Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Everything posted by ஏராளன்

  1. ஹட்டன் பிரதேசத்தில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் நபரொருவரின் கையில் இருந்த கையடக்கத் தொலைபேசி ஒன்று திடீரென வெடித்து சிதறியுள்ளது. கையடக்கத் தொலைபேசியின் பேட்டரியை கழற்றி சோதனை செய்து கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த ஆடை விற்பனை நிலையத்தில் உள்ள சிசிரிவி கமராவில் கையடக்கத் தொலைபேசி வெடித்து சிதறிய காட்சிகள் பதிவாகியுள்ளன. இதன்போது, அங்கிருந்த யாருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. கையடக்கத் தொலைபேசிகளை அதிக நேரம் சார்ஜ் செய்வதால் அதன் பேட்டரி வெடிக்கும் அபாயம் உள்ளதாக கையடக்கத் தொலைபேசிகளை பழுதுபார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/196649
  2. தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் சமகால அரசாங்கத்தின் நிலைப்பாடு மற்றும் அரசாங்கத்தின் சில உறுப்பினர்கள் வெளிப்படுத்திவரும் கருத்துகள் தொடர்பில் புதுடில்லி அவதானம் செல்லுத்தியுள்ளது. பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நாடாளுமன்ற அமர்வை ஆரம்பித்துவைத்துவிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க இந்தியா செல்ல திட்டமிட்டுள்ளார். ஜனாதிபதியாக அநுரகுமார திஸாநாயக்க தெரிவான பின் முதல் இராஜதந்திரியாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் கடந்த 04ஆம் திகதி இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணமொன்றை மேற்கொண்டதுடன், ஜனாதிபதி, பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பல்வேறு தரப்பினரை சந்தித்திருந்தார். அரச தரப்பினருடான சந்திப்பில் இலங்கைக்கு தொடர்ந்து இந்தியா உதவிகளை வழங்கும் எனக் கூறியிருந்ததுடன், தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வாக கருதப்படும் 13ஆவது திருத்தச்சட்டத்தை அமுல்படுத்துவதன் அவசியத்தையும் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கருத்து வெளியிட்டிருந்த மக்கன் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, ”வடக்கு மக்கள் 13ஆவது திருத்தச்சட்டத்தையோ அல்லது அதிகாரப் பகிர்வையோ கோரவில்லை. அது அரசியல்வாதிகளின் கோரிக்கை மாத்திரமே. இந்த மக்களுக்கு தமது பொருளாதார நலன்கள் நிறைவேற வேண்டும் என்பதே தேவையாக உள்ளது.” எனக் கூறினார். ரில்வின் சில்வாவின் கருத்துக்கு வடக்கின் தலைமைகள் கடும் கண்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அத்துடன், இராஜதந்திர மட்டத்திலும் இந்தக் கருத்து தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. அநுரகுமாரவின் வெளிவிவகார கொள்கைகள் தொடர்பில் இலங்கையில் உள்ள இராஜதந்திரிகள் ஏற்கனவே, அவதானம் செலுத்தியுள்ள சூழலிலேயே தமிழ் மக்களுக்குத் தீர்வு அவசியமில்லை எனக் கூறப்படும் கருத்துகளும் வெளியாகி வருகின்றன. தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் முக்கிய செயல்பாட்டாளர்களாக உள்ளவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பில் வெளிப்படுத்தப்படும் கருத்துகளை் குறித்து புதுடில்லி கழுகுப்பார்வை செலுத்தியுள்ளதாக இராஜதந்திர வட்டாரத்தில் அறிய முடிந்தது. இதுதொடர்பில் மௌனம் காக்கும் இந்தியா, அநுரகுமார திஸாநாயக்க புதுடில்லிக்கு பயணம் மேற்கொள்ளும் சந்தர்ப்பத்தில் தமது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த உள்ளது. தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தம் தொடர்பில் நேரடியான கருத்துகளை ஜனாதிபதி வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கவும் புதுடில்லி தயாராகி வருவதாக இராஜதந்திர வட்டாரத்தில் அறிய முடிந்தது. https://thinakkural.lk/article/310904
  3. சர்ஃபிராஸ் - ரிஷப் அதிரடியால் வலுவாக மீண்டு வந்த இந்தியா - கடைசி நாள் ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் சர்ஃபராஸ் கான் கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இளம் வீரர் சர்ஃபிராஸ் கானின் முதல் டெஸ்ட் சதம் மற்றும் ரிஷப் பந்தின் அற்புதமான பேட்டிங்கால் இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 462 ரன்களைக் குவித்துள்ளது. இதையடுத்து, நியூஸிலாந்து அணி வெற்றி பெற 107 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. இந்த இலக்கு சற்று குறைவானதாக தோன்றினாலும், இந்திய மைதானங்களில் ஐந்தாவது மற்றும் கடைசி நாளில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதையே வரலாறு கூறுகிறது. இந்திய அணியின் பந்துவீச்சு பலத்தால் நாளை ஆட்டம் எப்படி வேண்டுமானாலும் திரும்பலாம் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஆட்டத்தை திருப்பக் கூடிய பந்துவீச்சாளர்கள் இந்திய அணியிடம் இருப்பதால் ஆட்டத்தின் முடிவு என்பது மதில்மேல் பூனையாகவே இருப்பதாக கணிக்கப்படுகிறது. டெஸ்டில் சர்ஃபிராஸ் கான் முதல் சதம் 231 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தநிலையில் இந்திய அணி இன்றைய 4வதுநாள் ஆட்டத்தைத் தொடங்கியது. சர்ஃபிராஸ் கான் 70 ரன்களிலும், ரிஷப் பந்தும் களமிறங்கினர். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் இருவரும் இடம் பெற்றிருந்த நிலையில் இப்போது மீண்டும் இணைந்து ஆடினர். புதிய பந்தில், காலை நேரச் சூழலைப் பயன்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திவிடலாம் என நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் நினைத்தனர். ஆனால், அவர்களின் நினைப்புக்கு மாறாக ரிஷப்பந்த், சர்ஃபிராஸ் கான் இருவரும் அதிரடியாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். சர்ஃபிராஸ்கான் பவுண்டரி அடித்து 110 பந்துகளில் டெஸ்ட் அரங்கில் தனது முதலாவது சதத்தை நிறைவு செய்தார். இவரின் கணக்கில் மட்டும் 13 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். சர்ஃபிராஸ் கான் சதம் அடித்தவுடன் தனது ஹெல்மெட்டைக் கழற்றி, பேட்டை சுழற்றி துள்ளிக் குதித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இருவரும் சேர்ந்து நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களைச் சேர்த்தனர். 63 ஓவர்களில் இந்திய அணி 300 ரன்களை எட்டியது. ரிஷப் பந்த் 55 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த மகிழ்ச்சியில் சர்ஃபராஸ் கான் அரங்கிற்கு வெளியே சிக்ஸர் அடித்த ரிஷப் பந்த் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் டிம் சவுத்தி வீசிய ஒரு ஓவரில் ரிஷப் பந்த் 107 மீட்டர் உயரத்துக்கு சிக்ஸர் விளாசி பறக்கவிட்டார். ரிஷப் பந்த் அடித்த சிக்ஸரில் பந்து, பெங்களூரு சின்னச்சாமி அரங்கிற்கு வெளியே சென்றது. சர்பிஃராஸ் கான், ரிஷப் பந்த் கூட்டணி 100 ரன்களைக் கடந்து அபாரமாக ஆடியது. மழை குறுக்கிட்டதால், முன்கூட்டியே உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டு ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதன்பின் நீண்டநேரம் கழித்து மழை நின்றபின் ஆட்டம் மீண்டும் தொடங்கியது. மழைக்குப் பின்பும் இருவரின் அதிரடி ஆட்டத்தையும் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்களால் நிறுத்த முடியவில்லை. இருவரின் அற்புதமான ஆட்டத்தில் இந்திய அணி 400 ரன்களை எட்டியது. சர்ஃபிராஸ் கான் 194 பந்துகளில் 150 ரன்கள் எட்டினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷப் பந்த் 4-வது நாள் ஆட்டத்தில் ஒரு பந்தை சிக்ஸருக்கு விளாசிய காட்சி நியூஸி. பந்துவீச்சாளர்கள் திகைப்பு இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகிய நிலையில் 2வது இன்னிங்ஸில் மிகப்பெரிய அளவுக்கு ரன்களைக் குவித்ததைப் பார்த்து நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தனர். குறிப்பாக ரிஷப் பந்த், சர்ஃபிராஸ் கான் இருவரையும் பிரிக்க முடியாமல் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் திணறினர். இருவரும் சேர்ந்து நியூஸிலாந்து பந்துவீச்சை அடித்தாடி, ரன்மழை பொழிந்து அவர்களை திக்குமுக்காட வைத்தனர். சர்ஃபிராஸ், ரிஷப் அற்புத ஆட்டம் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இளம் வீரர் சர்ஃபிராஸ் கான் டெஸ்ட் அரங்கில் முதல் சதத்தை எட்டி 150 ரன்களில் ஆட்டமிழந்தார். கார் விபத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிகளில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரிஷப் பந்த் ஒரு ரன்னில் சதத்தை தவறவிட்டார். 2-வது இன்னிங்ஸில் 99 ரன்கள் சேர்த்து அவர் ஆட்டமிழந்தார். இருவரும் சேர்ந்து 4வது விக்கெட்டுக்கு 177 ரன்கள் சேர்த்து இந்திய அணி பெரிய ஸ்கோரை எட்டுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய அணியை நெருக்கடியில் இருந்து மீட்ட சர்ஃபராஸ் கான் - ரிஷப் பந்த் ஜோடி திருப்புமுனை ஏற்படுத்திய புதிய பந்து 80-வது ஓவரில் புதிய பந்து எடுக்கப்பட்டது. புதிய பந்தில் நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீசிய போதுதான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. புதிய பந்தில் வீசப்பட்ட 10.2 ஓவர்களில் இந்திய அணி சர்ஃபிராஸ் கான்(150), ரிஷப் பந்த்(99), கே.எல்.ராகுல் (12) ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இழந்தது. டிம் சவுத்தி பந்துவீச்சில் கவர் திசையில் அஜாஸ் படேலிடம் கேட்ச் கொடுத்து சர்ஃபிராஸ் கான் 150 ரன்களில் ஆட்டமிழந்தார். ரிஷப் பந்த் சதம் அடிக்க ஒரு ரன் இருக்கையில் ரூர்கே பந்துவீ்ச்சில் கிளீன் போல்டாகி 99 ரன்களில் ஆட்டமிழந்தார். டெஸ்ட் போட்டிகளில் ரிஷப் பந்த் 90 ரன்களுக்கு மேலாக குழித்து சதம் அடிக்கமுடியாமல் ஆட்டமிழப்பது இது 7-வது முறையாகும். கே.எல்.ராகுலும் 12 ரன்களில் ரூர்கே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இந்த 3 முக்கிய பேட்டர்கள் ஆட்டமிழந்தது நியூஸிலாந்து அணிக்கு புதிய தெம்பை, உற்சாகத்தை அளித்தது. பின் வரிசையில் ரவீந்திர ஜடேஜாவை(5) ரூர்கே வீழ்த்த, அஸ்வின்(15), பும்ரா(0), சிராஜ்(0) ஆகியோரின் விக்கெட்டுகளை ஹென்றி வீழ்த்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES 54 ரன்களுக்கு 7 விக்கெட் இந்திய அணி 408 ரன்கள் வரை 3 விக்கெட்டுகளை இழந்து வலுவாகத்தான் இருந்தது. ஆனால், 2வது புதிய பந்துவீச எடுத்தபின் கடைசி 54 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் இந்திய அணி பறிகொடுத்து ஆட்டமிழந்தது. இந்திய அணி 99.3 ஓவர்களில் 462 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. நியூஸிலாந்து தரப்பில் ஹென்றி, ரூர்கே தலா 3 விக்கெட்டுகளையும், அஜாஸ் படேல் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். கடைசி நாளில் ஆடுகளம் எப்படி இருக்கும்? நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்கள் என பெரிய ஸ்கோர் செய்தாலும், கடைசி நாளில் ரன்களை சேஸிங் செய்வது சின்னசாமி மைதானத்தில் மிகக் கடினமாக இருக்கும். ஏனென்றால், ஆடுகளத்தின் தன்மை முற்றிலும் மாறி சுழற்பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் என்று கடந்த கால வரலாறு உணர்த்துகிறது. இந்திய அணியில் இருக்கும் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் ஆகியோரின் சுழற்பந்துவீச்சையும், பும்ராவின் வேகப்பந்துவீச்சையும் எதிர்கொண்டு இந்த மைதானத்தில், டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில் 107 ரன்கள் இலக்கை சேஸ் செய்வது எளிதானதாக இருக்காது. பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி நாள் ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கும்? டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 74 ஆண்டுகளில் முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கும் குறைவாக எடுத்து சுருண்ட ஒரு அணி 6 முறை மட்டுமே அதில் இருந்து மீண்டு வந்து, ஆச்சர்யகரமான வெற்றியை பெற்றுள்ளது. 2012-ஆம் ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 99 ரன்களில் சுருண்ட பாகிஸ்தான் அணி, அந்த டெஸ்டை 71 ரன்களில் வென்றது. 2019-ஆம் ஆண்டில் லார்ட்ஸ் மைதானத்தில் அயர்லாந்து அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 85 ரன்களில் ஆட்டமிழந்த இங்கிலாந்து அணி 143 ரன்கள் வித்தியாசத்தில் அந்த ஆட்டத்தில் வென்றது. 2019-ஆல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக முதல் இன்னிங்ஸில் 67 ரன்களில் சுருண்ட இங்கிலாந்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இந்திய அணியைப் பொருத்தவரை வரலாறு அதற்கு சாதகமாக இல்லை. 100 ரன்களுக்கும் குறைவாக 27 முறை இந்திய அணி முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்துள்ளது. அதில் 5 முறை மட்டுமே இந்தியா டிரா செய்துள்ளது. ஆனால், முதல் இன்னிங்ஸில் 100 ரன்களுக்கும் குறைவாக சேர்த்த டெஸ்டில் இந்திய அணி ஒருமுறை கூட வென்றது இல்லை. அது மட்டுமல்லாமல் உள்நாட்டில் எதிரணி 300 ரன்களுக்கும் மேலாக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி தோற்றுள்ளது. 2008-ஆல் ஆமதாபாத்தில் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட், 1985-இல் சேப்பாக்கத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட், 2009-இல் ஆமதாபாத்தில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் , 1959-இல் டெல்லியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் ஆகியவற்றில் எதிரணி ஆகிய, 300க்கும் அதிகமான ரன்களை முன்னிலை பெற்ற டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி தோற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டியிலும் நியூஸிலாந்து அணி 300 ரன்களுக்கும் மேலாக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளதால், இந்திய அணி தோல்வியடையுமா? அல்லது இந்திய அணி வரலாற்றை மாற்றி எழுதுமா? என்பது நாளை தெரியும். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய அணி தோற்றால் என்ன ஆகும்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறுவதற்கு இந்திய அணிக்கு இன்னும் 5 வெற்றிகள் தேவைப்படுகிறது. நியூஸிலாந்துடன் 3 மற்றும் ஆஸ்திரேலியாவுடன் 5 டெஸ்ட் என மொத்தம் 8 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் குறைந்தபட்சம் 5 வெற்றிகளை இந்திய அணி பெற வேண்டும். அப்போதுதான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியும். தற்போது இந்திய அணி புள்ளிப்பட்டியலில் 98 புள்ளிகளுடன் 74.24 சதவீதத்துடன் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி 90 புள்ளிகளுடன் 62.50 சதவீதத்துடன் 2வது இடத்தில் இருக்கிறது. நியூஸிலாந்துக்கு எதிரான இந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி தோற்றால்கூட, இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் செல்வதில் உடனடியாக எந்த ஆபத்தையும் ஏற்படுத்தாது. https://www.bbc.com/tamil/articles/cg78xx4mv3xo
  4. இஸ்ரேலின் கடற்கரை நகரமான சீசரியாவில் அமைந்துள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஹெஸ்புல்லா அமைப்பினர் ஆளில்லா விமான தாக்குதல் நடத்தியுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படை தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி, லெபனான் எல்லையை கடந்து இஸ்ரேலுக்குள் 3 ஆளில்லா விமானங்கள் நுழைந்ததாகவும், அதில் 2 ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், மற்றொரு ஆளில்லா விமானம் கட்டிட சுவற்றை தாக்கியதாக கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவத்தின்போது பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது மனைவியும் இல்லத்தில் இல்லை எனவும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/196652
  5. பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, சரபோஜி மன்னர் கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ், சென்னை 3 மணி நேரங்களுக்கு முன்னர் தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தபோது வழங்கப்பட்ட தண்டனை முறைகள் குறித்து, இந்திய தொல்லியல் துறையின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மராட்டியர்களின் கல்வெட்டுகள் குறித்து முன்பே ஆய்வு செய்யப்பட்டு இருந்தாலும் முழு விவரங்களும் தற்போதுதான் தெரிய வந்ததாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி. அவர்களின் வம்சம், ஆட்சி முறை, கொடை என அனைத்து விவரங்களையும் மராட்டிய மன்னர்கள் கல்வெட்டில் பொறித்து வைத்துள்ளதாகக் கூறுகிறார், வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ். தஞ்சையில் மராட்டிய மன்னர்களின் ஆட்சியில் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனைகள் உள்ளிட்ட நீதி அமைப்பு மற்றும் அதன் நடைமுறைகள் குறித்த தகவல்கள் சுமார் 300 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவருவது ஏன்? இந்தத் தாமதத்திற்கு என்ன காரணம்? மராட்டிய மன்னர்களின் ஆட்சி தஞ்சாவூரை சோழர், பாண்டியர், நாயக்கர்களுக்குப் பின்னர் மராட்டிய மன்னர்கள் ஆட்சி செய்தனர். தஞ்சையை ஆண்ட விஜயரகுநாத நாயக்கரிடம் இருந்து மராட்டியத்தைச் சேர்ந்த வெங்கோஜி ராவ் போன்ஸ்லே எனும் ஏகோஜியின் கைகளுக்கு 1674ஆம் ஆண்டு தஞ்சாவூர் வந்து சேர்ந்தது. "இவர்கள் எந்தப் போரிலும் வெற்றி பெற்று தஞ்சையைக் கைப்பற்றவில்லை. மதுரையை ஆண்ட சொக்கலிங்க நாயக்கருக்கும் தஞ்சாவூரின் விஜயரகுநாத நாயக்கருக்கும் இடையில் ஏற்பட்ட மோதல் காரணமாகவே உள்ளே வந்தனர்" என்கிறார் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ். தஞ்சாவூர் விஜயரகுநாத நாயக்கர் மீது மதுரை சொக்கலிங்க நாயக்கர் படையெடுத்து வந்தபோது, தன்னிடம் படை பலம் இல்லாததால் பிஜப்பூர் சுல்தானிடம் தஞ்சை நாயக்கர் உதவி கேட்டதாகக் கூறுகிறார் செல்வராஜ். "பிஜப்பூர் சுல்தானின் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்த ஜாகீர்தாரர் ஏகோஜியை அனுப்பி வைத்தார். இவர் மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரர் முறையைச் சேர்ந்தவர். இவரது படைக்கும் மதுரை நாயக்கருக்கும் இடையில் தஞ்சை அய்யம்பேட்டையில் போர் நடந்தது. இதில் தஞ்சை நாயக்கருக்கு வெற்றி கிடைத்தது. இதற்கான போர் செலவை ஏகோஜி கேட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தஞ்சை கோட்டைக்குள் கடும் மோதல் ஏற்பட்டதாகவும் இதில் விஜயரகுநாத நாயக்கர் கொல்லப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் வெளிவந்துள்ளதாகக் கூறுகிறார் செல்வராஜ். ஏகோஜி ஆட்சிக்கு வந்த பின்னர், அவருக்கு அடுத்து ஷாஜி, முதலாம் சரபோஜி, துக்கோஜி, ஏகோஜி, சுஜன் பாய், பிரதாப சிம்மன், இரண்டாம் சரபோஜி ஆகியோர் தஞ்சாவூரை ஆண்டனர். இவர்களில் முதலாம் சரபோஜி தஞ்சாவூரை கி.பி. 1712 முதல் கி.பி 1728 வரை ஆட்சி செய்தார். கல்வெட்டின் சிறப்பு என்ன? பட மூலாதாரம்,MUNIRATNAM REDDY படக்குறிப்பு, மோடி எழுத்துருவில் இடம் பெற்றுள்ள சரபோஜி காலத்து கல்வெட்டு இந்தக் காலகட்டத்தில் நடைபெற்ற வழக்கு குறித்தும் அதற்கு மன்னர் வழங்கிய தண்டனை குறித்தும் கல்வெட்டு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டு, தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள விநாயகர் கோவிலின் வடமேற்கு திசையில் இருந்துள்ளது. மராட்டிய மொழியில் உள்ள இந்தக் கல்வெட்டு, தேவநாகரி மற்றும் மோடி வரி வடிவம் ஆகிய எழுத்து முறைகளைக் கையாண்டு பொறிக்கப்பட்டுள்ளது. மராட்டிய மன்னர்களின் காலத்தில் நடைமுறையில் இருந்த மோடி எழுத்துருவில் எழுதப்பட்ட ஆவணங்கள், தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலையத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருவதாக செல்வராஜ் தெரிவித்தார். "மோடி எழுத்துரு வடிவம் என்பது மராட்டிய எழுத்துகளை விரைவாக எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட வடிவம். சுருக்கெழுத்து பாணியிலான இந்த எழுத்துகளை எழுதுகோலை எடுக்காமலேயே வேகமாக எழுத முடியும்" என்று அவர் விளக்கினார். சரபோஜி மன்னரிடம் வந்த வழக்கு பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT படக்குறிப்பு, மோடி எழுத்துருவில் எழுதப்பட்ட ஆவணங்கள் இன்றும் சரஸ்வதி மகால் நூலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருகிறது தஞ்சையில் இந்திய தொல்லியல் துறை படியெடுத்த மராட்டிய கல்வெட்டுகள் சுமார் 40 வரை உள்ளதாகக் கூறுகிறார், இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி. அதில் இடம் பெற்றிருந்த முதலாம் சரபோஜி காலத்தில் நடந்த வழக்கு ஒன்றின் சுவாரஸ்யமான தகவல்களை முனிரத்தினம் பகிர்ந்துகொண்டார். "இந்தக் குறிப்பிட்ட கல்வெட்டை 1724ஆம் ஆண்டு பொறித்துள்ளனர். கலி ஆண்டு 4903, துந்துபி ஆண்டு ஆடி மாதம் 8ஆம் நாள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. துளஜா மன்னரின் மகன் சரபோஜி மன்னர் காலத்தில் இவை பொறிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு இடுகாடு நிலம் தொடர்பானது. தகனம் செய்யும் நபர்களின் காணியின் உரிமைக்காக கோடியான், சினான், தஞ்சினான், கல்வாட்டி ஆகிய சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கு மன்னரிடம் சென்றுள்ளது." "மன்னரோ, கொதிக்கும் நெய் பாத்திரத்தில் நான்கு பேரையும் கைகளை விடுமாறு கூறி, இந்த வழக்கின் முடிவில் தஞ்சியான் என்பவருக்குச் சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது என்று கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது, என்று தெரிவித்தார் முனிரத்தினம் ரெட்டி. இதை பிபிசி தமிழிடம் தெரிவித்த முனிரத்தினம் ரெட்டி, "தஞ்சியானுக்கு கொதிக்கும் நெய்யில் கையை விட்டும் எதுவும் ஆகாததால் அவர் விடுதலை செய்யப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. மராட்டிய மன்னர்களின் தண்டனை முறையை அறிந்துகொள்ள இந்தக் கல்வெட்டு உதவுகிறது" என்றார். ஒருவர் தவறு செய்யாமல் இருந்தால் அவருக்கு எதுவும் ஆகாது என்பதைத் தங்களின் நம்பிக்கையாக மராட்டிய மன்னர்கள் வைத்திருந்ததாகக் கூறுகிறார் முனிரத்தினம் ரெட்டி. கவனம் பெறும் மராட்டிய கல்வெட்டுகள் பட மூலாதாரம்,MUNIRATNAM REDDY படக்குறிப்பு, இந்திய தொல்லியல் துறையின் கல்வெட்டுடுப் பிரிவு இயக்குநர் முனிரத்தினம் ரெட்டி மராட்டிய மன்னர்களின் கல்வெட்டுகள் படிக்கப்பட்டாலும் அவை பெரிதாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று கூறிய முனிரத்தினம் ரெட்டி, அதற்கு ஓர் உதாரணத்தையும் குறிப்பிட்டார். இந்திய தொல்லியல் துறையில் ஆண்டறிக்கை வெளியிடப்படுவது வழக்கமாக உள்ளது. அதில் கல்வெட்டுகளைப் பற்றிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். 1921ஆம் ஆண்டு வெளியான குறிப்புகளில், ஒரு விவகாரத்தில் குற்றத்தை நிரூபிக்க கொதிக்கும் நெய்யில் விரல்களை விடுமாறு மராட்டிய மன்னர் தண்டனை கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. "ஆனால் இதில் தொடர்புடைய நபர்கள் யார் என்ற விவரம் அதில் சொல்லப்படவில்லை. எங்களுக்குத் தற்போது கிடைத்த கல்வெட்டு தகவல்களை மகாராஷ்ட்ராவில் உளள பேராசிரியர் அபிஜித் பண்டார்கருக்கு அனுப்பி வைத்தேன். அவர் இந்த தண்டனை முறைகளைப் பற்றிக் கூறிய பின்னர்தான், இதில் இன்னும் பயணிக்க வேண்டியிருப்பதை அறிந்தோம்" என்கிறார் முனிரத்தினம் ரெட்டி. தஞ்சை பெரிய கோவில் சுவர்கள் மற்றும் தூண்களில் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றை இந்திய தொல்லியல் துறை படியெடுத்து வைத்துள்ளது. தமிழ் கல்வெட்டுகள் பலரால் படிக்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன. ஆனால், மராட்டிய கல்வெட்டுகளுக்குப் போதிய கவனம் கொடுக்கப்படாமல் இருந்துள்ளதாகக் கூறுகிறார் முனிரத்தினம் ரெட்டி. மராட்டிய கல்வெட்டுகளைப் படித்து நூல்களாகக் கொண்டு வரும் பணியில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், "தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் குறித்து தமிழில் நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. தமிழ்நாட்டில் மட்டும் மராட்டிய மன்னர்கள் தொடர்பாக 34க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் படி எடுக்கப்பட்டுள்ளன. தற்போது புதிதாக 15 கல்வெட்டுகள் வந்துள்ளன. இவை ஒவ்வொன்றும் 6 முதல் 12 அடி அளவில் உள்ளன" என்று கூறினார். மராட்டிய கல்வெட்டுகளை ஆய்வு செய்வதில் தாமதம் ஏன்? பட மூலாதாரம்,SELVARAJ படக்குறிப்பு, வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ் "மராட்டிய மன்னர் கையாண்ட வழக்கு குறித்த கல்வெட்டு ஆய்வு செய்யப்பட்டு, அதன் விவரங்கள் வெளியாவதில் நீண்ட இடைவெளி நிலவியது ஏன்?" என்று முனிரத்தினம் ரெட்டியிடம் பிபிசி தமிழ் கேட்டது. அவர் அதற்கு, "இந்தத் துறையிலுள்ள ஊழியர் பற்றாக்குறை ஒரு காரணம்" என்றார். மேலும், "இந்தப் பற்றாக்குறை நாடு முமுவதும் பரவலாக உள்ளது. எங்களுக்கு உள்ள கட்டமைப்பை வைத்துக்கொண்டு செயல்படுகிறோம். தகவல் தொழில்நுட்பம் பெரிய அளவில் கை கொடுக்கிறது. தனிப்பட்ட ஆர்வம் காரணமாகவும் பல தகவல்களை வெளிக்கொண்டு வர முடிகிறது" என்றார். ஆட்சி முறை எப்படி இருந்தது? "சோழர்களின் ஆட்சிக் காலம் என்பது சுமார் 140 ஆண்டுகளாக இருந்துள்ளது. நாயக்க மன்னர்களும் இதே கால அளவில் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், இவர்களைவிட அதிக காலம் தஞ்சையை ஆட்சி செய்தது மராட்டிய மன்னர்கள்தான். இவர்கள் சுமார் 170 ஆண்டுகளுக்கும் மேல் ஆட்சி செய்துள்ளனர்" என்கிறார் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ். இவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகளாக கிழக்கில் காரைக்கால், மேற்கில் திருச்சி எல்லை, தெற்கில் அறந்தாங்கி, வடக்கில் கொள்ளிடம் வரையில் இருந்ததாகக் கூறும் செல்வராஜ், "தங்களின் ஆட்சிக் காலத்தில் மராட்டிய மன்னர்கள் மிக நியாயமாக நடந்து கொண்டுள்ளனர். கிறிஸ்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்" என்கிறார். இதுகுறித்து, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் 'போன்ஸ்லே வம்ச சரித்திரம்' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளது. "கோவில் புனரமைப்பு, வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்தது, பூஜை தட்டுகளைக் கொடுத்தது எனத் தங்கள் ஆட்சியில் நடந்த அனைத்தையும் மராட்டிய மன்னர்கள் கல்வெட்டாக வடித்து வைத்துள்ளதாகவும்" தெரிவித்தார் வரலாற்று ஆய்வாளர் செல்வராஜ். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgnjr75zmeo
  6. இலங்கை பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட வேளையில் இந்தியா வழங்கிய உதவிக்கு வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நன்றி தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றுகையிலேயே இதனை தெரிவித்துள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகால தொடர்புகளை சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார நெருக்கடியின்போது இந்தியா வழங்கிய உதவிகளையும் கடன் மறுசீரமைப்பின்போது இந்தியா வழங்கிய ஆதரவையும் நினைவுகூருகின்றோம் என்றும் இதன்போது வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196640
  7. இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று சனிக்கிழமை (19) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாய பூர்வமாக வரவேற்றனர். இக்கப்பலின் கட்டளை அதிகாரி சுனில் குல்ஹாரி ஆவார். கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளின் முதன்மையாக விளங்கும் இந்த கப்பலின் சேவை 2010 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இலட்சத்தீவுகளில் ஒன்றான கல்பேனி தீவின் பெயரே இந்த கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த கப்பலானது கடத்தல் எதிர்ப்பு நடவடிக்கைகள், கடலோரக் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள், தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுப்படப் பன்படுத்தப்படும். இந்த கப்பலானது பல்வேறு தொழில்நுட்ப கருவிகளைக் நாட்டுக்கு கொண்டுவந்துள்ளது. இந்த பொருட்கள் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்படும். இந்த கப்பலின் பணியாளர்கள் கொழும்பு மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு இடங்களைக் கண்டுகளிக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/196645
  8. வெள்ளம் படிப்படியாகக் குறைவடைந்தாலும் வெள்ள நீர் சூழ்ந்த பகுதிகளில் உள்ள நிலத்தில் விளையக்கூடிய கீரை வகைகளை உண்பதை தவிர்க்குமாறு ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் ஊட்டச்சத்து நிபுணர்கள் மேலும் தெரிவிக்கையில், “கடும் மழை காரணமாக கழிவறைகள் போன்றவற்றிலிருந்து வெளியேறும் கழிவு நீர் தண்ணீரில் கலந்து நிலத்தில் தேங்குவதால் நிலத்தில் விளையும் கீரை வகைகளை உண்பது மிகவும் ஆபத்தானது" ஆகும். இதனால், மழை வெள்ளம் குறையும் வரை அகத்தி, முருங்கை போன்ற கீரை வகைகளை மாத்திரம் உண்பது சிறந்ததாகும். மேலும், கடும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக வயிற்றுப்போக்கு, வயிற்றுக்கடுப்பு போன்ற நோய்கள் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ளதால், இயன்றவரை கொதித்து ஆறிய நீரை பருக வேண்டும் என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/196637
  9. தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: பிரசார் பாரதி விழாவில் என்ன நடந்தது? டிடி தமிழ் சொல்வது என்ன? பட மூலாதாரம்,DD TAMIL கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 18 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்தி மாத விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், அவமதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. "தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை," என டிடி தமிழ் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக அந்த விழாவில் பேசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி 'தமிழ் மக்களின் உணர்வுகளைத் தொடர்ந்து அவமதிக்கும் ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெறவேண்டும்' என்கிறார், முதலமைச்சர் ஸ்டாலின் . டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த இந்தி மாத விழாவில் என்ன நடந்தது? ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு தி.மு.க கொதிப்பது ஏன்? என்ன நடந்தது? சென்னையில் பிரசார் பாரதி அலுவலகத்தில் இந்தி மாத கொண்டாட்டத்தின் நிறைவு விழா, வெள்ளிக்கிழமையன்று (அக்டோபர் 18) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன், தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது. அதன்பின்னர், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. இதைப் பாடியவர்கள், 'தெக்கணமும் அதிற் சிறந்த திராவிட நல் திருநாடும்' என்ற வரியைத் தவிர்த்து விட்டுப் பாடினர். டிடி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தக் காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தின. 'தேசிய கீதத்தில் திராவிடம்' - ஸ்டாலின் கேள்வி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், 'திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்' எனப் பதிவிட்டுள்ளார். 'சட்டப்படி நடக்காமல், இஷ்டப்படி நடப்பவர் அந்தப் பதவி வகிக்கவே தகுதியற்றவர்' என ஆளுநர் ஆர்.என்.ரவியை சாடிய முதலமைச்சர் ஸ்டாலின், 'இந்தியைக் கொண்டாடும் போர்வையில் நாட்டின் ஒருமைப்பாட்டையும் இந்த மண்ணில் வாழும் பல்வேறு இன மக்களையும் ஆளுநர் இழிவுபடுத்துகிறார்' எனத் தெரிவித்துள்ளார். 'திராவிட ஒவ்வாமையால் அவதிப்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய கீதத்தில் வரும் திராவிடத்தையும் விட்டுவிட்டுப் பாடச் சொல்வாரா?' என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். பட மூலாதாரம்,X/MKSTALIN டிடி தமிழ் அளித்த விளக்கம் இதுகுறித்து, டிடி தமிழ் தொலைக்காட்சியின் தலைமை அதிகாரி ஒருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. " ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில், 'தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும்' என்று சக ஊழியர்கள் வந்து கூறினர். அவர்கள் பாடும்போது மேடையின் பின்பக்கம் ஏதோ இடையூறு ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் இந்த வார்த்தை தவிர்க்கப்பட்டுவிட்டது" என்று மட்டும் பதில் அளித்தார். தொடர்ந்து, டிடி தமிழ் நிர்வாகம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. 'தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச் சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியை தவறவிட்டுவிட்டார். கவனக்குறைவால் நடந்த இந்த தவறுக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்' எனப் பதிவிட்டுள்ளது. மேலும், 'தமிழையோ அல்லது தமிழ்த் தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவர்களிடம் இல்லை. வேண்டும் என்று இதனை யாரும் செய்யவில்லை. இதுதொடர்பாக ஆளுநருக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. இந்த சர்ச்சை ஒருபுறம் இருந்தாலும், இந்தி மாத நிறைவு விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,X/DDTAMILOFFICIAL ஆர்.என்.ரவி பேசியது என்ன? நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசும்போது, "தமிழ்நாட்டில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு உள்ளது என நினைத்தேன். இங்கு பரவலாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் சென்று பேசும்போது, அவர்கள் இந்தி மொழியை ஆர்வத்துடன் கற்று வருவது தெரிந்தது. "அனைத்து மொழிகளும் பாரத நாட்டின் மொழிகள் தான். காலனி ஆதிக்க காலத்தில் இந்திய மொழிகளைச் சிறுமைப்படுத்தும் வேலைகளை ஆங்கிலேயர்கள் செய்தனர். ஆங்கிலத்தை மட்டும் மொழியாக பார்த்தனர். "நமது மொழிகளை 'வெர்னாகுலர்' (vernacular) என அழைத்தனர். நமது மொழிகளை அடிமைகளின் மொழி என அழைத்தனர். அந்த வார்த்தையை தற்போதும் பயன்படுத்துகிறோம்," என்றார். அடுத்து, சமஸ்கிருதம் குறித்துப் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "தமிழ்நாட்டில் பலம் வாய்ந்த மொழியாக சமஸ்கிருதம் இருந்தது. அண்ணாமலை பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்த சமஸ்கிருத துறைகள் மூடப்பட்டுவிட்டன. சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்த சமஸ்கிருத துறையையே அழித்துவிட்டனர்," என சாடினார். இந்தியாவில் இருந்து தமிழ்நாட்டைப் பிரிப்பதற்கு கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு முயற்சிகள் நடந்துள்ளதாக குறிப்பிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, "இந்தியா எப்போதும் ஒன்றாக இருந்துள்ளது. பிரித்தாளும் கொள்கை இங்கு வெற்றி பெற்றதில்லை. நாட்டின் ஆன்மிக தலைநகராக தமிழ்நாடு இருக்கிறது. இங்கு தமிழ் குறித்துப் பேசுகிறவர்கள், இந்தியாவை விட்டு தமிழைக் கொண்டு செல்வதற்கு என்ன முயற்சிகளை எடுத்தனர்?" எனக் கேள்வி எழுப்பினார். தமிழ் இருக்கை, திருவள்ளூவர் இருக்கை ஆகியவற்றைப் பிற பல்கலைக்கழகங்களில் அமைப்பதற்கு மோதி அரசு மேற்கொண்ட முயற்சிகளை ஆர்.என்.ரவி குறிப்பிட்டார். பட மூலாதாரம்,RAJIVGANDHI படக்குறிப்பு, தி.மு.க மாணவரணித் தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி துணை முதல்வர் கருத்து இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இதைப் பெரிதுபடுத்த விரும்பவில்லை என்று கூறியுள்ளார். மேலும், "டிடி தமிழ் தரப்பு மன்னிப்பு கேட்டுவிட்டனர் என்று செய்திகளில் கேட்டேன். இது தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. என்ன நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்," என்று கூறினார். முன்னாள் முதல்வர் கருணாநிதி "ஒரு சில சமுதாயத்தினரை புண்படுத்தக் கூடாது என்பதற்காகச் சில வரிகளை நீக்கினார்" என்று குறிப்பிட்ட உதயநிதி ஸ்டாலின், "இன்று தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில் திராவிடம் என்ற வார்த்தையைத் தெரிந்தோ தெரியாமலோ நீக்கியுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்கள். என்ன நடவடிக்கை எடுக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்," என்றும் உதயநிதி தெரிவித்தார். பட மூலாதாரம்,UDAYSTALIN@X படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கருத்து சீண்டுகிறாரா ஆளுநர்? ஆளுநரின் பேச்சு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தி.மு.க மாணவர் அணி தலைவர் வழக்கறிஞர் ராஜிவ்காந்தி, "இந்தியை எதிர்த்து தமிழ்நாடு நீண்டகாலமாகப் போராடி வருகிறது. இந்தியாவின் அலுவல் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டபோது, தமிழ்நாட்டுக்கு இந்தி பொருந்தாது என விதிவிலக்கு பெறப்பட்டது. "கடந்த பத்து ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் இந்தி, சமஸ்கிருதம் போன்ற மொழிகளுக்கு மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியது. தமிழ் உள்பட சில மொழிகளுக்கு பாரபட்சம் காட்டப்படுவதை தொடர்ந்து சுட்டிக் காட்டி வருகிறோம்," என்றார். "தமிழ்நாட்டில் இந்தி மாதம் கொண்டாடப்படும் என அறிவித்து நிகழ்ச்சிகளை நடத்துவது தமிழர்களைச் சீண்டிப் பார்க்கும் வேலை. இதை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் முன்னின்று நடத்தி வருகிறார். இதுபோன்ற நிகழ்ச்சிகளைக் கைவிட வேண்டும் என பிரதமர் மோதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்," என்கிறார் ராஜிவ்காந்தி. சமஸ்கிருத மொழி சர்ச்சை சமஸ்கிருதம் குறித்து ஆளுநர் பேசியதற்கு பதில் அளித்த ராஜிவ்காந்தி, "சமஸ்கிருதம் தமிழ்நாட்டில் பிறந்த மொழி அல்ல. இன்றும் தமிழகக் கோயில்களில் சமஸ்கிருதம் இருக்கிறது. அதை 'தேவபாஷை' எனக்கூறி ஒதுக்கி வைத்தது தான் சிதைவடையக் காரணம். அதற்கு நாங்கள் காரணம் அல்ல. கல்விரீதியாக சமஸ்கிருதத்தைச் சிதைக்கும் வேலையை தி.மு.க செய்ததில்லை," என்கிறார். "மக்களிடம் சென்று தங்கள் கொள்கைகளைக் கூறி வெற்றி பெற்ற பிறகு இவர்கள் இந்தியை உயர்த்திப் பேசட்டும். அதைவிடுத்து, ஆளுநர் மூலமாக இந்தியை உயர்த்தும் வேலையை மத்திய அரசு செய்து வருகிறது. அதற்காக தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பதை ஏற்க முடியாது," என்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை குறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டிருக்கிறார். அதில், “சென்னை தூர்தர்ஷன் டிடி தமிழ் சேனலில் இந்தி மாத நிறைவு விழாவில் பங்கேற்ற தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அவமரியாதை செய்ததாக கூறி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் மீது வன்மத்தை கக்கும் விதமாக பொய்யான குற்றச்சாட்டை சுமத்திய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன்,” என்று கூறியிருக்கிறார். பட மூலாதாரம்,S R SEKHAR படக்குறிப்பு, தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் 'தோல்வியை மறைக்க நாடகம்' "தி.மு.க., ஆட்சியின் தோல்வியை மறைப்பதற்கு இந்தி எதிர்ப்பை மீண்டும் ஸ்டாலின் கையில் எடுத்திருக்கிறார்," எனக் கூறுகிறார் தமிழக பா.ஜ.க மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "சட்டம்-ஒழுங்கு பிரச்னை, போதைப்பொருள் புழக்கம், பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு ஆகியவற்றை மறைப்பதற்கு இந்தி விழாவில் ஆளுநர் பேசியதை பெரிதுபடுத்துகிறார்கள்," என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c749pdldrwwo
  10. யாழில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 24வது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபி அருகில் இன்று சனிக்கிழமை (19) நடைபெற்றது. மட்டக்களப்பு ஊடக மையத்தின் தலைவர் வ.கிருஷ்ணகுமார் தலைமையில் இந்த நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது மயில்வாகனம் நிமலராஜனின் உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, நினைவுச்சுடர் ஏற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து மௌன இறைவணக்கம் இடம்பெற்றது. இந்த நினைவஞ்சலி நிகழ்வில் மாவட்டத்தின் ஊடகவியலாளர்கள், சிவில் சமூகப் பிரதிநிதிகள், பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர். புதிய அரசாங்கத்தின் ஜனாதிபதி கடந்த கால ஆட்சியில் இடம்பெற்ற படுகொலை சம்பந்தமாக விசாரணைகள் நடத்தப்படவுள்ளமையை வரவேற்பதாக இதன்போது தெரிவிக்கப்பட்டதுடன் விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196648
  11. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; மிக முக்கியமான ஆவணங்களை கையளிப்பதற்காக விஜித ஹேரத்தை சந்திப்பதற்கு அனுமதி கோரினார் உதய கம்மன்பில முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தன்னிடமுள்ள மிக முக்கியமான பாதுகாப்பு விடயங்கள் தொடர்பான ஆவணங்களை கையளிப்பதற்காக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தினை சந்திப்பதற்கு அனுமதி கோரியுள்ளதை தொடர்ந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஆவணங்களை மறைத்த விவகாரத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு அடிப்படையில் மிகவும் முக்கியமான ஆவணங்களை பகிரங்கப்படுத்துவதற்கு தயாரில்லை என தெரிவித்துள்ள உதயகம்மன்பில இதன்காரணமாக அமைச்சரை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றதாக தெரிவித்துள்ளார். இதன்பின்னர் அமைச்சருக்கு குறுஞ்செய்தியை அனுப்பியதாகவும் அதற்கும் பதில் இல்லை என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். இதன் காரணமாக அவரை தொடர்புகொள்வதற்கான அனுமதியை கோரி பதிவுதபால் மூலம் கடிதமொன்றை அனுப்பினேன், என்னிடம் உள்ள ஆவணங்களை பொறுப்பான முறையில் கையளிக்க விரும்புகின்றேன் என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196633
  12. கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்கும் நோக்கில் செலுத்தப்படும் HPV தடுப்பூசி செலுத்திய பின் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பாடசாலை மாணவிகள் தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் ஐந்து மாணவிகளுக்கு HPV தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் அந்த மாணவிகளுக்கு வயிற்று வலி, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. எவ்வாறாயினும், சுகயீனமுற்ற மாணவர்களுக்கு உரிய வைத்திய சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் குணமடைந்துள்ளனர். தடுப்பூசி செலுத்தப்படும் போது மாணவிகளுக்கு ஏற்படும் அச்சம் காரணமாகவே இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவதாக இந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/196629
  13. மாற்றம் : தென்னிலங்கையிலிருந்து வருவதில்லை; தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும் அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம். என யாழ்பல்கலைகழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஊடகவியலாளர் சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் ஒன்றிய பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிங்கள – பௌத்த பேரினவாதம் முழுவீச்சில் செயற்படுவதற்கான வாய்ப்புக்களைப் பொருளாதார நெருக்கடி தற்காலிகமாக மட்டுப்படுத்தியுள்ள நிலையில் சிங்கள மக்கள் மாற்றமொன்றினை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர். எனினும் சிங்கள மக்களின் வாக்களிப்பு முறைக்கு நேர்மாறாக வாக்களித்ததன் மூலம் எம்மிடையே நிலவுவது பொருளாதார நெருக்கடி மட்டுமல்ல என்பதை தமிழ் மக்கள் தெளிவாக எடுத்துரைத்துள்ளனர். 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடம் நிலவும் வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் தெற்கில் ஏற்பட்டுள்ள ஊழலற்ற ஆட்சி, இளையோர்களின் அரசியற் பங்கேற்பு உள்ளிட்டவைகளின் தாக்கம் உணரப்படாமலுமில்லை. தமிழ்த் தேசிய சித்தாந்தத்தை சமூக, பொருண்மிய, பண்பாட்டுத் தளங்களில் மக்களுக்கானதாகக் கொண்டு போய்ச் சேர்ப்பதில் எந்த முனைப்பையும் காட்டாத தமிழ்த் தேசிய முலாம் பூசிய அரசியல்வாதிகள், அரசியற் கட்சிகள் மீதான பெரும் அதிருப்தி வெகுவாக மக்கள் மத்தியில் உணரப்பட்டு வருகின்றது. தென்னிலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தால் ஏற்பட்ட அலையில் தமிழ் மக்களிடையே குறிப்பாக இளையோர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த கரிசனை தமிழ்த் தேசிய அரசியற்பரப்பில் தவிர்த்துப் புறமொதுக்க முடியாதவொன்றாகும். தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கும், அரசியற் பண்பாட்டிற்கும் முற்றிலும் எதிரான அரசியலை முன்னெடுத்த தமிழ்த் தேசியப் போலிகளை இந்த மண்ணிலிருந்து துடைத்தெறிந்து புதிய தமிழ்த் தேசிய அரசியற் பண்பாட்டை தோற்றுவிப்பதே உண்மையான மாற்றமாகும். மாறாக ஊழல் எதிர்ப்பு, கவர்ச்சி அரசியலினால் தென்னிலங்கைத் தரப்புக்களை தமிழ் அரசியலிற்கு மாற்றாக முன்னிறுத்துவது அரசியல் தற்கொலைக்குச் சமமாகுமம் என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர். மேலும், மாற்றம், ஊழல் இளையோர்கள் தான் அரசியலுக்கு வரவேண்டும் எனும் தென்னிலங்கையின் கவர்ச்சி அரசியலினால் வடக்கு – கிழக்கில் நடைபெறும் தொடர் ஆக்கிரமிப்புக்களை மழுங்கடிக்கப்படுவதும் அதன் மூலம் தென்னிலங்கைத் தரப்புக்களிற்கும், அரசியல் வேலைத்திட்டங்கள் ஏதுமின்றிய சுயேட்சைகளிற்கு வாக்களிப்பதும் தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான பயணத்தை சீர்குலைக்கும் ஒன்றாகும். திம்புக் கோட்பாடுகளைப் புறமொதுக்கி தமிழ் மக்களின் அரசியல் வேணவாக்களிற்கு முற்றிலும் முரணான “இமயமலைப் பிரடகணம்” எனும் பெயரில் தமிழ் மக்களை அரசியல் சூழ்ச்சியொன்றினுள் தள்ளும் முயற்சியென்றும் இடம்பெறுகின்றதென்றும், அது சிறிலங்காவின் ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை தமிழ் மக்களுக்கான தீர்வாக ஆக்குவதற்கு முயற்சிப்பதோடு, தமிழ் மக்களின் இறைமை அரசியலை தனியே அடையாள அரசியலினுள் சுருக்குவதற்கான கபட முயற்சியென்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கண்டனம் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/196626
  14. யாஹ்யா சின்வார்: ஹமாஸ் அமைப்பினரே கண்டு அஞ்சிய இவர் யார்? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, யாஹ்யா சின்வாரின் இறப்பை வியாழக்கிழமை இஸ்ரேல் ராணுவம் உறுதிப்படுத்தியது கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிராங்க் கார்ட்னர் பதவி, பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஆண்டு அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை தங்கள் படையினர் கொன்றுவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. சின்வாரை கடந்த ஓராண்டுக்கும் மேலாக இஸ்ரேல் தீவிரமாகத் தேடி வந்தது. ஹமாஸின் அக்டோபர் 7 தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கப்பட்ட இஸ்ரேல் போரின் ஆரம்பக் கட்டத்தில் சின்வார் தலைமறைவானார். ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், 251 பேர் பணயக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ட்ரோன்கள், ஒட்டுக்கேட்பு கருவிகள், உளவாளிகள் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்ரேலிய துருப்புகள் சின்வாரின் இருப்பிடத்தைக் கண்டறிய முயற்சி செய்த நிலையில், அவர் கொல்லப்பட்டது எந்த ஆச்சர்யத்தையும் அளிக்கவில்லை. “(ஹமாஸின்) தளபதி யாஹ்யா சின்வார் தற்போது இறந்துவிட்டார்,” என்று இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். காஸாவுக்குள் எங்கோ பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப்பாதைகளில் தனது மெய்க்காப்பாளர்களுடன், கடந்த ஆண்டின் பெரும்பகுதியை அவர் கழித்திருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது. தன் இருப்பிடத்தை அடையாளம் காணலாம் என்ற பயத்தால் வெகு சிலருடன் மட்டுமே அவர் தொடர்பில் இருந்ததாகக் கருதப்பட்டது. இஸ்ரேல் பணயக் கைதிகளை மனித கேடயமாக பயன்படுத்திக்கொண்டு அவர் இருந்திருக்கலாம் என்றும் அஞ்சப்பட்டது. ஆனால், தெற்கு காஸாவில் பணயக் கைதிகள் இருப்பதற்கான எவ்வித அறிகுறியும் இல்லாத ஒரு கட்டடத்திற்குள் சின்வார் இஸ்ரேல் படையினரால் கொல்லப்பட்டதாக, இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. விரல் ரேகை மற்றும் பற்களின் ஆதாரங்களை வைத்து இறந்தது சின்வார்தான் என்பதை இஸ்ரேல் அறிவித்தது. “இனப்படுகொலை வரலாற்றுக்குப் பின்னர், இஸ்ரேல் மக்களின் வரலாற்றில் மோசமான படுகொலையை அவர் நிகழ்த்தினார். ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களின் கொலை மற்றும் நுற்றுக்கணக்கானோர் கடத்தப்பட்டதற்கு மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி, இன்று எங்களின் வீரமிக்க படையினரால் கொல்லப்பட்டார். நாங்கள் ஏற்கெனவே உறுதியளித்தது போன்று இன்று அவரைப் பழிதீர்த்துவிட்டோம்,” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார். காஸாவில் ஏற்கெனவே ஹமாஸின் மூத்த தலைவர்கள் பலரை இஸ்ரேல் கொன்றுள்ளது. அஸிஸடின் அல் அசம் எனும் ஹமாஸ் ராணுவ பிரிவின் தலைவர் முகமது டைஃப் அப்படி கொல்லப்பட்டவர்களுள் ஒருவர். கடந்த ஜூலை மாதம் நடந்த வான்வழித் தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. வெளிநாட்டு உறவுகளுக்கான ஐரோப்பிய கவுன்சிலின் மூத்த கொள்கை ஆய்வாளர் ஹியூ லாவிட் கூறுகையில், அக்டோபர் 7 தாக்குதல் ராணுவ நடவடிக்கை என்பதால், முகமது டைஃப்தான் அதன் மூளையாகச் செயல்பட்டதாக நம்பப்பட்டது என்றும், “ஆனால், அந்தத் தாக்குதலைத் திட்டமிட்ட குழுவின் ஒரு பகுதியாக சின்வார் இருந்திருக்கலாம், அக்குழுவில் அவர் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்” என்றும் தெரிவித்தார். மேலும் கடந்த ஜூலை மாதம் டெஹ்ரானில் ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் கொன்றதாக ஹமாஸ் குற்றம் சாட்டியது. தலைமறைவாக இருந்தபோதிலும் அடுத்த மாதமே சின்வார் தலைவராக அறிவிக்கப்பட்டார். இளமைக் காலமும் கைது நடவடிக்கையும் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டெல் அவிவில் நடைபெற்ற பேரணியில் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகளின் படங்கள் அபு இப்ராஹிம் எனப் பரவலாக அறியப்படும் 61 வயதான சின்வார், காஸா முனையின் கடைக்கோடி தெற்கில் கான் யூனிஸில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்தார். அவருடைய பெற்றோர் ஆஷ்கெலான் நகரை சேர்ந்தவர்கள். ஆனால், 1948ஆம் ஆண்டு இஸ்ரேல் நிறுவப்பட்டதைத் தொடர்ந்து, பாலத்தீனத்தில் பெருந்திரளான பாலத்தீனர்கள் தங்களின் முன்னோர்களின் வீடுகளில் இருந்து புலம்பெயர்ந்தனர். அதையடுத்து அவர்கள் அகதிகளாகினர். பாலத்தீனர்கள் இதை, “அல்-நக்பா” (al-Naqba) பேரழிவு என்று அழைக்கின்றனர். கான் யூனிஸ் ஆடவர் மேல்நிலைப் பள்ளியில் அவர் படித்தார். பின்னர், காஸாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக் கழகத்தில் அரபு மொழியில் இளங்கலை பட்டம் பெற்றார். அந்த நேரத்தில் கான் யூனிஸ் ‘முஸ்லிம் சகோதரத்துவம்’ ( Muslim Brotherhood) எனும் சன்னி இஸ்லாமிய அமைப்பின் “ஆதரவு கோட்டையாக” திகழ்ந்ததாக, ‘நியர் ஈஸ்ட்’ கொள்கைக்கான வாஷிங்டன் மையத்தின் ஆய்வாளரான எஹூட் யாரி (Ehud Yaari) தெரிவித்தார். இவர், யாஹ்யா சின்வாரை சிறையில் நான்கு முறை நேர்காணல் செய்தார். ‘நியர் ஈஸ்ட்’ என்பது மேற்கு ஆசியா, பால்கன் மற்றும் வட ஆப்பிரிக்காவின் சில பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு மத்திய தரைக் கடலைச் சுற்றியுள்ள பகுதி. அந்தப் பகுதிக்கான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளை கவனப்படுத்தும் மையமே ‘நியர் ஈஸ்ட்’ மையம். “அகதிகள் முகாமில் வறுமையான சூழலில் மசூதிகளுக்குச் செல்லும் இளம் வயதினருக்கான பெரும் இயக்கமாக” இஸ்லாமிய அமைப்பு திகழ்ந்ததாக யாரி கூறுகிறார். இது ஹமாஸ் அமைப்புக்கு முக்கியத்துவம் வாய்ந்த இயக்கமாகக் கருதப்பட்டது. கடந்த 1982ஆம் ஆண்டில் தனது 19வது வயதில் “இஸ்லாமிய நடவடிக்கைகளுக்காக” சின்வார் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டார். அதன்பின், 1985இல் மீண்டும் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில்தான் ஹமாஸ் அமைப்பின் நிறுவனர் ஷேக் அகமது யாசினின் நம்பிக்கையை சின்வார் பெற்றார். அந்தச் சூழலில் இருவரும் “மிகவும் நெருக்கமாகினர்” என, டெல் அவிவில் உள்ள தேசிய பாதுகாப்பு இயல் மையத்தின் மூத்த ஆராய்ச்சியாளர் கோபி மைக்கேல் தெரிவித்தார். ஹமாஸ் அமைப்பின் மதத் தலைவருடனான உறவு “அந்த இயக்கத்திற்குள் சின்வாருக்கு நல்லெண்ணம் ஏற்பட வழிவகுத்ததாகவும்" மைக்கேல் தெரிவித்தார். கடந்த 1987ஆம் ஆண்டு ஹமாஸ் நிறுவப்பட்டு, இரண்டு ஆண்டுகள் கழித்து, அந்த அமைப்பினருக்கே பயத்தை ஏற்படுத்தக்கூடிய அல்-மஜ்த் (al-Majd) அமைப்பிற்கு உள்ளேயே செயல்படும் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கினார். அப்போது அவருக்கு வயது 25 மட்டுமே. நன்னடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டவர்களை தண்டிக்கும் நடவடிக்கைக்காக அல்-மஜ்த் அமைப்பு பரவலாக அறியப்பட்டது. “பாலியல் ரீதியான காணொளிகள்” அடங்கிய கடைகளை சின்வார் குறிவைத்ததாக மைக்கேல் தெரிவித்தார். மேலும், இஸ்ரேலுடன் இணைந்து செயல்படுவதாக சந்தேகிக்கப்படும் எவராக இருந்தாலும் அவர்கள் கொல்லப்பட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹமாஸின் மதத் தலைவர் ஷேக் அகமது யாசிமின் ஓவியம் இஸ்ரேலுக்கு ஒத்துழைப்பதாக சந்தேகிக்கப்பட்ட ஏராளமானோரின் “கொடூரமான கொலைகளுக்கு” சின்வார் பொறுப்பானவர் என்றும் யாரி தெரிவித்தார். மேலும், “சிலர் அவருடைய கைகளாலேயே கொல்லப்பட்டனர். அதுகுறித்து என்னிடமும் மற்றவர்களிடமும் அவர் பெருமையுடன் பேசினார்” என்றார். உளவாளி என சந்தேகிக்கப்பட்ட நபர் ஒருவரை அவருடைய சகோதரரை வைத்தே உயிருடன் அடக்கம் செய்ய வைத்ததாக சின்வார் பின்னர் ஒப்புக் கொண்டதாக இஸ்ரேல் அதிகாரிகள் தெரிவித்தனர். “தன்னைப் பின்பற்றுபவர்கள், தன் மீது பயம் கொண்டவர்கள், தன்னுடன் எந்த சண்டைக்கும் செல்லாத பலரும் சூழ இருக்கும் ஒரு நபர்தான் யாஹ்யா சின்வார்” என்கிறார் யாரி. இஸ்ரேலிய வீரர்கள் இருவரை கடத்திக் கொலை செய்யத் திட்டமிட்டதாக, கடந்த 1988ஆம் ஆண்டு அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதே ஆண்டு, பாலத்தீனர்கள் 12 பேரை கொலை செய்ததாக குற்றம் நிரூபிக்கப்பட்டு, நான்கு ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு, அதே ஆண்டில் அவர் கைது செய்யப்பட்டார். சின்வாரின் சிறை நாட்கள் தன்னுடைய இளம் பருவத்தின் பெரும்பகுதியை, 1988-2011 வரையிலான 22 ஆண்டுகளை அவர் இஸ்ரேலிய சிறைகளிலேயே கழித்தார். சில காலத்தை அவர் தனிமை சிறையிலும் கழித்தார். அப்போது அவர் தன்னுடைய அமைப்பு சார்ந்து மேலும் ஊக்கம் பெற்றதாகத் தெரிகிறது. அவர் “தன்னுடைய அதிகாரத்தை இரக்கமின்றிப் பயன்படுத்தியதாக,” கூறுகிறார் யாரி. சிறைவாசிகளிடையே தன்னை ஒரு தலைவராக நிலைநிறுத்தினார். சிறை அதிகாரிகளுடன் அவர்களின் சார்பாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நன்னடத்தை ரீதியான நடவடிக்கைகளைச் செயல்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2021இல் யாஹ்யா சின்வார் கூட்டமொன்றில் உரையாற்றியபோது நின்றிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் சிறையில் அவர் இருந்த நேரத்தில், சின்வார் குறித்த இஸ்ரேல் அரசின் மதிப்பீடு, “கொடூரமான, அதிகாரமிக்க, செல்வாக்கு கொண்டவர். வழக்கத்திற்கு மாறான சகிப்புத் தன்மை, கபடம் மற்றும் தவறாகச் சித்தரித்தல் ஆகிய குணங்களைக் கொண்டவர். சிறைக்குள் மற்ற சிறைவாசிகள் மத்தியிலும் ரகசியங்களைக் காத்தவர். பெருந்திரளான கூட்டத்தைச் சமாளிக்கும் திறன் கொண்டவர்” என்பதாக இருந்தது. சின்வாருடன் நிகழ்ந்த சந்திப்புகள் மற்றும் உரையாடல்களின் அடிப்படையில், அவர் ஒரு மூர்க்க குணம் கொண்ட மனநோயாளி (psychopath) என்று யாரி மதிப்பிட்டுள்ளார். “ஆனால், சின்வாரை ‘மனநோயாளி’ என்பதோடு நிறுத்தினால் அது தவறாகிவிடும்” எனக் கூறிய அவர், “அப்படி மட்டும் நினைத்தால் அவருடைய மிகவும் விநோதமான, சிக்கலான குணத்தைத் தவறவிட்டு விடுவீர்கள்” என்றார். யாரி கூறுகையில், “சின்வார் மிகவும் தந்திரமான, சூட்சும புத்தி கொண்டவர். தன்னுடைய தனிப்பட்ட வசீகரத்தைத் தேவையான நேரத்தில் கொண்டு வரவும் பின்னர் மறைக்கவும் தெரிந்த நபர் அவர்” என்று விவரித்தார். இஸ்ரேல் அழித்தொழிக்கப்பட்டு, பாலத்தீனத்தில் யூதர்கள் வாழ்வதற்கு இடமிருக்காது எனக் கூறும்போது, “வேண்டுமானால் உங்களை மட்டும் விட்டு வைக்கிறோம்’ என நகைச்சுவையாகக் கூறுவார்” எனத் தெரிவித்தார். இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்ட சின்வார், ஹீப்ரு மொழியை சரளமாகக் கற்றார், இஸ்ரேல் செய்தித்தாள்களையும் அவர் வாசித்தார். தனக்கு அரபு மொழி தெரிந்திருந்தாலும், தன்னுடன் பேசும்போது அவர் ஹீப்ரு மொழியில் பேசுவதையே சின்வார் விரும்பியதாக யாரி தெரிவித்தார். “ஹீப்ரு மொழியில் பேசுவதை மேம்படுத்திக் கொள்ள அவர் நினைத்தார். சிறைப் பாதுகாவலர்களைவிட ஹீப்ரு மொழியை நிபுணத்துவத்துடன் பேசும் யாரோ ஒருவரிடம் இருந்து அவர் ஏதோவொன்றை அடைய விரும்பியதாக நினைக்கிறேன்,” என்கிறார் யாரி. பட மூலாதாரம்,GETTY IMAGES இஸ்ரேலிய பணயக் கைதி ஒருவரை விடுவிப்பதற்குப் பதிலாக, பாலத்தீன, இஸ்ரேலிய அரபு சிறைக் கைதிகள் 1,027 பேரை விடுவிக்கும் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சின்வார் 2011ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தைச் சேர்ந்த கிலாட் ஷாலிட் கூறுகிறார். ஹமாஸின் மூத்த படைத் தளபதியான சின்வாரின் சகோதரர் தன்னை, மற்றவர்களுடன் சேர்ந்து கடத்தி, ஐந்து ஆண்டுகள் சிறைபிடித்ததாக, ஷாலிட் கூறுகிறார். இஸ்ரேலிய வீரர்கள் பலரைக் கடத்த வேண்டும் என சின்வார் பின்னர் அழைப்பு விடுத்தார். அந்த நேரத்தில், காஸா முனையில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து, யாச்செர் அராஃபதா கட்சியைச் சேர்ந்த தன்னுடைய எதிரிகள் பலரை உயரமான கட்டடங்களில் இருந்து தூக்கி எறிந்து ஹமாஸ் கொன்றது. கொடுமையான நன்னடத்தை விதிகள் சின்வார் மீண்டும் காஸாவுக்கு திரும்பியபோது, அவர் உடனடியாக தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மைக்கேல் தெரிவித்தார். ஹமாஸின் நிறுவன தலைவராக இஸ்ரேலிய சிறைகளில் தனது பெரும்பகுதி வாழ்க்கையைக் கழித்த பெருமைக்காக அவர் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். ஆனால், “தன் கைகளாலேயே பலரை கொன்ற நபர் அவர். பலரும் அவரைப் பார்த்து பயந்தனர். அவர் மிகவும் கொடூரமான, ஆக்ரோஷமான, அதேசமயம் வசீகரிக்கக்கூடிய நபராகவும் இருந்தார்,” என்கிறார் மைக்கேல். “அவர் நன்றாக சொற்பொழிவாற்றக்கூடிய நபர் அல்ல” எனக் கூறும் யாரி, “மக்களை நோக்கி அவர் பேசும்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் பேசுவதாகவே தோன்றும்” என்கிறார். சிறையிலிருந்து வெளிவந்த உடனேயே, அஸிஸடின் அல் அசம் படைப்பிரிவு மற்றும் அதன் தலைவர் மார்வான் இசாவுடன் ஒரு கூட்டணியை உருவாக்கினார். கடந்த 2013ஆம் ஆண்டு, காஸா முனையில் ஹமாஸின் அரசியல் பிரிவு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 2017ஆம் ஆண்டு அதன் தலைவரானார். சின்வாரின் இளைய சகோதரர் முகமதுவும் ஹமாஸில் முக்கியப் பங்கு வகித்தார். இஸ்ரேலின் பல தாக்குதல் முயற்சிகளில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக அவர் கூறினார். இதையடுத்து, 2014ஆம் ஆண்டு அவர் உயிரிழந்ததாக ஹமாஸால் அறிவிக்கப்பட்டார். அப்போதிருந்து, அவர் இன்னும் உயிரோடு இருக்கலாம் என்றும், காஸாவில் பூமிக்கு அடியில் உள்ள சுரங்கப் பாதையில் ஹமாஸ் ராணுவப் பிரிவில் அவர் செயல்படலாம் என்றும், அக்டோபர் 7 தாக்குதலில்கூட அவர் பங்கு வகித்திருக்கலாம் என்றும் ஊடக செய்திகள் வலம் வந்தன. படக்குறிப்பு, முகமது சின்வார் தன்னுடைய இரக்கமின்மை மற்றும் வன்முறை குணம் காரணமாக சின்வார், கான் யூனிஸின் கசாப்புக்காரர் (Butcher) என்ற பட்டப்பெயரை பெற்றார். “சின்வார் கொடுமைமிக்க நன்னடத்தை விதிகளைச் செயல்படுத்தியதாக” கூறிய யாரி, அவற்றுக்குக் கட்டுப்படாவிட்டால், “தங்கள் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்பதை” ஹமாஸ் படையினர் அறிவார்கள் என்றார். கையாடல் மற்றும் தன்பாலின உறவில் ஈடுபட்டதாக, ஹமாஸ் தளபதி மஹ்மூத் இஷ்டிவி-யை (Mahmoud Ishtiwi) சிறைப்படுத்தி, கொடுமைப்படுத்தி கொலை செய்ததாக சின்வார் பரவலாக அறியப்படுகிறார். கடந்த 2018ஆம் ஆண்டில், சர்வதேச ஊடக சந்திப்பு ஒன்றில், அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெருசலேமுக்கு மாற்றுவதற்கான எதிர்ப்புகளின் ஒரு பகுதியாக, இஸ்ரேலில் இருந்து காஸா பகுதியைப் பிரிக்கும் எல்லை வேலியைத் தகர்க்கும் ஆயிரக்கணக்கான பாலத்தீனர்களுக்குத் தனது ஆதரவை குறிப்பால் உணர்த்தினார். கடந்த ஆண்டு மேற்குக் கரையில் பாலத்தீன அதிகார அமைப்பை (PA) ஆதரிக்கும் பாலத்தீனர்களால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து தான் உயிர் பிழைத்ததாக அவர் கூறியிருந்தார். எனினும், இஸ்ரேலுடன் தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஆதரவு, கைதிகள் பரிமாற்றம் மற்றும் பாலத்தீன அதிகார அமைப்புடன் நல்லிணக்கம் என, நடைமுறைக்கேற்ப முடிவுகளை அவர் எடுத்துள்ளார். தன் எதிரிகளால் அவர் மிதவாதி எனவும் விமர்சிக்கப்பட்டுள்ளார். இரானுடன் நெருக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES கைதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் சின்வாரை சிறையில் இருந்து விடுதலை செய்தது மோசமான தவறு என இஸ்ரேல் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த பலரும் கருதினர். அதிகளவிலான பணி அனுமதிகள் மற்றும் பொருளாதார ரீதியிலான ஊக்கம் காரணமாக, ஹமாஸ் போர் மீதான தனது நாட்டத்தை இழந்திருக்கும் என்ற தவறான நம்பிக்கையால் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர். இது நிச்சயமாக ஒரு பேரழிவு தரும் தவறான நம்பிக்கையாக மாறியது. “பாலத்தீனத்தை விடுதலை செய்ய விதிக்கப்பட்ட நபர்” என சின்வார் தன்னைத் தானே கருதியதாக யாரி கூறுகிறார். மேலும், அவர், “காஸாவில் பொதுளாதார நிலைமை மற்றும் சமூக நிலைமைகளை மேம்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை” என்றும் அவர் கூறினார். கடந்த 2015ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத் துறை சின்வாரை “உலகளாவிய பயங்கரவாதி” (Specially Designated Global Terrorist) என அறிவித்தது. கடந்த மே 2021இல் காஸா முனையில் உள்ள இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவரது வீடு மற்றும் அலுவலகம் இலக்கு வைக்கப்பட்டது. அஸிஸடின் அல் அசம் எனும் ஹமாஸின் ராணுவப் பிரிவுடன் அதன் அரசியல் பிரிவை இணைப்பதில் முக்கிய நபராக அவர் இருந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அஸிஸடின் அல் அசம் படை அக்டோபர் 7 தாக்குதலை வழிநடத்தியது. கடந்த அக்டோபர் 14, 2023 அன்று, இஸ்ரேல் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர், சின்வாரை “தீய சக்தியின் உருவம்” எனக் கூறியிருந்தார். மேலும், “அவரும் அவருடைய குழுவினரும் எங்களின் கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் அவரை அடைவோம்” என்றார். சின்வார் இரானுடனும் நெருக்கமான நபராக இருந்தார். சன்னி அரபு அமைப்பானது, ஷியா நாட்டுடன் கூட்டணி வைத்துக் கொள்வது வழக்கமானது அல்ல. ஆனாலும், இஸ்ரேலை அழித்து, அதன் ஆக்கிரமிப்பில் இருந்து ஜெருசலேமை “சுதந்திரப்படுத்துவது” எனும் ஒரே இலக்கை அவர்கள் கொண்டிருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 2017-ம் ஆண்டில் எகிப்து எல்லையில் சின்வார் (நடுவில் இருப்பவர்) அவர்கள் ஒன்றாக இணைந்து வேலை செய்தனர். ஹமாஸுக்கு நிதியுதவி, பயிற்சி மற்றும் ஆயுதங்களை இரான் வழங்கியது. அதன் ராணுவ திறன்களை மேம்படுத்தவும், இஸ்ரேலிய நகரங்களைக் குறிவைத்துத் தாக்கவல்ல ஆயிரக்கணக்கான ராக்கெட்டுகளையும் வழங்கியது. அந்த ஆதரவுக்கு சின்வார் தனது நன்றியுணர்வை 2021ஆம் ஆண்டு தன்னுடைய உரையில் தெரிவித்தார். “இரான் இல்லாமல் இருந்திருந்தால், பாலத்தீனத்தின் எதிர்க்கும் திறன் தற்போதைய நிலையை அடைந்திருக்காது” என்றார். யாஹ்யா சின்வாரை இழந்தது ஹமாஸுக்கு பெருத்த அடியாக இருக்கும். கடந்த ஆகஸ்ட் மாதம் ஹனியேவுக்கு பதிலாக ஹமாஸின் ஒட்டுமொத்த தலைவராகத் தேர்வு செய்யப்பட்டபோது, சவால்களைக் கடந்து, மீண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகக் கருதப்பட்டது. அவரைவிட சமரசமற்ற ஒரு தலைவரை அக்குழுவால் தேர்வு செய்திருக்க முடியாது. காஸா முனையை அழித்தொழித்த இஸ்ரேலின் ஓராண்டு ராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது குறித்து ஹமாஸ் ஆயுதக்குழு தற்போது முடிவெடுக்க வேண்டும். அல்லது, அதற்கு முரணாக, இந்த மோதலால் பாலத்தீன மக்கள் ஏராளமானோர் உயிரிழந்துள்ள போதிலும், இஸ்ரேலை எதிர்த்துச் சண்டையிட வேண்டுமா என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன், காஸாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் “90% எட்டப்பட்டதாக” சமீபத்தில் தெரிவித்திருந்தார். சின்வார் கொலையின் மூலம் அந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, இஸ்ரேலிய பணயக் கைதிகள் நாடு திரும்பலாம். இல்லையேல் அதற்கு மாறாக, முன்னெப்போதையும்விட கோபமான ஹமாஸ் உறுப்பினர்களை எந்தவிதமான சமரசத்தில் இருந்தும் விலக்கி வைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஜான் கெல்லி வழங்கிய கூடுதல் தகவல்களுடன் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/ckg97811zjvo
  15. வட மாகாணத்தின் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் வட மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டல திணைக்களத்தின் சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே சிறிதளவு மழை பெய்யக்கூடும். ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். கடல் புத்தளம் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக மாத்தறை வரையான கடல் பிராந்தியங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். மன்னார் தொடக்கம் காங்கேசன்துறை ஊடாக ஊடாக திருகோணமலை வரையான கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். காங்கேசன்துறை தொடக்கம் மன்னார் ஊடாக புத்தளம் வரையான அத்துடன் ஹம்பாந்தோட்டை தொடக்கம் பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற வேளைகளில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/196622
  16. பட மூலாதாரம்,DOORDARSHAN படக்குறிப்பு, பிரசார் பாரதி அலுவலகத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆன்.என்.ரவி கலந்துகொண்ட விழா 18 அக்டோபர் 2024, 13:23 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை பிரசார் பாரதி அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை, அக்டோபர் 18) நடந்த ஒரு விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இந்த விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரி விடுபட்டது. இது அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்வினையாற்றியிருக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் ‘திராவிடம் என்ற சொல்லை நீக்கி, தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடுவது தமிழ்நாட்டின் சட்டத்தை மீறுவதாகும்’, என்று பதிவிட்டுள்ளார். மேலும், “தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளையும் வேண்டுமென்றே தொடர்ந்து அவமதித்து வரும் ஆளுநரை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்ப பெறவேண்டும்,” என்று பதிவிட்டுள்ளார். மன்னிப்பு கேட்ட பிரசார் பாரதி இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து பிரசார் பாரதி இது குறித்து ஒரு விளக்கக் குறிப்பை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில் 'தவறுக்கு மன்னிப்பு கோருவதாக' அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. அதில், ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு சிறப்பித்த, சென்னை தூர்தர்ஷன் நடத்திய இந்தி மாத நிறைவு விழாவில், ‘தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின்போது கவனச்சிதறல் காரணமாக பாடியவர் ஒரு வரியைத் தவறவிட்டு விட்டார்’, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “தமிழையோ, அல்லது தமிழ்த்தாய் வாழ்த்தையோ அவமதிக்கும் எண்ணம் பாடியவரிடம் இல்லை. வேண்டும் என இதனை யாரும் செய்யவில்லை,” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘இனவாதக் கருத்து’ - ஆளுநரின் பதில் இந்தச் சர்ச்சை குறித்த முதல்வர் மு.க.ஸ்டாலினின் பதிவுக்கு எதிர்வினையாற்றியிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, ஸ்டாலினின் குற்றச்சாட்டு ‘பொய்யானது’ என்றும், ‘இனவாதம்’ என்றும் கூறியிருக்கிறார். எக்ஸ் தளத்தில் அவரது பதிவில், “ஒவ்வொரு விழாவிலும் நான் தமிழ்த் தாய் வாழ்த்தை முழுமையாக பாடுவேன் என்பதையும் அதை பக்திச் சிரத்தையோடும், பெருமையோடும், துல்லியமாகவும் பாடுவேன் என்பதும் [மு.க.ஸ்டாலினுக்கு] நன்றாகத் தெரியும்,” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், “நாட்டின் தொன்மையான, வளமான மற்றும் உயிர்ப்புமிக்க மொழியான தமிழை நாட்டின் பிற மாநிலங்களில் பரப்ப நான் ஏராளமான முயற்சிகளை செய்துள்ளேன். அதில், சமீபத்திய நடவடிக்கையாக வட கிழக்கு மாநிலத்தில் தமிழை பரப்ப அஸ்ஸாம் அரசின் ஒத்துழைப்புடன் கவுஹாத்தி பல்கல்கலைக்கழகத்தில் தமிழ் பட்டய படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டது,” என்று கூறியிருக்கிறார். “ஒரு ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் இனவாதக் கருத்தை தவறான குற்றச்சாட்டுகளுடன் முன்வைப்பது துரதிருஷ்டவசமாக மலிவானது மற்றும் முதலமைச்சரின் உயர் அரசியலமைப்புப் பதவியின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையிலும் உள்ளது,” என்று தெரிவித்திருக்கிறார். மேலும், ‘இனவாதக் கருத்துக்களையும் தவறான குற்றச்சாட்டுகளையும் அவசரகதியில் முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் தான் இருப்பதாக’ ஆளுநர் ஆர்.என். ரவி கூறியிருக்கிறார். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலின் வரலாறு இந்நிலையில், 'நீராரும் கடலுடுத்த' என்று தொடங்கும் இந்தப் பாடலின் பின்னணி என்ன? இது எப்படி தமிழ்த்தாய் வாழ்த்தாக அங்கீகரிக்கப்பட்டது? என்பதன் வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கலாம். இந்தப் பாடல் தமிழறிஞர் பெ.சுந்தரனார் 1891-இல் வெளியான தமது 'மனோன்மணீயம்' என்ற நாடக நூலுக்கு எழுதிய தமிழ் வாழ்த்துப் பா. 1970ம் ஆண்டு ஜூன் மாதம், கருணாநிதி முதல்வராக இருந்தபோது இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வமான தமிழ்த்தாய் வாழ்த்தாக ஏற்கப்பட்டது. அன்றே நீக்கப்பட்ட வரிகள் அப்படி ஏற்கும்போது சம்ஸ்கிருதம் போல அழியாத தமிழின் சிறப்பாக சுந்தரனார் குறிப்பிடும் சில வரிகளை நீக்கிவிட்டே அது அதிகாரப்பூர்வ வாழ்த்தாக ஏற்கப்பட்டது. "பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர் எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல் கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும் உன் உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல ஆயிடினும் ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையாவுன்" என்பவையே அந்த நீக்கப்பட்ட வரிகள். படக்குறிப்பு, தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான அரசாணை எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில்... மோகன ராகத்தில், திஸ்ர தாளத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் அமைத்த இசையில் அது பாடப்படவேண்டும் என்பது அரசாணை. இதில் எங்கும், இந்தப் பாடல் இசைக்கப்படும் போது எழுந்து நிற்பதைப் பற்றியோ, அவமதிப்பவர்களுக்கான தண்டனை பற்றியோ குறிப்பு இல்லை. தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னணி குறித்து தமிழ்வளர்ச்சித் துறையின் முன்னாள் இயக்குநரும், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான மா.ராசேந்திரனிடம் கேட்டோம். 1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது, கடவுள் வாழ்த்துக்கு மாற்றாக அரசு நிகழ்ச்சிகளில் பாடுவதற்கு தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது என்றார். மதச் சார்பற்ற அரசுக்கு மத நம்பிக்கையோடு கூடிய ஓர் இறைவணக்கப் பாடலைப் பாடுவது பொருத்தமாக இருக்காது என்பதால், மொழி வணக்கப்பாடல் அறிமுகமானது என்பதையும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89 படக்குறிப்பு, 1970-ஆம் ஆண்டு கருணாநிதி முதல்வராக இருந்தபோது தமிழ்த்தாய் வாழ்த்து அறிமுகம் செய்யப்பட்டது பாரதிதாசன் பாடல் பரிசீலனை பாரதிதாசன் பாடல் ஒன்றும் இதற்கான பரிசீலனையில் இருந்தது என்று கூறிய ராசேந்திரன், இறுதியில் சுந்தரனாரின் பாடல் சிறப்பாக இருந்ததாக முடிவு செய்யப்பட்டு தேர்வு செய்யப்பட்டது என்றார் அவர். நல்லிணக்கத் தன்மையுள்ள பாடல் இது என்று குறிப்பிட்ட ராசேந்திரன், மாநிலத்தின் ஆட்சி மொழியாக உள்ள ஒரு மொழியை அரசு நிகழ்ச்சிகளுக்கு முன்பு வாழ்த்திப் பாடுவது பண்பான செயல் என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு, 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானது இதற்கு முந்தைய சர்ச்சை தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலைச் சுற்றி அரசியல் சர்ச்சை உருவாவது இது முதல்முறை அல்ல. 2018-ஆம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில், காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது மட்டும் எழுந்து நின்றிவிட்டு, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையானது. இதுகுறித்து அப்போது பிபிசி தமிழிடம் பேசிய பெயர் வெளியிட விரும்பாத சங்கரமடத்தின் மூத்த நிர்வாகி ஒருவர், தமிழை அவமதிக்கும் நோக்கம் தங்களுக்கு இல்லை என்று கூறியிருந்தார். "மடத்தில் பாடப்படும் வழிபாட்டுப் பாடல்களுக்கு கூட பக்தர்கள் எழுந்து நிற்பார்களே ஒழிய மடாதிபதிகள் எழுந்து நிற்க மாட்டார்கள்" என்று கூறிய அவர் "இது எங்கள் சம்பிரதாயம்" என்றும் தெரிவித்தார். தேசிய கீதம் பாடும்போது மட்டும் விஜயேந்திரர் எழுந்து நின்றாரே ஏன் என்ற கேள்விக்கு, "தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்காவிட்டால் அது குற்றம்" என்று கூறிய அந்த நிர்வாகி, "தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?" என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து 2021-ஆம் ஆண்டு, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் நடத்தும் விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவது கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. (இந்தக் கட்டுரையில் 2018-ஆம் ஆண்டு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரர் ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்ட போது அமர்ந்தபடி இருந்தது சர்ச்சையானபோது பிரசுரிக்கப்பட்ட ஒரு கட்டுரையிலிருந்து தகவல்கள் எடுத்தாளப் பெற்றுள்ளன.) https://www.bbc.com/tamil/articles/cevy348ep89o
  17. தமிழ் மக்கள் அவ்வளவு இலகுவாக நம்பிவிடுவார்களா அண்ணா?! மக்களின் தமிழ் அரசியல்வாதிகளின் மீதான கோபத்தையும் வெறுப்பையும் திசைகாட்டி அறுவடை செய்யுமா என்பதை தேர்தல் முடிவுகள் சொல்லும்! புதிய ஒரு முறையாவது நாடாளுமன்றம் செல்லாத தமிழ்க்கட்சிகளின் இளையோர் சிலரும் வெல்லலாம்.
  18. வவுனியா ஓமந்தையில் சர்வதேச தரத்திலான விளையாட்டுக் கட்டட தொகுதி இன்று வெள்ளிக்கிழமை (18) திறந்து வைக்கப்பட்டது. கடந்த 2015 ஆம் ஆண்டு சுமார் 16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்ட சர்வதேச தரத்திலான விளையாட்டு கட்டிட தொகுதியானது நீண்ட காலமாக அபிவிருத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த அரசாங்க காலத்தில் மீளவும் நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. இதன் பிரகாரம் குறித்த கட்டிடத் தொகுதியில் உள்ளக விளையாட்டு அரங்கு மற்றும் நீச்சல் தடாகம் என்பன மேலும் சுமார் 14 கோடி ரூபா ஒதுக்கப்பட்டு முழுமையாக சுமார் 30 கோடி ரூபா செலவில் புனரவைக்கப்பட்டு இன்று உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் விளையாட்டு துறை அமைச்சின் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் ரியல் அட்மிரல் செமால் பெர்னான்டோ, உதவி பணிப்பாளர் கே. டபிள்யு. டி. கே.கொஸ்தா மற்றும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ். சரத் சந்திர ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு கட்டடத் தொகுதியை திறந்து வைத்திருந்தனர். https://www.virakesari.lk/article/196600
  19. இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் போட்டி: நியூசிலாந்து அணி வலுவான முன்னிலை, இந்திய அணியின் உத்தி என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ். க பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ரச்சின் ரவீந்திராவின் அற்புதமான சதத்தால் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களுக்கு ஆட்டமிழந்து இந்திய அணியைவிட 356 ரன்கள் முன்னிலை பெற்று வலுவாக இருக்கிறது. 2-வது இன்னிங்ஸை ஆடிய இந்திய அணி 3வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 70 ரன்களில் ஆட்டமிழந்தார், சர்ஃப்ராஸ்கான் 70 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணியைவிட இந்திய அணி 125 ரன்கள் பின்தங்கியுள்ளது. இன்னும் நாளை (அக்டோபர் 19) மற்றும் நாளை மறுநாள் (அக்டோபர் 20) மட்டுமே மீதமிருக்கும் நிலையில் ஆட்டத்தை இந்திய அணி எப்படி கையில் எடுக்கப்போகிறது என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. இந்திய அணியின் வியூகம் என்ன? இந்திய அணி விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து நியூசிலாந்து அணியின் முன்னிலை ரன்களைவிட கூடுதலாக 300 ரன்கள் சேர்த்து 5வது நாள் உணவு இடைவேளைவரை பேட் செய்தால் ஆட்டத்தை வெல்வதற்கு சாத்தியமுண்டு. ஒருவேளை விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்து நியூசிலாந்துக்கு குறைந்த இலக்கை நிர்ணயிக்க நேர்ந்தால், இந்திய அணி தோல்வியை நோக்கிச் செல்ல வேண்டியதிருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவது இந்திய அணிக்கு அவசியம் என்பதால் நெருக்கடியான நிலையில் இந்தியா இருக்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில்தான் இந்திய அணி வீரர்களின் பேட்டிங் பாணி உள்ளன. குறிப்பாக கேப்டன் ரோஹித் சர்மாவின் அரைசதம், விராட் கோலி, சர்ஃப்ராஸ் கானின் அதிவேக அரைசதமும், பேட் செய்தவிதமும் விரைவாக ரன்களைச் சேர்க்க வேண்டும் அதேநேரத்தில் விக்கெட்டையும் இழந்துவிடக்கூடாது என்பதை நோக்கமாக வைத்து ஆடினர். இருவரும் மிகவிரைவாக 3வது விக்கெட்டுக்கு 100 ரன்களைச் சேர்த்து, 136 ரன்கள் பார்னர்ட்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். வலுவான பார்ட்னர்ஷிப் நியூசிலாந்து அணி 91.3 ஓவர்களில் 402 ரன்கள் சேர்ப்பதற்கு ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி ஆகியோரின் பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாகும். 8-வது விக்கெட்டுக்கு ரச்சின் ரவீந்திரா, டிம் சௌதி ஆகியோரின் 133 ரன்கள் பார்ட்னர்ஷிப் அணியை பெரிய ஸ்கோருக்கு எடுத்துச் சென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரச்சின் ரவீந்திரா ரச்சின் ரவீந்திராவுக்கு 2-வது சதம் ரச்சின் ரவீந்திரா 88 பந்துகளில் அரைசதம் அடித்தநிலையில் அடுத்த 36 பந்துகளில் இன்னும் 50 ரன்களை எட்டி, சதம் அடித்தார். பெங்களூருவை பூர்வீகமாகக் கொண்ட ரவீந்திரா சர்வதேச டெஸ்ட் அரங்கில் அடித்த 2வது சதமாகும். இதற்கு முன் 2023 ஐசிசி உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் சதம் அடித்திருந்தார். சேவாக்கை முந்திய சௌதி டிம் சௌதி 57 பந்துகளில் அரைசதம் அடித்தார். டெஸ்ட் அரங்கில் இதுவரை அதிகபட்சமாக 91 சிக்ஸர்களை அடித்த இந்திய வீரரான விரேந்திர சேவாக் உடைய சாதனையை டிம் சௌதி முறியடித்துள்ளார். இந்த போட்டியில் அவர் 4 சிக்சர்கள் அடித்து மொத்தம் 93 சிக்சர்கள் உடன் சேவாக்கை விட முன்னிலையில் உள்ளார். விக்கெட் சரிவு முன்னதாக 2-வது நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் சேர்த்து, இந்திய அணியைவிட 134 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. ரச்சின் ரவீந்திரா 22 ரன்களுடனும், மிட்ஷெல் 14 ரன்களுடனும் இன்றைய 3-வது நாள் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆடுகளத்தின் ஈரப்பதத்தைப் பயன்படுத்திய பும்ரா, சிராஜ் இருவரும் தொடக்கத்திலேயே புதியபந்தை நன்கு ஸ்விங் செய்ததால், ரன் சேர்க்க நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் திணறினர். ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மிட்ஷெல் 18 ரன்னில் சிராஜ் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த வந்த டாம் பிளென்டன் 5 ரன்னில் பும்ரா பந்துவீச்சில் ஸ்லிப்பில் நின்றிருந்த ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய பிலிப்ஸ் 14 ரன்களிலும், மேட் ஹென்றி 8 ரன்களிலும் ஜடேஜா பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி பெவிலியன் திரும்பினர். ஆட்டம் தொடங்கி தேநீர் இடைவேளைக்குள் 3 விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தது. 53 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை நியூசிலாந்து பறிகொடுத்தது. இதனால் 300 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்துவிடும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிம் சௌதி, ரச்சின் ரவீந்திரா கூட்டணி வலுவான கூட்டணி ஆனால், 8-வது விக்கெட்டுக்கு டிம் சௌதி, ரச்சின் ரவீந்திரா கூட்டணி ஆட்டத்தை கையில் எடுத்தனர். புதிய பந்தை உணவு இடைவேளைக்குப் பின் எடுத்தபின் நியூசிலாந்து ரன்ரேட் வேகமெடுத்தது. ரச்சின் ரவீந்திராவும் அரைசதம் அடித்தபின் அடுத்த 50 ரன்களை 36 பந்துகளில் சேர்க்கவும் புதிய பந்து காரணமாக இருந்தது. சௌதியும் 3 சிக்ஸர்களை விளாசி அரைசதம் அடிக்கவும் புதிய பந்து உதவியது. அஸ்வின் டெஸ்ட் வாழ்க்கையில் மோசமான ஓவர் அதிலும் குறிப்பாக அஸ்வின் 80-வது ஓவரை வீசி அந்த ஓவரில் மட்டும் 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் என 20 ரன்களை வாரி வழங்கினார். அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரு ஓவரில் அதிகபட்சமாக வழங்கிய ரன்கள் இதுதான். சிராஜ் வீசிய ஓவரில் ஸ்லோவர் பாலில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து 65 ரன்களில் சௌதி ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து வந்த அஜாஸ் படேல் 4 ரன்னில் குல்தீப் யாதவ் ஓவரில் கால்காப்பில் வாங்கி விக்கெட்டை இழந்தார். சதம் அடித்து பேட் செய்து வந்த ரச்சின் ரவீந்திரா 134 ரன்களில் குல்தீப் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜூரெலிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் சென்றார். நியூசிலாந்து அணி 402 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழந்து, இந்திய அணியைவிட 356 ரன்கள் முன்னிலை பெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ரோஹித் சர்மா அரைசதம் இந்திய அணி பிற்பகலில் தனது 2-வது இன்னிங்ஸைத் தொடங்கியது. ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா நிதானமாக ஆட்டத்தைத் தொடங்கி, சில பந்துகளை மட்டும் பவுண்டரிக்கு விரட்டினர். ஜெய்ஸ்வால் பொறுமையாக பேட் செய்ய, ரோஹித் சர்மா இயல்பான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளாக விளாசியதால் ஸ்கோர் சீராக உயர்ந்தது. ஜெய்ஸ்வால் 35 ரன்கள் சேர்த்தநிலையில் அஜாஸ் படேல் பந்துவீச்சில் கீப்பர் பிளென்டலால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்துவந்த கோலி, ரோஹித்துடன் சேர்ந்தார். 59 பந்துகளில் அரைசதம் அடித்து நல்ல ஃபார்மில் ரோஹித் சர்மா விளையாடி வந்தார். ஆனால், அஜாஸ் படேல் வீசிய ஓவரில் பந்து ரோஹித் சர்மா பேட்டில் பட்டு எதிர்பாராதவிதத்தில் ஸ்டெம்பில் மெதுவாகப் பட்டதால் போல்டாகி ரோஹித் சர்மா 52 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 3வது விக்கெட்டுக்கு சர்ப்ஃராஸ் கான், விராட் கோலி கூட்டணி சேர்ந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோலி, சர்ஃப்ராஸ் கான் கோலி, சர்ஃப்ராஸ் அதிரடி ஆட்டம் முதல் இன்னிங்ஸில் ஏமாற்றம் அளித்த இருவரும் 2வது இன்னிங்ஸில் நியூசிலாந்து பந்துவீச்சை வெளுத்தனர். குறிப்பாக உள்நாட்டுப் போட்டிகளில் அதிகம் ஆடி நன்கு அனுபவம் பெற்ற சர்ஃப்ராஸ் கான் நியூசிலாந்து பந்துவீச்சை அனாசயமாக ஆடி பவுண்டரி, சிக்ஸர் என பறக்கவிட்டார். அதிலும் அஜாஸ் படேல் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட்டில் தொடர்ந்து 2 பவுண்டரிகளையும், மற்றொரு ஓவரில் இரு சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். இருவரின் அதிரடியான பேட்டிங்கால் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. சர்ஃப்ராஸ் கான் கோலி இருவரும் அரைசதம் அடித்தனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் விரைவாகவே 100 ரன்களை எட்டினர். 41 ஓவர்களில் இந்திய அணி 200 ரன்களை எட்டியது. நிதானமாக பேட் செய்த வந்த விராட் கோலி இன்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை பிலிப்ஸ் வீசியநிலையில் கடைசி பந்தில் கோலி 70 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் பிளென்டலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு சர்ஃப்ராஸ் கான், கோலி இருவரும் 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர். இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cx208rvxrx3o
  20. இங்கிலாந்தை துவம்சம் செய்த பாகிஸ்தான்; டெஸ்ட் தொடரை 1 - 1 என சமப்படுத்தியது (நெவில் அன்தனி) முல்தான் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த இங்கிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாளான இன்று 152 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றியீட்டியது. இதே விளையாட்டரங்கில் கடந்த வாரம் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஓர் இன்னிங்ஸ் மற்றும் 47 ஓட்டங்களால் வெற்றிபெற்ற இங்கிலாந்துக்கு இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுத்த பாகிஸ்தான், 3 போட்டிகள் கொண்ட தொடரை 1 - 1 என சமப்படுத்திக்கொண்டுள்ளது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸில் நோமான் அலி 46 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்களை வீழ்த்தி பாகிஸ்தானின் வெற்றியை வேளையோடு பெற்றுக்கொடுத்தார். டெஸ்ட் கிரிக்கெட் இன்னிங்ஸ் ஒன்றில் நோமான் அலி பதிவுசெய்த அதிசிறந்த பந்துவீச்சு இதுவாகும். முதல் இன்னிங்ஸில் 101 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றிய நோமான் அலி முழுப் போட்டியிலும் 147 ஓட்டங்களுக்கு 11 விக்கெட்களைக் கைப்பற்றினார். அவர் முதல் இன்னிங்ஸில் 32 ஓட்டங்களைப் பெற்றார். இப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 111 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களைக் கைப்பற்றிய சாஜித் கான், இரண்டாவது இன்னிங்ஸில் 93 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இவர் 2ஆவது இன்னிங்ஸில் 22 ஓட்டங்களைப் பெற்றார். அவர்கள் இருவரில் நோமான் அலியின் ஆற்றல் வெளிப்பாடுகள் மிகச் சிறந்ததாக இருந்தபோதிலும் சாஜித் கானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. போட்டியில் வெற்றி பெறுவதற்கு மேலும் 261 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் போட்டியின் நான்காம் நாள் ஆட்டத்தை 2 விக்கெட் இழப்புக்கு 36 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, சுமார் ஒன்றரை மணி நேரத்தில் எஞ்சிய 8 விக்கெட்களை இழந்து 144 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. இங்கிலாந்தின் இரண்டாவது இன்னிங்ஸ் 33.3 ஓவர்களில் முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து சார்பாக ஐவர் இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றபோதிலும் அவர்களால் அவற்றை பெரிய எண்ணிக்கைகளாக்க முடியாமல் போனது. அணிக்கு மீள்வருகை தந்த அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ் அதிகப்பட்சமாக 37 ஓட்டங்களைப் பெற்றார். எண்ணிக்கை சுருக்கம் பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 366 (கம்ரன் குலாம் 118, சய்ம் அயூப் 77, மொஹம்மத் ரிஸ்வான் 41, ஆமிர் ஜமால் 37, நோமான் அலி 32, ஜெக் லீச் 114 - 4 விக்., ப்றைடன் கார்ஸ் 50 - 3 விக்., மெத்யூ பொட் 66 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 291 (பென் டக்கெட் 114, ஜோ ரூட் 34, ஜெக் லீச் 25 ஆ.இ., சாஜித் கான் 111 - 7 விக்., நோமான் அலி 101 - 3 விக்.) பாகிஸ்தான் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 221 (சல்மான் அகா 63, சவூத் ஷக்கீல் 31, கம்ரன் குலாம் 26, ஷொயெப் பஷிர் 66 - 4 விக்., ஜெக் லீச் 67 - 3 விக்., ப்றைடன் கார்ஸ் 29 - 2 விக்.) இங்கிலாந்து - வெற்றி இலக்கு 297 - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 144 (பென் ஸ்டோக்ஸ் 37, ப்றைடன் கார்ஸ் 27, ஒல்லி போப் 22, நோமான் அலி 46 - 8 விக்., சாஜித் கான் 93 - 2 விக்.) ஆட்டநாயகன்: சாஜித் கான். https://www.virakesari.lk/article/196612
  21. ஜனவரி முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதக் காலப்பகுதிக்குள் இலங்கையினால் மீன் இறக்குமதிக்காக மாத்திரம் 24 பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்ரமணியம் ஜெய்சங்கரின் ‘வாழ்வாதாரத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான அணுகுமுறையை கையாளுங்கள் என்ற பரிந்துரையை அநுரகுமார அரசாங்கம் ஏற்றுக்கொள்ளுமா? ஜனவரி முதல் செப்டெம்பர் வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். (நிவேதா அரிச்சந்திரன்) இலங்கை தீவைச்­ சூழ அமைந்­துள்ள கடற்­ப­ரப்பு நாட்­டுக்கு கிடைத்­துள்ள அருங்­கொ­டை­யாக பார்க்­கப்­ப­டு­கி­றது. ஆனால் துர­திர்ஷ்­ட­வ­ச­மாக பல ஆண்­டு­க­ளாக இலங்­கைக்கு நெருக்­கடி நிலை­மையை தோற்­றுவித்­துள்ள இலங்கை - இந்திய மீனவர் விவ­கா­ரத்­துக்கு இது­வரை தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­கப்­ப­டா­ம­ல் உள்­ளது. கடந்த வருடம் கச்­ச­தீவு விவ­காரம் பேசு­பொ­ரு­ளாக மாறி­யி­ருந்த நிலையில் அத­னோ­டு இ­ணைந்­த­தாக தற்­போது மீண்டும் இந்த மீன்­பிடி விவ­கா­ரமும் தலை­தூக்­கி­யுள்­ளது. ஜனா­தி­பதி அநு­ர­கு­மார தலை­மை­யி­லான தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இலங்­கையில் ஆட்­சி­ய­மைத்­துள்ளது. இந்நிலையில் இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர் கலா­நிதி சுப்­ர­ம­ணியம் ஜெய்­சங்கர் கடந்த வாரம் இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்­றை மேற்­கொண்­டி­ருந்தார். இந்த சந்­திப்பில் இலங்­கையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய மீன­வர்கள் தொடர்பில் கவலை வெளி­யிட்­டி­ருந்தார். குறிப்­பாக இந்­திய மீன­வர்­க­ளையும் அவர்­க­ளது பட­கு­க­ளையும் விரைவில் விடு­தலை செய்ய வேண்­டு­மென தெரி­வித்­தி­ருந்த அவர், இந்திய மீனவர்­க­ளுக்கு விதிக்­கப்­பட்­டுள்ள அதி­கூ­டிய அப­ராதம் தொடர்பில் மீள்­ப­ரி­சீ­லனை செய்ய வேண்­டு­மெ­னவும் கோரிக்கை விடுத்­தி­ருந்தார். அதே­நேரம் வாழ்­வா­தா­ரத்­துடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்கள் குறித்த மனி­தா­பி­மான அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றை­யா­னது இந்த விவ­கா­ரத்தை தீர்த்து வைப்­ப­தற்­கான சிறந்த உத்­தி­யாக அமையும் எனவும் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். மீன்­பி­டித்­துறை, மீனவர் சங்­கங்கள் குறித்த கூட்­டுப்­பணிக் குழுக்­கூட்டம் உரிய காலத்தில் நடத்­தப்­படும் என உறு­தி­ய­ளித்த இந்­திய வெளி­வி­வ­கார அமைச்சர், கடந்த 4ஆம் திகதி 50 இந்­திய மீன­வர்கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­மைக்கு நன்­றியும் தெரி­வித்­துள்ளார். வெளி­வி­வ­கார அமைச்சர் விஜித ஹேரத்­து­ட­னான சந்­திப்பில் அய­லு­ற­வுக்கு முத­லிடம் மற்றும் சாகர் கோட்­பாடு ஆகி­ய­வற்றின் அடிப்­ப­டையில் இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு நிலை­நி­றுத்­தப்­படும் எனவும் தெரி­வித்­தி­ருந்தார். அதே­நேரம் முன்­னு­ரிமை அடிப்­ப­டையில் வழங்­கப்­படும் பணித்­திட்­டங்கள் ஊடாக இலங்­கைக்கு இந்­தியா வழங்கி வரு­கின்ற அபி­வி­ருத்தி சார் உத­விகள் தொடரும் எனவும் உறு­தி­ய­ளித்­தி­ருந்­த­மை­யா­னது இலங்கை மீதான இந்­தி­யாவின் கண்­ணோட்­டத்தை மேலும் வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதன் ஊடாக இலங்­கையில் எந்த அர­சாங்கம் ஆட்­சி­ய­மைத்­தாலும் இந்­தி­யாவின் ஒத்­து­ழைப்பு தொடரும் என்­பது உறு­தி­யா­கி­றது. அதற்கு இலங்­கையின் அமை­வி­டமே முக்­கிய கார­ணி­யாக அமைந்­தி­ருப்­ப­தாக துறைசார் நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர். ஆனால் தேசிய மக்கள் சக்தி அர­சாங்­கத்தைப் பொறுத்­த­மட்டில் நாட்டின் தேசிய வளங்­களைப் பாது­காப்­பதில் தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. இந்த விடயத்தில் கடந்த கால அர­சாங்­கங்­க­ளையும் கடு­மை­யாக விமர்­சித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் மீன்­பிடி விவ­கா­ரத்தில் இந்த அர­சாங்­கத்தின் நகர்வு எப்­படி அமை­யும் என்­பதை பொறுத்­தி­ருந்தே பார்க்க வேண்­டி­யுள்­ளது. இலங்கை ஆரம்­ப­காலம் முதல் கடந்த 2002 மற்றும் 2022 ஆகிய காலப்­ப­கு­தி­களில் முகங்­கொ­டுத்த பொரு­ளா­தார நெருக்­க­டி­க­ளின்­போது இந்­தி­யாவே நாட்­டுக்கு கைகொ­டுத்­து உ­த­வி­யது. இந்­நி­லையில் மூன்று தசாப்­த­ கால யுத்­தத்­துக்கு பின்னர் இலங்­கையின் வட­ப­கு­தியில் தென்­னிந்­திய மீன­வர்கள் மீன்­பி­டியில் ஈடு­ப­டு­கின்­றமை இரு நாடு­க­ளுக்­கு­ம் இ­டை­யி­லான நட்­பு­ற­வுக்கு மிகப்­ பெ­ரிய சவா­லாக அமைந்­துள்­ளது. ஆனால், இந்த விட­யத்தை இரு­ நா­டு­க­ளுமே மெள­ன­மாக கடந்து செல்­­கின்ற வித­மா­னது இரு ­நாட்டு நட்­பு­றவை தக்­க­வைத்­துக்கொள்­வ­தற்­கான காய்­ந­கர்த்­த­லா­கவே பார்க்க வேண்­டி­யுள்­ளது. இலங்­கையின் நிலப்­ப­ரப்பை விட 8 மடங்கு மிகப்­பெ­ரிய கடற்­ப­ரப்பும் மீன்­வ­ளமும் கொண்ட இலங்­கைத்­ தீவின் கடற்­ப­ரப்பு இந்­திய மீன­வர்­களால் ஆக்­கி­ர­மிக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­படும் விவ­கா­ரத்தில் இரு­ நாட்டு மீனவ சமூ­கங்­களும் வாழ்­வா­தார ரீதியில் மிகப்­பெ­ரிய சவாலை எதிர்­கொண்­டுள்­ளன. குறிப்­பாக இலங்கை கடற்­ப­டை­யி­னரின் துப்­பாக்கி பிர­யோ­கங்­களால் உயி­ரி­ழப்­புக்கள் பதி­வா­கி­யுள்­ள­தோடு இந்­திய, இலங்கை மீன­வர்­க­ள் கைது செய்யப்படும் சம்­ப­வங்­களும் அதி­க­ரித்து வரு­கின்­றன. அதே­நேரம் இலங்கை கடந்த காலங்­களில் பொரு­ளா­தார ரீதியில் மிகப்­பெ­ரிய வீழ்ச்­சியை சந்­தித்­தி­ருந்­தது. இதன்­போது பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான டொலர் உள்­வ­ரு­கையை அதி­க­ரிப்­பது தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட பரிந்­து­ரை­களில் இலங்­கையின் மீன் வளம் மிக முக்­கி­ய­மா­னது என துறைசார் நிபு­ணர்­களால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டது. ஆனால், இந்த விட­யத்தில் இது­வரை ஆட்­சி­யி­லி­ருந்த அர­சாங்­கங்கள் இந்­திய அர­சாங்­கங்­க­ளுடன் சுமு­க­மான ஓர் உடன்­பாட்­டுக்கு வரு­வ­தற்­கு­ரிய காய்­ந­கர்த்­தல்­களை மேற்­கொள்­ள­வில்லை. குறிப்­பாக இந்த விவ­கா­ரத்தில் இந்­திய மீன­வர்கள் அத்­து­மீறி நுழை­வதால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்தில் ஏற்­பட்­டுள்ள இழப்பு மதிப்­பீட்டு கணிப்­பீ­டுகள் இது­வரை எமது அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­ப­டா­ம­ல் உள்­ளது. இலங்­கையின் கடல்­வ­ளத்தை ஆட்­சிக்கு வரும் அர­சாங்­கங்கள் உரி­ய­வாறு பயன்­ப­டுத்­தி­யி­ருந்தால் இலங்­கையின் பொரு­ளா­தா­ரத்­துக்கு இந்­தத்­ துறை மிகப்­ பெ­ரிய பங்­க­ளிப்பை வழங்­கி­யி­ருக்கும் என்­பதே பொரு­ளா­தார நிபு­ணர்­களின் கருத்­தாக அமைந்­துள்­ளது. இழுவை மடிப்­ப­ட­குகள் இலங்­கையில் முற்­றாக தடை­ செய்­யப்­பட்­டுள்ள போதிலும் இலங்கை கடற்­ப­ரப்­புக்குள் அத்­து­மீறி நுழையும் இந்­திய மீன­வர்கள் இவற்றை பயன்­ப­டுத்­து­வதால் மீன்­களின் இருப்பும் கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்ளது. இது தொடர்பில் ஊட­கங்­க­ளாலும் சமூக ஆய்­வா­ளர்­க­ளாலும் கல்­வி­மான்­க­ளாலும் தொடர்ச்­சி­யாக சுட்­டிக்­காட்­டப்­பட்டு வரு­கின்­ற ­போ­திலும் இது­ தொ­டர்பில் இலங்கையின் கடந்த அர­சாங்­கங்கள் மெளனம் காத்­து­ வ­ந்துள்ளன. அவ்­வப்­போது இந்த விட­யத்­துக்கு எதி­ராக மக்கள் குரல் எழுப்பும் வேளை­களில் இந்­திய மீனவர் கைது சம்­ப­வங்­களும் இழு­வைப்­ப­ட­குகள் பறி­முதல் செய்யும் சம்­ப­வங்­களும் மாத்­திரம் நடந்­தே­று­கின்­றன. இலங்­கையில் நடந்­தே­றிய மூன்று தசாப்­த­ கால யுத்தம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு கடற்­ப­ரப்பில் இந்­திய மீன­வர்கள் மாத்­தி­ர­மன்றி இலங்கை மீன­வர்­க­ளுக்கும் மீன்­பி­டிக்க முடி­யா­மல்­போ­ன­மை­யா­னது குறித்த பகு­தி­களில் மீன்­வளம் பெருக்­க­ம­டைய வழி­கோ­லி­யது. இதனால் யுத்தம் நிறை­வ­டைந்த கையோடு தென்­னிந்­திய மீன­வர்கள் இலங்­கையின் கடற்­ப­ரப்­புக்குள் நுழைந்து மீன்­பி­டியில் ஈடு­பட ஆரம்­பித்துவிட்­டனர். ஆனால் இந்த விட­யத்தில் அப்­போது அதி­கா­ரத்­தி­லி­ருந்த அர­சாங்கம் அறிந்தும் அறி­யா­த­தைப்­போன்று நடந்­து­கொண்­டதன் விளை­வா­கவே இன்று இந்த மீனவர் விவ­காரம் தலை­தூக்­கி­யுள்­ளது என துறைசார் நிபு­ணர்கள் அதி­ருப்தி வெளி­யிட்­டுள்­ளனர். மீன் இறக்­கு­ம­தியில் ஆர்வம் காட்டும் இலங்கை மிகப்­பெ­ரிய கடல்­வ­ளத்தைக் கொண்­டுள்ள இலங்கை வெளி­நா­டு­க­ளி­லி­ருந்தே மீன்­களை இறக்­கு­மதி செய்­கி­றது. ஆனால் இதற்குப் பொறுப்புக்கூற வேண்­டிய அர­சாங்­கங்கள் இது­வ­ரை ­கா­லமும் மெளனம் சாதித்­து­ வ­ரு­கின்­றன. இந்த வரு­டத்தின் ஜன­வரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை­யி­லான 8 மாத காலப்­ப­கு­திக்குள் இலங்­கை­யினால் 39 பில்­லியன் மெட்ரிக் தொன் மீன் இறக்­கு­மதி செய்­யப்­பட்­டுள்­ளது. கடற்­றொழில் அமைச்சின் தர­வு­க­ளுக்கு அமைய மீன் இறக்­கு­ம­திக்­காக மாத்­திரம் 24 பில்­லியன் ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது. அதன் டொலர் பெறு­மதி 80 மில்­லி­ய­னாக பதி­வா­கி­யுள்­ளது. அத­ன­டிப்­ப­டையில் வரு­டாந்தம் இலங்கை 900 பில்­லியன் ரூபாய் பெறு­ம­தி­யான மீன்­வ­ளத்தை இந்­தியா சூறை­யா­டு­வ­தாக வட­மா­காண கடற்­றொழில் இணையம் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளது. இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் இந்­திய மீன­வர்­க­ளது அத்­து­மீ­றலால் கடற்­றொ­ழிலை நம்பி வாழ்ந்­து­வரும் உள்நாட்டு மீனவக் குடும்­பங்கள் பா­ரி­ய­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளன. இலங்­கையில் கடந்த காலங்­களில் ஏற்­பட்ட பொரு­ளா­தார நெருக்­க­டி­களால் மிகவும் பாதிக்­கப்­பட்ட ஒரு­த­ரப்­பாக இந்த மீனவ சமூகம் காணப்­ப­டு­கி­றது. இது தொடர்பில் கடந்த காலங்­களில் இந்த விவ­காரம் சூடு­பி­டித்­த­போது இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சினை தொடர்பில் நடுக்­க­டலில் பேச்­சு­வார்த்தை என்­றார்கள், இந்­திய நாட்டு மீனவப் பட­கு­க­ளுக்கு நிபந்தனை அடிப்படையில் அனு­மதி வழங்­கப்­போ­வ­தாக தெரி­வித்­தனர். ஆனால் இவை அனைத்தும் பெய­ர­ள­வி­லேயே நடந்­தே­றின. இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றலால் நாட்டின் மீன் வளம் மாத்­தி­ர­மன்றி மீன­வர்­களின் மீன்­பிடி உப­க­ர­ணங்கள் மற்றும் வலை­க­ளையும் அறுத்துச் செல்­கின்­றனர். அதே­நேரம் இழுவை மடிப்பட­கு­களால் மீன்­களின் இனப்­பெ­ருக்கம் படிப்­ப­டி­யாக அழிக்­கப்­ப­டு­கி­றது. இதன் விளை­வாக இலங்­கையின் கடல்­வளம் அழிக்­கப்­படும் அபாயம் நில­வு­வ­தாக துறைசார் நிபு­ணர்கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளனர். மேலும் இரு­நாட்டு மீன­வர்­க­ளையும் நடுக்­க­டலில் மோத­விட்டு இலங்கை அர­சாங்கம் வேடிக்கை பார்ப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டி­யுள்­ளனர். காலத்­துக்குக் காலம் கைது செய்­யப்­படும் இந்­திய மீன­வர்கள் விவ­காரம் தொடர்ந்தும் நடந்­தே­று­வ­துடன் பரி­தாப உயிரிழப்புக்களும் பதிவாகின்றன. காங்கேசன்துறை கடற்பரப்பில் அண்மையில் இழுவை மடிப்படகு மோதியதில் காயமடைந்த கடற்படை வீரர் அண்மையில் உயிரிழந்த சம்பவமும் பதிவாகியிருந்தது. அதேநேரம் இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் செப்டெம்பர் 29ஆம் திகதி வரையிலான 9 மாத காலப்பகுதியில் 55 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 413 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 வருடங்களுக்குள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் 1143 இந்திய மீனவர்களும் 157 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் வேடிக்கை என்னவெனில், இந்திய மீனவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள அழிவுகள் தொடர்பில் எவ்விதமான மதிப்பீடுகளையும் மேற்கொள்வதற்கு இதுவரை ஆட்சியிலிருந்த இலங்கை அரசாங்கங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பதுதான். அதேநேரம் இலங்கையின் கடல்வள பயன்பாட்டுக்கு வரவு – செலவுத் திட்டத்தில் போதிய நிதி கூட ஒதுக்கப்படுவதில்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கடல் வளத்தை இலங்கை சரியாக பயன்படுத்தியிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியிருக்க முடியும் என்பதே துறைசார் நிபுணர்களின் பரிந்துரையாகவுள்ளது. https://www.virakesari.lk/article/196255
  22. யுக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா களமிறங்குகிறதா? - உண்மை என்ன? பட மூலாதாரம்,ED JONES/AFP படக்குறிப்பு, ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியப் படைகள் போருக்குத் தயாராகி வருவதாக வெளியான கூற்றை ரஷ்யா மறுத்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் மற்றும் ஓல்கா இவ்ஷினா பதவி, பிபிசிக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வடகொரியர்களை உள்ளடக்கிய சுமார் 3,000 பேர் கொண்ட ஒரு படைப்பிரிவை ரஷ்ய ராணுவம் உருவாக்கி வருவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. யுக்ரேன் ராணுவத்தின் உளவுத்துறை வட்டாரங்கள் இந்தத் தகவலை பிபிசி-யிடம் தெரிவித்துள்ளனர். யுக்ரேன் ராணுவத்தின் சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள், ரஷ்யாவுடன் வடகொரியா நெருக்கமான ராணுவக் கூட்டணியை உருவாக்கி வருவதாகக் கூறுகிறது. இருப்பினும், ரஷ்யாவில் இருந்து வெகு தொலைவில் இருக்கும் கிழக்கு பகுதியில், இவ்வளவு பெரிய படைப் பிரிவு உருவாகி வருகிறது என்பதற்கான எந்த உறுதியான தகவலும் இன்னும் பிபிசிக்கு கிடைக்கவில்லை. ஆனால், ரஷ்ய அரசின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷ்யா- யுக்ரேன் போரில் வடகொரியா ஈடுபடுவது குறித்து வெளியான செய்திகளை நிராகரித்துள்ளார். பெஸ்கோவின் கூற்றுபடி, "பிரிட்டிஷ் புலனாய்வு அமைப்பு மட்டுமல்ல, அமெரிக்க உளவு நிறுவனமும் இதுபோன்ற செய்தி அறிக்கைகளை வெளியிடுகிறது. இது போன்ற தகவல்களை வழங்குவதே இந்த அமைப்புகளின் வேலை. ஆனால் இதுகுறித்து எந்த ஆதாரத்தையும் அவர்கள் முன்வைப்பதில்லை," என்றார். இருப்பினும், சமீபத்திய மாதங்களில் ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது என்பதில் சந்தேகமில்லை. பட மூலாதாரம்,VLADIMIR SMIRNOV/POOL/AFP படக்குறிப்பு, ஜூன் 19, 2024 அன்று ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான நட்பைக் கொண்டாடும் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ரஷ்யா - வட கொரியா இடையே அதிகரிக்கும் ஒத்துழைப்பு வடகொரிய தலைவர் கிம் ஜாங் உன் கடந்த வாரம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் பிறந்தநாளுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பியதோடு, அவரை 'நெருங்கிய தோழர்' என்றும் குறிப்பிட்டார். ரஷ்யா-யுக்ரேன் போரில் வடகொரியா தலையிடுவது குறித்து யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சரும் இந்த மாதம், யுக்ரேனில் வடகொரிய படைகள் நிலைநிறுத்தப்பட்டிருப்பதறகான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறினார். ஆனால், இந்தப் படையில் எத்தனை வீரர்கள் இருக்கிறார்கள் என்பது தான் மிகப் பெரிய கேள்வி. ரஷ்யாவின் கிழக்குக் கோடியில் இருந்து ஒரு ராணுவ தொடர்பான பிரமுகர் பிபிசி-யின் ரஷ்ய சேவையிடம், "பல வடகொரிய வீரர்கள் விளாடிவோஸ்டாக் (Vladivostok) நகரத்திற்கு வடக்கே உசுரிஸ்க் அருகே உள்ள ராணுவத் தளங்களுக்கு வந்துள்ளனர்," என்று கூறினார். ஆனால் உண்மையில் எத்தனை வீரர்கள் உள்ளனர் என்பதை நமக்கு தகவல் கொடுத்த நபர் கூறவில்லை. "இந்த எண்ணிக்கை நிச்சயமாக 3,000 ஆக இருக்காது," என்று அவர் கூறினார். ஒரு ராணுவ ஆய்வாளர், ரஷ்ய ராணுவம் ஆயிரக்கணக்கான வடகொரிய வீரர்களைத் தங்கள் ராணுவத்திற்குள் வெற்றிகரமாகப் பணியமர்த்த வைக்க முடியுமா என்று சந்தேகிப்பதாகக் கூறினார். பட மூலாதாரம்,KCNA/REUTERS வட கொரிய வீரர்களை ரஷ்யா எப்படி கையாளும்? ரஷ்யாவில் உள்ள ஆய்வாளர் ஒருவர், (பெயர் கூற விரும்பாமல்) பிபிசி-யிடம் பேசுகையில், "ஆரம்பத்தில், நூற்றுக்கணக்கான ரஷ்யக் கைதிகளை ராணுவத்தில் சேர்ப்பதே ரஷ்ய ராணுவத்திற்குக் கடினமாக இருந்தது. இத்தனைக்கும் அந்த கைதிகள் அனைவரும் ரஷ்ய மொழி பேசுபவர்கள்," என்றார். அதாவது, வடகொரியப் படைகளை நிர்வகிக்கும் பணி அவ்வளவு எளிதானது அல்ல. ஒருவேளை அவர்கள் 3,000 வடகொரிய வீரர்களைச் சேர்த்திருந்தாலும் கூட, அது போர்க்களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது. ஆனால் யுக்ரேனைப் போலவே அமெரிக்காவும் இதைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரிகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறுகையில், "ரஷ்யா, வடகொரிய வீரர்களைச் சேர்த்திருப்பது ரஷ்யாவிற்கும் வடகொரியாவிற்கும் இடையேயான உறவுகள் கணிசமாக மேம்பட்டுள்ளதைக் காட்டுகிறது," என்றார். இருப்பினும், மில்லரின் பார்வையில், இந்தச் செயல்பாடு, ரஷ்யா போர்க்களத்தில் இழப்புகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், கிம் ஜாங் உன்-உடன் ரஷ்யா மற்றும் வடகொரியா இடையே பாதுகாப்பு மற்றும் பிற துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஒன்றை கையெழுத்திட்டார். இதைத் தொடர்ந்து, வட கொரியா ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதற்கான ஆதாரங்கள் வெளிவந்தன. யுக்ரேனின் பொல்டாவா பிராந்தியத்தில் அண்மையில் மீட்கப்பட்ட ஏவுகணை மூலம் நிரூபிக்கப்பட்டது. 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் வட கொரியாவிடமிருந்து ரஷ்யா வெடிபொருட்கள் மற்றும் குண்டுகள் வாங்கியதற்கான ஆதாரங்கள் வெளியே கசிந்தது. இந்தத் தகவல்கள் ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் ஊழியர்களிடையே நடந்த டெலிகிராம் சேட் மூலமாகக் கசிந்தது. தரமற்ற வடகொரிய ஆயுதங்கள் யுக்ரேனில் நிலைநிறுத்தப்பட்டுள்ள ரஷ்ய வீரர்கள் இந்த ஆயுதங்களின் தரம் குறித்து அடிக்கடி புகார் கூறினர். இந்த ஆயுதங்களால் தங்களது ராணுவ வீரர்கள் பலர் காயம் அடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர். குர்ஸ்க் மாகாணத்தில் ரஷ்யாவை நிலைநிறுத்துவதற்கு முன்னதாக, மங்கோலிய எல்லைக்கு அருகில் உள்ள உலன்-உடே பகுதியில் வடகொரியப் படைகள் பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக யுக்ரைன் சந்தேகித்துள்ளது. சமீபத்தில் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தில் யுக்ரேன் ராணுவம் தாக்குதல் நடத்தியது. யுக்ரேனிய ஊடகமான 'டிஃபென்ஸ் எக்ஸ்பிரஸின்’ ஆசிரியர் வலேரி ரெபெக் கூறுகையில், "இந்த வடகொரிய வீரர்கள் ரஷ்யா-யுக்ரேன் எல்லையின் சில பகுதியைப் பாதுகாக்க அனுப்பப்படலாம். வட கொரிய வீரர்கள் இவ்வளவு சீக்கிரமாக முன் வரிசையில் நிறுத்தப்பட மாட்டார்கள்,” என்றார். ரெபெக்கை போன்று பல வல்லுனர்கள் இதே கருத்தை முன்வைத்துள்ளனர். மொழி தெரியாத வீரர்களால் என்ன பயன்? வடகொரியாவில் 12.8 லட்சம் வீரர்கள் இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் ரஷ்யாவைப் போன்று வடகொரிய ராணுவத்திற்குச் சமீபத்திய போர் நடவடிக்கைகளில் அனுபவம் இல்லை. வடகொரியா தனது ஆயுதப் படைகளில் பழைய சோவியத் மாதிரியைப் பின்பற்றி வருகிறது, ஆனால் அதன் முக்கியப் படையான காலாட்படை பிரிவுகள் யுக்ரேன் உடனான போருக்கு எவ்வாறு பொருந்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ரஷ்யா-வடகொரியா படைகள் இடையே மொழித் தடையும் இருக்கும். வட கொரிய வீரர்களும் ரஷ்ய அமைப்பைப் பற்றி அறிந்திருக்க மாட்டார்கள். இது தற்போதைய போரில் ரஷ்யாவிற்கு சிக்கல்களையே உருவாக்கும். ஆனால் இந்த விஷயங்கள் ரஷ்யா-யுக்ரேன் போரில் வட கொரிய வீரர்கள் பங்கேற்பதைத் தடுக்க வாய்ப்பில்லை. அதே சமயம், வடகொரியர்கள் பொறியியல் மற்றும் கட்டுமான திறன்களுக்கு பெயர் பெற்றவர்கள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர்கள் போரில் திறன் பெற்றவர்கள் அல்ல என்பது தான் பிரச்னை. வடகொரியாவுக்கு பணமும் தொழில்நுட்பமும் தேவை. ரஷ்யாவிற்கு ராணுவ வீரர்களும் ஆயுதங்களும் தேவை. வடகொரியாவுக்கு என்ன ஆதாயம்? கொரியா ரிஸ்க் குழுமத்தின் இயக்குநர் ஆண்ட்ரே லாங்கோவ், "வட கொரியா ரஷ்யாவிடமிருந்து நல்ல வருவாய் பெறலாம், ஒருவேளை அவர்கள் ரஷ்ய ராணுவ தொழில்நுட்பத்திற்கான அணுகலையும் பெறலாம். வடகொரியாவிடம் ராணுவ உதவிகளைப் பெறவில்லை எனில், ரஷ்யா இந்த தொழில்நுட்பத்தை வழங்கத் தயங்கும்,” என்றார். "இது வடகொரியாவுக்கு உண்மையான போர் அனுபவத்தைத் தரும். அதே சமயம் வடகொரியாவை விட வளமான மேற்கத்திய நாடுகளில் வாழ்வதன் நன்மையை அவர்களது வீரர்கள் பெறுவார்கள்," என்றார். அதேசமயம், கடந்த இரண்டரை ஆண்டுகாலப் போரில் ரஷ்யா இழந்தவைகளுக்கு விரைவில் ஈடு செய்ய வேண்டும் என்று புதின் விரும்புகிறார். பிரிட்டனைத் தளமாகக் கொண்ட 'Conflict Studies’ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த வலேரி அகிமென்கோ, வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்படுவது புதினுக்கு உதவும், என்கிறார். "இதற்கு முன்னர் அவர் முன்னெடுத்தக் கட்டாய ராணுவ அணி சேர்க்கை தோல்வியில் முடிந்தது. எனவே இம்முறை அவரது முயற்சிகளுக்கு வடகொரிய வீரர்க உதவுவார்கள்,” என்று நம்புகிறார். "யுக்ரேன் ராணுவ வீரர்களுடன் ஒப்பிடும்போது ரஷ்ய வீரர்கள் எண்ணிக்கையில் குறைந்து வருகிறார்கள் என்று புதின் நினைக்கிறார். எனவே, வடகொரிய வீரர்களை போரில் ஈடுபடுத்துவது சிறந்த வழியாக கருதுகிறார்,” என்றார். ஆனால், யுக்ரேன் அதிபர் இரு நாட்டின் கூட்டணி பற்றி கவலையை வெளிப்படுத்தியுள்ளார். ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான மோதல் களத்தில் இதுவரை மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் களமிறங்கவில்லை. ரஷ்யாவுக்காக நூற்றுக்கணக்கான வடகொரியப் படைகள் நிலைநிறுத்தப்பட்டதற்கான சான்றுகள் வெளிப்படும் நிலையில், போர்க்களத்தில் நுழையும் வெளிநாட்டு (மேற்கத்திய) வீரர்கள் பற்றி புதின் அதிகமாகக் கவலைப்பட வாய்ப்பில்லை. (கூடுதல் செய்தி அறிக்கை : பால் கிர்பி, கெல்லி என்ஜி மற்றும் நிக் மார்ஷ்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cn03j7x8d5eo
  23. ஈரான் கட்டமைத்த "பயங்கரவாத அச்சு சரிகிறது” - ஹமாஸ் தலைவர் கொலை குறித்து இஸ்ரேல் பிரதமர் ஈரான் கட்டமைத்த 'பயங்கரவாத அச்சு சரிகிறது’ என்று ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதை சுட்டிக்காட்டி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கருத்து தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இஸ்ரேல், பாலஸ்தீனம் இடையே நீண்டகாலமாக மோதல் நீடிக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி பாலஸ்தீனத்தின் காசா பகுதியைச் சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதையடுத்து, கடந்த ஓராண்டாக காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு நடுவே, ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக லெபனானின் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் வடக்கு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஹிஸ்புல்லா அமைப்புக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. இதையடுத்து, கடந்த சில வாரங்களாக இஸ்ரேல் ராணுவம் ஹிஸ்புல்லா தீவிரவாதிகளை குறிவைத்து வான்வழி தாக்குதலை நடத்தியது. கடந்த 27-ம் தேதி லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்தார். இந்நிலையில், இஸ்ரேல் ராணுவம் தெற்கு லெபனான் எல்லைப் பகுதியில் தரைவழித் தாக்குதலிலும் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வரும் கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விடுத்துள்ள வீடியோ செய்தியில், “ஈரான் கட்டமைத்த பயங்கரவாதத்தின் அச்சு சரிந்து வருகிறது. ஹெஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். பின்னர் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மோஷன், ஏற்கெனவே இஸ்மாயில் ஹனியாவும் கொல்லப்பட்டார். ஹமாஸ் ராணுவத் தலைவர் முகமது டெய்ஃபை வீழ்த்தினொம். ஈரான் தனது சொந்த மக்கள் மீதும், அண்டை நாடுகளான ஈராக், சிரியா, லெபனான், ஏமன் மக்கள் மீது செலுத்தும் பயங்கரவாதத்தின் படியும் முழுமையாக விரைவில் முடிவுக்கு வரும். ஈரான் தலைமையிலான தீவிரவாத அச்சுறுத்தலை முடிவுக்குக் கொண்டுவந்த மாறுபட்ட எதிர்காலத்தை உருவாக்க எங்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பு கிட்டியுள்ளது. யஹ்யா சின்வர் கொல்லப்பட்டதன் மூலம் இந்தப் போரில் மிக முக்கிய இலக்கை நாங்கள் எட்டியுள்ளோம். மிகப் பெரிய யூத இனப் படுகொலைக்குப் பின்னர் எங்கள் மக்களின் மீது மோசமாக தாக்குதலை நடத்தியவரின் கணக்கைத் தீர்த்துள்ளோம். இருப்பினும் ஹமாஸ் மற்றும் ஈரான் ஏவிவிட்டுள்ள பயங்கரவாதிகளுக்கு எதிரான எங்களின் போர் இன்னும் முடிவடையவில்லை. கடினமான நாட்கள் இன்னும் இருக்கின்றன. இறுதியில் நாங்கள் நிச்சயம் வெல்வோம்” என்று கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/196565
  24. தமிழ் அரசியல் பரப்பில் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் - மணிவண்ணன் தமிழ் அரசியல் பரப்பில் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ். தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் கூட்டணியினர் நல்லை ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ். மறைமாவட்ட ஆயர் ஆகியோரை நேரில் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டனர். தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் முதன்மை வேட்பாளரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் சக வேட்பாளர்கள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (18) காலை நல்லை ஆதீனத்துக்கு சென்று, குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து, ஆயர் இல்லத்துக்கு சென்றவர்கள் ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கியதுடன், கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர். இந்த சந்திப்பின் பின்னர், மணிவண்ணன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்து, ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டோம். அவருடனான கலந்துரையாடலின்போது, அவர் தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றிவிட்டதாகவும், அவர்களின் போக்குகள் மாறிவிட்டதாகவும் எம்மிடம் குறைபட்டுக்கொண்டார். மேலும், தமிழ் அரசியல் பரப்பில் மாற்றம் ஒன்று நிகழ வேண்டும் என தான் விரும்புவதாக சொன்னார். அவரை தொடர்ந்து யாழ். ஆயரை சந்தித்து ஆசீர்வாதம் வாங்கினோம். அவரும் முற்று முழுதான மாற்றத்தையே விரும்புகிறார். நாமும் அதனை வரவேற்று , எமது வேட்பாளர்கள் தொடர்பிலும் அவர்களின் தகைமைகள், ஆளுமைகள் தொடர்பிலும் எடுத்துக்கூறி இருந்தோம். மத தலைவர்கள் போன்று தமிழ் மக்களும் மாற்றத்தையே விரும்புகிறார்கள். அதனால் எமக்கு வாக்களித்து மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என மணிவண்ணன் தெரிவித்தார். மேலும், மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் இன்றைய தினம் முதல் எமது கட்சியினர் பிரசாரப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/196597

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.