Everything posted by ஏராளன்
-
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தால் என்ன நடக்கும்?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (இடது) மற்றும் அவரது பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட். கட்டுரை தகவல் எழுதியவர், ஜெர்மி போவன் பதவி, சர்வதேச ஆசிரியர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக தாம் கைது வாரண்டை எதிர்கொள்ளக்கூடும் என்ற செய்திக்கு, ஒரு காணொளி மூலமாக தனது கடும் கோபத்தை வெளிப்படுத்தினார் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. “இது வரலாறு காணாத தார்மீக மீறல்" என்று கூறிய அவர், “இரண்டாம் உலகப்போர் காலத்து யூத இனஅழிப்பிற்கு பிறகு யூத மக்கள் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலை அரங்கேற்றிய, இனப் படுகொலைகளை செய்யும் பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு எதிராக நியாயமான போரை இஸ்ரேல் நடத்தி வருகிறது," என்றும் குறிப்பிட்டார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) தலைமை வழக்கறிஞரான கரீம் கானை, ‘நவீன காலத்தின் பெரும் யூத எதிர்ப்பாளர்களில் ஒருவர்’ என்று நெதன்யாகு விவரித்தார். நாஜி ஜெர்மனியில் யூதர்களின் அடிப்படை உரிமைகளை மறுத்து, படுகொலையை செயல்படுத்திய நீதிபதிகளைப் போன்றவர் கரீம் கான் என்றும் அவர் குறிப்பிட்டார். இஸ்ரேலின் பிரதம மந்திரி மற்றும் பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக கைது வாரண்டுகளை கோரும் கரீம் கானின் முடிவு ‘உலகம் முழுவதும் எழுந்துவரும் யூத விரோதத்தின் நெருப்பில் பெட்ரோலை ஊற்றுவது போன்றது’ என்றார் அவர். பிரதம மந்திரி அலுவலகம் வெளியிட்ட அந்த காணொளியில் நெதன்யாகு ஆங்கிலத்தில் பேசினார். தனது செய்தி, தனக்கு நெருக்கமான நாடான அமெரிக்காவில் உள்ள மக்களை சென்றடைய வேண்டும் என்று அவர் விரும்பும் போது ஆங்கிலத்தில் பேசுகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கைகள் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் மீது எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸாவின் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார், பாலத்தீன பகுதியில் எங்கோ பதுங்கி இருப்பதாக நம்பப்படுகிறது. இஸ்ரேல்- ஹமாஸ் இருதரப்புக்கும் தண்டனை இஸ்ரேல் பிரதம மந்திரி வெளிப்படுத்திய சீற்றம், இஸ்ரேலின் அரசியல் தலைவர்களிடமும் எதிரொலித்தது. இந்த சீற்றத்திற்கு காரணமான அறிக்கைகள், ஐசிசியின் தலைமை வழக்கறிஞரும், பிரிட்டன் மன்னரின் சட்ட ஆலோசகருமான கரீம் கான் என்பவரால் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கைகளில், வார்த்தைக்கு வார்த்தை, வரிக்கு வரி, ஹமாஸின் மூன்று முக்கிய தலைவர்கள், இஸ்ரேலின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் மீது தொடர் குற்றச்சாட்டுகளை கரீம் கான் முன்வைக்கிறார். சர்வதேச சட்டம் மற்றும் ஆயுத மோதலின் சட்டங்களை, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், இரு தரப்பினர் மீதும் பயன்படுத்துவதற்கான உறுதிப்பாடு, கானின் அறிக்கையில் தெரிகிறது. கைது வாரண்ட் கோருவதற்கான காரணத்தையும் இந்த அறிக்கையில் அவர் விளக்குகிறார். "படை வீரர், தளபதி, அரசியல் தலைவர் என்று யாருமே தண்டனையிலிருந்து தப்ப முடியாது. சட்டம் அனைவருக்கும் பொதுவானது. நபர்களைப் பொறுத்து செயல்படுத்த முடியாது. அப்படி நடந்தால் சட்டத்தின் வீழ்ச்சிக்கான சூழ்நிலையை நாமே உருவாக்கிவிடுவோம்”, என்று கான் குறிப்பிட்டார். இரு தரப்பினரின் நடத்தையையும் சர்வதேச சட்டத்தின் கீழ் கொண்டு வர வைக்கும் இந்த முடிவு, இஸ்ரேலில் மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் கோபத்தை கிளப்பியுள்ளது. கைது வாரண்ட் கேட்பது ‘ஒப்புக் கொள்ள முடியாத செயல்’ என்றும், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே எந்த ஒற்றுமையும் இல்லை என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். “பாதிக்கப்பட்டவரையும் குற்றவாளியையும் சமமானவர்கள் என்கிறார் ஐசிசி வழக்கறிஞர் கரீம்” எனக் கூறி, தன் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெறுமாறு ஹமாஸ் கோரியது. "ஏழு மாதங்கள் தாமதமாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் ஆயிரக்கணக்கான குற்றங்கள் இழைக்கப்பட்ட பின்னர், இஸ்ரேலிய தலைமைக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிப்பதற்கான கோரிக்கை வந்துள்ளது” என ஹமாஸ் விமர்சித்தது. தனது அறிக்கையில் இரு தரப்புக்கும் இடையே நேரடி ஒப்பீடுகளை கான் செய்யவில்லை. ஆனால் அவர்கள் இருவருமே தொடர்ச்சியான போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக கான் குறிப்பிடுகிறார். இந்த சமீபத்திய போர் இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான சர்வதேச ஆயுத மோதல் மற்றும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இருதரப்பு ஆயுத மோதல் ஆகியவற்றின் பின்னணியில் வருகிறது என்றும் அவர் வலியுறுத்துகிறார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பாலத்தீனத்தை ஒரு நாடாக கருதுகிறது. ஏனெனில் ஐக்கிய நாடுகள் சபையில் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டிருப்பதால் ஐசிசியை உருவாக்கிய ரோம் சட்டத்தில் பாலத்தீனத்தால் கையெழுத்திட முடிந்தது. ஆனால், தான் அதிகாரத்தில் இருக்கும் வரை பாலத்தீனர்கள் ஒருபோதும் சுதந்திரம் பெற மாட்டார்கள் என்று நெதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மனித உரிமை அமைப்புகளின் பாராட்டுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தெற்கு காஸாவின் ரஃபா பகுதி கொடூரமான பயங்கரவாதிகளுக்கும், இஸ்ரேலின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையேயான அவமானகரமான மற்றும் தவறான ஒப்பீடுகள் என இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறுகிறார். ஆனால் இதை அப்படி பார்ப்பதற்கு பதிலாக, இரு தரப்புகள் மீதும் சட்டத்தை நடைமுறைப்படுத்த விரும்பும் ஐசிசி வழக்குரைஞரின் நடவடிக்கையாக மனித உரிமை குழுக்கள் பாராட்டுகின்றன. இந்த வாரண்ட் கோரல் ‘இஸ்ரேல் ஒரு தார்மீக படுகுழியில் விரைவாக இறங்குவதை’ குறிக்கிறது என்று இஸ்ரேலின் முன்னணி மனித உரிமை அமைப்பான பெட்செலம் கூறியது. “பொறுப்புக் கூறல் இல்லாமல், வன்முறை, கொலை மற்றும் அழிவு போன்ற அதன் கொள்கையை இனியும் தொடர முடியாது என்று சர்வதேச சமூகம் இஸ்ரேலுக்கு செய்யும் சமிக்ஞை இது,” என்று அது மேலும் தெரிவித்தது. அமெரிக்கா தலைமையிலான சக்தி வாய்ந்த மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலின் சர்வதேச சட்ட மீறல்களை கண்டும் காணாது இருப்பதாகவும், தங்களுக்கு ஆதரவாக இல்லாத பிற நாடுகளை கண்டித்து, தடைகளை விதிப்பதாகவும், மனித உரிமை ஆர்வலர்கள் பல காலமாக புகார் கூறி வருகின்றனர். கான் மற்றும் அவரது குழுவினரால் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை நீண்ட காலத்திற்கு முன்பே எடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர்கள் கருதுகின்றனர். ஹமாஸ் மீதான குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,AFP ஹமாஸின் மூன்று முக்கிய தலைவர்களும் அழித்தல், கொலை, பிணைக்கைதிகளை பிடித்தல், பாலியல் வன்புணர்வு மற்றும் சித்ரவதை உள்ளிட்ட போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக கான் கூறுகிறார். ஹமாஸ் தலைவரான யாஹ்யா சின்வார், அதன் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படைப்பிரிவின் தளபதி முகமது டெய்ஃப் மற்றும் ஹமாஸ் அரசியல் பணியகத்தின் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஆகியோர் இதில் பெயரிடப்பட்டுள்ளனர். விசாரணையின் ஒரு பகுதியாக கரீம் கான் மற்றும் அவரது குழுவினர், அக்டோபர் 7 தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்களை நேர்காணல் செய்தனர். ஹமாஸ், அடிப்படை மனித விழுமியங்களைத் மீறியதாக அவர் கூறினார். "ஒரு குடும்பத்தில் உள்ள அன்பு, பெற்றோருக்கும் குழந்தைக்கும் இடையிலான ஆழமான பிணைப்பு ஆகியவை சிதைக்கப்பட்டுள்ளன. வன்கொடுமை மற்றும் தீவிர துன்புறுத்தல்கள் மூலம் அளவிட முடியாத வலியை உண்டாக்குவதற்காக இது நடத்தப்பட்டுள்ளது," என்று கான் குறிப்பிட்டார். இஸ்ரேல் மீதான குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்ரேல் ராணுவ வீரர்கள் ”இஸ்ரேலுக்கு தன்னைத் தானே தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு. ஆனால் மனசாட்சியற்ற குற்றங்கள், சர்வதேச மனிதாபிமான சட்டத்திற்கு இணங்க வேண்டிய கடமையிலிருந்து இஸ்ரேல் தப்ப முடியாது," என்றார் கான். “அவ்வாறு செய்தால், பொதுமக்கள் மீது போர் ஆயுதமாக பட்டினியை பயன்படுத்தியது, கொலை, அழித்தல் மற்றும் பொதுமக்கள் மீது வேண்டுமென்றே நடத்திய தாக்குதல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக, நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோரை கைது செய்வதற்கான வாரண்ட்களை பிறப்பிப்பதை நியாயப்படுத்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார். அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதல்களுக்கு இஸ்ரேலின் பதிலடியின் தொடக்கத்தில் இருந்து, அமெரிக்க அதிபர் பைடன் இஸ்ரேலுக்கு தொடர்ச்சியான கண்டனங்களை வெளியிட்டார். இஸ்ரேல் பல பாலத்தீன குடிமக்களை கொன்று வருவதாகவும், காஸாவில் உள்ள குடிமக்களின் உள்கட்டமைப்பை அதிகமாக நாசம் செய்து வருவதாகவும் அவர் கவலை தெரிவித்தார். ஆனால் அதே நேரம் தாங்கள் எப்போதுமே ஆதரித்து வரும் நெருங்கிய கூட்டாளியிடம் கவனமாக சமநிலையை கடைப்பிடித்த பைடனும் அவரது நிர்வாகமும், தங்கள் கண்டனங்களின் முழு அர்த்தம் என்ன என்பதை பகிரங்கமாக தெரிவிக்கவில்லை. கரீம் கான் தனது விளக்கத்தை மிகத் தெளிவாகக் கூறுகிறார். காஸாவில் தனது போர் இலக்குகளை அடைய இஸ்ரேல் குற்றவியல் முறைகளைத் தேர்ந்தெடுத்ததாக அவர் கூறுகிறார். வேண்டுமென்றே மரணத்தை விளைவித்தது, பட்டினி, பெரும் துன்பம் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான காயம் ஏற்படுத்தியது போன்றவை இதில் அடங்கும். ஐசிசியின் கைது வாரண்ட் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ICC) கைது வாரண்டுகளை பிறப்பிக்கலாமா என்பதை ஐசிசியில் உள்ள நீதிபதிகள் குழு இப்போது பரிசீலிக்கும். ஐசிசியின் ரோம் சட்டத்தில் கையெழுத்திட்ட நாடுகள், வாய்ப்பு கிடைத்தால் அவர்களை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். கையொப்பமிட்ட 124 நாடுகளில் ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இல்லை. இஸ்ரேலும் இதில் கையெழுத்திடவில்லை. ஆனால் பாலத்தீனம் கையொப்பமிட்டிருப்பதால் போர்க்குற்றச் செயல்களை விசாரிக்க சட்டப்பூர்வ அதிகாரம் தனக்கு உண்டு என ஐசிசி கூறுகிறது. கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால் இஸ்ரேலின் நீண்ட கால பிரதமர் நெதன்யாகு, கைது செய்யப்படும் ஆபத்தை சந்திக்காமல், இஸ்ரேலுக்கு அருகில் உள்ள மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு செல்ல முடியாது. ”ஐசிசியின் நடவடிக்கைகள், சண்டையை நிறுத்துவதற்கோ, பிணைக்கைதிகளை விடுவிப்பதற்கோ அல்லது மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கோ உதவவில்லை,” என்று பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக் குறிப்பிட்டார். ஆனால் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், பிரிட்டன் நெதன்யாகுவை கைது செய்தாக வேண்டும் அல்லது அவருக்கு தூதாண்மை விலக்கு உண்டு என்று பிரிட்டன் வெற்றிகரமாக வாதிட வேண்டும். நெதன்யாகு மற்றும் கேலன்ட் ஆகியோருக்கு மிக முக்கியமான நாடு அமெரிக்கா. இந்த மோதலில் ஐசிசிக்கு அதிகார வரம்பு இல்லை என்று அமெரிக்க அதிபர் மாளிகை நம்புகிறது. ஜோ பைடனின் ஜனநாயகக் கட்சிக்குள் போர் தொடர்பாக பிளவுகளை இது அதிகப்படுத்தலாம். ஐசிசியின் இந்த நடவடிக்கையை அமெரிக்காவின் முற்போக்காளர்கள் ஏற்கனவே வரவேற்றுள்ளனர். ஜனநாயகக் கட்சிக்குள் இருக்கும் இஸ்ரேலின் உறுதியான ஆதரவாளர்கள், ஐசிசி அதிகாரிகள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் குடியரசுக் கட்சியின் நகர்வுகளை ஆதரிக்கலாம் அல்லது அவர்களை அமெரிக்காவில் இருந்து தடை செய்யலாம். வரவிருக்கும் இத்தகைய நடவடிக்கைகள் பற்றிய வதந்திகள் பல வாரங்களுக்கு முன்பே ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கில் பரவியதால் குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் குழு, கான் மற்றும் அவரது ஊழியர்களுக்கு எதிராக அச்சுறுத்தலை விடுத்தது. "இஸ்ரேலை குறிவைத்தால், நாங்கள் உங்களை குறிவைப்போம்.. உங்களுக்கு இது எச்சரிக்கை…." இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்ன செய்யும்? பட மூலாதாரம்,GETTY IMAGES யோவ் கேலன்டும் சுதந்திரமாக பயணம் செய்ய முடியாது. இஸ்ரேல் காஸாவை முற்றுகையிடப் போவதாக அறிவிக்கும் போது அவர் பயன்படுத்திய வார்த்தைகள், இஸ்ரேலின் நடத்தையை விமர்சிப்பவர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படுகிறது. "காஸா பகுதியில் முழு முற்றுகைக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மின்சாரம் இருக்காது, உணவு இல்லை, எரிபொருள் கிடையாது. எல்லாமே மூடப்படும். நாங்கள் மிருகங்களை எதிர்த்து போரிடுகிறோம். அதற்கேற்ப செயல்படுகிறோம்,” என்று ஹமாஸ் தாக்குதல்களுக்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு அக்டோபர் 7ஆம் தேதி கேலன்ட் கூறினார். "மனிதர்கள் உயிர்வாழ இன்றியமையாத பொருட்களை, காஸாவின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள குடிமக்களிடமிருந்து, இஸ்ரேல் வேண்டுமென்றே பறித்துள்ளது" என்று கான் தனது அறிக்கையில் எழுதியுள்ளார். காஸாவின் சில பகுதிகளில் பஞ்சம் நிலவுவதாகவும், மற்ற பகுதிகளுக்கும் அது நிச்சயம் பரவும் என்றும் அவர் கூறுகிறார். பஞ்சம் ஏற்பட்டுள்ளது என்ற கூற்றை இஸ்ரேல் மறுத்துள்ளது. உணவுப் பற்றாக்குறை தங்கள் முற்றுகையால் ஏற்பட்டது அல்ல என்றும் மாறாக ஹமாஸின் திருட்டு மற்றும் ஐ.நாவின் திறமையின்மையால் ஏற்பட்டது என்றும் இஸ்ரேல் கூறுகிறது. ஹமாஸின் அரசியல் பிரிவின் தலைவரான இஸ்மாயில் ஹனியேவுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டால், மூத்த அரபுத் தலைவர்களை சந்திக்க தான் மேற்கொள்ளும் வழக்கமான பயணங்களைப் பற்றி அவர் யோசிக்க வேண்டியிருக்கும். அவர் கத்தாரில் உள்ள தனது தளத்தில் இனி அதிக நேரத்தை செலவிடுவார் என்று கூறப்படுகிறது. இஸ்ரேலைப் போலவே கத்தாரும், ஐசிசியை நிறுவிய ரோம் சட்டத்தில் கையெழுத்திடவில்லை. மற்ற இரண்டு குற்றம் சாட்டப்பட்ட ஹமாஸ் தலைவர்கள், யாஹ்யா சின்வார் மற்றும் முகமது டெய்ஃப் ஆகியோர் காஸாவிற்குள் எங்கோ மறைந்திருப்பதாக நம்பப்படுகிறது. கைது வாரண்ட் அவர்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தாது. இவர்களை கொல்ல கடந்த ஏழு மாதங்களாக இஸ்ரேல் முயற்சி செய்து வருகிறது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் மறைந்த லிபிய கர்னல் முயம்மர் கதாஃபி ஆகியோரையும் உள்ளடக்கிய குற்றஞ்சாட்டப்பட்ட தலைவர்களின் பட்டியலில் நெதன்யாகுவையும் சேர்க்க இந்த வாரண்ட் வழிவகுக்கும். யுக்ரேனில் இருந்து ரஷ்யாவிற்கு குழந்தைகளை சட்டவிரோதமாக நாடு கடத்தியதற்காக புதின் வாரண்டை எதிர்கொள்கிறார். நிராயுதபாணியான பொதுமக்களைக் கொன்றதற்காகவும், சித்திரவதை செய்ததற்காகவும், தனது மக்களாலேயே கொல்லப்பட்ட கர்னல் கதாஃபிக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்படுவது, தனது ஜனநாயகத்தின் மீது கர்வம் கொள்ளும் ஒரு நாட்டின் தலைவரான பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்காது. https://www.bbc.com/tamil/articles/crggdrvnmx3o
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல், ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை - வரவேற்கின்றது பிரான்ஸ் Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 10:20 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஹமாஸ் தலைவர்களிற்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கவேண்டும் என ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளதை பிரான்ஸ் வரவேற்றுள்ளது. ஐசிசியின் வழக்குரைஞர் தனது வேண்டுகோளிற்கு ஆதரவாக சமர்ப்பிக்கும் ஆதாரங்களை ஆராய்ந்த பின்னர் விசாரணைக்கு முந்தைய நீதிமன்றம் இஸ்ரேல் தொடர்பில் தனது முடிவை எடுக்கலாம் என பிரான்சின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் சுதந்திரம் தண்டனையிலிருந்து விலக்களித்தல் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை பிரான்ஸ் ஆதரிக்கின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த பல மாதங்களாக சர்வதேச மனிதாபிமான சட்டங்களை இறுக்கமாக பின்பற்றவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்துள்ளதாக தெரிவித்துள்ள பிரான்ஸ், காசா பள்ளத்தாக்கில் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதையும் மனிதாபிமான உதவிகள் மறுக்கப்படுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வேண்டுகோள் தொடர்பில் மேற்குலகின் ஏனைய நாடுகளின் நிலைப்பாட்டிற்கும் பிரான்ஸ் நிலைப்பாட்டிற்கும் இடையில் பெரும் வேறுபாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184108
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
வலுவான கொல்கத்தாவை சன்ரைசர்ஸ் அணியின் சூறாவளி பேட்டிங் சாய்க்குமா? பிளேஆஃபில் இன்று மோதல் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் 35 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 2024 சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் தகுதிச் சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. எந்த ஆடுகளம்? பட மூலாதாரம்,GETTY IMAGES இரு அணிகளிலும் பவர் ஹிட்டர் பேட்டர்கள் அதிகம் இருப்பதால், இன்று நடக்கும் ஆட்டத்தில் ரன் மழைக்கு எந்தக் குறையும் இருக்காது, வாண வேடிக்கைக்கும் பஞ்சமிருக்காது. ஆனால் எந்த ஆடுகளத்தைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பதில்தான் ஆட்டத்தின் ஸ்வாரஸ்யம் இருக்கிறது. ஏனென்றால் ஆமதாபாத்தில் உள்ள இரு விக்கெட்டுகளில் சிவப்பு மண் கொண்ட விக்கெட் பேட்டர்களுக்கு சாதகமானது. பந்து நன்றாக பவுன்ஸ் ஆகி, பேட்டர்களை நோக்கி நன்கு வரும். முதலில் பேட் செய்யும் அணி 200 ரன்களுக்கு மேல் அடிக்க முடியும். சேஸிங்கும் சுவாரசியமாக இருக்கக் கூடிய விக்கெட். ஆனால், கறுப்பு மண் கொண்ட விக்கெட்டில் 165 ரன்களைக் கடப்பதே பெரும்பாடாக இருக்கும். சுழற்பந்துவீச்சாளர்களுக்கு ஏற்ற மெதுவான விக்கெட்டாக இருக்கும். இதுவரை நேருக்கு நேர் பட மூலாதாரம்,SPORTZPICS இரு அணிகளும் ஐபிஎல் தொடரில் இதுவரை 26 முறை மோதியுள்ளன. இதில் கொல்கத்தா 17 முறை வெற்றி பெற்றுள்ளது, சன்ரைசர்ஸ் 9 முறை தான் வெற்றுள்ளது.இந்த சீசனில் இரு அணிகளும் ஒரு முறை மோதிக்கொண்ட ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியை 4 ரன்களில் தோற்கடித்தது கொல்கத்தா அணி. சம வலிமையில் அணிகள் பட மூலாதாரம்,SPORTZPICS பந்துவீச்சு, பேட்டிங்கில் இரு அணிகளும் சம வலிமை பெற்ற அணிகளாகத் திகழ்வதால் எந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. கொல்கத்தா அணியில் பில் சால்ட் இங்கிலாந்து புறப்பட்டதால் அவருக்குப் பதிலாக ஆப்கானிஸ்தான் விக்கெட் கீப்பர் குர்பாஸ் சேர்க்கப்பட்டுள்ளார். சுனில் நரைனின் மிரட்டல் ஃபார்ம், ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் அய்யர், ரிங்கு சிங், ரஸல், ராமன்தீப் சிங் என பேட்டிங்கில் வலிமையான படை இருக்கிறது. அதேபோல சன்ரைசர்ஸ் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, மார்க்ரம், நிதிஷ்குமார் ரெட்டி, கிளாசன், அப்துல் சமது என தரமான பவர் ஹிட்டர்கள் உள்ளனர். கொல்கத்தாவில் குர்பாஸ் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரஹ்மனுல்லா குர்பாஸ் இதில் கொல்கத்தா அணியில் முதல்முறையாக ரஹ்மனுல்லா குர்பாஸ் இன்று களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்துக்குப்பின் இவர் எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல சன்ரைசர்ஸ் அணிக்கு 3வது இடத்தில் ராகுல் திரிபாதி ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு வலிமையாகும். இந்த சீசனில் இரு அணிகளும் விளையாடியபோது அந்த ஆட்டத்தில் டிராவிஸ் ஹெட் சன்ரைசர்ஸ் அணியில் சேர்க்கப்படவில்லை. இதனால் இந்த ஆட்டத்தில் ஹெட் களமிறங்கி நரைன், வருண் சக்ரவர்த்தி பந்துவீச்சை எதிர்கொள்வது சுவாரசியம் மிகுந்ததாக இருக்கும். கம்மின்ஸ் - ஸ்டார்க் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாட் கம்மின்ஸ் சன்ரைசர்ஸ் அணியில் பாட் கம்மின்ஸ் எனும் உலகத் தரமான பந்துவீச்சாளர் இருப்பதைப் போல், கொல்கத்தா அணியில் மிட்ஷெல் ஸ்டார்க் இருப்பது போட்டியின் சுவாரசியத்தை மேலும் அதிகப்படுத்தும். இது தவிர கொல்கத்தா அணியில் ஹர்சித் ராணா, வைபவ் அரோரா, ரஸல் ஆகியோரும் வேகப்பந்துவீச்சுக்கு இருக்கிறார்கள். சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன், புவனேஷ்வர் குமார், நிதிஷ்குமார் ரெட்டி ஆகிய வேகப் பந்துவீச்சாளர்களும் இருப்பது போட்டியை சமநிலைப்படுத்தும். நரைன், வருண்- விஜயகாந்த் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் நரைன் சுழற்பந்துவீச்சிலும் இரு அணிகளும் சம வலிமையோடு களமிறங்குகின்றன. கொல்கத்தா அணியில் சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி இருப்பதைப் போல், சன்ரைசர்ஸ் அணியில் இலங்கை வீரர் விஜயகாந்த், ஷாபாஸ் அகமது இருவரும் இருக்கிறார்கள். இதில் சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சாளர்களை விட கொல்கத்தாவின் சுழற்பந்துவீச்சு மேம்பட்டதாக இருக்கிறது. இம்பாக்ட் ப்ளேயர் முக்கிய பங்கு பட மூலாதாரம்,GETTY IMAGES இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா அணி இம்பாக்ட் ப்ளேயராக பேட்டிங்கை வலிமைப்படுத்த நிதிஷ் ராணாவையும், பந்துவீச்சில் இடதுகை சுழற்பந்துவீச்சாளர் அங்குல் ராய் அல்லது வைபவ் அரோரா இருவரில் ஒருவரை ஆடுகளத்தின் தன்மையைப் பொருத்து பயன்படுத்தலாம். அதேபோல சன்ரைசர்ஸ் அணி இம்பாக்ட் ப்ளேயராக தமிழக வீரர் நடராஜன், அல்லது சுழற்பந்துவீச்சாளர் விஜயகாந்த் இருவரில் ஒருவரை பயன்படுத்தக்கூடும். முக்கியத்துவமான ஆட்டம் என்பதால், எய்டன் மார்க்ரம் அணியில் வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மார்க்ரம் அணிக்குள் வரும் பட்சத்தில் ஷாபாஸ் அகமது அல்லது விஜயகாந்த் அமரவைக்கப்படலாம். மார்க்ரம் வரும்போது பேட்டிங் வரிசை வலுப்படும், சுழற்பந்துவீச்சுக்கும் உதவுவார். குறிப்பாக கொல்கத்தாவின் இடதுகை பேட்டர்களுக்கு எதிராக மார்க்ரம் ஆஃப் ஸ்பின் நன்கு எடுபடும். இது தவிர பந்துவீச்சில் இடதுகை பந்துவச்சாளர் தேவை எனும் பட்சத்தில் ஜெயதேவ் உனத்கட் வருவதற்கும் வாய்ப்புள்ளது. ரிங்கு சிங் மீது எதிர்பார்ப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ரிங்கு சிங் கொல்கத்தா அணியில் ரிங்கு சிங்கிற்கு 2023 சீசனைப் போல் இல்லாமல், இந்த சீசன் பெரிதான வாய்ப்புகளை வழங்கிய சீசனாக அமையவில்லை. அதனால்தான் அவரால் இந்திய அணியிலும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலும் இடம் பெற முடியவில்லை. இந்த சீசனில் ரிங்கு சிங் 11 இன்னிங்ஸ்களில் 113 பந்துகளை மட்டுமே சந்தித்து, 168 ரன் சேர்த்துள்ளார். ஃபினிஷர், பவர் ஹிட்டராகக் கருதப்படும் ரிங்கு சிங் ஆட்டம் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. நடராஜன் மிரட்டல் ஃபார்ம் பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோல, சன்ரைசர்ஸ் அணியில் நடராஜன் பந்துவீச்சு பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் மோசமாகப் பந்துவீசிய நிலையில் நடராஜன் பந்துவீச்சு மட்டுமே சிறப்பாக இருந்தது. யார்கர் மட்டும் நடராஜன் தற்போது வீசாமல், ஸ்லோ பவுன்ஸர், ஷார்ட் பால் போன்றவற்றை வீசும் வித்தைகளை கற்றுள்ளார். குறிப்பாக நடுப்பகுதி, டெத் ஓவர்களில் நடராஜன் பந்துவீச்சு இன்றைய ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். ஆடுகளம் எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானம் ஆமதாபாத்தில் இரு விதமான ஆடுகளங்களில் எதை பயன்படுத்தப்போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஆடுகளம் பயன்படுத்துவதைப் பொருத்துதான் இரு அணிகளிலும் வீரர்கள் தேர்வுகூட அமையலாம். சிவப்பு மண் கொண்ட தட்டையான ஆடுகளத்தை தேர்வு செய்தால், நிச்சயமாக ஸ்கோர் 200 ரன்களைக் கடக்கும். இந்த ஆடுகளத்தில் 200 ரன்கள் இருமுறை சேஸிங் செய்யப்பட்டு அதிகபட்சமாக 231 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளது. ஆட்டத்துக்கு சுவாரசியத்தைக் கூட்ட வேண்டுமென்றால் இந்த ஆடுகளத்தை பயன்படுத்தலாம். கறுப்பு மண் கொண்ட ஆடுகளம் மெதுவானது. பேட்டர்கள் பெரிதாக எந்த ஷாட்களையும் அடிக்க முடியாத கடுமையான ஆடுகளம். சுழற்பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செய்யும் இந்த ஆடுகளத்தில் ஆட்டம் நடந்தால் 165 ரன்களைக் கடப்பதே சிரமம். டாஸ் முக்கியப் பங்கு பட மூலாதாரம்,SPORTZPICS இன்றைய டாஸ் ஆட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கும். சிவப்பு மண் கொண்ட ஆடுகளத்தில் இதுவரை 6 போட்டிகள் நடந்துள்ளன. அதில் 2 போட்டிகளில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த அணிகள் வென்றுள்ளன. பெரிய ஸ்கோரை அடித்தாலும் டிபெண்ட் செய்ய முடியும், இரவு நேரத்தில் பனிப்பொழிவும் பெரிதாக இருக்காது. சன்ரைசர்ஸ் அணியும் இதுவரை பெற்ற வெற்றிகளில் 2 மட்டுமே சேஸிங் மூலம் பெற்றுள்ளது. மற்ற 5 வெற்றிகளுமே முதலில் பேட் செய்து டிபெண்ட் செய்துதான் வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட் செய்து பெரிய ஸ்கோரை அடித்து அதை டிபெண்ட் செய்வதைத்தான் சன்ரைசர்ஸ் விரும்புகிறது, அதுதான் அந்த அணிக்கு வசதியாக இருக்கிறது. சன்ரைசர்ஸ் முதலில் பேட் செய்த போது ரன்ரேட், சேஸிங் செய்தபோது இருந்ததைவிட 1.07 சதவீதம் அதிகமாக இருக்கிறது. கொல்கத்தா அணி இந்த சீசனில் 3 முறை சேஸிங் செய்து வென்றுள்ளது. 6 முறை ஸ்கோரை டிபெண்ட் செய்துள்ளது. ஆனால், இன்றைய ஆட்டத்தில் ஒருவேளை கொல்கத்தா டாஸ் வென்றால், முதலில் பேட் செய்யும் வாய்ப்பை சன்ரைசர்ஸ் அணிக்கு நிச்சயம் வழங்காது. ஆதலால் இன்று டாஸ் யார் வெல்லப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சுனில் நரைன் - புவனேஷ்வர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுனில் நரைன் இந்த சீசனில் கொல்கத்தா அணிக்கு யானை பலத்தை தரும் ஆல்ரவுண்டராக சுனில் நரைன் இருந்து வருகிறார். இந்த சீசனில் சதம் அடித்து 400 ரன்களுக்கு மேல் குவித்துள்ளார். கொல்கத்தா அணி மாபெரும் வெற்றிகளைப் பெற்றதற்கு சுனில் நரைன், பில்சால்ட் கூட்டணி முக்கியக் காரணம். சுனில் நரைன் களத்தில் இருந்தாலே கொல்கத்தாவுக்கு பாதி வெற்றியை உறுதி செய்துவிடுகிறார். ஆதலால் இன்றைய ஆட்டத்தில் சுனில் நரைனை வீழ்த்த சன்ரைசர்ஸ் பெரிய திட்டத்தோடு வரும். குறிப்பாக, ஐபிஎல்லில் இதுவரை பவர்ப்ளேயில் புவனேஷ்வர் ஓவரில் 34 பந்துகளில் நரைன் 31 ரன்கள் மட்டுமே சேர்த்து ஒருமுறை விக்கெட்டை இழந்துள்ளார். ஆதலால், இந்த முறை நரைனுக்கு எதிராக புவனேஷ்வரின் ஸ்விங் பந்துவீச்சை ஆயுதமாக சன்ரைசர்ஸ் பயன்படுத்தும். அதேபோல ஸ்ரேயாஸ், வெங்கேடஷ் இருவருமே ஸ்விங் பந்துவீச்சை விளையாடக் கூடிய அளவுக்கு பெரிய பேட்டர்கள் இல்லை. ஆதலால் இருவருக்கு எதிராகவும் புவனேஷ்வர் பெரிய துருப்புச்சீட்டாக இருப்பார். ஸ்ரேயாஸ் அய்யரை மட்டும் 3 முறை புவனேஷ்வர் ஆட்டமிழக்கச் செய்துள்ளார். அதேசமயம் குர்பாஸுக்கு எதிராக 4 பந்துகள் வீசிய புவனேஷ் 2 முறை விக்கெட் எடுத்துள்ளார், ஒரு ரன்கூட வழங்கவில்லை. இது சன்ரைசர்ஸ் அணிக்கு கூடுதல் போனஸ். திட்டங்கள் தேவை பட மூலாதாரம்,SPORTZPICS படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் கொல்கத்தா அணி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் சன்ரைசர்ஸ் அணியின் டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, கிளாசன் மூவரும் கொல்கத்தாவுக்கு பெரிய தலைவலியை ஏற்படுத்தலாம். பஞ்சாப் அணிக்கு எதிராக ஹெட் டக்அவுட் ஆன பின்பும், அபிஷேக் தனது அதிரடியை நிறுத்தாமல் வெளுத்து கட்டினார். அதிலும் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக ஈவு இரக்கமின்றி அபிஷேக் விளையாடக் கூடியவர். அதலால், நரைன், வருணுக்கு எதிராக அபிஷேக்கின் பேட்டிங் பெரிதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட் சுழற்பந்துவீச்சுக்கு எதிராக பலவீனமானவர். ஆனால் வேகப்பந்துவீச்சை வெளுத்துவிடுவார் என்பதால், இருவருக்கும் பல உத்திகளை வகுக்கவேண்டிய கட்டாயத்தில் கொல்கத்தா இருக்கிறது. சன்ரைசர்ஸ் அணிக்கு நடுவரிசையில் தூணாக செயல்படுபவர் ஹென்ரிச் கிளாசன். கொல்கத்தா அணி கிளாசனுக்கு எதிராக யாரைப் பயன்படுத்தப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. சுழற்பந்துவீச்சு, இடதுகை வேகப்பந்துவீச்சை கிளாசன் புரட்டி எடுப்பார் என்பதால், ரஸல் பந்துவீச்சை தான் கொல்கத்தா கையில் எடுக்கக்கூடும். ஏனென்றால் பந்துவீச்சில் வேரியேஷன்களை வெளிப்படுத்தக் கூடியவராக ரஸல் இருக்கிறார். ரஸலை வீழ்த்தும் ஆயுதம் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆந்த்ரே ரஸல் கொல்கத்தா அணிக்கு நடுவரிசையில் பலமாகவும், பந்துவீச்சில் ஆபத்பாந்தவனாக இருப்பவர் ஆந்த்ரே ரஸல். தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் விஸ்வரூபமெடுத்து ரஸல் விளையாடக்கூடியவர். கொல்கத்தாவுக்கு ஃபினிஷ் செய்யும் நேரத்தில் ரஸலின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருக்கிறது. அனைத்து பந்துவீச்சுக்கு எதிராக துவம்சம் செய்யும் ஆட்டத்தை வெளிப்படுத்தும் ரஸல், லெக் ஸ்பின்னுக்கு எதிராக பெரிதாக இதுவரை ஸ்கோர் செய்யவில்லை. 28 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ஒருமுறை லெக்ஸ்பின்னில் ரஸல் ஆட்டமிழந்துள்ளார். ரஸல் களத்துக்கு வருவதைப் பொருத்து சன்ரைசர்ஸ் அணி லெக் ஸ்பின்னர் விஜயகாந்தை கொண்டுவரும். இந்த ஆட்டத்தில் எந்த அணி வெல்லும், யார் ஆதிக்கம் செய்வார்கள் என்று கணிக்க முடியாத அளவுக்கு இரு அணிகளும் சம வலிமை படைத்தவர்களாக இருப்பதுதான் போட்டியின் உச்சகட்ட சுவாரசியம். https://www.bbc.com/tamil/articles/c9wwpxpkz0ko
-
நிவேதா: பெற்றோர் கைவிட்டும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நெகிழ்ச்சிக் கதை
திருநங்கை நிவேதா: பெற்றோர் கைவிட்டும் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நெகிழ்ச்சிக் கதை படக்குறிப்பு,திருநங்கை நிவேதா கட்டுரை தகவல் எழுதியவர், ஹேமா ராகேஷ் பதவி, பிபிசி 20 மே 2024 "என்னை திருநங்கையாக உணர்ந்த தருணத்தில் நான் 9-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னை வீட்டில் இருந்து வெளியே அனுப்பி விட்டார்கள். செய்வதறியாது சாலையில் சுற்றிக் கொண்டிருந்த நான் இன்று பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறேன்," என்று நெகிழ்ச்சியாகக் கூறுகிறார் திருநங்கை நிவேதா. தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய திருநங்கை நிவேதா தேர்ச்சி பெற்றுள்ளார். அவர் தனது கதையை பிபிசியிடம் பகிரிந்துகொண்டார். "எனக்குச் சொந்த ஊர் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை. நான் 9-ஆம் வகுப்பு வரை பெற்றோருடன் தான் வசித்து வந்தேன். 9-ஆம் வகுப்பு படிக்கும் போது தான் என் உடலில் மாற்றங்களை உணரத்தொடங்கினேன். ஆனால் என் பெற்றோருக்கு அது பற்றிய புரிதல் இல்லாத காரணத்தினாலும் என் பள்ளியில் சக மாணவர்கள் என்னைத் தொடர்ந்து கிண்டல்கள் செய்து வந்ததாலும் நான் பெரும் விரக்தி அடைந்தேன்," என்கிறார். அதன்பிறகு அவரது பெற்றோர் வீட்டில் வெளியேறியதாகக் கூறுகிறார் நிவேதா. "முதலில் எனக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை. கையில் காசு இல்லாததால் பசியோடு சாலையில் சுற்றித் திரிந்தேன். அப்போது தான் அனுஸ்ரீயை சந்தித்தேன். அதுதான் வாழ்வின் திருப்புமுனை," என்கிறார் நிவேதா. தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்கிறார் அனுஸ்ரீ. ஒரு விழாவில் நிவேதாவை பார்த்த அவர், குடும்பத்தைப் பற்றி விசாரிக்க, அப்போது தான் வீட்டில் இருந்து வெளியே வந்து விட்டதாக கூறியிருக்கிறார் நிவேதா. இனி என்ன செய்யப்போகிறாய், என்று கேட்டதும் 'எனக்குப் படிக்க வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறது, என்னை படிக்க வைப்பீர்களா?' என அவர் கேட்க, அப்போது தான் நிவேதாவுக்கு படிப்பின் மீது பெரும் ஆர்வம் இருக்கிறது என்று புரிந்து கொண்டார் அனுஸ்ரீ. 'என்னால் பள்ளியில் படிக்க முடியுமா?' தனது கதையை மேலும் தொடர்ந்த நிவேதா, "நான் அனுஸ்ரீ அக்காவிடம் 'எனக்குப் படிக்க வேண்டும்' என்று சொன்னவுடன், நிச்சயமாக அதற்கான முயற்சிகளை எடுப்பேன் என்று உறுதியளித்தார். அதன்பிறகு எனக்குத் திருநங்கைகள் குறித்தும், அவர்களைப் பற்றிய சமூக புரிதல் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார்," என்றார். "அதுவரை நானும் திருநங்கைகள் என்றாலே யாசகம் செய்ய வேண்டும் அல்லது பாலியல் தொழிலுக்குச் செல்ல வேண்டும் என்று தான் நினைத்து வருந்தினேன். அனுஸ்ரீயை பார்த்த பிறகுதான் எனக்கு வாழ்வின் மீது சிறு நம்பிக்கை கீற்று பிறந்தது," என்றார் நிவேதா. நிவேதா குறித்து நம்மிடம் பேசிய அனுஸ்ரீ, தன்னைப் பார்த்ததும் நிவேதா தன்னை படிக்க வைக்க முடியுமா என்று கேட்டதாகச் சொல்கிறார். படிப்பின் மீது அவருக்கு இருக்கும் ஆர்வம் தெரிந்ததும் நிச்சயம் அவரை படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்ததாகச் சொல்கிறார். "அதன் பிறகு அவளுக்காகப் பள்ளியை தேர்வு செய்வது எப்படி என்று ஆலோசனை நடத்தினோம். ஏனென்றால் ஏற்கனவே அவளுக்கு பள்ளியில் கசப்பான அனுபவங்கள் இருந்திருக்கிறது. அதனால் இருபாலர் பள்ளியைத் தவிர்த்துப் பெண்கள் பள்ளியைத் தேடத் துவங்கினோம். ஆனால் பல பள்ளிகளில் எங்கள் விண்ணப்த்தை ஏற்றுக் கொள்ளவில்லை. காரணம் திருநங்கைகள் பற்றிய புரிதல் பெரும்பாலோனோருக்கு இல்லை," என்கிறார் அனுஸ்ரீ. "திருநங்கைகளைப் பள்ளியில் சேர்த்தால் மற்ற மாணவர்களுக்குப் பிரச்னை வரும் என்றே பெரும்பாலானோர் நினைத்தார்கள். அதனாலேயே காலங்கள் கடந்து கொண்டே போனது. அதன் பிறகு இறுதியாக திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் விண்ணப்பத்தை வாங்கினோம். ஆனால் முதலில் அவர்களுமே தயங்கினார்கள் என்கிறார் அனுஸ்ரீ. படக்குறிப்பு,அனுஸ்ரீ (இடது) மாணவர் தலைவியான நிவேதா அந்தப் பள்ளியில் சேர்ப்பதற்கும் பல்வேறு அலுவலகங்களில் அனுமதி வாங்கச் சென்ற பிறகே, இறுதியாக சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட உயர்கல்வி அலுவலர் திருமதி பிரியா அனுமதி கடிதம் கொடுத்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல், இதுபோன்று வேறு திருநங்கைகள் படிக்க வேண்டும் என்று நினைத்தாலும் என்னுடைய அலுவலகம் வாருங்கள் நாங்கள் உதவி செய்கிறோம் என்று சொல்லி இருக்கிறார். அதன் பிறகே நிவேதாவுக்கு பள்ளியில் அட்மிஷன் கிடைத்திருக்கிறது. "பள்ளியில் அட்மிஷன் கிடைத்த பிறகு நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தோம். பள்ளி நிர்வாகமும் நிவேதாவிற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள். பள்ளியில் அவளுக்கு எந்த அசவுகரியமும் ஏற்படாமல் பார்த்துக் கொண்டார்கள்," என்கிறார் அனுஸ்ரீ. தொடர்ந்து 10, 11, 12 ஆகிய மூன்று வகுப்புகளிலும் பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்கிறார் நிவேதா. கடந்த 2 வருடங்களாக அப்பள்ளி மாணவர்கள் அனைவரும் வாக்களித்து தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர் தலைவியாக நிவேதாவைத் தேர்ந்தெடுத்திருக்கின்றனர். "இது எங்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது. டியூஷன் எங்கும் செல்லாமல், தொடர்ந்து 3 வருடங்கள் இடைநிற்காமல் படித்து, தமிழ்நாட்டில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஒரே திருநங்கை என்ற சாதனையை நிவேதா படைத்திருப்பது எங்கள் திருநங்கை சமூகத்திற்கே கிடைத்த வெற்றியாகப் பார்க்கிறேன்," என்கிறார் அனுஸ்ரீ. 'மருத்துவர் ஆவதே கனவு' நிவேதாவின் இந்த வெற்றியில் அவருடைய பாட்டிக்கும் பங்கு இருக்கிறது. 15 வயதில் திக்கற்று இருந்த நிவேதாவை திருநங்கை சாம்பவி தன்னுடைய பேத்தியாக தத்தெடுத்து இருக்கிறார். "என்னுடைய பேத்தியாக நிவேதாவை தத்தெடுத்து என் வீட்டிலேயே அவளை தங்க வைத்தேன். 10X10 அளவு கொண்ட அறையில் என்னோடு சேர்த்து 7 திருநங்கைகள் வசித்து வருகிறார்கள்," என்கிறார் அவர். "அந்த அறையில் தான் நாங்கள் அனைவரும் தூங்க வேண்டும். பல இன்னல்களுக்கு மத்தியில், பல இரவுகள் எல்லாம் தூங்காமல் படித்திருக்கிறார் நிவேதா. நாங்கள் அனைவரும் சேர்ந்து பட்ட கஷ்டத்துக்கு இன்று அவளுடைய தேர்ச்சி மூலமாக பலன் கிடைத்திருக்கிறது,” என்று கூறுகிறார் சாம்பவி. மாணவி நிவேதாவிற்கு மருத்துவராகும் கனவு இருக்கிறது. அதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். மருத்துவராகி திருநங்கைகளுக்கு தரமான மருத்துவ சேவைகள் தர வேண்டும் என்பதே தனது விருப்பம் என்கிறார் நிவேதா. https://www.bbc.com/tamil/articles/cd11494ljr1o
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் தலைவருக்கு எதிராக பிடியாணை - ஐசிசியின் வழக்குரைஞர் வேண்டுகோள் Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 06:16 AM 2023 ஒக்டோபர் ஏழாம்; திகதிக்கு பின்னர் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்காக இஸ்ரேலிய பிரதமருக்கும் ஹமாஸ் தலைவருக்கும் எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சிஎன்என்னிற்கு வழங்கிய பேட்டியில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குரைஞர் கரிம்கான் இதனை தெரிவித்துள்ளார். பெஞ்சமின் நெட்டன்யாகு, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட், ஹமாசின் தலைவர்கள் யஹ்யா சின்வர், முகமட் டெய்வ், இஸ்மாயில் ஹனியா ஆகியவர்களிற்கு எதிராக பிடியாணையை பிறப்பிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவிற்கு ஆதரவான அரசியல்வாதியொருவரை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முதல்முறை இலக்கு வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் உக்ரைன் யுத்தத்திற்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் போன்றவர்களின் பட்டியலில் பெஞ்சமின்நெட்டன்யாகு இணைந்துகொண்டுள்ளார். இந்த பிடியாணை குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஆராயவுள்ளனர். https://www.virakesari.lk/article/184071
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
குஜராத்தில் இலங்கையர்கள் என கருதப்படும் ஐஎஸ் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்ட விவகாரம் - இந்தியாவிடம் மேலதிக விபரங்களை கோரியது இலங்கை Published By: RAJEEBAN 21 MAY, 2024 | 10:08 AM ஐஎஸ் அமைப்பபை சேர்ந்தவர்கள் என கருதப்படும் இலங்கையர்கள் நால்வர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளமை குறித்து இலங்கையின் தேசிய புலனாய்வு பிரிவு உடனடி விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ஐஎஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் இலங்கையை சேர்ந்த நால்வர் குஜராத்திற்கு செல்ல முற்பட்டவேளை அஹமதாபாத்தில் கைதுசெய்யப்பட்டமை குறித்தே விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த சந்தேகநபர்களின் பின்னணி குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் அவர்கள் உண்மையிலேயே ஐஎஸ் சந்தேகநபர்களா என விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் இந்தியாவின் புலனாய்வு பிரிவினரிடம் இலங்கை புலனாய்வு பிரிவினர் மேலதிக தகவல்களை கோரியுள்ளனர். இந்திய அதிகாரிகள் தகவல்களை வழங்கியதும் உடனடியாக மேலதிக நடவடிக்கைகளிற்கான அடுத்த கட்ட விசாரணைகள் ஆரம்பமாகும் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள நால்வரும் சில நாட்களிற்கு முன்னர் கொழும்பிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து குஜராத் சென்றுள்ளனர். அவர்களிற்கான அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பை ஏற்றிருந்த நபருக்காக காத்திருந்தவேளை இவர்கள் விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து அஹமதாபாத் விமானநிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் கையடக்க தொலைபேசிகளில் காணப்பட்ட மறைகுறியாக்கப்பட்ட உரையாடல்கள் செய்திகளை பொலிஸார் மீட்டுள்ளனர் அவர்கள் இலக்கை நோக்கி செல்வதற்கு முன்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விடயங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாக பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை தீவிரமாக எடுத்துள்ளோம் சந்தேக நபர்கள் குறித்த மேலதிக தகவல்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். இந்த அச்சுறுத்தலை கையாள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுக்கின்றோம் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/184106
-
இன்றைய வானிலை
களுத்துறையில் அதிக மழை வீழ்ச்சி பதிவு! Published By: DIGITAL DESK 3 21 MAY, 2024 | 09:23 AM நாட்டில் சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதனையடுத்து, பலத்த மழை வீழ்ச்சிக்கான சிவப்பு அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது. நேற்று திங்கட்கிழமை (20) காலை 8.30 மணி முதல் இன்று செவ்வாய்க்கிழமை (21) காலை 8.00 மணி வரையான காலப்பகுதியில் களுத்துறை மாவட்டத்தில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர பகுதியில் 107 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, களுத்துறை - இங்கிரிய பகுதியில் 79 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், பண்டாரகம பகுதியில் 77 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. அத்தோடு, புத்தளம் மாவட்டத்தில் மாதம்பே பகுதியில் 75 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும், கம்பஹா மாவட்டத்தின் கிரிந்திவெல பகுதியில் 72 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. https://www.virakesari.lk/article/184099
-
வட, கிழக்கில் நிலவும் பிரச்சினைகள் எனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கின்றன - மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் தெரிவிப்பு
Published By: DIGITAL DESK 3 21 MAY, 2024 | 08:41 AM (நா.தனுஜா) வட, கிழக்கில் தமிழ்மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அம்மாகாணங்களைச் சேர்ந்த பலரிடம் கேட்டறிந்ததாகவும், அவை தனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் தெரிவித்துள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை தொடர்ச்சியாக வலியுறுத்திவருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகின்றது. அந்தவகையில் மூன்று தசாப்தகால யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு கடந்த சனிக்கிழமையுடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், முதன்முறையாக தெற்காசியப்பிராந்தியத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், கடந்த வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடைந்தார். இவ்விஜயத்தின்போது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் (18) கலந்துகொண்ட அவர், பல்வேறு முக்கிய தரப்பினருடன் சந்திப்புக்களையும் நடாத்தியிருந்தார். அதன் ஓரங்கமாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் சிவில் சமூகப்பிரதிநிதிகளைச் சந்தித்த செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட், அவர்களிடம் நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் விரிவாகக் கேட்டறிந்துகொண்டார். மூன்று பிரிவாக நடைபெற்ற இச்சந்திப்புக்களில் ஒன்றில் கலந்துகொண்டிருந்த 'அரகலய' போராட்டக்காரர்கள் உள்ளிட்ட செயற்பாட்டாளர்களிடம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு நாட்டில் நிலவும் சுதந்திரம் மற்றும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோர் மீதான ஒடுக்குமுறைகள் என்பன தொடர்பில் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த அவர்கள், அமைதியான முறையில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்கள்மீது ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு முன்னரே அதற்கு எதிராகத் தடையுத்தரவு பெறப்படுவதாகவும், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமை மேலும் பல்வேறு வழிகளில் மறுக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டினர். அதேவேளை இச்செயற்பாட்டாளர்களில் அங்கம்வகித்த தனியொரு தமிழ் பிரதிநிதியான ராஜ்குமார் ரஜீவ்காந்த், நாட்டின் வட, கிழக்கு மாகாணங்களில் மக்கள் முகங்கொடுத்துவரும் பிரச்சினைகள் தொடர்பில் அக்னெஸ் கலமார்ட்டிடம் எடுத்துரைத்தார். குறிப்பாக அரசியல்கைதிகள் விவகாரம், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரம், இராணுவமயமாக்கல், தொல்பொருள் திணைக்களத்தின் துணையுடன் இடம்பெறும் காணி சுவீகரிப்புக்கள், பௌத்த சிங்களமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவர் விளக்கமளித்தார். அதுமாத்திரமன்றி விசேடமாக தமிழர் விவகாரத்தில் சர்வதேச மன்னிப்புச்சபை போன்ற சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் அரசுக்கு வலுவான அழுத்தம் பிரயோகிக்கவேண்டியது அவசியம் எனவும் அவர் செயலாளர் நாயகத்திடம் வலியுறுத்தினார். அவற்றை செவிமடுத்த அக்னெஸ் கலமார்ட், தாம் உரிய அழுத்தத்தை வழங்குவதாக உறுதியளித்தார். அத்தோடு வட, கிழக்கில் தான் பல்வேறு தரப்பினரை சந்தித்தாகவும், அவர்களிடம் பல விடயங்களைக் கேட்டறிந்துகொண்டதாகவும் தெரிவித்த அக்னெஸ் கலமார்ட், அவை தனக்குப் பெரிதும் அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/184098
-
வற்றாப்பளைக்கு இளைஞர்களை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் விபத்து; ஒருவர் பலி ; ஐவர் படுகாயம்
Published By: DIGITAL DESK 3 21 MAY, 2024 | 09:33 AM முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேராவில் வளைவு பகுதியில் உழவு இயந்திரம் பெட்டி குடை சாய்ந்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததுடன், ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை (20) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பொங்கல் நிகழ்வுக்கு உழவு இயந்திரத்தில் பயணித்த இளைஞர் குழுவே இந்த விபத்தினை சந்தித்துள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் உழவியந்திரம் ஒன்றில் வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த வேளை வேகமாக சென்ற உழவு இயந்திரம் தேராவில் வளைவு பகுதியில் திருப்ப முற்பட்டபோது பெட்டி கழன்று தடம் புரண்டுள்ளது. குறித்த விபத்தில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த 16 அகவையுடைய ர.மிதுசிகன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து இளைஞர்கள் படுகாயமடைந்த நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்கள். உயிரிழந்த இளைஞனின் உடலம் மூங்கிலாறு பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பாக புதுக்குடியிருப்பு போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகிறார்கள். https://www.virakesari.lk/article/184102
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
அண்ணை இலவசமாக தந்துவிட்டு கழிக்கத் தான் கவலையாக இருக்கு!
-
2024 ஜனாதிபதி தேர்தலில் தமிழ், முஸ்லிம் வாக்காளர்களின் ஆதரவை ரணிலால் மீண்டும் பெறமுடியுமா?
20 MAY, 2024 | 02:46 PM (டி.பி.எஸ். ஜெயராஜ்) இலங்கையில் உத்தியோகபூர்வ சனத்தொகை கணக்கெடுப்பு 2012ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது. அந்த கணக்கெடுப்பின் பிரகாரம், இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் சனத்தொகையில் 74.9 சதவீதத்தினராக இருந்தனர். எண்ணிக்கையில் இரண்டாவது பெரிய இனத்தவர்களான இலங்கைத் தமிழர்கள் 11.1 சதவீதத்தினராக இருந்தனர். மூன்றாவது பெரிய இனத்தவர்களான இலங்கை முஸ்லிம்கள் 9.3 சதவீதத்தினராகவும் நான்காவது பெரிய இனத்தவர்களான 'மலையகத் தமிழர்கள்' என்று அறியப்படும் இந்திய வம்சாவளித் தமிழர்கள் 4.1 சதவீதத்தினராகவும் இருந்தனர். எண்ணிக்கையில் சிறுபான்மை இனத்தவர்களான இலங்கைத் தமிழர்களும் முஸ்லிம்களும் இந்திய தமிழர்களும் சனத்தொகையில் 25.5 சதவீதத்தினராக விளங்கினர். இந்த மூன்று இனத்தவர்களும் இலங்கையின் சில மாவட்டங்களில் பெரும்பான்மையானவர்களாக விளங்குகிறார்கள். ஏனைய மாவட்டங்களில் இவர்கள் சனத்தொகையில் கணிசமான பிரிவினராக இருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தலில் சகல மாவட்டங்களிலும் உள்ள மக்களும் ஒன்றாக வாக்களிப்பதால் முழு இலங்கையுமே 'ஒரு தனித் தொகுதியாக' மாற்றப்படுகிறது. அதில் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்கள் 74.9 சதவீதத்தினராகவும் சிங்களவர்கள் அல்லாத ஏனைய இனத்தவர்கள் 25.5 சதவீதத்தினராகவும் அமைகின்றனர். அதனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சிமுறை அறிமுகப்படுத்தப்பட்ட நாட்களில் இருந்து மூன்று சிறுபான்மை இனத்தவர்களும் ஜனாதிபதி தேர்தல்களில் குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகித்திருக்கிறார்கள். முன்னைய ஜனாதிபதி தேர்தல்களில் தமிழர்களும் முஸ்லிம்களும் வகித்த பாத்திரத்தை பற்றி விரிவாக எனது முன்னைய கட்டுரையில் எழுதியிருந்தேன். நான் அண்மைய வாரங்களாக தொடர்ச்சியாக எழுதிவந்த கட்டுரைகளில் 2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கான தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தந்திரோபாயங்கள், திட்டங்கள் தொடர்பில் கவனம் செலுத்தினேன். அதனால் இன்றைய கட்டுரையில் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணிலுக்கு இருக்கக்கூடிய சாதக பாதகங்களை ஆராய்கிறேன். ஏற்கெனவே குறிப்பிட்டவாறு ரணில் இலங்கை தமிழ் வாக்காளர்கள் மத்தியிலும் முஸ்லிம் வாக்காளர்கள் மத்தியிலும் பொதுவில் செல்வாக்குடையவராக இருந்து வந்திருக்கிறார். அவர் நேரடியாகப் போட்டியிட்ட 1999 ஜனாதிபதி தேர்தலிலும் 2005 ஜனாதிபதி தேர்தலிலும் தமிழ், முஸ்லிம் வாக்காளர்கள் அவருக்கு பெருமளவில் வாக்களித்தார்கள். 2010, 2015, 2019 ஜனாதிபதி தேர்தல்களில் அவர் ஆதரித்த வேட்பாளர்களான சரத் பொன்சேகா, மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாச ஆகியோரை மூன்று சிறுபான்மை இனச்சமூகங்களும் உறுதியாக ஆதரித்தன. பெரிய அதிர்ச்சி 2020 பாராளுமன்ற தேர்தலில் பொதுவில் ஐக்கிய தேசிய கட்சிக்கும் குறிப்பாக ரணிலுக்கும் பெரிய அதிர்ச்சி கிடைத்தது. நாடு பூராவும் அந்த கட்சிக்கு 249, 435 வாக்குகள் (2.15 சதவீதம்) மாத்திரமே கிடைத்தன. நாட்டின் மிகவும் பழமை வாய்ந்த கட்சியின் சார்பில் வரலாற்றில் முதல் தடவையாக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் கூட தெரிவு செய்யப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக பல தசாப்தங்களாக கருதப்பட்ட கொழும்பு மாவட்டத்தில் அதற்கு 30,875 வாக்குகள் (2.61 சதவீதம்) மாத்திரமே கிடைத்தது. அந்த கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பிரிந்து சென்று சஜித் பிரேமதாசவின் தலைமையில் சமகி ஜன பலவேகயவை அமைத்ததே அந்த தேர்தல் அனர்த்தம் நேர்ந்ததற்கான பிரதான காரணமாகும். ராஜபக்சாக்கள் தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 2020 பாராளுமன்ற தேர்தலில் பெரு வெற்றியைப் பெற்ற அதேவேளை சமகி ஜன பலவேகய இரண்டாவதாக வந்தது. பிரேமதாச எதிர்க்கட்சி தலைவரானார். தமிழர்கள், முஸ்லிம்கள் மத்தியில் ரணிலுக்கு பல தசாப்தங்களாக பெருமளவு அரசியல் ஆதரவு இருந்துவந்த போதிலும் 2020 தேர்தல் நிலைவரத்தை மறுதலையாக்கிவிட்டது. சஜித் பிரேமதாச தலைமையில் பிரிந்து சென்ற அணியினர் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் பெருமளவு வாக்குகளைப் பெற்றனர். உண்மையில், சமகி ஜன பலவேகயவில் இருந்து தெரிவான பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் தமிழர்களும் முஸ்லிம்களுமாவர். சமகி ஜன பலவேகயவிடம் ஐக்கிய தேசிய கட்சி இழந்த தமிழ், முஸ்லிம் வாக்குகளை ரணிலினால் மீண்டும் பெறமுடியுமா என்பதே இந்த தருணத்தில் எழுகின்ற கேள்வி. 2024 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உதவ தமிழ் கட்சிகளினதும் முஸ்லிம் கட்சிகளினதும் அவற்றின் வாக்காளர்களினதும் ஆதரவை மீண்டும் ரணிலினால் பெறமுடியுமா? இது தொடர்பில் மூன்று பிரதான இனக் குழுமங்களில் ஒவ்வொன்றினதும் நிலைவரத்தை சுருக்கமாக ஆராய்வோம். சுயாதீனமான வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் கட்சி சார்பிலலாத சுயாதீனமான ஒரு வேட்பாளராக ரணில் போட்டியிடுவார் என்பது தெளிவானது. அரசியல் கட்சிகள், பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கள், தனிப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைப்புக்களைக் கொண்ட ஒரு கூட்டணி அவரை ஆதரிக்கும். ஆனால், ரணில் இந்த கூட்டணியின் வேட்பாளராக இருக்கப்போவதில்லை. பதிலாக, எந்த கட்சியையும் சாராத வேட்பாளராக களமிறங்கப்போகும் அவரை இந்த கூட்டணி ஆதரிக்கும். அதனால் மூன்று சிறுபான்மைச் சமூகங்களினதும் ஆதரவை எந்தளவுக்கு ரணிலினால் பெறமுடியும் என்பதை அவரை ஆதரிக்கும் தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் கட்சிகளினதும் எண்ணிக்கையை வைத்து மாத்திரமே கணிப்பிடக்கூடியதாக இருக்கும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முதலில் நாம் இந்திய வம்சாவளியினரான மலையகத் தமிழர்களை பார்ப்போம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸே மலையகத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரிய தொழிற்சங்கமும் பிரதான அரசியல் கட்சியுமாகும். ஜனாதிபதி ரணிலின் அரசாங்கத்தில் அந்த கட்சி இப்போது அங்கம் வகிக்கிறது. அதற்கு நுவரெலியா மாவட்டத்தில் இருந்து தெரிவான இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அதன் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவை உறுப்பினராக இருக்கின்ற அதேவேளை தலைவர் செந்தில் தொண்டமான் கிழக்கு மாகாண ஆளுநராக பதவி வகிக்கிறார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தேர்தலில் ரணிலை உறுதியாக ஆதரிக்கும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடனான ரணிலின் பிணைப்பு இந்த வருட மே தினத்தன்று மேலும் பலப்படுத்தப்பட்டது. காங்கிரஸின் மே தினப் பேரணி கொட்டகலையில் நடைபெற்றது. பிரமாண்டமான அந்த பேரணியில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ரணில் அங்கு அணிதிரண்டு நின்ற தொழிலாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்றை கொண்டுவந்தார். தோட்டத் தொழிலாளர்களின் தினச் சம்பளம் 1000 ரூபாவில் இருந்து 1700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது என்று தொழிலாளர்களின் பெரும் ஆரவாரத்துக்கு மத்தியில் ஜனாதிபதி அறிவித்தார். 700 ரூபாய் சம்பள அதிகரிப்பு 70 சதவீத அதிகரிப்புக்கு சமனானதாகும். அதை அறிவிக்கும் வர்த்தமானியின் பிரதியை மக்களுக்கு அவர் காட்டினார். மிகுந்த கஷ்டப்பட்டு அந்த வர்த்தமானி அறிவித்தலை ஏப்ரல் 30ஆம் திகதி ஜனாதிபதி வெளியிடச் செய்தார். 700 ரூபாய் சம்பள அதிகரிப்பு தோட்ட லயன் அறைகளையும் தாண்டி முழுச் சமூகத்தின் மீதும் நேர்மறையான தாக்கத்தைச் செலுத்தும். தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் மீது ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் இருக்கும் அக்கறையை அது வெளிக்காட்டும். தமிழ் முற்போக்கு கூட்டணி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மலையக தமிழர்களின் முதன்மையான அரசியல் கட்சியாக இருந்தபோதிலும் பாராளுமன்ற ஆசனங்களைப் பொறுத்தவரை அதற்கு ஒரு ஏகபோகம் கிடையாது. மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, பழனி திகாம்பரம் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் வீ. இராதாகிருஷ்ணன் தலைமையிலான மலையக மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளை உள்ளடக்கிய தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு பாராளுமன்றத்தில் பெரிய எண்ணிக்கையில் மலையக உறுப்பினர்கள் இருக்கிறார்கள். 2020 பாராளுமன்ற தேர்தலில் தமிழ் முற்போக்கு கூட்டணி சமகி ஜன பலவேகயவின் பட்டியலில் போட்டியிட்டு ஆறு ஆசனங்களை வென்றெடுத்தது. நுவரெலியாவில் மூன்று உறுப்பினர்களும் பதுளையிலும் கண்டியிலும் கொழும்பிலும் தலா ஒரு உறுப்பினரும் வெற்றி பெற்றனர். பதுளை மாவட்டத்தில் இருந்து தெரிவான அரவிந்தகுமார் 2020 ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துடன் இணைந்ததையடுத்து கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இப்போது ரணில் தலைமையிலான அரசாங்கத்தில் அவர் கல்வி இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கிறார். தமிழ் முற்போக்கு கூட்டணி இதுவரையில் சஜித் பிரேமதாசவின் சமகி ஜன பலவேகயவுடன் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியிலேயே இருக்கிறது. ஆனால், சமகி ஜன பலவேகயவின் அரவணைப்பில் அதிருப்தியின் குமுறல்களும் மனக்குறையின் முணுமுணுப்புககளும் இருக்கவே செய்கின்றன. சரியான நேரத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணி சமகி ஜன பலவேகயவில் இருந்து பிரிந்து ஜனாதிபதி தேர்தலில் ரணிலை ஆதரிக்கும் என்று பரவலாக ஊகிக்கப்படுகிறது. சஜித்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தெரிவித்த மறுப்பு இதற்கு சாத்தியமான அறிகுறியாகும். அவசரப்பட்டு சஜித்தின் கட்சியுடன் இணைந்துகொள்வதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்பவில்லை என்று தெரிகிறது. கூட்டணி அதற்கு இருக்கக்கூடிய தெரிவுகளைப் பரிசீலித்து பொருத்தமான நேரத்தில் முடிவொன்றை எடுக்க விரும்புகிறது. சுருக்கமாக சொல்வதானால் விரும்புகின்ற நேரத்தில் ரணிலுடன் சேருவதற்கான சுதந்திரம் தனக்கு இருக்கவேண்டும் என்று கூட்டணி விரும்புகிறது. இந்த விடயத்தில் கூட்டணி பிளவுபட்டு சில பாராளுமன்ற உறுப்பினர்கள் சஜித்துடன் தொடர்ந்து இருக்க வேறு சிலர் ரணிலுக்கு ஆதரவளிக்கலாம் என்றும் சிலர் கருதுகிறார்கள். ரணில் - சஜித் மோதல் ஐக்கிய தேசிய கட்சிக்கும் சமகி ஜன பலவேகயவுக்கும் இடையிலான தற்போதைய பிளவு அடிப்படையில் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையிலான தன்னகம்பாவ மோதலேயாகும். பெரிய கொள்கை வேறுபாடு எதுவும் இல்லை. கோட்பாட்டு ரீதியில் இருவரும் ஒன்றே. சமகி ஜன பலவேகய புதிய போத்தலில் உள்ள பழைய ஐக்கிய தேசிய கட்சியே. இரு கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுஜன பெரமுனவையும் ஜனதா விமுக்தி பெரமுனவைுயம் (ஜே.வி.பி.) எதிர்க்க வேண்டும் என்பதே கட்சித் தொண்டர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அடிமட்ட உணர்வு சமகி ஜன பலவேகயவின் தமிழ், முஸ்லிம் கட்சி அணிகள் மத்தியிலும் பிரதிபலிக்கிறது. இந்த காரணத்தினாலேயே ஐக்கிய தேசிய கட்சியையும் சமகி ஜன பலவேகயவையும் மீண்டும் ஐக்கியப்படுத்துவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் கடுமையாக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் நல்லிணக்க நிலை ஏற்படுமானால் இருவரில் எவருக்கு ஆதரவளிப்பது என்பதை தீர்மானிப்பதில் மனோவுக்கும் ஹக்கீமுக்கும் இருக்கும் சிக்கலுக்கும் தீர்வு கிடைத்துவிடும். ஆனால், இது சாத்தியமில்லை என்றே தெரிகிறது. அதனால் ரணிலை ஆதரிப்பதா, இல்லையா என்பதை தமிழ் முற்போக்கு கூட்டணி அண்மைய எதிர்காலத்தில் தீர்மானிக்க வேண்டியிருக்கும். இது கட்சிக்குள் பிளவை ஏற்படுத்தக்கூடும். வடிவேல் சுரேஷ் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும் புறம்பாக இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் செல்வாக்கு மிக்க செயலாளரான பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷிடமிருந்து ரணிலுக்கு உற்சாகம் கிடைத்திருக்கிறது. ரணிலை கைவிட்டு சஜித்துடன் இணைந்த சுரேஷ் அவருடன் முரண்பட்டுக்கொண்டார். இப்போது சுரேஷ் மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இருக்கிறார். அதன் மே தினப் பேரணி மேடையிலும் அவரைக் காணக்கூடியதாக இருந்தது. எனவே, மலையகத் தமிழர்களின் வாக்குகளைப் பொறுத்தவரையில், ரணில் ஓர் உறுதியான நிலையில் இருக்கிறார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் சில சக்திகளின் ஆதரவு அவருக்கு இருக்கிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இலங்கை முஸ்லிம்களை பற்றி பார்ப்போம். பிரதான முஸ்லிம் கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் முன்னர் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஆதரவளித்திருந்தாலும், அந்த கட்சி எதிரணியில் சமகி ஜன பலவேகயவுடனேயே தொடர்ந்து இருந்து வருகிறது. அண்மையில் சஜித் கேட்டுக்கொண்டபோதிலும், முஸ்லிம் காங்கிரஸும் சமகி பல ஜனவேகயவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடவில்லை. தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசனைப் போன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் ரணிலுக்கும் சஜித்துக்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை மீண்டும் ஐக்கியப்படுத்துவதற்கு கடுமையாக முயற்சித்து வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் ரணிலை ஆதரிக்கும் என்று முஸ்லிம் அரசியலை அவதானிப்பவர்கள் உணர்கிறார்கள். தான் என்ன செய்யப்போகிறார் என்பதை ஹக்கீம் மிகவும் இரகசியமாக வைத்திருக்கிறார் என்றபோதிலும் முஸ்லிம் காங்கிரஸின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் ரணிலை ஆதரிக்கவே விரும்புகிறார்கள். ஹக்கீம் தொடர்ந்தும் சஜித்துடனேயே இருப்பாரேயானால், இந்த உறுப்பினர்கள் அவருக்கு எதிராகக் கிளம்பக்கூடிய சாத்தியப்பாடு இருக்கிறது. வடமேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் நசீர் அஹமட் தனது முன்னைய கட்சியான முஸ்லிம் காங்கிரஸுக்குள் ரணிலுக்கு ஆதரவான கிளர்ச்சியொன்றை தூண்டிவிடக்கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறார். மக்கள் காங்கிரஸ் - தேசிய காங்கிரஸ் தேர்தல் அறிவிக்கப்படும்போது ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ரணிலை ஆதரிக்கும். சமகி ஜன பலவேகயவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு ரிஷாத்தும் மறுத்துவிட்டார். 'வியத்மகா' பாராளுமன்ற உறுப்பினர்களுடன் அணிசேருவது உட்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் சஜித்துடன் ரிஷாத்துக்கு ஏற்கெனவே அதிருப்தி இருக்கிறது. மக்கள் காங்கிரஸின் அதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்களான ரஹ்மானும் முஷாரப்பும் ரணில ஆதரிக்கிறார்கள். ஏ.எல்.எம். அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் ரணிலை உறுதியாக ஆதரிக்கிறது. அதாவுல்லா அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றின் முடிசூடா மன்னன். மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் கணிசமான ஆதரவைக் கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவும் ரணிலை ஆதரிப்பார். மூன்று முஸ்லிம் கட்சிகளினதும் அதிருப்தி பாராளுமன்ற உறுப்பினர்களும் ஹிஸ்புல்லா போன்ற செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகளும் ரணிலை ஆதரிப்பார்கள். மேலும், சமகி ஜன பலவேகய சார்பில் நேரடியாக தெரிவான கபீர் காசிம், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் போன்ற முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் சமகி ஜன பலவேகயவில் இருந்து பிரியும் பட்சத்தில் ரணிலை ஆதரிக்கக்கூடும். அதனால் ஜனாதிபதி தேர்தலில் ரணில் பெருமளவு முஸ்லிம் ஆதரவைப் பெறக்கூடிய சாத்தியம் இருக்கிறது. டக்ளஸ் - பிள்ளையான் இறுதியாக நாம் இலங்கைத் தமிழர்களைப் பற்றி பார்ப்போம். தனது சொந்த ஐக்கிய தேசிய கட்சிக்கு மேலதிகமாக தற்போது இரு தமிழ்க் கட்சிகளின் ஆதரவு ரணிலுக்கு கிடைப்பது நிச்சயம். டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழமக்கள் ஜனநாயக கட்சியும் (ஈ.பி.டி.பி.) பிள்ளையான் என்ற சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையிலான தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியும் ரணிலின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்றன. ஈ.பி.டி.பி.க்கு இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருககிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகள் பிள்ளையானுக்கே கிடைத்தன. தேவானந்தாவுக்கு வடக்கில் மட்டுப்படுத்தப்பட்ட ஆனால் உறுதியான வாக்குவங்கி இருக்கிறது. தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து 2018ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்த மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தற்போது ஒரு இராஜாங்க அமைச்சர். அவரும் ரணிலை ஆதரிக்கக்கூடியது சாத்தியம். 2020 பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் தெரிவான ஒரேயொரு உறுப்பினர் அங்கஜன் இராமநாதன். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகள் அவருக்கே கிடைத்தன. நிலைவரங்களைச் சீர்தூக்கிப் பார்த்து செயற்படுவதில் கெட்டிக்கார அரசியல்வாதியான அங்கஜன் சரியான நேரத்தில் ரணிலுடன் இணைந்துவிடக்கூடிய சாத்தியமும் இருக்கிறது. உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரன் 2022 ஜூலை 20 பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்கே வாக்களித்தார். அதனால் அவர் ரணிலை ஆதரிக்கக்கூடிய சாத்தியம் இருக்கிறது. ஆனால், உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிராத அவர் மீண்டும் மனதை மாற்றிக்கொள்ளக்கூடும். எது எப்படியிருந்தாலும் விக்னேஸ்வரனை பெரிதாக கருத்தில் எடுக்கவேண்டியதில்லை. ஏனென்றால், மக்கள் மத்தியில் அவருக்கு குறிப்பிடத்தக்க ஆதரவு இப்போது கிடையாது. அகில இலங்கை தமிழ் காங்கிரஸுக்கு இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால், அதன் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஜனாதிபதி தேர்தலில் பங்கேற்கமாட்டார். தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழர்களை அவர் கேட்டிருக்கிறார். தமிழ் தேசிய கூட்டமைப்பு இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் அணியான தமிழ் தேசிய கூட்டமைப்பு 2020 பாராளுமன்ற தேர்தலில் பத்து ஆசனங்களைப் பெற்றது. கூட்டமைப்பு இப்போது பிளவுபட்டு அதன் மூன்று அங்கத்துவ கட்சிகளில் இரு கட்சிகள் (ரெலோவும் புளொட்டும்) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) உட்பட வேறு மூன்று கட்சிகளுடன் சேர்ந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்திருக்கின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான இலங்கை தமிழ் அரசு கட்சி இப்போது தனித்து நிற்கிறது. கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் ஆறு பேர் தமிழ் அரசு கட்சியையும் மூவர் ரெலோவையும் ஒருவர் புளொட்டையும் சேர்ந்தவர்கள். முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எவ்வாறு நடந்துகொள்ளும் என்பதை இப்போதே கூறுவது கஷ்டம். ஏனென்றால், அவற்றில் எந்த கட்சியும் தங்களது எண்ணத்தை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னர் மாத்திரமே அவர்கள் தீர்மானத்தை எடுக்கக்கூடும். ஆனால், பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு அல்ல, டலஸ் அழகப்பெருமவுக்கே அதன் ஆதரவை அறிவித்தது. என்றாலும் கூட்டமைப்பின் பத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் நான்கு பேர் மாத்திரமே அழகப்பெருமவுக்கு வாக்களித்ததாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் கூறின. ஏனையவர்கள் ஒன்றில் ரணிலுக்கு வாக்களித்தார்கள் அல்லது தங்கள் வாக்குச் சீடடுக்களை பழுதாக்கினார்கள். கூட்டமைப்பில் உள்ள சிலர் தனக்கு வாக்களித்ததாக ரணில் நகைச்சுவையாக கூறினார். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி இன்னமும் அதன் நிலைப்பாட்டை வெளிப்டையாக கூறவில்லை என்றபோதிலும் ரணிலை அவர்கள் ஆதரிக்கக்கூடும் என்று சில செய்திகள் கூறுகின்றன. தமிழ் அரசு கட்சியின் இரு முகாம்கள் அதேவேளை தமிழ் அரசு கட்சி இப்போது இரு முகாம்களாக பிளவுபட்டு நிற்கிறது. ஒரு முகாம் சிவஞானம் சிறீதரனையும் மற்றைய முகாம் மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரனையும் ஆதரிக்கின்றன. மேலும், கட்சி இப்போது சட்டப் பிரச்சினையில் சிக்கியிருக்கிறது. நீதிமன்றங்களில் ஒரு பொதுவான நிலைப்பாட்டை முன்வைக்க தயாரில்லாமல் அல்லது இயலாமல் அது இருக்கின்றது போன்று தெரிகிறது. மீண்டும் இத்தகைய பின்புலத்தில் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் அரசு கட்சி என்ன செய்யக்கூடும் என்பதை எதிர்வுகூறுவது உண்மையில் சாத்தியமில்லை. ஆனால், அந்த கட்சியின் இரு முகாம்களில் உள்ளவர்களில் சிலர் ரணிலை ஆதிரிக்கக்கூடியது சாத்தியம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன. இலங்கைத் தமிழர்கள் ரணிலுக்கு மிகவும் ஆதரவாக இருப்பார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சிக்குள் நம்பிக்கை இருக்கிறது. தமிழ்க் கட்சிகளின் நிலைப்பாடுகள் எவ்வாறிருந்தாலும் ரணில் தமிழ் மக்களை நேரடியாக அணுகி, அவர்களின் வாக்குகளைப் பெறமுடியும் என்பது இவர்களின் அபிப்பிராயமாக இருக்கிறது. வடக்கு -- கிழக்கு தமிழர்கள் ரணிலைப் பற்றி கொண்டிருக்கும் நேர்மறையான படிமத்தை அடிப்படையாகக் கொண்டு நோககும்போது இந்த முயற்சி வெற்றிகரமானதாக அமையக்கூடும். தமிழ் ஜனாதிபதி வேட்பாளர் ஆனால், தற்போதைய இரண்டு போக்குகள் ரணிலுக்கு பாதகமாக அமையக்கூடும். முதலாவது, ஜனாதிபதி தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கு குறிப்பிட்ட சில வட்டாரங்கள் முன்னெடுக்கும் முயற்சி. அவ்வாறு நடைபெறுமானால் 'தமிழ்ப் பொதுவேட்பாளர்' ரணிலுக்கு ஆதரவான கிடைக்கக்கூடிய வாக்குகளை திசைதிருப்பிவிடக்கூடும். முள்ளிவாய்க்கால் கஞ்சி இரண்டாவது, 2009 மே மாதத்தில் தமிழர்களைச் சூழ்ந்த மனித அவலத்தை அமைதியான முறையில் நினைவுகூருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் நிகழ்வுகளை கையாள்வதில் பொலிஸாரின் நடத்தை முள்ளிவாய்க்கால் அவலத்தின் நினைவாக அதன் பதினைந்தாவது வருட நிறைவில் தேங்காய் சிரட்டைகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் அந்த இருண்ட நாட்களில் சிக்கிக்கொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் வெறும் கஞ்சியை மாத்திரமே குடித்து உயிரைக் காப்பாற்றியதை குறிக்கும் முகமாகவே இந்த கஞ்சி விநியோகம் இடம்பெற்றது. கிழக்கு மாகாணத்தில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகித்ததாகக் கூறப்படும் நபர்கள் மீது பொலிஸார் முரட்டுத்தனமாக நடவடிக்கை எடுத்தார்கள். பெண்களை வீடுகளில் இருந்து பொலிஸார் அவர்கள் அழுது கதறக்கதற இழுத்துச் சென்றதாக செய்திகள் வந்தன. மக்களுக்கு கஞ்சி வழங்கியதற்காக மூன்று பெண்களும் ஒரு பல்கலைக்கழக மாணவனும் இன்னொரு ஆணும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்கள். சுகாதார காரணங்களைக் காட்டி சில இடங்களில் கஞ்சி விநியோகத்தை தடைசெய்ய பொலிஸார் நீதிமன்ற உத்தரவுகளைப் பெற்றனர். பொலிஸாரின் நடவடிக்கைகள் தமிழ் மக்களை கவலையடையவும் ஆத்திரமடையவும் வைத்தன. இந்த நியாயமற்ற அடாவடித்தனமான நடவடிக்கைகள் ஜனாதிபதி ரணிலுக்கே கெட்ட பெயரை ஏற்படுத்தும். பொலிஸாரின் செயல்களுக்காக அவர் மீதே குற்றஞ்சாட்டப்படுகிறது. செய்தியாளர்கள் மகாநாடொன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரான சுமந்திரன், "இந்த அடாவடித்தனங்கள் தொடருமானால் ரணில் இந்த பகுதிகளுக்கு வாக்கு கேட்டு வரத் தேவையில்லை" என்று கூறினார். https://www.virakesari.lk/article/184017
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
@கிருபன்ஐயா இருக்கிற புள்ளிகள் எல்லாத்தையும் குறைச்சு மைனஸில வந்திடுமோ?! இந்த புள்ளியிடும் முறை நீட் தேர்விற்கு புள்ளியிடும் முறையை ஒத்திருக்கிறது!
-
த.வி.பு.; இந்தியாவில் தடை நீடிப்பு!
நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் பொலிஸாரும் இதை நியாயப்படுத்தலாம். இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜுன் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளன. இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் தலையீட்டை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அடுத்த நாட்டில் இடம்பெற வேண்டியது பாராளுமன்றத் தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்பதை தீர்மானிப்பது இந்தியாவாகக் கூட இருக்கலாம்.
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
2024 ஐபிஎல்: சிஎஸ்கே-வின் ஆட்டம் எப்படி? தோனி கேப்டனாக இருந்தால்தான் சாம்பியன் பட்டம் சாத்தியமா? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ். க பதவி, பிபிசி தமிழுக்காக 50 நிமிடங்களுக்கு முன்னர் புதிய கேப்டன், ஏலத்தில் எடுக்கப்பட்ட புதிய வீரர்கள், முதல் வெற்றி, புள்ளிப்பட்டியலில் 3-வது இடம் வரை ஏற்றம் என உற்சாகமாக ஐபிஎல் 2024 சீசனைத் தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. வழக்கம்போல் இந்த முறையும் சிஎஸ்கே தான் சாம்பியன், ப்ளே ஆஃப் சுற்றில் வெல்லப்போகிறது, தோனியின் வழிகாட்டலில் சிஎஸ்கே கோப்பையை வெல்லும் என்றெல்லாம் ரசிகர்கள் சிஎஸ்கே அணியின் செயல்பாடு குறித்து புலங்காகிதம் அடைந்தனர். ஆனால், ஐபிஎல் தொடரில் உயிர்ப்பித்து நின்றிருக்க வேண்டிய முக்கியமான ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் ஒட்டுமொத்த பலவீனமும் அம்பலமானது. முக்கியமான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வி அடைந்து ஐபிஎல் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக்கொண்டு வெளியேறியது 5 முறை சாம்பியன் வென்ற சிஎஸ்கே அணி. 2024 ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 7 தோல்வி என 14 புள்ளிகளுடன், நிகர ரன்ரேட் 0.392 என 5-வது இடத்தைப் பிடித்து, ப்ளே ஆஃப் செல்லாமல் லீக் சுற்றோடு வெளியேறியது. ஆனால், தொடக்கத்தில் முதல் 8 போட்டிகளில் ஒரு வெற்றி, அதன்பின் தொடர்ந்து 6 வெற்றிகளைக் குவித்து ஆர்சிபி அணி யாரும் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் சிஎஸ்கே-வைச் சாய்த்து ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது. ஐபிஎல் தொடரின் முதல் பாதி சுற்று முடியும் போது ஆர்சிபி-யின் நிலையைப் பார்த்து, ஆர்சிபி வெளியேறிவிடும் என்று அந்த அணியின் ரசிகர்களே பேசத் தொடங்கி, கருத்துக்களைப் பதிவிட்டனர். ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் ஆர்சிபி அணி பொய்யாக்கி, ப்ளே ஆஃப் சுற்றுக்குள் சென்றிருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,2024 ஐபிஎல் சீசன் போட்டியின் இடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அறிவிப்பும் சிஎஸ்கே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள் சிஎஸ்கே-வின் ஆட்டம் எப்படி? ஐபிஎல் வரலாற்றில் 2024 சீசன்தான் சிஎஸ்கே அணியின் 3வது மோசமான ஆட்டம் என்பது தெரியவந்துள்ளது. 2008-ஆம் ஆண்டிலிருந்து சிஎஸ்கே அணியின் ஐபிஎல் வெற்றி சதவீதம் குறைந்தபட்சம் 55 சதவீதத்துக்கு மேல் இருந்து, அதிகபட்சம் 68 சதவீதம் இருந்துள்ளது. எந்தெந்த சீசனில் வெற்றி சதவீதம் குறைந்ததோ அந்த சீசனில் சிஎஸ்கே மோசமாக அடிவாங்கியது. குறிப்பாக 2020-ஆம் ஆண்டு சிஎஸ்கே வெற்றி சதவீதம் 42.86 ஆகவும், 2022-ஆம் ஆண்டில் சிஎஸ்கே வெற்றி சதவீதம் வெறும் 28.57 சதவீதமாகவும் இருந்தது. அதற்கு அடுத்தார்போல் 2024 சீசனில் சிஎஸ்கே வெற்றி சதவீதம் 50 சதவீதம் இருந்துள்ளது. ஆக, ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணியின் மோசமான செயல்பாடாக 2024 ஐபிஎல் சீசன் அமைந்திருக்கிறது என்பதை புள்ளிவிவரங்கள் வாயிலாக அறியலாம். இதில் 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனில் சிஎஸ்கே லீக் சுற்றோடு வெளியேறியதற்கு முதல் காரணம், சிஎஸ்கே-வின் கேப்டன்சி மாற்றம் குறித்த அறிவிப்புதான். சிஎஸ்கே கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு மீண்டும் தோனி நியமிக்கப்பட்ட குழப்பம் தோல்விக்கு இட்டுச் சென்றது. அதேபோன்ற குழப்பம் 2024 சீசன் தொடக்கத்திலும் ஏற்பட்டது. ஐபிஎல் சீசன் தொடங்கும்வரை தோனிதான் கேப்டன் என்று அனைத்து ரசிகர்களும் எதிர்பார்த்த நிலையில் திடீரென ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டது, அதிர்ச்சியையும், அவர் எவ்வாறு வழிநடத்தப்போகிறார் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. அது மட்டுமல்லாமல் 2024 ஐபிஎல் சீசன் போட்டியின் இடையே டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் அறிவிப்பும் சிஎஸ்கே ஆட்டத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் சிஎஸ்கே அணிக்காகக் கடந்த சில சீசன்களாகச் சிறப்பாக விளையாடிவரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய அணிக்கான டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பெறவில்லை ஆனால், ஷிவம் துபே ,ஜெய்ஸ்வால் இடம் பெற்றது குறித்து சமூக வலைத்தளங்களில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால், கெய்க்வாட் கடந்த சில சீசன்களாக சிறப்பாகச் செயல்பட்டநிலையில் அவருக்கான இடம் இந்திய அணியில் இல்லை. ஆனால், இந்த ஆதங்கத்தை கெய்க்வாட் எந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தவில்லை, அவரது பேட்டிங் திறன் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றபோதிலும், மனதளவில் அவருக்கு இது தாகத்தை ஏற்படுத்தி இருக்கும், அவரின் தன்னம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே அணியின் 9 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திரா ஜடேஜா, மொயின் அலி, மிட்ஷெல் ஆகியோரைத் தவிர வேறு எந்த வீரர்களுக்கும் சர்வதேச அனுபவம் பெரிதாக இல்லை வீரர்கள் தேர்வில் என்ன சிக்கல்? 2024-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்காக சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த வீரர்கள் தேர்வே பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. சிஎஸ்கே அணியில் இதற்கு முன் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் பல ஜாம்பவான்கள் இருந்தனர். அவர்கள் ஓய்வு பெற்றுச் சென்றபின் அந்த இடத்தை நிரப்பச் சரியான வீரர்கள் கொண்டுவரப்பட்டார்களா என்ற கேள்விக்கு பதில் இல்லை. உதாரணமாக, டூவைன் பிராவோ சிஎஸ்கே அணியின் பெரிய சொத்து. ஆட்டத்தை எந்தநேரத்திலும் மாற்றக்கூடிய திறன் கொண்டவர், தேவைப்படும் நேரத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் வேரியேஷன்களை வெளிப்படுத்தி எதிரணியை திக்குமுக்காடச் செய்பவர். பிராவோ இருக்கும்வரை சிஎஸ்கே அணிக்கும், தோனிக்கும் யானை பலம் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், பிராவோ ஓய்வு பெற்றுச் சென்றபின் அவரது இடத்தை நிரப்பச் சரியான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனரா, என்றால், பிராவோவுக்கு இணையாக இல்லாவிட்டாலும், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் யாரும் ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சிஎஸ்கே அணிக்கு நியூசிலாந்தைச் சேர்ந்த ஸ்டீபன் பிளெம்பிங் பயிற்சியாளராக இருக்கிறார் என்பதால், நியூசிலாந்து வீரர்களுக்கே அதிகமான முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. டேவான் கான்வே, மிட்ஷெல் சான்ட்னர், டேரல் மிட்ஷெல், ரச்சின் ரவீந்திரா என நியூசிலாந்து வீரர்கள் அதிகம் சேர்க்கப்பட்டனர். இவர்களில் டேவன் கான்வே காயம் காரணமாக இந்த சீசனில் விளையாடாதது சிஎஸ்கே அணிக்கு பெரிய பின்னடைவானது. இருப்பினும் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல், ரூ.1.80 கோடிக்கு வாங்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, ரூ.1.80 கோடிக்கு வாங்கப்பட்ட மிட்ஷெல் சான்ட்னர் எந்த அளவுக்கு இந்த சீசனில் திறமையை வெளிப்படுத்தினர் என்பது ஆய்வு செய்யப்படவேண்டிய ஒன்று. குறிப்பாக 'ஆல்ரவுண்டர்' அந்தஸ்துக்காக வாங்கப்பட்ட டேரல் மிட்ஷெல் 13 போட்டிகளில் 318 ரன்கள் சேர்த்து, சராசரியாக 24 என வைத்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டும் 142 என, மிரட்டும் அளவுக்கு இல்லை. அதேபோல 10 போட்டிகளில் மட்டும் ஆடிய ரச்சின் ரவீந்திரா 222 ரன்கள் சேர்த்து 22 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார். மிட்ஷெல் சான்ட்னருக்கு பந்துவீச்சில் வாய்ப்பே வழங்கப்படவில்லை, மூன்று போட்டிகளில் மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தியுள்ளார். ஆக, சிறப்பாகச் செயல்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து வீரர்கள் தேர்வும் சிஎஸ்கே-வுக்கு ஏமாற்றத்தையே அளித்தது. இதுதவிர, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி என்ற வீரரை ரூ.8 கோடிக்கு சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்தது. ஆனால், சமீர் ரிஸ்வி 8 போட்டிகளில் பங்கேற்று வெறும் 51 ரன்கள் மட்டுமே சேர்த்து வெறும் 7.5 ரன்கள்தான் சராசரி வைத்துள்ளார். சர்வதேச அளவில் அனுபவம் இல்லாத, டி20 போட்டிகளில் பெரிதாக சாதிக்காத வீரர்களை ஏலத்தில் எடுத்து சிஎஸ்கே கையைச் சுட்டுக்கொண்டது. ஷிவம் துபே-வை ஆல்ரவுண்டர்கள் வரிசையில் கொண்டாடும் சிஎஸ்கே அணி, அவருக்கு இந்த சீசனில் அதிகபட்சம் 10 ஓவர்கள்கூட வழங்கவில்லை. ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். ஐபிஎல் சீசனின் முதல் பாதியில் சிறப்பாக ஆடிய ஷிவம் துபே, பிற்பகுதியில் படுமோசமான ஃபார்மை வெளிப்படுத்தினார். 14 போட்டிகளில் ஆடிய துபே 396 ரன்கள் குவித்து 28 ரன்கள் சராசரி வைத்து 162 ஸ்ட்ரைக் ரேட்டில் விளையாடியுள்ளார். சிஎஸ்கே அணியின் 9 ஆல்ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திரா ஜடேஜா, மொயின் அலி, மிட்ஷெல் ஆகியோரைத் தவிர வேறு எந்த வீரர்களுக்கும் சர்வதேச அனுபவம் பெரிதாக இல்லை. தரமான பந்துவீச்சை எவ்வாறு சமாளித்து ஆடி சன்சேர்ப்பது என்பதிலும் அனுபவம் இல்லை. வீரர்கள் தேர்விலேயே சிஎஸ்கே அணி கோட்டை விட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,13 போட்டிகளில் 12 இன்னிங்ஸ் ஆடிய ரஹானே 242 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் சராசரி வைத்து 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார் ரஹானே, மொயின் அலி மீது விமர்சனம் ரஹானேவின் பேட்டிங் ஃபார்ம் குறித்துக் கேள்வி எழுந்து விமர்சிக்கப்பட்ட பின்புதான் அவரை இந்திய அணியில் இருந்து ஓரம் கட்டினர். ஆனால், ஐபிஎல் ஏலத்தில் ரஹானேவே சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்து வாழ்வு கொடுத்தது. கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானே, இந்த சீசனில் ஒட்டுமொத்தமாக சொதப்பினார். தொடக்க வரிசை, நடுவரிசை, ஒன்டவுன் என பலவரிசையில் மாற்றி ரஹானேவே களமிறக்கியும் அவரால் ஜொலிக்க முடியவில்லை. 13 போட்டிகளில் 12 இன்னிங்ஸ் ஆடிய ரஹானே 242 ரன்கள் சேர்த்து 20 ரன்கள் சராசரி வைத்து 123 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். கடந்த சீசனில் ரஹானே 14 போட்டிகளில் 326 ரன்கள் குவித்தார். இந்த சீசனில் ஏறக்குறைய 100 ரன்கள் குறைவாகச் சேர்த்து ஏமாற்றம் அளித்தார். அதேபோல சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் மொயின் அலி, 2021-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு வந்தவுடன் அருமையான பங்களிப்புச் செய்தார். அதன்பின் ஒவ்வொரு சீசனிலும் அவரது பந்துவீச்சு, பேட்டிங் திறமை மங்கிக்கொண்டே சென்றது. 2021 சீசனில் 15 போட்டிகளில் 357 ரன்கள் குவித்த மொயின் அலி, 2022 சீசனில் 10 போட்டிகளில் 244 ரன்கள் சேர்த்தார், 2023 சீசனில் 15 போட்டிகளில் 124 ரன்களாக மொயின் அலி பங்களிப்பு என படிப்படியாக மொயின் அலியின் பங்களிப்பும் குறைந்தது. 2024 சீசனில் 8 போட்டிகளில் 5 இன்னிங்ஸ்களில் 128 ரன்கள் சேர்த்து 25 ரன்கள் சராசரி வைத்துள்ளார். இதுபோன்று ஒவ்வொரு சீசனிலும் ஆட்டத்தின் திறன் குறையும் வீரர்கள் ஏலத்தில் மாற்றப்படாமல் தொடர்ந்து வைத்திருப்பது பெரிய விமர்சனமாக வைக்கப்படுகிறது. மொயின் அலி, ரஹானே இருவரும் அனுபவம் நிறைந்த பேட்டர்களாக இருந்தபோதிலும், இந்த சீசனின் முக்கியமான எந்த ஆட்டத்திலும் அவர்களால் சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடிக்கொடுக்க முடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ருதுராஜால் கேப்டன்சியில் தனித்தன்மையிடன் வெளிப்பட முடியவில்லை கெய்க்வாடுக்கு கேப்டன் பதவி 'சுமை' ஆனதா? ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே எனும் அணி 5 முறை சாம்பியன்ஷிப் பெற்ற வலிமையான அணி. அந்த அணிக்குக் கேப்டனாக வளரும் இளம் வீரரை உருவாக்குகிறோம் என்ற பெயரில் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கேப்டன்ஷிப் கொடுக்கப்பட்ட்டது. இது விளம்பர உத்தியா அல்லது உண்மையில் அதற்கான தகுதிகள் அவருக்கு இருப்பதைக் கண்டறிந்து வழங்கப்பட்டதா என்ற கேள்விகள் சிஎஸ்கே அணி வெளியேற்றத்துக்குப்பின் எழும்பியிருக்கின்றன. ஏனென்றால், அணியில் இருக்கும் பல வீரர்கள் சீனியர் வீரர்கள். ரஹானே, தோனி, மொயின் அலி, ஜடேஜா ஆகியோரை கையாள்வதும், பீல்டிங் அமைப்பதும் ஈகோவாக ஏற்காதவரை பணியின் சுமை தெரியாது. சீனியர் வீரர்கள், ஜூனியர் வீரர்கள் என்ற இடைவெளி சிஎஸ்கே ஓய்வறையில் இருந்ததாகப் பல்வேறு செய்தியறிக்கைகள் வெளியாகியிருக்கின்றன. அதிலும் குறிப்பாக ஓய்வறையில் கேப்டன்சி குறித்து தன்னிடம் ஆலோசனை கேட்கக்கூடாது என்று தோனி கெய்க்வாட்டிடம் கூறியதாகத் தகவல்களும் வெளிவந்தன. உதாரணமாக, ஆர்சிபியுடன் கடைசி லீக்கில் கடைசி ஓவரை வீசுவதற்கு முன் யாஷ் தயாலிடம் கோலி, டூப்பிளசிஸ், தினேஷ் கார்த்திக் என கேப்டன் அனுபவம் கொண்ட வீரர்கள் எந்த ஈகோவும் இன்றி ஆலோசனை நடத்தினர். ஆனால், இதே போன்ற சூழல் சிஎஸ்கே அணியில் இந்த சீசனில் இருந்ததா என்பது சந்தேகம்தான். கெய்க்கவாட்டுக்கு ஆலோசனை கூறுகிறேன் என்று தோனியே பீல்டிங் செய்வது, ஆலோசனைகள் கூறுவது என 'பேக் சீட் டிரைவராகப்' பல போட்டிகளில் செயல்பட்டார். இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்தபின்புதான், தோனி கேப்டன்சி பதவியை மறைமுகமாகச் செய்வதில் இருந்து விலகினார். சிஎஸ்கே என்ற பிரமாண்டமான அணி ரசிகர்கள் மனதில் பெரிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியைக் கையாள்வதும், நிர்வகிப்பதும் ஒரு யானையை அடக்குவது போலாகும். இந்தக் கேப்டன்சி பதவியை ருதுராஜ் சிறப்புடன் கையாண்டாரா அல்லது விருப்பத்துடன் ஏற்றுச் செயல்பட்டாரா என்பது குறித்து வரும் காலங்களில்தான் விளக்கம் கிடைக்கும். ஆனால், இளம் வீரர்களான கே.எல்.ராகுல், சஞ்சு சாம்ஸன், ரிஷப் பந்த் ஆகியோர் தனித்துச் செயல்பட்ட அளவுக்கு ருதுராஜால் கேப்டன்சியில் தனித்தன்மையிடன் வெளிப்பட முடியவில்லை, தோனியின் சாயலே பெரும்பகுதி இருந்தது. அது மட்டுமல்லாம் கேப்டனாக பொறுப்பேற்றாலும் அந்தச் சுமை தெரியாமல் கெய்க்வாட் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். 14 இன்னிங்ஸ்களிலும் 583 ரன்கள் சேர்த்து 42 ரன்கள் சராசரி வைத்துள்ளார். நிச்சயமாக கேப்டன் பொறுப்பும் ஏற்று, இதுபோன்று பேட்டிங்கிலும் சிறப்பாக பங்களிப்பு செய்வது கடினமான பணிதான். ஆனால் அதை கெய்க்வாட் கடைசிவரை சிறப்பாகவே செய்தார். சிஎஸ்கே-வின் 'டீம் ஸ்பிரிட்' என்னவானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிஎஸ்கே என்ற பிரமாண்டமான அணி ரசிகர்கள் மனதில் பெரிதாக கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த அணியைக் கையாள்வதும், நிர்வகிப்பதும் நுட்பமான விஷயம் தோனி கேப்டன்சியில் சிஎஸ்கே அணியில் அனைத்து வீரர்களிடமும் கூட்டுழைப்பு, அர்ப்பணிப்பு, உற்சாகம் ஆகியவை இயல்பாகவே இருந்தன என்பதைக் காண முடிந்தது. ஒவ்வொரு ஓவரையும் பந்துவீச்சாளர்களும் சரி, பேட்டர்களும் சரி ரசித்துச் செய்தனர். ஆனால், தோனி இல்லாத சிஎஸ்கே அணியில் இந்த 'டீம் ஸ்பிரிட்', வீரர்ளுக்கான ஆர்வம் இருந்தது என்றாலும், தோனி கேப்டன்சியில் இருந்த அளவுக்கு இல்லை என்பதுதான் உண்மை. எந்த இடத்திலும் சிஎஸ்கே சறுக்கினாலும், அதைத் தூக்கி நிறுத்த ஏதாவது ஒரு வீரர் விஸ்வரூமெடுத்து ஆடும் சூழல் தோனி கேப்டன்சியில் இருந்தது. ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே வெற்றி பெற்ற 7 போட்டிகளிலும் கெய்க்வாட்டின் பேட்டிங் பங்களிப்பு மட்டுமே பிரதானமாக இருந்தது. எப்போதாவது ஒருமுறைதான், ரச்சின் ரவீந்திரா, மிட்ஷெல், ஜடேஜாவின் பங்களிப்பு இருந்தது. ஆனால், அணிக்கான கூட்டுழைப்பு, வீரர்களுக்கான ஸ்பிரிட் இந்த சீசனில் இல்லை. ஆர்சிபி அணியை கடைசி லீக்கில் 218 ரன்கள் வரை அடிக்கவிடும் வகையில் பந்துவீச்சு இருந்தபோதே சிஎஸ்கே டீம் ஸ்பிரிட் குறித்து தெரிந்திருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,எந்த இடத்திலும் சிஎஸ்கே சறுக்கினாலும், அதைத் தூக்கி நிறுத்த ஏதாவது ஒரு வீரர் விஸ்வரூமெடுத்து ஆடும் சூழல் தோனி கேப்டன்சியில் இருந்தது தோனி இல்லாத சிஎஸ்கே சாத்தியமா? தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்கள் இன்னும் தயாராகவில்லை. அவர்களுக்கு அந்தத் துணிச்சலும் இல்லை. தோனி, கேப்டன் பொறுப்பேற்காமல் ப்ளேயிங் லெவனில் இருந்தபோதே சிஎஸ்கே அணி லீக் சுற்றோடு வெளியேறுகிறது. அப்படியிருக்கும்போது தோனி ஓய்வு பெற்று சிஎஸ்கே அணியிலிருந்து சென்றால், சிஎஸ்கே என்ற அணியின் நிலையை கற்பனை செய்வது கடினமாக இருக்கிறது. “தோனிதான் சிஎஸ்கே. தோனி இல்லாத சிஎஸ்கே அணிக்கு ரசிகர்கள் ஆதரவு குறையும், சிஎஸ்கே அணியை ரசிகர்கள் இப்போதுள்ள அளவு கொண்டாடமாட்டார்கள்,” என்று முன்னாள் வீரர் சேவாக் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். தோனியால் மட்டும்தான் சிஎஸ்கே அணிக்கு சாம்பியன்ஷிப்பை பெற்றுத்தர முடியும் என்ற பிம்பம் ரசிகர்கள் மனதில் கட்டமைக்கப்பட்டுவிட்டது. அந்தப் பிம்பத்தை ருதுராஜ் கெய்க்வாட், ஜடேஜா கொண்டு நிறுத்தினாலும், அதை உடைக்க முடியாது. அந்தப் பிம்பத்தை உடைக்க தோனி இல்லாத சிஎஸ்கே அணிக்குச் சில ஆண்டுகள் பிடிக்கலாம். அதற்கு, புதிய கேப்டனை ரசிகர்கள் ஏற்க வேண்டும். போட்டியின் தொடக்கத்தில், இடையே கேப்டன்சி பதவியை உதறும் தோனியின் போக்கு இந்த சீசனிலும் இருந்தது. ஏற்கெனவே இந்திய டெஸ்ட் அணிக்கு தோனி கேப்டனாக பொறுப்பேற்று ஆஸ்திரேலியா பயணம் செய்தார். அங்கு ஆஸ்திரேலிய அணியிடம் முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தவுடன், 2-வது டெஸ்ட் தொடங்கும் முன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி திடீரென அறிவித்தது இந்திய அணியின் தன்னம்பிக்கையை, மனோபலத்தை குலைத்தது. அதேபோன்ற போக்கை இந்த சீசனில் ஐபிஎல் தொடர் தொடங்கும் சில நாட்களுக்கு முன் சிஎஸ்கேவிலும் புகுத்தினார். சிஎஸ்கே-வின் கேப்டன் தோனி என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் சிஎஸ்கே நிர்வாகத்தின் திடீர் அறிவிப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியது, தோனி தலைமையில் விளையாடப் போகிறோம் என்ற வீரர்களின் நம்பிக்கை அசைத்துப் பார்க்கும் முடிவாக அமைந்தது. கேப்டனாக இருக்கும்போது தோனி பேட்டிங்கில் கடந்த சீசன்களில் சிறப்பாக ஆடியுள்ளார். ஆனால், இந்த சீசனில் தோனிக்குக் கேப்டன் என்ற சுமை இல்லை. அப்படி இருக்கும்போது, தோனி தானாக முன்வந்து நடுவரிசை, முன்வரிசையில் களமிறங்கி கேமியோ ஆடியிருக்கலாம். ஆனால், கடைசி லீக்ஆட்டம் வரை தோனி கடைசி வரிசையில்தான் களமிறங்கினார். 14 போட்டிகளில் 161 ரன்கள் மட்டுமே தோனி சேர்த்து, 11 ரன்கள் சராசரி வைத்துள்ளார். தோனி நடுவரிசையில், முதல்வரிசையில் களமிறங்கினால் நிச்சயம் சிஎஸ்கே ஸ்கோர் 200 ரன்களுக்கு மேல் செல்லக்கூடிய வாய்ப்புகள் இருந்தும் அதை தோனி கடைசி வரை பயன்படுத்தவே இல்லை. தோனி மிகச்சிறந்த ஃபினிஷர் என்பதில் ரசிகர்கள் யாருக்கும் மாற்றுக்கருத்தில்லை. ஆனால், சிறந்த ஃபினிஷர் என்பதை நிரூபிப்பதற்காகவே, தோனி கடைசி வரிசையிலும், அணி இக்கட்டான நிலையில் இருக்கும்போதுதான் களமிறங்குவேன் எனச் செயல்பட்டது சரியானதா என்ற கேள்வி எழுகிறது. தான் இருக்கும்போதே, தன்னுடைய இருப்பு இல்லாத சிஎஸ்கேவை தோனி உருவாக்க வேண்டும். அப்போதுதான் சிஎஸ்கே ஐபிஎல் சீசனில் வெற்றிகரமான அணியாக வலம் வர முடியும், என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தோனியால் மட்டும்தான் சிஎஸ்கே அணிக்கு சாம்பியன்ஷிப்பை பெற்றுத்தர முடியும் என்ற பிம்பம் ரசிகர்கள் மனதில் கட்டமைக்கப்பட்டுவிட்டது பலவீனமான பந்துவீச்சு சிஎஸ்கே அணியில் இருக்கும் ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர், பதீராணா, தேஷ்பாண்டே ஆகியோருக்குச் சர்வதேச அனுபவங்கள் பெரிதாக இல்லை. இவர்கள் சர்வதேச தளத்துக்குச் செல்லும்போது அவர்களது பலவீனம் வெளிப்பட்டுவிடும் என்பது கடந்த காலங்களில் தெரியவந்துள்ளது. அந்த உண்மை தெரிந்தும், இன்னும் இவர்களை சிஎஸ்கே நிர்வாகம் தாங்கி நிற்பது வியப்பாக இருக்கிறது. குறிப்பாகப் பதீரணாவின் பந்துவீச்சு கடந்த சீசனில் பெரிதாக சிஎஸ்கே அணியால் பேசப்பட்டது. ஆனால் உலகக் கோப்பைத் தொடரில் பதீரணா பந்துவீச்சால்தான் இலங்கை பெரிய தோல்விகளைச் சந்தித்தது என்ற விமர்சனங்களும் எழுந்தன. அப்படியிருக்கும் போது பந்துவீச்சாளர்களை ஏலத்தில் ஏன் சிஎஸ்கே நிர்வாகம் மாற்றவில்லை என்ற கேள்வி எழுகிறது. தொடர்ந்து ஒரே மாதிரியான பந்துவீச்சாளர்கள் அணியில் நீடிக்கும்போது, எதிரணியின் பேட்டர்களுக்கு வியூகங்களை வகுப்பது எளிதாகிவிடும், சிஎஸ்கே அணியின் தோல்வியும் எளிதாக அமைந்துவிடும். இது தெரிந்தே 4 பந்துவீச்சாளர்களையும் தொடர்ந்து தக்கவைத்துள்ளனர். இதில் பதீராணா 13 விக்கெட்டுகள், தேஷ் பாண்டே 14 விக்கெட்டுகள் வீழ்த்தினர். ஷர்துல், தீபக் சஹர் இருவரும் 9 போட்டிகளில் பங்கேற்றும் 5 விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளனர். சிஎஸ்கே அணியில் அனுபவம் நிறைந்த பந்துவீச்சாளராக இருந்து முஸ்தபிசுர் ரஹ்மான் மட்டும்தான். சிஎஸ்கே அணி ஏலத்தில் எடுத்த சிறந்த முடிவு முஸ்தபிசுர் ரஹ்மானை வாங்கியது மட்டும்தான். அவரும் தன்னுடைய அணிக்கான பணிக்கு செல்லும்வரை சிறப்பான பங்களிப்பை சிஎஸ்கே அளித்து 9 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பதீராணா, முஸ்தபிசுர் இருவரும் சிஎஸ்கே அணியிலிருந்து பாதியில் சென்றபோதே, சிஎஸ்கே பந்துவீச்சு பலம் பாதியாகக் குறைந்தது. சுழற்பந்துவீச்சுக்கு சான்ட்னர், ஜடேஜா, தீக்சனா, மொயின் அலி, ரச்சின் ரவீந்திரா ஆகியோர் இருந்தனர். ஆனால், இந்த சீசன் முழுவதும் சுழற்பந்துவீச்சாளர்களை கெய்க்வாட் பயன்படுத்திய வீதம் வேகப்பந்துவீச்சோடு ஒப்பிடுகையில் குறைவுதான். தோனி கேப்டன்சியில் சுழற்பந்துவீச்சைப் பயன்படுத்தத் தனி உத்தியே வைத்திருப்பார். ஜடேஜா, தீக்சனா, சான்ட்னர், மொயின் அலி ஆகியோரை தோனி சிறப்பாகக் கையாண்டு, தேவைப்படும் நேர்த்தில் விக்கெட்டுகளை எடுப்பார். ஆனால், இந்த சீசனில் சிஎஸ்கே அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் வீணடிக்கப்பட்டுவிட்டார்களோ என்ற சந்தேகமும் எழுகிறது. ஒட்டுமொத்தத்தில், சிஎஸ்கே ப்ளே ஆஃப் லீக்கோடு வெளியேறியிருக்கும் இந்நிலையில், தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்களும், வீரர்களும் மனதளவில் இன்னும் தயாராகவில்லை எனும் உணர்வே மேலெழுகிறது. https://www.bbc.com/tamil/articles/cz991njzg97o
-
ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்கப்போகும் முகமட் மொக்பர் - சில குறிப்புகள்
Published By: RAJEEBAN 20 MAY, 2024 | 12:18 PM ஈரானின் துணை ஜனாதிபதி முகமட் மொக்பெர் ஈரானின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகின்றன. ஈரானின் சட்டவிதிமுறைகளின் படி ஜனாதிபதியொருவர் உயிரிழந்து 50 நாட்களிற்குள் ஜனாதிபதி தேர்தல்இடம்பெறவேண்டும் . 1955ம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி பிறந்த மொக்பெர் ஈரானின் மததலைவர் ஆயத்துல்லா அலி கமேனிக்கு மிகவும் நெருக்கமானவர். ஈரான் குறித்த அனைத்து இறுதி முடிவையும் எடுப்பவர் ஆயத்துல்லா அலி கமேனி என்பது குறிப்பிடத்தக்கது. 2021 இல் ரைசி தெரிவு செய்யப்பட்டவேளை மொக்பெர் துணை ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். கடந்த ஒக்டோபரில் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டு ரஸ்ய இராணுவத்திற்கு மேலும் ஏவுகணைகள் ஆளில்லாவிமானங்களை வழங்குவதற்கு இணங்கிய ஈரானிய குழுவில் மொக்பெர் இடம்பெற்றிருந்தார் என விடயமறிந்த வட்டாரங்கள் ரொய்ட்டருக்கு தெரிவித்துள்ளன. ஆன்மீக தலைவருடன் தொடர்புபட்டமுதலீட்டு நிதியத்தின் தலைவராகவும் இவர் செயற்பட்டுள்ளார். அணு அல்லது கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகள் தொடர்பிலான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவித்து 2010 இல் ஐரோப்பிய ஒன்றியம் மொக்பெருக்கு எதிராக தடைகளை விதித்தது - பின்னர் அந்த தடைகளை நீக்கியது. https://www.virakesari.lk/article/184027
-
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தில் 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது
ISIS அமைப்பைச் சேர்ந்த 4 இலங்கையர்கள் இந்தியாவில் கைது! இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் 4 ISIS தீவிரவாதிகளை குஜராத் பொலிஸாரால் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இன்று (20) கைது செய்துள்ளனர். குறித்த நால்வரும் இலங்கையில் வசிப்பவர்கள் என்றும், இஸ்லாமிய அரசுடன் தொடர்புடையவர்கள் என்றும் குஜராத் பொலிஸார் தெரிவித்துள்ளது. இதேவேளை கைது செய்யப்பட்ட நால்வரும் தொடர்ந்தும் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அவர்கள் அஹமதாபாத்திற்கு வருகை தந்தமைக்கான நோக்கத்தைக் கண்டறியும் வகையில் முதற்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர்கள் இலங்கையில் இருந்து சென்னை வழியாக அஹமதாபாத்திற்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேநேரம் குறித்த நால்வரின் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://thinakkural.lk/article/302080
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களுக்கு மீண்டும் விளக்கமறியல்! Published By: VISHNU 20 MAY, 2024 | 06:33 PM முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களை எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மாளிகாகந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் 20 ஆம் திகதி திங்கட்கிழமை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் மருந்து இறக்குமதி சம்பவம் தொடர்பான வழக்கிலேயே முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 8 சந்தேக நபர்களும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/184075
-
"மதுபானசாலைக்கு அனுமதி வேண்டாம்" : மன்னார் - நானாட்டானில் மக்கள் மழைக்கு மத்தியில் போராட்டம்
20 MAY, 2024 | 05:56 PM மன்னார் - நானாட்டான் நகர பகுதிக்குள் எந்தவொரு மதுபானசாலைக்கும் அனுமதி வழங்க வேண்டாம் என அறிவுறுத்தி திங்கட்கிழமை (20) மத தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து நானாட்டான் பிரதேச செயலகத்துக்கு முன்பாக அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நானாட்டான் விவசாய அமைப்பு பிரதிநிதிகள், மகளிர் அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் இணைந்து நானாட்டான் சுற்றுவட்டத்தில் இருந்து நானாட்டான் பிரதேச செயலகம் வரை கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வருகைதந்து இந்த போராட்டத்தில் கலந்துகொண்டனர். நானாட்டானில் இந்து மற்றும் கத்தோலிக்க பாடசாலைகள் அமைந்துள்ள இடங்களில் மென் மதுபான விற்பனை நிலையம் இயங்கிவருகிறது. அதேவேளை, மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் கள்ளுத்தவறணை காணப்படுகிறது. இதனால் மென் மதுபானசாலையை உடனடியாக நிறுத்தும்படியும் நானாட்டான் ஒலி மடு பகுதியில் அமைந்துள்ள கள்ளுத்தவறணையை வேறு இடத்துக்கு மாற்றம் செய்யுமாறும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 'மது பாவனையை ஊக்கப்படுத்துபவர்களே மக்களையும் மாணவர்களையும் வாழவைக்க உதவிடுங்கள்', 'எமக்கு கிடைத்த சாபம் மதுக்கடை அதை இன்றே ஒழிப்போம்', 'உழைப்பை பறிக்க வந்த சாத்தான் இந்த மதுபானமும் மதுக்கடையும்', 'குடி சிலரின் இன்பம் பலரின் துன்பம்', 'மது விற்று கிடைக்கும் காசு உனக்கே நீ தேடும் சாபம்' போன்ற பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் அருட்தந்தையர்கள், இந்து ஆலய குருக்கள், முருங்கன் விகாராதிபதி, முன்னால் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள், மாதர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கையளிப்பதற்காக நானாட்டான் பிரதேச செயலாளர் சிவசம்பு கனகாம்பிகையிடம் போராட்டக்காரர்களால் வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/184069
-
இராணுவத்திடம் குடும்பமாக சரணடைந்தவர்களின் குழந்தைகளிற்கு என்ன நடந்தது? சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் கேள்வி?
Published By: RAJEEBAN 20 MAY, 2024 | 08:27 PM இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அவர் இந்த கேள்வியை எழுப்பினார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, எனது விஜயம் குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இலங்கையின் உள்நாட்டு போர் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற காலப்பகுதியில் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளது. இந்த காலப்பகுதியில் பல ஆயிரக்கணக்கானவர்கள் காணாமலாக்கப்பட்டனர். இந்த வருடம் இலங்கையில் நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தல்கள் இடம்பெறவுள்ளதால் இந்த வருடம் இலங்கையின் தலைவிதியையும் மனித உரிமை பாதுகாப்பின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். நான் ஏன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டேன்? இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து 15 வருடங்களாகின்ற நிலையில் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்து அறிந்துகொள்வதற்காக இந்த விஜயத்தை நான் மேற்கொண்டேன். இலங்கையில் நீதியை நிலைநாட்டுவதற்காக நாங்கள் என்ன செய்யவேண்டும் என்பதை அறிவதற்காகவும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களிற்கு சர்வதேச மன்னிப்புச்சபையின் ஆதரவை வழங்கவும் நான் இந்த விஜயத்தினை மேற்கொண்டேன். நான் முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டேன். காணாமலாக்கப்பட்டவர்களின் குடும்பங்களை சந்தித்தேன். அவர்கள் வெளிப்படுத்துகின்ற துணிச்சலும் மீள்எழுச்சி தன்மையும் நீதியை காண்பதற்கான அவர்களது உறுதிப்பாடும் எனது மனதை தொட்டுள்ளது. இலங்கையில் மிகப்பெருமளவானவர்கள் காணாமல்போயுள்ளனர் அவர்களிற்கு என்ன நடந்தது. காணாமல்போதல் என்பது மிகமோசமான வன்முறை. அது முடிவிற்கு வராது. உங்களிற்கு தெரியாது உங்களிற்கு தெரியாது பாதிக்கப்பட்டவர்களிற்கு பலபல வருடங்களிற்கு இந்த வலி தொடரும். மரணத்தை விட இது வலிமிகுந்தது. வலியும் வேதனையும் மிக மோசமானதாக காணப்படும். உளவியல் சித்திரவதை. நாளாந்தம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாரமும் தசாப்தங்களாக இந்த வலியும் வேதனையும் தொடரும். இது இலங்கையின் மீது விழுந்த கறை இந்த கறையை அகற்ற ஒவ்வொரு இலங்கை பிரஜையும் முன்வரவேண்டும். அந்த குழந்தைகள் எங்கே? நான்கைந்து மாத குழந்தைகள் மூன்று நான்கு வயதானவர்கள், நான் அவர்களின் படங்களை பார்த்திருக்கின்றேன். 15 வருடங்களாகியும் பதில் இல்லை இது மிக நீண்டகாலம். இது மன்னிக்க முடியாத குற்றம்- இவர்கள் குறித்து அரசாங்கம் பதிலளிக்கவேண்டும். இவர்கள் தாங்களாக முன்வந்து சரணடைந்தவர்கள். சரணடைவதற்கான பகுதிக்கு தாங்களாக சென்று சரணடைந்தார்கள். எங்கே அந்த குழந்தைகள்? https://www.virakesari.lk/article/184086
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
அது சரி. ஆனாலும் ஏதோ ஒரு பிரச்சனை ஓடுது. விசாரணையில் தெரிய வருமா? மூடி மறைக்கப்படுமா தெரியலையே?
-
இனவாதிகளை சந்தோஷப்படுத்தியுள்ள புலிகள் அமைப்பின் மீதான இந்தியாவின் தடை நீடிப்பு!
20 MAY, 2024 | 05:33 PM சிவலிங்கம் சிவகுமாரன் இறுதி யுத்தத்தின் அழிவுகளையும் துயரங்களையும் சுமந்து வாழ்ந்து வரும் தமிழ் மக்கள் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வின் ஒரு அங்கமாக கஞ்சி வழங்கும் நிகழ்வை வடக்கு கிழக்கு தமிழர் பிரதேசங்களில் முன்னெடுத்து வருகின்றனர். இதற்கு பல வழிகளிலும் தடைகளையும் ஏற்படுத்தி வரும் அரசாங்கம், அந்நிகழ்வில் ஈடுபட்ட பெண்களை நடு இரவில் வீடு புகுந்து அச்சுறுத்தி கைது செய்யும் நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளது. சில பிரதேசங்களில் கஞ்சி பரிமாறலுக்கு நீதிமன்ற தடையை காரணங்காட்டி வரும் பொலிஸார், இறுதி யுத்தத்தில் உயிரிழந்தோர் காணாமல் போனோரை நினைவு கூருவதற்கும் தடை விதித்து வருகின்றனர். 2009ஆம் ஆண்டுக்குப்பின்னர் ஒவ்வொரு வருடமும் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முன்னெடுக்கப்படும் போதெல்லாம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களுக்கு இந்த நெருக்கடிகள் ஏற்படுவது வழமையாகி விட்டது. 2016 ஆம் ஆண்டு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவானது, நினைவு கூருதல் உரிமையை உறுதி செய்யுமாறு அப்போதைய அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை செய்திருந்தமை முக்கிய விடயம். இந்த பொதுவான பரிந்துரைகளை அலட்சியப்படுத்தியுள்ள பொலிஸார் நீதிமன்ற தடை உத்தரவுகளைப் பெற்று அமைதியான முறையில் இடம்பெறும் இந்த நிகழ்வுகளை நடத்த விடாமல் பல நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர். யுத்தத்தில் இறந்தவர்களை நினைவுகூருவதற்கு தடை விதிக்கும் உலகின் ஒரே நாடாக இலங்கை விளங்குகின்றது. இறந்தவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்பதால் அவர்களை நினைவு கூருவதற்கு அனுமதியில்லையென்பது அரசாங்கத்தின் பதிலாக உள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே விடுதலை புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் ஐந்து வருடங்களுக்கு நீடிப்பதாக இந்திய மத்திய அரசு கடந்த 14 ஆம் திகதி அறிவித்திருந்தது. இந்திய பிரதமர் ராஜிவ் காந்தி கொலைச் சம்பவத்துக்குப் பிறகு 1991 ஆம் ஆண்டு இந்திய மத்திய அரசு விடுதலை புலிகள் இயக்கத்தை இந்தியாவில் தடை செய்தது. பின்னர் குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த தடை நீடிக்கப்பட்டே வந்தது. இறுதியாக 2019 ஆம் ஆண்டு மே மாதம் புலிகள் அமைப்பை ஐந்து வருடங்களுக்கு தடை செய்திருந்தது இந்தியா. தற்போது 2024 ஆம் ஆண்டிலிருந்து அடுத்த ஐந்து வருடங்களுக்கு அமைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. தடைக்கான காரணங்கள் முக்கியமானவை. விடுதலை புலிகள் அமைப்பு 2009 ஆம் ஆண்டு தோல்வியடைந்த போதிலும் ‘ஈழம்’ தொடர்பான நோக்கத்தை அந்த அமைப்பு இன்னும் கைவிடவில்லை. குறிப்பாக தமிழ் நாட்டில் ஈழம் கோட்பாட்டுக்கு ஆதரவு தரும் தரப்புகள் உள்ளன. அந்த அமைப்பின் முன்னாள் தலைவர்கள் ,உறுப்பினர்கள், ஈழத்துக்காக நிதி சேகரிப்பிலும் பிரசாரத்திலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த இயக்கத்தின் செயற்பாடுகள் இந்தியாவின் இறையான்மை மற்றும் ஒருமைப்பாட்டுக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் விளைவிப்பதாகவே உள்ளது. பிரிவினைவாத கருத்துகள் தொடர்ந்து பரப்பப்பட்டு வரும் நிலை காரணமாகவே அமைப்பு ஐந்து வருடங்களுக்கு தடை செய்யப்படுகின்றது என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்கு வந்த 15 ஆவது ஆண்டு நினைவேந்தல் இலங்கையின் தமிழர் பிரதேசங்களில் கடும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் இந்தியா இந்த தடை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பு இலங்கையிலுள்ள பேரினவாத அமைப்புகள், கட்சிகளுக்கு மேலதிக போனஸ் கிடைத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழமையாகவே 2009 ஆம் ஆண்டுக்குப்பிறகு முன்னெடுக்கப்படும் நினைவேந்தல் நிகழ்வுகளைப் பற்றி மிக மோசமாக இனவாதத்தை கக்கி வரும் விமல் வீரவன்ச, சரத் வீரசேகர ஆகியோர் இம்முறையும் அதை செய்ய தவறவில்லை. விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டிருக்காவிடின் தெற்காசியாவின் இஸ்ரேலாக தமிழீழம் இருந்திருக்கும் என விமல் வீரவன்ச பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் 29 ஆயிரம் இராணுவ வீரர்கள் தமது உயிரை தியாகம் செய்தனர். ஆனால் அந்த தியாகத்துக்கு மதிப்பளிக்காமல் யுத்த குற்றங்கள் தொடர்பில் இராணுவத்துக்கு எதிரான சாட்சியங்கள் திரட்டப்பட்டு வருகின்றன. இதன் மூலம் சர்வதேச நீதிமன்றில் இலங்கைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய முடியுமா என்பது குறித்து ஐ.நா கலந்துரையாடலை செய்வதாக ஐ.நா உயர்ஸ்தானிகர் கூறுகின்றார். இதை சாதாரண விடயமாக எடுத்துக்கொள்ளக் கூடாது என அரச தரப்பு எம்.பி சரத் வீரசேகர பாராளுமன்றில் கூறியுள்ளார். 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுற்ற பிறகும் அரசாங்கமானது வரவு செலவு திட்டத்தில் பாதுகாப்பு செலவீனங்களுக்கு பல பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை செய்தே வந்தது. இலங்கையில் பயங்கரவாதம் முற்றாக நீங்கவில்லையென்பதே இதற்கு அரசாங்கம் கூறும் பதிலாக இருந்தது. நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்த விவகாரம் என்பதால் உயர்மட்ட அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் இதை கண்டுகொள்ளாமலும் கேள்வி எழுப்பாமலும் கடந்த சென்றனர். தற்போது இந்தியாவும் இதே வகையில், ஈழம் கோரிக்கை இன்னும் தொடர்கின்றது என்று கூறியுள்ளதோடு விடுதலை புலிகள் அமைப்பின் செயற்பாடுகள் தமிழ்நாட்டில் தொடர்வதாகக் கூறியுள்ளது. இந்தியாவின் தடை அறிவிப்பு தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை தடுப்பதற்கு வலு சேர்த்துள்ளது எனலாம். மிகப்பெரிய நாடான இந்தியாவே புலிகளின் செயற்பாடுகள் இன்னும் தொடர்கின்றன எனக் கூறும் போது, நேரடி பாதிப்புக்கு முகங்கொடுத்த சிறிய நாடான இலங்கை தனது இறையாண்மை மற்றும் பாதுகாப்பு குறித்து ஏன் அக்கறை கொள்ளக் கூடாது என்று கேள்வியெழுப்புவதை தவிர்க்க முடியாது. யுத்தம் முடிவுற்ற பின்னர் இலங்கையில் இடம்பெற்ற சகல தேர்தல் பிரசாரங்களிலும் யுத்த வெற்றியை முன்வைத்தே ராஜபக்ச குடும்பத்தினர் சிங்கள மக்களை ஈர்த்து அவர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொண்டனர். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெல்வதற்கு இவர்கள் பயன்படுத்திய மிக முக்கியமான ஆயுதம் யுத்த வெற்றியும் நாட்டின் இறையாண்மை பாதுகாப்புமே…..ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை இதற்கு சரியாக அவர்கள் பயன்படுத்திக்கொண்டனர். ஆனால் அதிகாரத்தை கைப்பற்றியதும் அக்குண்டுத்தாக்குதல் சூத்திரதாரிகளை அம்பலப்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கைளையும் ராஜபக்ச சகோதரர்கள் முன்னெடுக்கவில்லை. இது அவர்களின் மீதான சந்தேகங்களை மக்கள் மத்தியில் அதிகரித்தது. கோட்டாபய துரத்தப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாக விளங்கியது. இவ்வருடம் ஏதாவதொரு தேர்தல் இடம்பெற்றால், மக்கள் மத்தியில் பிரசார நடவடிக்கைகளுக்குச் செல்வதற்கு ராஜபக்சக்களுக்கு ஒரு தயக்கம் நிச்சயமாக இருக்கும். யுத்த வெற்றி கதைகள் தற்போது மக்கள் மத்தியில் எடுபடாவிட்டாலும் புலிகள் அமைப்பின் மீதான இந்தியாவின் தடையை இவர்கள் ஊதி பெருப்பிக்கலாம். தனி ஈழம் கோரிக்கையை புலி ஆதரவாளர் இன்னும் கைவிடவில்லையென இந்தியா அறிவித்துள்ள நிலையில் இங்கு பிரஸ்தாபிக்கப்பட்டு வரும் தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்திலும் அது தாக்கம் செலுத்தலாம். வடக்கு கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளையும் தமிழ் மக்களையும் புலிகளாகவே பார்த்து வரும் அரசாங்கம், சில நேரங்களில் சிங்கள மக்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வருவதற்கு இதை ஒரு பிரசார நடவடிக்கையாக இப்போதிருந்தே ஆரம்பிக்கலாம். நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் பொலிஸாரும் இதை நியாயப்படுத்தலாம். இந்திய லோக்சபா தேர்தல் முடிவுகள் ஜுன் 4 ஆம் திகதி வெளியாகவுள்ளன. இலங்கையின் அரசியல் செயற்பாடுகளில் இந்தியாவின் தலையீட்டை குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. அடுத்த நாட்டில் இடம்பெற வேண்டியது பாராளுமன்றத் தேர்தலா ஜனாதிபதித் தேர்தலா என்பதை தீர்மானிப்பது இந்தியாவாகக் கூட இருக்கலாம். https://www.virakesari.lk/article/184057
-
சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம் - வெளிநாட்டுப்பிரஜை கைது!
அண்ணை சகோதரி பாஸ்போட் எடுக்க முடியாத கோபம், மறுபடி அவ பெயரில வங்கிக் கணக்கு திறந்த கோபம் எல்லாம் சேர்ந்து முறைப்பாடாகியிருக்கு!
-
அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு மீது பிடியாணை பிறப்பித்துள்ளது.
இஸ்ரேலிய பிரதமர் ஹமாஸ் தலைவருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் பிடியாணை Published By: RAJEEBAN 20 MAY, 2024 | 05:57 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் ஆகியோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. யுத்த குற்றங்களிற்கா பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/184071
-
குழந்தைகளிடையே அதிகரிக்கும் கிட்டப்பார்வை பிரச்னை - என்ன காரணம்? எப்படித் தடுப்பது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ் பதவி, பிபிசி தமிழ் 20 மே 2024, 10:46 GMT புதுப்பிக்கப்பட்டது 19 நிமிடங்களுக்கு முன்னர் 2030-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நகரங்களில் வாழும் மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தைக்கு 'மையோபியா' எனும் கிட்டப்பார்வை கண் குறைபாடு ஏற்படலாம் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவர்கள் கூறுகின்றனர். உலக அளவில் மே 13 முதல் 19 வரை கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. வளரிளம் குழந்தைகளிடையே பெருகி வரும் இந்தக் கண்சார் குறைபாடு சமீப காலமாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைமுறை மாற்றங்களால் அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். கிட்டப்பார்வை குழந்தைகளை ஏன் தாக்குகிறது? அதைத் தடுப்பது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலக மையோப்பியா நிறுவனத்தின்படி, 2050ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் 50% மையோப்பியாவால் பாதிக்கப்பட்டிருக்கும். மருத்துவர்கள் கூறுவது என்ன? உலக கிட்டப்பார்வை விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள மும்பை டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவமனையின் மருத்துவர்கள், 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் நகரத்தில் வளரும் 5 வயது முதல் 15 வயது வரை உள்ள மூன்றில் ஒரு குழந்தைக்கு கிட்டப்பார்வை ஏற்படலாம் என்று கூறியுள்ளனர். 1999 முதல் 2019-ஆம் வரை பதிவான கிட்டப்பார்வை தரவுகளின்படி, கடந்த 20 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை 4.44% இலிருந்து 21.15% என்ற அளவுக்கு மும்மடங்காக உயர்ந்துள்ளதாக கூறுகின்றனர் மருத்துவர்கள். உலக கிட்டப்பார்வை நிறுவனத்தின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள் உலக மக்கள்தொகையில் 50% மையோபியாவால் பாதிக்கப்பட்டிருக்கும். கிட்டப்பார்வை என்றால் என்ன? கிட்டப்பார்வை என்பது கண்களில் ஏற்படும் குறைபாடாகும். இதனால் தூரத்தில் இருக்கும் அனைத்தும் பாதிப்பின் தீவிரத்தைப் பொறுத்து கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ மங்கலாகத் தெரியும். அகர்வால்ஸ் மருத்துவமனையின் கண் மருத்துவர் மற்றும் அறுவைசிகிச்சை நிபுணர் அக்சயாவின் கூற்றுப்படி, இந்தக் குறைபாடு பிறப்பில் இருந்து 18 வயது வரை உள்ள குழந்தைகள் முதல் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்படக் கூடியது. சமீபத்தில் இதனால் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது பள்ளிக்குழந்தைகள் தான். அதற்குக் காரணம் சமீபத்தில் கோவிட் பெருந்தொற்று முடக்கத்திற்குப் பிறகான வாழ்க்கைமுறை மாற்றங்களே என்று கூறுகிறார் அக்சயா. எழும்பூர் அரசு கண் மருத்துமனையின் முன்னாள் இயக்குநரும், கண் மருத்துவருமான வஹீதா நஷீர், கோவிட் சமயத்தில் குழந்தைகள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருந்து அதிகமாக டிஜிட்டல் ஸ்க்ரீன்களை பயன்படுத்தியதால் மையோபியா பாதிப்பும் அதிகரிக்கலாம் என்று கூறுகிறார். குறிப்பாகக் கோவிட் தொற்றுக்குப் பிறகு அதிகரித்துள்ள ஆன்லைன் கல்வி முறை மற்றும் இதர டிஜிட்டல் ஸ்க்ரீன் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் வளரிளம் பருவத்தினரிடையே இந்தக் குறைபாடு அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார் அக்சயா. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கிட்டப்பார்வை இருந்திருந்தால் அது அவர்களின் வாரிசுகளுக்கும் ஏற்படலாம் கிட்டப்பார்வையின் வகைகள் 'ஸ்கூல் மையோபியா' என்றழைக்கப்படும் பள்ளிக்குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை பாதிப்பானது, அவர்களுடைய கண்களின் பின்பகுதி வேகமான முறையில் நீளமாக வளர்வதால் ஏற்படக்கூடிய கண் குறைபாடு என்கிறார் அக்சயா. ஸ்கூல் மையோபியா மட்டுமின்றி, மரபு சார்ந்த கிட்டப்பார்வை மற்றும் குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும் கிட்டப்பார்வை உள்ளிட்ட வகைகளும் உள்ளன. கிட்டப்பார்வை ஏன் ஏற்படுகிறது? கிட்டப்பார்வை ஏற்படுவதற்கு மரபுவழி உட்பட ஒரு சில முக்கிய காரணங்கள் உள்ளன. மருத்துவர் அக்சயா இதுகுறித்து கூறுகையில், “குழந்தைகளின் பெற்றோர்களுக்கு கிட்டப்பார்வை இருந்தால், அது அவர்களின் வாரிசுகளுக்கும் ஏற்படலாம்,” என்கிறார். அதேபோல் “வீட்டிற்குள்ளேயே இருந்தபடி டிஜிட்டல் ஸ்க்ரீன் பயன்பாட்டு நேரம் அதிகரிக்கும் போதும் கண் விழித்திரையில் ஏற்படும் பாதிப்புக்கு எதிர்வினையாக கண்கள் வேகமாக வளர்ந்துக் கொண்டே போகும்," என்றார். “இது அந்த வயதுக்கான வளர்ச்சியை விட அதிகமானதாக இருக்கும். மேலும் கண்களின் வளர்ச்சி காலம் முடியும் வரை இந்த நிலையின் தீவிரமும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்,” என்கிறார் மருத்துவர் அக்சயா. டிஜிட்டல் காலம் தொடங்குவதற்கு முன்பு, கல்வியில் அதிக கவனம் செலுத்தும், படிப்பதில் அதிக நேரம் செலவிடும் மாணவர்களுக்கு இந்த பாதிப்பு ஏற்பட்டுக் கொண்டிருந்தது என்று குறிப்பிடும் மருத்துவர் அக்சயா, தற்போதைய டிஜிட்டல் பயன்பாடு அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து உலகளவில் பெருகிவரும் பிரச்னையாக இது மாறியுள்ளது என்கிறார். பட மூலாதாரம்,AKSHAYA படக்குறிப்பு,கண் அறுவை சிகிச்சை நிபுணர் அக்சயா கிட்டப்பார்வையின் அறிகுறிகள் மருத்துவர் வஹீதா நஷீர் கிட்டப்பார்வையில் 'சிம்பிள் மையோப்பியா' (Simple Myopia), 'பேத்தலாஜிக் மையோப்பியா' (Pathologic Myopia) என இருவகை உண்டு என்கிறார். “இதில் சிம்பிள் மையோபியாவால் கண் பார்வை கூர்மையில் (Power) மட்டுமே மாற்றங்கள் ஏற்படும். ஆனால், பேத்தலாஜிக் மையோப்பியாவில் பார்வைத்திறன் மற்றும் ரெட்டினா சார்ந்த பிரச்னைகள் ஏற்படும்," என்கிறார். இதன் அறிகுறிகளை அடையாளம் கண்டு அதற்கான சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளாத வரை கண்பார்வை மங்கலாக மாறி, அதன் கூர்மைத் தன்மை '-25' வரைக் கூட குறைந்து கண்பார்வையின் வளர்ச்சியே ஒரு கட்டத்தில் நின்று விடும் என்று கூறுகிறார் மருத்துவர் வஹீதா நஷீர். இந்தக் குறைபாடு குழந்தைகளுக்கு அதிகம் ஏற்படுவதால் அதைத் தொடக்கத்திலேயே கண்டறிவதில் சிரமங்கள் இருக்கலாம் என்று கூறுகிறார் அக்சயா. ஆனாலும், கீழ்காணும் ஒரு சில அறிகுறிகளைக் கொண்டு அதை கண்டுகொள்ள முடியும் என்கிறார் அவர். கிட்டப்பார்வை உள்ளவர்களுக்கு தூரத்தில் உள்ள விஷயங்கள் மங்கலாகத் தெரியும் என்பதால் டி.வி. அல்லது பெரிய திரையில் எதையாவது பார்க்கிறார்கள் என்றால் அதை அருகில் சென்று பார்க்கவே முயல்வார்கள். பள்ளியில் படிக்கும்போது அல்லது போர்டில் உள்ளவற்றை பார்க்கும்போது சிரமம் ஏற்படுதல், மாறுகண் பிரச்னை இருப்பவர்களும் உடனடியாகப் பரிசோதனை செய்ய வேண்டும். அதேபோல் வழக்கமான தலைவலி மற்றும் கண்வலி இருப்பவர்களும் சோதனை செய்துகொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மையோபியா இருப்பதைக் கண்டறிந்தால் மருத்துவர் பரிந்துரையோடு கண்ணாடி அல்லது 'கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுத்த வேண்டும் எப்படிக் கட்டுப்படுத்துவது? கிட்டப்பார்வை ஏற்பட்டவர்கள் முறையான பரிசோதனை மற்றும் சிகிச்சை வழியாகக் கண்பார்வையில் ஏற்படும் குறைபாட்டைக் கட்டுப்படுத்த முடியும். கிட்டப்பார்வை என்பது 'ஆப்டிக்கல் நிலை' என்பதால் அதே வழியில்தான் அதைச் சரி செய்ய வேண்டும் என்கிறார் மருத்துவர் அக்சயா. கிட்டப்பார்வை இருப்பதைக் கண்டறிந்தால் மருத்துவர் பரிந்துரையோடு கண்ணாடி அல்லது 'கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுத்த வேண்டும் என்கிறார் அவர். மேலும், குறைபாட்டின் தீவிரம் மற்றும் பாதிக்கப்பட்டவரின் வயது, நிலை ஆகியவற்றைப் பொறுத்து லேசர் சிகிச்சை போன்ற நவீன சிகிச்சைகளும் இருப்பதாகக் கூறுகிறார் மருத்துவர் வஹீதா. ஒரு குழந்தைக்குக் கிட்டப்பார்வை இருப்பது தெரியாமல் விட்டுவிட்டால் நீண்ட காலத்திற்கு அதன் கண்பார்வை மங்கலாகவே தெரியும். படிப்பு மற்றும் இதர வெளிப்புறச் செயல்பாடுகளில் சோர்வு காணப்படும் என்கிறார் அக்சயா. அதேபோல், “கண்ணாடி இருந்தும் போடாமல் இருந்தால் சோம்பல் கண் ஏற்படலாம். அது ஒரு கட்டத்திற்கு மேல் கண் பார்வையை வளர விடாமல் தடுத்து விடும். மேலும், மாறுகண் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. அதற்கு அறுவைசிகிச்சை செய்யும் நிலை வரை செல்லவும் வாய்ப்பும் உள்ளது,” என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,டிஜிட்டல் திரை பயன்படுத்தும் நேரத்தை குறைப்பதன் மூலம் மையோபியா ஏற்படும் அபாயத்தைக் குறைக்கலாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சர்வதேச கிட்டப்பார்வை நிறுவனத்தின் தரவுகளின்படி அடுத்த 25 ஆண்டுகளில் உலகில் இருவரில் ஒருவருக்கு கிட்டப்பார்வை வருவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில், ஒரு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் இது ஏற்படும் அபாயத்தை குறைக்கலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். டிஜிட்டல் திரை பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பது அவ்வப்போது திரைகளைப் பார்ப்பதில் இருந்து இடைவேளை எடுத்துக்கொள்வது குறைவான ஒளியில் படிப்பதைத் தவிர்த்தல் வருடாந்திர கண் பரிசோதனை செய்துகொள்ளுதல் வெளியே செல்லும்போது சூரிய ஒளியைத் தவிர்க்கும் கண்ணாடிகள் அணிவது கண்ணுக்கு அவ்வப்போது ஓய்வு கொடுப்பது புகைபிடிப்பதைத் தவிர்ப்பது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சர்வதேச மையோபியா நிறுவனத்தின் தரவுகளின்படி அடுத்த 25 ஆண்டுகளில் உலகில் இருவரில் ஒருவருக்கு மையோபியா வருவதற்கான வாய்ப்புகள் உண்டு கண்பார்வை பறிபோகுமா? கிட்டப்பார்வை பாதிப்பால் நேரடியாகக் கண்பார்வை பறிபோகாது என்றாலும், கிளை பாதிப்புகள் ஏற்பட்டுக் கண்பார்வையில் பாதிப்பு ஏற்படலாம் என்று கூறுகிறார் மருத்துவர் வஹீதா நசீர். “கிட்டப்பார்வையால் கண்கள் பெரிதாகும் போது ரெட்டினா மெல்லியதாக மாறி அதற்கு ஆதரவாக இருக்கும் ஜவ்வு இலகுவாகி விடும். இது, ரெட்டினல் டிட்டேச்மென்ட் என்ற கண்குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இது குறிப்பிட்ட அளவிற்கான கண்பார்வை குறைபாட்டை ஏற்படுத்துவதில் தொடங்கி தீவிரமான பாதிப்பு வரை உண்டாக்கலாம்,” என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/cyxe0kd91d9o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக் கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனையும் இஸ்ரேலிய படையினரின் முற்றுகையில் - பெரும் அவலம் Published By: RAJEEBAN 20 MAY, 2024 | 11:56 AM காசாவின் வடபகுதியில் செயற்பட்டுக்கொண்டிருந்த ஒரேயொரு மருத்துவமனையையும் இஸ்ரேலிய படையினர் சுற்றிவளைத்துள்ளனர். அல்அவ்டா மருத்துவமனையை இஸ்ரேலிய படையினர் முற்றுகையிட்டுள்ளனர். மருத்துவமனையை நோக்கி எறிகணை தாக்குதலை மேற்கொண்ட பின்னர் இஸ்ரேலிய படையினர் அந்த மருத்துவமனையை சுற்றிவளைத்துள்ளனர் என செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. மருத்துவமனைக்கு அருகில் உள்ள கட்டிடங்களை இஸ்ரேலிய படையினர் புல்டோசர்களை பயன்படுத்தி அழித்துள்ளனர். இஸ்ரேலிய படையினர் மருத்துவமனையை முற்றுகையிட்டுள்ளதன் காரணமாக பொதுமக்களும் மருத்துவ சுகாதார பணியாளர்களும் மருத்துவமனைக்குள் நுழைவதற்கு வெளியே செல்வதற்கு முடியாத நிலை காணப்படுகின்றது. சனிக்கிழமை ஜபாலியா அகதிமுகாம்மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக இந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/184023