Everything posted by ஏராளன்
-
இந்தியாவை அச்சுறுத்தும் லோரன்ஸ் பிஸ்னோய் குழு - 11 மாநிலங்களில் செயற்படுகின்றது, 700 உறுப்பினர்கள் - ஏன்ஐஏ தகவல்
லோரன்ஸ் பிஸ்னோய் குற்றக்குழுவுடன் இணைந்த இந்தியா: கனடா கடும் குற்றச்சாட்டு இந்தியாவின் கடும் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக, தற்போது சிறைப்படுத்தப்பட்டுள்ள லோரன்ஸ் பிஸ்னோய் குழுவுடன், இணைந்து தமது மண்ணில் இந்தியா குற்றச்செயல்களில் ஈடுபடுவதாக கனடா பகிரங்க கருத்தொன்றை முன்வைத்துள்ளது. மும்பையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர், மகாராஸ்டிர முன்னாள் அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான பாபா சித்திக் கொல்லப்பட்டமைக்கு லோரன்ஸ் பிஸ்னோய் குழுவினரே காரணம் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்தியா மீதான கனடாவின் குற்றச்சாட்டும் வெளியாகியுள்ளது. இராஜதந்திர பதற்றம் இந்தக் குற்றச்சாட்டு ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கடும் இராஜதந்திர பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. நேற்று திங்கட்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய ரோயல் கனடியன் மவுண்டட் பொலிஸின் உதவி ஆணையர் பிரிஜிட் கவுவின், “பிஸ்னோய் போன்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைப் பயன்படுத்தி கனடாவில் காலிஸ்தானிக்கு ஆதரவான தரப்பினரை இந்தியா குறிவைக்கிறது என்று குற்றம் சுமத்தியுள்ளார். இந்திய தரப்பினர், கனடாவில் உள்ள காலிஸ்தான் சார்பு பிரிவுகளை குறிவைக்க பயன்படுத்துகிறார்கள். இது பகிரங்கமாக உரிமை கோரப்பட்டுள்ளதாகவும் பிரிஜிட் கவுவின் தெரிவித்துள்ளார். எனினும் கனடாவின் இந்த கடும் குற்றச்சாட்டுக்கு இந்தியாவின் பதில் இன்னும் வெளியாகவில்லை எனவும், போதைவஸ்து குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், 2022 இல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா, 2023 இல் கர்னி சேனா தலைவர் சுக்தேவ் சிங் கோகமேடி உட்பட பல உயர்மட்டத்தினரின் கொலைகளுக்கும், கனடாவில் வசிக்கும் பாடகர்கள் ஏபி டிஹ்லொன் மற்றும் ஜிப்பி கரேவால் ஆகியோரின் வீட்டின் முன்னால் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோக சம்பவத்தையும், லோரன்ஸ் பிஸ்னோயே வழிநடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீக்கிய அமைப்பின் தலைவர் முன்னதாக இந்தியாவால் தேடப்பட்டு வந்த சீக்கிய அமைப்பின் தலைவரான நிஜ்ஜார், 2023 இல் கனடா பிரிட்டிஸ் கொலம்பியாவில் கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்தியாவுக்கு தொடர்பிருப்பதாக கனடாவின் அரச தரப்பு குற்றம் சுமத்தி வருகிறது. எனினும் இந்தியா அதனை மறுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் உட்பட்ட 6 பேர் இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைக்காக இணைக்கப்பட்டதாக கூறி, இந்தியா கனடாவில் இருந்து இந்திய உயர்ஸ்தானிகர் வர்மாவை திருப்பியழைப்பதாக அறிவித்தது. அத்துடன் இந்தியாவில் கடமையாற்றும் கனடாவின் பதில் உயர்ஸ்தானிகர் உட்பட்ட 6 பேரையும் எதிர்வரும் சனிக்கிழமைக்குள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு இந்தியா கேட்டுக்கொண்டது. இதற்கு பதிலடி வழங்கும் வகையில், கனேடிய அரசாங்கமும், இந்தியாவினால் திருப்பியழைக்கப்பட்டதாக கூறப்பட்ட உயர்ஸ்தானிகர் மற்றும் 6 இராஜதந்திரிகளை நாட்டில் இருந்து வெளியேறுமாறு கேட்டுக்கொண்டது. மேலும் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான இந்த கசப்பான சம்பவங்கள் நேற்றைய தினத்தில் நடந்தேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/heavy-accusations-by-canada-against-india-1728972016?itm_source=parsely-api
-
வெற்றிபெற்றால் சலுகைகளை ஏற்கப்போவதில்லை என்று உறுதியளித்துள்ள வேட்பாளர்
தாம் நாடாளுமன்றத்தில் தேர்தலில் வென்றால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வழமையான சலுகைகளை பெறப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் ரெஹான் ஜயவிக்ரம உறுதியளித்துள்ளார். மொரவக்க மற்றும் தெனியாயவில் நடைபெற்ற கூட்டங்களின் போது, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் அல்லது வாகன அனுமதிப்பத்திரத்தை தாம் ஏற்கப்போவதில்லை என்று குறிப்பிட்ட அவர், அரசியலில் புதிய முகங்களின் தேவையையும் வலியுறுத்தியுள்ளார். மக்கள் சேவை இந்தநிலையில், தனிப்பட்ட நன்மைகளைப் பெறாமல் மக்களுக்கு சேவை செய்வதில் தாம் உண்மையாக இருப்பதாகவும் ரெஹான் ஜயவிக்ரம தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/rehan-jayawickrama-says-he-wont-accept-offers-1729041375
-
வட் வரி செலுத்த தவறிய அர்ஜுன் அலோசியஸுக்கு ஆறு மாத சிறை
3.5 பில்லியன் ரூபா வற் வரி மோசடி! அர்ஜூன் அலோசியஸின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று(16) மீண்டும் நிராகரித்துள்ளது. 3.5 பில்லியன் பெறுமதியான வற் வரியை செலுத்தத் தவறிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். கோரிக்கை நிராகரிப்பு பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக்ஸாரூக், நீதிமன்றில் வாதங்களை முன்வைத்து, அவர்களை பிணையில் விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தார். எனினும், வழக்கு தொடர்பில் ஆராய்ந்த மேலதிக நீதவான் பண்டார இளங்கசிங்க குறித்த இருவரின் பிணை கோரிக்கைகளையும் நிராகரித்துள்ளார். https://tamilwin.com/article/the-court-rejected-arjun-aloysius-request-1729059397
-
விபத்துக்களை தடுக்க வல்லையில் விசேட நடவடிக்கை!
யாழ்ப்பாணம் - வல்லைப் பாலத்தில் அண்மைக் காலங்களாக விபத்துக்கள் அதிகரித்துள்ளதால் “எங்கள் உயிர்களை நாங்களே பாதுகாத்துக் கொள்ளுவோம்“ எனும் முயற்சியில் கோப்பாய் பிரதேச செயலகம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. காலையிலும் மாலையிலும் வீதி அபிவிருத்தி அதிகாரசபை உத்தியோகத்தர்கள் இருவர் சிவப்புக் கொடியுடன் நின்று அவ்வீதியால் பயணிக்கும் வாகன சாரதிகளிடம் மெதுவாகப் பயணிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/196413 பாலத்தின் இருபுறமும் வேகத்தை குறைக்க படத்தில் உள்ளதுபோல மேடுகளை(road bump) அமைக்கலாமே?!
-
6 மாதங்களுக்கு மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் - அரசாங்கம் அறிவிப்பு!
(எம்.மனோசித்ரா) பொருளாதார நெருக்கடி காரணமாக மீன்பிடித்துறைக்கு ஏற்பட்டுள்ள தாக்கங்களை குறைத்து மீன்பிடித்துறையை இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய 6 மாதங்களுக்கு மீனவர்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை ஊடகவியலாளர் மாநாடு நேற்று செவ்வாய்கிழமை (15) இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், எரிபொருள் விலை மிகவும் பெருமளவில் அதிகரித்தமை காரணமாக மீன்பிடித்துறையில் ஏற்படும் பாதகமான தாக்கத்துக்கு தீர்வு வழங்குவதற்கு கடந்த ஆகஸ்ட் 21ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தீர்மானம் இதுவரை அமுல்படுத்தப்படவில்லை. எனவே, மீனவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதனை குறிக்கோளாக கொண்டு இம்மாதம் முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் 6 மாத காலத்துக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக விவசாய, காணி, கால்நடை வள, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது. அதற்கமைய எரிபொருளாக டீசல் பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் ஒரு லீற்றர் டீசலுக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்துக்கு 300 000 ரூபா வரையான உச்ச எல்லைக்குள் மீன்பிடித்துறையை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்hன கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது. எரிபொருளாக மண்ணெண்ணை பெற்றுக்கொள்ளும் மீன்பிடிக் கலங்களின் உரிமையாளர்கள் பெற்றுக்கொள்ளும் 15 லீற்றர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா பணம் கிடைக்கும் வகையில் ஒரு மாதத்தில் ஆகக்கூடியது 25 நாட்கள் என்ற அடிப்படையில், தொழிலில் ஈடுபடும் நாட்களுக்கு மட்டும் வரையறுக்கப்படும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணைக்கு 25 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும். டீசல் மற்றும் மண்ணெண்ணை விலைத் திருத்தம் மேற்கொள்ளப்படும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் டீசலுக்கான உச்ச நிவாரண விலையை 250 ரூபா என்ற மட்டத்திலும், மண்ணெண்ணைக்கான உச்ச விலை 150 ரூபா என்ற மட்டத்திலும் ஆக்க்கூடியது 6 மாத காலம் வரை டீசலுக்காக ஆக்ககூடியது சந்தை விலையிலிருந்து 7.5 சதவீத நிவாரணமும், மண்ணெண்ணைக்கு ஆக்ககூடியது சந்தை விலையிலிருந்து 12.5 சதவீத நிவாரணமும் மீனவர்களுக்கு கிடைக்கும் வகையில் மேற்குறித்த நிகழ்ச்சித்திட்டத்தை அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/196406
-
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு அமித்ஷா அனுமதி வழங்கினாரா? வோசிங்டன் போஸ்ட் தகவல்
கனடாவில் சீக்கிய பிரிவினைவாதிகள் மீதான தாக்குதலிற்கு இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அனுமதி வழங்கினார் என கனடா அதிகாரிகளை மேற்கோள்காட்டி வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்திய அதிகாரிகள் மத்தியிலான தொடர்பாடல்களில் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் இந்தியாவின் ரோ அமைப்பின் சிரேஸ்ட அதிகாரிகள் குறித்து குறிப்பிடப்பட்டிருந்ததாக கனடா அதிகாரிகள் இந்திய அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது. புலனாய்வு தகவல்களை சேகரித்தலில் ஈடுபடுமாறும் சீக்கிய பிரிவினைவாதிகள் மீது தாக்குதலை மேற்கொள்ளுமாறு இந்திய உள்துறை அமைச்சரும் ரோவின் அதிகாரிகளுமே உத்தரவிட்டனர் என்பது வெளியேற்றப்பட்டுள்ள இந்திய அதிகாரிகள் மத்தியிலான உரையாடல் மூலம் தெரியவந்துள்ளதாக வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஒக்டோபர் 12ம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டொவால், கனடாவின் பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சக அதிகாரிகள் மத்தியில் இடம்பெற்ற வெளியில் தெரியவராத சந்திப்பின் போது இந்த விடயம் குறித்து கனடா அதிகாரிகள் தகவல்களை வழங்கியுள்ளனர் என வோசிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது. மேலும் இடைமறித்து கேட்கப்பட்ட தகவல்களின் போது பெயர்கள் வெளியான நபர்களை விசாரணை செய்வதற்கு கனடா இந்தியாவின் அனுமதியை கோரியது என தெரிவித்துள்ள வோசிங்டன் போஸ்ட் அவர்களிற்கான இராஜதந்திர விடுபாட்டுரிமையை நீக்குமாறு கனடா விடுத்த வேண்டுகோளை இந்தியா நிராகரித்துள்ளது என செய்தி வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்தே இந்திய தூதுவர் உட்பட அதிகாரிகளை கனடா வெளியேற்றியது என வோசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196410
-
சந்ததிப் பெருக்கமும் இன்மையும்
சந்ததிப் பெருக்கமும் இன்மையும் (பகுதி 2) - ஆர். அபிலாஷ் பெண் முன்னேற்றமும் குழந்தைகளும் எண்ணிக்கைப் பெருக்கத்தால் செல்வம் குறைகிறது என செல்வந்தர்கள் நினைப்பதில்லை, குறைவாக பிள்ளை பெற்றால் நிறைவாக வாழலாம் என்பது பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்டவர்களின் வர்க்க உளவியல் மட்டுமே. பாலின பேதம் குறித்த விவாதங்களில் குழந்தைகளை பெண்களின் வளர்ச்சிக்கான தடையாக, அவர்களுடைய முதுகில் ஏற்றப்பட்ட பாரமாக பார்க்கிறார்கள். மில்லர் சொல்வது என்னவென்றால் வளர்ந்த நாடுகளில் பெண்கள் குறைவாக குழந்தை பெற்றுக் கொள்வதால் வளமாக இருக்கிறார்கள் என்பது ஒரு உத்தேச மயக்க வழு (intentional fallacy) மட்டுமே. வளர்ந்த நாடுகளில் செல்வம் பெருகுவதன் விளைவே மத்திய வர்க்கத்தினர் அங்கு குழந்தைகள் இல்லாமல் வாழ்வது அல்லது குறைவாக எண்ணிக்கையில் பெற்றுக் கொள்வது நிகழ்கிறது என்றும் இதைப் பார்க்க முடியும். வெளிநாடுகளிலும் இங்கும் பணக்கார பெண்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப் பார்க்கையில் நம்மால் இதன் பின்னுள்ள நவதாராளவாத பொருளாதார சதித்திட்டத்தைப் புரிந்துகொள்ள முடியும். பாலின பேதத்தை ஏற்படுத்துவது பொருளாதார ஏற்றத்தாழ்வே அன்றி குடும்பத்தைப் போன்ற சமூக அமைப்புகள் அல்ல. ஏனென்றால் தேசப் பொருளாதார கொள்கைகளே ஒரு குடும்பத்தின் போக்குகளின் திசைகாட்டி, சந்தைப் பொருளாதாரமே குடும்பத்தின் நடைமுறையைத் தீர்மானிக்கும் நெறிமுறை. விராத் கோலியின் மனைவியால் தொடர்ந்து குழந்தை பெற்றுக்கொண்டு உலகமெல்லாம் பயணிக்க எப்படி முடிகிறது? பாலிவுட் நடிகைகளால் எப்படி குழந்தைப் பேறுக்குப் பின்னர் வேலைக்குத் திரும்பவும் மாடலிங் பண்ணவும் முடிகிறது? அவர்களுக்கு முடிவது ஏன் மத்திய வர்க்க பெண்களுக்கு சாத்தியமாவதில்லை? பொருளாதாரத்தால் தான். ஜுரம் வந்தது என்றால் உடல் சூட்டை அல்ல அதற்கு காரணமான நோய்த்தொற்றையே நாம் சரிசெய்ய வேண்டும். பாலின பேதத்துக்கு, பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு காரணம் பொருளாதார ஏற்றத்தாழ்வே. இந்த பொருளாதார ஏற்றத்தாழ்வே பாலின சமத்துவத்தை உண்டு பண்ணுகிறது, குடும்ப அமைப்பு அல்ல. பாலின சுரண்டல் பொருளாதார சுரண்டலுக்குள் நிகழும் மற்றொரு தீமை எனும் உண்மையைப் பார்க்க விரும்பாமல் உலக வங்கியின் நிதியாதாரத்தைப் பெறும் நிறுவனங்கள் குடும்பத்தையும் ஆண்களையே காரணமாக சித்தரிக்கிறார்கள். குடும்பப் பெண்ணாக ஒருவர் இருப்பது பிற்போக்கானது, வளர்ச்சிக்கும் சமத்துவத்துக்கும் எதிரானது, ஆண்-பெண் உறவுகள் அடிமைத்தனத்தை நோக்கி வழிவகுக்கும் எனும் அச்சத்தை பெண்களிடம் விளைவிக்கிறார்கள். என்னதான் தனிப்பட்ட முடிவுகளால் தனியாக இருப்போரும் உண்டு எனினும் நவீன முதலீட்டிய சமூகத்தில் ஆணும் பெண்ணும் தனியாக இருப்பதை ஊக்கப்படுத்தும் ஒரு வலுவான போக்கு உள்ளதை நாம் மறுக்க முடியாது. உடைப்பதும் அதன் வழியாக போதாமையை உண்டு பண்ணுவதே முதலீட்டியத்தின் லாபத் திட்டம் எனக் கூறும் ராபர்ட் பார்க் முதலீட்டைக் குறைவாகவும் அதை பயன்படுத்தும் மக்களுக்கு போதாமை உள்ளபடியும் பார்த்துக் கொள்வதும், மக்களுக்கு தேசத்தின் நிதியாதாரம் மீது உரிமையில்லாமல் பார்த்துக்கொள்வதுமே நவீன முதலீட்டியத்தின் வெற்றிகரமான உத்தி என்கிறார். அதனாலே பெண்களுக்கு கூடுதலான கல்வியையும், நிதி உதவியையும் வழங்காமல் அவர்களுடைய பிள்ளைப்பேற்றைக் கட்டுப்படுத்த இந்திரா காந்தி அரசு அன்று விழைந்தது. அதையே பின்வந்தவர்களும் தொடர்ந்தார்கள். ஏனென்றால் அது ‘செலவில்லாத குறுக்குவழி’; ஆனால் கருத்தடை முயற்சிகள் தீவிரமாக நடந்த உ.பி, பீகார் போன்ற மாநிலங்களீல் இப்பெண்களின் கல்விக்கோ ஏழைகளின் வளர்ச்சிக்கோ எந்த நிதியாதாரத்தையும் வழங்காமல் திட்டங்களையும் செயல்படுத்தாமல் அரசு கைவிட்டதால் அங்கு குடும்பக் கட்டுப்பாட்டையும் மக்கள் ஏற்கவில்லை, ஏற்ற போதும் அதனால் பயன் கிடைக்கவில்லை. கண்ணாடியைத் திருப்பினால் எப்படி ஆட்டோ ஓடும்? தமிழகத்திலும் கேரளாவிலும் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் நகரமயமாக்கல், கல்வி ஆகிய காரணிகளால் சுலபத்தில் ஏற்கப்பட்டது. ஆனால் இந்த இரு மாநிலங்களின் வளர்ச்சியும் இரு குழந்தை போதும் எனும் முடிவினால் மட்டும் நிகழவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். என்ன பிரச்சினை எனில் இன்றும் குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் தாக்கம், அந்த மயக்க வழு, பிரமை முன்னேறிய சமூகத்து மக்களின் மனத்தில் நீடிக்கிறது: தமது பெண் குழந்தைகளை சமூக மரியாதைக்காக மணமுடிக்க விரும்பும் பெற்றோரில் ஒரு பகுதியினர் அவர்கள் குடும்பம் நடத்துவதை விரும்புவதில்லை. ஒரு ஐ.டி ஊழியரான பெண் தன் குழந்தைக்கு உணவு தயாரிக்கவும், வேறு தேவைகளுக்கும் ஆள் வைத்துக் கொள்ள முடியும். ஆனாலும் குழந்தை வளர்ப்பில் அவர் தன் ஓய்வு நேரத்தில் ஆர்வம் செலுத்தினால் கூட அது அவரது தனிப்பட்ட ‘பொருளாதார வளர்ச்சியை’ பாதித்துவிடும் எனும் அச்சம் அவரது அம்மாவுக்கு இருக்கிறது. அவர் தன் பேரன், பெயர்த்தியை தன் மகளிடம் இருந்து விலக்கி அவர்களை தானே வளர்க்க முன்வருவார். சிலரோ தம் மகளுக்கும் மருமகனுக்கும் இடையில் சிறு பிரச்சினை ஏற்பட்டால் கூட அவர்கள் பிரிய வேண்டும் என அழுத்தம் கொடுக்கிறார்கள். ஏனென்றால் தாம்பத்ய வாழ்க்கை, அது சார்ந்த கடமைகள், சவால்கள், நெருக்கடிகளை ‘பொருளாதார வீழ்ச்சியாக’ அவர்கள் கருதுகிறார்கள். இதனால் இன்று கல்யாணம் பண்ணிக்கொள்ள பக்கத்து அல்லது தொலைதூர மாநிலங்களில் பெண் தேடும் நிலை ஆண்களுக்கு ஏற்படுகிறது. மணப்பெண்ணை ஈர்க்கும் படியான நல்ல சம்பளத்துக்கான வேலை கிடைக்காவிடில் என்னாவது எனும் பயம் ஆண்களையும், கல்விக்கும் சுயவெளிப்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் கல்யாணம், குழந்தைப்பேறு தடையாகும் எனும் பயமும், அதனால் சமூகத்துக்காக பண்ணிவிட்டு அதில் இருந்து தப்பிக்க வேண்டும் எனும் விழைவும் நவீன பெண்களையும் ஆக்கிரமித்துள்ளது. இது குடும்பக் கட்டுப்பாட்டு பிரச்சாரத்தின் இன்னொரு முகமாகும். அது இன்று ‘குடும்ப வெறுப்பாக’ மாற்றப்பட்டுள்ளது. ஆண்கள் தனியாக வாழ்வது இயல்பற்றதாகவும், பெண்கள் தனியாக வாழ்வது இயல்பானதாகவும் பார்க்கப்படும் போக்கு இன்று வளர்ந்து வருகிறது. ஆண்களையும் பெண்களையும் இப்படி உளவியல் போதாமை கொண்டவர்களாக்கி மாற்றுவதும், அவர்களுடைய உடலை சதா கண்காணிப்பதுமே இந்த குடும்பக் கட்டுப்பாட்டின் கண்காணிப்பு அரசியல். அரசு, அரசை நடத்தும் உலக வங்கி, அவர்களால் வளர்க்கப்படும் அமைப்புகள் முன்னெடுக்கும் இந்த உயிரியல் அரசியலின் (biopolitics) உத்தேசமே பெண்ணின் கருப்பையைக் கட்டுப்படுத்துவதன் வழியாக சமூக அதிகாரத்தைக் கைப்பற்றி தக்க வைப்பதே எனக் கருதுகிறேன். நான் அடுத்து இங்கு முக்கியமாக சொல்ல விரும்புவது இந்த குழந்தைகளின் ஆளுமையில் ஏற்படும் மாற்றத்தைத் தான். அதிக குழந்தைப்பேறும் குழந்தைகளின் உடல், மன ஆரோக்கியமும் தனியாக வளரும் குழந்தைகளின் ஆளுமைக் கோளாறுகளைப் பற்றி நிறைய ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஒற்றைக் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்களின் பெற்றோருக்கும் மன அழுத்தம் உள்ளிட்ட மனச்சிக்கல்கள் அதிகமாக வருகின்றன. சமூகமாக்கல் திறன் குறைந்தவர்களாகவும் ஆரோக்கியமற்றவர்களாகவும், சுலபத்தில் போதைப் பழக்கத்துக்கு ஆட்படுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். அண்ணன், தம்பி, அக்கா, தங்கையுடன் வளரும் பிள்ளைகள் சமூகத்துடன் ஒத்திசைவு கொண்டவர்களாகவும், திறன் பெற்றவர்களாகவும் மாறுகிறார்கள். இந்த மாணவ நண்பர் ஒரு விசயத்தை குறிப்பிட்டார் - வீட்டில் சதா கூச்சல் குழப்பம் விளையாட்டு என பிள்ளைகள் இருந்தாலும் அவர்களுக்குள் ஒரு படிநிலை உள்ளது என்றார். மூத்த பெண் குழந்தைக்கு வயது 7. அவளிடம் பிற குழந்தைகள் (தம்பி, தங்கைகள்) அடங்கிப் பணிகிறார்கள். யார் அப்பாவிடம் போய் தொந்தரவு பண்ணினாலும் அந்த அக்கா குழந்தை போய் பேசி அப்பாவைக் காப்பாற்றுகிறாள். அம்மாவின் நேரத்தை பிற குழந்தைகள் எடுத்துக் கொண்டு களைப்படையாத வண்ணம் அவளே சின்னச்சின்ன வேலைகளை எடுத்துப் பண்ணுகிறாள். பள்ளியிலும் இக்குழந்தை தன் வயதை மீறிய முதிர்ச்சியும் நிதானமும் கொண்டிருக்கிறாள். வளர்ந்த குழந்தைகள் இன்று வளர வளர சின்னக் குழந்தைகள் போல மாறிக்கொண்டிருக்க இங்கே ஒரு சின்ன குழந்தை வளர்ந்த குழந்தையைப் போல பொறுப்பாக இருக்கிறாள். இந்த ‘முதிர்ச்சி பாவனைகளை’ தான் பிற பிள்ளைகளும் வளர வளர அவர்களிடம் தான் காண்பதாக சொன்னார். இந்த பாவனையே பின்னர் நிஜமான முதிர்ச்சியாகும். இக்குழந்தைகள் பதின் பருவம் எட்டி சமூகத்துடன் அதிகமாக பழக வாய்ப்புகள் கிடைக்கும் போது இந்த பாவனையே மிகவும் பயனளிக்கும். சுயக்கட்டுப்பாடும் முதிர்ச்சியும் சமூகமாக்கல் திறனும் அதிகரிக்கும். நன்றாகப் பேசி போட்டியிட்டு தனக்குத் தேவையானதைப் பெற்றுக்கொள்ளும் திறன் அதிகரிப்பதுடன், வருந்தி அழுது முடங்கிப் போகும், எல்லாவற்றுக்கும் பெற்றோரை சார்ந்திருக்கும் இயல்பு இல்லாமல் போகும். நான் இப்போதைய இளைஞர்களிடம் ஒரு விசித்திரமான மனப்பிரச்சினையைப் பார்க்கிறேன் - panic attack. திடீரென அவர்களுக்கு உடல் வியர்த்து, முகம் சிவந்து, வலிப்பு வந்ததைப் போல் ஆகிறது. கூட்டத்தைப் பார்த்தாலே பயமும் ஒவ்வாமையும் ஏற்படுகிறது. அவர்கள் உடனடியாக வெளியே போகாவிடில் மயங்கிவிடுவார்கள். இதெல்லாம் கூட்டமாய் வளரும் குழந்தைகளுக்கு ஏற்படவே முடியாது. அந்த நண்பர் முக்கியமாக தன் குழந்தைகள் உடல் நலிவுற்று அதிகமாக ஆஸ்பத்திரிக்கு போவதில்லை என்றார். எனக்கு இதை வேறொரு சம்பவத்துடன் பொருத்திப் புரிந்துகொள்ள முடிந்தது - என்னுடைய நாய்க்கு வயது 15. அடிக்கடி நோய்வயப்பட்டு தளர்ந்து வந்தது. கண்பார்வை பாதி போனது. நடக்கவே முடியவில்லை. டாக்டர் பார்த்துவிட்டு சில மாதங்கள் தாண்டாது, தயாராகுங்கள் என்றார். (டாக்ஸ்ஹண்ட் இன நாய்களின் சராசரியான ஆயுள் அதுதான்.) நான் சரி அடுத்த தலைமுறை வரட்டும் என்று இன்னொரு நாய்க்குட்டியை எடுத்தேன். நீங்கள் நம்ப மாட்டீர்கள், அடுத்த சில மாதங்களிலே இந்த 15 வயது நாய் 8 வயது நாயைப் போல ஆகிவிட்டது. அதன் உடலில் வெளிப்படையாகவே மாற்றங்களைப் பார்த்தேன். போட்டி போட்டுக்கொண்டு அதிகமாக ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டது. அதன் நடை வேகமாகியது. வலுவாக தன்னைக் காட்டிக்கொண்டது. இப்போது அதற்கு வயது 16. 18-19 வயதைத் தொடும் என நம்பிக்கை ஏற்பட்டுவிட்டது. தனியாக வாழ்வது மனிதனின் இயல்பு அல்ல. தனியாக வாழும் போது நம் ஆயுள் குறைகிறது என ஆய்வுகளே சொல்கின்றன. தனியாக வாழ்வதே இப்படியாக இருக்கும் போது தனியாக வளர்வது? உசாத்துணை: Goli, Srinivas and Jain, Neha. Modi’s Population Growth 'Problem' Is an Old Fallacy in a New Bottle. Health. Thewire.in. https://thewire.in/.../world-population-day-india... Markert, John. “The Malthusian fallacy: Prophecies of doom and the crisis of Social Security”. Elsevier. The Social Science Journal. Volume 42, Issue 4, 2005, Pages 555-568. Miller, Michael Matheson. “The Three Fallacies Behind Population Control.” Religion & Liberty Online. Action Institute. https://rlo.acton.org/.../111428-three-fallacies-behind... Park, Robert M. “NOT BETTER LIVES, JUST FEWER PEOPLE: THE IDEOLOGY OF POPULATION CONTROL.” International Journal of Health Services, vol. 4, no. 4, 1974, pp. 691–700. JSTOR, http://www.jstor.org/stable/45131567. Accessed 10 Mar. 2024. நன்றி: உயிரெழுத்து http://thiruttusavi.blogspot.com/2024/10/2_13.html
-
அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறும் மகிந்த ராஜபக்ச
"அரசியல்வாதிகள் ஓய்வுபெறுவதில்லை" - மகிந்த அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் அரசியலில் இருந்து தற்காலிகமாகவே விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தற்காலிக நிறுத்தம், அரசியல்வாதிகள் ஒருபோதும் ஓய்வுபெறுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். 2024 பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுன இலகுவான வெற்றியை பெறும் என குறிப்பிட்டுள்ள அவர் அனைத்து ராஜபக்சாக்களும் தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவில்லை, சசீந்திர ராஜபக்ச மொனராகல மாவட்டத்தில் போட்டியிடுகின்றார் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196404
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பொதுத் தேர்தல்; உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் திகதி அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் வழங்கப்படும் திகதி தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் குறிப்பிடப்படுவதாவது, பொதுத் தேர்தலுக்கான உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் செப்டெம்பர் 27 , 31 மற்றும் நவம்பர் 03 ஆகிய திகதிகளில் வழங்கப்படும். நவம்பர் 7 ஆம் திகதிக்குப் பின்னர் உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாத வாக்காளர்கள் தங்களது பிரதேசங்களில் உள்ள தபால் அலுவலகங்களுக்குச் சென்று உத்தியோகப்பூர்வமான வாக்காளர் அட்டைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது . https://www.virakesari.lk/article/196382
-
தெற்கின் அலையில் சிக்கிவிடாது இனத்தின் இருப்பை உறுதிசெய்வோம் - மயூரன்
தெற்கின் மாற்றம் என்ற வரையறைக்குள் தமிழ்மக்களின் தேவைகளை அடகுவைக்காமல் தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பை மனதில் நிறுத்தி வாக்களிக்குமாறு முன்னாள் வடக்குமாகாணசபை உறுப்பினரும் ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட வேட்பாளருமான செந்தில்நாதன் மயூரன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடகக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தெற்கில் இன்று அரசியல் மாற்றம் ஒன்று உருவாகியுள்ளது. அந்த மக்கள் மாற்றம் ஒன்றின் அவசியத்தை உணர்ந்து அநுரவை ஆட்சியில் அமர்த்தியுள்ளனர். வடகிழக்கிலும் அவ்வாறான ஒரு மாற்றம் வரவேண்டும் என்று பலரும் சிந்திக்கின்றார்கள். அந்த மாற்றத்திற்குள் பலவிடயங்கள் இருக்கிறது. நாடு பொருளாதார சிக்கல்களுக்கு முகம் கொடுத்து ஊழல்வாதிகளால் சூறையாடப்பட்டுள்ளது. அந்தவகையில் நாட்டில் ஒரு புதிய யுகத்தினை ஏற்படுத்துவதற்காகச் சிங்கள மக்கள் ஒன்றிணைந்துள்ளனர். அதனை நாம் வரவேற்கின்றோம். அதற்கான பங்களிப்புக்களை வழங்குவதற்கு நாங்களும் தயாராக இருக்கிறோம். இதேவேளை தெற்கு சிங்கள மக்கள் விரும்புகின்ற மாற்றமும் வடகிழக்கு தமிழ்மக்களின் எதிர்பார்ப்புக்களும் ஒன்றல்ல. இரண்டையும் நாம் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க முடியாது. இலஞ்சத்தையும் ஊழலையும் அகற்றினால் தமிழ்மக்கள் நிம்மதியாக வாழமுடியுமா. அல்லது அதனை மாத்திரம் நாம் மாற்றம் என்று கூறமுடியுமா. இன்று வடகிழக்கு தமிழர் பகுதிகளில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இனப்பரம்பல் செயற்பாடுகள் தமிழ்ப்பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தில் பாரியைத் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. சமகாலத்தில் திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்டங்களில் ஒரு தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதே கடினம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. வன்னி மாவட்டத்திலும் இந்த நிலையை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் திரைமறைவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. எனவே தமிழ்மக்களின் இருப்பையும் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எம் அனைவர் முன்னும் இருக்கிறது. இது தொடர்பாக நாம் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். ஏற்கனவே அதிகளவான தமிழ்மக்கள் புலம் பெயர்ந்து சென்றுள்ளமையால் தமிழ் பிரதிநிதித்துவம் குறைவடைந்து செல்லும் நிலைமையினை காண்கின்றோம். இந்நிலையில் மாற்றத்தினை விரும்பி நீங்கள் அளிக்கின்ற வாக்குகளால் எமது பாரம்பரிய பிரதேசங்களிலிருந்து சிங்கள பிரதிநிதிகளே பாராளுமன்றுக்கு செல்வர். அவர்களுக்குத் தமிழர்களின் பிரதான பிரச்சனைகளே தெரியாது. அவர்கள் எமக்காகப் பேசுவார்கள் என நம்பமுடியுமா. நாம் ஈழவிடுதலை போராட்டத்தில் எத்தனை ஆயிரம் போராளிகளை இழந்துவிட்டோம். எத்தனை உயிர்களை இழந்திருக்கின்றோம். பலர் அங்கவீனமுற்று அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளனர். பலர் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.இனப்பிரச்சினைக்கு தீர்வில்லை. இவை தொடர்பாக சிங்கள பிரதிநிதிகளால் பாராளுமன்றில் குரல்கொடுக்க முடியுமா. இல்லை. அல்லது சர்வதேசத்திற்குத்தான் தெரியப்படுத்த முடியுமா. இந்த நிலைமையில் நாம் தேசிய கட்சிகளுக்கு அளிக்கின்ற வாக்கானது அவர்களின் தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதுடன் 50 வருடங்களுக்கு மேலாக நீடித்துவரும் விடுதலை வேட்கையினை நீர்த்துப்போகச்செய்யும் நிலையினை ஏற்படுத்தும். எனவே தெற்கில் ஏற்பட்ட மாற்றத்திற்கான அலையில் தமிழ்மக்கள் சிக்கிவிடாது தமிழ்ப்பிரதேசங்களின் இருப்புக்களையும், பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கவேண்டிய அவசியத்தை உணரவேண்டும். தமிழ்மக்களின் குரலாக ஓங்கி ஒலிக்கும் பிரதிநிதிகளை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டிய அவசியம் தொடர்பில் தாயக மக்களும் புலம்பெயர்ந்து வாழ்கின்ற தமிழ் சொந்தங்களும் ஆழ்ந்து சிந்திக்கவேண்டும். தொடர்ச்சியான தேர்தல்களில் வடகிழக்கு தமிழ்மக்கள் சலுகை அரசியலை புறந்தள்ளி உரிமை அரசியலைப் பேசுகின்ற தமிழ்த்தேசிய கட்சிகளுக்கே தமது ஏகோபித்த ஆதரவினை வழங்கிவந்திருக்கின்றனர். எனவே இந்த தேர்தலிலும் தடம்மாறாது தமிழ்த்தேசியத்தின் இருப்பை பாதுகாப்பதற்கு ஒற்றுமையோடு அணிதிரளவேண்டுமென்று தமிழ்மக்களிடம் கேட்டுக்கொள்கிறேன். https://www.virakesari.lk/article/196399
-
தேசிய மக்கள் சக்தியின் அரசில்; தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை அமைச்சரவை தீர்மானம் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு அந்த அரசாங்கத்தின் காலத்திலும் நீதி கிடைக்கப்போவதில்லை உறுதியாகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவரும், யாழ்.மாவட்ட தலைமை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அது மாற்றதினை ஏற்படுத்தப்போவதாக கூறுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மக்கள் அரசாங்கமும் அநீதியை இழைக்கப்போகின்றது என்பதை முற்கூட்டியே அது அறிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமாச் சட்ட மீறல்கள் சம்பந்தமான சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை என்றும், சர்வதேச விசாரணையாளர்களின் பங்கேற்புக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைச்சரவை தீர்மானத்தினை எடுத்துள்ளது. குற்றம் செய்தவர்கள் தமது குற்றத்தை விசாரிப்பது என்பது இயற்கை நீதிக்கு முற்றிலும் முரணானதாகும் என்ற நியாயத்தினை ஏற்றுக்கொள்கின்ற எந்தவொருவரும் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலைச் செய்யாத, கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகின்றபோது மிகவும் மோசமானதொரு தரப்பாக இருக்கப்போகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம். ஆகவே தமிழருடைய தேசிய நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காத வகையில் பேரம்பேசக்கூடிய ஒரு தரப்பினை வடக்கு,கிழக்கில் இருந்து அமோக வெற்றியுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். குறிப்பாக, வடக்கு,கிழக்கு மக்கள் மாற்றத்தினை விரும்பி அதற்கான ஆதரவினை வழங்கியுள்ளார்கள் என்ற செய்தியை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆணை வழங்குவதன் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/196395
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
இங்கிலாந்தை வெளியேற்றி அரை இறுதிக்குள் நுழைந்தது மே.தீவுகள்: தென் ஆபிரிக்காவும் அரை இறுதி வாய்ப்பைப் பெற்றது (நெவில் அன்தனி) துபாய் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண பி குழுவுக்கான கடைசிப் போட்டியில் இங்கிலாந்தை 6 விக்கெட்களால் வெற்றிகொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. இப் போட்டியில் இங்கிலாந்து தொல்வி அடைந்ததால் பி குழுவிலிருந்து இரண்டாவது அணியாக தென் ஆபிரிக்கா அரை இறுதி வாய்ப்பை பெற்றுக் கொண்டது. தென் ஆபிரிக்காவும் இங்கிலாந்தும் தலா 6 புள்ளிகளைப் பெற்றிருந்தன. ஆனால், நிகர ஓட்ட வேக அடிப்படையில் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்கா 2ஆம் இடத்தைப பெற்றது. அணித் தலைவி ஹெய்லி மெத்யூஸ், கியானா ஜோசப் ஆகிய இருவரும் அதிரடியாக அரைச் சதங்களைக் குவித்ததுடன் ஆரம்ப விக்கெட்டில் 74 பந்துகளில் பகிர்ந்த 102 ஓட்டங்கள் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றியை இலகுபடுத்தியது. அத்துடன் இங்கிலாந்து 5 பிடிகளைத் தவறவிட்டது அதன் தோல்விக்கு பிரதான காரணமாக அமைந்தது. பி குழுவில் தோல்வி அடையாத அணியாக இருந்த இங்கிலாந்து கடைசிப் போட்டியில் வெற்றிபெற்று அரை இறுதிக்கு முன்னேற முடியும் என்ற நம்பிக்கையில் இருந்தது. ஆனால், இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 142 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்து 18 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது. ஹெய்லி மெத்யூஸ், கியானா ஜோசப் ஆகிய இருவரும் பவர் ப்ளேயில் 67 ஓட்டங்களை விளாசியதன் பலனாக மேற்கிந்தியத் தீவுகளின் ஆரம்பம் அமோகமாக இருந்தது. மொத்த எண்ணிக்கை 102 ஒட்டங்களாக இருந்தபோது கியானா ஜோசப் முதலாவதாக ஆட்டம் இழந்தார். அவர் 38 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார். சொற்ப நேரத்தில் ஹெய்லி மெத்யூஸ் 38 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 50 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். (104 - 2 விக்.) மொத்த எண்ணிக்கை 136 ஓட்டங்களாக இருந்தபோது ஷேர்மெய்ன் கெம்பல் (5), டியேந்த்ரா டொட்டின் (27) ஆகிய இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். ஆனால் அது மேற்கிந்தியத் தீவுகளுக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. வெற்றிக்கு மேலும் தேவைப்பட்ட 5 ஓட்டங்களை ஆலியா அலின் (8 ஆ.இ.) 2 பவுண்டறிகளை விளாசி பெற்றுக்கொடுத்தார். இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் களத்தடுப்பை தெரிவு செய்ய, முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 141 ஓட்டங்களைப் பெற்றது. இங்கிலாந்தின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஏழாவது ஓவரின் முதல் பந்தில் அதன் மொத்த எண்ணிக்கை 3 விக்கெட் இழப்புக்கு 34 ஓட்டங்களாக இருந்தது. அப்போது ஜோடி சேர்ந்த நெட் சிவர் ப்ரன்ட், அணித் தலைவி ஹீதர் ப்ரன்ட் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது துரதிர்ஷ்டவசமாக உபாதைக்குள்ளான ஹீதர் நைட் 21 ஓட்டங்களுடன் ஓய்வுபெற நேர்ந்தது. அது இங்கிலாந்துக்கு பெரும் தாக்கத்தைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனெனில் அதன் பின்னர் சீரான இடைவெளியில் 4 விக்கெட்கள் சரிந்தன. ஒரு பக்கத்தில் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய நெட் சிவர் ப்ரன்ட் 57 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அஃபி ஃப்ளெச்சர் 21 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹெய்லி மெத்யூஸ் 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்ட நாயகி: கியானா ஜோசப். https://www.virakesari.lk/article/196393
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
வடக்கு மக்களுக்கு 13 ஆவது திருத்தச்சட்டமும், அதிகாரப்பகிர்வும் அவசியமாக இல்லை என்பதுடன், பொருளாதார பிரச்சினைகளுக்கே தீர்வு அவசியமாக உள்ளது. ஆனால், தமிழ் அரசியல்வாதிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள இந்த வசனங்களை பயன்படுத்தி வருகின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்; வடக்கில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. மொழி ரீதியான பிரச்சினை அங்கு உள்ளது. அரச அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தாம் விரும்பும் மொழியில் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதுள்ளது. கொழும்பை மையப்படுத்தியுள்ள சில வசதி, வாய்ப்புகள் வடக்கிற்கு செல்வதில்லை. யாழ்ப்பாணத்தில் ஓரளவு தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளக் கூடிய வசதிகள் உள்ள போதிலும் கிளிநொச்சி, வவுனியா அல்லது முல்லைத்தீவில் வாழும் மக்கள் மிகவும் கஷ்டமான வாழ்கையையே வாழ்கின்றனர். இங்குள்ளவர்கள் கல்வி முதல் அனைத்து விடயங்களையும் பெற்றுக்கொள்வதில் நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். இந்த மக்கள் மிகவும் வறுமைக்கு உட்பட்டவர்களாக உள்ளனர். தெற்கில் இருந்து வடக்கிற்கு செல்லும் பாதை அழகாக உள்ளது. பாதையின் இருபுறங்களிலும் கடைகள் உள்ளன. ஆனால், பாதையை தாண்டி உள்ளே சென்றால் வீடுகள் இல்லை, மக்கள் வறுமையாகவும் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியாதும் வாழ்கின்றனர். உள்பாதைகள் மிகவும் மோசமான முறையில் புனரமைக்கப்படாது புழுதிகளுடன் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தில் சிலர் வெளிநாடுகளில் இருப்பதால் ஓரளவு பொருளாதாரம் உள்ளது. ஆனால், வவுனியா அல்லது கிளிநொச்சி சென்றால் அங்கு பொருளாதார இல்லை. முல்லைத்தீவில் வாழும் மீனவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பழங்களையும், மரக்கறிகளையும் விற்பனை செய்துக்கொள்ள உரிய சந்தை வாய்ப்புகள் இல்லை. வேலைவாய்ப்புகள் மிகவும் குறைவாகும். தெற்கில் இருந்து அங்கு சென்று சுற்றுலாவில் நாம் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், அங்குள்ள மக்களின் வாழ்கை முள்ளின் மேல் உள்ளது. பொது மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் பற்றி தேடுவதே அவசியமாக உள்ளது. காணி முரண்பாடுகள் நீண்டகாலமாக உள்ளன. யுத்தக்காலத்தில் தமது காணியை கைவிட்டு வெளியேறி மக்கள் யுத்தம் நிறைவடைந்து சென்ற போது அந்த காணிகளை வேறு நபர்கள் கைப்பற்றி குடியேறியுள்ளனர். அரசாங்கம் தலையீடு செய்து அந்தப் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. பிரச்சினைகள் அவ்வாறுள்ளன. ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்காத வடக்கின் தமிழ் அரசியல் தலைவர்கள், தமது அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள 13ஆவது திருத்தச்சட்டம் மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற வசனங்களை பயன்படுத்திக்கொண்டனர். ஆனால், வடக்கின் அடித்தட்டு மக்களுக்கு 13ஆவது திருத்தச்சட்டம் அவசியமில்லை. அவர்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமில்லை. அவர்களுக்கு விசாயத்தை மேற்கொள்ள நீர் வசதிகளும், அவற்றை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்புகளும், கல்வியும், நல்ல வைத்தியசாலைகளுமே அவசியமாக உள்ளன. எமது நாட்டில் ஒருவர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் அவர் கொழும்புக்கு கட்டாயம் வரவேண்டிய தேவையுள்ளது. கண் பரிசோதனைகளுக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்புக்கு வரவேண்டியுள்ளது. அனைத்தும் கொழும்பை மையப்படுத்தியுள்ளன. இவ்வாறு கொழும்பை மைப்படுத்தியுள்ள அனைத்து விடயங்களும் நாட்டின் அனைத்து பிரதேசங்களுக்கும் செல்லும் போது மக்களின் பிரச்சினைகள் தீரும். குறிப்பாக எமது நாட்டில் உற்பத்தி பொருளாதார முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். அந்தப் பொருளாதாரத்தின் பங்காளிகளாக அனைத்து பிரதேச மக்களும் ஒன்றிணைக்கப்பட வேண்டும் என்பதுடன், அந்த பொருளாதாரத்தின் பிரதிபலன்களும் அவர்களுக்கு கிடைக்க வேண்டும். உற்பத்தி பொருளாதார்ததின் பயன்கள் அனைத்து தரப்பினருக்கும் கிடைக்கும் போது நாட்டில் தற்போது காணப்படும் பிரச்சினைகளில் பெரும்பான்மையானவைக்கு தீர்வு கிடைத்துவிடும். அதன் ஊடாக அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.” என்றும் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் ரில்வின் சில்வா கூறியுள்ளார். https://thinakkural.lk/article/310789
-
மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
இலங்கையின் சுழற்சியில் மண்டியிட்டது மே. தீவுகள்: தொடர் 1 - 1 என சமனானது (நெவில் அன்தனி) ரங்கிரி, தம்புள்ளை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (15) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தனது சுழல்பந்துவீச்சாளர்களைக் கொண்டு மேற்கிந்தியத் தீவுகளை திணறச் செய்த இலங்கை 73 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரை 1 - 1 என இலங்கை சமப்படுத்தியது. இடதுகை சுழல் பந்துவீச்சாளர் துனித் வெல்லாலகே தனது ரி20 அறிமுகப் போட்டியில் முன்வரிசை வீரர்கள் மூவரின் விக்கெட்களைக் கைப்பற்றி மேற்கிந்தியத் தீவுகள் அணியை ஆட்டங்காணச் செய்தார். அவருக்கு பக்கபலமாக செயற்பட்ட மற்றைய சுழல்பந்துவீச்சாளர்களான அணித் தலைவர் சரித் அசலன்க, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்ஷன ஆகியோர் 6 விக்கெட்களைப் பகிர்ந்தனர். வேகப்பந்துவீச்சாளர் மதீஷ பத்திரண எஞ்சிய விக்கெட்டைக் கைப்பற்ற மேற்கிந்தியத் தீவுகள் இரட்டை இலக்க மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டது. இலங்கையினால் நிர்ணயிக்கப்பட்ட 163 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 16.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 89 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் பவர் ப்ளேயில் அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த மேற்கிந்தியத் தீவுகள் இன்றைய போட்டியில் பவர் ப்ளேயில் 3 விக்கெட்களை இழந்து 21 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அணித் தலைவர் ரோவ்மன் பவல் (20), அல்ஸாரி ஜோசப் 16 ஆ. இ.) ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் (14) ஆகிய மூவரே மேற்கிந்தியத் தீவுகள் சார்பாக இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் துனித் வெல்லாலகே 4 ஓவர்களில் 9 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் சரித் அசலன்க 6 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மஹீஸ் தீக்ஷன 3.1 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மதீஷ பத்திரண 12 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கையின் ஆரம்பம் ஆக்ரோஷமாக இருந்தபோதிலும் 13 ஓவர்களுக்கு பின்னர் ஓட்ட வேகம் சிறிது மந்தமடைந்தது. பெத்தும் நிஸ்ஸன்க, குசல் மெண்டிஸ் ஆகிய இருவரும் 10 ஓவர்களில் 73 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து பெத்தும் நிஸ்ஸன்கவும் குசல் பெரேராவும் 2ஆவது விக்கெட்டில் 34 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் குசல் பெரேரா 24 ஓட்டங்களுடன் வெளியேறினார். மறுபக்கத்தில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த பெத்தும் நிஸ்ஸன்க 54 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். முதலாவது போட்டியில் அரைச் சதங்கள் பெற்ற கமிந்து மெண்டிஸ் 19 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சரித் அசலன்க 9 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹசரங்க ஆகிய இருவரும் தலா 5 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்து வீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்த இப் போட்டியில் அரைச் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க ஆட்டநாயகனாகத் தெரிவானார். https://www.virakesari.lk/article/196392
-
பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
அறிமுக வீரர் குலாம் குவித்த சதத்தால் பலமான நிலையை நோக்கி பாகிஸ்தான் (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் கம்ரன் குலாம் குவித்த சதத்தின் உதவியுடன் பாகிஸ்தான் பலமான நிலையை நோக்கி நகர்கிறது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பாகிஸ்தான் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 259 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பாகிஸ்தான் அதன் முதல் இரண்டு விக்கெட்களை 19 ஓட்டங்களுக்கு இழந்து பெரும் நெருக்கடியை எதிர்கொண்டது. எனினும் சய்ம் அயூப், கம்ரன் குலாம் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 149 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தினர். சய்ம் அயூப் 77 ஓட்டங்களைப் பெற்றார். நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த வருடம் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான கம்ரன் குலாம் அப் போட்டியில் துடுப்பெடுத்தாடவோ பந்துவீசவோ இல்லை. மாறாக களத்தடுப்பில் மாத்திரம் ஈடுபட்டார். அதன் பின்னர் சர்வதேச டெஸ்ட் அரங்கில் இன்றைய போட்டியில் அறிமுகமான கம்ரன் குலாம், ஓர் அனுபவசாலிபோல் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 224 பந்தகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 118 ஓட்டங்களைப் பெற்றார். தொடர்ந்து 5ஆவது விக்கெட்டில் மொஹமத் ரிஸ்வானுடன் மேலும் 65 ஓட்டங்களை கம்ரன் குலாம் பகிர்ந்தார். மொஹமத் ரிஸ்வான் 37 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நடைபெற்றுவரும் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்டில் வெற்றிபெற்ற இங்கிலாந்து 1 - 0 என முன்னிலை வகிக்கிறது. https://www.virakesari.lk/article/196388
-
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் - ரவூப் ஹக்கீம்
பொதுத் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட ஐ.ம. ச. வேட்பாளருமான ரவூப் ஹக்கீம் கண்டியில் தெரிவித்துள்ளார். இது தனது தனிப்பட்ட கருத்தாக இருந்தாலும் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுக்க ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையும் இது தொடர்பில் தமது இணக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கண்டியில் திங்கட்கிழமை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மேலும் கூறியதாவது: ஐக்கிய மக்கள் கூட்டணி என்ற வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏழு மாவட்டங்களில் ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகிறது. கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தனித்து போட்டியிடுகின்றோம். அதன் மூலம் மேலும் 04 பாராளுமன்ற ஆசனங்களைப் பெறுவதே எமது நோக்கமாகும். பாராளுமன்ற தேர்தல். ஜனாதிபதி தேர்தலில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. விகிதாசார வாக்கு முறை நடைமுறைப் படுத்தப்பட்ட பின்னர் நான்கு ஜனாதிபதித் தேர்தல்களில் மாத்திரமே ஜனாதிபதியாக வெற்றி பெற்ற கட்சி பொதுத் தேர்தலில் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனது. தேசிய மக்கள் சக்தி இம்முறையும் குறைந்தபட்ச பெரும்பான்மையைப் பெறாது என்பதை திண்ணமாக கூறலாம் தேசிய மக்கள் சக்தியில் வேட்பாளருக்கான பட்டியலைப் பார்க்கும்போது, மக்களுக்குத் தெரிந்த பிரபல அரசியல் பிரமுகர்கள் குறைவு. மேலும் பாராளுமன்றம் என்பது அதுவொரு விளையாட்டுக் கூடம் அல்ல. திறமையும் அனுபவமும் உள்ளவர்கள் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. தேசிய மக்கள் சத்தியின் வேட்பாளர் பட்டியலில் பாரிய குறைபாடுகள் உள்ளன. பொதுத் தேர்தலில் யார் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தாலும் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். நாட்டின் ஜனநாயகம் வலுவாக இருக்க வலுவான எதிர்க்கட்சி அவசியம். மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆட்சியாளர்கள் நாட்டை திவாலாக்கியதை நாம் அனைவரும் அறிவோம். இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை கவனமாக பயன்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். கண்டியில் இருந்து ஐக்கிய மக்கள் கூடடணிக்கு 07 பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொடுப்பதே எமது இலக்காகும். கடந்த குறுகிய காலத்தில் அரசாங்கம் வாக்குறுதிகளை வழங்கிய போதிலும் அதனை நிறைவேற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை அதுமட்டுமன்றி, பொதுத் தேர்தலிலும் வாக்குறுதிகள்அள்ளி வீசப்படுகின்றன, ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக புதிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் கூறுகிறது. கத்தோலிக்க திருச்சபை இவ்விஷயத்தில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டது. இது குறித்து நான் பாராளுமன்றத்தில் பேசினேன். மேலும் இது குறித்து தற்போதைய ஜனாதிபதியும் நினைவுபடுத்தியுள்ளார் இது தொடர்பில் வெளியாகியுள்ள உண்மைகளின் அடிப்படையில் சட்டமா அதிபருக்கோ அல்லது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கோ விசாரணைகளை முன்னெடுப்பதற்கு எந்தத் தடையும் இல்லை. https://www.virakesari.lk/article/196397
-
அவுஸ்திரேலிய கால்பந்து அணியில்... ஈழத் தமிழன்.
பீபா 2026 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சீனாவுக்கு எதிரான சி குழு போட்டியில் இலங்கை வம்சாவளி தமிழர் நிஷான் (நெவில் அன்தனி) பீபா 2026 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றில் சீனாவுக்கு எதிரான சி குழு போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் அறிமுகமான இலங்கை வம்சாவளி தமிழர் நிஷான் வேலுப்பிள்ளை கோல் போட்டு அசத்தியுள்ளார். மெல்பர்ன் விக்டரி கழகத்தின் நட்சத்திர வீரரான 23 வயது நிரம்பிய நிஷான் வேலுப்பிள்ளை, போட்டியின் 83ஆவது நிமிடத்தில் மிச்செல் டியூக்குக்கு பதிலாக மாற்றுவீரராக பயிற்றுநர் டோனி பொப்போவிச்சினால் களம் இறக்கப்பட்டார். அவர் களம் நுழைந்த 7ஆவது நிமிடத்தில் அற்புதமான கோல் ஒன்றைப் போட்டார். இதன் பலனாக அவுஸ்திரேலியா 3 - 1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று நிகர கோல் வித்தியசாத்தை அதிகரித்துக்கொண்டது. அவுஸ்திரேலிய உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் 2019இலிருந்து அதிசிறந்த கால்பந்தாட்ட வீரராக நிஷான் வேலுப்பிள்ளை பிரகாசித்துவருகிறார். இலங்கை வம்சாவழி என்ற வகையில் அவரது ஆற்றல்கள் குறிப்பாக தமிழ் சமூகத்தினரால் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளது. அவரது ஆற்றல்கள் அவுஸ்திரேலியாவில் மட்டுமல்லாமல் இலங்கையிலும் பாராட்டப்படுவதாக அறியக்கூடியதாக இருக்கிறது. அறிமுகப் போட்டியிலேயே கோல் போட்டு அசத்தியதன் மூலம் நிஷான் வேலுப்பிள்ளைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது. நிஷான் வேலுப்பிள்ளை புகுத்திய கோல், 2026 உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் அவுஸ்திரேலியா விளையாடும் வாய்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. இந்தப் போட்டியில் அவுஸ்திரேலியா சார்பாக நிஷான் வேலுப்பிள்ளையை விட லூயிஸ் மில்லர், க்ரெய்க் கொட்வின் ஆகியோரும் சீனா சார்பாக ஸாங் யூனிங்கும் கோல்களைப் போட்டனர். https://www.virakesari.lk/article/196366
-
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 36 படகுகள் தயார்
Tamil Nadu Rains: வெளுத்து வாங்கும் மழை; மாநிலம் முழுவதும் எங்கே என்ன நிலவரம்? Chennai Rains: வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது சென்னையில் நேற்று முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இரவில் நல்ல மழை பெய்தது. இன்று காலை முதலே மீண்டும் கனமழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம் போன்ற பல்வேறு இடங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. பொதுவாக மழைநீர் தேங்கும் பகுதிகளான வேளச்சேரி போன்ற பகுதிகளில் மீட்புப் பணிகளுக்கு படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பிரசாரங்களின்போது ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதியுச்ச தொகை எவ்வளவு?; கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணைக்குழு கலந்துரையாடல் (நா.தனுஜா) தேர்தல் பிரசார செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் அவர்களது தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது ஒரு வாக்காளருக்காக செலவிடக்கூடிய அதியுச்ச தொகையை நிர்ணயிப்பதற்கான ஆலோசனை கலந்துரையாடல்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் நடாத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் அதியுச்ச தொகை குறித்த ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளித்தனர். பொதுத்தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் மற்றும் வேட்புமனுத்தாக்கல் என்பன கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன் முடிவுக்கு வந்தது. தேர்தல் பிரசார செலவினங்கள் ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத்தாக்கல் முடிவுக்குவந்து 5 நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவானது அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஒவ்வொரு வாக்காளருக்கும் செலவிடவேண்டிய அதியுச்ச தொகை எவ்வளவு என்று நிர்ணயித்து, அதனை வர்த்தமானியில் வெளியிடவேண்டும். அதேபோன்று அத்தொகையை நிர்ணயிப்பதற்கு முன்னதாக தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களிடமிருந்து இவ்விடயம் தொடர்பில் ஆணைக்குழு ஆலோசனை பெற்றுக்கொள்ளவேண்டும். அதற்கமைய ஒவ்வொரு மாவட்ட வாரியாக தேர்தல் பிரசார செலவினம் தொடர்பில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பரிந்துரைகளை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே திரட்டியிருந்தது. அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் ஒவ்வொரு வாக்களாளருக்கும் செலவிடப்படவேண்டிய அதியுச்ச தொகை குறித்த பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தேர்தல்கள் ஆணைக்குழுவானது நேற்று செவ்வாய்கிழமை எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளினதும் செயலாளர்களுடன் சந்திப்பொன்றை நடத்தியிருந்தது. இச்சந்திப்பின்போது பிரசார செலவினங்கள் தொடர்பில் அக்கட்சிகளின் பரிந்துரைகள் பெற்றுக்கொள்ளப்பட்டன. இவ்வாறு நாட்டின் சகல தேர்தல் மாவட்டங்களில் இருந்தும் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக்கொண்டு, அந்தந்த மாவட்டங்களின் சனத்தொகை, பூகோள அமைவிடம் மற்றும் செலவினங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் செயன்முறை ஊடாக ஒரு வாக்காளருக்கு செலவிடப்படவேண்டிய அதியுச்ச தொகை கணிப்பிடப்படும். இத்தொகையானது மேற்கூறப்பட்ட காரணிகளின் அடிப்படையில் மாவட்டத்துக்கு மாவட்டம் வேறுபடும். அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும், சுயேட்சை வேட்பாளர்களும் பிரசார நடவடிக்கைகளின்போது ஒரு வாக்காளருக்காக செலவிடவேண்டிய அதியுச்ச தொகையின் சராசரியானது பெரும்பாலும் 109 - 110 ரூபா என்ற மட்டத்தில் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தொகை ஒவ்வொரு மாவட்டத்துக்கும் வேறுபடும் என்பதால், கொழும்பு உள்ளிட்ட சனத்தொகை மற்றும் செலவினங்கள் கூடிய தேர்தல் மாவட்டங்களுக்கான அதியுச்ச தொகை அண்ணளவாக 110 - 120 ரூபா வரையும், வன்னி போன்ற சனத்தொகை மற்றும் செலவினங்கள் குறைந்த தேர்தல் மாவட்டங்களுக்கான அதியுச்ச தொகை அண்ணளவாக 80 - 100 ரூபா வரையும் நிர்ணயிக்கப்படக்கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. https://www.virakesari.lk/article/196389
-
தைவானை சுற்றி வளைத்த சீனா, ராணுவத்தை தயார்படுத்தும் தைவான் - அமெரிக்கா என்ன சொல்கிறது?
China vs Taiwan: குட்டி தீவை நாலா பக்கமும் சுற்றிவளைத்த சீனா; அமெரிக்கா சொன்னது என்ன?
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
சஞ்சய் குமார் வர்மா: கனடா குற்றம் சாட்டிய, இந்தியா திரும்பப் பெறும் தூதரின் பின்புலம் என்ன? பட மூலாதாரம்,HCI_OTTAWA படக்குறிப்பு, கனடாவுக்கான இந்திய தூதர் சஞ்சய் வர்மா 2 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த ஆண்டு கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டது தொடர்பான சர்ச்சை மீண்டும் தலைதூக்கியுள்ளது. இது இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே ராஜதந்திரச் சிக்கலை உருவாக்கியுள்ளது. இம்முறை, நிஜ்ஜார் கொலை வழக்கில், கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவின் பெயரையும் மற்ற இந்தியத் தூதரக அதிகாரிகளின் பெயரையும் கனடா தொடர்புபடுத்தியுள்ளது. கனடாவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, டெல்லியில் இருக்கும் இந்தியாவுக்கான கனடா தூதர் ஸ்டீவர்ட் ராஸ் வீலர் உள்ளிட்ட 6 பேரை வெளியேற்ற முடிவு செய்துள்ளது. இந்தியா கனடாவுக்கான தனது தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் பிற தூதரக அதிகாரிகளை நாடு திரும்புமாறு கேட்டுக் கொண்டதாகக் கூறியிருக்கிறது. ஆனால் கனடா அவர்களை வெளியேற்றியதாகக் கூறியுள்ளது. கனடாவில் உள்ள இந்தியத் தூதரகத்தின் மீதும் தூதரக அதிகாரிகள் மீதும் குறிவைத்து குற்றம் சாட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. திரும்ப அழைக்கப்பட்ட ஆறு அதிகாரிகள் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் இந்தப் பதற்றத்திற்கு மத்தியில், ஒருவரது பெயர் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் அடிபடுகிறது. அவர்தான் கனடாவுக்கான இந்திய தூதரான சஞ்சய் வர்மா. கனடாவிலிருந்து இந்தியாவால் திரும்ப அழைக்கப்பட்ட ஆறு அதிகாரிகளில் இந்தியத் தூதர் சஞ்சய் வர்மாவும் ஒருவர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சஞ்சய் வர்மா இந்தியாவின் மூத்த ராஜதந்திரி என்றும், அவர் 36 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார் என்றும் கூறியிருக்கிறது. அதேநேரம், தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டப் ராஜாங்கச் சட்ட விலக்கினை (diplomatic immunity) நீக்கவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவும் இந்தியா மறுத்துவிட்டதாகவும், அதன் பின்னரே அவர்களை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டதாகவும் கனடா கூறுகிறது. பட மூலாதாரம்,HCI_OTTAWA படக்குறிப்பு, 2019-ஆம் ஆண்டு மே மாதம், அவர் ஜப்பானுக்கான இந்தியத் தூதரானார் சஞ்சய் வர்மா யார் இந்த சஞ்சய் குமார் வர்மா? இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, 1965-ஆம் ஆண்டு பிறந்த சஞ்சய் குமார் வர்மா, பாட்னா பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு டெல்லி ஐ.ஐ.டி-யில் இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1988-ஆம் ஆண்டு இந்திய வெளியுறவுத் துறைப் பணிக்குத் தேர்வானார். 30 ஆண்டுகளுக்கும் மேலான சஞ்சய் வர்மாவின் ராஜதந்திரப் பணி ஹாங்காங்கில் உள்ள இந்திய உயர் ஆணையத்தில் இருந்து துவங்கியது. அதன் பிறகு சீனா, வியட்நாம், மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றினார். இத்தாலியில் இந்தியத் துணைத் தூதரக அதிகாரியாகப் பணியாற்றுவதற்கு முன்பு, அவர் சூடானுக்கான இந்திய தூதராக இருந்தார். சூடானில் இருந்து இந்தியா திரும்பிய அவரை, இந்திய அரசு முதலில் வெளியுறவு அமைச்சகத்தின் இணைச் செயலாளராகவும், பின்னர் கூடுதல் செயலாளராகவும் நியமித்தது. இதன் பிறகு, 2019-ஆம் ஆண்டு மே மாதம், அவர் ஜப்பானுக்கான இந்தியத் தூதரானார். 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை அப்பணியில் இருந்தார். அதன் பிறகு, கனடாவுக்கான இந்திய உயர் ஆணையராக வர்மா நியமிக்கப்பட்டார். பெங்காலி பேசும் சஞ்சய் வர்மா, இந்தி, ஆங்கிலம், மற்றும் சீன மொழிகளில் தேர்ச்சி பெற்றவர். சஞ்சய் வர்மாவின் மனைவியின் பெயர் குஞ்சன் வர்மா. இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். பட மூலாதாரம்,HCI_OTTAWA படக்குறிப்பு, நியாயமான விசாரணைக்கு இந்தியாவுக்கு கனடா வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று சஞ்சய் வர்மா கூறியிருந்தார் இந்தியா-கனடா பிரச்னை குறித்து சஞ்சய் வர்மா என்ன கூறினார்? இந்த ஆண்டு ஜூன் மாதம், கனடா நாடாளுமன்றக் குழு அறிக்கை ஒன்று, கனடாவின் ஜனநாயகத்திற்கு சீனா மிகப்பெரிய அச்சுறுத்தல் என்றும், இரண்டாவது பெரிய வெளிநாட்டு அச்சுறுத்தல் இந்தியா என்றும் விவரித்திருந்தது. கனடா தேசியப் பாதுகாப்பு மற்றும் புலனாய்வுக் குழுவின் நாடாளுமன்ற அறிக்கையில், கனடாவில் இந்தியாவின் தலையீடு படிப்படியாக அதிகரித்து வருவதாகக் கூறப்பட்டிருந்தது. கனடா தலைவர்கள், ஊடகங்கள் மற்றும் இந்திய - கனடா கலாசார சமூகங்களை இந்தியா குறிவைப்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டியிருந்தது. அப்போது ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய கனடாவுக்கான இந்தியத் தூதர் சஞ்சய் வர்மா அந்தச் செய்தியை நிராகரித்திருந்தார். நியாயமான விசாரணைக்கு இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், சாட்சிகளைக் குறுக்கு விசாரணைக்குக் கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் அதில் கூறியிருந்தார். “இந்த அறிக்கை இந்தியாவுக்கு எதிரான சக்திகளின் தூண்டுதலால் வெளியிடப்பட்டது. நீங்கள் ஆதாரத்தை வழங்க வேண்டும். ஆனால் இதில் நான் அப்படி எதையும் பார்க்கவில்லை,” என்று கூறியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என்றும், கனடாவின் அமைப்புகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவைச் சேதப்படுத்த விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் பேசிய வர்மா, “காலிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு நிறைய அரசியல் இடத்தை கனடா வழங்கியுள்ளது. எனவே அவர்கள் தங்கள் பினாமிகள் மூலம் இந்த முழுச் செயல்முறையையும் தூண்டியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்,” என்று கூறியிருந்தார். https://www.bbc.com/tamil/articles/ced0jw6q5n8o
-
வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 36 படகுகள் தயார்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு "சிவப்பு எச்சரிக்கை” – சென்னை வானிலை ஆய்வு மையம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்து வரும் 24 மணி நேரத்திற்கு கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும் என்பதால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மைய துணைத் தலைவர் பாலச்சந்திரன் கூறியுள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 42 இடங்களில் கனமழை பெய்துள்ளது. கனமழை எச்சரிக்கையை பொறுத்தவரை அடுத்துவரும் 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும். இதனால் இப்பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, காரைக்கால், திருவள்ளூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிககனமழையும் திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். நாளை திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு இந்த மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை வரையும் ஓரிரு இடங்களில் அதிகனமழையும் பெய்யக்கூடும்.வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழையும் பெய்யக்கூடும். திருப்பத்தூர், தருமபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 17-ஆம் தேதி வடமேற்கு மாவட்டங்களான திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு கனமழை முதல் மிக கனமழையும் ஒரு சில பகுதிகளில் அதிகனமழையும் பெய்யக்கூடும். மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரை குமரிக்கடல், மன்னார் வளைகுடா உள்ளிட்ட தமிழக கடலோர பகுதிகளில் இன்று 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் 16, 17 தேதிகளில் வட தமிழக கடலோர பகுதிகள் ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்ககடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் அவ்வப்போது 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போதைய நிலவரப்படி காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலைகொண்டுள்ளது. அடுத்துவரும் 24 மணி நேரத்தில் மேலும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வடதமிழகம் தெற்கு ஆந்திரா ஒட்டிய பகுதிகளை நெருங்க கூடிய சூழல் உள்ளது. இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார். https://www.virakesari.lk/article/196373
-
துணை விமானியை விமானியறையிலிருந்து வெளியே தள்ளிப்பூட்டிய விமானி - ஸ்ரீலங்கன் எயர்லைன்சில் சம்பவம்
சிறிலங்கன் எயார்லைன்ஸின் கேப்டன் பணிநீக்கம் கடந்த செப்டெம்பர் மாதம் 21 ஆம் திகதி சிட்னியில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட UL607 என்ற விமானத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பிலான விசாரணை முடிவடையும் வரை கேப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என சிறிலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில், சிவில் விமான போக்குவரத்து விதிமுறைகளின்படி தற்போது விசாரணை நடைபெற்று வருவதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் நேற்று (14) வெளியிட்ட ஒரு அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது. சிறிலங்கன் எயார்லைன்ஸ் குறித்த அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் விமான நிறுவனம் முழுமையாக ஒத்துழைக்கிறது. மேலும் விசாரணையின் முடிவு நிலுவையில் இருக்கும் நிலையில், கேப்டன் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு மற்றும் அனைத்து ஒழுங்குமுறை தேவைகளுக்கும் இணங்குதல் சிறிலங்கன் எயார்லைன்ஸின் முதன்மையான முன்னுரிமைகளாக உள்ளது” என அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. சிட்டினியிலிருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட UL607 என்ற விமானத்தில், விமானிகள் கடும் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களில் ஒருவர் ஏர்பஸ் ஏ330 விமானி அறையிலிருந்து பூட்டப்பட்டதாகவும் விமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://ibctamil.com/article/srilankan-airlines-captain-sacked-1729003024
-
இந்தியாவை விட்டு கனடா தூதர் வெளியேற உத்தரவு - இரு நாடுகளுக்கும் என்ன பிரச்னை?
கனடாவிற்கான தூதரக அதிகாரிகளை திரும்பப் பெற்றது இந்தியா கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதாக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கனடாவில் சீக்கிய தலைவரான ஹர்தீப் சிங், கடந்த ஆண்டு 2023 ஜூன் மாதம் கனடாவில் கொல்லப்பட்டார். இக்கொலை சம்பவம் இந்தியா – கனடா இடையேயான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தை மையமாக வைத்து இரு நாடுகளுக்கும் இடையே அவ்வப்போது கருத்து மோதல்கள் நிலவி வந்தன. இந்நிலையில், கனடாவுக்கான இந்திய தூதரையும், இதர தூதரக அதிகாரிகளையும் திரும்பப் பெறுவதென மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரிவினைவாதம் மற்றும் வன்முறை நிலவும் சூழ்நிலையில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அரசின் நடவடிக்கைகள் இந்திய தூதர் மற்றும் குறிப்பிட்ட சில அதிகாரிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. அவர்களின் பாதுகாப்பை தற்போதைய கனடா அரசு உறுதி செய்யும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. எனவே, இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றுக் கொள்வதாக முடிவு செய்துள்ளோம். இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாதம் மற்றும் வன்முறை சம்பவங்களுக்கு ஆதரவு அளிக்கும் ட்ரூடோ அரசு மீது நடவடிக்கை எடுக்க இந்திய அரசுக்கு உரிமை உள்ளது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196345
-
2024-ஆம் ஆண்டு நோபல் பரிசு: செய்திகள்
2024 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள் முழு விபரம் உலகளாவிய ரீதியில் மருத்துவம், பௌதிகவியல், இராசாயனவியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இம்மாதம் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டது. மருத்துவத்திற்கான நோபல் பரிசு மருத்துவத்திற்கான நோபல் பரிசு, அமெரிக்க விஞ்ஞானிகள் விக்டர் அம்ப்ரோஸ் மற்றும் கேரி ருவ்குன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ RNA-களின் ஒழுங்குமுறையால் புற்றுநோய், பிறவி காது கேளாமை மற்றும் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிய முயலும் முயற்சியாக `மைக்ரோ RNA' தொடர்பில் ஆராயச்சியில் ஈடுபட்ட இவர்கள், மரபணு வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் திறன் இல்லாவிட்டால், உயிரினத்தின் ஒவ்வொரு உயிரணுவும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் உயிரினங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த மைக்ரோ RNA தொடர்பில் ஆய்வை மேற்கொண்டுள்ளனர் . பௌதிகவியலுக்கான நோபல் பரிசு பௌதிகவியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கிய கட்டமைப்பான artificial neural networks என்று சொல்லப்படும் (செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள்) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட் மற்றும் பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இரசாயனவியலுக்கான நோபல் பரிசு புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இந்த ஆண்டுக்கான இரசாயனவியல் துறைக்கான நோபல் பரிசு பெற்றுள்ளார்கள். இலக்கியத்திற்கான நோபல் பரிசு இலக்கியத்திற்கான நோபல் பரிசு தென் கொரிய எழுத்தாளர், ஹான் காங்கிற்கு வழங்கப்படுகிறது. "வரலாற்று அதிர்ச்சிகளை எதிர்கொள்ளும் மற்றும் மனித வாழ்க்கையின் பலவீனத்தை வெளிப்படுத்தும் அவரது தீவிர கவிதை உரைநடைக்காக" இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. அமைதிக்கான நோபல் பரிசு 2024-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, ஜப்பானிய அமைப்பான நிஹோன் ஹிடாங்க்யோவுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்கள் இல்லாத உலகை அடைவதற்கான முயற்சிகளை அந்த அமைப்பு மேற்கொண்டதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த டாரன் அசெமேக்லு, ஜேம்ஸ் ராபின்சன், சைமன் ஜான்சன் ஆகியோருக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டை வடிவமைப்பதில் அமைப்புகளின் பங்கு பற்றிய ஆராய்ச்சிக்காக வழங்கப்பட்டுள்ளது. பலவீனமான சட்டம் மற்றும் சுரண்டல் அதிகம் கொண்ட நாடுகள் பெரியளவில் வளர்ச்சியை அடையாது என்பதை அவர்களின் ஆய்வு நிரூபித்துள்ளது. https://www.virakesari.lk/article/196338