Everything posted by ஏராளன்
-
இந்திய பெண்ணை மணந்த இலங்கையர் - நாடு கடத்துவதற்கு மதுரை நீதிமன்றம் தடை
02 OCT, 2024 | 10:21 AM இந்திய பெண்ணை மணந்த இலங்கையரை நாடு கடத்துவதற்கு இந்திய உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இலங்கை தலைமன்னாரைச் சேர்ந்த சரவணபவன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல்செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இலங்கையை சேர்ந்த நான், கடந்த மார்ச் மாதம் சுற்றுலா விசாவில் இந்தியா வந்தபோது, ராமநாதபுரம் சிவசக்தியை திருமணம்செய்ய முடிவு செய்தேன். ஆனால், நான் இலங்கை குடியுரிமை பெற்றவன் என்பதால், எனது திருமணத்தை பதிவு செய்யமுடியவில்லை. எனினும், சிவசக்தியை இந்து முறைப்படி கோயிலில் திருமணம் செய்து கொண்டேன். இந்நிலையில், எனது 3 மாத விசாகாலம் முடிவடைந்ததால், காலநீட்டிப்புக்காக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்தேன். ஆனால், எனது திருமணம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் இல்லாததால், எனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதை ரத்து செய்து, எனது விசா காலத்தை நீ்ட்டிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், “இந்திய குடியுரிமை பெற்றவரை வெளிநாட்டு நபர் திருமணம் செய்தால், அவருக்கு அதிகபட்சம் 5 ஆண்டுகால விசா நீட்டிப்பு வழங்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டது. பின்னர் நீதிபதி, “வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றவருக்கான விசா நீட்டிப்பு தொடர்பாக ஏற்கெனவே உயர் நீதிமன்றம் தெளிவான உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, மனுதாரருக்கு முறையாக திருமணம் நடைபெற்றதா என்பதை மத்திய வெளியுறவுத் துறை அதிகாரிகள் விசாரித்து, விசா நீட்டிப்பு வழங்க வேண்டும். அதுவரை மனுதாரரை நாட்டை விட்டு வெளியேற்றக் கூடாது” என உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/195291
-
இஸ்ரேல் மீது தாக்குதல் நடித்திய ஈரான்.. பாதுகாப்பு வளையத்திற்குள் செல்லும் மக்கள் - இஸ்ரேல் பரபரப்பு தகவல்!
இரான் தாக்குதல் எதிரொலி: இஸ்ரேலுடன் அமெரிக்கா ஆலோசனை - கச்சா எண்ணெய் விலை உயர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மத்திய கிழக்கில் சமீப நாட்களாக எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த இஸ்ரேல் மீதான இரானின் தாக்குதல் நிஜமாகியுள்ளது. இஸ்ரேல் மீது இரான் சுமார் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேலுக்கு முன்பே எச்சரித்திருந்த அமெரிக்கா, இரானின் ஏவுகணைகளை வழியிலேயே இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு உதவி புரிந்ததாக கூறியுள்ளது. எதிர்பார்க்கப்பட்ட படியே இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், இஸ்ரேல் இனி என்ன செய்யப் போகிறது? மத்திய கிழக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்க ராணுவம் என்ன செய்கிறது? மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அதிகரிக்கும் பதற்றம் உலகளாவிய அளவில், குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் என்ன? இரண்டாவது தாக்குதல் இன்னும் மோசமாக இருக்கும் - இரான் பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதை இரான் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேல் பதில் தாக்குதலில் ஈடுபட்டால் மேலும் தாக்குதல் தொடுப்போம் என்று இரான் மிரட்டல் விடுத்துள்ளது. இது இரான் புரட்சிகர காவல் படையின் முதல் தாக்குதல் என்று இரான் நாடாளுமன்றத்தின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளியுறவு கமிட்டி தலைவர் இப்ராகிம் அஸிஸி தெரிவித்துள்ளார். "இஸ்ரேலின் ராணுவ மையங்கள் மற்றும் தளவாடங்களே எங்கள் இலக்காக இருந்தன. கணிப்புகள் ஒருவேளை தவறானால் பொதுமக்களும் கூட பாதிப்புகளை சந்திக்கும் நிலையும் வரலாம். இஸ்ரேல் மீண்டும் தவறிழைத்தால் அடுத்தக்கட்டமாக இரண்டாவதாக நடத்தப்படும் தாக்குதல் பேரழிவை ஏற்படுத்துவதாக இருக்கும்" என்று அவர் கூறினார். படக்குறிப்பு, இரான் பயன்படுத்திய பேலிஸ்டிக் ஏவுகணைகள் தான் என்று ஏவுகணை பாதுகாப்புத் திட்ட இயக்குநர் தாமஸ் கராகோவும் கூறியுள்ளார் பேலிஸ்டிக் ஏவுகணைகளை இரான் பயன்படுத்தியதா? இஸ்ரேலை தாக்க இரான் எந்தவிதமான ஏவுகணைகளை பயன்படுத்தியது என்பது இன்னும் தெளிவாகவில்லை. அந்த ஏவுகணைகள் எந்த வகையைச் சேர்ந்தவை என்பதை அறிந்து கொள்ள ராணுவ நிபுணர்களிடம் பிபிசி வெரிஃபை குழு பேசியது. ஆயுத ஆராய்ச்சி சேவை என்ற புலனாய்வு கன்சல்டன்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளரான பேட்ரிக் சென்ஃப்ட் இதுகுறித்து பிபிசி வெரிஃபையிடம் பேசினார். ஏவுகணை சிதைவுகளை பார்க்கையில், இரான் இந்த தாக்குதலுக்கு பேலிஸ்டிக் ஏவுகணைகளை பயன்படுத்தியிருப்பது போல் தெரிகிறது என்று அவர் கூறினார். குரூயிஸ் ஏவுகணைகளைக் காட்டிலும் பேலிஸ்டிக் ஏவுகணைகளை இலக்கை மிக வேகமாக தாக்கக் கூடியவை என்றார் அவர். இரான் பயன்படுத்திய பேலிஸ்டிக் ஏவுகணைகள் தான் என்று ஏவுகணை பாதுகாப்புத் திட்ட இயக்குநர் தாமஸ் கராகோவும் கூறியுள்ளார். 200 ஏவுகணைகளை இரான் ஏவியது - அமெரிக்கா பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜேக் சுல்லிவன், இரானின் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக கூறினார் இரான் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி செலுத்தியதாக அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜேக் சுல்லிவன், இரானின் தாக்குதல்கள் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக கூறினார். இஸ்ரேலிய விமானங்களுக்கோ, முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ உடைமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்படாத வகையில், இரானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டு விட்டதாக தோன்றுவதாகவும் அவர் கூறினார். இஸ்ரேலை நோக்கி இரான் 200 பேலிஸ்டிக் ஏவுகணைகளை செலுத்தியதாகவும், அவற்றை வழியிலேயே இடைமறித்து அழிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்க கடற்படை உறுதுணையாக இருந்ததாகவும் அவர் கூறினார். அமெரிக்க அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறிய அவர், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து நிமிடத்திற்கு நிமிடம் அவர்கள் தெரிந்து கொள்வதாகவும் தெரிவித்தார். அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து இஸ்ரேலுடன் ஆலோசித்து வருவதாகக் கூறிய அவர், இஸ்ரேலில் உள்ள அமெரிக்க குடிமக்களை உடனே வெளியேறுமாறு தங்கள் நாடு எந்தவொரு அறிவுறுத்தல்களையும் விடுக்கவில்லை என்பதையும் தெளிவுபடுத்தினார். இரான் தாக்குதலுக்கு இஸ்ரேல் அல்லது அமெரிக்கா தரப்பில் பதிலடி தரப்படுமா என்ற கேள்விக்கு சுல்லிவன் பதிலளிக்க மறுத்துவிட்டார். பேலிஸ்டிக் ஏவுகணை பயன்பாட்டை ஒப்பிடுகையில், கடந்த ஏப்ரலில் இரான் நடத்திய தாக்குதலைப் போல இது இரு மடங்கு அதிகம் என்று அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் கூறியுள்ளது. செய்தியாளர் சந்திப்பில் பேசிய மேஜர் ஜெனரல் பேட்ரிக் ரைடர், இரானின் ஏவுகணைகளை வழியிலேயே தாக்கி அழிக்கும் பொருட்டு அமெரிக்காவின் 2 நாசகாரி கப்பல்கள் சுமார் ஒரு டஜன் ஏவுகணைகளை செலுத்தியதாக கூறினார். இரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை பட மூலாதாரம்,X/ @NETANYAHU படக்குறிப்பு, பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார் இரான் மிகப்பெரிய தவறிழைத்துவிட்டதாகவும், அதற்கு உரிய பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இரான் ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேலிய அமைச்சரவை கூட்டத்தை தொடங்கிவைத்துப் பேசிய அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கும் இஸ்ரேலின் உறுதிப்பாட்டை இரான் புரிந்து கொள்ளவில்லை" என்றார். "இரான் அதனை புரிந்து கொள்ளும். எங்களை யார் தாக்கினாலும் நாங்கள் திருப்பித் தாக்குவோம். நாங்களே வகுத்துக் கொண்ட அந்த விதிகளின் கீழ் செயல்பட நாங்கள் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார். இரானுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் ராணுவம் உறுதி இஸ்ரேலிய விமானப்படை இன்றிரவு மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வலுவான தாக்குதலை முன்னெடுக்கும் என்று இஸ்ரேல் ராணுவத்தின் செயதி தொடர்பாளர் டேனியல் ஹகாரி தெரித்துளளார். இரான் செலுத்திய ஏவுகணைகளை தடுப்பதில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக செயல்பட்டதாக அவர் கூறியுள்ளார். "இரானின் இந்த நடவடிக்கை மத்திய கிழக்கு பிராந்தியத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இன்றிரவு இரான் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு சரியான தொடர் விளைவுகள் இருக்கும்" என்றார் அவர். கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 74.40 அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தின் நடுவே கச்சா எண்ணெய் விலை 5 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது. அமெரிக்காவின் ஆற்றல் தகவல் ஆணைய தரவுகளின்படி, உலகின் ஏழாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராக இரான் உள்ளது. ஓபெக் எனப்படும் கச்சா எண்ணெய் உற்பத்தியாளர் கூட்டமைப்பில் உள்ள நாடுகளில் மூன்றாவது பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளராகவும் இரான் இருக்கிறது. அந்த பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இரான் அருகேயுள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே எண்ணெய்க் கப்பல் போக்குவரத்து தடைபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது. ஓமன் - இரான் இடையே உள்ள ஹோர்முஸ் நீரிணை வழியே உலக வர்த்தகத்தில் 25 சதவீத கச்சா எண்ணெய் சப்ளையாகிறது. ஓபெக் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள சௌதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், இராக் ஆகிய நாடுகளும் கூட ஹோர்முஸ் நீரிணை வழியேதான் கச்சா எண்ணெயை உலக சந்தைக்கு கொண்டு வருகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cz7jr58977ro
-
கோவை ஈஷா யோகா மையத்தில் காவல்துறை சோதனை, சமூக நலத் துறை விசாரணை - என்ன நடக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈஷா மையம் 1992-ஆம் ஆண்டு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்டது (கோப்புக்காட்சி) கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 1 அக்டோபர் 2024 புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் கோவை வெள்ளியங்கிரி மலைடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 150-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈஷா யோகா மையத்தின் மீது கூறப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகள் உட்பட அனைத்து கிரிமினல் வழக்குகள் குறித்தும் விரிவான அறிக்கையை வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தனது இரண்டு மகள்களை ஈஷா மையத்திலிருந்து மீட்டு தருமாறு தொடுத்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த போது சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியது. அந்த மையத்தில் தனது மகள்கள் மூளைச்சலவை செய்யப்பட்டு அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று அவர் குற்றம் சாட்டுகிறார், எனினும் தங்கள் சொந்த விருப்பத்திலேயே ஈஷா மையத்தில் இருந்து வருவதாக அவரது மகள்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். யாரையும் திருமணம் செய்து கொள்ளவோ, துறவறம் மேற்கொள்ளவோ கட்டாயப்படுத்துவதில்லை என்று ஈஷா யோகா மையம் தெரிவிக்கிறது. இந்நிலையில் காவல்துறையினர் நடத்தி வரும் விசாரணையின் அறிக்கை அக்டோபர் 4-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. வழக்கின் பின்னணி என்ன? ஈஷா யோகா மையம் 1992-ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான வெள்ளியங்கிரியில் ஜக்கி வாசுதேவால் நிறுவப்பட்டது. ஈஷா யோகா மையம் திருமணம் ஆன, ஆகாத ஆயிரக்கணக்கான மனிதர்கள் மற்றும் பிரம்மச்சரிய பாதையில் இருக்கும் சிலரின் இருப்பிடமாக இருக்கிறது என்று அந்த மையம் கூறுகிறது. கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தனது இரண்டு மகள்களை மீட்டு தருமாறு கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்திருந்தார். ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் தமிழ்நாடு வேளாண் பல்கலைகழத்தில் வேளாண் பொறியியல் துறையின் முன்னாள் தலைவர். அவருக்கு 42 வயதிலும், 39 வயதிலும் மகள்கள் உள்ளனர். அவரது மூத்த மகள் மெகட்ரானிக்ஸ் படிப்பில் இங்கிலாந்தில் உள்ள பிரபல பல்கலைகழகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். நல்ல சம்பளத்துக்கு வேலை பார்த்து வந்த அவர், திருமணம் செய்து பின் 2008-ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அதன் பிறகு அவர் ஈஷா மையத்தில் இணைந்தார். மென்பொருள் பொறியாளரான இளைய மகளும் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். அவரும் பின்பு ஈஷா மையத்தில் இணைந்துள்ளார். தற்போது இருவரும் ஈஷா மையத்தில் தங்கியிருக்கின்றனர். தனது மகள்களுக்கு “மருந்துகள் கொடுத்து அவர்களது மூளையின் செயல்பாட்டை குறைத்து” விட்டதாகவும் இதனால் குடும்பத்துடன் எந்த உறவையும் அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை எனவும் காமராஜ் தனது மனுவில் தெரிவித்திருந்தார். ஈஷா மையத்துக்கு வருபவர்கள் சிலரை அவர்கள் மூளைச்சலவை செய்து, சந்நியாசிகளாக மாற்றுகின்றனர் என்றும் பெற்றோர்கள் சந்திக்கக் கூட அனுமதி வழங்கப்படுவதில்லை என்றும் காமராஜ் தெரிவித்திருந்தார். அந்த மையத்தில் பணிபுரியும் மருத்துவர் மீது போக்சோ வழக்கு தொடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் ஜூன் 15-ஆம் தேதி மாலை 6 மணியளவில், அவரது மூத்த மகள் அவரை அழைத்து பேசியதாகவும், அப்போது ஈஷா யோகா மையத்தின் மீது தான் தொடுத்திருக்கும் வழக்குகளை பின் வாங்கும் வரை தனது இளைய மகள் உண்ணாவிரதம் இருந்து வருவதாகவும் தெரிவித்ததாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் காமராஜ் குறிப்பிட்டிருந்தார். படக்குறிப்பு, ஓய்வுபெற்ற பேராசிரியர் காமராஜ் மகள்கள் என்ன கூறுகின்றனர்? இந்த வழக்கு விசாரிக்கப்படும் போது அவரது மகள்கள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர். தனது மகள்கள் ஈஷா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக காமராஜ் கூறும் நிலையில், தாங்கள் சுய விருப்பத்துடன் அங்கு தங்கி வருவதாகவும் தங்களை யாரும் வற்புறுத்தவில்லை என்றும் மகள்கள் தெரிவித்தனர். ஈஷா யோகா மையம் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் கே ராஜேந்திர குமார், வயது வந்தவர்களுக்கு தங்கள் வாழ்க்கை குறித்து, முடிவு எடுக்க உரிமை உண்டு என்று வாதாடினார். நீதிமன்றம் அவர்களின் தனிப்பட்ட முடிவுகளில் தலையிடுவது தேவையற்றது என்று தெரிவித்தார். ஆனால் நீதிபதிகள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. தந்தையின் கோரிக்கை என்ன? தனது இளைய மகள் சென்னையில் உள்ள பிரபல தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போது கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ஜக்கி வாசுதேவ் பேசியதாகவும் அதில் அவர் ஈர்க்கப்பட்டார் என்றும் காமராஜ் தெரிவிக்கிறார். கல்லூரி படிப்பு முடித்து வேலைக்கு சென்றவர் ஈஷா மையத்தில் இணைந்துள்ளார். தனது மகளுடன் சேர்ந்து அவரது கல்லூரியில் படித்த 20 பெண்கள் தங்கள் வேலையை விட்டு, ஈஷா மையத்தில் இணைந்ததாக காமராஜ் பிபிசியிடம் தெரிவித்தார். “2016-ஆம் ஆண்டு இரு மகள்களும் ஈஷா மையத்தில் இணைந்தனர். அதே ஆண்டில் ஆட்கொணர்வு மனு தொடுத்து, மகள்களை பார்க்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. 2017- ஆம் ஆண்டு எனது மகள்களை எனக்கு எதிராக, 'நான் ஈஷா மையத்துக்கு களங்கம் ஏற்படுத்துவதாக' மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வைத்தனர். அந்த வழக்கு முடிய ஆறு ஆண்டுகள் ஆனதால் அதுவரை என்னால் அவர்களை காண இயலவில்லை. கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலையீட்டுக்கு பின் அவர்களை சந்திக்க மீண்டும் அனுமதி கிடைத்தது.” என்றார். மேலும், “மூத்த குடிமக்கள் சட்டத்தின் படி, பெற்றோர் பார்த்துக் கொள்ளும் கடமையிலிருந்து தவறுகிறார்கள் என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்திருந்தேன். வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் விசாரணை நடைபெற்ற போது, பெற்றோர்கள் ஈஷா மையத்துக்கு வந்தால் அவர்களை பார்த்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துவிட்டனர்” என்றார். படக்குறிப்பு, ஈஷா நிலையத்துக்கு வந்த காவல் துறையினர் நீதிமன்றம் என்ன கூறியது? இந்த வழக்கை விசாரித்தபோது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம் மற்றும் வி. சிவஞானம் ஈஷா மையத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர். சத்குரு என்று அழைக்கப்படும் ஜக்கி வாசுதேவ், “தனது மகளுக்கு திருமணம் செய்துவிட்டு, பிற பெண்களை மொட்டை அடித்து, சந்நியாசிகளாக” யோகா மையங்களில் வாழ ஏன் ஊக்குவிக்கிறார் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த பெண்களிடம், “நீங்கள் ஆன்மிகப் பாதையில் செல்வதாக கூறுகிறீர்கள். உங்கள் பெற்றோர்களை புறந்தள்ளுவது பாவம் என்று தோன்றவில்லையா?” என்று நீதிபதிகள் கேட்டனர். நீதிபதிகள் வழங்கிய உத்தரவில், வழக்கு தொடுத்தவர் மற்றும் ஈஷா மையத்தில் இருக்கும் இரு பெண்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். ஈஷா மையத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளின் ‘தீவிரத்தன்மையை’ கருத்தில் கொண்டும், காவலில் இருப்பவர்கள் தங்கள் முன் ‘பேசிய விதத்தை’ வைத்துப் பார்க்கும் போதும், ‘குற்றச்சாட்டுகளின் பின் உள்ள உண்மையை கண்டறிய மேலும் ஆராய வேண்டியுள்ளது’ என்று சென்னை உயர்நீதிமன்றம் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை புறநகர் காவல்துறையினர் ஈஷா மையம் மீது இருக்கும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தி, நீதிமன்றத்தின் முன் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதில்லை என விளக்கம் அளித்துள்ளது ஈஷா மையம் கூறுவது என்ன? இந்த விவகாரம் குறித்து ஈஷா யோகா மையத்தை பிபிசி தொடர்பு கொண்டது. அப்போது ஈஷா யோகா மையத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் எழுத்துப்பூர்வ விளக்கத்தை பிபிசியிடம் பகிர்ந்தார். அதில், “ஈஷா யோகா மையம் எவரையும் திருமணம் செய்து கொள்வதற்கோ அல்லது துறவறம் மேற்கொள்வதற்கோ கட்டாயப்படுத்துவதோ, உற்சாகப்படுத்தி உந்தி தள்ளவோ செய்வதில்லை. "இரண்டு பெண் பிரம்மச்சாரிகளின் பெற்றோர் கடந்த 8 வருடங்களாக பல்வேறு பொய் வழக்குகளை பதிவு செய்து உள்ளனர். உள்நோக்கம் கொண்ட சிலரின் தூண்டுதலால் போராட்டங்களை நடத்தி தேவையில்லாத சச்சரவுகளையும் ஏற்படுத்தி வருகின்றனர். மிக சமீபத்தில் காமராஜ் ஈஷா யோகா மையம் சென்று தன்னுடைய மகள்களை சந்தித்த CCTV காட்சிகளும் ஆதாரங்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது." என்று கூறப்பட்டுள்ளது மேலும் "2016-ஆம் ஆண்டு இதே காமராஜ் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை தீர விசாரித்த கோவை மாவட்ட நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று கோவை ஈஷா யோகா மையத்தில் இருவரையும் (காமராஜின் மகள்கள்) சந்தித்து நீதி விசாரணை நடத்தியது. அந்த தீர்ப்பில் நீதிபதிகள் 'பெற்றோர் தொடுத்த வழக்கில் உண்மையில்லை, பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டவர்கள் அந்த மையத்தில் தங்களது சுயவிருப்பத்திலேயே தங்கி இருக்கிறார்கள் என்று திட்டவட்டமாக தெரிவிக்கிறோம்' என்று கூறியுள்ளார்கள்.” என்று தெரிவித்துள்ளது. ஈஷா யோகா மையத்தில் விசாரணை இதையடுத்து செவ்வாய்கிழமை (அக்டோபர் 1), கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையிலான 150 காவலர்கள் மற்றும் சமூக நலத்துறை அதிகாரி அம்பிகா தலைமையிலான 50-க்கும் மேற்பட்டோர், ஈஷா யோகா மையத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள பெண்கள், எந்த மாதிரியான சூழல்களில் இந்த மையத்துக்கு வந்தனர், அங்கு அவர்கள் வாழ்க்கை முறை எவ்வாறாக இருக்கிறது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த விரிவான விசாரணையின் அறிக்கையை காவல்துறையினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cqxrzzjvg44o
-
இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
Iran launches missile strikes into Israel
-
இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
இஸ்ரேல் மீது இரான் ஏவுகணை தாக்குதல் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரான் ஏவுகணைகள் இஸ்ரேலுக்குள் நுழையும் காட்சி 23 நிமிடங்களுக்கு முன்னர் இரானிடம் இருந்து ஏவுகணை தாக்குதல் விரைவில் நடக்கலாம் என அமெரிக்கா எச்சரித்துள்ள நிலையில், இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணைகளை ஏவியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் எச்சரிக்கை சைரன்கள் ஒலித்துள்ளதாகவும் அது கூறுகிறது. இஸ்ரேலியர்களை எச்சரிக்கையாக இருக்கவும், பாதுகாப்பு படை வீரர்களின் அறிவுறுத்தல்களின் படி நடக்குமாறும் இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. சைரன் சத்தம் கேட்டவுடன், ''நீங்கள் ஒரு பாதுகாக்கப்பட்ட இடத்திற்குள் நுழைந்து, மறு அறிவிப்பு வரும் வரை அங்கேயே இருக்க வேண்டும்", எனவும் அது கூறியுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டெல் அவிவில் காணப்பட்ட இரான் ராக்கெட்டுகள் இதற்கிடையே இஸ்ரேலின் டெல் அவிவ் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பாக தெற்கு லெபனானில் இஸ்ரேல் படையெடுப்பை தொடங்கியது. "நாங்கள் தெற்கு லெபனானில் தரைவழி ராணுவ நடவடிக்கைகளை முன்னெடுக்கப் போகிறோம். தெற்கு லெபனானில் ஹெஸ்பொலா பயங்கரவாதிகளின் நிலைகளைக் குறிவைப்போம். இந்த ராணுவ நடவடிக்கை வரம்புக்குப்பட்டதாக இருக்கும். இந்த இலக்குகள் எல்லையோர கிராமங்களில் உள்ளன.” என இஸ்ரேல் ராணுவம் கூறியிருந்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwylrp084qxo
-
அநுரா குமார திசாநாயக்க; இலங்கை வானில் 'இடதுசாரி' நட்சத்திரம்
Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 10:47 AM பாகம் 1 டி.பி.எஸ். ஜெயராஜ் அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ' சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ' (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும் செஞ்சேனையுடனும் தனது ஊடாட்டம் பற்றிய உயிர்களையுடைய விபரிப்பாக அமைந்த அந்த முதலில் 1937 ஆம் ஆண்டில் பிரசுரமானது. மாவோ என்று அறியப்பட்ட மாவோ சேதுங்கைப் பற்றி அந்த நேரத்தில் மேற்குலகில் பெரிதாகத் தெரியாது. பல வருடங்கள் கழித்து மாவோவின் தலைமையில் கம்யூனிஸ்டுகள் சீனாவில் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ' சீன வானில் சிவப்பு நட்சத்திரத்தின் ' பிரதிகள் பிரமிக்கத்தக்க அளவில் பெரும் எண்ணிக்கையில் உலகெங்கும் விற்பனையானது. சீனாவின் புதிய கம்யூனிஸ்ட் ஆட்சியாளர்கள் பற்றி ஒரு உள்நோக்கைப் பெறுவதற்கு அந்த்நூல் பேராவலூடன் வாசிக்கப்பட்டது. இலங்கையில் புதிதாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க ஒரு அர்த்தத்தில் இன்று இலங்கை வானில் எழுந்திருக்கும் சிவப்பு நட்சத்திரம் அல்லது இடதுசாரி நட்சத்திரமே. அநுரா அல்லது ஏ.கே.டி. என்று பிரபல்யமாக அறியப்பட்ட திசாநாயக்க 2024 செப்டெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இலங்கையின் ஒனபதாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக அவர் செப்டெம்பர் 23 ஆம் திகதி பதவியேற்றார். 55 வயதான திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) யினதும் தேசிய மக்கள் சக்தியினதும் தலைவர். ஒரு தீவிரவாத இயக்கமாக இருந்து பிறகு அரசியல் கட்சியாக மாறிய ஜே.வி.பி. ஆறு தசாப்த கால வரலாற்றைக் கொண்டது. தேசிய மக்கள் சக்தி, ஜே.வி.பி.யையும் வேறு 21 அமைப்புக்களையும் உள்ளடக்கிய இடதுசாரிப் போக்குடைய ஒரு பரந்த கூட்டணியாகும். இந்த அமைப்புக்களில் சிறிய கட்சிகள், தொழிற் சங்கங்கள், உரிமைகள் குழுக்கள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புகள் அடங்குகின்றன. ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியின் தலைமைத்துவக் கட்சியாகும். திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் திசையறிகருவி சின்னத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தலில் வெற்றி பெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) திசாநாயக்கவை மார்க்சிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸட், சோசலிஸ்ட், நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ' இந்திய விரோதி ' என்றும் ' தமிழர் விரோதி ' என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது எனக்கு சந்தேகமே. சில காலத்துக்கு முன்னர் ட்ரம்ப் என்ற ஒரு பேர்வழி " வெள்ளை மாளிகையை " அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப் போர் ஒன்றையே நடத்தும் அளவுக்கு அவர் சென்றார். லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு " மரக் கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான " ஒரு கதை என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் குறிப்பிடத்தக்க உயர்வையும் கூட " மண்வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு " வந்த ஒரு காவியம் என்று வர்ணிக்க முடியும். இந்த பின்னணியில்தான் இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவை இந்த பத்தி இரு பாகங்களாக ஆராய்கிறது. தம்புத்தேகம வாழ்க்கை திசாநாயக்க முதியான்சலாகே அநுரா குமார திசாநாயக்க 1968 நவம்பர் 24 ஆம் திகதி பிறந்தார். அவரின் பிறந்த இடம் மத்திய மாகாணத்தின் மாத்தளை மாவட்டத்தில் கலேவெல ஆகும்.அவரின் பெற்றோர்கள் கண்டிய கொவி பௌத்த சாகியத்தைச் சேர்ந்தவர்கள். திசாநாயக்கவும் அவரது மூத்த சகோதரியும் சிறுவர்களாக இருந்தபோது குடும்பம் வடமத்திய மாகாணத்தின் அநுராதபுரம் மாவட்டதுக்கு குடிபெயர்ந்தது. சில வருடங்கள் கெக்கிராவையில் வாழ்ந்த பிறகு குடும்பம் அதே மாகாணத்தின் தம்புத்தேகமவுக்கு நகர்ந்தது. தம்புத்தேகம அநுராதபுரம் நகரில் இருந்து 25 கிலோமீட்டர்கள் தொலைவிலும் தலைநகர் கொழும்பில் இருந்து 190 கிலோமீட்டர்கள் தொலைவிலும் அமைந்திருக்கும் ஒரு விவசாயப் பிரதேசமாகும். திசாநாயக்க தனது ஆரம்பக்கல்வியை காமினி மகா வித்தியாலயத்திலும் இரண்டாம் நிலைக் கல்வியை தம்புத்தேகம மத்திய கல்லூரியிலும் நிறைவுசெய்தார். அவரே தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக பிரவேசம் செய்த முதல் மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது. திசாநாயக்கவின் தந்தையார் ஒரு விவசாயத் தொழிலாளி. பல வருடங்களுக்கு பிறகு அவருக்கு நில அளவையாளர் திணைக்களத்தில் ஒரு அலுவலக உதவியாளராக நிரந்தரமான தொழில் வாய்ப்பு கிடைத்தது. சில சந்தர்ப்பங்களில் நில அளவையாளர்கள் களவேலைக்கு செல்லும்போது தந்தையார் உபகரணங்களை தூக்கிச்செல்லும் வேலையையும் செய்தார். குடும்பப் பெண்மணியான தாயாருக்கு நெல் விதைப்பு மற்றும் அறுவடைக் காலங்களில் ஒழுங்காக வேலை கிடைக்கும். தம்புத்தேகமவுக்கு வந்த பிறகு ஆரம்ப வருடங்களில் குடும்பம் பெரும் பணக் கஷ்டத்துக்குள்ளானது. அவர்களது வீட்டுக்கு மின்சார வசதி கிடையாது. இளம் திசாநாயக்க இரவு வேளைகளில் மண்ணெண்ணெய் குப்பி விளக்கின் வெளிச்சத்தில்தான் படிக்கவேண்டியிருந்தது. குடும்ப வருமானத்துக்கு உதவுவதற்காக தாயார் இனிப்புப் பலகாரங்கள் தயாரிப்பார். மகன் அவற்றை எடுத்துச் சென்று அருகாமையில் உள்ள தம்புத்தேகம புகையிரத நிலையத்தில் யாழ்தேவி, உத்தரதேவி மற்றும் ரஜரட்ட போன்ற நீண்டதூர ரயில்களின் பயணிகளுக்கு விற்பனை செய்வார். பாடசாலை விடுமுறை நாட்களில் திசாநாயக்க குழிவெட்டுபவராக பகுதிநேர வேலை செய்தார். குடும்பத்துக்கு பொருளாதாரக் கஷ்டம் இருந்த போதிலும், திசாநாயக்க திறமை மிகுந்த ஒரு மாணவனாக பிரகாசித்தார். பாடங்களை புரிந்துகொள்வதில் மிகுந்த ஆற்றலையும் நுட்பநுணுக்கமான விடயங்களை எளிதில் கிரகித்துக் கொள்ளும் திறமையும் கொண்டவராக அவர் இருந்தார். நல்ல நினைவாற்றலும் அவருக்கு இருந்தது. பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கு தம்புத்தேகம மத்திய கல்லூரியில் இருந்து தெரிவான முதல் மாணவன் என்ற வகையில் அந்த பாடசாலைக்கு அவர் பெருமை சேர்த்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு சில வாரங்கள் முன்னதாக அந்த கல்லூரியின் ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை கௌரவித்தனர். அந்த நிகழ்வு ஜனாதிபதி தேர்தலில் அவருக்கு கிடைக்கவிருந்த வெற்றிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது. ஆர்வமிக்க வாசகர் திசாநாயக்க தனது மாணவ காலத்திலும் பல்கலைக்கழகத்தில் படித்த காலத்திலும் ஒரு ஆர்வமிக்காவாசகர். இப்போதும் தான். சில வருடங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றுக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய அவரிடம் விரும்பிய நூல்கள் குறித்து கேட்கப்பட்டது. லியோ டால்ஸ்ராயின் ' போரும் சமாதானமும் ' , மார்க்சிம் கோர்க்கியின் ' தாய் ' , மகிந்த பிரசாத் மாசிம்புல எழுதிய 'செங்கோட்டன் ', மோகன் ராஜ் யடவலவின் ' 'ஆதரனீய விக்டோரியா' ஆகியவை அவர் குறிப்பிட்டவற்றில் சில நூல்கள். பல சிறுகதைகளையும் தான் விருப்பி வாசித்ததாக அவர் கூறினார். தனது பாடசாலை நாட்களில் டாக்டர் ஆபிரஹாம் கோவூரின் படைப்புக்களை வாசிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். தென்னிந்திய மாநிலமான கேரளாவில் திருவல்லா என்ற பகுதியைச் சேர்ந்த டாக்டர் கோவூர் இலங்கைக்கு குடிபெயர்ந்து கல்கிசை சென். தோமஸ் கல்லூரியில் பல வருடங்கள் ஆசிரியராக கடமையாற்றினார். பகுத்தறிவாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்த்அவர் மூடநம்பிக்கைகள், போலிச் சாமியார்கள் மற்றும் மதங்களின் பெயரால் இடம்பெறும் போலித்தனங்களுக்கும் எதிராக பெருமளவு நூல்களை எழுதினார். மாபெரும் சிந்தனையாளர்களினதும் அரசியல் தலைவர்களினதும் சரிதைகளையும் சுயசரிதைகளையும் திசாநாயக்க நன்கு சுவைத்துப் படிப்பார். மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், காந்தி, டிட்டோ, காஸட்ரோ மற்றும் கிளின்ரோ ஆகியோரின் சரிதைகள் திசாநாயக்கவின் வாழ்வை வளப்படுத்திய மகத்தான மனிதர்களின் நூல்களில் முக்கியமானவை. அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறுகையில் " எனது வாழ்க்கையை பல நூல்கள் மாற்றியமைத்தன.சோவியத் ரஷ்யாவின் இலக்கியங்களினால் குறிப்பாக நாவல்கள் , சிறுகதைகளினால் நான் மிகவும் ஆழமாக ஆகர்சிக்கப்பட்டேன். அந்த காலகட்டத்தின் இலக்கியங்கள் எமது வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின" என்று குறிப்பிட்டிருந்தார். வாசிப்பின் மீதான திசாநாயக்கவின் காதலையும் நூல்கள் தனது வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் பற்றிய அவரின் மதிப்பையும் வைத்துக்கொண்டு அவரை வெறுமனே ஒரு புத்தகப்பூச்சி என்று நினைத்துவிடக் கூடாது. அவருக்குள் இருக்கின்ற ஒரு ' மெய்வல்லுனரை " மக்கள் நேரிலும் தொலைக் காட்சிகளிலும் பார்த்திருப்பார்கள். சுறுசுறுசுறுப்பாக நடந்துவந்து மேடைகளில் அவர் ஏறுகின்ற பாங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. அவரது இந்த உடல்தகுதியின் தோற்றுவாய் அநுராதபுரத்தின் தண்ணீரில் தங்கியிருக்கிறது. நல்ல நீச்சல் வீரர் திசாநாயக்க வேகமும் உரமும் கொண்ட நல்ல நீச்சல் வீரர். தனது மாணவ காலத்தில் அவர் அநுராதபுரத்தில் உள்ள வரலாற்று முக்கியத்தும் வாய்ந்த திஸ்ஸவேவ, அபயவேவ, நுவரவேவ ஆகிய மூன்று வாவிகளில் நீந்துவார். முதலாவது நூற்றாண்டில் வலகம்பா மன்னனால் நிர்மாணிக்கப்பட்ட நுவரவேவவின் முழுமையான மூன்று கிலோ மீட்டர்கள் நீளத்தையும் திசாநாயக்க அடிக்கடி நீந்தி முடிப்பார். அரசியல் செயற்பாட்டாளராக மாறிய பிறகு திசாநாயக்க இலங்கை பூராவும் பயணம் செய்தார். எங்கெல்லாம் குளங்கள், வாவிகள் மற்றும் ஆறுகள் இருக்கின்றனவோ அங்கு சாத்தியமான வேளைகளில் அவர் நீச்சலில் இறங்குவதற்கு தவறுவதில்லை. "நான் நீச்சலை மிகவும் விரும்புபவன். சராசரியாக சுமார் இரு கிலோமீட்டர்கள் நீந்துவேன். அதனால் எனக்கு ஒரு நீச்சல் தடாகம் போதாது. உண்மையைச் சொல்கிறேன், எனக்கு நீச்சல் தடாகங்களைப் பிடிப்பதில்லை" என்று அவர் ஒரு தடவை நேர்காணலில் கூறினார். நீச்சலும் வாசிப்பும் படிப்பும் நிறைந்த அமைதியான கிராமப்புற வாழ்க்கையில் இருந்து திசாநாயக்க தனது பதினகவைகளின் இறுதி வருடத்தில் அரசியலில் ஆர்வம் காட்டத் தொடங்கினார். 1987 ஆம் ஆண்டு போரையும் சமாதானத்தையும் கொண்டதாக இருந்தது. அதுவே திசாநாயக்கவின் வாழ்வை முற்றுமுழுதாக மாற்றியமைத்த ஆண்டாகவும் அமைந்தது. அதற்கு பிறகு நடந்தவற்றை விளங்கிக்கொள்வதற்கு வரலாற்றை ஒரு தடவை திரும்பிப்பார்க்க வேண்டியிருக்கிறது. இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கை இலங்கையின் இனநெருக்கடி பல வருடங்கள் நீடித்த கொடூரமான ஒரு ஆயுதமோதலாக மாறியது. முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் முன்னாள் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தன ஜே.ஆர். ஜெயவர்தனவும் கொழும்பில் 1987 ஜூலை 29 ஆம் திகதி இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். போர்நிறுத்தம் ஒன்று பிரகடனம் செய்யப்பட்டது. அமைதியைப் பேணுவதற்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இந்திய இராணுவம் இந்திய அமைதிகாக்கும் படை என்ற பெயரில் நிலைகொண்டது. இலங்கை ஆயுதப்படைகளுக்கும் ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதக் குழுக்களுக்கும் இடையிலான போரை முடிவுக்கு கொண்டுவருவதன் மூலம் சமாதானத்தை ஏற்படுத்தும் மெச்சத்தக்க குறிக்கோளுடனேயே ராஜீவ் -- ஜெயவர்தன உடன்படிக்கை கைச்சாத்திடப்ப்பட்டது. எதிர்பார்க்கப்பட்டதைப் போன்று நிலைத்து நிற்கக்கூடிய ஒரு சமாதானத்தை கொண்டுவருவதற்கு பதிலாக, இந்திய - இலங்கை உடன்படிக்கை மேலும் வன்முறைக்கும் இரத்தக்களரிக்கும் வழிவகுத்தது. வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையிலான தமிழீழ விடுதலை புலிகள் இயக்கம் உடன்படிக்கையை ஏற்றுக்கொள்வதற்கு மறுத்து மீண்டும் போரைத் தொடங்கியது. விரைவாகவே வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படையினருக்கு எதிராக விடுதலை புலிகள் முழு அளவிலான கெரில்லப்போரை தொடுத்தனர். றோஹண விஜேவீர அதேவேளை றோஹண விஜேவீர தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுனயும் (ஜே.வி.பி. ) இந்திய -- இலங்கை உடன்படிக்கையை எதிர்த்து தென்னிலங்கையில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டது. பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவியில் இருந்தபோது 1971 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. ஆயுதக்கிளர்ச்சி ஒன்றை தொடங்கியது. பல நாடுகளின் உதவியுடன் அந்த கிளர்ச்சியை அரசாங்கம் ஈவிரக்கமற்ற முறையில் கொடூரமாக நசுக்கியது. ஆயிரக்கணக்கான இளைஞர்கள் கொல்லப்பட்டனர். மேலும் ஆயிரக்கணக்கானவர்களன சிறையில் அடைக்கப்பட்டனர். இது முதலாவது ஜே.வி.பி. கிளர்ச்சி என்று பொதுவாக அழைக்கப்படுகிறது. 1977 ஆம் ஆண்டில் பதவிக்கு வந்த ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஜே.வி.பி. மீதான தடையை நீக்கி விஜேவீர உட்பட சிறையில் அடைக்கப்பட்டிருந்த அந்த இயக்கத்தின் உறுப்பினர்களை விடுதலை செய்தது. ஜே.வி.பி. மீண்டும் அரசியல் நீரோட்டத்தில் பிரவேசித்தது.விஜேவீர 1982 அக்டோபர் ஜனாதிபதி தேர்தலிலும் போட்டியிட்டு மூன்றாவதாக வந்தார். ( ஐக்கிய தேசிய கட்சி முதலாவதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டாவதாகவும் வந்தன ) இலங்கை அரசியலில் ஒரு மூன்றாவது சக்தியாக " புதிய இடது " ஜே.வி.பி." மேலெழுந்தது போன்று தோன்றியது. ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கத்தின் பல அமைச்சர்களின் அந்தரங்க ஆதரவுடன் 1983 ஜூலையில் நாடுபூராவும் தமிழர்களுக்கு எதிராக இனவன்செயல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. அந்த வன்செயல்களுக்கு ஜே.வி.பி.பொறுப்பென்று தவறாகக் குற்றஞ்சாட்டி ஜனாதிபதி ஜெயவர்தன அந்த கட்சியை தடைசெய்தது. ஜே.வி.பி. தலைமறைவு இயக்கமாக செயற்படத் தொடங்கியது. விஜேவீர உட்பட தலைவர்களும் தலைமறைவாகினர். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி ஆனால், இந்திய -- இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு வடக்கிலும் கிழக்கிலும் இந்திய அமைதிகாக்கும் படை நிலை கொண்டபோது ஜே.வி.பி. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டது. கடந்த காலத்தில் இந்திய மன்னர்கள் இலங்கை மீது நடத்திய பல்வேறு படையெடுப்புகள் பற்றிய பழைய அச்சங்களை மீண்டும் கிளறிய ஜே.வி.பி. சிங்கள பெரும்பான்மை மாகாணங்களில் இந்திய எதிர்ப்பு போராட்டம் ஒன்றை தொடங்கியது. அது ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி என்று அழைக்கப்பட்டது. 1987 ஆம் ஆண்டில் ஜே.வி.பி. இரண்டாவது கிளர்ச்சியை தொடங்கியபோது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகப் பெரும்ப்னமையா வாழும் பிரதேசங்களில் அந்த இயக்கத்துக்கு உறுப்பினர்கள் இருக்கவில்லை. அதனால் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஏழு மகாணங்களிலிலேயே அதன் ஆயுதப்போராட்ட நடவடிக்கைகள இடம்பெற்றன. ஜே.வி.பி.யின் இந்திய எதிர்ப்பு இராணுவப் பிரிவுக்கு தேசபக்த மக்கள் இயக்கம் ( தேசப்பிரேமி ஜனதா வியாபாரய ) என்று பெயரிடப்பட்டது. மக்களின் ஆதரவைத் திரட்டுவதற்கே தேசபக்திக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதிக்கு கீர்த்தி விஜேபாகு என்று இயக்கப்பெயர் கொடுக்கப்பட்டு வரலாற்று சம்பவங்கள் நினைவு மீட்டப்பட்டன. பத்தாவது நூற்றாண்டில் மன்னர்களான இராஜராஜ சோழனுக்கும் இராஜேந்திர சோழனுக்கும் எதிராக இளவரசர் கீர்த்தியே போராடினார். ருஹுணு இளவரசரான அவர் இறுதியில் பொலன்னறுவையில் இருந்து சோழ படையெடுப்பாளர்களை விரட்டி தன்னை விஜேபாகு மன்னன் என்று முடாசூடிக் கொண்டார். தேசபக்த மக்கள் இயக்கத்தின் தளபதி கீர்த்தி விஜேபாகுவின் உண்மையான பெயர் சமான் பியசிறி பெர்னாண்டோ. மொரட்டுவையில் லுணாவ பகுதியைச் சேர்ந்த அவர் களனி பல்கலைக்கழக பட்டதாரி. ஜே.வி.பி.யில் இணைவு இத்தகைய சூழ்நிலைகளின் கீழ் தான் 19 வயதான அநுரா குமார திசாநாயக்க 1987 ஆம் ஆண்டில் தனது ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் இரத்நாயக்கவுடன் சேர்ந்து ஜே.வி.பி.யில் இணைந்துகொண்டார். திசாநாயக்க ' சுனில் ஐயா ' என்று அழைத்த அந்த சகோதரன் அவரின் வாழ்க்கையில் பெரும் செல்வாக்கைச் செலுத்தினார். தாய்நாட்டுக்காக தாங்கள் ஜே.வி.பி.யில் இணையவேண்டும் என்று திசாநாயக்கவை நம்பவைத்தவரே அந்த சுனில்தான். அரவிந்த என்ற அநுரா அநுரா குமார திசாநாயக்க ஜே.வி.பி.யில் இதைந்தபோது அவர் க.பொ.த. உயர்தர பரீட்சை எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்துக் கொண்டிருந்தார். சில மாதங்களுக்கு பிறகு திசாநாயக்கவுக்கு பேராதனை பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைத்தது. அவர் கண்டிக்கு சென்று தனது மூன்றாம் நிலைக் கல்வியை ஆரம்பித்தார். ஆனால் அவர் தனது கூடுதலான நேரத்தை தலைமறைவு அரசியல் நடவடிக்கைகளிலேயே செலவிட்டார். "அரவிந்த ' என்ற இயக்கப் பெயருடன் ஜே.வி.பி./ தேசப்பிரேமி ஜனதா வியாபாரயவுக்கு ஆதரவான நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டார். ஜே.வி.பி.யின் பல்வேறு அமைப்புக்களிடையே தகவல்களைக் கொண்டுசெல்லும் பணிகளை தூதருக்குரிய பணிகளை அவர் செய்தார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலம் நீடித்தது. அதில் ஜே.வி.பி.யினாலும் பொலிசார், பரா இராணுவம் மற்றும் படைகள் மேற்கொண்ட கிளர்ச்சி முறியடிப்பு நடவடிக்கைகளினாலும் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டனர். அரசின் முகவர்களினால் ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பாதுகாப்பு படைகளினாலும் அரசின் ஏனைய முகவர்களினாலும் கொல்லப்மட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் நம்பகமான மதிப்பீடுகள் கிடைக்கவில்லை எனினும் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் உத்தியோகபூர்வ விபரங்கள் இருக்கின்றன. அந்த மூன்று வருட காலப்பகுதியில் 487 அரசாங்க சேவையாளர்கள், 342 பொலிஸ்காரர்கள், 209 பாதுகாப்பு படையினர், 16 அரசியல் தலைவர்கள் 4,945 குடிமக்கள் ஜே.வி.பி.யினால் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தொகையில் 30 பௌத்த பிக்குகள், இரு கத்தோலிக்க மதகுருமார், 52 பாடசாலை அதிபர்கள், நான்கு மருத்துவர்கள், 18 பெருந்தோட்ட அத்தியட்சகர்கள் மற்றும் 27 தொழிற் சங்கவாதிகளும் அடங்குவர். அதில் 93 பொலிஸ்காரர்கள் மற்றும் 69 படைவீரர்களின் குடும்ப உறுப்பினர்களும் கூட அடங்குவர். அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை ஜே.வி.பி.யினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட பயங்கரவாதத்துக்கு இணையாக அரசின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளும் அமைந்தன. அரச பயங்கரத்தினால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான இளைஞர்களில் திசாநாயக்கவின் ஒன்றுவிட்ட சகோதரன் சுனில் அடங்குவார். சுனில் ஐயா கைதாகி சித்திரவதை செய்யப்பட்டு மரணமடைந்தார். அரவிந்த என்ற திசாநாயக்க பேராதனையை விட்டு தப்பியோடி தலைமறைவானார். அவர் தேடப்படும் ஒருவராக இருந்தார். அரசியலில் ஈடுபாடு இல்லாத அவரின் குடும்பம் தங்களது மண்வீட்டில் இருந்து ஒரு எளிமையான கல்வீட்டுக்கு குடிபெயர்ந்தது. அரவிந்தவுக்கு ஒரு எச்சரிக்கையாக அரசின் முகவர்கள் அந்த வீட்டுக்கு தீவைத்துக் கொளுத்தியதாக கூறப்பட்டது. திசாநாயக்க மேராதனையில் கல்வியை இடையில் நிறுத்தி தலைமுறைவு வாழ்க்கைக்கு சென்றார். பெரிதாக வெளியில் தலைகாட்டாமல் அவர் இடத்துக்கு இடம் சென்று வந்ததாக ஜே.வி.பி. வட்டாரங்களில் இருந்து அறியக்கூடியதாக இருந்தது. அந்தக் காலப்பகுதியே அவரது வாழ்க்கையில் மிகவும் ஆபத்தான கட்டமாக இருந்தது. றோஹண விஜேவீர, உபதிஸ்ஸ கமநாயக்க உட்பட பெரும்பாலான சிரேஷ்ட ஜே.வி.பி. தலைவர்கள் பிடிக்கப்பட்டு கொலை செய்ப்பட்டனர். சிரேஷ்ட தலைவர்களில் சோமவன்ச அமரசிங்க மாத்திரமே உயிர்தப்பி இந்திய உதவியுடன் ஐரோப்பாவுக்கு தப்பிச்சென்றார். ஜே.வி.பி.யின் இரண்டாவது கிளர்ச்சி முற்றுமுழுதாக நசுக்கப்பட்டது. களனி பல்கலைக்கழகம் நிலைவரம் தணியத் தொடங்கியது. எந்தவிதமான தொடர்புமின்றி ஒரு வருடத்துக்கும் கூடுதலான காலமாக தலைமறைவாக இருந்த பிறகு திசாநாயக்க வெளியில் வந்து சமூகத்தில் மீண்டும் இணைந்துகொண்டார். ' அரவிந்தவின் ' அத்தியாயம் அத்துடன் முடிவுக்கு வந்தது. திசாநாயக்க தனது கல்வியை மீண்டும் ஆரம்பித்தார். இந்த தடவை களனி பல்கலைக்கழகத்துக்கு மாற்றம் பெற்று அங்கு கல்வியை தொடர்ந்தார். தலைவிதி ஜே.வி.பி.க்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட கொடூரமான நடவடிக்கைகளில் இருந்து தப்பிய திசாநாயக்கவுக்கு எதிர்காலத்தில் பெரிய ஒரு பாத்திரத்தை வகிப்பதற்கு விதி எழுதப்பட்டிருந்தது போன்று தோன்றியது. இதிகாசத்தில் வரும் பீனிக்ஸ் பறவையைப் போன்று சாம்பலில் இருந்து ஜே.வி.பி. வெளிக்கிளம்பியது. திசாநாயக்க படிப்படியாக உயர்ந்து ஜே.வி.பி.யினதும் அதன் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினதும் தலைவராக வந்தார். தற்போது அவர் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி. இடதுசாரித் தாரகை இலங்கை மேலாக எழுந்திருக்கிறது. இது எவ்வாறு நிகழ்ந்தது என்பதை இரண்டாவது பாகத்தில் பார்ப்போம். https://www.virakesari.lk/article/195194
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
மதுபான விற்பனை உரிமத்திற்கு சிபார்சுக் கடிதம் வழங்கியதாகவும் அதற்காக பணம் எதனையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
-
பிளாட்டின மோதிரத்தில் மாணிக்க கல்லை இவர் வளர்த்தது எப்படி?!
ஒரு சிறு துகள் கல்லானது: பிளாட்டின மோதிரத்தில் மாணிக்க கல்லை இவர் வளர்த்தது எப்படி? பட மூலாதாரம்,UNIVERSITY OF THE WEST OF ENGLAND படக்குறிப்பு, இந்த மாணிக்கம் வேதியியல் செயல்முறை மூலம் உருவாக்கப்பட்டது. கட்டுரை தகவல் எழுதியவர், கேத்தி அலெக்சாண்டர் பதவி, பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2024, 10:20 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை வைரம் (Synthetic diamond) பல இடங்களில் தொழில்நுட்ப முறையில் செயற்கையாக தயாரிக்கப்படுகிறது. ஆனால் மாணிக்கம் (Ruby) செயற்கையாக தயாரிக்கப்படுவதில்லை. பொதுவாக மாணிக்க கற்கள் இயற்கையான சூழலில் உருவாக நீண்ட நேரம் எடுக்கும். ஆனால் அதே செயல்முறையை ஆய்வகத்தில் வேகமாக செய்ய முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஒரு பிளாட்டின மோதிரத்தின் மீது சிறிய மாணிக்க துகளை வைத்து வளர்த்தெடுக்கும் வேதியியல் செயல்முறையை ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கண்டுபிடித்துள்ளார். உலகில் இவ்வாறு செய்யப்படுவது இதுவே முதல் முறை. இந்த செயல்முறை வெற்றிகரமாக செய்த ஆய்வாளரின் பெயர் சோஃபி பூன்ஸ். அவர் இங்கிலாந்தின் தென்மேற்கு பகுதியில் உள்ள பிரிஸ்டலின் வெஸ்ட் ஆஃப் இங்கிலாந்து பல்கலைக்கழகத்தில் (UWE) நகை வடிவமைப்பில் மூத்த பேராசிரியராகவும் ஆராய்ச்சியாளராகவும் உள்ளார். சோஃபி பூன்ஸ் ஆய்வகத்தில் ஒரு வேதியியல் செயல்முறையை உருவாக்கியுள்ளார். இது மாணிக்க கல்லின் வளர்ச்சி செயல்முறையை துரிதப்படுத்துகிறது. இந்த செயல்முறையின் மூலம், உண்மையான ரத்தினத்தின் ஒரு சிறிய துகள் பல மடங்கு பெரிதாகிறது. இதுபோன்ற செயல்முறை ஆய்வகத்தில் இதுவரை நடந்ததில்லை என்று இங்கிலாந்து மேற்குப் பல்கலைக்கழகம் கூறுகிறது. சோஃபி மாணிக்கத்தை பட்டை தீட்டும் போது விழும் நுண்ணிய துகள்களைப் பயன்படுத்தி மற்றொரு மாணிக்கத்தை உருவாக்கினார். ஃப்ளக்ஸ் செயல்முறை என்றால் என்ன? மாணிக்க கற்கள் வெட்டப்படும் போது அதில் இருந்து கழிவாக சிதறும் துகள்களை வைத்து சோஃபி பூன்ஸ் ஒரு புதிய மாணிக்கத்தை வளர்த்தெடுக்கிறார். அந்த கழிவு துகளை மாணிக்க `விதை’ என்கிறார். அந்த மாணிக்க துகளை மோதிரம் போன்ற ஒரு பிளாட்டினம் அமைப்பில் வைத்தார். பின்னர் "ஃப்ளக்ஸ்" (flux) எனப்படும் வேதிப் பொருளைப் பயன்படுத்தினார். இது பிளாட்டினம் அமைப்பின் மீது மாணிக்க கல்லின் வளர்ச்சியை செயல்படுத்துகிறது. அவற்றின் வெப்பநிலையை குறைக்கிறது. ஆய்வகத்தில் புதிதாக வளர்க்கப்படும் மாணிக்கம் அல்லது பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படும் மாணிக்க கற்கள் ஆற்றல் அல்லது வெப்பநிலைக்கு உணர்திறன் கொண்டவை. ஆனால், ஃப்ளக்ஸ் உதவியுடன் உருவாகும் இந்த மாணிக்க கற்கள் `கழிவு’ மாணிக்க துகள்களிலிருந்து சூளையில் (furnace) வளர்த்தெடுக்கப்படுகிறது. ஒரு சில நாட்களில் இது முழுமையாக உருவாகிறது. பூன்ஸ் தனது சோதனைகளைப் பற்றி பேசுகையில், "நான் மாணிக்க கற்களை 5 முதல் 50 மணி நேரம் வரை சூளையில் வைத்து வளர்க்கும் செயல்முறையை பரிசோதித்து வருகிறேன். இந்த மாணிக்கங்கள் சூளையில் எவ்வளவு நேரம் இருக்கிறதோ அவ்வளவு பெரிதாகவும், தெளிவாகவும் இருக்கும்." என்றார். கைரேகை, கருவிழி ஒரே மாதிரி இருக்குமா? ஆதார் அட்டை கிடைக்காமல் போராடும் இரட்டையர்கள்30 செப்டெம்பர் 2024 பட மூலாதாரம்,UWE படக்குறிப்பு, ஆய்வகத்தில் மாணிக்கம் தயாரிக்க 5 முதல் 50 மணி நேரம் ஆகும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர் "இந்த செயல்முறையை விரைவாக்க முயற்சி செய்து வருகிறேன். குறைந்த நேரத்தில் நீடித்த மாணிக்க கற்களை உருவாக்க வேண்டும்." "இந்த புதிய முறையானது மனிதனால் உருவாக்கப்பட்ட மாணிக்க கற்கள் செயற்கையானவை என்ற கருத்தை சவால் செய்கிறது" என்று அவர் மேலும் கூறினார். "இந்த மாணிக்க கற்கள் எந்தளவுக்கு வளரும் என்பதை உங்களால் கணிக்க முடியாது. சூளையில் மாணிக்க கற்களை உருவாக்கும் அம்சம் அது இயற்கையான முறையில் வளர்வது போன்ற உணர்வைத் தருகிறது, ஒரு நகை வடிவமைப்பாளராக அதை பார்த்து நான் ஆச்சரியப்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார். சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில், ஒரு சிறிய மாணிக்க துகள் அல்லது மாணிக்கத்தின் ஒரு பகுதி இருந்தால் ஆய்வகத்தில் ஒரு முழு மாணிக்க கல்லை உருவாக்க முடியும். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட தரமான மாணிக்கம் பட மூலாதாரம்,CHRIS KING படக்குறிப்பு, ரெபேக்கா எண்டர்பியின் கூற்றுப்படி, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ரத்தினக் கற்கள் செயற்கையானவை அல்ல. ரெபேக்கா எண்டர்பி என்பவர் பிரிஸ்டலில் உள்ள நகை வடிவமைப்பாளர். ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட வைரங்கள் பற்றிய கட்டுரைகளை எழுதியுள்ளார். ஆய்வகத்தில் வளர்க்கப்படும் வைரங்களைப் பற்றிய கருத்து அல்லது மக்களின் அணுகுமுறை மாறிவருகிறது என்கிறார். "ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்படும் மாணிக்க கற்கள் செயற்கையானவை அல்ல. அவை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமியில் இயற்கையாக நிகழும் அதே செயல்முறைகளின் பிரதி அல்லது பிரதிபலிப்பு " "எனவே ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட மாணிக்க கற்கள் சுரங்கத்தில் இருந்து வெட்டப்பட்ட மாணிக்க கற்களை விட மலிவானவை. ஒரு வகையில், விலையுயர்ந்த மாணிக்க கற்களுக்கு ஒப்பீட்டளவில் மலிவான ஒரு மாற்றாகும்." ஏனெனில் சுரங்கத்தில் இருந்து மாணிக்கத்தை பிரித்தெடுக்கும் முழு செயல்முறையும், விலை உயர்ந்தது. அதனுடன் ஒப்பிடும் போது, ஆய்வக மாணிக்க கற்களின் உருவாக்கம் அதிக செலவு பிடிக்காது. எனவே அவற்றில் விலை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. ஒரு ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மாணிக்க கற்கள் 'சுற்றுச்சூழலுக்கு சிறந்ததாக' இருக்கும் என்றும் எண்டர்பி கூறினார். "ஆனால் இந்த மாணிக்க கற்களை உற்பத்தி செய்வதற்கு சூளையில் அதிக ஆற்றல் தேவைப்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு உகந்த புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்தி தயாரிக்கப்பட வேண்டும்" என்று அவர் கூறினார். பிஎச்டி மேற்கொள்ளும் பூன்ஸ், ஆய்வகத்தில் மாணிக்க கற்களை உருவாக்கும் இந்த செயல்முறையை தான் ஆய்வு செய்து வருகிறார். அவரின் ஆய்வறிக்கையும் இதை பற்றியது தான். இத்திட்டத்தின் வெற்றியானது இப்போது இங்கிலாந்து மேற்கு பல்கலைக்கழகத்தின் (UWE) இரண்டாம் சுற்று நிதியுதவிக்கு வழிவகுத்துள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகமும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளது, இதனால் மாணிக்க கற்கள் பற்றிய ஆராய்ச்சிகள் விரிவுபடுத்தப்படும். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpv2lrdx242o
-
தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் திருகோணமலை மாணவிகள் சாதனை..!
Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 01:04 PM பொலன்னறுவையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 27 ஆம் திகதி பாடசாலைகளுக்கிடையிலான 2024 தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில் 17 வயது பிரிவின் கீழ் திருகோணமலை சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி சி.கிசோத்திகா தங்கப் பதக்கத்தை பெற்றுள்ளனர். 20 வயது பிரிவின் கீழ் திருகோணமலை / சாம்பல்தீவு மகா வித்தியாலய மாணவி சி. கதுர்சிகா வெள்ளி பதக்கத்தையும், திருகோணமலை /சண்முகா இந்து மகளீர் கல்லூரி மாணவி வி.பிரீசா வெண்கலப் பதக்கத்தையும் பெற்று பாடசாலைக்கும் திருகோணமலைக்கும் பெருமை தேடிக் கொடுத்துள்ளனர். இம் மாணவிளை கே.உமா சுதன் (பயிற்றுவிப்பாளர்) திறன்பட பயிற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/195208
-
பாராளுமன்ற பொதுத் தேர்தல் செய்திகள் - 2024
பொதுத் தேர்தலுக்கான நிதி: கிடைத்தது அங்கீகாரம் பொதுத்தேர்தலை நடத்துவதற்கான 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரியில் 05 பில்லியன் ரூபாய் விடுவிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. கடந்த மாதம் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதுடன், 2024.11.14 ஆம் திகதி பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு திகதி குறித்தொதுக்கப்பட்டது. ஆனாலும், 2024 வரவு செலவுத் திட்டத்தில் பொதுத்தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவில்லை. நிதி ஒதுக்கீ்டு அவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுத்தேர்தலை நடாத்துவதற்காக திறைசேரியில் இருந்து நிதியை விடுவிப்பதற்கு அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் பிரகாரம் 2024 ஆம் ஆண்டுக்கான திறைசேரியில் 05 பில்லியன் ரூபாய் விடுவிப்பதற்காக ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்டுள்ள படிமுறைகள் தொடர்பாக அமைச்சரவை உடன்பாடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பொதுத்தேர்தலை நடாத்துவதற்கு ஏற்புடைய 2025 ஆம் ஆண்டில் ஈடுசெய்யப்பட வேண்டிய செலவான 06 பில்லியன் நிதி ஒதுக்கீட்டை 2025 ஆம் ஆண்டின் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் இடைக்கால நிறைவேற்றும் சரணக்கின் மூலம் ஒதுக்கி வழங்குவதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://ibctamil.com/article/funds-from-treasury-to-conduct-general-elections-1727772734
-
க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது
சாதாரண தர பரீட்சை : தேசிய மட்டத்தில் சாதனை படைத்த கிழக்கு மாகாணம் 2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையில் வரலாற்றில் முதல் முறையாக கிழக்கு மாகாணம் தேசிய மட்டத்தில் 2ம் இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்துள்ளது. தேசிய மட்டத்தில் 6ஆம் இடத்தில் இருந்து 2ஆம் இடத்திற்கு முன்னேறியமை வரலாற்று சாதனை என்பதோடு இதற்கு மாணவர்களின் கடின உழைப்பும் கிழக்கு மாகாணத்தின் புதிய சிறந்த கல்விக் கொள்கையுமே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு கல்வி வலயத்தில் மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 58 மாணவர்கள் 9 பாடங்களிலும் விசேட சித்திகளைப் பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறு இந்த மாவட்டத்தில் அதிகமான 9 விசேட சித்தி பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கொண்ட பாடசாலையாக மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலை பாராட்டைப் பெற்றுள்ளது. அத்துடன் இந்தப் பாடசாலையில் 25 மாணவர்கள் 8 பாடங்களில் விசேட சித்தி பெற்றுள்ளதோடு 13 மாணவர்கள் 7 பாடங்களில் விசேட சித்திகளையும் பெற்றுள்ளனர். கௌரவிப்பு நிகழ்வு இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், வின்சென்ட் மகளிர் கல்லூரிக்கும் பெருமை தேடித்தந்த மாணவிகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் உதயகுமார் தவத்திருமகளின் தலைமையில் இடம்பெற்றது. இக்கௌரவிப்பு நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கென்னடி, மட்டக்களப்பு கல்வி வலய நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் சாமினி ரவிராஜ், கல்வி அபிவிருத்தி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான நிதர்ஷனி மகேந்திரகுமார், மற்றும் பாடசாலை பிரதி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். https://ibctamil.com/article/gce-ol-exam-results-2024-eastern-province-2nd-plac-1727774428
-
இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
அமெரிக்காவின் எச்சரிக்கையை தொடர்ந்து உலக சந்தையில் எண்ணெய் விலை அதிகரிப்பு 01 OCT, 2024 | 09:08 PM இஸ்ரேலை இலக்கு வைத்து ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளவுள்ளதாக அமெரிக்கா விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை மூன்று விதம் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் மத்திய கிழக்கில் போர் சூழல் காணப்பட்டபோதிலும் வலுசக்தி சந்தைகள் மிகவும் அமைதியாக காணப்பட்டன.செங்கடல் பகுதியில் ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் தாக்குதலை மேற்கொண்டபோதிலும் வலுசக்தி சந்தைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படவில்லை. எனினும் போர்நிலைமை தீவிரமானால் ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தையும் வளைகுடாவிலிருந்து எண்ணெய் ஏற்றுமதியையும் ஈரான் தடுக்கலாம், என்ற அச்சநிலை காணப்பட்டது. இந்த அச்சம் தற்போது உலக சந்தையில் காணப்படுகின்றது. https://www.virakesari.lk/article/195273
-
பெண்மணிக்கு மதுபானசாலை அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொடுத்தேன் - சி.வி.விக்னேஸ்வரன் வாக்குமூலம்
கிளிநொச்சியில் (Kilinochchi) வழங்கப்பட்டுள்ள மதுபானசாலை அனுமதி பத்திரங்களி்ல் ஒன்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரனின் (C. V. Vigneswaran) கோட்டாவில் வழங்கப்பட்டுள்ளதாக சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. குறித்த சர்ச்சைக்குரிய மதுபானசாலை அனுமதியை தாய் தந்தை அற்ற ஒரு பெண்மணிக்கே பெற்றுக் கொடுத்தேனே அன்றி நான் எடுக்கவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தின் கரடிப்போக்குச் சந்தியில் இயங்கும் மதுபான சாலை ஒன்றுக்கான அனுமதி வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் ஊடாகப் பெற்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது. சி.வி.விக்னேஸ்வரன் 2024.02.19 அன்று எழுத்து மூலம் வழங்கிய கடிதத்தின் அடிப்படையிலேயே இந்த மதுபானசாலைக்கான அனுமதி அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது. மதுபானசாலைக்கான அனுமதி ரணில் விக்ரமசிங்க ஆட்சியில் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு சட்டவிரோத மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார். அந்தவகையில் முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரனின் (C. V. Vigneswaran) சிபார்சின் அடிப்படையில் மதுபானசாலை அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் தகவல் வெளியாகியுள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் அங்கஜன் இராமநாதனின் (Angajan Ramanathan) தந்தையின் சிபார்சின் பேரிலும் ஒரு மதுபானசாலைக்கான அனுமதி வழங்கப்பட்டதற்கான கடிதம் கூட வெளிவந்திருந்தது. தமிழரசுக்கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்கு அழைப்பு விடுக்கின்றோம் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.. https://ibctamil.com/article/liquor-bar-permit-issues-cv-vigneswaran-1727777074
-
பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெறும்; மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்க கூடாது - உதய கம்மன்பில
Published By: VISHNU 01 OCT, 2024 | 07:48 PM (இராஜதுரை ஹஷான்) பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெறும். எளிய பெரும்பான்மை பலத்தையே மக்கள் வழங்க வேண்டும். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் அரசாங்கமும் இல்லாதொழியும், நாடும் பாதிக்கப்படும் என பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார். கொழும்பில் செவ்வாய்க்கிழமை (1) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பினை மீள பெற்றுக் கொண்டுள்ளமை சிறந்த தீர்மானமாகும். அரச பாதுகாப்பினை பெறுவதாயின் ஒன்று மக்கள் பிரதிநிதியாக இருக்க வேண்டும் அல்லது உயிரச்சுறுத்தல் ஏதும் காணப்பட வேண்டும். நாங்கள் தற்போது மக்கள் பிரதிநிதிகள் அல்ல ஆகவே விசேட பாதுகாப்பு அவசியமற்றது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்துச் செய்வதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் அரசியலுக்கு பிரவேசிப்பதற்கு முன்னர் வகித்த அரச உயர் பதவிகளை துறந்துள்ளார்கள். அவர்களால் இனி அரச சேவையில் இணைய முடியாது. ஆகவே ஓய்யூதிய கொடுப்பனவு தொடர்பில் எடுத்துள்ள தீர்மானத்தை அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும். சஜித் - ரணில் மற்றும் அவர்களை நம்பியுள்ள தரப்பினர் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் படுதோல்வியடைவார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கிய பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் அரசியலில் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வெற்றிப் பெறும். மக்கள் எளிய பெரும்பான்மையை ஜனாதிபதிக்கு வழங்க வேண்டும். ஏனெனில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கினால் அரசாங்கமும், நாடும் இல்லாதொழியும். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர் ஜயவர்தன, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோட்டபய ராஜபக்ஷ ஆகியோருக்கு மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனான பாராளுமன்றத்தை வழங்கினார்கள். இறுதியில் அரசாங்கம் பாரிய நெருக்கடிகளே தோற்றம் பெற்றன. ஆகவே எந்த அரசாங்கத்துக்கும் மக்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இனி வழங்க கூடாது என்றார். https://www.virakesari.lk/article/195269
-
ஹெஸ்பொலா தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டு விட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு - என்ன நடந்தது?
எப்படி கொல்லப்பட்டார் ஹிஸ்புல்லா தலைவர்..! கடந்த வெள்ளிக்கிழமை லெபனானின்(lebanon) தெற்கு பகுதியில் உள்ள ஹிஸ்புல்லா தலைமையகம் மீது இஸ்ரேல்(israel) விமானப்படை நடத்திய தாக்குதலில் அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா உட்பட பல தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் நஸ்ரல்லா எப்படி உயிரிழந்தார் என்பது தொடர்பான தகவலை இஸ்ரேல் ஊடகமொன்று வெளியிட்டுள்ளது. நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழப்பு இதன்படி ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா இரகசிய பதுங்கு குழியில் மறைந்திருந்த போது நச்சுப் புகை கசிவில் மூச்சுத் திணறி உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது. இஸ்ரேலின் சனல் 12 வெளியிட்டுள்ள தகவலில், ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லா பதுங்கி இருந்த மறைவிடத்தின் மீது இஸ்ரேல் 80 தொன் வெடிகுண்டுகள் வீசப்பட்டதை அடுத்து ஏற்பட்ட வெடிப்பு காரணமாக பதுங்கு குழியில் நச்சுப் புகை கசிவு ஏற்பட்டு 64 வயதான ஹசன் நஸ்ரல்லா மூச்சுத் திணறி வேதனையில் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளது. உடலில் காயங்கள் ஹசன் நஸ்ரல்லாவின் உடல் அந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்ட போது உடலில் காயங்கள் ஏதுமின்றி காணப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. எனினும் அவரின் மரணத்திற்கான உண்மையான காரணத்தை ஹிஸ்புல்லா அமைப்பு வெளியிடவில்லை. https://ibctamil.com/article/how-hezbollah-leader-was-killed-1727793866
-
இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் - அமெரிக்கா
01 OCT, 2024 | 07:48 PM இஸ்ரேல் மீது எந்தவேளையிலும் ஈரான் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்ளலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. வெள்ளை மாளிகையின் சிரேஸ்ட அதிகாரியொருவர் சிபிஎஸ் செய்தி சேவைக்கு இதனை தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு எதிரான ஈரானின் நேரடி தாக்குதல் ஈரானிற்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரி இந்த தாக்குதலை எதிர்கொள்வதற்காக இஸ்ரேல் தன்னை தயார்படுத்துவதற்கு அமெரிக்கா உதவுகின்றது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195270
-
தாய்லாந்தில் விபத்தில் சிக்கிய பாடசாலை பேருந்து தீப்பிடித்து எரிந்தது - 20 சிறுவர்கள் பலி
01 OCT, 2024 | 02:39 PM தாய்லாந்தில் பாடசாலை பேருந்து விபத்தில் சிக்கி தீப்பிடித்ததில் 20 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். தலைநகர் பாங்கொக்கிற்கு வெளியே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. 16 மாணவர்களும் மூன்று ஆசிரியர்களும் உயிர் பிழைத்துள்ளனர், 22 மாணவர்களிற்கும் ஆசிரியர்களிற்கும் என்ன நடந்தது என்பது தெரியாத நிலை காணப்படுகின்றது. பேருந்து முற்றாக எரிந்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. பேருந்து தீப்பிடித்து எரிந்ததால் மீட்பு நடவடிக்கைகளிற்காக உள்ளே நுழைய முடியாத நிலை காணப்படுகின்றது. தாய்லாந்தின் வடமாகாணத்தில் சுற்றுலாவிற்கு சென்றுவிட்டு திரும்பிக்கொண்டிருந்த பேருந்தே விபத்தில் சிக்குண்டுள்ளது. பாங்கொக்கின் நெடுஞ்சாலையொன்றில் பயணித்துக் கொண்டிருந்தபோது டயர் வெடித்ததால் பேருந்து தடுப்பு மதில் ஒன்றுடன் மோதியது என மீட்பு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195231
-
பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்!
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவித்தல்! Published By: DIGITAL DESK 7 01 OCT, 2024 | 05:53 PM கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை 2023 (2024) மீள் பரிசீலனை பெறுபேறுகள் மற்றும் இடைநிறுத்தம் செய்து வைக்கப்பட்ட பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உரிய விண்ணப்பங்களை ஒக்டோபர் 01 முதல் ஒக்டோபர் 08 வரை இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கமுடியும் எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் விண்ணப்பித்தல் தொடர்பாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் www.ugc.ac.lk மூலம் அறிந்துக்கொள்ளமுடியும் என குறிப்பிட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்புவது தொடர்பான மேலதிக விபரங்கள் முன்னர் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிப்பதற்கு வழங்கப்படும் வாய்ப்புக்கள் , ஏற்கனவே முடிவடைந்த திறன் / நடைமுறைப் பரீட்சைகளின் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பதற்குப் பொருந்தாது எனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195263
-
தகுதி இன்றி இலங்கை துாதரகங்களில் கடமையாற்றும் முக்கியஸ்தர்களின் உறவுகளை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானம்
அரசியல் பலம்-விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட இராஜதந்திரிகளை மீள அழைக்க நடவடிக்கை அரசியல் பலம் மற்றும் விசுவாசத்தின் அடிப்படையில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களை மீள அழைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத், இது தொடர்பான அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்த அறிக்கையின் அடிப்படையில் அரசியல் நியமனம் பெற்றவர்களின் பதவிகள் மீள பெறப்படும் என அவர் கூறினார். “எம்.பி.க்களின் பல மகன்கள் மற்றும் மகள்களுக்கு இராஜதந்திர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன,” என்று அவர் கூறினார். எவ்வாறாயினும், இலங்கை இராஜதந்திரிகள் எவரும் உடனடியாக மீள அழைக்கப்பட மாட்டார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/310187
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
சுன்னாகத்திலுள்ள மின்னுற்பத்தி இயந்திரங்களுக்கு பாவித்து மாற்றிய கழிவு ஒயில் பாதுகாப்பான முறையில் சேமித்து(நேரடியாக மண்ணுக்குள் சேரவிடப்பட்டதாக) அகற்றப்படவில்லை என்பது தான் நான் அறிந்த செய்திகள். இது நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பினால் வழங்கப்படும் சலுகை என நினைக்கிறேன் அண்ணை. மேலதிக விபரங்கள் தேடிப் பார்க்கிறேன்.
-
ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு தற்போது என்ன பாதிப்பு?- விரிவான தகவல்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்தின் இதயத்திலிருந்து செல்லும் பிரதான ரத்தக் குழாயில் ஏற்பட்ட வீக்கத்திற்கு சிகிச்சை முடிவடைந்துள்ளதாகவும் அவர் இரு நாட்களில் வீடு திரும்புவார் என்றும் அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று (செப்டம்பர் 30) இரவு சென்னை க்ரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய இதயத்திலிருந்து ரத்தத்தை கொண்டு செல்லும் பிரதான ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டிருந்தது. இந்தப் பிரச்னைக்கான சிகிச்சை இன்று அளிக்கப்பட்டது. இதயவியல் நிபுணரான மருத்துவர் சாய் சதீஷ் உள்ளிட்ட ஐந்து பேரைக் கொண்ட மருத்துவக் குழு ரஜினிகாந்திற்கு சிகிச்சை அளித்தனர். ரத்தக் குழாய்க்குள் அனுப்பப்பட்ட சிறு குழாய் மூலம் (கேதீட்டர்) வீக்கம் ஏற்பட்டிருந்த பகுதியில் ஒரு 'ஸ்டென்ட்' பொருத்தப்பட்டிருப்பதாக அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது. "திட்டமிட்டபடி சிகிச்சை நடைபெற்றது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. இன்னும் இரு நாட்களில் அவர் வீடு திரும்புவார்" என அவர் சிகிச்சைபெற்றுவந்த தனியார் மருத்துவமனை அளித்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருக்கிறது. ரஜினிகாந்திற்கு ஏற்பட்ட பிரச்னை என்ன? இதயத்திலிருந்து ரத்தத்தை எடுத்துச் செல்லும் பிரதான ரத்தக் குழாயான aorta-வில் சில சமயங்களில் வீக்கம் ஏற்படுவதுண்டு. இந்த வீக்கம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம் என்றாலும், பெரும்பாலும் வயிற்றுப் பகுதியிலோ நெஞ்சுப் பகுதியிலோதான் ஏற்படும். வயிற்றுப் பகுதியில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டால் அது Abdominal Aortic Aneurysm என்றும் நெஞ்சகப் பகுதியில் வீக்கம் ஏற்பட்டால் அது Thoracic Aortic Aneurysm என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்த வீக்கத்தை அப்படியே விட்டுவிட்டால், ரத்தக் குழாய் வெடித்து உயிருக்கு ஆபத்தாக முடியலாம். ஆனால், முன்கூட்டியே சிகிச்சை அளிக்கப்படும் பட்சத்தில், பெரிய பிரச்னையின்றி வாழ்வைத் தொடர முடியும். உயர் ரத்த அழுத்தம், ரத்தக் குழாயில் கொழுப்பு படிவது, புகைபிடிக்கும் பழக்கம் என இந்தப் பிரச்னைக்கு பல காரணங்கள் உள்ளன. நடிகர் ரஜினிகாந்திற்கு உடம்பில் எந்த இடத்தில் உள்ள ரத்தக் குழாயில் வீக்கம் ஏற்பட்டது என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. படக்குறிப்பு, ரஜினிகாந்த் உடல் நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை ரஜினிகாந்த்தின் உடல் நல பிரச்னைகள் 2011-ஆம் ஆண்டிலிருந்தே ரஜினிகாந்த்தின் உடல்நலம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. 2011-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தனது மகள் சவுந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கும் 'ராணா' என்ற படத்திற்கான புகைப்படங்கள் எடுக்கும் பணிகள் நடந்துகொண்டிருந்த போது ரஜினிகாந்திற்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. முதலில் சென்னையில் சிகிச்சை பெற்ற ரஜினிகாந்த் பிறகு, சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற அவர், இரு வாரங்களுக்குப் பிறகு வீடு திரும்பினார். ஆனால், அவருடைய உடல் நலத்தில் என்ன பிரச்னை, என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. 2016-ஆம் ஆண்டில் ரஜினிகாந்த் 'கபாலி' படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு உள்ளிட்ட பணிகள் முடிந்த பிறகு, அவர் குடும்பத்தினருடன் அமெரிக்காவுக்குச் சென்றார். அங்கு சில பரிசோதனைகளைச் செய்து கொண்டதாகவே அப்போது தகவல்கள் வெளியாயின. அங்கிருந்து திரும்பியவுடன் ஷங்கர் இயக்கத்தில் '2.0' படத்தின் படப்பிடிப்பில் நடித்தார். அந்தத் தருணத்தில் என்ன பரிசோதனைகள் செய்யப்பட்டன என்பது போன்ற தகவல்களும் வெளியாகவில்லை. இந்நிலையில், ரஜினிகாந்த் தான் புதிய அரசியல் கட்சி துவங்கவிருப்பதாக 2017-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அறிவித்தார். 2020-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் ரஜினிகாந்த் சுற்றுப்பயணம் மேற்கொள்வார் எனவும் அதற்குப் பிறகு அக்டோபர் 2-ஆம் தேதி புதிய கட்சி பற்றிய அறிவிப்பு வெளியாகுமெனவும் கூறப்பட்டது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக அப்படி ஏதும் நடக்கவில்லை. இந்நிலையில் அந்த ஆண்டு இறுதியில், சமூக வலைதளங்களில் ரஜினிகாந்த் வெளியிட்ட அறிக்கை எனக் கூறப்பட்டு, ஒரு அறிக்கை வெளியானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது அதில் அவரது உடல் நலம் குறித்த பல தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அதாவது, "2011ஆம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு சிங்கப்பூரில் சிகிச்சைபெற்று உயிர் பிழைத்து வந்தேன். அது அனைவருக்கும் தெரியும். 2016ஆம் ஆண்டு மே மாதத்தில் மறுபடியும் எனக்கு சிறுநீரக பாதிப்பு தீவிரமாக ஏற்பட்டு அமெரிக்காவின் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ க்ளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. இது ஒரு சிலருக்கே தெரியும்" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ரஜினி வெளியிட்டதாகக் கூறப்பட்ட அறிக்கையில், அவர் அரசியலில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டுமென மருத்துவர்கள் கூறிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. "கொரோனா தொற்று எப்போது முடியும் என தெரியாத இந்த தருணத்தில் எனது அரசியல் பிரவேசம் குறித்து எனக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் ஆலோசனை நடத்தினேன். அதற்கு மருத்துவர்கள் கொரோனாவிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி. அது எப்போது வரும் என்று தெரியாது. வந்தாலும் அந்த தடுப்பூசியை உங்களுக்கு செலுத்தினால் அதை உங்கள் உடல்நிலை ஏற்றுக்கொள்ளுமா என்பது அந்த மருந்து வந்த பிறகுதான் தெரியும். இப்போது உங்களுக்கு வயது 70. மேலும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்திருப்பதால் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவு எனவே கொரோனா காலத்தில் மக்களை தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என திட்டவட்டமாகக் கூறிவிட்டார்கள்" என்று அறிக்கை கூறியது. இந்த அறிக்கையை தான் வெளியிடவில்லையெனக் கூறிய ரஜினிகாந்த், அந்த அறிக்கையில் இருந்த தகவல்கள் உண்மைதான் எனத் தெரிவித்தார். இதற்குப் பிறகு, உடல் நிலை காரணமாக, தான் அரசியல் கட்சி எதையும் துவங்கப்போவதில்லை என ரஜினிகாந்த் அறிவித்தார். அவரது ரஜினி மக்கள் மன்றம் 2021 ஜூலை மாதம் கலைக்கப்பட்டது. இதற்குப் பிறகு ரஜினிகாந்த் தீவிரமாக படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவர் நடித்து, த.ச. ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdjez28ww4eo
-
ரணில் விக்கிரமசிங்கவிற்கு தற்போது விடுபாட்டுரிமையில்லை - மத்திய வங்கி திறைசேரி பிணைமுறி மோசடி குறித்த கேள்விக்கு விஜித ஹேரத் பதில்
01 OCT, 2024 | 02:14 PM முன்னாள் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு தற்போது விடுபாட்டுரிமை இல்லை என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். மத்தியவங்கி திறைசேரி பிணைமுறி மோசடி தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாக ரணில்விக்கிரமசிங்க பதவி வகித்ததால் அவருக்கு விடுபாட்டுரிமை காணப்பட்டதால் முன்னர் மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ரணில்விக்கிரமசிங்க தற்போது ஜனாதிபதியில்லை அவருக்கு தற்போது விடுபாட்டுரிமையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசாங்கத்திற்கு ரணில்விக்கிரமசிங்கவை நீதிமன்றத்தின் அழைப்பதற்கான அதிகாரம் உள்ளது என குறிப்பிட்டுள்ள அமைச்சரவை பேச்சாளர் தற்போது சிங்கப்பூரில் அடைக்கலம் புகுந்துள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டிற்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/195236
-
ஜப்பானின் புதிய பிரதமர் - சிகெரு இசிபா
01 OCT, 2024 | 12:28 PM ஜப்பானின் புதிய பிரதமராக ஆளும் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவரான சிகெரு இசிபாவை அந்த நாட்டின் நாடாளுமன்றம் தெரிவு செய்துள்ளது. கட்சியின் புதிய தலைவராக சில நாட்களிற்கு முன்னர் இசிபா தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் புதிய பிரதமராக தெரிவுசெய்யப்பட்டுள்ளார். புதிய பிரதமர் இன்று தனது அமைச்சரவையை அறிவிப்பார். புதிய பிரதமர் ஒக்டோபர் 27 ம் திகதி நாடாளுமன்ற தேர்தலிற்கு அழைப்பு விடுக்கவுள்ளார். https://www.virakesari.lk/article/195221
-
மனித குடலில் வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆம்பர் டான்ஸ் பதவி, 1 அக்டோபர் 2024, 08:32 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மனிதர்களின் குடல் நாளம், பாக்டீரியாவை தாக்கும் வைரஸ்களால் நிரம்பி வழிகின்றன. அந்த வைரஸ்கள் நம் உடலுக்குள் என்ன செய்கின்றன? நீங்கள், நம் குடலுக்குள் வசிக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நுண்ணுயிரிகளைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், அந்த பாக்டீரியாக்களுக்கு உள்ளேயும் அதைச் சுற்றியும் கோடிக்கணக்கான வைரஸ்கள் வாழ்கின்றன. அந்த பாக்டீரியாக்கள் மீதும் நம் மீதும் அவை முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதுதான் ஃபேஜியோம். அதாவது, பாக்டீரியாக்களை உண்ணக்கூடிய நுண்ணுயிரிகளின் தொகுப்பு. மனித செரிமான மண்டலத்திற்குள் இத்தகைய வைரஸ்கள் பில்லியன் கணக்கில், டிரில்லியன் கணக்கில் இருக்கின்றன. அவற்றின் தொகுப்புதான் ஃபேஜியோம். இந்த ஃபேஜியோம் தொடர்பான அறிவியல் புரிதல் சமீபத்தில் வளர்ச்சி அடைந்துள்ளது என்கிறார் கொலராடோ அன்சுட்ஸ் ஸ்கூல் ஆஃப் மெடிசின் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த பாக்டீரியாலஜிஸ்ட் ப்ரெக் டியூர்காப். அவற்றின் மகத்தான பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ள ஆராய்ச்சியாளர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும், சரியான பாக்டீரிய உண்ணி வைரஸை, அதாவது ஃபேஜை (phage) பயன்படுத்தினால் அல்லது குறிவைத்து சிகிச்சை மேற்கொண்டால், மனித ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியுமென்று ஆராய்ச்சியாளர்கள் சந்தேகிக்கின்றனர். “பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் நல்லவை, கெட்டவை இரண்டுமே இருக்கும்” என்று ஸ்டான்ஃபோர்ட் மெடிசனின் தொற்றுநோயியல் மருத்துவரும் ஆய்வாளருமான பால் பொலிக்கி கூறுகிறார். ஆனால், இப்போதைக்கு மனித குடல் நாளப் பகுதியை எத்தனை பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் ஆக்கிரமித்துள்ளன என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒருவேளை ஒவ்வொரு பாக்டீரியாவுக்கும் ஒன்று அல்லது அதற்கும் குறைவாக இவை இருக்கக்கூடும். பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் நபருக்கு ஏற்ப மாறுபடுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரிய உண்ணி வைரஸின் மரபணுக்களை கொண்ட பாக்டீரியாக்களும் குடலில் இருக்கின்றன. ஆனால், அவை வைரஸ்களை தீவிரமாக உற்பத்தி செய்யவில்லை. அந்த பாக்டீரியாக்களின் மரபணுத்தொகுதியில் பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் டி.என்.ஏ.களும் ஒட்டிக்கொண்டிருக்கின்றன என்பதே அதற்குக் காரணம். இன்னும் நிறைய அடையாளம் காணப்படாத ஃபேஜ்கள் இருக்கின்றன. இவற்றை விஞ்ஞானிகள் ஃபேஜியோமின் “இருண்ட பொருள்” என்று அழைக்கின்றனர். இது வரையிலான ஃபேஜ் ஆராய்ச்சிகளின் பெரும்பகுதி, இந்த வைரஸ்கள் மற்றும் அவை சார்ந்து வாழும் பாக்டீரியாவை அடையாளம் காண்பதாக இருந்துள்ளன. நல்ல ஃபேஜ்களின் தரவுத்தளத்தில், சுமார் 1,40,000க்கும் மேற்பட்ட ஃபேஜ்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், இது நிச்சயமாக குறைத்து மதிப்பிடப்பட்ட அளவுதான். அயர்லாந்தில் உள்ள கார்க் பல்கலைக்கழக கல்லூரியின் நுண்ணுயிரியலாளர் கொலின் ஹில், "பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் பன்மைத்துவம் அசாதாரணமானது” என்கிறார். விஞ்ஞானிகள் மனித மலத்தின் மாதிரிகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு வரிசைகளைப் பிரித்தறிவதன் மூலம் இந்த ஃபேஜ் வைரஸ்களை கண்டுபிடிக்கிறார்கள். அதில்தான், ஆய்வாளர்கள் க்ராஸ்ஃபேஜ் (crAsspage) எனப்படும் குடலில் காணப்படும் மிகப் பொதுவான ஃபேஜ் குழுவைக் கண்டறிந்தார்கள். குடலில் பொதுவாகக் காணப்படும் க்ராஸ்ஃபேஜ்கள் மனித ஆரோக்கியத்தில் தாக்கம் ஏற்படுத்துமா என்பது தெளிவாகத் தெரியவில்லை, ஆனால் அவை குடல் பாக்டீரியாவின் பொதுவான குழுவாக அறியப்படும் பாக்டீராய்டுகளை (Bacteroides) பாதிப்பதால், அப்படி தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை என்கிறார் ஹில். பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீராய்டுகளை பாதிக்கும் பிற பொதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களில் குபாஃபேஜ் (குடல் நாள பாக்டீராய்டுகளை தாக்கும் ஃபேஜ்) மற்றும் லோவிஃபேஜ் (பல வைரஸ் மரபணுக் கூறுகள்) ஆகியவை அடங்கும். இத்தகைய பாக்டீரிய உண்ணி வைரஸ்களின் தொகுப்பு ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும். நுண்ணுயிரியல் துறையின் 2023ஆம் ஆண்டு மதிப்பாய்வில் (2023 Annual Review of Microbiology) ஹில் மற்றும் அவரது சக ஆய்வாளர்கள் விவரித்ததன்படி, வயது, பாலினம், உணவுமுறை, வாழ்க்கை முறை ஆகிய அனைத்தையும் பொறுத்து, இந்தத் தொகுப்பில் மாற்றங்கள் இருக்கும். வைரஸ் - பாக்டீரியா உறவு ஃபேஜ் எனப்படும் இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாவை பாதித்து, சில நேரங்களில் அவற்றைக் கொல்கின்றன என்பது நாம் அறிந்தது தான். ஆனால் அதையும் தாண்டி, வைரஸ், பாக்டீரியா இடையே விவரிக்க முடியாத அளவுக்குச் சிக்கலான உறவு இருக்கலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். “நாங்கள் முதலில், ஃபேஜ்களும் பாக்டீரியாக்களும் சண்டையிடுகின்றன என்று நினைத்தோம். ஆனால், அவையிரண்டும் எதிர்த்திசையில் இருக்கும் அதேவேளையில், ஒன்றுக்கொன்று நல்லுறவையும் பேணுகின்றன.” புதிய மரபணுக்களை கொண்டு வருவதன் மூலம் ஃபேஜ்கள் பாக்டீரியாவுக்கு பயனளிக்கின்றன. ஒரு பாக்டீரிய உண்ணி வைரஸ் துகள் ஒரு பாக்டீரியாவுக்குள் ஒன்றிணையும்போது, அந்த வைரஸ் சில நேரங்களில் அதன் புரதக்கூட்டிற்குள் அதன் சொந்த மரபணுப் பொருட்களுடன் சேர்த்து பாக்டீரியாவின் மரபணுக்களையும் அடைத்து வைத்துக்கொள்ளும். பின்னர், அந்த மரபணுக்களை ஒரு புதிய ஒம்புயிரி (Host) பாக்டீரியாவாக மாற்றுகிறது. இப்படி தற்செயலாகத் தனது புரதக்கூட்டில் அது சேகரித்த மரபணுக்கள் உதவிகரமாகவும் இருக்கும் என்கிறார் டியூர்காப். ஏனெனில், அவை ஆன்டிபயாடிக் பொருட்களுக்கு எதிர் செயலாற்றும் திறனையும், ஒரு புதிய பொருளை ஜீரணிக்கும் திறனையும் குடலுக்கு வழங்கக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES பாக்டீரிய உண்ணி வைரஸ்கள், பாக்டீரியாக்களை தொடர்ந்து கண்காணித்து, தேவையான நேரத்தில் அவற்றைக் கொல்வதன் மூலம், அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுக்குள் வைத்திருப்பதாக ஹில் கூறுகிறார். பாக்டீராய்டுகள் எனப்படும் பாக்டீரியாக்கள், தங்கள் வெளிப்புற மேற்பரப்பில் பல வகையான பூச்சுகளைக் கொண்டுள்ளன. இந்தப் பூச்சுகள், நோய் எதிர்ப்பு மண்டலத்தைத் தவிர்ப்பது மற்றும் செரிமான மண்டலத்தின் வெவ்வேறு பகுதிகல் இருந்து பலவாறான நன்மைகளை செய்கின்றன. ஆனால், “க்ராஸ்ஃபேஜ் வகையைச் சேர்ந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இந்தப் பூச்சுகளை அடையாளம் கண்டுவிடக்கூடும். ஆகையால் பாக்டீராய்டுகள் தங்கள் வெளிப்புற பூச்சுகளைத் தொடர்ச்சியாக மாற்றிக்கொண்டே இருக்க வேண்டிய தேவை உள்ளது,” என்கிறார் ஹில். இதன்விளைவாக, குடலில் வெவ்வேறு வகை வெளிப்புற பூச்சுகளைக் கொண்ட பாக்டீராய்டுகள் உள்ளன. அதோடு, குடலின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் வகையிலும், புதிய சவால்களை எதிர்கொள்ளும் வகையிலும் இவற்றின் எண்ணிக்கை அமைகின்றன. வைரஸ் - பாக்டீரியா இடையே நடக்கும் 'ஆடுபுலி' ஆட்டம் பாக்டீரியாக்களின் எண்ணிக்கை எல்லை மீறிப் போகாமல் பாக்டீரிய உண்ணி வைரஸ்களான ஃபேஜ்கள் தடுக்கின்றன. நம் உடலிலுள்ள குடல் நாளம் காடுகளைப் போன்ற ஒரு சூழலியல் அமைப்பைக் கொண்டது. ஒரு காட்டில் வாழும் புலிகளும் ஓநாய்களும் எப்படி மான்களை வேட்டையாடுமோ, அதுபோல, ஃபேஜ் வைரஸ்கள் பாக்டீரியாக்களை வேட்டையாடுகின்றன. காட்டிற்கு புலிகளும் ஓநாய்களும் எப்படித் தேவையோ, அதேபோல, நம் குடலுக்கும் இந்த ஃபேஜ்கள் தேவை. பட மூலாதாரம்,GETTY IMAGES இதில், வேட்டையாடிக்கும்(ஃபேஜ்கள்) இரைக்கும்(பாக்டீரியாக்கள்) இடையிலான உறவில் மாற்றம் ஏற்படும்போது, நமது செரிமான மண்டலத்தில், குடல் அழற்சி(IBS), குடல் எரிச்சல், பெருங்குடல் புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். உதாரணமாக, குடல் அழற்சியால் பாதிக்கப்பட்ட ஒருவருடைய குடலில், வைரஸ்களின் பன்மைத்தன்மை குறைவாக இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். குடல் நாள நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பேணுவதற்காக, அதற்கேற்ற உணவுமுறையை மக்கள் பின்பற்ற வேண்டுமென அறிவுறுத்தப்படுவார்கள். சில தீவிரமான சந்தர்ப்பங்களில் மருத்துவரீதியாக மல நுண்ணுயிர் மாற்று சிகிச்சையும் மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில், பாக்டீரிய உண்ணி வைரஸ்களை சமாளிப்பது மருத்துவத்தில் மிகவும் நேர்த்தியான அணுகுமுறையை வழங்கக்கூடும் என்று ஹில் கூறுகிறார். அதாவது, வயிற்றுப் புண்களுக்கு சிகிச்சையளிக்கும்போது, அதை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாவை அழிப்பதற்கான சிகிச்சையில் பயன்படுத்துவதற்கு ஏதுவான பாக்டீரிய உண்ணி வைரஸ்களை விஞ்ஞானிகள் தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த பாக்டீரிய உண்ணி வைரஸ்கள் இல்லாமல் போனால், “சில வகையான பாக்டீரியாக்கள் குடலில் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்றும் அதனால், சில உணவுகளை ஜீரணிக்க முடியாமல் வாயுப் பிரச்னை மற்றும் வயிறு வீக்கம் ஏற்படலாம்.” ஆகவே, நம் குடலின் சூழலியல் அமைப்பை நிர்வகிக்கும் டிரில்லியன் கணக்கான இந்த ஃபேஜ்களுக்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று ஹில் பரிந்துரைக்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cyvynzlln95o
-
ஜனாதிபதியை சந்தித்தார் அமெரிக்க தூதுவர்
01 OCT, 2024 | 11:15 AM இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இன்று ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவை சந்தித்து உரையாடியுள்ளார் இந்த சந்திப்பு குறித்து சமூக ஊடகபதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது- நீடித்து நிலைத்திருக்கும் இலங்கை அமெரிக்க உறவுகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவை இன்று சந்திக்க முடிந்துள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகின்றேன். இலங்கையின் வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல், குடிமைபங்கேற்பு மற்றும் நல்லாட்சி ஆகியவற்றின் திறன்களை வலுப்படுத்தும் அதேவேளை வலுவான, அனைவரையும் உள்ளடக்கிய சமூகங்களையும,; செழித்துவளரும் பொருளாதாரங்களையும் கட்டியெழுப்பும், எங்களின் பகிரப்பட்ட இலக்குகள் குறித்து நான் வலியுறுத்தினேன். இலங்கையர்கள் தங்கள் சொந்த இலக்குகளையும் அபிலாசைகளையும் அடைவதற்காக அவர்களை வலுப்படுத்தும் எங்களின் உதவிகள் திட்டங்கள் குறித்தும் சுட்டிக்காட்டினேன். இலங்கை புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கும் வேளையில் ஐக்கியம், நல்லாட்சி, செழிப்பு மற்றும் மனித உரிமைகளிற்கு ஆதரவளிக்கும் வலுவான சகாவாக அமெரிக்கா விளங்கும். https://www.virakesari.lk/article/195203