Everything posted by ஏராளன்
-
நினைவேந்தல்களுக்கு எதிரான அடக்குமுறையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என பிரிட்டன் இலங்கைக்கு தெரிவிக்கவேண்டும் - பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர்
Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 10:59 AM தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முள்ளிவாய்க்காலின் இறுதி இராணுவ நடவடிக்கையின் போது 169000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது இது ஒரு இனப்படுகொலை என பலர் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் யுத்தசூன்யவலயத்தில் கண்மூடித்தனமான குண்டுவீச்சினை மேற்கொண்டது படுகொலைகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்தாயகப்பகுதிகளான வடக்குகிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தொடரும் ஒடுக்குமுறைகளை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பிரிட்டன் தெளிவான எச்சரிக்கைகளை விடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திரமான வெளிப்படையான ஜனநாயக சமூகத்தில் மக்கள் நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடமுடியாது சுதந்திரமான நியாயமான ஜனநாயகத்தில் நீங்க்ள இதனை செய்யவேண்டும் என கொல்பேர்ன் தெரிவித்துள்ளார். ஓவ்வொருவருடமும் நாங்கள் இதனை கேள்விப்படுகின்றோம் நினைவேந்தல் குழப்ப்படுவது குறித்த கதைகளை கேட்கின்றோம் மக்கள் காரணமில்லாமல் கைதுசெய்யப்படுகின்றனர் இதன் காரணமாக இதனை நிறுத்தவேண்டும் என்ற வலுவான செய்தியை பிரிட்டன் தெரிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 2009 இல் இடம்பெற்ற சம்பவங்களை இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்வதற்கான தேவை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இதற்கான முயற்சிகளில் தானும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். tamil guardian https://www.virakesari.lk/article/183220
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம் 11 MAY, 2024 | 06:56 PM கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது. வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர். இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது. https://www.virakesari.lk/article/183271
-
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு யாழ். பல்கலையில் குருதிக் கொடை
2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இலங்கை இராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி குருதிக்கொடை நிகழ்வு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது. குறித்த நிகழ்வானது எதிர்வரும் 14 ஆம் திகதி காலை 09 மணி முதல் மாலை 03.00 மணி வரை இடம்பெறவுள்ளது. தமிழ் மக்களின் நினைவேந்தல் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் நினைவேந்தி நடைபெறும் குருதிக்கொடையில் பல்கலைக்கழக மாணவர்கள், கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் மட்டுமன்றி பொதுமக்களும் கலந்து கொண்டு குருதிக் கொடை செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/blood-donation-jaffna-uni-mullivaikal-memorial-1715440182
-
இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு
இரானில் இந்த ஹிஜாப் எதிர்ப்பு போராளியை பூட்டிய வேனுக்குள் காவல்படை என்ன செய்தது? பிபிசி புலனாய்வு பட மூலாதாரம்,ATASH SHAKARAMI படக்குறிப்பு,இரானில் பெண்களுக்கான கடுமையான ஆடைக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்களின் போது நிக்கா காணாமல் போன போது அவருக்கு வயது 16. கட்டுரை தகவல் எழுதியவர், பெர்ட்ரம் ஹில், ஐடா மில்லர் & மைக்கேல் சிம்கின் பதவி, பிபிசி ஐ இன்வஸ்டிகேஷன்ஸ் 11 மே 2024, 13:14 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் எச்சரிக்கை - இந்த அறிக்கையில் உள்ள புகைப்படங்களும் விளக்கங்களும் சில வாசகர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தலாம். இரானின் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் மூன்று ஆண்களால் பதின்பருவ பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இந்த தகவல் இரான் பாதுகாப்புப் படையினரால் எழுதப்பட்டதாகக் கசிந்த ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022 இல் அரசுக்கு எதிரான போராட்டத்தின் போது காணாமல் போன 16 வயது பெண் நிக்கா ஷகராமிக்கு என்ன நடந்தது என்பது இந்த ஆவணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன ஒன்பது நாட்களுக்குப் பிறகு அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. நிக்கா தற்கொலை செய்து கொண்டதாக அரசாங்கம் கூறியது. இந்த ஆவண அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை குறித்து இரானின் அரசாங்கம் மற்றும் அதன் புரட்சிகர காவல் படையிடம் கேள்வி எழுப்பினோம். ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை. "மிகவும் ரகசியமானது" எனக் குறிப்பிடப்பட்ட இந்த ஆவண அறிக்கையில் நிக்கா ஷகராமி வழக்கில் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) மேற்கொண்ட விசாரணை குறித்து சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் நிக்காவை கொன்றவர்களின் பெயர்களும் உண்மையை மறைக்க முயன்ற மூத்த தளபதிகளின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. மேலும், அன்று என்ன நடந்தது, நிக்கா எப்படி கொல்லப்பட்டார் என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது. அதில் சொல்லப்பட்ட தகவல்கள் மனதை உலுக்குகிறது. போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினர் நிக்காவை தடுத்து நிறுத்தி, ரகசிய வேனுக்கு இழுத்துச் சென்றனர். காவலர்களில் ஒருவர் நிக்காவை பாலியல் ரீதியாக சித்ரவதை செய்துள்ளார். நிக்காவுக்கு கைவிலங்கிடப்பட்டு இருந்தாலும், காவலர்களுக்கு எதிராக கால்களை உதைத்தும் கூச்சலிட்டும் தன் எதிர்ப்பை அவர் வெளிப்படுத்தியுள்ளார். தன்னால் முடிந்த அளவுக்கு அவர்களை எதிர்த்துப் போராடியதால் ஆத்திரம் அடைந்த காவலர்கள் நிக்காவை தடியால் அடித்துள்ளனர். நிக்கா எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை அடித்து துன்புறுத்தினோம் என காவலர்கள் விசாரணையின் போது ஒப்புக் கொண்டதாக ரகசிய ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆவணம் நம்பகத்தன்மை உடையதா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எங்களுக்கு இருந்தது. காரணம், ஏராளமான போலியான இரானிய ஆவணங்கள் புழக்கத்தில் உள்ளன. எனவே பிபிசி, இந்த ஆவணத்தில் இருக்கும் தகவல்களை, பல ஆதாரங்களை ஒப்பிட்டு, ஒவ்வொரு விவரத்தையும் பல மாதங்கள் சரிபார்த்தது. எங்கள் விரிவான விசாரணைகளுக்குப் பிறகு எங்கள் கைக்குக் கிடைத்துள்ள இந்த ஆவணங்கள் பதின்பருவ பெண் நிக்காவுக்கு நடந்தவற்றை விவரிக்கின்றன என்பதை உறுதி செய்தோம். நிக்காவை கண்காணித்த பாதுகாப்புப் படை பட மூலாதாரம்,SOCIAL MEDIA படக்குறிப்பு,நிக்கா தனது சகோதரி ஐடா உடன் இருந்த புகைப்படம். நிக்கா ஷகராமி காணாமல் போனது முதல் மரணித்த தகவல் வரை பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டது. அவரது புகைப்படம் இரானில் சுதந்திரத்திற்காக பெண்கள் நடத்திய போராட்டத்தின் முகமாக மாறியது. 2022 இல் இலையுதிர் காலத்தில் இரான் முழுவதும் மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டங்கள் நடத்தினர். ”கட்டாய ஹிஜாப்” தொடர்பான கடுமையான விதிகளால் கோபமடைந்த பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர். `பெண், வாழ்க்கை, சுதந்திரம்’ என்ற இயக்கம் சில நாட்களுக்கு முன்பு 22 வயது பெண் மாசா அமினியின் மரணத்தால் வெகுண்டெழுந்தது. 'மாசா அமினி சரியாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டு, கைதாகி, போலீஸ் காவலில் ஏற்பட்ட காயங்களால் அவர் இறந்தார்.’ என்று ஐ.நா உண்மை கண்டறியும் குழு கூறுகிறது. நிக்காவின் வழக்கில், போராட்டத்திலிருந்து காணாமல் போன ஒரு வாரத்திற்குப் பிறகு அவரது குடும்பத்தினர் அவரது உடல் சவக்கிடங்கில் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆனால், இரான் அதிகாரிகள் நிக்காவின் மரணம் போராட்டத்தின் போது ஏற்பட்டது என்று கூறி, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறி வழக்கை முடித்தனர். செப்டம்பர் 20 அன்று மாலை, நிக்கா காணாமல் போவதற்கு சற்று முன்பு, மத்திய தெஹ்ரானில் உள்ள லாலே பூங்காவிற்கு அருகில், குப்பைத்தொட்டி பக்கத்தில் நின்றபடி ஹிஜாப்களுக்கு தீ வைத்துப் போராட்டம் நடத்தியது வீடியோவாக பதிவு செய்யப்பட்டிருந்தது. அவரைச் சுற்றியிருந்த மற்றவர்கள் இரானின் உச்ச தலைவரான ஆயத்துல்லா அலி காமனெயி-யைக் குறிப்பிட்டு "சர்வாதிகாரி ஒழிக" என்று கோஷமிட்டனர். அந்த நேரத்தில் நிக்கா தான் கண்காணிக்கப்படுவதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. போராட்டம் தொடங்கியதில் இருந்தே பாதுகாப்புப் படையினர் நிக்காவை கண்காணித்ததாக ஆவணத்தில் எழுதப்பட்டுள்ளது. அறிக்கையில் இருப்பது என்ன? இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை (IRGC) தலைமைத் தளபதியின் கூற்றுப்படி, போராட்டத்தை பல ரகசிய பாதுகாப்புப் பிரிவுகள் கண்காணித்தன. அந்த குழுக்களுடனான விரிவான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் இந்த ஆவணத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ரகசிய பாதுகாப்பு குழுக்களில் ஒன்றுதான் டீம் 12. நிக்காவின் வழக்கத்திற்கு மாறான நடத்தை, அவரது மொபைல் ஃபோனுக்கு திரும்பத் திரும்ப வந்த அழைப்புகள் என அவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது. எனவே, `இந்த பதின்வயது பெண் தான் போராட்டத்தைத் தலைமை தாங்குகிறார்’ என பாதுகாப்புப் படை எண்ணியது. நிக்கா உண்மையில் ஆர்ப்பாட்டத்தின் தலைவர்களில் ஒருவரா என்பதை உறுதிப்படுத்த, பாதுகாப்புப் படைப் பிரிவை சேர்ந்த அதிகாரி ஒருவரை போராட்டக் களத்துக்குள் அனுப்பி, போராளியாக நடிக்க வைத்தனர். பின்னர், அறிக்கையின்படி, அந்த காவலர் அவரை கைது செய்ய தனது குழுவை அழைத்தார். ஆனால் நிக்கா அந்த சமயத்தில் தப்பி விட்டார். பாதுகாப்புப் படையினரால் தான் துரத்தப்படுவதாக நிக்கா அன்றிரவு தனது நண்பருக்கு அலைபேசியில் தெரிவித்ததாக அவரது அத்தை பிபிசி பாரசீகத்திடம் கூறியிருந்தார். ஒரு மணிநேர தீவிரத் தேடுதல் பணிக்கு பின்னர், நிக்காவை அவர்கள் கைது செய்ததாக அறிக்கை கூறுகிறது. அவர் அக்குழுவின் ஃப்ரீசர் பொருந்திய ஒரு வாகனத்துக்குள் அடைக்கப்பட்டார். வாகனத்துக்கு முன்புறம் ஓட்டுநருடன் ”டீம் 12” குழுவின் தலைவர் மோர்டேசா ஜலீல் அமர்ந்து கொண்டார். அராஷ் கல்ஹோர், சதேக் மொன்ஜாசி மற்றும் பெஹ்ரூஸ் சதேகி ஆகிய அக்குழுவின் காவலாளிகள் மூன்று பேருடன் நிக்கா வாகனத்தின் பின்பகுதியில் இருந்தார். ”டீம் 12” குழு நிக்காவை எங்கு அழைத்துச் செல்வது என்று தெரியாமல் வாகனத்தில் பயணித்துள்ளனர். அவர்கள் அருகில் இருந்த ஒரு தற்காலிக போலீஸ் முகாமில் விட முயற்சித்தார்கள். ஆனால் அங்கு போராளிகளின் கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். எனவே அவர்கள் 35 நிமிட பயண தூரத்தில் உள்ள போராட்ட தடுப்பு மையத்திற்குத் கொண்டு செல்ல திட்டமிட்டனர், அந்த தடுப்பு நிலைய தளபதி ஆரம்பத்தில் நிக்காவை அனுமதிக்க ஒப்புக்கொண்டாலும் பின்னர் மறுத்துவிட்டார். அந்த தளபதி புலனாய்வு விசாரணையின் போது கூறிய தகவல்களாக அறிக்கையில் , `நிக்கா என்ற பெண் தொடர்ந்து அரசுக்கு எதிராக கோஷமிட்டார். தடுப்பு நிலையத்தில் ஏற்கனவே பல பெண் போராளிகளை பிடித்து வைத்திருக்கிறோம். நிக்கா இங்கு அழைத்து வரப்பட்டால் போராளிகளை தூண்டி, கோஷமிட வைப்பார், எனவே வர வேண்டாம் என்று சொல்லிவிட்டோம்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. ’நிக்கா கால்சட்டைக்குள் கையை வைத்திருந்தார்’ பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு,இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை - கோப்புப்படம் தலைவர் மோர்டேசா ஜலீல் மீண்டும் தனது IRGC தலைமையகத்தை ஆலோசனைக்காக தொடர்பு கொண்டதாக அறிக்கை கூறுகிறது. நிக்காவை தெஹ்ரானின் மோசமான எவின் சிறைச்சாலைக்கு அனுப்புமாறு உத்தரவு கிடைத்துள்ளது. அங்கு பயணிக்கும் சமயத்தில், வழியில், வாகனத்தின் இருண்ட பின்புறப் பெட்டியிலிருந்து சத்தம் கேட்கத் தொடங்கியது என்கிறார் மோர்டேசா. அவர் கேட்ட சத்தம் எதனால் வந்தது என்பது எங்களுக்குத் தெரியும். நிக்காவைக் காவலில் வைத்திருக்கும் நபர்களிடமிருந்து ஆவணம் செய்யப்பட்ட தகவல்கள் வாயிலாக அங்கு நடந்தது விவரிக்கப்பட்டது. மூவரில் ஒருவரான பெஹ்ரூஸ் சதேகி விசாரணையில் கொடுத்த தகவலின்படி, “தடுப்பு மையத்தால் நிராகரிக்கப்பட்ட பின்னர் மீண்டும் வாகனத்தில் ஏற்றப்பட்டவுடன், நிக்கா திட்டவும் கத்தவும் தொடங்கினார். அராஷ் கல்ஹோர் தன் காலுறைகளால் அவளது வாயை அடைத்தார், ஆனால் அவர் எதிர்த்துப் போராட ஆரம்பித்தார். பிறகு சதேக் [மோன்ஜாசி] அவரை வாகனத்தில் இருந்த ஃப்ரீஸர் பெட்டி மீது கிடத்தி, அவர் மீது ஏறி அமர்ந்தார். நிக்கா அமைதியானார்" என்று அவர் புலனாய்வாளர்களிடம் கூறினார். "என்ன நடந்தது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் சில நிமிடங்களுக்குப் பிறகு அவர் மீண்டும் திட்ட ஆரம்பித்தார், அங்கு இருட்டாக இருந்ததால் என்னால் எதையும் பார்க்க முடியவில்லை, எனக்கு தாக்கிக் கொள்ளும் சத்தம் மட்டுமே கேட்க முடிந்தது." என்றார். அதன் பின்னர் அராஷ் கல்ஹோர் சொன்ன தகவல்கள் நம்மை அதிர்ச்சியில் உறைய வைக்கின்றன. படக்குறிப்பு,இது அசல் ஆவணத்தின் மறு உருவாக்கம் (ஆதாரத்தை அடையாளம் காணக்கூடிய சில தகவல்களைத் தவிர்த்து) அராஷ் கல்ஹோர் ”எனது ஃபோன் டார்ச்சை ஆன் செய்து பார்த்த போது, சதேக் மொன்ஜாசி ’நிக்கா கால்சட்டைக்குள் கையை வைத்திருந்தார்’. அதன் பிறகு நாங்கள் கட்டுப்பாட்டை இழந்தோம்” என்று விவரித்தார். "அதன் பின்னர் அங்கு என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை... ஆனால் நிக்காவை தாக்கும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. நானும் கைகளால் அடிக்கவும், கால்களால் உதைக்கவும் தொடங்கினேன், நான் எங்கள் குழுவினரைத் தாக்குகிறேனா அல்லது நிக்காவை தாக்குகிறேனா என்பது உண்மையில் எனக்குத் தெரியாது.” என்றார். ஆனால் அராஷ் கல்ஹோரின் கூற்றுக்கு சதேக் மோன்ஜாசி முரண்பட்டார். “தொழில்முறை பொறாமையால் அவர் அப்படி சொல்கிறார். நிக்கா கால்சட்டைக்குள் நான் கை வைக்கவில்லை.” என்றார். ஆனால் நிக்கா மீது அமர்ந்து அவரின் பின்புறத்தை தொட்டபோது அவர் "பாலியல் உணர்வு" அடைந்ததை மறுக்க முடியாது என்று புலனாய்வு விசாரணையில் ஒப்புக்கொண்டார். நிக்கா எரிச்சல் ஆகி, அவரது கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்த போதிலும் - தன் மீது அமர்ந்திருந்த காவலாளியை நகங்களால் கீறியிருக்கிறார். தன் உடலை உலுக்கி காவலாளியை கீழே விழ செய்திருக்கிறார். படக்குறிப்பு,இது அசல் ஆவணத்தின் மறு உருவாக்கம் (ஆதாரத்தை அடையாளம் காணக்கூடிய சில தகவல்களைத் தவிர்த்து) நிக்காவுக்கு நடந்தது என்ன? "நிக்கா என் முகத்தின் மீது எட்டி உதைத்தார், அதனால் நான் என்னை தற்காத்துக் கொள்ள வேண்டியிருந்தது." என்று சதேக் மோன்ஜாசி கூறியுள்ளார். வாகனத்தின் கேபினில் இருந்து, மோர்டேசா ஜலீல் டிரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னார். வாகனத்தை நிறுத்தி பின்பக்கக் கதவை திறந்து பார்த்த போது, நிக்காவின் உயிரற்ற உடல் கிடந்தது. அவரின் முகம் மற்றும் தலையில் இருந்து ரத்தத்தை சுத்தம் செய்ததாக மோர்டேசா கூறினார். நிக்காவின் உடல் முழுவதும் பலத்த காயங்கள் காணப்பட்டன என்றும் குறிப்பிட்டிருக்கிறார். நிக்காவின் தாய் தனது மகளை சவக்கிடங்கில் பார்த்தபோது உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாக சொன்னதும் மோர்டேசா சொன்னதும் ஒத்துப் போகிறது. மேலும் நிக்காவின் இறப்புச் சான்றிதழ் - அக்டோபர் 2022 இல் பிபிசி பெர்சியனால் பெறப்பட்டது - அதில் "கடினமான பொருளால் தாக்கப்பட்ட பல காயங்கள்" அவர் உடலில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளனர். ”டீம் 12” தலைவர் மோர்டேசா ஜலீல், ”வாகனத்தின் பின்புறத்தில் நிக்காவுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை நடத்த முயற்சிக்கவில்லை” என்பதை ஒப்புக்கொண்டார். "நான் நிக்காவின் உடலை எப்படி அப்புறப்படுத்துவது என்று மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தேன், யாரிடமும் எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் கேட்டது ஒரே கேள்வி தான் . `அவள் மூச்சுவிடுகிறாளா’ என்றேன், அதற்கு 'இல்லை, அவள் இறந்துவிட்டாள்' என்று பெஹ்ரூஸ் சதேகி பதிலளித்தார் என்று நினைக்கிறேன்." என மோர்டேசா ஜலீல் கூறியுள்ளார். கொலை செய்யப்பட்ட சடலத்துடன், ஜலீல் மூன்றாவது முறையாக IRGC இன் தலைமையகத்தை அழைத்தார். இம்முறை, "நயீம் 16" என்ற குறியீட்டுப் பெயருடன் கூடிய மூத்த அதிகாரியிடம் பேசினார். நயீம் 16 விசாரணையில், "எங்கள் நிலையங்களில் ஏற்கனவே இறப்புகள் ஏற்பட்டிருந்தன, மேலும் அந்த இறப்பு எண்ணிக்கை 20 ஆக உயருவதை நான் விரும்பவில்லை. எனவே இங்கு நிக்காவின் சடலத்தைக் கொண்டு வர நான் ஒப்புக் கொள்ளவில்லை” என்றார். அவர் ஜலீலிடம் "அந்த சடலத்தை தெருவில் தூக்கி எறிந்து விடுங்கள்" என்று கூறியிருக்கிறார். தெஹ்ரானின் யாதேகர்-இ-எமாம் நெடுஞ்சாலையின் கீழ் ஒரு அமைதியான தெருவில் நிக்காவின் உடலை விட்டுச் சென்றதாக ஜலீல் குறிப்பிட்டிருக்கிறார். `வாகனத்தின் பின்புறத்தில் நிக்காவுக்கு பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்யப்பட்டதால் அடிதடி சூழல் ஏற்பட்டது. டீம் 12 குழுவின் தாக்குதல்கள் நிகாவின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது” என்று இந்த விசாரணை முடிவில் கூறப்பட்டுள்ளது. "மூன்று தடிகள் மற்றும் மூன்று டேசர்கள் பயன்படுத்தப்பட்டன. அதில் எந்த ஆயுதத்தின் அடி அவளை மரணிக்க வைத்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை," என்று அந்த அறிக்கை கூறுகிறது. நிக்காவிற்கு என்ன நடந்தது என்ற அரசாங்கத்தின் கூற்றுடன் இந்த அறிக்கை முரண்படுகிறது. அவரின் இறுதிச் சடங்கிற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, அரசு தொலைக்காட்சி அதிகாரப்பூர்வ விசாரணையின் முடிவுகளை ஒளிபரப்பியது. நிக்கா ஒரு கட்டிடத்தில் இருந்து குதித்து இறந்ததாக செய்தி வெளியிட்டது. நிக்கா ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் நுழைவதை போன்ற சிசிடிவி காட்சி அடங்கிய காணொளி செய்தியில் காட்டப்பட்டது, ஆனால் நிக்காவின் தாயார் பிபிசி பெர்ஷியனுக்கு ஒரு தொலைபேசி பேட்டியில் " அந்த நபர் நிக்கா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை" என்று கூறினார். பிபிசி ஆவணப்படத்தில் போராளிகளின் மரணங்கள் குறித்து அதிகாரிகள் கூற்றுகளை பற்றி விவாதிக்கையில் நஸ்ரின் ஷகராமி "அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம்," என்று கூறினார். சகோதரி கைது பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஹெஸ்பொல்லா அமைப்பு: கோப்புப்படம் பிபிசி ஐ (BBC Eye), இந்த விசாரணை அறிக்கையின் உண்மைத்தன்மையை தீவிரமாக ஆய்வு செய்தது. சில சமயங்களில், அதிகாரப்பூர்வ இரானிய ஆவணங்கள் மற்றும் இணையத்தில் புழக்கத்தில் உள்ள பிற ஆவணங்கள் கூட போலியானவை என்று கண்டறியப்படுகிறது. எவ்வாறாயினும், இந்த போலி ஆவணங்களில் பெரும்பாலானவை எளிதில் பொய்யானது என கண்டுபிடிக்கப்படுகின்றன. ஏனெனில் அந்த அறிக்கைகள் அதிகாரப்பூர்வ வடிவமைப்பில் இருந்து வேறுபடுகின்றன - பிழையான தலைப்பு, அல்லது குறிப்பிடத்தக்க இலக்கண அல்லது எழுத்துப் பிழைகளை கொண்டிருக்கின்றன. எங்கள் விசாரணையை மையப்படுத்திய ஆவணத்திலும் இதுபோன்ற சில முரண்பாடுகள் இருந்தன. உதாரணமாக, அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட "நஜா" போலீஸ் படை அந்த காலகட்டத்தில் "ஃபராஜா" என்று அழைக்கப்பட்டது. எனவே, ஆவணத்தின் உண்மைத்தன்மையை மேலும் சோதிக்க, நூற்றுக்கணக்கான முறையான ஆவணங்களை கையாண்ட அனுபவம் மிக்க முன்னாள் இரானிய உளவுத்துறை அதிகாரியிடம் கொடுத்தோம். அவர் IRGC நிலையத்திற்கு அழைப்பு விடுத்தார். இரானில் உள்ள மூத்த உளவுத்துறை அதிகாரிகளுக்கு ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ குறியீட்டைப் பயன்படுத்தி - இந்த அறிக்கை உண்மையில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு வழக்கை பற்றியதா என்பதை சரிபார்க்க சொன்னார். அந்த ரகசிய அறிக்கை, 2022 ஆம் ஆண்டு அரசாங்க எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீதான 322 பக்க வழக்கு கோப்பின் ஒரு பகுதி என்று அறிக்கையின் எண் காட்டியதாகவும் அவர் உறுதிப்படுத்தினார். அதன்படி, 100% உறுதியாக இருக்க முடியாது என்றாலும், இது உண்மையானது என்ற நம்பிக்கையை எங்களுக்கு அளித்தது. IRGC-ஐ அவர் தனிப்பட்ட முறையில் அணுகியது மற்றொரு மர்மத்தை விலக்கவும் எங்களுக்கு உதவியது. நிக்காவின் உடலைத் தூக்கி எறியுமாறு குழுவிடம் கூறிய அந்த "நயீம் 16" இன் அடையாளம் தெரியவந்தது. அந்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி மற்றொரு அழைப்பு மேற்கொண்டு நயீம் 16 யாரின் குறியீடு என்பதை கேட்டறிந்தார். இந்த முறை இரானின் இராணுவ அமைப்பில் உள்ள ஒருவருக்கு அழைப்பு விடுத்து. நயீம் 16 ஐஆர்ஜிசியில் பணிபுரியும் கேப்டன் முகமது ஜமானிக்கான அழைப்பு அடையாளம் என்ற தகவலை எங்களுக்கு சொன்னார். நிக்காவின் மரணம் தொடர்பான ஐந்து மணி நேர விசாரணையில் கலந்து கொண்டவர்களில் ஒருவராக அந்தப் பெயர் பட்டியலிடப்பட்டுள்ளது, இந்த அறிக்கையை குறிப்பிட்டு, நாங்கள் ஐஆர்ஜிசி மற்றும் இரான் அரசாங்கத்திடம் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். அவர்கள் பதிலளிக்கவில்லை. எங்களுக்குத் தெரிந்தவரை, நிக்காவின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவில்லை, அது ஏன் என்று அந்த ரகசிய ஆவணத்தை பார்த்தாலே யூகிக்க முடியும். விசாரணைக்கு வந்த டீம் 12 குழு உட்பட அனைவரின் பெயர்களும் அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர்களின் பெயருக்கு அருகே, வலதுபுறம் அவர்கள் சேர்ந்த குழு: "ஹெஸ்பொலா" என குறிப்பிடப்பட்டுள்ளது. இது இரானிய துணை இராணுவக் குழுவான ஹெஸ்பொலாவைக் குறிக்கிறது. இது அதேபெயரில் உள்ள லெபனான் குழுவுடன் தொடர்பில்லாதது. அதன் உறுப்பினர்கள் ஐஆர்ஜிசி- ஆல் பயன்படுத்தப்படுகிறார்கள், ஆனால் சில சமயங்களில் அதன் அதிகார வரம்பிற்கு வெளியே செயல்படுகிறார்கள், இதனை அறிக்கை ஒப்புக் கொள்வது போல் தெரிகிறது: "மேற்கண்ட நபர்கள் ஹெஸ்பொலாவின் படைகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், தேவையான பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு உத்தரவாதங்களை பெறுவதற்கு அப்பால் இந்த வழக்கைப் பின்தொடர்வது சாத்தியமில்லை" என்று அது கூறுகிறது. மறுபுறம், IRGC அதிகாரி நயீம் 16, எழுத்துப்பூர்வமாக கண்டிக்கப்பட்டு இருக்கிறார் என்பதையும் அறிக்கை கூறுகிறது. 551 எதிர்ப்பாளர்கள் இரானின் ’பெண், வாழ்க்கை, சுதந்திர’ இயக்கத்தின் போராட்டத்தின் போது பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டதாக ஐநாவின் உண்மை கண்டறியும் குழு தெரிவித்துள்ளது. பாதுகாப்புப் படையினரின் கொடூரமான ஒடுக்குமுறை காரணமாக சில மாதங்களுக்குப் பிறகு போராட்டங்கள் தணிந்தன. இரானின் அறநெறிப் படையின் நடவடிக்கைகளில் ஒரு மந்த நிலை ஏற்பட்டது, ஆனால் இஸ்லாமிய ஆடைக் குறியீட்டின் மீறல்கள் மீதான புதிய ஒடுக்குமுறை கடந்த மாத தொடக்கத்தில் தொடங்கியது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் நிக்காவின் மூத்த சகோதரி ஐடாவும் ஒருவர். https://www.bbc.com/tamil/articles/c97z9609pv9o
-
இலங்கையில் இன்று முதல் புதிய விசா முறை அமுல்
வருகைத்தரு வீசா மாத்திரமல்ல இணைய வீசா முறையும் வேண்டாம் : குடிவரவுத் திணைக்கள அதிகாரி நாட்டிற்கு வரும் வழக்கமான வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை பாதிப்படைவதால், வருகைத்தரும் வீசா மட்டுமல்ல, இணையத்தின் ஊடான வீசா முறையும் நிறுத்தப்பட வேண்டும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இணையத்தளப் பிரச்சினைகள் காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில்(Bandaranaike International Airport) சுற்றுலாப் பயணிகளின் வருகை குறிப்பிடத்தக்க அளவில் குறைவடைந்துள்ளதாக தனது அடையாளத்தை வெளிப்படுத்த விருப்பம் கொள்ளாத இந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார். புதிய முறை இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், சில வெளிநாட்டினர் வணிக நோக்கத்திற்காக இலங்கைக்கு வருகை தருகிறார்கள், சுற்றுலா அமைச்சகம் நாட்டின் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இலக்கு வைத்துள்ளது. எனினும் புதிய முறையால் நிலைமை மாற்றம் அடைந்துள்ளது. இந்த வருகைத்தரும் (ஒன்-எரைவல்) மற்றும் இணையத்தள (ஒன்லைன்) வீசா முறைகளின் கீழ் பரிவர்த்தனைகள் முற்றிலும் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன. கடந்த 12 வருடங்களில் குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகளால் 52 அமெரிக்க டொலர்களுக்கு இந்த முறைமை செயற்படுத்தப்பட்டு 50 அமெரிக்க டொலர்கள் திறைசேரிக்கு அனுப்பப்பட்டது. மேலும், ஸ்ரீ லங்கா டெலிகொம் வழங்கிய சேவைக்கான கட்டணமாக 2 அமெரிக்க டொலர்கள் அறவிடப்பட்டது. புதிய முறையின்கீழ் நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணங்கள் துபாயில் உள்ள வங்கிக்கு அனுப்பப்படுவதாகவும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, உள்ளூர் அரச வங்கி ஒன்றின் மூலம் நிதி திறைசேரியில் வைப்புச் செய்யப்படுகிறது. முன்னதாக, இந்தக் கட்டணங்கள் இலங்கை மத்திய வங்கியின் பிரதி அரச செயலாளரின் கீழ் உள்ள கணக்கில் பற்று வைக்கப்பட்டுள்ளன. கட்டணங்கள் டொலர் பரிமாற்றத்தின் தினசரி புதுப்பித்தலுடன், ஒவ்வொரு நாளும் பிற்பகல் 2 மணிக்குப் பிறகு பற்று வைக்கப்படும். தகவல் மீறல் சம்பவங்கள் ஆனால் புதிய முறையின் கீழ், இரண்டு நாட்களுக்குப் பின்னரே கட்டணங்கள் திறைசேரியில், பற்று வைக்கப்படும். ஒருவரின் கடவுச்சீட்டு தகவலை மற்றொரு தரப்பினர் பெற்றுக்கொள்ளும் தகவல் மீறல் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன எனவே, இந்த புதிய முறைக்கு சீனா உள்ளிட்ட சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. VFS GLOBAL நிறுவனத்திற்கு 75.5 டொலர்களை செலுத்திவிட்டு நாட்டிற்கு வரும் வெளிநாட்டவர், வீசாவைப் பெறும்போது அவர்களது கடவுச்சீட்டு எண் மற்றும் பிறந்த திகதியில் உள்ள பிழைகளை சரிசெய்ய மேலும் 50 செலுத்த வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, சிறு பிழைகளை சரி செய்ய குடிவரவுத் திணைக்களத்தால் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. இதேவேளை VFS GLOBAL என்பது துபாயை தளமாகக் கொண்ட ஒரு நிறுவனமாகும். இது இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டது. எனினும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என குறிப்பிட்டுள்ளார். https://tamilwin.com/article/not-only-visit-visa-but-also-online-visa-system-1715431733
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
கிளிநொச்சியிலும் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு 11 MAY, 2024 | 06:05 PM கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்று (11) பகல் ஒரு மணியளவில் நடைபெற்றது. கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருடந்தோறும் கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு கஞ்சி வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183263
-
முள்ளிவாய்க்கால் கஞ்சி வார்ப்பு
முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு பகுதிகளில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டது 11 MAY, 2024 | 04:29 PM முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நினைவுகூரப்பட்டு வருகிறது. அந்த வகையில், முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்தவர்களின் நினைவாக இன்றைய தினம் (11) முல்லைத்தீவில் விசுவமடு, புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளில் நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டு கஞ்சி காய்ச்சி வழங்கப்பட்டது. விசுவமடு ரெட்பானா சந்தி பகுதியில் சமூக செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டிலும், புதுக்குடியிருப்பு சந்தியை அண்மித்த பகுதியில் மாற்றத்துக்கான இளையோர் அமைப்பின் ஏற்பாட்டிலும் கஞ்சி வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இதன்போது அரசியல் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்குகின்ற செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்தனர். https://www.virakesari.lk/article/183253
-
சிரேஷ்ட பிரஜைகளின் நிலையான வைப்புக்கான வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதம் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை 11 MAY, 2024 | 04:38 PM (எம்.மனோசித்ரா) சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்பு வட்டி வீதத்தினை அதிகரிக்குமாறு முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை தொடர்பில், தற்போதைய பொருளாதார நிலைமையையும் அடிப்படையாகக் கொண்டு மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்தார். பொருளாதார நெருக்கடிகளுக்கு முன்னர் சிரேஷ்ட பிரஜைகளுக்கான சேமிப்பு வட்டி வீதம் 15 வீதமாகக் காணப்பட்டது. ஆனால், அதன் பின்னர், மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது அது ஓரிலக்கம் வரை குறைக்கப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது மீண்டும் தமது சேமிப்புக்கான வட்டி வீதத்தை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் சிரேஷ்ட பிரஜைகளால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்துகையில் மேற்கண்டவாறு தெரிவித்த இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், சேமிப்புக் கணக்குகளைப் பேணும் சகல சிரேஷ்ட பிரஜைகளுக்கும் அவர்கள் கோரும் வட்டி வீதத்தை வழங்கினால் வருடத்துக்கு 80 பில்லியன் ரூபாய் தேவைப்படும். இதற்கு முன்னர் செலுத்திய வட்டி வீதத்துக்காக திறைசேரிக்கு 105 பில்லியன் கடன் காணப்படுகிறது. எனவே இந்த கோரிக்கைகள் தொடர்பில் பொறுப்புடன் ஆழமாக மதிப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் எவ்வாறு இவ்விடயம் தொடர்பில் தீர்மானிப்பது என்பது குறித்து ஆராயுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். எனவே பல்வேறு வயதினருக்கான வட்டி வீதங்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற பல்வேறு கோரிக்கைகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/183256
-
பூமியைத் தாக்கும் சூரிய புயல் விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
பூமியை கடும் சூரிய காந்த புயல் தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த தகவலை அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (10) இரவு முதல் இன்று (11) இரவு வரை கலிபோர்னியா தெற்கு அலபாமா வரையான பகுதிகளுக்கு சூரிய காந்த புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சூரிய காந்த புயல் காரணமாக பூமியின் வட அரைக்கோளத்தில் பாதிப்பு ஏற்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் செயற்கைக் கோள்களின் செயற்பாடுகளும் முடங்க வாய்ப்பிருப்பதாக அமெரிக்க கடல், வளிமண்டல ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. https://thinakkural.lk/article/301379
-
அரவிந்த் கேஜ்ரிவால் கைது: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு என்பது என்ன? முழு விவரம்
“சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” - ஜாமீனில் விடுதலையான கேஜ்ரிவால் முழக்கம் 11 MAY, 2024 | 09:29 AM புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீனில் விடுதலையான பின்னர், ““சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடுவோம்!” என்று தனது கட்சித் தொண்டர்கள் முன்னிலையில் முழங்கினார். திஹார் சிறையின் 4-வது கேட் வழியாக சிறையில் இருந்து அரவிந்த் கேஜ்ரிவால் வெளியே வந்தபோது அவரை ஆம் ஆத்மி தொண்டர்கள் குழு ஒன்று கையில் கொடியுடன் கோஷம் எழுப்பி வரவேற்றனர். அவர்களுடன் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால், ஆம் ஆத்மி மூத்த தலைவர்களான அதிஷி, சவுரப் பரத்வாஜ், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் இருந்தனர். 50 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் வெளியே வந்திருக்கும் டெல்லி முதல்வருக்கு ஆம் ஆத்மி தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் ஆம் ஆத்மி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய கேஜ்ரிவால், “உங்கள் அனைவருக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். நீங்கள் அனைவரும் உங்களின் ஆசிர்வாதங்களை வழங்கினீர்கள். உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர்களால்தான் நான் இன்று உங்கள் முன்பு நிற்கிறேன். நான் திரும்பி வருவேன் என்று உங்களுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். இதோ உங்கள் முன்பு நிற்கிறேன். சர்வாதிகாரத்துக்கு எதிராக நாம் அனைவரும் நாட்டைக் காப்பாற்ற வேண்டும். சனிக்கிழமை காலை 11 மணிக்கு கன்னாட் பகுதியில் உள்ள அனுமன் கோயிலுக்குச் சென்று, அதன் பிறகு மதியம் 1 மணிக்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற இருக்கும் செய்தியாளர்கள் கூட்டத்தில் சந்திப்போம்" என்றார். முன்னதாக, மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இடைக்கால ஜாமீன் வழங்கியது. தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதிக்கும் வகையில், அவருக்கு வரும் ஜூன் 1-ம் தேதி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2-ம் தேதி நீதிமன்றத்தில் அவர் சரணடைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இது குறித்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கன்னா மற்றும் திபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு சில முக்கிய நிபந்தனைகளையும் விதித்து உத்தரவிட்டது. அதன்படி, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு முன்பாக ரூ.50,000-க்கான தனிநபர் பத்திரம் வழங்க வேண்டும். அவர் ஜாமீனில் இருக்கும் காலங்களில் முதல்வர் அலுவலகத்துக்கோ, தலைமைச் செயலகத்துக்கோ செல்லக்கூடாது. அவர் மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா அனுமதி இல்லாமல் எந்த அலுவலக கோப்புகளிலும் அவர் கையெழுத்திடக் கூடாது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு பற்றி பேசவோ அல்லது தன் மீதான குற்றச்சாட்டு பற்றி விவாதிக்கவோ கூடாது. இந்த வழக்கில் தொடர்புடைய எந்த சாட்சிகளுடனும் தொடர்பு கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/183209
-
ஜப்பான் மக்களிடம் அணுகுண்டு ஏற்படுத்திய வலியைக் குறைக்க உதவிய அனிமே, மாங்கா
பட மூலாதாரம்,GETTY IMAGES/TEZUKA PRODUCTIONS CO., LTD. கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 11 மே 2024, 07:42 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "பள்ளி முடிந்து மாலை வீடு வந்தவுடன், கை, கால் கழுவிவிட்டு டிவியின் முன்பாக கார்ட்டூன் நெட்வொர்க் சேனலை போட்டுக்கொண்டு இமை மூடாமல் டிராகன் பால் ஸி, போகிமான் ஆகிய தொடர்களை கார்ட்டூன் நெட்வொர்க்கில் பார்க்காமல் நாள் ஓடாது. ஒருநாள், ஒரு எபிசோட் பார்க்காதபோது, பலநாள் காத்திருந்த முக்கியக் காட்சிகள் அன்றெனப் பார்த்து ஒளிபரப்பாகிவிடவே, அவற்றை அடுத்த நாள் பள்ளியில் வகுப்புத் தோழர்கள் விவரித்துப் பெருமிதம் கொள்ளும்போது மனதுக்குள்ளேயே பொருமிக்கொள்வோம்." இந்த அனுபவத்தைப் பகிராத 90ஸ் கிட்ஸ்களை அரிதாகவே காண முடியும் என்னும் அளவுக்கு இருபது ஆண்டுகளுக்கு முந்தைய குழந்தைகளின் வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாகி, இந்தியாவில் பிரபலமடையத் தொடங்கின அனிமேக்கள். அப்படிப்பட்ட அனிமேக்களும் அவற்றின் உருவாக்கத்தில் கணிசமான பங்கு வகிக்கும் ஜப்பானிய காமிக்ஸ் வடிவமான மாங்காக்களும் இரண்டாம் உலகப்போரின் முடிவில் அமெரிக்கா வீசிய இரண்டு அணுகுண்டுகள் குறித்த ஜப்பான் மக்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஓர் ஊடகமாகவே செயல்பட்டதாகவும் அதன் வரலாறு கூறுகிறது. ஜப்பான் மட்டுமின்றி இன்று உலகம் முழுக்கவே பலரின் வாழ்வில் ஓர் அங்கமாகிவிட்ட அனிமேக்களும் மாங்காக்களும் அணுகுண்டுக்குப் பிந்தைய ஜப்பானில் வகித்த பங்கு என்ன? இங்கு விரிவாகப் பார்ப்போம். அணுகுண்டுகள் ஜப்பானியர்கள் மீது ஏற்படுத்திய தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES அணுகுண்டு தாக்குதலை நடத்துவதற்கு முன்பே ஜப்பான் தோற்றுவிட்டது, ஆனால் சண்டையைத் தொடர்ந்துகொண்டிருந்தது. அதுவரைக்கும் பசிபிக் பெருங்கடலில் முழு ஆதிக்கம் செலுத்தி வந்த நாடு, அமெரிக்காவிடம் வீழ்ந்தது. ஆனால், அதிகாரபூர்வமாக சரணடையவில்லை. அமெரிக்கா நிபந்தனையற்ற சரணடைதலை ஜப்பானிடம் கோரியபோது, தங்கள் பேரரசருக்கு ஏதும் நேர்ந்துவிடக்கூடாது என்பது உட்பட சில நிபந்தனைகளுடன் மட்டுமே சரணடைய முடியும் என்று ஜப்பான் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்தச் சூழ்நிலையில், ஜப்பானை அணுகுண்டு குறித்து அமெரிக்கா எச்சரித்தபோதும் அது கற்பனையில் மட்டுமே சாத்தியம் என்று ஜப்பான் ராணுவம் நினைத்தது. இவற்றைத் தொடர்ந்தே ஹிரோஷிமா, நாகசாகி மீது அணுகுண்டுப் பேரழிவு நடத்தப்பட்டது என்பது வரலாறு. இந்த நிலையில், இப்படிக் கற்பனை செய்து பாருங்கள். நாம் வாழும் ஊருக்கு அருகிலேயே இருக்கும் - அதாவது சுமார் 100கி.மீட்டருக்கு உள்ளாக இருக்கும் ஓர் ஊரில் அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படுகிறது. அதனால் வானுயர் எழும் காளான் புகைத் திரளைக் காணும்போது நாம் எப்படி உணர்வோம்! அத்தகைய பேரழிவைக் கண்முன் காணும்போது ஏற்படும் கலக்கம், அச்சுறுதல், நடுக்கம், வேதனை, வெறுப்பு அத்தனையும் ஹிரோஷிமா, நாகசாகி அணுகுண்டு வெடிப்பைக் கண்ட மக்களை ஆட்கொண்டிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆகஸ்ட் 9, 1945 அன்று அமெந்ரிக்கா நாகசாகி மீது அணுகுண்டை வீசிய பிறகான நிலை ஜப்பானிய மாங்கா கலைஞரான கட்சுஹிரோ ஒட்டோமோ எழுத்தில் உருவான அகிரா என்ற அனிமேவின் இறுதிக்காட்சிகளில் எழும் பிரமாண்ட புகைத்திரளால், நியோ-டோக்கியோ என்ற நகரமே வெறும் எலும்புக்கூடாய்க் காட்சியளிப்பதைப் பார்த்தால், உங்களுக்கு ஓரளவுக்கு அந்த உணர்வின் தாக்கம் கிடைக்கும். ஒரு வெடிகுண்டு! ஒரேயொரு முறை வெடித்து, மொத்த நகரத்தையும் விழுங்கிச் செரித்து, அதன் எலும்புக்கூட்டை மட்டும் துப்பும்போது, அதன் விளைவுகளால் பாதிக்கப்பட்ட மக்கள், அனாதையான குழந்தைகள், இந்தக் கொடூரங்களைக் கண்ணால் பார்த்தவர்கள் என அனைவரையும் ஒவ்வொரு வகையில் பாதித்தது. “இவையனைத்துமே ஜப்பானியர்களுக்கு பேரதிர்ச்சிகரமான அனுபவங்கள். பல ஆண்டுகளாக, பேரழிவு அவர்களின் மனக்கண்ணில் இருந்து நீங்காமல் இருந்ததில் ஆச்சரியமில்லை. இத்தகைய கொடுமையான நிலையில் இருந்து தாங்கள் மீண்டுவர, இலக்கியம், இசை, கலை ஆகியவற்றில் அந்தத் தாக்கத்தின் உருவகத்தைக் கொண்டு வருவதை, குணப்படுத்தும் செயல்முறையின் ஒரு பகுதியாகச் செய்ததாக” தி கான்வர்சேஷன் இதழில் வெளியான அனிமே குறித்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அகிரா அத்தகைய உருவகங்களுக்கான ஓர் உதாரணம் மட்டுமே. இப்படியாகப் பல மாங்காக்கள் மற்றும் அனிமேக்களில் அணுகுண்டு வெடிப்பின் உருவகங்களையும் குறியீட்டையும் காண முடியும். இன்று வரை பல அனிமேக்களில் அந்த பிரமாண்ட புகைத்திரளின் உருவகம் வெவ்வேறு வடிவங்களில் இடம்பெறவே செய்கின்றன. எடுத்துக்காட்டாக, இன்று மிகப் பிரபலமாக இருக்கும் நருட்டோ அனிமேவில் வரும் பெயின் (Pain) என்ற கதாபாத்திரம், கொனோஹா கிராமத்தின் மேலே வானில் நின்றுகொண்டு தனது 'ஷின்ரா டென்சேய்' என்ற சக்தியைப் பயன்படுத்துவார். அது அந்தக் கிராமம் முழுவதையும் மிகப் பிரகாசமான ஒளியால் மூடிப் பிறகு பெருவெடிப்பை ஏற்படுத்தும். அணுகுண்டை நேரில் பார்த்தவர்களின் சாட்சியமும் இதை ஒத்தே இருக்கின்றன. இதேபோல் ஒன் பீஸ் தொடரிலும் வேகாபங்க் என்ற விஞ்ஞானி உருவாக்கிய மதர் ஃப்ளேம் என்ற ஆயுதமாகவும் பயன்படுத்தவல்ல ஆற்றலும் அணு ஆற்றலையே மையாமக் கொண்டுள்ளது. அனிமே, மாங்கா என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES அனிமேக்களின் வரலாறு 1907ஆம் ஆண்டில் இருந்தே தொடங்குகிறது. இருப்பினும், அவற்றுக்கு அனிமே என்ற குறிப்பிட்ட சுருக்கம் பயன்படுத்தப்பட்டது 1960களில் இருந்துதான் என்கிறார் ஜோனாதன் க்ளிமென்ட்ஸ். முதன்முதலாக 1962ஆம் ஆண்டில் எய்கா ஹ்யோரான் என்ற திரைப்படங்களை விமர்சிக்கும் இதழில் இவை குறித்து கட்டுரை எழுதிய மோரி டகுயாதான் அனிமே என்ற அனிமேஷனுக்கான சுருக்கத்தை முதன்முதலில் பயன்படுத்தியதாகவும் 2013 வெளியான தனது நூலில் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அனிமே என்பது ஏதோ உருவாக்கப்பட்ட பதம் அல்ல, அது அனிமேஷன் என்ற ஆங்கில சொல்லின் சுருக்கப்பட்ட வடிவமே என்கிறார் அனிமே சார்ந்த வணிகப்பொருட்களுக்கான அனிசிங்க் என்ற நிறுவனத்தின் இணை-நிறுவனரும் அனிமேக்கள் மீது அதீத ஆர்வம் கொண்டவருமான நிகில் ரவிக்குமார். அதே கூற்றை அமெரிக்காவின் டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜப்பானிய படிப்புகள் துறையின் பேராசிரியர் சூசன் ஜே.நேப்பியர் தனது ‘அனிமே ஃப்ரம் அகிரா டூ பிரின்சஸ் மோனோனோகே’ என்ற நூலிலும் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் தனது நூலில் இப்படிக் குறிப்பிடுகிறார்: “அனிமேஷன் என்ற ஆங்கில வார்த்தையின் சுருக்கமான அனிமே, இப்போது அமெரிக்க சொல்லகராதியில் ஒரு தனி இடத்தைப் பிடித்துவிட்டது. அதாவது, நியூயார்க் டைம்ஸ் நாளிதழின் குறுக்கெழுத்துப் புதிர்களில் இடம்பெறும் அளவுக்கு அதன் பயன்பாடு பெருகியுள்ளது.” அடிப்படையில், ஜப்பானியர்களை பொறுத்தவரை மேற்கத்திய படைப்பாக இருந்தாலும் சரி, ஜப்பானிய படைப்பாக இருந்தாலும் சரி அனைத்துமே அனிமேதான். ஆனால், ஜப்பானிய அனிமேக்களின் கதைக்களம், சண்டை, அதிரடி, காமெடி போன்றவற்றுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்காமல் கதைக்களத்தில் இடம்பெறும் ஒரு குறிப்பிட்ட தருணத்தின் சூழலை உணர்வுபூர்வமாகக் கடத்துவதில் கவனம் செலுத்துகிறது. இதை மாங்காக்கள் மிக ஆழமாகச் செய்வதாகக் கூறுகிறார் நிகில். மாங்கா என்பது மேற்கத்திய, இந்திய காமிக்ஸ் புத்தகங்களைப் போன்றது. அதுவும் காமிக்ஸ் புத்தகம்தான். ஆனால், கதை மீதான மாங்காவின் அணுகுமுறை காமிக்ஸில் இருந்து அதைத் தனித்துவமாக்குகிறது. நிகிலின் கூற்றின்படி, காமிக்ஸ்களை பொறுத்தவரை அதிரடியில் அதிக கவனம் செலுத்தும். ஆனால் மாங்காக்கள் “ஒவ்வொரு தருணத்தின்மீதும் அதிக கவனம் செலுத்தும். ஒரு திறந்திருக்கும் கதவு, சூரிய உதயம், ஒருவரின் கண்ணீர், பசி, மகிழ்ச்சி என அனைத்தையும் மாங்காக்களில் வரும் ஓவியங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்குத் துல்லியமாகக் கடத்தும். அதுதான் அவற்றின் தனித்துவம்.” காட்ஸில்லா – உயிருள்ள அணுகுண்டு உருவாக்கப்பட்டதன் பிண்ணனி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இஷிரோ ஹோண்டாவின் இயக்கத்தில் 1954ஆம் ஆண்டு வெளியான கோஜிரா படத்தில் வரும் காட்சி ஜப்பான் இரு அணுகுண்டுகளால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவிடம் சரணடைந்த பிறகு, அந்நாடு மீண்டும் தன்னை கட்டமைத்துக்கொள்ள அமெரிக்கா உதவியது. அதைத் தொடர்ந்து பசிபிக் பெருங்கடலில் அமெரிக்கா தனது அணுகுண்டுகளை சோதிக்கத் தொடங்கியது. இப்படியாக மார்ச் 1, 1954 அன்று மார்ஷல் தீவுகளில் உள்ள பிகினி அடோல் என்ற சிறிய தீவில் ஓர் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்தப் பகுதியில் கடந்து சென்ற ஒரு மீன்பிடிப் படகு அந்த அணுகுண்டு வெடிப்பில் வெளியான கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டது. அந்த அணுகுண்டு ஹிரோஷிமாவில் வெடிக்கப்பட்டதைவிட 1,000 மடங்கு சக்தி வாய்ந்தது. இதன் பாதிப்புகளால், அந்த மீன்பிடிப் படகில் இருந்த ஐகிச்சி குபோயாமா உயிரிழந்தார். இது ஜப்பான் மக்களிடையே அணுகுண்டு சோதனைக்கு எதிராகக் கொந்தளிக்க வைத்தது. ஐகிச்சி குபோயாமாவின் கடைசி விருப்பமாக இருந்தது ஒன்று மட்டுமே, “அணுகுண்டுக்குப் பலியான கடைசி உயிர் தனதாக இருக்க வேண்டும்.” இதைத் தொடர்ந்துதான் ஜப்பானில் அணுகுண்டுக்கு எதிரான இயக்கமே உருவானது. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்படியாக ஜப்பான் மக்கள், ஹிரோஷிமா, நாகசாகியை தொடர்ந்தும் அணுகுண்டுகளின் பாதிப்புகளை எதிர்கொண்டனர். அதன் விளைவாக உருவானதே ஜப்பானிய மொழியில் கோஜிரா என்றழைக்கப்படும் காட்ஸில்லா. காட்ஸில்லா என்பது அணுகுண்டின் பண்புகளை உருவகப்படுத்திய ஓர் உயிருள்ள கதாபாத்திரம்தான் என்கிறார் அனிசிங்க் நிறுவனத்தின் இணை-நிறுவனர் நிகில். காட்ஸில்லா கதையில் அதன் அறிமுகமே கடலில் ஒரு மீன்பிடிப் படகைத் தாக்குவதில் இருந்துதான் தொடங்கும். ஐகிச்சி குபோயாமா இருந்த மீன்பிடிப்படகு அணுகுண்டு வெடிப்பில் சிக்கியதைக் குறிக்கும் குறியீடுதான் அந்தக் காட்சி. கலை எப்படி ஜப்பானிய மக்கள் தங்கள் வலிகளைக் கடத்தப் பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றுதான் காட்ஸில்லா. இப்படியாக, பேர்ஃபூட் ஜென், பிரின்சஸ் மோனோனொகே, கிரேவ் ஆஃப் ஃபயர்ஃப்ளைஸ் போன்ற கதைகளின் மூலம், இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தை உருவகப்படுத்தி, ஜப்பான் மக்களின் உணர்ச்சியைக் கடத்துவதற்கான ஓர் ஊடகமாக அனிமேக்கள் பயன்படுத்தப்பட்டதை அறிய முடிகிறது. அனிமே மற்றும் மாங்காக்களில் அணுகுண்டின் தாக்கம் பட மூலாதாரம்,GETTY IMAGES “அனிமே உட்பட ஜப்பான் இலக்கியங்கள் போரின் ஆயுதங்களைப் பற்றிப் பேசியதைவிட, அந்த ஆயுதங்கள் ஏற்படுத்தும் விளைவுகளையே பேசின. அவ்வளவு கொடூரமான ஆயுதங்களை நாம் பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வியை முன்வைத்தன” என்கிறார் நிகில். “எவ்வளவு பெரிய போர்வீரனாக இருந்தாலும், முழுவதும் எரிந்து கருகிப்போன ஒரு குழந்தையின் சட்டையையும் கடைசியில் மிச்சமிருந்த அந்தக் குழந்தையின் ஒற்றைச் செருப்பையும் காட்டினால், போர் குறித்த அவனது வெறி சலனப்படும்.” அதைத்தான் மாங்காக்களும் அனிமேக்களும் உருவகப்படுத்த முயன்றன என்று கூறும் நிகில், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ என்ற அனிமே திரைப்படத்தைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் அனிமே துறை மிகவும் இளம் கட்டத்தில் இருந்தது. ஆகவே, அனிமேவை ஒரு முக்கிய ஊடகமாக வைத்து அணுகுண்டின் தாக்கத்தில் இருந்து ஜப்பான் மக்கள் விடுபட்டனர், அல்லது அதையே முற்றிலும் வடிகாலாகப் பயன்படுத்தினர் என்று கூற இயலாது என்பது நிகிலின் கூற்று. ஆனால், ‘இன் திஸ் கார்னர் ஆஃப் தி வேர்ல்ட்’ போன்ற அனிமே திரைப்படங்கள் ஜீரணிக்கவே முடியாத அணுகுண்டின் விளைவுகளைக் கையாள்வதற்கான ஒரு வடிகாலாக அமைந்தது என்பதையும் மறுக்க முடியாது. மேலும், இந்தக் குறிப்பிட்ட படத்தை ஜப்பான் அரசாங்கமே காட்சிப்படுத்தி, மக்களிடையே விளம்பரப்படுத்தும் அளவுக்கு, அது இரண்டாம் உலகப்போரின் விளைவுகளைப் பற்றியும் மீண்டு வருதல் குறித்தும் பேசியது என்பது குறிப்பிடத்தக்கது. அனிமேக்களில் அணுகுண்டு தாக்கத்தை தொடக்கி வைத்த முன்னோடிகள் பட மூலாதாரம்,TEZUKA PRODUCTIONS CO., LTD. நவீன அனிமேக்களின் தந்தையாகக் கருதப்படும் ஒசாமு டெசுகா மற்றும் மியாசாகி ஹயாவோ ஆகியோர்தான் அணுகுண்டின் தாக்கத்தைத் தங்கள் அனிமேக்களில் வெளிப்படுத்தத் தொடங்கினார்கள். ஒசாமு டெசுகாவின் மாங்கா படைப்புகளில் விவரிக்கப்பட்ட அணுகுண்டு வெடிப்பின் காட்சி, அதைப் பார்ப்பவர்களுக்கு அங்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு மனதில் அழுத்தமாகப் பதிந்தன. அவரது படைப்புகள் தாங்கவொண்ணா துக்கத்தைக் கையாள்வது, இயற்கையின் அத்தனை அழகையும் அதை அடக்கி ஆள வேண்டுமென்ற மனிதனின் ஆசையால் அழித்துவிட முடியும் என்பன போன்றவற்றைப் பேசின. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஒசாமு டெசுகாவின் ஆஸ்ட்ரோபாய் அவரது பெரும்பாலான படைப்புகள், அனாதையாக்கப்பட்ட ஓர் இளம் கதாபாத்திரம் தன்னந்தனியாக உயிர் பிழைக்கப் போராடுவதைச் சுற்றியிருக்கும். அவரது ஆஸ்ட்ரோபாய் என்ற மாங்காவில், தனது மகனின் இழப்பை ஈடுகட்ட ஒரு விஞ்ஞானி ஆண்ட்ராய்டு சிறுவனை உருவாக்குகிறார். பின்னர், அதனால் மகனின் இழப்பை ஈடுகட்ட முடியாது என்றுணர்ந்து கைவிடுகிறார். அநாதையாக்கப்படும் அந்த ஆஸ்ட்ரோபாய் பிறகு போராடி ஒரு சூப்பர் ஹீரோ ஆகிறார். அவரைப் போலவே, அணுகுண்டு வெடிப்பை நேரில் கண்டு உயிர் பிழைத்த கெய்ஜி நகாஸாவா உருவாக்கிய பேர்ஃபூட் ஜென் அணுகுண்டால் அழிக்கப்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த சிறுவனின் கதையைப் பேசியது. “நகாஸாவா தனது தங்கை பிறந்து சில வாரங்களிலேயே கதிர்வீச்சு பாதிப்பால் உயிரிழந்தைக் கண்முன் கண்டவர். அவரது தாயும் அதே பிரச்னையால் காலப்போக்கில் மரணித்தார்,” என்று தி கான்வர்சேஷன் இதழ் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது. பேர்ஃபூட் ஜென்னின் கதையும் அத்தகைய ஒன்றுதான். மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கெய்ஜி நகாஸாவா இந்த முன்னோடிகளின் படைப்புகள் அதிகம் பேசியது ஒரு பேரழிவின் விளைவுகள், மரணங்கள், இழப்புகள் மற்றும் அதன் பிறகும் நீடிக்கும் இந்த வாழ்வில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின் அந்தச் சிறிய ஒளி. அனைத்தையும் இழந்த பிறகும், ஒருவன் மீண்டும் எழுந்து நிற்க வேண்டும், வாழ்வைப் புதிதாகத் தொடங்க வேண்டும் என்பதை இவர்களது கதைகள் வலியுறுத்தின. பட மூலாதாரம்,GETTY IMAGES டெசுகாவின் ஜப்பான் ஒரு ஃபீனிக்ஸ் பறவையைப் போன்றது. முற்றிலும் அழிந்த பிறகும் அதன் அத்தியாயம் முடிந்துவிடாமல், மீண்டும் உயிர்த்தெழுந்து சிறகடித்துப் பறந்து வரும். அவை அனைத்துமே அப்போதைய ஜப்பான் மக்களின் போருக்குப் பிறகு, அதனால் விளைந்த ஒரு பேரழிவுக்குப் பிறகான மீட்சியை, எழுச்சியை உருவகப்படுத்தின. போருக்கு முன்பு மேற்கத்திய வடிவங்களைப் பின்பற்றி உருவாக்கப்பட்ட அனிமே கதைகளில் இருந்து முற்றிலும் வேறுபட்ட ஒரு புதிய சகாப்தம் அனிமே மற்றும் மாங்காக்களில் தொடங்கியது. ஒசாமு டெசுகா, மியாசாகி ஹயாவோ, கட்சுஹிரோ ஒட்டோமோ, கெய்ஜி நகாஸாவாவை தொடர்ந்து அடுத்து வந்த மாங்கா, அனிமே கலைஞர்களும் அவர்களைப் பின்பற்றி மரணம், மறுபிறவி, வாழ்வின் ஒளி அதாவது, வாழ்க்கை மீதான நம்பிக்கையை மையமாக வைத்துப் படைப்புகளை உருவாக்கினார்கள். அதன்மூலம், ஜப்பான் மக்கள் எப்படி அது சந்தித்த வரலாற்றின் மிகப்பெரும் அழிவில் இருந்து, அது தந்த வலியில் இருந்து தன்னைக் குணப்படுத்திக் கொண்டனர் என்பதையும் அறிய முடிகிறது. https://www.bbc.com/tamil/articles/cz5dj6rlr8ro
-
பிரதமர் மோதியின் முஸ்லிம்கள் குறித்த பேச்சு, எதிர்க்கட்சிகளின் விமர்சனம்: மௌனம் காக்கும் தேர்தல் ஆணையம்
பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி கட்டுரை தகவல் எழுதியவர், வினீத் கரே பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மக்களவைத் தேர்தல் 2024 ஏழு கட்டங்களாக நடந்து வரும் நிலையில், தேர்தல் பிரசாரங்களில் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளைப் பரப்புவது வெளிநாடுகள் உட்பட பல்வேறு தரப்பினர் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த பொதுத் தேர்தலில் பிரதமர் மோதி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் எனப் பல நிபுணர்கள் கணித்து வரும் நிலையில் பாஜக தேர்தல் பிரசார பாணி தொடர்பான விமர்சனங்கள் எழுந்துள்ளன. சமீபத்திய தேர்தல் பிரசாரம் குறித்து, பெயர் குறிப்பிட விரும்பாத முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர், "இதுபோன்ற தேர்தல் பிரசாரத்தை நான் பார்த்ததே இல்லை. இவர்களின் கருத்துகள் விஷமத்தனமாக உள்ளது. இப்படியெல்லாம் பேசுவார்கள் என்று கற்பனைகூட செய்து பார்க்கவில்லை" என்று கூறினார். 'இந்தப் போக்கு நாட்டின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல' மும்பை கலவரத்திற்குப் (1993) பிறகு அமைதியான சூழலை மேம்படுத்துவதற்காக அமைக்கப்பட்ட மும்பையின் சமூகம் மற்றும் மதச்சார்பின்மைக்கான ஆய்வு மையத்தின் பொறியாளர் இர்பானின் கூற்றுப்படி, ``இதுபோன்ற தேர்தல் பரப்புரைகள் மக்கள் மத்தியில் பிரிவினையை அதிகரிக்கும். நாட்டின் எதிர்காலத்திற்கு இது நல்லதல்ல.” என்கிறார். ”இதற்கு முன்பு நடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களில் `ஊழல் எதிர்ப்பு’, `இந்தியாவுக்கு நல்ல காலம் பிறக்கிறது (அச்சே தின்)’, `தேசியவாதம்’ உள்ளிட்ட வாக்கியங்களின் அடிப்படையில் தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டது. 2024 தேர்தல் 'முஸ்லிம்களுக்கு எதிரான' கருத்துகளை முன்வைத்து நடத்தப்படுகின்றன,” என்றார். அமெரிக்காவில் இயங்கி வரும் வில்சன் மையத்தின் தெற்காசியா பிரிவின் இயக்குநர் மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதியும் பாஜகவும் 400 இடங்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதைச் செய்கிறார்கள்,” என்றார். ராஜஸ்தானின் பன்ஸ்வாரா மாவட்டத்தில் பிரதமர் மோதி ஆற்றிய பிரசார உரை குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தலையங்கம் எழுதியிருந்தது , இந்தக் கட்டுரையின் தலைப்பு - "No, Prime Minister". ராஜஸ்தானில் ஒரு தேர்தல் பிரசாரத்தில், பிரதமர் மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லிம்களை பற்றி கருத்து தெரிவித்தார், அதில் முஸ்லிம்களை 'ஊடுருவுபவர்கள்' மற்றும் 'அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்பவர்கள்' என்று குறிப்பிட்டார். அடுத்தடுத்து வெளியான அறிக்கைகள் பட மூலாதாரம்,ANI இந்த பிரசார விவகாரம் இத்துடன் முடியவில்லை. கர்நாடக பாஜக, இட ஒதுக்கீடு தொடர்பாக பதிவிட்ட ட்வீட், 'முஸ்லிம்களுக்கு எதிரான' தேர்தல் விளம்பரம் ஆகியவை சர்ச்சையை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின் அடிப்படையில் பாஜக தலைவர்கள் பேசிய கருத்துகள் தவறானவை என்றும் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கூறி வருகின்றனர். இது தவிர, ‘‘தனிப்பட்ட சட்டம் மூலம் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவோம் என காங்கிரஸ் கூறுகிறது” என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார். பாஜக தலைவர் ஜேபி நட்டா ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம், “காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தபோது, இது காங்கிரஸ் கட்சியின் அறிக்கையா அல்லது முஸ்லீம் லீக்கின் அறிக்கையா என்று யோசித்தேன்,” என்றார். பட மூலாதாரம்,TWITTER படக்குறிப்பு,அமித் மாளவியா தேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது உரையில், "காங்கிரஸ் இம்முறை தேர்தல் அறிக்கையில், மத சிறுபான்மையினருக்கு அரசு வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதை மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது, இது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர்களை ஆயுதப்படையில் சேர்க்கலாம்," என்றார். மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒரு பேரணியில் பேசியபோது, "காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பார்த்தால், காங்கிரஸ் அந்நிய சக்திகளோடு கைகோர்த்திருப்பது தெரிகிறது. உங்கள் பிள்ளைகளின் சொத்துகளை முஸ்லிம்களுக்கு கொடுக்க நினைக்கிறார்கள்" என்று கூறினார். காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஷரியா, தாலிபன் போன்ற வார்த்தைகள் எங்குமே குறிப்பிடப்படவில்லை. பிரதமர் மோதி, பன்ஸ்வாராவில் ஆற்றிய உரை குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா செய்தியாளர் சந்திப்பில் கூறியிருப்பதாவது: “இந்தியா கூட்டணிக்கு, நாட்டு மக்களை விடவும் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்தவர்கள்தான் முக்கியம்,” என்று குறிப்பிட்டார். வெவ்வேறு அரசியல் சித்தாந்தங்களை கொண்டவர்களின் கருத்து என்ன? பாஜகவின் பிரசாரம் மீதான விமர்சனங்கள் குறித்து வலதுசாரி சுவ்ரோகமல் தத்தா பேசுகையில், "இந்த நாட்டில் உடலிலிருந்து தலை துண்டிக்கப்பட்டது இல்லையா? கஜ்வா-இ-ஹிந்த் என்ற சித்தாந்தம் இந்த நாட்டிற்குள் வரவில்லையா? ஓட்டு ஜிகாத் இந்த நாட்டிற்கு வரவில்லையா? இந்த உண்மைகளை பிரதமர் அம்பலப்படுத்துகிறார், அவர் அப்படி என்ன குற்றம் செய்துவிட்டார்?” என்றார். பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக், பிரதமர் மோதியின் பிரசாரம் மீதான விமர்சனங்களை ஏற்கவில்லை. ஜமால் சித்திக் பேசுகையில், “மோதி ஜி எப்போதும் முஸ்லிம்களின் நலன் பற்றியே சிந்தித்தவர் ஊடுருவியவர்கள் என்றால் முஸ்லிம் என்று அர்த்தம் இல்லை. அதை ஏன் முஸ்லிம்கள் மீது திணிக்கிறோம்? பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நாட்டை உடைக்க முயல்கின்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் வேலை வாய்ப்புகளை மக்களிடம் இருந்து கொள்ளையடித்து வருகிறார்கள். ஆம், இந்து, முஸ்லிம் என இரு தரப்பிலும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள்," என்றார். தேர்தல் ஆணையம் 'மௌனம்' காப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. தேர்தல் ஆணையத்துக்கு சுமார் 200 புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதில், 169 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. பாஜக சார்பில் 51 புகார்கள் அளிக்கப்பட்டு, அதில் 38 வழக்குகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸிடம் இருந்து 59 புகார்கள் பெறப்பட்டன, அவற்றில் 51 புகார்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், ``விஷமத்தனமான கருத்துகளை” உள்ளடக்கிய தேர்தல் பிரசாரங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், ஆளும் பாஜக தலைவர்கள் மீது காட்டும் கடுமையை, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் காட்டுவதில்லை என்று தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முன்னர், பாஜக தலைவர்கள் பிரசாரத்தில் இந்து மத சின்னங்களைப் பயன்படுத்தியதற்காக தேர்தல் ஆணையம் பாஜக மீது நடவடிக்கை எடுத்ததாகவும் தற்போது எதிர்க்கட்சிகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை என்றும் விமர்சனம் எழுந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டெரெக் ஓ பிரையன், தேர்தல் ஆணையம் ஒரு "பாகுபாடான நடுவர்" போல் நடந்து கொள்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தேர்தல் ஆணைய அதிகாரி கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். பிரதமரின் பேச்சுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, பிபிசியிடம் பேசுகையில், "சாதி, மதம், சமூகம் குறித்த கருத்துகளுக்கு தேர்தல் ஆணையம் மௌனம் காப்பது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். முன்னாள் தேர்தல் ஆணையர் ஒருவர் கூறுகையில், ``கடந்த காலங்களில் சர்ச்சையான பிரசார உரைகளுக்கு தேர்தல் ஆணையம் கடுமை காட்டியிருந்தால் இன்று இவ்வாறான நிலை ஏற்பட்டிருக்காது.,’ என்றார். தேர்தல் ஆணையத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட மாதிரி நடத்தை விதிகளின்படி, தேர்தல் பிரசாரத்தின்போது மத சின்னங்களை பயன்படுத்தி வாக்கு கேட்கக்கூடாது. மதம், சாதி அடிப்படையில் வாக்களிக்குமாறு வேண்டுகோள் விடுக்கக்கூடாது. தேர்தல் நடத்தை நெறிகளின்படி, எந்தவொரு மத அல்லது இன சமூகத்திற்கு எதிராக வெறுப்பு பிரசாரத்தை மேற்கொள்வது அல்லது முழக்கங்களை எழுப்புவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்த விதிகளைக் காரணம் காட்டி, பிரதமர் மோதி மீது நடவடிக்கை எடுக்க எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசாரப் பேச்சுக்கான நோட்டீஸ் பிரதமருக்கு அனுப்பப்படாமல், கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அனுப்பப்பட்டது கேள்விகளின் தீவிரத்தை மேலும் அதிகரித்தது. இதேபோன்று, ராகுல் காந்தியின் பேச்சு குறித்து கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது, இப்படி நடப்பது இதுவே முதல் முறை. காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பதிவில் , “பிரதமரின் தரக்குறைவான கருத்துகளால் சாமானிய மக்கள் மத்தியில் சலசலப்பு எழுந்துள்ளது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கைகள் கட்டிப் போடப்பட்டுள்ளன என்பது தெளிவாகிறது. சமமாக நடத்துகிறோம் என்பதை நிரூபிக்க ராகுல் காந்தியின் கருத்துக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்? தேர்தல் ஆணையத்திற்கு இது அவசியமா? பாஜக தலைவர் ஹேமமாலினி குறித்து ஆட்சேபகரமான கருத்து தெரிவித்ததற்காக காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலாவை தேர்தல் ஆணையம் கண்டித்ததையும், அவரது தேர்தல் பிரசாரத்துக்கு 48 மணிநேரம் தடை விதித்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். இது தவிர, பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநெட்-ஐ குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்தது,” என்று குறிப்பிட்டார். அழுத்தமான பேச்சுகளுக்கு என்ன காரணம்? பட மூலாதாரம்,GETTY IMAGES பிரதமர் மோதியின் பன்ஸ்வாரா பிரசார உரை, இரண்டாம் கட்ட வாக்குப் பதிவுக்கு முன்பாகப் பேசப்பட்டது. வாக்குப்பதிவின் இரண்டாம் கட்டமாக கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், பிகார், சத்தீஸ்கர், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் பல தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அமெரிக்காவில் உள்ள ஜார்ஜ்டவுன் பல்கலைகழகத்தில் பணிபுரியும் இந்திய அரசியல் துறை பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், “கடந்த 10 ஆண்டுகளில், சில சந்தர்ப்பங்களில் கட்சியின் முக்கிய அடிப்படைக் கொள்கைகளை நிலைநாட்டும் வகையில் மறைமுகமாக பிரதமர் மோதி செயல்பட்டார். தீவிரமாக சர்ச்சைக்குரிய கருத்துகள் பேசுவதை மற்ற பாஜக தலைவர்களிடம் ஒப்படைத்தார், ஆனால் இந்த முறை எல்லாம் மாறிவிட்டது. பிரதமர் மோதியே மயானம் மற்றும் சுடுகாடு பற்றிக் குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது,” என்று விவரித்தார். ``கிராமங்கள் மற்றும் நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் உள்ள சவால் ஆகியவை முக்கியமான பிரச்னையாக இருப்பதால் பொருளாதாரம் தொடர்பான பேச்சுகள் வாக்காளர்களை ஈர்க்கவில்லை என்பதை பாஜக புரிந்து கொண்டது என்பதற்கு இதுவொரு அறிகுறி,” என்று பேராசிரியர் நூருதீன் கூறுகிறார். மேலும் பேசிய அவர், ``தேர்தலுக்கு முன் அரவிந்த் கேஜ்ரிவாலை கைது செய்தது, பாஜக கட்சியினர் மத்தியில், இது ஹிட்-விக்கெட் (hit-wicket) என்று ஒருதரப்பும் தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொண்டது என்று மற்றொரு தரப்பும் நம்பியது. இந்த நடவடிக்கை எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்தது, 'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்ற முழக்கத்தை எழுப்ப வழிவகுத்தது.” பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,அரவிந்த் கெஜ்ரிவால் கேஜ்ரிவாலின் கைது பாஜகவின் அதீத நம்பிக்கையின் விளைவு என்று அவர் கருதுகிறார். ``ராமர் கோவில் பிரதிஷ்டை விழாவின் மூலம் தேர்தலில் பலன் கிடைக்கும் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால் அது கிடைக்கவில்லை. மகாராஷ்டிராவில் கட்சிகள் உடைந்ததால் பலர் பாஜகவில் இருந்து விலகிச் சென்றனர்,’’ என்றும் அவர் குறிப்பிட்டார். சமீபத்திய தேர்தல் பிரசாரத்தின்போது, ராகுல் காந்தியை தாக்கும் வகையில் பேசிய பிரதமர் மோதி, அதானி மற்றும் அம்பானி பற்றிக் குறிப்பிட்டார். இதுகுறித்துப் பேசிய நூருதீன் ``பாஜக-வுக்கு நெருக்கமானவர்கள் என நம்பப்படும் நபர்களை பிரசாரத்தில் குறிப்பிடுகிறார். இதெல்லாம் நம்பும்படி இல்லை,” என்கிறார். மைக்கேல் குகல்மேன் கூறுகையில், ``பிரதமர் மோதி தேர்தலில் தானும் தனது கட்சியும் சிறப்பாகச் செயல்படுவதாக நம்புகிறார். அவர் தனது முக்கிய ஆதரவாளர்களைத் தாண்டி மேலும் பலரை கட்சியில் இணைக்க முயல்கிறார்.” " இது புத்திசாலித்தனமான கொள்கை அல்ல. கட்சியில் மக்களைs சேர்க்க விரும்பினால், அவர்கள் முஸ்லிம் வாக்காளர்களை நல்ல முறையில் அணுக வேண்டும், சுதந்திர எண்ணம் கொண்ட வாக்காளர்களிடம் பேச வேண்டும், பாஜகவை சார்ந்த வாக்காளர்களை அணுக வேண்டும். நீங்கள் அவர்களை உங்கள் பக்கம் ஈர்க்க முயல்கிறீர்கள் என்றால், பயன்படுத்தும் கடுமையான மொழியைத் தவிர்ப்பது நல்லது. தற்போதைய பிரசார பாணி துரதிர்ஷ்டவசமானது,” என்று மைக்கேல் குகல்மேன் கூறுகிறார். பாஜகவின் கொள்கைகளை ஆதரிப்பவரான டாக்டர் சுவ்ரோகமல் தத்தா கூறுகையில், "பிரதமர் மோதி மற்றும் பாஜக தலைவர்களின் பேச்சுகள் பிரிவினை ஏற்படுத்தும் அரசியல் அல்ல, நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாட்டுடன் தொடர்புடையது." ” பிரிவினை ஏற்படுத்தும் செயல்கள் செய்தது காங்கிரஸ்தான் என்று பிரதமர் மோதி தொடர்ந்து கூறி வருகிறார், இதுபோன்று மீண்டும் நடக்கக் கூடாது. இதைப் பார்த்து நாடும், சமுதாயமும் உஷாராக இருக்க வேண்டும் என்று பிரதமர் நம்மை எச்சரிக்கிறார். இந்த வார்த்தைகளைச் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் பிரதமர் இருக்கிறார்." "மேலும், நாட்டின் தேசிய வளங்களில் சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கூறியது வரலாற்று ரீதியாக உண்மை கிடையாது,” என்றார். விமர்சகர்களின் கருத்துப்படி, மன்மோகன் சிங்கின் பேச்சை முன்வைத்து பாஜக தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பகிரும் கருத்தும், சூழலும் தவறானது என்கின்றனர். அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இதை எப்படிப் பார்க்கின்றன? பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், மேற்கத்திய ஊடகங்களில் இந்தியா மற்றும் இந்திய அரசியலைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் செய்திகள் நல்ல தொணியில் இல்லை. இந்திய ஜனநாயகம் குறித்து வரும் செய்திகள், பாஜக தலைவர்களின் பேச்சுகள், நிஜ்ஜார் படுகொலை தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போது அமெரிக்காவில் இந்த விவகாரங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பது தெரிகிறது.” ``செய்திகள், கட்டுரைகள் அல்லது வேறு எந்தப் பதிவாக இருந்தாலும், இந்தியாவில் ஜனநாயகம் பலவீனமடைந்து வருவதாகவும், சிறுபான்மையினரின் நிலை சரியில்லை என்றும் மேற்கத்திய ஊடகங்களில் தொடர்ந்து எழுதப்பட்டு வருகிறது. சீனாவிற்கும் மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் உலக அரசியலில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்," என்கிறார். பேராசிரியர் இர்பான் நூருதீன் கூறுகையில், "தற்போது உலகின் கவனம் இந்தியா மற்றும் இந்திய ஜனநாயகத்தின் எதிர்மறை அம்சங்களை நோக்கியே உள்ளது. நிஜ்ஜார் கொலை வழக்கில் வாஷிங்டன் போஸ்ட் என்ற அமெரிக்க நாளிதழில் சமீபத்தில் வெளியான செய்தி அறிக்கை மற்றும் இந்திய உளவாளிகள் என்று குறிப்பிட்டு ஆஸ்திரேலியாவில் வெளியான செய்தி அறிக்கை ஆகியவை இதற்கு சான்று’’ என்று சுட்டிக்காட்டுகிறார். நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவுக்கு எந்தப் பங்கும் இல்லை என இந்தியா மறுத்து வருகிறது. பேராசிரியர் நூருதீன் மேலும் கூறுகையில், “உலக அரங்கில் இந்தியாவுக்கு பெரும் ஆதரவாக இருக்கும் நாடுகள் அமெரிக்காவும் ஆஸ்திரேலியாவும்தான். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பியூ ரிசர்ச் நடத்திய ஆய்வறிக்கையின்படி ஐரோப்பாவில் காலப்போக்கில் இந்தியா மீதான எதிர்மறை எண்ணம் அதிகரித்துள்ளது,” என்றார். மைக்கேல் குகல்மேன் கூறுகையில், "பிரதமராக நரேந்திர மோதியின் பேச்சுகளையும், தேர்தல் பிரசாரங்களையும் தனித்தனியாகப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆனால், பாஜகவின் கொள்கைகள் குறித்து பல முஸ்லிம்கள் கவலைப்பட்டாலும், பிரதமர் மோதியின் ஆட்சியில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியா உடனான மத்திய கிழக்கு நாடுகளின் உறவுகள் வலுப்பெற்றுள்ளதால் இந்திய நிலைமைகள் பற்றி அவை எதுவும் கூறாது, இது தவிர ஏராளமான இந்தியர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரிகின்றனர்,” என்றார். மைக்கேல் குகல்மேனின் கூற்றுப்படி, ”பாகிஸ்தான் மற்றும் சீனாவை தவிர, வேறு எந்த நாட்டின் தலைவரும் தேர்தல் பிரசாரங்களைக் குறிப்பிட்டு இந்தியாவை விமர்சிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால் வெளிநாட்டு மண்ணில் நிஜார் படுகொலை போன்ற குற்றச்சாட்டுகள் வெளிச்சத்திற்கு வரும்போது இந்த நிலைமை மாறுகிறது." "இந்தியா மதச்சார்பின்மையில் இருந்து விலகிச் செல்கிறது என்ற கவலை நீண்ட காலமாக இருக்கிறது, தேர்தல் பரப்புரை பேச்சுகள் இந்தியாவின் போக்கைப் பற்றிய கவலையை மேலும் அதிகரிக்கச் செய்கிறது. 'வெறுக்கத்தக்க பேச்சு' என்றே சொல்லத் தோன்றுகிறது” என்றும் அவர் கூறுகிறார். குற்றச்சாட்டுகளை மறுக்கும் பாஜக தலைவர்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தக் குற்றச்சாட்டுகளை பாஜக தலைவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர். வலதுசாரி சர்வதேச விவகாரங்களின் நிபுணர் சுவ்ரோகமல் தத்தா கருத்துப்படி, இந்தியாவை பற்றி சர்வதேச நாடுகளோ அல்லது மேற்கத்திய நாடுகளோ என்ன சொல்கிறது என்பதைப் பற்றி இந்தியா கவலைப்படவில்லை.” அவர்கள் முதலில் அவர்கள் பிரச்னைகளைப் பார்க்க வேண்டும். சட்டவிரோத குடியேறிகள் ஸ்வீடன், பிரான்ஸில் போராட்டங்கள் நடத்தினர், பாரிஸிலும் தாக்குதல் நடந்தது, லண்டனில் வெடிகுண்டு தாக்குதல்கள், மாஸ்கோ தியேட்டர்களில் ஐ.எஸ் தாக்குதலில் மக்கள் இறந்தது எனப் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. அமெரிக்காவில் உள்ள கறுப்பர்கள் மற்றும் ஸ்பானியர்களுக்கு செய்யப்படும் பாகுபாடுகளை அமெரிக்காவும் ஐரோப்பாவும் முதலில் சரி செய்ய வேண்டும்,” என்றார். பாஜக சிறுபான்மை மோர்ச்சா தலைவர் ஜமால் சித்திக் கூறுகையில், "பிரதமருக்கு முன் கேள்விகள் வரும்போது, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையை வெளியிடும்போது, காங்கிரஸ் இளவரசர் ராகுல் பையா தனது கருத்தைத் தெரிவிக்கும்போது, மோதியை தாக்கும்போது, மோதிஜி உங்கள் கருத்தை நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்." சமீபத்தில், டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த பிரதமர் மோதி, முஸ்லிம்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தார். அப்போது, "சுயபரிசோதனை செய்து, சிந்தித்துப் பாருங்கள், நாடு முன்னேறி வருகிறது. குறை என்று உங்கள் சமூகத்தில் உணரப்பட்டால், அது காங்கிரஸ் ஆட்சியின்போது அரசு செய்த செயல்பாடுகளின் விளைவுதான்,” என்றார். https://www.bbc.com/tamil/articles/c72pg37gvngo
-
யாழில் வெப்பத்தால் 5 பேர் வரை உயிரிழப்பு - வைத்திய நிபுணர்கள்
யாழில் வெப்பத்தால் மேலும் ஒருவர் பலி Published By: DIGITAL DESK 3 11 MAY, 2024 | 01:02 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக நேற்று வெள்ளிக்கிழமையும் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்கு ஆண்டவர் தோட்டம் பகுதியை சேர்ந்த 68 வயதுடைய வல்லிபுரம் கோபாலசிங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார். முதியவர் வீட்டில் மயக்கமுற்ற நிலையில், வீட்டில் இருந்தவர்களால் மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் உடற்கூற்று பரிசோதனை நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சட்ட வைத்திய அதிகாரி மேற்கொண்ட போது , கடுமையான வெப்ப தாக்கத்தால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிட்டார். அதேவேளை கடந்த வியாழக்கிழமை புன்னாலைக்கட்டுவன் பகுதியில் 44 வயதுடைய நபர் ஒருவரும் கடும் வெப்ப தாக்கத்தால் உயிரிழந்திருந்தார். அத்துடன், அண்மைய நாட்களில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஐவர் "ஹீட் ஸ்ரோக்" ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர் என போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ரி .பேரானந்தராஜா ஊடக சந்திப்பில் தெரிவித்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/183236
-
யாழில் பெண்ணொருவர் கழுத்து நெரித்து கொலை
Published By: DIGITAL DESK 3 11 MAY, 2024 | 12:47 PM யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பகுதியில் குடும்ப பெண்ணொருவர், நேற்று வெள்ளிக்கிழமை (10) கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார். உடுத்துறை வடக்கு, தாளையாடியை சேர்ந்த 44 வயதுடைய ஜெகசீலன் சங்கீதா என்பவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் வீட்டின் கழிவறைக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பப்பட்ட கொள்கலனினுள் (பரல்) தலை மூழ்கிய நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார். அது தொடர்பில் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உடற்கூற்று பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். உடற்கூற்று பரிசோதனையில் துணி ஒன்றினால், பெண்ணின் கழுத்தை நெரித்து படுகொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/183233
- எல்லோராலும் தூண்டப்படும் இனமுரண்!
-
நாமலை சந்தித்தார் ஜூலி
11 MAY, 2024 | 01:41 PM பாராளுமன்ற உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார் அமெரிக்கத் தூதர் ஜூலி சங். நாமல் ராஜபக்ஷவுடனான சந்திப்பையடுத்து அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையில் அரசியல் கட்சிகளுக்கிடையிலான எமது சந்திப்பின் ஒரு பகுதியாக நாமல் ராஜபக்ஷவை சந்தித்தோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் என்ற புதிய பொறுப்பில் அவரது அரசியல் ஈடுபாடுகள், இளைஞர்களை பாதிக்கும் பிரச்சினைகள் மற்றும் இலங்கை - அமெரிக்காவுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தல் தொடர்பான கருத்துக்களை பரிமாறிக்கொண்டோம் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/183237
-
சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
யூடியூப் சேனல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை தேவையா? நீதிபதியின் கருத்தைத் தொடர்ந்து கிளம்பும் விவாதம் பட மூலாதாரம்,GETTY IMAGES/SAVUKKU SHANKAR கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 11 மே 2024, 05:25 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் "சில யூடியூப் சேனல்கள் தங்கள் பின்தொடர்பாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, அவதூறான உள்ளடக்கம் கொண்ட காணொளிகளை வெளியிடுவதன் மூலம் சமூகத்திற்கு அச்சுறுத்தலாக மாறி வருகின்றன." "இதுபோன்ற விரும்பத்தகாத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது" என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு வியாழக்கிழமை தெரிவித்தார். நேர்காண்பவரும் குற்றவாளியா? சவுக்கு சங்கர் கைதான வழக்கில், முன் ஜாமீன் கேட்டு ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல் உரிமையாளர் மற்றும் சவுக்கு சங்கருடனான நேர்காணலை நடத்தியவருமான ஃபெலிக்ஸ் ஜெரால்டு மனு கொடுத்திருந்தார். அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, கூடுதல் அரசு வழக்கறிஞர் (ஏ.பி.பி) இ.ராஜ் திலக், மனுதாரர் சமீபத்தில் 'சவுக்கு சங்கர்' என்கிற ஏ. சங்கரை நேர்காணல் செய்ததாகவும், இதன்மூலம் பெண் காவலர்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளை வெளியிட அவருக்கு "வசதி செய்து கொடுத்ததாகவும்" கூறினார். மனுதாரரின் வழக்கறிஞர் தனது கட்சிக்காரர் கடந்த 25 ஆண்டுகளாக ஒரு பத்திரிகையாளராக இருக்கிறார் என்று கூறியபோது, நீதிபதி கூறுகையில், மனுதாரர் இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருக்க வேண்டும், ஏனென்றால் அவர்தான் நேர்காணல் செய்தவரை பெண்களுக்கு எதிராக அவதூறான கூற்றுகளை வெளியிடத் தூண்டினார் என்றார். படக்குறிப்பு,சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு ரெட் பிக்ஸ் யூ டியூப் சேனல், பத்து நாட்கள் முன்பு காவல்துறை தொடர்பாக சவுக்கு சங்கருடன் நடத்திய நேர்காணலை வெளியிட்டிருந்தது. அந்த நேர்காணலில் ஒரு காவல் அதிகாரியின் பெயரைக் குறிப்பிட்டு, ஆவேசமாகப் பேசிய சவுக்கு சங்கர், பணியில் இருக்கும் பெண் காவலர்கள் மற்றும் அந்தக் காவல் அதிகாரி ஆகியோர் தொடர்பாகச் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தார். அதே நேர்காணலில், மற்றொரு தருணத்தில், தனது இடது கையால் வலதுபுறம் உள்ள மீசையை முறுக்கிக் கொண்டே, “திமுகவுக்கு இந்தத் தேர்தலில் சில தொகுதிகளில் இழுபறி நீடிக்கிறது. இதற்குக் காரணம் சவுக்கு மீடியா என முதல்வரிடம் சிலர் கூறியிருந்தனர்," என்று கூறியவர், அதேவேளையில் ஆனால் அதற்குக் காரணம் மு.க.ஸ்டாலினின் அரசுதான் என்பதை கொச்சைப்படுத்தும் வார்த்தைப் பயன்பாட்டுடன் கூறியவாறு சிரித்தார். எதிரில் இருந்த நெறியாளர், “நான் உங்கள் தாக்கத்தைக் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் இப்படி ஒரு செய்தி கிடைத்தால், அது எதனால் ஏற்பட்டது என்று ஆராயாமல் ஒரு ஊடகத்தை முடக்கினால் சரியாகிவிடும் என்று அரசு எப்படி நினைக்கிறது?” என்று கேட்கிறார். குடிசைத் தொழிலாக யூடியூப்! பட மூலாதாரம்,GETTY IMAGES இது தொடர்பாக பி.பி.சி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மாலன், ”யூ டியூப் சேனல்கள் நடத்துவது என்பது தற்போது குடிசைத் தொழில் செய்வது போல் ஆகிவிட்டது. யூடியூப் சேனல்களில் செய்திகளைச் சேகரிப்பதற்கான குழுக்கள் கிடையாது. அதற்கான நிதி ஆதாரம், மனித வள ஆதாரம் இருக்காது. எனவே அந்த சேனல்கள் செய்திகளை அலசி கருத்து தெரிவிக்கும் தளமாக இருக்கிறது. சில நேரங்களில் அது புரளி பேசுவதாகவும், அதையும் தாண்டி சில நேரங்களில் அவதூறாகப் பேசுவதாகவும் மாறிவிடுகிறது," என்றவர் யூடியூப் சேனல்கள் ஒட்டுமொத்தமாகத் தரம் குறைந்துள்ளதாகவும் அதற்கு பொருளாதார நோக்கங்கள் இல்லையென்று கூற முடியாது எனவும் கூறினார். எதையும் திட்டி பேசினால்தான் யூ டியூபில் எடுபடும் என்று கருதப்படுவதாக அவர் தெரிவிக்கிறார். கிட்டத்தட்ட இதே மாதிரியான கருத்தை பெண் ஊடகவியலாளர்கள் குறித்து எஸ்.வி.சேகர் பேசியபோது, எதிர்ப்புகள் கிளம்பின. ஆனால் "இன்று சவுக்கு சங்கர் பேசும்போது, கருத்துரிமை பறிபோனதாகக் கூறுவது எப்படி நியாயம்?" என்றும் வினவுகிறார். கோபப்படுவது சரியில்லை என்று குறிப்பிடும் நீதிபதி அரி பரந்தாமன், “அம்பேத்கர் கூறிய இட ஒதுக்கீடு பத்து ஆண்டுகளுக்குத்தான் செல்லும் என்று நீதிமன்றம் கூறும்போது வராத கோபம் ஏன் இப்போது வருகிறது?” எனக் கேட்கிறார். கட்டுப்பாடுகள் தேவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES தமிழகத்தில் ஏராளமான யூடியூப் சேனல்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சேனல்களில் அரசியல், சினிமா எனப் பல்வேறு விதமான விஷயங்கள் வெளிவருகின்றன. அரசியல் கட்சிகளும் தங்களுக்கான சேனல்களை நடத்தி வருகின்றனர். யூடியூப் சேனல் தொடங்க யாரிடமும் எந்த உரிமையும் பெறவேண்டிய அவசியமில்லை. பெரிய ஊடகங்களுக்கு இல்லாத கட்டுப்பாடு ஏன் யூடியூப் ஊடகத்திற்கு மட்டும் விதிக்கப்பட வேண்டும் என்று கேட்கிறார், நீதிபதி அரி பரந்தாமன். "எந்த ஊடகத்துக்கும் முறைப்படுத்துதல் இல்லை. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நடத்தும் ஊடகங்கள் முறைப்படுத்துதல் இல்லாமல்தான் இயங்குகின்றன. சாதாரண மக்கள் பயன்படுத்தும் யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை ஏன் முறைப்படுத்த வேண்டும்?" சவுக்கு சங்கரின் நேர்காணலை யாராலும் ஆதரிக்க முடியாது, ஆனால் செய்தி என்பது விற்கப்படும் பண்டமாகிவிட்ட நிலையில் யாரும் அதில் லாபம் சம்பாதிக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள் என்கிறார் அவர். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் அது அரசியல் ரீதியாகத்தான் பயன்படுத்தப்படும் என்கிறார் ஜீவா டுடே என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் பத்திரிகையாளர் ஜீவ சகாப்தன். “யூ டியூப் சேனல்களில் பாஜகவை திட்ட வேண்டும் அல்லது திமுகவை திட்ட வேண்டும். அதில் பேசும் சர்ச்சையான கருத்தை முகப்புப் படமாக வைக்க வேண்டும் என்ற போக்குதான் பெரும்பாலும் உள்ளது. பெண்களையோ, ஒரு துறை சார்ந்தவர்களையோ அவதூறாகப் பேசுவது ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல. சில யூடியூப் சேனல்களில் நடிகைகள் குறித்த கிசுகிசு, பிறரைத் தனிப்பட்ட முறையில் தாக்குவது ஆகியவையே உள்ளடக்கங்களாக இருப்பதால், யூடியூப் சேனல்கள் என்றாலே மோசம் என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால் இதை முறைப்படுத்த வேண்டும் என்று அரசு கூறினால், அரசியல் ரீதியாக கருத்து தெரிவிப்பவர்களைத்தான் அரசு கட்டுப்படுத்தும். பெண்களைப் பற்றி இழிவாகப் பேசுபவர்களைத் தேடி முதலில் செல்லாது. அது ஆபத்தானது,” என்றார். சரிவில் ஊடக சுதந்திரம் பட மூலாதாரம்,GETTY IMAGES ஊடக சுதந்திரம் தொடர்பான தரவரிசைப் பட்டியலை எல்லைகள் இல்லாத ஊடகவியலாளர்கள் என்ற அமைப்பு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. அதில் இந்தியாவின் தரவரிசை 159 என்ற பின்தங்கிய இடத்தில் உள்ளது. இந்திய ஊடகங்கள் அதிகாரபூர்வமற்ற அவசரநிலையை அடைந்திருப்பதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தியாவின் அரசமைப்பு சட்டத்தில் பத்திரிக்கை சுதந்திரம் தனியாகக் குறிப்பிடப்படாத போதிலும், கருத்துரிமையின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கம் காலனி ஆதிக்க கால சட்டங்களைப் பயன்படுத்தி ஊடகங்களைக் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் எதிர்க்கட்சிகளும்கூட சட்ட வழிமுறைகளைப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களைத் துன்புருத்துவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஒளிபரப்பு சேவைகள் கட்டுப்பாட்டு சட்டம், 2023 தகவல் தொடர்பு சட்டம், டிஜிட்டல் தனிநபர் தரவுகள் பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றின் மூலம் ஊடகங்களைக் கட்டுப்படுத்த அதீதமான அதிகாரத்தை அரசாங்கம் குவித்துக் கொண்டிருப்பதாக அந்த அறிக்கை குற்றம் சாட்டுகிறது. அரசியல் ரீதியான கருத்துகள் காரணமே இல்லாமல் முடக்கப்படுவதாக போல்தா இந்துஸ்தான் என்ற சேனலின் நிறுவனர், ஹசீன் ரஹ்மானி பிபிசி தமிழிடம் கூறினார். மேலும் அவர் பேசுகையில், “கடந்த மாதம் 4ஆம் தேதி, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அறிவுறுத்தலின் பெயரில் எங்களது யூடியூப் சேனல் முடக்கப்படுவதாக யூடியூப் நிர்வாகத்திடம் இருந்து மின்னஞ்சல் கிடைத்தது. தகவல் கிடைத்து 12 மணிநேரங்களில் சேனல் முடக்கப்பட்டது. நாங்கள் அதுவரை 4,200 வீடியோக்கள் பதிவிட்டிருந்தோம். இரண்டு நாட்கள் முன், நான் கேட்காமலேயே, சேனல் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. எங்கள் குழு இரண்டாவது முறையாக ஆய்வு செய்தததில் உங்கள் தளத்தில் விதிமீறல்கள் எதுவும் இல்லை,” என்று கூறினர். எந்த விதிமீறலும் இல்லாமல் 34 நாட்கள் முடக்கப்பட்டு இருந்ததாக ஹசீன் ரஹ்மானி கூறினார். சமூக ஊடகத்தில் தினமும் உழைத்தால்தான் ஆதரவுத் தளத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்று கூறும் அவர், "இன்று நாங்கள் முதல் படியில் இருந்து மீண்டும் தொடங்க வேண்டும். அதே போன்று முகநூலில் விளம்பரங்கள் மூலம் வருவாய் பெறுவதற்கான அனுமதி தொடர்ந்து மறுக்கப்படுகிறது," என்றும் தெரிவித்தார். மேலும், இதே செயலை அரசு ஒவ்வொரு யூடியூப் சேனலின் மீதும் மேற்கொள்ளும், இப்படியே செய்துகொண்டிருந்தால் எழுப்புவதற்குக் குரலே இருக்காது, என்றார் ஹசீன் ரஹ்மானி. https://www.bbc.com/tamil/articles/cz96mj0mje7o
-
பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் - ஐநாவில் தீர்மானம் நிறைவேற்றம்
11 MAY, 2024 | 06:25 AM ஐக்கியநாடுகள் சபையில் பாலஸ்தீனத்திற்கு நிரந்தர உறுப்புரிமை வழங்குவது குறித்து ஐக்கியநாடுகள்பாதுகாப்பு சபை பரிசீலிக்கவேண்டும் என கோரும் தீர்மானத்தை ஐக்கியநாடுகள் சபை நிறைவேற்றியுள்ளது. பாலஸ்தீனத்திற்கு தற்போதைய பார்வையாளர் நிலையிலிருந்து மேலும் பல உரிமைகளையும் சலுகைகளையும் இந்த தீர்மானம் வழங்கியுள்ளது. 143 நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன. https://www.virakesari.lk/article/183203
-
பாணில் கிடந்த எலியின் உடற் பாகங்கள் : 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டன!
பொதிசெய்யப்பட்ட இரண்டு பாண் பாக்கெட்டுகளில் எலியின் உடலின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து சுமார் 100,000 க்கும் மேற்பட்ட பாண்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இச்சம்பவம் ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. ஜப்பான் உயர்தர சுகாதாரம் பேணப்படும் நாடாகும். இவ்வாறான சம்பவங்கள் அங்கு நடைபெறுவது அரிதாகும். எலியின் எச்சங்கள் அதன் தயாரிப்புகளில் எவ்வாறு ஊடுருவின என்பதை ஆராய்ந்து வருவதாக குறித்த பாண் தயாரிப்பு நிறுவன அதிகாரி ஷிகிஷிமா தெரிவித்துள்ளார். “எங்கள் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனையாளர்களுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தியதற்காக நாங்கள் ஆழ்ந்த மன்னிப்பு கேட்க விரும்புகிறோம்” என்று குறித்த நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜப்பானில் தூய்மை மற்றும் சுகாதாரம் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது, ஆனால் உணவு விஷம் மற்றும் மோசமான தரம் ஆகியவை அண்மைக்காலத்தில் ஜப்பானிய தலைப்புச் செய்திகளாக அவ்வப்போது வருகின்றன. கடந்த ஆண்டு, அரிசி உருண்டையில் கரப்பான் பூச்சி கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மன்னிப்புக் கேட்கப்பட்டதோடு அவை திரும்பபெறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301373
-
இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் - அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் ஹோர்ஸ்ட்
Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 08:27 AM இலங்கையில் பொறுப்புக்கூறல் உண்மை நல்லிணக்கம் நீதி போன்றவற்றிற்கு ஆதரவளிப்பேன் என இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ள எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழுவின் முன்னிலையில் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டால் இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களை ஆதரவளிக்க எதிர்பார்த்திருப்பதாக தெரிவித்துள்ள அவர் இலங்கையின் மனித உரிமை நிலவரம் குறித்த அமெரிக்காவின் கரிசனைகளை பகிர்ந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இலங்கையில் துடிப்பான சிவில்சமூகம் காணப்படுகின்றது, நான் நியமிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் இலங்கை அமெரிக்க சமூகங்கள் உட்பட மக்கள் மத்தியிலான தொடர்புகளை வலுப்படுத்த எண்ணியுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களிற்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளேன். உண்மை, நீதி, நல்லிணக்கம், பொறுப்புக்கூறலிற்கு நான் ஆதரவளிப்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க செனெட்டின் வெளிவிவகார குழு இலங்கையின் பொறுப்புகூறும் விவகாரங்களை கையாள்வதற்கான எலிசபெத் கே கோர்ஸ்டின் திறமை மாற்றுக்கருத்துக்களை இலங்கை அரசாங்கத்திடம் தெரிவிப்பதற்கான திறமை குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதன்போது இலங்கை நாடாளுமன்றம் சமீபத்தில் நிறைவேற்றிய சட்டங்கள் இலங்கை மக்களிற்கான சுதந்திரங்களை மேலும் முன்னேற்றமாக்குவதற்கான அமெரிக்காவின் முயற்சிகள் குறித்து செனெட்டர் பென்கார்டின் சுட்டிக்காட்டினார். நான் தூதுவராக நியமிக்கப்படுவது உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் பின்பற்றவேண்டிய சர்வதேச தராதரத்திற்கு அனைவரையும் பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவேன் என எலிசபெத் கே கோர்ஸ்ட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/183206
-
பொலிஸார் விரட்டிச் சென்ற நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் – புன்னாலைக் கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்தார். குறித்த சம்பவத்தில் அப்பகுதியில் பொதுமக்கள் கூடியதால் குழப்பமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. பலாலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை மறித்துள்ளனர். இதன் போது குறித்த நபர் தொடர்ந்து பயணிக்கவே விரட்டி சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் குறித்த நபர் பயணித்த மோட்டார் வண்டியை உதைந்து விழுத்தியதில் குறித்த நபர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார். உயிரிழந்தவரின் சடலம் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://thinakkural.lk/article/301368
-
'வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி - 2024' ஜனாதிபதி பார்வையிட்டார்
Published By: VISHNU 11 MAY, 2024 | 01:53 AM இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட ”வீடமைப்பு மற்றும் சர்வதேச நிர்மாணக் கண்காட்சி – 2024”ஐ (Housing & Construction International Expo – 2024) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் வெள்ளிக்கிழமை (10) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பார்வையிட்டார். 'இலங்கையைக் கட்டியெழுப்புவோம்' என்ற தொனிப்பொருளின் கீழ் இவ்வருட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், நிர்மாணத்துறை நிறுவனங்களின் 300 விற்பனை கூடங்கள் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சீனாவில் உள்ள 30 முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளுடன் கூடிய விற்பனை கூடங்கள் இந்த கண்காட்சியில் முதல் முறையாக இணைந்துள்ளதுடன், இலங்கை முப்படைகளின் நிர்மாணத் தொழில்நுட்பத்தைக் காட்சிப்படுத்தும் கூடங்களை உள்ளடக்கிய இக்கண்காட்சி, எதிர்வரும் 12 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விற்பனை கூடங்கள் மற்றும் ஆயுதப்படைகளின் கண்காட்சிக் கூடங்களை ஜனாதிபதி பார்வையிட்டதுடன், கண்காட்சியின் ஏற்பாட்டாளர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். இலங்கை நிர்மாணக் கைத்தொழில் சபையின் தலைவர் பட்டய கட்டிடக்கலை நிபுணர் ஜயந்த பெரேரா, பொதுச் செயலாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரி பொறியியலாளருமான நிஷங்க என். விஜேரத்ன உள்ளிட்ட பலர் இதன்போது உடனிருந்தனர். https://www.virakesari.lk/article/183201
-
தேர்தலுக்குத் தயார், சிறந்த வேட்பாளர் கிடைக்கவில்லை - பஷில் ராஜபக்ஷ
Published By: VISHNU 11 MAY, 2024 | 01:02 AM (இராஜதுரை ஹஷான்) இந்திய மக்களவைத் தேர்தல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை அறிவிப்பார். ஜனாதிபதி தேர்தலுக்கு நாங்கள் தயார், ஆனால் சிறந்த வேட்பாளர் இதுவரை கிடைக்கவில்லை. நாட்டுக்காக எவருடனும் இணைந்து செயற்பட தயார் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பஷில் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை (10) தேர்தல் கண்காணிப்பு மையத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியதாவது, ஜனாதிபதி தேர்தலுக்கான பணிகளைத் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது. தேர்தலுக்கு நாங்கள் தயார் இருப்பினும் சிறந்த வேட்பாளர் ஒருவர் கிடைக்கவில்லை. எமது தரப்பில் தாமதம் இருப்பதை ஏற்றுக் கொள்கிறோம். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது பல விடயங்கள் பேசப்பட்டன. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத்தேர்தலை நடத்த வேண்டும் என்ற யோசனையை முன்வைத்துள்ளோம். இந்திய தேர்தலுக்கு பின்னர் அதாவது எதிர்வரும் ஜூன் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் தனது நிலைப்பாட்டை அறிவிப்பதாகக் குறிப்பிட்டார். வெகுவிரைவில் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவும், கட்சியை பலப்படுத்தவும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் குறிப்பிட்டார்கள். அதற்கமைய நாமல் ராஜபக்ஷவை கட்சியின் தேசிய அமைப்பாளராக நியமித்துள்ளோம். பொதுஜன பெரமுனவின் ஒரு தரப்பினர் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்குவதாகவும், பிறிதொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் குறிப்பிடுவது பொய்யானது. கட்சியின் சகல உறுப்பினர்களுடன் கலந்துரையாடி அரசியல் ரீதியிலான தீர்மானங்கள் எடுக்கப்படுகிறது. கட்சியின் ஏகமனதான தீர்மானத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிவிப்பார். தேர்தல் ஒன்று இடம்பெற்றால் பொதுஜன பெரமுனவின் நிலையை விளங்கிக் கொள்ளலாம். மக்களாணைக்கு செல்வதற்கு நாங்கள் அச்சமடையவில்லை. நாட்டுக்காக எவருடனும் கைகோர்க்கவும், எத்தரப்பினரையும் விட்டு விலகுவதற்கும் நாங்கள் தயாராகவுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/183195
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
GT vs CSK: சாதனைகளை முறியடித்த கில், சுதர்சன் - சி.எஸ்.கே ப்ளே ஆஃப் செல்வதில் சிக்கல் பட மூலாதாரம்,SPORTZPICS கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடர் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் செல்லும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தார்களோ அந்த அணிகள்செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடைசி இடத்தில் இருந்த அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்பை உருவாக்கி வருகிறது. இதுபோன்ற சுவரஸ்யமான திருப்பங்கள் ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் கிடைத்து வருகின்றன. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நேற்றைய தோல்வியால், சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிஎஸ்கே அணிக்கு இருக்கும் ஒரே பலம் நிகர ரன்ரேட் மட்டும்தான். அந்த நிகர ரன்ரேட்டை மட்டும் வைத்துக்கொண்டு அடுத்த இரு போட்டிகளிலும் வெல்ல வேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறது. ஒரு கட்டத்தில் 3வது இடத்தை அல்லது 2வது இடத்தைப் பிடிக்க சிஎஸ்கே அணிக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்ட நிலையில் இப்போது 4வது இடத்தைப் பிடிக்கவே கடும் பிரயத்தனம் செய்ய வேண்டியதாகி இருக்கிறது. ஆமதாபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது குஜராத் டைட்டன்ஸ் அணி. முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்தது. 232 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்து 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிஎஸ்கே-வுக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு எப்படி? பட மூலாதாரம்,SPOTZPICS இந்தத் தோல்வியால் சிஎஸ்கே அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான பாதை குறுகியுள்ளது. சிஎஸ்கே அணி தற்போது 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது. சிஎஸ்கேவுக்கு இணையாக டெல்லி கேபிடல்ஸ், லக்னெள அணிகளும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன. ஆனால், இந்த இரு அணிகளின் நிகர ரன்ரேட் மைனஸில் இருப்பதால், சிஎஸ்கே அணியைவிட பின்தங்கியுள்ளன. ஆனால் சிஎஸ்கேவின் நிகர ரன்ரேட் இந்தத் தோல்வியால்கூட பெரிதாக பாதிக்காமல் நிகர ரன்ரேட் 0.491 என வலுவாக இருப்பதால் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. சிஎஸ்கே, அடுத்து வரும் 2 ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ராஜஸ்தான் அணியுடன் வரும் ஞாயிற்றுக்கிழமை சென்னையிலும், அதன்பின் ஆர்சிபியுடன் பெங்களூருவிலும் சிஎஸ்கே மோதுகிறது. இந்த இரு அணிகளும் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால், இரு அணிகளையும் வீழ்த்துவது சிஎஸ்கே அணிக்கு சவாலாக இருக்கும். ப்ளே ஆஃப் வாய்ப்புக்கான சாத்தியங்கள் என்ன? ஒருவேளை சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்று ஒன்றில் தோற்றால் 14 புள்ளிகளுடன் முடிக்கும். அப்போது, டெல்லி கேபிடல்ஸ், லக்னெள அணிகள் தங்களுக்குரிய 2 ஆட்டங்களிலும் வென்று 16 புள்ளிகள் பெற்றிருந்தால், அந்த இரு அணிகளில் எந்த அணியின் நிகர ரன்ரேட் சிறப்பாக இருக்கிறதோ அந்த அணி 4வது இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை லக்னெள, டெல்லி அணிகள் தங்களுக்கு இருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் வென்று, ஒன்றில் தோற்று தலா 14 புள்ளிகளுடன் முடித்து, ஆர்சிபி அணியும் 14 புள்ளிகளுடன் முடித்து, குஜராத் அணியும் 14 புள்ளிகளுடன் முடித்தால், கடைசி இடத்துக்கு சிஎஸ்கே, டெல்லி, லக்னெள, ஆர்சிபி, குஜராத் ஆகிய 5 அணிகள் போட்டியிடும், நிகர ரன்ரேட் அடிப்படையில் எந்த அணி உயர்வாக இருக்கிறதோ அந்த அணி ப்ளே ஆஃப் வாய்ப்பைப் பெறும். இந்தக் கணக்கீட்டின்படி, சிஎஸ்கேவுக்கு நிகர ரன்ரேட்டில் சவாலாக இருப்பது ஆர்சிபி மட்டும்தான். ஆர்சிபி 0.217 என்ற அளவில் இருப்பதால் இன்னும் ஒரு வெற்றி பெற்றாலே நிகர ரன்ரேட் சிஎஸ்கேவுக்கு இணையாக வந்துவிடும். அப்போது 14 புள்ளிகளுடன் போட்டியிடும்போது, சிஎஸ்கே அல்லது ஆர்சிபி என்ற போட்டியும் வரலாம். குஜராத் அணிக்கு வாய்ப்பு குறைவு பட மூலாதாரம்,SPORTZPICS குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த வெற்றியால் 12 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி என 10 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருக்கிறது, நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.063 எனப் பின்தங்கியுள்ளது. குஜராத் அணி தனக்கிருக்கும் 2 லீக் ஆட்டங்களில் வென்றால் 14 புள்ளிகள் பெறலாம். ஆனால், நிகர ரன்ரேட்தான் அந்த அணிக்குப் பெரிய சிக்கலாக உள்ளது. நிகர ரன்ரேட்டை உயர்த்தும் அளவுக்கு பிரமாண்ட வெற்றியைப் பெற்றால், குஜராத் அணி ப்ளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகலாம், அது மட்டுமல்லாமல், மற்ற அணிகளின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால்தான் அது சாத்தியம். பட மூலாதாரம்,SPORTZPICS போட்டியை ஆக்கிரமித்த கில், சுதர்சன் குஜராத் அணியின் வெற்றிக்கு அடித்தளமிட்டவர்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் கேப்டன் சுப்மன் கில், தமிழக வீரர் சாய் சுதர்சன் இருவரும்தான். ஒட்டுமொத்த ஆட்டத்திலும் இருவரும் ஆதிக்கம் செலுத்தி விளையாடி பெரிய ஸ்கோருக்கு அணியைக் கொண்டு சென்றனர். ஐபிஎல் தொடரில் தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சதமே சதம் அடித்த 3வது ஜோடி என்ற பெருமையைப் பெற்றனர். இதற்கு முன் விராட் கோலி, ஏபிடி ஜோடி 2016இல் குஜராத் லயன்ஸுக்கு எதிராகவும், ஆர்சிபிக்கு எதிராக 2019இல் வார்னர், பேர்ஸ்டோ ஜோடியும் சதம் அடித்திருந்தனர். கேப்டன் சுப்மன் கில் 51 பந்துகளில் 103 ரன்கள் சேர்த்து (7 சிக்ஸர், 5 பவுண்டரி) ஆட்டமிழந்து ஆட்டநாயகன் விருது பெற்றார். இவருக்குத் துணையாக ஆடிய தமிழக வீரர் சாய் சுதர்சன் 55 பந்துகளில் 105 ரன்கள் சேர்த்து (6 சிக்ஸர், 9 பவுண்டரி) ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 210 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 200 ரன்களுக்கு மேல் குஜராத் அணி சேர்த்தது என்பது ஐபிஎல் வரலாற்றில் தொடக்க ஆட்டக்காரர்கள் சேர்ப்பது 2வது முறை. இதற்கு முன் 2022இல் கொல்கத்தா அணிக்கு எதிராக கே.எல்.ராகுல், டீகாக் ஜோடி 210 ரன்களுக்கு மேல் சேர்த்திருந்தனர். அது மட்டுமல்லாமல் இது சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடக்க ஜோடி சேர்த்த 2வது அதிகபட்ச ஸ்கோராகும். அது மட்டுமல்லாமல் ஆமதாபாத்தில் குஜராத் அணி சேர்த்த 231 ரன்கள் என்பது ஐபிஎல் தொடரில் அந்த அணியின் 2வது அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் கடந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக 233 ரன்கள் சேர்த்திருந்தது குஜராத் அணி. சிஎஸ்கே அணிக்கு எதிராக தொடக்க ஜோடி 150 ரன்களுக்கு மேல் சாய் சுதர்சன், கில் சேர்த்ததுதான் அதிகபட்சம். இதற்கு முன் 2015இல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ரஹானே, வாட்சன் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்திருந்ததுதான் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிகபட்சமாக இருந்தது. கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்சன் இருவரும் ஆட்டம் முழுவதையும் ஆக்கிரமித்து பேட் செய்தனர். சான்ட்னர் வீசிய முதல் ஓவரிலேயே கில் ஒரு சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்கள் சேர்த்து அதிரடியாகத் தொடங்கினார், ஜடேஜா ஓவரை வெளுத்த சாய் சுதர்சன் 21 ரன்கள் சேர்த்து சுழற்பந்துவீச்சாளர்களை மிரட்டினார். சுதர்சன் 32 பந்துகளில் அரை சதத்தையும், கில் 25 பந்துகளில் அரை சதத்தையும் நிறைவு செய்தனர். ராக்கெட் வேகத்தில் ரன்ரேட் பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளே ஓவரில் குஜராத் அணி, விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் சேர்த்தது. ஆனால் குஜராத் அணி ஸ்கோரையும், ரன்ரேட்டையும் உயர்த்தியது 7 முதல் 15வது ஓவர்களுக்கு இடையேதான். இந்த 8 ஓவர்களில் மட்டும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். குறிப்பாக 9 முதல் 14 ஓவர்களுக்கு இடையே மட்டும் 100 ரன்கள் சேர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பவர்ப்ளே முடிவில் 58 ரன்கள் இருந்த குஜராத் அணி 9.3 ஓவர்களில் 100 ரன்களையும், 12.4 ஓவர்களில் 150 ரன்களையும் எட்டியது. 16.2 ஓவர்களில் 200ரன்களை குஜராத் அணி எட்டியது. சாய் சுதர்சன் 50 பந்துகளில் தனது முதல் ஐபிஎல் சதத்தை நிறைவு செய்தார், கில் 50 பந்துகளில் தனது 2வது சதத்தை நிறைவு செய்தார். இருவரையும் 18வது ஓவர் வரை சிஎஸ்கே பந்தவீச்சாளர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடியவில்லை. தேஷ் பாண்டே வீசிய 18வது ஓவரில் ஆஃப் சைடு விலக்கி வீசப்பட்ட பந்தை விரட்டி அடிக்க முற்பட்டு சாய் சுதர்சன் 104 ரன்களில் ஆட்டமிழந்தார். அதே ஓவரில் கில் 103 ரன்கள் சேர்த்தநிலையில் துபேயிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். டெத் ஓவர்களை மட்டும் ஓரளவுக்கு கட்டுக்கோப்பாக சிஎஸ்கே பந்துவீச்சாளர் வீசியதால், 30 ரன்கள் மட்டும் குஜராத் அணியால் சேர்க்க முடிந்தது. சிஎஸ்கே அணி தோற்றது ஏன்? செய்த தவறுகள் என்ன? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பேற்றதில் இருந்து சுழற்பந்துவீச்சை சரியாகப் பயன்படுத்துவதில்லை என்ற குற்றசாட்டு இருந்து வருவது நேற்றைய ஆட்டத்திலும் ஒரு விமர்சனமாக வர்ணனையாளர்களால் வைக்கப்பட்டது. புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்களில் இருக்கும் ராஜஸ்தான், கொல்கத்தா இரு அணிகளுமே சுழற்பந்துவீச்சை சிறப்பாகப் பயன்படுத்தி அந்த இடத்தை அடைந்தவை. ஆனால் சிஎஸ்கே அணியில் சான்ட்னர், ஜடேஜா, மொயின் அலி, ரவீந்திரா ஆகிய 4 சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. மொயீன் அலி சர்வதேச அளவில் சிறப்பாகப் பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்தியவர், டெஸ்ட் போட்டிகளில் பந்து வீசிய நீண்ட அனுபவமுடையவர். ஆனால், இரு இடதுகை பேட்டர்கள் களத்தை 15 ஓவர்களுக்கு மேலாக ஆக்கிரமித்து விளையாடும்போது, அவர்களை வீழ்த்த ஆஃப் ஸ்பின்னரான மொயீன் அலியை ஏன் பயன்படுத்தவில்லை என்பது குறித்து வர்ணனையாளர்கள் நேற்று கேள்வி எழுப்பினர். ஜடேஜா, சான்ட்னர் ஓவர்களில் ரன்கள் அதிகமாகச் சென்றவுடன் இருவருக்கும் 2 ஓவர்களோடு கெய்க்வாட் நிறுத்தினார், ஆனால் இருவருமே விக்கெட் டேக்கர்கள் என்பதை மறந்துவிட்டு, டேரல் மிட்ஷெலுக்கு ஓவரை வழங்கினார். ஆனால், மிட்ஷெல் 4 ஓவர்கள் வீசி 52 ரன்கள் கொடுத்தார். சிமர்ஜித் சிங் 4 ஓவர்கள் வீசி 60 ரன்களை வாரி வழங்கினார். இவர்கள் இருவர் மட்டுமே 112 ரன்களை வழங்கினர். 'ஃபீல்டிங்கில் கோட்டைவிட்டோம்' பட மூலாதாரம்,SPORTZPICS தோல்வி குறித்து சிஎஸ்கே கேப்டன் கெய்க்வாட் கூறுகையில், “எங்களின் ஃபீல்டிங் எதிர்பார்த்த அளவு சிறப்பாக இல்லை, 10 முதல் 15 ரன்கள் கூடுதலாகக் கொடுத்துவிட்டோம். மற்ற வகையில் சிறப்பாகவே செயல்பட்டோம். அதிலும் மிட்ஷெல், மொயீன் அலி ஆட்டம் அற்புதமாக இருந்தது. எங்களின் அடுத்த ஆட்டம் சென்னையில் நடக்கிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற வலிமையான அணிக்கு எதிரான ஆட்டம் கடினமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்,” எனத் தெரிவித்தார். அதேபோல பவர்ப்ளேவில் ரன்களை சேர்க்கவும் சிஎஸ்கே அணி தவறவிட்டது. பவர்ப்ளே ஓவர்களுக்குள் ரஹானே(1), ரவீந்திரா(1), கெய்க்வாட்(0) என 3 முக்கிய பேட்டர்களை 10 ரன்களுக்குள் இழந்தது. குறிப்பாக கெய்க்வாட் இந்த சீசன் முழுவதும் தொடக்க வீரராகக் களமிறங்கி சிறப்பாக பேட் செய்து வரும்போது, திடீரென ஒன்டவுனில் களமிறங்கியது ஏன் என்ற கேள்வியும் கிரிக்கெட் விமர்சகர்களால் முன்வைக்கப்பட்டது. ரஹானே இந்த சீசன் முழுவதும் ஃபார்மில் இல்லை, இருந்தும் தொடர்ந்து அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவது ஏன் எனத் தெரியவில்லை. டேரல் மிட்ஷெல்-மொயீன் அலி இருவரும் 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததுதான் சிஎஸ்கே அணியின் ஆறுதலான அம்சமாகப் பார்க்கப்படுகிறது. மொயீன் அலி 31 பந்துகளில் அரைசதத்தையும், டேரல் மிட்ஷெல் 27 பந்துகளில் அரைசதத்தையும் அடித்தனர். இருவரின் ஆட்டமும் நம்பிக்கையை ஏற்படுத்திய நிலையில் அதை மோகித் சர்மா உடைத்தார். மோகித் சர்மா பந்துவீச வராத வரைக்கும் சிஎஸ்கே ஆட்டத்தின் மீது ரசிகர்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், கடந்த 3 ஆட்டங்களாக மோசமாகப் பந்துவீசிய மோகித் சர்மா நேற்று சிஎஸ்கே பேட்டர்களை மிரட்டினார். தனது பந்துவீச்சு வேரியேஷனில் அடுத்தடுத்த ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி திணறடித்தார். மிட்ஷெல், மொயீன் அலி, ஷிவம் துபே ஆகிய 3 பேரின் விக்கெட்டையும் தனது ஸ்லோ பால், நக்குல் பால் தந்திரத்தால் மோகித் சர்மா வீழ்த்தினார். மிட்ஷெல் 63 ரன்களிலும், மொயீன்ன் அலி 56 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இருவர் சேர்த்த ஸ்கோர்தான் சிஎஸ்கே அணியில் அதிகபட்சமாகும். https://www.bbc.com/tamil/articles/c6py9l14x8no
-
பிரசவித்த குழந்தையை வைத்தியசாலையில் விட்டுச் சென்ற சிறுமி - யாழில் சம்பவம்
Published By: DIGITAL DESK 3 11 MAY, 2024 | 09:57 AM குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி துன்னாலைப் பகுதியைச் சேர்ந்ததாக தெரிவித்து 15 வயது சிறுமியொருவர் கர்ப்பம் தரித்த நிலையில் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக நேற்று (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குழந்தை நேற்று இரவு பிரசவித்த நிலையில், குழந்தையை அநாதரவாக விட்டுவிட்டு இன்று (11) காலை முதல் தாய், சிறுமி என இருவரும் தலைமறைவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகத்தால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். https://www.virakesari.lk/article/183212