Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க ஆகியோர் மூடி மறைத்துள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி குற்றம்சாட்டியுள்ளார். பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சமூக செயற்பாட்டாளரான சுனந்த தேசப்பரியவினால் எழுதப்பட்ட ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான புத்தக வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தொிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தொிவிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். சிலர் எம்மிடம் கேட்கிறார்கள், 5 வருடங்களாக எதற்காக இந்த ஈஸ்டர் தாக்குதல் விவகாரத்தை இழுத்துக் கொண்டு போகின்றீர்கள் என்று. அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுவதற்காக இந்த மிலேச்சத்தனமான தாக்குதலை செய்த பிரதான சூத்திரதாரி யார் என்பதை நாம் பார்க்க வேண்டும். இந்த உண்மையை தெரிந்துக் கொண்டால், நாட்டில் கொலை கலாசாரத்தை ஆரம்பித்தது யார்? இந்தக் கொலைகளை சாதாரணமாக்கியது யார்? அரசியல் அதிகாரத்திற்கு வர நாட்டு மக்களின் உயிர்களை பலியொடுத்த தரப்பினர் யார் என்பதை நாட்டு மக்களும் புரிந்துக் கொள்வார்கள். இதன் பின்னால் எந்த அரசியல் சக்தி உள்ளது? எந்த எந்த அரசியல் அதிகாரிகள் இதன் பின்னணியில் உள்ளார்கள் என்பதை நாம் தேட வேண்டும். நாம் இவர்களை அடையாளப்படுத்தியவுடன், இவர்களிடமிருந்து இந்த சமூகத்தை பிரிக்க வேண்டும். அல்லது இந்த சமூகத்திலிருந்து இவர்களை வேறுபடுத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, சனல் 4 ஊடகத்தில் வெளியான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான தகவல்களை ஆராய்வதற்காக குழுவொன்றை நியமித்திருந்தார். இந்தக் குழுவின் அறிக்கையும் அவரிடம் கையளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் கையளிக்கப்பட்டது. ஆனால், தற்போது குறித்த அறிக்கை காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில், ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக மிகவும் உறுதியான சாட்சிகள் மற்றும் தரவுகள் காணப்பட்டன. முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்சவோ, ரணில் விக்ரமசிங்கவோ இது தொடர்பாக ஆணைக்குழுக்களை அமைத்தாலும், அடுத்தக்கட்ட நகர்வுகளை அவர்கள் மேற்கொள்ளவில்லை. ஏன் இப்படி செய்ய வேண்டும்? ஒன்று இவர்கள் இந்தத் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். அல்லது, தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் இவர்களது நெருங்கிய தரப்பினராக இருக்க வேண்டும். அப்படியானால் மட்டும் தான் இந்த விடயங்களை இவர்கள் மூடிமறைத்திருக்க வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/srilanka-bomp-blast-investigation-1727879197?itm_source=parsely-detail
  2. கனடாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய புலம்பெயர்தல் விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. இதன் காரணமாக கனடாவில் உணவகங்கள் உட்பட பல நிறுவனங்களை நடத்துவோருக்கு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர் பணியாளர்கள் இல்லாவிட்டால், தாங்கள் உணவகங்களையே மூடவேண்டிய நிலை ஏற்படும் என, பல உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தற்காலிக பணியாளர் விசா பல பணிகளில் தட்டுப்பாடு நிலவும் நிலையிலும், கனடா அரசு குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயற்பட்டு வருகிறது. குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் பலருடைய பணி அனுமதி காலாவதியாகவுள்ளது. இந்நிலையில், அவர்கள் அனைவரையும் மீண்டும் பணிக்கு எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் அத்துடன், ஒரு வருடத்துக்குதான் பணி அனுமதிகளும் வழங்கப்பட உள்ளது. இவ்வாறான நிலையில் பணி வழங்குவோர், புதிதாக பணியாளர்களை பணிக்கு அமர்த்தி, அவர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டிய கட்டாய நிலைமை ஏற்பட்டுள்ளது. அரசின் குறைந்த ஊதிய தற்காலிக பணியாளர்கள் எண்ணிக்கையைக் குறைக்கும் திட்டத்தால் புலம்பெயர் தொழிலாளர்கள் கடும் அவதிக்குள்ளாக இருப்பதுடன், பல தொழில்கள் மூடப்படும் அபாயமும் உள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/canada-new-immigration-rules-2024-update-1727881842#google_vignette
  3. இடைத்தரகர்களின் தலையீட்டை கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ற லாபத்தை பெற்றுக் கொடுக்க வேண்டும் - வடக்கு ஆளுநர் 02 OCT, 2024 | 06:07 PM விவசாயத்தை காலநிலைக்கு ஏற்ப கொண்டு செல்வதுடன் விவசாய உற்பத்திகளை விற்பனை செய்கிறபோது இடைத்தரகர்களின் தலையீட்டைக் கட்டுப்படுத்தி விவசாயிகளுக்கு உற்பத்திக்கேற்ப லாபம் கிடைப்பதற்கு முயற்சி செய்ய வேண்டும் என வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகம் தெரிவித்தார். இன்றைய தினம் (2) திருநெல்வேலி விவசாய கண்காட்சியினை ஆரம்பித்துவைத்து, அதில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி யாழ்ப்பாணம், திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் இயற்கை விவசாயம், கால்நடை வளர்ப்பு, சிறுதானியங்கள், பயிர் உற்பத்திகள் உட்பட பல்வேறு வகையான விவசாய செயல்முறைகள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் விவசாய நிறுவனங்களை சார்ந்தவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டு இக்கண்காட்சியை பார்வையிட்டனர். https://www.virakesari.lk/article/195336
  4. பாராளுமன்ற தேர்தல்; இதுவரை 37 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர் - தேர்தல் ஆணைக்குழு 02 OCT, 2024 | 05:46 PM எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இதுவரை (செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியிலிருந்து ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி வரை) 37 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்துவதற்கான அறிவிப்பைத் தேர்தல் ஆணைக்குழு கடந்த செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195333
  5. 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மத்திய கிழக்கில் கடந்த ஓராண்டாகவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் மோசமாக்கும் வகையில், இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதலை நேற்று (அக்டோபர் 1) நடத்தியது. இதற்கிடையே, இரானின் அதி உயர் தலைவர், அயதுல்லா அலி காமேனெயி இன்று (அக்டோபர் 2) தெஹ்ரானில் இரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த பிராந்தியத்தில் நிலவும் பதற்றம் மற்றும் போருக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளை குற்றஞ்சாட்டினார். அவர்கள் இங்கு அமைதியை நிலைநாட்டுவதாக பொய்யாக கோருகின்றனர் எனவும் அவர் தெரிவித்தார். ''அந்த நாடுகள் இங்கிருந்து வெளியேற வேண்டும் (Get lost) அப்போதுதான் இங்குள்ள நாடுகள் அமைதியாக இருக்கும்'' என்றும் அவர் கூறினார். நேற்று (அக்டோபர் 1) இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஏவுவதற்கான உத்தரவை வழங்கிய இரானின் அதி உயர் தலைவரான காமேனெயி, ஒரு பாதுகாப்பான இடத்தில் தொடர்ந்து இருப்பதாக இரான் மூத்த அதிகாரி ஒருவர் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அயதுல்லா அலி காமேனெயி தெஹ்ரானில் இரானின் முக்கியஸ்தர்களை சந்தித்தார் (கோப்புக்காட்சி) ஐ.நா. பொதுச் செயலாளருக்கு தடை ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இஸ்ரேலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் கூறியுள்ளார். இஸ்ரேல் மீது இரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை குட்டெரெஸ் "வெளிப்படையாக கண்டிக்க" தவறியதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார். மத்திய கிழக்கில் மோதல் அதிகரித்து வருவதை நேற்று (அக்டோபர் 1) கண்டித்த ஐ.நா பொதுச்செயலாளர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது குறிப்பிடத்தக்கது. இரான் தாக்குதலும் இஸ்ரேல் பதிலும் இரான் ஏவிய ஏவுகணைகளில் பெரும்பாலானவை அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் இஸ்ரேலிய விமானப்படையால் இடைமறிக்கப்பட்டதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இரானுக்கு உரிய பதிலடி தரப்படும் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இஸ்ரேலை நோக்கி டஜன்கணக்கான ஏவுகணைகளை ஏவியதாக இரானின் புரட்சிகர காவல்படை உறுதிப்படுத்தும் அறிக்கையை இரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பியது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் அது எச்சரித்துள்ளது. ஜூலை மாதம் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய மற்றும் கடந்த வெள்ளிக்கிழமை ஹெஸ்பொலா தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலத்தீன, லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக புரட்சிகர காவல்படை தெரிவித்தது. இந்த தாக்குதலுக்கு பின் விளைவுகள் இருக்கும் என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் மற்றொரு தாக்குதல் நடைபெறும் எனவும் இரானின் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது. இஸ்ரேலில் என்ன நடந்தது? முன்னதாக இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தது. சைரன் சத்தம் கேட்டவுடன், ''நீங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து, மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும்", எனவும் அது கூறியது. இரானில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதால், இஸ்ரேல் முழுவதும் உள்ள மற்றவர்களைப் போல நாங்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு சென்றோம் என ஜெரூசலத்தில் உள்ள பிபிசி செய்தியாளர் ஆலிஸ் கட்டி கூறினார். அமெரிக்கா என்ன செய்தது? இதற்கிடையே இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இரானிய தாக்குதல்களிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்கவும், இஸ்ரேலை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் பைடன் உத்தரவிட்டார். இரானின் தாக்குதல்களை அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் கண்காணித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்தது. சில இரானிய ஏவுகணைகளை நடுவானில் அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் பிபிசியின் அமெரிக்க கூட்டு செய்தி நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் தெரிவித்தார். படக்குறிப்பு, இஸ்ரேலுக்கு உதவ அமெரிக்க ராணுவத்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டார். இரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் உறுதி இரான் செலுத்திய ஏவுகணைகளை தடுப்பதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக இஸ்ரேல் ராணுவத்தின் செய்தி தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறினார். "இரானின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சரியான தொடர் விளைவுகள் இருக்கும்" என்றார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்தது. இரானுக்கு இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்தது. இரான் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார். "இரான் அதனை புரிந்து கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் திருப்பித் தாக்குவோம். நாங்களே வகுத்துக் கொண்ட அந்த விதிகளின் கீழ் செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இரானின் தலைநகரான டெஹ்ரானில் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடினர் இரானில் வீதியில் இறங்கி கொண்டாடிய மக்கள் பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, டெஹ்ரானில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான மக்கள் இரான் மற்றும் ஹெஸ்பொலாவின் கொடிகளை ஏந்தியிருந்தனர். இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியதை அடுத்து, இரானின் தலைநகரான டெஹ்ரானில் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடினர். ஏராளமான மக்கள் இரான் மற்றும் ஹெஸ்பொலாவின் கொடிகளை ஏந்தியிருந்தனர். லெபனானில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட முன்னாள் ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லாவின் புகைப்படத்தை மக்கள் வைத்திருந்ததை பார்க்க முடிந்தது. இந்தக் கொண்டாட்டம் தொடர்பாக வெளியான புகைப்படங்களின்படி, சிலர் பட்டாசுகளை வெடிக்கிறார்கள். ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்திய பிறகு இதேபோன்ற கொண்டாட்டம் பிரிட்டன் தூதரகத்திற்கு முன் நடந்தது. இப்போதும் அதே இடத்தில் தான் மக்கள் ஒன்று கூடினர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, பிரிட்டன் தூதரகத்திற்கு முன் மக்கள் ஒன்று கூடினர் லெபனானில் கொண்டாட்டம் படக்குறிப்பு, பெய்ரூட்டில் பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இஸ்ரேல் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்திய செய்தி வெளியான பிறகு, லெபனானில் உள்ள ஹெஸ்பொலா உறுப்பினர்கள், பாலத்தீனிய குழுக்கள் மற்றும் இரானின் ஆதரவாளர்கள், தலைநகர் பெய்ரூட்டில் பட்டாசு வெடித்தும், துப்பாக்கியால் வானை நோக்கிச் சுட்டும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாக இருக்கும் ஒரு பள்ளியில் சில கொண்டாட்டங்களை பார்க்க முடிந்தது. இங்கு சிவில் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பிபிசி கேமரா முன்பு ‘V’ (வெற்றி) என்ற அடையாளத்தில் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டி "நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம், மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்," என்று அவர்கள் கூச்சலிட்டனர். முன்னதாக சில ஹெஸ்பொலா ஆதரவாளர்களும், லெபனானில் உள்ள சிலரும், ‘இரானை ஹெஸ்பொலாவை விற்றுவிட்டதாக’ கூறி கடுமையாக விமர்சித்தனர். ‘ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டதற்கு இரான் பழிவாங்கவில்லை, இது இஸ்ரேலுக்கு தைரியத்தை அளித்துள்ளது’ என்றும் சிலர் பிபிசியிடம் கூறினார்கள். ஒருவர், “இது ஒரு நிகழ்வு மட்டுமே. எங்கள் தலைவர் போய்விட்டார், எந்தப் பழிவாங்கலும் அவரைத் திரும்பக் கொண்டுவராது." என்று கூறினார். ஏவுகணையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாலத்தீன மக்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகருக்கு அருகே, ஒரு ஏவுகணை கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது மேற்குக் கரையில் உள்ள ஹெப்ரோன் நகருக்கு அருகே பாலத்தீனர்கள், அங்கு விழுந்த ஒரு ஏவுகணையின் இடிபாடுகளை பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகின. ஏ.எப்.பி. செய்தி முகமையின் புகைப்படக் கலைஞரின் கூற்றுப்படி, அடையாளம் தெரியாத இந்த ஏவுகணையின் மிச்சம் ஹெப்ரோனுக்கு மேற்கே உள்ள துரா நகரின் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏவுகணையுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட பாலத்தீன மக்கள் ஏவுகணையுடன் ஒரு குழு புகைப்படம் எடுப்பதையும் காண முடிந்தது. ஆனால் அந்த புகைப்படங்களின் நம்பகத்தன்மையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwylrp084qxo
  6. லெபனான் மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர் பலி 02 OCT, 2024 | 08:33 PM லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பினருடனான மோதலில் எட்டு இஸ்ரேலிய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய இராணுவம் இதனை அறிவித்துள்ளது. மேலும் எட்டுபேர் காயமடைந்துள்ளனர். இதேவேளை லெபனானில் இஸ்ரேலிய படையினருக்கு இழப்புகளை ஏற்படுத்தியதாக ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்துள்ளது. யரூன் என்ற லெபனான் கிராமத்தை சுற்றிவளைக்க முற்பட்ட இஸ்ரேலிய படையினருடன் மோதல் இடம்பெற்றதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. வெடிபொருள் ஒன்றை வெடிக்க வைத்து இஸ்ரேலிய படையினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இன்று மூன்று தடவை இஸ்ரேலிய படையினருடன் நேரடி மோதலில் ஈடுபட்டதாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195350
  7. முதலில் ஈரானின் தாக்குதல் தொடர்பாக எச்சரிக்கும் செய்திகள் வந்தன; பின்னர் ஏவுகணைகள் இடைமறிக்கப்படும் சத்தம் கேட்டது - இஸ்ரேல் நிலைமை பற்றி பி.பி.சி. Published By: RAJEEBAN 02 OCT, 2024 | 01:56 PM இஸ்ரேலிய நேரப்படி 7.30 மணியளவில் அனைவரின் கையடக்க தொலைபேசிகளிற்கும் அந்த குறுஞ்செய்தி வந்தது. 'பாதுகாப்பான இடம் என அறிவிக்கப்பட்ட பகுதிக்கு நீங்கள் அனைவரும் உடனடியாக செல்லவேண்டும் மறுஅறிவிப்பு வரும்வரை அங்கேயே இருக்கவேண்டும்" என அந்த குறுஞ்செய்தி எச்சரித்தது. இஸ்ரேலிய இராணுவத்தின் உள்நாட்டு பாதுகாப்பு படையணியின் மத்திய கட்டளை பீடமே இந்த செய்தியை அனுப்பியிருந்தது. உயிர் காக்கும் அறிவுறுத்தல்கள் என அது குறிப்பிட்டிருந்தது. ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் செலுத்தப்படுவது ஆரம்பித்ததும் மக்கள் பாதுகாப்பான அறைகளில் உள்ள புகலிடங்களை நோக்கி சென்றனர். அபாய எச்சரிக்கை ஒலிப்பதை மில்லியன் கணக்கான மக்கள் செவிமடுத்தனர். அபாய எச்சரிக்கை ஒலிக்க தொடங்கியதும், பிபிசியின் ஜெரூசலேமின் பணியகத்தில் உள்ள பாதுகாப்பான இடத்திற்கு நாங்கள் சென்றோம். ஜன்னல்கள் இல்லாத பாதுகாப்பான இடம். ஏவுகணைகள் தலைக்கு மேலே செல்வதனால் உண்டாகும் பாரிய சத்தத்தினையும் இஸ்ரேல் அவற்றை செயல் இழக்கச்செய்வதால் ஏற்படும் சத்தத்தையும் நாங்கள் அடிக்கடி கேட்டோம். இங்கும் வேறு பகுதிகளிலும் பதிவு செய்யப்பட்டு சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள வீடியோக்கள் ஏவுகணைகள் காரணமாக ஏற்பட்ட வெளிச்சங்களை காண்பித்துள்ளன. அவை இடைமறிக்கப்பட்டதால் அல்லது வெடித்து விழுவதால் ஏற்பட்ட புகை மண்டலங்களையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன. இஸ்ரேலிய இராணுவத்தினர் 8 மணியளவில் தாங்கள் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதாக தெரிவிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டதுடன் பொதுமக்களை தொடர்ந்தும் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். 'நீங்கள் கேட்கும் சத்தங்கள் இடைமறிக்கப்பட்ட ஏவுகணைகளால் ஏற்பட்டவை" என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்தது. ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ள தயாராகின்றது என்ற தகவல் வெளியானது முதல் இஸ்ரேலில் கரிசனைகள் காணப்பட்டன. இஸ்ரேலிய துருப்பினர் லெபனானிற்குள் ஊடுருவிய சில மணிநேரங்களின் பின்னர் இந்த தகவல் வெளியாகியிருந்தது. லெபனானில் ஹெஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட இலக்குவைக்கப்பட்ட தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்திருந்தது. ஹெஸ்புல்லா, ஹமாஸ் தலைவர்களையும் ஈரானின் இராணுவ அதிகாரியையும் கொலை செய்த இஸ்ரேலின் தாக்குதல்களிற்கு பதிலடியாகவே ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. தலைக்கு மேலாக ஏவுகணைகள் பறந்துகொண்டிருக்க இஸ்ரேலின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ள மக்கள் குறுஞ்செய்திகள் மூலம் தங்கள் நிலைமைகளை பகிர்ந்துகொண்டனர். எல்லா நேரமும் நிறைய எச்சரிக்கை ஒலிகள் ஒலித்துக்கொண்டிருந்தன, இதனால் நாங்கள் பாதுகாப்பான அறைகளில் இருக்கின்றோம், தற்போதைக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என 2 பிள்ளைகளின் தாயார் குரல் செய்தி மூலம் எங்களிற்கு தகவல் தெரிவித்தார். 'நாங்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளோம், எங்கள் வாழ்க்கையில் இது இடம்பெறும் என நாங்கள் நினைத்துப்பார்க்கவில்லை, ஆபத்து மிகவும் நெருங்கிவந்துவிட்டது" என டெல் அவியை சேர்ந்த பத்திரிகையாளர் தெரிவித்தார். வழமையாக நாங்கள் வீட்டிற்குள்ளேயே இருப்போம் பாதுகாப்பான புகலிடத்தை நோக்கி செல்வதில்லை ஆனால் இந்த முறை நாங்கள் பாதுகாப்பான பகுதிக்கு செல்லவேண்டும் என்பதை உணர்ந்தோம் என அவர் தெரிவித்துள்ளார். 'அதுபாரிய சத்தம்" என தெரிவிக்கின்றார் சட்டத்தரணி எவ்ராட் எல்டான் செச்டெர் மத்திய இஸ்ரேலில் உள்ள ரணாணாவிலிருந்து வட்ஸ்அப் மூலம் தெரிவிக்கின்றார். 'இன்றிரவுடன் இது முடியப்போவதில்லை" என்கின்றார் அவர். 'இது எவ்வாறு மாற்றமடையப்போகின்றது என்பதை நாங்கள் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், உண்மையிலேயே இது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகின்றது, ஆனால் இஸ்ரேலிய இராணுவம் எங்களை பாதுகாக்கும் என நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம், ஈரான் மிகப்பெரிய தவறிழைத்துள்ளது" என்கின்றார் அவர். https://www.virakesari.lk/article/195305
  8. தமிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்ந்தும் தெரிவிக்கையில், சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் உள்ளோம். அந்தவகையில் சில சட்டச் சிக்கல்கள் உள்ளன. அந்த விடயம் தொடர்பில் நீதி அமைச்சின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதற்கமைய தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவர் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/tamil-political-prisoners-1727861767
  9. ஈரான் மிகப்பெரிய தவறிழைத்து விட்டது; அதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும்; இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை இஸ்ரேலுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றதாக அறிவித்துள்ள ஈரான், பதில் தாக்குதல் நடத்தினால் அந்நாட்டையே அழிக்கும் விதமாக பதிலடி கொடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்நிலையில், ஈரானின் தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான தாக்குதல் குறித்து ஈரான் ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள மூன்று ராணுவ தளங்களை குறி வைத்து தாக்கியதாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா இயக்கத் தலைவர் ஹசன் நசருல்லா, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனிய ஆகியோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், பாலஸ்தீன், லெபனான் மக்கள் கொல்லப்பட்டதற்கும் பதிலடியாக இந்த ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் உக்கிரமாக தாக்குவோம் எனவும் ஈரான் ராணுவம் எச்சரித்துள்ளது. இஸ்ரேலுக்கு தீர்க்கமான பதிலடி கொடுக்கப்பட்டிருப்பதாக ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார். நியாயமான உரிமைகளுக்காகவும், ஈரானில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காகவும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு பதில் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீதான தாக்குதலை தொடர்ந்து ஈரான் தலைவர் அலி காமேனி, தனது எக்ஸ் பக்கத்தில் நிலத்தடி ஆயுதக் குவியலின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதில், ஈரானின் வெற்றி நெருங்கிவிட்டது என்று எச்சரித்துள்ளார். நேர்மையான மக்களை இழக்க நேரிட்டாலும் இறுதியில் வெற்றி பெற்றுவிட்டதாகவும் அலி காமேனி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியபோது அலி காமேனி பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. பிரதமர் நெதன்யாகு எச்சரிக்கை ஈரானின் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு பதுங்கு குழியில் தஞ்சம் புகுந்தார். தாக்குதல் முடிவுக்கு வந்த பிறகு அவர் அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்றார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ராணுவத்தினர் இஸ்ரேல் ராணுவத்தின் பலத்தை குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக தெரிவித்தார். தங்களை யார் தாக்கினாலும் பதிலடி கொடுப்போம் என்று எச்சரித்தார். ஈரான் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாகவும், இதற்கு உரிய விலையை கொடுக்க நேரிடும் என்றும் எச்சரித்தார். இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தோல்வியடைந்துவிட்டதாகக் கூறிய நெதன்யாகு, இந்த தாக்குதலை முறியடிக்க உதவிய அமெரிக்காவிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் உலக நாடுகள் இஸ்ரேலுடன் துணை நிற்க வேண்டும் என்றும் நெதன்யாகு கேட்டுக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், “இஸ்ரேல் உங்களுடன் நிற்கிறது என்பதை ஈரான் மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும், உங்களை அடி பணியச் செய்யும் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஈரான் அரசு தனது சொந்த மக்களின் நலன்களை விட பிராந்திய மோதல்களுக்கு முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த அரசு ஈரானை ஆழமான இருளிலும் ஆழமான போரிலும் ஆழ்த்துகிறது” என்றார். https://thinakkural.lk/article/310216
  10. 2026 ஆம் ஆண்டுக்கான அமெரிக்க கிரீன் கார்ட் விசாவுக்கான விண்ணப்பங்களை கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் கோரியுள்ளது. இந்த திட்டமானது இன்று (02), மதியம் 12 மணிக்கு தொடக்கம் நவம்பர் 5, வரை ஒன்லைன் பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படும். ஆண்டுதோறும் 55,000 நபர்களுக்கு அமெரிக்காவில் வசிக்க இந்த விசா வழங்கப்படுகிறது. அமெரிக்க குடியேற்ற விசா இந்நிலையில், குறித்த திட்டத்தின் மூலம் குறைந்த குடியேற்ற விகிதங்களைக் கொண்ட நாடுகளிலிருந்து தகுதித் தேவைகளைப் பூர்த்தி செய்து, அமெரிக்க குடியேற்ற விசாவைப் பெறுவதற்கான வாய்ப்புக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கிறது. மேலும் இந்த விண்ணப்பத்திற்காக http://dvprogram.state.gov என்ற இணையத்தளத்திற்குள் நுழைய முடியும் என்று தூதரகம் தெரிவித்துள்ளது. https://tamilwin.com/article/applications-for-us-green-card-visa-1727849764#google_vignette
  11. இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொண்டால் அதன் அனைத்து உட்கட்டமைப்புகளையும் தாக்குவோம் - ஈரான் 02 OCT, 2024 | 10:41 AM இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அதன் அனைத்து உட்கட்டமைப்புகளையும் இலக்குவைப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. ஈரானின் ஆயுதப்படையின் கூட்டு தளபதி மேஜர் ஜெனரல் முகமட் பகேரி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இஸ்ரேல் இந்த குற்றங்களை தொடர முயன்றால் எங்கள் இறைமை மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டிற்கு எதிராக ஏதாவது செய்ய முயன்றால் இன்றிரவு நடவடிக்கையை மேலும் பல மடங்கு வலுவான விதத்தில் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் அனைத்து உட்கட்டமைப்பும் இலக்குவைக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். ஈரானின் புரட்சிகர காவலர் படையணி இன்றைய ஏவுகணை தாக்குதலை மேலும் தீவிரமாக முன்னெடுப்பதற்கு தயார்படுத்தப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195295
  12. 02 OCT, 2024 | 03:24 PM ராஜபக்ச குடும்பத்தினர் உகன்டாவிலும் வேறு பல நாடுகளிலும் மில்லியன் கணக்கான டொலர்களை மறைத்துவைத்திருக்கின்றனர் என்ற தனது குற்றச்சாட்டுகளை ஜனாதிபதி நிரூபிக்கவேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொதுமக்களின் நிதி களவாடப்பட்டுள்ளது என ஜனாதிபதியும் அவரது குழுவினரும் பல ஆண்டுகளாக தெரிவித்துவருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தனது குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்கான தருணம் இது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195323
  13. அயர்ன் டோமால் தடுக்க முடியாத எதிரி ஏவுகணைகளை தாக்கி அழிக்கும் இஸ்ரேலின் 'மந்திரக்கோல்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலில் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு கட்டுரை தகவல் எழுதியவர், உமைமா அல்ஷாஸ்லி பதவி, பிபிசி அரபு சேவை, கெய்ரோ 4 மணி நேரங்களுக்கு முன்னர் டெல் அவிவ் நகரில் உள்ள மொசாட்டின் (இஸ்ரேலிய உளவு அமைப்பு) தலைமையகத்தின் மீது ஹெஸ்பொலா கடந்த புதன்கிழமையன்று ஏவிய ஏவுகணை, இரானால் தயாரிக்கப்பட்ட காதிர்-ஒன் பாலிஸ்டிக் ஏவுகணை என்று சொல்லப்படுகிறது. இந்த ஏவுகணை 700 முதல் 1000 கிலோ வரை வெடிமருந்துகளை சுமந்து செல்லக்கூடியது மற்றும் முழு கட்டடத்தையும் அழிக்கும் திறன் கொண்டது என்று கூறப்படுகிறது. டேவிட் ஸ்லிங் என்ற வான் பாதுகாப்பு அமைப்பு நிறுவப்பட்டிருப்பதால் ஹெஸ்பொலாவின் இந்தத் தாக்குதலை தடுப்பதில் இஸ்ரேல் வெற்றி பெற்றதாக இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மெயின்சர் தெரிவித்தார். இஸ்ரேல் மீது இரான் நேற்றிரவு பேலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்டு நடத்திய தாக்குதலை முறியடிப்பதிலும் டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது. இரான் ஏவுகணைகளை இடைமறித்து அழிப்பதில் இஸ்ரேலின் அயர்ன் டோம் மற்றும் அமெரிக்காவுடன் டேவிட் ஸ்லிங் அமைப்பும் திறம்பட செயல்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. டேவிட் ஸ்லிங் என்பது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் தனது தொழில்நுட்ப திறனுக்காக உலகம் முழுவதும் புகழ் பெற்றது இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிய பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புக்கு மாற்றாக டேவிட் ஸ்லிங், உருவாக்கப்பட்டது. டேவிட் ஸ்லிங் அமைப்பின் தாக்கும் தொலைவு பேட்ரியாட் அமைப்பை விட 100 கிலோமீட்டர் தூரம் அதிகம் என்று மத்திய ஆசிய ராணுவ விவகாரங்களுக்கான முன்னாள் அமெரிக்க வெளியுறவுத்துறை ஆலோசகர் கர்னல் அப்பாஸ் தோஹக் பிபிசியிடம் கூறினார். இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மூன்று அடுக்குகளை கொண்டது என்று இஸ்ரேலின் தொழில்நுட்பத்தை கண்காணிக்கும் 21C இணையதளம் தெரிவிக்கிறது. டேவிட் ஸ்லிங் என்பது இஸ்ரேலின் பாதுகாப்பு கட்டமைப்பில் உள்ள ஒரு நடுத்தர தூர ஏவுகணைகளை முறியடிக்கும் பாதுகாப்பு அமைப்பாகும். இது ’அயர்ன் டோமுக்கு’ப் பிறகு மிகவும் வெற்றிகரமான பாதுகாப்பு கவசமாக கருதப்படுகிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனம் ரஃபேல் கூறுகிறது. டேவிட் ஸ்லிங் ஒரு 'முழுமையான, நடுத்தர முதல் நீண்ட தூர வான் மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு' என்றும் கருதப்படுகிறது. பைபிளில் கூறப்பட்ட ஒரு கதையின் அடிப்படையில் இந்த ஆயுதத்திற்கு பெயரிடப்பட்டது. அதில் டேவிட் (தாவூத்) கோலியாத் (ஜாலூத்) மீது கற்களை வீசுவதற்கு கவனை (Slingshot) பயன்படுத்தினார் என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் கூறுகிறது. டேவிட் ஸ்லிங், பேலிஸ்டிக் மற்றும் க்ரூயிஸ் ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், அயர்ன் டோம் வான் பாதுகாப்பு அமைப்பு குறுகிய தூர ஏவுகணைகளை அழிக்கிறது என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. டேவிட் ஸ்லிங் பாதுகாப்பு அமைப்பு, இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் மற்றும் அமெரிக்க நிறுவனமான ரேதியோனால் தயாரிக்கப்பட்டு 2017இல் பயன்பாட்டுக்கு வந்தது என்று இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்தது. 40 முதல் 300 கிலோமீட்டர் தொலைவு வரை ராக்கெட் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் இருந்து காக்கும் திறன் கொண்ட டேவிட் ஸ்லிங், ‘மந்திரக்கோல்' என்றும் அழைக்கப்படுகிறது. டேவிட் ஸ்லிங்கில் ஒரு ஏவுகணை செலுத்தும் அமைப்பு, ELM 2084 ரேடார், ஒரு இயக்க முறைமை மற்றும் ஸ்டன்னர் இடைமறிக்கும் ஏவுகணைகள் உள்ளன. டேவிட் ஸ்லிங்கின் ஒரு ஏவுகணை செலுத்தும் அமைப்பில் 12 ஏவுகணைகளை பொருத்த முடியும். அதன் அனைத்து பாகங்களும் அமெரிக்காவில் தயாரிக்கப்படுகின்றன என்று மிஸைல் த்ரெட் என்ற இணையதளம் குறிப்பிட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலில் டேவிட் ஸ்லிங் ஏவுகணையை பார்வையிடும் அமெரிக்க வீரர்கள் ஸ்டெய்னர் ஏவுகணை ஸ்டெய்னர் ஏவுகணை 4.6 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் 15 கிலோமீட்டர் உயரத்தில் இருந்து வரும் எந்த ஒரு ராக்கெட் அல்லது ஏவுகணையையும் அழிக்கும் திறன் கொண்டது என்று மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் மிஸைல் த்ரெட் என்ற இணையதளம் தெரிவிக்கிறது. இந்த ஏவுகணையின் முன் பகுதி ஒரு டால்ஃபின் வடிவத்தை ஒத்து இருக்கிறது. அதில் இரண்டு சென்ஸார்கள் நிறுவப்பட்டுள்ளன. டேவிட் ஸ்லிங் வான் பாதுகாப்பு அமைப்பு இஸ்ரேலை தாக்க வரும் எதிரியின் ஏவுகணைகளை செயல்பட விடாமல் தடுக்கும் (ஜாம் செய்யும்) திறனைக் கொண்டுள்ளது. ஸ்டெய்னர் ஏவுகணையில் திட எரிபொருள் அமைப்பு உள்ளது. இது ஒரு அதிவேக ஆயுதம். ஒரு ஸ்டெய்னர் ஏவுகணையை உருவாக்க பத்து லடசம் டாலர்கள் செலவாகும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிப்பதாக இஸ்ரேலிய நாளேடு 'ஹாரெட்ஸ்' தெரிவிக்கிறது. அயர்ன் டோமில் பயன்படுத்தப்படும் ஏவுகணையுடன் ஒப்பிடுகையில் ஸ்டெய்னர் ஏவுகணையில் தனியாக வெடிபொருட்கள் (வார் ஹெட்) இருக்காது. ஏவுகணை நேரடியாகவே இலக்கைத் தாக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேலின் அயர்ன் டோம் பாதுகாப்பு அமைப்பு ரேடார் அமைப்பு டேவிட் ஸ்லிங்கில் ELM 2084 மல்டி-மிஷன் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இது அத்துமீறும் விமானம் மற்றும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. இந்த ரேடார், விமான கண்காணிப்பு அல்லது தாக்குதல்களை கண்காணிக்கும் பணிகளுக்கும் பயன்படுத்தப்படலாம். இந்த ரேடார் 474 கிலோமீட்டர் சுற்றளவில் சுமார் 1,100 இலக்குகளை கண்காணிக்க முடியும். இது மின்சார அமைப்பு மூலம் அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. தாக்குதல் கண்காணிப்பு பணியைப் பற்றி நாம் பேசினால், அது 100 கிலோமீட்டர் வரம்பில் ஒரு நிமிடத்திற்குள் 200 இலக்குகளை கண்காணிக்க முடியும். டேவிட் ஸ்லிங் எப்போது உருவாக்கப்பட்டது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் டேவிட் ஸ்லிங் அமைப்பின் பணியை 2006 இல் தொடங்கியது இஸ்ரேல், டேவிட் ஸ்லிங் அமைப்பை உருவாக்கும் வேலையை 2006 இல் தொடங்கியது. பின்னர் இந்த அமைப்பை உருவாக்க 2008 ஆகஸ்டில் அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. 2006 மற்றும் 2020க்கு இடையில் டேவிட் ஸ்லிங்கை உருவாக்க அமெரிக்கா இரண்டு பில்லியன் டாலர்களை இஸ்ரேலுக்கு வழங்கியது என்று அந்நாட்டு நாடாளுமன்ற ஆராய்ச்சி சேவையின் ஆய்வு தெரிவிக்கிறது. 2009 அக்டோபரில், இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் அட்வான்ஸ்டு டிஃபென்ஸ் சிஸ்டம், சர்வதேச ஏவுகணைகள் மற்றும் லாஞ்சர்கள் தயாரிப்பதற்காக அமெரிக்க நிறுவனமான ரேதியோனுடன் 10 கோடி டாலர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இஸ்ரேலிய நிறுவனமான ரஃபேல் முதன்முதலில் டேவிட் ஸ்லிங்கை 2013 இல் பாரிஸ் விமான கண்காட்சியில் காட்சிக்கு வைத்தது என்று ராணுவ உபகரணங்களைக் கண்காணிக்கும் இணையதளமான டிஃபென்ஸ் நியூஸ் குறிப்பிட்டுள்ளது. டேவிட் ஸ்லிங்கின் முதல் வெற்றிகரமான சோதனை 2012 இல் ஒரு பாலைவனத்தில் நடத்தப்பட்டது என்று டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் தெரிவிக்கிறது. டேவிட் ஸ்லிங் 302 மிமீ ராக்கெட்டுகள் மற்றும் இரானிய ஃபத்தஹ 110 ஏவுகணையை இடைமறிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று 2015 ஆம் ஆண்டு டிஃபென்ஸ் நியூஸில் வெளியான ஒரு செய்தி குறிப்பிடுகிறது. இஸ்ரேல் இதை எப்போதெல்லாம் பயன்படுத்தியது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறினார் கோலன் குன்றுகளிலிருந்து வரும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்க டேவிட் ஸ்லிங் முதன்முறையாக 2018 ஜூலையில் பயன்படுத்தப்பட்டது என்று 2018 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய செய்தித்தாள்கள் தெரிவித்தன. இஸ்ரேல் டேவிட் ஸ்லிங்கைப் பயன்படுத்தி இரண்டு இடைமறிக்கும் ஏவுகணைகளை ஏவியது. சிரியாவால் ஏவப்பட்ட இரண்டு SS-21 பேலிஸ்டிக் ஏவுகணைகளை இடைமறிக்கும் நோக்கத்துடன் அவை செலுத்தப்பட்டன என்று டிஃபென்ஸ் நியூஸ் வலைத்தளம் கூறுகிறது. சிரியாவால் ஏவப்பட்ட ஏவுகணைகள் சிரிய எல்லைக்குள் விழுந்தன. அதே சமயம் ஒரு இஸ்ரேலிய ஏவுகணை கோலன் குன்றுகள் மீது விழுந்து சேதமடைந்தது. டேவிட் ஸ்லிங்கில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணையை சிரிய ராணுவம் கைப்பற்றி அதை ஆய்வு செய்ய ரஷ்யாவுக்கு அனுப்பியது. 2023 மே மாதமும் டேவிட் ஸ்லிங்கை பயன்படுத்தியது பற்றி இஸ்ரேல் தகவல் கொடுத்தது. காஸாவில் இருந்து ஏவப்பட்ட, அயர்ன் டோமால் தடுக்க முடியாத ஏவுகணைகளை இந்த பாதுகாப்பு அமைப்பு அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்தது. ஹெஸ்பொலாவுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், கடந்த புதன்கிழமை இந்த லெபனான் அமைப்பால் ஏவப்பட்ட ஏவுகணையை இஸ்ரேல் படைகள் அழித்ததாக இஸ்ரேலிய அரசின் செய்தித் தொடர்பாளர் டேவிட் மெயின்சர் கூறினார். "டெல் அவிவ் மீது ஹெஸ்பொலா பயங்கரவாதிகள் ஏவுகணையை வீசியது வரலாற்றில் இதுவே முதல் முறை. ஆனால் இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பான டேவிட் ஸ்லிங் அதை வெற்றிகரமாக முறியடித்தது மற்றும் தெற்கு லெபனானில் உள்ள ஏவுதளங்களையும் அழித்தது,” என்று அவர் குறிப்பிட்டார். டேவிட் ஸ்லிங் உள்ளிட்ட இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்பு ஹெஸ்பொலாவின் ஏவுகணைத் தாக்குதல்களுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக நிரூபணமாகியுள்ளது என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறுகிறார். "இது பல ராக்கெட்டுகளை அழித்தது மட்டுமல்லாமல், வெவ்வேறு திசைகள் மற்றும் இடங்களில் இருந்து ஏவப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளையும் முறியடித்தது." ஜோர்டானின் ராணுவ விவகார நிபுணரான பிரிகேடியர் ஜெனரல் மூசா அல்-கல்பும், கர்னல் அப்பாஸ் தோஹாக்குடன் உடன்படுகிறார். 2006 போருடன் ஒப்பிடும் போது டேவிட் ஸ்லிங் சிஸ்டம் காரணமாக இப்போது இஸ்ரேலுக்கு ஹெஸ்பொல்லா மீது ஒரு ஆதிக்க நிலை கிடைத்துள்ளது என்று அவர் கூறுகிறார். ஒருவேளை ஹெஸ்பொலாவின் சில ஏவுகணைகள் டேவிட் ஸ்லிங் இருக்கும் இடத்தை அடைந்து அதற்கு சேதம் விளைவிப்பதில் வெற்றி பெறக்கூடும். ஆனால் அது குறைவான விளைவையே ஏற்படுத்தும் என்று அவர் கூறுகிறார். ஹைப்பர்சானிக் ஏவுகணைகள் மிக வேகமாக நகர்வதால் அவற்றை நிறுத்துவதில் டேவிட் ஸ்லிங் சிரமங்களை எதிர்கொள்ளலாம் என்று கர்னல் அப்பாஸ் தோஹக் கூறுகிறார். ஹெஸ்பொலாவிடம் இந்த ஏவுகணை இருக்கிறதா இல்லையா என்பது தனக்குத் தெரியாது என்று அவர் குறிப்பிட்டார். ரஷ்ய உதவியுடன் தயாரிக்கப்பட்ட சர்குன் ஏவுகணை ஹெஸ்பொலாவிடம் இருக்கும் என்று தான் நினைக்கவில்லை என்று மூசா அல்-கல்ப் கூறுகிறார். குறைந்த எண்ணிக்கையிலான இந்த ஏவுகணைகளை இரான் ஹெஸ்பொலாவுக்கு கொடுத்திருக்கும் சாத்தியக்கூறு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்த முடிவு இரானின் உயர்மட்ட தலைமையின் சிறப்பு அதிகாரம் என்பதால் இப்படி நடந்திருக்க வாய்ப்பில்லை என்று அவர் நினைக்கிறார். டேவிட் ஸ்லிங்கை ஃபின்லாந்திற்கு வழங்கும் 355 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் 2023 நவம்பரில், கையெழுத்திட்டது. டேவிட் ஸ்லிங், பேலிஸ்டிக், க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் போர் விமானங்களை கண்காணித்து அழிக்கும் திறன் கொண்ட உலகின் அதிநவீன பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றாகும் என்று அப்போது இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பின் பலவீனங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டேவிட் ஸ்லிங்கில் பொருத்தப்பட்ட ஒரு ஏவுகணையின் விலை பத்து லடசம் டாலர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைப்பில் சில பலவீனங்கள் இருக்கின்றன. அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்துவது கடினம். அந்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் அந்த ஆயுதங்களை குறிவைத்து அழிக்க முடியும் என்று மூசா அல்-கல்ப் கூறுகிறார். டேவிட் ஸ்லிங்கில் பொருத்தப்பட்ட ஒரு ஏவுகணையின் விலை பத்து லடசம் டாலர். அதனால் எதிரியின் ஏவுகணை ஆயுதக் களஞ்சியத்துடன் இதன் எண்ணிக்கையை ஒப்பிடமுடியாது என்றும் அவர் தெரிவித்தார். தொழில்நுட்ப காரணங்களுக்காக இஸ்ரேல், டேவிட் ஸ்லிங்கை அயர்ன் டோம் போலப் பயன்படுத்தாது என்றும் மூசா அல்-கல்ப் கருதுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c23k75m29n7o
  14. ஈசல்கள் போல பாய்ந்து வந்த ஈரானின் ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகள்! திருப்பி அடிக்கத் தயராகும் இஸ்ரேல்!! ஒலியை விட 5 மடங்கு வேகமாகப் பணிக்கக்கூடிய தனது 'பட்டா ஹைபர்சோனிக் பலிஸ்டிக் ஏவுகணைகளையே இஸ்ரேல் மீது ஈரான் ஏவியதாக ஈரான் அரச ஊடகங்கள் கூறுகின்றன. எதற்காக ஈரான் நேற்றைய தினம் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தது? ஈரானின் தாக்குதல் எந்த அளவுக்கு இஸ்ரேலைப் பாதித்து இருக்கின்றது? இஸ்ரேல் மீது தாக்குதல் மேற்கொண்டதால் இராணுவ ரீதியாகவும், இராஜதந்திர ரீதியாகவும் ஈரான் அடைந்துள்ள நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? https://tamilwin.com/article/is-iran-use-hypersonic-ballistic-missiles-1727850693#google_vignette
  15. இஸ்ரேலின் புலனாய்வு பிரிவின் தலைமையகம் - இரண்டு விமானதளங்களை இலக்குவைத்தது ஈரான் - சிஎன்என் 02 OCT, 2024 | 08:09 AM இஸ்ரேலின் உளவுப்பிரிவான மொசாட்டின் தலைமையகத்தின் மீது அல்லது அதற்கு அருகில் பல ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளதையும் நெவட்டிம் விமானப்படைதளம், டெல் நொவ் விமானப்படை தளம் ஆகியவையும் தாக்குதலிற்கு இலக்காகியுள்ளதையும் வீடியோக்கள் வெளிப்படுத்தியுள்ளன என சிஎன்என் தெரிவித்துள்ளது. இந்த இலக்குகளை ஈரான் தாக்கலாம் என அமெரிக்க இஸ்ரேல் புலனாய்வு பிரிவினர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்தனர், ஈரான் தனது மூன்று விமானப்படை தளங்களை தாக்கலாம் என இஸ்ரேலிற்கு புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தன, என விடயமறிந்த வட்டாரங்கள் சிஎன்எனிற்கு தெரிவித்துள்ளன. விமானப்படை தளங்கள் கட்டளை பீடங்களை ஈரான் இலக்குவைக்கலாம் என அமெரிக்க புலனாய்வு பிரிவினர் இஸ்ரேலிற்கு தெரிவித்தனர் எனவும் சிஎன்என் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய தலைநகரின் கிலிலொட் பகுதியில் உள்ள மொசாட்டின் தலைமையகத்திற்கு அருகில் இரண்டு ஏவுகணைகள் விழுந்து வெடிப்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன. இது ஒரு குடியிருப்பு பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை இஸ்ரேலின் தென்பகுதி நெகெவ் பாலைவனத்தில் உள்ள நெவட்டிம் தளத்தில் ஈரானின் பல ரொக்கட்கள் விழுந்து வெடிப்பதை வீடியோக்கள் காண்பித்துள்ளன. இஸ்ரேலின் தலைநகரிலிருந்து தென்பகுதியில் உள்ள டெல்நொவ் தளம் தாக்கப்பட்டுள்ளதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன. https://www.virakesari.lk/article/195283
  16. பட மூலாதாரம்,VARDHMAN OFFICIAL WEBSITE படக்குறிப்பு, எஸ்.பி.ஓஸ்வால் கட்டுரை தகவல் எழுதியவர், ஹர்மன்தீப் சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த 82 வயதான பத்மபூஷன் விருது பெற்ற ஜவுளி தொழிலதிபர் எஸ்.பி.ஓஸ்வால் மிகப்பெரிய இணைய மோசடியில் ஏமாற்றப்பட்டிருக்கிறார். ஓஸ்வாலிடம் திரைப்பட பாணியில் 7 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். போலியான இணையவழி உச்ச நீதிமன்ற விசாரணைகள், போலி கைது வாரண்டுகள், போலி சிபிஐ அதிகாரிகள் என மிகப்பெரிய ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றி ஓஸ்வாலை ஏமாற்றியிருக்கிறது ஒரு கும்பல். கிட்டத்தட்ட சூர்யா நடிப்பில் வெளியான தமிழ் திரைப்படமான 'தானா சேர்ந்த கூட்டம்’ பட பாணியில், சிபிஐ அதிகாரிகள் போன்று வேடமிட்டு குற்றச்செயலை அரங்கேற்றியுள்ளனர். எஸ்.பி.ஓஸ்வால், இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளி உற்பத்தியாளரான வர்தமான் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். காவல்துறை கூற்றுபடி, குற்றம் சாட்டப்பட்டுள்ள கும்பல், போலி சிபிஐ அதிகாரிகள் என கூறி அவரை அணுகியுள்ளனர். மும்பையின் அமலாக்கத்துறை இயக்குநரகம் பிறப்பித்ததாகக் கூறி, ஒரு போலி கைது வாரண்டைக் காட்டி ஓஸ்வாலை மிரட்டியுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு என்று கூறி ஒரு போலி ஆவணத்தையும் அந்த கும்பல் ஓஸ்வாலிடம் காட்டியதாக போலீஸார் தெரிவித்தனர். அந்த உத்தரவில் ஓஸ்வால் ஏழு கோடியை ரகசிய கண்காணிப்புக் கணக்கில் (Secret Supervision Account) டெபாசிட் செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட அந்த கும்பல் ஓஸ்வாலை 'ஸ்கைப்' செயலி மூலம் இரண்டு நாட்கள் டிஜிட்டல் கண்காணிப்பில் வைத்திருந்தனர். இந்த வீடியோ கால் மூலம் போலி நீதிமன்ற விசாரணைக்கும் ஏற்பாடு செய்தனர். இந்த வழக்கில் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களை கொண்ட கும்பலை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர். இது தொடர்பாக குவாஹாட்டியை சேர்ந்த இருவரை கைது செய்துள்ளனர். மேலும் 7 பேரை தேடி வருகின்றனர். இந்த கும்பல் அசாம், மேற்கு வங்கம் மற்றும் டெல்லியில் செயல்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் பண மோசடி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மும்பையில் ஓஸ்வாலின் பெயரில் ஒரு வங்கி கணக்கு இருப்பதாகவும், அதில் முறைகேடுகள் நடந்ததாகவும் அந்த கும்பல் ஏமாற்றியது முதல் தகவல் அறிக்கையின்படி ( எப்ஐஆர் ), கடந்த ஆண்டு செப்டம்பரில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஒரு தொழிலதிபர் சம்பந்தப்பட்ட பணமோசடி வழக்கில், ஓஸ்வால் ஈடுபட்டதாக அந்த கும்பல் அவரை குற்றம்சாட்டியுள்ளது. மும்பையில் ஓஸ்வால் பெயரில் முறைகேடாக வங்கி கணக்கு இருப்பதாக குற்றம்சாட்டி அவரை மிரட்டியுள்ளனர். இது தவிர, ஓஸ்வால் சட்டவிரோதமாக பார்சல் அனுப்பியதாகவும் அவரிடம் அந்த கும்பல் கூறியுள்ளது. இந்த சம்பவத்தை வேறு யாரிடமாவது கூறினால் அது சட்டத்திற்கு எதிரானது என அந்த கும்பல் ஓஸ்வாலிடம் கூறியதால், இதை வேறு யாரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாத சூழலுக்கு ஓஸ்வால் தள்ளப்பட்டார். போலி நீதிமன்றம் மற்றும் ஆன்லைன் காவல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த வழக்கில் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களை கொண்ட கும்பலை போலீஸார் அடையாளம் கண்டுள்ளனர் முதல் தகவல் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, குற்றம் சாட்டப்பட்டிருக்கும் நபர்கள், ஓஸ்வாலை இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியான ஆன்லைன் கண்காணிப்பில் வைத்திருந்தனர். கேமராவை விட்டு விலகி செல்ல கூடாது, குறுஞ்செய்திகள் மற்றும் அனுமதியின்றி அழைப்புகளை ஏற்கக் கூடாது என்றும் ஓஸ்வாலிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இரவில் தூங்கும் போதும், ஆன்லைனில் ஓஸ்வாலை கண்காணித்தனர். ஸ்கைப் செயலி தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தது. தூங்கும் போதும், மறுபுறத்தில் இருந்து ஒருவர் தொடர்ந்து அவரை பார்த்துக் கொண்டிருந்தார். ஒஸ்வாலுக்கு "24×7 கண்காணிப்பு விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்" என்ற தலைப்பில் 70 விதிமுறைகளை கொண்ட ஆவணமும் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து ஓஸ்வால் ஆன்லைன் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக ஏமாற்றப்பட்டிருக்கிறார். இதற்கிடையில், குற்றம் சாட்டப்பட்ட கும்பல் போலி நீதிமன்ற விசாரணையையும் ஏற்பாடு செய்திருக்கிறது, அதில் ஒருவர் தன்னை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் என்று அறிமுகப்படுத்தி கொண்டார். ஆனால், ஓஸ்வால் போலி நீதிபதியின் முகத்தைப் பார்க்க முடியவில்லை என்று புகாரில் குறிப்பிட்டிருக்கிறார். அதன் பிறகு ஓஸ்வாலுக்கு நீதிமன்ற உத்தரவு ஆவணம் ஒன்று பகிரப்பட்டுள்ளது. அது அசல் ஆவணம் போலவே இருந்ததால், ஓஸ்வால் அந்த உத்தரவில் இருந்தபடி ரூ. 7 கோடியை அனுப்பினார். பணத்தை மீட்ட காவல்துறை பட மூலாதாரம்,KULDEEP CHAHAL/FB படக்குறிப்பு, காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல் லூதியானா காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல், ஓஸ்வாலின் புகாரைப் பெற்ற பிறகு, பணத்தை திரும்பப் பெறுவதற்காக குறிப்பிட்ட வங்கிக் கணக்குகளை முடக்கும் பணியை முதலில் தொடங்கினார். இதுவரை 5.25 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீட்கப்பட்ட தொகை ஓஸ்வாலின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். மத்திய உள்துறை அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தை குறிப்பிட்டு பேசிய குல்தீப் சாஹல், ''இந்தியாவில் சைபர் குற்றங்களின் பிரிவில் இதுவரை மீட்கப்பட்டதில் இதுதான் அதிக தொகை'' என்று கூறினார். லூதியானா காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் பொறுப்பாளரான காவல் ஆய்வாளர் ஜத்திந்தர் சிங் கூறுகையில், "ஆகஸ்ட் 28 மற்றும் 29 -ஆம் தேதிகளில், குற்றம் சாட்டப்பட்டவர் போலி சிபிஐ அதிகாரி போல் தன்னை காட்டி கொண்டு ஓஸ்வாலின் தனிப்பட்ட எண்ணில் தொடர்பு கொண்டார். மும்பையின் சில அதிகாரிகளால் ஒரு பார்சல் கைப்பற்றப்பட்டதாகவும், அவர் (ஓஸ்வால்) பணமோசடியில் ஈடுபட்டதாகவும் அந்த நபர் ஓஸ்வாலிடம் கூறியிருக்கிறார். போலி கைது வாரண்ட் மற்றும் நீதிமன்ற உத்தரவும் ஓஸ்வாலுக்கு அனுப்பப்பட்டது'' என்கிறார் ஜத்திந்தர் சிங் மேலும் கூறுகையில், ''குற்றம் சாட்டப்பட்ட கும்பலை சேர்ந்த ஒரு நபர், ஓஸ்வாலுக்கு ஸ்கைப்பில் வீடியோ கால் செய்திருக்கிறார். வீடியோ அழைப்பில் போலி சிபிஐ அலுவலகம் காட்டப்பட்டது. சிபிஐ அதிகாரிகள் போன்று அடையாள அட்டைகளை அணிந்து கொண்டு சிலர் காணப்பட்டனர். அவர்கள் அனைவரும் சாதாரண ஆடைகளை அணிந்திருந்தனர். அந்த போலி அலுவலகத்தின் பின்னணியில் சில கொடிகள் இருந்தன. அது ஒரு புலனாய்வு அமைப்பின் உண்மையான அலுவலகம் போல் தோற்றமளித்தது. அதன் பின்னர் ஏமாற்று நாடகம் நடத்தப்பட்டுள்ளது. ஓஸ்வால் மூன்று தவணைகளாக 7 கோடி ரூபாயை குற்றம் சாட்டப்பட்டவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றியுள்ளார்'' என்கிறார். காவல்துறையின் கூற்றுப்படி, குற்றம்சாட்டப்பட்டிருக்கும் அந்த கும்பல் மீண்டும் மீண்டும் வங்கி கணக்கு எண்களை மாற்றி கூறியதால் ஓஸ்வால் தரப்பில் சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஓஸ்வால் காவல்துறையை அணுகினார். போலீசார் சம்பந்தப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கையைத் தொடங்கினர். காவல்துறையின் கூற்றுப்படி, எஃப்ஐஆர் பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்தக் கும்பலில் ஒரு தொழிலதிபரும், வங்கியின் முன்னாள் ஊழியரும் அடங்குவர். அட்னு சவுத்ரி மற்றும் ஆனந்த் குமார் என அடையாளம் காணப்பட்ட இரண்டு நபர்களை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டிருக்கும் ஆனந்த் சொந்தமாக மருத்து கடை வைத்திருந்தார், மற்றொரு நபர் சிறிய வியாபாரம் செய்து வருகிறார். எனவே கைது செய்யப்பட்ட இருவரும் சிறு வணிகர்கள் என்று காவல்துறை கூறுகிறது. தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் அவர்கள், அதன் பிறகு சுலபமான வழியில் பணம் ஈட்ட நினைத்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ரோமி கலிதா என்ற நபர் வங்கியின் முன்னாள் ஊழியர் என்று கூறும் காவல் ஆய்வாளர் ஜத்திந்தர் சிங்,'' இந்த குற்றச் சம்பவத்தில் வங்கி தொடர்பான பரிவர்த்தனை விஷயங்கள் மற்றும் அனைத்து வகையான தொழில்நுட்ப தகவல்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது '' என்கிறார் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏழு பேரை போலீஸார் தேடி வருகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES இணைய மோசடிகளை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? இது போன்ற மோசடி சம்பவம் யாருக்காவது நடந்தால், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1903 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை ஆணையர் குல்தீப் சிங் சாஹல் தெரிவித்துள்ளார். இது சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண். இந்த சைபர் ஹெல்ப்லைன் 300க்கும் மேற்பட்ட வங்கிகளுடன் தொடர்பில் உள்ளது. இந்த ஹெல்ப்லைனைத் தொடர்பு கொண்ட பிறகு, சம்பந்தப்பட்ட வங்கியால் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும், இதனால் இந்தக் கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்க முடியாது. மேலும், இதுபோன்ற அழைப்புகள் வரும்போது, சம்பந்தப்பட்டவர்கள் தங்களுக்கு நெருக்கமானவர்களுடன் கலந்துரையாட வேண்டும். ஒருவர் மீது வழக்கு நிலுவையில் இருந்தால், அது அவருக்கு முன்பே தெரிந்திருக்கும். எனவே, இதுபோன்ற அழைப்புகள் மூலம் வழக்கு பதிவு செய்கிறோம் என்று யாராவது மிரட்டினால், அந்த விவகாரம் சந்தேகத்திற்குரியது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். https://www.bbc.com/tamil/articles/c361kxykrreo
  17. கட்டுநாயக்க விமான நிலைய அபிவிருத்தி விரைவில்;ஜப்பான் நிறுவனம் உறுதி ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாரநாயக்கவை சந்தித்தனர். ஜயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா நிறுவனத்தின் உதவியுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் 11 வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவுசெய்வது குறித்து அண்மையில் ஜப்பான் தூதுவர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டதோடு, அந்த செயற்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்தும் நேற்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. https://thinakkural.lk/article/310228
  18. சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள் குழு இன்று நாட்டுக்கு வருகை 02 OCT, 2024 | 08:43 AM (நா.தனுஜா) அண்மைக்கால பொருளாதார மேம்பாடு மற்றும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் நோக்கில் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களப் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் இன்று நாட்டுக்கு வருகை தரவுள்ளனர். நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க தெரிவுசெய்யப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 21 ஆம் திகதி நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பதாக சுமார் ஒருமாத காலம் நாடளாவிய ரீதியில் சகல வேட்பாளர்களாலும் முன்னெடுக்கப்பட்ட பிரசாரங்களின் பிரதான பேசுபொருளாகப் பொருளாதார மீட்சியும், சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகளுமே காணப்பட்டன. அதற்கமைய தேர்தலுக்கு முன்னர் வொஷிங்டனில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜுலி கொஸாக், நாட்டின் பொருளாதார நிலைவரம் வெகுவாக முன்னேற்றமடைந்திருப்பினும் இன்னமும் நெருக்கடியிலிருந்து முழுமையாக மீளவில்லை எனவும், ஆகையினால் மிகக்கடின முயற்சிகளின் ஊடாக எட்டப்பட்ட அடைவுகளைப் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம் எனவும் வலியுறுத்தியிருந்தார். அதுமாத்திரமன்றி 'இலங்கைக்கும், சர்வதேச பிணைமுறிதாரர்களுக்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டமையை வரவேற்கிறோம். இது இலங்கையின் கடன்மறுசீரமைப்பு செயன்முறையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதைக் காண்பிக்கிறது' எனத் தெரிவித்திருந்த அவர், சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டம் தொடர்பான மூன்றாம் கட்ட மீளாய்வுக்கான காலப்பகுதி குறித்து இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் வெகுவிரைவில் கலந்துரையாடுவோம்' எனவும் அறிவித்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் இன்று புதன்கிழமை நாட்டுக்கு வருகைதரவிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா ஸ்ரீனிவாசன் தலைமையிலான குழுவினர், எதிர்வரும் வெள்ளிக்கிழமை (4) வரை நாட்டில் தங்கியிருப்பர். இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவையும், அரசாங்கத்தினால் புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் பொருளாதார நிபுணர் குழுவினரையும் சந்திக்கவிருக்கும் சர்வதேச நாணய நிதிய அதிகாரிகள், சமகால பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் விரிவாக்கப்பட்ட நிதிவசதிச் செயற்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டுவரும் பொருளாதார மறுசீரமைப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/195256
  19. மெக்சிகோவின் முதல் பெண் ஜனாதிபதியாக ஷெயின்பாம் பதவியேற்க உள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் ஜனாதிபதி தேர்தல் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் மெக்சிகோவின் ஆளுங்கட்சியான மொரேனா கட்சி (இடதுசாரி) சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட கிளாடியா ஷேன்பாம், ஏறக்குறைய 60 சதவீத வாக்குகளைப் பெற்று, அசைக்க முடியாத முன்னிலையுடன் வெற்றி பெற்றார். இதையடுத்து மெக்சிகோவின் 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் ஜனாதிபதியாக 62 வயதான கிளாடியா ஷேன்பாம் பதவியேற்கவுள்ளார். இதையடுத்து, அடுத்த 6 ஆண்டுகளுக்கு மெக்சிகோவின் ஜனாதிபதியாக கிளாடியா ஷேன்பாம் தொடருவார். ரோமன் கத்தோலிக்க சமூகப் பிரிவைச் சார்ந்த கிறிஸ்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட மெக்சிகோவில் (உலகின் 2-ஆவது பெரிய ரோமன் கத்தோலிக்க மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடு), யூத இனத்தை சேர்ந்த ஒருவர், அந்நாட்டின் உயர்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும். அந்த நாட்டில் பெண்கள் பாரம்பரியக் கடமைகளை மட்டுமே ஆற்ற வேண்டும் என்ற அழுத்தம் கொடுக்கப்படும் சூழலிலும் நாட்டின் தலைமைப் பதவியை ஒரு பெண் அலங்கரிக்கவுள்ளாா். உலகளவில் புகழ்பெற்ற பருவநிலை விஞ்ஞானியான கிளாடியா ஷேன்பாம், 2007-ஆம் ஆண்டு ’அமைதிக்கான நோபல் பரிசை’ வென்ற பெருமைக்குரியவர். 2018-ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற அவர், மெக்சிகோ மாநகரின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெற்றார். கடந்த 2000-லிருந்து 2006 வரை நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இவா் பொறுப்பு வகித்துள்ளாா். மெக்சிகோ மட்டுமன்றி, அமெரிக்கா, கனடா ஆகிய வல்லரசுகளில் நடைபெற்ற அதிபர் தேர்தல்களில் எந்தவொரு பெண் வேட்பாளரும் இதுவரை வெற்றிபெற்று அதிபராகப் பதவியேற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குற்றச்செயல்களும் வன்முறைச் சம்பவங்களும் அதிகரித்து வரும் சூழலில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக இன்று (அக்.1) பதவியேற்றார் கிளாடியா ஷேன்பாம். பதவியேற்பு விழாவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் மற்றும் பிரேசில் அதிபர் லூலா டா சில்வா ஆகியோர் கலந்து கொள்ள உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/310209
  20. பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி செயலகத்திற்கு பெறப்பட்டிருந்த வாகனங்கள் மீண்டும் அந்த நிறுவனங்களிடம் கையளிப்பு Published By: VISHNU 02 OCT, 2024 | 04:34 AM கடந்த காலங்களில் அமைச்சுகள், திணைக்களங்கள் உள்ளிட்ட பல்வேறு அரச நிறுவனங்களில் இருந்து ஜனாதிபதி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்ட வாகனங்கள் ஜனாதிபதி அலுவலகத்திற்கு அருகில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த வளாகத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் அந்தந்த நிறுவனங்களுக்கே மீண்டும் கையளிக்கப்பட்டன. இதன்போது 19 வாகனங்களை மீள கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததோடு, அவற்றில் 15 வாகனங்கள், முன் அறிவித்தலுக்கமைய வருகை தந்திருந்த குறித்த நிறுவனங்களின் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டன. அதன்படி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் 8 வாகனங்ளும், நிதி அமைச்சின் 03 வாகனங்களும் தென் மாகாண சபை, போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவை அமைச்சு, வனஜீவராசிகள் திணைக்களம் என்பவற்றிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட தலா ஒவ்வொரு வாகனங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 15 வாகனங்கள் மீளக் கையளிக்கப்பட்டன. ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, மேலதிக செயலாளர் மகேஷ் ஹேவாவிதாரண உள்ளிட்ட பலர் வாகனங்கள் கையளிக்கும் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/195278
  21. புதிய நாடாளுமன்றத்தில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைக்குத் தீர்வு வழங்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதன்போது, செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் விஜித ஹேரத் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் மூலம் புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அரசை அமைப்பதற்காக நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலின் ஊடாகவே அரசு அமைக்கப்படும். எம்முடைய விஞ்ஞாபனத்துக்கு அமைய இனப்பிரச்சினைக்குத் தீர்வை வழங்க புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். அவ்வாறு உருவாக்கப்படும் அரசமைப்பு நாட்டு மக்களிடம் வழங்கப்பட்டு அவர்களின் கருத்துக்களுடன் கூடிய கொள்கை மற்றும் வேலைத்திட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும். புதிய அரசு ஆட்சி அமைத்தமையைத் தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். – என்றார். https://thinakkural.lk/article/310198
  22. Published By: VISHNU 02 OCT, 2024 | 04:22 AM ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகவர் நிறுவனத்தின் தலைமை பிரதிதிநிதி யாமோடா டெட்சூயா (YAMADA TETSUYA) உள்ளிட்ட சிரேஷ்ட பிரதிநிதிகள் குழுவினர் செவ்வாய்க்கிழமை (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்தனர். ஜயிக்கா நிறுவனத்தினால் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி திட்டத்தின் இரண்டாம் கட்டம் மற்றும் தொலைக்காட்சி ஔிபரப்பை டிஜிட்டல் மயமாக்குதல் போன்ற வேலைத்திட்டங்களை விரைவில் ஆரம்பிப்பது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. ஜயிக்கா (JICA) நிறுவனத்தின் உதவியுடன் இந்நாட்டில் முன்னெடுக்கப்படும் 11 வேலைத்திட்டங்களை விரைவில் நிறைவு செய்வது குறித்து அண்மையில் ஜப்பான் தூதுவர் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதோடு, அந்த செயற்பாடுகளை துரிதப்படுத்துவது குறித்தும் இன்றைய சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டது. இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் கட்சுஹிரோ சுஷூகி (KATSUHIRO SUZUKI) உள்ளிட்டோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/195277
  23. Published By: VISHNU 02 OCT, 2024 | 03:50 AM (எம்.மனோசித்ரா) மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் எனக்கு ஓயவூதியம் முறையாக வழங்கப்படவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தில் வழங்கப்பட்ட 94,000 ஓய்வூதியத்தையும் சமூக சேவைகளுக்காவே பயன்படுத்தினேன். அரசாங்கம் வழங்கியவற்றில் 7 வாகனங்களை மீளக் கையளித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். செவ்வாய்கிழமை (1) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் எனக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை 2015க்குப் பிறகு நான் அதை கேட்கவுமில்லை, மற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கி எனக்கு ஓய்வூதியம் வழங்கவில்லையென அரசு தெரிந்திருக்கவுமில்லை. அதன் பின்னல் 94000 ஆயிரம் ஓய்வூதியமாக வழங்கப்பட்டது. அது தான் எனக்கு வழங்கப்பட்ட ஓய்வூதியமாகும். அதன்பிறகு நான் ஊடகங்களுக்கு அறிக்கையொன்றும் வழங்கினேன். எனது சொந்த உபயோகத்திற்காக தனி கணக்கை திறந்து, பல சமூக சேவைகளுக்காக நான் அதைப் பயன்படுத்தினேன். அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 14 வாகனங்களில் 7 வாகனங்களை மீள ஒப்படைத்துள்ளேன். தற்போது என்னிடம் 4 வாகனங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு பாதுகாப்புக்காகவும், ஏனைய இரண்டும் பயணம் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்குமாகும். 12 வருட அரசியல் வாழ்க்கையில் தனது செந்த செலவுக்காக அரசிடமிருந்து எந்த பணத்தையும் நான் பெறவில்லை. ஆட்சி காலத்தில் சிலரது தொடர்ச்சியான கோரிக்கைகளால் 12 ஆண்டுகளில் 4 வாகனங்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கினேன். ஆனால் நான் அதனைப் பெறவில்லை. எனது ஊழியர்களுக்கும் நானே ஊதியங்களை வழங்குகின்றேன். மின்சாரம் மற்றும் நீர்கட்டணங்களைக் கூட நானே செலுத்துகின்றேன். ஹெக்டர் கொப்பேடுவ உடன் நான் மாத்திரமே வாகனத்துக்கான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை. முந்தைய ஆட்சியாளர்களுக்கு உணவுக்கான செலவுகள் கூட அரசாங்கத்தினாலேயே வழங்கப்பட்டன. அரசாங்கம் சார்பான பேச்சுவார்த்தைகளில் மாத்திரமே நாம் அரச செலவில் உணவுகளைப் பெற்றிருக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/195276
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆக்ரோஷமான பேஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்து 2 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்திய அணியினர் நிரூபித்துள்ளனர். 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கான்பூரில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது மற்றும் 3வது நாள் ஆட்டம் மழை காரணமாக முற்றிலும் ரத்து செய்யப்பட்டநிலையில் 4வது நாள் மற்றும் கடைசிநாள் ஆகிய இருநாட்களில் சிறப்பாக விளையாடி இந்திய அணி இந்த போட்டியை வென்றுள்ளது. இதன் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்றுள்ளது. இதுவரை இந்திய அணிக்கு எதிராக ஒரு டெஸ்ட் தொடரைக் கூட வெல்ல முடியவில்லை என்ற வரலாறு வங்கதேச அணிக்குத் தொடர்கிறது. நினைத்துப் பார்க்க முடியாத வெற்றி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெற்றிக்கோப்பையுடன் இந்தியா அணி முதல் 3 நாட்கள் வரை 2வது டெஸ்ட் போட்டி நடக்குமா அல்லது ரத்தாகுமா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஏனென்றால் 3 நாட்களில் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டிருந்தது. ஆனால், நேற்று மற்றும் இன்று பிற்பகல் தேநீர் இடைவேளைக்குள் இந்திய அணி ஆட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர். 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மொத்தமாக 312 பந்துகளை மட்டுமே சந்தித்து. டெஸ்ட் வரலாற்றில் ஒரு அணி குறைவான பந்துகளைச் சந்தித்து அடைந்த அடைந்த வெற்றிகளில் இது இரண்டாவது ஆகும். இதற்கு முன் தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக 281 பந்துகளைச் சந்தித்து இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 180 ஓவர்களுக்கும் குறைவாக அதாவது 173.2 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இன்னும் ஒன்றரை செஷன் மீதமிருக்கும் நிலையில் ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த டெஸ்ட் தொடரில் மொத்தம் 180 ஓவர்களுக்கும் குறைவாக மட்டுமே வீசப்பட்டது. 'பேஸ்பால் ஆட்டம்' உலகளவில் 'பாஸ்பால்' (Bazball) ஆட்டம் குறித்து பெருமளவு விவாதிக்கப்பட்டு வரும்நிலையில் அதில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகள்தான் ஆதிக்கம் செய்து வருகின்றன. ஆனால், தங்களாலும் ஆக்ரோஷமான பேஸ்பால் ஆட்டத்தை கையில் எடுத்து 2 நாட்களில் டெஸ்ட் போட்டியை முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பதை இந்திய அணியினர் நிரூபித்துள்ளனர். 2வது இன்னிங்ஸில் வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து இந்திய அணி வெற்றி பெற 95 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி டி20 அதிரடி பேட்டிங்கை முறையை கையில் எடுத்து, 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வாலும், 114 ரன்கள் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய அஸ்வின் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனர். புள்ளிப்பட்டியலில் இந்திய அணி ஆதிக்கம் இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடருக்கான புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து இந்திய அணி முதலிடத்தில் இருந்து வருகிறது. இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றியதால் 12 புள்ளிகள் கிடைத்தது. தற்போது புள்ளிப்பட்டியலில் இந்திய அணி, 11 போட்டிகளில் 8 வெற்றி, 2 தோல்வி, ஒரு டிரா என 98 புள்ளிகளுடன், 74.24 சதவீத வெற்றியுடன் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி 90 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆட்டநாயகனாக இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த ஜெய்ஸ்வால் அறிவிக்கப்பட்டார் ரோஹித் கூறுவதென்ன? இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “வாழ்க்கையில் நாம் அனைவரும் நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும், பல்வேறு தரப்பட்டவர்களுடன் சேர்ந்து பணியாற்ற வேண்டும். ராகுல் டிராவிடுடன் இணைந்து செயல்பட்டோம் தற்போது, கவுதம் கம்பீருடன் இணைந்து செயல்படுகிறோம். இந்த போட்டியை எப்படியாவது வெல்ல வேண்டும் என்று தீவிரமாக விளையாடினோம். 4வது நாள் ஆட்டத்தின்போது வங்கதேசத்தை குறைந்த ரன்களில் ஆட்டமிழக்கச் செய்ய திட்டமிட்டோம். ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதாக உதவவில்லை, ஆனால், ஆடுகளத்துக்கு ஏற்றார் போல் இந்திய பந்துவீச்சாளர்கள் பந்துவீசினர். பேட்ஸ்மேன்களும் ரிஸ்க் எடுத்து தங்களின் உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தினர்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆடுகளம் பந்துவீச்சாளர்களுக்கு பெரிதாக உதவவில்லை என ரோஹித் சர்மா கூறினார் கடைசிநாள் ஆட்டம் கடைசி நாளில் வங்கதேச அணிக்கு பந்துவீச்சில் நெருக்கடி கொடுத்து, குறைந்த ஸ்கோரில் அந்த அணியை வீழ்த்தி, 2வது டெஸ்ட் போட்டியை தன்வசமாக்க இந்திய அணி முடிவு செய்தது. அதற்கு ஏற்றார்போல் 52 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸைத் தொடங்கிய வங்கதேசம் அணி, நேற்றைய ஆட்டநேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் சேர்த்திருந்தது. கடைசிநாளான இன்று வங்கதேசத்தின் விக்கெட்டுகள் அனைத்தையும் வீழ்த்தி டெஸ்ட் போட்டியை வெல்லும் முயற்சியில் இந்திய அணி களமிறங்கியது. ஷாத்மான் இஸ்லாம், மோமினுல்ஹக் ஆட்டத்தைத் தொடங்கினர். ஆட்டம் தொடங்கிய 2வது ஓவரிலேயே அஸ்வின் பந்துவீச்சில் மோமினுல் 2 ரன்னில் ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த கேப்டன் ஷாண்டோ, இஸ்லாமுடன் சேர்ந்து விக்கெட் சரிவைத் தடுத்து ஆடினார். இஸ்லாம் கடினமாகப் போராடி அரைசதம் அடித்தார். இருவரும் நிதானமாக ஆடிய நிலையில் ஜடேஜா பந்துவீச்சில் ஷாண்டோ க்ளீன் போல்டாகி 19 ரன்னில் விக்கெட்டை இழந்தார். அரைசதம் அடித்த இஸ்லாம் 50 ரன்னில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் ஜெய்ஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதன்பின் சீரான இடைவெளியில் வங்கதேச அணியினர் விக்கெட்டுகளை பறிகொடுத்தவாறு இருந்தனர். 28 ஓவர்களின்போது 5 விக்கெட் இழப்புக்கு 93 ரன்கள் சேர்த்திருந்த வங்கதேச அணி, அடுத்த 19 ஓவர்களில் 53 ரன்களுக்கு மீதமிருந்த 5 விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி வரிசை பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். உணவு இடைவேளையின்போது 47 ஓவர்கள் முடிவில் வங்கதேச அணி 146 ரன்களுக்கு 2வது இன்னிங்ஸில் ஆட்டமிழந்தது. இந்தியத் தரப்பில் அஸ்வின், ஜடேஜா, பும்ரா தலா 3 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணிக்கு எளிய இலக்கு இதையடுத்து, இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 95 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஜெய்ஸ்வால், ரோஹித் ஆட்டத்தைத் தொடங்கினர். முதல் இன்னிங்ஸை போன்று ஜெய்ஸ்வால் அதிரடி ஆட்டத்தைக் கையில் எடுத்து பவுண்டரி, சிக்ஸருக்கு விளாசினர். 3வது ஓவரிலேயே கேப்டன் ரோஹித் 8 ரன்னில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய கில் 6 ரன் சேர்த்த நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 6 ஓவர்களுக்குள் இந்திய அணி 34 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் ஜெய்ஸ்வால் தனது அதிரடி ஆட்டத்தை கைவிடாமல் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 6.6 ஓவர்களில் இந்திய அணி 50 ரன்களை எட்டியது. 43 பந்துகளில் ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்து 51 ரன்களில் தைஜுல் இஸ்லாம் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். விராட் கோலி 29 ரன்கள் எடுத்தார், ரிஷப் பந்த் கடைசியில் ஒரு பவுண்டரி அடித்து இலக்கை அடைந்து ஆட்டத்தை வெற்றி பெற வைத்தனர். தரைக்கு மேலே ஒரு நாள் என்பது பூமிக்கடியில் 2 நாளுக்கு சமமா? நேரம் பற்றிய ஆய்வு உணர்த்தும் உண்மை24 செப்டெம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தொடர்நாயகன் விருது வென்ற அஸ்வின் அதிரடி ஜெய்ஸ்வால் இந்த டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் ஸ்ட்ரைக் ரேட் 128.12 ஆக இருந்தது, இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்துள்ளார். டெஸ்ட் போட்டியில் ஒரு பேட்டரின் 3வது அதிகபட்ச ஸ்ட்ரைக் ரேட் இதுவாகும். அது மட்டுமல்லாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் 50 பந்துகளுக்கும் குறைவாக இரு இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்த முதல் இந்திய பேட்டர் ஜெய்ஸ்வால்தான். மிகப்பெரிய வெற்றி தொடர்நாயகன் விருது வென்ற அஸ்வின் கூறுகையில் “ இந்திய அணியின் ஆட்டத்தைப் பார்த்து உண்மையில் நான் பாராட்டுகிறேன். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நெருங்கி வரும் நிலையில் இந்த வெற்றி எங்களுக்கு மிகப்பெரியது. உணவு இடைவேளைக்குப்பின் வங்கதேச அணியை 2வது இன்னிங்ஸில் வீழத்திவிட்டோம். ரோஹித் சர்மா நேற்று போல் இன்றும் அதிரடியாக ஆட்டத்தைத் தொடங்கி, வழிகாட்டினார். அதன்படியே ஜெய்ஸ்வால், கோலி ஆகியோரும் சிறப்பாக ஆடி ஒரு மணிநேரத்தில் ஆட்டத்தை முடித்துவிட்டனர். ஜடேஜாவின் பந்துவீச்சை பற்றி அதிகமாக கூறத் தேவையில்லை. இந்த வெற்றியில் எனக்கும் பங்கிருக்கிறது என்பதில் பெருமையாக இருக்கிறது” எனத் தெரிவித்தார். ஆஸ்திரேலியா உள்பட எந்த அணியும் நெருங்கிடாத சாதனை இந்திய அணி உள்நாட்டில் தொடர்ச்சியாக 18-வது டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. உலகக் கிரிக்கெட்டில் இதுவரை எந்த அணியும் உள்நாட்டில் தொடர்ந்து 18 டெஸ்ட் தொடர்களை வென்றதில்லை. அதிகபட்சமாக ஆஸ்திரேலிய அணி உள்நாட்டில் 10 டெஸ்ட் தொடர் வெற்றிகளை(1994-2000, 2004-2008) பெற்றுள்ளது. உள்நாட்டு போட்டிகளில் கடைசியாக 2013-ஆம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரை இழந்தது. அதன்பின் இதுவரை 12 ஆண்டுகளாக ஒரு டெஸ்ட் தொடரில் கூட இந்திய அணி கோட்டைவிடவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cew1ndqv0d4o
  25. வலிந்து காணாமலாக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது?; சர்வதேச சமூகமும், ஐ.நாவும் ஒன்றிணைந்து நீதியைப் பெற்றுத்தருமா? - வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் Published By: VISHNU 01 OCT, 2024 | 10:14 PM (நா.தனுஜா) நாம் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்திருப்பதுடன், சர்வதேச நீதிப்பொறிமுறையில் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இறுதிக்கட்டப் போரின்போது எமது அன்புக்குரியவர்கள் சரணடைந்த இராணுவ சோதனைச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்வதன் ஊடாகவே எமது பிள்ளைகள் உள்ளடங்கலாக அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறியமுடியும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒன்றுபட்டு செயற்படுமா? என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி சர்வதேச சிறுவர் தினமான நேற்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: செவ்வாய்க்கிழமை (01.10) சர்வதேச சிறுவர் தினமாகும். உலகளாவிய ரீதியில் சிறுவர்களின் நலனை மேம்படுத்தும் நோக்கில் 1954 ஆம் ஆண்டு யுனிசெப் அமைப்பினால் சர்வதேச சிறுவர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டது. அத்தினம் பரிசுகள் மூலம் சிறுவர்களை மகிழ்விக்கும் வகையில் கொண்டாடப்பட்டுவருகிறது. அதேவேளை தமது அனுபவங்களின் ஊடாக சமூகத்தின் மேம்பாட்டில் பெரும் பங்காற்றிய வயது முதிர்ந்தவர்களை கௌரவிக்கும் நோக்கில் ஒக்டோபர் முதலாம் திகதி சர்வதேச முதியோர் தினமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் யுனிசெப் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் ஏனைய கிளை கட்டமைப்புக்கள் இலங்கையின் வட, கிழக்கு மாகாணங்களைச்சேர்ந்த சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது பற்றிய கரிசனையுடன் செயற்பட்டனவா? இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது பால் மற்றும் கஞ்சிக்காக வரிசைகளில் காத்திருந்த சிறுவர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்கள் எத்தனை பேர் குண்டுத்தாக்குதல்களில் கொல்லப்பட்டனர்? எத்தனை பேர் அங்கவீனமாக்கப்பட்டனர்? அதுமாத்திரமன்றி தமது பாதுகாப்புக்காகப் பலர் தமது பிள்ளைகளுடன் படையினரிடம் சரணடைந்தனர். அவ்வாறு தமது பெற்றோருடன் சரணடைந்த குழந்தைகள் உள்ளிட்ட 29 சிறுவர்களின் விபரங்களை நாம் கடந்த 2019 ஆம் ஆண்டு சிறுவர் தினத்தன்று வெளியிட்டோம். அவ்விபரங்கள் சர்வதேச இராஜதந்திரிகளிடமும் கையளிக்கப்பட்டன. இருப்பினும் இன்று வரை அச்சிறுவர்கள் தொடர்பில் எந்தவொரு தரப்பினரும் அக்கறை காண்பிக்கவில்லை. தமது பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்தது என்பதை அறியாமல் 250 க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். நாமும் மரித்துப்போவதற்கு முன்பதாக எமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்று ஏன் யாராலும் கூறமுடியவில்லை? நாம் உள்ளகப்பொறிமுறையில் நம்பிக்கை இழந்திருப்பதுடன், சர்வதேச நீதிப்பொறிமுறையில் மாத்திரமே முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இறுதிக்கட்டப் போரின்போது எமது அன்புக்குரியவர்கள் சரணடைந்த இராணுவ சோதனைச்சாவடிகளுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணை செய்வதன் ஊடாகவே எமது பிள்ளைகள் உள்ளடங்கலாக அன்புக்குரியவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைக் கண்டறியமுடியும். இவ்விடயத்தில் சர்வதேச சமூகமும், ஐக்கிய நாடுகள் சபையும் ஒன்றுபட்டு செயற்படுமா? அதேபோன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இனியும் தாமதிக்காமல், பொருத்தமான சர்வதேச நீதிப்பொறிமுறை ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் ஊடாக இலங்கையைப் பொறுப்புக்கூறச்செய்வதற்கும், நாம் உயிருடன் இருக்கும்போதே எமக்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/195274

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.