Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு, 'இம்சை அரசன் 23-ம் புலிகேசி' திரைப்படத்தில் வடிவேலு கட்டுரை தகவல் எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் (இன்று (செப். 12) நடிகர் வடிவேலு தன் 64-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி இக்கட்டுரை பிரசுரிக்கப்படுகிறது.) கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நகைச்சுவையின் வெவ்வேறு பரிணாமங்களை வெளிப்படுத்திய வடிவேலு இன்று தன் 64-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தென்மாவட்டமான மதுரையை சேர்ந்த வடிவேலு, தமிழ் சினிமாவுக்குள் நுழைந்த கதை சுவாரஸ்யமானது. வறுமையான குடும்பத்தை சேர்ந்த வடிவேலுவிற்கு, தன் தந்தை இறப்புக்கு பின்னர் குடும்ப பொறுப்புகளை கவனிக்கும் நிலை ஏற்படுகிறது. மதுரையில் புகைப்படங்களுக்கு கண்ணாடி பிரேம் போடும் சிறிய கடையொன்றில் வேலை பார்த்துவந்த வடிவேலுக்கு அப்போது அங்கு எதிர்பாராவிதமாக சென்ற நடிகர் ராஜ்கிரணின் அறிமுகம், கிடைக்கிறது. பின்னர், ராஜ்கிரணின் அலுவலகத்தில் வேலை பார்த்துவந்த வடிவேலுவை, 1988-ம் ஆண்டில் வெளியான ‘என் தங்கை கல்யாணி’ திரைப்படத்தில் மிகச்சிறிய கதாபாத்திரத்தில் பயன்படுத்துகிறார் இயக்குநரும் நடிகருமான டி.ராஜேந்தர். எனினும், 1991-ஆம் ஆண்டில் கஸ்தூரி ராஜாவின் இயக்கத்தில் ராஜ்கிரண் தயாரித்து நடித்த ‘என் ராசாவின் மனசிலே’ திரைப்படத்தில்தான் வடிவேலு முறையாக நடிகனாக அறிமுகமானார். படம் வெற்றிபெறவே ராஜ்கிரணும் வடிவேலுவும் இணைந்து, ‘எல்லாமே என் ராசாதான்’, ‘பாசமுள்ள பாண்டியரே’, ‘பொன்னு விளையுற பூமி’ என பல படங்களில் நடித்தனர். நீண்ட இடைவெளிக்குப் பின் விஜயின் ‘காவலன்’ திரைப்படத்திலும் இருவரும் இணைந்து நடித்தனர். 1992-ம் ஆண்டில் ஆர்.வி. உதயகுமார் இயக்கத்தில் விஜயகாந்தின் ‘சின்ன கவுண்டர்’ திரைப்படத்தில், செந்தில்-கவுண்டமணி இணையுடன் படம் நெடுகவே நடிக்கும் வாய்ப்பு வடிவேலுவிற்கு கிடைத்தது. அதன்பின், ‘சிங்காரவேலன்’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் நண்பர்கள் பட்டாளத்தில் ஒருவராக நடித்தார் வடிவேலு. வித்தியாசமான உடல்மொழி, ஆடை, அலங்காரம் என, பார்த்தாலே சிரிக்கும்படியான கதாபாத்திரத்தில் அப்படத்தில் வடிவேலு நடித்திருப்பார். ‘எல்லாமே என் ராசாதான்’ திரைப்படத்தில் ‘எட்டணா இருந்தா எட்டூரும் என் பாட்ட கேக்கும்’ பாடலை பாடிய வடிவேலு, பல பாடல்களை பாடியுள்ளார். கடைசியாக அவர் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்தில் ‘ராசா கண்ணு’ பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றது. திருப்புமுனையாக அமைந்த படம் நகைச்சுவை வேடங்களில் நடித்துவந்த வடிவேலுவிற்கு அதே ஆண்டில் வெளியான ‘தேவர் மகன்’ திரைப்படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது என கூறலாம். தான் பேசும் பெரும்பாலான மேடைகளில் ‘தேவர் மகன்’ திரைப்படம் குறித்து வடிவேலு குறிப்பிடுவார். குறிப்பாக, கமல்ஹாசன் தனக்கு அத்திரைப்படத்தில் அளித்த வாய்ப்பு குறித்தும் நடிகர் சிவாஜி கணேசன் படப்பிடிப்பின் போது பாராட்டியது குறித்தும் நிறையவே பகிர்ந்துள்ளார். அந்த திரைப்படத்தில் சிவாஜி இறக்கும் காட்சியில், தான் அந்த காட்சியை பயன்படுத்தி நடித்துவிட வேண்டும் என்பதற்காக மிகையாக அழுததாகவும், அதனால் சிவாஜி கணேசன் தன்னை அழைத்து, “கமல்தானே எனக்கு இந்த படத்தில் மகன். நீ ஏன் இப்படி நடிக்கிறாய்?” எனக்கூறி, நடிப்பை குறைத்துக் கொள்ளுமாறு கூறியதாகவும் நிகழ்ச்சியொன்றில் நகைச்சுவையாக தெரிவித்தார் வடிவேலு. பட மூலாதாரம்,MAAMANNAN MOVIE படக்குறிப்பு, மாமன்னன் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் உள்ளிட்டோர் ‘மாமன்னன்’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், “நானும் இளையராஜாவும் வடிவேலுவை ஆரம்ப காலங்களில் ரசித்தவர்கள். ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் இசக்கி கதாபாத்திரம் சீரியஸாக இருக்கிறதே, இவரா செய்யப் போகிறார், ஒல்லியாக இருக்கிறாரே என்றெல்லாம் வடிவேலுவை சந்தேகமாக கேட்டார்கள். ஆனால், படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் என்னுடைய நடிப்பையும் வடிவேலுதான் தாங்கிப் பிடித்தார் என்றால் அது மிகையல்ல. கடைசி காட்சியில் அவர் அப்படி அழுததால்தான் , ‘போய், புள்ளை குட்டிங்கள படிக்க வைங்க’ என்ற வசனத்தை என்னால் பேச முடிந்தது” என கூறினார். மறக்க முடியாத கதாபாத்திரங்கள் பல திரைப்படங்களில் கோவை சரளாவுடன் இணைந்து நடித்த வடிவேலு, அவரிடம் அடி வாங்கும் காட்சிகள் இல்லாத திரைப்படங்களே இல்லை எனலாம். குறிப்பாக, இயக்குநர் வி.சேகரின் ‘வரவு எட்டணா செலவு பத்தணா’, ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ போன்ற திரைப்படங்களை கூறலாம். தமிழ் சினிமா நகைச்சுவை வரலாற்றில் வடிவேலு - கோவை சரளா இணைக்கு என எப்போதும் தனி இடம் உண்டு. அதேபோன்று, ‘வெற்றிக் கொடிகட்டு’, ‘குண்டக்க மண்டக்க’ படங்களில் வடிவேலு - பார்த்திபன் ஜோடியும் வெற்றிபெற்றது. 2000-களில் அவர் நடித்த பல திரைப்படங்களில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயரை வைத்தே அந்த திரைப்படம் தெரியும் அளவுக்கு தன்னுடைய தனித்துவமான வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழியால் எல்லா தரப்பு மக்களையும் வயது வித்தியாசமின்றி ரசிக்க வைத்தார். பட மூலாதாரம்,MAAMANNAN MOVIE படக்குறிப்பு, ராஜ்கிரணின் 'என் ராசாவின் மனசிலே' படத்தில் வடிவேலு அறிமுகமானார் வடிவேலுவின் ஒற்றை வரி வசனங்களை, மக்கள் தங்கள் தினசரி வேலைகளில் பயன்படுத்துவதை சாதாரணமாக நாம் கேட்க முடியும். வீரபாகு, பாடிசோடா, சூனா பானா, படித்துறை பாண்டி, கைப்புள்ள, 23-ம் புலிகேசி, ‘சந்திரமுகி’ முருகேசன், ‘ஏட்டு’ ஏகாம்பரம், ‘நாய்’ சேகர் என அவருடைய பிரபலமான கதாபாத்திரங்களின் பட்டியல் நீள்கிறது. சமூகத்தில் ஏற்படுத்திய தாக்கம் வடிவேலு நகைச்சுவையின் தனித்துவம் என்ன என்பது குறித்து இயக்குநர் அஜயன் பாலா பிபிசி தமிழிடம் பேசினார். “நகைச்சுவைக்கு என எப்போதும் ஒரு ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டில் இருந்திருக்கிறது. கூத்து, நாடக பாரம்பரியத்தால் இது ஏற்பட்டிருக்கலாம். 1940களில் என்.எஸ். கிருஷ்ணன், 50களில் சந்திரபாபு, 60களில் நாகேஷ், 70களில் சுருளிராஜன் என தொடர்ந்து, 80களில் செந்தில்-கவுண்டமணி என ஒவ்வொரு தசாப்தத்திலும் ஒருவர் கோலோச்சியுள்ளார். என்.எஸ்.கேவுக்கு சமூக கருத்துகள், சந்திரபாபுவுக்கு நடனம், நாகேஷுக்கு உடல்மொழி என, எல்லோரும் தனித்தன்மை வாய்ந்தவர்கள்தான். ஆனால், தன் நகைச்சுவையால் சமூகத்தில் தாக்கம் ஏற்படுத்தியது வடிவேலுதான்” என்றார். தமிழ் பண்பாட்டு தளத்தில் வடிவேலுவிற்கு மிகப்பெரும் பங்கு இருப்பதாக தெரிவித்த அவர், தமிழ்நாட்டு மக்களின் மொழி, தென்மாவட்டத்தின் உடல்மொழி, தமிழரின் பண்பாட்டு சொலவடைகள் ஆகியவற்றை தன் நகைச்சுவையில் வடிவேலு பயன்படுத்தி உள்ளார் எனவும் கூறினார். “360 டிகிரியில் நடிப்பது வடிவேலுவுக்கு கைகூடியிருக்கிறது. ஒருவரை எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அந்த கதாபாத்திரமாக அவர் நடிப்பதை பார்க்க முடியும்” என்கிறார் அஜயன் பாலா. “தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கலைஞன் வடிவேலு, அவரை நாம் சரியாக பயன்படுத்தவில்லை என்ற மனக்குறை எனக்கு இருக்கிறது” என, ஒருமுறை மறைந்த இயக்குநர் மகேந்திரன் கூறியதை அவர் நினைவுகூர்கிறார். நோய்வாய்பட்டு படுக்கையில் உள்ளவர்களுக்கு வடிவேலுவின் நகைச்சுவை மருந்தாக இருப்பதாக அஜயன் பாலா கூறுகிறார். பட மூலாதாரம்,FACEBOOK/MARI SELVARAJ படக்குறிப்பு, 'மாமன்னன்' திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் உதயநிதி மற்றும் இயக்குநர் மாரி செல்வராஜ் “அவருடைய பெரும்பாலான நகைச்சுவைகளில் தன்னை தாழ்த்திக்கொண்டுதான் மற்றவர்களை மகிழ்ச்சிபடுத்துவார். சுயபகடிதான் அவர் நகைச்சுவைகளின் அடிப்படை” என்கிறார் அவர். வடிவேலு நடிக்காத காலகட்டத்திலும் மீம்கள் வாயிலாக இளம் தலைமுறையினரை அவர் சென்று சேர்ந்துள்ளதாக குறிப்பிடும் அஜயன் பாலா, “அதனால்தான் வடிவேலு ‘பண்பாட்டு நாயகன்” என்கிறார். இயக்குநர் மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ திரைப்படத்தில் மாமன்னனாக வடிவேலு நடித்தபோது, அவ்வளவு கனமான கதாபாத்திரத்தை ஏற்று அவரால் நடிக்க முடியுமா என சந்தேகம் எழுப்பினாலும், மிக திறமையாக அக்கதாபாத்திரத்திற்கு அவர் நியாயம் சேர்த்திருப்பார் என்கிறார் அஜயன்பாலா. 'பார்த்தாலே சிரிப்பு வரும்' வடிவேலுவுக்கு நகைச்சுவை திறன் அவருடைய இயல்பிலேயே இருப்பதாக கூறுகிறார், ‘ரசிகை பார்வை’ புத்தகம் உட்பட தமிழ் சினிமா குறித்து தொடர்ச்சியாக எழுதிவரும் ஜீவசுந்தரி பாலன். பிபிசி தமிழிடம் பேசிய ஜீவசுந்தரி பாலன், “அநாயாசமான உடல்மொழி, வசனங்களை பேசும் விதம் இரண்டும்தான் வடிவேலுவின் வெற்றிக்குக் காரணம். வடிவேலுவை பார்த்தாலே சிரிப்பு வரும். சினிமா தவிர்த்த இடங்களில் பேசும்போதும் அவருக்கு நகைச்சுவை உணர்வு அபாரமாக இருக்கிறது. இருக்கும் இடத்தை கலகலப்பாக வைத்துக்கொள்வார்” என்றார். அவருடைய திரைப்படங்கள் சிலவற்றுக்கு நகைச்சுவை பகுதிகளை உருவாக்கிய இயக்குநர்கள் தம்பி ராமையா, சுராஜ் பங்கையும் ஜீவசுந்தரி பாலன் சுட்டிக்காட்டுகிறார். வடிவேலு மீதான விமர்சனங்கள் தனிப்பட்ட முறையில் மறைந்த நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த், சிங்கமுத்து உள்ளிட்டோருடன் வடிவேலுவுக்கு பிரச்னைகள் உள்ளன. மேலும், சில ஆண்டுகளுக்கு முன்பு இம்சை அரசன் 23-ம் புலிகேசி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தொடர்பாக இயக்குநர் ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்துக்கு இடையே பிரச்னை நிலவியது. மேலும், இதற்கு காரணமாக நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருந்தார். அதனடிப்படையில் வடிவேலு நடிக்கக் கூடாது என ‘ரெட் கார்டு’ தடை உத்தரவு இருந்தது. அந்த தடை நீக்கப்பட்டு 2021-ம் ஆண்டில்தான் வடிவேலு மறுபிரவேசம் செய்தார். இதையடுத்து வெளியான ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படம் வெற்றி பெறவில்லை. எனினும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்த ‘மாமன்னன்’ திரைப்படத்தில் அவருடைய கதாபாத்திரம் பரவலாக பேசப்பட்டது. தற்போது சுந்தர். சி இயக்கத்தில் ‘கேங்கர்ஸ்’ எனும் திரைப்படத்தில் வடிவேலு நடித்துவருகிறார். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1jljxw6el9o
  2. அண்ணை படகு உரிமையாளர்கள் தான் முழுவதும் தூண்டி விடுவது என நினைக்கிறேன். எங்கட பக்கமும் வழிச்சுத் துடைச்சால் பிறகு என்ன செய்வினம் என யோசிக்கிறேன்! யார் இவர்களுக்கு மாற்று மீன்பிடி முறைகள், ஆழ்கடல் மீன்பிடித்தல் போன்றவை குறித்து அறிவூட்டுவது.
  3. பார்ப்பேன், எனக்கு தெரியலையே பையா! அதுசரி எங்கை ஆளைக் காணோம்? நல்லூருக்கு போனதோ?!
  4. கொஞ்சம் சொல்லிக் குடுங்கோ அண்ணை, சீட்டின் நீளத்தால தேடிப்பிடிக்க சிரமப்படவேணும்!
  5. திருகோணமலையில் அதிகரித்துவரும் சிங்களக் குடியேற்றங்கள்: தமிழ், முஸ்லிம் மக்களின் சரித்திரம் மற்றும் கலாசாரத்தை அழிப்பதே பிரதான நோக்கம் - 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' வெளியிட்டுள்ள புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டு Published By: VISHNU 12 SEP, 2024 | 09:03 PM (நா.தனுஜா) யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு முயற்சிகளின் பிரதான இலக்காகும் என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டினால் வெளியிடப்பட்டுள்ள நில அபகரிப்பு தொடர்பான புதிய ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இயங்கிவரும் 'த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்' என்ற கல்வியகத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்றுவரும் நில அபகரிப்புக்கள் தொடர்பான தரவுகளையும், ஆவணப்படுத்தல்களையும் உள்ளடக்கிய 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை: இலங்கையில் தமிழர் தாயகத்தை இலக்குவைக்கும் நில அபகரிப்பு' எனும் தலைப்பிலான 32 பக்க ஆய்வறிக்கையொன்று வெளியிடப்பட்டுள்ளது. இலங்கை சுதந்திரமடைந்த நாள் முதல் அபிவிருத்தி என்ற போர்வையில் இலங்கையில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டு குடியேற்றங்கள் நிறுவப்பட்டிருப்பதாகவும், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதிலிருந்து இக்குடியேற்றங்கள் அதிகரித்திருப்பதாகவும் அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருப்பதுடன், தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை வலுவற்றவர்களாக்கும் பொருட்டு அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்தினரால் கையாளப்பட்டுவரும் பலதரப்பட்ட உத்திகள் பற்றியும் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. 'யுத்தத்தின் பின்னர் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மக்களின் ஆதிக்கம் விரிவடைந்துவருகின்றது. வடக்கு, கிழக்கு தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் ஒன்றிணைந்த தாயகம் என்ற கோட்பாட்டை இல்லாமல் செய்யும் அதேவேளை, அவர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் அவர்களது சரித்திரம் மற்றும் கலாசாரம் என்பவற்றை முற்றாக அழிப்பதே இந்த நில அபகரிப்பு முயற்சிகளின் பிரதான இலக்காகும்' என த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட்டின் ஸ்தாபகரும் நிறைவேற்றுப்பணிப்பாளருமான அனுராதா மிட்டால் சுட்டிக்காட்டியிருக்கிறார். இந்த ஆய்வறிக்கையின் பிரகாரம், நில அபகரிப்புக்களின் காரணமாக திருகோணமலை மாவட்டத்தில் தற்போது 27 சதவீதமாக இருக்கும் சிங்கள மக்கள், அந்த மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில் 36 சதவீதத்தைத் தம்வசம் வைத்திருக்கின்றனர். அங்கு 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட நிலப்பரப்பு (41,164 ஏக்கர்) அபகரிக்கப்பட்டிருக்கும் நிலையில், கடந்த 10 வருடங்களில் குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவு இதனால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்ப்பாசனத்திட்டங்கள், துறைமுக நவீனமயமாக்கல், சக்திவலு உற்பத்தி, சுற்றுலாத்துறை மேம்பாடு என்பன உள்ளடங்கலாக 'அபிவிருத்தி' எனும் போர்வையில், 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையின் ஓரங்கமாக இந்த நில அபகரிப்புக்கள் இடம்பெற்றுவருகின்றன. அதேபோன்று தொல்லியல் திணைக்களம், வன இலாகா, மகாவலி அதிகாரசபை மற்றும் சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை என்பன உள்ளடங்கலாகப் பல்வேறு அரச கட்டமைப்புக்கள் இந்த நில அபகரிப்பின் மூலம் இடம்பெறும் 'சிங்களமயமாக்கல்' நடவடிக்கையில் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் 'ஆக்கிரமிப்பின் கீழ் திருகோணமலை' என்ற ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 'தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் செறிந்துவாழும் பகுதிகளில் பௌத்த விகாரைகளை விஸ்தரிப்பதானது பௌத்தமயமாக்கலை மேற்கொள்வதற்கும், குடித்தொகைப்பரம்பலில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் கலாசார சின்னங்களை அழிப்பதற்கும் வாய்ப்பேற்படுத்துகின்றது. 2009 ஆம் ஆண்டிலிருந்து குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் 3887 ஏக்கர் நிலப்பரப்பில் 26 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோன்று இலங்கை இராணுவத்தின் 7 பிராந்திய தலைமையகங்களில் 5 வட, கிழக்கு மாகாணங்களில் நிறுவியிருப்பதன் மூலம் இம்மாகாணங்கள் தொடர்ந்து உச்சளவில் இராணுவமயமாக்கப்பட்டுள்ளன. இது அப்பகுதிகளில் பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்கும், சிங்கள மக்களைக் குடியேற்றுவதற்கும், நிலங்களை அபகரிப்பதற்கும் உதவுகின்றது' எனவும் த ஒக்லன்ட் இன்ஸ்டிடியூட் தெரிவித்திருக்கிறது. https://www.virakesari.lk/article/193536
  6. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையானார் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய 12 SEP, 2024 | 07:57 PM மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (12) முன்னிலையாகியுள்ளார். இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவினால் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இரு வழக்குகள் தொடர்பாகவே அவர் இன்று (12) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். தரமற்ற இம்யூனோகுளோபுளின் தடுப்பூசிகளை இறக்குமதி செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் நேற்று (11) பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/193527
  7. அவர்களுக்கு இங்கு முறையான கட்டமைப்பு எதுவும் இல்லை, ஆனால் தெற்கே கற்கும் பல்கலைக் கழக மாணவர்கள் ஊடாக பெற்றோர், உறவினரிடம் வாக்கு சேகரிக்க முயலுவதாக சிலர் கூறினார்கள்! வாய்ப்பில்லை என நினைக்கிறேன் அண்ணை.
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில், கோவையில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்திருந்தார். அப்போது கோவையிலுள்ள தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள், மத்திய அமைச்சருடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிக்கு, கொடிசியா தொழிற்காட்சி அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவையைச் சேர்ந்த ஏராளமான தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன், ஜி.எஸ்.டி., வருமானவரித்துறை உள்ளிட்ட வெவ்வேறு மத்திய அரசுத் துறைகளின் அதிகாரிகள் பலரும் அதில் பங்கேற்றிருந்தனர். தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் பலரும் பலவிதமான கோரிக்கைகளை முன் வைத்துப் பேசினர். அதில், தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் மற்றும் தென்னிந்திய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் துணைத்தலைவருமான சீனிவாசன் சில விஷயங்களைப் பேசினார். இவர் கோவையில் உணவகத்தையும் நடத்தி வருகிறார். “நீங்கள் இனிப்பு ரகங்களிக்கு 5% ஜி.எஸ்.டி., வைத்திருக்கிறீர்கள். இன்புட் கொடுக்கிறீர்கள். சாப்பாட்டுக்கு 5% வைத்திருக்கிறீர்கள். ஆனால் இன்புட் கிடையாது. கார வகைகளுக்கு 12% வைத்திருக்கிறீர்கள். பேக்கரியில் பிரட்டையும், பன்னையும் விட்டு விட்டு, மற்ற எல்லாவற்றுக்கும் 28% வரை ஜி.எஸ்.டி., வைத்திருக்கிறீர்கள். ஒரே பில்லில் ஒரே குடும்பத்துக்கு, விதவிதமாக ஜி.எஸ்.டி., போட்டுக் கொடுப்பது கஷ்டமாக இருக்கிறது. பன்னுக்கு ஜி.எஸ்.டி., கிடையாது. ஆனால், பன்னுக்குள் க்ரீம் வைத்தால், அதுக்கு 18% ஜி.எஸ்.டி., இருக்கிறது. கஸ்டமர் ‘நீங்கள் கிரீமையும், ஜாமையும் கொடுங்கள். நானே உள்ளே வைத்துக்கொள்கிறேன்' என்கிறார். எங்களால் கடை நடத்த முடியவில்லை,” என்றார் சீனிவாசன் மேலும், “ஒன்று எல்லாவற்றுக்கும் ஒரே மாதிரி அதிகமாக்கிவிடுங்கள். எங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசனிடம் கேட்டால், ‘வடநாட்டில் அதிகம் இனிப்பு உண்கிறார்கள், அதனால் 5% ஜி.எஸ்.டி., வைத்திருக்கிறார்கள்’ என்கிறார். ஆனால் தமிழ்நாட்டில் ஸ்வீட், காரம், காபி என்றுதான் சாப்பிடுவார்கள். தயவு செய்து இதனை பரிசீலனை செய்யவும்,” என்றார். படக்குறிப்பு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,கோவையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார் குறுக்கிட்டு பதிலளித்த நிர்மலா சீதாராமன் இதற்கு அப்போதே குறுக்கிட்டுப் பேசிய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “மாநில வாரியாக நாங்கள் வரி விதிப்பது இல்லை,” என்றார். அதற்கு “இந்தியா முழுதும் நீங்கள் வரியை ஏற்றினாலும் மகிழ்ச்சிதான். ஆனால் ஒரே மாதிரியாக வரி விதியுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஒரு குடும்பம் வந்து சாப்பிட்டால், பில் போடுவது கம்ப்யூட்டருக்கே கஷ்டமாக இருக்கிறது” என்றார் சீனிவாசன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோவையில் தொழில் முனைவோர் அமைப்புகளுடன் நடத்திய கூட்டங்கள், நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்து நிர்மலா சீதாராமன் விளக்கினார் வைரலான வீடியோ நிர்மலா சீதாராமனுடன் சீனிவாசன் பேசிய வீடியோ, சமூக ஊடகங்களில் சில மணி நேரங்களுக்குள் ‘வைரல்’ ஆகப் பரவியது. இந்தநிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கோவையில் இன்று பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார். அப்போது அவரிடம், தென்னிந்திய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் துணைத்தலைவருமான சீனிவாசன் எழுப்பிய கேள்விகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர், “அவர் கேட்டது பற்றி, ஜி.எஸ்.டி., அதிகாரிகளை அனுப்பி, ஓட்டல்கள் சங்கத்தின் கோரிக்கையைப் பற்றிக் கேட்கச் சொல்லியிருந்தேன். அவர் கேள்வி கேட்கும்போது, பன்னுக்கு ஜி.எஸ்.டி., இல்லை; ஆனால் க்ரீமுக்கு இருக்கிறது. இதையெல்லாம் எங்கள் கம்ப்யூட்டரால் கணக்குப் பண்ண முடியவில்லை; கம்ப்யூட்டரே திணறுது என்று ஜனரஞ்சகமாகப் பேசினார். தவறு ஒன்றுமில்லை. அவருடைய ஸ்டைலில் அவர் பேசினார்.''என்றார் மேலும் அவர்,'' உண்மையில், அமைச்சர்களைக் கொண்ட குழ, எந்தெந்தப் பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்கலாம் என்று விரிவாக ஆய்வு செய்தபின்பே, பரிந்துரைத்துள்ளனர். அந்த குழுவில், பா.ஜ.க அல்லாத பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அமைச்சர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள். இதே ஓட்டல்கள் சங்கமும் இதற்காக ஏற்கனவே கோரிக்கை மனு கொடுத்துள்ளது. ஜி.எஸ்.டி., கவுன்சில் அதை ஆய்வு செய்கிறது. ஆனால் தொழிலில் நீண்ட காலமாக இருக்கும் அவர் ஜனரஞ்சகமாகப் பேசியது, ஜி.எஸ்.டி.,க்கு பரம விரோதமாக இருக்கும் மக்களுக்கு அது ரொம்ப ஆதாயமாக இருக்கும்,” என்றார். “ ‘பார்த்தீங்களா ஊறுகாய் மாமியை’ கேள்வி கேட்டார். எல்லாரும் சிரிக்கிறார்கள்’ என்பார்கள். நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ஜி.எஸ்.டி.,யில் மக்களுக்கு இருக்கும் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு, கவுன்சிலில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் முயற்சி செய்கிறார்கள்,” என்று விரிவாக விளக்கினார். படக்குறிப்பு, ‘இனிப்பு ரகங்களிக்கு 5% ஜி.எஸ்.டி., ஆனால் கார வகைகளுக்கு 12% ஜி.எஸ்.டி., ஏன்?’ என்று உணவகத் துறையினர் கேள்வி எழுப்பினர் ஸ்வீட்-காரம் ஆகியவற்றுக்கு வெவ்வேறு வரியா? “ஸ்வீட்டுக்கு ஒரு விதமாகவும், காரத்துக்கு வேறுவிதமாகவும் இல்லாமல் ஒரே சீராக ஜி.எஸ்.டி., விதிக்க வேண்டுமென்று ஓட்டல்கள் சங்கம் வைத்துள்ள கோரிக்கை பரிசீலிக்கப்பட வாய்ப்புள்ளதா?” என்று பிபிசி தமிழ் கேள்வி எழுப்பியது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் நிர்மலா சீதாராமன், “அவர்கள் மட்டுமில்ல, நாடு முழவதும் ஆயிரக்கணக்கான அமைப்புகள் இப்படிக் கோரிக்கை வைத்துள்ளன,” என்றார். “இதுபோல அமைப்புகளின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டு, எதற்காவது ஜி.எஸ்.டி., குறைக்கப்பட்டுள்ளதா?’’ என்று பிபிசி தமிழ் மீண்டும் கேள்வி எழுப்பியது. அதற்கு, “நிறைய பொருட்களுக்குக் குறைக்கப்பட்டுள்ளது. மருத்துவக் காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி., போட்டிருப்பதாகக் கடுமையாக விமர்சனம் செய்தார்கள். ஜி.எஸ்.டி., வருவதற்கு முன்பே, மருத்துவக் காப்பீடுக்கு பல மாநிலங்களில் தனித்தனியாக வரி விதிக்கப்பட்டு வந்தது. இப்போது அது சர்ச்சையானதும், தனிநபர் காப்பீடுக்குக் கொடுப்பதா அல்லது குழு மருத்துவக் காப்பீட்டுக்குக் குறைப்பதா, முதியோருக்கு மட்டும் வரியை விட்டுக் கொடுக்கலாமா அல்லது எல்லோருக்கும் கொடுக்கலாமா என்று பல்வேறு மாநில அமைச்சர்களும் பல வித கேள்விகளையும் கேட்டார்கள். கமிட்டி முடிவின்படியே, அதற்கு முடிவு எடுக்கப்படும்,” என்றார் நிர்மலா சீதாராமன். படக்குறிப்பு, கோவை ஓட்டல் குழுமத்தின் தலைவரும், தென்னிந்திய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் துணைத்தலைவருமான சீனிவாசன் ‘யதார்த்தமாகப் பேசினேன்’ இதற்கிடையில், தென்னிந்திய நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரண்ட் சங்கத்தின் துணைத்தலைவரான சீனிவாசனின் பேச்சு, வைரலாகப் பரவியதால், அவர் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தனிப்பட்ட முறையில் சந்தித்து, விளக்கம் அளித்ததாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. அதைப்பற்றி சீனிவாசனிடம் பிபிசி தமிழ் கேட்டபோது, “நான் எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை. எந்த வித உள் நோக்கத்துடனும் நான் அந்தக் கேள்வியை எழுப்பவில்லை. ஓட்டல்கள் சங்கத்தின் கோரிக்கையை, யதார்த்தமாகப் பேசினேன். அவ்வளவுதான். தமிழ்நாடு ஓட்டல்கள் சங்கத்தின் கெளரவத் தலைவர் என்ற முறையிலும், தனிப்பட்ட முறையிலும் அவரைச் சந்தித்து, இந்த கோரிக்கை குறித்த மனுவையும் கொடுத்தேன். இதே நிதியமைச்சர், ஆங்கிலத்தில் மட்டும் அல்லது இந்தியில் மட்டும் பேசுபவராக இருந்திருந்தால் நான் தமிழில் இவ்வளவு விரிவாகப் பேசியிருக்க முடியாது. தமிழில் இவ்வளவு எளிமையாகப் பேசவும், அணுகவும் கூடிய அறிவார்ந்த அமைச்சர் என்பதால்தான் அவரிடம் இந்தக் கோரிக்கையை விரிவாக எடுத்துக் கூறினேன். நிச்சயமாக அந்த கோரிக்கை ஏற்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/cr404w6ed5ro
  9. Published By: VISHNU 12 SEP, 2024 | 06:27 PM (நா.தனுஜா) இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்டு, நடைமுறையில் இருக்கும் 51/1 தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வது குறித்து ஆராயப்பட்டுவரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் 7 ஆம் திகதி பேரவையில் அதுகுறித்த தீர்மானம் எட்டப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை (9) ஜெனிவாவில் ஆரம்பமானது. அன்றைய தினம் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க்கின் உரை மற்றும் மியன்மார் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான எழுத்துமூல அறிக்கை, அதன்மீதான விவாதம் என்பவற்றைத் தொடர்ந்து இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது. அதன்படி இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தலைப்பிலான 51/1 தீர்மானத்தின் உள்ளடக்க அமுலாக்கத்தில் அடையப்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம் என்பன தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து உயர்ஸ்தானிகரின் அறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் உரையாற்றியதுடன், சர்வதேச மற்றும் உள்நாட்டு மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்கள் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்தன. இவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட சிவில் சமூக அமைப்புக்களில் அறிக்கைகளில் இலங்கை தொடர்பில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட 51/1 தீர்மானத்தை மேலும் இரு வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தக்கூடியவகையில் புதுப்பிக்குமாறு பேரவையிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானம், பின்னர் 51/1 ஆக கால நீடிப்புச்செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த நிலையில், அத்தீர்மானம் இம்மாதத்துடன் முடிவுக்கு வருகிறது. அதனையடுத்து இலங்கை தொடர்பில் புதிய தீர்மானமொன்றைக் கொண்டுவருவது பற்றி முன்னர் ஆராயப்பட்ட போதிலும், இலங்கையில் இது தேர்தல் ஆண்டு என்பதால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மேலும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குக் காலநீடிப்புச் செய்வதற்கான சாத்தியப்பாடு குறித்து பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் ஆலோசிக்கப்பட்டது. இவ்வாறானதொரு பின்னணியில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதியுடன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 57 ஆவது கூட்டத்தொடர் முடிவுடையவுள்ள நிலையில், ஒக்டோபர் 7 ஆம் திகதி இலங்கை தொடர்பான 51/1 தீர்மானம் அரசாங்கத்தின் இணக்கப்பாட்டுடன் பேரவையில் வாக்கெடுப்பின்றி காலநீடிப்புச் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித்தேர்தலின் பின்னர் ஆட்சிபீடமேறும் புதிய அரசாங்கம் இதற்கு உடன்படாவிடின், இலங்கை தொடர்பான தீர்மானத்தைக் காலநீடிப்புச் செய்வதற்கு வாக்கெடுப்புக்குச் செல்லவேண்டிய கட்டாயம் ஏற்படும். https://www.virakesari.lk/article/193533
  10. பட மூலாதாரம்,ANI 12 செப்டெம்பர் 2024, 11:19 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 72. சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். யெச்சூரி இன்று மதியம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதாக பிபிசி தெலுங்கு ஆசிரியர் ஜி.எஸ்.ராம்மோகனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புண்யாவதி தெரிவித்தார். செப்டம்பர் 10 அன்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், யெச்சூரிக்குக் கடுமையான சுவாசத் தொற்று இருப்பதாக கூறப்பட்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி அஞ்சலி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், யெச்சூரியை ‘இடதுசாரி இயக்கத்தின் வலிமையான தலைவர், இந்திய அரசியலின் உயர்ந்த ஆளுமை’ என்று வர்ணித்துள்ளார். “மாணவர் தலைவராக அவசரநிலையை எதிர்த்து நின்றதிலிருந்தே, அவர் நீதியின் மீது உறுதியான அச்சமற்ற தலைவராக இருந்தார். உழைக்கும் மக்கள், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், முற்போக்கு ஆகிய கொள்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டும்'', என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நான் அவருடன் பேசிய நுட்பமான உரையாடல்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்தக் கடினமான சமயத்தில் அவரது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்,” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,X/MKSTALIN சீதாராம் யெச்சூரியின் மரணம் குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரியை ‘எனது நண்பர்’ எனக் குறிப்பிடுள்ளார். "இந்தியா என்ற கருத்தின் பாதுகாவலர், நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். எங்களுக்கிடையிலான நீண்ட விவாதங்கள் இனி நடக்காது. இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள்," என்று தெரிவித்திருக்கிறார். மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “மூத்த அரசியல்வாதியான சீதாராம் யெச்சூரியின் மறைவு தேசிய அரசியலுக்கு ஒரு இழப்பு,” என்று பதிவிட்டிருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ “அன்புக்குரியவரும், எஸ்.எஃப்.ஐ-யின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய மாணவர் கூட்டமைப்பு தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுகிறது,” என்று எழுதியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, யெச்சூரி (இடது) 1984-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்கும், பின்னர் 1992-இல் உயர்மட்டக் குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார் தேசிய அளவில் முதல் மாணவர் சீதாராம் யெச்சூரி 1952-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தை யெச்சூரி சர்வேஸ்வர சோமயாஜி, தாயார் யெச்சூரி கல்பகம். அவர்கள் சென்னையில் குடியேறிய தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சீதாராம் யெச்சூரி, ஹைதராபாத்தில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1969-ஆம் ஆண்டு, தனி தெலுங்கானாவுக்கான போராட்டம் நடந்து வந்ததன் காரணமாக, டெல்லி சென்று, பிரசிடெண்ட் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்தார். அங்கு சி.பி.எஸ்.இ தேர்வில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்தார். பின்னர், செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். 1975-ஆம் ஆண்டு, நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டார். அதனால், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புக்குச் சேர்ந்த போதிலும் அவரால் அதனை முடிக்க முடியவில்லை. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, 1974-இல் இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்.எஃப்.ஐ) சேர்ந்தார். 1975-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். குறுகிய காலத்திற்குள், யெச்சூரி எஸ்.எஃப்.ஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டார். யெச்சூரி 1984-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்கும், பின்னர் 1992-இல் உயர்மட்டக் குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது திறமையாலும், அர்ப்பணிப்பாலும் குறுகிய காலத்திலேயே கட்சியில் அங்கீகாரம் பெற்றார். அவசரநிலைக்குப் பிறகு, ஒரே ஆண்டில் (1977-78) மூன்று முறை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீதாராம் யெச்சூரி போக்குவரத்து, சுற்றுலா, மற்றும் கலாசாரம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார் இந்திரா காந்தியை பதவி விலக வைத்தவர் 1977-ஆம் ஆண்டு அவசரநிலை முடிவுக்கு வந்து, தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்த பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தொடர்ந்தார். இதை எதிர்த்து சீதாராம் யெச்சூரி தலைமையில் 500 மாணவர்கள் இந்திரா காந்தி வீட்டுக்குச் சென்று போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் இந்திரா காந்தியை சந்தித்தனர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை விளக்கி இந்திரா காந்தியிடம் யெச்சூரி ஒரு குறிப்பாணையை வாசித்தார். யெச்சூரி அதை வாசித்துக்கொண்டிருந்த போது, இந்திரா காந்தி எந்த உணர்ச்சியும் இல்லாமல் முழுமையாகக் கேட்டார். பின்னர் மாணவர்கள் அதே குறிப்பாணையை அவரிடம் வழங்க, இந்திரா காந்தி அதை ஏற்றுக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் பதவியை ராஜினாமா செய்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES மூத்த அரசியல் தலைவர் சீதாராம் யெச்சூரி இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2005-இல் முதல் முறையாகவும், 2011-இல் இரண்டாவது முறையாக மாநிலங்களவையில் மேற்கு வங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார். விவசாயிகள், உழைக்கும் மக்கள், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகள், மதவெறி அச்சுறுத்தல் குறித்து ராஜ்யசபாவில் அவர் ஆற்றிய உரைகள் பெரிதும் கவனிக்கப்பட்டன. அவர் போக்குவரத்து, சுற்றுலா, மற்றும் கலாசார துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். 1996-இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் குறைந்தபட்ச கூட்டுத் திட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார். 2015-ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் ஐந்தாவது பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-இல் இரண்டாவது முறையாகவும், 2022-இல் மூன்றாவது முறையாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதலில் இந்திராணி மஜும்தாரை மணந்த யெச்சூரி, அவரிடமிருந்து பிரிந்த பிறகு பத்திரிகையாளர் சீமா சிஸ்தியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இந்திராணி மஜும்தாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி தனது 34 வயதில் ஏப்ரல் 2021-இல் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மகள் அகிலா யெச்சூரி இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். 'வாட் இஸ் ஹிந்து ராஷ்டிரா', 'போலி இந்துத்துவம் அம்பலமானது', 'இந்திய அரசியலில் சாதியும் வர்க்கமும்', 'பற்றாக்குறையின் சகதி’ போன்ற நூல்களை எழுதியுள்ளார். https://www.bbc.com/tamil/articles/cd9d9lle3pjo
  11. பொதுவேட்பாளருக்கு மட்டும் புள்ளடி போடச் சொல்கிறார்கள் பொதுக்கட்டமைப்பைச் சேர்ந்தோர்.
  12. 12 SEP, 2024 | 05:06 PM அரசும் அதன் அதிகாரமும்தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்து வைத்துக்கொண்டிருக்கின்றதா என குரலற்றவர்களின் குரல் அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது. தேசிய சிறைக்கைதிகள் தினமான இன்றைய தினம் வியாழக்கிழமை (12) யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அமைப்பினர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், ஜனநாயகப் பெயர் கொண்டமைந்துள்ள இலங்கை நாட்டில் இன்று 116ஆவது தேசிய சிறைக்கைதிகள் தின நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுமார் 13 ஆயிரம் கைதிகளை மாத்திரமே தடுத்து வைத்திருக்கக்கூடிய இட வசதியினைக் கொண்ட சிறைக்கூடங்களுக்குள் 24 ஆயிரம் கைதிகளை திணித்து அடைத்து வைத்துக்கொண்டிருக்கின்ற நிலையிலேயே சிறைத்துறை இந்த கைதிகள் தின நிகழ்வை கடைபிடித்துவருகிறதென்பது சுட்டிக்காட்டத்தக்கது. இருப்பினும் உணவு, நீர், சுகாதாரம் மற்றும் மருத்துவம் போன்ற அடிப்படை கட்டமைப்புகள் போதுமற்ற நிலையில் பெயருக்காக கொண்டாடப்படுகின்றதா இந்த தேசிய சிறைக்கைதிகள் தினம் என்கின்ற கேள்வி எழுகிறது. இத்தனை மோசமான கட்டமைப்பை கொண்டியங்கும் சிறைக்குள்ளேயே சமூகத்தை நேசித்த எமது தமிழ் அரசியல் கைதிகள் 30 ஆண்டுகளாக வாடிக்கொண்டிருக்கிறார்கள் என்பது எத்தனை கொடூரமானது! "எமது நாடு ஜனநாயக நாடு. நாம் கருணை அன்பு மிக்கதொரு பாரம்பரிய சமூக சமயத்தை சார்ந்தவர்கள். மறப்போம் மன்னிப்போம் என்பது எமது கொள்கையில் ஒரு அங்கம்" என மேடை முழக்கம் செய்கின்ற அரசும் அதன் அதிகாரமும் தான் எமது தமிழ் அரசியல் கைதிகளை பழிதீர்க்கும் போக்கில் 30 ஆண்டுகளாக சிறைக்குள் தடுத்துவைத்துக்கொண்டிருக்கிறதா எனக் கேட்கின்றோம். இன்று தேர்தல் பரப்புரைகளாலும் எண்ணற்ற வாக்குறுதிகளாலும், நாடு நிரம்பித் ததும்பிக்கொண்டிருக்கிறது. ஆனபோதிலும், தமிழினத்தின் பெயரில் மூன்று தசாப்த காலங்களாக சிறையில் கொடுமை அனுபவித்துவரும் எமது தமிழ் அரசியல் கைதிகளின் நரக வாழ்க்கைக்கான முற்றுப்புள்ளியின் எல்லை இதுவரை தெரியவில்லை. உண்மையிலேயே ஒரு ஜனநாயக நாட்டினுடைய சட்டங்களை அமுல்படுத்துகின்ற நீதித்துறையும் அதற்கு ஒப்ப இயங்குகின்ற சிறைத்துறையும் அரச இயந்திரத்தின் முக்கிய இரு பிரிவுகளாகும். இவை குற்றம் காணும் குடிமக்களை சீர்திருத்தி, குறிப்பிட்டதொரு காலத்துக்குள் மீண்டும் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து வாழ்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்கும் பொறுப்புக்குரிய நிறுவனங்களாகும். ஆனாலும், தமிழ் அரசியல் கைதிகளுடைய விடுதலை விடயத்திலே அரசும் அதன் இயந்திரங்களும் மாற்றான் தாய் மனப்போக்குடன் நடந்துகொள்வதன் நோக்கம் என்ன? காலம் காலமாக கதிரையேறும் சிங்கள ஆட்சி அதிகாரங்கள், தமிழ் மக்களை ஏமாற்றி வாக்குச் சூரையாடும் கலாசாரத்துக்கு இனிமேலாவது முற்றுப்புள்ளியிட வேண்டும். மக்களினதும் சர்வதேசத்தினதும் பார்வைக் கோணங்களை திசை மாற்றும் கைங்கரியத்தை கைவிட வேண்டும். நிச்சயமாக இதற்கு மேலும், கால வீணடிப்புச் செய்யாமல் தமிழ் மக்களின் தீர்க்கப்பட வேண்டிய அவசர அடிப்படை விடயங்களுக்கு தீர்வினைக் கூற வேண்டும். குறிப்பாக, இனத்தின் பெயரில் நாளுக்கு நாள் வஞ்சிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் 10 தமிழ் அரசியல் கைதிகளினதும் விடுதலை விடயத்தில், அரசின் உண்மையான இறுதி நிலைப்பாட்டை பொதுவெளியில் தெரிவிக்க வேண்டும் என்பதை 'குரலற்றவர்களின் குரல்' மனிதநேய அமைப்பினராகிய நாம், இந்த ஆண்டு தேசிய சிறைக்கைதிகள் தின பகிரங்க கோரிக்கையாக முன்வைக்கின்றோம். அவ்வாறில்லையேல், இந்த நாட்டின் ஆட்சி அதிகாரங்களுக்கும் அதற்குத் துணை செய்யும் குடி மக்களுக்கும், தமிழினத்தின் சாபக் கேடு என்பது தவிர்த்தொதுக்க முடியாத ஒரு காலத்தின் நியதியாகும் என்பதை நினைவூட்ட கடமைப்படுகின்றோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஊடக சந்திப்பில் குரலற்றவர்களின் குரல் அமைப்பின் தலைவர் முருகையா கோமகன், அரசியல் கைதியான பார்த்தீபனின் சகோதரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/193518
  13. 12 SEP, 2024 | 04:15 PM தமிழ் பொது வேட்பாளர் என்ற ரீதியில் என்னை எந்த பிரதான கட்சித் தலைவர்களும் பேசுவதற்காக அழைக்கவில்லை. அவ்வாறு அவர்கள் அழைத்தாலும் நான் செல்லப்போவதில்லை. நான் எடுத்த இந்த முடிவில் இறுதி வரை பயணித்தே தீருவேன் என தமிழ் பொது வேட்பாளர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பிலுள்ள அவரது அலுவலகத்தில் இன்று வியாழக்கிழமை (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வெற்றியை அல்லது இலக்கை உடைப்பதற்கு இப்போது பல சக்திகள் இறங்கியுள்ளன. இந்த நபர்களினால் இன்னும் சில தினங்களில் அல்லது தேர்தலுக்கு முதல் நாளிலோ என்னைப் பற்றி துண்டுப்பிரசுரங்கள் வெளியிடப்படலாம். நான் தேர்தலில் இருந்து ஒதுங்கிவிட்டேன் என்று கூட அவர்கள் துண்டுப்பிரசுரங்கள், காணொளிகளை வெளியிடக்கூடும். இவை எதையும் மக்கள் நம்ப வேண்டாம். தமிழ் மக்களுக்கு நான் ஒன்று கூறுகின்றேன். நீங்கள் குழப்பமடையத் தேவையில்லை. விருப்பு வாக்கு, விருப்பத் தேர்வு என்கின்ற விடயத்தில் பலர் மக்களை குழப்பமடையச் செய்து வருகின்றனர். மக்களாகிய நீங்கள் எனது சங்கு சின்னத்துக்கு மட்டும் ஒரு புள்ளடியிடுங்கள் அவ்வளவுதான். இன்று இந்த பொது வேட்பாளர் என்கின்ற விடயம் இலங்கையில் மட்டுமல்ல, இந்தியா உள்ளிட்ட சில நாடுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் எங்கள் விடுதலைப் போராட்டத்தில் அகிம்சை ரீதியிலான, ஆயுத ரீதியிலான இராஜதந்திர செயற்பாட்டிலே கூர்மை பெற்றபோது எல்லோருமே இதை அவதானித்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் எல்லோருமே தவறு விட்டிருக்கின்றார்கள். இலங்கை மட்டும் எங்களை ஏமாற்றவில்லை. இந்தியாவும் எங்களை ஏமாற்றி இருக்கின்றது. இறுதிப் போரில் இனப்படுகொலையை செய்வதற்காக பல நாடுகள் இலங்கைக்கு துணை போயிருக்கின்றது. எனவே அவர்கள் அனைவருக்கும் ஒரு மனச்சாட்சி இருக்கின்றது. இணைந்த வட கிழக்கிலே ஒரு அரசியல் தீர்வினை தமிழர்களுக்கு வழங்க அவர்கள் தவறியிருக்கின்றார்கள். அந்த தவறை சுட்டிக்காட்டவேண்டிய உரிமை வடகிழக்கு மக்களுக்கு இருக்கிறது. அதை ஒரு ஜனநாயக வடிவமாக நாங்கள் காட்ட இருக்கின்றோம். தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் வேட்பாளராக நான் வரவேண்டும் என்று ஆசைப்படவில்லை. வேட்பாளராக என்னை தெரிவு செய்வதற்கு முன் நானே இரண்டு பேரை வேட்பாளராக முன்மொழிந்தேன். இறுதியாக சில மாற்றங்கள் ஏற்பட்டதன் காரணமாக நான் இதை ஏற்றிருக்கின்றேன். அனைவரும் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் அரசுக் கட்சியில் இருந்து வேறு அரசியல் கட்சியில் போட்டியிடுவது தமிழ் அரசு கட்சியை விட்டு விலகிச் செல்வதாக கருதப்படலாம். நான் இன்னுமொரு கட்சியில் அங்கத்துவம் பெறவில்லை. இப்பொழுதும் தமிழ் அரசுக் கட்சியில் தான் இருக்கின்றேன். நான் தமிழ் தேசிய கொள்கையுடையவன். கட்சியின் கொள்கையை நான் ஏற்றுக்கொள்கிறேன். அதே போன்று எனது தமிழ் தேசிய கொள்கையினையும் கட்சி ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/193514
  14. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் & நித்யா பாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 6 மணி நேரங்களுக்கு முன்னர் மலையாள சினிமாவை உலுக்கிய நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையின் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலிக்கிறது. தமிழ் திரைத் துறையிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் சுரண்டல், பாலியல் துன்புறுத்தல்கள் ஆகியவை நடப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 8ஆம் தேதி) நடந்த தமிழ் சினிமா நடிகர்களின் கூட்டமைப்பான தென்னிந்திய நடிகர்கள் சங்கத்தின் 68வது பேரவைக் கூட்டத்தில், பெண்களுக்கு எதிரான புகார்களை விசாரிப்பதற்கான குழு பற்றி அறிவிக்கப்பட்டது. இந்தக் குழு தமிழ் திரைத்துறையில், பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு ஒரு தீர்வைக் கொண்டு வருமா? சங்கத்தின் உறுப்பினர்கள், மூத்த சினிமா பத்திரிகையாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நடிகர்கள் என்ன சொல்கிறார்கள்? நடிகர் சங்கம் என்ன செய்துள்ளது? பட மூலாதாரம்,NADIGAR-SANGAM.ORG படக்குறிப்பு, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவர் பூச்சி எஸ். முருகன் நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், தற்போது அந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், பெண்களுக்கான தன்னார்வ அமைப்புகள், ஆகியோரை இணைக்க முடிவு செய்து, அக்குழுவுக்கென ஒரு மின்னஞ்சல் முகவரியையும் உருவாக்கியிருப்பதாகத் தெரிவிக்கின்றனர் நடிகர் சங்க நிர்வாகிகள். மேலும் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அக்குழுவின் தலைவரான நடிகர் ரோகிணி விசாகா கமிட்டியை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னிந்திய நடிகர் சங்கத்தின் துணைத் தலைவரான பூச்சி S. முருகன், கடந்த 2019ஆம் ஆண்டே தென்னிந்திய நடிகர் சங்கத்தில், பாலியல் புகார்களை விசாரிக்க விசாகா கமிட்டி அமைக்கப்பட்டதாகவும், செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில் அதுபற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். “நடிகர் சங்கத்தில் ஏற்கெனவே இருந்த குழுவில் 5 பேர் இருந்தனர். தற்போது அக்குழுவில், ஒரு பெண் வழக்கறிஞர், பெண்களுக்கான ஒரு தன்னார்வ அமைப்பு ஆகியோரை இணைத்து அக்குழு புதுப்பிக்கப்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது,” என்றார். மேலும், இந்தக் குழுவில் புகாரளிக்க ஏற்கெனவே ஒரு தொலைபேசி எண் இருந்ததாகவும், தற்போது அந்த எண்ணோடு சேர்த்து, புகாரளிக்க ஒரு புதிய மினனஞ்சல் முகவரியையும் சங்கம் உருவாக்கி இருப்பதாகவும் பூச்சி முருகன் தெரிவித்தார். புகார்கள் வரும் பட்சத்தில், அதை இந்தக் குழு விசாரித்து, அது உண்மையெனில் அதற்கு நடவடிக்கை எடுக்கும், தேவைப்படும் பட்சத்தில் காவல்துறையிடமும் அக்குழு புகார் அளிக்கும் என்றார் அவர். பேரவைக் கூட்டத்திற்கு முன்னர் ஒரு வாரமாக சங்கத்தில் ஆலோசிக்கப்பட்டு, விசாகா குழுவில் இந்தப் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், புத்துயிர் கொடுக்கப்பட்டிருக்கும் விசாகா கமிட்டி, தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான பெண் நடிகர்கள் கொடுக்கும் புகார்களை மட்டும் விசாரித்தாலும், உறுப்பினர்கள் அல்லாத பெண் நடிகர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், அவர்களுக்கும் வழிகாட்டுதலும் தார்மீக ஆதரவும் கொடுக்கும் என்றார் பூச்சி முருகன். இதோடு, நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத் தீர்மானத்தில், பெண் நடிகர்களுக்கு ‘படப்பிடிப்பு நடக்கும் இடங்களில் தரமான உடை மாற்றும் அறை வசதி, கழிவறை வசதி மற்றும் உரிய பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய, தயாரிப்பாளர்களோடு பேசி ஆவன செய்யத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாகா கமிட்டியினர் சொல்வது என்ன? பட மூலாதாரம்,NADIGAR-SANGAM.ORG படக்குறிப்பு, நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், மூத்த நடிகருமான லதா சேதுபதி செப்டம்பர் 8ஆம் தேதி நடந்த நடிகர் சங்கத்தின் பேரவைக் கூட்டத்தில், விசாகா குழுவின் தலைவரான நடிகை ரோகிணி, அக்குழுவைப் பற்றியும் அதன் செயல்பாடுகள் பற்றியும் பேசினார். அப்போது அவர், பாலியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் பெண் நடிகர்கள் விசாகா குழுவை அணுகிப் புகார் கொடுக்க வேண்டும் என்றும், அப்படிக் கொடுக்கப்படும் புகார் உறுதியானால், அதில் ஈடுபட்ட நபருக்கு 5 ஆண்டுகள் நடிக்கத் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்தார். நடிகர் சங்கத்தின் விசாகா கமிட்டியை பற்றி மேலும் அறிந்துகொள்ள பிபிசி தமிழ் ரோகிணியைத் தொடர்பு கொண்டது. அப்போது அவர், இந்தக் குழுவில், வழக்கறிஞர்கள், தன்னார்வ அமைப்புகள், பாலினம் சார்ந்த மனநல ஆலோசகர்கள் ஆகியோரை இணைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்ததோடு, அதற்கு மேல் அதுபற்றி எதுவும் பேச மறுத்துவிட்டார். இதுகுறித்து நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினரும், மூத்த நடிகையுமான லதா சேதுபதியிடம் பிபிசி தமிழ் பேசியது. நடிகர் சங்கத்தில், 2019லேயே விசாகா கமிட்டி இருந்தபோதும், அது அதிகமாகச் செயல்பாடில்லாமல் இருந்ததாகத் தெரிவித்தார். தற்போது “புகார்களை விசாரிக்க ஏதுவாக, கமிட்டியில் ஒரு ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியை இணைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டது,” என்றார் அவர். “இந்தக் குழுவின் நோக்கமே, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண் நடிகர்கள், உடனடியாக, துணிவாக முன்வந்து புகாரளிக்க வேண்டும் என்பதுதான்,” என்றார் லதா. ‘வரவேற்கத்தக்க மாற்றம்தான், ஆனால்…’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சினிமா துறை, ஒரு முறையான கட்டமைப்புடன் கூடிய துறை இல்லை, அதனால் பெண்களுக்கு எதிரான இத்தகைய விஷயங்களுக்கு இத்தனை நாளாகத் தீர்வு காண்பதில் சிக்கல் இருந்தது என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள் தமிழ்த் திரைத்துறையில் இதுபோன்ற ஒரு மாற்றம் வந்திருப்பது குறித்து, மூத்த சினிமா பத்திரிகையாளரான அனுபமா சுப்ரமணியனிடம் பிபிசி தமிழ் பேசியது. இதுவொரு வரவேற்கத்தக்க விஷயம் என்று கூறும் அனுபமா, ஆனால் இது ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடாது என்றார். “இதற்கு முன்னரே நடிகர் சங்கத்தில் 2019ஆம் ஆண்டு விசாகா கமிட்டி அமைக்கப்பட்டிருந்தாலும் அது செயலிழந்துவிட்டது. அதன் பிறகு, கோவிட் பொதுமுடக்கம் வந்ததால் அது பேச்சற்றுப் போய்விட்டது. ஆனால் இப்போது இந்த விஷயம் பற்றி மிகப் பரவலாகப் பேசப்படுவதால் இத்தகைய மாற்றம் வந்திருக்கிறது,” என்கிறார் அவர். இது நன்கு திட்டமிடப்பட்ட முடிவு என்று கூறும் அவர், ஆனால் மாற்றம் மிக மெதுவாகவே வரும் என்றார். மேற்கொண்டு பேசியபோது “இந்த கமிட்டியின் தாக்கம் எந்தளவுக்கு இருக்கும் என்பது, யார்மீது புகார் கொடுக்கப்படுகிறது, அது எத்தகைய புகார் என்பதைப் பொறுத்தது. இந்தப் புகார்களின் தகவல்கள் சட்டப்படி ரகசியமாகக் காப்பாற்றப்பட வேண்டும். அதனால், ஒருவேளை ஒரு பெரிய நடிகரின் மீது கொடுக்கப்படும் புகார் நிரூபிக்கப்பட்டு அவர் நடிப்பதில் இருந்து 5 ஆண்டுகள் தடை செய்யப்பட்டால்தான் இந்த கமிட்டியின் செயல்பாடுகள் குறித்து வெளியில் தெரிய வரும்,” என்கிறார். தமிழ் சினிமா துறையில் நடிகைகள் பல காலமாகவே சந்தித்து வரும் சிக்கல்கள் குறித்துப் பேசிய அனுபமா, தமிழ் சினிமாவில் துணை நடிகைகள் மிக மோசமாக நடத்தப்பட்ட சம்பவங்கள் உண்டு என்றும் கூறுகிறார். “படப்பிடிப்புத் தளத்தில் அவர்கள் உடை மாற்றுவதற்கான அறைகூட இருக்காது. அவர்களுக்கு முறையான கழிப்பறை வசதிகள் இருக்காது. இப்போது நடிகர் சங்கத்தின் தீர்மானத்தில் அது பற்றியும் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது,” என்கிறார். மேலும் பேசிய அனுபமா, சினிமா துறை ஒரு முறையான கட்டமைப்புடன் கூடிய துறை இல்லை, அதனால் பெண்களுக்கு எதிரான இத்தகைய விஷயங்களுக்கு இத்தனை நாளாகத் தீர்வு காண்பதில் சிக்கல் இருந்தது என்கிறார். “அதனால், விசாகா குழு இப்போது புதுப்பிக்கப்பட்டிருப்பதே ஒரு நல்ல மாற்றம்தான். புகார் கொடுக்கும் பெண்களின் அடையாளம் வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்படும் என்ற தைரியத்தோடு அவர்கள் புகார் தெரிவிக்க முன்வரலாம். இல்லையெனில், அவமானப்படுத்தப்படுவோம், வேலை கிடைக்காது என்பன போன்ற அச்சத்தால், அவர்கள் இதுபற்றிப் பேச முன்வரமாட்டார்கள்,” என்கிறார் அனுபமா. ‘இது வெற்று அறிவிப்பு’ படக்குறிப்பு, நீதிபதி ஹேமா கமிட்டியின் மலையள திரையுலகம் குறித்த அறிக்கை தமிழ்த் திரைத்துறையிலும் சர்ச்சையைக் கிளப்பியது ஆனால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் இந்தச் சமீபத்திய அறிவிப்பு, ஏற்கெனவே பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் நடிகைகளிடம் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை எனத் தெரிகிறது. படப்பிடிப்பின் போது மிக மோசமான முறையில் நடத்தப்பட்டதாகவும், பாலியல் ரீதியான சீண்டல்களுக்கு உள்ளானதாகவும் கூறும் குணச்சித்திர நடிகை ஒருவர், இது வெறும் அறிவிப்பாகத்தான் இருக்கும் என்கிறார். தமிழ் திரைத்துறையில் இருக்கும் பெண்கள் புகார் தெரிவிப்பதற்கென அவசர உதவி மையம் மற்றும் இ-மெயில் முகவரி ஆகியவை அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்துப் பேசிய அவர், "ஏற்கெனவே விசாகா கமிட்டி இருக்கிறது. ஆனால் பெண் கலைஞர்கள் என்ன மாற்றங்களையும், மேம்பாட்டையும் கண்டார்கள்? விசாகா கமிட்டி அவர்களுக்கு எந்த வகையில் உதவியது?" என்ற கேள்வியை எழுப்புகிறார். "இங்கே இருக்கும் விசாகா கமிட்டியும், நடிகர் சங்கமும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கவில்லை என்பதுதான் உண்மை. இத்தகைய சூழலில், இதுபோன்ற புதிய அறிவிப்புகள் வெறும் அறிவிப்பாகவேதான் இருக்குமே அன்றி, அதனால் ஆக்கப்பூர்வமான மாற்றங்கள் ஏற்படாது. ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் புகார்களுக்கு முதலில் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிறகு புதிய பிரச்னைகள் பற்றிக் கவலைப்படலாம்," என்றும் அவர் கூறுகிறார். முன்னர் கொடுக்கப்பட்ட புகார்கள் குறித்து பிபிசியிடம் பேசிய நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பூச்சி முருகன், சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர், நடிகர் சங்கத்தின் விசாகா குழுவிடம் இரண்டு புகார்கள் வந்ததாகவும், அவை அக்குழுவால் விசாரிக்கப்பட்டு, தீர்க்கப்பட்டதாகவும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/clyn357n00vo
  15. 12 SEP, 2024 | 01:37 PM யுத்த குற்றங்களில் ஈடுபட்ட இலங்கையர்களிற்கு எதிராக தடைகள் விதிக்கப்படுமா என்பது குறித்து பிரிட்டன் தெளிவான பதிலை வழங்க தவறியுள்ளது. எதிர்கால தடைகள் குறித்த ஊகங்களை வெளியிடுவது பொருத்தமற்ற விடயம் ஏனென்றால் தடைகளினால் ஏற்படக்கூடிய தாக்கத்தினை அது குறைக்கலாம் என பிரிட்டனின் வெளிவிவகார, பொதுநலவாய, அபிவிருத்தி அலுவலக இராஜாங்க அமைச்சர் கதெரின் வெஸ்ட் தெரிவித்துள்ளார். இலங்கையில் யுத்த குற்றங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிரான மக்னிட்ஸ்கி பாணியிலான தடைகளின் தாக்கம் குறித்த எழுத்துமூல கேள்விக்கே அவர் இதனை தெரிவித்துள்ளார். மனித உரிமை விவகாரத்தில் இலங்கை பிரிட்டனிற்கு தொடர்ந்தும் முன்னுரிமைக்குரிய நாடாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள அமைச்சர் உண்மை நீதி பொறுப்புக்கூறல் ஆகிய விடயங்களில் பிரிட்டன் தொடர்ந்தும் இலங்கையுடன் ஈடுபாட்டை பேணுகின்றது என குறிப்பிட்டுள்ளார். சர்வதேச மனித உரிமை தடைகள் என்பது பிரிட்டனின் வெளிவிவகார கொள்கையின் முக்கியமான ஒரு சாதனம் என தெரிவித்துள்ள அவர் பரந்துபட்ட வெளிவிவகார கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியம் என கருதப்படும் தருணத்தில் தடைகளை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/193496
  16. தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரும் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்கவை கைது செய்து விசாரணைகளை ஆரம்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுர திஸாநாயக்க இனக்குழுக்கள் மத்தியில் அமைதியின்மையை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி தேசப்பற்றுள்ள மக்கள் சக்தியினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. அநுர குமார திஸாநாயக்க யாழ்ப்பாணத்தில் வெளியிட்ட கருத்துக்களால் இன முரண்பாடுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் சுகத் ஹேவாபத்திரன குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/309333
  17. என்னுடைய பெற்றோர் பொதுவேட்பாளருக்கு போடுவதாக இருக்கிறார்கள். ஏனைய நண்பர்களிடம் விசாரித்து சொல்கிறேன் அண்ணை.
  18. 12 SEP, 2024 | 03:34 PM நாகப்பட்டினம்: தங்களின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இலங்கை மீனவர்கள் மற்றும் இலங்கை கடற்படையினரைக் கண்டித்து செருதூர் மீனவர்கள் இன்று (செப்.12) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மீன்பிடி தொழிலை நம்பியுள்ள சுமார் 2500 பேர் வேலையிழந்துள்ளனர். தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் தஞ்சாவூர் புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வங்கக் கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது இலங்கை கடற்படையினரால் கடுமையாக தாக்கப்படுவதும் சிறைபிடிக்கப்படுவதும் தொடர் நிகழ்வுகளாக நடந்து வருகின்றன. சில நேரங்களில் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தும் சம்பவங்ளும் அதனால் மீனவர்கள் உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கின்றன இதனைத் தடுத்து நிறுத்தக்கோரி மத்திய - மாநில அரசுகளிடம் தமிழக மீனவர்கள் முறையிட்ட வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நாகை மாவட்டம் செருதூர் பகுதியைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் அடுத்தடுத்து இலங்கை கடற்கொள்ளையர்களால் தாக்கப்பட்டனர். இந்தச் சம்பவங்களில் தமிழக மீனவர்கள் தங்களது மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை பறிகொடுத்தனர். அந்த அதிர்ச்சி விலகுவதற்குள்ளாக கடந்த 10-ம் தேதி கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த செருதூர் மீனவர்களின் ஃபைபர் படகு மீது இலங்கை கடற்படை கப்பல் மோதி ஏற்பட்ட விபத்தில் நான்கு மீனவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். நல்லவேளையாக அவர்கள் அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டனர். சக மீனவர்களின் உதவியோடு கரை திரும்பிய அந்த நான்கு மீனவர்களும் ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்இ தமிழக மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்இ தமிழக மீனவர்கள் தாக்கப்படும் சம்பவங்களை கண்டிக்கும் விதமாகவும் செருதூர் பகுதி மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி கடலுக்கு ஏற்கனவே மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பிய நிலையில்இ இன்று புதிதாக யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் செருதூர் பகுதியில் உள்ள சுமார் 400-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள 2500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். மத்திய - மாநில அரசுகள் தலையிட்டு இலங்கை அரசுடன் சுமுகமாக பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என செருதூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/193504
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 12 செப்டெம்பர் 2024, 06:17 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் அபோஃபிஸ் 99942. ‘பெருங்குழப்பத்தின் கடவுள் (God of Chaos)’ என்றழைக்கப்படும் இந்தச் சிறுகோள் இப்போது பேசுபொருளாகி வருகிறது. இந்தச் சிறுகோள் வரும் 2029ஆம் ஆண்டில், பூமிக்கு மிக நெருக்கமாக, அதாவது சுமார் 32,000கி.மீ. தொலைவு வரைக்கும் அருகே வரும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். பண்டைய எகிப்திய புராணங்களில் தீமை மற்றும் குழப்பத்தை விளைவிக்கக்கூடிய பேய்ப்பாம்புதான் அபோஃபிஸ். அதன் பெயரைக் கொண்ட இந்தச் சிறுகோளும் பூமியில் கடந்த ஆண்டுகளில் சில குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 335 மீட்டர் அகலம் கொண்ட அபோஃபிஸ் சிறுகோள் பொதுவெளியில் பேசுபொருளாவது இது முதல்முறையல்ல. இது கண்டுபிடிக்கப்பட்ட 2004ஆம் ஆண்டு முதலே, பூமிக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய சிறுகோளாக இது அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பூமி மீது மோதக்கூடிய சிறுகோள்களில் அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடிய ஒன்றாக இது இருக்கும் என்று குறிப்பிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, விஞ்ஞானிகள் இந்தச் சிறுகோளை தொடர்ச்சியாகக் கண்காணித்தவாறு உள்ளனர். ஆனால், சமீபத்திய தரவுகளின்படி, இதனால் தற்போதைக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்ற முடிவுக்கு நாசா விஞ்ஞானிகள் வந்துள்ளனர். நாசாவின் சமீபத்திய தரவுகள்படி, அபோஃபிஸ் 99942 எனப்படும் இந்தச் சிறுகோள், 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதி பூமிக்கு அருகில் துல்லியமாக 31,860கி.மீ. நெருக்கமாக வரப் போகிறது. அபோஃபிஸ் மூலம் பூமிக்கு ஆபத்தா? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, கடந்த 2021ஆம் ஆண்டில், அபோஃபிஸ் சிறுகோளின் சுற்றுப்பாதை துல்லியமாகக் கண்டறியப்பட்டது. இந்தச் சிறுகோள் பூமியை நெருங்கி வரும்போது, புவியின் கிழக்கு அரைக்கோளத்தில், தொலைநோக்கியின் உதவியின்றியே, அதை அனைவராலும் பார்க்க முடியும். இதன்மூலம், சூரிய குடும்பத்தின் ஆதிகாலச் சிறுகோள் ஒன்றை மிக நெருக்கமாகப் பார்க்கும் அரிய வாய்ப்பு வானியலாளர்களுக்குக் கிடைக்கும். இந்தச் சிறுகோள் மூலம் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்ற கேள்விக்குப் பதிலளித்த மூத்த விஞ்ஞானி முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன், “பூமியில் இருந்து சுமார் 32,000கி.மீ. தொலைவில் இதன் சுற்றுவட்டப்பாதை இருக்கும் என்பதால், பூமி மீது எந்தவித நேரடித் தாக்கமும் இருக்கப் போவதில்லை,” என்று கூறினார். இது முதன்முதலாக 2004இல் கண்டுபிடிக்கப்பட்டபோது, இது பூமி மீது மோதுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகக் கூறப்பட்டது. அதுகுறித்த அச்சுறுத்தலும் எழுந்தது. ஆனால் கடந்த 2021ஆம் ஆண்டில், அபோஃபிஸின் சுற்றுப்பாதை துல்லியமாகக் கண்டறியப்பட்டது. அதோடு வானியலாளர்களின் அவதானிப்புகளை உள்ளடக்கிப் பகுப்பாய்ந்த பிறகு, அதனால் பூமிக்குக் குறைந்தபட்சம் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது என்ற முடிவுக்கு நாசா விஞ்ஞானிகள் வந்துள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இதற்கு முன்பு அபோஃபிஸ் பூமிக்கு நெருக்கமாக வந்தபோது அதற்கும் பூமிக்கும் இடையே 1.7 கோடி கிலோமீட்டர் தொலைவு இருந்தது. சமீபத்தில் 2029ஆம் ஆண்டில் அது பூமியை நெருங்கி வரும் என்று வானியலாளர்கள் கணித்தபோது, கூடவே அதனால் ஏற்படக்கூடிய அச்சுறுத்தல்களும் விவாதப் பொருளாயின. ஆனால் நாசா அவதானிப்புகளின்படி, அதன்மூலம் 2029ஆம் ஆண்டில் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்ற முடிவுக்கு விஞ்ஞானிகள் வந்துள்ளனர். இதற்கு முன்பு, “2004, 2013 ஆகிய ஆண்டுகளில் பூமிக்குச் சற்று நெருக்கமாக அது வந்துள்ளது. ஆனால் அப்போதெல்லாம் இருந்த தூரத்தைவிட இது மிகவும் குறைவாக இருப்பதால்தான் அச்சம் எழுகிறது. இருப்பினும், அதன் தொலைவு குறித்த இப்போதைய கணிப்புகளின் துல்லியத்தன்மை, அந்த அச்சுறுத்தலைத் தேவையற்றது எனப் புறக்கணிக்க உதவியுள்ளதாக” கூறுகிறார் முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன். இதற்கு முன்பு அபோஃபிஸ் பூமிக்கு நெருக்கமாக வந்தபோது அதற்கும் பூமிக்கும் இடையே 1.7 கோடி கிலோமீட்டர் தொலைவு இருந்தது. ஆனால், இம்முறை புவி ஒத்திசைவு செயற்கைக்கோள்கள் இருக்கும் தூரத்தைவிட மிக நெருக்கமாக இந்தச் சிறுகோள் வரப் போகிறது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, அபோஃபிஸ் சிறுகோள் 2029ஆம் ஆண்டு ஏப்ரல் 13ஆம் தேதியன்று பூமிக்கு நெருக்கமாக வரவுள்ளது. இந்நிலையில், அது பூமியை நெருங்கும்போது அந்தப் பகுதியில் இருக்கும் செயற்கைக்கோள்களின் இயக்கத்தை அது பாதிக்குமா என்று கேட்டபோது, “நாம் முன்கூட்டியே அபோஃபிஸின் பாதையைக் கணித்துவிட்டதால், அது பூமியை நெருங்கும் முன்பாகவே செயற்கைக் கோள்களை அந்தக் குறிப்பிட்ட பாதையில் இருந்து நகர்த்திவிட முடியும்,” என்று முனைவர்.த.வி.வெங்கடேஸ்வரன் விளக்கினார். முந்தைய ஆய்வுகளில் அது 2036இல் மீண்டுமொரு முறை பூமியை நெருங்கி வரும். அப்போது அதனோடு தாக்கம் ஏற்படுவதற்கான அச்சுறுத்தல் இருப்பதாக முன்னர் கூறப்பட்டது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம், அபோஃபிஸை அவதானித்தபோது, சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுவட்டப் பாதையின் மதிப்பீட்டைத் துல்லியமாகக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, 2036, 2068 ஆகிய அபாயங்களை முழு நம்பிக்கையுடன் விஞ்ஞானிகள் புறக்கணித்துள்ளனர். “அபோஃபிஸ் சிறுகோளால், 2068 மட்டுமில்லை, எங்கள் கணக்கீடுகளின்படி, குறைந்தபட்சம் அடுத்த ஒரு நூற்றாண்டுக்கு அது பூமி மீது எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது,” என்று நாசா விஞ்ஞானி டேவிட் ஃபர்னோச்சியா கூறியுள்ளார். அபோஃபிஸ்-ஐ ஆய்வு செய்யப்போகும் நாசா விண்கலம் பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, ஒசைரிஸ் அபெக்ஸ் விண்கலம் ஏப்ரல் 29, 2029 அன்று அபோஃபிஸ் சிறுகோளுக்கு நெருக்கமாக, 4,000கி.மீ. தொலைவில் பறந்து சென்று ஆய்வு செய்யும். அபோஃபிஸ் சிறுகோள் முதன்முதலாக ஜூன் 19, 2004 அன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதை முதன்முதலாகக் கண்டுபிடித்த வானியலாளர்கள் ராய் டக்கர், டேவிட் தோலன், ஃபேப்ரிசியோ பெர்னார்டி ஆகியோரால், தொழில்நுட்பம் மற்றும் வானிலை சிக்கல்கள் காரணமாக இரண்டு நாட்கள் மட்டுமே இந்தச் சிறுகோளை அவதானிக்க முடிந்தது. பிறகு, ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு குழுவினர் அதே ஆண்டின் பிற்பகுதியில் இந்தச் சிறுகோளை மீண்டும் கண்டுபிடித்தனர். அப்போதிருந்து, ஆப்டிகல் மற்றும் ரேடார் தொலைநோக்கிகள் அபோஃபிஸ் சூரியனைச் சுற்றி வரும்போது, அதைக் கண்காணித்து வருகின்றன. அந்தச் சிறுகோளைத் தொடர்ந்து அவதானிப்பதன் மூலம், விஞ்ஞானிகள் அதன் எதிர்காலச் சுற்றுப்பாதையையும் கணித்துள்ளனர். மேலும், செப்டம்பர் 2023இல் பென்னு சிறுகோளின் மாதிரியைச் சேகரித்து முடித்த ஒசைரிஸ்-ரெக்ஸ் (OSIRIS-Rex) விண்கலத்தை, ஒசைரிஸ்-அபெக்ஸ் (OSIRIS-APEX) எனப் பெயர் மாற்றம் செய்து அபோஃபிஸை நோக்கி நாசா விஞ்ஞானிகள் திருப்பி அனுப்பினர். பட மூலாதாரம்,NASA இந்தச் சிறுகோள் பூமிக்கு நெருக்கமாக 2029இல் வரும்போது, அந்த விண்கலம் அதை ஆய்வு செய்யும். ஏப்ரல் 29, 2029 அன்று அபோஃபிஸ் சிறுகோளுக்கு நெருக்கமாக, 4,000கி.மீ. தொலைவில் பறந்து சென்று ஆய்வு செய்யும். பிறகு ஜூன் மாதத்தில் அபோஃபிஸில் தரையிறங்கி, அதன் நிலப்பரப்பை வரைபடமாக்குவதோடு, சிறுகோளின் வேதிமக் கலவையைப் பகுப்பாய்வு செய்யும். ஒசைரிஸ் அபெக்ஸ் விண்கலம் அதை நெருங்கும்போது, விண்கலத்தில் உள்ள கேமராக்கள் சிறுகோளின் படங்களை எடுக்கும். அந்த நேரத்தில் பூமியிலுள்ள தொலைநோக்கிகள் அபோஃபிஸை கண்காணிக்கும். பூமிக்கு மிக நெருக்கமாக அது வரும்போது, சிறுகோளில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் ஒசைரிஸ் அபெக்ஸ் விண்கலத்தால் துல்லியமாகக் கண்டறியப்படும். அதேவேளையில், பென்னு சிறுகோளில் அந்த விண்கலம் செய்த ஆய்வுகளை இதிலும் மேற்கொள்ளும். அதிலுள்ள இமேஜர்கள், அலைமாலை அளவிகள், லேசர் அல்டிமீட்டர் ஆகியவை சிறுகோளின் மேற்பரப்பை மிக நெருக்கமாகப் பகுப்பாய்வு செய்யும். மேலும், பென்னு சிறுகோளில் செய்ததைப் போலவே, அபோஃபிஸின் மேற்பரப்பில் இருந்து 16 ஆடி ஆழம் வரை துளையிட்டு, ஆழத்தில் இருக்கும் தூசு, பாறைகளைக் கிளறி, சிறுகோளின் தரைப்பரப்புக்குக் கீழே என்ன பொருட்கள் இருக்கின்றன என்பதைக் கண்டறியும். ஆனால், பென்னுவில் செய்ததைப் போல் இந்த விண்கலம், அபோஃபிஸில் இருந்து மாதிரிகளைச் சேகரிக்காது. அபோஃபிஸ் சிறுகோளை ஆய்வு செய்வதால் என்ன பயன்? பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, பென்னு சிறுகோளில் மாதிரிகளைச் சேகரித்து வந்த ஒசைரிஸ் ரெக்ஸ், அடுத்ததாக ஒசைரிஸ் அபெக்ஸ் என்ற பெயரில் அபோஃபிஸை ஆய்வு செய்யப் போகிறது. அடிப்படையில் விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் பாறைகளின் தன்மையைப் புரிந்துகொள்ள அபோஃபிஸ் மீது நடத்தப்படும் ஆய்வுகள் உதவும் என்கிறார் முனைவர்.வெங்கடேஸ்வரன். அவரது கூற்றுப்படி, விண்ணில் சுற்றிக் கொண்டிருக்கும் பாறைகள், சிறுகோள்களின் மீதும் மோதுகின்றன. அப்படிப்பட்ட மோதல்கள் அபோஃபிஸ் மீதும் நிகழ்ந்திருக்கும். அப்போது அதன் தரைப்பரப்பில், அந்த விண்கற்களின் துகள்களும் விழுந்திருக்கும். ஆகவே, “இந்தச் சிறுகோளின் மேற்பரப்ப்பை ஆய்வு செய்வதன் மூலம் நம்மால் விண்கற்களை இன்னும் விரிவாகத் தெரிந்துகொள்ள முடியும்.” அதோடு, சூரிய குடும்பத்தின் ஆதிகால மிச்சங்களில் ஒன்றாகச் சிறுகோள்கள் இருப்பதால், மொத்த சூரிய குடும்பத்திற்குமான அடிப்படை இயக்கவியலைப் புரிந்துகொள்ள இதிலிருந்து கிடைக்கும் தரவுகள் நமக்கு உதவக்கூடும் என்றும் விளக்குகிறார் அவர். பூமி உருவான காலகட்டத்தில் இருந்த கற்கள் அதில் இருப்பதால், ஆதிகாலம் குறித்துப் புரிந்துகொள்வதில் நமக்கு இது உதவலாம் என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES இப்படியாக தோற்றத்தின் ஆதியைப் புரிந்துகொள்ளும் அதேவேளையில், எதிர்காலத்திற்குப் பயனளிக்கும் அம்சங்களும் இதை ஆய்வு செய்வதன் மூலம் கிடைக்கும் என்கிறார் முனைவர் வெங்கடேஸ்வரன். “அபோஃபிஸ் போன்ற சிறுகோள்களை விரிவாக ஆய்வு செய்து புரிந்துகொள்வதன் மூலம், எதிர்காலத்தில் ஒருவேளை ஏதேனும் சிறுகோள் பூமியைத் தாக்கும் அளவுக்கு நெருக்கமாக வந்தால், அதற்கு எப்படி எதிர்செயலாற்றுவது என்ற திட்டத்தைத் தீட்டுவதற்கு இந்த ஆய்வு உதவும்,” என்கிறார் அவர். ஆதிகால சூரிய குடும்பத்தின் எச்சம் அனைத்து சிறுகோள்களையும் போலவே, அபோஃபிஸும் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சூரிய குடும்பத்தின் ஆரம்பக்கால மிச்சம்தான். இந்தச் சிறுகோள், செவ்வாய், வியாழன் ஆகிய கோள்களுக்கு இடையே உருவானது. பிறகு, பல லட்சக்கணக்கான ஆண்டுகளில், அதன் சுற்றுவட்டப்பாதை, வியாழன் போன்ற பெரும் கோள்களின் ஈர்ப்புவிசையால் மாற்றியமைக்கப்பட்டது. இதனால், அது தற்போது சூரியனை பூமிக்கு அருகிலிருந்து சுற்றி வருகிறது. அபோஃபிஸின் மேற்பரப்பை ஆய்வு செய்வதற்கான உயர்திறன் மிக்கத் தெளிவான புகைப்படங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. தற்போது அது பூமிக்கு அருகில் வரும்போது, அதை ஆய்வு செய்யப்போகும் ஒசைரிஸ்-அபெக்ஸ் விண்கலத்தின் மூலம் அதுகுறித்த விரிவான புரிதலை ஏற்படுத்தக்கூடிய தரவுகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/c8rx72p7xxvo
  20. Published By: VISHNU 11 SEP, 2024 | 08:04 PM (நெவில் அன்தனி) உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் மிகப் பெரிய அளவில் நடத்தப்பட்ட ஐசிசி ஆடவர் உலகக் கிண்ணம் 2023 போட்டி மூலம் இந்தியாவுக்கு 11,637 கோடி ரூபா (இந்திய நாணயப்படி) வருவாய் கிடைத்துள்ளதாக ஐசிசி புதன்கிழமை (11) வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அஹமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, தரம்சாலா, ஹைதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 10 நகரங்களில் 2023 அக்டோபர் 5ஆம் திகதியிலிருந்து நவம்பர் 19ஆம் திகதிவரை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதன்போது பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு உலகக் கிண்ண கிரிக்கெட் ஊக்கியாக இருந்தது. இந்தியாவின் பொருளாதாரத்திற்கு இந்த உலகக் கிண்ணம் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளதுடன் ஐசிசி நிகழ்வுகளின் பெறுமதியும் உலகுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் பேரவை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஆகிய இரண்டு நிறுவனங்களின் நேரடி முதலீடும், மாநில கிரிக்கெட் சங்கங்கள் மூலம் விளையாட்டரங்குகளை மேம்படுத்தும் திட்டமும் இணைந்து பல்வேறு துறைகளில் உள்ள இந்திய வணிகங்களுக்கு நேரடி பலன்கள் கிடைக்கச் செய்துள்ளன. போட்டிகள் நடத்தப்பட்ட நகரங்கள் அனைத்திலும் சுற்றுலாத்துறை பெரும் முன்னேற்றம் அடைந்திருந்தது. தங்குமிடங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் பானங்கள் மூலம் 861.4மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானத்தை ஈட்டியது. இதில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பங்களிப்பு தாராளமாக இருந்ததென அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 ஐசிசி ஆடவர் கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டிகளை 1.25 மில்லியன் பார்வையாளர்கள் நேரடியாக கண்டு களித்துள்ளனர். இந்தியாவில் தங்கியிருந்த சர்வதேச பயணிகள் பல சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் 281.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருவாயாக கிடைத்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இந்தியாவை உலகத் தரம் வாய்ந்த விளையாட்டுத்துறை இடமாக உலகக் கிண்ணப் போட்டி வெளிப்படுத்தியது. அத்துடன் பொருளாதார வளர்ச்சிக்கான உந்து சக்தியாக கிரிக்கெட் விளங்குவதும் உறுதிசெய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/193440
  21. இந்த நாட்டில் தமிழர்கள் அழிவுப்பாதைக்கு கொண்டு செல்லப்படுகின்றார்கள். இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு நடந்த அநீதிகளை சர்வதேசத்திற்கு கொண்டு செல்வதற்கு இன்று எமக்குள்ள ஒரே வழி பொதுவேட்பாளராகும். வேறு யாருக்கும் வாக்களிப்பதன் மூலம் அதனை அடையமுடியாது என மட்டக்களப்பு மாவட்ட ஜேசு சபை துறவி அருட்தந்தை ஜோச்மேரி தெரிவித்தார். மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். இந்த நாட்டில் தமிழர்கள் அழிக்கப்பட்டுவருகின்றார்கள். இதனை வெளியுலகுக்கு கொண்டுசெல்லவேண்டும். நாங்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதனால் எமது பிரச்சினையை கொண்டுசெல்லமுடியாது. அதனால் பொதுவேட்பாளராக அரியநேத்திரன் நிறுத்தப்பட்டுள்ளார். இது நல்ல சந்தர்ப்பம். இதனை நாங்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்றார். https://thinakkural.lk/article/309310
  22. தொடர்ந்தும் அனுர முன்னிலையில்; இரண்டாவது மூன்றாவது விருப்பு வாக்குகளே முடிவை தீர்மானிக்கலாம்; சுகாதார கொள்கை நிறுவகத்தின் புதிய கருத்துக்கணிப்பு Published By: RAJEEBAN 12 SEP, 2024 | 11:27 AM எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்கவிற்கு அதிகளவு ஆதரவு தொடர்ந்தும் காணப்படுவதையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு அதிகரித்து வருவதையும் காண்பிக்கும் கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. சுகாதார கொள்கைகள் நிறுவகம் மேற்கொண்ட கருத்துக்கணிப்பின் போது இது தெரியவந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு மக்கள் வாக்களிக்க எண்ணியுள்ளனர் என்பது குறித்து ஆகஸ்ட் மாதம் ஐஎச்பி மேற்கொண்ட கருத்துக்கணிப்பின்போது தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அனுரகுமார திசநாயக்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவும் தொடர்ந்து முன்னிலையில் உள்ளமை தெரியவந்துள்ளது. தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 36 வீத ஆதரவு காணப்படுகின்றது,ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளருக்கு 32 வீத ஆதரவு காணப்படுகின்றது,ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு 28 வீத ஆதரவு காணப்படுகின்றது . ரணில்விக்கிரமசிங்கவிற்கான ஆதரவு மார்ச் முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில் அதிகரித்து வந்துள்ளது.ஏனைய வேட்பாளர்களிற்கான ஆதரவு சிறிதளவு வீழ்ச்சியை சந்தித்துள்ளது. எங்களின் ஆகஸ்ட் மாத கருத்துக்கணிப்பு போட்டிகடுமையானதாக காணப்படுவதை வெளிப்படுத்தியுள்ளது, எந்த வேட்பாளரும் அரைவாசி வாக்குகளை கூட பெறமாட்டார்கள் என ஐஎச்பியின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கலாநிதி ரவி ரண்ணன் எலிய தெரிவித்துள்ளார். இந்த கருத்துகணிப்பு எந்த வேட்பாளரும் பெரும்பான்மையான வாக்காளர்களின் மனதை கவராததை புலப்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள அவர் 2024ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலே இரண்டாவது மூன்றாவது விருப்புவாக்குகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் இலங்கையின் முதலாவது ஜனாதிபதி தேர்தலாக அமையலாம் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வாக்கும் அதன் முக்கியத்துவத்தை பெறுவதற்காக வாக்காளர்களிற்கு அறிவுறுத்தும் செயற்பாடுகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் சிவில் சமூகமும் ஈடுபடவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/193472

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.