Everything posted by ஏராளன்
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
இம்பாக்ட் பிளேயர் விதி பற்றி ரோஹித் சர்மா கவலை ஏன்? இந்திய கிரிக்கெட்டில் அதன் தாக்கம் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மே 2024, 15:29 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் “இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. அந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டும், 12 வீரர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல." இந்திய கிரிக்கெட் அணி தலைவர் ரோஹித் சர்மா அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இந்த கருத்து, ஐ.பி.எல்லில் கடைபிடிக்கப்படும் இம்பாக்ட் விதிமுறை குறித்த விவாதங்களை கிளப்பியுள்ளது. இம்பாக்ட் விதி ஐபிஎல் போட்டிகளை சுவாரஸ்யமாக்குகிறது என்று ஒரு தரப்பினரும், சர்வதேச போட்டிகளில் இல்லாத விதியால் இந்தியாவில் ஆல்ரவுண்டர்கள் உருவாவதை தடுப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறுகின்றனர். திறமையை நிரூபிக்கும் களமான ஐபிஎல் பாகிஸ்தான், இந்திய, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகளின் முக்கிய வீரர்கள் ஒரே அணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என்று ரசிகர்கள் செய்த கற்பனையை நிஜமாக்கியது ஐபிஎல் டி20 தொடர்தான். இந்த ஐபிஎல் தொடரால் இந்திய அணிக்கு மட்டும் பலன் கிடைக்கவில்லை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்களும் சிறப்பாக ஆடி தங்களின் தேசிய அணியில் இடம் பெற்றனர். புதிய இளம் பேட்டர்கள், இளம் வேகப்பந்து வீச்சாளர்கள், திறமையான சுழற்பந்து வீச்சாளர்கள் அடையாளம் காணப்பட்டு இந்திய அணிக்குக் கிடைத்தனர். கிரிக்கெட் கனவுகளுடன் பயிற்சி எடுத்து, விளையாடி வரும் ஏராளமான இளைஞர்களை அடையாளம் காணும் தளமாகவும், தங்களின் திறமையை நிரூபிக்கும் அரங்காகவும் ஐபிஎல் உருவெடுத்துள்ளது என்றால் மிகையில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஆல்ரவுண்டர்கள் ஓர் அணியில் இருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து அணியில் பலம் நிர்ணயிக்கப்படும். சர்வதேச அளவில் கிரிக்கெட் அணியின் பலம் என்ன? சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணி வலிமையானது என்பதை முடிவு செய்யும் அளவுகோல்களில் ஒன்றாக இருப்பது ‘ஸ்பெஷலிஸ்ட்’ பந்துவீச்சாளர்கள், பேட்டர்கள் மட்டுமல்ல ‘ஆல்ரவுண்டர்கள்’ எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதும் கூர்ந்து கவனிக்கப்படும். ஆல்ரவுண்டர்கள் ஓர் அணியில் இருக்கும் எண்ணிக்கையைப் பொருத்து அணியில் பலம் நிர்ணயிக்கப்படும். அதிகமான ஆல்ரவுண்டர்களை வைத்திருக்கும் அணி உண்மையாகவே வலிமையான அணியாகவே பார்க்கப்படுகிறது. இதில் பேட்டிங் ஆல்ரவுண்டர், பந்துவீச்சு ஆல்ரவுண்டர் என்று இரு வகைகளிலும் வீரர்கள் அணியில் சேர்க்கப்பட்டனர். இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகம் இவையெல்லாம், ஐபிஎல் டி20 தொடரில் “இம்பாக்ட் ப்ளேயர்” விதி வருவதற்கு முன்புதான் இருந்தது. இந்த விதி ஐபிஎல் டி20 தொடரில் 2023ம் ஆண்டு சீசனில் நடைமுறைக்கு வந்தபின், ‘ஆல்ரவுண்டர்கள்’ அணிகளில் குறைந்து, “ இம்பாக்ட் ப்ளேயர்” என்ற கலாசாரத்துக்கு மாறிவிட்டனர். பட மூலாதாரம்,IPL / X படக்குறிப்பு,2023 ஐபிஎல் அணிகள் இம்பாக்ட் ப்ளேயர் விதி என்றால் என்ன? இம்பாக்ட் பிளேயர் விதி என்பது வழக்கமான ஆடும் லெவனில் உள்ள 11 வீரர்கள் தவிர, மேலும் 5 வீரர்களை டாஸ் போடும்போது அறிவிக்க வேண்டும். இந்த 5 வீரர்களில் யாரை வேண்டுமானாலும் தேவைக்கு ஏற்றாற்போல் பந்துவீச்சாளருக்குப் பதிலாக பேட்டரையோ, அல்லது பேட்டருக்கு பதிலாக பந்துவீச்சாளராகவோ இம்பாக்ட் பிளேயராக களமிறக்கிக் கொள்ளலாம். இதற்கு முன் மாற்றுவீரர்(சப்ஸ்டிடியூட்) என்பவர் ஏதேனும் வீரருக்கு காயம் ஏற்பட்டால், உடல்நலக்குறைவு ஏற்பட்டால் பீல்டிங் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுவார். ஆனால், இம்பாக்ட் ப்ளேயர் விதியில் வரும் வீரர் பந்துவீச முடியும், பேட்டிங் செய்யவும் முடியும். கடந்த 2023ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் ப்ளேயர் விதிக்குப்பின், ஐபிஎல் தொடரில் உள்ள அணிகள், ஆல்ரவுண்டர்கள் மீதான தங்கள் கவனத்தைக் குறைத்துவிட்டன. ஐபிஎல்லில் நடைபெறும் வீரர்களுக்கான ஏலத்தில் இதனை கண்கூடாக காண முடிந்தது. இம்பாக்ட் விதி அமலுக்கு வருவதற்கு முன்பு நடந்த ஏலங்களின் போதெல்லாம் மிகப்பெரிய நட்சத்திர வீரர்களுக்கு நிகராக ஆல் ரவுண்டர்களுக்கு கிராக்கி இருந்ததைக் காண முடிந்தது. பென் ஸ்டோக்ஸ், கிளென் மேக்ஸ்வெல், ரவீந்திர ஜடேஜா, ஆந்த்ரே ரஸ்ஸல், ஸ்டாய்னிஸ் போன்ற வீரர்கள் பேட்டிங், பந்துவீச்சு ஆகிய இரண்டிலும் பங்களிக்கக் கூடியவர்கள் என்பதாலேயே அதிக விலை போயினர். சர்வதேச போட்டிகளில் பெரிதாக ஜொலிக்காத கேதார் ஜாதவை ஆல்ரவுண்டர் என்பதாலேயே 2018-ம் ஆண்டு ஏலத்தின் போது 7.8 கோடி ரூபாய் கொடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது ரசிகர்களுக்கு நினைவிருக்கும். ஆனால், கடந்த தொடரில் இம்பாக்ட் பிளேயர் விதி அமலுக்கு வந்த பிறகு, நடப்புத் தொடருக்கு முன்னதாக நடைபெற்ற வீரர்கள் ஏலத்தில் அந்த விதியின் தாக்கத்தை உணர முடிந்தது. ஒரு பேட்ஸ்மேனையோ, பவுலரையோ தேவைக்கு ஏற்ப 12-வது வீரராக களமிறக்க முடியும் என்பதால் அனைத்து அணிகளுமே ஏதாவது ஒரு துறையில் ஸ்பெஷலிஸ்டான வீரர்களையே குறிவைத்தன. இதனால், ஆல்ரவுண்டர்களுக்கான மவுசு குறைந்து போனது. கடந்த ஏலத்தில் பேட்டிங் அல்லது பவுலிங்கில் ஸ்பெஷலிஸ்ட் வீரர்களே அதிக விலைக்கு ஏலம் போயினர். ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் 24.75 கோடி ரூபாய்க்கும். மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் 20.50 கோடி ரூபாய்க்கும் ஏலம் போயினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஐபிஎல் போலவே ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் “பவர் சர்ஜ்” என்ற விதி உள்ளது. ஆஸ்திரேலியாவில் ‘பவர் சர்ஜ்’ ஆஸ்திரேலியாவில் நடந்துவரும் பிக் பாஷ் லீக் டி20 கிரிக்கெட்டில் “பவர் சர்ஜ்”(Power Surge) என்ற முறை உள்ளது. ஐபிஎல் தொடரில் இம்பாக்ட் ப்ளேயர் விதியைப் போல பேட்டிங் செய்யும் அணியின் கரங்களையே இதுவும் வலுப்படுத்துகிறது. பவர் சர்ஜ் என்பது பவர்ப்ளேயில் 6 ஓவர்களில் 4 ஓவர்கள் மட்டும்தான் வீச முடியும். மீதமுள்ள 2 ஓவர்களை 11-வது ஓவருக்குப்பின் பேட்டிங் செய்யும் அணிதான் எப்போது வீசுவது என்பதை முடிவு செய்யும். இந்த விதியால் ஆட்டத்தின் முடிவைத் தீர்மானிப்பதே பேட்டிங் செய்யும் அணியாகத்தான் இருக்கும். இந்த பவர் சர்ஜ் விதி பிக்பாஷ் லீக்கில் எவ்வாறு சர்ச்சையாக, விவாதப்பொருளாக மாறியுள்ளதோ அதேபோன்று இம்பாக்ட் ப்ளேயர் விதியும் மாறியுள்ளது. பட மூலாதாரம்,IPL / INSTAGRAM படக்குறிப்பு, இம்பாக்ட் ப்ளேயர் ஆல்ரவுண்டர்களை பாதிப்பதாக தெரிவிக்கிறார் வோக்ஸ். "ஆல்ரவுண்டர்களின் தேவையை குறைத்த இம்பாக்ட் பிளேயர் விதி" "இம்பாக்ட் ப்ளேயர் விதி ரசிகர்களுக்கு நல்ல பொழுதுபோக்கைக் கொடுத்தாலும், அது போட்டியிலிருந்து ஆல்ரவுண்டர்களை வெளியேற்றிவிடுகிறது" என்று லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியின் ஆலோசகர் ஆடம் வோக்ஸ் தெரிவித்துள்ளார். அவர் ஆங்கில நாளேடுக்கு அளித்த பேட்டியில், “இம்பாக்ட் ப்ளேயர் விதி டி20 ஆட்டத்தின் சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி பொழுதுபோக்காக இருக்கிறது. ஆனால், இது ஆல்ரவுண்டர்களின் முக்கியத்துவத்தை குறைத்து விடுகிறது. அணிகளின் ஸ்கோர் எப்போதும் இல்லாத அளவு உயர்கிறது, அணிகளுக்கு முழுமையான ஸ்பெஷலிஸ்ட் பேட்டர்கள் 7வது அல்லது 8-வது வரிசை வரை கிடைக்கிறது. நான் பவர் சர்ஜின் ரசிகன். இம்பாக்ட் ப்ளேயர் விதியைவிட பவர் சர்ஜை ரசிக்கிறேன். சேஸிங்கின் போது ஆட்டம் கையைவிட்டு சென்றுவிட்டதாக ஒருபோதும் நினைக்க முடியாது” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டி20 உலகக் கோப்பையில் சிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரிங்கு சிங் – துபே சர்ச்சை ரிங்கு சிங்கிற்கு டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டு, ஷிவம் துபேவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதும் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாகி வருகிறது. ஏனென்றால், ஷிவம் துபே சர்வதேச போட்டிகளி்ல் விளையாடிய பெரிதாக அனுபவம் இல்லாதவர். ஐபிஎல் தொடரில் இதுவரை பெரிதாக பந்துவீசவும் இல்லை. குறிப்பாக 2022 ஐபிஎல் சீசனில் 20.4 ஓவர்கள் வீசிய துபே 8 விக்கெட்டுகளையும், 2023 ஐபிஎல் சீசனில் 4 ஓவர்கள் வீசி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளார். 2024 சீசனில் இதுவரை துபே பந்துவீசவில்லை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படி இருக்கும் போது எந்த அடிப்படையில் ஷிவம் துபே ஆல்ரவுண்டர் வரிசையில் இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதேசமயம், ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக விளையாடி தன்னை ஃபினிஷர் என நிரூபித்துள்ளார். ஆனால், அவர் ரிசர்வ் வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாமல் போனதற்கு அவரை இம்பாக்ட் ப்ளேயராகவே கொல்கத்தா அணி களமிறக்கியது முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இந்த சீசனில் ரிங்கு சிங் மொத்தம் 82 பந்துகளே ஆடியுள்ளார். ஆனால், சிஎஸ்கே அணியில் இடம் பெற்ற ஷிவம் துபே 203 பந்துகளை ஆடி, சராசரியாக 23 பந்துகளை சந்தித்துள்ளார். இதில் 26 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகளை அடித்துள்ளார். ஆனால், கொல்கத்தா அணியில் ரிங்கு சிங் 6வது அல்லது 7-வது வீரராக இம்பாக்ட் ப்ளேயராக களமிறக்கப்படுகிறார். சமநிலையற்ற சூழல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பயிற்சியாளரும், முன்னாள் ஆஸ்திரேலிய வீரரான டாம் மூடி எக்ஸ் தளத்தில் இம்பாக்ட் விதி பற்றி பதிவிட்ட கருத்தில் “பந்துவீச்சுக்கும், பேட்டிங்கிற்கும் சமநிலையற்ற சூழலை இம்பாக்ட் ப்ளேயர் விதி உருவாக்கும். ஏலத்தில் மோசமாக வீரர்களைத் தேர்வு செய்ததை மூடி மறைக்கவே இந்த முறை இருக்கிறது” என விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்டபின், சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் இந்திய வீரர்கள் 25 இன்னிங்ஸ்களில் 1263 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 2,133 ரன்களும் சேர்த்துள்ளனர். இம்பாக்ட் ப்ளேயர் விதியால் என்ன நன்மை? ஆனால் இம்பாக்ட் ப்ளேயர் விதி கொண்டுவரப்பட்டதிலிருந்து இந்திய பேட்டர்களின் பேட்டிங் ஸ்ட்ரைக் ரேட் மேம்பட்டுள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இம்பாக்ட் ப்ளேயர் விதி அறிமுகப்படுத்தப்பட்ட பின், சர்வதேச டி20 போட்டிகளில் பவர்ப்ளேயில் இந்திய வீரர்கள் 25 இன்னிங்ஸ்களில் 1,263 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 2,133 ரன்களும் சேர்த்துள்ளனர். டெத் ஓவர்களில் 22 இன்னிங்ஸ்களில் 935 ரன்கள் சேர்த்துள்ளனர் இம்பாக்ட் விதி அமலுக்கு வரும் முன்பு, 2022 டி20 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி வீரர்கள் பவர் ப்ளேயில் 6 இன்னிங்ஸ்களில் 217 ரன்களும், நடுப்பகுதி ஓவர்களில் 6 இன்னிங்ஸ்களில் 477 ரன்களும், டெத் ஓவர்களில் 6 இன்னிங்ஸ்களில் 296 ரன்களும் சேர்த்திருந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதி மீது தனக்கு பெரிய உடன்பாடு இல்லை என்று கூறுகிறார் ரோகித் சர்மா. விதியை எதிர்த்தவரே இம்பாக்ட் பிளேயர் ஆனது எப்படி? “இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறைக்கு நான் பெரிய ரசிகன் அல்ல. அந்த விதி ஆல்ரவுண்டர்கள் வளர்வதில் சிக்கல்களை ஏற்படுத்தும். கிரிக்கெட் என்பது 11 வீரர்கள் விளையாடுவதாக இருக்க வேண்டும், 12 வீரர்கள் விளையாடும் விளையாட்டு அல்ல. இந்த விதிமுறை சமநிலையான அணியைத் தேர்ந்தெடுத்த முக்கியத்துவத்தை அழித்துவிடும்” என்று கூறி இம்பாக்ட் பிளேயர் விதிக்கு எதிரான விவாதத்தை தொடங்கிவைத்த ரோஹித் சர்மாவே இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் சூழலும் உருவானது. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவரை இம்பாக்ட் பிளேயராக மும்பை இந்தியன்ஸ் அணி பயன்படுத்தியது. முதுகில் ஏற்பட்ட பிரச்னையால் ரோஹித் சர்மா இம்பாக்ட் பிளேயராக களமிறங்கும் நிலை ஏற்பட்டதாக ஆட்டத்திற்கு பிறகான செய்தியாளர் சந்திப்பில் சக அணி வீரர் பியூஷ் சாவ்லா தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்தால், தோனியை இன்னும் அதிகமான காலம் கிரிக்கெட் விளையாட வைக்கலாம் என்று கூறுகிறார் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டுவைன் பிராவோ. "தோனி இன்னும் பல ஆண்டுகள் விளையாடலாம்" இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை செயல்பாட்டில் இருக்கும் வரை வயதான வீரர்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜடேஜா, ரஹானே உள்ளிட்ட மூத்த வீரர்கள் அவரவர் அணிகளில் இருந்து விடைபெற விடாமல் தொடர்ந்து இருக்க வைக்கும். இது குறித்து சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் டுவைன் பிராவோ“ இம்பாக்ட் ப்ளேயர் விதிமுறை தொடர்ந்து இருந்தால், தோனியை இன்னும் அதிகமான காலம் கிரிக்கெட் விளையாட வைக்கும்”என்று சமீபத்தில் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஏனென்றால், கோலி, ரோஹித் சர்மா போன்ற மூத்த வீரர்கள் விளையாடுவதைக் காணவே ரசிகர்கள் அரங்கிற்கு வருகிறார்கள். நட்சத்திர வீரர்கள் இல்லாத ஆட்டத்தைக் காண ரசிகர்களும் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. வணிக ரீதியான நோக்கத்திற்காக, மூத்த வீரர்களை தொடர்ந்து தக்க வைக்கும் நோக்கில் இம்பாக்ட் ப்ளேயர் விதியை அணிகள் பயன்படுத்தக் கூடும் என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். https://www.bbc.com/tamil/articles/c3ge94jq41qo
-
வடலூரில் வள்ளலார் சர்வதேச மைய பணிகள் நிறுத்தி வைப்பு - தமிழ்நாடு அரசின் ரூ.100 கோடி திட்டத்திற்கு எதிர்ப்பு ஏன்?
வள்ளலார் சர்வதேச மைய கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டது ஏன்? - பிபிசி கள ஆய்வு கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு நிறுத்தியுள்ளது. ஒருபுறம் எதிர்ப்புக் கிளம்பிய நிலையில், மற்றொருபுறம் தொல்லியல் தடயங்கள் கிடைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு கூறுகிறது. வள்ளலார் சர்வதேச மையத்தை அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இடத்தில் கட்டக் கூடாது என்று அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இந்நிலையில்தான், சர்வதேச மையக் கட்டுமானப் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட குழிகளில் "தொல்லியல் சுவர்கள்" கண்டெடுக்கப்பட்டுள்ளன. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க, அரசு தேர்ந்தெடுத்திருக்கும் இடம், வடலூரில் சத்ய ஞான சபையை ஒட்டியுள்ள சுமார் 70 ஏக்கர் பரந்த நிலபரப்பு. இந்த இடத்தை வள்ளலாரை பின்பற்றுபவர்கள் சிலர் ‘பெருவெளி’ என்றழைக்கின்றனர். வள்ளலார் விரும்பியபடி இந்த பெருவெளி காலியாக இருக்க வேண்டும், எந்த கட்டுமானமும் இருக்கக் கூடாது என்று கூறுகின்றனர். வள்ளலார் யார்? வள்ளலார் எனப்படும் ராமலிங்க அடிகளார், தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆன்மீகவாதி ஆவார். சமய பேதங்கள் இல்லாத பொது நெறியை வகுத்த வள்ளலார், 1865-ஆம் ஆண்டு சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தை நிறுவினார். இந்த அமைப்பு உருவ வழிபாட்டை மறுத்து, ஒளி வழிபாட்டை முன்வைக்கிறது. கோயில் என்ற அமைப்புக்கு பதில் சபையை உருவாக்கினார் வள்ளலார். அவர் எழுதிய திருவருட்பாவில், முதல் ஐந்து திருமுறைகளில் ஆன்மீகம் குறித்து பேசிய வள்ளலார், தனது வாழ்நாளின் கடைசி ஒன்பது ஆண்டுகளில் எழுதியதான ஆறாம் திருமுறையில் சாதியை எதிர்த்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மதச்சீர்திருத்தம் வேண்டிய வள்ளலாரின் கருத்துகளை ஆறாம் திருமுறையில் பார்க்கலாம். 'வேத ஆகமங்கள் என்று வீண் வாதமாடுகின்றீர், வேத ஆகமத்தின் விளைவு அறியீர்' என்று வேத நம்பிக்கைகளை விமர்சித்துள்ளார் அவர். 1927-ஆம் ஆண்டு வெளிவந்த 'குடியரசு' இதழின் முதல் பதிப்பில் வள்ளலாரின் வரிகளை வெளியிட்டார் தந்தை பெரியார். வள்ளலார் சர்வதேச மையம் எதற்காக? கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில், ரூ.100 கோடி மதிப்பில் 3.18 ஏக்கர் பரப்பளவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்தச் சர்வதேச மையத்தில் தியான மண்டபம், மின் நூலகம், வள்ளலாரின் கொள்கைகளை எடுத்துரைக்கும் தகவல் மையம், நிகழ்வரங்கம், முதியோர் இல்லம், வெளிநாட்டு ஆய்வு மாணவர்களுக்கான விடுதி ஆகியவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. “இவை வள்ளலார் கூறிய சமரச வேத தருமசாலையின் கிளைச்சாலைகளாகவே அமைக்கப்பட்டுள்ளன. விவகார சாலை (தகவல் மையம்), உபகார சாலை (முதியோர் இல்லம்), சாத்திர சாலை (படிப்பகம்), விருத்தி சாலை (வளர்ச்சி மையம்) ஆகியவை சர்வதேச மையத்தில் கட்டப்படுகின்றன,” என்றார் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி. வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்தப்பட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பார்வதிபுரம் மக்கள் போராடுவது ஏன்? இந்தச் சர்வதேச மையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கிய போது, அதை எதிர்த்து குழிக்குள் இறங்கி போராடியவர்கள் பார்வதிபுரத்தை சேர்ந்த மக்கள். சத்திய ஞான சபைக்குப் பின்புறம் உள்ள பகுதியே பார்வதிபுரம். வள்ளலார் தரும சாலை அமைப்பதற்காக, 1867-ஆம் ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி இந்த ஊரை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் தங்கள் நிலத்தை தானமாக கொடுத்தனர். தங்கள் முன்னோர்கள் கொடுத்த நிலம் வள்ளலார் விரும்பியது போல் பெருவெளியாக இருக்க வேண்டும், கட்டுமானங்கள் நடைபெறக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். சர்வதேச மையம் அமைப்பது குறித்து தங்களிடம் கருத்து எதுவும் கேட்கவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர் அவர்கள். வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதை தாங்கள் எதிர்க்கவில்லை என்றும், இந்த இடத்தில் கட்ட வேண்டாம் என்று கூறுவதாகத் தெரிவித்தனர். ‘பெருவெளி’ என்பது என்ன? சர்வதேச மையத்தின் கட்டுமானத்தை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் பெருவெளி என்பதை இருவேறு விதமாக பார்க்கிறார்கள். சத்திய ஞான சபையை சுற்றி இருக்கும் 70 ஏக்கர் நிலத்தை பெருவெளி என்று அழைக்கின்றனர் வள்ளலாரை பின்பற்றுபவர்கள் சிலர். ஆனால், பெருவெளி என்பது எந்த குறிப்பிட்ட நிலமும் கிடையாது, அண்ட பெருவெளி தான் வள்ளலார் கூறியது என்கின்றனர் வேறு சிலர். வெளி என்பது இடம் அல்ல, தங்களுக்கான தத்துவம் என்கிறார் வள்ளலார் படிப்பக ஒருங்கிணைப்பாளர் முனைவர் சுப்ரமணிய சிவா. “வள்ளலார் ‘ஓங்கார நிலை நின்றேன்’ என்ற பாடலில் 'நானும் இறைவனும் உறைந்த அனுபவம் தான் தோழி நிறைந்த பெருவெளியே' என்கிறார். அதாவது வள்ளலாரும் இறைவனும் கலந்த அனுபவத்தின் குறியீடு தான் பெருவெளி என்று வள்ளலாரே கூறியுள்ளார். பெருவெளிக்குள் தான் சத்ய ஞான சபை இருக்கிறது," என்றார். "சபையைச் சுற்றிதான் வள்ளலார் கூறும் வெளிகள் உள்ளன. திருக்கோயில்களில் எப்படி பிரகாரம் இருக்கிறதோ அதே போன்று சத்திய ஞான சபையை சுற்றி 30-க்கும் மேற்பட்ட வெளிகள் உள்ளன. அவை அருவுருவமாக உள்ளன. கண்ணுக்கு தெரியாததாலேயே அவை இல்லை என்றாகிவிடாது. அகவல், அருள்விளக்கமாலை, ஆறாம் திருமுறை என பல இடங்களில் வள்ளலார் இந்த பெருவெளியை குறிப்பிட்டுள்ளார்," என்றார். "இங்கு கட்டுமானம் மேற்கொள்வது, திருக்கோயிலில் உள்ள திருச்சுற்றை இடிப்பதற்கு சமமாகும்,” என்கிறார் அவர். படக்குறிப்பு,முனைவர் சுப்ரமணிய சிவா வடலூரில் உள்ள மூத்த சன்மார்கி முருகன், 153 ஆண்டுகளாக பெருவெளியாக இருக்கும் நிலத்தை அப்படியே காக்க வேண்டும் என்கிறார். “மக்கள் அந்தப் பெருவெளியில் நின்று ஒளிவழிபாடு செய்ய வேண்டும் என்பதற்காக தான், பார்வதிபுரம் மக்களிடமிருந்து இந்த இடத்தை வாங்கினார் வள்ளலார். 153 ஆண்டுகளாக இது பெருவெளியாக தான் உள்ளது. இனியும் அப்படி தான் இருக்க வேண்டும்,” என்கிறார். வள்ளலார் குறித்த நூல்களை எழுதியிருக்கும் உமாபதி, “இந்த இடத்தில் கட்டுமானங்கள் நடைபெறக் கூடாது என்று கூறுவதற்கு எந்த அர்த்தமும் இல்லை. வெளி என்பதை எந்த இடத்துக்குள்ளும் சுருக்க முடியாது. வள்ளலார் கூறும் வெளி என்பது அண்டப் பெருவெளி. வள்ளலாரின் கூற்று படி அது கணக்கு வழக்கற்றது,” என்கிறார். இந்தத் தத்துவார்த்த மோதல் ஒரு புறம் இருக்க, வேறு சில காரணங்களுக்காகவும் இந்தச் சர்வதேச மையம் எதிர்க்கப்படுகிறது. தற்போது அமைந்திருக்கும் சத்திய ஞான சபை அனைவருக்கும் தங்கு தடையின்றி வந்து செல்லக் கூடிய இடமாக, ஆதரவற்றோர் இளைப்பாறக் கூடிய இடமாக உள்ளது. வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்பட்டால், அந்த இடம் கட்டுப்படுத்தப்பட்ட இடமாக மாறிவிடும் என்ற அச்சம் அப்பகுதியினருக்கு இருக்கிறது. பார்வதிபுரத்தைச் சேர்ந்த சங்கீதா, “எனக்கு சிறு வயதிலிருந்தே வள்ளலாரைப் பிடிக்கும். எனக்கு ஊர், அருகில் உள்ள குறிஞ்சிபாடி. எனக்கு திருமணமாகி இங்கு வந்த போது, இனி தினம் தினம் வள்ளலாரை காணலாம் என்று மகிழ்ந்தேன். அனைவரும் சமம் என்று வள்ளலார் கூறியதால் அவரைப் பிடிக்கும். இந்த ஞான சபைக்கும் எங்கள் ஊருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உண்டு. எங்கள் ஊருக்கு ஒரு பெண் புதிதாக திருமணம் ஆகி வந்தால் முதலில் சபைக்கு கூட்டி சென்று வணங்கிய பிறகே ஊருக்குள் அழைத்து வரப்படுவார். அதே போன்று திருமணமாகி வெளியூர் சென்றாலும், சபையின் முன் சென்ற பிறகே செல்வார். இங்கு 2,000 வீடுகள் உள்ளன. நாங்கள் ஊருக்குள் வருவது, பள்ளிக்கு செல்வது, வேலைக்கு செல்வது எல்லாம் இந்த வழியாக தான். சர்வதேச மையம் அமைக்கும் போது எழுப்பப்படும் சுவர் எங்கள் பாதையைத் தடுக்கும்,” என்றார். படக்குறிப்பு,சங்கீதா, பார்வதிபுரம் அதே பகுதியில் இருக்கும் சாந்தி, “அந்த நிலம் நாங்கள் கொடுத்த நிலம், எங்கள் நிலம், அது அரசின் புறம்போக்கு நிலமல்ல. எங்கள் இடத்தை நாங்கள் வள்ளலாருக்கு தான் தர விரும்புகிறோம். சாலையில் போகிறவர்கள் ஞான சபையின் கோபுரத்தை பார்த்துவிட்டு வணங்கி செல்கின்றனர். புதிய கட்டுமானத்தால் அந்த கோபுரம் மறைந்து விடும்” என்கிறார். படக்குறிப்பு,சாந்தி, பார்வதிபுரம் குழிக்குள் இறங்கி போராடியதற்காக வழக்கு போடப்பட்டவர்களில் ஒருவரான மணிகண்டன், தங்கள் போராட்டம் திடீரென நடைபெறவில்லை என்கிறார். “ஆட்சியருக்கும், முதல்வருக்கும் மனு வழங்கினோம். எந்த பதிலும் இல்லை. அரசின் இந்த முனைப்பை பார்த்தால், வியாபார நோக்கத்துக்காக சர்வதேச மையத்தை அமைக்கிறார்களா என்ற சந்தேகம் எழுகிறது. வசதி மிகுந்த பல சர்வதேச மையங்களை அரசு உருவாக்க முடியும். இது போன்ற பெருவெளியை அரசு நினைத்தால் உருவாக்க முடியுமா?" என்கிறார். "வள்ளலாருக்கு சொந்தமான 12.8 ஏக்கர் நிலம், நெய்வேலி சாலையில் காலியாக உள்ளது. இந்த பெருவெளியின் சுமார் 40 ஏக்கர் ஆக்கிரமிப்பில் உள்ளன. அதை மீட்டெடுத்து சர்வதேச மையம் கட்டலாமே,” என்கிறார் மணிகண்டன். படக்குறிப்பு,மணிகண்டன், பார்வதிபுரம் குழிக்குள் இருக்கும் தொல்லியல் படிமங்கள் என்ன? சர்வதேச மையம் கட்டுவதற்காக அரசு தோண்டிய குழிகளில் தொல்லியல் படிமங்கள் சில கிடைத்திருப்பதாக தமிழக அரசு கூறுகிறது. தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு நடத்தும் வரை கட்டுமானப் பணிகளை நிறுத்தி வைத்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கூறுகையில் , “அங்கு கிடைத்துள்ள சுவர்களை ஆய்வு செய்ய வேண்டும். எனினும் அந்த இடத்தில் வீடுகள் இருந்ததற்கு சான்றுகள் உள்ளன, எனவே தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. எனினும் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு முடிந்த பிறகே கட்டுமானப் பணிகள் தொடரும்,” என்றார். அரசு கூறுவது என்ன? இந்த சர்ச்சை குறித்து, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, “வள்ளலாரின் கருத்தியலுக்கு எதிராக நாங்கள் எதையும் செய்யவில்லை. வள்ளலார் தனது எழுத்துகளில் 30 இடங்களில் பெருவெளியை குறிப்பிடுகிறார். எந்த இடத்திலும் இங்கு உள்ள 70 ஏக்கர் தான் பெருவெளி என்று வள்ளலார் குறிப்பிடவில்லை. அவர் கூறியது அண்ட பெருவெளி. ‘கணக்கு வழக்கு அற்றது’ பெருவெளி என்கிறார். பார்வதிபுரம் மக்கள் கொடுத்தது 80 காணி நிலம் என்பதற்கு சான்றுகள் எதுவும் கிடையாது. இந்து சமய அறநிலையத்துறை இந்த இடத்தை கையில் எடுக்கும் போது எவ்வளவு நிலம் இருந்ததோ, அது இப்போதும் இருக்கிறது, எதுவும் ஆக்கிரமிப்பு செய்யவில்லை,” என்றார். இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு பிபிசி தமிழிடம் பேசுகையில், “வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பது தொடர்பாக பார்வதிபுரம் மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த பெருவெளியை தற்போது அவர்கள் முழுமையாக நினைத்தபடி எல்லாம் பயன்படுத்தி வருகின்றனர். சர்வதேச மையம் அமைக்கப்பட்டால் தங்களால் அந்த இடத்தை பயன்படுத்த முடியாது என்று நினைக்கின்றனர். சர்வதேச மையம் அமைப்பதால் யாரும் அவர்கள் உள்ளே வர தடை செய்ய போவதில்லை. இந்த மையம் அமைவதால், பொருளாதார, கலாசார ரீதியில் அந்த மக்களுக்கு தான் பலனளிக்கும். அந்த இடத்தில் உள்ள தொல்லியல் படிமங்களை ஆய்வு செய்ய, நீதிமன்ற உத்தரவு படி, தொல்லியல் நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்றார். https://www.bbc.com/tamil/articles/cj7m9z142p0o
-
42 நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் கைதிகள் பரிமாற்றம் - யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக்கொண்டது ஹமாஸ் - இஸ்ரேல் மறுப்பு
காஸாவில் அமைதி திரும்புமா? சண்டையை நிறுத்த ஹமாஸ் தயார் - இஸ்ரேல் என்ன சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 27 நிமிடங்களுக்கு முன்னர் "காஸா போர் நிறுத்தம் குறித்த புதிய ஒப்பந்தத்தின் முன்மொழிவு, இஸ்ரேலின் முக்கிய கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும் பேச்சுவார்த்தை தொடரும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தர்களால் போர் நிறுத்தத்திற்கு சில நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன. அதை ஏற்றுக் கொண்டதாக ஹமாஸ் கூறியுள்ள நிலையில் நெதன்யாகுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. ஹமாஸ் அதிகாரி, "முடிவு இப்போது இஸ்ரேலின் கைகளில் உள்ளது" என்று கூறியுள்ளார். ஹமாஸ் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம் இஸ்ரேலின் அடிப்படை கோரிக்கைகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் ஆனால் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,இஸ்ரேலில் பணயக்கைதிகளை விடுவிக்க கோரும் ஆர்ப்பாட்டம் இதற்கிடையில், இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, தெற்கு காஸாவில் உள்ள ரஃபா கடவுப் பாதைக்கு அருகில் இஸ்ரேலிய படைகள் மற்றும் டாங்கிகள் தென்படுகின்றன. அண்மையில், இஸ்ரேல் ரஃபாவில் தாக்குதல்களை ஆரம்பித்தது. அகதிகளை முகாமை விட்டு வெளியேறுமாறு இஸ்ரேல் ஏற்கனவே கூறியிருந்தது. ரஃபாவில் ஹமாஸை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருவதாக இஸ்ரேலிய ராணுவம் கூறியுள்ளது. இஸ்ரேலின் நடவடிக்கையால் ரஃபாவில் வசிக்கும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பலர், அப்பகுதியை காலி செய்ய, கழுதைகள் மீது சவாரி செய்து வருகின்றனர். கான் யூனிஸ் அருகே உள்ள முகாமில் இருந்து ஒரு லட்சம் பேரை வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. ரஃபாவின் கிழக்குப் பகுதிகளில் இருந்து மக்கள் காலி செய்ய வேண்டும் என்ற உத்தரவை, போரின் "ஆபத்தான திருப்புமுனை" என்று ஹமாஸ் அதிகாரி ஒருவர் விவரித்தார். தற்போது முன்வைக்கப்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தில் இரண்டு விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார கால போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸால் பணயக் கைதிகளாக இருக்கும் இஸ்ரேலியர்களை விடுவிப்பது. ஹமாஸ் சொல்வது என்ன? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை குறித்த எச்சரிக்கையை அடுத்து மக்கள் கிழக்கு ரஃபாவை விட்டு வெளியேறுகின்றனர். திங்கட்கிழமை மாலை, ஹமாஸ் சார்பில் ஒரு அறிக்கை வெளியானது. அதன்படி, `ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, கத்தார் பிரதமரிடமும் எகிப்திய உளவுத்துறை தலைவரிடமும் போர் நிறுத்த உடன்படிக்கை முன்மொழிவுக்கு சம்மதம் தெரிவித்ததாக அறிவித்தார்’ என்று கூறப்பட்டிருந்தது. இந்த முன்மொழிவை பற்றி நன்கு அறிந்த ஒரு மூத்த பாலத்தீன அதிகாரி பிபிசியிடம், ”தனது நிபந்தனைகள் நிறைவேற்றப்பட்டால் ’இஸ்ரேல் விரோத நடவடிக்கைகளை’ முடிவுக்கு கொண்டுவர ஹமாஸ் ஒப்புக்கொண்டது’’ எனக் கூறினார். இந்த அறிக்கை, ஹமாஸ் தனது ஆயுத தாக்குதல்களை முடிவுக்கு கொண்டு வர பரிசீலித்து வருவதை சுட்டிக்காட்டுகிறது, இருப்பினும் இது தொடர்பாக மேற்கொண்டு தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இவை அனைத்தும் இரண்டு கட்ட போர்நிறுத்த ஒப்பந்தங்களின் மூலம் மட்டுமே சாத்தியப்படும், அதன் கீழ் ஒவ்வொரு கட்டமும் 42 நாட்களுக்கு இருக்கும். முதற்கட்டமாக, பிணைக் கைதிகளாக பிடிபட்டுள்ள பெண் இஸ்ரேலிய படையினர் விடுவிக்கப்படுவார்கள். அதன் கீழ், இஸ்ரேல் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 50 பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், அவர்களில் சிலருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டத்தின் போது, இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் இருக்கும். ஆனால் போர் நிறுத்தத்தின் 11 நாட்களுக்குள், இஸ்ரேல் தனது இராணுவ உபகரணங்களை அப்பகுதியின் ராணுவ மையத்திலிருந்து திரும்பப் பெறத் தொடங்கும் மற்றும் சலா அல்-தின் சாலையில் இருந்து வெளியேறும். இது வடக்கு-தெற்கு பாதை மற்றும் கடற்கரை சாலைகளில் நடைபெறும் செயல்முறை. 11 நாட்களுக்குப் பிறகு, இடம்பெயர்ந்து வாழும் பாலத்தீனர்கள், வடக்கே தங்கள் பகுதிகளுக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள். ஒரு அதிகாரியின் கூற்றுப்படி, போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்ட நடவடிக்கையில் காஸாவில் கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்படும். பின்னர் `நீண்ட கால அமைதி’ ஒப்பந்தத்துடன் முடிவடையும். "போர் நிறுத்த ஒப்பந்தத்தில் உடன்பட்டாலும் தடையாக இருந்தாலும் முடிவு இப்போது இஸ்ரேலின் கைகளில் உள்ளது" என்று ஹமாஸின் மூத்த அதிகாரி ஒருவர் AFP செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். இஸ்ரேலின் அறிக்கை பட மூலாதாரம்,GETTY ஹமாஸின் அறிக்கை வெளியானதும், இந்த தகவல் மக்கள் மத்தியில் பரவியது, இதனால் காஸா மக்களிடையே கொண்டாட்ட சூழல் காணப்பட்டது. ஆனால் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு இஸ்ரேலிய அதிகாரி, ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் கூறுகையில், ”ஹமாஸ் ஏற்றுக்கொண்ட ஒப்பந்தம், எகிப்திய முன்மொழிவின் 'மென்மையான பதிப்பு', இது சாத்தியம் ஆகாது. இஸ்ரேல் தரப்பில் ஏற்க முடியாத இலக்குகளைக் கொண்டுள்ளது. எப்படியும் இஸ்ரேல் ஒப்பந்தத்தை நிராகரிக்கும். அவ்வாறு நிராகரித்தால், அதையே இஸ்ரேலின் பிம்பமாக கட்டமைக்க இந்த முயற்சி என்று தோன்றுகிறது" என்று கூறினார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டது, "ஹமாஸின் முன்மொழிவு இஸ்ரேலின் அடிப்படை நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என்றாலும், இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளக்கூடிய நிபந்தனைகள் அடங்கிய ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்தியஸ்தர்கள் குழுவை இஸ்ரேல் அனுப்பும்." என்று அதில் கூறப்பட்டுள்ளது. "அதனுடன், பணயக் கைதிகளை விடுவிக்கவும், ஹமாஸின் ராணுவப் பிரிவை ஒழிக்கவும் ஹமாஸ் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஃபாவில் தனது தாக்குதலை தொடர இஸ்ரேலின் போர் அமைச்சரவை முடிவு செய்துள்ளது. எதிர்காலத்தில், காஸா இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக மாறக்கூடாது என்று இஸ்ரேல் விரும்புகிறது" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கிழக்கு ரஃபாவில் ஹமாஸ் நிலைகளை குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிக்கை வெளிவந்துள்ளது. கத்தார் மற்றும் எகிப்துடன் ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் ஊடகங்களிடம் தெரிவித்தார். அவர் ஹமாஸின் பதிலை மறுபரிசீலனை செய்து, நேச நாடுகளுடன் கலந்துரையாடும் முயற்சியில் இருக்கிறார். ”பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பான ஒப்பந்தம் இஸ்ரேலிய மக்களின் நலன் சார்ந்தது என்று நாங்கள் நம்புகிறோம். பாலத்தீனர்களுக்கு இந்த ஒப்பந்தம் பலன் தரும். இது உடனடி போர் நிறுத்தத்திற்கு வழிவகுக்கும். மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கும் உதவும், எனவே இந்த விஷயத்தில் அனைத்து தரப்பினருடனும் பேச முயற்சிப்போம்.” என்றும் அவர் கூறினார். கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் படை தாக்குதல் நடத்தியதில் இருந்து இந்தப் போர் தொடங்கியது. இந்தத் தாக்குதலில் குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 250 பேர் பிணைக்கைதிகளாக பிடிக்கப்பட்டனர். ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காஸா சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இஸ்ரேலிய இராணுவ தாக்குதலில் இதுவரை 34,700 பாலத்தீனர்கள் இறந்துள்ளனர். கடந்த ஆண்டு நவம்பரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் ஹமாஸ் 105 பணயக் கைதிகளை விடுவித்தது. அப்போது ஒரு வாரத்திற்கு போர் நிறுத்தம் செய்யப்பட்டு இஸ்ரேல் சிறைகளில் இருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். "காஸாவில் 128 பணயக்கைதிகள் எங்கிருக்கிறார்கள் என்பது இன்னும் தெரியவில்லை" என்று இஸ்ரேல் கூறுகிறது. இந்த பணயக்கைதிகளில் 34 பேர் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது. https://www.bbc.com/tamil/articles/cv2rzm3yylgo
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
ரஃபா எல்லை இஸ்ரேலிய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் -மனிதாபிமா உதவிகளை காசாவிற்குள் கொண்டு செல்வது இடைநிறுத்தம் 07 MAY, 2024 | 03:44 PM காசா பகுதியில் உள்ள ரஃபாஎல்லையை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ரஃபா மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிஎன்பதுடன் எகிப்திலிருந்து காசாவிற்கான மனிதாபிமான உதவிகள் வருவதற்கான ஒரேயொரு பாதையாகவும் காணப்படுகின்றது. ரஃபாவின் காசா பக்கத்தினை நாங்கள் தற்போது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துள்ளோம் எங்களது சிறப்பு படைகள் இந்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபட்டுள்ளன என இஸ்ரேலின் இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இதேவேளை காசா எல்லை அதிகாரசபைக்கான பேச்சாளர் இஸ்ரேலிய டாங்கிகள் காணப்படுவதை உறுதிசெய்துள்ளார். அந்த பகுதி ஊடாக மனிதாபிமான உதவிகள் பயணிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/182896
-
யாழ். வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து கும்பல் ஒன்று அடாவடி
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 12:57 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து குழப்பத்தில் ஈடுபட்ட கும்பலை கைது செய்வதற்கு யாழ்ப்பாண பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இளைஞனின் உயிரிழப்பை அடுத்து , அவரின் நண்பர்கள் என தம்மை அடையாளப்படுத்திக்கொண்ட சுமார் 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்து அடாவடியில் ஈடுபட்டதுடன், மருத்துவர்கள், தாதியர்கள், நோயாளிகளுடன் முரண்பட்டனர். அது தொடர்பில் மருத்துவ சேவைக்கு இடையூறு ஏற்படுத்தினார் என வைத்தியசாலை நிர்வாகத்தினரால், யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்துள்ள பொலிஸார் அடாவடியில் ஈடுபட்டவர்களை இனம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/182883
-
யாழில் வெப்பத்தால் 5 பேர் வரை உயிரிழப்பு - வைத்திய நிபுணர்கள்
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 12:49 PM அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த வாரத்தில் மாத்திரம் நான்கு முதல் ஐந்து வரையான இறப்புக்கள் பதிவாகியுள்ளதென வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக உடலின் வெப்பநிலை அதிகரித்து வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புஉள்ளது. வெப்ப பக்கவாதம் மூலம் எமது விடுதிகளில் அனுமதிக்கப்பட்டிருந்த பல நோயாளிகளை இழந்து இருக்கின்றோம். இனிவரும் காலங்களிலும் வெப்பநிலை அதிகரித்துச் செல்லக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே, வெப்பநிலை அதிகரிப்பை தடுக்கும் நோக்கில் அதிகளவிலான மரங்களை நடவேண்டும். பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனைகளின் அதிகரிப்பு மற்றும் அதிகளவிலான மரங்கள் அழிப்பு என்பனவற்றின் மூலம் தான் தற்பொழுது வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. எனவே மக்கள் அனைவரும் வீட்டுக்குவீடு மரங்களை நட்டு சுற்றாடலை குளிர்மையாக வைத்திருக்கவேண்டும். அதிக நீர் மற்றும் குளிர்மையான பானங்களை அருந்த வேண்டும். கடந்த இரு வாரங்களில் வெப்ப பக்கவாதம் காரணமாக எமது நோயாளர் விடுதிகளில் அனுமதிப்பட்டிருந்த நான்கு தொடக்கம் ஐந்து நோயாளிகளை இழந்து இருக்கின்றோம். இந்த நோய் வராமல் இருப்பதற்கு அதிக நீரை அருந்த வேண்டும். வீட்டில் உள்ள வயோதிபர்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதிய நீர் ஆகாரங்களை வழங்கவேண்டும். தர்பூசணி, வெள்ளரிப்பழம், தோடம்பம் போன்ற பழங்களை கூடுதலாக உண்ணக் கொடுக்க வேண்டும். வயது போனவர்களுக்கு தண்ணீர் தாகம் எடுப்பது தெரியாது. எனவே நீர் ஆகாரங்களை தொடர்ச்சியாக வழங்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உடலின் வெப்பத்தை குறைத்து வெப்ப பக்கவாதம் வாராமல் தடுக்கமுடியும் என்றார். https://www.virakesari.lk/article/182880
-
மீள் மின் இணைப்பை 90 நாட்களுக்குள் பெற்றுக்கொள்ளாவிடின் மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும் - மின்சாரத்துறை அமைச்சர்
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 01:33 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் மீள் இணைப்பை பெற்றுக் கொள்ளாத மின்பாவனையாளர்களின் மின்கணக்கு இரத்து செய்யப்பட்டு மின் விநியோகம் முழுமையாக துண்டிக்கப்படும். மீள் மின் இணைப்புக்காக அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமர்வின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினரான கெவிந்து குமாரதுங்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, 2022 மே மாதம் 14 ஆம் திகதிக்கு முன்னரான காலப்பகுதியில் 70 இலட்சம் மின்பாவனையாளர்கள் மின்விநியோக கட்டமைப்பில் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.பல மணித்தியாலங்கள் மின்விநியோக துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டன.ஆட்சிமாற்றத்தை தொடர்ந்து மின்கட்டமைப்பில் கொள்கை ரீதியில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டது. மின்விநியோக கட்டமைப்பின் கொள்கை திருத்தம் செய்யப்பட்டதால் தற்போது பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மின்கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. கட்டணத்தை தொடர்ந்து குறைக்க முடியுமா என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பில் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம். சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் விநியோகிக்கப்பட்டு நிலுவை கட்டணம் செலுத்தாத சுமார் 10 இலட்சம் மின்பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு 90 நாட்களுக்குள் நிலுவை கட்டணத்தை செலுத்தாவிடின் மின்விநியோகம் முழுமையாக துண்டிக்கப்பட்டு, மின்பாவனைக்கான கணக்கும் இரத்து செய்யப்படும். மின்கட்டணத்தை செலுத்தாத தரப்பினரை இலக்கு வைத்து அவர்களுக்காக விநியோகத்தை துண்டிக்குமாறு எவருக்கும் பொறுப்பு வழங்கவில்லை. கட்டணம் செலுத்தாவிடின் மின்விநியோகம் துண்டிக்கப்படும் இது நான் அமைச்சரான பின்னர் எடுத்த தீர்மானமல்ல,காலம் காலமாகவே அமுல்படுத்தப்படுகிறது. சிவப்பு எச்சரிக்கை கட்டண படிவம் வழங்கப்பட்டு,கட்டணம் செலுத்துவதற்கு காலவகாசம் வழங்கப்படும். அந்த காலப்பகுதிக்குள் கட்டணத்தை செலுத்தாவிடின் தான் மின் விநியோகம் துண்டிக்கப்படும். மின்விநியோகம் துண்டிக்கப்பட்டு, மீள இணைப்பு பெற்றுக்கொள்ளப்படும் போது அறவிடப்படும் கட்டணம் தற்போது குறைக்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/182884
-
கனடா: ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது - யார் அவர்கள்?
மூன்று இந்தியர்கள் கைதால் கனடா - இந்தியா உறவில் மீண்டும் பதற்றம் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES 6 மே 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. இந்த கைது குறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, "கனடா வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பைக் கொண்ட நாடு," என்று கூறியுள்ளார். மேலும் அவர், கனடா தனது குடிமக்களின் பாதுகாப்பிற்கு உறுதியளிக்கும் `சட்டப்பூர்வமான நாடு` என்று அவர் கூறினார். 2023-ஆம் ஆண்டு, ஜூன் 18-ஆம் தேதி அன்று, கனடிய குடிமகன் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் இருக்கும் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் உள்ள ஒரு குருத்வாரா முன் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில், கனடாவின் எட்மண்டன் நகரில் வசிக்கும் இந்தியக் குடிமக்களான 22 வயது கரண் ப்ரார், 22 வயது கமல்ப்ரீத் சிங் மற்றும் 28 வயது கரன்ப்ரீத் சிங் ஆகியோர் முதல் நிலை கொலை மற்றும் கொலை செய்ய சதி செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்யப்பட்டனர். சனிக்கிழமையன்று (மே 4) கனடாவின் டொரோண்டோ நகரில் இந்தக் கைது நடவடிக்கை பற்றிப் பேசிய கனடா பிரதமர் ட்ரூடோ, “கனடா சட்டத்தை மதிக்கும் ஒரு நாடு என்பதால் இது முக்கியமானது. எங்களிடம் வலுவான மற்றும் சுதந்திரமான நீதி அமைப்பு உள்ளது. எங்கள் குடிமக்கள் அனைவரின் பாதுகாப்பிற்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்," என்றார். “ஆர்.சி.எம்.பி (கனடா நாட்டின் காவல்துறை) கூறியது போல், விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை இந்த மூன்று பேரை கைது செய்வதோடு மட்டும் நின்றுவிடப் போவதில்லை," என்றார். நிஜ்ஜார் கொலைக்குப் பிறகு, கனடாவில் உள்ள சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் ட்ரூடோ கூறினார். "கனடாவில் உள்ள அனைவருக்கும் பாரபட்சம் மற்றும் அச்சமின்றி சுதந்திரமாக வாழ உரிமை உள்ளது," என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன? இந்தக் கைது நடவடிக்கைகள் குறித்து சனிக்கிழமை (மே 4) பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு கனடா விசா வழங்க்குவதாகக் குற்றம் சாட்டினார். இதுகுறித்துப் பேசிய ஜெய்சங்கர், "இந்தியாவின் பஞ்சாபில் திட்டமிடப்பட்டக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள்," என்று கூறினார். ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது அவர் இதைத் தெரிவித்தார். மேலும் பேசிய ஜெய்சங்கர், தான் இந்தச் செய்தியைப் பார்த்ததாகச் சொன்னார். "போலீஸ் விசாரணையில் யாரையாவது கைது செய்திருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில், திட்டமிட்ட குற்றங்களில் தொடர்புடைய பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் கனடாவில் வரவேற்கப்படுகிறார்கள். அவர்களுக்கு கனடா விசா வழங்குகிறது," என்றார். “இந்தியாவில் தேடப்படுபவர்களுக்கு விசா கொடுக்கிறீர்கள். பலர் பொய்யான ஆவணங்களுடன் வருகிறார்கள். ஆனாலும் நீங்கள் அவர்களை தங்க அனுமதிக்கிறீர்கள். அரசியல் ஆதாயத்துக்காக அவர்களை இருக்க விடுகிறீர்கள். இதனால் உங்களுக்கும் பிரச்னைகள் இருக்கும். சில சமயங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் சிந்திக்க வேண்டும்," என்றார். கனடாவுடன் இந்தியாவுக்கு பிரச்னை இருப்பதை வெளியுறவு அமைச்சர் வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். ஜெய்சங்கர் கூறுகையில், “அமெரிக்காவுடன் இந்தியாவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால் கனடாவுடன் பிரச்னை உள்ளது," என்றார். "கனடாவில் ஆட்சியில் இருக்கும் கட்சியும் எதிர்க்கட்சியும் பேச்சு சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதம் மற்றும் வன்முறையை ஆதரிப்பவர்களுக்கு அங்கீகாரம் அளித்துள்ளன," என்றார் ஜெய்சங்கர். கடந்த ஆண்டு செப்டம்பரில், நிஜ்ஜார் கொலையில் இந்திய அரசின் ஏஜெண்டுகளுக்கு தொடர்பு இருப்பதற்குத் தன்னிடம் வலுவான ஆதாரம் இருப்பதாக ஜஸ்டின் ட்ரூடோ கூறியிருந்தார். அப்போதிருந்து, இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருக்கின்றன. அப்போது கனடாவின் குற்றச்சாட்டுகளை 'அடிப்படையற்றது மற்றும் அபத்தமானது' என்று இந்தியா விவரித்திருந்தது. படக்குறிப்பு,கனடாவில் கைது செய்யப்பட்டிருக்கும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்ட மூன்று பேர் யார்? காலிஸ்தான் ஆதரவாளர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் மூன்று இந்தியர்களை கனடா போலீசார் வெள்ளிக்கிழமை (மே 3) கைது செய்தனர். கனடாவின் ஒருங்கிணைந்த படுகொலை விசாரணைக் குழு இவர்களைக் கைது செய்தது. அவர்கள் இந்தியக் குடிமக்களான கரண் ப்ரார், கரன்ப்ரீத் சிங் மற்றும் கமல்பிரீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கரண் ப்ரார், 22, பஞ்சாபின் ஃபரித்கோட்டில் வசிப்பவர், கரன்ப்ரீத் பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்தவர், மூன்றாவது நபரான கமல்ப்ரீத் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். கரண் கல்விக்கான அனுமதியில் (ஸ்டடி பெர்மிட்) கனடா சென்றவர். பஞ்சாப் போலீஸ் வட்டாரங்களின்படி, கரண் ப்ரார் ஃபரித்கோட் மாவட்டத்தின் கோட்காபுரா நகரை சேர்ந்தவர். பஞ்சாப் போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், "கரண் ப்ரார் தனது பள்ளிப் படிப்பை கோட்காபுராவில் முடித்தார், பின்னர் அவர் 2020-இல் கல்வி அனுமதியில் கனடா சென்றார்," என்றனர். கரண் ப்ராரின் குடும்பத்துக்கு நிலபுலன்கள் இருப்பதாக காவல்துறை கூறுகிறது. அக்கம்பக்கத்தினர் மற்றும் அருகிலுள்ளவர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின்படி, கரணின் தாத்தா பல்பீர் சிங் ப்ரார் ஒரு உள்ளூர் தொழிலதிபர். கரண் தனது பெற்றோருக்கு ஒரே மகன். அவரது தாயார் ரமன் ப்ரார் வேலை நிமித்தமாக சிங்கப்பூரில் வசிப்பதாக அவர்கள் தெரிவித்தனர். கரண் ப்ராரின் தந்தை மன்தீப் பிரார் கடந்த மாதம் 18-ஆம் தேதி காலமானார். இதன் காரணமாக கரணின் தாயும் இந்தியா வந்தார். குர்தாஸ்பூரைச் சேர்ந்த கரண் ப்ரீத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரது தந்தை துபாயில் லாரி ஓட்டுநராக வேலை செய்கிறார். கரன்ப்ரீத் சிங்கின் மாமாவும் கிராம சர்பஞ்சின் மகனுமான ரஞ்சித் சிங் ராணா, "கரண் ப்ரீத் ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்," என்றார். ஆரம்பக் கல்வியை முடித்த கரண்ப்ரீத் 2016-இல் துபாய்க்குச் சென்றதாகவும், அங்கு தனது தந்தையுடன் சுமார் நான்கு ஆண்டுகள் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்ததாகவும் அவர் கூறினார். கரண்ப்ரீத் கனடா சென்றது குறித்து ரஞ்சித் சிங் கூறுகையில், "கரண்ப்ரீத் பணி அனுமதிச் சீட்டில் கனடா சென்றுள்ளார்," என்றார். கரண்ப்ரீத் கடந்த மூன்று ஆண்டுகளாக கனடாவில் இருப்பதாகவும், அங்கு லாரி ஓட்டுவதாகவும் கூறினார். மூன்றாவது நபரான கமல்ப்ரீத் சிங் பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தின் நாகோதரில் இருக்கும் கலான் கிராமத்தில் வசிப்பவர். கமல்பிரீத் சிங் நகோதரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்தார். 2019-ஆம் ஆண்டில் 12-ஆம் வகுப்பை முடித்தார். அதன் பிறகு கல்வி விசாவில் கனடா சென்றார். கமல்ப்ரீத்தின் தந்தை சத்னம் சிங் வருமானம் ஈட்டுவதாலும், கிராமத்தில் அவர்களுக்கு நிலம் உள்ளதாலும் அவரது குடும்பம் பொருளாதார ரீதியாக வலுவாக உள்ளது என்று தெரிவிக்கப்படுகிறது. கமல்ப்ரீத்தின் சகோதரி கனடாவில் வசிக்கிறார் என்று பஞ்சாப் காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார். 2022-இல் அவரைச் சந்திக்க அவரது தாயும் கனடா சென்றார். படக்குறிப்பு,சமீப காலமாக இந்தியா-கனடா உறவுகளில் சிக்கல் ஏற்பட்டுள்ளது கனடா-இந்தியா வார்த்தைப் போர் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி கனடாவின் டொராண்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த `கல்சா தின` நிகழ்ச்சியில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவில் வசிக்கும் சீக்கிய சமூக மக்களிடையே உரையாற்றினார். ஊடக அறிக்கைகளின்படி, இந்த நிகழ்வில் ட்ரூடோ, கனடா சீக்கிய சமூகத்தின் மத உரிமையை `பாகுபாடு` இன்றி ஆதரிக்கும் என்று கூறியிருந்தார். இந்த நிகழ்வில் காலிஸ்தானுக்கு ஆதரவாகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த நிகழ்வில் ஊடகங்களிடம் பேசிய ட்ரூடோ, காலிஸ்தான் ஆதரவு போராட்டங்களை சுட்டிக்காட்டி, “எங்கள் வேலை அரசியல் போராட்டங்களை நிறுத்துவது அல்ல," என்றார். இதற்கு அடுத்த நாள், இந்திய வெளியுறவு அமைச்சகம், இந்தியாவுக்கான கனடா துணை உயர் ஸ்தானிகரை வரவழைத்து தனது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது. இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கடந்த வியாழன் அன்று (மே 2), "கனடாவில் பிரிவினைவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கு எப்படி அரசியல் இடம் கொடுக்கப்படுகிறது என்பது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது கனடா-இந்தியா உறவுகளை மட்டும் பாதிக்காது. கனடா தனது சொந்த குடிமக்களுக்கு வன்முறை மற்றும் குற்றச் சூழ்நிலையை உருவாக்குகிறது," என்றார். பட மூலாதாரம்,SIKH PA படக்குறிப்பு,கடந்த ஆண்டு, காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துக்களை என்.ஐ.ஏ பறிமுதல் செய்தது என்.ஐ.ஏ வெளியிட்ட காலிஸ்தான் ஆதரவாளர்களின் பட்டியல் கடந்த ஆண்டு, தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) காலிஸ்தான் ஆதரவு தலைவர்களின் பெயர்ப் பட்டியலை வெளியிட்டது. அதில் உள்ளவர்களின் சொத்துகளை அந்த நிறுவனம் பறிமுதல் செய்ய முடிவு செய்தது. கடந்த ஆண்டு, காலிஸ்தான் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுவின் சொத்துகளை என்.ஐ.ஏ பறிமுதல் செய்தது. இந்தப் பட்டியலில், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கும் காலிஸ்தான் ஆதரவு தலைவர்கள் பலரின் பெயர்கள் இருந்தன. அவர்களை என்.ஐ.ஏ 'பயங்கரவாதிகள்' என்று குறிப்பிட்டிருந்தது. பரம்ஜித் சிங் பம்மா - இங்கிலாந்து வாத்வா சிங் (பாபர் சாச்சா) - பாகிஸ்தான் குல்வந்த் சிங் முத்ரா - இங்கிலாந்து ஜே.எஸ்.தலிவால் - அமெரிக்கா சுக்பால் சிங் - இங்கிலாந்து ஹர்பிரீத் சிங் (ராணா சிங்) - அமெரிக்கா சரப்ஜித் சிங் பெனூர் - இங்கிலாந்து குல்வந்த் சிங் (காந்தா) - இங்கிலாந்து ஹர்ஜப் சிங் (ஜப்பி சிங்) - அமெரிக்கா ரஞ்சித் சிங் நீத்தா - பாகிஸ்தான் குர்மீத் சிங் (பக்கா பாபா) குர்பிரீத் சிங் (ரிபெல்) - இங்கிலாந்து ஜஸ்மீத் சிங் ஹக்கிம்கஜாதா - துபாயில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர் குர்ஜந்த் சிங் தில்லோங் - ஆஸ்திரேலியா லக்பீர் சிங் ரோட் - கனடா அமர்தீப் சிங் பூரேவால் - அமெரிக்கா ஜதீந்தர் சிங் க்ரேவால் - கனடா துபிந்தர் சிங் - இங்கிலாந்து ஹிம்மத் சிங் - அமெரிக்கா https://www.bbc.com/tamil/articles/c04307g9kd0o
-
இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்ய அமைச்சரவை அங்கீகாரம் !
07 MAY, 2024 | 10:16 AM சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room) மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room) குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Data Centre) ஒளிப்பதிவு அறை (Studio Room) மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/182858 இலங்கை கல்வி முறை மாற்றத்திற்கு சீனா அரசு உடன்பாடு! இலங்கையின் பொதுவான கல்வி முறையை டிஜிட்டல் நிலையுருமாற்றம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவுக்கமைய உதவிகளை வழங்குவதற்கு சீனா அரசு உடன்பாடு தெரிவித்துள்ளது. குறித்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய சாத்தியவளக் கற்கை தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் மிடுக்கான பார்த்தறியும் திரையுடன் கூடிய வகுப்பறை (Delivering Class Room), மிடுக்கான ஏற்புப்பரப்பு திரையுடன் கூடிய வகுப்பறை (Receiving Class Room), குறித்த பணிகளை நெறிப்படுத்துவதற்காக கல்வி அமைச்சின் கீழ் தரவு மையம் (Studio Room), ஒளிப்பதிவு அறை (Studio Room), மாநாட்டு அறை (Conference Room) போன்றவற்றை வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. கலப்புக் கற்றல் முறைமையை முறைசார்ந்த வகையில் மேற்கொள்ளல், வளங்களைப் பகிர்ந்து கொள்ளல், விசேட திறன்களைக் கொண்டுள்ள ஆசிரியர்களின் அறிவை தேவையான சந்தர்ப்பங்களில் மாணவர்களுக்கு வழங்கல், ஆசிரியர் பற்றாக்குறை காணப்படும் வேளைகளில் ஏற்படுகின்ற பிரச்சினைகளைத் தவிர்த்தல் மற்றும் மற்றும் உத்தேசக் கல்வி மறுசீரமைப்புக்களுக்காக வசதிகளை வழங்கல் போன்ற பணிகளை வினைத்திறனாகவும் பயனுறு வகையிலும் மேற்கொள்வதற்காக குறித்த உபகரணங்கள் மூலம் ஒத்துழைப்புக்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அதற்கமைய, குறித்த சாத்தியவளக் கற்கையின் அறிக்கையின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://thinakkural.lk/article/301054
-
மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை அதானி நிறுவனத்திற்கு வழங்க அமைச்சரவை அங்கீகாரம்
07 MAY, 2024 | 10:36 AM 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு ( M/s Adani Green Energy SL Limited ) வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இன்று செவ்வாய்க்கிழமை (7) இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகியது. இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் ( M/s Adani Green Energy Limited ) மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி (உண்மையான வெளிநாட்டு செலாவணி சரிவிகிதத்திற்கமைய இலங்கை ரூபாவில் செலுத்துவதற்கு) இறுதிக் கட்டணமாக அங்கீகரிப்பதற்கும் 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை M/s Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/182862
-
இன்றைய வானிலை
நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும்! நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நாளை (08) முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் நாளை பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் நாளை பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறித்த பகுதிகளில் 50 மில்லி மீற்றருக்கும் அதிகளவிலான மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மத்திய, சபரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய அபாயங்களைக் குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. https://thinakkural.lk/article/301025
-
மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி
Published By: DIGITAL DESK 3 07 MAY, 2024 | 09:22 AM மன்னார் பொது வைத்தியசாலைக்கு 600 மில்லியன் ரூபா நிதியை நன்கொடையாக வழங்க இந்திய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி கிடைத்துள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான கட்டிட நிர்மாண பணிகளுக்கும், மருத்துவ உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்குமாக இந்த 600 மில்லியன் ரூபா நன்கொடை பயன்படுத்தப்படவுள்ளது. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸின் நெறிப்படுத்தலின் கீழ், மாகாண சபையால் திட்ட முன்மொழிவு தயாரிக்கப்பட்டு சுகாதார அமைச்சின் ஊடாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திடம் விண்ணப்பம் சமர்பிக்கப்பட்டது. இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட இந்திய அரசாங்கம் 600 மில்லியன் ரூபா நன்கொடையை வழங்குவதற்கான அனுமதியை அளித்துள்ளது. மன்னார் பொது வைத்தியசாலையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு இன்மையால் மக்கள் பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் முகமாக வடக்கு மாகாண ஆளுநரினால் இந்திய அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/182852
-
42 நாள் யுத்த நிறுத்தம் பணயக்கைதிகள் கைதிகள் பரிமாற்றம் - யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனையை ஏற்றுக்கொண்டது ஹமாஸ் - இஸ்ரேல் மறுப்பு
Published By: RAJEEBAN 07 MAY, 2024 | 11:04 AM ஹமாஸ் அமைப்பு மூன்று கட்ட யுத்த நிறுத்தம் தொடர்பான யோசனைகளையும் கைதிகள் பணயக்கைதிகள் பரிமாற்றம் தொடர்பான யோசனைகளையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள அதேவேளை இஸ்ரேல் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளது. கத்தார் எகிப்துடன் இணைந்து மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்ட அமெரிக்கா ஹமாஸ் அமைப்பின் யோசனைகளை ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் உள்ள நேசநாடுகளுடன் இது குறித்து ஆராயவுள்ளதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என்ற யோசனையை ஏற்றுக்கொண்டுள்ள ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் தனது சிறைகளில் உள்ள பாலஸ்தீனியர்களை விடுதலை செய்தால் 33 இஸ்ரேலிய பணயக்கைதிகளை விடுதலை செய்ய தயார் எனவும் தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக இஸ்ரேல் காசாவிலிருந்து அரைவாசிக்கும் மேற்பட்ட படையினரை விலக்கிக்கொள்ளவேண்டும் தென்காசாவிலிருந்து பாலஸ்தீனியர்கள் வடக்கிற்கு செல்ல அனுமதிக்கவேண்டும் என்ற யோசனையையும் ஹமாஸ் அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 42 நாட்கள் யுத்த நிறுத்தத்தின் பின்னர் காசவில் நீடிக்ககூடிய அமைதியை உருவாக்குவதற்கான உடன்படிக்கை கைச்சாத்தாகும். மேலும் காசாவிலிருந்து இஸ்ரேலிய படையினர் முற்றாக விலக்கிக்கொள்ளப்படுவார்கள் - இஸ்ரேல் பாலஸ்தீன கைதிகளை விடுதலை செய்தால் ஹமாஸ் தன்னிடம் பணயக்கைதிகயாக உள்ள இஸ்ரேலிய படையினரை விடுதலை செய்யும். https://www.virakesari.lk/article/182867
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
மும்பையின் ஆறுதல் வெற்றியால் சென்னைக்குக் கிடைத்த நன்மை பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஐபிஎல் டி20 தொடரில் ப்ளே ஆஃப் சுற்று நெருங்க, நெருங்க ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் புள்ளிப்பட்டியலில் அடுத்தடுத்து மாற்றங்கள் நடந்து வருகின்றன. அப்படியொரு போட்டிதான் திங்கள்கிழமை நடந்திருக்கிறது. மும்பையின் ஆறுதல் வெற்றி, சன்ரைசர்ஸ் அணிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 55-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி. முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES மும்பை அணிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இருக்கிறதா? இந்த வெற்றி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஆறுதலாக மட்டுமே இருக்கும். ஆனால், இந்த வெற்றி சன் ரைசர்ஸ் ப்ளே ஆஃப் சுற்று செல்வதில் பெரிய பிரேக் போடும் விதத்தில் அமைந்துவிட்டது. அதே நேரத்தில் இந்த வெற்றி சிஎஸ்கே உள்ளிட்ட சில அணிகளுக்கு பிளேஆப் கனவை தக்கவைத்துக் கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. மும்பை தோற்றிருந்தால், சிஎஸ்கே புள்ளிப் பட்டியலில் கீழே இறங்கியிருப்பதுடன், பிளேஆப் வாய்ப்பும் கூடுதல் சவாலாக மாறியிருக்கும். மும்பை அணி இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் 9-ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது, 12 போட்டிகளில் 4-ஆவது வெற்றியைப் பதிவுசெய்தாலும் நிகர ரன்ரேட் இன்னும் மைனஸைக் கடக்காமல் 0.212 என்ற அளவில்தான் இருக்கிறது. அடுத்த இரு போட்டிகளிலும் மும்பை அணி பெரிய அளவில் வென்றால்கூட ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்வது பெரிய சந்தேகம்தான். இருப்பினும் மும்பையின் வெற்றிகள் பல அணிகளின் முன்னேற்றத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணிக்கு என்ன சிக்கல்? இந்த தோல்வி சன்ரைசர்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்று செல்வதற்கான பாதையை கடினமாக்கியுள்ளது. முதல் இரு இடங்களை கொல்கத்தா அணி பிடிக்க தேவையான வசதிகளை உருவாக்கிவிட்டது. சன்ரைசர்ஸ் அணி அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் கட்டாய வெற்றி பெற வேண்டிய நிலையும், நிகர ரன்ரட்டை உயர்த் வேண்டிய சூழலிலும் இருக்கிறது. ஏனென்றால் இந்த தோல்வியால் சன்ரைசர்ஸ் அணியின் நிகர ரன்ரேட் மைனசில் சென்று 0.065 ஆகக் குறைந்துவிட்டது. சன்ரைசர்ஸ் அணி 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கிறது.இந்த 4வது இடத்தைத் தக்கவைக்க, சன்ரைசர்ஸ் அணிக்கு அடுத்தடுத்து வெற்றிகள் அவசியம். அதேசமயம் லக்னெள அணி இன்னும் ஒரு போட்டியில் தோற்றால்கூட சன்ரைசர்ஸ் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பு பிரகாசமடையும். புள்ளிப்பட்டியலில் திடீர் மாற்றங்கள் இன்று டெல்லியில் நடக்கும் ராஜஸ்தான், டெல்லி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் முடிவு புள்ளிப்பட்டியலில் இன்னும் திடீர் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும். ராஜஸ்தான் அணி பிரமாண்ட வெற்றி பெற்றால் 18 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடிக்கும். கொல்கத்தா 2-ஆவது இடம் பிடிக்கும். ஒருவேளை சாதாரண வெற்றியாக அமைந்தாலும், 18 புள்ளிகளுடன் முதலிடம் செல்லும். அதேசமயம், டெல்லி அணி வெற்றி பெற்றால், 12 புள்ளிகளுடன், சிஎஸ்கே, லக்னெள, சன்ரைசர்ஸ் அணிகளுடன் ரேஸில் இணைந்துவிடும். மும்பை இந்தியன்ஸ் அணியின் நேற்றைய சேஸிங்கில் வெற்றிக்கு சூர்யகுமார் மட்டுமே முக்கியக் காரணமாக அமைந்தார். 51 பந்துகளில் சதம் அடித்த சூர்யகுமார் யாதவ் 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்று ஆட்டநாயகன் விருது வென்றார். ஸ்கைக்கு துணையாக ஆடிய பேட்டர் திலக் வர்மா 37 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 4வது விக்கெட்டுக்கு 79 பந்துகளில் 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES டெஸ்ட் போட்டியா அல்லது டி20 போட்டியா? கடந்த முறை இதே வான்கடே மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் ரன் திருவிழாவாவை சன்ரைசர்ஸ் அணி நடத்தி, பல புதிய சாதனைகளைப் படைத்தது. ஆனால் இந்த முறை சன்ரைசர்ஸ் அணியை தொடக்கத்தில் இருந்தே கட்டுப்படுத்தி, 173 ரன்களில் மும்பை அணி சுருட்டியது. ஆனால் 173 ரன்களையும் டிபெண்ட் செய்ய வலுவான பந்துவீச்சு வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணியும் முயன்றது. பேட்டர்களுக்கு சொர்க்கபுரியான வான்ஹடே மைதானத்தில் 173 ரன்களைக் கட்டுப்படுத்துவது எளிதான இலக்கு அல்ல. அதற்கு ஏற்றாற்போல் புதியபந்தில் பந்துவீசி மும்பை பேட்டர்களை புவனேஷ்வர், கம்மின்ஸ், யான்சென் திணறவிட்டனர். பனிப்பொழிவால் ஆடுகளம் லேசான நெகிழ்வுத்தன்மை அடைந்ததால், பந்துவீச்சாளர்களால் ஸ்விங்கைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் பந்து பலமுறை பேட்டர்களை கடந்து விக்கெட் கீப்பரிடம் சென்றது. அதிகமான ஸ்விங் ஆகியதால், முதல் 3 ஓவர்களில் சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் 18 உதிரிகளை விட்டனர். இதனால் மும்பை அணி முதல் 9 பந்துகளில் அதிரடியாகத் தொடங்கி 29 ரன்களைச் சேர்த்தது. ஆனால், அடுத்தடுத்து சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தனர். முதலில் யான்சென் தனது ஸ்விங் பந்துவீச்சில் இஷான் கிஷன் விக்கெட்டை எடுத்தார். அடுத்ததாக கம்மின்ஸின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ரோஹித் சர்மா ஆட்டமிழந்தார். 3வதாக நமன்திர் புவனேஷ்வர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால், முதல் 9 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்த மும்பை அணி அடுத்த 19 பந்துகளில் 6 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. 1.3 ஓவரிலிருந்து 4.4 ஓவர்கள்வரை மும்பை அணி ஒரு ரன்கூட எடுக்கவில்லை. டெஸ்ட் போட்டியில் வீசப்படும் பந்துவீச்சா அல்லது டி20 போட்டியா எனத் தெரியாத அளவுக்கு பந்து ஸ்விங் ஆகின. இதுபோன்ற ஆடுகளத்தில் கம்மின்ஸ், புவனேஷ் பந்துவீச்சைப் பற்றி சொல்லத்தேவையில்லை. இருவரும் தலா ஒரு மெய்டன் ஓவர்களை வீசி திணறவிட்டனர். இதனால் ஆட்டம் மும்பையின் கையைவிட்டு சன்ரைசர்ஸ் பக்கம் நழுவுகிறதா என்று வான்கடே ரசிகர்கள் கவலையடைந்தனர். 4வது விக்கெட்டுக்கு சூர்யகுமார், திலக் வர்மா ஜோடி சேர்ந்து ஆட்டத்தை கையில் எடுத்து, அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சூர்யகுமாரின் அதிரடி சூர்யகுமார் களத்துக்கு வந்தபின் ஆட்டத்தின் போக்கே மாறியது. கம்மின்ஸ், யான்சென் ஓவர்களை சூர்யகுமார் முதலில் குறிவைத்து பவுண்டரிகளை அடித்தார். யான்சென் வீசிய 7-வது ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை விளாசினார். நிதானமாகத் தொடங்கிய ஸ்கை 7 பந்துகளில் 4 ரன்கள் என்ற நிலையில் இருந்து, அதன்பின் 14 பந்துகளில் 32 ரன்கள் என்ற நிலைக்கு உயர்ந்தார். பந்துவீச்சில் கிடைத்த துல்லியத்தை அதன்பின் சன்ரைசர்ஸ் அணி இழந்தது. பவப்ப்ளேயில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் சேர்த்தது. சன்ரைசரஸ் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எளிதாக அடித்த சூர்யகுமார் 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். அதிலும் யான்சென் பந்துவீச்சில் 9பந்துகளைச் சந்தித்த சூர்யகுமார் 32 ரன்களை விளாசினார், அதில் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் அடங்கும். 11.1 ஓவர்ளில் மும்பை அணி 100 ரன்களை எட்டியது. ஒருகட்டத்தில் சூர்யகுமார் 82 ரன்கள் சேர்த்திருந்தபோது கம்மின்ஸ் வீசிய 17-வது ஓவரில் அடுத்தடுத்து 2பவுண்டரி, சிக்ஸர் விளாசி 96 ரன்களு உயர்ந்தார். நடராஜன் வீசிய 18-வது ஓவரில் லாங்க் ஆஃப் திசையில் சிக்ஸர்விளாசி சதத்தை நிறைவு செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஐபிஎல் தொடரில் சூர்யகுமார் 2வது சதத்தையும், டி20 போட்டிகளில் 6வது சதத்தையும் நிறைவு செய்து 102 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆட்டத்தின் முக்கியமான வித்தியாசம் என்னவென்றால், சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் அனைவரும் சேர்ந்து 12 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடித்தனர். ஆனால் நேற்று சூர்யகுமார் ஒருவரே 12 பவுண்டரிகள், 6சிக்ஸர்கள் விளாசினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ‘ப்ளே ஆஃப் கணக்குத் தெரியாது’ மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா கூறுகையில் “ ப்ளேஆஃப் செல்வதற்கான கணித சூழல்கள் எனக்குத் தெரியாது. இந்த வெற்றியால் மகிழ்ச்சி. கூடுதலாக 20 ரன்கள் கொடுத்துவிட்டோம், இருப்பினும் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. என்னுடைய பந்துவீச்சு எனக்கு திருப்தி அளிக்கிறது. நல்ல லென்த்தில் பந்துவீசினேன், இதைத்தான் விரும்புகிறேன். பியூஷ் சாவ்லா எடுத்த விக்கெட்டுகள் திருப்புமுனையாக அமைந்தது. ஸ்கையின் ஆட்டம் நம்பமுடியாத அளவுக்கு இருந்தது. சன்ரைசர்ஸ் பந்துவீச்சாளர்களுக்கு அவர் கொடுத்த அழுத்தம் ரன்சேர்ப்பில் தெரிந்தது. எந்தவிதமான மோசமான பந்தையும் ஸ்கை பெரிய ஷாட்கள் அடிக்க தவறவிடவில்லை. என்னுடைய அணியில் ஸ்கை இருப்பது அதிர்ஷ்டம். இதுபோல் அடுத்தடுத்து வெற்றிகள் வரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் அணி எங்கு தோற்றது? சன்ரைசர்ஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் சேர்த்ததுதான் அந்த அணியில் நேற்றைய அதிகபட்ச ஸ்கோராகும். வலுவான பேட்டிங் வரிசையை வைத்திருக்கும் சன்ரைசர்ஸ் அணி நேற்று விக்கெட்டுகளை சீரான இடைவெளியில் இழந்தது. பவர்ப்ளேயில் விக்கெட்டை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த மும்பை அணி பந்துவீச்சாளர்களில் பும்ரா தவிர மற்றவர்கள் வழக்கத்துக்கு மாறாக துல்லியமாக பந்துவீசினர். ஆனால் பும்ரா தனது இயல்பான பந்துவீச்சில் அபிஷேக் சர்மா 11 ரன்னில் வெளியேற்றினார். மயங்க அகர்வால் 5 ரன்னில் கம்போஜ் பந்துவீச்சில் க்ளீன் போல்டாகி ஆட்டமிழந்தார். இருப்பினும் பவர்ப்ளேயில் சன்சைர்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 56 ரன்களுடன் வலுவாக இருந்தது. டிராவிஸ் ஹெட் விக்கெட்டை எடுக்க பியூஷ் சாவ்லா கொண்டுவரப்பட்டார். தொடக்கத்தில் இருந்தே சாவ்லா பந்துவீச்சுக்கு திணறிய ஹெட் திலக் 48 ரன்கள் சேர்த்தநிலையில் திலக் வர்மாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரு கட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவான நிலையில் இருந்தது, ஸ்கோரை 200 ரன்களுக்கு மேல் கொண்டு செல்லகக்கூடிய வலுவான பேட்டர்கள் இருந்தனர். அதன்பின் வந்த நடுவரிசை, கீழ்வரிசை பேட்டர்கள் யாரும் நிலைத்து ஆடவில்லை. நிதிஷ்குமார் ரெட்டி(20), கிளாசன்(2), யான்சென்(17), ஷாபாஸ் அகமது(10) அப்துல் சமது(3) என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தது ரன் சேர்ப்பில் பெரிய பாறையை கட்டிவிட்டதுபோன்ற நிலை ஏற்பட்டது. ஹர்திக் பாண்டியா, பியஷ் சாவ்லாவின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் பெரிய திருப்புமுனையாக இருந்தது.டி20 உலகக் கோப்பை நெருங்கும் நேரத்தில் ஹர்திக்கின் பந்துவீச்சில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருவரும் சேர்ந்து சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசையை உலுக்கி எடுத்தனர். 90 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து வலுவாக இருந்த சன்ரைசர்ஸ் அணி, அடுத்த 11 பந்துகளில் 96 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி 6 ரன்களுக்க 3 விக்கெட்டுகளை இழந்தது. ஷாபாஸ் அகமது, யான்சென் தங்களால் முடிந்த அளவு போராடினர். 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் சேர்த்திருந்த சன்ரைசர்ஸ் அணி, 136 ரன்களுக்கு 8 விக்கெட்டுகள் என்ற நிலைக்கு தள்ளப்பட்டது. பியூஷ் சாவ்லா, ஹர்திக் இருவரும் கடைசி வரிசை பேட்டர்களின் விக்கெட்டை வீழ்த்தி சன்ரைசர்ஸ் ரன்ரேட்டை இறுக்கிப் பிடித்தனர். சன்ரைசர்ஸ் கேப்டன் கம்மின்ஸ் அதிரடியாக கேமியோ ஆடி 17 பந்துகளில் 35 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். https://www.bbc.com/tamil/articles/c3g82zdll3do
-
நாடளாவிய ரீதியில் கிராம சேவையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு - மக்கள் அவதி
இன்றும் தொடரும் கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு! நாடளாவிய ரீதியில் சுகவீன விடுமுறையை அறிவித்து, கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு இன்றும் (07) தொடர்கின்றது. கொடுப்பனவுகளை அதிகரிக்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கோரி, நேற்றும் இன்றும் இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் நெவில் விஜேரத்ன தெரிவித்துள்ளார். தமது தொழில் பிரச்சினைகளுக்கான உரிய தீர்வை வழங்காவிடின் அடுத்த வாரம் முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கங்கள் எச்சரித்துள்ளன. இதேவேளை கிராம உத்தியோகத்தர்களின் சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகள் அவசியம் என அகில இலங்கை சுதந்திர கிராம அதிகாரிகள் சங்கத்தின் பிரதித் தலைவர் பீ.எம்.தீக்ஷன தெரிவித்துள்ளார். அதேநேரம் கிராம உத்தியோகத்தர்களிடம் சேவைகளை பெற்றுக்கொள்ளச் சென்ற பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் நேற்றைய தினம் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/301044
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
அண்ணை மேலே படத்தில் இணைத்த கூகுள்ஏர்த்தின் வெப்பச் சுட்டி.
-
அரச உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம்
ஓய்வு பெற்ற அரச உத்தியோகத்தர்கள், மாகாண அரச உத்தியோகத்தர்கள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை 65 வரை நீட்டித்து, பின்னர் ஓய்வு பெறும் வயதெல்லை 60 ஆக குறைக்கப்பட்ட நிலையில், அதற்கிடையிலான காலத்தில் 60 வயது பூர்த்தியான பின்னர் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்காக இந்த வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்னவினால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர தேவைகளை பூர்த்தி செய்யும் உத்தியோகத்தர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய வாகன இறக்குமதி உரிமம் வழங்க கடந்த மார்ச் 11ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/301006
-
சென்னை: நாய்களால் தாக்கப்பட்ட 5 வயது சிறுமிக்கு விரைவில் 'பிளாஸ்டிக் சர்ஜரி' - உடல்நிலை எப்படி இருக்கிறது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 6 மே 2024, 14:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் வசித்துவரும் 5 வயது சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரால் வளர்க்கப்பட்ட ராட்வெய்லர் நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. அந்தச் சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருக்கிறார். வளர்ப்பு நாய்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் என்ன சொல்கின்றன? பூங்காவில் என்ன நடந்தது? சென்னை ஆயிரம் விளக்கு மாடல் பள்ளிக்கூடச் சாலையில் இருக்கும் பூங்காவின் காவலாளியாக விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரகு என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவி சோனியா, குழந்தை சுதக்ஷா ஆகியோருடன், பூங்காவில் உள்ள ஒரு அறையிலேயே வசித்துவருகிறார். தனது உறவினர் ஒருவர் இறந்துவிட்டதால், அதற்காக விழப்புரம் சென்றிருக்கிறார் ரகு. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று (மே 5) இரவு 9 மணியளவில், அந்தப் பூங்காவுக்கு எதிரில் வசிக்கும் புகழேந்தி என்பவர் தனது இரண்டு ராட்வய்லர் ரக நாய்களுடன் அந்தப் பூங்காவிற்கு வந்திருக்கிறார். அப்போது அந்தப் பூங்காவில் விளையாடி கொண்டிருந்த சுதக்ஷாவை நாய்கள் தாக்க ஆரம்பித்துள்ளன. அந்த நாய்களை புகழேந்தியால் கட்டுப்படுத்த முடியவில்லை. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கே வந்த குழந்தையின் தாய் சோனியாவையும் நாய்கள் தாக்கியுள்ளன. இந்தத் தாக்குதலில், நாய்கள் குழந்தையின் தலைப் பகுதியில் உள்ள தோலைக் கடித்து குதறின. இதனால் தலையில் 11 அங்குலம் அளவுக்கு தோல் பிய்ந்து வந்துவிட்டது. இதற்குப் பிறகு அக்கம்பக்கத்தினர் வந்து நாயை விரட்டி, குழந்தையை மீட்டனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தை, சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. அதன்பிறகு காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. நாயை வளர்த்த புகழேந்தி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். புகழேந்தி மீது ஐ.பி.சி 289-வது பிரிவு (மிருகங்கள் தொடர்பாக அலட்சியமான நடத்தை) ஐ.பி.சி 336 (பிறரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையில் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. நாய்கள் இரண்டும் அவரது வீட்டிற்குள்ளேயே இன்னும் இருக்கின்றன. தற்போது குழந்தை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருக்கிறது. படக்குறிப்பு,சம்பவம் நடந்த பூங்கா சென்னை மாநகர ஆணையர் சொன்னது என்ன? இதற்கிடையில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், "ராட்வய்லர் வகை நாய்களை வளர்க்கத் தடை இல்லையென்றாலும், அதற்கு மாநகராட்சியிடம் உரிமம் பெற வேண்டும்," என்றார். இச்சம்பவத்தில் அந்த உரிமத்தை நாயை வளர்ப்பவர் பெறவில்லை என்று குறிப்பிட்டார். இதற்குப் பிறகு, இந்தச் சம்பவம் நடந்த பூங்காவைப் பார்வையிட்ட அவர், "கடித்த நாயின் உரிமையாளர்கள் இப்போது இங்கே இல்லை. ஆகவே ஏதாவது தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் மூலம் நாயை அப்புறப்படுத்த யோசித்து வருகிறோம். ஒன்றிரண்டு நாட்களில் இது குறித்து முடிவு செய்வோம். தவிர, இதுபோன்ற நாய்களை வளர்ப்பதற்கு `கென்னல் கிளப் ஆஃப் இந்தியா` அமைப்பிடம் உரிமம் பெற்றிருந்தாலும் கூட மாநகராட்சியின் உரிமத்தையும் பெற வேண்டும்," என்றார். மேலும், "இதுபோன்ற நாய்களை வெளிநாடுகளில் சண்டைக்காக வளர்ப்பார்கள். அப்படி ஒரு நாயை, அதனைக் கட்டுப்படுத்தும் கயிறுகூட இல்லாமல் இவ்வளவு வீடுகள் இருக்கும் இடத்தில் அவிழ்த்து விடுவதாக இப்பகுதியினர் கூறுகிறார்கள். ஏற்கனவே இங்கிருக்கக் கூடிய கோழி ஒன்றை இந்த நாய்கள் கடித்துக் குதறியிருக்கின்றன. குழந்தைக்கு தலையில் மட்டுமல்லாமல் உடலிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. தற்போது குழந்தை மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. இன்னும் சில நாட்களுக்குப் பிறகு குழந்தைக்கு பிளாஸ்டிக் சர்ஜரி அறுவை சிகிச்சை செய்யப்படும்," என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,RADHAKRISHNAN இந்தியாவில் நாய் பிரச்னை இந்தியாவில் நாய்கள் தொடர்பாக இருவிதமான பிரச்னைகள் உள்ளன. ஒன்று தெரு நாய்கள் தொடர்பான பிரச்னை. இரண்டாவதாக, வளர்ப்பு நாய்கள் - அதாவது ஆக்ரோஷமான வளர்ப்பு நாய்கள் - தொடர்பான பிரச்னை. தெரு நாய்களைப் பொருத்தவரை, அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, உள்ளூராட்சி அமைப்புகள் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருவிலேயே விட்டுவிடுகின்றன. மற்றொரு பக்கம், தனிநபர்கள் ஆக்ரோஷமான குணமுடைய நாய்களை வளர்ப்பது இந்தியாவின் பல நகரங்களில் பிரச்சனையாகவே நீடித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த மார்ச் 12-ஆம் தேதி ஆக்ரோஷமான குணமுடைய நாய்களை வளர்ப்பதற்குக் கட்டுப்பாடுகளை விதித்து மத்திய அரசு ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ராட்வய்லர் நாய் (கோப்புப் படம்) - ஆக்ரோஷமான நாய் ரகங்களில் ஒன்று மீன் வளம், மிருக நலன், பால்வளத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலரான ஓ.பி.சௌத்ரி ஒரு சுற்றறிக்கையை எல்லா மாநில தலைமைச் செயலர்களுக்கும் அனுப்பினார். அந்தச் சுற்றறிக்கையில், "மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய நாய் இனங்களை வைத்திருக்கவோ, வளர்க்கவோ, இனப்பெருக்கம் செய்விக்கவோ அனுமதியோ, உரிமமோ அளிக்க வேண்டாம்" எனக் கூறியிருந்தார். பல மாநிலங்களிலும் நாய் கடித்ததால் ஏற்பட்ட மரணங்களை அடுத்து இந்த சுற்றறிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தச் சுற்றறிக்கையில் பிட்புல் டெர்ரியர், டோஸா இனு, அமெரிக்கன் ஸ்டஃப்போர்ட்ஷயர் டெர்ரியர், டோகோ அர்ஜென்டைனோ, அமெரிக்கன் புல்டாக், ராட்வய்லர் உள்ளிட்ட நாய் ரகங்களின் பெயர்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதுபோன்ற நாய்களை வைத்திருப்பவர்கள் அவற்றுக்குக் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமென்றும் சுற்றறிக்கை கூறியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தெரு நாய்ககளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த, உள்ளூராட்சி அமைப்புகள் தெரு நாய்களைப் பிடித்து அவற்றுக்கு கருத்தடை செய்து மீண்டும் தெருவிலேயே விட்டுவிடுகின்றன ஆனால், இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து சில நாய் உரிமையாளர்கள் வழக்குத் தொடர்ந்த நிலையில், இந்தியாவில் உள்ள இரண்டு உயர் நீதிமன்றங்கள் இதற்குத் தடை விதித்தன. மேற்கு வங்கத்தில் தன்மய் தத்தா என்பவர் உயர் நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்குத் தொடர்ந்தார். இந்தியாவில் எந்தச் சட்டம் நாய் வளர்ப்பைத் தடை செய்கிறது என தனது மனுவில் அவர் கேள்வி எழுப்பியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், சுற்றறிக்கையின் ஒரு பகுதிக்குத் தடை விதித்தது. இந்த நாய்களை இறக்குமதி செய்யவும் விற்கவுமான தடையை ஏற்றுக்கொண்டது. அதேபோல, மார்ச் 19-ஆம் தேதி ராட்வய்லர் நாயை வளர்க்கும் ஒருவர் இந்தச் சுற்றறிக்கையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நாய்கள் தொடர்பான பல தரப்பினரையும் ஆலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். இதையடுத்து, இந்த முடிவுகள் எதன் அடிப்படையில் எடுக்கப்பட்டனவோ, அதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, இந்த சுற்றறிக்கைக்குத் தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,வளர்ப்புப் பிராணிகளுக்கான உரிமம், அவற்றின் கழிவுகளை அப்புறப்படுத்துதல், இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது நாய் வளர்ப்பதற்கான உரிமம் சென்னையைப் பொருத்தவரை, வளர்ப்புப் பிராணிகளை வளர்க்க சென்னை மாநகராட்சியிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆன்லைனிலும் பதிவுசெய்து கொள்ளலாம். இதற்கு 50 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் இந்த உரிமத்தைப் புதுப்பிக்க வேண்டும். இந்த உரிமம், வளர்ப்புப் பிராணிகளின் கழிவுகளை அப்புறப்படுத்துதல், இனப்பெருக்கம் ஆகியவை தொடர்பாக சில கட்டுப்பாடுகளை விதிக்கிறது. ஆனால், ஒருவர் தனது வளர்ப்புப் பிராணியை பதிவு செய்யாமல் இருந்தால், பிரச்னை ஏற்படாமல் இருக்கும் வரை அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. உயர் ரக நாய்களை வளர்ப்பவர்கள் கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவில் பதிவு செய்கின்றனர். "கென்னல் கிளப் ஆஃப் இந்தியாவைப் பொருத்தவரை, நாய்களின் இனத் தூய்மை குறித்து மட்டுமே பதிவுசெய்கிறோம். ஒரு உயர் ரக நாய் இருந்தால், அதன் தாய்-தந்தை யார் என்பதை ஆராய்ந்து சான்றிதழ் அளிக்கிறோம். நாய்களை வளர்ப்பதற்கான உரிமம் எதையும் நாங்கள் தருவதில்லை," என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த சி.வி.சுதர்ஸன். தமிழ்நாட்டில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசு கொள்கை ஒன்றை உருவாக்கிவருகிறது. இந்தக் கொள்கை இன்னும் வெளியிடப்படவில்லை. https://www.bbc.com/tamil/articles/c4n1xg77228o
-
ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவு
இஸ்ரேலின் எச்சரிக்கையை தொடர்ந்து ரஃபாவிலிருந்து பெருமளவு மக்கள் வெளியேறுகின்றனர் - பெரும் குழப்பநிலை Published By: RAJEEBAN 06 MAY, 2024 | 04:52 PM ரஃபாவிலிருந்து பொதுமக்கள் உடனடியாக வெளியேறவேண்டும் என உத்தரவுபிறப்பித்துள்ளதை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் அங்கிருந்து வெளியேறிக்கொண்டிருக்கின்றனர். ரஃபாவின் கிழக்கு பகுதியில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது. எதிர்காலத்தில் ரஃபாவில் இஸ்ரேல் தனது இராணுவநடவடிக்கைகளை தீவிரப்படுத்தலாம் என இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் அறிவித்த மறுநாள் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உங்களின் பாதுகாப்பிற்காக சோதனைசாவடிகளிற்கு அருகில் உள்ள மனிதாபிமான பகுதிக்கு உடனடியாக செல்லுமாறு கேட்டுக்கொள்கின்றோம் என இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். அல்ரபாவின் அல்சவ்கா மற்றும் அதனை அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மட்டுப்படுத்த அளவிலான நடவடிக்கையில் ஈடுபடப்போவதாக இஸ்ரேலிய இராணுவத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் இடம் பெயர்ந்த மில்லியன் கணக்காண மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரபாவில் தஞ்சமடைந்துள்ளனர். அச்சமடைந்த மக்கள் கால்நடையாகவும் அல்லது கழுதைகளின் மீதும் அல்லது தங்களின் உடமைகளை வாகனங்களில் ஏற்றியபடி வாகனங்களிலும் ரபாவிலிருந்து வெளியேறுகின்றனர். நேற்றிரவு இஸ்ரேல் மேற்கொண்ட விமானக்குண்டுவீச்சுகள் மக்களின் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரஃபாவிலிருந்து நகரத்தின் மேற்கு பகுதி உட்பட நகரத்தில் கடும் பதற்றநிலை காணப்படுகின்றது பலர் வெளியேறுவதற்கு தீர்மானித்துள்ளனர் பலர் ஏற்கனவே வெளியேற ஆரம்பித்துள்ளனர் என நேரில் பார்த்த ஒருவர் தெரிவித்தார் என கார்டியன் தெரிவித்துள்ளது. மேலும் ரஃபா மனிதாபிமான நடவடிக்கைகளிற்கான பிரதான தளமாகவும் காணப்படுகின்றது. அவர்கள்ரஃபாவின் கிழக்கில் உள்ளவர்களை வெளியேறுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரஃபா எல்லையில் மேற்கில் உள்ளவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளனர். எனக்கு என்ன செய்வது என தெரியவில்லை. நான் அறிவிக்கப்பட்ட இடத்தில் இல்லாவிட்டாலும் எனது குடும்பத்தை டெய்ர் எல் பலாவிற்கு கொண்டு செல்லப்போகின்றேன் என ரஃபாவின் வடக்கில் தனது குடும்பத்துடன் தஞ்சமடைந்துள்ள அபுமுகே தெரிவித்துள்ளார். தற்போது கடும் மழை பெய்கின்றது எங்கு போவது என எங்களிற்கு தெரியவில்லை. இந்த நாள் வரும் என நான் கவலையுடன் இருந்தேன் எனது குடும்பத்தவர்களை எங்கு கொண்டு செல்வது என சிந்திக்கவேண்டும் என ரஃபாவில் அகதியாக உள்ள அபுரயீட் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182821
-
யாழ்ப்பாணத்தில் நேற்றைய இன்றைய கடும் வெப்பநிலை!
36 – 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை! வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களிலும் இன்றைய தினம் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. குறித்த பகுதிகளில் 36 முதல் 37 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும் என அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலையானது 2 வாரங்களுக்கு எச்சரிக்கை மட்டத்துக்கு உயர்வடையக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன் மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களிலும் வெப்பநிலையானது அதிகரிக்கக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/300968 இரவு 10மணிக்கும் 41 காட்டுது யாழ்ப்பாணம்!
-
கைது செய்யப்பட்டார் அமைச்சர் கெஹலிய
கெஹலியவின் விளக்கமறியலில் நீடிப்பு! தரமற்ற ஊசியை இறக்குமதி செய்தமை தொடர்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட 7 பேரை எதிர்வரும் மே மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://thinakkural.lk/article/301022
-
அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த ஐவர் கைது
06 MAY, 2024 | 06:19 PM கிளிநொச்சியில் அரசுக்கு சொந்தமான கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரிவுக்குட்பட்ட கல்மடு வனப் பிரதேசத்துக்குள் அனுமதியின்றி உள்நுழைந்து மரங்களை வெட்டி, மரக்குற்றிகளை இரண்டு உழவு இயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து இளைஞர்கள் இராமநாதபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட ஐவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்கள் வெட்டிய மரக்குற்றிகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182838
-
சென்னை: ஏரிகளில் வேகமாக குறையும் நீர்மட்டம் - கோடையில் குடிநீர் தட்டுப்பாடின்றி வருமா?
கோவை: அணைகளின் நீர் இருப்பு குறைந்ததால், குடிநீருக்கு பற்றாக்குறை - கள நிலவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ச.பிரசாந்த் பதவி, பிபிசி தமிழுக்காக 6 மே 2024, 05:08 GMT கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான, சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகளின் நீர்மட்டம் குறைந்துள்ளது. இது கோவை மாவட்டத்தின் குடிநீர் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநகராட்சிகளில் கோவையும் ஒன்று. மாநகராட்சியுடன் சேர்த்து கோவை மாவட்டத்தில் மொத்தம் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை, ஆனைகட்டி அருகே கேரள மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சிறுவாணி அணை, மேட்டுப்பாளையத்தை அடுத்த்துள்ள பில்லூர் அணை மற்றும் பொள்ளாச்சியில் உள்ள ஆழியாறு அணை ஆகியவை தான் கோவை மாநகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரங்கள். மாநகராட்சிப் பகுதிகள் தவிர்த்து, கோவை மாவட்டத்தின் மற்ற பகுதிகளான பொள்ளாச்சி, கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிகளுக்கு ஆழியாறு அணை முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. கோவையின் குடிநீர் விநியோகம் எப்படி நடக்கிறது? கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 ஆகிய திட்டங்கள், வடவள்ளி – கவுண்டம்பாளையம் மற்றும் ஆழியாறு கூட்டுக் குடிநீர் திட்டங்கள் ஆகியவற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இப்படியான நிலையில், கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாதது, மற்றும் இந்த ஆண்டு கோடை மழை பெய்யாதது போன்ற காரணங்களால், கோவையின் நீராதாரமாக உள்ள சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால், அணைகளில் இருந்து பெறப்படும் நீரின் அளவு குறைந்து, மக்களுக்கு வாரம் ஒருமுறை அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சிறுவாணி அணையைப் பொறுத்தவரை, மொத்தம் உள்ள 45 அடியில், ஏப்ரல் 30-ஆம் தேதி நிலவரப்படி, 12 அடி வரை மட்டுமே நீர் மட்டம் உள்ளது. பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடி. இதில் 55.25 அடிக்கு மட்டுமே நீர்மட்டம் உள்ளது. அதேபோல், ஆழியாறு அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில், 58.70 அடி உயரத்திற்கு மட்டுமே நீர் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES 'இந்த ஆண்டு மழை பெய்யாததால் சிக்கல்' இந்த நிலையில், கோவை மாவட்டத்தின் குடிநீர் பற்றாக்குறை குறித்து, மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கைப்படி, சிறுவாணி அணைப் பகுதியில் 2023 ஏப்ரல் மாதம் 95 மில்லிமீட்டர் மழை பதிவானது, பில்லூர் அணைப்பகுதியில் 2189.64 மி.மீ. மழையும், ஆழியாறு அணைப் பகுதியில் 41.80 மி.மீ. மழையும் பதிவானது. ஆனால், இந்த ஆண்டு சிறுவாணி, பில்லூர் மற்றும் ஆழியாறு அணைப் பகுதியில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் மழை பெய்யாததால், அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால், "சிறுவாணி அணையில் இருக்கின்ற நீரை ஜூன் வரை வழங்குவதற்காக, அணையில் இருந்து நாள் ஒன்றுக்கு 104.4 எம்.எல்.டி பெறப்படுவதற்குப் பதிலாக 35 எம்.எல்.டி நீர் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படும். இதேபோல், பில்லூர் அணையில் இருக்கும் நீரும் ஜூன் வரையில் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஆழியாறு அணையில் தற்போது இருக்கும் நீர் கோடையைச் சமாளிக்கப் போதுமானதாக உள்ளது," என்று மாவட்ட ஆட்சியர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். ‘வீட்டின் மாதச் செலவு அதிகரித்துள்ளது’ இந்நிலையில், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதாகக் கோவை நகரில் வசிக்கும் பொதுமக்களில் சிலர் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். பிபிசி தமிழிடம் பேசிய கோவை கணபதி பகுதியில் வசிக்கும் இல்லத்தரசியான ரம்ய பிரியா, ஆண்டுதோறும் கோடைக் காலத்தில், குறிப்பாக மே மாதம் வாரம் ஒருமுறை, தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்குவார்கள் என்றும், இந்த ஆண்டு 12 நாட்களுக்கு ஒருமுறைதான் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாகவும் கூறுகிறார். "தினமும் குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கு போர்வெல் நீர் வழங்கி வந்தனர். இப்போது அதுவும் சரிவரக் கிடைக்காமல் உள்ளது," என்கிறார் ரம்ய பிரியா. கோடையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளதால், சேமிக்கும் நீர் விரைவில் தீர்ந்துவிடுவதாகக் கூறும் அவர், "650 ரூபாய் செலுத்தி டிராக்டரில் 1,000 லிட்டர் நீர் விலைக்கு வாங்கிப் பயன்படுத்துவதுடன், குடிநீரை விலைக்கு வாங்கிப் பயன்படுத்துகிறோம். இதனால், வீட்டின் மாதச் செலவு அதிகரித்துள்ளது," என்றார். ‘பயன்பாட்டைக் குறைத்துள்ளோம்’ தங்கள் பகுதிக்கு வாரம் ஒருமுறைதான் குடிநீர் வழங்கப்படுவதாகவும் கிடைக்கும் நீரை குடிக்க, சமைக்க மட்டுமே சிக்கனமாகப் பயன்படுத்துவதாகவும் கூறுகின்றனர் கோவை ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த ராஜேஷ் கோவிந்தராஜலு, சுஜாதா தம்பதி. பிபிசி தமிழிடம் பேசிய அவர்கள், "குடிநீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. குடிநீர் அல்லாத பயன்பாட்டுக்கான நீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பாத்திரங்களின் பயன்பாட்டையும் வெகுவாகக் குறைத்துள்ளோம்," என்றனர். இந்த நிலையில், அரசு போதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளாமல் விட்டதால் தான் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர் விவசாயிகள் சங்கத்தினர். பிபிசி தமிழிடம் பேசிய கெளசிகா நீர்க்கரங்கள் என்ற சுற்றுச்சூழல் அமைப்பின் நிறுவனர் செல்வராஜ், "சிறுவாணி, பில்லூர் அணைகளில் கடந்த சில ஆண்டுகளாக வண்டல் மண் அதிகரித்து அணையின் நீர் சேமிப்புத் திறன் குறைந்துள்ளது. வண்டல் மண் எடுத்து அணைகளின் நீர்மட்டத்தை உயர்த்த அரசு தவறிவிட்டதால், இன்று நாம் நீரின்றி சிரமத்தைச் சந்திக்கிறோம்," என்றார். படக்குறிப்பு,குடிநீர் பற்றாக்குறையுடன் விவசாயமும் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத் தலைவர் பெரியசாமி அணைகளைத் தூர்வார கோரிக்கை நீர்நிலைகளைத் தூர்வாரி ஆழப்படுத்தினால் மட்டுமே இனி வரும் காலங்களை எதிர்கொள்ள முடியும் என்கிறார் செல்வராஜ். இதை விளக்கிய செல்வராஜ், "பருவநிலை மாற்றத்தால் கடந்த சில ஆண்டுகள் முன்பு பெய்ததைப் போல பருவமழை கிடைப்பதில்லை. திடீரென சில நாட்களில் அதீத கனமழை தான் பொழிகிறது. இத்தகைய சூழலைச் சமாளிக்க தமிழ்நாடு அரசு சிறுவாணி, பில்லூர், ஆழியாறு அணைகளை முறையாகத் தூர்வாரி கரைகளைப் பலப்படுத்த வேண்டும். அணைகளைப் போல குளங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்," எனக் கூறுகிறார். வறட்சியால் குடிநீர் பற்றாக்குறை பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், அதேபோல் விவசாயமும் பாதிப்புகளைச் சந்திப்பதாக தெரிவிக்கிறார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட துணைத்தலைவர் பெரியசாமி. பிபிசி தமிழிடம் பேசிய பெரியசாமி, "அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருவதால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றனர். குடிநீர் தட்டுப்பாடு ஒரு பக்கம் இருக்க, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து போதிய நீர் கிடைக்காமல் விவசாயமும் கடுமையாகப் பாதித்துள்ளது," என்றார். படக்குறிப்பு,கோவைக்கு முக்கிய குடிநீர் ஆதாரங்களாக பில்லூர் அணை, சிறுவாணி அணை, ஆழியாறு அணை இருக்கிறது. அதிகாரிகள் சொல்வது என்ன? விவசாயிகளின் குற்றச்சாட்டுகள் குறித்து, கோவை மண்டல பொதுப் பணித்துறை முதன்மைப் பொறியாளர் சிவலிங்கத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது. "அணைகள், குளங்களைப் பாதுகாப்பதற்காகச் சிறப்புத் திட்டங்கள் மூலம், வண்டல் மண் எடுத்து, கரைகளைப் பலப்படுத்தி தூர்வாரும் பணிகளைச் செய்து வருகிறோம். இந்த ஆண்டு மழைக்காலம் துவங்குவதற்கு முன்பு ஆழியாறு அணையில் வண்டல் மண் எடுத்து தூர்வாரத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், குளங்களிலும் வண்டல் மண் எடுக்கப்படும்," என்று சிவலிங்கம் கூறினார். மேலும், சிறுவாணி அணை கேரள மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால், கேரள அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அணையைத் தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு தெரிவித்துள்ளதாகவும், பில்லூர் அணையையும் தூர்வார அரசுக்கு கோரிக்கை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறினார். "கடந்த காலங்களில் இல்லாததைவிட தற்போது வெப்ப அலை அதிகமாக இருப்பதால், அணைகளில் நாள் ஒன்றுக்கு 10-15 கன அடி நீர் ஆவியாகி வருகிறது. பருவமழை குறைவால் நீர் வரத்தும் இல்லை. ஆழியாறு அணையில் போதிய நீர் இருப்பதால் குடிநீருக்கு பிரச்னை இல்லை. ஆனால், பில்லூர், சிறுவாணியில் நீர் குறைந்து வருவதால் குடிநீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது," என்றார் சிவலிங்கம். கோவை மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய முதன்மைப் பொறியாளர் செல்லமுத்து பேசுகையில், "அணைகளில் நீர்மட்டம் பெருமளவு குறைந்துள்ளதால், வழக்கமாகப் பெறும் நீரின் அளவு குறைந்துள்ளது. கிடைக்கின்ற நீரை மக்களுக்குப் பகிர்ந்தளித்து வருகிறோம். குடிநீர் அல்லாத பயன்பாட்டிற்கு நிலத்தடி நீர் விநியோகம் செய்யப்படுகிறது. மக்கள் சிக்கனமாகப் பயன்படுத்தினால் மட்டுமே கோடையைச் சமாளிக்க முடியும்," என்றார். பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், "சிறுவாணி, பில்லூர் அணைகளைத் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசிடம் மாநகராட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவைக்கு வந்த முதன்மைச் செயலாளர்களிடமும் அணைகளில் வண்டல் மண் தேங்கியுள்ளதால் நீர் பெறுவதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவும் நிலையிலும், அணைகளில் இருக்கின்ற நீரை மாநகராட்சியின் மண்டலம் வாரியாக மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறோம்," என்றார். https://www.bbc.com/tamil/articles/c3g843vg0nyo
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
அமெரிக்க தூதுவரை சந்தித்தனர் ரி-20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் இலங்கை வீரர்கள் 06 MAY, 2024 | 08:48 PM (நெவில் அன்தனி) ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் பங்குபற்றுவதற்காக ஐக்கிய அமெரிக்கா பயணிப்பதற்கு முன்னர் இலங்கை அணியினரை அமெரிக்க தூதரகம் உபசரித்துள்ளது. 'எக்ஸ்'இல் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங், 'ஐக்கிய அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி ரி20 உலகக் கிண்ணத்திற்கு தயாராகும் இலங்கையின் தேசிய ஆடவர் கிரிக்கெட் அணியினரை அமெரிக்க தூதரகத்தில் நாங்கள் வரவேற்றோம். ஐக்கிய அமெரிக்காவில் உள்ள கிரிக்கெட் மைதானங்களுக்கு இந்த அணி செல்வது விளையாட்டுத்துறை இராஜதந்திரத்திற்கு முக்கியமான சந்தர்ப்பமாக அமைகிறது. அவர்கள் தங்கள் ஆற்றல்கள் மற்றும் ஆர்வத்தின் மூலம் ஐக்கிய அமெரிக்கா முழுவதும் உள்ள இரசிகர்களை ஈர்ப்பார்கள் என்பது உறுதி' என குறிப்பிட்டுள்ளார். வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலன்க, குசல் மெண்டிஸ், தசுன் ஷானக, தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ், மஹீஷ் தீக்ஷன, குசல் பெரேரா, பினுர பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, டில்ஷான் மதுஷங்க, பெத்தும் நிஸ்ஸங்க, மதீஷ பத்திரண, சதீர சமரவிக்ரம, பிரமோத் மதுஷான், துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, பானுக ராஜபக்ச, ஜெவ்ரி வெண்டர்சே, நுவன் துஷார, சாமிக்க கருணாரத்ன, து ன்மந்த சமீர, நிரோஷன் டிக்வெல்ல, விஜயகாந்த் வியாஸ்காந்த் ஆகியோரை அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் சந்தித்து உரையாடினார். ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் ஐக்கிய அமெரிக்காவிலும் மேற்கிந்தியத் தீவுகளிலும் ஜூன் 1ஆம் திகதியிலிருந்து 29ஆம் திகதிவரை கூட்டாக நடைபெறவுள்ளது. அமெரிக்காவில் 3 மைதானங்களில் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ளன. ப்ளோரிடா, லவ்டர்ஹில் சென்ட்ரல் ப்ரோவார்ட் ரீஜினல் பார்க் விளையாட்டரங்கு, டெக்சாஸ் க்ராண்ட் ப்ரெய்ரி விளையாட்டரங்கு, நியூ யோர்க, ஈஸ்ட் மெடா நசவ் கன்ட்றி சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கு ஆகிய 3 விளையாட்டரங்குகளே ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் நடைபெறவுள்ள அமெரிக்க மைதானங்களாகும். ரி20 உலகக் கிண்ணத்திற்கான இலங்கை குழாத்தை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை. பெரும்பாலும் இந்த வாரத்திற்குள் 15 வீரர்களைக் கொண்ட இறுதிக் குழாத்தை உப்புல் தரங்க தலைமையிலான இலங்கை அணித் தெரிவுக் குழுவினர் வெளியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/182844
-
சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்! கடை உரிமையாளர் ஒருவரின் திமிர் பேச்சு
அக்கா கடைக்காறர் திருந்துவது சாத்தியமில்லை, அவர்கள் வியாபாரிகள் எல்லோ! சட்ட நடவடிக்கைகளிற்கு, தண்டப்பணத்திற்கு பயந்து கொஞ்சம் ஒழுங்காக இருப்பது போல் நடிப்பினம். எழுந்தமானமாக கடைகளை சென்று பார்வையிடும் பிஎச்ஐ களால் தான் ஓரளவு தப்பித்து வாழ்கிறோம். பிஸ்கற், சோடா போன்றவை கூட காலாவதி திகதியின் பின் கவனிக்காதது போல விற்கிறார்கள்.