Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. ஹமாஸ் மீண்டும் பீனிக்ஸ் போல சாம்பலில் இருந்து உயிர்த்தெழும் - சிரேஸ்ட தலைவர் ஹமாஸ் அமைப்பு பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் என நாடு கடந்து வாழும் அதன் தலைவர்களில் ஒருவரான காலிட் மெசெல் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளார். இஸ்ரேலுடனான கடந்த ஒரு வருடகால யுத்தத்தின் போது பலத்த இழப்புகளை ஹமாஸ் சந்தித்துள்ள போதிலும் அந்த அமைப்பு புதிய போராளிகளை சேர்த்து வருகின்றது ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது என தெரிவித்துள்ள அவர் ஹமாஸ் அமைப்பு பீனிக்ஸ் பறவை போல சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும் என குறிப்பிட்டுள்ளார். இஸ்ரேலுடனான கடந்த ஒரு வருட மோதலை 76 வருடகால வரலாற்றுடன் பாலஸ்தீனியர்கள் நக்பா என அழைப்பதுடன் தொடர்புபடுத்தி ஹமாஸின் நாடு கடந்து வாழும் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார். 1948 இல் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு காரணமான யுத்தத்தினால் பாலஸ்தீனியர்கள் பெருமளவில் இடம்பெயர நேர்ந்ததை நக்பா என பாலஸ்தீனியர்கள் அழைக்கின்றனர். பாலஸ்தீன வரலாறு பல சுற்றுக்களை கொண்டது என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் தியாகிகளை இழந்த எங்கள் இராணுவ திறமையின் ஒரு பகுதியை இழந்த தருணங்களை எதிர்கொண்டுள்ளோம், ஆனால் பின்னர் பீனிக்ஸ் போல பாலஸ்தீனியர்களின் உணர்வுகள் மீளஉயிர்த்தெழும் என அவர் தெரிவித்துள்ளார். 1996 முதல் 2017 வரை ஹமாஸ் அமைப்பின் தலைவராக விளங்கிய மெசாலை விசஊசியை பயன்படுத்தி கொலை செய்வதற்கு 1997 இல் இஸ்ரேல் முயன்றமை குறிப்பிடத்தக்கது. நெட்டன்யாகு அரசாங்கம் அதிகாரத்திலிருக்கும் வரை சமாதானத்திற்கான வாய்ப்புகள் இல்லை என தெரிவித்துள்ள அவர், இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு காணப்படும்வரை மத்திய கிழக்கு எந்த நேரத்திலும் வெடிக்ககூடிய குண்டு போல காணப்படும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195745
  2. நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு தேர்தல் களத்தில் போட்டியிடும் பிரதமர் இலங்கையின் பிரதமர் ஹரினி அமரசூரிய எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார். இதற்கான வேட்பு மனுவில் அவர் நேற்று உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டுள்ளார். இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கவுள்ளனர். இதற்கிடையில் புதிய அரசாங்கத்துக்கு போட்டியாக விளங்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதமர் வேட்பாளராக சஜித் பிரேமதாசவும் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். எனினும் எந்த மாவட்டத்தில் அவர் போட்டியிடுகிறார் என்பது இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை. https://thinakkural.lk/article/310459
  3. 09 OCT, 2024 | 09:38 AM (இராஜதுரை ஹஷான்) புதிய அரசியலமைப்பு உருவாக்கம் அவசியமற்றது. பொதுத்தேர்தலில் ஜனாதிபதிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க வேண்டாம்.113 ஆசனங்களை வழங்கினால் போதும் என்பதை மக்களிடம் வலியுறுத்துகிறேன் என மவ்பிம ஜனதா கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். கொழும்பில் உள்ள மவ்பிம ஜனதா கட்சி காரியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, மவ்பிம ஜனதா கட்சியின் சார்பில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் வேட்பாளர்களை களமிறக்குவோம். பாராளுமன்றத்தில் பிரதான அரசியல் கட்சியாக இடம் பிடிப்போம். ஊழலுக்கு எதிர்ப்பதாக குறிப்பிடுபவர்கள் பேச்சளவில் மாத்திரமே செயற்பட்டுள்ளார்கள். நாங்கள் செயலளவில் ஊழலை எதிர்த்துள்ளேன். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியில் இடம்பெற்ற ஊழல் மோசடியை சுட்டிக்காட்டியதால் அமைச்சு பதவியில் இருந்து நீக்கப்பட்டேன். என்னை அமைச்சு பதவியில் இருந்த ஊழல்வாதிகளை பாதுகாத்தமை அவர் ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைவதற்கு ஒரு காரணியாகும். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் வழங்க கூடாது.113 ஆசனங்களை மாத்திரம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதாக குறிப்பிடப்படுகிறது. புதிய அரசியலமைப்பை உருவாக்குவது அவசியமற்றது. நடைமுறையில் உள்ள அரசியலமைப்பை திருத்தம் செய்ய வேண்டுமே தவிர அடிப்படைவாத நோக்கமுடைய டயஸ்போராக்களின் நோக்கத்துக்கு அமைய புதிய அரசியலமைப்பை இயற்ற கூடாது. தேசியத்தை முன்னிலைப்படுத்தியே செயற்படுவோம். எக்காரணிகளுக்காகவும் தேசியத்தையும், தேசிய உற்பத்திகளையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தேசியத்தை பாதுகாப்பதற்கு பலமான எதிர்க்கட்சியை மக்கள் தோற்றுவிக்க வேண்டும். அப்போது தான் அரசாங்கம் சிறந்த முறையில் செயற்படும் என்றார். https://www.virakesari.lk/article/195802
  4. இலங்கையில் ஒன்லைன் வங்கி பயனாளர்களுக்கு அவசர எச்சரிக்கை இலங்கையில் ஒன்லைன் ஊடாக மேற்கொள்ளப்படும் நிதி மோசடிகள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்து வருவதாக கணினி அவசர பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் நிதி மோசடிகள் தொடர்பில் 340 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக கணினி அவசர பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் வரை, இணையம் தொடர்பாக 7,210 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை சமூக ஊடகங்கள் மூலம் இடம்பெற்றவையாகும். ஒன்லைன் மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பெறப்பட்ட முறைப்பாடுகளில் 20 சதவீதம் ஒன்லைன் சம்பவங்களுடன் நேரடியாக தொடர்புடையவையாகும். இவற்றில், ஒன்லைன் வங்கியில் ஈடுபடும் பயனர்களைக் குறிவைத்து இணைய மோசடிகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது. பெரும்பாலான நேரங்களில், ஒன்லைன் வங்கி பயனர்கள் OTP எண்ணின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துவதில்லை, இது வங்கிக் கணக்கை அணுகுவதற்கு பயன்படுத்தப்படும் கடவுச்சொல் மற்றும் தற்காலிக கடவுச்சொல் ஆகும். கடந்த காலங்களில் ஒன்லைன் வங்கிச் சேவை தொடர்பான மோசடிகள் தொடர்பான 340 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. வங்கிகள் தொடர்பான இணையதளத்தை சரியாக அடையாளம் காணாத பலர் இவ்வாறான மோசடியில் சிக்கியுள்ளதாக கணினி அவசர பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310455
  5. எம்.மனோசித்ரா மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. உலக சந்தையில் விலை அதிகரித்தால் அதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கையிலும் எரிபொருள் விலைகளில் மாற்றங்கள் ஏற்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழலால் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. இவ்வாறான போர் சூழல் ஏற்படும் போது எரிபொருட்களின் விலைகள் அதிகரிப்பது வழமையானதாகும். எனவே உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரித்தால், அது இலங்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால் தற்போது அவ்வாறு எவ்வித பாதிப்புக்களும் ஏற்படவில்லை. இதற்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட எரிபொருள் தான் தற்போது உபயோகப்படுத்தப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்துக்கு அவற்றை உபயோகிக்க முடியும். அவற்றின் சராரியான விலைகளே தற்போது நடைமுறையிலுள்ளன. போர் சூழல் உக்கிரமடைந்து விலைகள் அதிகரித்தால், அவற்றுக்கேற்ப இலங்கையிலும் எரிபொருட்களின் விலைகள் தீர்மானிக்கப்படும். தற்போது எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை என்றார். https://www.virakesari.lk/article/195767
  6. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் யாழ் மாவட்டத்தில் தமிழ் மக்கள் கூட்டணியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரம் வெளியாகியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சி.வி. விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணிக்குள் அண்மையில் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. வி.மணிவண்ணனுக்கு முன்னுரிமையளிப்பதாகத் தெரிவித்து அந்தக் கட்சியின் மூத்தவர்கள் பலர் அதிருப்தியடைந்து, கட்சி செயற்பாட்டிலிருந்து ஒதுங்கி விட்டனர். இதைத் தொடர்ந்து வி.மணிவண்ணன் தரப்பே வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது. தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் பட்டியலில் வி.மணிவண்ணன், வ.பார்த்தீபன், செல்டன் (யாழ் மத்திய கல்லூரி கிரிக்கெட் பயிற்சியாளர்), சிற்பரன், ஜெனிட்டன் (கோப்பாய் – விளையாட்டு உத்தியோகத்தர்), உமாகரன் இராசையா, மிதிலைச்செல்வி (முன்னாள் தமிழரசுக் கட்சி மகளிர் அணி உறுப்பினர்), கோகிலவாணி (கிளிநொச்சி), சாவகச்சேரியைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றின் பிராந்திய முகாமையாளர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். https://thinakkural.lk/article/310457
  7. (எம்.மனோசித்ரா) உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் குறித்த விசாரணைகள் உரிய முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வரலாற்று தவறுகள் இனி இடம்பெறாது. தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை வழங்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடந்த அரசாங்கங்களைப் போன்று இந்த விவகாரம் குறித்த விசாரணைகளை காணாமலாக்குவதற்கோ அல்லது மறைப்பதற்கோ எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குவதாகவும் அமைச்சரவை பேச்சாளர் குறிப்பிட்டார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று செவ்வாய்கிழமை (08) இடம்பெற்ற போது இதனைத் தெவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் புதிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையிலுள்ள பக்கங்கள் எவ்வாறு நீக்கப்பட்டன என்பது குறித்தும் ஆராயப்படவுள்ளது. முன்னாள் சட்ட ஆய்வாளரின் தலையீட்டுடன் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நாட்டு மக்களுக்கு எவ்வித அநீதியும் இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்படமாட்டாது. அதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணகளின் ஊடாக ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அறிக்கையிலுள்ள பக்கங்கள் நீக்கப்பட்டனவா? என்பதை வெளிக் கொண்டு வருவோம். இரண்டாவதாக முன்னெடுக்கப்பட்ட விசாரணை அறிக்கை யாரிமுள்ளது என்பது தனிப்பட்ட ரீதியில் எனக்குத் தெரியாது. தற்போதைய அரசாங்கத்தின் மீது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க வாய்ப்பில்லை. அரசாங்கம் இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை. ஜனாதிபதி மாத்திரமே தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார். எனினும் பதவியேற்று குறுகிய காலத்துக்குள் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்திருக்கின்றோம். வரலாற்றில் இடம்பெற்ற தவறுகள் புதிய ஆட்சியின் கீழ் ஒருபோதும் இடம்பெறாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகளை சட்டத்தின் முன்னிறுத்தி, தண்டனை வழங்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் ஸ்திரமாகவுள்ளோம். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கடந்த அரசாங்கங்களைப் போன்று அவற்றை காணாமலாக்குவதற்கோ அல்லது மறைப்பதற்கோ எமது அரசாங்கம் நடவடிக்கை எடுக்காது என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குகின்றோம். அரச புலனாய்வு பிரிவின் பணிப்பாளராக பதவி வகித்த மேஜர் ஜெனரல் சுரேஸ் சலே ஓய்வு பெற்றதையடுத்து, அந்த பதவிக்கு பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக குமார நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவியில் மாற்றம் ஏற்பட்டாலும், விசாரணைகளுடன் தொடர்புடைய ஆவணங்கள் அவ்வாறே இருக்க வேண்டும். ஓய்வு பெற்றுச் செல்லும் போது அவற்றை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியாது. எனவே விசாரணைகள் தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் காணாமல் போயிருந்தாலும், அதற்கு பதிலளிப்பதற்கு அவர் பொறுப்புடையவராவார் என்றார். https://www.virakesari.lk/article/195766
  8. என்னண்ணை நீங்க மருந்து போத்தலை குலுக்கிற மாதிரி சொல்கிறீங்க!
  9. அண்ணை, 1 கோடி செலவழிக்கவேணுமாம் தேர்தலுக்கு! நேற்று பாடசாலைக்கருகில் சந்தித்த தம்பி சொன்னான். ஒருத்தர் 30 லட்சம் வைச்சுக்கொண்டு என்ன செய்ய என்று கையை பிசைகிறாராம்!
  10. முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் உள்ள இளம் ஒளி விளையாட்டு மைதானத்தில் விடுதலைப் புலிகளால் புதைக்கப்பட்ட ஆயுதங்கள் இருப்பதாக தெரிவித்து தற்போது அந்த இடத்திலே அகழ்வு பணி இடம்பெற்று வருகிறது. கொழும்பு நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த அகழ்வுப்பணியானது கொழும்பில் இருந்து வருகைதந்த பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195803
  11. படக்குறிப்பு, காஸா - இஸ்ரேல் இடையேயான மோதல் ஆரம்பித்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், பால் ஆடம்ஸ் பதவி, ராஜ்ஜீய விவகாரங்களுக்கான செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வரலாற்றில் மிகவும் மோசமான தாக்குதலின் தாக்கத்தில் இருந்து இஸ்ரேல் மீண்டு வந்து கொண்டிருந்த அதே நேரத்தில், காஸா கடுமையான வெடிகுண்டு தாக்குதல்களுக்கு ஆளானது. பாலத்தீன - இஸ்ரேல் விவகாரத்தில் இந்த மோதல் ஒரு திருப்புமுனையாக கருதப்பட்டது. பல ஆண்டுகளாக நம்முடைய திரைகளில் இருந்து விலகியே இருந்த இஸ்ரேல் - பாலத்தீன மோதல்கள் கடந்த ஆண்டு மீண்டும் நம் பார்வைக்கு வந்தன. இந்த மோதல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் இந்த தாக்குதல்கள் துவங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்புதான், "இரண்டு தசாப்தங்களாக இருந்த சூழலோடு ஒப்பிடுகையில் மத்திய கிழக்கு பிராந்தியம் தற்போது மிகவும் அமைதியாக இருக்கிறது," என்று கூறியிருந்தார். தற்போது ஓர் ஆண்டாக அந்த பிராந்தியம் எரிந்து கொண்டிருக்கிறது. 41 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் இறந்துள்ளனர். 20 லட்சத்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர். மேற்கு கரையில் மேலும் 600 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். லெபனானில் பத்து லட்சம் பேர் புலம் பெயர்ந்துள்ளனர். அங்கு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மோதலின் முதல் நாளில் 1200 இஸ்ரேலியர்கள் இறந்தனர். அதன் பிறகு 350க்கும் மேற்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரர்கள் இறந்து போனார்கள். காஸாவின் எல்லையோரமும், பதட்டத்துடன் காணப்படும் லெபனான் நாட்டு எல்லையை ஒட்டிய வடக்கு இஸ்ரேலில் வாழ்ந்து வந்த இரண்டு லட்சம் இஸ்ரேலியர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். ஹெஸ்பொலாவின் வான்வழி தாக்குதலில் 50க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களும் பொதுமக்களும் உயிரிழந்துள்ளனர். முற்றுப்பெறாத மோதல்கள் மற்ற நாடுகளும் மத்திய கிழக்கு முழுவதும் நடந்து வரும் இந்த மோதலில் இணைந்துள்ளன. இந்த மோதல் அதிகரிப்பதை தடுக்க அமெரிக்கா மேற்கொண்ட விடாப்பிடியான முயற்சிகள் அனைத்து ஒன்றும் இல்லாமல் போனது. அதிபர் சந்திப்புகள், எண்ணிக்கையற்ற ராஜ்ஜீய அதிகாரிகளின் பேச்சுவார்த்தைகள், பெரும் அளவிலான ராணுவ ஆயுதங்களை அனுப்புதல் என பல நடவடிக்கைகள் இதில் அடங்கும். இராக், ஏமென் போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தும் ராக்கெட்டுகள் ஏவப்படுகின்றன. எதிர்பார்க்கப்பட்ட வகையில் இஸ்ரேலும் இரானும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. அமெரிக்காவின் முயற்சிகள் செல்வாக்கற்றதாக காணப்பட்டது. மோதல்கள் விரிவடைந்து வருகின்ற சூழலில் அதன் ஆரம்பப்புள்ளி முற்றிலுமாக பார்வையில் இருந்து மறைய துவங்கிவிட்டது. ஊடகங்கள் அனைத்தும் மத்திய கிழக்கில் முழுமையான போர் சூழல் உருவாகும் என்ற எதிர்பார்ப்பில் இருந்த சூழலில், அக்டோபர் 7க்கு முன்பும் சரி பின்பும் சரி, காஸா மக்களின் வாழ்க்கை மறந்து போன ஒன்றாக மாறிவிட்டது. தங்களின் வாழ்க்கையையே தலைகீழாக புரட்டிப் போட்ட அந்த நாளில் பாதிக்கப்பட்ட சில இஸ்ரேலியர்களும் கூட ஒதுக்கப்பட்டதாக உணர்கின்றனர். "நாங்கள் புறந்தள்ளப்பட்டோம்," என்று கூறுகிறார் பணைய கைதியாக பிடித்து வைக்கப்பட்டிருக்கும் நிம்ரோத் கோஹெனின் தந்தை யெஹுதா கோஹென். கடந்த வாரம் இஸ்ரேலின் கன் செய்திகளில் பேசிய அவர், "இந்த அர்த்தமற்ற போரில் அனைத்து எதிரிகளையும் நம் பக்கம் திருப்பியதற்கு நெதன்யாகுதான் காரணம்," என்று கூறினார். கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த நிகழ்வு மிகவும் சிறிய நிகழ்வுதான் என்று உணர வைக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் வெற்றியுடன் செய்து கொண்டிருக்கிறார் என்றும் யெஹுதா கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 7 தாக்குதல்- முதலாமாண்டு நினைவு தினத்தை அனுசரித்த இஸ்ரேலியர்கள் நெதன்யாகுவின் நிலைப்பாடு என்ன? அனைத்து இஸ்ரேலிய மக்களும் யெஹுதா கோஹெனின் கருத்திற்கு உடன்படவில்லை. இஸ்ரேலின் எதிரிகள், யூத நாட்டை அழிப்பதற்கான துவக்கமாகவே ஹமாஸின் தாக்குதலை பார்க்கின்றனர். பேஜர்கள் வெடிப்பு, திட்டமிடப்பட்ட கொலைகள், தொலைதூரத்திற்கு சென்று இலக்கை தாக்கும் வான்வழி தாக்குதல்கள், தங்களின் பெருமையாக இஸ்ரேல் கருதும் உளவு பிரிவு மூலமான தாக்குதல்கள் என்று இஸ்ரேல் பதில் தாக்குதல்கள் நடத்தி, கடந்த ஆண்டு இழந்த தன்னம்பிக்கையை தற்போது மீட்டுள்ளது. கடந்த வாரம் பேசிய நெதன்யாகு, மத்திய கிழக்கில் இஸ்ரேல் அணுக முடியாத பகுதி என்ற ஒன்று இல்லை என்று நம்பிக்கையுடன் கூறினார். அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு பிரதமருக்கான தேர்தல் கருத்துக்கணிப்பில் மோசமான இடத்தில் இருந்தார் நெதன்யாகு. தற்போது அதில் முன்னேறி வருவதை அவரால் காண முடிகிறது. மிகவும் தைரியமான முடிவுகளை எடுக்கும் ஒரு உரிமமாக அது மாறுமா என்ற கேள்வியும் நீடிக்கிறது. ஆனால் இவை அனைத்தும் எதை நோக்கி செல்கிறது? ''எப்போது இசை முடிய போகிறது? எங்கே அனைவரும் நிற்பார்கள் என்று யாருக்கும் தெரியவில்லை'' என்று கூறுகிறார் - பிபிசியின் டுடே பாட்காஸ்ட் நிகழ்வில் பேசிய இரானுக்கான முன்னாள் பிரிட்டன் தூதர் சிமோன் காஸ். மோதலை நிறுத்தும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. அமெரிக்காவின் மத்திய கட்டளை தளபதி (Centcom) மைக்கேல் குரில்லா இஸ்ரேலுக்கு வருகை புரிந்தது ராஜ்ஜீய தீர்வுகளை ஆய்வதற்கான ஒரு வருகை போல் இல்லாமல் நெருக்கடியை சமாளிக்கும் முயற்சியாகவே காணப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் நான்கு வாரங்களில் நடைபெற உள்ளது. மத்திய கிழக்கு முன்பு எப்போதும் இல்லாத வகையில் சிக்கலானதாக இருக்கின்ற இத்தகைய சூழலில் அமெரிக்கா எந்தவிதமான புதிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஏதுவான நேரம் இது அல்ல. தற்போதைக்கு, உடனடி சவாலானது இந்த மோதல் மிகப்பெரிய பிராந்திய மோதலாக உருமாறுவதை தடுப்பது. கடந்த வாரம் இரான் நடத்திய தாக்குதல் உட்பட அனைத்திற்கும் பதிலடி தரும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாக அதன் கூட்டாளி நாடுகள் கருதுகின்றன. இரானின் அந்த தாக்குதலில் இஸ்ரேலியர்கள் யாரும் கொல்லப்படவில்லை. இரான் இஸ்ரேலின் ராணுவம் மற்றும் உளவு அமைப்புகளை இலக்காக வைத்தே தாக்குதல் நடத்தியது. இருப்பினும் கடுமையான பதிலடி வழங்குவோம் என்று நெதன்யாகு உறுதி அளித்தார். பல வாரங்களாக நடைபெற்ற மோதல்களில் அற்புதமான உத்திகள் மூலம் வெற்றி பெற்ற பிறகு, இஸ்ரேலின் பிரதமர் பல பெரிய கனவுகளை காண துவங்கியுள்ளார். இரானிய மக்களுக்கு அவர் நேரடியாக வெளியிட்ட செய்தி ஒன்றில், தெஹ்ரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட இருப்பதாக மறைமுகமாக கூறினார். "எப்போது இரான் விடுதலை அடையும்? மக்கள் நினைக்கும் காலத்திற்கு முன்பே அது நிகழ்ந்துவிடும். அனைத்தும் மாற்றமடையும்," என்று அவர் கூறினார். இராக்கில் 2003-ஆம் ஆண்டு அமெரிக்க போர் தொடுத்த போது அமெரிக்காவின் நவீன பழமைவாதிகள் வெளியிட்ட கூற்றையே நெதன்யாகு எதிரொலிப்பதாக சிலர் கருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 7 தாக்குதலுக்கு பிறகு இருபது லட்சம் காஸா மக்கள் புலம் பெயர்ந்துள்ளனர் இஸ்ரேல் இல்லாத உலகத்தை இரானிய அரசு கனவு காணலாம். ஆனால் 'எதிர்ப்பின் அச்சு' என்று அழைக்கப்படுகின்றன இரானின் ஆதரவு பெற்ற அமைப்புகளான ஹெஸ்பொலாவும் ஹமாஸும் ஒடுக்கப்படும் நிலையில், இரான் அந்த பிராந்தியத்தில் இருக்கும் ஒரே ஒரு வல்லரசு நாடான இஸ்ரேலை போரில் எதிர்கொள்ள முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளது. இரான் ஏற்படுத்தியுள்ள அச்சத்தை இஸ்ரேல் மிக விரைவாக கடந்து சென்றுவிட இயலும். சமீபத்திய வெற்றிகள் அதற்கு நம்பிக்கை அளித்தாலும் தனியாக அதனை செய்ய இயலாது என்பதையும் இஸ்ரேல் உணர்ந்தே இருக்கிறது. ஆட்சி மாற்றம் என்பது ஜோ பைடனின் நோக்கத்தில் இல்லை. அவரது துணை அதிபரான கமலா ஹாரிஸின் நோக்கத்திலும் இல்லை. டொனால்ட் டிரம்பைப் பொறுத்தவரை ஒரே ஒருமுறை தான் இரானை தாக்கும் எண்ணம் அவருக்கு இருந்தது. 2019-ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை தெஹ்ரான் சுட்டு வீழ்த்திய பிறகு அந்த முடிவை எடுத்தார். இருப்பினும் இறுதி நொடியில் அந்த எண்ணத்தில் இருந்து பின்வாங்கினார். ஆனால், அதற்கடுத்த 7 மாதத்தில் இரானின் தளபதி காஸிம் சுலைமானியை கொல்ல உத்தரவு பிறப்பித்தார். ஒரு வருடத்திற்கு முன்பு, மத்திய கிழக்கு சில தசாப்தங்களில் காணாத மிகப்பெரிய பேரழிவை சந்திக்க இருக்கிறது என்பதை வெகு சிலரே நினைத்து பார்த்திருப்பார்கள். காஸாவில் மோதல் துவங்கி இரண்டாம் ஆண்டை அடியெடுத்து வைத்துள்ள நிலையில் அனைவரும், போர் நிறுத்தத்திற்கு பிறகோ, அல்லது பரந்த போரில் மொத்தமாக மூழ்கிய பிறகோ காஸாவை மீண்டும் கட்டமைப்பது எப்படி என்றும், ஆள்வது எப்படி என்றும் ஆலோசித்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு கட்டத்தில், எப்போது ஹமாஸ், ஹெஸ்பொலாவை போதுமான அளவிற்கு ஒழித்துவிட்டோம் என்று இஸ்ரேல் நினைக்கிறதோ, இது இந்த பிராந்தியத்தை மேலும் நெருக்கடிக்குள் கொண்டு செல்லாது என்று இஸ்ரேலும் இரானும் கூறுகிறதோ, அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுக்கு வந்த பிறகோ, ராஜ்ஜீய ரீதியிலான பேச்சுவார்த்தைக்கு மற்றுமொரு வாய்ப்பு கிடைக்கலாம். அதுவரை, இந்த மோதலை நிறுத்த நீண்ட காலம் ஆகும் என்றே தோன்றுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgn24z6ek1o
  12. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஒக்டோபர் 5ஆம் திகதி இரவு சுமார் 10.45 மணியளவில், ஈரானில்(iran) ரிக்டர் அளவுகோலில் 4.6 என்ற அளவில் வலுவான நிலநடுக்கம்(earth quake) ஏற்பட்டது. நிலநடுக்கத்தின் மையம் ஈரானின் செம்னான் மாகாணத்தில் உள்ள அரடன் நகருக்கு அருகில் 10 கி.மீ தொலைவில் நிலத்தடியில் பதிவாகியுள்ளது.நிலநடுக்கத்தின் அளவு ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து 110 கிலோமீட்டர் தொலைவில் உணரப்பட்டது. இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை ஈரானை உலுக்கிய நிலநடுக்கத்திற்கு ஈரான் புரட்சிப் படை இரகசியமாக பூமிக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்தியதே காரணம் என இஸ்ரேல் சந்தேகம் வெளியிட்டுள்ளது. மேலும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நோக்கில் ஈரான் அணு ஆயுத சோதனை நடத்தி வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஈரானின் அணுசக்தி திட்டத்தால் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. நாட்டின் எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வாக ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை தொடங்கியுள்ளது. ஈரான் மீதான இஸ்ரேலின் குற்றச்சாட்டு இருப்பினும், ஈரான் அணு ஆயுதங்களை இரகசியமாக தயாரித்து வருவதாக இஸ்ரேல்(israel) குற்றம் சாட்டுகிறது. இதற்கிடையில், ஈரான் சமீபத்தில் இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசியதற்கு பதிலடியாக ஈரானைத் தாக்கி, ஈரானிய ஆட்சியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த நடவடிக்கை எடுப்பதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/iran-earthquakes-caused-by-nuclear-tests-1728384521#google_vignette
  13. பாராளுமன்றத் தேர்தல்; வேட்பாளர்களைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்பை பெண்களுக்கு வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கபே அமைப்பு கோரிக்கை பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் மூத்த அரசியல்வாதிகள் இந்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளனர். எனவே, ஒவ்வொரு அரசியல் கட்சியிலிருந்தும் வேட்புமனுக்களை கையளிக்கும் போது பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கணிசமான இடத்தை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சிலர் மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் தமது கடமையை சரியாக செய்யவில்லை என்பதை அவதானித்துள்ளோம். மேலும், மக்கள் அந்தந்த கட்சியால் வேட்புமணுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மக்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கின்றனர். எனவே, அனைத்து அரசியல் கட்சிகளும் தமது கட்சி பிரதிநிதிகளை தெரிவு செய்யும் போது பொதுமக்களால் குற்றம் சுமத்தப்பட்டவர்களை தெரிவு செய்யாமல் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் கணிசமான வாய்ப்பை வழங்குவதற்கு முன்வர வேண்டுமென கபே அமைப்பின் நிர்வாக பணிப்பாளர் சுரங்கி ஆரியவன்ச அவர்கள் கேட்டுக்கொள்கிறார். ஊடகங்களுக்கு நேற்று திங்கட்கிழமை (07) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்தும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இந்நாட்டில் பெரும்பான்மையான வாக்காளர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர். அந்த வகையில் குறிப்பாக அவ்வீதம் நீண்டகாலமாக 50% முதல் 52% வரையில் காணப்படுகிறது. ஆனால், இந்நாட்டு வரலாற்றில் பெண்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் 6% வீதத்தினை விட அதிகரிக்காமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதன் காரணமாக ஜனநாயகத்தை மதிக்கும் அனைத்து அரசியல் கட்சிகளும் இம்முறை பாராளுமன்றத்தேர்தலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டுமென கபே அமைப்பு கேட்டுக்கொள்கின்றது. https://www.virakesari.lk/article/195794
  14. அண்ணை, தேசியப்பட்டியல் மூலம் நேரடி தேர்தலில் போட்டியிட முடியாத மாற்றுத்திறனாளிகள், பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களிற்கு மாவட்டத்திற்கு ஒரு பிரதிநிதித்துவம் நாடாளுமன்றில் வழங்கப்பட வேண்டும்.
  15. ஹமாஸ் புதிய தலைவர் சின்வார் உயிருடன்....! கசிந்துள்ள தகவல் ஹமாஸ் (Hamas) அமைப்பின் புதிய தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar) உயிருடன் இருப்பதாக இஸ்ரேல் ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூலை மாதம் ஈரானுக்கு சென்றிருந்தபோது இஸ்ரேல் (Israel) தாக்குதலில் கொல்லப்பட்டார். இதையடுத்து ஹமாஸின் புதிய தலைவராக பொறுப்பேற்ற யாஹ்யா சின்வார் கடந்த மாதம் 21 ஆம் திகதி இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. இஸ்ரேலிய ஊடகங்கள் இந்நிலையில், ஹமாஸ் தலைவர் சின்வார் உயிருடன் இருப்பதாகவும், அவர் கத்தார் அதிகாரிகளுடன் இரகசியமாக பேசியதாவும் இஸ்ரேலிய ஊடகம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் தலைவர் கத்தார் மத்தியஸ்தர்களுடன் தொடர்பில் உள்ளார் என்று அல் - அரேபியா மற்றும் டெய்லி மெயில் ஊடகங்களை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்கள் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் ராணுவம் இதேவேளை, லெபனானின்(lebanon) பெய்ரூட் பகுதியில் நேற்று(07) தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் மிக முக்கிய தளபதி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சுஹைல் ஹுசைன் ஹுசைனி என்ற தளபதியே கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இவர் ஈரானுக்கும்(iran) ஹிஸ்புல்லாவுக்கும் இடையே ஆயுதங்களைக் கொண்டு செல்வதில் "முக்கியமான" பங்கு வகித்ததாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை குறிப்பிட்டது. https://ibctamil.com/article/hamas-news-leader-yahya-sinwar-alive-1728372450?itm_source=parsely-api
  16. பொதுத்தேர்தல்; தபால்மூல வாக்களிப்பு விண்ணப்பங்களுக்கான கால அவகாசம் நீடிப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தபால்மூலம் வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால அவகாசம் ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணிக்கு முதல் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில், தபால்மூலம் வாக்களிக்கவுள்ள வாக்காளர்களின் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலவகாசம் ஒக்டோபர் 10 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195795
  17. பதில் பொலிஸ்மா அதிபர் நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் சிரேஸ்ட பிரதிபொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கும் ஜனாதிபதியின் முடிவிற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்க கடந்த மாதம் 27ம் திகதி அரசியலமைப்பின் கீழ் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை பதில் பொலிஸ்மா அதிபராக நியமித்தார். அன்றைய தினமே ஜனாதிபதியின் செயலாளர் நியமனக்கடிதத்தை வழங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று அரசியலமைப்பு பேரவை இந்த நியமனத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/195793
  18. ட்ரம்ப் வெற்றி பெறவில்லை என்றால்… ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறவில்லை என்றால், அதுவே அவர் சந்திக்கும் கடைசித் தேர்தல்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், குடியரசுக் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால் பல காரணங்களால் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகினார். பின்னர் ஜனநாயக கட்சி சார்பில், இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. கமலா ஹாரிஸ் போட்டியில் நுழைந்ததிலிருந்து அங்கு தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியது. ஜோ பைடன் போட்டியில் இருந்தபோது, ட்ரம்ப்தான் வெற்றிப் பெறுவார் என கூறப்பட்ட நிலையில், கமலா ஹாரிஸ் வந்தவுடன் ட்ரம்புக்கு பின்னடைவு ஏற்பட்டதாக அமெரிக்க அரசியல் கருத்து கணிப்பாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்தத் தேர்தலில் ட்ரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இருவருக்கும் பல்வேறு பிரபலங்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். அந்த வகையில் தொடக்கத்திலிருந்தே முன்னாள் அதிபர் ட்ரம்புக்கு பிரபல தொழிலதிபரும், எக்ஸின் உரிமையாளருமான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்தின், முன்னாள் செய்தி தொகுப்பாளர் டக்கர் கார்ல்சனுடனான எலான் மஸ்க்கின் நேர்காணல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியை தொடர்ந்து இந்த பேட்டி வெளிவந்துள்ளது. இதில் எலான் மஸ்க் பேசியதாவது; இந்தத் தேர்தலில் ட்ரம்ப் வெற்றிபெறவில்லை என்றால், அதுவே அவர் சந்திக்கும் கடைசித் தேர்தல் என்பது எனது கருத்து. சட்டவிரோதமானவர்கள் அல்லது புலம்பெயர்ந்தவர்கள் ஒரு சில முக்கிய மாநிலங்களுக்கு வேண்டுமென்றே கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கு அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டால் அவர்கள் ஜனநாயக கட்சிக்கு வாக்களிப்பர். இவ்வாறு ஸ்விங் ஸ்டேட்களில் ஆயிரக்கணக்கான மக்களை வைத்தால் வைத்தால் என்ன ஆகும்?. எனது கணிப்பு என்னவென்றால், அடுத்த 4 ஆண்டுகளுக்கு ஜனநாயக கட்சியினர் இருந்தால், சட்டவிரோதமானவை அனைத்தையும் சட்டபூர்வமானதாக மாற்றுவர்.” என எலான் மஸ்க் தெரிவித்தார். அமெரிக்காவைப் பொறுத்தவரை ஸ்விங் ஸ்டேட்களில் யார் அதிக வாக்குகளைப் பெறுகிறார்களோ அவர்கள் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது. அந்த வகையில் முக்கியமான ஸ்விங் மாகாணங்களாக இருக்கும் விஸ்கான்சின், பென்சில்வேனியா மற்றும் மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் ட்ரம்பை பின்னுக்குத் தள்ளி கமலா ஹாரிஸ் கருத்துக் கணிப்புகளில் முன்னிலை பெற்றுள்ளார். https://thinakkural.lk/article/310450
  19. இலங்கையின் பொருளதாரத்தை பலப்படுத்த தேவையான எந்தவொரு ஒத்துழைப்பையும் வழங்கத் தயாரென அமெரிக்கா உறுதியளித்துள்ளது. இலங்கையின் ஏற்றுமதி வர்த்தக பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அவசியமான ஒத்துழைப்பை வழங்கத் தயாரென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்க மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இன்று (08) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அனுப்பியிருந்த வாழ்த்துச் செய்தியினையும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்தார். இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு சர்வதேச நாணய நிதியம், ஐக்கிய அமெரிக்க அபிவிருத்தி முகவர் நிலையத்தின்(USAID) ஊடாக நிதி உதவிகளை வழங்கத் தயாரெனவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார். ஊழல் மோசடிகளை மட்டுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கு அமெரிக்க தொழில்நுட்ப உதவிகளை வழங்குமெனவும் அவர் உறுதியளித்தார். சிறந்த அரச நிருவாகத்திற்காக வழங்கக்கூடிய எந்தவொரு உதவியையும் வழங்குவதோடு, பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்தில் அதற்கான உதவிகளை வழங்கவும் அவர் இணக்கம் தெரிவித்தார். மீள் புதுபிக்கத்தக்க வலுசக்தி, ஏற்றுமதி விவசாயத்தை உருவாக்குதல் மற்றும் கிராமங்களின் வறுமையை ஒழிப்பதற்காக புதிய ஜனாதிபதியால் முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அமெரிக்க தூதுவர் உறுதியளித்தார். தற்போது செயற்படுத்தப்படும் கிராமிய பாடசாலைகளின் பகல் உணவு வேலைத்திட்டத்தை நகர பாடசாலைகளிலும் வழங்க உதவிகளை வழங்கவிருப்பதாகவும் அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இந்த சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைத்தீவிற்காக ஐக்கிய ராஜ்ஜியத்தின் சர்வதேச அபிவிருத்திக்கான முகவர் நிலையத்தின் பிரதி பணிப்பாளர் ஜஸ்டின் டிவென்ஷோ (Justin Divenanzo) மற்றும் பொருளாதார நிபுணர் கிறிஸ்டோபர் குஷ் (Christopher Gooch) உள்ளிட்டோரும் கலந்து கொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/195773
  20. இலங்கை அனைத்து நாடுகளுடனும் சமமான இராஜதந்திர உறவை பேணும் எந்த நாட்டிற்கும் விசேட சலுகையையோ முக்கியத்துவத்தையோ வழங்காது என வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இந்தியாவுடன் எப்படி ஈடுபாட்டை பேணுகின்றோமோ அது போலவே சீனாவுடன் ஈடுபாட்டை கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த மாத இறுதியில் சீன இராணுவத்தின் பயிற்சி கப்பலை இலங்கைக்குள் அனுமதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமைக்கான நோக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜித ஹேரத் இது நாட்டின் இராஜதந்திர ஈடுபாட்டின் கட்டமைப்பை மீறாத விடயம் என குறிப்பிட்டுள்ளார். இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு இந்த மாதம் வந்துசேரும்; என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த நாடும் விசேடமானது என கருதவில்லை, பெரிய நாடாகயிருந்தாலும் சரி சிறிய நாடாகயிருந்தாலும் சரி அவற்றுடன் இலங்கை இராஜதந்திர உறவுகளை பேணுகின்றது, எங்கள் அணுகுமுறையில் பக்கச்சார்பு இருக்காது என அமைச்சர் தெரிவித்துள்ளார். வழமையான இராஜதந்திர பரிமாற்றங்களின் ஒரு பகுதியாக பல நாடுகளின் போர்க்கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் தரித்து நின்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195755
  21. இலங்கை தொடர்பான எந்தவொரு ஜெனீவா தீர்மானத்திற்கும் அனுர அரசாங்கம் எதிர்ப்பு - யுத்த குற்ற ஆதாரங்களை சேகரிக்கும் பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளாது - விஜித ஹேரத் 08 OCT, 2024 | 12:21 PM ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் சமர்ப்பிக்கப்படும் எந்த தீர்மானத்தின் 51/1 நகல் வடிவையும் இலங்கை தொடர்ந்து எதிர்க்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிக்கும் வெளிப்புற பொறிமுறைக்கான அதிகாரங்களை நீடிக்கும் எந்த தீர்மானத்தையும் இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் தெரிவித்துள்ளார். அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனை தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல் வடிவை நிராகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். எனினும் உள்நாட்டு பொறிமுறை மூலம் நல்லிணக்கம் உட்பட மனித உரிமை பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பது குறித்து அரசாங்கம் அர்ப்பணிப்புடன் உள்ளது என அவர் தெரிவித்துள்ளார். இலங்கை மனித உரிமை பேரவையுடனும், வழமையான மனித உரிமை பொறிமுறையுடனும், தொடர்ந்தும் ஒத்துழைப்பு அர்த்தபூர்வமான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார், தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் தெரிவு செய்யப்படும் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான விஜித ஹேரத் நாங்கள் எங்கள் நிலைப்பாட்டை ஜெனீவாவிற்கு தெரியப்படுத்துவோம் என குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்மானத்தில் உள்ள பல விடயங்களை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது, மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனினும் இதற்கு காலம் தேவை, நாளை ஜெனீவாவில் இந்த நிலைப்பாட்டை தெரியப்படுத்துவோம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195746
  22. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை பக்கங்கள் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் அரசாங்கம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத், தெரிவித்துள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த மாநாடு இன்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த பக்கங்கள் எவ்வாறு காணாமல் போயின என்பதும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் அனைத்து பக்கங்களும் அப்படியே உள்ளதா என்பதும் விசாரணைகளின் மூலம் கண்டறியப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310434
  23. Published By: VISHNU 08 OCT, 2024 | 09:08 PM இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, 31 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட முருகன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை செவ்வாய்க்கிழமை (08) நேரில் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 31 வருடங்களின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விடுதலை செய்யப்பட்டார். முருகன் இலங்கையை சேர்ந்தவர் என்பதால் இலங்கை செல்வதற்கு ஆவணங்கள் இல்லை எனும் காரணத்தால் திருச்சி சிறப்பு முகாமில் சுமார் ஒன்றை வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார். அவரை இலங்கைக்கு மீள அழைத்து வர அப்போது கடற்தொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா சில நடவடிக்கைகளை எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளை இவருடன் கைது செய்யப்பட்ட சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த போதே கடந்த பெப்ரவரி மாதம் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195806
  24. 08 OCT, 2024 | 05:26 PM (எம்.நியூட்டன்) யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/195791

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.