Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. டிரம்ப் vs கமலா ஹாரிஸ்: அமெரிக்க அதிபர் தேர்தல் விவாதத்தில் முன்னிலை பெறப்போவது யார்? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் டிரம்ப் கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி ஹோவெல் பதவி, பிபிசி உலக சேவை 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு நடைபெறும் இரண்டாவது விவாதம் அடுத்த செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இந்த விவாதத்தில் முதல்முறையாக டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸ் நேருக்கு நேர் விவாதிக்க உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வேட்பாளர்கள் மத்தியில் நடக்கும் விவாதங்கள் உலகம் முழுவதும் கவனிக்கப்படுகிறது. இந்த விவாதங்கள் அமெரிக்காவில் மக்களின் வாக்களிக்கும் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம். கமலா ஹாரிஸ் விவாதிக்கும் திறன் பெற்றவர் என்று கூறப்படுகிறது. அதே நேரம் டொனால்ட் டிரம்ப் கடந்த 2016 மற்றும் 2020 அதிபர் தேர்தல் விவாதங்களில் தான் ஒரு வலிமையான வேட்பாளர் என்பதை நிரூபித்தார். விவாதம் எப்போது நடக்கும்? அதன் விதிகள் என்ன? பிலடெல்பியாவில் செப்டம்பர் 10ஆம் தேதி இந்த விவாதம் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு (Eastern Time) தொடங்கும். இது 2024ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலை முன்னிட்டு நடக்கும் இரண்டாவது விவாதம். முதல் விவாதம் ஜூன் மாதம் டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிபர் ஜோ பைடனுக்கு இடையே நடைபெற்றது. அதன் பின்னர் பைடன் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலக முடிவு செய்தார். இந்த முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் ஏபிசி ஊடகத்தில் ஒளிபரப்பப்படும் மற்றும் ஏபிசி நியூஸ் லைவ், டிஸ்னி+ மற்றும் ஹுலு ஆகியவற்றில் ஒளிபரப்பப்படும். இந்த விவாதத்தில் நேர வரம்புகள் கடுமையாகப் பின்பற்றப்படும். மதிப்பீட்டாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஒவ்வொரு வேட்பாளருக்கும் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே கொடுக்கப்படும். அதன் பின்னர் எதிர் வேட்பாளரின் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவித்து விவாதிக்க இரண்டு நிமிடங்கள் வழங்கப்படும். ஒரு வேட்பாளர் பேசும்போது மற்றொரு வேட்பாளர்களின் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்து வைக்கப்படும். மேலும் விவாத அறையில் பார்வையாளர்கள் இருக்க மாட்டார்கள். கமலா ஹாரிஸ் மைக்ரோஃபோன்கள் ஆஃப் செய்யப்படக் கூடாது என்று விரும்பினார், ஆனால் சமீபத்தில் விவாத விதிகளுக்கு ஒப்புக் கொண்டார். இந்தக் குறிப்பிட்ட விதி, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. டிரம்புக்கும் பைடனுக்கும் இடையிலான முதல் விவாதம் பல்வேறு குறுக்கீடுகள் மற்றும் வாக்குவாதங்களால் நிறைந்திருந்தது. அதைத்தொடர்ந்து இது கொண்டு வரப்பட்டது. செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள இந்த விவாதம் டேவிட் முயர் மற்றும் லின்சி டேவிஸ் ஆகிய இரண்டு மதிப்பீட்டாளர்கள் முன்னிலையில் நடத்தப்படுகிறது. இருவரும் ஏபிசி ஊடகத்தின் செய்தியாளர்கள். கமலா ஹாரிஸின் பலம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கமலா ஹாரிஸின் முதல் பிரசார விவாதம் 2003இல் நடந்தது கமலா ஹாரிஸ் 2003இல் சான் பிரான்சிஸ்கோ வழக்கறிஞராக போட்டியிட்டு வெற்றி பெற்றதில் இருந்தே தேர்தல் விவாதங்களில் பங்கேற்று வருகிறார். கலிபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாகவும், கலிபோர்னியாவுக்கான அமெரிக்க செனட்டராகவும் தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பு, அவரின் வெற்றிகரமான பிரசாரங்களின் போதும் அவர் விவாதங்களில் பங்கேற்றார். கமலா ஹாரிஸ் 2019இல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் பதவிக்குப் போட்டியிட்டபோது ஜோ பைடனுடன் விவாதித்தார். மேலும் அவர் 2020 துணை அதிபர் விவாதத்தில் மைக் பென்ஸை எதிர்கொண்டார். மேடையில் நிற்கும்போது அந்தச் சூழலைத் தனது பேச்சுத் திறனால் தன்னால் கட்டுப்படுத்த முடியும் என்பதை அவர் காட்டினார். 2020ஆம் ஆண்டு பென்ஸுட் உடனான விவாதத்தில் அவர் குறுக்கிட்டதற்காக அவரைத் தயங்காமல், "மதிப்பிற்குரிய துணை அதிபரே, நான் பேசி கொண்டிருக்கிறேன்" என்று கண்டித்தார். கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டில் நிறைய விவாத அனுபவங்களைப் பெற்றுள்ளார். அதற்கு முன், அவர் கலிபோர்னியா நீதிமன்றங்களில் ஒரு வழக்கறிஞராகப் பணியாற்றினார், ஒவ்வொரு வழக்கிலும் எதிர்க்கட்சியினரின் குறைபாடுகளை அடையாளம் காண்பதில் வல்லவர். விவாதத்தில் டொனால்ட் டிரம்ப் முன்வைக்கும் கருத்துகளை மறுத்து வாதிடும்போது இந்தத் திறமை அவருக்குப் பயனளிக்கும். இருப்பினும், 2020 ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஆவதற்கான முயற்சியில் கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். மேலும் அவர் நிலையான கொள்கை நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கவில்லை என்பதே அவர் மீது வைக்கப்பட்ட முக்கிய விமர்சனம். செவ்வாய்க் கிழமை நடக்கும் விவாதத்தில், கமலா ஹாரிஸிடம் மதிப்பீட்டாளர்கள் அவரது கொள்கைகள் பற்றிப் பல கடினமான கேள்விகளைக் கேட்க வாய்ப்பிருக்கிறது. கமலா ஹாரிஸ் தனது பொது மேடைப் பேச்சுகளில் நீளமாகப் பேசக் கூடியவர் என்பதால் விவாதத்தில் காலக்கெடுவைப் பின்பற்றிச் சொல்ல வேண்டிய கருத்துகளைத் தெளிவாக, சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சூழலில் இருக்கிறார். அவரது சமீபத்திய சிஎன்என் நேர்காணலில் "ஒரு அவசரமான விஷயம் என்னவென்றால், காலக்கெடுவைக் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்" என்றார். அதிபர் தேர்தல் விவாதங்களில், பொதுவாகப் பேசும் நேரம் மிகவும் குறைவாக இருக்கும். வேட்பாளர்களின் பிரசாரத் தகவல்கள் வாக்காளர்களுக்குத் தெளிவாகச் சென்றடைய வேண்டும். டிரம்பின் பலம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அக்டோபர் 2016இல் நடந்த அமெரிக்க அதிபர் விவாதத்தின் போது டொனால்ட் டிரம்ப் ஹிலாரி கிளிண்டனுக்கு பின்னால் நிற்கிறார் கமலா ஹாரிஸுக்கு எதிராக டிரம்ப் எதிர்கொள்ளும் இந்த விவாதம் அவருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அவர் 2016 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் அதிபர் தேர்தலுக்கான 4 விவாதங்களில் பங்கேற்றார். அவர் மிகவும் வாக்குவாதம் செய்யும், வித்தியாசமான வேட்பாளர் என்பதை நிரூபித்தார். ஹிலாரி கிளிண்டனுக்கு எதிரான 2016 விவாதங்களின் போது, அவர் மேடையைச் சுற்றிச் சென்று, அவர் பேசிக் கொண்டிருக்கையில் அவருக்குப் பின்னால் சென்று நின்றார். இது "பயத்தை ஏற்படுத்தியது” என்று ஹிலாரி கூறினார். கடந்த 2020ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் முதல் விவாதத்தில், அவர் ஜோ பைடன் பேசுகையில் குறுக்கிட்டு, "நீங்கள் வாயை மூடுங்கள்" என்று சொன்னார். இந்தத் தந்திரங்கள் அவரது தேர்தல் எதிரிகளைச் சீர்குலைத்து அவரைக் கவனத்தின் மையமாக மாற்றுகின்றன. இருப்பினும், டிரம்ப் அடிக்கடி விவாதங்களின்போது பேச்சை மாற்றி, வேறு ஏதோ பேசி மழுப்புகிறார். அவர் பேசும் விஷயங்கள் உண்மைக்குப் புறம்பாக இருப்பதாக உண்மை சரிபார்ப்பாளர்கள் கூறுகின்றனர். கருத்துக்கணிப்புகளில் முன்னணியில் இருப்பது யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த ஜூலை மாதம் அதிபராக மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பு, ஜோ பைடன் தேசிய அளவிலும் பல டாஸ்-அப் மாகாணங்களிலும் வாக்காளர்களின் கருத்துக்கணிப்பில் டொனால்ட் டிரம்பைவிட பின்தங்கி இருந்தார். ஆனால், கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக ஆனதில் இருந்து டிரம்பைவிட மிகவும் பிரபலமாகிவிட்டார் என்று தேசிய கருத்துக் கணிப்புகளின் சராசரியைத் தொகுக்கும் அரசியல் பகுப்பாய்வு அமைப்பான ``RealClearPolitics’’ கூறுகிறது. செப்டம்பர் 3ஆம் தேதி நிலவரப்படி, அவர் தேசிய அளவில் 1.9 புள்ளிகள் என்ற அளவில் டிரம்பைவிட முன்னிலை வகிக்கிறார். இருப்பினும், ஹிலாரி கிளிண்டன் 2016இல் இதே கட்டத்தில் தேசிய வாக்கெடுப்பில் ஐந்து புள்ளிகள் முன்னிலையில் இருந்தார். ஆனால் தேர்தலில் டிரம்பிடம் தோல்வியடைந்தார். தேசிய தேர்தல்களைவிட, மாகாணங்களுக்குள் நடக்கும் கருத்துக் கணிப்புகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், தேர்தல் கல்லூரி நடத்தும் தனிப்பட்ட மாகாணங்களின் கருத்துக்கணிப்பு முடிவுகள், ஒரு வேட்பாளர் பெறும் வாக்குகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கிறது, மேலும் யார் அதிபராக வர வேண்டும் என்பதைத் தேர்தல் கல்லூரி தீர்மானிக்கிறது. அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா மற்றும் பென்சில்வேனியா போன்ற சில டாஸ்-அப் மாகாணங்கள் உள்ளன. அவை வேட்பாளர்களின் வெற்றிக்கு முக்கியமானவை. இந்த இடங்களில் தேர்தல் முடிவுகளைக் கணிப்பது கடினம். அங்கு கட்சிகள் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. செப்டம்பர் தொடக்கத்தில், RealClearPolitics, மிச்சிகன் மற்றும் ஜார்ஜியாவில் நடந்த கருத்துக் கணிப்பில் கமலா ஹாரிஸ் ட்ரம்பை முந்தினார். மேலும் பென்சில்வேனியாவில் அவருக்கு இணையான வாக்குகளைப் பெற்றிருந்தார். ஆனால் அரிசோனா மற்றும் வட கரோலினாவில் பின்தங்கினார். அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் காணப்படும் ஒருமித்த கருத்து என்னவெனில், தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை மதிப்பிடுவது கடினம். ஒரு வேட்பாளருக்கு அதிபர் பதவிக்கு வர 270 தேர்தல் கல்லூரி வாக்குகள் தேவை. ஜனநாயகக் கட்சிக்கு 226 தேர்தல் கல்லூரி வாக்குகளும், குடியரசுக் கட்சியினருக்கு 219 வாக்குகளும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 93 பேர் எந்த வழியிலும் செல்லலாம் என்றும் கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. https://www.bbc.com/tamil/articles/c204l9ngngno
  2. தமிழ் மக்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இருக்கும் பொறுப்பு வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இருப்பதாக இலங்கை தமிழரசு கட்சி தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணிலுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அந்த கட்சியின் தலைவர் மாவைசேனாதி ராஜா இதனை தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வடக்கில் ஒரு போதும் தீர்க்கப்படாத தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்க்கும் பாரிய பொறுப்பு உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை மீள அபிவிருத்தி செய்து மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற இரண்டு தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்ட ஜனாதிபதி, காங்கேசன்துறையில் உள்ள மாவை சேனாதிராஜாவின் வீட்டுக்கு வந்து அவரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/309073
  3. மணிப்பூரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலி - ட்ரோன் தாக்குதலால் மக்கள் அச்சம் 08 SEP, 2024 | 10:06 AM இம்பால்: மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு மே 3ம் தேதி குகி ஸோ பழங்குடியினர் மற்றும் மைத்தேயி சமூகங்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக்கலவரம் ஓராண்டுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த மோதல் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. போராட்டாக்காரர்கள் இந்த முறை ட்ரோன்கள், ராக்கெட்கள் போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பிஷ்ணுபூர், கிழக்கு இம்பால் மாவட்ட மக்கள் விடிய விடிய சிறிய விளக்குகளைகூட அணைத்துவிட்டு அச்சத்தில் உறைந்தனர். இந்நிலையில், மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் சனிக்கிழமை நடந்த புதிய வன்முறையில் பொதுமக்களில் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார், “மாவட்டத் தலைநகரில் இருந்து 5 கி.மீ தூரத்தில் இருக்கும் தனிமைப்படுத்தப்பட்ட இடத்தில் இருக்கும் வீட்டுக்குள் நுழைந்த ஆயுதம் தாங்கிய குழுவினர் அங்கு தூங்கிக் கொண்டிருந்தவரை சுட்டுக்கொன்றனர். இந்தக் கொலைக்கு பின்னர், மாவட்டத் தலைநகரில் இருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள இடத்தில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய குழுக்களுக்கு இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு நடந்தது. இதில் மூன்று பழங்குடியின போராட்டக்கார்கள் உட்பட நான்கு போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்" என்று தெரிவித்தனர். மணிப்பூர் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் கூறுகையில், “போராட்டக்காரர்கள் குழு ஒன்று கிராமத்துக்குள் புகுந்து அங்கு ஒருவரைக் கொன்ற பின்பு துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இனக்கலவரத்தின் ஒரு பகுதியாக இந்த கொலைகள் நடந்துள்ளன. கொல்லப்பட்டவர்கள் குகி பழங்குடியினர் மற்றும் மைத்தேயி ஆகிய இரண்டு தரப்பினைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல்கள் கிடைத்துள்ளன” என்றார். மணிப்பூரில் ராக்கெட் தாக்குதல்: மாநிலத்தில் 17 மாதங்களுக்கு முன்பு வன்முறை உருவாகித் தொடர்ந்து வரும் சூழ்நிலையில், வெள்ளிக்கிழமை தாக்குதலில் முதல் முறையாக ராக்கெட்கள் பயன்படுத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்முறையாக ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்ட ஆறு நாட்களுக்கு பின்னர் இந்த ராக்கெட் தாக்குதல் நடந்துள்ளது. இதுகுறித்து வெள்ளிக்கிழமை பின்னிரவில் போலீஸார் வெளியிட்ட அறிக்கையில், “குகி போராட்டக்காரர்கள் நீண்ட தூரம் தாக்கும் வகையிலான ராக்கெட்டை பயன்படுத்தியுள்ளனர். வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட ராக்கெட் குறைந்தது நான்கு அடிகள் உள்ளது. துரு பிடிக்காத வகையில் துத்தநாகம் பூசப்பட்ட (galvanised) இரும்புக்குழாயில் வெடிமருந்துகளை நிரப்பி, அதனை உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ராக்கெட் லாஞ்சரில் வைத்து சுடப்பட்டுள்ளது. ராக்கெட் அதிக தூரம் செல்வதற்கு போராட்டக்கார்கள் அதில் வெடிமருந்துகளின் அளவினை மாற்ற வேண்டும். அமைதியாக இருந்த மாதங்களில் அவர்கள் அதற்கு பயிற்சி பெற்றுள்ளனர்" என்று தெரிவித்திருந்தனர். https://www.virakesari.lk/article/193110
  4. பாராலிம்பிக்ஸ்: இந்தியா ஒலிம்பிக்கை விட இதில் அதிக பதக்கங்களை வென்றது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரா ஒலிம்பிக்கில் ப்ரீத்தி பால் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், ஜான்வி மூலே பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 6, 2024 அன்று, பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியா தனது 27வது பதக்கத்தை வென்றது. பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் சிறந்த செயல்திறன் இதுவாகும். இந்திய விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை இது ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதே நேரத்தில், பலரையும் இந்த வெற்றி ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஏனென்றால், பாராலிம்பிக் போட்டிக்கு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் இந்தியா அதிக பதக்கங்களை வெல்லவில்லை. ஒலிம்பிக் போட்டிக்கு 110 வீரர்கள் கொண்ட குழுவை இந்தியா அனுப்பியிருந்தது. இருந்தபோதிலும், இந்தியா அணியால் ஒரு வெள்ளி மற்றும் ஐந்து வெண்கலப் பதக்கங்கள் அதாவது மொத்தம் 6 பதக்கங்களை மட்டுமே வெல்ல முடிந்தது. இது தவிர, ஆறு வீரர்கள் நான்காவது இடத்தைப் பெற்றிருந்தனர். பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவில் இருந்து 84 வீரர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் ஒலிம்பிக்கைவிட நான்கு மடங்கு அதிக பதக்கங்களை வென்றுள்ளனர். இந்தியா மட்டுமல்ல, பிரிட்டன், யுக்ரேன், நைஜீரியா போன்ற நாடுகளும் ஒலிம்பிக்கைவிட பாராலிம்பிக் போட்டியில் அதிக பதக்கங்களைப் பெற்றுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், ஒலிம்பிக்குடன் ஒப்பிடுகையில், பாராலிம்பிக் போட்டிகளில் சில நாடுகள் எவ்வாறு சிறப்பாகச் செயல்பட்டன என்று பலர் ஆச்சரியப்படுகிறார்கள். ஆனால், இரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடுவது சரியாக இருக்காது என்பதை நாம் அறிய வேண்டும். ஏனெனில் இரண்டு நிகழ்வுகளிலும் போட்டிகளின் நிலை என்பது வேறு. தவிர, இதில் பங்கேற்கும் வீரர்களின் மன மற்றும் உடல் திறன்களும் வேறுபடுகின்றன. ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது ஒரு வீரரின் உடல் நிலை அல்லது உடலின் திறனுக்கான சோதனை என்றும், மறுபுறம் பாராலிம்பிக் போட்டிகள் என்பது ஒரு நபரின் மன உறுதியையும் தைரியத்தையும் சோதிப்பதற்கானவை என்றும் கூறப்படுகிறது. இப்போது ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளில் பதக்க வெற்றிகளில் இவ்வளவு வித்தியாசம் ஏன்? இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன. அதோடு புள்ளிவிவரங்களும் ஒரு கதையைச் சொல்கின்றன. அதிக பதக்கங்கள், குறைவான போட்டிகள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, பாராலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய துப்பாக்கிச் சுடுதல் குழு முதல் விஷயம் என்னவென்றால், ஒலிம்பிக்குடன் ஒப்பிடும்போது பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வழங்கப்படுகின்றன மற்றும் குறைந்த நாடுகளே இதில் பங்கேற்கின்றன. பாரிஸ் ஒலிம்பிக்கில் 204 அணிகள் பங்கேற்று மொத்தம் 32 விளையாட்டுகளில் 329 தங்கப் பதக்கங்களை வென்றனர். அதேநேரம் பாராலிம்பிக்கில் 22 விளையாட்டுகளில் 549 தங்கப் பதக்கங்களுக்காக 170 அணிகள் பங்கேற்கின்றன. இவ்வாறு இருக்க, இயற்கையாகவே பாராலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம். பாராலிம்பிக் மற்றும் ஒலிம்பிக் என இரண்டிலும் பங்கேற்கும் நாடுகளுக்கு, பாராலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் வெல்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. உதாரணமாக சீனாவை எடுத்துக்கொண்டால், டோக்கியோ ஒலிம்பிக்கில் சீனா 89 பதக்கங்களையும், டோக்கியோ பாராலிம்பிக்கில் சீனா 207 பதக்கங்களையும் வென்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 64 பதக்கங்களையும், இரண்டு வாரங்களுக்குப் பிறகு நடைபெற்ற பாராலிம்பிக்கில் 124 பதக்கங்களையும் பிரிட்டன் வென்றிருந்தது. டோக்கியோ ஒலிம்பிக்கில் 7 பதக்கங்களையும், பாராலிம்பிக்கில் 19 பதக்கங்களையும் இந்தியா வென்றது. இதேபோன்ற உதாரணங்களைத்தான் பாரிஸ் பதக்க அட்டவணையிலும் காண முடிகிறது. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முன்னணியில் இருந்த சில நாடுகள், பாராலிம்பிக்கில் பின்தங்கி இருப்பதையும் பார்க்க முடிகிறது. இதில் அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளும் அடங்கும். ஆனால் நைஜீரியா, யுக்ரேன், இந்தியா போன்ற நாடுகள் பாராலிம்பிக்கில் சிறப்பாகச் செயல்பட்டன. இதன் பின்னணியில் உள்ள காரணங்களைப் பார்க்கலாம். மருத்துவ வசதிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வில்வித்தையில் தங்கப் பதக்கம் வென்ற ஹர்விந்தர் சிங் ஒலிம்பிக் செயல்திறன் ஒரு நாட்டின் மக்கள் தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் நேரடியாகத் தொடர்புடையது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. இவ்வாறான நிலையில் பணக்கார நாடுகள் அதிக பதக்கங்களைப் பெறுகின்றன என்று கூற முடியாது ஆனால் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இடம் பிடித்துள்ள நாடுகள் ஒப்பீட்டளவில் பணக்கார நாடுகள் என்பதையும் மறுக்க முடியாது. பாராலிம்பிக்கை பொறுத்தவரை, பணத்தைவிட முக்கியமான இரண்டு விஷயங்கள் நாட்டின் மருத்துவ வசதிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மீதான அதன் அணுகுமுறை. பாராலிம்பிக்கில் அமெரிக்காவைவிட பிரிட்டனின் ஆட்டம் சிறப்பாக இருப்பதற்கு இதுவே காரணம் என்றும் சிலர் வாதிடுகின்றனர். இந்தியாவில் மருத்துவ வசதிகளில் ஏற்றத்தாழ்வு உள்ளது. ஆனால் இது இருந்தபோதிலும், உலகின் பல நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் மருத்துவ வசதிகள் ஒப்பீட்டளவில் மலிவானவை. அதாவது, பாரா-தடகள வீரர்கள் மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள எந்தவொரு மாற்றுத்திறனாளி நபரும் அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையைப் பெற அதிக வசதி வாய்ப்புகள் உள்ளளன. பாரா விளையாட்டு கலாச்சாரம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மாரியப்பன் தங்கவேலு தொடர்ந்து மூன்று பாராலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ளார் சீனா மற்றும் பிரேசிலை போலவே, இந்தியாவும் அதிக மக்கள் தொகை ஒரு கொண்ட நாடு, அதாவது வெவ்வேறு பாரா-விளையாட்டுகளுக்கு அதிக எண்ணிக்கையிலான வீரர்கள் உள்ளனர். ஆனால் அதிக எண்ணிக்கையில் வீரர்கள் இருந்தாலும், செயல்திறன் சிறப்பாக இருப்பது என்பது எப்போதும் நடக்காது. இது நாட்டின் கலாசாரம் மற்றும் சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் மீதான அணுகுமுறை என்ன என்பதைப் பொறுத்தது. இதற்கு இந்தியா சிறந்த உதாரணம். பல நாடுகளில், மாற்றுத்திறன் உடையவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள் அல்லது பரிதாபமாக நடத்தப்படுகிறார்கள். அங்கு மாற்றுத் திறனாளிகள் வீரர்களாகக் கருதப்படுவதில்லை. இந்த விஷயத்தில் இந்தியாவும் விதிவிலக்கல்ல. ஆனால் சமீப காலமாக, சமூகத்திலும் விளையாட்டுக் கண்ணோட்டத்திலும் பெரிய மாற்றம் காணப்படுகிறது. இந்த மனப்பான்மை பாராலிம்பிக்கில் இந்தியாவின் ஆட்டத்தில் பிரதிபலித்தது என்று சொல்லலாம். கடந்த 20 ஆண்டுகளில் பாரா-விளையாட்டுகள் பற்றிய விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. அதனால், மத்திய, மாநில அளவில் வீரர்களுக்கு வழங்கப்படும் நிதியும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவில், 2010இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதன் பின்னர், சர்வதேச பதக்கங்களை வெல்லும் வீரர்கள் மற்றும் பாரா வீரர்கள் என இரு தரப்புக்கும் ஒரே மாதிரியான ரொக்கப் பரிசுகளை வழங்கத் தொடங்கியது விளையாட்டு அமைச்சகம். இந்த விஷயத்தில் ஹரியாணா மிகவும் முன்னிலையில் உள்ளது. பாரா விளையாட்டுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே அதிகரிக்க ஹரியாணா அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இம்முறை பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பங்கேற்கச் சென்ற 84 வீரர்கள் கொண்ட இந்திய அணியில், 23 வீரர்கள் ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். பாரா விளையாட்டு வீரர்களுக்கு மிகப் பெரிய விருதுகள், அரசு வேலைகள் மற்றும் கௌரவங்களை வழங்குவதன் மூலம் ஹரியாணா இந்த விளையாட்டுகளை ஊக்குவித்துள்ளது மற்றும் இது பொது மக்களிடையே பாரா-விளையாட்டுகளுக்கு ஒரு நன்மதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி பஞ்சாபியில் வெளியான ஒரு கட்டுரையில், பாரா விளையாட்டுத் துறையில், ஹரியாணாவின் அடிச்சுவடுகளை எவ்வாறு பல மாநிலங்கள் பின்பற்றுகின்றன என மூத்த பத்திரிக்கையாளர் சௌரப் துக்கல் கூறியிருந்தார். வீரர்கள் மத்தியில் விழிப்புணர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாரிஸ் பாராலிம்பிக் 2024 தொடக்க விழா அணிவகுப்பில் இந்திய அணி நாட்டில் பாரா விளையாட்டு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், வீரர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதில் வீரர்களுக்கு முக்கியப் பங்குள்ளது என்று கூறுகிறார் சக்கர நாற்காலி- கிரிக்கெட் வீரர் ராகுல் ராம்குடே. "உடல் குறைபாடுகளை எதிர்கொள்ளும் ஒரு நபர் அதிலிருந்து வெளியே வந்து தனது சொந்த அடையாளத்தை உருவாக்க விரும்புகிறார். அவர் ஏதாவது செய்ய விரும்புகிறார். விளையாட வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் முழு உழைப்பையும் கொடுக்கத் தயாராக உள்ளனர். அதுமட்டுமின்றி, தற்போது பல பாரா விளையாட்டு வீரர்கள் மற்றவர்களுக்கு உதவவும் வழிகாட்டவும் தாங்களாகவே முன்வருகின்றனர்” என்று கூறுகிறார் அவர். ராகுலும் அவரது சகாக்களும் இந்தியாவில் சக்கர நாற்காலி கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அடையாளப் பிரச்னையும் இங்கே முக்கியமானது. உண்மையில், ஒலிம்பிக் வீரர்களுடன் ஒப்பிடுகையில் பாராலிம்பிக் வீரர்களுக்குக் குறைவான மீடியா வெளிச்சமும், சமூகத்தின் கவனமும் கிடைக்கிறது. இதன் பொருள், அவர்கள் மீதான எதிர்பார்ப்புகளும், அதனால் ஏற்படும் அழுத்தமும் குறைவாகவே உள்ளது. ஆனால் பாரா-தடகள வீரர்களுக்கு வாழ்க்கையில் வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும், பதக்கங்களை வெல்ல வேண்டும் என்ற வேட்கை அதிகமாக உள்ளது. அதுதான் அவர்களைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. இன்னும் செல்ல வேண்டிய தூரம் அதிகம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, துப்பாக்கி சுடுதல் வீராங்கனையான அவனி லெகரா டோக்கியோ மற்றும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார் இருப்பினும், இந்தியாவில் பாரா-விளையாட்டுகள் மீதான அணுகுமுறை மாறிவிட்டது. ஆனால் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது, அவை எல்லாம் அவ்வளவு எளிதானது அல்ல. மேலும் பாரா வீரர்களும் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனையான அவனி லெகரா டோக்கியோ மற்றும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காக தங்கப் பதக்கம் வென்றுள்ளார். ஆனால் அவர் பயிற்சி எடுத்த தளத்தில், நீண்ட காலமாக சக்கர நாற்காலிகளுக்கான பாதை அமைக்கப்படவில்லை. பின்னர், அவனியின் முயற்சியால், இங்கு சாய்வுதளம் கட்டப்பட்டது. இது ஒரு இடத்தின் கதையல்ல, நாட்டில் உள்ள பல மைதானங்கள், பயிற்சி மைதானங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், கழிவறைகள் போன்றவற்றின் நிலையும் இப்படித்தான் இருப்பதாகக் கூறுகிறார் ராகுல் ராம்குடே. அவ்னியின் சாதனைகளை விவரித்த இந்திய தேசிய துப்பாக்கிச் சுடுதல் பயிற்சியாளர் சுமா ஷிரூரும் இதையே கூறியிருந்தார். “பாரிஸ் பாராலிம்பிக் போட்டிக்குப் பிறகு, அவனியுடைய பயணத்தின் அடுத்த கட்டம் இன்னும் கொஞ்சம் சுதந்திரமாக, தற்சார்பாக வாழ்வதுதான். ஆனால் நம் நாட்டில் அது எளிதானது அல்ல. ஏனெனில் நமது அமைப்பில் உள்ள விஷயங்கள் பாரா வீரர்களுக்கு ஆதரவாக இல்லை அல்லது சக்கர நாற்காலிகள் பயன்படுத்த ஏற்ற பொது இடங்கள் இல்லை. ஆனாலும் அவனி சுதந்திரமாக வாழ விரும்புகிறாள்,” என்று சுமா கூறுகிறார். பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற வெற்றியின் மிக முக்கியமான பாடம் இது. இந்தியா தனது வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், இந்தத் திசையில் தொடர்ந்து உழைத்து, பாரா விளையாட்டுக்கான அணுகலை இன்னும் எளிதாக்க வேண்டும். - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cvg5y9r0emmo
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிசியோதெரபி. இந்த வார்த்தையைக் கேட்டவுடன், உடற்பயிற்சி, உடல் அசைவுகள், மசாஜ், ஆகியவற்றுடன் கூடிய ஒரு குழப்பமான பிம்பம்தான் பலரது மனங்களில் தோன்றும். ஆனால், பல ஆண்டுகளாக, உடல் இயக்கம் சார்ந்த குறைபாடுகளைச் சரி செய்வதற்காக அடிப்படை மருத்துவத்துடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும் பிசியோதெரபி என்றால் என்ன? அது எதற்காகச் செய்யப்படுகிறது? அதில் என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன? இதுகுறித்து அறிந்துகொள்ள, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் பிசியோதெரபி நிபுணரான எழில்வாணனிடம் பிபிசி தமிழ் பேசியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விபத்தினாலோ, பக்கவாதம் போன்ற நோய்த் தாக்குதலினாலோ பாதிக்கப்பட்ட நபர்கள் பல நாட்கள் படுக்கையிலேயே இருந்தால், அவர்களது தசைகள் பலவீனாமாகியிருக்கும் இதற்கு எளிமையாகப் பதிலளிக்க வெண்டுமெனில், ‘பிசியோதெரபி புனர்வாழ்வு மற்றும் வலி நிவாரணத்துக்கான ஒரு வழிமுறை’ என்கிறார், எழில்வாணன். அதாவது, விபத்தினாலோ, வேறு நோய்த் தாக்குதலினாலோ உடல் இயக்கம் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு, சில முறைகள் மூலம் மீண்டும் அந்த உடலியக்கங்களைச் சரிசெய்வதுதான் பிசியோதெரபி. அதேபோல உடலில் சில பகுதிகளில் இருக்கும் வலிக்கு நிவாரணம் அளிக்கும் சிகிச்சைகளும் பிசியோதெரபியில் உள்ளன. “விபத்தினாலோ, அடிபட்டோ, உடல் இயக்கம் பாதிக்கப்பட்டவர்களை மருந்துகளால் மட்டும் முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதற்கான ஒரு துணை சிகிச்சை முறையாகத்தான் பிசியோதெரபி இருக்கிறது,” என்கிறார் எழில்வாணன். மேலும், இந்தப் பிரச்னைகளுக்காக நாட்பட்ட அளவில் மருந்துகளை உட்கொண்டால், சிறுநீரகப் பிரச்னை, இரைப்பை அழற்சி (gastritis), குடல் மற்றும் வயிற்றுப் புண் (ulcer) ஆகியவை ஏற்படக்கூடும் என்பதால், ஒரு கட்டத்திற்கு மேல், மருத்துவர்களே மருந்துகளைக் குறைத்துவிட்டோ அல்லது நிறுத்திவிட்டோ, பிசியோதெரபி செய்யப் பரிந்துரைப்பதாக எழில்வாணன் கூறுகிறார். பிசியோதெரபியில் என்னென்ன முறைகள் உள்ளன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ‘ரெசிஸ்டன்ஸ்’ உடன் கூடிய உடற்பயிற்சி முறை, நோயாளிகளின் கைகளிலோ, கால்களிலோ எடைகள், ஸ்பிரிங்க் ஆகியவற்றைப் பொருத்தி, அவற்றோடு சேர்த்து கை-கால்களைத் தூக்கவோ அசைக்க வைப்பது பிசியோதெரபி சிகிச்சை முறைகளுக்கு இரண்டு முக்கியமான நோக்கங்கள் உள்ளன என்கிறார் எழில்வாணன். புனர்வாழ்வு: விபத்திலோ, வேறு நோயாலோ உடலியக்கம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவ்வியக்கங்களைச் சரிசெய்வது வலி நிவாரணம்: உடலில் நாட்பட்ட முறையில் இருக்கும் வலியைப் போக்குவது இவற்றுக்கு பிசியோதெரபியில் இரண்டு சிகிச்சை முறைகள் உள்ளன. 1) உடற்பயிற்சி சிகிச்சை: இது கை-கால் அசைக்க முடியாமல், நடக்க முடியாமல் இருப்பவர்களுக்கு, உடற்பயிற்சி முறைகள் மூலம் மீண்டும் கை-கால் அசைவுகளைச் சீராக்குவது. இதில் மூன்று வகைகள் உள்ளன என்கிறார் எழில்வாணன். நேரடி உடற்பயிற்சி: பிசியோதெரபிஸ்ட் கற்றுத் தரும் உடற்பயிற்சிகளை நோயாளிகள் அவர்களாகவே செய்வது உதவியுடன் கூடிய உடற்பயிற்சி: தாமாகவே உடற்பயிற்சி செய்ய முடியாத நோயாளிகளுக்கு, அதைச் செய்ய பிசியோதெரபிஸ்ட் உதவி செய்வது ‘ரெசிஸ்டன்ஸ்’ உடன் கூடிய உடற்பயிற்சி: இந்த முறையில், நோயாளிகளின் கைகளிலோ, கால்களிலோ எடைகள், ஸ்பிரிங்க் ஆகியவற்றைப் பொருத்தி, அவற்றோடு சேர்த்து கை-கால்களைத் தூக்கவோ அசைக்கவோ வைப்பது. இதில், ஒரு சுவற்றிலோ, அசைக்க முடியாத இடத்திலோ ‘தெராபேண்ட்’ (theraband) என்ற பட்டையான, கடினமான ரப்பர் பேண்டை பொருத்தி அதை கை-கால்களில் மாட்டி, அதனோடு சேர்த்து அவற்றை அசைக்க வைப்பது. எலெக்ட்ரோ தெரபி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எலெக்ட்ரோ தெரபி முறையில், வெப்பம், ஒளி, மின்காந்த அலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது 2) எலெக்ட்ரோ தெரபி: இது நாட்பட்ட உடல் வலி, அல்லது உடலின் சில பகுதிகளில் இருக்கும் வலியைப் போக்கப் பயன்படுத்தப்படுகிறது. நாட்பட்ட அளவில் முதுகு, கழுத்து, தோள்பட்டை ஆகியவற்றில் இருக்கும் வலி, அல்லது ஆர்த்ரைடிஸ் ஆகிய பிரச்னைகளுக்கு இந்த சிகிச்சை முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறையில், மின்சாரம் மூலம் இயங்கும் சாதனங்களைப் பயன்படுத்தி வலியைப் போக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாகக் கூறுகிறார் எழில்வாணன். இம்முறையில், வெப்பம், ஒளி, மின்காந்த அலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி சிகிச்சையளிக்கப்படுகிறது. இதற்கு, அல்ட்ராசௌண்ட், லேசர், ஷார்ட் வேவ் டயாதெர்மி, அல்ட்ராவயலட் ஆகிய இயற்பியல் விளைவுகளை உருவாக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை தசைகளில் வெப்பத்தை உருவாக்கி, வலியைச் சரி செய்கின்றன. பொதுவாக, கழுத்து வலி, முதுகு வலி ஆகிய பிரச்னைகளுக்காக பிசியோதெரபி சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, அவுட் பேஷண்ட்களாக வலி நிவாரண சிகிச்சையளிக்கப்படுக்கிறது. அதுவே எலும்புமுறிவு, அல்லது பெரியளவிலான உடல் பாதிப்புகளுக்கு உள்ளானவர்கள், பொதுவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை ஆகியவற்றுக்கு உட்படுத்தப்படுவார்கள், அவர்களுக்கு புனர்வாழ்வு சிகிச்சையான உடற்பயிற்சி சிகிச்சையளிக்கப்படுகிறது, என்கிறார் எழில்வாணன். பிசியோதெரபி சிகிச்சையின் பலன்கள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாமாகவே உடற்பயிற்சி செய்ய முடியாத நோயாளிகளுக்கு, அதைச் செய்ய பிசியோதெரபிஸ்ட் உதவி செய்வது ஒருமுறை மிக மோசமான விபத்தினாலோ, பக்கவாதம் போன்ற நோய்த் தாக்குதலினாலோ உடல் அசைவுகளை இழந்து, கழிவறைக்குச் செல்வது போன்ற அன்றாடச் செயல்களுக்குக்கூட பிறரைச் சார்ந்து இருப்பவர்களை பிசியோதெரபி முடிந்த அளவுக்கு இயல்பு நிலைக்குத் திரும்ப உதவுகிறது, என்கிறார் எழில்வாணன். இதுபோன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட நபர்கள் பல நாட்கள் படுக்கையிலேயே இருந்ததால், அவர்களது தசைகள் பலவீனாமாகியிருக்கும். பிசியோதெரபி அவர்களது தசைகளை மீண்டும் வலுவாக்க உதவுகிறது, என்கிறார் அவர். “இதுபோன்ற நோயாளிகளை பிசியோதெரபி மூலம் 90% இயல்பு நிலைக்குக் கொண்டுவர முடியும்,” என்கிறார் அவர். பிசியோதெரபி செயல்படும் வேகம் பற்றிப் பேசிய எழில்வாணன், எலும்பு முறிவு ஏற்பட்டு கை-கால்களை நீட்ட-மடக்க முடியாமல் இருக்கும் பிரச்னைகளில், தொடர்ந்து பிசியோதெரபி உடற்பயிற்சிகள் செய்து வந்தால், 1-2 மாதங்களில் கை-கால்களைச் சுலபமாக அசைக்க முடியும் என்கிறார் அவர். அதுவே, தலையில் அடிபட்டு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டோ, தண்டுவடத்தில் அடிபட்டோ, கை-கால்களைச் சரிவர அசைக்க முடியாமல் போனால், தொடர் பிசியோதெரபி உடற்பயிற்சிகள் மூலம் அதைச் சரிசெய்ய 3 மாதங்கள் வரை பிடிக்கும் என்கிறார் எழில்வானன். ஆனால், இவையனைத்தும் நோயாளிகள், தொடர்ந்து முறையாக உடற்பயிற்சிகளைச் செய்வதில்தான் இருக்கிறது என்கிறார் அவர். “சில சந்தபர்ப்பங்களில், நோயாளிகள், பிசியோதெரபி உடற்பயிற்சிகளைச் செய்யப் பொறுமை இல்லாமல், வேறு மருந்துகள், வேறு சிகிச்சை முறைகள் ஆகியவற்றுக்கு மாறிவிடுவார்கள். அப்போது பிசியோதெரபி பலனளிக்காமல் போகலாம்,” என்கிறார் அவர். பொதுவாக, இந்தப் பிரச்னைகளைத் தவிர்க்க அறுவை சிகிச்சை முடிந்தவுடன் பிசியோதெரபி பரிந்துரைக்கப்படுவதாகக் கூறுகிறார் அவர். மேலும், கடந்த 20 ஆண்டுகளாக, அமர்ந்தபடியே வேலை செய்யும் ஐ.டி நிறுவன வேலை போன்றவை அதிகரித்துள்ளதால், கழுத்து வலி, முதுகு வலி ஆகியவற்றுக்காக பிசியோதெரபிக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருப்பதாக அவர் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cd058d3ry51o
  6. விசேட தேவை கொண்டவர்களுக்காக ஆரம்பிக்கப்படவுள்ள சஜித்தின் 3 வீதக்கொள்கை ஐக்கிய மக்கள் சக்தி (SJB), கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் விசேட தேவை கொண்ட சமூகத்தை வலுவூட்டுவதற்கான தனது கொள்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையின் 1.6 மில்லியன் அங்கவீனமுற்ற பிரஜைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஜனாதிபதி செயலணியொன்றை ஸ்தாபிக்கத் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa ) இதன்போது அறிவித்துள்ளார். தேசிய கொள்கையின் அவசியம் இந்த விடயத்தில் ஒரு விரிவான தேசிய கொள்கையின் அவசியத்தை வலியுறுத்திய பிரேமதாச, விசேட தேவையுடையவர்களுக்கு 3வீத வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை அறிமுகப்படுத்தவும், கொடுப்பனவுகளை அதிகரிக்கவும், அத்தியாவசிய உபகரணங்களுக்கான வரிகளை நீக்கவும் உறுதியளித்துள்ளார். அவர்களுக்கு சிறப்புப் பயிற்சி மற்றும் கல்வித் திட்டங்களுடன், காப்புறுதி தொகை மற்றும் வங்கிக் கடன்களுக்கான அணுகலை எளிதாக்குவதாகவும் அவர் உறுதியளித்தார். https://tamilwin.com/article/sajith-3-percent-policy-launch-special-need-people-1725769435
  7. புதிதாக மின் இணைப்புகளை மேற்கொள்ளும் போது வரி இலக்கத்தை கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான முன்மொழிவு இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. வருமான உரிமம் வாகனப் பதிவு, வருமான உரிமம் பெறுதல், நடப்புக் கணக்கு தொடங்குதல், நிலம், அசையாச் சொத்து உள்ளிட்ட சொத்துகளைப் பெறுதல் போன்ற வழக்குகளில் வரி இலக்கத்தை பெறுவது தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன்படி மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வது தொடர்பான பரிந்துரை நிதித் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்படும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://ibctamil.com/article/tariff-electricity-connection-notice-issued-1725756449
  8. நாட்டில் காணப்படும் விசேட தேவையுடையோர்களுக்கு காப்புறுதிகளையும் வழங்குவோம் என என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார். அத்துடன், அத்தோடு விசேட தேவையுடையோர்கள் பயன்படுத்துகின்ற உபகரணங்களுக்கு அறவிடப்படும் வரியையும் நீக்குவோம் என குறிப்பிட்டுள்ளார் கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற மாற்றுத்திறனாளிகளை வலுப்படுத்தும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியால் வகுக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த சஜித் பிரேமதாச, மாற்றுத்திறனாளிகளின் நலன்களை பேண தனியான ஜனாதிபதி செயலணியொன்று நிறுவப்படும். 2012 ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பிரகாரம் மொத்த மக்கள் தொகையில் 8.7% விசேட தேவையுடையோர் இருக்கின்றார்கள். வங்கிக் கடன் அது எண்ணிக்கையில் 16 இலட்சம். இவர்களுக்காக பல சந்தர்ப்பங்களில் நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் குரலெழுப்பி இருக்கிறேன். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் இதற்காக சமூக ஒப்பந்தம் ஒன்றிற்கு வந்தோம். ஆனால் துரதிஷ்டவசமாக ஆட்சி அதிகாரம் கிடைக்கவில்லை. என்றாலும் எதிர்க் கட்சியில் இருந்து கொண்டு அதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். அதற்காக நாடாளுமன்றத்தில் பிரேரணைகளை முன்மொழிந்த போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களும் இருந்தார்கள். வங்கிக் கடன்களை பெற்றுக் கொள்வதற்கு தடைகள் காணப்படுகின்றன. எனவே அவற்றை இலகுபடுத்துவோம். இந்த சமூகத்தில் காணப்படுகின்ற திறமையானவர்களுக்காக தனியான விசேட வேலை திட்டங்களையும் முன்னெடுப்போம். இவை வெறும் வார்த்தைகளாக மாத்திரமன்றி செயற்பாட்டில் கொண்டு வருவோம். விசேட தேவையுடையவர்களும் எமது நாட்டின் பிரஜைகளே. எனவே இந்த சமூகத்துக்காக சகல வசதிகளையும் கொண்ட கல்விமுறை ஆரம்பிக்கப்பட்டு பயிற்சிகளையும் வழங்குவோம்” என்றார். https://ibctamil.com/article/sajith-premadasa-on-disabled-people-rights-1725711975#google_vignette
  9. பட மூலாதாரம்,NARENDRAMODI படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி இரண்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்குப் பயணம் செய்வதன் கடைசி கட்டமாக செப்டம்பர் 4ஆம் தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்குடன், அந்த நாட்டின் பெரிய தொழிலதிபர்களையும் பிரதமர் மோதி சந்தித்தார். பிரதமரின் இந்தப் பயணத்தின்போது இந்தியா- சிங்கப்பூர் இடையே பல முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின. செமிகண்டக்டர் கிளஸ்டர்களின் வளர்ச்சி, வடிவமைப்பு, மற்றும் உற்பத்தி தொடர்பான ஒப்பந்தமும் இதில் அடங்கும். சிங்கப்பூர் பிரதமராகப் பதவியேற்ற பிறகு லாரன்ஸ் வோங்கை பிரதமர் மோதி சந்திப்பது இதுவே முதல்முறை. அப்போது பிரதமர் மோதி, “ஒவ்வொரு வளரும் நாட்டுக்கும் சிங்கப்பூர் உத்வேகமாக உள்ளது. இந்தியாவில் பல சிங்கப்பூர்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம்,” என்றார். தற்போது, இந்தியாவுக்கும், அதன் எல்லையைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளுக்குமான உறவுகள் நல்ல நிலையில் இல்லை. அதேநேரம், ஏசியான் (ASEAN) நாடுகளில் சீனா தனது செல்வாக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியப் பெருங்கடலில் மாலத்தீவு அதிபர் முய்சுவின் அரசும் சீனாவின் பக்கம் சாய்ந்திருப்பதாகத் தெரிகிறது. தென்கிழக்கு ஆசியா மற்றும் இந்தோ-பிசிஃபிக் புவிசார் அரசியலில் இந்தியாவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, 'ஆக்ட் ஈஸ்ட் பாலிசி'-யின் கீழ் பிரதமர் மோதியின் சிங்கப்பூர் பயணம் இந்தியாவுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது? இந்தியாவின் முன்னாள் தூதரும், தென்கிழக்காசிய விவகாரங்களில் நிபுணருமான சுரேஷ் குமார் கோயல், மற்றும் பாங்காக்கில் உள்ள தம்மசாட் பல்கலைக்கழகத்தில் (ஜெர்மன்-தென்கிழக்கு ஆசிய பொதுக் கொள்கைகள் மற்றும் நல்லாட்சிக்கான சிறப்பு மையம்) மூத்த ஆராய்ச்சி உறுப்பினரான ராகுல் மிஷ்ரா ஆகியோரிடம் இது தொடர்பாக பிபிசி ஹிந்தி பேசியது. இந்தியாவுக்கு சிங்கப்பூர் ஏன் முக்கியம்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, ஏசியான் நாடுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சிங்கப்பூர் திகழ்கிறது “கணினிமயமாக்கல், செயற்கை நுண்ணறிவு அல்லது செமிகண்டக்டர் (குறைக்கடத்தி) துறையில் தொழில்நுட்பம் மற்றும் முதலீடு இரண்டையும் கொண்டு வரக்கூடிய ஒரு கூட்டாளியை இந்தியா தேடுகிறது. இதற்கு சிங்கப்பூருடனான வர்த்தக உறவுகள் மிகவும் முக்கியமானவை. சிங்கப்பூர், ஏசியான் கூட்டமைப்பில் மிகப்பெரிய பொருளாதாரம். ஏசியான் நாடுகளுக்கு இடையிலான உள்வர்த்தகம் இந்த நாட்டின் மூலமே நடைபெறுகிறது," என்று சுரேஷ் குமார் கோயல் கூறுகிறார். ஏசியான் நாடுகளில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சிங்கப்பூர் உள்ளது. அதே நேரம், உலக அளவில் இந்தியாவின் ஆறாவது பெரிய வர்த்தக கூட்டாளியாகவும் அந்நாடு உள்ளது. முதலீட்டின் பார்வையிலும் சிங்கப்பூர் மிகவும் முக்கியமானது. 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் மிக அதிக நேரடி அந்நிய முதலீட்டைச் செய்த நாடாக சிங்கப்பூர் இருந்தது. 2000ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சிங்கப்பூர் இந்தியாவில் மொத்தம் 160 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளது. இந்தியாவின் ‘லுக் ஈஸ்ட்’ மற்றும் ‘ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கையில் சிங்கப்பூரின் பங்கு குறித்துப் பேசிய ராகுல் மிஷ்ரா, "1992இல் கிழக்கு நோக்கிய கொள்கையை நாம் தொடங்கினோம். இந்தியாவின் இந்தக் கொள்கையின் மையமாக ’சிங்கப்பூருடனான கூட்டு’ உள்ளது. சிங்கப்பூர் எப்போதுமே இந்தியாவுடன் நெடுநோக்குப் பார்வையுடன் கூடிய கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. அவ்வப்போது இந்தியா சிங்கப்பூரின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இருக்க முடியாவிட்டாலும், இந்தியாவுடனான தன் உறவுகளில் விரிசல் ஏற்பட சிங்கப்பூர் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. 1992இல் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் கிழக்கு நோக்கிய கொள்கையை அறிமுகப்படுத்தியபோது சிங்கப்பூர் 'இந்தியா ஃபீவர்' என்ற பெயரில் பிரசாரத்தைத் தொடங்கியது. அது இந்தியாவின் இந்தக் கொள்கையைப் பெரிதும் விரிவுபடுத்தியது," என்று குறிப்பிட்டார். "செயல் உத்தி விஷயங்கள், அல்லது பாதுகாப்பில், தனது பாதுகாப்புத் தளங்களை வேறு யாரையும் பயன்படுத்த அனுமதிப்பதில்லை என்ற கொள்கையை இந்தியா எப்போதும் பின்பற்றுகிறது. ஆனால் சிங்கப்பூர் இதற்கு விதிவிலக்கு. இந்தியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான வணிக மற்றும் செயல் உத்தி உறவுகள் எப்போதும் நெருக்கமாக உள்ளன,” என்கிறார் அவர். இந்தியாவை ஏசியான் நாடுகளுடன் இணைக்கிறது சிங்கப்பூர் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார் பிரதமர் நரேந்திர மோதி. இரு நாடுகளுக்கும் இடையே பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின ஏசியான் (தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு) என்பது 10 தென்கிழக்கு ஆசிய நாடுகளின் குழு. ஏசியானின் கண்ணோட்டத்தில் இந்தியா-சிங்கப்பூர் உறவுகள் குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் குமார் கோயல், "ஆசியா பசிஃபிக் மற்றும் ஏசியான் நாடுகளில் சீனாவை யாரேனும் சமன்படுத்த முடியுமென்றால் அது இந்தியாதான் என்பது சிங்கப்பூருக்கு தெரியும். சீனா மீதான சார்பைக் குறைக்கும் விதமாக இப்பிராந்தியத்தில் இந்தியா தனது செயல்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று சிங்கப்பூர் விரும்புகிறது. சிங்கப்பூரின் உதவியுடன் இந்தியா, ஏசியானின் சிறப்பு உச்சி மாநாட்டில் (கிழக்கு ஆசிய உச்சி மாநாடு) உறுப்பினரானது. ஆசியா பசிஃபிக் பகுதியில் சீனாவின் செல்வாக்கு மிக அதிகமாக உள்ளது. அந்த வகையில் சிங்கப்பூரின் ஆதரவு இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது,” என்றார். வர்த்தகம், கடல்சார் பாதுகாப்பு, மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவற்றில் சிங்கப்பூர், ஏசியானில் இந்தியாவிற்கான முக்கிய வர்த்தக, மற்றும் செயல் உத்தி நுழைவாயில் என்று சுரேஷ் குமார் கோயல் கருதுகிறார். சீனா, ஏசியான் நாடுகளில் நிறைய முதலீடு செய்துள்ளது. சீனாவிற்கும் ஏசியான் நாடுகளுக்கும் இடையே 722 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 60 லட்சம் கோடி ரூபாய்) மதிப்பிலான பொருட்களின் வர்த்தகம் உள்ளது. இதில் இந்தியா மிகவும் பின் தங்கியுள்ளது. ஆசியான் நாடுகளுடன் இந்தியாவின் மொத்த வர்த்தகம் 131 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 11 லட்சம் கோடி ரூபாய்) மட்டுமே. இது இந்தியாவுக்கு பெரும் கவலையாக உள்ளது. "உண்மையில் பிரச்னை என்னவென்றால், 2008-09இல் இந்தியா-ஏசியான் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடந்தபோது நாம் பொருட்களில் மட்டுமே கவனம் செலுத்தினோம். நமது தனித்துவமான திறனாக இருந்த சேவைத் துறையை விட்டுவிட்டோம். இந்த இடைவெளியைக் குறைக்க நாம் சேவைத் துறையில் கவனம் செலுத்த வேண்டும். இந்த நிலையில் இந்தியா-ஏசியான் வர்த்தக உறவுகள் விவகாரத்தில் ஆய்வுக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கை அடுத்த ஆண்டுக்குள் வரும்,” என்று ராகுல் மிஷ்ரா குறிப்பிட்டார். “சீனாவை பொறுத்தவரை அவர்கள் தங்கள் பொருட்களை முடிந்தவரை பல நாடுகளில் கொட்ட விரும்புகிறார்கள். இந்தியா உட்படப் பல நாடுகள் இதனால் கவலையில் உள்ளன. சர்வதேச ஏற்றுமதியின் அளவுருக்கள் மற்றும் தரங்களுக்கு ஏற்ப நமது திறனை அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார். தென் சீனக் கடல், கடல்சார் பாதுகாப்பு, மற்றும் சிங்கப்பூர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவின் மொத்த வர்த்தகப் பொருட்களில் குறைந்தது 55% தென் சீனக் கடல் வழியாகச் செல்கிறது கிழக்கு-மேற்கு வர்த்தகப் பாதைகளின் நடுவில் சிங்கப்பூர் அமைந்துள்ளது. இந்தியாவின் கடல்சார் பாதுகாப்புக் கொள்கையின் கீழ் இது மிகவும் முக்கியமானது. இந்தியாவின் மொத்த வர்த்தகப் பொருட்களில் குறைந்தது 55% தென் சீனக் கடல் வழியாகச் செல்கிறது. இந்தியப் பெருங்கடலில் 'ஸ்ட்ரிங் ஆஃப் பெர்ல்ஸ்' என்ற கொள்கையின் கீழ் சீனா தொடர்ந்து தனது கடற்படை இருப்பை அதிகரித்து வருகிறது. தென் சீனக் கடல் மீது இந்தியாவின் வளர்ந்து வரும் ஆர்வம் குறித்துப் பேசிய ராகுல், "இந்தியாவின் வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு தென் சீனக் கடல் வழியாகத்தான் நடைபெறுகிறது. கடல்சார் பாதுகாப்பு முதல் மனிதக் கடத்தல் வரை கடல்சார் செயல் உத்தி விவகாரங்களில் தென் சீனக் கடல் தொடர்பாக இந்தியா அக்கறை கொண்டுள்ளது. கூடவே மலாக்கா ஜலசந்தியில் தன் கடற்படை இருப்பதை மிக முக்கியமானதாகக் கருதுகிறது,” என்றார். சீனாவின் தலையீடு இல்லாத சுதந்திரமான கடல் பாதைகளை உருவாக்குவது இந்தியாவுக்கு முக்கியம். “தற்போது சீனா ‘ஏ2-ஏடி’ (A2-AD - ஆண்டி ஆக்சிஸ் ஏரியா டினயல்) கொள்கையைக் கடைபிடிக்கிறது. தென் சீனக் கடல் வழியாக யாரேனும் சென்றால் அதை சீனா ஆட்சேபிக்கிறது. எனவே இந்தியாவும் பிற நாடுகளும் ’சுதந்திரமான கடல் போக்குவரத்து’ பற்றிப் பேசுகின்றன. சமீப காலமாக தென் சீனக் கடல் தொடர்பாக சிங்கப்பூர் வெளிப்படையாகக் குரல் எழுப்பி வருகிறது. இந்தப் பிராந்தியத்தில் அண்டை நாடுகள் மற்றும் ஆசியான் நாடுகளுக்கு சீனா பிரச்னைகளை உருவாக்குவது குறித்து சிங்கப்பூர் அதிருப்தி அடைந்துள்ளது. இங்கு இந்தியாவின் இருப்பு வேண்டும் என்று சிங்கப்பூர் விரும்புகிறது. ஆனால் அதேநேரம் முற்றுகை அல்லது போர்ச் சூழலை அது விரும்பவில்லை,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார். தென் சீனக் கடலில் இந்தியா-சிங்கப்பூர் உறவுகளின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட்ட சுரேஷ் குமார் கோயல், "இந்தியா குவாட் அமைப்பின் உறுப்பினர். குவாட் குழு, இந்தோ-பசிஃபிக் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்தை (கடல் பாதைகளின் சுதந்திரம்) விரும்புகிறது. அதற்குக் காரணம் நமது பெரும்பாலான வர்த்தகம் இந்தோ-பசிஃபிக் பகுதி வழியாகவே நடக்கிறது. வர்த்தகம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டால், இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் நமக்கு மிகவும் முக்கியமானது. தென் சீனக் கடலில் என்ன நடந்தாலும் அது இந்தப் பிராந்தியம் மற்றும் நம் மீது நேரடித் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, இந்தோ பசிஃபிக் பகுதியில் இந்தியா தனது பங்கை ஆற்ற வேண்டும். இதற்கு சிங்கப்பூரின் ஆதரவு தேவை," என்று விளக்கினார். இந்தியா செமிகண்டக்டர் மீது கவனம் செலுத்துகிறதா? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சிங்கப்பூரின் உயர்மட்ட வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோதி, இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்யுமாறு அழைப்பு விடுத்தார் இந்தியாவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் இது மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மொபைல் போன், விண்கலம், விசைப்பலகை என எந்த மின்னணு சாதனமாக இருந்தாலும் அவற்றில் செமிகண்டக்டர் சிப்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்தத் துறையில் உலகம் ஒரு சில நாடுகளை மட்டுமே சார்ந்துள்ளது. இதன் காரணமாக கோவிட் காலத்தில் அதன் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறுகள் காரணமாகப் பெரும் இழப்புகளைச் சந்திக்க வேண்டியிருந்தது. தற்போது இந்தியா தனது செமிகண்டக்டர் தேவையின் பெருமளவை இறக்குமதி மூலமாகவே பூர்த்தி செய்கிறது. சிங்கப்பூருடனான நல்லுறவு இந்த விஷயத்தில் இந்தியாவுக்கு உதவிகரமாக இருக்கும் என்று ராகுல் கருதுகிறார். “வரும் காலங்களில் செமிகண்டக்டர் துறையில் பெரிய சக்தியாக உருவெடுக்க இந்தியா கடுமையாக முயற்சி செய்து வருகிறது. இது தொடர்பாக மலேசியா உள்ளிட்ட பிற நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இந்த நிலையில் சிங்கப்பூருடன் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா- சிங்கப்பூர் கூட்டறிக்கையைப் பார்த்தால், சமகால விஷயங்கள் மற்றும் நீண்ட கால இலக்குகள் குறித்து இரு நாடுகளுக்கும் இடையே உள்ள புரிந்துணர்வு தெளிவாகப் புலப்படும்,” என்றார் அவர். செப்டம்பர் 5ஆம் தேதி, சிங்கப்பூரின் உயர்மட்ட வர்த்தகத் தலைவர்களைச் சந்தித்த பிரதமர் மோதி, இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் முதலீடு செய்யுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். “செமிகண்டக்டர் துறையில் நாங்கள் மிக வேகமாக முன்னேறி வருகிறோம். இத்துறையில் முழுமையான உள்கட்டமைப்பை உருவாக்குவோம். இந்தியாவின் இரண்டாம் அடுக்கு (tier-2) மற்றும் மூன்றாம் அடுக்கு (tier-3) நகரங்களில்கூட ஸ்டார்ட் அப்கள் இப்போது வளர்ந்து வருகின்றன," என்று பிரதமர் மோதி குறிப்பிட்டார். செமிகண்டக்டர் ஆற்றல் மையம் உலகளாவிய செமிகண்டக்டர் துறையில் தற்போது பல முக்கிய நாடுகள் முன்னிலை வகிக்கின்றன. இதில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. ஆனால் விநியோகச் சங்கிலியில் சீனாவை சார்ந்திருப்பது பல நாடுகளுக்குக் கவலையாக உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் 'சீனா+1' கொள்கையின் கீழ் ஒரு மாற்று சக்தியின் பங்கு முக்கியமானது. அந்த இடத்தைப் பிடிக்க இந்தியா விரும்புகிறது. இந்த ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் இருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோதி, ”செமிகண்டக்டர் உற்பத்தியில் உலகளாவிய மையமாக மாறுவதை இந்தியா தனது நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்றார். செமிகண்டக்டர் துறையில் இறக்குமதியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க இந்தியா தொடர்ந்து முயன்று வருகிறது. அத்தகைய சூழ்நிலையில் இந்தியாவுக்கான சாத்தியக்கூறுகள் நிறைந்ததாக சிங்கப்பூர் உள்ளது. "செமிகண்டக்டர் தொழிலுக்கு மூன்று விஷயங்கள் மிகவும் முக்கியம் - தொழில்நுட்பக் கட்டமைப்பு மற்றும் நிபுணர்கள், அரிய கனிமங்கள், மற்றும் தொழிலாளர் சக்தி. அவர்கள் விரும்பினால் பெரிய அளவில் செமிகண்டக்டர் சிப்களை உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு நாடுகள் இந்தியாவும் சீனாவும் மட்டுமே. நம்மிடம் தொழிலாளர் சக்தி உள்ளது. அரிய கனிமங்களுக்கு மற்ற நாடுகளின் உதவியைப் பெற வேண்டியிருக்கலாம். மேலும் தொழில்நுட்பத்தில் சிங்கப்பூர் நமக்குப் பெரிய ஆதரவாக இருக்கும்," என்று ராகுல் மிஷ்ரா குறிப்பிட்டார். செமிகண்டக்டர் துறையில் சிங்கப்பூரின் ஆதரவை இந்தியா விரும்புவது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் செமிகண்டக்டர்களுக்கான தேவை வேகமாக அதிகரித்து வருகிறது செமிகண்டக்டர் துறையானது சிங்கப்பூரின் பொருளாதாரத்தில் ஒரு முக்கியப் பகுதி. செமிகண்டக்டர் துறையானது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% பங்களிப்பை அளிக்கிறது. சிங்கப்பூர் உலகளாவிய செமிகண்டக்டர் உற்பத்தியில் 10 சதவீதமும், செமிகண்டக்டர் உபகரணங்களின் உற்பத்தியில் 20 சதவீதமும் பங்களிப்பதாக சிங்கப்பூர் பொருளாதார மேம்பாட்டு வாரியம் தெரிவிக்கிறது. சிங்கப்பூரின் செமிகண்டக்டர் துறை மிகவும் முன்னேறியுள்ளது. சிங்கப்பூரின் உதவியோடு, புதிய தொழில்நுட்பம் மூலம் இந்தியா தனது உற்பத்தித் திறனை அதிகரிக்க விரும்புகிறது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலக சந்தையில் தன்னை முன்னெடுத்துச் செல்லக்கூடிய ஓர் உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்க இந்தியா விரும்புகிறது. இருப்பினும் சிங்கப்பூரும் சில சவால்களை எதிர்கொண்டுள்ளது. சிங்கப்பூர் மிகவும் சிறிய நாடு, அதன் நிலவியல் பரப்பளவு மற்றும் மக்கள் தொகை மிகவும் குறைவு. இங்கு உற்பத்திச் செலவு அதிகம் என்பதால் பல நிறுவனங்கள் மலேசியா மற்றும் தாய்லாந்திற்கு செல்லத் தொடங்கியுள்ளன. "செமிகண்டக்டர் துறையில் உலக அளவில் முன்னணியில் இருக்க சிங்கப்பூர் விரும்புகிறது. ஆனால் அதற்கான வளங்கள் அதனிடம் இல்லை. சிங்கப்பூர் 'டீகப்ளிங்' கொள்கையைப் பின்பற்ற விரும்புகிறது. சீனாவுடன் நல்லுறவைப் பராமரிக்க விரும்பும் அதேநேரம் தனது வர்த்தகத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அது வேறு கூட்டாளிகளையும் விரும்புகிறது. சீனா மீதான சார்பைக் குறைக்கும் ஒரு மாற்று வழியை அது தேடுகிறது,” என்றார் ராகுல் மிஷ்ரா. ”சிங்கப்பூருக்கு இந்தியா ஒரு நம்பகமான கூட்டாளியாக இருந்து வருகிறது. தனக்கு உதவும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என்பது சிங்கப்பூருக்கு தெரியும். உலகளாவிய செமிகண்டக்டர் துறையில் தங்கள் இருப்பை நிலைநாட்ட இரு நாடுகளுமே விரும்புகின்றன. இரு நாடுகளின் இலக்குகளும் ஒன்றையொன்று ஆதரிப்பதாகவே உள்ளன. இந்தத் திசையில் இந்தியா எவ்வளவு விரைவாகவும் தீவிரமாகவும் செயல்படும் என்பதுதான் இப்போதைய கேள்வி," என்று அவர் மேலும் கூறினார். https://www.bbc.com/tamil/articles/ce380yl1x2yo
  10. 07 SEP, 2024 | 10:26 PM வடக்கு மக்களுக்கு சட்டத்தின் மூலம் முழுமையாக பாதுகாப்பு வழங்கப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் உறுதி அளிப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இன்று ஜே.வி.பி.யின் கொள்கைகளை சுமந்து வரும் அநுரகுமார திஸாநாயக்க வடக்கு மக்களை அச்சுறுத்தி வருவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வடக்கில் மக்களை அச்சுறுத்தியது தொடர்பில் வடக்கு தமிழ் மக்களிடமும் தென்னிலங்கை மக்களிடமும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் தெரிவித்தார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டி பிரதேசத்தில் இன்று (07) பிற்பகல் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர். வடக்குப் பிரதேசத்தின் அபிவிருத்திக்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, மாகாண சபை முறைமையை மீண்டும் பலப்படுத்தி ஒவ்வொரு மாகாணத்திற்கும் விரிவான அபிவிருத்தியை வழங்குவதே தமது நோக்கமாகும் எனவும் தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ''இரண்டு வருடங்களுக்கு முன்னர் குடும்பமாக ஒவ்வொரு வரிசைகளில் நிற்கிறோம். ரூபாய் பெறும் வீழ்ச்சி கண்டது. வியாபாரங்கள் மூட்டப்பட்டு தொழில்களை இழக்க நேரிட்டது. மக்கள் கஷ்டங்களை மறந்திருக்க வாய்ப்பில்லை. மீண்டும் அந்த யுகம் வேண்டுமா? நல்ல எதிர்காலம் வேண்டுமா? என்பதை தேர்தல் தீர்மானிக்கும். அன்று நாங்கள் அரசமைத்த போது அனுரவும் சஜித்தும் இருக்கவில்லை. இந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் இல்லை. இப்போது அவர்களால் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்கின்றனர். எல்லாவற்றையும் சீர்குலைக்கவே முயற்சிக்கின்றனர். கஷ்டப்பட்டு 2 வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டோம். சில சமயங்களில் கஷ்டமான தீர்மானங்களை எடுத்தோம். வரிசை அதிகரித்து செலவை குறைத்தோம். மக்கள் கஷ்டங்களை ஏற்றுக்கொண்டனர். சிறந்த எதிர்காலம் கிடைக்குமென மக்கள் நம்பினர். எனவே மீண்டும் வரிசை யுகத்திற்கு தேவையில்லை. எனவே முன்னோக்கிச் செல்வோம். ஐ.எம்.எப் அமைப்புடன் ஆலோசித்து அவர்களின் நிபந்தனைகள் பிரகாரம் செயலாற்றினோம். அதன் பலனான ரூபாய் வலுவடைந்தது. அதனால் பொருட்களின் விலை குறைந்திருக்கிறது. அந்த சலுகை மக்களுக்கும் கிடைக்கிறது. வீட்டின் கஷ்டங்களை பெண்களே அறிவர். பொருட்களின் விலை குறைந்ததால் அஸ்வெசும நிவாரணம் வழங்கினோம். அதேபோன்று பொருளாதாரம் தற்போது மேலும் வலுவடைந்திருக்கிறது. தனியார் துறையில் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அரச ஊழியர்களுக்கும் சம்பள அதிகரிப்பு கிடைத்தது. அடுத்த வருடத்தில் மேலும் அதிகரிப்போம். அரச ஊழியர்கள் பெரும் சுமைகளைத் தாங்கிக்கொண்டனர்.. அதனால் இன்று வாழ்க்கைச் சுமை சற்று குறைந்திருக்கிறது. இத்தோடு விட்டுவிடாமல் மக்கள் சுமையை மேலும் குறைப்போம். கஷ்டப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவேன். மக்களுக்கு காணி உறுதிகளை தந்திருக்கிறேன். ஒரு சிலருக்கு கிடைக்கவில்லை தேர்தலின் பின் அந்த திட்டம் தொடரும். அடுத்த ஐந்து வருடங்களில் பொருளாதாரத்தைப் பலப்படுத்துவோம். கல்வியை பலப்படுத்துவோம். அதற்காக வேலைத் திட்டங்கள் என்னிடம் உள்ளது. அதனால் தான் 'இயலும் ஸ்ரீலங்கா' என்று சொல்கிறேன். அனுவரவும் சஜித்தும் திட்டங்கள் இல்லாததால் இயலாது ஸ்ரீலங்கா என்றே சொல்லில்கொள்ள வேண்டும். நாட்டில் வரிகளைக் குறைத்தால் மீண்டும் பணத்தை அச்சிட நேரிடும். அதனால் ஐ.எம்.எப் சலுகைகள் கிடைக்காது. அதனை செய்ய வேண்டுமா? எனவே, ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதே எனது தேவையாகும். 2023 முன்னெடுத்த திட்டங்களுக்கு தற்போது பலன் கிடைக்கிறது. 2024 இ்ல் செய்தவைக்கு அடுத்த வருடம் தீர்வு கிடைக்கும். நாம் இப்போது உற்பத்திகளை அதிகரிக்க வேண்டியுள்ளது. அதனால் பெருமளவில் வரி அறவீட்டு பரப்பை அதிகப்படுத்தி வரிச்சுமையை குறைக்க வேண்டும். பெண்களே பொருளாதார நெருக்கடியின் பிரச்சினைகளை பல கஷ்டங்களுக்கு மத்தியில் நிர்வகித்தனர். அதற்காக பெண்களைப் பாராட்டுகிறேன். பெண்கள் பட்ட கஷ்டங்களை மறுக்கவில்லை. எனவே பெண்களை வலுவூட்டும் சட்டத்தை நிறைவேற்றியிருக்கிறோம். உள்ளூராட்சி, மாகாண சபைகளில் பெண்களின் பிரச்சினைகளுக்கும், குடும்ப வன்முறைகளுக்கும் தீர்வு வழங்க பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கிறோம். சட்ட உதவிகளையும் பெண்களுக்கு வழங்குவோம். பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கு கடன் வட்டி வீதம் குறைக்கப்படும். விவசாய நவீனமயமாக்கலை வடக்கிற்கும் வழங்குவோம். வருமானத்தை அதிகரிக்க வழி செய்வோம். மலையக பகுதிகளிலிருந்தும் அதற்காக ஒத்துழைப்பு பெறப்படும். அதனால் மக்களுக்கு அதிக இலாபம் கிடைக்கும். அதற்காக சலுகைக் கடன்களையும் வழங்குவோம். சுற்றுலாப் பயணிகள் வருகையை இரட்டிப்பாக அதிகரிப்போம். அதற்காகவே பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்தோம். வடக்கில் மூன்று கைத்தொழில் பேட்டைகளை அமைப்போம். டிஜிட்டல் பொருளாதார மையங்களையும் அமைப்போம். யாழ். மக்கள் வௌியில் சென்று தொழில் செய்யாமல் இங்கு தொழில்களை செய்ய வழிமுறைகளை உருவாக்குவோம். யாழ். நதி திட்டமும் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு தருவோம். கல்வி மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் முன்னெடுப்போம். அதற்காகவே 'இயலும் ஸ்ரீலங்கா' திட்டம் செயற்படுத்தப்படும். மீண்டும் மாகாண சபைகளை செயற்படுத்துவோம். பாரிய அபிவிருத்திகளை செய்ய மாகாண சபைகளின் பங்களிப்பு அவசியம். அனுரகுமார திசாநாயக்க யாழ்ப்பாணத்துக்கு வந்தபோது 'தெற்கு மக்கள் மாற்றம் ஒன்றுக்காக ஒன்றுபட்டிருக்கும் போது வடக்கு மக்கள் அதற்கு மாறான தீர்மானத்தை எடுத்தால் தெற்கு மக்களின் மனோபாவம் எவ்வாறு இருக்கும்' என்று கேட்டிருக்கிறார். அப்படிச் சொல்வது வடக்கு மக்களை அச்சுறுத்துவதாகும். 2010 ஆம் ஆண்டில் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்குமாறு நாங்கள் கூறினோம். மக்கள் வாக்களித்தனர். ஆனால் சிங்கள மக்கள் மஹிந்த ராஜபக்‌ஷவிற்கு வாக்களித்தனர். அதற்காக மஹிந்த ராஜபக்‌ஷ யாழ்ப்பாண மக்களை அச்சுறுத்த தெற்கிலிருந்து ஆட்களோடு வரவில்லை. தமிழ் மக்கள் சஜித்துக்கு வாக்களித்த போது சிங்கள மக்கள் கோட்டாபய ராஜபக்‌ஷவை தெரிவு செய்தனர். அப்போதும் கோட்டாபய ராஜபக்‌ஷ வடக்கு மக்களை அச்சுறுத்த வரவில்லை. ஆனால், ஜே.வீ.பி மக்களை அச்சுறுத்துகிறது. அனுரவிற்கு வெற்றிபெற்ற அனுபவம் இல்லை. அவர் வெல்வதற்கான சாத்தியமும் இல்லை. வடக்கு மக்களின் சட்டரீதியான பாதுகாப்பை நாம் உறுதிப்படுத்துவோம். எனவே, மக்களை அச்சுறுத்தியதையிட்டு ஜேவீபியினர் வெட்கப்பட வேண்டும். அனுர திசாநாயக்க இதற்காக வடக்கு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதற்காக சிங்கள மக்களைப் பயன்படுத்திக் கொண்டதால் அவர்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும். எனவே, விரும்பியவருக்கு வாக்களிக்கும் உரிமை வடக்கு மக்களுக்கு உண்டு. அந்த உரிமையைப் பாதுகாப்போம். எனவே செப்டம்பர் 21 சிலிண்டருக்கு வாக்களியுங்கள். இல்லாவிட்டால் சிலிண்டரும் இருக்காது அபிவிருத்தியும் வராது." என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், "இன்று யாழ். மக்கள் யாருக்கு ஆதரவளிப்பது என்ற தீர்மானத்தை எடுத்துள்ளனர். தொடர்ச்சியாக பல தடவைகள் யாழ்.மக்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளித்துள்ளனர். ஆனால் நான் முதல் முறையாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப்போகிறேன். எனவே, எமது தேவைகளுக்காக வந்த தலைவர்களோடு இருக்கவேண்டும்.. தேவையில்லா நேரத்தில் வந்த தலைவர்கள் பின்னால் நிற்பதுபொருத்தமல்ல. நாம் நன்றி மறப்பவர்கள் அல்ல. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை ஏற்றிருக்காவிட்டால் இலங்கை சோமாலியாவை போன்ற நிலையை அடைந்திருக்கும். கீழே விழுந்து கிடந்த இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தீர்மானங்களால் உயர்த்தி வைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 21 ஆம் திகதி மக்கள் தமது இருப்பை காப்பதற்கான தலைவரைத் தெரிவு செய்ய வேண்டும். கடந்த இரு வருடங்களில் மக்களுக்கு நிம்மதியை தந்த தலைவராகவே ஜனாதிபதி இருக்கிறார். இலங்கை தமிழரசுக் கட்சி வேடடிக்கையான வேலைகளை செய்கிறது. மறுமுனையில் சுமந்திரன் ஓடிப்போய் எதிர்கட்சித் தலைவருக்கு ஆதரவளிக்க முன்வந்திருக்கிறார். தமிழ் மக்களின் வாக்குகளை புதைக்குழிக்குள் தள்ளும் வகையிலேயே சுமந்திரனின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களுக்கு செய்துள்ள சேவைகள் மக்கள் நன்கு தெரியும். எதிர்கட்சித் தலைவர் நல்லாட்சியில் இருந்தபோது வடக்கு மக்களுக்கான வீட்டுத் திட்டங்களை முழுமையாக நிறைவு செய்யாமல் விட்டுவிட்டு ஆட்சிக்கு வந்த பின்பு செய்வதாக கூறுவது வேடிக்கையாகும். எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அந்த வீட்டுத் திட்டங்களை மீள ஆரம்பித்தற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருக்கிறார். எனவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் மாத்திரமே இந்த நாட்டை மீட்டெடுக்க முடியும்." என்றார். அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா "நாடு மிகக் கஷ்டத்திலிருந்த வேளையில் மீட்க வந்தமைக்காகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நாம் ஆதரவளித்தோம். அரசியல் இலாபம் கருதாமல் நாட்டை பற்றி சிந்தித்து அவர் செயலாற்றியதாலேயே எம்மால் தேர்தலை நடத்த முடிந்திருக்கிறது.. அவரைக் கண்டு பலரும் பொறாமை கொண்டிருந்தாலும், நாம் அவருக்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டுமென நினைக்கிறோம். பொருளாதார நெருக்கடியால், தெற்கிலும் வடக்கிலும் மக்கள் பெரும் நெருக்கடிகளை கண்டனர். விவசாயம் செய்ய முடியாமல் போனது. இன்றைய நிலை அவ்வாறானதல்ல ஜனாதிபதி எல்லா பிரச்சினைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். அதேபோல் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டுள்ளார். இந்நாட்டின் தெற்கிலிருந்த தலைவர்கள் வடக்கு மக்களை இரண்டாம் பட்சமாகவே கருதினர். ஆனால், அனைவரையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்த்தவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. அதனால் தான் தெற்கில் போன்றே வடக்கு மக்களுக்கும் காணி உறுதிகளை வழங்கினார். இப்பகுதிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தவும் அவர் பெருமளவான நிதியை ஒதுக்கியிருக்கிறார். விமான சேவை அமைச்சராக நியமித்த வேளையிலும் பலாலி விமான நிலையத்திற்கு சர்வதேச விமான சேவைகளை கொண்டுவரக்கூடிய நிலையை ஏற்படுத்துமாறு வலியுறுத்தினார். அதன்படியே யாழிலிருந்து இந்தியாவிற்கு எலயர்ன்ஸ் எயார் விமான சேவை இடம்பெறுகிறது. நாளாந்தம் இரு விமான சேவைகள் இடம்பெறுகின்றன. விரைவில் இண்டிகோ விமான சேவையும் விமானப் பயணத்தை பலாலியிலிருந்து ஆரம்பிக்கவுள்ளது. இவ்வாறான விடயங்களை வடக்கு மக்களுக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கியிருக்கிறார். எனவே, யாழ். மக்கள் சரியானவரைத் தெரிவு செய்ய வேண்டும்." என்றார். கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ''2022 ஆம் ஆண்டில் நான் கல்வி அமைச்சராக பொறுப்பெடுத்த காலத்தில் பாடசலைகள், கல்விச் செயற்பாடுகள் என அனைத்தும் ஸ்தம்பிதமடைந்து கிடந்ததையே காண முடிந்தது. இன்று வட மாகாணத்தில் ஆசிரியர் பற்றாக்குறை, அதிபர் பற்றாக்குறை, நிர்வாகச் சேவையிலிருக்கும் பற்றாக்குறையும் நிவர்த்திக்கப்பட்டுள்ளது. இரண்டு வருடங்களில் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கியிருக்கிறோம். அடுத்த வருடத்திலிருந்து கொத்தனிப் பாடசாலைகளை அமைத்து பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கான பௌதீக வளங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளையும் செய்திருக்கிறோம். யாழ். மக்கள் கல்விக்கு முன்னுரிமை வழங்கும் சமூகம். நாம் இன்று நாட்டை மீட்க முற்படும் வேளையில் ஜேவீபியினர் கல்விச் செயற்பாடுகளை முடக்கும் முயற்சிகளையே முன்னெடுத்தனர்.. எவ்வாறாயினும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரச ஊழியர்கள் அனைவருக்கும் சம்பள அதிகரிப்பை வழங்கினார். எனவே, புதிய ஒருவர் ஜனாதிபதியாக வந்தாலும் உடனடியாக பாராளுமன்றத்தைக் கலைக்க முடியாது. நாம் ஆரம்பித்த பணிகளுக்காக சுற்று நிருபங்களை வெளியிட வேண்டிய தேவை உள்ளது. சம்பளப் பிரச்சினைகளை எவ்வாறு தீர்க்க போகிறார் என்பதை அனுரகுமார திசாநாயக்க எங்குமே கூறவில்லை. சஜித்தும் அவ்வாறுதான் சொல்கிறார். ஆனால் இவர்களின் ஆட்சி வந்தால் சம்பள அதிகரிப்பு செயன்முறை முற்றாக சரிவடையும். கடந்த காலத்தில் அரசாங்கம் அடைந்த வெற்றியின் பலனாகவே அரசாங்கம் இந்த சலுகைகளை வழங்குகிறது என்பதை மக்கள் கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும்." என்றார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் "இன்று சில வேட்பாளர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இனவாதி என்கிறார்கள். எதிர்தரப்பு வேட்பாளர்களில் ஒருவர் 2015 - 2019 வரையில் கலாச்சார அமைச்சராக இருந்தபோது 1000 விகாரைகள் கட்டத் தீர்மானித்திருந்தார். அவற்றை தமிழ் மக்கள் அதிகமான பகுதிகளில் செய்யவே அவர் அனுமதி வழங்கியிருந்தார். அவ்வாறின்றி, சிங்கள மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அதனை செய்திருந்தால் அவருக்கும் நாமும் ஆதரவளித்திருப்போம். எனவே இவ்வாறான தலைவர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இனவாதி என்று சொல்வது வேடிக்கையானது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்தனர். அவர் ஜனாதிபதி பதவியை இன்னொருவருக்கு வழங்க முன்வந்த வேளையில் எவரும் அதனை ஏற்க முன்வராமல் ஓடிவிட்டனர். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று நாட்டைப் பொறுப்பேற்றுக்கொண்டு நாட்டை மீட்டெடுத்தார். நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது ஒரு மரம் வளர்ப்பது போன்றதாகும். நன்றாக வளர்ந்த மரத்தை இலகுவாக வெட்டி வீசிவிட முடியும். ஆனால் அந்த மரத்தை வளர்ப்பது கஷ்டமாகும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். அரசனை நம்பி புருசனைக் கைவிட்ட கதைபோல புதியவர்களை நம்பி ரணில் ஆட்சிக்கு முடிவுகட்டினால் எல்லோரும் சென்று வரிசைகளில் நிற்க நேரிடும். இன்று வடக்கில் காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. காணிப் பிரச்சினைக்கு ஜனாதிபதி தொடர்ந்தும் தீர்வுகளை வழங்குகிறார். ஆனால் எந்தவொரு மாகாணத்துக்கும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லை. இங்கிருந்து மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்புகின்ற அனைவரும் அரசாங்கத்திற்கு எதிராகவே செயற்படுகின்றனர். ஆனால், அவர்கள் அரசாங்கத்துடன் இணைந்துகொண்டு பொலிஸ் துறைசார் அதிகாரங்களைப் பெற்றுக்கொண்டு அந்த விடயங்களை நிர்வகிக்க முடியும். வடக்கிலிருந்து 6 கெபினட் அமைச்சர்களைத் தெரிவு செய்ய முடியும். ஆனால் ஒருவர் மட்டுமே வருகிறார். அதனால் நமது உரிமைகளை நாமே விட்டுக்கொடுக்கிறோம். நாம் தவறு செய்வதால் இன்னுமொருவர் வந்து தனது சமூகத்திற்கு அதனை செய்கிறார். எனவே, மக்கள் சரியான தலைவரை தெரிவு செய்து அவரோடு இணைந்து பயணிக்க வேண்டும்." என்றார். இந்து மதத் தலைவர்கள், யாழ். மாவட்ட விவசாய திணைக்களத் தலைவர் தியாகலிங்கம், பிரதேச அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான மக்கள் இந்த வெற்றிப் பேரணியில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/193097
  11. சஜித்துக்கு நிபந்தனையற்ற ஆதரவு தமிழர்களுக்கு இழைத்துள்ள துரோகம் - அங்கஜன் இராமநாதன் Published By: DIGITAL DESK 7 08 SEP, 2024 | 09:25 AM (இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகமல்லவா, வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் சூழ்ச்சிகளுக்கு தமிழ் மக்கள் அகப்பட கூடாது. செய்நன்றி மறவாமல், ஜனாதிபதிக்கு மீண்டும் ஆணையளிக்க வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் - உடுப்பிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை (07) இடம்பெற்ற சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவின் 'இயலும் ஸ்ரீ லங்கா' தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, இது தேர்தல் பிரச்சாரக் கூட்டமல்ல, ஜனாதிபதிக்கு யாழ் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்த வேண்டிய தேவை கிடையாது. நன்றிக்கான கூட்டம். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு நிம்மதியாக வாழ்வதற்கு நம்பிக்கையளித்துள்ளார். ஜனாதிபதியின் வெற்றிக்கான கூட்டமாகவே இதனை கருத வேண்டும். தற்போதைய முன்னேற்றத்தை மென்மேலும் உறுதிப்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெற்றிப் பெற வேண்டும். இல்லையேல் நாடு மீண்டும் பின்னடையும். வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் சிறந்த தீர்மானத்தை எடுத்துள்ளார்கள். தமது அபிலாசைகளை வென்றெடுப்பதற்கு தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு பலதடவைகள் ஆதரவளித்துள்ளார்கள். ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கும் முதல் மேடை இதுவென்பதை குறிப்பிட்டுக் கொள்ள வேண்டும். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் தலைவர்கள் இருந்த போது மக்களுக்காக சவால்களை பொறுப்பேற்பேன் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார். இரண்டு வருடங்களில் நாட்டை வழமைக்கு கொண்டு வந்துள்ளார். நாங்கள் சந்தர்ப்பவாதிகளல்ல, நன்றியுள்ளவர்கள். நெருக்கடியான சந்தர்ப்பத்தில் ஜனாதிபதி அரசாங்கத்தை பொறுப்பேற்றாமல் இருந்திருந்தால் இலங்கை சோமாலியாவை போன்று மாறியிருக்கும். பொருளாதார மீட்சிக்கு சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எழுச்சிப் பெறுவதா? அல்லது வீழ்ச்சியடைவதா ? என்பதை செப்டெம்பர் 21 திகதி தீர்மானிக்க வேண்டும். வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் வாக்குகளை சிதறடிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை தமிழரசுக் கட்சி வேடிக்கையான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. தமிழரசு கட்சியின் ஒரு தரப்பினர் தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கியுள்ள நிலையில். பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விரைவாக சென்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளார். ஜனாதிபதியை என்னுடைய அலுவலகத்துக்கு அழைத்து தமிழ் மக்களின் நீண்டகால கோரிக்கைகளை எழுத்துமூலமாக அவரிடம் வழங்கினேன். இதனை ஏற்றுக் கொண்டதன் பின்னரே நான் அவருக்கு ஆதரவு வழங்கினேன். பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் நிபந்தனைகளின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் சுமந்திரன் எவ்விதமான நிபந்தனைகளுமில்லாமல் எதிர்க்கட்சித் தலைவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார். இது தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள துரோகம், தமிழ் மக்களின் வாக்குகள் எம்மிடம் என்ற மாயையில் இருந்துக் கொண்டு செயற்படும் இவர்கள் தமிழர்களை நெருக்கடிக்குள்ளாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். தமிழர்கள் இந்த சூழ்ச்சியில் அகப்பட மாட்டார்கள். யார் உண்மையானவர்கள் என்பதை தமிழர்கள் நன்கு அறிவார்கள். ஜனாதிபதியை இனவாதி என்று குறிப்பிடுகிறார்கள். நல்லாட்சியில் அவர் தமிழர்களுக்கு செய்த அபிவிருத்திகளை மக்கள் நன்கு அறிவார்கள்.வடக்கில் இடைநிறுத்தப்பட்டுள்ள அபிவிருத்தி பணிகளை மீண்டும் தொடர்வோம் என்றார். https://www.virakesari.lk/article/193105
  12. மகாவிஷ்ணு கைது, 5 பிரிவுகளில் வழக்கு - எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைக்கலாம்? பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT படக்குறிப்பு, தமிழாசிரியர் மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாயின. கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 7 செப்டெம்பர் 2024 சென்னையில் அரசுப் பள்ளி ஒன்றில் பாவம், புண்ணியம் குறித்து மகாவிஷ்ணு என்பவரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த நிகழ்ச்சியில், பார்வை மாற்றுத் திறனாளி ஆசிரியரை அவமதித்ததாக அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியா திரும்பிய மகாவிஷ்ணுவை, சென்னை விமான நிலையத்திலேயே காவல்துறையினர் கைது செய்தனர். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பள்ளிக்கல்வித்துறை மீதான குற்றச்சாட்டுகளை திசைதிருப்பவே மகாவிஷ்ணு விவகாரம் பெரிதாக்கப்படுவதாக, இந்து அமைப்பினர் விமர்சித்துள்ளனர். 'சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அரசு இதுபோன்று கெடுபிடி காட்டுவதில்லை' என்பது அவர்களது குற்றச்சாட்டு. இந்தக் குற்றச்சாட்டு குறித்து பள்ளிக்கல்வித்துறை என்ன சொல்கிறது? பள்ளிகளில் மதம் சார்ந்த நிகழ்வுகள் விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கை என்ன? சென்னை அசோக் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசுவதற்காக 'பரம்பொருள்' அறக்கட்டளையை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர் அழைக்கப்பட்டார். அவர் தனது பேச்சில், பாவ புண்ணியம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. பின்னர், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள ஆண்கள் மாதிரி பள்ளியில் பேச அழைக்கப்பட்டார். அங்கு மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு பார்வை மாற்றுத் திறனாளியும் தமிழாசிரியருமான சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். அவருடன் மேடையிலேயே மகாவிஷ்ணு வாக்குவாதம் செய்த காட்சிகள் இணையத்தில் வெளியாயின. மகாவிஷ்ணு மீது குவிந்த புகார்கள் சமூக வலைதளங்களில் இந்த காட்சிகள் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டனர். மகாவிஷ்ணுவின் பேச்சைக் கண்டித்து மாற்றுத் திறனாளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து, சைதாப்பேட்டை காவல்நிலையம் மற்றும் அசோக் நகர் காவல்நிலையத்தில் அவர் மீது புகார்கள் அளிக்கப்பட்டன. தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனுவில், 'மகாவிஷ்ணு மீது மாற்றுத்திறனாளிகள் வன்கொடுமை சட்டம் மற்றும் ஊனமுற்றோர் உரிமைகள் சட்டப்பிரிவு 72(அ) படி நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, திருப்பூர் குளத்துப்பாளையத்தில் செயல்படும் மகாவிஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, ஆஸ்திரேலியாவில் இருந்து நாடு திரும்பிய மகாவிஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் காவல்துறையினர் கைது செய்தனர். மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் அனிதா ஆனந்த் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட அவரை, செப்டம்பர் 20-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் வில்சன் அளித்த புகார் மனு இதுபோன்ற நபர்களுக்கு வரவேற்பு கிடைப்பது ஏன்? "ஆன்மிகத்துக்கு தேவையான முதிர்ச்சி மகாவிஷ்ணுவிடம் இருப்பது போல தெரியவில்லை. இந்து ஆன்மிகம் என்பது அனைத்தையும் துறப்பது தான். பரம்பொருள் என்று சொல்லும் நிலைக்கு அவர் மாறவில்லை. ஓஷோவிடம் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் அதற்கு ஒரு பதில் இருக்கும். இவர்களைப் போன்றவர்களிடம் கேள்வி கேட்டால் கோபப்படுவார்கள்" என்கிறார், எழுத்தாளர் இரா.முருகவேள். "மகாவிஷ்ணு சிறைக்கு சென்று வந்தாலும் அவரை ஆதரிப்பதற்கு ஒரு கூட்டம் தயாராக இருக்கும். மறுபிறவி, பூர்வ ஜென்மம் ஆகிய விஷயங்களில் நம்பிக்கை உள்ள கூட்டம் அவரை ஆதரிக்கவே செய்யும்" என்று அவர் கூறுகிறார். "தன் மீது மக்களுக்கு பயபக்தி, மரியாதை இருக்க வேண்டும் என மகாவிஷ்ணுவை போன்றவர்கள் எதிர்பார்ப்பது வழக்கம். அது கேள்விக்குள்ளாகும் போது கோபப்படுகின்றனர். மாற்றுத்திறனாளி ஆசிரியரை பேசவிடாமல் செய்ய வேண்டும் என்பது தான் அவரின் நோக்கமாக இருந்துள்ளது" என்று குறிப்பிடுகிறார் முருகவேள். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, மாற்றுத்திறனாளி ஆசிரியரை பேச விடாமல் செய்ய வேண்டும் என்பது தான் மகாவிஷ்ணுவின் நோக்கமாக இருந்ததாக குறிப்பிடுகிறார் எழுத்தாளர் முருகவேள் இந்து அமைப்புகள் குற்றச்சாட்டு ஆனால், பள்ளிக்கல்வித் துறையில் நடக்கும் தவறான விஷயங்களை திசைதிருப்பவே மகாவிஷ்ணு விவகாரம் பெரிதுபடுத்தப்படுவதாக கூறுகிறார், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் வழக்கறிஞர் ராமமூர்த்தி. "கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி பயிற்சிகளை நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது. மற்ற பள்ளிகளிலும் இதுபோல போலி முகாம்கள் நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. இதுபோன்று பள்ளிக்கல்வித்துறை மீது எழுந்த விமர்சனங்களை மறைப்பதற்காக நடத்தப்படும் யுக்தியாகவே இதைப் பார்க்கிறோம்". என்கிறார் ராமமூர்த்தி. தொடர்ந்து பேசிய அவர், "மகாவிஷ்ணு விவகாரத்தை வைத்துக் கொண்டு பள்ளிகளில் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்பதில் வழிகாட்டுதல்களை கொண்டு வருவதற்கு இதைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இதற்கு முன்பு இவ்வாறு மகாவிஷ்ணு பேசியதாக எந்த தகவலும் இல்லை. சொல்லிக் கொடுக்கப்பட்டு பேசப்பட்டதா என்பதை ஆராய வேண்டும். இதை நாடகமாகவே பார்க்கிறோம்" என்றார். “மதத்தையும் அரசையும் தள்ளி வைப்பது என்பது வேறு. இவர்கள் இந்து மதத்தை மட்டும் தள்ளி வைக்கின்றனர். கிறிஸ்துவ, இஸ்லாமிய பள்ளிகளில் நடக்கும் விஷயங்களைக் கண்டு கொள்ள மாட்டார்கள்" என்று அவர் குற்றம்சாட்டுகிறார். பட மூலாதாரம்,@ANBIL_MAHESH படக்குறிப்பு, மகாவிஷ்ணுவிடம் கேள்வியெழுப்பிய தமிழ் ஆசிரியர் சங்கருடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறை விளக்கம் வழக்கறிஞர் ராமமூர்த்தியின் குற்றச்சாட்டை பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் மறுத்துள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தப் பிரச்னையில் தலைமை ஆசிரியையின் பங்களிப்பு எதுவும் இல்லை. பள்ளி மேலாண்மைக் கமிட்டியை சேர்ந்த பெண்மணி ஒருவர் தான் மகாவிஷ்ணுவை கூட்டி வந்திருக்கிறார். இவ்வாறு பேசுவார் எனத் தெரிந்திருந்தால் அவரை அனுமதித்திருக்க மாட்டார்கள். அதேநேரம், சைதாப்பேட்டை பள்ளிக்கு, அசோக் நகர் பள்ளி தலைமை ஆசிரியையை தான் கூட்டிச் சென்றுள்ளார். அங்கு தான் பிரச்னை ஏற்பட்டது" என்றார். தொடர்ந்து பேசிய அவர்,"மெட்ராஸ் கல்வி சட்டத்தில், மதம் சார்பான எந்த நிகழ்வுகளையும் பள்ளி வகுப்பு நேரங்களில் நடத்தக் கூடாது என உள்ளது. இது அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்தும். சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளில் அவர்களுக்கான சலுகைகள் உள்ளன. ஆனால், வகுப்பறைகளில் நடத்தப்பட வேண்டியதை மட்டுமே அவர்கள் செயல்படுத்த வேண்டும்" என்கிறார் கண்ணப்பன். மகாவிஷ்ணுவுக்கு எத்தனை ஆண்டு சிறைத்தண்டனை கிடைக்கும்? மகாவிஷ்ணு மீதான சட்ட நடவடிக்கைகள் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், "மத ரீதியான உணர்வுகளை புண்படுத்தினால் மட்டுமே வெறுப்பு பேச்சு என்ற பிரிவில் வழக்கு பதிவாகும். இன்னொரு மதத்தை பாதிக்கும் வகையில் மகாவிஷ்ணு எதையும் பேசவில்லை. பார்வை மாற்றுத் திறனாளியிடம், 'முன் ஜென்ம பாவம்' எனக் கூறியது அவர்களை அவமதிக்கும் செயல். அதற்காக அவதூறு வழக்கு மட்டுமே பதிவு செய்ய முடியும்" என்கிறார். "அவதூறு என்பது தனி மனிதர்களை இலக்காக வைத்து பேசினால் வரும். அவர், பார்வை மாற்றுத் திறனாளிகள் அனைவரையும் குறிப்பிடுகிறார். பகுத்தறிவுவாதம் பேசும் பிரிவினரை அவமதிக்கும் வகையில் பேசியதாக அவதூறு வழக்கைப் பதிவு செய்யலாம். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து கைது செய்யலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்" என்கிறார் ராதாகிருஷ்ணன். ‘மாணவர்களுக்கு மனச்சோர்வு ஏற்படும்’ "தன்னால் அனைத்தையும் சாதிக்க முடியும்; மற்றவர்களுக்கு இல்லாத சக்தி தன்னிடம் இருப்பதாக சிலர் நினைக்கின்றனர். அதுதான் இதுபோன்ற சர்ச்சைகளுக்கு காரணம்" என்கிறார் மூத்த மனநல மருத்துவர் சிவநம்பி. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பள்ளி மாணவர்களிடம் இவ்வாறு பேசும் போது அவர்களுக்கு மனவருத்தமும் மனச் சோர்வும் ஏற்படும். பிற்காலத்தில் இது பாதிப்புகளை ஏற்படுத்தும். பொது இடத்தில் இதுபோன்று பேசும்போது பிரச்னை இல்லை. அதைக் கேட்பவர்கள் கேட்கட்டும். மற்றவர்கள் புறக்கணித்துவிட்டு செல்வார்கள். பள்ளிகளில் இவ்வாறு பேசுவது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்" என்கிறார். அரசின் 4 அறிவுறுத்தல்கள் பட மூலாதாரம்,@ANBIL_MAHESH படக்குறிப்பு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், பள்ளிக் குழந்தைகளுக்கு முற்போக்கான அறிவியல்பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெறும் வகையில் புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிடுவதற்கு தான் ஆணையிட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்கேற்ப, வெள்ளிக்கிழமையன்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் கண்ணப்பன் தெரிவித்தார். "கூட்டத்தில், எந்த சூழலிலும் தனியார் நிகழ்வுகளை பள்ளிகளில் அனுமதிக்கக் கூடாது; பாடம் தொடர்பானவற்றை மட்டும் பேச அனுமதிக்கலாம்; ஆசிரியர்கள், பேராசிரியர்களைக் கொண்டு தன்னம்பிக்கை வகுப்புகளை எடுக்கலாம். பள்ளிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன" என்கிறார் கண்ணப்பன். அனைத்துப் பள்ளிகளும் வரும் காலத்தில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை வகுக்க, முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், கமிட்டி ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் கண்ணப்பன் குறிப்பிட்டார். தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக் குழு தகவல் இந்நிலையில், 'மகாவிஷ்ணுவை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கிறிஸ்துவர்' என்ற தகவல் இணையத்தில் பரவியது. "இது முற்றிலும் தவறான தகவல். சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வரும் 'அந்தோணி பர்ணாந்து' என்ற முகநூல் பக்கம், ஆசிரியர் சங்கருடையது அல்ல" என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்புக்குழு தெரிவித்துள்ளது. - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/czrgz67d001o
  13. அனுரகுமார யாழ்ப்பாணத்தில் இனவாத கருத்து எதனையும் வெளியிடவில்லை, ஊழல் அற்ற அரசாங்கம் என்ற விடயத்தில் அவருக்கு முழுமையான ஆதரவு – சுமந்திரன் Published By: RAJEEBAN 08 SEP, 2024 | 07:56 AM தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசநாயக்க யாழ்ப்பாணத்தில் இனவாதத்தை அடிப்படையாக கொண்ட கருத்தினை வெளியிடவில்லை என தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம் என தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. தென்பகுதி மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றார்கள். இந்த தேர்தல் மூலம் அந்த மாற்றம் வரும், ஆனால் வடபகுதி மக்கள் இந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை என தென்பகுதி மக்கள் தெரிவிக்க கூடும் என யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்திருந்தார். அவர் இந்த சொற்களை பயன்படுத்தி இதனை தெரிவித்தவேளை பலர் உடனடியாக இது கோட்டாபய ராஜபக்சவின் கூற்றை நினைவுபடுதுகின்றது என தெரிவித்தனர். அனுராதபுரத்தில் இடம்பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கோட்டாபய ராஜபக்ச நான் அனைவரும் எனது வெற்றியின் பங்குதாரர்களாகயிருக்கவேண்டும் என விரும்பினேன், ஆனால் வடபகுதி மக்கள் இந்த வெற்றியில் என்னுடன் இணைந்துகொள்ளவில்லை என அவர் தெரிவித்திருந்தார். வடபகுதி மக்களிற்கு அவ்வேளை உணர்வொன்று காணப்பட்டது, அது சரியானது என நிரூபிக்கப்பட்டது ஏனென்றால் கோட்டாபய ராஜபக்சவை தெரிவு செய்த தென்பகுதி மக்களே அவரை துரத்தினார்கள். நாங்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றோம், விரும்புகின்றோம், 70 வருடங்களிற்கு மேலான ஆட்சிமுறையில் மாற்றங்கள் ஏற்படவேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக மக்கள் கோருகின்ற மாற்றம் இல்லை. நாங்கள் அந்த மாற்றத்தினையும் கோருகின்றோம். ஊழல் அற்ற அரசாங்கம் என்ற மாற்றத்தினை விரும்புகின்றோம், இந்த முயற்சியில் நாங்கள் தோழர் அனுரகுமார திசநாயக்கவின் பக்கம் நிற்கின்றோம் அதனை ஆதரிக்கின்றோம். நாங்கள் அவருக்கு இந்த விடயத்தில் முழுமையாக ஆதரவை வழங்குகின்றோம், ஊழலை ஒழிப்பதில் அவருக்கு முழுமையான ஆதரவை வழங்குவோம். இது குறித்து எந்த கேள்வியும் இல்லை. வெவ்வேறு பகுதிகளில் வசிக்கின்ற மக்கள், வெவ்வேறு மொழிகளை வசிக்கின்ற மக்கள், அவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் குறைந்தவர்களாகயிருக்கலாம் ஆனால், அவர்களிற்கும் அரசாங்க அதிகாரங்களிற்கான சமமான அணுகல் காணப்படும் மாற்றத்தை விரும்புகின்றோம். இதுவே உண்மையான மாற்றமாகயிருக்கும். தோழர் அனுரகுமார இனவெறி உணர்வுகளுடன் இந்த கருத்தினை வெளியிட்டார் என நான் கருதவில்லை, அவரை எனக்கு நன்கு தெரியும், அவர் இனவாத உணர்வுகள் அற்ற மனிதர், அவர் இந்த நாட்டில் இனவாதத்தை ஒழிப்பதற்கு தீவிர முயற்சிகளை எடுத்துள்ளார், இந்த விடயத்தில் எங்களிற்கு வேறு உணர்வுகள் வித்தியாசமான உணர்வுகள் இல்லை, நாங்கள் வேறு ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவளிக்க தீர்மானித்திருக்கலாம் ஆனால் இந்த விடயத்தில் நாங்கள் இணைந்திருக்கலாம். https://www.virakesari.lk/article/193102
  14. Published By: DIGITAL DESK 7 03 SEP, 2024 | 03:02 PM தொகுப்பு: ஆர்.ராம் உலகளாவிய ரீதியில் பல்வேறு சமஷ்டி முறைமைகள் காணப்படுகின்றன. அவை நாடுகளின் மேம்பட்ட நிலைமைகளுக்கு அவசியமானவையாக உள்ளன. அந்தவகையில் எதியோப்பியாவலும் சமஷ்டி முறைமை உள்வாங்கப்பட்டது. ஆனால் அதன் விளைவுகள் எவ்வாறு அமைந்திருந்தன. அதற்கான காரணங்கள் என்னவாக உள்ளன என்பது பற்றிப் பார்ப்பது பொருத்தமானதாக இருக்கும். ஆபிரிக்கப் பிராந்தியத்தில் இரண்டாவது மிகப் பெரும் சனத்தொகையாக 120மில்லியன் மக்களைக் கொண்ட தேசம் தான் எதியோப்பியா. 1936-1941 வரையான இத்தாலிய கட்டுப்பாடு, 1941-1952 பிரித்தானிய கட்டுப்பாடு ஆகிய இரண்டு காலகட்டங்களைத் தவிரவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீண்டதொரு காலனித்துவத்துக்குள் உள்ளாகாத தேசமாக எதியோப்பியா காணப்படுகின்றது. இது, வரலாற்று ரீதியாகவும், பிராந்திய, பூகோள கலாசார ரீதியாகவும், மொழி வாரியாகவும் பன்முகத்தன்மை கொண்ட சமுதாயத்தினைக் கொண்டதொரு தேசமாக காணப்படுகின்றது. 80இற்கும் அதிகமான மொழிகளைக் கொண்டிருக்கின்றமையானது விசேடமானதாகும். இப்படியானதொரு தேசத்தில் அரசைக் கட்டியெழுப்பும் செயல்முறை ஒரு முடியாட்சியின் மூலம் இருந்தது. அத்தோடு மத்திய அரசைக் கட்டுப்படுத்துவதற்கு ‘மன்னர்கள்’ அல்லது ‘ராசஸ்’ இடையே கடுமையான போட்டிகள் நிலவியிருந்தன. அதேநேரம், மத்தியிலிருந்து கீழ் மட்டம் வரையில் அணுக முடியாத காரணத்தால் சில பேரரசர்கள் நடைமுறையில் பரவலாக்கப்பட்ட நிர்வாக முறைமையைக் கொண்ட ஆட்சி வடிவத்தில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. புவியியல் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதியோப்பியா ஒரு பரவலாக்கப்பட்ட நிர்வாகத்திற்கு உகந்ததாகும். எனினும், 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நவீன அரசின் வளர்ச்சியுடன், நவீன தொழில்நுட்பம் மற்றும் சில மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பயன்படுத்தி ‘மிகை-மையமயமாக்கல்’ போக்குகள் உள்நாட்டுக்குள் வளர்ந்தன. திறந்த ஒருங்கிணைப்பு மற்றும் அழிப்புக்கொள்கைகள் பேரரசர்களாலும் இராணுவ சர்வாதிகாரத்தாலும் பின்பற்றப்பட்டன. அம்ஹாரிக் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகவும், கிறிஸ்தவம் மாநிலத்தின் மதமாகவும் அறிவிக்கப்பட்டது. இதனால் நவீன அரசின் தோற்றம் குழு ஆதிக்கத்தின் வலுவானதொரு ‘மைய’ அதிகாரக் குவிப்பை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. இதனால் ஏற்பட்ட மக்கள் புரட்சி 1974இல் கடைசி பேரரசரான ஹைல் செலாசியை ஆட்சியில் இருந்து அகற்றியது. எனினும், ஜனநாயக ஆட்சி உருவாக்கப்படுவதற்கு பதிலாக ஒரு இராணுவ சர்வாதிகாரம் நிறுவப்பட்டதோடு சில சீர்திருத்தங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் சுதந்திரம், ஜனநாயகம் மற்றும் சமத்துவத்திற்கான மக்களின் கோரிக்கைகளுக்;கு இராணுவத்தின் ஆட்சியில் பதிலளிக்கப்படவில்லை. இதனால் உள்நாட்டில் அந்நிய தேசங்களாக்கப்பட்ட பகுதிகளும், உரிமைகள் மறுதலிக்கப்பட்ட தேசிய இனங்களும் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கின. இது 17வருடங்கள் நீடித்திருந்தன. இதேநேரம், 1950ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் 390(வி)ஏ இற்கு அமைவாக, 1952முதல் 1962வரை நீடித்த எதியோப்பியாவுடன் எரித்திரியா இணைக்கப்பட்டது. எனினும், 1962ஆம் ஆண்டில் எதியோப்பியா-எரித்தியா கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக இரத்து செய்யப்பட்டது. இதனால், 1961இல் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதோடு அது 1991 வரை தொடர்ந்தது.1991-1993வரையான காலப்பகுதியில் பதவியில் இடைக்கால அரசாங்கம் நீடித்திருந்தது. 1993இல் எரித்திரியா ஒரு மேலாதிக்கக் கட்சியான விடுதலை முன்னணியால் ஏற்பாடு செய்யப்பட்ட வாக்கெடுப்பைத் தொடர்ந்து அதன் சுதந்திரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அப்போதைய எதியோப்பியாவின் இடைக்கால அரசாங்கம் எரித்திரியாவின் சுதந்திரத்தை அங்கீகரித்தது. அத்துடன் எரித்திரியா ஐ.நா.வின் அங்கீகாரத்தினையும் பெற்றுக்கொண்டது. எனினும், 1998-2000 வரையிலான காலத்தில் எரித்திரியா எதியோப்பியாவுடன் போரை முன்னெடுத்தது. இதன் விளைவால் எரித்திரியா 1991 இல் நிறுவப்பட்ட இடைக்கால அரசாங்கத்தால் இன்னும் ஆளப்படும் நிலைமையே நீடிக்கின்றது. பேரரசர்கள் மற்றும் இராணுவத் தலைவர்களின் கட்டாய ஒருங்கிணைப்புக் கொள்கைகள், தேசிய இனங்கள் அல்லது இனக்குழுக்களின்; சுயாட்சிக்கான கோரிக்கைகளை நிவர்த்தி செய்யத் தவறிவிட்டன. இதன்விளைவால்; மத்திய அரசுக்கு எதிராக கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன. நீண்ட உள்நாட்டுப் போர் ஒட்டுமொத்தமாக நாட்டையே அழித்தது. நீண்ட உள்நாட்டுப் போருக்குப் பிறகு, ஒருவாறு, 1991இல் இராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது. எனினும் ஒருகுழு ஆதிக்கம் செலுத்தும் சர்வாதிகார ஆட்சிகளின் தீவிர அடக்குமுறை இயல்புகளுக்கு எதிர்வினையாக நாட்டில் பல்வேறு குழுக்கள் வலுவான இனவாத உணர்வை வளர்த்தன. இதனால், 1991இல் உள்நாட்டின் வரலாற்றில் புதிய அத்தியாயம் உருவானது. மத்திய அரசைக் கட்டுப்படுத்தியவர்களை முழுமையாகத் தோற்கடித்து நாட்டைக் கிளர்ச்சிப் படைகள் கட்டுப்படுத்தின. சுதந்திரம், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்திற்கான மற்றொரு நம்பிக்கை மீண்டும் தோற்றுவிக்கப்பட்டது. இராணுவ ஆட்சியைத் தோற்கடித்த எதிரோப்பிய கிளர்ச்சியாளர்கள் பல்வேறு குழுக்களின் சுயநிர்ணயக் கொள்கைகளின் அடிப்படையில் ஒரு பொதுவான மத்திய அரசாங்கத்தை நிறுவுவதன் மூலம் நாட்டின் ஒற்றுமையைப் பராமரிக்க முடிவு செய்தனர். பலதரப்பட்ட குழுக்களின் நீண்டகால பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு காணப்பட வேண்டும். எனவே நிறுவனமயமாக்கப்பட்ட அங்கீகாரம் மற்றும் பன்முகத்தன்மைக்கு இடமளிப்பதற்கான தேவை உணரப்பட்டது. எதியோப்பியாவை 14சுயாட்சிப் பகுதிகளாகப் பிரித்து, அரசியலமைப்பு ஆணையகத்தால் சமஷ்டி அரசியலமைப்பை உருவாக்குதல் உள்ளிட்ட விடயங்கள் 1994இல் அரசியலமைப்புச் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டதோடு தாமதமின்றி 1995இல் நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. ‘எங்களது தேசம் எதியோப்பிய நாடு, நாங்கள் தேசிய இனங்கள் மற்றும் பூர்வீகமான மக்கள்’ என்ற தொனிப்பொருளை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டது. அரசியலமைப்பின் 46ஆவது சரத்தில் குடியேற்ற முறைகள், மொழி, அடையாளம் மற்றும் சம்பந்தப்பட்ட மக்களின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்படும் என்பது தெளிவாக குறித்துரைக்கப்பட்டது. எனவே, எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசமும், தேசியமும் மற்றும் மக்கள் குழுக்களும் ஒரு சமஷ்டி மாநிலமாக இருக்கலாம். அத்துடன் தங்கள் சொந்த மாநிலத்தை நிறுவுவதற்கும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதும் அரசியலமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எந்தவொரு தேசம், தேசியம் அல்லது மக்கள் குழு தனது சொந்த மாநிலத்தை உருவாக்குவதற்கான உரிமையானது பின்வரும் அடிப்படையில் உறுதி செய்யப்படுகின்றது. அவையாவன, (அ) தேசம், தேசியம் அல்லது சம்பந்தப்பட்ட மக்கள் குழு அரசியலமைப்பு கவுன்சிலின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களால் மாநில உரிமைக்கான கோரிக்கை அங்கீகரிக்கப்பட்டு, கோரிக்கை மாநில கவுன்சிலுக்கு எழுத்துபூர்வமாக முன்வைக்கப்படும் போது (ஆ)கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கவுன்சில் ஒரு வருடத்திற்குள் வாக்கெடுப்பை ஏற்பாடு செய்து, கோரிக்கையை முன்வைத்த தேசம், தேசியம் அல்லது மக்கள் குழு மத்தியில் நடத்தப்படும் போது (இ)வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் மாநில உரிமைக்கான கோரிக்கை ஆதரிக்கப்படும் போது (ஈ)மாநில கவுன்சில் தனது அதிகாரங்களை, கோரிக்கையை முன்வைத்த தேசம், தேசியம் அல்லது மக்கள் குழுவுக்கு அங்கீகாரம் அளிக்கும் போது (உ)விண்ணப்பமின்றி வாக்கெடுப்பு மூலம் புதிய மாநிலம் உருவாக்கப்பட்டால், நேரடியாக எதியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசில் உறுப்பினராகிறது. (ஊ)எதியோப்பியாவின் கூட்டாட்சி ஜனநாயகக் குடியரசின் உறுப்பினர்கள் சம உரிமைகள் மற்றும் அதிகாரங்களைக் கொண்டிருக்கும். இந்நிலையில் எதியோப்பிய நாடானது, தற்போது மத்திய எதியோப்பியா பிராந்திய மாநிலம், சிடாமா பிராந்திய மாநிலம், தெற்கு எதியோப்பிய பிராந்திய மாநிலம், தென்மேற்கு எதியோப்பியா மக்கள் பிராந்திய மாநிலம் ஆகிய நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தின் சுயாட்சி உறுதிப்படுத்தப்பட்டுள்ள அதேநேரம், மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சிறுபான்மை தேசிய இனங்களுக்கான சிறப்பு பிரதிநிதித்துவத்திற்காக அரசியல்சாசனத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனங்கள் மற்றும் சிறு மக்கள் குழுக்களின் சிறப்புப் பிரதிநிதித்துவம் குறைந்தபட்சம் 20ஆக இருப்பதோடு மக்கள் பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 550க்கு மிகையாகாமல் இருக்க வேண்டும்; என்பதும் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் பிரதிநிதிகள் சபையானது சமஷ்டி அதிகார வரம்பிற்கு ஒதுக்கப்பட்ட அனைத்து விடயங்களிலும் சட்டம் இயற்றவும், மத்திய அரசுக்கு ஒதுக்கப்பட்ட வருவாய்களைப் பெறவும், வரிகளை விதிக்கவும், மத்திய வரவு,செலவுத்திட்டத்தினை அங்கீகரிக்கவும், சர்வதேச ஒப்பந்தங்களை அங்கீகரிக்கவும், தேசிய பாதுகாப்பு, பொது பாதுகாப்பு மற்றும் ஒரு தேசிய பொலிஸ் படை ஆகியவற்றின் அமைப்பை தீர்மானிக்கவும் அதிகாரத்தினைக் கொண்டிருக்கின்றது. அத்துடன், இச்சபையானது சுயநிர்ணய உரிமை தொடர்பான பிரச்சினைகளை முடிவு செய்வதற்கும், மத்திய மற்றும் மாநில வரிகளின் மூலங்களிலிருந்து பெறப்பட்ட வருவாயின் விகிதங்களைத் தீர்மானிக்கவும், மத்திய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்களை முடிவு செய்யவும், மாநிலங்களுக்கு இடையேயான எல்லைப் பிரச்சினைகள் குறித்து முடிவெடுக்கவும் அதிகாரத்தினைக் கொண்டிருகின்றது. மாநில மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சபைக்கு இடையிலான பகிரப்பட்ட ஒத்திசைவுப்பட்டியலில் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தவும், ஒரு மாநிலம் அரசியலமைப்பு ஒழுங்குக்கு ஆபத்தை ஏற்படுத்தினால் தலையீட்டை ஆணையிடுவதற்கும், மக்கள்தொகை கணக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில், தொகுதிகளின் எல்லைகளை தீர்மானிப்பதற்கும், அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவை தீர்மானிக்கவும், அரசியலமைப்பு திருத்தம் குறித்து முடிவு செய்யவும் அதிகாரங்களைக் கொண்டிருக்கின்றது. மேலும், நாட்டின் ஜனாதிபதி தேர்தல் நடத்துவதற்கான அங்கீகாரத்தினை வழங்குதல், அரசியலமைப்பில் வழங்கப்படாத வரிவிதிப்பு அதிகாரத்தின் மீதான முடிவுகளை எடுத்தல், மாநில அதிகாரிகள் தங்கள் அதிகார வரம்பிற்குள் மனித உரிமை மீறல்களை செய்கின்றபோது கைது செய்ய முடியாத சந்தர்ப்பங்களில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த முடிவுகளை தீர்மானித்தல் உள்ளிட்ட அதிகாரங்களும் மக்கள் பிரதிநிதிகள் சபையிடத்தில் உள்ளன. எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசங்களும், தேசியங்களும் மற்றும் மக்கள் குழுக்களும் பிரிந்து செல்லும் உரிமை உட்பட சுயநிர்ணய உரிமைக்கு நிபந்தனையற்ற உரிமை உள்ளது. எதிரோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசமும், தேசியங்களும் மற்றும் மக்கள் குழுக்களும் அதன் சொந்த மொழியைப் பேசவும், எழுதவும், வளர்க்கவும், கலாசாரத்தை வெளிப்படுத்தவும், மேம்படுத்தவும் அதன் வரலாற்றைப் பாதுகாக்கவும் உரிமைகளைக் கொண்டிருக்கின்றன. எத்தியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு தேசங்களுக்கும், தேசியங்களுக்கும் மற்றும் மக்கள் குழுக்களுக்கும் முழு அளவிலான சுய-அரசு உரிமை உள்ளது, இதில் தான் வசிக்கும் பிரதேசத்தில் அரசாங்க நிறுவனங்களை நிறுவுவதற்கான உரிமையும், மாநில மற்றும் மத்திய அரசாங்கங்களில் சமமான பிரதிநிதித்துவமும் உள்ளடங்குகின்றது. இத்தகைய உச்சபட்சமான அதிகாரங்கள் அரசியலமைப்பு ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் முன்னர் ஒடுக்கப்பட்ட பலதரப்பட்ட மக்கள் குழுக்கள் உறுதியானவர்களாக மாறி தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர். உள்நாட்டில் பாரிய பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளதோடு பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை தோற்றுவிக்கப்பட்டுள்ளதோடு பிராந்தியத்தில் எதியோப்பியாவின் அதிகாரம் அதிகரித்துள்ளது. அதேநேரம் சர்வதேச சமாதான முயற்சிகளில் எதியோப்பியாவின் வகிபாகமும் அதிகரித்துள்ளது. இருந்தபோதும், எதியோப்பியாவில் மக்கள் குழு அடையாளங்களின் ஆதிக்கம், வலிமையான ஒருங்கிணைப்பு செயல்முறை, என்பன மக்கள் குழுக்களுக்கு இடையில் அவநம்பிக்கைகள் நிலவுவதற்கு வழிசமைக்கிறது. அதுமட்டுமன்றி தற்போதுள்ள பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் வகையில் சமஷ்டி அமைப்புகள் நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகின்றபோதும் யதார்த்தத்தில் பார்க்கும்போது, அந்த வடிவமைப்பில் காணப்படும் சில சிக்கல்களால் கடுமையான நெருக்கடிகள் தோன்றியுள்ளன. மக்கள் சபைக்கான பிரதிநிதித்துவம் தொகுதியின் அனைத்து மக்களின் பிரதிநிதியாக ஒற்றை உறுப்பினர் முறைமை காணப்படுகின்றது. இது பல்வேறு குழுக்களின் உண்மையான பிரதிநிதித்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்காதுள்ளது. இதனால் நாட்டின் பல்வேறு சிறு குழுக்களுக்கு கணிசமான பங்கேற்பு இல்லாத சூழல் நீடிக்கின்றது. இதன்விளைவாக, பெரும்பான்மை அமைப்பானது, அதிக மக்கள்தொகை அதிக பிரதிநிதிகள், அதிக அதிகாரம் போன்ற கோரிக்கைகளை தொடரச் செய்கிறது. சட்டத்தை உருவாக்கும் செயல்முறைகளில் மக்கள் பிரதிநிதித்துவ சபையின் நிர்வாகியின் உருவாக்கம் சிக்கலுக்குள்ளானதாக காணப்படுகின்றது. அரசியலமைப்பு விளக்கம், மற்றும் நிதி இடமாற்றங்கள், இனங்களுக்கிடையிலான மோதல்களைத் தீர்த்தல் என்பன மையத்தில் இருப்பதால் தேசிய இனங்களின் சமத்துவத்திற்கு உத்தரவாதம் அளிக்காத நிலைமை காணப்படுகின்றது. முடிவெடுக்கும் நடைமுறை எளிய பெரும்பான்மை அடிப்படையில் இருப்பதால், சட்டத்தை உருவாக்கும் அமைப்பு போலவே, அதிக மக்கள் தொகை கொண்ட குழுக்கள் அதிக பிரதிநிதிகள் மற்றும் அதிக அதிகாரங்களைக் கொண்டிருக்கலாம் என்பது இயல்பாகின்றது. எதியோப்பியாவில் சமஷ்டி அமுலாக்கம் தொடர்ச்சியான சவால்களை சந்திக்கின்றது. குறிப்பாக, சட்டப்பூர்வ பிரச்சினையை தோற்றுவிப்பதாக உள்ளது. ஆரம்பத்தில், எதியோப்பிய சமுதாயத்தின் அனைத்துப் பிரிவுகளும் சமஷ்டி முறையை நல்ல நிர்வாக அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னர் சலுகை பெற்ற மக்கள் குழுக்கள் அல்லது உயரடுக்கினர் அதை முற்றிலுமாக நிராகரித்தனர். பல தசாப்தங்களாக அதற்கு எதிராக வேலை செய்தனர். பின்னர் சமஷ்டி, கொள்கை அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டபோது அவர்களின் மனதில் மாற்றம் ஏற்பட்டது. பழைய ஆட்சியை எதிர்த்துப் போராட, அரசியல் கட்சிகள், மக்கள் குழுக்கள் இன அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டன, இன்னும் அவை தொடர்ச்சியான அவநம்பிக்கையின் காரணமாக அவ்வாறான கூட்டிலேயே இருக்கின்றது. அந்நிலையானது இப்போது நடந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கும் அடிப்படையாக காணப்படுகின்றது. முந்தைய ஆட்சியை இராணுவ ரீதியாக தோற்கடித்த எதியோப்பிய மக்கள் புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற இனக் கட்சிகளின் கூட்டணி, அதீத மத்தியத்துவத்துடன் நாட்டை 27 ஆண்டுகள் ஆட்சி செய்வதற்கு இடமளித்தது. இது ஜனநாயக புறக்கணிப்பையும், மத்திய அரசின் சர்வாதிகார ஆட்சி, பிராந்தியங்களில் தலையீடு ஆகியவற்றுக்கும் வழிசமைப்பதற்கு வித்திட்டுள்ளது. பன்முகத்தன்மை சார்ந்த சமஷ்டி முறையை ஏற்றுக்கொள்வது என்பது பல்வேறு வகைகளில் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதாகும். எவ்வாறாயினும், இனக்குழுக்களின் உரிமைகளுக்கும், குறிப்பிட்ட இனக்குழுக்கள் வாழும் பிரதேசத்தில் குடியேறும் தனிநபர்களின் உரிமைக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகியுள்ளன. அடக்குமுறை மற்றும் ஒருமைப்படுத்தல் செயல்முறைகளின் மரபு காரணமாக, அரசியலமைப்பு உரிமைக்கும் நடைமுறைக்கும் இடையே ஒரு இடைவெளி ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு தேசமும், தேசியமும் மற்றும் மக்கள் குழுவின் உரிமையாக அதன் மொழியை பயன்படுத்த, அதன் கலாசாரம் மற்றும் வரலாற்றை வளர்க்க, சுயராச்சிய அதிகாரத்தைப் பயன்படுத்த, மாநில மற்றும் மத்திய அரசுகளில் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த, எந்த நேரத்திலும் தங்கள் சொந்த மாநிலத்தை நிறுவவதற்கு இடமளிக்கின்ற போதும் நடைமுறையில் சாத்தியமற்ற நிலைமையே உள்ளது. எதியோப்பியாவின் தேசங்கள், தேசியங்கள் மற்றும் மக்கள் குழுக்கள் அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியலிடப்படவில்லை, அரசியலமைப்பு தேசம், தேசியம் மற்றும் மக்கள் குழு என்ற சொற்களில் எந்த வேறுபாட்டையும் ஏற்படுத்தவில்லை. அங்குள்ள மக்கள் குழுக்கள் அனைத்திற்கும் ஒரே வரையறைகளே பயன்படுத்தப்படுகிறது ஒரு பொதுவான கலாசாரம் அல்லது ஒத்த பழக்கவழக்கங்கள், மொழியின் பரஸ்பர நுண்ணறிவு, பொதுவான அல்லது தொடர்புடைய அடையாளங்களில் நம்பிக்கை, பொதுவான உளவியல் அமைப்பு மற்றும் அடையாளம் காணக்கூடிய, முக்கியமாக தொடர்ச்சியான பிரதேசத்தில் வசிக்கும் மக்கள் குழு உள்ளிட்டவற்றுக்கான விசேட அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. இதனால், 2018 இல், ஒரு புதிய குழு வெகுஜன ஆர்ப்பாட்டத்தின் மூலம் அதிகாரத்தை கைப்பற்றியபோது, முந்தைய அனைத்து முன்னேற்றங்களும் மீண்டும் தலைகீழாக மாறியது. புதிய பிராந்திய மாநிலங்களை உருவாக்க அதிக ஆர்வம் கொண்ட நிலைமையும், வெளிநாட்டு உதவி, புதிய அரசியல் கூட்டணி மற்றும் வெளிநாட்டு தலையீடுகளை நம்பியிருக்கும் நிலைமையும் புதிய வடிவம் பெற்றது. 2020 நவம்பரில் இருந்து, மத்திய அரசு வெளிநாட்டுப் படைகளுடன் இணைந்து தனது சொந்த மக்கள் மீது இனப்படுகொலைப் போரை நடத்திக் கொண்டிருக்கிறது. இந்த நிலைமையானது சமஷ்டி ஆட்சி அமைப்பின் தோல்வியாகும். இத்தோல்வி என்பது அரசின் தோல்வி என்பதே பொருளாகும். எதிரோப்பியாவைப் பொறுத்தவரையில் ஜனநாயக வழிமுறைகள் மூலம் நாட்டை ஒன்றாகக் கட்டியெழுப்புவதற்கான கடைசித் தெரிவாக சமஷ்டி முறையே சிறந்தது என்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உள்நாட்டின் பலதரப்பட்ட குழுக்களுக்கு இடமளிக்கும் ஒருநல்ல பொறிமுறையாக இருக்க முடியும். அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் புதிய முன்னேற்றங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள நெகிழ்வுத் தன்மைகள் உள்ளன, அதாவது அரசியலமைப்பின் இயக்கம் மிகவும் முக்கியமானதாக உள்ளது. எதியோப்பிய சமஷ்டி அமைப்பு முறையானது பன்முகத்தன்மைக்கு இடமளிக்கும் நல்ல நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டது, ஆனால் அது நடைமுறையில் செயற்படுத்தப்படவில்லை. எதியோப்பியா தன்னை சீர்திருத்துவதில் தோல்வியடைந்தது அல்லது சீர்திருத்தம் மற்றும் வளர்ந்து வரும் சவால்களுக்கு ஏற்றவாறு மாற்றியமைக்க மிகவும் தாமதமானது. இதனால், அரசின் தோல்வி தவிர்க்க முடியாததாகி விட்டது. தற்போதைய நிலையில் மத்தியையும், மாநிலத்தையும் பராமரிப்பதற்கான ஒரேவழி, முற்றிலும் சீர்திருத்துவதும் ஒரு புதிய ஒப்பந்தத்தை கொண்டு வருவதுதான். எதியோப்பியாவில் உள்ள ஒவ்வொரு குழு மக்களும், குறிப்பாக மத்திய அரசால் ஏற்கனவே பாதிக்கப்பட்டவர்கள். அத்தகைய தரப்பினருக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்க உத்தரவாதம் அளிக்க வேண்டும். பிராந்தியங்கள் மற்றும் மத்திய அரசு ஆகியவற்றுக்கு இடையிலான ‘சரிபார்ப்புகள் மற்றும் சமப்படுத்தல்கள்’ வழிமுறையை அமைப்பது முக்கியமானதாக உள்ளது. சமஷ்டி அதிகார முறைமையை இழந்த பிராந்திய மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் மீள வழங்குவது உறுதியாக வேண்டியுள்ளது. இதேநேரம் மத்திய அரசாங்கத்தின் தவறுகளுக்கு பொறுப்புக்கூற முடியாது விட்டாலோ அல்லது அச்செயற்பாட்டை எதிர்காலத்திலும் மாற்றுவதற்கு முடியாவிட்டால், மாநிலத்தின் சுய இடையூறுக்கு வழிவகுக்கக் கூடாது. விவாகரத்து முறையே சிறந்தது. அந்த விவாகரத்து முறையானது வன்முறையாக இருக்க வேண்டியதில்லை, அது அமைதியாகவும் இருக்கலாம். https://www.virakesari.lk/article/192707
  15. பட மூலாதாரம்,UCL படக்குறிப்பு, பனியுகம் குறித்த மர்மத்தை கார்வெல்லாக் தீவுகள் அவிழ்க்கலாம் என நம்பப்படுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 7 செப்டெம்பர் 2024, 09:06 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு தீவுக் கூட்டம், பூமியின் மிகப் பெரும் மர்மத்தைக் கட்டவிழ்க்க உதவும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஸ்காட்லாந்தின் மேற்குக் கடற்கரையில் அமைந்துள்ள கார்வெல்லாக் தீவுகள், சுமார் 720 மில்லியன் (72 கோடி ஆண்டுகள்) ஆண்டுகளுக்கு முன்பு பூமி மிகப் பெரிய பனியுகத்தில் நுழைந்தது என்பதற்கான மிகச் சிறந்த சான்றுகளைக் கொண்டுள்ளதாக, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். முதல் விலங்கு இந்தப் பூமியில் தோன்றிய பின்னர், 80 மில்லியன் ஆண்டுகளுக்கு (8 கோடி ஆண்டுகள்) முன்பு கிட்டத்தட்ட முழு உலகையும் இரு தொகுதிகளாக உறைபனி சூழ்ந்திருந்தது. அது பூமியை “பனிப்பந்து” (snowball earth) என அழைக்கக் கூடிய வகையில் இருந்துள்ளது. பாறைகளில் மறைந்திருக்கும் உறைபனி குறித்த தடயங்கள், கார்வெல்லாக் தீவுகளைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் அழிந்துவிட்டன. பூமி நீண்டகாலமாக ஏன் அத்தகைய உச்சகட்ட உறைபனி நிலையை அடைந்தது, சிக்கலான உயிரினங்களின் தோற்றத்திற்கு அந்த நிலை ஏன் முக்கியம் என்பதற்கான விடைகளை இந்தத் தீவுகள் தரும் என ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். பட மூலாதாரம்,SPL படக்குறிப்பு, வரலாற்றிலேயே மிகத் தீவிரமான பனியுகத்தில் பூமி நீண்டகாலத்திற்கு உறைபனியால் சூழப்பட்டிருந்தது பாறையின் அடுக்குகளை வரலாற்றுப் புத்தகத்தின் பக்கங்களாகக் கருதலாம். ஒவ்வோர் அடுக்கும் வெகு காலத்திற்கு முன்பு பூமியின் சூழல் குறித்த விவரங்களைக் கொண்டிருக்கும். பாறை அடுக்குகள் மிகப்பெரும் உறைபனியால் அரித்துச் செல்லப்பட்டதால், பூமி ஒரு பனிப்பந்தாக மாறுவதற்கு வழிவகுத்த முக்கியமான காலகட்டம் குறித்த தகவல்களே இல்லாமல் இருந்தது. திருப்பத்தை ஏற்படுத்திய ஆய்வு லண்டனில் உள்ள யுனிவர்சிட்டி காலேஜின் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட புதிய ஆய்வின்படி, உறைபனி அரிப்பிலிருந்து கார்வெல்லாக் தீவுகள் தப்பித்ததாகத் தெரிய வந்துள்ளது. வரலாற்றில் பூமி எப்படி மிகவும் அழிவுகரமான ஒரு காலகட்டத்திற்குள் நுழைந்தது? நூற்றுக்கணக்கான மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பனிப்பந்து உருகியபோது, முதல் உயிரினம் தோன்றியபோது என்ன நடந்தது என்பதற்கான விரிவான சான்றுகளை பூமியில் கொண்டுள்ள ஒரேயொரு இடமாக கார்வெல்லாக் தீவுக் கூட்டம் இருக்கக்கூடும். கண்டங்கள் காலப்போக்கில் நகர்ந்ததால், ஸ்காட்லாந்து அந்தக் காலகட்டத்தில் முற்றிலும் மாறுபட்ட இடத்தில் இருந்திருக்கும். ஸ்காட்லாந்து பூமியின் பூமத்திய ரேகைக்குத் தெற்கே இருந்தது. மேலும், ஸ்காட்லாந்து உட்பட பூமி முழுவதும் உறைபனியால் சூழப்படுவதற்கு முன்புவரை வெப்பமண்டல காலநிலையைக் கொண்டிருந்தது. “உலகம் முழுவதும் இல்லாத, பனியுகத்தில் நுழைந்த தருணத்தை நாங்கள் ஸ்காட்லாந்தில் கண்டறிந்துள்ளோம்,” என லண்டன் யுனிவர்சிட்டி காலேஜின் பேராசிரியரும் இந்த ஆய்வை வழிநடத்தியவருமான கிரஹாம் ஷீல்ட்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். “கார்வெல்லாக் தீவுகளில் உள்ள பாறைகளின் அடுக்குகளில், உலகின் மற்ற பகுதிகளில் பனிப்பாறை அரிப்பு காரணமாகக் காண முடியாத முக்கியமான பல மில்லியன் ஆண்டுகள் குறித்த தகவல்கள் உள்ளன.” இங்கு முக்கியத் தீவு ஒன்றில் தனியாக அமைக்கப்பட்டுள்ள கட்டடத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் குழு தவிர, ஸ்காட்லாந்தின் இன்னர் ஹெப்ரைடுகள் (தீவுக் கூட்டம்) மக்கள் வாழாத இடமாகும். மேலும், செல்டிக் இனக் குழுவின் 6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மடாலயத்தின் இடிபாடுகளும் அங்குள்ளன. இந்த முக்கியமான கண்டுபிடிப்பை பேராசிரியர் ஷீல்டின் பிஹெச்.டி ஆய்வு மாணவர் எலியாஸ் ரூகென் நிகழ்த்தினார். அவருடைய ஆய்வு முடிவுகள், ஜியோலாஜிக்கல் சொசைட்டி ஆஃப் லண்டன் எனும் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. அந்தப் பாறைகளுடைய அடுக்குகளின் காலத்தை முதன்முதலில் கண்டறிந்து, அவை உலகின் எந்தப் பகுதியிலுள்ள பாறை அடுக்குகளிலும் காணக் கிடைக்காத முக்கியமான காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதை எலியாஸ் முதன்முதலில் கண்டறிந்தார். அறிவியல் உலகில் முக்கிய இடம் அவருடைய கண்டுபிடிப்பால் கார்வெல்லாக் தீவுகளுக்கு அறிவியல் உலகில் முக்கியமான இடம் கிடைக்கவுள்ளது. பூமியையே மாற்றக்கூடிய புவியியல் ரீதியிலான தருணங்களுக்கான முக்கியமான சான்றுகளைக் கொண்டிருப்பதாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் பொருத்தப்படும் பெரிய தங்க ஆணி (golden spike) இங்கு பொருத்தப்பட வாய்ப்புள்ளது. திருடர்களைத் தடுக்கும் விதமாக பொருத்தப்படும் இந்த ஆணி, உண்மையில் தங்கத்தால் ஆனது அல்ல. பட மூலாதாரம்,UCL படக்குறிப்பு, இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்திய எலியாஸ், கேரட்டை வைத்து ஆணி அடிப்பது போன்று செய்கிறார் இதைப் பொருத்துவதற்காக, தன் கண்டுபிடிப்பைக் காட்டுவதற்கு “கிரையோஜெனியன் துணை ஆணைய” உறுப்பினர்களை அவ்விடத்திற்கு எலியாஸ் அழைத்துச் சென்றுள்ளார். அடுத்த கட்டமாக, பரவலான புவியியல் சமூகத்தில் இதற்கு ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது இதைவிட சிறப்பான சான்றுகள் ஏதேனும் இருக்கிறதா என்பதை வெளிப்படுத்த அனுமதிப்பார்கள். ஏதும் இல்லையென்றால், அவ்விடத்தில் தங்க ஆணி அடுத்த ஆண்டு பொருத்தப்படும். இதனால் அவ்விடத்தின் அறிவியல் தரம் உயர்த்தப்பட்டு, ஆய்வுக்கு மேலும் நிதி கிடைக்கும். அப்படி நிகழ்ந்தால், இளம் ஆராய்ச்சியாளராக 60 ஆண்டுகளுக்கு முன்பு இதன் முக்கியத்துவத்தை முதன்முதலாக அடையாளப்படுத்திய டாக்டர் டோனி ஸ்பென்சருக்கு அது மகிழ்ச்சியை ஏற்படுத்தும். “தங்க ஆணியைப் பொருத்துவதற்காகத் தேர்ந்தெடுக்க சுமார் 50 இடங்கள் உள்ளன,” என பிபிசியிடம் தெரிவித்த அவர், “ஆனால் இங்குதான் பாறைகள் தடிமனாகவும், வண்டல் மிகவும் தொடர்ச்சியாகவும் இருக்கும்," என்றார். எனவே "குறிப்பிட்ட பனி யுகத்தின்போது அறியப்பட்ட காலத்தின் ஆரம்பப் புள்ளியை அந்த இடம் பாதுகாத்ததாகத் தெரிகிறது." - இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c8ern3j17w2o
  16. காசா மீது இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட பாரிய தாக்குதல் : 48 மணி நேரத்தில் 61 பேர் பலி பாலஸ்தீன காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்கள் காரணமாக கடந்த 48 மணிநேர இடைவெளியில் குறைந்தது 61 பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் மருத்துவர்கள் இன்று தெரிவித்துள்ளனர் இஸ்ரேலியப் படைகள் ஹமாஸ் தலைமையிலான போராளிகளுடன் போரை ஆம்பித்து பதினொரு மாதங்கள் ஆகியுள்ளன. இராஜதந்திரங்கள் இந்தநிலையில், மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும், காசாவில் உள்ள இஸ்ரேலிய மற்றும் வெளிநாட்டு பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பல பாலஸ்தீனியர்களை விடுவிப்பதற்கும், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் ஈடுபடுவதற்கும், மேற்கொள்ளப்பட்ட இராஜதந்திரங்கள், இதுவரை தோல்வியடைந்துள்ளன. இதற்கிடையில் ஜபாலியா நகர்ப்புற அகதிகள் முகாமில் இடம்பெயர்ந்த மக்களுக்கு தங்குமிடமாகச் செயல்படும் ஹலிமா அல்-சதியா பள்ளி வளாகத்தின் மீது, இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் வளாகத்திற்குள் இருந்த ஹமாஸ் கட்டளை மையத்தை குறிவைத்தே தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. காசா நகரில் உள்ள ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் மேலும் 5 பேர் கொல்லப்பட்டனர். அத்துடன் இன்று இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர். காசா பகுதி முழுவதும் இஸ்ரேலிய இராணுவத் தாக்குதல்களில் இதுவரை 28 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீனிய சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://tamilwin.com/article/israeli-military-strikes-in-gaza-kill-61-48-hours-1725730591
  17. காங்கேசன்துறை துறைமுகத்தை விஸ்தரிப்பதற்கு இந்தியா (India) 65 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளதென இலங்கையின் விமான போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்று (07) நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் நிதியுதவிகள் மேலும், இந்த நிதி வழங்கலுக்கமைய குறித்த துறைமுகம் விரைவில் கப்பல் பயணங்களுக்கு தயாராகி விடும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே, வடக்கில் விமான நிலையம், தீவுகளில் காற்றாலை மின்சாரம் மற்றும் தொடருந்து போக்குவரத்து துறைகளில் இந்தியா நிதியுதவிகளையும் முதலீடுகளையும் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/kankesanturai-port-expanding-by-65-m-indian-fund-1725723887
  18. இந்திய கடற்றொழிலாளர்கள் 14 பேர் கைது இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் மூன்று படகுகளில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட இந்திய கடற்றொழிலாளர்களே இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர். 14 பேர் கைது இவ்வாறு கைது செய்யப்பட்ட 14 இந்திய கடற்றொழிலாளர்களும் கடற்றொழிலிற்கு பயன்படுத்திய 3 படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அவர்கள், யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்பட்டு் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளனர். https://tamilwin.com/article/14-indian-fishermen-arrested-1725717376#google_vignette
  19. 07 SEP, 2024 | 06:22 PM (நா.தனுஜா) நாட்டின் சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்தியத்துக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் எனவும், ஆகவே அநுரகுமார திஸாநாயக்க கூறுவதைப்போன்று சிங்கள மக்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழ் மக்களால் வாக்களிக்கமுடியாது எனவும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், அண்மையில் யாழ்ப்பாணத்தில் மக்கள் கூட்டமொன்றில் உரையாற்றிய தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்: 'நாட்டின் பெரும்பான்மை மக்கள் மாற்றத்தை வேண்டிநிற்கும் இவ்வேளையில் யாழ் மக்களான நீங்கள் மாத்திரம் அதற்கு எதிராக எவ்வாறு செயற்படுவீர்கள்? இலங்கைத் தமிழரசுக்கட்சியின் தீர்மானம் அந்த மாற்றத்துக்கு எதிரான தீர்மானமாக மாறியது ஏன்? யாழ்ப்பாணத்தில் புத்திஜீவிகள், கற்றறிந்தவர்கள் இருக்கிறார்கள். மாற்றத்துக்கு எதிராக யாழ் மக்களை வழிநடத்தும் அரசியலை நீங்கள் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அத்தகைய தீர்மானம் தவறானது என்பதை நீங்கள் உங்கள் மக்களுக்கு எடுத்துக்கூறுங்கள். நாங்கள் வெற்றிபெறுவோம். தெற்கில் இலட்சக்கணக்கான வாக்குகளைப் பெற்று நாம் வெற்றிபெறுவோம். ஆனால் அந்த வெற்றியின், மாற்றத்தின் பங்குதாரர்களாக நீங்களும் இணைந்துகொள்ளுங்கள். மாறாக அந்த மாற்றத்துக்கு எதிரானவர்களாக நீங்கள் மாறிவிடாதீர்கள்.' தென்னிலங்கை சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்களுக்கு விரோதமாக தமிழ் மக்கள் செயற்படக்கூடாது எனும் தொனியில் அமைந்த அநுரகுமார திஸாநாயக்கவின் இக்கருத்து தொடர்பில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர். இதுபற்றிக் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், சிங்கள மக்கள் கடந்த காலங்களில் தமிழர்களை நசுக்கும் சிங்கள ஏகாதிபத்திய ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவே வாக்களித்து வந்திருப்பதாகவும், எனவே சிங்களவர்களுக்கு எது தேவையோ அதற்கேற்றவாறு தமிழர்களால் வாக்களிக்கமுடியாது எனவும், மாறாக எது சரியோ அதற்கே வாக்களிக்கமுடியும் எனவும் தெரிவித்தார். அதேபோன்று தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு குறித்த உத்தரவாதத்தை யாரேனுமொரு வேட்பாளர் வழங்கியிருந்தால் தாம் அதுபற்றிப் பரிசீலித்திருப்போம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை அநுரகுமார திஸாநாயக்கவின் கருத்து தொடர்பில் கண்டனத்தை வெளிப்படுத்தியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான், வடக்கில் மக்கள் முன்பு உரையாற்றுகின்ற அநுரகுமார திஸாநாயக்க, 'தெற்கில் மக்கள் விரும்பும் மாற்றத்துக்கு எதிராக நின்றதாக நீங்கள் அடையாளப்படுத்தப்படுவதை விரும்புகின்றீர்களா?' எனக் கேட்கின்றார். அதாவது அவர்களுக்கு (தேசிய மக்கள் சக்திக்கு) ஆதரவான நிலைப்பாட்டை தமிழ் மக்கள் எதிர்க்கக்கூடாது என்ற எச்சரிக்கையே அதுவாகும். அதுமாத்திரமன்றி சஜித் பிரேமதாஸவை ஆதரிப்பதற்கு இலங்கைத் தமிழரசுக்கட்சி மேற்கொண்ட தீர்மானத்தையும் அவர் கேள்விக்கு உட்படுத்துகின்றார். இவ்வாறான அச்சுறுத்தல்கள் ஜனநாயகத்துக்கு முற்றிலும் விரோதமானவையாகும். ஆகையினாலேயே மக்கள் விடுதலை முன்னணி இன்னமும் மாற்றமடையவில்லை என்று நாம் தொடர்ச்சியாகக் கூறிவருகின்றோம். எனவே இதுகுறித்து நாட்டுமக்கள் விழிப்புடன் செயற்படவேண்டியது அவசியமாகும்' என்று குறிப்பிட்டார். அதேபோன்று 'அநுரகுமார திஸாநாயக்கவின் கூற்றுப்படி தமிழர்களுக்கென எந்தவொரு அரசியல் இலக்குகளும் இல்லை. அவர்கள் தமது அரசியல் கோரிக்கைகளை மறந்துவிட்டு, நீதிக்காகத் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கவேண்டும்' என்று விசனம் வெளியிட்டிருக்கும் சட்டத்தரணியும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான சஞ்சுலா பீற்றர், 'ஏனைய சிங்கள அரசியல் கட்சிகளைப் போலன்றி, தேசிய மக்கள் சக்தி மாறுபட்டது என்று கூறுவதை இனியேனும் நிறுத்துங்கள்' என்று வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/193096
  20. 07 SEP, 2024 | 05:30 PM (நா.தனுஜா) எனது அரசியல் பயணத்தையும் அது சார்ந்த பணிகளையும் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் நான் உறுதியாக இருக்கிறேன் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில், தமிழ் தேசிய பொதுக்கட்டமைப்பினால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் தமிழ் பொது வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதாக அறிவித்திருக்கும் நிலையில், தமிழ் பொதுவேட்பாளர் அரியநேத்திரனை ஆதரிக்கும் நிலைப்பாட்டில் தான் உறுதியாக இருப்பதாக சிறிதரன் அறிவித்துள்ளார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த மாதம் 29ஆம் திகதி லண்டனுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சிறிதரன், அங்கு முதலாவது தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உமா குமரன் உள்ளடங்கலாக பல்வேறு தரப்பினரை சந்தித்து கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். அதன் ஓரங்கமாக இரு தினங்களுக்கு முன்னர் பிரித்தானியவாழ் புலம்பெயர் தமிழர்களின் ஏற்பாட்டில் அங்கு நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய சிறிதரன், 'ஈழத்தமிழர்களை மையப்படுத்திய தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் இனத்தின் இருப்புக்காகவும், இறைமைக்காகவும் அரசியல் பணியாற்றுவதற்காகவே நான் இணைந்துகொண்டேன். எனது அரசியல் பயணத்தையும், அது சார்ந்த பணிகளையும் அதே தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் நின்றுதான் எமது மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதனால் இறுதி வரை அந்தக் கொள்கையில் பிறழ்வற்றுப் பயணிக்கத் தலைப்பட்டுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி அதன் அடிப்படையிலேயே காலத்தின் தேவையுணர்ந்து தமிழ்ப் பொதுவேட்பாளரை ஆதரிக்கும் நிலைப்பாட்டிலும் தான் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/193089
  21. பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 செப்டெம்பர் 2024 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் அரசுப்பள்ளி ஒன்றில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மகாவிஷ்ணுவை அங்கே பேச அழைத்தது யார் என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. இது தொடர்பாக சென்னை அசோக் நகரில் இன்று பிற்பகலில் (07.09.2024) செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சித்ரகலா, “மகாவிஷ்ணு நிகழ்ச்சியை நாங்கள் தான் ஏற்பாடு செய்து கொடுத்தோம் எனச் சொல்கிறார்கள். எங்களுக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆகஸ்ட் 28ஆம் தேதி இப்படி ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என பள்ளியின் தலைமை ஆசிரியரோ அல்லது பள்ளி நிர்வாகமோ எங்களிடம் சொல்லவில்லை. பள்ளிக்கல்வித்துறை சார்பாக எங்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது நாங்கள் அனைவரும் இதைத் தெரிவித்தோம்” என்று கூறினார். மூட நம்பிக்கைகளை ஊக்குவிக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பள்ளி மேலாண்மைக் குழு ஒருபோதும் அனுமதிக்காது என்றும், பள்ளியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவதும், பள்ளி வளர்ச்சிக்கான பணிகளை முன்னெடுப்பதும் தான் பள்ளி மேலாண்மைக் குழுவின் பணி என்றும் அவர் தெரிவித்தார். இந்த விஷயத்தில் என்ன நடந்தது? கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதியன்று சென்னை அசோக் நகரில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய மகாவிஷ்ணு என்பவர் தனது பேச்சில் சர்ச்சைக்குரிய பல கருத்துகளை முன்வைத்தார். இதேபோல சைதாப்பேட்டையில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியிலும் மகாவிஷ்ணு பேச அழைக்கப்பட்டார். அங்கு பேசும்போது, மனிதர்கள் முந்தைய பிறவிகளில் செய்த பாவ - புண்ணியங்களின் அடிப்படையில் இந்தப் பிறவியில் பலன்களை அனுபவிக்கிறார்கள் என்று குறிப்பிட்டார். அவரது இந்தப் பேச்சுக்கு அந்தப் பள்ளியைச் சேர்ந்த தமிழ் ஆசிரியரும், பார்வை சவால் உடைய மாற்றுத் திறனாளியுமான கே.ஷங்கர் என்பவர் அந்தத் தருணத்திலேயே எதிர்ப்புத் தெரிவித்தார். ஆனால், அப்படிக் கேள்வியெழுப்பிய ஆசிரியரிடம் மிகவும் உரத்த குரலில், ‘உங்களுடைய பெயர் என்ன, என்னைப் பேச அனுமதித்த மாவட்ட கல்வி அதிகாரியைவிட நீங்கள் பெரியவரா’ என மகா விஷ்ணு பதிலுக்குக் கேள்வி எழுப்பினார். மேலும், தான் பேசுவது ‘அவருடைய ஈகோவை புண்படுத்தியதால்தான்’ இதுபோல அந்த ஆசிரியர் பேசுவதாகவும் குறிப்பிட்டார். படக்குறிப்பு, அமைச்சர் வருகைக்காகப் பலரும் காத்திருந்தபோது திடீரென அங்கு வந்த எஸ்.எஃப்.ஐ, எய்ட்ஸோ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் பள்ளிக்கு முன்பாகப் போராட்டத்தில் இறங்கினர் பள்ளி முன்பு மாணவர் அமைப்பினர் போராட்டம் இந்த இரு அரசுப் பள்ளிகளிலும் மகாவிஷ்ணு பேசிய பேச்சின் வீடியோ துணுக்குகள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டன. குறிப்பாக, வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 5), பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இதைப் பகிர்ந்து, அரசுப் பள்ளிகளுக்குள் இதுபோல நடக்க அனுமதித்தது ஏன் எனக் கேள்வியெழுப்பினர். மேலும், பல சமுக ஊடகப் பதிவர்கள், மகாவிஷ்ணுவைப் பேச அனுமதித்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் குரல் எழுப்பினர். சமீபத்தில், விநாயகர் சதுர்த்தியை பள்ளிகளில் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் என ஒரு சுற்றறிக்கை வெளியாகி, பள்ளிக் கல்வித் துறை மீது பலத்த விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த விவகாரம் கூடுதல் அனலைக் கிளப்பியது. இதையடுத்து, வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 6) காலையில் அசோக் நகர் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொள்ளும் நிகழ்ச்சி நடக்குமென அறிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்துக் கேள்வியெழுப்ப வெள்ளிக்கிழமை காலையில் அந்தப் பள்ளிக்கு முன்பாக ஊடகங்கள் திரண்டிருந்தன. அமைச்சர் வருகைக்காகப் பலரும் காத்திருந்த போது திடீரென அங்கு வந்த எஸ்.எஃப்.ஐ உள்ளிட்ட மாணவர் அமைப்பினர் பள்ளிக்கு முன்பாகப் போராட்டத்தில் இறங்கினர். சுமார் பத்து மணியளவில் அங்கு வந்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து இரண்டு மூன்று நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப் போவதாக போராட்டக்காரர்களிடம் உறுதியளித்தார். பட மூலாதாரம்,PARAMPORUL FOUNDATION/YT படக்குறிப்பு, கேள்வியெழுப்பிய ஆசிரியரிடம் மிகவும் உரத்த குரலில், ‘உங்களுடைய பெயர் என்ன, என்னைப் பேச அனுமதித்த மாவட்ட கல்வி அதிகாரியைவிட நீங்கள் பெரியவரா’ என மகா விஷ்ணு பதிலுக்குக் கேள்வி எழுப்பினார் அமைச்சரின் வாக்குறுதி, முதல்வரின் அறிக்கை பிறகு நடந்த பள்ளியில் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மகாவிஷ்ணுவிடம் கேள்வியெழுப்பிய தமிழ் ஆசிரியர் கே.ஷங்கருக்குப் பொன்னாடை போர்த்தி அவரைக் கௌரவித்தார். இதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்பில் மகேஷ், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கேள்வி எழுப்பிய ஆசிரியரை அவமானப்படுத்தியது தொடர்பாகப் புகார் அளிக்கப்படும் என்றும் கூறினார். ஆனால், மகாவிஷ்ணு என்ற நபர் எப்படி பள்ளிகளுக்குள் நுழைந்தார் என்ற கேள்விக்குப் பதிலளிக்க யாரும் முன்வரவில்லை. அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.தமிழரசி, மகாவிஷ்ணு பேசியபோது குறுக்கிட்ட தமிழ் ஆசிரியர் கே.சங்கர், ஆகியோர் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டனர். விசாரணை நடத்துவதற்காக வந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மார்ஸ், பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் கண்ணப்பன் ஆகியோரும் ஊடகங்களிடம் பேச மறுத்துவிட்டனர். அமைச்சரிடம் கேட்டபோது, எப்படி இது ஏற்பாடு செய்யப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட” தான் ஆணையிட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். படக்குறிப்பு, செப்டம்பர் 6 காலை அசோக் நகர் பள்ளியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்ட நிகழ்ச்சி நடந்தது பள்ளி தலைமை ஆசிரியர்கள் இடமாற்றம் அசோக் நகர் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்து சென்ற சில நிமிடங்களில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியரான இரா.தமிழரசி, திருவள்ளூர் மாவட்டம் கோவில் பதாகையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்குப் பிறகு, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.சண்முகசுந்தரம் செங்கல்பட்டு மாவட்டம் அணைக்கட்டில் உள்ள மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மகாவிஷ்ணு தரப்பு சொல்வது என்ன? இந்த விவகாரம் குறித்து மகாவிஷ்ணுவின் கருத்தை அறிய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அவரது அமைப்பான பரம்பொருள் ஃபவுண்டேஷனில் கேட்டபோது, "அவர் வெளிநாட்டிற்குச் சென்றிருப்பதால், உடனடியாக இது தொடர்பாக கருத்துகளைத் தெரிவிக்க முடியவில்லை. விரைவில் இந்த விவகாரத்தில் எங்களது கருத்தைத் தெரிவிப்போம்," என்று மட்டும் தெரிவித்தனர். சில மாதங்களுக்கு முன்பாக இதேபோல அரசுப் பள்ளி மாணவர்களிடம், அவர்களது தாய் - தந்தையர் படும் துயரங்கள் குறித்து ஒருவர் பேசுவதும் அதைக் கேட்கும் மாணவர்கள் கதறி அழும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் வெளியாயின. அப்போதும் இதேபோலக் கண்டனம் எழுந்தது. படக்குறிப்பு, அரசுப் பள்ளி நிகழ்ச்சிகளுக்கு யாரை அழைப்பதென்றாலும் முதன்மைக் கல்வி அலுவலரின் அனுமதியைப் பெறவேண்டும் அரசுப் பள்ளிகளில் பேச யாரை அழைக்கலாம்? வரையறை என்ன? தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் பேச யாரை அழைக்கலாம் என்பது குறித்து விதிமுறைகள் ஏதும் உள்ளனவா? "அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியின்றி யாரையும் உள்ளே அனுமதிக்க முடியாது. யாரை அழைப்பதென்றாலும் முதன்மைக் கல்வி அதிகாரியின் அனுமதியைப் பெற வேண்டும். "ஆனால், ஒரு நபர் மாணவர்கள் மத்தியில் பேச மிகத் தகுதியானவர் என பள்ளித் தலைமை ஆசிரியர் கருதினால், விதிவிலக்காக அவரே முடிவெடுக்கலாம். ஆனால், வரும் நபரின் பின்னணி குறித்து முழுமையாக ஆராய வேண்டியது அவரது கடமை. அந்த நிகழ்வுக்கு அவரே பொறுப்பு," என்கிறார் தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளிகள் முதுநிலை பட்டதாரிகள் ஆசிரியர் கழகத்தின் கௌரவத் தலைவர் ஏ.ஆர்.பாலகிருஷ்ணன். மாற்றுத் திறனாளியான கே.ஷங்கரை அவமானப்படுத்தியதாக மாற்றுத் திறனாளிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் மகாவிஷ்ணு மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். படக்குறிப்பு, சென்னை அசோக் நகர் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் வந்து சென்ற சில நிமிடங்களில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார் யார் இந்த மகாவிஷ்ணு? மகாவிஷ்ணு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர். மாணவராக இருந்த நாட்களிலேயே மேடைப் பேச்சில் ஆர்வமுடையவராக இருந்த மகாவிஷ்ணு, தனியார் தொலைக்காட்சி நடத்திய 'அசத்தப் போவது யாரு?' நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் பரவலான அறிமுகத்தைப் பெற்றார். "இந்த (அசத்தப் போவது யாரு?) நிகழ்ச்சியில் கிடைத்த பெயரும் புகழும் அவருக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. பிறகு படங்களை இயக்க விரும்பி, கதைகளை எழுதினார். அதற்குப் பிறகு 'துருவங்கள் பதினாறு' படத்தை கேரளாவில் விநியோகம் செய்தார். "இதற்குப் பிறகு படம் ஒன்றை இயக்கவும் முடிவு செய்தார். "ஆனால், அந்த முயற்சியில் வெற்றி ஏதும் கிடைக்காத நிலையில், தனது குருவான காஞ்சி விஸ்வநாத சுவாமிகள் அருளால் ஆன்மீகப் பாதையை அவர் கண்டடைந்ததாக," அவரது 'பரம்பொருள் ஃபவுண்டேஷனின்' இணையதளம் குறிப்பிடுகிறது. இதற்குப் பிறகு தன்னை ஆன்மீகவாதியாக முன்னிறுத்திக் கொண்ட மகாவிஷ்ணு, திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் 'பரம்பொருள் ஃபவுண்டேஷன்' என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்த அமைப்பின் சார்பில் யோகா நிகழ்ச்சிகள், உரைகள் ஆகியவற்றை நிகழ்த்தி வருகிறார் மகாவிஷ்ணு. https://www.bbc.com/tamil/articles/cqjlxxvxrj1o
  22. மோசமான நிலையிலிருந்த இலங்கையை அரைச் சதங்களுடன் தனஞ்சய, கமிந்து மீட்டனர் 07 SEP, 2024 | 11:02 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிராக லண்டன், கெனிங்டன் கியா ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 3ஆவதும் கடைசியுமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் போட்டியில் மிகவும் மோசமான நிலையில் இருந்த இலங்கையை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் மீட்டெடுத்தனர். போட்டியின் இரண்டாம் நாளான இன்று இங்கிலாந்தின் முதலாவது இன்னிங்ஸில் கடைசி 7 விக்கெட்களை 64 ஓட்டங்களுக்கு வீழ்த்திய இலங்கை, ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. ஆரம்ப வீரர் பெத்தும் நிஸ்ஸன்க திறமையாக துடுப்பெடுத்தாடி 64 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். ஏனைய முன்வரிசை வீரர்களான திமுத் கருணாரட்ன (9), குசல் மெண்டிஸ் (14), ஏஞ்சலோ மெத்யூஸ் (3), தினேஷ் சந்திமால் (0) ஆகியோர் பிராகாசிக்கத் தவறினர். இதன் காரணமாக இலங்கை அணி ஒரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஆனால், அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸ் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 118 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மீட்டெடுத்தனர். தனஞ்சய டி சில்வா 10 பவுண்டறிகள் உட்பட 64 ஓட்டங்களுடனும் கமிந்து மெண்டிஸ் 6 பவுண்டறிகள் உட்பட 54 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் ஒல்லி ஸ்டோன் 28 ஓட்டங்களுக்கு 2 விக்கெடகளையம் அறிமுக வீரர் ஜொஷ் ஹல் 26 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கிறஸ் வோக்ஸ் 41 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். முன்னதாக 3 விக்கெட் இழப்புக்கு 221 ஓட்டங்களிலிருந்து தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 325 ஓட்டங்களைப் பெற்றது. ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 261 ஓட்டங்களைப் பெற்று மிகவும் பலமான நிலையில் இருந்த இங்கிலாந்து, கடைசி 7 விக்கெட்களை 64 மேலதிக ஓட்டங்களுக்கு இழந்தது. முதலாம் நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் 3 விக்கெட்களை மாத்திரம் வீழ்த்திய தமது வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு ஓய்வெடுத்து 2ஆம் நாள் இதனைவிட சிறப்பாக பந்துவீசி போட்டியில் திருப்பத்தை ஏற்படுத்துவார்கள் என முதலாம் நாள் ஆட்டம் முடிவடைந்த பின்னர் இலங்கையின் வேகப்பந்துவீச்சுப் பயிற்றுநர் ஆக்கிப் ஜாவேட் கூறியிருந்தார். அதனை நீரூபிக்கும் வகையில் இலங்கை பயன்படுத்திய நான்கு பந்துவீச்சாளர்களும் 8 விக்கெட்களைப் பகிர்ந்துகொண்டதுடன் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். தனது இன்னிங்ஸை 103 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அணித் தலைவர் ஒல்லி போப் 154 ஒட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். 151 பந்துகளை எதிர்கொண்ட அவர், 19 பவுண்டறிகளையும் 2 சிக்ஸ்களையும் விளாசியிருந்தார். அவரையும் ஆரம்ப வீரர் பென் டக்கெட்டையும் தவிர வேறு எவரும் 20 ஓட்டங்களை எட்டவில்லை. இரண்டாம் நாள் ஆட்டத்தில் தவறான, மோசமான அடி தெரிவுகளால் இங்கிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் விக்கெட்களை இழந்தனர். இங்கிலாந்தின் கடைசி 6 விக்கெட்கள் வெறும் 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன. பந்துவீச்சில் மிலன் ரத்நாயக்க 56 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் விஷ்வா பெர்னாண்டோ 46 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லஹிரு குமார 97 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அசித்த பெர்னாண்டோ 88 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/193098
  23. 07 SEP, 2024 | 04:30 PM இத்தாலியப் பெண் ஒருவரை பலாத்காரமாக காரில் ஏற்ற முயன்ற தேரர் ஒருவர் மீது அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, இத்தாலியப் பெண் நேற்று (06) அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள ருவன்வெலிசாய விகாரைக்கு சென்றுள்ளார். இதன்போது, அங்கிருந்த தேரர் இத்தாலியப் பெண்ணிடம் சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள நிலையில் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்தைப் பெற்றுக்கொண்டு அங்கிருந்த சென்றுள்ளார். பின்னர், சிறுது நேரம் கழித்து தேரர் இத்தாலியப் பெண்ணின் வட்ஸ்அப் இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தன்னை சந்திப்பதற்கு வருமாறு கூறியுள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த இத்தாலியப் பெண் தனது ஹோட்டல் நோக்கி நடந்து சென்று கொண்டிருக்கும் போது காரில் வந்த தேரர் இத்தாலியப் பெண்ணை காரில் ஏறுமாறு வற்புறுத்தியுள்ளார். இதன்போது, இந்த காரின் சாரதியும் காரில் ஏறுமாறு அச்சுறுத்தியநிலையில், இத்தாலிய பெண் அருகில் இருந்த கடை ஒன்றிற்குள் தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட இத்தாலிய பெண் இது தொடர்பில் அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/193088
  24. 07 SEP, 2024 | 04:12 PM (நமது நிருபர்) கனேடிய அரசாங்கத்தினால் வழங்கப்படும் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் முடிசூட்டு பதக்கத்தை இம்முறை கணேசன் சுகுமார் மற்றும் குலா செல்லத்துரை ஆகிய இரு புலம்பெயர் தமிழர்கள் பெற்றுள்ளனர். கனேடிய அரசினால் மொத்தமாக 18 கனேடியர்களுக்கு இந்த உயர் அங்கீகாரம் வழங்கப்பட்டதுடன், அவர்களில் மேற்குறிப்பிட்ட இரண்டு புலம்பெயர் தமிழர்களும் உள்ளடங்குகின்றனர். இந்த முடிசூட்டு பதக்கமானது மன்னர் மூன்றாம் சார்ல்ஸின் முடிசூட்டு விழாவைக் குறிக்கும் விதமாக கனேடிய அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட உயர் பெருமைக்குரிய பதக்கமாகும். கனடாவின் ஆளுநர் நாயகம் மேரி சிமொனினால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த அங்கீகாரம், கனடாவின் வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்களவு பங்களிப்பு வழங்கியவர்களை கௌரவிக்கும் வகையில் அளிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/193085

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.