Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. அமெரிக்கா இரானிய தாக்குதலை "தோல்வியுற்றது மற்றும் பயனற்றது" என்று விவரித்தது. இரானின் தாக்குதல் குறைவான சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக புகைப்படங்கள் காட்டின. F-35 போர் விமானங்களை வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய விமானப்படையின் `Nevatim’ தளத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டின. வாஷிங்டனை தளமாகக் கொண்ட கடற்படை பகுப்பாய்வு மையத்தை சேர்ந்த டெக்கர் ஈவெலத் கூறுகையில், புகைப்படங்கள் 32 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை காட்டியது. F-35 போர் விமானங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு அருகில் சேதங்கள் இருந்தது. அவை தப்பித்தது அதிர்ஷ்டம் தான் " என்றார்.
  2. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மன் பதவி, வெளியுறவுத்துறை செய்தியாளர், வாஷிங்டன் 16 அக்டோபர் 2024, 04:38 GMT அமெரிக்கப் படைகளால் இயக்கப்படும் "அதிஉயர் பகுதி பாதுகாப்பு முனையம்" எனப்படும் `தாட்’ கவசத்தை, இஸ்ரேலுக்கு அனுப்புவதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டின் மீது நடத்தப்பட்ட இரானிய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து 'தாட்' வான் பாதுகாப்பு கவசம் (THAAD : Terminal High-Altitude Area Defense) இஸ்ரேலின் வான் பாதுகாப்பை மேம்படுத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். "இஸ்ரேலைப் பாதுகாப்பதே அதன் இலக்கு" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டார். அக்டோபர் 1 அன்று இஸ்ரேல் மீது ஏவப்பட்ட 180 க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணைகள் உட்பட இரான் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையின் மூலமாக அமெரிக்கா, இஸ்ரேலில் அமெரிக்கப் படைகளை தரையிறக்க உள்ளது. எனவே இந்த செயல்பாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இஸ்ரேலில் ஏற்கனவே சிறிய எண்ணிக்கையிலான அமெரிக்க படைகள் உள்ளன. ஆனால் இம்முறை சுமார் 100 துருப்புகள் நிலைநிறுத்தப்பட உள்ளன. எனவே இது முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை. ஏனெனில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் விரிவடைந்து வரும் போரில் அதிகரித்து வரும் அமெரிக்க ஈடுபாட்டை இது குறிக்கிறது. இரான் மீது இஸ்ரேல் இன்னும் அதன் தாக்குதலைத் தொடங்கவில்லை. பதிலடி மிகவும் "ஆபத்து நிறைந்ததாகவும், துல்லியமாகவும் இருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக ஆச்சரியம் அளிப்பதாக இருக்கும்" என்று இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் யோவ் காலண்ட் கூறியுள்ளார். இரான் ஆதரவு பெற்ற ஹெஸ்பொலா தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட்டில் படுகொலை செய்ததால் தான் இஸ்ரேலை தாக்கியதாக இரான் கூறியது. `தாட்’ கவசத்தை (THAAD) இஸ்ரேலுக்கு வழங்குவதன் பின்னணி என்ன? பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES படக்குறிப்பு, தாட் கவசம் ஏவுகணை தாக்குதலில் இருந்து பாதுகாப்பு அளிப்பதாக கூறப்படுகிறது (கோப்புப் படம்) இது இஸ்ரேலிய வான் பாதுகாப்பில் இருக்கும் குறைகளை நிவர்த்தி செய்ய அமெரிக்கா முன்னெடுத்த திட்டமா அல்லது இரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவது குறித்து அமெரிக்காவில் அதிகரித்து வரும் கவலைகளை இது சுட்டிக்காட்டுகிறதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அதிபர் பைடன் இரானின் அணுசக்தி நிலையங்கள் மற்றும் அதன் எண்ணெய், எரிசக்தி உள்கட்டமைப்பு மீதான எந்தவொரு தாக்குதலையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தீர்க்கமாக குறிப்பிட்டுள்ளார். அப்படி நடந்தால் அது ஒரு தீவிரமான மோதலைத் தூண்டும் மற்றும் உலகப் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று அவர் கருதுகிறார். அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையின் பின்னணி எதுவாக இருந்தாலும், விரிவடைந்து வரும் மத்திய கிழக்குப் போருக்கு மத்தியில் அமெரிக்காவின் பாதுகாப்பு உதவி இஸ்ரேலுக்கு எவ்வளவு தேவை என்பதை சுட்டிக்காட்டுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரானின் தாக்குதல் குறைவான சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக புகைப்படங்கள் காட்டின. தாட் கவசம் எவ்வாறு செயல்படும்? இந்த மாத தொடக்கத்தில் இரான் பயன்படுத்திய Fattah-1 போன்ற பாலிஸ்டிக் ஏவுகணைகள் பூமியின் வளிமண்டலத்தில் ஏவப்பட்டு பின்னர் தங்கள் இலக்கை நோக்கி இறங்குகின்றன. மற்ற ஏவுகணைகள் அல்லது ட்ரோன்களுடன் ஒப்பிடுகையில் அதன் வேகம் மிகப்பெரிய பலமாக பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுத உற்பத்தியாளரான லாக்ஹீட் மார்ட்டின் கூற்றுப்படி, தாட் அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணைகளுக்கு எதிராக மிகவும் துல்லியமாக செயல்படும். மற்றொரு அமெரிக்க ஆயுத உற்பத்தி நிறுவனமான `ரேதியோன்’ ( Raytheon) தாட் கவசத்தின் அதிநவீன ரேடாரை உருவாக்குகிறது. இந்த கவச அமைப்பில் ஆறு டிரக் அமைப்பிலான லாஞ்சர்கள் இருக்கும். ஒவ்வொரு லாஞ்சரிலும் எட்டு இடைமறிக்கும் ஏவுகணைகள்(interceptors) உள்ளன. மேலும் இதில் பயன்படுத்தப்படும் ஒரு பேட்டரிக்கு சுமார் $1 பில்லியன் (£766m) வரை செலவாகும். அதை இயக்குவதற்கு 100 ராணுவப் பணியாளர்கள் தேவை. தாட் அமைப்பு, குறுகிய மற்றும் நடுத்தர தொலைவு ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி தர யுக்ரேன் இந்த தாட் கவசத்தை வாங்க விரும்பியது. அதிகமாக தேவைப்படும் ஆயுதமாக இது கருதப்படுகிறது. சவுதி அரேபியாவும் இதனை வாங்க முடிவு செய்திருக்கிறது. இஸ்ரேலை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதற்கு கைமாறாக அமெரிக்காவிடம் இருந்து இதனை அதிகமாக வாங்க சவுதி விரும்பியதாகவும் தெரிய வருகிறது. ஆனால், ஹமாஸின் அக்டோபர் 7-ஆம் தேதி தாக்குதலுக்கு பிறகு இந்த ஒப்பந்தம் தடம் புரண்டது. படக்குறிப்பு, ரஷ்யாவின் தாக்குதலுக்கு பதிலடி தர யுக்ரேன் இந்த தாட் கவசத்தை வாங்க விரும்பியது இரான் தாக்குதல் மற்றும் இஸ்ரேல் கொடுக்கப் போகும் பதிலடி இரான் அக்டோபர் 1-ஆம் தேதியன்று இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது, இதில் மேற்குக் கரையில் உள்ள ஜெரிகோவில் ஒரு நபர் கொல்லப்பட்டார். அவர் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணையின் ஒரு பகுதி தாக்கி உயிரிழந்தார். இஸ்ரேல், ஏரோ 2 மற்றும் ஏரோ 3 எக்ஸோ உட்பட அமெரிக்காவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த வான்வழி பாதுகாப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த ஏவுகணைகள் சூப்பர்சோனிக் வேகத்தில் சீறிப் பாயும். பாலிஸ்டிக் ஏவுகணைகளை விண்வெளியில் சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டவை. இந்த பாதுகாப்பு அமைப்பின் இஸ்ரேலிய வடிவமைப்பாளர்கள், ஏரோ ஏவுகணைகள் இரானிய தாக்குதலுக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டது என்று கூறினார்கள். அமெரிக்கா இஸ்ரேலின் தற்காப்பு நடவடிக்கைக்கு ஆதரவாக செயல்பட்டது. அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகளின் ஆதரவுடன் இஸ்ரேல், கிழக்கு மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து இடைமறிக்கும் ஏவுகணைகளை ஏவியது, பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிரி ஏவுகணைகளை இடைமறிக்கும் தாட். (சித்தரிப்புப் படம்) அமெரிக்கா இரானிய தாக்குதலை "தோல்வியுற்றது மற்றும் பயனற்றது" என்று விவரித்தது. இரானின் தாக்குதல் குறைவான சேதத்தையே ஏற்படுத்தி இருப்பதாக புகைப்படங்கள் காட்டின. F-35 போர் விமானங்களை வைக்கப்பட்டிருக்கும் இஸ்ரேலிய விமானப்படையின் `Nevatim’ தளத்தில் சேதம் ஏற்பட்டிருப்பதை செயற்கைக்கோள் படங்கள் காட்டின. வாஷிங்டனை தளமாகக் கொண்ட கடற்படை பகுப்பாய்வு மையத்தை சேர்ந்த டெக்கர் ஈவெலத் கூறுகையில், புகைப்படங்கள் 32 இடங்களில் பாதிப்பு ஏற்பட்டிருந்ததை காட்டியது. F-35 போர் விமானங்கள் வைக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு அருகில் சேதங்கள் இருந்தது. அவை தப்பித்தது அதிர்ஷ்டம் தான் " என்றார். ஏவுகணைகள் மற்றும் இடைமறிக்கும் கருவிகளின் உதிரி பாகங்களால் நேரடியாக சேதம் ஏற்பட்டதா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று இஸ்ரேலிய செய்தித்தாள் `Haaretz’ தெரிவித்துள்ளது. டெல் அவிவ் உட்பட சில இடங்களில் நேரடி தாக்கங்கள் இருந்தன. ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாட்டின் தலைமையகத்திற்கு அருகில் மக்கள் வாழும் பகுதியில் ஒன்பது மீட்டர் ஆழமான பள்ளத்தை உருவாக்கியதாக கூறப்படுகிறது. தாட் கவசம் இஸ்ரேலுக்கு எவ்வாறு உதவும்? அரசியல் ரீதியாக பார்த்தால், `தாட்’ கவசம் பற்றிய அறிவிப்பு, இஸ்ரேலின் பாதுகாப்பிற்காக பைடன் நிர்வாகம் அளிக்கும் "இரும்புக் கவச" ஆதரவை பிரதிபலிக்கிறது. இஸ்ரேலின் புள்ளிவிபரங்களின்படி கடந்த ஆண்டு 50,000 டன்களுக்கும் அதிகமான ஆயுதங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பியுள்ளது. அதேசமயம் அமெரிக்காவில் நிலவும் சில அரசியல் முரண்பாடுகளையும் எடுத்துக்காட்டுகிறது. முதலாவதாக, இஸ்ரேலையும் அதன் எதிர்ப்பாளர்களையும் மோதலை அதிகரிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுக்க முயற்சிக்கிறது. அதற்கு பதிலாக ராஜ்ஜிய நடவடிக்கைகளை நாடுமாறு வலியுறுத்துகிறது. இந்த முயற்சிகள் தோல்வியடைந்த போது, வெள்ளை மாளிகை அதன் நட்பு நாடான இஸ்ரேலின் முடிவுகளை வலுவாக ஆதரித்தது. அதே நேரத்தில் அதை ராஜதந்திர ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் இஸ்ரேலை பாதுகாக்க முடிவு செய்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னதாக தாட் கவசம் 2019 இல் பயிற்சிக்காக தெற்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா மற்றும் ஐஆர்ஜிசி தளபதி அப்பாஸ் நில்ஃபோரோஷன் ஆகியோரின் மரணங்கள், லெபனான் தரைப்படை ஆக்கிரமிப்பு ஆகியவற்றைத் தொடர்ந்து இரானிய ஏவுகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டது. 11 மாத காலமாக எல்லை தாண்டிய ராக்கெட் தாக்குதல் நடத்தியதால்தான் ஹெஸ்பொலாவின் தலைமையை தாக்கி அதன் பாரிய ஏவுகணைகளை அழித்ததாக இஸ்ரேல் கூறியது. ராணுவ அழுத்தம் மற்றும் ஹெஸ்பொலாவின் திறன்களை அழிப்பது மட்டுமே 60,000 இஸ்ரேலியர்கள் வடக்கு இஸ்ரேலில் உள்ள அவர்களது வீடுகளுக்கு திரும்புவதை உறுதி செய்யும் என்பது இஸ்ரேலின் நிலைப்பாடு. இஸ்ரேலை ஆதரிப்பதற்கும், இரான் மற்றும் இரானிய ஆதரவு குழுக்களின் தாக்குதல்களில் இருந்து அமெரிக்கப் பணியாளர்களைப் பாதுகாப்பதற்கும் "சமீபத்திய மாதங்களில் அமெரிக்க ராணுவம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் ஒரு பகுதியா தாட் இஸ்ரேலுக்கு வழங்கப்படுகிறது" என்று அமெரிக்கா விவரிக்கிறது. இதற்கு முன்னதாக தாட் கவசம் 2019 இல் பயிற்சிக்காக தெற்கு இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது. இரானிய வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராச்சி, "அமெரிக்க ஏவுகணை அமைப்புகளை இயக்க தனது படைகளை இஸ்ரேலுக்கு அனுப்புவதன் மூலம் அவர்களை அமெரிக்கா ஆபத்தில் ஆழ்த்துகிறது" என்று எச்சரித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce9j715r4pyo
  3. இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானின் நகர மேயர் பலி இஸ்ரேல் மேற்கொண்ட விமானதாக்குதலில் லெபனான் மேயர் உட்பட பலர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானின் நபாதிஹ் என்ற நகரத்தின் மேயரே கொல்லப்பட்டுள்ளார். மாநகரசபை கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த பகுதியை இலக்குவைத்து இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/196461
  4. 2026 ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று போட்டியில் பொலிவியா அணிக்கு எதிராக ஹட்ரிக் கோல் பதிவு செய்து மெஸ்ஸி அசத்தியுள்ளார். இந்தப் போட்டியில் அர்ஜெண்டினா அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான தகுதி சுற்று போட்டிக்கான இந்த ஆட்டம் அர்ஜெண்டினாவில் நடைபெற்றது. கணுக்கால் காயம் காரணமாக சமீபகால போட்டிகளில் பங்கேற்காத 37 வயதான நட்சத்திர வீரரான லயோனல் மெஸ்ஸி, அண்மையில் அணிக்கு திரும்பினார். இதில் 19, 84, 86 ஆகிய நிமிடங்களில் மெஸ்ஸி கோல் பதிவு செய்தார். சக அணி வீரர்கள் 2 கோல்கள் பதிவு செய்ய அசிஸ்ட் செய்து அவர் உதவினார். அதன் மூலம் தனது அபார ஆட்டத்திறனை அவர் வெளிப்படுத்தி இருந்தார். இதில் மெஸ்ஸி பதிவு செய்த இரண்டாவது கோல் கிளாசிக் ரகம். பந்தை டிரிபிள் செய்து இடது காலில் இருந்து வலது காலுக்கு மாற்றி அதனை கோல் கம்பத்தின் வலது பக்கமாக (கீழ்புறம்) தள்ளி கோல் பதிவு செய்தார். அடுத்த இரண்டு நிமிடங்களில் மூன்றாவது கோலை அவர் பதிவு செய்தார். அர்ஜெண்டினாவின் மார்டினஸ், அல்வரஸ் மற்றும் தியாகோ ஆகியோரும் 45, 45(+3), 69-வது நிமிடங்களில் கோல் பதிவு செய்திருந்தனர். இந்த வெற்றியின் மூலம் 10 அணிகள் அடங்கிய தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையிலான பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்றில் 10 போட்டிகளில் விளையாடி 22 புள்ளிகளை அர்ஜெண்டினா பெற்றுள்ளது. இதன் மூலம் பட்டியலில் அந்த அணி முதலிடத்தில் உள்ளது. அர்ஜெண்டினா நடப்பு உலக சாம்பியன் என்பது குறிப்பிடத்தக்கது. 2026 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் கனடா, மெக்சிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. https://thinakkural.lk/article/310824
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெப்பக் காற்று தொடர்ந்து கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும் கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் புயல் மீண்டும் பேசுபொருளாகியிருக்கிறது. அதைப்பற்றித் தெரிந்துகொள்வோம். கடலில் உள்ள வெப்பக் காற்று தான் புயலாக மாறுகிறது என்பது புயலுக்கான ஒற்றை வரி விளக்கமாகும். கடலில் உள்ள வெப்பமான ஈரப்பதம் கொண்ட காற்று கடல் பரப்புக்கு மேல் எழும்பும். அப்படி வெப்பக் காற்று மேல் எழும்பும் போது, அதன் கீழே குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். சுற்றியுள்ள அதிக காற்றழுத்தம், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதிக்குள் நகரும். இந்தப் பகுதிக்குள் வந்த பிறகு, இந்தக் காற்றும் வெப்பமடைந்து மேல் எழும்பும். இப்படித் தொடர்ந்து வெப்பக்காற்று மேலெழும்பும் போது அது மேகங்களாக மாறும். மேகங்களும் காற்றும் சுழலத் தொடங்கும். கடலிலிருந்து மேல் எழும்பும் வெப்பக் காற்று அந்தச் சுழற்சிக்குத் தொடர் உந்துதலாக இருக்கும். இதுவே புயல் எனப்படுகிறது. தொடர்ந்து வெப்பக் காற்று கிடைக்காவிட்டால் புயல் வலுவிழந்துவிடும். எனவே தான் புயல் நிலத்தை அடைந்த பிறகு, அது முற்றிலும் ஓய்ந்து விடுகிறது. புயல் வெவ்வேறு கடல் பகுதிகளில் வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் 'டைஃபூன்' எனவும், மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் 'ஹரிக்கேன்' எனவும், தெற்கு அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் 'டோர்னடோ' எனவும், வட மேற்கு ஆஸ்திரேலியாவில் 'வில்லி-வில்லிஸ்' எனவும் அழைக்கப்படுகிறது. புயலின் வகைகள் புயல்கள் பெரும்பாலும் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவை வெப்ப மண்டலப் (tropical) புயல்கள் மற்றும் வெப்ப மண்டலச் சேய்மை (extra tropical) எனப்படும். வெப்ப மண்டலப் புயல் என்பது கடக ரேகை (tropic of cancer) மற்றும் மகர ரேகைக்கு (tropic of Capricorn) இடையில் உருவாகக்கூடியது ஆகும். காற்றின் வேகம் மணிக்கு 63கி.மீ வேகத்தை விட அதிகம் கொண்டதாக இருக்கும். இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகும் புயல்கள் இந்த வகையைச் சார்ந்ததாகும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் விளக்குகிறது. வெப்ப மண்டலச் சேய்மைப் புயல்கள் மிதமான வெப்பம் இருக்கும் மண்டலங்களில் உருவாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனக் கடல் மற்றும் பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் புயலை, டைஃபூன் என அழைக்கிறார்கள் புயலின் தீவிரம் இந்தியாவில், காற்றின் வலிமை, மழைப்பொழிவு, புயலின் எழுச்சி ஆகியவற்றைக் கொண்டு புயல் எவ்வளவு வீரியமானது என வகைப்படுத்தப்படுகிறது. காற்றின் வேகம் மணிக்கு 31கி.மீ-க்கு கீழ் இருந்தால் அது குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி எனப்படும். காற்றின் வேகம் 31கி.மீ முதல் 49கி.மீ வரை இருந்தால் அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் என்று வகைக்கப்படுத்தப்படுகிறது. மணிக்கு 49 கி.மீ முதல் 61 கி.மீ வரை காற்றின் வேகம் இருந்தால் அது ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகியுள்ளது என்று அர்த்தம் அடுத்த நிலை, அதாவது மணிக்கு 61கி.மீ முதல் 88கி.மீ வரை காற்றின் வேகம் இருக்கும்போது அது புயல் என்றழைக்கப்படும். அதை விடவும் காற்றின் வேகம் அதிகமாக, மணிக்கு 88கி.மீ முதல் 117கி.மீ வரை இருந்தால், தீவிர புயல் என்றழைக்கப்படும். அந்த வேகத்தையும் விட அதிகமாக இருக்கும் புயல்கள் சூப்பர் புயல்கள் என்று அழைக்கப்படுகின்றன. புயல் எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்து ஒன்று முதல் ஐந்து வரை இந்தியாவில் வகைப்படுத்தப்படுகின்றன. ஒன்று – குறைந்த சேதம் இரண்டு – மிதமான சேதம் மூன்று – பரவலான சேதம் நான்கு – தீவிர சேதம் ஐந்து – மிக மோசமான சேதம் புயலின் பாகங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2019இல் இந்தியாவை நோக்கி வரும் ஃபானி புயல் (கோப்புப் படம்) புயலுக்கு மூன்று பாகங்கள் உள்ளன. நடுப்பகுதி - மேலே திரண்டிருக்கும் மேகங்கள் சுழல ஆரம்பிக்கும் போது அதிலுள்ள கடினமான பகுதிகள் ஓரத்திற்கு சென்றுவிடும். எனவே நடுப்பகுதி காலியாக இருக்கும். இதை ஆங்கிலத்தில் செண்ட்ரிஃபியூகல் (centrifugal) என்று சொல்வார்கள். இது தான் புயலின் 'கண்' பகுதி எனப்படும். இது வட்டமாக, நீள்வட்டமாக, அல்லது ஒரே மையத்தைக் கொண்ட அடுத்தடுத்து அடுக்குகளாக இருக்கும். இந்தியப் பெருங்கடலில் உருவாகும் புயல்கள் அடுத்தடுத்த அடுக்குகள் கொண்டதாக இருக்கும். இதைச் சுற்றியுள்ள பகுதி ‘eye wall’ எனப்படும் பகுதி அதிவேகக் காற்றைக் கொண்டதாகும். இதுவே புயலின் மிகவும் முக்கிய மற்றும் ஆபத்தான பகுதி. இந்தப் பகுதி கரையை கடக்கும் போது தான் அதிகனமழை, சூறைக்காற்று உருவாகும். இதற்கும் வெளியே இருக்கும் பகுதி மேகக்கூட்டங்களால் ஆனது. இவற்றால் மிதமானது முதல் கனமழை வரை பெய்யலாம். இஸ்ரேலுக்கு அமெரிக்கா அனுப்பும் அதிநவீன 'தாட்' வான் பாதுகாப்பு கவசம் - எவ்வாறு செயல்படும்?16 அக்டோபர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன தென்னிந்தியாவில் புயல்கள் தென்னிந்தியாவில் புயல்கள் வங்கக் கடல் அல்லது அரபிக் கடலில் பருவமழை மாற்றங்கள் மற்றும் கடல் மேற்பரப்பு வெப்ப நிலை பொருத்து உருவாகின்றன. கடந்த 20 ஆண்டுகளில் வங்கக் கடலில் ஏற்படும் புயல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே நேரம் அரபிக்கடலில் உருவாகும் புயல்கள் அதிகரித்துள்ளன. போபாலில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வுகளில் இந்தத் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தரவுகளின் படி வங்கக் கடல் மற்றும் அரபிக் கடல் பகுதியில் ஒரு தசாப்தத்தில் 50.5% புயல்கள் உருவாகின்றன என்று இந்த ஆய்வு கூறுகிறது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரையிலான காலத்தில் 49.8% புயல்களும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில் 28.9% புயல்களும் உருவாகின என்றும் இந்த தரவுகள் தெரிவிக்கின்றன. 2001-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் அரபிக் கடலில் தீவிர புயல்கள் அதிகமாக உருவாகத் துவங்கியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் ஒரு பகுதி மட்டுமே அரபிக் கடலில் உருவாகி வந்த நிலையில், 20 ஆண்டுகளில், புயல்கள் அதிகமாகியுள்ளன. வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கையில் நான்கில் இரண்டு பகுதி அரபிக் கடலில் உருவாகிறது. அதே நேரம் வங்கக் கடலில் உருவாகும் புயல்களின் எண்ணிக்கை சற்றே குறைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு குறிப்பிடுகிறது. தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் உருவாக்கியுள்ள புயல் பாதிக்கும் இடங்கள் குறித்த வரைபடக் குறிப்பில், இந்தியாவில் கிழக்குக் கடற்கரையோரத்தில் புயலால் பாதிப்படையக்கூடிய நான்கு மாநிலங்களில் ஒன்றாகத் தமிழகத்தைக் குறிப்பிடுகிறது. 1891 முதல் 2013-ஆம் ஆண்டு வரையிலான இந்திய வானிலை ஆய்வு மையத் தகவல்களின் படி, தமிழகத்தின் வடக்குப் பகுதியிலேயே அதிக புயல்கள் ஏற்பட்டுள்ளன. இதற்குத் தமிழகத்தின் பூகோள அமைப்பு ஒரு காரணமாகும். வங்கக் கடலில் உருவாகும் புயல்கள், தமிழகத்துக்குத் தென்கிழக்கே அமைந்திருக்கும் இலங்கையின் காரணமாக வடக்கு நோக்கி திருப்பப்படுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cz04zmdpez9o
  6. இரண்டு வாரங்களாக மருந்து, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்பொருட்களை இஸ்ரேல் ராணுவம் தடை செய்துள்ளது. இதனால் வடக்கு காசாவில் உள்ள 4,00,000 பாலஸ்தீனர்கள் பட்டினியில் தள்ளப் பட்டுள்ளனர். இதனால் அதிக மக்கள் உயிர்ப் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என ஐரோப்பிய – மத்திய தரைக் கடல் மனித உரிமை கள் கண்காணிப்பு அமைப்பு எச்சரித்துள்ளது. வடக்கு காசாவில் சுமார் 2, 00,000 பாலஸ்தீனர்கள் பத்து நாட்க ளாக உணவு, குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ஈரான் நிராகரிப்பு ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராச்சி ஓமான் அரசின் உதவியுடன் அமெரிக்காவுடன் நடை பெறும் பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அறிவித்துள் ளார். இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்த துவங்கிய பிறகு பிராந்தியம் முழுவ தும் போர் பரவி விடக் கூடாது. ஈரானும் அமெரிக்காவும் போரில் இறங்கிவிடக் கூடாது என இரு நாட் டுக்கும் இடையே ஓமன் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது. தற்போது போர்ப் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில் பேச்சுவார்த்தையை ஈரான் நிராகரித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் இஸ்ரேல் தயார்? ஈரான் மீது தாக்குதல் நடத்துவது குறித்து ஒரு முழுமையான திட்டத்திற்கு இஸ்ரேல் வந்துள்ள தாகக் கூறப்படுகிறது. அந்த திட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சரவையின் இறுதி ஒப்புதல் தேவை என இஸ்ரேல் அரசு செய்தித் தொடர்புத் துறை தெரிவித்துள்ளது. ஈரானின் எண் ணெய், அணுசக்தி நிலையங்களை தாக்கமாட்டேன் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் உறுதி கொடுத்ததாக கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய பணக்கார நகரம் அபுதாபி அரசு மேற்கொள்ளும் முதலீட்டு நிதி மூலம் பெரும் வருவாய் அடிப்படையில் உலகிலேயே மிகப் பெரிய பணக்கார நகரமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி அறிவிக்கப் பட்டுள்ளது. நடப்பு அக்டோபர் மாத நிலவரப்படி அபு தாபி அரசு 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை பெற்று இந்த முதலிடத்தை பிடித்துள்ளதாக எஸ்.டபிள்யு.எப் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மிக வேகமாக வளரும் நகரமாக அபுதாபி உள்ளது குறிப் பிடத்தக்கது. https://thinakkural.lk/article/310830
  7. ஊடகங்களிடம் தேர்தல்கள் ஆணையாளர் விடுத்துள்ள விசேட கோரிக்கை பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்தி முடிப்பதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க சகல ஊடகங்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று ஊடகப் பிரதானிகளுடன் நடைபெற்ற சந்திப்பில் இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், கடந்த வெள்ளிக்கிழமையுடன் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் செய்வது நிறைவடைந்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தியும், சுயேட்சையாகவும் போட்டியிடும் வேட்பாளர்கள் நாடளாவிய ரீதியில் தமது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற காலப்பகுதியில் வேட்பாளர்களின் பிரசார நடவடிக்கைகளுக்காக ஊடகங்களால் வழங்கப்பட்ட நியாய பூர்வத்தன்மை, தேர்தல் பிரசாரங்கள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் ஊடகங்களும் அதனை உரியவாறு பின்பற்றி நடந்துகொண்டமையையும் அவர் இதன்போது நினைவுக் கூர்ந்தார். அத்தோடு, பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் விடுக்கப்பட்ட அறிவிப்புக்களை மக்களிடம் கொண்டுச் சென்று சேர்ப்பதில் ஊடகங்கள் வழங்கிய ஒத்துழைப்புக்கும் அவர் நன்றி தெரிவித்தார். அதே காலப்பகுதியில் சில ஊடகங்களின் நியாயமற்ற நடத்தைகளைச் சுட்டிக்காட்டி, அவை மீண்டும் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துமாறும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்திமுடிப்பதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்குமாறும், இந்தத் தேர்தலில் போட்டியிடும் சகல வேட்பாளர்களுக்கும் இயலுமானவரை சமத்துவமான பிரசார வாய்ப்பை அளிக்குமாறும் அவர் ஊடகப்பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://thinakkural.lk/article/310815
  8. பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, பூச்சாவின் விட்செஸ் சுமார் முழுக்க முழுக்க பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு ஆகும். கட்டுரை தகவல் எழுதியவர், சாரா ரெயின்ஸ்ஃபோர்ட் பதவி, கிழக்கு ஐரோப்பா நிருபர், பூச்சா 48 நிமிடங்களுக்கு முன்னர் யுக்ரேனில் உள்ள பூச்சா (Bucha) நகரத்தில் இருள் சாயும் வேளையில் தான் இந்தக் குழு பணியைத் துவங்குகிறார்கள். ஏனெனில் இரவில் தான் ரஷ்யா இந்த நகரத்தின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தத் துவங்கும். இந்தக் குழு கிட்டத்தட்ட முழுதும் பெண்களைக் கொண்ட ஒரு தன்னார்வ வான் பாதுகாப்புப் பிரிவு. அவர்கள் தங்களை 'பூச்சாவின் சூனியக்காரிகள்' (The Witches of Bucha) என்று அழைத்துக் கொள்கின்றனர். தற்போது அவர்கள் யுக்ரேனில் வான் பாதுகாப்பிற்காக உதவுகின்றனர். ஏனெனில் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் படையில் அதிக எண்ணிக்கையில் ஆண்கள்தான் முன்னணியில் இருந்து சண்டையிடுகின்றனர். இந்த குழு சுட்டு வீழ்த்துவதற்கு அதிகமான ரஷ்ய ட்ரோன்கள் உள்ளன. யுக்ரேன் ஏவுகணை தாக்குதல் தொடங்குவதற்கு முன்பாக அதன் முக்கிய பாதுகாப்பு படைகளை வீழ்த்த ரஷ்யா ட்ரோன்களை கொண்டு இங்கு தாக்குதல் நடத்துகின்றது. இந்தக் குழுவில் உள்ள பெண்கள் பகலில் ஆசிரியர், மருத்துவர் போன்ற பணிகளைச் செய்கிறார்கள். ஒருவர் இதில் கை-கால் அழகுக் கலை நிபுணராகவும் உள்ளார். மறுபுறம் இரவில் தங்களது நாட்டை பாதுகாப்பதற்காக அவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுகிறார்கள். பூச்சா பகுதியில் ரஷ்யா முழு அளவிலான படையெடுப்பைத் துவங்கி, இந்தப் பகுதியை ஆக்கிரமித்தபோது, அவர்கள் சக்தியற்றதாக உணர்ந்ததால், அதற்கு ஒரு தீர்வு இது என்று இவர்களில் பலர் கூறுகிறார்கள். 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில், யுக்ரேன் படைகள் அந்தப் பகுதியில் இருந்து வெளியேறிய பின், கொலை, சித்திரவதை, கடத்தல் உட்பட பல பதற்றமூட்டும் நிகழ்வுகள் நடந்துள்ளன. விமானத் தாக்குதல்களும் பழைய ஆயுதங்களும் “எனக்கு 51 வயதாகிறது. எனது எடை 100 கிலோ, என்னால் ஓட முடியாது. போருக்கு தேவையான ஆயுதங்களை அவர்கள் எனக்கு அனுப்புவார்கள் என்று நினைத்தேன், ஆனால் அதற்குள் என்னை போருக்கு அழைத்துச் சென்றார்கள்," என்று வாலண்டினா கூறுகிறார். வாலண்டினா ஒரு கால்நடை மருத்துவர். சில மாதங்களுக்கு முன்பு தான் ரஷ்ய ட்ரோன்களைத் தாக்கும் பணியில் இணைந்தார். அவர் 'வால்கிரி' (Valkyrie - நோர்ஸ் தொன்மத்தில் ஒரு பெண் சிறுதெய்வம்) என்னும் குறிப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். அவரது நண்பர்கள் சிலர் ரஷ்யாவுடனான போரில் யுக்ரேன் ராணுவத்தின் முன்னணி வீரர்களாகப் பணியாற்றி உயிரிழந்தனர், அதனால்தான் அவர் இந்த பணியில் சேர்ந்ததாக கூறுகிறார். “இந்த வேலையை என்னால் செய்ய முடியும். ஆயுதங்கள் கனமாக உள்ளன. ஆனாலும் பெண்களால் இதைச் செய்ய முடியும்,” என்கிறார். வாலண்டினா பேசிய பிறகு அந்தப் பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை ஒன்று வந்தது. அப்போது அவர் இந்தக் குழு எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கினார். அடர்ந்த காடுகளின் ஒரு பகுதியில் இருந்து அவரது குழு தாக்குதலுக்குத் தயாராகின்றது. பிபிசி-யின் செய்தியாளர்கள் அவர்களது வாகனத்தைப் பின்தொடர்கிறார்கள். அது ஒரு வயலின் நடுப்பகுதியை நோக்கிச் செல்கிறது. நான்கு பேர் கொண்ட குழு தங்கள் ஆயுதங்களைத் தயார்படுத்தத் துவங்கினர். அவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கிகள் பல ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டவை. அவற்றுள் 1939-ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட வெடிமருந்துகள் கொண்ட பெட்டிகளும் இருந்தன. அதில் சோவியத் கொடியில் உள்ளது போலவே சிவப்பு நட்சத்திரங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, சில மாதத்திற்கு முன்பு தான் ரஷ்ய ட்ரோன்களை தாக்கும் பணியில் இணைந்தார், வாலண்டினா. ‘பிரசவத்தைப் போல பயமானது’ இந்தக் குழுவில் செர்ஹி என்ற ஒரே ஒரு ஆண் மட்டும்தான் உள்ளார். அவர் ஆயுதங்களில் உள்ள சூட்டைத் தணிப்பதற்காகக் கையால் ஏவுகணையில் உள்ள ஒரு பகுதியில் பாட்டில் கொண்டு தண்ணீரை ஊற்றுவார். யுக்ரேனிடம் இவ்வளவு ஆயுதங்கள்தான் உள்ளன. அதில் சிறந்தவை போரில் முன்னணியில் பயன்படுத்தப்படுகின்றன. யுக்ரேன் அதன் நட்பு நாடுகளிடம் கூடுதல் ஆயுதங்களைக் கோரி வருகிறது. ஆனால் இந்தப் பழங்கால ஆயுதங்கள் சிறப்பான முறையில் பராமரிக்கப்படுவதாகவும், இதுவரை மூன்று ட்ரோன்களை வீழ்த்தியதாகவும் 'பூச்சாவின் சூனியக்காரிகள்' குழு கூறுகிறது. "எதிரிகளின் அசைவுகளைக் கேட்பதே எனது வேலை," என்று வாலண்டினா கூறுகிறார். "இது பதட்டமான வேலை. ஆனால் அவர்களின் சிறிய சத்ததிற்கும் நாம் கவனம் செலுத்த வேண்டும்,” என்கிறார். அவரது தோழி இன்னா, போரில் முன்னணியில் பணியாற்றி வருகிறார். அவரும் 50 வயதிற்கு மேற்பட்டவர் ஆவார். "இது பயமாக இருக்கிறது. ஆனால் ஒரு குழந்தையைப் பிரசவிப்பதும் பயமானதுதான். இருப்பினும் நான் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளேன்," என்று இன்னா சிரித்துக்கொண்டே கூறுகிறார். அவர் 'செர்ரி' என்ற குறிப்புப் பெயரால் அழைக்கப்படுகிறார். இன்னா ஒரு கணித ஆசிரியர். இந்தக் குழுவில் பணியாற்றிய பிறகு அவர் ஒரு வகுப்பை எடுக்க இந்தக் காட்டுப் பகுதியில் இருந்து விரைந்து செல்ல வேண்டும். பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, இந்த குழுவில் செர்ஹி என்ற ஒரே ஒரு ஆண் மட்டும்தான் உள்ளார். ‘பெண்களாலும் இதைச் செய்ய முடியும்’ இன்னா, "நான் எனது காரில் ஆடைகள், ஒப்பனை பொருட்கள், ஹீல்ஸ் ஆகியவை வைத்துள்ளேன். எனது காரிலேயே ஆடைகளை மாற்றிக்கொண்டு, வகுப்பு எடுக்க புறப்பட்டுவிடுவேன்," என்கிறார். "ஆண்கள் போரிடச் சென்றுவிட்டார்கள். ஆனால் நாங்கள் இங்கே இருக்கிறோம். யுக்ரேனியப் பெண்களால் என்னதான் செய்ய முடியாது? எங்களால் எல்லாவற்றையும் செய்ய முடியும்," என்கிறார். "ஆண்கள் போரில் முன்னணியில் ஈடுபடுகிறார்கள், அவர்கள் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள் என்பது எங்களுக்கு புரிகின்றது," என்கிறார். இது போன்ற தன்னார்வப் பிரிவுகளின் மொத்த எண்ணிக்கை, அல்லது எத்தனை பெண்கள் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்த தரவு எதுவும் இல்லை. ஆனால், ரஷ்யா ஒவ்வொரு இரவும் வெடிபொருட்கள் நிரம்பிய ட்ரோன்களைக் கொண்டு இங்கு தாக்குவதால், யுக்ரேனில் உள்ள பெரிய நகரங்களில் கூடுதல் பாதுகாப்பை உருவாக்க இந்தக் குழுக்கள் உதவுகின்றன. களத்தில் உள்ள இந்தக் குழுகளில் உள்ள யூலியா தனது டேப்லெட்டில் இரண்டு ட்ரோன்களைக் கண்காணிக்கிறார். அவை பூச்சாவிற்கு அருகில்தான் உள்ளன. அதனால் இங்கு எந்த உடனடி ஆபத்தும் இல்லை. ஆனால் எச்சரிக்கை முடியும் வரை துப்பாக்கிகள் கொண்டு இவர்கள் களத்தில் இருப்பார்கள். 48 ஆயிரம் பாடல்களை பாடியுள்ள எஸ்.ஜானகியின் முதல் தமிழ்த் திரைப்பட பாடல் எது தெரியுமா?24 ஏப்ரல் 2024 பிராய்லர் கோழி எப்படி உருவாகிறது? அதற்கும் நாட்டுக்கோழிக்கும் என்ன வித்தியாசம்?26 ஏப்ரல் 2024 பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, இன்னா ஒரு கணித ஆசிரியர். 'ஆண்கள் யாரும் இல்லை' இந்தத் தன்னார்வலர் குழுவின் தளபதி ஒரு அஜானுபாகுவான நபர். அவர் கடுமையான சண்டை நடைபெற்று வந்த கிழக்கு டான்பாஸ் பகுதியில் உள்ள போக்ரோவ்ஸ்கில் இருந்து தற்போது திரும்பியுள்ளார். "அங்கு இடைவிடாமல் தாக்குதல் நடந்தது," என்று ஆண்ட்ரி வெர்லாட்டி ஒரு புன்னகையுடன் அதை விவரிக்கிறார். பூச்சா பகுதிகளில் வான் பாதுகாப்பு மற்றும் இரவு நேரப் பாதுகாப்புப் பணிக்காகச் சுமார் 200 ஆட்களை அவர் பணியமர்த்தினார். அவர்களில் பலர் முழுநேர ராணுவச் சேவைக்குத் தகுதியற்றவர்கள். பின்பு போருக்கான ஆள்திரட்டல் சட்டத்தை யுக்ரேன் மாற்றியமைத்தது. அந்நாட்டிற்குக் கூடுதல் போர் வீரர்கள் அவசரமாகத் தேவைப்பட்டனர். இதனால் படைத்தளபதியின் குழுவினர் பலர் திடீரென முன்னணியில் பணியாற்றத் தகுதி பெற்றனர். "எனது குழுவில் இருந்து 90% ஆட்கள் ராணுவத்தில் சேர்ந்தனர், 10% பேர் எலிகள் போலச் சிதறி ஒளிந்து கொண்டனர். எங்களுக்கென யாரும் எஞ்சியில்லை," என்று படைத்தளபதி ஆண்ட்ரி வெர்லாட்டி கூறுகிறார். வயது வரம்பிற்குக் குறைவான ஆண்களைக் கொண்டு பணியிடங்களை நிரப்புவது அல்லது பெண்களைக் குழுவில் இணைத்துக்கொள்வது என்பதில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டியதாக இருந்தது. "பெண்களை ராணுவத்தில் பணியமர்த்துவது என்பது முதலில் ஒரு நகைச்சுவையாக இருந்தது. அவர்கள் ராணுவத்தில் பணியாற்றுவார்கள் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால் தற்போது அவர்கள்தான் இங்கு பணியாற்றி வருகின்றனர்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, ஆண்ட்ரி வெர்லாட்டி ‘எங்கள் பங்களிப்பு இல்லாமல் போர் முடியாது’ பூச்சாவின் இந்தப் பெண்கள் குழுவினர் தங்கள் வார இறுதி நாட்களை ராணுவப் பயிற்சிகள் செய்வதில் செலவிடுகிறார்கள். இவர்களைச் சந்திக்க பிபிசி செய்தியாளர் குழு சென்றபோது, அவர்கள் ஒரு கட்டடத்தில் நுழைந்து எவ்வாறு தாக்குவது என்ற முதல் பாடத்தை கற்றுக்கொண்டு இருந்தனர். அவர்கள் ஒரு பண்ணை வீட்டின் இடிபாடுகளில் பயிற்சி செய்தனர். வீட்டின் உள்ளே நுழைவதற்கு முன்னர் துப்பாக்கியைக் கொண்டு அந்தப் பகுதியை நோட்டமிட்டு எச்சரிக்கையாக செல்கின்றனர். அந்த குழுவில் சிலர் மற்றவர்களை விட உறுதியான தோற்றத்தைக் கொண்டுள்ளனர். ஆனால் இந்தப் பெண்களின் அர்ப்பணிப்பு மற்றும் கவனம் தெளிவாக உள்ளது. ஏனெனில் அவர்கள் இந்தப் பணியில் ஈடுபடுவாதற்கான காரணங்கள் ஆழமானவை மற்றும் தனிப்பட்டவை. "எதிரி நாட்டுப் படைகள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்தது எனக்கு நினைவிருக்கிறது. அதனால் ஏற்பட்ட பயம் எனக்கு நினைவிருக்கிறது. என் சொந்தக் குழந்தையின் அலறல் எனக்கு நினைவிருக்கிறது. நாங்கள் தப்பி ஓடும்போது வழியில் கிடந்த சடலங்கள் எனக்கு நினைவிருக்கிறன," என்று வாலண்டினா பிபிசியிடம் கூறினார். பூச்சாவில் நடந்த தாக்குதலில் இருந்து வாலண்டினாவின் குடும்பம் தப்பித்தது. ஒரு ரஷ்ய சோதனைச் சாவடியில், ஒரு வீரர் அவர்களின் காரின் ஜன்னலை இறக்கச் சொன்னார். பின்னர் அவர் வாலண்டினாவின் மகனின் தலையில் துப்பாக்கியை வைத்தார். இதனால் வாலண்டினாவிற்கு பெரும்கோபம் வந்தது. சுமார் 1,000 நாட்கள் முழு அளவிலான போருக்குப் பிறகு யுக்ரேன் நாட்டின் பெரும்பகுதி பாதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இனிமேல் இதில் யுக்ரேன் வெற்றி பெறும் என்று வாலண்டினா அழுத்தமாக நம்புகிறார். "எங்கள் வாழ்க்கை மாறிவிட்டது, எங்கள் திட்டங்கள் அனைத்தும் தகர்ந்துவிட்டன. ஆனால் இந்தப் போர் விரைவாக முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காக நான் இங்கு வந்திருக்கிறேன். இங்குள்ள எங்கள் பெண்கள் சொல்வது போல, எங்கள் பங்களிப்பு இல்லாமல் இந்தப் போர் முடிவுக்கு வராது," என்றார் அவர். பட மூலாதாரம்,BBC/JAMES CHEYNE படக்குறிப்பு, ரஷ்ய படையெடுப்புகளை தோற்கடிக்க யுக்ரேனின் படைகள் உறுதியாக இருக்கிறார்கள் 'ரஷ்யர்களை மன்னிக்க மாட்டேன்' இந்தக் குழுவின் அலுவலக மேலாளராக உள்ளார் அன்யா. அவருக்குத் தற்போது 52 வயதாகிறது. இந்த ராணுவப் பயிற்சிகள் அவரை மேம்படுத்துவதாக அவர் கூறுகிறார். "எதிரிகள் இந்தப் பகுதியை ஆக்கிரமித்தபோது, நான் மிகவும் அர்த்தமற்றதாக உணர்ந்தேன். என்னால் வேறு யாருக்கும் உதவவோ, என்னைத் தற்காத்துக் கொள்ளவோ முடியவில்லை. நான் ஆயுதங்களைப் பயன்படுத்துவது எப்படி என்பதைக் கற்றுக்கொள்ள விரும்பினேன், அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எண்ணினேன்,” என்கிறார். இந்தப் பயிற்சியின் மத்தியில் அவர்களுக்குள் மகிழ்ச்சியாக பேசிக்கொள்கின்றனர். ஆனால் அந்த இரவு, ஒரு பெண் மனம் திறந்து மனதை கனக்க வைக்கும் ஒரு கதையைப் பகிர்ந்து கொள்கிறார். பூச்சா நகரத்தைக் கைப்பற்றியதும், ரஷ்யப் படைகள் வீடு வீடாகச் செல்லத் துவங்கின. அவர்கள் அங்குள்ள பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்தனர். அப்போது ஒரு நாள் ரஷ்யப் படைகள் குழந்தைகளைக் கொல்ல வருவதாக வதந்தி பரவியது. "அன்று நான் எடுத்த முடிவுக்காக, நான் ரஷ்யர்களை மன்னிக்க மாட்டேன்," என்று அந்தப் பெண் கூறுகிறார். ரஷ்ய வீரர்கள் அவரது வீட்டிற்கு ஒருபோதும் வரவில்லை. அவர் எதுவும் செய்யத் தேவை இருந்ததில்லை. ஆனால் அந்தப் பெண் சொன்ன விவரங்களையும், அதற்குப் பின் அவர் எடுத்த தீவிர முடிவையும் வெளியில் கூற முடியாது. ஆனால் இந்தப் பெண் அன்று நடந்த நிகழ்வினால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பத்திருக்கிறார். தன்னையும், தன் குடும்பத்தையும், தன் நாட்டையும் தற்காத்துக் கொள்ளக் கற்றுக்கொண்டபோதுதான் முதன்முதலாக அவர் நிம்மதி அடைந்தார். "இங்கே வந்து பணிபுரிவது உண்மையில் எனக்கு உதவியது, ஏனென்றால் நான் மீண்டும் பாதிக்கப்பட்டவளைப் போல மிகவும் பயப்பட மாட்டேன்," என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c33vkdz4rl2o
  9. குடிநீர் அடைக்கப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு சுகாதாரத்துறை மக்களை கேட்டுக் கொண்டுள்ளது. பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்தும் போது, அவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மூலப்பொருட்களிலிருந்து சில இரசாயனங்கள் நீருடன் கலப்பதாக உணவு பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. அவற்றில் சில இரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் குடிநீர் நிரம்பிய பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சிலர் நீரை சேமித்து வைப்பதற்காக குறித்த பிளாஸ்டிக் போத்தல்களை மீளப் பயன்படுத்துவதாகவும், அவை ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சின் உணவு பாதுகாப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. https://thinakkural.lk/article/310838
  10. இல்மனைட் மட்டுமில்ல இப்ப கோபால்ற்றும் இருக்காமெல்லோ! அவங்கட 11 திட்டங்கள் மீளத்தொடங்கிற்றாங்கள், அப்ப பதற்றமா இருக்குமெல்லோ!
  11. அவர் முதலே உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந்தவர் தானே அண்ணை. அப்பவே வீட்டில சொல்லித்தான் விட்டது, தொடர்ந்து இருக்கக் கூடாது, மற்றவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்கவேணும். தன்னுடைய சம்பளப்பணம் 15000*60 மாதம் முழுவதும் பல்ப் போடவும் 2 இலட்சம் ரூபா பெறுமதியில் கற்றல் செயற்பாடுகளுக்கு கொட்டகை போடவும் பயன்படுத்தினவர்.
  12. பொதுத் தேர்தல் : கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் உள்நாட்டு பங்குதாரர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற உள்நாட்டுப் பங்குதாரர்களுக்கு உபகரணங்களைக் கையளிக்கும் நிகழ்வு இன்று (16) கொழும்பில் நடைபெற்றுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய தேர்தல்கள் கண்காணிப்புக் குழுவின் தலைவர் கார்மன் மொரீனோ உட்பட பலர் இதில் பங்கேற்றனர். (படப்பிடிப்பு : எஸ்.எம்.சுரேந்திரன்) https://www.virakesari.lk/article/196464
  13. அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று முதல் இடைக்கால கொடுப்பனவு! அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் இன்று புதன்கிழமை (16) முதல் ரூ.3000 மாதாந்த இடைக்கால கொடுப்பனவு வழங்க ஓய்வூதிய திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கான உத்தேச மாதாந்த இடைக்கால கொடுப்பனவான 3000 ரூபாய் வழங்கப்படாமை தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதற்கான பணத்தை திறைசேரியிலிருந்து வழங்குமாறு அண்மையில் பணிப்புரை விடுத்தார். அந்த அறிவுறுத்தலின்படி, திறைசேரியிலிருந்து தேவையான பணம் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வழங்கப்பட்டுள்ளதோடு, அதனை இன்று முதல் ஓய்வூதியதாரர்களின் கணக்கில் வைப்பிலிட ஓய்வூதிய திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் மாதாந்த இடைக்கால கொடுப்பனவாக ரூ.3000 வழங்க 24/08/2024 திகதியிட்ட 02/2024ஆம் இலக்க பொது நிர்வாக சுற்றறிக்கை வெளியிடப்பட்ட போதிலும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை. கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி, 679,960 ஓய்வூதியதாரர்களுக்கு இந்த மாதத்துக்கான 2,021 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டை திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம், ஓய்வூதியத் திணைக்களத்துக்கு வழங்கியுள்ளது. அதன்படி, இந்தக் கொடுப்பனவை இன்று (16) முதல் வழங்க ஓய்வூதியத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது. அரச மற்றும் தனியார் வங்கிகளில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியர்களின் வங்கிக் கணக்கில் இன்று பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதுடன், தபால் நிலையங்கள் மற்றும் உப அலுவலகங்களில் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் இந்தக் கொடுப்பனவை இம்மாதம் 18ஆம் திகதி முதல் பெற்றுக்கொள்ள முடியும். https://www.virakesari.lk/article/196463
  14. அப்படித்தான் நானும் நினைக்கிறேன், மேசன் தொழிலாளர்களுக்குப் பதில் இராணுவத்தினர் வேலை செய்திருப்பார்கள்.
  15. எனக்கு தேர்தலில் நிற்கும் எண்ணம் எப்போதும் இல்லை அண்ணை. நம்மட ஊருக்குள்ளயே என்னை எல்லோருக்கும் தெரியாது!
  16. படக்குறிப்பு, ஊட்டி வெலிங்டன் ராணுவ மையத்தில் கட்டபொம்மன் சிலை கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 16 அக்டோபர் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (கட்டபொம்மன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த கட்டுரை மீண்டும் பகிரப்படுகிறது) இந்தியாவின் முதல் விடுதலைப் போர் என அழைக்கப்படும் 1857 சிப்பாய் கலகத்திற்கு பல ஆண்டுகள் முன்பாகவே தமிழ்நாட்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக போரிட்டவர்களில் முதன்மையானவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த மாலிக்கபூர், 612 யானைகளையும், 20,000 குதிரைகளையும், 96000 மணங்கு பொன்னும், முத்தும், அணிகலன்களும் அடங்கிய பெட்டிகளையும் மதுரையிலிருந்து கொள்ளையடித்து சென்றார் என்று வரலாறு கூறுகிறது. "அப்படிப்பட்ட மாலிக்கபூரைக் கூட “கொள்ளைக்காரன் மாலிக்கபூர்” என யாரும் எழுதுவதில்லை, ஆனால் வெள்ளையர் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடி, ஆங்கிலேயர்கள் நடத்திய இறுதி விசாரணையில் கூட எவ்வித கொள்ளைக் குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாத, வீரபாண்டிய கட்டபொம்மனை “கொள்ளைக்காரன்” என்று பழி சுமத்துகிறார்கள்”, என வேதனைப்படுகிறார் எழுத்தாளர் வே. மாணிக்கம். தமிழ்நாட்டின் பாஞ்சாலங்குறிச்சி எனும் ஒரு சிறிய பாளையத்தை ஆண்ட பாளையக்காரர் தான் வீரபாண்டிய கட்டபொம்மன், ஆனால் இந்த சிறிய பாளையத்தை பல கட்ட போர்களுக்கு பிறகு தான் ஆங்கிலேய அரசால் முழுமையாக கைப்பற்ற முடிந்தது. ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்டு, அக்டோபர் 16, 1799 அன்று கயத்தாறில் தூக்கிலிடப்பட்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். படக்குறிப்பு, தூக்கிலிடப்படுவதற்கு முன்பு கட்டபொம்மன் இருந்த சிறைச்சாலை கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டது ஏன்? “ஆங்கிலேய அரசுக்கு வரி கட்ட மறுத்தது, தனது படைவீரர்கள் உதவியோடு ஆங்கிலேய அரசுக்கு எதிராக புரட்சி செய்து பல ஆங்கிலேய சிப்பாய்களை கொன்றது, மற்ற பாளையக்காரர்களையும் அரசுக்கு எதிராக புரட்சி செய்ய தூண்டியது உட்பட பல காரணங்களுக்காக வீரபாண்டிய கட்டபொம்மன் கைது செய்யப்பட்டு, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அவர் கயத்தாரின் பழைய கோட்டைக்கு அருகில் உள்ள ஒரு இடத்தில் மேஜர் பானர்மேன் மற்றும் பாளையக்காரர்கள் முன்னிலையில் தூக்கிலிடப்பட்டார்”, என 1881-இல் மதராஸ் அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட, ராபர்ட் கால்டுவெல் எழுதிய 'திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு' என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கூட வீரபாண்டிய கட்டபொம்மன் சுதந்திரத்திற்காக போராடியவர் அல்ல, அவர் ஒரு கொள்ளைக்காரர் என சிலர் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்களில் இதைக் குறித்து அவ்வப்போது சர்ச்சைகளும் எழுவதும் உண்டு. இது குறித்து சில நூல்களும் தமிழில் வெளிவந்துள்ளன. இவ்வாறு சொல்லப்படுவதன் பின்னணி என்ன, வீரபாண்டிய கட்டபொம்மன் என்பவர் உண்மையில் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து போராடியதால் தான் தூக்கிலிடப்பட்டாரா என தெரிந்து கொள்ள நெல்லையைச் சேர்ந்த எழுத்தாளர் வே. மாணிக்கத்திடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். வே. மாணிக்கம், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் தமிழாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கட்டபொம்மன் பற்றி ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றவர். கட்டபொம்மன் கும்மிப்பாடல், வீரபாண்டிய கட்டபொம்மன் விவாத மேடை, வீரபாண்டிய கட்டபொம்மன் வரலாறு, தானாபதிப் பிள்ளை வரலாறு, கட்டபொம்மன் வரலாற்று உண்மைகள், ஊமத்துரை வரலாறு, போன்ற பல நூல்களை எழுதியுள்ளார். படக்குறிப்பு, கட்டபொம்மன் வழிபட்ட விக்ரகங்கள் கட்டபொம்மன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் என்னென்ன? கட்டபொம்மன் மீதான இறுதி விசாரணையின் போது வெள்ளையரால் நான்கு குற்றங்கள் சுமத்தப்பட்டன, வரி ஒழுங்காகக் கட்டவில்லை கலெக்டர் அழைத்த போது சந்திக்க மறுத்தார் சிவகிரியாரின் மகனுக்கு ஆதரவாகப் படைகள் அனுப்பினார் பானர்மேன் அதிகாரத்திற்கு கட்டுப்பட்டுச் சரணடையாமல் எதிர்த்து போரிட்டார். "அவர் மீது கொள்ளையடித்தார் என எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை. ஆனாலும் கூட சிலர் வீரபாண்டிய கட்டபொம்மன் மீது தவறான குற்றச்சாட்டுகளை ஆதாரங்கள் ஏதுமின்றி முன் வைக்கிறார்கள்” எனக் கூறுகிறார் வே.மாணிக்கம். அவர் தொடர்ந்து பேசியது, “ஆங்கிலேய அதிகாரி மாக்ஸ்வெல் நில அளவை எனும் பெயரில் தன் பகுதிகளை எட்டையபுரத்தாருக்கு கொடுத்ததைக் கட்டபொம்மன் ஏற்கவில்லை. தன் தந்தையைப் போலவே வெள்ளையரை எதிர்த்து பல செயல்களில் ஈடுபட்டார், வரி கட்ட மறுத்தார். கலெக்டர் ஜாக்சன் பலமுறை கடிதம் எழுதியும் கட்டபொம்மன் அவரை சென்று பார்க்கவில்லை. இதனால் கோபமடைந்த ஜாக்சன், கட்டபொம்மனை கைது செய்ய உடனே படை அனுப்புமாறு கவர்னருக்கு கடிதம் எழுதினார். ஆனால் கவர்னரோ, கட்டபொம்மனை அழைத்து பேசுமாறு ஜாக்சனுக்கு ஆலோசனை வழங்கினார். எனவே சமரசம் பேச 15 நாட்களுக்குள் இராமநாதபுரம் வருமாறு கட்டபொம்மனுக்கு கடிதம் அனுப்பிவிட்டு குற்றாலம் சென்று விட்டார் கலெக்டர் ஜாக்ஸன். கடிதம் கண்டு தன்னைக் காண வரும் கட்டபொம்மனை ஆத்திரமூட்டி, ஊர் ஊராக அலைக்கழித்துச் சந்திக்க விடாமல் செய்துவிட்டால் அதையே காரணம் காட்டி பாளையக்காரர் பதவியிலிருந்து அவரை நீக்கிவிடலாம் என்பதே ஜாக்சன் திட்டம். இவ்வாறு குற்றாலம், சொக்கம்பட்டி, சிவகிரி, சேத்தூர் என ஒவ்வொரு ஊராக அலைக்கழிக்கப்பட்ட கட்டபொம்மன் இறுதியாக ஜாக்சனை இராமநாதபுரத்தில் சந்தித்தார்” என்றார். படக்குறிப்பு, பாஞ்சாலங்குறிச்சிக்கு வெளியே ஆங்கிலேய படை கட்டபொம்மன் ஜாக்சனை சந்தித்த போது நடந்த கலவரம் தொடர்ந்து பேசிய வே.மாணிக்கம், “இராமநாதபுரம் பேட்டி கட்டபொம்மனின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வு. ஜாக்சனை சந்திக்க கட்டபொம்மன் சென்ற போது, அவர் மட்டுமே கோட்டைக்குள் அனுமதிக்கப்பட்டார். அவரது தம்பிமார், மாப்பிள்ளைமார், மாமனார், மற்றும் படைகள் வெளியே தடுத்து நிறுத்தப்பட்டனர். மூன்று மணிநேரம் தண்ணீர் கூட தராமல் அவரை காக்க வைக்கிறார்கள். மேலும் நிர்வாகத்தின் உத்தரவு வரும் வரை கோட்டைக்குள்ளேயே கட்டபொம்மன் தங்கியிருக்க வேண்டுமென சொல்லப்பட்டது. தன்னை சிறைப்படுத்த முயற்சி நடக்கிறது என்பதை உணர்ந்த கட்டபொம்மன் கோட்டையை விட்டு வெளியேறுகிறார். அப்போது அங்கு ஒரு கலவரம் நடைபெறுகிறது, அதில் லெப்டினன்ட் கிளார்க் எனும் ஆங்கிலேய அதிகாரி கட்டபொம்மனால் கொல்லப்படுகிறார்” எனக் குறிப்பிடுகிறார். இந்த நிகழ்வுகளுக்கு ஆதாரமாக கட்டபொம்மனின் இரு கடிதங்கள், ஆங்கிலேய அதிகாரி டேவிட்சனின் கடிதம், ஆங்கிலேய அரசு அமைத்த விசாரணைக் குழுவின் அறிக்கை ஆகியவை உள்ளன. இராமநாதபுரம் பேட்டியில் ஜாக்சன் நடந்து கொண்டது தவறு என கண்டுகொண்ட ஆங்கிலேய நிர்வாகம் அவரை பதவி நீக்கம் செய்து, லூசிங்டன் என்பவரை கலெக்டராக நியமித்தது. ('திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', 1881, ராபர்ட் கால்டுவெல், பக்கம்: 177-178). படக்குறிப்பு, பாஞ்சாலங்குறிச்சி போரில் இறந்த ஆங்கிலேய வீரர்களின் கல்லறைகள் இராமநாதபுர கடை வீதியை கொள்ளையிட்டாரா கட்டபொம்மன்? வே.மாணிக்கம் தொடர்ந்து பேசும்போது, “இராமநாதபுர பேட்டியில் நடந்த கலவரத்தோடு சேர்த்து, அதற்கு முன்னும் பின்னும் நடந்த விஷயங்களையும் கணக்கில் கொள்ள வேண்டும். கலெக்டர் ஜாக்சனை சந்திக்க புறப்பட்டு வந்த கட்டபொம்மனும் அவரது வீரர்களும், பலநாட்கள் அலைக்கழிக்கப்பட்டு, இறுதியில் கட்டபொம்மன் அவமதிக்கப்படுகிறார். அவரது தம்பிமாரும், மாப்பிள்ளைமாரும் பேட்டி நடக்கும் முன்பே தாக்கப்பட்டனர். அவர்களது உடமைகள் பறிமுதல் செய்யப்பட்டு அவை ஆங்கில வீரர்களால் ஏலம் போடப்பட்டன. அங்கு நடந்த மோதலில் பாஞ்சாலங்குறிச்சி வீரர்கள் பலர் உயிர் துறந்தனர். முற்றுகையை உடைத்து வெளியே வந்தனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் கட்டபொம்மனின் படை வீரர்கள் கொதித்துப்போய் இருந்தனர். எனவே திரும்பி செல்லும் வழியில் இருந்த இராமநாதபுர கடை வீதியை படைவீரர்கள் அழித்தனர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான ஒரு செயலாகவே இதைப் பார்க்க வேண்டும்” எனக் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு, ஆங்கிலேய அரசால் அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, “இந்த கலகத்தில் கட்டபொம்மனை குறை சொல்வதற்கில்லை. தன்மான கௌரவத்திற்கு பங்கமேற்படும் போது, கோழையைப் போல அவர் நடந்துகொள்ள வேண்டுமென்று எதிர்பார்ப்பது தவறாகும். மேலும், தன் தலைவனுக்கு ஆபத்து ஏற்பட இருக்கும் சமயம் அவனுக்கு கட்டுப்பட்டு இருக்கும் பரிவாரங்கள் கைக்கட்டிச் சும்மா இருக்காது. உணர்ச்சி வசப்படத்தான் செய்யும்” என்று அறிக்கை கொடுத்தது. ('திருநெல்வேலி மாவட்டத்தின் அரசியல் மற்றும் பொது வரலாறு', 1881, ராபர்ட் கால்டுவெல், பக்கம்: 173-177). “இதே போல அருங்குளம், சுப்பலாபுரம் என எட்டயபுரத்தை சேர்ந்த இரண்டு கிராமங்கள் மற்றும் ஆழ்வார்திருநகரி, திருவைகுண்டம் போன்ற இடங்களில் கட்டபொம்மன் கொள்ளையிட்டார் என கூறுகிறார்கள். ஆனால், நில அளவை என்ற பெயரில் ஆங்கிலேயர்கள் அந்த பகுதிகளை கட்டபொம்மனிடமிருந்து பறித்தனர், சினம் கொண்ட கட்டபொம்மன் அந்த பகுதிகளில் தனது ஆட்களைக் கொண்டு உழுது பயிரிட்டார். இவ்வாறு உழுது பயிரிட்டதை கொள்ளையடித்தார் என சிலர் திரித்து எழுதினார்கள்”. படக்குறிப்பு, ஊமைத்துரை மற்றும் படை வீரர்கள் இருந்த சிறை கட்டபொம்மன் ஒரு தெலுங்கர் எனும் வாதம் ஏன் எழுகிறது? “கட்டபொம்மனை தெலுங்கன் என்று கூறி நம்மிடமிருந்து பிரிக்கிறார்கள். அவரது முன்னோர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் தான், ஆனால் வீரபாண்டிய கட்டபொம்மன் நம் தமிழ் மண்ணில் பிறந்தவர்” என்றும் வே. மாணிக்கம் கூறுகிறார். “அப்போதிருந்த தமிழ்நாட்டின் பாளையக்காரர்கள் பலர் இவரது தலைமையின் கீழ் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக போராட விரும்பினார்கள். கட்டபொம்மன், இனம், மொழி, சாதி வேறுபாடு பார்க்காத ஒரு பாளையக்காரராக இருந்ததால் தான் இது சாத்தியமானது. வீரபாண்டிய கட்டபொம்மனின் அவைப்புலவராக சங்கர மூர்த்தி எனும் தமிழ்ப்புலவரே இருந்துள்ளார். கட்டபொம்மன் குறித்து பல்வேறு கதைப்பாடல்கள் ஏட்டுச்சுவடிகளில் உள்ளன. கட்டபொம்மனுடனான பாஞ்சாலங்குறிச்சி போரில் கடுமையான சேதங்களை சந்தித்த மேஜர் பானர்மேன் கூட கட்டபொம்மனை “அஞ்சா நெஞ்சத்துடன் விளங்கினார்” என பாராட்டினார் (மேஜர் பானர்மேன் கவர்னருக்கு எழுதிய கடிதம்). எதிரிகளே வியந்து பாராட்டிய ஒரு மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மன், அவரைப் பற்றிய பொய்க் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளிவிட்டு, உண்மையான வரலாற்றை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும்” எனக் கூறுகிறார் எழுத்தாளர் வே.மாணிக்கம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cd178e2pwlko
  17. கிளிநொச்சி பரந்தன் மற்றும் பன்னங்கண்டி ஆகிய பகுதிகளில் இராணுவத்தினரால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் அதன் பயனாளிகளிடம் இன்று (16) காலை கையளிக்கப்பட்டன. கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பரந்தன் சிவபுரம் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த 05 பேர் கொண்ட குடும்பம் ஒன்றுக்காக நிர்மாணிக்கப்பட்ட வீடு, அதன் உரிமையாளரிடம் இன்று காலை 9 மணிக்கு கையளிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, காலை 10 மணியளவில் கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி கிராமத்தில் இராணுவத்தில் பணியாற்றும் கணவன் - மனைவி மற்றும் அவர்களுடன் சேர்ந்து வாழும் மாற்றுத்திறனாளியான தாய், தந்தையரை உள்ளடக்கிய குடும்பத்துக்கான வீடொன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது இராணுவ உயரதிகாரிகள், இராணுவ பதவி நிலை உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், வீடுகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள், பொதுமக்கள் என பலர் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/196440
  18. உயிர்த்த ஞாயிறுதாக்குதல் விசாரணை அறிக்கைகளை பகிரங்கப்படுத்துவதாக அரசாங்கம் உறுதியளித்தால் அவற்றை கையளிப்பேன் - உதயகம்மன்பில அரசாங்கம் பகிரங்கமாக வெளியிடுவதாக உறுதியளித்தால் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் தொடர்பில் தன்னிடமுள்ள இதுவரை வெளியிடப்படாத இரண்டு அறிக்கைகளையும் கையளிக்க தயார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். என்னிடமுள்ள அறிக்கையை பெற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசாங்கம் பகிரங்கப்படுத்தாவிட்டால் என்ன நடக்கும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஜனாதிபதியோ அமைச்சரவை பேச்சாளரோ நான் வழங்கும் அறிக்கைகளை வெளியிடுவோம் என உறுதியளிக்கும் வரை நான் அரசாங்கத்திடம் அவற்றை கையளிக்க தயாரில்லை என உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். நான் வேண்டுகோள் விடுத்தபடி ஏழுநாட்களிற்குள் அறிக்கைகளை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்காவிட்டால் நான் அவற்றை இணையத்தில் வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பேன், என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196441
  19. பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃபுடன் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கட்டுரை தகவல் எழுதியவர், ஃபர்ஹத் ஜாவேத் பதவி, பிபிசி உருது, இஸ்லாமாபாத் 16 அக்டோபர் 2024, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 18 நிமிடங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கடந்த சில நாட்களாக முக்கிய சாலைகள் மற்றும் கட்டடங்கள் ஜொலித்து வருகின்றன. பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மரங்களை வெட்டி சீரமைத்தல், சாலை விளக்குகள் அமைத்தல், ஓவியங்கள், மலர்கள் கொண்டு அலங்கரித்தல் போன்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மிகவும் பாதுகாப்பான பகுதியான நாடாளுமன்றத்திற்கு முன் பூக்களால் செய்யப்பட்ட மயில் போன்ற அழகிய மலர் அலங்காரங்கள் காணப்படுகின்றன. இந்த அலங்காரங்கள் எந்த ஒரு தேசிய விழாவிற்காகவும் அல்ல, இது ஒரு சர்வதேச கூட்டதிற்கு தயாராவதற்காக நடந்து வரும் ஏற்பாடுகள். இந்த வாரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 23வது உச்சி மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் தலைமை தாங்குகிறார். இந்த மாநாட்டில் சீனா, ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இந்நிகழ்வில் இரான் துணை அதிபர் மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரும் கலந்து கொள்கின்றனர். பார்வையாளராக மங்கோலியாவின் பிரதமரும், சிறப்பு விருந்தினராக துர்க்மெனிஸ்தான் வெளியுறவு அமைச்ரும் கலந்துகொள்கின்றனர். இந்த 2 நாள் மாநாட்டிற்காக இஸ்லாமாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அக்டோபர் 17 ஆம் தேதி வரை அந்நகரின் பாதுகாப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இஸ்லாமாபாத்தின் இரட்டை நகரம் என்று அழைக்கப்படும் ராவல்பிண்டிக்கும் மூன்று நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நகரின் வணிக மையங்களும் நீதிமன்றங்களும் இந்த நேரத்தில் மூடப்பட்டு இருக்கும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன? சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளால் 2001 ஆம் ஆண்டு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிறுவப்பட்டது. தற்போது கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா மற்றும் இரான் ஆகிய நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். மக்கள் தொகை அடிப்படையில் இரண்டு பெரிய நாடுகளான சீனா மற்றும் இந்தியா இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் 40% கொண்ட அமைப்பாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளது. 2005 முதல் 2017 ஆம் ஆண்டு வரை பாகிஸ்தான் இந்த அமைப்பில் பார்வையாளர் அந்தஸ்து பெற்றிருந்தது. 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முறையாக உறுப்பினராக இணைந்தது. இந்த அமைப்பு ரஷ்யா, சீனா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யூரேசிய(ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகள்) பாதுகாப்பு அமைப்பாக தொடங்கப்பட்டது. 2017-ஆம் ஆண்டில், இந்த அமைப்பு இந்தியா மற்றும் பாகிஸ்தானைத் தொடர்ந்து பார்வையாளர் நாடாக இருந்த ஆப்கானிஸ்தானும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு, இரானுக்கும் இந்த அமைப்பின் முறையான உறுப்பினருக்கான அங்கீகாரம் வழங்கப்பட்டது. பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதை முக்கிய நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு செயல்படுகின்றது. அதன் தொடக்கத்தில் இருந்து தற்போது நடந்த விரிவாக்கம் வரை, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது, மேற்கத்திய நாடுகளின் அமைப்பான நேட்டோவிற்கு இணையான அமைப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உண்மையில் நேட்டோவைப் போல வலுப்பெற்றுவிட்டதா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் இந்த கூட்டமைப்பின் 23வது உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்குவார். எஸ்சிஓ அமைப்பு நேட்டோவுக்கு இணையாக வலுப்பெறுமா? சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளை உறுப்பினர்களாக கொண்டிருப்பதால், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒரு பெரிய அமைப்பாக இருக்கின்றது. மேலும் இது உலகின் 40 சதவீத பரப்பளவைக் கொண்டுள்ளது. அதன் அமைப்பு நேட்டோவிலிருந்து வேறுபட்டது என்றும் அதன் போர்த்திறன் சற்று குறைவாக இருக்கிறது என்றும் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது ஒரு நன்மைதான் என்றும் ஆய்வாளர் அமீர் ஜியா கூறுகிறார். "ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கம் மேற்கத்திய நாடுகளின் கூட்டமைப்புடன் போட்டியிடுவது அல்ல. ஆனால் அது அந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை குறைத்து சமநிலையை உருவாக்கும் ஒரு அமைப்பாக இருக்க வேண்டும் என்ற வாய்ப்பை வழங்க வேண்டும்", என்றும் அவர் தெரிவித்தார். உலகில் தற்போது பொருளாதார அல்லது பாதுகாப்பு தேவைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள பல அமைப்புகள் உள்ளன என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இதில் ஜி-7, ஜி-20, குவாட், நேட்டோ மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு போன்ற பெரிய அமைப்புகளும் அடங்கும். ஜி-7 மற்றும் ஜி-20 ஆகியன அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே பொருளாதார ஸ்திரத்தன்மை, வளர்ச்சி மற்றும் அரசியல் ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கும் பொருளாதார கூட்டமைப்புகள் ஆகும். ஆனால், நேட்டோ என்பது 32 நாடுகளின் ராணுவக் கூட்டணி ஆகும். அதன் உறுப்பு நாடுகளுக்கு இடையே கூட்டு பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாக கொண்டு இந்த அமைப்பு இயங்குகின்றது. இங்கு ஒரு உறுப்பு நாட்டின் மீதான தாக்குதல் அனைத்து உறுப்பு நாடுகளின் மீதான தாக்குதலாக கருதப்படுகிறது. இரான் விவகாரங்கள் தொடர்பான சர்வதேச விவகார நிபுணரான சஹ்ரா ஜைதி போன்ற விமர்சகர்கள், இந்த கூட்டமைப்பை மேற்கத்திய நாடுகளின் நலன்களுக்கு மட்டுமே உதவும் ஒன்றாகவும், மேற்கத்திய செல்வாக்கைத் தக்கவைப்பதற்கான ஆயுதமாகவும் கருதுகின்றனர். மறுபுறம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நோக்கம் பிராந்திய பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மை, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுப்பது போன்றவற்றை சார்ந்தே உள்ளன. ஆனால் குறைவான ராணுவத்திறன் மற்றும் உறுப்பு நாடுகளுக்கு இடையே உள்ள உள்நாட்டு பிரச்னைகள் ஆகியவை இந்த அமைப்பின் முக்கிய பலவீனங்களாகக் கருதப்படுகின்றன. இதனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு அதன் நோக்கத்தில் தோல்வியடைந்துள்ளதா? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் இந்த படம் ஜூன் 2019 இல் ஜப்பானின் ஒசாகாவில் நடைபெற்ற ஜி-20 உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்டது. இந்தியா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளதா? இந்த அமைப்பு அதன் நோக்கங்களையும் இலக்குகளையும் அடைந்ததா இல்லையா என்பது குறித்து விவாதங்கள் எழலாம். ஆனால், இதுபோன்ற அமைப்புகள் அல்லது கூட்டணிகள் இருப்பது ஒரு சாதகமான விஷயம் என்று ஆய்வாளர் அமீர் ஜியா கருதுகிறார். "ஆரம்பத்தில் பலவீனமாகத் தோன்றிய இந்த அமைப்பு, தற்போது வலுவடைந்து வருகிறது", என்று இரானில் இருந்து பிபிசியிடம் பேசிய ஆய்வாளர் சஹ்ரா ஜைதி கூறுகிறார். சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து உருவான நாடுகள் பல விஷயங்களில் பலவீனமாக இருந்தனர் என்று அவர் தெரிவித்தார். "அவர்களுக்கு ஆதரவு தேவைப்பட்டது. இந்த அமைப்பு உருவான போது, அந்த நாடுகள் இந்த அமைப்பிற்கு ஒத்துழைப்பை வழங்கினால் தாங்கள் சிறந்து விளங்க முடியும் என்றும் இது அந்நாட்டின் மீதான வெளிநாட்டு செல்வாக்கையும் அகற்றும் என்பதை உணர்ந்தனர்", என்றும் அவர் கூறினார். "மேற்கத்திய நாடுகளுடன் ஒப்பிடும் போது கிழக்கு நாடுகளின் இந்தக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் பலவீனமாக தோன்றினாலும் இப்போது அதன் பலம் ஓரளவு அதிகரித்திருக்கிறது. இரான் உறுப்பினரானதால் இந்த அமைப்பு வலுப்பெற்றுள்ளது". இது குறித்து பிபிசியிடம் பேசிய மூத்த இந்திய பத்திரிகையாளர் சுஹாசினி ஹைதர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு பல பிரச்னைகளை விவாதிப்பதற்கான முக்கிய தளமாக மாறியுள்ளது என்றார். "இது யூரேசியாவில் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் ஒரு முக்கியமான அமைப்பாக உள்ளது. இந்த அமைப்பு அதன் பல நோக்கங்களை அடைய முடியவில்லை, இதற்கு ஒரே காரணம் குறிக்கோள்களும் இலக்குகளும் காலப்போக்கில் மாறிக்கொண்டே இருப்பதுதான்", என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்லாமாபாத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வீரர்கள். இந்த மாநாட்டிற்கு முன்பு நகரை பாதுகாக்கும் பொறுப்பு ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. “இது இருதரப்பு மோதல்களைத் தீர்ப்பதற்கான ஒரு மன்றமாக இல்லாவிட்டாலும், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்து பொதுவான பிரச்னைகள் குறித்து விவாதிக்க இது ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள உச்சிமாநாடு உறுப்பு நாடுகள் கூடுவதற்கான ஒரு வாய்ப்பே தவிர வேறொன்றுமில்லை என்பது எனது கருத்து". "உச்சிமாநாட்டில் வழக்கமான நிகழ்ச்சிகளைத் தவிர பிரதமர் ஷாபாஸ் ஷெரீப், வருகை தரும் உறுப்பு நாடுகளின் முக்கிய தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளையும் நடத்துவார்", என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் கலந்துகொள்வதற்கு மட்டுமே பாகிஸ்தானிற்கு பயணம் செய்வதாகவும், அந்நாட்டுடன் இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என்றும் அவர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் உருவாகும் கூட்டமைப்புகள் மிக மெதுவாகவே செயல்படும் என்கிறார் அமீர் ஜியா. “தற்போது உலகில் பல கூட்டமைப்புகள் உள்ளன, ஒரு நாடு ஒரே கூட்டமைப்பில் மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நேரத்தில் பல கூட்டமைப்புகளிலும், சில நேரங்களில் எதிரான கருத்தியல்கள் கொண்ட கூட்டமைப்புகளிலும் உறுப்பினராக இருக்கலாம். உதாரணமாக, இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பினராக உள்ளது மற்றும் அதில் உள்ள நாடுகளுக்கு எதிரான நாடுகளின் கூட்டமைப்பான குவாட்டிலும் உறுப்பினராக உள்ளது." என்று அவர் கூறுகிறார். உறுப்பு நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகள் இருக்கலாம், ஆனால் அத்தகைய முரண்பாடுகளை ஒதுக்கி, பேச்சுவார்த்தை மற்றும் ஒத்துழைப்பிற்கு சாத்தியமான விஷயங்களை உறுப்பு நாடுகள் கருத்தில் கொள்வதே நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிடுகிறார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாகிஸ்தானுடனான இருதரப்பு உறவுகள் குறித்து விவாதிக்கப் போவதில்லை என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஒத்துழைப்பிற்கான புதிய பாதை சர்வதேச அளவில் பல நாடுகள் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள ரஷ்யா மற்றும் இரான் போன்ற நாடுகள் சர்வதேச அளவில் நேரடியாகவோ அல்லது வேறு வகையிலோ மோதல்களில் ஈடுபட்டுள்ளனர். இத்தகைய சூழலில் இந்த உச்சி மாநாடு நடைபெறுவதால், இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது மற்றும் இது ஒரு பெரிய மேடையாக பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த உச்சிமாநாட்டின் போது இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுமா? இந்த மாநாட்டில் இஸ்ரேலுக்கு எதிராக இரான் ஏதேனும் கடுமையான முன்மொழிவு செய்யுமா? ரஷ்யா - யுக்ரேன் போரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகள் ரஷ்யாவிற்கு முழு ஆதரவை தெரிவிக்குமா? என்ற கேள்விகள் எழுகின்றன. மிகப்பெரிய அல்லது வலுவான கருத்துகளை கூறுவது என்பது கடினம் என்று சுஹாசினி ஹைதர் கூறுகிறார். “பாகிஸ்தானில் கூடும் இந்த மன்றம், இந்த கூட்டமைப்பின் முக்கிய மாநாடாக இருக்காது. எனவே, இங்கு மிகப்பெரிய அல்லது வலுவான கருத்துகள் கூறப்படும் என்று நான் நினைக்கவில்லை" என்று அவர் கூறினார். ஆனால் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடான இரான், இந்த மாநாட்டில் அந்த பிராந்தியத்தின் தற்போதைய நிலைமை குறித்து தெளிவான கருத்தை தெரிவிக்கும் என்று நம்பப்படுகின்றது என்று ஆய்வாளர் சஹ்ரா ஜைதி கூறினார். கடந்த ஆண்டுதான் இரான் இந்த கூட்டமைப்பின் முறையான உறுப்பினரானது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த மாநாட்டில் இரான் மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாடுகளும் கலந்துகொள்ளும் வேளையில் இங்கு இரான் செல்வாக்கு செலுத்துவதை நிரூபிக்க முடியும் என்றும் சஹ்ரா ஜைதி கூறினார். இஸ்ரேலில் நடக்கும் போர் மற்றும் இரானில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து வலுவான கருத்துகள் இந்த மாநாட்டில் தெரிவிக்கப்படும் என்று இரான் நம்பி வருவதாகவும் அவர் கூறுகிறார். "இந்த கூட்டமைப்பில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளும் வெளிநாட்டு சக்திகளின் பிடியில் இருந்து கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்ளும் நிலை இருக்கக் கூடாது என்று விரும்புகின்றன. பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் வலுவாக இருப்பது முக்கியம். இந்த கூட்டமைப்பு அதன் உறுப்பு நாடுகளை கைவிட்டுவிடாது என்பதும் முக்கியம். இரான் இதனை நம்புகின்றது" என்கிறார் அவர். "மத்திய கிழக்கு பகுதியில் மோசமடைந்து வரும் நிலைமை மற்றும் இரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான சமீபத்திய பதற்றம் காரணமாக, இரான் இந்த மாநாட்டை விரும்புகின்றது. ஆனால் இந்த சந்திப்பில் இருந்து வலுவான கருத்துகள் தெரிவிப்பது என்பது கடினம் என்பதை ஆய்வாளர் அமீர் ஜியா புரிந்துகொண்டுள்ளார்", என்று நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். உலகில் ஒருபுறம் போர் நடந்து வரும் சூழலில், இந்த மாநாட்டினால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த முடியுமா? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஜூலை 2024 இல் அஸ்தானாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்படுமா? இந்த மாநாட்டின் முக்கிய சந்திப்பிற்கு பிறகு உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளின் தலைவர்களுடன் பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் முக்கியமான இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார் என்று பாகிஸ்தான் வெளியுறவுததுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மறுபுறம், இருநாட்டு விவகாரங்கள் குறித்து பேசப் போவதில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஏற்கனவே தெரிவித்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் சாசனத்தில் இருதரப்பு விவகாரங்கள் குறித்த பேச்சுகள் குறித்து எந்த ஒரு விதிமுறையும் இல்லை என்றாலும், உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் சந்தித்து பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். "சர்வதேச மாநாடுகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களின் சந்திப்பும் ஒரு காலத்தில் நடந்தது. அங்கு இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால், சமீப ஆண்டுகளாக இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவரையொருவர் விமர்சிப்பதற்கான களமாக இந்த மாநாடு மாறிவிட்டதாக தெரிகின்றது", என்று சுஹாசினி ஹைதர் கூறினார். அமீர் ஜியா கூறுகையில், பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு காரணமாக, இந்த சந்திப்பின் போது லேசான பதற்றம் இருக்கலாம், என்றார். “பயங்கரவாதம் என்று வரும்போது, இந்தியா பாகிஸ்தானை குற்றம்சாட்டும், பாகிஸ்தான் பலுசிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவை குற்றம்சாட்டும். தற்போது இந்த இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் எந்த ஒத்துழைப்பும் இல்லை. இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரே அறையில் இருக்கும் போது , அங்கு லேசான பதற்றம் இருக்கும்", என்று அவர் கூறினார். “இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்த பாகிஸ்தானுக்கு விருப்பம் இருக்கலாம், ஆனால் காஷ்மீர் விஷயத்தில், 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு இதுபோன்ற எந்த ஒப்பந்தமும் பாகிஸ்தானுக்கு இழப்பாக மாறிவிடும் நிலையும் உள்ளது. அதன் விளைவு பாகிஸ்தானின் அரசியலுக்கும் ராணுவத்திற்கும் சிக்கலை ஏற்படுத்தும்", என்று அமீர் ஜியா கூறுகிறார். இந்தியாவுடனான உறவை மேம்படுத்துவது பற்றி சிந்திக்கும் முன், பாகிஸ்தான் தனது பொருளாதார மற்றும் அரசியல் நிலைமையை மேம்படுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார். சர்வதேச விவகாரங்கள் ஒரு டி20 போட்டி போல அல்ல, இந்த கூட்டமைப்புகள் மெதுவாகவே செயல்படுவதில் அமீர் ஜியா போன்ற ஆய்வாளர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் இரான் ஆய்வாளர் சஹ்ரா ஜைதி நடைமுறைக்கு தேவையுள்ள நடவடிக்கைகள் எடுப்பதே அவசியம் என்று கருதுகிறார். "உறுப்பு நாடுகள் ஒருவருக்கொருவர் துணையாக நிற்கவில்லை அல்லது ஒத்துழைக்காவிட்டால், மற்ற அமைப்புகளைப் போலவே இதுவும் பெயருக்கு மட்டுமே உள்ள ஒரு அமைப்பாக இருக்கும்", என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm2ygxwkyk0o
  20. சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்டது. காட்டுயானைகளிடமிருந்து விவசாயிகளின் வாழ்வாதார பயிர்களை பாதுகாக்கும் நோக்குடன் உலக வங்கியின் நிதி உதவியில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் கீழ் இந்த சூரிய மின்கல யானைவேலி அமைக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பூநகரி கமநல சேவை நிலையத்துக்குட்பட்ட செம்மன்குன்று பகுதியில் இந்த பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்துக்கான பணிகள் வட மாகாணத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்றன. கிளிநொச்சியில் பூநகரி, அக்கராஜன்குளம், முழங்காவில் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட, தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்நிகழ்வில் காலநிலைக்கு சீரமைவான நீர்ப்பாசன விவசாயத்திட்டத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரி சாம்பசிவம் கேசிகா, பூநகரி கமநல சேவை நிலைய அபிவிருத்தி உத்தியோகத்தர் கு.குணசீலன் உட்பட விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/196419
  21. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான முன்னுதாரணம் என இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகோசி ஹிடேகி பாராட்டியுள்ளார். இலங்கையின் சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் அமைதியான ஜனநாயக ரீதியிலான அதிகார மாற்றத்திற்கான நாட்டின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். ஜனநாயக கொள்கைகளிற்கு ஊக்கமளிக்கும் அர்ப்பணிப்பிற்காக இலங்கையின் அரசியல்வாதிகள் பொதுமக்களிற்கு ஜப்பான் தூதுவர் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். சமீபத்தைய ஜனாதிபதி தேர்தல் உண்மையாகவே ஊக்கமளிக்கும் ஒன்று, ஜனநாயக ரீதியிலான அமைதியான அதிகார மாற்றத்திற்காக மக்களும் அரசியல்வாதிகளும் வெளிப்படுத்தியுள்ள அர்ப்பணிப்பு ஊக்கமளிக்கும் ஒன்று, என தெரிவித்துள்ள ஜப்பான் தூதுவர் நீங்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளீர்கள். அது உயிர்த்துடிப்பு மிக்க செழிப்பு மிக்க அமைதியான இலங்கையை உருவாக்குவதற்கு அனைத்து மக்களும் ஒன்றிணைவார்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது என ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய தலைவர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிப்பவையாக காணப்பட்டன, ஆட்சிமுறை சீர்திருத்தம், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி சர்வதேச ஒத்துழைப்பிற்கான தங்கள் அர்ப்பணிப்பை அவர்கள் வலியுறுத்தினார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழலை ஒழிக்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ள ஜப்பானிய தூதுவர் ஆட்சிமுறை சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதே புதிய அரசாங்கத்தின் முக்கிய நிகழ்ச்சி நிரலாக காணப்படவேண்டும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196421
  22. சென்னையில் கணிப்புக்கு மாறாக மழை குறைய என்ன காரணம்? காற்றழுத்த தாழ்வு மண்டலம் எங்கே? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் 2 நாள் கனமழைக்குப் பிறகு இன்று லேசான மழையே பெய்து வருகிறது. 16 அக்டோபர் 2024, 06:47 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் தென்மேற்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணிநேரத்தில் 12 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து அதே பகுதியில் நிலை கொண்டுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது சென்னையிலிருந்து கிழக்கு தென்கிழக்கு திசையில் சுமார் 360 கிலோமீட்டர் தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கே 390 கிலோமீட்டர் தொலைவிலும் ஆந்திர மாநிலத்தின் நல்லூரிலிருந்து தென்கிழக்கு திசையில் சுமார் 450 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு வட மேற்கு நோக்கி நகர்ந்து வடதமிழ்நாடு தெற்கு ஆந்திர கடற்கரையோரம் புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே நாளை (அக். 17) காலை கரையை கடக்கக் கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இன்று சென்னை மற்றும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரையிலும் அவ்வாறான கனமழை பெய்யவில்லை. ஆங்காங்கே லேசான மழையே பெய்தது. தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன. சென்னையில் 70 நிவாரண முகாம்களில் 2 ஆயிரத்து 789 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது. சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,IMD WEBSITE படக்குறிப்பு, காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை காட்டும் வரைபடம் சென்னையில் 8 விமான சேவைகள் ரத்து தொடர் மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில் விமான பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கிறது. இதனால், சென்னை விமான நிலையத்தில் இதுவரையில் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகள், தாங்கள் பயணிக்கும் விமான நிறுவனங்களோடு தொடர்பு கொண்டு, தங்களுடைய விமானங்களின் நிலையை கேட்டு தெரிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற் போல் பயணத் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் நேற்று பரவலாக கனமழை பெய்தது (அக். 15, 2024) ஏரிகள் வேகமாக நிரம்புகின்றன காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 38 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 30 ஏரிகளும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஐந்து ஏரிகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 130 ஏரிகள் 75 சதவீதத்தை தாண்டியும் 120 ஏரிகள் 50 சதவீதத்தை தாண்டியும் நிரம்பி உள்ளது ஆக பொதுப்பணித்துறை தகவல் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,X/TAMIL NADU WEATHERMAN படக்குறிப்பு, கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளதாகவும் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னையில் மழை குறைந்தது ஏன்? இந்நிலையில், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் சற்று மேல்நோக்கி சென்றுவிட்டதால் கனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை நிபுணர் பிரதீப் ஜான் தன் சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளார். கனமழை பெய்வதற்கான மேகத்திரள்கள் தெற்கு ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமல்லாமல் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் மிதமான மழையே பெய்யும் என அவர் கணித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0l70zlvkxo
  23. காசா மருத்துவமனையின் வளாகத்தில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலையும், அக்கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததையும் நேரில் பார்த்த ஒருவர், அந்த பயங்கர சம்பவத்தையும், மக்கள் கொல்லப்பட்டதை - காயமடைந்ததை பார்த்ததையும், அவ்வேளை ஏதும் செய்ய இயலாமல் தான் தவித்த அனுபவத்தையும் பிபிசியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். நான் பார்த்த மிக மோசமான காட்சி இது என தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்ததும் அதிலிருந்து தப்புவதற்காக மக்கள் அதனை கிழித்து எறிந்ததையும் அலறியதையும் பார்த்ததாக யுவதியொருவர் தெரிவித்துள்ளார். தீயில் எரிந்து உயிரிழந்தவர்களை காப்பாற்ற முடியாததால் நான் கண்ணீர் விட்டு கதறியழுதேன் என நபர் ஒருவர் தெரிவித்துள்ளார். திங்கட்கிழமை இஸ்ரேல் மத்திய காசாவின் டெய்ர் அல்பலா வளாகத்தில் உள்ள அல்அக்சா மருத்துவமனை மீது தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த கூடாரங்கள் தீப்பிடித்து எரிந்தன. நால்வர் கொல்லப்பட்டனர். பெருமளவு சிறுவர்களும் பெண்களும் காயமடைந்தனர் என ஹமாஸின் மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. நபரொருவர் தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை காண்பிக்கும் வீடியோவை பிபிசி ஆராய்ந்து உறுதி செய்துள்ளது. கதறல்கள், வெடிப்புச் சத்தங்களுக்கு மத்தியில் தீயை அணைப்பதற்காக மக்கள் ஓடுவதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. கார் தரிப்பிடமொன்றுக்குள் காணப்பட்ட தளமொன்றிலிருந்து செயற்பட்ட ஹமாஸ் உறுப்பினர்களையே இலக்குவைத்ததாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அங்கிருந்த வெடிபொருட்கள் வெடித்ததால் தீப்பிடித்திருக்கலாம் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அந்த பகுதியில் செயற்பட்டதாக அறியவில்லை. அது மருத்துவமனை போன்றே இயங்கியது என எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. அதன் பணியாளர்கள் குறிப்பிட்ட மருத்துவமனையில் பணிபுரிவது குறிப்பிடத்தக்கது. அங்கிருந்த மக்கள் தீயில் சிக்கி எரிந்து உயிரிழந்தார்கள் என ஐக்கிய நாடுகளின் மனிதாபிமான விவகாரங்களுக்கான முகவர் அமைப்பு தெரிவித்துள்ள அதேவேளை வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு பேரவையின் பேச்சாளர் வெளியாகியுள்ள காட்சிகள் மனதை உலுக்குகின்றன என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலின் தாக்குதலின் பின்னர் பொதுமக்கள் உயிருடன் தீப்பிடித்து எரிவதை காண்பிக்கும் காட்சிகள் மனதை உலுக்குகின்றன. இஸ்ரேலுக்கு இது குறித்த எங்கள் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளோம் என சிபிஎஸ்ஸுக்கு அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களின் உயிரிழப்புகளை தவிர்க்கவேண்டிய தேவை இஸ்ரேலுக்குள்ளது. இங்கு இடம்பெற்ற சம்பவம் மிகவும் பயங்கரமானது. ஹமாஸ் அப்பகுதியில் செயற்பட்டிருந்தாலும் கூட இது பயங்கரமானது என அவர் தெரிவித்துள்ளார். வெளிநோயாளர்கள் காத்திருக்கும் பிரிவுக்கு வெளியே காணப்பட்ட பல தற்காலிக கூடாரங்களை இஸ்ரேல் தாக்கியது என காசாவுக்கான எல்லைகள் அற்ற மருத்துவர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அனா ஹல்போர்ட் தெரிவித்துள்ளார். பாரிய வெடிப்புச்சத்தங்களை கேட்டு நான் உறக்கத்திலிருந்து கண்விழித்தேன். கூடாரங்களை சுற்றி தீ பரவிக்கொண்டிருந்தது என தற்காலிக கூடாரங்களில் வசித்த தாய் ஒருவர் தெரிவித்துள்ளார். எல்லா பக்கத்திலும் வெடிப்புகள் இடம்பெற்றன. அது வாயுவா அல்லது வெடிகுண்டா என நாங்கள் அதிர்ச்சியடைந்தோம் என அவர் பிபிசிக்கு தெரிவித்துள்ளார். நான் என் வாழ்க்கையில் பார்த்த மோசமான காட்சிகள் இவை என தெரிவித்துள்ள அவர் நாங்கள் இதுபோன்ற அழிவை ஒருபோதும் பார்த்ததில்லை என்றார். பிபிசி ஆராய்ந்து உறுதி செய்துள்ள சில வீடியோக்களை படம் பிடித்த புகைப்படப் பிடிப்பாளர் அட்டியா டார்விஸ் அது மிகப் பெரும் அதிர்ச்சி. மக்கள் எரிவதை பார்த்துக்கொண்டிருந்தேன். என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என பிபிசியிடம் தெரிவித்துள்ளார். நான் மிகவும் மனமுடைந்து போனேன் என அவர் தெரிவித்துள்ளார். பலர் தீயில் சிக்குண்டு எரிவதை, உயிருடன் எரியும் கோரக் காட்சியை பார்த்தோம். நாங்களும் எரியுண்டுபோவோம் என நினைத்தோம் என மருத்துவமனையில் வசிக்கும் உம் யாசெர் அப்தெல் ஹமீட் டஹெர் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்களில் அவரின் மகனும் ஒருவர். மகனது மனைவியும் குழந்தையும் காயமடைந்துள்ளனர். இவரின் 11 வயது பேரப்பிள்ளை லினாவின் காலிலும் கையிலும் குண்டுச்சிதறல்கள் உள்ளன. மக்கள் அலறுவதை நான் கேட்டேன் என அந்த சிறுமி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196431
  24. நேற்று இவர்களது ஒரு சிறிய கூட்டம் எமது பகுதியில் ஒரு வீட்டில் கூடியபோது எனது நண்பரும் கலந்து கொண்டிருந்தார். நீங்கள் வாக்கு கேட்கத் தேவையில்லை!, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினாலே போதும் என தான் கூறியதாகக் கூறினார். அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டாத பலர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டதாக தெரிவித்தார். போறபோக்கைப் பார்த்தால் தமிழருக்கு ஒரு பிரச்சனையும் இல்லைப் போல தான் இருக்கு!
  25. முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகல் பாலம் மற்றும் புளியம்பக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன. முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம், 2004 ஆம் ஆண்டுக்கான ஆழிப்பேரலை அனர்த்தம் என்பவற்றால் கடுமையாக சேதத்துக்கு உள்ளாகியது. இந்த பாலத்தின் அவசியம் தற்போது குறித்த பாலத்தில் சிறுசிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது. இந்த பாலத்தின் தொடர் பணிகளின் அவசியம் தொடர்பில் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முல்லைதீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மற்றும் மாகாண சபை ஆகியவற்றில் நடந்த கலந்துரையாடல்களிலும் பாலத்தின் அவசியம் பற்றி கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. கடந்த காலங்களில் அதற்கான அமைச்சரவை தீர்மானங்களும் கொண்டு வரப்பட்ட நிலையில், அதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஏ9 வீதிக்கு அடுத்தபடியான போக்குவரத்து பாதை இவ்வாறான நிலையில் குறித்த பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகின்றன இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இங்கு 15 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன. எனவே, ஏ9 வீதிக்கு அடுத்தபடியான போக்குவரத்து பாதையாகவும் வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் போக்குவரத்து பாதையாகவும் உள்ள குறித்த வீதியிலுள்ள இருபாலங்களையும் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். https://tamilwin.com/article/two-bridges-in-critical-condition-in-mullaithivu-1729049738

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.