Everything posted by ஏராளன்
-
கொஞ்சம் ரசிக்க
அக்கா எனக்கென்னமோ சாப்பிட்டதை அவசரமாக பொக்கற்றில வைச்சதா படுகிறது!
-
இருவேறு நிறங்களில் மாறும் பெருங்கடல்கள் - என்ன காரணம்?
பட மூலாதாரம்,ESA கட்டுரை தகவல் எழுதியவர், ஃபிரான்கி அட்கின்ஸ் பதவி, பிபிசி செய்தியாளர் 22 மே 2024, 08:35 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காலநிலை மாற்றத்தின் விளைவாக கடலில் உள்ள பைட்டோ பிளாங்டன் (phytoplankton) என்னும் உயிரிகளின் பரவலில் சம நிலை குலைந்து, கடல்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நீங்கள் கடலை சித்தரித்து வரையும் போது, ஒளிரும் பசும் நீல நிறத்தில் கடல் நீரை கற்பனை செய்து வண்ணம் தீட்டி இருக்கிறீர்களா? நினைத்து பார்க்க அழகாக தான் இருக்கும், ஆனால் நமது பிரபஞ்சத்தின் பெருங்கடல்களில் சில பகுதிகள் உண்மையில் பசுமை நிறமாக மாறும் சாத்தியங்கள் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சி கூறுகிறது. இதற்கு முக்கிய காரணமாக சொல்லப்படுவது `காலநிலை மாற்றம்’ இது விஞ்ஞானிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. சில பகுதிகளில் கடல் நீர் அடர் பச்சை நிறமாக மாறி வருவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். குறிப்பாக பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள பகுதிகளில் அடர் பச்சை நிறமாகவும் மற்றப் பகுதிகளில் அடர் நீல நிறமாகவும் மாறி வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இந்த நிறமாற்றம் நம் கண்களுக்கு புலப்படாது என்றாலும் செயற்கைகோள் மூலம் ஆய்வுகளில் இந்த மாற்றத்தை பதிவு செய்துள்ளனர். "இந்த நிறத்தை மனித மொழியில் விவரிப்பது கடினம். நீங்கள் அதை நன்றாக பார்க்க முடியாது. மாறாக, ஒரு மான்டிஸ் இறால் அல்லது ஒரு பட்டாம்பூச்சி போன்ற உயிரினங்கள் பார்க்கக் கூடிய ஒன்றாக இருக்கலாம்" என்று பிரிட்டனின் சவுதாம்ப்டனில் உள்ள தேசிய கடல்சார் மையத்தின் விஞ்ஞானி பிபி கேல் விவரித்தார். ஐரோப்பிய ஒன்றியத்தின் கோபர்நிகஸ் காலநிலை சேவை அமைப்பு, ஏப்ரல் 2024 இல் ஐரோப்பிய காலநிலை அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் பெருங்கடல்களில் நிகழ்ந்த பெரும் மாற்றங்களை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. பெருங்கடலில் `குளோரோஃபில்’ நிறமி அதிகளவில் தென்பட்டதை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது - இந்த ஒளிச்சேர்க்கை நிறமி தான் பைட்டோ பிளாங்டன் (கடல்வாழ் தாவர உயிரிகள்) மற்றும் தாவரங்களுக்கு பச்சை நிறத்தை அளிக்கிறது. பட மூலாதாரம்,GETTY படக்குறிப்பு,கடல் நீர் பசுமையாக காட்சியளிப்பது குளோரோஃபில் நிறைந்த நுண்ணிய தாவரங்களின் பரவலால் ஏற்படுகிறது ஏப்ரல் 2023 இல் பிரிட்டனுக்கு வடக்கே நார்வே கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடலில் சராசரியை விட 200-500% அதிகமாக இந்த நிறமி தென்பட்டது. அதே நேரத்தில் ஐபீரிய தீபகற்பத்தின் மேற்கே அமைந்துள்ள பெருங்கடலில் அவை 60-80% குறைவாக இருந்தது. ஜூன் 2023 இல் சராசரியை விட மத்தியதரைக் கடலில் குளோரோஃபில் அளவு 50-100% அதிகமாக இருந்தது. இரண்டு நிகழ்வுகளிலும் சராசரி அளவீடுகள் 1998-2020 க்கு இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்டது. `இதுபோன்ற மாற்றங்கள் ஒவ்வோர் ஆண்டும் நிகழக் கூடிய இயற்கையான செயல்பாடு கிடையாது. அவை இயல்பான மாறுபாடுகளுக்கு அப்பாற்பட்டவை’ என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த நிற மாற்றம் கடல் வெப்பமடைவதற்கான அறிகுறியாகும். கோப்பர்நிகஸ் காலநிலை சேவை அமைப்பு சேகரித்த கடல் மேற்பரப்பு வெப்பநிலை பற்றிய பிபிசி பகுப்பாய்வு "உலகின் பெருங்கடல்கள் வரலாறு காணாத வெப்பமயமாதலை சந்தித்து வருகின்றன” என்பதை வெளிப்படுத்தியுள்ளது. உலகப் பெருங்கடல்கள் பதிவு செய்யப்பட்ட வெப்பமயமாதலை அனுபவிப்பதையும் அது வெளிப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு நாளும் உலகப் பெருங்கடல்களில் வெப்பநிலை பதிவுகள் முந்தைய ஆண்டை விட அதிகமாக இருப்பதை இந்த பகுப்பாய்வு கோடிட்டு காட்டுகிறது. நாசா செயற்கைக்கோள்களைப் பயன்படுத்தி இருபது ஆண்டுகளாக தரவுகள் சேகரிக்கப்பட்டு அதனை வரை படமாக்கி `நேச்சர்’ ஆய்வு இதழில் வெளியிடப்பட்டது. இந்த சமீபத்திய ஆய்வு அறிக்கை பிபி கேல் தலைமையில் வெளியிடப்பட்டது. மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) விஞ்ஞானிகளுடன் சேர்ந்து, உலகின் பாதிக்கும் மேற்பட்ட கடல் பகுதி (56%) நிறம் மாறி இருப்பதை அவர் கண்டறிந்தார். இதை புரியும்படி சொல்ல வேண்டுமெனில், 56% என்ற இந்த பகுதியளவு, உலகின் அனைத்து நிலப்பரப்புகளை விடவும் பெரியது. பட மூலாதாரம்,COPERNICUS CLIMATE CHANGE SERVICE/ECMWF கடல்வாழ் தாவர உயிரிகளின் பங்கு என்ன? இந்த மாற்றங்கள் ஏன் நிகழ்கின்றன? என்பதற்கான உறுதியான காரணங்கள் விஞ்ஞானிகளுக்கு தெரியவில்லை என்றாலும், கடலின் மேற்பரப்பில் வாழும் பைட்டோ பிளாங்டன் பரவல் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று அவர்கள் நம்புகிறார்கள். பைட்டோ பிளாங்டன் என்பது கடலின் மேற்பரப்பில் மிதக்கும் நுண்ணிய தாவரங்கள் ஆகும், இவை கடலின் உணவு சங்கிலியில் தொடக்கப்புள்ளியாக இருக்கும் முக்கிய உயிரினம் ஆகும். கிரில் முதல் திமிங்கலங்கள் வரையிலான கடல் உணவுச் சங்கிலியில் பங்கு வகிக்கும் மற்ற உயிரினங்களையும் தக்கவைப்பது பைட்டோ பிளாங்டன் தான். ஒளிச்சேர்க்கையின் போது சூரிய ஒளியிலிருந்து ஆற்றலை பெற தாவரங்கள் பயன்படுத்தும் பச்சை நிறமியான குளோரோஃபில் பைட்டோ பிளாங்டனிலும் உள்ளது. வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை கடலுக்கு மாற்றுவதில் பைட்டோபிளாங்டன் பெரும் பங்கு வகிக்கிறது. பொதுவாக, கடலின் நிறம் என்பது அதன் மேல் அடுக்குகளில் உள்ளவற்றின் பிரதிபலிப்பாக தான் இருக்கும். பெருங்கடலில் மேற்பரப்பு அடர் நீல நிறத்தில் காட்சி அளித்தால் அங்கு பைட்டோபிளாங்டன் போன்ற உயிரிகளின் இருப்பு குறைவாக உள்ளது என்று அர்த்தம். அதே சமயம் அடர் பசுமை நிறத்தில் தென்பட்டால் கடலின் மேற்பரப்பில் அதிக பைட்டோபிளாங்க்டன் இருப்பதைக் குறிக்கும். கடலின் மேற்பரப்பில் இருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளியின் அலைநீளங்களைப் (wavelengths) ஆய்வு செய்வதன் மூலம், எவ்வளவு குளோரோஃபில் உள்ளது என்பதை மதிப்பிட முடியும் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். "கடலில் இருக்கும் வெவ்வேறு வகையான பைட்டோ பிளாங்டன் உயிரிகள் ஒளிச்சேர்க்கைக்கு பயன்படுத்தப்படும் நிறமிகளின் வெவ்வேறு கலவைகளை கொண்டுள்ளன. இந்த நிறமிகள் வெவ்வேறு அலைநீளங்களில் ஒளியை உறிஞ்சுகின்றன உதாரணமாக, சிவப்பு சாயம் கொண்ட ஒரு கிளாஸ் தண்ணீர் சிவப்பு நிறமாக காட்சியளிக்கும், ஏனெனில் அதில் சிவப்பு அல்லாத அலைநீளத்தை உறிஞ்சும் தன்மை உள்ளது. பைட்டோபிளாங்டனும் அப்படி தான். இவை தண்ணீரில் உள்ள துகள்கள். எனவே ஒளியை சிதறடிக்கும் தன்மை கொண்டவை" என்கிறார் கேல். 'மெய்நிகர் பூமி' பட மூலாதாரம்,ESA நாசாவின் அக்வா செயற்கைக்கோளில் உள்ள கருவியான `மோடிஸ்’ (Modis), ஏழு புலப்படும் அலைநீளங்களின் அளவீடுகளை எடுக்கிறது. இது கணினி மாதிரிகளின் அடிப்படையில் முந்தைய ஆய்வுகளில் கைப்பற்றப்பட்டதை விட முழுமையான வண்ண நிறமாலையை(spectrum) குறிக்கிறது. இதன் மூலம், கேல் ஆய்வை வெவ்வேறு முறைகளில் உருவகப்படுத்த ஒரு மாதிரியை உருவாக்கினார். "எங்களிடம் ஒரு மெய்நிகர் பூமி உள்ளது, அங்கு நாம் வரலாற்றின் இரண்டு வெவ்வேறு மாதிரிகளை காணலாம். ஒரு மாதிரியில் காலநிலை மாற்றம் இருக்காது. மற்றொன்றில், காலநிலை மாற்றம் இருக்கும்" என்று அவர் விளக்கினார். வண்ண மாற்றங்களின் ஸ்பெக்ட்ரத்தை வரைபடமாக்க, மோடிஸ் (Moderate Resolution Imaging Spectro radiometer) தரவு எனப்படும் நாசாவின் அக்வா செயற்கைக்கோளில் உள்ள ஒரு கருவியில் இருந்து கேல் 20 வருட தரவுகளை எடுத்தார் . "அந்த இரண்டு மெய்நிகர் பூமிகளும் காலப்போக்கில் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதையும், உண்மையான கடலில் ஏற்படும் மாற்றங்களையும் நாம் பார்க்கலாம். இந்த செயல்முறையில் தான் உலகின் பெருங்கடல்களின் 56% மேற்பரப்பு நிறம் மாறிவிட்டது என்பது கண்டறியப்பட்டது. குறிப்பாக, பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வெப்ப மண்டல பெருங்கடல் பகுதிகள் காலப்போக்கில் அடர் பசுமை ஆகிவிட்டன. ஏனெனில் பைட்டோபிளாங்டன் அதிகரிப்பதால் குளோரோஃபில் அதிகம் காணப்படுகிறது. அனைத்து முக்கிய கடல் படுகைகளிலும் மாற்றங்களை நாங்கள் கவனித்தோம். இந்த மாற்றம் பசிபிக் அல்லது அட்லாண்டிக் அல்லது இந்திய பெருங்கடல்களில் மட்டும் நிகழவில்லை. இவை உண்மையில் உலகளாவிய மாற்றங்கள் ஆகும்" என்று விவரிக்கிறார் கேல். மசாசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனம் (MIT) மற்றும் உலகளாவிய மாற்றத்திற்கான அறிவியல் மையத்தின் கடல்சார் விஞ்ஞானி ஸ்டெபானி டட்கிவிச் என்பவரின் முந்தைய ஆய்வறிக்கையில் இந்த கோட்பாடு வெளியிடப்பட்டது. அதனை கேல் தலைமையிலான ஆய்வு உறுதிப்படுத்துகிறது. கடலின் நிறத்தில் ஏற்படும் எதிர்கால மாற்றங்களை கணிக்க 2019 ஆம் ஆண்டில் டட்கிவிச் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தினார். இருப்பினும், இது காலநிலை மாற்றத்தால் ஏற்பட்டதா அல்லது எல் நினோ மற்றும் லா நினாவின் போது காணப்பட்ட சாதாரண கடல் நிறங்களா என்பதை தீர்மானிக்க அவருக்கு கடினமாக இருந்தது . "இயற்கை மாறுபாடுகளின் அளவு மிகவும் பெரியது. எனவே கடல் நிறம், காலநிலை மாற்றத்தால் அதிகரித்து வருகிறதா அல்லது குறைகிறதா என்பதைக் கூறுவது மிகவும் கடினமாக இருந்தது" என்கிறார் டட்கிவிச். செயற்கைக்கோள் தரவைச் சேகரித்த கேலின் ஆய்வில், கடலின் மேற்பரப்பில் இருந்த துகள்கள் மற்றும் வண்டல்களில் இருந்து ஒளி வீசும் போது, அவை சிவப்பு மற்றும் நீலம் உள்ளிட்ட பல்வேறு அலைநீளங்களை பிரதிபலித்தது. இந்த முடிவுகள் `குளோரோபில்’ என்ற தலைப்பை தாண்டி ஆய்வின் நோக்கத்தை விரிவுபடுத்தியது. டட்கிவிச் சமீபத்திய கேலின் ஆய்விலும் இணைந்து பணியாற்றினார், இந்த ஆய்வு தன் முந்தைய ஆய்வின் புள்ளிவிவர கணிப்புகளை உறுதிப்படுத்தியதாக அவர் கூறுகிறார். "நிஜ உலக செயற்கைக்கோள் அளவீடுகள் ஆய்வில் உருவாக்கிய மாதிரியுடன் ஒத்துப்போகின்றன. ஆய்வில் இரண்டு மெய்நிகர் மாதிரிகள் உருவாக்கப்பட்டன. அவற்றில் காலநிலை மாற்றத்தை பிரதிபலிக்கும் உலக மாதிரியை பார்க்கும் போது, நிஜ உலகில் நாம் காணும் மாற்றங்கள் மனிதர்களால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றங்கள் காரணமாக இருக்கலாம்." என்றார். பெருங்கடலின் நிறம் மாறுவதால் என்ன பாதிப்பு? இந்த மாற்றங்கள் கடலில் நிகழும் போது அதன் தாக்கம் வியத்தகு அளவில் இருக்கும். ஒவ்வொரு பத்தாண்டிலும் வெப்பநிலை தொடர்ந்து அதிகரிப்பதால் பைட்டோபிளாங்க்டன் பரவல் வடக்கு நோக்கி 35 கிமீ (21 மைல்) வேகத்தில் இருக்கும் என்று சில ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். ஜூபிளாங்டன்(zooplankton) என்ற மிதவைப் பிராணிகளின் பரவலில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்த பைட்டோபிளாங்டனை உண்ணும் சிறிய உயிரினங்களின் பரவல் வெப்பமண்டலத்தில் குறையும் அதேநேரத்தில் துருவ பகுதிகளில் வியத்தகு அளவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒன்றோடொன்று இணைந்த உணவு சங்கிலியில் விளைவுகளை ஏற்படுத்தும். பசுமை கடல் பகுதியான எமரால்டு கோவ்ஸ் (Emerald coves) மற்றும் அடர் நீல கடல் பகுதிகள் ஒரே இரவில் திடீரென்று நிறம் மாறிவிடாது. ஆனால் வெப்பநிலை அதிகரிக்கும் போது நிறங்களின் போக்கும் மாறுபடும். "உண்மையில் நாம் கவலைப்படுவது கடலின் நிறம் மாறிவிடும் என்று அல்ல. இந்த வண்ணங்கள் மோசமான காலநிலை மாற்றத்தை பிரதிபலிக்கிறது. எங்கள் கவலை எல்லாம் சுற்றுச்சூழல் அமைப்பை பற்றியது" என்கிறார் கேல். https://www.bbc.com/tamil/articles/cyxxydxx401o
-
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்!
ஒரே பிரசவத்தில் பிறந்த 4 குழந்தைகள்! மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை ஆரோக்கியமான முறையில் தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்னும் தாயே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார். மருத்துவதுறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பதானது அரிதான விடயமாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்தியநிபுணர் வைத்தியர் சரவணன் தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகவியலாளர்களை தெளிவுபடுத்தும் வகையான ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெற்றது. இதன்போது சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகள் கொண்டுவரப்பட்டு ஊடகவியலாளர்களுக்கு காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் பெ.மைதிலி உட்பட வைத்தியர்கள், தாதியர்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு ஒரு சூழில் நான்கு குழந்தைகள் பிறக்கும் செயற்பாடானது 5 இலட்சத்து 70ஆயிரம் அம்மாக்களிலேயே இடம்பெறுவதாகவும், அதுவும் செயற்கை முறையிலான கருத்தரிப்பு மூலமே அவ்வாறான விடயமும் சாத்தியமாக காணப்படும் நிலையில், இயற்கையான கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை இந்த தாய் பிரசவித்தானது மருத்துவ துறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதாகவும், அத்துடன் பிறந்த நான்கு குழந்தைகளும் மிகவும் சுகதேக ஆரோக்கியத்துடன் உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர் சரவணன் தெரிவித்தார். https://thinakkural.lk/article/302244
-
மீனவர்களுக்கு அவசர அறிவிப்பு - கடலுக்குச் செல்லவேண்டாம்
பல நாள் மீன்பிடி படகுகள் உட்பட அனைத்து மீன்பிடி படகுகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை பணிக்கு செல்ல அனுமதிக்கப்படாது என கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் .சுசந்த கஹவத்த இதனைத் தெரிவித்தார். அடுத்த சில நாட்களில் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, திணைக்களம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. அத்துடன், தற்போது கடலுக்கு சென்றுள்ள பல நாள் மீன்பிடி படகுகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகள் ஊடாக செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/302226
-
மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தேர் திருவிழா (படங்கள்)
வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது. நேற்று தேர்த்திருவிழா இடம்பெற்ற நிலையில் புதன் கிழமையான இன்று தீர்த்த உற்சவம் இடம்பெறவுள்ளது உற்சவ மூர்த்திகளுக்கு வசந்த மண்டபத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதை தொடர்ந்து நேற்று மாலை உற்சவ மூர்த்திகளின் உள் வீதி ,வெளி வீதி உலா இடம்பெற்றது அதனைத் தொடர்ந்து உற்சவ மூர்த்திகள் தேரில் ஆரோகணித்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிக்க பஞ்சரத பவனி இடம் பெற்றது. https://thinakkural.lk/article/302196
-
சென்னை ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையத்திற்கு 'இளையராஜா' பெயர் ஏன்? அவர் எவ்விதம் பங்களிப்பார்?
பட மூலாதாரம்,IIT MADRAS கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 21 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள ஐ.ஐ.டி (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) முதல் முறையாக இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கப் போகிறோம் என்கிறார் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி. சென்னை ஐ.ஐ.டி வளாகத்துக்குள் அமையும் 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய'த்துக்கு இளையராஜா நேற்று மாலை (மே 20) அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய இசையமைப்பாளர் இளையராஜா, “மொசார்டுக்கு பிறகு 200 ஆண்டுகளாக உலகம் மற்றொரு மொசார்ட்டை உருவாக்கவில்லை. இந்த ஆராய்ச்சி மையத்திலிருந்து 200 இளையராஜாக்கள் உருவாக வேண்டும். ஒருவனுக்கு தண்ணீர் கொடுக்காதே, தாகம் கொடு, தண்ணீரை அவன் தேடிக்கொள்வான். இசைகற்க கிராமத்திலிருந்து சென்னைக்கு கிளம்பி வந்த போது எனது அம்மா எனக்கு நான்கு ரூபாய் கொடுத்து அனுப்பினார். இசை என் மூச்சானது. நான் சாதித்ததாக கூறுகிறார்கள், ஆனால் இப்போதும் அந்த கிராமத்திலிருந்து கிளம்பி வந்த சிறுவன் போலவே உணர்கிறேன்,” என்று பேசினார். இந்த முயற்சி நாடு முழுவதுமே கவனத்தை ஈர்த்துள்ளது, அதேசமயம் தொழில்நுட்பம் சார்ந்த ஐ.ஐ.டி படிப்புகளில் இசையமைப்பாளர் பெயரிலான ஆராய்ச்சி மையம் என்ன செய்ய முடியும் என்ற ஆர்வமும் எழுந்துள்ளது. பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, முழு நேர பாடப்பிரிவை நடத்த முடியாவிட்டாலும், இளையராஜா அவர்கள் மிக நெருக்கமாக ஐ.ஐ.டி-யுடன் பணியாற்றுவார் பட மூலாதாரம்,IIT MADRAS படக்குறிப்பு, 'மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மைய'த்துக்கு இளையராஜா நேற்று மாலை (மே 20) அடிக்கல் நாட்டினார் 'அனைவருக்குமான இசை' சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் இந்தப் புதிய வளாகத்தின் நோக்கம் ‘அனைவருக்குமான இசை’ என்று கூறப்படுகிறது. இந்த மையம், மனிதனுக்கும் இசைக்குமான தொடர்பை அறிவியல் பூர்வமாக தெரிந்து கொள்ள பயன்படும், இந்த ஆராய்ச்சி மையத்தின் மூலம் இசை தொடர்பான படிப்புகளும், இசைக் கருவிகளை வடிவமைத்து ஆராயும் பணிகளும் மேற்கொள்ளப்படும் என்று சென்னை ஐ.ஐ.டி கூறுகிறது. இது தொடர்பாக ஐ.ஐ.டி இயக்குநர் டாக்டர். வி காமகோடி பிபிசி தமிழுடன் பேசுகையில், “சென்னை ஐ.ஐ.டி-யில் தொழில்நுட்பப் படிப்புகளைத் தாண்டிப் பிற கலைகளுக்கும் இடமுண்டு. வளாகத்தில் கலை நிகழ்வுகள் பல நடைபெறுகின்றன. இசைக்குழுக்கள் உள்ளன. ஆர்வமுள்ள மாணவர்களும் ஆசிரியர்களும் தங்கள் திறன்களை வெளிப்படுத்துகிறார்கள்,” என்றார். படக்குறிப்பு,சென்னை ஐ.ஐ.டி இயக்குநர் வி.காமகோடி செயற்கைத் நுண்ணறிவில் சங்கீதம் இந்த இசை ஆராய்ச்சி மையத்தில், “புதிய இசைக்கருவிகளை உருவாக்குவது, மின்னணு இசைக்கருவிகளை (சிந்தசைசர் - synthesiser) பயன்படுத்தி புதுமைகள் படைப்பது, இசையை ஆழமாகப் புரிந்து கொள்வது, மேள வாத்திய த்வனிகளை உருவாக்க மென்பொருள் எழுதுதல் என தொழில்நுட்பத்தின் தாக்கம் இசையின் மீதும், இசையின் தாக்கம் தொழில்நுட்பத்தின் மீதும் எவ்வாறு உள்ளது என ஆராய விரும்பினோம்,” என்கிறார் காமகோடி. இந்தத் துறையில் தற்போது ஆர்வம் அதிகரித்து வருவதால் புதிதாக ஆராய்ச்சி மையத்தைத் தொடங்கியதாகவும் வரும் நாட்களில் கர்நாடக இசைக் கச்சேரியில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவது பற்றியெல்லாம் ஆராய முடியும் என்றும் சொல்கிறார் அவர். “இதற்கான தீர்வுகள் எளிதல்ல, நாங்கள் இது குறித்து மிகத் தீவிரமாக யோசித்த போது, வழக்கமான முறையில் இசை கற்றுத் தருவது இது போன்ற ஆராய்ச்சிக்கு உதவாது என்று உணர்ந்தோம். அதன் அடிப்படையில் இப்போது புதிய மையம் உருவாக்கப்பட்டுள்ளது,” என்றார். பட மூலாதாரம்,ILAYARAJA / INSTAGRAM இளையராஜா ஏன் தேர்வு செய்யப்பட்டார்? கல்வியை ஜனநாயகப்படுத்தும் நோக்கில், 'அனைவருக்கும் ஐ.ஐ.டி' என்ற பெயரில் சென்னை ஐ.ஐ.டி பல புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த மையமும் துவங்கப்பட்டுள்ளது என்கிறார் காமகோடி. அவர் மேலும் பேசுகையில், “இப்படி ஒரு முயற்சிக்காக இசையமைப்பாளர் இளையராஜாவை நான் நேரில் சந்தித்த போது அவர் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தினார். இளையராஜா, எந்தவித இசைப் பயிற்சியும் இல்லாமல் இசையமைக்கத் தொடங்கினார். அவரது இசைப் பயணத்தில் பல வியக்கத்தக்கப் பாடல்களை வழங்கியுள்ளார். சாஸ்த்ரிய சங்கீதத்தை கிராமப்புற பாடல்களுடன் இணைத்து சாதாரண மக்களிடம் கொண்டு சென்றார். மேற்கத்திய இசை, சூஃபி பாடல்கள் ஆகியவற்றுடன் இணைத்து இசையமைத்துள்ளார் இளையராஜா. எனவே அவர் இந்த ஆராய்ச்சி மையத்துக்கு வழிகாட்டுவது மிகவும் பொருத்தமானது,” என்று குறிப்பிட்டார். பாடத்திட்டம் இன்னும் இறுதியாகவில்லை இசை தொடர்பான இந்தப் புதிய படிப்பு மாற்றங்களுக்கு ஆளாகி வருவதாக ஐ.ஐ.டி தெரிவிக்கிறது. உடனடியாக பட்டப்படிப்பு உருவாக்கப்படவில்லை. பாடத்திட்டத்தை படிப்படியாக மெருகூட்டி, இந்த ஆராய்ச்சி மையத்தில், சான்றிதழ் படிப்புகள் வருங்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்கிறது ஐ.ஐ.டி. இந்தத் துறையில் பட்டப்படிப்பு உருவாக்குவது படிப்படியாக மேற்கொள்ளப்படும் என்கிறார்கள். எதிர் காலத்தில் பாடத்திட்டங்களை வளர்த்தெடுக்கும்போது, இசைக்கான புதிய, நவீன கருவிகளை உருவாக்குதல், இசை ஸ்வரங்களை ஒன்றாக கலப்பது (synthesising of notes), மேலும், புதிதாக வளர்ந்துவரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம் இசையில் புதுமைகள் உருவாக்குதல், அதே போல மனிதர்களின் மனநலனுக்கு எப்படி இசை உதவியாக உள்ளது என்பதெல்லாம் ஆராயப்படும். அதே போல நாட்டுப்புறப் பாடல்கள் பற்றியும், தொன்மையான இசைக் கோர்ப்புகள் குறித்தும் ஆய்வுகள் நடத்தப்படும் என ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவிக்கிறது. இசையமைப்பாளர் இளையராஜா, தன்னை போன்று பல இசையமைப்பாளர்களை கண்டறிந்து உருவாக்க வேண்டும் என விரும்புகிறார். அதே போல புதிய இசைக்கருவிகளை உருவாக்கும் முயற்சியில் சென்னை ஐ.ஐ.டி சில காலமாகவே முயற்சிகளை எடுத்து வருகிறது. புதிய இந்த மையத்தில் அந்த இரண்டு விருப்பங்களும் இணைகின்றன என்று ஐ.ஐ.டி நிர்வாகம் தெரிவிக்கிறது. பட மூலாதாரம்,IIT MADRAS இளையராஜா முழுநேரம் வழிநடத்துவாரா? “ஒரு நேர்த்தியான கமகம் (கர்நாடக இசை ஒலிகள்) எவ்வாறு இசைக்கப்படுகிறது என்பதை இன்னும் சின்தசைஸ் செய்ய முடியவில்லை. அதைப் போலவே இசையின் மொழியை ஆராய்ந்து தெரிந்து கொள்ள இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன,” என காமகோடி தெரிவித்தார். இசை மாணவர் ராஜேந்திர பிரசாத் கூறுகையில், “அனுபவத்தில் இருந்து இசை கற்றுக் கொண்ட இசையமைப்பாளர் இளையராஜாவோடு இணைந்து இதுபோன்ற முயற்சிகள் நடப்பது இசையை ஜனநாயகப்படுத்தும். இந்த மையத்தில் செயல்படுத்தப்படும் பாடப்பிரிவின் நோக்கங்கள் என்ன? மாணவர் சேர்க்கைக்காக தகுதிகள் என்ன என்று அறிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம். இசையமைப்பாளர் இளையராஜாவிடமே கற்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்திதான்,” என்று தெரிவித்தார். சென்னை ஐ.ஐ.டி-யில் அமையவிருக்கும் இந்த மையத்தில் முழு நேரப் பாடப்பிரிவை இளையராஜா வழிநடத்துவாரா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஐ.ஐ.டி நிர்வாகம், “முழு நேர பாடப்பிரிவை நடத்த முடியாவிட்டாலும், இளையராஜா அவர்கள் மிக நெருக்கமாக ஐ.ஐ.டி-யுடன் பணியாற்றுவார், இந்த மையத்துக்கு தொடர்ந்து வழிகாட்டுவார். இந்த மையத்தில் பிற இசைக் கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றுவோம்,” என தெரிவித்துள்ளது. 'பாடல்கள் குறித்து இளையராஜா நேரடியாக விளக்குவார்' இந்த மையத்தின் மூலம் இசை கற்றலை விரிவுபடுத்த முயல்வதாக சென்னை ஐ.ஐ.டி-யில் பொறியியல் வடிவமைப்புத் துறையின் பேராசிரியர் எம்.ராமநாதன் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். “இயற்பியல், வேதியியல் ஆய்வகங்கள் இருப்பது போல் பள்ளிகளில் இசை ஆய்வகங்கள் அமைக்க வேண்டும். வயது வரம்பு இல்லாமல் யார் வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளும் வகையிலான, மாணவர்களுக்கு ஏற்ற பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். இன்னும் இரண்டு மாதங்களில் பயிற்சிப் பட்டறைகள் தொடங்கவுள்ளன. இளையராஜா அவரது குழுவினருடன் இணைந்து ஒரு பாடலை எப்படி இசையமைத்தார்கள் என்று நேரடியாக விளக்குவார்கள்,” என்றார். "இளையராஜாவின் பாடல்களை கேட்கும் போது மனதில் ஒருவித விவரிக்க முடியாத உணர்வு ஏற்படும். இசைக்கும் மனித உணர்வுகளுக்கு இருக்கும் தொடர்பு குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்படும்," என்றார். '3டி பிரிண்டிங்' முறையில் இசைக் கருவிகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இசைக்கருவிகளைத் தயாரிப்பதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்க 3டி தொழில்நுட்பம் கொண்டு அவற்றை அச்சிடலாம் பல விதமான கலாச்சாரங்களை கொண்ட இந்தியாவில் நூற்றுக்கணக்கான இசைகருவிகள் உள்ளன. இவற்றில் பல இன்று அருங்காட்சியகத்தில் மட்டுமே காணப்படுகின்றன. அந்தக் கருவிகளின் வரலாறு, அவற்றின் வடிவமைப்பு பற்றிய ஆய்வுகள் நடைபெறும் என்கிறார் பேராசிரியர் எம்.ராமநாதன். “தமிழ்நாட்டின் யாழ் இன்று பயன்பாட்டில் இல்லை. இது போன்று பல கருவிகள் இந்தியா முழுவதும் இருந்தன, சிலவற்றின் பெயர் கூட நமக்கு தெரியாது,” என்கிறார். இசைக் கருவிகளைத் தயாரிப்பதையும் அவற்றை இசைக்கக் கற்றுக் கொள்வதையும் தொழில்நுட்பத்தைக் கொண்டு எளிமையாக்கலாம் என்கிறார் ராமநாதன். “எப்படி விமானம் ஓட்டுவதற்கு முன்பாக, flight simulator (உண்மையான விமானத்தை ஓட்டுவதை போன்ற மெய்நிகர் அனுபவத்தை தரக்கூடிய தொழில்நுட்பம்) பயன்படுத்துகிறார்களோ அதே போன்று வயலின் போன்ற கருவிகளை மெய்நிகர் அனுபவத்தில் இசைத்து பழகலாம். இசைக்கருவிகளைத் தயாரிப்பதற்கான நேரத்தையும் செலவையும் குறைக்க 3டி தொழில்நுட்பம் கொண்டு அவற்றை அச்சிடலாம். சோதனை முறையில் சென்னை ஐ.ஐ.டி-யில் வயலின் மற்றும் யுகலெலே ஆகிய இசைக்கருவிகளை 3டி பிரிண்டிங்க் முறையில் ஆச்சிடப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மையத்தின் மூலம் முற்றிலும் புதிதான இசைக்கருவிகளை படைப்பதற்கு வாய்ப்புண்டு,” என்கிறார். சென்னை ஐ.ஐ.டி-யில் விருப்பப் பாடங்களாக ‘இசைக் கருவிகளின் அறிவியல்’ மற்றும் ‘கர்நாடக இசைக்கான அறிமுகம்’ ஆகிய பாடங்கள் உள்ளன. https://www.bbc.com/tamil/articles/c722ny1pyrqo
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இறுதிப்போட்டியில் கொல்கத்தா: சன்ரைசர்ஸ் சூறாவளி பேட்டிங்கை சீர்குலைத்த 'அந்த' முடிவு பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் முதல் ஓவரின் 2வது பந்து அது. சரியான லென்த்தில் வீசப்பட்ட அந்த பந்து லேசாக ஸ்விங் ஆகி, ஸ்டெம்பை சிதறடிக்க தனது பேஸ்பால் ஆட்டத்தால் எதிரணிகளை கலங்கடித்து வந்த டிராவிஸ் ஹெட் டக்அவுட் ஆகி வெளியேறினார். 75 ஆயிரம் பேர் நிறைந்திருந்த ஆமதாபாத் அரங்கில் சன்ரைசர்ஸ் அணி ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்களை கொல்கத்தா வீரர்கள் அந்த அதிர்ச்சியியில் இருந்து கடைசி வரை மீளவே விடவில்லை. அடுத்த ஓவரில் மற்றொரு அதிரடி ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா ஆட்டமிழந்தார். 5வது ஓவரில் நிதிஷ் குமர் ரெட்டி, ஷாபாஸ் அகமது என இரு விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழவே சன்ரைசர்ஸ் அணி நெருக்கடியில் சிக்கியது. அவை அனைத்துக்கும் காரணம் ஒரே நபர் மிட்ஷெல் ஸ்டார்க். ரூ.24 கோடிக்கு ஐபிஎல் ஏலத்தில் தன்னை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வாங்கியது சரியே என்பதை இந்த ஒரு போட்டியில் அவர் நிரூபித்துவிட்டார். மிட்ஷெல் ஸ்டார்க்கின் வலிமையே புதிய பந்தில் பந்தை காற்றின் வேகத்துக்கு ஏற்ப பந்தை வீசுவதும், துல்லியம் தான். கிரிக் இன்ஃபோ வலைதள புள்ளிவிவரங்கள்படி, டி20 கிரிக்கெட்டில் மிட்ஷெல் ஸ்டார்க் வீசிய முதல் ஓவர்களில் 67.5 சதவீதம் ஸ்டெம்ப்பை நோக்கி வந்து போல்டாக்கும் அல்லது பேட்டர்களுக்கு அவுட்சைட் எட்ஜாகி கேட்சாகும். இதே பாணியை நேற்றும் கடைபிடித்து சன்ரைசர்ஸ் அணியை ஸ்டார்க் சிதறடித்தார். மிட்ஷெல் ஸ்டார்க்கின் ஆகச்சிறந்த பந்துவீச்சால், ஐபிஎல் டி20 2024 சீசனின் இறுதிப்போட்டிக்கு 4வது முறையாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. அந்த அணி ப்ளே ஆஃப் தகுதிச் சுற்று முதல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வீழ்த்தியது. 4வது முறையாக இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,கொல்கத்தா அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு சென்றுள்ளது. இதற்கு முன் 2012, 2014ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. 2021ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சிஎஸ்கேவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளிலும் பவர் ஹிட்டர்கள் அதிகம் இருப்பதால் இந்த ஆட்டம் ரசிகர்களால் வெகுவாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆட்டம் ஒருதரப்பாக நடந்து முடிந்தது. ஆட்டத்தின் முதல் பாதியில் ஸ்டார்க் தனது மந்திர பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் அணியை பாதி சாய்த்தார். பிற்பகுதியில் தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி தனது பங்களிப்பை செய்து ஒட்டுமொத்தமாக வீழ்த்தினார். பேட்டிங்கில் கொல்கத்தா அணியின் குர்பாஸ், நரைன் இருவரும் பவர்ப்ளே ஓவருக்குள் எதிரணியின் நம்பிக்கையை குலைத்துவிட்டனர். 3வது விக்கெட்டுக்கு கேப்டன் ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் இருவரும் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை வசமாக்கினர். ‘எனக்கு தமிழ் தெரியாது, ஆனால் அவர் தமிழில் பேசுவார்’ பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “ஒவ்வொரு வீரரும் பொறுப்புடன் செயல்பட்டனர். இந்த புத்துணர்ச்சி முக்கியமானது. பல்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்து புத்துணர்ச்சி குறையாமல் வைத்திருப்பது சாதாரணது அல்ல. ஒரேமாதிரியாக விளையாடுவது மிக முக்கியம். கிடைக்கும் ஒவ்வொரு வாயப்பையும் சரியாகப் பயன்படுத்தினோம். சூழலுக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு பந்துவீச்சாளரும் சிறப்பாக செயல்பட்டனர். ஒவ்வொரு வீரரும் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளாமல், பொறுப்புடன் செயல்பட்டனர். குர்பாஸ் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். பந்துவீச்சின் போது நடுப்பகுதி ஓவர்களை சுனில், வருண் பார்த்துக்கொண்டனர். எனக்கும் வெங்கேடஷுக்கும் இடையே ஒரே வித்தியாசம் எனக்கு தமிழ் தெரியாது. ஆனால் என்னிடம் அவர் தமிழில் பேசுவார். இருவரும் சேர்ந்து சந்தோஷமாக பேட் செய்தோம்” என்றார். சன்ரைசர்ஸ் ஏமாற்றம் பட மூலாதாரம்,SPORTZPICS மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணியின் பேட்டிங் மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. குறைந்த ஸ்கோரை வைத்துக்கொண்டு டிபெண்ட் செய்யவும் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டதால், எளிதாக வெற்றியை கொல்கத்தா வசமாக்கியது. சன்ரைசர்ஸ் அணியின் பீல்டிங் படுமோசமாக இருந்தது. முக்கிய கட்டங்களில் பல கேட்சுகளை அந்த அணி வீரர்கள் கோட்டைவிட்டனர். ஸ்ரேயாஸ் ஷாட் அடித்த போது, கையில் விழுந்த பந்தைக் கூட டிராவிஸ் ஹெட் பிடிக்காமல் கோட்டை விட்டார். சன்ரைசர்ஸ் பந்துவீச்சு வழக்கத்துக்கு மாறாக மோசமாக இருந்து. நடராஜன் மட்டுமே ஓவருக்கு 7 ரன்கள் வீதம் கொடுத்திருந்தார். மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஓவருக்கு இரட்டை இலக்க ரன்களில் தான் வாரி வழங்கினர். நடுப்பகுதியில் எதிரணி ரன்சேர்ப்பைக் கட்டுப்படுத்த ஸ்பெலிஸ்ட் பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை. பகுதி நேரப் பந்துவீச்சாளர்களான நிதிஷ் ரெட்டி, ஹெட், விஜயகாந்த் ஆகியோரின் பந்துவீச்சு அந்த அணிக்கு கைகொடுக்கவில்லை. சன்ரைசர்ஸ் அணிக்கு இதோடு வாய்ப்பு முடிந்துவிடவில்லை. ஆமதாபாத்தில் இன்று நடக்கும் ராஜஸ்தான்-ஆர்சிபி இடையேயான வெளியேற்றுதல் (எலிமினேட்டர்) ஆட்டத்தில் வெல்லும் அணியுடன் சன்ரைசர்ஸ் அணி மோதி, அதில் வென்றால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறலாம். வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கும் இறுதிப் போட்டியில் மீண்டும் கொல்கத்தாவை எதிர்கொண்டு சன்ரைசர்ஸ் பழிதீர்க்க முடியும். ஸ்டார்க் மிரட்டல் பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,மிட்ஷெல் ஸ்டார்க்கை பாராட்டும் சக கொல்கத்தா வீரர்கள் சன்ரைசர்ஸ் அணியின் முதுகெலும்பை முதல் 6 ஓவர்களிலேயே மிட்ஷெல் ஸ்டார்க் முறித்துவிட்டார் என்றுதான் கூற வேண்டும். பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் ஸ்டார்க் 3 விக்கெட், அரோரா ஒரு விக்கெட் என 4 விக்கெட்டுகளை இழந்த சன்ரைசர்ஸ் அப்போதே தோல்வியை நோக்கி நடைபோடத் தொடங்கிவிட்டது எனலாம். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த டிராவிஸ் ஹெட்டை முதல் ஓவரின் 2வது பந்திலேயே கிளீன் போல்டாக்கி டக்அவுட் ஆக்கினார் ஸ்டார்க். டி20 ஃபர்மெட்டில் டிராவிஸ் ஹெட்டை டக்அவுட்டில் ஸ்டார்க் ஆட்டமிழக்கச் செய்தது 4வது முறையாகும். டிராவிஸ் ஹெட் தொடர்ந்து 2வது முறையாக இந்த சீசனில் டக்அவுட் ஆகினார். கடைசி லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு டக்அவுட் ஆனார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசினார். நிதானமாக பேட் செய்த அபிஷேக் ஷர்மா 3 ரன்களில் ரஸலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 2024 சீசனில் அனைத்து அணிகளுக்கும் சிம்மசொப்னமாக இருந்து, மிரட்டல் விடுத்த இரு பேட்டர்களும் ஒற்றை ரன்னிலும், டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தது சன்ரைசர்ஸ் அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர். இந்த சீசனில் சன்ரைசர்ஸ் அணிக்கு வெற்றியை எளிதாக்கியதில் பெரும்பங்கு ஹெட், அபிஷேக் ஷர்மா ஆகிய இருவரையே சாரும். அவர்கள் இருவரும் சொற்ப ரன்களில் முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டத்தில் ஆட்டமிழந்த போதே ஏதோ விபரீதம் நடக்க இருக்கிறது என்பது அந்த அணி ரசிகர்களுக்கு புரிந்துவிட்டது. 5வது ஓவரில் ஸ்டார்க் வீசிய 5வது பந்து அவுட்சைட் ஆஃப்சைடில் சென்றதை நிதிஷ் குமார் ரெட்டி தட்டிவிட விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்சானது. அடுத்து களமிறங்கிய ஷாபாஸ் அகமது க்ளீன் போல்டாகி வெளியேற, ஸ்டார்க்கிற்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கிடைத்தன. பவர்ப்ளே ஓவருக்குள் 45 ரன்களுக்கு சன்ரைசர்ஸ் அணியின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி, அந்த அணியின் முதுகெலும்பை உடைத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. நம்பிக்கையளித்த திரிபாதி பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,ராகுல் திரிபாதி 3வது வீரராகக் களமிறங்கிய ராகுல் திரிபாதி மற்றும் கிளாசன் ஓரளவுக்கு நிதானமாக ஆடி சன்ரைசர்ஸ் அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஹர்சித் ராணா, அரோரா பந்துவீச்சில் சிக்ஸர், பவுண்டர்களாக வெளுத்த திரிபாதி, 29 பந்துகளில் அரைசதம் அடித்தார். வழக்கத்துக்கு மாறாக பொறுமையாக பேட் செய்த கிளாசன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் மட்டுமே அடித்த நிலையில், 32 ரன்களில் வருண் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்று எல்லைக்கோடு அருகே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 35 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்த திரிபாதி, நரைன் வீசிய 14-வது ஓவரில் ரஸலால் ரன்அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து சன்ரைசர்ஸ் அணி மீண்டும் நெருக்கடியில் சிக்கியது. இம்முறை அந்த அணியை காப்பாற்ற யாரும் இருக்கவில்லை. அடுத்த வந்த சன்வீர் சிங், அதே ஓவரில் நரைன் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி டக்அவுட்டில் வெளியேறினார். அதன்பின் அப்துல் சமது(30), புவனேஷ்வர்(0) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். கேப்டன் கம்மின்ஸ் கடைசி நேரத்தில் கேமியோ ஆடி 30 ரன்கள் சேர்த்து கௌரவமான ஸ்கோரை எட்ட உதவினார். 101 ரன் வரை 4 விக்கெட்டுகளை இழந்திருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 58 ரன்களுக்குள் மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்டார்க் 4 ஓவர்கள் வீசி 34 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளைச் சாய்த்து ஆட்டநாயகன் விருது வென்றார். சன்ரைசர்ஸ் சூறாவளி பேட்டிங்கை சீர்குலைத்த மோசமான முடிவு பட மூலாதாரம்,SPORTZPICS ஆமதாபாத்தில் நேற்று பயன்படுத்தப்பட்ட ஆடுகளம், சிவப்பு, கறுப்பு மண் கலந்த ஆடுகளம். இதனால் ஆட்டத்தின் தொடக்கத்தில் ஆடுகளம் சிறிது ஈரப்பதத்துடன் இருந்ததால், பந்து நன்றாக ஸ்விங் ஆகி, வேகமாக பேட்டர்களை நோக்கி வந்ததால், விக்கெட்டுகள் மளமளவென சன்ரைசர்ஸ் அணிக்குச் சரிந்தது. ஆனால், பிற்பகுதியில் பந்து பழையதான பிறகு சன்ரைசர்ஸ் பேட்டர்கள் அடித்து ஆடவும் உதவியாக இருந்தது. ஆக சன்ரைசர்ஸ் அணியின் தோல்வியில் ஆடுகளத்திற்கு முக்கிய பங்கு உண்டு. ஆடுகளத்தை சரியாக கணிக்காமல் விட்டதும், டாஸ் வென்றதும் வழக்கம்போல் பேட்டிங்கை தேர்வு செய்ததும் தவறான முடிவாக அமைந்துவிட்டது. "விரைவில் மீண்டு வருவோம்" பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் முக்கியமான ஆட்டத்தில் தோல்வி அடைந்தாலும், சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் சிறிது கூட மனம் தளராமல் பேசி, உற்சாக ஊற்றை வற்றாமல் பார்த்துக்கொண்டார். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில் “இந்த தோல்வியிலிருந்து விரைவாக மீண்டு வருவோம். சரியான திட்டமிடல் இல்லாவிட்டால் இதுபோன்ற தோல்விகள் டி20 போட்டியில் வரத்தான் செய்யும். பேட்டிங்கில் சரியான தொடக்கம் அமையவில்லை, பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்படவில்லை. உம்ரான் மாலிக்கை கொண்டுவர திட்டமிட்டோம், ஆனால் சன்வீர் பேட்டிங் செய்வார் என்பதால் வைத்திருந்தோம். கொல்கத்தா அணியினர் நன்றாக பேட் செய்தனர், பந்துவீசினர். இந்த தோல்வியிலிருந்து விரைவில் வெளியேவருவோம். புதிய இடம் எங்களுக்காக காத்திருக்கிறது” எனத் தெரிவித்தார். பவர் ப்ளேயில் பாதி வெற்றி 159 ரன்கள் எனும் குறைந்த இலக்கை துரத்திய அணிக்கு பில் சால்ட்டுக்குப் பதிலாக களமிறங்கிய குர்பாஸ் நல்ல தொடக்கம் அளித்து 23 ரன்களில் நடராஜன் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆபத்தான பேட்டர் சுனில் நரைன் 4 பவுண்டர்கள் உள்பட 21 ரன்களில் கம்மின்ஸ் பவுன்சரில் விக்கெட்டை இழந்தார். பவர்ப்ளே ஓவருக்குள் 63 ரன்கள் சேர்த்து இருவரும் ஆட்டத்தை பாதி முடித்துக் கொடுத்தனர். வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் அரைசதம் பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,அரைசதம் அடித்த வெங்கடேஷ் 3வது விக்கெட்டுக்கு வெங்கடேஷ், ஸ்ரேயாஸ் இருவரும் சேர்ந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 3வது விக்கெட்டுக்கு இருவரும் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். வெங்கடேஷ் அதிரடியாக ஆடி பவுண்டரி, சிக்ஸர்கள் விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்று 28 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் வெங்கடேஷ் கணக்கில் சேரும். வெங்கடேஷ் அரைசதம் அடித்ததும், பொறுமையிழந்த கேப்டன் ஸ்ரேயாஸும் அதிரடியைக் கையில் எடுத்தார். டிராவிஸ் ஹெட் வீசிய 14வது ஓவரில் ஸ்ரேயாஸ் 3 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து 23 பந்துகளில் அரைசதம் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். வெங்கடேஷ் 51, ஸ்ரேயாஸ் 58 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றி பெற வைத்தனர். https://www.bbc.com/tamil/articles/ck557z24045o
-
பலஸ்தீன் அரசினை அங்கீகரிக்க ஐரோப்பிய நாடுகள் தயாராகின்றன
பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கப்போவதாக நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் அறிவிப்பு - தூதுவர்களை மீள அழைக்கின்றது இஸ்ரேல் Published By: RAJEEBAN 22 MAY, 2024 | 02:19 PM நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அடுத்தவாரம் அங்கீகரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள நிலையில் இந்த நாடுகளிற்கான தங்கள் தூதுவர்களை இஸ்ரேல் உடனடியாக மீள அழைத்துள்ளது. பாலஸ்தீன தேசம் என்ற ஒன்று இல்லாமல் மத்தியகிழக்கில் அமைதி நிலவாது என நோர்வேயின் பிரதமர் ஜொனஸ் கர் ஸ்டோர் தெரிவித்துள்ளார். மே 28ம் திகதி நோர்வே பாலஸ்தீன தேசத்தை உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். இரண்டு தேசம் தீர்வே மத்தியகிழக்கில் அமைதிக்கு அவசியமான விடயம் என தெரிவித்துள்ள பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினரால்லாத நோர்வே இரண்டு தேசம் தீர்விற்கு உறுதியான ஆதரவை வெளியிட்டு வந்துள்ளது. இரண்டு தேசம் கொள்கையை ஆதரிக்காத ஹமாஸ் அமைப்பும் ஏனைய பயங்கரவாத குழுக்களும் இஸ்ரேலுமே பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன என நோர்வே பிரதமர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184227
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வீழ்த்தி இறுதிப் போட்டியில் முதல் அணியாக நுழைந்தது கொல்கத்தா Published By: VISHNU 22 MAY, 2024 | 01:15 AM (நெவில் அன்தனி) அஹமதாபாத், நரேந்திர மோடி விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (21) இரவு நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் முதலாவது தகுதிகாண் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை 8 விக்கெட்களால் வெற்றிகொண்ட கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதல் அணியாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. அப் போட்டியில் சகலதுறைகளிலும் அபார ஆற்றல்களை வெளிப்படுத்திய முன்னாள் சம்பியன்களான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 6.2 ஓவர்கள் மீதமிருக்க மிக இலகுவாக வெற்றிபெற்று நான்காவது தடவையாக இறுதிப் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. 2012இலும் 2014இலும் சம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2021இல் இரண்டாம் இடத்தைப் பெற்றது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தினால் நிர்ணயிக்கப்பட்ட 160 ஓட்டங்கள் என்ற சுமாரான மொத்த எண்ணிக்கையை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 13.4 ஓவர்களில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ரஹ்மத்துல்லா குர்பாஸ் (23), சுனில் நரேன் (21) ஆகிய இருவரும் 3.2 ஓவர்களில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். அவர்கள் இருவரும் 23 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். அடுத்து ஜோடி சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர்களான வெங்கடேஷ் ஐயர், அணித் தலைவர் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகிய இருவரும் எதிரணி பந்துவீச்சாளர்களை மிக இலகுவாக எதிர்கொண்டு ஓட்டங்களைக் குவித்து வெற்றியை உறுதி செய்தனர். அவர்கள் இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 44 பந்துகளில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஷ்ரேயாஸ் ஐயர் 24 பந்துகளில் 58 ஓட்டங்களுடனும் வெங்கடேஷ் ஐயர் 28 பந்துகளில் 51 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இருவரும் தலா 5 பவுண்டறிகளையும் 4 சிக்ஸ்களையும் விளாசினர். தங்கராசு நடராஜன், பெட் கமின்ஸ் ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர். விஜயகாந்த் வியாஸ்காந்த்துக்கு இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீச முடியாமல் போனது. முன்னதாக இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது. அவ்வணியின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ட்ரவிஸ் ஹெட் (0), அபிஷேக் ஷர்மா (3), நிட்டிஷ் குமார் ரெட்டி (9), ஷாஹ்பாகஸ் அஹ்மத் (0) ஆகிய நால்வரும் வெளியேற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் தடுமாற்றம் அடைந்தது. (5 ஓவர்கள் நிறைவில் 39 - 4 விக்.) அதன் பின்னர் ராகுல் த்ரிபதியும் ஹென்றிச் க்ளாசனும் 5ஆவது விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் சரிவை ஓரளவு சீர் செய்தனர். எனினும் சீரான இடைவெளியில் அவர்கள் இருவரும் ஆட்டம் இழந்தனர். ராகுல் த்ரிபதி 55 ஓட்டங்களையும் க்ளாசன் 32 ஓட்டங்களையும் பெற்றனர். தொடர்ந்து மேலும் 3 விக்கெட்கள் சரிய 16 ஓவர்கள் நிறைவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் மொத்த எண்ணிக்கை 126 ஓட்டங்களாக இருந்தது. எனினும் அணித் தலைவர் பெட் கமின்ஸ் (30), விஜயகாந்த் வியாஸ்காந்த் (7 ஆ.இ) ஆகிய இருவரும் கடைசி விக்கெட்டில் 33 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கை 150 ஓட்டங்களைக் கடக்க உதவினர். பந்துவீச்சில் மிச்செல் ஸ்டாக் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வருண் சக்கரவர்த்தி 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக். https://www.virakesari.lk/article/184177
-
'கலப்பு பொறிமுறை வேண்டாம்' தமிழ்த் தாய்மார்கள் மன்னிப்புச் சபையின் தலைவரிடம் வலியுறுத்தல்
Published By: VISHNU 21 MAY, 2024 | 11:55 PM இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை அரச பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த அல்லது அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் சென்ற தமது உறவினர்களுக்கு சர்வதேச பொறிமுறையின் ஊடாக நீதி வழங்கப்பட வேண்டுமென யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பின் தலைவரிடம் வலியுறுத்தியுள்ளனர். மே 18, 2009 இல் போர் முடிவுக்கு வந்த தினத்தில் இருந்து, தமிழ் மக்களுக்கு நீதி மறுக்கப்பட்ட 15ஆவது வருடத்தில், முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொள்வதற்காக இலங்கை வந்திருந்த சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்டிடம் (Agnes Callamard), நினைவேந்தல் தினத்திற்கு முன்தினம் முல்லைத்தீவில் நடைபெற்ற கலந்துரையாடலில் தமிழ் தாய்மார்கள் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளனர். ஏழு வருடங்களாக தனது அன்புக்குரியவர்களைத் தேடும் இடைவிடாத பயணத்தின் போது புலனாய்வு அமைப்புகளின் அச்சுறுத்தல்கள் குறித்தும் அக்னஸ் கலமார்டிடம் தெளிவுபடுத்தியதாக, சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி மரியசுரேஷ் ஈஸ்வரி தெரிவித்தார். “எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதற்கு இலங்கையில் நீதி கிடைக்காது. சர்வதேச பொறிமுறைக்குள் கொண்டுபோய் எங்களுக்கான நீதி பெற்றுத்தர வேண்டும். மீண்டும் மீண்டும் ஆணைக்குழுக்களை உருவாக்கி இலங்கையில் விசாரணைகள் செய்யக்கூடாது என்பதையும், நாங்கள் எங்கள் உறவுகளை அவர்களிடம் எப்படி கையளித்தோம். எங்களை அரசாங்கம் எப்படி விசாரணை செய்கிறது. புலனாய்வுத்துறை எங்களை எப்படி அச்சுறுத்துகிறார்கள். எங்களை போராட்டங்களை எவ்வாறு முறியடிக்கின்றார்கள் என்பதை எடுத்துக்கூறினோம்.” வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள எட்டு மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் பங்கேற்ற கலந்துரையாடலின் பின்னர், அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் தலைவி தம்பிராசா செல்வராணி, அன்புக்குரியவர்களுக்கான நீதிக்கான போராட்டத்தில் கலப்பு நீதிமன்றத்தை எவ்வகையிலும் ஏற்கப்போவது இல்லை என்ற விடயத்தை சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தியதாக தெரிவித்தார். “எங்களுக்கு கலப்பு நீதிமன்றத்தின் மீது நம்பிக்கையில்லை. கலப்பு நீதிமன்றத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம். எங்களுக்கு சர்வதேச நீதிமன்றம் வேண்டும் என்பதை நாம் உறுதிப்படுத்தினோம். அதில் வெளிநாட்டு நீதவான்களை வைப்போம் என அவர் கூறினார். அவர்கள் வெளிநாட்டு நீதிபதிகளாக இருந்தாலும் சட்டத்தரணிகள் இங்கு உள்ளவர்கள் தானே. இங்குள்ளவர்களிடம் எங்கள் பிரச்சினைகளை சொல்ல முடியாது. ஆனால் சர்வதேச பொறிமுறைதான் எங்களுக்கு சரி. அது நடந்தால் நாங்கள் சாட்சியமளிக்க தயாராக இருக்கின்றோம்.” இலங்கைக்கு எதிரான போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக கலப்பு நீதிமன்றத்தை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பரிந்துரைத்துள்ளது. பல வருடங்களாக இராணுவத்தினரால் பலவந்தமாக ஆக்கிரமிக்கப்பட்டு இன்னும் விடுவிக்கப்படாத தமிழ் மக்களின் காணிகள் தொடர்பிலும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளரிடம் தெளிவுபடுத்தியதாக தெரிவித்த தமிழ்த் தாய்மார்கள் மேலும் தெரிவிக்கையில், போரின் இறுதி நாட்களில், கரையோரப் பகுதியில் சிக்கி, எறிகணை வீச்சு, வான்வழித் தாக்குதல், பீரங்கித் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற முடியாமல் தவித்த தமிழ் மக்களை பட்டினிச் சாவில் இருந்து காப்பாற்ற உதவிய முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றுச் சிறப்பு குறித்தும் அவருக்கு விளக்கமளித்ததாக குறிப்பிட்டனர். வன்னி மண்ணுக்குள் காலடி எடுத்து வைத்ததன் மூலம், வெளிநாட்டில் இருந்து பெற்றுக்கொண்ட தகவல்களைக் காட்டிலும், போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்து கொள்ள முடிந்ததாக, சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கலமார்ட் தெரிவித்ததாக தமிழ்த் தாய்மார்கள் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தனர். இந்தக் கூட்டத்திற்கு அடுத்த நாள் முள்ளிவாய்க்கால் மண்ணில் நடைபெற்ற தமிழ் இனப்படுகொலை நினைவேந்தலில் கலந்து கொண்ட அக்னஸ் கலமார்ட், இந்த நினைவேந்தல் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு சர்வதேச சமூகம் தவறியதை நினைவுபடுத்துவதாக ஊடகங்களிடம் தெரிவித்தார். “இன்றைய ஆண்டு நிறைவானது இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டு ஆயுத மோதலில் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி வழங்குவதில் இலங்கை அதிகாரிகள் மற்றும் சர்வதேச சமூகத்தின் கூட்டுத் தோல்வியின் கடுமையான நினைவூட்டலாகும். 15 வருடங்களுக்கு முன்னர், போரின் இறுதி நாட்களில் எண்ணற்ற பொதுமக்கள் உயிர் இழந்த அதே இடத்தில் நிற்பது வருத்தமளிப்பதாக உள்ளது." காசா, உக்ரைன் உள்ளிட்ட போர் மோதல்கள் மீது உலகின் கவனம் குவிந்துள்ளதால் 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் நடந்த குற்றங்களுக்கு நீதி வழங்கும் பொறுப்பை இழக்கும் அபாயம் தொடர்பிலும் அவர் எச்சரித்துள்ளார். சர்வதேச சட்டத்தின் கீழ் குற்றங்கள் மற்றும் மோதலின் இரு தரப்பிலும் உள்ளவர்கள் செய்த சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்களின் பிற மீறல்கள் பற்றிய நம்பகமான ஆதாரங்களை ஐ.நா விசாரணைகள் கண்டறிந்துள்ள போதிலும், இது குறித்து சுயாதீனமான அல்லது பாரபட்சமற்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டினார். "இதற்கிடையில், மோதலின் போது பலவந்தமாக காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களைத் தேடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு எவ்வளவு காலம் வீணாகிறார்கள் என்பதை கேட்பது உண்மையிலேயே மனவேதனை அளிக்கிறது." முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இரண்டு நாட்களின் பின்னர், அரசாங்கத்தின் போர் வெற்றி நினைவேந்தலின் ஒரு நாளின் பின்னரும் அக்னஸ் கலமார்ட் இலங்கை வெளிவிவகார அமைச்சரை கொழும்பில் சந்தித்திருந்தார். எமது தேசத்தின் சுதந்திரம் மற்றும் அமைதிக்காக இலங்கை இராணுவத்தின் 26,000ற்கும் மேற்பட்டோர் தமது இன்னுயிர்களை தியாகம் செய்ததாகவும், ஆயிரக்கணக்கானோர் தமது உடல் அங்கங்களை தியாகம் செய்ததாகவும் அமைச்சர் கூறியிருந்தார். "சிறியளவு உள்நாட்டு மக்களை திருப்திப்படுத்த வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடுபவர்களால் இலங்கையின் உள்விவகாரங்களில் வெளியுலக செல்வாக்கு கொண்டு வரப்படுவது குறித்து நான் அதிருப்தி தெரிவித்தேன்.” என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் (முன்னர் ட்விட்டர்) குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/184176
-
தமிழ்நாட்டில் 15 நாளில் 100 மிமீ மழை - அதீத வெப்பத்திற்கும் அதிகப்படியான மழைக்கும் என்ன தொடர்பு?
பட மூலாதாரம்,UGC கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு முன்பாக வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரித்த நிலை மாறி தற்போது சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை பெய்கிறது. இது வழக்கமான கோடைக்கால மழைப்பொழிவு தானா? இந்த கோடைக்காலத்தில் இருந்த அதீத வெயிலுக்கும் தற்போதைய அதிகப்படியான மழைக்கும் தொடர்பு இருக்கிறதா? தென்மேற்குப் பருவமழை உரிய காலத்தில் தொடங்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கரூரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 112 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. அதேசமயம், தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கோடை மழையும் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கோடைக்காலம் தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவில் கோடைக்கால வெப்பம் சமீப காலமாக இயல்பை விட அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக சென்னையில் கடந்த ஆண்டு பதிவான 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை விட ஒரு டிகிரி அதிகரிக்கலாம் என்று முன்னதாக பிபிசி தமிழிடம் பேசியிருந்த பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த பிரபாகரன் வீரஅரசு தெரிவித்தார். ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களில் தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரித்தது. குறிப்பாக கரூர், ஈரோடு, சேலம், வேலூர், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, தருமபுரி என பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை 100 டிகிரியை தாண்டி பதிவானது. அதே நேரத்தில், மறுபுறம் கடந்த சில தினங்களாக கோடை மழையும் அதிகரித்துள்ளதன் காரணமாக குற்றாலம், தேனி, கொடைக்கானல் உள்ளிட்ட சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் சூழல் ஏற்பட்டது. பட மூலாதாரம்,UGC கோடைமழை தமிழகத்தில் கோடைமழையை பொருத்தவரை இந்த பருவத்தில், இதுவரை 115மில்லி மீட்டர் மட்டுமே பெய்துள்ளதாக நம்மிடம் தெரிவித்தார் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன். இது வழக்கமான மழைதான் என்றும், இதற்கு முன்பே 200 மில்லி மீட்டருக்கு அதிகமாக கூட கோடை மழை பெய்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார். “2023இல் கூட அதிகமான மழைப்பொழிவு இருந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் கோடைமழை பொழியும் இடம் மாறுகிறது. அந்த வகையில் இந்த முறை மேற்கு தொடர்ச்சி மழையை ஒட்டி மழை பொழிந்து வருகிறது” என்று கூறினார் அவர். ஆனால், “மூன்று மாத சராசரியை மட்டும் கணக்கில் எடுத்தால் இது அதிகமான மழைப்பொழிவே” என்று கூறுகிறார் தனியார் வானிலை ஆய்வாளரான பிரதீப் ஜான். பட மூலாதாரம்,IMD படக்குறிப்பு,கடந்த 15 நாட்களில் அதிக மழை பொழிந்ததற்கான வானிலை ஆய்வு மையத்தின் தரவுகள். இந்திய வானிலை மையத்தின் தினசரி மழைப்பொழிவு அளவு தரவுகளை சுட்டிக்காட்டும் அவர், “மார்ச், ஏப்ரலில் சுத்தமாக மழை பொழியாமல், மே ஒன்றாம் தேதி -19 சதவீதத்தில் இருந்த அளவு, இன்று +9 என்ற நிலையை எட்டியுள்ளது. இது நாளை இன்னும் அதிகரிக்கும். மார்ச் 1ஆம் தேதியில் இருந்து மே 1ஆம் தேதி வரை சுத்தமாக மழை இல்லை. ஆனால், மே 5ம் தேதியில் இருந்து கடைசி 15 நாட்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமாக மழை பொழிந்துள்ளது.” “ஒட்டுமொத்த கோடைகாலத்தை எடுத்துக் கொண்டால் இது குறைவான மழைப்பொழிவுதான். ஆனால், மே மாதம் மட்டும் கணக்கிட்டால் இது அதிகமான மழைப்பொழிவு. ஒரு ஆண்டில் நமக்கு கிடைக்கும் சராசரி மழையே 918 மில்லி மீட்டர் தான். அதில் 10 சதவீதம் கடந்த 15 நாட்களில் மட்டுமே பொழிந்துள்ளது” என்று கூறுகிறார் பிரதீப் ஜான். படக்குறிப்பு,“வெப்பம் அதிகமாக இருப்பதால் மட்டுமே கோடை மழை அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது" என்கிறார் வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன். அதீத வெப்பத்திற்கும் அதிக மழைக்கும் தொடர்பு உண்டா? கோடை மழை என்பது மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்களில் பொழியும் மழை என்று குறிப்பிடும் பாலச்சந்திரன் இந்தாண்டும் இயல்பான அளவே பெய்துள்ளது என்கிறார். இதுகுறித்து அவர் பேசுகையில், “வெப்பம் அதிகமாக இருந்தால் கோடை மழை அதிகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. காற்றலைகள் உட்பட மழைப்பொழிவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பொதுவாகவே வெப்பம் அதிகமானால் மழை வரும் என்று அர்த்தம் கிடையாது” என்று கூறினார். அதிக வெப்பம் நிலவி, நிலம் வறண்டு போகும்போது மழை பெய்து அதை சமன் செய்யும் என்று கூறும் தனியார் ஆய்வாளர் பிரதீப் ஜானும், வெப்பம் அதிகமாக இருந்ததால் மழை பொழிகிறது என்பது உண்மையல்ல என்கிறார். சமீப காலமாக திடீர் வெயிலும், உடனே மழையும் பொழிவதற்கான காரணம் என்ன என்று கேட்டபோது, அதுதான் வெப்பச்சலன மழை என்று தெரிவித்தார் அவர். "வழக்கமாக மே மாதங்களில் வெப்பச்சலன மழை ஏற்படும், எனினும் அது பரவலாக இருக்காது. தற்போது தமிழகத்திற்கு அருகில் உருவான மேலடுக்கு சுழற்சி காரணமாக பரவலாக மழை பெய்துள்ளது. இந்த தாக்கம் இன்னும் இரண்டு நாட்களுக்கு இருக்கும், அதற்கு பின் மழை குறைந்து விடும்" என்கிறார் பிரதீப் ஜான். பட மூலாதாரம்,TAMIL NADU WEATHERMAN / X படக்குறிப்பு,தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை நன்றாக பொழிந்து அங்குள்ள நீர்பகுதிகள் நிறைந்து காணப்படலாம் என்று கூறுகிறார் பிரதீப் ஜான். வெப்பம் பருவமழையில் தாக்கத்தை ஏற்படுத்துமா? மே மாத இறுதியில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரத்திற்குள் 2024ஆம் ஆண்டிற்கான பருவமழை காலம் தொடங்க உள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் சில நாட்களாக கோடை மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், கடந்த 19.5.2024 அன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தாண்டு வழக்கத்தை விட மூன்று நாட்கள் முன்னதாகவே அந்தமான் கடல்பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் கனமழை, மிதமான மழை உள்ளிட்ட எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் அடுத்த சில தினங்களுக்கு, “ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கும் சமீபமாக நிலவி வந்த அதீத வெயிலுக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா? இதனால், எதிர்வரும் பருவமழையில் தாக்கம் ஏற்படுமா என்ற கேள்வியை பாலச்சந்திரனிடம் முன்வைத்தோம். அவர் பேசுகையில், “இப்போது நல்ல வெயில் அடிக்கிறது என்பதற்காக பருவமழை நன்றாக பொழியும் என்று கூற முடியாது. வானிலையை பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட நிகழ்வை வைத்து கணித்து விட முடியாது. சுற்றுசூழல் மாற்றங்கள், பருவநிலை மாற்றம், இவற்றின் தொடர்ச்சியாக வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றம் என பல்வேறு காரணிகளை பொறுத்துதான் வானிலையின் இறுதி முடிவு கிடைக்கும்.” “இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக பருவமழை நன்றாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதில் சில காலகட்டங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கும், சில காலகட்டங்களில் குறைவாக இருக்கும். தமிழ்நாட்டில் பெரும்பான்மையான பகுதிகளில் நல்ல மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjqq382gqg9o
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
இந்தியாவில் மிகப் பெரிய தாக்குதல் நடத்த சதி: ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தகவல் 22 MAY, 2024 | 10:34 AM அகமதாபாத்: இலங்கையில் இருந்து சென்னை வழியாக குஜராத் சென்ற 4 ஐ.எஸ்.தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் நாசவேலைகளில் ஈடுபட அவர்கள் திட்டமிட்டிருந்தது விசாரணை யில் தெரியவந்துள்ளது. இலங்கையை சேர்ந்த ஐ.எஸ். தீவிரவாதிகள் குஜராத்தின் அகமதாபாத்துக்கு வருவதாக அந்த மாநில தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸாருக்கு சமீபத்தில் ரகசிய தகவல் கிடைத்தது. விசாரணையில், இலங்கையை சேர்ந்த நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேர், கொழும்புவில் இருந்து சென்னை வழியாக அகமதாபாத்துக்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து இலங்கை புலனாய்வு துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில், “4 பேரும் என்டிஜே என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள். தற்போது 4 பேரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் இணைந்து செயல்படுகின்றனர்’ என்று தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து கடந்த 19-ம் தேதி அகமதாபாத் விமான நிலையத்தில் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீஸார் சாதாரண உடையில் மறைந்திருந்தனர். அன்றிரவு நுஸ்ரத் கனி, நப்ரான், பரீஸ் பரூக், ரஸ்தீன் ரஹீம் ஆகிய 4 பேர் இண்டிகோ விமானத்தில் அகமதாபாத் விமான நிலையத்தில் தரையிறங்கினர். அவர்களை போலீஸார் கைது செய்தனர். இது குறித்து குஜராத் டிஜிபி விகாஸ் சஹாய், குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு உயரதிகாரிகள் ஹரிஷ் உபாத்யாயா, சுனில் ஜோஷி ஆகியோர் கூறியதாவது: பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ்.தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர் அபு பக்கர் உத்தரவின்பேரில் 4 பேரும் செயல்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ் மட்டுமே பேசுகின்றனர். நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வருகிறது. அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் மே 21, 22-ல் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. இந்த சூழலில், நாட்டில் மிகப்பெரிய தாக்குதல் நடத்த அவர்கள் திட்டம் தீட்டிஇருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. பாஜக மூத்த தலைவர்கள் நுபுர் சர்மா, ராஜா சிங், உப்தேஷ் ரானாவை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டியதும் தெரியவந்துள்ளது. அவர்களது செல்போன்களை ஆய்வு செய்ததில் இதுதொடர்பாக பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. ஒரு தீவிரவாதியின் செல்போனில் அகமதாபாத்தின் நர்மதா நதி கால்வாயின் புகைப்படம் இருந்தது. சம்பந்தப்பட்ட இடத்தில் போலீஸார் ஆய்வு செய்து, 20 தோட்டாக்களுடன் கூடிய, பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட 3 துப்பாக்கிகள், ஐ.எஸ். தீவிரவாத இயக்க கொடி ஆகியவற்றை கைப்பற்றினர். இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை: பொதுவாக தீவிரவாத செயல்கள், அதிதீவிர குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை மாநில போலீஸார் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். அவர்களோடு தொடர்பில் இருப்பவர்களும் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள். அதிலும், தமிழக காவல் துறையின் ‘க்யூ’ பிரிவு போலீஸார் உன்னிப்பாக கண்காணிப்பார்கள். குறிப்பாக, இலங்கையில் இருந்து சென்னை விமான நிலையம் வரும் பயணிகள் யார்? அவர்களது பின்னணி என்ன என்பது கவனிக்கப்படும். ஆனால், தற்போது சென்னையில் இருந்து நழுவிச் சென்று குஜராத்தில் கைது செய்யப்பட்டுள்ள 4 தீவிரவாதிகளும் சென்னையில் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இவர்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து வகையாக உளவு பிரிவு போலீஸாரின் பார்வையில் இருந்தும் தப்பியது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் விரிவான விசாரணை நடத்த போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். க்யூ பிரிவு போலீஸாரும் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர். இனி வரும் காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துவிட கூடாது என்பதற்காகவே விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/184193
-
நடுவானில் கடுமையாக குலுங்கிய சிங்கப்பூர் எயர்லைன்ஸ் விமானம் -பயணி ஒருவர் பலி
நடுவானில் திடீரென குலுங்கிய விமானம், தூக்கி வீசப்பட்ட பயணிகள் - சிங்கப்பூர் விமானத்திற்குள் என்ன நடந்தது? பட மூலாதாரம்,REUTERS கட்டுரை தகவல் எழுதியவர், ஜோயல் கிண்டோ, சைமன் ஃப்ரேசர் பதவி, பிபிசி செய்திகள் 21 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் லண்டனில் இருந்து கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடுமையான கொந்தளிப்பில் (டர்புலன்ஸ்) சிக்கிக் குலுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் சிங்கப்பூர் செல்வெவேண்டிய அந்த போயிங் 777-300ER விமானம் பாங்காக்கிற்கு திருப்பி விடப்பட்டது. உள்ளூர் நேரப்படி 15:45 மணிக்கு (இந்திய நேரப்படி மதியம் 1:30 மணி) அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் நிலை திடீரெனத் தாழ்வானதாகவும், மக்கள் மற்றும் பொருட்கள் கேபினைச் சுற்றித் தூக்கியெறியப்பட்டதாகவும் பயணிகள் தெரிவித்தனர். விமானத்தில் 211 பயணிகள் மற்றும் 18 பணியாளர்கள் இருந்ததாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த ஜெஃப் கிச்சன் என்ற 73 வயது நபர் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் இறந்திருக்கலாம் என்று பாங்காக்கில் உள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். அவரது மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது நிலை குறித்து தகவல்கள் இல்லை. பட மூலாதாரம்,REUTERS பட மூலாதாரம்,REUTERS பயணிகள் சொல்வது என்ன? பிபிசி-யிடம் பேசிய, அந்த விமானத்தில் பயணம் செய்த லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ, "காபி என்மீது முழுவதும் கொட்டிவிட்டது" என்று கூறினார். "விமானத்தின் நிலை தாழ்ந்த சில வினாடிகளில், ஒரு பயங்கரமான அலறல் போன்ற ஒரு சத்தம் கேட்டது," என்றார். இந்தக் கொந்தளிப்பு நிலையடைந்தவுடன், 'தலையில் காயம்' ஏற்பட்டு 'வேதனையால் அலறிய' ஒரு பெண்ணுக்குத் தன்னால் உதவ முடிந்தது என்று ஆண்ட்ரூ கூறினார். பாங்காக்கில் உள்ள விமான நிலையத்தின் ஒரு சிறப்புப் பகுதியில் பயணிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ஆண்ட்ரூ. "எனக்கு வேறொரு விமானம் கிடைக்கும். இவை மிகவும் அரிதான நிகழ்வுகள்," என்று அவர் கூறினார். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் பேசிய மற்றொரு பயணி, விமானம் திடீரென "மேல்நோக்கிச் சாய்ந்து, நடுங்கியது," என்றார். "நான் அடுத்து நடக்கப் போவதற்காக மனதளவில் தயாராகத் துவங்கினேன். திடீரென்று விமானத்தின் நிலை பயங்கரமாகத் தாழ்ந்தது. அதனால் அமர்ந்திருந்த மற்றும் சீட்பெல்ட் அணியாத அனைவரும் உடனடியாக விமானத்தின் மேற்கூரையில் சென்று மோதினர்," என்று 28 வயதான மாணவர் ஸஃபரான் ஆஜ்மீர் கூறினார். "சிலரது தலை பேக்கேஜ் கேபின்களின் மேல் இடித்து, அதைக் குழியாக்கி, விளக்குகள் மற்றும் முகமூடிகள் இருக்கும் இடங்களில் மோதி அவ்விடங்கள் உடைந்தன," என்றார். பட மூலாதாரம்,REUTERS விமானத்திற்குள் என்ன நடந்தது? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321 இல் பயணித்த ஒரு பயணி, பிபிசி 5 லைவ்விடம் பேசியபோது, "மிகவும் இயல்பான" பயணம் திடீரென மோசமானதாக மாறியது என்று கூறினார். லண்டனைச் சேர்ந்த ஆண்ட்ரூ, தனது பல ஆண்டு விமான பயண அனுபவத்தில் அந்த கொந்தளிப்பை "நம்ப முடியாத அளவிற்கு கடுமையானது" என்று விவரித்தார். விமானத்தின் இந்த மோசமான நிலை சில வினாடிகள் மட்டுமே நீடித்ததாகத் தோன்றினாலும், அதன் பிறகு நடந்த காட்சி "பயங்கரமானது" என்று ஆண்ட்ரூ கூறினார். "தலையில் பயங்கர காயத்துடன் இரத்தம் தோய்ந்த ஒரு வயதான பெண்மணி" இருப்பதைப் பார்த்ததை அவர் நினைவு கூர்ந்தார், மற்றொரு பெண் "முதுகில் ஏற்பட்ட வலியால் கத்தினார்". மாரடைப்பால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் பிரிட்டிஷ் நபரின் அருகில் அமர்ந்திருப்பதாகவும், விமானத்தின் எஞ்சிய பயண நேரம் முழுமையும் தரையில் படுத்துக் கொள்ள வேண்டிய அளவுக்கு மிகவும் மோசமாக காயமடைந்த மற்றொரு நபரைப் பார்த்ததாகவும் ஆண்ட்ரூ கூறினார். பாங்காக்கில் சிகிச்சை விமானத்தில் இருந்த 31 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள பயணிகள் மற்றும் பணியாளர்கள் பாங்காக்கில் உள்ள சுவர்ணபூமி சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதிக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விமான நிறுவனம் தாய்லாந்து அதிகாரிகளுடன் இணைந்து பயணிகளுக்கு மருத்துவ உதவிகளைச் செய்து வருவதாகவும், கூடுதல் உதவி அளிக்க ஒரு குழுவை பாங்காக்கிற்கு அனுப்புவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து அதிகாரிகள் ஆம்புலன்ஸ்கள் மற்றும் அவசரகாலக் குழுக்களை சுவர்ணபூமி விமான நிலையத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் சீ ஹாங் டாட், பயணிகளுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசாங்கம் உதவி செய்யும் என்றார். "லண்டனில் இருந்து சிங்கப்பூர் செல்லும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ321-இல் நடந்த சம்பவம் குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்," என்று அவர் ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,REUTERS 143 பயணிகள் சிங்கப்பூர் சென்றடைந்தனர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் குலுங்கியதில் காயமின்றி தப்பிய 143 பேர், பாங்காக்கில் இருந்து மற்றொரு விமானத்தில் சிங்கப்பூர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 131 பயணிகளும், 12 விமானப் பணியாளர்களும் சிங்கப்பூரை சென்றடைந்துவிட்டதாக அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய விமானத்தில் இருந்த 79 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுக்கு சிகிச்சை தேவைப்படுவதால் பாங்காக்கிலேயே தொடர்ந்து இருப்பதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,REUTERS காரணம் என்ன? இச்சம்பவம் எவ்வாறு நடந்தது என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. கொந்தளிப்பு (Turbulence) பொதுவாக விமானம் மேகத்தின் வழியாகப் பறக்கும்போது ஏற்படுகிறது. ஆனால் ரேடாரில் தெரியாத 'தெளிவான காற்றுக் கொந்தளிப்பும்' உள்ளது. "பல லட்சம் விமானங்கள் இயக்கப்படும் சூழலில் கடுமையான கொந்தளிப்பால் ஏற்படும் காயங்கள் ஒப்பீட்டளவில் அரிதானவை. இருப்பினும், கடுமையான கொந்தளிப்பு கடுமையான காயங்களுக்கு வழிவகுக்கும், அல்லது துரதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தைப்போல உயிரிழப்புக்கு வழிவகுக்கும்," என்று விமான நிபுணர் ஜான் ஸ்ட்ரிக்லேண்ட் பிபிசியிடம் கூறினார். கொந்தளிப்புகளைச் சமாளிப்பது எப்படி என்று விமானக் குழுக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது, என்றார் அவர். காலநிலை மாற்றம் எதிர்காலத்தில் கடுமையான கொந்தளிப்பை உருவாக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன காட்டுகிறது. https://www.bbc.com/tamil/articles/c8447dr2rv3o
-
விகாரைகளில் மின்சார நெருக்கடிக்கு நிவாரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ளார்
மின்சார நெருக்கடிக்கு நிவாரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ள போதிலும் அவற்றை இன்னும் நிறுவ முடியவில்லை - பிரதமர் தினேஷ் குணவர்தன Published By: VISHNU 22 MAY, 2024 | 01:43 AM (செங்கடகல நிருபர் எம்.ஏ.அமீனுல்லா) இலங்கையின் விகாரைகளில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடிக்கு நிவாரணமாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சோலார் பேனல்களை வழங்கியுள்ள போதிலும், அவற்றை இன்னும் நிறுவ முடியவில்லை எனவும், ஒரு நாடு என்ற வகையில் எமது தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்கம் மற்றும் அதிகாரத்துவ நடைமுறைகளில் நிலவும் பலவீனங்களினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே நாம் எதிர்கொள்ளும் சவாலாகும் எனவும் அவர் கூறினார். பூஜாபிட்டிய, திவானவத்த ஸ்ரீ போதிருக்கராம விகாரையில் எட்டு மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட 34 அடி உயர மைத்ரேய போதிசத்துவர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் திங்கட்கிழமை (20) இதனைத் தெரிவித்தார். கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.குணதிலக ராஜபக்ஷ மற்றும் அக்குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் நிதி நன்கொடையில் இதன் நிர்மாணப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இலங்கையில் 10% பாடசாலைகள் கூட சோலார் பெனல்களை பொருத்தவில்லை எனவும் பொருளாதார நெருக்கடி காரணமாகச் சர்வதேச பரிவர்த்தனைகள் வீழ்ச்சியடைந்த யுகம் முடிவுக்கு வருவதாகவும் பிரதமர் கூறினார். ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளினால் மலையகத்தில் விகாரைகளுக்குச் சொந்தமான பதின்மூன்று இலட்சம் ஏக்கர் காணி இழக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்நோக்கி வருகிறோம். “பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் எமது நாட்டை பலவந்தமாக அடக்கினார்கள், அதனால் அடையாளம் அழிக்கப்பட்டு எமது நாட்டை அன்று எமது கிராமியத் தலைவர்களும் மலையகத் தலைவர்களும் ஆரம்பித்த மாபெரும் போராட்டத்தினால் எமது நாடு சுதந்திரப் பயணத்தைத் தொடர முடிந்தது. இன்று வாழும் தலைமுறைக்கும் எதிர்காலத்தில் வாழும் தலைமுறைக்கும் புத்த தர்மத்தைப் பற்றிய ஆழமான புரிதலை அடையக்கூடிய வழிகாட்டுதல் தேவை. புத்தரின் தர்மத்தை உலகிற்கு எடுத்துச் செல்லவும், அதைப் புரிந்து கொண்டு செயல்படவும் வழிகாட்டி தேவை. பௌத்தத்தின் ஆழமான ஆசீர்வாதங்களுடன் வாழ்ந்த ஒரு தலைமுறை எமது கிராமங்களில் இருந்தது. உணவு கொண்டுவர ஹெலிகாப்டர்களுக்காக அவர்கள் காத்திருக்கவில்லை. கிராமத்தில் விவசாயம் செய்ததை சேகரித்து வண்டியில் ஏற்றி பொருளாதாரம் கண்டார். இது பௌத்தத்தின் உன்னத பரிசு. அது நிறுவப்பட்டது, புத்த தர்மத்தின் அடிப்படையில் மனித சமுதாயம் கட்டப்பட்டது. உன்னத நற்பண்புகளால் பிறந்த நாகரீகத்திலிருந்து நம் தேசம் இப்படித்தான் கட்டப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள். நமது நாடு கடினமான சூழ்நிலையில் உள்ளது. யார் ஆட்சியைக் கைப்பற்றினாலும் நாங்கள் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்நோக்கி வருகிறோம். உலகமும் அப்படித்தான். வல்லரசுகள் கூட வாழத் தெரியாத நிலையை இன்று உலகம் அடைந்துள்ளது. அன்றைய சவால்களை கடந்து சென்ற மாவீரர்களினால் ஒரு நாடு என்ற அடையாளத்தை பேணவும் சிங்கள பௌத்தத்தை ஒன்றிணைந்த தேசத்தில் பாதுகாக்கவும் முடிந்தது. இன்று, அதையெல்லாம் பாதுகாத்துக்கொண்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான சவாலை நாம் சமாளிக்க வேண்டும்." https://www.virakesari.lk/article/184181
-
அமெரிக்கா ரூ.5 லட்சம் கோடி ராணுவ உதவி: யுக்ரேன் எத்தகைய ஆயுதங்கள் பெறும்? போரின் போக்கு மாறுமா?
யுக்ரேனுக்கு 60 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி அனுப்ப அமெரிக்கா முடிவு - போரின் திசையை இது மாற்றுமா? பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கியுடன் ஜோ பைடன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யுக்ரேனில் நடந்து வரும் போர் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. வடகிழக்கு யுக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தியுள்ளது. யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கியேவின் புறநகர்ப் பகுதியில் ரஷ்ய ராணுவம் பெரிய அளவிலான தாக்குதல்களை நடத்திவருகிறது. இங்குள்ள நிலைமை மிகவும் தீவிரமாக உள்ளது. யுக்ரேன் ராணுவம் தொடர்ந்து ரஷ்ய தாக்குதலின் பிடியின் கீழ் இருக்கிறது. ஆயுதப் பற்றாக்குறையால் தவிக்கும் யுக்ரேன் ராணுவம் இதுவரை எப்படியோ சமாளித்து வருகிறது. ஏப்ரலில் அமெரிக்க நாடாளுமன்றம் யுக்ரேனுக்கு 60 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய்) ராணுவ உதவி வழங்கும் மசோதாவை நிறைவேற்றியது. அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் இந்த உதவித்தொகுப்பின் ஆயுதங்களுடன் யுக்ரேன் சென்றார். அப்போது, வான் பாதுகாப்பு மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், கார்கியேவிற்கு இரண்டு 'பேட்ரியாட்கள்’ (அமைப்புகள்) தேவை என்றும் ஜெலென்ஸ்கி பிளின்கனிடம் கூறினார். யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் நிலைமை சிக்கலானதாக மாறியுள்ளது. யுக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் சரியான நேரத்தில் கிடைத்தால், ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க யுக்ரேனால் முடியுமா? ஆயுதக் கிடங்குகள் மீது இலக்கு பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த சில மாதங்களாக ரஷ்ய ராணுவத்தின் ஏவுகணைத் தாக்குதலைத் தடுப்பதில் யுக்ரேன் ராணுவம் பலமுறை தோல்வியடைந்துள்ளது. ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதல்களால் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கியேவ் நகரில் ரயில் போக்குவரத்து உட்பட பல உள்கட்டமைப்பு வசதிகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன. கடந்த சில மாதங்களில் யுக்ரேன் ராணுவம் பலவீனமடைந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன. கடந்த ஆண்டு ரஷ்யா மீதான பதிலடித் தாக்குதலின் போது யுக்ரேன் ராணுவம் ரஷ்ய ராணுவத்தின் விநியோகச் சங்கிலியை உடைக்கத் தவறியது. இதன் காரணமாக ரஷ்யா அதிக படைகளையும் ஆயுதங்களையும் அப்பகுதிக்குள் கொண்டு வந்தது. மேலும் ரஷ்யப் படைகள் யுக்ரேனைத் தாக்க கிளைடு குண்டுகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. அவற்றைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி, இந்த குண்டுகளைப்போடும் விமானங்களை குறிவைப்பதாகும். இதைச் செய்வதற்கான ஆயுதங்கள் யுக்ரேனிடம் குறைந்து வருகின்றன. இதன் காரணமாக யுக்ரேனிய நகரங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களின் அபாயம் அதிகரித்துள்ளது. பெர்லினைச் சேர்ந்த குஸ்டாவ் கிரெசல், ராணுவச் சிந்தனைக் குழுவான யுரோப்பியன் கவுன்ஸில் ஆன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மூத்த ஆராய்ச்சியாளர். மிகப்பெரிய ரஷ்ய ராணுவத்தின் திறன்களைக் குறைக்க யுக்ரேனிய ராணுவத்தால் முடியாவிட்டால், அதற்கு பதிலடி கொடுப்பது மிகவும் கடினம் என்று அவர் கருதுகிறார். இதைச் செய்ய யுக்ரேன் ராணுவத்திற்கு அடுத்த ஆண்டு வரை ஆயுத இருப்புக்கான உத்தரவாதம் தேவை என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேனிடம் ஆயுதங்கள் இல்லாதது ரஷ்ய ராணுவத்திற்குப் பெரிதும் பயனளித்திருப்பதாக கிரெசெல் நம்புகிறார். யுக்ரேனின் மன உறுதியை பாதிக்கும் வகையில் சில சிறிய பகுதிகளை கைப்பற்றுவதில் ரஷ்யா வெற்றி பெற்றுள்ளதுடன், யுக்ரேனின் ராணுவ ஆயுத உற்பத்தியை குறிவைப்பதிலும் வெற்றி பெற்றுள்ளது. ரஷ்ய தாக்குதல்களில் இருந்து தனது ராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்காகவும், ஆயுத இருப்பை தொடர்ந்து பராமரிக்கவும் யுக்ரேன், பல தொழிற்சாலைகளைச் சிறிய தொழிற்சாலைகளாக மாற்றி, அவற்றைக் குறிவைப்பது கடினமாக இருக்கும் இடங்களுக்கு மாற்றியது என்று குஸ்டாவ் கிரெசல் குறிப்பிட்டார். யுக்ரேனின் ஆயுத உற்பத்தி ஆலைகளை அழிக்க முடியாத போது ரஷ்யா, யுக்ரேனின் மின் உற்பத்தி நிலையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தத் தொடங்கியது. ஏனெனில் மின் உற்பத்தி நிலையங்களைப் பாதுகாக்க தேவையான ஆயுதங்கள் யுக்ரேனிடம் இல்லை என்று அவர் தெரிவித்தார். "துரதிர்ஷ்டவசமாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் ரஷ்யா, பல யுக்ரேனிய மின் உற்பத்தி நிலையங்களைச் சேதப்படுத்தியது. ஏனெனில் யுக்ரேனிடம் போதுமான வான் பாதுகாப்பு ஆயுதங்கள் எஞ்சியிருக்கவில்லை," என்கிறார் கிரெசல். மின்சாரம் இல்லாததால் யுக்ரேனின் பொருளாதாரம் மட்டுமின்றி அதன் ஆயுத உற்பத்தித் திறனும் மோசமாக பாதிக்கப்பட்டது. யுக்ரேனை மேலும் மேலும் மேற்கத்திய நாடுகளைச் சார்ந்திருக்கச் செய்வது ரஷ்யாவின் உத்தி. "இந்தப் போரில் பலவீனமான இணைப்பு யுக்ரேன் அல்ல, மேற்கத்திய நாடுகளே என்று ரஷ்யாவுக்குத் தெரியும். யுக்ரேனுக்கு மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகள் தொடர்ந்து தேவைப்படுமானால், ஏதோ வகையிலான ஒப்பந்தம் அல்லது அது சரணடைவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும்," என்றார் குஸ்டாவ் கிரெசல். யுக்ரேனின் மிகப்பெரிய ஆதரவாளரான அமெரிக்கா ஆறு மாத நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஏப்ரல் 24-ஆம் தேதி, 60 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை வழங்குவதற்கான சட்டத்தை இயற்றியது. இதை யுக்ரேன் நீண்ட காலமாக கோரி வந்தது. பட மூலாதாரம்,EPA அமெரிக்க ராணுவ உதவி வாஷிங்டனில் உள்ள செயல் உத்தி மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையத்தின் ஐரோப்பா ரஷ்யா மற்றும் யுரேசியா திட்டத்தின் இயக்குனரான மேக்ஸ் பெர்க்மென், '60 பில்லியன் டாலர் அமெரிக்க உதவி யுக்ரேன் போரில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்' என்று நம்புகிறார். "யுக்ரேனில் போரின் வரைபடம் கணிசமாக மாறும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் யுக்ரேனிய ராணுவத்திடம் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் தீரும் நிலையில் உள்ளன. வான் பாதுகாப்பிற்குத் தேவையான ஆயுதங்கள் இல்லாமல் அது போராடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்க உதவியுடன் இந்த குறைபாடு விரைவில் தீரும்,” என்று அவர் குறிப்பிட்டார். "தொகைக்கான ஒப்புதல் கிடைத்ததும் அமெரிக்க அதிபர் தனது ராணுவத்தின் கையிருப்பில் இருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்களை எடுத்து அவற்றை விமானம் அல்லது கடல் வழியாக யுக்ரேனுக்கு வழங்க முடியும். யுக்ரேனுக்கு விரைவில் இந்த ஆயுதங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று அவர் சொன்னார். 60 பில்லியன் டாலர் உதவித் தொகுப்பு மிகவும் பெரியது. கடந்த இரண்டு ஆண்டுகளில், யுக்ரேனுக்கு அமெரிக்கா 40 பில்லியன் டாலர் உதவி அளித்துள்ளது. இப்போது இந்த மிகப்பெரிய தொகுப்புக்கு ஒப்புதல் கிடைத்த பிறகு அமெரிக்கா, தனது ஆயுத உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களை நேரடியாக வாங்கி யுக்ரேனிடம் ஒப்படைக்க முடியும். பட மூலாதாரம்,GETTY IMAGES "இப்போது யுக்ரேனுக்கான ஆயுதங்களை புதிதாக தயாரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் நிறுவனங்களிடமிருந்து ஆயுதங்களை வாங்கி யுக்ரேனுக்கு கொடுக்க வேண்டும். இது தன் சொந்த ராணுவ கையிருப்பில் இருந்து ஆயுதங்களை வழங்குவதை விட செலவு பிடிக்கக்கூடியது,” என்று மேக்ஸ் பெர்க்மென் குறிப்பிட்டார். "கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் ராணுவக் கையிருப்பில் இருந்து ஆயுதங்களை எடுத்து யுக்ரேனுக்கு வழங்கி வந்தன. ஆனால் இப்போது நாங்கள் குறிப்பாக யுக்ரேனுக்காக ஆயுதங்களை தயாரிப்போம். இது எதிர்காலத்தில் யுக்ரேனின் நிலையை பலப்படுத்தும்," என்று அவர் கூறினார். பேட்ரியாட் ஏவுகணைகள் மற்றும் ஹைமர் ராக்கெட்டுகள் ஆகியவை அமெரிக்க உதவித் தொகுப்பில் உள்ளன. கூடவே இப்போது யுக்ரேன் சோவியத் கால ஆயுத தொழில்நுட்பத்திற்கு பதிலாக நேட்டோ நாடுகளால் பயன்படுத்தப்படும் ராணுவத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும். இந்த உதவித்தொகுப்பு காரணமாகவே இது சாத்தியமாகிறது. "போர் மேலும் தீவிரமாகும் என்ற பயம் காரணமாக அமெரிக்கா நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட ஆயுதங்களை யுக்ரேனுக்கு வழங்கவில்லை என்று கூறப்பட்டது. அது உண்மையல்ல," என்று மேக்ஸ் பெர்க்மென் விளக்குகிறார். இந்த அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்த ஆட்களை தனது ராணுவத்தில் சேர்ப்பதுதான் இப்போது யுக்ரேனின் முன் இருக்கும் சவால். இதைக் கருத்தில் கொண்டு ராணுவத்தில் கட்டாய ஆட்சேர்ப்புக்கான குறைந்தபட்ச வயது 27 லிருந்து 25 ஆக குறைக்கப்படும் புதிய சட்டத்தின் வரைவுக்கு யுக்ரேன் ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ஐந்து லட்சம் பேரை ராணுவத்தில் சேர்க்க முடியும் என யுக்ரேன் நம்புகிறது. 2024-ஆம் ஆண்டில் தன் நிலத்தின் மீது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்வதும், நவீன ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் புதிய வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதும் யுக்ரேனின் இலக்காக இருக்க வேண்டும். இதனால் அடுத்த ஆண்டு தான் இழந்த நிலத்தை மீண்டும் கைப்பற்ற ரஷ்யா மீது பெரிய எதிர் தாக்குதலை தொடுக்க முடியும் என்று மேக்ஸ் பெர்க்மென் கூறுகிறார் . புதினின் திட்டம் என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் யுக்ரேனுக்கான உதவித்தொகுப்பை அங்கீகரிக்க அமெரிக்கா ஆறு மாதங்கள் எடுத்தது. இந்தத் தாமதத்தால் யுக்ரேனிய ராணுவம் பலவீனமடைந்தது. இந்தத் தாமதத்தை ரஷ்யா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டதாக லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியின் போர் வியூக ஆய்வுகள் துறையின் ஆராய்ச்சியாளர் டாக்டர் மரீனா மிரோன் கூறுகிறார். "உதவித்தொகுப்பை அனுமதிப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் ரஷ்யா நிச்சயமாக பலனடைந்திருக்கிறது. அமெரிக்கா இந்தத்தொகுப்பை அங்கீகரிக்கும் என்று ஜனவரியில் இருந்தே ரஷ்ய செயல்திட்டவாதிகளுக்குத் தெரியும். அதனால் அவர்கள் தங்கள் ராணுவத்தைத் தயார்படுத்த இந்தத் தாமதத்தைப் பயன்படுத்தினர்," என்று அவர் குறிப்பிட்டார். "இந்த உதவித்தொகுப்பால் யுக்ரேனுக்கு அதிக பலன் கிடைக்காத அளவிற்கு அதன் ராணுவத்தை பலவீனப்படுத்தும் திசையில் ரஷ்யா செயல்பட்டது,” என்று மிரோன் கூறுகிறார். பட மூலாதாரம்,EPA ரஷ்யாவின் ராணுவ உத்தி என்ன? யுக்ரேனிய ராணுவத்தைப் பல முனைகளில் சிக்க வைக்க ரஷ்யா விரும்புகிறது என்று டாக்டர் மரீனா மிரோன் குறிப்பிட்டார். தற்போது யுக்ரேன் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சனை ராணுவ வீரர்களின் பற்றாக்குறை ஆகும். எல்லாவற்றிற்கும் மேலாக மேற்கிலிருந்து பெறப்பட்ட அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்த வீரர்கள் தேவைப்படுவார்கள். அதனால்தான் ரஷ்ய ராணுவம் பல முனைகளில் தாக்குதல் நடத்தி வருகிறது என்றார் அவர். யுக்ரேனின் இரண்டாவது பெரிய நகரமான கார்கியேவ் மீது தொடர்ச்சியான வெடிகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு ரஷ்ய ராணுவம் அந்த நகரைக் கைப்பற்றக்கூடும் என்று கூறப்படுகிறது. இது நடந்தால் இந்தப் போர் தொடர்பாக யுக்ரேனின் ஆதரவு நாடுகள் முன் பல கடினமான கேள்விகள் எழும். ரஷ்யா கார்கியேவைக் கைப்பற்றி, மற்ற முனைகளில் யுக்ரேனிய ராணுவத்திற்குச் சேதம் விளைவித்தால், மேற்கத்தியத் துருப்புக்களின் உதவியின்றி யுக்ரேன் மீள முடியாது என்று டாக்டர் மரீனா மிரோன் சுட்டிக்காட்டினார். இந்தப் போரில் யுக்ரேன் மற்றும் ரஷ்யாவின் ராணுவ உபகரணங்கள் பெரும் சேதத்தைச் சந்தித்துள்ளதாக அவர் நம்புகிறார். வடகொரியாவிடம் இருந்து ஆயுதங்கள் பெறப்படுவதாக வரும் செய்திகளை ரஷ்யா மறுத்து வருகிறது. ஆனால் சீனாவிடம் இருந்து அதிக எண்ணிக்கையிலான ட்ரோன்களையும் இரானிடம் இருந்து ஏவுகணைகளையும் அது பெறுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. "ரஷ்யா வெற்றி பெற்றாலும், கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை அது மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கு பணம் தேவைப்படும். ராணுவ வெற்றியை அடைவது அரசியல் வெற்றியிலிருந்து மிகவும் மாறுபட்டது. போரில் வெற்றி பெற்றால் அமைதி கிடைக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை,” என்று மிரோன் கூறுகிறார். உதவியில் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு பட மூலாதாரம்,GETTY IMAGES பெரும்பாலான ஐரோப்பிய ஆதரவாளர்கள் இந்தக்கருத்தை முழுமையாக புரிந்து கொண்டுள்ளனர் என்று பிரிட்டனின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் யுக்ரேன் அரசியல் பேராசிரியர் ஓல்கா ஓனுச் கருதுகிறார். யுக்ரேன், ரஷ்யாவின் காலனித்துவ ஆக்கிரமிப்புக்கு பலியாகியிருப்பதாக லத்தீன் அமெரிக்காவின் பல நாடுகள் நம்புகின்றன என்று பேராசிரியர் ஓல்கா ஓனுச் குறிப்பிட்டார். பிரேசில் மற்றும் இந்தியா, அமெரிக்காவின் நட்பு நாடுகளாக இருந்தாலும், யுக்ரேனை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. ஆனால் இப்போது அவர்களின் சிந்தனையிலும் மாற்றம் ஏற்பட்டு வருகிறது, இதன் பெருமை யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கிக்குச் செல்கிறது. போர் காரணமாக யுக்ரேனில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். அத்தகைய சூழ்நிலையில் யுக்ரேன் மக்களின் ஆதரவு அவருக்கு இருக்கிறதா என்று அவரது தலைமையின் சட்டபூர்வத்தன்மை மீது கேள்விகள் எழுகின்றன. ஜெலென்ஸ்கியின் புகழ் சிறிதே குறைந்துள்ளது, ஆனால் இன்று அதிபர் தேர்தல் நடத்தப்பட்டால், அவர் எளிதாக வெற்றி பெறும் அளவிற்கு அவரது புகழ் உள்ளது என்று பேராசிரியர் ஓல்கா ஓனுச் தெரிவித்தார். அமெரிக்க உதவித்தொகுப்பு மூலம் அவருக்கு அரசியல் ஆதாயம் கிடைக்கும். ஆனால் அமெரிக்காவில் தேர்தலுக்குப் பிறகு குடியரசுக் கட்சி வேட்பாளர் அதிபரானால் எதிர்காலத்தில் அவருக்கு அத்தகைய உதவி கிடைக்காமல் போகலாம். ஜெலென்ஸ்கி மீதான நம்பிக்கை பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி யுக்ரேனில் போரை பாதிக்கும் பல காரணிகளை நாம் பார்த்தோம். ஆனால் பரந்த உலக அரசியலின் பின்னணியில் அதைப் பார்ப்பதும் முக்கியம். ஏப்ரல் 13-ஆம் தேதி இரான், ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இஸ்ரேல் மீது ஒரு பெரிய தாக்குதலை நடத்தியது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் பெரிய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை விட இந்தத் தாக்குதல் மூன்று மடங்கு பெரியதாக இருந்தது, ஆனால் அமெரிக்கா, பிரிட்டன், ஜோர்டன் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பின் காரணமாக இது கிட்டத்தட்ட முறியடிக்கப்பட்டது. அமெரிக்காவும் இங்கிலாந்தும் இஸ்ரேலுக்கு உதவியதுபோல, ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள யுக்ரேனுக்கு உதவவில்லை என்று யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறியதாக, பேராசிரியர் ஓல்கா ஓனுச் குறிப்பிட்டார். "அவர் கூறுவது சரிதான். இஸ்ரேலுக்கு அளிக்கப்பட்ட உதவிக்கும் யுக்ரேனுக்கு அளிக்கப்பட்ட உதவிக்கும் வித்தியாசம் உள்ளது. இதேபோன்ற நடவடிக்கையை 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ஆம் தேதியும் எடுத்திருக்கலாம். ஆனால் அது நடக்கவில்லை. யுக்ரேனின் வான்வெளியைப் பாதுகாக்கும் திறன் தங்களிடம் இல்லை என்று அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நினைத்திருக்கக்கூடும் அல்லது அந்தத் திசையில் நடவடிக்கை எடுக்க அவை விரும்பாமல் இருந்திருக்கக்கூடும்,” என்றார் அவர். "ஒவ்வொரு நாளும் ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களால் பாதிப்புக்கு உள்ளாகும் யுக்ரேனிய மக்கள், ரஷ்ய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளால் தடுக்க முடியும் என்பதை அறிவார்கள்," என்று ஓனுச் கூறுகிறார். யுக்ரேன் மீதான ரஷ்ய தாக்குதல் யுக்ரேனுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கும் ஜனநாயகத்துக்கும் அச்சுறுத்தல் என்று அதிபர் ஜெலென்ஸ்கி வாதிட்டு வருகிறார். யுக்ரேனுக்கான உதவி தொடரும் வகையில் மேற்கத்திய நாடுகளுக்கு இந்த செய்தியை தெரிவிப்பதில் அவர் வெற்றி பெற்றாரா? போருக்குப் பிறகு அமைதி இந்தச் சாத்தியகூறு போர் குறித்த ஒப்பந்தத்திற்கு வழிவகுக்குமா? பேராசிரியர் ஓல்கா ஓனுச், யுக்ரேனைச் சேர்ந்தவர். தங்கள் நிலத்தை வேறொரு நாட்டிற்கு விட்டுக்கொடுக்கும் சாத்தியக்கூறு குறித்து நாட்டின் எந்தவொரு குடிமகனும் எப்படி பதில் அளிப்பாரோ, அவரது பதிலும் அதுபோலவே இருந்தது. "நிலத்தை இழப்பதன் மூலம் அமைதியை அடையலாம் என்று நினைப்பவர்களின் சிந்தனை தவறு. இரண்டு விஷயங்கள் நடக்கலாம். போர் சிலகாலம் நிற்கலாம், ஆனால் அது முடிவடையாது. ரஷ்யா மீண்டும் நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும். முன்பு பலமுறை இதேபோல அது செய்திருக்கிறது,” என்று அவர் சொன்னார். "நிலத்திற்கு ஈடாக ஏதேனும் ஒப்பந்தம் யுக்ரேன் மீது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டால், அது நாட்டிற்குள் முரண்பாடுகளுக்கு வழிவகுக்கும். ரஷ்ய ஆக்கிரமிப்பு மண்டலத்தில் ஏற்கனவே இதுபோன்ற மோதல்கள் நடந்து வருகின்றன. ஒப்பந்தம் நியாயமானதாக இல்லாவிட்டால், சமாதானம் ஏற்படாது," என்று ஓனுச் தெரிவித்தார். எனவே இப்போது நமது முக்கிய கேள்விக்குத் திரும்புவோம் - யுக்ரேனுக்குச் சரியான நேரத்தில் அமெரிக்க ஆயுதங்கள் கிடைத்தால், அது ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க முடியுமா? பல வழிகளில் அமெரிக்க உதவி கிடைப்பது தாமதமானது. தொடர்ச்சியான ரஷ்ய தாக்குதல்கள் யுக்ரேனிய மக்களின் மன உறுதியை மோசமாக பாதித்துள்ளது. யுக்ரேனிய ராணுவம் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், இந்த ஆயுதங்கள் யுக்ரேனை எவ்வளவு விரைவாக சென்றடைகின்றன மற்றும் போர்க்களத்தில் எவ்வளவு திறம்பட பயன்படுத்தப்படுகின்றன என்பதைப்பொருத்து யுக்ரேனின் வெற்றிவாய்ப்பு இருக்கும். https://www.bbc.com/tamil/articles/cv22307d153o
-
இந்தியா வந்த பிரபாகரனிடம் ராஜீவ் காந்தி சொன்னது என்ன? மணி சங்கர் அய்யர் எழுதிய நூலில் புதிய தகவல்
பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு மணி நேரத்துக்கு முன்னர் [இன்று (மே 21) முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு நாள்.] முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கும் 'எனக்குத் தெரிந்த ராஜீவ்' (The Rajiv I Knew) என்ற நூல், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் குறித்து ராஜீவின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபரின் பார்வையில் சில நுணுக்கமான தகவல்களை முன்வைக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் மத்திய அமைச்சராகவும் இருந்த மணி சங்கர் அய்யர் தற்போது ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த காலகட்டம் குறித்து விரிவான புத்தகம் ஒன்றை எழுதியிருக்கிறார். 'The Rajiv I Knew' என்ற பெயரில் வெளியாகியிருக்கும் இந்தப் புத்தகம், ராஜீவ் காந்தி ஆட்சியின் காலகட்டத்தில் எட்டப்பட்ட ஒப்பந்தங்கள், சர்ச்சைகள், வெளியுறவுத் துறை கொள்கை முயற்சிகள், உள்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள், பஞ்சாயத் ராஜ் ஆகியவை குறித்து விரிவாகப் பேசுகிறது. இதில் சர்ச்சைகள் என்ற பகுதியில் ஷா பானோ வழக்கு, பாபர் மசூதி விவகாரம், ராஜஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட பிராஸ்டாக் நடவடிக்கை, இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு அனுப்பப்பட்ட விவகாரம், போஃபர்ஸ் ஆகியவை விவரிக்கப்பட்டிருக்கின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இலங்கை பிரதமர் ஜெயவர்தனேவுடன் ராஜீவ் காந்தி யாரையும் ஆலோசிக்காமல் ராஜீவ் எடுத்த முடிவு இதில் இலங்கைக்கு இந்திய அமைதி காக்கும் படையை அனுப்பியது மிக மோசமான முடிவு எனக் குறிப்பிட்டிருக்கிறார் மணிசங்கர் அய்யர். இந்திய அமைதி காக்கும் படையை அனுப்ப இந்தியா எப்படி ஒப்புக்கொண்டது என்பது குறித்தும் ஒரு புதிய தகவலைச் சொல்கிறார் மணி சங்கர் அய்யர். "ராஜீவ் - ஜெயவர்தனே ஒப்பந்தம் கையெழுத்தானதும் அருகிலிருந்த அறைக்குள் ராஜீவை அழைத்துச் சென்றார் இலங்கை அதிபர் ஜெயவர்தனே. நாட்டின் இரு முனைகளிலும் நிகழும் இருவேறு உள்நாட்டுக் கலகங்களை இலங்கை ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்பதை ராஜீவிடம் தெரிவித்தார் ஜெயவர்தனே. தலைநகர் கொழும்பில் நடக்கும் வன்முறைகளைக்கூட ராணுவத்தால் சமாளிக்க முடியாது என்றார். ஆகவே, ஆயுதம் ஏந்திய தமிழ்க் குழுக்களிடம் இருந்து இலங்கை ராணுவத்தைப் பாதுகாக்க ஒரு அமைதி காக்கும் படையை அனுப்ப வேண்டும் என்றார் ஜெயவர்தனே. தன் மூத்த அமைச்சர்களின் எதிர்ப்பையும் மீறி, இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தைத் திருத்த ஒப்புக்கொண்டதற்காக இதனைச் செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் ஜெயவர்தனே," என்கிறது இந்த நூல். அந்தத் தருணத்தில் அந்த அறைக்கு வெளியில் காத்திருக்கும் தன் நிபுணர்களைக்கூட கலந்தாலோசிக்காமல் அதற்கு ராஜீவ் காந்தி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது. "அதற்குப் பிறகு, இந்த வேண்டுகோள், ஒப்பந்தத்தின் இணைப்பாகச் சேர்க்கப்பட்டது. இலங்கை அரசே கேட்டுக்கொண்டாலும் இலங்கையில் இந்தியா ராணுவ ரீதியாகத் தலையிடாது என்ற இந்திரா காந்தியின் நிலைப்பாடு மறு பரிசீலனை செய்யப்பட்டு, படைகளை அனுப்ப முடிவுசெய்யப்பட்டது," என்று கூறப்பட்டிருக்கிறது. ராஜீவ் காந்தியின் முடிவைக் கேட்டு இந்தியாவில் இருந்த நிபுணர்கள் ஆச்சரியமடைந்ததாகவும் இந்நூல் கூறுகிறது. "ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, இவ்வளவு அவசரத்துடன் இம்மாதிரி பிரிவுகள் ஒப்பந்தத்தில் சேர்க்கப்படும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால், ராஜீவ் காந்தி முடிவெடுத்து, உடனடியாக செயல்படுத்திவிட்டார்," என்று மணி சங்கர் அய்யர் தனது புத்தகத்தில் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதமருக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (guard of honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார் கடற்படை வீரரால் தாக்கப்பட்ட ராஜீவ் இதுகுறித்து மேலும் பேசும் இந்த நூல், ஜெயவர்தனேவின் வேண்டுகோளை ஏற்றதற்கான விலையை ராஜீவ் அடுத்த சில நிமிடங்களிலேயே தரவேண்டியிருந்தது, என்கிறது. "பிரதமருக்கு கடற்படையினரின் பாரம்பரிய மரியாதை (guard of honour) அளிக்கப்பட்டபோது, ஒரு கடற்படை வீரர் தனது துப்பாக்கியின் பின்பக்கத்தால் ராஜீவ் காந்தியைத் தாக்கினார். அந்தத் தாக்குதலில் ராஜீவ் காந்தியின் தலை நொறுங்கி, அந்த இடத்திலேயே அவர் கொல்லப்பட்டிருப்பார். ஆனால், தாக்குதல் வருவதை உணர்ந்துகொண்ட பிரதமர் விலகிக்கொள்ளவே, அடி தோள்பட்டையில் விழுந்தது," என்கிறது இப்புத்தகம். இந்தச் சம்பவத்திற்குச் சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமரின் விமானம் தில்லியில் தரையிறங்கியது. உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, மணி சங்கர் அய்யரிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்நதாக மணி சங்கர் அய்யர் இந்த நூலில் தெரிவிக்கிறார். அந்த வீடியோ அதன்படியே கொடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கிறார். "இந்திய அமைதி காக்கும் படை ஆரம்பத்திலிருந்தே ஒரு மோசமான நிகழ்வாக அமைந்தது. ஆரம்பக் கட்டச் சேதங்களுக்குப் பிறகு, ராணுவம் சுதாரித்துக்கொண்டாலும் இது பேரழிவாகவே அமைந்தது. ஆரம்பத்தில், இந்திய அமைதி காக்கும் படை விடுதலை தர வந்த படையாகக் கருதப்பட்டு, யாழ்ப்பாண மக்களால் வரவேற்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் பாதுகாப்போடு பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப முடியும் எனக் கருதிய புலிகள் இயக்க உறுப்பினர்களும் இந்த வரவேற்பில் இணைந்துகொண்டிருந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்தும் கிழக்குப் பகுதியில் இருந்தும் புலிகளால் துப்பாக்கி முனையில் துரத்தப்பட்ட பிற போராளிக் குழுக்கள் தாங்களும் யாழ்ப்பாணத்திற்கும் கிழக்கிற்கும் திரும்ப முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அமைதி காக்கும் படையை வரவேற்றனர்," என்கிறார் மணி சங்கர் அய்யர். "இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் எல்லாப் பகுதிகளிலும் இந்திய அமைதி காக்கும் படை இறங்கிய இடங்களில் எல்லாம் உற்சாக வவேற்பு அளிக்கப்பட்டது. மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது, அமைதி காப்பதில் தன் பலத்தைப் பயன்படுத்தியதன் மூலம், தெற்காசியாவில் ஒரு முக்கிய சக்தியாக இந்தியா ராஜதந்திர வெற்றியைப் பெற்றிருப்பதாக இந்திய வட்டாரங்களில் நம்பிக்கை ஏற்பட்டது," என்கிறார் மணி சங்கர் அய்யர். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகி 24 மணி நேரத்திற்குள் படைகள் அனுப்பப்பட்டதால், இலங்கையின் கள நிலவரம் குறித்து எவ்விதமான தகவல்களும் படைத் தளபதிகளோக்கோ, வீரர்களுக்கோ அளிக்கப்படவில்லை, என்கிறார். "அமைதிப் படை தரையிறங்கியதிலிருந்து புலிகளுக்கும் அமைதி காக்கும் படைக்கும் இடையில் மோதல் ஏற்படும் காலத்திற்கு இடையில் சுமார் இரண்டு மாதங்கள் இருந்தன. அந்த காலகட்டம் இந்தியாவால் பயன்படுத்திக் கொள்ளப்படவில்லை. இதனால் இலங்கைப் போராளிகளுக்கும் இலங்கை ராணுவத்திற்கும் இடையில் அமைதி காக்கும் படையாக இருந்திருக்க வேண்டிய, இந்திய அமைதி காக்கும்படை, தமிழ்ப் போராளிகளோடு மோதவேண்டியதாயிற்று. இது இலங்கையின் வட - கிழக்குப் பகுதியை இந்தியாவின் வியட்னாமாக மாற்றியது," என்கிறார் மணி சங்கர் அய்யர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலர் டி.என். சேஷன் அந்தத் தாக்குதல் சம்பவத்தின் வீடியோவை, மணி சங்கர் அய்யரிடம் கொடுத்து தூர்தர்ஷனிடம் கொடுக்கச் சொன்நதாக மணி சங்கர் அய்யர் இந்த நூலில் தெரிவிக்கிறார் இந்தியா வந்த பிரபாகரன் ஒப்பந்தம் கையெழுத்தான வாரம் விடுதலைப் புலிகள் இயகத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் புது தில்லிக்கு அழைத்துவரப்பட்டதாகச் சொல்கிறது இந்நூல். அவரிடம் ஒப்பந்தத்தின் பிரதி அளிக்கப்பட்டபோதே, பிரச்சனை ஆரம்ப அறிகுறிகள் தெரிய ஆரம்பித்தன, எனவும் சொல்கிறது. "அவர் தில்லி அசோகா ஹோட்டலில் பலத்த காவலுக்கு இடையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். அந்த ஒப்பந்தத்தைப் படித்துப் பார்த்துவிட்டு, தன் சகாக்களிடம் கருத்துக்களைக் கேட்க விரும்பினார் அவர். விரைவிலேயே அந்த ஒப்பந்தம் தனக்கு ஏற்புடையதல்ல என்பதை பிரபாகரன் தெளிவுபடுத்தினார்," என்கிறது இப்புத்தகம். "பிரபாகரன் தங்கியிருந்த அறைக்குள் ரகசியமாக நுழைந்த பத்திரிகையாளர் அனிதா பிரதாப்பிடம் இதனை அவர் வெளிப்படையாகவே சொன்னார். அனிதா பிரதாப் பிரச்சனை உருவாவதை புரிந்துகொண்டார். ஆனால், இந்திய அரசக் கட்டமைப்பிலிருந்த யாருக்கும் அது புரிந்திருக்கவில்லை. ராஜீவ் காந்தியின் தனிப்பட்ட வசீகரத்திற்கு பிரபாகரன் பணிந்துவிடுவார் என நம்பினார்கள். ஆனால், தில்லியிலிருந்து எப்படித் தப்புவது என்பதைத்தான் பிரபாகரன் யோசித்துக்கொண்டிருந்தார்," என்று அப்போதிருந்த நிலைமையை விளக்குகிறார் மணி சங்கர் அய்யர். "பிரதமர் ராஜீவ் காந்தியுடனான சந்திப்பிற்குப் பிறகு, அவரது குடும்பத்துடனான விருந்தில் கலந்துகொள்ள பிரபாகரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. விருந்து முடிந்த பிறகு, தனது மகன் ராகுல் காந்தியை அழைத்த ராஜீவ், தனது குண்டு துளைக்காத கவச உடையை எடுத்துவரும்படி சொன்னார். அதனை பிரபாகரனுக்கு அணிவித்த ராஜீவ், 'உங்களைப் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று புன்னகையுடன் சொன்னார். இந்த விவகாரம் தொடர்பாக எச்சரிக்கை விடுத்தவர்களிடம் `பிரபாகரன் ஒப்புக்கொண்டார். நான் அவரை நம்புகிறேன்` என்று பதிலளித்தார் ராஜீவ்," என்று இந்நூல் கூறுகிறது. இதுகுறித்து மேலும் விவரிக்கும் இந்தப் புத்தகம், பிரபாகரன் தனக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி தேவையெனத் தெரிவித்ததாகச் சொல்கிறது. "அந்தப் பணம் கொடுக்கப்பட்டது. ஆனால், இறையாண்மையுள்ள தனி தேசமாக ஈழத்தை அடைவதிலும் பிரபாகரன் உறுதியாக இருந்தார். ஒப்பந்தம் ஏற்பட்ட பிறகு ஆகஸ்ட் 4-ஆம் தேதி சுதுமலையில் நிகழ்த்திய தனது பேச்சிலேயே ஒப்பந்தம் குறித்த முரண்பாட்டை பிரபாகரன் தெரிவித்தார். 'நாங்கள் இந்தியாவையும் அதன் மக்களையும் நேசிக்கிறோம். ஆனால், தமிழ் ஈழத்தை அடையும் லட்சியத்திற்காக தொடர்ந்து போராடுவோம்' என்றார். பட மூலாதாரம்,JUGGERNAUT BOOKS விரைவிலேயே ஆயுதங்களை ஒப்படைப்பதில் தனக்கு விருப்பமில்லை என்பதை புலிகள் இயக்கத்தினர் அறிவித்துவிட்டனர். ஆரம்பத்தில் புலிகளுக்கும் இந்தியப் படைகளுக்கும் இடையிலான உறவு சுமுகமாகவே இருந்தது. இந்தியப் படைகளுடன் எந்த நேரத்திலும் பேசுவதற்காக, ரேடியோ அலைவரிசையும் புலிகளுடன் பகிர்ந்துகொள்ளப்பட்டது (ஆனால், இப்படி அலைவரிசையை பகிர்ந்துகொண்டது பிறகு பிரச்சனையாகவே முடிந்தது)," என்று இந்த பனூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. "திலீபனின் மரணம் ஒப்பந்தத்திற்கு எதிரான ஒரு திருப்பு முனையாக அமைந்தது. இதற்கிடையில், ஏகப்பட்ட ஆயுதங்கள், வெடி பொருட்களுடன் விடுதலைப் புலிகளின் தலைவர் புலேந்திரன், 16 புலிகள் இயக்கத்தினருடன் பாக் நீரிணை பகுதியில் கைதுசெய்யப்பட்டார். அவர்களைப் பார்க்கவும் உணவு அளிக்கவும் புலிகள் அனுமதிக்கப்பட்டனர். உணவு அளிக்கும் சாக்கில் அவர்களுக்கு சயனைடு அளிக்கப்பட்டது. அதனை அருந்தி 17 பேரும் உயிரிழந்தனர்," என்று இந்நூலில் கூறப்பட்டுள்ளது. "அவர்களது சடலங்கள் பிரபாகரனின் சொந்த ஊரான வல்வெட்டித் துறைக்கு கொண்டுவரப்பட்டபோது பொது மக்களின் கோபம் உச்சகட்டத்தை எட்டியது. புலிகள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். மோதலைத் தவிர்ப்பதற்காக பிரபாகரனைச் சந்திக்க இந்திய தளபதிகள் முயன்றனர். ஆனால், அது நடக்கவில்லை. விரைவிலேயே இந்திய ரோந்து வாகனத்தைத் தாக்கிய புலிகள், ஐந்து கமாண்டோக்களை கொன்றனர். இரு தரப்புக்கும் இடையில் மோதல் துவங்கியது," என்கிறது இப்புத்தகம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மணி சங்கர் அய்யர் இந்தியப் படையின் திட்டத்தை அறிந்துகொண்ட புலிகள் இந்தப் பிரச்னை எப்படி வலுத்தது என்பதையும் இந்தப் புத்தகம் விவரிக்கிறது. "அக்டோபர் 5-ஆம் தேதி யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜெனரல் சுந்தர்ஜி, புலிகளின் ஆயுதங்களைப் பறிக்க 'ஆபரேஷன் பவன்' நடவடிக்கையை துவங்க உத்தரவிட்டார். இந்திய ராணுவம் மூன்று, நான்கு வாரங்களில் இதனை முடித்துவிடும் என்றார் சுந்தர்ஜி. இது மோசமான கணிப்பாக முடிந்தது. காரணம், இந்திய ராணுவத்தின் திட்டங்கள் முன்பே பிரபாகரனுக்குத் தெரிந்திருந்தன. காரணம், நிலைமை சுமுகமாக இருந்தபோது தனது தகவல் தொடர்பு அலைவரிசையை புலிகளுடன் இந்திய ராணுவம் பகிர்ந்துகொண்டிருந்ததுதான்," என்கிறது. "ஒரு முறை ஹெலிகாப்டரில் வந்திறங்கி, புலிகளின் தலைவர்கள் அனைவரையும் பிடிக்க இந்தியப் படை திட்டமிட்டது. ஆனால், அதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாகவே அனைவரும் அங்கிருந்து தப்பியிருந்தனர். ஆரம்பத்தில் புலிகளை 72 மணி நேரத்திலிருந்து 15 நாட்களுக்குள் சுற்றி வளைத்துவிடலாம் என இந்திய ராணுவம் நினைத்தது. ஆனால், ஒருபோதும் அது நடக்கவில்லை," என்கிறது இந்நூல். அந்தத் தருணத்தில் இலங்கைக்கான இந்தியத் தூதராக இருந்த ஜே.என்.தீக்ஷித், இந்தத் தோல்விக்கான காரணத்தை தனது பணி கொழும்பில் விரிவாகக் குறிப்பிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் மணி சங்கர் அய்யர். அதாவது `தமிழ் ஈழம் மீதான பிரபாகரனின் பிடிப்பையும் திட்டமிடுவதில் அவருக்கு இருந்த புத்திசாலித்தனம், எதிர்த்து நிற்பதில் உறுதியான தன்மை, ஒற்றை நோக்குடைய தன்மை ஆகியவற்றை மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டோம், என்கிறார். "அதேபோல, இந்திய அமைதி காக்கும் படைக்குச் சரியான தகவல்கள் அளிக்கப்படவில்லை. தமிழர்களுக்காக இறங்கிவருவதில் ஜெயவர்தனேவுக்கு இருந்த அரசியல் உறுதியையும் நேர்மைத்தன்மையையும் அதிகமாக மதிப்பிட்டுவிட்டோம். இலங்கைத் தமிழர்களிடமிருந்து புலிகளைத் தனியாக பிரித்துவிட முடியும் என்ற எனது நம்பிக்கையும் பொய்த்துப் போனது. இலங்கை விவகாரத்தில் ராஜீவ் காந்தியின் ஈடுபாட்டை வரலாறு துல்லியமாக முடிவுசெய்யும். இந்திய, இலங்கை மக்களின் நலனுக்காக எவ்வித பிரதிபலனையும் தராத பணியை அவர் மேற்கொண்டார். அதற்கு அவர் தன் உயிரை விலையாகக் கொடுத்தார்," என்று இந்த நூலில் சொல்கிறாற் மணி சங்கர் அய்யர். `The Rajiv I Knew` புத்தகத்தை ஜக்கர்நாட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/czqqwvygdw2o
-
பிறந்தநாளில் 20 வயது யுவதிக்கு எமனாக வந்த இராணுவ வாகனம் - யாழில் சம்பவம்!
அண்ணை பகிர்ந்துள்ளேன்.
-
வாதவூரானின் அண்ணா 09/05/2024 இல் காலமானார்
அமரர் குமாரசாமி கிருபாகரமூர்த்தி ஓய்வுநிலை ஆசிரியர் பிறப்பு : 13.04.1976 இறப்பு : 09.05.2024 அண்ணாவின் பிரிவால் துயருற்று இருக்கும் @வாதவூரான் உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், ஓம் சாந்தி. எம்மைப்போல MUSCULAR DYSTROPHY யால் பாதிக்கப்பட்டவர்.
-
எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் - மருந்துகளை கொண்டுவருவதற்காக ரபா எல்லையை திறப்பதற்கான அழுத்தங்களை கொடுங்கள் - காசா மருத்துமவனையில் சிக்குண்டுள்ள அவுஸ்திரேலிய மருத்துவர்
Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 11:08 AM காசாவில் செயற்படும் ஒரேயொரு மருத்துவமனைக்குள் சிக்குண்டுள்ள அவுஸ்திரேலிய மருத்துவர், அவுஸ்திரேலிய அரசாங்கம் அங்கிருந்து தன்னையும் தனது குழுவினரையும் வெளியேற்றவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளதுடன் மருத்துவமனைக்கு மருந்துபொருட்களை அனுப்பவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேல் ரபா எல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த பின்னர் கான் யூனிசில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனைக்குள் சிட்னியை சேர்ந்த மருத்துவர் மோதர் அல்பெருட்டி உட்பட 16 மருத்துவர்களும் மருத்துவசுகாதார பணியாளர்களும் சிக்குண்டுள்ளனர். இஸ்ரேலின் தாக்குதலில் அவுஸ்திரேலிய மனிதாபிமான பணியாளர் கொல்லப்பட்டது போன்ற நிலை எங்களிற்கு ஏற்படுவதற்கு முன்னர் எங்களை இங்கிருந்து வெளியேற்றுங்கள் என்பதே எங்கள் செய்தி என அவர் கார்டியன் அவுஸ்திரேலியாவிற்கு தெரிவித்துள்ளார். காசா மனிதாபிமான பொருட்கள் மருத்துவ பணியாளர்களை பெறுவதற்காக எல்லையை திறக்குமாறு அழுத்தங்களை கொடுங்கள் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அல்பெருட்டி மே மாதம் முதலாம் திகதி பாலஸ்தீன அமெரிக்க மருத்துவ குழுவுடன் காசாவிற்கு சென்றார். நாங்கள் 13 ம் திகதி அங்கிருந்து வெளியேற திட்டமிட்டிருந்தோம் எனினும் ஏழாம் திகதி இஸ்ரேலிய படையினர் ரபாவை கைப்பற்றியதால் எங்களை அங்கிருந்து வெளியேறமுடியவில்லை சர்வதேச மனிதாபிமான பணியாளர்களிற்கான ஒரேயொரு பாதையையும் அவர்கள் மூடிவிட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். நாங்கள் எங்கள் பணியை ஒருவாரத்திற்கு முன்னரே பூர்த்தி செய்துவிட்டோம்; எங்கள் குடும்பத்தவர்கள் கவலையடைந்துவிட்டனர் அவர்களிடமிருந்து அழுத்தங்களை எதிர்கொள்கின்றோம் மூன்றுவாரங்களின் பின்னர் நாங்கள் களைத்துப்போய்விட்டோம் எனவும் அவுஸ்திரேலிய மருத்துவர் தெரிவித்துள்ளார். அல்பேருட்டி குழுவினர் காசாவிற்குள் மருந்துகள் மருத்துவம பொருட்களை எடுத்துச்சென்றனர் ஆனால் அவைமுடிவடையும் நிலையில் உள்ளன எனவும் அவர்தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184117
-
ஹெலிகொப்டர் விபத்தில் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உயிரிழப்பு
ஹெலிகாப்டர் விபத்து: இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? இஸ்ரேலில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY 37 நிமிடங்களுக்கு முன்னர் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த செய்தி வெளியானதும் இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் எதிர்வினைகள் வரத் தொடங்கின. இந்த ஹெலிகாப்டர் விபத்து ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்தது. விபத்திற்குள்ளான ஹெலிகாப்டரின் பாகங்கள் திங்கள் கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டன. அதன்பின்னர் ஹெலிகாப்டரில் யாரும் உயிர் பிழைத்ததற்கான அறிகுறிகள் இல்லை என இரான் நாட்டு ஊடகம் தெரிவித்தது. ரைசியின் மரணம் உறுதி செய்யப்பட்டதும் இஸ்ரேல் சமூக ஊடகங்களில் மேலும் தீவிரமாக எதிர்வினைகள் வரத் தொடங்கின. இரானிலும் ரைசியின் திடீர் மரணம் குறித்து சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். சமீபத்தில் இரான் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் ஏற்பட்டது. முதலாவதாக, சிரியாவில் உள்ள இரான் தூதரகம் மீதான தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதற்கு பதிலடியாக ஏப்ரல் 2024இல், இஸ்ரேலை ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்கியது இரான். இந்த மோதல் சம்பவங்களுக்கு மத்தியில் ரைசியும் இரானின் வெளியுறவு அமைச்சரும் திடீரென மரணமடைந்தது இஸ்ரேல் மீது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் ரைசியின் மரணத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று இஸ்ரேல் மறுத்துள்ளது. செய்தி முகமை ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, பெயர் கூற விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, “ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குப் பின்னால் இஸ்ரேல் இல்லை.” என்று கூறியுள்ளார். எனினும் இஸ்ரேல் அரசிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக இதுவரை எந்த அறிவிப்பும் வரவில்லை. இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கொல்லப்பட்டது தொடர்பாக இஸ்ரேலிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் மற்றும் அமெரிக்காவின் பங்கு குறித்து எழும் கேள்விகள் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டின் இரானிய செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏ கூற்றுப்படி, இந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு இரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளே காரணம் என்று இரான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் முகமது ஜாவத் ஜரீப் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து முகமது ஜவாத் கூறியதாவது, ‘‘இதயத்தை உலுக்கும் இந்த சம்பவத்திற்கு அமெரிக்காவும் ஒரு காரணம். விமானப் போக்குவரத்துத் துறை இரானுக்கு எதையும் விற்கக் கூடாது என்று அமெரிக்கா தடை விதித்தது. இந்த காரணத்திற்காக அதிபரும் அவரது தோழர்களும் உயிர் தியாகம் செய்யும் சூழலுக்கு தள்ளப்பட்டனர். அமெரிக்காவின் இந்த குற்றம் இரானிய மக்களின் நினைவிலும் சரித்திரத்திலும் பதிவாகியிருக்கும். இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான போது இரான் அமெரிக்காவிடம் உதவி கோரியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆனால் அமெரிக்கா உதவி செய்யவில்லை. அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் திங்களன்று, “இரான் அரசாங்கம் எங்களிடம் உதவி கேட்டது. இதுபோன்ற சூழ்நிலையில் எந்த வெளிநாட்டு அரசும் உதவி கேட்டாலும் நாங்கள் உதவ தயாராக உள்ளோம் என்று இரான் அரசிடம் தெரிவித்தோம். ஆனால் இறுதியில் தளவாட பிரச்னை காரணமாக (logistical reasons) எங்களால் உதவ முடியவில்லை.” என்றார். அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் லாயிட் ஆஸ்டினிடம் இந்த விவகாரத்தில் இரான் அமெரிக்காவை குற்றம் சாட்டக்கூடும் என்று கவலைப்படுகிறீர்களா? என்று கேள்வியெழுப்பட்டது. "இந்த ஹெலிகாப்டர் விபத்தில் அமெரிக்காவுக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று அவர் பதிலளித்தார். அமெரிக்க செனட்டர் சக் ஷுமர் திங்களன்று, "அமெரிக்க உளவுத்துறை அமைப்புகளின் அதிகாரிகள் உடனான உரையாடல்களின் அடிப்படையில், இரான் அதிபர் மரணத்தில் சதி இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை” என்று கூறினார். இஸ்ரேல் ஊடகங்களின் எதிர்வினை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. `டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல்’ என்னும் தளத்தில், ரைசியின் ஹெலிகாப்டர் விபத்திற்கும் இஸ்ரேலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ஒரு அதிகாரி கூறிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி அறிக்கையின்படி, இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் அவிக்டோர் லிபர்மேன், "ரைசியின் மரணம் இஸ்ரேல் கொள்கைகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாதது. அதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ரைசியின் மரண செய்தி எங்களுக்கு முக்கியமில்லை. இது இஸ்ரேலின் நிலைப்பாட்டை எந்த விதத்திலும் பாதிக்காது. இரானின் கொள்கைகளை உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி தீர்மானிக்கிறார். ரைசி ஒரு கொடூரமான மனிதர் என்பதில் சந்தேகமில்லை. அவரது மரணத்துக்கு கண்ணீர் வடிக்க மாட்டோம்.” என்று குறிப்பிட்டிருக்கிறார். இந்த செய்தி அறிக்கையில், பிரதமர் அலுவலக துணை அமைச்சர் அவி மாவோஸின் கருத்தும் பதிவு செய்யப்பட்டுள்ளது, “ஒரு மாதத்திற்கு முன்பு ரைசி, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினால், பிழைக்க மாட்டீர்கள் என்று மிரட்டல் விடுத்தார். ஆனால் இப்போது அவரே உயிருடன் இல்லை.” என்று பேசியுள்ளார். டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தியில், இந்த கருத்துகளை மேற்கோள் காட்டி, ரைசியின் மரணத்தை இஸ்ரேலுக்கு ஒரு நல்ல செய்தி என்று விவரித்துள்ளனர். ரைசி மரணத்தை தொடர்ந்து, இஸ்ரேலிய நகரமான பேட் யாமில் உள்ள ஒரு மதத் தலைவர் தனது மாணவர்களிடம் வார நாட்களில் யூதர்கள் ஓதும் பிரார்த்தனையை தவிர்க்கச் சொல்லி இருக்கிறார். பொதுவாக இந்த பிரார்த்தனைகள் பண்டிகை சமயங்களில் நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தி அறிக்கையில், ரைசியின் மரணத்திற்குப் பிறகு கொண்டாட்டம், நடனம் போன்ற விஷயங்களும் சில இடங்களில் நடந்ததாக எழுதப்பட்டுள்ளது. "தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்” பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இப்ராஹிம் ரைசி இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் எழுச்சி குறித்து `யாய் நெட்’ செய்தி இணையதளத்தில் கட்டுரையாக பகிரப்பட்டுள்ளது. அந்த கட்டுரைக்கு 'தெஹ்ரானின் கசாப்புக் கடைக்காரர்' என்று தலைப்பிடப்பட்டுள்ளது. மற்றொரு செய்தி இணையதளம், `இரானின் மிகவும் வெறுக்கப்பட்ட மனிதனின் மரணம்’ என்ற தலைப்பை வழங்கியுள்ளது. ரைசியின் மரணத்துக்கு கண்டிப்பாக கண்ணீர் வராது என்று எழுதப்பட்டுள்ளது. இரான்-இராக் போரின் போது நடந்த படுகொலைகளால், அங்குள்ள மூத்த குடிமக்களின் மனதில் ரைசி குறித்து ஒருவித பயம் நிலவுகிறது. ஹிஜாப் தொடர்பான கண்டிப்பு காரணமாக, பெண்கள் ரைசியை வெறுக்கிறார்கள் என்றும், இரானின் புரட்சிகர காவலர்களும் அவரிடமிருந்து தள்ளி இருந்ததாக அந்த செய்தி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நீதித்துறையில் பணியாற்றத் தொடங்கிய ரைசி, பல நகரங்களில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் நீதிபதியாகவும் ஆனார். ரைசி 1988 இல் உருவாக்கப்பட்ட உளவுத்துறை நீதிமன்றத்தில் சேர்ந்தார், அது 'மரணக் குழு' என்று பலரால் அழைக்கப்பட்டது. ஏற்கனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக சிறை தண்டனை அனுபவித்து வந்த ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகளிடம் இந்த நீதிமன்றங்கள் மீண்டும் விசாரணை செய்தன. இந்த நீதிமன்றங்களால் மரண தண்டனை விதிக்கப்பட்ட அரசியல் கைதிகளின் சரியான எண்ணிக்கை தெரியவில்லை, ஆனால் மனித உரிமை அமைப்புகள் அவர்களில் சுமார் 5,000 ஆண்களும் பெண்களும் அடங்குவர் என்று கூறுகின்றனர். தூக்கிலிடப்பட்ட பின்னர், அவர்கள் அனைவரும் வெளியுலகிற்கு தெரியாத பெரிய புதைகுழிகளில் புதைக்கப்பட்டனர். மனித உரிமை ஆர்வலர்கள் இந்த சம்பவத்தை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று கூறுகின்றனர். இந்த குற்றங்களில் தனக்கு பங்கில்லை என இப்ராஹிம் ரைசி மறுத்தார். ஆனால் அவர் ஒரு முறை இரானின் முன்னாள் உச்ச தலைவர் ஆயதுல்லா காமனெயி ஃபத்வாவின் படி, இந்த தண்டனை 'பொருத்தமானது' என்று கூறினார். ரைசியின் உடல் தெஹ்ரானுக்கு கொண்டு வரப்படும் போது, யாரும் உண்மையாக கண்ணீர் சிந்தமாட்டார்கள் என்று `யாய் நெட்’ தெரிவிக்கிறது. `ஜெருசலேம் போஸ்ட்’ செய்தி அறிக்கை ரைசியின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் நடந்து வரும் பரபரப்பை பற்றி குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் சமூக ஊடகங்களில் என்ன நடக்கிறது? இஸ்ரேலில் சில சமூக ஊடக கணக்குகளில் இருந்து ரைசியின் மரணம் குறித்த மீம்ஸ்கள் பகிரப்படுகின்றன. சிலர் ரைசியின் ஹெலிகாப்டரை `எலி காப்டர்’ என்ற மொசாட் ஏஜென்ட் ஓட்டிச் சென்றதாக கிண்டலாக பகிர்ந்துள்ளனர். எலி கோஹன் என்பவர் இஸ்ரேலின் உளவாளி. இஸ்லாமில் `கமில்’ (Kamil) நிலையை எட்டியதன் மூலம், கோஹன் சிரியா அதிபருடன் மிகவும் நெருக்கமாகி விட்டார், அவர் சிரியாவின் துணை பாதுகாப்பு அமைச்சராக ஆகும் நிலையில் இருந்தார். 1967 அரபு-இஸ்ரேல் போரில் இஸ்ரேலின் வெற்றியில் கோஹன் சேகரித்த உளவுத்துறை தகவல் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் பேசப்பட்டு வரும் `எலி காப்டர்’ என்ற பெயர் எலி கோஹனின் பெயருடன் இணைக்கப்பட்டு பேசப்படுகிறது. இஸ்ரேலின் பிரெஞ்சு மொழி செய்தி சேனலின் (I-24) நிருபரான டேனியல் ஹைக், `எல்லி காப்டர்’ நகைச்சுவை பற்றி செய்தியாக வெளியிட்டார். இருப்பினும், மக்கள் இதை விமர்சித்ததால், சேனல் தரப்பு மன்னிப்பு கேட்டது. பட மூலாதாரம்,BBC/PUNEET KUMAR படக்குறிப்பு,எலியாஹு பென் ஷால் கோஹன் அல்லது `எலி கோஹன்' ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடினார்களா? ரைசியின் மரணத்தை இஸ்ரேலிய தலைவர்கள் கொண்டாடியதாக துருக்கிய செய்தி நிறுவனம் அனடோலு (Anadolu) தெரிவித்துள்ளது. கலாசார அமைச்சர் அமிச்சாய் எலியாஹு ஒரு கோப்பையில் ஒயின் இருக்கும் படத்தை X தளத்தில் இல் வெளியிட்டு, `சியர்ஸ்’ என்று பகிர்ந்துள்ளார். அவர் மற்றொரு ட்வீட் பதிவில், "நேற்றிரவு வரை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் மரணத்தை விரும்பிய இந்த பைத்தியக்காரர்களும், வலதுசாரி மக்களும், இரான் கொலையாளியின் மரணத்தை நாம் கொண்டாட வேண்டாம் என்று விரும்புகிறார்கள்.” என்று பதிவிட்டுள்ளார். சில இஸ்ரேலிய தலைவர்களின் அறிக்கைகள் இந்த செய்தி அறிக்கையில் இடம் பெற்றுள்ளன. அவர்கள் ரைசியின் மரணத்திற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டாம் என்றும், ரைசியின் பழைய அறிக்கைகளை மேற்கோள் காட்டியும் பதிவிட்டுள்ளனர். இப்ராஹிம் ரைசியின் மரணம் குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை. https://www.bbc.com/tamil/articles/c10049qge74o
-
காசா குறித்து ஒரு விதமான நிலைப்பாடு இலங்கை குறித்து வேறுவிதமான நிலைப்பாடு - சர்வதேச சமூகம் குறித்து இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கடும் விமர்சனம்
Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 01:17 PM இலங்கையின் மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சர்வதேச சமூகம் இரட்டைநிலைப்பாட்டினை பின்பற்றுவதாக இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது. இலங்கை மீது வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் இராஜதந்திரிகள் மனித உரிமை அமைப்புகள் அதிகளவு அழுத்தங்களை கொடுப்பதையும் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதையும் அவதானித்துள்ளதாக ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலே குறிப்பிட்ட ஆளுமைகள் மற்றும் அமைப்புகள் அவர்களின் இரட்டை நிலைப்பாட்டு கொள்கைகளிற்கு நன்கு அறியப்பட்டவர்கள் என தெரிவித்துள்ள ரஸ்ய தூதரகம் இந்த நீதியின் தூதுவர்கள் இந்த விடயத்தை பார்க்கும் விதம் குறித்த தனது குழப்பமான நிலையை மீண்டும் வெளியிட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளது. காசா விவகாரத்தில் அவர்கள் வெளிப்படுத்தும் பொறுமை குறித்து இந்த ஆளுமைகளை விமர்சிக்க விரும்புவதாக ரஸ்ய தூதரகம் தெரிவித்துள்ளது. காசா விவகாரம் குறித்து ஏன் அவர்கள் பொறுமையாக உள்ளனர். யுகொஸ்லாவியா, ஆப்கானிஸ்தான், லிபியா மற்றும் நேட்டோ தனது ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் ஏற்றுமதி செய்ய விரும்பும் பகுதிகளில் நேட்டோ ஏற்படுத்திய மனிதாபிமான பாதிப்பு குறித்து இந்த சர்வதேச பிரமுகர்கள் ஏன் மதிப்பீடுகளை வெளியிடவில்லை எனவும் இலங்கைக்கான ரஸ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. பால்டிக் நாடுகளில் ரஸ்ய மொழிபேசும் சிறுபான்மையினத்தவர்கள் ஒடுக்கப்படுவது குறித்து இவர்கள் ஆராய்வதை எது தடுக்கின்றது எனவும் ரஸ்ய தூதரகம் கேள்வி எழுப்பியுள்ளது. https://www.virakesari.lk/article/184133
-
அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணம் - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம்
அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணம், ஆனாலும் மக்கள் இன்னமும் நம்பிக்கை இழக்கவில்லை - சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 11:43 AM அமெரிக்கா, பிரிட்டன், ரஸ்யா, சீனா போன்ற நாடுகளே விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணமாக உள்ளன என தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றம் சென்றமையும் சர்வதேச அளவில் இடம்பெறும் காசா தொடர்பான ஆர்ப்பாட்டங்களும் சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என கருதும் மக்கள் உள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் விதிமுறைகளை அடிப்படையாக கொண்டசர்வதேச ஒழுங்குமுறையின் வீழ்ச்சி ஐநா போன்ற அமைப்புகளின் மீதுமக்கள் நம்பிக்கைஇழப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது. 1948ம் ஆண்டு புதிய ஒழுங்குமுறையை உருவாக்குவதில் பங்களிப்பு செய்தவர்களே அதனை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அமெரிக்கா பிரிட்டன் ரஸ்யா சீனா போன்ற நாடுகளே விதிமுறைகளை அடிப்படையாக கொண்ட சர்வதேச ஒழுங்குமுறை வீழ்ச்சியடைவதற்கான காரணமாக உள்ளன. காசாவில் இடம்பெறும் விடயங்களை அவதானிக்கும் போது இது புலப்படுகின்றது. ஆனாலும் இதற்கு எதிராக தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளமை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படவேண்டிய விடயம் இது சர்வதேச அமைப்புகள் மீது மக்கள் நம்பிக்கை இழக்கவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ளது. 1948ம் ஆண்டின் இனப்படுகொலைகள் தொடர்பான பிரகடனம் மிகவும் அவசியமான விடயம் என்பதை தென்னாபிரிக்காவின் நடவடிக்கைகள் உலகிற்பு தெளிவுபடுத்தியுள்ளன. உலக நாடுகளில் இதற்கு பெரும் வரவேற்பு காணப்படுகின்றது குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் இதற்கு பெரும் ஆதரவு காணப்படுகின்றது. காசாவில் யுத்தநிறுத்தத்தை கோரும் தீர்மானத்தை கொண்டுவருவதில் வழமையாக இந்த விடயத்தில் ஆர்வம் காண்பிக்கும் நாடுகளிற்கு பதில் வேறு நாடுகள் ஆர்வம் காட்டியமை குறிப்பிடத்தக்க விடயம். அமெரிக்கா உட்பட பல நாடுகளில் பல்கலைகழகங்களில் காசா விவகாரம் தொடர்பில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றன. பெருமளவு மக்களும் பல்கலைகழக மாணவர்களும் வீதியில் இறங்கியுள்ளனர் சர்வதேச சட்டங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என கருதும் பெருமளவு மக்கள் உள்ளனர் என்பதை இது வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/184120
-
பூனைக்கு கௌரவ முனைவர் பட்டம்!
கல்லூரிகளில் படித்து பட்டம் பெற்று, பின்னர் குறிப்பிட்ட கருப்பொருளை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்யும் நபர்களுக்கு பல்கலைக்கழகங்கள் முனைவர் பட்டம் வழங்குவது வழக்கம். இதுதவிர தொழிலதிபர்கள், கலைத்துறையினர், சாதனை படைத்தவர்கள் என பலருக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் பூனைக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கப்பட்டிருப்பது பேசு பொருளாகி இருக்கிறது. அங்குள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்கிற பூனை வசித்து வருகிறது. 4 ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் சுற்றி வரும் இந்த பூனை மாணவர்களிடம் நட்புடன் பழகும் தன்மை கொண்டது. அதோடு பல்கலைக்கழக வளாகத்தில் குப்பை தொட்டிகளை பொறுப்புடன் பராமரித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை பாராட்டி மேக்ஸ் பூனைக்கு பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கி உள்ளது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/302113
-
15 ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவவீரர்கள் சட்ட ரீதியாக சேவையிலிருந்து வெளியேற்றம்
Published By: DIGITAL DESK 7 21 MAY, 2024 | 11:19 AM பொது மன்னிப்பு காலத்தின் முடிவில் விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத 15667 இராணுவவீரர்கள் சட்ட ரீதியாக வெளியேற்றப்படவுள்ளதாக இலங்கை இராணுவ தலைமையகத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்களுக்கு 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20 அம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி வரை சட்ட ரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்காக ஒரு மாத கால பொது மன்னிப்பு காலம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இதனடிப்படையில், பிரகடனப்படுத்தப்பட்டிருந்த பொது மன்னிப்பு காலத்தின் 2023 டிசம்பர் 31, மற்றும் அதற்கு முன் விடுமுறை இன்றி பணிக்கு சமுகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு சட்ட ரீதியாக சேவையில் இருந்து விலகுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், விடுமுறையின்றி கடமைக்கு சமுகமளிக்காத 15667 இராணுவவீரர்கள் சட்ட ரீதியாக வெளியேற்றப்படவுள்ளனர். மேலும், மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் அனுமதி இன்றி கடமைக்கு சமுகமளிக்காமல் தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவத்தைச் சேர்ந்த 373 பேர் இராணுவத்தை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/184105
-
வற்றாப்பளைக்கு இளைஞர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்து; ஒருவர் பலி ; ஐவர் படுகாயம்
வற்றாப்பளை கண்ணகி அம்மனை தரிசித்து விட்டு வந்த பக்தர்களுக்கு ஏற்பட்ட சோகம்! Published By: DIGITAL DESK 3 21 MAY, 2024 | 12:15 PM யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு - சாந்தை பகுதியில் இருந்து வற்றாப்பளை ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்த பக்தர்கள் பேருந்து குடைசாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், மேற்குறிப்பிட்ட பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் ஒன்றுசேர்ந்து பேருந்து ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்துவிட்டு இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்தனர். இந்நிலையில், பூநகரி பாலம் தாண்டி வந்துகொண்டிருந்த போது பேருந்து தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்நிலையில் பேருந்தில் பயணித்த ஆறு பயணிகள் படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், அவர்கள் பூநகரி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/184124