Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஐபிஎல் பிளே ஆஃப் சுற்றில் மூன்று அணிகள் அதிகாரபூர்வமாக தகுதி பெற்றுவிட்டன. கொல்கத்தா, ராஜஸ்தான், ஹைதராபாத் லீக் சுற்றில் இன்னும் ஒரு போட்டி இருக்கும் முன்னரே லீக் ரேஸில் வென்று பிளே ஆஃபில் காலடி எடுத்து வைத்துவிட்டன. குஜராத், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் அதிகாரபூர்வமாக வெளியேறிவிட்டன. மீதமுள்ள ஒற்றை இடத்துக்கு நான்கு அணிகள் போட்டிபோடுகின்றன. ஆனால் இதில் டெல்லி அணிக்கு போட்டிகள் முடிந்துவிட்டன. அது 14 புள்ளிகளை எடுத்திருக்கிறது. லக்நௌ அணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் கடைசி போட்டி மீதமிருந்தது. இந்த போட்டியில் வென்றால் 14 புள்ளிகள் கிடைக்கும். ஆனால் இவ்விரு அணிகளும் மிக மோசமான ரன் ரேட் வைத்திருப்பதால் பிளே வாய்ப்பு வாய்ப்பு கிட்டதட்ட முடிந்துவிட்டது. ஆக மீதமிருக்கும் ஒற்றை இடத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் நாளை மல்லுக்கட்ட உள்ளன.
  2. 17 MAY, 2024 | 08:56 PM அமெரிக்காவிலிருந்து தபால் விமானச் சேவை மூலம் சீதுவையில் உள்ள களஞ்சியசாலை வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட 10 கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் சுங்க போதைப் பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினரால் இன்று (17) கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த போதைப்பொருட்களானது பொதிகளாக்கப்பட்ட வாகன உதிரிப்பாகங்களுக்குள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டு பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள 25 வயது இளைஞரொருவரின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேக நபரான இளைஞர் இந்த பொதிகளை எடுப்பதற்காக சென்றிருந்த போது அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் குறித்த பொதிகளில் இருந்த வாகன உதிரிப்பாகங்களிலிருந்து 3 கிலோ 101 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183803
  3. 2011 இல் எனது தம்பி guillain barre syndrome ஆல் எழுந்து நடக்க முடியாதவாறு பாதிக்கப்பட்டுவிட்டான். அவன் ஏற்கனவே Muscular dystrophy ஆல் பாதிப்படைந்து/பலவீனமடைந்து இருந்ததால் மீள நடக்க முடியவில்லை என வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர். சாதாரண மனிதர்களுக்கு guillain barre syndrome வந்தால் அவர்கள் படிப்படியாக வழமைக்குத் திரும்புவார்கள்.
  4. பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை பார்வையிட்டார் அமெரிக்க தூதுவர் ஜூலி சங்! 17 MAY, 2024 | 09:55 PM பனை அபிவிருத்திச் சபை அலுவலகத்தை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சாங் இன்று வெள்ளிக்கிழமை (17) பார்வையிட்டார். யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்திச் சபையின் தலைமை காரியாலயத்தை இன்று காலை 8.15 மணியளவில் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பார்வையிட்டார் . இதன்போது பனை அபிவிருத்திச் சபையினுடைய தலைவர் கிருஷ்ணராஜா பத்திராஜா, உத்தியோகத்தர்கள், சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் தனபால உட்பட பலர் கலந்து கொண்டனர் . இதன்போது பனை அபிவிருத்திச் சபையின் சபையினுடைய உற்பத்திகள் தொடர்பான கருத்தரங்கு ஒன்றும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது . https://www.virakesari.lk/article/183802
  5. 17 MAY, 2024 | 06:20 PM எம்மில் சிலர் கோவிட் தொற்று பாதிப்பிற்கு பிறகு கில்லன்- பாரே சிண்ட்ரோம் எனப்படும் அதி விரைவு நரம்பு தளர்ச்சிப் பாதிப்பிற்கு ஆளாகக்கூடும். அப்போது எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம்.. எம்முடைய நரம்பு மண்டலத்தை தாக்குகிறது. இது அரிய வகை பாதிப்பு என்றாலும், கை, கால் போன்றவற்றில் ஏற்பட்டு, பாரிய சுகவீனத்தை ஏற்படுத்தி, உயிருக்கு அச்சுறுத்தலை உண்டாக்க கூடும். எனவே இத்தகைய பாதிப்பின் அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனடியாக வைத்தியசாலைக்குச் சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற வேண்டும் என வைத்தியர்கள் அறிவுறுத்துகிறார்கள். எம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் விவரிக்க இயலாத காரணங்களால் நரம்புகளை தாக்கி தளர்ச்சியை ஏற்படுத்துகிறது. இது வெகுவிரைவில் உடல் முழுவதும் பரவி உடலை முடக்கி விடும். இதன் காரணமாக கை மற்றும் கால்களில் பலவீனமும், கூச்ச உணர்வும் ஏற்பட்டு அசௌகரியத்தையும், சுக வீனத்தையும் ஏற்படுத்துகிறது. இது அவசர நிலையாக கருதப்பட்டு சிகிச்சை பெற வேண்டும். சுவாச தொற்று அல்லது இரைப்பை தொற்று, குடல் தொற்று, ஜிகா வைரஸ் தொற்று, கொரோனா வைரஸ் தொற்று ஆகிய தொற்று பாதிப்பால் இத்தகைய நோய்க்குறி ஏற்படுவதாக மருத்துவர்கள் விவரிக்கிறார்கள். கை விரல்கள், கால் விரல்கள், கணுக்கால், மணிக்கட்டு ஆகிய பகுதிகளில் ஊசி குத்துவது போன்ற உணர்வு, கால்களில் ஏற்படும் பலவீனம் உடல் முழுவதும் பரவுவது, நடையில் தடுமாற்றம், படிக்கட்டுகளில் ஏற இயலாத நிலை, பேச்சு- மெல்லுதல் -விழுங்குதல் போன்றவற்றில் சிரமம், பார்வையில் தடுமாற்றம், தசைப்பிடிப்பு குறிப்பாக இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும்போது தசை பிடிப்பு, குடல் செயல்பாட்டில் சமசீரற்ற தன்மை, இதயத் துடிப்பில் சமசீரற்ற தன்மை, குருதி அழுத்த மாறுபாடு.. போன்ற அறிகுறிகள் இருந்தால் அவை இத்தகைய பாதிப்பின் அறிகுறியாக இருக்கலாம். இத்தகைய அறிகுறிகளுக்கு வைத்தியர்கள் வழக்கமான பரிசோதனைகளுடன் எலக்ட்ரோமயோகிராபி, நரம்பு செயல்பாட்டு திறன் குறித்த பிரத்யேக பரிசோதனை, தண்டுவட குழாயில் சுரக்கும் பிரத்யேக திரவத்தின் பரிசோதனை என சில பரிசோதனைகளை பரிந்துரைப்பர். பரிசோதனை முடிவுகளில் அடிப்படையில் உங்களுக்கான சிகிச்சை தீர்மானிக்கப்படும். அப்போது பிளாஸ்மா மாற்று சிகிச்சை மற்றும் இம்யூனோகுளோபுலின் தெரபி ஆகிய நவீன சிகிச்சைகளின் மூலம் உங்களுக்கு முதன்மையான நிவாரணத்தை வழங்குவர். இதனுடன் பிசிக்கல் தெரபி எனப்படும் இயன்முறை சிகிச்சையும் வழங்கி உங்களின் தளர்ச்சி அடைந்த நரம்பின் செயல்பாட்டை இயல்பு நிலைக்கு மீட் பர். இதனைத் தொடர்ந்து வைத்தியர்கள் பரிந்துரைக்கும் வாழ்க்கை நடைமுறை, உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை முழுமையாக பின்பற்றினால் மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்படாமல் ஆரோக்கியமாக வாழலாம். வைத்தியர் பாலசுப்பிரமணியன் தொகுப்பு அனுஷா. https://www.virakesari.lk/article/183810
  6. Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 06:17 PM முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? முள்ளிவாய்க்கால் கஞ்சி என்பது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமல்ல. இந்த விவகாரத்தை அரசாங்கம் தவறான விதத்தில் கையாள்கின்றது என சட்டத்தரணியும் மக்கள் பேரவைக்கான இயக்கத்தின் உறுப்பினருமான சிறீநாத் பெரேரா தெரிவித்தார். நேர்காணலின்போது இதனை தெரிவித்த ஸ்ரீநாத் பெரேரா கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் எனவும் குறிப்பிட்டார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ள ஸ்ரீநாத் பெரேரா, வலிந்து காணாமல் ஆக்கப்ட்டோரின் உறவுகளின் போராட்டங்கள், கேப்பாபிலவு மண்மீட்பு போராட்டம், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டங்கள் போன்றவற்றில் தன்னை இணைத்துக்கொண்டவர். ஸ்ரீநாத் பெரேரர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மயிலத்தனை மாதவனை தமிழ் பண்ணையாளர்களை சமீபத்தில் சந்தித்திருந்தார். உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில் இல்லை என தெரிவிக்கும் அவர் ஜேவிபி தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை சிறிதளவும் புரிந்துகொள்ளவில்லை அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள அவர்கள் தயாரில்லை எனவும் குறிப்பிட்டார். பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. கேள்வி - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளில் தொடர்ச்சியாக கலந்துகொண்டுள்ளீர்கள்? இம்முறையும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கின்றீர்கள் அங்கு எவ்வாறான உணர்வுகளை கடந்த காலங்களில் அவதானித்திருக்கின்றீர்கள்? பதில்- கடந்த வருடம் இளைஞர்கள் பலர் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகளில் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குவது உட்பட பல்வேறு ஏற்பாடுகளில் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். இளைஞர்கள் இவ்வாறான நடவடிக்கைளில் ஈடுபடுவது மிகவும் சாதகமான விடயம். பரந்தன் முதல் முள்ளிவாய்க்கால் வரை நான் இதனை அவதானித்தேன். திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட விடயம் தமிழ்மக்களின் உணர்வுகளை பாதித்துள்ளது. சமூக ஊடகங்களில் நான் அவதானித்த விடயங்களை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உணர்வுகள் கடினமாகியுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இது தொடர்வதற்கு இனியும் அனுமதிக்க முடியாது என தமிழர்கள் கருதுகின்றனர். இந்த துன்புறுத்தல்கள் வன்முறைகள் முடிவிற்கு வரவேண்டும் என தமிழ் மக்கள் கருதுகின்றனர். தமிழ் மக்களின் உணர்வுகள் கடினமாகியுள்ளமை இம்முறை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வெளிப்படும் என கருதுகின்றேன். நான் கடந்த மூன்று வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டுள்ளேன். தங்கள் உறவுகளைஇழந்த குடும்பத்தவர்களின் துயரம் வேதனை ஒவ்வொரு வருடம் மனதை வருத்தும் விதத்தில் வெளிப்படும். இந்த வருடமும் அதேபோன்ற வேதனையான துயரமான உணர்வுகளே வெளிப்படப்போகின்றன. கூட்டு வேதனை கவலை துயரம் என்பன பொங்கி பெருகி வெளியேறும் இடம் முள்ளிவாய்க்கால் தனிமையில் வாழும்போது அவர்களிடமிருந்து வெளிவராத உணர்வுகள் அனைவரும் ஒன்றிணையும் போது திடீரென வெடித்துக் கிளம்பும் கண்ணீராக கதறல்களாக. தற்போது வடக்குகிழக்கில் காணப்படும் நிலைமை மாற்றமடையும் வரை இந்த நிலை மாறப்போவதில்லை. தற்போதைய நிலை தொடர்ந்தால் இந்த நிலை மாறாது. 2 திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கியவர்கள் தாக்கப்பட்டு கைதுசெய்யப்பட்டமைக்கு உடனடியாக நீங்கள் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கண்டனம்வெளியிட்டிருந்தீர்கள்-? பதில்- இது மிகவும் மோசமான செயல் என்னவென்று சொல்ல முடியாத செயற்பாடு- எவரும் இவ்வாறான அனுபவத்தை எதிர்கொள்ளக்கூடாது. முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குவது ஏன் பிரச்சினைக்குரிய விடயம்? அதில் என்ன உள்ளது? அது ஏன் தவறு ? போரின் போது உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்காக அவர்கள் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்குகின்றனர். இது விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்ட விடயமில்லை. அவர்கள் இதன் மூலம் மோதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைகூருகின்றனர். இதில் என்ன தவறு உள்ளது ஆட்சியாளர்கள் மிகவும் மோசமான விதத்தில் இந்த விடயத்தை கையாள்கின்றனர். 3 திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவத்திற்கு தென்பகுதியிலிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? பதில்- திருகோணமலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை தயாரித்து வழங்கியவர்கள் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எங்களை போன்ற சில குழுக்கள் மாத்திரம் எதிர்ப்பை வெளியிட்டன. எதிர்கட்சி அரசியல்வாதிகள் இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை. மலையக அரசியல்வாதிகளிடமிருந்து பொலிஸாரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குரல் வெளிப்பட்டதை நான் அவதானிக்கவில்லை. 4 வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் போராடும் பகுதிகளிற்கு தென்னிலங்கையிலிருந்து தொடர்ச்சியாக சென்று வருபவர்களில் நீங்களும் ஒருவர் - அவர்களின் போரட்டத்தின் ஆரம்பகாலத்திலிருந்து நீங்கள் அவர்களின் போராட்டத்திற்கு உங்கள் ஆதரவை வெளியிட்டு வந்துள்ளீர்கள் - காணாமல்போனோர் அலுவலகம் உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழு போன்றவை குறித்த உங்கள் அவதானிப்பு என்ன? பதில்- எந்த நம்பிக்கையும் இல்லை. காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட்டு ஐந்து வருடங்களாகின்றன ஏதாவது கண்டுபிடிக்கப்பட்டதா? எதுவும் வெளிவரவில்லை. மரணச்சான்றிதழ் வழங்குவது இழப்பீடு வழங்குவது குறித்து மாத்திரம் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஆனால் காணாமல்போனவர்களின் உறவுகள் உங்களிடம் பணம் கேட்கவில்லை நீதியைதான் கோருகின்றார்கள். அவர்களில் பலர் தங்கள் உறவுகளை இராணுவத்திடம் ஒப்படைத்தவர்கள். அவர்களிற்கு என்ன நடந்தது என்பதை தான் அவர்கள் கேட்கின்றனர். காணாமலாக்கப்பட்டமைக்கு யார் பொறுப்பு இது தொடர்பில் எவருக்கு எதிராகவும் எந்த நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்? இது தொடர்பில் காணாமல்போனோர் அலுவலகம் எதனையும் செய்யவில்லை. உண்மை நீதி நல்லிணக்க ஆணைக்குழுக்கள் போன்றவை செயற்படக்கூடிய சூழல் இலங்கையில்இல்லை. அரசாங்கம் அதற்கு தயாரில்லை. நடந்து முடிந்த சம்பவங்களிற்கு பொறுப்பான ஆளும் வர்க்கமும் ஒடுக்குமுறை அரசாங்கமும் வெள்ளையடிப்பதற்கான ஒரு முயற்சியாக இவ்வகை ஆணைக்குழுக்களை பயன்படுத்த முயல்கின்றன. கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவை விட இது எந்த வகையில் சிறந்தது என்பது எனக்கு விளங்கவில்லை. 5 சில வாரத்திற்கு முன்னர் நீங்கள் மயிலத்தனைமடு சென்றிருந்தீர்கள்? மயிலத்தனைமடு கால்நடை வளர்ப்போர் விவசாயிகள் தற்போது பெரும் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளனர். தங்கள் கால்நடைகளிற்கு உணவு வழங்குவதற்காக அவர்கள் மேய்ச்சல் நிலங்களை பயன்படுத்தி வந்தார்கள். பெண் ஆளுநர் - பதவியேற்ற பின்னர் அந்த நிலத்தை கைப்பற்றி சிங்கள விவசாயிகளிற்கு வழங்குவதற்கான நடவடிக்கையில் அவர் ஈடுபட்டார். அவர்களின் போராட்டம் 200நாட்களை கடந்து நீடிக்கின்றது அரசாங்கம் அதனை அலட்சியம் செய்துள்ளது. ஆனாலும் விவசாயிகள் துணிச்சலுடன் அர்ப்பணிப்புடன் போராடுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகள் கூட வலுவான விதத்தில் எதிர்ப்பை வெளிப்படுத்தவில்லை என நான் கருதுகின்றேன். கேள்வி- எதிர்வரும் தேர்தல்களில் ஜேவிபி தமிழ் மக்களின் ஆதரவை பெறுவது குறித்த விடயம் பேசுபொருளாகியுள்ளதே? பதில்- ஜேவிபி தற்போது சிங்கள பௌத்த வாக்காளர்களின் பெருமளவு ஆதரவை பெற்றுள்ளது அவர்கள் தற்போது வடக்குகிழக்கு மற்றும் மலையக தமிழர்களின் ஆதரவை பெற முயல்கின்றனர். இந்த பகுதிகளில் அவர்களிற்கு மிகக்குறைந்த ஆதரவே காணப்படுகின்றது அனுரகுமார திசநாயக்க இந்த பகுதிகளில் தனது ஆதரவை அதிகரிக்க முயல்கின்றார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே வெற்றியை தீர்மானிக்கப்போகின்றன. இதன் காரணமாக அனுரகுமார திசநாயக்க தமிழ்மக்களின் வாக்குகளை பெற முயல்கின்றார். ஆனால் அவர் தமிழ் மக்களிற்கு எதனையும் வழங்க முன்வரவில்லை. நாங்கள் இந்த நிலைமையை மாற்றுவோம் அபிவிருத்தி செய்வோம் என மாத்திரம் தெரிவிக்கின்றார். தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினையை அவர் புரிந்துகொள்ளவில்லை. தேசியஇனப்பிரச்சினைக்குபொருளாதார அபிவிருத்தி மூலம் மாத்திரம் தீர்வை காணமுடியாது. தங்கள் பகுதிகளை தங்கள் நாளாந்த வாழ்க்கையை நிர்வகிப்பதற்கான உரிமையை தமிழ் மக்கள் கோரிநிற்கின்றனர். இதற்கான தீர்வு குறித்த விடயத்தில் அனுரகுமார திசநாயக்க அமைதியாக காணப்படுகின்றார். 13வது திருத்தம் குறித்தும் அவர் உறுதியாக எதனையும் தெரிவிக்கவில்லை. அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய 13 வது திருத்தத்தை நாங்கள் வரவேற்கின்றோம் என தெரிவித்து 24 மணிநேரத்தில் டில்வின் சில்வா அதனை முற்றாக எதிர்த்தார். நாங்கள் அதனை ஆதரிக்கவில்லை என தெரிவித்தார். இதன் அர்த்தம் என்னவென்றால் அவர்கள் -ஜேவிபி சிறிய அளவு அதிகாரப்பகிர்விற்கு கூட தயாரில்லை . ஆரம்பத்திலிருந்து இதுதான் அவர்களின் கொள்கை . அவர்கள் அதிகாரங்களை ஏனையவர்களுடன் பகிர்ந்துகொள்ளவிரும்பவில்லை. அவர்கள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை காணமாட்டார்கள் இதேவேளை ஜேவிபி தமிழ் வர்த்தகர்களின் ஆதரவை பெற முயல்கின்றது. சோசலிஸ கட்சி என்ற நிலையிலிருந்து அவர்கள் சீர்திருத்த பூர்ஸ்வா கட்சியாக மாறிவிட்டனர். அவர்களிடமிருந்து தமிழர்களிற்கு எந்த தீர்வும் கிடைக்காது. கொழும்பு தமிழ்சங்கத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பெரும்பான்மையினத்தை சேர்ந்தவர்கள் தமிழ் மக்களுடன் கைகோர்ப்பது குறித்து கருத்துதெரிவித்திருந்தீர்கள்? பதில்- தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கு காலத்திற்கு காலம் பெரும்பான்மை சமூகம் ஏதோ சில தீர்வுகளை முன்வைக்க முயன்றுள்ளது. இடதுசாரிகள் என்ற அடிப்படையில் நாங்கள்அதனை ஆதரிக்கவில்லை. தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான உரிமையை ஏற்றுக்கொள்வதிலேயே அவர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தங்கியுள்ளது. எனினும் இலங்கையை ஆண்ட எந்த முதலாளித்துவ கட்சிகளும் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.அவர்கள் தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.அவர்களின் அரசியல் அடிப்படை என்பது சிங்கள பௌத்த பேரினவாதமாகும். இடதுசாரிகள், சோசலிச கொள்கைகளில் நம்பிக்கையுள்ளவர்கள் மாத்திரம் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை ஏற்றுக்கொள்கின்றார்கள் ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்மக்களின் சுயநிர்ணய உரிமையை பாதுகாப்பதும் அதற்காக போராடுவதும் பெரும்பான்மை சமூகத்தினர் அதனை ஏற்றுக்கொள்ளச் செய்வதும் ஒரு வகையான இடதுசாரிகளிற்கான ஒரு புனித கடமை. தமிழ் மக்களின் போராட்டத்தை தென்பகுதியின் வர்க்க போராட்டத்துடன் இணைத்து முன்னெடுக்கவேண்டும். நாங்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். எந்த முதலாளித்துவ கட்சியும் இதனை செய்யப்போவதில்லை. https://www.virakesari.lk/article/183790
  7. 13 MAY, 2024 | 10:28 AM சஷி தரூர் இந்திய பொதுத்தேர்தல் அதன் இரண்டாவது மாதத்தில் பிரவேசித்திருக்கும் நிலையில், மிகவும் சம்பிரதாயபூர்வமான எதிர்பார்ப்புகள் தலைகீழாகப் போய்விட்டன. பெரிய மாறுதல் எதுவும் சாத்தியமில்லை என்று நம்புகின்ற அறிஞர்கள் பிரதமர் நரேந்திர மோடி மிகவும் வசதியான வெற்றியைப் பெறுவார் என்று நீண்ட நாட்களுக்கு முன்னரே முடிவெடுத்துவிட்டார்கள். ஆனால், ஏழு கட்ட தேர்தலில் ஏற்கெனவே இரு கட்டங்கள் நிறைவடைந்து, சுமார் 190 தொகுதிகளில் மக்கள் தங்கள் வாக்குகளை ஏற்கெனவே பதிவுசெய்துவிட்ட நிலையில் இனிமேலும் நிலைவரம் அவ்வளவு சுலபமானதாக தோன்றவில்லை. வாக்களித்துவிட்டு வாக்குச்சாவடிகளில் இருந்து வெளியே வருகின்ற மக்களிடம் கருத்துக்கேட்டு அதன் அடிப்படையில் வெளியிடப்படுகின்ற கணிப்புகளை (Exit Polls) சகல ஏழு கட்ட வாக்குப்பதிவுகளும் நிறைவடையும் வரை வெளியிடக்கூடாது என்று இந்தியாவின் சுயாதீனமான தேர்தல்கள் ஆணைக்குழு தடைசெய்திருக்கிறது. (இறுதிக்கட்ட வாக்கெடுப்பு ஜூன் முதலாம் திகதி நடைபெறவிருக்கிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4 வெளியாகும்) ஆனால், பாரதிய ஜனதா கட்சி நினைக்கின்ற மாதிரி நிலைவரம் இருக்கப் போவதில்லை என்பதை வாக்காளர்களின் உணர்வுகள் பற்றிய உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகள் உறுதியாக வெளிப்படுத்துகின்றன. மூன்றாவது தடவையாகவும் பாரதிய ஜனாதாவுக்கு வாக்களிப்பதற்கான போதுமான காரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்றே தோன்றுகிறது. தொழில் வாய்ப்புக்களைப் பெருக்குவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் 2014ஆம் ஆண்டில் மோடியைப் பதவிக்கு கொண்டு வந்தவர்களுக்கு மீண்டும் அவருககு வாக்களிப்பதற்கு காரணம் இல்லை. மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் வேலையில்லாத் திண்டாட்டம் கணிசமான அளவுக்கு அதிகரித்திருக்கிறது. மிகவும் அண்மையில் வேலையில்லாத் திண்டாட்டத்தில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்தாக தோன்றுகின்ற போதிலும், உண்மையான வேலையில்லாத் திண்டாட்ட வீதம் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் காட்டுகின்றதையும் விட மிகவும் அதிகம் என்று நம்புவதற்கு போதிய காரணங்கள் இருக்கின்றன. மேலும், 2014ஆம் ஆண்டுக்கு பிறகு இந்தியர்களில் 80 சதவீதமானவர்களின் வருமானங்கள் வீழ்ச்சியடைந்திருப்பதுடன் குடும்பங்களின் கொள்வனவுச் சக்தியும் சேமிப்புகளும் தகர்ந்து போயிருக்கின்றன. தங்களது நல்வாழ்வை அரசாங்கம் போதுமானளவுக்கு பாதுகாக்கவில்லை என்று பலர் குற்றஞ்சாட்டுகிறார்கள். கடுமுயற்சி எடுத்து தன்னைச் சுற்றி கட்டியெழுப்பியிருககும் தனிநபர் வழிபாடு காரணமாக மோடி மிகுந்த செல்வாக்கு கொண்டவராக விளங்குகிறார் என்பது உண்மையே. ஆனால், அவரது வேட்பாளர்களை ஆதரிப்பதில் மக்கள் அதிகளவு ஆர்வம் காட்டுவதாக இல்லை. மோடியின் நடத்தை அவரின் அச்சவுணர்வு அதிகரிப்பதை காட்டுகிறது. முஸ்லிம்களுக்கு எதிரான அவரின் எச்சரிக்கைகள் இப்போது நேரடித் தாக்குதல்களாக தீவிரமடைந்திருக்கின்றன. எதிர்க்கட்சியான இந்திய தேசிய காங்கிரஸ் மீதான தாக்குதல்களையும் மோடி கடுமையாக தீவிரப்படுத்தியிருக்கிறார். காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனம் முஸ்லிம் லீக்கின் முத்திரையைக் கொண்டிக்கிறது என்று அவர் கூறுகிறார். இந்துக்களின் தனிப்பட்ட சொத்துக்களை காங்கிரஸ் தலைமையிலான அரசாங்கம் முஸ்லிமக்களுக்கு பிரித்துக்கொடுத்துவிடும் என்று கூட கடந்தமாதம் தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் அவர் கூறினார். காங்கிரஸின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மோடி முழுவதுமான தவறான முறையில் வியாக்கியானம் செய்கின்றபோதிலும், உண்மையில் அந்த விஞ்ஞாபனத்தில் முஸ்லிம் என்ற சொல்லே கிடையாது. சொத்துப்பகிர்வு என்று அதில் எந்த இடத்திலும் குறிப்பிடப்படவும் இல்லை. முஸ்லிம்களை இந்தியர்கள் அல்ல ஊடுருவல்காரர்கள் என்றும் அதிகமாகப் பிள்ளைகளைப் பெறுபவர்கள் என்றும் அவர் இகழ்ச்சி செய்கிறார். ஆத்திரமூட்டும் வகையிலான மோடியின் பேச்சக்கள் அவரின் பதவிக்கு இழிவை ஏற்படுத்துகின்றன. ஒரு பிரதமர் நாட்டின் சகல குடிமக்களுக்கும் சேவை செய்பவராக இருக்கவேண்டும். ஆனால் அவர் இந்தியாவின் 20 கோடி முஸ்லிம்களையும் வெள்ப்படையாக அவமதிக்கிறார். பாரதிய ஜனதாவின் வேறு தலைவர்களும் மக்கள் மத்தியில் அச்சமூட்டும் பிரசாரங்களையே செய்கிறார்கள். இது அந்த கட்சியினர் மத்தியில் அதிரித்துவரும் நம்பிக்கையின்மையை வெளிக்காட்டுகிறது. பாரதிய ஜனதா தோற்கடிக்கப்பட்டால் ஷரியா சட்டம் இந்தியாவுக்கு வரும் என்ற உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை உதாரணமாகக் கூறலாம். மத அடிப்படையில் வாக்காளர்களை துருவமயப்படுத்தும் முயற்சி பாரதிய ஜனதாவினால் ஏற்கெனவே பரீட்சித்துப் பார்க்கப்பட்ட ஒன்றுதான். அதன் தர்க்கம் எளிதானது. அதாவது முஸ்லிம்களை பிசாசுகளாகக் காட்டினால் இந்திய சனத்தொகையில் 80 சதவீதத்தினராக இருக்கும் இந்துக்களில் அரைவாசிப் பேரையாவது அவர்களின் மற்றைய வேறுபாடுகளை மறக்கச்செய்து பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கச் செய்து இன்னொரு தேர்தல் வெற்றியைப் பெறலாம் என்பதே. ஆனால் இந்த தந்திரோபாயம் முற்றுமுழுதாகப் பயன்தரக்கூடியதல்ல. அதனால் பாரதிய ஜனதா பெரும் எண்ணிக்கையான எதிரணி அரசியல்வாதிகளை தனது அணியில் சேர்த்துக்கொள்கிறது. ஊழல் குற்ச்சாட்டுகளுக்கு உள்ளான எதிரணி அரசியல்வாதிகளை மிரட்டி தன்பக்கம் பாரதிய ஜனதா பலவந்தமாக இழுக்கிறது. அவர்களும் வளக்குகளில் சிக்குவதை தவிர்ப்பதற்காக பக்கம் மாறிவிடுகிறார்கள். பாரதிய ஜனதா கறைபடிந்த அரசியல்வாதிகளை சுத்தப்படுத்தும் ஒரு சலவை இயந்திரம் என்பது இப்போது தேசிய அளவில் ஒரு பகிடியாக மாறிவிட்டது. பல்வேறு எதிர்ககட்சிகளுடன் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதிலும் பாரதிய ஜனதா முனைப்புக் காட்டுகிறது. அவற்றில் ஒன்று ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி. அந்த கட்சி சில வருடங்களுக்கு முன்னர் மோடி அரசாங்கத்துக்கு எதிராக ரோக்சபாவில் நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தது. அதன் தலைவர்கள் மோடியை மிகவும் கடுமையாகத் தாக்கிப் பேசினார்கள். இப்போது திடீரென்று அதுவெல்லாம் மறக்கப்பட்டுவிட்டது. கிழக்கு இந்திய மாநிலமான ஒடிசாவில் பிஜு ஜனதாதள் கட்சியையும் மேற்கு இந்திய மாநிலமான பஞ்சாபில் அகாலி தள் கட்சியையும் தன்பக்கம் இழுக்க பாரதிய ஜனதா மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. அந்த இரு கட்சிகளும் முன்னைய கூட்டரசாங்கத்தில் பாரதிய ஜனாவை கைவிட்டு வெளியேறியவை. பாரதிய ஜனதாவின் அழைப்பை அவை உதாசீனம் செய்துவிட்டன. கட்சிகளை தன்பக்கம் இழுக்கும் முயற்சிகள் பயனளிக்காத பட்சத்தில் அவற்றை வெளிப்படையாக அங்சுறுத்தும் காரியங்களில் பாரதிய ஜனதா இறங்கிவிடுகிறது. டில்லியிலும் பசஞ்சாபிலும் ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரான டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போதைய விசாரணை ஒன்றின் அங்கமாக நள்ளிரவில் கைதுசெய்யப்பட்டு சிறையில் தள்ளப்பட்டார். கெஜ்ரிவாலுக்கு அடுத்தபடியாக உள்ள தலைவர் ஒரு வருடத்துக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். ஆனால், அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டும் இதுவரை சுமத்தப்படவில்லை. காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை, தேர்தல் பிரசாரங்களின் தொடக்கக் கட்டத்தில் அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. ராகுல் காந்தியின் ஹெலிகொப்டரில் சட்டவிரோத பொருட்கள் இருப்பதாகக் கூறி அதை சோதனை செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது. இவையெல்லாம் பரந்தளவு மக்கள் ஆதரவுடன் வெற்றிபெறும் நம்பிக்கையைக் கொண்டிருக்கும் ஒரு கட்சி செய்கின்ற காரியங்கள் அல்ல. மாறாக, வெற்றி தனது கையைவிட்டு நழுவுகிறது என்று அஞ்சுகின்ற கட்சி செய்யக்கூடிய காரியங்கள். 2019 பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா ஆறு மாநிலங்களில் சகல லோக்சபா தொகுதிகளிலும் மூன்று மாநிலங்களில் ஒரு தொகுதியைத் தவிர ஏனைய தொகுதிகளிலும் இரு மாநிலங்களில் இரு தொகுதிகளைத் தவிர எனைய தொகுதிகளிலும் வெற்றிபெற்றது. இந்த மாநிலங்கள் சகலவற்றிலும் அந்த கட்சி பின்னடைவைக் காணக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இந்த ஒவ்வொரு மாநிலத்திலும் சொற்ப எண்ணிக்கையான தெ்குதிகளில் தோல்வியடைந்தாலும் கூட, ஒட்டுமொத்தத்தில் பெரும்பான்மையை இழக்கவேண்டிவரும். அதற்கான நல்ல வாய்ப்பு இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, 2019ஆம் ஆண்டில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஓரிரு மாதங்கள் முன்னதாக இந்தியக் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் இராணுவத்தின் வாகனத் தொடரணி மீது ஜாய்ஷ் ஈ முஹமட் என்ற பாகிஸ்தானில் இருந்து இயங்கும் இஸ்லாமியத் இயக்கம் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல் பாரதிய ஜனதாவுக்கு கைகொடுத்தது. இந்த தடவை இந்திய வாக்காளர்களை திசைதிருப்பக்கூடிய எந்தவொரு இல்லாத நிலையில் கடந்த தேர்தலில் பெற்றதைப் போன்ற ஒரு வெற்றியை மீண்டும் சாதிக்கமுடியும் என்று பாரதிய ஜனதா நம்பிக்கை வைக்கமுடியாது. பாரதிய ஜனதா வழங்கிய வாக்குறுதிகளைக் காப்பாற்றாததால் மக்கள் பெரும் விரக்தியில் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையை எதிர்க்கட்சிகள் வாய்ப்பாகப் பயன்படுத்துகின்றன. மாற்றத்துக்கான அறிகுறிகள் தெரிகின்றன. https://www.virakesari.lk/article/183377
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலென் ப்ரிக்ஸ் பதவி, பிபிசி சுற்றுச்சூழல் செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் உலகின் மிகப்பழமையான மரங்களில் ஒன்றான பாபாப் மரங்களின் தோற்றம் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகள் தீர்த்து வைத்துள்ளனர். மரபணு ஆய்வுகளின்படி, 2.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே இருக்கும் மடகாஸ்கர் தீவில் இந்த மரங்கள் தோன்றின. பின்னர், அவற்றின் விதைகள் கடல் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கும், ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டு, தனித்தனி இனங்களாகப் பரிணமித்தன. ஆராய்ச்சியாளர்கள் இந்த மரங்களைப் பாதுகாக்க இன்னும் அதிகமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர். நாம் முன்பு நினைத்ததை விட இம்மரங்கள் அழிவின் விளிம்பில் இருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். பாபாப் மரங்கள் அவற்றின் விசித்திரமான வடிவம் காரணமாகவும் அவற்றின் நீண்ட ஆயுள் காரணமாகவும் 'உயிர் மரம்' (tree of life) அல்லது 'தலைகீழ் மரம்' (upside down tree) என்று அழைக்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம் மற்றும் பரவலான காடழிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவை இப்போது அழிந்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த மரங்களின் வெள்ளைப் பூக்கள் அந்தி வேளையில் பூப்பவை 'உயிர்களுக்கு ஆதரவாக இருக்கும் மரங்கள் ஆபத்தில் உள்ளன' பிரிட்டனில் உள்ள 'ராயல் தாவரவியல் பூங்கா'வைச் சேர்ந்த முனைவர் இலியா லீச், லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது கணவரும் பேராசிரியருமான ஆண்ட்ரூ லீச்சுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார். "பல்வேறு விலங்குகள், தாவரங்கள், மற்றும் மனிதர்களை ஆதரிக்கும் முக்கியமான உயிரினமான பாபாப் மரங்களின் தோற்றத்தை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். "மேலும் இந்த ஆய்வின் தரவுகள், பாபாப் மரங்களைப் பற்றிய முக்கியமான பல புதிய புரிதல்களை எங்களுக்கு வழங்கியுள்ளது. இது அவைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நமக்கு உதவும்," என்கிறார் அவர். இந்த ஆராய்ச்சி தம்பதிகள் பாபாப் மரங்களின் எட்டு இனங்களை ஆய்வு செய்தனர். அவற்றில் ஆறு இனங்கள் மடகாஸ்கரில் காணப்படுகின்றன, ஒன்று ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக உள்ளது, மற்றொன்று வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. மடகாஸ்கரில் உள்ள பாபாப் மரங்களில் மிகப் பெரியதும் மிகவும் பிரபலமானதுமான 'ராட்சத பாபாப் மரம்' (giant baobab) உட்பட, மடகாஸ்கரைச் சேர்ந்த அழிந்து வரும் இரண்டு பாபாப் இனங்களுக்கு உயர் பாதுகாப்பு நிலையை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர். பட மூலாதாரம்,ALEXANTONELLI-ROYALBOTANICGARDENSKEW படக்குறிப்பு,பாபாப் மரங்களின் பழங்கள் ஒரு 'சூப்பர் உணவாகக்' கருதப்படுகின்றன உணவு முதல் உடை வரை அனைத்தும் தரும் மரம் பாபாப் மரங்கள் பூமியில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க மரங்களில் ஒன்றாகும். இவை, பரவியிருக்கும் உள்ளூர் நாகரிகங்கள் மற்றும் மரபுகளுடன் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன. இந்த மரங்கள் மடகாஸ்கர் மொழியான 'மலகாசி' மொழியில் 'காட்டின் தாய்' என்றும், 'தலைகீழ் மரம்' மற்றும் 'உயிர் மரம்' என்றும் அழைக்கப்படுகின்றன. இந்த மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழக்கூடியவை. பெரிய அளவில் வளர்ந்து, வறண்ட காலங்களில் உயிர்வாழ்வதற்காக அதிக அளவு தண்ணீரை அவற்றின் தண்டுகளில் சேமித்து வைக்கின்றன. இவற்றின் பழங்கள் ஒரு 'சூப்பர் உணவாகக்' கருதப்படுகின்றன. அவற்றின் தண்டுகளில் இருந்து கயிறுகள் அல்லது ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படும் இழைகளை உருவாக்கப் பயன்படுகின்றன. இந்த மரங்களின் வெள்ளைப் பூக்கள் அந்தி வேளையில் பூப்பவை. இந்தப் பூக்கள் மகரந்தச் சேர்க்கையாக வெளவால்களை ஈர்க்கின்றன. இந்த வௌவால்கள் இந்தப் பூக்களின் தேனை உண்பதற்காக அதிக தூரம் பறந்து வருகின்றன. மேலும் இந்த மரங்கள் பறவைகள் கூடு கட்டும் முக்கியமான இடங்களாகும். இந்த ஆய்வை, சீனாவின் வுஹான் தாவரவியல் பூங்கா, பிரிட்டனின் ராயல் தாவரவியல் பூங்கா, மடகாஸ்கரின் அண்டனானரிவோ பல்கலைக்கழகம், மற்றும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின. https://www.bbc.com/tamil/articles/cxx8x5wd9lpo
  9. ஒரு பக்கம் என்றால் உண்மையாக இருக்கும், ஒரு தாள்(2பக்கம்) எனில் கிழிக்கப்பட்டிருக்கலாம்.
  10. Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 12:41 PM ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் கைவிடவேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது. தென்னாபிரிக்க சட்டத்தரணிகள் எழுத்துமூலம் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர். ரபா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஏழு மாத காசா யுத்தம் 35000 பேரை கொலை செய்துள்ளதுடன் காசாவை தரைமட்டமாக்கியுள்ளது என அவர்கள் தெரிவித்துள்ளனர். துயரம் என்பது மிகமோசமானதாக காணப்படுவதால் உணவு மருந்து போன்றவற்றை காசாவிற்குள் கொண்டு செல்வதற்கு யுத்தநிறுத்தம் அவசியமாகின்றது என தென்னாபிரிக்கா சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் தரைத்தாக்குதலை ரபா எதிர்கொண்டுள்ளது, இது பாலஸ்தீனியர்களின் வாழ்க்கையின் அடித்தளத்தையே அழித்துவிடும் என தென்னாபிரிக்க சட்டத்தரணி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183769
  11. 17 MAY, 2024 | 05:10 PM நாட்டில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. அவர்களில் சிலர் பொதுமக்களுக்குப் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பேச்சாளர் சலின் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறான போலி வைத்தியர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் கிடைத்தால் 1907 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தெரிவிக்குமாறு அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் வைத்திய துறை தொடர்பில் எந்தவித முன் அனுபவமும் திறனும் இல்லாதவர்கள் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183786
  12. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கடெரினா கின்குலோவா பதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜார்ஜியா நாட்டில், 'ரஷ்யா சட்டம்' என்று அழைக்கப்படும் 'வெளிநாட்டுச் செல்வாக்கு' பற்றிய புதிய சட்டத்திற்கு எதிராக வெகுஜன மக்களின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மற்றொருபுறம் ரஷ்யாவில் இருந்து விலகி ஐரோப்பாவை நோக்கி நகரும் முயற்சிகள், தற்போது யுக்ரேனுக்கு நேர்ந்திருக்கும் போர் மற்றும் ஆக்கிரமிப்பை ஜார்ஜியாவிலும் ஏற்படுத்தும் என்ற கவலைகளும் அந்நாட்டில் அதிகரித்து வருகின்றன. கிழக்கு ஐரோப்பாவிற்கும் மேற்கு ஆசியாவிற்கும் இடையிலுள்ள பகுதியான தெற்கு காகசஸ் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜார்ஜியா. இதன் மக்கள்தொகை 37 லட்சம். இது முன்னாள் சோவியத் யூனியனின் ஒரு பகுதி. இந்நாடு இன்றைய ரஷ்யாவின் செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பகுதியாக நீண்டகாலமாகக் கருதப்பட்டு வருகிறது. 1991ஆம் ஆண்டு சோவியத் யூனியன் உடைந்த பின், அதன் பல கூட்டமைப்பு நாடுகள் எந்த அரசியல் அமைப்பைத் தேர்ந்தெடுப்பது, எந்த சர்வதேசக் கூட்டணிகளில் சேர்வது என்ற அடிப்படையில் தங்கள் சொந்த முடிவுகளை எடுக்க ஒரு வரலாற்று வாய்ப்பை வழங்கியது. எஸ்தோனியா, லாட்வியா, லித்துவேனியா போன்ற பால்டிக் நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேரும் முடிவை ரஷ்யா ஏற்றுக்கொண்டது. ஆனால் யுக்ரேனின் கதை வேறு. ரஷ்யா தன் செல்வாக்கு மண்டலத்தின் பகுதியாக நீண்ட காலமாகக் கருதிய ஒரு மிகப் பெரிய நாடு யுக்ரேன். 2014இல் ஐரோப்பிய சார்பு மக்கள் போரட்டங்களுக்குப் பிறகு, ரஷ்யாவின் நெருக்கமான பொருளாதார ஒன்றியத்தில் இருந்து விலகிச் செல்ல யுக்ரேன் முடிவு செய்தது. இதனால் கிரைமியா மற்றும் கிழக்கு யுக்ரேனின் சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்தது. அதற்கு 10 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது யுக்ரேன் மீது ரஷ்யா ஒரு முழு அளவிலான போரை நடத்தி வருகிறது. மேலும் பல யுக்ரேனிய பகுதிகள் ரஷ்ய ஆதிக்கத்தின் கீழ் உள்ளன. ஜார்ஜியாவும் இதேபோன்ற கதியைச் சந்திக்கக் கூடுமா? ஜார்ஜியாவில் எதற்காகப் போரட்டம் நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜார்ஜியாவின் சர்ச்சைக்குரிய 'ரஷ்யா சட்டம்' தற்போதைய போராட்டங்களைத் தூண்டியிருக்கிறது. இந்த வாரத் துவக்கத்தில், ஜார்ஜியாவின் நாடாளுமன்றம் ஒரு சட்ட மசோதாவை நிறைவேற்றியது. அதில் வெளிநாட்டிலிருந்து 20%-க்கும் அதிகமான நிதியைப் பெறும் சில நிறுவனங்கள் தங்களை`வெளிநாட்டுச் செல்வாக்கின் முகவர்களாகப்` பதிவு செய்ய வேண்டும், என்று கூறப்பட்டிருந்தது. நிதி சம்பந்தமான தகவல்களை வெளியிட வேண்டுமென்றும், விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தச் சட்டம் கூறுகிறது. ஜார்ஜியாவில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் சுயாதீன ஊடகங்களும் வெளிநாட்டிலிருந்து மானியங்கள் மற்றும் பிற நிதிகளுக்கு விண்ணப்பிப்பது பொதுவானது என்று, ஜார்ஜியாவின் தலைநகரான டிபிலிசியில் உள்ள பிபிசி நிருபர் நினா அக்மெடெலி கூறுகிறார். இந்த அமைப்புகளின் பணி, நாட்டின் குடிமைச் சமூகத்தின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக மாறியுள்ளது. ஜார்ஜியாவை ஆளும் கட்சியான 'ஜார்ஜிய கனவு' (Georgian Dream), நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவை முன்மொழிந்தது. ஆனால் இது அரசின் மீதான விமர்சனங்களை ஒடுக்குவதற்காகக் கொண்டு வரப்படவில்லை, மாறாக வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதையும், பல்வேறு அமைப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கக்கூடும் என்பது குறித்து பொதுமக்களுக்குத் தெரியப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றது. ஆனால் திபிலிசியில் உள்ள இலியா பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை பேராசிரியரான ஹான்ஸ் குட்ப்ராட், இந்த மசோதா 'பெயருக்கு மட்டும்தான்' வெளிப்படைத்தன்மை பற்றியது என்று கூறுகிறார். "இது பொதுச் சமூகத்தின் மீதான பலமுனைத் தாக்குதலின் ஒரு பகுதியாகும். இது ஜார்ஜியாவில் சில காலமாகவே நடந்து வருகிறது. இந்தச் சட்டம் 'யாரை வேண்டுமானாலும் அடக்குமுறைக்கு உள்ளாக்கும்' சட்டமாகும். நீங்கள் விரும்பாத எந்தவொரு குடிமைச் சமூக அமைப்பையும் அடக்குமுறைக்கு உள்ளாக்க அனுமதிக்கும் வகையில் இது கட்டமைக்கப்பட்டுள்ளது,” என்று குட்ப்ராட் கூறுகிறார். இவர் 1990களில் இருந்து காகசஸ் பகுதியைப் பற்றிய செய்திகளைச் சேகரித்து வருகிறார். இந்தச் சட்டம் இறுதியாக நிறைவேற்றப்பட்டபோது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா எச்சரிக்கை செய்தன. "இந்தச் சட்டத்தை ஏற்றுக்கொள்வது ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதையில் பயணிக்கும் ஜார்ஜியாவின் முன்னேற்றத்தைப் பாதிக்கும்," என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் பொரெல் ஓர் அறிக்கையில் தெரிவித்தார். பல்லாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள் இந்தச் சட்டத்தை 'எதேச்சதிகாரமானது' மற்றும் 'ரஷ்ய-பின்புலமுடையது' என்று கண்டித்து திபிலிசியின் தெருக்களில் இறங்கிப் போராடினர். அப்போது அவர்களுக்கும் போலீசாருக்கும் இடையில் மோதல் சம்பவித்தது. சர்வாதிகார சோவியத் யூனியனின் ஒரு பகுதியாக ஜார்ஜியா இருந்த வரலாற்றைக் குறிப்பிட்டு பிபிசியிடம் பேசிய ஒரு போராட்டக்காரர், "நாங்கள் எந்தக் குழியிலிருந்து வெளியே வந்தோமோ அதற்குள் மீண்டும் தள்ளப்படக்கூடாது என்பதற்காகப் போராடி வருகிறோம்," என்றார். போராட்டத்துக்கும் ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'ஜார்ஜியன் ட்ரீம்' கட்சியின் கௌரவத் தலைவர், பிட்ஜினா இவானிஷ்விலி என்ற கோடீஸ்வரர் ஆவார். இந்த ஜார்ஜிய சட்டம், தனது எதிர்ப்பாளர்களைக் கட்டுப்படுத்த ரஷ்யா பயன்படுத்தும் ஒரு சட்டத்தை ஒத்திருக்கிறது. வரும் அக்டோபர் மாதம் நடக்கவிருக்கும் அடுத்த ஜார்ஜிய நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன் நிறைவேற்றப்படது. இந்தத் தேர்தல், 2012 முதல் ஜார்ஜியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் 'ஜார்ஜியன் ட்ரீம்' கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கான வாய்ப்பை மக்களுக்கு வழங்கக்கூடும். இக்கட்சியின் கொள்கைகள், ரஷ்யாவை போலவே ஒரு அரசியல் குழுவின் கைகளில் அதிகாரத்தைக் குவிப்பதாகக் கருதப்படுகிறது. 'ஜார்ஜியன் ட்ரீம்' கட்சியின் கௌரவத் தலைவர், ஃபிட்ஜினா இவானிஷ்விலி என்ற கோடீஸ்வரர். அவருடைய சொத்து மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.40,905 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது (4.9 பில்லியன் அமெரிக்க டாலர்கள்). இது ஜார்ஜியாவின் பட்ஜெட்டைவிட அதிகம், மற்றும் அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20% ஆகும். அவரது பல வணிகங்கள் ரஷ்யாவுடன் நெருக்கமாக உள்ளன. "ஜார்ஜியா அரசின் எதேச்சதிகாரப் போக்கு அதிகரித்து வருவதாகவும், குடிமைச் சமூகத்தை அடக்கும் செயல்முறையில் ரஷ்யாவை பின்பற்றப் பார்ப்பதாகவும் நான் நினைக்கிறேன்," என்கிறார் பொலிட்டிகோ என்ற ஊடக நிறுவனத்தின் தெற்கு காகசஸ் நிருபர் கேப்ரியல் கேவின். "அதே நேரத்தில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இவானிஷ்விலிக்கு இதுகுறித்து அறிவுரை வழங்க வேண்டியிருந்தது என்று நான் நினைக்கவில்லை. இந்த விஷயத்தில் இவானிஷ்விலிக்கு உந்துதல் தேவையில்லை. ஏனெனில் புதினைப் போலவே வெளிநாட்டுச் செல்வாக்கின் அச்சுறுத்தலைப் பற்றி அவர் அதே அச்சங்களை அனுபவிக்கிறார்," என்றார் அவர். உலக அரசியலில் ஜார்ஜியா எவ்வளவு முக்கியமானது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் சம்பவித்தது ஜார்ஜியா அமைந்துள்ள தெற்கு காகசஸ் பகுதி 'ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையிலான நுழைவாயில்' என்று விவரிக்கப்படுகிறது. இது பண்டைய உலகின் வர்த்தகப் பாதைகளின் தாயகம். இது இன்று வரை முக்கியமாக இருந்து வருகிறது. வரலாற்று ரீதியாக, இரான், துருக்கி மற்றும் ரஷ்யா போன்ற வல்லரசுகள் இந்தப் பிராந்தியத்திற்காகச் சண்டையிட்டன. மேலும் இப்பகுதியில் செல்வாக்கு செலுத்துவதற்காகத் தொடர்ந்து போட்டியிடுகின்றன. சமீபகாலமாக, சீனா மற்றும் மேற்கத்திய சக்திகளும்கூட இப்பகுதியின்மீது அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. ஜார்ஜியா 19ஆம் நூற்றாண்டில் ரஷ்யப் பேரரசின் ஒரு பகுதியாக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எப்போதும் சிக்கலாகவே இருந்து வருகிறது. ஏனெனில், ஜார்ஜியா வரலாற்றின் சில காலகட்டங்களில் ரஷ்யாவுடனும், மற்று காலகட்டங்களில் மற்ற நாடுகளுடனும் வெருக்கமாக இருந்து வந்துள்ளது. கடந்த 1918இல் சுதந்திரம் பெற்றதில் இருந்து 1991 வரை ஜார்ஜியா ரஷ்யா ஆதிக்கம் செலுத்திய சோவியத் யூனியனின் பகுதியாக இருந்தது. 1980களில் தேசிய அடையாள மறுமலர்ச்சியை அனுபவித்த முதல் சோவியத் குடியரசுகளில் ஜார்ஜியாவும் ஒன்று. இது நாடு தழுவிய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக அமைந்தது. அது சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. கடந்த 2003இல் நடந்த 'ரோஜாப் புரட்சி'யின் மூலம் (Rose Revolution) ஜனநாயக மாற்றத்தை அனுபவித்த முதல் முன்னாள் சோவியத் நாடு ஜார்ஜியா. இது ஜார்ஜியாவின் சோவியத் எதேச்சாதிகார வரலாற்றை அசைக்க முயன்றது. இது ரஷ்யாவை நேருக்கு நேர் பார்க்காத ஓர் அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டு வந்தது, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோவில் சேர்வதை நோக்கி ஜார்ஜியாவை தீவிரமாக வழிநடத்த முயன்றது. 2008ஆம் ஆண்டில், ரஷ்யா ஜார்ஜியாவின் சில பகுதிகளை ஆக்கிரமித்தது. இன்றும் ரஷ்ய படைகள் திபிலிசியில் இருந்து சுமார் 130கி.மீ. தூரத்தில் நிறித்தி வைக்கப்பட்டுள்ளன. யுக்ரேனுடனான ஒப்பீடுகள் சரியா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த 2008ஆம் ஆண்டு ஜார்ஜியாவின் சில பகுதிகளை ரஷ்யா ஆக்கிரமித்தது. கடந்த சில வாரங்களாக, பல ஆய்வாளர்கள் 'வரலாறு திரும்புவதை' பற்றிப் பேசி வருகின்றனர். ஓர் அரசின் எதேச்சாதிகாரப் போக்குகள் தீவிரமடைகின்றன, அதன் ஜனநாயகப் போக்கில் இருந்து திசை திரும்புகிறது, அங்கு எதிர்ப்புகள் வெடிக்கின்றன, இறுதியில் ரஷ்யா அங்கு நுழைந்து காலூன்றுகிறது. இதுபோன்ற நிகழ்வுகள் 2013-2014இல் யுக்ரேனில் நடந்தன. 2022இல் மோசமடைந்தன. 1945க்குப் பிறகு ஐரோப்பாவில் மிகப்பெரிய போர் வெடித்தது. ஆனால் ஜார்ஜியாவின் விஷயத்தில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. முதலாவதாக, ஜார்ஜியா 2003 மற்றும் 2008க்கு இடையில் யுக்ரேன் பாணியிலான நிகழ்வுகளை அனுபவித்தது. அதைத் தொடர்ந்து எதிர்ப்புகள் நிகழ்ந்தன. ரஷ்ய படையெடுப்பு நிகழ்ந்தது. அதன் 20% நிலப்பரப்பு ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. இங்கு உண்மையான கேள்வி என்னவென்றால்: ஜார்ஜியாவின் ரஷ்ய-நட்பு அரசாங்கம் கட்டுப்பாட்டை இழந்தால் ரஷ்யா ஜார்ஜியாவை மேலும் ஆக்கிரமிக்குமா? இந்தச் சாத்தியத்தை நிராகரிக்க முடியாது. ஆனால் 'ஜார்ஜியன் ட்ரீம்' கட்சி தன் கட்டுப்பாட்டை இழப்பதும் சந்தேகம்தான். பிபிசி நிருபர் நினா அக்மெடெலி கூறுவது போல, ஜார்ஜியா ஒரு பிளவுபட்ட சமூகம். அங்கு பெரும்பான்மையான மக்கள் நிலமை மோசமடைவதைப் பற்றிக் கவலைப்படுகின்றனர். சிலர் உண்மையிலேயே ஆளும் கட்சியை ஆதரிக்கின்றனர். ஜார்ஜியா போன்ற ஒரு சிறிய நாட்டிற்கு ரஷ்யாவுடன் ஒட்டிக்கொள்வது ஒரு நடைமுறைத் தேர்வு என்று சிலர் நம்புகிறார்கள். அதன் பொருளாதாரம் அதன் பரந்த அண்டை நாடுகளுடனான வர்த்தகத்தை நம்பியுள்ளது, ரஷ்யாவை எதிர்த்துப் போரிடுவதைக் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ஜார்ஜியாவின் ராணுவம் மிகச் சிறியது, என்றும் அவர்கள் கருதுகிறார்கள். சர்ச்சைக்குரிய 'வெளிநாட்டு செல்வாக்கு' சட்டத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன்னதாக இவானிஷ்விலி ஓர் அரிய பொது உரையை நிகழ்த்தினார். அதில் ரஷ்யாவுடனான மோதலில் ஜார்ஜியா மக்களைப் பலிகொடுக்க நினைக்கும் மேற்கு நாடுகளின் முயற்சியைத் தடுக்க இந்தச் சட்டம் அவசியம் என்று கூறினார். திபிலிசியின் தெருக்கள் போரட்டக்காரர்களால் நிறைந்துள்ளன. அவர்களில் பலர் 35 வயதிற்கு உட்பட்டவர்கள். ஜார்ஜியாவின் எதிர்காலம் ஒரு நூலிழையில் தொங்குகிறது. அங்கு, ரஷ்யா போன்ற ஒரு நாட்டில் வாழும் சாத்தியத்தை நினைத்துப் பலரும் அதிர்ச்சியடைகிறார்கள். யுக்ரேன் எதிர்கொண்ட அழிவு மற்றும் உயிரிழப்பு போன்றவற்றைப் அனுபவிக்கும் சாத்தியத்தை நினைத்துப் பலரும் பயப்படுகிறார்கள். https://www.bbc.com/tamil/articles/crgym3z4x47o
  13. வடக்கு மாகாண அபிவிருத்திக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்கத் தயார் - அமெரிக்க தூதுவர் Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 04:50 PM வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களுக்கும், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) அவர்களுக்கும் இடையில் இன்று வெள்ளிக்கிழமை (17) சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. வடக்கு மாகாண அபிவிருத்தி செயற்பாடுகள், கல்வி, சுற்றுலாத்துறை, காணி விடுவிப்பு, தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகள், தொழில் வாய்ப்புகள், முதலீட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது. கால்நடை உற்பத்திகளை மேம்படுத்த வேண்டியுள்ளதாகவும், இயந்திர தொழில்நுட்ப பயன்பாட்டை மக்கள் மயப்படுத்த வேண்டும் எனவும் இதன்போது ஆளுநர் தெரிவித்தார். காணி விடுவிப்பு, விடுவிக்கப்பட்டுள்ள காணிகளுக்குள் மக்கள் பிரவேசிப்பதற்கான வசதிகள் தொடர்பிலும் அமெரிக்க தூதுவர், ஆளுநரிடம் கேட்டறிந்துக்கொண்டார். ஜனாதிபதியின் வழிகாட்டுதல்களுக்கு அமைய, காணி விடுவிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்தார். அத்துடன் அண்மையில் விடுவிக்கப்பட்ட காணிகளுக்குள் பிரவேசிப்பதற்கான வீதிகள் உரிய நடைமுறைகளை பின்பற்றி திறக்கப்படுவதாகவும் ஆளுநர் கூறினார். மேலும், வடக்கில் காணப்படும் உற்பத்திகளுக்கான சந்தை வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்ககூடிய கண்காட்சி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவரிடம், ஆளுநர் கேட்டுக்கொண்டார். வடக்கிற்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாக தெரிவித்த இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், மாணவர்களுக்கு இலவச ஆங்கில மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க உள்ளதாகவும், அதற்கான ஒத்துழைப்புகளை ஆளுநரிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். 27 வருடங்களின் பின்னர் அமெரிக்க அமைதி காக்கும் கழகத்தின் ஊடாக இலங்கையில் இலவச ஆங்கில மொழி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க தூதுவர் கூறினார். https://www.virakesari.lk/article/183799
  14. Published By: RAJEEBAN 17 MAY, 2024 | 03:49 PM சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்தின் தாயாரின் வீட்டிற்கு சென்ற சிஐடியினர் விசாரணையில் ஈடுபட்டடுள்ளனர் திருகோணமலையில் உள்ள தனதுதாயாரின் வீட்டிற்கு சிஐடியினர் சென்று விசாரணைகளில் ஈடுபட்டனர் என ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இன்று காலை 10 மணியளவில் மூன்றாவது தடவையாக எந்த முன் அனுமதியுமின்றி CIDயினர் திருகோணமலையில் உள்ள எனது அம்மாவின் வீட்டிற்கு சென்று விசாரணையில் ஈடுபட்டார்கள். இங்கு கொழும்பில் இடம்பெறுகின்ற அச்சுறுத்தல்கள் என் சார்ந்தவை அதை கடந்து செல்ல என்னால் முடிகிறது. ஏற்கனவே சென்ற வருடம் இரவு 12 மணிக்கு திருகோணமலை வீட்டைச் சென்று தட்டினார்கள். புலானாய்வுப் பிரிவினருக்கு எனது விபரங்கள் முழுமையாகத் தெரிந்தும் தொடர்ச்சியாக எனது குடும்ப உறுப்பினர்களை தொந்தரவு செய்வதை அனுமதிக்க முடியாது. என்னைப் பற்றிய என் குடும்பம் பற்றிய விபரங்களை அம்மாவிடம் கேட்டுள்ளனர். எந்த ஒரு அனுமதியும் இல்லாமல் இவர்கள் தொடர்ச்சியாக இப்படியான மோசமான அத்துமீறல்/ உரிமை மீறல்களில் ஈடுபடுவதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்க முடியாது. வரும் திங்கட்கிழமை மனிதவுரிமை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யவுள்ளேன். https://www.virakesari.lk/article/183793
  15. ஏன் தமிழ் மொழியில் இறைவனை வழிபட்டு செய்ய முடியாது? உலகயே ஆண்ட மொழிக்கு ஓர் வழிபாட்டு முறை இல்லையா? பல கேள்விகளுக்கு பதில் பாருங்கள்.... https://www.facebook.com/story.php?story_fbid=7114182321944764&id=100000591990201&mibextid=jmPrMh&rdid=cX0EgcI4VWWyd4jq மேலுள்ள முகப் புத்தக காணொளியை பார்த்தால் புரிதல் கூடும். டென்மார்க் நாட்டிலுள்ள வேல்முருகன் கோயிலில் தமிழில் வழிபாடு நடாத்துவதற்காக, இலங்கையின் திருக்கோணமலையிலிருந்து வந்து வேல்முருகன் கோயிலில் தங்கியிருந்த தம்பிரான் சாமிகள் மீது இரவில் வன்முறைத் தாக்குதல். தமிழில் வழிபாடு நடாத்துவதா எனக் கொதித்தெழுந்த ஆரிய அடிமைகளினதும் சாதியத் திமிர் பிடித்தவர்களுமான சிலரின் கைங்காரியமே இது. தமிழில் வழிபாடு நடாத்துவதா எனத் தமிழர் எனச் சொல்லிக் கொள்ளும் சிலருக்கே சினம் வந்து வன்முறையில் ஈடுபடுகின்றனர் எனில் என்ன சொல்வது! இங்கு தமிழ் வழிபாடு மீது தாக்குதல் நடாத்தியவர்கள் மட்டுமல்ல, இதனைக் கண்டும் பேசா மடந்தைகளாக ஐரோப்பாவில் வாழும் அனைத்துத் தமிழருமே இதற்குப் பொறுப்பு. உலகு எங்கும் இந்துத்துவாவும் அதன் உடன்பிறப்பான வன்முறையும் பல்கிப் பெருகுகின்றது . இந்துத்துவா என்பது தமிழரிடையே உள்ள ஏனைய சிறுபான்மை மதங்களுக்கு மட்டுமல்ல, தமிழ் மொழியின் உயிருக்கே ஒரு நாள் உலை வைக்கும். விழித்துக் கொள் தமிழா! 🙏தமிழா தமிழில் வழிபடு, தமிழால் வழிப்படு🙏 வட்சப் குழுவில் வந்தது, இதன் உண்மைத் தன்மை அறியேன்.
  16. வீதியோர சோலார் மின்விளக்குகள் பழுதாகிவிட்டன என நினைக்கிறேன்.
  17. ‘கோவேக்ஸின்’ தடுப்பூசியால் 30% பேருக்கு உடல்நல கோளாறு – ஆய்விதழில் தகவல்! 17 MAY, 2024 | 10:08 AM கொரோனாவிற்கு எதிராக கோவேக்ஸின் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டதாக ஆய்விதழ் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஸ்பிரிங்கர் நேச்சர்’ என்ற ஆய்விதழில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: “கொரோனா வைரஸ்க்கு எதிராக செலுத்திக்கொள்ளப்பட்ட பிபிவி152 கோவேக்ஸின் தடுப்பூசியின் பக்கவிளைவுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளப்பட்டு ஓராண்டான பின்னர் ஏற்பட்ட நீண்டகால பக்கவிளைவுகள் குறித்து 2022-ம் ஆண்டு ஜனவரி முதல் 2023-ம் ஆகஸ்ட் வரை, உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டனர். வளரிளம் பருவத்தைச் சேர்ந்த 635 பேர், 18 வயதுக்கு மேற்பட்ட 291 பேர் என மொத்தம் 926 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், சுமார் 50% பேர் கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர், தங்களுக்கு தொற்று பாதிப்புகள் ஏற்பட்டதாகத் தெரிவித்தனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு மேல் சுவாசக் குழாய் தீநுண்மி தொற்று ஏற்பட்டுள்ளது. கோவேக்ஸின் செலுத்திக்கொண்டவா்களில் சுமார் 30% பேருக்கு ஓராண்டுக்குப் பின்னர் உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொண்ட வளரிளம் பருவத்தைச் சோ்ந்தவர்களில் 10.5% பேருக்கு தோல் சார்ந்த பிரச்னைகளும், 10.2% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகளும், 4.7% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகளும் ஏற்பட்டுள்ளன. 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 8.9% பேருக்கு பொதுவான உடல்நலக் கோளாறுகள், 5.5% பேருக்கு நரம்பு மண்டல கோளாறுகள் ஏற்பட்டுள்ளது. 5.8% பேர் தசைகள், எலும்புகள், மூட்டுகள், தசைநாண்கள், தசைநார்கள் மற்றும் குருத்தெலும்பு மண்டலம் சார்ந்த கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பெண்களில் 4.6% பேருக்கு மாதவிடாய் பாதிப்புகளும், 2.7% பேருக்கு கண்விழி பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளது. கேடயச் சுரப்பியில் (தைராய்டு கிளாண்ட்) இருந்து சுரக்கக் கூடிய ஹார்மோன் குறைவாக சுரப்பதன் மூலம் உடலில் ஏற்படக் கூடிய பிரச்னைகள் 0.6% பேருக்கு ஏற்பட்டுள்ளது. ஒரு சதவீதம் பேருக்கு கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னர் கில்லன் பாரே சின்ட்ரோம் என்ற அதிவிரைவான நரம்பு தளா்ச்சி, பக்கவாதம் உள்ளிட்ட தீவிர பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. கோவேக்ஸின் செலுத்திக்கொண்ட பின்னா் 3 பெண்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனர். அவா்களுக்கு சர்க்கரை நோய் இருந்துள்ளது. அவா்களில் இருவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183749
  18. அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு எதிராக நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயங்கப் போவதில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் தெரிவித்துள்ளார். தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்ட போதிலும் தனது சுதந்திரத்தையும் கட்சியையும் இந்த அரசாங்கத்திடம் அடகு வைக்கவில்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டுள்ளார். பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தேர்தல் உள்ளிட்ட வரவிருக்கும் அரசியல் நடவடிக்கைகள் குறித்து கட்சிக்குள் வலுவான விவாதங்கள் நடைபெற்று வருவதாகவும் பொதுத் தேர்தல் அல்லது ஜனாதிபதித் தேர்தல் உட்பட எந்தவொரு தேர்தலுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய வளங்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை தாம் கடுமையாக எதிர்ப்பதாகவும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான கட்சிகளும் இதே கருத்தையே கொண்டிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்தார். ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசாங்க உரிமை உள்ளதால், எந்த நேரத்திலும் அரசாங்கத்திற்கு தனது கருத்தை தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசாங்கத்தில் இருந்து விலகுவீர்களா என்ற ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, நாட்டுக்காக எந்தவொரு தீர்மானத்தையும் எடுக்கத் தயார் எனவும் தெரிவித்தார். https://thinakkural.lk/article/301842
  19. ஜனாதிபதியால் திறந்து வைக்கப்படவுள்ள யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீட புதிய கட்டிடத் தொகுதி Published By: DIGITAL DESK 7 17 MAY, 2024 | 11:15 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக யாழ் நகரில் புதிதாகக்கட்டப்பட்ட எட்டு மாடிகளைக் கொண்ட மருத்துவப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சித்தொகுதி கட்டிடம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. வட மாகாணத்திற்கு எதிர்வரும் 24 ஆம் திகதி இருநாள் விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி, அங்கு குறித்த கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளார். இந்த கட்டிடத் தொகுதியில் இரண்டு பெரிய தியேட்டர்கள், ஒரு சிறிய தியேட்டர், எண்டோஸ்கோபி மற்றும் மேமோகிராம், கருவுறுதல் பராமரிப்பு, யூரோடைனமிக் சேவைகள், கேட்போர் கூடம், முதுகலை மையம் மற்றும் மருத்துவ பணியாளர் அறை மற்றும் கற்பித்தல் வசதிகள் உள்ளன. இந்தக் கட்டிடத்தொகுதி 700 மில்லியன் ரூபா செலவில் கல்வி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டுக்கமைய நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கட்டடிப்பொருட்களின் விலைகள் அதிகரிப்பால் கட்டிடத் தொகுதி இதுவரை நிறைவு பெறாமல் இருப்பதுடன் கட்டிடத்தை முழுமையாக நிர்மாணித்து பூர்த்தி செய்ய 130 மில்லியன் தேவை என கணக்கிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183751
  20. பட மூலாதாரம்,SCREENGRAB கட்டுரை தகவல் எழுதியவர், மெரில் செபாஸ்டியன் பதவி, பிபிசி நியூஸ், கொச்சி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த ஆண்டு நவம்பரில், முரளிகிருஷ்ணன் சின்னதுரை பிரிட்டனில் நடந்த தமிழ் மொழி நிகழ்வின் நேரடி ஒளிபரப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது விசித்திரமான ஒன்றைக் கவனித்தார். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகா என்ற அறிமுகத்துடன் பெண் ஒருவரின் உரை ஒளிப்பரப்பானது. இதில் பிரச்னை என்னவென்றால், துவாரகா இறந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. 2009 இல் இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதி நாட்களில் ஒரு வான்வழித் தாக்குதலில் துவாரகா உயிரிழந்ததாக கூறப்பட்டது. அந்த சமயத்தில் 23 வயதான துவாரகாவின் உடல் கண்டுபிடிக்கப் படவில்லை. அப்படியிருக்க, தற்போது ஒரு நடுத்தர வயதுப் பெண்ணாக தோன்றும் துவாரகா அந்த காணொளியில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் தங்கள் சுதந்திரத்திற்கான அரசியல் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லுமாறு அறிவுறுத்துகிறார். தமிழ்நாட்டில் போலிச் செய்திகளைக் கண்டறிவதற்கான பணியில் ஈடுபட்டிருக்கும் சின்னதுரை, அந்த வீடியோவை உன்னிப்பாகப் பார்த்தார், வீடியோவில் உள்ள குறைபாடுகளைக் கவனித்தார், அதன் பின்னர் அவருக்கு உண்மை புரிந்தது. அது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட உருவம் என்று முடிவுக்கு வந்தார். அந்தக் காணொளி ஏற்படுத்தும் சாத்தியமான சிக்கல்கள் சின்ன துரைக்கு தெளிவாகத் தெரிந்தன: "இது தமிழ்நாட்டில் ஒரு உணர்ச்சிப்பூர்வமான பிரச்னை சார்ந்த விஷயம், மேலும் தேர்தல் சமயம் என்பதால், தவறான தகவல் விரைவில் பரவக்கூடும்." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த தொழில்நுட்பம் அதிநவீனமாகி எளிதில் கிடைப்பதால், இதை பயன்படுத்தி, பலர் போலி செய்திகளை உண்மையாக்கி பகிர்கின்றனர். இந்தியாவில் தேர்தல் சூழலில் இது போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் பகிர்வுகளை தவிர்க்க முடியாது - பிரசார வீடியோக்கள், இந்திய மொழிகளில் தனிப்பயனாக்கப்பட்ட ஆடியோ செய்திகள் மற்றும் வேட்பாளர்களின் குரலில் வாக்காளர்களுக்கு செய்யப்படும் தானியங்கி அழைப்புகள் வரை கட்டுப்படுத்துவது சிரமம். ஷாஹித் ஷேக் போன்ற டிஜிட்டல் படைப்பாளிகள் இந்திய அரசியல்வாதிகளை நாம் இதுவரை பார்த்திராத அவதாரங்களில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வேடிக்கையாக உருவகப்படுத்தி ரசிக்கின்றனர். பிரபலங்கள் விளையாட்டு வீரர்களின் உடைகள் அணிந்திருப்பது போன்றும், இசை மற்றும் நடனம் ஆடுவது போன்றும் காணொளிகள் உருவாக்கப்பட்டு அதிகம் பகிரப்பட்டது. ஆனால் இந்த தொழில்நுட்பம் அதிநவீனமாகி எளிதில் கிடைப்பதால், இதை பயன்படுத்தி, பலர் போலி செய்திகளை உண்மையாக்கி பகிர்கின்றனர். போலி செய்திகளின் தாக்கங்கள் குறித்து வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். "வதந்திகள் எப்போதுமே தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக இருக்கும். ஆனால் சமூக ஊடகங்களின் யுகத்தில், வதந்திதள், போலி பகிர்வுகள் காட்டுத்தீ போல் பரவுகிறது. இது உண்மையில் நாட்டையே தீக்கிரையாக்கும்" என்கிறார் நாட்டின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி. பட மூலாதாரம்,SAHIXD படக்குறிப்பு,இந்தியாவின் பல்வேறு முன்னணித் தலைவர்களின் உருவங்களும் திரித்து பகிரப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முன்னேற்றங்களை இந்திய அரசியல் கட்சிகள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளவில்லை. நமது எல்லைக்கு அப்பால் இருக்கும் பாகிஸ்தானில், சிறையில் இருக்கும் அரசியல்வாதி இம்ரான் கானின் உரை செயற்கை நுண்ணறிவு மூலம் தேர்தல் பேரணியில் ஒலித்தது. மேலும் இந்தியாவில், பிரதமர் நரேந்திர மோதி வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தை திறம்பட பிரசாரம் செய்ய பயன்படுத்துகிறார் - பார்வையாளர்கள் மத்தியில் இந்தியில் உரையாற்றுகிறார். ஆனால், அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருவியான `பாஷினி’ மூலம் அவரின் உரை நிகழ் நேரத்தில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு ஒளிப்பரப்பாகிறது. அதே சமயம் இந்த தொழில்நுட்பம் வார்த்தைகளையும் செய்திகளையும் திரித்து கையாளவும் பயன்படுகிறது. கடந்த மாதம், பாலிவுட் நட்சத்திரங்கள் ரன்வீர் சிங் மற்றும் அமீர்கான் ஆகியோர் காங்கிரஸ் கட்சிக்காக பரப்புரை செய்வது போல் இரண்டு வீடியோக்கள் அதிகம் பகிரப்பட்டது. இவை டீப் ஃபேக் (deepfakes) என்றும், தங்களின் அனுமதியின்றி செய்யப்பட்டவை என்றும் இருவரும் போலீஸில் புகார் அளித்தனர். பின்னர், ஏப்ரல் 29 அன்று, பிரதமர் மோதி, ஆளும் கட்சியின் மூத்த தலைவர்களின் பேச்சுகளை திரித்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி காணொளிகள் உருவாக்கப்படுவதாக கவலை தெரிவித்தார். அவரின் பேச்சுகளும் மாற்றப்படுவதாக குறிப்பிட்டார். பிரதமர் வருத்தம் தெரிவித்த அடுத்த நாளே, உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் போலி வீடியோ தொடர்பாக எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர். மோதியின் பாரதிய ஜனதா கட்சி மீதும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். பிரச்னை என்னவென்றால் - கைது செய்யப்பட்ட போதிலும் - நிபுணர்களின் கூற்றுப்படி விரிவான ஒழுங்குமுறை எதுவும் உருவாக்கப்படவில்லை. பட மூலாதாரம்,SAHIXD படக்குறிப்பு,பிரதமர் மோதி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் எடிட் செய்யப்பட்ட படங்கள் அதாவது, "இதுபோன்று ஏதாவது தவறு செய்து பிடிபட்டால், அவர்கள் மீது மிகவும் குறைவான தண்டனைக்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தரவு மற்றும் பாதுகாப்பு ஆய்வாளர் ஸ்ரீனிவாஸ் கோடாலி கூறுகிறார். படைப்பாளிகள் பிபிசியிடம் பகிர்கையில், "ஒழுங்குமுறை இல்லாத நிலையில் தாங்கள் எந்த வகையான வேலையைச் செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது என்பதைத் தீர்மானிக்க தனிப்பட்ட நெறிமுறைகளை நம்பியிருக்க வேண்டி உள்ளது” என்று கூறினார்கள். அரசியல்வாதிகள், அவர்களது போட்டியாளர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ஆபாசமான சித்தரிப்புகள், வீடியோக்கள் மற்றும் ஆடியோக்களை மார்பிங் செய்தல் உள்ளிட்ட செயல்களுக்கு கோருவதாக படைப்பாளிகள் பிபிசியிடம் கூறுகின்றனர். "ஒருமுறை அரசியல்வாதி ஒருவரின் சர்ச்சை வீடியோ வைரலானது. அந்த உண்மையான வீடியோவையே டீப் ஃபேக் போல் உருவாக்கும்படி என்னிடம் கேட்கப்பட்டது, ஏனெனில் அசல் வீடியோ, பரவலாகப் பகிரப்பட்டால், அரசியல்வாதி மீது மோசமான விமர்சனங்கள் வரும்” என்று திவ்யேந்திர சிங் ஜாடூன் நடந்ததை விவரித்தார். திவ்யேந்திர சிங் ஜாடூன், தி இந்தியன் டீப்ஃபேக்கரின் (TID) நிறுவனர். இவரின் நிறுவனம் இந்திய அரசியல்வாதிகளுக்கான பிரசார படைப்புகளை உருவாக்க AI மென்பொருளைப் பயன்படுத்துகிறது. இவர்கள் உருவாக்கும் வீடிபோக்களில், இது உண்மையானது அல்ல என்பதை குறிப்பிடும் `disclaimers’ சேர்க்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"ஒரு டீப் ஃபேக்கை உருவாக்குவது இப்போது மிகவும் எளிதானது. எங்களுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் எடுத்துக்கொண்ட வேலை, இப்போது மூன்று நிமிடங்களில் செய்துவிட முடியும்" என்கிறார் ஜாடூன். மேற்கு வங்கத்தில் ஒரு மார்க்கெட்டிங் ஏஜென்சியில் பணிபுரியும் ஷேக், சமூக ஊடகங்களில் அரசியல்வாதிகள் மற்றும் அரசியல் கட்சி இணையத்தளங்களில் தன் அனுமதி இன்றி தனது படைப்புகளை பகிர்ந்துள்ளதை கண்டுள்ளார். "ஒரு அரசியல்வாதி நான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கிய மோதியின் புகைப்படத்தை என் பெயரை குறிப்பிடாமல் பயன்படுத்தினார், மேலும் அது AI ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்றும் குறிப்பிடவில்லை," என்று அவர் கூறுகிறார். "ஒரு டீப் ஃபேக்கை உருவாக்குவது இப்போது மிகவும் எளிதானது. எங்களுக்கு ஏழு அல்லது எட்டு நாட்கள் எடுத்துக்கொண்ட வேலை, இப்போது மூன்று நிமிடங்களில் செய்துவிட முடியும். உங்களிடம் ஒரு கணினி இருந்தால் போதும்." என்று ஜாடூன் விளக்குகிறார். உண்மையில், இரண்டு நபர்களிடையே போலி தொலைபேசி அழைப்பை உருவாக்குவது எவ்வளவு எளிது என்பதை பிபிசி நேரடியாக கண்டது - இந்த விஷயத்தில், பிபிசி நிருபரும் முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் பேசுவது போன்று வீடியோ உருவாக்கப்பட்டது அபாயங்கள் இருந்தபோதிலும், செயற்கை நுண்ணறி தொழில்நுட்பத்துக்கான ஒழுங்குமுறை சட்டத்தை பரிசீலிக்கவில்லை என்று இந்தியா முதலில் கூறியது. எவ்வாறாயினும், இந்த மார்ச் மாதத்தில், "மோதி ஒரு பாசிசவாதியா?" என்ற வினவலுக்கு கூகுளின் ஜெமினி சாட்பாட் பதிலளிப்பது போன்ற நிகழ்வு சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த சம்பவம் மீதான கோபத்திற்கு பிறகு இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான சட்டம் செயல்பாட்டிற்கு வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,"ஒவ்வொரு தகவலும் ஒரு மணி நேரத்திற்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கிறது" என்கிறார் தமிழகத்தில் ஊடக கண்காணிப்பு அமைப்பை சேர்ந்த முரளிகிருஷ்ணன். இது நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டங்களை மீறியுள்ளதாக அந்நாட்டின் இளநிலை தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். "அப்போதிருந்து, இந்திய அரசாங்கம் "நம்பகமற்ற" அல்லது "சோதனை செய்யப்படாத" ஜெனரேடிவ் AI மாதிரிகள் அல்லது கருவிகளை பகிரங்கமாக வெளியிடுவதற்கு முன், அதன் வெளிப்படையான அனுமதியை பெறுமாறு தொழில்நுட்ப நிறுவனங்களை கேட்டுக் கொண்டுள்ளது. ’தேர்தல் செயன்முறையின் நேர்மையை அச்சுறுத்தும்’ இந்த தொழில்நுட்பங்களின் பதில்களுக்கு எதிராகவும் அது எச்சரிக்கை விடுத்தது” ஆனால் இது போதாது. போலி செய்திகளை கண்டறியும் நிபுணர்கள், இதுபோன்ற உள்ளடக்கத்தை நீக்குவது ஒரு கடினமான பணியாகும், குறிப்பாக தேர்தல்களின் போது தவறான தகவல்கள் உச்சத்தைத் தொடும் போது யாராலும் கட்டுப்படுத்த முடியாது. "ஒவ்வொரு தகவலும் ஒரு மணி நேரத்திற்கு 100 கிமீ வேகத்தில் பயணிக்கிறது" என்கிறார் தமிழகத்தில் ஊடக கண்காணிப்பு அமைப்பை சேர்ந்த சின்னதுரை. "ஆனால் நாங்கள் பரப்பும் தகவல்கள் மணிக்கு 20 கிமீ வேகத்தில் தான் மக்களை சேரும்." என்கிறார். மேலும் இந்த போலி படைப்புகள் முக்கிய ஊடகங்களில் கூட நுழைகின்றன என்கிறார் கோடாலி. இருந்தபோதிலும், "தேர்தல் ஆணையம் ஏஐ குறித்து மௌனமாக உள்ளது. பெரிய அளவில் விதிகள் எதுவும் இல்லை. அவர்கள் உண்மையான விதிமுறைகளை கொண்டு வருவதற்கு பதிலாக தொழில்நுட்பத் துறையை சுய-ஒழுங்குபடுத்த சொல்கிறார்கள்." என்கிறார். "ஆனால் இப்போதைக்கு போலி படைப்புகளை பகிர்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டால், அது சரிபார்க்கப்படாத தகவல்களை பகிரும் மக்களையும் பயமுறுத்தக்கூடும். ஏஐ பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் வேண்டும்" என்று குரேஷி கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cn0v004d254o
  21. Published By: DIGITAL DESK 3 17 MAY, 2024 | 10:26 AM யாழ்ப்பாணம், ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் வியாழக்கிழமை (16) தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார். ஐயாத்துரை தியாகராஜா (வயது 76) என்ற முதியவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த முதியவரின் மனைவி உயிரிழந்துள்ளார். அவரது பிள்ளைகள் அனைவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்ற நிலையில் குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில், மன விரக்தியடைந்த அவர் இன்றையதினம் அவரது வீட்டில் உள்ள கிணற்றில் விழுந்து உயிர்மாய்த்துள்ளார். இந்த காட்சி அங்கிருந்த சி.சி.டி கமராவில் பதிவாகியுள்ளது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/183748
  22. இந்த நாட்களில் மக்கள் மத்தியில் டைபொய்ட் பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளதாக சுகாதாரத்துறையினர் எச்சரித்துள்ளனர். மலக் கழிவுகளால் டைபொய்ட் பாக்டீரியா உருவாகிறது மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் மலத்திலிருந்து மற்றொரு நபருக்கு பாக்டீரியா பரவுகிறது. வீட்டில் சமைத்த உணவை உட்கொள்ளாதவர்கள் மற்றும் வெளியூர் சென்று வருபவர்கள் இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் அறிவித்தல் விடுத்துள்ளனர். இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உணவு மற்றும் பானங்களை தயாரிக்கும் போது, அது மற்றொரு நபருக்கு பரவும் அபாயம் உள்ளது. எனவே இயன்றவரை வீட்டில் சமைத்த உணவுகளை உண்ணுமாறு சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்த பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், காய்ச்சல், இதயத்துடிப்பு குறைதல், சோர்வு மற்றும் இருமல், தலைவலி மற்றும் மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். டைபொய்ட் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட நபர்கள் அனைத்து சுகாதார மருத்துவ அலுவலர் அலுவலகங்களிலிருந்தும் தொடர்புடைய தடுப்பூசிகளை இலவசமாகப் பெறலாம்என அறிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301826
  23. சன்ரைசர்ஸ் 3ஆவது அணியாக ப்ளே ஓவுக்கு தகுதி : நான்காவது இடத்திற்கு சென்னை, பெங்களூருக்கு இடையில் போட்டி 16 MAY, 2024 | 11:43 PM (நெவில் அன்தனி) இண்டியன் பிறீமியர் லீக் ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சிரமமின்றி முன்னேறியது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கும் குஜராத் டைட்டன்ஸுக்கும் இடையில் ஹைதராபாத்தில் இன்று வியாழக்கிழமை (16) இரவு நடைபெறவிருந்த 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 66ஆவது போட்டி மழையினால் கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதற்கு அமைய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 13 போட்டிகளில் 15 புள்ளிகளைப் பெற்று ப்ளே ஓவ் சுற்றுக்கு 3ஆவது அணியாகத் தகுதிபெற்றது. ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் றோயல்ஸ் ஆகிய அணிகள் ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெற்றிருந்தன. இதேவேளை, இந்த மூன்று அணிகளைத் தொடர்ந்து 4ஆவது அணியாக ப்ளே ஓவ் சுற்றுக்கு தகுதிபெறப்போகும் அணி எது என்பதை சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கும் றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கும் இடையிலான போட்டி தீர்மானிக்கவுள்ளது. அப் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் வெற்றிபெற்றால் ப்ளே ஓவ் சுற்றில் விளையாட தகுதிபெறும். றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மிகப் பெரிய வெற்றியை ஈட்டினால் மாத்திரமே ப்ளே ஓவ் வாய்ப்பை பெறும். இப் போட்டி சனிக்கிழமை நடைபெறவுள்ளது. ஒருவேளை, அப் போட்டியும் மழையினால் கைவிடப்பட்டால் சென்னை சுப்பர் கிங்ஸ் 15 புள்ளிகளைப் பெற்ற ப்ளே ஓவ் சுற்றுக்குள் நுழையும். https://www.virakesari.lk/article/183735
  24. இன்றைய வானிலை முன்னறிவித்தல் இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்ட தளம்பல் நிலை காரணமாக மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. அனுராதபுரம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் மட்டக்களப்பு – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் கொழும்பு – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் காலி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் யாழ்ப்பாணம் – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் கண்டி – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் நுவரெலியா – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் இரத்தினபுரி – மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் திருகோணமலை – பி.ப. 2.00 மணிக்குப்பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் https://thinakkural.lk/article/301800

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.