Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கச்சதீவு குறித்து மீண்டும் பேசவேண்டிய தேவையில்லை - அலிசப்ரி 04 APR, 2024 | 02:55 PM ஐம்பது வருடங்களிற்கு முன்னர் இந்தியா கையளித்த சர்ச்சைக்குரிய கச்சதீவு குறித்து புதிய பேச்சுவார்த்தைகள் எவற்றையும் ஆரம்பிக்கவேண்டிய தேவைஉள்ளதாக இலங்கை கருதவில்லை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இந்திய தேர்தல் களத்தில் கச்சதீவு விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். 1976ம் ஆண்டு இரண்டு அயல்நாடுகளும் கச்சதீவு குறித்து செய்துகொண்ட உடன்படிக்கையை தேர்தலில் மீண்டும் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நரேந்திரமோடி தேர்தல் விவகாரமாக்கியுள்ளார். இந்த பிரச்சினை ஐம்பது வருடங்களிற்கு முன்னரே பேசப்பட்டு தீர்வுகாணப்பட்டுள்ளது இதன் காரணமாக மீண்டும் இது குறித்து பேசவேண்டிய அவசியமில்லை என அலிசப்ரி ஹிரு தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவேண்டிய நிலையேற்படும் என நான் கருதவில்லை என தெரிவித்துள்ள அவர் கச்சதீவின் தற்போதைய நிலையில் மாற்றங்கள் வேண்டும் என எவரும் இதுவரை வேண்டுகோள் விடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180431
  2. தோனியிடம் சிக்காமல் தப்பிய டெல்லி அணி, சுனில் நரேனிடம் சரணடைந்தது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 26 நிமிடங்களுக்கு முன்னர் தோல்வி உறுதி எனத் தெரிந்தபின் அந்த ஆட்டத்தில் விளையாட வீரர்களுக்கும் ஆர்வம் இருக்காது, பார்க்கும் ரசிகர்களுக்கும் ஆர்வம் குறைந்துவிடும். அதுபோன்ற ஆட்டம்தான் நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்துமே ஒருதரப்பாகவே நடந்து முடிந்தது. ஒருநாள் போட்டியில் அடிக்க வேண்டிய ‘டீசன்ட்டான ஸ்கோரை’, டி20 தொடரில் அடித்தபிறகு, அதை சேஸிங் செய்ய முற்பட்டால் என்ன ஆகும். எதிரணி நிச்சயமாக நம்பிக்கை இழந்து தோல்விமுகம் காட்டி ஓடும். அதுதான் கொல்கத்தா - டெல்லி இடையேயான ஆட்டத்தில் நடந்தது. ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 16-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 106 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் சேர்த்தது. 273 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 17.2 ஓவர்களில் 166 ரன்களுக்கு ஆட்டமிழந்து 106 ரன்களில் தோல்வி அடைந்தது. ரஸல் விழுந்தார், வரலாறு தப்பியது இந்த ஐபிஎல் டி20 வரலாற்றில் 2ஆவது அதிகபட்ச ஸ்கோரை கொல்கத்தா அணி நேற்று பதிவு செய்தது. சன்ரைசர்ஸ் அணி அடித்த வரலாற்று ஸ்கோரான 277 ரன்களை கொல்கத்தா அணி நேற்று முறியடித்திருக்கும். கடைசி ஓவரில் ஆந்த்ரே ரஸலுக்கு யார்க்கர் வீசி கீழே விழச்செய்து இஷாந்த் சர்மா ஆட்டமிழக்கச் செய்யாமல் இருந்தால், கொல்கத்தா அணி சன்ரைசர்ஸ் ஸ்கோரை நிச்சயமாக முறியடித்திருக்கும். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர் 2018ம் ஆண்டில் இந்தூரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 218 ரன்கள் சேர்த்ததுதான். 272 ரன்கள் எனும் ஸ்கோர் எதிரணிக்கு தோல்வியை பரிசளிக்கும் இலக்குதான். நரேன் 85(39பந்துகள்), ரகுவன்ஷி54 (27பந்துகள்), ரஸல்41 (19 பந்துகள்) ரிங்கு சிங் 26(8பந்துகள்) என கொல்கத்தா ஸ்கோர் உயர்வுக்கு இவர்கள்தான் காரணம். இந்த 4 பேட்டர்களுமே நேற்று 200 க்கும் மேற்பட்ட ஸ்ட்ரைக் ரேட்டில்தான் பேட் செய்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3 ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் 2.518 என வலிமையாக முதலிடத்துக்கு முன்னேறியது. டெல்லி கேபிடல்ஸ் அணி 3 ஆட்டங்களில் ஒரு வெற்றி, 2 தோல்விகளுடன், நிகர ரன்ரேட்டில் மைனஸ் 1.347புள்ளிகளுடன் 9-வது இடத்துக்கு சரிந்துள்ளது. 106 ரன்களில் டெல்லி அணி தோற்றது அந்த அணியின் நிகர ரன்ரேட்டை மோசமாகக் குறைத்துவிட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்டநாயகன் நரைன் கடந்த போட்டியில் பேட்டிங்கில் ஜொலித்து கேமியோ ஆடி அரைசதத்தை தவறவிட்ட சுனில் நரேன் இந்த முறை அதைச் சரியாகச் செய்தார். சிக்ஸர், பவுண்டரி எனப் பறக்கவிட்ட நரேன் 21 பந்துகளில் அரைசதம் என 85 ரன்கள்,ஒரு விக்கெட் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றார். சுனில் நரைன் அமைத்துக் கொடுத்த வலிமையான அடித்தளத்தில்தான் கொல்கத்தா அணியால் பயணிக்க முடிந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் நரைன் 3ஆவது முறையாக அரைசதம் அடித்துள்ளார். டேவிட் வார்னர்தான் பவர்ப்ளே ஓவருக்குள் அதிகபட்சமாக 6 முறை அரைசதம் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சுனில் நரைன் நேற்று சேர்த்த 85 ரன்கள்தான் அவரின் டி20 வாழ்க்கையில் அதிகபட்ச ஸ்கோர். இதற்குமுன் 2017ல் பர்படாஸ் டிரிடென்ட்ஸ் அணிக்கு எதிராக 79 ரன்கள் சேர்த்ததே அவரின் அதிகபட்சமாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ‘நினைத்துப் பார்க்காத ஸ்கோர்’ கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “நாங்கள் தொடக்கத்தில் பேட் செய்தவிதத்தை பார்த்தால் 200 ரன்கள் சேர்ப்போம் என்று நினைத்தேன், ஆனால் 270க்குமேல் ரன்களை நினைத்துப்பார்க்கவில்லை. பவர்ப்ளேயில் நரைன் அடித்து ஆட வேண்டும் அவர் இல்லாவிட்டால் ரகுவன்ஷி ஆட வேண்டும் என திட்டம் வகுத்திருந்தோம். இளம் வீரர் ரகுவன்ஷி அச்சமில்லாத பேட்டர், சூழலை அறிந்து சிறப்பாக பேட் செய்கிறார். அவரின் ஷாட்கள் அனைத்தும் தேர்ந்த, முதிர்ச்சி அடைந்த பேட்டர் போன்று இருந்தது. பந்துவீச்சாளர்களும் அவர்களின் பொறுப்பை உணர்ந்து செயல்பட்டனர். வெற்றிக்கு அனைவரும் பங்களிப்பு செய்தனர். 3 வெற்றிகள் பெற்றாலும் அடுத்தடுத்து தொடர்ந்து பயணிக்க வேண்டியுள்ளது. இதே வெற்றி தொடரும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சுவாரஸ்ய புள்ளிவிவரங்கள் இந்த ஆட்டத்தில் மட்டும் விசாகப்பட்டினம் மைதானத்தில் கொல்கத்தா அணி பேட்டர்கள் 18 சிக்ஸர்களை விளாசியதுதான் ஒரு இன்னிங்ஸில் அதிகபட்சமாகும். இதற்கு முன் 2019-இல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 17 சிக்ஸர்களை விளாசி இருந்தது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி பவர்ப்ளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 88 ரன்கள் குவித்தது, ஐபிஎல் வரலாற்றில் அந்த அணியின் 2வது அதிகபட்சமாகும். இதற்கு முன் 2017ல் ஆர்சிபி அணிக்கு எதிராக 105 ரன்களை கொல்கத்தா அணி பதிவு செய்திருந்தது. ஐபிஎல் வரலாற்றில் முதல் 10 ஓவர்களில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த 3வது அணியாக கொல்கத்தா அணி மாறியது. இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி 10 ஓவர்களில் 135 ரன்களைச் சேர்த்தது. இதற்கு முன் சன்ரைசர்ஸ் அணி 148 ரன்களும், மும்பை அணி 141 ரன்களும் 10 ஓவர்களில் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரகுவன்ஷி நேற்றைய ஆட்டத்தில் 25 பந்துகளில் அரைசதம் அடித்தார் 18 வயது ரகுவன்ஷி அடித்த அரைசதம் கொல்கத்தா அணியில் நேற்று களமிறங்கி அரைசதம் அடித்த ரகுவன்ஷிக்கு 18வயது முடிந்து 303 நாட்கள் ஆகிறது.அதாவது இளம் வயதில் அறிமுகமாகி அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியிலில் இணைந்து பெருமை பெற்றார். இதற்கு முன் 2008ல் ஸ்ரீவத் கோஸாமி 19 வயதில் அரைசதம் அடித்திருந்தார். ஒட்டுமொத்தமாக ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் களமிறங்கி அரைசதம் அடித்த 7-ஆவது பேட்டராக ரகுவன்ஷி இடம் பெற்றார். கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை இளம் வயதில் அறிமுகமாகி அரைசதம் அடித்த 2வது பேட்டர் ரகுவன்ஸி. சுப்மான் கில் 18வயது 237 நாட்களில் கொல்கத்தா அணியில் அறிமுகமாகினார். அதேபோல ரகுவன்ஸி நேற்றைய ஆட்டத்தில் 25பந்துகளில் அரைசதம் அடித்தார். அறிமுக ஆட்டத்திலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது பேட்டராக ரகுவன்ஸி இடம் பெற்றார். இதற்கு முன், 2008ல் ஜேம்ஸ் ஹோப் அறிமுக ஆட்டத்திலேயே 24 பந்துகளில் அரைசதம் அடித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சாளர்களின் தோல்வி டெல்லி பந்துவீச்சாளர்கள் கலீல் அகமது, இசாந்த் சர்மா சிஎஸ்கே அணிக்கு எதிராக சிறப்பாகப் பந்துவீசினார்கள். ஆனால், நேற்றை ஆட்டத்தில் அவர்களின் “லைன் லென்த்”, “பவுன்ஸர்”, “ஷார்ட் பால்” எங்கே போனது எனத் தெரியவில்லை. இருவரும் நரைன் பேட்டிங்கிற்கு கடிவாளம் போட நினைத்தாலும் பந்துகள் பவுண்டரி, சிக்ஸருக்கு பறந்தவாறு இருந்தது. நரைனுக்கு பவுன்ஸர் பந்துகளை எதிர்த்து பேட் செய்ய வராது, குறிப்பாக ஷார்ட் பவுன்ஸர்களை வீசினால் பொறுமை இழந்து விக்கெட்டுகளை இழந்துவிடுவார். இதுபோன்ற முறைக்கு டெல்லி வேகப்பந்துவீச்சாளர்கள் முயற்சிக்கவேவில்லை. பெரும்பாலான பந்துகளை ஸ்லாட்டிலும், ஆஃப் சைடு விலக்கியும் வீசி, மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். அதிலும் இசாந்த் சர்மா, கலீல் அகமது பந்துவீச்சில் ஸ்விங் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் பேட்டரை நோக்கியும், ஸ்டெம்ப் நோக்கியும் எறிவதுபோன்றுதான் பந்துவீச்சு இருந்தது. ஐபிஎல் தொடரில் அதிவேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான நோர்க்கியா சிறப்பாகப் பந்துவீசி நரைன், ரகுவன்ஸி பேட்டிங் வேகத்தைக் கட்டுப்படுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் இசாந்த், கலீலை விட மோசமாகப் பந்துவீசி வாங்கிக்கட்டிக்கொண்டார். டெல்லி அணியின் பந்துவீச்சு ஒட்டுமொத்தத்தில் மிக மோசமாக அமைந்திருந்தது. கேப்டன் ரிஷப் பந்த் 7 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி கொல்கத்தா ரன் வேகத்தை கட்டுப்படுத்த முயன்றார். ஆனால் 6 பந்துவீச்சாளர்கள் இரட்டை இலக்க ரன்களைத்தான் சராசரியாக விட்டுக்கொடுத்தனர். கலீல் அகமது, இசாந்த் சர்மா, நோர்க்கியா, சலாம் ஆகிய 4 பேர் சேர்ந்து 192 ரன்களை விட்டுக் கொடுத்தனர். அதாவது ஓவருக்கு சராசரியாக 15 ரன்களை வாரி வழங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES அக்ஸரை பயன்படுத்தாதது ஏன்? இதில் அக்ஸர் படேல் ஒரு ஓவர் வீசி 18 ரன்கள் கொடுத்ததற்காக அவருக்கு தொடர்ந்து ஓவர்கள் வழங்கப்படாதது தவறான முடிவாகவே கருதப்படுகிறது. அக்ஸர் படேல் சிறந்த விக்கெட் டேக்கிங் பந்துவீச்சாளர், ஒரு ஓவரில் ரன் வழங்கினாலும் அடுத்த ஓவரில் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை படைத்தவர் அக்ஸர்படேல் அவரை நேற்று சரியாகப் பயன்படுத்தாததால்தான் பேட்டிங்கிலும் களமிறங்கியவுடன் பெரிய ஷாட்டுக்கு முயன்று அதிருப்தியில் டக்அவுட்டாகினார். சுமித் குமார், ரஷிக் சலாம் என அனுபவமற்ற பந்துவீச்சாளர்களை டெல்லி கேபிடல்ஸ் பந்துவீசச் செய்தது. அந்த அணியில் லலித் யாதவ் என்ற ஆப்ஸிபின்னர் ஆல்ரவுண்டர் இருக்கிறார் அவரை இதுவரை பயன்படுத்தவில்லை. குல்தீப், அக்ஸர் தவிர்த்து சிறப்பாகப் பந்துவீசக்கூடிய சுழற்பந்துவீச்சாளர்கள் யாரும் இல்லை என்பது பெரிய பலவீனமாகும். ஆர்சிபி அணி எந்தமாதிரியான சிக்கலில் சிக்கி இருக்கிறதோ அதேபோன்ற சிக்கலில் டெல்லி அணியும் மாட்டிக்கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 273 ரன்கள் சேஸிங் என்றபோதே டெல்லி அணி தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டது நரைன், ரகுவன்ஷி, ரஸல் வேகம் கொல்கத்தா அணிக்கு மென்ட்டராக கவுதம் கம்பீர் வந்தபின் அந்த அணியின் போக்கிலும், போட்டியை அணுகும் விதத்திலும் பெரிய மாற்றங்கள் தென்படுகிறது. கடந்த சீசனில் பேட்டிங்கில் ஜொலிக்காத சுனில் நரைன், கடந்த இரு போட்டிகளிலும் அதிரடியான தொடக்கத்தை அளித்து வருகிறார். பவர்ப்ளே ஓவர்களை சிறப்பாகப் பயன்படுத்தும் வகையில் நரைன் பேட்டிங் அமைந்துள்ளது. கொல்கத்தா அணி 3.5 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தநிலையில் பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 88 ரன்கள் குவித்தது. பில்சால்ட்-நரைன் கூட்டணி 4.3 ஓவர்களில் 60 ரன்கள் சேர்த்து சால்ட் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த ரன்களில் நரைன் அரைசதமும் அடங்கும். 2வது விக்கெட்டுக்கு நரைன், ரகுவன்ஸி கூட்டணி டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தது. இருவரும் சேர்ந்து 2வது விக்கெட்டுக்கு104 ரன்கள் சேர்த்தனர். இருவரும் பேட் செய்யத் தொடங்கியபின், டெல்லி பீல்டர்கள் மைதானத்தில் பீல்டிங் செய்யாமல் பார்வையாளர்கள் மாடத்தில் பீல்டிங் செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். நரைன், ரகுவன்ஸி இருவரும் ஒவ்வொரு பந்துவீச்சாளர்களையும் வெறுத்து ஓடும்வகையில் பவுண்டரி, சிக்ஸர் என விளாசினர். அதிலும் நரைன் தான் சந்தித்த ஒவ்வொரு 3 பந்துகளுக்கும் ஒரு பவுண்டர் என்ற கணக்கில் விளாசினார். மார்ஷ் பந்துவீச்சில் நரைன் 85 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஆந்த்ரே ரஸல் களமிறங்கியபின், ரன்ரேட் இன்னும்வேகமாக உயர்ந்தது. டெல்லி பந்துவீ்ச்சை வெளுத்த ரஸல், பவுண்டரி, சிக்ஸர்களாகப் பறக்கவிட்டார். ரகுவன்ஸி(54), ஸ்ரேயாஸ்(18) என விக்கெட்டுகள் சரிந்தாலும் ரஸலின் அதிரடி மட்டும் குறையவில்லை. கடந்த சில போட்டிகளாக பேட்டிங் செய்ய வாய்ப்புபெறாத ரிங்கு சிங் 8 பந்துகளில் 3 சிக்ஸர் உள்பட 26 ரன்களுடன் வெளியேறினார். மதம்பிடித்த யானை போன்று களத்தில் ஆக்ரோஷத்துடன் ரஸல் பேட் செய்தார். ரஸலின் பேட்டிங்கைப் பார்த்தபோது, கொல்கத்தா அணி பெரிய ஸ்கோருக்கு முயற்சிக்கும் என ரசிகர்கள் கருதினர். ஆனால் இஷாந்த் சர்மா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில், துல்லியமான யார்கரை சமாளிக்க முடியாமல் க்ளீன் போல்டாகி, ரஸல் கால் இடறிகீழே விழுந்தார். 19 பந்துகளில் 41 ரன்கள் சேர்த்து ரஸல் ஆட்டமிழந்தார், செல்லும்போது இசாந் சர்மா பந்துவீச்சுக்கு கைதட்டல் கொடுத்து சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES தோல்வியை ஒப்புக்கொண்ட டெல்லி 273 ரன்கள் சேஸிங் என்றபோதே டெல்லி அணி தோல்வியை மறைமுகமாக ஒப்புக்கொண்டது. மிகப்பெரிய ஸ்கோரை துரத்தும்போது பேட்டர்களிடம் ஒருவிதமான நெருப்பு இருக்க வேண்டும், அந்த நெருப்பு நேற்று ரிஷப் பந்த், ஸ்டப்ஸ் இருவரிடம் மட்டும்தான் வெளிப்பட்டது. வார்னர்(18), பிரித்வி ஷா(10),மார்ஷ்(0),போரெல்(0) அக்ஸர் படேல்(0) என எந்த பேட்டரிடமும் காணப்படவில்லை. கேப்டன் என்ற பொறுப்புணர்வுடன் தன்னால் முடிந்த பங்களிப்பை ரிஷப் பந்த் அளித்து, 25ப ந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதில்5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகள் அடங்கும். குறிப்பாக வெங்கடேஷ் பந்துவீச்சில் ரிஷப் பந்த் ஒரே ஓவரில் 28 ரன்கள் விளாசியது திருப்புமுனை. அதேபோல டிரிஸ்டன் ஸ்டெப்ஸ் 32 பந்துகளில் 54 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இருவரும் அடித்த ஸ்கோர்தான் டெல்லி கேபிடல்ஸில் அதிகபட்சமாகும். மற்ற பேட்டர்கள் நம்பிக்கை இழந்து பேட் செய்தனர். கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு அதிகமான அழுத்தத்தை அந்த அணியின் பேட்டர்களும் தரவில்லை, டெல்லி கேபிடல்ஸ் பேட்டர்களும் சிரமம் கொடுக்கவில்லை. கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் ஸ்டார்ஸ், அரோரா, ரஸல், வருண் சக்ரவர்த்தி வீசிய சாதாரண பந்துகளிலேயே விக்கெட்டுகளை தூக்கிக் கொடுத்துவிட்டு டெல்லி பேட்டர்கள் வெளியேறினர். https://www.bbc.com/tamil/articles/crg9yzlypdmo
  3. இஸ்ரேல் மனிதாபிமான பணியாளர்களின் வாகனங்களை இலக்கு வைத்து தாக்கியது - வேல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பின் ஸ்தாபகர் குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 04 APR, 2024 | 10:42 AM இஸ்ரேலின் தாக்குதலில் மனிதாபிமான பணியாளர்களை இழந்த வேல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பின் தலைவர் ஜோசே அன்ரெஸ் இஸ்ரேல் தனது பணியாளர்கள் பயணம் செய்துகொண்டிருந்த வாகனங்களை இலக்குவைத்து தாக்கியது என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு காரையும் இலக்குவைத்து இஸ்ரேல் தாக்கியது என அவர் தெரிவித்துள்ளார். நான் ஸ்தாபித்த வேல்ட் சென்ரல் கிச்சன் இஸ்ரேலிய படையினருடன் தெளிவான தொடர்பாடல்களை கொண்டிருந்தது எனது பணியாளர்கள் பயணிக்கின்றனர் என்பது இஸ்ரேலிற்கு தெரிந்திருந்தது என அவர் ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு தெரிவித்துள்ளார். இது குண்டு தவறான இடத்தில் விழுந்த துரதிஸ்டவசமான சம்பவம் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். எங்கள் வாகனங்களின் மேற்பகுதியில் இலச்சினைகள் தெளிவாக பதிக்கப்பட்டிருந்தன இதன் மூலம் நாங்கள் யார் என்பதையும் என்ன செய்துகொண்டிருக்கின்றோம் என்பதையும் தெளிவாக தெரிவித்திருந்தோம் எனவும் ஜோசே அன்ரஸ் தெரிவித்துள்ளார். எங்கள் வாகனத் தொடரணி எங்கு நிற்கின்றது என்பது இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு தெரிந்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்காவும் கொல்லப்பட்ட பணியாளர்களின் நாடுகளும் விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். யுத்த சூன்ய பிரதேசத்தில் அவர்கள் எங்களை இலக்குவைத்தனர். அந்த பகுதி இஸ்ரேலிய படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் காணப்பட்டது. மூன்று வாகனங்களில் எங்கள் அணியினர் பயணிக்கின்றனர் என்பது அவர்களுக்கு தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/180391
  4. கார்த்திகைப்பூ விவகாரம் : தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பாணை ! Published By: DIGITAL DESK 3 04 APR, 2024 | 10:43 AM யாழ். தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. நாளை வெள்ளிக்கிழமை 5 ஆம் திகதி பிற்பகல் 2.30 மணிக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது. பாடசாலை இல்ல விளையாட்டு போட்டி தொடர்பில் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டமை தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்ட முறைப்பாட்டிற்கான விசாரணைக்கு தெல்லிப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழப்பாண அலுவலகத்தால் அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/180392
  5. Published By: VISHNU 04 APR, 2024 | 02:58 AM (நா.தனுஜா) பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென பயங்கரவாதத்தடைச்சட்டம் போன்ற விசேட சட்டம் அவசியமா எனவும் தாம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, இருப்பினும் தாம் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல என்பதால், அடிப்படை மனித உரிமை மீறல்களுக்கு அப்பாற்பட்டு தம்மால் இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கமுடியாது எனத் தெரிவித்துள்ளது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய தவிசாளர் மற்றும் ஆணையாளர்கள் கடந்த ஆண்டு தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் குறித்துத் தெளிவுபடுத்தும் நோக்கிலான ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை கொழும்பிலுள்ள இலங்கை மன்றக்கல்லூரியில் நடைபெற்றது. இச்சந்திப்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரி.பி.தெஹிதெனிய, ஆணையாளர்களான பேராசிரியர் ரி.தனராஜ், பேராசிரியர் பாத்திமா பர்ஸானா ஹனீஃபா, கலாநிதி ஜெஹான் டினுக் குணதிலக, நிமல்.ஜி.புஞ்சிஹேவா மற்றும் ஆணைக்குழுவின் செயலாளர் ரஞ்சித் உயன்கொட ஆகியோர் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டனர். அதற்கமைய நாட்டின் அரசியலமைப்பின் ஊடாக மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை, கடமைகள் மற்றும் அதிகாரங்கள், ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பணிகள் என்பன தொடர்பில் தவிசாளர் தெஹிதெனிய தெளிவுபடுத்தினார். குறிப்பாக நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் மீறல் பற்றி கிடைக்கப்பெறும் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், பொலிஸ் நிலையம் உள்ளடங்கலாக தடுப்புக்காவல் நிலையங்களுக்குச்சென்று கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடல், விசேட தேவையுடையோர் மற்றும் பால்புதுமையின சமூகம் உள்ளடங்கலாக நாட்டின் அனைத்துத்தரப்பினரதும் உரிமைகளை உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி செயற்படல், நாடளாவிய ரீதியில் மனித உரிமைகள் தொடர்பில் சீரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இலக்காகக்கொண்டு பணியாற்றல் போன்றவற்றில் தாம் விசேட கவனம் செலுத்தியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். அதுமாத்திரமன்றி தாம் கடந்த ஆண்டு ஆணைக்குழுவில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோது உரியவாறான விசாரணைகள் மூலம் தீர்வு காணப்படாத பெரும் எண்ணிக்கையான முறைப்பாடுகள் நிலுவையில் இருந்ததாகவும், கொவிட் - 19 பெருந்தொற்றுப்பரவல், ஊழியர் பற்றாக்குறை என்பன அதற்குக் காரணமாக அமைந்திருந்ததாகவும் குறிப்பிட்ட அவர், அவற்றை நிவர்த்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார். அவரைத்தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா, தாம் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளும்போது சுமார் 12,000 முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகள் முடிவுறுத்தப்படாமல் நிலுவையில் இருந்ததாகவும், அவற்றில் சுமார் 9000 முறைப்பாடுகள் தம்மால் முடிவுறுத்தப்பட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். அதுமாத்திரமன்றி கடந்தகாலங்களில் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்புக்கள் மிகமுக்கிய மனித உரிமை மீறல் பிரச்சினையாகக் காணப்பட்டதாகவும், குறிப்பாக 2023 இல் பொலிஸ்காவலின் கீழான உயிரிழப்பு தொடர்பில் 24 சம்பவங்கள் பதிவாகியிருந்ததாகவும் சுட்டிக்காட்டிய அவர், இவற்றை முழுமையாக முடிவுக்குக்கொண்டுவரும் நோக்கில் பொலிஸாருக்குரிய வழிகாட்டல்களைத் தயாரித்து வெளியிட்டிருப்பதாகத் தெரிவித்தார். அதேபோன்று அண்மையகாலங்களில் போதைப்பொருளை இல்லாதொழிக்கும் நோக்கில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் 'யுக்திய' செயற்திட்டத்தினால் பொதுமக்களின் மனித உரிமைகள் மீறப்படுவது பற்றி 44 முறைப்பாடுகள் தமக்குக் கிடைக்கப்பெற்றிருப்பதாக நிமல் புஞ்சிஹேவா குறிப்பிட்டார். அதனையடுத்து சிறுவர்களிடம் விசாரணைகளை மேற்கொள்ளல், பெண்களை இரவு நேரத்தில் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச்செல்லல், அவ்வாறு அழைத்துச்செல்லும்போது பெண் பொலிஸ் அதிகாரிகள் உடனில்லாதிருத்தல் போன்ற விடயங்கள் பற்றி ஆராய்ந்து, உரிய வழிகாட்டல்களை பொலிஸாருக்கு வழங்கியிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். மேலும் ஆணைக்குழுவில் கல்வி மற்றும் பயிற்சி வழங்கல் பிரிவுக்குப் பொறுப்பாக செயற்படும் ஆணையாளர் தனராஜ் கருத்து வெளியிடுகையில், பாடசாலை மாணவர்களுக்கான பாடத்திட்டத்திலும், ஆசிரியர் கற்பித்தல் செயற்திட்டத்திலும் மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை உள்வாங்குவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும், விசேட தேவையுடையோருக்கு அவசியமான பயற்சிகள் வழங்கப்பட்டுவருவதாகவும் கூறினார். அதேவேளை பாலின அடிப்படையிலான வன்முறைகளை முடிவுக்குக்கொண்டுவருவதுடன் பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு ஆணைக்குழுவினால் மேற்கொள்ளப்படும் நகர்வுகள் பற்றி ஆணையாளர் பர்ஸானா ஹனீஃபாவும், சர்வதேச சட்டங்கள் மற்றும் பிரகடனங்களுக்கு அமைவாக இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரத்தை உறுதிப்படுத்துவதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் ஆணையாளர் ஜெஹான் குணதிலகவும் தெளிவுபடுத்தினர். இதன்போது நிகழ்நிலைக்காப்பு சட்டமூலம், உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம், பாலியல் உறவுக்கு சம்மதம் தெரிவிக்கும் வயதெல்லையைக் குறைக்கும் வகையில் தண்டனைச்சட்டக்கோவையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சமர்ப்பிக்கப்பட்ட திருத்தச்சட்ட மசோதா என்பன தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கரிசனைகள் வெளிப்படுத்தப்பட்டு, பரிந்துரைகளும் சமர்ப்பிக்கப்பட்டதாக ஜெஹான் குணதிலக சுட்டிக்காட்டினார். அதேவேளை தற்போது நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுவரும் நிலையில், இவ்வாறானதொரு பிரத்யேக சட்டம் நாட்டுக்கு அவசியமா எனக் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதிலளித்த ஜெஹான் குணதிலக கூறியதாவது: 'நாம் நாட்டின் பாதுகாப்புத்துறைசார் கட்டமைப்பு அல்ல. எனவே இவ்வாறானதொரு சட்டம் அவசியமா? இல்லையா? என்பது பற்றி எம்மால் அரசாங்கத்துக்கு ஆலோசனை வழங்கமுடியாது. மாறாக இச்சட்டப்பிரயோகத்தினால் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படும் பட்சத்தில், அதுசார்ந்த ஆலோசனைகளையே எம்மால் வழங்கமுடியும். இருப்பினும் பயங்கரவாதத்துடன் தொடர்புடைய விவகாரங்களைக் கையாள்வதற்குரிய சரத்துக்களை நாட்டின் பொதுச்சட்டத்தில் உள்ளடக்கமுடியும் எனவும், அதற்கென விசேட சட்டம் அவசியமா எனவும் நாம் ஏற்கனவே வினவியிருக்கின்றோம் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180373
  6. Published By: VISHNU 04 APR, 2024 | 03:23 AM வடமாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் அவர்களுக்கும், யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத்தூதுவர் சாய் முரளி அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று புதன்கிழமை (3) மாலை யாழ்ப்பாணம் மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய தூதர அலுவலகத்தில் நடைபெற்றது. இச் சந்திப்பில் வட மாகாணத்தில் இளைஞர்கள் மற்றும் ஸ்டார்ட்அப் சுற்றுச் சூழலை மையமாகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகள், திறன் மேம்பாடு மற்றும் சமூக ஈடுபாடு பற்றியும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் கல்விக்காக மேற்கொள்ளும் திட்டங்கள் பற்றியும் விரிவாக கலந்துரையாடப்பட்டன. இதில் யாழ்ப்பாண இந்திய உதவித்துணைத் தூதுவர் தலைமை அதிகாரி பாஸ்கர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/180375
  7. வாட்ஜ் பேங்க்: கச்சத்தீவுக்குப் பதிலாக இந்தியா பெற்ற 6,500 சகிமீ பகுதியில் என்ன உள்ளது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் காங்கிரஸ் ஆட்சியின்போது கச்சத்தீவை இலங்கைக்கு தந்துவிட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டிவரும் நிலையில், அதற்குப் பதிலாக முக்கியத்துவம் வாய்ந்த 'Wadge Bank' பகுதியை பெற்றதாக காங்கிரஸ் கூறியிருக்கிறது. இந்த Wadge bank பகுதி எங்கே இருக்கிறது? இதன் முக்கியத்துவம் என்ன? 1974ல் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பாக் நீரிணை பகுதியில் எல்லையை வகுக்கும்போது, கச்சத்தீவை இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்துவிட்டதாக பா.ஜ.க. குற்றம்சாட்டி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பா.ஜ.கவின் பெரும்பாலான தலைவர்கள் இந்த விவகாரத்தை முன்னிறுத்திப் பேசிவருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கடல் எல்லையைப் பிரிக்கும்போது, வளம்மிக்க 'வாட்ஜ் பேங்க்' பகுதியை இந்தியா பெற்றுத்தந்தாக காங்கிரஸ் கட்சி கூறியிருக்கிறது. இந்தப் பகுதி எப்படி இந்தியாவுக்குக் கிடைத்தது? வாட்ஜ் பேங்க் பகுதியின் மீது இந்தியாவின் இறையாண்மை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் பகுதியில் எல்லையை வகுக்கும் வகையில் இரு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. முதலாவது ஒப்பந்தம் 1974ல் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின்படி, பாக் நீரிணை பகுதியில் எல்லை வகுக்கப்பட்டது. இதன்படியே கச்சத்தீவு இலங்கை பகுதியைச் சேர்ந்தது என முடிவெடுக்கப்பட்டது. இரண்டாவது ஒப்பந்தம் 1976ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் மன்னார் வளைகுடா பகுதியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான எல்லையை வரையறுத்தது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலர் கேவல் சிங்கும் இலங்கையின் வெளியுறவுத் துறை செயலர் டபிள்யு. டி.ஜெயசிங்கேவும் கையெழுத்திட்டனர். இதற்குப் பிறகு கேவல் சிங், டபிள்யு டி ஜெயசிங்கேவுக்கு ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதத்தில் வாட்ஜ் பேங்க் பகுதி பற்றி விரிவாகக் குறிப்பிட்டார். "வாட்ஜ் பேங்கில் மீன் பிடிப்பது தொடர்பாக இரு அரசுகளுக்கும் இடையில் பின்வரும் புரிந்துணர்வு எட்டப்பட்டிருக்கிறது. 1. கன்னியாகுமரிக்கு அருகில் உள்ள வாட்ஜ் பேங்க், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தைச் சேர்ந்தது. அந்தப் பகுதியின் மீதும் அதன் வளங்கள் மீதும் இந்தியாவுக்கு முழு இறையாண்மை உண்டு. 2. இலங்கையைச் சேர்ந்த மீன்பிடி படகுகளோ, மீனவர்களோ வாட்ஜ் பேங்க் பகுதியில் மீன் பிடிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக மூன்று ஆண்டுகளுக்கு இந்தியா உரிமம் வழங்கும் படகுகள் மட்டும் அங்கே மீன் பிடிக்கலாம். இந்த காலகட்டத்திற்குப் பிறகு வாட்ஜ் பேங்க் பகுதியில் இலங்கை மீன்பிடிப் படகுகள் மீன் பிடிக்கக்கூடாது. 3. இதற்காக இந்தியா விதிக்கும் கட்டணத்தையும் நிபந்தனைகளையும் இலங்கை மீன்பிடிப் படகுகள் ஏற்க வேண்டும். 4. வாட்ஜ் பேங்க் பகுதியில் பெட்ரோலியமோ, பிற தனிமங்களோ கிடைக்கிறதா என இந்தியா ஆராய நினைத்தால், அது பற்றி இலங்கைக்குத் தெரிவிக்கப்படும். இந்தியா சொல்லும் தேதியில் இலங்கை படகுகள் வருவது நிறுத்தப்பட வேண்டும். 5. வாட்ஜ் பேங்க் பகுதியில் இலங்கையின் படகுகள் மீன் பிடிப்பது தடுக்கப்படுவதால், புதிதாக மீன்பிடி மண்டலங்களை உருவாக்க இந்தியா இலங்கைக்கு உதவிசெய்யும்" என அந்தக் கடிதத்தில் கூறினார். இதனை ஏற்பதாக டபிள்யு. டி. ஜெயசிங்கே பதில் கடிதம் ஒன்றை எழுதினார். இந்த ஒப்பந்தத்தின்படியே வாட்ஜ் பேங்க் பகுதி இந்தியாவுக்குக் கிடைத்தது. வாட்ஜ் பேங்க் பகுதி எங்கேயிருக்கிறது? வாட்ஜ் பேங்க் என்பது கன்னியாகுமரிக்கு தெற்கில் 50 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள கடற்பகுதி. சரியாகச் சொல்வதெனில், கன்னியாகுமரிக்குத் தெற்கில், கடலடியில் அமைந்துள்ள கண்டத்திட்டின் முனைப் பகுதி இது. இது இந்தியாவின் கடல் எல்லை பகுதிக்கு அப்பால் இருந்தாலும், அதன் மீதான உரிமையை இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளும் உறுதிசெய்துள்ளன. இந்தப் பகுதியில் கடலின் ஆழம் 200 மீட்டர் அளவுக்கு இருக்கும். வாட்ஜ் பேங்க் பகுதி 4,000 சதுர மைல் (சுமார் 6,500 சகிமீ) பரப்பளவுடையது. இந்தப் பகுதியில் கடல் பல்லுயிர் வளம் அதிகம் என்பதால் மீன் வளமும் அதிகம். இந்த கடற்பகுதியில் வெப்ப நிலை மிதமானதாக இருந்தாலும், உப்புத் தன்மை அதிகமாக இருக்கும். இந்தப் பகுதி மீன்கள் இனப்பெருக்கம் செய்ய உகந்த பகுதியாக கருதப்படுகிறது. மே மாதம் முதல் அக்டோபர் வரை மீன் பிடிக்க மிகச் சிறந்த காலமாகக் கருதப்படுகிறது. இந்தப் பகுதியில் மீன் பிடிக்க கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சல், சின்ன முட்டம் துறைமுகத்திலிருந்து மீன்பிடிப் படகுகள் செல்கின்றன. கேரளாவின் விழிஞ்சம் பகுதியிலிருந்தும் படகுகள் வருகின்றன. இந்தப் பகுதியில் சுமார் 425 வகையான மீன்கள் காணப்படுகின்றன. இந்தப் பகுதியிலிருந்து வருடத்திற்கு 65,000 மெட்ரிக் டன்கள் அளவுக்கு மீன்களைப் பிடிக்க முடியும். பட மூலாதாரம்,SRILANKA FISHERIES MAGAZINE 1976 வாட்ஜ் பேங்கில் பெட்ரோலியம் உள்ளதா? வாட்ஜ் பேங்க் பகுதி மீன் மற்றும் பல்லுயிர் வளத்திற்காக அறியப்பட்ட பகுதியாக இருந்தாலும் இந்தப் பகுதியில் பெட்ரோலியம் கிடைக்கும் சாத்தியமும் இருப்பதாக இந்தியா கருதுகிறது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் ஹைட்ரோ கார்பன் இயக்குநரகம் கடந்த ஜனவரி மாதம் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டது. அந்த நோட்டீஸில், வாட்ஜ் பேங்க் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்று இடங்களில் பெட்ரோலியம் கிடைக்க வாய்ப்புள்ளதா என ஆராய ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் எனக் கூறியது. ஆனால், இதற்கு கன்னியாகுமரி மற்றும் கேரளாவைச் சேர்ந்த மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் இதற்குக் கண்டனம் தெரிவித்தனர். இங்கு எண்ணெய் துரப்பணம் செய்யக்கூடாது முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான எம்.ஜி. தேவசகாயம் மத்திய மீன் வளத் துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றையும் எழுதினார். ஆனால், இந்தப் பகுதியில் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவைத் துரப்பணம் செய்யும் எண்ணம் இந்தியாவுக்கு நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. https://www.bbc.com/tamil/articles/cd1007j01y7o
  8. 2022 ஆம் ஆண்டில் உலகின் மிக வயதான மனிதர் என்று கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுலா ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா தனது 114 வயதில் செவ்வாய்க்கிழமை காலமானதாக அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் தெரிவித்தனர். “ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா 114 வயதில் நித்தியத்தை கடந்துவிட்டார்” என்று வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ சமூக ஊடக தளமான X இல் தெரிவித்துள்ளார். பெரெஸ் பெப்ரவரி 4, 2022 அன்று உயிருடன் இருக்கும் மிக வயதான மனிதராக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டார். 2022 நிலவரப்படி 11 குழந்தைகளின் தந்தையான அவருக்கு 41 பேரக்குழந்தைகள், 18 கொள்ளுப் பேரக்குழந்தைகள் மற்றும் 12 கொள்ளுப் பேரக்குழந்தைகள் உள்ளனர். விவசாயியான இவர் மே 27, 1909 இல் தச்சிராவில் உள்ள எல் கோப்ரே நகரில் பிறந்தார், தனது ஐந்தாவது வயதில், அவர் தனது அப்பா மற்றும் சகோதரர்களுடன் விவசாயத்தில் பணியாற்றத் தொடங்கினார் என்று 2022 இன் கின்னஸ் அறிக்கை கூறுகிறது. https://thinakkural.lk/article/297977
  9. பங்களாதேஷுடனான தொடர் வெற்றியை அடுத்து ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் பாகிஸ்தானை பின்தள்ளியது இலங்கை Published By: VISHNU 03 APR, 2024 | 07:21 PM (நெவில் அன்தனி) சட்டோக்ராமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷை 192 ஓட்டங்களால் வெற்றிகொண்டு தொடரை 2 - 0 என முழுமையாக கைப்பற்றிய இலங்கை, ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான அணிகள் நிலையில் பாகிஸ்தானை பின்தள்ளி 4ஆம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது போட்டியில் வெற்றிபெற்றதன் மூலம் மேலும் 12 வெற்றிப் புள்ளிகளை ஈட்டிய இலங்கை, இதுவரை 2 வெற்றிகளுடன் 24 வெற்றிப் புள்ளிகளை ஈட்டி 50.00 சதவீத புள்ளிகளுடன் 3 இடங்கள் தாவி 4ஆம் இடத்தை அடைந்துள்ளது. இதனை அடுத்து 2025இல் நடைபெறவுள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை இலங்கை சற்று அதிரித்துக்கொண்டுள்ளது. ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் அணிகள் நிலையில் இந்தியா (68.15%), அவுஸ்திரேலியா (62.50%), நியூஸிலாந்து (50.00%) முதல் 3 இடங்களில் இருக்கின்றன. 2023-2025 ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் சுழற்சியில் தற்போதைய வெற்றியுடன் பெரு உற்சாகம் அடைந்துள்ள இலங்கை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளது. இந்த சுழற்சியில் சொந்த மண்ணில் இலங்கைக்கு இரண்டு தொடர்கள் நடைபெறவுள்ளன. இந்த வருட இறுதியில் நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இலங்கை, அடுத்த வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவை வரவேற்கவுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் தலா 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த மூன்று தொடர்களிலும் இலங்கை முழுமையான வெற்றிகளை ஈட்டினால் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியனஷிப் இறுதிப் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கும். https://www.virakesari.lk/article/180364
  10. தாய்வான் பூகம்பம் - சுரங்கப்பாதையில் சிக்குண்டுள்ள 77 பேரை மீட்க தீவிர முயற்சி 03 APR, 2024 | 05:10 PM தாய்வானை தாக்கிய பூகம்பம் காரணமாக 127 பேர் மற்றும் சுரங்கப்பாதைகள் மற்றும் இடைநடுவில் பேருந்ர்களிலும் சிக்குண்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹ_வாலியனில் மலைகளிற்கு அடியில் உள்ள ஜின்வென் கிங்சூய் சுரங்கப்பாதைகளில் 77 பேர் சிக்குண்டுள்ளனர் என தீயணைப்புதுறையினர் தெரிவித்துள்ளனர். டராகோ தேசிய பூங்காவில் உள்ள சொங்டே சுரங்கப்பாதைக்குள் ஜேர்மனியை சேர்ந்த இரண்டு சுற்றுலாப்பயணிகள் சிக்குண்டுள்ளனர். இதேவேளை டராகோ தேசிய பூங்காவில் இருந்து பயணித்துக்கொண்டிருந்த பேருந்துகளில் 50 சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/180359
  11. யாழில் இன்று முதல் போக்குவரத்தில் புதிய நடைமுறை! யாழ்ப்பாணக் குடாநாட்டில் இன்று (03) முதல் போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என யாழ்ப்பாணம் மாவட்ட மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணக் குடாநாட்டின் போக்குவரத்தைச் சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களைச் செலுத்துகின்றவர்கள், தொலைபேசிகளை பேசியப்படி வாகனங்களை செலுத்துபவர்கள், பாதசாரிகள் கடவைகள் இருக்கத்தக்கதாக அதற்கு அருகாக வீதியைக் கடக்கின்றவர்கள், வீதிகளில் வாகனங்களின் பயணப்பாதையில் எச்சில், வெற்றிலை என்பனவற்றைத் துப்புகின்றவர்கள், போக்குவரத்து ஒழுக்க மீறல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது இன்று முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். அத்துடன், பாடசாலைகள், கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அருகாகவும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்று முதல் பலப்படுத்தப்படுகின்றன. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வுத் திட்டத்தை இந்த வருடமும் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சீரானதும் ஆரோக்கியமானதுமான போக்குவரத்தை மேற்கொண்டு, தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் என தெரிவித்தார். https://thinakkural.lk/article/298010
  12. மனிதாபிமான பணியாளர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலின் எதிரொலி; தங்கள் நடவடிக்கைகளை இடைநிறுத்திய தொண்டு அமைப்புகள் - காசா பெரும் மனிதாபிமான நெருக்கடியில் சிக்கும் அபாயம் Published By: RAJEEBAN 03 APR, 2024 | 03:31 PM காசாவில் மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து தொண்டு நிறுவனங்கள் தங்கள் மனிதாபிமான பணிகளை இடைநிறுத்தியுள்ளதை தொடர்ந்து மனிதாபிமான நெருக்கடி தீவிரமடையும் ஆபத்து உருவாகியுள்ளது. வேர்ல்ட் சென்ரல் கிச்சனின் வாகனத்தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் ஏழு மனிதாபிமான பணியாளர்கள் கொல்லப்பட்டதை தொடர்ந்து காசாவில் மனிதாபிமான பணியி;ல் ஈடுபட்டுள்ள பல அமைப்புகள் தங்கள் பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு தங்கள் பணிகளை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளன. இது முன்னர் ஒருபோதும் இடம்பெறாத விடயம் என தெரிவித்துள்ள அனெரா என்ற தொண்டு நிறுவனம் பல மனிதாபிமான பணியாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் கொல்லப்பட்ட நிலையில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது பாதுகாப்பான நடவடிக்கை இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளோம் என தெரிவித்துள்ளது. மனிதாபிமான உதவிகள் இடைநிறுத்தம் பாலஸ்தீன மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய மோசமான பாதிப்புகளை நாங்கள் புரிந்துகொள்கின்றோம் எனினும் மனிதாபிமா உதவி விநியோகத்தின் போது அதிகரிக்கும் ஆபத்துகள் எங்கள் பணியாளர்கள் தாங்கள் மீண்டும் பாதுகாப்பாக பணியாற்ற முடியும் என கருதும்வரை எங்கள் பணிகளை இடைநிறுத்தவேண்டிய நிலையை உருவாக்கியுள்ளது என அனரா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. காசாவில் பட்டினியும் வறுமையும் எந்த நேரத்திலும் உருவாகலாம் என கடந்த மாதம் ஐநா தெரிவித்திருந்தது. பாலஸ்தீன பகுதியில் பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பட்டினியை எதிர்கொள்பவர்களின் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துள்ளது என ஒக்ஸ்பாம் தெரிவித்துள்ளது. பட்டினி நிலைமை காரணமாக 27 குழந்தைகள் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர் என ஹமாசின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில் இஸ்ரேலிய குண்டுவீச்சு மற்றும் எல்லைகளில் விதிக்கப்பட்டுள்ள போக்குவரத்து தடைகளின் மத்தியில் அவசரமாக உணவுதேவைப்படுபவர்களிற்கான உணவை வழங்குவதற்காக சைப்பிரசிலிருந்து கடல்வழி மார்க்கமொன்றை உருவாக்கும் நடவடிக்கைகளில் வேர்ல்ட் சென்ரல் கிச்சன் ஈடுபட்டிருந்தது. இந்த சூழ்நிலையிலேயே திங்கட்கிழமை அதன் வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த தாக்குதலில் பிரிட்டனை சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஜோன் சப்மன் ஜேம்ஸ் ஹென்டர்சன் ஜோம்ஸ் கேர்பி மூவரும் தொண்டர் அமைப்பின் பாதுகாப்பு குழுவில் இணைந்து பணியாற்றிக்கொண்டிருந்தனர். இந்த குழுவின் தலைவரான அவுஸ்திரேலிய பெண் ஜோமி பிரான்கோமும் கனடா போலந்து பிரஜைகளும் பாலஸ்தீன பிரஜையொருவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். அவுஸ்திரேலிய பெண்மணி உலகின் பல நாடுகளில் பணியாற்றியவர். வேர்ல்ட் சென்ரல் கிச்சன் ஏற்பாடு செய்த மனிதாபிமான கப்பல்கள் அன்றைய தினம் 400 மெட்ரிக்தொன் உணவுப்பொருட்களுடன் வந்து சேர்ந்தன இதற்கான நிதியை ஐக்கிய அரபு இராச்சியம் வழங்கியிருந்தது. எனினும் 100 தொன் உணவு இறக்கப்பட்ட நிலையிலேயே இஸ்ரேலின் தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து கப்பலை மீண்டும் சைப்பிரசிற்கு திரும்புமாறு வேர்ல்ட் சென்ரல் கிச்சன் கேட்டுக்கொண்டுள்ளது. இதேவேளை மனிதாபிமான வாகனத்தொடரணி மீது இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்டமை குறித்த பல விபரங்களை இஸ்ரேலில் இருந்து வெளியாகும் ஹரெட்ஸ் வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள்காட்டி இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. வேர்ல்ட் சென்ரல் கிச்சன் அமைப்பின் இலச்சினையுடன் பயணித்துக்கொண்டிருந்த வாகனத்தொடரணி மீது இஸ்ரேலின் ஆளில்லா விமானங்கள் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளன. https://www.virakesari.lk/article/180346
  13. பட மூலாதாரம்,GETTY IMAGES 36 நிமிடங்களுக்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் விவிபேட் - VVPAT (Voter-Verified Paper Audit Trail) இயந்திரங்கள் மூலம் பெறப்பட்ட ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்க முடியுமா என்று அரசாங்கம் மற்றும் தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தற்போது இருக்கும் நடைமுறையில், ஒவ்வொரு தொகுதியிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலா ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகைச் சீட்டுகள் மட்டுமே எண்ணப்படுகின்றன. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது அரசு மற்றும் தேர்தல் ஆணையத்திடம் நீதிமன்றம் பதில் கோரியுள்ளது. அருண்குமார் அகர்வால் தாக்கல் செய்த மனுவைத் தொடர்ந்து நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் இந்த விஷயத்தில் வாக்களிக்க அழைப்பு விடுத்துள்ளனர். விவிபேட் மூலம் வாக்காளர்கள் தங்களது வாக்கு தாங்கள் விரும்பிய வேட்பாளருக்குச் சென்றிருக்கிறதா என்று சரிபார்க்க வாய்ப்பு கிடைக்கிறது. விவிபேட் இயந்திரம் ஒரு ஒப்புகைச் சீட்டை அளிக்கிறது, அதில் வாக்காளர் அவர் அளித்த வாக்கைப் பார்க்க முடியும். அதில் ஏதேனும் தவறு இருந்தால், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக அந்த ரசீது சீல் வைக்கப்பட்ட உறையில் வைக்கப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த சர்ச்சைகள் கடந்த 2019-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு, பல எதிர்க்கட்சிகள் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பின. விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளை 100% சரிபார்க்குமாறு எதிர்க்கட்சிகள் முதலில் உச்ச நீதிமன்றத்திடமும், பின்னர் தேர்தல் ஆணையத்திடமும் கேட்டிருந்தன. ஆனால் நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் இந்தக் கோரிக்கையை நிராகரித்தன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுவதாக சில எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் நிராகரித்து அதில் உண்மை இல்லை என்று கூறியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒரு சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும் தமிழ்நாட்டில் எதிர்ப்பலை தேர்தல் ஆணையத்தின் புதிய நடைமுறையால் ஒவ்வொரு தொகுதிகளிலும் 2 சதவீதம் தவறு வருவதற்கு வாய்ப்பு உள்ளது என தேர்தல் ஆணையமே கூறியுள்ளதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். ஆகவே, 2 சதவீதம் வாக்குகளில் வித்தியாசம் ஏற்படுமானால் அதை உடனடியாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்று அவர் கூறுகிறார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் ஒப்புகைச் சீட்டு (விவிபேட்) வழங்குவது தொடர்பான விதிமுறைகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரியும், தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய நடைமுறையை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இது குறித்து பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இதுவரையில் நடைபெற்ற தேர்தல்களுக்கும், தற்போது நடைபெறவுள்ள தேர்தலுக்கு இடையே புதிய பிரிவை தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இது தவறானது என தேர்தல் ஆணையரிடம் முன்பே கூறியிருந்தோம். ஆனால் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இப்போது வழக்கு தொடர்ந்து இருக்கிறோம்." "புதிய மாற்றத்தின்படி ஒரு தொகுதியில் 2 சதவீதம் வாக்குப்பதிவில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது என தேர்தல் ஆணையமே கூறுகிறது. உதாரணத்திற்கு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள 22 லட்சத்து 30 ஆயிரம் வாக்களர்களில் 2 சதவீதம் வாக்கு என்பது 46 ஆயிரம் வாக்குகள். அப்படியெனில் ஏறத்தாழ 46 ஆயிரம் வாக்குகள் வரையில் தவறு நடப்பதற்கு வாய்ப்பு உள்ளது. ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கு 46 ஆயிரம் வாக்குகள் என்பது சாதாரண விஷயம் அல்ல. கடந்த 2019-ல் விசிக தலைவர் திருமாவளவன் கூட மூன்றாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார்." விவிபேட் ஒப்புகைச்சீட்டை நூறு சதவீதம் நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இதற்காக நீதிமன்றத்தை திமுக நாடியுள்ளதாக கூறினார். விவிபேட் இயந்திரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை கடந்த மாதம் வி.சி.க. தலைவர் திருமாவளவன் சந்தித்து மனு அளித்து இருந்தார். அந்த மனுவில், வட இந்திய மாநிலங்களில் இன்றும் மின்னணு எந்திரங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மின்னணு எந்திரங்களில் முறைகேடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளது என்ற அச்சம் கட்சிகளிடையே உள்ளது. 100 சதவீத விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ணி தேர்தல் முடிவை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாக அவர் தெரிவித்து இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஒரு விவிபேட்-இல் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 சீட்டுகளை அச்சிட முடியும் விவிபேட் இயந்திரம் எப்படி வேலை செய்கிறது? மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளரின் பெயருக்கு அருகே உள்ள பட்டனை வாக்காளர் அழுத்துகிறார். அவர் அழுத்தும் அதேநேரத்தில், வேட்பாளரின் பெயர், எண் மற்றும் சின்னம் அடங்கிய ஒப்புகைச் சீட்டு விவிபேட் இயந்திரத்தில் வாக்காளர்களுக்கு 7 வினாடிகள் தெரியும். அதன் பிறகு, சீட்டு தானாகவே துண்டிக்கப்பட்டு, ஒரு ‘பீப்’ ஒலியுடன் சீல் செய்யப்பட்ட பெட்டியில் சேகரிக்கப்படும். வாக்குப்பதிவின் போது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டால், அது குறித்தும் தெரிவிக்கப்படும். நீங்கள் தீர்மானித்தபடி வாக்களித்தீர்களா என்பதைச் சரிபார்க்க வாக்காளருக்கு வாய்ப்பு கிடைக்கும். விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும். விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. வாக்காளர்கள் விவிபேட் இயந்திரங்களை திறக்கவோ. அவற்றைத் தொடவோ முடியாது. ஒரு விவிபேட் இயந்திரத்தில் உள்ள ஒரு காகித ரோலில் 1,500 ஒப்புகைச் சீட்டுகளை அச்சிட முடியும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீதான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள விவிபேட் ஒப்புகளைச் சீட்டுகள் சோதனை செய்யப்பட்டன. படக்குறிப்பு, முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி முன்னாள் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன? முன்னாள் தேர்தல் ஆணையர் எஸ். ஒய். குரேஷி இதுகுறித்து பிபிசிக்கு அளித்த பேட்டியில், தேர்தலில் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்த அனைத்து வாக்குச்சாவடிகளிலும் விவிபேட் வசதி மற்றும் ஒப்புகைச் சீட்டுகளை எண்ணுதல் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும், என்றார். “ஓரிடத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற முதல் இரண்டு வேட்பாளர்கள் வாக்குச் சாவடியில் மறு வாக்கு எண்ணிக்கை கோரினால், அதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும், இது முழுமையான மறு வாக்கு எண்ணிக்கைக்கான விருப்பத்தை வழங்கும்,” என்றார். தொழில்நுட்ப வல்லுநர்களும் குரேஷியின் இதே கருத்தைத் தெரிவிக்கின்றனர். வாக்குப்பதிவு இயந்திரம் பாதுகாப்பாக உள்ளதா என்பதைச் சரிபார்க்க விவிபேட் ஒரு தீர்வு என்று அவர்கள் கூறுகின்றனர். பிபிசி மராத்தியிடம் பேசிய புனேவைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர் மாதவ் தேஷ்பாண்டே, விவிபேட் இயந்திரத்தால் வாக்கு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட்டுக்கு ஒரு செய்தியை அனுப்ப முடியும் என்றார். அதன்மூலம் அது ஒரு தனி ரசீதை அச்சிட முடிந்தால், அது பாதுகாப்பானதாகக் கருதப்படும், என்றார். “வாக்குப்பதிவுக்குப் பிறகும் விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தின் கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டும்,” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விவிபேட் இயந்திரம் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். வாக்களித்த வாக்காளர் மட்டுமே சீட்டில் உள்ள விவரங்களைப் பார்க்க முடியும் EVM-இல் வாக்குகள் எப்படி எண்ணப்படுகின்றன? முதலில், தேர்தல் அதிகாரி மற்றும் அவருடன் பணிபுரியும் அதிகாரிகள் வாக்களிப்பின் ரகசியம் காக்க உறுதிமொழி எடுத்துக்கொள்கிறார்கள். அதன்பிறகு அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் சரிபார்க்கப்படுகின்றன. இது நடக்கும்போது, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வாக்கு எண்ணும் முகவர்களுடன் வாக்கு எண்ணும் நிலையங்களில் இருக்க உரிமை உண்டு. இந்த முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்க்கலாம். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதன் பிறகுதான் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் குறிப்பிட்ட வரிசையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இயக்குவதன் மூலம் எண்ணப்படுகின்றன. அதன்பிறகு, பல்வேறு வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. பின்னர் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான எண்கள் கூட்டப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விவிபேட் இயந்திரங்களைத் திறக்க தேர்தல் அதிகாரிகளுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது விவிபேட் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்ப்பு கடந்த 2019-ஆம் ஆண்டில், தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் எண்ணிக்கை முடிந்ததும், அவற்றின் மொத்த எண்ணிக்கை விவிபேட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்கப்பட்டது. ஒவ்வொரு வாக்கு எண்ணும் கூடத்துக்கும் தனி விவிபேட் சாவடி உள்ளது. எண்ணிக்கையில் ஏதேனும் தவறு இருந்தாலோ, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டாலோ அதுபற்றி உடனடியாக தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டியது தேர்தல் நடத்தும் அதிகாரியின் பொறுப்பு. இந்த அறிவிப்பு கிடைத்ததும், அந்த இடத்தில் வாக்கு எண்ணிக்கையைத் தொடரவோ, வாக்கு எண்ணிக்கையை ரத்து செய்யவோ அல்லது மறு வாக்குப்பதிவு நடத்தவோ தேர்தல் ஆணையம் உத்தரவிடலாம். வாக்கு எண்ணிக்கை பிரச்னையின்றி முடிந்து, தேர்தல் ஆணையத்தால் பிற உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படாவிட்டால், தேர்தல் நடத்தும் அலுவலர் முடிவை அறிவிக்கலாம். 2019-ஆம் ஆண்டு தேர்தலில் கூடுதல் இயந்திரங்கள் உட்பட 39.6 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் 17.4 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன. தேர்தல் ஆணையம் இந்த ஆண்டு சுவிதா என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது, அதில் வாக்குச்சாவடி முடிவுகளைப் பார்க்கலாம். https://www.bbc.com/tamil/articles/c2588r4vqgpo
  14. யாழ். சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. குறித்த தகவலை துறைமுகங்கள் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தனியார் துறையினருக்கு குத்தகை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை (jaffna international airport) தனியார் துறையினருக்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பில் உள்நாட்டு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் விருப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கு பொருத்தமான முதலீட்டாளரைத் தெரிவு செய்ததன் பின்னர் மேலதிக பணிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala de Silva) குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மத்தளை விமான நிலையத்தின் செயற்பாடுகளை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு மாற்றுவதற்கான யோசனை, நிதி அமைச்சிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். https://tamilwin.com/article/jaffna-international-airport-lease-nimal-siripala-1712112912?itm_source=parsely-api
  15. 03 APR, 2024 | 01:22 PM சென்னை: கச்சத்தீவு பற்றி பேசும் பாஜகவும் காங்கிரஸும், மீனவர்களைத் தாக்கும் இலங்கை கடற்படை மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்பது குறித்து விளக்க வேண்டும் என்று உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்தியப் பெருங்கடலில் செல்லும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சரக்குக் கப்பல்கள், பயணிகள் கப்பல்களைத் தாக்கி கொள்ளையடிக்கும் சோமாலியா கடற்கொள்ளையர்களிடம் இருந்து இக்கப்பல்களைப் பாதுகாக்கும் பணியில் இந்திய கடற்படை மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதற்கு அமெரிக்க அரசு உட்பட பல நாட்டு அரசுகள் பாராட்டு தெரிவித்துள்ளன. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கச் செல்லும்தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுத் தள்ளுகிறது. ஆடு, மாடுகளை ஓட்டிக்கொண்டு போவது போல, நமது மீனவர்களைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள். நமது மீனவர்களுக்கு சொந்தமான இயந்திரப் படகுகள், மீன்வலைகள் போன்றவை பறிமுதலும், சேதமும் செய்யப்படுகின்றன. மீனவர்கள் பிடித்த மீன்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. 1983-ம் ஆண்டில் இருந்து கடந்த 40 ஆண்டு காலமாக எவ்வித அச்சமுமில்லாமல் இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை வேட்டையாடி வருகிறது. ஆனால், அவர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்திய கடற்படை இதுவரை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ராமேசுவரத்துக்கு அருகிலுள்ள மண்டபத்தில் இந்திய கடலோரக் காவல்படையின் கப்பல்கள் நிறுத்தப்படுகின்றன. கடற்படையோ, கடலோரக் காவல்படையோ இதுவரை இலங்கை கடற்படைக்கு எதிராக ஒரு சிறுநடவடிக்கைகூட எடுக்கவில்லை. தயங்குவது ஏன்?: எங்கேயோ இருக்கிற சோமாலியா நாட்டுக் கடற்கொள்ளையர்களிடம் இருந்து உலக நாடுகளின் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் இந்தியக் கடற்படை, இலங்கை கொள்ளையர்களிடம் இருந்து நமது மீனவர்களைப் பாதுகாக்கும் கடமையைச் செய்யத் தயங்குவது ஏன்? கச்சத் தீவு பிரச்சினையில் பாஜகவும், காங்கிரஸும் மாறிமாறி குற்றம்சாட்டிக் கொண்டிருக்கின்றன. ஆனால், மன்னார் வளைகுடா பகுதியில் அத்துமீறி நமது மீனவர்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் இலங்கை கடற்படைக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் எடுக்க இந்தியக் கடற்படையும், கடலோரக் காவல்படையும் இதுவரை முன்வராதது ஏன் என்பதுகுறித்து மக்களிடம் இரு கட்சிகளும் விளக்க வேண்டும். https://www.virakesari.lk/article/180297 இலங்கைக் கடற்படை எல்லை தாண்டிச் சென்றா கைது செய்கின்றது?!
  16. விடுமுறையிலிருந்து கடமைக்கு சமூகமளிக்காத முப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இம்மாதம் 20ஆம் திகதி முதல் மே மாதம் 20ஆம் திகதி வரை பொது மன்னிப்புக் காலத்தை அமைச்சு அறிவித்துள்ளது. பொது மன்னிப்புக் காலம் அதன்படி, சேவையை விட்டு வெளியேறிய உறுப்பினர்கள் பொது மன்னிப்புக் காலத்திற்குள் சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இந்த காலத்தின் போது, சேவையை விட்டு வெளியேறிய முப்படைகளின் உறுப்பினர்கள் மீண்டும் இராணுவத் தலைமையகத்திற்குச் சென்று சட்டப்பூர்வமாக சேவையை விட்டு வெளியேற முடியும். ஒருவர் இராணுவத்திற்கு ஏதேனும் பணம் கொடுக்க வேண்டும் என்றால், அந்த பணமும் இங்கு வசூலிக்கப்படுகிறது. https://tamilwin.com/article/government-deadline-for-srilanka-tri-forces-1712141350
  17. யாழ். மாவட்டத்தில் (Jaffna District) போக்குவரத்து நடைமுறைகள் இறுக்கமாகக் கண்காணிக்கப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளனர். இது இன்றுமுதல் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக யாழ். மாவட்ட மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க தெரிவித்துள்ளார் அத்துடன், நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் (Police) களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். போக்குவரத்து ஒழுக்க மீறல் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ். மாவட்டத்தின் (Jaffna District) போக்குவரத்தை சீர்செய்வது தொடர்பில் பல்வேறு செயற்றிட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. யாழ்ப்பாணத்தில் (Jaffna) தலைக்கவசம் இல்லாமல் வாகனங்களைச் செலுத்துகின்றவர்கள், திறன்பேசிகள் மற்றும் அலைபேசிகளைக் கதைத்தபடி சாரத்தியத்தில் ஈடுபடுகின்றவர்கள், பாதசாரிகள் கடவைகள் இருக்கத்தக்கதாக அதற்கு அருகாக வீதியைக் கடக்கின்றவர்கள், வீதிகளில் வாகனங்களின் பயணப்பாதையில் எச்சில், வெற்றிலை என்பனவற்றைத் துப்புகின்றவர்கள். போக்குவரத்து ஒழுக்க மீறல்களில் ஈடுபடுகின்றவர்கள் மீது இன்றுமுதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும். வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அத்துடன், பாடசாலைகள், கல்வி நிலையங்கள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அருகாகவும் நெரிசல் மிகுந்த இடங்களிலும் கூடுதலான பொலிஸார் களமிறக்கப்பட்டு வீதிப் பாதுகாப்பு நடவடிக்கைகள் இன்றுமுதல் பலப்படுத்தப்படுகின்றன. கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து விழிப்புணர்வுத் திட்டத்தை இந்த வருடமும் தொடர்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் சீரானதும் ஆரோக்கியமானதுமான போக்குவரத்தை மேற்கொண்டு, தேவையற்ற அசௌகரியங்களைத் தவிர்க்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://tamilwin.com/article/traffic-rules-strictly-monitored-in-jaffna-1712120057?itm_source=parsely-api
  18. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு இலங்கையை வந்தடைந்த முருகன், ரொபர்ட் பயஸ், ஜெயகுமாரிடம் விசாரணை இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ள நிலையில் அவர்களிடத்தில் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் விசாரணை தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்குப் பிறகு விமானம் மூலம் இலங்கைக்கு திரும்பிய முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபர்ட் பயஸ் ஆகியோர் இன்று காலை இலங்கையை வந்தடைந்திருந்தனர். இரண்டாம் இணைப்பு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைக் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் தற்போது இலங்கையை வந்தடைந்துள்ளனர். இவர்கள் மூவரும் இன்று(03) இலங்கைக்கு அழைத்து வரப்படவுள்ளதாக தமிழக சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார். குறித்த மூவரும், திருச்சி சிறப்பு முகாமிலிருந்து நேற்று இரவு 11.15 மணிக்கு சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இதன்படி சென்னை விமான நிலையத்திலிருந்து இலங்கை நோக்கி பயணித்த இவர்கள் மூவரும் தற்போது 11.30 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். மேலும் அவர்களுக்கு இலங்கைக்கு வருவதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் சட்டத்தரணி புகழேந்தி பாண்டியன் தெரிவித்திருந்தார்.' முதலாம் இணைப்பு இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி(Rajiv Gandhi) கொலை வழக்கிலிருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இன்று நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளதுடன் அவர்களுக்கு ஒருவழி கடவுச்சீட்டு (Passport)மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று முற்பகல் 10 மணியளவில் சென்னை விமான நிலையத்திலிருந்து அவர்கள் இலங்கை(Sri Lanka)நோக்கி பயணிக்கவுள்ளதாக, அவர்கள் சார்பில் வழக்குகளில் முன்னிலையான தமிழக சட்டத்தரணி புகழேந்தி உறுதிப்படுத்தியுள்ளார். ஒருவழி கடவுச்சீட்டு இந்நிலையில் அவர்களுக்கு இலங்கைக்கு செல்வதற்கு மாத்திரமே இந்தியாவிலுள்ள(India) இலங்கை துணை உயர்ஸ்தானிகரகம் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாக சட்டத்தரணி புகழேந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருக்கும் இலங்கையர்களுக்கு கடவுசீட்டு வழங்க நடவடிக்கை எடுத்த போதிலும் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்ட இந்த மூவருக்கும் ஒருவழி கடவுச்சீட்டு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக அங்கிருந்தும் கிடைக்கும் செய்திகள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் மேலும், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான முருகன், ரொபர்ட் பயஸ் மற்றும் ஜெயகுமார் ஆகியோர் இலங்கை வந்தவுடன் அவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தில் நெருக்கடியான சூழல் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்திருந்தார். லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, அவர்கள் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்து இறங்கிய உடன் இலங்கையின் பயங்கரவாத தகவல் பிரிவினரால் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாகவும், அதற்கான ஏற்பாட்டினை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டார். உலகளவில் சர்ச்சை உலகளவில் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான இலங்கையர்கள் பல மணி நேரம் தடுத்து வைக்கப்பட்டு விடுதலைப்புலிகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கலாம் என்றும் தெரிவித்திருந்தார். மேலும், இவர்களின் உடல் பாகங்கள் செயலிழக்கும் வகையில் இந்தியா அரசினால் மருந்து செலுத்தப்பட்டிருக்கலாம் எனவும், இதன் மூலம் அவர்கள் ஒரு வருடத்தில் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். https://tamilwin.com/article/murugan-robert-pius-and-jayakumar-came-sri-lanka-1712098918
  19. ‘வால் நட்சத்திரம்’ என்பது சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றி வரும் பனி, தூசி மற்றும் பாறைகளால் ஆன ஒரு விண் பொருள் ஆகும். ஒரு வால் நட்சத்திரமானது சூரிய குடும்பத்தின் உட்புற மண்டலத்தை நெருங்கும்போது, சூரியனின் வெப்பத்தால் அதில் உள்ள பனி ஆவியாகி, வால் நட்சத்திரத்தின் கருவைச் சுற்றி ஒருவித ஒளிரும் தன்மைகொண்ட வாயு மற்றும் தூசியால் ஆன வால் போன்ற அமைப்பு உருவாகிறது. இந்த வால் நட்சத்திரங்கள் காண்பதற்கு அரிதான நிகழ்வாகவும், வானியல் அற்புதங்களில் ஒன்றாகவும் பார்க்கப்படுகின்றன. அந்த வகையில் 70 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை சுற்றி வரக்கூடிய ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ என்ற வால்நட்சத்திரம் தற்போது பூமியை நெருங்கி வருகிறது. சுமார் 30 கி.மீ. நீள மையப் பகுதியை கொண்ட இந்த வால்நட்சத்திரம், தற்போதே தெரியத் தொடங்கிவிட்டதாகவும், தொலைநோக்கி உதவியுடன் இதனை பார்க்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு அடிவானத்தில் இந்த வால்நட்சத்திரம் தென்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த ’12 பி பான்ஸ்-புரூக்ஸ்’ வால்நட்சத்திரமானது 1385ஆம் ஆண்டு சீனாவிலும், 1457ஆம் ஆண்டு இத்தாலியிலும் தென்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இந்த ஆண்டு ஜூன் மாதம் இது பூமிக்கு மிக நெருக்கத்தில் வரும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் பிறகு இந்த வால்நட்சத்திரம் இனி 2095இல் தான் தோன்றும் என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/297959
  20. காஸாவில் மனிதாபிமானப் பணியாளர்கள் கொலை: இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோருகிறார் Published By: SETHU 03 APR, 2024 | 02:17 PM காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு இஸ்ரேலிய ஜனாதிபதி மன்னிப்பு கோரியுள்ளார். அதேவேளை, இத்தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. காஸாவில் இஸ்ரேல் திங்கட்கிழமை (01) நடத்திய தாக்குதலால் தனது ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்டனர் என அமெரிக்காவை தளமாகக் கொண்ட வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன் எனும் தொண்டு நிறுவனம் நேற்று தெரிவித்தது. இதையடுத்து காஸாவில் தனது பணிகளை இடைநிறுத்துவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அவுஸ்திரேலியா, போலந்து, பிரிட்டன் நாடுகளைச் சேர்ந்தவர்களுடன்; அமெரிக்க கனேடிய இரட்டைப் பிரஜாவுரிமையைக் கொண்ட ஒருவர் மற்றும் பலஸ்தீனியர் ஒருவர் இச்சம்பவத்தில் உயிரிழந்தனர் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காஸாவில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 7 பேர் கொல்லப்பட்ட தாக்குதல் ஒரு கடுமையான தவறு என இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளின் தலைவர் ஹேர்ஸி ஹலேவி தெரிவித்துள்ளார். 'இச்சம்பவம் ஒரு கடுமையான தவறு. அது நடந்திருக்கக் கூடாது' என அவர் கூறியுள்ளார். இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பான தனது ஆழ்ந்த கவலையை தெரிவிப்பதற்கும் மன்னிப்பு கோருவதற்காகவும் வேர்;ல்ட் சென்ட்ரல் கிச்சன் நிறுவனத்தின் தலைவர் ஜோஸ் அன்;ரெஸுடன் தான் உரையாடியதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹேர்ஸோக் தெரிவித்துள்ளார். இத்தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதல்ல என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹு கூறியுள்ளார். எனினும் அவர் மன்னிப்பு கோரவில்லை. இது ஒரு துயர சம்பவம் எனக் கூறியுள்ள அவர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் இத்தாக்குதலைக் கண்டித்துள்ளார். பொதுமக்களுக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த தொண்டு நிவாரண ஊழியர்களை பாதுகாப்பதற்கான போதிய நடவடிக்கைகளை இஸ்ரேல் மேற்கொள்ளவில்லை எனவும் பைடன் கூறியுள்ளார். இச்சம்பவத்தை கண்டித்துள்ள ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ், இந்த யுத்தத்தில் மனிதாபிமானப் பணியாளர்கள் 196 பேர் உயிரிழந்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார். உடனடி மனிதாபிமான போர் நிறுத்தத்தின் அவசியத்தை இச்சம்பவம் வெளிப்படுத்துகிறது எனவும் அவர் கூறியுள்ளார். https://www.virakesari.lk/article/180334
  21. பட மூலாதாரம்,NARENDRA MODI/FACEBOOK 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், இலங்கையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கச்சத்தீவு பேசுப்பொருளாக மாறியுள்ளது. ''இந்திய மக்கள் குறித்து சிந்திக்காது காங்கிரஸ் கட்சி கச்சத்தீவை இலங்கைக்கு தரைவார்த்தமை குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது" என இந்திய பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் வலைத்தளத்தில் கடந்த 31ஆம் தேதி பதிவிட்டிருந்தார். இது தொடர்பில் அனைத்து இந்தியர்களும் கோபமடைந்துள்ளதாகவும், காங்கிரஸ் கட்சி தொடர்பில் தொடர்ந்தும் நம்பிக்கை வைக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையின் கட்டுப்பாட்டில் உள்ள தீவுகளில் கச்சத்தீவும் ஒன்றாக காணப்படுகின்றது. இலங்கைக்கு மிகவும் தொலைவிலுள்ள தீவாகவும் கச்சத்தீவு காணப்படுகின்றது. தென்னிந்தியாவின் ராமேஸ்வரம் நகருக்கு மிகவும் அண்மித்த இடத்தில் கச்சத்தீவு அமைந்துள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து கச்சத்தீவிற்கு 24 கிலோமீட்டரே காணப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலிருந்து கச்சத்தீவு 63கி.மீ. தொலைவில் உள்ளது. இந்திய மக்களவைத் தேர்தல் சமயத்தில் இதுகுறித்து சர்ச்சை எழுப்பப்பட்டுள்ள நிலையில், கச்சத்தீவை இலங்கையிடமிருந்து இந்தியா மீண்டும் கையகப்படுத்த முடியுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராமேஸ்வரம் நகருக்கு மிக அருகில் கச்சத்தீவு உள்ளது. கச்சத்தீவை இலங்கைக்கு கையளித்த ஒப்பந்தம் கச்சத்தீவின் உரிமை தொடர்பான பிரச்னை வரலாற்று ரீதியாகவே காணப்பட்டது. இந்த நிலையில், இலங்கையின் பிரதமராக பதவி வகித்த ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவிற்கும், இந்திய பிரதமராக பதவி வகித்த இந்திரா காந்திக்கும் இடையில் 1974ஆம் ஆண்டு ஜுன் மாதம் 26ஆம் தேதி ஒப்பந்தத்தின் ஊடாக கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தானது. கச்சத்தீவு இந்தியாவின் பகுதி அல்லவெனவும், அது இலங்கையின் ஒரு பகுதி எனவும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு இலங்கைக்கு சொந்தமான நிலையில், கச்சத்தீவு உரிமை மற்றும் கச்சத்தீவு கடல் எல்லை தொடர்பான பிரச்னை 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பித்திலிருந்தே இருந்துள்ளது. கச்சத்தீவின் உரிமை குறித்து 1921ஆம் ஆண்டு இந்திய மற்றும் இலங்கை பிரதிநிதிகளுக்கு இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. கச்சத்தீவு பிரித்தானிய ஆட்சி காலத்தில் ராமண்டி கட்டுப்பாட்டில் இருந்தது என இந்த கலந்துரையாடலின் போது இந்திய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவு எந்தவொரு காலத்திலும் இந்தியாவிற்கு சொந்தமானதாக இருக்கவில்லை என இலங்கை பிரதிநிதிகள் கூறியுள்ளனர். 1800ஆம் ஆண்டு காலப் பகுதியில் வரையப்பட்ட வரைப்படமொன்றின் ஊடாக கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 1860ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது சிவில் நிர்வாகியாக செயற்பட்ட சேர் ஜேம்ஸ் எமர்சன் வெளியிட்ட சிலோன் என்ற புத்தகத்தில் கச்சத்தீவு வரைப்படம் இடம்பெற்றிருந்ததாக தொல்லியல் அதிகாரிகள் கூறியுள்ளனர். 1974ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் படி கச்சத்தீவு மற்றும் கச்சத்தீவு கடல் எல்லை தொடர்பான கடற்றொழில் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்திய மீனவர்களுக்கும் இலங்கை மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் இருந்து வந்தன. அத்துடன், 1976ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், கச்சத்தீவை அண்மித்து இந்திய மீனவர்களுக்கு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட முடியும் என கூறப்பட்டுள்ளது. இதனால், கச்சத்தீவை தமிழக மக்கள் உரித்தாக்கிக் கொள்வது முக்கியமானது என்கின்றார்கள். இந்திய பொதுத் தேர்தல் 2024 இந்தியாவின் பொதுத் தேர்தல் தொடர்பான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி ஆரம்பிக்கப்படுவதுடன், ஜுன் மாதம் முதலாம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றது. இந்த தேர்தல் நடைபெறுகின்ற பின்னணியிலேயே கச்சத்தீவு விவகாரம் மீண்டும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வெற்றியை உறுதி செய்துக்கொள்வதற்கு கச்சத்தீவு பிரச்னை முக்கியமானது என சர்வதேச அரசியல் தொடர்பான ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தமிழக வாக்காளர்களுக்கு இடையில் காங்கிரஸ் கட்சி குறித்து எதிர்வலைகளை ஏற்படுத்துகின்றமை மற்றும் பாரதிய ஜனதா கட்சி மீதான நம்பிக்கையை அதிகரிக்கின்றமை ஆகிய நோக்கில் நரேந்திர மோதி கச்சத்தீவு குறித்து பிரச்னையை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச உறவுகள் தொடர்பான ஆராய்ச்சியாளரும், ஆலோசகருமான கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா, பிபிசிக்கு தெரிவிக்கின்றார். கச்சத்தீவை இந்தியா மீண்டும் கையகப்படுத்த முடியுமா? கச்சத்தீவு ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு உரித்தானாலும், குறித்த தீவின் உரிமை இந்திய அரசியலமைப்பிலிருந்து நீக்கப்படவில்லை என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா கூறுகின்றார். இதன்படி, கச்சத்தீவை இந்தியாவிற்கு உரித்தாக்கிக் கொள்வதற்கான சில வழிமுறைகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ''முதலாவது, இந்திய அரசாங்கம் இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்கொன்றை தாக்கல் செய்து, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமையும் பட்சத்தில் தீவின் உரிமையை மீண்டும் பிரச்னையின்றி பெற்றுக்கொள்ள முடியும். அப்படியில்லையென்றால், ராஜதந்திர கலந்துரையாடல்களின் ஊடாக கச்சத்தீவை மீண்டும் இந்தியா உரித்தாக்கிக் கொள்ள முடியும். அது சிக்கலான விடயம். எவ்வாறாயினும், தேர்தலை இலக்காக கொண்டு நரேந்திர மோதி சில பிரச்னைகளை உருவாக்கினாலும், அவை அதே விதத்தில் நடைமுறைப்படுத்த முடியும் என எதிர்பார்க்க முடியாது” என அவர் கூறுகின்றார். ''இந்த இடத்தில் மற்றுமொரு பிரச்னை காணப்படுகின்றது. கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தம் என்பதனால், அது தொடர்பில் சீனா அவதானம் செலுத்தியுள்ளது. இந்தியாவிற்கு அது அச்சுறுத்தல் என்பதனால், இந்தியா அது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளது" என்கிறார் அவர். கச்சத்தீவு இலங்கைக்கு உரித்தாவதன் நன்மைகள் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானதன் ஊடாக சில நன்மைகள் கிடைத்துள்ளன என்று கூறுகின்றார் கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா. “போர் காலத்தில் இந்த பிரதேசத்தில் மீன்பிடிக்கப்படாதமையினால், அங்கு மீன் வளம் மிகுதியாக காணப்படுவது ஒரு முக்கிய நன்மையாகும். அத்துடன், தற்போது நடத்தப்பட்டுள்ள ஆராய்ச்சியின் ஊடாக எரிவாயு அந்த பகுதியில் காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 12 கடல் மைல் தொலைவான கடல் எல்லை நடவடிக்கைகள் விஸ்தரிக்கப்பட்டுள்ளமை மற்றுமொரு நன்மையாகும். கச்சத்தீவு இந்தியாவுக்குச் சொந்தமானதாக இருந்தால், அந்தப் பகுதி மன்னாரில் இருந்து கணக்கிடப்படும்” என கலாநிதி ஹசித் கந்தவுடஹேவா தெரிவித்தார். அப்படியானால், இலங்கைக்கு சொந்தமான ஆராய்ச்சி பெருங்கடலின் பரப்பளவு குறையும். கச்சத்தீவை இந்தியா உரித்தாக்கிக்கொள்வது இலகுவானதா? கச்சத்தீவை மீண்டும் உரித்தாக்கிக் கொள்வது மிகவும் இலகுவான விடயம் அல்லவென இந்திய ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. 2014ஆம் ஆண்டு இந்தியாவின் அப்போதைய சட்டமா அதிபராக இருந்த முகுல் ரோதாகியினால் அந்த நாட்டு உச்ச நீதிமன்றத்திடம் எழுப்பப்பட்ட கேள்வியை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் கடந்த 31ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. ''கச்சத்தீவு 1974ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு கையளிக்கப்பட்டுள்ளது. அதை இன்று எப்படி மீண்டும் எடுப்பது? கச்சத்தீவை மீண்டும் எடுக்க வேண்டும் என்றால், அது போர் ஒன்றின் ஊடாகவே எடுக்க வேண்டும்", என்பதே அந்தச் செய்தி. இலங்கைக்கான இந்தியாவின் முன்னாள் துணைத்தூதர் கூறுவது என்ன? கச்சத்தீவை திரும்ப பெற முடியுமா என்பது குறித்து யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய முன்னாள் இந்திய துணைத்தூதர் நடராஜன் பிபிசி தமிழிடம் பேசினார். “இனிமேல் கச்சத்தீவை திரும்ப பெற்றுவிடலாம் என யாராவது சொன்னால் அது சாத்தியமில்லை என்றுதான் அர்த்தம். கச்சத்தீவு வழக்கை பொறுத்தவரை உச்ச நீதிமன்றமே, ‘அது முடிந்த கதை’ என தீர்ப்பை வழங்கி இருக்கிறது. “ என்றார் நடராஜன். “கச்சத்தீவை அப்போதைய பிரதமர், இந்திரா காந்தி கொடுத்தார். மாநில அரசு கச்சத்தீவு விவகாரத்தில் எதுவும் செய்திருக்க முடியாது. இது முழுக்க முழுக்க மத்திய அரசின் முடிவு. இது நல்ல முடிவாக இருந்தாலும், இல்லையென்றாலும் அதற்கு மத்திய அரசு தான் பொறுப்பு” ஏற்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். “கிட்டத்தட்ட ஏழாயிரம் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கையில் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். இப்போது புதிதாக இலங்கை அரசு என்ன செய்கிறது என்றால், மீனவர்கள் மீது எப்.ஐஆர். பதிவு செய்கிறது. வழக்கு பதிந்தால், இந்திய மீனவர்கள் வரமாட்டார்கள் என்பதற்காக இலங்கை அரசு இதைச் செய்கிறது. மீனவர்கள் சிறையிலடைக்கப்பட்டால் , வெளியே எடுப்பது சிரமம். அதனால் தான் இந்த ஆண்டு கச்சத் தீவிலிருக்கும் புனித அந்தோணியார் திருவிழாவிற்கு இந்தியா மீனவர்கள் யாரும் போகவில்லை. மேலும், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்கமாட்டோம் என போராடிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களுடைய போராட்டம் சரியானதே” என்றார். கூடுதல் தகவல்கள்: சுதாகர், பிபிசி தமிழுக்காக https://www.bbc.com/tamil/articles/c4n558we7jwo
  22. தாய்வானில் பூகம்பம் - சுனாமி எச்சரிக்கை 03 APR, 2024 | 06:22 AM தாய்வானின் கிழக்கு கடலோர பகுதியை தாக்கியுள்ள பாரியபூகம்பத்தை( 7.2) தொடர்ந்து ஜப்பான் அதிகாரிகள் சுனாமி எச்சரிக்கையை விடுத்துள்ளனர். ஜப்பானின் தென்பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் தாய்வானின் கிழக்கு நகரமானஹ_வாலியனில் பல கட்டிடங்கள் இடிந்துவீழ்ந்துள்ளதை காண்பிக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன. டோக்கியோவிலிருந்து தென்பகுதியில் ஆயிரம் மைல்தொலைவில் உள்ள ஒகினாவாவை சுனாமி அலைகள் தாக்ககூடும் என ஜப்பானிய அதிகாரிகள் எச்சரி;த்துள்ளனர். மக்களை கடலோரபகுதிகளிற்கு செல்லவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ள அதிகாரிகள் தாழ்நிலப்பகுதிகளில் வசிப்பவர்கள் அங்கிருந்து வெளியேறவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். இதேவேளை ஜப்பானின் யொனாகுனி என்ற தீவை சிறிய சுனாமி தாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/180288
  23. மயங்க் யாதவ்: இந்தியா இதுவரை தேடிவந்த அதிவேக பந்துவீச்சாளர் இவர்தானா? கிரிக்கெட் உலகமே வியந்து பார்ப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 31 நிமிடங்களுக்கு முன்னர் “மயங்க் யாதவ் வேகப்பந்துவீச்சு உண்மையில் சிறப்பாக இருந்தது. அவரின் வேகப்பந்துவீச்சை நான் எதிர்க்கொண்டபோது எனக்கே வியப்பாக இருந்தது. ஆனாலும், அவரின் பந்துவீச்சை எதிர்கொள்ள விரும்பினேன். அவரின் வேகப்பந்துவீச்சு எங்களை தோற்கடித்துவிட்டது” இது இந்திய அணி வீரரும், பஞ்சாப் கிங்ஸ் கேப்டனுமான ஷிகர் தவண் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் பற்றி சிலாகித்து கூறியது. அது மட்டுமல்ல ஆஸ்திரேலிய ஜாம்பவான் டேல் ஸ்டெயின், ஆஸ்திரேலிய புயல் பிரட் லீ, இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்ட பலரும் இந்திய அணிக்கு அதிவேகப் பந்துவீச்சாளர் கிடைத்துவிட்டார் என்று மயங்க் யாதவ் பந்துவீச்சைப் பார்த்து புகழ்ந்திருந்தனர். இந்திய அணிக்கு பும்ரா, ஷமி, சிராஜ் ஆகிய வேகப்பந்துவீச்சாளர்கள் இருந்தபோதிலும் இவர்களின் சராசரி வேகம் என்பது மணிக்கு 135 கி.மீ வேகத்தில் பந்துவீசுவது தான். சமீபத்திய கண்டுபிடிப்பாக சன்ரைசர்ஸ் அணியில் உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசினாலும் அவரின் பந்துவீச்சில் கட்டுப்பாடு, ஒழுக்கம், துல்லியத்தன்மை, லைன்-லென்த்தை பின்பற்றுவது போன்றவை பெரும்பாலும் இருப்பதில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் வீரர்கள் நவீன்-உல்-ஹக் மற்றும் மயங்க் யாதவ். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச வேகம் எவ்வளவு? ஐபிஎல் வரலாற்றில் ஷான் டெய்ட், பிரட்லீ, பெர்குஷன், நோர்க்கியா, உம்ரான் மாலிக், ஜோப்ரா ஆர்ச்சர் என பல வேகப்பந்துவீச்சாளர்கள் வந்து விளையாடினாலும் மயங்க யாதவ் போல் நிலைத்தன்மை கொண்ட வேகம், துல்லியம் இருந்தது இல்லை. ஐபிஎல் தொடரில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணிக்காக ஆடிய ஷான் டெய்ட் 157 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார், அதன்பின் நியூசிலாந்து பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷன் 157 கி.மீ வேகத்தில் வீசியுள்ளார். அடுத்ததாக உம்ரான் மாலிக்(157) நோர்க்கியா(156.2) வேகத்தில் வீசியுள்ளனர். கடைசியாக ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மயங்க் அகர்வால் வீசிய வேகம் 156.8 கி.மீ. துல்லியத்தன்மை, கட்டுக்கோப்பு அதிகம் உம்ரான் மாலிக் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசும்போது, பெரும்பாலும் அவரின் பந்து அவுட் ஸ்விங்கிலேயே செல்லும். இவ்வாறு செல்லும் பந்துகளை பேட்டர்கள், பந்தின் வேகத்தின் போக்கிலேயே பேட்டை வைத்து தட்டினாலே சிக்ஸர் அல்லது பவுண்டரி எளிதாகச் சென்றுவிடும். அதனால்தான் உம்ரான் மாலிக்கின் டி20 சராசரி 10 ரன்களுக்கு மேல் வைத்துள்ளார். வேகப்பந்துவீச்சாளர்கள் அதிவேகமாகப் பந்துவீசும் போது துல்லியத்தன்மையும், லைன்லென்த் மாறாமல் வீசினால் பேட்டர்கள் எதிர்கொண்டு விளையாடுவது கடினம். இதுபோன்ற கட்டுக்கோப்பான, ஒழுக்கமான பந்துவீச்சு 1980களில் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர்களிடம் இருந்தது. கரீபியன் ஜாம்பவான்கள் உதாரணம் கர்ட்லி அம்புரோஸ், கர்ட்னி வால்ஷ், மால்கம் மார்ஷல், ஆன்டி ராபர்ட்ஸ், இயான் பிஷப், மைக்கேல் ஹோல்டிங் உள்ளிட்ட பல பந்துவீச்சாளர்களிடம் இருந்தது. அதனால் தான் கிரிக்கெட் உலகை மேற்கிந்தியத்தீவுகளின் வேகப்பந்துவீச்சாளர்கள் ஆட்டுவித்து, தொடர்ந்து இரு உலகக் கோப்பைகளை வெல்ல முடிந்தது. வேகப்பந்துவீச்சில் அதிவேகமும், துல்லியத்தன்மையோடும், லைன்லென்த்தில் பந்துவீசும் பந்துவீச்சாளர்கள் குறைந்துவரும் நிலையில் அத்திபூத்தார் போல் இந்திய அணிக்கு கிடைத்துள்ள வீரர் மயங்க் யாதவ். பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அறிமுகமாகிய மயங்க் யாதவ் முதல் பந்தை மணிக்கு 147 கி.மீ வேகத்தில் வீசத் தொடங்கி படிப்படியாக தனது வேகத்தை அதிகரித்து 156 கிமீ வேகத்தில் வீசினார். 2024ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் மயங்க் யாதவ் வீசிய பந்துதான் அதிகபட்ச வேகமாகும். லக்னோ சூப்பர் ஜெயிட்ன்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளரான தென் ஆப்பிரிக்கா வீரர் மோர்கல் கூட, மயங்க் யாதவின் பந்துவீச்சைப் பார்த்து மிரண்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்திய மயங்க் யாதவை பாராட்டும் லக்னோ அணி வீரர்கள். 'மயங்க் மீது நம்பிக்கை வைத்தோம்' மோர்ன் மோர்கல் கூறுகையில் “மயங்க் யாதவ் பந்துவீச்சைப் பார்த்தேன். காற்றில் பந்து சீறிச் செல்கிறது மிரட்சியாக இருக்கிறது. கடந்த சீசனில் விளையாட வேண்டியவர் ஆனால் காயம் காரணமாக விளையாடவில்லை. மயங்க் யாதவின் வேகப்பந்துவீச்சு மீது நம்பிக்கை வைத்துதான் அவரை ஏலத்தில் தக்கவைத்தோம். நல்ல விக்கெட்டாக இருக்கிறது, நன்றாகப் பந்துவீசு முடிந்தவரை யார்கர்கள், பவுன்ஸர்கள், லைன்-லென்த்தில் வீசு என்று அறிவுரை தெரிவித்தேன். அதை சிறிதும் மாறாமல் மயங்க் வீசியது என்னை பிரமிப்பூட்டியது” எனத் தெரிவித்தார். வந்தார், வென்றார் மயங்க் மயங்க் யாதவ் பந்துவீச வருவதற்கு முன் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றியை நோக்கி பயணித்தது. ஷிகர் தவண், பேர்ஸ்டோ அருமையான ஃபார்மில் இருந்தனர். ஆனால், மயங்க் யாதவ் பந்துவீச வந்தபின், அவரின் முதல் ஓவரைத் தவிர மற்ற 3 ஓவர்களிலும் விக்கெட்டை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்தார். 50 டெஸ்ட்களுக்கு மேல் விளையாடிய அனுபவம் கொண்ட பேர்ஸ்டோ, ஷிகர் தவண் போன்ற பெரிய பேட்டர்கள்கூட, மயங்க் யாதவ் வீசும் பந்தின் வேகத்துக்கு ஏற்ப பேட்டை கொண்டுவர முடியாமல் சிரமப்பட்டனர். அதனால்தான், பேர்ஸ்டோ தனக்கு வீசப்பட்ட ஷார்ட் பந்தை சமாளிக்க முடியாமல் மூக்கு மேல் ராஜாவாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். மயங்க் யாதவ் பந்துவீச்சில் இருக்கும் சிறப்பம்சம் என்னவெனில் அவரின் பந்துவீச்சில் அதிவேகத்தோடு, துல்லியத்தன்மை, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது, பெரும்பாலான பந்துகளை பேட்டர்களின் இடுப்பு வரை இன்ஸ்விங்காக வீசுவதுதான். இவ்வாறு பந்துவீசும்போது, பேட்டர்கள் ரன்சேர்க்க கடுமையாகத் திணறுவார்கள், ஒரு கட்டத்தில் நெருக்கடி முற்றி, பெரிய ஷாட்டுக்கு முயலும்போது கிளீன் போல்ட் அல்லது கேட்ச் கொடுத்து வெளியேறுவார்கள். பட மூலாதாரம்,SPORTZPICS யார் இந்த மயங்க் யாதவ்? புதுடெல்லியைச் சேர்ந்த மயங்க் யாதவ் 2002, ஜூன் 17ம் தேதி பிறந்தார். இவரின் தந்தை பிரபு யாதவ். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் தீவிரமான கிரிக்கெட் ரசிகர். அதிலும் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்து ஜாம்பவான் கர்ட்லி ஆம்புரோஸ், வால்ஷ் ஆகியோரின் தீவிர ரசிகராக இருந்தவர். தனது மகனையும் கரீபியன் வேகப்புயல்கள் ஆம்புரோஸ் போன்று உருவாக்க வேண்டும் என தீவிரமான வேட்கையுடன் தயார் செய்துள்ளார். மேற்கு டெல்லியில் உள்ள மோதி நகரில் தான் மயங்க் யாதவ் குடும்பம் வசித்து வருகிறது. மோதி நகருக்கு அருகே தான் விராட் கோலியும் வளர்ந்தார். மோதி நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் தான் தொடக்கத்தில் மயங்க் யாதவுக்கு அவரின் தந்தை பந்துவீச பயிற்சி அளித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மயங்க் யாதவ். 'கரீபியன் விதையை விதைத்தேன்' மயங்க் யாதவ் குறித்து அவரின் தந்தை பிரபு யாதவ் ஒரு ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ நான் தினமும் தொழிற்சாலையில் இருந்து வந்தபின் சிறுவயதில் இருந்தே மயங்க் யாதவிடம் கரீபியன் வேகப்பந்துவீச்சாளர்கள் குறித்த கதைகளைக் கூறுவேன். சிறுவயதில் இருந்தே வேகப்பந்துவீச்சுக்கான விதையை மயங்க் மனதில் விதைத்துவிட்டேன்." "ஆம்புரோஸ், வால்ஷ் போன்று நீயும் ஒரு வேகப்பந்துவீச்சாளராக மாற வேண்டும், உன் பந்துவீச்சைப் பார்த்து பேட்டர்கள் அஞ்ச வேண்டும் என்று சொல்லி இருக்கிறேன். டெல்லி வெங்கடேஷ்வரா கல்லூரி அருகே இருக்கும் சோனெட் கிளப்பில் மயங்க் பந்துவீசி பயிற்சி எடுப்பதை தொலைவில் இருந்து ரசித்துவிட்டு வீடு திரும்புவேன்." "ஆம்புரோஸை பார்த்து ஏன் சர்வதேச பேட்டர்கள் அஞ்சினார்கள் தெரியுமா? ஏனென்றால், அவரின் பந்து பேட்டர்களின் தலையை பதம் பார்த்துவிடும். அந்த பயத்தை நீயும் விதைக்க வேண்டுமென்றால், உருவாக்க வேண்டுமென்றால் இப்போதிருந்து பயிற்சி எடு என்று மயங்கிடம் தெரிவிப்பேன்." "சிறுவயதில் டெல்லி சுற்றுவட்டாரத்தில் மயங்க் பந்துவீச்சு என்றாலே பேட்டர்கள் அச்சப்படுவார்கள். அவருக்கு செல்லமாக 'தலைக்கு வீசும் பந்துவீச்சாளர்' என்று பெயரும் வைத்தனர்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,SPORTZPICS தந்தை-மகனுக்கும் சண்டை மயங்க் யாதவுக்கும் அவரின் தந்தை பிரபு யாதவுக்கும் அடிக்கடி சண்டை வரும். அதாவது மயங்க் யாதவ், தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயினின் ரசிகர்கள், மயங்க் தந்தை பிரபு, ஆம்புரோஸ் ரசிகர். இரு பந்துவீச்சாளர்களில் யார் சிறந்தவர் என்று மயங்கிற்கும், அவரின் தந்தைக்கும் அடிக்கடி சண்டை வரும் என்று பிரபு யாதவ் தெரிவித்தார். ரிஷப் பந்த் பயிற்சியாளர் அளித்த வாய்ப்பு மயங்க் யாதவ் சிறுவயது குறித்து அவரின் தந்தை பிரபு யாதவ் கூறுகையில் “என் மகன் மயங்க், 14 வயதுக்குட்பட்டோர், 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டிகளி்ல் விளையாடவில்லை. அவர் நேரடியாக ஏ லிஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். மயங் யாதவ் பந்துவீச்சு வேகத்தைப் பார்த்த ரிஷப் பந்த் பயிற்சியாளர் தராக் சின்ஹா அவரை அழைத்துச் சென்று வாய்ப்பளித்தார்” எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஜிதேஷ் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய மயங்க் யாதவ். சர்வீசஸ் வாய்ப்பை மறுத்த மயங்க் டெல்லியில் சோனெட் கிளப்பி்ல்தான் மயங்க் யாதவ் தொடக்கத்தில் விளையாடி வந்தார். அதன் பின்பு தான் ஏ லிஸ்ட் போட்டிகளில் பங்கேற்றார். இந்த சோனெட் கிளப் நடத்திவரும் தேவந்தர் சர்மா கூறுகையில் “மயங்க் யாதவிடம் வேகப்பந்துவீச்சு எனும் திறமை இருப்பதை கண்டறிந்து வெளிக்கொண்டு வந்தவர் தராக் சின்ஹா தான். ரிஷப்பந்த், மயங்க் யாதவ் இருவரையும் பிரித்துப் பார்த்தது இல்லை. மயங்க் யாதவுக்கு சர்வீசஸ் அணியிலும் விளையாட தாரக் சின்ஹா வாய்ப்பு பெற்றுக் கொடுத்தார், வேலையும் வாங்கித் தருவதாக உறுதி தெரிவித்தார். 3 விதமான ஃபார்மெட்டிலும் விளையாட வைப்பதாக தாரக் சின்ஹா உறுதியளித்தார். ஆனால், அதை மயங்க் அகர்வால் ஏற்க மறுத்துவிட்டார். ஆனால், துரதிர்ஷ்டமாக கொரோனா 2வது அலையில் 2021, நவம்பர் மாதம் தாரக் சின்ஹா காலமாகிவிட்டார். ஆனால், அவர் இறந்தபின் தனது பயிற்சியாளர் தாரக் சின்ஹாவின் ஆசையான டெல்லி அணிக்கு விளையாடும் கனவை மயங்க் யாதவ் நிறைவேற்றினார். சண்டிகரில் நடந்த விஜய் ஹசாரே கோப்பையில் டெல்லி அணிக்காக மயங்க் யாதவ் அறிமுகமாகினார். கடைசி இரு ஓவர்களில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவை என்றபோது, மயங்க் 49-வது ஓவரை மெய்டனாக வீசி அணியை வெற்றி பெறச் செய்தார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES 'தாரக் சின்ஹா கடவுள்' தாரக் சின்ஹா குறித்து மயங்க் யாதவ் தந்தை பிரபுயாதவ் கூறுகையில் “தாரக் சின்ஹா எனக்கு கடவுள் போன்றவர். அவர்தான் என் மகனை இந்த அளவு வளர்த்தெடுத்தவர். கொரோனா காலத்தில் எனக்கு சரியான வேலையும், ஊதியமும் இல்லை. என் மகனை கோடைகால வகுப்பில் சேர்த்து பயிற்சி அளித்து ரூ.65 ஆயிரம் செலவிட்டது தாரக் சின்ஹா தான். என்னிடம் ரூ.20 ஆயிரம் தான் இருந்தது. அதை தாரக் சின்ஹாவிடம் திருப்பிக் கொடுத்தேன். ஆனால் அவர் அதை வாங்க மறுத்துவிட்டு, இந்த முறை என்னுடைய பணத்தை செலவிடுகிறேன் என்றார்” எனத் தெரிவித்தார். மயங்க் யாதவின் அறிமுகம் மயங்க் யாதவின் தொழில்முறை கிரிக்கெட் 2022ம் ஆண்டில்தான் தொடங்கியுள்ளது. 2022ம் ஆண்டில் அக்டோபரில் டெல்லி அணிக்காக டி20 போட்டியில் மயங்க் யாதவ் அறிமுகமாகி, மணிப்பூர் அணிக்கு எதிராக களமிறங்கினார். அதன்பின் லிஸ்ட் ஏ பிரிவில் டெல்லி அணிக்காக மயங்க் விளையாடியுள்ளார். ஒரே ஒரு முதல் தரப் போட்டியில் டெல்லி அணியில் விளையாடிய மயங்க், மகாராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடியுள்ளார். 2023ம் ஆண்டில் ஐபிஎல் ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி ரூ.20 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், காயம் காரணமாக ஒரு போட்டியில்கூட விளையாடாமல் விலகினார். இருப்பினும் மயங்க் யாதவின் வேகப்பந்துவீச்சு மீது லக்னோ அணிக்கு தீவிரமான நம்பிக்கை இருந்ததால், ஏலத்தில் அவரை தக்கவைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மயங்க் யாதவ். 'சர்வீசஸ் வாய்ப்பை நிராகரித்தேன்' டெல்லி அணிக்காக மட்டுமே விளையாட வேண்டும் என்ற தீவிரமான எண்ணம் கொண்டவர் மயங்க் யாதவ். அது குறித்து அவர் கூறுகையில் “என்னுடைய ஆட்டத்தைப் பார்த்த சர்வீசஸ் அணி எனக்கு அணியில் இடமும் வேலையும் தருவதாக கூறினார்கள். நான் ஒரு சில பந்துகளும், பவுன்சர்களும் தான் வீசியிருந்தேன். என்னுடைய திறமையில் 50 சதவீதத்தைத் தான் வெளிப்படுத்தினேன். எனக்கு வேலையும், அணியில் இடமும் தருவதாக கூறிய அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தேன். டெல்லி நான் வளர்ந்த மண் அந்த அணிக்காகத்தான் விளையாடுவேன் என்று கூறி டெல்லிக்காக களமிறங்கினேன்." என்றார். தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு சிறுவயதில் இருந்தே வேகம் என்றால் மிகவும் பிடிக்கும். விமானம், சூப்பர் பைக் அல்லது ராக்கெட் வேகத்தோடு எது இருந்தாலும் எனக்குப் பிடிக்கும். அதனால்தான் 155 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதை விரும்பினேன். முதல் முறையாக 156 கி.மீ வேகத்தை நெருங்கி இருக்கிறேன். கடந்த 2 ஆண்டுகளாக ஐபிஎல் தொடரில் எனது முதல் பந்தை எவ்வாறு வீசுவது என்று கற்பனை செய்திருந்தேன். அதனால்தான் முதல் பந்தை வீசும்போது நான் பதற்றப்படவில்லை” எனத் தெரிவித்தார் மயங்க் யாதவ். https://www.bbc.com/tamil/articles/c14jj09gk7lo
  24. கொழும்பு வந்தடைந்தனர் முருகன், பயஸ், ஜெயக்குமார் - விமானநிலையத்தில் தடுத்து வைத்து விசாரணை 03 APR, 2024 | 02:40 PM கொழும்பை வந்தடைந்துள்ள முருகன் பயஸ் ஜெயக்குமார் மூவரையும் கொழும் விமானநிலையத்தில் அதிகாரிகள் தடுத்துவைத்து விசாரணை செய்கின்றனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/180340
  25. Published By: VISHNU 03 APR, 2024 | 09:55 AM தற்போதைய குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமூலமொன்றை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருவதற்கான அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதென மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார். அதேநேரம், வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்பித்த பின்னர் தேசிய மகளிர் ஆணைக்குழுவை ஸ்தாபிக்க வாய்ப்பு கிட்டும் என்றும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் செவ்வாய்க்கிழமை (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கும் மேலும் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், "பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலத்திற்கு 04.03.2024 அமைச்சரவை அனுமதி கிடைத்திருந்ததோடு, 03.07.2024 வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதனை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவிருப்பதோடு, தேசிய மகளிர் ஆணைக்குழு அமைப்பதற்கான நியதிகளும் அதற்குள் உள்வாங்கப்பட்டுள்ளன. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியமும் 20.03.2024 பாராளுமன்றத்தில் பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பான கலந்துரையாடலை நடத்தியிருந்தது. ஜனாதிபதி அலுவலகம், சட்டமா அதிபர் திணைக்களம், சட்ட வரைஞர் திணைக்களம் உள்ளிட்ட தரப்பினரும் இந்த கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தனர். பெண்களை வலுவூட்டுவதற்கான சட்டமூலம் தொடர்பில் உலக வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகள் தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதோடு, ஒரு வாரத்திற்குள் அந்த அவதானிப்புகளை பரிசீலிக்க இலங்கையின் மகளிர் பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர். அதில் திருத்தங்கள் இருக்கும் பட்சத்தில் மீண்டும் வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டதன் பின்னர் பாராளுமன்றத்தில் சமர்பிக்க பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் ஒன்றியத்தினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் சார்பில் அவருக்கு நெருக்கமான ஒருவர் வழக்குப் பதிவு செய்வதற்கான வாய்ப்பு உள்ளிட்ட பல முக்கிய விடயங்களும் புதிய சட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருப்பதோடு, நடைமுறையிலிருக்கும் குடும்ப வன்முறைத் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்து புதிய சட்டமாக பாராளுமன்றத்தில் சமர்பிக்கவும் அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, மாத்தறை, மட்டக்களப்பு, அநுராதபுரம், மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான பெண்களுக்கான 11 தற்காலிக தடுப்பு நிலையங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பாலின சமத்துவ சட்டமூலத்திற்கும் அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதோடு, வர்தமானியில் அறிவிப்பதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. மேலும், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பாதுகாப்பு இல்லங்களை நிர்வகிப்பதற்கான தேசிய வழிகாட்டுதல்களுக்கும் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது." என இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/180286

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.