Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. உயர்ந்த மரங்கள் மழைக்காலங்களில் பெருங்காற்றில் வீதியில் விழ வாய்ப்பிருக்கலாம்! மற்றும்படி மரங்களை அநாவசியமாக வெட்டி வீழ்த்துவதை தவிர்க்கவேண்டும். ஏறத்தாள 50 நாளின் பின் 6ஆம் திகதி முதல் வெப்பச்சலன மழை சிறிது பெய்கிறது. மழை வேணும் எனில் மரம் வளர்ப்போம்.
  2. ChatGPT உருவாக வழிவகுத்த கண்டுபிடிப்புக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜாஃப்ரி ஹிண்டன் 8 அக்டோபர் 2024, 12:46 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு செயற்கை நுண்ணறிவுத் துறையில் முக்கியமான கட்டமைப்பான செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்கள் (artificial neural networks) சார்ந்த கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய இரண்டு ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ஹாப்ஃபீல்ட், மற்றும் பிரிட்டனில் பிறந்து கனடாவில் பணியாற்றும் ஜாஃப்ரி ஹின்டன் ஆகியோருக்கு இந்தப் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸ் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 😎 அன்று அறிவித்தது. “இந்த இரு ஆராய்ச்சியளர்களும், இன்றைய இயந்திரக் கற்றல் (machine learning) தொழில்நுட்பத்துக்கு அடித்தளமாக இருக்கும் முறைகளை உருவாக்க இயற்பியல் கருவிகளைப் பயன்படுத்தியுள்ளனர்,” என்று சுவீடனின் அரச அறிவியல் கழகம் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.9 கோடி பரிசுத் தொகையை இவர்கள் சமமாகப் பகிர்ந்து கொள்வார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES ChatGPT-க்கு வழிவகுத்த கண்டுபிடிப்பு செயற்கை நரம்பியல் வலைப்பின்னல்களில் ஜாஃப்ரி ஹின்டனின் முன்னோடி ஆராய்ச்சி ‘ChatGPT’ போன்ற தற்போதைய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் உருவாக்கப்பட வழிவகுத்தது. செயற்கை நுண்ணறிவில், நரம்பியல் வலைப்பின்னல்கள் என்பவை மனித மூளையைப் போலவே தகவல்களைக் கற்றுக்கொள்வது மற்றும் செயலாக்குவது போன்ற அமைப்புகளாகும். ஒரு மனிதரைப் போலவே, அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ள இந்த நரம்பியல் வலைப்பின்னல், செயற்கை நுண்ணறிவுத் தளங்களுக்கு உதவுகின்றன. இது ‘ஆழ்ந்த கற்றல்’ (deep learning) என்று அழைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES செயற்கை நினைவுக் கட்டமைப்பு தரவுகள், படங்கள் அகியவற்றைச் சேமித்து வைத்து, அவறைத் தேவைக்கேற்ப மறுகட்டமைப்பு செய்யும் ஒரு ‘நினைவுக் கட்டமைப்பை’ ஜான் ஹாப்ஃபீல்ட் உருவாக்கினார். ஜாஃப்ரி ஹின்டன், இந்தத் தரவுகள், படங்கள் ஆகியவற்றில் உள்ள குறிப்பிட்ட கூறுகளை அடையாளம் காணும் முறையைக் கண்டுபிடித்தார். ஜாஃப்ரி ஹிண்டன் செயற்கை நுண்ணறிவின் தந்தை என்றழைக்கப்படுகிறார். அவர் 2023-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்திலிருந்து தனது பணியை ராஜினாமா செய்தார். “இந்தக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த இவர்கள் இயற்பியலைப் பயன்படுத்தினர். அதைத் தொடர்ந்து இந்தக் கண்டுபிடிப்புகள் இயற்பியல் ஆராய்ச்சிக்கு உதவுகின்றன,” என்று ராயல் ஸ்வீடிஷ் அகாடமி ஆப் சயின்ஸின் உறுப்பினர் ஆண்டர்ஸ் இர்பாக் தெரிவித்தார். இந்தக் கண்டுபிடிப்புகள் அணு இயற்பியல், விண்ணியல், காலநிலை மாற்றம், சோலார் செல்கள், மருத்துவ ஸ்கேன்கள் எனப் பலதரப்பட்ட பயன்பாடுகளைக் கொண்டிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார். பரிசு வென்ற ஜாஃப்ரி ஹின்டன், தொழில் புரட்சி எப்படி மனிதர்களின் உடல் வலிமையை மீறிச் சென்றதோ, அதேபோல் தங்கள் கண்டுபிடிப்புகள் மனிதர்களின் அறிவு வலிமையை மீறிச் செல்ல உதவின என்றார். ஆனால் இந்தக் கட்டமைப்புகள் மனிதர்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் அபாயமும் உள்ளது என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தொலைபேசி மூலமாகக் கூறினார். "நான் கணிப்பது என்னவென்றால் 5 முதல் 20 ஆண்டுகளுக்குள், AI முழு கட்டுப்பாட்டை எடுத்துக்கொள்ளும் என்ற சிக்கலை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்", என்று ஜாஃப்ரி ஹின்டன் கூறினார். கடந்த ஆண்டின் இயற்பியல் பரிசு கடந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது. ஒளியில் மிகக் குறுகிய, கண நேரத்தில் நடக்கும் நிகழ்வுகளைப் பதிவு செய்வது குறித்த ஆய்வுக்காக இந்தப் பரிசு அறிவிக்கப்பட்டது. அவர்களது ஆய்வு தான் எலக்ட்ரான்கள் குறித்து நாம் புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்தது. பியர் அகோஸ்டினி, ஃபெரன்க் கிரௌஸ், ஆன் லூயே ஆகிய 3 விஞ்ஞானிகள் அந்தப் பரிசை பகிர்ந்து கொண்டானர். அணுக்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என்பதைப் பதிவு செய்யவும், புரிந்து கொள்ளவும் உதவக் கூடிய மிகமிகக் குறுகிய அதிர்வு கொண்ட ஒளியை உருவாக்குவது எப்படி என்பதை அவர்களது ஆய்வு செய்து காட்டியது. https://www.bbc.com/tamil/articles/cyvy9n0zj4jo
  3. அது 250ரூபா அல்லது 350ரூபா கொடுக்கிறார்கள் அண்ணை. சமுர்த்தியும் அரச ஊழியர் தவிர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது. தொகை சரியாத் தெரியவில்லை அக்கா.
  4. முதியோர் கொடுப்பனவு 3000ரூபா, 70 வயதிற்கு மேற்பட்டவ்களுக்கு அண்ணை.
  5. Published By: DIGITAL DESK 7 06 OCT, 2024 | 05:14 PM ஆர்.ராம்- ‘தமிழ்த் தேசியம்’ தான் வடக்கு, கிழக்கை மையப்படுத்திய அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளினதும் பிரதான கோசமாகும். ஆனால் அந்த அரசியல் கட்சிகளுக்குள் தங்களில் யார் தமிழ்த் தேசியவாதிகள் என்பதில் பாரிய முரண்பாடுகள் காணப்படுகின்றன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கோட்பாடுகளுடன் ஒத்துப்போகக் கூடிய ஆகக்கூடுதலான விடயங்களை உள்வாங்கியிருக்கின்ற அரசியல்கட்சிகள் ‘தூய தமிழ்த் தேசியவாத சக்திகளாக’ அல்லது ‘தமிழர்களின் உரிமைக்கான குரல்களாக’ அடையாளப்படுத்தப்படுகின்றன. அதே நேரம், மத்திய அரசாங்கத்துடன் ஒன்றித்துப் பயணிக்கக் கூடிய அரசியல் கட்சிகள் அல்லது அங்கத்துவத்தினைக் கொண்டிருக்கக் கூடிய தரப்புக்கள் ‘தமிழ்த் தேசிய விரோதிகளாக’ அல்லது ‘தமிழ்த் தேசிய துரோகிகளாக’ சித்தரிக்கப்படுகின்றன. மேற்படி வகையறாக்களுக்குள் தான் ‘மிதவாத’ அல்லது ‘முற்போக்கு’ சிந்தனை சக்திகளும் உள்ளடக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிட்டுக் கூற வேண்டியதொரு விடயமாக உள்ளது. தமிழ்த் தேசியத்தின் உண்மையான வாரிசுகள் யார், போலித் தமிழ்த் தேசியவாதிகள் யார் என்று ஆராய்வது இந்தப் பத்தியின் நோக்கமல்ல. ஏனெனில் அது தமிழ் மக்களின் ஆணையுடன் சம்பந்தப்பட்ட விடயம். மாறாக, வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ‘தமிழ்த் தேசிய மையவாத அரசியல் கட்சிகளுக்கு’ முன்னால் காணப்படுகின்ற பாரிய சவால்களையும், ஆபத்துக்களையும் வெளிப்படுத்துவது தான் இந்தப் பத்தியின் பிரதான நோக்கமாக உள்ளது. நடைபெற்று நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈ.பி.டி.பி, சிவநேசத்துரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆகியனவும் அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய தனிநபர்களும் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கி மூன்றாவது இடத்தைப் பிடித்த ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்தார்கள். யாழ்ப்பாணத்தில் அவர் 84,588 வாக்குகளையும், வன்னியில் 52,573வாக்குகளையும், மட்டக்களப்பில் 91,132வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளார். திருகோணமலையில் 40,496 வாக்குகளையும், அம்பாறையில் 86,589 வாக்குகளையும் ரணில் விக்கிரமசிங்க பெற்றிருந்தாலும் அதில் தமிழ்த் தரப்பு வாக்குகள் சொற்பமானவையே. இவ்வாறான நிலையில், ரணில் விக்கிரமசிங்கவின் மேற்படியான பெறுபேற்றுக்கு டக்ளஸ் தேவானந்தா, சிவநேசத்துரை சந்திரகாந்தன், அங்கஜன் இராமநாதன், சதாசிவம் வியாழேந்திரன் ஆகிய நான்கு நபர்கள் தான் பிரதான காரணிகளாக உள்ளனர். இதில், டக்ளஸ், சந்திரகாந்தன் ஆகியோர் தனியாக தமது கட்சிகளின் ஊடாக பாராளுமன்ற தேர்தலுக்கு முகங்கொடுகின்றார்கள். அவர்களுக்கும், அவர்களின் கட்சிகளுக்கும் நிலையான வாக்குவங்கியொன்று உள்ளது. ஆகவே அவ்விருவரினது வெற்றி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டது எனலாம். ஆனால், வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோர் கடந்தமுறை தேசிய கட்சிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்று சாதித்திருந்தாலும் இம்முறை அவர்கள் புதுப்பொலிவுடன் வரவுள்ள பழைய தேசிய கட்சியொன்றின் கூட்டுடன் தான் கைகோர்க்க வேண்டியுள்ளது. அந்தக் கைகோர்ப்புக்கான அங்கீகாரம் எவ்வளவு தூரம் வெற்றியை உறுதி செய்யும் என்பதில் கேள்விகள் உள்ளன. ஏனெனில், வியாழேந்திரன், அங்கஜன் ஆகியோருக்கு மத்தியில் ஆட்சியில் இருந்தவர்களுடன் கொண்டிருந்த ஊடாட்டம் தான் வெற்றியை உறுதி செய்தது. ஆகவே, அவர்களின் வாக்காளர்கள் மத்தியுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருப்பதை தான் எதிர்பார்பாக கொண்டிருப்பார்கள் என்று கொள்கின்றபோது, இம்முறை அதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படவில்லை. ஆகவே அவர்களின் ஆதரவாளர்கள் எவ்விதம் சிந்திப்பார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டியுள்ளது. அடுத்து ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாமிடத்தைப் பிடித்தவர் சஜித் பிரேமதாச. இவரை இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சுமந்திரன் அணி மட்டும் தான் ஆதரித்திருந்தது. அதில் யாழில் சுமந்திரனும், மட்டக்களப்பில் சாணக்கியனும் ஆதரித்து வாக்குச் சேர்த்தார்கள். அதற்கு அமைவாக, யாழ்.தேர்தல் மாவட்டத்தில் 121,177வாக்குகளை அவர் பெற்றார். இதில் கிளிநொச்சியில் சமத்துவக் கட்சி பெற்றுக்கொடுத்த 30ஆயிரம் வரையிலான வாக்குகளும் உள்ளடக்கம். வன்னியில் 94,422வாக்குகளையும், மட்டக்களப்பில் 139,110வாக்குகளையும் திருகோணமலையில் 120,588 அம்பாறையில் 200,348 வாக்குகளையும் சஜித் பிரேமதாச பெற்றுக்கொண்டுள்ளார். இதில் முஸ்லிம் கட்சிகளின் வாக்குச் சேகரிப்பும் உள்ளடங்கியுள்ளது. ஆகவே, சுமந்திரன், சாணக்கியன் ஆகியோர் தங்களின் அறிவிப்புக்கு மக்கள் திரண்டு வாக்களித்ததாக தர்க்கத்துக்காக கூறினாலும் சஜித்துக்கான வாக்குகளில் தங்களின் பங்களிப்பு எவ்வளவு என்பதை உறுதியாக கூற முடியாதவொரு நிலைமையே உள்ளது. ஏழு அரசியல் கட்சிகளும், 83சிவில் அமைப்புக்களும் இணைந்து களமிறக்கிய தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனுக்கு யாழ்ப்பாணத்தில் 116,688 வாக்குகளும், வன்னியில் 36,377வாக்குகளும், அவரது பிறந்த மண்ணான மட்டக்களப்பில் 36,905வாக்குகளும் திருமலையில் 18,524வாக்குகளும் அம்பாறையில் 9,985வாக்குகளும் கிடைத்துள்ளன. கொழும்பு மாவட்டத்தில் 3,168வாக்குகளும் கொழும்புக்கு வெளியே வடக்கு,கிழக்கு அல்லாத ஏனைய மாவட்டங்களில் 4,696 வாக்குகளும் உள்ளடங்கலாக அவர் 2,26,243வாக்குகளை ஒட்டுமொத்தமாகப் பெற்றுக்கொண்டுள்ளார். இந்நிலையில் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் சிறிதரன் ஆதரவு அணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் மக்கள் கூட்டணி, சிவில் அமைப்புக்களின் கூட்டான தமிழ்த் தேசிய பொதுச்சபை ஆகிய நான்கு தரப்புக்கள் அந்த வாக்குகளுக்கு உரிமை கோருகின்றன. இதனைவிட, புலம்பெயர் சமூகத்தின் வகிபாகமும் உள்ளது. ஆகவே, ‘தேசமாக’ அணி திரட்டிய அரியநேத்திரனுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் எந்தத் தரப்பிற்குச் செல்லும் என்பதிலேயே அதற்கான உண்மையான உரிமையாளர்கள் வெளிப்படுத்தப்படுவார்கள். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியும், சிறிதரன் தரப்பும், விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணியும் தனித்தனியாகவே போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுக்குள் சில சிவில் அமைப்பின் பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி பொதுவேட்பாளரின் ‘சங்கு’ சின்னத்தை தனதாக்கியுள்ளது. இது ஏனைய தரப்பினருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆகவே பிரசார மேடைகளில் ‘சங்கு’ சின்னத்தை மையப்படுத்திய வாதப்பிரதிவாதங்களும் தாராளமாக எழுவதற்கு இடமுள்ளது. இம்முறை தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த தரப்பில் உள்ள அரசியல் முக்கியஸ்தர்களின் தேர்தல் செலவீனங்களை பெருவர்த்தக நிறுவனமொன்று தத்தெடுப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த நடவடிக்கைகள் சாத்தியமாகின்றபோது குறித்த தரப்புக்கள் பெருவர்த்தக நிறுவனத்தின் ‘கை பொம்மைகளாக’ மாறும் நிலைமையே ஏற்படும். இவற்றைவிடவும், தமிழ் பொதுவேட்பாளரை ஆதரித்த அணியும், ரணிலை ஆதரித்த அணியும் உள்ள அரசியல்வாதிகள் சம்பிரதாய தமிழ்த் தேசிய அரசியல் கலாசாரத்திற்கு அப்பாற்சென்று பெற்றுக்கொண்ட சலுகைகள் பற்றிய தகவல்களும் மெல்லக் கசிய ஆரம்பித்துள்ளன. அவையும் பாராளுமன்ற தேர்தல் முடிவுகளில் கணிசமான தாக்கத்தினை ஏற்படுத்தவுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள அநுரகுமார திசாநாயக்க வடக்கு,கிழக்கில் நேரடியாகவே களமிறங்கிப் பிரசாரம் செய்திருந்தார். யாருடனும் கூட்டணி அமைத்திருக்கவில்லை. அவருக்கு யாழில் 27,086வாக்குகளும் வன்னியில் 21,412வாக்குகளும் மட்டக்களப்பில் 38,832வாக்குகளும் கிடைத்துள்ளன. திருகோணமலையில் 49,886வாக்குகளும், அம்பாறையில் 108,971வாக்குகளும் கிடைத்துள்ளன. யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் பாராளுமன்ற ஆசனமொன்றைப் பெறுவதற்கு சொற்பமான வாக்குகளே அவருக்குத் தேவையாக உள்ளன. தற்போதைய சூழலில் வடக்கு,கிழக்கில் உள்ள துறைசார்ந்த நிபுணத்துவத் தரப்புக்கள் ஜே.வி.பியின் பெலவத்த தலைமையகத்திலும், ஜனாதிபதி செயலகத்திலும், நீண்ட வரிசையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்கோரி நிற்கின்றன. அவ்விதமானவர்களில் ஜே.வி.பி.அடையாளம் கண்டு பொருத்தமான மக்கள் அபிமானத்தை வென்றவர்களை களமிறக்கும்போது வெற்றி உறுதியானதாக மாறுவதற்கே வாய்ப்புக்கள் உள்ளன. ஜே.வி.பி.தலைமையிலான தேசிய மக்கள் சக்தி வடக்கு,கிழக்கில் தலா ஒவ்வொரு ஆசனங்களை வெற்றி கொள்வது தான் முதற்கட்ட இலக்காக கொண்டுள்ள நிலையில் அந்த இலக்கு இலகுவில் அடையப்படும் என்பதே கணிப்பாக உள்ளது. இதேநேரம், தேர்தல் புறக்கணிப்பைக் கோரிய தமிழ்;த் தேசிய மக்கள் முன்னணி தனித்து களமிறங்குகின்றது. அது தன்னுடைய வழமையான ஆதரவாளர்களை நோக்கியே நகருவதற்கான சந்தர்ப்பங்களே அதிகமுள்ளது. இவ்விதமான சூழலில் தமிழ்த் தேசியத் தளத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் ஏதேவொரு வகையில் அழுத்தங்கள் மற்றும் சிக்கல்கள் நிறைந்ததாகவே உள்ளன. அத்தோடு தமிழ்த் தேசியத்தை மையப்படுத்திய அரசியல் கட்சிகள் மீதான தமிழ் மக்களின் அபிமானமும் தற்போதைய சூழலில் குறைமதிப்புக்குள்ளாகியுள்ளது. இந்த நிலைமை தமிழ் மக்கள் மத்தியிலும் ‘மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்ற சிந்தனையை வெகுவாக தோற்றுவித்து வருகின்றது. மூன்று சதவீதத்தினைக் கொண்டிருந்த ஜே.வி.பி.அரியணைக்கு செல்லுமளவிற்கு உருவெடுத்திருக்கும் நிலையில் வடக்கு, கிழக்கிலும் மாற்றத்தை மையப்படுத்திய சிந்தனைகள் வலுப்பெற்றுள்ளன. ஆகவே, வடக்கு,கிழக்கு எதிர்பார்க்கும் மாற்றம் தமிழ்த் தேசியத்துக்குட்பட்டதாக இருந்தால் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லை. சிலவேளைகளில் அந்த மாற்றம் தென்னிலங்கை காண்பித்த ‘திசைகாட்டியை’ நோக்கியதாக இருந்தால் தமிழ்த் தேசிய மையவாத அரசியல் கட்சிகளின் எதிர்காலம் எப்படியிருக்கும்? https://www.virakesari.lk/article/195636
  6. 08 OCT, 2024 | 11:55 AM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 277 யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் 488 யானைகள் உயிரிழந்துள்ளன. அதிகளவான யானைகள் பயிர்களை பாதுகாப்பதற்காக காணிகளில் பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, காணிகளில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள மின்சார கம்பிகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீனராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195741
  7. 08 OCT, 2024 | 11:24 AM பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞனிடம் 15 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி முதல் கட்டமாக 15 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்ற பின்னர், வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காது தன்னை ஏமாற்றி விட்டதாக இளைஞன் ஒருவர் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்துள்ளான். முறைப்பட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்ட குற்றத்தில் பருத்தித்துறை பகுதியை சேர்ந்த நபரை கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் நேற்று திங்கட்கிழமை (07) நீதிமன்றில் முற்படுத்திய போது , இளைஞனிடம் பெற்றுக்கொண்ட பணத்தில் ஒரு தொகையை இன்று செவ்வாய்க்கிழமை (08) மீள கையளிப்பதாகவும் , மிகுதி பணத்தினை மிக விரைவில் மீளளிப்பதாக மன்றில் தெரிவித்துள்ளார். அதனை அடுத்து அவரை பிணையில் செல்ல மன்று அனுமதித்தது. https://www.virakesari.lk/article/195738
  8. அணிக்குள் தன்னம்பிக்கையையும் மற்றையவர்கள் மீதான நம்பிக்கையையும் கட்டி எழுப்பியுள்ளதாக சனத் ஜயசூரிய கூறுகிறார் Published By: VISHNU 08 OCT, 2024 | 02:03 AM (நெவில் அன்தனி) கிரிக்கெட் அரங்கில் சகலமும் தன்னம்பிக்கை, மற்றையவர் மீதான நம்பிக்கை, கொஞ்சம் அதிர்ஷ்டம் என்பனவாகும் என இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய தெரிவித்தார். இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுநராக நியமிக்கப்பட்ட பின்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 'நான் எப்போதும் கூறுவது என்னவென்றால், தன்னம்பிக்கை, மற்றவர் மீது நம்பிக்கை வைத்தல் என்பதாகும். இதனை அணிக்குள் ஏற்படுத்தியுள்ளேன். அது மிகவும் முக்கியமாகும். இதில் கொஞ்சம் அதிர்ஷ்டம் அடங்கியிருக்கிறது என நான் நினைக்கிறேன். நாம் எவ்வளவு கடினமாகவும் உழைக்கலாம். ஆனால், சிலவேளைகளில் அதிர்ஷ்டமும் நமக்கு தேவை' என அவர் குறிப்பிட்டார். 'வீரர்கள் அனைவரும் திறமையாக விளையாடவேண்டும் என்பதில் அர்ப்பணிப்படன் இருக்கின்றனர். கடந்த இரண்டு வருடங்களில் அவர்கள் எதை எதிர்கொண்டனர் என்பதை அறிவர். அவர்கள் துவண்டு போயிருந்தனர். இதனால் இலங்கை வீரர்களை ஆதரிக்குமாறு பொது மக்களைக் கேட்டுக்கொண்டேன். அவர்கள் ஒரு சிறந்த கிரிக்கெட் குழுவினராவர். அவர்களிடம் திறமை இருக்கிறது. அவர்களுக்கு நான் நம்பிக்கை ஊட்டினேன். நான் அவர்களுடனேயே இருக்கிறேன். அவர்கள் என்னோடு எதையும் கலந்துரையாடலாம்' என சனத் ஜயசூரிய மேலும் தெரிவித்தார். 'உள்ளூர் பயிற்றுநர் என்ற வகையில் வீரர்களுடன் இலகுவகாக கலந்துரையாட முடியும் என்பது முக்கிய விடயமாகும். அவர்களுக்கு என்ன பிரச்சினை இருந்தாலும் என்னுடன் சுதந்திரமாக பேசலாம். அதனைத் தீர்த்துவைப்பது சுலபமானது. அதனை செய்வதற்கான தன்னம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. நான் என்னவகையான கிரிக்கெட் விளையாடினேன் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே நான் முன்வைக்கும் பெறுமதியான விடயங்களை அவர்கள் அறிவார்கள், 'உள்ளூர் பயிற்றுநர் என்ற வகையில் எனக்கென்று பொறுப்பு இருக்கிறது. எனக்கு விருப்பமானர்கள் என யாரும் இல்லை. பாரபட்சம் எதுவும் என்னிடம் இல்லை. சுயாதீனமாக செயற்படுவதையே விரும்புகிறேன். எனக்கு பின்னர் உள்ளூர் பயிற்றுநர் ஒருவருக்கு இந்த பதவி கிடைக்கும் என்பதை நான் அறிவேன்' என்றார் அவர். பயிற்சிகளின்போது நாங்கள் வித்தியாசமானவற்றை முயற்சி செய்வோம். அவர்கள் ஆர்வமாக இருக்கவேண்டும் என விரும்புகிறேன். பயிற்சிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்வோம் எனவும் அவர் கூறினார். ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெறுவதற்கு இலங்கைக்கு நல்ல வாய்ப்பு இருப்பதாக சனத் ஜயசூரிய தெரிவித்தார். ஆனால், தென் ஆபிரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 3இல் வெற்றிபெற்றாக வேண்டும் என அவர் குறிப்பிட்டார்., 'இலங்கை அணிக்கு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் இன்னும் நான்கு போட்டிகள் மீதம் உள்ளன. தென் ஆபிரிக்காவில் தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2 போட்டிகளும் இலங்கையில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 போட்டிகளும் உள்ளன. இந்த நான்கு போட்டிகளில் 3இல் வெற்றிபெற்றால் இலங்கையினால் இறுதிப் போட்டிக்கு முன்னேறக்கூடியதாக இருக்கும். 'தென் ஆபிரிக்காவுக்கு எதிராக டேர்பனிலும் போர்ட் எலிஸபெத்திலும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. அந்த இரண்டு மைதானங்களும் இலங்கைக்கு சாதகமானவையாகும். எனவே இலங்கை அணி முழு த் திறமையுடன் விளையாடி வெற்றிபெற முயற்சிக்கும். அதற்காக இலங்கை அணியை தயார்படுத்தவுள்ளேன். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 2 டெஸ்ட் போட்டிகள் எமது சொந்த நாட்டில் நடைபெறவுள்ளன. எனவே இலங்கை அணிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது' என்றார். இது இவ்வாறிருக்க, தலைமைப் பயிற்றுநர் பணியானது சவால்மிக்கது என அவர் குறிப்பிட்டார். 'இந்தப் பதவியை நான் எனது வாழ்நாளில் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு சவால் மிக்க பணி என்பதை நான் அறிவேன். அது ஒரு இலகுவான தொழில் அல்ல. ஆனால், அந்த சவாலை ஏற்று இலங்கை அணியினருடன் முன்னோக்கி நகர்வேன்' என சனத் ஜயசூரிய தெரிவித்தார். இது இவ்வாறிருக்க, 'வெளிநாட்டுப் பயிற்றுநர்களுக்கு போன்றே சனத் ஜயசூரியவுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. இப் பதவிக்கு பலர் விண்ணப்பித்திருந்தனர். ஆனால், கடந்த 3 தொடர்களில் இலங்கைக்கு சனத் ஜயசூரிய சிறந்த பெறுபேறுகளை ஈட்டிக்கொடுத்துள்ளதால் அவரையே முழு நேரப் பயிற்றுநராக நியமிப்பதற்கு எமது நிறைவேற்றுக்குழு தீர்மானித்தது' என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா தெரிவித்தார். இந்தியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய நாடுகளுக்கு எதிரான மூவகை கிரிக்கெட் தொடர்களின்போது இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்காலப் பயிற்றுநராக சனத் ஜயசூரிய கடமையாற்றி இருந்தார். https://www.virakesari.lk/article/195722
  9. கட்டுரையில் உள்ள தகவல்கள் உண்மை எனில் இஸ்ரேலுக்கு பலத்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருத இடமுண்டு.
  10. 08 OCT, 2024 | 11:08 AM இவ்வருடத்தின் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் இணையவழி குற்றங்கள் தொடர்பில் 9 ஆயிரம் முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு தெரிவித்துள்ளது. இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழுவின் பொறியியலாளர் சாருக தமுனுபொல இது தொடர்பில் தெரிவிக்கையில், 80 சதவீதமான முறைப்பாடுகள் சமூக ஊடகங்களுடன் தொடர்புடையவவை ஆகும். அதன்படி, இணையவழி மோசடி தொடர்பில் 1,400 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், 85 முறைப்பாடுகள் சிறுவர்கள் மீதான இணைய அச்சுறுத்தல்களுடன் தொடர்புடையவை என்பதுடன், 40 முறைப்பாடுகள் பாலியல் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புடையவை ஆகும். இணையவழி ஊடாக பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வுகளை அதிகரிக்க வேண்டடியதன் அவசியத்தை இந்த அறிக்கை சுட்டிக்காட்டுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195737
  11. 08 OCT, 2024 | 11:23 AM இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து தான் விலகுவதாகவும், கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்குமாறும் சிவஞானம் சிறீதரனுக்கு மாவை சேனாதிராஜா, கடிதம் அனுப்பியுள்ளார். அக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மாவை சோமசுந்தரம் சேனாதிராஜா ஆகிய நான் இதுவரை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருந்து செயற்பட்டு வந்திருக்கின்றேன். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு 2024 ஜனவரி 21ஆம் திகதி நடைபெற்றபோது பொதுக்குழுவில் தாங்கள் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருந்தீர்கள். தாங்கள் அந்தவகையில் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை இன்னும் ஏற்கவில்லை. அதனால் நான் தொடர்ந்தும் கட்சியின் தலைவராகச் செயலாற்றி வந்துள்ளேன். அந்தப் பொறுப்பை உடன் ஏற்றுத் தலைவராகச் செயற்படுமாறு அன்றிலிருந்து பல தடவைகள் வற்புறுத்தி வந்துள்ளேன். 2024 ஒக்டோபர் 7ஆம் திகதியிலிருந்து இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளேன் என்பதனை இந்தக் கடிதம் மூலம் அறியத் தருகின்றேன். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் பொறுப்பை உடன் ஏற்று நிறைவேற்றிச் செயற்படுமாறு வற்புறுத்திக் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது. குறித்த கடிதத்தின் பிரதி இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கத்துக்கும் அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195735
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES 7 அக்டோபர் 2024 நமது சிறுவயதிலிருந்தே காய்கறிகள், கீரைகளைச் சாப்பிடுமாறு பெரியவர்கள் நமக்கு அறிவுறுத்துவார்கள். அந்த அறிவுரையைப் பின்பற்றுவதற்கு மிக முக்கியமான காரணம் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றுடன் கூடிய நல்ல உணவு நமது ஆரோக்கியத்துக்கு முக்கியமானது என்று நமக்குத் தெரியும். ஆனால் அவற்றில் சில உணவுகள் உங்களைப் புற்றுநோயிலிருந்து காப்பாற்றக் கூடும் என்று உங்களுக்குத் தெரியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது ப்ரோக்கோலியில் அப்படி என்ன இருக்கிறது? முட்டைகோஸ், காலிபிளவர் போன்ற இலைதழை மிக்க ஒரு காய்கறிதான் (cruciferous vegetable) ப்ரோக்கோலி. பார்ப்பதற்கு பச்சைநிற காலிபிளவர் போன்ற இதற்கு புற்றுநோய் ஏற்படுவதை குறைக்கும் தன்மை இருக்கிறது, என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஒரேகன் பல்கலைக்கழகம் நடத்திய ஓர் ஆராய்ச்சியின்படி, நாம் உண்ணும் உணவில் சிறிய அளவில் ப்ரோகோலியைச் சேர்த்துக்கொள்வதுகூட புற்றுநோயைத் தடுக்க உதவும் என்று தெரியவந்துள்ளது. அந்த ஆராய்ச்சியின்படி, ப்ரோக்கோலியின் முளைப்பயிரில் (broccoli sprouts) புற்றுநோயை தடுக்கும் பண்புகள் அதிகம் இருப்பதாகவும், அதற்கு சல்ஃபரோஃபேன் (Sulforaphane) என்னும் சேர்மம்தான் காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. ப்ரோக்கோலியில் மார்பக புற்றுநோயை கட்டுப்படுத்த உதவும் கூறுகள் உள்ளதாகவும் நார்ஃபோக்கில் உள்ள விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில், மார்பக எக்ஸ்-ரேக்களில் இயல்புக்கு மாறான அறிகுறிகளைக் கொண்டிருந்த பெண்கள், தினமும் ஒரு கப் ப்ரோக்கோலி முளைப்பயிரைச் சாப்பிட்டு வந்தவுடன், இயல்புக்கு மாறான உயிராணுக்களின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோகோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன், PTEN இல்லாத செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது ப்ரோக்கோலி எப்படி புற்று நோயைத் தடுக்கிறது? ப்ரோக்கோலி போன்ற இலைதழைமிக்க காய்கறிகளில் இருக்கும் இந்த சல்ஃபரோஃபேன் சேர்மம், நமது DNAவில் ஏற்படும் மாறுபாடுகளை தடுக்கிறது. அதன்மூலம் புற்றுநோய் ஏற்படுவதைத் தடுக்கிறது. ப்ரோகோலி குறித்து நடத்தப்பட்ட பல ஆராய்ச்சிகளின் முடிவுகளை ஆய்வு செய்த ஒரு குழு, ‘அதிகளவில் ப்ரோகோலி உட்கொண்டவர்களுக்கு, ப்ரோகோலியைக் குறைவாக உட்கொண்டவர்களையோ, ப்ரோகோலியே உட்கொள்ளாதவர்களையோ விட, பல வகையான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபத்து குறைவாக இருப்பதாக’ தரவுகள் கூறுகின்றன என்கிறது. ஆனால், இந்தத் தொடர்பினை உறுதிப்படுத்த இன்னும் ஆய்வுகள் தேவைப்படுகின்றன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ப்ரோகோலியில், வைட்டமின் சி, ஆன்டி-ஆக்சிடண்டுகள், மற்றும் கரோடினாய்டுகள் என்ற நிறமிகள் ஆகியவை உள்ளன. இந்தக் காய்கறியை உண்பவர்களுக்கு மரபியல் சார்ந்த நோய்கள், இதய நோய்கள் ஆகியவற்றின் ஆபத்துகள் குறைகின்றன என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தினமும் ஒரு கப் ப்ரோகோலி முளைப்பயிரைச் சாப்பிட்டு வந்தவுடன், இயல்புக்கு மாறான செல் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டிருந்தது ப்ராஸ்டேட் புற்றுநோய்த் தடுப்பு ப்ரோக்கோலி புற்று நோயைத் தடுக்க வல்லது என்பதை 2010-ஆம் ஆண்டு நார்ஃபோக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர். ப்ராஸ்டேட் புற்றுநோயைக் குறித்து ஆராய்ச்சி செய்துவந்த அவர்கள், ப்ரோக்கோலியில் சல்ஃபரோஃபேன் இருப்பதைக் கண்டறிந்தனர். இந்த சல்ஃபரோஃபேன், PTEN (phosphatase and tensin homolog) என்ற மரபணு குறைவாக இருக்கும் செல்களின் வளர்ச்சியைக் கடுப்படுத்துகிறது என்று அந்த ஆய்வு கண்டறிந்தது. இந்த PTEN மரபணு குறைவாகவோ, செயலிழந்தோ காணப்பட்டால், ப்ராஸ்டேட் புற்றுநோய் பரவும். மனித ப்ராஸ்டேட் தசைகள் மற்றும் எலிகளின் மீது நடத்தப்பட்ட ஆய்வில், சல்ஃபரோஃபேன் புற்றுநோய் செல்களாக மாறக்கூடிய செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தியது கண்டறியப்பட்டது. PTEN என்பது புற்றுநோயைத் தடுக்கும் மரபணு, அது அழிந்தோலோ, செயலிழந்தாலோ அது ப்ராஸ்டேட் புற்றுநோயை ஊக்குவிக்கும், என்று நோர்விச் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் ரிச்சார்ட் மித்தென் பிபிசி-யிடம் கூறியிருந்தார். ப்ரோக்கோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன், PTEN இல்லாத செல்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துகிறது, ஆனால் PTEN இருக்கும் செல்களின் மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்துவதில்லை, என்று அவர் கூறியிருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப்ரோகோலி, வாழைப்பழம், ஆகியவற்றில் இருக்கும் நார்ச்சத்து, நமது குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தங்குவதைத் தடுக்கின்றது ப்ரோக்கோலியின் பிற நன்மைகள் என்ன? இது தவிர, ப்ரோக்கோலியில் இருக்கும் சல்ஃபரோஃபேன் ஆர்த்ரைட்டிஸ் நோயைத் தடுப்பதற்கும் உதவுகிறது என்று ஏஸ்ட் ஆங்க்லியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர். மனித செல்கள் மற்றும் எலிகள் மீதான சோதனைகளில் ப்ரோக்கோலி, முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகளிலிருக்கும் சல்ஃபோராபேன், குருத்தெலும்புகளைச் சேதப்படுத்திக் கேடுவிளைவிக்கும் ஒரு நொதியைத் (enzyme) தடுக்கிறது என்று கண்டறியப்பட்டிருக்கிறது. மேலும், லிவர்பூல் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு ஆய்வில் ப்ரோக்கோலி வயிறு, குடல் ஆகியவற்றில் ஏற்படும் பிரச்னைகளையும் சீராக்க உதவுகிறது என்று கண்டறியப்பட்டது. ப்ரோக்கோலி, வாழைப்பழம், ஆகியவற்றில் இருக்கும் நார்ச்சத்து, நமது குடலில் கேடு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் தங்குவதைத் தடுக்கின்றது என்று கண்டறிந்தது. பிபிசி தளங்களில் வெளியான பல்வேறு செய்திகளில் இருந்து தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன https://www.bbc.com/tamil/articles/cwyv16gxnqxo
  13. 08 OCT, 2024 | 10:06 AM மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கல் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் திங்கட்கிழமை (07) திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் JICA திட்டத்தின் பணிப்பாளர் திருகோணமலை மாவட்டத்தின் முன்னேற்றம் தொடர்பாக பாராட்டுக்களை தெரிவித்ததுடன் மாவட்ட அரசாங்க அதிபரும் இத் திட்டத்திற்கு மிகுந்த ஒத்துழைப்பு வழங்கியுள்ளமைக்கு நன்றிகளையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார். மேலும், இத்திட்டத்தில் உள்ள சவால்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளிகளை தொழில் வாய்ப்புக்கு உள்வாங்கும் போது பெண்களையும் விகிதாசார அடிப்படையில் சேர்க்க வேண்டும் எனவும் கூறப்பட்டது. இதன்போது மாவட்ட இணைப்பாளர் சமூக சேவை உத்தியோகத்தர், மாவட்ட இணைப்பாளர் மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் சமூக சேவை திணைக்களத்தின் சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/195730
  14. திசராணி குணசேகர “மழையைத் தேடுகிறேன் மழையைத் தேடுகிறேன்." – கில் ஸ்கொ ட்-ஹே ர ன் (அமெரிக்காவில் குளிர்காலம்) ஜனாதிபதி திஸாநாயக்கவும் அவரது கட்சியும் அவர்களின் நீடித்த ஆதிகால விசுவாசங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று உண்மையான சமத்துவத்தின் தளத்தில் சிங்களவர்கள் அல்லாத இலங்கையர்களிடம் விண்ணப்பிக்க முடியுமா? தேர்தல் ஆணைக்குழு தொடர்ந்து உலுக்கி வருகிறது. விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு உரம் மற்றும் எரிபொருள் மானியங்களை அதிகரிக்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் வழங்கப்பட்ட உத்தரவை பாராளுமன்றத் தேர்தல் காலமென இந்த வாரம், நிறுத்தியிருந்தது. அதேபோன்று ஜனாதிபதித் தேர்தலின் போது ரணில் விக்கிரமசிங்கவின் பல கொடுப்பனவுகளை நிறுத்தியது. சரியான சட்டங்கள், நிறுவனங்கள், வழிகாட்டுதல் மற்றும் நேரம் கொடுக்கப்பட்டால், இலங்கை அரசு இன்னும் காப்பாற்றக்கூடியது என்பதை தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடு சுட்டிக்காட்டுகிறது; மேம்படுத்தக்கூடியது கூட. 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரசாரம் எப்போதும் இல்லாத வகையில் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருந்தது. தேர்தல் சட்டங்கள் வெளிப்படையாகக் கண்டிப்புடனும் சமத்துவமாகவும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தேசபந்து தென்னகோனின் தொடர்ச்சியான செல்வாக்கின்றி பொலிசார் பின்பற்றுவதற்கு (உயர் நீதிமன்றத்திற்குப் பாராட்டுக்கள்!) தடையின்றி தேர்தல் ஆணைக்குழு வழிவகுத்தது, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், அவரது கோட்டையான தம்புள்ளையில் பாரியளவில் வீடு வீடாக பிரசாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். தம்புள்ளை பொலிஸாரினால் அது நிறுத்தப்பட்டது. அமைச்சரின் முகத்தில் இருந்த திகைப்பான வெளிப்பாடு, பொலிஸாரின் தலையீட்டின் முன்னொருபோதுமில்லாத தன்மை, அவரது அனுபவத்திற்கு அப்பாற்பட்ட நியாயமான-விளையாட்டுக்கான விசுவாசத்தின் வெளிப்பாடு மற்றும் எங்களுடையது என்று தொடங்கி பலவற்றைப் பேசியது. தேர்தல் கூட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது இளம் ஆதரவாளர்களுக்கு மதிய உணவு உபசரிப்பதை தடுக்க தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் தலையிட்டனர். மஹரகமவில் உள்ள இளைஞர் நிலையத்திற்கு அதிகாரிகள் இறங்கிய போது, உணவுப் பொருட்களை கைப்பற்றி பொலிஸாரிடம் விருந்தினை கையளித்த போது ஜனாதிபதி உடனிருந்தார். கோத்தாபய ராஜபக்சவின் 20 வது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருந்திருந்தால், தேர்தல்கள் ஆணைக்குழு இவ்வளவு சுதந்திரமாகச் செயற்பட்டிருக்க முடியாது. அந்தத் திருத்தம் சுயாதீன ஆணைக்குழுக்களை ஜனாதிபதியின் பிற்சேர்க்கைகளாக மாற்றியது. அதிர்ஷ்டவசமாக இலங்கை ஜனநாயகத்தின் அதிர்ஷ்டவசமாக, ரணில் விக்கிரமசிங்க, 21வது திருத்தத்தின் மூலம் ஆணைக்குழுக்களை மீண்டும் சுயாதீனமாக்கினார், அவர் முதலில் இலங்கையில் பிரசார நிதியச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். தேர்தல் ஆணைக்குழுவில் பணியாற்றும் அரசியல் செல்வாக்கு இல்லாத அதிகாரத்துவம், அதன் அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதமான சுதந்திரத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது, தேர்தல் சட்டங்களை அச்சமோ ஆதரவோ இல்லாமல் எழுத்துபூர்வமாக நடைமுறைப்படுத்தியது. 2024 ஜனாதிபதித் தேர்தலின் பின்விளைவுகள் எப்போதும் இல்லாத விதத்தில் மிகவும் அமைதியானதாக இருந்தது. துப்பாக்கி குண்டுகள் அல்லது தீ வைப்பு ஒருபுறம் இருக்கட்டும் பட்டாசு வெடிக்கவில்லை. என்.பி.பி /ஜே .வி .பி கூறியமை செயற்படுத்தபட்டிருக்கக்கூடும் . இந்தத் தேர்தலில் அரசியல் வர்க்கத்தின் மீதான மக்களின் கோபம் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்ததால், அதீத மகிழ்ச்சியின் சில சம்பவங்கள் எதிர்பார்க்கப்பட்டிருக்கலாம். ஆனால் எதுவும் இல்லை. தேர்தல் முடிவு அரசியல் எழுச்சியை ஏற்படுத்தியது, ஆனாலும் நாடு தங்க மீன் கிண்ணம் போல் அமைதியாக இருந்தது. வெற்றியில் என்.பி.பி /ஜே.வி.பி.இன் சிறந்த நடத்தை எதிர்கால வெற்றியாளர்களால் பின்பற்றப்படும், மேலும் எமது அரசியல் கலாசாரத்தில், ஒரு பெரிய புதிய பாரம்பரியத்தில் நிலை நிறுத்தப்படும் என்று நம்புகிறோம். (அதேசமமாக, மிகவும் பொருத்தமான ஹரிணி அமரசூரியவை பிரதமராக அவர்கள் நியமித்திருப்பது, உயர் மட்டங்கள் உட்பட, பொருத்தமான பெண்களுக்கு கதவுகளைத் திறக்க ஏனைய தரப்பினரை ஊக்குவிக்கும் என்று நம்புகிறோம்) போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தவரை தேர்தல் பணியின் நிறைவு நிகழ்வில் பேச அழைத்ததன் மூலம் தேர்தல் ஆணைக்குழு மற்றொரு சிறந்த முன்னுதாரணத்தை அமைத்துள்ளது. சஜித் பிரேமதாச ஒரு குறுகிய மற்றும் உறுதியான உரையை நிகழ்த்தும் சந்தர்ப்பத்திற்கு உயர்ந்தார், இரண்டு உரிச்சொற்கள் பொதுவாக பயன்படுத்த முடியாதவை மற்றும் அவரது கூற்றுகள். ரணில் விக்கிரமசிங்கவுக்கு முகவர் ஒருவரை அனுப்புவதற்குப் பதிலாக, தனிப்பட்ட முறையில் நிகழ்வில் கலந்துகொள்ளும் தைரியம் இருந்திருந்தால், இத்தருணத்தின் தொனி மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். தேசத்திற்கு சிந்தனைமிக்க உரையை ஆற்றியதன் மூலம் அவர் அந்த குறையை சரிசெய்தார். ஒன்றாக எடுத்துக்கொண்டால், 2024 ஜனாதிபதித் தேர்தல் முதிர்ச்சியடையாத ஜனநாயகத்திலிருந்து முதிர்ந்த ஜனநாயகத்திற்கு மாற்றும் படியை இலங்கை எடுத்த தருணத்தைக் குறிப்பதாக இருந்தது. ஜனநாயகம் என்பது செயற்பாட்டில்இருக்கிறது. மந்திரக்கோலை அசைத்தால் கிடைப்பது போல் ஜனநாயக முன்னேற்றங்கள் ஒரு நொடியில் நடக்காது. அவை நீண்ட செயல்முறைகள், பெரும்பாலும் பல மாறுபாடுகளுடன். இன்று நம்மிடம் உள்ள உண்மையான சுதந்திரமான தேர்தல் ஆணைக் குழு உருவாகி இரண்டு தசாப்தங்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட காலம் எடுத்தது. 2001 ஆம் ஆண்டு 17வது திருத்தம் அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவியது. செயல்படுத்தப்படாவிட்டாலும், அது ஒரு யோசனை, ஒரு நம்பிக்கை, ஒரு பார்வையை நிலைநிறுத்தியது. மகிந்த ராஜபக்ச 18வது திருத்தச் சட்டத்தின் மூலம் ஆணைக்குழுக்களை ஜனாதிபதியின் பிற்சேர்க்கையாக மாற்றினார். சிறிசேன – விக்கிரமசிங்க நிர்வாகம் அந்த பின்னடைவை 19வது திருத்தத்தின் மூலம் மாற்றியமைத்து, இன்னும் சொல்லப்போனால், ஆணைக்குழுக்களை செயற்பட வைத்தது. கோத்தாபய ராஜபக்ச, உண்மையான ராஜபக்ச பாணியில், 20 வது திருத்தத்தின் மூலம் ஆணைக்குழுக்கள் மீது ஜனாதிபதி கட்டுப்பாட்டை மீண்டும் சுமத்தினார். ரணில் விக்கிரமசிங்க சுயாதீன ஆணைக்குழுக்களை மீண்டும் நிறுவினார். நல்லது, கெட்டது மற்றும் அசிங்கமானது 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு தொலைக்காட்சி நேர்காணலின் போது “என்னை நேசிக்கும் மக்கள் நிச்சயமாக நாமலை நேசிப்பார்கள்” என்று மகிந்த ராஜபக்ச கூறினார். நாமல் ராஜபக்சவின் துணிச்சலான பிரசாரம் இருந்த போதிலும் அதிர்ஷ்டவசமாக இலங்கை ஜனநாயகத்தில் , ‘என்னை நேசிக்கின்ற -என் மகனை நேசிக்கின்ற’ என்ற இலங்கையர்கள் எண்ணிக்கையில் குறைவாகவே இருந்தனர்; 342,781 வாக்காளர்கள், 2.6% வாக்காளர்கள். ராஜபக்ச மந்திரம் போய்விட்டது என்றென்றும் போய்விட்டது. “மக்கள் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால், பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கிடைத்திருக்கும்” என்று பசில் ராஜபக்ச 2022 டிசம்பர் இல் ஒரு தொலைக்காட்சி சனலுக்குத் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு நன்றாகத் தெரியும். ராஜபக்சக்கள் இயங்கும் பொருளாதாரத்தை மரபுரிமையாகப் பெற்றனர் மற்றும் அதிலிருந்தவற்றை எடுத்து, இலங்கை மக்களை இக்கட்டான நிலைக்குத் தள்ளினார்கள். கோத்தாபய ராஜபக்ச வெளியேற்றப்பட்ட நேரத்தில், 14 பேர் வரிசையில் நின்று இறந்தனர். நாம் எப்படி வங்குரோத்து நிலையை அடைந்தோம் என்பது பற்றிய நியாயமான விவாதம் ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் வெளிப்படையாக இல்லாமல் இருந்தது. ராஜபக்ச மெத்தனம் புரிந்துகொள்ளக்கூடியது, இயற்கையானது. துரதிர்ஷ்டவசமாக, மூன்று முக்கிய வேட்பாளர்களுக்கும் இந்த பிரச்சினை ஒரு பிரச்சினையாக இல்லை. கோத்தாபய ஆதரவாளர்களில் பெரும்பான்மையானவர்கள் அவருக்கு ஆதரவளித்ததால் ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தைத் தவிர்த்து விட்டார். சஜித் பிரேமதாசவும் அநு ரகுமார திஸாநாயக்கவும் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தி சில அங்குலங்கள் மேலே இழுத்ததற்காக எந்தப் புகழையும் பெற விரும்பாத காரணத்தினால் இந்தப் பிரச்சினையைத் தவிர்த்துவிட்டனர். (தற்செயலாக, ரணில் விக்ரமசிங்க சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம், அவர் ஒரு காலத்தில் ராஜபக்சவின் அடிவருடிகள் தன்னைச் சூழ்ந்து கொள்ளாமல், ஐ.தே.க.வின் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தால். வெற்றி அவருக்கு ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் அவருக்குக் கிடைத்த இழப்பை தவிர்த்திருக்க முடியும்). மக்கள் ஞாபகமாக வைத்திருந்து செயல்பட்டனர். ராஜபக்சவின் வாக்குத் தளம் இப்போதைக்கு இல்லை. ஐ.எம்.எவ்.பிணை மீட்பு பொதியில் கையொப்பமிடப்பட்ட போது, சுனில் ஹந்துன் நெத்தி (எதிர்கால என்.பி.பி அரசாங்கத்தில் ஒரு சாத்தியமான நிதியமைச்சர்) அதை “சமீபத்திய ஐ.எம்.எவ் உடன்படிக்கைகளில் மிகவும் மோசமானது” என்று குறிப்பிட்டிருந்தார் . பிரசாரத்தின் போது, என்.பி.பி /ஜே. வி.பி. அதன் எதிர்ப்பைக் குறைத்தது, இது யதார்த்தத்திற்கு இடமளிக்கும் செயல்முறையாகும். இது ஒப்பந்தத்தை ரத்து செய்யாது என்ற வாக்குறுதியில் முடிந்தது. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் இந்த புதிய நிர்வாகமும் இதுவரை நடுநிலையாக இருக்கிறது, நேரடி வரிகள் தொடர்பாக , மற்றொரு கடந்தகால வாக்குறுதிக்கு வரும்போது, அதே அளவு எச்சரிக்கையுடன் இருக்கும் என்று நம்புகிறோம். மீண்டும், ஹந்துன்நெத்தியின் கூற்றுப்படி என்.பி.பி. வரி இல்லாத வரம்பை மாதத்திற்கு ரூபா 200,000 மற்றும் மேல் விகிதத்தை 24% ஆக குறைக்கவும் திட்டமிடுகிறது . மங்கள சமரவீர காலத்தில் இருந்த வரம்பை அதிகரித்து, ரூ. 150,000, அர்த்தமுள்ளதாக இருக்கிறது; உயர்மட்ட வீ தத்தை மிகக் கடுமையாகக் குறைப்பது இல்லை – ஐ.எச்.பி.வாக்கெடுப்பின்படி, 40% செல்வந்தரான இலங்கையர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் என்.பி.பி.க்கு ஆதரவாக இருந்தனர் என்பதை ஒருவர் நினைவுபடுத்தும் வரை. இந்த குறிப்பிட்ட வட்டத்தை சதுரமாக்குவதற்கு ஒரு குறைவான நிதி அழிவு வழி இருக்கலாம். புதிய அரசாங்கம் உண்மையில் ஊழலையும் வீண்விரயத்தையும் குறைக்குமானால், 36% வரி விதிக்கப்படுவதை அதன் ஆதரவாளர்கள் எவ்வாறு எதிர்க்க முடியும். ஏனெனில் அவர்களின் வரிப்பணத்தை இழிவுபடுத்தப்பட்ட அரசியல் வர்க்கத்தை வளப்படுத்துவதற்குப் பதிலாக நாட்டின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பதை அவர்கள் அறிவார்கள்? புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு ஒரு எளிமையான விவகாரம். மைத்திரிபால சிறிசேனவைப் போலவே, எளிமையான, மலிவான மற்றும் மிகவும் அணுகக்கூடிய முதலீட்டைக் கொண்டிருந்தார். ஜனாதிபதி சிறிசேன தனது பதவியேற்பு உரையில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக உறுதியளித்தார். நாட்டின் மற்றும் அவரது துரதிர்ஷ்டத்திற்கு வாக்குறுதி மீறப்பட்டது. என்.பி.பி./ஜே.வி.பி . கூட நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால், தேர்தலுக்குப் பின், அந்த வாக்குறுதி குறித்து அதிகம் பேசப்படவில்லை. ஜனாதிபதி பதவி ஏற்கனவே புதிய ஆட்சியாளர்களின் மனதில் பதிந்துவிட்டதா? புதிய நிர்வாகம் தொடங்கியதில் இருந்து, வாகனக் கண்காட்சி என்பது ஊரில் மிகப்பெரிய பேச்சாக இருக்கலாம். மிகக் குறைந்த நேரத்தில் பொது நிதியை விரயம் செய்யம் குற்றம் (ஏன் போர்ஷே, சொர்க்கத்திற்காக?) அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊழலுக்கு அளவிட முடியாத நெகிழ்ச்சித் தன்மையின் நிரந்தர வாசலை ஜனாதிபதி பதவி எவ்வாறு உருவாக்குகிறது என்பதை நிரூபிக்கிறது. ஒரு ஜனாதிபதி தனது விசுவாசிகளுக்கு வெகுமதி அளிக்க பொது நிதியைப் பயன்படுத்துகிறார் என்ற (சமீபத்திய கதை) மீண்டும், ஏன் ஜனாதிபதி பதவி ஜனநாயகத்திற்காக மட்டுமல்ல, நிதிக்காகவும் செல்ல வேண்டும் என்பதை நிரூபிக்கிறது. பொருளாதார ஆரோக்கியம். வாகனப் பிரச்சினையை அதிகம் பயன்படுத்திய என்.பி.பி /ஜே.வி.பி இன்னும் அந்தக் குறிப்பிட்ட கருத்தைக் கூறவில்லை. புதிய ஆட்சியானது டோல்கீனின் லார்ட் ஆஃப் தி ரிங் என்ற இலங்கைப் பதிப்பின் ஃப்ரோடோ, மோதிரத்தின் கவர்ச்சியை எதிர்த்து அதை அழித்ததா? வடக்கு, தெற்கு மற்றும் காஸாவிலிருந்து ஒரு பாடம் ஜனாதிபதி மாளிகையில் இரண்டு வீதிகளை திறந்து வைத்தமைக்காக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பாராட்டப்பட்டார். (மைத்திரிபால சிறிசேனவும் தனது முதல் வாரங்களில் இதேபோன்ற ஒன்றைச் செய்தார்). யாழ்ப்பாணத்தில் மூடப்பட்டுள்ள பல வீதிகளை திறந்து வைப்பதன் மூலம் வடக்கிற்கு இதேபோன்ற செயற்பாட்டை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியிடம் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அந்த கோரிக்கைக்கு ஜனாதிபதியின் பதில் இன்னும் வரவில்லை. திஸாநாயக்க பிக்குகள் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவத்தினரை நம்பியிருப்பதால் வராமல் போகலாம். குறைந்தபட்சம் ஒரு வகையில், அநுரகுமார திஸாநாயக்க, கோத்தாபய ராஜபக்சவுடன் (மற்றும் ரணில் விக்கிரமசிங்க) ஒரு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளார்: அரசியல் விசுவாசமான ‘போர் வீரரை’ பாதுகாப்புச் செயலாளராக நியமித்தல் (மற்றும் வைத்திருத்தல்). அத்தகைய ஜனாதிபதியால் இறுதி ஈழப்போர் = மனிதாபிமான நடவடிக்கை என்ற கட்டுக்கதைக்கு அப்பால் செல்ல முடியுமா? அவர் முயற்சி செய்வாரா? யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், வடக்கு மிகவும் இராணுவமயமாகவே உள்ளது. 2022 இல், இலங்கையின் 21 இராணுவப் பிரிவுகளில் 14 வடக்கில் நிலைகொண்டிருந்தன. இப்போது நிலைமை வேறுவிதமாக இருக்க முடியாது. வடக்கை ஏன் இராணுவத்தால் நிரப்ப வேண்டும்? இன்னும் ஏன் தமிழர்களை இப்படி வித்தியாசமாக நடத்துகிறார்கள்? அவர்கள் தமிழர்கள் என்பதால், அந்த அளவுகோலால் எப்போதும் சந்தேகப்படுவார்களா? நாட்டின் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும் போது வடக்கு மற்றும் கிழக்கில் திஸாநாயக்க மிகவும் மோசமாக இருந்தார். வெளிப்படையாக, அங்குள்ள மக்கள் அவரது சகோதரத்துவ பாடல் வரிகள் சந்தேகத்தின் அளவுடன் கருதுகின்றனர். பிக்குகள் மற்றும் ஓய்வுபெற்ற இராணுவத்தின் மீது அவர் வெளிப்படையாகச் சார்ந்திருப்பது, அதிகாரப் பகிர்வுக்கான அவரது அர்ப்பணிப்பு இல்லாமை, ஊழல் மற்றும் வீண்விரயத்தை எதிர்த்துப் போராடும் தெற்கு முற்போக்குவாதிகளுக்கு (அதுவும் செய்யப்பட வேண்டும்) முக்கியமற்றதாகத் தோன்றலாம். ஆனால் அந்த இரு மாகாணங்களின் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருப்புகள் தொடர்பாக கவலையளிக்காதது எவ்வாறு? ஜனாதிபதி திஸாநாயக்கவும் அவரது கட்சியும் அவர்களின் நீடித்த ஆதிகால விசுவாசங்களால் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கு அப்பால் சென்று உண்மையான சமத்துவத்தின் தளத்தில் சிங்களம் அல்லாத இலங்கையர்களிடம் முறையிட முடியுமா? அவ்வாறான அணுகுமுறை இல்லாத பட்சத்தில், வடக்கின் தீவிர -இராணுவமயமாக்கல் முடிவடையாது, மேலும் இலங்கை இராணுவ இறக்குமதி வளாகமானது அனைத்து இலங்கையர்களின் உண்மையான தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பயன்படுத்தக்கூடிய பற்றாக்குறை வளங்களை தொடர்ந்து நுகரும். காசா மீதான இஸ்ரேலின் போரின் தொடக்கத்தில், சமாதானத்துக்கான யூதர்களின் ரப்பி ஜெசிகா ரோசன்பெர்க் மினியாபோலிஸில் நடந்த பைடன் -நன்கொடையாளர்களின் கூட்டத்தில் குறுக்கீடு செய்து , “திரு. ஜனாதிபதிஅவர்களே , யூத மக்கள் மீது உங்களுக்கு அக்கறை இருந்தால், நீங்கள் இப்போது போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தார் . 1,000-க்கும் மேற்பட்ட நன்கொடையாளர்கள் கூச்சலிட்டனர். அவர் அகற்றப்பட்டார். 2024 செப்டம்பர் வரை, இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் 41,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 2024ஆகஸ்ட் க்குள், போரினால் இஸ்ரேலுக்கு 67.3 பில்லியன் டொலர்கள் செலவானது. இஸ்ரேல் பைத்தியக்காரத்தனமான போரை லெபனானுக்குள் விரிவுபடுத்துவது நிதி மற்றும் மனித செலவுகளை செங்குத்தாக உயர்த்தும். தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் இலங்கையர் என்ற தன்மையை ஏற்றுக்கொள்ள சிங்களவர்களால் முடியாதமையே , சுதந்திரத்தின் போது நாடு கொண்டிருந்த பெரும் ஆற்றலை உணரத் தவறியதற்கு முக்கிய காரணியாக இருந்தது. இராணுவச் செலவைக் குறைக்கவோ அல்லது வடக்கு மற்றும் கிழக்கின் சில பகுதிகளை இராணுவ மயமற்றதாக்கவோ நாங்கள் விரும்பாததன் மூலம் இந்த இயலாமை தொடர்கிறது. இதுவே சிறிசேன-விக்கிரமசிங்க நிர்வாகத்திற்கும் விக்கிரமசிங்க ஜனாதிபதி பதவியும் அகப்பட்டுக்கொண்டதும் துன்பகரமா னதாக இருந்த இக்கட்டான நிலையாகும் .[ இரண்டு சமமான ஆபத்தானவற்றுக்கு இடையில், இரண்டையும் எதிர்கொள்ளாமல் கடந்து செல்ல முடியாது மற்றும் மற்றொன்றுக்கு பலியாகலாம்]. . அநுரகுமார திஸாநாயக்க நிர்வாகம் சிறப்பாக செயற்பட முடியுமா? சமூகத்திலும் அதன் சொந்த அணிகளிலும் ஆழமாக வேரூன்றியிருக்கும் தப்பெண்ணங்களைக் கடந்து, இலங்கைக்கு மிகவும் தீங்கு விளைவித்த இன-மத தீய சுழற்சியில் இருந்து வெளியேற முடியுமா? பினான்சியல் டைம்ஸ் https://thinakkural.lk/article/310354
  15. நிதி மோசடியில் ஈடுபட்ட 19 சீன பிரஜைகள் கைது Published By: DIGITAL DESK 2 08 OCT, 2024 | 10:03 AM இணையம் ஊடாக மேற்கொள்ளப்பட்ட நிதி மோசடி தொடர்பில் 19 சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் நாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/195728
  16. இஸ்ரேலின் அயன் டோமை தாண்டி இலக்கை அடைந்த ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் மூண்டது. ஒரு வருடமாகியும் அங்கு தொடர்ந்து தாக்குதல் சம்பவங்கள் நடந்துவருகின்றன. முதலில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே துவங்கிய போர், பிறகு பெலனானின் ஹிஸ்புல்லா, ஈரான் என தற்போது நீண்டுள்ளது. அதன்படி, இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் துவங்கி இன்றுடன் ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில், இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பும், காசாவில் இஸ்ரேலும் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில், 26 நபர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இஸ்ரேல் ராணுவத்தினர் காசாவின் டெய்ர் அல்-பலாஹ் நகரில் உள்ள மசூதி மீது வான் வழி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் அங்கு இருந்தவர்களில் 26 பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலின் மூன்றாவது பெரிய நகரமான ஹைபா மற்றும் டைபிரியாஸ் மீது ஹிஸ்புல்லா அமைப்பு ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைபா நகரின் மீது ஹிஸ்புல்லா அமைப்பு இரண்டு ஏவுகணைகளை வீசியுள்ளது. அதேபோல், டைபிரியாஸ் நகரத்தின் மீது ஐந்து ஏவுகணைகளை வீசியுள்ளது. இந்த ஏழு ஏவுகணைகளும், இஸ்ரேலின் அயன் டோம் தொழில்நுட்பத்தை மீறி இலக்கை துல்லியமாக தாக்கியுள்ளன. எதிர்பாராத விதமாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை தொடர்ந்து வடக்கு இஸ்ரேலில் சைரன் ஒலி எழுப்பப்பட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. https://thinakkural.lk/article/310423
  17. Published By: VISHNU 07 OCT, 2024 | 10:46 PM (எம்.ஆர்.எம்.வசீம்) முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்காக இருந்துவந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் பகிரப்பட்டு வருகின்றபோதும் பதில் பொலிஸ்மா அதிபர் அதனை மறுத்துள்ளார். இவ்வாறு ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு அவரை அவமதிக்கும் வகையில் போலிப்பிரசாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டு வருகிறதை ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் வன்மையாக கண்டிக்கிறோம் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் திங்கட்கிழமை (7) ஊடகங்களுக்கு விடுத்திருந்த விசேட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இலக்காகக்கொண்டு தொடர்ந்து அவரை அவமதிக்கும் வகையில் பொய் தகவல்கள் சமூகமயமாக்கப்பட்டு வருவதை காணகூடியதாக இருக்கிறது. ஐக்கிய தேசிய கட்சி என்றவகையில் அந்த விடயங்களை வன்மையாக கண்டிக்கிறோம். ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டுக்கு பாரிய பணிகளை மேற்கொண்டிருக்கிறார். அதேபோன்று கடந்த காலங்களில் வீழ்ச்சியடைந்திருந்த இந்த நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பியதும் அவராகும். என்றாலும் அவரை இலக்குவைத்து பொய் தகவல்கள் சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. அதேபோன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புக்கு இருந்த பொலிஸ் அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாக சமூகவலைத்தலங்களில் தகவல் பரப்பப்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை (6) பதில் பொலிஸ்மா அதிபருக்கு பதிலாக பிரதி பொலிஸ்மா அதிபர் (மனிதவள முகாமைத்துவம்) சிசிர குமாரவினால் இடமாற்றம் குறிப்பிட்டு எழுத்து மூலமான உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் 8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்ட ஏனைய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பெயரிடப்பட்ட பொலிஸ் பிரிவுகளுக்கு உடன் செயற்படும் வகையில் சமூகமளிக்குமாறு உத்தரவு பிரப்பிக்கப்பட்டுள்ளது. என்றாலும் இதுதொடர்பாக சமூகவலைத்தலங்களில் பிரசரமாகி சில மணி நேரங்களுக்கு பின்னர் பதில் பொலிஸ்மா அதிபரால், குறித்த ஊடக அறிக்கை போலியானது எனவும் பாதுகாப்புக்கு இருந்த அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்பு கடமையில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். பதில் பொலிஸ்மா அதிபர் இதுதொடர்பாக முறையாக கவனம் செலுத்தி நடவடிக்கை எடுப்பார் என நாங்கள் நம்புகிறோம். மேலும் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக வெறுப்பை ஏற்படுத்துவதற்கு அரசாங்கத்துடன் தொடர்புள்ள தரப்பொன்று செற்படுவதையும் காணக்கூடியதாக இருக்கிறது. அதேபோன்று அரசாங்கத்துக்கு நெருக்கமான சிலரால் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரசிங்கவினால் பயன்படுத்திய ஜனாதிபதி மாளிகையின் சமையலறை என குறிப்பிட்டு, வெளிநாடு ஒன்றின் சமையலறை ஒன்றின் காணொளி ஒன்று கடந்த சில தினங்களாக சமூகமயமாக்கப்பட்டுள்ளது. இவ்வாறான தகவல்களின் உண்மை, பொய் தன்மையை முறையாக புரிந்துகொள்ள முடியாத, மூளை வளர்ச்சியற்ற சிலரால் இது சமூகவலைத்தலங்களில் பரப்பப்பட்டு வருகிறது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவியை வகித்த சந்தர்ப்பத்தில் கொழும்பு கோட்டையில் அமைந்துள்ள ஜனாதிபதி மாளிகை பயன்படுத்தியது தேசிய மற்றும் சர்வதேச உத்தியோகபூர் கடமைகளுக்கு மாத்திரமாகும். ரணில் விக்ரமசிங்கவும் அவரது பாரியாரான மைத்திரி விக்ரமசிங்கவும் அவர்களின் தனிப்பட்ட வீட்லே வசித்து வந்தார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இலங்கை முகம்கொடுத்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் பொறுப்பில் இருந்து தப்பிச்செல்லாமல் பாரிய நெருக்கடியில் இருந்து நாட்டை மீட்டெடுத்த தலைவரின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்வகையில் முன்னெடுத்திருக்கும் கீழ் மட்டத்திலான சேறு பூசும் பிரசாரம் தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி மிகவும் கவலையடைகிறது. இந்த நாட்டு மக்களுக்கு எது சத்தியம் எது பொய் என்பதை புரிந்துகொள்வதற்கான பகுத்தறிவு இருக்கும் என நாங்கள் நம்புகிறோம். அதேபோன்று சேறு பூசும் பிரசாரம் மேற்கொண்டு காலத்தை வீணடிக்காமல் தங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின் பிரகாரம் நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நாங்கள் ஆளும் அரசாங்காத்திடம் கேட்டுக்கொள்கிறோம். https://www.virakesari.lk/article/195721
  18. தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவு பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்ட அல்லது நியமிக்கப்படக்கூடிய அனைத்து அரச அதிகாரிகள் மற்றும் சேவையாளர்கள் அஞ்சல் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்க வேண்டுமெனத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் சில குறைபாடுகள் காரணமாக தபால் வாக்குகளுக்கு விண்ணப்பிக்காதது அல்லது விண்ணப்பங்களை நிராகரிப்பது தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிக்க ஒரு காரணம் அல்ல என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுதவிர, தேர்தலுடன் நேரடியாகத் தொடர்புடைய பணிகளுக்கு நியமிக்கப்படாதவர்கள் தபால் மூலம் வாக்குகளைச் செலுத்தக் கோருவதற்குத் தகுதியற்றவர்கள் என்றும், அத்தகைய அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்புக்காக விண்ணப்பிப்பதில்லை என்றும் அத்தகைய விண்ணப்பங்களை உறுதிப்படுத்த வேண்டாம் என்றும் தேர்தல் ஆணைக்குழு நிறுவன பிரதானிகளை அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனைகளுக்கமைய செயற்படத் தவறினால் அரசியலமைப்பின்படி அபராதம் அல்லது 3 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/310429
  19. Published By: DIGITAL DESK 7 07 OCT, 2024 | 05:47 PM (நா.தனுஜா) எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட நிலையில், அதுகுறித்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் பலரும் அதிருப்தியடைந்திருந்த பின்னணியில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா இன்று திங்கட்கிழமை (07) கட்சியிலிருந்து விலகினார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவிருக்கும் பாராளுமன்றத்தேர்தலில் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர்கள் அக்கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (06) அறிவிக்கப்பட்டது. அதன்படி யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களுக்கான வேட்பாளர்களாக எஸ்.சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், எஸ்.சி.சி.இளங்கோவன், கேசவன் சயந்தன், சந்திரலிங்கம் சுகிர்தன், சுரேக்கா சசீந்திரன், இம்மானுவல் ஆர்னோல்ட், கிருஸ்ணவேணி சிறிதரன், தியாகராயா பிரகாஷ் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர். இருப்பினும் அப்பெயர் பட்டியலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. இதனையடுத்து கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். அவர் மாத்திரமன்றி கட்சியின் மேலும் சில சிரேஷ்ட உறுப்பினர்களும் இவ்வேட்பாளர் பட்டியல் தொடர்பில் கடும் அதிருப்தியடைந்திருந்த நிலையில், தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா நேற்று திங்கட்கிழமை கட்சியிலிருந்து விலகினார். அதற்கமைய மாவை சேனாதிராஜா தமிழரசுக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவிக்கும் கடிதத்தை கட்சியின் பொதுச்செயலாளர் பா.சத்தியலிங்கத்துக்கு அனுப்பிவைத்திருப்பதாக அவரது தரப்பினர் கேசரியிடம் உறுதிப்படுத்தினர். ஆனால் பொதுச்செயலாளர் சத்தியலிங்கத்தைத் தொடர்புகொண்டு அக்கடிதத்தின் உள்ளடக்கம் குறித்து வினவியபோது, மாவை சேனாதிராஜா கட்சியிலிருந்து விலகிவிட்டாரா என ஊடகவியலாளர்கள் தொடர்புகொண்டு கேட்டபோது தான் தானும் அறிந்துகொண்டதாகவும், இருப்பினும் அதுகுறித்த உத்தியோகபூர்வ கடிதம் எதுவும் தனக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும் பதிலளித்தார். அதேவேளை எதிர்வரும் பொதுத்தேர்தலில் தமிழரசுக்கட்சி சார்பில் யாழ் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலில், மக்கள் மத்தியில் செல்வாக்குடைய சிரேஷ்ட உறுப்பினர்களின் பெயர்கள் ஏன் உள்வாங்கப்படவில்லை என்றும், அதற்குரிய நியாயமான காரணங்கள் என்ன என்றும் மருத்துவர் சத்தியலிங்கத்திடம் வினவியபோது, அதற்கு அவர் பின்வருமாறு பதிலளித்தார்: 'இந்தத் தீர்மானம் கட்சியின் தேர்தல் நியமனக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். தேர்தலில் போட்டியிடுவதற்கு விருப்பம் தெரிவித்து அதிக எண்ணிக்கையான விண்ணப்பங்கள் வரும்போது, அவற்றை ஆராய்ந்து அதில் பொருத்தமான விண்ணப்பங்களை மாத்திரம் தெரிவுசெய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே இம்முறை தேர்தலில் போட்டியிடவிருக்கும் வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கான செயன்முறையொன்று நியமனக்குழுவினால் வகுக்கப்பட்டு, அதற்கு அமைவாகவே வேட்பாளர் தெரிவு இடம்பெற்றது. எனவே இவ்வாறானதொரு பின்னணியில் சிலர் ஏன் தெரிவுசெய்யப்படவில்லை என்பதற்குத் தனித்தனியாகக் காரணம் கூறுவது சாத்தியமற்றதாகும்' என்றார். https://www.virakesari.lk/article/195712
  20. நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பெண் வேட்பாளர் தெரிவில் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ள கட்சியின் மகளிர் அணியினர், கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி பல்வேறு கேள்விகளையும் எழுப்பியுள்ளார்கள். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியின் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து யாழ். ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை நடத்தினர். இதன்போது கட்சியின் யாழ். மாவட்ட மகளிர் அணித் தலைவி மதனி நெல்சன் தெரிவித்ததாவது:- “நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் சார்பில் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பிரேரிக்கப்பட்டுள்ள பெண் வேட்பாளர் தெரிவில் கட்சியின் மகளிர் அணிக்குக் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. உண்மையில் எதற்காக இவ்வாறான தெரிவுகளைச் செய்தார்கள் என்ற சந்தேகமும் கேள்வியும் இருக்கின்றது. இந்தப் பெண் வேட்பாளர் தெரிவு சர்வாதிகாரமான முறையிலே நடைபெற்றிருக்கின்றது. இதனால் கட்சியில் உள்ள பெண்கள் அவமானப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் யாழில் போட்டியிடுவதற்காக மகளிர் அணியில் இருக்கின்ற ஐந்து பேர் இரண்டு கிழமைக்கு முன்னதாகவே விண்ணப்பித்து இருந்தனர். ஆனால், வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட சுமந்திரன் பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றும், காடுகள், மலைகள், மேடுகள், பள்ளங்கள் எனப் பல இடங்களிலும் பெண்களைத் தேடுவதாகவும் தனது பாணியில் கிண்டலாகச் சொல்லியிருந்தார். ஆனால், 5 ஆம் திகதி பெண்கள் விண்ணப்பிக்கவில்லை என்றவர் மறுநாள் 6 ஆம் திகதி இரண்டு பெண்கள் விண்ணப்பித்து அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்று கூறுகின்றார். உண்மையில் ஓரிரு வாரங்களுக்கு முன்னர் விண்ணப்பித்தவர்களை மறைத்து யாரும் விண்ணப்பிக்கவில்லை எனச் சொன்னவர் திடீரென இருவர் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களைத் தெரிவு செய்துள்ளதாகவும் கூறுகின்றார். ஆகவே, எதற்காக அவர் உண்மையைச் சொல்லாமல் பொய் சொல்லுகின்றார். இவ்வாறாக அவரின் பொய்களைக் கேட்கவோ, சர்வாதிகாரத்துடன் அவர் செயற்பட்டு வருவதையோ அனுமதிக்க நாங்கள் தயாராக இல்லை. எங்களில் பல பேர் போட்டியிட விண்ணப்பித்து இருக்கையில் அதனை மறைத்துவிட்டு தனக்குத் துதிபாடுபவர்களை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நிறுத்தியுள்ளார். ஆக முதலில் விண்ணப்பித்த நாங்கள் யார்? இப்போது சுமந்திரன் தெரிவு செய்த இருவரும் யார்? எந்த அடிப்படையில் அவர்களைச் சுமந்திரன் தெரிவு செய்தார்.? ஆக மொத்தத்தில் தனக்குத் துதி பாடுபவர்களைத் தானே நிறுத்திவிட்டு இப்போது ஆளுமை மிக்க பெண்கள் என அவர் புருடா விடுகின்றார். ஆக இந்தப் பருப்பு எல்லாம இனி வேகாது. வெறுமனே அடாவடித்தனமாகச் சர்வாதிகாரத்துடன் தான் செயற்படுவதால் மற்றவர்களை முட்டாள்கள், மடையர்கள் எனச் சுமந்திரன் நினைக்கக்கூடாது. எல்லாத்துக்கும் தனித்து ஒற்றையாளாக முடிவெடுகின்ற அவரது ஆட்டம் இனி முடிவுக்கு வரும். இந்த இரு பெண் வேட்பாளர்களின் தெரிவு என்பது தன்னிச்சையாக சுமந்திரனால் மட்டுமே செய்யப்பட்டுள்ளது. இதற்கு யாருடைய ஒப்புதலும் இன்றி தனக்குத் துதிபாடுபவர்களைத் தனது வாக்கு வங்கிக்காக அவர் தெரிவு செய்துள்ளார். எங்கள் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக இந்த இருவரையும் சுமந்திரன் நியமித்துள்ளார். முன்னர் விண்ணப்பித்தவர்களைப் புறந்தள்ளி தனக்குத் துதிபாடிக்கொண்டு தன்னோடு பயணிக்கக்கூடிய இரண்டு கொத்தடிமைகளை வேட்பாளர்களாகச் சுமந்திரன் நியமித்துள்ளார்.” – என்றார். தமிழரசுக் கட்சியின் மகளிர் அணிச் செயலாளர் ரஜனி ஜெகப்பிரகாஷ், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை தவிசாளர் நாகரஞ்சினி ஜங்கரன், தமிழரசுக் கட்சியின் மகளிர் அணியைச் சேர்ந்த விமலேஸ்வரி ஆகியோரும் பெண் வேட்பாளர் நியமனத்துக்கு எதிராகக் கருத்து வெளியிட்டனர். தமிழரசுக் கட்சிக்குள் தற்போது சுமந்திரனின் சர்வாதிகார ஆட்சிதான் நடக்கின்றது என்றும் அவர்கள் கடும் விசனம் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/310414
  21. Published By: DIGITAL DESK 2 08 OCT, 2024 | 10:07 AM யாழ்ப்பாணத்தில் கட்டுமரம் கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் கடற்தொழிலாளி ஒருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். தும்பளை லூதர் மாத கோவிலடியை சேர்ந்த 69 வயதுடைய திருச்செல்வம் ஞானப்பிரகாசம் என்பவரே உயிரிழந்துள்ளார். தனது கட்டுமரத்தில் கடற்தொழிலுக்காக கடலுக்குள் சென்ற வேளை கட்டுமரம் கடலில் கவிழ்ந்ததில், அவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். சடலம் சக தொழிலாளிகளால் மீட்கப்பட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195731
  22. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கிரெட்டேசியஸ் காலத்தில் ஏற்பட்ட பேரழிவு நிகழ்விலிருந்து டைனோசர்களால் உயிர் பிழைக்க முடியவில்லை கட்டுரை தகவல் எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட் பதவி, அறிவியல் நிருபர், பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய சிறுகோள் (Asteroid) ஒன்று. ஆனால் அந்த ஒரு சிறுகோள் மட்டும் பூமியைத் தாக்கவில்லை, குறுகிய கால இடைவெளியில் மற்றொரு சிறுகோளும் பூமியில் மோதியுள்ளது என்று விஞ்ஞானிகள் குழு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த சிறுகோள் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைக்கு அருகில் கடலில் விழுந்துள்ளது. இதனால் அப்போது ஒரு மிகப்பெரிய பள்ளமும் ஏற்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, இது அட்லாண்டிக் பெருங்கடலை கடந்து சென்றிருக்கக் கூடிய, குறைந்தபட்சம் 800 மீட்டர் உயரமுள்ள சுனாமியை உருவாக்கும் திறன் கொண்ட ஒரு ‘பேரழிவு நிகழ்வாக’ இருந்திருக்கும். “இந்த நிகழ்வு 450-500 மீட்டர் அகலம் கொண்ட நாதிர் (Nadir) என்ற பள்ளத்தை உருவாக்கியது. இந்த சிறுகோள் மணிக்கு 72,000 கிமீ வேகத்தில் பூமியில் மோதியதாக நம்பப்படுகிறது.” ‘நாதிர் பள்ளம்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாதிர் பள்ளத்தின் புகைப்படங்கள் எதுவும் இல்லை, ஆனால் ஆஸ்திரேலியாவில் உள்ள காஸ்ஸஸ் பிளஃப் (Gosses Bluff) பள்ளம் அதை மிகவும் ஒத்திருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் ஸ்காட்லாந்தில் உள்ள ஹெரியட்-வாட் பல்கலைக் கழக முனைவர் ஊஸ்டன் நிக்கல்சன் 2022இல் நாதிர் பள்ளத்தைக் கண்டுபிடித்தார், ஆனால் அது உண்மையில் எப்படி உருவானது என்பது தெரியவில்லை. இப்போது, நிக்கல்சனும் அவரது சகாக்களும் ‘ஒரு சிறுகோள் கடற்பரப்பில் மோதியதால்தான் இந்த 9 கி.மீ பள்ளம் ஏற்பட்டது’ என்று உறுதியாக நம்புகிறார்கள். ஒரு சிக்கல் என்னவென்றால், இது எப்போது நிகழ்ந்தது என்பதை விஞ்ஞானிகளால் சரியாகக் கண்டறிய முடியவில்லை. டைனோசர்களின் அழிவுக்கு முன்னரா அல்லது அதற்குப் பிறகா என்பது துல்லியமாக தெரியவில்லை. டைனோசர்களை அழித்த அந்த சிறுகோள், தென்கிழக்கு மெக்சிகோவில் 180 கிமீ அகலம் கொண்ட சிக்சுலுப் (Chicxulub) என்ற பள்ளத்தை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறுகிய இடைவெளியில் பூமியைத் தாக்கிய இரு சிறுகோள்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், அந்த சிறுகோள் ஒரு தீப்பந்தமாக உருமாறியிருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள் ஆப்பிரிக்க கடற்கரையில் மோதிய இந்த சிறுகோளை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள், டைனோசர்கள் அழிந்துபோன ‘கிரெட்டேசியஸ்’ (Cretaceous) காலத்தின் இறுதியில் இந்த சிறுகோள் பூமியில் மோதியிருக்கும் என்று கூறுகிறார்கள். பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்தவுடன், அது ஒரு தீப்பந்தமாக உருமாறியிருக்கும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். “உதாரணத்திற்கு அந்த சிறுகோள் கிளாஸ்கோவை (ஸ்காட்லாந்தில் உள்ள நகரம்) தாக்குகிறது, நீங்கள் அங்கிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள எடின்பரோ நகரில் இருக்கிறீர்கள் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். அங்கிருந்து பார்த்தால், வானத்தில் உள்ள சூரியனை விட 24 மடங்கு பெரியதாகவும், எடின்பரோவில் உள்ள அனைத்து மரங்கள் மற்றும் தாவரங்கள் தீப்பற்றி எரிய போதுமானதாகவும் அந்த நெருப்பு பந்து இருந்திருக்கும்" என்று நிக்கல்சன் விளக்குகிறார். இதனால் காற்றில் மிகவும் வலுவான ஒரு வெடிப்பு (Air burst) ஏற்பட்டிருக்கும் என்றும், அதைத் தொடர்ந்து 7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை ஒத்த ஒரு நில அதிர்வும் ஏற்பட்டிருக்கும் என கருதப்படுகிறது. கடலுக்கு அடியில் இருந்து பெருமளவிலான நீர் வெளியேறி, பின்னர் பெரும் அலைகளாக கீழே மோதி, தனித்துவமான தடங்களை உருவாக்கியது. இரண்டு பெரிய சிறுகோள்கள் நமது கிரகத்தை இவ்வளவு குறுகிய கால இடைவெளியில் தாக்குவது அசாதாரணமானது. இந்த இரண்டு சிறுகோள்களும் குறுகிய கால இடைவெளியில் பூமியில் மோதியது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்களுக்குத் தெரியவில்லை. இதுபோன்ற நிகழ்வு மீண்டும் நடக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய சிறுகோள் டைனோசர்களின் அழிவுக்கு காரணமாக அமைந்தது ஏறக்குறைய இதே அளவிலான ஒரு நிகழ்வை மனிதகுலம் 1908 ஆம் ஆண்டு கண்டது. சைபீரியாவின் வளிமண்டலத்தில் 50 மீட்டர் சிறுகோள் ஒன்று நுழைந்தது, துங்குஸ்கா நிகழ்வு (Tunguska event) என்று அழைக்கப்படுகிறது. தற்போது பூமிக்கு மிக அருகில் ‘பென்னு’ (Bennu) எனும் மிகவும் ஆபத்தான சிறுகோள் ஒன்று சுற்றி வருகிறது. நாதிர் பள்ளத்தாக்கை உருவாக்கிய சிறுகோள் ஏறக்குறைய பென்னுவின் அளவைக் ஒத்திருக்கும். நாசாவின் கூற்றுப்படி, 2182ஆம் ஆண்டில் செப்டம்பர் 24ஆம் தேதி பென்னு சிறுகோள் பூமியுடன் மோதக்கூடும். ஆனால் இதற்கான வாய்ப்பு என்பது 2,700இல் 1 சதவீதம் மட்டுமே. மனித வரலாற்றில் இந்த அளவிலான சிறுகோள் தாக்கம் இருந்ததில்லை. இந்த நிகழ்வுகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகள் பூமியில் உள்ள பள்ளங்கள் அல்லது பிற கிரகங்களில் உள்ள பள்ளங்களின் படங்களை ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. நாதிர் பள்ளத்தை நன்கு புரிந்து கொள்ள, நிக்கல்சனும் அவரது குழுவினரும் டிஜிஎஸ் (TGS) என்ற புவி இயற்பியல் நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட உயர் தெளிவுத்திறன் (Resolution) கொண்ட 3டி தரவை ஆய்வு செய்தனர். பெரும்பாலான பள்ளங்கள் அரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் இந்த நாதிர் பள்ளம் சேதமில்லாமல் இருப்பது, விஞ்ஞானிகள் பாறைகளை ஆழமாக ஆராய அனுமதிக்கிறது. "இது போன்ற சிறுகோள் மோதியதால் ஏற்பட்ட ஒரு பள்ளத்தின் உட்புறத்தை நாம் பார்ப்பது இதுவே முதல் முறை. இது மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது," என்று நிக்கல்சன் கூறுகிறார். பூமியில் வெறும் 20 கடல் பள்ளங்கள் உள்ளன, அவற்றில் எதுவுமே இதுபோன்ற முழுமையான ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்படவில்லை என்றும் நிக்கல்சன் கூறுகிறார். நிக்கல்சன் மற்றும் அவரது குழுவின் ஆராய்ச்சி முடிவுகள் ‘நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் எர்த் & என்விரான்மென்ட்’ அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c7v6mz77l88o
  23. பொது வேட்பாளரில் தங்கியுள்ள தமிழர் சுய மரியாதை! -நஜீப் பின் கபூர்- இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்கு சரியாக இரண்டு வாரங்கள்தான் இருக்கின்றன. அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக தேர்தல் பிரசாரப்பணிகள் அனைத்தும் முற்றுப் பெற்றுவிடும். இது நமது வாக்காளர்களுக்கும் தெரியும். வேட்பாளர்கள் முற்பத்து ஒன்பது பேரில் புத்தளத்தை சேர்ந்த மு.கா. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் இல்யாஸ் மரணித்துவிட்டாலும் அவரது பெயர் வாக்குச் சீட்டில் இடம் பெற்றிருக்கும். இதற்கு முன்னரும் இந்த இல்யாஸ் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டிக்கு வருவதை சம்பிரதாயமாக கடைப்பிடித்து வந்திருக்கின்றார். என்னதான் முப்பத்து ஒன்பது பேர் களத்தில் இருந்தாலும் இவர்களில் டசன் கணக்கானவர்கள் பிரதான வேட்பாளர்களின் டம்மிகளாகத்தான் தேர்தலில் குதித்திருக்கின்றார்கள். வேட்பாளர்களாக பதிவு செய்தவர்களில் நான்கு பேரை காணவில்லை. காணவில்லை என்பதன் அர்த்தம் அவர்கள் தொலைபேசி இணைப்புக்குக் கூட வரத் தயாராக இல்லை. அவர்களின் புகைப்படங்களை கூட நமக்குத் தர அவர்கள் தயாராக இல்லை. இன்னும் பத்தொன்பது பேர் பிரதான வேட்பாளர்களின் கையாட்களாக போட்டியில் குதித்திருக்கின்றார்கள். இதற்கு முன்னரும் இப்படி நடந்திருக்கின்றது. இன்று டசன் கணக்கானவர்கள் இருந்தாலும் முக்கியமான வேட்பாளர்கள் என்று விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர்தான் இருக்கின்றார்கள். அந்த வகையில் நாம் அவர்களை ஐந்து பேர் என்ற அளவில் வைத்துக் (அனுர, சஜித், நாமல், ரணில், அரியம்) கொண்டு தமிழர்களின் சுயமரியாதை பற்றிப் பார்ப்போம். 2024 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாம் நிறையவே தேர்தல் பற்றியும் வேட்பாளர்கள் பற்றியும் நமது வார இதழில் பேசி இருந்தோம். அந்த வரிசையில் கடைசி சில தகவல்களைத்தான் இப்போது நாம் இங்கு பார்க்க இருக்கின்றோம். ஜனாதிபதி ரணில் ராஜபக்ஸக்களின் மொட்டுக் கட்சியை பிளந்து கொண்டு அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவை நம்பி களத்தில் இறங்கி இருக்கின்றார். ஜனாதிபதி ரணில் இது விடயத்தில் மஹிந்த ராஜபக்ஸக்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் பார்த்திருக்கின்றார் என்றுதான் சொல்ல வேண்டும். அடுத்து ஐக்கிய தேசியக் கட்சியை பிளந்து கொண்டு தனிக்கட்சி அமைத்த சஜித் பிரேமதாச தொலைபேசி சின்னத்தில் ரணிலுக்கு எதிரான கட்சியை அமைத்து வேட்பாளராக வந்திருக்கின்றார். இங்கும் அவர் ஐ.தே. கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களை தன்னுடன் வைத்திருக்கின்றார். இதனால்தான் கடந்த தேர்தலில் ரணிலுக்கு ஒரு ஆசனத்தை கூட போட்டி போட்டு வெற்றி கொள்ள முடியாமல் போனது. இதனால் இன்று ரணிலும் சஜித்தும் அரசியல் எதிரிகள். அடுத்து நாடாளுமன்றத்தில் இரண்டு டசன் வேட்பாளர்கள் அளவில் வைத்திருக்கின்ற ராஜபக்ஸக்கள் தரப்பில் இருந்து அவர்களது அரசியல் வாரிசு நாமல் மொட்டுக் கட்சி சார்பில் போட்டிக்கு வந்திருக்கின்றார்.தனிப்பட்ட ரீதியில் சீனியர் மஹிந்த ராஜபக்ஸ தமது தரப்பில் இருந்து ஒரு வேட்பாளர் ரணிலுக்கு எதிராக 2024ல் களத்துக்கு வருவதை விரும்பவில்லை. என்றாலும் தனது புதல்வரின் பலவந்தம் காரணமாகத்தான் மஹிந்த அவரை ஆதரிக்கின்ற தீர்மானத்துக்கு வர வேண்டி வந்தது. இது தொடர்பாக ராஜபக்ஸக்களின் குடும்பத்துக்குள் நடந்த மோதல்கள் பற்றி நாம் முன்பு பல தகவல்களை சொல்லி இருந்தோம். அவை ஊகங்கள் அல்ல யதார்த்தமான கதைகள். அடுத்து இப்போது தெற்கு அரசியலில் பிரதான வேட்பாளர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார் ஜே.வி.பி-என்.பி.பி தலைவர் அனுரகுமார திசநாயக்க. அவர் மீதுதான் ஏனைய பிரதான வேட்பாளர்கள் அனைவரும் தமது விமர்சனங்களை செய்து கொண்டிருக்கின்றனர். காய் இருக்கின்ற மரத்துக்குத்தான் கல் எறிவார்கள் என்பது போலதான் இது. இதிலிருந்து அனுர ஒரு செல்வாக்கான வேட்பாளராக இருக்கின்றார் என்பதனை அவரது அரசியல் எதிரிகளே உறுதி செய்து அவருக்கு ஒரு பிரசாரத்தை கொடுத்துக் கொண்டு வருகின்றார்கள். தெற்கு அரசியலில் நான்கு முனைப் போட்டி என்று களம் இருக்கின்றது. ஆனால் நமது பார்வையில் அங்கு இருமுனைப் போட்டிதான். மூன்றாம் இடத்துக்குத்தான் இருவர் பலப் பரீட்சையில் இருக்கின்றார்கள். இது எப்படி? அவர்கள் யார் என்று நமது வாசகர்கள் யோசிக்கலாம். அடுத்த கட்டுரையில் வாசகர்களே கள நிலைவரங்களைக் கண்டறிவதற்கான வகையில் (சுய கணிப்பு) ஒரு கட்டுரையில் நிலமையை புரிய வைக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். எனவே இன்று கருத்துக் கணிப்புக்கள் என்று சொல்லப்படுகின்றவற்றை வாசகர்கள் தமது தலைகளில் போட்டுக் கொள்ளக்கூடாது என்பது நமது கருத்து. அரசியல்வாதிகளும் ஊடகங்களும் சமூக ஊடகங்களும் இன்று மக்களுக்கு உண்மைக்குப் புறம்பான கதைகளைச் சொல்லி மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதில் அவர்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும் பொருளாதார நலன்களும் அதில் இருக்கின்றன என்பதனை குடிமக்கள் புரிந்து கொள்ள வேண்டும். ரணில் நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று வெற்றி பெறுவார் என்ற கதையும் சஜித்துக்கு தொண்ணூறு இலட்சம் வாக்குகள். அனுரவுக்கு ஒரு கோடி வாக்குகள் என்பவைகள் எல்லாம் கற்பனைக் கதைகள் என்பது இருபத்தி இரண்டாம் திகதி பின்னிரவில் நாம் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கும். ஒரு புறத்தில் பார்க்கின்ற போது தமது ஆதரவாளர்களை ஊக்குவிப்பதற்காக அரசியல்வாதிகளும் அவர்களுக்கு கூஜா தூக்குகின்ற ஊடகங்களும் இப்படியான கதைகளை சந்தைப்படுத்தி வருகின்றன. இதனை குடிமக்கள் புரிந்து கொண்டால் அவர்கள் குழப்பமடைய வேண்டிய தேவை இருக்காது. ஆனால் இப்படியான கதைகளை எல்லாம் காதில் வாங்கிக் கொள்கின்ற கூட்டத்தினர்தான் சமூகத்தில் டென்சனாகிக் கொண்டிருக்கின்றார்கள். நமது நாட்டில் மட்டுமல்ல உலகம் பூராவிலும் அரசியலில் இப்படியான காட்சிகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. இதனால்தான் இன்று அனுர, சஜித், ரணில், நாமல் தமக்கே வெற்றி என்று கதை சொல்லிக் கொண்டு வருகின்றார்கள். இப்போது நாம் தலைப்பில் சொல்லி இருக்கின்ற தமிழர்களின் சுயமரியாதை பற்றி நமது கருப் பொருளுக்குள் பிரவேசிப்போம். இந்த சுயமரியாதை என்ற பதம் ஒவ்வொரு தனிமனிதனினதும் உயிரினங்களின் உணர்வுகளிலும் இரண்டறக் கலந்திருக்கின்ற ஒரு அம்சம். அது உணர்வுக்குள் அடங்கிப் போய் இருக்கும். தனக்கு அல்லது தனது இனத்துக்கு சமூகத்துக்கு தேசத்துக்கு ஒரு கௌரவப் பிரச்சினை வரும் போது சுயமரியாதை என்ற உருவத்தில் அது வெளிப்படும். மேற்சொன்ன நான்கு வேட்பாளர்கள் மத்தியில் ஐந்தாம் ஆளாக தமிழர்களின் பொது வேட்பாளரையும் நாம் ஒரு கனதியான வேட்பாளராக எடுத்துக் கொள்ள முடியும். அவருக்கு சமூகம் எந்தளவுக்கு வாக்கு கொடுக்கின்றதோ அந்தளவுக்குத்தான் அவர்களுக்கான மரியாதையும் சுயகௌரவமும் பாதுகாப்பும் இருக்கும் என்று நாம் உறுதியாக நம்புகின்றோம். தமிழர்களைப் பொறுத்தவரை அவர்தான் அந்த சமூகத்தின் ஜனாதிபதி வேட்பாளர். தமிழர்களின் பொது வேட்பாளராக அரியநேத்திரனைக் களத்தில் இறக்கி இருப்பது ஒரு இனத்தின் குறியீடாகத்தான் என்பது அனைவரும் அறிந்த செய்தி. என்றாலும் வெற்றி பெற முடியாத ஒருவர் ஏன் களத்திற்கு வரவேண்டும் என்று தமிழர் தரப்பிலிருந்தே சில அரசியல்வாதிகள் கேட்டிருந்தார்கள். எனவே வெற்றி பெறக்கூடிய தெற்கு அரசியல்வாதி ஒருவருக்கு ஆதரவு கொடுத்து அவர் ஊடாக தமிழர்கள் உரிமைகளை அடைவதற்கு இது தடை என்பது அவர்கள் வாதமாகவும் இருக்கின்றது. இவர்களிடம் நாம் கேட்பது போட்டியிடுகின்ற 39 பேரில் ஒருவர்தானே வெற்றி பெற முடியும். எனவே வெற்றி பெற முடியாத ஏனையோர் அப்படியாக இருந்தால் எதற்காக அங்கு போட்டிக்கு வந்திருக்கின்றார்கள்? அடுத்து இவர்கள் இனம் காட்டுகின்ற வேட்பாளர்தான் தெற்கில் வெற்றி பெறுவார் என்பதற்கு என்னதான் உத்தரவாதம் இருக்கின்றது. அடுத்து நல்லாட்சி அரசாங்கத்தை பதவிக்கு கொண்டு வருவதில் பிரதான பங்காளியாக இருந்த இவர்கள் அன்று வாய்ப்பான நேரத்தில் தமிழர்களுக்கு என்னதான் பெற்றுக் கொடுத்திருந்தார்கள். ரணிலை நம்பி கடைசி வரையிலும் தமிழர்களை ஏமாற்றி அரசியல் பிழைப்பு நடத்தியவர்கள் இந்த பொது வேட்பாளரை எதிர்ப்பதிலும் முன்னணியில் இருந்து கொண்டிருக்கின்றார்கள். இதனை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியல் செயல்பாடுகளின் போது அவர்களை எந்த இடத்தில் கொண்டு வந்து வைக்க வேண்டும் என்பது தொடர்பிலான தீர்மானங்களையும் இப்போது தமிழர்கள் எடுத்தாக வேண்டும். இதற்கு இந்த ஜனாதிபதித் தேர்தல் தமிழர்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்திருக்கின்றது. தமிழர்களின் அரசியல் அரங்கை தூய்மைப்படுத்தும் ஒரு காலமாக இதனை தமிழர்கள் உபயோகித்துக் கொள்ள முடியும். சந்தர்ப்பவாத அரசியல் செய்தவர்களுக்கும் செய்கின்றவர்களுக்கும் இனங்களின் அரசியல் உணர்வுகள், போராட்டங்கள், தியாகங்களைப் புரிந்து கொள்ள முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் இன உணர்வுடன் செயல்படுகின்றவர்கள் இவர்கள் விடயத்தில் இன்னும் அடக்கி வாசிப்பது புரிந்து கொள்ள முடியாத விடயமாக இருக்கின்றது. ஈகோ பிரச்சினைகளோ தெரியாது.! தமிழரசுக் கட்சியில் இருக்கின்ற ஏனைய தலைவர்கள் தனிப்பட்ட ரீதியில் பொது வேட்பாளருக்கு ஆதரவு என்ற கதையைச் சொல்லிக் கொண்டிருப்பதால் அவர்களும் முதுகெலும்பு இல்லாத தலைவர்கள் என்பதனை தம்மை சமூகத்திற்கு கோடிட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். சுமந்திரன் ஒரு முறை, 2024 செப்டெம்பர் இருபதாம் திகதி வரை பொது வேட்பாளர் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க காலம் இருக்கின்றது என்று ஒரு கதையை ஊடகங்களுக்கு சொல்லி இருந்தார். அவரது அந்தக் கதையிலிருந்து எதனை உணர முடிகின்றது. ஒருவர் இனத்தின் சார்பில் களத்தில் இறக்கி விடப்பட்டிருக்கின்ற தீர்க்கமான இந்த நேரத்தில் இறுதி நிமிடம் வரை தமிழரசுக் கட்சி முடிவு சொல்லும் வரை காத்திரு என்ற வார்த்தை எவ்வளவு தூரம் தமிழர்களின் உணர்வுகளைக் கொச்சைப்படுத்துகின்ற விடயமாக இருக்க முடியும். இது தொடர்பாக தமிழரசுக் கட்சி இன்னும் மௌனம் காப்பது ஏன்? தெற்கின் அரசியல் முகவர் தமிழரசுக் கட்சித் தீர்மானம் பற்றிக் கேட்ட போது அந்த முகவர் 20ம் திகதி வரை பொறுத்திரு என்று சொல்லி இருந்தார். இது எவ்வளவு தூரம் துரோகமான கதை. அடுத்து கிழக்கில் ஒருவருக்கு அறுபது கோடியும் வடக்கில் ஒருவருக்கு நாற்பது கோடியும் என்று ஜனாதிபதி ரணில் நிதி ஒதுக்கி இருக்கின்றார் என்று தயாசிறி ஜயசேகர பகிரங்கமாக பெயர் குறிப்பிட்டு கூறி வருகின்றார். இவர்கள்தான் இன்று தமிழ் பொது வேட்பாளருக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கி இருக்கும் முக்கிய புள்ளிகள். மறுபுறத்தில் இப்படி ரணிலிடம் பணம் வாங்கி தமது அரசியலை முன்னெடுத்துச் செல்பவர்கள் எப்படிப் பொது வேட்பாளரை ஆதரிக்க முடியும்? கட்சியின் அங்கீகாரம் இல்லாமல் இப்படி தன்னிஸ்டத்துக்கு அபிவிருத்தி பணிகளுக்கு பணம் வாங்கி சமூக விரோத அரசியல் செய்வது தொடர்பாக தமிழரசுக் கட்சி இன்றுவரை கேள்வி எழுப்பியதும் கிடையாது. சிறிதரன் என்னதான் தலைவராக தெரிவு செய்யப்பட்டாலும் அவர் ஏட்டுச் சுரைக்காய் வடிவில்தான் தனது பதவியையும் அதிகாரத்தையும் வைத்துக் கொண்டு அரசியல் செய்து வருகின்றார். அல்லது தெற்கு அரசியல் முகவர்களுக்கு அவர் பயந்து முடிவுகளை எடுக்க பின்வாங்கி வருகின்றார். இப்படியான ஒரு பின்புலத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னால் வருகின்ற பொதுத் தேர்தலில் தற்போது பொது வேட்பாளரை களத்தில் ஆதரிக்கின்ற சக்திகள் புதியதோர் அரசியல் இயக்கமாக வருகின்ற தேர்தலில் தமிழ் மக்களின் அங்கீகாரத்துக்கு வரலாம். அப்போது இந்த தமிழரசுக் கட்சியும் சிறிதரன் போன்றவர்களும் இலவுகாத்த கிளியின் நிலைக்கு ஆளாகலாம். தமிழர்கள் தொடர்பாக சர்வதேசத்தின் அவதானத்தை ஈர்ப்பதற்கும் இங்குள்ள தமிழர்களின் பிரச்சினைகளை உலகிற்கு எடுத்துச் சொல்வதற்கும் பொது வேட்பாளர் பெறுகின்ற வாக்குகள் நிச்சயம் துணைபுரியும். பொது வேட்பாளர் அரியநேத்திரன் தமிழ் மக்களின் எழுபத்தி ஐந்து சதவீதமான வாக்குகளுக்கு அதிகம் பெறத் தவறுவாராக இருந்தால் அது தமிழர்களுக்கான தலை குனிவாகத்தான் அமையும். இந்த நாட்டில் தமிழர்களுக்கு நெருக்கடிகள், பிரச்சினைகள் ஏதும் இல்லை என்றுதான் அது அர்த்தத்தைக் கொடுக்கும். மேலும் எதிர்வரும் காலங்களில் இந்த நாட்டில் இருக்கின்ற தமிழர்கள் மீது தெற்கு அரசியல்வாதிகள் தமது அவதானத்தை செலுத்துவதற்கும் அரியநேத்திரன் பெறுகின்ற வாக்குகள் உறுதுணையாகவும் இருக்கும். பணத்துக்காகவும் தெற்கு அரசியல் தலைமைகளுடன் கொடுக்கல் வாங்கல் அரசியல் செய்ய முனைகின்றவர்களுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்கும் ஒரு தேர்தலாகவும் தமிழர்கள் இந்த 2024 ஜனாதிபதித் தேர்தலை பாவிக்க முடியும். நாம் வாழ்கின்ற சமூகத்தில் தன்னலன்களுக்காக கோடாறிக் காம்புகள் தமது பணிகளைச் செய்து கொண்டுதான் இருக்கும். இதற்கு மத்தியில்தான் சமூக விமோசனங்களுக்கான பணிகளும் போராட்டங்களும் முன்னெடுத்துச் செல்ல வேண்டி இருக்கின்றது என்பதனை நாம் வரலாறு பூராவிலும் பார்த்துத் தான் வருகின்றோம். அனுர, சஜித், நாமல், ரணில் ஆகியோருக்கு அடுத்தபடியாக வாக்குகளைப் பெறுகின்ற வேட்பாளராக தமிழர்களின் பொது வேட்பாளர் வருவார் என்று எதிர்பார்க்கலாம். வடக்கு, கிழக்கில் பொது வேட்பாளர் பெறுகின்ற வாக்குகள் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான ஒரு கருத்துக் கணிப்பாகவும் உலகம் பார்க்கும் ஒரு நிலையும் இந்தத் தேர்தலில் இருக்கின்றது. இதனை உலகம் பூராவிலும் வாழ்கின்ற தமிழ் சமூகத்தினர் புரிந்து கொள்ள வேண்டும். https://thinakkural.lk/article/308733
  24. விசேட தேவையுடைய வாக்காளர்கள் தொடர்பில் வெளியான தகவல் Published By: DIGITAL DESK 2 07 OCT, 2024 | 06:15 PM தேர்தலின்போது விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் வைத்து வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக்கொள்வதற்காக உதவியாளர் ஒருவரை உடன் அழைத்துச் செல்ல சட்ட ரீதியாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவிக்கையில், அவ்வாறு உடன் அழைத்துச் செல்லும் உதவியாளர் 18 வயதைப் பூர்த்தி செய்த ஒருவராக இருக்க வேண்டும் என்பதோடு அத்தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர் அல்லாதவராகவும் இருக்க வேண்டும். மேலும், உதவியாளர் ஒருவரோடு வருகைதருவதற்கும் இயலாத வாக்காளர்கள், பழைய முறைப்படி வாக்கெடுப்பு நிலைய அலுவலர் ஒருவரின் முன்னிலையில் தலைமை தாங்கும் அலுவலர் ஊடாக தனது வாக்குச் சீட்டினை அடையாளமிட்டுக்கொள்வதற்கு வசதிகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195711
  25. கந்தையா அருந்தவபாலன் இலங்கை மக்களுக்கு வளமான வாழ்வையும் அழகான நாட்டையும் தருவதாக வாக்குறுதியளித்த அனுரகுமார திசநாயகவை இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளார்கள். ஜனாதிபதியாக பதவியேற்ற அனுர தானும், தனது கட்சிக்கு நாடாளுமன்றத்திலிருந்த மூன்று உறுப்பினர்களும் சேர்ந்து அமைச்சுப் பொறுப்புகளைப் பகிர்ந்த பின் நாடாளுமன்றத்தைக் கலைத்து புதிய நாடாளுமன்றத் தேர்தல் ஒன்றுக்கான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆந் திகதி தேர்தல் நடைபெறவிருப்பதுடன், 21 ஆந் திகதி புதிய நாடாளுமன்றம் கூடவுள்ளது. இலங்கையின் அரசியலமைப்பின்படி ஜனாதிபதிக்கு அதிகளவு அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தாலும் சட்டவாக்கத்துறையான நாடாளுமன்றத்தின் ஆதரவின்றி அவரது அதிகாரங்களை முழுமையாகப் பிரயோகித்து ஆட்சி செய்ய முடியாது. அவரது ஆட்சிக்குத் தேவையான சட்டங்களை ஆக்குவதற்கு மட்டுமன்றி நிதியொதுக்கீடுகளுக்கும் நாடாளுமன்றத்தின் ஆதரவு அவசியமாகும். அதுவும் மாற்றங்களை எதிர்பார்த்து நிற்கும் மக்களைத் திருப்திப்படுத்துவதற்கு வழமைக்கு மாறான மிகக் கடினமான பல தீர்மானங்களை அவர் எடுக்கவேண்டியுள்ளதால் நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மட்டுமன்றி மூன்றில் இரண்டு சிறப்புப் பெரும்பான்மையும் அவருக்கு அவசியமாகும். குறைந்தது சாதாரண அறுதிப் பெரும்பான்மையான 113 ஆசனங்களை அவரது கட்சி பெற்றால் மட்டுமே அனுர தனது ஜனாதிபதி பதவியை நிலைப்படுத்த முடியும். அவ்வாறு பெறமுடியாத நிலை ஒன்று உருவாகுமானால் நாடு உறுதியற்ற ஒரு குழப்பகரமான நிலைமைக்கு தள்ளப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கட்சி அல்லது அதனது வேட்பாளர் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அளவைக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு அக்கட்சி பெறக்கூடிய ஆசனங்களின் எண்ணிக்கையளவை எதிர்வுகூற முடியாது. ஜனாதிபதிப் பதவியை வென்ற கட்சிக்குச் சார்பான கருத்துநிலை ஒன்று இயல்பாகவே மக்களிடத்து உருவாகும் என்பதால் ஜனாதிபதித் தேர்தலில் பெற்ற வாக்குகளின் சதவீத அளவைவிட கூடுதலான அளவு நாடாளுமன்ற ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்றாலும் அது நிச்சயமான ஒன்றெனக் கூறமுடியாது. ஏனெனில் இலங்கையின் அரசியல், சமூக நிலைமைகள் மற்றும் தேர்தல் முறைமை என்பவற்றுக்கு அமைய வெவ்வேறு தேர்தல்களில் வெவ்வேறு வகையான காரணிகள் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. ஜனாதிபதித் தேர்தல் என்பது இலங்கை முழுவதும் ஒரு தொகுதியாக கருதப்படும் தேர்தல் முறையாகும். இதில் உள்ளூர் அல்லது பிரதேசம் மற்றும் தனிநபர் சார்ந்த சிறப்புக் காரணிகளின் செல்வாக்கு மிகக் குறைவாகும். தேசிய நோக்கில் நாடு தொடர்பான காரணிகளின் தாக்கமே அதிகளவில் இருக்கும். உதாரணமாக 2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் இனவாதம் மற்றும் தேசிய பாதுகாப்பு என்பன மக்களின் தெரிவில் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தியது போல இவ்வாண்டுத் தேர்தலில் கடந்த கால ஆட்சியாளரின் ஊழல் மற்றும் அதிகார முறைகேடுகள், பொருளாதாரப் பாதிப்புகள் அதிகளவு செல்வாக்குச் செலுத்தியுள்ளதைக் குறிப்பிடலாம். ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட அடிப்படையில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவதாலும் இலங்கையில் பல்லினத்தன்மை கொண்ட மக்கள் வாழ்வதாலும் அத்தேர்தலில் பிரதேச மற்றும் தனிநபர் சார்ந்த காரணிகள் அதிகளவில் செல்வாக்குச் செலுத்தி வருகின்றன. இனம், மதம், மொழி போன்ற காரணிகளுடன் வேட்பாளர் தொடர்பான தனிநபர் செல்வாக்கு, பிரதேச கட்சிகளின் செல்வாக்கு போன்ற பல காரணிகள் மக்களின் தெரிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. உதாரணமாக நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் வடக்கில் எல்லா மாவட்டங்களிலும் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கே கூடுதலான வாக்குகள் கிடைத்தன. அதன்படி நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கில் அக்கட்சிக்கே அதிகளவு ஆசனங்கள் கிடைக்கவேண்டும். ஆனால் அவ்வாறு கிடைக்கப் போவதில்லை. பதிலாக வடக்கிலுள்ள தமிழ்க் கட்சிகளுக்கே அதிகளவு ஆசனங்கள் கிடைக்கும். அதேபோல, இத்தேர்தலில் பொதுஜன பெரமுன வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷ பெற்றுக்கொண்ட வாக்குகளின் சதவீதம் 2.57 ஆகும். இதற்கமைய இக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெறக்கூடிய உறுப்பினர்களின் எண்ணிக்கை 6 ஆகும். ஆனால் அவ்வாறு இருக்கப்போவதில்லை. அதைவிடக் கூடுதலான உறுப்பினர்களை அக்கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் பெற்றுக் கொள்ளும். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் பதிவான வாக்குகளில் அனுரவின் தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொண்ட வாக்குகள் சுமார் 42% ஆகும். இதற்கமைய நாடாளுமன்றத் தேர்தலில் குறைந்தது 97 உறுப்பினர்கள் அக்கட்சிக்கு கிடைக்கவேண்டும். இந்தளவு கிடைக்குமா? அல்லது இதைவிடக் கூட கிடைக்குமா? அல்லது இதைவிடக் குறையுமா? என்பது ஆய்வுக்குரியது. பொதுவாக இலங்கையின் தேர்தல் வரலாற்றில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் அதிகளவு உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்வதே வழமையாக உள்ளது. அந்த வகையில் அறுதிப் பெரும்பான்மையை (113) அல்லது மூன்றில் இரண்டு சிறப்புப் பெரும்பான்மையை (151) அக்கட்சிகள் பெற்றிருக்கின்றன. அந்தவகையில் தேசிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்களின் எண்ணிக்கை 97 ஐ விட கணிசமான அளவு அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது. இதில் இரண்டு முக்கிய காரணிகள் தேசிய மக்கள் சக்திக்குச் சார்பானவையாக உள்ளன. ஒன்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் சார்பாக மக்களின் கருத்து நிலையில் ஏற்படும் மாற்றம். இதன்மூலம் அக்கட்சிக்கான வாக்குகள் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. இரண்டாவது, மாவட்ட ரீதியிலான சிறப்பு ஒதுக்கீட்டு (போனஸ்) உறுப்பினர்கள். அதாவது ஒரு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெறும் கட்சிக்கு ஒரு உறுப்பினர் ஒதுக்கப்பட்ட பின்னரே ஏனையவை விகிதாசார அடிப்படையில் பங்கிடப்படும். ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 15 தேர்தல் மாவட்டங்களில் கூடுதலான வாக்குகளைப் பெற்றுள்ளது. அந்த அடிப்படையில் குறித்த அந்த 15 மாவட்டங்களிலும் அதேயளவு வாக்குகளை அக்கட்சி பெறுமிடத்து பங்கீட்டுக்கு மேலாக 15 உறுப்பினர்களைப் பெறக்கூடிய வாய்ப்புண்டு. இதேபோலவே தேசியப் பட்டியலிலிருந்தும் கூடிய உறுப்பினர்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. இந்த வழிகளில் தேசிய மக்கள் சக்திக்கு சாதகமான நிலைமைகள் காணப்படுவதால் அறுதிப் பெரும்பான்மையை (113) விட சற்றுக் கூடுதலான உறுப்பினர்களை இலகுவாக பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இவ்விடயத்தில் சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்திக்கான வாய்ப்புக் குறைவாகும். ஏனெனில் அவரின் கட்சி ஏழு மாவட்டங்களில் மட்டும் முதன்நிலை பெற்றிருப்பதுடன், அவை வடக்கு, கிழக்கு, மலையகம் சார்ந்த மாவட்டங்களாக உள்ளன. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் இக்கட்சி முதன்மை பெறுவதற்கான வாய்ப்புக் குறைவு என்பதற்கப்பால் உறுப்பினர்களின் எண்ணிக்கையும் இம்மாவட்டங்களில் மிகக் குறைவாகவே இருக்கும். இதுவரை இலங்கையில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளில் முதல் சுற்றிலேயே 50 % இலும் கூடிய வாக்குகளை பெற்று ஜனாதிபதிகள் தெரிவாகியிருந்தனர். ஆனால் இம்முறை 50% இலும் குறைவான வாக்குகளையே அனுர பெற்றிருந்தார். எனினும் அவரது நேர் எதிர்ப் போட்டியாளரை விட 13 இலட்சம் அதிகப்படியான வாக்குகளை அவர் பெற்றிருந்தார். இது 10% உயர்வானதாகும். 2019 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோதபாய ராஜபக்‌ஷ தனது நேரெதிர் போட்டியாளரைவிட 14 இலட்சம் வாக்குகளை அதிகமாகப் பெற்றிருந்தார். அத் தேர்தலிலும் இருவருக்கிடையில் 10% வேறுபாடே இருந்தது. எனினும் அதன்பின் 2020 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கோதாபயவின் பொதுஜன பெரமுன கட்சி தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் உள்ளடங்கலாக 145 உறுப்பினர்களைப் பெற்றபோது சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி 54 உறுப்பினர்களை மட்டுமே பெற்றிருந்தது. இக்குறைவுக்கு ஏலவே சுட்டிக்காட்டியது போல அத்தேர்தலிலும் வடக்கு, கிழக்கு, மலையக மக்களே அதிகளவில் சஜித்துக்கு வாக்களித்திருந்ததன் காரணமாக நாடாளுமன்றத் தேர்தலில் அப்பகுதிகளைச் சேர்ந்த பிரதேசக் கட்சிகளின் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டதனால் ஐக்கிய மக்கள் சக்திக்கு உறுப்பினர்கள் அதிகம் கிடைக்காமல் போனமையாகும்.இதேபோன்ற ஒரு காட்சி இம்முறையும் தோன்றினால் தேசிய மக்கள் சக்திக்கு நாடாளுமன்றில் உறுதியான பலம் கிடைக்காமல் இருப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எனினும் இந்த வாய்ப்பானது எதிரணிகளின் வியூகங்களால் மட்டுப்படுத்தப்படுவதற்கான நிலைமைகளும் உண்டு. அவ்வியூகங்களில் முக்கியமானதொன்று ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்கான முன்னெடுப்பாகும். உண்மையில் இவ்விரு கட்சிகளும் மோதகமும் கொழுக்கட்டையும் போன்றதுதான். இவ்விரண்டும் சேர்ந்து மோதகமாகவோ அல்லது கொழுக்கட்டையாகவோ அல்லது இன்னொரு பெயரிலோ ஒன்றிணைவதற்கான சாத்தியம் அதிகமுண்டு. ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே எலும்புக்கூடாகிவிட்டது. ரணிலின் ஆட்சியைத் தக்கவைத்தவர்கள் பொதுஜன பெரமுன உறுப்பினர்கள். அவர்களில் கணிசமானவர்களும் முக்கிய புள்ளிகளும் ஜனாதிபதித் தேர்தலில் ரணிலின் பின்னால் நின்றவர்கள். அவர்கள் எதிர்காலத்தில் என்ன முடிவெடுப்பார்கள் என்று கூறுவது கடினம். பலர் மீண்டும் தமது தாய்க்கட்சியான பொதுஜன பெரமுனவுக்கு திரும்பக்கூடும். எனினும் அக்கட்சியின் நிலை இறங்குமுகமாக இருப்பதால் ஐக்கிய தேசியக்கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணையும்போது அவர்களில் கணிசமானவர்களும் அதில் இணையக்கூடும். ஏனெனில் அவர்களுக்கு கட்சி, கொள்கை என்பவற்றைவிட பதவி முக்கியம். இவ்வாறான ஒரு இணைவு ஏற்பட்டாலும் அல்லது கணிசமானவர்கள் தமது தாய்க்கட்சியான பொதுஜன பெரமுனவுடன் இணைந்தாலும் அது நிச்சயமாக தேசிய மக்கள் சக்தியின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். புள்ளிவிபர அடிப்படையில் பார்த்தால் தேர்தலில் அனுர பெற்றது 42%, சஜித் பெற்றது 32%, ரணில் பெற்றது 17%. சஜித்தும் ரணில் தரப்பும் இணையும்போது அது 49% ஆக மாறும். இது அனுரவைவிட 7% அதிமானது. அதனால் நாடாளுமன்றில் எதிர்த்தரப்பு தேசிய மக்கள் சக்தியைவிட அதிகஆசனங்களைக் கைப்பற்றும் என வாதிடமுடியும். ஆனால் புள்ளிவிபரங்கள் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் உண்மைநிலையைப் பிரதிபலிப்பதில்லை. ஆனால் ஐக்கிய மக்கள் சக்தியுடனான ஏனைய கட்சிகளின் கூட்டு அதிலும் குறிப்பாக தமிழ், முஸ்லிம் கட்சிகளுடனான கூட்டு அப்படியே தொடர்வது நிச்சயம் தேசிய மக்கள் சக்தியின் மீது கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும். அதேபோலவே ஜனாதிபதித் தேர்தலைப் போன்றல்லாது நாடாளுமன்றத் தேர்தலில் பொதுஜன பெரமுனவும் ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தும். அதேவேளை, எதிர்காலத்தில் கூட்டுக்களில் மாற்றம் அல்லது புதிய கூட்டுக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. எதுவாயினும் தேசிய மக்கள் சக்தியுடன் பலமுள்ள வேறு கட்சிகள் கூட்டுச் சேர்வதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகக் காணப்படுவதால் எதிர்த்தரப்புகளின் திரட்சி அக்கட்சிக்கு சவாலாக அமையலாம். நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி எதிர்கொள்ள வேண்டியுள்ள இன்னொரு சவால், வேட்பாளர்கள் தொடர்பானது. எதிர்த்தரப்புகளால் நிறுத்தப்படவுள்ள வேட்பாளர்கள் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அல்லது அவர்களைப் போன்ற பிரபலமானவர்களாக இருக்கும்போது அவர்களுக்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் நிறுத்தப்படும் வேட்பாளர்களில் ஒரு சிலரைத்தவிர ஏனையோர் புதியவர்களாக அல்லது ஒப்பீட்டு ரீதியில் மக்கள் மத்தியில் பிரபலம் குறைந்தவர்களாகவே இருக்கப்போகிறார்கள். இவ்வேட்பாளர்கள் படித்தவர்களாக, நேர்மையானவர்களாக இருக்கக்கூடும். ஆனால் தேர்தலில் வெல்வதற்கு அத்தகைமைகள் மட்டும் போதுமானவையல்ல. ஏலவே சுட்டிக்காட்டியது போல இதில் தனிமனிதக் காரணிகள் அதிகம் செல்வாக்குச் செலுத்தக்கூடியன. ஒரு தொகுதியில் ஏலவே அரசியலில் பதவிகளை வகித்து கணிசமான வாக்கு வங்கியைக் கொண்டிருக்கும் ஒருவரை அவர் எக்கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் எதிர்த்து கூடிய வாக்குகளை புதிய ஒருவர் பெறுவது இலகுவான ஒன்றல்ல. மாற்றத்துக்காக ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களித்ததுபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் நடந்து கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியாது. இவற்றுக்கு மேலாக அனுரவின் வெற்றியை விரும்பாத பலதரப்புகள் இச்சந்தர்ப்பத்தில் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் காத்திருக்கின்றன என்பதையும் நிராகரிக்க முடியாது. உள்நாட்டைப் பொறுத்தமட்டில் நீண்டகாலமாக அரசியல் அதிகாரத்தையும் அதனுடன் இணைந்து அளவுக்கதிகமான வசதி வாய்ப்புகளையும் அனுபவித்த மேற்றட்டு அரசியல்வாதிகள், இவர்களுடன் பரஸ்பர நலன்களைப் பகிர்ந்து கொண்ட முதலாளிகளும் நிறுவனங்களும், எல்லை கடந்து அனுரவின் கையில் அதிகாரம் செல்வதை விரும்பியிருக்காத இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் போன்றன நாடாளுமன்றத்தினூடாக அனுரவுக்கு குடைச்சல் கொடுத்து தமக்கு வசதியாக மீண்டும் பழைய நிலைக்கு நாட்டை கொண்டுவர முயற்சிப்பர் என்பதையும் நிராகரிக்க முடியாது. இது போன்ற பல தடைகளையும் திரைமறைவு முயற்சிகளையும் எதிர்கொண்டே தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றமையால் நாடாளுமன்றத் தேர்தலில் எழக்கூடிய புதிய சவால்களையும் அது வெற்றிகொள்ளும் என எதிர்பார்க்க முடியும். இலங்கை என்ற வண்டிலின் எருதுகளை அனுரவிடம் கொடுத்த மக்கள் அவற்றின் நாணயக் கயிற்றையும் அவரிடம் கொடுக்கத் தயங்கமாட்டார்கள் என நம்பலாம். பாதியைத் தாண்டிய அனுர மீதியையும் தாண்டுவதற்கான வாய்ப்புகளே அதிகமுண்டு. இல்லையெனில் அதன்விளைவுகளை அனைத்து மக்களும் அனுபவிக்க நேரிடும். https://thinakkural.lk/article/310088

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.