Everything posted by ஏராளன்
-
இலங்கையில் மேலதிகமாக உள்ளவெடிமருந்துகளை போலந்து ஊடாக உக்ரைனிற்கு விற்க முயற்சியா? பாதுகாப்பு அமைச்சு தெரிவிப்பது என்ன?
Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 11:38 AM இலங்கையில் மேலதிகமாக உள்ள வெடிமருந்துகளை உக்ரைனிற்கு விற்பனை செய்வதற்கு போலந்து இடைத்தரகர்களை பயன்படுத்துகின்றது என வெளியாகியுள்ள தகவல்களை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. இவ்வாறான தகவல்களில் எந்த உண்மையிலும் இல்லை ஆதாரங்களும் இல்லை என பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். எனினும் காலவதியான வெடிமருந்துகள் இராணுவத்தின் முகாம்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன என்பதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளார். எனினும் இந்த வெடிமருந்துகள் பாதுகாப்பு அமைச்சிற்கு சொந்தமானவை இல்லை தனியாருக்கு சொந்தமானவை என தெரிவித்துள்ள அவர் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக இவற்றை அகற்றுமாறு அந்த நிறுவனத்தை கேட்டுக்கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். உடனடியாக அவற்றை அகற்றுமாறு கேட்டுக்கொண்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை இந்த மேலதிக வெடிபொருட்கள் சீன நிறுவனமொன்றிற்கு சொந்தமானவை என பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ள டெய்லிமிரர் கொஸ்மிக் டெக்னோலஜிஸ் என்ற தனியார் நிறுவனம் மூலம் சீன நிறுவனம் கடந்த வருடம் இந்த வெடிபொருட்களை போலந்திற்கு அனுப்ப முயன்றது எனினும் சர்வதேச அழுத்தங்களால் இது நிறுத்தப்பட்டது என குறிப்பிட்டுள்ளன என தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/184937
-
சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் : நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள்!
புகைத்தல், மதுசார பாவனையை எதிர்த்து மட்டக்களப்பில் விழிப்புணர்வு மரதன் ஓட்டம் 31 MAY, 2024 | 11:30 AM சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான வாழ்வினை கட்டியெழுப்பும் நோக்கில் நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில், மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை விழிப்புணர்வு மரதன் ஓட்ட நிகழ்வு நடைபெற்றது. மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு, மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம், மண்முனை வடக்கு சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவை இணைந்து இந்த மரதன் ஓட்டத்தை நடத்தியது. மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ராஜ்பாபு தலைமையில் நடைபெற்ற இந்த மரதன் ஓட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.ஜே.முரளிதரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இதன்போது, இளைஞர்கள் மத்தியில் புகைத்தல் மற்றும் மது ஒழிப்பினை வலியுறுத்தி, விழிப்பூட்டும் வகையில் மரதன் ஓட்டப்போட்டியில் பங்குகொண்டவர்களின் மீது 'போதையிலிருந்து இளைஞர்களை பாதுகாப்போம்’ எனும் ஸ்டிக்கர்கள் மாவட்ட அரசாங்க அதிபரால் ஒட்டப்பட்டது. அதை தொடர்ந்து, மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் ஈஸ்பரனின் ஒழுங்கமைப்பில் மாவட்ட அரசாங்க அதிபரினால் கொடியசைத்து மரதன் ஓட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது. இந்த மரதன் ஓட்டப் போட்டியானது இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் வகையில் விழிப்புணர்வூட்டும் நிகழ்வாக அமைந்தது. "நண்பா, போதைக்கு புகைத்தலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம், வலுவான தேசம் ஒன்றினை கட்டியெழுப்புவோம்" எனும் தலைப்பில் இம்முறை சர்வதேச புகைத்தல் மற்றும் மது எதிர்ப்பு தினம் நாடெங்கும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. https://www.virakesari.lk/article/184935
-
சுயநிர்ணய உரிமையே அவசியமான தீர்வு - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலே நிக்கெல்
சுயநிர்ணய உரிமையே அவசியமான தீர்வு - இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றமைக்கான ஆதாரங்கள் உள்ளன - ஒபமா கூட தனது நூலில் குறிப்பிட்டுள்ளார் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் விலே நிக்கெல் Published By: RAJEEBAN 31 MAY, 2024 | 11:30 AM சுயநிர்ணய உரிமையே அவசியமான முக்கியமான தீர்வு என தெரிவித்துள்ள அமெரிக்க சனப்பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர் விலே நிக்கெல் இதற்கான சர்வஜனவாக்கெடுப்பு இடம்பெறுவது அவசியம் என குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அமெரிக்கா அங்கீகரிக்க செய்வது மிகவும் அவசியமான நடவடிக்கை, ஆனால் அதற்கான ஆதாரங்கள் உள்ளன பராக் ஒபாமா தனது நூலில் இது குறித்து பேசியுள்ளார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் கார்டியனிற்கான பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். 1 அமெரிக்க காங்கிரஸில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானத்தை சமர்ப்பித்தமைக்கு நன்றி - அதுபற்றி மேலும் தெரிவிக்க முடியுமா உங்களை இதனை செய்ய தூண்டியது என்ன என குறிப்பிடமுடியுமா? பதில்- இலங்கை நிலவரம் தமிழ் மக்களிற்கு எதிரான ஒடுக்குமுறை மற்றும் சுயநிர்ணய உரிமை ஆகிய விடயங்கள் குறித்து அமெரிக்காவில் எங்கள் குரல்கள் செவிமடுக்கபடுவதை நோக்கிய மிகவும் முக்கியமான ஆரம்பகட்ட நடவடிக்கை இது என நான் கருதுகின்றேன். சுயநிர்ணய உரிமையே அவசியமான தீர்வு அதனை அமைதியான வழியில் அடையலாம் என நான் கருதுகின்றேன். உலகின் ஏனைய முக்கியமான நாடுகள் இது குறித்து ஆராய்ந்துள்ளன அமெரிக்காவும் இது குறித்து ஆராயவேண்டும் . இது மிகவும் அவசியமான முதல்கட்ட நடவடிக்கை காங்கிரசின் ஏனைய உறுப்பினர்களிடமிருந்தும் அதற்கு அப்பாலும் சிறந்த ஆதரவு கிடைத்துள்ளது, நாங்கள் எதனை நோக்கி செல்கின்றோம் என்பது குறித்து நான் மிகவும் நம்பிக்கை கொண்டுள்ளேன். கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நான் இது குறித்து கலந்துரையாடினேன் அவர்கள் நாங்கள் இந்த விடயத்தில் அவர்களின் தலைமைத்துவத்துடன் இணைந்துகொள்ளவுள்ளமை குறித்து மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார்கள். 2 காங்கிரசில் நீங்கள் சமர்ப்பித்துள்ள தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை என்ன? பதில்- மக்கள் தங்களின் குரல்கள் செவிமடுப்பதை உறுதி செய்தால் மாத்திரமே வோசிங்டனில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நாங்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்தியில் தீவிரபரப்புரையை மேற்கொள்ளவேண்டியுள்ளது - காங்கிரஸ் உறுப்பினர்கள் காங்கிரஸிற்கு விஜயம் மேற்கொண்டு உறுப்பினர்களின் ஆதரவை பெறவேண்டும் அதன் மூலமே அவர்களின் ஆதரவை பெறமுடியும். காங்கிரசின் இரு தரப்பு உறுப்பினர்களிற்கு நீங்கள் இந்த விடயத்தில் தெளிவுபடுத்தவேண்டும்,அதனை செய்தால் நாங்கள் அந்த விடயத்தில் வெற்றிபெறுவோம், உலகம் முழுவதும் செவிமடுக்கப்படக்கூடிய உண்மையான செய்தியை தெரிவிக்கவேண்டும். கேள்வி - இலங்கையில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை அங்கீகரிப்பது ஏன் மிக முக்கியமான விடயம்? பதில்- எதனை செய்வது என்றாலும் கடந்தகாலங்களில் விடயங்கள் நிகழ்ந்தன இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொள்வது மிகவும் அவசியம். இதனை செய்யும் வரை நாங்கள் முன்னோக்கி நகர்வது மிகவும் கடினம். இனப்படுகொலை இடம்பெற்றது என்பதற்கான ஆதாரங்கள் தரவுகள் தெளிவாக உள்ளன. முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது சுயசரிதையில் ஐநாவின் போதிய ஆதரவு கிடைக்காதது குறித்து தெரிவித்துள்ளார்.இலங்கையில் இடம்பெறும் வெளிப்படையான இனப்படுகொலை குறித்தே அவர் தெரிவித்துள்ளார். ஆகவே இந்த செயற்பாடுகளில் இனப்படுகொலை இடம்பெற்றது என்பதை ஏற்றுக்கொள்ளவைப்பது மிக முக்கியமான விடயம் அந்த விடயத்திற்கு தீர்வை காணும் வரை அடுத்த கட்ட சவாலான விடயங்கள் குறித்து நகர்வது கடினம். கேள்வி - சுயநிர்ணய உரிமை சர்வஜனவாக்கெடுப்பு குறித்து பேசுகின்ற போது நீங்கள் இந்த விடயத்தில் அமெரிக்கா பல உலக நாடுகளிற்கு உதவியமை குறித்து கருத்து தெரிவித்திருந்தீர்கள் - இலங்கையில் இது சாத்தியம் என நீங்கள் கருதுகின்றீர்களா? பதில் - இது இலங்கையில் இடம்பெறவேண்டும் என நான் கருதுகின்றேன் அமெரிக்காவில் உள்ள எங்கள் விழுமியங்கள் மூலம் வழிகாட்டவேண்டும் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும். சுயநிர்ணய உரிமைக்கான உரிமை என்பது மிகவும் முக்கியமானது ஏன் அது முக்கியமானது என்பதை அறிந்துகொள்வதற்கு நீங்கள் அமெரிக்காவின் வரலாற்றை பார்க்கவேண்டும் . தமிழில் வீரகேசரி இணையம் https://www.virakesari.lk/article/184934
-
பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண்ணின் பயணப் பொதி திருட்டு!
பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண்ணின் பயணப் பொதி திருட்டு; சந்தேக நபர் கைது Published By: DIGITAL DESK 7 31 MAY, 2024 | 11:44 AM பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 20 ஆயிரம் டொலர் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திருடப்பட்ட கமராவை தொம்பே பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மடிக்கணினியின் கடவுச் சொல்லை அழிப்பதற்காக பேலியகொடை பிரதேசத்தில் நபரொருவருக்கு 5,000 ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பொருட்கள் சந்தேக நபரிடம் காணப்பட்டதாகவும் புறக்கோட்டை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார். “அண்டர் தி சேம் ஸ்கை” என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் ஸ்கை மெக்கோவன் என்பவர் 37 நாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில், புறக்கோட்டை பெஸ்டியன் மாவத்தையில் பஸ்ஸில் வைத்து இவரது பயணிப்பைத் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/184929
-
இலங்கையிலிருந்து பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்கள் வழங்கி வைப்பு
Published By: DIGITAL DESK 3 31 MAY, 2024 | 11:33 AM இலங்கை பாகிஸ்தானுக்கு 36,000 கருவிழிப்படலங்களை (corneas) நன்கொடையாக வழங்கியுள்ளதாக பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஓய்வுப்பெற்ற எட்மிரல் வீந்திர விஜேகுணவர்தன தெரிவித்துள்ளார். இலங்கை உலகிற்கு 88,000 கருவிழிப்படலங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது. அதில் பாகிஸ்தானுக்கே அதிகளவு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுற்றுச்சூழலிலிருந்து ஒட்சிசனை எடுத்துக் கொள்ளும் `கார்னியா’ எனப்படும் கருவிழிப்படலம், இரத்தமில்லாத திசுவால் ஆனது. இதனை, தானமாக கொடுப்பவருக்கோ, அதனைப் பெற்றுக் கொள்பவருக்கோ, மருத்துவ ரீதியாக எந்தவொரு பொருத்தமும் வேண்டியதில்லை. அவை இயல்பாகவே எவருக்கும் ஏற்புடையதாகிவிடும். https://www.virakesari.lk/article/184927
-
மாதக்கணக்கில் பழுதடைந்துள்ள CT ஸ்கான் இயந்திரம்! நோயாளர்கள் கடும் அவதி!
Published By: VISHNU 30 MAY, 2024 | 11:42 PM வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள CT ஸ்கான் இயந்திரம் கடந்த சிலமாதங்களாக பழுதடைந்துள்ளமையால் நோயாளிகள் அவதிக்குள்ளாவதுடன் அலைக்கழிப்பிற்கு உள்ளாக்கப்படுகின்றார்கள். வவுனியா பொது வைத்தியசாலையில் ஒரேயொரு CT இயந்திரம் மாத்திரமே உள்ளது. அது கடந்த சில மாதங்களாக பழுதடைந்துள்ளது. இதனால் CT ஸ்கான் எடுக்கவேண்டிய நோயாளர்கள் அனுராதபுரம், பொலனறுவை மற்றும், யாழ் போதனா வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர். இதனால் நோயாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகின்றனர். அங்கு கொண்டுசெல்லப்படும் ஒரு நோயாளிக்காக நோயாளர்காவுவண்டியில் ஒருவைத்தியர் தாதியர் சிற்றூழியர் ஆகியோர் பயணிக்கவேண்டும். இதன் மூலம் நேரவிரயம் மாத்திரம் அல்லாமல் வீண் செலவும் ஏற்படுகின்றது. வைத்தியசாலையில் நோயாளர்காவு வண்டிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதற்காகவும் காத்திருக்கவேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதேவேளை சில தினங்களிற்கு முன்பாக குறித்த இயந்திரம் திருத்தப்பட்டநிலையில். அன்றையதினமே மீண்டும் அது பழுதடைந்துள்ளது. CT இயந்திரம் பழுதடைந்து மாதக்கணக்காகும் நிலையில் அதனைத் திருத்தி சீரான செயற்பாட்டில் ஈடுபடுத்துவதில் வைத்தியசாலை நிர்வாகம் விரைந்துசெயற்படவில்லை என்ற குற்றச்சாட்டும் பொதுமக்களிடம் எழுந்துள்ளது. https://www.virakesari.lk/article/184910
-
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
பாலியல் புகார்: விமானத்தில் வந்திறங்கிய பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் கைது பட மூலாதாரம்,FB/PRAJWAL REVANNA படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணா 14 நிமிடங்களுக்கு முன்னர் பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகாரில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் தேவே கௌடவின் பேரனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா வியாழக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். ஜெர்மனியிலிருந்து வியாழக்கிழமை கர்நாடகா திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணாவை, கேம்பேகௌட சர்வதேச விமானநிலையத்தில் வைத்து வியாழக்கிழமை நள்ளிரவு 12.52 மணியளவில் காவல்துறை, சி.ஆர்.பி.எஃப், சிறப்பு புலனாய்வு குழு இணைந்து கைது செய்தது. விரைவில் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். சாம்பல் நிற மேற்சட்ட அணிந்திருந்த பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான வாயிலில் நடந்துசென்ற போது கைது செய்யப்பட்டார். கர்நாடகாவின் ஹசன் மக்களவைத் தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளம் - பாஜக கூட்டணி வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், ஏப்ரல் 26ஆம் தேதி அத்தொகுதிக்கு வாக்குப்பதிவு முடிந்தவுடன் அன்றிரவே ஜெர்மன் புறப்பட்டுச் சென்றார். பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் புகார் தொடர்பான 2,960 வீடியோக்கள் உள்ளதாக கூறப்படும் பென்டிரைவ்-கள், வாக்குப்பதிவுக்கு 5 நாட்கள் முன்னதாக, கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதியன்று பல்வேறு பொது இடங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டது. “அரசியல் சதி” பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் கர்நாடகா திரும்புவதற்கு முன்பு, வெள்ளிக்கிழமை (இன்று) காலை 10.30 மணிக்கு சிறப்பு புலனாய்வு குழுவின் முன்னர் தான் ஆஜராவேன் எனக்கூறி பிரஜ்வல் வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தன் மீதான புகார் “அரசியல் சதி” என அவர் குறிப்பிட்டிருந்தார். கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணா விமான நிலையத்திலிருந்து நேரடியாக, சிறப்பு புலனாய்வு குழு செயல்பட்டுவரும் குற்ற புலானாய்வு துறை அலுவலகத்திற்கு (சிஐடி) அழைத்துச் செல்லப்பட்டார். இவர் கைது செய்யப்படுவதை முன்னிட்டு, விமான நிலையத்திலும் சிஐடி அலுவலகத்தின் நுழைவாயிலிலும் ஏராளமான காவல்துறையினர் நிறுத்தப்பட்டிருந்தனர். பிரஜ்வல் ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை மக்கள் பிரதிநிதிகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விரைவில் நடைபெறவுள்ளது. தன் மீது ஹோலேனரசிப்பூர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலியல் வன்புணர்வு வழக்குகளிலும் சிறப்பு புலனாய்வு குழுவிடம் உள்ள மற்ற இரு வழக்குகளிலும் ரேவண்ணா ஜாமீன் கோரியுள்ளார். பிரஜ்வாலின் தாய் பவானி ரேவண்ணாவின் முன்ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மைசூரு மாவட்டத்தில் உள்ள கே.ஆர். நகரை சேர்ந்த பெண் ஒருவரை அவருடைய கணவர் ஹெச்.டி. ரேவண்ணா கடத்தியதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு பவானி அழைக்கப்பட்டிருந்தார். இந்த கடத்தல் வழக்கில் ஹெச்.டி. ரேவண்ணா ஏற்கெனவே ஜாமீன் பெற்றுள்ளார். பிரஜ்வல் ரேவண்ணா மீதான புகார்கள் பட மூலாதாரம்,HD DEVE GOWDA'S X ACCOUNT படக்குறிப்பு,பிரதமர் நரேந்திர மோதியுடன் பிரஜ்வல் ரேவண்ணா (வலது) ஏப்ரல் 28 அன்று, ரேவண்ணாவின் குடும்பத்திற்கு சமையல்காரராகப் பணிபுரிந்த 47 வயதான பெண் ஒருவர், பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவர் தன்னை ரேவண்ணாவின் தாயின் உறவினர் என்று கூறிக்கொண்டார். "நான் [அவர்கள் வீட்டில் பணிக்குச்] சேர்ந்தபோது, அங்கிருந்த மற்ற ஆறு பணிப்பெண்கள் பிரஜ்வாலைப் பார்த்து பயப்படுவதாகக் கூறுவார்கள். ஆண் ஊழியர்களும் எங்களை ஹெச்.டி.ரேவண்ணா மற்றும் அவரது மகன் பிரஜ்வலிடம் எச்சரிக்கையாக இருக்கச் சொல்வார்கள்," என்று அவர் தனது புகாரில் கூறியுள்ளார். "அவரது மனைவி இல்லாத போதெல்லாம், ஹெச்.டி.ரேவண்ணா என்னை தகாத முறையில் தொடுவார், என் ஆடைகளைக் களைந்து என்னை பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவார். நான் சமையலறையில் வேலை செய்யும் போது, பிரஜ்வல் என்னைப் பின்னால் தொடுவார்," என்று அவர் தனது புகாரில் மேலும் கூறினார். பாதிக்கப்பட்ட மற்ற பெண்களின் வீடியோக்களை ஆன்லைனில் பார்த்த பிறகு தான் புகாரளிக்க முடிவு செய்ததாக அந்தப் பெண் கூறினார். மேலும், பிரஜ்வல் ரேவண்ணா தனது மகளையும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும், அவரது தந்தை ஹெச்.டி.ரேவண்ணா தங்களைப் பின்தொடர்ந்து, கிரிமினல் மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். கசிந்த வீடியோக்கள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி நடத்திய போராட்டம் இதையடுத்து, கர்நாடக மகளிர் ஆணையத்தின் கோரிக்கையின் அடிப்படையில் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) இந்த வழக்கை விசாரிக்கும் என்று கர்நாடக முதலமைச்சர் கே. சித்தராமையா தெரிவித்திருந்தார். கர்நாடக மாநில ஏ.டி.ஜி.பி பி.கே.சிங் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. கடந்த ஏப்ரல் 26-ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் ரேவண்ணாவின் தொகுதியான ஹசன் தொகுதியில் வாக்குப்பதிவு நடந்து முடிந்த ஒருநாளுக்குப் பிறகு அவர்மீதான குற்றச்சாட்டுகள் பல வெளிச்சத்துக்கு வந்தன. பிரஜ்வல் ரேவண்ணா ஏற்கனவே ஹசன் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த வீடியோக்களை கசியவிட்டது யார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழின் அறிக்கையின்படி, தேர்தலுக்கு முன்னதாக 2,000-க்கும் மேற்பட்ட பென்-டிரைவ்கள் பரப்பப்பட்டன. பிரஜ்வல் ரேவண்ணாவால் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த வீடியோக்களில், அவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் பெண்களின் முகங்கள் இருந்தன. இந்த வழக்கில் அவர் மீதும் அவரது தந்தை மீதும் குற்றம்சாட்டப்படிருக்கிறது. முன்னதாக, "விசாரணையில் கலந்துகொள்ள நான் பெங்களூருவில் இல்லை. எனவே இதனை எனது வழக்கறிஞர்கள் மூலம் பெங்களூரு சி.ஐ.டி-இடம் (CID) தெரிவித்துள்ளேன். உண்மை விரைவில் வெளிவரும்," என்று எக்ஸ் தளத்தில் பிரஜ்வல் பதிவிட்டிருந்தார். இப்புகாரைத் தொடர்ந்து பிரஜ்வல் ரேவண்ணா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் கட்சி போராட்டங்களை நடத்தியது. மேலும், பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகம் திரும்புவதற்கு முன்னதாக, வியாழக்கிழமை பல்வேறு மக்கள் அமைப்புகள் சார்பில் ‘ஹசன் சலோ’ (Hassan Chalo) எனும் பெயரில் போராட்டம் நடத்தப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/cv2294pp9wjo
-
இந்தியா இலங்கை ஆதினங்களின் சுவாமிகள் முதல் முதல் இணைந்து இரு நாடுகளின் புனித நதிகளின் தீர்த்தங்களுடன்; ஈழத்துத் திருச்செந்தூர் ஆலைய மஹா கும்பாபிஷேகம்
Published By: VISHNU 31 MAY, 2024 | 03:10 AM இலங்கையில் முதல் முதல் மட்டக்களப்பு கல்லடி ஈழத்துத் திருச்செந்தூர் முருகன் ஆலைய மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 20ம் இந்தியாவின் புனித கங்கைகளின் தீர்த்தம் இலங்கையிலுள்ள புனித கங்கைகளின் தீர்த்தங்கள் கொண்டு இந்தியாவின் திருக்கயிலாய பரம்பரை பேரூர் ஆதின குருமா சந்நிதான கயிலைப்புனிதர் முதுமுனைவர் சீர்வாளர் சீர் சாந்தலிங்க மருதாச்சல அடிகள் தலைமையில் இந்தியா, இலங்கையிலுள்ள பல ஆதீனங்களின் சுவாமிகள் ஒன்றிணைந்து திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா இடம்பெறவுள்ளது என அகில பாரத சந்நியாசிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் சுவாமி வேதசந்த ஆனந்த ஆச்சாரியார் பக்த அடியார்கள் அழைப்பு விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/184912
-
புகை பிடிப்பதை நிறுத்தியதும் உடலில் ஏற்படும் 10 மாற்றங்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இன்று (மே 31-ஆம் தேதி) உலக புகையிலை எதிர்ப்பு தினமாக (World No Tobacco Day) கடைப்பிடிக்கப்படுகிறது. உலக சுகாதார மையத்தின் உறுப்பு நாடுகளால் 1987-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த தினம், உலகம் முழுவதும் பரவியுள்ள புகையிலை பயன்பாட்டின் மீதும் அது ஏற்படுத்தும் நோய் மற்றும் மரணங்கள் மீதும், இவை எவ்வாறு தவிர்க்கப்படக்கூடியவை என்பதன்மீதும் கவனத்தை ஈர்ப்பதற்காக கடைப்பிடிக்கப்படுகிறது. புகையிலை நுகரப்படும் மிகப் பரவலான வழிமுறைகளில் ஒன்று, சிகரெட் புகைப்பது. சிகரெட் புகைப்பதனாலோ, அந்தப் புகையை சுவாசிப்பதாலோ புற்றுநோய் ஏற்படும் என்பது இன்று நாம் அறிந்த பொதுவான உண்மைகளில் ஒன்றாகும். ஆனால் சிகரெட் புகைப்பதற்கும் புற்றுநோய் ஏற்படுவதற்குமான தொடர்பு அவ்வளவு எளிதில் நிறுவப்படவோ, பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை. அமெரிக்காவின் தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்டுள்ள ஒரு ஆய்வறிக்கையின் படி, 19-ஆம் நூற்றாண்டுக்கு முன்னர், நுரையீரல் புற்றுநோய் அரிதான ஒரு நோயாகவே இருந்து வந்தது. ஆனால் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில், இயந்திரமயமாக்கப்பட்ட சிகரெட் தயாரிப்பும், பரவலான சந்தைப்படுத்துதலும் நுரையீரல் புற்றுநோய் சம்பவங்களின் எண்ணிக்கையை அதிகரித்தன. “1940-கள், 1950-களில், நுரையீரல் புற்றுநோய்க்கு சிகரெட் தான் காரணம் என்ற உண்மை அங்கீகரிக்கப்பட்டது. இது நோய்ப்பரவல் ஆய்வுகள், விலங்குகள் மீதான ஆய்வுகள், செல் நோய்க்கூறு அராய்ச்சி, ரசாயனப் பகுப்பாய்வு, ஆகியவற்றின்மூலம் நிறுவப்பட்டது,” என்கிறது அந்த ஆய்வறிக்கை. ஆனாலும், இந்த உண்மை பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதும் அவ்வளவு எளிதாக நடக்கவில்லை. சிகரெட் நிறுவனங்கள் இதனை தங்கள் வணிகத்திற்கெதிரான திட்டமிடப்பட்ட சூழ்ச்சியாகச் சித்தரித்தன. இவையனைத்தையும் தாண்டி, இன்று சிகரெட் புகைப்பது புற்றுநோயை உண்டாக்கும் என்ற அறிவியல் உண்மை, சிகரெட் பெட்டிகளிலிருந்து, சினிமா அரங்கங்கள் வரை இன்று பரவியிருக்கிறது. ஒருவர் எந்த வயதில் சிகரெட் பிடிக்கும் பழக்கத்தைத் துவங்குகிறார்? மருத்துவர்களிடம் கேட்டபோது, தாங்கள் பார்க்கும் பெரும்பாலான நோயாளிகள், பள்ளியிலிருந்து கல்லூரிக்குச் செல்லும் வளரிளம் பருவமான 18 வயதளவில், நண்பர்களோடு ‘ஜாலியாகப்’ புகைபிடிக்கத் துவங்கி அதுவே கைவிடமுடியாத பழக்கமாகிவிட்டதாகச் சொல்வதாகக் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES புகைப்பழக்கம் ஏன் ஒருவரை அடிமைப்படுத்துகிறது? புகைபிடிப்பது ஏன் எளிதில் கைவிடமுடியாத பழக்கமாகிறது? 'நிக்கோட்டின்,’ என்கிறார் சென்னையைச் சேர்ந்த மூத்த நுரையீரல் மருத்துவரான எஸ்.ஜெயராமன். புகையிலையில் இருக்கும் நிக்கோட்டின் என்ற இந்த ரசாயனம் தான் புகைபிடிப்பதை கைவிடமுடியாத பழக்கமாக (addictive) மாற்றுகிறது என்கிறார் அவர். இதனோடு பிணைக்கப்பட்ட வகையில், இந்த ஆண்டின் புகையிலை எதிர்ப்பு தினத்தின் கருப்பொருள் ‘புகையிலை வணிகத்தின் ஊடுருவலில் இருந்து குழந்தைகள் மற்றும் இளைஞர்களைக் காப்பது’. புகையிலை எதிர்ப்பு நாளை முன்னிட்டு, புகைபிடிப்பதை நிறுத்தியவுடன் உடலில் ஏற்படும் மாற்றங்களைக் குறித்து இந்தக் கட்டுரை பேசவிருக்கிறது. இதற்காக, சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பொதுமருத்துவத் துறைத்தலைவர் மருத்துவர் எஸ்.சந்திரசேகர் மற்றும் சென்னையைச் சேர்ந்த மூத்த நுரையீரல் மருத்துவரான எஸ்.ஜெயராமன் ஆகியோர் பிபிசி தமிழிடம் கூறிய கருத்துக்கள் இங்கே தொகுத்தளிக்கப்படுகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES புகைபிடிப்பதை நிறுத்தினால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன? ‘புகைபிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் என்ன நன்மை?’ என்று மருத்துவர் சந்திரசேகரிடம் கேட்டோம். “பொதுவாக 40 வயதுக்குள் ஒருவர் புகைபிடிக்கும் பழக்கத்தைக் கைவிட்டால், அவரது ஆயுள் 10 வருடங்கள் கூடும், என்று மருத்துவர்கள் சொல்வோம்,” என்கிறார். மேலும், “அதுவே ஒருவர் 40 வயதுக்கு மேல் புகைப்பழக்கத்தைக் கைவிட்டால், அவரது உடலில் புகையால் ஏற்பட்ட பாதிப்புகள் 90% குறையும், ஆனால் அவரது ஆயுள் நீளும் என்று சொல்ல முடியாது,” என்கிறார். பொதுவாக, புகைபிடிப்பதால், புற்றுநோய், மாரடைப்பு ஆகியவை ஏற்படும் என்றுதான் பலரும் பொதுவாக நினைப்பார்கள். ஆனால், புகைபிடிக்கும் ஒருவரது சுவை உணரும் திறன், உடல் நாற்றம், பற்களின் நிறம் முதற்கொண்டு பல விஷயங்களையும் புகைப் பழக்கம் பாதிக்கிறது, என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். தொடர்ந்து புகைபிடிப்பவர் அப்பழக்கத்தைக் கைவிடும்போது இந்தப் பிரச்னைகள் உடனடியாகவும் படிப்படியாகவும் குறைகின்றன, என்கிறார் அவர். பட மூலாதாரம்,S CHANDRASEKAR படக்குறிப்பு,சென்னையிலுள்ள அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியின் பொதுமருத்துவத் துறைத்தலைவர் மருத்துவர் எஸ்.சந்திரசேகர் சுவை உணர்வதில் உள்ள சிக்கல்கள் தீரும் புகைபிடிப்பவர்களுக்கு ஆரோக்கியமற்ற சில வகையான உணவுகளை அதிகம் விரும்பி உண்ணும் பழக்கம் இருக்கும். காரணம்? “புகைப் பிடிப்பதால், அவர்களது நாவில் உள்ள சுவைமொட்டுக்களின் உணர்திறன் பாதிக்கப்படுவதால், அவர்கள் இனிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு ஆகிய சுவைகளை உணரும் தன்மை மாறிவிடும்,” என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். காய்ச்சல் வரும்போது வாய் சுவையற்றுப் போய்விடுவதைப்போல, புகைபிடிப்பவர்களுக்கும் ஆகும் என்கிறார் அவர். இது டிஸ்ஜியூசியா (dysgeusia) என்று அழைக்கப்படுகிறது. இதனால், அவர்கள் சுவைக்காக ஆரோக்கியமற்ற உணவுகளைத் தேடி உண்பார்கள், என்கிறார். சுவாசம், உடல் துர்நாற்றம் சரியாகும் புகைபிடிப்பவர்களின் சுவாசத்தில் ஒருவகையான துர்நாற்றம் வீசுவதை நாம் பலரும் கவனித்திருப்போம். தொடர்ந்து புகைபிடிப்பவர்களின் தலைமுடி, வியர்வை ஆகியவற்றிலும் இந்த துர்நாற்றம் இருக்கும். அவர்கள் புகைபிடிப்பதை நிறுத்தினால், 2-3 நாட்களிலேயே இந்த துர்நாற்றம் மறையும், என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். பட மூலாதாரம்,DR S JAYARAMAN படக்குறிப்பு,சென்னையைச் சேர்ந்த மூத்த நுரையீரல் மருத்துவரான எஸ்.ஜெயராமன் உடலில் சேரும் நச்சுத்தன்மை வெளியேறும் புகையிலையில் சுமார் 4,000 ரசாயனங்கள் உள்ளன என்கிறார், மருத்துவர் ஜெயராமன். இவற்றில் 70-க்கும் மேற்படவை புற்றுநோயை உருவாக்க வல்லவை (carcinogens). "ஒருவர் புகைபிடிக்கும்போது இந்த ரசாயனங்களையும் சேர்த்தே தனது நுரையீரலுக்குள் அனுப்புகிறார். இவை உடலின் ரத்த ஓட்டத்தில் கலந்து, உடலில் தங்கிவிடுகின்றன. தொடர்ந்து புகைப் பிடிக்கும் ஒருவர், புகைப் பிடிப்பதை நிறுத்திய ஒரு நாளைக்குள்ளேயே அவரது ரத்தத்திலும் செல்களிலும் உள்ள இந்த நச்சுத்தன்மைமிக்க ரசாயனங்கள் (toxins) வெளியேறத் துவங்குகின்றன. புகைபிடிப்பதை நிறுத்திய ஒரு வாரத்துக்குள், ஒருவர் ஆரோக்கியமான உணவுமுறையைப் பின்பற்றி வந்தால், அவரது உடலில் எஞ்சியுள்ள இந்த நச்சுத்தன்மை மிக்க ரசாயனங்கள் வெளியேறிவிடும்," என்கிறார் மருத்துவர் ஜெயராமன். சருமச் சுருக்கங்கள் மறையும் புகைப் பிடித்தல் இதயத்தின் ரத்த நாளங்களை மட்டுமல்ல, சருமத்தின் ரத்த நாளங்களையும் சுருங்கச் செய்கிறது. இது ரத்த நாளம் சுருங்குதல் (vascular narrowing) என்று அழைக்கப்படுகிறது. இதனால், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்பட்டு, வயதான தோற்றம் ஏற்படுகிறது. புகைப் பிடிப்பதை நிறுத்தும்போது, இந்த நிலையும் சீராகும், என்கிறார் மருத்துவர் ஜெயராமன் பற்கள், உதடுகளின் நிறமாற்றம் சீராகும் ஒருவர் புகைப் பிடிக்கும் போது, புகையிலையில் இருக்கும் தார் (tar) பற்களில் படிகிறது. இதனால் புகைப் பிடிப்பவர்களின் பற்கள் மஞ்சளாகவோ, அவர்களின் பற்களில் பழுப்பு நிறப்படிவுகளோ இருப்பதைக் காணலாம். அதேபோல் இந்தத் தார், புகைப் பிடிப்பவர்களின் உதடுகள் நாக்கு ஆகியவற்றிலும் படிந்து அவை கருமையாக நிறம் மாறுவதற்குக் காரணமாக இருக்கலாம். புகைபிடிப்பவர்கள் சிலரது விரல்களிலும் கருமை படிந்திருக்கும். ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தும்போது இவை சீராகத் துவங்குகின்றன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புகைபிடிப்பதை நிறுத்தி 6-8 மாதங்களில், முதலில் 10-15 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடக்கவே சிரமப்பட்டவர்கள், 25 நிமிடங்கள் வரை சிரமமின்றி நடக்கமுடியும் மூச்சிரைப்பு சரியாகும் புகைபிடிப்பவர்கள் மாடிப்படிகளில் ஏறும்போதோ, அதிக தூரம் நடக்கும்போதோ, அவர்களுக்கு விரைவாக மூச்சிரைக்கத் துவங்கிவிடும், சிலசமயங்களில் படபடப்பு கூட ஏற்படும். உடற்பயிற்சி செய்யும்போதும் இதுபோன்ற நிலை ஏற்படலாம். இதற்குக் காரணம், புகையிலையில் உள்ள ஹைட்ரஜன் சயனைட், ஃபீனால், நைட்ரோசமைன்கள் போன்ற நச்சுத்தன்மைமிக்க ரசாயனங்கள் ரத்தத்தில் கலந்து அனுதாப நரம்பு மண்டலத்தைத் தூண்டுகின்றன (sympathetic stimulation), என்கிறார் மருத்துவர் ஜெயராமன். இதனால், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை அதிகரிக்கின்றன. "புகைபிடிப்பதை நிறுத்தி 1-2 வாரங்களில் இந்த நிலை சீராகத் துவங்கும். 2 மாதங்களுக்குள் இந்த பாதிப்புகள் வெகுவாக மாறிவிடும். புகைபிடிப்பதை நிறுத்தி 6-8 மாதங்களில், முதலில் 10-15 நிமிடங்கள் தொடர்ச்சியாக நடக்கவே சிரமப்பட்டவர்கள், 25 நிமிடங்கள் வரை சிரமமின்றி நடக்கமுடியும்," என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள ஒருவருக்கு மாரடைப்பு முதலான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன மாரடைப்பு, இதய நோய் ஏற்படும் சாத்தியங்கள் குறைகின்றன புகைபிடிப்பதை நிறுத்தியவுடன், ஒருவருக்கு மாரடைப்பு (heart attack), பக்கவாதம் (stroke), இருதய நோய்கள் (cardiovascular diseases) ஆகியவை ஏற்படுவதற்கான சாத்தியங்கள் குறைகின்றன. 2 முதல் 5 ஆண்டுகள் புகைபிடிப்பவர்களுக்கு இந்த நோய்கள் வருவதற்கான அதிக சாத்தியங்கள் உள்ளன. புகையிலையில் உள்ள தார், கார்பன் மோனாக்ஸைட், ஹைட்ரஜன் சயனைட் உள்ளிட்ட ரசாயனங்கள், இருதயத்தின் நாளங்களில் கொழுப்பு படிவதை அதிகப்படுத்துகின்றன. இதனால் ‘coronary artery spasm’ எனப்படும் இதயத்துக்குச் செல்லும் ரத்த நாளங்கள் சுருங்குவது முதல், மாரடைப்பு முதலான நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன, என்கிறார் மருத்துவர் ஜெயராமன். ஒருவர் புகைபிடிப்பதை நிறுத்தி ஒரு வருடத்தில் இந்த நோய்களுக்கான சாத்தியங்கள் குறைகின்றன, என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். புகைப் பிடிக்கும் பழக்கமுள்ள ஒருவர் அதை நிறுத்தி 10-15 ஆண்டுகளில் அவரது இதயம், அந்த பாதிப்புகளிலிருந்து மாறி, புகைபிடிக்காத ஒருவரது இதயம் போன்ற நிலைக்குத் திரும்பும், என்கிறார் மருத்துவர் சந்திரசேகர். பக்கவாதம் ஏற்படும் சாத்தியம் குறைகிறது புகையிலையில் இருக்கும் மேற்சொன்ன ரசாயனங்கள், மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களிலும் இதே பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்கள் சுருங்கி, மூளைக்குச் சென்று சேரவேண்டிய ரத்தமும் ஆக்சிஜனும் அளவில் குறைகின்றன. இது பக்கவாதத்துக்கு (stroke) வழிவகுக்கிறது. புகைபிடிப்பதை நிறுத்தும்போது, இந்த ஆபத்துக்கான சாத்தியமும் குறைகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தொடர்ந்து புகைபிடிப்பவர்களது ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் அதிகமாகப் புகைபிடிப்பவர்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது ஆண்களின் விறைப்புத் தன்மை புகையிலையில் இருக்கும் நச்சுத்தன்மைமிக்க ரசாயனங்கள், ரத்த நாளங்களைச் சுருங்கச் செய்யும் என்பதைப் பார்த்தோம். ஒரு ஆணுக்கு பாலியல் உணர்ச்சி தோன்றும்போது அவரது ஆணுறுப்பு விறைக்க வேண்டுமெனில், அவரது ஆணுறுப்பின் ரத்த நாளங்களில் அதிக ரத்தம் பாயவேண்டும். ஆனால் தொடர்ந்து புகைபிடிப்பவர்களது ரத்த நாளங்கள் சுருங்குகின்றன. இதனால் அதிகமாகப் புகைபிடிப்பவர்களுக்கு விறைப்புத் தன்மை குறைபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. புகைபிடிப்பதை நிறுத்தினால், இந்த ஆபத்தும் குறையும். ரத்த ஓட்டம் சீராகும் புகைபிடிப்பதனால் ஏற்படும் ரத்த நாளச்சுருக்கத்தால் இஸ்கிமியா (ischemia) என்ற பதிப்பும் ஏற்படக்கூடும். அதாவது, உடலின் ஒரு பகுதிக்கு சரியான ரத்த ஓட்டம் செல்லாத நிலை. இதனால், அந்தப் பகுதிக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. இதனால் திசுக்கள் இறக்கும் necrosis, புண்கள் ஆகியவை ஏற்படக்கூடும். புகைபிடிப்பதை நிறுத்தினால், இந்த ஆபத்தும் குறைகிறது. https://www.bbc.com/tamil/articles/c7227d70enwo
-
"முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!"
கருத்துள்ள கதை, நன்றி ஐயா.
-
ஆபாச நடிகைக்கு டொனால்ட் டிரம்ப் ரூ.1 கோடி கொடுத்த வழக்கை உலகம் உற்றுநோக்குவது ஏன்? - முழு விவரம்
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்ப் குற்றவாளி எனத் தீர்ப்பு - தேர்தலில் போட்டியிட முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என வரலாற்றுபூர்வமான தீர்ப்பை நியூயார்க் நீதிமன்றம் வழங்கியுள்ளது. தண்டனை விவரங்கள் வரும் ஜூலை 11 அன்று அறிவிக்கப்படும். அவருக்கு சிறைத்தண்டனை வழங்கப்படலாம் என்றாலும் பெரும்பாலும் அபராதமே விதிக்கப்படும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த தீர்ப்பு அவமானகரமானது என்றும் மோசடியானது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். குற்ற வழக்கு ஒன்றில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதன்முறை. வரும் நவம்பரில் நடக்க இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். ‘யாரும் சட்டத்திற்கு மேலானவர்கள் அல்ல’ எனக்கூறி, இந்த தீர்ப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பிரச்சார குழு நியாயப்படுத்தியுள்ளது. “டிரம்ப்பை தோற்கடிப்பதற்கான ஒரே வழி அவரை வாக்குப்பதிவில் தோற்கடிப்பதுதான், நீதிமன்ற அறையில் அல்ல” என, பைடனின் பிரச்சாரக் குழு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர், அவருடைய பிரச்சாரக் குழு அவரை ‘அரசியல் கைதியாக’ சித்தரித்தது. வழக்கு என்ன? கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார். டொனால்ட் டிரம்ப் தனது முன்னாள் தனிப்பட்ட வழக்கறிஞரும் ஆலோசகருமான மைக்கேல் கோஹனுக்கு ‘சட்டச் செலவுகள்’ எனப் பதிவு செய்து பணம் அளித்த விவகாரத்தையே இந்த விசாரணை மையமாகக் கொண்டுள்ளது. இவ்வழக்கில் மொத்தமாக 34 புகார்களை டொனால்ட் டிரம்ப் எதிர்கொண்டு வந்தார். இதுதொடர்பான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் டிரம்ப் மறுத்தார். மேலும், ஸ்டார்மி டேனியல்ஸுடன் உடலுறவு கொண்டதாக வெளியான தகவல்களையும் அவர் மறுத்தார். இந்த வழக்கின் மையமாக உள்ள ஸ்டார்மி டேனியல்ஸ் உட்பட 22 சாட்சியங்களை ஆறு வாரங்களாக நீதிமன்றம் விசாரித்தது. இந்த வழக்கின் 12 நடுவர்கள் இரண்டு நாட்கள் விவாதித்து ஒருமனதாக தீர்ப்பு வழங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியுமா? குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டாலும், டிரம்ப் இந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் வேட்பாளராக நீடிக்க முடியும். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. அதன்படி போட்டியிடுபவர் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் அமெரிக்க குடிமகனாகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை எந்த சட்டமும் தடுக்கவில்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். https://www.bbc.com/tamil/articles/cd11074k9gwo
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
அது முதல் போட்டியிட்டவர் நிரப்பினது. உங்கள் பதிலை யாழில் பதிந்த பின் கூகிள் சீற்றில் பதில் பகுதியை அழித்துவிடும்படி கிருபன் அண்ணை எழுதி இருந்தவர். நான் முதலில் நிரப்ப வெளிக்கிட வேறு யாரோ எனது பதில்களை மாற்றுவது போல் தெரிந்ததால் அவரை பதிய விட்டு பின்னர் புதிதாக நான் பதிந்தேன். 60 ஓவர்கள் என நினைக்கிறேன் பையா.
-
தயானின் ‘தலையீடுகள்’
30 MAY, 2024 | 12:38 PM கலாநிதி தயான் ஜயதிலக்கவின் ‘தலையீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்’ (Interventions: Selected Political Writings) நூல் வெளியீட்டு நிகழ்வில் இடம்பெற்ற ஆரோக்கியமான விவாதங்களின் தொகுப்பு... (ஆர்.ராம்) கலாநிதி தயான் ஜயதிலக்கவின் ‘தலையீடுகள்: தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்டுரைகள்’ (Interventions: Selected Political Writings) நூல் வெளியீட்டு நிகழ்வு வழக்கமான நூல் வெளியீட்டு நிகழ்விலிருந்து முழுவதும் மாறுபட்டதாக அமைந்திருந்தது. கோட்டேயில் உள்ள மார்கா கல்வி நிறுவனத்தில் கடந்த 03ஆம் திகதி நடைபெற்றிருந்த இந்த நூல் வெளியீட்டு நிகழ்வானது கருத்துருவாக்கிகள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்களின் சமகால மற்றும் எதிர்கால அரசியல் நிலைவரங்களை அடியொற்றியதாக அமைந்திருந்தது. ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிவிவகார கொள்கை வடிவமைப்புக்குழுவின் முக்கியஸ்தரும், சுயாதீன எழுத்தாளருமான குசும் விஜயதிலக்க கலந்துரையாடலுக்கான நடுவராகச் செயற்பட்டார். அவர் தன்னை அறிமுகப்படுத்தும்போது, அண்மைய இரண்டு வருடங்களாக மாற்றத்தை எதிர்பார்த்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து பணியாற்றுகின்றேன் என்று குறிப்பிட்டார். அத்துடன், கலாநிதி ஜயதிலக்க அண்மைய காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் பக்கம் சாய்ந்துள்ளமையும் அதன் தலைவரான அநுரகுமார திசாநாயக்கவை அவர் முழுமூச்சுடன் அங்கீகரிப்பது தொடர்பாகவும் குசும் விஜயதிலக்க கேள்விகளைத் தொடுத்திருந்தார். அத்துடன், கலாநிதி ஜயதிலக்கவும் தானும் பல சமூக-அரசியல் மற்றும் பொதுக்கொள்கை அனுதாபங்களைப் பகிர்ந்துகொள்கிறோம். எமது உலகக் கண்ணோட்டங்கள் மிகவும் வேறுபட்டவை அல்ல. ஆனால், அவரும் நானும் ஒரே மாதிரியாக வாக்களித்திருக்க வாய்ப்பில்லை. தேர்தலில் தான் வாழ்நாள் முழுவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்காளராக இருந்தேன். தயான் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளராக குறிப்பிடத்தக்க காலத்தை செலவிட்டார் என்றும் கூறினார். தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் இரண்டாம் நிலை செயலாளராக பணியாற்றியவரும் சர்வதேச சட்டங்கள் மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பான துறை சார்ந்த நிபுணருமான நடாஷா குணரத்ன நூல் பற்றி அறிமுக உரையை வழங்கியதோடு ‘ஒருதலைப்பட்சமான’ உலகளாவிய சிந்தனைகள் பற்றிய கருத்துக்களை பற்றிய விடயங்கள் சிலவற்றையும் ‘தேசிய ஒற்றுமை’ சம்பந்தமாகவும் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, அமெரிக்காவில் ரஷ்யா, சீனா ஆகியவற்றுக்கு எதிரான ஒருதலைப்பட்சமான சிந்தனைகளும், சித்தாந்த ரீதியான நிலைப்பாடுகளும் தீவிரமாக உள்ளன. அந்த நிலைமைகள் தேசிய ஒற்றுமையை பாதிக்கவில்லை என்றும் தேசமாக குறித்த விடயத்தில் பொதுப்படையக நேர்மறையான சிந்தனைகளே உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். அதேநேரம், சீனா, ரஷ்யா போன்ற நாடுகளும் அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் பற்றிய சிந்தனைகளும் சித்தாந்த ரீதியாக மாற்றமடையாத ஒரு சூழல் இருக்கின்றது. அதுமட்டுமன்றி இந்த நாடுகளில் அவ்விதமான சிந்தனையானது தேசப்பற்றை வலுவாக கட்டியெழுப்புவதற்கும் அடிப்படையாக உள்ளது என்றும் நடாஷா குணரத்ன கூறினார். இதனையடுத்து தேசிய சமாதானப் பேரவையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜெஹான் பெரேரா, ‘ஒருதலைப்பட்சம்’ என்ற விடயத்தினை இலங்கையுடன் ஒப்பீடு செய்து வினாவொன்றைத் தொடுத்திருந்தார். “இலங்கையில் சிங்களப் பெரும்பான்மையான அரசாங்கம் சிங்கள பெரும்பான்மை மக்களை மையப்படுத்தியே தீர்மானங்களை எடுக்கின்றது. இதன் காரணமாக வடக்கு, கிழக்கு மக்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் தொடர்ந்தும் புறக்கணிக்கப்பட்டு வருகின்ற நிலைமை நீடிக்கின்றது. இதுவொரு தேசிய பிரச்சினையாக இன்னமும் நீடித்துக்கொண்டிருக்கிறது” என்று அவர் சுட்டிக்காட்டினார். அத்தோடு, “இலங்கையில் ஒருதலைப்பட்சம் என்ற கருத்தியலானது எதிர்மறையான நிலைமைகளே உருவாக்கியுள்ளது. அதுமட்டுமன்றி பெரும்பான்மை சமூகத்துக்குள் அது ஒன்றுபடுவதற்கான சூழலை ஏற்படுத்தினாலும் கூட வடக்கு, கிழக்கால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றதொரு தோற்றப்பாட்டையே கட்டியெழுப்பியுள்ளது. இந்த விடயத்தினை எவ்வாறு அணுக முடியும். தீர்வு நோக்கி உரையாட முடியும்” என்று ஜெஹான் பெரேரா கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த தயான் ஜயதிலக்க, “உள்நாட்டில் ஒருதலைப்பட்சம் என்பது ஒற்றைத் துருவவாதமாக மாறியுள்ளது. லிபியா போன்ற நாடுகளில் இவ்விதமான மாற்றமே துருவப்படுத்தலை கூர்ப்படையச் செய்ததோடு மோசமான விளைவுகள் ஏற்படவும் அடிப்படைக் காரணமானது. ஆகவே அதிகாரங்கள் பகிரப்படுதல் சம்பந்தமாக கோட்பாடுகள் மற்றும் நடைமுறைகள் பற்றிய சிந்தனைகளை ஏற்றுக்கொள்வதுதான் பொருத்தமானதாக இருக்கும்” என்றார். பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க சில கேள்விகளையும் தனது கருத்துக்களையும் பகிர்ந்துகொண்டார். அவர், “நான் பதவியை துறந்தபோது சஜித் பிரேமதாச என்னைத் தொடர்புகொண்டார் என்னை செல்லவேண்டாம் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அந்த ஒரு மனிதர் தான் என்னை தடுத்து நிறுத்த முயற்சித்தவராக இருந்தார். அது ஒருபுறமிருக்கையில், சஜித் பிரேமதாசவிடம் அத்தியாவசியமான கண்ணியம் இருந்தபோதிலும், அவரிடத்தில் வேறு மாற்றங்களை காண முடியாதவொரு நிலைமை உள்ளது” என்று ஆரம்பித்தார். தொடர்ந்து “தேசிய மக்கள் சக்தியின் கொள்கை குறைபாடுகள் பற்றிய கவலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனென்றால் தமது கொள்கை நிலைப்பாட்டை ஆடம்பரமாக முன்வைப்பவர்கள், ஆட்சிக்கு வந்ததன் பின்னர் மீண்டும் மீண்டும் அவர்களிடத்தில் நடைமுறையில் உள்ள அரசியல் தத்துவம், ஆகியவற்றை முன்வைப்பதில்லை. அவர்கள் தாம் முன்வைத்த கொள்கைகளையே மீண்டும் புறக்கணிக்கின்ற நிலைமைகளே உள்ளன” என்றும் குறிப்பிட்டார். “உதாரணமாக கூறுவதாக இருந்தால் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்ற தருணத்தில் போற்றத்தக்க நீண்ட பிரகடனத்தைக் கொண்டிருந்த ‘நல்லாட்சி’ அரசாங்கத்தைப் பற்றிய எனது அனுபவம், ஏறக்குறைய அனைத்து இலங்கை அரசியல்வாதிகள் அனைவரையும் வெறுக்காமல் இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை எனக்கு உணர்த்தியது. தேர்தலுக்காக அவர்கள் கூறும் கொள்கைகள் பற்றி பதவிக்கு வந்ததன் பின்னர் யோசிக்கிறார்களா என்றால் இல்லை. அவர்களிடத்தில் அந்தக் கொள்கைகள் பற்றி யாரும் பின்னர் கேள்விகள் எழுப்புவதும் கிடையாது” என்று சுட்டிக்காட்டினார். அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தின் வெளிப்படையான தோல்விக்குப் பின்னர், தயானின் கருத்துக்களுக்கு மாற்றாக நான் வேறு திசையில் சிந்தத்ததோடு அந்தச் சிந்தனைகளில் உறுதியாக நகர்ந்தேன், அதில் இழைக்கப்பட்ட தவறுகளுக்கு ‘மன்னிப்பு’ என்ற விடயம் பொருத்தமாகுமா என்றும் கேள்வி எழுப்பினேன். “2021ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பணமதிப்பு நீக்கம், அந்த ஆண்டின் இறுதியில் எனக்கு ஏற்பட்ட கெரோனாவால் எனக்கு சக்தி இல்லாமல் போனது. அடுத்த வருடத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பமானது முரண்பட்ட அரசியல் கூட்டாண்மைகளுக்கு வழிவகுத்தது, ‘அன்னே ரணசிங்க’ கூறியது போல், புலம்புவதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று எனக்கு உணர்த்தியது” என்றும் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க கூறினார். அவரைத் தொடர்ந்து என்னிடத்தில் சிறியதொரு கேள்வி அல்லது பரிந்துரைதான் உள்ளது என்ற பீடிகையுடன் பேராசிரியர் சரித்த ஹேரத் தனது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு ஆரம்பித்தார். அவர் பொருளாதார, வெளிவிவகார கொள்கை சம்பந்தமான கேள்விகளை தொடுப்பதற்கே முனைந்தார். அந்த வகையில், “சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்கும் தற்போதைய ரணில்-ராஜபக்ஷ கூட்டின் கொள்கைகளுக்கும் இடையிலான வேறுபாடுகளை பொதுவெளியில் எதற்காக தெளிவுபடுத்தாது அமைதி காக்கும் நிலைமைகள் நீடிக்கின்றன. அதற்கான காரணம் என்ன என்பதுதான் மிகப்பெரும் கேள்வியாக உள்ளது” என்றார். அதுமட்டுமன்றி, ஜனாதிபதி பிரேமதாச நிலைநிறுத்திய தேசிய இறையாண்மையை அடிப்படையாகக் கொண்ட பூகோளத்துடன் ஒத்திசைவான வெளியுறவுக் கொள்கையை உருவாக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியால் இயலவில்லை என்றும் அவர் மேலும் கூறினார். அதற்கு தயான் ஜயதிலக்க, “கட்சிக்குள் சஜித் கொண்டிருக்கும் முக்கூட்டு தான் அவரை இலட்சியங்களை பின்பற்றவிடாமல் தடுத்து நிறுத்தியது என்று பலமாக பதிலளித்தார். அதுமட்டுமன்றி, சஜித் பிரேமதாச தன்னையொரு மாற்றுத் தலைவராக தொடர்ச்சியாக காண்பித்தாலும் அவர் முன்னெடுக்க வேண்டிய பல்வேறு கருமங்கள் தொடர்பில் இன்னமும் ஆழமான கரிசனைகளைக் கொள்ள வேண்டியுள்ளது” என்றார். அத்துடன் மைய-இடது வாதக் கோட்பாட்டின் தோல்விகள் பற்றியும் தயான் ஜயதிலக்க குறிப்பிட்டார். அதன் அடிப்படையில், “எந்தவொரு இடதுசாரி இயக்கமும், குறிப்பாக முற்போக்கான நோக்கத்தை கொண்டதொன்றாகும். இளையோரை ஈர்க்க வேண்டும் என்பதில் உந்துதலுடன் தொடர்ச்சியாக செயற்படுவதில் பின்னடைவுகள் உள்ளன. மத்திய-இடது சாரிகளின் தோல்விகளால் இளையோர் வாக்குகளில் கணிசமான பகுதிகள் அநாதையாகிவிட்டதற்கான அனைத்து வாய்ப்புகளும் உள்ளன. ஆனால் அவர்களுக்கு ஒரு புதிய வீடும் புதிய ஆரம்பமும் அவசியமாக உள்ளதோ தெரியவில்லை. இலங்கையில் மத்திய-இடதுசாரிகள் இன்னும் சமூக ரீதியாக பழமைவாதமாக உள்ளனர். அதேசமயம் வலதுசாரிகள் பிற்போக்குத்தனமான போக்குகளைக் கொண்டிருந்தாலும், காஸ்மோபாலிட்டனிசத்தின் அடியையே தக்கவைத்துக் கொள்கிறார்கள். சமூகப்-பொருளாதார விடயத்தில் ஒற்றைக் கொள்கை பயனுள்ளதாக இருக்கும். இலங்கையின் அரசியல் சமன்பாடுகள் குறிப்பாக இடது முற்போக்கு பார்வையாளர்களுக்கு இதுபோன்ற பல வாய்ப்புகளை வழங்குகின்றன. 2008இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா சுகாதாரப் பாதுகாப்பை பயன்படுத்தினார். சுமார் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பெர்னி சாண்டர்ஸ் வேறொரு விதமாக இயங்கினார். மத்திய-இடதுசாரிகள் இலங்கையில் ஒருமுற்போக்கான காரணத்தை வரையறுக்கலாம். அது சுகாதாரம், கல்வி போன்றவற்றில் நிலையானதொரு விடயப்பரப்பை வெளிப்படுத்தினால் அதிருப்தியடைந்த வாக்காளர்கள் மத்தியில் தொடர்புகளையும் ஒருமித்த கருத்தையும் உருவாக்குவதற்கு ஆரம்பமாக அமையும்” என்று சுட்டிக்காண்பித்தார். இதனையடுத்து கலாநிதி சரத் அமுனுகம, அணிசேராக் கொள்கையின் கடந்த கால அனுபவத்தையும், இலங்கை அக்கொள்கையை பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். அவர் கூறுகையில், “இந்து, சீன முரண்பாடுகள் எழுந்தபோது பண்டாரநாயக்க அணிசேராக் கொள்கையில் உறுதியாக இருந்தார். இதனால் இந்திய, சீன முரண்பாடுகளுக்குள் அவர் பக்கம் சார்ந்து சிக்கிக்கொள்ளவில்லை. இது அக்காலத்தில் இலங்கையின் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தியதோடு இருதரப்புக்கும் நம்பிக்கைக்குரிய நாடாகவும் மாறியிருந்தது” என்றார். தற்போது “இந்து சமுத்திரம் மிகவும் கரிசனைக்குரிய பகுதியாக மாறியுள்ளது. அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட செல்வாக்கு மிக்க நாடுகள் தமது கடற்பயணம் பற்றிச் சிந்திக்கின்றார்கள். ஜப்பான், தென்கொரியா உள்ளிட்டவை ஆர்வமாக இருக்கின்றன. அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் எல்லை தாண்டலை தடுப்பதற்காக எல்லைப் பாதுகாப்பு விடயத்தில் ஈடுபடுகின்றன. சீனா ஆய்வுகள் மற்றும் கடற்போக்குவரத்துக்கான எதிர்பார்க்கின்றன? என்றும் குறிப்பிட்டார். இதற்குப் பதிலளித்து கருத்துக்களை முன்வைத்திருந்த தயான் ஜயதிலக்க, “அணிசேராக் கொள்கையை மீளுறுதி செய்வதைப் பார்க்கிலும் தெற்கு உலகம் (குளோபல் சௌத்) என்கிற புதிய ஆடையை அணிவது பற்றிச் சிந்திக்க வேண்டியுள்ளது. இந்த ஆடையானது தனிப்பட்ட அல்லது ஓரங்கப்பட்ட ஒரு விடயமாக இருக்காது. சர்வதேச தரப்புக்களுடன் ஒன்றிணைக்கப்பட்ட பொதுப்படைய நிலைப்பாடுகள், அடையாளங்கள், கோட்பாடுகள் உள்ளிட்ட பலவற்றைக் கொண்டதாக அமையும். இலங்கை போன்ற நாடுகள் குழுக்களாக வகைப்படும் வரையறைகளுக்குள் இருந்து வெளிவந்து பரந்துபட்ட கூட்டாண்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். ஐக்கிய மக்கள் சக்தியோ, தேசிய மக்கள் சக்தியோ இந்த விடயத்தினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உச்சரித்தது கிடையாது. ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தினை கையிலெடுத்துள்ளார்” என்றார். இறுதியாக, இடதுசாரிச் சிந்தனையாளரான டி.யு.குணசேகர, தயான் ஜயதிலக்க இளைஞராக இருந்தபோது அவருடன் நிகழ்த்திய முதலாவது சந்திப்பை நினைவுகூர்ந்தார். “பேராதனை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக விக்கிரமபாகு கருணாரத்த இருந்தபோது சர்வதேச உறவுகள் பற்றிய உரையாற்றுவதற்காக நான் சென்றிருந்தேன். உரையின் இறுதியில் உயரமான இளைஞன் ஒருவர் சரளமான வார்த்தைகளுடன் கேள்விகளைத் தொடுத்தார். உரை முடிவடைந்தவுடன் யார் அந்த இளைஞன் என்று ஆராய்ந்தேன். தேடிச் சென்று பேசினேன். அவர் தான் தயான் ஜயதிலக்க. இப்போது அரசியல் ஆய்வாளராகிவிட்டார். மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது” என்றார். அத்தோடு, “பண்டாரநாயக்க, ஜே.ஆரிடம் அரசாங்கத்தினை ஒப்படைக்கின்றபோது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 24 சதவீதம் அரசாங்கத்தின் வருமானமாக இருந்தது. ராஜபக்ஷக்களின் காலத்தில் குறிப்பாக பஷில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக இருந்த காலத்தில் அந்த வருமான சதவீதம் 6ஆக மாறிருக்கின்றது. இதற்கான காரணத்தினை நான் பாராளுமன்றத்திலும் கேள்வியாக எழுப்பியிருந்தேன். ஆனால், பதில் கிடைக்கவில்லை. அதற்கு காரணம் நாட்டின் வரிக்கொள்கை தான். மேற்குலகின் சித்தாந்தத்தில் வரிக்கொள்கையை வரித்துக்கொண்டமையால் தான் இந்த பரிதாப நிலைமை ஏற்பட்டது என்பதை ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார். அதனைத் தொடர்ந்து இலங்கை, ரஷ்ய, சீன உறவுகள் சம்பந்தமான விடயங்களும், பொருளாதார மேம்பாடுகள் தொடர்பான கொள்ளைகள் பற்றியும் உரையாடல்கள் இடம்பெற்றிருந்தன. அத்துடன் தயானின் ‘தலையீடுகள்’ நூல் வெளியீடு நிறைவுக்கு வந்திருந்தாலும் மார்கா கல்வி நிறுவனத்தின் வளாகம் எங்கும் அன்று மாலை முழுவதும் நீண்ட உரையாடல்கள் தொடரத்தான் செய்தன. https://www.virakesari.lk/article/184840
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
இறுதிப் போரில் குழந்தைகளை கொலை செய்தனர்: அப்போது இரக்கம் வரவில்லையா? என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி Published By: VISHNU 30 MAY, 2024 | 09:03 PM காசா சிறுவர்களுக்காக நிதி வழங்கும் அரசாங்கத்திற்கு இறுதிப்போரில் தமிழ் குழந்தைகள் கொலை செய்யப்படும் போது இரக்கம் வரவில்லையா என வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர். வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையத்திற்கு முன்பாக 30 ஆம் திகதி வியாழக்கிழமை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்பாட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள், சர்வதேச நீதியினைக் கோரி நாம் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம். எமது போராட்டங்களை தடுக்கும் விதத்தில் பல்வேறு அடக்குமுறைகள் இந்த அரசால் பிரயோகிக்கப்பட்டு வருகின்றது. இருப்பினும் நாம் நீதிக்கான எமது போராட்டங்களில் தொடர்ச்சியாக பயணிப்போம். இதேவேளை காசாவில் பாதிக்கப்பட்டுள்ள சிறுவர்களுக்காக உருவாக்கப்பட்ட காசா நிதியத்திற்கு ஜனாதிபதியால் அதிக நிதி ஒதுக்கப்படுகின்றது. இந்த நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் இன்னொரு நாட்டிற்கு நன்கொடை வழங்கப்படுகின்றது. இது தமக்கான ஆதரவினை பெருக்குவதற்கான ஒரு அரசியல் நகர்வாகவே பார்க்க முடியும். தற்போது காசா சிறுவர்களுக்காக நிதி ஒதுக்குபவர்கள் இறுதிப் போரில் தமிழ் குழந்தைகளை கொரலை செய்தார்கள். அப்போது அவர்களுக்கு இரக்கம் வரவில்லையா என கேள்வி எழுப்பினர். https://www.virakesari.lk/article/184908
-
படையினருக்கான காணி அளவீடுகளை உடனடியாக நிறுத்தவும் - அமைச்சர் டக்ளஸ்
Published By: VISHNU 30 MAY, 2024 | 08:40 PM படைத் தரப்பினருக்காகக் காணிகளைச் சுவீகரிக்கும் நோக்காலான அனைத்து காணி அளவீடுகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட செயலகத்தில் 30 ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்குக் குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் இணைத் தலைவர் பி.எம்.எஸ் சாள்ஸ் ஆகியோர் தலைமையில் இடம்பெற்ற இன்றைய கூட்டத்தில், ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதிக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களினால் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டம் தொடர்பாகவும், கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களின் முனனேற்றங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. குறிப்பாக, யாழ் மாவட்டத்திலிருந்து சுண்ணக்கல் அகழப்பட்டு அனுமதியற்ற முறையில் வர்த்தக நோக்குடன் பிற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்படுவது தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதுடன், அரசாங்கத்தின் புதிய தீர்மானத்திற்கு அமைவாக சுண்ணக்கல்லை எடுத்துச் செல்வதற்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்படவுள்ள நிலையில், சரியானவர்களுக்கு உரிய நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்படும் வரையில், ஆனையிறவை தாண்டி சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுவதை தடுத்து நிறுத்துவதற்கு கடந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தினை இறுக்கமாக நடைமுறைப்படுத்து தொடர்பாகவும் பொலிஸாருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. இந்நிலையில், பொன்னலை, திருடவடிநிலை பகுதியில் தனியார் காணியில் நிலை கொண்டிருக்கும் கடற்படையினருக்கு குறித்த காணியை சட்ட ரீதியாக வழங்குவதற்கான அளவீட்டு பணிகள் மேற்கொள்வதற்கான முயற்சிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் மக்கள் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான படைத் தரப்பினருக்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளை அனுமதிக்க கூடாது என்ற கோரிக்கையும் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரனினால் முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக, நில அளவைத் திணைக்கள அதிகாரி மற்றும் கடற்படை அதிகாரி ஆகியோரின் கருத்துக்களைக் கேட்டறிந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதி உட்பட்ட உயர்மட்டத்தினருடன் கலந்துரையாடி ஒரு உறுதியான தீர்மானத்தினை மேற்கொள்ளும் வரையில் படைத் தரப்பினருக்காகக் காணிகளைச் சுவீகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு அதிகாரிகளுக்ளுக்கு அறிவுறுத்தியதுடன், படைத் தரப்பினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ள காணிகள் தொடர்பான விபரத்தினையும் தனக்குச் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் அபிவிருத்தி சார் முன்மொழிகள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு ஜனாதிபதியினால் வழங்கப்பட்டுள்ள விசேட நிதி ஒதுக்கீட்டில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. இதன்போது, ஒரு சிலருக்கு மாத்திரம் விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனினால் ஆதங்கம் வெளியிடப்பட்டது. இதற்குப் பதிலளித்த, ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியுடன் கலந்துரையாடி சில உறுப்பினர்கள் விசேட நிதி ஒதுக்கீட்டினை பெற்றுள்ளதாகவும், குறித்த விசேட நிதி ஒதுக்கீடு ஏனையவர்களுக்கும் கட்டமாக கிடைக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டதுடன், மக்களுக்கான அபிவிருத்திக்குப் பயன்படுத்தப்படும் நிதி என்ற அடிப்படையில் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் எனவும், தனக்கான விசேட நிதியையும் ஜனாதிபதியிடம் கோரவுள்ளதாகவும் தெரிவித்தார். இதன்போது, இந்த வருடத்திற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பாகவும், அவற்றில் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களின் முன்மொழிகள் உள்ளடக்கப்படாமை தொடர்பாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்களினால் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்கள் நடாத்தப்பட்டு, பெற்றுக்கொள்ளப்பட்ட முன்மொழிவுகளின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட வேலைத்திட்டங்களே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எந்தவிதமான அரசியல் நலன்களும் அற்ற வகையில் மக்களின் தேவைகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்நிலையில், சட்டவிரோத செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தல் உட்பட பல்வேறு விடயங்கள் இன்றைய கூட்டத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184907
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை : மன்னாரில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராட்டம் 30 MAY, 2024 | 04:15 PM யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு தீர்வு பெற்றுத் தராத அரசு, தமிழர்களுக்கு ஒரு சரியான, நிரந்தரமான தீர்வினை தரும் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர். மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவி மனுவல் உதயச்சந்திரா தலைமையில் இன்று வியாழக்கிழமை (30) காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு முன் போராட்டம் இடம்பெற்றது. பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களே மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், காணாமலாக்கப்பட்ட எம் உறவுகளை தேடி நாங்கள் 15 வருடங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். அரசாங்கம் இதுவரை எமக்கு உரிய தீர்வு வழங்கவில்லை. தமிழ் மக்களுக்கு தொடர்ந்தும் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. மேலும் களப்பு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வு வழங்கப்படும் என அரசு கூறுகிறது. எமக்கு களப்பு நீதிமன்றத்தில் நம்பிக்கையே இல்லை. எமது ஒரே முடிவு, சர்வதேச விசாரணையே எமக்கு தேவை. வேறு எந்த தீர்விலும் எமக்கு நம்பிக்கை இல்லை. எனவே எமக்கு சர்வதேச விசாரணையே வேண்டும். இந்த நாட்டின் ஜனாதிபதியே இப்பிரச்சினைக்கு காரணமாக இருந்தவர். தமிழர்களின் பிரச்சினையை தீர்த்து வைப்பதாக கூறி இன்று பல வருடங்கள் கடந்துவிட்டது. ஆனால் இதுவரை ஒரு வித அனுசரணையும் அவர் செய்யவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. மீண்டும் அவர் ஜனாதிபதியாக வந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினைகளை தீர்த்து வைப்பார் என்பதில் எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீதும் எமக்கு நம்பிக்கை இல்லை. இவர்கள் மூவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் எதையும் செய்ய மாட்டார்கள். யுத்தம் முடிந்து சுமார் 15 வருடங்கள் கடக்கின்ற போதும் தமிழ் மக்களுக்கு ஒரு தீர்வு வழங்காத சிங்கள அரசு, எங்களுக்கு ஒரு சரியான, நிரந்தர தீர்வினை தரும் என்பதில் எவ்வித நம்பிக்கையும் இல்லை. எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் எமக்கு சர்வதேச விசாரணை ஒன்றே தேவை என்றனர். https://www.virakesari.lk/article/184884
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
டி20 உலகக்கோப்பை: 22,000 கி.மீ. பயணம் செய்து அமெரிக்காவை அடைந்த கிரிக்கெட் ஆடுகளங்கள் பட மூலாதாரம்,ICC 9 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தாண்டு ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்காவில் நடக்க உள்ளது என்பதே பலருக்கும் ஆச்சரியம் தரும் நிலையில், அதற்காக பயன்படுத்தப்படும் கிரிக்கெட் ஆடுகளங்கள் அதைவிட ஆச்சரியம் தருகின்றன. ஆம், மற்ற ஊர்களில் நிலையாக கட்டப்பட்டுள்ள கிரிக்கெட் ஆடுகளங்களை போலன்றி ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ள அமெரிக்க கிரிக்கெட் ஆடுகளங்கள், கிட்டத்தட்ட 14000 மைல்கள் (22,500 கி.மீ) தாண்டி ஆஸ்திரேலியாவில் இருந்து கொண்டு வரப்பட்டவை. முதல்முறையாக அமெரிக்காவில் உலகளாவிய பெரிய கிரிக்கெட் போட்டி நடைபெறவுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் இருந்து புளோரிடா வழியாக கப்பல் மூலம் இந்த கிரிக்கெட் ஆடுகளங்கள் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நியூயார்க், டெக்சாஸ் மற்றும் புளோரிடாவில் உள்ள பெஸ்போக் ஆடுகளங்களில் இந்த போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் தொடக்க ஆட்டமான அமெரிக்கா மற்றும் கனடா இடையிலான ஆட்டம் மற்றும் குழு நிலை ஆட்டங்களில் முக்கியமான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி ஆகிய இரண்டும் அமெரிக்காவில் நடைபெற உள்ளது. ஒட்டுமொத்தமாக நடைபெற உள்ள போட்டிகளில் 16 போட்டிகள் அமெரிக்காவிலும், 39 போட்டிகள் மேற்கிந்திய தீவுகளிலும் நடைபெற உள்ளது. இதற்காக அமெரிக்காவில் கிரிக்கெட் ஆடுகளங்களை தயார் செய்யும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. அதுவும் அதற்கான கிரிக்கெட் ஆடுகளங்களை உருவாக்கும் பணி சவால்கள் நிறைந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவில் ஐசிசி டி20 ஆண்கள் உலகக்கோப்பை போட்டிக்கான ஆடுகளங்கள் தயாராகி வருகின்றன. "எங்களது நோக்கமே வீரர்கள் நன்றாக விளையாடும் அளவிற்கான வேகம் மற்றும் நிலையாக பவுன்ஸ் ஆகும் ஆடுகளங்களை உருவாக்குவதாகும்" என்று அடிலெய்டில் ஆடுகளங்களை உருவாக்கும் டேமியன் ஹக் கூறுகிறார். இவர்தான் தற்போது அமெரிக்காவில் நடக்கவுள்ள ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை போட்டிக்கான ஆடுகளங்களை தயார் செய்து வருகிறார். "நாங்கள் கிரிக்கெட்டை கொண்டாட விரும்புகிறோம். ஆனால், அதில் சவால்களும் உள்ளன." அக்டோபர் 2023 இல் இருந்தே 10 டிராப்-இன் பிட்ச்களை உருவாக்கும் பணிகள் தொடங்கப்பட்டு விட்டன. ஒவ்வொரு பிட்ச்களும் இரண்டு ட்ரேக்களாக(Trays) பிரிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதன் நோக்கம் போட்டிக்கு தயார் நிலையில் இருக்கும் நான்கு ஆடுகளங்களை உருவாக்குவதும், 6 பயிற்சி ஆடுகளங்களை உருவக்குவதும் ஆகும். இந்த ஆடுகளங்களை உருவாக்க பயன்படுத்தப்படும் களிமண் போன்ற மண்வகை அமெரிக்காவில் உள்ள பேஸ்பால் ஆடுகளங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இது வெப்பமான காலநிலைக்கு ஏற்றதும், ரோலிங் மற்றும் கடினமான பயன்பாட்டை தாங்கும் அளவிற்குமான ஒரு வகை புற்களுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. இந்த பிட்ச் ட்ரேக்கள் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் இருந்து புளோரிடாவுக்கு கப்பல் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளன. அந்த சமயம் நியூயார்க்க்கில் உறைபனி சூழல் இருந்ததால், இவை வெப்பமான சூழல் உள்ள பகுதியில் வளர்க்கப்பட்டு, ஆடுகளம் தயார் செய்யப்படும் இடத்திற்கு சாலைமார்க்கமாக கொண்டு வரப்பட்டன. வேகமாக செல்ல வேண்டும் என்பதற்காக இரண்டு ஓட்டுனர்கள் மூலம் இந்த ஆடுகளங்கள் லாரிகள் வழியாக ஓய்வே இல்லாமல் கொண்டுவரப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மைதானத்தில் ஆடுகளத்தை தயார் செய்ய ஹக் மற்றும் அவரது குழுவுக்கு 12 மணிநேரம் தேவைப்படும். காரணம் ஆண்களுக்கான டி20 உலகக்கோப்பையின் முதல் கட்ட ஆட்டமான, குரூப் நிலை ஆட்டங்கள், ஜூன் 1ஆம் தேதி தொடங்கி ஜூன் 18ஆம் தேதி வரை நடக்கும். அதற்கு வேகமாக ஆடுகளத்தை தயார் படுத்த வேண்டும். மைதானத்தில் ஆடுகளத்தை தயார் செய்ய ஹக் மற்றும் அவரது குழுவுக்கு 12 மணிநேரம் தேவைப்படும். இந்த ஆடுகளங்களில் சில தொடங்கவுள்ள போட்டிக்காக தயார் செய்யப்படுகின்றன. சமீபத்தில் பிபிசியிடம் பேசியிருந்த ஹக், “நான் கலவையான உணர்வுகளால் சூழப்பட்டிருக்கிறேன்” என்று கூறினார். "நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன், ஆனால் அதே நேரத்தில் என்ன நடக்கும் என்று தெரியாததால் கொஞ்சம் பதற்றமாகவும் இருக்கிறது.” "இது ஒரு பெரிய வேலை. எங்களுக்குத் தெரிந்ததெல்லாம், எங்களால் முடிந்தவற்றை செய்துவிட்டோம்.” "இதில் என்னென்ன பிரச்னைகள் வரலாம், எங்களின் பணி என்ன மாதிரியான பலனைத் தரும் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் நாங்கள் யோசித்துவிட்டோம். இவை நல்ல ஆடுகளங்களாக இருக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறினார் ஹக். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முதற்கட்ட போட்டிகளில் இந்தியா நான்கு அணிகளுடன் மோத உள்ளது. இந்தியா பங்குபெறும் போட்டிகள் முதற்கட்ட போட்டிகளில் இந்தியா விளையாடும் நான்கு ஆட்டங்களில் மூன்று போட்டிகள் நியூயார்க் நகரிலும், ஒரு போட்டி லாடர்ஹில் பகுதியிலும் நடைபெற உள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு.. ஜூன் 5, புதன், இரவு 7:30 மணி: இந்தியா vs அயர்லாந்து, இடம் - நியூயார்க் ஜூன் 9, ஞாயிறு, இரவு 8:00 மணி: இந்தியா vs பாகிஸ்தான், இடம் - நியூயார்க் ஜூன் 12, புதன், இரவு 8:00 மணி: அமெரிக்கா vs இந்தியா, இடம் - நியூயார்க் ஜூன் 15, ஞாயிற்றுக்கிழமை, இரவு 8:00 மணி: இந்தியா vs கனடா, இடம் - லாடர்ஹில் இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கும் இந்தியா இதற்கு முந்தைய டி20 போட்டிகளில் இதுவரை ஆறு அணிகள் வென்றுள்ளன. இதில் 2007ஆம் ஆண்டு நடந்த போட்டியில் இந்திய அணி தனது வெற்றியைப் பதிவு செய்தது. அந்த சீரிஸின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெறுவதற்கான சூழல் இருந்த போதிலும், இலங்கை அணியிடம் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்தது இந்தியா. இந்நிலையில், இந்தாண்டு தனது இரண்டாவது வெற்றியை எதிர்நோக்கி களம் இறங்கவுள்ளது இந்திய அணி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அடுத்த டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளை இந்தியா நடத்த உள்ளது. இந்தியாவில் டி20 போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் டி20 போட்டிகள் ஒவ்வொரு முறையும் வெவ்வேறு நாடுகளில் நடத்தப்படுகிறது. அந்த வரிசையில் இரண்டாண்டுகள் கழித்தே டி20 போட்டிகளின் அடுத்த பதிப்பு நடைபெற உள்ளது. 2026இல் நடைபெற உள்ள அடுத்த பதிப்பை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இணைந்து நடத்த உள்ளன. மேலும் அதற்கடுத்த 2028 பதிப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் கூட்டாக நடத்துவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/crggqrnv9z4o
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@கிருபன் அண்ணை கேள்விகள் 43), 46), 49), 52), 67), 70) ஆகியவற்றிற்கு தற்போது பதிலளித்துள்ளேன்.
-
ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும் - சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
இஸ்ரேலின் ஏவுகணை மீது எழுதப்பட்ட வாசகத்தால் எழுந்துள்ள சர்ச்சை இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் நிக்கி ஹாலே, அந்த நாட்டு இராணுவ ஏவுகணை ஒன்றில் எழுதிய வாசகம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறித்த ஏவுகணையில் “அவர்களின் கதையை முடித்துவிடுங்கள்” என அவர் எழுதும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினருக்கு இடையே காசா பகுதியில் போர் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பாலஸ்தீனியர்கள் மீது தொடர் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி குறித்த தாக்குதல் மூலம் பாலஸ்தீனத்தில் 36,000 பேர் வரையில் பலியாகியுள்ளனர். https://thinakkural.lk/article/302810
-
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் Published By: DIGITAL DESK 3 30 MAY, 2024 | 04:10 PM வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்திருந்தனர். கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அருகில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகத்திற்கு முன்பாக A9 வீதியில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளின் படங்களையும் பதாகையும் தாங்கியவாறு சர்வதேச விசாரணை வேண்டும் என கோசங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/184885
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NED 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA UGA 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN SL 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG AUS 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK PAK 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ NZ 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG AFG முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN IRL Select IRL USA Select USA 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) PAK #A2 - ? (1 புள்ளிகள்) IND 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! USA முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM SCOT Select SCOT OMA Select OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) AUS #B2 - ? (1 புள்ளிகள்) ENG 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI AFG AFG Select AFG PNG Select PNG UGA Select UGA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) NZ #C2 - ? (1 புள்ளிகள்) AFG 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! PNG முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL SL BAN Select BAN NED Select NED NEP Select NEP 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) SL 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NEP சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 IND SA IND 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 AUS AFG AUS 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 NZ PAK PAK 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 ENG SL ENG 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 AUS SA AUS 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 IND AFG IND 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 PAK SL PAK 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 NZ ENG ENG 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 IND AUS AUS 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 AFG SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 ENG PAK PAK 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 NZ SL NZ சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK PAK ENG Select ENG ENG NZ Select NZ SL Select SL 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) PAK #அணி 1B - ? (2 புள்ளிகள்) ENG 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! SL சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS AFG Select AFG SA Select SA 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) AUS #அணி 2B - ? (1 புள்ளிகள்) IND 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! AFG அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) IND 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 2 இரண்டாவது இடம்) AUS இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி AUS உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) IND 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) PNG 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) KOHLI 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Trent Boult 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) NZ 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Jaiswal 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Jasprit Bumrah 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mitchell Starc 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@கிருபன் அண்ணை 72) கேள்வியில் குழு 1 இரண்டாம் இடம் என வரவேண்டும் என நினைக்கிறேன். ஒரு தடவை சரி பாருங்கோ.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
முதலிடம் பெற்ற கல்யாணி, இரண்டாமிடம் பெற்ற நுணாவிலான், மூன்றாமிடம் பெற்ற கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துகள். போட்டியில் கலந்து சிறப்பித்த உறவுகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்.
-
ஸ்மார்ட்போன்களை தவிர்த்து சாதாரண போன்கள் மீது அதிகரிக்கும் மக்களின் மோகம்
பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரென்னன் டோஹெர்டி பதவி, பிபிசி நிருபர் 22 நிமிடங்களுக்கு முன்னர் நவீன தொழில்நுட்பத்தை வெறுக்கும் நியோ-லுடிட்கள் (neo-Luddites) மற்றும் தொழில்நுட்ப அழுத்தம் உள்ளவர்கள் குறைவான அம்சங்களைக் கொண்ட போன்களை தேடுகின்றனர். ஆனால் இந்த போன்களின் சந்தை நிலையற்றதாகவும் உறுதியற்ற லாப வரம்புகளையும் கொண்டிருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு ஐபோன் 17 வயதை எட்டுகிறது. ஐபோன் என்னும் தொடுதிரை மூலம் இயங்கும் (touchscreen-controlled device) சாதனத்தின் வெளியீடு, ஸ்மார்ட்போன்கள் பற்றிய மக்களின் எதிர்பார்ப்புகளை வரையறுத்தது. அதன் பிறகு டச் ஸ்கிரீன் கொண்ட ஸ்மார்ட் போன்களின் சந்தை பெரும் எழுச்சியைக் கண்டது. இதனால் ஒரு தலைமுறையினர் ஸ்மார்ட்போன் இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது தெரியாமலேயே வளர்ந்துவிட்டனர். ஸ்மார்ட்போன்கள் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வெளியான எண்ணற்ற அறிவியல் ஆய்வுகளைப் பற்றித் தெரிந்து கொள்ளவோ, மொபைல் போன்களால் பாதிக்கப்பட்டவர்களின் சொந்த அனுபவங்களைத் தெரிந்து கொள்ளவோ மக்களுக்கு நேரமில்லை அல்லது அறிந்து கொள்வதற்கான நேரம் கடந்துவிட்டது. உலகை தங்கள் விரல் நுனியில் வைத்திருக்க உதவும் ஸ்மார்ட் போன்கள் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றி பலர் நன்கு அறிந்திருக்கிறார்கள். இந்த போன்கள் ஒருங்கிணைப்புத் திறனை பாதிக்கும், தூக்கத்தைப் பாதிக்கும். மேலும் சில மனநலம் சார்ந்த பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். டம்ப் போன்கள் என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தச் சிக்கல்களைத் தீர்க்க, எளிமையான வழிகள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக, திரை நேரத்தைக் கட்டுப்படுத்தும் செயலிகளை போனில் டவுன்லோட் செய்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் சிலர் செயலிகள் பரிந்துரைக்கும் நேரத்தைத் தாண்டியும் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். எனவே மொபைல் போன் பயன்பாட்டைக் குறைக்கும் இன்னும் ஆக்கப்பூர்வமான வழிமுறைகளின் தேவை அதிகரித்துள்ளது. அலைபேசி அழைப்பு, குறுஞ்செய்தி அனுப்புதல் மற்றும் அலாரங்களை செட் செய்வது போன்ற அடிப்படை செயல்பாடுகளைக் கொண்ட போன்களுக்கான தேடலும் அதிகரித்து வருகிறது. அதற்கான தீர்வுதான் 'டம்ப் போன்கள் (dumb phone)'. சில டம்ப் போன்கள் 90களில் வெளியான ஃபிளிப் (Flip) போன்களை ஒத்திருக்கும். மற்றவை வியக்கத்தக்க ஸ்மார்ட்போன் அனுபவத்தை வழங்கும் மேம்பட்ட வடிவமைப்பைக் கொண்டிருக்கும். ஒரு சில பெற்றோர்கள், தங்கள் குழந்தைகள் மொபைல் போன்களுக்கு அடிமையாவதைத் தடுக்க, திரை நேரத்தைக் குறைக்க, டம்ப் போன்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இதுபோன்று அக்கறையுள்ள சில பெற்றோர்கள் தங்கள் ஸ்மார்ட்போன் ஏற்படுத்தும் கவனச் சிதறல்களில் இருந்து குழந்தைகளை விலக்கி வைப்பதற்கான ஒரு வழியாக இந்த எளிய போன்களை கருதுகின்றனர். இந்த எளிமையான டம்ப் போன்கள் வயது முதிர்ந்தவர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கட்டுமானம் அல்லது விவசாயம் போன்ற தொழில்களில் ஈடுபட்டிருக்கும் தரப்பினர் உடையாத கடினமான மொபைல் போன்களை விரும்புகின்றனர். அவர்களுக்குச் சிறந்த தேர்வாக டம்ப் போன்கள் இருக்கும். மேலும் ஸ்மார்ட்போன்களை சராசரி விலை கொடுத்து வாங்க முடியாதவர்களுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். சமூக ஊடகங்களில் இருந்து தப்பிக்க நினைக்கும் இளைஞர்கள் டம்ப் போன்களை விரும்புகின்றனர். டம்ப் போன்கள் எளிதாகக் கிடைக்குமா? பட மூலாதாரம்,GETTY IMAGES நானும் இந்த போனை முயற்சி செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியும். 2000களின் முற்பகுதியில் கேமிங் கன்சோல்கள் இல்லாத வீட்டில் வளர்ந்த நான், ஹாலோ மற்றும் பார்டர்லேண்ட்ஸ் போன்ற கேம்களை நண்பர்களின் வீட்டில் விளையாடினேன். அதன் விளைவாக எனக்கு அடிக்கடி மயக்கம் வருவது போல் இருந்தது. மேலும் கவனச் சிதறல் பிரச்னையும் இருந்தது. பின்னர், ஒரு செய்தி ஊடகத்தில் நிருபராகப் பணியாற்றினேன், அப்போது ட்விட்டரில் அதிக நேரம் செலவிட்டேன். கொரோனா பாதிப்பால் பொதுமுடக்கம் அறிவித்த காலகட்டத்தில் ட்விட்டர் பயன்பாட்டை நிறுத்தினேன். ஆனால் இன்ஸ்டாகிராம் ரீல்ஸுக்கு அடிமையானேன். எப்போதுமே போன் திரையில் மூழ்கியிருப்பது என் நல்வாழ்வை அரித்தது. ஸ்மார்ட்போன் பயன்பாட்டை நிறுத்துவது எனக்கு நல்லது என்று தோன்றியது. ஆயினும் நடைமுறையில் ஸ்மார்ட் போனை ஒதுக்கிவிட்டு, அதற்கு மாற்றான டம்ப் போனை வாங்குவது நான் எதிர்பார்த்ததைவிட சற்று கடினமாக இருந்தது. முதலில், டம்ப் போனை வாங்குவதே சவாலான ஒன்றாக இருந்தது. குறைவான தேர்வுகள் மட்டுமே இருந்தன. இணையம் முழுவதும் மில்லியன் கணக்கான ஸ்மார்ட்போன் மதிப்புரைகள் உள்ளன. ஆனால் டம்ப் போன்கள் பற்றி அவ்வளவாக யாரும் பேசவில்லை. நான் இறுதியாக எழுத்தாளர் மற்றும் டம்ப் ஃபோன் வழக்கறிஞரான ஜோஸ் பிரியோன்ஸ் உதவியுடன் 'டம்ப்ஃபோன் ஃபைண்டர்' என்னும் இணையதளத்தைக் கண்டுபிடித்தேன். 'CAT-S22’ என்னும் ஃபிளிப் போனை தேர்ந்தெடுத்தேன், இது ஒரு செமி-ஸ்மார்ட் டம்ப் ஃபோன். இது கூகுள் மேப்ஸ் (Google Maps) உள்ளிட்ட பயன்பாடுகளுக்கான அணுகலைக் கொண்டுள்ளது. இதன் விலை $69 (ரூ.5735). டம்ப் ஃபோன்களை பற்றி நான் எவ்வளவு அதிகமாகக் கற்றுக் கொண்டேனோ, அந்த அளவுக்கு மதிப்புரைகள் இல்லாததால், போனை பயன்படுத்துவதில் எனக்குச் சிக்கல் இருக்கிறது என்பதை உணர்ந்தேன். அதிகரித்து வரும் தேவை இருந்தபோதிலும், தொலைபேசி உற்பத்தியாளர்கள் டம்ப் ஃபோன் சாதனங்களை உற்பத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை என்பதை நான் புரிந்துகொண்டேன். அனைத்து புதிய போன் விற்பனையகங்களிலும் பெரும்பான்மையான ஸ்மார்ட்போன்கள் இருப்பதால், புதிய டம்ப் போன்களை வெளியிடுவதற்கு அல்லது அவற்றின் தற்போதைய மாடல்களை புதுப்பிப்பதற்கு தொழில்நுட்ப நிறுவனங்கள் குறைந்த பட்ஜெட்டை மட்டுமே ஒதுக்குகின்றன. மோசமான பொருளாதாரச் சந்தை பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES டம்ப் ஃபோன்களுக்கான சந்தை சிறிய அளவில் இருந்தாலும், விற்பனை ஓரளவுக்கு ஆகிறது. அமெரிக்காவில், கவுன்டர்பாயிண்ட் ஆய்வு நிறுவனத்தின் ஆகஸ்ட் 2023 தரவுகள்படி - அடிப்படை வசதிகளைக் கொண்ட டம்ப் போன் ரகமான ஃபீச்சர் போன்கள் (feature phones) கைபேசி சந்தையில் வெறும் 2% மட்டுமே ஆக்கிரமித்துள்ளன. கவுன்டர்பாயின்ட் மதிப்பீட்டின்படி, அமெரிக்காவில் மட்டும் இந்த ஆண்டின் இறுதிக்குள் டம்ப் போன் விற்பனை 2.8 மில்லியனை எட்டும். "அமெரிக்காவில் ஃபீச்சர் போன்கள் ஓரளவுக்கு விற்பனை ஆகின்றன. ஏனெனில் அவற்றின் எளிமையான வடிவமைப்பு, மலிவு விலை மற்றும் கடினமான அமைப்பு குறிப்பிட்ட மக்கள்தொகைக்கு ஏற்றவாறு உள்ளது. மொபைல் சந்தையில் ஃபீச்சர் போன்களுக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருக்காது என்றாலும், ஸ்மார்ட்போன் ஆதிக்கம் செலுத்தும் சந்தையில் ஃபீச்சர் போன்களுக்கான நிலையான தேவையை உருவாக்கும் சூழல் உருவாகியுள்ளது," என்று ஆய்வு நிறுவனம் கூறுகிறது. டெக்சாஸில் உள்ள பேய்லர் யுனிவர்சிட்டியின் ஹான்காமர் ஸ்கூல் ஆஃப் பிசினஸின் மார்க்கெட்டிங் பேராசிரியரான ஜிம் ராபர்ட்ஸ், உலகளவில் அமெரிக்காவில்தான் வியக்கத்தக்க அளவில் டம்ப் ஃபோன்கள் விற்கப்படுவதாகக் கூறுகிறார். அவர் கூற்றுபடி சுமார் 20% டம்ப் ஃபோன்கள் விற்கப்படுகின்றன. ஆனால் உண்மையான சந்தை தரவு புள்ளிவிவரங்கள் வேறுபடுகின்றன. ராபர்ட்ஸ் கூற்றுபடி, "எதிர்பார்க்கும் அளவுக்குத் தாங்கள் மகிழ்ச்சியாக இல்லை, அல்லது மிகவும் மகிழ்ச்சியுடன் இல்லை என்பதை நுகர்வோர் உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் தொலைபேசிகளில் அதிக நேரம் செலவிடுவதுதான் மகிழ்ச்சியின்மைக்குக் காரணம் என்று கருதுகிறார்கள்,” என்கிறார். ஸ்மார்ட்போன்களில் அதிக லாபம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஸ்டேடிஸ்டா சந்தை அறிக்கைப்படி, மொத்த உலகளாவிய ஃபீச்சர் போன் சந்தை இந்த ஆண்டு 10.6 பில்லியன் டாலர் வருவாயைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. போன் உற்பத்தியாளர்கள் ஃபீச்சர் போன் விற்பனையில் இருந்து குறிப்பிடத்தக்க தொகையை மட்டுமே பெறுகின்றனர். அவர்களால் ஸ்மார்ட் போன்களை போன்று லாபம் ஈட்ட முடியவில்லை. வணிகத்தை மேம்படுத்த முயல்வது பொருளாதார ரீதியாக உதவாது, குறிப்பாக டம்ப் ஃபோன்கள் பெரும்பாலும் அவற்றின் ஒட்டுமொத்த நிறுவனங்களின் ஒரு சிறிய பிரிவாக மட்டுமே இருக்கும். இந்தத் தொழில்நுட்ப ஜாம்பவான்களில் பலர் மேம்பட்ட மென்பொருள் அல்லது மிகவும் சிறப்பு வாய்ந்த வன்பொருளில் வருவாய் ஈட்டுகின்றனர். அந்த ஸ்மார்ட் போன்களுக்கு நுகர்வோர் அதிக விலை செலுத்துவார்கள். மேலும் இந்தத் தொழில் நிறுவனங்கள் மிகவும் மாறுபட்ட வருவாய் வழிகளையும் கொண்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சாம்சங், அதன் செமி கண்டக்டர் (semiconductor) பிரிவில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் பல பில்லியன்கள் சம்பாதிக்கிறது. எனவே இந்த நிறுவனங்கள் டம்ப் போன் பயனர்களைக் கருத்தில் கொள்வதில்லை. சிறிய அளவில் மட்டுமே டம்ப் ஃபோன் உற்பத்தியில் கவனம் செலுத்துகின்றன. அதன் வருவாய்த் திறன் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் கூறுகையில், "தொழில்நுட்ப ஜாம்பவான்கள் ஸ்மார்ட்போன்களுக்கு கட்டணம் வசூலிக்க முடியும் என்பதால், அவர்கள் எந்த நேரத்திலும் டம்ப் ஃபோன் பயனர்களுக்கு முன்னுரிமை அளிக்க மாட்டார்கள்,” என்கின்றனர். 2019ஆம் ஆண்டில் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டை விட்டு வெளியேறிய பிரியோன்ஸ், பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் அதிக விலையுயர்ந்த மாடல்களை டம்ப் ஃபோன்கள் முந்துவதை விரும்பவில்லை என்று விளக்குகிறார். "பெரிய தொழில்நுட்ப ஜாம்பவான்கள் உங்கள் ஸ்மார்ட்ஃபோன் பயன்பாட்டைக் குறைப்பதை விரும்பவில்லை. ஏனெனில் அவர்கள் பணம் சம்பாதிக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். சாத்தியமான மாற்றாக இருக்குமா? பட மூலாதாரம்,SERENITY STRULL/BBC/GETTY IMAGES இன்னும் டம்ப் ஃபோன்களை வழங்கும் நிறுவனங்களைப் பற்றிப் பேசுகையில், ஃபாரெஸ்டர் ரிசர்ச்சின் (Forrester Research) துணைத் தலைவரும் முதன்மை ஆய்வாளருமான தாமஸ் ஹுசன், "இந்த விற்பனையாளர்களில் பலர் இதைச் செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை, குறைந்த பட்சம் இந்த சாதனங்களை நீண்ட காலத்திற்குத் தயாரிப்பார்களா என்பது தெரியவில்லை,” என்றார். குறைவான லாப வரம்புகளுடன், இந்த போன்கள் இயங்கும் தொழில்நுட்பம் காலாவதியாகி, அவை செயல்பட முடியாமல் போகும் என்ற கூற்றும் உள்ளது. உதாரணமாக, உலகெங்கிலும் உள்ள டம்ப் ஃபோன் பயனர்கள் தங்கள் செயல்பாட்டைத் தக்கவைத்துக் கொள்ளும் 2G மற்றும் 3G நெட்வொர்க்குகள் முற்றிலும் செயல்படாமல் போய்விட்டால், அவர்கள் அதிர்ஷ்டம் இல்லாமல் போய்விடுவார்கள். மேலும் சாதாரண வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்குக்கூட பணிரீதியாக ஸ்மார்ட் ஃபோன் தேவைப்படுகிறது. எனவே பயனர்களின் எண்ணிக்கையும் ஃபோன் உற்பத்தியைப் பாதிக்கும். ஆர்வமுள்ள வணிக மாதிரியைக்கூட மேம்படுத்துவதற்குப் போதுமான வாடிக்கையாளர்கள் இல்லாமல் இருக்கலாம். இருப்பினும், டம்ப் ஃபோன் நிறுவனங்கள் நிலைத்து நிற்க ஒரு வழி உள்ளது. பொருளாதார ரீதியாக சாத்தியமானதாக இருக்க, நிறுவனங்கள் "இந்த ஃபோனின் பிரீமியம் பிராண்டை உருவாக்கலாம்" என்று ஹுசன் கூறுகிறார். உண்மையில், சில ஸ்டார்ட்-அப்கள் இந்த சிறப்புச் சந்தையை நிலைநிறுத்தவும் பொருளாதார வெற்றியைக் காணவும் முயற்சி செய்கின்றன. ஃபீச்சர் ஃபோனில் ஒரு வகையான நவீனத் தோற்றத்தை வழங்குகின்றன. நியூயார்க்கை தளமாகக் கொண்ட லைட் என்ற நிறுவனம் தனிப் பயனாக்கக் கூடிய 'லைட் போன்களை' உருவாக்குகிறது, இது இணையம், சமூக ஊடகங்கள் மற்றும் பிற கவனச் சிதறல்களுக்கு மக்கள் அடிமை ஆவதைக் குறைக்கிறது. 'லைட் போன்கள்' பட மூலாதாரம்,GETTY IMAGES "நாங்கள் லைட் போன் மூலம் செய்ய முயல்வது செயலற்ற போனை உருவாக்குவது அல்ல, மாறாக மிகவும் உள்நோக்கத்துடன் கூடிய அடிப்படை அலைபேசியை உருவாக்குவது. அதாவது பிரீமியம் டம்ப் போன்களை உருவாக்குவது," என்று லைட்டின் இணை நிறுவனர்ஜோ ஹோலியர் 2023இல் CNBCயிடம் தெரிவித்தார். இந்த சாதனத்தின் விலை தற்போது 299 டாலர்கள்(ரூ.24,854). இதைக் குறைந்த அல்லது இடைப்பட்ட ஸ்மார்ட்போன் மாடல்களுடன் ஒப்பிடலாம். டம்ப்- டவுன் போனுக்கு இது அதிக விலை, ஆனால் நிறுவனத்தைப் பொறுத்தவரை ஒரு முக்கிய தயாரிப்பைப் பொருளாதார ரீதியாக லாபகரமானதாக மாற்றுவதற்கான ஒரு வழியைக் கையில் எடுத்துள்ளது. குறைந்த விலை அல்லது கடினத் தன்மையின் அடிப்படையில் விற்கப்படும் ஃபீச்சர் போன்களைப் போலல்லாமல், லைட் போன்கள், ஸ்டைல் அல்லது சில செயல்பாடுகளில் தியாகம் செய்யாமல் டிஜிட்டல் பயன்பாட்டைக் குறைக்கும் எண்ணம் உள்ளவர்களைக் குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பிரியோன்ஸ் கூற்றுபடி, "லைட் போனில் அழைப்புகள், குறுந்தகவல் மற்றும் அடிப்படைப் பயன்பாட்டுச் செயல்பாடுகள் உள்ளன, இவை அனைத்தும் இ-ரீடரை போன்ற மின் மை திரை மூலம் பார்க்க முடியும். இதில் காலெண்டர், மேப்ஸ், பாட்காஸ்ட்கள் மற்றும் இசையைக் கேட்க முடியும். குறிப்புகளை எடுக்க முடியும். ஸ்மார்ட் போன் பயன்பாட்டைக் குறைத்து எப்படி வாழ வேண்டும் என்பதை நான் கற்றுக்கொள்ள முடிந்த ஒரு நல்ல அம்சத்தைக் கொண்ட ஃபோன்," என்று அவர் கூறுகிறார். இந்தப் புதிய சாதனங்கள் தங்கள் டிஜிட்டல் திரைக்கு அடிமையாவதைத் தடுக்க நினைக்கும் பயனர்களைக் கவரும் வகையில் மற்ற வணிக மாதிரிகளுடன் போட்டியிட வேண்டும். ஆனால் வன்பொருள் மாற்றத்தைவிட மென்மையாகச் செல்லும் வகையில் அவ்வாறு செய்ய விரும்பலாம். அதுதான் அமெரிக்காவை தளமாகக் கொண்ட கோஸ்ட் மோட் (Ghost Mode) நிறுவனத்தின் உத்தி. இந்நிறுவனம் தனது சொந்த போனை உற்பத்தி செய்து விற்பதற்குப் பதிலாக, கூகுள் பிக்சல் 6a ஸ்மார்ட்போனை வாடிக்கையாளரின் விவரக் குறிப்புகளுக்கு ஏற்ப அவர்களுக்குத் தேவையான அனைத்து பயன்பாடுகளுடன் மறுநிரலாக்கம் செய்கிறது. அவற்றைச் செய்தவுடன், கோஸ்ட் மோட் நிறுவனம் அந்தப் பயன்பாட்டு செயலிகளை லாக் செய்கிறது. பயனர்கள் ஸ்மார்ட் போன் வைத்திருப்பார்கள், ஆனால் தேவையற்ற செயலிகளைப் பயன்படுத்த முடியாது. இந்த முக்கியத் தயாரிப்புகளில் பெரும்பாலானவற்றைப் போலவே, இந்த சேவையும் 600 டாலர்கள் (ரூபாய் 50,000) என்ற அதிக விலையில் செய்யப்படுகிறது. ஆனால் இந்தப் பயன்பாடு உயர்நிலை வாடிக்கையாளர்களை ஈர்க்கக்கூடும். இந்தப் புதிய நிறுவனங்களின் போன்களில் மக்கள் அதிக ஆர்வம் காட்டிய போதிலும், சந்தைகளில் வெற்றி பெறுவது இன்னும் ஆபத்தானது. நான் வாங்கிய CAT S-22இன் உரிமம் பெற்ற உற்பத்தியாளர்களான புல்லிட், எனது அலைபேசி என் கைகளுக்கு வருவதற்கு முந்தைய நாள் உற்பத்தியை நிறுத்தியது. நான் ஒரு வாரம் அதைப் பயன்படுத்திப் பார்த்தேன். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்க நான் பயன்படுத்திய இரண்டு செயலிகளின் செயல்பாடுகளை அழைக்கவும், குறுஞ்செய்தி அனுப்பவும் பயன்படுத்தினேன். எனது மொத்த இணையப் பயன்பாடு ஒரு நாளுக்கு ஒரு மணிநேரமாகக் குறைந்தது. எனது சுற்றுப்புறங்கள், புத்தகங்கள் மற்றும் இசையில் என்னால் சிறப்பாகக் கவனம் செலுத்த முடிந்தது. ஆனால் எனது லைப்ரரி செயலியை நான் இழந்தேன். அதனால், நான் மீண்டும் சாம்சங் காலக்ஸி A32க்கு மாறினேன். நான் மினிமலிஸ்ட் என்னும் செயலியை என் ஃபோனில் நிறுவியுள்ளேன், இது தேவையற்ற செயலி ஐகான்கள் மற்றும் அதன் பின்னணி செயல்பாட்டை அகற்றும் ஒரு செயலி. அனைவருடனும் தொடர்பில் இருக்க மெசஞ்சர், வாட்ஸ்அப் மட்டும் பயன்படுத்தினேன். ஆனால் அடிப்படைத் தேவையில்லாத எல்லா செயலிகளும் என் ஸ்கிரீனுக்கு வெளியே சென்றன. நான் அவற்றைத் தேவைப்படும் போது மட்டுமே பயன்படுத்தினேன். https://www.bbc.com/tamil/articles/cv22wnnyx99o
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
மிக்க நன்றி @கிருபன் அண்ணை.