Everything posted by ஏராளன்
-
எமது நாடு சிறியதாக இருந்தாலும் பல படுகொலைகள் இடம்பெற்றுள்ளன - விஜயதாஸ
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 04:12 PM ஜே.வி.பி இரண்டு முறை ஆயுதம் ஏந்தி போராடியதன் விளைவாக 1971 ஆம் ஆண்டில் 12,000 பேரும், 1988-1989 ஆண்டுகளில் 77,000 பேரும் உயிரிழந்ததாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 30 வருடகால விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தில் சுமார் 70 ஆயிரம் உயிரிழந்துள்ளதாகவும், இந்த நாடு சிறியதாக இருந்தாலும் பலபடுகொலைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கண்டி மாவட்ட நல்லிணக்கக்குழுவிற்கான காரியாலயமொன்றை திறந்துவைக்கும் முகமாக மத்திய மாகாண ஆளுநர் காரியாலயத்தில் நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறான அனர்த்தங்கள் மீண்டும் ஏற்படாத வகையில் கிராம மட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கக் குழுக்களுக்கு ஆதரவு கிடைக்கும் எனவும் இதன் மூலம் கிராமத்திற்கு கிராம அரச அதிகாரம் கிடைக்கும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்துரையாற்றிய விஜயதாச ராஜபக்ஷ, இதுவரையில் செயற்பட்டு வந்த தேசிய நல்லிணக்கம் மற்றும் சீர்திருத்த ஆணைக்குழு கடந்த ஜனவரி மாதம் முதல் பாராளுமன்ற சட்டத்தின் மூலம் சட்டரீதியான அமைப்பாக மாற்றப்பட்டு அதன் செயற்பாடுகள் மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். இந்த நிறுவனத்தினூடாக கிராமத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு கிராமம் வலுவூட்டுவதாகவும், 14016 கிராம சேவைபிரிவுகளிலும் 11000 இற்கும் மேற்பட்ட கிராம சேவைபிரிவுகளில் ஏற்கனவே நல்லிணக்கக் குழுக்களை நிறுவியுள்ள தாகவும் அவர் கூறினார். அண்மைக் காலத்தில் நாடு அரசியல் ரீதியாக திவாலான நிலைக்கு தள்ளப்பட்டும் மேலும் நாடடில் ஏற்பட்டுள்ள வங்குரோத்து நிலையிலும், மறுபுறம் சமூக, பொருளாதார, கலாசார ரீதியிலும் சீரழிந்துள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இந்தப் பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதை விட, இந்த நிலைமை ஏன்? ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து, அது மீண்டும் ஏற்படாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பதே முக்கியமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். நாம் சுதந்திரம் பெற்ற போது இருந்த தேசிய மற்றும் மத உறவுகளை பாதுகாக்க முடியாமல் போனதும், நாட்டில் சட்டத்தின் ஆட்சி கடுமையாக உடைக்கப்பட்டதுமே இதற்கு முக்கிய காரணம் என்றும் அவர் கூறினார். இனம், மதம், குலம் ஆகியவற்றின் அடிப்படையில் மக்கள் பிரிந்தது ஒருபக்கம் இருக்க, மறுபுறம் உடரட்ட பகத்தரட்ட என பிரிவினைகள் வரையறுக்கப்படாவிட்டாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு மக்களைக் பல பிரிவினர்களாகப் பிரித்து இந்தப் பிரிவினைகளை தமது பிழைப்புக்காகப் பயன்படுத்தி வருகின்றனரதாகவும் சுட்டிக்காட்டினார். கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்கக் குழுவிற்கு கிராமம் தொடர்பாக முடிவெடுக்கும் முழு அதிகாரம் வழங்கப்படுவதுடன், கிராமத்தில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலம் நாட்டின் ஐக்கியம் நிலைநாட்டிடப்படுவதுடன் கிராமத்தில் உள்ள அமைதியை விரும்பும் மக்களை ஒன்றிணைத்து கிராமத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்கி புதிய வேலைத்திட்டத்தின் மூலம் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் தேசிய மட்டத்திற்கு இதனை கொண்டு வர அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் வலியுறுத்தினார். மேலும் இந்த விசேட சட் ட யாப்பு, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் செயலாகவும், மேலும் கிராமத்திற்குத் தேவையான அபிவிருத்தித் திட்டங்களை இனிமேல் கிராம மக்களே தீர்மானிப்பார்களே தவிர அரசியல்வாதிகளோ அவர்களின் ஆதரவாளர்களோ அல்ல எனவும் வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே, இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன, சர்வமத பெரியார்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/184705
-
ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடகாலத்திற்கு ஒத்திவைக்கும் யோசனை - வெளியிட்டது ஐக்கியதேசிய கட்சி
28 MAY, 2024 | 03:22 PM ஜனாதிபதி தேர்தலையும் நாடாளுமன்ற தேர்தலையும் இரண்டு வருடங்களிற்கு ஒத்திவைக்கும் யோசனையை, ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்க பண்டார முன்வைத்துள்ளார். அறிக்கையொன்றில் இதனை தெரிவித்துள்ள அவர், தேவைப்பட்டால் இந்த யோசனையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து இது தொடர்பில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்தலாம் என தெரிவித்துள்ளார். இது இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொரு தருணம் என தெரிவித்துள்ள அவர், நாடு பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டது, ஆனால் அதற்கு தீர்வை காண்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இவற்றின் மூலம் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்துள்ளன என தெரிவித்துள்ளார். சர்வதேசத்தின் நம்பிக்கையை நாங்கள் மீளப் பெற்றுள்ளோம். பொருளாதாரநிலையை ஸ்திரப்படுத்தியுள்ளோம். பொதுமக்களிற்கு நிவாரணங்களை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். தற்போதைய ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்த விடயங்களை சாதித்துள்ளோம், எனவும் தெரிவித்துள்ள அவர் நாட்டின் தற்போதைய தேவைகள் ஜனாதிபதி தேர்தல் பொதுத்தேர்தலுடன் தொடர்புபட்டிருக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/184683
-
அரசியல் தீர்வு இல்லாத நல்லிணக்கம் நம்பிக்கை தராது
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 03:21 PM கலாநிதி ஜெகான் பெரேரா போர் முடிவுக்கு வந்திருக்கலாம், ஆனால் அதனுடன் தொடர்புடைய பிரச்சினைகள் முடிவுக்கு வரவில்லை என்பதை போர் முடிவின் பதினைந்தாவது வருட நிறைவு தெளிவாக வெளிக்காட்டியிருக்கிறது. இராணுவ நடவடிக்கையின் களமாக இருந்த வடக்கிற்கும் கிழக்கிற்கும் வெளியே வழமைநிலை உணர்வு இருக்கிறது. போரின் நினைவு அருகிக்கொண்டு போகிறது. இந்த நிலைவரம் அரசாங்கம் மற்றைய பிரச்சினைகளுக்கு மிகவும் குறிப்பாக அதிகப்பெரும்பான்மையான மக்களின் வாழ்வில் இன்னமும் தொடர்ந்து அவலத்தை ஏற்படுத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பொருளாதார வீழ்ச்சி மீது கவனத்தைச் செலுத்துவதற்கு முன்னுரிமை கொடுக்கமுடியும் என்ற நம்பிக்கை ஏற்படுவதற்கு வழிவகுத்திருக்கிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவத்தின் கீழ் அதுவும் அவருக்கு பலம்பொருந்திய மேற்குலக நாடுகளின் தலைவர்களுடன் நெருக்கமான உறவுகள் இருக்கும் சூழ்நிலையில் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடமிருந்து வருகின்ற சர்வதேச நெருக்குதல்களை வெற்றிகொள்ளமுடியும் என்ற நம்பிக்கையும் கூட இருந்தது. ஆனால், இடம்பெற்றிருக்கும் நிகழ்வுகள் சர்வதேச சமூகம் இலங்கை மீது அதன் கவனத்தை தொடர்ந்து செலுத்துகிறது என்பதை வெளிக்காட்டுகிறது. அமெரிக்க வல்லரசுடன் சேர்ந்து வர்த்தக கப்பல் போக்குவரத்தை பாதுகாப்பதற்கு செங்கடலுக்கு கடற்படைக் கப்பல் ஒன்றை அனுப்பியதைப் போன்ற (அரசாங்கம் பயன்படுத்திய) புவிசார் அரசியல் தந்திரோபாயங்கள் சர்வதேச மனித உரிமைகள் மன்றங்களில் பயனைத் தரவில்லை. அரசாங்கத்தின் நோக்கில் இருந்து பார்க்கும்போது நிலைவரம் உண்மையில் மேலும் மோசமாகியிருக்கிறது போன்றே தெரிகிறது. சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் அக்னஸ் கலாமார்ட்டின் இலங்கை விஜயமும் இறுதிப் போர்க்களமான முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் அவரின் பங்கேற்பும் முக்கியமாக கவனிக்கத்தக்கது. இலங்கை விவகாரத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்துவதன் மூலம் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு சர்வதேச சமூகத்திடம் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்குமாறு விடுக்கப்பட்ட அந்த அழைப்பு காசாவிலும் உக்ரேனிலும் மேற்கு நாடுகள் இழந்துவிட்ட தார்மீக நியாயப்பாட்டை தக்கவைப்பதற்கான ஆர்வத்தின் ஒரு அறிகுறியாகும். காசாவிலும் உக்ரேனிலும் மோதல்கள் தொடருகின்ற போதிலும் இலங்கை மீது கவனத்தைச் செலுத்துவதில் ஒரு தளர்வு இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணமாகும். இலங்கை மீதான கவனம் மேலும் தீவிரமடைந்திருக்கிறது போன்றே தோன்றுகிறது. தமிழ் ஈழம் மீது சர்வஜன வாக்கெடுப்பொன்றை நடத்த வேண்டுமென்று கோரிக்கை விடுத்து அமெரிக்க காங்கிரஸில் சமர்ப்பிக்கப்படும் பிரேரணையையும் இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலை என்று கனடிய பிரதமர் வருடாந்தம் வெளியிடுகின்ற அறிக்கையையும் வெறுமனே வெளிநாட்டு அரசியல்வாதிகள் தேர்தல் நோக்கங்களுக்காக முன்னெடுக்கும் தந்திரச்செயல்கள் என்று நிராகரித்துவிடமுடியாது. இந்த அறிக்கைகளும் நிலைப்பாடுகளும் சர்வதேச மன்னிப்பச் சபையின் அறிக்கையில் காணப்பட்டதைப் போன்று கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு பெரிதாகிவிடக்கூடும். இரு முனைகள் இந்த சர்வதேச சவாலுக்கு அரசாங்கம் இரு முனை அணுகுமுறை ஒன்றின் ஊடாக பதிலளிக்கின்றது போன்று தெரிகிறது. சர்வதேச விமர்சகர்களினால் வெளியிடப்படுகின்ற அறிக்கைகளை கடுமையான வார்த்தைப் பிரயோகங்களுடன் கூடிய பதில்கள் மூலம் மறுதலிப்பது ஒரு அணுகுமுறை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை குறைபாடுகளைக் கொண்டது என்றும் பக்கச்சார்பின்மை, சொந்த உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்ட மதிப்பீட்டு தொடர்பிலான அடிப்படைக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்றும் ஜெனீவாவில் உள்ள அதன் தூதுவரூடாக அரசாங்கம் கூறியிருக்கிறது. அரசாங்கம் தொடர்ச்சியாக நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்ற ஒரு நேரத்தில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கிறது என்று இலங்கையின் தூதுவர் கூறியிருக்கிறார். கனடாவின் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்திருக்கும் இலங்கை வெளியுறவு அமைச்சர் பொருத்தமில்லாத வகையில் இலங்கை மீது கனடா செலுத்தும் கவனம் அதன் இரட்டைத் தன்மைக்கு ஒரு தெளிவான உதாரணம் என்றும் உலகின் வேறு பகுதிகளில் தினமும் நிகழும் மனித அவலங்கள் தொடர்பில் வேண்டுமென்றே கனடா கவனத்தைச் செலுத்தாமல் இருக்கிறது என்றும் வெளியுறவு அமைச்சர் குறிப்பிடடிருக்கிறார். இரண்டாவது அணுகுமுறை ஜனாதிபதி விக்கிரமசிங்க தலைமையில் முன்னெடுக்கப்படுகிறது. வடக்கில் உள்ள அரச நிருவாகத்துடனும் சிவில் புத்திஜீவிகளுடனும் தொடர்புகொண்டு செயற்படுவதற்காக அந்த பகுதிக்கு ஜனாதிபதி பல தடவைகள் விஜயம் செய்திருக்கிறார். அண்மைய வெசாக் விடுமுறையின்போது யாழ்ப்பாணத்தில் இரு தினங்களைச் செலவிட்ட அவர் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் சந்தித்துப் பேசினார். பெரியளவினான அபிவிருத்தி நடவடிக்கைகளின் மையமாக வடக்கை மாற்றுவதற்கான அபிவிருத்தி நோக்கு ஒன்றையும் ஜனாதிபதி எடுத்துக்கூறினார். "வடக்கிலும் கிழக்கிலும் மோதலின் விளைவாக தோன்றிய நீண்டகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வைக்காணவேண்டிய அவசியத்தை அங்கீகரித்து பிரதமராக இருந்த வேளையிலும் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்ற வேளையிலும் யாழ்ப்பாணத்துக்கு கிரமமாக விஜயம் செய்வதில் நான் முக்கிய கவனம் எடுத்தேன். அபிவிருத்தியை நோக்கி எமது கவனத்தைத் திருப்பவேண்டிய நேரம் வந்துவிட்டது. இங்குள்ள மக்கள் தொழில் வாய்ப்புக்களுக்காக காத்திருக்கிறார்கள். அபிவிருத்திக்கான ஆற்றலும் வளமும் யாழ்ப்பாணத்தில் பெருமளவில் இருக்கின்றன. அண்மைய வருடங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அபிவிருத்தியையே கண்டிருக்கும் யாழ்ப்பாணம் வளர்ச்சிக்கான பேரளவு ஆற்றல்களைக் கொண்டிருக்கிறது" என்று அவர் கூறியிருக்கிறார். நல்லிணக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டிய தேவை பற்றியும் யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி பேசினார். "முன்னோக்கிச் செல்வதற்கு நல்லிணக்க முயற்சிகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியிருக்கிறது. காணாமல் போனோர் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணவேண்டியிருக்கிறது. இழப்பீடு, உண்மை மற்றும் நல்லிணக்கத்துக்கான பொறிமுறையொன்றை வகுக்கவேண்டியிருக்கிறது. இந்த சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட சகல தரப்புகளினதும் கூட்டு ஒத்துழைப்பும் செயற்பாடும் அவசியமாகிறது. "முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து வடக்கையும் கிழக்கையும் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நான் கலந்துரையாடியிருக்கிறேன் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. ஆனால் நீதி அதிகாரங்கள் குறித்த முக்கியமான பிரச்சினையை நாம் கையாளவேண்டும்" என்று ஜனாதிபதி கூறினார். அதிகாரப்பகிர்வு ஆனால், இத்தகைய முயற்சிகளுக்கு மத்தியிலும், ஜனாதிபதியின் முயற்சிகள் வடக்கு மக்களைச் சென்றடைவதில் இடைவெளி ஒன்று இருக்கிறது. இது முக்கியமாக கவனத்தில் எடுக்கப்பட வேண்டியதாகும். தற்போது செயலிழந்து கிடக்கும் மாகாணசபைகளின் வடிவில் உள்ள அதிகாரப்பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் தொடர்பான பிரச்சினைகளை ஜனாதிபதி கையாளவில்லை என்று வடக்கில் உள்ள ஊடகங்களும் புத்திஜீவிகளும் கூறுகிறார்கள். இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டுமானால் அபிவிருத்தியுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலும் கடந்த கால உரிமை மீறல்களுடன் தொடர்புடைய பிரச்சினைகளையும் மாத்திரமல்ல அதிகாரப் பரவலாக்கத்திலும் கவனம் செலுத்தவேண்டியது முக்கியமானதாகும். பல இனத்தவர்களும் பல மதத்தவர்களும் வாழுகின்ற பன்முக நாடான இலங்கையில் இனத்துவ சமூகங்களுக்கு இடையில் ஒப்புரவான முறையில் அதிகாரங்களை எவ்வாறு பகிர்ந்துகொள்வது என்பதிலேயே இனநெருக்கடியின மூலவேர்கள் இருக்கின்றன என்பதை கூர்மதியுடைய ஒரு அரசியல் மாணவன் என்ற வகையில் ஜனாதிபதி நன்றாக அறிவார். இரு வருடங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்தினால் ஜனாதிபதியாக தெரிவானபோது இந்த பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி துணிச்சலாகப் பேசினார். அரசியலமைப்பின் ஒரு அங்கமாக இருக்கும் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவை குறித்து மாத்திரமல்ல இதுவரையில் வேறு எந்த அரசாங்கமும் நடைமுறைப்படுத்தாத காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை பரவலாக்கம் செய்யும் ஏற்பாடுகள் உட்பட அந்த திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் பேசினார். ஆனால் இப்போது இ்ன்னும் ஐந்து மாதங்களுக்கும் குறைவான காலத்திற்குள் வரவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போடாடிடுவது குறித்து சிந்திக்கும் விக்கிரமசிங்க வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாக்குகளைப் பெறுவதற்கு தான் தங்கியிருக்கும் அரசியல் கட்சிகளின் ஆதரவு தொடர்பில் குறைந்தளவு நம்பிக்கையைக் கொண்டவராகவே அவர் இருக்கிறார். ஆனால் அதிகாரப்பகிர்வு தொடர்பில் மௌனமாக இருந்தால் தமிழ்பேசும் மக்களை பெரும்பான்மையினராகக் கொண்டிருக்கும் வடக்கிலும் கிழக்கிலும் அவருக்கு கிடைக்கக்கூடிய வாக்குகள் ஆபத்துக் குள்ளாகக்கூடும். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விக்கிரமசிங்கவும் பிரதான போட்டியாளர்களாக விளங்கப்போகும் இருவரில் ஒருவரான எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தனது தலைமையிலான எதிர்கால அரசாங்கம் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தும் என்று நேரடியாகவே கூறியிருக்கிறார். கொழும்பில் நடைபெற்ற சமகி ஜன பலவேகயவின் மேதினப் பேரணியில் உரையாற்றிய பிரேமதாச , "வங்குரோத்து அடைந்த எமது நாட்டை பீடித்திருக்கும் பாரதூரமான அரசியல் பிரச்சினைகளுக்கு குறிப்பாக சிங்களவர்கள் அல்லாத சமூகங்களின் பிரச்சானைகளுக்கு நிலைபேறான தீர்வைக் காண்பதற்கு பெரும்பான்மையினரான சிங்கள மக்களின் ஆதரவை நாம் நாடவிருக்கிறோம்" என்று கூறினார். இதில் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதும் உள்ளடங்குகிறது. நாடு உண்மையாகவே நிலைபேறான நல்லிணக்கத்தைக் காணவேண்டும் என்றால் அபிவிருத்தியையும் கடந்த காலத்தையும் கையாளுவதுடன் சேர்த்து அந்த திருத்தத்தை நடைமுறைப்டுத்துவதும் அவசியம் என்றும் பிரேமதாச கூறினார். https://www.virakesari.lk/article/184679
-
யாழில் வைத்தியசாலைக்குள் நுழைந்த மோட்டார் சைக்கிள் : கடமையிலிருந்த உத்தியோகத்தர் மீது தாக்குதல்
Published By: DIGITAL DESK 3 28 MAY, 2024 | 02:10 PM யாழ். போதனா வைத்தியசாலை உத்தியோகஸ்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்த நபரை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்தவர், வைத்தியசாலை வளாகத்தினுள் அத்துமீறி மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்று, தான் ஏற்றி வந்த நபரை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளார். அதன்போது, உத்தியோகஸ்தர் ஒருவர், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவரை, வைத்தியசாலை வளாகத்தினுள் ஏன் அத்துமீறி நுழைந்தீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். அதன்போது, இருவருக்கும் இடையில் தர்க்கம் ஏற்பட்ட போது, உத்தியோகஸ்தர் மீது வைத்தியசாலைக்குள் இருந்த அச்சியந்திரத்தால் ( printer) தாக்குதல் மேற்கொண்டுள்ளார். அதனையடுத்து, அவ்விடத்தில் ஒன்று கூடிய சக உத்தியோகஸ்தர்கள் ஒன்று கூடி தாக்குதல் மேற்கொண்டவரை மடக்கி பிடித்து, யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/184687
-
தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட முடியாது நாட் சம்பளமாக 1380 ரூபாவை மாத்திரமே எம்மால் வழங்க முடியும் - பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம்
Published By: VISHNU 27 MAY, 2024 | 06:31 PM (எம்.மனோசித்ரா) பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்க முடியாவிட்டால், தோட்டங்களை ஒப்படைத்து செல்லுமாறு அரசாங்கத்தால் ஆணையிட முடியாது. அவ்வாறானதொரு நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதற்கெதிராக தாமும் சட்ட நடவடிக்கை எடுக்க தயார் என பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் தெரிவித்தது. அடிப்படை சம்பளத்தில் 200 ரூபா அதிகரிப்புடன், நாட் சம்பளமாக 1380 ரூபாவை மாத்திரமே எம்மால் வழங்க முடியும். இது தொடர்பான முன்மொழிவை நாம் சமர்ப்பித்த போதிலும், அரசாங்கம் அதனை நிராகரித்துள்ளது. இவ்வாறான முட்டாள் தனமான தீர்மானங்களால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாம் முற்றாக அழிந்து போகக் கூடிய அபாயம் காணப்படுவதாகவும் முதலாளிமார் சம்மேளனம் எச்சரிக்கை விடுத்தது. பெருந்தோட்டந் தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் தெளிவுபடுத்தும் வகையில் நேற்று திங்கட்கிழமை கொழும்பு, ரேணுகா சிட்டி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே முதலாளிமார் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் இதனைத் தெரிவித்தனர். ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட முதலாளிமார் சம்மேளனத்தின் தலைவர் சேனக அலவத்தேகம, பொதுச் செயலாளர் லலித் ஒபேசேகர, பேச்சாளர் ரொஷான் இராஜதுறை, கொழும்பு தேயிலை வர்த்தக சங்கத்தின் தலைவர் சஞ்ஜய் ஹேரத், சிரேஷ்ட தேயிலை ஏற்றுமதியாளர் அன்ஸ்லம் பெரேரா, சிறுதோட்ட உரிமையாளர்கள் சங்க தலைவர் ஜகத் பத்திரண உள்ளிட்டோரால் மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. முதலாளிமார் சம்மேளனத்தின் பேச்சாளர் ரொஷான் இராஜதுறை தெரிவிக்கையில், சம்பள உயர்வை வழங்க முடியாது என நாம் கூறவில்லை. ஆனால் உற்பத்தி செலவு மற்றும் வருமானம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டே சம்பள அதிகரிப்பை வழங்க முடியும். அடிப்படை சம்பளத்தை 200 ரூபாவால் அதிகரித்து, நாளாந்த மொத்த சம்பளமாக 1380 ரூபாவை வழங்குவதற்கான யோசனையை முன்வைத்துள்ளோம். எனினும் அரசாங்கமும், பெருந்தோட்ட தொழிற்சங்கங்களும் அந்த யோசனையை நிராகரித்துள்ளன. உற்பத்தி திறன் மற்றும் வருமானத்துடன் இணைக்கப்பட்ட சம்பள மாதிரியை அல்லது தொழிலாளர்களின் கொடுப்பனவுகளை உற்பத்தி திறன் மற்றும் வருமானத்துடன் இணைக்கும் வருவாய் பகிர்வு மாதிரியை நாம் முன்மொழிந்துள்ளோம். அந்த முன்மொழிவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 1992இல் அரசாங்கம் தன்னால் நிர்வகிக்க முடியாத நிலைமையிலேயே தோட்டங்களை கம்பனிகளிடம் குத்தகைக்கு வழங்கியது. இவற்றில் பல பில்லியன்களை கம்பனிகள் முதலீடு செய்துள்ளன. அது மாத்திரமின்றி பங்குகளையும் கொள்வனவு செய்துள்ளன. எனவே தற்போது தோட்டங்களை சிறந்த நிலைமைக்கு கொண்டு வந்ததன் பின்னர் ஒப்படைத்துவிட்டுச் செல்லுமாறு எவ்வாறு கூற முடியும்? அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் நாம் அதனை சட்ட ரீதியாக அணுகுவோம். 1700 ரூபா வழங்க முடியும் என்றால் அரசாங்கத்தின் நிர்வாகத்தின் கீழுள்ள தோட்டங்களில் அதனை செய்து காண்பிக்குமாறு சவால் விடுக்கின்றோம். எம்மால் வழங்கக் கூடிய அதிகபட்ச நாளாந்த சம்பளம் தொடர்பில் இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கவில்லை. முதலாளிமார் சம்மேளனத்தில் அங்கத்துவம் வகிக்கும் பங்குடைமையாளர்களுடன் பேசியே இறுதி தீர்மானம் எடுக்க முடியும் என்றார். சிரேஷ்ட தேயிலை ஏற்றுமதியாளர் அன்ஸ்லம் பெரேரா தெரிவிக்கையில், ஆட்சியாளர்களினால் எடுக்கப்பட்ட தான்தோன்றித்தனமான சில முடிவுகளாலேயே இன்று பெருந்தோட்டங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான முட்டாள்தனமான தீர்மானங்கள் தொடர்ந்தும் அமுல்படுத்தப்படுமானால் எதிர்காலத்தில் 'சிலோன் டி' என்ற நாமம் அழிந்து விடும் அபாயம் காணப்படுகிறது. இது நாட்டின் ஏற்றுமதி பொருளாதாரத்தில் பாரதூரமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார். https://www.virakesari.lk/article/184642
-
இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் உலகின் வலுவான ஜனநாயக நாடுகள் - கொலம்பியா ஜனாதிபதி
28 MAY, 2024 | 10:37 AM உலகின் வலுவான ஜனநாயக நாடுகள் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலையில் காணப்படுகின்றன என கொலம்பியா ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ தெரிவித்துள்ளார். வலுவான ஜனநாயக நாடுகளில் உள்ள வங்கிகள் நிதி அமைப்புகளின் உரிமையாளர்கள் காசாவில் இடம்பெறும் படுகொலைகளை ஆதரிப்பவர்களாக காணப்படுவதால் இந்த ஜனநாயக நாடுகளால் இஸ்ரேலை எதிர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது என அவர் சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ளார். இந்த ஜனநாயக நாடுகளின் செயற்பாடுகள் பாலஸ்தீன மக்களின் இருப்பிற்கு மாத்திரம் ஆபத்தை ஏற்படுத்தவில்லை ஜனநாயகம் மனித குலத்தின் இருப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன என அவர் தெரிவித்துள்ளார். இன்று புவிசார் அரசியலின் அதிகாரம் என்பது வெறுமனே பெரும் பணத்தை சேர்த்தல் மற்றும் போர் விமானங்களை தவிர வேறு ஒன்றில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். காசாவில் இஸ்ரேலின் யுத்தத்திற்கு எதிராக வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து வருபவர் கொலம்பிய ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184665
-
முல்லைத்தீவில் தியோநகர் மீனவர்களினால் தொடர் போராட்டம்
முல்லைத்தீவு, தியோநகர் மீனவர்களின் போராட்டம் தற்காலிகமாக நிறைவு Published By: DIGITAL DESK 7 28 MAY, 2024 | 09:33 AM முல்லைத்தீவு, தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் இணைப்பு வீதியானது சில தரப்பினரால் மறித்து வேலி இடப்பட்ட சம்பவம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை (26) இடம்பெற்றது. முல்லைத்தீவு கரையோரக் கிராமங்களில் ஒன்றான தியோநகர் பகுதியில் பிரதான வீதியினையும், கடற்கரையினையும் இணைக்கும் குறித்த வீதியூடாகவே கிராம மக்கள் மீன்பிடிக்குச்செல்வது வழக்கமானதாகும். இந்நிலையில் திங்கட்கிழமை (27) மீனவர்கள் தொழிலுக்கு செல்லும் வீதியினது வேலி அடைக்கப்பட்டு கற்கள் போடப்பட்டு மூடப்பட்டுள்ளது. அதனையடுத்து மக்கள் கிராம மக்கள் ஒன்று கூடி குறித்த வீதித்தடைகள் வேலிகளை அகற்றியிருந்தனர். குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பகுதியில் சுற்றுலாத்தளம் ஒன்றினை அமைத்துள்ள தனியார் நிறுவனம் ஒன்று தொடர்ச்சியாக அப்பகுதி மீனவர்களுக்கு தொழில் செய்யவிடாமல் தொல்லை கொடுத்து வருவதாகவும், குறித்த கிராம மக்களின் மீன்பிடிப்படகுகள் வலைகளை உள்ளே வைத்தே பாதையினை அடைத்ததாகவும் கரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு சுதந்திரமாக விடுவதில்லை என்றும், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு முறையிட்டும் பயன் கிடைக்கவில்லை என்றும் தமக்கான நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்திருந்தனர். அதனை தொடர்ந்து நேற்று பிரதேச செயலக அதிகாரிகளும், பிரதேச சபை அதிகாரிகளும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்தித்து கலந்துரையாடியதன் அடிப்படையில் விரைவான தீர்வு பெற்றுத்தரப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் இன்றுடன் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்படுவதாகவும் தீர்வு கிடைக்காவிட்டால் இரு வாரங்களின் பின்னர் போராட்டம் மீண்டும் ஆரம்பமாகும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர். குறித்த போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியினை சேர்ந்த பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்டவர்கள் நேரில் சென்று மக்களுடைய பிரச்சினைகளை கேட்டறிந்து கொண்டதுடன் மக்களுடன் இணைந்து தீர்வினை கோரி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/184657
-
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தித்தார்
Published By: VISHNU 27 MAY, 2024 | 10:16 PM இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பானது விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/184648
-
நீங்கள் நிலவுக்குச் சென்றால் அங்கு என்ன சாப்பிட முடியும்? ஆராய்ச்சிகள் சொல்வது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், லாரா ஹால் பதவி, பிபிசி செய்திகள் 27 மே 2024 விண்வெளியில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் முயற்சிக்கு நிலவு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் நாம் அங்கு சென்றால் என்ன சாப்பிட முடியும்? முற்றிலும் செயறகையாகத் தயாரிக்கப்படும் பாஸ்தா, ப்ரோட்டீன் பார்கள் ஆகியவை இதற்கு விடையாக இருக்குமா? விண்வெளியில் ஆதிக்கம் செலுத்துவதற்கான போட்டி வேகம் பெற்று வருகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் மூலம் விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. 15 ஆண்டுகள் சுற்றுவட்டப்பாதையில் நிலைத்திருக்கும் வகையில் கட்டப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) தற்போது 26வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. விரைவில் அதன் இடத்தில் மற்றொரு மையம் அறிமுகப்படுத்தப்படும். விண்வெளியில் உள்ள மற்ற கிரகங்களுக்கு மனிதனை அனுப்ப விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனுடன், ராக்கெட்டுகள் மூலம் பணக்காரர்களை விண்வெளியின் விளிம்புகளுக்கு அழைத்துச் செல்லும் சுற்றுலாத் திட்டங்களும் தொடங்கப்பட்டுள்ளன. விண்வெளியை அடைந்த பிறகு, அங்கு நாம் என்ன சாப்பிடுவது, எப்படி வாழ்வது? "சரியான உணவுதான் விண்வெளி வீரர்களை அறிவாற்றலுடன் செயல்பட வைக்கிறது," என்று ஐரோப்பிய விண்வெளி முகமையின் விண்வெளி வீரர் நடவடிக்கைகளுக்கான துணைத் தலைவர் முனைவர் சோன்யா ப்ரூங்ஸ் கூறினார். "விரிவான விண்வெளிப் பயணங்கள் வெற்றிகரமாக இருக்க, விண்வெளி வீரர்களுக்குப் பல்வேறு ஊட்டச்சத்துகளுடன் கூடிய சரியான உணவை வழங்குவது முக்கியம். மிக முக்கியமான ஒரு விஷயத்தை யாரும் கவனிக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது," என்று அவர் கூறினார். தற்போது, விண்வெளி வீரர்களுக்குச் சிறிய பாக்கெட்டுகளில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. இந்த உணவுகள் சிறப்பு உணவு நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. அதன்படி, தயாரிக்கப்பட்ட உணவுகள் உறைய வைக்கப்பட்டு, நீரிழப்பு செய்யப்படுகின்றன. விண்வெளி வீரர்கள் இந்த உணவை தண்ணீரில் சூடாக்கி அல்லது குளிர்வித்து சாப்பிடுவார்கள். சில சமயங்களில் வீட்டிலிருந்து உணவையும் கொண்டு வருகிறார்கள். (இது கவனமாக தயாரிக்கப்பட்டு நீரிழப்பு செய்யப்படுகிறது) பட மூலாதாரம்,ESA/NASA படக்குறிப்பு,விண்வெளியில் சாக்லேட் மியூஸ் தயாரிப்பது பரிசோதனை செய்த ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானி ஆண்ட்ரியாஸ் மோஜென்சன் விண்வெளிக்கு எடுத்துச் செல்ல முடியாத உணவுப் பொருட்கள் ரொட்டியை விண்வெளிக்கு எடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால், குறைந்த புவியீர்ப்புச் சூழலில் துகள்கள் எளிதில் காற்றில் பறக்கும். அதாவது, அவற்றை உண்பதற்கு பதிலாக நாம் அவற்றின் துகள்களை சுவாசிக்கும் அபாயம் உள்ளது. விண்வெளில் உப்பையும் குறைவாகவே பயன்படுத்த வேண்டும். மனித உடல் விண்வெளியில் சோடியத்தை வித்தியாசமாகச் சேமிக்கிறது. இதனால் எலும்புகள் உடையக்கூடிய அபாயம் உள்ளது. கழிவுநீர் மறுசுழற்சி முறையை பாதிக்கும் ஆல்கஹால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் அனுமதிக்கப்படுவதில்லை. “ஆறு மாதங்கள் விண்வெளியில் இருக்கும் விண்வெளி வீரர்கள் மொறுமொறுப்பான உணவுகளை மெல்லும் உணர்வை இழக்கிறார்கள். அதனால்தான் நீண்ட விண்வெளிப் பயணங்களில் பங்கேற்கும் விண்வெளி வீரர்களுக்கு மனநலமும் முக்கியமானது. அதனால் அவர்களுக்கு பலவிதமான உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும்” என்கிறார் சோன்யா ப்ரூங்ஸ். நாசா 2021-ஆம் ஆண்டில் ‘டீப் ஸ்பேஸ் ஃபுட் சேலஞ்ச்’ என்பதை அறிமுகப்படுத்தியது. இது விண்வெளியில் குறைந்த வளங்களைக் கொண்டு உணவை உருவாக்குவதற்கும் குறைந்த கழிவுகளை உற்பத்தி செய்வதற்கும் புதிய வழிகளைக் கண்டறிவதற்கான திட்டம். அந்த உணவு பாதுகாப்பானதாக மட்டுமல்லாமல், சத்தானதாகவும், சுவையாகவும் இருக்க வேண்டும் என்றும் கோரப்பட்டது. ஹெல்சின்கியை தளமாகக் கொண்ட 'சோலார் ஃபுட்ஸ்' நிறுவனம் இந்தச் சவாலில் உள்ள எட்டு இறுதிப் போட்டியாளர்களில் ஒன்றாகும். இந்த நிறுவனம் விண்வெளிக் கழிவுகளில் இருந்து புரதம் தயாரிக்கும் அற்புதமான யோசனையை கொண்டு வந்தது. "அடிப்படையில், காற்றிலிருந்து உணவை உருவாக்குகிறோம்," என்கிறார் சோலார் ஃபுட்ஸ்-இன் மூத்த துணைத் தலைவர் அர்து லுக்கனென். ஃபின்லாந்தின் கிராமப்புறங்களில், கார்பன் டை ஆக்சைடு, ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் ஆகியவற்றின் கலவையை உட்கொண்டு உயிர்வாழும் நுண்ணுயிரியை அவரது நிறுவனம் அடையாளம் கண்டுள்ளது. இந்த நுண்ணுயிரியை மனிதர்கள் உண்ண முடியும். இந்த நுண்ணூயிரியிலிருந்து புரதம் தயாரிக்கப்படுகிறது. இதை மற்ற பொருட்களுடன் கலக்கலாம். இதைப் பயன்படுத்தி பாஸ்தா மற்றும் புரோட்டீன் பார்கள் போன்ற சத்தான உணவுகளைத் தயாரிக்கலாம். இறைச்சி மற்றும் முட்டைகளுக்கு மாற்றாகவும் இதைப் பயன்படுத்தலாம். "நாங்கள் விண்வெளி உணவைப் பற்றி யோசித்து வருகிறோம். ஏனெனில் விண்வெளியில் வசிப்பவர்களிடம் இரண்டு கழிவு வாயுக்கள் உள்ளன. அவை ஹைட்ரஜன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு,” என்கிறார் லுக்கனென். "அதனால்தான் நாங்கள் விண்வெளியில் உணவின் தொழில்நுட்பத்தைப் பற்றி மட்டுமல்ல, சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை, உயிர்வாழ்வதற்கு அவசியமான அமைப்புகள் பற்றியும் சிந்திக்கிறோம்," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,NASA/AMANDA GRIFFIN படக்குறிப்பு,சூரிய ஒளியும் புவியீர்ப்பு விசையும் முற்றிலும் இல்லாமல் காய்கறிகளை வளர்ப்பதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன செயற்கை மாமிசம் உருவாக்க முடியுமா? இந்த நிறுவனம் தயாரிக்கும் புரதத்தை பேஸ்ட் அல்லது பொடியாக்க முடியும். பாஸ்தா, புரோட்டீன் பார்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த சாக்லேட் தயாரிக்க இது மாவு, மற்ற வழக்கமான உணவுப் பொருட்களுடன் கலக்கப்படலாம். அதை (புரதத் தூள்) எண்ணெய்களுடன் கலந்து மாமிசத்தை (இறைச்சித் துண்டு அல்லது மீன்) உருவாக்கலாமா என்பது ஆராயப்படுகிறது. இதற்கு 3டி பிரிண்டர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. விண்வெளி வீரர்கள் புதிய உணவை விரும்பினால், வைட்டமின் மாத்திரைகள் பயன்பாட்டுக்கு வரலாம், மேலும் சூரிய ஒளியும் புவியீர்ப்பு விசையும் முற்றிலும் இல்லாமல் காய்கறிகளை வளர்ப்பதற்கான சோதனைகளும் நடைபெற்று வருகின்றன. சர்வதேச விண்வெளி நிலையத்தில் வெஜ்ஜி (Veggie) என்ற காய்கறி தோட்டம் உள்ளது. விண்வெளி வீரர்கள் சூரிய வெளிச்சம், புவியீர்ப்பு விசை இல்லாமல் தாவரங்கள் வளர்ப்பது எப்படி என ஆய்வு செய்கின்றனர். புளோரிடாவின் மெரிட் தீவில் உள்ள 'இன்டர்ஸ்டெல்லர் லேப்ஸ்' ஆய்வகம் சிறிய தாவரங்கள், காய்கறிகள், காளான்கள் மற்றும் பூச்சிகளை உற்பத்தி செய்ய ஒரு மாதிரி உயிரியக்க அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் ஆஸ்திரேலியாவின் ‘எனிக்மா ஆஃப் தி காஸ்மோஸ்’ உடன் இணைந்து நாசா டீப் ஸ்பேஸ் ஃபுட் சேலஞ்சில் இறுதிப் போட்டியாளராகவும் உள்ளது. எனிக்மா ஆஃப் தி காஸ்மோஸ் விண்வெளியில் வளரும் சிறிய தாவரங்களை ஆராய்ச்சி செய்து வருகிறது. பட மூலாதாரம்,ESA/NASA படக்குறிப்பு,ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் விண்வெளி வீரர் மத்தியாஸ் மவுரர் தனது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவைக் காட்டுகிறார் விண்வெளியில் எதிர்கால உணவாகத் தோன்றும் பொருட்களின் பட்டியலில் பூஞ்சைகளும் உள்ளன. டீப் ஸ்பேஸ் ஃபுட் சேலஞ்சில் இறுதிப் போட்டிக்கு வந்த ஆறு நிறுவனங்களில் மூன்று நிறுவனங்கள் பூஞ்சைகளை உணவாக உருவாக்க வேலை செய்கிறார்கள். இதில், ஸ்வீடனின் கோதன்பர்க் நகரைச் சேர்ந்த மைகோரேனா என்ற நிறுவனம், நுண்ணிய பாசி மற்றும் பூஞ்சை ஆகியவற்றை இணைத்து மைக்ரோ புரத உற்பத்தி முறையை உருவாக்கி வருகிறது. "பூஞ்சைகள் மிகவும் மாறுபட்டவை," என்கிறார் மைகோரேனா நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையில் பணிபுரியும் கார்லோஸ் ஓட்டேரோ. “இது பல்வேறு பரப்புகளில் வளர்க்கப்படலாம். இது வேகமாக வளரும். விண்வெளியில் உள்ள குழுவினருக்கு போதுமான அளவு உற்பத்தி செய்ய சிறிய வடிவமைப்புடன் ஒரு நேர்த்தியான அமைப்பை உருவாக்கலாம். மிகவும் சக்திவாய்ந்த, ஆரோக்கியமான, கதிரியக்க எதிர்ப்பு கொண்டவையாகவும் இவை இருக்கும். சேமித்து எடுத்துச் செல்வது மிகவும் எளிதானது,” என்றார். சோதனை விண்வெளி உணவு பூமியில் உணவு சுழற்சிக்கு நெருக்கத்தில் உள்ளது. மற்றொரு கூடுதல் நன்மை என்னவென்றால், இந்த உணவில் உள்ள புரதங்களில் மனித உடல் செயல்படத் தேவையான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளன. பட மூலாதாரம்,CLAES BECH POULSEN படக்குறிப்பு,சமையல் கலைஞர் ராஸ்மஸ் மங்க் ஸ்பேஸ் விஐபி என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்துடன் விண்வெளிக்கு செல்ல ஒப்பந்தம் செய்துள்ளார். விண்வெளியில் 'கேட்டரிங்' விண்வெளி பந்தயத்தில் தனியார் நிறுவனங்கள் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகரிப்பதால், தனியார் சமையல் கலைஞர்களுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. கோபன்ஹேகனில் உள்ள அல்கெமிஸ்ட் உணவகத்தில் பணிபுரியும் சமையல் கலைஞர் ராஸ்மஸ் மன்ச், புளோரிடாவைத் தளமாகக் கொண்ட விண்வெளி தொடக்க நிறுவனத்துடன் இணைந்து தனது சிறப்பான உணவை விண்வெளிக்கு எடுத்துச் சென்று அங்கு பரிமாறியுள்ளார். நெப்டியூன் என்ற விண்கலத்தில் ஆறு ஆர்வலர்களுடன் இணைந்து அவர் விண்வெளிக்கு செல்ல உள்ளார். இதற்காக ஸ்பேஸ் விஐபி எனும் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளோம் என்றார். ஆறு மணி நேர பயணத்திற்கு ஒவ்வொருவரிடமிருந்தும் 4,95,000 டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 கோடியே 10 லட்சம்) வசூலிக்கப்படுகிறது. சுற்றுலாப் பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலங்களில் உணவு வழங்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர விரும்பும் பல சமையல் கலைஞர்களில் இவரும் ஒருவர். ஆனால், உலகம் முழுவதும் இந்த விலையுயர்ந்த பயணத்திற்குச் செல்லக்கூடியவர்கள் வெகு சிலரே. விண்வெளி உணவைத் தயாரிப்பதன் முக்கியக் குறிக்கோள் பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் உற்பத்தி செய்வது மட்டுமல்ல, பூமியில் அதை உண்ணக்கூடியதாக மாற்றுவதும் ஆகும். நாசாவின் டீப் ஸ்பேஸ் சேலஞ்ச், வளம் இல்லாத பகுதிகள் மற்றும் தீவிர வானிலை நிலைகளில் பூமியில் கூட அதிநவீன உணவை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "காலநிலை மாற்றம் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உணவு உற்பத்தியில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்கிறார் லுக்கனென். “பூமியில் நாம் பயன்படுத்திய வளங்களிலிருந்து வரும் கழிவுகளில் இருந்து நல்ல விஷயங்களை உருவாக்குகிறோம். இதுதான் பொருளாதார சுழற்சி கோட்பாடு. பூமி மிக உயரமான விண்கலம். நாங்கள் அதில் இருக்கிறோம். இங்கு வளங்கள் குறைவாகவே உள்ளன,'' என்றார். "விண்வெளியிலும் பூமியிலும் உள்ள வளங்களைத் திறமையாகப் பயன்படுத்துவதே எங்கள் நோக்கம்," என்கிறார் மைகோரெனாவின் ஆராய்ச்சித் துறையின் தலைவர் கிறிஸ்டினா கார்ல்சன். “எதிர்காலத்தில் கார்பன் உமிழ்வுகள் இருக்காது, கழிவுகள் இருக்காது. அத்தகைய திட்டத்தை உருவாக்க விண்வெளி சரியான இடம். அது அங்கே சாத்தியம் என்றால், பூமியிலும் சாத்தியம்,” என்றார். நாசாவின் 'டீப் ஸ்பேஸ் உணவு' சவாலின் மூன்றாம் கட்டம் இந்தக் கோடையில் நடைபெறும். இதன் ஒரு பகுதியாக, இந்தத் திட்டங்கள் விண்வெளி போன்ற சூழலில் அவை எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்க்க சோதிக்கப்படும். இந்த நவீன உணவுகள் விண்வெளி வீரர்களின் உணவின் ஒரு பகுதியாக இருக்க முடியுமா? இனி வரும் நாட்களில் பூமியில் நாம் உண்ணும் உணவு இதுதானா என்று அனைவரும் இப்போட்டிகளுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c7228d2enpno
-
பிரிட்டனால் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட தமிழர் உயிரிழப்பு - பிரிட்டனின் உள்துறை அலுவலகம் மீது கடும் குற்றச்சாட்டுகள்
Published By: RAJEEBAN 28 MAY, 2024 | 10:18 AM பிரிட்டனின் உள்துறை அமைச்சினால் இலங்கைக்கு தவறுதலாக நாடு கடத்தப்பட்ட தமிழர் இலங்கையில் உயிரிழந்துள்ள நிலையில் அவர் தனது மீண்டும் குடும்பத்துடன் இணைவதற்கு உள்துறை அமைச்சின் திணைக்களங்களின் தாமதமே காரணம் என அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்;டியுள்ளனர். சுதர்சன் இதயசந்திரன் என்பவர் 2019 டிசம்பர் மாதம் 24ம் திகதிஅவரது திருமணநாள் அன்று பிரிட்டனிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார். போலியான ஆவணங்களை பயன்படுத்தியதையும் டெஸ்கோவில் பணியாற்றியமையையும் ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டார். செவிப்புல திறன் அற்ற தனது மனைவி சுபத்திரா தனது 9 மற்றும் 8 வயது ஆண் பெண் குழந்தைகளை விட்டு விட்டு அவர் பிரிட்டனிலிருந்து வெளியே வேண்டிய நிலையேற்பட்டது. அவரின் மனைவியின் தாயார் சுதர்சன் இதயசந்திரனை குடும்பத்தின் தூண் என வர்ணித்துள்ளார். எனினும் நவம்பர் 2023 ம் ஆண்டு இடம்பெற்ற குடிவரவு தீர்ப்பாயத்தில் நீதிபதி பொனெவெரோ சுதர்சன் இதயசந்திரனின் மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்டதுடன் அவருக்கு குடும்பத்துடன் இணைவதற்கான உரிமை உள்ளது என தெரிவித்தார். சுதர்சன் இதயசந்திரனிற்கு பிரிட்டனில் அவரது குடும்பத்தினருடன் வாழ்வதற்கான உரிமையுள்ளது என நீதிபதிதெரிவித்தார். இந்த தீர்ப்பிற்கு எதிராக பிரிட்டனின் உள்துறை அலுவலகம் முறையீடு செய்யவில்லை எனினும் அவர் மீண்டும் பிரிட்டனிற்கு திரும்புவதற்கான விசாவை வழங்கும் ஏற்பாடுகளை மந்தகதியில் முன்னெடுத்தது. இந்த செயற்பாடுகள் பல மாதங்கள் நீடித்தன. இதன் காரணமாக அவர் இலங்கையில் ஆபத்தான சூழ்நிலைகளில் வசிக்கவேண்டிய நிலைக்குதள்ளப்பட்டார். அவரது குடும்பம் இலங்கை தமிழ் குடும்பம். எம்டிசி சொலிசிட்டர்சனின் நாக கந்தையா உள்துறை அமைச்சின் தாமதங்கள் குறித்த நீதி மறுஆய்வினை முன்னெடுத்ததை தொடர்ந்தே அதிகாரிகள் சுதர்சன் இதயசந்திரனிற்கு மீண்டும் விசா வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஆரம்பித்தனர். அதற்காக மன்னிப்பு கடிதமொன்றையும் வெளியிட்டனர். அந்த கடிதத்தில் தாமதங்களிற்கு அதிகாரிகள் காரணமில்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது. மே 19 ம் திகதி இலங்கையில் இதயசந்திரன் அவர் தங்கயிருந்த இடத்தில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். செப்சிஸ் காரணமாகவே அவர் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். தனது பிள்ளைகளிடமிருந்து பிரிந்து இருந்ததால் அவர் மன உளைச்சலிற்கு ஆளாகியிருந்தார் என தெரிவித்துள்ள அவரது அவர் ஒழுங்காக உணவருந்தவில்லை என குறிப்பிட்டுள்ளனர். அவரது குடும்பத்தினர் இதிலிருந்து எவ்வாறு மீளப்போகின்றனர் என்பது தெரியவில்லை என தெரிவித்துள்ள நாகேந்திரா அவர் இங்கு வசித்தவேளை அவைரையும் பராமரித்தார். அவர் மிகவும் இளகிய மனம் கொண்ட ஆதரவான நபர் அவரது இழப்பை யாராலும் மீளநிரப்ப முடியாது. உள்துறை அமைச்சு அவரை நாடு கடத்தாவிட்டால் அவர் உயிருடன் இருந்திருப்பார் என கருதுகின்றேன் அவரின் மரணத்திற்கு பிரிட்டனின் உள்துறை அமைச்சே காரணம் என குற்றம்சாட்டுகின்றோம் என குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனின் உள்துறை அமைச்சு இதயசந்திரனை மிகவும் நியாயமற்ற விதத்தில் நடத்தியுள்ளது என தெரிவித்துள்ள நாகேந்திரா அவருக்கு சார்பாக தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னரும் அவர் மனமுடைந்தவராக காணப்பட்டார். தனது குடும்பத்துடன் மீள இணைவதற்காக தான் ஏன் காத்திருக்கவேண்டும் என்பதை அவரால் புரிந்துகொள்ள முடியவில்லை எனவும் நாகேந்திரா தெரிவித்துள்ளார். என்ற அமைப்பின் இயக்குநர் லூ கால்வே இந்த மனதிற்கு கடும் வேதனையை ஏற்படுத்தும் விவகாரம் குறித்து தீவிர கேள்விகளை எழுப்பவேண்டும், பிரிட்டனில் வசிப்பதற்கான தெளிவான உரிமை உள்ளபோது ஏன் சுதர்சன் நாடு கடத்தப்பட்டார்? நீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதில் ஏன் உள்துறை அமைச்சு மந்தகதியில் செயற்பட்டது என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184662
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கருத்தை கருத்தால் எதிர்கொள்வோம், பேயால் அல்ல!😜
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எதுக்கண்ணை இவ்வளவு சோகப்பாடல்?! @கிருபன் புள்ளிப்பட்டியல வெள்ளிக்கிழமை தான் போடுவாராம்! பயப்பிடுறாரோ?!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நானும் கம்முனுதான் இருந்தேன் அண்ணை! @ஈழப்பிரியன் இவர் தானுங்கோ சுரண்டினவர்!
- நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்
-
இலங்கையில் கால்பந்தாட்டத்தை முன்னேற்ற லைக்கா ஞானம் அறக்கட்டளை திட்டம் : ஜூலையில் பிரம்மாண்ட போட்டி: 55 நகரங்களிலிருந்து 440 அணிகள்
27 MAY, 2024 | 03:59 PM லைக்கா ஞானம் அறக்கட்டளை இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்துடன் இணைந்து (FFSL) நாட்டின் காற்பந்துதுறையில் ஒரு புதிய மைல்கல்லை அடையும் முயற்சியாக 19 வயதிற்குட்பட்டவர்களுக்கான காற்பந்தாட்டப் போட்டித் தொடர் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தப் போட்டிக்கான அங்குரார்ப்பண நிகழ்வு கொழும்பு, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் திங்கட்கிழமை (27 ) இடம்பெற்றது. நிகழ்வில் லைக்கா குழுமத்தின் ஸ்தாபகத் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான அல்லிராஜா சுபாஸ்கரன், லைக்கா ஹெல்த்தின் தலைவரும் லைக்கா ஞானம் அறக்கட்டளையின் இணை நிறுவுனருமான பிரேமா சுபாஸ்கரன், லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் மற்றும் லைக்கா குழுமத்தின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இவ்விடயம் தொடர்பாக லைக்கா ஞானம் அறக்கட்டளையுடன் இணைந்து இலங்கை காற்பந்தாட்ட சம்மேளனம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “ஆசியப் பிராந்தியத்தில் காற்பந்துத்துறையினை உயர்தரத்தில் வலுப்படுத்தும் நோக்கில் இந்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தொழில்முறை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை இணைத்துக்கொண்டு இளம் வீரர்கள் தேசிய அணியை அடைய தெளிவான பாதையை வழங்குவதை குறித்த செயற்றிட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் நாடளாவிய ரீதியில் 55 நகரங்களில் இருந்து 19 வயதிற்குட்பட்ட 440 அணிகள் பங்கேற்கவுள்ளதுடன், குறித்த சுற்றுப்போட்டியில் முதற்கட்டத்தில் 11,000 வீரர்கள், 2,500 விளையாட்டுக் கழகங்களின் அதிகாரிகள், 1,000க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்கள் பங்குபெறவுள்ளனர். போட்டியின் இறுதிக் கட்டம் 24 மாவட்ட அணிகளில் முடிவடைவதுடன், சிறந்த அணிகள் தங்கள் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, இறுதிக்கிண்ணத்திற்காக மோதவுள்ளன. குறித்த காற்பந்தாட்டச் சுற்றுப் போட்டிகள் எதிர்வரும் ஜூலை மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கவுள்ளதுடன், இதற்கு தேசிய மற்றும் சர்வதேச அனுசரணையாளர்கள் அனுசரணை வழங்குகின்றனர். லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான, அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் 2010 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட லைக்கா ஞானம் அறக்கட்டளையானது இலங்கையின் இளைஞர் யுவதிகளை காற்ப்பந்தாட்டத்துறையில் வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை காற்பந்தாட்டச் சம்மேளனத்துடன் தற்போது கைகோர்த்துள்ளது. இச்செயற்திட்டத்தின் ஊடாக லைக்கா ஞானம் அறக்கட்டளையானது அனைத்து சமூகத்தினருக்கும் காற்பந்து விளையாட்டை நீண்ட காலத்திற்கு ஊக்குவிப்பதற்கு உறுதிபூண்டுள்ளது. லைக்கா ஞானம் அறக்கட்டளையானது, சுகாதாரம், கல்வி, விவசாயம், இளைஞர் வலுவூட்டல், மற்றும் சமூக மேம்பாடு போன்ற முக்கியமான துறைகளில் கவனம் செலுத்தி, அனைத்து மாவட்டங்களிலும் சமூக வளர்ச்சித் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. குறித்த காற்பந்தாட்டச் சுற்றுப்போட்டியினை நடத்துவதற்கு பிரதான பங்காளராக லைக்காவின் ஞானம் அறக்கட்டளை விளங்குவதுடன், ஊடக மற்றும் தனியார் அனுசரணை நிறுவனங்களும் இணைந்து கொண்டுள்ளன” எனக் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லைக்காவின் ஞானம் அறக்கட்டளையானது லைக்கா குழுமத்தின் நிறுவனரும், தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் லைக்கா ஹெல்த்தின் தலைவர் பிரேமா சுபாஸ்கரன் ஆகியோரால் அல்லிராஜா சுபாஸ்கரனின் தாயார் ஞானாம்பிகை அல்லிராஜாவின் பெயரில் 2010 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்தாபிக்கப்பட்டது. சமூகப் பொறுப்புணர்வு மற்றும் உதவி வழங்கல் போன்றவற்றில் உள்ள அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையில் உலகளவில் வறுமைக்கோட்டின் கீழ் உள்ள சமூகங்களுக்கு உதவிக் கரம் நீட்டுவதே லைக்கா ஞானம் அறக்கட்டளையின் பிரதான நோக்கமாகும். (படப்பிடிப்பு எஸ். சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/184617
-
போதையிலிருந்து எதிர்கால சந்ததியை காப்பாற்றக் கோரி வடக்கை சுற்றி இளைஞன் நடைபயணம்
27 MAY, 2024 | 04:06 PM 'போதையில் இருந்து இளம் சந்ததியை காப்பாற்றுவோம்' என்ற தொனிப்பொருளில் வவுனியா சமயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் வட மாகாணத்தை சுற்றி நடைபயணம் ஆரம்பித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் மரத்திலிருந்து கீழே விழுந்து ஒரு வருடங்களாக படுக்கையில் இருந்த ரோஷன் என்கிற இந்த இளைஞர், தற்போது சற்றே உடல்நிலை தேறிய நிலையில் இந்த நடைபயணத்தில் இறங்கியுள்ளார். அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனை மற்றும் அதன் ஊடாக இளைஞர்கள், மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பழக்க வழக்கங்களில் இருந்து எதிர்கால சந்ததியை பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இவர் நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார். வவுனியா நகரின் மத்தியில் உள்ள மணிக்கூட்டு கோபுரத்தில் இருந்து ஆரம்பித்த இந்த நடைபயணம் 3 நாட்கள் வட மாகாணத்தை சுற்றி நடந்து, வவுனியாவில் பயணம் நிறைவுபெறும் என கூறப்படுகிறது. https://www.virakesari.lk/article/184604
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அண்ணை மறந்திட்டியளோ?! சுவியண்ணைக்கு அடுத்தாளாக வந்தனான்!!
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அண்ணை வேணாம் அடுத்த போட்டிக்கு ஆள் தேவை! அதனால அவசரப்படவேணாம்!!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அண்ணை வாறன் வாறன் முடிவு திகதிக்கு முன்னர் கலந்துகொள்கிறேன்.
-
பப்புவா நியூகினி நாட்டில் 670 பேர் மண்ணுக்குள் புதையுண்டதாக ஐநா அதிகாரி தகவல் - என்ன நடந்தது?
பப்புவா நியூ கினியா: நிலச்சரிவில் 2000 பேர் உயிரோடு புதைந்துள்ளனர் - வெளியான அதிர்ச்சி தகவல் பசிபிக் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கு அருகே இருக்கும் தீவு நாடு பப்புவா நியூ கினியா. அங்கு சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கடந்த வெள்ளிக்கிழமை அங்குள்ள எங்கா மாகாணத்தின் காகோலாம் கிராமத்தில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் சேதமடைந்தன. அதிகாலை 3 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பலர் மண்ணில் புதையுண்டனர். இதையடுத்து அங்கு விரைந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பாறைகளும், மரங்களும் குடியிருப்புகள் மீது விழுந்தன. இதனால் உறங்கிக்கொண்டு இருந்த மக்கள் அதில் சிக்கினர். இதனால் 1200க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாகவும், 650-க்கு மேற்பட்டோர் மண்ணில் புதையுண்டனர் என்று முதல்கட்ட தகவல் வெளியானது. இந்நிலையில், பப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதையுண்டதாக அந்நாட்டின் தேசிய பேரிடர் மையம் ஐ.நா.விடம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பப்புவா நியூ கினியா நாட்டிற்கு உதவ தயாராக இருப்பதாக அவுஸ்திரேலியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன. https://thinakkural.lk/article/302547
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
கவுதம் கம்பீர்: 'வேகமும் விவேகமும்' நிறைந்த ஆலோசகரால் கொல்கத்தா அணி ஐபிஎல் சாம்பியன் ஆன கதை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் கம்பீர் 27 மே 2024, 11:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் மே 26 இரவு. சென்னையில் வெப்பநிலை சுமார் 35 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. இறுதிப் போட்டியைக் காண சேப்பாக்கம் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்திருந்தனர். பரபரப்பான சூழல் நிலவியது. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர்கள் அனைவரும் வியர்வையில் நனைந்திருந்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்ணயித்த இலக்கை கொல்கத்தா அணி நெருங்கிக் கொண்டிருந்தது. சுமார் 12 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகத் தெரிந்தது. அவ்வபோது ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் பக்கம் ஊடக கேமராக்கள் திரும்பின. அவரது அணி விளையாடும் போதெல்லாம், கேமராக்கள் மைதானத்தை ஃபோகஸ் செய்வதைப் போலவே காவ்யா மாறனையும் ஃபோகஸ் செய்வது வழக்கம். கொல்கத்தா அணியின் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கவே, காவ்யா கேமராக்களுக்கு பை சொல்லிவிட்டு சிறிது நேரம் போகஸில் இருந்து விலகிச் சென்றார். கொல்கத்தாவின் ரிங்கு சிங் போன்ற பல வீரர்கள் மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தனர். பார்வையாளர்கள் பக்கம் அமர்ந்திருந்த கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாருக் கான் மற்றும் அவரது குடும்பத்தினர் முகத்திலும் மகிழ்ச்சியைப் பார்க்க முடிந்தது. ஆனால் ஒருவர் மட்டும் அமைதியாக இருந்தார். வெற்றி 100% உறுதியான பிறகு சந்தோஷப்பட்டுக் கொள்ளலாம் என்பது போன்று அவர் அமைதியாக அமர்ந்திருந்தார். அவர்தான் கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர். கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் அடித்த ஷாட், ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டு வந்தது. அதுவரை அமைதியாக இருந்த கவுதம் கம்பீர் இப்போது இருக்கையில் இருந்து எழுந்து நின்று வீரர்களைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அடுத்த பந்திலேயே வெங்கடேஷ் அடித்த ஷாட் மூலம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 'ஐ.பி.எல் 2024’ சாம்பியன் ஆனது. கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீரை சுனில் நரைன் கட்டிப்பிடித்து நன்றியுணர்வை வெளிப்படுத்தி உற்சாகத்துடன் அழைத்துச் சென்றார். வாணவேடிக்கைகளால் வானம் ஒளிர்ந்தது. இந்த மகிழ்ச்சியான தருணத்தை கொல்கத்தா அணி இதுவரை மூன்று முறை பெற்றுள்ளது. கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன் ஆனதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி - 'கௌதம் கம்பீர்’. கொல்கத்தா அணி வென்றதும் கவுதம் கம்பீர் தன் சமூக வலைத்தளப் பக்கத்தில், "யாருடைய எண்ணங்களும் செயல்களும் உண்மையாக நேர்மையாக இருக்கின்றனவோ, அவர்களின் தேர், ஸ்ரீ கிருஷ்ணரால் இயக்கப்படும்," என்று பதிவிட்டார். கவுதம் கம்பீரின் வழிகாட்டுதலின் கீழ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஐபிஎல் 2024-இல் சாம்பியன் ஆனது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொல்கத்தா அணியுடன் கெளதம் கம்பீர் கொல்கத்தா அணி, கவுதம் கம்பீர் மற்றும் டீம் இந்தியா கொல்கத்தா முதன் முதலில் 2012-ஆம் ஆண்டு ஐ.பி.எல் சாம்பியன் ஆனது. அப்போது கவுதம் கம்பீர் அந்த அணியின் கேப்டனாக இருந்தார். 2014-ஆம் ஆண்டு கொல்கத்தா இரண்டாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியன் ஆன போதும் கெளதம் தான் கேப்டனாக இருந்தார். தற்போது கொல்கத்தா அணி மூன்றாவது முறையாக ஐ.பி.எல் சாம்பியனாகியுள்ள நிலையில், கவுதம் கம்பீர் ஆலோசகராக உள்ளார். மேலும் கம்பீர் தலைமையில் கொல்கத்தா அணி மூன்று முறை பிளே-ஆஃப் சுற்றுகளை எட்டியது. முன்னதாக, 2022, 2023-ஆம் ஆண்டுகளில் ஒரு ஆலோசகராக, லக்னோ அணியை இறுதிப் போட்டிக்கும் மூன்றாவது இடத்திற்கும் அழைத்துச் சென்ற பெருமை கம்பீரையே சேரும். 2024-ஆம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றதைத் தொடர்ந்து, கவுதம் கம்பீர் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்குப் போட்டியிடலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. ஐ.பி.எல் வெற்றிக்குப் பிறகு, கம்பீரின் கடந்தகால வெற்றிகளையும் ரசிகர்கள் நினைவு கூர்ந்து பகிர்ந்து வருகின்றனர். 2007-இல் நடந்த டி20 உலகக் கோப்பையில் கவுதம் கம்பீர் முக்கியப் பங்கு வகித்தார். இப்போட்டியில் இந்தியா சார்பில் அதிக ரன் குவித்தது கெளதம் கம்பீர் தான். 2011-இல், பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி உலக சாம்பியனான போதும், அப்போட்டியில் கம்பீரின் பங்களிப்பு பெரிய அளவில் இருந்தது. 2011 சர்வதேச ஒருநாள் உலகக் கோப்பையில் (ODI) கம்பீர், 9 போட்டிகளில் 9 இன்னிங்ஸ்களில் 43.66 சராசரி மற்றும் 85.06 ஸ்டிரைக் ரேட்டில் 393 ரன்கள் எடுத்தார். இதில் 4 அரை சதங்களும் அடங்கும். முதல் ஓவரில் இருந்து 42-வது ஓவர் வரை நின்று ஆடிய கம்பீர், 97 ரன்கள் எடுத்து அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இருப்பினும், சிலர் இந்த வெற்றிக்கு கேப்டன் மகேந்திர சிங் தோனியை காரணம் காட்டியதும், கம்பீர் வெளிப்படையாக தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2012ல் கம்பீர் மற்றும் ஷாருக் கான் கொல்கத்தா அணிக்குத் திரும்பிய கம்பீர் கம்பீர் 2023-ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு ஆலோசகராக மீண்டும் கொல்கத்தா அணிக்குத் திரும்பினார். கம்பீர் மீண்டும் கொல்கத்தா அணிக்கு திரும்பியதால், அதில் பல்வேறு மாற்றங்களை செய்வார் என்று கருதப்பட்டது. கம்பீரின் உத்தி என்னவெனில், பில் சால்ட்டுடன் இணைந்து சுனில் நரைனை ஆரம்ப இன்னிங்ஸ் விளையாடச் செய்வது தான். இந்த உத்தி அந்த அணிக்குப் பெரிதும் பயனளித்தது. அணி 8 முறை 200-க்கு மேல் ரன் குவித்தது. ஒரு அலோசகராக, ஆலோசகராக கம்பீரின் அணுகுமுறையை அணி வீரர் நிதிஷ் ராணாவின் வார்த்தைகளிலிருந்து புரிந்து கொள்ள முடியும். நிதிஷ் ராணா கூறுகையில், “கௌதம் கம்பீர் எங்கள் அலோசகராக முடிவு செய்தபோது, அவருக்கு நீண்ட குறுஞ்செய்தி அனுப்பி என் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினேன். அதற்கு கம்பீர் அளித்த பதில் என்னை ஊக்கப்படுத்தியது. 'நம் அணி மேடையில் நின்று கோப்பையை உயர்த்தும்போது தான் உண்மையில் எனக்கு மகிழ்ச்சியான தருணம்’ என்று கம்பீர் சொன்னார். கம்பீரின் இந்த வார்த்தைகள் என்றைக்கும் என் மனதில் நிற்கும்,” என்றார். கவுதம் கம்பீரின் வியூகத்தைப் பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் பின்னோக்கிச் செல்ல வேண்டும். டிசம்பர் 2023. ஐ.பி.எல் வீரர்களின் ஏலம் நடந்த சமயம். அந்த நிகழ்வின் போது மேசையில் கௌதம் கம்பீர் அமர்ந்திருந்தார். அப்போது ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24 கோடியே 75 லட்சத்துக்கு கொல்கத்தா வாங்கியது. ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணி இவ்வளவு விலை கொடுத்து ஒரு வீரரை வாங்கியது இதுவே முதல் முறை. இந்த முடிவு குறித்து அந்த சமயத்தில் சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால் தற்போது அந்த முடிவு சரி என்பது போல், கொல்கத்தா சாம்பியன் ஆனதற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சமூக வலைதளங்களில், மிட்செல் ஸ்டார்க்கை தேர்வு செய்ததற்காக கவுதம் கம்பீருக்கு மக்கள் தற்போது நன்றி தெரிவித்து வருகின்றனர். சிலர் ஸ்டார்க்கின் படத்தை வைத்து மீம்ஸ் ஆக பகிர்ந்து வருகின்றனர். 24 கோடி ரூபாய் வீணாகி விட்டது என்று யாரெல்லாம் சொன்னீர்கள்? என்று கேள்வி எழுப்புவது போன்று மீம்ஸ் பகிரப்படுகிறது. ஸ்டார்க் மீதான இந்த அன்புக்கு காரணம் - பந்துவீச்சில் மூன்று ஓவர்களில் 14 ரன்கள் மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தத் தொடரில் ஸ்டார்க் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றி பெற்றார். இந்த ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி 14 ஆட்டங்களில் விளையாடியது. ஒன்பது வெற்றி, மூன்றில் தோல்வி. 20 புள்ளிகளுடன் கொல்கத்தா சாம்பியன் ஆனது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் கம்பீர் மற்றும் ஷாருக்கான் கொல்கத்தா அணியும் கெளதம் கம்பீரும் வெற்றிகளை வசப்படுத்தும் கௌதம் கம்பீரிடம் மந்திரக்கோல் எல்லாம் எதுவும் இல்லை ஆனால் அவர் வகுக்கும் வியூகம் மிக முக்கியமானது. கொல்கத்தா அணியின் கேப்டனாக இருந்த ஏழு சீசனிலும் கம்பீரின் தலைமைத்துவத்தை ரசிகர்கள் பார்த்திருக்கிறார்கள். ஸ்போர்ட்ஸ் ஸ்டார் இதழ் தனது கட்டுரையில் "கொல்கத்தா அணி சில கடினமான சூழ்நிலைகளையும் எதிர்கொண்டது. ஆனால் கவுதம் அதற்கான தீர்வுகளை கண்டறிந்து செயல்படுத்தினார். கவுதம் கம்பீர் என்னும் மனிதர் அருகில் இருந்தால் ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும் என்று அணியின் நிர்வாகத்திற்கும் வீரர்களுக்கும் தெரியும். பயிற்சி முகாம்களின் போது, சுனில் நரைன் மற்றும் ஆண்ட்ரூ ரசல் முக்கியத்துவம் பெறுவதை கம்பீர் உறுதி செய்தார். இதன் விளைவாக, போட்டியில் சுனில் 488 ரன்கள் குவித்து வெற்றி பெற்றார்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் வெற்றியில் அணியின் நிர்வாகமும் முக்கிய பங்கு வகித்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸின் தாயார் ஆப்கானில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சூழலில், அவர் இந்தியாவில் கொல்கத்தா அணிக்காக விளையாடுவது அணி மீதான அவரது அன்பைக் காட்டுகிறது. அணியை நிர்வகிப்பவர்கள் வீரர்களிடம் நடந்து கொள்ளும் விதம் தான் இந்த அன்புக்கு காரணம். ரஹ்மானுல்லா குர்பாஸ் பேசுகையில், “உங்களுக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போன்ற நிர்வாகம் அமைந்தால் கவலைப்படத் தேவையில்லை, ஏனென்றால் கவுதம் சார், ஷாருக் சார், தலைமைப் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் வீரர்களை குடும்பம் போன்று நடத்துவார்கள்," என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கம்பீர் 2023 இல் லக்னோவின் ஆலோசகராக இருந்த சமயத்தில் கோலியுடன் களத்தில் வாக்குவாதம் ஏற்பட்டது கம்பீரின் பிம்பம் கவுதம் கம்பீர் எப்போதும் ஆக்ரோஷமாகவும் கோபமாகவும் இருப்பதாக ஒரு பிம்பம் இருக்கும். கம்பீர் மட்டும் இல்லை, பல வீரர்கள் மீது இந்த விமர்சனம் வைக்கப்படுவது வழக்கம். மைதானத்தில் விராட் கோலியுடன் கம்பீர் வாக்குவாதம் செய்ததை ரசிகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை. இந்த ஐ.பி.எல் போட்டியிலும் அப்படி ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டது, ஆனால் இரு வீரர்களும் ஒருவரை ஒருவர் சந்தித்து சிரித்து கொண்டனர். 'களத்திற்கு வெளியே நண்பர்கள்' என்று கம்பீர் சொல்வது வழக்கம். இந்தக் கூற்றை தனது கிரிக்கெட் வாழ்நாளில் செயல்படுத்தியும் காட்டியிருக்கிறார். இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஷ்வின் தனது யூடியூப் சேனலில் கம்பீரை நேர்காணல் செய்திருந்தார். அதில் "கவுதம் கம்பீர் பற்றி தவறான புரிதல் உள்ளது. ஆனால் அவர் அப்படி இல்லை,” என்று அஷ்வின் கூறினார். இந்தக் காணொளியில் கௌதம் கம்பீர், "என்னால் முடிந்தவரை ஆக்ரோஷமாக இருக்க விரும்புகிறேன்," என்று கூறியிருந்தார். "இதில் என்ன தவறு? இது என் இயல்பு. என்னைப் பொறுத்தவரையில் வெற்றி பெறுவது ஒரு ஆசை. நான் வெற்றி பெற வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறேன்," என்றார். இதே நிகழ்ச்சியில் கம்பீர், "நான் பேசும் போது சிரிப்பதில்லை என்று பலர் சொல்வார்கள். என் முகத்தில் எப்போதும் விளையாட்டு தொடர்பான பதற்றம் இருக்கும். மக்கள் நான் சிரிப்பதைப் பார்ப்பதற்காக வருவதில்லை. நாங்கள் வெற்றி பெறுவதைப் பார்க்கவே வருகிறார்கள். என்னால் இதை மாற்றிக் கொள்ள முடியாது. நான் பாலிவுட் நடிகர் இல்லை. நான் ஒரு கிரிக்கெட் வீரர்,” என்றார். கொல்கத்தா அணிக்கு கம்பீர் கேப்டனாக இருந்தபோது விளையாடிய வீரர் பியூஷ் சாவ்லா கூறுகையில், "நல்ல சூழல் இருந்தால், எந்த வீரரை வைத்தும் சிறந்த முடிவுகளைப் பெற முடியும் என்பதை கம்பீர் அறிவார். அவர் கிரிக்கெட்டை மிகவும் அழகாகப் படித்து வைத்திருக்கிறார்,” என்றார். 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் செய்தியில், முன்னாள் கே.கே.ஆர் வீரர் மன்விந்தர் பிஸ்லா, "கவுதம் கம்பீர் தனது அணியின் வீரருக்காக நெஞ்சில் புல்லட்டையும் சுமப்பார்," என்று புகழ்ந்திருக்கிறார். பட மூலாதாரம்,ANI கம்பீர் கொல்கத்தாவில் நீடிப்பாரா? ஐ.பி.எல்-லில் கொல்கத்தாவை சாம்பியன் ஆக்கிய ஆலோசகரான கௌதம் கம்பீர் அந்த அணியில் நீடிப்பாரா என்பதுதான் தற்போதைய கேள்வி. 'இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அவர் பொறுப்பேற்க முடியுமா?' என்ற யூகங்களும் உள்ளன. முன்னாள் கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாஃபர் ESPN Cric Info நிகழ்ச்சியில் பேசுகையில், "எனது பார்வையில், கம்பீர் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்பார். ஐ.பி.எல் வெற்றி இதனை உறுதி செய்துள்ளது,” என்றார். அதே நிகழ்ச்சியில், டாம் மூடி, "முதலில் கொல்கத்தா அணியில் ஒரு ஆலோசகராக தனது இன்னிங்ஸை வெற்றிகரமாக முடிக்க வேண்டும் என்று கம்பீர் நினைத்திருக்க கூடும். டீம் இந்தியாவின் பயிற்சியாளராக வருவதைப் பற்றி பின்னர் யோசிக்கலாம் என்று இருக்கிறார் போலும், ஏனென்றால் அது ஒரு பெரிய பொறுப்பு,” என்றார். இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதில் கவுதம் கம்பீர் எந்தளவுக்கு கவனமாக இருக்கிறார் என்ற கேள்விக்கான பதில் விரைவில் தெரியவரும். https://www.bbc.com/tamil/articles/ce44j9e2980o
-
எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன்
நவநாஜிய பாணியிலே பல அரசாங்க துறைகள் இணைந்து பலம் பொருந்தியவர்களுடன் சேர்ந்து எங்கள் இருப்புகளை, குடித்தொகையை மாற்றியமைக்க முயல்கின்றனர் - பேராசிரியர் பத்மநாதன் Published By: RAJEEBAN 27 MAY, 2024 | 06:02 PM நவநாஜிய பாணியிலே பல அரசாங்க துறைகள் இணைந்து பலம் பொருந்தியவர்கள், செல்வாக்கு பொருந்தியவர்களுடன் இணைந்து அவர்கள் எங்கள் இருப்புகளை குடித்தொகையை மாற்றியமைப்பதற்கும் முயல்கின்றனர் என தெரிவித்துள்ள பேராசிரியர் பத்மநாதன் மீண்டும் எங்களின் தேசிய உரிமையை எழுச்சியை வளர்க்கவேண்டும் என தெரிவித்துள்ளார். பேராசிரியர் பத்மநாதனின் 'ஒரு மறைந்துபோன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ் சங்கத்தில் இடம்பெற்றவேளை ஆற்றிய உரையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அத்தோடு அவர், "நாங்கள் மீண்டும் பாராளுமன்ற ரீதியாகவும் வெளிப்புறமாகவும் எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும். ஒன்று மட்டும் சொல்கின்றேன்... தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது. மற்றவற்றை இறைமை அதிகாரம், சுயநிர்ணய உரிமை இவற்றைதான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் பேச்சுவார்த்தை மூலம் அவசியம்" எனவும் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது உரையின்போது மேலும் கூறுகையில், "தமிழ் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமான மொழிவழக்கும் இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது. இலங்கை தமிழர்களினதும் சிங்களவர்களினதும் முன்னோர்கள் நாகர்களின் வழிமுறை சந்ததியினரே. 19ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் சிங்கள தலைவர்கள், படித்தவர்கள், ஸ்டேட் கவுன்சிலில் இருந்தவர்கள், பக்குவமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள், தமிழர்கள் ஒரு தேசிய இனம் நாட்டில் ஒரு சமஸ்டி முறையிலான ஆட்சி அமையவேண்டும் என்றார்கள். நாங்கள் என்ன செய்தோம் எட்டியும் பார்க்கவில்லை. இப்போது என்ன சொல்கின்றோம்... ஒஸ்லோ பிரகடனத்தில் எழுதப்பட்டுள்ளது என்கின்றோம். இதனை நான் அவருக்கு பிரச்சாரமாக சொல்லவில்லை... உண்மையை சொல்லவேண்டும். எங்கள் பிரதிநிதிகள் பௌத்த விகாராதிபதியொருவருக்கு ஆயிரம் ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளமை பற்றி ஜனாதிபதியிடம் முறையிட்டவேளை அவர் அந்த திணைக்கள தலைவருக்கு சொன்னார், எனக்கு நீர் இந்த வரலாறு படிப்பிக்க தேவையில்லை, புராதன காலத்தில் வடகிழக்கில் உள்ள பௌத்த நிறுவனங்களின் நிலங்கள் எல்லாம் தமிழருக்கு சொந்தமானவை. அந்தளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இனவாதிகளை பற்றி நான் சொல்லவில்லை. இவர் இனவாதம் பேசாதவர். ஆனால், சில விடயங்களை செய்வதற்கு துணிச்சல் அற்றவர்; ஆற்றல் அற்றவர். எங்களுடைய கோமாளித்தனம் தொடர்ந்து வந்ததனால் எங்கள் இருப்பிற்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்திய இலங்கை உடன்படிக்கையில் சொல்லப்பட்டவற்றை மீறிவிட்டனர், ஜனாதிபதியை கேளாமல் நீதிமன்றத்தை நிராகரித்தும் அவர்கள் பல விடயங்களை செய்கின்றார்கள். எங்கட ஆட்கள் 15 இலட்சம் பேர்தான் இருக்கின்றார்கள். ஆனால் இருப்பது 17 கட்சி மலையகத்தில் உள்ள கட்சிகளுடன் சேர்த்தால் 24 கட்சி. எங்கே போகப்போகின்றோம்! நாங்கள் தற்போது என்ன செய்யவேண்டும் என்றால், இவற்றை பாதுகாப்பதற்கு என்னென்ன நிறுவனங்கள் உள்ளனவோ தற்போதைய அரசமைப்பின்படி என்னென்ன நிறுவனங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அவற்றை பயன்படுத்தி இயக்கவேண்டும். அவற்றின் மூலம் இந்த ஆவணங்களை தேடவேண்டும், தேடி பாதுகாக்க வேண்டும், அருங்காட்சியகங்களை அமைக்கவேண்டும், காட்சிப்படுத்த வேண்டும், இவ்வாறான நூல்களை எல்லாம் மக்களுக்கு வழங்கி விளங்கப்படுத்தி மீண்டும் எங்களின் தேசிய உரிமையை, எழுச்சியை வளர்க்கவேண்டும். தேசிய உணர்ச்சி எனும்போது நான் அரசியல் பேசுகின்றேன் என எவரும் சொல்லக்கூடாது. சர்வதேச ரீதியாகவும் சிங்கள மன்னர்களின் ஆட்சி வழக்கின்படியும் தமிழ் மக்கள் அவர்களின் அரசுகள், பிராந்தியங்கள் தனித்துவமானவை. அரசுரிமையில் இறைமையில் பங்குள்ளவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம். இது பற்றி எங்களுடைய துறையில் உள்ளவர்கள்தான் அடக்கி வாசிக்கின்றார்கள். உள்ளதை சொல்வதற்கு பயப்படக்கூடாது. நாங்கள் மீண்டும் பாராளுமன்ற ரீதியாகவும் வெளிப்புறமாகவும் எங்களுடைய உரிமைகளை நிலைநாட்டவேண்டும். ஒன்று மட்டும் சொல்கின்றேன்... தமிழ் ஈழம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது. மற்றவற்றை இறைமை அதிகாரம், சுயநிர்ணய உரிமை இவற்றைதான் பெற்றுக்கொள்ள முடியும். அதுவும் பேச்சுவார்த்தை மூலம் அவசியம். ஏனென்றால், நிலைமை ஒன்றும் நடக்காவிட்டால் 22ஆம் ஆண்டை பற்றித்தான் சிந்திக்கவேண்டும்" என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/184634
-
ரெமல் புயல் ; பங்களாதேஷ், இந்தியாவில் பலத்த மழையினால் 10 இலட்சம் பேர் இடம்பெயர்வு
Published By: DIGITAL DESK 3 27 MAY, 2024 | 04:27 PM ரெமல் புயல் ஞாயிற்றுக்கிழமை (26) இரவு கரையைக் கடந்ததை அடுத்து, இந்தியா, பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீசியதுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக மண்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதத்தை ஏற்பட்டுள்ளது. புயல் தாக்கத்திற்கு முன் ஆயத்தமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிலும் 10 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். ரெமல் புயல் மணிக்கு 135 கிலோமீட்டர் வேகத்தில் புயல் சீறியதாக இந்தியாவின் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கோல்கத்தா நகரில் புயலின் வேகம் உச்சத்தில் இருந்தபோது பெரிய கொங்கிரிட் துண்டுகள் விழுந்ததில் ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார். ரெமல் புயல் 89 மில்லி மீற்றர் (3.5 அங்குலம்) மழையை பொழியும் மற்றும் வங்காள விரிகுடாவின் கடல் அலையானது 2.5 முதல் 3.7 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பங்களாதேஷில் புயல் காற்றினால் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். மணிக்கு 120 கிலோ மீட்டர்வேகத்தில் காற்று வீசியதால், மரங்களும் மின் கம்பங்களும் விழுந்ததில் சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் பேர் மின்சாரம் இல்லாமல் அவதிக்குள்ளாகியுள்ளனர். பங்களாதேஷில் உள்ள மோங்லா மற்றும் பேரா கடல்சார் துறைமுகங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பங்களாதேஷில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 20 இலட்சம் மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் குறைந்தது அரை இலட்சம் மக்கள் "களிமண், மரம், பிளாஸ்டிக், வைக்கோல் அல்லது தகரம் போன்ற பொருட்களால் செய்யப்பட்ட வீடுகளில் வாழ்கின்றனர் என இலாப நோக்கற்ற BRAC அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் பருவழைக் காலத்தில் உருவான முதல் புயலாக ரமெல் உள்ளது. புயலுக்கு ஓமன் நாடு 'ரமெல்' என பெயரிட்டுள்ளது. இதற்கு அராபிய மொழியில் மண் என்று அர்த்தமாகும். ஜூன் மாதத்தில் தொடங்கும் தென்மேற்குப் பருவமழை செப்டம்பர் வரை நீடிப்பது வழக்கம். https://www.virakesari.lk/article/184619
-
எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன்
எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்தும் தென்னிலங்கை அரசியலுக்கு தெளிவான பதில் பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் நூல் - பேராசிரியர் சர்வேஸ்வரன் Published By: RAJEEBAN 27 MAY, 2024 | 04:15 PM தமிழ் மக்களின் இருப்பை மறுக்கும் இலங்கையில் தமிழின் தொன்மையை சைவசமயத்தின் தொன்மையை மறுக்கும் தென்னிலங்கை அரசியலுக்கு வலுவான உறுதியான பதிலை ஆதாரங்களுடன் வழங்கும் விதத்தில் பேராசிரியர் பத்மநாதன்; ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதிகால யாழ்ப்பாணம் என்ற நூலை எழுதியுள்ளார் என கொழும்பு பல்கலைகழக சட்டபீட பேராசிரியர் அ.சர்வேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம் நூல் வெளியிடும் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அடித்தளமிட்டவர்கள் நாகர்கள் அவர்கள் தமிழ்மொழியில் பேசினார்கள் என்பதை பேராசிரியர் பத்மநாதனின் ஒரு மறைந்து போன நாகரீகத்தின் தரிசனம் - ஆதி கால யாழ்ப்பாணம் நூல் உரிய ஆதாரங்களுடன் உறுதிப்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார். பேராசிரியரின் இந்த நூலை ஆங்கிலத்திலும் கட்டாயமாக சிங்களத்திலும் மொழிபெயர்க்க வேண்டும். இந்த நூல் நிச்சயமாக சிங்களத்தில் சென்றடையவேண்டும். பேராசிரியர் மணல்திட்டில் இருந்திருந்தால் அவரையும் தொல்பொருளாக்கி பெயரை மாற்றியிருக்ககூடிய காலம் இது. இலங்கையில் சைவத்தின் தொன்மை தமிழின் தொன்மை நாகவழிபாட்டின் தொன்மை ஆகியவற்றை இந்த நூல் சான்றுபடுத்துகின்றது. இந்த நூல் நாகர்கள் பற்றியது வடபகுதி நாகதீவு நாகநாடு என அழைக்கப்படுவது எங்களிற்கு தெரியும். யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிகள் நாகர்கள். இது அவர்கள் பற்றிய நூல். நாகர்கள் தமிழ்மொழியை பேசினார்கள் என இந்த நூல் சான்றுரைக்கின்றது. நாகர்கள் தங்களை தமிழர்களாக அடையாளப்படுத்தவில்லை, ஆனால் அவர்கள் தமிழ்மொழியை பேசினார்கள். இதன் மூலம் இந்த தேசத்தின் தமிழ்மொழியின் தொன்மை உறுதி செய்யப்படுகின்றது. பேராசிரியர் பத்மநாதனின் ஒருமறைந்துபோன நாகரீகத்தின் தரிசனம் நூல் நாகர்கள் வடகிழக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வாழ்ந்தது பற்றி பேசுகின்றது. யாழ்ப்பாணத்தில் நாகர்கள் பல இடங்களில் பரந்துவாழ்ந்திருக்கின்றார்கள். வடமராட்சியில் அவர்கள் வாழ்ந்தமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன அங்கு நாகவழிபாடு இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன. வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட பல பொருட்கள் இதற்கான ஆதாரங்களாக காணப்படுகின்றன. வடமராட்சியில் கரவெட்டி, அல்வாய், உடுப்பிட்டி போன்ற இடங்களில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர். அதற்கான ஆதாரங்கள் உள்ளதை பேராசிரியர் தனது நூலில் முன்வைத்துள்ளார். தென்மராட்சியில் சாவகச்சேரியில் நாகர்கள் வாழ்ந்துள்ளனர் தீவுப்பகுதியிலும் அவர்கள் வாழ்ந்துள்ளனர். எனது ஊரான காரைநகரில் பல இடங்களில் அவர்கள் வாழ்ந்துள்ளனர். வேலணையில் வாழ்ந்துள்ளனர். யாழ்ப்பாண பட்டினத்தின் பல பகுதியில் அவர்கள் வாழ்ந்துள்ளனர் ஆனைக்கோட்டையில் அவர்கள் பயன்படுத்திய கற்களால் செய்யப்பட்ட செம்புகள் போன்ற பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் தெரிவித்துள்ளார். நவாலியில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன. பேராசிரியரின் இந்த நூல் யாழ்ப்பாணத்தின் பலபகுதிகளில் நாகர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதை சொல்கின்றது. தென்னிலங்கை வரலாற்றாசிரியர்கள் எழுதும் நூல்கள் பலவற்றில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. தமிழ்மக்களின் வரலாற்றின் தொன்மை சைவசமயத்தின் தொன்மை போன்றவை மறைக்கப்படுவதற்கு பல பேராசிரியர்கள் உதவியுள்ளனர். அப்போது இருந்த அரசாங்கம் இதற்கு உதவியது. தற்போதும் இது தொடர்கின்றது. தமிழின் தொன்மை பற்றிய இந்த நூல் நாகர்கள் யாழ்ப்பாணத்தின் எல்லாப்பகுதிகளிலும் வாழ்ந்ததாக கூறுகின்றது. அவர்கள் தமிழ்மொழியில் பேசியுள்ளனர். பிராமி எழுத்து வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை பற்றியும் இறந்தவர்களின் உடல்களை புதைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஈமத்தாழிகளும் காணப்பட்டமை குறித்து பேராசிரியர் தனது நூலில் தெரிவித்துள்ளார். நாகர்கள் தமிழ்மொழி பேசுபவர்களாக காணப்பட்டனர் என்கின்றார் பேராசிரியர். பிராகிருதமொழிப் பயன்பாடும் அவர்கள் காலத்தில் காணப்பட்டுள்ளது. அன்பளிப்புகளை வழங்குவதற்கு அவர்கள் பிராகிருதமொழியை பயன்படுத்தியுள்ளனர். நாகர்கள் யாழ்ப்பாணத்தின் எல்லாபகுதிகளிலும் வாழ்ந்தவர்கள் அவர்கள் தமிழ்மொழியை பேசினார்கள் என இந்த நூல் நிறுவியுள்ளது, அது முக்கியமான விடயம். நாகவழிபாடு யாழ்ப்பாணத்திற்கு புதிய விடயமல்ல எனது ஊரில் நாகவழிபாடு முக்கியமான விடயமாக காணப்பட்டது. நாகவழிபாடு கொழும்பில் இல்லை. நாகவழிபாடு இடம்பெற்றமைக்கான பல ஆதாரங்கள் உள்ளன. வல்லிபுர ஆழ்வார் கோயில் இதற்கான வலுவான ஆதாரம். யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் நாகவழிபாடு காணப்பட்டது என்பதை பேராசிரியர் நெறிப்படுத்துகின்றார். யாழ்ப்பாணத்தின் எல்லா பகுதிகளிலும் நாகர் கோயில்கள் இன்றும் காணப்படுகின்றன. அன்று தமிழ்மொழி பேசப்பட்டுள்ள நாகர் வழிபாடு சைவ வழிபாடு என்பதை பேராசிரியர் ஆதாரத்துடன் நிறுவுகின்றார். தென்பகுதியை சேர்ந்த ஒரு பேராசிரியர் இந்த நாட்டில் போர்த்துக்கீசரின் வருகையின் பின்னரே யாழ்ப்பாண வரலாறு ஆரம்பமானது என என்னிடம் தெரிவித்தார். நான் அவருடன் கடுமையான வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டேன். எனது சொந்த ஊரில் காணப்பட்ட ஐயனார் கோயிலை இடித்தே போர்த்துக்கீசர் காரைநகர் கடற்கோட்டையை கட்டினார்கள் என தெரிவித்தேன். இன்றும் கொழும்பில் யாழ்ப்பாணத்தமிழர் ஆங்கிலேயரின் வருகைக்கு பின்னர் வந்தவர்கள் என தெரிவிக்கும் கல்விமான்கள் உள்ளனர். அவர்கள் வரலாற்றை திரிபுபடுத்துகின்றனர். பேராசிரியர் இதனை முறியடிக்கும் விதத்தில் தமிழின் தொன்மையை சைநெறியின் தொன்மையை ஆதாரத்துடன் நிரூபித்திருக்கின்றார். இன்றைய யாழ்ப்பாணத்திற்கு அடித்தளமிட்டவர்கள் நாகர்கள் என்பதையும் பேராசிரியர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார். அவர்கள் நிலங்களை அது சார்ந்த வளங்களை உரிய முறையில் பயன்படுத்தினார்கள். விவசாயத்தில் ஈடுபட்டார்கள், வயல்களை அமைத்தார்கள். எந்த இடத்தில் குளங்களை கிணறுகளை அமைக்கவேண்டும் என நாகர்கள் மிக நுட்பமாக திட்டமிட்டார்கள். இது தவிர அவர்கள் மட்கல உபயோகத்தில் ஈடுபட்டார்கள், உலோகங்களை தயாரித்தார்கள் மந்தை மேய்ச்சலில் ஈடுபட்டார்கள். வடக்கில் மேய்ச்சல் தரைகள் குறைவு, அவர்கள் விவசாயத்திற்கு தேவையான மந்தைகளை வளர்த்தார்கள். நாகர்கள் கடல் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தினார்கள். படகுகள் தோணிகள் போன்றவற்றை உருவாக்கினார்கள் நிலவளங்களை போல கடல்வளங்களை பயன்படுத்தினார்கள் என்பதற்கான ஆதாரங்களை பேராசிரியர் பத்மநாதன் தனது நூலில் முன்வைத்துள்ளார். அவர்களின் இந்த கட்டமைபே தற்போதைய யாழ்ப்பாணம் . நாகர்களின் காலம் தன்னிறைவு பொருளாதாரம் காலம். அதற்கான வழிமுறைகளை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். 30 வருடங்களிற்கு முன்னர் நாங்கள் யுத்தத்தின் போது கடும் பஞ்சத்திலிருந்து தப்பினோம். வேறுநாடுகள் என்றால் பஞ்சத்தில் சிக்குண்டிருக்கும் ஆனால் எங்கள் மக்கள் பஞ்சத்திலிருந்து தப்பினார்கள் என்றால் இதற்கு நாகர்கள் அறிமுகப்படுத்திய கட்டியெழுப்பிய பொருளாதாரமே காரணம். நாகர்களின் உட்கட்டமைப்பு பற்றியும் பேராசிரியரின் நூல் பேசுகின்றது. நாகர்களின் கட்டிடங்களில் தூண்கற்கல் முக்கியமானவை வட்டக்கல் என்பது மற்றுமொரு முக்கிய அம்சம். பௌத்த மதத்தினர் சந்திரவட்டக்கல்லை வைத்து வரலாற்றை திரிபுபடுத்த முயலும்போது நாகர் காலத்து வட்டக்கல் குறித்த விடயங்களை பேராசிரியர் முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம். நாகர்கள் ஆபரண தயாரிப்பில் ஈடுபட்டிருந்தன பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டனர் என பேராசிரியர் தனது நூலில் தெரிவிக்கின்றார். பிதிர் வழிபாடு என்பது யாழ்ப்பாணத்தில் காணப்பட்ட விடயம் திருமண சடங்கின் ஆரம்பத்திலும் பிதிர்வழிபாட்டில் ஈடுபட்டனர், இன்று பலருக்கு தங்கள் முன்னோர்களின் பெயர்கள் கூட தெரியாத நிலை காணப்படுகின்றது. தென்னிலங்கை அரசியல் எங்கள் இருப்பை கேள்விக்கு உட்படுத்துகின்றது, தமிழின் சைவசமயத்தின் தொன்மையை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். பேராசிரியரின் இந்த நூல் அவர்கள் உண்மையை புரிந்துகொள்ள உதவும். இனப்பிரச்சினை தீர்வினை கோரும் நாங்கள் கேட்பது எல்லாம் நியாயமானது என ஆதாரத்துடன் நிரூபிக்கவேண்டும். இந்த நூல் தென்பகுதிக்கும் சர்வதேச சமூகத்திற்கும் எங்களின் நியாயபாட்டினை முன்வைக்கின்றது. இந்த நூலை வாசித்து முடித்தபோது எங்கள் ஊரில் எனது வீட்டிற்கு அருகில் உள்ள நாகர்கோயில் நினைவிற்கு வந்தது. கோயிலை சுற்றி குளம் வயல்கள் காணப்படுகின்றன. இந்த நூலை வாசிக்கும் அனைவரும் தற்போதை சூழ்நிலையில் இந்த நூலை எழுதியமைக்காக பேராசிரியர் பத்மநாதனிற்கு நன்றி தெரிவிப்பார்கள். https://www.virakesari.lk/article/184618
-
இரசித்த.... புகைப்படங்கள்.
பெருவிருட்சம் என்பது இதுதானோ?!