Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை, இந்திய அணியின் உத்தி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ். க பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரச்சின் ரவீந்திராவின் அற்புதமான சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய அணியைவிட 356 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக இருக்கிறது. 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழந்தார், சர்ஃப்ராஸ்கான் 70 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியைவிட இந்திய அணி 125 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் நாளை (அக்டோபர் 19) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 20) மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ஆட்டத்தை இந்திய அணி எப்படி கையில் எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய அணியின் வியூகம் என்ன? இந்திய அணி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து நியூசிலாந்து அணியின் முன்னிலை ரன்களைவிட கூடுதலாக 300 ரன்கள் சேர்த்து 5வது நாள் உணவு இடைவேளைவரை பேட் செய்தால் ஆட்டத்தை வெல்வதற்கு சாத்தியமுண்டு. ஒருவேளை விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து நியூசிலாந்துக்கு குறைந்த இலக்கை நிர்ணயிக்க நேர்ந்தால், இந்திய அணி தோல்வியை நோக்கிச் செல்ல வேண்டியதிருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு அவசியம் என்பதால் நெருக்கடியான நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்தான் இந்திய அணி வீரர்களின் பேட்டிங் பாணி உள்ளன. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவின் அரைசதம், விராட் கோலி, சர்ஃப்ராஸ் கானின் அதிவேக அரைசதமும், பேட் செய்தவிதமும் விரைவாக ரன்களைச் சேர்க்க வேண்டும் அதேநேரத்தில் விக்கெட்டையும் இழந்துவிடக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து ஆடினர். இருவரும் மிகவிரைவாக 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களைச் சேர்த்து, 136 ரன்கள் பார்னர்ட்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். வலுவான பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து அணி 91.3 ஓவர்களில் 402 ரன்கள் சேர்ப்பதற்கு ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி ஆகியோரின் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாகும். 8-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி ஆகியோரின் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரச்சின் ரவீந்திரா ரச்சின் ரவீந்திராவுக்கு 2-வது சதம் ரச்சின் ரவீந்திரா 88 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில் அடுத்த 36 பந்துகளில் இன்னும் 50 ரன்களை எட்டி, சதம் அடித்தார். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரவீந்திரா சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடித்த 2வது சதமாகும். இதற்கு முன் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார். சேவாக்கை முந்திய சௌதி டிம் சௌதி 57 பந்துகளில் அரைசதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் இதுவரை அதிகபட்சமாக 91 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரரான விரேந்திர சேவாக் உடைய சாதனையை டிம் சௌதி முறியடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் 4 சிக்சர்கள் அடித்து மொத்தம் 93 சிக்சர்கள் உடன் சேவாக்கை விட முன்னிலையில் உள்ளார். விக்கெட் சரிவு முன்னதாக 2-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், மிட்ஷெல் 14 ரன்களுடனும் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்திய பும்ரா, சிராஜ் இருவரும் தொடக்கத்திலேயே புதியபந்தை நன்கு ஸ்விங் செய்ததால், ரன் சேர்க்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிட்ஷெல் 18 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த டாம் பிளென்டன் 5 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய பிலிப்ஸ் 14 ரன்களிலும், மேட் ஹென்றி 8 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினர். ஆட்டம் தொடங்கி தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது. 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூசிலாந்து பறிகொடுத்தது. இதனால் 300 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிம் சௌதி, ரச்சின் ரவீந்திரா கூட்டணி வலுவான கூட்டணி ஆனால், 8-வது விக்கெட்டுக்கு டிம் சௌதி, ரச்சின் ரவீந்திரா கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்தனர். புதிய பந்தை உணவு இடைவேளைக்குப் பின் எடுத்தபின் நியூசிலாந்து ரன்ரேட் வேகமெடுத்தது. ரச்சின் ரவீந்திராவும் அரைசதம் அடித்தபின் அடுத்த 50 ரன்களை 36 பந்துகளில் சேர்க்கவும் புதிய பந்து காரணமாக இருந்தது. சௌதியும் 3 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடிக்கவும் புதிய பந்து உதவியது. அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையில் மோசமான ஓவர் அதிலும் குறிப்பாக அஸ்வின் 80-வது ஓவரை வீசி அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்களை வாரி வழங்கினார். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஓவரில் அதிகபட்சமாக வழங்கிய ரன்கள் இதுதான். சிராஜ் வீசிய ஓவரில் ஸ்லோவர் பாலில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 65 ரன்களில் சௌதி ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த அஜாஸ் படேல் 4 ரன்னில் குல்தீப் யாதவ் ஓவரில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தார். சதம் அடித்து பேட் செய்து வந்த ரச்சின் ரவீந்திரா 134 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார். நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணியைவிட 356 ரன்கள் முன்னிலை பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மா அரைசதம் இந்திய அணி பிற்பகலில் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி, சில பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினர். ஜெய்ஸ்வால் பொறுமையாக பேட் செய்ய, ரோஹித் சர்மா இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளாக விளாசியதால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. ஜெய்ஸ்வால் 35 ரன்கள் சேர்த்தநிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் கீப்பர் பிளென்டலால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கோலி, ரோஹித்துடன் சேர்ந்தார். 59 பந்துகளில் அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் ரோஹித் சர்மா விளையாடி வந்தார். ஆனால், அஜாஸ் படேல் வீசிய ஓவரில் பந்து ரோஹித் சர்மா பேட்டில் பட்டு எதிர்பாராதவிதத்தில் ஸ்டெம்பில் மெதுவாகப் பட்டதால் போல்டாகி ரோஹித் சர்மா 52 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 3வது விக்கெட்டுக்கு சர்ப்ஃராஸ் கான், விராட் கோலி கூட்டணி சேர்ந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோலி, சர்ஃப்ராஸ் கான் கோலி, சர்ஃப்ராஸ் அதிரடி ஆட்டம் முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அளித்த இருவரும் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்தனர். குறிப்பாக உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் ஆடி நன்கு அனுபவம் பெற்ற சர்ஃப்ராஸ் கான் நியூசிலாந்து பந்துவீச்சை அனாசயமாக ஆடி பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார். அதிலும் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்டில் தொடர்ந்து 2 பவுண்டரிகளையும், மற்றொரு ஓவரில் இரு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இருவரின் அதிரடியான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சர்ஃப்ராஸ் கான் கோலி இருவரும் அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் விரைவாகவே 100 ரன்களை எட்டினர். 41 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. நிதானமாக பேட் செய்த வந்த விராட் கோலி இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை பிலிப்ஸ் வீசியநிலையில் கடைசி பந்தில் கோலி 70 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு சர்ஃப்ராஸ் கான், கோலி இருவரும் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx208rvxrx3o
  2. இங்கிலாந்தை துவம்சம் செய்த பாகிஸ்தான்; டெஸ்ட் தொடரை 1 - 1 என சமப்படுத்தியது (நெவில் அன்தனி) முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான இன்று 152 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது. இதே விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்துக்கு இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த பாகிஸ்தான், 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டுள்ளது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் நோமான் அலி 46 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றியை வேளையோடு பெற்றுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் நோமான் அலி பதிவுசெய்த அதிசிறந்த பந்துவீச்சு இதுவாகும். முதல் இன்னிங்ஸில் 101 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய நோமான் அலி முழுப் போட்டியிலும் 147 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவர் முதல் இன்னிங்ஸில் 32 ஓட்டங்களைப் பெற்றார். இப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 111 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றிய சாஜித் கான், இரண்டாவது இன்னிங்ஸில் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இவர் 2ஆவது இன்னிங்ஸில் 22 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரில் நோமான் அலியின் ஆற்றல் வெளிப்பாடுகள் மிகச் சிறந்ததாக இருந்தபோதிலும் சாஜித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேலும் 261 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்தில் எஞ்சிய 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் 33.3 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து சார்பாக ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் அவற்றை பெரிய எண்ணிக்கைகளாக்க முடியாமல் போனது. அணிக்கு மீள்வருகை தந்த அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் அதிகப்பட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றார். எண்ணிக்கை சுருக்கம் பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 366 (கம்ரன் குலாம் 118, சய்ம் அயூப் 77, மொஹம்மத் ரிஸ்வான் 41, ஆமிர் ஜமால் 37, நோமான் அலி 32, ஜெக் லீச் 114 - 4 விக்., ப்றைடன் கார்ஸ் 50 - 3 விக்., மெத்யூ பொட் 66 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 291 (பென் டக்கெட் 114, ஜோ ரூட் 34, ஜெக் லீச் 25 ஆ.இ., சாஜித் கான் 111 - 7 விக்., நோமான் அலி 101 - 3 விக்.) பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 221 (சல்மான் அகா 63, சவூத் ஷக்கீல் 31, கம்ரன் குலாம் 26, ஷொயெப் பஷிர் 66 - 4 விக்., ஜெக் லீச் 67 - 3 விக்., ப்றைடன் கார்ஸ் 29 - 2 விக்.) இங்கிலாந்து - வெற்றி இலக்கு 297 - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 144 (பென் ஸ்டோக்ஸ் 37, ப்றைடன் கார்ஸ் 27, ஒல்லி போப் 22, நோமான் அலி 46 - 8 விக்., சாஜித் கான் 93 - 2 விக்.) ஆட்டநாயகன்: சாஜித் கான். https://www.virakesari.lk/article/196612
  3. ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை தீவைச்­ சூழ அமைந்­துள்ள கடற்­ப­ரப்பு நாட்­டுக்கு கிடைத்­துள்ள அருங்­கொ­டை­யாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக பல ஆண்­டு­க­ளாக இலங்­கைக்கு நெருக்­கடி நிலை­மையை தோற்­றுவித்­துள்ள இலங்கை - இந்திய மீனவர் விவ­கா­ரத்­துக்கு இது­வரை தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டா­ம­ல் உள்­ளது. கடந்த வருடம் கச்­ச­தீவு விவ­காரம் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருந்த நிலையில் அத­னோ­டு இ­ணைந்­த­தாக தற்­போது மீண்டும் இந்த மீன்­பிடி விவ­கா­ரமும் தலை­தூக்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி அநு­ர­கு­மார தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்­கையில் ஆட்­சி­ய­மைத்­துள்ளது. இந்நிலையில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி சுப்­ர­ம­ணியம் ஜெய்­சங்கர் கடந்த வாரம் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றை மேற்­கொண்­டி­ருந்தார். இந்த சந்­திப்பில் இலங்­கையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன­வர்கள் தொடர்பில் கவலை வெளி­யிட்­டி­ருந்தார். குறிப்­பாக இந்­திய மீன­வர்­க­ளையும் அவர்­க­ளது பட­கு­க­ளையும் விரைவில் விடு­தலை செய்ய வேண்­டு­மென தெரி­வித்­தி­ருந்த அவர், இந்திய மீனவர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள அதி­கூ­டிய அப­ராதம் தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அதே­நேரம் வாழ்­வா­தா­ரத்­துடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்கள் குறித்த மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றை­யா­னது இந்த விவ­கா­ரத்தை தீர்த்து வைப்­ப­தற்­கான சிறந்த உத்­தி­யாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மீன்­பி­டித்­துறை, மீனவர் சங்­கங்கள் குறித்த கூட்­டுப்­பணிக் குழுக்­கூட்டம் உரிய காலத்தில் நடத்­தப்­படும் என உறு­தி­ய­ளித்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர், கடந்த 4ஆம் திகதி 50 இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு நன்­றியும் தெரி­வித்­துள்ளார். வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­து­ட­னான சந்­திப்பில் அய­லு­ற­வுக்கு முத­லிடம் மற்றும் சாகர் கோட்­பாடு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு நிலை­நி­றுத்­தப்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார். அதே­நேரம் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் வழங்­கப்­படும் பணித்­திட்­டங்கள் ஊடாக இலங்­கைக்கு இந்­தியா வழங்கி வரு­கின்ற அபி­வி­ருத்தி சார் உத­விகள் தொடரும் எனவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­மை­யா­னது இலங்கை மீதான இந்­தி­யாவின் கண்­ணோட்­டத்தை மேலும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் ஊடாக இலங்­கையில் எந்த அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­தாலும் இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்பு தொடரும் என்­பது உறு­தி­யா­கி­றது. அதற்கு இலங்­கையின் அமை­வி­டமே முக்­கிய கார­ணி­யாக அமைந்­தி­ருப்­ப­தாக துறைசார் நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தைப் பொறுத்­த­மட்டில் நாட்டின் தேசிய வளங்­களைப் பாது­காப்­பதில் தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. இந்த விடயத்தில் கடந்த கால அர­சாங்­கங்­க­ளையும் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் மீன்­பிடி விவ­கா­ரத்தில் இந்த அர­சாங்­கத்தின் நகர்வு எப்­படி அமை­யும் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது. இலங்கை ஆரம்­ப­காலம் முதல் கடந்த 2002 மற்றும் 2022 ஆகிய காலப்­ப­கு­தி­களில் முகங்­கொ­டுத்த பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளின்­போது இந்­தி­யாவே நாட்­டுக்கு கைகொ­டுத்­து உ­த­வி­யது. இந்­நி­லையில் மூன்று தசாப்­த­ கால யுத்­தத்­துக்கு பின்னர் இலங்­கையின் வட­ப­கு­தியில் தென்­னிந்­திய மீன­வர்கள் மீன்­பி­டியில் ஈடு­ப­டு­கின்­றமை இரு நாடு­க­ளுக்­கு­ம் இ­டை­யி­லான நட்­பு­ற­வுக்கு மிகப்­ பெ­ரிய சவா­லாக அமைந்­துள்­ளது. ஆனால், இந்த விட­யத்தை இரு­ நா­டு­க­ளுமே மெள­ன­மாக கடந்து செல்­­கின்ற வித­மா­னது இரு ­நாட்டு நட்­பு­றவை தக்­க­வைத்­துக்கொள்­வ­தற்­கான காய்­ந­கர்த்­த­லா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. இலங்­கையின் நிலப்­ப­ரப்பை விட 8 மடங்கு மிகப்­பெ­ரிய கடற்­ப­ரப்பும் மீன்­வ­ளமும் கொண்ட இலங்­கைத்­ தீவின் கடற்­ப­ரப்பு இந்­திய மீன­வர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­படும் விவ­கா­ரத்தில் இரு­ நாட்டு மீனவ சமூ­கங்­களும் வாழ்­வா­தார ரீதியில் மிகப்­பெ­ரிய சவாலை எதிர்­கொண்­டுள்­ளன. குறிப்­பாக இலங்கை கடற்­ப­டை­யி­னரின் துப்­பாக்கி பிர­யோ­கங்­களால் உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ள­தோடு இந்­திய, இலங்கை மீன­வர்­க­ள் கைது செய்யப்படும் சம்­ப­வங்­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன. அதே­நேரம் இலங்கை கடந்த காலங்­களில் பொரு­ளா­தார ரீதியில் மிகப்­பெ­ரிய வீழ்ச்­சியை சந்­தித்­தி­ருந்­தது. இதன்­போது பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான டொலர் உள்­வ­ரு­கையை அதி­க­ரிப்­பது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களில் இலங்­கையின் மீன் வளம் மிக முக்­கி­ய­மா­னது என துறைசார் நிபு­ணர்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. ஆனால், இந்த விட­யத்தில் இது­வரை ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்கள் இந்­திய அர­சாங்­கங்­க­ளுடன் சுமு­க­மான ஓர் உடன்­பாட்­டுக்கு வரு­வ­தற்­கு­ரிய காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொள்­ள­வில்லை. குறிப்­பாக இந்த விவ­கா­ரத்தில் இந்­திய மீன­வர்கள் அத்­து­மீறி நுழை­வதால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள இழப்பு மதிப்­பீட்டு கணிப்­பீ­டுகள் இது­வரை எமது அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டா­ம­ல் உள்­ளது. இலங்­கையின் கடல்­வ­ளத்தை ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள் உரி­ய­வாறு பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு இந்­தத்­ துறை மிகப்­ பெ­ரிய பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்கும் என்­பதே பொரு­ளா­தார நிபு­ணர்­களின் கருத்­தாக அமைந்­துள்­ளது. இழுவை மடிப்­ப­ட­குகள் இலங்­கையில் முற்­றாக தடை­ செய்­யப்­பட்­டுள்ள போதிலும் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி நுழையும் இந்­திய மீன­வர்கள் இவற்றை பயன்­ப­டுத்­து­வதால் மீன்­களின் இருப்பும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ளது. இது தொடர்பில் ஊட­கங்­க­ளாலும் சமூக ஆய்­வா­ளர்­க­ளாலும் கல்­வி­மான்­க­ளாலும் தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்­ற ­போ­திலும் இது­ தொ­டர்பில் இலங்கையின் கடந்த அர­சாங்­கங்கள் மெளனம் காத்­து­ வ­ந்துள்ளன. அவ்­வப்­போது இந்த விட­யத்­துக்கு எதி­ராக மக்கள் குரல் எழுப்பும் வேளை­களில் இந்­திய மீனவர் கைது சம்­ப­வங்­களும் இழு­வைப்­ப­ட­குகள் பறி­முதல் செய்யும் சம்­ப­வங்­களும் மாத்­திரம் நடந்­தே­று­கின்­றன. இலங்­கையில் நடந்­தே­றிய மூன்று தசாப்­த­ கால யுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு கடற்­ப­ரப்பில் இந்­திய மீன­வர்கள் மாத்­தி­ர­மன்றி இலங்கை மீன­வர்­க­ளுக்கும் மீன்­பி­டிக்க முடி­யா­மல்­போ­ன­மை­யா­னது குறித்த பகு­தி­களில் மீன்­வளம் பெருக்­க­ம­டைய வழி­கோ­லி­யது. இதனால் யுத்தம் நிறை­வ­டைந்த கையோடு தென்­னிந்­திய மீன­வர்கள் இலங்­கையின் கடற்­ப­ரப்­புக்குள் நுழைந்து மீன்­பி­டியில் ஈடு­பட ஆரம்­பித்துவிட்­டனர். ஆனால் இந்த விட­யத்தில் அப்­போது அதி­கா­ரத்­தி­லி­ருந்த அர­சாங்கம் அறிந்தும் அறி­யா­த­தைப்­போன்று நடந்­து­கொண்­டதன் விளை­வா­கவே இன்று இந்த மீனவர் விவ­காரம் தலை­தூக்­கி­யுள்­ளது என துறைசார் நிபு­ணர்கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளனர். மீன் இறக்­கு­ம­தியில் ஆர்வம் காட்டும் இலங்கை மிகப்­பெ­ரிய கடல்­வ­ளத்தைக் கொண்­டுள்ள இலங்கை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தே மீன்­களை இறக்­கு­மதி செய்­கி­றது. ஆனால் இதற்குப் பொறுப்புக்கூற வேண்­டிய அர­சாங்­கங்கள் இது­வ­ரை ­கா­லமும் மெளனம் சாதித்­து­ வ­ரு­கின்­றன. இந்த வரு­டத்தின் ஜன­வரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை­யி­லான 8 மாத காலப்­ப­கு­திக்குள் இலங்­கை­யினால் 39 பில்­லியன் மெட்ரிக் தொன் மீன் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. கடற்­றொழில் அமைச்சின் தர­வு­க­ளுக்கு அமைய மீன் இறக்­கு­ம­திக்­காக மாத்­திரம் 24 பில்­லியன் ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது. அதன் டொலர் பெறு­மதி 80 மில்­லி­ய­னாக பதி­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் வரு­டாந்தம் இலங்கை 900 பில்­லியன் ரூபாய் பெறு­ம­தி­யான மீன்­வ­ளத்தை இந்­தியா சூறை­யா­டு­வ­தாக வட­மா­காண கடற்­றொழில் இணையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் இந்­திய மீன­வர்­க­ளது அத்­து­மீ­றலால் கடற்­றொ­ழிலை நம்பி வாழ்ந்­து­வரும் உள்நாட்டு மீனவக் குடும்­பங்கள் பா­ரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கையில் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டி­களால் மிகவும் பாதிக்­கப்­பட்ட ஒரு­த­ரப்­பாக இந்த மீனவ சமூகம் காணப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் கடந்த காலங்­களில் இந்த விவ­காரம் சூடு­பி­டித்­த­போது இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சினை தொடர்பில் நடுக்­க­டலில் பேச்­சு­வார்த்தை என்­றார்கள், இந்­திய நாட்டு மீனவப் பட­கு­க­ளுக்கு நிபந்தனை அடிப்படையில் அனு­மதி வழங்­கப்­போ­வ­தாக தெரி­வித்­தனர். ஆனால் இவை அனைத்தும் பெய­ர­ள­வி­லேயே நடந்­தே­றின. இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றலால் நாட்டின் மீன் வளம் மாத்­தி­ர­மன்றி மீன­வர்­களின் மீன்­பிடி உப­க­ர­ணங்கள் மற்றும் வலை­க­ளையும் அறுத்துச் செல்­கின்­றனர். அதே­நேரம் இழுவை மடிப்பட­கு­களால் மீன்­களின் இனப்­பெ­ருக்கம் படிப்­ப­டி­யாக அழிக்­கப்­ப­டு­கி­றது. இதன் விளை­வாக இலங்­கையின் கடல்­வளம் அழிக்­கப்­படும் அபாயம் நில­வு­வ­தாக துறைசார் நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். மேலும் இரு­நாட்டு மீன­வர்­க­ளையும் நடுக்­க­டலில் மோத­விட்டு இலங்கை அர­சாங்கம் வேடிக்கை பார்ப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். காலத்­துக்குக் காலம் கைது செய்­யப்­படும் இந்­திய மீன­வர்கள் விவ­காரம் தொடர்ந்தும் நடந்­தே­று­வ­துடன் பரி­தாப உயிரிழப்புக்களும் பதிவாகின்றன. காங்கேசன்துறை கடற்பரப்பில் அண்மையில் இழுவை மடிப்படகு மோதியதில் காயமடைந்த கடற்படை வீரர் அண்மையில் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது. அதேநேரம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் 29ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 வருடங்களுக்குள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 1143 இந்திய மீனவர்களும் 157 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவெனில், இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எவ்விதமான மதிப்பீடுகளையும் மேற்கொள்வதற்கு இதுவரை ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான். அதேநேரம் இலங்கையின் கடல்வள பயன்பாட்டுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் போதிய நிதி கூட ஒதுக்கப்படுவதில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடல் வளத்தை இலங்கை சரியாக பயன்படுத்தியிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருக்க முடியும் என்பதே துறைசார் நிபுணர்களின் பரிந்துரையாகவுள்ளது. https://www.virakesari.lk/article/196255
  4. யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா களமிறங்குகிறதா? - உண்மை என்ன? பட மூலாதாரம்,ED JONES/AFP படக்குறிப்பு, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியப் படைகள் போருக்குத் தயாராகி வருவதாக வெளியான கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் மற்றும் ஓல்கா இவ்ஷினா பதவி, பிபிசிக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடகொரியர்களை உள்ளடக்கிய சுமார் 3,000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவை ரஷ்ய ராணுவம் உருவாக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. யுக்ரேன் ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் இந்தத் தகவலை பிபிசி-யிடம் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் ராணுவத்தின் சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள், ரஷ்யாவுடன் வடகொரியா நெருக்கமான ராணுவக் கூட்டணியை உருவாக்கி வருவதாகக் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கிழக்கு பகுதியில், இவ்வளவு பெரிய படைப் பிரிவு உருவாகி வருகிறது என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இன்னும் பிபிசிக்கு கிடைக்கவில்லை. ஆனால், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா- யுக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடுவது குறித்து வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். பெஸ்கோவின் கூற்றுபடி, "பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பு மட்டுமல்ல, அமெரிக்க உளவு நிறுவனமும் இதுபோன்ற செய்தி அறிக்கைகளை வெளியிடுகிறது. இது போன்ற தகவல்களை வழங்குவதே இந்த அமைப்புகளின் வேலை. ஆனால் இதுகுறித்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைப்பதில்லை," என்றார். இருப்பினும், சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. பட மூலாதாரம்,VLADIMIR SMIRNOV/POOL/AFP படக்குறிப்பு, ஜூன் 19, 2024 அன்று ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான நட்பைக் கொண்டாடும் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ரஷ்யா - வட கொரியா இடையே அதிகரிக்கும் ஒத்துழைப்பு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதோடு, அவரை 'நெருங்கிய தோழர்' என்றும் குறிப்பிட்டார். ரஷ்யா-யுக்ரேன் போரில் வடகொரியா தலையிடுவது குறித்து யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரும் இந்த மாதம், யுக்ரேனில் வடகொரிய படைகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதறகான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினார். ஆனால், இந்தப் படையில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி. ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் இருந்து ஒரு ராணுவ தொடர்பான பிரமுகர் பிபிசி-யின் ரஷ்ய சேவையிடம், "பல வடகொரிய வீரர்கள் விளாடிவோஸ்டாக் (Vladivostok) நகரத்திற்கு வடக்கே உசுரிஸ்க் அருகே உள்ள ராணுவத் தளங்களுக்கு வந்துள்ளனர்," என்று கூறினார். ஆனால் உண்மையில் எத்தனை வீரர்கள் உள்ளனர் என்பதை நமக்கு தகவல் கொடுத்த நபர் கூறவில்லை. "இந்த எண்ணிக்கை நிச்சயமாக 3,000 ஆக இருக்காது," என்று அவர் கூறினார். ஒரு ராணுவ ஆய்வாளர், ரஷ்ய ராணுவம் ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களைத் தங்கள் ராணுவத்திற்குள் வெற்றிகரமாகப் பணியமர்த்த வைக்க முடியுமா என்று சந்தேகிப்பதாகக் கூறினார். பட மூலாதாரம்,KCNA/REUTERS வட கொரிய வீரர்களை ரஷ்யா எப்படி கையாளும்? ரஷ்யாவில் உள்ள ஆய்வாளர் ஒருவர், (பெயர் கூற விரும்பாமல்) பிபிசி-யிடம் பேசுகையில், "ஆரம்பத்தில், நூற்றுக்கணக்கான ரஷ்யக் கைதிகளை ராணுவத்தில் சேர்ப்பதே ரஷ்ய ராணுவத்திற்குக் கடினமாக இருந்தது. இத்தனைக்கும் அந்த கைதிகள் அனைவரும் ரஷ்ய மொழி பேசுபவர்கள்," என்றார். அதாவது, வடகொரியப் படைகளை நிர்வகிக்கும் பணி அவ்வளவு எளிதானது அல்ல. ஒருவேளை அவர்கள் 3,000 வடகொரிய வீரர்களைச் சேர்த்திருந்தாலும் கூட, அது போர்க்களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் யுக்ரேனைப் போலவே அமெரிக்காவும் இதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரிகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "ரஷ்யா, வடகொரிய வீரர்களைச் சேர்த்திருப்பது ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையேயான உறவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது," என்றார். இருப்பினும், மில்லரின் பார்வையில், இந்தச் செயல்பாடு, ரஷ்யா போர்க்களத்தில் இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன்-உடன் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, வட கொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதற்கான ஆதாரங்கள் வெளிவந்தன. யுக்ரேனின் பொல்டாவா பிராந்தியத்தில் அண்மையில் மீட்கப்பட்ட ஏவுகணை மூலம் நிரூபிக்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் வட கொரியாவிடமிருந்து ரஷ்யா வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் வெளியே கசிந்தது. இந்தத் தகவல்கள் ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் ஊழியர்களிடையே நடந்த டெலிகிராம் சேட் மூலமாகக் கசிந்தது. தரமற்ற வடகொரிய ஆயுதங்கள் யுக்ரேனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள் இந்த ஆயுதங்களின் தரம் குறித்து அடிக்கடி புகார் கூறினர். இந்த ஆயுதங்களால் தங்களது ராணுவ வீரர்கள் பலர் காயம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். குர்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யாவை நிலைநிறுத்துவதற்கு முன்னதாக, மங்கோலிய எல்லைக்கு அருகில் உள்ள உலன்-உடே பகுதியில் வடகொரியப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக யுக்ரைன் சந்தேகித்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் யுக்ரேன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. யுக்ரேனிய ஊடகமான 'டிஃபென்ஸ் எக்ஸ்பிரஸின்’ ஆசிரியர் வலேரி ரெபெக் கூறுகையில், "இந்த வடகொரிய வீரர்கள் ரஷ்யா-யுக்ரேன் எல்லையின் சில பகுதியைப் பாதுகாக்க அனுப்பப்படலாம். வட கொரிய வீரர்கள் இவ்வளவு சீக்கிரமாக முன் வரிசையில் நிறுத்தப்பட மாட்டார்கள்,” என்றார். ரெபெக்கை போன்று பல வல்லுனர்கள் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். மொழி தெரியாத வீரர்களால் என்ன பயன்? வடகொரியாவில் 12.8 லட்சம் வீரர்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவைப் போன்று வடகொரிய ராணுவத்திற்குச் சமீபத்திய போர் நடவடிக்கைகளில் அனுபவம் இல்லை. வடகொரியா தனது ஆயுதப் படைகளில் பழைய சோவியத் மாதிரியைப் பின்பற்றி வருகிறது, ஆனால் அதன் முக்கியப் படையான காலாட்படை பிரிவுகள் யுக்ரேன் உடனான போருக்கு எவ்வாறு பொருந்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்யா-வடகொரியா படைகள் இடையே மொழித் தடையும் இருக்கும். வட கொரிய வீரர்களும் ரஷ்ய அமைப்பைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். இது தற்போதைய போரில் ரஷ்யாவிற்கு சிக்கல்களையே உருவாக்கும். ஆனால் இந்த விஷயங்கள் ரஷ்யா-யுக்ரேன் போரில் வட கொரிய வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்க வாய்ப்பில்லை. அதே சமயம், வடகொரியர்கள் பொறியியல் மற்றும் கட்டுமான திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் போரில் திறன் பெற்றவர்கள் அல்ல என்பது தான் பிரச்னை. வடகொரியாவுக்கு பணமும் தொழில்நுட்பமும் தேவை. ரஷ்யாவிற்கு ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் தேவை. வடகொரியாவுக்கு என்ன ஆதாயம்? கொரியா ரிஸ்க் குழுமத்தின் இயக்குநர் ஆண்ட்ரே லாங்கோவ், "வட கொரியா ரஷ்யாவிடமிருந்து நல்ல வருவாய் பெறலாம், ஒருவேளை அவர்கள் ரஷ்ய ராணுவ தொழில்நுட்பத்திற்கான அணுகலையும் பெறலாம். வடகொரியாவிடம் ராணுவ உதவிகளைப் பெறவில்லை எனில், ரஷ்யா இந்த தொழில்நுட்பத்தை வழங்கத் தயங்கும்,” என்றார். "இது வடகொரியாவுக்கு உண்மையான போர் அனுபவத்தைத் தரும். அதே சமயம் வடகொரியாவை விட வளமான மேற்கத்திய நாடுகளில் வாழ்வதன் நன்மையை அவர்களது வீரர்கள் பெறுவார்கள்," என்றார். அதேசமயம், கடந்த இரண்டரை ஆண்டுகாலப் போரில் ரஷ்யா இழந்தவைகளுக்கு விரைவில் ஈடு செய்ய வேண்டும் என்று புதின் விரும்புகிறார். பிரிட்டனைத் தளமாகக் கொண்ட 'Conflict Studies’ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வலேரி அகிமென்கோ, வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்படுவது புதினுக்கு உதவும், என்கிறார். "இதற்கு முன்னர் அவர் முன்னெடுத்தக் கட்டாய ராணுவ அணி சேர்க்கை தோல்வியில் முடிந்தது. எனவே இம்முறை அவரது முயற்சிகளுக்கு வடகொரிய வீரர்க உதவுவார்கள்,” என்று நம்புகிறார். "யுக்ரேன் ராணுவ வீரர்களுடன் ஒப்பிடும்போது ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள் என்று புதின் நினைக்கிறார். எனவே, வடகொரிய வீரர்களை போரில் ஈடுபடுத்துவது சிறந்த வழியாக கருதுகிறார்,” என்றார். ஆனால், யுக்ரேன் அதிபர் இரு நாட்டின் கூட்டணி பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மோதல் களத்தில் இதுவரை மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் களமிறங்கவில்லை. ரஷ்யாவுக்காக நூற்றுக்கணக்கான வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டதற்கான சான்றுகள் வெளிப்படும் நிலையில், போர்க்களத்தில் நுழையும் வெளிநாட்டு (மேற்கத்திய) வீரர்கள் பற்றி புதின் அதிகமாகக் கவலைப்பட வாய்ப்பில்லை. (கூடுதல் செய்தி அறிக்கை : பால் கிர்பி, கெல்லி என்ஜி மற்றும் நிக் மார்ஷ்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn03j7x8d5eo
  5. ஈரான் கட்டமைத்த "பயங்கரவாத அச்சு சரிகிறது” - ஹமாஸ் தலைவர் கொலை குறித்து இஸ்ரேல் பிரதமர் ஈரான் கட்டமைத்த 'பயங்கரவாத அச்சு சரிகிறது’ என்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நடுவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது. கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள வீடியோ செய்தியில், “ஈரான் கட்டமைத்த பயங்கரவாதத்தின் அச்சு சரிந்து வருகிறது. ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மோஷன், ஏற்கெனவே இஸ்மாயில் ஹனியாவும் கொல்லப்பட்டார். ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃபை வீழ்த்தினொம். ஈரான் தனது சொந்த மக்கள் மீதும், அண்டை நாடுகளான ஈராக், சிரியா, லெபனான், ஏமன் மக்கள் மீது செலுத்தும் பயங்கரவாதத்தின் படியும் முழுமையாக விரைவில் முடிவுக்கு வரும். ஈரான் தலைமையிலான தீவிரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்த மாறுபட்ட எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதன் மூலம் இந்தப் போரில் மிக முக்கிய இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம். மிகப் பெரிய யூத இனப் படுகொலைக்குப் பின்னர் எங்கள் மக்களின் மீது மோசமாக தாக்குதலை நடத்தியவரின் கணக்கைத் தீர்த்துள்ளோம். இருப்பினும் ஹமாஸ் மற்றும் ஈரான் ஏவிவிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் போர் இன்னும் முடிவடையவில்லை. கடினமான நாட்கள் இன்னும் இருக்கின்றன. இறுதியில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்று கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/196565
  6. தமிழ் அரசியல் பரப்பில் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் - மணிவண்ணன் தமிழ் அரசியல் பரப்பில் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியினர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் சக வேட்பாளர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (18) காலை நல்லை ஆதீனத்துக்கு சென்று, குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, ஆயர் இல்லத்துக்கு சென்றவர்கள் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் பின்னர், மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டோம். அவருடனான கலந்துரையாடலின்போது, அவர் தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களின் போக்குகள் மாறிவிட்டதாகவும் எம்மிடம் குறைபட்டுக்கொண்டார். மேலும், தமிழ் அரசியல் பரப்பில் மாற்றம் ஒன்று நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக சொன்னார். அவரை தொடர்ந்து யாழ். ஆயரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினோம். அவரும் முற்று முழுதான மாற்றத்தையே விரும்புகிறார். நாமும் அதனை வரவேற்று , எமது வேட்பாளர்கள் தொடர்பிலும் அவர்களின் தகைமைகள், ஆளுமைகள் தொடர்பிலும் எடுத்துக்கூறி இருந்தோம். மத தலைவர்கள் போன்று தமிழ் மக்களும் மாற்றத்தையே விரும்புகிறார்கள். அதனால் எமக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மணிவண்ணன் தெரிவித்தார். மேலும், மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்றைய தினம் முதல் எமது கட்சியினர் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196597
  7. எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (18) மு.ப 09.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான கடமைக்கு சிறப்பான ஒத்துழைப்பு வழங்கிய கிராம அலுவலர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், இக் கலந்துரையாடல் ஒரு பின்னூட்டலாகவே நடைபெறும் எனவும், சனாதிபதித் தேர்தல் கடமைகளில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கமைய நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் கடமைகளில் வினைத்திறமையாக பங்களிப்பினை வழங்குமாறும் கேட்டுக்கொண்டதுடன், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் செல்லுபடியற்ற வாக்குகள் அதிகமாகவிருந்த காரணத்தினால் வாக்காளர்களுக்கான விழிப்புணர்வுச் செயற்பாடுகளை பிரதேச செயலக ரீதியாக வெளிக்கள உத்தியோகத்தர்கள் மூலம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதால் அதற்கான ஒத்துழைப்பினையும் கிராம அலுவலர்கள் வழங்குமாறும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார். பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலகர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ் விளக்கமளிக்கப்பட்டது. இச் செயலமர்வில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/196594
  8. பொதுத் தேர்தல்; விசேட தேவையுடையோருக்கு போக்குவரத்து வசதிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும் என தேர்தல் ஆணைக்கழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்கழு மேலும் தெரிவிக்கையில், பொதுத் தேர்தலில் வாக்களிப்பதற்கு நடத்து அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்ல முடியாத விசேட தேவையுடைய வாக்காளர்களுக்குப் போக்குவரத்து வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படும். இந்த போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும், பிரதேச செயலகங்களிலும், கிராம அலுவலர் அலுவலகங்களிலும், www.election .gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவும் பெற்றுக் கொள்ள முடியும். இந்த விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 7 ஆம் திகதிக்கு முன்னர் உரிய தெரிவத்தாட்சி அலுவரிடம் அல்லது மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பவர், தன்னால் கால்நடையாகவோ அல்லது பொது போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தியோ வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்ல முடியாது என நிரூபிக்கக்கூடியவாறு வைத்தியரின் சான்றிதழுடன் விண்ணப்பத்தை ஒப்படைக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்கழு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/196588
  9. யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் அவர்களுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவிற்கிடையிலான சந்திப்பு இன்று (18.10.2024) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது , நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை சனிக்கிழமை (19) யாழ்ப்பாணத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்ய விஜயம் மேற்கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இச் சந்திப்பில் உதவித் தேர்தல் ஆணையாளர் இ. கி. அமல்ராஜ், யாழ்ப்பாண பொலிஸ் தலைமைப்பீட பொறுப்பதிகாரி சம்லி பலுசேன கலந்துக்கொண்டனர். நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் நாளை (19) யாழ்ப்பாணத்திற்கு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூர்ய விஜயம் மேற்கொண்டு பொலிஸ் பொறுப்பதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ள ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/196586
  10. யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டாலும் இஸ்ரேலிற்கு எதிரான எங்கள் யுத்தம் தொடரும் - பாலஸ்தீனிய மக்கள் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ள போதிலும் இஸ்ரேலிற்கு எதிரான யுத்தம் தொடரும் என பாலஸ்தீன மக்கள் உறுதி வெளியிட்டுள்ளனர். அழிவடைந்த யுத்தத்தினால் சிதையுண்டுபோயுள்ள கான் யூனிசில் உள்ள பாலஸ்தீனியர்கள் யாஹ்யா சின்வர் கொல்லப்பட்டுள்ள போதிலும் யுத்தம் தொடரும் என உறுதியாக தெரிவிக்கின்றனர் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி சுயாதீன செய்தியாளர்களை பயன்படுத்தி பாலஸ்தீனியர்களின் கருத்தினை பெற்றுள்ளது( இஸ்ரேல் பிபிசியை பாலஸ்தீனத்திற்குள் அனுமதிப்பதில்லை என்பதுகுறிப்பிடத்தக்கது.) இந்த யுத்தம் யாஹ்யா சின்வரையோ அல்லது வேறு எவரையுமோ நம்பியிருக்கவில்லை எந்த தலைவர் அல்லது அதிகாரி மீது நம்பிக்கையை வைத்து இந்த யுத்தத்தை பாலஸ்தீனிய மக்கள் முன்னெடுக்கவில்லை என வைத்தியர் ரமடான் பாரிஸ் என்பவர் தெரிவித்துள்ளார். இது பாலஸ்தீன மக்களிற்கு எதிராக முன்னெடுக்கப்படும் அழிப்பு போர், பிரச்சினை என்பது யஹ்யா சின்வரை விட மிகப்பெரியது என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் எங்களை மாத்திரம் அழிக்கவிரும்பவில்லை, அவர் முழு மத்திய கிழக்கையும் அழிக்க விரும்புகின்றனர். அவர்கள் லெபனானில், சிரியாவில், யேமனில் போரிடுகின்றனர் என அட்னன் அசூர் என்பவர் தெரிவித்துள்ளார். எங்களிற்கும் யூதர்களிற்கும் இடையிலான யுத்தம் 100 வருடங்களிற்கு மேல் 1919ம் ஆண்டிலிருந்து இடம்பெறுகின்றது என அவர் தெரிவித்துள்ளார். சின்வரின் மரணம் ஹமாசிற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு நான் அப்படி நினைக்கவில்லை ஹமாஸ் என்பது சின்வரில்லை அது மக்கள் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196595
  11. சீக்கியரை கொல்ல முயன்றதாக அமெரிக்காவில் ரா அதிகாரி மீது குற்றச்சாட்டு - யார் இந்த விகாஷ் யாதவ்? பட மூலாதாரம்,US JUSTICE DEPARTMENT படக்குறிப்பு, அமெரிக்க நீதித்துறை வெளியிட்டுள்ள விகாஷ் யாதவின் புகைப்படம் கட்டுரை தகவல் எழுதியவர், செரில்லன் மொல்லன் பதவி, பிபிசி நியூஸ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்பட்ட அமெரிக்க குடிமகனான குர்பத்வந்த் சிங் பன்னுனை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, முன்னாள் இந்திய உளவுத்துறை அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்ல முயன்றதற்காக முன்னாள் இந்திய அரசு அதிகாரி விகாஷ் யாதவ் மீது "கொலை செய்ய கூலிப்படையை ஏவுதல் மற்றும் பணமோசடி" ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நியூயார்க்கின் தெற்கு மாகாணத்திற்கான அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. விகாஷ் யாதவ் மீதான குற்றப்பத்திரிகை, ஒரு படுகொலை முயற்சியில் இந்திய அரசை நேரடியாகச் சம்பந்தப்படுத்துவதாக உள்ளது. அமெரிக்காவின் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது. ஆனால் விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை. இந்த ஆண்டு தொடக்கத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர் நிகில் குப்தா, பிராக் (Prague) சிறையில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டார். அமெரிக்கா, கனடா என இரட்டைக் குடியுரிமை பெற்ற பன்னுன் மீதான கொலை முயற்சியில் இந்திய பிரமுகர்கள் ஈடுபட்டதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. காலிஸ்தானுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆர்வலர் என்பதால் பன்னுனை இந்திய அரசு `பயங்கரவாதி’ என்று முத்திரை குத்தியது. இந்திய அரசின் குற்றச்சாட்டுகளை பன்னுன் மறுத்தார். இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், ``அமெரிக்க நீதித்துறையின் குற்றப் பத்திரிகையில் 'சிசி-1' என்று குறிப்பிடப்பட்ட நபர் தற்போது இந்திய அரசால் பணியமர்த்தப்பட்ட ஒருவர் இல்லை” என்று கூறினார். இருப்பினும், அவர் இந்தக் கருத்தை சம்பந்தப்பட்ட நபரின் பெயரைக் குறிப்பிடாமல் கூறினார். எனவே அவர் யாதவைதான் குறிப்பிடுகிறார் என்று யூகிக்கப்பட்டது. விகாஷ் யாதவ் மீதான குற்றச்சாட்டு என்ன? பட மூலாதாரம்,GURPATWANT PANNUN/FB படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுன் குற்றப் பத்திரிகையின்படி, விகாஷ் யாதவ் என்பவர் பன்னுனை கொலை செய்வதற்கான சதித் திட்டத்தின் பின்னணியில் இருந்தவர். மேலும் இந்தக் கொலைத் திட்டத்தைச் செயல்படுத்த அவர் குப்தா என்பவரை நியமித்தார். "மே 2023இல் குப்தாவுக்கு எதிராக இந்தியாவில் தொடரப்பட்ட வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு ஈடாக இந்தப் படுகொலையைச் செயல்படுத்த அவரை விகாஷ் யாதவ் பணியமர்த்தியதாக" குற்றப் பத்திரிகை கூறுகிறது. அதோடு, "ஜூன் 2023இல் அல்லது அதற்குப் பிறகு, படுகொலைக்கான சதித் திட்டத்தைச் செயல்படுத்த, குப்தாவிடம் விகாஷ் யாதவ் குர்பத்வந்த் சிங் பன்னுன் பற்றிய தனிப்பட்ட தகவல்களை வழங்கினார். இந்தத் தனிப்பட்ட தகவல்களில், நியூயார்க் நகரில் இருக்கும் பன்னுனின் வீட்டு முகவரி, அவருடன் தொடர்புடைய தொலைபேசி எண்கள், அவரின் தினசரி விவரங்கள் ஆகியவை அடங்கும்" என்று குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது. சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதில் இந்திய அதிகாரிகளின் தலையீடு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ள நிலையில், யாதவ் மீதான குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது. யார் இந்த விகாஷ் யாதவ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குர்பத்வந்த் சிங் பன்னுனை கொல்லச் சதி செய்ததாக முன்னாள் இந்திய அதிகாரி விகாஷ் யாதவ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. விகாஷ் யாதவ் மீதான குற்றப் பத்திரிகை, "இந்திய குடிமகன், இந்தியாவில் வசிப்பவர்" என்று அவரை விவரிக்கிறது. அவரை விகாஸ் மற்றும் அமானத் என்ற பெயர்களிலும் குறிப்பிட்டுள்ளனர். அவர் இந்திய அரசின் அமைச்சரவை செயலகத்தில் பணியில் இருந்தார். அதன் கீழ்தான் இந்தியாவின் உயர் புலனாய்வு அமைப்பான `ரா’ (RAW) செயல்படுகிறது. `ரா’ உளவு அமைப்பு பிரதமர் அலுவலகத்தினுடைய (PMO) அதிகாரத்தின் கீழ் செயல்படுகிறது. "பாதுகாப்பு மேலாண்மை" மற்றும் "உளவுத்துறை" ஆகிய பிரிவுகளில் பணி புரியும் "மூத்த கள அதிகாரி" (Senior Field Officer) என்று யாதவ் தனது பதவியை விவரித்ததாகக் குற்றப் பத்திரிகை கூறுகிறது. அவர் இந்தியாவின் துணை ராணுவ மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் (CRPF) பணியாற்றியதாகவும், "போர்க் கருவிகள் மற்றும் ஆயுதங்களில்" பயிற்சி பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. `படுகொலை சதி’ என்று கூறப்படும் இந்த வழக்கு விசாரணையில் இந்தியாவின் ஒத்துழைப்பு திருப்தி அளிப்பதாக அமெரிக்க வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்தியா, கனடா ஆகிய இரு நாடுகளும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைச் சுமத்திக் கொண்டிருப்பதால் கனடா உடனான இந்தியாவின் உறவு தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கனடா குறிப்பிடும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலில் சில நபர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அந்த நபர்களை நாடு கடத்துமாறு கனடாவிடம் இந்தியா பலமுறை கேட்டுக் கொண்டதாகவும், ஆனால் அதற்கு கனடா தரப்பில் எந்தப் பதிலும் வரவில்லை என்றும் ஜெய்ஸ்வால் குறிப்பிட்டுள்ளார். இந்திய அரசு அதிகாரிகள், பிஷ்னோய் கும்பலைப் பயன்படுத்தி "கொலைகள், மிரட்டிப் பணம் பறித்தல், வன்முறைச் செயல்கள்" மற்றும் காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் ஆதரவாளர்களைக் குறிவைத்தல் ஆகிய குற்றங்களைச் செய்வதாக கனடிய காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ள இந்தியா, இந்தக் குற்றங்கள் தொடர்பான எந்த ஆதாரத்தையும் கனடா வழங்கவில்லை என்று கூறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx208g7xlxmo
  12. அமரர் நாகலிங்கம் கனகலிங்கம் ஐயாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள். விபரங்கள் கீழுள்ள இணைப்பில். https://ripbook.com/nagalingam-kanagalingam-65409ea124ab0/notice/remembrance-66f565336ac3c
  13. இங்கிலாந்து - பாகிஸ்தான் 2ஆவது டெஸ்ட் போட்டியில் யாரும் வெற்றிபெறலாம் என்ற நிலை (நெவில் அன்தனி) முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் வெற்றிக்கு மேலும் 261 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. போட்டியின் 3ஆம் நாளான வியாழனன்று 297 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் இங்கிலாந்து போட்டியின் 3ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 36 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஒலி போப் 21 ஓட்டங்களுடனும் ஜோ ரூட் 12 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதுள்ளனர். போட்டியில் இன்னும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் இந்தப் போட்டியில் என்த அணியும் வெற்றி பெறலாம் என்ற நிலை காணப்படுகிறது. எண்ணிக்கை சுருக்கம் பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 366 (கம்ரன் குலாம் 118, சாய்ம் அயூப் 77, மொஹம்மத் ரிஸ்வான் 41, நோமான் அலி சல்மான் அகா 31, ஜெக் லீச் 114 - 4 விக்., ப்றைடன் கார்ஸ் 50 - 3 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 291 (பென் டக்கட் 114, ஜோ ரூட் 34, சாஜித் கான் 111 - 7 விக்., நோமான் அலி 101 - 3 விக்.) பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 221 (சல்மான் அகா 63, சவூத் ஷக்கீல் 31, கம்ரன் குலாம் 26, ஷொயெப் பஷிர் 66 - 4 விக்., ஜெக் லீச் 67 - 3 விக்.) இங்கிலாந்து வெற்றி இலக்கு 297 ஓட்டங்கள் - 2ஆவது இன்: 36 - 2 விக். https://www.virakesari.lk/article/196541
  14. மேற்கிந்தியத் தீவுகளை நையப்புடைத்து 9 விக்கெட்களால் வென்ற இலங்கை தொடரையும் (2 - 1) கைப்பற்றி வரலாறு படைத்தது (நெவில் அன்தனி) ரங்கிரி தம்புள்ளை சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 3ஆவதும் திர்மானம் மிக்கதுமான சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் முன்வரிசை வீரர்களின் அபார துடுப்பாட்டங்களின் உதவியுடன் 9 விக்கெட்களால் இலங்கை மிக இலகுவாக வெற்றிபெற்றது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை கைப்பற்றியது. அத்துடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இருதரப்பு சர்வதேச ரி20 தொடரில் இலங்கை வெற்றிபெற்றது இதுவே முதல் தடவையாகும். 2016இல் நடைபெற்ற தோடர் சமநிலையில் முடிவடைந்ததுடன் 2020இலும் 2021இலும் இலங்கை தோல்வி அடைந்திருந்தது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு இரண்டாவது போட்டியில் நிர்ணயித்த 163 ஓட்டங்கள் என்ற அதே வெற்றி இலக்கை நோக்கி இந்தப் போட்டியில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 18 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 166 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 32 பந்துகளில் 60 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரில் ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 22 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 39 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். ஆரம்பத்தில் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் பின்னர் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை வேகமாக பெற்றார். அவருக்கு இணையாக குசல் பெரேராவும் வேகமாக ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 76 பந்துகளில் 106 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் வெற்றியை இலகுவாக்கினர். குசல் மெண்டிஸ் 50 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 68 ஓட்டங்களுடனும் குசல் பெரேரா 36 பந்துகளில் 7 பவுண்டறிகள் உட்பட 55 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. இரண்டாவது போட்டியில் அரைச் சதம் குவித்த எவின் லூயிஸ் முதல் ஓவரிலேயே ஓட்டம் பெறாமல் விக்கெட்டைப் பறிகொடுத்தார். அதன் பின்னர் சீரான இடைவெளியில் விக்கெட்கள் சரிய 12ஆவது ஓவரில் அதன் மொத்த எண்ணிக்கை 5 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களாக இருந்தது. முன்வரிசையில் ப்றெண்டன் கிங் 23 ஓட்டங்களையும் அணிக்கு மீளழைக்கப்பட்ட ஷாய் ஹோப் 18 ஓட்டங்களையும் பெற்றனர். மத்திய வரிசையில் அணித் தலைவர் ரோவ்மன் பவல், குடாக்கேஷ் மோட்டியும் ஆகிய இருவரும் 26 பந்துகளில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறிது தெம்பைக் கொடுத்தனர். மோட்டி 15 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 32 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து ரோவ்மன் பவல் 7ஆவது விக்கெட்டில் ரொமாரி ஷெப்பர்டுடன் மேலும் 31 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ரோவ்மன் பவல் 27 பந்துகளில் ஒரு பவுண்டறி, 3 சிக்ஸ்களுடன் 37 ஓட்டங்களையும் ரொமாரியோ ஷெப்பர்ட் 18 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: குசல் மெண்டிஸ்; தொடர்நாயகன்: பெத்தும் நிஸ்ஸன்க https://www.virakesari.lk/article/196537
  15. இந்தியா ‘பெரும் தவறு செய்துவிட்டது’ என்று கூறிய ட்ரூடோ – இந்திய அரசின் பதில் என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர், அதற்கான ஆதாரம் இல்லை எனக் கூறியுள்ளார் 17 அக்டோபர் 2024 காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாகக் கூறிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அது இந்தியாவின் ‘மிகப்பெரிய தவறு’ என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தத் தவற்றை கனடாவால் கண்டுகொள்ளாமல் இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். கனடா மண்ணில் இந்திய எதிர்ப்பாளர்களைக் குறிவைத்து கொலைகள், மிரட்டி பணம் பறித்தல், மற்றும் பிற வன்முறைச் செயல்களில் இந்தியா ஈடுபட்டதாகக் கனடா அதிகாரிகள் குற்றம் சாட்டிய இரண்டு நாட்களுக்குப் பிறகு ட்ரூடோ இந்தக் கருத்தைத் தெரிவித்தார். கனடாவின் இந்தக் குற்றச்சாட்டுகள் ‘அபாண்டமானவை’ என்று கூறியிருக்கும் இந்தியா, அவற்றை நிராகரித்திருக்கிறது. அரசியல் ஆதாயத்திற்காகக் கனடாவின் சீக்கியச் சமூகத்தை மகிழ்விக்க ட்ரூடோ முயல்வதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் மாதம் கனடா பிரஜையான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார். அதன் பிறகு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்தக் கொலைக்கு இந்தியாதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அதை இந்தியா முழுமையாக நிராகரித்தது. அதன் பிறகு இரு நாடுகளும் தங்கள் பிரதிநிதிகளை சொந்த நாடுகளுக்கு வரும்படி அழைப்பு விடுத்தன. இதன் பிறகு இரண்டு நாடுகளுக்கும் இடையே சூடான கருத்து மோதல் ஏற்பட்டது. தற்போது இருநாட்டு உறவும் மோசமான நிலையை எட்டியுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் வெளிநாட்டு தலையீடு தொடர்பான விசாரணையின்போது கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆஜரானார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நிஜ்ஜார் கொலையில், இந்தியாவின் தலையீடு இருப்பதாகக் கிடைத்த உறுதியான உளவுத் தகவலின் அடிப்படையிலேயே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்ததாகவும் இதுதொடர்பாக ஆதாரங்கள் எதையும் புலனாய்வு அமைப்பு வழங்கவில்லை,” எனவும் தெரிவித்தார். இந்நிலையில், தாங்கள் வலியுறுத்தி வரும் கூற்றை ஆமோதிக்கும் வகையில் ட்ரூடோவின் கூற்று இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பதில் இந்நிலையில் இந்தப் பிரச்னை குறித்து, வியாழக்கிழமை (அக்டோபர் 17) அன்று பேசிய இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது. அதில், ‘கனடா இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறது, ஆனால் அதற்கான ஆதாரங்களை வழங்கவில்லை’ என்று கூறியிருக்கிறது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறும்போது, “இந்தப் பிரச்சினையில் நாங்கள் ஏற்கனவே எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியுள்ளோம். கடந்த இரண்டு நாட்களாக இது தொடர்பாகப் பல செய்திக்குறிப்புகளை வெளியிட்டுள்ளோம், அதில் எங்களது நிலைப்பாடு தெளிவாக உள்ளது,” என்றார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “கடந்த செப்டம்பர் மாதம் முதல் கனடா அரசு ஒரு சிறு தகவலைக் கூட எங்களுடன் பகிர்ந்து கொள்ளவில்லை. நேற்று நாங்கள் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டோம். கனடா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது, ஆனால் அதற்கு தை ஆதரிக்க எந்த உறுதியான ஆதாரத்தையும் வழங்கவில்லை,” என்றார். “எங்கள் இராஜதந்திரிகளுக்கு எதிரான பொய்யான குற்றச்சாட்டுகளை நாங்கள் நிராகரிக்கிறோம்," என்று அவர் கூறினார். ‘இந்திய அரசு தவறு செய்துவிட்டது’ பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கனடிய அரசின் குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடா இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என இந்தியா தெரிவித்துள்ளது ஹர்தீப் சிங் நிஜ்ஜார், காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரான இவரை இந்தியா பயங்கரவாதி என்று அறிவித்துள்ளது. அவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருக்கும் சர்ரே பகுதியில், ஒரு வாகன நிறுத்துமிடத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் குறித்த ஜஸ்டின் ட்ரூடோவின் சமீபத்திய அறிக்கைக்குப் பிறகு, இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு வலு சேர்க்கும் வகையில் கனடா இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது. நிஜ்ஜாரின் மரணம் இந்தியாவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்து, நிஜ்ஜார் கொலையை விசாரிக்கப் புலனாய்வு அமைப்புகளைக் கேட்டுக் கொண்டதாக கனடா பிரதமர் தெரிவித்தார். ஆனால், “இந்தக் கொலையை உளவுத்துறையினர் ஏற்கெனவே கண்காணித்து வருவதைத் தாம் பின்னர் அறிந்ததாகவும்” கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கனடா பிரதமரின் பேச்சு, “நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்துவதாக” இந்தியா தெரிவித்துள்ளது இந்த விஷயத்தில் இந்தியா மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகக் கூறிய அவர், “கடந்த ஆண்டு கனடா மண்ணில் சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருந்தால், அந்தக் குற்றச்சாட்டை கனடாவால் புறக்கணிக்க முடியாது,” என்றார். “நாங்கள் இந்தியாவை தூண்டிவிடவோ அல்லது சண்டையிடவோ நினைக்கவில்லை. அதேவேளையில், கனடாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையில் தலையிடலாம் என்று நினைத்து இந்திய அரசு மிகப்பெரிய தவறு செய்துவிட்டது. கனடியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய நாங்கள் எதிர்வினையாற்ற வேண்டியுள்ளது,” என்று கூறினார். ஜஸ்டின் ட்ரூடோவின் பேச்சுக்கு எதிர்வினையாற்றியுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், கனடா பிரதமரின் பேச்சு, “நாங்கள் தொடர்ந்து பேசி வருவதை உறுதிப்படுத்துவதாக” தெரிவித்துள்ளது. “இந்தியா மற்றும் இந்திய தூதர்கள் மீது சுமத்தப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை ஆதரிக்க கனடா எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை. பிரதமர் ட்ரூடோ மட்டுமே இதற்குப் பொறுப்பு. இந்தப் பொறுப்பற்ற செயல் இந்தியா – கனடா உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது,” என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா – கனடா உறவில் விரிசல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமர் மோதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பியதாக ட்ரூடோ கூறினார் இந்தியா, கனடா இடையிலான உறவு கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த திங்களன்று, கனடாவில் இருந்து இந்திய தூதர் சஞ்சய் வர்மா மற்றும் பல தூதரக அதிகாரிகளை இந்தியா திரும்ப அழைத்ததாகக் கூறியது. இதனுடன், இந்தியா ஆறு கனடிய தூதரக அதிகாரிகளை நாட்டைவிட்டு வெளியேற்றியது. ஆனால், கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைநகர் ஒட்டாவாவில் செய்தியாளர் சந்திப்பில், தனது அரசு, ஆறு இந்திய தூதர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியதாகக் கூறினார். இதுதவிர, கனடாவின் ராயல் மௌன்ட் போலீசார், திங்களன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில், இந்திய ஏஜென்டுகள் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்களை, குறிப்பாக காலிஸ்தான் ஆதரவாளர்களை, கனடாவில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான பிஷ்னோய் குழுவின் உதவியுடன் குறிவைப்பதாகக் கூறியது. ஜி20 மாநாட்டில் ஜஸ்டின் ட்ரூடோ என்ன செய்தார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, “மோதி இப்பிரச்னை தொடர்பாக தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார்" என ட்ரூடோ தெரிவித்தார் இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நிஜ்ஜார் கொலை குறித்த விவரங்களைப் பகிரங்கப்படுத்த வேண்டாம் என்று தனது அரசு முடிவு செய்ததாக விசாரணையின்போது ட்ரூடோ தெரிவித்தார். “நாங்கள் நினைத்திருந்தால், உச்சிமாநாட்டிற்கு முன்னதாகவே இதைப் பகிரங்கப்படுத்தி, இந்தியாவிற்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யவில்லை. இந்தியா எங்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதற்காக, இதுதொடர்பாக நாங்கள் பின்னால் இருந்து வேலைகளை தொடர்ந்தோம். இதற்கான ஆதாரங்கள் குறித்து இந்தியா எங்களிடம் கேட்டது. உங்களின் (இந்தியா) பாதுகாப்பு முகமைகள் அதுகுறித்து தெரிவிக்கும் என கூறினோம். ” என்று கூறினார். மேலும், இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டின்போது பிரதமர் நரேந்திர மோதியிடம் இந்தப் பிரச்னையை எழுப்பியதாகவும் ஜஸ்டின் ட்ரூடோ கூறினார். இதில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதைத் தான் அறிந்திருப்பதாக அவரிடம் கூறியதாகவும் அதுகுறித்த தனது கவலையை வெளிப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். “மோதி தனது வழக்கமான பாணியில் பதிலளித்தார். கனடாவில் இந்திய அரசுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்கள் இருப்பதாகவும் அவர்கள் கைது செய்யப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்” என்றும் ஜஸ்டின் ட்ரூடோ குறிப்பிட்டார். ஜி20 உச்சிமாநாட்டில் இருந்து நாடு திரும்பிய பிறகு கனடா நாடாளுமன்றத்தில் நிஜ்ஜார் கொலை குறித்த குற்றச்சாட்டுகளைப் பகிரங்கப்படுத்தினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5y3jg59jn4o
  16. வடகிழக்கு தமிழர்களின் உண்மையான அபிலாஷைகளை தேசிய மக்கள் சக்தி புரிந்துகொள்ளவில்லை - ரில்வின் சில்வாவின் கருத்து இதை காண்பிக்கிறது - தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் (நா.தனுஜா) மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வாவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து, அவர்கள் வட, கிழக்கு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷைகள் என்னவென்பதை இன்னமும் அறிந்துகொள்ளவில்லை என்பதையே காண்பிக்கிறது எனச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானதாக அன்றி, சகல இனங்களுக்குமானதாக அமையவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா, 'அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அனைத்துப் பிரச்சினைகளுக்குமான தீர்வாக அமையாது. வடக்கு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி தமிழ் அரசியல்வாதிகள் பேசுவதில்லை. மாறாக அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் மற்றும் அதிகாரப்பகிர்வு என்பன பற்றி மாத்திரமே பேசுவார்கள். இருப்பினும் நாம் வடக்கில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகளுக்குக் கட்டம் கட்டமாக உரிய தீர்வு வழங்குவோம்' எனக் குறிப்பிட்டிருந்தார். டில்வின் சில்வாவின் இக்கருத்தை 'வட, கிழக்கு தமிழ் மக்களின் உண்மையான அபிலாஷை என்னவென்பதை அறியாதோரின் கருத்து' என விமர்சித்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் எம்.ஏ.சுமந்திரன், இந்தக் கருத்து நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்குத் தாம் மேற்கொண்ட தீர்மானம் சரியானது என்பதைக் காண்பிப்பதாகத் தெரிவித்தார். 'தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் விஞ்ஞாபனத்தில் 2015 - 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுப் பூர்த்திசெய்யப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. இருப்பினும் அதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. எது எவ்வாறிருப்பினும் அத்தேர்தலில் சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு நாம் எடுத்த தீர்மானம் சரி என்பதையே டில்வின் சில்வாவின் கருத்து வெளிப்படுத்துகின்றது. தேசிய மக்கள் சக்தியினரை ஒட்டுமொத்தமாக இனவாதிகள் எனக் கூறமுடியாது. ஆனால் இத்தகைய கருத்துக்கள் அவர்கள் குறித்தவொரு இனத்தின் அபிலாஷைகளை சரிவரப் புரிந்துகொள்ளவில்லை என்பதையே காண்பிக்கின்றன. சமத்துவம் என்பது தனியொரு இனத்துக்கானதாக அன்றி, சகல இனங்களுக்குமானதாக அமையவேண்டும். இருப்பினும் பொதுத்தேர்தலின் பின்னர் ஏற்கனவே அளிக்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகள் முன்னெடுக்கப்படும் பட்சத்தில், இயலுமானவரை அதில் சமஷ்டி கட்டமைப்பை உள்ளடக்குவதை முன்னிறுத்தி அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவோம்' எனவும் சுமந்திரன் குறிப்பிட்டார். அதேவேளை இதுபற்றிக் கருத்துரைத்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அரசியலமைப்பு உருவாக்க நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுக்கவிருப்பதாக தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்தது. இருப்பினும் இப்புதிய அரசியலமைப்பானது நாட்டை ஒற்றையாட்சிக்குள் முடக்கும் செயற்பாடு என்பது அனைவருக்கும் தெரியும். அதனை இந்தக் கருத்து மீளுறுதிப்படுத்தியிருக்கிறது' எனச் சுட்டிக்காட்டினார். அத்தோடு நல்லாட்சி அரசாங்கத்தினால் இந்த அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தவிர்ந்த ஏனைய சகல தமிழ் அரசியல் கட்சிகளும் அதனை ஆதரித்ததாகக் குறிப்பிட்ட கஜேந்திரகுமார், எனவே எதிர்வருங்காலத்தில் இம்முயற்சியைத் தம்மால் மாத்திரமே முறியடிக்கமுடியும் என்றும், அதற்கு வட, கிழக்கு மாகாணங்களில் தமக்கு 10 ஆசனங்களேனும் கிடைக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும் தமிழ் அரசியல் தலைவர்கள் 13ஆவது திருத்தத்தை மாத்திரமே கேட்பதாகவும், தமிழ் மக்களின் ஏனைய பிரச்சினைகள் குறித்துப் பேசுவதில்லை எனவும் டில்வின் சில்வா கூறுவது முற்றிலும் தவறானது எனச் சுட்டிக்காட்டிய ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் பொதுத்தேர்தல் வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன், பொருளாதார நெருக்கடி, காணி அபகரிப்பு, குடிநீர்ப்பிரச்சினை, தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல்கள் என்பன உள்ளடங்கலாக தமிழர்களின் பிரச்சினைகள் பற்றி தாம் தொடர்ந்து பேசியிருப்பதாகவும், இருப்பினும் அதற்கு கடந்தகால அரசாங்கங்களும், தேசிய மக்கள் சக்தியும் செவிசாய்க்கவில்லை எனவும் விசனம் வெளியிட்டார். 'நாங்கள் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையான தீர்வாகக் கருதவில்லை. இருப்பினும் அது நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருப்பதனால் முதலில் அதனை நடைமுறைப்படுத்துமாறும், அடுத்தகட்டமாக சமஷ்டி அடிப்படையிலான தீர்வு நோக்கி நகருமாறும் வலியுறுத்திவருகிறோம். இருப்பினும் அரசியலமைப்பில் உள்ள ஒரு திருத்தத்தை நடைமுறைப்படுத்தச் செய்வதே பெரும் பிரயத்தனமாக இருக்கிறது. அவ்வாறிருக்கையில் அடுத்தகட்டம் நோக்கிப் பயணிப்பதென்பது மிகவும் சவாலான விடயமாகவே இருக்கும்' எனவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196525
  17. ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கண்டுபிடித்து, கொலை செய்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜெரிமி பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 54 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலின் மூளையாகச் செயல்பட்டவர் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார். அந்தத் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தலைமறைவான நிலையில் இஸ்ரேலிய படையினர் ஓராண்டுக்கும் மேலாக அவரைத் தேடி வந்தனர். ஹமாஸ் தலைவரான, 61 வயதான சின்வார், காஸா முனையில் பூமிக்கு அடியில் அமைந்துள்ள சுரங்கப்பாதைகளில் மெய்க்காப்பாளர்கள் மற்றும் இஸ்ரேலில் இருந்து பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டவர்களை “மனிதக் கேடயங்களாக” பயன்படுத்தி பெருமளவு காலத்தைக் கழித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், தெற்கு காஸாவில் இஸ்ரேல் படையினர் ரோந்து மேற்கொண்டபோது அவர் கொல்லப்பட்டார். அப்போது குறைவான காப்பாளர்களே அங்கிருந்தனர். அங்கு பணயக் கைதிகள் யாரும் இல்லை. அவர் கொல்லப்பட்டது குறித்த மேலதிக தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. சின்வார் கொல்லப்பட்டது குறித்து நாங்கள் இதுவரை அறிந்த தகவல்களை இங்கு தொகுத்துள்ளோம். வழக்கமான ரோந்து கடந்த புதன்கிழமையன்று ரஃபா நகரில் அமைந்துள்ள தல்-அல்-சுல்தான் பகுதியில் 828வது பிஸ்லாமக் (Bislamach) படையணியினர் ரோந்து மேற்கொண்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் ஹமாஸ் ஆயுதக்குழுவை சேர்ந்த மூவரின் இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு, அவர்களுடன் இஸ்ரேல் துருப்புகள் சண்டையிட்டுள்ளன. இதில், அவர்கள் மூவரும் கொல்லப்பட்டனர். அந்த நேரம் வரை குறிப்பிடத்தக்க மோதலாக இது கருதப்படவில்லை. மேலும், வியாழக்கிழமை காலை வரை இஸ்ரேலிய படையினர் அந்தப் பகுதிக்கு மீண்டும் செல்லவில்லை. இந்தச் சண்டையில் இறந்தவர்கள் குறித்து பரிசோதனை செய்யும் போதுதான், அங்கிருந்த ஒரு சடலம், நம்ப முடியாத வகையில் ஹமாஸ் தலைவரின் தோற்றத்தை ஒத்திருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. திடீர் தாக்குதல் நிகழலாம் என்ற சந்தேகத்தால், அச்சடலம் அங்கேயே விடப்பட்டு, விரல் மட்டும் அகற்றப்பட்டு பரிசோதனைக்காக இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. பின்னர் அப்பகுதி பாதுகாப்பானது எனத் தெரிய வந்ததை அடுத்து, அங்கிருந்து அந்தச் சடலம் இஸ்ரேலுக்கு கொண்டு செல்லப்பட்டது. இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி, “அவர் (யாஹ்யா சின்வார்) அங்கிருப்பார் என்பது எங்கள் படைகளுக்குத் தெரியாது, ஆனாலும் நாங்கள் தாக்குதலைத் தொடர்ந்தோம்” என்றார். அந்தப் பகுதியில் மூன்று நபர்கள் அங்கும் இங்கும் ஓடியதாகவும், தங்கள் படைகள் அவர்களைக் கண்டறிந்து தாக்குதலில் ஈடுபட்ட நிலையில், அவர்கள் மூவரும் பிரிந்து சென்றதாகவும் கூறினார். சின்வார் என அடையாளம் காணப்பட்ட நபர், “தனியாக ஒரு கட்டடத்திற்குள் ஓடினார்” என்றும் ட்ரோன் மூலம் அவரது இருப்பிடம் அடையாளம் காணப்பட்டு அவர் கொல்லப்பட்டதாகவும் டேனியல் ஹகாரி தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த செப்டம்பர் மாதம், ரஃபாவின் தெருக்களில் ரோந்து சென்றுகொண்டிருந்த இஸ்ரேலிய துருப்புகள் சின்வார் மனித கேடயமாகப் பயன்படுத்தியிருக்கலாம் என நம்பப்பட்ட பணயக் கைதிகள் யாரும் அப்பகுதியில் இல்லை. ஒருவேளை யாரும் அறியாதவண்ணம் அவர் அங்கிருந்து இடம்பெயரும் முயற்சியில் இருந்திருக்கலாம். அல்லது, அவரது பாதுகாப்புக்காக இருந்த வீரர்களில் பலரை அவர் இழந்திருக்கக்கூடும் என்பதையே அவருடன் இருந்த மிகச் சிறிய அளவிலான பாதுகாவலர்கள் குழு உணர்த்துகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலண்ட் கூறுகையில், “சின்வார் ஓடும்போது அவர் அடித்து, தாக்கப்பட்டதில் உயிரிழந்தார். அவர் ஒரு படைத் தலைவராக இறக்கவில்லை, தன்னுடைய நலனை மட்டுமே சிந்தித்த ஒருவராகவே அவர் இறந்தார். எங்களுடைய அனைத்து எதிரிகளுக்கும் இது ஒரு செய்தி” என்று தெரிவித்தார். இஸ்ரேல் ராணுவத்தால் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட ட்ரோன் காட்சியில், சின்வார் கொல்லப்படுவதற்கு முன்பு நிகழ்ந்த கடைசி தருணங்கள் காட்டப்பட்டன. பெருமளவு அழிக்கப்பட்ட கட்டடத்திற்குள் ட்ரோன் மூலம் அந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இடிபாடுகள் நிறைந்த கட்டடத்தின் முதல்தளத்தில் தலை மூடப்பட்டு, நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஒருவரை நோக்கி அந்த ட்ரோன் செல்கிறது. காயமடைந்திருப்பதாகத் தோன்றும் அந்த நபர் கம்பு போன்ற ஒரு பொருளை ட்ரோன் மீது வீசியதைப் பார்க்க முடிகிறது. அத்துடன் அந்த வீடியோ முடிவடைந்தது. சின்வார் கொல்லப்பட்டதை உறுதி செய்த இஸ்ரேல் பட மூலாதாரம்,GETTY IMAGES காஸாவில் வியாழக்கிழமை மதிய நேரத்தில் யாஹ்யா சின்வார் உயிரிழந்தாரா என்பதற்கான “சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக” இஸ்ரேல் முதலில் அறிவித்தது. அந்த அறிவிப்பு வந்த சில நிமிடங்களிலேயே, ஹமாஸ் தலைவருடன் ஒத்த அம்சங்களைக் கொண்ட நபரின் சடலம் தொடர்பான படங்கள், சமூக ஊடகங்களில் பதிவிடப்பட்டன. அதில் அந்நபருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டிருந்தது. பிரசுரிக்க முடியாத நிலையில் கோரமாக அந்தப் படங்கள் உள்ளன. இருப்பினும், உயிரிழந்த மூன்று பேரின் அடையாளத்தை “இந்தக் கட்டத்தில்” உறுதிப்படுத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து, சிறிது நேரத்திலேயே யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக, “தாங்கள் அதிகம் நம்புவதாக” இஸ்ரேல் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர். எனினும், அவருடைய இறப்பை உறுதி செய்வதற்கு முன்பாக அனைத்து அவசியமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்தனர். அந்தப் பரிசோதனைகளை மேற்கொள்ள அதிக நேரமாகவில்லை. வியாழக்கிழமை மாலையே, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, சின்வார் “கொல்லப்பட்டதாக” இஸ்ரேல் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “தீயசக்திக்குப் பெரும் அடி” என்றும், “ஆனாலும், காஸாவில் நடைபெற்று வரும் போர் முடிவுறவில்லை” எனவும் எச்சரித்துள்ளார். இஸ்ரேல் ராணுவம் சின்வாரை சுற்றி வளைத்தது எப்படி? பட மூலாதாரம்,IDF திட்டமிடப்பட்ட தாக்குதலின்போது சின்வார் கொல்லப்படவில்லை என்றாலும், அவர் எங்கிருக்கலாம் என்பது குறித்து உளவுத்துறை தகவல் அளித்த பகுதிகளில் பல வாரங்களாகத் தாங்கள் செயல்பட்டு வந்ததாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் மிகவும் உள்ளே சென்று, அவருடைய இருப்பிடத்தைக் கண்டறிந்து, அப்பகுதிக்கு மெதுவாக முன்னேறியுள்ளனர். ஓராண்டுக்கும் மேலாக சின்வார் தலைமறைவாக இருந்தார். முகமது டைஃப், இஸ்மாயில் ஹனியே போன்ற மற்ற ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்டது, அக்டோபர் 7 தாக்குதலை மேற்கொள்ள அவர் பயன்படுத்திய கட்டமைப்பை அழித்தது, ஆகியவற்றின் விளைவாக இஸ்ரேலின் அழுத்தத்தை சின்வார் நிச்சயமாக உணர்ந்திருப்பார். இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் வெளியிட்ட அறிக்கையில், தெற்கு பகுதியில் தங்களின் சமீபத்திய நடவடிக்கைகள் மூலம் தங்கள் படைகள் “சின்வாரை பின்தொடர்ந்ததால், அவருடைய நகர்வுகள் சுருக்கப்பட்டு, பெரும்பாலும் தடை செய்யப்பட்டது, இதையடுத்து அவர் கொல்லப்பட்டார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இதுவே போரின் முடிவு இல்லை’ பட மூலாதாரம்,GETTY IMAGES அக்டோபர் 7 தாக்குதல் நடந்தது முதலே, சின்வாரை கொல்வது இஸ்ரேலின் முக்கிய இலக்காக இருந்தது. ஆனால், அவரது முடிவு மட்டுமே காஸா போரின் முடிவை உறுதி செய்துவிடவில்லை. நெதன்யாகு, தான் ‘பழிதீர்த்துவிட்டதாக” கூறினாலும், குறைந்தபட்சம் ஹமாஸ் பிடியில் இருக்கும் 101 பணயக் கைதிகளை மீட்கும் வரையிலாவது இந்தப் போர் தொடரும் என்று வலியுறுத்தியுள்ளார். “பணயக் கைதிகளின் குடும்பங்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக் கொள்கிறேன். போரில் இதுவொரு முக்கியமான தருணம். நமது அன்புக்குரியவர்கள், அனைவரும் வீட்டிற்குத் திரும்பும் வரை நாங்கள் முழு பலத்துடன் தொடர்ந்து போரிடுவோம்,” என்று நெதன்யாகு கூறியுள்ளார். ஆனால், தற்போதைய சூழலில், பணயக் கைதிகளை திருப்பிக் கொண்டுவர ஏதுவான ஒரு போர் நிறுத்தம் கொண்டுவரப்படும் என்று கருதியதாக இஸ்ரேலில் உள்ள பணயக் கைதிகளின் குடும்பங்கள் தெரிவித்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cr54ym8dgdyo
  18. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகள் உடனடியாக வெளிப்படுத்தப்பட வேண்டும் - நிமல் லான்சா எம்.மனோசித்ரா கத்தோலிக்க திருச்சபை மற்றும் கத்தோலிக்க மக்களை ஏமாற்றாமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டும். அவற்றில் ஏதேனும் குறைபாடுகள் அல்லது பிழைகள் இருந்தால் அவை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்தார். நீர்கொழும்பில் வியாழக்கிழமை (17) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மிகவும் உணர்ச்சிகரமான விடயமாகும். எனவே அந்த தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிட்டு நீதி வழங்கப்பட வேண்டும் என கத்தோலிக்க திருச்சபையும் கத்தோலிக்க மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது நாடகம் அல்ல. கத்தோலிக்க மக்கள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை நம்புகின்றனர். எனவே அந்த நம்பிக்கையை அவர் பாதுகாக்க வேண்டும். ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டைப் பொறுப்பேற்றபோது அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை இருந்தது. ஆனால், அவர் பதவியேற்ற பின்னர், அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. நல்லாட்சியின்போதும் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. ஊதிய முரண்பாடுகளைக் களைய குழுக்கள் நியமிக்கப்பட்டன. பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதால் அடுத்த வருடம் முதல் அரச ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை சம்பளத்தை அதிகரிக்கவுள்ளதாக முன்னர் மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. ஆனால் தற்போது தாம் சம்பள அதிகரிப்பை வழங்குவதாகக் கூறவில்லை என்று அவர்கள் மறுக்கின்றனர். சுமார் 80 சதவீத அரச ஊழியர்கள் தேசிய மக்கள் சக்திக்கே வாக்களித்தனர். எனவே அவர்களை இந்த அரசாங்கம் ஏமாற்றக்கூடாது என்றார். https://www.virakesari.lk/article/196511
  19. எங்களை வைத்து வியாபாரம் செய்வதே அரசியல் வாதிகளின் நோக்கமாக இருப்பதாக முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக் கொண்ட சுயேட்சை குழு தெரிவித்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் முன்னாள் போராளிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைக்கொண்ட சுயேட்சைக்குழுவானது அரிக்கன் இலாம்பு சின்னத்தில் போட்டியிடுகின்றது. இது தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகசந்திப்பு வவுனியாவில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்; வன்னியில் அவையவங்களை இழந்த பலபோராளிகள் உள்ளனர். அன்றாட உணவுக்கே அவர்கள் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. அநாதைகளாக உள்ள அவர்களை இந்த அரசியல் வாதிகள் யாருமே கண்டுகொள்வதில்லை. எம்மை வைத்து வியாபாரம் செய்வதே அவர்களது நோக்கம். எனவே நேரடியாக பாதிக்கப்பட்ட எமக்கே அந்த விடயங்கள் புரியும். எனவே எமது தேவைகளை பூர்த்திசெய்வதற்காக இந்த தேர்தலில் நாம் நிற்கிற்றோம் என்றனர். https://www.virakesari.lk/article/196540
  20. பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, பெற்றோரை கொலை செய்தபின் அவர்களின் ஓய்வூதியத்தை விர்ஜினியா பயன்படுத்தி வந்துள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், லூயிஸ் ஆடம்ஸ் & டெபி டப்பி பதவி, பிபிசி நியூஸ், எசக்ஸ் 17 அக்டோபர் 2024 [எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் உள்ள சில விவரங்கள் உங்களுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தலாம்.] காவல்துறையினர் தனது வீட்டின் கதவை உடைத்து ஏன் உள்நுழைந்தார்கள் என விர்ஜினியா மெக்கல்லாவிற்கு (Virginia McCullough) தெரியும். ஆனால், அதற்குக் காவல்துறை இவ்வளவு நாட்களை எடுத்துக்கொண்டது ஏன் என அவர் ஆச்சர்யப்பட்டார். “உற்சாகமாக இருங்கள், குறைந்தபட்சம் நீங்கள் குற்றவாளியைப் பிடித்துவிட்டீர்கள்,” என தனக்குக் கைவிலங்கு மாட்டிய அதிகாரிகளிடம் அவர் அமைதியாகக் கூறினார். ஜான் (John) மற்றும் லூயிஸ் மெக்கல்லா (Lois McCullough) இருவரும் கடலோரத்தில் வசித்து வருவதாக அவர்களின் அண்டை வீட்டார் நினைத்திருந்தனர். ஆனால், உண்மையில் இருவரும் தன் மகளால் இரக்கமற்ற வகையில் விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். பிரிட்டனில் இருக்கும் செல்ம்ஸ்ஃபோர்ட், எசக்ஸ் (Chelmsford, Essex) அருகில் உள்ள கிரேட் பேடோ (Great Baddow) என்ற பகுதிக்கு அருகில் உள்ள மெக்கல்லாவின் குடும்ப வீடு பெரும் ரகசியமானதாகவே இருந்து வந்தது. மெக்கல்லா தம்பதி அவர்களது உறவினர்களிடம் தங்களிடமிருந்து விலகி இருக்குமாறு கூறியிருந்தனர். இந்நிலையில், அவர்கள் கிளாக்டன் பகுதியில் உள்ள எசக்ஸ் சன்ஷைன் கடற்கரை பகுதியில் வசிப்பதாக நண்பர்களிடம் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த பயங்கரமான உண்மைச் சம்பவம் மிகவும் வித்தியாசமானது. பம்ப் ஹில் (Pump Hill) குடியிருப்புப் பகுதியின் மூடிய கதவுகளுக்கு உள்ளே நடந்த இந்தச் சம்பவத்தை கண்டுபிடிக்க 4 வருடங்கள் ஆகியிருக்கிறது. எப்போதும் திரையால் மூடப்பட்ட வீடு கொடிய விஷம் கொடுக்கப்பட்டு கொல்லப்பட்ட ஜான் மெக்கல்லா ஓய்வு பெற்ற வணிகவியல் விரிவுரையாளர். 70 வயதான அவரது உடலை வீட்டில் போர்வைகள், மணல், மற்றும் சிமென்ட் கலவையாலான இலகுரகக் கற்களைக் கொண்டு கல்லறை போன்ற அமைப்பில் மறைத்து வைக்கப்பட்டது. 71 வயதான அவரது மனைவி லூயிஸ்-இன் உடல் மாடியில் உள்ள அலமாறியின் படுக்கை விரிப்புக்குப் பின் மறைத்து வைக்கப்பட்டது. லூயிஸ் மெக்கல்லா சுத்தியலால் தாக்கப்பட்டார். அதனுடன், அவருடைய மகள் அவருக்கு பரிந்துரைக்கபட்ட மருந்துகளுடன் விஷத்தையும் கலந்து கொடுத்திருக்கிறார். வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 11), 36 வயதான விர்ஜினியா மெக்கல்லாவிற்கு, இந்தக் கொலைகளைச் செய்ததற்காக செல்ம்ஸ்ஃபோர்ட் க்ரௌன் (Chelmsford Crown) நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, அவர் குறைந்தபட்சம் 36 ஆண்டுகள் சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும். “அவரது வீடு எப்போதும் திரையால் மூடப்பட்டிருக்கும், உள்ளே யார் இருக்கிறார்கள் என்பதைக்கூடப் பார்க்க முடியாது,” என மெக்கல்லாவின் வீட்டிற்கு அருகில் 20 ஆண்டுகளாக வசிக்கும் ஃபில் சார்ஜெண்ட் (Phil Sargeant) தெரிவிக்கிறார். தன்னுடைய அண்டை வீடு ஏன் இவ்வளவு ரகசியமாக இருந்தது என்பதற்கான காரணத்தை சார்ஜெண்ட் இப்போது தெரிந்து கொண்டார். “விர்ஜினியா தனது பெற்றோரைக் கொலை செய்து விட்டார் என்பதைச் சொல்லக் கூட மிகவும் கடினமாக இருக்கிறது,” என்கிறார் சார்ஜெண்ட். “அவள் அமைதியாகவும் இனிமையாகவும் இருந்தார். அவர் வேடிக்கையான ஒரு நபர். எதிலும் தலையிட மாட்டார்", என்கிறார் சார்ஜெண்ட். பட மூலாதாரம்,STEVE HUNTLEY/BBC படக்குறிப்பு, விர்ஜினியாவின் பெற்றோரின் சடலங்கள் நான்கு ஆண்டுகளாக வீட்டுக்குள்ளேயே இருந்துள்ளன ‘கற்பனை உலகில் சஞ்சரிப்பவர்’ 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் எசக்ஸ் பாதுகாப்புக் குழுவிடம் இருந்து எசக்ஸ் காவல்துறைக்கு ஒரு ஃபோன் அழைப்பு வந்தது. மெக்கல்லா தம்பதியின் நலனில் அக்கறை கொண்ட குடும்ப மருத்துவர் அவர்களைச் சில காலம் பார்க்கவில்லை என்பதால் அதுகுறித்துக் கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ஒவ்வொரு சந்திப்பின் போதும், வெவ்வேறு காரணங்களைக் கூறி தனது பெற்றோரால் மருத்துவப் பரிசோதனைக்கு வர முடியாது என அவர்களது சார்பாக விர்ஜினியா கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பொதுமுடக்கம் நிலவியதும் அவருக்குச் சாதகமாக அமைந்தது. அதனால், அவருடைய பெற்றோர் நீண்ட காலமாக வெளியே தென்படவில்லை. ஆனால், காவல்துறை மெக்கல்லாவிடம் பேசியபோது, அவர் எதையோ மறைக்கிறார் என்பது தெரியவந்தது. ஏன் அவரது பெற்றோர்கள் எப்போதும் நகரை விட்டு வெளியே இருக்கிறார்கள் என்பது தெளிவாகியது. மெக்கல்லாவிற்குத் தொலைக்காட்சியை வாடகைக்குக் கொடுத்த ஆலன் தாம்சன் என்பவருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அவரது பெற்றோர்கள் சார்பாக, விர்ஜினியா மெக்கல்லா திடீரென ஃபோன் செய்து தொலைக்காட்சியை உரிமையாளரான ஆலன் தாம்சனிடமே கொடுத்து விடுவதாக கூறியுள்ளார். தொலைக்காட்சியைப் பெற தாம்சனின் பணியாளர் அவரது வீட்டிற்கு வந்தபோது, வீட்டுக்குள் நுழையக் கூடாது என்றும் தொலைக்காட்சி முன்வாசலில் தயாராக வைக்கப்பட்டிருக்கிறது என்றும் விர்ஜினியா கூறியுள்ளார். “அவர் ஓரளவுக்குக் கற்பனையிலேயே வாழ்பவர் என நினைத்தேன். ஆனால் ஒரு கொலைகாரர் என்று நான் நினைக்கவே இல்லை,” என்கிறார் தாம்சன். பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, ஜான் மெக்கல்லாவின் உடல் போர்வைகள் மற்றும் ஓவியங்களாலான கல்லறை போன்ற அமைப்பில் மறைத்து வைக்கப்பட்டது. 'நான் இதற்கு தகுதியானவள் தான்' விர்ஜினியாவின் வீட்டுக்கு காவல்துறை விசாரணைக்ககச் சென்றபோது, அவர்கள் அங்கு செல்வது முதல்முறை அல்ல. உடல்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு சில வாரங்களுக்கு முன்பு, தான் தாக்குதலுக்கு உள்ளானதாகக் கூறிக் காவல்துறையினரை விர்ஜினியா தன் வீட்டுக்குள் அழைத்தார். காவல்துறையினரை அழைத்ததன் நோக்கம் அவருக்குத் தான் தெரியும். ஆனால், நிலைமையைச் சோதித்துப் பார்க்க காவல்துறையினரை வீட்டுக்குள் அழைத்ததாகச் சிலர் கருதினர். இறுதியில், தான் தாக்கப்பட்டதாக அவர் கூறியது உண்மையில்லை என தெரியவந்தது. 2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காவல்துறையினர் வீட்டுக்கு வந்தபோதும் மெக்கல்லா முன்கூட்டியே தயாராக இருந்தார். “இந்த நாள் எப்படியும் வரும் என எனக்கு தெரியும்,” என்று அவர் ஒப்புக்கொண்டார். “இந்தத் தீர்ப்பு எனக்குக் கிடைக்க வேண்டியது தான், அதை ஏற்கிறேன். அதை ஏற்பதுதான் சரி. அது எனக்கு கொஞ்சம் அமைதியைத் தரும்,” என்று அவர் கூறினார். அவரது வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் விர்ஜினியா தன் பெற்றோரிடம் நிதி சம்பந்தமானப் பிரச்னையை மறைக்கத் தீவிரமாக முயற்சித்தது தெரிய வந்தது. அவர்களது நம்பிக்கையை கெடுக்கும் வகையில், வாடகை இல்லாமல் வாழ்ந்துள்ளார். அவர்களது பணத்தைப் பயன்படுத்தியும், அவர்களது கிரெடிட் கார்டையும் அதிகமாகப் பயன்படுத்தியுள்ளார். மோசடியால் பணம் இழந்துவிட்டீர்கள் என்று போலியான கடிதங்களைக் காட்டித் தனது பெற்றோரை மெக்கல்லா நம்ப வைத்துள்ளார். உண்மையில், அந்த பணம் விர்ஜினியாவால்தான் ‘ஏமாற்றப்பட்டது’. பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, விர்ஜினியாவின் தாய் சுத்தியலால் தாக்கப்பட்டும் விஷம் கொடுத்தும் கொல்லப்பட்டார். தந்தை விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் எதற்காக கொலை செய்தார்? அவரது பெற்றோர்களைப் பொறுத்தவரை, விர்ஜினியா நல்ல தகுதி உடையவர், பொருத்தமான வேலையில் இருப்பவர், மேலும், கலைஞராக வருவதற்குக் கடுமையாக உழைத்தார் என்று நினைத்தனர். மேலும், பிற்காலத்தில் நிதி சார்ந்த உதவிகளைத் தனது பெற்றோருக்கும் செய்வதாக அவர்களிடம் கூறியிருந்தார் விர்ஜினியா. அதற்குப் பதிலாக, விர்ஜினியா சூழ்ச்சியுடன் தன் பெற்றோரின் பணத்தைப் பயன்படுத்தி வந்தார். தன் பெற்றோரின் இரக்கத்தை நன்றாகப் பயன்படுத்தியும், துஷ்பிரயோகம் செய்தும் வந்துள்ளார். அவர்களது ஓய்வூதியம், கிரெடிட் கார்ட் பயன்பாடு, சொத்துக்களை விற்றல் என மொத்தமாக விர்ஜினியா தனது பெற்றோரைக் கொலை செய்ததன் மூலம் 1,49,697 பவுண்டுகள் (தோராயமாக 1.6 கோடி ரூபாய்) பயனடைந்துள்ளார். 2019 - 2023 ஆண்டுக்கிடையில் அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்காக 21,000 பவுண்டுகள் (தோராயமாக 23 லட்சம் ரூபாய்) செலவழித்ததையும் நீதிமன்றம் விசாரித்தது. தான் கூறிய பொய்கள் மற்றும் மாட்டிக் கொள்வோமோ என்ற பயம் காரணமாக, இறுதியில் தனது பெற்றோரை கொடூரமாகக் கொலை செய்துள்ளார். அவரது வீட்டிற்கு அருகில் உள்ள வினியார்ட்ஸ் வணிக மையத்தில் காய்கறிக் கடை வைத்திருக்கும் பால் ஹேஸ்டிங்ஸ் (Paul Hastings) என்பவரும் விர்ஜினியாவின் பெற்றோர் வெளியே வராததை கவனித்துள்ளார். அவருடைய கடையில் பொருட்கள் வாங்கும் தனது பெற்றோர், தற்போது கிரேட் பேட்டோவில் வாழவில்லை என்று கடைக்காரரிடம் விர்ஜினியா தெரிவித்துள்ளார். எந்த விஷயத்தையும் சந்தேகப்படாத அளவிற்கு அவரால் சொல்ல முடியும் என்பதுதான் அவருடைய தனித்துவம் வாய்ந்த இயல்பு என ஹேஸ்டிங் தெரிவித்தார். “விர்ஜினியா, என் கடைக்கு வந்து, ‘காவல்துறை என்னை பின் தொடர்கிறார்கள், நான் என் அம்மா, அப்பாவைக் கொலை செய்திருக்கலாம் என அவர்கள் நினைக்கின்றனர்’ என தெரிவித்தார்,” என அவர் கூறினார். “எனக்கு அது வித்தியாசமாக தோன்றியது. ஆனால் அதைப்பற்றி வேறு எதையும் நான் யோசிக்கவில்லை. அது அவருடைய விசித்திரமான இயல்பு என்று நான் நினைத்தேன்,” என்கிறார் ஹேஸ்டிங். சில சமயங்களில் அவர் தனது கடைக்கு ஒரு நாளைக்கு நான்கு முறை வருவார், அடுத்த 15 நாட்கள் காணமல் போவார் என ஹேஸ்டிங் கூறுகிறார். பட மூலாதாரம்,FAMILY HANDOUT படக்குறிப்பு, விர்ஜினியா தன் பெற்றோரின் நல்லெண்ணத்தைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்கிறார் கிர்பி ‘கர்ப்பிணி போல நடித்தார்’ அவர் தனது கடைக்கு வந்து உணவு உள்ளிட்ட பொருட்களை வழங்குவார் என்று விர்ஜினியாவின் விட்டருகே பூக்கடை நடத்தி வரும் டெப்பி பொல்லார்ட் (Debbie Pollard) கூறிகிறார். “அவர் வித்தியாசமானவர் என எங்களுக்குத் தெரியும். ஆனால், அவர் இப்படிச் செய்வார் என்று நாங்கள் கனவிலும் நினைத்ததில்லை,” என்கிறார் டெப்பி. “அவருடைய அம்மா, அப்பாவின் சடலங்களுடன் இத்தனை ஆண்டுகள் அவர் வாழ்ந்திருக்கிறார். நினைத்தாலே பயமாக இருக்கிறது,” என்கிறார். விர்ஜினியா கர்ப்பிணியைப் போன்று கூட நடித்திருக்கிறார் என்றும் தன் ஆடையின் உள்ளே போலியான பொருள் மூலம் தனது வயிற்றைப் பெரிதாகக் காட்டியிருக்கிறார் என்றும் ஹேஸ்டிங்ஸ் மற்றும் டெப்பி கூறுகின்றனர். பட மூலாதாரம்,STUART WOODWARD/BBC படக்குறிப்பு, "மிகவும் அனுபவம் வாய்ந்த துப்பறிவாளர்களுக்குக் கூட இந்த கொலைகளின் விவரங்கள் அதிர்ச்சியையும் திகிலையும் அளிக்கும்" என்கிறார் ராப் கிர்பி தீர்ப்பு வழங்கப்பட்ட அக்டோபர் 11 அன்று விர்ஜினியா பெரும்பாலும் எவ்வித உணர்ச்சியும் இன்றி தரையையே பார்த்துக் கொண்டிருந்தார். தன் தாயை எப்படிக் கொலை செய்தேன் என காவல்துறையினரிடம் தான் கூறியதன் பதிவைப் பின்னர் கேட்கும் போதுதான் அவர் அழத்தொடங்கினார். "அவர் (தாய்) மிகவும் அப்பாவியாக இருந்தார். வானொலியைக் கேட்டுக்கொண்டு அமர்ந்திருப்பார்," என்று அவர் அதிகாரிகளிடம் கூறினார். “தைரியத்தை வரவைக்க மூன்றுமுறை உள்ளே சென்றேன். பின்னர் தயங்காமல் இதை செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அவர் (தாய்) நம்ப முடியாமல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்,” என்றார் விர்ஜினியா. பட மூலாதாரம்,ESSEX POLICE படக்குறிப்பு, விர்ஜினியா மெக்கல்லாவிற்கு 36 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது எசக்ஸ் காவல்துறையின் துப்பறிவுக் கண்காணிப்பாளர் ராப் கிர்பி (Rob Kirby), நீதிமன்றத்தில் அவரது அமைதியானச் செயல்பாடுகள், ஒரு ‘திட்டமிட்டக் கொலைகாரரது செயல்பாடுகள் போல’ அமைதியாக இருந்தன என்கிறார். “அவர் செய்த வஞ்சகம், துரோகம், மோசடி ஆகியவை குறித்த பரந்த அளவிலான விசாரணையை நாங்கள் மேற்கொண்டோம்,” என்கிறார் அவர். “இது அதிர்ச்சியூட்டும் வகையிலும், பெரிய அளவிலும் இருந்தது. விர்ஜினியா தனது வாழ்க்கையின் ஒவ்வொரு விஷயத்தைப் பற்றியும் பொய் சொல்லியிருக்கிறார். அவரைச் சுற்றியுள்ள அனைவரையும் ஏமாற்றியிருக்கிறார். கேலிக்கூத்தாக்கி இருக்கிறார். மேலும், தெளிவாக அவரது பெற்றோரின் நம்பிக்கையை பயன்படுத்தியிருக்கிறார்,” என்கிறார். “தனது பெற்றோர்களைப் பற்றியோ, அல்லது அவர்களது இழப்பால் பாதிக்கப்படுபவர்களைப் பற்றியோ யோசிக்காமல் கொடூரமாக அவர்களைக் கொலை செய்துள்ளார். அவர் ஒரு புத்திசாலி, விஷயங்களைத் திறமையாக கையாளுபவர்,” என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg4qwrlqnp3o
  21. நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை வெளியேற்றி இறுதியில் நுழைந்தது தென் ஆபிரிக்கா (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (17) இரவு நடைபெற்ற அரை இறுதிப் போட்டியில் நடப்பு உலக சம்பியன் அவுஸ்திரேலியாவை நொக் - அவட் செய்து ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் விளையாட தென் ஆபிரிக்கா தகுதிபெற்றது. கடந்த வருடம் மகளிர் ரி20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் தனது சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா, ஐக்கிய அரபு இராச்சியத்தில் 8 விக்கெட்களால் மிக இலகுவாக வெற்றிபெற்று பதிலடி கொடுத்தது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 135 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.2 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 135 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டி இரண்டாவது நேரடித் தடவையாக இறுதிப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. தென் ஆபிரிக்காவின் வெற்றியில் அயாபொங்கா காக்காவின் துல்லிய பந்துவீச்சு, ஆன்எக் பொஷ் குவித்த அரைச் சதம், லோரா வுல்வார்டின் சிறந்த துடுப்பாட்டம் என்பன முக்கிய பங்காற்றின. தென் ஆபிரிக்கா பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது தஸ்மின் ப்றிட்ஸ் 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (25 - 1 விக்.) ஆனால், லோரா வுல்வார்ட் ஆன்எக் பொஷ் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 65 பந்துகளில் 96 ஓட்டங்களைப் பகிர்ந்து தமது அணிக்கு வெற்றி இலக்கை அண்மிக்க உதவினர். லோரா வுல்வார்ட் 37 பந்துகளில் 42 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (121 - 2 விக்.) வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 14 ஓட்டங்களை ஆன்எக் பொஷ், க்ளோ ட்ரையொன் ஆகிய இருவரும் பெற்றுக்கொடுத்தனர். இப் போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய ஆன்எக் பொஷ் 48 பந்துகளில் 8 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 74 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். க்ளோ ட்ரையொன் ஆட்டம் இழக்காமல் ஒரு ஓட்டத்தைப் பெற்றார். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட அவுஸ்திரேலியா 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது. க்றேஸ் ஹெரிஸ் (3), ஜோர்ஜியா வெயாஹாம் (5) ஆகிய இருவரினது விக்கெட்கள் குறைந்த எண்ணிக்கைக்கு வீழ்ந்ததால் அவுஸ்திரேலியா ஆட்டம் கண்டது. பெத் மூனியும் பதில் அணித் தலைவி தஹிலா மெக்ராவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 3ஆவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியை சீர் செய்தனர். தஹிலா மெக்ரா 27 ஓட்டங்களைப் பெற்றார். 16.5 ஓவர்களில் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தபோது பெத் மூனி 44 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னரே அவுஸ்திரேலியாவின் ஓட்ட வேகம் சற்று அதிகரிக்கத் தொடங்கியது. எலிஸ் பெரி 23 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார். ஃபோப் லிச்ஃபீல்ட் 9 பந்துகளில் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அயாபொங்கா காக்கா 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மாரிஸ்ஆன் கெப் 4 ஓவர்களில் 24 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் நொன்குலுலென்கோ 31 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஆன்எக் பொஷ் https://www.virakesari.lk/article/196539
  22. அது தங்களுக்கு வாக்குப் போட்ட இடங்களுக்கு மட்டும் நிதி ஒதுக்குவினம் அண்ணை! வன்னியில் எவ்வளவோ வீட்டுத் திட்ட வீடுகளில் மக்கள் இல்லை. ஆனாலும் பலர் குடிசைகளில் வாழ்கிறார்கள்! ஏனெனில் பொருத்தமான திட்டங்கள் இல்லை. மக்கள் வாழக் கூடிய பகுதிகளில்/ வேலை வாய்ப்பு உள்ள இடங்களில் வீட்டுத்திட்டம் அமைவதில்லை. அரசு ஒரே இடத்தில் 50 வீடுகளைக் கட்டி வழங்கி மாதிரிக் கிராமம் என பெயர் சூட்டும்! ஆனால் பாதி வீடுகளில் மக்கள் வசிப்பதில்லை. மல்லாவி ஐயங்கன்குளம் என நினைக்கிறேன் சந்தைக்கென கட்டிய கட்டிடத்தில் மாடுகள் படுத்துறங்குகின்றன!
  23. இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: இரண்டாவது நாள் முடிவில் பந்துவீச்சில் திணறிய இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ். க பதவி, பிபிசி தமிழுக்காக 17 அக்டோபர் 2024, 11:09 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பெங்களூருவில் இன்று தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களில் சுருண்டது. நியூஸிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 50 ஓவர்கள் முடிவில்நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது. முதல் இன்னிங்ஸில் 31.2 ஓவர்கள் மட்டுமே பேட் செய்த இந்திய அணி 46 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது, சராசரியாக 1.46 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இந்திய அணியில் விராட் கோலி, சர்ஃப்ராஸ் கான், ரவிச்சந்திர அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, கே.எல்.ராகுல் ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர். உள்நாட்டில் குறைந்தபட்சம் உள்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சேர்த்த மிகக் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் உள்நாட்டில் கடந்த 1987-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய 75 ரன்களுக்கு சுருண்டிருந்ததே குறைந்தபட்ச ஸ்கோராக இருந்தது. அதைவிட குறைவான ரன்னில் இன்று இந்திய அணி ஆட்டமிழந்தது. ஒட்டுமொத்தத்தில் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் 3வது குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன் 2020-ஆம் ஆண்டு அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 36 ரன்களிலும், 1974-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 42 ரன்களிலும் இந்திய அணி ஆட்டமிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது. சுப்மான் கில் கழுத்துவலி காரணமாக இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடாததால், கடந்த 8 ஆண்டுகளுக்குப்பின் 2016-ஆம் ஆண்டுக்குப்பின் டெஸ்ட் போட்டியில் 3-வது வரிசையில் விராட் கோலி பேட் செய்ய இன்று (அக்டோபர் 17) களமிறங்கினார். ஆனால், 9 பந்துகளைச் சந்தித்த கோலி, ரூர்கே பந்துவீச்சில் டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். இந்திய அணியில் ரிஷப் பந்த் சேர்த்த 20 ரன்கள்தான் ஒரு பேட்ஸ்மேன் சேர்த்த அதிகபட்ச ஸ்கோராகும். அடுத்தார்போல் ஜெய்ஸ்வால் 13 ரன்கள் சேர்த்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில், டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும்தான் நியூசிலாந்து தரப்பில் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பந்துவீசினர். இதில் மேட் ஹென்றி 13.2 ஓவர்கள் வீசி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குல்தீப் யாதவ் விக்கெட்டை வீழ்த்தியபோது அவர் டெஸ்ட் போட்டியில் அவரது 100-வது விக்கெட்டை எடுத்தார். இந்திய அணிக்கு எதிராக முதல் டெஸ்டில் விளையாடிய வில்லியம் ரூர்கே 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதிகபட்சம் 20 ரன்கள்தான் இந்திய அணியில் டாப்-4 பேட்டர்களில் அதிகபட்சமாக சேர்க்கப்பட்டதே ரோஹித் சர்மா சேர்த்த 13 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் நண்பகல் உணவு இடைவேளை முடிந்த அடுத்த தேநீர் இடைவேளைக்குள் முடிந்துவிட்டது. 2-வது செஷனில் மின்னல் வேகத்தில் பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் 12 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் ஆட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தனர். பெங்களூருவில் நேற்று (அக்டோபர் 16) தொடங்க இருந்த டெஸ்ட் போட்டி மழையால் முதல் நாள் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து 2-வது நாளான இன்று டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யத் தீர்மானித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES விக்கெட்டை கணிக்கத் தவறினாரா ரோஹித் பெங்களூருவில் கடந்த சில நாட்களாகப் பெய்த மழையாலும், காலநிலையில் இருந்த குளிர்ந்த நிலையாலும் வேகப்பந்துவீச்சுக்கு நன்றாகவே பிட்ச் சாதகமாக இருந்தது. இதைப் பயன்படுத்திய நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் முதல் செஷனில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா அணியை பெரிய நெருக்கடிக்குள் தள்ளினர். முதல் ஓவரில் இருந்தே நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் எதிர்பார்த்ததைவிட பந்து நன்றாக ஸ்விங் ஆகியது. தொடக்கத்தில் 2 ஸ்லிப் பீல்டர்களை வைத்திருந்த நியூசிலாந்து அணி, வேகப்பந்துவீச்சுக்கு பிட்ச் ஒத்துழைப்பதைப் பார்த்து 3-வது ஸ்லிப்பை அமைத்தனர். பெங்களூரு ஆடுகளம் சுழற்பந்துவீச்சாளர்களுக்கு நன்கு ஒத்துழைக்கக்கூடியது என்று முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் நியூசிலாந்து அணியில் ஒரு சுழற்பந்துவீச்சாளர்கள்கூட பந்துவீசவில்லை. 3 வேகப்பந்துவீச்சாளர்கள் சேர்ந்து இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை முடித்துவிட்டனர். காலநிலையை கணித்த நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாதம் 3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கினார். ஆனால், இந்திய அணியோ பும்ரா, சிராஜ் ஆகிய இரு வேகப்பந்துவீச்சாளர்களுடனும், 3 சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது. 34 ரன்களுக்குள் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து அடுத்து எந்தவகையான உத்தியைக் கையாள்வது என்று தவித்தது. ஆனால் 2-வது செஷன் உணவு இடைவேளைக்குப்பின் தொடங்கியதும், 12 ரன்கள் மட்டுமே எடுத்து மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து இந்திய அணி ஆட்டமிழந்தது. குறிப்பாக மேட் ஹென்றி வீசிய 24-வது ஓவரில் அடுத்தடுத்து ஜடேஜா, அஸ்வின் ஆட்டமிழந்தனர், அடுத்து ஹென்றி வீசிய 25-வது ஓவரில் ரிஷப் பந்த் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி தடுமாற்றம் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தயாராகி வரவில்லை என்பது தொடக்கத்திலேயே ரோஹித் சர்மா, ஜெய்ஸ்வால் பேட்டிங்கில் தெரிந்தது. இருவரும் நியூசிலாந்து பந்துவீச்சைச் சமாளித்து ரன்களைச் சேர்க்க தடுமாறினர், பதிலடி கொடுக்க இருவரும் முயன்றும் இயலவில்லை. டிம் சவுதி வீசிய 7-வது ஓவரில் ரோஹித் சர்மா 2 ரன்களில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ஏற்கெனவே ஹென்றி பந்துவீச்சில் கால்காப்பில் ரோஹித் சர்மா வாங்கினார், ஆனால், அதற்கு நடுவர் அவுட் வழங்கவில்லை. அடுத்த வாய்ப்பில் சவுதியிடம் விக்கெட்டை ரோஹித் இழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி தோனியின் சாதனையை முறியடித்த கோலி தோனியின் சர்வதேச சாதனையையும் கோலி இந்த ஆட்டத்தில் முறியடித்தார். தோனி 535 சர்வதேச போட்டிகளில் களமிறங்கி இருந்தநிலையில், கோலி தனது 536-வது சர்வதேச போட்டியில் இன்று விளையாடி தோனியின் சாதனையை முறியடித்தார். இதன் மூலம் அதிகமான போட்டிகளில் சச்சினுக்கு அடுத்தார்போல் ஆடிய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார். விக்கெட் சரிவு அடுத்ததாக களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் 3 பந்துகளைச் சந்தித்த நிலையில் ஹென்றி பந்துவீச்சில் கான்வேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். உள்நாட்டுப் போட்டிகளில் இதுவரை 4வது இடத்தில் களமிறங்கிப் பழகாத சர்ஃப்ராஸ் கான் சர்வதேச போட்டியில் களமிறங்கினார். 12.4 ஓவர்கள் வீசப்பட்ட நிலையில் திடீரென மழை குறுக்கிடவே ஆட்டம் சற்றுநேரம் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது. இந்த இடைவெளியே நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு, அடுத்தக் கட்ட தாக்குதலுக்கு தயாராகினர். சிறிய இடைவெளிக்குப்பின் ஆட்டம் தொடங்கியபின், இந்திய அணி சார்பில் ஜெய்ஸ்வால் முதல் பவுண்டரியை அடித்தார். ஆனால் ஜெய்ஸ்வால் நீண்டநேரம் நிலைக்கவில்லை 13 ரன்னில் ரூர்கே பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளைக்குச் செல்லும் முன்பாக ரூர்கே பந்துவீச்சில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பர் பிளன்டெலிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். உணவு இடைவேளை முடிந்து இந்திய அணி வந்தபின் அடுத்த 12 ரன்களுக்குள் மீதமிருந்த 4 விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டமிழந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES 134 ரன்கள் முன்னிலையில் நியூசிலாந்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூஸிலாந்து அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் டாம் லாதம், டேவிட் கான்வே இருவரும் இந்தியப் பந்துவீச்சைச் சமாளித்து எளிதாக ரன்களைச் சேர்த்தனர். பெங்களூரு பிட்ச்சுக்கு ஏற்றவாறு நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய நிலையில், இந்தியப் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் இதை எளி்தாக கையாண்டு சுழற்பந்துவீச்சிலும், வேகப்பந்துவீச்சிலும் சிக்ஸர், பவுண்டரி என வெளுத்தனர். முதல் விக்கெட்டுக்கு லாதம், கான்வே ஆகிய இருவரும் 67 ரன்கள் குவித்தனர். குல்தீப் யாதவ் பந்துவீச்சில் லாதம் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் வீரர்களுடன் பல ஐபிஎல் போட்டிகளில் கான்வே ஆடியிருந்ததால், அவர் மிகவும் எளிதாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தார். 2வது விக்கெட்டுக்கு வில் யங் களமிறங்கி கான்வேயுடன் சேர்ந்தார். இருவரும் இந்தியப் பந்துவீச்சை எளிதாகச் சமாளித்து, ரன்களைச் சேர்த்தனர். அஸ்வின், குல்தீப், ஜடேஜா பந்துவீச்சில் நியூஸிலாந்து பேட்ஸ்மேன்கள் அதிரடியாக பேட் செய்தனர். இதில் கான்வே 54 பந்துகளில் அரைசதம் அடித்தார். 27.1 ஓவர்களில் நியூஸிலாந்து அணி 100 ரன்களை எட்டியது. நிதானமாக பேட் செய்த வில் யங் 33 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் குல்தீப் யாதவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு கான்வே, வில் யங் கூட்டணி 75 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்துவந்த ரச்சின் ரவீந்திரா, கான்வேயுடன் சேர்ந்தார். சதத்தை நோக்கி நகர்ந்த கான்வே 91 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 22 ரன்களிலும், டேரல் மிட்ஷெல் 14 ரன்களிலும் களத்தில் ஆட்டமிழக்காமல் உள்ளனர். 50 ஓவர்கள் முடிவில்நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் குவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c04p6x3yweqo
  24. பெலாரஸ் - லித்துவேனியா எல்லையில் ஒரு இலங்கை அகதியின் உடலை ஐரோப்பிய எல்லை பாதுகாப்பு காவலர்கள் கண்டுபிடித்துள்ளனர். சடலமாக மீட்கப்பட்டவரிடம் தொலைபேசிகள் எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் இலங்கையை சேர்ந்த 24 வயதுடைய பிரஜை என அவரது சடலத்திற்கு அருகில் கிடந்த ஆவணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உறுதிபடுத்தப்பட்ட அடையாளம் அதற்கமைய, யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியை சேர்ந்த எஸ். ஜதுசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அதில் இருந்த பெயர் மற்றும் விபரங்களை கொண்டு அடையாளம் உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், சம்பவத்தின் அனைத்து சூழ்நிலைகள் மற்றும் படங்கள் பெலாரஸ் புலனாய்வாளர்களால் பதிவு செய்யப்பட்டுள்ளன. https://tamilwin.com/article/sri-lanka-tamil-boy-body-found-in-lithuania-1729170316#google_vignette

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.