Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஜூனில் உயர்தர வகுப்புக்கள் ஆரம்பம் - கல்வி அமைச்சினால் சுற்று நிரூபம் வெளியீடு 16 MAY, 2024 | 05:38 PM (எம்.மனோசித்ரா) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 2023 (2024) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை ஆரம்பிப்பதற்கான சுற்று நிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய, உயர்தர வகுப்புகளை ஜூன் 4ஆம் திகதி முதல் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. புதன்கிழமை (15) நிறைவடைந்த க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகளை உடனடியாக ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த ஏற்கனவே அறிவித்திருந்தார். பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் வெசாக் விடுமுறையின் பின்னர் ஆரம்பிக்கப்படவுள்ளன. எவ்வாறிருப்பினும் பரீட்சைகளை நிறைவு செய்துள்ள மாணவர்களுக்கான உயர்தர வகுப்புகள் முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னதாகவே ஆரம்பிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். இதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரம் ஏற்கனவே பெறப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் கிடைக்கப் பெறாத அதிபர்கள் மாகாண மற்றும் வலய கல்வி திணைக்களங்களில் பெற்றுக் கொள்ள முடியும் என்று கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/183718
  2. சிங்கப்பூரில் இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர், 34 வயதில் பாட்டி ஆகி இருப்பது சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதத்தை எழுப்பியுள்ளது. சிங்கப்பூரை சேர்ந்த உணவக உரிமையாளரான ஷிர்லி லிங் என்பவர், இன்ஸ்டாகிராமில் பல்வேறு வகையான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமானவர். கடந்த அன்னையர் தினத்தன்று இன்ஸ்டாவில் வாழ்த்து ஒன்றை பதிவிட்ட அவர், தனது 17 வயது மகனுக்கு குழந்தை பிறந்திருப்பதாக குறிப்பிட்டார். இளம்வயதில் பாட்டி ஆகி இருப்பதில் சாதகம் மற்றும் பாதக அம்சங்கள் இருப்பதாகவும், குடும்பத்தை பொறுப்புடன் நடத்துவது குறித்து மகனுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் அப்பெண் பதிவிட்டுள்ளார். மேலும், இளம்வயதில் தாயாவது பெரும் இன்னலை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்ட அவர், தனது மகனை கண்டிப்பதற்கு பதிலாக, பொறுப்புள்ள நபராக மாற்றுவதற்கு முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். ஷிர்லி லிங்கிற்கு 17 வயதில் முதல் திருமணம் ஆன நிலையில், 3 முறை மறுமணம் செய்த அவர், தற்போது 5 குழந்தைகளுக்கு தாயாக உள்ளார். விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.இதில், முதல் திருமணத்தில் பிறந்த 17 வயது மகனுக்கு தான், கடந்தாண்டு திருமணமாகி தற்போது குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், இளம் வயதில் பாட்டி ஆன இன்ஸ்டா பிரபலம் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை வெளிப்படுத்தி வருகின்றனர். https://thinakkural.lk/article/301763
  3. Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 03:46 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், கடந்த வெள்ளிக்கிழமை கழுத்து நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தொடர்பின் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். உடற்கூற்று பரிசோதனையில் துணி ஒன்றினால், பெண்ணின் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் பெண்ணின் கணவரை நேற்று புதன்கிழமை (15) கைது செய்துள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையில் அடிக்கடி கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு, தர்க்கம் ஏற்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் ,அடிப்படையில் பெண்ணின் கணவரை பொலிஸார் கைது விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றனர். https://www.virakesari.lk/article/183669
  4. இலங்கையில் அதிகரிக்கும் 'பிரஷர்' இலங்கையில் பதிவாகும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றா நோய்கள் அமைப்பின் சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் தெரிவித்துள்ளார். அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய 18 வயதுக்கும் 69 வயதுக்கும் இடைப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் 35 சதவீத உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பதிவாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும் மே 17 ஆம்திகதி உயர் இரத்த அழுத்தம் மற்றும் மே மூன்றாவது வாரத்தில், உப்பு பயன்பாடு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலகளவில் பல நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உயர் இரத்த அழுத்த அபாயத்தைத் தடுப்பது குறித்து சமூக மருத்துவ நிபுணர் ஷெரில் பாலசிங்கம் மேலும் கருத்து தெரிவிகையில் “முக்கியமாக, ஆரோக்கியமாக சாப்பிடுவது மிகவும் முக்கியம், குறிப்பாக உப்பின் பயன்பாட்டை முடிந்தவரை குறைப்பது மிகவும் முக்கியம். மேலும், உடல் செயல்பாடுகளை அதிகரிப்பது மற்றும் ள் மன அழுத்தத்தைக் குறைக்க நடவடிக்கை எடுப்பது மிகவும் முக்கியம். புகையிலை மற்றும் மதுபானங்களை தவிர்ப்பதாலும் உயர் இரத்த அழுத்தம் வராமல் தடுக்க முடியும் என்றார் . https://thinakkural.lk/article/301769
  5. நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை நடைபெறாது : கட்டணத்தை மீளப்பெறமுடியும் ! Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 03:56 PM நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கப்பல் சேவை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது 17ஆம் திகதி வரை ஒத்திவைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் 19ஆம் திகதிக்கு கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் சேவையை ஆரம்பிக்க சில சட்டரீதியான அனுமதிகள் உள்ளிட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பிற்போடப்பட்டது. அதனால், மே19 அல்லது அதற்குப் பின்னர் தாம் விரும்பிய திகதிகளில் பயணிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லது செலுத்திய கட்டணத்தினை முழுமையாக மீளப்பெற விரும்பினால், customer.care@sailindsri.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும். செலுத்திய கட்டணத்தினை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183699
  6. கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை நீக்கியது மூதூர் நீதிமன்றம் - சட்டத்தரணி சுகாஷ் 16 MAY, 2024 | 05:13 PM (துரைநாயகம் சஞ்சீவன்) கஞ்சி காய்ச்சுவது தொடர்பாக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை மூதூர் நீதிமன்றம் அகற்றியிருப்பதாக சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். மூதூர் நீதிமன்றில், சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள நால்வருக்கு எதிரான வழக்கானது, நகர்த்தல் பத்திரத்தின் மூலம் வழக்கு விசாரணைக்காக நீதிபதி தஸ்னீம் பௌசான் முன்னிலையில் இன்றைய தினம் (16) எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் எதிரிகளின் சார்பாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் முன்னிலையாகியிருந்தார். இதன்போது முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதிபதி, இவ்வழக்கில் எதிரிகள் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள காரணத்தினால் அவர்கள் தொடர்பான அறிக்கையை துரிதமாக நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதுடன், மூதூர் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடையை அகற்றுவதாக கட்டளை பிறப்பித்திருக்கிறது. தென்னிலங்கையிலே பாற்சோறு கொடுப்பது சட்ட விரோதமாகாது என்றால் எவ்வாறு வடக்கு, கிழக்கிலே கஞ்சி கொடுப்பது சட்ட விரோதமாகும் என்பது போன்ற பல கேள்விகளை வாதங்களாக நீதிமன்றில் முன்வைத்ததாகவும் சட்டத்தரணி சுகாஸ் தெரிவித்தார். அத்துடன் இந்த வழக்கில் எதிரிகள் சார்பாக பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் சட்டத்தரணிகள் தாமாகவே முன்னிலையாகியிருந்ததாகவும் இதற்காக அவர்களுக்கு தான் நன்றி கூறுவதாகவும் இந்த வழக்கானது தமிழ் - முஸ்லிம் இன ஒற்றுமைக்கு வலுச்சேர்க்கின்ற வழக்காக இருக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கடந்த 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பல்கலைக்கழக மாணவி உட்பட நான்கு பேர் சம்பூர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர். பின்னர் இவர்கள் மீது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின்கீழ் வழக்கு தொடரப்பட்டு மறுநாள் திங்கட்கிழமை (13) மூதூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது நால்வருக்கும் எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து மன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த நால்வரின் கைது தொடர்பில் சம்பூர் பொலிஸார் நடந்துகொண்ட விதம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/183714
  7. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் மரணம் தொடர்பான சர்ச்சை உலகெங்கும் தொடரும் நிலையில், அவரது சகோதரர் மனோகரன் பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தந்தி டி.வி.க்கு அளித்துள்ள பேட்டியிலேயே இதனை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் 2009, மே 18ல் பிரபாகரன் இறந்துவிட்டார் என இலங்கை இராணுவம் அறிவித்தது. பிரபாகரனுக்கு முதல்முறையாக வீர வணக்க நிகழ்வை டென்மார்க்கில் வரும் 18-ஆம் திகதி நடத்த உள்ளோம். பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நாளிலேயே வீரவணக்க நிகழ்வு நடைபெறுகிறது. பிரபாகரன் பெயரில் நடக்கும் மோசடிகளை தடுக்கவும், அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கவும் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படுகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301755
  8. Published By: RAJEEBAN 16 MAY, 2024 | 04:35 PM 18 வயது விமல் யோகநாதன் சமீபத்தில் பான்ஸ்லி கழகத்தில் விளையாடுவதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளார்- இதன் மூலம் இங்கிலாந்து கால்பாந்தாட்ட அணிகளில் விளையாடும் முதலாவது தமிழ் தொழில்சார் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். தனது பயணம் குறித்து தமிழ் கார்டியனுடன் அவர் தனது எண்ணங்களை பகிர்ந்துகொண்டார். வேல்ஸின் சிறிய கிராமத்திலிருந்து விமல் யோகநாதன் படிப்படியாக ஒவ்வொரு கட்டமாக முன்னேறிச் சென்றுள்ளார். இது எனக்கும் எனது குடும்பத்திற்கும் மிகப்பெரிய நாள், கடந்த பத்துவருடங்களாக உழைத்த உழைப்பின் உச்சக்கட்டம் இது வரவிருக்கும் ஒரு நீண்டவாழ்க்கையின் ஆரம்பம் நான் இது குறித்து பெருமைப்படுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார். ஹோலிவெல் லெய்சர் நிலையத்தின் உள்ளரங்கில் கால்பந்து விளையாடும் போது நான்குவயது சிறுவன், பின்னர் பிரெஸ்டேடைன் லிவர்பூல் அக்கடமிகளுக்கு விளையாடினான், தற்போது பார்ன்ஸ்லி அணிக்காக தனது முதலாவது தொழில்முறை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளான். விமல் தனது பெற்றோரிடமிருந்து கிடைத்த ஆதரவு குறித்து இவ்வாறு தெரிவித்தான். அவர்கள் அற்புதமான ஆதரவை வழங்கினார்கள், கடந்த பத்து பதினொரு வருடங்களாக அவர்கள் நாளாந்தம் என்னை பயிற்சிகளிற்காக பயிற்சிகள் இடம்பெறும் பகுதிகளிற்கு வாகனத்தில் அழைத்து சென்றார்கள் நான் விளையாடும் போதெல்லாம் சமூகமளித்தார்கள் என அவன் தெரிவித்தான். சிறுவயதில் தனது தாயார் கோபத்தை கட்டுப்படுத்திக்கொண்டு எப்படி தன்னை பயிற்சிகள் இடம்பெறும் இடங்களிற்கு இழுத்துச்சென்றார் என்பதையும் நினைவு கூர்ந்தான் விமல். விமலிற்கு கால்பந்தாட்டம் மிகவும் பிடித்தமான விடயமாக காணப்பட்டது, ஆனால் அவனிற்குள் இருந்த நான்கு வயது சிறுவன் பயிற்சிகள் உடற்பயிற்சிகள் போன்றவற்றை விரும்பவில்லை. பெற்றோர் என்னை இழுத்துக்கொண்டு சென்றது நினைவிலிருக்கின்றது, ஆனால் கால்பந்தாட்டத்தில் ஈடுபடத்தொடங்கியதும் நான் அதனை நேசிக்கத் தொடங்கினேன் என அவன் தெரிவித்தான். கால்பந்தாட்டத்தில் ஈடுபட்ட ஆரம்பநாட்களில் விங்கெர் ஸ்டிரைக்கராக விளையாடிய விமல் தற்போது பார்ன்ஸ்லியில் மிட்பீல்ட் விளையாடுகின்றார். அவர் தனது பயிற்சிகள் தொடர்பில் பின்பற்றிய ஒழுக்க நெறி, மீள்எழுச்சிதன்மை, மனவலிமை ஆகியவை திறமையுள்ள பல வீரர்களின் வாழ்க்கையில் பின்னடைவை ஏற்படுத்திய விடயங்களை இவர் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு உதவியுள்ளன. இவர் லிவர்பூலில் இருந்து விடுவிக்கப்பட்டதை இவ்வாறுநினைவுகூர்ந்தார். ஏழு வயது முதல் எனது வாழ்க்கையில் நான் அறிந்திருந்த தெரிந்திருந்த ஒரே விடயம் அதுதான் - அங்கு செல்வது பயிற்சி பெறுவதும் - அதனை இழந்ததும் அந்த நாட்கள் மிகவும் கடினமானவையாக காணப்பட்டன என அவர்தெரிவிக்கின்றார். பேர்ன்லேயில் சில காலம் விளையாடிய விமல் பின்னர் பார்ன்ஸ்யில் இணைந்து கொண்டார் அந்த கழகம் மே 2023 இல் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான வரலாற்றுப்புகழ்மிக்க தொழில்சார் மேம்பாட்டு கிண்ணத்தை வெல்வதற்கு காரணமானார். தன்னுடைய மீள்எழுச்சி தன்மை எங்கிருந்து வருகின்றது என்பது குறித்து அவர் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கின்றார். நான் கடினமாக முயற்சி செய்யவேண்டும் அவ்வளவுதான் - இருட்டின் இறுதியில்ஒளியிருக்கும் என்கின்றார் அவர். 2023 இல் லீக் கப் போட்டியில் பார்ன்ஸ்லே அணியும் டிரன்மெரே அணியும் மோதியவேளை -விமல் தனது முதல்தொழில்சார் போட்டியில் விளையாடியவேளை அந்த வெளிச்சத்தின் சில நொடிகளை அவதானிக்க முடிந்தது. அதன் பின்னர் அவர் பிரதான அணிக்காக பல தடவைகள் விளையாடியுள்ளார். விமல் மீது அணியின் பயிற்றுவிப்பாளர் நெய்ல் கொலின்ஸ் வைத்துள்ள நம்பிக்கையை இது வெளிப்படுத்தியுள்ளது. பயிற்சியாளர்கள் சகவீரர்கள் உட்பட அனைவரும் நான் வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு எனக்கு சிறந்த ஆதரவை வழங்கிவருகின்றனர், இது ஒரு சிறந்த அனுபவம், பிரதான அணியின் வீரர்கள் அனைவரும் நான் அணிக்குள் ஒன்றிணைவதற்கு உதவியாக இருக்கின்றனர் எனவும் அவர் தெரிவிக்கின்றார். பான்ஸ்லியின் இடைக்கால கால்பந்து இயக்குநரான பொபி ஹொசல் விமலை பாராட்டியுள்ளார். கழகத்தின் 18 முதல் 21 வயதினருக்கான அணியின் நட்சத்திர வீரர் என விமலை பாராட்டியுள்ள அவர் யோகநாதனின் ஆக்ரோசமான விளையாட்டு பாணியை பாராட்டியுள்ளார். அவரது சிறந்த மனோநிலையை பாராட்டியுள்ள அவர் எப்போதும் கற்றுக்கொள்வதற்கும் தன்னை வளர்த்துக்கொள்வதற்குமான விருப்பத்தை அவர் வெளிப்படுத்துகின்றார் எனவும் குறிப்பிட்டுள்ளார் tamil guardian https://www.virakesari.lk/article/183707
  9. Published By: DIGITAL DESK 3 16 MAY, 2024 | 10:20 AM தமிழர் தாயகத்தில் மே 18 ம் திகதியை தமிழ்தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அந்த செய்தி குறிப்பில், தமிழ் மக்கள் மிக கொடூரமாக கொன்று அழிக்கப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவுறுகின்ற வலி சுமந்த நாட்களை நினைவு கூருகின்ற இந்த தருணத்தில் தமிழராகிய எம் ஒட்டுமொத்த ஆன்மாவையும் பாதித்த மே 18 ஐ தமிழ் தேசிய துக்க நாளாக நாம் அனைவரும் கடைப்பிடிப்போம். ஏற்கனவே வட மாகாண சபையால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இதனை உணர்வுபூர்வமாக தமிழர் தாயகமெங்கும் அனுட்டிக்க தமிழ் தேசிய சக்திகளோடு கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அழைப்பு விடுக்கின்றது. இந்த நாளில் முள்ளிவாய்காலில் சென்று நினைவேந்த கூடியவர்கள் வழமைபோன்று முள்ளிவாய்கால் பொது கட்டமைப்பு ஒழுங்கு செய்த நிகழ்வுகளில் பெருந்திரளாக பங்கேற்குமாறு வேண்டி நிற்கின்றோம். அதேநேரம் அங்கு செல்லமுடியாதவர்கள் தங்கள் பிரதேச வழிபாட்டுத்தலங்களில் ஒன்றுகூடி பிரார்த்தனைகளை மேற்கொள்ளவும் வேண்டுகின்றோம். அன்றைய தினம் அனைத்து தமிழர் வணிக வளாகங்கள் பொது இடங்களில் கறுப்புக் கொடிகளை பறக்கவிடுமாறும் கறுப்புப் பட்டியுடன் கடமைகளில் ஈடுபடுமாறும் கோருகின்றோம். எமது தெருக்களை பொது இடங்களை வீட்டின் முன்னுள்ள வீதியோரங்களை துப்பரவு செய்வதுடன் அனைத்து கேளிக்கை நிகழ்வுகளையும் தவிர்த்து முள்ளிவாய்கால் கஞ்சியை ஒரு நேர உணவாகவேனும் உண்பதற்கு ஒவ்வொரு தமிழ் குடும்பமும் முன் வருவோம். மேலதிக தனியார் கல்வி நடவடிக்கைகள் அனைத்தையும் அன்றைய தினம் முழுமையாக நிறுத்தி எம் இளையோருக்கு எம் வலிகளின் ஆழத்தை சாத்வீகமாக உணர்வபூர்வமாக வெளிப்படுத்துவோம். பல்கலைக்கழக மாணவர் ஏற்பாடு செய்துள்ள இந்த காலப்பகுதிக்கான இரத்ததான முகாம்களில் பங்கேற்போம். வலி சுமந்த குடும்பங்களிற்கு மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் ஆறுதல் அளிப்போம். இந்த தமிழ்த்தேசிய துக்க நாளில் ஒட்டுமொத்த தமிழராய் நிலத்திலும் புலத்திலும் எம் உச்சபட்ச ஆத்மார்த்த உணர்வை அமைதியாக உறுதியாக வெளிக்காட்டுவோம். அதற்காக அனைவரும் திடசங்கற்பம் பூணுவோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/183659
  10. ராஜஸ்தான் தோற்றதால் 2-ஆவது இடத்துக்கு போட்டியிடும் 3 அணிகள் பட மூலாதாரம்,SPORTZPICS ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ப்ளே ஆஃப் சுற்றில் எந்தெந்த அணிகள் இடம் பெறும் என்பதில் இன்னும் தெளிவு இல்லாமல் ரசிகர்களை ஏங்க வைத்திருக்கிறது இந்த ஐபிஎல் சீசன். ஆர்சிபி அணி தொடர்ந்து 5 போட்டிகளை வென்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் நீடித்துவந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடர்ந்து 4 தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு ஏற்பட்ட தோல்வியால், அந்த அணி 2-ஆவது இடத்தைப்பிடிக்கும் வாய்ப்பை இழந்து 3-ஆவது மற்றும் 4-ஆவது இடத்துக்கான போட்டிக்குத் தள்ளப்பட்டுள்ளது. குவஹாத்தியில் நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 65-ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல் அணி 9 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்தது. 145 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 7 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எந்தவிதமான ஏற்றமும் கிடைக்கப் போவதில்லை என்றாலும், ராஜஸ்தான் அணியின் ப்ளே ஆஃப் வாய்ப்பை அசைத்துப் பார்த்துவிட்டது. பஞ்சாப் 13 போட்டிகளில் 10 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாது என்றபோதிலும், தன்னுடன் மோதும் ப்ளே ஆஃப் செல்ல வாய்ப்புள்ள அணிகளின் வாய்ப்பை இடைமறிப்பதில் இதன் பங்கு அதிகமாகும். அதுதான் நேற்று ராஜஸ்தான் அணிக்கு நடந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES ராஜஸ்தான் அணிக்கு ப்ளே ஆப்பில் எந்த இடம் கிடைக்கும்? ராஜஸ்தான் அணி தொடர்ந்து 4-ஆவது தோல்வியை நேற்று சந்தித்துள்ளது. ராஜஸ்தான் அணி 13 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் 0.273 நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான் அணிக்கு கடைசி லீக் ஆட்டம் கொல்கத்தா அணியுடன் மிகக்கடுமையானதாக, சவாலானதாக இருக்கக்கூடும். ஏனென்றால், ராஜஸ்தான் அணியிலிருந்து ஜாஸ் பட்லர் இங்கிலாந்து அணிக்காக சென்றுவிட்டதால் பெரியபேட்டரை இழந்துவிட்டது பெரிய பின்னடைவு. அதேபோல, கொல்கத்தா அணியிலிருந்து பில் சால்ட் இங்கிலாந்து சென்றுவிட்டார். வெளிநாட்டு முக்கிய வீரர்கள் இரு அணியிலிருந்து கிளம்பி இருப்பதால் வெற்றிக்காக கடுமையாக இரு அணிகளும் போராடும். ஒருவேளை கொல்கத்தா அணி கடைசி லீக்கில் ராஜஸ்தானிடம் தோற்றால், முதலிடத்தை தக்கவைப்பதில் எந்தச் சிக்கலும் இருக்காது. ஆனால், ராஜஸ்தான் அணி வென்றால் 18 புள்ளிகள் பெற்றாலும் 2-ஆவது இடம் கிடைப்பது சந்தேகம்தான். ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணிக்கு 2 லீக் ஆட்டங்கள் மீதமிருக்கின்றன. அந்த இரு ஆட்டங்களிலும் சன்ரைசர்ஸ் வென்றால், 18 புள்ளிகளுடன் வலுவான நிகர ரன்ரேட்டில் 2வது இடத்தைப் பிடிக்க முடியும். ராஜஸ்தான் அணி 3வது இடத்துக்கு தள்ளப்படும். கடைசி இடத்தை ஆர்சிபி அல்லது சிஎஸ்கே பிடிக்கலாம். ஒருவேளை சன்ரைசர்ஸ் ஒரு ஆட்டத்தில் வென்று, மற்றொன்றில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். ஆர்சிபி அணியை சிஎஸ்கே வென்றால் 16 புள்ளிகள் பெறும். ராஜஸ்தான் அணியும் கடைசி லீக்கில் தோற்றால் 16 புள்ளிகள் பெறும். 3 அணிகளும் 16 புள்ளிகள் பெற்று கடைசி 3 இடத்துக்கு மல்லுக்கட்டும். அப்போது வலுவான நிகர ரன்ரேட் வைத்திருக்கும் சிஎஸ்கே 2வது இடத்தையும், 3வது இடத்தை சன்ரைசர்ஸ் அணியும், 4வது இடம் ராஜஸ்தானுக்கும் கிடைக்கலாம். இப்போதுள்ள சூழலில் ப்ளே ஆஃப் சுற்றில் முதலிடத்தை கொல்கத்தா அணி பிடிக்கும், தக்கவைக்கும் என்பது மட்டும் உறுதியாகியுள்ளது. மற்ற 3 இடங்களில் எந்தெந்த அணி அமரும், யாருடன் யார் ப்ளே ஆஃப் சுற்றில் மோதப் போகிறார்கள் என்பதைக் கணிக்க இன்னும் சில போட்டிகள் காத்திருக்க வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணி வென்றது எப்படி? பஞ்சாப் அணி ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறினாலும், நம்பிக்கையை கைவிடவில்லை. கடைசிப்போட்டிவரை வெற்றிக்காக போராடுவோம் என்று தங்களின் போராட்டக் குணத்தை நேற்று வெளிப்படுத்தினர். இந்த வெற்றியால் தங்களுக்கு எந்தப் பலனும் இல்லை என்றாலும் தங்களின் வெற்றி, புள்ளிப்பட்டியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும், பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும் என்பதை மட்டும் புரிந்திருந்தனர். பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவண் காயத்தால் பல போட்டிகளில் ஆடாத நிலையில் கேப்டனாக செயல்பட்ட சாம்கரன் அற்புதமாக செயல்பட்டார். இந்த ஆட்டத்திலும் பந்துவீச்சாளர்களை சிறப்பா ரொட்டேட் செய்து, ராஜஸ்தான் அணியை 144 ரன்களுக்குள் சுருட்டினார். சாம் கரன் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஆகச்சிறப்பாகச் செயல்பட்டு வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். கேப்டனுக்குரிய பொறுப்புடன் விளையாடிய சாம் கரன் 63 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்றார். பந்துவீச்சிலும் பட்டையக் கிளப்பிய சாம்கரன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி ராஜஸ்தானை சுருட்ட உதவி செய்தார். பஞ்சாப் பந்துவீச்சாளர்களில் பெரும்பாலும் ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் வழங்கவில்லை. நேதன் எல்லீஸ், ஹர்சல் படேல், ராகுல் சஹர், அர்ஷ்தீப் சிஹ், சாம் கரன் அனைவருமே விக்கெட் வீழ்த்தி தங்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டதால்தான் ராஜஸ்தான் அணி 144 ரன்களில் சுருட்ட முடிந்தது. சேஸிங்கின்போது பஞ்சாப் அணி ஒரு கட்டத்தில் 36 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தும், 48 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங்(6), பேர்ஸ்டோ(14), ரூஸோ(22), சஷாஹ் சிங்(0) என விரைவாக விக்கெட்டுகளை இழந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் அணியை மீட்ட சாம் கரன்-ஜிதேஷ் ஜோடி பஞ்சாப் அணி தோல்விப் பாதைக்கு செல்லும் ராஜஸ்தான் வெற்றி உறுதியாகும் என ஒரு கட்டத்தில் கணிக்கப்பட்டது. ஆனால், அனைத்து கணிப்புகளையும் கேப்டன் சாம் கரன், ஜிதேஷ் சர்மா கூட்டணி உடைத்தது. 5-ஆவது விக்கெட்டுக்கு சாம்கரனுடன் ஜோடி சேர்ந்த ஜிதேஷ் சர்மா 63 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். 20 பந்துகளில் 22 ரன்கள் மட்டுமே ஜிதேஷ் சர்மா சேர்த்தாலும், சாம் கரனுக்கு அவர் அளித்த ஒத்துழைப்பு ஆட்டத்தை வெற்றி நோக்கி நகர்த்த உதவியாக இருந்தது. ஜிதேஷ் சர்மா-சாம்கரனைப் பிரிக்க அஸ்வின், சஹல், போல்ட் எனபல பந்துவீச்சாளர்களை சாம்ஸன் பயன்படுத்தியும் பலனில்லை. மாறாக அனைவரின் ஓவரிலும் சாம் கரன் பவுண்டரி, சிக்ஸர் விளாசி சாம்ஸன் கணிப்பை பொய்யாக்கினார். கடைசி 6 ஓவர்களில் பஞ்சாப் அணிக்கு ஓவருக்கு 9 ரன்கள் தேவைப்பட்டது. ஜிதேஷ், சாம் கரன் அதிரடிக்கு மாறினர். அஸ்வின் ஓவரில் சாம்கரன் சிக்ஸர் அடிக்க, சஹல் பந்துவீச்சில் ஜிதேஷ் சிக்ஸர் அடிக்கமுயன்று ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய அஷுதோஷ் சிங்கால் வெற்றி எளிதானது. அஷுதோஷ் சிறிய கேமியோ ஆடி பஞ்சாப் அணியை வெற்றி பெற வைத்தார். சாம்கரன் 38 பந்துகளில் அரைசதம் அடித்து, 41 பந்துகளில் 63 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அஷுதோஷ் சிங் 17 ரன்களுடன் களத்தில் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங்கில் திணறிய ராஜஸ்தான் அணி ராஜஸ்தான் அணி நேற்று பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் சிறப்பாகச் செயல்படவில்லை. ராஜஸ்தான் அணியின் பேட்டர், உள்ளூர் ஹீரோ ரியான் பராக் சேர்த்த 48 ரன்களைக் கழித்துப் பார்த்தால் ராஜஸ்தான் அணியின் ஸ்கோர் 100 ரன்களைக் கூட கடக்காது. ஜெய்ஸ்வால் இந்த சீசனில் சரியாக ஆடவில்லை. ஃபார்மின்றி தவிக்கும் இவரை டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு தேர்வு செய்துள்ளது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சாம்கரன் வீசிய முதல் ஓவரிலேயே ஸ்விங் பந்தில் க்ளீன் போல்டாகி ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தார். கரீபியன் ஆடுகளங்களில் ஜெய்ஸ்வால் என்ன செய்யப் போகிறார் எனத் தெரியவில்லை. சாம்ஸன் என்ன சொல்கிறார்? ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்ஸன் கூறுகையில் “ இந்த விக்கெட்டை நாங்கள் மிகச்சிறப்பாக எதிர்பார்த்தோம். 140 ரன்களுக்குள் அடிக்க முடியும் ஆடுகளமாக நினைக்கவில்லை, குறைந்தபட்சம் 160ரன்கள் வரை சேர்க்கத் திட்டமிட்டிருந்தோம் ஆனால் பேட் செய்யஆடுகளம் கடினமாக இருந்தது. எங்கள் தோல்விகளை ஏற்கிறோம்." "எங்கு தோற்றோம் என்பது குறித்து ஆலோசிப்போம். அணியில் எந்த இடத்தில் யார் சரியாகச் செயல்படவில்லை, எங்கு பிரச்சினை இருக்கிறது என்பதை ஆலோசிப்போம். எங்களிடம் தனி ஒருவனாக அணியை வெல்ல வைக்கும் திறமையான வீரர்கள் இருக்கிறார்கள். அனைவரும் முயற்சித்தால் வெற்றி எளிதாகும். இது குழுவான விளையாட்டு. இந்த கடினமான நேரத்தில் ஒவ்வொரு வீரரும் முன்வந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும்” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c72p2kq08ezo
  11. ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபா Published By: DIGITAL DESK 7 16 MAY, 2024 | 09:00 AM தம்புள்ளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று புதன்கிழமை (15) 01 கிலோ கிராம் எலுமிச்சை பழத்தின் விலை 3000 ரூபாவாக அதிகரித்து காணப்பட்டுள்ளது. தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு ஊவா மாகாணத்தில் இருந்து எலுமிச்சைபழம் விநியோகிக்கப்படுகின்றது. சந்தைக்கு போதியளவு எலுமிச்சை பழம் கிடைக்காத காரணத்தினால் எலுமிச்சையின் மொத்த மற்றும் சில்லறை விலைகள் அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/183653
  12. பாலியாறு நீர்த்திட்டம் அங்குரார்ப்பணம் Published By: VISHNU 16 MAY, 2024 | 01:31 AM வடக்கு மாகாண மக்களுக்குச் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுக்கும் தொலைநோக்கு சிந்தனையில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலியாறு நீர்த்திட்டம் புதன்கிழமை (15) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மன்னார் வெள்ளாங்குளம் பகுதியில் இதற்கான அங்குரார்ப்பண நிகழ்வு நடைபெற்றது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர், வடக்கு மாகாண பிரதம செயலாளர், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். பாலியாறு நீர்த்திட்ட அங்குரார்ப்பண நிகழ்விற்கான நினைவுப் பதாதை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஆகியோரால் திரைநீக்கம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து பாலியாறு நீர்த்திட்ட அலுவலகமும் திறந்து வைக்கப்பட்டது. பாலியாறு நீர்த்திட்டத்திற்காக 2024 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் 250 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களையும், பூநகரி பிரதேசத்தின் ஒரு பகுதியும் இந்த திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, மேற்குறித்த பகுதிகளில் வசிக்கும் 127,746 குடும்பங்களுக்குச் சுத்தமான குடிநீரை விநியோகிக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183650
  13. Published By: VISHNU 16 MAY, 2024 | 01:17 AM இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜீலி சங் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்து பல சந்திப்புகளில் ஈடுபட்டார். தமிழ் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் அமெரிக்க தூதர் ஜீலி சங் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மானிப்பாயில் உள்ள அமெரிக்க மிஷனரியின் கிறீன் மெமோரியல் வைத்தியசாலைக்கு தூதுவர் விஜயம் செய்து நிலைமைகளை பார்வையிட்டார். வடக்கு மாகாண கடற்படை தளபதியை காங்கேசன்துறை தலைமையகத்தில் அமெரிக்க தூதுவர் சந்தித்து கலந்துரையாடினார். அத்துடன் அண்மையில் உயர் பாதுகாப்பு வலயங்களாக இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகளையும் அமெரிக்க தூதுவர் பார்வையிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. https://www.virakesari.lk/article/183648
  14. மழையுடனான வானிலை தொடருமாம்...... 16 MAY, 2024 | 06:01 AM இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் வளிமண்டலவியல் இடையூறு தொடர்ந்தும் நிலைகொண்டுள்ளது. ஆனபடியினால் நிலவுகின்ற மழையுடனான வானிலை மேலும் தொடர்க்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் பெரும்பாலான மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான பலத்த மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேல், தென் மற்றும் கிழக்கு மாகாண கரையோரப் பிராந்தியங்களில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது. பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர். நாட்டை சூழ உள்ள உள்ள கடல் பிராந்தியங்களின் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 20 ‐ 30 கிலோமீற்றர் வேகத்தில் தென்மேற்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும். ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்யகின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார். https://www.virakesari.lk/article/183652
  15. Published By: VISHNU 16 MAY, 2024 | 01:40 AM முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குற்பட்ட கரும்புள்ளியான் குள நீர் விநியோக திட்ட அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (14) இடம்பெற்றது வடமாகாண ஆளுநர் சாள்ஸ் அவரக்ளினால் குறித்த குடிநீர் திட்டத்திற்கான பெயர்பலகை திரை நீக்கம் செய்துவைக்கப்பட்டிருந்தது அதனை தொடர்ந்து அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களினால் குடிநீர் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டதுடன், சம நேரத்தில் ஏனைய அதிதிகளினாலும் அடிக்கல் நாட்டப்பட்டிருந்தது நிகழ்வில் வடமாகாண ஆளுநர், மாகாண பிரதம செயலாளர்,அமைச்சின் செயலாளர் ,பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் , குலசிங்கம் திலீபன்,மாகாண நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அதிகாரிகள்,மாகாண நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள், மற்றும் முல்லை மாவட்ட செயலாளர், மற்றும் யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மற்றும் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மற்றும் பொது அமைப்புக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் குறித்த குடிநீர் திட்டமானது உலக வங்கியின் 1856 மில்லியன் மேற்பட்ட நிதிப்பங்களிப்பில் நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183651
  16. ஸ்லோவாக்கியா பிரதமரை துப்பாக்கியால் சுட்டது யார்? - என்ன நடந்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES 15 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 50 நிமிடங்களுக்கு முன்னர் ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ராபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன நடந்தது? உள்ளூர் செய்தி தொலைக்காட்சி நிறுவனமான TA3 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "ஸ்லோவாக்கியாவின் தலைநகரான பிராட்டிஸ்லாவாவிலிருந்து வட கிழக்கே 180 கிமீ தொலைவில் உள்ள ஹன்ட்லோவா நகரில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. ஹன்ட்லோவா நகரில் உள்ள கலாசார சமூக மையத்தில் நடந்த அரசு நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் ராபர்ட் அங்கிருந்து கிளம்புவதற்காக வெளியே வந்தபோது மீது துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. இதை ஸ்லோவாக்கியாவின் உள்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளரும் உறுதிப்படுத்தியுள்ளார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்ட இடம் அந்நாட்டு ஊடகங்களிடம் பேசிய சாட்சிகள், "துப்பாக்கி சூட்டுக்கு பிறகு பிரதமர் தரையில் வீழ்ந்ததாகவும், பாதுகாவலர்கள் அவரை காரில் ஏற்றி உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்" என்றும் தெரிவித்துள்ளனர். பின்னர், ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,ராபர்ட் ஃபிகோ படக்குறிப்பு,பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகரில் உள்ள மருத்துவமனைக்கு பிரதமர் ராபர்ட் ஃபிகோ கொண்டுவரப்பட்ட காட்சி உயிருக்கு ஆபத்தான நிலையில் பிரதமர்? பிரதமரின் கை, கால் மற்றும் வயிற்றுப்பகுதியில் குண்டுகள் பாய்ந்துள்ளதாக உறுதி செய்யப்படாத தகவல்கள் கூறுகின்றன. பிபிசியால் அதை தனிப்பட்ட முறையில் உறுதி செய்யமுடியவில்லை. இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் பிபிசியிடம் பேசுகையில், "நான் பிரதமரின் கைகளைக் குலுக்க சென்ற போது மூன்று குண்டுகள் சுடப்பட்ட சத்தத்தை கேட்டேன். பின் பிரதமரின் தலையில் ஒரு கீறலையும் பார்த்தேன்" என்றார். பிரதமர் படுகொலை செய்ய முயற்சிகள் நடந்திருப்பதாக ஸ்லோவாக்கியா உள்துறையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். ஆனால், பிரதமரின் உடல்நிலை குறித்து எந்த தகவலையும் அவர் குறிப்பிடவில்லை. பிரதமரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “பிரதமர் பல முறை சுடப்பட்டார், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார். அவர் ஹெலிகாப்டர் மூலமாக பான்ஸ்கா பைஸ்ட்ரிகா நகருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. யார் இந்த ராபர்ட் ஃபிகோ? கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலுக்குப் பிறகு ஸ்லோவாக்கியாவின் பிரதமராக மீண்டும் ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டார் ராபர்ட் ஃபிகோ. இடதுசாரி ஸ்மெர்-எஸ்எஸ்டி கட்சிக்கு தலைமை தாங்கி வரும் ராபர்ட், கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேனுக்கான போர் உதவிகளை நிறுத்துவதாக உறுதிமொழி கொடுத்திருந்தார். அதே சமயம் தான் ஒரு ரஷ்ய சார்பற்றவன் என்பதையும் அவர் தெரிவித்துக் கொண்டார். 2018 இல் புலனாய்வுப் பத்திரிகையாளரான ஜான் குசியாக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஃபிகோ பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. "தங்களது கட்சி ஆட்சிக்கு வந்தால், யுக்ரேனுக்கு ஒரு சுற்று வெடிமருந்துகளை கூட அனுப்பமாட்டோம்” என்று தேர்தல் பரப்புரையின் போது ராபர்ட் உறுதியளித்தார். . ரஷ்யா மீதான மேற்கத்திய நாடுகள் விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை எதிர்ப்பதாக அவர் அளித்த உறுதிமொழியும், சிலரிடம் வரவேற்பை பெற்றது. இவரையும், ஹங்கேரியின் வலதுசாரி பிரதமரான விக்டர் ஓர்பனையும் ஒப்பிட்டு ஐரோப்பிய அரசியல் அரங்கில் விவாதங்கள் நடந்தன. ஒருவர் கைது ஸ்லோவாக்கியா பிரதமர் சுடப்பட்டது தொடர்பாக சம்பவ இடத்தில் ஒரு நபர் காவலர்களால் கைது செய்யப்பட்டார். அவர் யார்?, அவர்தான் பிரதமரை துப்பாக்கியால் சுட்டாரா? பிரதமர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட என்ன காரணம்? என்பன போன்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பிரதமர் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவரை கைது செய்துள்ளனர் காவல்துறையினர். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை உலகத் தலைவர்கள் கண்டித்துள்ளனர். உலகத் தலைவர்கள் கண்டனம் ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் மீதான தாக்குதலை உலக தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளனர். ஸ்லோவாக்கியா அதிபர் சுசானா கேப்புட்டவா, இந்த தாக்குதலை மிருகத்தனமானது மற்றும் இரக்கமற்றது என விமர்சித்துள்ளார். “நான் இந்த தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்தேன். இந்த மோசமான சூழ்நிலையில், தாக்குதலில் இருந்து மீண்டு வர ராபர்ட் ஃபிகோவுக்கு கூடுதல் வலிமை கிடைக்க வேண்டுகிறேன்” என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், ஃபிகோ மீதான இந்த மோசமான தாக்குதலை தான் கண்டிப்பதாக கூறியுள்ளார். ருமேனிய பிரதமர் மார்செல் சியோலாகு, துப்பாக்கிச் சூடு பற்றிய செய்தியைக் கேட்டு தான் "ஆழ்ந்த அதிர்ச்சியில்" இருப்பதாககூறியுள்ளார். செக். குடியரசு நாட்டின் பிரதமர் பீட்டர் ஃபியாலா, இந்த சம்பவம் "அதிர்ச்சியூட்டுவதாகவும்”, ஃபிகோ விரைவில் குணமடைய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் கூறுகையில், "எனது நண்பரான பிரதமர் ராபர்ட் ஃபிகோவுக்கு எதிரான இந்த கொடூரமான தாக்குதலால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்" என்று கூறியுள்ளார். இங்கிலாந்து பிரதமரான ரிஷி சுனக் தனது எக்ஸ் பக்கத்தில், “இந்த பயங்கரமான தாக்குதல் சம்பவத்தை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அனைவரும் ஃபிகோ மற்றும் அவரது குடும்பத்தாரையே நினைத்துக் கொண்டிருக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஸ்லோவாக்கியா பிரதமர் மீதான தாக்குதலை கண்டித்துள்ளார் யுக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி யுக்ரேன் அதிபர் கண்டனம் யுக்ரேன் அதிபர் வோலோதிமிர் ஜெலென்ஸ்கி இந்த தாக்குதலை பயங்கரமானது என்று கூறியுள்ளார். எந்த ஒரு நாட்டிலும், எந்த வடிவத்திலும் வன்முறைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், தங்களது சிந்தனை முழுவதும் ராபர்ட் ஃபிகோ மற்றும் அவரது அன்புக்குரியவர்கள், ஸ்லோவாக்கியாவின் மக்களோடு இருப்பதாக தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c9rzrlekkn1o
  17. Published By: RAJEEBAN 15 MAY, 2024 | 01:00 PM நாங்கள் இரண்டாவது நக்பாவை எதிர்நோக்கியுள்ளோம் என தெரிவிக்கும் பாலஸ்தீனியர்கள் எனினும் இம்முறை தனித்து விடப்பட்டுள்ளதாகவும் தனியாக அதனை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர். பாலஸ்தீனியர்கள் 1948 ம்ஆண்டு பலவந்தமாக இடம்பெயரச்செய்ப்பட்டு இன்றுடன் 76 ஆண்டுகள்பூர்த்தியாகியுள்ளன. எனினும் அன்று இஸ்ரேலிற்கு எதிராக அராபிய நாடுகள் ஒரணியில்காணப்பட்டன. எனினும் காசாவில் இடம்பெறும் யுத்தங்களும் மேற்குகரையில் இஸ்ரேலின் இராணுவ ஆக்கிரமிப்பும் இரண்டாவது நக்பா அரங்கேறுகின்றது என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் என தெரிவித்துள்ள பாலஸ்தீன மக்கள் ஆனால் இம்முறை நாங்கள் அதனை தனியாக எதிர்கொள்கின்றோம் என தெரிவித்துள்ளனர். சிலர் 1948ம் ஆண்டுஅராபிய இஸ்ரேலிய யுத்தத்தைநினைவுகூர்ந்துள்ளதுடன் சமூகத்தின் அனைத்துர தரப்பினரும் பாலஸ்தீனத்திற்காக போரடி உயிர்நீத்தனர் என சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த யுத்தத்தில் சியோனிஸ்ட்களிற்கு எதிராக பாலஸ்தீனியர்களுடன் இணைந்து ஈராக்கிய படையினர் போரிட்டனர் என அடிப் நசல் என்பவர் தெரிவித்துள்ளார். தற்போது அராபிய இராணுவம் என்பதே இல்லை அனைவரும் தங்கள் சொந்த நலன்களை பாதுகாக்க விரும்புகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183601
  18. Published By: DIGITAL DESK 3 15 MAY, 2024 | 11:04 AM கனடாவின் எண்ணெய் வளம் மிக்க போர்ட் மெக்முரே பகுதியில் (Fort McMurray) பாரிய காட்டுத்தீ தீவிரமாகப் பரவி வருகிறது. இதன் காரணமாக நான்கு புறநகர்ப் பகுதிகளில் உள்ள சுமார் 6,000 மக்களை வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. வரட்சி மற்றும் பலத்த காற்றினால் ஆல்பர்ட்டாவின் மேற்கு மாகாணத்தில் கடந்த வாரம் முதல் காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளது. தற்போது காட்டுத் தீ தென்மேற்கே சுமார் 13 கிலோ மீற்றர் (8 மைல்) தொலைவில் உள்ளது. அங்கு மணிக்கு 40 கிலோ மீற்றர் (24.8 மைல்) வேகத்தில் காற்று வீசியுள்ளது. பலத்த காற்று வீசுவது துரதிர்ஷ்டவசமாக எங்களுக்கு சாதகமானதாக இல்லை. காற்றின் வேகம் குறையும் வரை காட்டு தீ நகரத்தை நோக்கி தொடர்ந்து பரவி வரும் என ஆல்பர்ட்டா காட்டுத் தீ தகவல் தொடர்பு அதிகாரி ஜோசி செயின்ட்-ஓங்கே தெரிவித்துள்ளார். காட்டுத் தீ தீவிரமடைந்துள்ளதால் வானம் புகையால் சூழப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக தீயணைப்பு வீரர்கள் தீ பரவும் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 10,000 ஹெக்டயர் பரப்பிலான வனப்பகுதிகளில் தீ பற்றி எரிந்து வருகிறது. அபாசண்ட், பீக்கன் ஹில், ப்ரேரி க்ரீக் மற்றும் கிரேலிங் ஆகிய பகுதிகளிர் வசிப்பவர்கள் மாலை 4 மணிக்குள் வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2016 ஆம் ஆண்டில், போர்ட் மெக்முரேயில் பரவி பாரிய காட்டுத்தீ 90,000 குடியிருப்பாளர்களை வெளியேற்ற கட்டாயப்படுத்தியது. ஒரு நாளைக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பீப்பாய்கள் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/183580
  19. தினமும் மனைவிக்காக குர்குரே வாங்கி வந்துகொண்டிருந்த கணவன், ஒரு நாள் மனைவியுடன் நடந்த சண்டையில் குர்குரே வாங்கி வர மறந்து விட்டார். இந்தியாவில் சிறுவர்கள் அதிகம் விரும்பி உண்ணும் நொறுக்குதீனியாக குர்குரே(கார முறுக்கு) உள்ளது. அரிசி, சோளம் ஆகியவற்றுடன் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் நிறமிகளைக் கலந்து மொறுமொறுப்பான நொறுக்குதீனியாக இது தயாராகிறது. இதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பலர் கூறிவந்தாலும் அதிகமானோர் இதை விரும்பி உண்ணப்படும் பண்டமாக இருந்து வருகிறது. இந்நிலையில் கணவன் கார முறுக்கு வாங்கித் தராததால் மனைவி அவரைப் பிரிந்து சென்ற அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கார முறுக்கு சாப்பிடுவதில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. கிட்டத்தட்ட கார முறுக்குக்கு அடிமையான அப் பெண் தனக்கு தினமும் 5 ரூபாய் பாக்கெட்கார முறுக்கு வாங்கித்தர வேண்டும் என்று தனது கணவரிடம் வலியுறுத்தியுள்ளார். அதன்படி தினமும் மனைவிக்காக கார முறுக்கு வாங்கி வந்துகொண்டிருந்த கணவன் ஒரு நாள் மனைவியுடன் நடந்த வாக்குவாதத்தில் கார முறுக்கு வாங்கி வர மறந்துவிட்டார். இதனால் கணவரைப் பிரிய முடிவெடுத்து வீட்டை விட்டு வெளியேறிய அந்தப் பெண், அவருடைய பெற்றோர் வீட்டில் போய் தங்கியுள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார். இதற்கிடையே இந்த விவகாரம் பொலிஸ் நிலையத்துக்கு செல்ல, அவர்கள் இருவரையும் அழைத்து பொலிஸார் விசாரித்துள்ளனர். அப்போது அந்தப் பெண், கார முறுக்கு விவகாரத்தை மறைத்து, தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் கணவர் அதை மறுத்துள்ளார். குடும்பநல ஆலோசனை மையத்துக்கு இருவரும் பின்னர் அனுப்பிவைக்கப்பட்டனர். அங்கு, இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. பின்னர், சில நாட்கள் கழித்து இருவரும் மீண்டும் ஆலோசனைக்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவர்களிடம் பல அமர்வுகளில் தொடர்ந்து பேசிய ஆலோசகர் தெரிவிக்கையில், அப்பெண்ணுக்கு கார முறுக்கு மீது இருந்த அதீத ஆர்வமே அவர் கணவரைப் பிரிய காரணம் என்று தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/301643
  20. ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை இஸ்ரேலிற்கு அனுப்புவதற்கு பைடன் நிர்வாகம் முயற்சி - சர்வதேச ஊடகங்கள் 15 MAY, 2024 | 11:50 AM இஸ்ரேலிற்கு ஒரு பில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்களை அனுப்ப விரும்புவதாக வெள்ளை மாளிகை அமெரிக்க காங்கிரசிற்கு தெரிவித்துள்ளது. டாங்கிகளின் எறிகணைகள், மோட்டார்கள், கவசவாகனங்கள் போன்றவற்றை இஸ்ரேலிற்கு அனுப்ப விரும்புவதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது என ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது. வெள்ளை மாளிகையிடம் இவ்வாறான திட்டம் காணப்படுவதை உறுதிசெய்துள்ள அதிகாரியொருவர் எனினும் இதற்கு அமெரிக்க காங்கிரசின் அனுமதி அவசியம் என தெரிவித்துள்ளார். இஸ்ரேலிற்கு ஒரு தொகுதி ஆயுதங்களை வழங்குவதை இடைநிறுத்தியுள்ளதாக கடந்த வாரம் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார். ரபா மீது பாரியதாக்குதலை மேற்கொண்டால் ஆயுத விநியோகத்தை இடைநிறுத்துவோம் என பைடன் எச்சரித்திருந்தார். https://www.virakesari.lk/article/183591
  21. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 15 மே 2024, 09:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் யானை - மனித மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளை பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க விரிவான அறிக்கை கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி அன்று வெளியிடப்பட்டது. இதற்கு சில அரசியல் கட்சிகளும், தொடர்புடைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் யானை - மனித மோதல்களால் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 500 மனிதர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட யானைகளும் இறப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழ்நாட்டில் யானை- மனித மோதல்கள் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கோயம்புத்தூர், கூடலூர், சத்தியமங்கலம் மற்றும் ஓசூர் ஆகிய வனக்கோட்டங்களில் கடுமையான யானை- மனித மோதல்கள் நடந்துள்ளன என்றும், அதற்கான தீர்வு தான் இந்த புதிய யானை வழித்தடங்கள் என்று தமிழ்நாடு வனத்துறை அறிக்கை கூறுகிறது. அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் தொகுதியின் 46 கிராமங்கள் இதில் உள்ளன. அப்பகுதி மக்கள் வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து திங்கள்கிழமை (மே 13) தங்கள் வீடுகள், கடைகளில் கறுப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினார்கள். யானைகளுக்கான வழித்தடங்கள் என்றால் என்ன? வனத்துறை அடையாளம் கண்டுள்ள யானை வழித்தடங்களால் மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு பாதிப்புகள் ஏற்படுமா? பட மூலாதாரம்,TNFORESTDEPARTMENT 42 யானை வழித்தடங்கள் தமிழ்நாடு வனத்துறை அறிக்கையின் படி, 2023இல் நடத்தப்பட்ட யானைகள் கணக்கெடுப்பின் மூலம் தமிழ்நாட்டின் 20 வனக் கோட்டங்களில் மொத்தம் 2,961 யானைகள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் முதுமலை புலிகள் காப்பகத்தின் உதகை மற்றும் மசினகுடி வனக் கோட்டங்களில் 790 யானைகள் (26.7%), சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் ஹாசனூர் மற்றும் சத்தியமங்கலம் வனக் கோட்டங்களில் 668 யானைகள் (22.6%), ஆனைமலை புலிகள் காப்பகத்தின் பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் வனக் கோட்டங்களில் 337 யானைகள் (11.4%), தமிழ்நாட்டின் மீதமுள்ள வனக் கோட்டங்களில் 1,166 (39.3%) யானைகள் உள்ளன. அதிகரித்து வரும் யானை- மனித மோதல் பிரச்னைக்கு தீர்வு காணவும், யானைகளுக்கான கூடுதல் வழித்தடங்களை அடையாளம் காணவும், தமிழக அரசின் வனத்துறை கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் வி.நாகநாதன் (வனஉயிரினம்) தலைமையில் வனத்துறை மற்றும் அறிவியல் நிபுணர்கள் அடங்கிய குழு மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தமிழக யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இக்குழு தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது. இவை ஓசூர், தருமபுரி, ஈரோடு, மசினகுடி, கூடலூர், கோயம்புத்தூர், சத்தியமங்கலம், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஸ்ரீவில்லிபுத்தூர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளின் வனக் கோட்டங்களில் அமைந்துள்ளன. 161 பக்க அறிக்கையில் பாலக்காட்டுக் கணவாய்க்கு மேற்குப் பகுதியில் உள்ள வழித்தடங்கள், தெற்குப் பகுதியில் உள்ள வழித்தடங்கள் என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES மேலும், அந்த வழித்தடங்களைப் பயன்படுத்தும் யானைகளின் எண்ணிக்கை, அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகள், விவசாய நிலங்கள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், கோயில்கள், தனியார் விடுதிகள், நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள், அவை யானைகளுக்கு எந்தெந்த வகையில் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் ஆகிய விவரங்கள் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யானைகளைப் பாதுகாக்க அரசு சார்பாக எடுக்கப்பட வேண்டிய உடனடி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் 2022இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 80 யானைகள் இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த யானைகளுக்கு இரண்டு வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவை தேவர்சோலா- நிலம்பூர் மற்றும் ஓவேலி. தேவர்சோலா- நிலம்பூர் வழித்தடத்தில் உள்ள 7 கிராமங்களில் 34,796 குடும்பங்கள் வசிக்கின்றன. ஓவேலி வழித்தடத்தில் உள்ள 31 கிராமங்களில், 2,547 குடும்பங்கள் வசிக்கின்றன. அதேபோல மசினகுடி வனக்கோட்டத்தில் 61 யானைகள் இருப்பதாக 2023 கணக்கெடுப்பில் தெரியவந்தது. இங்கு அடையாளம் காணப்பட்டுள்ள சீகூர் வழித்தடத்தில் உள்ள 8 கிராமங்களில் 513 குடும்பங்கள் வசிக்கின்றன. வனத்துறை அறிக்கையின் சில பரிந்துரைகள் மசினகுடி- உதகை பாதையில் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கக் கூடாது, உதகை செல்ல கூடலூர் பாதையைப் பயன்படுத்த வேண்டும். யானைகள் செல்ல அதிக பாலங்கள் கட்டப்பட வேண்டும். வழித்தடத்தில் உள்ள இரும்புக்கம்பி வேலிகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். பொக்காபுரத்தில் உள்ள நீலகிரி மலைச் சரிவுகள் முதல் மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக (ESA- Eco sensitive areas) அறிவிக்கப்படும். யானைகள் வழித்தடங்களில் சுதந்திரமாக நடமாடுவதற்கு இடையூறாக இருக்கும் அனைத்து நெருக்கடியான பகுதிகளும் (Bottle neck points) சரிசெய்யப்பட வேண்டும். முக்கிய நெருக்கடி பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி, மனித வாழ்விடங்களை அகற்ற வேண்டும். அதேபோல கூடலூரில் தனியார் நிலங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும். குத்தகை காலம் முடிந்த தோட்ட நிலங்களை கைப்பற்றி, அவற்றை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிக்க வேண்டும். யானை- மனித மோதல்களைத் தவிர்க்க புதிய கண்காணிப்பு அமைப்புகள் நிறுவப்பட வேண்டும். தேயிலைத் தோட்ட நிர்வாகங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, ரிசர்வ் வனப்பகுதிக்கு அருகில் உள்ள செக்ஷன் 17 நிலங்களை கையகப்படுத்த வேண்டும். படக்குறிப்பு,மசினகுடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வர்கீஸ். ‘யானைகளின் வாழ்விடங்கள் மாறும் அபாயம்’ வனத்துறை அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தப் பகுதிகள் அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் சென்று விடும் எனவும், பல தலைமுறைகளாக இங்கு வசிப்பவர்கள் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் எனவும் கூடலூர் மற்றும் மசினகுடி கிராம மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக பேசிய மசினகுடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் வர்கீஸ், இந்த புதிய அறிக்கையின் பரிந்துரைகளை அமல்படுத்தினால் யானை- மனித மோதல்கள் அதிகரிக்கவே செய்யும் என்கிறார். “வழித்தடம் என்பதே இரண்டு யானை வாழ்விடங்களுக்கு இடையே செல்லக்கூடிய ஒரு குறுகிய பகுதி. அத்தகைய வழித்தடங்கள் வழியாக யானைகள் செல்லலாம், சாப்பிடலாம், தண்ணீர் குடிக்கலாம். ஆனால் அந்த இடத்தில் அவை தங்கி இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதுவே யானை வழித்தடத்திற்கான வரையறை." என்கிறார். மேலும், "நீலகிரி மலைப்பகுதியில் இருந்து மாயார் பள்ளத்தாக்கு வரை உள்ள 61,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட பகுதியை வழித்தடம் என கூறியுள்ளார்கள். முதுமலையும் சத்தியமங்கலமும் தான் யானையின் வாழ்விடங்கள். இவ்வளவு பெரிய பகுதியை வழித்தடமாக மாற்றும்போது, யானைகள் தங்கள் வாழ்விடங்களை மாற்றிக்கொண்டு இங்கேயே தங்கி இனப்பெருக்கம் செய்யத் தொடங்கும்" என்கிறார் வர்கீஸ். படக்குறிப்பு,கூடலூர் பகுதியில் ஏற்றப்பட்டுள்ள கறுப்பு கொடி. "யானைகளின் இயற்கை வாழ்விடங்கள் மாறினால், அது யானை- மனித மோதலை அதிகரிக்கவே செய்யும். இந்த 61,000 ஹெக்டேர் பகுதியில் 1193 ஹெக்டேர் நிலப்பரப்பில் 10 பகுதிகளில் மனிதர்கள் வசிக்கிறார்கள். முதுமலை முதல் சத்தியமங்கலம் வரை உள்ள காடுகள் வழியாக யாரையும் தொந்தரவு செய்யாமல் யானைகள் சென்று வரும். மனிதர்களும் அவற்றை சீண்டுவதில்லை. இப்படியிருக்க முழு பகுதியையும் வழித்தடம் என அறிவித்தது தவறு.” என்று கூறுகிறார் வர்க்கீஸ். தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் எதிர்ப்பை தெரிவிக்கவே இந்தப் பகுதியின் அனைத்து வீடுகள், கடைகளில் கறுப்புக்கோடி ஏற்றியுள்ளோம். மக்கள் கருத்தைக் கேட்டு அரசு முடிவெடுக்க வேண்டும், அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்து யானை வழித்தடங்களை முறையாக அடையாளம் காண வேண்டும்” என்று கூறினார். படக்குறிப்பு,கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன். 'வழித்தடங்களைக் கண்டறிவதில் குழப்பம்' யானை வழித்தடங்களை எப்படி கண்டறிய வேண்டும் என்பதில் ஒரு பெரும் குழப்பம் நீடிப்பதாகக் கூறுகிறார் கூடலூர் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக கட்சியைச் சேர்ந்தவருமான பொன். ஜெயசீலன். “2000ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தமிழ்நாட்டில் 25 யானை வழித்தடங்கள் இருப்பதாக வனத்துறையினர் கூறினார்கள். பின்னர் 2017இல் மீண்டும் ஒரு கணக்கெடுப்பில் 18 வழித்தடங்கள் எனக் கூறினார்கள். அதன் பிறகு 2023இல் எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 20 என்றும் அதில் 15 தமிழ்நாட்டு எல்லைக்குள்ளும், மீதம் 5 கர்நாடகா, கேரளா எல்லைகளில் இருக்கிறது என்றும் கூறினார்கள். இப்போது 42 என்கிறார்கள்." என்று கூறினார். தொடர்ந்து பேசுகையில், “இந்த 161 பக்க அறிக்கையை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ளார்கள். இப்பகுதியில் உள்ள பாமர மக்கள் இதை எப்படி படித்து புரிந்துகொள்வார்கள். எனவே மக்களையும் உள்ளூர் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும், இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என்கிறார் சட்டமன்ற உறுப்பினர் பொன். ஜெயசீலன். படக்குறிப்பு,சூழலியல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினருமான ஓசை காளிதாசன். யானை வழித்தடங்களின் முக்கியத்துவம் இந்த உலகிற்கு காடுகள் வேண்டும் என்றால், காடுகளைக் காப்பாற்ற யானைகள் வேண்டும், யானைகளைக் காப்பாற்ற யானை வழித்தடங்கள் வேண்டும் என்று கூறுகிறார் சூழலியல் செயல்பாட்டாளரும், தமிழ்நாடு வன உயிரின வாரிய உறுப்பினருமான ஓசை காளிதாசன். “இரண்டு வாழ்விடங்களுக்கு இடையேயான குறுகிய பாதையை தான் யானை வழித்தடம் அல்லது வலசைப் பாதை என்று சொல்வார்கள். ஒரு வளர்ந்த யானைக்கு 150 கிலோ உணவு, 200 லிட்டர் தண்ணீர் வரை தேவைப்படும். உணவு தேடி அவை பயணித்துக் கொண்டே இருக்கும். இந்த வழித்தடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் யானைகளால் ஒரு வாழ்விடத்திலிருந்து மற்றொன்றிற்கு செல்ல இயலாது.” என்கிறார் ஓசை காளிதாசன். தொடர்ந்து பேசிய அவர், “கடந்த சில வருடங்களாக பல பெரும் ஆக்கிரமிப்புகளால் யானை வலசைப் பாதைகள் மாறிவிட்டன. இதனால் யானைகளின் வாழ்விடங்கள் சுருங்கி விட்டதால், அவை விளை நிலங்களுக்குள் நுழைகின்றன. மக்கள் வசிக்கும் பகுதிகளால் யானைகளுக்கு பாதிப்பு இல்லை, காரணம் மக்களும் பழங்குடிகளும் பல காலமாக யானைகளோடு தான் வாழ்ந்து வருகிறார்கள். பிரச்னை யாரால் என்றால் புதிதாக முளைத்துள்ள பெரிய நிறுவனங்களின் ரிசார்டுகளாலும், ஆசிரமங்களாலும் தான். யானைகள், மக்கள் மற்றும் பழங்குடிகள், இரண்டு தரப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும்” என்று கூறுகிறார் ஓசை காளிதாசன். பட மூலாதாரம்,@MMATHIVENTHAN படக்குறிப்பு,தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தமிழக அரசு கூறுவது என்ன? யானை வழித்தடத் திட்டத்துக்கு எழுந்திருக்கும் எதிர்ப்பு குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “கூடலூர், மசினகுடி மக்கள் யாரும் பதற்றப்படத் தேவையில்லை. இப்போது வெளியிடப்பட்டிருப்பது ஒரு திட்ட வரைவு மட்டுமே. அது நிபுணர்களுக்காக தயாரிக்கப்பட்ட வரைவு என்பதால் தான் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் மக்களிடம் இது குறித்து கருத்து கேட்கவில்லை. தேர்தல் முடிந்ததும் ஒவ்வொரு பகுதி மக்களிடமும் சென்று கருத்து கேட்போம்." என்றார். எதிர்க்கட்சிகள் இதை அரசியலாக்க முயற்சி செய்வதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர், "யானைகளின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் தான், அதற்காக எடுத்தோம் கவிழ்த்தோம் என்று யாரையும் வெளியேறச் சொல்ல மாட்டோம். சில பகுதிகளில் அதற்கான தேவை ஏற்பட்டாலும் அவர்களுக்கு தகுந்த நஷ்ட ஈடும், மாற்று இடமும் வழங்கப்படும்” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆனால் கூடலூர், மசினகுடி பகுதி மக்கள் இதை ஏற்பதாகத் தெரியவில்லை. கூடலூரைச் சேர்ந்த விமல் பேசுகையில், “இப்படித்தான் கூடலூரின், ஓவேலி பகுதியில் புலிகள் காப்பகத் திட்டத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும்போது நஷ்ட ஈடும், மாற்று இடமும் தருவதாகச் சொன்னார்கள், ஆனால் அந்த மக்களுக்கு இன்றுவரை அது கிடைக்கவில்லை. பத்து தலைமுறைக்கும் மேலாக இங்கு வாழ்ந்து வருகிறோம். ஒருபோதும் யானை வாழ்விடங்களையோ வழித்தடங்களையோ நாங்கள் ஆக்கிரமித்ததில்லை” என்று கூறும் அவர் ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறார், “பழங்குடிகளுக்கும் எங்களுக்கும் யானைகள் தான் பாதுகாப்பு, யானைகளுக்கு நாங்கள் தான் பாதுகாப்பு. எங்களை வெளியேற்றிவிட்டு என்ன செய்யப் போகிறார்கள்?” https://www.bbc.com/tamil/articles/ce5llj4kr52o
  22. தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப்போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவம் முன் உதாரணம் - முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு Published By: VISHNU 15 MAY, 2024 | 08:00 PM தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப் போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவமே மிக அண்மைய நல்ல முன் உதாரணமாகும் என்று தெரிவித்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு சர்வதேசம் அதனை உணர்ந்து போர்க் குற்றங்களுக்கான நீதியையும் அரசியல் நீதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் பேரினவாத அரச படைகளினதும் பொலிஸாரினதும் புலனாய்வு துறையினரதும் பல்வேறு அடக்குமுறை நெருக்கதல்களுக்கு மத்தியில் போர் வலி சுமந்த மக்களாக போரில் கொல்லப்பட்ட, இறந்த எம் உறவுகளுக்காக கடந்த 14 வருடங்களாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வேதனையோடும் நீதி எதிர்ப்பார்ப்போடும் செய்கின்றோம். போர்க்காலத்தில் பட்டினிச்சாவை தவிர்ப்பதற்காக செல்லடினாலும், குண்டு தாக்குதலிலும், ஆங்காங்கே இரத்த வெள்ளத்தில் சதை சதைப்பிண்டங்களாக உறவுகள் வீழ்ந்து கிடைக்க கஞ்சிக்கு வரிசையில் நின்றதை மறக்க முடியாதவர்களாக ஒவ்வொரு வருடமும் உப்புக்கஞ்சி பகிர்ந்து நினைவுகளை மீட்கின்றோம். அவ்வாறே இவ்வருட நினைவேந்தலில் ஆரம்ப நாளில் கஞ்சி பகிர்ந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சம்பூரில் மூன்று பெண்கள் உட்பட ஆண் ஒருவரையும் கைது செய்து ஐ.சி.சி.பி.ஆர் இன் கீழ் 14 நாட்கள் தடுப்பு காவலில் சம்பூர் பொலிஸார் வைத்துள்ளனர். இது போரின் வலி சுமந்து நீதிக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் அனைத்து தமிழர்களையும் மௌனிக்க செய்து தண்டிக்கும் இனவாத வன்முறையாகும். இதனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பு வன்மையாகக் கண்டிப்பதோடு குற்றம் சாட்டப்பட்டவர்களை அனைத்து குற்றச்சாட்டுகளில் விடுவித்து உடனடியாக விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர், சட்டமா அதிபர், ஜனாதிபதி உள்ளிட்ட அனைவரையும் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறான சம்பவங்கள் இனியும் நடக்க இடம் கொடுக்கக் கூடாது எனவும் கூறுகின்றோம். கஞ்சி பகிர்தல் எந்த வகையில் இன முரண்பாட்டைத் தோற்றுவிக்கும்? என்று கேட்பதோடு; ஒன்று கூடுதல் மற்றும் கஞ்சி பகிர்ந்தல் மூலம் தொற்றுநோய் பரவுமென யாரால்? அறிவித்தல் விடுக்கப்பட்டது எனவும் சம்பூர் பொலிஸாரிடம் கேட்கின்றோம். அங்கு பொலிஸார் பெற்றுக் கொண்ட தடை உத்தரவின் அடிப்படை நோக்கம் இனவாதமாகும். இதுவே இனமுறைகளைத் தோற்றுவிக்கும் செயற்பாடாகும். இத்தகைய குற்றத்தை செய்த சம்பூர் பொலிஸார் எந்தச் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவர். யுத்த குற்றங்கள் இழைக்கப்பட்ட நாட்டில் இனப்படுகொலை துன்பியல் நினைவுகளோடு இனஅழிப்பிற்கு தொடர்ந்தும் முகம் கொடுத்தவர்களாக நினைவேந்தலைச் செய்யும் நாம் நீதிக்கான ஆயுதமாகக் கஞ்சியையும், கஞ்சி சிரட்டையுமே தூக்கி நிற்கின்றோம். இதனை இனவாத நோக்கத்தில் சட்டத்தின் துணைகொண்டு தட்டிப்பறித்து புத்தரின் போதனை மிதித்து அவரின் பிச்சை பாத்திரத்தையே தட்டிப்பறிப்தற்கு சமமாகும் என இவ் வைகாசி மாதத்தில் வலியுறுத்தி கூற விரும்புகின்றோம். இவ்வருடம் எதிர்வரும் கிழமையில் பௌத்தர்களின் வெசாக் பண்டிகையை கொண்டாடவிருக்கின்றனர். அப்போது தெற்கில் மட்டுமல்ல வடகிழக்கிலும் பௌத்தர்களும், சிங்கள பௌத்த இராணுவத்தினரும் வீதிகளில் தான சாலைகளை அமைத்து வீதியில் பயணிக்கும் மக்களை நிறுத்தி குளிர்பானங்களையும், உணவுகளையும் பகிர்வர். தொற்றுநோய் பரவுமென அப்போதும் சம்பூர் பொலிஸார் இதனை செய்யவிடாது தடுப்பார்களா? யாராவது நீதிமன்ற தடை உத்தரவைப் பெறுவார்களா? இல்லையே. தமிழர் தாயகத்தில் இராணுவத்தினரின் தர்ம சாலைகளையும், பௌத்த பாராயணம் ஒலிபெருக்கி சத்தங்களையும் இனமுரண்பாட்டுக்கு உரிய ஒன்றாகவே நாம் பார்க்கின்ற போதும் அதற்கு எதிராக எவரும் நீதிமன்றத்தை நாடவில்லை. இன, மத நல்லிணக்கமென நாமும் அமைதி கொள்ளும்போது எம்மை சீண்டிவிடும் செயற்பாட்டில் எவரும் ஈடுபடக்கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பு. தமிழர்களுக்கு இந்த நாட்டில் நீதி கிட்டப் போவதில்லை என்பதற்கு சம்பூர் சம்பவமே மிக அண்மைய நல்ல முன் உதாரணமாகும். இதனை சர்வதேசம் உணர்ந்து தமிழர்களுக்குக் கூறும் போர்க் குற்றங்களுக்கான நீதியையும் அரசியல் நீதியையும் பெற்றுக் கொடுப்பதற்கு சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் எனவும் முள்ளிவாய்க்கால் 15 ஆம் நினைவு ஆண்டில் மீண்டும் வலியுறுத்துகின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/183640
  23. 50 வயது தாண்டும்போதே சுகர் வருத்தங்கள் வாறது. விழிப்புணர்வு வரும்போது பலர் நோயாளிகள் ஆகியிருப்பர்.
  24. பல சந்தர்ப்பங்களில் நாங்களும் அப்பிடித்தான், மற்றவர் நிலைமை தெரியாமல் பேசுவது. பகிர்விற்கு நன்றி அக்கா.
  25. 15 MAY, 2024 | 02:11 PM நெடுந்தீவு குமுதினி படுகொலையின் 39ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (15) காலை நெடுந்தீவு மாவிலி துறைமுகத்தில் அமைந்துள்ள குமுதினி படுகொலை நினைவுத்தூபியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு நினைவுச்சுடர்கள் ஏற்றப்பட்டு அக வணக்கம் செலுத்தப்பட்டு, உணர்வெழுச்சி நினைவேந்தல் நடைபெற்றது. இதன்போது, பசுந்தீவு ருத்திரன் எழுதிய குமுதினி படுகொலை நினைவுகளைச் சுமந்த "உப்புக் கடலை உரசிய நினைவுகள்" என்ற கவி நூல் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் தரித்து நிற்கும் குமுதினி படகில் வெளியிடப்பட்டது. இந்த நூலை சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் வெளியிட்டுவைத்தார். தொடர்ந்து, குமுதினி படகில் இருந்து கடலில் மலர் தூவி உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் முள்ளிவாய்க்கால் நினைவுகளை சுமந்த முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கப்பட்டது. அத்தோடு, உயிரிழந்தவர்களின் நினைவாக மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன. 1985/05/15 அன்று இதேபோன்ற நாளில் நெடுந்தீவு கடற்பரப்பில் நெடுந்தீவு மாவிலித் துறைமுகத்தில் இருந்து யாழ். புங்குடுதீவு குறிகாட்டுவான் நோக்கி கடலில் குமுதினி படகில் மக்கள் பயணித்தபோது கடற்படையினரால் 07 மாத பெண்குழந்தை, பெண்கள் அடங்கலாக 36 பேர் நடுக்கடலில் வைத்து வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இந்த நினைவேந்தலில் சிவகுரு ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள், நெடுந்தீவு பங்குத்தந்தை S.பத்திநாதன், மத தலைவர்கள், படுகொலையில் உயிரிழந்தவர்களின் உறவுகள், பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/183603

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.