Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. அண்ணை எனக்கேதும் தெரியாது, கண்டேன் பகிர்ந்தேன்.
  2. கர்ணன் VS இராசராச சோழன் 🎙 #Sangeetha #Ragavendhiran | Tamil Pechu Engal Moochu | Episode Preview
  3. மக்களை அணிதிரட்ட முடியவில்லையோ? இல்லை நாங்கள் தான் எதிர்ப்புப் போராட்டம் செய்கின்றோம் என காட்டவோ தெரியவில்லை ஐயா?!
  4. ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் இரண்டையும் ஒன்றாக வைத்தால் மக்களின் வரிப்பணம் கொஞ்சம் மிஞ்சும்!!
  5. மாஸ்கோ தாக்குதல்: 133 பேரை பலிவாங்கிய சம்பவம் நடந்தது எப்படி? வீடியோ ஆதாரம் காட்டுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், பால் கிர்பி பதவி, பிபிசி செய்தி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 23) ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், ஒரு இசை நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை 133 பேர் கொல்லப்பட்டதாகவும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தத் தாக்குதலை ‘காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாதத் தாக்குதல்’ என்று விவரித்துள்ளார். வெள்ளிக்கிழமை இரவு எட்டு மணியாக சில நிமிடங்களே இருக்கும்போது இந்தத் தாக்குதல் நடைபெற்றது. பிக்னிக் எனப்படும் ரஷ்ய இசைக்குழுவின் ராக் இசை நிகழ்ச்சிக்காக குரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள வளாகம் நிரம்பியிருந்தது. "பழுப்பு நிற ஆடை அணிந்த சிலர், பயங்கரவாதிகளோ அல்லது ராணுவமோ, அவர்கள் யார் என்று எனக்குத் சரியாகத் தெரியவில்லை. துப்பாக்கிகளுடன் வளாகத்திற்குள் நுழைந்து மக்களைச் சுடத் தொடங்கினர்," என்று புகைப்படக் கலைஞர் டேவ் ப்ரிமோவ் கூறினார். துப்பாக்கி ஏந்திய நபர்கள் வளாகத்தில் கூடியிருந்த கூட்டத்தின் நடுவே அமைதியாக நடந்து சென்று, பின்னர் கண்மண் தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். மோசமான பாதுகாப்பு ஏற்பாடுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த இசைக் கச்சேரிக்கு சுமார் 6,200 டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. ஆனால் வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்தது வெறும் நான்கு காவலர்களே. அந்த நான்கு காவலர்களில் ஒருவர் பேசுகையில், “தாக்குதல் தொடங்கியவுடன் எனது சகாக்கள் ஒரு விளம்பரப் பலகைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார்கள்” என்று கூறினார். மேலும், "தாக்குதல் நடத்தியவர்கள் எங்களிடமிருந்து 10 மீட்டர் தொலைவில் கடந்து சென்றனர். அவர்கள் தரைத்தளத்தில் இருந்தவர்களை நோக்கி சரமாரியாகச் சுடத் தொடங்கினர்" என்றார். தாக்குதல் நடத்தியவர்கள் எத்தனை பேர் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் மேல் தளத்தில் இருந்து படமாக்கப்பட்ட ஒரு காணொளியில் நான்கு ஆண்கள் தரைத்தளத்தில் தனித்தனியாக நடந்து செல்வதைக் காண முடிகிறது. முதலில் துப்பாக்கியுடன் செல்பவர், ஜன்னல்களுக்கு அருகே பதுங்கியிருப்பவர்களைக் குறிவைத்துச் சுடுகிறார். அவ்வாறு சுடப்பட்டவர்களே ரஷ்யாவின் மீதான இந்தக் கொடிய தாக்குதலில் முதலில் பலியானவர்கள். கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் பலர் மாஸ்கோவின் வடமேற்கு எல்லையில் உள்ள கிராஸ்னோகோர்ஸ்க், கிம்கி மற்றும் அதன் அருகிலுள்ள பிற நகரங்களில் இருந்து வந்தவர்கள். அந்தக் காணொளியில் இரண்டாவது நபரும் துப்பாக்கியுடன் மக்களை நோக்கிச் சுட்டவாறே முன்னேறுகிறார். அதே நேரத்தில் மூன்றாவது நபர் ஒரு பையுடன் அமைதியாகப் பின்தொடர்கிறார். நான்காவது நபர் தனது துப்பாக்கியை அவரிடம் ஒப்படைக்கிறார். தாக்குதலை நேரில் கண்ட பெண் ஒருவர், “நான் எனது 11 வயது மகளுடன், நுழைவாயிலுக்கு அருகிலுள்ள ஒரு ஓட்டலில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டிருந்தேன். அப்போது துப்பாக்கிச் சத்தமும் மக்களின் அலறலும் கேட்டது. அருகிலிருந்தவர்கள் தரையில் படுக்குமாறு கூச்சலிட்டனர். நாங்கள் குழந்தைகள் இருந்த பகுதிக்கு விரைந்தோம், கீழே படுத்து, மேசைகள் மற்றும் நாற்காலிகள் கொண்டு தடுப்புகளை அமைக்கத் தொடங்கினோம். காயமடைந்த பலர் எங்களை நோக்கி ஓடி வந்தனர்," என்று பிபிசியிடம் கூறினார். அரங்கிற்குள், சில நிமிடங்களில் கச்சேரி தொடங்க இருந்தது. சிலர் துப்பாக்கிச் சத்தம் கச்சேரியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்றுதான் முதலில் நினைத்துள்ளார்கள். தாக்குதலை நேரில் கண்டவர்கள் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES "ஒருவித முடிவில்லாத பட்டாசு சத்தம் போலத்தான் முதலில் கேட்டது. நான் திரும்பிப் பார்த்தபோது, ஹாலில் இருந்த அனைவரும் எல்லா திசைகளிலும் ஓடுவதை உணர்ந்தேன்,” என்று சோஃபிகோ க்விரிகாஷ்விலி கூறுகிறார். புகைப்படக் கலைஞர் டேவ் ப்ரிமோவ் கூறுகையில், “அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது. அரங்கின் இருக்கைகளுக்கு இடையில் படுத்துக்கொள்ள சிலர் முயன்றனர். ஆனால் துப்பாக்கி ஏந்தியவர்கள் ஸ்டால்களில் சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தியதால், மக்களின் தப்பிக்கும் முயற்சி பயனளிக்கவில்லை,” என்றார். பார்வையாளர்களில் சிலர் தப்பிக்க மேடையை நோக்கிச் சென்றுள்ளனர். மற்றவர்கள் மேலே சென்று வெளியேறும் வழிகளைக் கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் கதவுகள் பூட்டப்பட்டிருப்பதைக் கண்டனர். தாக்குதலில் குழந்தைகள் உட்பட முதியவர்களும் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். மேடையை நோக்கி ஓடிய ஒரு பெண் தான் கண்ட காட்சியை விவரித்தார், “ஒரு நபர் துப்பாக்கியால் சுடுவதைக் கண்டேன். நாங்கள் திரைக்குப் பின்னால் ஓடினோம், சீருடையில் இருந்த குரோகஸ் ஊழியர்களில் ஒருவர் எங்களை வேகமாக ஓடச் சொன்னார், நாங்கள் ஓடினோம். குளிர்கால ஆடைகள் ஏதுமின்றி கார் பார்க்கிங்கிற்குள் பதுங்கிக் கொண்டோம்," என்றார். ஓபரா நிகழ்ச்சிக்காக அங்கு வந்த மார்கரிட்டா புனோவா, முதலில் துப்பாக்கிச் சத்தத்தை பட்டாசு என்று நினைத்துள்ளார், பின்னர் அவரும் அவரது கணவரும் அது துப்பாக்கிச் சூட்டின் சத்தம் என்று அடையாளம் கண்டுள்ளனர். "யாரோ கீழே ஓடுங்கள் என்று சொன்னார்கள், முழு இருட்டாக இருந்தது. நாங்கள் வெளியே வந்த நேரத்தில் எங்களுக்குப் பின்னால் துப்பாக்கிச் சூடு சத்தம் அதிகமாகக் கேட்டது," என்றார். மற்றொரு நபரான விட்டலி, ஒரு பால்கனியில் இருந்து இந்த தாக்குதலைக் கண்டார், "அவர்கள் சில பெட்ரோல் குண்டுகளை வீசினர், அதனால் எல்லாம் பற்றி எரியத் தொடங்கியது," என்றார். அது பெட்ரோல் வெடிகுண்டா என உறுதியாகத் தெரியவில்லை. ஆனால், தீ வேகமாகப் பரவியது. இதன் காரணமாக தீயணைப்பு வீரர்களால் கட்டடத்தின் அருகில் செல்ல முடியவில்லை. தீ விரைவில் கூரைக்கும் பரவியது. மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்து தீ மளமளவென கட்டடத்தின் முன்பகுதிக்கும் பரவி, இரண்டு மேல் தளங்கள் எரிந்து நாசமானது. ஆடிட்டோரியத்தில் இருந்தவர்களில் பலர் ஃபோயர் அறை வழியாக ஓடிவிட்டனர். ஒரு வீடியோவில், சோபாவில் கிடக்கும் இரண்டு உயிரற்ற உடல்களைக் கடந்து மக்கள் எஸ்கலேட்டர்களில் விரைவதைக் காட்டுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES மற்றொரு வீடியோவில், துப்பாக்கிச் சூட்டின் சத்தம் சுற்றி எதிரொலிக்கும்போது மக்கள் தப்பி ஓடுவதைக் காட்டுகிறது. எங்கு செல்வதெனத் தெரியாமல் அவர்கள் கட்டடத்தின் பின்புறத்தை நோக்கி ஓடுகிறார்கள். அங்கு சிலர் பதுங்கி பயத்துடன் அமர்ந்திருக்கிறார்கள், மற்றவர்கள் தாழ்வாரங்கள் வழியாக ஒருவரையொருவர் பிடித்துக் கொண்டு வெளியேறுகிறார்கள். இந்தத் தாக்குதல் நடக்கும்போது, கட்டடத்தில் எங்காவது ரஷ்ய காவல்துறையோ அல்லது சிறப்புப் படையோ இருப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. உயிர் பிழைத்தவர்கள் ஒரு படிக்கட்டில் ஏறி குரோகஸ் சிட்டி ஹாலின் நுழைவாயிலை அடைந்தனர். ஒருவர் மயக்கமடைவதைக் காண முடிகிறது. மற்றவர்கள் தங்கள் வீடுகளுக்கு தகவலைச் சொல்கிறார்கள். ஒரு நடனக் குழுவின் உதவியாளரான ஈவா, துப்பாக்கி ஏந்தியவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தபோது மேடைக்குப் பின்னால் இருந்தார். "நாங்கள் டிரஸ்ஸிங் ரூமில் இருந்தோம், ஒரு கூட்டம் எங்களைக் கடந்து சென்றது. நடைபாதையில் மக்கள் ஓடுவதை நாங்கள் பார்த்தோம். நாங்களும் கோட்களை எடுத்துக்கொண்டு கூட்டத்துடன் ஓடினோம்," என்கிறார். தொடக்கத்தில் பிக்னிக் இசைக்குழுவின் அனைத்து உறுப்பினர்களும், பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் பின்னர் வெளியான உறுதிப்படுத்தப்படாத செய்திகளில் இசைக் கலைஞர்களில் ஒருவர் காணவில்லை என்று சொல்லப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியும், காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 200ஐ தாண்டியதும், ஆடிட்டோரியத்திற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலின் தீவிரம் அனைவருக்கும் புரிந்தது. கொல்லப்பட்டவர்கள் குறித்த முதல் அதிகாரப்பூர்வ பட்டியலில், மிகவும் வயதானவர்களும் (70 வயது) இருப்பதாகவும், இறந்தவர்களில் மற்றும் காயமடைந்தவர்களில் குழந்தைகளும் அடக்கம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐஎஸ் அமைப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் ரஷ்ய மக்கள். இஸ்லாமிய அரசு எனப்படும் ஐஎஸ் அமைப்பு ஓர் அறிக்கையின் மூலம் தாக்குதலுக்குத் தாங்கள் பொறுப்பேற்பதாகக் கூறியுள்ளது. ஆனால் அமைப்பின் எந்தக் கிளை இதைச் செய்தது எனக் குறிப்பிடவில்லை. இரண்டு வாரங்களுக்கு முன்னர், ரஷ்யாவை தாக்க ஐஎஸ் அமைப்பு திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. மாஸ்கோவில் ‘பெரிய கூட்டங்களை’ குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அமெரிக்கா அப்போது கூறியிருந்தது. இருப்பினும் அமெரிக்க உளவுத்துறை அளித்த தகவலில் போதுமான, நம்பகமான விவரங்கள் இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் புகார் கூறியுள்ளனர். தங்களுக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை என யுக்ரேன் உடனடியாக மறுத்தது. போர்க்களத்தில் மட்டுமே நாங்கள் தாக்குவோம் என்று அது கூறியது. ஆனால் ரஷ்யாவின் எஃப்.எஸ்.பி பாதுகாப்பு முகமை, தாக்குதலில் ஈடுபட்ட குற்றவாளிகள் யுக்ரேனில் இருந்து ரஷ்யாவை கடக்க முயன்றதாகவும், யுக்ரேனில் அவர்களுக்கு ‘வலுவான தொடர்புகள்’ இருப்பதாகவும் கூறியது. தாக்குதலில் நேரடியாகத் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு பேர் உட்படப் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் எப்.எஸ்.பி கூறுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES சனிக்கிழமையன்று தாக்குதல் நடந்த இடத்திற்கு, உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த திரும்பிய மார்கரிட்டா புனோவாவும் அவரது கணவர் பாவேலும், "தாக்குதலில் இருந்து தப்பித்து வீடு சென்றதும் கண்ணீருடன் தங்கள் குழந்தைகளைக் கட்டிப்பிடித்ததுதான் நாங்கள் செய்த முதல் காரியம்" என்று கூறினார்கள். மாஸ்கோவில் சனிக்கிழமை பிற்பகல் வரை அதிபர் புதின் சோகத்தில் மூழ்கியுள்ள ரஷ்ய பொதுமக்களிடையே உரையாற்றினார். கொலையாளிகளை இரண்டாம் உலகப் போரின் நாஜிக்களுடன் ஒப்பிட்டுப் பேசிய அவர், ரஷ்ய மக்களுடைய ஒற்றுமையின் பலத்தை யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது என்றார். ஞாயிற்றுக்கிழமை, தேசிய துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்றும் அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cyxz971ddwzo
  6. பந்துவீச்சில் விஷ்வா, லஹிரு, ராஜித்த அபாரம் : 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதமிருக்க 211 ஓட்டங்கள் முன்னிலையில் இலங்கை 23 MAR, 2024 | 08:00 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சில்ஹெட் சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மீதம் இருக்க இலங்கை 211 ஓட்டங்களால் முன்னிலையில் இருக்கிறது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய இப் போட்டியில் விஷ்வா பெர்னாண்டோ, லஹிரு குமார, கசுன் ராஜித்த ஆகிய மூவரும் மிகச் சிறப்பாக பந்துவிசியதன் பலனாகவே இலங்கை முன்னிலையில் இருக்கிறது. சுமாரான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட இப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை இன்று சனிக்கிழமை (23) 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்களை இழந்து 119 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இப் போட்டியில் 3 நாட்கள் மீதம் இருப்பதால் எந்த அணியும் வெற்றிபெறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையினால் தனது மொத்த எண்ணிக்கைக்கு மேலும் 150 ஓட்டங்களை சேர்த்தால் இப் போட்டியில் வெற்றி பெற்று முதலாவது ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகளைப் பெறக்கூடியதாக இருக்கும். எனவே, நாளைய மூன்றாம் நாள் ஆட்டம் தொடரும்போது தனஞ்சய டி சில்வாவும் இராக்காப்பாளன் விஷ்வா பெர்னாண்டோவும் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் துடுப்பெடுத்தாடி குறைந்தது ஒரு மணித்தியாலம் விக்கெட்களைத் தக்கவைத்துக்கொண்டு ஓட்டங்களைப் பெற முயற்சிக்கவேண்டும். வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்களைப் பெற்றது. தனஞ்சய டி சில்வாவும் கமிந்து மெண்டிஸும் தலா 102 ஓட்டங்களைப் பெற்றதுடன் 6ஆவது விக்கெட்டில் சாதனை மிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையைப் பலப்படுத்தியிருந்தனர். தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இன்று காலை தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த பங்களாதேஷ் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறி சகல விக்கெட்களையும் இழந்து 188 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. துடுப்பாட்டத்தில் தய்ஜுல் இஸ்லாம், லிட்டன் தாஸ், காலித் அஹ்மத் ஆகிய மூவரே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த, லஹிரு குமார ஆகியோர் 10 விக்கெட்களையும் பகிர்ந்துகொண்டனர். முதல் இன்னிங்ஸ் நிறைவில் 92 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த இலங்கை, 2ஆவது இன்னிங்ஸில் குறிப்பிட்டு சொல்லும் அளவுக்கு பிரகாசிக்கவில்லை. நிஷான் மதுஷ்க (10), குசல் மெண்டிஸ் (3), ஏஞ்சலோ மெத்யூஸ் (22) ஆகியோர் குறைந்த எண்ணிக்கைகளுடனும் தினேஷ் சந்திமால் ஓட்டம் பெறாமலும் ஆட்டம் இழந்தனர். (64 - 4 விக்.) மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ன 101 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களைப் பெற்றார். தனது 36ஆவது டெஸ்ட் அரைச் சதத்தைப் பூர்த்தி செய்த சொற்ப நேரத்தில் திமுத் கருணாரடன, தலை உயர பந்தை அடிக்க விளைந்து பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். திமுத் கருணாரட்னவும் அணித் தலைவர் தனஞ்சய டி சில்வாவும் 5ஆவது விக்கெட்டில் 49 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். ஆட்ட நேர முடிவில் தனஞ்சய டி சில்வா 23 ஓட்டங்களுடனும் விஷ்வா பெர்னாண்டோ 3 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். எண்ணிக்கை சுருக்கம் இலங்கை 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 280 (தனஞ்சய டி சில்வா 102, கமிந்து மெண்டிஸ் 102, காலித் அஹ்மத் 72 - 3 விக்., நஹித் ரானா 87 - 3 விக்.) பங்களாதேஷ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 188 (தய்ஜுல் இஸ்லாம் 47, லிட்டன் தாஸ் 25, காலித் அஹ்மத் 22, விஷ்வா பெர்னாண்டோ 48 - 4 விக்., லஹிரு குமார 31 - 3 விக்., கசுன் ராஜித்த 56 - 3 விக்.) இலங்கை 2ஆவது இன்: 2ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 119 - 5 விக். (திமுத் கருணாரட்ன 52, தனஞ்சய டி சில்வா 23 ஆ.இ., ஏஞ்சலோ மெத்யூஸ் 22, நஹித் ரானா 42 - 2 விக்., மெஹிதி ஹசன் மிராஸ் 5 - 1 விக்.) https://www.virakesari.lk/article/179540
  7. வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டி.. நாம் தமிழர் அறிவிப்பு 24 MAR, 2024 | 10:10 AM இந்திய மக்களவை தேர்தலில் கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுகிறார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலே வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர்களை அறிவிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி எந்தவொரு கட்சியுடன் கூட்டணி இல்லாமல் தனித்து களம் காண்கிறது. 2024 மக்களை தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் 20 பெண்கள் மற்றும் 20 ஆண்கள் அடங்கிய 40 வேட்பாளர்களை ஒரே மேடையில் அறிமுகப்படுத்தினார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அப்போது கிருஷ்ணகிரி தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் வீரப்பன் மகள் வித்யா போட்டியிடுவதாக அறிவித்தார். அறிவித்தபோது கூட்டத்தில் கைதட்டல்கள் மற்றும் விசில் சத்தங்கள் பறந்தன. ”ஐயா வனம் காக்க போராடினார்; இனம் காக்க நானும் என் மகளும் போராடுகிறோம்” என சீமான் தெரிவித்தார் அப்போது பேசிய சீமான் ”தனித்து நிற்கிறோம் ! தனித்துவத்தோடு நிற்கிறோம் ! மற்றவர்தோள் மீது ஏறி நின்று நான் உயரமானவன் என்று காட்டுவதை விட தனித்து நின்று உண்மையான உயரத்தைக் காட்டுவதே மேலானது. காலையில் வாக்குப் பதிவு என்றால் இரவு சொன்னால் கூட சின்னத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கும் ஆற்றல் இதிறமை கொண்ட தகவல் தொழில்நுட்பப் படை பிரிவை கொண்டுள்ளேன்.என சீமான் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179555
  8. இலங்கை - இந்தியா இடையிலான பாலம் குறித்து இவ்வாரம் முக்கிய பேச்சு - புதன்கிழமை டெல்லி செல்கிறார் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் 24 MAR, 2024 | 10:57 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பாலம் அமைக்கும் திட்டம் குறித்து கலந்துரையாடல் இவ்வாரம் இடம்பெறவுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி ஆலோசகர் சாகல ரத்நாயக்க எதிர்வரும் 27ஆம் திகதி புதன்கிழமை டெல்லிக்கு செல்கிறார். இரு நாட்கள் டெல்லியில் தங்கியிருக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க அந்நாட்டு தலைவர்களுடன் இருநாடுகளுக்கு இடையிலான பாலத்தை கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அண்மைய இந்திய விஜயத்தின்போது இரு நாடுகளுக்கு இடையில் பாலம் அமைப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. இதன் பிரகாரம் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து, இந்தியாவின் இராமேஸ்வரம் வரையில் இந்த பாலம் அமைக்கப்படவுள்ளது. வாகன போக்குவரத்துக்கு மாத்திரமன்றி, இரு வழி புகையிரத பாதையும் இந்த பாலத்தின் ஊடாக நிர்மானிக்கப்பட உள்ளது. இதேவேளை, இலங்கைக்கும் இந்தியாவுக்குமான உத்தேச பாலத்தின் ஊடான நில இணைப்பை மையப்படுத்தி, தலைமன்னார் தொடக்கம் திருகோணமலை ஊடாக கொழும்பு வரையிலான விசேட நேரடி நெடுஞ்சாலை போக்குவரத்து கட்டமைப்பும் உருவாக்கப்படவுள்ளது. இதன் முதல் கட்டமாக தலைமன்னாரிலிருந்து திருகோணமலை துறைமுகம் வரையிலான வீதி கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம், இந்தியாவுக்கு இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க, டெல்லியில் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார். இந்த பாலம் ஊடாக இரு நாட்டு பொருளாதார மேம்பாடு மற்றும் மக்கள் தொடர்புகளை வலுப்படுத்த முடியும் என்று இருதரப்பும் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த பாலத்தை அமைப்பதற்கான பூர்வாங்க ஆய்வு நடவடிக்கைகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179559
  9. 23 MAR, 2024 | 10:45 PM ஆர்.ராம் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்கப்படும்போது அவருடைய நோக்கம் உட்பட தென்னிலங்கை தலைமைகளுடன் பேரம்பேசுவதற்கான நிபந்தனை வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளதாக ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவதானது வெற்றி பெறுவதற்கு அல்லவெனவும், தேசிய இனப்பிரச்சினையை தென்னிலங்கைத் தலைமைகள் புறக்கணித்தமையாலேயே என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளதோடு தென்னிலங்கைத் தலைவர்களுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளதாகவும் கூறினார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்குவதற்கான முயற்சிகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் களமிறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த மூன்று தலைவர்களும் தமிழ் மக்கள் நீண்டகாலமான நீடித்துவருகின்ற இனப்பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வினைக் காணவேண்டும் என்று போராடி வருகின்றார்கள் என்பதை நன்கு அறிந்தவர்கள். எனினும் அவர்களில் எவருமே தற்போது வரையில் இந்த நாட்டில் இனப்பிரச்சினையொன்று காணப்படுகின்றது. அதற்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை பகிரங்கமாகக் கூறுவதற்கோ தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை முறையாக முன்னெடுப்பதற்கோ தயாராக இல்லை. அவர்கள் தற்போது தமிழ் மக்களுக்கு இனரீதியான பிரச்சினைகள் இல்லை. இந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினைகளே காணப்படுகின்றன என்பதை மையப்படுத்தியே கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்கள். அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை மேற்கொள்வதற்கும் தயாராக இல்லை. இவ்வாறான நிலையில் தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் மும்முனை தேர்தல் காணப்படுவதால் சிறுபான்மை மக்களின் வாக்குகள் தீர்மானிக்கும் சக்தியைக் கொண்டிருக்கின்றது. ஆகவே, சிறுபான்மை மக்களின் வாக்குகள் வெற்றியை தீர்மானிப்பதில் பெரும் செல்வாக்கைச் செலுத்தவுள்ளன. எனவே தான் தென்னிலங்கை தலைவர்களுக்கு தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கையை வெளிப்படுத்தும் முகமாக அவர்களின் வெற்றியை தீர்மானிக்கும் வாக்குகள் அவர்களுக்கு செல்வதை தடுக்கும் முகமாகவே தமிழர்களின் சார்பில் பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு முயற்சிகளை எடுத்துள்ளோம். அவ்வாறு வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதால் எமக்கு தேர்தலில் வெற்றி கிடைக்காது என்பதை நன்கே அறிந்துள்ளோம். ஆனால் தமிழ் மக்கள் அனைவரும் ஏகோபித்து வாக்களிக்கும்போது தென்னிலங்கைத் தலைவர்கள் பெரும்பான்மையை உறுதி செய்வது மிகக் கடினமாக இருக்கும். ஆகவே, அவர்கள் தமிழ் மக்களை நோக்கி வரவேண்டிய தேவை ஏற்படும். அப்போது தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளை தமிழ் பொதுவேட்பாளர் கொண்டிருப்பார். அதனடிப்படையில் அதனை மையப்படுத்தி பேச்சுக்களை முன்வரும் வேட்பாளருடன் நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம். அதற்காக, தமிழ் பொதுவேட்பாளர் கொண்டிருக்க வேண்டிய நிபந்தனைகள் சம்பந்தமான வரைவொன்று தயாரிக்கப்படவுள்ளது. அத்துடன் தென்னிலங்கை தலைவர்கள் அல்லது வேட்பாளர்கள் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு தயாராகின்றபோது அவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுப்பதற்கான உயர்மட்டக் குழுவொன்றும் உருவாக்கப்படவுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/179529
  10. உயிர்த்த ஞாயிறு தின குண்டு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை 3 வாரங்களுக்கு முன்னரே அறிந்தேன் : உண்மையை பகிரங்கப்படுத்தினால் உயிருக்கு ஆபத்து - மைத்திரி 24 MAR, 2024 | 08:12 AM (இராஜதுரை ஹஷான்) உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தின் உண்மை சூத்திரதாரி தொடர்பில் மூன்று வாரங்களுக்கு முன்னரே எனக்கு தகவல் கிடைத்தது. நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் இரகசிய வாக்குமூலம் வழங்குவேன். திறந்த மன்றில் பகிரங்க வாக்குமூலம் வழங்கினால் எனக்கும், எனது குடும்பத்தாரின் உயிருக்கும் ஆபத்து நேரிடும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னறுவையில் சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகச்சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, குண்டுத் தாக்குதலை யார் நடத்தியது என்பது தொடர்பான தகவல்கள் எனக்கு மூன்று வாரங்களுக்கு முன்னதாகவே கிடைக்கப்பெற்றது. அதன் பின்னரே நேற்று முன்தினம் கண்டியில் வைத்து நான் அவ்வாறு குறிப்பிட்டேன். உண்மையை வெளிப்படுத்துமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்தால் நீதிமன்றத்துக்கு இரகசிய வாக்குமூலம் வழங்குவேன். திறந்த மன்றில் பகிரங்கமாக வாக்குமூலம் வழங்க முடியாது, ஏனெனில் அவ்வாறு வழங்கினால் எனக்கும், எனது குடும்பத்தாருக்கும் உயிராபத்து ஏற்படும். ஆகவே நீதிமன்றத்துக்கு வாக்குமூலம் வழங்க தயாராக உள்ளேன். அரசியல் எதிர்பார்ப்புக்களை அடிப்படையாக்க கொண்டு நான் இவ்வாறு குறிப்பிடவில்லை. உண்மையை வெளிப்படுத்தவே எதிர்பார்க்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/179548
  11. சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிராக போராட்டம் 24 MAR, 2024 | 08:06 AM சட்டவிரோதமாக மக்களது காணிகளை அபகரித்து அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் சனிக்கிழமை (23) ஆரம்பமாகி இடம்பெறுகின்றது. இந்த போராட்டமானது தொடர் போராட்டமாக, ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முதல்நாள் ஆரம்பமாகி பௌர்ணமி தினத்தன்று மாலை நிறைவடையும். அந்த வகையில் இன்றையதினம் பௌர்மிதினம் ஆகையால் போராட்டம் நேற்று சனிக்கிழமை ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய செல்வராஜா கஜேந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி ஈடுபட்டுவருகின்றனர். https://www.virakesari.lk/article/179547
  12. KKR vs SRH: ஒரே பந்தில் மாறிய ஆட்டம் - கே.கே.ஆர்-க்கு 'மரண பயம்' காட்டிய கிளாசன் செய்த சிறு தவறு பட மூலாதாரம்,IPL/TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் 412 ரன்கள், 29 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகள், ரஸலின் ருத்ர தாண்டவம், கிளாசனின் ‘கிளாசிக்கான’ பேட்டிங், 3 ஓவர்களில் திரும்பிய ஆட்டம், கடைசி ஓவரில் எகிறிய இதயத் துடிப்பு என குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் ஏராளம். கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 3வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியை 4 ரன்களில் தோற்கடித்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. முதலில் பேட் செய்த கேகேஆர் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் சேர்த்தது. 209 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்குடன் பயணித்து, 7 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் சேர்த்து 4 ரன்களில் போராடித் தோற்றது சன்ரைசர்ஸ் ஹைதரபாத். உண்மையில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து வெற்றியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்சித் ராணா திருடிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். கிளாசனின் ஒட்டுமொத்த உழைப்பும் 2 பந்துகளில் வீணாகிவிட்டது. திக்... திக்... கடைசி ஓவர் பட மூலாதாரம்,IPL/TWITTER மூன்று ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிக் காட்டிய ஹென்றிக் கிளாசன், கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டபோது ராணா வீசிய முதல் பந்தில் சிக்ஸர் விளாசி கேகேஆர் அணி வீரர்களின் நம்பிக்கையை உடைத்தார். ஆனால் 2வது பந்தில் மட்டும் கிளாசன் ரன் எடுக்காமல் ஸ்ட்ரைக்கை தக்கவைத்து இருந்தால் முடிவு வேறு மாதிரி திரும்பியிருக்கும். ஆனால், 2வது பந்தில் ஒரு ரன் எடுத்து ஷான்பாஸ் அகமதுவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க 3வது பந்தில் அவர் ஆட்டமிழந்தார். 4வது பந்தில் புதிய பேட்டர் யான்சென் ஒரு ரன் எடுத்தார். 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் களத்தில் இருந்ததால் முடிவு சன்ரைசர்ஸ் பக்கம் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், ராணா 5வது பந்தை ஸ்லோ பவுன்ஸராக வீச, கிளாசன் அடித்த ஷாட் தேர்டுமேன் திசையில் சூயசிடம் கேட்சாக மாறியதும் ஆட்டம் கை நழுவியது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்தால் சன்ரைசர்ஸ் வெற்றி, பவுண்டரி அடித்தால் சூப்பர் ஓவர் என்ற நிலை ஏற்பட்டது. கேப்டன் கம்மின்ஸ் கடைசிப் பந்தைத் தவறவிடவே, சன்ரைசர்ஸ் அணியிடம் இருந்து வெற்றியைப் பறித்தார் ராணா. ஹீரோ ஆகும் நேரம் பட மூலாதாரம்,IPL/TWITTER வெற்றி குறித்து கொல்கத்தா அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் கூறுகையில் “17வது ஓவரில் இருந்தே என் வயிற்றில் பட்டாம் பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிட்டன. நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் கிளாசன் இருந்தவரை கடைசி ஓவரில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம் என்று நினைத்தேன். கடைசி ஓவரை ஹர்சித் வீச வந்தபோது பதற்றத்துடனே இருந்தார். என்னிடம் அந்த நேரத்தில் அனுபவமான பந்துவீச்சாளர் இல்லை. எனக்கு ராணா மீது நம்பிக்கை இருந்தது. ஏதோ நல்லது நடக்கும் என்று தெரிந்தது. நான் ராணாவிடம், 'தோற்றால்கூடப் பரவாயில்லை. இதுதான் நீ ஹீரோவாக உருவாகச் சரியான நேரம். வாய்ப்பைத் தவறவிடாதே. எது வேண்டுமானாலும் நடக்கட்டும்' என்று உற்சாகப்படுத்தினேன். அவரும் சிறப்பாகப் பந்து வீசினார். ரஸல் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் அற்புதமாகச் செயல்பட்டார். நரைன் தனது அனுபவமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். தொடக்கமே இதுபோன்ற வெற்றியாக அமைந்துவிட்டால், அணிக்கு பெரிய உற்சாகமாக அமையும். சில விஷயங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும் அதில் முக்கியமானது ஃபீல்டிங்,” எனத் தெரிவித்தார். ஆபத்தான பேட்டர் கிளாசன் பட மூலாதாரம்,IPL/TWITTER ஒரு கட்டத்தில் கேகேஆர் அணியே வெற்றி பெற 99 சதவீதம் வாய்ப்புள்ளதாக கணினி கணிப்புகள் தெரிவித்த நிலையில் அந்தக் கணிப்பை கடைசி 3 ஓவர்களில் 88 சதவீதமாக கிளாசன் மாற்றிக் காட்டினார். கடந்த ஆண்டிலிருந்து டி20 உலகில் ஆகச் சிறந்த பேட்டராக கிளாசன் இருந்து வருகிறார். கிளாசனை முதல் 10 பந்துகளில் ஒரு அணி ஆட்டமிழக்கச் செய்யாவிட்டால், எதிரணிக்கு மிகப்பெரிய சேதாரத்தை ஏற்படுத்தக்கூடும் அளவுக்கு அவர் ஆபத்தான பேட்டர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் சுழற்பந்துவீச்சை அல்வா சாப்பிடும் வகையிலும், வேகப்பந்துவீச்சாளர்களின் நம்பிக்கையைத் தகர்த்தெறியும் வகையிலும் பேட் செய்யும் ‘பேட்டிங் ராட்சதன்’ கிளாசன் என்றுகூடக் கூறலாம். 3 ஓவர்கள் ஆட்டத்தை திருப்பிய கிளாசன் பட மூலாதாரம்,IPL/TWITTER இந்த ஆட்டத்திலும் அதே நிலைதான். கடைசி 5 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி வெற்றிக்கு 81 ரன்கள் தேவைப்பட்டது. 17வது ஓவரில் அப்துல் சமது, ஷான்பாஸ் 17 ரன்கள் சேர்த்தனர். வருண் வீசிய 18வது ஓவரில் 3 சிக்ஸர் உள்ளிட்ட 21 ரன்களை கிளாசன் விளாசினார். உலகின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க் பந்துவீச்சைப் புரட்டி எடுத்த கிளாசன் 4 சிக்ஸர்கள் உள்பட 26 ரன்களை விளாசினார். இந்த 3 ஓவர்கள்தான் ஆட்டத்தை கேகேஆர் அணியிடம் இருந்து சன்ரைசர்ஸ் கைக்கு மாற்றியது. ரஸலால் முடிந்தது கிளாசனால் முடியாதா கிளாசன் 29 பந்துகளில் 63 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவர் கணக்கில் பவுண்டரியே கிடையாது, 8 சிக்ஸர்கள் மட்டும்தான். கொல்கத்தா வெற்றி பெறாவிட்டால் ஆட்டநாயகன் விருது கிளாசனுக்கு கிடைத்திருக்கும். ஆனால், கிளாசனின் ஆட்டம் ரஸலுக்கு போட்டியாகவே இருந்தது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமான ஆன்ட்ரூ ரஸலின் கடைசி நேரத்தில் அதிரடி ஆட்டத்துக்குப் பதிலடியாக கிளாசன் பேட்டிங் அமைந்தது. ரஸல் 25 பந்துகளில் 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 64 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருதை வென்றார். துணிச்சல் ராணா கடைசி ஓவரில் 12 ரன்களை வெற்றிகரமாக ஹர்சித் ராணா தனது துணிச்சலான பந்துவீச்சால் டிபெண்ட் செய்து கொடுத்தார். ஏற்கெனவே மதம்கொண்ட யானை போல் ஃபார்மில் கிளாசன் இருந்தபோது, கடைசி ஓவரை வீசுவது எளிதல்ல. அனுபவமற்ற ராணா முதல் பந்தை வீசியதுமே நினைத்ததுபோல் கிளாசன் சிக்ஸருக்கு பறக்கவிட்டார். ஆனால், அடுத்தடுத்து ராணா பந்துவீச்சில் காட்டிய ‘வேரியேஷன்தான்’ ஷான்பாஸ், கிளாசன் விக்கெட்டுகளை வீழ்த்தியது. இல்லாவிட்டால் கிளாசன் இருந்த ஃபார்முக்கு 2 பந்திலேயே ஆட்டம் முடிந்திருக்கும். கிளாசன் செய்த தவறு பட மூலாதாரம்,IPL/TWITTER கடைசி ஓவரில் வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. ராணா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் சிக்ஸருக்கு பறக்கவிட்ட கிளாசன், தொடர்ந்து ஸ்ட்ரைக்கை தக்கவைத்திருக்க வேண்டும். ஆனால், 2வது பந்தில் ஒரு ரன் எடுத்ததுதான் கிளாசன் செய்த பெரிய தவறு. கிளாசன் இருந்த ஃபார்முக்கு அடுத்த ஒரு பந்தை தவறவிட்டாலும், 3வது பந்தில் நிச்சயம் சிக்ஸர் கிடைத்திருக்கும் ஆட்டம் முடிந்திருக்கும். ஆனால், ஷான்பாஸுக்கு ஸ்ட்ரைக்கை கொடுத்தபோது ஷான்பாஸ் விக்கெட்டை இழந்தார், நெருக்கடி அதிகரிக்கவே பெரிய ஷாட்டுக்கு முற்பட்டு கிளாசனும் விக்கெட்டை இழந்தார். கிளாசன் ஸ்ட்ரைக்கை தக்க வைக்காமல் இருந்ததுதான் மிகப்பெரிய தவறு. நெருக்கடி தரும் இலக்கு வெற்றி இலக்கு 209 ரன்கள் என்றவுடன் எந்த அணிக்கும் இயல்பாகவே பெரிய நெருக்கடி, அழுத்தம் இருக்கும். ரன்ரேட் 10 என்ற கணக்கில் பயணித்தால்தான் இலக்கை எட்டமுடியும் என்று சன்ரைசர்ஸ் அணிக்கு தெரிந்துவிட்டது. மயங்க் அகர்வால்(32), அபிஷேக் ஷர்மா(32) நல்ல தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளேவில் சன்ரைசர்ஸ் அணி மயங்க் விக்கெட்டை இழந்து 65 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த ராகுல் திரிபாதி(20), மார்க்ரம்(18) ஸ்கோர் செய்ய முயன்றும் முடியவில்லை. சுழற்பந்துவீச்சில் நெருக்கடி கேகேஆர் அணி வலுவான சுழற்பந்துவீச்சாளர்களை வைத்து நடுப்பகுதி ஓவர்களில் ரன்ரேட்டை கட்டிப்போட்டது. சுனில் நரேன், வருண், சூயஸ் எனத் துல்லியமாக சுழற்பந்து வீசி சன்ரைசர்ஸ் அணிக்கு நெருக்கடி அளித்தனர். ஆனால், கிளாசன் களமிறங்கிய பின்புதான் ஆட்டத்தில் விறுவிறுப்பு தொற்றிக் கொண்டது. ஆட்டம் மாறிய 2 ஓவர்கள் பட மூலாதாரம்,IPL/TWITTER கிளாசன் களமிறங்கியபோது சன்ரைசர்ஸ் வெற்றிக்கு 8.2 ஓவர்களில் 102 ரன்கள் தேவைப்பட்டது. மெதுவாக ஆடத் தொடங்கிய கிளாசன் 12 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 18 ரன்கள் சேர்த்தார். வருண் பந்துவீச்சுக்கு தொடக்கத்தில் தடுமாறிய கிளாசன் அவரின் 18வது ஓவரை பிழிந்து எடுத்தார். அதுமட்டுமல்லாமல் ஸ்டார் ஓவரை பங்கம் செய்த கிளாசன், 26 ரன்கள் குவித்தார். ஐபிஎல் வரலாற்றில் வள்ளல் பந்துவீச்சாளராக ஸ்டார்க்கை மாற்றிவிட்டார் கிளாசன். இரண்டு ஓவர்களில் 47 ரன்கள் சேர்த்து ஒட்டுமொத்த ஆட்டத்தையும் கிளாசன் திருப்பி ரசிகர்களை இருக்கையின் நுனிக்குக் கொண்டு வந்தார். அப்துல் சமதுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து 44 ரன்கள் சேர்த்த கிளாசன், ஷான்பாஸ் அகமதுடன் சேர்ந்து, 58 ரன்கள் சேர்த்து கிளாசன் ஆட்டத்தை மாற்றினார். வலுவான சுழற்பந்துவீச்சு கொல்கத்தா அணி நேற்றைய ஆட்டத்தில் சுனில் நரைன், வருண், சூயஷ் என 3 சுழற்பந்துவீச்சாளர்களை திறமையாகப் பயன்படுத்தியது. கிளாசன் களமிறங்காததை 3 பந்துவீச்சாளர்களுமே சிறப்பாகப் பந்துவீசி சன்ரைசர்ஸ் பேட்டர்களுக்கு நெருக்கடி அளித்தனர். அதிலும் நரைன் தான் வீசிய 4 ஓவரில் கொடுத்த 19 ரன்களில் ஒரு பவுண்டரிகூட சன்ரைசர் பேட்டர்களை அடிக்கவிடவில்லை. அதில் 8 டாட் பந்துகள் அடங்கும். அதேபோல ‘இம்பாக்ட் ப்ளேயர்’ சூயஷ் சர்மாவும் 2 ஓவர்களையும் கட்டுக்கோப்புடன் வீசினார். கிளாசனிடம் சிக்காதவரை வருண் சக்கரவர்த்தியும் துல்லியமாகவே பந்துவீசியிருந்தார். சன்ரைசர்ஸ் அணி பேட்டர்கள் நடுப்பகுதி ஓவர்களில் திணறியதற்கு கேகேஆர் சுழற்பந்துவீச்சு முக்கியக் காரணம். ஃபார்முக்கு வந்த ரஸல் பட மூலாதாரம்,IPL/TWITTER கேகேஆர் அணி ஒரு கட்டத்தில் 51 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 208 ரன்கள் சேர்ப்பதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ஆன்ட்ரூ ரஸிலின் “மசுல்” பேட்டிங்கும், அறிமுக வீரர் பில் சால்ட், ராமன்தீப் சிங்கின் கேமியோதான். அதிலும் பில்சால்ட் 40 பந்துகளில் 54 ரன்களும், ராமன்தீப் 17 பந்துகளில் 35 ரன்களும் சேர்த்து கேகேஆர் ஸ்கோரை உயர்த்தினர். ஃபினிஷிங் ரோலில் வந்த ரஸல் 25 பந்துகளில் 7சிக்ஸர், 3 பவுண்டரிகள் என 64 ரன்கள் சேர்த்துப் பெரிய ஸ்கோருக்கு அடித்தளமிட்டார். ரஸல் களமிறங்கும் வரை புவனேஷ்வர் குமார், நடராஜன், மார்க்கண்டே சிறப்பாகவே பந்துவீசி இருந்தனர். ஆனால், புவனேஷ்வர் 17வது ஓவரை வீச வந்தபோது ரஸல் 18 ரன்களை வெளுத்தார். நடராஜன் வீசிய 18வது ஓவரில் 15 ரன்கள், புவனேஷ்வர் வீசிய 19வது ஓவரில் 2 பவுண்டரி 2 சிக்ஸர் என 26 ரன்களை ரஸல் எடுத்தார். 20 பந்துகளில் அரைசதம் அடித்த ரஸல் கேகேஆர் அணிக்கு தன்னுடைய 200வது சிக்ஸரையும் அடித்தார். கட்டுக்கோப்பாகப் பந்தவீசிய சன்ரைசர்ஸ் அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 85 ரன்களை வாரி வழங்கியது. மிரட்டலாக வந்த நடராஜன் சன்ரைசர்ஸ் அணியில் விளையாடும் தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனின் பந்துவீச்சு கடந்த சீசன்களில் இல்லாதவகையில் இந்த ஆட்டத்தில் சிறப்பாக இருந்தது. தொடக்கத்திலே வெங்கடேஷ், கேப்டன் ஸ்ரேயாஸ் இரு பெரிய விக்கெட்டுகளை என நடராஜன் வீழ்த்தி தனது துல்லியமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ரஸலிடம் சிக்காதவரை நடராஜன் சராசரி சிறப்பாகவே இருந்தது. கடைசி நேரத்தில் ரிங்கு சிங்கின் விக்கெட்டையும் நடராஜனின் கைப்பற்றினார். நான்கு ஓவர்கள் வீசிய நடராஜன் 32 ரன்கள் கொடுத்தார், இதில் ரஸல் விளாசிய 15 ரன்களை கழித்துப் பார்த்தால் நடராஜனின் சராசரியும், 3 விக்கெட்டுகளும் அற்புதமான பந்துவீச்சாக அமையும். பட மூலாதாரம்,IPL/TWITTER சன்ரைசர்ஸ் செய்த தவறுகள் சன்ரைசர்ஸ் அணியில் கம்மின்ஸ், நடராஜன், யான்சென், புவனேஷ்வர் என 4 திறமையான பந்துவீச்சாளர்கள் இருந்தும் கொல்கத்தா ரன்ரேட்டை கட்டுப்படுத்த முடியவில்லை. கேப்டன் கம்மின்ஸ் போன்ற அனுபவம் கொண்ட வேகப்பந்துவீச்சாளர்கள் தொடக்கத்திலேயே தனது ஸ்பெல்லை முடிக்காமல், டெத் ஓவர்களில் வீசி இருந்தால் ரன்ரேட்டை குறைத்திருக்கலாம். அதேபோல டெத் ஓவர்களில் யான்சென் சிறப்பாக வீசக்கூடியவர். புவனேஷ்வர் ஸ்பெல்லை தொடக்கத்திலேயே முடிக்க வைத்து, யான்செனை கடைசியில் பந்துவீச வைத்திருக்கலாம். ஷான்பாஸ் அகமதுவையும் சரியாகப் பயன்படுத்தாமல் கம்மின்ஸ் விட்டுவிட்டார். ஷான்பாஸ் முதல் ஓவரில் 14 ரன்கள் சென்றவுடன் அவருக்கு ஓவர் தருவதை நிறுத்தாமல், கூடுதலாக சில ஓவர்கள் வழங்கியிருக்கலாம். https://www.bbc.com/tamil/articles/cnek0vdln14o
  13. மைத்திரி உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளாரா? பிள்ளையானுக்கு சந்தேகம்! 23 MAR, 2024 | 10:42 PM முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறுதின குண்டுத் தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது. எனவே அவர் துணிந்த நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை அவர் வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை என பிள்ளையான் என்றழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார். மட்க்களப்பில் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் எழுதிய ஈஸ்டர் படுகொலை இனமத நல்லிணக்க அறிதலும் புரிதலும் எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை (23) அஞ்சனா மண்டபத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடாத்தியவர்களை தெரியும் என தெரிவித்த கருத்தை நான் ஊடகங்களில் பார்த்தேன். ஒரு சாதாரண மனிதனைப்போல முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேசுகின்றார். இந்த குண்டு வெடிப்பு இடம்பெறுகின்ற போது அவர் நாட்டின் தலைவராக இருந்தார். தலைவருடைய பொறுப்பு யாராக இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டியதே. ஆனால் அவர் அதைவிட்டுவிட்டு இப்போது இரகசிய வாக்குமூலம் கொடுக்க வேண்டும் என கருத்துக்களை சொல்லுகின்றார். எனவே ஒருவேடிக்கையான மனிதரை இந்த நாட்டு அரசியலுக்கு கொண்டுவந்துள்ளோம் என்பதையிட்டு நாங்கள் வெட்டகப்படவேண்டும். ஏன் அவர் இரகசிய வாக்குமூலம் தேவை என்கின்றார். எதற்கு? யாருக்கு ? அச்சப்படுகின்றார். அப்படியென்றால் இந்த குண்டு வெடிப்பிற்கு அவரும் ஒத்துழைப்பு வழங்கியிருக்கின்றாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு ஆகவே அவர் ஒரு துணிந்த நேர்மையான அரசியல் தலைவராக இருந்தால் யார் என்பதை வெளிப்படையாக விரைவாக ஊடகங்களில் வெளிப்படுத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/179536
  14. 23 MAR, 2024 | 10:25 PM நாட்டில் வேகமாக காசநோய் கரவிவருவதாகவும் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மத்திய மார்புநோய்களுக்கான சிகிச்சை பிரிவின் மாவட்ட காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி வைத்தியர் ஆர்.எம்.எம்.சரத் பண்டார தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், காச நோய் என்பது ஒரு வகை பாக்டீரியா நோய்க்கிருமிகளால் ஏற்படும் ஒரு நோயாகும். இந்நோய் வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று நோயாகும். உமிழ்நீர், சளி மூலமாக பரவக்கூடிய இந்நோய் தற்போது இலங்கையின் பல்வேறு மாவட்டங்களில் வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் மேல் மாகாணத்தில் கொழும்பு , கம்பஹா மற்றும் களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் மட்டக்குளி, மோதரை, மாளிகாவத்தை, தெமட்டகொடை, பொரள்ளை மற்றும் வனாத்தமுல்ல உள்ளிட்ட பிரதேசங்களிலேயே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நோய் வேகமாக பரவக் கூடியது என்பதால் வீட்டில் உள்ள ஒருவர் பாதிக்கப்பட்டாலும் முழுக் குடும்ப உறுப்பினர்களையும் பரிசோதிப்பது மிகவும் அவசியம். 2 வாரங்களுக்கு மேல் தொடரும் இருமல், உணவில் நாட்டமின்மை, உடல் எடை குறைதல், சளியுடன் இரத்தம் வெளியேறுதல் உள்ளிட்ட அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக அருகில் உள்ள வைத்தியரிடம் பரிசோதனை மேற்கொண்டு நோயை உறுதி செய்ய வேண்டும். வைத்தியரின் ஆலோசனைகளின் கீழ் தொடர்ந்து 6 மாதங்களுக்கு தீவிர சிகிச்சை பெற்று வருவதால் இந்த நோயை குணப்படுத்த முடியும். இந்த நோயானது பாதிப்பு தன்மை அற்றது என்பதுடன் இந்த நோய் அறிகுறிகளை விரைவில் அறிந்து கொண்டால் இதனை குணப்படுத்துவது மிகவும் எளிது. ஆனால் இந்த நோய் அறிகுறிகளை அறிந்து கொள்ள தாமதமானால் இதனை குணப்படுத்துவது சிரமமாகலாம் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179539
  15. இந்திய தேர்தல் அறிவிப்பால் தமிழக முதல்வருடனான சந்திப்பில் தாமதம் - வடக்கு கடற்றொழிலாளர்கள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கரிசனை 23 MAR, 2024 | 10:44 PM (ஆர்.ராம்) இலங்கை, இந்திய கடற்றொழிலாளர்களுக்கு இடையிலான முறுகல் நிலைமைகள் தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நடத்தப்படுவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இந்தியப் பொதுத்தேர்தல் அறிவிப்பால் தாமதமடைந்துள்ளது. இலங்கைக் கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் இந்திய மீனவர்கள் இழுவைமடிப் படகுகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபடுவதால் கைது செய்யப்படுவதோடு, அவர்களது உபகரணங்களும் கையகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் எல்லை தாண்டும் மீனவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நாட்டின் கடல்வளத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் பல இடம்பெற்று வந்தன. அதேநேரம், தமிழகத்திலும் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில், இருநாட்டு கடற்றொழிலார்கள் விவகாரத்திற்கு விரைந்து முற்றுப்புள்ளி வைப்பதற்கு பாண்டிச்சேரி ஜுனியன் பிரதேசத்தின் மீன்பிடி மற்றும் மீனவர் நலன் கே.லக்ஷ்மி நாராயணன்; அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தார். குறித்த கடிததத்தின் பிரகாரம், தமிழக முதல்வர் ,மு..க.ஸ்டாலினுக்கும் அமைச்சர் டக்ளஸ{க்கும் இடையில் சந்திப்பொன்றை நடத்துவதென்றும் அதில் இருதரப்பும் இணக்கப்பாடுகளை எட்டுவதென்றும் கூறப்பட்டிருந்தது. அதனடிப்படையில், அமைச்சர் டக்ளஸ் பாண்டிச்சேரி செல்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையி இந்திய பாராளுமன்றத்திற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், முதலமைச்சர் ஸ்டாலின் அமைச்சர் டக்ளஸ் உள்ளிட்ட இந்த விவகாரத்துடன் தொடர்புடைய எந்தவொரு தரப்பினரையும் சந்திப்பதாக இருந்தால் இந்திய தேர்தல்கள் ஆணையகத்தின் முன் அனுமதி பெற வேண்டியது அந்நாட்டுச் சட்டமாகவுள்ளது. அந்தவகையில், இருதரப்பு அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் தாமதமாகியுள்ளது. அத்துடன், விசேடமாக தமிழக மீனவர்கள் எல்லை தாண்டமாட்டார்கள் என்ற உத்தரவாதக் கடிதத்தினை பாண்டிச்சேரி மற்றும் தமிழக முதலமைச்சர்கள் வழங்குவதற்கு உறுதிய அளித்துள்ளன. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ளதாக இந்திய தலைமை தேர்தல்கள் ஆணையகம் அறிவித்துள்ளதோடு ஏப்ரல் 19ஆம் திகதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179534
  16. பஞ்சாபை வெற்றி பெறச் செய்த சென்னையின் 'சுட்டிக் குழந்தை' - காயத்தில் இருந்து மீண்ட ரிஷப் பந்த் என்ன சாதித்தார்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 23 மார்ச் 2024 “கேட்ச் மிஸ் மேட்ச் மிஸ்” என்று கிரிக்கெட்டில் சொல்வதுண்டு. அதுபோல் டெல்லி கேபிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் வார்னர் கோட்டை விட்ட கேட்ச் உள்ளிட்ட பல்வேறு தவறுகளால் அந்த அணி வெற்றியை பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தாரை வார்த்தது. முலான்பூரில் இன்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 2வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வென்றது. முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கி 4 பந்துகள் மீதிமிருக்கையில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சி.எஸ்.கே. அணியில் முன்பு விளையாடிய, சென்னை ரசிகர்களால் சுட்டிக்குழந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் சாம் கரண் பஞ்சாப் அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். ராக்கெட் வேகத்தில் ரன்ரேட் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவண், பந்துவீ்ச்சைத் தேர்ந்தெடுத்தார். இதையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணிக்கான ஆட்டத்தை டேவிட் வார்னர், மிட்ஷெல் மார்ஷ் தொடங்கினர். சாம் கரன் வீசிய முதல் ஓவரிலேயே 2 பவுண்டரிகளை விளாசி 10 ரன்களை மார்ஷ் சேர்த்து அதிரடியாகத் தொடங்கினார். அர்ஷ்தீப் வீசிய 2வது ஓவரில் வார்னர் சிக்ஸர், பவுண்டரி என 11 ரன்களைச் சேர்த்து ரன்ரேட்டை எகிறச்செய்தார். ரபடா வீசிய 3வது ஓவரிலும் மார்ஷ் பவுண்டரி, சிக்ஸர் என 12 ரன்களைச் சேர்க்கவே டெல்லி அணியின் ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் சென்றது. 4வது ஓவரை அர்ஷ்தீப் வீசினார். முதல் பந்தில் சிக்ஸர் விளாசிய மார்ஷ் 2வது பந்தில் சஹரிடம் கேட்ச் கொடுத்து 20 ரன்னில் வெளியேறினார். அடுத்து ஷாய் ஹோப் களமிறங்கினார். ரபாடா வீசிய 5-வது ஓவரில் வார்னர் பவுண்டரி, சிக்ஸர் விளாசி 11 ரன்களை சேர்த்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் டெல்லி அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஹோப், ரிஷப் பந்த் ஏமாற்றம் பொறுமையாக பேட் செய்த ஹோப் அதிரடிக்கு மாறினார். சஹர் வீசிய 7-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என 14 ரன்களை விளாசினார். இதனால் 8-வது ஓவரில் ஹர்சல் படேல் பந்துவீச அழைக்கப்பட்டார். அதற்கு பலனும் கிடைத்தது, ஹர்சல் படேல் ஓவரின் கடைசிப் பந்தில் வார்னர்29 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கார் விபத்துக்குப்பின் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த ரிஷப் பந்த் நீண்ட காலத்துக்குப்பின் களமிறங்கி ஹோப்புடன் சேர்ந்தார். ரிஷப் பந்த் நிதானமாக பேட் செய்ய, ஹோப் அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரிகளாக விளாசி ரன்ரேட்டை குறையவிடாமல் பார்த்துக்கொண்டார். 10ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 86 ரன்கள் சேர்த்திருந்தது. ஹோப் விக்கெட்டை வீழ்த்த ரபாடா அழைக்கப்பட்டார். ரபாடா வீசிய 11வது ஓவரில் சிக்ஸர் விளாசிய ஹோப், அதேஓவரில் ஷார்ட் கவரில் ஹர்பிரித் பிராரிடம் கேட்ச் கொடுத்து 33 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ரிக்கி புயி களமிறங்கி, ரிஷப் பந்துடன் சேர்ந்தார். சஹர் வீசிய 12-வது ஓவரில் ரிஷப் பந்துக்கு ஒரு கேட்ச் வாய்ப்பை ஹர்சல் படேல் தவறவிட்டது மட்டுமின்றி பவுண்டரியும் கோட்டைவிட்டார். 13-வது ஓவரை ஹர்சல் படேல் வீசினார். ஹர்சல் ஓவரில் பவுண்டரி அடித்து அதிரடி காட்டிய ரிஷப் பந்த், ஸ்லோபவுன்ஸரில் விக்கெட்டை இழந்தார். ஹர்சல் வீசிய ஸ்லோ பவுண்ஸரில் ஸ்குயர் திசையில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து 18 ரன்னில் ஆட்டமிழந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சரிவில் சிக்கிய டெல்லி பிரார் வீசிய 14-வது ஓவரில் ரிக்கி புயி 3 ரன்களில் விக்கெட் கீப்பர் ஷர்மாவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். 74 ரன்கள் வரை டெல்லி அணி ஒரு விக்கெட் மட்டும் இழந்திருந்த நிலையில் அடுத்த 37 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து நெருக்கடியான நிலைக்கு தள்ளப்பட்டது. சஹர் வீசிய 15-வது ஓவரில் ஸ்டப்ஸ் 5 ரன்னில் சசாங் சிங்கிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். நிதானமாக பேட் செய்த அக்ஸர் படேல் 21 ரன்னில் ரன்அவுட் ஆகி விக்கெட்டை பறிகொடுத்தார் அடுத்துவந்த சுமித் குமார் 2 ரன்னில் அர்ஷ்தீப் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். டெல்லி கேபிடல்ஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆபத்பாந்தவன் போரெல் ஹர்சல் படேல் வீசிய கடைசி ஓவரில் அபிஷேக் போரல் வெளுத்து வாங்கிவிட்டார். 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை ராக்கெட் வேகத்துக்கு உயர்த்தி 10 பந்துகளில் 33 ரன்கள் என அழகான கேமியோ ஆடி அணியை மீட்டெடுத்தார். குல்தீப் யாதவ் கடைசிப் பந்தில் ஒரு ரன்எடுக்க முற்பட்டு ரன்அவுட்டாகினார். அபிஷேக் போரல் 33 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 20வது ஓவர் தொடக்கத்தில் டெல்லி வெற்றி பெற 38 சதவீத வாய்ப்பு இருப்பாத கணினி முடிவுகள் தெரிவித்த நிலையில் 20வது ஓவர் முடிவில் 55 சதவீதமாக உயர்ந்துவிட்டது. 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேபிடல்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பஞ்சாப் கிங்ஸ் அதிரடித் தொடக்கம் 175 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் அணி களமிறங்கியது. ஷிகர் தவண், பேர்ஸ்டோ அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். கலீல் அகமது வீசிய முதல் ஓவரிலேயே தவண் 2 பவுண்டரிகள், பேர்ஸ்டோ 2 பவுண்டரிகள் விளாசி 17 ரன்களைக் குவித்தனர். இசாந்த் சர்மா வீசிய 2வது ஓவரில் தவண் பவுண்டரி உள்பட 8 ரன்களைச் சேர்த்து ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்றார். விக்கெட் சரிவு இசாந்த் சர்மா வீசிய 4வது ஓவரின் முதல் பந்தில் ஷிகர் தவண் 22 ரன்களில் கிளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த பிரப்சிம்ரன் சிங் வந்தவேகத்தில் இசாந்த் சர்மா பந்துவீச்சில் 2 பவுண்டரிகளை விளாசினார். 3வது பவுண்டரி அடிக்க ஸ்ட்ரைட் டிரைவ் ஆடியபோது, பந்து இசாந்சர்மா கைகளில் பட்டு ஸ்டெம்பில் பட்டதால் ரன்அவுட் முறையிடப்பட்டது. இதில் 3வது நடுவர் தீர்ப்பில் இசாந்த் சர்மா கைகளில் பட்டு ஸ்டெம்பில் பட்டது உறுதியாகவே, பேர்ஸ்டோ 9 ரன்னில் ரன்அவுட் முறையில் வெளியேறினார். அடுத்து சாம் கரன் களமிறங்கி பிரப்சிம்ரன் சிங்குடன் சேர்ந்தார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 2 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் சேர்த்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிரப்சிம்ரன் அவசரம் அக்ஸர் படேல் வீசிய 7வது ஓவரிலும், குல்தீப் யாதவ் வீசிய 8-வது ஓவரிலும் பிரப்சிம்ரன், சாம் கரன் ரன் சேர்க்க சிரமப்பட்டனர். அதிலும் குல்தீப் தற்போது சர்வதேச அளவில் நல்லஃபார்மில் இருப்பதால், மிகுந்த கவனத்துடன் அவரின் பந்துவீச்சை எதிர்கொண்டனர். குல்தீப் யாதவ் வீசிய 10-வது ஓவரில் கூக்ளியாக வீசப்பட்ட பந்தை பிரப்சிம்ரன் சிங் லாங் ஆன் திசையில் தூக்கி அடிக்க முற்பட்ட வார்னரிடம் கேட்சானது. பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களில் வெளியேறினார். 10ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து வந்த ஜிதேஷ் சர்மாவும் நீண்டநேரம் நிலைக்கவில்லை. 9 ரன்கள் சேர்த்தநிலையில் குல்தீப் யாதவ் ஓவரில் விக்கெட் கீப்பர் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். அடுத்து லியாம் லிவிங்ஸ்டோன் களமிறங்கி சாம்கரனுடன் சேர்ந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES வெற்றிக் கூட்டணி 14 ஓவர்கள் வரை ரன்ரேட் மெதுவாகவே சென்றது. மார்ஷ் வீசிய 15-வது ஓவரில் கரன் 2 பவுண்டரிகளும், லிவிங்ஸ்டோன் ஒரு சிக்ஸரும் விளாச 18 ரன்கள் கிடைக்கவே ஆட்டம் பரபரப்படைந்தது. அதிரடியாக ஆடிய சாம்கரன் 39 பந்துகளில் இந்த ஐபிஎல் தொடரில் முதல் அரைசதத்தை பதிவு செய்தார். கடைசி 4 ஓவர்களில் பஞ்சாப் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டது. கலீல் அகமது வீசிய 17-வது ஓவரை குறிவைத்த லிவிங்ஸ்டோன் 2 பவுண்டரிகள் உள்பட 11 ரன்கள் சேர்த்தார். 18 பந்துகளில் பஞ்சாப் வெற்றிக்கு 28 ரன்கள் தேவைப்பட்டது. மார்ஷ் வீசிய 18-வது ஓவரில் சாம்கரன் ஒரு சிக்ஸர், பவுண்டரியும், லிவிங்ஸ்டோன் ஒருசிக்ஸரும் விளாசி 18 ரன்கள் சேர்த்து ரன்ரேட் நெருக்கடியைக் குறைத்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசி 2 ஓவர்களில்... கடைசி 2 ஓவர்களில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. கலீல்அகமது வீசிய 19-வது ஓவரில் சாம் கரன் 63 ரன்கள் சேர்த்த நிலையில் கிளீன் போல்டாகி வெளியேறினார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் சேர்ந்து 67 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். அடுத்து களமிறங்கிய சசாங்க் சிங் வந்தவேகத்தில் ரிஷப்பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 4 ரன்கள் கொடுத்து, 2 விக்கெட்டுகளை கலீல் அகமது எடுத்ததால் ஆட்டம் பரபரப்பானது. கடைசி ஓவரில் பஞ்சாப் அணி வெற்றிக்கு 6 ரன்கள் தேவைப்பட்டது. லிவிங்ஸ்டோன் களத்தில் இருந்ததால் பஞ்சாப் வெற்றி எதிர்பார்க்கப்பட்டதாக இருந்தது. அதற்கு ஏற்றார்போல், கடைசி ஓவரை சுமித்குமார் முதல் இரு பந்துகளை வைடாக வீசினார், 2வது பந்தில் லிவிங்ஸ்டோன் சிக்ஸருக்கு வின்னிங் ஷாட் அடிக்கவே பஞ்சாப் வெற்றி உறுதியானது. 4 பந்துகள் மீதிருக்கையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வென்றது. லிவிங்ஸ்டோன் 21 பந்துகளில் 38 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES சொத்தையான பந்துவீச்சு டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கத்தில் பலமாக அமைந்த வேகப்பந்துவீச்சாளர் இசாந்த் சர்மா காயமடைந்தது அந்த அணிக்கு பலவீனமாக அமைந்தது. இதனால், மார்ஷ், கலீல் அகமதுக்கு முழு ஓவர்கள் வழங்க வேண்டியதிருந்தது. மார்ஷ் 4 ஓவர்கள் வீசி 52 ரன்களையும், கலீல் அகமது 43 ரன்களையும் வாரி வழங்கினார். இருவர் மட்டுமே சேர்ந்து 95 ரன்களை வழங்கி அணிக்கு இக்கட்டான சூழலை ஏற்படுத்தினர். குல்தீப், அக்ஸர் படேல் இருவரும் தங்களுக்குரிய பங்களிப்பை சரியாகச் செய்தனர். இருவரின் பந்துவீச்சால்தான், நடுப்பகுதியில் பஞ்சாப் கிங்ஸ் ரன்ரேட் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், கலீல், மார்ஷ் பந்துவீச வந்தபின் லிவிங்ஸ்டோன், கரன் இருவரும் குறுகிய பவுண்டரி தொலைவைப் பயன்படுத்தி, குறிவைத்து டெல்லி கேபிடல்ஸ் அணியைத் தகர்த்தனர். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தொடக்கத்தில் கிடைத்த தருணத்தை பயன்படுத்தவில்லை. பேர்ஸ்டோ, தவண் ஆட்டமிழந்தவுடன் பஞ்சாப் அணிக்கு நெருக்கடி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், தவறவிட்டனர். எதிர்பார்த்த அளவுக்கு பீல்டிங் இல்லை, சராசரிக்கும் குறைவாகவே பீல்டிங் தரம் இருந்தது. குறிப்பாக வார்னர் முக்கியமான கட்டத்தில் கேட்சை தவறவிட்டது ஆட்டத்தை தவறவிட்டதாக மாறிவிட்டது. மார்ஷ், கலீல் அகமது இன்னும் லைன், லென்த்தில் பந்துவீசி இருந்தால் ஆட்டம் விறுவிறுப்பாக அமைந்திருக்கும். நடுப்பகுதி ஓவர்களில் குல்தீப், அக்ஸர் ரன் ரேட்டை இறுக்கிப் பிடித்தனரே தவிர விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை. இதுபோன்ற அடுக்கடுக்கான தவறுகளால் வெற்றி வாய்ப்புகளை பஞ்சாபிடம் டெல்லி தாரை வார்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பதற்றமாக இருந்தது டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ரிஷப் பந்த் கூறுகையில் “ இசாந்த் சர்மா காயமடைந்தது எங்களுக்கு பெரிய பாதிப்பாக அமைந்தது. அபிஷேக் போரல் கடைசி நேரத்தில் அடித்த கேமியோ ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தது. இசாந்த் சர்மா இல்லாததால் கூடுதல் பந்துவீச்சாளர்இல்லாதநிலையில் விளையாடினோம். நீண்டகாலத்துக்குப்பின் பேட்டிங் செய்த போது எனக்கு பதற்றம் இருந்தது. இன்னும் கூடுதலாக ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். ஆடுகளம் அருமையாக இருந்ததால், அதிகமாக குறை கூறவிரும்பவில்லை. இந்த தோல்வியில் இருந்து நிச்சயம் பாடம் கற்போம்” எனத் தெரிவித்தார். வெற்றி நாயகர்கள் பஞ்சாப் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு சாம் கரன்(63), லிவிங்ஸ்டோன்(33) ஆகியோரின் ஆட்டம்தான் முக்கியக் காரணமாகும். நீண்ட பேட்டிங் வரிசை வைத்திருந்தும் பெரிதாக எந்த பேட்டரும் சோபிக்கவில்லை. ஆனால் 5-வது விக்கெட்டுக்கு இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து 67 ரன்கள் சேர்த்து ஆட்டத்துக்கு திருப்புமுனையை ஏற்படுத்தினர். பட மூலாதாரம்,GETTY IMAGES திருப்புமுனை ஓவர்கள் குறிப்பாக மார்ஷ், கலீல் அகமது ஓவர்களை குறிவைத்து இருவரும் வெளுத்து வாங்கியதுதான் ஆட்டத்துக்கு உயிரை வரவழைத்தது. ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி தோல்வியின் பிடியில் இருந்தது. ஆனால், 15 ஓவர்களுக்குப்பின் இருவரின் மிரட்டல் அடியால், ஆட்டத்தின் போக்கு, டெல்லியிடம் இருந்து பஞ்சாப் கிங்ஸ் கரங்களுக்கு மாறியது. இந்த ஐபிஎல் தொடரில் முதல் அரைசதம் அடித்த சாம் கரனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. https://www.bbc.com/tamil/articles/c2jxrpl750jo
  17. மொஸ்கோ இசைநிகழ்ச்சி அரங்கதாக்குதல் - கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரிப்பு 23 MAR, 2024 | 04:56 PM மொஸ்கோவில் இசைநிகழ்ச்சி அரங்கமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது. குரோகஸ் சிட்டியின் இசைநிகழ்ச்சி அரங்கில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 115 ஆக அதிகரித்துள்ளது என ரஸ்யாவின் விசாரணை குழு தெரிவித்துள்ளது. அரங்கில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது மேலும் உடல்களை மீட்டுள்ளதாக விசாரணை குழு தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த தாக்குதலுடன நேரடியாக தொடர்புபட்ட நால்வரை கைதுகைதுசெய்துள்ளதாக ரஸ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/179520
  18. 23 MAR, 2024 | 04:36 PM உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவின் உறவுகளை ஒன்றிணைத்து பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினதும் வாழ்வியலை மேம்படுத்தும் நோக்கில் நெடுந்தீவில் எதிர்வரும் ஆகஸ்ட் 4 முதல் 10 வரை நெடுவூர்த் திருவிழா நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் நெடுவூர்த் திருவிழாவின் ஏற்பாட்டாளரும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான கிருபாகரன் தர்மலிங்கம் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், கடந்து போன இனப்போரினாலும் பொருளியல் போரினாலும் சிதறுண்டு போனோரெல்லாம் உலகின் பல பாகங்களிலும் வெளி மாவட்டங்களிலும் பரந்து வாழும் இச்சூழலில் எமது தாய்மண் உறவுகள் ஒன்றிணைந்து கடந்த கால வாழ்வியலை மகிழ்வோடு மீட்டுப் பார்க்கும் அழகிய தருணமாக இந்த நெடுவூர்த் திருவிழா அமையும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இவ்விழாவில் பல்துறை சார்ந்த நிகழ்வுகளை உறவுகளின் பங்களிப்புடன் நடத்துவதற்கு நாம் எண்ணியுள்ளோம். இதன்மூலம் நெடுந்தீவு பிரதேச அபிவிருத்தியினையும் உள்ளூரில் வாழும் உறவுகளினது வாழ்வியலையும் மேம்படுத்துவதே எமது நோக்கம் என்றார். https://www.virakesari.lk/article/179517
  19. Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 04:11 PM காசநோயினால் வவுனியாவில் கடந்தவருடம் மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், 58 பேர் நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளதாக வவுனியா காசநோய் கட்டுப்பாட்டு வைத்திய அதிகாரி கே.சந்திரகுமார் தெரிவித்தார். வவுனியாவில் இன்று சனிக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், இம்முறை “ஆம் எங்களால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்” எனும் தொனிப்பொருளில் உலக காசநோய் தினம் மார்ச் 24 ஆம் திகதி நினைவுகூரப்படுகின்றது. இலங்கையை பொறுத்தவரை ஒரு இலட்சம் பேரில் 62 பேர் காசநோயாளர்களாக இனம்காணப்படவேண்டும். இருப்பினும் 4 ஆயிரம்பேர் வரை இனம் காணப்படாமல் இருக்கின்றனர். நாட்டில் இறப்பிற்கு காரணமானமூன்றாவது நோயாக இது காணப்படுகின்றது. கடந்தவருடம் வவுனியா மாவட்டத்தில் 58 நோயாளர்கள் இனம்காணப்பட்டனர். அதில் மூன்றுபேர் உயிர் இழந்துள்ளனர். தொடர்ச்சியாக இரு வாரங்களிற்கு மேற்ப்பட்ட இருமல் மாலைநேரத்தில் காய்ச்சல், உணவில் நாட்டம்இன்மை, உடல்நிறை குறைவடைதல், சளியுடன் ரெத்தம் வெளியேறல். இப்படியான அறிகுறிகள் தென்பட்டால் அது காசநோயாக இருக்கலாம். மேற்கூறிய அறிகுறிகள் இருந்தால் அருகில் உள்ள பொதுவைத்தியசாலைகளுக்கு சென்று சாதாரண சளிப்பரிசோதனையினை இலவசமாக செய்துகொள்வதன் மூலம் இந்த நோயினை இனம் காணலாம். எந்தவித அறிகுறியும் இல்லாமலும் இந்த நோய் உடலில் இருக்கலாம். குறிப்பாக ஏற்கனவே நோய் ஏற்ப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், அல்லது நாட்பட்ட நோய் கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், சிறுநீரக நோயாளர்கள், மூட்டுவாதம் போன்ற நோய்கள் உள்ளவர்களுக்கு அறிகுறிகள் வெளிப்படாமல் இந்த நோய்கிருமி தங்ககூடும். அப்படியானவர்களுக்கு பரிசோதனையினை செய்வதன் மூலம் அதனை கண்டறியலாம். ஒருவருக்கு காசநோய் ஏற்ப்பட்டால் ஆறுமாதத்திற்கு நேரடி கண்காணிப்புடனான சிகிச்சையின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டால் அதனை முற்றாக குணப்படுத்தலாம். அது தொடர்பில் அச்சம் கொள்ளத்தேவையில்லை. சிகிச்சைகளை எடுக்கத்தவறினால் அது தீவிரமடைந்து இறப்பிற்கு வழிவகுக்கும். என்றார். https://www.virakesari.lk/article/179515
  20. IPL 2024: 'டிஆர்எஸ் முறை நீக்கம்'.. புது தொழில்நுட்பம் அறிமுகம்: இதுவரை யாரும் செய்யாத டெக்னிக்! இனி டிஆர்எஸ் முறை இருக்காது. அதற்கு மாற்றாக, தரமான தொழில்நுட்பத்தை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது. IPL 2024: 'டிஆர்எஸ் முறை நீக்கம்'.. புது தொழில்நுட்பம் அறிமுகம்: இதுவரை யாரும் செய்யாத டெக்னிக்! டிவி அம்பயர்ஸ் டூ டிரைக்டர்ஸ் என்ற வாசகத்தை இனி கேட்க முடியாது. ஆம், டிஆர்எஸ் முறையை ஒழித்து, புது விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது. ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்: டிஆர்எஸ் எடுக்கும்போது, அது சிலமுறை தவறான முடிவுகளை காட்டுகிறது. மூன்றாவது நடுவர் தெளிவாக ஆராய்ந்தாலும், சிலமுறை தவறான முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த குறைகளை போக்க, ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் கொண்டு வரப்படுகிறது. டிவி அம்பயர் கிடையாது: ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் கொண்டு வரப்படுவதால், இனி 'டிவி அம்பயர் டூ டிரைக்டர்' என்ற வார்த்தையை கேட்க முடியாது. டிஆர்எஸ் முறை தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவியோடு எடுக்கப்படும். ஆனால், தற்போது ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் அப்படி கிடையாது. இடையில் வர மாட்டார்கள்: டிஆர்எஸ் முறையை கணிக்க மூன்றாம் நடுவர், ஹக்ஐ வல்லுநர்கள் இருவரும், தொலைக்காட்சி உதவியை நாடுவார்கள். தொலைக்காட்சி காட்சிகளை வைத்து, ஹக்ஐ தொழில்நுட்ப வல்லுநர் டிஆர்எஸை உருவாக்குவார்கள். அதனை பார்த்து, மூன்றாவது நடுவர் அவுட், நாட் அவுட் என்பதை கணித்து கூறுவார். இனி அப்படி நடக்காது. தொலைக்காட்சி தேவையில்லை: ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டத்திற்கு, தொலைக்காட்சி உதவி தேவையில்லை. மூன்றாம் நடுவர் மற்றும் ஹக்ஐ வல்லுநர்கள் ஆகியோர் ஒரே அறையில் அமர்ந்து, ஒரு நிமிடத்திற்குள் அவுட், நாட்அவுட்டை துல்லியமாக தீர்மானிப்பார்கள். எப்படி சாத்தியம்? ஹக்ஐ வல்லுநர்கள் மொத்தம் 8 கேமராக்களை பொறுத்துவார்கள். பௌலர்கள் என்ட், பேட்டர்கள் என்ட் என இதில் 8 கேமராக்கள் இருக்கும். இதை வைத்து, ஹக்ஐ வல்லுநர்கள் உடனே, டிஆர்எஸ் போன்ற ஒன்றை கொண்டு வந்துவிடுவார்கள். இதற்கு 30 நொடிகள் கூட ஆகாதாம். அடுத்து, மூன்றாம் நடுவர் உடனே அதை பார்த்து, அவுட், நாட்அவுட்டை தீர்மானிப்பார். 10 நொடிகளிலும் தீர்ப்பு: LBW ரிவியூ எடுத்தால், அதிக நேரம் பிடிக்கும். ஆனால், ஸ்மார்ட் ரிவியூ சிஸ்டத்தில் அப்படி நடக்காது. பந்து லெக் சைடில் பிட்ச் ஆனால், அதனை 10 நொடிகளில் கணித்துவிட முடியும். உடனே, நாட் அவுட் என மூன்றாம் நடுவர் அறிவித்துவிடுவார். 8 கேமராக்களிலும் பார்க்க முடியும்: முன்புபோல் இல்லாமல், ஸ்மார்ட் ரிவியூ சிஸ்டம் மூலம், 8 கேமராக்களில் ரிவியூவை பார்க்க முடியும். இதனை ஒளிபரப்பவும் செய்வார்கள். ரிவியூ எடுக்கும் போது, 8 கேமராக்களில் பதிவான காட்சிகள் ஒரு சில நொடிகளில் திரைக்கு வந்துவிடும். உடனே தீர்ப்பும் வந்துவிடும். இதனால், நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamil.samayam.com/sports/cricket/iplt20/news/ipl-introduces-smart-replay-system-for-quicker-more-accurate-reviews-the-new-system-will-have-the-tv/articleshow/108632260.cms?story=7
  21. LIVE 3rd Match (N), Eden Gardens, March 23, 2024, Indian Premier League Kolkata Knight Riders 208/7 Sunrisers Hyderabad (3.1/20 ov, T:209) 28/0 SRH need 181 runs in 101 balls. Current RR: 8.80 • Required RR: 10.68 Win Probability:SRH 17.62% • KKR 82.38% நடராஜன் 4 விக்கெட் சன்ரைசர்ஸ் அணிக்காக பந்துவீசி எடுத்திருக்கிறார். T Natarajan 4 0 32 3 8.00 9 3 1 3 0
  22. முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய தனது நூலை மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க தேரர்களுக்கு வழங்கினார் Published By: DIGITAL DESK 3 23 MAR, 2024 | 04:10 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ “ஜனாதிபதி பதவியில்‌ இருந்து என்னை வெளியேற்றியதன் சதி” என்ற தனது நூலை நேற்று (22) மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களிடம் வழங்கினார். கோட்டாபய ராஜபக்ஷ ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று வழிபாடுகளை நிறைவேற்றிய பின்னர், தலதா மாளிகையின் தியவடன நிலமேவிடம் நூலின் பிரதியொன்றினை வழங்கியிருந்தார். அதனைத் தொடர்ந்து அன்றைய தினமே மல்வத்து விகாரைக்கு சென்று மஹாநாயக்கர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரரின் ஆசீர்வாதத்தைப் பெற்றார். பின்னர், அஸ்கிரிய மகா விகாரைக்குச் சென்று நூலை வழங்கி மகாநாயக்கர் வரகாகொட ஸ்ரீ ஞானரதனவின் ஆசீர்வாதங்களைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, மகாநாயக்க தேரர்களுடன் தனிப்பட்ட கலந்துரையாடலிலும் ஈடுபட்டார். https://www.virakesari.lk/article/179511
  23. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: மைத்திரியிடம் விசாரணை நடத்த உத்தரவு! 23 MAR, 2024 | 08:01 PM உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸ் மா அதிபருக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடத்தியது யார் என்பது தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/179541
  24. பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்தார். நாட்டில் உள்ள 1,700,000 பாடசாலை மாணவர்களுக்காக இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படுவதாகவும் அத்துடன், இந்த வேலைத்திட்டத்திற்காக 26 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/296893

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.