவிக்கப்பட்டுள்ள முதலாவது பெரும் இரு தரப்பு திட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் நான் இந்தியாவில் கூட்டமொன்றில் கலந்துகொண்டேன், நாங்கள் தமிழ்நாட்டின் இராமேஸ்வரத்திற்கும் இலங்கையின் திருகோணமலைக்கும் இடையில் நெடுஞ்சாலையொன்றையும், புகையிரதபாதையொன்றையும் அமைக்கவுள்ளோம் என பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்துள்ளார். இரு நாடுகளினதும் வர்த்தகர்கள் அதிகளவு கட்டணத்தை செலுத்தவேண்டியுள்ளதாலேயே இது குறித்து திட்டமிடப்படுவதாக தெரிவித்துள்ள அவர் புகையிரத தரைப்பாதையை அமைத்தால் இரு தரப்பினருக்கும் அது உதவியாக அமையக்கூடும், ஐரோப்பா உட்பட ஏனைய நாடுகளுடன் வர்த்தகத்திற்கு அது உதவும், இந்திய வர்த்தகர்கள் இலங்கையிலிருந்து நன்மையை பெறமுடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196329
  24. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட உறுப்பினர்கள் ஆணைக்குழுவில் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் தமது இராஜினாமா கடிங்களை திங்கட்கிழமை (14) ஜனாதிபதிக்கு கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதி செயலகம் விடுத்த அறிவிப்பை அடுத்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அதன் உப தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சந்தன பி. உடவத்த மற்றும் உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை இராஜினாமா செய்வதாக எழுத்து மூலம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் அறிவித்துள்ளனர். கடந்த 2020 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவி காலம் 2025 ஆம் ஆண்டு மாத் நிறைவடைய இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/196316
  25. முன்னைய அரசாங்கம் உகாண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் பொதுமக்களின் பணத்தை முதலீடு செய்துள்ளது – அவற்றை மீட்பதற்கான சட்டங்கள் இயற்றப்படும் - தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் முன்னைய அரசாங்கம் உகாண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.கறுப்பு பணம் சட்டவிரோதபணபரிமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளன. எங்களுடைய அரசாங்கத்தின் போது களவாடப்பட்ட சொத்துக்களை பணத்தை மீட்பதற்கான சட்டங்களை இயற்றவுள்ளோம்.என தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரும் சட்டத்தரணியுமான நிலாந்தி கொட்டஹச்சி தெரிவித்துள்ளார் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- உகாண்டாவிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் மறைத்துவைக்கப்பட்டிருக்கின்ற சட்டவிரோதமாக பெறப்பட்ட உழைக்கப்பட்ட பணத்தை மீட்கவேண்டி பரந்துபட்ட சூழமைவின் அடிப்படையிலேயே உகாண்டாவில் உள்ள களவாடப்பட்ட சொத்துக்கள் குறித்து நான் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தேன். நான் தெரிவித்தமைக்காக நான் முழுப்பொறுப்பையும் ஏற்கின்றேன். நான் தெரிவித்த சில கருத்துக்களிற்காக எனக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை முன்னெடுக்கின்றனர்.எனக்கு உகாண்டா குமாரி மெனிக்கே என பட்டப்பெயர் சூட்டியுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நான் ஆற்றிய உரைகளின் போது சட்டமொழுங்கு நீதியை நிலைநாட்டுவது குறித்தும்,தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட அனுரகுமாரதிசநாயக்கவினால் அதனையே செய்ய முடியும் என்பதையும் நான் குறிப்பிட்டிருந்தேன். எங்களுடைய முழுமையான திட்டத்தில் களவாடப்பட்ட சொத்துக்களை மீட்பதற்கான அமைப்பொன்றை ஏற்படுத்த உறுதியளித்திருந்தோம். அபிவிருத்தியடைந்த நாடுகளில் அவ்வாறான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக அவ்வாறான அமைப்புகள் உள்ளன. பொதுமக்களின் வரிப்பணத்தை துஸ்பிரயோகம் செய்து அதனை வெளிநாட்டில் முதலீடு செய்திருந்தால் அதனை மீட்பதற்கான கட்டமைப்புகள் உள்ளன. என்னுடைய அந்த உரையின் போது உகாண்டாவில் பதுக்கிவைக்கப்பட்டுள்ள பணத்தை மீட்கவேண்டியதன் அவசியம் குறித்து நான் குறிப்பிட்டிருந்தேன். நான் அந்த உரையை ஆற்றியவேளை பணம் அச்சிடும் டி லாரூ நிறுவனம் இலங்கையில் அச்சடித்த பணத்தின் ஒரு பகுதியை உகாண்டாவிற்கு அனுப்பியது என்பதை நான் அறிந்திருந்தேன், என்னுடைய கருத்து பேசுபொருளாக மாறியது. முன்னைய அரசாங்கம் உகாண்டாவிலும் உலகின் ஏனைய பகுதிகளிலும் முதலீடு செய்துள்ளது என்பதை நாங்கள் அறிவோம்.கறுப்பு பணம் சட்டவிரோதபணபரிமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் உள்ளன. எங்களுடைய அரசாங்கத்தின் போது களவாடப்பட்ட சொத்துக்களை பணத்தை மீட்பதற்கான சட்டங்களை இயற்றவுள்ளோம்.தேசிய மக்கள் முன்னணி அரசாங்கமாகயிருந்தாலும் சரி எந்த அரசாங்கமாகயிருந்தாலும் சரி பொதுமக்களின் பணம் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை. நான் தெரிவித்த விடயங்களிற்கு நான் முழுமையாக பொறுப்பேற்கி;ன்றேன். உகாண்டாவாகயிருந்தாலும் சரி எங்கிருந்தாலும்; சரி நாங்கள் அதனை கையாளும் பொறுப்பை ஏற்போம். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு நான் தெரிவித்த விடயத்தினை கேள்விக்குட்படுத்துவதற்கான அதற்கு எதிராக சவால் விடுவதற்கான அனைத்து உரிமையும் உள்ளது நாங்கள் அவருக்கு பொருத்தமான தருணத்தில் பதிலளிப்போம். https://www.virakesari.lk/article/196311

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.