Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 09 SEP, 2024 | 12:30 PM மேற்குகரையில் ஜோர்தான் எல்லைக்கு அருகில் ஜோர்தானை சேர்ந்த வாகனச்சாரதி மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இஸ்ரேலை சேர்ந்த மூன்று இஸ்ரேலிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஜோர்தான் ஆற்றினை கடக்கும் பகுதியில் உள்ள அலன்பை பாலத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்திலேயே இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாதியொருவர் டிரக்கில் அலைன் பை பாலத்தை நோக்கி வந்தார் டிரக்கிலிருந்து இறங்கினார் அந்த பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக மூன்று இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் ,தாக்குதலை மேற்கொண்டவரும் கொல்லப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த துப்பாக்கி தாக்குதல் தனிநபரின் செயல் என தெரிவித்துள்ள ஜோர்தான் இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது. துப்பாக்கி சூட்டினை மேற்கொண்டவர் ஜோர்தானை சேர்ந்த 39 வயது நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/193212
  2. யாழ்.கொழும்பு ரயில் சேவை எப்பொழுது?; வெளியானது அறிவிப்பு வடக்கு ரயில் பாதையின் மாஹோ – அநுராதபுரத்துக்கும் இடையிலான ரயில் பாதை சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது கல்கமுவ பகுதியில் நிர்மாணிக்கப்படும் யானை சுரங்கப்பாதையின் நிர்மாண பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் அடிப்படையில், அதன் பணிகள் நிறைவடைந்த பின்னர் காங்கேசன்துறை – கொழும்பு ரயில் சேவை மீள ஆரம்பிக்கும் என தெரியவந்துள்ளது. https://thinakkural.lk/article/309163
  3. 09 SEP, 2024 | 03:13 PM மட்டக்களப்பு சத்துருக்கொண்டானில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவுத்தூபியை புனர்நிர்மானம் செய்து, அதில் ”இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டவர்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை இன்று திங்கட்கிழமை (09) பதித்துக்கொண்டிருந்தபோது, இக்கல்வெட்டை பொலிஸார் பலவந்தமாக அகற்றி, அங்கு புனரமைப்பு செய்யவிடாமல் தடுத்துள்ளனர். அதனையடுத்து பொதுமக்களுக்கும் பொலிஸாருக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டதில் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியுள்ளது. அத்துடன், அங்கு பொலிஸார் குவிக்கப்பட்டு சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் உட்பட 7 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்தனர். 1990 செட்டெம்பர் 9ஆம் திகதி கொக்குவில், பனிச்சையடி, பிள்ளையாரடி, சத்துருக்கொண்டான் முதலான பிரதேசங்களைச் சேர்ந்த 85 பெண்கள், 10 வயதுக்குட்பட்ட 42 சிறுவர்கள், 25 வயோதிபர்கள் உட்பட 186 பொதுமக்கள் இராணுவத்தினராலும் ஊர்காவல் படையினராலும் ஒட்டுக்குழுக்களாலும் படுகொலை செய்யப்பட்டு 34வது நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த நினைவேந்தலை முன்னிட்டு சத்துருக்கொண்டானில் அமைக்கப்பட்ட படுகொலை செய்யப்பட்டவர்களின் தூபியில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் நினைவேந்தலை அனுஷ்டிப்பதற்கான முன்னாயத்த வேலைகளை செய்துகொண்டிருந்தனர். இதன்போது “1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட 186 அப்பாவி பொதுமக்கள்” என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்ட கல்வெட்டை நினைவுத்தூபியில் பதித்துக்கொண்டிருந்தனர். அவ்வேளை அங்கு சென்ற கொக்குவில் பொலிஸார், “இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் ஒட்டுக்குழுக்களால் படுகொலை செய்யப்பட்ட” என குறிப்பிடப்பட்டுள்ள கல்வெட்டை பதிக்க முடியாது என கூறி கல்வெட்டை பதிக்கவிடாமல் தடுத்துள்ளனர். இதன்போது அங்கிருந்த பொதுமக்கள் சமூக செயற்பாட்டாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது. அப்போது பொதுமக்கள், இது 1995 சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்தபோது ஓய்வுபெற்ற நீதியரசர் கே.பாலிகிட்ணன் தலைமையில் ஆணைக்குழு அமைக்கப்பட்டு, அதில் பாதிக்கப்பட்ட மக்களும் அதில் உயிர் தப்பியவர்கள் பலரும் இராணுவத்தினர், ஊர்காவல் படையினர் படுகொலை செய்ததாக சாட்சியமளித்து, அவை ஜனாதிபதி ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் அடிப்படையில் யாரால் படுகொலை செய்யப்பட்டது என பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டை ஏன் பதிக்கக்கூடாது என பொதுமக்கள் கேள்வியெழுப்பி வாதம் செய்தனர். இந்நிலையில் தொடர்ந்தும் கல்வெட்டை பதிக்கவிடாது பொலிஸார் தடுக்க முற்பட்டபோது அதனை மீறி கல்வெட்டு பதிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது அங்கு நின்ற பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட 7 பேரை அங்கிருந்து இழுத்துச் சென்று ஜீப் வண்டியில் ஏற்றியுள்ளார். அத்துடன் கல்வெட்டு பதிக்கும் வேலையை செய்துகொண்டிருந்த மேசனை இழுத்துத் தள்ளி, கல்வெட்டை அகற்றியதில் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து ஜீப் வண்டியில் ஏற்றப்பட்ட 7 பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு, பின்னர் இறக்கிவிடப்பட்டனர். அதேவேளை அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/193230
  4. பிரபல நடிகர் ஜெயம் ரவி, தனது மனைவி ஆர்த்தி ரவியை பிரிவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஜெயம் ரவிக்கும், அவரது மனைவி ஆர்த்திக்கும் விவாகரத்து ஏற்பட உள்ளதாக சில மாதங்களுக்கு முன்னரே தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், தன் மனைவியை பிரிவதாக அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். https://thinakkural.lk/article/309150
  5. 09 SEP, 2024 | 02:45 PM சென்னை: இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழகமுதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் “இலங்கை அதிகாரிகளால் இந்திய மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த 07-09-2024 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்களையும்அவர்களது மூன்று மீன்பிடி விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் மட்டும் (7-09-2024 வரை) 350 மீனவர்கள் மற்றும் 49 மீன்பிடிப் படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு ஆண்டுகளில் இது மிக அதிகமானது. மேலும் இலங்கை நீதிமன்றங்கள் மீனவர்களின் சக்திக்கு மீறிய அபராதங்களை விதித்து வருகின்றன. இலங்கை அதிகாரிகளின் இத்தகைய நடவடிக்கைகள் தமிழக மீனவர்கள் அங்கு சிறையில் இருக்கும் காலத்தை நீட்டிக்க வழி செய்வதோடு ஏற்கெனவே துயரத்தில் உள்ள மீனவக் குடும்பங்களை மிகுந்த வேதனைக்குள்ளாக்கி அவர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பிற்கும் வழி வகுக்கும். எனவே இலங்கை சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உறுதியான தூதரக முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மீனவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கடுமையான அபராதத் தொகையைத் தள்ளுபடி செய்திடவும் கூட்டுப்பணிக் குழுக் கூட்டத்தைக் விரைந்து நடத்திடவும் வேண்டும். இதில் அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193228
  6. ஆதரவு யாருக்கு என இறுதி முடிவெடுக்க இலங்கை தமிழரசு கட்சியின் சிறப்பு குழு நாளை கூடுகிறது இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய குழுவால் நியமிக்கப்பட்ட சிறப்பு குழு நாளை செவ்வாய்க்கிழமை வவுனியாவில் கூடவுள்ளதுடன் இந்த கூட்டத்தில் மாவை சேனாதிராஜா, சி.வி.கே.சிவஞானம், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறீதரன் மற்றும் பா.சத்தியலிங்கம் ஆகியோர் கூடி கலந்துரையாடவுள்ளனர். இந்த சந்திப்பு தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் பா.சத்தியலிங்கத்தின் வவுனியா அலுவலகத்தில் கூடவுள்ளது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்களின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆராய்ந்து அறிக்கை வெளியிடும் நோக்கில் இந்த சிறப்பு குழு நியமிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த குழு நாளை கூடி ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பது தொடர்பில் முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/309157
  7. இந்திய - இலங்கை பயணிகள் கப்பல் சேவையில் ஏற்பட்டுள்ள மாற்றம் தமிழ் நாட்டின் நாகபட்டிணத்தில் இருந்து காங்கேசன் துறைக்கு நடத்தப்படும் பயணிகள் கப்பல் சேவை மேலும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஆரம்பித்த, இந்த சிவகங்கை கப்பல் சேவை நாளாந்தம் நடைபெற்று வந்த நிலையில், குறைந்த பயணிகளின் வருகை காரணமாக செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் போக்குவரத்து சேவை மட்டுப்படுத்தப்பட்டு கிரமமாக நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமைகளிலும் கப்பலை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை பயணிகளிடம் இருந்து விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. பயணிகளின் கோரிக்கையை ஏற்று செப்டெம்பர் 21 முதல் சனிக்கிழமைகளிலும் சிவகங்கை பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன்படி வாரத்தில் செவ்வாய்க்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் கப்பல் இயக்கப்படும். பயணிகள் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். https://thinakkural.lk/article/309143
  8. Published By: VISHNU 08 SEP, 2024 | 09:55 PM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்க பகிரங்க டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரினா சபலென்கா முதல் தடவையாக சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார். நியூயோர்க் சிட்டி ப்ளஷிங் மெடோவ்ஸ் ஆர்த்ர் அஷே அரங்கில் சனிக்கிழமை (07) நடைபெற்ற இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை ஜெசிக்கா பெக்யூலாவை 2 நேர் செட்களில் வெற்றிகொண்டு அரினா சபலென்கா சம்பியனானார். ஒரு வருடத்திற்கு முன்னர் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ஒரு செட் முன்னிலையிலிருந்த சபலென்கா 1 - 2 என்ற செட்கள் அடிப்படையில் கோக்கோ கோவிடம் தோல்வி அடைந்து சம்பியன் பட்டத்தை தவறவிட்டிருந்தார். இந்த வருடம் நடுநிலையாளராக போட்டியிட்ட 2ஆம் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா 2 நேர் செட்களில் வெற்றியீட்டி சம்பயினானார். மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இரண்டு செட்களிலும் பெக்யூலாவிடம் கடும் சவாலை எதிர்கொண்ட சபலென்கா 7 - 5, 7 - 5 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் வெற்றிபெற்று சம்பியனானார். தனது முதலாவது மாபெரும் டென்னிஸ் இறுதிப் போட்டியில் விளையாடிய தரவரிசையில் 6ஆம் இடத்திலுள்ள பெக்யூலா இரண்டாவது செட்டில் ஒரு கட்டத்தில் 5 - 3 என்ற ஆட்டங்கள் அடிப்படையில் முன்னிலையில் இருந்தார். ஆனால் அடுத்த 4 ஆட்டங்களிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய சபலென்கா வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை உறுதிசெய்துகொண்டார். இந்த வருடம் அவர் வென்றெடுத்த இரண்டாவது மாபெரும் டென்னிஸ் சம்பியன் பட்டமாகும். அத்துடன் டென்னிஸ் வாழ்க்கையில் அவர் வென்றெடுத்த 3ஆவது மாபெரும் சம்பியன் பட்டம் இதுவாகும். அவுஸ்திரேலியா பகிரங்க டென்னிஸ் போட்டியில் அவர் இந்த வருடம் தனது 2ஆவது தொடர்ச்சியான சம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். https://www.virakesari.lk/article/193182
  9. இலங்கையின் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவை Published By: VISHNU 08 SEP, 2024 | 11:56 PM (நெவில் அன்தனி) லண்டன் கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் 26 வருடங்களின் பின்னர் மீண்டும் வெற்றிபெறும் முனைப்புடன் 219 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை, 3ஆம் நாள் ஆட்டம் போதிய வெளிச்சம் இன்மையால் நிறுத்தப்பட்டபோது ஒரு விக்கெட்டை இழந்து 94 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இலங்கையின் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்கள் மீதம் இருக்க அதன் வெற்றிக்கு மேலும் 125 ஓட்டங்கள் தேவைப்படுகிறது. போட்டியில் மேலும் 2 நாட்கள் மீதம் இருப்பதால் இலங்கை அணி அவசரப்படாமல் ஆறஅமர துடுப்பெடுத்தாடி வெற்றி இலக்கை அடைய முயற்சிக்க வேண்டும். திமுத் கருணாரட்ன (8) துரதிர்ஷ்டவமாக கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சில் பட் - பேட் (bat - pad) மூலம் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். முதல் இன்னிங்ஸில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்த பெத்தும் நிஸ்ஸன்க இரண்டாவது இன்னிங்ஸிலும் அரைச் சதம் குவித்து 53 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். 44 பந்துகளை எதிர்கொண்ட அவர் 7 பவுண்டறிகளை அடித்துள்ளார். மறுபக்கத்தில் குசல் மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 30 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதுள்ளார். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 2ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர். இது இவ்வாறிருக்க, இன்று காலை விக்கெட் காப்பில் ஈடுபட்டிருந்த தினேஷ் சந்திமால், 18ஆவது ஓவரில் லஹிரு குமார வீசிய பந்து இடப்புறமாக எகிறிச்சென்றபோது உயரே தாவி தார். ஆனால் பந்தைப் பிடித்த பின்னர் நிலத்தில் வீழ்ந்து அடிபட்டதால் தினேஷ் சந்திமால் கடும் வலியால் அவதியுற்றார். முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர் இரண்டு பதில் வீரர்கள் அவரை தாங்கலாக மைதானத்தை விட்டு அழைத்துச் சென்றனர். வீரர்கள் தங்குமறைக்கு அவர் ஒவ்வொரு படியாக தட்டுத்தடுமாறி ஏறிச்சென்றார். 18ஆவது ஓவரிலிருந்து அவருக்குப் பதிலாக நிஷான் மதுஷ்க விக்கெட் காப்பாளராக செயற்பட்டார். போட்டியின் மூன்றாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 5 விக்கெட் இழப்புக்கு 211 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இலங்கை எஞ்சிய 5 விக்கெட்களை இழந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 265 ஓட்டங்களாக இருந்தது. தனஞ்சய டி சில்வா 64 ஓட்டங்களிலிருந்தும் கமிந்து மெண்டிஸ் 54 ஓட்டங்களிலிருந்தும் தங்களது துடுப்பாட்டங்களைத் தொடர்ந்தனர். அவர்கள் இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி அணியை பலமான நிலையில் இடுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கையின் கடைசி 5 விக்கெட்கள் 43 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சரிந்தன. மொத்த எண்ணிக்கை 220 ஓட்டங்களாக இருந்தபோது தனஞ்சய டி சில்வா 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவரைத் தொடர்ந்து கமிந்து மெண்டிஸ் 64 ஓட்டங்களுடன் வெளியேறினார். பின்வரிசையில் அசித்த பெரனாண்டோ (11) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்; பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 35 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஜொஷ் ஹல் 53 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிறிஸ் வோக்ஸ் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 62 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்த இங்கிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாற்றத்திற்கு மத்தியில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. இந்தத் தொடரில் இங்கிலாந்து துடுப்பாட்டத்தில் சரிவு கண்டது இதுவே முதல் தடவையாகும். டான் லொரன்ஸ் 35 ஓட்டங்களையும் ஜெமி ஸ்மித் 67 ஓட்டங்களையும் பெற்று துடுப்பாட்டத்தில் பிரகாசித்தனர். ஒரு சந்தர்ப்பத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்களை இழந்து 82 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது. அப்போது ஜெமி ஸ்மித் 31 பந்துகளில் 15 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். அடுத்த 6 பந்துகளில் 20 ஓட்டங்களைக் குவித்தார். அத்துடன் 43 பந்துகளில் அரைச் சதத்தைப் பூர்த்திசெய்தார். இறுதியில் 50 பந்துகளில் 10 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 67 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். அவர் கடைசி 19 பந்துகளில் 52 ஓட்டங்களைக் குவித்தமை இங்கிலாந்துக்கு சற்று தெம்பைக் கொடுப்பதாக அமைந்தது. லோரன்ஸ், ஸ்மித் ஆகியோரைவிட ஜோ ரூட் (12), ஒல்லி ஸ்டோன் (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் லஹிரு குமார 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மிலன் ரத்நாயக்க 43 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 325 ஓட்டங்களையும் இலங்கை 263 ஓட்டங்களையும் பெற்றிருந்தன. https://www.virakesari.lk/article/193183
  10. Published By: DIGITAL DESK 7 09 SEP, 2024 | 10:28 AM கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதற்காக வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு முன் 15 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக குழந்தைகளுடன் பொது மக்கள் காத்திருக்கும் பெரும் அவலம் நிகழ்கிறது. என பாதிக்கப்பட்டுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். கழிவு வாய்க்காலின் மிக மோசமான துர்நாற்றம், நுளம்பு கடி தொல்லை, பாம்புகளின் நடமாட்டம் என பெரும் அவலத்திற்கு முகம் கொடுத்து வாரக்கணக்கில் இரவு பகலாக படுக்கை விரிப்புக்களை விரித்து படுத்து உறங்குவதாகவும், தெரிவித்துள்ள பொது மக்கள், இந்த பெரும் அவலத்திற்கு விரைவில் தீர்வு காணுமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். நாள் ஒன்றுக்கு 60 கடவுச் சீட்டுக்கள் வழங்கப்பட்டு வருகின்றன நிலையில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் இவ்வாறு15 நாட்களுக்கு மேலாக வரிசையில் நிற்கின்றனர். https://www.virakesari.lk/article/193194
  11. 09 SEP, 2024 | 10:27 AM புதுடெல்லி: ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவந்து, இரு நாடுகள் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக இந்தியதேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யா செல்கிறார். இரு நாடுகளின் முக்கிய தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாகபோர் நீடிக்கிறது. இதன் காரணமாக இரு தரப்பிலும் அதிக அளவில்உயிர் சேதம், பொருள் சேதங்கள் ஏற்பட்டன. தற்போது ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் எண்ணிக்கை குறைந்த நிலையில் உக்ரைன், ரஷ்யாவுடன் போரிட்டு வருகிறது. ‘‘இது போருக்கான காலம் இல்லை. ரஷ்யா, உக்ரைன் போரைகைவிட்டு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்’’ என்று இருநாட்டு தலைவர்களிடமும் பிரதமர் மோடிபல முறை வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யாவுக்கு சென்றபோது, புதினிடம் நேரிலும் இதுகுறித்து மோடி வலியுறுத்தினார். பிரதமர் மோடி கடந்த 23-ம் தேதி உக்ரைன் சென்றிருந்தபோது, ‘‘ரஷ்யா - உக்ரைன் மோதல் விவகாரத்தில் இந்தியா நடுநிலை வகிக்கவில்லை. இந்தியா எப்போதும் அமைதியின் பக்கம்தான் உள்ளது’’ என்றும் திட்டவட்டமாகதெரிவித்தார். போர் நடவடிக்கையை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்புமாறும், இதில் உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் பிரதமர்மோடி உறுதிபட கூறினார். அப்போது, பிரதமருடன் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரும் சென்றிருந்தனர். ‘‘உக்ரைன் படைகள் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் ஊடுருவியதால், பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை’’ என ரஷ்ய அதிபர் புதின் ஏற்கெனவே கூறியிருந்தார். ஆனால், அவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில், ‘‘ரஷ்யா-உக்ரைன் இடையே அமைதியை ஏற்படுத்த இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் உண்மையாக முயற்சி மேற்கொள்கின்றன. அந்த நாடுகள் இதில் நடுவர்களாக செயல்பட முடியும். துருக்கியில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தையில் அமல்படுத்தப்படாத ஒப்பந்தங்கள், இனிமேல் நடக்க உள்ள அமைதி பேச்சுவார்த்தைக்கு அடிப்படையாக இருக்கும்’’ என்று கூறியிருந்தார். புதினின் இந்த கருத்து, அமைதி பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாதயார் என்பதை காட்டும் விதமாக உள்ளது. இதையடுத்து, புதினை தொடர்புகொண்டு பேசிய பிரதமர் மோடி,அமைதி முயற்சிகள் குறித்து ஆலோசிக்க, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை அனுப்பி வைப்பதாக கூறினார். இதற்கு ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளதால், அஜித் தோவல் விரைவில் ரஷ்யா செல்ல உள்ளார். அவர் அமைதி பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையை தொடங்குவார் என கூறப்படுகிறது. உக்ரைன் தலைவர்களுடனும் அவர் ஆலோசனையில் ஈடுபடுவார் என தெரிகிறது. இந்தியாவின் தீவிர முயற்சியால் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு, அமைதி திரும்பினால், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு மேலும் உயரும் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். இத்தாலி பிரதமர் நம்பிக்கை: இத்தாலியின் செர்னோப்பியோ நகரில் ஆம்ப்ரோசெட்டி கூட்டமைப்பின் கூட்டம் கடந்த 7-ம் தேதிநடந்தது. இதில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை சந்தித்த பிறகு, இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி கூறும்போது, ‘‘ரஷ்யா - உக்ரைன் பிரச்சினையை தீர்ப்பதில் இந்தியா, சீனா முக்கிய பங்காற்ற முடியும். அவசியம் முக்கிய பங்காற்ற வேண்டும்’’ என்றார். https://www.virakesari.lk/article/193197
  12. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையின் 57ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகிறது. இன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு பின்னர் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்று பிற்பகல் 5 மணிக்கு இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடும் பக்க நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனிடையே, இலங்கை தொடர்பான 51/1 தீர்மானத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக அறிய கிடைக்கின்றது. https://thinakkural.lk/article/309094
  13. பட மூலாதாரம்,GOV.UK / REUTERS படக்குறிப்பு, பைனான்சியல் டைம்ஸில் முதல் முறையாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவர்கள் கூட்டாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், கோர்டன் கொரேரா பதவி, பிபிசி செய்தியாளர் 8 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "பனிப்போருக்குப் பின் நாம் இதுவரை கண்டிராத வகையில், சர்வதேச உலக ஒழுங்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது" என்று பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவுத்துறை தலைவர்கள் எச்சரித்துள்ளனர். யுக்ரேனில் புதினின் ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் ரஷ்யாவையும் எதிர்ப்பதில் இரு நாடுகளும் ஒன்று பட்டுள்ளன என்று பிரிட்டனின் உளவு சேவை அமைப்பான எம்ஐ6 மற்றும் அமெரிக்காவின் முக்கிய உளவு முகமையான சிஐஏ-வின் தலைவர்கள் கூறியுள்ளனர். பைனான்சியல் டைம்ஸில் முதல் முறையாக பிரிட்டன் மற்றும் அமெரிக்காவின் உளவுத்துறைத் தலைவர்கள் கூட்டாக ஒரு கட்டுரையை எழுதியுள்ளனர். அதில் சர் ரிச்சர்ட் மூர் மற்றும் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோர் யுக்ரேனில் போர் வருவதை கண்டறிந்து "சர்வதேச சமூகத்தை எச்சரிக்க முடிந்தது" என்றும் யுக்ரேனுக்கு உதவும் வகையில் ரகசியங்களை வகைப்படுத்தி வெளியிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஐரோப்பா முழுவதும் ரஷ்யாவின் பொறுப்பற்ற, அழிவை ஏற்படுத்தும் ராணுவ நடவடிக்கைகளை தடுக்கவும், இஸ்ரேல்-காஸா போரின் தீவிரத்தை குறைக்கவும், மீண்டும் எழுச்சி பெறும் ஐஎஸ் (IS) இயக்கத்தை முறியடிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறினர். அபாயத்தை எதிர்த்து போராட ஒன்றிணைந்த இருநாடுகள் "சர்வதேச உலக ஒழுங்கு என்பது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு வழிவகுத்து, உயரும் வாழ்க்கைத் தரம், வாய்ப்புகள் மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்கிய சீரான அமைப்பாகும். இது ஒப்பீட்டளவில் பனிப்போருக்குப் பிறகு நாம் கண்டிராத வகையில் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதில் சந்தேகமில்லை." "இந்த அதிகரித்து வரும் அபாயத்தை எதிர்த்துப் போராடுவது" தான் பிரிட்டனுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான சிறப்பு உறவின் அடித்தளம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பிப்ரவரி 2022 இல் ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக நீடிக்கும் யுக்ரேன் மோதல், இரு நாடுகளும் சமாளிக்க வேண்டிய "முன்னெப்போதும் இல்லாத அச்சுறுத்தல்களில்" ஒன்று. மேற்கூறியவாறு, பைனான்சியல் டைம்ஸில் op-ed பக்கத்தில், அவர்கள் எழுதியிருந்தனர். சனிக்கிழமை அன்று (ஆகஸ்ட் 7) லண்டன் கென்வுட் ஹவுஸில் நடந்த பைனான்சியல் டைம்ஸின் வார இறுதி விழாவில் பாதுகாப்பு முகமைகளின் தலைவர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் தங்கள் முதல் கூட்டு உரையை வழங்கினர். அவர்கள் மேடைக்கு வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை உரையாற்ற போகிறவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. ஒன்றாக, நிதானமாக வந்த அவர்கள், தங்கள் பாதுகாப்பு முகமைகளுக்கு இடையிலான நெருங்கிய பணி ரீதியான கூட்டுறவை வலியுறுத்தினார்கள். "ரஷ்ய அதிபரின் பிடி தளரவில்லை" யுக்ரேன் சமீபத்தில் ரஷ்யாவின் கர்ஸ்க் பிராந்தியத்தில் ஒரு பகுதியைக் கைப்பற்றியது "குறிப்பிடத்தக்க தந்திரோபாய வெற்றி" என்று பர்ன்ஸ் கூறினார். அதே சமயம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு அதிகாரத்தின் மீதான பிடி தளர்கிறது என்பதற்கான எந்த அறிகுறியையும் தான் காணவில்லை என்றும் கூறினார். மேற்கு நாடுகளிடம் யுக்ரேன், அதிக ஆயுதங்களை வழங்கவும், ரஷ்யாவின் உள்பகுதியில் அவற்றைப் பயன்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை நீக்கவும் வலியுறுத்தி வருகிறது. யுக்ரேன் கேட்பதை சில சமயங்களில் செய்யத் தவறியதற்கு காரணம் ரஷ்யா எப்படி நடந்துகொள்ளும் என்ற அச்சத்தில் தான், ஆனால் யுக்ரேனுக்கான ஆதரவை நிறுத்தக் கூடாது என்று உளவுத் தலைவர்கள் பரிந்துரைத்தனர். "அதிகரிக்கும் அபாயங்களை நாம் யாரும் இலகுவாக எடுத்துக் கொள்ளக்கூடாது" என்று பர்ன்ஸ் கூறினார். 2022 இன் பிற்பகுதியில், போர்க்களத்தில் பின்னடைவுகள் ஏற்பட்ட போது, அதற்கு பதிலளிக்கும் விதமாக ரஷ்யா தந்திரோபாய அணு ஆயுதங்களைப் பயன்படுத்தும் சூழல் நிலவியது. இதனை "உண்மையான ஆபத்து" இருந்த ஒரு தருணம் என்று அவர் விவரித்தார். அப்போது ரஷ்ய அதிகாரிகளிடம் அவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து பர்ன்ஸ் எச்சரித்திருக்கிறார். "எவ்வாறாயினும், இதனால் நாங்கள் தேவையில்லாமல் மிரட்டலை எதிர்கொள்ளலாம் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை. " என்று சிஐஏ இயக்குனர் பர்ன்ஸ் தொடர்ந்தார். "புதின் ஓர் ஆதிக்கவாதி. அவர் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த மாட்டார்" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,FT படக்குறிப்பு, சர் ரிச்சர்ட் மூர் மற்றும் வில்லியம் பர்ன்ஸ் ஆகியோர் சனிக்கிழமை FT நிகழ்வில் ஒன்றாக அமர்ந்து உரையாடினர் "ரஷ்ய உளவுத்துறையின் சில செயல்கள் கொடூரமானவை" ஐரோப்பாவில் நாசவேலைகளை மேற்கொள்வதற்கான ரஷ்ய உளவுத்துறையின் விருப்பம் அதிகரித்து வருவதாக கூறப்படுவது பற்றி கேட்கப்பட்ட போது, தாக்குதல்களை நடத்த குற்றவாளிகளைப் பயன்படுத்துவது ஒரு குறிப்பிட்ட அளவிலான அவநம்பிக்கையைக் குறிக்கிறது என்று சர் ரிச்சர்ட் மூர் பதிலளித்தார். "ரஷ்ய உளவுத்துறையின் சில செயல்கள் சற்றே காட்டுமிராண்டித்தனமாக மாறியுள்ளன." என்றும் அவர் கூறினார். பர்ன்ஸ் மேலும் கூறுகையில், அவர்களின் திட்டங்கள் சில சமயங்களில் திறமையற்றவை என்று தோன்றினாலும், அவை "பொறுப்பற்றதாகவும் ஆபத்தானதாகவும்" மாறி விடும் அபாயம் உள்ளது என்றார். பைனான்சியல் டைம்ஸ் செய்தித்தாள் கட்டுரையில், இருவரும் யுக்ரேனுக்கு ஆதரவாக வரும்போது, "யுக்ரேனுக்கு உதவுவதில் முன்னெப்போதையும் விட தற்போதைய பாதையை பின் தொடர்வது மிகவும் முக்கியமானது." என்று எழுதியுள்ளனர் மேலும் புதின் "வெற்றி பெற மாட்டார்" என்றும் கூறினர். மோதலின் முடிவை தொழில்நுட்பம் எவ்வாறு மாற்றும் என்பதை இந்த போர் நிரூபித்ததாகவும், புதுமை, பரிசோதனை மற்றும் பயன்பாடு ஆகியவற்றின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதாகவும் அவர்கள் கூறினர். அவர்களின் கட்டுரையில்: "யுக்ரேனுக்கு அப்பால், ரஷ்ய உளவுத்துறையால் ஐரோப்பா முழுவதும் நடத்தப்படும் பொறுப்பற்ற நாசவேலைகளை தடுக்க நாங்கள் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படுகிறோம். எங்களுக்கு இடையே பிளவுகளை ஏற்படுத்த வடிவமைக்கப்பட்ட பொய்கள் மற்றும் தவறான தகவல்களை பரப்புவதற்கு தொழில்நுட்பத்தை இழிந்த முறையில் பயன்படுத்துகின்றனர்." என்று குறிப்பிட்டுள்ளனர். இரு நாடுகளின் உளவுத்துறை முகமைகளும் சீனாவின் எழுச்சியை இந்த நூற்றாண்டின் முக்கிய உளவுத்துறை மற்றும் புவிசார் அரசியல் சவாலாக பார்க்கின்றன. அவர்கள் (சீனா) தங்கள் சேவைகளை "முன்னுரிமையை பிரதிபலிக்கும் வகையில்" மறுசீரமைத்துள்ளனர், என்று இருவரும் எழுதியுள்ளனர். மத்திய கிழக்கில் கட்டுப்பாடு மற்றும் தீவிரத்தை குறைக்க தாங்கள் "கடினமாக" அழுத்தம் கொடுத்ததாகவும், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த "இடைவிடாமல்" உழைத்து வருவதாகவும் அவர்கள் கூறினர். போர் நிறுத்த முயற்சிகளுக்கு மையமாக செயல்பட்ட பர்ன்ஸ், பைனான்சியல் டைம்ஸ் நிகழ்வில் வரவிருக்கும் நாட்களில் இன்னும் விரிவான திட்டம் செயல்படுத்தப்படலாம் என்று சுட்டிக்காட்டினார். "அரசியல் விருப்பமே இறுதியில் இதை தீர்மானிக்கிறது’’ என்று கூறிய அவர், இரு தரப்பிலும் உள்ள தலைவர்கள் ஒரு உடன்பாட்டை எட்டுவார்கள் என்று தனது உண்மையான நம்பிக்கையை வெளிப்படுத்தினார். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் தெற்கு இஸ்ரேலைத் தாக்கி 11 மாதங்கள் ஆகிறது. சுமார் 1,200 பேரைக் கொன்று, 251 பேரை பணயக் கைதிகளாக்கினர். அன்றிலிருந்து காஸாவில் 40,000 க்கும் மேற்பட்ட மக்கள் இஸ்ரேலின் தற்போதைய ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c9d1wd545dzo
  14. எமது தலையில் நாமே மண் அள்ளி போடும் செயல்: அரியநேத்திரன் வெளிப்படை தென்பகுதி வேட்பாளர்களுக்கு அளிக்கும் வாக்கு எமது தலையில் மண் அள்ளி போடும் செயல் என தமிழ் பொது கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் பா. அரியநேந்திரன் (P.Ariyanethran) தெரிவித்துள்ளார். வவுனியாவில் (Vavuniya) இன்று (08) தமிழ் தேசிய பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், இன்று பரவலாக பேசப்படுகின்ற மூன்று தென் பகுதி ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளி கொட்டுவதற்கு சமமாகவே இருக்கும் என்பதற்கு மாற்றுக்கருத்து இல்லை. பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தி இதில் சஜித் பிரேமதாச ஆயிரம் பன்சாலைகளை கட்டுவதாக தெரிவித்து இருக்கின்றார். இந்த நிலையில் யாரோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது பன்சாலைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாக தான் இருக்கும். அதேபோல் ரணில் விக்ரமசிங்கவுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமையும். ரணில் விக்கிரமசிங்கவே ஒரு கட்டமைப்பாக ஒரு தேசமாக ஒரு இனத்தின் விடுதலைக்காக இருந்த எம்மை சிதைத்த பெருமை அவரைத் தான் சாரும். அதே போல் அநுரகுமார திசாநாயக்க எமது இணைந்த வடக்கு கிழக்கை பிரித்தவராக இருக்கின்றார். இவ்வாறானவர்களை தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம் கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம். ஆகவே இந்த பொதுக் கட்டமைப்பு ஊடாக ஒரு செய்தியை சொல்வதற்காகவே நான் வந்திருக்கின்றேனே தவிர ஒரு ஜனாதிபதியாக வருவதற்கு அல்லது நிறைவேற்றி அதிகாரம் கொண்ட அந்த கதிரையை தட்டி படிப்பதற்காகவும் இல்லை. விடுதலைக்கான புள்ளடி ஈழ மண்ணில் இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும் நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் தென் இலங்கைக்கு ஏன் ஒன்பதாவது ஜனாதிபதியாக வர இருக்கின்றவருக்கும் அந்தத் தகவலை நாங்கள் கொடுக்க இருக்கின்றோம். எங்களுடைய வடக்குக் கிழக்கில் ஒரு இனமாக ஒரு தேசமாக ஒன்றிணைந்த கட்டமைப்புக்குள் சமஸ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்காக எங்களுடைய இனம் ஒன்றிணைந்து தனது ஆதரவை தெரிவிக்கின்றது என்கின்ற ஒரு செய்தியை நாங்கள் அவர்களுக்கு சொல்லி இருக்கின்றோம். இந்த 13 நாட்களுக்கு பல போலியான செய்திகள் என்னை பற்றி வரலாம். இருபதாம் திகதி கூட அரியனேந்திரன் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றார் என்ற செய்தி கூட இந்த சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளிவரலாம். ஆனால் நான் எந்த விதமான மாற்றத்திற்கு உட்பட போவதில்லை. ஆகவே நீங்களும் போடுகின்ற புல்லடியானது எமது இனத்திற்கான புள்ளடி எமது விடுதலைக்கான புள்ளடி எமது மண்ணுக்கான மண் மீட்புக்கான புல்லடி என்பதை உணர்ந்து செயல்படுங்கள். https://ibctamil.com/article/tamil-candidate-speech-vavuniya-election-campaign-1725803923#google_vignette
  15. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சென்னையில் மகா சிவராத்திரி நிகழ்வில் காளி வேடமணிந்து சாமியாடும் பெண் (கோப்புப்படம்) கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை தமுக்கம் மைதானத்தில் சமீபத்தில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சிலர் ‘சாமியாடிய’ நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோன்ற நிகழ்வுகள் தமிழ்நாட்டில் ஒன்றும் புதிதல்ல. கோவில் திருவிழாக்கள் அல்லது வழிபாட்டு நிகழ்வுகளின் போதோ, தீ மிதித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை செலுத்தும் போதோ பலரும் ‘சாமியாடுவார்கள்’. வழக்கமாக அதிர்ந்து பேசாதவர்கள் கூட, ‘சாமியாடும் போது’ வேறொரு நபராக மாறி ஆவேசமாக நடந்துகொள்வார்கள். பெண்கள் பலர் தலைவிரி கோலமாக ஆடுவார்கள். இவ்வாறு சிலர் திடீரென 'சாமியாடுவது' ஏன்? அதற்கான உளவியல் காரணங்கள் என்ன? மதுரை புத்தக கண்காட்சியில் என்ன நடந்தது? மதுரையில் பபாசி (தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்) ஒருங்கிணைத்த புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு, புத்தக கண்காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் இசைக் கலைஞர்கள் ஆன்மிக பாடல்களை பாடினர். அப்போது, “அங்கே இடி முழங்குது” எனும் கருப்பசாமி பாடல் பாடப்பட்டது. அந்த சமயத்தில் அங்கு திரண்டிருந்த பள்ளி மாணவிகள் முன்பாக, கருப்பசாமி வேடமணிந்த ஒருவர் வந்து பாடலுக்கு ஏற்ப ஆவேசமான முகபாவனைகளுடன் ஆடினார். அப்போது, அங்கிருந்த பள்ளி மாணவர்கள் ஒருவர் பின் ஒருவராக ‘சாமியாடினர்’. புத்தகக் கண்காட்சியில் ஆன்மிக பாடல்கள் பாடப்பட்டதற்கு கண்டன குரல்களும் எழுந்தன. இதற்கிடையில், கூட்டாக பள்ளி மாணவர்கள் ‘சாமியாடியது’ பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையில், அது ‘சாமியாடுவதுதானா’ அல்லது அப்படி ஏற்படுவதற்கான உளவியல் காரணங்கள் என்ன என்பதை அறியும் முயற்சி இது. ‘சாமியாடுவது’ ஏன்? பண்பாட்டு ரீதியாக பார்த்தால், ஆழ்மன பற்றுகளே இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைவதாக சமூகவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். சமூகவியல் ஆய்வாளரான தொ. பரமசிவன் தன்னுடைய ‘பண்பாட்டு அசைவுகள்’ எனும் புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார். “இறைத் தொடர்பான சிந்தனைகளுக்கு ஆட்படுத்தப்படும் போது உள ரீதியாகவும், உடல் ரீதியாகவும் மனிதனிடம் மாற்றங்கள் ஏற்படுகின்றன. உளரீதியான மாற்றமே மற்றவற்றிற்கு காரணமாக அமைவதாகவும் கருதலாம். ‘வினைகளுக்கு மூல காரணமாக இருப்பவை மனதில் தோன்றும் பற்றுகள் என்றும், இவை உள்ளத்தில் தோன்றி ஆழமாக இடம் பிடிக்கின்ற நிலையில் அப்பற்றுதலே தம்மை ஆட்படுத்தும் எனறு குறிப்பிடுவர். அவ்வடிப்படையில் இறைத் தொடர்பான சிந்தனைகள் மனிதனை ஆட்படுத்தும் வேளையில் சாமியாடுதல் நிகழ்வு நாட்டுப்புறங்களில் நடைபெறுகின்றது. இவ்வாறான வழிபாட்டு முறை தமிழ்ச் சமூகத்தில் மரபு வழியாக இருந்து வருபவையாகும்” என குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆழ்மன பற்றுகளே இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணமாக அமைவதாக உளவியல் நிபுணர்கள் கூறுகின்றனர் “இப்படி கடவுளின் பெயரால் தன்நிலை மறந்து உணர்ச்சிவயப்பட்ட நிலையில், ‘சாமியாடும்’ நிகழ்வு ஒரு குறிப்பிட்ட மதத்திற்கானதாக இல்லாமல், பெரும்பாலான கலாசாரங்களில், மத வித்தியாசம் இல்லாமல் இருக்கிறது” என்கிறார், மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த உளவியல் மருத்துவர் கிருபாகரன். இப்படி தன்நிலை அறியாமல் இயல்புக்கு மாறாக ஆவேசமாக நடந்துகொள்வதற்கு பல உளவியல் காரணங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார். “இதுவொரு வகையான பன்முகப் பிளவுபட்ட ஆளுமைக் கோளாறு (Dissociative identity disorder). சாமியாடுவதை கலாசார ரீதியாக ஏற்றுக்கொண்டதால், இதனை ஒரு உளவியல் குறைபாடாக நாம் பார்ப்பதில்லை” என்கிறார் கிருபாகரன். இந்த நிலை ஏற்படுபவர்கள் தங்களின் சுயநினைவில் இருக்க மாட்டார்கள். “வேறு ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டது (possession attack) போன்று நடந்துகொள்வார்கள். இதனுடன் வேறு சில மனநல குறைபாடுகளும் அவர்களுக்கு இருக்கலாம்” என கூறுகிறார் அவர். சிறுவயது பாதிப்புகள் காரணமா? சிறுவயதில் பாலியல் துன்புறுத்தல் போன்ற விரும்பத்தகாத நிகழ்வுகள், இழப்புகள், நெருக்கமானவர்களின் இறப்புகள், பள்ளிகளில் மற்றவர்களின் கேலிக்கு ஆளாதல், பெற்றோர்களின் கவனிப்பின்மை, பெற்றோர்கள் துணையின்றி வளர்தல் போன்ற சூழ்நிலைகள் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணமாக அமையலாம் என அவர் விளக்குகிறார். சிறுவயதில் போர், கடத்தலை எதிர்கொண்டவர்கள், இதேபோன்ற கலாசார சூழலில் வளர்க்கப்படுவதும் கூட காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர். “பெரும்பாலான சந்தர்ப்பங்களில், மரபியல் ரீதியாகவும் இது தொடர்கிறது. சாமியாடுபவர்களில் பெரும்பாலானவர்கள் “என் அம்மா, பாட்டி கூட சாமியாடினார்கள்’ என கூறுவது உண்டு” என்கிறார் கிருபாகரன். சமூக கலாசார மதநெறிகளுக்கு அப்பாற்பட்ட மெய்மயக்க (தன்னிலை மறந்த மயக்க) நிலை என்றும் (Dissociative trance disorder) இதனை உளவியல் ரீதியாக குறிப்பிடுகின்றனர். குறிப்பிட்ட நேரத்திற்கு புறச்சூழலை மறந்து, தன்நிலை இழந்து செயல்படுவதை உளவியல் ரீதியாக இவ்வாறு குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப் படம் கோவில் திருவிழாக்களில் வாசிக்கப்படும் வாத்தியங்களில் குறிப்பிட்ட அதிர்வெண்ணிலிருந்து இசை வெளிப்படும் போது அதை கூர்ந்து கவனமாக கேட்க தொடங்கும்போது, அத்தகைய நிலை சிலருக்கு ஏற்படுவதாக, மருத்துவர் கிருபாகரன் கூறுகிறார். “போதை பொருட்களை உட்கொண்டு இந்த நிலைக்கு செல்வதை இதனுடன் ஒப்பிட கூடாது” என்கிறார் அவர். மதுரையில் பள்ளி மாணவிகளும் கூட, இப்படி இசையை உன்னிப்பாக கவனித்து, அதனால் ஆட்கொள்ளப்பட்டிருக்கலாம் என அவர் கூறுகிறார். “இத்தகையவர்களிடம் பின்னர் ஒரு சமயத்தில் நீங்கள் சாமியாடிய போது என்னென்ன செய்தீர்கள், மற்றவர்கள் பேசியது நினைவிருக்கிறதா என கேட்டால் எதுவும் ஞாபகம் இருக்காது. தங்களின் ஆளுமையை மறந்து, உணர்விழந்து அத்தகைய நிலைக்கு தள்ளப்படுவார்கள். நம் உடலின் கட்டுப்பாடு (motor control) நம்மிடம் அந்த சமயத்தில் இருக்காது. நீங்கள் நீங்களாகவே இருக்க மாட்டீர்கள். உங்கள் மீதான கட்டுப்பாட்டை இழந்துவிடுவீர்கள்” என விளக்குகிறார் கிருபாகரன். உடலில் என்ன மாற்றம் நடக்கிறது? அந்த சமயத்தில் உடலில் நரம்பியல் ரீதியாக வேதியியல் மாற்றங்கள் (neuro chemical changes) உடலில் நிகழும் என குறிப்பிடும் அவர், டோப்பமின், செரட்டோனின் உள்ளிட்ட ரசாயனங்களில் ஏற்றத்தாழ்வு ஏற்படும் என்கிறார். “சிறுவயதில் அவர்கள் எதிர்கொண்ட சில விரும்பத்தகாத சூழல்கள், இந்த ரசாயன மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணங்களாக உள்ளன.” “பல்வேறு கலாசாரங்களில் சிலர் இறந்தவர்களை போன்றே பேசுவார்கள். அவர்களின் குரலை கூட அப்படியே கொண்டு வருவார்கள். இறந்தவர்களின் குணநலன்களை தங்களுக்கே தெரியாமல் (subconscious) உள்வாங்கியிருப்பார்கள். அது இத்தகைய தருணங்களில் வெளிப்படுகின்றது” என்றார், கிருபாகரன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நரம்பியல் ரீதியாக பல மாற்றங்கள் நிகழ்கின்றன என்கிறார், உளவியல் மருத்துவர் கிருபாகரன் கலாசார ரீதியாக ‘சாமியாடுதல்’ பலருக்கும் உளவியல் ரீதியான பிரச்னையாக தெரிவதில்லை. ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றம் தென்பட தொடங்கும்போது, மதம் சார்ந்த முடிவுகளை நாடிவிட்டு, கடைசி தீர்வாக உளவியல் மருத்துவரை அணுகுவதாக அவர் கூறுகிறார். “விடுதியில் தனியாக இருக்கும் பெண்ணிடம் சில நபர்கள் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர், அதன் தொடர்ச்சியாக விடுதியில் ஒருவர் இறந்து போகவே, இறந்த நபரின் ஆன்மா தனக்குள் புகுந்துவிட்டது போன்று ஓர் இளம்பெண் நடந்துகொள்கிறார். அவருக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம்” என உதாரணம் ஒன்றையும் அவர் சுட்டிக்காட்டினார். அறிகுறிகளுக்கு ஏற்ப இத்தகைய உளவியல் குறைபாடு உள்ளவர்களுக்கு ஆன்ட்டிசைகோட்டிக் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. வளர்ப்பு முறையுடன் தொடர்பு குழந்தை பருவத்தில் எதிர்கொண்ட சிக்கல்கள், வளர்ப்பு முறை இத்தகைய வித்தியாசமான நடத்தைகளுக்கும் தொடர்பிருப்பதாக பல ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன. இந்திய உளவியலுக்கான சர்வதேச ஆய்விதழில் (The International Journal of Indian Psychology) கடந்த ஏப்ரல் மாதம் இதுதொடர்பாக ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியானது. குழந்தை பருவத்தில் பெற்றோரின் நடத்தை குறித்து அக்குழந்தை புரிந்துகொள்ளும் விதம் (Perceived parenting), மதம் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்கள், சிக்கலான சூழல்கள் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளிலிருந்து மீண்டு வருதல் குறித்து, 18 முதல் 26 வயதுடைய 127 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவை எப்படி உளவியல் ரீதியாக ஒரு குழந்தையின் வளர்ப்பில் தாக்கம் செலுத்துகிறது என்பதை இந்த ஆய்வு அலசுகிறது. வளர்ப்பு முறைக்கும் ஆன்மிக அறிவு மற்றும் கடினமான சூழல்களிலிருந்து மீண்டு வருதலுக்கும் தொடர்பிருப்பதாக இந்த ஆய்வு பரிந்துரைக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அத்தகைய நிகழ்வுகளின் போது ஒருவர் தன்நிலை மறக்கிறார் அதே இதழில், அதே காலகட்டத்தில் வெளியான மற்றொரு ஆய்வுக்கட்டுரை, குழந்தை பருவத்தில் எதிர்கொண்ட துன்புறுத்தல்களுக்கும் இத்தகைய ஆளுமை கோளாறு (dissociative disorder) குறைபாட்டுக்கும் உள்ள தொடர்பை பேசுகிறது. ஒடிசாவில் இத்தகைய குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 11-19 வயதுடைய 38 நோயாளிகள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டனர். இதில் கலந்துகொண்ட பெரும்பாலான நோயாளிகள், சிறுவயதில் தீவிரமான மன மற்றும் உடல் ரீதியான புறக்கணிப்பை எதிர்கொண்டதாகவும், அவர்களுடைய பெற்றோர் சர்வாதிகாரமாக நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். அவர்களுடைய சமூக பின்னணி குறித்தும் ஆய்வில் அலசப்பட்டது. ஆண்களை விட பெண்களே அதிகம் 'சாமியாடுவது' ஏன்? தமிழ் கலாசாரத்தில் பெண்களே பெரும்பாலும் சாமியாடுகின்றனர். “பெண்களே ஆண்களைவிட சிறுவயதில் பலவித அழுத்தங்களை எதிர்கொண்டிருப்பதால் இப்படி இருக்கலாம்” என்கிறார், மருத்துவர் கிருபாகரன். சமூகவியல் ஆய்வாளரான தொ. பரமசிவன் தன்னுடைய ‘பண்பாட்டு அசைவுகள்’ எனும் புத்தகத்தில் இப்படி குறிப்பிடுகிறார். “உளவியல் ரீதியாகப் பெண்ணின் அழுத்தி வைக்கப்பட்ட எண்ணங்களே இதற்கு காரணமாகக் கருதப்படுகிறது. ‘பெண்கள் தலைவிரி கோலத்துடன் ஆடுதல் என்பது அமுக்கப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டுத் தங்களின் ஆவேசத்தைக் காட்டுவதே சாமியாடுதலாகும் என்றும், சாமியாடும் போது ஒருமையில் நிஜ வாழ்வில் பயன்படுத்த முடியாத சொற்களைத் தளமாற்றம் பெற்ற நிலையில் பெண்கள் பயன்படுத்துவதென்பது தங்களின் நிஜ வாழ்வின் ஒடுக்குதல்களைத் தற்காலிகமாக உணர்த்தும் மனவியல் செயல்பாடாகும் என உளவியல் ரீதியாக கூறுகின்றனர்” என குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/crmw9gmk24do
  16. கடந்த வருட தரவுகளுக்கு அமைவாக விருது வழங்கப்பட்டிருக்கலாம் என நினைக்கிறேன்.
  17. கந்தையா அருந்தவபாலன் ஒன்றுக்கு மேற்பட்ட தேசிய இனங்களைக் கொண்டிருக்கும் நாடொன்றில் அந்தந்த இனங்களின் தனித்துவத்தை ஏற்று அவர்களின் அரசியல் மற்றும் அடிப்படை உரிமைகளை வழங்கும் சமத்துவமான ஆட்சிமுறைமை நிலவும் நாடுகளில் வாழும் மக்களிடையே தமது இன உணர்வை விட தமது நாடு என்ற தேசிய உணர்வு மேலோங்கி நிற்பதைக் காணக்கூடியதாக உள்ளது. இதற்கு மாறாக பெரும்பான்மைத் தேசிய இனம் ஏனைய தேசிய இனங்களின் அரசியல் உரிமைகள் பலவற்றை மறுத்து அவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக கருதும் ஆட்சி முறைமையைக் கொண்டிருப்பதுடன், அத்தேசிய இனங்களை ஒடுக்கும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வரும் ஒருநாட்டில் உள்ள சிறுபான்மை தேசிய இனங்களுக்குத் தேசிய உணர்வை விடத் தமது இன உணர்வே மேலோங்கி இருக்கும். இத்தகைய ஒரு நிலையே இலங்கையிலும் காணப்படுகிறது. குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் தங்களை இலங்கையர் என்று கருதுவதைவிடத் தமிழர்கள் என்று வெளிப்படுத்துவதையே வழக்கமாகக் கொண்டுள்ளனர். இலங்கையர் என்ற அடையாளம் தமிழர்க்கு இருந்தாலும் இலங்கையர் என்ற உணர்வு அவர்களிடத்து இயல்பாக ஏற்படவில்லை. பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் தமிழ்த் தலைவர்களிடத்தும் படித்தவர்களிடத்தும் இலங்கையர் என்ற உணர்வு ஓரளவு மேலோங்கிக் காணப்பட்டாலும் அவ்வாட்சிக்காலத்தின் இறுதிக்கூறிலிருந்து தமிழர்களிடம் காணப்பட்ட இலங்கையர் என்ற உணர்வு மங்கத் தொடங்கிவிட்டது. அரசாட்சியில் இலங்கையர் பங்கெடுப்பதற்காகப் பிரித்தானியரால் கொண்டுவரப்பட்ட அரசியல் சீர்திருத்தங்களில் இலங்கையரின் பங்கு படிப்படியாக வளர்ச்சியடைய, தமிழர்களின் இலங்கையரென்ற உணர்வு படிப்படியாக வீழ்ச்சியடைந்தமை வரலாறு. இனபேதம் காரணமாக இலங்கைத் தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress) இலிருந்து சேர்.பொன்.அருணாசலத்தின் வெளியேற்றத்துடன் படித்தோரிடையே காணப்பட்ட இலங்கையர் என்ற உணர்வு ம் படிப்படியாக வெளியேறத் தொடங்கிவிட்டது. இதன் உச்ச நிலைதான் தந்தை செல்வாவின் தனிநாட்டுக் கோரிக்கையும் அதற்கான ஆயுதப் போராட்டமும். ஆயுதப் போராட்டம் முற்றுப் பெற்றாலும் தமிழர்கள் தம்மை இலங்கையராகவன்றி தமிழராகவே எண்ணும் உணர்வு முற்றுப்பெறவில்லை. ஏனெனில் அதற்கான எந்தவொரு அரசியல் மாற்றமும் இன்னும் இலங்கையில் நிகழவில்லை. இலங்கையரெனும் வெறும் அடையாளத்துடனும் தமிழர் என்ற உணர்வுடனுமே இதுவரையில் நடந்த எல்லாத் தேர்தல்களுக்கும் தமிழர்கள் முகம் கொடுத்துள்ளனர். இந்த ஒரு பின்புலத்திலிருந்தே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமிழ் மக்கள், தமிழர்கள் எவ்வாறு முகம் கொடுப்பார்கள் என்று சிந்திக்கவேண்டும். 1978 இல் ஆக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது குடியரசு அரசியலமைப்புக்கிணங்க இதுவரை எட்டு ஜனாதிபதித் தேர்தல்கள் இடம்பெற்றுள்ளன. இந்த எட்டுத் தேர்தல்களிலும் தென்னிலங்கைச் சிங்கள வேட்பாளர்களுக்கே தமிழ் மக்கள் வாக்களித்துள்ளனர். ஆனால், அத்தேர்தல்களில் இலங்கையராகவன்றி தமிழராகவே சிந்தித்து வாக்களித்துள்ளதைக் காணமுடியும். அதாவது வெற்றி தோல்விகளுக்கு அப்பால் தம்மினத்துக்கு எதிராகச் செயற்பட்ட வேட்பாளர்களுக்கு எதிராகவே வாக்களித்து வந்துள்ளனர். இவற்றுள் ஈழ விடுதலைப் போராட்டம் கூர்மையடைந்த பின்னரான காலப்பகுதியில் நடைபெற்ற ஆறு தேர்தல்களிலும் தமிழ்மக்கள் இலங்கையராகவன்றி தமிழராகவே சிந்தித்து வாக்களித்துள்ளமை தெளிவாகவே புலப்படும். 1982 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில்கூட பொதுவேட்பாளராக அன்றித் தனித்துப் போட்டியிட்ட குமார் பொன்னம்பலத்துக்கு வழங்கிய வாக்குகளுக்கு சம அளவிலான வாக்குகளை ஜே.ஆர். ஜெயவர்த்தனாவை எதிர்த்துப் போட்டியிட்ட கொப்பேகடுவவுக்கும் (SLFP) தமிழ் மக்கள் வழங்கியிருந்தனர். இந்திய – இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்த பிரேமதாசவுக்கு எதிராக 1988 இலும் பின்னர் சமாதானப்புறாவாக தன்னை வெளிப்படுத்திய சந்திரிகாவுக்கு 1994, 1999 களிலும் 2004இல் விடுதலைப்புலிகளின் கோரிக்கையை ஏற்று புறக்கணிப்பிலும் 2010, 2015, 2019 களில் தமிழினப் படுகொலையாளிகளாக தமிழ் மக்களால் கருதப்படும் ராஜபக்க்ஷக்களுக்கு எதிராகவும் தமிழ் மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். இலங்கைத் தமிழர்களும் தம்மைப் போலவே இலங்கையராகச் சிந்தித்துச் செயற்படவேண்டும் என்பதே சிங்களத் தலைவர்களதும் சிங்கள மக்களதும் விருப்பமாகும். ஆனால் அவர்கள் அதற்காகத் தமிழர்களுடன் விட்டுக்கொடுக்கவும் இணக்கத்தை ஏற்படுத்தவும் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை. இந்த நாட்டில் தன்னாட்சி உரிமை கொண்ட மூத்த குடிகளான தமிழர்களின் நியாயமான அரசியல் உரிமைகளை வழங்க அவர்கள் தயாராக இல்லை. ஆட்சி அதிகாரத்தைப் பகிர்ந்து சமத்துவமான முறையில் கூட்டாட்சி செய்வதன் மூலம் இலங்கையர் என்ற எண்ணத்தை உருவாக்க அவர்கள் ஒருபோதும் முயன்றதில்லை. உண்மையில் அவர்கள் எதிர்பார்க்கும் இலங்கையராக சிந்திப்பது என்பது இங்குள்ள ஏனைய சிறுபான்மைத் தேசிய இனங்களைச் சிங்களவராகச் சிந்திக்கச் சொல்வதாகும். அதாவது எனக்குச் சமமாக அன்றி கீழாக இருக்கவேண்டும். ஆனால் என்னைப்போல இலங்கையனாகச் சிந்திக்க வேண்டுமென்பதாகும். இது மஹாவம்ச புனைகதைகளை அடித்தளமாகக் கொண்டு சிங்கள மக்களிடையே கட்டியெழுப்பப்பட்ட பௌத்த – சிங்கள பேரினவாத சிந்தனையின் விளைவாகும். பெரும்பான்மையான சிங்கள மக்களைப் பொறுத்தவரை தேசியம் என்பதைக் குறிக்கும் ‘ஜாதிக’ என்பது ‘ஜாதிய’என்ற இனத்தைக் குறிக்கும் ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. அந்த ஜாதிய என்பது சிங்களச் சாதி அல்லது இனமாகும். தேசிய நல்லிணக்கம் என்பது கூட சிங்கள மக்களின் அல்லது சிங்களக் கட்சிகளின் ஒற்றுமையாகக் கருதப்படுகிறதே அன்றி இங்கிருக்கும் தேசிய இனங்களின் ஒற்றுமையாகக் கருதப்படுவதில்லை. சிங்களம் மட்டுமே அரச கரும மொழி என 1956 இல் தொடங்கிய அதிகாரக் குரல்கள் ஒரே தேசம் ஒரே குரல், ஒரே நாடு ஒரே சட்டம், One Nation One Country என இன்று வரை தமது காதுகளில் ஒலித்துக்கொண்டிருப்பதை தமிழர்கள் எப்படி மறக்கமுடியும்? நியமிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜயதுங்கா கூறியதுபோல, இந்நாட்டில் தமிழர்கள், சிங்களவர் எனும் மரத்தைச் சுற்றிப்படரும் கொடிகளாக அல்லது முன்னாள் இந்நாள் ஜனாதிபதி வேட்பாளர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியது போல, இங்கு தமிழர்கள் விரும்பினால் இருந்துவிட்டுப் போகலாம் உரிமைகள் பற்றிக் கதைக்கக் கூடாது என்ற மனநிலையில் சிங்களத் தலைவர்கள் இருந்துகொண்டு தமிழர்களையும் தம்மைப்போல இலங்கையராக சிந்திக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலையே இங்கு காணப்படுகிறது. நாம் தமிழர்களாக மட்டுமன்றி இலங்கையராகவும் சிந்திக்க விரும்புகிறோம் என கடந்த காலங்களில் தமிழ் மக்களாலும் தலைவர்களாலும் முன்னெடுக்கப்பட்ட இணக்கப்பாடுகளுக்கு இறுதியில் என்ன நடந்தது? பண்டா – செல்வா, டட்லி – செல்வா ஒப்பந்தங்கள் தொடங்கி இடையில் இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை, இறுதியாக நல்லாட்சி அரசின் புதிய அரசியலமைப்பு போன்ற எல்லாவற்றுக்கும் நடந்தது என்ன என்பதைத் தமிழ் மக்கள் நன்கு அறிவார்கள். அன்று சொந்த முகத்தில் தமிழ் மக்களுக்குத் துரோகஞ் செய்தவர்கள் இன்று ஜனாதிபதி வேட்பாளர் என்ற முகமூடியுடன் தமிழ் மக்களுக்கு அதைத் தருவோம் இதைத் தருவோம் என ஆசை காட்டுவதைப் பார்க்கிறோம். புல்லைக்காட்டி மாட்டை அழைப்பது போல தேர்தல் விஞ்ஞாபன சொல்லைக்காட்டி தமிழர்களை வளைக்க எண்ணும் இத்தலைவர்களின் கடந்த கால தமிழர் விரோதச் செயற்பாடுகளை மறக்காத தமிழ் மக்கள் தாங்கள் மாடல்லர் மீண்டும் அடுப்பங்கரையை நாடாத சூடுகண்ட பூனைகள் என்று சொல்லாமல் விடுவார்கள் என்று எவ்வாறு அவர்கள் எதிர்பார்க்க முடியும்? இன்றும் கூடப் பிச்சையிடுவது போல தருவோம் என்று கூறுகிறார்களே அன்றிப் பகிர்வோம் என்று கூறவில்லை. யார் வந்தாலும் தமிழர்கள் தமது உரிமைகளைப் பெற ஒத்துழைப்போம் என்று கூறாது நான் வந்தால் தருவேன் என்றுதான் கூறுகிறார்கள். இவர்களை தமிழ் மக்கள் எவ்வாறு நம்புவது? 1978 ஆம் ஆண்டில் மாமனார் ஜே. ஆரின் காலத்திலிருந்து இன்றுவரை ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக, பிரதமராக, எதிர்க்கட்சித் தலைவராக, ஜனாதிபதியாக இருந்துள்ளார். இதுவரை தமிழ் மக்களுக்கு ரணில் செய்த நன்மைகள் எவை? சந்திரிகா முன்மொழிந்த இடைக்கால தன்னாட்சி அதிகார சபைப் பிரேரணையை நாடாளுமன்றத்தில் எரித்த கூட்டத்தினர்க்கு தலைமை வகித்தார், கருணாவைப் புலிகளிடமிருந்து தானே பிரித்தார் என்றும் அதனால் தன்னாலேதான் யுத்தத்தை வெற்றி கொள்ள முடிந்தது என மார் தட்டினார், நல்லாட்சி அரசாங்கத்தில் சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் என்ற எலும்பைக்கொடுத்து ஆளுங்கட்சியாகச் செயற்படவைத்ததுடன், புதிய அரசியலமைப்பு என்ற நாடகத்தையும் வெற்றிகரமாக அரங்கேற்றி முடித்தார், ஜனாதிபதியாக வந்தவுடன் 13 ஐப் பற்றி வாயெடுக்க, பௌத்த துறவிகள் முறைத்துப் பார்த்தவுடன் அப்படியே தன்வாயை மூடிவிட்டார். இப்போது தமிழ் வாக்குகளுக்காக மீண்டும் பழைய பல்லவி பாடத் தொடங்கிவிட்டார். வர்த்தகப் பொருளாதாரத்தையே தேரவாத வர்த்தகப் பொருளாதாரமெனப் பெயர் சூட்டி பிக்குகளை மகிழ்விக்க எண்ணும் ரணில் அப்பிக்குகளை மீறி தமிழருக்குத் தீர்வு தருவார் என நம்பலாமா? கூரையைறி கோழிபிடிக்க முடியாதவர் வானமேறி வைகுண்டத்துக்குத் தமிழர்களைக் கூட்டிச் செல்லப் போவதாகக் கூறுகிறார். மஹிந்த தன்னை விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்ட வீரன் என்று கூறி மக்களிடம் வாக்குக் கேட்டது போல, மற்றவர்கள் எல்லாரும் ஓடியொழிந்தபோது முன்வந்து பொருளாதார அழிவிலிருந்து நாட்டையும் மக்களையும் மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவந்தவர் தானே எனக்கூறி மக்களிடம் ரணில் வாக்குக் கேட்கிறார். அது ஓரளவு உண்மையென்றாலும் தமிழ் மக்களுக்கு அது பழகிப்போனதொன்றாகும். விடுதலைப் புலிகளை அழிக்கிறோம் என பல ஆண்டுகளாக தங்கள் மீது ஏவப்பட்ட வெடிகுண்டுகளை மட்டுமன்றி மிக மோசமான பொருளாதாரக் குண்டுகளையும் தாங்கி வாழ்ந்து மீண்ட தமிழ் மக்களுக்கு எரிவாயுவுக்கும் பெற்றோலுக்குமான காத்திருப்பு வரிசைகள் கால் தூசுக்குச் சமானம். அதனால் இந்த விடயத்தில்கூட தமிழ் மக்கள் இலங்கையராக எண்ணுவதைவிட தமிழராக எண்ணுவதற்கே முக்கியத்துவமளிப்பர். ரணில், அனுர என்பவர்களுடன் ஒப்பிடும்போது சஜித் பலவீனமான ஒரு தலைவர் என்பதை அவரது கடந்த கால அரசியல் செயற்பாடுகளிலிருந்து மதிப்பிட முடியும். கிழட்டு நரி எனப்படும் ஜே. ஆரின் அரசியல் வாரிசு ரணில் போல, தமிழ் மக்களுக்கெதிராக மோசமான அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்ட ரணசிங்க பிரேமதாசவின் நேரடி வாரிசு சஜித். தொடக்கத்திலிருந்தே இந்திய- இலங்கை ஒப்பந்தத்தையும் மாகாணசபை முறைமையையும் எதிர்த்து வந்ததுடன், அச்சபைகளுக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் கையகப்படுத்தும் கைங்கரியங்களைத் தொடக்கி வைத்த பெருமைக்குரிய பிரேமதாசவின் கொள்கைகளைக் பின்பற்றப் போவதாக அவர் மகன் சஜித் இப்போது பரப்புரை செய்கிறார். அடித்தட்டு மக்களின் நலனை மேம்படுத்துவதற்கான பிரேமதாசவின் பல திட்டங்கள் சிறப்பானவை என்றாலும் தமிழ் மக்களுக்கு எதிரான அவரது திட்டங்களையும் சஜித் நடைமுறைப்படுத்த மாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம். வடக்கு, கிழக்கில் ஆயிரம் விகாரைகளை புனரமைக்க கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கியவர் சஜித் என்பதை தமிழ் மக்கள் மறக்கமுடியாதவாறு குருந்தூர் மலையும் மயிலிட்டியும் நிலாவெளியும் நாளாந்தம் நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்கள் பௌத்த மதத்திற்கோ அதன் சின்னமான விகாரைகளுக்கோ எதிரானவர்களல்லர். ஆனால் அவை அடக்கு முறைக்கும் ஆக்கிரமிப்புக்குமான சின்னங்களாக மாறுவதற்கு எதிரானவர்கள். இந்த விடயத்திலும் தமிழ் மக்கள் இலங்கையராக அன்றித் தமிழராகவே எப்போதும் தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர். நல்லாட்சிக் காலத்தில் புதிய அரசியலமைப்புக்கான சலசலப்புத் தோன்றியபோது தற்போதுள்ள மாகாணசபை முறைமைக்கு மேல் அனுமதிக்க முடியாது எனக்கூறிய சஜித், தற்போது வாக்குகளுக்காக 13 ஐ முழுமையாகத் தருவதாகவும் அதில் வழங்கப்பட்ட அதிகாரங்களை கையகப்படுத்தாது இருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகவும் கூறுகிறார். காணி, காவல்துறை அதிகாரத்தைத் தருவதாகக் காலையில் யாழ்ப்பாணத்தில் இவர் கூற, மாலையில் அது ‘பொலிஸ்’ அல்ல ‘செக்குரிட்டிக் காட்’ என கொழும்பில் அவரது பேச்சாளரைக் கூறச்செய்வார். அத்துடன் ஆறு மாதங்களுக்குள் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதாகவும் உறுதியளிக்கிறார். மாகாணசபைத் தேர்தல்களைத் தள்ளிவைப்பதற்கான கபடவேலையைச் செய்த நல்லாட்சியில் பிரதமருக்கு அடுத்த நிலை அதிகாரத்திலிருந்தபோது அது தொடர்பாக வாயே திறக்காத சஜித், ஆறு மாதத்தில் தேர்தலை நடத்துவேன் எனக் கூறுவதை தமிழ்மக்கள் எவ்வாறு நம்ப முடியும்? தமிழர்கள் இலங்கையராகச் சிந்தித்து தனக்கு வாக்களிக்க வேண்டுமெனக் கோரும் இன்னொரு முதன்மை வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க. தற்போதைய தேசிய மக்கள் சக்தியினதும் முன்னைய ஜே.வி.பி யினதும் தலைவர் அவர். செஞ்சட்டை அணிந்து பேரணி நடத்தி தம்மை இடசாரிகளாகக் காட்ட முனையும் இவர்கள் உண்மையில் இடசாரிச் சித்தாந்தங்களை கடைப்பிடிப்பவர்களா? தேசிய இனமொன்று பிரிந்து செல்வதற்கான உச்சமட்ட உரிமையைக் கொண்டிருக்கும் என அச்சித்தாந்தம் கூறும்போது தமிழரின் தேசியப் பிரச்சினையை பொருளாதாரச் சமூகப் பிரச்சினையாக சுருக்கிப் பார்க்கும் இவர்களை, மதத்தலைவர்களிடம் சென்று அரசியல் ஆசீர்வாதம் வாங்கும் இவர்களை உண்மையான இடதுசாரிகளென தமிழர்கள் எவ்வாறு நம்ப முடியும்? உண்மையில் இடதுசாரிகள் என்ற பெயரில் கூடியளவு இனவாதத்தைக் கடந்த காலத்தில் விதைத்தவர்கள் இவர்களே. தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு – கிழக்கை நீதிமன்றம் சென்று நிரந்தரமாகத் தமிழர் தாயகத்தைக் கூறுபோட்டவர்கள் இவர்களே. அரசியலமைப்பில் உள்ளதை நடைமுறைப்படுத்துவதற்காக இதை மேற்கொண்டதாக கூறும் அனுர அதே அரசியலமைப்பில் அதே பிரிவில் இருக்கும் மாகாண சபைகளுக்கான காணி, காவல்துறை அதிகாரங்களை ஏன் நடைமுறைப்படுத்துவதற்கு நீதிமன்றம் செல்லவில்லை? குறைந்தது அதற்கான குரலைக்கூடக் கொடுக்கவில்லையே. அந்த அரசியலமைப்பின்படி ஏலவே வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களை படிப்படியாகப் பறித்தபோது அதற்கெதிராக ஏன் இவர் குரல் கொடுக்கவில்லை? இப்போது இவர் தமிழர்க்கான நீதியையும் உரிமைகளையும் தான் வழங்கப்போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறுகிறார். அதேவேளை யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணைகளோ, தண்டனைகளோ இல்லை எனவும் கூறுகிறார். தமிழ் மக்கள் கோருவது விடுதலைப் புலிகளுக்கெதிரான செயற்பாடுகளுக்கான நீதியை அல்ல. அப்பாவித் தமிழர்கள் மீதும் பொதுமன்னிப்பின் பேரில் கையளிக்கப்பட்டு, சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான நீதியையே அவர்கள் கோருகின்றனர். இதனை வழங்க மறுப்பவர்களின் ஆட்சியில் தமிழர்களுக்குப் பாதகமான சட்டங்களும் நீதி நடவடிக்கைகளும் இருக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? முதன்மை வேட்பாளர்கள் மூவரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்றும் அதன்மூலம் தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு வழங்கப்படும் என்று கூறுகின்றனர். இலங்கையில் இதுவரை இரண்டு புதிய அரசியலமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ன. இருபதுக்கு மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. 1972 இல் சிறிமா அம்மையாரின் ஆட்சியிலும் 1978 இல் ஜே. ஆரின் ஆட்சியிலும் கொண்டுவரப்பட்ட புதிய அரசியலமைப்புகளினூடாக தமிழர்க்கு எதை வழங்கினார்கள்? ஏலவே டொனமூர் அரசியலமைப்பில் வழங்கப்பட்டிருந்த தமிழ் மக்களுக்கான கொஞ்ச நஞ்ச பாதுகாப்பையும் இல்லாமலாக்கி மேலும் தமிழ் மக்களுக்குப் பாதகமான உறுப்புரைகளை அரசியலமைப்பில் உள்ளடக்கியதுதானே வரலாறு. இரண்டாவது குடியரசு அரசியலமைப்பு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தபோது அதனை இலங்கையராக எண்ணி ஆதரிக்காது தமிழராக நின்று எதிர்த்த அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் நீங்கள் கோட்டைக்குச் செல்லுங்கள் நாங்கள் நல்லூருக்குச் செல்கிறோம் என அவையிலிருந்து வெளியேறியதும் வரலாறு. இருபதுக்கு மேற்பட்ட அரசியலமைப்புத் திருத்தங்களுள் இந்தியாவின் அழுத்தத்தின்கீழ் ஏற்படுத்தப்பட்ட 13 ஐ விட ஏனைய திருத் தங்களுள் தமிழர் சார்பாக எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லையே. பதிலாக ஏலவே குறையாக வழங்கப்பட்ட 13 ஐயும் வெட்டிக் குறைத்து கோதாக்குவதற்கான தீர்மானங்கள்தானே மேற்கொள்ளப்பட்டன. இந்த இலட்சணத்தில் இவர்கள் கூறும் புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்களுக்கான தீர்வு கிடைக்கும் என அவர்களை நம்பவைக்க முடியுமா? இந்த வகையில் தமிழர் இலங்கையராகச் சிந்திப்பதற்கான வாய்ப்புகளை மறுத்து தமிழர்களாகச் சிந்திப்பதற்கான தூண்டுதல்களைத் தொடர்ந்து செய்து வருபவர்கள் சிங்களத் தலைவர்கள். அவ்வாறான ஒரு நிலையை ஏற்படுத்தியவர்கள் தமக்குத் தேவைப்படும்போது மட்டும் தமிழர்கள் இலங்கையராகச் சிந்திக்க வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. அதற்குப் பதிலாக தமிழர்கள் இலங்கையராகச் சிந்திப்பதற்கான அங்கீகாரத்தை முதலில் வழங்குவதற்கு முயலவேண்டும். அதுகூட அவர்கள் கூறுவது போல நான் செய்வேன், நான் செய்வேன் என தனித்துச் செய்ய முடியாது. நாங்கள் செய்வோம் என அவர்கள் அனைவரும் இணைவதன் மூலமே அது சாத்தியமாகும். அதுவரை தமிழர்கள் தமது அடையாளமாக இலங்கையராகவும் உணர்வில் தமிழர்களாகவுமே இருப்பர். அது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் பிரதிபலிக்கும். https://thinakkural.lk/article/308963
  18. Published By: VISHNU 08 SEP, 2024 | 08:57 PM மனித மூளையை பாதிக்கும் புதிய வைரஸ் சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. உண்ணி மூலம் மனிதர்களுக்கு பரவும் இந்த வைரஸை 'வெட்லேண்ட் வைரஸ்' என்று விஞ்ஞானிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர். சீனாவின் ஜின்ஷுவில் உள்ள ஈரநிலப் பூங்காவில் பணிபுரிந்த 61 வயது முதியவர் ஒருவரிடம் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட பிறகு மனித மூளை தொடர்பான கடுமையான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193181
  19. யாழில் எனது உரை குறித்த விமர்சனங்களிற்கு சுமந்திரன் தெளிவான பதிலை வழங்கிவிட்டார் – அனுரகுமார 08 SEP, 2024 | 07:35 PM யாழ்ப்பாணத்தில் தான் ஆற்றிய உரை குறித்த விமர்சனங்களிற்கு பதிலளித்துள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க நடாளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் ஏற்கனவே தகுந்த பதிலை தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளார். சுமந்திரன் சரியான பதிலை ஏற்கனவே வழங்கியுள்ளதால் நான் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பதிலளிக்கவேண்டியதில்லை என அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார். இனவாதத்தை கிளறியமைக்காக ரணில் விக்கிரமசிங்கவே மன்னிப்பு கோரவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193179
  20. இங்கிலாந்து (England) அணித்தலைவர் ஒலி போப்(Ollie Pope), 147 ஆண்டுகள் பழமையான டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனையை படைத்துள்ளார். அதாவது வெவ்வேறு அணிகளுக்கு எதிராக தனது முதல் ஏழு டெஸ்ட் சதங்களை அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது 49வது போட்டியில் விளையாடிய அவர், ஓவல் (Oval) மைதானத்தில் இலங்கைக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போதே இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். புதிய சாதனை இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3வது டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ஓட்டங்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் சொற்ப ஓட்டங்களே எடுத்த போப், மூன்றாவது போட்டியில் தனது சொந்த மைதானமான ஓவல் மைதானத்தில் விளையாடி, விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். இங்கிலாந்து அணி இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார். இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/ollie-pope-s-world-record-century-in-3rd-test-1725784067#google_vignette
  21. 7 செப்டெம்பர் 2024 அமெரிக்காவில் இரவில் காணாமல் போன 3 வயது குழந்தை 100 ஏக்கர் மக்காச்சோள தோட்டத்திற்குள் தன்னந்தனியாக தவித்ததை ட்ரோன் மூலம் கண்டுபிடித்து காவல்துறையினர் மீட்டனர். விஸ்கான்சின் மாகாணத்தின் ஆல்டோ பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இரவு 8:49 மணிக்கு தங்கள் 3 வயது மகனை காணவில்லை என பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். வீட்டின் பின்புறம் இருந்த மக்காச்சோள தோட்டத்திற்குள் குழந்தை சென்றிருக்கலாம் என அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, காவல்துறையினர் தெர்மல் இமேஜிங் டிரோன் மூலம் குழந்தையை தேடிய நிலையில், ஒரு மணிநேர தேடுதலுக்குப் பின் குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது. எந்த காயமும் இன்றி குழந்தை மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். வீட்டில் இருந்து அரை மைல் தொலைவில் குழந்தை இருந்ததாகவும் அவர்கள் கூறினர். https://www.bbc.com/tamil/articles/c07elm8747xo
  22. வவுனியாவில் தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் 08 SEP, 2024 | 04:27 PM தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (8) வவுனியா கலைமகள் சனசமூக நிலைய மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் அரியநேத்திரன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் வேந்தன், யாழ். மாநகர சபையின் முன்னாள் மேயர் மணிவண்ணன், முன்னாள் மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அருண் தம்பிமுத்து, அரசியல் ஆய்வாளர்களான நிலாந்தன், ஜதீந்திரா, யோதிலிங்கம், தமிழரசு கட்சியின் மகளிர் அணி தலைவி விமலேஸ்வரி மற்றும் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/193151
  23. அப்பிடியா அண்ணை?! அப்ப 4 தான் என்னோட கண்ணுக்குத் தெரிகிறது.
  24. யாருடைய நண்பர்கள் என்று சொன்னால் பதில் கூறலாம் அண்ணை! நான் பதிலைச் சொல்ல உங்கட நண்பர்களைக் கூடத் தெரியலயா என்ற! ஏன் தடியை குடுத்து அடியை வாங்குவான்.
  25. -விஸ்வாமித்ரா- “அறியாததை பற்றி ஒருவர் ஒருபோதும் பயப்படுவதில்லை; அறிந்ததொன்று முடிவுக்கு வருகின்றது என்றே என்று ஒருவர் அஞ்சுகிறார் . ~ ஜித்து கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு தேர்தலும் அதன் சொந்த வேகத்தை உருவாக்குகிறது. அதன் வாழ்க்கை இயக்கவியல் அதன் வளர்ச்சியில் சேதனமானது மற்றும் எப்போதும் தரையில் வேரூன்றியுள்ளது. வேட்பாளர்களும் அவர்களது பதிலீடுகளும்செயற்கையான துணிச்சலில் ஈடுபடலாம்; வாக்காளரிடம் உண்மையைச் சொல்வதை விட, பிரசாரத்தின் முடிவில் அவர் வெற்றி பெற்றால், வேட்பாளரை ஈர்க்கவும், அதன் மூலம் அவரிடமிருந்து ஆதரவைப் பெறவும் அவர்களின் அடிப்படை விருப்பம் அதிகமாக இருக்கலாம். ஆனால் தேர்தல்கள் அடிப்படையில் அவர்களின் சந்தேகத்தின் நிழல்களை மாற்றவில்லை. ஒன்றன் பின் ஒன்றாக, தேர்தல்கள் என்று நாம் அழைக்கும் இந்த நிகழ்வுகள் உள் யதார்த்தத்தின் சில காட்டுமிராண்டித்தனமான அம்சங்களைக் கொண்டுள்ளன. பொதுவாக அரசியல்வாதிகளும், குறிப்பாக வேட்பாளர்களும் அரசியலின் ஏற்றத் தாழ்வு, தோல்வி, வெற்றி ஆகியவற்றை நன்கு அறிவார்கள். அரசியலின் புயல் சூழலை சகித்துக்கொண்டு, தாங்குபவர்கள் இறுதியில் பிழைப்பார்கள், வெல்வார்கள் அல்லது தோல்வியடைவார்கள். தெற்கில் சிங்களவராக இருந்தாலும் சரி அல்லது வடக்கில் உள்ள தமிழர்களாக இருந்தாலும் சரிவாக்காளர் யாராக இருந்தாலும், வேட்பாளரின் கதை நம்பக்கூடியதாகவும், அழகாகவும், நியாயமான நம்பகத்தன்மையுடனும் இருந்தால், வேட்பாளர் பற்றிய அவரது முதல் பார்வை சந்தேகம் மற்றும் அதன் பிறகு நம்பிக்கையாக இருக்கும். எதிரணியின் அடிப்படைச் செய்தியை அதன் வரலாற்று சகிப்புத்தன்மையின் பின்னணியில் சவால் செய்வது ஒவ்வொரு வேட்பாளரின் மீதும் பிரத்தியேகமாக உள்ளது. பெரும்பாலும், வாக்காளர் தனது தவறான நம்பிக்கையை உணர்ந்து கொள்வார், அப்படியானால், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர். வடக்கு வாக்காளர், செல்வநாயகத்தின் தமிழரசுகட்சியின் காலம் முதல் தற்போதைய தமிழ் தேசியக் கூட்டமைப்புவரைகுறிப்பாக அவரது இன, கலாசார மற்றும் மதம் முறைமை மற்றும் வேறுபாடுகளைக் கொண்டு, எமது கடந்தகால ஆட்சியாளர்கள் அனைவராலும் ஏமாற்றப்பட்டுள்ளார். , பதினாறாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் யூதர்களை விட தமிழர்கள் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர். ஷேக்ஸ்பியரின் தி மெர்ச்சன்ட் ஒவ் வெனிஸில் வரும் ஷைலக்கைப் போலவே, தமிழர்களும் ‘பாவம் செய்வதை விட அதிகமாகப் பாவம் செய்திருக்கிறார்கள்’. பெரும்பான்மையான தென்னிலங்கைச் சிங்களவர்கள் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் ஆனால் அது ஒரு உண்மை. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களை ஒருமுறை கைவிட்டார் . இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறிய தாராளவாதி ஒருவர், மகா சங்கத்தினர் மற்றும் உறுதியான குழுவின் அழுத்தத்தின் கீழ் தனது சொந்த பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தை (பணடா -செல்வா . உடன்படிக்கை) ரத்து செய்ய வேண்டியிருந்ததுவளமான மண்ணாக இருந்து நவீன சிங்கள பௌத்த அடிப்படைவாதம் எந்த இடையூறும் இல்லாமல் வளர்ந்தது. எந்த ஒரு சிங்கள பௌத்த அரசியல்வாதியும் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்க்கவோ அல்லது சவால் செய்யவோ மாட்டார். அப்படிச் செய்தால் அது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தாகிவிடும். பண்டா செல்வா உடன்படிக்கை கைவிடப்பட்டதன் பின்னர், 1965 பொதுத் தேர்தலின் பின்னர், டட்லி சேனநாயக்க மற்றும் செல்வநாயகம் ஆகியோரால் சேனநாயக்க-செல்வநாயகம் உடன்பாடு ஆரம்பிக்கப்பட்டது. அது வடக்கு மற்றும் கிழக்கிற்கு மேலும் அதிகாரப் பகிர்வை வழங்குவதாக உறுதியளித்தது. அந்த ஒப்பந்தமும் பண்டா -செல்வா உடன்படிக்கையை புதைத்த அதே விதியை சந்தித்தது. வடக்குத் தமிழர்களை எரிச்சலூட்டுவது மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாகக் குறைத்து மதிப்பிடும் ஒரு தேசியப் பிரச்சினையை இறுதிவரை பின்பற்றுவதற்கான உள் பலமோ, அரசியல் விருப்பமோ, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோ அதிகாரத்தில் இருந்த காலத்தில் எஸ் மற்றும் டட்லி இருவருக்கும் இல்லை. கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்க அவர்களை ஒருமுறை கைவிட்டார் . இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழர் பிரச்சினைக்கு சமஷ்டி முறையே சரியான தீர்வாக இருக்கும் என்று கூறிய தாராளவாதி ஒருவர், மகா சங்கத்தினர் மற்றும் உறுதியான குழுவின் அழுத்தத்தின் கீழ் தனது சொந்த பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தத்தை (பணடா -செல்வா . உடன்படிக்கை) ரத்து செய்ய வேண்டியிருந்ததுவளமான மண்ணாக இருந்து நவீன சிங்கள பௌத்த அடிப்படைவாதம் எந்த இடையூறும் இல்லாமல் வளர்ந்தது. எந்த ஒரு சிங்கள பௌத்த அரசியல்வாதியும் சிங்கள பௌத்த அடிப்படைவாதத்தை எதிர்க்கவோ அல்லது சவால் செய்யவோ மாட்டார். அப்படிச் செய்தால் அது அவருடைய அரசியல் எதிர்காலத்துக்கு ஆபத்தாகிவிடும். பண்டா செல்வா உடன்படிக்கை கைவிடப்பட்டதன் பின்னர், 1965 பொதுத் தேர்தலின் பின்னர், டட்லி சேனநாயக்க மற்றும் செல்வநாயகம் ஆகியோரால் சேனநாயக்க-செல்வநாயகம் உடன்பாடு ஆரம்பிக்கப்பட்டது. அது வடக்கு மற்றும் கிழக்கிற்கு மேலும் அதிகாரப் பகிர்வை வழங்குவதாக உறுதியளித்தது. அந்த ஒப்பந்தமும் பண்டா -செல்வா உடன்படிக்கையை புதைத்த அதே விதியை சந்தித்தது. வடக்குத் தமிழர்களை எரிச்சலூட்டுவது மட்டுமன்றி, ஒட்டுமொத்தமாகக் குறைத்து மதிப்பிடும் ஒரு தேசியப் பிரச்சினையைமுடிவுக்கு கொண்டு வரு வதற்கானஆத்ம பலமோ, அரசியல் விருப்பமோ, பாராளுமன்றத்தில் பெரும்பான்மையோ அதிகாரத்தில் இருந்த காலத்தில் எஸ்.டபிள்யூ .ஆர் . டி மற்றும் டட்லி ஆகிய இருவருக்கும் இல்லை பெரும்பான்மையான சிங்கள பௌத்தர்களுக்கும் இந்துத் தமிழர்களுக்கும் இடையிலான இந்த முரண்பாடுகள், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மற்றும் தொடர் பகைமைகள் அனைத்தும் வவுனியாவிற்கு தெற்கில் உள்ள சிங்கள அரசியல்வாதிகளின் பிரத்தியேக வசதிக்காகவும் பாவனைக்காகவும் உருவாக்கப்பட்டு இருபத்தேழு வருட யுத்தத்தில் முடிவடைந்தது. போர் முடிந்துவிட்டது. தமிழ்ப் போராளிகளும் அவர்களது படைகளும் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டு நசுக்கப்பட்டுள்ளன. வடக்கில் ஒரு அமைதி நிலவுகிறது. எந்த வகையிலும் இது தமிழர் பிரச்சினைக்கான தீர்வு அல்ல. யுத்தத்தின் போது இலங்கை இராணுவத்தினரால் பிடிக்கப்பட்ட தமது மகன்கள் மற்றும் மகள்கள் வீடு திரும்பக் காத்திருக்கும் விதவைத் தாய்மார்கள் வடக்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எந்த முடிவும் எட்டப்படவில்லை. ஒரு தீர்மானத்தை விடுங்கள், காணாமல் போன இந்த சிறுவர் சிறுமிகள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தை கூட அரசாங்கத்தின் மூடிய உதடுகளிலிருந்து வெளிவரவில்லை. தென்னிலங்கை அரசியல் மிகவும் சீர்கெட்டு, சீரழிந்துவிட்டது, அதாவது ஒரு அரசியல்வாதி கூட காணாமல் போன ஆண்களின் மற்றும் பெண்களின் கதியைப் பற்றி வாய் திறக்க முடியாது. இதன் விளைவாக, சிக்கலை முடிக்கவோ அல்லது இறுதி செய்யவோ முடியவில்லை. யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. சிங்கள அரசியல்வாதிகள் வடக்கில் சொல்வதை சிங்களப் பிரதேசத்தில் மீண்டும் கூற முடியாது. இப்பிரச்சினை இவ்வளவு அருவருப்பான சுவையை பெற்று முழு சிங்கள பௌத்த உளவியலையும் விழுங்குகிறது. இந்த சூழலில்தான் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே கடந்த கால தமிழ்த் தலைவர்களையும் மக்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றிய அந்த நம்பிக்கையற்ற அரசியல்வாதிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அரசியல் வம்சாவளி என்பது அவர்கள் எந்த அளவு பெருமையுடனும் அணியக்கூடிய சின்னம் அல்ல. இரண்டுக்கும் இடையில், ரணில் மிகவும் தாராளவாதமாகத் தெரிகிறார், மேலும் தமிழர்களுக்கு மேலும் அரவணைப்புக் கரத்தை நீட்டத் தயாராக இருக்கிறார், ஆனால் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளிப்பவர்களை ஒரு சுருட்டு முனையில் நம்ப முடியாது! இதனை தமிழ் தலைமைகள் நிபந்தனையின்றி அறிந்து கொள்ள வேண்டும். யுத்தத்தின் போது இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. சிங்கள அரசியல்வாதிகள் வடக்கில் சொல்வதை சிங்களப் பிரதேசத்தில் மீண்டும் கூற முடியாது. இப்பிரச்சினை இவ்வளவு அருவருப்பான சுவையை பெற்று முழு சிங்கள பௌத்த உளவியலையும் விழுங்குகிறது. இந்த சூழலில்தான் தற்போதைய ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுகிறது. ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகிய இருவருமே கடந்த கால தமிழ்த் தலைவர்களையும் மக்களையும் மீண்டும் மீண்டும் ஏமாற்றிய அந்த நம்பிக்கையற்ற அரசியல்வாதிகளின் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் அரசியல் வம்சாவளி என்பது அவர்கள் எந்த அளவு பெருமையுடனும் அணியக்கூடிய சின்னம் அல்ல. இரண்டுக்கும் இடையில், ரணில் மிகவும் தாராளவாதமாகத் தெரிகிறார், மேலும் தமிழர்களுக்கு மேலும் அரவணைப்புக் கரத்தை நீட்டத் தயாராக இருக்கிறார், ஆனால் அவரைச் சூழ்ந்துகொண்டு ஆட்சிக்கு வருவதற்கு ஆதரவளிப்பவர்களை ஒருஇறுதிக்கட்டத்தில் நம்ப முடியாது! இதனை தமிழ் தலைமைகள் நிலைமையை அறிந்து கொள்ள வேண்டும். சஜித் தனது தீவிர சிங்கள பௌத்த தேசியவாதத்திற்காக நன்கு அறியப்பட்ட ஒரு தந்தையிடமிருந்து வந்தவர். 13வது திருத்தச் சட்டம் மற்றும் மாகாண ஆட்சி முறைக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தது வரலாறு. அவரது தேசியவாதம் வெளிப்படையான இனவாதம் மற்றும் பாராளுமன்றத்தில் அவரது நடத்தை மற்றும் ஜனாதிபதியாக எப்போதும் தீவிரமான ஒன்றாக இருந்தது மற்றும் அவரது அகங்கார மனநிலையிலிருந்து பிறந்தது. துரதிஷ்டவசமாக ஜனாதிபதி பிரேமதாசவின் மகனான சஜித்துக்கும் அதே மனப்பான்மை மரபுரிமையாகவே காணப்படுகின்றது. தன்னைப் பற்றி மிகையாக மதிப்பிடுவதும், அதை உலகம் முழுவதும் கேட்கும்படி உரக்கக் கூறுவதும் அவருடைய செயல்பாடாக இருந்து வருகிறது. 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதாக வாக்குறுதியளிப்பதும், அதற்கு அப்பால் சென்று 13ஏ உறுதிமொழியை வழங்குவதும் சஜித் பிரேமதாசவுக்கு விசித்திரமான பொது அரசியல் நடத்தை அல்ல. ஆனால் வடக்கில் உள்ள தமிழ்த் தலைவர்கள் சஜித் தமக்கு என்ன சொன்னாலும் ஒரு சிட்டிகையால் அல்ல, ஒரு ப ரல் உப்பைப் பொறுக்க வேண்டும். ஏற்கனவே மக்களின்நம்பிக்கையை இழந்துவிட்ட சில திறமையற்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளால் சஜித்துக்கும் ஆதரவாகவும், துணையாகவும் இருந்து வருகிறது. ரணில் மற்றும் சஜித் இருவரும் அந்த நாற்றமும் அழுகியமான கடந்த காலத்தின் ஆபாசமானபொருட்களை சுமந்து செல்கிறார்கள். அவர்கள் ஒரே கட்சியில் பணியாற்றினார்கள்- ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அவர்கள் வெளிப்படுத்தும் அரசியல் பாசாங்குத்தனம் என்பதை சாதாரண விட யமாக அலட்சியப்படுத்தப்படக் கூடாது. இன்னும் அரகலய -22 சிங்கள மக்களின் பொது ஆன்மாவை ஒரு சிறிய அளவிலாவது மாற்றியிருக்கலாம். தற்போதைய சூழ்நிலையின் சிறிய முன்னேற்றத்திற்கு அந்த சிறிய அளவிலான மாற்றம் அவசியமாக இருக்கலாம். வடக்குத் தலைமைத்துவத்தால் ரணிலையோ அல்லது சஜித்தையோ நம்ப முடியாவிட்டால் அதற்கு ஒரே மாற்று அனுரகுமார திஸாநாயக்க மட்டுமே. ஜே.வி.பி இந்தியாவிற்கு எதிரான மற்றும் தமிழர்களுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை பிரகடனப்படுத்தும் நாட்கள் முடிந்துவிட்டன. அனுரகுமார இப்போது தேசிய மக்கள் சக்தியின் தலைவராக உள்ளார். ஆனால் அவர் இப்போது சுமக்கும் சுமை மிகப்பெரியது. ஜே.வி.பி.யின் கடந்த காலம் அவரை எடைபோடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், தற்போதைய நிலைப்பாட்டிலிருந்து எந்தவொரு தலைவரின் மீதும் முக்கியமாக தேசிய விட யங்களில் நம்பிக்கை வைக்க முடிந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி அனு ரகுமாரவாகும் . தமிழ்த் தலைமைகள் மனதில் கொள்ள வேண்டியது அனுரவின் தனிப்பட்ட கடந்த காலத்தையும் அவரது மிகவும் தாழ்மையான தொடக்கத்தையும் தான். அந்தத் தொடக்கங்கள், வடக்கின் சராசரி பிரஜையுடன் எளிதில் தொடர்புபடுத்தக்கூடியவை, அவர் தனது முழு நேரத்தையும் வறண்ட நிலங்களில் செலவிடுகிறார், நாளுக்கு நாள் வியர்த்து தனது சந்ததியினரின் வாழ்க்கையை எளிதாக்க முயற்சிக்கிறார். அவரது முயற்சிகள் மற்றும் ஒரு தெற்கு விவசாயியின் வேலைகள் அடிப்படையில் ஒரே மாதிரியானவை அல்லது சில சமயங்களில் கடினமாக இருக்கும். ஆனால்ஒப்பீ ட்டுத் தன்மை மற்றும் பரஸ்பர பச்சாதாபம் ஆகியவை எந்த அரசியல்வாதிக்கும் தேவையற்றவை என்று நிராகரிக்க முடியாத இரண்டு அடிப்படைகள். வடக்கில் உள்ள தமிழர்கள் ரணில் மற்றும் சஜித் இருவரையும் நிராகரிக்கலாம், ஏனென்றால் அவர்கள் வடக்கால் சவால் செய்யப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட ஒரு கடந்த காலத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள்.அனுரவுக்கு வாக்களிக்க வேண்டாம் என்று அவர்கள் இன்னும் முடிவு செய்யலாம். ஆனால் ரணில் அல்லது சஜித்துக்கு வாக்களிப்பது வேறு வழியில்லை. கொழும்பு டெலிகிராப் https://thinakkural.lk/article/309033

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.