Everything posted by ஏராளன்
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி தாக்குதலை தொடரும் முனைப்பில் இஸ்ரேல் - ரஃபாவில் என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,காஸா எல்லை அருகே இஸ்ரேலின் டாங்குகளும், கவச வாகனங்களும் தென்பட்டன. 34 நிமிடங்களுக்கு முன்னர் தெற்கு காஸாவில் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், மேலும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனர்களை ரஃபாவை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளது. ரஃபாவின் கிழக்கு மாவட்டங்களில் வசிப்பவர்களை அல்-மவாசிக்கு செல்லுமாறு அறிவிப்புகள் விடப்படுகின்றன. சமூக ஊடக பதிவுகள் மூலமாகவும் தெரிவிக்கப்படுகின்றன. குறுகிய கடலோரப் பகுதியான அல்-மவாசியை "விரிவாக்கப்பட்ட மனிதாபிமான மண்டலம்" என இஸ்ரேல் அழைக்கிறது. சில நாட்களுக்கு முன்பு உள்ளூர் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் நிரம்பியிருந்த ரஃபாவின் பகுதிகள், தற்போது பேய் நகரம் போல் காட்சியளிக்கின்றன. தரைவழித் தாக்குதல் பாரிய பொதுமக்கள் உயிரிழப்பு மற்றும் மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுக்கும் என்று அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகள் எச்சரித்த போதிலும், ரஃபாவில் திட்டமிட்ட நடவடிக்கைகளைத் தொடரப் போவதாக இஸ்ரேல் கூறியுள்ளது. சனிக்கிழமையன்று, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ஹமாஸ் பணயக்கைதிகளை விடுவித்தால் அடுத்த நாளே காஸாவில் போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்றார். போர் நிறுத்தம் ஹமாஸ் கையில் உள்ளது. அவர்கள் அதைச் செய்ய விரும்பினால், நாங்கள் அடுத்த நாளே போர் நிறுத்தம் செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்திருந்தார். அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் 128 பேர் இன்னும் விடுவிக்கப்படவில்லை. இதில், 36 பேர் இறந்துவிட்டதாகக் கருதப்படுகிறது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேல் ராணுவம் அறிவித்த பிறகு, வடக்கு காஸாவில் சில வெடிப்புகளை காண முடிந்தது. ரஃபாவில் ஹமாசுடன் நேருக்கு நேர் சண்டை என இஸ்ரேல் தகவல் சனிக்கிழமையன்று ரஃபாவில் புகை எழுந்ததைக் காண முடிந்தது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களாக ஏ.எஃப்.பி. செய்தி முகமை மேற்கோள் காட்டியவர்கள் எகிப்துடனான எல்லை அருகே வான்வழித் தாக்குதல் நடந்ததாக தெரிவித்தனர். முன்னதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்த இஸ்ரேல் பாதுகாப்புப் படை, ரஃபாவில் ஹமாஸ் குழுவினருடன் "நேருக்கு நேர் சண்டையில்" ஈடுபட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. அந்தப் பகுதியில் பல சுரங்கங்களை கண்டறிந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. சனிக்கிழமை, காஸா பகுதி முழுவதும் டஜன் கணக்கில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடந்துள்ளன, இஸ்ரேலிய ராணுவம் பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் உள்கட்டமைப்புகளை குறிவைப்பதாகக் கூறியது. சனிக்கிழமை மாலை இஸ்ரேல் ராணுவம், காஸா பகுதியின் வடக்கே ஜபாலியா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இலக்குகளைத் தாக்கி வருவதாக கூறியிருந்தது. முன்னதாக, வடக்கு காஸாவின் சில பகுதிகளை விட்டு வெளியேறுமாறு அங்கிருக்கும் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவர்கள் "தற்காலிகமாக மேற்கு காஸா நகரத்தில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு இஸ்ரேல் தெரிவித்திருந்தது. பட மூலாதாரம்,REUTERS அமெரிக்காவையும் மீறி தாக்குதலை தொடர இஸ்ரேல் உறுதி லட்சக்கணக்கான பாலத்தீனர்கள் அடைக்கலமாகியுள்ள காஸா பகுதியின் தெற்கு முனை வரை தரைவழித் தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேலின் திட்டம் சர்வதேச அளவில் கவலையைத் தூண்டியுள்ளது. கடந்த வாரம், ரஃபா மீதான பெரிய தாக்குதலுக்கு பயன்படுத்தக் கூடிய கனரக ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்காது என்று அதிபர் பைடன் கூறினார். அதே போல இஸ்ரேலின் இந்தச் செயலை பிரிட்டனும் எதிர்க்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரூன், "ரஃபாவில் ராணுவ நடவடிக்கையை பிரிட்டன் எதிர்க்கிறது, ஆனால் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவது தொடர்பாக அமெரிக்காவை முடிவை பிரிட்டன் பின்பற்ற வாய்ப்பில்லை" என்றும் கூறினார். கடந்த வெள்ளிக்கிழமை இந்த முரண்பாடுகள் குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ரஃபா மீதான இராணுவத் தாக்குதலைத் தொடர்வோம் என்றும் உறுதியாக தெரிவித்தார். மேலும், "தேவைப்பட்டால்.. நாங்கள் தனித்து நிற்போம்"என்றும் நெதன்யாகு கூறினார். அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டதாகவும், 252 பேர் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. இதற்கு பதிலடியாக காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் குறைந்தது 34,900 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைச்சகம் கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/c3gj7ze1kneo
-
இஸ்ரேலிய பிரதமர் ஒரு இனப்படுகொலையாளி - கொலம்பிய ஜனாதிபதி கடும் விமர்சனம்
12 MAY, 2024 | 11:45 AM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு வரலாற்றில் ஒரு இனப்படுகொலையாளன் என பதிவுசெய்யப்படுவார் என கொலம்பிய ஜனாதிபதி கஸ்டவோ பெட்டிரோ சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அப்பாவி சிறுவர்கள் பெண்கள் முதியவர்கள் மீது ஆயிரக்கணக்கில் குண்டுகளை வீசுகின்றார் இதன் காரணமாக அவர் கதாநாயகனாக மாற முடியாது என அவர் பதிவிட்டுள்ளார். மில்லியன் கணக்கில் யூதர்களை கொலை செய்த நாஜிகளுடன் இஸ்ரேலிய ஜனாதிபதியை ஒப்பிட்டுள்ள அவர் எந்த மதத்தினரையும் நீங்கள் கொலை செய்தாலும் இனப்படுகொலை இனப்படுகொலை தான் எனவும் அவர்தெரிவித்துள்ளார். முன்னதாக கொலம்பிய ஜனாதிபதியை இஸ்ரேல் பிரதமர் ஹமாஸ் ஆதரவாளர் என குறிப்பிட்டிருந்தார். https://www.virakesari.lk/article/183299
-
கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?
ஹர்தீப் நிஜ்ஜார் கொலை வழக்கு | 4வது நபரை கைது செய்தது கனடா காவல்துறை! 12 MAY, 2024 | 09:21 AM கனடாவில் பிரபல சீக்கிய ஆர்வலர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 வது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இந்தியா கனடா உறவும் கூட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அந்தக் குற்றச்சாட்டையும் இந்தியா மொத்தமாக நிராகரித்தது. இதற்கிடையே ஹர்தீப் சிங் கொலை தொடர்பாக கரன் பிரார் (22) கமல்ப்ரீத் சிங் (22) கரன்ப்ரீத் சிங் (28) ஆகிய மூன்று பேரை கனடா போலீசார் கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரும் ஆல்பர்ட்டா என்ற பகுதியில் வசிக்கும் non-permanent residents என்றும் விசாரணை அதிகாரி மன்தீப் முகர் தெரிவித்தார். அவர்கள் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேநேரம் அந்த மூன்று பேருக்கும் ஒருவரை மற்றொருவருக்குத் தெரியாதாம். இதற்கிடையே இந்திய அரசுடன் அவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொலை விசாரணையும் தொடர்ந்து நடத்தி வருவதாகவும் ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் உதவி ஆணையர் டேவிட் டெபூல் தெரிவித்தார். இந்த நிலையில், இந்த கொலை வழக்கில் நான்காவது நபராக இந்தியரான அமந்தீப் சிங் (22) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கொலை மற்றும் சதித்திட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் சர்ரே மற்றும் அபோட்ஸ்ஃபோர்டில் வசித்து வந்துள்ளார். அமன்தீப் சிங், ஆயுதங்கள் தொடர்பான குற்றச்சாட்டில் ஏற்கனவே ஒன்டாறியோவில் காவலில் வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183282
-
சமையலுக்கு எந்த பாத்திரம், எந்த அடுப்பு சிறந்தது? மைக்ரோவேவ் அவன், ஏர் பிரையர் தீங்கு தருமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஓம்கார் கர்ம்பேல்கர் பதவி, பிபிசி மராத்தி 2 மணி நேரங்களுக்கு முன்னர் 'கேஸ் அடுப்பில் சமைத்த சாம்பார், விறகடுப்பில் சமைத்த போது இருந்த ருசியில் இல்லை, அந்த அடுப்பில் சமைத்த உணவே சிறந்தது, குக்கரில் சமைத்த சாதமும், சட்டியில் சமைத்த சாதமும் முற்றிலும் வேறு.. மைக்ரோவேவில் சமைத்த உணவில் ருசியே இல்லை. சாரம் இழக்கும் வகையில் சமைப்பது நல்லதல்ல. இப்படி சமைப்பது நல்லது, அப்படி சமைப்பது நல்லது.." இதுபோன்ற வாக்கியங்களை அடிக்கடி நம் வீடுகளில் கேட்க முடியும். பல வீடுகளில், உணவை சமைப்பது, சூடுபடுத்துவது, கொதிக்க வைப்பது என அனைத்திலும் பல விதிகள் பின்பற்றப்படுகின்றன. பெரும்பாலும் உணவு சமைப்பதில், பாரம்பரிய முறைகள் தான் சிறந்தது என்ற நம்பிக்கை மக்களிடையே காணப்படுகிறது. மைக்ரோவேவ் அல்லது ஏர் ஃப்ரையர் போன்ற நவீன மின் சாதனங்கள் உணவின் ஊட்டச்சத்துக்களை அழித்து விடும் என்ற பலரும் நம்புகின்றனர். ஆனால் இந்த ஆண்டு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் (என்ஐஎன்) வழங்கிய புதிய வழிகாட்டுதல்களில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றிய நம்முடைய நம்பிக்கைகளை புரட்டிப் போடக் கூடியவை, இந்திய ஆண்களுக்கும் பெண்களுக்கும் தினமும் எவ்வளவு உணவு தேவை, எவ்வளவு ஊட்டச்சத்துகள் தேவை, பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் உணவில் என்ன இருக்க வேண்டும் மற்றும் சமையல் உபகரணங்கள் ஆகியவற்றை பற்றிய தகவல்கள் அந்த அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் 'இந்தியர்களுக்கான உணவு வழிகாட்டுதல்கள்' என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளன. சமையல் முறைகள் மற்றும் சமையல் பாத்திரங்கள் பற்றி இந்த அறிக்கை விவரிக்கும் தகவல்களை முதலில் பார்ப்போம்… எந்த பாத்திரத்தில் சமைப்பது சிறந்தது? எந்த வகையான பாத்திரத்தில் சமைப்பது? நாம் பயன்படுத்தும் பாத்திரம் நல்லது தானா? அதை எவ்வாறு பராமரிப்பது, அதில் ஏதேனும் பாதகமான ரசாயன எதிர்வினை இருக்கிறதா? சமைக்கும் போது, இந்த பாத்திரங்கள் உணவின் ஊட்டச்சத்துகளை அழித்து விடுமா? பாத்திரங்களில் ரசாயன பூசப்பட்டிருந்தால் அவை உணவோடு கலந்து விடுமா? - இதுபோன்று பல நேரங்களில் சந்தேகம் வரும். சில சமயங்களில் பயமும் இருக்கும். `ஐசிஎம்ஆர்’ மற்றும் `என்ஐஎன்’ வழங்கிய இந்த புதிய வழிகாட்டுதல்களில், மண் பாத்திரங்கள், உலோகம், துருப்பிடிக்காத எஃகு, நான்ஸ்டிக் மற்றும் கிரானைட் கற்கள் பற்றிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,GETTY மண் பாண்டங்கள் சமையலுக்கு பாதுகாப்பானவை. மண் பாண்டங்களில் சமைக்கும் போது குறைந்த எண்ணெயில் சமைக்க முடியும். மண் பாத்திரங்களில் வெப்பம் ஒரே அளவில் பரவும், உணவு பொருளில் ஒரே மாதிரி வெப்பம் ஊடுருவுவதால், ஊட்டச்சத்து மதிப்புகள் பாதுகாக்கப்படும் என்று அறிக்கையில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஊறுகாய், சட்னி, சாம்பார், சாஸ் போன்றவற்றை அலுமினியம், இரும்பு, செம்பு பாத்திரங்களில் வைக்கக் கூடாது. ஸ்டீல் கிண்ணத்தில் இந்த பொருட்களுக்கு எந்தவித பாதகமான விளைவும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழிகாட்டுதல்களை உருவாக்கிய நிபுணர்கள் டெஃப்லான் பூச்சு கொண்ட நான்-ஸ்டிக் பாத்திரங்களை (pan) 170 டிகிரி செல்சியஸுக்கு மேல் சூடாக்கினால் ஆபத்தான விளைவை ஏற்படுத்தும் என்று கூறுகிறார்கள். ஸ்டவ் மீது நீண்ட நேரம் காலியாக வைத்து சூடாக்கினாலும் ஆபத்தான விளைவு ஏற்படும். காலியாக வைத்து சூடுபடுத்தும் போது, நான்-ஸ்டிக் பாத்திரத்தில் இருக்கும் டெஃப்லான் லேயர், நச்சுப் புகைகளை உருவாக்கும். நான்-ஸ்டிக் பாத்திரங்களைப் பயன்படுத்தும் போது, எப்படி சுத்தம் செய்வது என்னும் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த சமையல் பாத்திரங்களில் நான்ஸ்டிக் பூச்சு சேதமடைந்து விட்டால், அதைப் பயன்படுத்த கூடாது என்றும் அறிக்கை கூறுகிறது. `ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இயக்குநர் டாக்டர். ஹேமலதா ஆர் கூறுகையில் , “மக்கள் `ஒட்டவே ஒட்டாத’ நான்-ஸ்டிக் சமையல் பாத்திரங்களை வாங்க விரும்புகிறார்கள், ஏனெனில் அது பிரபலமாக உள்ளது. எளிதில் கிடைக்கிறது. ஆனால் அதிக சூடேறும் போது, நான் - ஸ்டிக் பூச்சுகளில் உள்ள ரசாயனங்கள் வெளியேறி, நம் உணவில் கலந்து, நம் உடலுக்குள் செல்கின்றன. இது ஆபத்தானது. எனவே, நான்-ஸ்டிக் பயன்பாட்டை குறைக்க வேண்டும். அப்படி பயன்படுத்தினாலும், அதன் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். இந்த பாத்திரங்களை சுத்தம் செய்வதற்கு ஒரு சிறப்பு முறை உள்ளது. அதற்கேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும். கீறல்கள் விழுந்த பழைய நான்-ஸ்டிக் பாத்திரங்களை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. `கிரானைட் கல்’ சமையல் பாத்திரங்கள் (Granite stoneware) இப்போது குறைந்த எடையிலும் கிடைக்கின்றன. இந்த கல் சட்டிகள் மூலம் குறைந்த நேரத்திலும் குறைந்த ஆற்றல் பயன்பாட்டிலும் சமைக்க முடியும். இந்த சட்டிகள் வெப்பத்தை நன்கு தக்கவைத்து கொள்ளும் ஆற்றல் கொண்டவை. அடுப்பு அணைக்கப்பட்ட பிறகும் நீண்ட நேரம் வெப்பத்தைத் தக்க வைத்துக்கொள்ளும். டெஃப்லான் பூச்சு இல்லாத கல் பாத்திரங்கள் பயன்படுத்த பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. மைக்ரோவேவ் மற்றும் ஏர் பிரையர் பயன்பாடு பட மூலாதாரம்,GETTY இந்த வழிகாட்டுதல் அறிக்கையில், சமையல், கொதித்தல், குக்கர் சமையல், வேக வைத்தல், வறுத்தல், குறைந்த எண்ணெயில் வறுத்தல், பார்பிக்யூ, கிரில்லிங் மற்றும் ஏர் ஃப்ரை செய்தல் என சமையல் முறைகளின் நன்மைகள் மற்றும் சாத்தியமான தீமைகளையும் விவரிக்கிறது. உதாரணமாக பொரியலை எடுத்துக் கொள்வோம். இந்த அறிக்கையில் உள்ள தகவல்களின்படி, வறுக்கப்படும் செயல்முறை, உணவின் ஊட்டச்சத்து மதிப்புகளை மாற்றுகிறது. வைட்டமின் சி போன்ற நீரில் கரையக்கூடிய வைட்டமின்கள் அழிக்கப்பட வாய்ப்புகள் அதிகம். மேலும், ஒரு உணவு பொருளை எண்ணெயில் வறுக்கும் போது, அதிகப்படியான ஆக்ஸிஜனேற்றப்பட்ட கூறுகள் உருவாகலாம் மற்றும் நச்சுகளும் உருவாகலாம். மிக முக்கியமாக, அதிகப்படியான எண்ணெய் மற்றும் கொழுப்பு நுகர்வு இதய நோய், பக்கவாதம், நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். இது அடிவயிற்றை சுற்றி கொழுப்பு சேர்வதற்கும், கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகளின் சமநிலையின்மைக்கும் வழிவகுக்கிறது. அதே எண்ணெயை மீண்டும் பொரிப்பதற்கு பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் விளக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மைக்ரோவேவ் அவனில் சமைப்பது பற்றிய ஒரு புதிய மற்றும் சிந்தனையைத் தூண்டும் தகவலை வழங்குகிறது. மைக்ரோவேவ் சமையலுக்கும் வழக்கமான சமையலுக்கும் இடையே சிறிய ஊட்டச்சத்து வேறுபாடு இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஊட்டச்சத்துகளின் மீது குறைவான பாதிப்பை ஏற்படுத்தும் சமையல் முறைகளில் மைக்ரோவேவ் சமையல் ஒன்றாகும். காரணம், மைக்ரோவேவில் சமைக்கும் போது, மிகக் குறைந்த நீரே பயன்படுத்தப்படும். மைக்ரோவேவ், உணவை உள்ளே இருந்து சூடாக்குகிறது. இது ஊட்டச்சத்துகளை அழிக்காததால், மற்ற சமையல் முறைகளை விட இது அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை தக்க வைக்கிறது. மைக்ரோவேவ் அவனில் மிகக் குறுகிய காலத்தில் சமைப்பதால், அதிக நேர வெப்பத்தால் அழிக்கப்படும் வைட்டமின் சி மற்றும் பிற கூறுகளும் பாதுகாக்கப்படுகின்றன. இது புரதங்கள், லிப்பிடுகள், வைட்டமின்கள், தாதுக்கள் ஆகியவற்றில் குறைவான விளைவை ஏற்படுத்தும். மைக்ரோவேவில் சமைக்கும் போது, பாதுகாப்பான கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரங்களை பயன்படுத்துமாறு அறிக்கை பரிந்துரைக்கிறது. பிளாஸ்டிக் கொள்கலன்கள் நல்லதல்ல என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'மைக்ரோவேவ் விதிகளை பின்பற்ற வேண்டும்' `ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இயக்குநர் டாக்டர். ஹேம்லதா ஆர் பிபிசி மராத்திக்கு கொடுத்த பேட்டியில், “வழக்கமான சமையல் முறைகளை விட மைக்ரோவேவ் சமையல் சிறந்தது என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் உங்களுக்கு வேறு வழியில்லை எனில் மைக்ரோவேவ் பயன்படுத்தலாம். மைக்ரோவேவ் நாம் நினைப்பது போல் மோசமான உபகரணம் இல்லை. நிச்சயமாக, மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பயன்படுத்துவது ஆபத்தானது. அதன் விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும். எனவே, மைக்ரோவேவில் அனைத்து ஊட்டச்சத்து மதிப்புகளும் இழக்கப்படும் என்ற பொதுவான பார்வையை நம்ப வேண்டியதில்லை. மைக்ரோவேவை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். இது அந்தளவிற்கு கெடுதல் இல்லை." என்றார். மைக்ரோவேவில் உணவை நீண்ட நேரம் சூடாக்கினால், அதில் ' அக்ரிலாமைடு' (acrylamide) என்ற வேதிப்பொருள் உருவாகும். இது புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சில நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எரிவாயு அல்லது விறகடுப்பில் உணவைச் சூடாக்குவதை விட மைக்ரோவேவில் உணவைச் சமைப்பது அதிக அக்ரிலாமைடை உருவாக்குகிறது என்று சில நிபுணர்கள் கூறுகிறார்கள். மைக்ரோவேவில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கவனமாக இருங்கள்! இது உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தானது. மைக்ரோவேவில் இருந்து வரும் வெப்பம் பிளாஸ்டிக்கில் உள்ள நச்சு பாலிமர் (polymer) துகள்களை உடைக்கும். இந்த பாலிமர் துகள்கள் உணவுடன் கலக்கின்றன. இந்த பாலிமர் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்கள் பாதிக்கப்படும். எனவே, பிளாஸ்டிக் பொருட்களை மைக்ரோவேவில் எந்த சூழ்நிலையிலும் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருள்களை மிருதுவாக்க பயன்படுத்தப்படும் ரசாயனமான தாலேட்ஸ் (Phthalates) எனப்படும் பிளாஸ்டிசைசர்கள் (plasticizers) நமது வளர்சிதை மாற்றத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக, உடலில் உள்ள ஹார்மோன்களின் சமநிலை மோசமடையத் தொடங்குகிறது. பட மூலாதாரம்,GETTY இந்த தாலேட்ஸ் (Phthalates) உடலில் நுழைவதால், குழந்தைகளுக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இது இன்சுலின் சுரக்கும் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே சர்க்கரை நோய், ரத்த அழுத்த பிரச்னைகள் தோன்றும். இது ஆஸ்துமா அல்லது கருவுறுதல் தொடர்பான பிரச்னைகளையும் ஏற்படுத்தும் . பட மூலாதாரம்,GETTY மைக்ரோவேவ் அவன் இந்திய சமையலறைகளில் ஹோட்டல்களில் ஊடுருவி இருந்தாலும், ஏர் பிரையர்கள் ஒப்பீட்டளவில் நமக்கு புதியவை தான். இதில் வறுத்த உணவுகள் அதிக எண்ணெய் பயன்படுத்துவதைத் தவிர்க்கின்றன என்று இந்த அறிக்கை கூறுகிறது. மற்ற சமையல் முறைகளில் உணவு பொருட்களை வறுப்பதை விட இதில் வறுக்கும் போது உணவில் குறைந்த அளவு எண்ணெய் உறிஞ்சப்படும் குறைந்த எண்ணெய் என்றால் குறைந்த கலோரிகள் என்று அர்த்தம். குறைந்த கலோரிகள் என்றால் எடை அதிகரிப்பு மற்றும் உடல் பருமன் ஏற்படும் அபாயம் குறைவு. உருளைக்கிழங்கு போன்ற மாவுச்சத்து நிறைந்த உணவுகளை சமைக்க ஏர் பிரையர்களைப் பயன்படுத்தலாம் என்று இந்த அறிக்கை கூறுகிறது. ஏர் பிரையரில் மீன்கள் வறுக்கப்படும் போது, பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (இதயத்திற்கு ஆரோக்கியமான ஒமேகா -3 கொழுப்புகள்) குறையும் மற்றும் ஆரோக்கியத்தில் அழற்சியை ஊக்குவிக்கும் சேர்மங்களை அதிகரிக்கும் என்கிறது அறிக்கை. உணவுப்பொருள்களில் ஊட்டச்சத்துகளை தக்க வைப்பது எப்படி? சமையல் முறை மற்றும் பாத்திரங்கள் பற்றிய தகவல்களை பார்த்தோம், இந்த அறிக்கை ஊட்டச்சத்து மதிப்புகளை பராமரிக்க சில குறிப்புகளை வழங்கியுள்ளது. இந்த அறிவுறுத்தல்கள் படி, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அடிக்கடி கழுவ வேண்டாம். காய்கறிகள் மற்றும் பழங்களை தோலுரிப்பதற்கும், வெட்டுவதற்கும் முன் கழுவவும். சமையலில் அதிக தண்ணீர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும், சமையலுக்கு தேவையான அளவு தண்ணீரை மட்டுமே பயன்படுத்தவும். காய்கறிகளை சமைக்கும் போது பாத்திரங்களை மூடி வைக்கவும். எண்ணெயில் வறுப்பதற்கு பதிலாக ஆவியில் வேக வைக்கவும். உடைந்த தானியங்கள் மற்றும் புளித்த உணவுகளை (இட்லி-தோசை) உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளை சமைக்கும் போது சோடாவை சேர்க்க வேண்டாம். மீதமுள்ள எண்ணெயை மீண்டும் சூடாக்குவதைத் தவிர்க்கவும். ஆரோக்கியமான உணவு முறை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொரு நோய்க்கும் டாக்டர்கள் 'வாழ்க்கை முறை மாற்றங்களை' அதாவது வாழ்க்கை முறையை மாற்றி 'ஆரோக்கியமான உணவை' சாப்பிடுங்கள் என்று கூறுகிறார்கள். உடல் பருமன், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் முதல் மனநோய் வரை இந்த அறிவுறுத்தலை மருத்துவர்களிடம் கேட்டிருப்பீர்கள். என்ன தான் சாப்பிடுவது என்ற கேள்வி வரும். 'ஆரோக்கியமான' உணவில் ஏராளமான காய்கறிகள், தானியங்கள், பருப்பு வகைகள், மிதமான உலர் பழங்கள், கொட்டைகள், விதைகள், பழங்கள் மற்றும் தயிர் ஆகியவை இருக்க வேண்டும் என்று ICMR மற்றும் NIN பரிந்துரைக்கின்றன. `ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ இல் இந்த வழிகாட்டுதல்களை உருவாக்க பணியாற்றிய ஆராய்ச்சியாளர் டாக்டர். சுப்பாராவ் எம். ஜி, பிபிசி மராத்திக்கு கூடுதல் தகவல்களை வழங்கினார். உணவு பொருட்களில், தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், எண்ணெய் வித்துகள், எண்ணெய், கொழுப்புச் சத்துள்ள உணவுகள், பச்சைக் காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள், வேர்கள் மற்றும் கிழங்குகள், இறைச்சி, மீன், மசாலாப் பொருட்கள் என பத்து வகைகளாகப் பிரித்துள்ளோம் என்றார். மேற்சொன்ன உணவு வகைகளில் ஏதேனும் ஐந்து முதல் ஏழு உணவுகளை தினசரி உணவில் எடுத்து கொள்ளலாம். 2000 கலோரி உணவு என கருத்தில் கொண்டால், உங்கள் உணவில் பாதி காய்கறிகள் மற்றும் பழங்களாக இருக்க வேண்டும். முடிந்தவரை புதிய காய்கறிகள் மற்றும் குறைந்த அளவு பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது நல்லது.” “மேற்சொன்ன 10 வகை உணவு உட்பிரிவுகளில், ஏதேனும் ஒன்றை மட்டும் தொடர்ந்து சாப்பிடுவதும் சரியல்ல, உங்கள் உணவில் பலவகையான உணவுப் பொருட்கள் இருக்க வேண்டும். உங்கள் வசதிக்கு ஏற்ப தேர்வு செய்து உண்ணுங்கள். ஆரோக்கியமான உணவுக்கு அதிக செலவு தேவையில்லை. ஆனால் உட்கொள்ளும் அளவு பரிந்துரைக்கப்பட்ட அளவில் இருக்க வேண்டும். கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார் உண்ண வேண்டிய உணவுகள் பட மூலாதாரம்,GETTY `ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ வழிகாட்டுதல்களின்படி கருத்தரித்தல், கர்ப்பம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் போது நல்ல உணவுப் பழக்கத்தை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியமான உணவு மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறை ஆகியவை இருக்க வேண்டும். கருத்தரித்தலுக்கு முன்கூட்டிய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றி கொள்வது நல்லது. கர்ப்பிணிகள் சரியான ஹீமோகுளோபின் மற்றும் பிஎம்ஐ அளவை பராமரிப்பதில் கவனமாக இருக்க வேண்டும். முதல் கர்ப்பத்திற்கான குறைந்தபட்ச வயது 21-ஆக இருக்க வேண்டும். உணவில் பல்வேறு பருப்பு வகைகள், முந்திரி, பாதாம் போன்றவை, மீன், பால், முட்டைகள் இருக்க வேண்டும். அதிக சர்க்கரை மற்றும் கொழுப்பு மற்றும் உப்பு அதிகம் உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும். மது, புகையிலை எந்த வகையிலும் எடுத்துக் கொள்ளக் கூடாது. இரத்த சோகை வராமல் இருக்க மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை உட்கொள்ள வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை ருசிக்கு மட்டும் தான் கடந்த சில ஆண்டுகளில், நிறைய உப்பு நிறைந்த பல உணவுகள் சந்தையில் விற்கப்படுகின்றன. வீட்டில் உள்ள உணவிலும் வெளியில் உண்ணும் உணவுகளிலும் மற்றும் பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகளிலும் மக்களின் உணவில் உப்பின் அளவு அதிகரித்துள்ளதாக தெரிகிறது. இது குறித்த கவலைகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வருகின்றன. ஐசிஎம்ஆர்’ - `என்ஐஎன்’ ஆகியவையும் ஒரு நாளைக்கு ஐந்து கிராமுக்கு மேல் உப்பை உட்கொள்ள வேண்டாம் என்று பரிந்துரைக்கின்றன. அயோடின் உப்பு பயன்படுத்தவும். சாஸ்-கெட்ச்அப், பிஸ்கட், சிப்ஸ், சீஸ், கருவாடு ஆகியவற்றின் அளவைக் குறைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்து பொட்டாசியம் கிடைக்கும். அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளில் சர்க்கரை, உப்பு மற்றும் கொழுப்பு அதிகம். இது ஊட்டச்சத்து மதிப்பு மற்றும் நார்ச்சத்து குறைவாக உள்ளது. இருப்பினும், இந்த உணவுகளில் கலோரிகள் அதிகம். எனவே, இந்த அறிவுறுத்தல்களில் உள்ள ஒரு முக்கியமான பரிந்துரை என்னவென்றால், அனைவரும் சாஸ்கள், சீஸ், மயோனைஸ், ஜாம், பழ கூழ், ஜூஸ், கார்பனேற்றப்பட்ட பானங்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் ஆகியவற்றை குறைவாக சாப்பிட வேண்டும். வீட்டில் தயாரிக்கும் உணவில் எண்ணெய்-நெய், சர்க்கரை, உப்பு அதிகம் பயன்படுத்தினால் அதுவும் நல்லதல்ல. வெளியில் சாப்பிடும் போது கூடுதல் கவனம் தேவை. வறுத்த உணவு, இனிப்பு, உப்பு, வேக வைத்த உணவுகளைத் தவிர்க்கவும். உப்பு அதிகம் உள்ள உணவுகள் உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துவதோடு சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று இந்த அறிவுறுத்தல்கள் கூறுகின்றன. https://www.bbc.com/tamil/articles/c72plr5y2w0o
-
மன்னாரில் நடைபெற்ற நுங்கு விழா
வவுனியாவில் நுங்கு திருவிழா! 12 MAY, 2024 | 06:15 PM வவுனியா மருக்காரம்பளையில் தமிழரின் பாரம்பரிய பறை இசையுடன் நுங்கு திருவிழா இன்று (12) நடைபெற்றது. இதன்போது பனை மரத்தின் பயன்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டதுடன், பனை மரத்தின் உற்பத்திப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும் கலை நிலா கலையகத்தினால் 'குளக்கரையை பாதுகாப்போம்' எனும் தொனிப்பொருளில் நாடக ஆற்றுகையும் நடைபெற்றிருந்தது. சுயாதீன இளைஞர்களினால் தொடர்ச்சியாக ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்த நுங்கு திருவிழாவில் பெருமளவான இளைஞர்கள், யுவதிகள் பலரும் கலந்துகொண்டு நுங்குகளை பருகி மகிழ்ந்ததை இம்முறையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. https://www.virakesari.lk/article/183349
-
ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா? நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்வதா? ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும் - சம்பிக்க
12 MAY, 2024 | 03:38 PM (இராஜதுரை ஹஷான்) ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது நாட்டுக்காக கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி தீர்மானிக்க வேண்டும். நாட்டில் மீண்டும் ஒரு அரசியல் நெருக்கடியை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தோற்றுவிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். மஹரகம பகுதியில் நேற்று சனிக்கிழமை (11) மாலை இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷவுக்கும் இடையில் தொடர்ச்சியாக இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் இணக்கப்பாடற்ற வகையில் நிறைவடைந்துள்ளன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை நடத்துமாறு பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஜனாதிபதி தேர்தலில் களமிறக்குவதற்கு தம்மிடம் வேட்பாளர் இல்லை என்பதையும், அவ்வாறு களமிறக்கினால் படுதோல்வியடைய நேரிடும் என்பதை ராஜபக்ஷர்கள் நன்கு அறிவார்கள். அதனால்தான் இவர்கள் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்றத் தேர்தலை கோருகிறார்கள். பாராளுமன்றத்தின் தற்போதைய பலத்தை கொண்டு பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுன தலைமையிலான அரசாங்கத்தை அமைக்க ராஜபக்ஷர்கள் முயற்சிக்கிறார்கள். ராஜபக்ஷர்களுக்காக பாராளுமன்றத்தை கலைப்பதா அல்லது கடன் மறுசீரமைப்பை நிறைவு செய்து பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானிக்க வேண்டும். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தனது பிரதான இலக்கு என்று ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளார். வெளிநாட்டு அரசமுறை கடன் மறுசீரமைப்பு எதிர்வரும் ஜூலை மாதம் நிறைவு பெறும் என்று அரசாங்கம் குறிப்பிடுகிறது. இவ்வாறான நிலையில் பாராளுமன்றத்தை கலைத்தால் நாட்டில் ஸ்திரமற்ற அரசியல் நிலைமை தோற்றம் பெறும். அது கடன் மறுசீரமைப்புக்கு தாக்கம் செலுத்தும் என்பதை ஜனாதிபதி நன்கறிவார். அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் இடம்பெறவுள்ள நிலையில் அதற்கு முன்னர் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தினால் முரண்பாடான அரசாங்கமே தோற்றம் பெறும். ஜனாதிபதி ஒரு கட்சியையும், அரசாங்கம் பிறிதொரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும்போது அரசியல் நெருக்கடிகள் தோற்றம் பெறும். ஆகவே நாட்டில் மீண்டும் அரசியல் நெருக்கடி தோற்றம் பெறுவதற்கு ஜனாதிபதி இடமளிக்கமாட்டார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். https://www.virakesari.lk/article/183321
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ராஜஸ்தானை வென்று மூன்றாவது இடத்திற்கு சிஎஸ்கே முன்னேற்றம் - ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 42 நிமிடங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரின் 2024 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் பாதையை விசாலமாக்கியுள்ளது. ஆனால், ப்ளே ஆஃப் சுற்றை இன்னும் உறுதி செய்யவில்லை என்பதால், சிஎஸ்கே ரசிகர்களுக்கு டென்ஷன் நீடிக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 61-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் சேர்த்தது. எளிய இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 10 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணி தனது 50-வது வெற்றியை பதிவு செய்துள்ளது. ராஜஸ்தான் மந்தமான ஆட்டம் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. ஜெய்ஸ்வால், பட்லர் ஆட்டத்தைத் தொடங்கினர். வழக்கமாக அதிரடியாகத் தொடங்கக்கூடிய இருவரும் நிதானமாக ஆடினர். தேஷ்பாண்டே வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள்தான் எடுத்தனர். தீக்சனா வீசிய 2வது ஓவரிலும் பவுண்டரிகள் ஏதும் அடிக்காமல் ராஜஸ்தான் பேட்டர்கள் 4 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். தேஷ்பாண்டே வீசிய 3வது ஓவரில்தான் பட்லர் முதல் பவுண்டரியை அடித்தார். தீக்சனா வீசிய 4வது ஓவரில் ஜெய்ஸ்வால் சிக்ஸர், பவுண்டரி என 13ரன்கள் சேர்த்தார். அதன்பின் ஷர்துல் வீசிய 5வது ஓவரில் ஜெய்ஸ்வால் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள் அடித்து 9 ரன்கள் சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 42 ரன்கள் மட்டுமே சேர்த்து. இந்த ஐபிஎல் சீசனில் விக்கெட் இழப்பின்றி ஒரு அணி பவர்ப்ளேயில் சேர்த்த குறைந்த ஸ்கோராகும். பட மூலாதாரம்,GETTY IMAGES விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிவு 7வது ஓவரை வீசி சிமர்ஜீத் சிங் அழைக்கப்பட்டார். அவரின் முதல் பந்திலேயே ஜெய்ஸ்வால் 24 ரன்கள் சேர்த்தநிலையில் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்துவந்த சாம்ஸன், பட்லருடன் இணை சேர்ந்தார். ஜடேஜா வீசிய 8-வது ஓவரில் பட்லர், சாம்ஸன் இருவரும் ரன்சேர்க்கத் தடுமாறினர். 8-வது ஓவரை மீண்டும் சிமர்ஜீத் சிங் வீசினார். அப்போது ஸ்கூப் ஷாட்டுக்கு முயன்ற பட்லர் 21ரன்களில் தேஷ்பாண்டேவிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து களமிறங்கிய ரியான் பராக் வந்தவுடனே சிக்ஸர் விளாசி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆடுகளத்தில் பேட்டர்களை நோக்கி பந்து வருவது மெதுவாக இருந்ததால், ரன் சேர்க்க ராஜஸ்தான் பேட்டர்கள் திணறினர். 10 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் மட்டுமே சேர்த்தது. ஜடேஜா வீசிய 11வது ஓவரில் ரியான் பராக் ஸ்விட்ச் ஹிட் ஷாட் அடிக்க டீப் கவர் திசையில் நின்றிருந்த தேஷ்பாண்டே அந்த கேட்சை தவறவிட்டார். சாம்ஸன், ரியான் பராக் இருவரும் பவுண்டரி, சிக்ஸர் அடிக்க சிரமப்பட்டு, ஒரு ரன், இரு ரன்களாகவே சேர்த்தனர். இதனால் ஓவருக்கு சராசரியாக 6 ரன்கள் வீதமே சேர்க்க முடிந்தது. 15-வது ஓவரை சிமர்ஜீத் சிங் வீசினார். ரன் சேர்க்க ஏற்கெனவே சாம்ஸன் தடுமாறி வந்தார். அவர் நினைத்தபடி எந்த ஷாட்களையும் அடிக்க முடியாததால் விரக்தியில் இருந்தார். சிமர்ஜித் வீசிய அந்த ஓவரின் 2வது பந்தை சாம்ஸன் தூக்கி அடிக்க முற்பட்டு, மிட்ஆஃப் திசையில் கெய்க்வாட்டிடம் கேட்சானது. சாம்ஸன் 15 ரன்களில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணி ரன் சேர்க்க திணறல் அடுத்து ஜூரெல் களமிறங்கி, பராக்குடன் சேர்ந்தார். ஷர்துல் தாக்கூர் வீசிய 16-வது ஓவரில் ஜூரெல் டீப் மிட் விக்கெட்டில் சிக்ஸர் பறக்கவிட ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கடந்தது. சிமர்ஜீத் வீசிய 17-வது ஓவரில் ஜுரெல், பராக் இருவரும் தலா ஒரு பவுண்டரி அடித்து ரன்ரேட்டை உயர்த்தினர். கடைசி ஓவரை தேஷ்பாண்டே வீசினார். அவுட்சைட் ஆஃப் சைடில் வீசப்பட்ட பந்தை ஜூரெல் தூக்கி அடிக்க ஷர்துல் தாக்கூரிடம் கேட்சானது. ஜூரெல் 28 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷுபம் துபே, வந்த வேகத்தில் ஸ்லோவர் பாலை அடித்து ஷிவம் துபேயிடம் கேட்ச் கொடுத்து டக்அவுட்டாகினார். அந்த ஓவரில் ரியான் பராக் சிக்ஸர் அடித்து 10 ரன்கள் சேர்த்தார். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி, 5 விக்கெட் இழப்புக்கு 141ரன்கள் சேர்த்தது. ரியான் பராக் 47 ரன்களுடனும், அஸ்வின் ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சிஎஸ்கே தரப்பில் சிறப்பாகப் பந்துவீசிய சிமர்ஜீத் சிங் 4 ஓவர்கள் வீசி 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தேஷ்பாண்டே 4 ஓவர்கள் வீசி 30 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இவர்கள் தவிர ஜடேஜா, தீக்சனா இருவரும் நடுப்பகுதி ஓவர்களிலும், தொடக்கத்திலும் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி ராஜஸ்தான் ரன்ரேட்டை உயர விடாமல் பார்த்து கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே அணி அதிரடி தொடக்கம் 142 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சிஎஸ்கே அணியின் ரவீந்திரா, கெய்க்வாட் இருவரும் களமிறங்கினர். டிரன்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் 4 ரன்கள் மட்டுமே சிஎஸ்கேவுக்கு கிடைத்தது. சந்தீப் சர்மா வீசிய 2வது ஓவரில் ரவீந்திரா ஒரு சிக்ஸர் உள்பட 12 ரன்கள் சேர்த்தனர். போல்ட் வீசிய 3வது ஓவரில் ரவீந்திரா சிக்ஸர், பவுண்டரி என 12 ரன்கள் சேர்த்தார். சிஎஸ்கேவின் தொடக்க ஜோடியில் இடதுகை பேட்டர் இருப்பதால் அஸ்வின் பந்துவீச அழைக்கப்பட்டார் அதற்கு நல்ல பலனும் கிடைத்தது. அஸ்வின் வீசிய ஓவரில் 4வது பந்தை ரச்சின் ரவீந்திரா தூக்கி அடிக்க அஸ்வினிடமே கேட்சானது. ரவீந்திரா 27 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து டேரல் மிட்ஷெல் களமிறங்கினார். சந்தீப் சர்மா வீசிய 5வது ஓவரில் மிட்ஷெல் இரு பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். அஸ்வின் வீசிய 6-வது ஓவரிலும் மிட்ஷெல் 2 பவுண்டரிகளை விளாசி சிஎஸ்கே ரன்ரேட்டை உயர்த்தினார். பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள் சிக்கனம் 7வது ஓவரை ஆந்த்ரே பர்கர் வீசினார், இந்த ஓவரில் பவுன்சராக வீசப்பட்ட பந்தை கெய்க்வாட் சிக்ஸர் விளாச 10 ரன்கள் சேர்த்தார். பந்துவீச்சில் மாற்றம் செய்து சஹல் அழைக்கப்பட்டார். சஹல் வீசிய 8-வது ஓவரில் கால் காப்பில் வாங்கி மிட்ஷெல் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து மொயின் அலி களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். ஆவேஷ் கான் வீசிய 9-வது ஓவரில் சிஎஸ்கே பேட்டர்கள் 7 ரன்களும், அஸ்வின் வீசிய 10-வது ஓவரில் 3 ரன்களும் சேர்த்தனர். 10 ஓவர்கள் முடிவில் சிஎஸ்கே அணி 2 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் சேர்த்தனர். 11வது ஓவரை பர்கர் வீசினார். தொடக்கத்தில் இருந்தே திணறிய மொயின் அலி, டீப் கவர் பாயின்ட் திசையில் சிக்ஸருக்கு முயல, ஆவேஷ்கானால் கேட்ச் பிடிக்கப்பட்டார். மொயின் அலி 10 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பட மூலாதாரம்,GETTY IMAGES சிக்ஸர் துபே ஏமாற்றம் அடுத்து ஷிவம் துபே களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். சஹல் வீசிய 13-வது ஓவரில் துபேவும், கெய்க்வாட்டும் 5 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 14-வது ஓவரை அஸ்வின் வீசினார், முதல் பந்திலேயே துபே, ஸ்ட்ரைட் திசையில் சிக்ஸருக்கு விளாசினார், 2வது பந்தில் துபே பவுண்டரி விளாசினார். அஸ்வின் வீசிய கடைசிப்பந்தில் துபே சிக்ஸருக்கு முயற்சிக்க ரியான் பராக்கிடம் கேட்சானது. துபே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். துபே விக்கெட்டை வீழ்த்திய போது, அஸ்வின் முக்கிய மைல்கல்லை எட்டினார். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தனது 50-வது விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். சிஎஸ்கே வெற்றிக்கு கடைசி 36 பந்துகளில் 35 ரன்கள் தேவைப்பட்டன. 15-வது ஓவரை சஹல் வீசினார். இந்த ஓவரில் கெய்க்வாட் ஒரு பவுண்டரி அடிக்க, ஜடேஜா சிக்ஸருக்கு முயன்றார். ஆனால் பவுண்டரி அருகே நின்றிருந்த பட்லர் கேட்ச் பிடித்த நிலையில் எல்லைக்கோட்டின் மீது விழுவதற்கு முன்பே பந்தை தூக்கி எறிந்ததால் கேட்சாக மாறவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES ஜடேஜாவின் அரிதான ரன்அவுட் ஆவேஷ் கான் 16-வது ஓவரை வீசினார். அந்த ஓவரின் கடைசிப்பந்தை சந்தித்த ஜடேஜா தட்டிவிட்டு ரன் எடுக்க முயன்றார். ஒரு ரன் எடுத்த நிலையில், 2 வது ரன்னுக்கு ஓடி வரவே கெய்க்வாட் மறுத்துவிட்டார். இதனால் மீண்டும் நான்-ஸ்ட்ரைக்கர் பகுதிக்கு ஜடேஜா ஓடும்போது, ஸ்டெம்பை மறைத்துக்கொண்டு ஓடினார். தன்னுடைய ஓடும் பகுதியையும் மாற்றி, பீல்டர் ரன்அவுட் செய்ய இடையூறு செய்யும் வகையில் ஸ்டெம்பை மறைத்து ஜடேஜா ஓடினார். பந்தை பிடித்து எறிந்த சாம்ஸன், ரன்அவுட் செய்ய முயல, பந்து ஜடேஜா கையில் பட்டது. ரன்அவுட்டுக்கு இடையூறாக ஓடியதாக ஜடேஜா மீது 3வது நடுவரிடம் சாம்ஸன் அப்பீல் செய்தார். இதை ஆய்வு செய்த 3வது நடுவர், ஜடேஜா ரன்அவுட் செய்யவிடாமல் ஸ்டெம்பை மறைத்து ஓடியது உறுதி செய்து அவுட் வழங்கினார். ஜடேஜா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிஸ்வி களமிறங்கி, கெய்க்வாட்டுடன் சேர்ந்தார். கெய்க்வாட் பொறுப்பான பேட்டிங் பட மூலாதாரம்,GETTY IMAGES சிஎஸ்கே வெற்றிக்கு 24 பந்துகளில் 21 ரன்கள் தேவைப்பட்டன. சந்தீப் சர்மா வீசிய 17-வது ஓவரில் ரிஸ்வி பவுண்டரி உள்பட 8 ரன்கள் சேர்த்தார். கடைசி 3 ஓவர்களில் சிஎஸ்கே வெற்றிக்கு 13 ரன்கள் தேவைப்பட்டன. ஆந்த்ரே பர்கர் வீசிய 18-வது ஓவரில் கெய்க்வாட் ஒரு சிக்ஸர் விளாசி ரசிகர்களின் பதற்றத்தைக் குறைத்தார். போல்ட் வீசிய 19-வது ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்து வெற்றியை நெருங்க வைத்தார். 2வது பந்தில் ரிஸ்வி பவுண்டரி அடித்து சிஎஸ்கே அணியை வெற்றி பெற வைத்தார். 18.2 ஓவர்களில் சிஎஸ்கே அணி இலக்கை அடைந்தது. கேப்டன் கெய்க்வாட் 42 ரன்களிலும், ரிஸ்வி 15 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். ரசிகர்களுக்கு தோனி தந்த 'ஸ்பெஷல்' என்ன? இந்த சீசனில் சிஎஸ்கே அணி சேப்பாக்கத்தில் விளையாடும் கடைசி லீக் என்பதால், சிஎஸ்கே அணிக்கு ஆதரவு அளிக்க ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் வந்திருந்தனர். அரங்கமே மஞ்சள்மயமாகக் காட்சியளித்தது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு ஏகோபித்த ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு வெற்றியுடன் சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மைதானத்தை வலம் வந்து நன்றி செலுத்தினர். அது மட்டுமல்லாமல் தோனி டென்னிஸ் ராக்கெட் மூலம் பந்துகளை ரசிகர்கள் மத்தியில் அடித்து அவர்களை மகிழ்வித்தார். ஆட்டநாயகன் சிமர்ஜீத் சிங் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு அச்சாரமாக இருந்தது சிமர்ஜீத் சிங்கின் பந்துவீச்சும், கேப்டன் கெய்க்வாட்டின் ஆங்கர் ரோல் பேட்டிங்கும்தான். பதீராணா, முஸ்தபிசுர் ரஹ்மான் இல்லாத நிலையில் சிமர்ஜீத் பந்துவீச்சு, சிஎஸ்கே அணிக்கு பெரிய பலமாக மாறியுள்ளது. சிமர்ஜீத் தொடக்கத்திலேயே பட்லர், ஜெய்ஸ்வால் விக்கெட்டை வீழ்த்தி ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்படுத்தினார். இந்த அழுத்தத்தில் இருந்து ராஜஸ்தான் அணி கடைசி வரை மீள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. 26 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய சிமர்ஜீத் சிங் ஆட்டநாயகன் விருது வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணி ஏன் தோற்றது? அது மட்டுமல்லாமல் ராஜஸ்தான் அணி இதுவரை பேட்டர்களுக்கு சாதமான ஆடுகளத்தில் விளையாடிவிட்டு, சேப்பாக்கத்தில் மந்தமான ஆடுகளத்தில் விளையாடும் போது ஸ்கோர் செய்யத் திணறியதும் தோல்விக்கான காரணம். 141 ரன்கள் சேர்த்து அதை ராஜஸ்தான் அணி பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்வது கடினமானது, சிஎஸ்கே ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி? இந்த வெற்றியால் சிஎஸ்கே அணி 13 போட்டிகளில் 7 வெற்றி, 6 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. நிகர ரன்ரேட்டில் ராஜஸ்தான் அணியை விட உயர்ந்து 0.528 என வலுவாக இருக்கிறது. சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணியை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணி வென்றால், 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்யும். ஏற்கெனவே வலுவான நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி இருப்பதால், 16 புள்ளிகளுடன் சன்ரைசர்ஸ், டெல்லி, லக்ளெ அணிகள் போட்டியிட்டாலும் சிஎஸ்கே ப்ளே ஆஃப் சுற்றில் 3வது அல்லது 4வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. ஒருவேளை சிஎஸ்கே அணி கடைசி லீக் ஆட்டத்தில் ஆர்சிபியுடன் தோல்வி அடைந்து, ஆர்சிபி அணி இன்று நடக்கும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வென்றாலும், 14 புள்ளிகளுடன் இரு அணிகளும் கடைசி இடத்துக்கு போட்டியிடும். ஆனால், நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே வலுவாக இருப்பதால், குறைந்தபட்சம் 4வது இடம் கிடைக்க வாய்ப்புண்டு. பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தானுக்கு 2வது இடம் கிடைக்குமா? ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 12 போட்டிகளில் 8 வெற்றி, 4 தோல்வி என 16 புள்ளிகளுடன் 2வது இடத்தில் நீடிக்கிறது. தொடர்ந்து 3 தோல்விகளைச் சந்தித்தாலும், ராஜஸ்தான் அணி தனது 2வது இடத்திலிருந்து கீழே இறங்கவில்லை, நிகர ரன்ரேட்டும் பெரிதாக குறையாமல் 0.349 என நீடிக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு இன்னும் 2 லீக் ஆட்டங்கள் உள்ளன. அதில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடனான ஆட்டத்தில் வென்றாலும், கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டம் ராஜஸ்தானுக்கு சவாலாக இருக்கும். இன்னும் ஒரு போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றால்கூட 18 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும். அதேநேரம், சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 2 லீக் ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால், ராஜஸ்தான் 2வது இடத்தைப் பிடிக்கும். சன்ரைசர்ஸ் அணி கடைசி 2 லீக் ஆட்டங்களிலும் வென்று, ராஜஸ்தான் அணி ஒரு ஆட்டத்தில் மட்டும் வென்றால், நிகர ரன்ரேட் அடிப்படையில் 2வது இடம் தீர்மானிக்கப்படும். https://www.bbc.com/tamil/articles/cjq581v213go
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் ரஞ்சித் அண்ணை, வாழ்க வளத்துடன்.
-
வியாழனன்று இலங்கை வருகிறார் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் பங்கேற்பார்
Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 01:03 PM (நா.தனுஜா) மூன்று தசாப்த கால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், இவ்வாரம் இலங்கைக்கு வருகைதரவுள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளார். யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான வன்முறைகள் என்பன தொடர்பில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை மீதான அழுத்தங்களையும் பிரயோகித்துவருகிறது. அந்த வகையில் யுத்த முடிவின் 15 வருடப் பூர்த்தியையொட்டி லண்டனைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் எதிர்வரும் வியாழக்கிழமை (16) இலங்கைக்கு வருகைதரவுள்ளார். அன்றைய தினம் சர்வதேச மன்னிப்புச் சபையில் கொழும்பு அலுவலக செயற்பாட்டாளர்களைச் சந்தித்துப் பேசவிருக்கும் அவர், வெள்ளிக்கிழமை (17) முள்ளிவாய்க்காலுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். அங்கு சில முக்கிய இரகசிய சந்திப்புக்களை நடாத்துவதற்கு உத்தேசித்திருக்கும் அக்னெஸ் கலமார்ட், யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் சனிக்கிழமை (18) நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 20ஆம் திகதி கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ள அவர், நாட்டின் சமகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பான தனது அவதானிப்புக்களைப் பகிர்ந்துகொள்ளவுள்ளார். அதேவேளை செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு நேரம் வழங்குமாறு மன்னிப்புச் சபையின் கொழும்பு அலுவலகம் ஓரிரு மாதங்களுக்கு முன்னரே ஜனாதிபதி செயலகத்திடம் கோரியிருக்கின்ற போதிலும், அதற்கு இன்னமும் உரிய பதில் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183307
-
நெகிழியை தின்று செரிக்கும் மெழுகு புழுக்கள்: தேனீ கூட்டில் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பிரான்சிஸ் அகஸ்டின் பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடலில் நொதிகள் உள்ள இந்த நெளியும் புழுக்கள் நெகிழியைச் சிதைக்கின்றன. இவை அப்படிச் செய்யவில்லையெனில் இந்த ப்ளாஸ்டிக் சிதைவதற்கு பல தசாப்தங்கள் அல்லது நூற்றாண்டுகள்கூட எடுக்கும். முதல் பார்வையில் மெழுகுப்புழுக்கள் பற்றி குறிப்பாகச் சொல்வதற்கு எதுவும் இல்லை. மெழுகு அந்துப்பூச்சிகளின் வளைந்து நெளியும் லார்வா வடிவம், தேனீக்கள் தங்கள் தேன்கூடுகளை உருவாக்கப் பயன்படுத்தும் மெழுகைச் சாப்பிடுகின்றன. தேனீ வளர்ப்பவர்கள் ஒரு நொடிகூட சிந்திக்காமல் இந்தப் புழுக்களை அழித்துவிடுவார்கள். ஆனால் 2017ஆம் ஆண்டில் ஸ்பானிஷ் தேசிய ஆராய்ச்சி கவுன்சிலில் முதுகெலும்பு கொண்ட விலங்குகளின் கரு வளர்ச்சியை ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மூலக்கூறு உயிரியலாளர் ஃபெடெரிகா பெர்டோச்சினி, மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கக்கூடிய, இந்த உயிரினங்கள் பற்றிய ஒரு கண்டுபிடிப்பைச் செய்தார். பெர்டோச்சினி, புதிதாக தேனீ வளர்ப்பவர். தேன்கூட்டை சுத்தம் செய்த பிறகு சில மெழுகுப் புழுக்களை ஒரு பிளாஸ்டிக் பையில் வைத்து, அவற்றை அங்கே விட்டுவிட்டார். சிறிது நேரம் கழித்து இந்தப் புழுக்கள் பிளாஸ்டிக்கில் சிறிய துளைகளை உருவாக்கத் தொடங்கியதை அவர் கவனித்தார். புழுக்களின் வாய் பட்டவுடனேயே ப்ளாஸ்டிக் சிதைய ஆரம்பித்தது. படக்குறிப்பு,இந்தப் புழுக்களின் 'உமிழ்நீரில்' செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு முக்கியமான நொதிகள் இருந்தன. "அதுவொரு உண்மையான யுரேகா தருணம் - அது அருமையாக இருந்தது," என்று தனது ஆரம்ப கண்டுபிடிப்பு மற்றும் அதன் அர்த்தம் என்ன என்பது மனதில் பதிந்த அந்தத் தருணத்தை பெர்டோச்சினி விவரிக்கிறார். "அதுதான் கதையின் ஆரம்பம். ஆராய்ச்சித் திட்டத்தின் ஆரம்பம், எல்லாவற்றுக்குமான ஆரம்பம்," என்று அவர் குறிப்பிட்டார். மனிதர்களாகிய நமக்குச் செய்யக் கடினமாக இருக்கும் ஒன்றை அந்தப் புழுக்கள் செய்து கொண்டிருந்தன. அதுமட்டுமல்லாமல் அந்தப் புழுக்கள் உணவு போல ப்ளாஸ்டிக்கை ஜீரணிப்பது போலவும் தோன்றியது. பெர்டோச்சினி மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளர்கள் புழுக்களின் வாயில் இருந்து சுரந்த திரவங்களைச் சேகரிக்கத் தொடங்கினர். இந்த 'உமிழ்நீரில்' செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு முக்கியமான நொதிகள் இருந்தன. இவை முறையே ரோமன் மற்றும் கிரேக்க வேளாண் பெண் தெய்வங்களின் பெயர்களாகும். அவை பிளாஸ்டிக்கில் உள்ள பாலிஎத்திலீனை ஆக்சிடைஸ் செய்து சிதைவை ஏற்படுத்தின. படக்குறிப்பு,"இந்தp புழுக்களின் நொதிகளை பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதே இறுதி குறிக்கோள்," என்கிறார் பெர்டோச்சினி. தேன் கூடுகளை அழிக்கும் அவற்றின் திறனைப் பார்க்கும்போது அவற்றை பிளாஸ்டிக் மாசுபாட்டு சூழலில் அப்படியே விடுவது சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆபத்தானதாக இருக்கலாம் என்று பெர்டோச்சினி குறிப்பிடுகிறார். ஆனால் இந்தp பூச்சிகளால் உற்பத்தி செய்யப்படும் என்சைம்கள், உலகின் பிளாஸ்டிக் மாசு நெருக்கடியைச் சமாளிக்க உதவும் என்றும் அவர் நம்புகிறார். பெர்டோச்சினி இப்போது பிரான்சில் உள்ள பயோரிசர்ச் ஸ்டார்ட்அப் பிளாஸ்டிசென்ட்ரோபியில் தலைமைத் தொழில்நுட்ப அதிகாரியாக உள்ளார். பிளாஸ்டிக்கை உடைப்பதில் இந்த நொதிகளைப் பரவலாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்காக ஒரு குழுவுடன் இணைந்து பணியாற்றுகிறார். "இந்த நொதிகளை பிளாஸ்டிக் கழிவுகளில் பயன்படுத்துவதே இறுதி குறிக்கோள்" என்கிறார் பெர்டோச்சினி. "இந்தக் கண்டுபிடிப்பு மற்றும் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டு உலகளவில் நாம் பயன்படுத்தக்கூடிய ஒரு தீர்வாக மாற்றப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன்," என்று அவர் குறிப்பிட்டார். பயன்தரக்கூடிய என்சைம்கள் பல்வேறு உயிரினங்களில் காணப்படுகின்றன. சில பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்கள் பிளாஸ்டிக்கை ஜீரணிக்கின்றன. ஆனால் உயர் விலங்கினங்களில் இது மிகவும் அரிதானது. கடந்த 2022ஆம் ஆண்டில், பிளாஸ்டிக்கை விரும்பி உண்ணும் மற்றொரு முதுகெலும்பில்லாத உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. அதுதான் "சூப்பர் வார்ம்" ஜூபோபாஸ் மோரியோ. இது பாலிஸ்டிரீன் கொண்ட உணவு மூலம் தனது எடையை அதிகரித்துக் கொள்கிறது. பிளாஸ்டிக் மீதான நமது நம்பிக்கையையும், நுகர்வையும் குறைக்கப் பல உலகளாவிய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. இந்த இலக்கிற்காக, பல நாடுகளும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் உற்பத்தி மற்றும் பயன்பாட்டைக் குறைக்க முயற்சிகளை மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளன. மேலும் 2024இன் பிற்பகுதியில் உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இறுதியில் இதுபோன்ற நொதிகள், பிளாஸ்டிக்கை குறைக்கப் பெருமளவில் உற்பத்தி செய்யப்பட்டால், அதில் இந்தச் சிறிய புழுக்களின் பங்கும் இருக்கலாம். பிளாஸ்டிக் பயன்பாடு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிளாஸ்டிக் முழுவதுமாக சிதைவதற்குப் பல தசாப்தங்கள் முதல் நூற்றாண்டுகள் வரை ஆகும். இன்று உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உருவாகின்றன. அதில் 19 முதல் 23 மில்லியன் டன்கள் (சுமார் 2,000 குப்பை லாரிகளுக்குச் சமமானவை) நீர்வாழ் உயிரின சுற்றுச்சூழல் அமைப்புகளுக்குள் செல்கின்றன. அதில் பெரும்பாலானவை நுண்ணுயிர்களின் இருப்பிடமாக மாறுகின்றன அல்லது விலங்குகளால் உண்ணப்படுகின்றன. பிளாஸ்டிக் முழுவதுமாக சிதைவதற்குப் பல தசாப்தங்கள் முதல் நூற்றாண்டுகள் வரை ஆகும். https://www.bbc.com/tamil/articles/c6pyj8kjkz3o
-
யுத்தத்தை நடத்திய அரசாங்கங்களே பொறுப்புக்கூறலை தாமதிக்கின்றன : தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்
Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 01:30 PM (நா.தனுஜா) யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்திவருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான தளமாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். அதேபோன்று பிளவுபட்டிருக்கும் தமிழ் அரசியல் கட்சிகளைத் தமக்கு ஏற்றாற்போல் கையாள்வது சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு இலகுவான விடயமாக மாறிவரும் நிலையில், இனியேனும் தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும் என அக்கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர். அரச படையினருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் சுமார் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்றுவந்த யுத்தம் கடந்த 2009 மே 18ஆம் திகதி முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு எதிர்வரும் சனிக்கிழமையுடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இருப்பினும் யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல்கள் தொடர்பில் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவில்லை. அதுமாத்திரமன்றி யுத்தத்துக்கு அடிப்படையாக அமைந்த காரணிகள் அடையாளங்காணப்பட்டு முழுமையாகக் களையப்படவோ, தமிழர்களின் நீண்டகாலக் கோரிக்கையான சுயநிர்ணய உரிமையுடன் கூடிய சமஷ்டி முறையிலான அரசியல் தீர்வோ இன்னமும் வழங்கப்படவில்லை. இவ்வாறானதொரு பின்னணியில் தமிழர்களின் பிரச்சினைகளுக்குரிய தீர்வினைப் பெற்றுத்தருவதாக தொடர்ச்சியாக வாக்குறுதியளித்துவரும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள், அதனை முன்னிறுத்தி தேசிய தேர்தல் ஆண்டான இவ்வருடத்தில் எத்தகைய நகர்வுகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன என வினவியபோதே தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்கண்டவாறு வலியுறுத்தினர். அதன்படி, இது பற்றிக் கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிறிஞானம் சிறிதரன், '2009இல் ஆயுதப்போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னரான காலப்பகுதியில் தமிழர்களின் அரசியல் பிரச்சினையை சிங்கள பேரினவாத அரசாங்கங்கள் பலவீனமானதாகவே பார்க்கின்றன. 2009ஆம் ஆண்டின் பின்னர் எமக்கான அரசியல் தீர்வினை அடைந்துகொள்ளும் நோக்கிலேயே 2010இல் சரத் பொன்சேகாவுக்கும், 2015இல் மைத்திரிபால சிறிசேனவுக்கும், 2019இல் சஜித் பிரேமதாஸவுக்கும், 2022இல் ரணில் விக்ரமசிங்கவுக்கும் (பாராளுமன்றத்தில் இரகசிய வாக்கெடுப்பு மூலம் இடைக்கால ஜனாதிபதித் தெரிவு) ஆதரவளித்தோம். இருப்பினும் சிங்கள அரசாங்கங்கள் எம்மை ஏமாற்றியிருக்கின்றன. ஆனால் இவ்வாறு தொடர்ந்து ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது' என்று சுட்டிக்காட்டினார். இத்தகையதொரு சூழ்நிலையிலேயே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்குவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருப்பதாகவும், சர்வதேச அரங்கில் தமிழர் விவகாரம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அரசியல் தீர்வுக்கான சாத்தியம் உருவாகி வருவதாகவும் அவர் தெரிவித்தார். அதேவேளை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் இவ்விடயத்தில் தமது கட்சியின் நிலைப்பாட்டை பின்வருமாறு தெளிவுபடுத்தினார்: இன அழிப்பின் ஊடாக யுத்தம் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்துள்ளன. உள்ளகப் பொறிமுறையின் ஊடாக போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமைமீறல்கள் தொடர்பில் ஒருபோதும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த முடியாது என நாம் 2010ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக கூறிவருகின்றோம். மாறாக சர்வதேச பொறிமுறையின் ஊடாக பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் அதேவேளை, தமிழர் தேசம் அங்கீகரிக்கப்பட்டு அரசியல் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதேபோன்று யுத்தத்தை நடாத்திய அரசாங்கங்களே இப்போது பொறுப்புக்கூறலைத் தாமதப்படுத்தி வருகின்றன. எனவே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பேரம் பேசுவதற்கான வாய்ப்பாக தமிழர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கமைய ஒற்றையாட்சியைப் புறக்கணித்து, சமஷ்டியை வலியுறுத்தும் அதேவேளை, ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கவேண்டும். எனவே இதனைக் கருத்திற்கொண்டு சிங்கள தேசிய கட்சிகள் அவற்றின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வினை முன்வைக்கவேண்டும்' என வலியுறுத்தினார். மேலும் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில் பல விடயங்களில் இன்னமும் மாற்றம் ஏற்படாதபோதிலும், சில விடயங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாக ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பில் கருத்து வெளியிட்ட புளொட் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக படையினர் வசமிருந்த காணிகள் பகுதியளவில் விடுவிக்கப்பட்டுள்ளமை, அரசியல்கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிட்ட அவர், இருப்பினும் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இல்லாத அளவுக்கு தற்போது தொல்பொருள் திணைக்களமும், பௌத்த பிக்குகளும் இணைந்து வட, கிழக்கில் காணிகளை அபகரித்துவருவதாக விசனம் வெளியிட்டார். அத்தோடு தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறல் என்பது மேலும் இறுக்கமானதாக மாறிவருவதாக தெரிவித்த அவர், இவை அனைத்தும் தற்போது மிகக் குழப்பகரமான சூழ்நிலையை தோற்றுவித்திருக்கின்றன என்றார். 'தமிழ் அரசியல் கட்சிகளின் மத்தியிலும் ஒற்றுமையீனம் மேலோங்கி வருகின்றது. இதன் விளைவாக தமிழ் மக்களுக்கு இடையிலும் பிளவுகள் அதிகரித்துவருகின்றன. பிளவுபட்டிருக்கும் அரசியல் கட்சிகளைத் தமக்கு ஏற்றாற்போல் கையாள்வது சிங்கள பேரினவாத அரசியல் கட்சிகளுக்கு இலகுவான விடயமாக மாறிவருகின்றது. ஆகவே இவ்வேளையில் தமிழ் மக்களின் நலன் கருதி தமிழ் அரசியல் கட்சிகள் ஒன்றுபடவேண்டும். அதேபோன்று இக்குழப்பகரமான சூழ்நிலையில் பொதுவேட்பாளர் விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் அரசியல் கட்சிகளும், சிவில் சமூகமும் மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும்' எனவும் சித்தார்த்தன் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/183301
-
கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொல்லப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் - மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட்
Published By: RAJEEBAN 12 MAY, 2024 | 01:46 PM அரகலயவின் போது முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தாக்கப்பட்டு கொலை செய்யப்படும் ஆபத்து நிலவியதால் அவர் இலங்கையிலிருந்து வெளியேற உதவினேன் என மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி முகமட் நசீட் தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர்இதனை தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக பாதுகாக்கப்பட்ட இலங்கையின் ஜனநாயகம் குறித்த பெருமைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் அரகலயவின்போது இலங்கை ஜனாதிபதியொருவர் அடித்துக் கொல்லப்படுவதை தடுப்பதற்காக 2022 ஜூலை மாதம் 12ம் திகதி அவர் தப்பியோடுவதற்கு உதவியதாக மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வேறுபல நாடுகளை போல இலங்கை ஒருபோதும் சதிப்புரட்சியை எதிர்கொண்டது இல்லை உள்நாட்டு யுத்தத்தின்போது கூட இலங்கை தேர்தல்களை தவறவிட்டது இல்லை என அவர் தெரிவித்துள்ளார். நாடு எப்போதும் தேர்தல் மூலமே அதிகார மாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இலங்கையில் ஜனாதிபதியொருவர் ஒருபோதும் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்படவில்லை. அவர்கள் ஒருபோதும் ஜனாதிபதியை கைதுசெய்ததும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நான் எனது ஜனாதிபதி காலத்தில் எதிர்கொண்டது போன்ற நிலைமை இலங்கையில் காணப்பட்டது, கொழும்பு அதனை எதிர்கொள்வதை நான் விரும்பவில்லை. இன்றும் அதே அரசாங்கம் பதவியில் உள்ளது. உங்கள் ஜனாதிபதி மாத்திரம்தான் வேறு ஒருவர் எனவும் குறிப்பிட்டுள்ள முகமட் நசீட் 2009 யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவருவதற்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளும துப்பாக்கி குண்டுகளும் இன்றும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நான் மாலியில் எதிர்கொண்ட விடயங்கள் கொழும்பில் இடம்பெற்றால் தென்னாசியா முழுவதும் அது எதிரொலிக்கும் தென்னாசியா தப்பிபிழைக்காது என நான் கருதினேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை மக்கள் வேறு ஒரு அரசியல் ஏற்பாட்டை செய்துகொள்வதற்கு உதவுவதற்கான சந்தர்ப்பம் எனக்கு கிடைத்துள்ளதாக நான் கருதினேன் எனது மனதில் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகுவது வேறு எதனையும் விட முக்கியமானதாக காணப்பட்டது எனவும் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அந்த காலகட்டத்தில் பதவி விலக தயராகயிருக்கவில்லை, அவர் இன்னமும் வலுவானவராக காணப்பட்டார். அவரின் கட்டுப்பாட்டின் கீழ் படையினர் காணப்பட்டனர் என தெரிவித்துள்ள முகமட் நசீட் இராணுவம் தலையிட முடியாது என எப்படி நான் எதிர்பார்க்காமல் இருக்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அந்த பதட்டமான நிலையை தணிப்பதற்கு அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதை உறுதி செய்வதே உகந்த விடயமாக காணப்பட்டது. மேலும் அவர் பதவி விலகி இலங்கையர்களிற்கு வேறு ஒரு தெரிவை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கவேண்டிய நிலை காணப்பட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவர் அவ்வாறு வெளியேறியது இலங்கையர்களுக்கு இரத்தக்களறியற்ற அரசியல்தருணத்தை வழங்கியது எனஅவர் குறிப்பிட்டுள்ளார். நான் மக்களின் உணர்வுகளிற்கு எதிராக செயற்பட்டேன் என நான் கருதவில்லை இலங்கையில் உள்ள நண்பர்கள் சிலர் அவ்வேளை என்மீது கடும் கோபம் கொண்டிருந்தார்கள், ஆனால் தற்போது அனைத்தும் அமைதியாகிவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் இராணுவத்துடன் மோதியிருந்தால் என்ன நடந்திருக்கும் என நினைத்துப்பாருங்கள் மக்கள் ஜனாதிபதி மீது தாக்குதலை மேற்கொண்டிருந்தால் நிலைமை அவ்வளவு சிறப்பானதாகயிருந்திராது எனவும் குறிப்பிட்டுள்ள மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி நான் இதனை இலங்கைமக்களிற்கு தெளிவுபடுத்த விரும்புகின்றேன் எனது நிலைப்பாட்டை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என மன்றாடுகின்றேன் எனவும் தெரிவித்துள்ளார். இலங்கை மக்களிற்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதற்கு உள்ள உரிமையை நான் ஒருபோதும் தடுக்க முயலவில்லை, அவர்களின் அரசியல் செயற்பாடுகளிற்கு பாதிப்பை ஏற்படுத்த விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183296
-
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு – ஊர்தி பவனியும் ஆரம்பம்!
யாழில் முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் நினைவு ஊர்தி பவனியும் 12 MAY, 2024 | 02:50 PM முள்ளிவாய்க்கால் கஞ்சி விநியோகமும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி பவனியும் இன்று (12) காலை 9.30 மணியளவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரவாதம் சரவணபவனின் ஏற்பாட்டில் வட்டுக்கோட்டை தொகுதி கிளையினால் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலசந்திரன் தலைமையில் இந்த கஞ்சி விநியோகமும் நினைவு ஊர்தி பவனியும் இடம்பெற்றது. இதன்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்து, முன்னாள் பேராளியும் முன்னாள் உபதவிசாளருமான விஜயனால் பொதுச்சுடர் ஏற்றிவைக்கப்பட்டு, தொடர்ச்சியாக ஈகைச்சுடரேற்றி, அகவணக்கமும் மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து, முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி விநியோகிக்கப்பட்டது. அத்தோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியின் வரலாற்றினை உள்ளடக்கிய துண்டுப்பிரசுரங்களும் வழங்கப்பட்டன. இதன்போது தமிழின படுகொலையை அடையாளப்படுத்தும் முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி யாழ். நகரிலிருந்து ஆரம்பமானது. இதில் காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலசந்திரன், வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் நாகரஞ்சின், முன்னாள் உப தவிசாளர் விஜயன், வட்டுக்கோட்டை தொகுதி மகளிர் அணி தலைவி ஜெயரஞ்சி, சமூக செயற்பாட்டாளர் சபாஷ் அம்பிகை, பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். யாழில் பயணத்தை தொடங்கிய இந்த நினைவு ஊர்தி நாளை 13ஆம் திகதி திங்கட்கிழமை தென்மராட்சியிலும், 14ஆம் திகதி வடமராட்சியிலும், 15ஆம் திகதி கோப்பாய், மானிப்பாய், நல்லூர் பிரதேசங்களிலும், 16ஆம் திகதி வட்டுக்கோட்டையிலும், 17ஆம் திகதி வேலணையிலும், 18ஆம் திகதி காரைநகரிலும் பயணிக்கும். இறுதிநாள் நினைவேந்தல் சங்கானை பேருந்து தரிப்பிடத்தில் மாலை 5 மணிக்கு இடம்பெறும். முள்ளிவாய்க்கால் நினைவு ஊர்தி தங்கள் பிரதேசங்களுக்கு வரும்போது மக்கள் அணிதிரண்டு ஆத்மார்த்தமாக அஞ்சலி செலுத்துமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளனர். https://www.virakesari.lk/article/183319
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
பார்ம்ல இருக்கவன பார்ம் அவுட் பண்ணனுமா... பார்ம்ல இல்லாதவனுக்கு ஓப்பனிங் பேட் வேணுமா டேபிள் கடைசில இருக்க அணிய டேபிள் டாப் கொண்டு போகனுமா மத்த டீம் கிட்ட அடி வாங்குனவன் எல்லாம் 100 அடிக்கனுமா டாஸ் வின் பண்ணி மேட்ச் தோக்கனுமா திறமையான பிளேயர்ஸ் எல்லாரையும் வருச கணக்கா பெஞ்ச்ல உக்கார வைக்கனுமா அணுகுவீர் சென்னை சூப்பர் கிங்ஸ்... சேப்பாக்கம் மைதானம்.... எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது..... முகநூல் பதிவொன்று https://www.facebook.com/story.php?story_fbid=2675239192649639&id=100004907528753&post_id=100004907528753_2675239192649639&mibextid=xfxF2i&rdid=t05xMYxZyNxFKvqs
-
அன்னையர் நாள்
வணக்கம். காலையில் எழுந்ததும் இன்றைய நாள்(05/11/2024) குறித்த திட்டமிடல் குறித்துப் பேசினேன். மனைவியார் சொன்னார், “நாளைக்கு மதர்சு டே, ஆகவே கடைகள்ல கூட்டமா இருக்கும்”. தொடர்ச்சியாக ஒரு பேச்சைப் பதிவு(ஆடியோ கிளிப்) செய்து குழுக்களிலும் ஒருசிலருக்கும் அனுப்பி விட்டு வேலைகளைத் துவக்கி இருந்தேன். வணிக வளாகத்தை நோக்கி வண்டி சென்று கொண்டிருக்கும் போது ஓர் அழைப்பு. நார்த்கரொலைனாப் பல்கலைக்கழகத் தமிழ்மாணவர் சங்கத்தலைவரின்(president of University of North Carolina Tamil Students Organization) அழைப்பு அது. வண்டியைச் செலுத்திக் கொண்டேவும் உட்கிடை உரையாடற்கடத்தியின் ஊடாகப் பேசலானேன். “Appa, you are more inline with mother of mother's day" என்றார். நன்றி சொல்லி, நலம் விசாரிப்புக்குப் பின்னர் பேச்சு முடிவுக்கு வந்தது. வீட்டுக்கு வந்து சேர்ந்ததும், அன்னையர் நாளின் அன்னை குறித்த தேடலையும் நாடலையும் மேற்கொண்டேன். அமெரிக்க சிவில்வார், உள்நாட்டுப் போருக்கு முந்தைய காலகட்டத்தில் சமூகத்தில் கொந்தளிப்புகள் மேலோங்கி இருந்தன. பிள்ளைவளர்ப்பில் விழிப்புணர்வு வேண்டி, உள்ளூர் அளவில் தாயார்களுக்கான சங்கங்கள் அமைத்து விழிப்புணர்வு ஊட்டி வந்தார் யேனா ஜார்விஸ் என்பார். அடுத்தடுத்து அன்னையர்கள் நலம், கடமைகள் கருதிப் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வந்தார் யேனா. 1905ஆம் ஆண்டு மறைந்த தம் தாயாரின் செய்த பல தியாகங்களை மேற்கோள் காட்டி, 1908ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட வழிவகுத்தார் யேனா அவர்கள். தொடர்ந்து யேனா அவர்கள் மேற்கொண்ட அலுவல்களின் வழி, குடியரசுத் தலைவர் வுட்ரோ வில்சன் அவர்கள், மே மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை நாட்டின் அதிகாரப்பூர்வமான அன்னையர் நாளாகவும் விடுமுறைநாளாகவும் அறிவித்தார். நாடெங்கும் அன்னையர்நாள் பரபரப்பாகக் கடைபிடிக்கப்பட்டது. யேனா அவர்கள் சொல்லொணாத்துயர் கொண்டார். நாட்டின் அதிகாரப்பூர்வ நாட்காட்டியிலிருந்து அன்னையர் நாளை நீக்க வேண்டுமெனப் போராடவும் விழைந்தார். காரணம்? அத்தகு நாள் அதன் நோக்கத்தில் இருந்து, அடிப்படையில் இருந்து விலகி, நழுவி, வணிகமயமாக்கப்பட்டதுதான் காரணம். அரசாங்கத்துடன் பேசிப் பேசி, தம் மறைவுக்குச் சற்று முன்பாக, 1948ஆம் ஆண்டு, நீக்கப்பட்டதைக் கண்டு சற்று மனம் ஆற்றிக் கொண்டார். இருந்தாலும், இன்றளவும், அன்னையர் நாள் கடைபிடிக்கப்பட்டே வருகின்றது. அன்னையர் நாளின் அன்னைக்கு நாம் செய்யும் தொண்டு என்னவாக இருக்க முடியும்? உள்ளபடியே அவரின் உள்ளக்கிடக்கையைப் புரிந்து கொண்டு செயற்படுவதால் மட்டுமே அது ஈடேறும். மகவினை ஈன்றுகின்ற போது ஒருவர் தாய் ஆகின்றார். அதன் நிமித்தம் அவர் பல்வேறு அர்ப்பணிப்புகளை, தன்னலம் கருதாமல் தியாகங்களைச் செய்கின்றார். ஒவ்வொரு பிரசவமும் மறுபிறப்பு என வர்ணிப்பர். அதற்கும் மேற்பட்டு, மகவு ஈன்றபின்னரும் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டே மீள்கின்றார். உயிர்நீர்களின்(hormonals imbalance) சமன்பாடின்மை நிமித்தம் மனச்சோகை(postpartum depression), தாய்ப்பால் ஊட்டுதற்சிக்கல்கள், தன்னுடற்கட்டுமான மீள்பணிகளெனப் பலவும். பிரசவத்திற்குப் பிறகான மனச்சோகை என்பது 80% பெண்களுக்கு ஏற்படுவதாகவும், எழுவரில் ஒருவருக்கு அது பெரும்சிக்கலாகவே உருவெடுப்பதாகவும் அற்வியற்கட்டுரைகள் சொல்கின்றன. பெரும்பாலானோர் இதனை இனம் கண்டு கொள்வதே இல்லை. மாறாக, பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் என்பதாகக் கருதி விடுகின்றனர். நீண்டநாள்ச் சிக்கல்களாக இன்னபிறவும். According to the WHO, more than a third of women experience lasting health problems after giving birth, including: Pain during sexual intercourse (30%) Low back pain (32%) Anal incontinence (19%) Urinary incontinence (8-31%) Anxiety (9-24%) Depression (11-17%) Perineal pain (11%) Fear of childbirth (tokophobia) (6-15%) சும்மா, அன்னையர் நாளில் லாலா பாடி, குளிர்விப்பதால் மட்டுமே மேன்மை கிட்டிவிடுமா? இது போன்றவற்றை வெளிப்படுத்தி, நல்லதொரு புரிதலையும் ஒத்துழைப்பையும் கவனிப்பையும் நல்குவதால் மட்டுமே, அன்னையர் நாளின் அன்னையாரான யேனா ஜார்விஸ் அவர்களின் புகழுக்கு வலுசேர்க்க முடியும். மாந்தகுலத்துக்கும் மேன்மை கிட்டும். அன்னையர் நாள் வாழ்த்தும் வணக்கமும்!! -பழமைபேசி, pazamaipesi@gmail.com http://maniyinpakkam.blogspot.com/2024/05/blog-post.html
-
தமிழ்ப் பொது வேட்பாளா் விடயத்தில் முடிவெடுக்க 19 ஆம் திகதி தமிழரசு மத்திய குழு கூடுகிறது
தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் தீர்மானம் எடுக்க அவசரப்பட வேண்டாம் - தமிழ் அரசுக் கட்சி உட்பட அனைத்து தரப்பிடமும் சம்பந்தன் வேண்டுகோள் Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 10:44 AM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் விடயத்தில் தீர்மானம் எடுப்பதற்கு அவசரப்பட வேண்டாம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சி உட்பட விடயத்துடன் தொடர்புடைய அனைத்து தரப்பிடமும் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் பகிரங்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கான அரசியல் கட்சிகள் கொள்கை அளவில் இணக்கப்பாட்டை வெளியிட்டுள்ளன. சிவில் அமைப்புக்களும் ஏகமனதான கருத்துக்கு வருகை தந்துள்ளன. இலங்கை தமிழரசுக் கட்சி 19ஆம் திகதி தீர்மானத்தை வெளியிடப்போவதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிரேஷ்ட தலைவர் என்ற வகையில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக உள்ளது என்று வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டெம்பர் 17ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 16ஆம் திகதிக்கும் இடையில் நடைபெறவுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. நாட்டின் நீண்ட வரலாற்றை பார்க்கின்றபோது பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த ஒருவரே ஜனாதிபதியாக வரமுடியும் என்ற நிலைமைகள் உள்ளன. இந்த நிலையில் தென்னிலங்கையின் தேசியக் கட்சிகள் தற்போது வரையில் உத்தியோகபூர்வமாக தங்களது ஜனாதிபதி வேட்பாளர் பற்றிய அறிவிப்புக்களைச் செய்யவில்லை. அக்கட்சிகள் அவ்விதமான அறிவிப்புக்களை செய்வதற்கு முன்னதாக நாம் எமது நிலைப்பாட்டை முன்வைத்து வீணான குழப்பங்களை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை. தென்னிலங்கைத் தலைவர்களில் யார்? வேட்பாளர் அவர்களின் தமிழ் மக்கள் தொடர்பான நிலைப்பாடு என்ன? அவர்களுடைய தேர்தல் விஞ்ஞாபனம் என்ன கூறுகின்றது உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஆழமான கவனத்தைச் செலுத்த வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கில் சரித்திர ரீதியாக வாழ்ந்துவருகின்ற மக்கள் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அதிகாரப்பகிர்வினைக் கோரிவருகின்றார்கள் என்பது தென்னிலங்கையின் தலைவர்கள் நன்கு அறிவார்கள். ஆகவே அவர்கள் நாட்டின் தலைமைப்பொறுப்பினை ஏற்பதாக இருந்தால் நிச்சயமாக தமிழ் மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் தங்களது நிலைப்பாடுகளை வெளிப்படுத்த வேண்டியது அவசியமாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் உள்ள சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள். தென்னிலங்கையில் உள்ள தலைவர்கள் உள்ளக சுயநிர்ணய உரித்தினை ஏற்றுக்கொள்ளாது விட்டால் நாம் சர்வதேசச் சட்டங்களுக்கு அமைவாக வெளியக சுயநிர்ணயத்தினைக் கோருவதற்கு இயலுமானவர்களாக இருக்கின்றோம் என்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுபடுத்துகின்றேன். அந்த வகையில், நாம் அனைத்து சூழல்களையும் ஆழமாக எமது கருமங்களை முன்னெடுக்க வேண்டும். அவசரப்பட்டு எந்தவிதமான முடிவுகளையும் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்றார். https://www.virakesari.lk/article/183291
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
இனி யார் மனதையும் புண்படுத்தும் வகையில் பேச மாட்டேன்.. நீதிபதியிடம் சொன்ன சவுக்கு சங்கர் சென்னை: இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன், யார் மனதையும் புண்படுத்தும் வகையில் இனிமேல் பேச மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கில், 10 நபர்கள் இருட்டு அறையில் வைத்து தன்னை கண்மூடித்தனமாக தாக்கி உள்ளனர். என்னை மோசமாக அடிக்கின்றனர். விசாரணையை என்று அடிக்கிறார்கள். இனி யூடியூப்பில் கடுமையான பிரச்சனை ஏற்படுத்துவது போன்ற கருத்துக்களை தெரிவிக்க மாட்டேன் என்று சவுக்கு சங்கர் நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதற்கு, இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிறேன். நான் விசாரணை மேற்கொள்ளும் வரை தைரியமாக இருக்கும்படியும் சவுக்கு சங்கரிடம் நீதிபதி கூறியதாக சவுக்கு சங்கரின் வழக்கறிஞர் விஜயராகவன் பேட்டி அளித்துள்ளார். சிறைத்துறை தலைவர் வழக்கு: முன்னதாக கோவை சிறையில் இருந்து சவுக்கு சங்கரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்து மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்து என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் போலீசார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், யூ-டியூபர் சவுக்கு சங்கர், தேனியில் கைது செய்யப்பட்டார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரது வலது கை வேண்டுமென்றே உடைக்கப்பட்டுள்ளதாகவும், சிறையில் அவரை சிறைத் துறையினர் துன்புறுத்தியுள்ளதால், அதுகுறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காயமடைந்த சவுக்கு சங்கருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என, சவுக்கு சங்கரின் தாயார் கமலா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அடங்கிய அமர்வு, சிறையில் ஆய்வு செய்த கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையை (மே 09) தாக்கல் செய்யும்படி, பதிவுத்துறைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ராஜ்திலக் , சிறையில் சவுக்கு சங்கர் கொடுமை படுத்தப்படவில்லை. சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டது ஏன்? என பதிலளித்த அவர், அவருக்கு ஏற்கனவே சிறை கைதிகளுடன் பகை இருந்திருக்கலாம் எனவும், அதனால் தாக்கப்பட்டிருந்தால் அதற்கு அரசு பொறுப்பேற்க முடியாது எனவும் தெரிவித்தார். சிறை நிர்வாகம் சார்பில் கோவை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், ஆட்கொணர்வு மனுவில் வேறு சிறைக்கு மாற்ற நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்க முடியாது. சிறை மாற்றம் செய்ய சிறை நிர்வாகத்திற்கு கோரிக்கை மனு அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், சவுக்கு சங்கர் கட்டாயம் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறித்தி உள்ளனர். அதனால், மருத்துவர்கள் அறிக்கை படி சிறை அதிகாரிகள் செயல்பட வேண்டும் என தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சவுக்கு சங்கருக்கு சிறை நிர்வாகம் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கோவை சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற வேண்டும் என்ற சவுக்கு சங்கரின் தாயார் அளித்த மனு மீது சிறைத்துறை தலைவர் முடிவு எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். https://tamil.oneindia.com/news/chennai/i-will-not-hurt-anyones-feelings-anymore-in-youtube-videos-says-savukku-shankar-to-judges-605191.html
-
ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தேடும் 'ஆள் கடத்தல்காரரை' பிபிசி கண்டுபிடித்தது எப்படி? செய்தியாளரின் திரில் அனுபவம்
கட்டுரை தகவல் எழுதியவர், சூ மிட்செல் பதவி, பிபிசி செய்திகள் 11 மே 2024 'பர்ஸான் மஜீத், இங்கிலாந்து உட்பட பல நாடுகளின் காவல்துறையினரால் தேடப்பட்டு வரும் ஒரு குற்றவாளி. ஆங்கிலக் கால்வாய் வழியாக பல புலம்பெயர்ந்தோரை சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் ஊடுருவச் செய்த குற்றத்திற்காக இவர் தேடப்படுகிறார். பிபிசி செய்தியாளர் சூ மிட்செல் பெரும் போராட்டத்திற்கு இவரைச் சந்தித்து பேசினார். தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் சூ மிட்செல்.' இராக்கில் உள்ள ஒரு ஷாப்பிங் மாலில் ஐரோப்பாவின் மிகவும் பிரபலமான ஆள் கடத்தல் குற்றவாளியான மஜீத்துடன் இப்போது நேருக்கு நேராக அமர்ந்திருக்கிறேன். அடுத்த நாள் அவரது அலுவலகத்தில் என இரண்டு இடங்களில் அவருடன் உரையாட முடிந்தது. எங்கள் இருவருக்குமான உரையாடலின் போது, ஆங்கிலக் கால்வாய் வழியாக அவரால் கொண்டு செல்லப்பட்ட புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு இருக்கும் என தனக்குத் தெரியாது என்று கூறுகிறார். “ஆயிரமாக இருக்கலாம், 10,000 இருக்கலாம். எனக்குத் தெரியாது, நான் எண்ணவில்லை” என்கிறார் மஜீத். சில மாதங்களுக்கு முன், மஜீத்துடனான இந்த சந்திப்பு சாத்தியமில்லாத ஒன்றாகத் தோன்றியது. அகதிகளுடன் பணிபுரியும் முன்னாள் ராணுவ வீரர் ராப் லாரியுடன் சேர்ந்து, ‘ஸ்கார்பியன்’ (Scorpion) என்று அழைக்கப்படும் இந்த மனிதரை (மஜீத்) கண்டுபிடித்து விசாரிக்க நான் புறப்பட்டேன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிப்ரவரி 2023: துருக்கியில் இருந்து இத்தாலிக்குச் சென்ற படகில் குறைந்தது 95 புலம்பெயர்ந்தோர் இறந்தனர். பல ஆண்டுகளாக, ஆங்கிலக் கால்வாய் வழியாக படகுகள் மற்றும் லாரிகள் மூலம் ஆட்களைக் கடத்தும் தொழிலை மஜீத்தும் அவரது கும்பலும் செய்து வந்தனர். ஆங்கிலக் கால்வாய் பகுதியில் நடைபெற்ற பெரும்பாலான ஆள் கடத்தல்களில் இந்த கும்பலுக்கு பங்கு இருந்தது. 2018 முதல் இன்று வரை, ஆங்கிலக் கால்வாயை படகு மூலம் கடக்க முயன்ற 70க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இறந்துள்ளனர். கடந்த மாதம், பிரான்ஸ் நாட்டின் கடற்பகுதியில் ஏழு வயது சிறுமி உட்பட ஐந்து பேர் கொல்லப்பட்டனர். இத்தகைய சட்டவிரோத பயணம் மிகவும் ஆபத்தான ஒன்று, ஆனால் கடத்தல்காரர்களுக்கு இவை மிகவும் லாபகரமானதாக இருக்கின்றன. படகு மூலம் ஆங்கிலக் கால்வாயை கடக்க ஒரு நபருக்கு 6,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 6.27 லட்சம்) வசூலிக்கிறார்கள். 2023இல் கிட்டத்தட்ட 30,000 பேர் இவ்வாறு ஆங்கிலக் கால்வாயை கடக்க முயற்சி செய்தார்கள், இதனால் இந்தத் தொழிலில் லாபத்திற்கான சாத்தியம் மிகத் தெளிவாக உள்ளது. ஸ்கார்பியன் என்னும் இந்த குற்றவாளி குறித்த எங்கள் தேடல், வடக்கு பிரான்சின் கலேஸ் நகருக்கு அருகே உள்ள ஒரு அகதிகள் முகாமில் இருந்து தொடங்கியது. அங்கு நாங்கள் ஒரு சிறுமியைச் சந்தித்தோம். டிங்கி (Dinghy) எனப்படும் காற்று அடைக்கப்பட்ட ஒரு சிறிய படகு மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயன்ற அந்தச் சிறுமி, கிட்டத்தட்ட உயிரை இழக்கும் நிலைக்குச் சென்றார். அந்த டிங்கி படகு கடல் பயணத்திற்கு ஏற்ற நிலையில் இருக்கவில்லை. மிகவும் மலிவான விலையில், பெல்ஜியத்தில் இருந்து அந்த பழைய டிங்கி படகு வாங்கப்பட்டது. அதில் பயணித்த 19 பேரிடமும் லைஃப் ஜாக்கெட்டுகள் இல்லை. பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடக்க முயற்சி செய்கிறார்கள். கடலுக்கு மக்களை அனுப்புவது யார்? சட்டவிரோதமாக புலம்பெயர்பவர்களை கைது செய்து அழைத்துச் செல்லும் இங்கிலாந்து காவல்துறையினர், அவர்கள் மொபைல் போன்களை எடுத்து சோதனை செய்கிறார்கள். 2016 முதல் செய்த சோதனைகளில், ஒரு மொபைல் எண் மீண்டும் மீண்டும் கிடைத்தது. பெரும்பாலும் அந்த எண் ‘ஸ்கார்பியன்’ என்ற பெயர் அல்லது தேள் புகைப்படத்துடன் சேமிக்கப்பட்டிருக்கும். பர்ஸான் மஜீத் என்ற குர்திஷ் இராக்கிய மனிதரின் குறியீட்டுப் பெயர் தான் இந்த ‘ஸ்கார்பியன்’ என்பதை அதிகாரிகள் உணரத் தொடங்கினர் என்று இங்கிலாந்தின் தேசிய குற்றவியல் அமைப்பின் (NCA) மூத்த விசாரணை அதிகாரி மார்ட்டின் கிளார்க் எங்களிடம் கூறினார். 2006ஆம் ஆண்டில் 20 வயது இளைஞனாக, ஒரு லாரி மூலமாக இங்கிலாந்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்தார் மஜீத். ஒரு வருடம் கழித்து, இங்கிலாந்தில் தங்குவதற்கு அவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட போதிலும், கூடுதலாக பல ஆண்டுகள் இங்கிலாந்தில் தங்கியிருந்தார். அதில் சில ஆண்டுகளை துப்பாக்கி மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக சிறையில் கழித்தார். அவர் இறுதியாக 2015இல் இராக்கிற்கு நாடு கடத்தப்பட்டார். இதற்குப் பிறகு, பெல்ஜியத்தில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தனது மூத்த சகோதரரிடமிருந்து சட்டவிரோதமாக புலம்பெயர்ந்தவர்களை இங்கிலாந்திற்குள் கடத்தும் தொழிலை கற்றுக்கொண்டதாக நம்பப்படுகிறது. பின்னர் மஜீத், ஸ்கார்பியன் என்ற பெயரால் அறியப்பட்டார். 2016 மற்றும் 2021க்கு இடையில், ஐரோப்பாவிற்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான மக்கள் கடத்தல் வர்த்தகத்தின் பெரும்பகுதியை ஸ்கார்பியன் கும்பல் கட்டுப்படுத்தியதாக நம்பப்படுகிறது. இரண்டு வருட சர்வதேச காவல்துறையின் கடுமையான நடவடிக்கையின் விளைவாக, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் உள்ள நீதிமன்றங்களில் இந்த கும்பலைச் சேர்ந்த 26 உறுப்பினர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆனால் கைது செய்யப்படுவதிலிருந்து தொடர்ந்து தப்பித்து ஓடிக்கொண்டிருந்தார் ஸ்கார்பியன். பெல்ஜிய நீதிமன்றத்தில் அவர் மீது நடத்தப்பட்ட விசாரணையில், 121 நபர்களைக் கடத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. அக்டோபர் 2022இல், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 834,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 8.72 கோடி) அபராதமும் விதிக்கப்பட்டது. அப்போதிருந்து, ஸ்கார்பியன் இருக்கும் இடம் யாருக்கும் தெரியவில்லை. இதுவே நாங்கள் உடைக்க விரும்பிய மர்மம். பட மூலாதாரம்,FACEBOOK படக்குறிப்பு,மஜீத், 2012இல், நாட்டிங்ஹாமில் கார் மெக்கானிக்காக பணிபுரிந்தார். ஸ்கார்பியனை சந்திப்பதற்கான முயற்சி ராபின் தொடர்பு மூலம் ஒரு இரானிய நபரிடம் பேசினோம். அவர் ஆங்கிலக் கால்வாயை கடக்க முயன்றபோது ஸ்கார்பியனை தொடர்பு கொண்டதாக கூறினார். ஸ்கார்பியன் அந்த இரானியரிடம் தான் துருக்கியில் இருப்பதாகவும், அங்கிருந்து தனது வணிகத்தை ஒருங்கிணைத்து வருவதாகவும் கூறியிருந்தார். பெல்ஜியத்தில், மஜீத்தின் மூத்த சகோதரரை நாங்கள் கண்டுபிடித்தோம், இப்போது அவர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார். ஸ்கார்பியன் துருக்கியில் இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறினார். இங்கிலாந்திற்குச் செல்லும் பெரும்பாலான புலம்பெயர்ந்தோருக்கு, துருக்கி ஒரு முக்கியமான இடமாகும். அதன் குடியேற்றச் சட்டங்கள் காரணமாக, ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து நாட்டிற்குள் நுழைய விசா பெறுவது ஒப்பீட்டளவில் எளிதானது. இஸ்தான்புல்லில் கடத்தல்காரர்கள் அடிக்கடி வரும் ஒரு ஓட்டலுக்கு நாங்கள் சென்றோம். பர்ஸான் மஜீத் சமீபத்தில் அங்கு காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. கடத்தல் வணிகத்தைப் பற்றி எங்களிடம் கூற முடியுமா என்று மேலாளரிடம் கேட்ட போது, மொத்த கஃபேயும் அமைதியாக இருந்தது. சிறிது நேரத்திற்குப் பிறகு, ஒரு நபர் எங்கள் மேஜையைக் கடந்து செல்லும் போது, துப்பாக்கியை எடுத்துச் செல்வதைக் காட்ட தனது மேல் சட்டையை விலக்கி காண்பித்தார். நாங்கள் ஆபத்தானவர்களைக் குறித்து விசாரிக்கிறோம் என்பதை நினைவூட்டுவதாக அது இருந்தது. எங்கள் அடுத்த விசாரணை மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை அளித்தது. சில தெருக்களுக்கு அப்பால் உள்ள பணப் பரிமாற்ற நிலையத்தில் மஜீத் சமீபத்தில் 172,000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 1.8 கோடி) டெபாசிட் செய்ததாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. நாங்கள் எங்கள் கைப்பேசி எண்ணை அங்கே கொடுத்துவிட்டு வந்தோம், அடுத்த நாள் இரவில், ராபின் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியின் மறுமுனையில் யாரோ ஒருவர் பர்ஸான் மஜீத் என்று கூறிக்கொண்டிருந்தார். இந்த அழைப்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே அழைப்பின் தொடக்கத்தை பதிவு செய்ய நேரம் இல்லை. ராப் பேசிய போது, எதிர்முனையில் பேசியவர், “நீங்கள் என்னைத் தேடுகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன்.” என்று கூறினார். நான் அவரிடம், 'நீங்கள் யார்? ஸ்கார்பியனா?' எனக் கேட்டபோது, 'நீங்கள் என்னை அப்படி அழைக்க விரும்புகிறீர்களா? பரவாயில்லை’ என்றார். இவர்தான் உண்மையான பர்ஸான் மஜீத் என்பதைச் சொல்ல வழியில்லை, ஆனால் அவர் கொடுத்த விவரங்கள் நமக்குத் தெரிந்தவற்றுடன் ஒத்துப்போகின்றன. 2015ஆம் ஆண்டு நாடு கடத்தப்படும் வரை நாட்டிங்ஹாமில் தான் வசித்து வந்ததாக அவர் கூறினார். ஆனால் தான் கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லை என்று அவர் மறுத்தார். "இது உண்மையல்ல. இது வெறும் ஊடகங்களின் கூற்று" என்று அவர் தெரிவித்தார். தொடர்பு அடிக்கடி துண்டிக்கப்பட்டது, ஆனால் அவர் தனது இருப்பிடம் குறித்து எந்த துப்பும் கொடுக்கவில்லை. படக்குறிப்பு,தனது சகோதரர்களுடன் ஸ்கார்பியன். புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி மற்றும் இடம் தெரியவில்லை. 12 பேருக்கான படகில் 100 பேர் அவர் எப்போது மீண்டும் அழைப்பார் என்று எங்களுக்குத் தெரியாது. இதற்கிடையில், துருக்கியிலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலிக்கு குடிபெயர்ந்தவர்களை கடத்துவதில் ஸ்கார்பியன் இப்போது ஈடுபட்டுள்ளதாக ராபின் உள்ளூர் தொடர்பு எங்களிடம் கூறினார். நாங்கள் கேட்டது கவலையளிக்கக் கூடிய விஷயமாக இருந்தது. ஏறக்குறைய 12 பேரை ஏற்றிச் செல்ல உரிமம் பெற்ற படகுகளில் 100 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம்கூட்டமாக ஏறத் தயாராக இருந்தனர். படகுகள் பெரும்பாலும் படகோட்டும் அனுபவம் இல்லாத கடத்தல்காரர்களால் இயக்கப்படும். கடலோர காவல்படை ரோந்துகளைத் தவிர்ப்பதற்காக சிறிய தீவுக் கூட்டங்களுக்கு இடையே ஆபத்தான பாதையில் செல்லும். இதில் பெரிய அளவிலான பணம் விளையாடுகிறது. இந்த படகுகளில் ஒரு இடத்திற்கு பயணிகள் தலா 10,000 யூரோக்கள் (9 லட்சம் ரூபாய்) செலுத்துவதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 720,000க்கும் அதிகமான மக்கள் கிழக்கு மத்திய தரைக் கடல் பகுதியைக் கடந்து ஐரோப்பாவிற்குச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அவர்களில் கிட்டத்தட்ட 2,500 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். எஸ்ஓஎஸ் மெடிட்டரேனியன் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஜூலியா ஷாஃபர்மேயர் கூறுகையில், “கடத்தல்காரர்கள் இந்த மக்களின் வாழ்க்கையை பெரும் ஆபத்தில் ஆழ்த்தியுள்ளனர். இந்த மக்கள் வாழ்ந்தாலும் இறந்தாலும் அவர்களுக்கு எந்த கவலையும் இல்லை என்று நான் நினைக்கிறேன்." இந்த நேரத்தில், இந்த கேள்வியை ஸ்கார்பியனிடம் நேரடியாக கேட்க எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மீண்டும் எங்களை அழைத்தார். மீண்டும் ஒருமுறை, தான் ஒரு கடத்தல்காரர் என்பதை அவர் மறுத்தார். இருப்பினும், தான் பார்த்த வேலைக்கான அவரது வரையறை என்பது “நான் பணியை மட்டுமே செய்தேன், ஆனால் கட்டளையிட்டவர் வேறு யாரோ” என்று தோன்றியது. “நான் வெறுமனே அங்கு இருந்தேன், இப்போது அப்படி கூட இல்லை. நான் பணத்தைக் கையாள்பவன் மட்டுமே” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஸ்தான்புல், ஐரோப்பாவுக்குச் செல்லும் புலம்பெயர்ந்தோருக்கு துருக்கி ஒரு முக்கியமான பகுதியாக உள்ளது. ஸ்கார்பியனுக்கு சொந்தமான வில்லா மஜீத் நீரில் மூழ்கி இறந்த புலம்பெயர்ந்தோர் மீது சிறிதும் அனுதாபம் காட்டவில்லை. "நீங்கள் இறந்து போவது கடவுள் கையில் உள்ளது, ஆனால் சில நேரங்களில் உங்கள் தவறும் உள்ளது. கடவுள் ஒருபோதும் 'அந்த படகில் ஏறு’ என்று கூறுவதில்லை." என்கிறார் மஜீத். எங்களின் அடுத்த விசாரணைக்கான இடம் மர்மரிஸ் ரிசார்ட் ஆகும், அங்கு ஸ்கார்பியனுக்கு சொந்தமாக ஒரு வில்லா இருப்பதாக துருக்கி போலீசார் கூறினர். நாங்கள் அங்கு விசாரித்தபோது, அவருடன் எல்லோருடனும் நட்பாக இருந்ததாக ஒரு பெண் கூறினார். மஜீத் ஆள் கடத்தலில் ஈடுபட்டிருப்பதை அந்தப் பெண் அறிந்திருந்தார். இது மஜீத்துக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தினாலும் கூட, அவரது கவலை பணத்தைப் பற்றி மட்டுமே, புலம்பெயர்ந்தோரின் தலைவிதி பற்றி அல்ல என்றும் அந்தப் பெண் கூறினார். "மஜீத் அவர்களைப் பற்றி கவலைப்படவில்லை. அது மிகவும் வருத்தமாக இருக்கிறது, இல்லையா? நான் கேள்விப்பட்ட விஷயங்களை நினைத்துப் பார்த்தால், மிகவும் அவமானமாக உள்ளது. ஏனென்றால் அவை நல்லதல்ல என்று எனக்குத் தெரியும்." என்கிறார் அந்தப் பெண். அவர் இராக்கில் இருக்கலாம் என்று யாரோ தன்னிடம் கூறியிருந்தாலும், சமீபத்தில் மர்மரிஸில் உள்ள அவரது வில்லாவில் அவரைப் பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். இராக்கின் குர்திஸ்தான் பகுதியில் உள்ள ஒரு நகரமான சுலைமானியாவில் உள்ள ஒரு பணப் பரிமாற்றத்தில் ஸ்கார்பியனை அண்மையில் பார்த்ததாக மற்றொரு நபர் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது. நாங்கள் அந்த இடத்திற்கு புறப்பட்டோம். அங்கு ஸ்கார்பியன் கிடைக்கவில்லை என்றால், நாங்கள் இந்த முயற்சியை கைவிட வேண்டும் என்று முடிவு செய்தோம். ஆனால் ராபின் நண்பரால் அவரைத் தொடர்பு கொள்ள முடிந்தது. முதலில், மஜீத் மிகவும் சந்தேகமடைந்தார், எப்படியாவது அவரைப் பிடித்து ஐரோப்பாவிற்கு அழைத்துச் செல்ல திட்டமிடுகிறோம் என்று கவலைப்பட்டார். முதலில் ராபின் நண்பர் மூலமாகவும், பின்னர் நேரடியாக ராப் மூலமாகவும் குறுஞ்செய்திகள் குவிந்தன. ஸ்கார்பியன் எங்களை சந்திப்பார், ஆனால் சந்திக்கும் இடத்தை அவரே முடிவு செய்வார் என்றால் மட்டுமே சந்திப்பு நடக்கும். அவர் சொல்லும் இடம் என்றால் பாதுகாப்பாக இருக்குமா அச்சம் இருந்ததால் நாங்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை. பின்னர் ஒரு குறுஞ்செய்தி வந்தது, "நீங்கள் எங்கே இருக்கிறீர்கள்?" நாங்கள் அருகில் உள்ள வணிக வளாகத்திற்குச் சென்று கொண்டிருப்பதாகச் சொன்னோம். ஸ்கார்பியன் எங்களிடம் அவரை தரை தளத்தில் உள்ள ஒரு காபி ஷாப்பில் சந்திக்கச் சொன்னார். படக்குறிப்பு,சூ மிட்செல் மற்றும் ராப், ஸ்கார்பியனைச் சந்தித்தபோது, அவர்களின் ஓட்டுனர் ரகசியமாக அதை படம்பிடித்தார். ஸ்கார்பியனை சந்தித்த தருணம் இறுதியாக, நாங்கள் அவரைப் பார்த்தோம். பர்ஸான் மஜீத் ஒரு பணக்கார கோல்ப் வீரர் போல் தோற்றமளித்தார். புதிய ஜீன்ஸ், வெளிர்-நீல சட்டை மற்றும் கறுப்பு நிற மேல் கோட் அணிந்திருந்தார். அவர் கைகளை மேசையில் வைத்தபோது, அவரது விரல் நகங்கள் மெனிக்யூர் செய்யப்பட்டிருப்பதைக் கண்டேன். இதற்கிடையில், மூன்று பேர் அருகில் இருந்த மேஜையில் அமர்ந்தனர். அவரது பாதுகாப்பு குழு என்பதை நாங்கள் யூகித்தோம். மீண்டும், அவர் ஒரு குற்ற அமைப்பின் தலைவராக இருப்பதை மறுத்தார். மற்ற கும்பல்கள் தன்னை சிக்க வைக்க முயன்றதாக அவர் கூறினார். "சிலர் தாங்கள் கைது செய்யப்படும்போது, 'நாங்கள் அவருக்காக வேலை செய்கிறோம்' என்று கூறுகிறார்கள். அவர்கள் குறைவான தண்டனையைப் பெற விரும்புகிறார்கள். அதனால் இப்படிச் சொல்கிறார்கள்” என்றார். மற்ற கடத்தல்காரர்களுக்கு பிரிட்டிஷ் கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு அவர்களின் வர்த்தகத்தை மேற்கொள்வது குறித்தும் அவருக்கு கோபம் உள்ளது. "பிரிட்டிஷ் பாஸ்போர்ட்டை வைத்திருந்த பையன் ஒருவன், மூன்று நாட்களில் 170 அல்லது 180 பேரை துருக்கியிலிருந்து இத்தாலிக்கு அனுப்பினான். நான் தொழில் செய்ய வேறு நாட்டிற்கு செல்ல விரும்புகிறேன். என்னால் இங்கு இருக்க முடியாது” என்றார் மஜீத். புலம்பெயர்ந்தோர் இறப்புக்கான அவரது பொறுப்பு குறித்து நாங்கள் கேட்டபோது, அவர் தொலைபேசியில் சொன்னதையே மீண்டும் கூறினார், அவர் பணத்தை எடுத்துக்கொண்டு படகில் இடங்களை மட்டுமே முன்பதிவு செய்தேன் என்று. அவரைப் பொருத்தவரை, ஒரு கடத்தல்காரன் என்பவன் மக்களை படகுகள் மற்றும் லாரிகளில் ஏற்றி அவர்களை சட்டவிரோதமாக கடத்துபவன். "நான் யாரையும் படகில் ஏற்றியதில்லை, யாரையும் கொன்றதில்லை." என்றார் அவர். உரையாடல் முடிந்தது, ஆனால் சுலைமானியாவில் தான் பணிபுரிந்த பணப் பரிமாற்ற அலுவலகத்தைப் பார்க்க ராப்பை அழைத்தார் ஸ்கார்பியன். அது ஒரு சிறிய அலுவலகம், ஜன்னலில் அரபு மொழியில் சில எழுத்துகளும் ஒன்றிரண்டு மொபைல் போன் எண்களும் இருந்தன. மக்கள் பணம் செலுத்த அங்கு வந்தனர். அங்கு இருந்தபோது ஒரு நபர் ஒரு பெட்டி நிறைய பணம் எடுத்துச் செல்வதைக் கண்டதாகக் கூறினார் ராப். இந்த சந்தர்ப்பத்தில், 2016ஆம் ஆண்டில் பல ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பாவிற்குச் சென்ற போது, தான் எவ்வாறு இந்த வணிகத்தில் இறங்கினேன் என்பதைப் பற்றி பேசினார் ஸ்கார்பியன். “யாரும் அந்த மக்களை வற்புறுத்தவில்லை. அவர்கள் விரும்பியே சென்றனர்” என்று அவர் கூறினார். "அவர்கள் கடத்தல்காரர்களிடம், 'தயவுசெய்து, எங்களுக்கு இதைச் செய்யுங்கள்' என்று கெஞ்சிக் கொண்டிருந்தனர். சில சமயங்களில் கடத்தல்காரர்கள், 'கடவுளுக்காக நான் அந்த மக்களுக்கு உதவுவேன்' என்று கூறுகிறார்கள். பின்னர் இது உண்மையல்ல, அது உண்மையல்ல என்று அவர்கள் புகார் கூறுகிறார்கள்” என்கிறார் ஸ்கார்பியன். படக்குறிப்பு,பெல்ஜியத்தில் உள்ள வழக்கறிஞர்களிடமிருந்து பெற்ற தகவல் தாள். 2016 மற்றும் 2019க்கு இடையில், பெல்ஜியம் மற்றும் பிரான்சில் நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கிய இரண்டு முக்கிய நபர்களில் ஒருவராக தான் இருந்ததாக ஸ்கார்பியன் கூறினார், மேலும் அந்த சமயத்தில் அவர் லட்சக்கணக்கான டாலர்களைக் கையாண்டதாக ஒப்புக்கொண்டார். "நான் அவர்களுக்கு வேலை செய்தேன். பணம், இருப்பிடம், பயணிகள், கடத்தல்காரர்கள், இவை அனைத்திற்கும் இடையில் நான் செயல்பட்டேன்” என்று சொல்லும் அவர், தான் ஆட்கள் கடத்தலில் ஈடுபடவில்லை என்று தொடர்ந்து மறுத்தார். ஆனால் அவரது நடவடிக்கைகள் இதற்கு முற்றிலும் முரணானது. ஸ்கார்பியன் அதை உணரவில்லை, ஆனால் அவர் தனது மொபைல் ஃபோனை ஸ்க்ரோல் செய்தபோது, ராப் பின்னால் உள்ள கண்ணாடியில் மொபைல் திரையின் பிரதிபலிப்பைப் பிடித்தார். சில பாஸ்போர்ட் எண்களின் பட்டியலை ராப்பால் பார்க்க முடிந்தது. கடத்தல்காரர்கள் இவற்றை இராக் அதிகாரிகளுக்கு அனுப்புவார்கள் என்று பின்னர் அறிந்தோம். புலம்பெயர்ந்தோர் துருக்கிக்கு செல்ல, போலி விசாக்களை வழங்க இராக் அதிகாரிகளுக்கு லஞ்சம் வழங்கப்படும். அதுதான் நாங்கள் ஸ்கார்பியனைக் கடைசியாகப் பார்த்தது. ஒவ்வொரு கட்டத்திலும், நாங்கள் எங்கள் விசாரணையின் முடிவுகளை இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் உள்ள அதிகாரிகளுடன் பகிர்ந்து கொண்டோம். பெல்ஜியத்தில் உள்ள அரசு வழக்கறிஞர் ஆன் லுகோவியாக், ஸ்கார்பியனுக்கு எதிரான வழக்கில் முக்கிய பங்கு ஆற்றியவர். ஸ்கார்பியன் ஒரு நாள் ஈராக்கில் இருந்து நாடு கடத்தப்படுவார் என்று அவர் நம்புகிறார். "நீங்கள் விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது என்ற சமிக்ஞையை குற்றவாளிக்கு அனுப்புவது மிகவும் முக்கியம். நாங்கள் கண்டிப்பாக அவரை வீழ்த்துவோம்" என்று வழக்கறிஞர் ஆன் லுகோவியாக் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/cp9gw9e8dnjo
-
தமிழர்களின் நீதிக்கான பொறிமுறையை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது - வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி
Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 09:39 AM (எம்.மனோசித்ரா) இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர்வர்கள் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் நீதி கோரி போராடுகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவதில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது. ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். கடந்த செவ்வாயன்று பாராளுமன்ற உரையில் எம்.ஏ.சுமந்திரன், உள்ளக பொறிமுறையின் மூலம் ஒருபோதும் தீர்வு கிடைக்காது என்றும், ரோம் சட்டத்திற்கமைய அரசாங்கம் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார். எதிர்வரும் 19ஆம் திகதியுடன் யுத்தம் நிறைவுப்பெற்று 15 ஆண்டுகள் பூர்த்தியாகின்றது. இவ்வாறானதொரு நிலையில் பொறுப்பு கூறல் விடயத்தில் அரசாங்கத்தின் கடப்பாடு தொடர்ந்தும் விமர்சனத்துக்குட்பட்டதாகவே காணப்படுகிறது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே வெளிவிவகார அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெளிவுபடுத்துகையில், யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரச்சினைகள் உள்ளன. காணாமல் போனோர் அலுவலகத்தில் சென்று தமது உறவுகளை இழந்த மக்கள் அவர்களை தேடித்தருமாறு கோருகின்றனர். அதற்கான பொறிமுறையொன்றை உருவாக்குவது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். ஆனால் அந்த பொறிமுறையை உருவாக்குவதற்கான பொறுப்பினை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது. மாறாக அதனை சர்வதேசத்துக்கு வழங்கினால் உள்நாட்டவர்கள் அதனை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நல்லிணக்க பொறிமுறையானது தமிழ் மக்கள் மாத்திரமின்றி சிங்கள மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இதனை சர்வதேசத்துக்கு வழங்க முடியாது. அது நடைமுறையில் யதார்த்தமானதல்ல. கடந்த செவ்வாய்கிழமை உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே பாராளுமன்றத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டிருக்கக் கூடும். மறுபுறம் உதய கம்மன்பில மற்றும் சரத் வீரசேகர போன்றோர் அவ்வாறு எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆனால் பிரிதொரு தரப்பினர் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் போதுமானவையல்ல என்று கூறுகின்றனர். எனவே இவ்விடயத்தில் பக்க சார்பாக அன்றி நடுநிலையான தீர்வினை வழங்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றார். https://www.virakesari.lk/article/183281
-
ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ வீரர்களைக் கூலிப்படைகளில் அமர்த்தும் மனித கடத்தல் செயற்பாடு
சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்பு படைகளை சேர்ந்த பலர் உயிரிழப்பு : ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரி பாதுகாப்பு சபையில் சாட்சியம் Published By: DIGITAL DESK 7 12 MAY, 2024 | 09:40 AM (லியோ நிரோஷ தர்ஷன்) சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்ற இலங்கை பாதுகாப்பு படைகளை சேர்ந்த பலர் உயிரிழந்துள்ளதாக தேசிய பாதுகாப்பு சபையில் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சாட்சியமளித்த ஒய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி, ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்று மீண்டும் இலங்கைக்கு தப்பித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்ற தேசிய பாதுகாப்பு சபை கூட்டத்தின் போதே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டது. அங்கு மேலும் குறிப்பிடுகையில், இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப்பெற்ற அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளனர். இவர்களை போரில் தொடர்புப்படுத்தியவர்கள் குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாதுகாப்பு சபையில் வலியுறுத்தினார். இலங்கை பாதுகாப்பு படைகளை சார்ந்தவர்களை ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்க செய்தவர்கள் தொடர்பில் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான தயாசிறி ஜயசேகர மற்றும் காமினி வலேபொட ஆகியோரையும் அன்றைய தினம் பாதுகாப்பு சபை கூட்டத்திற்கு வரவழைக்கப்பட்டு தகவல்கள் கோரப்பட்டது. ஏனெனில் குறித்த சம்பவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் பல தகவல்களை ஏற்கனவே வெளியிட்டிருந்தனர். இதன் பிரகாரமே அவர்கள் அழைக்கப்பட்டனர். இதன்போது சட்டவிரோதமான முறையில் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்று அங்கிருந்து மீண்டும் இலங்கைக்கு தப்பிவந்த ஒய்வுப்பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் குறித்து தகவல்கள் வழங்கப்பட்டது. உடனடியாக தொலைப்பேசியில் தொடர்புக்கொண்ட பாதுகாப்பு சபை அதிகாரிகள், முழு விபரத்தையும் கேட்டறிந்தனர். குறித்த இராணுவ அதிகாரி வழங்கிய தகவல்களுக்கு அமைய, இலங்கை பாதுகாப்பு படைகளின் ஓய்வுப்பெற்ற பல அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ரஷ்ய - உக்ரைன் போரில் பங்கேற்றுள்ளதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் உறுதிப்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து மேலதிக விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு முப்படைகளுக்கும் ஜனாதிபதி உத்தரவிட்டதுடன், நாட்டு மக்களை தெளிவுப்படுத்தி ரஷ்ய - உக்ரைன் போரில் இலங்கையர்கள் பங்கேற்பதை தவிர்க்க ஊடகங்களின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தினித் சிந்தக கருணாரட்னவுக்கு ஆலோசனை வழங்கினார். https://www.virakesari.lk/article/183284
-
முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நினைவேந்தல் நிகழ்வு - ஒன்றுபட்டு தமிழர்களாக நினைவேந்தலில் ஒன்றிணைய அழைப்பு
12 MAY, 2024 | 09:49 AM இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் எதிர்வரும் 18 ஆம் திகதி முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும் என்றும் எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாப சுயவிளம்பரப் படுத்தல்களைக் கடந்து பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. நினைவேந்தல் நிகழ்வு குறித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுகட்டமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது, முள்ளிவாய்க்கால் மண்ணில் தமிழினப்படுகொலை உச்சந்தொட்டு இவ்வருடம் 15 ஆவது ஆண்டு. ஈழத்தமிழினத்தின் அடக்குமுறைக்கெதிரான விடுதலைப்போராட்டத்தின் ஆயுதப் போராட்டப் பரிமாணத்தை பல்வேறு சக்திகளின் துணை கொண்டு இலங்கை அரசு மௌனிக்கச் செய்து இன்றுடன் 15 ஆண்டுகள் நிறைவடைகின்றது. தமிழ்த்தேசியத்தின் நம்பிக்கையில் உறுதி கொண்டு தமிழர் விடுதலைப்போராட்டத்தின் வடிவங்களை மாற்றி தொடர்ந்தும் விடுதலைக்காக ஈழத்தமிழினம் பயணிக்கின்றது என்பது, விடுதலையின் மீது கொண்ட பேரவாவின் பிரதிபலிப்பு. ஈழத்தமிழினத்தின் நீதி வேண்டிய பயணமும் தொடர் போராட்ட முன்னெடுப்புகளும் நீதியின் கதவை எப்போதுமே தட்டிக்கொண்டேயிருக்கப்போகிறது. மனித உரிமைக்காவலர்கள் என்று மார் தட்டிக்கொள்பவர்களின் வெள்ளைச்சாயம் தமிழினப்படுகொலையில் வெளுக்கத்தொடங்கி தற்போது காசாவில் அரங்கேற்றப்பட்டுக்கொண்டிருக்கும் பலஸ்தீனப்படுகொலையில் கட்டங்கட்டமாக அப்பட்டமாக தோலுரிக்கப்படுகிறது. மனித உரிமை சாசனத்தை ஒரு கையிலும்இகொலைக்கருவியை இன்னொரு கையிலும் கொண்டு சனநாயகம் போதிப்பவர்களின் அபத்தம் வெளிக்கிளம்புகிறது. ஈழத்தமிழினம் நினைவுகளை மட்டும் ஆயுதமாக்கவில்லை.விடுதலைக்கனவினை நம்பிக்கை இயங்கியலாக்கி இலக்கு நோக்கிப் பயணிக்கின்றது. நீதிக்கான தொடர் தேடலும் ஓர் ஆயுதமே என்பதை ஆர்மேனியா தொடக்கம் பலஸ்தீனம் வரைக்கும் விடுதலைப்போராட்டங்களின் வரலாறு எமக்கு சொல்லித்தருகின்றது. பேரவலத்தை நினைவு கூருவதற்கு அப்பால்இ ஈழத்தமிழினம் விடுதலைக்காய் தியாகித்தவர்களின் கனவுகளின் நினைவுகளைச் சுமந்து பயணிக்கின்றது. முள்ளிவாய்க்கால் ஒரு பேரவலத்தின் குறியீடு மட்டுமல்ல.அடக்குமுறை எதிர்ப்பின் நம்பிக்கையின் குறியீடு விடுதலைப்போராட்டத்தை வெற்றிஃதோல்வி என இருமைக்குள் வரையறுத்துவிட முடியாது. 15வது ஆண்டின் நினைவேந்தல் ஒழுங்குமுறைகளை தயார் செய்யும்ஈழத்தமிழினம்இ முள்ளிவாய்க்கால் தரும் விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டிய கால கட்டத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது. விடுதலை நம்பிக்கையின் நினைவுகளை மக்கள் மயப்படுத்துவதென்பதுஇ ஒரு அமைப்பின் நிகழ்ச்சித்திட்டமல்ல. ஒவ்வொரு ஈழத்தமிழனதும் வரலாற்றுக்கடமையும் உரிமையும் கூட. இதை நினைவில் கொண்டு இன்றுவரை நீதி வழங்கப்படாத இனப்படுகொலையின் இவ்வாண்டிற்கான நினைவேந்தல் 05. 18 இல் முற்பகல் 10.30 மணிக்கு முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தில் நடைபெறும். எனவே அனைவரும் பேதங்களைத் துறந்து சுயலாபசுய விளம்பரப் படுத்தல்களைக் கடந்து எமது பொது நிகழ்ச்சி நிரலில் ஒன்றுபட்டு தமிழர்களாக இந் நினைவேந்தலில் ஒன்றிணையுமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம். அத்துடன் அன்று மாலை 6மணிக்கு அனைத்து ஆலயங்களிலும் கோவில்களிலும் மணி ஒலி எழுப்புவதுடன் அன்று இயலுமான வரை முள்ளிவாய்க்கால் கஞ்சியையும் பரிமாறி தமிழின அழிப்பினை நினைவு கூருவோம். https://www.virakesari.lk/article/183285
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
KKR vs MI: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக கொல்கத்தா தகுதி - திருப்புமுனை ஏற்படுத்திய ரஸல், ராணா பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் 2024 சீசனில் இதுவரை எந்த அணியும் ப்ளே ஆஃப் சுற்றை அதிகாரபூர்வமாக உறுதி செய்யாமல் இருந்தன. ப்ளே ஆஃப் சுற்றுக்கு நெருக்கமாக இருந்தபோதிலும், அதை உறுதி செய்ய ஏதாவது ஒரு வெற்றி தேவையாகவே இருந்து வந்தது. அந்த வெற்றியை நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பெற்றதையடுத்து, ப்ளே ஆஃப் சுற்றுக்கு 18 புள்ளிகளுடன் முதல் அணியாகத் தகுதி பெற்றது. அதேநேரம், முதல் இரு இடங்களைப் பிடிக்கவும் கொல்கத்தாவுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 60வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. மழையால் ஆட்டம் 45 நிமிடங்கள் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 16 ஓவர்கள் கொண்ட ஆட்டமாக நடத்தப்பட்டது. முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 16 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் சேர்த்தது. 158 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்து 18 ரன்களில் தோல்வி அடைந்தது. முதல் இரு இடங்களில் கொல்கத்தா இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 12 போட்டிகளில் 9 வெற்றி 3 தோல்விகளைப் பெற்று 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளே ஆஃப் சுற்றையும் முதல் அணியாக உறுதி செய்தது. நிகர ரன்ரேட்டில் கொல்கத்தா அணி வலுவாக 1.428 என இருக்கிறது. கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களிலும் சாதாரணமாக வென்றாலே 22 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்க வைக்கும். ஒருவேளை இரு ஆட்டங்களிலும் தோல்வி அடையும்பட்சத்தில் 18 புள்ளிகளுடன் இருந்தாலும், நிகர ரன்ரேட்டை வலுவாக வைத்திருப்பதால், ப்ளே ஆஃப் சுற்றில் இருப்பதற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை ஒரு ஆட்டத்தில் தோல்வி அடைந்து, மற்றொரு ஆட்டத்தில் வென்றால்கூட கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தைப் பிடிக்கலாம். பட மூலாதாரம்,SPORTZPICS ஆனால், அதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தனக்கிருக்கும் கடைசி 3 லீக் ஆட்டங்களில் ஒன்றில் தோற்று மற்ற இரு ஆட்டங்களில் வெல்ல வேண்டும். ஒருவேளை கொல்கத்தா அணி 20 புள்ளிகளுடன் முடித்து நிகர ரன்ரேட்டில் வலுவாக இருந்தபோதிலும், ராஜஸ்தான் அணி 22 புள்ளிகளுடன் முடித்தால் ராஜஸ்தான் அணிதான் முதலிடத்தைப் பிடிக்கும். ஒருவேளை கொல்கத்தா அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடனும், ராஜஸ்தான் அணியும் தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்று 22 புள்ளிகளுடன் முடித்தால், நிகர ரன்ரேட் அடிப்படையில் முதல் இரு இடங்கள் முடிவு செய்யப்படும். அந்த வகையில் தற்போது ராஜஸ்தான் அணியைவிட வலுவாக கொல்கத்தா இருக்கிறது. அடுத்த இரு வெற்றிகளால் கொல்கத்தா அணி இன்னும் புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டை வலுப்படுத்தும். ஆனால், ராஜஸ்தான் அணி 0.426 என கொல்கத்தா ரன்ரேட்டைவிட ஒரு புள்ளி குறைவாக இருப்பதால் நிகர ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தைப் பிடிப்பது மாபெரும் வெற்றிகளைப் பெற்றால்தான் சாத்தியம். ஆதலால், கொல்கத்தா அணி இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே முதல் இரு இடங்களைப் பிடிப்பது உறுதி. மும்பை அணிதான் ஐபிஎல் தொடரிலிருந்து முதல் அணியாக வெளியேறியது. இருப்பினும் ஆறுதல் வெற்றிக்காக நேற்று களமிறங்கி 9வது தோல்வியைச் சந்தித்தது. மும்பை அணி இதுவரை 13 போட்டிகளில் 4 வெற்றி, 9 தோல்வி என 8 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது. தனது கடைசி லீக்கில் லக்னெள அணியை மும்பை அணி வரும் 17ஆம் தேதி சந்திக்கிறது. இந்த ஆட்டத்தில் ஒருவேளை மும்பை அணி வென்றால், லக்னெளவின் ப்ளே ஆஃப் கனவு முடிவுக்கு வந்துவிடும். ஒருவேளை லக்னெள அணி வென்றால், ப்ளே ஆஃப் வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும். தமிழக வீரர் வருணுக்கு ஆட்டநாயன் விருது பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது பந்துவீச்சாளர்கள்தான். ஈரப்பதமான ஆடுகளத்தை நன்றாகப் பயன்படுத்தி, மும்பை பேட்டர்களை ரன்சேர்க்கவிடாமல் திணறவிட்டனர். குறிப்பாக சுனில் நரைன், தமிழக வீரர் வருண் சக்ரவர்த்தி இருவரும் மும்பை பேட்டர்களின் கைகளைக் கட்டிப்போடும் வகையில் பந்து வீசினர். இருவரும் சேர்ந்து 7 ஓவர்கள் வீசி 38 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சராசரியாக ஓவருக்கு 5 ரன்கள் மட்டுமே இருவரும் விட்டுக்கொடுத்தனர். இதில் வருண் சக்ரவரத்தி 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது வென்றார். குறிப்பாக பவர்ப்ளே ஓவர்கள் முடிந்து, அடுத்த 5 ஓவர்களை வருண், நரைன் வீசி வெறும் 22 ரன்கள் மட்டுமே அடிக்க மும்பை பேட்டர்களை அனுமதித்து, 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி பெரும் நெருக்கடி அளித்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ரஸல், ராணா திருப்புமுனை ஆல்ரவுண்டர் ஆந்த்ரே ரஸலும் பந்துவீச்சில் நேற்று 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஏற்கெனவே நரைன், வருண் பந்துவீச்சில் ரன் சேர்க்க முடியாமல் சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட் திணறி வந்தனர். இதில் ரஸலும் தனது பந்துவீச்சில் பல்வேறு வேரியேஷன்களை வெளிப்படுத்தி, ஸ்லோவர் பால், நக்குல் பால், ஸ்லோ பவுன்சர் என வீசி ஸ்கை பேட்டரை திணறவிட்டார். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த ஸ்கை 11 ரன்களில் ரமன்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து ரஸல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதேபோல டிம் டேவிட் வந்தவேகத்தில் ரஸல் பந்துவீச்சில் டக்அவுட் ஆகி வெளியேறினார். இரு பெரிய விக்கெட்டுகளை வீழ்த்தி ரஸல் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். கடைசி ஓவரில் மும்பை அணிக்கு வெற்றியைத் தேடித் தரக் காத்திருந்த திலக் வர்மா, நமன் திர் இருவரையும் ஹர்சித் ராணா வெளியேற்றினார். இந்த 4 பந்துவீச்சாளர்கள்தான் கொல்கத்தா அணி வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்து டிபெண்ட் செய்து கொடுத்தனர். கொல்கத்தாவின் பேட்டிங் எப்படி இருந்தது? பட மூலாதாரம்,SPORTZPICS கொல்கத்தா அணிக்கு வழக்கமாக அதிரடியான தொடக்கம் அளிக்கும் நரைன்(0), பில் சால்ட் (6) ஸ்ரேயாஸ்(7) மிகச் சொற்ப ரன்களில் வெளியேறினர். பவர்ப்ளேவில் கொல்கத்தா 3 விக்கெட்டுகளை இழந்து 50 ரன்கள் மட்டுமே சேர்த்தது. வெங்கடேஷ்(42), நிதிஷ் ராணா(33), ரஸல்(20), ரிங்கு சிங்(20) ஆகியோர் சிறிய கேமியோ ஆடி சேர்த்த ரன்கள்தான் அந்த அணியின் அதிகபட்ச ஸ்கோர். எந்த பேட்டரும் அரைசதம்கூட அடிக்கவில்லை, அனைத்து வீரர்களின் பங்களிப்பால் 157 ரன்கள் எனும் ஸ்கோரை கொல்கத்தா அடைந்தது. பும்ராவின் மேஜிக் பந்துவீச்சு ஜஸ்பிரித் பும்ராவின் பந்துவீச்சை நேற்று எதிர்கொண்ட சுனில் நரைன் நிச்சயமாக சில வினாடிகள் திகைத்திருப்பார். பும்ரா வீசிய பந்து யார்க்கராக ஸ்டெம்பை பதம் பார்க்கும் என்று நரைன் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார். இந்த பந்துக்கு எந்தப் பதிலும் இல்லாமல் நரைன் டக்-அவுட்டில் வெளியேறினார். இந்த சீசனில் நரைன் டக்-அவுட் ஆவது இதுதான் முதல்முறை. பும்ரா வீசிய முதல் ஓவர் முதல் பந்து, பும்ராவின் கையில் இருந்து ரிலீஸ் ஆகும்போது அவுட்சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கிச் சென்றது. ஆனால், கண்ணிமைக்கும் நேரத்தில் காற்றில் ஸ்விங் ஆகி நரைனின் ஆஃப் ஸ்டெம்பை தட்டிவிட்டு க்ளீன் போல்டாக்கியது. அவுட் சைட் ஆஃப் ஸ்டெம்ப் நோக்கி பந்து செல்கிறது என நினைத்து பேட்டை தூக்கியவாறு நரைன் நிற்க பந்து ஸ்டெம்பை தட்டிவிட்டு சென்றதைப் பார்த்து நரைன் சில வினாடிகள் திகைத்து நின்றார். பும்ரா 4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ‘நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை’ பட மூலாதாரம்,SPORTZPICS மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில், “எங்களுக்கு இந்த சீசனும், இந்த ஆட்டத்தின் தோல்வியும் கடினமாக இருந்தது. பேட்டிங்கில் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும் அதை நடுவரிசையில் வந்தவர்கள் பயன்படுத்தாதற்கு விலை கொடுத்துவிட்டோம். ஆடுகளம் கண்டுபிடிக்க முடியாத அளவு வித்தியாசமாக இருந்தது, ஆனால், தருணம்(மொமென்ட்டம்) என்பது முக்கியமானது, அந்தத் தருணத்தை, வாய்ப்புகளை நாங்கள் கைப்பற்ற முடியவில்லை." "இந்தச் சூழலுக்கு இந்த இலக்கு அடையக்கூடியதுதான். எங்கள் பந்துவீச்சாளர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். மழை காரணமாக, பந்துகள் பவுண்டரி சென்றாலே ஈரமாகிவிடுகிறது. கொல்கத்தா அணியும் சிறப்பாகப் பந்துவீச்சில் செயல்பட்டனர். அடுத்து வரும் ஆட்டத்தை அனுபவித்து விளையாட வேண்டும், நல்ல கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ஆரம்பத்தில் இருந்தே குறிக்கோளாக இருக்கிறது. ஆனால், நாங்கள் போதுமான அளவு நல்ல கிரிக்கெட்டை இந்த சீசனில் விளையாடவில்லை,” எனத் தெரிவித்தார் ஃபார்ம் இழந்து தவிக்கும் ரோஹித் சர்மா மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடந்த சில போட்டிகளாகவே ஃபார்ம் இல்லாமல் தவித்து வருகிறார். இந்த நிலை நேற்றைய ஆட்டத்திலும் தொடர்ந்தது. இஷான் கிஷன் அதிரடியாக ஆடி பவுண்டரிகளை அடித்து வரும் நிலையில் ரோஹித் சர்மா விருப்பமில்லாமல் பேட் செய்தார். அதிலும் குறிப்பாக வருண் பந்துவீச்சில் ஸ்வீப் ஷாட் அடிக்க பலமுறை ரோஹித் முயன்றும் பந்து அவருக்கு மீட் ஆகவில்லை. பவர்ப்ளே ஓவர்கள் முழுவதும் களத்தில் இருந்த ரோஹித் சர்மா பேட்டிலிருந்து ரன்கள் வருவது நேற்று கடினமாக இருந்தது. 24 பந்துகளைச் சந்தித்த ரோஹித் சர்மா 19 ரன்கள் சேர்த்தார் இதில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கும். பட மூலாதாரம்,SPORTZPICS ரோஹித்தின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 79 ஆக இருந்தது. இஷான் கிஷன் அதிரடியாக பேட்டை சுழற்றியதால்தான் பவர்ப்ளேவில் மும்பை 59 ரன்கள் சேர்த்தது. டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் நிலையில் ரோஹித் சர்மா இப்படி ஃபார்மின்றி தவிப்பது இந்திய அணியின் நிலையை கேள்விக்குள்ளாக்குகிறது. மறுபுறம் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கிலும் பெரிதாக ரன் சேர்க்கவில்லை ஃபார்மிலும் இல்லை, பந்துவீச்சிலும் ஜொலிக்கவில்லை. ஆனால், இந்திய அணிக்கு துணை கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டுள்ளதும் பல்வேறு கேள்விகளை கிரிக்கெட் விமர்சகர்களிடையே எழுப்பியுள்ளது. நம்பிக்கையளித்த பேட்டர்கள் சூர்யகுமார் யாதவ்(11) நடுவரிசை பேட்டர்கள் ஹர்திக் பாண்டியா(2), டிம் டேவிட்(0), நேஹல் வதேரா(3), ஆட்டமிழந்தாலும், திலக் வர்மா, நன் திர் இருவரும் மும்பை அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல முயன்றனர். கடைசி 18 பந்துகளில் 57 ரன்கள் மும்பை வெற்றிக்குத் தேவைப்பட்டது. ஐபிஎல் டி20 தொடரில் இந்த ஸ்கோர் எட்டக்கூடியதுதான். ஹர்சித் ராணா வீசிய 14வது ஓவரில் திலக் வர்மா சிக்ஸர், பவுண்டரி என 16 ரன்கள் சேர்த்தார். நமன் திர் உற்சாகமடைந்து, ரஸல் வீசிய 15வது ஓவரில் இரு சிக்ஸர் உள்பட 19 ரன்கள் சேர்த்தார். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்டது. திலக் வர்மா, நமன்திர் மீது நம்பிக்கையும் ரசிகர்களுக்கு ஏற்பட்டது. ஆனால், ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் 3 பந்துகளில் திலக் வர்மா(32), நமன்திர்(17) இருவரும் விக்கெட்டை இழக்க மும்பையின் கதை முடிந்தது. https://www.bbc.com/tamil/articles/cnd6jw30dj9o
-
வவுனியாவில் 15 வயது சிறுமிக்கு போதைமருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வு : உடந்தையாக செயற்பட்ட பெண் உட்பட நால்வர் கைது
12 MAY, 2024 | 07:20 AM வவுனியா நகரை அண்மித்த பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் வைத்து 15 வயது சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். வவுனியா, ஓமந்தைப் பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவரை வவுனியா நகரையண்டிய பகுதியில் உள்ள விடுதி ஒன்றிற்க்கு அழைத்து சென்ற இளைஞர் ஒருவர் குறித்த சிறுமிக்கு பாேதை மருந்து கொடுத்து கூட்டு வன்புணர்வில் ஈடுபட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சிறுமியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து பெற்றோர் சிறுமியிடம் விசாரித்ததில் சிறுமி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்களை அணுகிய சிறுமியின் பெற்றோர் அவர்களின் வழிப்படுத்தலில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். முறைப்பாடு தொடர்பில் விசாரணை செய்த வவுனியா பொலிசார் கூட்டு வன்புணர்வுக்கு உடந்தையாக செயற்பட்டதாக அவரது உறவினரான 20 வயது பெண் ஒருவரும் வன்புணர்வில் ஈடுபட்ட சந்தேகத்தில் வவுனியா நகரப் பகுதியில் உள்ள தொலைபேசி விற்பனை நிலையத்தில் கடமையாற்றும் இளைஞன் உட்பட மூன்று இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரும் வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு நீதிமன்ற உத்தரவுக்கமைய தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சிறுமியிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/183279
-
முள்ளிவாய்க்காலின் 15ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சுமந்திரன் விடுத்துள்ள அறைகூவல்!
12 MAY, 2024 | 10:19 AM 'முக்கால் நூற்றாண்டு போராட்டமும் எமது தேசத்தின் எதிர்காலமும்' என்ற தொனியில் முள்ளிவாய்க்காலின் 15ஆவது ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு சுமந்திரன் அறைகூவலொன்றை விடுத்துள்ளார். இது குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2009 மே மாதம் நிகழ்ந்த முள்ளிவாய்க்கால் படுகொலைகளை இந்த வாரம் நாம் நினைவுகூருகிறோம். யுத்தத்தின் இறுதிக்கட்டத்திலே எந்தத் திசையிலும் தப்பியோட முடியாமல், தொடர்ச்சியாக அன்பானவர்களை இழந்தவண்ணமாக வெறுங்கையர்களாக எமது மக்கள், உணவில்லாமல், கஞ்சி மட்டும் குடித்தபடி, பாரிய நெருக்கடியிலும் துயரத்திலும் கழித்த நாட்கள் இவை. துப்பாக்கி, வெடிகுண்டு சத்தங்கள் மௌனித்த பின்பு, தாம் அகப்பட்டிருந்த இடத்திலிருந்து மக்கள் வெளியேறியபோது, பலர் அரச படைகளினால் சுட்டுக்கொல்லப்பட்டதும், மற்றவர்கள் பல விதங்களில் துன்புறுத்தப்பட்டதும் அனைவரும் அறிந்த உண்மை. குறித்த வயதெல்லைக்குட்பட்ட ஆண்களும் பெண்களும் அரச படைகளிடம் சரணடைய வேண்டுமென வற்புறுத்தப்பட்டு தங்கள் உறவினர்களால் அப்படியாகக் கையளிக்கப்பட்டவர்கள் இன்று வரை காணாமலாக்கப்பட்டிருக்கின்றார்கள். எஞ்சியவர்கள் முட்கம்பி வேலிகளுக்குள் கைதிகளைப் போல அடைக்கப்பட்டு, ஒன்றரை வருடத்திற்கு மேல் சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டிருந்தார்கள். இத்தனை கொடூரங்களும் உலகமே பார்த்திருக்க அரங்கேற்றப்பட்டு 15 வருடங்கள் இன்று நிறைவடைகின்றன. இன்று வரை இந்த சர்வதேச குற்றங்களுக்காக ஒருவருக்கெதிராகத் தானும் வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை. ஒருவரும் குற்றவாளியாக காணப்படவுமில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை 2014ஆம் ஆண்டு OISL என்ற முழுமையான சர்வதேச விசாரணை ஒன்றை நடாத்தி, அதன் அறிக்கையை 2015 செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையிலும் அதற்கு முன்னர் ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கொடுக்கப்பட்ட 2012 மார்ச் 31 திகதியிட்ட நிபுணர் குழுவின் அறிக்கையிலும் யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பல சர்வதேச குற்றங்கள் இழைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும், அதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன்நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 2015 அக்டோபர் 1ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஸ்ரீலங்கா அரச அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட 30/1 என்ற தீர்மானத்தில் சர்வதேச விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள், வழக்கு தொடுநர்கள் மற்றும் நீதிபதிகளினுடைய பங்கேற்புடன் நீதிமன்ற பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதாக உறுதி கூறப்பட்டிருந்த போதிலும், ஸ்ரீலங்கா அரசு பின்னர் அந்த வாக்குறுதியிலிருந்து பின்வாங்கிவிட்டது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்த பின்னர் கடந்த 15 ஆண்டு காலத்தில் தமிழர்களின் அரசியல், சமூக, பொருளாதார நிலைப்பாடுகளில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றங்கள் சம்பந்தமாக சிந்தித்து செயலாற்றுவதற்கான பொருத்தமானதொரு தருணம் இதுவென்று நான் நினைக்கின்றேன். எமது அரசியல் விடுதலைக்கென்றே கால் நூற்றாண்டுக்கு கூடுதலாக ஆயுதப் போராட்டமொன்று நிகழ்த்தப்பட்டது. ஆயுத முனையில் அறம் சார்ந்த அரசியல் விடுதலையை பெற முடியாது என்பது எனது தனிப்பட்ட நம்பிக்கையாக இருந்தபோதிலும், தம் மீது மோசமான அடக்கு முறைகளையும் வன்முறையையும் இலங்கை அரசு பிரயோகித்த பின்னணியில் வேறு வழியின்றி தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதற்கு அன்று எடுத்த தீர்மானத்தை இன்று வேறொரு சூழ்நிலையிலிருந்து நாம் மதிப்பிடவோ, குறை கூறவோ முடியாதென்பதை தொடர்ச்சியாக கூறி வந்துள்ளேன். அத்தோடு, அத்தகைய ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எவ்வித சுயநல சிந்தனையும் இன்றி எமக்காக செய்த அர்ப்பணிப்புகளும் உயிர்த் தியாகங்களும் எக்காலத்திலும் எமது சமூகத்தில் மிக உயர்ந்த பங்களிப்பாக கருதப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டை நான் தொடர்ச்சியாக வலியுறுத்தி இருக்கிறேன். ஆனால் அத்தகைய தியாகம் மிக்க ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்பு, எத்தனையோ பேரிழப்புகளை சந்தித்த பின்பு, மற்றுமொரு முறை ஆயுதம் ஏந்திப் போராடுவதை இலங்கையில் வாழும் எந்தத் தமிழ் மகளும் தமிழ் மகனும் ஒரு தெரிவாக நினைத்துப் பார்ப்பதே இல்லை. அப்படியான பின்புலத்தில் கடந்த 15 வருட காலத்தில் எங்களுடைய அரசியல், சமூக, பொருளாதார விடுதலைக்காக நாம் மேற்கொண்ட அணுகுமுறைகள் வெற்றியளித்துள்ளனவா என்ற கேள்வியின் அடிப்படையில் சுய விமர்சனத்தை மேற்கொள்வது அத்தியாவசியமானது என்று கருதுகிறேன். ஒரு கணம் எமது அரசியல் உரிமைப் போராட்டத்தை ஒரு புறம் வைத்துவிட்டு இக்காலகட்டத்தில் எமது சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாடுகளை நோக்குவோமாயின், நாம் பாரிய பின்னடைவுகளை தொடர்ச்சியாக சந்தித்துக் கொண்டிருக்கிறோம் என்பது புலனாகும். இளையவர்கள் மத்தியிலே பரவலாகி இருக்கின்ற வாள்வெட்டுக்குழுக்கள் போன்ற வன்முறைக் கலாசாரமும், போதைவஸ்து பாவனையும் இதற்கான சான்றாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, இவை எமது இளைஞர், யுவதிகளை வலுவிழக்கச் செய்வதற்கான முயற்சிகளாகும். ஆட்சியாளர்களே இவற்றை ஊக்குவிக்கிறார்கள் என்பதில் உண்மை இருக்கும்போதிலும், இவற்றைக் கட்டுப்படுத்தும் முதலாவது பொறுப்பு எமது அரசியல் மற்றும் சமூக தலைவர்களிடம் தான் இருக்கின்றது. வன்முறைக்கும் போதைப் பாவனைக்கும் சினிமா போன்ற வெளிசக்திகள் பெரும் செல்வாக்கை செலுத்தினாலும் கூட, அந்த தாக்கங்களை மழுங்கடிக்கின்ற விதமான செயற்பாடொன்றையும் முன்னெடுக்காதது எமது தவறேயாகும். இந்தப் பின்னடைவுகள் தொடருமாக இருந்தால், அரசியல் விடுதலை ஒன்று எமக்கு கிடைத்தாலும் கூட அதைப் பொறுப்போடு நிர்வகிக்கின்ற திறன் அற்றவர்களாக எமது இளைய சமுதாயத்தினர் மாறியிருப்பார்கள். எமது இளையவர்கள் கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டுத்துறைகளில் தங்களது அபரிமிதமான திறனை உள்நாட்டிலும் பிராந்தியத்திலும், சர்வதேச மட்டத்திலும் கூட அண்மைய காலங்களில் வெளிப்படுத்தியிருப்பது எமக்கு பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய விடயம். இது இளைய சமுதாயத்தின் திறமைகளை மேலும் வளர்த்துக்கொள்வதற்கு நாம் மூலதனங்களை செய்ய வேண்டும் என்பதை அழுத்திச் சொல்கின்றன. இதைப் போலவே பொருளாதார ரீதியில் மிக மோசமாக நலிவடைந்திருக்கும் எமது மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு புலம்பெயர்ந்திருக்கின்ற எமது உறவுகளின் முயற்சிகளின் பயனாக பல செயற்றிட்டங்கள் ஆங்காங்கே செய்யப்பட்டாலும் பாரியளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்கி எமது இளைஞர் யுவதிகள் வெளிநாடு செல்லாமல் இங்கேயே கண்ணியமாக சுய கௌரவத்தோடு வாழக்கூடிய சூழ்நிலையை நாம் ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்பதுதான் உண்மை. கடந்த பொதுத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் இளைஞர்கள் வாக்களித்த முறை இதனை அம்பலப்படுத்தியது. மேற்சொன்ன இரண்டு காரணிகளும் எமது அரசியல் உரிமைகளுக்கு அப்பாற்பட்டவை அல்ல. மாறாக, எமது அரசியல் உரிமைகளிலிருந்து பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்தவை. எமது மக்களுக்கான விடுதலை பாதை என்பது இப்படியான முழுமையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்க வேண்டும். அப்படியானதொரு அணுகுமுறையை கடந்த 15 ஆண்டுகளாக நாம் பின்பற்ற தவறிவிட்டோம் என்பதே கசப்பான உண்மை. சென்ற பாராளுமன்ற காலம் 2015 - 2019 மட்டும் இதற்கு சற்று விதிவிலக்கானது. அந்த காலகட்டத்தில் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த பாரிய அளவிலான நிலங்கள் விடுவிக்கப்பட்டதும், பல தசாப்தங்களாக புறக்கணிக்கப்பட்டிருந்த எமது பிரதேசங்களில் அபிவிருத்திக்கும் பொருளாதார மீளெழுச்சிக்குமென முக்கியமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதை நாம் மறந்துவிடலாகாது. ஆனால் அதற்குப் பின்னர் நில ஆக்கிரமிப்புக்கள் தொடர்ந்து மிக வேகமாக நடைபெறுவதையும் பல்வேறு அடக்குமுறைகள் எம்மீது பிரயோகிக்கப்படுவதையும் நாம் நன்கு அறிவோம். இவற்றை தடுப்பதென்பது, நாம் ஒரு தேசமாக இத்தீவிலே தொடர்ந்து வாழக்கூடிய எமது இருப்பை தக்கவைக்கின்ற, "தமிழ்த் தேசியத்தை" பாதுகாக்கின்ற பிரதானமான செயற்பாடாகும். வெற்றுக் கோஷங்களையும், போராட்ட மனநிலையை தூண்டுகின்ற பேச்சுக்களையும் நடைமுறை சாத்தியமற்ற தீர்மானங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டும் எமது மக்களுக்கான விடுதலைப் பயணத்தை ஒரு அங்குலம் கூட முன்நோக்கி நகர்த்த முடியாது. நாம் ஒரு தனி தேசமென்பதை உரக்கச் சொல்லுகிற அதேவேளையில் ஒரு தேசமாக வாழ்வதற்கு வேண்டிய அணுகுமுறைகளை நாம் கைவிடக்கூடாது. தந்தை செல்வாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் நாங்கள் வன்முறையையோ அதன் வெவ்வேறு பிரதிபலிப்புக்களையோ முற்றாக தவிர்த்துக்கொள்ளல் வேண்டும். எமது இளைஞர் யுவதிகளினதும், போரிலே மடிந்தவர்களினதும் உயிர்த்தியாகங்கள் வீணாக போகாதிருக்க வேண்டுமேயானால் வன்முறைக்கு தூண்டாத எமது அணுகுமுறை தொடர்பாக எமது சிந்தனையிலும் பேச்சிலும் தெளிவு இருத்தல் வேண்டும். 1957ஆம் ஆண்டு வன்முறையில் ஈடுபடத் தொடங்கியிருந்த இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வாலிப முன்னணியினருக்கு தந்தை செல்வா கூறிய எச்சரிக்கை: "தமிழ் மக்களுக்கு நல்லது கொண்டுவரப் புறப்பட்ட நாங்கள், நாசம் கொண்டுவந்த கதையாக மாறிவிடும்" என்பது இன்றைய சூழ்நிலைக்கும் சாலப்பொருந்தும். எமது அரசியல் நிலைப்பாட்டில் உறுதியாக நிலைத்திருந்து எமது தன்மானத்துக்கும் சுய கெளரவத்துக்கும் ஏற்ற விதமான ஆட்சி மாற்றத்துக்கு சாத்வீக வழியில் போராடுகின்ற அதேவேளையில், தேர்தல் நேரங்களிலும் மற்ற தருணங்களிலும் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை உன்னிப்பான இராஜதந்திர நோக்கோடு நாம் கையாள வேண்டும். ஒரு ஜனநாயக அமைப்பிலே, எண்ணிக்கையிலே குறைவானவர்களாக இருக்கின்ற ஒரு தேசம் கைக்கொள்ள வேண்டிய அத்தியாவசிய அணுகுமுறை அது. நாம் வலியுறுத்துகின்ற தமிழ் தேசிய பிரச்சினை, இலங்கையின் பிரதானமான தேசிய பிரச்சினை என்பதை இலங்கையில் வாழும் மற்றைய சமூகத்தினருக்கும் நாம் பொருத்தமான முறைகளில் விளங்கப்படுத்த வேண்டும். எம்மை ஒரு தேசமாக அங்கீகரிப்பது தமக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்கின்ற உண்மையை அவர்களும் உணரச்செய்தல் வேண்டும். எமது போராட்டம் நீதிக்கான போராட்டம்; நியாயமான அரசியல் உரிமைகளுக்கான போராட்டம். அநீதி, அநியாயம் ஒருபோதும் வென்றதில்லை. எமது போராட்டம் நீண்ட நெடியதானதாக இருந்தாலும், அற வழியில் சாத்வீக முறைகளைக் கைக்கொண்டு அதிலிருந்து அணுவளவும் பிசகாமல் போராடுவோமானால் எமக்கான நீதி கிடைத்தேயாக வேண்டும். அப்படியானதொரு தூய்மையான அறவழிப் போராட்டத்தில் இணைந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். எதிர்காலத்தை நோக்கி நம்பிக்கையோடு சேர்ந்து பயணிப்போம்! https://www.virakesari.lk/article/183290
-
பூமியைத் தாக்கும் சூரிய புயல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
கிராஃபிக்ஸ் அல்ல, நிஜம்! வானில் இந்த அற்புத காட்சி எங்கே, எவ்வாறு தோன்றியது? பட மூலாதாரம்,JOEL SPENCER படக்குறிப்பு,ைகிழக்கு மிட்லாண்ட்ஸின் நார்மன்டன் தேவாலயத்தை அடுத்துள்ள ருத்லாண்ட் வாட்டர் பகுதியில் தோன்றிய துருவ ஒளி. கட்டுரை தகவல் எழுதியவர், நடாஷா பிரெஸ்கியால் பதவி, பிபிசி செய்திகள் 11 மே 2024 பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்திவாய்ந்த புவி காந்தப் புயல் ஒன்று தாக்கியதன் விளைவாக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு உலகின் பெரும்பாலான பகுதிகளில், அபூர்வ வானியல் நிகழ்வான துருவ ஒளி (Northern lights) தோன்றியது. இத்தகைய புவி காந்தப் புயல் நிகழ்வுகள் வானில் துருவ ஒளி தோன்றும் வாய்ப்பை அதிகரிக்கின்றன. கடைசியாக 2003இல் ஒரு வலுவான புவி காந்தப் புயல் ஏற்பட்டது. உலகின் பல பகுதிகளில் வானில் தோன்றிய துருவ ஒளியின் சில சிறந்த புகைப்படங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு,இங்கிலாந்தின் லிவர்பூலில், கிராஸ்பி கடற்கரையில் உள்ள சிலைக்கு மேலே தோன்றிய துருவ ஒளிகள். பட மூலாதாரம்,JOSH WALET/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,நெதர்லாந்தின் ஆர்லாண்டர்வீனில் உள்ள மோலன்விர்காங் ஆலைக்கு மேலே இரவு வானில் தோன்றிய துருவ ஒளி. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ரஷ்யாவின் தென்மேற்கு சைபீரிய நகரமான தாராவில் துருவ ஒளிகளால் பிரகாசிக்கும் இளஞ்சிவப்பு வானம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான் பிரான்சிஸ்கோவின் வடக்குப் பகுதியில் உள்ள மிடில்டனில் வானில் தோன்றிய துருவ ஒளி பட மூலாதாரம்,PA MEDIA படக்குறிப்பு,ஸ்காட்லாந்தின் வடக்கு குயின்ஸ்ஃபெரியில் உள்ள ஃபோர்த் பாலத்திற்கு மேலே ஊதா மற்றும் பச்சை நிறங்களில் தோன்றிய துருவ ஒளிகள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வடகிழக்கு உக்ரைனில் உள்ள கார்கிவ் மீது தோன்றிய துருவ ஒளி பட மூலாதாரம்,LAURENT GILLIERON/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு,சுவிட்சர்லாந்தின் டெய்லென்ஸ் கிராமத்தில் பாப்லர் மரங்களின் வரிசைக்கு மேலே அழகான துருவ ஒளி பட மூலாதாரம்,PROFESSORMILLER/ WATCHERS படக்குறிப்பு,பிபிசி வானிலை கண்காணிப்பாளர் பேராசிரியர் மில்லர் வேல்ஸில் உள்ள மோல்ட், பிளின்ட்ஷயர் மீது வானத்தில் தோன்றிய துருவ ஒளியைப் படம் பிடித்தார். https://www.bbc.com/tamil/articles/crgy0n0823eo