Everything posted by ஏராளன்
-
சங்கு சின்னத்திற்கு வாக்களிப்பதன் மூலம் தமிழ்த் தேசிய அரசியல் பரப்பை ஒன்றிணைக்க முடியும் - பா.அரியநேந்திரன்
சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களியுங்கள் - அரியநேந்திரன் தெரிவிப்பு! Published By: DIGITAL DESK 7 13 SEP, 2024 | 05:44 PM ஜனாதிபதி தேர்தலில் சங்கு சின்னத்திற்கு மாத்திரமே வாக்களியுங்கள். ஏனையவர்களுக்கு விருப்பு வாக்கு போட வேண்டாம் என தமிழ் பொது வேட்பாளர் அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இன்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எட்டு மாவட்டங்களிலும் எமது பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்த வாக்குக்களை விட அதிக வாக்குகள் எமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை எமக்கு வந்துள்ளது. மக்களிடம் நாம் சங்கு சின்னத்திற்கு மாத்திரம் வாக்களிக்க வேண்டும் என்றே கோரி வருகிறோம். ஆனால் சிலர் சங்கு சின்னத்துக்கு வாக்களித்த பின்னர் விரும்பிய மற்றைய வேட்பாளருக்கு வாக்களிக்குமாறு சிலர் கூறு கின்றனர். இது எனதோ, பொது கட்டமைப்பை சார்ந்தவர்களுடைய கருத்தோ இல்லை. தற்போதைய நிலவரப்படி எவருமே 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற முடியாத நிலைமை காணப்படுகிறது. அதனால் தென்னிலங்கையை சேர்ந்தவர்கள் வடக்கு கிழக்கில் முகாமிட்டு பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றனர். நல்லூர் திருவிழாவிற்கு காப்புக்கடை போடுவது போன்று, கொக்கட்டிசோலை தான்தோன்றிஸ்வரர் ஆலயத்தில் இனிப்பு கடை போடுவது போன்று, வடக்கு கிழக்கில் வந்து தங்கி பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களுக்கு முகவர்களாக சில தமிழர்கள் செயற்படுகின்றனர். எமது இனத்திற்காக அவர்கள் சிந்தித்து சங்கு சின்னத்திற்கு ஆதரவு வழங்க முன் வரவேண்டும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/193618
-
மனித குரங்குகள் தனக்குத் தானே மருத்துவம் செய்து கொள்வது எப்படி?
தாவரம் மூலம் சுய மருத்துவம் செய்யும் கொரில்லா - புதிய மருந்து கண்டுபிடிப்புக்கு இந்த குரங்குகள் உதவுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மத்திய மற்றும் மேற்கு ஆப்ரிக்காவில் 150,000-க்கும் சற்று குறைவான `வெஸ்டர்ன் லோ லேண்ட்’ கொரில்லாக்கள் காடுகளில் வாழ்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் பிரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் நிருபர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கொரில்லா இனங்களிடம் காணப்படும் சுய மருத்துவம் செய்துகொள்ளும் போக்கு, எதிர்கால மருந்துவக் கண்டுபிடிப்புகளுக்கு உதவும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். கபோன் (Gabon) நாட்டில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், காட்டு கொரில்லா இனம் உட்கொள்ளும் வெப்பமண்டல தாவரங்களை ஆய்வு செய்தனர். இந்தத் தாவரங்கள் உள்ளூர் மூலிகை மருத்துவர்களாலும் பயன்படுத்தப்படுகின்றன. ஆய்வு முடிவில், அவற்றில் நான்கு தாவரங்களில் மருத்துவ குணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த தாவரங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட் (antioxidants) மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு திறன் அதிகம் உள்ளதாக ஆய்வகத்தில் செய்யப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. குறிப்பாக ஒரு தாவரம், சூப்பர்பக்ஸை (உடல்நல பாதிப்பு ஏற்படுத்தும் ஒரு வகை பாக்டீரியா. ஆன்டிபயாடிக் மருந்துகள் மூலம் இந்த பாதிப்பை குணப்படுத்த முடியாது) எதிர்த்துப் போராடும் திறன் பெற்றிருந்தது. பெரிய குரங்கு இனங்கள், குணப்படுத்தும் பண்புகளைக் கொண்ட தாவரங்களைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதன் மூலம் சுய மருத்துவம் செய்துக்கொள்கின்றன. சமீபத்தில், காயம்பட்ட ஒராங்குட்டான் குரங்கு ஒன்று தன் காயத்தை குணப்படுத்த, தாவரத்தை பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெஸ்டர்ன் லோலேண்ட் கொரில்லாக்கள் அடர்ந்த காடுகளில் வாழ்கின்றன. மூங்கில் தண்டுகள், தளிர்கள் மற்றும் பழங்களை உண்கின்றன. சமீபத்திய ஆய்வில், கபோன் நாட்டில் உள்ள முகாலாபா டூடூ (Moukalaba-Doudou) தேசியப் பூங்காவில் 'வெஸ்டர்ன் லோலேண்ட்' (western lowland) கொரில்லாக்கள் உட்கொள்ளும் தாவரங்களை தாவரவியலாளர்கள் ஆய்வு செய்தனர். உள்ளூர் மூலிகை மருத்துவர்கள் உடனான நேர்காணல்களின் அடிப்படையில் மருத்துவ குணமுள்ள நான்கு தாவரங்களை ஆராய்ச்சியாளர்கள் தேர்ந்தெடுத்தனர். கபோக் மரம் (Kapok tree), ராட்சத மஞ்சள் மல்பெரி (giant yellow mulberry), ஆப்ரிக்கத் தேக்கு, மற்றும் அத்தி மரங்கள் ஆகியவை அந்தத் தாரவங்களாகும். பாரம்பரிய மருத்துவத்தில் வயிற்றுப் பிரச்னைகள் முதல் கருவுறுதல் தொடர்பான பிரச்னைகள் வரை அனைத்திற்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் இந்த தாவரங்களின் மரப்பட்டையில், பீனால்கள் முதல் ஃபிளாவனாய்டுகள் வரையிலான ரசாயனங்கள் உள்ளன. இந்த ரசாயனங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை. ஆய்வு செய்யப்பட்ட நான்கு தாவரங்களும் ஒரு வகை 'ஈ. கோலி' பாக்டீரியாவுக்கு எதிராக பாக்டீரியா எதிர்ப்புச் செயல்பாட்டைக் கொண்டிருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கபோக் மரம் உள்ளூர் மூலிகை மருத்துவர்களால் மனிதர்களின் நோய்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது "இந்த ஆய்வு மத்திய ஆப்பிரிக்க மழைக்காடுகள் பற்றிய நமது அறிவில் உள்ள மிகப்பெரிய இடைவெளிகளை அம்பலப்படுத்துகிறது. மேலும் கொரில்லாக்கள் தங்களுக்கு நன்மை செய்யும் தாவரங்களை உண்ணும் வகையில் பரிணாம வளர்ச்சியடைந்துள்ளதை காட்டுகிறது" என்று கபோன் விஞ்ஞானிகளுடன் இந்த ஆய்வில் பங்கேற்ற பிரிட்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் அறிஞர் ஜோனா செட்செல் கூறினார். கபோன் மிகப்பெரிய, ஆராயப்படாத காடுகளை கொண்டுள்ளது. இது வன யானைகள், சிம்பன்சிகள், கொரில்லாக்கள் மற்றும் அறிவியலுக்கு புலப்படாத பல தாவரங்களின் தாயகமாகும். வேட்டையாடுதல் மற்றும் நோய் தொற்றுகளால் அதிக எண்ணிக்கையிலான வெஸ்டர்ன் லோலேண்ட் கொரில்லாக்கள் காடுகளில் இருந்து காணாமல் போயுள்ளன. இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் சிவப்பு பட்டியலில் (IUCN Red List) கொரில்லா இனம் அழிவின் விளிம்பில் இருப்பதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி 'PLOS ONE’ என்னும் அறிவியல் ஆய்விதழில் வெளியிடப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/czxlxnd0jqdo
-
இலங்கையின் கடற்படுக்கையில் உள்ள மிகவும் பெறுமதியான கனிய வளம் - கண் வைத்தது அதானி நிறுவனம்
'Afanasy Nikitin Seamount' The AN Seamount is a structural feature (400 km-long and 150 km-wide) in the Central Indian Basin, located about 3,000 km away from India's coast. It comprises a main plateau, rising 1200 m above the surrounding ocean floor (4800m), and secondary elevated seamount highs.Mar 28, 2024 Sensing China threat, India joins race to mine new sea patch Files application with the International Seabed Authority for rights to explore two vast tracts in Indian Ocean seabed that aren’t part of its jurisdiction March 26, 2024 10:39 pm | Updated March 27, 2024 10:06 am IST - NEW DELHI: JACOB KOSHY India seeks to explore a cobalt-rich region in the Indian Ocean known as the Afanasy Nikitin Seamount (AN Seamount). Photo: Google Maps Earlier this month, India applied to the International Seabed Authority (ISBA), Jamaica, for rights to explore two vast tracts in the Indian Ocean seabed that aren’t part of its jurisdiction. The application to explore one of these regions, a cobalt-rich crust long known as the Afanasy Nikitin Seamount (AN Seamount), is a gambit by India. Rights to the region have already been claimed by Sri Lanka under a separate set of laws, The Hindu has learnt, but India’s application is part-motivated by reports of vessels by China undertaking reconnaissance in the same region, a highly placed official, who declined to be identified, confirmed to The Hindu. The AN Seamount is a structural feature (400 km-long and 150 km-wide) in the Central Indian Basin, located about 3,000 km away from India’s coast. From an oceanic depth of about 4,800 km it rises to about 1,200 metre and — as surveys from about two decades establish — rich in deposits of cobalt, nickel, manganese and copper. For any actual extraction to happen, interested explorers — in this case, countries — must apply first for an exploration licence to the ISBA, an autonomous international organisation established under the United Nations Convention on the Law of the Sea (UNCLOS). The AN Seamount is located about 3,000 km away from India’s coast. Photo: www.isa.org.jm These rights are specific to areas that are part of the open ocean, meaning ocean — whose air, surface and sea-bed — where no countries can claim sovereignty. Around 60% of the world’s seas are open ocean and though believed to be rich in a variety of mineral wealth, the costs and challenges of extraction are prohibitive. Currently no country has commercially extracted resources from open oceans. However, another UNCLOS-linked body, the Commission on the Limits of the Continental Shelf, which decides on the limits of a country’s continental shelf, may impede India’s exploration ambitions. Exclusive rights Countries have exclusive rights up to 200 nautical miles, and its underlying sea-bed from their borders. Some ocean-bound states may have a natural stretch of land, connecting their border and the edge of the deep ocean that extends beyond this 200, as part of their so-called continental shelf. To claim so, however, a country must give a detailed scientific rationale, complete with underwater maps and surveys to show this unbroken land-connect to a scientific commission appointed by the ISBA. If such a claim is approved, then such a country will have primacy to explore and potentially exploit the living and non-living resources in the region. Normally, claims to the continental shelf do not extend beyond 350 nautical miles from their coast. “However, there is a provision under which countries along the Bay of Bengal can apply a different set of criteria to make claims on the extent of their continental shelf. Using this, Sri Lanka has claimed up to 500 nautical miles. Whether they are actually awarded so we have to wait and see but India has staked a claim for exploration because we have noted Chinese presence. If we don’t at least stake a claim now, then this could have consequences in the future,” the official told The Hindu. If a region isn’t formally classified as being part of a country’s continental shelf, then it is considered ‘high sea’ and open to any country to approach the ISBA and ask permission for exploration. “For the application for cobalt-rich ferromanganese crust, the Commission noted that the area of the application [by India] lies entirely within an area submitted to the Commission on the Limits of the Continental Shelf by another state [Sri Lanka]. The Commission has sought comment in writing from the applicant [India] on this matter,” says a report by the ISBA based on proceedings this month and available on the organisation’s website. A high-level delegation from India led by the Ministry of Earth Sciences was in Jamaica, the ISBA headquarters, this month, presenting scientific evidence to buttress India’s claims to exploration. The ISBA has in turn asked India to clarify on multiple points. A final decision is expected later this year. Along with the application for AN Seamount, India has also applied for permission to explore another region, spanning 3,00,000 square km, called the Carlsberg Ridge in the Central Indian Ocean to investigate for polymetallic sulphides, which are large smoking mounds near hydrothermal vents that are reportedly rich in copper, zinc, gold and silver. Like Sri Lanka, India too has staked a claim for its continental shelf up to 350 nautical miles from its border but has yet to be awarded so. It has previously garnered exploration rights to two other large basins in the Central India Ocean and has undertaken surveys. India applied to the International Seabed Authority (ISBA), Jamaica, for rights to explore two vast tracts in the Indian Ocean seabed that aren’t part of its jurisdiction. The application to explore one of these regions, a cobalt-rich crust long known as the Afanasy Nikitin Seamount (AN Seamount), is a gambit by India. The AN Seamount is a structural feature (400 km-long and 150 km-wide) in the Central Indian Basin, located about 3,000 km away from India’s coast. From an oceanic depth of about 4,800 km it rises to about 1,200 metre and — as surveys from about two decades establish — rich in deposits of cobalt, nickel, manganese and copper. These rights are specific to areas that are part of the open ocean, meaning ocean — whose air, surface and sea-bed — where no countries can claim sovereignty. Around 60% of the world’s seas are open ocean and though believed to be rich in a variety of mineral wealth, the costs and challenges of extraction are prohibitive. https://www.thehindu.com/sci-tech/science/sensing-china-threat-india-joins-race-to-mine-new-sea-patch/article67995397.ece
-
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள்
இலங்கை: கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி பற்றி இதுவரை தெரிய வந்த தகவல்கள் படக்குறிப்பு, கொழும்பின் பிரதான பகுதியில் தற்போது மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் பல பத்தாண்டுகளாக அவ்வப்போது மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவது தொடரும் நிலையில், தற்போது தலைநகரத்தின் முக்கிய வளாகம் ஒன்றிலும் மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பின் பிரதான பகுதியும், அதிவுயர் பாதுகாப்பு வளையமுமான பகுதி ஒன்றிலிருந்தே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்திற்குள் செல்லும் இங்குறுகடை சந்தியிலிருந்து நிர்மாணிக்கப்படும் வீதி அபிவிருத்தி பணிகளுக்காக இடம்பெற்ற அகழ்வு நடவடிக்கைகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகப் பகுதியிலுள்ள பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் கடந்த ஜுலை மாதம் 13ஆம் தேதி இடம்பெற்ற அகழ்வுப் பணிகளின் போதே இந்த மனிதப் புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த விடயம் தொடர்பில் கொழும்பு புதுக்கடை பிரதம நீதவான் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதை அடுத்து, பிரதம நீதவான் பண்டார இலங்கசிங்க முன்னிலையில் கடந்த 5ஆம் தேதி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இலங்கையில் கடந்த காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழி தொடர்பான ஆய்வுகளை நடத்திய தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இந்த மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. மனிதப் புதைகுழி எந்த காலப் பகுதிக்குச் சொந்தமானது? இந்த மனிதப் புதைகுழி எந்த காலப் பகுதிக்குச் சொந்தமானது என்பது தொடர்பில் இதுவரை சரியாக அனுமானிக்க முடியவில்லை என பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவிக்கிறார். ''இங்குள்ள குழப்பகரமான நிலைமையால், இந்த இடம் மிகவும் சிக்கலான பகுதியாக உள்ளது. இங்கு வீதிகள் இரண்டு முறை அமைக்கப்பட்டுள்ளன. கால்வாய்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அபிவிருத்திப் பணிகள் இடம்பெற்ற பகுதியாகவும் இது இருக்கிறது. அதனால், இந்த விவகாரம் மிகவும் சிக்கலான ஒன்றாகியுள்ளது," என்று அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, இந்தப் புதைகுழி எந்த காலப் பகுதி சேர்ந்தது எனத் தெரிய வரவில்லை ''காலப் பகுதி தொடர்பில் ஏதேனும் தடயங்கள் கிடைக்கும் வரை, காலப் பகுதி குறித்து எதையும் எம்மால் கூற முடியாது. நாங்கள் இன்னும் எலும்புக் கூடுகளை முழமையாகக் காணக்கூடிய அளவிற்குக்கூட வரவில்லை. மேல் பகுதியை மாத்திரமே அகழ்ந்து கொண்டிருக்கின்றோம். எலும்புக் கூடுகளை முழுமையாக எடுப்பதற்கு இன்னும் ஓரிரு தினங்கள் எடுக்கும்," என அகழ்வுப் பணிகளை மேற்கொள்ளும் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவிக்கிறார். காணாமல் ஆக்கப்பட்டுள்ளோர் புதைந்துள்ளனரா? இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை இந்தப் புதைகுழியில் புதைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து, காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளும் இந்த மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளில் தலையீடு செய்துள்ளனர். ''இந்த இடத்தில் கடற்படை முகாமொன்று இருந்தது. துறைமுக போலீஸ் என்பது 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதி மற்றும் போர் இடம்பெற்ற காலப் பகுதியில் சந்தேக நபர்களைத் தடுத்து வைக்கும் ஒரு இடமாகப் பிரபல்யமடைந்து காணப்பட்டது. இதனாலேயே, இந்த மனிதப் புதைக்குழி 1988 மற்றும் 1989ஆம் ஆண்டு காலப் பகுதிக்குச் சொந்தமானதாக இருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம்" என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோர் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தையடுத்து, இவ்விவகாரத்தில் அவர்களின் உறவினர்கள் தலையிட்டுள்ளனர் அரசாங்கத்திற்கு உண்மையைக் கண்டறியும் அரசியல் தேவை இல்லாமை காரணமாகவே, கடந்த காலங்களில் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பான எதிர்கால விசாரணைகள் நடத்தப்பட்டவில்லை என அவர் குற்றம் சாட்டுகிறார். அரசாங்கத்திற்கு எதிராக வன்முறைகள் அல்லது எதிர்ப்புகள் எழும் பட்சத்தில், அதைத் தடுத்து நிறுத்துவதற்கான சிறந்த அடக்குமுறையாக இந்தக் காணாமல் ஆக்குதலைப் பயன்படுத்த முடியும் என அவர் கூறுகிறார். இலங்கையில் இதுவரை 22 மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்கள் ஒன்றியம் தெரிவிக்கின்றது. 'கார்பன் ஆய்வுகள் தொடர்பில் நம்பிக்கை இல்லை' இலங்கையில் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட மனிதப் புதைகுழிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நடத்தப்பட்ட கார்பன் ஆய்வுகள் குறித்து நம்பிக்கை இல்லை என காணாமல் போனோர் குடும்பங்கள் ஒன்றியத்தின் தலைவர் குறிப்பிடுகின்றார். ''குறிப்பாக அண்மைக் காலத்தில் கார்பன் ஆய்வுகளுக்காக அனுப்பப்பட்ட மனித எச்சங்கள் சரியாக ஆய்வு நடத்தப்பட்டது என நம்ப முடியவில்லை. அரசாங்கத்தின் தேவைகளுக்கு அமைய தீர்மானங்களை மாற்ற முடியும் என்ற நம்பிக்கையே எமக்குள்ளது" என அவர் கூறுகின்றார். படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 6ஆம் தேதி முல்லைத்தீவில் தோண்டப்பட்ட மனிதப் புதைகுழி ''இந்த மனித எச்சங்களிலுள்ள டி.என்.ஏவுடன், ஒப்பிட்டுப் பார்க்கும் வகையிலான உறவினர்களின் டி.என்.ஏ வங்கியொன்று கிடையாது. அதனால், இந்த மனித எச்சங்கள் யாருடையது என்பதை அடையாளம் காணும் வகையிலான உபாயங்கள் இல்லை. அத்துடன், அரசாங்கம் இந்த விடயம் தொடர்பில் ஊக்கமளிப்பதில்லை. அந்தந்த குடும்பங்களின் உறவினர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் தலையீடு செய்வதற்கான ஊக்குவிப்பு இல்லை. அதனால், இந்த விடயம் வெற்றியளிக்கவில்லை," என அவர் குறிப்பிடுகின்றார். இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள் இலங்கையில் கடந்த 30 ஆண்டு காலத்தில் மாத்திரம் சுமார் 20க்கும் அதிகமான மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நான்கு சிவில் அமைப்புகள் ஒன்றிணைந்து அண்மையில் வெளியிட்ட அறிக்கையொன்றின் பிரகாரம், 20 மனிதப் புதைகுழிகள் இதுவரை நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து, முல்லைத்தீவு கொக்குத் தொடுவாய் மனிதப் புதைகுழி மற்றும் கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 'மனிதப் புதைகுழிகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது' இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள அனைத்து மனிதப் புதைகுழிகள் தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக மனிதப் புதைகுழிகள் தொடர்பான வழக்குகளில் முன்னிலையாகும் வழக்கறிஞர்கள் தெரிவிக்கின்றனர். இதன்படி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி தொடர்பிலும் தாம் கவனம் செலுத்தியுள்ளதாக வழக்கறிஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, இதுவரை சுமார் 20க்கும் மேற்பட்ட புதைக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன (கோப்புப்படம்) ''கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிக்கு முன்னதாக கண்டுபிடிக்கப்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வுப் பணிகள் நிறைவடைந்துள்ளன. இந்த மனிதப் புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட எலும்புப் கூடுகள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிடுகிறார். கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி தொடர்பான இடைக்கால அறிக்கையை, தொல்லியல் துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ முல்லைத்தீவு நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்னர் சமர்ப்பித்திருந்தார். இந்த இடைக்கால அறிக்கையின் பிரகாரம், குறித்த மனிதப் புதைகுழி 1994ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியைக் கொண்டிருக்கலாம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே கொழும்பிலும் தற்போது மனிதப் புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj626p5zy64o
-
நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்தினால் நேட்டோவுடன் நேரடி யுத்தமாக கருதுவோம் - புட்டின்
அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை உக்ரைன் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டால் நேட்டோ எங்களுடன் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக கருதுவோம் - புட்டின் 13 SEP, 2024 | 02:12 PM ரஸ்யா மீது உக்ரைன் நீண்டதூர ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நேட்டோ நீக்கினால் உக்ரைன் ரஸ்ய யுத்தத்தில் நேட்டோ நேரடியாக களமிறங்குகின்றது என தான் கருதுவேன் என ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வழங்கிய நீண்டதூர ஏவுகணையை உக்ரைன் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு மேற்குலக அமெரிக்க இராஜதந்திரிகள் தயாராக உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையிலேயே புட்டின் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். நீண்ட தூர ஏவுகணையை பயன்படுத்துவதற்கான தடையை தளர்த்தினால் அதன் அர்த்தம் நேட்டோவும் ஐரோப்பிய நாடுகளும் ரஸ்யாவிற்கு எதிராக யுத்தத்தில் ஈடுபட்டுள்ளன என்பதே என விளாடிமிர் புட்டின் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். அப்படியானால் மோதலின் சாராம்சத்தில் ஏற்படும் மாற்றத்தை மனதில் கொண்டு எங்களிற்கு ஏற்படும் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் வகையில் தகுந்த முடிவுகளை எடுப்போம் என புட்டின் தெரிவித்துள்ளார். அமெரிக்கா தான் வழங்கியுள்ள ஆயுதங்களை பயன்படுத்தி எல்லையை கடந்து ரஸ்யாவிற்குள் நுழைந்து தாக்குதல்களை மேற்கொள்வதற்கு உக்ரைனிற்கு அனுமதிவழங்கியுள்ள போதிலும், நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு பைடன் நிர்வாகம் இன்னமும் அனுமதிவழங்கவில்லை. https://www.virakesari.lk/article/193585
-
சபாஷ்... சரியான போட்டி.
பெற்றோரை அவர்களது முதுமையில் அரவணைத்துப் பாதுகாப்பது ஒவ்வொரு பிள்ளைகளதும் உரிமையும் கடமையும் ஆகும். வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடம் அடி
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களிடையே விவாதம் – மூன்றாம் உலக போர் ஏற்படும் என எச்சரிக்கை
கமலா ஹாரிஸுடன் இனி விவாதத்தில் கலந்து கொள்ளமாட்டேன்; ட்ரம்ப் அறிவிப்பு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் உடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார். குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியுமான டொனால்ட் டிரம்ப், ஜனநாயகக் கட்சியின் துணைத் தலைவர் கமலா ஹாரிஸுக்கு எதிரான மற்றொரு ஜனாதிபதி விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அமெரிக்காவில் ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது, முடிவுகள் வெளியான பிறகு, 2025 முதல் யார் நாட்டின் ஆட்சியைப் பிடிக்கப் போகிறார்கள் என்பது தெரிய வரும். இம்முறை தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் இடையே போட்டி நிலவுகிறது. கமலா ஹாரிஸ் ஜனாதிபதியானால் இந்தியர்கள் அதிக பலன் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது. டொனால்ட் டிரம்புடன் ஒப்பிடும்போது, கமலா ஹாரிஸ் எப்போதும் அனைவரையும் அழைத்துச் செல்லும் குடியேற்றக் கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்கிறார். அமெரிக்காவை பொறுத்தவரை ஜனாதிபதி வேட்பாளர்கள் ஒரே மேடையில் விவாதம் நடத்தி கொள்வது என்பது வழக்கமானதாக உள்ளது. அதன்படி, கமலா ஹாரிஸ் – டொனால்ட் டிரம்ப் இடையே நேரடி விவாதம் என்பது கடந்த 10ம் திகதி நடந்தது. இருவருக்கும் இடையேயான முதல் விவாதத்தை ஏபிசி செய்தி நிறுவனம் நடத்தி முடித்துள்ளது. இரு வேட்பாளர்களும் தங்களது வாக்குறுதிகளைக் கிடைக்கின்ற மேடையில் அறிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் டிரம்ப்பும், கமலா ஹாரிஸும் சந்திக்கின்ற முதல் நேரடி விவாதம் நேற்று முந்தினம் நடைபெற்றது. இதில், சூடு பறக்க இருவரும் விவாதம் செய்தனர். இந்த விவாதம் தொடங்கும் முன், டிரம்ப் இருந்த இடத்திற்கு நேரடியாகவே சென்று கமலா ஹாரிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும், இந்த நேரடி விவாதம் 90 நிமிடங்கள் நடந்தது. விவாதத்தின் தொடக்கத்தில், டொனால்டு டிரம்ப் இருந்த இடத்திற்குச் சென்று கமலா ஹாரிஸ் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். இது அனைவரின் மனம் கவரும் ஒன்றாக அமைந்தது. 90 நிமிடங்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் மற்றும் உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர், அமெரிக்க நாட்டின் பணவீக்கம், கருக்கலைப்பு விவகாரம் போன்ற விஷயங்கள் காரசாரமாக விவாதிக்கப்பட்டன. விவாதத்தின் பல இடங்களில் டிரம்பை மீண்டும் தூண்டிவிட்டு சமநிலையை இழக்கச் செய்தார், இதனால் டிரம்ப் பல இடங்களில் தடுமாறிய பேசினார். இந்த விவாதத்தின் முடிவில் பல அமெரிக்க ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வழக்கம் போல வெளியிட்டன. அதில், பெரும்பாலான பொலிட்டிகோ செய்தி நிறுவனம் , சி.என்.என். செய்தி நிறுவனம், வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம், நியூயார்க் டைம்ஸ், பாக்ஸ் நியூஸ், ABC, MSNBC போன்ற பெரும்பாலான செய்தி நிறுவனங்களின் கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் தான் இந்த தேர்தலில் வெற்றி பெறுவார் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அனல் பறக்கும் இந்த 90 நிமிட விவாதத்தைக் கமலா ஹாரிஸ் நிதானமாக கையாண்டார் எனவும் டிரம்ப் இந்த விவாதத்தில் கோபமாகவே செயல்பட்டார் எனவும் பொதுவான கருத்தாக அனைத்து ஊடகமும் தெரிவித்துள்ளன. மேலும் உடனடியாக கமலா ஹாரிஸ் 2வது விவாதத்துக்கு அழைப்பு விடுத்தார். இதற்கு டொனால்ட் டிரம்ப் தரப்பில் இருந்து பதில் வரவில்லை. இந்நிலையில் தான் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தில் கமலா ஹாரிஷ் தான் வென்றதாக பல நிறுவனங்கள் தெரிவித்துள்ளனர். இதனால் டொனால்ட் டிரம்ப் கடும் அதிருப்தியடைந்துள்ளார். இத்தகைய சூழலில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அமெரிக்க அதிபர் தேர்தல் தொடர்பாக இனி கமலா ஹாரிசுடன் விவாதத்தில் 2வது முறையாக பங்கேற்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். https://thinakkural.lk/article/309402
-
கனடாவிலிருந்து யாழில் காணி வாங்க வந்தவருக்கு ஏற்பட்ட நிலை; 85 இலட்சம் ரூபா பணத்துடன் தரகர் தலைமறைவு!
13 SEP, 2024 | 12:16 PM கனடா நாட்டில் இருந்து யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவதற்காக வந்தவரின் 85 இலட்ச ரூபாய் பணம் காணி தகரால் அபகரிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்ட நபர் ஒருவர் கனடா நாட்டில் வசித்து வருகிறார். அவர் யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் காணி ஒன்றினை கொள்வனவு செய்வதற்காக சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வருகை தந்துள்ளார். அவருக்கு குறித்த காணியை கிளிநொச்சி பகுதியை சேர்ந்த காணி தரகர் ஒருவரே அடையாளம் காட்டி, காணி உரிமையாளருடன் பேச்சுக்களையும் நடத்தியுள்ளார். அதனை அடுத்து காணியை கொள்வனவு செய்வதற்கு 85 இலட்ச ரூபாய் பணத்தினை ரொக்கமாக தயார் செய்திருந்தார். அந்த பணத்தினை கனடா வாசி தன்னுடன் வைத்திருந்தார். அவர் அசந்த நேரம் பார்த்து, காணி தரகர் 85 இலட்ச ரூபாய் பணத்தினை அபகரித்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/193566 5000 ரூபாய்த்தாள் வந்ததும் வந்தது 85 லட்சத்தையும் சுலபமா சுருட்ட முடிந்தது.
-
ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முதல் முறையாக விசேட தேவையுடையோருக்கு விசேட அடையாள அட்டைகள் விநியோகம்
13 SEP, 2024 | 11:46 AM எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக முதன் முறையாக விசேட தேவையுடையவர்களுக்கான விசேட அடையாள அட்டையை தேர்தல் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் முதற்கட்டமாக ஐந்து மாவட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள 526 விசேட தேவையுடையவர்களுக்கு இந்த அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளன. முதல் தடவையாக இன்று மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஏறாவூர் நகரம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளைச் சேர்ந்த விசேட தேவையுடையவர்களுக்கு விசேட வாக்களிப்பு அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த அடையாள அட்டை பத்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் என கூறப்படுகிறது. மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எச்.எம் சுபியான் தலைமையில் நடைபெற்ற விசேட தேவையுடையோருக்கான அடையாள அட்டைகள் விநியோகிக்கும் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜெ முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி மற்றும் சமூக மாவட்ட சமூக சேவை அதிகாரி உட்பட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். விசேட தேவையுடையவர்கள் இந்த அடையாள அட்டையினூடாக சிரமமின்றி வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க முடியும் என மாவட்ட அரசாங்க அதிபர் இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார். https://www.virakesari.lk/article/193559
-
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடியான நிலையை எங்களிற்கு சாதகமாக பயன்படுத்த விரும்பாததால் அமைதியாகவுள்ளோம் - சீனா
Published By: RAJEEBAN 13 SEP, 2024 | 10:49 AM இலங்கை கடற்பரப்பில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு சீன கப்பல்களிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை குறித்து அதிருப்தியடைந்துள்ளதாக தெரிவித்துள்ள சீனா சில நாடுகள் இது தங்களிற்கு கிடைத்த வெற்றி என சில நாடுகள் கருதுகின்றன. ஆனால் உண்மை அதுவல்ல என குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான சீன தூதரக அதிகாரி யன்வெய் சூ இதனை தெரிவித்துள்ளார். சீனாவின் நட்பு நாடான இலங்கை ஏன் இந்த நடவடிக்கையை எடுத்தது என சீனாவில் சமூக ஊடக பயனாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். மூன்றாம் தரப்பொன்றின் அழுத்தம் காரணமாகவே இலங்கை இந்த நடவடிக்கையை எடுத்தது என குறிப்பிட்டுள்ள அவர் சில நாடுகள் இதனை தமக்கு கிடைத்த இராஜதந்திர வெற்றி என சில நாடுகள் கருதுகின்றன, ஆனால் இலங்கையின் நெருக்கடியான நிலைமையை பயன்படுத்த விரும்பாததால் நாங்கள் அமைதியாகயிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார். சீனா இலங்கையின் சுதந்திரம் இறைமையை மதிக்கின்றது என சீன இராஜதந்திரி தெரிவித்துள்ளார். ஏனைய நாடுகளின் அழுத்தம் காரணமாகவே சீனாவின் ஆராய்ச்சி கப்பல்களிற்கு இலங்கை தடைவிதித்தது என முணுமுணுப்புகள் காணப்படுகின்றன, இலங்கையால் தனியாக அவ்வாறான கடல் ஆராய்ச்சியில் ஈடுபட முடியாததன் காரணமாகவே சீனா உதவியது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/193557
-
வாக்களித்ததை யாருக்கும் சொன்னால் கைது செய்யப்படுவர்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அதிரடி அறிவிப்பு
ஓம் கவி ஐயா.
-
போலரிஸ் டான்: முதல் தனியார் ஸ்பேஸ் வாக்கில் விண்வெளிக்குச் சென்ற கோடீஸ்வரர்
பட மூலாதாரம்,POLARIS/X கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, பிபிசி செய்தியாளர் 13 செப்டெம்பர் 2024, 07:20 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், ஸ்பேஸ்எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டில் முதல் தனியார் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இது தனியார் நிதியுதவியுடன் இயங்கும் முதல் விண்வெளிப் பயணம் என்று கூறப்படுகிறது. இந்தத் திட்டத்தின் பெயர் போலரிஸ் டான் (Polaris Dawn). கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், சாரா கில்லிஸ் ஆகியோர் போலரிஸ் டான் திட்டத்தின் குழுவில் உள்ளனர். இந்த நான்கு பேரும் நேற்று (செப்டம்பர் 12) விண்வெளிக்குச் சென்று ஸ்பேஸ் வாக் அனுபவத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்துள்ளனர். இதற்கென பிரத்யேகமாகத் தயார் செய்யப்பட்ட 'போலரிஸ் டான்' என்ற விண்கலம் இவர்களை வெற்றிகரமாக விண்வெளிக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அவர்கள் விண்வெளியையும், பூமியின் பிரமாண்ட காட்சியையும் வியந்து பார்த்த காணொளியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. பணம் பரிமாற்றச் செயலாக்க வணிகமான ஷிஃப்ட் 4-இன் (Shift4) நிறுவனர் ஜாரெட் ஐசக்மேன் மூன்று விண்வெளிப் பயணத் திட்டங்களுக்கு நிதியளித்தார். அவர் நிதியளித்த மூன்று திட்டங்களில் `போலரிஸ் டான்’ முதல் திட்டம் ஆகும். ஜாரெட் ஐசக்மேன் இந்த திட்டத்திற்குத் தலைமை வகித்து கமாண்டர் பொறுப்பில் இருக்கிறார். தனது நெருங்கிய நண்பரான ஸ்காட் 'கிட்' போட்டீட் (ஓய்வு பெற்ற விமானி), மற்றும் இரண்டு ஸ்பேஸ்எக்ஸ் பொறியாளர்கள் அன்னா மேனன், சாரா கில்லிஸ் ஆகியோருடன் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். `ரெசிலியன்ஸ்’ எனப்படும் இந்த விண்கலம் சுற்றுப்பாதையில் பயணித்து இறுதியில் பூமிக்கு மேலே 870 மைல்கள் (1,400 கிமீ) வரை செல்லும். கடந்த 1970களில் நாசாவின் அப்பல்லோ திட்டம் நிறுத்தப்பட்டதில் இருந்து, எந்த விண்வெளி வீரரும் அவ்வளவு தூரம் வரை பயணிக்கவில்லை. அதிக கதிர்வீச்சை எதிர்கொள்ளும் குழு பட மூலாதாரம்,REUTER படக்குறிப்பு, இடமிருந்து வலமாக, அன்னா மேனன், ஸ்காட் போட்டீட், கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், சாரா கில்லிஸ் ஆகியோர் போலரிஸ் டான் மிஷனின் குழுவில் உள்ளனர் விண்வெளி வீரர்கள் `வான் ஆலன் பெல்ட்’ எனப்படும் விண்வெளிப் பகுதி வழியாகச் செல்வார்கள், இது அதிக அளவிலான கதிர்வீச்சைக் கொண்டிருக்கும். ஆனால் குழுவினர் விண்கலம் மற்றும் அவர்களின் மேம்படுத்தப்பட்ட விண்வெளி உடைகளால் கதிர்வீச்சில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள். வான் ஆலன் பெல்ட் பகுதியில் சில கடப்புகளில், அதீத கதிர்வீச்சை விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ள நேரிடும். மூன்று மாதத்திற்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தால் ஏற்படும் அனுபவத்திற்கு இணையாக இந்தக் கதிர்வீச்சின் தாக்கம் இருக்கும். ஆனால், இது ஏற்றுக்கொள்ளக் கூடிய வரம்புகளுக்குள் இருக்கும். ஒப்பீட்டளவில் குறுகிய, அதே சமயம் பாதுகாப்பான கதிர்வீச்சு வெளிப்பாட்டுக்கு, மனித உடல் ஏற்படுத்தும் விளைவுகளை ஆய்வு செய்வதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். சோதனைகள் மேற்கொள்ளத் திட்டம் விண்வெளியில் தங்கள் இரண்டாவது நாளின்போது இந்தக் குழுவினர் அதிகபட்ச உயரத்தில் இருப்பார்கள். அப்போது 40 சோதனைகள் வரை மேற்கொள்வர். பட மூலாதாரம்,POLARIS/X ஸ்பேஸ் எக்ஸின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் வலையமைப்புக்கும் டிராகன் விண்கலத்திற்கும் இடையே செயற்கைக்கோள் வழியாக நடத்தப்படும் லேசர் தொடர்பு சோதனையும் இதில் அடக்கம். எல்லாம் திட்டமிட்டபடி நடந்தால், மூன்றாம் நாளில் ஐசக்மேன் மற்றும் சாரா கில்லிஸ் ஆகியோர் முதன்முதலில், தனியாரால் நிதி அளிக்கப்பட்ட ஸ்பேஸ் வாக் (spacewalk) செயல்பாட்டை முயன்று பார்க்கவுள்ளனர். ஸ்பேஸ் வாக் சுமார் இரண்டு மணிநேரம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்கள் சுற்றுவட்டப் பாதையில் 700 கி.மீ தொலைவில் இருக்கும்போது இது நடக்கும். விண்வெளி வீரர்கள் புதிய எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி (ஈவிஏ) என்னும் விண்வெளி வீரர் சூட்களை (உடைகளை) சோதனை செய்ய உள்ளனர். இது அதன் பெயருக்கு ஏற்ப, விண்கலத்திற்கு வெளியே வேலை செய்வதற்காக ஸ்பேஸ் எக்ஸ்-இன் இன்ட்ரா வெஹிகுலர் ஆக்டிவிட்டி (ஐவிஏ) சூட்களில் இருந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. ஈவிஏ (EVA) சூட்டின் ஹெல்மெட்டில் ஹெட்ஸ்-அப் டிஸ்ப்ளே இருக்கும். இது பயன்பாட்டில் இருக்கும்போது சூட் பற்றிய தகவலை வழங்கும். ஈவிஏ சூட்கள், விண்வெளியில் ஏவப்படும்போதும் தரையிறங்கும் போதும் அணிவதற்கு வசதியாகவும் இலகுவாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்பேஸ் வாக் செய்யத் தேவையான ஸ்பேஸ் சூட் பட மூலாதாரம்,SPACEX படக்குறிப்பு, விண்வெளி வீரர்கள் புதிய எக்ஸ்ட்ராவெஹிகுலர் ஆக்டிவிட்டி (ஈவிஏ) என்னும் விண்வெளி வீரர் சூட்களை சோதனை செய்ய உள்ளனர். விண்வெளி ஸ்பேஸ் வாக்கிற்காக பயிற்சியில் இருந்தபோது அளித்த பேட்டியில் கில்லிஸ், மனிதர்களை வேற்றுகிரகங்களுக்கு அனுப்பும் ஸ்பேஸ் எக்ஸ் திட்டங்களில் இதுவொரு அவசியமான அம்சம் என்று கூறினார். “இதுவரை அரசுகளால் மட்டுமே `ஸ்பேஸ் வாக்’ செயல்பாட்டைச் சாத்தியமாக்க முடிந்தது. ஆனால் ஸ்பேஸ் எக்ஸ் செவ்வாய் கிரகத்திற்குச் சென்று மனித வாழ்க்கையை மற்றொரு கிரகத்திலும் சாத்தியப்படுத்தும் லட்சியத்தைக் கொண்டுள்ளது. அங்கு செல்வதற்கான நடைமுறைகளை நாம் தொடங்க வேண்டும். அதற்கான முதல்படி ஈவிஏ ஸ்பேஸ் சூட்டின் பயன்பாட்டைச் சோதிப்பது. இதன்மூலம் ஸ்பேஸ் வாக் மற்றும் அதற்கான எதிர்கால ஆடை வடிவமைப்புகளைச் சிறப்பாக உருவாக்க முடியும்” என்று ஐசக்மேன் கூறினார். "இன்னொரு கிரகத்தில் வாழ்விடங்களை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கனவை அவர்கள் நனவாக்கப் போகிறார்கள் எனில், அவர்களுக்கு ஈவிஏ சூட்டின் திறன் தேவை என்பதை ஸ்பேஸ் எக்ஸ் அறிந்திருக்கிறது." மனிதர்கள் மத்தியில் விண்வெளிப் பயணம் மிகவும் பொதுவான செயல்பாடாக மாறும்போது அதற்கான உடைகள் அனைத்துத் தரப்பு விண்வெளி வீரர்களுக்கும் கிடைக்க வேண்டும். எனவே ஸ்பேஸ் சூட் வாங்குவதற்கான செலவைக் குறைப்பதே இதன் நோக்கம். ஸ்பேஸ்வாக்கின் ஒரு தனித்துவமான அம்சம் என்னவென்றால், ரெசிலியன்ஸ் எனப்படும் டிராகன் விண்கலம், ஒரு ஏர்லாக்கை (airlock) கொண்டிருக்கவில்லை, இது விண்கலத்தின் மீதமுள்ள பகுதிக்கும் வெற்றிடத்திற்கு (vacuum) வெளியே செல்லும் நுழைவாயிலுக்கும் இடையில் ஒரு சீல் செய்யப்பட்ட இடமாகும். பொதுவாக விண்வெளி வீரர்கள் உள்ளே நுழைவதற்கும் வெளியே செல்வதற்கும் ஏர்லாக் அழுத்தம் நீக்கம்( depressurise) செய்யப்படும். ஆனால் ரெசிலியன்ஸ் விஷயத்தில், முழு குழுவும் அழுத்தம் நீக்கம் செய்யவேண்டும். ஸ்பேஸ் வாக் செய்யாத விண்வெளி வீரர்களும் முழுமையாக சூட் அணிய வேண்டும். வெற்றிடத்தைத் தாங்கும் வகையில் விண்கலம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலன்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் நான்கு விண்வெளி வீரர்களும் ஈவிஏ உடைகளை அணிந்திருப்பர். ஆனால் இருவர் மட்டுமே விண்கலத்தில் இருந்து வெளியேறுவார்கள். விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் உடல்நல பிரச்னைகள் இந்தக் குழு, `பெண்ட்ஸ்’ என அழைக்கப்படும் அழுத்தத் தளர்வு நோயின் (decompression sickness) தாக்கம் குறித்த சோதனைகளையும் செய்யவுள்ளது. விண்வெளி வீரர்கள் சில நேரங்களில் அனுபவிக்கும் மங்கலான பார்வை பிரச்னையையும் சோதனை செய்யவுள்ளனர். விண்வெளிப் பயணத்தின்போது ஏற்படும் நியூரோ-கண் பிரச்னை இது. பட மூலாதாரம்,POLARIS/X வான் ஆலன் பெல்ட்களில் இருந்து கதிர்வீச்சின் தாக்கத்தைச் சோதிப்பதும், ஸ்பேஸ் வாக் மேற்கொள்வதும் விண்வெளிப் பயணங்களை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும். நிலவு அல்லது செவ்வாய்க்கு தனியார் நிதியளிக்கும் திட்டத்தின் மூலம் அதிக பயணங்களை மேற்கொள்ள இது அடித்தளம் அமைக்கும். முதல்முறையாக விண்வெளிக்குப் பயணிக்கும் நபர்களைக் கொண்ட இந்தக் குழு, பல விஷயங்களை முதல்முறையாக அனுபவித்து, சாதிக்க முடியும். ஐசக்மேன் இதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே விண்வெளியில் இருந்துள்ளார். மற்ற மூவர் விண்வெளிக்குச் செல்வது இதுவே முதல்முறை. கிரான்ஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் ராக்கெட் உந்துவிசை நிபுணரான டாக்டர் ஆடம் பேக்கரின் கூற்றுப்படி, "இதில் நிறைய ஆபத்துகள் இருப்பதாக ஓர் உணர்வு இருக்கிறது.” "அவர்கள் அனைவரும் தங்களுக்குள் நிறைய லட்சிய நோக்கங்களை அமைத்துக் கொண்டனர். ஆனால் ஒப்பீட்டளவில் அவர்கள் குறைந்த விண்வெளிப் பயண அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.” "மறுபுறம், அவர்கள் இப்பணியை உருவகப்படுத்தி அது எப்படி இருக்கும் எனத் திட்டமிட ஆயிரக்கணக்கான மணிநேரங்களை முதலீடு செய்துள்ளனர். எனவே, ஆபத்துகளைக் குறைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டனர்.” இந்தப் பணி வெற்றியடைந்தால், அரசு விண்வெளி ஏஜென்சிகளைவிட அதிகமான மக்களைக் கொண்டு செல்லும் தனியார் சார்ந்த விண்வெளிப் பயணங்களின் தொடக்கத்திற்கு இது வழிவகுக்கும் என்று சில ஆய்வாளர்கள் நம்புகின்றனர். பெரிய தொகை, நிறைய விளம்பரங்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, டிராகன் விண்கலத்தில் ஏர் லாக் இல்லை, எனவே விண்வெளியின் வாக்யூமை தாங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும். ஆனால் டாக்டர் பேக்கர் மிகவும் எச்சரிக்கையான அணுகுமுறையை முன்வைக்கிறார். "இதுவரையிலான சாதனையானது தனியார் துறையால் செலவழிக்கப்பட்ட ஒரு பெரிய தொகை, நிறைய விளம்பரங்களை உள்ளடக்கியது. ஆனால் 500 அல்லது அதற்கு மேல் 100க்கும் குறைவான கூடுதல் நபர்கள் மட்டுமே அரசு நிதியுதவி பெற்ற விண்வெளி வீரர்களாக விண்வெளிக்குச் சென்று திரும்பினர். அதுவும் மிகக் குறுகிய காலத்திற்கு மட்டுமே அங்கு இருந்தனர். "விண்வெளிப் பயணம் கடினமானது, விலையுயர்ந்தது மற்றும் ஆபத்தானது. எதிர்காலத்தில் நீங்கள் பெரும் பணக்காரர்களுக்கு மாறாக, பல சாதாரண மனிதர்கள் விண்வெளிக்குச் செல்வதைக் காண்பீர்களா அல்லது அவர்களில் ஒருவராக இருப்பீர்களா என்பது சந்தேகமே” என்கிறார் டாக்டர் பேக்கர். கோடீஸ்வரர்கள் தங்கள் சொந்த விண்வெளிப் பயணத்திற்கு நிதி அளிப்பார்கள் என்பதைச் சிலர் வெறுக்கத்தக்க ஒன்றாகக் கருதுகின்றனர். மேலும் பயணத்திற் பணம் செலுத்தும் நபர், திட்டத்திற்குத் தலைமை தாங்கும் கமாண்டராக இருப்பதைச் சிலர் புருவம் உயர்த்திக் கேட்கின்றனர். ``இது ஒரு மாயைத் திட்டமாக மறைந்துவிடக் கூடாது” என்று ஓபன் பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞானியான டாக்டர் சிமியோன் பார்பர் கூறுகிறார். அவர் முழுக்க முழுக்க அரசாங்க நிதியுதவி திட்டங்களில், விண்கலங்களுக்கான அறிவியல் கருவிகளை உருவாக்குகிறார்." பட மூலாதாரம்,SPACEX/X "அந்த குழுவினரில் ஐசக்மேன் உண்மையில் மிகவும் அனுபவம் வாய்ந்த விண்வெளி வீரர். அவர் மட்டும்தான் இதற்கு முன்பு விண்வெளிக்குச் சென்றவர். ஸ்பேஸ் எக்ஸுடன் மற்றொரு தனியார் நிதித் திட்டத்தில் இருந்தார், அங்கு அவர் கமாண்டர் பதவியையும் பெற்றார்” என்று அவர் பிபிசியிடம் கூறினார். "இன்னும் விரிவாகப் பார்த்தால், இந்த நட்சத்திர வகுப்பு விண்வெளிப் பயண டிக்கெட்டை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் பணம் பூமியில் பயன்படுத்தப்படும். சம்பளம் கொடுக்கவும், பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்கவும், வரி செலுத்தவும் பயன்படுத்தப்படும். தொண்டுக்காக இந்தத் திட்டம் திரட்டும் பணத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.” விண்வெளித் துறையில் உள்ள பலர் பணக்காரர்களின் ஈடுபாட்டை ஒரு நல்ல விஷயம் என்று நம்புவதாக அவர் கூறுகிறார். "அவர்கள் பூமிக்கு வெளியே, ஒரு நாள் சந்திரன் அல்லது செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல விரும்பினால், அது அறிவியல் வளர்ச்சிக்கு உதவும். மேலும் விண்வெளியை ஆராய்வதற்கான பல்வேறு காரணங்கள் இருப்பதால், இந்தத் திட்டம் மிகவும் நிலைத்தன்மை அடையும்.” - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c2040pnr7dpo
-
திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பதவி இடைநிறுத்தம்!
Published By: DIGITAL DESK 3 13 SEP, 2024 | 03:18 PM திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா இன்று வெள்ளிக்கிழமை (13) நீதிச்சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து, ஜனாப் பயாஸ் ரசாக் மாவட்ட நீதிபதியாகவும், ஜீவராணி கருப்பையா பிரதம நீதிவான் நீதிமன்ற நீதிவானாகவும் இன்றைய தினம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேம்சங்கர் முன்னிலையில் சத்திய பிரமாணம் செய்து கொண்டனர். https://www.virakesari.lk/article/193590
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
நாடு முழுவதும் 13,417 வாக்குச்சாவடிகள்; 18 ஆம் திகதியுடன் பிரசாரத்துக்கு தடை - தேர்தல் ஆணையாளரின் அறிவிப்பு வெளியானது ஜனாதிபதி தேர்தலுக்கான சகல பிரசார நடவடிக்கைகளும் எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் பூர்த்தி ஆகும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேபோல், 21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4:30 வரையில் வாக்காளர்கள் வாக்களிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். நாடு முழுவதிலும் 13,417 வாக்குச்சாவடிகளில் வாக்களிப்பு செய்ய முடியும். தேர்தலில் வெற்றி ஈட்டும் ஜனாதிபதி வேட்பாளர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டு பத்து முதல் 12 நாட்களில் நாடாளுமன்றை கலைக்க முடியும் என தேர்தல் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இவ்வாறு நாடாளுமன்றை கலைத்து 35 முதல் 44 நாட்கள் வரையிலான காலப்பகுதிக்குள் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தேவை ஏற்பட்டால் தேர்தல் நடாத்துவதற்காக அதிகபட்சமாக 52 முதல் 66 நாட்களை எடுத்துக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஜனாதிபதியின் விருப்பத்திற்கு ஏற்ப நாடாளுமன்றை கலைக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். அல்லது தற்போதைய நாடாளுமன்றின் பதவிக்கால நிறைவடையும் வரையில் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309394
-
உயர்தரப் பரீட்சை செய்திகள் - 2024
உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ள திகதி அறிவிப்பு! 13 SEP, 2024 | 01:30 PM 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 25 ஆம் திகதி ஆரம்பமாகும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/193581
-
பற்களைப் பிடுங்கினால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு நடக்குமா?
சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது, ஹூவாங்கின் 23 பற்களும் பிடுங்கப்பட்டு அதே நாளில் 12 புதிய பற்கள் பொருத்தப்பட்டன. இந்த நிலையில் மருத்துவமனையிலிருந்து திரும்பிய அவர் இரண்டு வாரங்கள் கழித்து ஆகஸ்ட் 28 ஆம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மகள் இணையத்தில் வெளியிட்ட பதிவில், “பற்களை பிடுங்கிய பிறகு தொடர்ச்சியாக வலியை அனுபவித்து வந்த எனது தந்தை இவ்வளவு சீக்கிரம் உயிரிழப்பார் என்று நினைக்கவில்லை. நாங்கள் புதிதாக வாங்கிய காரை ஓட்டும் வாய்ப்புகூட அவருக்கு கிடைக்கவில்லை” என தெரிவித்திருந்தார். இந்த பதிவு இணையத்தில் வேகமாக பரவிய நிலையில், பலரும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இது அறுவை சிகிச்சை என்பதை விட இது அறுவை சிகிச்சை என்பதை விட ஏதோ மருத்துவ எக்ஸ்பெரிமெண்ட் போல உள்ளது என்று பலரும் கூறியுள்ளனர். மேலும் ஒரே நாளில் 10 பற்கள் பிடுங்கப்படுவதே அதிகம் என்று பல் மருத்துவர்கள் தங்களின் அபிப்பிராயங்களைக் கூறி வருகிறனர். பற்களை பிடுங்குவதற்காக அளிக்கப்பட்ட மருந்தின் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டதா? அல்லது வேறு காரணம் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/309399
-
கண் மை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஆபத்து என எச்சரிக்கும் மருத்துவர்கள் - தவிர்க்கும் வழிகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 13 செப்டெம்பர் 2024, 04:47 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் அப்போது கல்லூரி மாணவியாக இருந்த சாருலாதவிற்கு கண்ணில் மை இட்டுக்கொள்ள மிகவும் பிடிக்கும். தினமும் அவர் கண் இமையின் விளிம்பான வாட்டர்லைனில் (waterline) மை இட்டுக்கொள்வார். சில காலத்திற்குப் பிறகு, அவருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டதுடன் கண்ணின் உள்ளே உருண்டையாக கட்டி போல ஒன்று இருப்பது போலத் தோன்றியது. இதற்காக வீட்டிலே கை வைத்தியம் செய்து வந்தார். ஆனால் ஆறு மாத காலமாகியும் அது குணமாகாத காரணத்தால், கண் மருத்துவரிடம் சென்று, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு இந்தக் கட்டி நீக்கப்பட்டது. சிறிது நாட்களுக்குப் பிறகு இதே போல மற்றொரு கண்ணிலும் கட்டி வந்தது. இந்தப் பிரச்னை தொடர்ச்சியாக வந்ததால், இதைப் பரிசோதனை செய்த சாருலதாவின் கண் மருத்துவர், "உங்களுக்குக் கண்ணில் மை இடும் பழக்கம் உள்ளதா?" என்று கேட்டு, அதனால்தான் அவருக்குக் கண்ணில் கட்டி வருவதாகக் கூறியுள்ளார். “இதுவரை எனக்கு மூன்று முறை கண்களில் கட்டிக்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளன. கண் மை இட்டுக்கொள்வதை நிறுத்திப் பல ஆண்டுகள் ஆகிறது. அதிலிருந்து இதுபோல கண்களில் கட்டி ஏதும் வரவில்லை” என்று சாருலதா பிபிசி தமிழிடம் தெரிவித்தார். குழந்தை முதல் பெரியவர்கள் வரை பலரால் பயன்படுதப்படும் கண் மை ஆபத்தானதா? அதைப் பயன்படுத்துவதால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? கண்கள் எவ்வளவு மென்மையானது? சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியின் ஒரு பகுதி, சமூக ஊடக பக்கங்களில் வைரல் ஆனது. அதில் தொடர்ச்சியாக கண் மை பயன்படுத்துவது ஆபத்தானது என்று கண் மருத்துவர் அஷ்வின் அகர்வால் குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்து கண் மருத்துவர்களிடம் கேட்டபோது, “உடல் உறுப்புகளில் கண்கள் மிகவும் மென்மையானவை மற்றும் முக்கியமானவையாக இருக்கின்றன. அதைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும். அதில் தூசி போன்றவை படியும்போது கண் எரிச்சல், கண் கட்டி போன்றவை ஏற்படலாம்,” என்று கூறுகிறார் கண் மருத்துவர் வஹீதா நசீர். “கண்ணின் விளிம்புகளில் லாக்ரீமல் சுரப்பிகள், மெய்போமியன் சுரப்பிகள் போன்றவை இருக்கின்றன. இவைதான் கண்ணீர் சுரப்பதற்கும், எண்ணெய் போன்றவற்றைச் சுரந்து கண்கள் உலர்ந்து போகாமல் இருப்பதைத் தவிர்க்கவும் செய்கிறது.” “கண்ணின் வாட்டர்லைனில் மை இடுவதால், அங்குள்ள நுண்ணிய துளைகளில் (pores) அடைப்பு ஏற்படும். இதனால் கண்ணில் சுரக்கப்படும் திரவியங்கள் வெளியேற வழி இல்லாமல் உள்ளேயே இருந்து, அது கட்டி போல உருவாகக்கூடும். இந்த பாதிப்பிற்கு கேலேசியான் (chalazion) என்று பெயர்” என்றார் மருத்துவர் வஹீதா. என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கண்ணில் வரும் இந்தக் கட்டிகள், இமையின் உள் பக்கங்களிலும் வெளிப்புறத்திலும் தோன்றலாம். கண்களை அலங்கரிக்க கண் மை, ஐ லைனர், மஸ்காரா, ஐ ஷாடோ போன்ற சாதனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைத் தொடர்ச்சியாக கண்களின் உள்ளே பயன்படுத்தும்போது, கஞ்சக்டிவைடிஸ் எனப்படும் கண் எரிச்சல், ஸ்டை எனப்படும் கண் கட்டிகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கிறார் மருத்துவர் வஹீதா. "இது போன்றவற்றைப் பொருட்படுத்தாமல் இருந்தால் இந்த பாதிப்பு அதிகமாகி புற்றுநோய்கூட வரும் வாய்ப்புகள் உள்ளன,” என்றார் அவர். கண்ணில் வரும் இந்தக் கட்டிகள், இமையின் உள்பகுதியிலும் வெளிப்புறத்திலும் தோன்றலாம். இதனால் பார்வைக்கு எந்தப் பாதிப்பும் இருக்காது. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், கரு விழிகளில் இந்தப் பாதிப்பு பரவி கண் பார்வையில் பிரச்னைகள் ஏற்படலாம் என்றும் அவர் விளக்கினார். இதுபோன்று கண்ணில் கட்டி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். பாதிப்பு தீவிரமாக இருப்பின், அறுவை சிகிச்சை மூலம் கட்டியிலுள்ள சீழ் வெளியேற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும், என்று இதைக் குணப்படுத்தும் முறை குறித்து விளக்கினார் மருத்துவர் வஹீதா. “தற்போது பயன்படுதப்படும் கண் மையில் உள்ள வேதிப் பொருட்களால் கண் உலர்ச்சி, கண்ணில் அழுத்தம் அதிகரிப்பு, கார்னியல் அல்சர் எனப்படும் கருவிழிப் புண் போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்” என்றும் எச்சரிக்கிறார் கண் மருத்துவர் சிவக்குமார். கண் மை பயன்படுவதால் மட்டுமே இந்தப் பிரச்னைகள் ஏற்படுகிறதா என்ற கேள்விக்கு, "இந்தப் பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களில் கண் மை இட்டுக்கொள்வதும் ஒன்றாக இருக்கின்றது. தொடர்ச்சியாக வேதிப் பொருட்கள் அடங்கிய ஒப்பனை சாதனங்களை கண்ணில் பயன்படுத்தும்போதும், கண்ணில் பிரச்னைகள் இருந்தும் அதற்கு சிகிச்சை எடுக்காமல் இருக்கும்போதும் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படலாம்" என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ‘ஐ மேக்கப்’ - ஒரு பேஷன் டிரெண்ட் பட மூலாதாரம்,GETTY IMAGES கண்ணில் மை இடும் பழக்கம் நீண்டகாலமாக நிலவி வருகிறது. குழந்தை முதல் பெரியவர் வரை கண் மை இட்டுக்கொள்கின்றனர். முன்பு விளக்கெண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்ட கண் மை பயன்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது கடைகளில் பல வகைகளிலும் வெவ்வேறு நிறங்களிலும் கண் மைகள் கிடைக்கின்றன. "கண் மை என்பது பிரபல பேஷன் டிரெண்டாக எக்காலத்திலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போதெல்லாம், கண் மை நீர் போன்றவை பட்டு அழியாமல் இருக்க அதில் அதிகளவில் வேதிப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படுகிறது," என்று ஒப்பனைக் கலைஞர் அகிலா தெரிவித்தார். மேலும், இத்தகைய வேதிப்பொருட்கள் நிறைந்த ஒப்பனைப் பொருட்கள் சிலருக்கு பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆகையால், அவற்றைப் பயன்படுத்தத் தொடங்கும் முன்பாக 'பேட்ச் டெஸ்ட்' செய்து பார்த்துவிட்டுத் தொடங்க வேண்டும் என்கிறார் அகிலா. அதாவது, எந்த ஒப்பனைப் பொருளாக இருந்தாலும், அதை மிகச் சிறிய அளவில் உடலின் ஒரு சிறு பகுதியில் பயன்படுத்திப் பார்த்து, அதனால் எந்தவித விளைவுகளும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே தொடர்ந்து பயன்படுத்த வேண்டும் என்கிறார் அகிலா. பாதிப்புகளைத் தடுப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கண்ணில் ஏற்படும் கட்டிகள் “பொதுவாக உடல் சூடு, தூசி, சுத்தமில்லாமல் இருப்பது போன்ற காரணங்களால் கண் இமைகளில் கட்டி வரலாம்” என்கிறார் மருத்துவர் சிவக்குமார். இதுபோன்ற பாதிப்புகளைத் தடுக்கும் வழிமுறைகளைக் குறித்துப் பேசிய கண் மருத்துவர் வஹீதா, சில அறிவுறுத்தல்களை வழங்கினார்: முதலில் கண்களில் தூசி சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கண்களில் வேதிப் பொருட்கள் கொண்ட ஒப்பனை சாதனங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவேண்டும். ஒருவேளை பயன்படுத்தினாலும் தேவை முடிந்தவுடன் கண் இமை, இமையிலுள்ள முடி போன்ற கண்ணின் எல்லா பகுதிகளிலும் சரியான முறையில் அவற்றை முழுமையாக அகற்ற வேண்டும். அதை அகற்றாமல் போனால் கண்ணில் பாதிப்புகள் ஏற்படக்கூடும். ஒருவர் பயன்படுத்திய ஒப்பனைப் பொருட்களை வேறொருவர் பயன்படுத்தக்கூடாது. சோப், ஃபேஸ்வாஷ் போன்றவை கண்ணுக்குள் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும், வெறும் தண்ணீர் கொண்டே கண்ணைச் சுத்தம் செய்ய வேண்டும். கண்களுக்கு உள்ளே அல்லது அதைச் சுற்றி கட்டி ஏற்பட்டால் நாமக்கட்டி, சந்தனம், விளக்கெண்ணை போன்றவற்றைப் பயன்படுத்த கூடாது. கண் சிவப்பாகவோ அல்லது அதில் ஏதேனும் எரிச்சல் ஏற்பட்டாலோ, உடனடியாக கண் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவப் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ற உரிய சிகிச்சை வழங்கப்பட வேண்டும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cm23lr3x9gwo
-
முதல் தெரிவு அரியம்; 2 வது தெரிவு அனுர; தமிழர் தேசத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றம்
ஒரே ஒருவருக்கு எனில் புள்ளடியும் விருப்பு வாக்கு எனில் 1 2 3 என விருப்பமானவர்களுக்கு போடலாம். 1 போட்டு 2 3 போடாதுவிடின் எண்ணுமிடத்தில் அரசியல் கட்சி சார்ந்தோர் குழுவாகப் பணி செய்தால் 2ஆவது 3ஆவது வாக்கை தமது விருப்புக்கு போடலாம்!
-
தென் சீனாவை நோக்கி நகரும் யாகி சூறாவளி : பாடசாலைகளுக்கு பூட்டு, விமான சேவைகள் இரத்து
யாகி சூறாவளி; வியட்நாமில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 197 ஆக அதிகரிப்பு Published By: DIGITAL DESK 3 12 SEP, 2024 | 03:26 PM வியட்நாமில் யாகி சூறாவளியால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் சிக்கி 200 பேர் உயிரிழந்துள்ளதோடு, 125 க்கும் மேற்பட்டோர் காணமல் போயுள்ளார்கள். இதனை அந்நாட்டு ஊடகங்கள் வியாழக்கிழமை (12) தெரிவித்துள்ளன. இந்நிலையில் 800 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துளள்ளன. வியட்நாம் தலைநகர் ஹனோய்யில் சிவப்பு ஆற்றிலிருந்து வந்த நீர் சிறிது குறைந்த போதிலும் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. பல தசாப்தங்களுக்கு பின்னர் தென்கிழக்கு ஆசியாவை தாக்கிய மிக வலிமையான சூறாவளியாக யாகி சூறாவளி காணப்படுகின்றது. இந்த சூறாவளி 149 கிலோ மீற்றர் (92 மைல்) வேகத்தில் காற்றுடன் சனிக்கிழமை கரையைக் கடந்தது. இந்நிலையில், சூறாவளி ஞாயிற்றுக்கிழமை வலுவிழந்தாலும் தொடர்ந்து பெய்யும் மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்து ஆபத்தான நிலையில் உள்ளன. கடந்த இரண்டு தசாப்தங்களில் இம்முறையே ஹனோய் வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வடக்கு வியட்நாமின் லாவோ காய் மாகாணத்தில் உள்ள லாங் நுவின் பகுதியில் கிராமங்கள் தீடீர் வெள்ளத்தில் மூழ்கியதால் பலர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தேடும் பணிகள் நேற்று புதன்கிழமை ஆரம்பிக்கப்பட்டது. இன்று வியாழக்கிழமை காலை நிலவரப்படி 53 பேர் காணமல் போயுள்ளதோடு, 8 சடலங்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. 42 உயிரிழந்துள்ளதாக VNExpress தெரிவித்துள்ளது. பெரும்பாலான உயிரிழப்புகள் வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் இடம் பெற்றுள்ளது. அவற்றில் பல உயிரிழப்புகள் வியட்நாமில் லாவ் காய் பகுதியில் இருக்கும் லாங் நு கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. லாவோ காய் மாகாணம் சாபாவின் பிரபலமான மலையேற்ற இடமாகவும் உள்ளது. அங்கு திங்களன்று சூறாவளியில் மக்கள் நடமாட்டம் அதிகமிருந்த ஒரு பாலம் இடிந்து விழுந்து, அதன் மீதிருந்த பத்து கார்கள் மற்றும் இரண்டு மோட்டார்கைக்கிள்கள்,லொறிகள் சிவப்பு ஆற்றில் மூழ்கின. அத்தோடு, மலைப்பகுதியான காவ் பாங் மாகாணத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் 20 பேருடன் சென்ற பஸ் வெள்ளம் நிறைந்த ஓடையில் அடித்துச் செல்லப்பட்டது. யாகி போன்ற சூறாவளிகள் காலநிலை மாற்றத்தால் வலுவடைகிறது. இதனால், புவி வெப்பமடைவதால் சூறாவளிகள் பலத்த காற்றையும், தீவிர மழையையும் கொண்டு வர வழிவகுக்கிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். https://www.virakesari.lk/article/193498
-
வாழ்வதும் ஒரு போராட்டம்தான்
வாழ்வதற்கு உடல் நலம் மட்டுமல்ல உள நலமும் தேவை.
-
பலத்காரம் செய்ய முயன்ற மருத்துவரின் ஆணுறுப்பை பிளேட்டால் அறுத்த தாதி.
தாதியின் துணிச்சலைப் பாராட்டவேண்டும். இவ்வாறு செய்து தப்பி இருக்காதுவிட்டால் வல்லுறவும் அதன் பின் படுகொலையும் செய்திருப்பார்கள்.
-
தமிழ்ப் பொது வேட்பாளாின் தோ்தல் விஞ்ஞாபனம் நாளை வெளியீடு!
தமிழ்ப் பொது வேட்பாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை வரவேற்றுள்ள கனேடிய தமிழர் தேசிய அவை Published By: DIGITAL DESK 7 13 SEP, 2024 | 09:25 AM நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்ப் பொது வேட்பாளரால் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையை கனேடிய தமிழர் தேசிய அவை வரவேற்று அதற்கான முழுமையான ஆதரவையும் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கனேடிய தமிழர் தேசிய அவை வெளியட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, சிவில் சமூகங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், கிராமிய அமைப்புகள், மாணவர் அமைப்புகள், அரசியல் கட்சிகள் என்பன இணைந்து “தமிழ்த் தேசியப் பொதுக்கட்டமைப்பு” என்ற ஆற்றலுள்ள அணியாக ஒன்றிணைந்துள்ளன. இந்த ஒன்றிணைவின் ஊடாகத் தமிழ்ப் பொது வேட்பாளர் அறிவிப்பும், வேட்பாளர் அறிக்கையையும் வெளிவந்துள்ளன. இந்த ஒற்றுமையானது, தமிழ் மக்களின் கூட்டு அடையாளத்தை வலுப்படுத்துவதற்கு ஒரு புதிய நம்பிக்கையையும் வலுவான அடித்தளத்தையும் தருகிறது. இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்கள் எவரும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை நிறைவு செய்வதில் அக்கறை காட்டாது, தமிழ் மக்களை அடிபணியச் செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அதிகாரத்திற்காகப் போட்டி போட்டு வருகின்றனர். ஆங்கிலேயர்கள் இலங்கைத் தீவை விட்டு வெளியேறியதிலிருந்து கடந்த 76 ஆண்டுகளாக இந்நிலைமை தொடர்கிறது. ஏனைய வேட்பாளர்களுக்கு வாக்களிப்பது என்பது தமிழ் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதையும், தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் தமிழின அழிப்பையும் ஏற்றுக் கொள்வதற்கு ஒப்பானதாகும். எனவே, தமிழ் மக்கள் இத்தேர்தலைப் பயன்படுத்தி, தமது நிலைப்பாடு குறித்து அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தியை அறிவிக்க வேண்டும். தமிழ்த் தேசியப் பொது வேட்பாளர் பின்வரும் முக்கிய விடயங்கள் உள்ளடக்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார். தமிழ் மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய ஒரு தேசம். மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகளின் இனவழிப்புகளால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளனர். இலங்கை அரசுகளால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்புக்கான சர்வதேச விசாரணை மற்றும் தண்டனை வழங்கும் பொறிமுறை, தமிழின அழிப்புக்கான பரிகார நீதி என்பவற்றைத் தமிழ் மக்கள் கோருகின்றனர். தமிழர் தாயகப் பகுதிகளில் வாழும் தமிழர், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதன் மூலம், தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் அறிக்கைக்கு வாக்களிக்கிறீர்கள். தமிழ்ப் பொது வேட்பாளருக்கு ஆதரவு கொடுப்பதன் ஊடாக ஒரு தெளிவான செய்தியை கொடுக்கின்றீர்கள். தமிழ் மக்களாக ஒன்றிணைந்து எமது மக்களின் நியாயமான வேணவாக்களை நிறைவேற்றுவதற்கான கூட்டுச் செயற்பாட்டைத் தொடங்குவோம் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/193545
-
தமிழர்கள் ஒன்றுபட்டுள்ளார்கள் என்பதை சர்வதேசத்திற்கு காட்டவேண்டும் என்கிறது கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம்
தமிழ் மக்கள் இந்த நாட்டில் அனுபவித்து துன்பங்களுக்கு தீர்வாக இம்முறை தமிழ் பொதுவேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் எனவும் அது தமிழர்களின் தலையாய கடமையெனவும் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள் தெரிவித்தார். கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் வகையில் எடுத்த தீர்மானத்தினை அறிவிக்கும் வகையிலான ஊடக சந்திப்பு மட்டக்களப்பு நாவற்குடாவில் உள்ள ஒன்றியத்தின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஊடக சந்திப்பில் கிழக்கிலங்கை இந்துக்குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ கணேச லோகநாதன் குருக்கள், செயலாளர் சிவஸ்ரீ சி.குகநாதன் குருக்கள், உறுப்பினர் சிவஸ்ரீ செ.கு.உதயகுமார குருக்கள் ஆகியோர் கலந்துதெரிவித்தனர். இதன்போது கருத்து தெரிவித்த தலைவர், எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டுக் கொண்டிருக்கின்ற எமது தமிழ் பொது வேட்பாளர் பா.அரியனேத்திரன் அவர்களை ஆதரித்து இன்று எமது அலுவலகத்தில் நாங்கள் இந்த ஊடக சந்திப்பை நடத்துவதற்கு முன் வந்துள்ளோம். இலங்கை திரு நாட்டிலேயே எமது மக்கள் இதுவரை காலமும் பெரும்பான்மை இன சிங்கள ஜனாதிபதிகளினால் இதுவரை காலமும் நாங்கள் பல்வேறு பட்ட ஆதரவை வழங்கியிருந்தோம் அதன் மூலமாக எங்களது மக்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மாத்திரமே அன்றி வேறு எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இன்று எமது மக்கள் ஆண்டாண்டு காலமாக தொடர்ந்து வந்த ஆட்சியாளர்களினால் எமது இனம் மிகவும் மோசமாக வஞ்சிக்கப்பட்டது தமிழர்கள் மிகவும் கேவலமாக நடத்தப்பட்டார்கள் எமது இனம் கொன்றொழிக்கப்பட்டது இவை அனைத்தையும் இதுவரை காலமும் நாங்கள் அனுபவித்து வந்திருக்கின்றோம். அதற்கு ஒரு தீர்வாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பொதுச் சபையின் ஊடாக நாங்கள் இந்த தமிழர் பொதுச் சபையிலே எமது கிழக்கிலங்கை இந்து குருமார் ஒன்றியம் அங்கத்தவர்கள் ஆக இருக்கின்றோம். அதன் மூலம் இந்த பொது கட்டமைப்பினால் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகின்ற அரியநேத்திரன் அவர்களை ஆதரிக்க வேண்டும் ஏனென்றால் அது தமிழர்களுடைய தலையாய கடமை ஆகும். எங்களது இனம் தேசியம் சுய நிர்ணயம் ஆகியவற்றை நாங்கள் பெற வேண்டுமாக இருந்தால் உங்களுக்காக அந்த வலுவான சக்தியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமாக இருந்தால் தமிழர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கின்றோம் என்பதனை சர்வதேசத்திற்கும் இலங்கையில் மாறி மாறி வருகின்ற பௌத்த அரசியல்வாதிகளுக்கும் எடுத்துக்காட்டுவதற்காகவும் இந்த தேர்தல் ஒரு முக்கியமான களமாக அமைந்திருக்கின்றது. ஏனென்றால் இந்த தேர்தலிலே தமிழர்கள் என்கின்றவர்கள் இதுவரை காலமும் தமிழ் தேசியம் என்கின்ற போர்வையில் பல்வேறுந்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாதையிலே நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இம்முறை முதல் முறையாக வடகிழக்கில் இருக்கின்ற தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியத்தின் பால் உறுதிபூண்டு அனைவரும் ஒற்றுமையாக எமது ஜனாதிபதி தேர்தலிலே மற்றவர்களுக்கு நாங்கள் எடுத்துக்காட்டாக இந்த பொது வேட்பாளர் அவர்களை நாங்கள் ஆதரிக்க வேண்டும். அது மாத்திரம் இல்லாமல் இரு ஜனாதிபதி தேர்தலிலே பொது வேட்பாளர் ஜனாதிபதியாக வருவதற்காக போட்டியிடவில்லை எமது மக்களுடைய ஒற்றுமை எங்களுடைய உரிமைக்காக நாங்கள் குரல் கொடுப்பதற்கு எல்லோரும் ஒன்று திரண்டு குரல் கொடுக்க வேண்டும் என்பதற்காக முதல் முறையாக ஒரு படிக்கல்லாகவே இதனை நாங்கள் கருதுகின்றோம். ஆகவே ஒவ்வொரு தமிழ் மக்களும் உணர்ந்து எதிர் வருகின்ற 21 ஆம் திகதி காலையில் இறை வழிபாட்டுடன் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையத்திற்கும் சென்று எமது சங்கு சின்னத்திற்கும் எமது வேட்பாளர் அரிய நேத்திரன் அவர்களுக்கு மாத்திரம் தங்களது வாக்கினை செலுத்துவதன் மூலம் தமிழ் மக்கள் அனைவரும் தங்களது உரிமைகளுக்காகவும் நாங்கள் பட்ட துன்பங்களில் இருந்து வெளியேறி நாங்களும் சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என்று சர்வதேசத்திற்கும் ஏகையிலே வருகின்ற அரசியல் தலைமைகளுக்கும் உணர்த்துவதற்கு எல்லோரும் அணி திரண்டு எமது சங்கு சின்னத்தை வலுப்பட செய்வோம் அதன் மூலம் எமது உரிமைகளையும் எமது கோரிக்கைகளையும் நாங்கள் வென்றெடுப்பதற்கு அனைவரும் ஒன்று சேருமாறு உங்களை அன்போடு வேண்டுகின்றோம் என்றார். https://thinakkural.lk/article/309383
-
வாக்களித்ததை யாருக்கும் சொன்னால் கைது செய்யப்படுவர்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அதிரடி அறிவிப்பு
கைபேசி எடுத்துவர முடியாது; வாக்களித்ததை யாருக்கும் சொன்னால் கைது செய்யப்படுவர்; தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் அதிரடி அறிவிப்பு வாக்களிப்பு நிலையங்களுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது என்றும் வாக்காளர்கள் மட்டுமன்றி வேட்பாளர்களும் வாக்குச்சாவடிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை எடுத்துச் செல்ல முடியாது என்றும், வாக்களித்ததன் பின்னர் யாருக்கு வாக்களித்தீர்கள் என்பதை பகிரங்கமாக சொன்னால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்தார். ‘சுதந்திரமானதும் மற்றும் நியாயமானதுமான ஜனாதிபதி தேர்தலில் ஊடகங்களின் வகிபாகம்’ எனும் தொனிப்பொருளில் இலங்கை பத்திரிகையாளர் சங்கத்தால் ஏற்பாடு செய்திருந்த விசேட கருத்தரங்கு, கொழும்பிலுள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில், வியாழக்கிழமை (12) பிற்பகல் நடைபெற்றது. அதில், கலந்துகொண்டு கருத்துரையை வழங்கியதன் பின்னர், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். https://thinakkural.lk/article/309386
-
மலேசியாவின் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் மோசமான துஸ்பிரயோகங்கள் - 402 சிறுவர்கள் மீட்பு
Published By: RAJEEBAN 12 SEP, 2024 | 12:02 PM மலேசியாவின் 20 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் உடல்ரீதியாக பாலியல்ரீதியாக துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டனர் என கருதப்படும் 402 சிறுவர்களையும் பதின்மவயதினரையும் பொலிஸார் மீட்டுள்ளனர். ஒரு வயது முதல் 17 வயதானவர்களை மீட்டுள்ளோம் இவர்கள் பல்வேறுவிதமான துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். மத ஆசிரியர்கள் உட்பட 171 பேரை கைதுசெய்துள்ளதாக மலேசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுவர் பராமரிப்பு நிலையங்கள் பிரபலமான இஸ்லாமிய அமைப்புடன் தொடர்புடையவை என்பது குறிப்பிடத்தக்கது எனினும் அந்த அமைப்பு தனக்கும் இதற்கும் தொடர்பில்லை என தெரிவித்துள்ளது. நெகேரிசெம்பிலான் மாநிலத்தில் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் சிறுவர் துஸ்பிரயோகம் இடம்பெறுவதாக வெளியான தகவல்களை தொடர்ந்து செலெங்கூர் நெகெரி செம்பிலானில் உள்ள 20க்கும் மேற்பட்ட சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் பொலிஸார் சோதனை நடவடிக்களை முன்னெடுத்திருந்தனர். 17 முதல் 64 வயதான சந்தேகநபர்கள் சிறுவர்களை பல்வேறுவிதமான துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தினார்கள் என பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் "சூடான உலோகப் பொருட்களைப் பயன்படுத்தி தண்டிக்கப்பட்டனர்" என்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் அவர்களின் நிலை மோசமாகும் வரை மருத்துவ சிகிச்சையைப் பெற அனுமதிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். குழந்தைகள் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஒரு காவல் மையத்தில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டு சுகாதார பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் . பல குழந்தைகளை மதக்கல்விக்காக பெற்றோர் இந்த நிலையங்களிற்கு அனுப்பியிருந்தமை தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/193478