Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,COLLIER LANDRY படக்குறிப்பு, கோலியர் லேண்ட்ரி பாயில் தனது தந்தைக்கு எதிரான விசாரணையில் சாட்சியம் அளித்தார். 3 மணி நேரங்களுக்கு முன்னர் -நான் கோலியர் லேண்ட்ரி பாயில். - உங்கள் வயது என்ன என்று சொல்லுங்கள். -எனக்கு 12 வயது ஆகிறது - நீங்கள் டிசம்பர் 30 அன்று ஒன்பது மணியளவில் படுக்கைக்குச் சென்றதாகச் சொன்னீர்கள். அன்றிரவு உங்களை தூக்கத்தை தொந்தரவு செய்யும் வகையில் ஏதாவது நடந்ததா? - என் சகோதரியிடம் இருந்து ஓர் அலறல் சத்தம் கேட்டது. அம்மாவுக்கு ஏதோ பிரச்னை என்றுதான் முதலில் நினைத்தேன். சிறிது நேரம் கழித்து, மூன்று நிமிடங்களுக்கு தொடர்ந்து சத்தமாக கதவை தட்டும் சத்தம் கேட்டது. - அந்த `ஒலி’ எப்படி இருந்தது என்று விவரிக்க முடியுமா? - அது மிகவும் வலுவான சத்தமாக இருந்தது. கோலியர் தனக்கு முன்னால் இருந்த மர மேசையில் தனது இரு கைகளையும் வைத்து வேகமாக தட்டினார். - பின்னர், சுமார் ஒன்றரை நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் இதுபோன்ற பலத்த சத்தம் கேட்டது. கோலியர் மீண்டும் இரண்டு கைகளாலும் மேசையின் மீது தட்டி காண்பித்தார். -அந்த சத்தம் மிகவும் அதிகமாக கேட்டதால், நான் பயந்து போனேன். -சரி, என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள நீங்கள் படுக்கையில் இருந்து எழுந்தீர்களா? - இல்லை, நான் அதை செய்யவில்லை. - நீங்கள் ஏன் எழுந்திருக்கவில்லை என்று நடுவர் மன்றத்திடம் சொல்ல முடியுமா? ஏனென்றால் நான் என் தந்தையை நினைத்து மிகவும் பயந்தேன், நான் எப்போதுமே அவருக்கு பயப்படுவேன். அமெரிக்காவில் ஒரு நீதிமன்றத்தில், வழக்கறிஞர் மற்றும் கோலியர் இடையே நடந்த இந்த உரையாடல் 1990இல் நிகழ்ந்தது, அப்போது கோலியருக்கு வயது 11. தனது தாயைக் கொன்றதற்காக தனது சொந்த தந்தைக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்து, சிறைக்கு அனுப்பிய வழக்கின் உரையாடல் தான் இது. ஆனால் இந்த கதை நீண்ட காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆக்ரோஷமான விவாகரத்து கோரிக்கை பட மூலாதாரம்,COLLIER LANDRY படக்குறிப்பு,கோலியர் தனது குடும்பத்துடன் ஓஹியோவின் மான்ஸ்ஃபீல்டில் வசித்து வந்தார் கோலியர் தனது பெற்றோரான ஜான் - நோரீன் பாயில் மற்றும் அவரது சகோதரியுடன் அமெரிக்காவில் ஓஹியோ மாகாணத்தில் உள்ள ஒரு சிறிய நகரமான மான்ஸ்ஃபீல்டில் வசித்து வந்தார். கோலியர் தனது தாயுடன்தான் பெரும்பாலான நேரத்தை செலவிட்டார். அவரது தந்தை ஜான் சமூகத்தில் அந்தஸ்து மிக்க மருத்துவராக பணியாற்றினார். மக்கள் அவரை மதித்தனர். எப்போதும் வேலை வேலை என்றிருப்பார். கோலியர் சிறிய வயதில் இருந்தே தன் தந்தையை முழுமையாக நம்பினார். ஆனால் 11 வயதில் தன் தந்தையை பற்றிய சில உண்மைகளை கண்டுபிடித்தார். தனது தந்தை வேலையில் அதிக நேரம் செலவிடுவதாக சொல்வது உண்மை இல்லை என்று கோலியருக்கு தெரிய வந்தது. தனது குழந்தைகளுடன் வசித்து வந்த ஷெர்ரி என்ற பெண் வீட்டிற்கு கோலியரை அவரின் தந்தை இரண்டு முறை அழைத்துச் சென்றார், அந்த சமயத்தில் தனது தந்தை அந்தப் பெண்ணை முத்தமிடுவதை பார்த்த கோலியர் அதிர்ச்சியடைந்தார். வீடு திரும்பியதும், தனது தந்தைக்கு ஒரு காதலி இருப்பதாக தனது தாயிடம் கூறினார். ஜான் பாயில் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பது இது முதல் முறை அல்ல. தனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பது நோரீனுக்கு முன்னரே தெரியும். கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக தனது கணவர் பற்றிய தகவல்களை அறிந்திருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நோரீன் தன் கணவரிடம் முன்வைத்த ஒரே நிபந்தனை, தனது குழந்தைகளை இந்த விவகாரங்களில் ஈடுபடுத்தக் கூடாது என்று கேட்டார். ஜான் பாயிலும் அதை ஏற்றுக்கொண்டார். கோலியர் சொன்னதை கேட்டு ஆத்திரமடைந்த நோரீன் தொலைபேசியில் தனது கணவரை அழைத்து சத்தம் போட்டார். தன் மகனை மற்றொரு பெண் வீட்டுக்கு அழைத்துச் சென்றதை சுட்டிக்காட்டி விவாகரத்து கேட்டார். 1989 இன் பிற்பகுதியில், விடுமுறை முடியும் வரை ஒன்றாக இருக்க அவர்கள் இருவரும் முடிவு செய்தனர். பின்னர் 1990 இல், நோரீன் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க முடிவு செய்தார். "என் தந்தையின் நடவடிக்கை நாளுக்கு நாள் மிகவும் ஆக்ரோஷமாக மாறியது. நானும் அம்மாவும் அவரை பிரிந்தால் நிம்மதியின்றி தெருவில் வசிப்போம் என்று அவர் சொல்லிக் காட்டினார். எங்கள் முழு வாழ்க்கையையும் அவர் நரகமாக்கி விட்டார்." என்று கோலியர் பிபிசியிடம் விவரித்தார். தற்போது கோலியருக்கு 46 வயதாகிறது. அவர் தன் சொந்த வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை வைத்து ஏ மர்டர் இன் மான்ஸ்ஃபீல்ட்(A Murder in Mansfield) என்ற பெயரில் 2017 இல் ஆவணப்படம் வெளியிட்டார். ஒரு முறை அவரது தந்தை அவரை ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர்கள் நீல நிற தார்ப்பாய் விரிப்பை வாங்கினார். ஆனால் அவர் அதற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. பின்னர் ஒரு நாள் அவரது தந்தை ஒரு பச்சை வெளிப்புற தரை விரிப்பை வாங்கி வந்தார், அதை அவர் வீட்டின் பின் தாழ்வாரத்தில் விரித்தார். எனக்கு ஒன்றுமே புரியவில்லை. பொருத்தமற்ற பொருளை எதற்கு வாங்கி வீட்டில் வைக்க வேண்டும் என்று எனக்கு தோன்றியது, இதெல்லாம் ஏன் செய்கிறார் என்ற உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வந்தது . பொம்மை தலையணையில் ஒளித்து வைத்த பட்டியல் பட மூலாதாரம்,COLLIER LANDRY படக்குறிப்பு,தன் அம்மாவுடன் கோலியர் நோரீன் தனது திருமணத்தை விட்டு வெளியேற முழுமூச்சில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினார். அதே சமயம் கோலியரிடம், அவரின் தந்தையைப் பற்றி மேலும்மேலும் பல விஷயங்களைச் சொன்னார். “நவம்பர் 1989இல், என் அம்மா என்னைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்து ஒரு சிறிய உணவகத்திற்கு கூட்டி வந்தார். நாங்கள் காரில் இருந்தோம், அப்போது என் அம்மா என்னிடம்: 'கோலியர், நீ ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும். நான் உன்னை விட்டு எங்குமே செல்லமாட்டேன். நான் ஒருவேளை உன்னை பிரிகிறேன் என்றால், அது கண்டிப்பாக உன் தந்தையால் தான் இருக்கும். என்றைக்காவது உன் அப்பா, `உன் அம்மா போய்விட்டார்’ என்று சொன்னால், அவர் என்னை கொன்று விட்டார் என்று அர்த்தம். அவரை நம்பாதே ' என்றார். சிறுவன் தனது தாயின் நண்பர்கள் அனைவரின் தொலைபேசி எண்களையும் பட்டியலிட்டு எழுதி, அதை தனது படுக்கை அறையில் இருக்கும் பொம்மை தலையணைக்குள் மறைத்து வைத்தார். அன்று டிசம்பர் 30, 1989. கோலியர் தனது வளர்ப்பு சகோதரி மற்றும் தாயுடன் வீட்டில் இருந்தார். அவர்களுடன் தங்கியிருந்த தந்தைவழி பாட்டிக்காக அனைவரும் காத்திருந்தனர். கோலியரின் அப்பா அந்த பாட்டியை வீட்டில் விட்டுவிட்டு எங்கோ கிளம்பினார். "அன்று தான் நான் என் அம்மாவை கடைசியாகப் பார்த்தேன்," என்று கோலியர் விவரிக்கிறார். டிசம்பர் 31, 1989 அன்று, கோலியர் நள்ளிரவில் ஒரு அலறல் சத்தம் கேட்டு கண்விழித்தார். மேலும் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் பலத்த சத்தம் கேட்டது. கதவை யாரோ பலமாக தட்டுவது போன்ற சத்தம் கேட்டது. அந்த சத்தங்களுக்கு மத்தியில் தனது தந்தை மிகவும் தாழ்ந்த குரலில் ஏதோ முணுமுணுப்பதை கோலியர் கேட்டார். “நான் எழுந்து போய் என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டுமா? அல்லது நான் இப்படியே படுக்கையில் இருக்கலாமா? நான் படுக்கையில் மறைந்து கொண்டேன். அப்போது யாரோ மெதுவாக இறங்கி நடக்கும் சத்தம் கேட்டது. அங்கு சுவரில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தேன். மணி 3:18 ஆனது மீண்டும் போர்வைக்குள் சென்றேன். நான் படுக்கை மீது அந்த போர்வையினுள் என்னால் முடிந்தவரை அமைதியாக இருந்தேன், வாசலில் காலடிகளை கவனித்தேன். என்னை நானே பரிசோதித்துப் பார்த்தேன். எனக்கு ஒன்றும் ஆகவில்லை. என்ன நடந்தது? ஏதேனும் பேயாக இருக்குமா? வேண்டாம் வெளியே பார்க்க வேண்டாம்.” என்று தொடர்ந்தார். தூங்குவது போல் நடித்து கொண்டிருந்த சிறுவன் கோலியர், அவர்கள் வெளியேறுவதைப் பார்த்தார். அப்படியே படுத்து எப்படியோ தூங்கிவிட்டார். கண்விழித்த போது சூரியன் உதித்திருந்தது. நேராக அம்மாவின் அறைக்கு ஓடினார். படுக்கையில் தாள்கள் அலங்கோலமாக கிடந்ததை கோலியர் கவனித்தார். காரணம் அவரின் அம்மா தூங்கி எழுந்தவுடன் படுக்கையை சரிசெய்து விட்டு தான் அடுத்த வேலையை பார்ப்பார். ஏதோ நடந்திருப்பதை கோலியர் புரிந்து கொண்டார். ஜான் இடுப்பில் டவலுடன் சோபாவில் அமர்ந்திருப்பதைப் பார்த்தார். அவர் குளித்துவிட்டு வந்திருந்தார். “அம்மா எங்கே?” என்று அப்பாவிடம் கேட்டா கோலியர். அவரது தந்தை அவரைப் பார்த்து அமைதியாக பதிலளித்தார்: "கோலியர், அம்மா கொஞ்சம் வெளியூர் சென்றிருக்கிறார். " என்று சொன்னார். கோலியருக்கு புரிந்தது. அப்பா அம்மாவை ஏதோ செய்திருக்கிறார் என்று கண்டுபிடித்தார். நள்ளிரவில் எனக்கும் உன் அம்மாவுக்கு பிரச்னை ஏற்பட்டது. நோரீன் என் பணம், காதலி மற்றும் விவாகரத்து பற்றி பேசி சண்டை போட்டார்” என்று கோலியரிடம் ஜான் சொன்னார். - நள்ளிரவில் நான் கேட்ட அந்த சத்தம் எப்படி வந்தது? - உன் அம்மா பர்ஸை என் மீது எறிந்தாள், அதனால் பர்ஸ் சுவரில் மோதிய சத்தத்தை நீ கேட்டிருக்க வேண்டும். - இருமுறை கேட்டதே? - ஆம், ஆம், பர்ஸ் தூக்கி எறிந்த சத்தம் தான் கோலியர். அந்த நேரத்தில் அவரது பாட்டி அங்கு வந்தார். சண்டைக்குப் பிறகு நோரீன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும், அவர்கள் போலீஸை அழைக்கப் போவதில்லை என்றும் பாட்டி கூறினார் . "பயப்பட வேண்டியதில்லை. உன் அம்மா திரும்பி வருவார். இதற்கு முன்னரும் இப்படி செய்திருக்கிறார்” என்று பாட்டி சமாதானப்படுத்தினார். பட மூலாதாரம்,COLLIER LANDRY படக்குறிப்பு,கோலியரின் பெற்றோர் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்தனர், ஆனால் ஜான் பாயில் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு அவர்கள் கோலியரை வளர்ப்பு சகோதரி பிரிந்து சென்றார். சிறுவனை நம்பிய துப்பறியும் நிபுணர் கோலியர் தன் தந்தையை நம்பவில்லை. இதற்கு முன்பு தாய் இப்படி வீட்டை விட்டு வெளியேறியது இல்லை. வயர்லெஸ் போனை எடுத்துக்கொண்டு, தன் அறைக்கு ஓடி, தான் பொம்மை தலையணையில் இருந்த தொலைப்பேசி எண்களின் பட்டியலை தேடினார். குளியலறைக்கு சென்று பூட்டிக்கொண்டு அந்த பட்டியலில் இருந்த எண்களுக்கு அழைக்க ஆரம்பித்தார். தாயின் நண்பர்களிடம் நடந்ததை கூறினான். "என்னால் காவல்துறையை அழைக்க முடியாது என்று என் தந்தை என்னிடம் கூறினார். அதனால் நீங்கள் காவல்துறையை அழைத்து என் அம்மா பற்றி சொல்லுங்கள்" என்று அவர் நோரீனின் நண்பர்களிடம் கூறினார். போலீஸார் வீட்டிற்கு வந்து கதவை தட்டினர். பாட்டி கதவை திறந்தார். அவர்களைப் பார்த்ததும் பாட்டி பயந்துவிட்டார். "உன் தந்தை உன்னைக் காவல்துறையை அழைக்க வேண்டாம் என்று சொன்னார் அல்லவா!" பாட்டி திட்டினாள். சிறுவன் காவல் அதிகாரிகளில் ஒருவரை ஓரமாக இழுத்து அவரிடம் சொன்னான்: “ என் அம்மாவுக்கு ஏதோ நடந்திருக்கிறது. எனக்கு என் தந்தை மீது சிறிதும் நம்பிக்கை இல்லை .“ என்றார். முதலில் அவர்கள் கோலியரை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை, ஆனால் சிறுவனின் வற்புறுத்தலுக்கு பிறகு வழக்கு பதிவு செய்தனர். புத்தாண்டு தினத்தன்று, டேவிட் மெஸ்மோர் என்ற துப்பறியும் நபர் நோரீன் காணாமல் போன வழக்கை விசாரிக்க தொடங்கினார். நோரீன் வீட்டுக்கு டேவிட் மெஸ்மோர் வந்தார். அன்று காலை அப்பா கிளம்பி கொண்டிருந்தார். பாட்டி கவலையுடன் தன் மகனை அழைக்க சமையலறைக்குச் சென்றார். இது கோலியருக்கு கிடைத்த பொன்னான சந்தர்ப்பம். துப்பறியும் நபரிடம் சென்று, அவரின் கண்களை நேராகப் பார்த்து, "என் அம்மா ஒருபோதும் என்னை தனியாக விட்டு செல்லமாட்டார். உங்கள் தொடர்பு எண்ணை கொடுங்கள். நாளை நான் பள்ளிக்குச் செல்கிறேன், என்னால் இங்கே பேச முடியாது என்பதால் நான் உங்களை தொலைபேசியில் அழைக்கிறேன்" என்று அவர் விளக்கினார். பெரும்பாலான குழந்தைகள் இந்த கட்டத்தில் குழப்பமாக இருப்பார்கள், தங்கள் தாயின் இழப்பால் குழப்பமடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். தந்தையைப் பற்றி எண்ணி பயப்படுவார்கள், ஆனால் கோலியர் அப்படி பயப்படவில்லை. அச்சிறுவரின் உணர்ச்சிகள் இடைநிறுத்தப்பட்டது போல் இருந்தது. கோலியர் அடுத்த நாள் பள்ளிக்கு வந்தார், அங்கு அவர் நேரடியாக தலைமையாசிரியரின் அலுவலகத்திற்குச் சென்று துப்பறியும் அதிகாரி எண்ணுக்கு அழைத்தார். கோலியரின் பள்ளிக்கு டேவிட் வந்தார், சிறுவன் தனக்குத் தெரிந்த அனைத்தையும் அவரிடம் சொன்னார். "டேவ், நான் வீட்டிற்கு சென்றதும், நான் என் அம்மாவின் உடலைக் கண்டுபிடிக்க முடியுமா என்று வீட்டு அடித்தளத்தில் பார்க்கப் போகிறேன். நான் என் அம்மாவின் பையைத் தேடப் போகிறேன். அவர் கிளம்புவதாக இருந்தால், அவர் தன் பையை எடுத்துச் சென்றிருக்க வேண்டும். என் தந்தையின் நடத்தையை பருந்து போல் கவனிக்க போகிறேன்” என்று கூறினார். கோலியர் ஒரு `லிட்டில் டிடெக்டிவ்’ ஆனார். துப்பறியும் நிபுணர் மெஸ்மோர், கோலியரை நம்பினார். அடுத்த சில வாரங்களுக்கு கிட்டத்தட்ட தினமும் ஜான் வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். கோலியரின் தந்தையிடம் வழக்கு குறித்து பேசுமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் அவர் காவல்துறையிடம் பேச மறுத்தார். கோலியர் துப்பறியும் அதிகாரியுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்தார். விசாரணையில் உதவுவதற்காக அவருக்கு தகவல்களை தெரிவித்தார். ஆனால் துப்பறியும் நபர் தீவிரமாக விசாரிக்க முயன்றபோது, அவருக்கு சில சொந்த பிரச்னைகள் ஏற்பட்டன. ஜான் பாயில் பணக்காரராகவும் செல்வாக்கு மிக்கவராகவும் இருந்ததால், உயர் அதிகாரியை வைத்து காவல்துறையிடம் இந்த வழக்கை மறந்து விடுமாறு உத்தரவிட வைத்தார். துப்பறியும் அதிகாரிக்கு ஒன்று மட்டும் புரிந்தது. "இந்தக் குழந்தைக்கு ஏதோ ஒன்று தெரியும்." பொருந்தாத இரண்டு புகைப்படங்கள் பட மூலாதாரம்,COLLIER LANDRY படக்குறிப்பு,கோலியர் லேண்ட்ரி (வலது) 2017 இல் திரையிடப்பட்ட A Murder in Mansfield என்ற அவரது கதையைப் பற்றிய ஆவணப்படத்திற்காக அவரது தந்தையை சந்தித்தார். “என் அப்பா என்னிடம், அவரின் அலுவலகத்திற்கு வர சொல்லி கேட்டார். அவருக்கு அங்கு ஏதோ சில ஆவணங்களை தேட வேண்டி உள்ளதாக சொன்னார். நான் அவரை கண்காணிக்க வேண்டும் என்று அவருடன் போக சம்மதித்தேன்”என்று கோலியர் கூறினார். “திரும்பி வரும் வழியில் ஒரு பெட்ரோல் பங்கில் நின்றோம். என் தந்தை பெட்ரோல் நிலையத்திற்குள் நுழைந்தார், நான் அவரின் காரை சோதனை செய்த போது, அதில் இரண்டு புகைப்படங்களைக் கண்டேன். ஒன்று நான் இதுவரை பார்த்திராத வீட்டிலிருந்து எடுத்தது. மற்றொன்று அவரது காதலி அவரது இரண்டு குழந்தைகள் பிளாஸ்டிக் சுற்றப்பட்ட பார்சல் முன் அமர்ந்திருந்தனர் "என்று அவர் நினைவு கூர்ந்தார். கோலியர் புகைப்படங்களை பற்றி மெஸ்மோரிடம் கூறினார். மான்ஸ்ஃபீல்டில் இருந்து மூன்று மணி நேர பயணத்தில் பென்சில்வேனியாவின் ஈரி நகரில் ஒரு புதிய மருத்துவமனையை நிறுவியதோடு, நோரீன் காணாமல் போனதுக்கு முன்னதாக ஜான் பாயில் அங்கு ஒரு புதிய வீட்டையும் வாங்கி குடியேறினார் என்பதை கண்டுபிடித்தனர். மெஸ்மோர் அந்த வீட்டு விற்பனை விவகாரத்தை கையாண்ட ரியல் எஸ்டேட் முகவரைத் தொடர்பு கொண்டு சந்தேகப்படும்படி ஏதாவது நடந்ததா என்று விசாரித்தார். கோலியரின் தந்தை ஜான், அந்த வீட்டை வாங்குவதற்கு மிகவும் அவசரம் காட்டியதாகவும், அந்த வீட்டின் அடித்தளத்திற்கு கீழ் என்ன இருக்கிறது என்று கேட்டதாகவும், அதை மேலும் விரிவாக்கம் செய்ய முடியுமா என்று கேட்டதாவும் அந்த முகவர் அவரிடம் கூறினார். விசாரணை வேகமெடுத்தது மற்றும் கோலியரின் தந்தையால் அதை உணர முடிந்தது. "என் தந்தை என்னை உட்காரவைத்து, ' கோலியர் உனக்கு நன்றாக தெரியும், அம்மா நம்மை இப்படிப்பட்ட நிலையில் விட்டுச் சென்றது உனக்கு மிகவும் கடினமாக இருக்கும் என்று எனக்குத் தெரியும், அது உன்னை மிகவும் பாதித்துள்ளது என்று எனக்குத் தெரியும், அது என்னையும் மிகவும் பாதித்துவிட்டது. உன் அம்மாவை நான் மிகவும் நேசித்தேன். எனக்கு அடுத்த வாரம் புளோரிடாவில் ஒரு மருத்துவ மாநாடு உள்ளது, நாம் இருவரும் அங்கு சேர்ந்து போகலாமா? ” என்று கேட்டார். கோலியர் இது நல்ல யோசனையல்ல என்று உணர்ந்தார். எனவே அவர் பள்ளியில் இருந்து அடுத்த நாள் மெஸ்மோருக்கு போன் செய்து, "நீங்கள் என்னை புளோரிடாவிற்கு அழைத்துச் செல்ல விரும்புகிறீர்களா, நான் அங்கு சென்றால் திரும்பி வரமாட்டேன். என் அப்பா அங்கே அழைத்து செல்லவிருக்கிறார். நான் முற்றிலும் பயந்துவிட்டேன்." என்று கூறினார். நீல நிற தார்ப்பாயும் பச்சை கம்பளமும் பட மூலாதாரம்,COLLIER LANDRY படக்குறிப்பு, ஜான் பாயில் ஜனவரி 24, 1990 அன்று கைது செய்யப்பட்டார். ஜனவரி 24 காலை, அவரது தாயார் காணாமல் போன நான்கு வாரங்களுக்குள், கோலியரும் அவரது வளர்ப்பு சகோதரியும் அவர்களது வீட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டனர். சமூக சேவை ஊழியர்களுடன் மெஸ்மோர் நின்று கொண்டிருந்தார். புலனாய்வாளர்கள் தாயின் உடலைத் தேடி வீட்டை சோதனை செய்தனர். அடித்தளத்தையும் ஆய்வு செய்தனர். அடுத்த நாள், புலனாய்வாளர்கள் நோரீன் பாயிலின் உடலைக் கண்டுபிடித்தனர். கோலியரின் தாயார் அந்த புதிய வீட்டின் அடித்தளத்திற்கு கீழ் புதைக்கப்பட்டிருந்தார் . “நீ உன் தந்தைக்கு எதிராக சாட்சி சொல்ல வேண்டியதில்லை என்று அரசு தரப்பு என்னிடம் கூறியது. ஆனால் நான் உண்மை என்னவென்று எனக்குத் தெரியும் என்பதால் அவர் குற்றவாளி என்பதை உறுதிப்படுத்த விரும்பினேன்." கோலியரின் தந்தை வாங்கி வந்த நீல நிற தார்ப்பாயால் நோரீனின் உடல் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. அவர்களது மான்ஸ்ஃபீல்ட் வீட்டின் பின்புற வராண்டாவில் விரிக்கப்பட்ட அந்த பச்சைக் கம்பளம் அடித்தளத்தில் புதிய சிமெண்டை மூடுவதற்கு பயன்படுத்தப்பட்டது. ஜான் பாயில் கொலை செய்ததற்கு தண்டனை பெற்றார். கோலியர் பள்ளி முடித்ததும், தன் பெயரில் இருந்த தனது தந்தையின் கடைசி பெயரை நீக்கி, கோலியர் லேண்ட்ரி என்று மாற்றிக் கொண்டார். https://www.bbc.com/tamil/articles/cmll932wv3zo
  2. ஜல்சா குமார் என்ற பெயரில் ஒரு காணொளி விஜய் ரிவியில் வந்ததே!! அதில் இன்ஸ்பையர் ஆகி குசால் குமார் வந்திருக்கலாம்!
  3. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 05:34 PM “உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் கிளிநொச்சி மாவட்டத்தின் 04 பிரதேச செயலகங்களையும் உள்வாங்கி 1,700 இலவச காணி உறுதிப் பத்திரங்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கி வைத்தார். இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (25) இரணைமடு பிரதேசத்தில் நடைபெற்றது. https://www.virakesari.lk/article/184460
  4. யாழ்ப்பாணத்திலுள்ள கடையொன்றில் நபரொருவர் வாங்கிய ரோல்ஸில் துருப்பிடித்த கம்பித் துண்டொன்று காணப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக பொதுச் சுகாதாரப் பரிசோதகருக்கு அறிவித்து சட்ட நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதேவேளை, கடந்த 21ஆம் திகதி குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில் வாங்கிய பாணுக்குள் பீங்கானின் கண்ணாடித் துண்டொன்று காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுகின்றமையால் கடைகளில் உணவுகளைக் கொள்வனவு செய்வதில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/302386
  5. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 03:47 PM வடக்கில் அரசாங்க அதிபர்கள் மற்றும் அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம் அரசியல் காரணமாக பின்னடிப்புச் செய்யக் கூடாதென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் எழுத்து மூலம் கடிதம் அனுப்பியுள்ளார். குறித்த கடிதத்தில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய இரண்டு மாவட்டங்களிலுமுள்ள நிரந்தர ஜிஏக்கள் ஓய்வு பெற்று சுமார் 03 மாதங்களாகியும் நிரந்தர அரச அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை. கூடுதல் GAக்கள் அந்த கடமைகளை உள்ளடக்கி உள்ளனர். தகுதியான தமிழ் சிறப்பு தர SLAS அதிகாரிகள் நியமனத்திற்கு தகுதி இருந்தும் முக்கியமான பொதுப் பதவிகளுக்கு இந்த மூத்த அதிகாரிகளின் நியமனங்களை அரசியல் தடுக்கக் கூடாது. மேலும், வட்டாட்சியர் அலுவலகத்தில் 04 செயலர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சுகாதாரம், கல்வி மற்றும் மகளிர் விவகார அமைச்சகங்கள். ஆனால் கிரேடு 1 அதிகாரிகள் செய்கிறார்கள். கல்வி அமைச்சு, மகளிர் விவகார அமைச்சு மற்றும் ஆளுநர் அலுவலகத்தில் கடமையாற்றுகின்ற அதேவேளை விவசாய அமைச்சின் செயலாளர் சுகாதார அமைச்சின் செயலாளராக செயற்படுகின்றார். திரு. குகநாதன், திரு. ஸ்ரீ, திருமதி. எலிலரசி மற்றும் திரு. அருள்ராஜ் போன்ற மூத்த சிறப்பு அதிகாரிகளும், அரசியல் காரணங்களுக்காக, GAக்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பதவியில் இருந்து புறக்கணிக்கப்பட்டு, பறிக்கப்படுகிறார்கள். முக்கியமான நிர்வாகப் பதவிகளுக்கு மூத்த SLAS அதிகாரிகளை நியமிப்பதை கெளரவ கவர்னர் வெறுக்கிறார். அதற்கு பதிலாக அவர் அந்த பதவிகளை நிர்வகிக்கும் இளைய கூட்டாளிகளை விரும்புவதாக தெரிகிறது. இதனால் இந்த சிரேஷ்ட SLAS அதிகாரிகளின் பெறுமதியான சேவைகளை பொதுமக்கள் இழக்கின்றனர். நிரந்தர உத்தியோகத்தர்களை GAக்கள் மற்றும் செயலாளர்களாக விரைவில் நியமிக்க மாண்புமிகு உங்களது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/184453
  6. சென்னை: 4வது மாடியில் இருந்து விழுந்த குழந்தை உயிர் பிழைத்தும், தாய் தற்கொலை செய்தது ஏன்? படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட ரம்யா (இடதுபுறம்), பால்கனியில் இருந்து தவறி விழுந்த குழந்தை, கீழ் தளத்தின் ஷன் ஷேடில் சிக்கியிருந்த காட்சி (வலது) கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 31 நிமிடங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் யாரோ எங்கோ பகிர்ந்த வெறுப்பு கருத்துகள் சென்னையில் மாடியில் தவறி விழுந்து மீட்கப்பட்ட குழந்தையின் தாய் உயிரை பறித்துள்ளது. சென்னை ஆவடி அருகே திருமுல்லைவாயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்தவர் வெங்கடேஷ் (37), இவரது மனைவி ரம்யா (33). ஐ.டி துறையில் பணியாற்றி வந்த இவர்களுக்கு 5 வயதில் ஆண் குழந்தையும், 9 மாத பெண் குழந்தையும் உள்ளன. கடந்த ஏப்ரல் 28ம் தேதி ரம்யா உணவு கொடுத்துக் கொண்டிருந்த போது, ஒன்பது மாத கைக்குழந்தை எதிர்பாராத விதமாக நான்காவது மாடி பால்கனியில் இருந்து தவறி கீழ் தளத்திலிருந்த ‘சன் ஷேடில்’ விழுந்தது. அருகில் குடியிருந்தவர்கள் ஜன்னல் கம்பியில் நின்றபடி, பெரும் போராட்டத்திற்கு பின் குழந்தையை உயிருடன் மீட்டனர். குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிவேகத்தில் பரவியது. பகிரப்பட்ட வீடியோக்களில், குழந்தை பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்ததற்காக அவரது தாயைக் குற்றம்சாட்டி வெறுப்பு கருத்துகளை பலரும் பதிவிட்டிருந்தனர். இதுபோன்ற இணையவழி தொல்லையால் (Cyber bullying) ரம்யா மன ரீதியில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளார். இந்த மன உளைச்சலில் இருந்து மீள, கோவையில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு வந்த ரம்யா, அங்கேயே தற்கொலை செய்து கொண்டார். ரம்யாவின் தற்கொலைக்கான காரணங்களை அறியும் பிபிசி தமிழ் முயற்சியில், ரம்யா மகப்பேறுக்கு பிந்தைய மனச்சோர்வு (Postpartum Depression), இணையவழி தொல்லை (Cyber Bullying) மற்றும் குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிந்தைய மன உளைச்சல் (Post Traumatic Depression) போன்ற பாதிப்புகளால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதீத மன உளைச்சல் தான் தற்கொலைக்கு காரணம்! படக்குறிப்பு, தற்கொலை செய்து கொண்ட ரம்யா வழக்கு விசாரணை அதிகாரியான காரமடை காவல் ஆய்வாளர் ராஜசேகரன், ‘‘ரம்யா அதீத மன உளைச்சலில் இருந்ததால் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார்,’’ என்கிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், ‘‘குழந்தை விழுந்த சம்பவத்தால் வெங்கடேஷ் மற்றும் ரம்யா தம்பதியினர் மன விரக்தியில் இருந்துள்ளனர். மன அமைதிக்காக கோவையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு ரம்யா குடும்பத்துடன் வந்துள்ளார். ஆனாலும், சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வெறுப்பு கருத்துகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையாமல் அவர் அதீத மன அழுத்தத்தில் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளார். ரம்யா குடும்பத்தினரிடம் நடத்திய விசாரணையில் இவை தெரியவந்துள்ளன,’’ என்கிறார் ஆய்வாளர் ராஜசேகரன். குழந்தை பிறந்த பிறகு தாய்க்கு ஏற்படும் மன அழுத்தம் அதாவது மகப்பேற்றுக்கு பிறகான மன அழுத்த (Postpartum Depression) பாதிப்பில் ரம்யா இருந்ததாகவும், குழந்தை கீழே விழுந்த நிகழ்வுக்குப் பிறகு மன உளைச்சல் அதிகரித்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும், ரம்யாவின் தந்தை போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த தனது புகாரில் தெரிவித்துள்ளார். ‘‘எனது மகள் ரம்யா இரண்டாவது குழந்தை பிறந்த பின் மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்க்கையில் விரக்தி அடைந்தவர் போல இருந்தார். யாரிடமும் பேசாமல் விரக்தியில் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துள்ளார்,’’ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். படக்குறிப்பு,சென்னையில் குழந்தை மீட்பு ரம்யாவின் உலகம் எத்தகையது? ‘ரம்யா தைரியமான பெண் அவர் தற்கொலை முடிவை எடுப்பார் என நாங்கள் நினைக்கவில்லை என, நம்மிடம் பேசிய ரம்யாவின் சித்தப்பா கூறினார். தனது பெயர் வெளியிட வேண்டாமென்பதை நம்மிடம் கேட்டுக் கொண்ட அவர், ‘‘ரம்யா குடும்பத்திலும், உறவினர்களிடமும் அதீத அன்பு கொண்டவர். சிறு வயது முதலே தைரியமாக இருப்பவர். குடும்பத்தில் யாருக்கு பிரச்னை என்றாலும் தீர்வு சொல்லக்கூடிய பக்குவம் உள்ளவர். மாற்று சாதியை சேர்ந்தவரை காதலித்தார். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். அனைத்தும் நன்றாக சென்ற நிலையில் ரம்யா தற்கொலை செய்வார் என நாங்கள் கனவிலும் நினைக்கவில்லை,’’ என்கிறார் அவர். ரம்யாவின் தந்தை அரிசி வியாபாரம் செய்பவர். அவர்களின் குடும்பமே அதிக கடவுள் பக்தி உடையது. குழந்தை மீட்கப்பட்ட பின் ரம்யாவின் தந்தை கெடா வெட்டி சிறப்பு பூஜையே நடத்தியுள்ளார் என்கிறார் ரம்யாவின் சித்தப்பா. மேலும் தொடர்ந்த அவர், ‘‘எங்கே யாரோ பதிவிட்ட வெறுப்பு கருத்துக்கள் எங்கள் மகள் உயிரை பறித்துள்ளது. ஏதாவது சம்பவம் நடந்தால் இனியாவது அனைவரும் சம்பவத்தில் நடந்த நன்மைகளை குறிப்பிட்டு பாதிக்கப்பட்டோருக்கு மன ஆறுதல் தரும் வகையில் பேச முன்வர வேண்டும். வெறுப்பு கருத்துகளால் யாருக்கு என்ன பயன்? பாதிப்பு தான் அதிகமாகிறது’’ என வருத்தத்துடன் நம்மிடம் தெரிவித்தார். ‘யாரென்றே தெரியாதவர்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்திற்கு நாங்கள் என்ன செய்ய முடியும், யார் மீது வழக்கு தொடுப்பது?’ என்கிறார் ரம்யாவின் சித்தப்பா. ‘எந்த தாயும் குழந்தையை பாதிப்பில் விடமாட்டார்கள்’ ‘சைபர் ஃபுல்லியிங்’ காரணமாக ரம்யா தற்கொலை செய்தது தொடர்பாக சில பெண்களிடம் நாம் பேசினோம். நம்மிடம் பேசிய கோவையைச் சேர்ந்த விமலா, ‘‘எனக்கும் இரண்டு குழந்தைகள் உள்ளன. எந்த தாயும் தன் குழந்தையை ஆபத்தான சூழலில் விடமாட்டார். சிறிதாக காயம் ஏற்பட்டாலே பதறிப்போவார்கள், அது தான் தாய்மை உணர்வு. குழந்தை மாடியில் இருந்து விழுந்த போது மனரீதியில் ரம்யா மிகவும் பாதிக்கப்பட்டிருப்பார். அவருக்கு ஆதரவாக, மன உறுதி கொடுப்பது போல் தான் அனைவரும் பேசியிருக்க வேண்டும். ஆனால், அவரின் தாய்மை குறித்து பலரும் விமர்சித்ததை பார்க்கும் போது வருத்தமாக உள்ளது,’’ என்றார். நம்மிடம் பேசிய மற்றொரு பெண்ணான அமுதா, ‘‘அப்படி ஒரு சம்பவத்தில் இருந்து குழந்தை மீட்கப்பட்டது மிகப்பெரிய விஷயம். உயிருடன் அந்த குழந்தை தாய்க்கு மீண்டும் கிடைத்தது வரம். ஆனால், அந்த தாயின் மனநிலையை பாதிக்கும் வகையில் பதிவிடப்பட்ட கருத்துகளால் இன்று அந்த குழந்தைக்கு தாய் இல்லாமல் போய்விட்டது. உண்மையில் குழந்தை பிறந்து அதை வளர்க்கும் போது தாய்மார்களுக்கு அதிக மன உளைச்சல் ஏற்படும். இப்படியான சூழலில் வெறுப்பு கருத்துகள் அவரை அதிகம் பாதித்திருக்கும்,’’ என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரசவத்திற்கு பிறகு பெண்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தம் இரண்டாவது குழந்தை பிறந்ததில் இருந்தே ரம்யா அதிக மன உளைச்சலில் இருந்ததாக புகாரில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த பாதிப்பின் தீவிரம் என்ன? "பிரசவத்திற்கு பிறகு பெண்களில் 3 சதவீதம் பேர் தான் மகப்பேற்றுக்கு பிறகான மன அழுத்த பாதிப்பை எதிர்கொள்கிறார்கள்” என்கிறார், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையின் இயக்குநர் கலைவாணி. நம்மிடம் பேசிய இயக்குநர் கலைவாணி, ‘‘இந்தியாவில் பிரசவமாகும் பெண்களில் 30 சதவீதம் பேருக்கு பிரசவத்துக்கு பிறகான பதற்றம் (Postpartum Blues) எனப்படும் மன அழுத்தம் ஏற்படுகிறது. பிரசவித்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சையால் ஏற்படும் வலி, மயக்கம், குழந்தையை வளர்ப்பு தொடர்பான பயம், வறுமை, குடும்ப ஆதரவு போன்ற பல எண்ணங்கள் மனதில் தோன்றி, அவை ஏற்படுத்தும் மன உளைச்சல் பிரசவத்துக்கு பிறகான பதற்றம் (Postpartum Blues) என அழைக்கப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு மேல் `போஸ்ட்பார்ட்டம் ப்ளூஸ்’ பாதிப்பு இருந்தால் அது, மகப்பேற்றுக்கு பிறகான மன இறுக்கம் (Postpartum depression) என அழைக்கப்படும். இந்தியாவில் பிரசவமாகும் பெண்களில் அதிகபட்சமாக 1 –2 சதவீதம் பேருக்கு தான் இத்தகைய பாதிப்பு ஏற்படும். பிரசவித்த தாய்மார்கள் இரண்டு வாரத்திற்கு மேல், சோர்வாக, மன உளைச்சலில் தனிமையாக இருந்தால் உடனடியாக மகப்பேறு மருத்துவரிடமும், மனநல மருத்துவரிடமும் ஆலோசனை பெற வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே இந்த பாதிப்பை கண்டறிந்து மனநலத்தை காக்க முடியும்,’’ என்கிறார் அவர். மன இறுக்கம் தீவிரமடைந்தால் தாய் தன் குழந்தையை கொலை செய்யும் அளவிற்கான சம்பவங்களும், தாய் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்துள்ளதாகவும், அந்த அளவிற்கு இது தீவிர மன உளைச்சலை தரும் எனவும் தெரிவிக்கிறார் மருத்துவர் கலைவாணி. இந்தியாவில் மகப்பேறுக்கு பிறகான மன அழுத்த பாதிப்பு கண்டறியப்படாத மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத குறைபாடுகளில் ஒன்றாகும் என சமீபத்திய அறிக்கை கூறுகிறது. ரம்யாவின் உயிரைப் பறித்த பலவித மன அழுத்த பாதிப்புகள்! படக்குறிப்பு,மனநல ஆலோசகர் அனிஷா ரஃபி ரம்யா ‘இணையவழித் தொல்லை, பிரசவத்துக்கு பிறகான மன அழுத்தம் மட்டுமின்றி அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ( Post Traumatic Stress) காரணமாகவும் மன அழுத்தத்தில் இருந்திருப்பார் என்கிறார், கோவையைச் சேர்ந்த மனநல ஆலோசகர் அனிஷா ரஃபி. நம்மிடம் பேசிய அனிஷா, ‘‘ஒருவரை மையப்படுத்தி அவரை தவறான முறையிலோ, குற்றம்சாட்டியோ அல்லது அவரின் சமூக அடையாளத்தை கொச்சைப்படுத்தும் படி விமர்சிப்பதை ‘இணையத் தொல்லை’ (Cyber Bullying) என்கிறோம். இது நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அதிகரிப்பதுடன், இதனால் மன நலம் பாதிப்போரும் அதிகரித்து வருகின்றனர்’’ என்கிறார் அவர். நம்மை அதிகம் பாதிக்கும் வகையில் ஒரு சம்பவம் நிகழ்ந்தால், அதை அடிக்கடி நினைத்து பார்த்து நாம் மனவிரக்தி அடைவதையும், நம்மை நாமே குற்றம் சொல்லிக்கொள்வதையும் அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு ( Post Traumatic Stress) என அழைக்கப்படுகிறது. தற்கொலை செய்த ரம்யாவும் இந்த பாதிப்பையும் எதிர்கொண்டிருப்பார் என்கிறார் அனிஷா. அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தம் ( Post Traumatic Stress) மேலும் தொடர்ந்த அனிஷா, ‘‘ரம்யா தைரியமான பெண் என அவர் குடும்பத்தினர் தெரிவித்திருந்தாலும், குழந்தை மீட்கப்பட்ட சந்தோஷத்தை விட ரம்யா குறித்தான மோசமான கருத்துகள் அவரை மிகவும் பாதித்துள்ளது. இது அவரது தற்கொலைக்கான காரணமாக அமைந்திருக்கும்,’’ என்கிறார் அவர். அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்த பாதிப்பில் இருந்து மீள்வது எப்படி என்பதையும் மனநல ஆலோசகர் அனிஷா விளக்குகிறார். ‘‘ரம்யாவிற்கு நடந்ததைப்போல சம்பவம் நடந்தால், சில வாரங்களுக்கு சமூக வலைதளத்தை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. தன் மன உறுதியை அதிகப்படுத்தி, தனக்கு ஆதரவாக உள்ளவர்களிடம் அதிகம் பேசுவது இந்த பாதிப்பில் உள்ளோரின் மனநிலையை பலப்படுத்த உதவும். யாரேனும் இப்படி பாதிக்கப்பட்டிருந்தால் அவர் உடனடியாக மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக பேசி, அவர்களை கண்காணித்து அவர்களின் மனநலத்தை பாதுகாப்பது மட்டுமே அவரை காப்பதற்கான தீர்வு,’’ என்கிறார் மனநல ஆலோசகர் அனிஷா. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்திய இணைய பயனாளர்களில் 38% பேர் ‘சைபர் ஃபுல்லியிங்’ செய்பவர்கள் – அதிர்ச்சி ரிப்போர்ட்! இந்தியாவில் அரசியல்வாதிகள், சினிமா நடிகர்கள் ‘சைபர் ஃபுல்லியிங்’ பாதிப்பை எதிர்கொண்ட சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால், சமீப நாட்களாக சாமானிய மக்களும் இந்த பாதிப்பை எதிர்கொள்வதும், அதனால் தற்கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது. ரம்யாவிற்கு முன்னரும் இந்தியாவில் சில மாநிலங்களில், ‘சைபர் ஃபுல்லியிங்’ காரணமாக சிலர் தற்கொலை செய்துள்ளனர். மத்தியப் பிரதேசம் மாநிலம் உஜ்ஜயின் பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவன் பிரியன்சு யாதவ், பலவித மேக்கப் அணிந்து ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில் ‘ரீல்ஸ்’ வெளியிட்டு வந்தார். 2023 நவம்பர் மாதம் அவர் பெண் வேடம் அணிந்து ரீல்ஸ் வெளியிட்ட போது, பலரும் பிரியன்சுவை கிண்டல் செய்து வெறுப்பு கருத்துக்களை பகிர்ந்தனர். இதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலத்தை சேர்ந்த முதல் மாற்றுப்பாலின உடற்கட்டமைப்பாளராக (bodybuilder) இருந்தவர் பிரவீன் நாத். இவர் 2021 மாநில அளவிலான bodybuilding போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதுடன், மிஸ்டர் கேரளா போட்டியிலும் வென்றிருந்தார். மிஸ் மலபார் அழகுப்போட்டியில் வெற்றி பெற்றிருந்த மாற்றுபாலினத்தை சேர்ந்த ரிஷானா ஐசு திருமணம் செய்தார். இவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட வெறுப்பு கருத்துகளால், மனமுடைந்து பிரவீன் தற்கொலை செய்து கொண்டார். ‘சைபர் ஃபுல்லியிங்’ இந்தியாவில் வளர்ந்து வரும் பிரச்னையாக உள்ளது. தேசிய குற்ற ஆவணங்கள் காப்பகத்தின் தரவுகளை நாம் சேகரித்த போது, இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான இணைய வழித்தொல்லை, (சைபர் ஃபுல்லியிங்) சம்பவங்கள் தொடர்பாக 2022ம் ஆண்டில் மட்டுமே 9,821 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதுவே 2018ம் ஆண்டி 8,986 வழக்குக்கள் பதிவாகியிருந்தன. இந்தியாவில் பத்தில் நான்கு இணைய பயனாளர்கள் ‘இணையவழித் தொல்லை கொடுக்கும் செயல்களில் ஈடுபடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் நடத்திய சர்வேயில் தெரியவந்துள்ளது. ஒட்டுமொத்த இணைய பயனாளர்களில் 38 சதவீதம் பேர் ‘இணையவழித் தொல்லை’ செய்வதாகவும், இதில் இளைஞர்கள் தான் அதிகம் எனவும் தெரிவித்துள்ளனர். சிலர் ‘இணையவழித் தொல்லை’, ‘பப்ளிக் ஷேமிங்’கில் ஈடுபடுவது ஏன்? சமூக வலைதளத்தில் ‘சைபர் ஃபுல்லியிங், பப்ளிக் ஷேமிங்’ செய்வது ஒருவித மனநோய் என்கிறார், கோவை குமரகுரு கல்லூரியின் உளவியல் துறை உதவிப்பேராசிரியர் தாரணி. இதை விளக்கிய உதவிப்பேராசிரியர் தாரணி, ‘‘சமூகத்தில் நானும் ஒரு அங்கம் என்பதை நிரூபிக்க நினைத்து தான், எது நடந்தாலும் அது குறித்து சமூக வலைதளங்களில் பதிவு மற்றும் கருத்துகளை பகிர்கின்றனர். ஒரு சம்பவம் தொடர்பாக அல்லது ஒரு நபர் தொடர்பாக கற்பனையான ஒரு உரிமையை எடுத்துக்கொண்டு கருத்துகளை பகிர்வதை பாராசோஷியல் உறவு (Parasocial Relationship) என்கிறோம். ஒருவர் மீது கற்பனையான ஒரு உரிமையை எடுத்துக்கொண்டு, சமூகத்தில் தன் இருப்பை பதிவு செய்ய நினைத்து தான் பலரும் ‘சைபர் ஃபுல்லியிங்’, ‘பப்ளிக் ஷேமிங்’ செய்கின்றனர், இது ஒரு வித மனநோய்,’’ என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘இணையவழித் தொல்லை’ குறித்து சட்டம் சொல்வது என்ன? சமூக வலைதளங்களில் இணையவழித் தொல்லைகளால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டுமென விளக்கியுள்ளார், கோவை மாவட்ட சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் அருண். நம்மிடம் பேசிய அருண், ‘‘சமூக வலைதளங்களில் ‘சைபர் ஃபுல்லியிங், பப்ளிக் ஷேமிங்’ போன்றவற்றால் ஒருவர் பாதிக்கப்பட்டால், இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழும், அவதூறு வழக்கு பதிய முடியும், பெண்களாக இருந்தால் பெண் வன்கொடுமை சட்டத்திலும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும். அது தெரிந்த நபர்கள் மூலம் நடந்திருந்தால் எளிதாக நடவடிக்கை எடுக்க முடியும், அறிமுகம் இல்லாத நபர்கள் என்றால் அவர்கள் மீது புகார் கொடுத்தாலும், குற்றவாளியின் சமூக வலைதள கணக்கை கண்டறிந்து, அவர்களின் ஐ.பி முகவரி (Internet Protocol), அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து தான் நடவடிக்கை மேற்கொள்ள முடியும். இவர்களுக்கு அபராதத்துடன் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும். ‘இணையவழித் தொல்லை, பப்ளிக் ஷேமிங்’ போன்றவை ஒரு நபரின் தற்கொலைக்கு காரணமாக இருந்தாலோ, ஒருவரின் சமூக அந்தஸ்தை குறைத்தாலோ, அவதூறு வழக்கு மட்டுமின்றி, தற்கொலைக்கு தூண்டுதல் போன்ற சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளலாம். இந்த குற்றத்திற்கு இரண்டு ஆண்டு முதல் பத்து ஆண்டுகள் வரையில் தண்டனை கிடைக்கும்’’ என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/ce55yxdz7gdo
  7. பட மூலாதாரம்,FAMILY HANDOUT கட்டுரை தகவல் எழுதியவர், அமைரா மதாபி பதவி, பிபிசி அரபு சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒருபுறம் காஸாவில் இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கும் நிலையில், மறுபுறம் 13,000த்திற்கும் மேற்பட்ட காஸா மக்கள் காணாமல் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் பலரும் கட்டிட இடிபாடுகளுக்குள் புதைந்திருக்கலாம் என்று நம்பப்படும் நிலையில், பல மனிதநேய சேவை குழுக்களும், அவர்கள் வலுக்கட்டாயமாக இங்கிருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். அப்படியாக தொலைந்தவர்களில் ஒருவரான முஸ்தஃபாவை, அவரது சகோதரர் அகமது அபு துக் பல மாதங்களாக தேடி வருகிறார். போரிலிருந்து தப்பிப்பதற்காக தெற்கில் உள்ள நகரமான கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனை வளாகத்தில் இவர்களது குடும்பம் தஞ்சம் புகுந்துள்ளது. ஆனால் இவர்களது பக்கத்து வீடு தீயில் எரிவதாக கேள்விப்பட்ட முஸ்தஃபா தங்களது வீட்டின் நிலை குறித்து பார்ப்பதற்காக சென்றுள்ளார். ஆனால், அதற்கு பிறகு அவர் திரும்பி வரவே இல்லை. "எங்களால் முடிந்த வரை அவரை தேடினோம்" என்கிறார் அகமது. இதுகுறித்து அவர் கூறுகையில், "முன்பு வீடுகள் இருந்த இடத்தில், தற்போது எரிந்த குப்பைகள் மட்டுமே எஞ்சியுள்ளன. எங்கள் பகுதி முழுவதும் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு, பல மாடி கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளன." ஆம்புலன்ஸ் டிரைவரான முஸ்தஃபாவின் உடலை எங்கெங்கோ தேடியும் பலனில்லை. காஸாவில் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்புக் குழுவினர் கட்டிட இடிபாடுகளில் இருந்து வெளியே எடுத்த உடல்கள் தொடங்கி அருகில் இருந்து குழிகள் உட்பட அனைத்து இடத்தில் தேடியும் முஸ்தஃபாவின் உடல் கிடைக்கவே இல்லை. மருத்துவமனைக்கு வரும் ஏதாவது ஒரு அவசர ஊர்தியிலாவது அவரை கண்டுபிடித்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் தங்கள் குடும்பம் இருப்பதாக கூறுகிறார் அகமது. காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,000 ஐத் தாண்டியுள்ளதாகக் கூறுகிறது. இந்த எண்ணிக்கை மருத்துவமனைகளில் பதிவு செய்யப்பட்ட இறப்புகளின் அடிப்படையிலானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போர் தொடங்கியதற்கு பிறகு காஸா மக்கள் மற்றும் ஹமாஸ் வீரர்கள் உட்பட 13,000 பேர் எந்தவித தடயமும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக, யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. 10,000 பேர் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளனரா? முஸ்தஃபாவைப் போலவே காணாமல் போன ஏராளமான நபர்களின் குடும்பங்கள் கடந்த ஏழு மாதங்களாக அவர்களது நிலை குறித்து எந்த தகவலும் இன்றி தவித்து வருகின்றனர். அக்டோபர் 7, 2023இல் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய முன்னறிவிப்பற்ற தாக்குதலில் 1200 பேர் இறந்தது மட்டுமின்றி 252 பேர் பணையக்கைதிகளாக அழைத்து செல்லப்பட்டனர். இதைத் தொடர்ந்து காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது இஸ்ரேல். போர் தொடங்கியதற்கு பிறகு காஸா மக்கள் மற்றும் ஹமாஸ் வீரர்கள் உட்பட 13,000 பேர் எந்தவித தடயமும் இல்லாமல் காணாமல் போயுள்ளதாக, ஜெனிவாவை தளமாக கொண்டு இயங்கும் யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. அதிகாரப்பூர்வ பாலஸ்தீன பாதுகாப்பு சேவையின் ஒரு பகுதியாக காஸாவில் இயங்கி வரும் சிவில் பாதுகாப்பு பிரிவு, காணாமல் போனவர்களில் 10,000 பேர் வரை இடிபாடுகளுக்குள் புதையுண்டிருக்கலாம் என்று கூறுகிறது. ஐ.நா. மதிப்பீட்டின்படி, காஸாவில் 37 மில்லியன் டன் இடிபாடுகள் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதன் கீழ் பல உடல்கள் புதையுண்டுள்ளன. இது தவிர, காஸாவில் சுமார் 7,500 வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் ஆங்காங்கே உள்ளன. இது நிவாரணப் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கூடுதல் அச்சுறுத்தலாக உள்ளது. சிவில் பாதுகாப்பு அமைப்பின் உறுப்பினர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டுள்ள உடல்களை மீட்பதற்கு தன்னார்வலர்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அவர்களிடம் சாதாரணமான உபகரணங்களே உள்ளதால் அவர்களால் மீட்புப்பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை. இதைத்தாண்டி, இந்த முறை காஸாவில் மோசமான வெப்பநிலை நிலவுவதால், இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் பிணங்களில் இருந்து ஏதாவது தொற்று நோய் பரவலாம் என்றும் அச்சுறுத்தல் நிலவுகிறது. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு, இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள உடல்களை மீட்க உதவிக்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அனுபவம் உள்ள நாடுகளின் சர்வதேச உதவியை கோரியுள்ளது சிவில் பாதுகாப்பு அமைப்பு. இஸ்ரேலிய ராணுவம் கைது செய்துள்ளதா? அப்துல் ரஹ்மான் யாகி தனது குடும்பத்தை இடிபாடுகளில் இருந்து மீட்பதற்கான சவாலான போராட்டத்தை எதிர்கொண்டு வருகிறார். மத்திய காஸாவில் உள்ள டெய்ர் அல்-பாலா பகுதியில் இவரது குடும்பத்தின் மூன்று அடுக்கு மாடி வீடு இருந்தது. பிப்ரவரி 22 ஆம் தேதி, இந்த வீட்டின் மீது ஏவுகணை விழுந்த போது, அவரது குடும்பத்தைச் சேர்ந்த 36 பேர் அந்த வீட்டிற்குள் இருந்தனர். அதனைத் தொடர்ந்து 17 பேர் மட்டுமே இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டதாகவும், அதிலும் கூட முகங்கள் மோசமாக சிதைந்திருந்ததால் யாரையும் அடையாளம் காண முடியவில்லை என்று கூறுகிறார் யாகி. மேலும், "வீட்டில் இருந்த பெரும்பாலான குழந்தைகளின் உடல்களை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார் அவர். இதுபோன்று சிக்கியுள்ள உடல்களை மீட்க உதவிக்காக, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் அனுபவம் உள்ள நாடுகளின் சர்வதேச உதவியை கோரியுள்ளது சிவில் பாதுகாப்பு அமைப்பு. இந்த பிரச்னையில் உடனடியாக தலையிட்டு, காஸாவுக்குள் கனரக இயந்திரங்களை கொண்டு வர அனுமதிக்க வேண்டும் என இஸ்ரேலுக்கு அழுத்தம் தர சர்வதேச அமைப்புகளையும் அது கேட்டுக்கொண்டுள்ளது. ஆனால், அதன் மீதான எந்த ஒரு பதிலும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போனதாகக் கருதப்படும் நபர்கள் அவர்களது குடும்பத்தினருக்குத் தெரியாமல் இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் (IDF) கட்டுப்பாட்டில் இருக்கலாம் என்று நம்புகிறது அம்னெஸ்டி இன்டர்நேஷனல் (Amnesty International). இதைத்தான் 'அரச அமைப்புகளால் காணாமல் ஆக்கப்படுவது' என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.. யூரோ-மெட் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மதிப்பீட்டின்படி, காஸாவை சேர்ந்த நூற்றுக்கணக்கான பாலஸ்தீனர்கள் அவர்களது குடும்பத்தினருக்குக் கூட தெரியாமல், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினரால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஒருவரை காவலில் வைத்திருக்கும் நாடு அந்த நபரின் அடையாளம் மற்றும் அவரது இருப்பிடம் உள்ளிட்ட விவரங்களை கண்டிப்பாக அவரை சார்ந்தவர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் ஜெனிவா ஒப்பந்தத்தில் இஸ்ரேல் கையெழுத்திட்டுள்ளது. அக்டோபர் 7 தாக்குதல்களுக்கு பிறகு, இதுபோன்ற தடுப்பு காவல் மையங்களுக்கு சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் பிரதிநிதிகள் வருவதையும் தடை செய்துள்ளது இஸ்ரேல். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களை சந்திக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இதுவரைஅனுமதி கிடைக்கவில்லை" என்று செஞ்சிலுவை சங்கம் கூறுகிறது. 'வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்கள்' காசாவில் உள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் தலைமை அதிகாரி ஹிஷாம் முஹன்னா பேசுகையில், அந்த அமைப்பு "தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்களை சந்திக்க பலமுறை வேண்டுகோள் விடுத்தும், இதுவரைஅனுமதி கிடைக்கவில்லை" என்று கூறினார். அதேபோல் இஸ்ரேலிய பணயக்கைதிகளை சந்திக்கவும் ஹமாஸிடம் அனுமதி கிடைக்கவில்லை என்று செஞ்சிலுவை சங்கம் கூறியுள்ளது. இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்பு படையிடம் பிபிசி கருத்து கேட்ட நிலையில், எந்த பதிலும் கிடைக்கவில்லை. ஆனால் இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் சதனது எக்ஸ் பக்கத்தில், “ஹமாஸால் கடத்தப்பட்ட பணையக்கைதிகள் குறித்து எந்த தகவலும் இஸ்ரேலுக்கு கிடைக்காத நிலையில், இஸ்ரேலில் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹமாஸ் வீரர்கள் குறித்து செஞ்சிலுவை சங்கமும் எந்த தகவலையும் சேகரிக்க கூடாது” என்று பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். மத்திய காஸாவின் மற்றொரு நகரமான அல்-ஜவைடாவில் உள்ள மற்றுமொரு குடும்பம், காணாமல் போன தங்கள் இரண்டாவது மகனான முஹம்மது அலியைத் தேடி வருகிறது. "வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களில்" தங்களது மகனும் இருக்கலாம் என்று அவர்கள் அஞ்சுகின்றனர். அவர்களது மகன் இஸ்ரேலிய பாதுகாப்பு படையின் காவலில் இருப்பதாக யாரோ சொல்லும் வரை , முஹம்மது அலியின் தாயார், தனது மகனின் புகைப்படத்தை வைத்துக்கொண்டு அவனைத் தேடிக் கொண்டிருந்தார். கடைசியாக முஹம்மது அலியை பார்த்தவர்கள் அவர் உயிரோடு இருந்ததாகவும், அதற்கு பின் என்ன ஆனது என்று எந்த ததகவலும் தெரியவில்லை என்றும் கூறியுள்ளனர். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான இணையவழி படிவத்தை உருவாக்கியுள்ளது. நம்பிக்கையில் தொடரும் தேடல் கடுமையான குண்டுவீச்சு தாக்குதலில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, வடக்கு காஸாவின் ஜபாலியாவில் உள்ள பள்ளியில் தஞ்சம் அடைவதற்காக டிசம்பர் 23 அன்று அவரது குடும்பத்தினர் தங்கள் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து முகமதுவைக் காணவில்லை. ஆனால் அந்த பள்ளிக்குள் நுழைந்த இஸ்ரேலிய வீரர்கள், அங்கிருந்த பெண்களையும் குழந்தைகளையும் வெளியேற உத்தரவிட்டதாக முகமதுவின் மனைவி அமானி அலி கூறுகிறார். மேலும், முகமதுவைத் தவிர அனைத்து ஆண்களும் அன்று இரவே திரும்பிவிட்டதாகவும், ஆனால் முகமது மட்டும் திரும்பவில்லை என்றும் கூறுகிறார் அவரது மனைவி. அவருக்கு என்ன நடந்தது, எங்கு சென்றார் என்று யாருக்குமே தெரியவில்லை. தனது கணவர் இறந்துவிட்டதாக கருதுவதா அல்லது இஸ்ரேலிய படையின் காவலில் இருக்கிறார் என்று நினைப்பதா என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று அமானி கூறுகிறார். இருப்பினும், இஸ்ரேலிய படைகளால் கைப்பற்றப் பட்டிருந்தால் அவர்கள் உயிர் பிழைப்பார்கள் என்ற நம்பிக்கை இல்லை என்றும் அவர் கூறுகிறார். ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகம், இறந்தவர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கான இணையவழி படிவத்தை உருவாக்கி, அக்டோபர் 7க்குப் பிறகு காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது பற்றிய உறுதியான பதிவு ஒன்றை உருவாக்கியுள்ளது. அதிலிருந்து, சரியான தகவல் கிடைக்கும் வரை காணாமல் போனவர்களின் குடும்பங்கள் தொடர்ந்து அவர்களை தேடிக்கொண்டிருக்கும். https://www.bbc.com/tamil/articles/cz9949zelm7o
  8. Published By: DIGITAL DESK 3 25 MAY, 2024 | 10:21 AM கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் 5,320 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சிறப்பு சுகாதார நிலையம் (Centre of Excellence for Women’s Healthcare) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இன்று சனிக்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டது. நாடளாவிய ரீதியில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் நெதர்லாந்து அரசாங்கத்தின் உதவியுடன், அரசாங்கம் இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184430
  9. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 57 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த 2014ஆம் ஆண்டு அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு (TANGEDCO) விற்ற நிலக்கரியில் மோசடி நடந்திருப்பதாகவும், இதனால், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சுமார் ரூ.6,000 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் ஆதரங்களுடன் கூடிய புலனாய்வு அறிக்கை ஒன்று வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை மற்றும் அடிப்படையற்றவை என அதானி குழுமம் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளது. மேலும், தாங்கள் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படவில்லை என்ற கூற்றை மறுப்பதாகவும் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், இதுகுறித்து கருத்து தெரிவிக்க தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை தொடர்புகொண்டபோது, அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. அதானி குழுமம் 2014ஆம் ஆண்டு இந்தோனீசியாவில் இருந்து சென்னைக்குக் கொண்டு வந்த 69,925 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரி, தரம் குறைந்தது என்றும், ஆனால் அது உயர்தரக் கரி என்று சொல்லப்பட்டு, அதன் விலை மும்மடங்கு உயர்த்தப்பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு விற்கப்பட்டதாகவும் அந்தப் புலனாய்வு அறிக்கை சொல்கிறது. 'ஒருங்கிணைக்கப்பட்ட குற்றம் மற்றும் ஊழலை வெளிப்படுத்தும் திட்டம் (Organized Crime and Corruption Reporting Project)' என்ற அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கும் இவ்வறிக்கை குறித்த செய்தியை பிரிட்டனை சேர்ந்த 'ஃபினான்ஷியல் டைம்ஸ்' பத்திரிகையும் வெளியிட்டிருக்கிறது. இந்நிலையில், 2016-2017ஆம் ஆண்டே புலனாய்வு செய்து இந்த முறைகேட்டைக் கண்டறிந்ததாக தமிழகத்தைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் தெரிவித்துள்ளது. இந்த அறிக்கை புதன்கிழமை (மே 22) வெளியானதில் இருந்து அரசியல் கட்சித் தலைவர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அறிக்கை சொல்வது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த 2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இந்தோனீசியாவில் இருந்து 69,925 மெட்ரிக் டன் அளவிலான நிலக்கரியை ஏற்றிக்கொண்டு சென்னை வந்த கப்பல், பிரிட்டிஷ் விர்ஜின் தீவுகள் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களைச் சுற்றிக்கொண்டு வந்ததாக ஒசிசிஆர்பி (OCCRP) அறிக்கை கூறுகிறது. இந்தப் பயணத்தின்போது தரம் குறைந்த நிலக்கரி, உயர்தர நிலக்கரி என்று தகவல் மாற்றப்பட்டு, அதன் விலை மும்மடங்காகி, ஒரு மெட்ரிக் டன்னுக்கு 91.91 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 7,655 ரூபாய்) ஆனது என்று தெரிவிக்கிறது. இதற்கான தரவுகள், பல இடங்களில் இருந்து பெறப்பட்ட வங்கி ஆவணங்கள், இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குநரகம், இந்தோனீசியாவில் அதானி குழுமம் நிலக்கரி வாங்கும் ஒரு முக்கிய நிறுவனம் கசியவிட்ட ஆவணங்கள், மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திடம் இருந்து பெற்ற பல ஆவணங்கள் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. மேலும், அதானி குழுமம் வாங்கிய நிலக்கரி நிறுவனங்களுக்கிடையே கைமாறியபோது அதன் தரம் படிப்படியாக உயர்த்திக் காட்டப்பட்டதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தோனீசியாவை சேர்ந்த ஜோன்லின் என்ற நிறுவனத்திடம் இருந்து பெறப்பட இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு குறிப்பிடப்படவில்லை என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஆனால் அந்த நிறுவனத்திடம் இருந்து கசிந்த ஆவணங்கள் அந்த நிலக்கரியின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 28 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 2,332 ரூபாய்) என்று தெரிவிக்கின்றன. இது அன்று ஜோன்லின் நிறுவனம் தரம் குறைந்த நிலக்கரியை இந்த விலைக்குத்தான் விற்றது என்ற தகவலுடன் பொருந்திப் போவதாகவும் ஒசிசிஆர்பி அறிக்கை கூறுகிறது. ஜோன்லின் நிறுவனம், 'அதானி குளோபல் பிடிஈ சிங்கப்பூர் என்ற நிறுவனத்திற்கு அளித்த விலைப் பட்டியலில் அந்த நிலக்கரியின் விலை ஒரு மெட்ரிக் டன்னுக்கு 33.75 அமெரிக்க டாலர்கள் (இன்றைய இந்திய மதிப்பில் சுமார் 2,811 ரூபாய்) என்று தெரிவித்திருந்தது. மேலும் இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு 'ஒரு கிலோவுக்கு, 3,500 கிலோ கலோரிகளுக்கும் குறைவானது' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது தரம் குறைந்த (லோ கிரேட்) நிலக்கரி என்று வகைப்படுத்தப்படுகிறது. ஆனால், சுமார் ஒரு மாத காலத்திற்குப் பிறகு அதே நிலக்கரியில் இந்தத் தகவல்கள் அனைத்தும் மாறியிருந்தன, என்கிறது இந்த அறிக்கை. ஒரு யூனிட் நிலக்கரியின் விலை 91.91 அமெரிக்க டாலர்களாகி இருந்தது. அதேபோல் அதன் கலோரிஃபிக் மதிப்பு ஒரு கிலோவுக்கு 6,000 கிலோகாலரிகள் என்று தெரிவிக்கப்பட்டிருந்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. அதானி குழுமம் 2014ஆம் ஆண்டு வழங்கிய இரண்டு டஜன் நிலக்கரி டெலிவரிகளை ஆய்வு செய்து அவற்றிலும் இதே போக்கு இருப்பதை ஒசிசிஆர்பி நிறுவனம் கண்டறிந்துள்ளது. இறுதியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தரம் குறைந்த நிலக்கரியை, அதிக விலை கொடுத்து வாங்கியுள்ளதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. இழப்பின் அளவைக் கணித்தது எப்படி? பட மூலாதாரம்,ARAPPOR IYAKKAM படக்குறிப்பு,இந்த முறைகேட்டை 2016-2017ஆம் ஆண்டிலேயே கண்டறிந்ததாகக் கூறுகிறார் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன். இந்த முறைகேட்டை 2016-2017ஆம் ஆண்டிலேயே கண்டறிந்ததாகக் கூறும் அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, 2016இல் பல தகவல் அறியும் உரிமை சட்டக் கோரிக்கைகள் மூலம் இதைக் கண்டறிந்ததாகக் கூறினார். "அதன்மூலம், நிலக்கரி இறக்குமதித் தரவுகள், டெண்டர் ஆவணங்கள், கொள்முதல் ஆவணங்கள் ஆகியவற்றைப் பெற்று, அவற்றிலுள்ள தகவல்களை இந்தோனீசிய சந்தை நிலவரத்துடன் ஒப்பிட்டோம்," என்கிறார் ஜெயராமன். அதோடு, தமிழ்நாடு நியூஸ்பிரிண்ட் மற்றும் பேப்பர் லிமிடெட் நிறுவனமும் (Tamil Nadu Newsprint & Paper Limited - TNPL) இதே நிலக்கரியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்தார். "அவர்களது தரவுகளையும் பெற்று விலைகளை ஒப்பிட்டுப் பார்த்தோம். அந்த ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி டிஎன்பிஎல் சொந்தமாக வாங்கிய நிலக்கரிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 70 அமெரிக்க டாலர்கள் என்ற விலையைக் கொடுத்தது. ஆனால் அதற்கு இரண்டு நாட்கள் கழித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அதே நிலக்கரிக்கு ஒரு மெட்ரிக் டன்னுக்கு 91 அமெரிக்க டாலர்கள் என்ற விலைக்கு அதானி குழுமத்திற்கு கொள்முதல் ஆணை வழங்கியது," என்றார். அதேபோல் இந்தோனீசிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ நிலக்கரி விலைகளையும் அவர்கள் ஒப்பிட்டுப் பார்த்தபோது இந்த முறைகேடு தெரிய வந்ததாகவும் ஜெயராமன் தெரிவித்தார். இந்தத் தரவுகளை வைத்துதான் இந்த முறைகேடுகளால் தமிழக அரசுக்கு ஏற்பட்ட இழப்பின் அளவு ரூ.3,000 கோடி என்பதைக் கணித்ததாகச் சொல்கிறார் அவர். "சுங்கத்துறையின் தரவுகள் இந்த நிலக்கரியின் கலோரிஃபிக் மதிப்பு 4,000 கிலோகாலரிகள் என்கின்றன. இந்தியாவின் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகமும் (Comptroller and Auditor General - CAG) இந்த நிலக்கரியில் மூன்றில் ஒரு பங்கு தரமற்றது என்று தெரிவித்திருக்கிறது," என்றார் ஜெயராமன். இதுகுறித்து 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சி.பி.ஐ-க்கும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கும் புகார் அளித்ததாகவும், ஆனால் அவற்றின்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறுகிறார் அவர். திமுக ஆட்சிக்கு வந்த பின்னும் பொதுத் துறையிலும், மின்சாரத் துறையிலும் புகார் அளித்திருப்பதாகவும், ஆனால் இன்னும் அரசு இதில் நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகிறது என்றும் கூறினார். அப்போதைய மின்துறை அமைச்சரின் பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் இந்தக் குற்றச்சாட்டுகளை அப்போது தமிழ்நாட்டின் மின்துறை அமைச்சராக இருந்தவரும், தற்போதை நத்தம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான நத்தம் விஸ்வநாதனிடம் முன்வைத்தோம். "இந்தக் குற்றச்சாட்டுகளுக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை," என்று கூறினார் நத்தம் விஸ்வநாதன். மேலும் பேசிய அவர், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் "நிலக்கரி கொள்முதல் குறித்த முடிவுகள் தனியொரு நபரால் எடுக்கப்படுவதில்லை, அது ஒரு குழுவால் எடுக்கப்படுபவை. அதனால் எந்தவொரு தனிப்பட்ட நபரும் இதற்குப் பொறுப்பாக முடியாது" என்றார். இதுபோன்ற முடிவுகளை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பல அதிகாரிகள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஆகியோர் சேர்ந்துதான் எடுப்பார்கள் என்றும். தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார். மேலும் அவர், "இன்று நடக்கும் பல ஊழல்களை மறைக்க இதுபோன்ற பழைய விஷயங்கள் குறித்த குற்றச்சாட்டுகள் முகாந்திரமின்றி முன்வைக்கப்படுகின்றன," என்றார். அதானி குழுமத்தின் பதில் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து அதானி குழுமத்தின் பதிலை அறிந்துகொள்ள பிபிசி தமிழ் அந்நிறுவனத்தை மின்னஞ்சல் மூலம் தொடர்புகொண்டது. அதற்கு அந்நிறுவனம் மின்னஞ்சல் வாயிலாக பதிலளித்துள்ளது. அதன்படி, இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் 'பொய்யானவை, மற்றும் அடிப்படையற்றவை' என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், அதானி குழுமம் விதிமுறைகளுக்கு இணங்கச் செயல்படவில்லை என்ற கூற்றை மறுப்பதாகவும் தெரிவித்துள்ளது. அதானி குழுமம் அளித்துள்ள விளக்கத்தில், “தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அரசாணை எண் 89இன் படி இந்த ஒப்பந்தம் நிலையான விலையின் அடிப்படையிலானது. வெளிப்படையான, போட்டி ரீதியான நடைமுறையின் மூலம் இந்த ஒப்பந்தத்தை அதானி நிறுவனம் பெற்றது. அதன்படி, அதானி குளோபல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட விலையில் நிலக்கரியை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. எனவே, சந்தை அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதன்மூலம், விலை உள்பட எந்த வகையான விநியோக அபாயங்களில் இருந்தும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டது,” எனக் குறிப்பிட்டுள்ளது. விலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக ஏதேனும் எதிர்மறையாக இருந்தால், அதை விநியோகிப்பவரே முழுமையாக ஏற்க வேண்டும் எனத் தனது பதிலில் அதானி குழுமம் தெரிவித்துள்ளது. அதோடு, 7.2.2014 தேதியிட்ட அரசாணை 89இன் படி, மொத்த ஒப்பந்த அளவான 3.7 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரியில், 2.1 மில்லியன் மெட்ரிக் டன் நிலக்கரி வழங்கும் ஒப்பந்தம் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஒப்பந்தத்தின்படி, “விநியோகிக்கப்படும் நிலக்கரியின் மொத்த கலோரிஃபிக் மதிப்பு, ஒரு கிலோவுக்கு 5,800 முதல் 6,700 கிலோ கலோரி (kcal/kg) இருக்க வேண்டும். நிலக்கரி காற்றில் உலர அனுமதிக்கப்பட்ட பிறகே அதன் தரம் கணக்கிடப்படுகிறது (air dried basis - ADB). மேலும், நிலக்கரி விநியோகிப்பவர் கலோரிஃபிக் மதிப்பு 5,800க்கும் குறைவாக உள்ள நிலக்கரியைக்கூட விநியோகிக்க முடியும். ஆனால், அதற்கு செலுத்தப்பட வேண்டிய தொகையில் இருந்து அதிகமான அபராதம் சரிசெய்யப்படும்,” என அதானி குழுமம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த ஒப்பந்தம் மற்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட தரம் குறைந்த நிலக்கரியை அதானி நிறுவனம் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்திற்கு வழங்கியதாகக் கூறுவதும் தவறானது என விளக்கம் அளித்துள்ளது. நிலக்கரியின் தரம் அது விநியோகிக்கப்படும் ஆலைகளில் மட்டுமல்லாமல், அவை ஏற்றப்படும் துறைமுகம், இறக்கி வைக்கப்படும் துறைமுகம் மற்றும் சுங்க அதிகாரிகளால் பல்வேறு நிலைகளில் சோதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அதானி நிறுவனம், இந்தச் சோதனை முறை சுயாதீனமானது மற்றும் வெளிப்படையானது எனத் தெரிவித்துள்ளது. எனவே, பல்வேறு நிலைகளில் இத்தகைய விரிவான தரச் சோதனை முறைகளைக் கடந்து விநியோகிக்கப்படும் நிலக்கரி, தரம் குறைந்தது என்ற குற்றச்சாட்டு அடிப்படையற்றது என்பது மட்டுமல்லாமல், நியாயமற்றதும் அபத்தமானதும்கூட என அதானி குழுமம் கூறியுள்ளது. மேலும், அறப்போர் இயக்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள அதானி குழுமம், அந்த அமைப்பின் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிலளித்துள்ளதாகவும் அத்துடன் அந்த விவகாரம் முடிவடைந்து விட்டதாகவும் கூறியுள்ளது. தமிழ்நாடு அரசு கூறுவது என்ன? அதானி குழுமம் மீதான இக்குற்றச்சாட்டுகள் குறித்தும், இதுகுறித்து தற்போதைய திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்ற 'அறப்போர் இயக்கத்தின்' புகார் குறித்தும் விளக்கத்தைப் பெற தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை பிபிசி தமிழ் பலமுறை தொடர்புகொண்டது. எனினும், அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தலைவர் ராஜேஷ் லக்கானியின் கருத்தைப் பெறவும் பிபிசி தமிழ் முயன்றது. ஆனால் அவரைத் தொடர்புகொள்ளப் பலமுறை முயன்றும் பலனளிக்கவில்லை. அவர் விளக்கமளிக்கும் பட்சத்தில் கட்டுரையில் சேர்க்கப்படும். https://www.bbc.com/tamil/articles/ckrrv31zknpo
  10. இன்றைய வானிலை 25 MAY, 2024 | 06:48 AM தென்மேல் பருவப்பெயர்ச்சியின் காரணமாக நிலவுகின்ற காற்றும் மழையுடனான வானிலையையும் தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சப்ரகமுவ மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் நுவரேலியா மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, காலி, மாத்தறை மற்றும் மன்னார் மாவட்டங்களின் சில இடங்களிலும் 75 மில்லிமீற்றர் வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும். மத்திய மலைப்பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்திற்கு சுமார் 50 ‐ 60 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்திற்கு சுமார் 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடல் பிராந்தியங்களில் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசும். மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 40 ‐ 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் மணித்தியாலத்திற்கு 60 ‐ 70 கிலோமீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்தும் காணப்படும். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 ‐ 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும். சில சமயங்களில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 ‐ 60 கிலோமீற்றர் ஆக அதிகரித்தும் காணப்படும். மன்னார் தொடக்கம் கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்கள் அடிக்கடி மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஆனபடியினால் இக் கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் அடிக்கடி கொந்தளிப்பாகக் காணப்படுவதனால் இக் கடல் பிராந்தியங்களில் மீனவர்களும் கடல் சார் ஊழியர்களும் அவதானத்துடன் கடற்றொழில் நடவடிக்கைளில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். மன்னார் தொடக்கம் கல்பிட்டி, கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் கடல் அலையானது 2.5 ‐ 3.0 மீற்றர் உயரத்திற்கு மேலெழக்கூடும். இது தரைப் பிரதேசத்திற்கு தாக்கத்தை ஏற்படுத்தாது என்றார். https://www.virakesari.lk/article/184425
  11. SRH vs RR: பேட் கம்மின்ஸ் ஷாபாஸ், அபிஷேக்கை வைத்து போட்ட திட்டம் - சுழலில் சுருண்ட ராஜஸ்தான் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 44 நிமிடங்களுக்கு முன்னர் “மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டத்தின் சத்தத்தை நிசப்தமாக்குவதில் இருக்கும் மனநிறைவு வேறு எதிலும் இல்லை.” உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்பாக, 2023, நவம்பர் 18ஆம் தேதி ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் இப்படிப் பேசினார். மறுநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விராட் கோலி விக்கெட்டை கம்மின்ஸ் வீழ்த்தி மைதானத்தில் இருந்த ஒரு லட்சம் ரசிகர்களையும் நிசப்தமாக்கினார். “எங்களுக்கு ஐபிஎல் கோப்பையை வெல்ல உரிமை இருக்கிறது, அந்த நாட்களும் உள்ளன. அடுத்தடுத்து வெற்றி பெறுவோம்.” ப்ளே ஆஃப் சுற்றில் கொல்கத்தாவிடம் தோற்றபோது 2024, மே 21ஆம் தேதி சன்ரைசர்ஸ் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசியது. பேட் கம்மின்ஸ் தான் கூறியதைச் செய்து காட்டும் பணியில் இறங்கிவிட்டார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தங்களின் குறைந்த ஸ்கோரை டிபெண்ட் செய்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தி 3வது முறையாக பைனலுக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றுள்ளது. இதற்கு முன் 2016, 2018ஆம் ஆண்டுகளில் இறுதிப்போட்டிக்கு சன்ரைசர்ஸ் அணி தகுதி பெற்றிருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கும் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டு கோப்பைக்காக பலப்பரிட்சை சன்ரைசர்ஸ் அணி நடத்தவுள்ளது. இதற்கு முன் 2016, 2017 எலிமினேட்டர் சுற்றுகளிலும் 2018ஆம் ஆண்டு 2வது தகுதிச் சுற்றுப் போட்டிகளிலும் கொல்கத்தா அணியை சன்ரைசர்ஸ் அணி எதிர்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது 5வது முறையாக கொல்கத்தா அணியை நாக்-அவுட்டில் சன்ரைசர்ஸ் சந்திக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 2வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்கடித்தது. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் இலக்கைத் துரத்திய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹீரோ சுழற்பந்துவீச்சாளர்களின் சிறப்பான ஆட்டம் பட மூலாதாரம்,SPORTZPICS சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனித்துவமான சுழற்பந்துவீச்சாளர்கள் யாருமின்றி பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து ராஜஸ்தான் கதையை முடித்துள்ளார் கேப்டன் கம்மின்ஸ். இந்த ஆட்டத்தில் பந்துவீசிய ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மா இருவரும் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள். அதிலும் முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற ஆட்டங்களில் பந்துவீசிய அனுபவம் இல்லாதவர்கள். ஆனால், இருவரையும் சரியாகப் பயன்படுத்தி, ராஜஸ்தான் பேட்டிங் வரிசையை கம்மின்ஸ் உலுக்கிவிட்டார். ஷாபாஸ், அபிஷேக் இருவரின் பந்துவீச்சு மீதும் கம்மின்ஸ் வைத்திருந்த நம்பிக்கையை இருவரும் காப்பாற்றினர். இருபது ஓவர்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டும் 9 ஓவர்கள் வீசினர். இதில் ஷாபாஸ், அபிஷேக் தலா 4 ஓவர்கள், மார்க்ரம் ஒரு ஓவர் 3 பேரும் சேர்ந்து 57 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ராஜஸ்தான் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் ஷாபாஸ், அபிஷேக் இருவரும் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் மட்டுமே வழங்கினர். கட்டுக்கோப்பாகப் பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியும், கிளாசனுடன் கூட்டணி அமைத்து ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்த ஷாபாஸ் அகமது ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 'இலக்கை அடைந்துவிட்டோம்' பட மூலாதாரம்,SPORTZPICS வெற்றிக்குப் பின் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கம்மின்ஸ் கூறுகையில், “2023ஆம் ஆண்டிலிருந்து சன்ரைசர்ஸ் அணி விளையாடி வருவதைப் பார்த்து வருகிறார்கள். எங்களின் இலக்கு இறுதிப் போட்டிதான் அதை அடைந்துவிட்டோம்." "எங்கள் பேட்டிங் வலிமை, பந்துவீச்சு திறமை எங்களுக்குத் தெரியும். அதேநேரம், எதிரணியின் பலத்தையும் குறைவாக மதிப்பிடவில்லை. இறுதிப்போட்டி நிச்சயம் கடினமானதாக இருக்கும்," என்று தெரிவித்தார். பொய்யான ராஜஸ்தான் கணிப்பு ராஜஸ்தான் அணி டாஸ் வென்றவுடன் சேப்பாக்கம் ஆடுகளத்தை தவறாகக் கணித்து இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எண்ணி பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. அது மட்டுமல்லாமல் சேப்பாக்கத்தில் ஸ்குயர் பவுண்டரி அளவு 62 மீட்டராக சிறியதாக இருப்பதால் சேஸிங் செய்துவிடலாம், எளிதாக பவுண்டரி, சிக்ஸர் அடிக்கலாம் என்று ராஜஸ்தான் அணியினர் கணித்தனர். ஆனால், எதுவுமே ராஜஸ்தான் அணி நினைத்தது போன்று நடக்கவில்லை. சேப்பாக்கத்தில் எதிர்பார்த்த அளவு நேற்று பனிப்பொழிவு இல்லாததால், பந்து காய்ந்தவாறே இருந்ததால் சுழற்பந்துவீச்சுக்கு சிறப்பாக ஒத்துழைத்தது. இதனால்தான் பகுதிநேர சுழற்பந்துவீச்சாளர்கள் வீசும் பந்து நன்றாகச் சுழன்று, பேட்டர்களை திணறடித்தது. சேப்பாக்கத்தில் பனிப்பொழிவு நேற்று பெரிதாக இல்லாததால் ஆடுகளமும் வறண்டிருந்தது, பந்தும் காய்ந்திருந்ததால் சன்ரைசர்ஸ் அணி பெரிய அதிசயத்தை நிகழ்த்தியது. சன்ரைசர்ஸ் வெற்றிக்குக் காரணம் என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS சன்ரைசர்ஸ் அணியின் நேற்றைய ஆட்டத்தில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தது கிளாசனின்(50) பொறுமையான பேட்டிங்கும், ஷாபாஸ் அகமது, அபிஷேக் ஷர்மாவின் பந்துவீச்சும்தான். இருவரும் சேர்ந்து ராஜஸ்தான் பேட்டிங் வரிசையின் முதுகெலும்பையே உடைத்துவிட்டனர். குறிப்பாக தமிழக வீரர் நடராஜன் 3 ஓவர்கள் வீசி 13 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். சன்ரைசர்ஸ் அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சு தங்களின் ஸ்கோரை டிபெண்ட் செய்ய உதவியது. அதிலும் இம்பாக்ட் ப்ளேயராக வந்த ஷாபாஸ் அகமது பேட்டிங்கில் 17 ரன்கள் சேர்த்து கிளாசனுடன் சேர்ந்து 45 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்து ஸ்கோர் உயரக் காரணமாக அமைந்தார். அது மட்டுமல்லாமல் பந்துவீச்சில் ராஜஸ்தான் பேட்டர் ஜெய்ஸ்வாலை(41) செட்டில் ஆகவிடாமல் விக்கெட்டை வீழ்த்தி ஷாபாஸ் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 2022க்குப் பின் ஜெய்ஸ்வால் முதல்முறையாக சுழற்பந்துவீச்சில் தனது விக்கெட்டை நேற்று இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் ரியான் பராக், அஸ்வின் இருவரது விக்கெட்டையும் ஷாபாஸ் வீழ்த்தி ஆட்டத்தின் துருப்புச்சீட்டாக இருந்தார். பட மூலாதாரம்,SPORTZPICS ஏப்ரல் 5ஆம் தேதிக்குப் பின் ஐபிஎல் தொடரில் பந்துவீச வாய்ப்பு பெறாத ஷாபாஸ் நேற்றுதான் பந்துவீசினார். ஆனால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முத்திரை பதித்தார். அதேபோல அபிஷேக் ஷர்மா ஐபிஎல் தொடரில் 4 ஓவர்களை முழுமையாக 2வது முறையாக நேற்றுதான் வீசி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். அதிரடி பேட்டரும், பகுதிநேர சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவையும் கம்மின்ஸ் நேற்று நன்றாகப் பயன்படுத்தினார். அபிஷேக் ஷர்மா ஓரளவுக்கு பந்துவீசக் கூடியவர் என்றாலும் அவர் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் முழு ஓவர்களையும் வீசியதில்லை. ஆனால், இடதுகை சுழற்பந்துவீச்சாளரான அபிஷேக் ஷர்மாவை சிறப்பாகப் பயன்படுத்தி 4 ஓவர்கள் வீச வைத்து 24 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளையும் வீழ்த்த கம்மின்ஸ் காரணமாக அமைந்தார். பேட்டிங்கில் இரு தகுதிச்சுற்றுகளிலும் ஜொலிக்காத அபிஷேக் நேற்று பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டார். இந்த சீசனில் 15 இன்னிங்ஸ்களில் ஆடிய அபிஷேக் ஷர்மா 482 ரன்கள் குவித்து, 200 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். “இந்திய அணியின் சொத்தாக மாறிவரும் அபிஷேக்கை எவ்வாறு தேர்வாளர்கள் உலகக் கோப்பைக்கு தவறவிட்டார்கள் எனத் தெரியவில்லை” என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி வியப்புடன் கேள்வி எழுப்பியுள்ளார். அபிஷேக், ஷாபாஸ் இருவரும்ம் பந்துவீச வந்த பிறகு 33 பந்துகளாக ராஜஸ்தான் அணி ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை. 4 விக்கெட்டுகளையும் இழந்தது. கிளாசன் எனும் ‘கேம் சேஞ்சர்’ பட மூலாதாரம்,SPORTZPICS ஹென்ரிச் கிளாசன் இந்த ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் அணிக்கு சிறந்த பேட்டராகவும், விக்கெட் கீப்பராகவும், ஃபினிஷராகவும் கிளாசன் இருக்கிறார். கிளாசன் நேற்று களமிறங்கியபோது, சன்ரைசர்ஸ் 99 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது கிளாசன் களமிறங்கி ஆங்கர் ரோல் செய்து, தனது வாய்ப்புக்காகக் காத்திருந்தார். இருபது பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து நிதானமாக ஆடிய கிளாசன், சஹல் ஓவரை குறிவைத்து 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வெளுத்து 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். கிளாசன் அடித்த 50 ரன்கள் சன்ரைசர்ஸ் அணி கௌரவமான ஸ்கோரை பெறக் காரணமாக அமைந்தது. ஒருவேளை கிளாசன் ஸ்கோர் செய்யாமல் இருந்திருந்தால், சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களுக்குள்கூட சுருண்டிருக்கலாம். ஆகவே, கிளாசனின் ஆட்டம்தான் கேம் சேஞ்சராக இருந்தது. ராஜஸ்தான் செய்த தவறுகள் பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணி, ஆடுகளத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்று எண்ணி சேஸிங் செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டது. தொடக்கத்தில் டிரென்ட் போல்ட் விக்கெட்டுகளை வீழ்த்தி சன்ரைசர்ஸை சுருட்ட வாய்ப்பை ஏற்படுத்தியும் அதைப் பயன்படுத்தவில்லை. பேட்டிங்கில் ஜெய்ஸ்வால்(42), துருவ் ஜூரெல்(56) தவிர வேறு எந்த பேட்டர்களும் பங்களிப்பு செய்யவில்லை. ராஜஸ்தான் பந்துவீச்சைப் பொருத்தவரை டிரென்ட் போல்ட், சந்தீப் ஷர்மா, ஆவேஷ்கான் ஆகியோர் தேவையான நேரத்தில் விக்கெட்டுகளை வீழ்த்திக் கொடுத்து சன்ரைசர்ஸ் அணியைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். ஒரு கட்டத்தில் 120 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. அந்தத் தருணத்தை இறுகப் பிடித்திருந்தால், நிச்சயம் ஆட்டம் ராஜஸ்தான் பக்கம் வந்திருக்கும். ஆனால், அதன் பிறகும் 55 ரன்கள் சேர்க்கவிட்னர். 'ஆடுகளத்தை தவறாகக் கணித்தோம்' பட மூலாதாரம்,SPORTZPICS ராஜஸ்தான் அணியின் கேப்டன் சாம்ஸன் கூறுகையில், “எங்களின் பந்துவீச்சாளர்களை நினைத்துப் பெருமைப்படுகிறேன். பனிப்பொழிவு இருக்கும் என நாங்கள் கணித்துவிட்டோம். ஆனால், 2வது இன்னிங்ஸில் விக்கெட் வேறுவிதமாகத் திரும்பிவிட்டது." "எங்களுக்கு எதிராகத் தரமான சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தினர். அனைவருமே சிறப்பான பங்களிப்பைச் செய்தனர். இந்திய அணிக்கு செறிவு, திறமை மிகுந்த இளைஞர்கள் இந்தத் தொடரில் இந்திய அணிக்கு அடையாளம் காணப்பட்டுள்ளனர்," என்று தெரிவித்தார். சேஸிங்கில் சிறப்பாக ஆடக்கூடிய ராஜஸ்தான் அணி நேற்று சொதப்பியது. ஜாஸ் பட்லருக்கு பதிலாக வந்த காட்மோர் குறிப்பிடத்தக்க வகையில் ஆடவில்லை. கேப்டன் சாம்ஸன் போட்டியின் அழுத்தத்தைத் தாங்க முடியாமல் தவறான ஷாட்டை அடித்து 10 ரன்னில் அபிஷேக் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். நம்பிக்கை நாயகன் ரியான் பராக் 6 ரன்னில் ஷாபாஸ் அகமது பந்தில் ஆட்டமிழந்தார். இதில் துருவ் ஜூரெல் மட்டுமே 35 பந்துகளில் 56 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். https://www.bbc.com/tamil/articles/c9xxlzy32k8o
  12. 'ரஃபா மீது நடத்தும் தாக்குதலை நிறுத்தவும்' - சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு வழங்கிய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES 16 நிமிடங்களுக்கு முன்னர் ரஃபா நகரில் தாக்குதலை உடனடியாக நிறுத்துமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளது. அதனுடன் இஸ்ரேலுக்கு பல்வேறு உத்தரவுகளையும் அந்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவை ஹமாஸ் வரவேற்றுள்ள நிலையில், இஸ்ரேல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. முன்னதாக, தெற்கு காஸாவில் உள்ள ரஃபாவில் தாக்குதலை நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடுமாறு ஐ.நா-வின் சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா கோரிக்கை விடுத்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையை வெள்ளிக்கிழமை (மே 24) அன்று சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதிபதி நவாஃப் சலாம் தலைமையேற்று நடத்தினார். அப்போது, “காஸா முனையில் மக்களின் பேரழிவுகரமான வாழ்க்கை நிலை மேலும் மோசமடைந்துள்ளது," எனக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக நீடித்த மற்றும் பரவலான உணவுப் பற்றாக்குறையை நீதிமன்றம் வருத்தத்துடன் கவனித்ததாகத் தெரிவித்தார். மேலும், ரஃபாவில் நடக்கும் ராணுவத் தாக்குதல் நடவடிக்கையை அடிக்கோடிட்டுக் காட்டிய பல்வேறு ஐ.நா. அதிகாரிகளை நீதிபதி மேற்கோளிட்டு காட்டினார். ரஃபாவில் மே 7 அன்று இஸ்ரேல் ராணுவத் தாக்குதலை தொடங்கிய நிலையில், மே 18 வரை சுமார் 8 லட்சம் பாலத்தீன மக்கள் அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். படக்குறிப்பு, சர்வதேச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவர் நீதிபதி நவாஃப் சலாம் தீர்ப்பை வாசிக்கிறார் நீதிமன்றம் கூறியது என்ன? விசாரணையை தொடர்ந்து, பாலத்தீன மக்களுக்கு 'உடனடி ஆபத்து' எனக்கூறி, ரஃபாவில் இஸ்ரேல் ராணுவ தாக்குதல் மற்றும் மற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. அங்கு நிலவும் தற்போதைய சூழல், 'காஸாவில் உள்ள மக்களின் உரிமைகளுக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு விளைவிக்கும்' என நீதிபதி சலாம் தெரிவித்தார். மேலும், இன்றைய உத்தரவின் அடிப்படையில் அங்கு ஏற்பட்ட முன்னேற்றம் குறித்து இஸ்ரேல் இன்னும் ஒரு மாதத்தில் நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, மனிதாபிமான உதவிகள் நுழைவதற்காக எகிப்து-காஸா இடையிலான ரஃபா எல்லையைத் திறக்க வேண்டும் என்றும், விசாரணை அமைப்புகள் மற்றும் உண்மை கண்டறியும் குழுக்கள் காஸாவுக்குச் செல்வதற்கான அணுகலை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஹமாஸால் பிடிக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் இன்னும் விடுவிக்கப்படாதது குறித்தும் நீதிபதி சலாம் கவலை தெரிவித்தார். "பணயக்கைதிகளின் நிலை குறித்து நீதிமன்றம் மிகுந்த கவலையை வெளிப்படுத்துகிறது. மேலும் அவர்களை உடனடியாக, நிபந்தனையின்றி விடுவிக்க அழைப்பு விடுக்கிறது," என்று அவர் தெரிவித்தார். "இன்னும் பலர் சிறைபிடிக்கப்பட்டிருப்பது மிகவும் கவலையளிக்கிறது," என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு,நீடித்த மற்றும் பரவலான உணவுப் பற்றாக்குறையை நீதிமன்றம் வருத்தத்துடன் கவனித்ததாக நீதிபதி தெரிவித்தார் ஹமாஸ், இஸ்ரேல் கூறியது என்ன? சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு “(தாக்குதல்) நிறுத்தத்திற்கான தெளிவான அழைப்பு" என தென்னாப்பிரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் நலேடி பண்டோர் தெரிவித்துள்ளார். ஹமாஸ் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் கூறுகையில், "சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். ரஃபா நகரில் எங்கள் மக்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று இந்த தீர்ப்பு கோருகிறது," என தெரிவித்தார். இதற்கிடையில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் யாயிர் லாபிட் கூறுகையில், “ரஃபாவில் ராணுவ நடவடிக்கையின் முடிவை, பணயக்கைதிகளை விடுவிப்பதற்கும், பயங்கரவாதத்திற்கு எதிராக தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமைக்கும் சர்வதேச நீதிமன்றம் நேரடியாக இணைக்கவில்லை என்பது ஒரு மோசமான தார்மீகத் தோல்வியாகும்," என அதிருப்தி தெரிவித்தார். சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளிவந்த சில நிமிடங்களிலேயே, ரஃபா நகரின் மையத்தில் உள்ள ஷபூரா முகாம் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் தொடர் வான்வழித் தாக்குதல்களை நடத்தின. படக்குறிப்பு, சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் சட்டபூர்வமானது என்றாலும், நடைமுறையில் உத்தரவுகளை அந்நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாது வழக்கு விவரம் இந்த வழக்கு விசாரணையின் போது, தென்னாப்பிரிக்கா தரப்பு வழக்கறிஞர்கள், பாலத்தீன மக்களின் வாழ்க்கையை உறுதி செய்வதற்கு தேவையான தற்காலிக நடவடிக்கைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டனர். மேலும், காஸாவுக்குள் நிவாரண பணியாளர்கள், ஊடகவியலாளர்கள், விசாரணையாளர்களுக்கு 'தடையற்ற அனுமதியை' வழங்க இஸ்ரேலை வலியுறுத்தினர். தென்னாப்பிரிக்காவின் இந்த வழக்கை 'முற்றிலும் ஆதாரமற்றது' என்று கூறியுள்ள இஸ்ரேல், அக்டோபர் 7-ஆம் தேதி நடந்த தாக்குதலுக்குப் பிறகு மீதமுள்ள ஹமாஸ் படையினரை அழிக்க ரஃபாவில் தங்கள் நாடு மேற்கொண்டுள்ள தாக்குதல் முக்கியமானது என தெரிவித்துள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் உத்தரவுகள் சட்டபூர்வமானது என்றாலும், நடைமுறையில் உத்தரவுகளை அந்நீதிமன்றத்தால் செயல்படுத்த முடியாது. காஸாவில் பாலத்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்துவதாகவும் தென்னாப்பிரிக்கா குற்றச்சாட்டு தெரிவித்திருந்தது. இந்த வழக்கில் கடந்த ஜனவரி 26 அன்று வழங்கப்பட்ட இடைக்கால உத்தரவில், காஸாவில் நடந்துவிடக்கூடிய இனப்படுகொலையைத் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேறொள்ளுமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு தரப்பினரால் உற்றுநோக்கப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cw44xggnn1go
  13. 22 நிமிடங்கள் தொடர்ந்து கைத்தட்டினால் என்னவாகும்? கேன்ஸ் திரைப்பட விழாவில் இது எப்படிச் சாத்தியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் ஃபிஷரால் பதவி, பிபிசி 3 மணி நேரங்களுக்கு முன்னர் கேன்ஸ் திரைப்பட விழாவில் 'Horizon: An American Saga' என்ற திரைப்படம் திரையிடப்பட்ட பிறகு, பார்வையாளர்களின் கரவொலி ஏழு நிமிடங்கள் நீடித்தது. பின்னர் அனைவரும் எழுந்து நின்று பாராட்டினர். ஒரு படைப்புக்கு பார்வையாளர்கள் ஏழு நிமிடங்கள் கைத்தட்டிப் பாராட்டியது கேன்ஸ் திரைப்பட விழா வரலாற்றில் புதிது கிடையாது. 2006-ஆம் ஆண்டு ‘பான்ஸ் லேபிரிந்த்’ (Pan's Labyrinth) எனும் படம் திரையிடப்பட்டபோது பார்வையாளர்களின் கைத்தட்டல் 22 நிமிடங்களுக்கு நீடித்தது. கேன்ஸ் திரைப்பட விழா வரலாற்றில் நீண்ட கைதட்டல் பெற்ற படைப்பு இதுதான். நான் இதைப் பற்றி கேள்விப்பட்ட போது, 'அவ்வளவு நேரம் என்னால் கைத்தட்ட முடியுமா? அதை ஒரு முறை முயற்சி செய்யலாம்' என்று தோன்றியது. கேன்ஸ் விழாவின் நீளமான கைதட்டல் நிகழ்வை வீட்டில் முயற்சி செய்ய முடிவெடுத்தேன். இவ்வளவு நேரம் என்னால் கைதட்ட முடியுமா என்ற சந்தேகத்துடன் இன்று காலை, என் மகளிடம் டைமரைத் தொடங்கச் சொல்லி, கைதட்ட ஆரம்பித்தேன். "அப்பா, ஏன் இப்படி செய்கிறாய்?" என்று என் மகள் கேட்டார். என்ன பதில் சொல்வது என்று தெரியாமல், "இது ஒரு அறிவியல் சோதனை,” என்று பதிலளித்தேன். அறுபது நொடிகள் கடந்தது, அனைத்தும் நன்றாக சென்றது. "இது எளிமையாக தான் உள்ளது. என்னால் இதனை நீண்ட நேரம் செய்ய முடியும்," என்று நான் நினைத்தேன். கொஞ்ச நேரம் கைத்தட்டிக் கொண்டே இருக்கையில் என் மனதில் பல விஷயங்கள் தோன்றியன. என் சொந்த வாழ்கையில் நான் செய்த தேர்வுகள், என் தற்போதைய நிலை, இப்படி நிறைய எண்ணங்கள் ஓடின. அதே சமயம், நாம் ஏன் கை தட்டுகிறோம்? மனிதர்கள் ஏன் தங்கள் கைகளை ஒன்றாகச் சேர்த்துத் தட்டுகிறார்கள்? இவ்வாறு எப்போது பாராட்ட ஆரம்பித்தார்கள்? மற்ற விலங்குகள் இதைச் செய்யுமா? கேன்ஸ் பார்வையாளர்கள் ஏன் விசில் அடிப்பது, பிற ஒலிகள் எழுப்புவது போன்று செய்யாமல் கைத்தட்டுகிறார்கள்? இப்படிப் பல கேள்விகள் என் மனதில் எழுந்தன. நாம் எப்போது கைதட்டத் துவங்கினோம்? உளவியல் நிபுணர் ஆலன் க்ராலி 2023-ஆம் ஆண்டு கைத்தட்டல் பற்றி ஆய்வு செய்தார். நமது வரலாற்றின் ஆரம்பத்தில் இருந்தே மனித இனம் கைதட்டும் பழக்கத்தைக் கொண்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார். நமது மூதாதையர்கள் அந்தக் காலகட்டத்தில் பேசும் மொழி இல்லாததால், வேட்டையாடுபவர்களின் இருப்பைக் குறிக்க, எதிரிகளை அச்சுறுத்த, விளையாடுவதற்கு அல்லது வாய்ப்புகளை முன்னிலைப்படுத்த இந்தச் சத்தத்தைப் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் உணர்ந்திருக்கலாம். மேலும் சில விலங்கினங்கள் சக விலங்குகளின் கவனத்தைப் பெற அல்லது நீண்ட தூரம் தொடர்பு கொள்ள கைத்தட்டலை பயன்படுத்துகின்றன. 'கிரே சீல்ஸ்’ (grey seals) எனப்படும் கடல் நாய் நீருக்கடியில் இருக்கும் போது, தன் துணைக்கு வலிமையையும் ஆதிக்கத்தையும் காட்ட கைதட்டல் ஒலியை எழுப்புகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES கைத்தட்டப் பணம் கொடுத்த மன்னர் இரண்டு நிமிடங்களாகக் கைத்தட்டிக் கொண்டிருக்கிறேன். எனது கைத்தட்டல் பரிசோதனை எனது வளர்ப்பு நாயின் கவனத்தை ஈர்த்தது. என் நாயைப் பார்த்ததும் எனக்குத் தோன்றியதெல்லாம், நாய்களால் கைத்தட்ட முடியாது, ஏனெனில் கைத்தட்டுவதற்கு ஏதுவாக மூட்டுகள் அவற்றுக்கு இல்லை என்பது தான். என்னை உற்று நோக்கும் என் நாயிடம் பேச முடிந்தால், நான் மனித சமூக-கலாச்சார நெறிமுறைகளை பற்றிய ஒரு முக்கியமான ஆய்வில் ஈடுபடுகிறேன் என்று அதனிடம் விளக்க முடியும், ஆனால் நான் சொல்வது அதற்குப் புரியாது. எனவே என்னைப் பார்த்து அது குரைக்கத் துவங்கியது. ஒருவரின் செயலைப் பாராட்டுவதற்காக மக்கள் கைத்தட்டுகிறார்கள். ஆனால் அதை எப்போது தொடங்கினார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பாராட்டுத் தெரிவிக்க மக்கள் எப்போது கைதட்ட ஆரம்பித்தார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. பைபிளில் சில இடங்களில் கைத்தட்டல் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ளது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், வழிபாடு செய்யவும் மக்கள் கைத்தட்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தியர்களும் இதைச் செய்திருக்கலாம். இருப்பினும், திரையரங்கத் திரையிடல் அல்லது உரையாற்றுவதைப் பாராட்டி மக்கள் கைதட்டும் பழக்கம் பண்டைய ரோமில் துவங்கியதாகத் தெரிகிறது. நாடகங்களில், காட்சிகளின் முடிவில் 'plaudite' என்ற வார்த்தை குறிப்பிடப்பட்டிருக்கும். அந்த வார்த்தையில் இருந்து தான் 'applause' (கைத்தட்டல்) என்ற வார்த்தை தோன்றியது. ரோமானியத் தலைவர்களுக்கு, கைதட்டல் என்பது பிரபலத்தின் செல்வாக்கை மதிப்பிடும் அளவீடாகும். அதாவது, சமூக ஊடகங்களில் கிடைக்கும் 'லைக்குகளைப்' போன்றது. கைத்தட்டல் சத்தத்தை அதிகரிக்கச் சில பிரபலங்கள் பணம் கொடுத்த சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன. பேரரசர் நீரோ, தான் வரும் போதெல்லாம் கைத்தட்ட 5,000 வீரர்களை பணம் கொடுத்துப் பணியமர்த்தினார். ஒரு பிரெஞ்சுக் கவிஞர் 1500-களில் பலத்த கைதட்டலுக்கு ஈடாக பார்வையாளர்களுக்கு இலவச டிக்கெட்டுகளை வழங்கினார். அடுத்த இரண்டு நூற்றாண்டுகள் முழுவதும், பிரான்சில் தொழில்முறை ஊதியம் பெறும் 'கைதட்டல்காரர்கள்' (claquers) அனைத்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கைத்தட்டும் பணியைச் செய்வது வழக்கமானது. பட மூலாதாரம்,GETTY IMAGES சத்தம் எழாமல் கைத்தட்டுவது சாத்தியமா? வாழ்வதற்காக என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது என்று என்னை நானே கேள்வி எழுப்பி கொண்டேன். என் கைகள் வலிக்கின்றன. என் திருமண மோதிரத்தை அணிந்து கொண்டிருப்பதற்காக நான் இப்போது வருந்துகிறேன். நடிகை நிக்கோல் கிட்மேன் ஒருமுறை ஆஸ்கார் விருது விழாவில் 'கடல்நாய்’ போன்று வித்தியாசமாக கைத்தட்டியதற்காக கேலி செய்யப்பட்டார். அவர் விரல்களில் மோதிரங்கள் இருந்ததால் அப்படிக் கைத்தட்டியதாக அவர் பின்னர் விளக்கினார். கைத்தட்டுவது எளிது. பொதுவாகக் குழந்தை பிறந்து முதல் வருடத்தின் பிற்பகுதி வரை கைத்தட்டுவதற்குப் போதுமான அளவு ஒருங்கிணைப்புத் திறன் இருக்காது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் பிறகு குழந்தைகள் அதை எளிதாகச் செய்ய முடியும். பல்வேறு கலாச்சாரங்களில் கைத்தட்டல் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக கட்டை விரல் மற்றும் நடுவிரலைப் பயன்படுத்திச் சொடக்குவது போன்ற செய்கைகளும் சில நிகழ்வுகளில் பயன்படுத்தப்படுகின்றன. கவிதை வாசிப்பு, சொற்பொழிவு போன்ற நிகழ்வுகளில் விரல்களைச் சொடக்குவது வழக்கமாகக் கையாளப்படுகிறது. விரல்களைச் சொடக்குவது, குறைந்த முயற்சியில் திறம்பட உரத்த சத்தத்தையும் உருவாக்குகிறது. "கைத்தட்டல் மிகவும் சிறப்பானது. அதிக ஒலி அளவு கொண்ட சமிக்ஞை. பாராட்டைப் பதிவு செய்ய எளிமையான, விரைவான மற்றும் பயனுள்ள செயலாகும்," என்று க்ராலி குறிப்பிடுகிறார். கைத்தட்டலின் மற்றொரு முறை நம் கைகளைத் தொடை மீது தட்டிச் சத்தம் எழுப்புவது. ஆனால் இந்தச் சத்தம் பெரிதாகக் கேட்காது. இறுதியாக, கைதட்டல் என்பது சத்தமாகக் கத்துவது, ஆரவாரம் செய்வது, சத்தமிடுவது, அல்லது கூக்குரலிடுவதைக் காட்டிலும் சமூக ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு செயல் ஆகும். அநாகரீகமாகக் கூச்சலிடுவதைக் காட்டிலும், கைதட்டல் கண்ணியமாகவும் இலகுவாகவும் இருக்கும். அதே சமயம் உற்சாகத்தையும் ஏற்படுத்தும். மேலும் சத்தம் எழுப்பாமல் கைத்தட்டும் முறையும் உள்ளது. அதனை 'கோல்ஃப் கைதட்டல்' (golf clap) என்பார்கள். விளையாட்டுக் களத்தில் வீரர்களை திசை திருப்பாமல் விரல்களை மெதுவாக உள்ளங்கையில் தட்டுவதை கோல்ஃப் கைதட்டல் என்பார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES கைத்தட்டல் பாராட்ட மட்டுமா பயன்படுத்தப்படுகிறது? என் மனம் அலைபாய ஆரம்பித்தது. 2021-ஆம் ஆண்டு கேன்ஸ் விழாவில் நடந்த நீண்ட கைத்தட்டலின் போது, நடிகர் ஆடம் டிரைவர் சிகரெட்டைப் பற்ற வைத்தார். ஆனால் நான் இப்போது அப்படிச் செய்ய விரும்பவில்லை. புகைபிடிக்கும் போது கைதட்டுவது ஆபத்தானது. சில ஆராய்ச்சியாளர்கள், கைத்தட்டல் 'பாராட்டுவது' மட்டுமின்றி மேலும் சில விஷயங்களையும் குறிக்கும் என்று சுட்டிக்காட்டியுள்ளனர். உதாரணமாக, சில சமயங்களில், தேசிய கீதம் முடிந்ததும் கைத்தட்டுவார்கள். பார்வையாளர்கள் மனதளவில் அடுத்த நிகழ்வுக்குத் தங்களைத் தயார்படுத்தி கொள்வார்கள். சில சமயங்களில் இது சமூக உறவுகளை வளர்க்கும் செயலாகவும் இருக்கும். எடுத்துக்காட்டாக, கொரோனா பொது முடக்கத்தின் போது, சில நாடுகளில் கைதட்டும்படி மக்களை வலியுறுத்தினர். மேலும் சில மருத்துவர்கள், செவிலியர்களைப் பாராட்ட மக்கள் கைத்தட்டினர். இருப்பினும், கைத்தட்டல் சத்தம் சில சமயங்களில் வெறுப்பு உணர்வையும் ஏற்படுத்துகிறது. பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கைதட்டல் பல நேரங்களில் வெறுப்பை ஏற்படுத்தும். சில சமயங்களில் பாரம்பரிய இசைக் கச்சேரியில் பாடல்கள் முடிவதற்கு முன்னால் கைதட்டும் அப்பாவி நபர் மீது பரிதாபம் தோன்றும். கைத்தட்டல் ஒரு நோயா? என் மகளுக்குச் சலிப்பாகிவிட்டது. "நான் பிறகு வருகிறேன்," என்று அவர் அறையை விட்டு வெளியேறினார். "தயவு செய்து போகாதே," என்று நான் கெஞ்சினேன். ஆனால் அவர் போய்விட்டார். "கைத்தட்டல் சில சமயங்களில் சமூகத் தொற்றாகவும் மாறிவிடுகிறது. ஒரு அறையில் மிகப்பெரிய கூட்டத்திற்கு மத்தியில், பெரும்பாலானோர் கைத்தட்டும் போது, கைத்தட்டும் எண்ணம் இல்லாதவர்களும் தானாகக் கைத்தட்டுவார்கள். அதாவது மக்கள் உள் விருப்பத்தால் அல்லாமல் சமூக அழுத்தத்தால் கை தட்டலாம்," என்று க்ராலி குறிப்பிடுகிறார். 2013-ஆம் ஆண்டில், ரிச்சர்ட் மான் தலைமையிலான குழு, பின்னர் ஸ்வீடனில் உள்ள உப்சாலா பல்கலைக்கழகத்தில், கல்வி விரிவுரைகளுக்கு பிறகு மாணவர்கள் மத்தியில் நடப்பதை கவனித்தார். ஒவ்வொரு விரிவுரைக்கு பின்னரும் யாராவது கைத்தட்டினால் உடனே ஒட்டுமொத்த கூட்டமும் கைத்தட்டியது. கைதட்டலின் ஆரம்பம் பெரும்பாலும் ஒரு நோய் பரவும் முறையை போன்றே பின்பற்றுவதை அவர்கள் கண்டறிந்தனர். நாம் ஏன் கை தட்டுகிறோம்? சுருக்கமாக பதில் சொல்ல வேண்டுமெனில், நிறைய சத்தம் போடுவதற்கும், நமது பாராட்டுகளைக் காட்டுவதற்கும், ஒன்றாகச் சேர்ந்து மகிழ்வதால் வரும் சமூகப் பிணைப்பை வலுப்படுத்துவதற்கும் இது மிகச் சிறந்த வழியாகும். ஆனால் மிக நீண்ட கைதட்டலை எப்படி விவரிப்பது? 2013-இல், பிபிசி செய்தியிடம் பேசிய ரிச்சார்ட் மன் (Richard Mann), "கைதட்டலின் நீளம் பாராட்டின் தரமாகப் பார்க்கப்படுவதில்லை. நீங்கள் தொடங்குவதற்கு (கைத்தட்டல்) உங்களைச் சுற்றி சமூக அழுத்தம் இருக்கும். ஆனால் நீங்கள் கைத்தட்டத் துவங்கியவுடன், யாரோ ஒருவர் அதை நிறுத்தும் வரை, நிறுத்தக்கூடாது என்ற வலுவான நோக்கம் ஏற்படுகிறது," என்றார். மான்-இன் இந்தக் கண்டுபிடிப்பை கேன்ஸ் விழாவின் நீண்ட கைதட்டல் நிகழ்வுடன் பொருத்திப் பார்த்தால் சரியாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES 10 நிமிடங்களுக்கு மேல் கடந்துவிட்டது.. இந்தக் கட்டத்தில், கைத்தட்டல் ஒலி அந்நியமாகவும் மிகவும் மெல்லிய சத்தமாகவும் மாறும். என் கைகள் வேறொருவருக்குச் சொந்தமானது போல் இருக்கின்றன. 2006-ஆம் ஆண்டில் 22 நிமிடங்களை எட்டிய கேன்ஸில் பார்வையாளர்களை நான் கற்பனை செய்து பார்க்கிறேன். அவர்கள் எப்படி உணர்ந்தார்கள் என்று ஆச்சரியப்படுகிறேன். அவர்கள் இறக்கும் வரை கைத்தட்டலாம் என்று நினைத்தார்களா? அவர்கள் சில உயர்ந்த உணர்வு நிலையை அடைந்தனரா? எப்படித்தான் அவ்வளவு நேரம் கைதட்டினார்கள்? என்னால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. என் கைகள் மரத்துப் போகும் முன் கைத்தட்டுவதை நிறுத்த முடிவு செய்கிறேன். மேலும் இந்தக் கட்டுரையை நான் எழுத வேண்டும் என்பதால் இதோடு கைத்தட்டுவதை நிறுத்திக் கொள்கிறேன். இருப்பினும், நான் என் வாழ்க்கையில் முன்பு கைத்தட்டியதை விட இம்முறை நீண்ட நேரம் நான் தொடர்ந்து கைத்தட்டினேன் என்பதோடு என் பரிசோதனையை முடிக்கிறேன். என் மகள் என் செயலால் எரிச்சலடைந்திருக்கலாம். ஆனால் நான் இவ்வளவு நேரம் கைத்தட்டியது நிச்சயமாக கைதட்டலுக்கு தகுதியானது தானே? https://www.bbc.com/tamil/articles/cpvvzqgyll3o
  14. சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே! - யாழில் ஜனாதிபதி ரணிலை பாராட்டிய வடக்கு ஆளுநர் 24 MAY, 2024 | 06:09 PM தலைமைத்துவத்துக்கான சிறந்த வெளிப்பாடு; சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி என வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக்கான கட்டடத்தொகுதி திறந்து வைக்கப்பட்ட இன்றைய (24) நிகழ்வில் உரையாற்றியபோதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். பல்கலைக்கழகத்துக்கான பாரிய மைல்கல் நிகழ்வாக இன்றைய நிகழ்வு அமைந்துள்ளது. நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த இந்த கட்டட தொகுதியை விரைவில் திறந்து, பயன்பாட்டுக்கு வழங்குமாறு கடந்த மார்ச் மாதம் ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தேன். கோரிக்கையை ஏற்று, மே மாதம் கட்டடம் திறக்கப்படும் என அவர் கூறினார். அதன் பின்னர் ஒரு தடவை கூட இது தொடர்பில் பேசவில்லை. எனினும், வழங்கிய வாக்குறுதிக்கு அமைய ஜனாதிபதி அவர்கள் இன்றைய தினம் இந்த கட்டடத்தை திறந்து வைத்துள்ளார். இதுவே தலைமைத்துவத்துக்கான சிறந்த வெளிப்பாடு. சிறந்த தலைவர் ஒருவர் செயற்படக்கூடிய விதம் இதுவே. பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்த நாட்டை மீட்டெடுத்த தலைவர் எமது ஜனாதிபதி. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு, எரிபொருள் தட்டுப்பாடு நிலவிய காலத்தில், மின்சாரமின்றி நாடு இருளுக்குள் கிடந்தபோது தலைமைத்துவத்தை பொறுப்பேற்று சவால்களை வெற்றிகொண்டார். பல சவால்களை தனி நபராக எதிர்கொண்டு, நாட்டை மாற்றியமைத்தார். இவ்வாறான ஜனாதிபதியின் பிரதிநிதியாக வடக்கில் ஆளுநராக சேவையாற்றுவதில் பெருமிதம் அடைகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/184409
  15. அண்ணை காதல் கடிதங்களாக இருக்குமோ?! நீங்கள் கலியாணம் கட்டினவர் என்பதால் அதற்கும் சந்தர்ப்பம் குறைவு! அப்ப என்னவா இருக்கும்?!
  16. பெங்களூருவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டிய ராஜஸ்தான் 2ஆவது தகுதிகாணில் ஹைதராபாத்தை சந்திக்கும் Published By: VISHNU 23 MAY, 2024 | 12:33 AM (நெவில் அன்தனி) அஹமதாபாத், நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (22) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் நீக்கல் போட்டியில் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 4 விக்கெட்களால் வெற்றிகொண்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 2ஆவது தகுதிகாண் போட்டியில் விளையாட தகுதிபெற்றது. றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 6 தொடர்ச்சியான வெற்றிகளுடன் இந்தப் போட்டியை நம்பிக்கையுடன் எதிர்கொண்டது. ராஜஸ்தான் றோயல்ஸ் 4 தொடர்ச்சியான தோல்விகளுடன் இந்தப் போட்டியை சற்று அவநம்பிக்கையுடன் எதிர்கொண்டது. ஆனால் பெங்களூருவின் தொடர் வெற்றிகளுக்கு முடிவுகட்டிய ராஜஸ்தான் அவ்வணியை நொக் அவுட் செய்தது. முதலாவது தகுதிகாண் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸிடம் தோல்வி அடைந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாவது தகுதிகாண் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் எதிர்த்தாடும். இந்தத் தோல்வியின் மூலம் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூருவினதும் 17 அத்தியாயங்களிலும் அவ்வணிக்காக விளையாடிவந்த விராத் கோஹ்லியினதும் சம்பியனாகும் கனவு மீண்டும் காணல் நீராகிப்போனது. ஆனால், அப்போட்டியின்போது ஐபிஎல் வரலாற்றில் 8000 ஓட்டங்களைக் குவித்த முதலாவது வீரர் என்ற சாதனையை விராத் கோஹ்லி நிலைநாட்டினார். 252 போட்டிகளில் 8 சதங்கள், 50 அரைச் சதங்கள் உட்பட 8004 ஓடட்ங்களை விராத் கோஹ்லி குவித்துள்ளார். இரண்டு 'றோயல்' அணிகள் மோதிய இந்தப் போட்டியில் அதிரடியின் பிரவாகத்தைக் காண முடியவில்லை. ஆனால், சமயோசிதத்துடனும் நிதானம் கலந்த வேகத்துடனும் ஓட்டங்கள் பெறப்பட்டதை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. விராத் கோஹ்லி, பவ் டு ப்ளெசிஸ், ரஜாத் பட்டிடார், கெமரன் க்றீன் ஆகிய பெங்களூரு வீரர்களிடமும் யஷஸ்வி ஜய்ஸ்வால், சஞ்சு செம்சன், ரியான் பரக், த்ருவ் ஜுரெல் ஆகிய ராஜஸ்தான் வீரர்களிடமும் துடுப்பாட்டத்தில் வழமையாக காணப்படும் விசுவரூபம் வெளிப்படவில்லை. மாறாக இரண்டு அணியினரும் வெற்றியை மாத்திரம் குறிவைத்து விவேகத்துடன் விளையாடியதை அவதானிக்க முடிந்தது. இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் வெற்றியைத் தனதாக்கிக்கொண்டது. 173 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் 19 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 174 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. யஷஸ்வி ஜய்ஸ்வால், டொம் கொஹ்லர்-கெட்மோ ஆகிய இருவரும் 33 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். கொஹ்லர்-கெட்மோ 20 ஓட்டங்களுடனும் யஷஸ்வி ஜய்ஸ்வால் 45 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து சஞ்சு செம்சன் 17 ஓட்டங்களையும் ரியான் பரக் 36 ஓட்டங்களையும் ஷிம்ரன் ஹெட்மயர் 26 ஓட்டங்களையும் பெற்று அணிக்கு தெம்பூட்டினர். 18ஆவது ஓவரில் ரியான் பரக் , ஷிம்ரன் ஹெட்மயர் ஆகிய இருவரும் ஆட்டம் இழந்ததால் போட்டியில் திருப்பம் ஏற்படுமோ என எண்ணவைத்தது. அவர்கள் இருவரும் 5ஆவது விக்கெட்டில் 45 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். கடைசி 2 ஓவர்களில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டது. லொக்கி பேர்கசன் வீசிய 19ஆவது ஓவரில் ரோவ்மன் பவல் முதல் இரண்டு பந்துகளில் பவுண்டறிகளையும் கடைசிப் பந்தில் சிக்ஸையும் விளாசி ராஜஸ்தான் றோயல்ஸின் வெற்றியை உறுதிசெய்தார். அவர் 16 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் மொஹமத் சிராஜ் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றது. விராத் கோஹ்லி, அணித் தலைவர் பவ் டு ப்ளெசிஸ் ஆகிய இருவரும் 28 பந்துகளில் 37 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில் பவ் டு ப்ளெசிஸ் 17 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். மொத்த எண்ணிக்கை 56 ஓட்டங்களாக இருந்தபோது விராத் கோஹ்லி 33 ஓட்டங்களுடன் வெளியேறினார். தொடர்ந்து கெமரன் க்றீன் (27), ரஜாத் பட்டிடார் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அதுவே அணியின் சிறந்த இணைப்பாட்டாமாக இருந்தது. அவுஸ்திரேலியர்களான கெமரன் க்றீன், க்ளென் மெக்ஸ்வெல் ஆகிய இருவரும் 12ஆவது ஓவரில் ரவிச்சந்திரன் அஷ்வினின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். இந்த ஆட்டமிழப்புகள் பெங்களூரு அணிக்கு பலத்த நெருக்கடியைக் கொடுத்தது. பட்டிடார் 34 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். மத்தியவரிசையில் மஹிபால் லொம்ரோர் 17 பந்துகளில் 32 ஓட்டங்களையும் தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஆவேஷ் கான் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரவிச்சந்திரன் அஷ்வின் 4 ஓவர்களில் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ரவிச்சந்திரன் அஷ்வின். https://www.virakesari.lk/article/184266
  17. Published By: RAJEEBAN 24 MAY, 2024 | 07:46 PM காசாவின் ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வேதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் உடனடியாக ரபா மீதான தாக்குதலையும் ஏனைய நடவடிக்கைகளையும் நிறுத்தவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மனிதாபிமான பொருட்களை காசாவிற்குள் கொண்டு செல்வதற்காக இஸ்ரேல் எகிப்து எல்லையில் உள்ள ரபா எல்லையைதிறக்கவேண்டும் விசாரணையாளர்களும் காசாவில் என்ன நடக்கின்றது என்பதை அறிவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களும் காசாவிற்குள் செல்வதற்கு அனுமதிக்கவேண்டும் எனவும் சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஒரு மாதகாலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும்எனவும் உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/184416
  18. யாழ். போதனா வைத்தியசாலை தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் - ஜனாதிபதி ரணில் 24 MAY, 2024 | 01:55 PM யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். இதன் மூலம் வடக்கில் சிறந்த சுகாதார கட்டமைப்பை உறுதிப்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி கூறினார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கான மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சிக் கட்டடத்தை இன்று (24) திறந்துவைத்ததை தொடர்ந்து உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/184375
  19. யாழ். பல்கலையில் 46 வருடங்களுக்குப் பின் நிர்மாணிக்கப்பட்ட மருத்துவ பயிற்சி, ஆராய்ச்சிக் கட்டடம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு 24 MAY, 2024 | 04:32 PM (எம.நியூட்டன்) வடக்கு மாகாணத்துக்கு இரண்டு நாள் விஜயம் ‍செய்துள்ள ஐனாதிபதி ரணில் வெள்ளிக்கிழமை (24) யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார். யாழ். மைதானத்தில் உலங்குவானூர்தியில் சென்றிறங்கிய ஐனாதிபதி தலைமையிலான குழுவினரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். தொடர்ந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்துக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாகக் கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித் தொகுதி கட்டடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது. இந்த கட்டடத் தொகுதியில் இரண்டு பெரிய நவீன சத்திர சிகிச்சை தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் என பல நவீன வசதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 700 மில்லியன் ரூபாய் செலவில் கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீட்டுக்கமைய இந்த கட்டடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தந்தை செல்வா கலையரங்கில் காணி உரிமைகள் வழங்கி வைக்கும் நிகழ்விலும் ஜனாதிபதி கலந்துகொண்டார். https://www.virakesari.lk/article/184372
  20. 24 MAY, 2024 | 01:16 PM கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை என செல்வராஜா கஜேந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் முகநூல் பதிவொன்றில் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் பொலிஸாரும் இராணுவத்தினரும் ஐஸ்கிறீம் கொடுக்கலாம், பாயாசம் கொடுக்கலாம். கஞ்சி வழங்கினால் இனநல்லிணக்கம் குழம்புமென தடைகொடுக்கும் மன்றங்கள் சிங்களவர்கள் வசிக்காத வடக்கு கிழக்கில் வெசாக் கொண்டாடினால் இனநல்லிணக்கம் பாதிக்கப்படுமென தடை வழங்கவில்லை. கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார அதிகாரிகளை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை. வீதியோரமாக அனுமதியின்றி ஒரு சிறு வியாபாரியால் கடை போட முடியாது. ஆனால் இராணுவத்தினரால் அனுமதியின்றி ஆரிய குளத்தினுள் வெசாக் கூடுகளை கட்டமுடியும். தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம். சிங்களவர்களுக்கு இன்னொரு நியாயம். நம்புங்கள். இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்திற்கு முன் அனைவரும் சமம். https://www.virakesari.lk/article/184373
  21. கடவுள்தான் என்னை அனுப்பி வைத்தார் - மோடி பேட்டி 23 MAY, 2024 | 02:51 PM கடவுள்தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்தார். நான் சோர்வடையாமல் சுறுசுறுப்புடன் இயங்குவதற்கு கடவுள் அளித்த சக்திதான் காரணம் என்று இந்திய பிரதமர்பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு இந்திய பிரதமர்பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது எப்போதும் சோர்வடையாமல் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவது எப்படி என்று பிரதமர் மோடியிடம், செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில்: நான் எப்போதும் சோர்வடையாமல் பணியாற்றி வருகிறேன். நான் கடவுளால் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவன். நான் சோர்வடையாமல் பணியாற்றுவதற்கு கடவுள் கொடுத்த பரிசுதான் அந்த சக்தி. என் தாயின் மரணத்துக்குப் பின்னர் பலவற்றை சிந்தித்து பார்க்கிறேன். ரத்தமும் சதையும் கலந்த உடல்ரீதியான சக்திதான் அனைவரையும் இயக்குவதாக நினைத்திருந்தேன். அப்படி இல்லையென்பதை இப்போது உணர்கிறேன். அவற்றை நான் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன். மற்றவர்கள் இதனை விமர்சிக்கலாம், அதற்கு எதிராக சொல்லலாம். ஆனால், நான் அவற்றை முழுமையாக நம்புகிறேன். என்னை இந்த பூமிக்கு அனுப்பியதே அந்த கடவுள்தான். ஏதோ ஒரு விஷயத்தை நடத்த வேண்டும் என்பதற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார். எனக்குள்ள ஆற்றல் சாதாரண மனிதர் பெற்றிருக்கும் ஆற்றல் கிடையாது. கடவுளால் மட்டுமே இத்தகைய ஆற்றலை கொடுக்க முடியும். இவ்வாறு பிரதமர் மோடி அதில் கூறியுள்ளார். பிரதமரின் இந்தப் பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பஸ்தியில் நேற்று மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்கான வாகனப் பேரணியில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். அங்கு நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருக்கிறது. இதனால் அந்த நாட்டுக்கு நாம் பயப்படவேண்டும் என்று இங்குள்ள கட்சித் தலைவர்கள் பயந்து கொண்டு இருந்தனர். ஆனால் எதிரிகள் நம் நாட்டை சீண்ட முயன்றபோது அவர்களது நாட்டுக்குள்ளேயே நுழைந்து அவர்களைத் தாக்கி அழித்தோம். பாகிஸ்தானுக்காக சமாஜ்வாதியும், காங்கிரஸ் கட்சியும் இன்னும் அனுதாபப்பட்டுக் கொண்டு இருக்கின்றனர். உ.பி.யில் 79 தொகுதிகளை இண்டியா கூட்டணி வெல்லும் என்று அகிலேஷ் யாதவ் கூறுகிறார். ஆனால் அது நடக்கப் போவதில்லை. நாட்டு நலனுக்காக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயககூட்டணி அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. மறுபக்கம், நாட்டில் நிலையற்ற தன்மையை ஏற்படுத்த இண்டியா கூட்டணி முயற்சிக்கிறது. நாடு வளம் பெற மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். https://www.virakesari.lk/article/184314
  22. மட்டக்களப்பு சிங்களமயமாக்கலில் வடமுனை நெலுகல்மலையில் புதிய விகாரை கட்டுமானப்பணி - தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர்! ! 24 MAY, 2024 | 05:18 PM மட்டக்களப்பை சிங்கள மயமாக்கலின் அடிப்படையில் எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற மலையில் மாவட்ட இரு இராஜாங்க அமைச்சர்களின் ஆசீர்வாதத்துடன் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் புதிதாக விகாரை கட்டும் பணி திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார். மட்டக்களப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி காரியாலத்தில் கடந்த புதன்கிழமை (22) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார். திட்டமிட்ட அடிப்படையிலே கிழக்கு சிங்கள தேசத்துக்குள் படி படியாக கரைந்து கொண்டிருக்கின்றது அம்பாறை. திருகோணமலை மாவட்டம் முழுவதுமாக சிங்களதேசத்தின் திட்டமிட்ட அபகரிப்பு உட்பட்டு தமிழ் மக்கள் கையில் இருந்து விடுவிக்கப்படுகின்ற மிகப் பெரிய ஆபத்தான நிலைக்கு போயிருக்கின்றது. அதன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் இதில் எல்லைப்புற கிராமங்கள் சிங்கள தேசத்தினாலும் பொரும்பான்மை இனத்தவர்களால் குறிவைக்கப்பட்டு எல்லைக்கிராமங்கள் அபகரிக்கும் செயற்பாடுகள் படிபடியாக நடந்தேறிவருகின்றது. அதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிரான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள வடமுனை கிராமசேவகர் பிரிவிலுள்ள நெலுகல் மலையில் எனப்படுகின்ற குடும்பிமலையின் பின்பகுதியான இந்த மலையில் நெலுகல்மலை கிறீன் விகாரை எனும் பெயரில் விகாரை கட்டும் பணியை திருகோணமலை சோமவதி விகாரை விகாராதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது. இந்த பகுதியில் பாரிய கட்டிடம் அமைக்கப்பட்டு அதில் இருந்துகொண்டு கட்டுமானப்பணியில் மேசனாக இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன்நோக்கம் கிழக்கு மாகாணத்தை முற்றுமுழுதாக சிங்கள பௌத்த தேசத்துக்குள் கரைப்பதற்கான நடவடிக்கையபக பார்க்கின்றோம் வடக்கில் குறுந்தூர்மலை வெடுக்குநாறிமலை, கையகப்படுத்தப்பட்டுள்ள இந்த வேளையிலே கிழக்கு மண் சத்தம் இல்லாமல் பறிபோய் கொண்டிருக்கின்றது மயிலத்தமடு மேச்சல்தரையில் ரவுண்டப் எனும் புல்லுக்கு அடிக்கும் மருந்தையடித்து மேச்சல் புல்தரைகள் அழிக்கப்பட்டு 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மேச்சல் தரை காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது அதேவேளை மகாவலி ஏ வலயத்துக்குரிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டு பொரும்பான்மை இனத்தவர்களை குடியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதேவேளை பண்ணையாளர்களை தொடர்ந்து அச்சுறுத்தி அங்கிருந்து அவர்களை வெளியேற்றுகின்ற நடவடிக்கைகள் கட்சிதமாக மேற்கொள்ளப்பட்டுவருகின்றது இந்த நடவடிக்கைகளுக்கு யார் காரணம் என்பதை மக்கள் மிகத் தெளிவாக விளங்கி கொள்ள வேண்டும். இந்த மாவட்டத்தில் 2 இராஜாங்க அமைச்சர்கள் இருக்கின்றனர் இவர்களுடைய பணி சிங்கள தேசத்தினுடைய நிகழ்சி நிரலை அமுல்படுத்துவதுதான் இவர்களது நோக்கமாக இருக்கின்றதே தவிர மட்டக்களப்பு மாவட்டமக்களை பாதுகாக்க எந்தவொரு முன்னேற்றகரவமான செயற்பாடுகளை செய்யவில்லை. குறிப்பாக மேச்சல்தரை பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போக முடியாத சூழ்நிலை காணப்பட்டது அதனை எமது கட்சி தலைவர் நா.உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்த இடத்துக்கு சென்று அந்த பகுதிக்கு நா.உறுப்பினர் கூட செல்லமுடியாது என்பதை சர்வதேசத்துக்கு அம்பலப்படு த்தியிருந்தார். இந்த நிலையில் கஜேந்திரகுமார் ஏன் இங்கு வரவேண்டும் என பிள்ளையான் நேற்றைய கூட்டத்தில் தெரிவித்திருந்தார் எனவே கஜேந்திரகுமார்; இந்த இடத்துக்கு வரவேண்டியதாக இருந்தது நீங்கள் ஒரு காட்டிக் கொடுப்பை செய்து தமிழ் மக்;களை அழிக்கின்ற செயற்பாட்டில் நின்றதனால் அந்த மக்கள் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளை கூப்பிடவேண்டிய அபாய நிலைக்கு இட்டுச் சென்றீர்கள் எனவே அது ஒரு வெக்க கேடான விடையம். இவரின் செயற்பாடுகளை பார்த்தால் தெரியும் தங்களது பக்கற்றுக்களை நிரப்புகின்ற விதமாக தங்களின் அமைச்சுக்கு ஊடாக கிடைக்கின்ற வீதிகளை அமைத்து அதில் 15 வீதம் தரகு பணம் பெற்றுக் கொண்டு அதற்கு வக்காளத்து வாங்குகின்ற ஒப்பந்தகாரர்களை பின்னால் வைத்துக்கொண்டு தான் பேச ஒப்பந்த காரர்கள் கையடிக்கின்ற செயற்பாட்டை மிக கடசிதமாக பிள்ளையான் செய்துவருகின்றார். எனவே மட்டக்களப்பு மக்கள் புத்திசாதுரியமாக சிந்திக்கவேண்டிய காலம் இது வருப்போகும் தேர்தல் மாவட்டத்தில் மேலும் ஒரு அரசியல் அடிமை நெருக்கடிக்குள் தள்ளபப் போகின்றது. எனவே வருகின்ற தேர்தலில் தமிழ் தேசியத்துடன் உள்ள தமிழ் தரப்புக்களை பலப்படுத்தவேண்டுமே தவிர மாறாக அரசுடன் நிற்கின்றவர்களுக்கு வாக்குரிமையை அளிப்பீர்களாக இருந்தால் மட்டக்களப்பில் மிங்சி இருக்கின்ற கொஞ்ச காணிகளும் பறிபோகி மக்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக அமைந்துவிடும். இந்த விகாரை கட்டும் விடையம் இரண்டு இராஜாங்க அமைச்சர்களுக்கும் தெரியாமல் நடக்க வாய்ப்பு இல்லை இவர்களின் நிகழ்சி நிரல் அடிப்படையில் இவர்களுக்கு தெரிந்துதான் நடக்கின்றது இதனை தெரியப்படுத்தினால் தங்களுக்க மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற பயத்தினால் தெரியப்படுத்தாமல் அரசின் நிகழ்சி நிரலை இவர்கள் செய்கின்றனர். அதற்காக போடுகின்ற பிச்சைகளான எலும்பு துண்டுகளுக்குதான் இவர்கள் அலைகின்றனரே தவிர தமிழ் மக்களின் பிரச்சனைக்கு முகம் கொண்டு கிழக்கை மீட்கின்றோம் என போலித்தனமான கதைகளை மக்களுக்கு சொல்லி இனப்படுகொலை செய்த படுகொலை செய்தவர் மக்கள் மத்தியில் பூமாலைகள் தரித்துக் கொண்டு திரிவது எங்களுடைய படித்த சமூகத்திற்கோ உண்மையான தமிழ் உணர்வுள்ள மக்களுக்கு தெரிந்திருக்கும் அதற்கான பதிலடியயை எதிகாலத்தில் மக்கள் கொடுப்பார்கள் என்றார். https://www.virakesari.lk/article/184392
  23. ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் கறுப்புக் கொடி போராட்டம் 24 MAY, 2024 | 03:55 PM யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஜனாதிபதியின் யாழ்ப்பாண வருகைக்கு எதிராகக் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டடமொன்றைத் திறந்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்துக்கு வருகைதந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினரால் பல்கலைக்கழக வளாகத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான வளாகம் மற்றும் மருத்துவ பீட வளாகத்தில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் சுமார் பன்னிரண்டாயிரம் பணியாளர்கள் தங்களுடைய சம்பள முரண்பாடு மற்றும் நீண்ட காலமாகத் தீர்த்து வைக்கப்படாத பிரச்சினைகள் பலவற்றை தீர்க்கக் கோரி நாடளாவிய ரீதியில் போராட்டத்தை முன்னெடுத்துவரும் நேரத்தில், பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான கட்டடமொன்றைக் கோலாகலமாகத் திறந்து வைப்பதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கையைக் கண்டித்து போராட்டம் நடத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/184388
  24. இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு மிக மோசமான சித்திரவதைகளை அனுபவித்த – யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் சுகந்தினிக்கு கொரியாவில் உயர் விருது Published By: RAJEEBAN 24 MAY, 2024 | 03:11 PM ஈழத்தமிழ் பெண்களின் உரிமைக்காக குரல்கொடுக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர் சுகந்தினி மதியமுதன் தங்கராஜிற்கு தென்கொரியாவின் மே18 நினைவு அறக்கட்டளை 2024 குவாங்ஜூ விருதினை வழங்கி கௌரவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தினதும் அதன் பாதுகாப்பு படையினரினதும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டுள்ள -யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் பெண்களின் உரிமைகள் அவர்களை வலுப்படுத்துதல் ஆகியவற்றிற்காக அமரா என்ற அமைப்பை ஆரம்பித்து சுகந்தினி தனது செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றார். சுகந்தினி 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை பாலியல் வன்முறைகளில் இருந்து தப்பியவர். இராணுவத்திடம் அனைத்தையும் இழந்த பல பெண்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்துபவராக துணிச்சல் தைரியத்தின் அடையாளமாக சுகந்தினி காணப்படுகின்றார் என மே 18 நினைவு அறக்கட்டளை தெரிவித்துள்ளது. சுகந்தினியின் செயற்பாடுகள் எங்கள் அமைப்பின் உணர்வுகளோ நெருக்கமானதாக காணப்படுகின்றது என கருதுகின்றோம் என தெரிவித்துள்ள மே 18 நினைவு அறக்கட்டளை இலங்கையில் தமிழ் பெண்களின் மனித உரிமை நிலவரத்தில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான அவரது முயற்சிகளிற்கு உறுதியான ஆதரவை வழங்குகின்றோம் எனவும் தெரிவித்துள்ளது. சர்வதேச சமூகத்தின் அக்கறையும் கவனமும் ஒத்துழைப்பும் ஆதரவும் தமிழர் பகுதிகளில் பாதுகாப்;பு படையினரின் அக்கிரமங்கள் குறித்த வெளிச்சத்திற்கு வருவதற்கு உதவியாக அமையும் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இரண்டு காரணங்களிற்காக நான் விடுதலை இயக்கத்தில் இணைந்தேன் என தெரிவித்துள்ள சுகந்தினி ஒன்று தமிழர்களை சிங்கள அரசின் ஒடுக்குமுறையிலிருந்து விடுவிப்பது மற்றையது இலங்கையின் இராணுவ இயந்திரத்தின் பாலியல் வன்முறைகளில் இருந்து தமிழ் பெண்களை பாதுகாப்பது என தெரிவித்துள்ளார். 2009 இல் ஆயுதமோதல் முடிவிற்கு வருவதற்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆட்சியின் கீழ் தமிழ் பெண்களின் பாதுகாப்பும் கௌரவமும் குறிப்பிடத்தக்க அளவிற்கு பாதுகாக்கப்பட்டது என சுகந்தினி தெரிவித்துள்ளார். பெண்கள் இரவில் அச்சமின்றி நடமாட முடிந்தது அவர்கள் தன்னிறைவு கொண்டவர்களாக சுதந்திரமாக வாழக்கூடியவர்களாக வலுப்படுத்தப்பட்டார்கள் பெண்களின் சுயவேலைவாய்ப்பிற்கு அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன, சுய பாதுகாப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஆணாதிக்க சமூகத்தின் மூலம் உருவாக கூடிய சமூக தடைகளை உடைப்பதற்கான விழிப்புணர்வு வழங்கப்பட்டது எனவும் சுகந்தினி தெரிவித்துள்ளார். அனைத்து துறைகளிலும் பெண்களிற்கு சமவாய்ப்பு வழங்கப்பட்டது. இது மெல்ல மெல்ல ஆணாதிக்க சமூக உணர்வுகள் மறைவதற்கு வழிவகுத்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் 2009 இல் இடம்பெற்ற இனப்படுகொலையுடன் முடிவடைந்த இராணுவநடவடிக்கையின் பின்னர் நிலைமை மாற்றமடைந்தது என தெரிவித்துள்ள சுகந்தினி பாலியல் வன்முறைகள் சித்திரவதைகள் போன்ற சம்பவங்கள் குறித்த தகவல்கள் வெளியாகின. இவை குழந்தைகள் வயது முதிர்ந்தவர்களிற்கு எதிராகவும் இழைக்கப்பட்டன என தெரிவித்துள்ளார். தான் கைதுசெய்யப்பட்டு வவுனியாவின் மிக மோசமான ஜோசப்முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டதை சுகந்தினி நினைவு கூர்ந்துள்ளார். அங்கு மிகவும் பயங்கரமான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184386

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.