Everything posted by ஏராளன்
-
யுத்தத்தின் இறுதிகாலங்களில் ஊடகவியலாளராக பணியாற்றிய சுரேன் கார்த்திகேசுவின் “போரின் சாட்சியம்”
23 MAR, 2024 | 09:32 AM முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைஇடம்பெற்றவேளை இலங்கையில் ஊடகவியலாளராக பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு போரின் சாட்சியாகயிருந்த அவரின் கண்முன்னே இடம்பெற்ற சம்பவங்கiயும் அவர் எடுத்த புகைப்படங்களையும உள்ளடக்கிய போரின் சாட்சியங்கள் நூலை வெளியிடவுள்ளார். போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையில் பணிபுரிந்த சுரேன் கார்த்திகேசு தற்போது புலம்பெயர்ந்து வாழ்ந்;து கொண்டிருக்கின்ற நிலையி;ல் புலம்பெயர் தேசங்களில் இந்த அவர் நூலை வெளியிடவுள்ளார். இந்த நூல் ஏப்பிரல் 27 த் திகதி கனடா வன்கூவரிலும் மே 12 ம் திகதி சுவிட்சர்லாந்திலும் வெளியாகவுள்ளது. எனக்கு கிடைத்த சந்தர்ப்பம் போல வேறு போர்க்காலத்தில் ஊடகவியலாளராக பணியாற்றியவர்களுக்கு கிடைத்திருக்காது. இறுதிப்போர்க்காலத்தில் ஈழநாதம் பத்திரிகையை தவிர வேறு எந்த அச்சு ஊடகங்களும் வெளிவரவில்லை. பத்திரிகைப்பயணமும் அத்தோடு நான் எடுத்த ஒளிப்படங்களையும் உள்ளடக்கி “ போரின் சாட்சியம் ” என்ற நூலை உருவாக்கியுள்ளேன். இதில் சில இறுதிப்போர்க்காலத்தில் பணியாற்றிய சில ஊடகவியலாளர்கள் பற்றிய விபரங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளது. 2009 போர்நடைபெற்ற காலத்தில் நீங்கள் பார்த்திருந்த ஒளிப்படங்களுக்கான கதைகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம். போரின் மூலம் இனஅழிப்புச் செய்யப்பட்டுள்ளமைக்கான சாட்சியங்களைக்கொண்ட இந்நூல் எதிர்வரும் 2024- ஏப்பிரல் 27 சனிக்கிழமை, அன்று மாலை 4 மணிக்கும் வன்கூவரிலும் வெளியிடப்படுகிறது என்பதை அறியத்தருகின்றேன். என ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179478
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே: ஆர்சிபி-யின் ஓட்டைகளைப் பயன்படுத்திய கேப்டன் ருதுராஜ் பட மூலாதாரம்,IPL/TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளைய, புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார். அவரது கேப்டன்சி வெற்றிகரமாக அமைந்ததற்கு அறிமுக வீரர்கள் முஸ்தபிசுர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் முக்கியக் காரணங்களாக அமைந்தனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 2024ஆம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டம் தொடங்கியது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. கேப்டன் யார்? சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற பதற்றம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அவ்வப்போது ருதுராஜுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிய தோனி, ஃபீல்டிங் செட் செய்வதிலும் உதவினார். கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது. ஆர்சிபியை துரத்தும் தோல்வி - சிஎஸ்கே சாதனை பட மூலாதாரம்,IPL/TWITTER சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியின் தோல்வி 17வது ஆண்டாகத் தொடர்கிறது. 2008ஆம் ஆண்டுக்குப் பின் சேப்பாக்கத்தில் ஆர்சிபியால் இன்னமும் வெற்றி பெற முடியவில்லை என்ற அவப்பெயர் நீடிக்கிறது. அதேநேரம், சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 8வது வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைதானத்தில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே அணியாகத்தான் இருக்கும். ஆட்டம் முடிந்தபின் மைதானத்தில் “இது எங்க ஏரியா உள்ள வராதே” என்ற பாடல் ஒலித்தபோது, ஆர்சிபி அணிக்கு சிஎஸ்கே கூறுவதுபோல் இருந்தது. டிஜே-வின் சமயோஜித பாடலை ரசிகர்கள் ஏகத்துக்கும் ரசித்தனர். முஸ்தபிசுர் ‘முறுக்குப்பிழிதல்’ நுட்பம் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோரின் பேட்டிங் முக்கியக் காரணங்கள். அதிலும் முஸ்தபிசுர் ரஹ்மானின் ஸ்லோ-பால் நுட்பம் முதல் போட்டியிலேயே நன்கு பலன் அளித்தது. “முறுக்குப் பிழிதல்” போல் கையை மடக்கி வைத்து பேட்டர்களை ஏமாற்றும் அந்த ஸ்லோ-பால் நுட்பம் அவருக்கு பவர்ப்ளேவில் 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தது. 2வது ஸ்பெலில் பந்துவீச வரும்போது, கோலி, கிரீன் என இரு பெரிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிஎஸ்கே பணியைச் சுலபமாக்கினார். சிஎஸ்கே அணியின் அறிமுக பந்துவீச்சாளர் “ஃபிஸ்(Fiz)” எனப்படும் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், அதை மற்ற பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை. இதனால்தான் ஆர்சிபியை 100 ரன்களுக்குள் சுருட்ட முடியாமல் கூடுதலாக 95 ரன்களை சேர்க்க முடிந்தது. அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தபிசுர்(ஃபிஸ்) ரஹ்மானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. பட்டையைக் கிளப்பிய ரவீந்திரா பட மூலாதாரம்,IPL/TWITTER அதேபோல மற்றொரு அறிமுக வீரர், தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அறிமுக ஆட்டத்தைப் போல் பேட் செய்யாமல் பட்டையைக் கிளப்பிவிட்டார். அவரின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 246 என்று மிரட்டலாக இருந்தது. 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்த ரவீந்திரா கணக்கில் 3 சிக்ஸர்களும், 3 பவுண்டர்களும் அடங்கும். தொடக்கத்தில் ரவீந்திரா, ரஹானே அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் சிஎஸ்கேவின் வெற்றியை எளிதாக்கியது. ‘என்னுடன் தோனி இருக்கிறார்’ கேப்டனாக முதல் வெற்றியை ருசித்த கெய்க்வாட் பேசுகையில், “தொடக்கத்திலேயே கட்டுக்கோப்பாகச் செயல்பட்டோம், முதல் 3 ஓவர்கள் முடிந்து, சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தபின் ஆட்டம் எங்கள் வசம் வந்தது. இன்னும் 15 ரன்கள் குறைவாகக் கொடுத்திருக்கலாம். ஆர்சிபியும் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியது. மேக்ஸ்வெல், டூப்ளெஸிஸ் விரைவாக ஆட்டமிழந்தது எங்களுக்கு திருப்புமுனையாக இருந்தது. இதனால்தான் அடுத்த 5 ஓவர்களை கட்டுப்படுத்த முடிந்தது. கேப்டன்சியை மிகவும் ரசித்துச் செய்கிறேன், கூடுதலாக எந்த அழுத்தமும் இல்லை. ஒருமுறைகூட அழுத்தமாக இருப்பதாக நினைக்கவில்லை ஏனென்றால் என்னுடன் தோனி இருக்கிறார். பேட்டர்களுக்கு அவர்களின் பணி என்பது தெளிவாகத் தெரிந்திருப்பது வெற்றியைச் சுலபமாக்குகிறது, சேஸிங்கை எளிதாக்குகிறது,” எனத் தெரிவித்தார். சிக்ஸர் முக்கியம் டி20 போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஓடி ஓடி ரன்கள் சேர்ப்பது என்பது வெற்றிக்குப் பெரிதாக உதவாது. அது ஸ்ட்ரைக்கை தக்கவைக்க உதவுமே தவிர வெற்றியின் பாதையை கடினமாக்கிவிடும். மாறாக, அவ்வப்போது அடிக்கும் சிக்ஸர்கள், பவுண்டரிகள்தான் வெற்றியின் அருகே கொண்டு செல்லும். இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 சிக்ஸர்கள் அடித்த நிலையில், சிஎஸ்கே அணி ஒட்டுமொத்தமாக 9 சிக்ஸர்களை விளாசியது, 10 பவுண்டரிகள் எடுத்தது. ஆர்சிபி அணி 14 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடிக்க முடிந்தது. ஆர்சிபி-யின் ‘ஓட்டைகள்’ பட மூலாதாரம்,IPL/TWITTER பவர்ப்ளே ஓவர்களை எந்த அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ அதை சிஎஸ்கே பேட்டர்கள் சிறப்பாகப் பயன்படுத்தினர். ஆர்சிபி அணி அதிரடியான தொடக்கத்தை அளித்து 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது. ஆனால், அடுத்த 2 ஓவர்களில் திடீரென 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, ஆர்சிபியின் தோல்விக்கு முக்கியக் காரணம். ஆர்சிபி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஜொலிக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே அணியில் அனைத்து பேட்டர்களும் பங்களிப்பு செய்ததுதான் வெற்றி, தோல்விக்கான வேறுபாடு. அதிலும் ரஹானே, டேரல் மிட்ஷெல் என அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் பவுண்டரி அடிப்பதைவிட, சிக்ஸர்கள் அடிப்பதிலேயே கவனம் செலுத்தியதன் நுட்பம் ஆர்சிபிக்கு புரியவில்லை. வெற்றியை எளிதாக நெருங்கும் வழியை சிஎஸ்கே கையில் எடுத்தபோது, அதைத் தடுக்கும் வகையில் பந்துவீச்சை ஆர்சிபி பலப்படுத்தவில்லை. ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையோடு ஒப்பிடும்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை வலிமையாக இருக்கிறது. சிஎஸ்கே அணியில் தீக்சனா வரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள். பட மூலாதாரம்,IPL/TWITTER ஆனால், 9 பேட்டர்களை அல்லது 10 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு ஆர்சிபியில் பந்துவீச்சு பலம் பொருந்தியதாக இல்லை என்பதா இருக்கின்ற பந்துவீச்சாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவில்லை என்பதா எனத் தெரியவில்லை. ஏனென்றால், அல்சாரி ஜோஸப், கேமரூன் கிரீன் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டு சிஎஸ்கே ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். கேமரூன் கிரீன் பயன்படுத்திய “ஸ்லோவர் கட் பால்”, ஜோஸப்பின் அதிவேகம், “ஷார்ட்பால் பவுன்சர்” ஆகியவை நன்கு பலன் கொடுத்தது. “ஷார்ட் பால்” உத்தியை இன்னும் திட்டமிட்டுக் கையாண்டிருந்தால், சிஎஸ்கே ரன்ரேட்டை தொடக்கத்திலேயே மட்டுப்படுத்தி இருக்க முடியும். மேலும், சுழற்பந்துவீச்சாளர் மயங்க் டாகர் அற்புதமாகப் பந்துவீசி 2 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார். மேஸ்க்வெலுக்கு ஒரு ஓவர் மட்டும் வழங்கி அவரின் திறமையை டூப்ளெஸ்ஸிஸ் வீணடித்துவிட்டார். இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் வேகப்பந்துவீச்சாளர்களையே டூப்ளெஸ்ஸிஸ் நம்பியது ரன்கள் எளிதாகக் குவியக் காரணமாக அமைந்தது. ‘சேஸிங் கிங்’ ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா, ரஹானே, மிட்ஷெல் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், துபே களமிறங்கியபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அவரின் பேட்டிங் 13 பந்துகளுக்கு 7 ரன்கள் என மந்தமாகவே இருந்தது. பட மூலாதாரம்,IPL/TWITTER துபே ஷார்ட் பந்துகளுக்கு திணறுகிறார் எனத் தெரிந்து கேமரூனும், ஜோஸப்பும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், தன்னை நிலைப்படுத்திய துபே, வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி 28 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா பேட்டிங்கில் 2 டாட் பந்துகளை மட்டுமே சந்தித்தார், பெரும்பாலான பந்துகளில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதத்தில் ரன்களை சேர்த்தது சிஎஸ்கேவின் நெருக்கடியைக் குறைத்தது. ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் இருந்து 27வது முறையாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதுவரை தோனியுடன் சேர்ந்து எந்த பேட்டரும் சேஸிங்கில் இதுபோன்று வெற்றிகரமாகச் செயல்பட்டதில்லை. ஆர்சிபி அணிக்கு டூப்ளெஸ்ஸிஸ், கோலி நல்ல தொடக்கத்தை அளித்தனர். தேஷ்பாண்டே, சஹர் ஓவர்களில் பவுண்டரிகளாக டுப்ளெஸ்ஸிஸ் வெளுத்ததால், 4 ஓவர்களில் ரன்ரேட் 10க்கு உயர்ந்தது. ஆனால், முஸ்தபிசுர் 5வது ஓவரை வீச வந்தவுடன் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது. அதிரடியாக ஆடிய டூப்பளசிஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் சிறிது கூடுதல் பவுன்ஸரை வீசியவுடன் வந்த வேகத்தில் பட்டிதாரும் டக்-அவுட்டில் க்ளீன் போல்டாகி வெளியேறினார். அடுத்துவந்த அதிரடி பேட்டர் மேக்ஸ்வெல் ரன் ஏதும் சேர்க்காமல் தீபக் சஹர் ஓவரில் விக்கெட்டை இழந்தார். 41 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஆர்சிபி அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பட மூலாதாரம்,IPL/TWITTER கோலியின் மந்தமான பேட்டிங் நான்காவது விக்கெட்டுக்கு கோலி, க்ரீன் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து அணியைக் கொண்டு சென்றனர். இதுபோன்ற நேரத்தில் “ஆங்கர்ரோல்” செய்கிறேன் எனக் கூறிக் கொண்டு ஆமைவேகத்தில் கோலி ரன்களை சேர்ப்பதுதான் அவர் மீது கிரிக்கெட் விமர்சர்கள் வைக்கும் பெரிய விமர்சனத்துக்கு காரணமாக இருக்கிறது. கோலி சேர்த்த 20 ரன்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடங்கும். ஆர்சிபி தடுமாறிய பின் கோலியின் மந்தமான ஆட்டத்தால், ரன்ரேட் வீதம் கடுமையாகக் குறைந்தது. கோலி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதத்தில் விளையாடியதற்குப் பதிலாக பவுண்டரி, சிக்ஸர் அடித்து சிறிய கேமியோ ஆடிச் சென்றிருக்கலாம். டிகே, ராவத் அதிரடி பன்னிரண்டாவது ஓவரை முஸ்தபிசுர் பந்துவீச வந்தபோது அந்த ஓவரில் விராட் கோலி(20) விக்கெட்டையும், கிரீன்(18)விக்கெட்டையும் வீழ்த்தி ஆர்சிபிக்கு நெருக்கடி கொடுத்தார். பட மூலாதாரம்,IPL/TWITTER ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 100 ரன்களை கடந்தது. ஆனால், 15வது ஓவர்களுக்குப் பின் ராவத், டிகே இருவரும் கியரை மாற்றி ரன்வேகத்தை அதிகரித்தனர். தீக்சனா வீசிய 16வது ஓவரில் டிகே ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் ராவத் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி, டிகே ஒரு சிக்ஸர் என 25 ரன்கள் சேர்த்தனர். இந்த ஓவர்தான் ஆர்சிபி அணிக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ராவத், டிகே இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்தனர். முஸ்தபிசுர் வீசிய 19வது ஓவரில் ராவத் ஒரு சிக்ஸரும், டிகே ஒரு பவுண்டரியும் விளாசி 16 ரன்கள் சேர்த்தனர். ராவத் 48 ரன்னில் தோனியால் ரன்அவுட் ஆனார். டிகே 38 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இருவரும் 6வது விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியைத் தூக்கி நிறுத்தினர். கடந்த ஓர் ஆண்டில் பெரிதாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டிகே நேற்று அருமையான ஃபினிஷர் ரோலை செய்தார். அவர் கடந்த சீசனில் மோசமாக ஆடிய குறையை முதல் போட்டியிலேயே நிவர்த்தி செய்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/c515xjyjv4po
-
பங்களாதேஸ் - இலங்கை கிரிக்கெட் தொடர்
தனஞ்சய, கமிந்துவின் சதங்கள் கைகொடுக்க இலங்கை சிறந்த நிலையில் : முதல் நாளில் 13 விக்கெட்கள் சரிவு 22 MAR, 2024 | 08:32 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமை (22) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனஞ்சய டி சில்வா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் குவித்த சதங்களினால் இலங்கை சிறந்த நிலையை அடைந்துள்ளது. கமிந்து மெண்டிஸ் தனது கன்னி டெஸ்ட் சதத்தைப் பூர்த்திசெய்தமை விசேட அம்சமாகும். இரண்டு போட்டிகளைக் கொண்ட ஐசிசி டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியின் ஆரம்பத் தினமான இன்றைய தினம் 13 விக்கெட்கள் சரிந்த போதிலும் ஆட்ட நேர முடிவில் இலங்கை 248 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்தது. அப் பொட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 280 ஓட்டங்ளைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இலங்கையின் முன்வரிசை துடுப்பாட்டம் மிக மோசமாக இருந்தது. ஆரம்ப வீரர் நிஷான் மதுஷ்க 2 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதனைத் தொடர்ந்து திமுத் கருணாரட்னவும் குசல் மெண்டிஸும் 2ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 43 ஓட்டங்களாக உயர்த்தினர். ஆனால், குசல் மெண்டிஸ் (16), திமுத் கருணாரட்ன (17), ஏஞ்சலோ மெத்யூஸ் (5), தினேஷ் சந்திமால் (9) ஆகிய நால்வரும் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க இலங்கை 5 விக்கெட்களை இழந்து 57 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது. இதன் காரணமாக இலங்கை அணி குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சகல விக்கெட்களையும் இழந்துவிடுமோ என்ற சந்தேகம் எழுந்தது. எனினும், தனஞ்சய டி சில்வா, 20 மாதங்களின் பின்னர் டெஸ்ட் அணிக்கு மீளழைக்கப்பட்ட கமிந்த மெண்டிஸ் ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 6ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 202 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியை வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுத்து சிறப்பான நிலையில் இட்டனர். டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் 6ஆவது விக்கெட்டில் பங்களாதேஷுக்கு எதிராக இலங்கை சார்பாக பகிரப்பட்ட அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கமிந்து மெண்டிஸ் மிகுந்த அனுபவசாலிபோல் துடுப்பெடுத்தாடி 127 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 102 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார். தனஞ்சய டி சில்வா 131 பந்துகளில் 12 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 102 ஓட்டங்களைப் பெற்றனர். அவர்கள் இருவரும் கூட்டாக 204 ஓட்டங்களைப் பெற்றிராவிட்டால் இலங்கையின் நிலை தர்மசங்கடமாகியிருக்கும். அவர்கள் இருவரும் சதங்கள் குவித்த பின்னர் தொடர்ந்து பொறுமையுடன் துடுப்பெடுத்தாடியிருந்தால் அணிக்கு இன்னும் நலமாக அமைந்திருக்கும். அவர்கள் இருவர் உட்பட இலங்கையின் கடைசி 5 விக்கெட்கள் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தப்பட்டன. பந்துவீச்சில் காலித் அஹ்மத் 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நஹித் ரானா 87 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் பங்களாதேஷ் முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 32 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோ 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கசுன் ரஜித்த 20 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இன்றைய தினம் சரிந்த13 விக்கெட்களில் ஒன்றைத் தவிர்ந்த மற்றைய 12 விக்கெட்களையும் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தியிருந்தனர். இரண்டாம் நாள் ஆட்டம் சனிக்கிழமை (23) தொடரும்போது விஷ்வா பெர்னாண்டோ, கசுன் ராஜித்த ஆகியோரும் லஹிரு குமாரவும் சரியான இலக்குளை நோக்கி பந்துவீசி பங்களாதேஷை நெருக்கடிக்குள்ளாக்குவது இலங்கைக்கு சாதகத் தன்மையை ஏற்படுத்தும். https://www.virakesari.lk/article/179466
-
பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
உடலுறவு கொள்ளும் வயதை 14 ஆக குறைக்கும் திருத்த வர்த்தமானியை இடைநிறுத்துங்கள் - பாராளுமன்ற பெண் உறுப்பினர் ஒன்றியம் Published By: DIGITAL DESK 3 22 MAR, 2024 | 09:55 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) 1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயதெல்லை 14 வயதாக குறைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஆகவே, இந்த திருத்தத்தை உடன் நிறுத்துமாறு பாராளுமன்றத்தின் பெண் உறுப்பினர்களின் ஒன்றியம் நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது. 1995 ஆம் ஆண்டு தண்டனைச் சட்டக் கோவைக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்துக்கு அமைய, 16 வயதுக்குட்பட்ட பெண் தனது சொந்த விருப்பத்தின் பேரில் உடலுறவு கொண்டாலும், அது கற்பழிப்பாகக் கருதப்படும். எனினும், நீதி அமைச்சரால் தண்டனைச் சட்டக் கோவைக்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தம் மூலம் அந்த வயது எல்லையை 14 வயது வரை குறைக்கப்படவுள்ளது. பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் என்ற வகையில் தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் தனது கடுமையான கவலையை வெளியிடுவதாக குறிப்பிட்டுள்ள ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே, 364 ஆம் பிரிவுக்கான உத்தேச திருத்தம் தொடர்பில் கருத்திற்கொள்ளவேண்டிய விடயங்கள் குறித்த விபரங்களை கடிதம் மூலம் முன்வைப்பதாக அறிவித்துள்ளார். தண்டனைச் சட்டக் கோவையின் 364 ஆம் பிரிவை திருத்துவதற்கான உத்தேச சட்டமூலத்தை மீளப்பெறுமாறு பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்நாட்டின் பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்குமாறும் இலங்கையில் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்காக நீதியை உறுதிப்படுத்துமாறும் பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் சார்பில் மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக்கொள்வதுடன் இது தொடர்பில் மேலதிகத் தகவல்கள் அல்லது மாற்று முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு தமது ஒன்றியம் எந்த நேரத்திலும் தயாராக உள்ளதாக கடிதம் மூலம் சுதர்சினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179445
-
இன்றைய வானிலை
கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களில் கடும் மழை! 31ஆம் திகதி வரை மழை தொடருமாம்! 22 MAR, 2024 | 06:09 PM நாட்டில் நிலவும் வெப்பமான காலநிலையையடுத்து இன்று (22) கொழும்பு உள்ளிட்ட பல பிரதேசங்களிலும் கடும் மழை பெய்துவருகிறது. குறிப்பாக கொழும்பு நகரின் பல பகுதிகளில் கடும் மழை பெய்வதால் வெள்ள நீர் நிரம்பியுள்ளது. இதேவேளை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை மழை தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தகக்கது. இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என இன்று வெள்ளிக்கிழமை (22) மட்டக்களப்பு வானிலை அவதான நிலைய இணைப்பாளர் சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு, வடமத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் பல தடவை மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடய மழையோ பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வானிலை தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், சப்ரகமுவ மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் மேலான பலத்த மழை பெய்யக்கூடும். மத்திய சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பனி மூட்டம் காணப்படும். அதேவேளை இடியுடன் கூடிய மழையின்போது பலத்த காற்று வீசக்கூடும். மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொது மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இதேவேளை நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புக்களை பொறுத்தளவில் திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு அம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கடல் பரப்புக்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது. நாட்டை சூழவுள்ள கடல் பரப்புக்களில் காற்றானது கிழக்கு அல்லது மாறுபட்ட திசையில் வீசுவதுடன் மணிக்கு 20 தொடக்கம் 30 கிலோமீற்றர் வேகத்தில் காணப்படும். புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புக்களுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதிகளில் காற்றின் வேகமானது 40 தொடக்கம் 45 கிலோமீற்றர் வரை அவ்வப்போது அதிகரிக்கக்கூடும். புத்தளத்தில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையும் அம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்பில் அவ்வப்போது கொந்தளிப்பாக காணப்படும். இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் என்றார். இதேவேளை திடீர் காலநிலை மாற்றம் காரணமாக கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் நேற்று வியாழக்கிழமையில் இருந்து அவ்வப்போது மழை பெய்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/179458
-
பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு
பாலியல் செயற்பாட்டுக்காக சிறுமிகளின் வயதெல்லையை குறைக்கும் குற்றவியல் சட்டத்தின் பிரிவுகளை மீளப்பெற வேண்டும் - சஜித் Published By: DIGITAL DESK 3 22 MAR, 2024 | 05:37 PM (எம்.ஆர்.எம். வசீம், இராஜதுரை ஹஷான்) குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ள குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை வடுத்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (22) விசேட கூற்றொன்றை முன்வைத்து குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், 2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை ஆளும் கட்சி பிரதமகொறடா அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். இந்த சட்டமூலத்தின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அதேபோன்று தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களும் முன்வைப்பது மிகவும் முக்கியமான விடயங்களாகும். அதனால் குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றார். இதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க பதிலளிக்கையில், எதிர்கட்சித்தலைவரின் கோரிக்கையை நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபசாரத்தை சட்ட பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்துரையாட வேண்டிய விடயம். எனவே, அதைச் செய்வதில் இரண்டு நிலைப்பாடுகள் இல்லை என்றார். https://www.virakesari.lk/article/179443
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
LIVE 1st Match (N), Chennai, March 22, 2024, Indian Premier League Royal Challengers Bengaluru (19.6/20 ov) 173/6 Chennai Super Kings RCB chose to bat. Current RR: 8.65 • Last 5 ov (RR): 71/1 (14.20)
-
இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இணைந்து ஏற்பாடுசெய்துள்ள டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு மாநாடு
22 MAR, 2024 | 06:05 PM இலங்கை தொழில் நுட்ப அமைச்சுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் இணைந்து டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு குறித்த மாநாடு ஒன்றினை மார்ச் 26 ஆம் திகதி கொழும்பில் ஒழுங்கமைத்துள்ளது. சேவைகள் வழங்கலுக்கான இயலுமை, உள்ளீர்ப்பினை வலுவாக்குவதன் ஊடாக சமூகங்களை வலுவூட்டல் மற்றும் கண்டுபிடிப்புகள் மூலம் பொருளாதாரத்தை வளமாக்கல் ஆகியவற்றுக்காக டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் நிலைமாற்றத்திற்கான ஆற்றல்களை பயன்படுத்துவது குறித்து இந்த மாநாடு ஆராய்கின்றது. இந்த மாநாடானது அங்குரார்ப்பண அமர்வுடன் ஆரம்பமாகும் நிலையில், இந்த அமர்வில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து இரண்டு குழு நிலைக் கலந்துரையாடல்கள் நடைபெறவுள்ளன. முதலாவதாக நடைபெறும் “Accelerating Digital Sri Lanka’ என்ற தலைப்பிலான கலந்துரையாடலில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பானது எவ்வாறு ஆட்சியினை இலகுவாக்குகின்றது என்பது தொடர்பாகவும், குறித்த சேவைகளை மக்கள் இலகுவாக பயன்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆராயப்படுகின்றது. அத்துடன் “Unlocking the Digital Stack” என்ற தலைப்பிலான இரண்டாவது குழு நிலை கலந்துரையாடலில் முதல் நிலை தளங்கள், இணைப்பு தொழில்நுட்பம், சந்தை மற்றும் ஆட்சி உள்ளிட்டவற்றில் டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் பயன்பாடு குறித்தும் கவனம் செலுத்தப்படும். இந்த இரு அமர்வுகளும் முறையே தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ கனக ஹேரத் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹர்ஷ டி சில்வா ஆகியோரால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. டிஜிட்டல் உட்கட்டமைப்பு மற்றும் ஆட்சி குறித்த நோக்கினையும், சிறந்த அறிவு மற்றும் அனுபவம் ஆகியவற்றை வழங்குவதற்காக பல்வேறு துறைகளையும் அடிப்படையாகக் கொண்ட இந்திய, இலங்கை நிபுணர்கள் இந்த இரு கலந்துரையாடல்களிலும் பங்கேற்கின்றனர். அத்துடன் இந்த மாநாட்டினை https://www.virakesari.lk/article/179453
-
யாழ்., கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்தின் வசமிருந்த 109 ஏக்கர் காணிகள் மக்களிடம் கையளிப்பு!
இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்த காணிகள் விடுவிப்பு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று(22) யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் 278ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டன. ஜே/244 வயாவிளான் கிழக்கு , ஜே/245 வயாவிளான் மேற்கு, ஜே/252 பலாலி தெற்கு , ஜே/254 பலாலி வடக்கு, ஜே/253 பலாலி கிழக்கு ஆகிய கிராம சேவையாளர் பிரிவில் இருந்து காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. https://thinakkural.lk/article/296730
-
அவுஸ்திரேலியா செல்லவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!
அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு - மாணவர்களிற்கான விசாக்களை இறுக்கமாக்க தீர்மானம் 22 MAR, 2024 | 10:45 AM அவுஸ்திரேலியாவிற்கு குடிபெயர்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களிற்கான விசா நடைமுறைகளை அவுஸ்திரேலியா இறுக்கமானதாக மாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் சனிக்கிழமை முதல் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல விரும்பும் வெளிநாட்டு மாணவர்கள் மற்றும் பட்டதாரி மாணவர்களிற்கான விசாக்களுக்கு ஆங்கில தேவைகளை அவுஸ்திரேலிய அரசாங்கம் அதிகரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வாரம் முதல் நாங்கள் முன்னெடுக்கவுள்ள நடவடிக்கைகள் அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்பவர்களின் எண்ணிக்கையை குறைக்கும் என அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் கிளாரா ஓநெய்ல் தெரிவித்துள்ளார். தொழில் வாய்ப்பை மையமாக வைத்து அவுஸ்திரேலியாவிற்கு வரவிரும்பும் மாணவர்களை கட்டுப்படுத்துவதற்காக உண்மையா மாணவர் சோதனையொன்றை நடைமுறைப்படுத்தவுள்ள அவுஸ்திரேலியா விசிட்டர் விசாக்களில் வருபவர்களிற்கு அவுஸ்திரேலியாவில் மேலும் தங்கியிருக்க முடியாது என்ற நிபந்தனை விதிக்கப்படும். https://www.virakesari.lk/article/179396
- மயிலம்மா.
-
தமிழ்நாடு - நாடாளுமன்றத் தேர்தல் செய்திகள்
தமிழ்நாடு: 2024 நாடாளுமன்றத் தேர்தலில் கவனிக்கப்படும் 10 முக்கிய வேட்பாளர்கள் 44 நிமிடங்களுக்கு முன்னர் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் இறுதி செய்து வருகிறது. திமுக, அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, தாங்கள் போட்டியிடும் இடங்களின் வேட்பாளர்கள் பட்டியலை இறுதி செய்து வெளியிட்டுள்ளது. திமுக 21 இடங்களில், அதிமுக 33 இடங்களில், பாஜக 20 இடங்களில் தேமுதிக 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ், அமமுக இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அறிவிக்கப்படுள்ள வேட்பாளர்களில் தேர்தல் களத்தில் கவனிக்கப்படும் 10 வேட்பாளர்களாக இவர்கள் இருக்கிறார்கள். கே. அண்ணாமலை பட மூலாதாரம்,FACEBOOK தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை தேர்தலில் போட்டியிடுவது குறித்து கடந்த சில மாதங்களாகவே, பேச்சு அடிபட்டு வந்தது. நான் போட்டியிட மாட்டேன் என முதலில் கூறிய அண்ணாமலை, தலைமை அறிவித்தால் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார். அவர் கோவையில் போட்டியிடுவதை கடைசி நேர சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தது பாஜக. திமுகவும் அதிமுகவும் அறிவித்த பிறகே, அண்ணாமலை அங்கு போட்டியிடுவதாக பாஜக அறிவித்திருந்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் நரேந்திர மோதி மேற்கொண்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் கோவையில்தான் நடைபெற்றது. தமிழகத்தில் பாஜக இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளில் ஒன்று கோவை. கடந்த 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றிருந்தார். உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கிலிருந்து வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், கோவை பாஜகவுக்கு முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. எனவே அந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என பாஜக கருதுகிறது. சிங்கை ராமச்சந்திரன் பட மூலாதாரம்,FACEBOOK கோவையில் அதிமுக சார்பாகப் போட்டியிடும் இவர், முதல் முறை வேட்பாளர். தேர்தல் களத்துக்குப் புதிது என்றாலும், கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணியின் மாநிலச் செயலாளராக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர். அதிமுகவின் இளைஞர் அணி முகங்களில் பிரபலமான இவர், கோவை அதிமுக வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர். கோவையில் அண்ணாமலை வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை அடுத்து, “ஐ அம் வெயிட்டிங்” என்று பதிவிட்ட அவர், சமூக ஊடக தளங்களில் கணிசமான பின்தொடர்பவர்களைக் கொண்டு பிரபலமானவர். பாஜகவிலிருந்து களமிறங்கும் இளம் அண்ணாமலையை எதிர்த்துப் போட்டியிட இவரே சரியானவர் என்று அதிமுக தலைமை முடிவு செய்துள்ளது. தமிழிசை சௌந்தரராஜன் பட மூலாதாரம்,FACEBOOK தமிழிசை சௌந்தரராஜன் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைமை மிகக் குறிப்பாக இருந்தது. எனவே அவர் வகித்து வந்த தெலங்கானா மாநில ஆளுநர் பதவியையும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தது கட்சித் தலைமை. சென்னை, அவர் ஏற்கெனவே போட்டியிட்டுள்ள நகரம். பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது, சென்னை நகர மக்களிடம், இளைஞர்களிடம் நெருங்கிப் பழகியவர். தடாலடியான அரசியல் பாணி இல்லாதவர், சாதி மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பொதுவெளியில் பகிரங்கமாகத் தெரிவிக்காதவர். மருத்துவரான தமிழிசை சௌந்தரராஜன் நகர்ப்புற மக்களுக்கான சரியான வேட்பாளராக இருப்பார் என்று பாஜக கருதியதால் தென் சென்னை வேட்பாளராக அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். விஜய பிரபாகர் பட மூலாதாரம்,DMDK மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் விருதுநகர் தொகுதியில் இருந்து தேமுதிக சார்பாகப் போட்டியிடுகிறார். விஜயகாந்த் மறைந்த சில மாதங்களில் நடைபெறும் தேர்தலில், அவர் பிறந்த ஊரான ராமானுஜபுரம் இருக்கும் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஏ சி சண்முகம் பட மூலாதாரம்,FACEBOOK புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிடுகிறார். கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த அவர், தன்னை எதிர்த்து நின்ற திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். அதிமுகவில் இருந்து பாஜக அணிக்கு வந்த அவருக்கு இந்த முறை சீட் வழங்கி தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்திருப்பது பாஜகவுக்கு வெற்றி தோல்வியைத் தாண்டி சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது. கல்வி நிலையங்கள் நடத்தி வரும் ஏ.சி சண்முகம், நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார். கனிமொழி பட மூலாதாரம்,FACEBOOK கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்டு 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி, தூத்துக்குடி தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரானார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஆதரவுடன், தூத்துக்குடிக்கான திட்டங்கள் முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்தில், வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது. ஏற்கெனவே இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி டெல்லி வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர். கடந்த தேர்தலில் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார். அவர் தாயாரது சமூகமும் தூத்துக்குடியில் அவர் நிறுத்தப்படுவதற்கு ஒரு காரணம். நயினார் நாகேந்திரன் பட மூலாதாரம்,FACEBOOK திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிடுகிறார் நயினார் நாகேந்திரன். பாஜகவுக்கு மாநிலத்தில் உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரில் இவரும் ஒருவர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் இருந்திருந்தாலும், நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று வெற்றி பெற முடிந்தது. இதற்கு தொகுதி மக்களிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட செல்வாக்கு முக்கியக் காரணம். ஆ. ராசா பட மூலாதாரம்,FACEBOOK தனித்தொகுதியான நீலகிரியில் ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்ற ஆ.ராசா தற்போது மீண்டும் அதே தொகுதியில் இருந்து போட்டியிடுகிறார். தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்ற ஆ.ராசாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டத்தில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. பாஜக அந்த தொகுதியில் நேரடியாக போட்டியிடும் என்பதும் அந்தத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிறுத்தப்படுவார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதே. தனது கோட்டையாக இருக்கும் நீலகிரியில் பாஜக வேட்பாளர் ஒருவரை வீழ்த்துவது கடினமானதாக இருக்காது என்பதால், அங்கு நன்கு பரீட்சயமான ஆ.ராசாவையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தியுள்ளது திமுக. செல்வ கணபதி பட மூலாதாரம்,FACEBOOK இவர் 1991இல் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தவர். பின் 1999இல் அதிமுகவின் சார்பாக சேலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 2008ஆம் ஆண்டு திமுகவில் இணைந்து மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். கட்சியின் முதல் கட்டத் தலைவர்கள் பட்டியலில் இவர் இல்லாதபோதும், சேலம் தொகுதியில் நன்கு அறியப்பட்டவர். அவர் மீதிருந்த ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில், கடந்த முறை வெற்றி பெற்ற எஸ்.ஆர்.பார்த்திபனுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, செல்வ கணபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து சேலத்தில் அதிமுக சார்பாக 31 வயது புதுமுகமான விக்னேஷ் நிறுத்தப்பட்டுள்ளார். டிடிவி தினகரன் பாஜக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் இணைந்து, இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. தேனி தொகுதியில் 1998இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தத் தொகுதியில் சமூக செல்வாக்கையும் பெற்றுள்ளார் டிடிவி தினகரன். அவருக்கு எதிராக திமுக சார்பில் போட்டியிடும் தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகி ஆவார். https://www.bbc.com/tamil/articles/cyez76dzw08o
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸா போர் நிறுத்தம்: அமெரிக்காவின் பிரேரணை மீது பாதுகாப்புச் சபையில் இன்று வாக்கெடுப்பு Published By: SETHU 22 MAR, 2024 | 02:39 PM காஸாவில் உடனடியாக போர்நிறுத்தம் அமுல்படுத்தப்படுவதை வலியுறுத்துவதற்காக அமெரிக்க அனுசரணையுடன் முன்வைக்கப்படும் பிரேரணை தொடர்பில் ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இன்று வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றும் முயற்சிகளை அமெரிக்கா ஏற்கெனவே 3 தடவைகள் தனது வீட்டோ அதிகாரரத்தைப் பயன்படுத்தி தடுத்தது. இந்நிலையில் தற்போது காஸாவில் உடனடி போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா, பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்ற அமெரிக்க அனுசரணையுடன் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. போர் நிறுத்தத்துக்கான அமெரிக்காவின் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்நிலையில் மத்திய கிழக்குக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளிங்கன் இன்று எகிப்திலிருந்து இஸ்ரேலுக்கு சென்றுள்ளார். இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவுடன் போர் நிறுத்தம் குறித்து பிளிங்கன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். https://www.virakesari.lk/article/179434
-
மொங்கோலியாவில் மிக கடுமையான குளிர்காலம்; ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழப்பு
Published By: RAJEEBAN 22 MAR, 2024 | 02:14 PM மொங்கோலியா அரைநூற்றாண்டு காலத்தில் சந்தித்துள்ள மிகவும் கடுமையான குளிர்காலம் காரணமாக ஐந்து மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன என மனிதாபிமான அமைப்புகள் தெரிவித்துள்ளன. மொங்கோலியா மிகவும் கடுமையான குளிரில் சிக்குப்பட்டு உறைந்துபோயுள்ளது 4.7 மில்லியன் விலங்குகள் உயிரிழந்துள்ளன ஆயிரக்கணக்கான் மக்களின் வாழ்வாதாரத்திற்கும் உணவு விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது. வெப்பநிலை வீழ்ச்சியடைந்துள்ளது கடும் பனி காணப்படுகின்றது மேய்ச்சல் நிலங்கள் முற்றாக மூடப்பட்டுள்ளனகால்நடைகள்ள் உணவிற்காக அலைகின்றன என செஞ்சிலுவை சம்மேளனம் தெரிவித்துள்ளது. மங்கோலியாவில் மூன்று இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாடோடிகள் மற்றும் கால்நடை மேய்ப்பில் ஈடுபட்டுள்ளனர் உணவுக்காகவும் சந்தைகளி;ல் விற்பனை செய்வதற்காகவும் அவர்கள் கால்நடைகளை நம்பியுள்ளனர். தங்கள் வாழ்க்கைக்காக கால்நடைகளை முற்றாக நம்பியுள்ள மக்கள் கடும் குளிர்காலம் காரணமாக ஒரு சிலமாதங்களில் ஆதரவற்றவர்களாக மாறிவிட்டனர் சர்வதேச செஞ்சிலுவை சம்மேளனத்தின் ஆசிய பசுபிக்கிற்கான பிராந்திய இயக்குநர் அலெக்ஸாண்டர் தெரிவித்துள்ளார்.அவர்களில் சிலர் தங்களிற்கான உணவைபெற்றுக்கொள்ள முடியாத நிலையில் தங்கள் வீடுகளில் குளிரை போக்குவதற்காக எரியூட்ட முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கால்நடைமேய்ச்சலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் 2250க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் கால்நடைகளில் 70 வீதத்திற்கும் அதிகமானவற்றை இழந்துவிட்டன 7000ம் குடும்பங்கள் போதிய உணவை பெற முடியாத நிலையில் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடும் குளிரான காலநிலை மொங்கோலியாவின் பெரும்பகுதியை பாதித்துள்ளது.இந்த காலநிலை நீடிக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. தற்போது மொங்கோலியாவில் வசந்தகாலம் ஆனால் குளிர்காலம் நீடிக்கின்றது இன்னமும் நிலத்தில் பனி காணப்படுகின்றது கால்நடைகள் உயிரிழக்கின்றன எனமத்தியு தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179391
-
இந்திய படகுகளின் அத்துமீறல்களைக் கட்டுப்படுத்தக் கோரி கடற்றொழிலாளர்களால் 19 ஆம் திகதி உணவு தவிர்ப்புப் போராட்டம்
அமைச்சர் டக்ளஸ் உறுதிமொழி; உணவு தவிர்ப்பு போராட்டம் கைவிடப்பட்டது! Published By: DIGITAL DESK 3 22 MAR, 2024 | 04:17 PM இந்திய அத்துமீறிய மீன்பிடியாளர் களை நிறுத்துமாறு கோரி நான்கு நாட்கள் இடம்பெற்ற உணவு தவிர்ப்புப் போராட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உறுதிமொழியால் கைவிடப்பட்டது. கடந்த செவ்வாய்கிழமை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்திற்கு அருகாமையில் யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் நான்கு போர் உணவுதவிர்ப்புப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இன்று நான்காம் நாள் போராட்ட இடத்திற்கு வருகை தந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்திய அத்துமீறிய கடற் தொழிலாளர்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி முதலமைச்சர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுடன் பேசினேன். பாண்டிச்சேரி முதலமைச்சர் எல்லை தாண்டும் மீனவர்களை தடுப்பது தொடர்பில் எழுத்துமூலமான உறுதிமொழி தந்துள்ளார். தமிழக முதல்வர் கடிதம் அனுப்பத் தயாராக இருப்பதாகவும் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையகத்துடன் ஆலோசித்து கடிதம் அனுப்புவதாக கூறியிருக்கிறார். மீனவர் பிரச்சனை தொடர்பில் பேச வருமாறு இந்திய தரப்பினர் அழைப்பு கொடுத்திருந்தார்கள் நான் அவர்களிடம் கூறி இருக்கிறேன் இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் வர மாட்டார்கள் என்ற எழுத்து மூலமாக உத்தரவாதம் தந்தால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கு வருவேன் எனக் கூறியுள்ளேன். எனது நிலைப்பாடு அன்று என்ன கூறினோனே அதுதான் எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு வார்கள். கைது செய்யப்படுபவர்களை விடுவிக்க எனக்கு அழுத்தங்கள் வந்தாலும் எனது நிலைப்பாடு ஒன்றுதான். இதனால் தான் இந்தியா என்னை எதிரியாப் பார்க்கிறது ஏனைய தமிழ் அரசியல் வாதிகள் மீனவர் பிரச்சினையில் மெளனமாக இருப்பதால் எதிரியாக பார்ப்பதில்லை . ஆகவே இந்தியத் தரப்பு சாதகமான சமிக்ஞைகளை காண்பித்த நிலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுங்கள் மீனவர்கள் பக்கமே நான் நிற்பேன் என அவர் மேலும் தெரிவித்தார் குறித்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவாக தும்பளை, கொட்டடி, சேந்தான் குளம், குருநகர், மாதகல், பலாலி, தையிட்டி, சக்கோட்டை, மயிலிட்டி, வளலாய், மயிலிட்டி மற்றும் சீத்திப்பந்தல் ஆகிய கடற்தொழில் சங்கங்களைச் சேர்த்து மீனவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகை தந்தனர். https://www.virakesari.lk/article/179438
-
உலக நீர் தினமும் அதன் சமூகப்பாங்கும்
22 MAR, 2024 | 10:46 AM இன்று உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற பல்வேறு தினங்களில் உலக நீர் தினமும் ஒன்றாக அமைகிறது. ஆண்டுதோறும் மாரச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற இந்த நீர் தினமானது ஏனைய உலகளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டு வருகின்ற தினங்களில் இருந்து அதிமுக்கியத்துவம் பெற்று சற்று வேறுபடுகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ அங்கீகாரத்துடன் மார்ச் 22 என்பது உலக நீர் தினம் எனத் தீர்மானிக்கப்பட்டு உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது என்பதை யாவரும் அறிந்ததே. அருகி வருகின்ற நீர் வளத்தின் சகல திட்டங்களையும் அதன் பராமரிப்பு நிர்வாகத்தை விருத்தி செய்து நீர் வளப் பாதுகாப்பை நன்கு வலுப்படுத்தி நாளாந்தம் பெரும் சவாலாக அமைந்து வருகின்ற நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதே உலக நீர் தினம் கொண்டாடப்படுவதன் பிரதான நோக்கம் ஆகும். அதுமட்டுமன்றி, நாடுகளின் புவியியல் அமைப்புக்கு தக்கவாறு அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பு பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதலும் இந்த நீர் தினத்தின் ஒரு அம்சம் ஆகும். மேலும், ஒரு நாட்டின் எதிர்காலப் பிரஜைகளாக சமூகத்தின் பல சவால்களை எதிர்கொள்ளக் காத்திருக்கும் மாணவ சமூகத்திற்கும் அவரவரது நாட்டின் நீர் வளப் பாதுகாப்புப் பற்றி விழிப்புணர்வு அளிப்பதும் இந்த உலக நீர் தினத்தின் இன்னொரு சிறப்பம்சம் ஆகும். இன்னும் சொல்லப்போனால், நீரின்றி அமையாதது உலகு, நீர் வளங்கள் மிக விரைவாக அருகிச் செல்கின்றன. அத்தோடு, சூழல் பிரச்சினைகளில் முன்னோடியாகத் திகழ்வது இந்த நீர் பற்றாக்குறை எனும் தாற்பரியங்களைத் தாங்கி நிற்கிறது இந்த நீர் தினம். நீரில்லாத வாழ்க்கையை எங்களால் எண்ணிப் பார்க்கவே முடியாத அளவுக்கு நீர் எமது வாழ்வின் ஒரு பிரதான அங்கமாகத் திகழ்கின்றது. 1992ஆம் ஆண்டு பிரேஸிலில் ரியோடி ஜனய்ரா நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை சூழலும் அபிவிருத்தியும் எனும் மாநாட்டின் 21ஆம் நூற்றாண்டுக்கான நிகழ்ச்சித் திட்டத்தில் இந்த நீர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி கொண்டாடப்பட வேண்டும் என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1993ஆம் ஆண்டு மாரச் மாதம் 22ஆம் திகதி முதன் முதலான உலக நீர் தினம் கொண்டாடப்பட்டது. அதன் பின்னர் இன்று வரைக்கும் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 22ஆம் திகதி உலகெங்கிலும் நீர் தினம் ஒவ்வொரு கருப்பொருளை வலியுறுத்திக் கொண்டாடப்பட்டு வருகிறது. 1993இல் முதன்முதலாக நீர் தினம் உலகளாவிய ரீதியில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீர் வளங்களின் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை மனித சமூகத்துக்கு வழங்குதல் என்பதே இதன் பிரதான நோக்கமாக இருந்தபோதிலும் அந்த ஆண்டில் விசேடமான கருப்பொருள் அல்லது எண்ணக்கருவோ அமைந்திருக்கவில்லை. எனினும் 1994ஆம் ஆண்டு சர்வதேச ரீதியில் முதன்முறையாக “நீர் வளங்களைப் பராமரிப்பது எம் எல்லோரதும் கடப்பாடு” எனும் கருப்பொருளில் உலக நீர் தினம் உலகெங்கும் கொண்டாடப்பட்டது. எமது அன்றாட நடவடிக்கைகளின்போது எண்ணெய், பூச்சிகொல்லிகள், உரங்கள் மற்றும் வண்டல் மண் ஆகியவை நீரூடகங்களை எப்படியோ சென்றடைந்துவிடுகின்றன. எமது நீர் வளங்களைச் சுத்தமாக வைத்திருப்பதையும் மற்றும் நாம் சுற்றுபுறத்தில் போதியளவு நீர் இருப்பதை உறுதி செய்வதையும் அனைவரும் ஆதரவளிக்க வேண்டும். அதாவது எமது வீட்டைச் சுற்றியுள்ள நீர் வளங்களை மாசுக்களிலிருந்து பாதுகாத்தல் எனப் பொருள்படும். 1996ஆம் ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருள் “மகளிரும் நீரும்” என்பதாக அமைந்தது. நீர் சேகரிக்கும் கடமையில் முக்கிய அங்கம் வகிப்பவர்கள் பெண்களாக அமைவதால் நீரால் பரவும் நோய்களுக்கு முதலில் ஆளாகுபவர்கள் பெண்களே. இது பெண்களின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கின்றது. அதுமட்டுமில்லாமல், அதிக குழந்தைகள் இறந்த நிலையிலே பிரசவிக்கின்றன அல்லது குறைபாடுகளுடன் பிறக்கின்றன. பாதுகாப்பான நீர் மற்றும் சுகாதார சேவையின்றி பெண்கள் மற்றும் சிறுமிகள் துஷ்பிரயோகத்துக்கும் தாக்குதலுக்கும் மற்றும் உடல்நலக் குறைவுக்கும் ஆளாகின்றனர். இது அவர்களின் கல்வி, தொழில் மற்றும் கண்ணியத்தை முற்றாகப் பாதிக்கிறது. வீடு, பாடசாலை, வேலைத்தளம் மற்றும் பொது இடங்களில் மேம்படுத்தப்படும் நீர் மற்றும் சுகாதார சேவைகள் பாலின சமத்துவத்தைப் பிரதிபலிக்கின்றன. சேவைகள் அனைத்தும் அவர்களின் குறிப்பிட்ட தேவைக்கு அமையும் முகமாக பெண்களும் சிறுமிகளும் தீர்வுகளை வடிவமைத்துச் செயற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டும். நீர் மற்றும் துப்புரவு சேவைகள் இன்றிய சுற்றுப்புறங்களில் உள்ள சுகாதாரமற்ற நிலைப்பாடுகள் வாந்திபேதி போன்ற நோய்க் கிளர்ச்சியின் தொடர்ச்சியான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இது ஏழைச் சமூகங்களை பேரழிவுக்கு உட்படுத்தி நகரத்துக்கும் அதற்கு அப்பாலும் பரவுகின்றது. இதனால் சேவை காணாத நகர்ப்புறச் சூழல்கள் இலகுவில் அதிர்ச்சிக்கு ஆளாகின்றன. இந்நிலையை மையப்படுத்தி 1996ஆம் ஆண்டு உலக நீர் தினம் “தாகம் கொண்ட நகரங்களுக்கான நீர்” எனும் கருப்பொருள்கொண்டு அமையப்பெற்றது. 1997ஆம் ஆண்டு உலக நீர் தினம் “உலக நீர் போதுமானதா?” எனும் தொனிப்பொருளில் அமையப் பெற்றது. எமது பூமிக்கிரகம் ஓருபோதும் முற்றாக நீர் இன்றிப் போகாது. எனினும் சுத்தமான நன்னீர் எப்போதும் மனிதர்களுக்குத் தேவைப்படும் இடத்தில் எப்போதும் கிடைக்காது என்பதை நினைவில் கொள்ளல் வேண்டும். உலகில் ஆறு நாடுகளில் மட்டுமே உலகின் பாதி நன்னீர் அளவு காணப்படுகிறது. “நிலத்தடி நீர் கண்ணுக்குப் புலப்படாத வளம்” எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது. 1998ஆம் ஆண்டு உலக நீர் தினம், நிலத்தடி நீர் பார்வைக்குப் புலப்படாமல் இருந்தாலும் இது ஒரு ஆரோக்கியமான கிரகத்தின் பல்லின விருத்தி, வளரும் உணவு மற்றும் பிற தேவைகளுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. மறைந்துள்ள வளங்களான நீரோடைகள், ஆறுகள், ஈரநிலங்கள் மற்றும் ஏரிகள் என்பன மழைவீழ்ச்சி, உருகும் பனிமலைகள், நீரோட்டங்கள் மற்றும் நிலத்தடி நீர் என்பவற்றால் மீள்வளம் பெறுகின்றன. 1999ஆம் ஆண்டு “அனைவரும் நீரோட்டத்தின் கீழே வாழ்கின்றார்கள்” எனும் கருப்பொருளை விளக்கும் முகமாக உலக நீர் தினம் இடம்பெற்றது. நீரைப் பற்றி கற்பவர்கள் “நாங்கள் அனைவரும் நீரோட்டத்தின் கீழே வாழ்கிறோம்” என்று கூறுகிறார்கள். இதன் பொருள், நாம் இங்கே நீருக்கு ஆற்றும் எந்த செயலும் இந்த நீரோட்டத்தின் கீழே வாழ்கின்ற மக்கள், தாவரங்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கக்கூடும். அவ்வாறே, எங்களுக்கு மேலேயுள்ள நீரோட்டத்தை ஒருவர் மாசுபடுத்தினால் அந்த மாசு கீழேயுள்ள நீரோட்டத்தை அடைந்து எங்களைப் பாதிக்கும். இருபதாம் நூற்றாண்டைக் கடந்துவிட்ட நாம் இன்றும் அழுத்தமான உலகளாவிய பிரச்சினைகளில் ஒன்றாகிய “நீரினை அணுகும் வழி” என்பதிலிருந்து மீள முடியாமல் இருக்கின்றோம். உலக சனத்தொகை பெருகும்போது அதற்கேற்ப நீரின் தேவையும் வெகுவாக அதிகரிக்கும். அதேநேரத்தில் காலநிலை மாற்றம், வலுப் பற்றாக்குறை, நிலப் பயன்பாட்டுத் தீர்மானங்கள், கனிய வளங்களின் தொழிற்பாடுகள், தொழிற்சாலைகளின் தேவைப்பாடுகள் ஆகியவற்றால் நீரின் கிடைக்கக்கூடிய தன்மை மற்றும் நீரின் தரம் என்பன மிகவும் சவாலாக உள்ளன. எமது தற்போதைய நீர்ப் பயன்பாட்டைச் சமாளிப்பதற்கும் அதை எதிர்காலத்துக்காக கட்டமைப்பதற்கும் சிறந்த வழிகளைக் கண்டறிய வேண்டும். இதனால் பெருகி வரும் சனத்தொகைக்கு சேவை செய்ய முடியும். மேலும் எதிர்கால சந்ததியினருக்காக இருப்புக்களைப் பாதுகாக்க முடியும். இதனால் 2000ஆம் ஆண்டு உலக நீர் தினம் “21ஆம் நூற்றாண்டுக்கான நீர்” எனும் கருப்பொருளில் இடம்பெற்றது. “ஆரோக்கியத்துக்கு நீர்” எனும் கருப்பொருளுடன் 2001ஆம் ஆண்டு உலக நீர் தினம் அமையப்பெற்றது. நீர் எமது ஆரோக்கியத்துக்கு இன்றியமையாதது. உயிரணுக்களுக்கு ஊட்டச் சத்துக்களை கொண்டு செல்வது, கழிவுகளை வெளியேற்றுவது, மூட்டுக்கள் மற்றும் உறுப்புக்களைப் பாதுகாப்பது, உடல் வெப்பநிலையைப் பேணுவது உள்ளிட்ட எமது உடலின் பல செயற்பாடுகளில் நீர் முக்கிய பங்குவகிக்கிறது. நீர் எப்போதும் எங்களுக்கான அருந்து பானமாக இருக்க வேண்டும். “அபிவிருத்திக்கான நீர்” என்றவாறு அமைகிறது 2002ஆம் ஆண்டின் உலக நீர் தினத்தின் கருப்பொருள். நீரானது நிலையான அபிவிருத்தியின் முக்கிய இடத்தில் உள்ளது. அத்துடன் சமூக பொருளாதார அபிவிருத்தி, வலு மற்றும் உணவு உற்பத்தி, ஆரோக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புக்கள் மற்றும் மனித உயிர்வாழ்வுக்கும் இன்றியமையாத ஒன்றாகின்றது. சமூகத்துக்கும் சுற்றுச்சூழலுக்கும் இடையே முக்கிய இணைப்பாக செயல்படும் நீரானது காலநிலை மாற்றத்துக்கு ஈடுகொடுக்கும் தன்மையின் இதயத்திலும் உள்ளது. “எதிர்காலத்துக்கான நீர்” என்பதே 2003ஆம் ஆண்டு உலக நீர் தினத்தின் கருப்பொருளாக அமைந்தது. மனித குலத்துக்கும் பூமிக்கிரகத்தின் எதிர்காலத்துக்கும் நீர் ஒரு முக்கிய இயற்கை வளம் ஆகும். நீர் எமது மிகப்பெரிய இயற்கை வளம் ஆகும். நீர் எமது மிகப்பெரிய இயற்கை வளமாக அமைந்த போதிலும் அது வரையறுக்கப்பட்டதும் மற்றும் வேறு எதனாலும் ஈடு செய்யப்பட முடியாததும் ஆகும். அதனால்தான் மனிதனின் எதிர்கால நல்வாழ்விற்கும், கடல்வளப் பாதுகாப்புக்கும் மற்றும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கும் நீரின் நிலைத்தன்மை இன்றியமையாத ஒன்றாகும். 2004ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருளாக அமைவது “நீரும் அனர்த்தமும்” என்பதாகும். பெரும்பாலான அனர்த்தங்கள் நீர் தொடர்பானவை வெள்ளம், நிலச்சரிவு, புயல், வெப்ப அலை, காட்டுத்தீ, கடும் குளிர், வறட்சி மற்றும் நீரால் பரவும் நோய்களின் தீவிரம் ஆகியவை பிரதானமாக காலநிலை மாற்றத்தின் காரணமாக அடிக்கடி இடம் பெறுவதுடன் அவை மிகவும் தீவிரமாகவும் இருக்கின்றன. 2005ஆம் ஆண்டு உலக நீர் தினம் ‘பத்தாண்டு காலத்துள் வாழ்க்கைக்கான நீர்’ எனும் கருப்பொருளை வலியுறுத்தி நிற்கின்றது 2003ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை 2005 - 2015 காலப்பகுதியை “வாழ்க்கைக்கான நீர்” நடவடிக்கைக்கான “சர்வதேச தசாப்தம்”என அறிவித்தது. 2015ஆம் ஆண்டுக்குள் நீர் மற்றும் நீர் தொடர்பான பிரச்சினைகளில் சர்வதேச வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளை ஊக்குவிப்பதே இந்த தசாப்பத்தின் முதன்மை நோக்கம் எனத் தீர்மானிக்கப்பட்டது. 2006ஆம் ஆண்டு “நீரும் கலாச்சாரமும்” எனும் கருப்பொருளுடன் உலக நீர் தினம் அமையப் பெற்றது. நீர் என்பது மனித குலத்தால் பேணப்படவேண்டிய ஒரு நன்கொடையாக சிலரால் கருதப்படும் அதேவேளை சுற்றுச் சூழலிற்கும் வனவிலங்குகளுக்குமான நீர் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ஒரு பார்வையாக மற்றவர்களால் கருதப்படுகின்றது. நீருக்கும் இடத்துக்குமான தொடர்பு பெரும்பாலும் “தொடர்பு மதிப்புக்கள்” என வகைப்படுத்தப்படுகின்ற அதேவேளை உள்நாட்டுக் கலாசாரங்களில் மிகவும் வலுவாகவும் கருதப்படுகிறது. “நீர் பற்றாக்குறையைச் சமாளித்தல்” எனும் கருப்பொருளைக் கொண்டு இடம்பெற்றது 2007ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். நீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு உள்ளூர் தேசிய மற்றும் ஆற்றுப்படுக்கைகளின் மட்டத்திலான நடவடிக்கைகள் அவசியமானவை. இது உலகளாவிய மற்றும் சர்வதேச ரீதியான நடவடிக்கைகளை ஈர்க்கின்றது. அத்தோடு நீர் வளங்களின் பகிர்வு முகாமைத்துவம் மற்றும் அதன் நன்மைகள் என்பவற்றின் மூலம் நாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்பினை அதிகரிக்க வழிவகுக்கிறது. “சுகாதாரம்” எனும் கருப்பொருளுடன் 2008ஆம் உலக நீர் தினம் இடம்பெற்றது. ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட குழாய் நீர் அல்லது கழிவு நீர் சுத்திகரிப்புடன் கூடிய சாக்கடை இணைப்புக்கள் மூலமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்துவதன் மூலம் வயிற்றுப் போக்கு இறப்புக்களைக் குறைத்து சுகாதாரத்தை சடுதியாக மேம்படுத்த முடியும் என்று ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. “எல்லை கடந்த நீர்” எனும் தொனிப்பொருளுடன் 2009ஆம் ஆண்டு உலக நீர் தினம் அமையப்பெற்றது. இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட நாடுகளால் பகிர்ந்துகொள்ளப்படும் நீர் நிலைகள் மற்றும் ஏரிகள் மற்றும் ஆற்றுப்படுக்கைகள் எல்லை கடந்த நீர்வளம் ஆகும். அதிகரித்துவரும் நீர் அழுத்த சகாப்தத்தில் தவறாக நிர்வகிக்கப்படும் எல்லை தாண்டிய நீர் விநியோகங்கள் சமூக அமைதியின்மையையும் மோதலையும் மீண்டும் திறன் கொண்டவையாக அமைகின்றன. காலநிலை மாற்றம் மற்றும் உலக சனத்தொகையின் அதிகரிப்பு என்பவற்றைச் சமாளிக்க மக்களினதும் சூழலினதும் தேவைகளை நிவர்த்தி செய்யும் எல்லை தாண்டிய நீர் வள முகாமைத்துவத்தில் அதிதேசிய ஒருங்கிணைந்த அணுகுமுறை மிகவும் அவசியம். 2010ஆம் ஆண்டு உலக நீர் தினம் “ஆரோக்கியமான உலகிற்குச் சுத்தமான நீர்" எனும் கருப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது. சுத்தமான நீரினைப் பெறுதல் மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். ஆனால், உலகில் நால்வருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை. இது ஒரு சுகாதாரப் பேராபத்து ஆகும். ஆண்டுதோறும் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் பாதுகாப்பற்ற நீரினால் இறக்கின்றனர். நகர்ப்புற நீர் பயன்பாட்டுத் துறைகளில் வதிவிடங்கள், வர்த்தகம், தொழிற்சாலை, நிறுவனங்கள் மற்றும் பிற பயன்பாட்டுத்துறைகள் அடங்குகின்றன. விவசாயத்துக்கு பயன்படுத்தப்படாத அல்லது சூழலுக்கு பயன்படுத்தப்படாத நீர் “நகர்ப்புற நீர்” எனக் கருதப்படுகிறது. எனவே குடிநீர்க்காகவும் கழிவகற்றலுக்காகவும் மற்றும் குளிப்பதற்காகவும் பயன்படுகின்ற நீர் “நகர்ப்புற நீர்” எனப்படும். 2011ஆம் ஆண்டு “நகர்ப்புற நீர்” எனும் தொனிப்பொருளில் உலக நீர் தினம் அமையப்பெற்றது. “நீரும் உணவுப் பாதுகாப்பும்” என்ற கருப்பொருளைத் தாங்கிநிற்கிறது 2012ஆம் ஆண்டு உலக நீர் தினம். உணவுப் பாதுகாப்புக்கு நீர் இன்றியமையாதது. பயிர்கள் மற்றும் கால்நடைகளின் வளர்ச்சிக்கு நீர் மிகவும் அவசியமானது. விவசாயத்திற்கு பாரியளவு நீர் தேவைப்படும் அதேவேளை பல்வேறு உணவு உற்பத்திக்கு தரமான நீர் அவசியமாகின்றது. மனிதத் தேவைக்காகப் பயன்படுத்தப்படுகின்ற உலகின் அனைத்து நன்னீர்களின் 70 சதவீதமானவை பாசன விவசாயத்திற்குப் பயன்படுகின்றன. 2013ஆம் ஆண்டு உலக நீர் தினம் தனது கருப்பொருளை “சர்வதேச கூட்டுறவு ஆண்டு” அமைந்துள்ளது. இதன் மூலம் சர்வதேச சமூகம் அமைதியானதும் நிலையானதுமான நீர் முகாமைத்துவம் மற்றும் நீர்வளப் பாவனை என்பவற்றின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கிறது. “நீர் மற்றும் வலு” எனும் தொனிப்பொருளினை விளக்கி நிற்கிறது 2014ஆம் ஆண்டு உலக நீர் தினம். நீர் மற்றும் அதன் வலு இரண்டுமே மனித உயிர் வாழ்விற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் மிகவும் இன்றியமையாத வளங்கள் ஆகும். குடிநீர், விவசாயம் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் மிகவும் அவசியம் ஆகும். அதேவேளை போக்குவரத்து, வெப்பமாக்கல் மற்றும் மின்னுற்பத்திக்கு நீரின் வலு அவசியமாகின்றது. நிலையான அபிவிருத்தி, வாழ்வாதாரம், நீதி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில் என்பவற்றிற்கு நீர் மிகவும் இன்றியமையாத ஒரு திறவுகோல் ஆகும். சுத்தமான மற்றும் நிலையான நீர் வளங்களுக்குரிய வழிமுறை இன்னும் தளம்பல் நிலையிலே உள்ளது. அனைவருக்கும் சமமானதும் பாதுகாப்பான நீர் கிடைக்காமல் எந்தவொரு நிலையான அபிவிருத்தி என்ற ஒன்று இருக்கவே முடியாது. இதன் சாராம்சத்தை தழுவி நிற்கிறது 2015ஆம் உலக நீர் தினக் கருப்பொருளான “நீரும் நிலையான அபிவிருத்தியும்”. 2016ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருள் “சிறந்த நீர், சிறந்த தொழில்” என்பதை வலியுறுத்தி நிற்கிறது. இது நீருக்கும் தொழிலுக்கும் இடையான தொடர்புகளை மையமாகக் கொண்டுள்ளது. அனைத்து தொழிலாளர்களில் அண்ணளவாக ஐம்பது சதவீதமானோர் நீர் தொடர்பான துறைகளில் தொழில் புரிபவர்கள் ஆவர். அத்துடன் அவை யாவும் தண்ணீர் கிடைப்பதைப் பொறுத்தே அமைகின்றன. உண்மையில், சமூகத்தால் உற்பத்தி செய்யப்படுகின்ற பெரும்பாலான கழிவு நீரானது தொழிற்சாலைகள், விவசாயம் மற்றும் நகராட்சிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இவை சுத்திகரிக்கப்படாமலே மீண்டும் சுற்றுச்சூழல் அமைப்பில் சேர்கின்றது. இந்த நிலையின் மீது விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற 2017 உலக நீர் தினம் “ஏன் கழிவு நீர்” எனும் தொனிப்பொருளை வலியுறுத்தி நிற்கிறது. “நீருக்காக இயற்கை” என்ற கருப்பொருளை தாங்கி நிற்கிறது 2018க்கான உலக நீர் தினம். சுற்றுச்சூழல் அமைப்பினைப் பாதுகாப்பதே நீர்ப் பாதுகாப்புக்கான திறவுகோல் ஆகும். 2030ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் மக்கள் நீர்ப்பற்றாக்குறையை எதிர்கொள்ள நேரிடும். நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான எமது திறனில் இது பெரும் தடைகளை ஏற்படுத்துகின்றது. இந்த நெருக்கடியை சமாளிப்பதற்கான தெளிவான பாதையை இயற்கை எமக்கு வழங்குகிறது. இயற்கை சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் மூலமும் அவற்றை மீளக் கட்டியெழுப்புதல் மூலமும் நிலையான முறையில் முகாமைத்துவம் செய்வதன் மூலமும் இந்த நெருக்கடியின் தாக்கத்தைத் தணிக்க முடியும். அதுமட்டுமன்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையை முன்னேற்றவும் முடியும். “யாரையும் விட்டு விடலாகாது” என்ற கருப்பொருளுடன் அமையப் பெற்றது, 2019ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். “யாரையும் விட்டுவிடக்கூடாது” என்ற உறுதிமொழியானது தீவிர வறுமையை அதன் அனைத்து வடிவங்களிலிருந்தும் முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஒரு உறுதிப்பாடு ஆகும். “அனைவருக்கும் நீர்” என்பதே இக்கருப்பொருளின் மறுவடிவம். அதாவது, அதிக முன்னேற்றம் கண்டவர்கள் பின்தங்கியவர்களைக் கைவிடாமல் இருப்பதற்கான ஒரு சமூகப் பொறிமுறை உருவாக்கப்படல் அவசியம். 2020ஆம் ஆண்டின் கருப்பொருளாக “நீரும் காலநிலை மாற்றமும்” என்றவாறு அமைகின்றது. நீர் நெருக்கடிக்கு பிரதான ஏதுவாய் விளங்குவது காலநிலை மாற்றம். கடும் வெள்ளம், கடல் மட்டம் உயர்தல், பனி நிலச் சுருக்கம், காட்டுத் தீ மற்றும் வறட்சி என்பவற்றின் மூலம் காலநிலை மாற்றத்தில் தாக்கங்களை நாம் உணர்கின்றோம். இருப்பினும், நீர் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போரிடும். நீர் எவ்வாறு மதிப்பிடப்படுகிறது என்பதைக் கட்டுப்படுத்துபவர்கள்தான் அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் கட்டுப்படுத்துகிறார்கள். மதிப்பிடுதல் என்பது நீர்வள முகாமைத்துத்துவத்தில் வலுவானதும் சமத்துவமும் மிக்கதான ஒரு முக்கிய அம்சம் ஆகும். வெவ்வேறான நீர்ப் பயன்பாடுகளின் நீரினை மதிப்பிடத் தவறியமை நீரின் அரசியல் புறக்கணிப்பிற்கும் அதன் தவறான முகாமைத்துவத்திற்கும் மூலகாரணமாக அமைகின்றது. 2021ஆம் ஆண்டு உலக நீர் தினம் “நீரின் மதிப்பீடு” எனும் கருப்பொருளில் அமையப்பெற்றது குறிப்பிடத்தக்கது. “கண்ணுக்குப் புலப்படாத நிலத்தடி நீரைப் புலப்படச் செய்தல்” எனும் கருப்பொருளைத் தாங்கி நிற்கிறது 2022ஆம் ஆண்டுக்கான உலக நீர் தினம். நிலத்தடி நீர் உலகளவில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத குடிநீரை வழங்குகின்றது. நாற்பது சதவீதமான நீர் நீர்ப்பாசனத்துக்கு பயன்படுகின்ற அதேவேளை மூன்றில் ஒரு பங்கு தொழிற்சாலைக்குப் பயன்படுகிறது. சுற்றுச்சூழலை தக்கவைப்பது மட்டுமல்லாமல் காலநிலை மாற்றத்துக்கு ஈடு கொடுக்கவும் நிலத்தடி நீர் அவசியமாகின்றது. அதிகரிக்கும் நீர்ப்பற்றாக்குறையும் மேற்பரப்பு நீரின் கிடைப்பனவின் நம்பகத்தன்மையும் (மனித செயற்பாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக) நிலத்தடி நீரின் மீது அதிக விசுவாசத்தையும் அழுத்தத்தையும் கொள்வதற்குக் காரணமாக அமைகின்றன. 2023ஆம் ஆண்டின் உலக நீர் தினக் கருப்பொருளாக “மாற்றத்தை துரிதப்படுத்தல்” என்றவாறு அமைகின்றது. நீர் மற்றும் சுகாதாரத்தின் முன்னேற்றத்தைத் துரிதப்படுத்துவதற்கு நிலையான நீர் முகாமைத்துவ நடைமுறைகளை மேம்படுத்தும் முகமாக அரச நிறுவனங்களும் தனியார் துறைகளும் இணைந்து செயற்பட வேண்டும். நீர்ப்பாதுகாப்பு மற்றும் செயல்திறனை மேம்படுத்தல், நீர் மாசடைதலைக் குறைத்தல், சுத்தமான நீருக்கான வசதியினை உருவாக்கல் போன்றவற்றுக்கான உட்கட்டமைப்புக்களையும் தொழில்நுட்பங்களையும் வழங்குவதற்கு முதலீடு செய்தல் என்பதே “மாற்றத்தை துரிதப்படுத்தல்” என்பது கொண்டுள்ளது. அதனை அடைவதற்கு, சிறுமிகள் மற்றும் பெண்கள், கிராமப்புற மக்கள் ஆகியவற்றின் தேவைப்பாடுகள் கருத்திற்கொள்ளப்பட்டு சுத்தமான நீருக்கும் ஏற்ற சுகாதார வசதிக்குமான வழியமைத்தல் வேண்டும். புத்தாக்கத் தீர்வுகள் மற்றும் நிலையான நீர்த் தொழில்நுட்பங்கள் என்பவற்றில் முதலீடு செய்யும் சமூகம் தலைமையிலான நீர்ச் செயற்றிட்டங்கள் மட்டுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வினை வழங்கும். பல்வேறு கோணங்களில் ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினம் ஒவ்வொரு கருப்பொருளைக் கொண்டு அமைந்ததை போன்றே இவ்வருடம் “சமாதானத்துக்கான நீர்” எனும் தொனிப்பொருளில் அமைகின்றது. நீர்ப் பற்றாக்குறையாக இருக்கும்போது அல்லது நீர் மாசடையும்போது அல்லது மக்கள் சமமின்மையை உணரும்போது அல்லது ஏற்ற வசதியில்லாதபோது சமூகங்களுக்கும் நாடுகளுக்குமிடையில் பதற்றம் உருவாகும். உலகளவில் மூன்று மில்லியனுக்கும் அதிகளவிலான மக்கள் சொந்த நாட்டின் எல்லைகளைக் கடக்கும் நீரை நம்பியுள்ளனர். எனினும், 24 நாடுகள் மட்டுமே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் பெருகிவரும் சனத்தொகை என்பவற்றைச் சமாளிக்க நீர்வள நிலையப் பாதுகாப்புக்கும் அதை பேணுவதற்கும் நாடுகளுக்கிடையான அவசரத் தேவைகள் உள்ளன. பொதுச் சுகாதாரம் மற்றும் செழிப்பு, உணவு மற்றும் சக்தி அமைப்புக்கள், பொருளாதார உற்பத்தி மற்றும் சுற்றுச் சூழல் ஒருமைப்பாடு ஆகியவை நன்கு செயற்படுகின்றதும் சமத்துவ முகாமைத்துவம் மிக்கதுமான நீர்ச் சுழற்சியில் தங்கியுள்ளன. சர்வதேச வலைப் பின்னல், அதாவது World Wide Web எனும் சொற்றொடரை மற்றும் றறற எனும் பதத்தை அறியாதவர்கள் உலகில் எவரும் இல்லை. மீண்டும் அதே பதம் றறற வேறு உள்ளடக்கம் கொண்டு வெளிவரக் காத்திருக்கிறது. அதாவது World Water War (உலக நீர் யுத்தம்) என்பதுதான். அப்படியொரு www உருவாகாமல் நீர் தொடர்பான சகல நடவடிக்கைகளில் ஈடுபடுவது இந்த நீரேந்தும் பூமிக்கிரகத்தில் நீரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு உயிரினத்தினதும் தவிர்க்கமுடியாத தார்மீகப் பொறுப்பு ஆகும். - எந்திரி. எஸ்.ராஜ்குமார் சிரேஷ்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர், அம்பாறை பிராந்தியம் https://www.virakesari.lk/article/179394
-
உலக தண்ணீர் தினம் : 100 கிணறுகளை வெட்டிய ஒரே மனிதர்; கிராம மக்களின் தாகம் தீர்த்த ஹீரோ
6 மணி நேரங்களுக்கு முன்னர் செனகலை சேர்ந்த ஜூனியர் டியாகாடே இதுவரை 100 கிணறுகளை கட்டி கொடுத்துள்ளார். செனகலில் உள்ள பல கிராமங்களிலும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்நிலையில் ஒரே இளைஞர் நூறுக்கும் மேற்பட்ட கிணறுகளை கட்டிக் கொடுத்து மக்களின் தாகம் தீர்த்து வருகிறார். இதற்காக பலரிடமும் நிதி வசூல் செய்து, கடந்த ஆண்டில் பல கிணறுகளை உருவாக்கி கொடுத்துள்ள ஜூனியர் இது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி தருவதாக கூறுகிறார். மேலும், இதனால் தனது குடும்ப வாழ்க்கை பாதிக்கப்பட்ட போதிலும் கூட தொடர்ந்து மக்களுக்காக கிணறு வெட்டிக் கொடுப்பதே தனக்கு மகிழ்ச்சி என்று அவர் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/articles/clm75rygdrmo
-
இத்தாலி பெண் பிரதமரின் ஆபாச வீடியோக்கள்.. இழப்பீடு கேட்டு வழக்கு
இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. நவீன உலகம் பெருமையாக பேசிக்கொள்ளும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் மற்றும் அதன் எதிர்விளைவுகள் டிஜிட்டல் துறையில் அதிகரித்துள்ளது. இந்த தொழில்நுட்பத்தை பொழுதுபோக்கு அம்சங்களில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். டீப்பேக் என்ற ஏ.ஐ. வீடியோ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒருவரின் முகத்தை வேறு ஒருவரின் உடலோடு பொருத்தி வீடியோ வெளியிடுவது அதிகரித்து வருகிறது. அவ்வகையில், இத்தாலி பெண் பிரதமர் ஜார்ஜியா மெலோனியின் டீப்பேக் வீடியோக்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்ஜியா மெலோனியின் முகத்தை, ஆபாச திரைப்படத்தில் உள்ள நடிகையின் உடலுடன் பொருத்தி ஆபாச வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக தெரிகிறது. அந்த வீடியோக்கள் வைரலான நிலையில், அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணையில், 40 வயது நிரம்பிய நபர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் இந்த வீடியோக்களை தயாரித்து வலைத்தளத்தில் பதிவேற்றியது தெரியவந்துள்ளது. அவர்கள் மீது அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது. மெலோனி சம்பந்தப்பட்ட ஆபாச வீடியோக்கள் அனைத்தும், 2022ல் அவர் பிரதமராக பதவியேற்பதற்கு முன்பு பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இத்தாலிய சட்டத்தின்படி, ஒருசில அவதூறு செயல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும். இந்நிலையில், ஆபாச வீடியோக்கள் வெளியிட்டதால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு 1 லட்சம் யூரோக்கள் இழப்பீடாக வழங்க உத்தரவிடக்கோரி பிரதமர் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பிரதமர் மெலோனி ஜூலை 2-ம் தேதி சசாரி கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளிக்க உள்ளார். பிரதமர் கோரிய இழப்பீடு வழங்கப்பட்டால், ஆண்களின் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் அந்த தொகையை நன்கொடையாக வழங்குவார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதுபோன்ற பிரச்சினையால் பாதிக்கப்படும் பெண்கள், வழக்கு தொடர பயப்படவேண்டாம் என்ற செய்தியை தெரியப்படுத்தவே இழப்பீடு கேட்டு பிரதமர் மெலோனி வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல் இந்தியாவில், ரஷ்மிகா மந்தனா, கத்ரீனா கைப், நோரா பதேஹி உள்ளிட்ட பாலிவுட் நட்சத்திரங்களின் டீப்பேக் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/296731
-
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு: தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலையில் மக்கள் - பிபிசி கள ஆய்வு
கட்டுரை தகவல் எழுதியவர்,முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 21 மார்ச் 2024 சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது. திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டுள்ள விமான நிலையத்திற்கு விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்க்கும் போராட்டம் பெரிய ஊடக கவனம் இன்றி 600 நாட்களைக் கடந்திருக்கிறது. 600வது நாள் போராட்டத்தை கடந்த சனிக்கிழமையன்று ஒப்பாரிப் போராட்டமாக நடத்தி முடித்திருக்கிறார்கள் விவசாயிகள். சென்னையிலிருந்து சுமார் 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்திருக்கிறது பரந்தூர். இந்த பரந்தூர் கிராமம் உள்பட அருகில் உள்ள 13 கிராமங்களில் உள்ள விவசாய நிலங்கள், வீடுகளைக் கையகப்படுத்தி புதிய விமான நிலையத்தை அமைக்க அரசு உத்தேசித்திருக்கிறது. சென்னை விமான நிலையத்தை பெரிய அளவில் விரிவாக்கம் செய்ய முடியாது என்பதால் அதற்கு இணையாக ஒரு விமான நிலையத்தை அமைக்க வேண்டும் என்பது நீண்ட காலமாகவே, கிட்டத்தட்ட 80களில் இருந்தே உத்தேசிக்கப்பட்டு வந்தது. இதற்காக போரூர், ஸ்ரீபெரும்புதூர் என பல இடங்கள் பரிசீலிக்கப்பட்டுவந்தன. இறுதியாக தற்போது பரந்தூர் பகுதி தேர்வுசெய்யப்பட்டிருக்கிறது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி இந்தத் திட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் அறிவிப்புச் செய்யப்பட்டது. பரந்தூரில் அமையவிருக்கும் இந்த புதிய விமான நிலையத்தில் இரண்டு ஓடுதளங்கள், விமான நிலைய முனையங்கள், இணைப்புப் பாதைகள், விமானங்கள் நிறுத்துமிடம், சரக்கு கையாளும் முனையம், விமான பராமரிப்பு வசதிகள் ஆகியவை இடம்பெறும் எனக் கூறப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பரந்தூர், வளத்தூர், பொடவூர், நல்வாய், தண்டலம், மடப்புரம், தொடரூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் இருக்கும் நிலங்களில் 4791.29 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதில் 3,466 ஏக்கர் நிலம் நன்செய் விவசாய நிலம். 1,317 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் ஏரி, குளம், குட்டை, கால்வாய்கள் போன்றவை அமைந்துள்ளன. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே இப்பகுதி மக்கள் இதனைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். இந்தத் திட்டத்திற்காக முழுமையாக கையகப்படுத்தப்படவிருக்கும் ஏகனாபுரம், நெல்வாய், நாகப்பட்டு கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இதனை மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். "எத்தனை லட்சம் தந்தாலும் வேண்டாம்" திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே ஏகனாபுரம் மக்களின் நிம்மதி பறிபோயிருக்கிறது. தினமும் இரவு நேரங்களில் இந்தத் திட்டத்தை எதிர்த்து கூட்டம் நடத்துவது, கிராம பஞ்சாயத்துகளில் திட்டத்தை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவது, கிராமசபை கூட்டங்களைப் புறக்கணிப்பது என பல வகைகளிலும் தங்கள் எதிர்ப்பைப் பதிவுசெய்து வருகின்றனர். இருந்தபோதும், இந்தத் திட்டம் தொடர்ந்து முன்னோக்கி நகர்வது இவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில்தான் 600-ஆவது நாள் போராட்டத்தை, அரசின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஒப்பாரிப் போராட்டமாக நடத்தினர். போராட்டம் நடந்த சனிக்கிழமையன்று, பரந்தூர், நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். அன்று மட்டுமல்ல, பெரிய அளவில் போராட்டம் நடக்கும் தினங்களில், இந்தப் பகுதி முழுமையாக காவல்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படுகிறது. இந்தத் திட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஒரே இடத்தில்கூடி போராட்டம் நடத்துவது பெரும்பாலும் அனுமதிக்கப்படுவதில்லை. அந்தந்த கிராமங்களிலேயே போராட்டம் நடத்தும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால், இப்பகுதி மக்கள் இந்த விவகாரத்தை அப்படியே விடுவதாக இல்லை. ஏகனாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்திக்கு இங்கே வெறும் 53 சென்ட் நிலம்தான் இருக்கிறது. ஆனால், அதிலிருந்து கிடைக்கும் நெல் தனக்கு வருடம் முழுவதும் போதுமானதாக இருக்கிறது என்கிறார் அவர். அந்த நிலத்தை பிடுங்கிக்கொண்டுவிட்டு, எத்தனை லட்சம் தந்தாலும் அது தனக்கு தேவையில்லை என்கிறார் அவர். "இது டெல்டா மாவட்டங்களைப் போல ஆற்றை நம்பியிருக்கும் பாசனப்பகுதி அல்ல. ஏரியில் தண்ணீரை நிரப்பி, அதன்மூலம் விவசாயம் செய்துவருகிறது. அரசின் எந்த உதவியும் இல்லாமல் வாழ்ந்துவருகிறோம். இதை எடுத்துக்கொண்டு அவர்களால் எத்தனை கோடி தர முடியும்?" என்கிறார் அவர். படக்குறிப்பு, கிருஷ்ணமூர்த்தி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை பரந்தூரில் உத்தேசிக்கப்பட்டிருக்கும் விமான நிலையத்தைப் பொறுத்தவரை, 20,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு 2030க்குள் செயல்பாட்டிற்குக் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. வருடத்திற்கு பத்து கோடி பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இந்த விமான நிலையம் திட்டமிடப்படுகிறது. விவசாயிகளின் போராட்டம் தொடர்ந்த நிலையில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் ஆகியோர் போராடும் விவசாயிகளைச் சந்தித்துப் பேசினர். அந்தப் பேச்சு வார்த்தைக்குப் பிறகு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், நிலங்களுக்கு இழப்பீடாக நிலத்தின் மதிப்பைப் போல 3.5 மடங்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. விவசாயிகளின் கோரிக்கைகள், கவலைகள் தமிழக முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படும் என்றும் அமைச்சர்கள் வாக்குறுதி அளித்தனர். ஆனால், இதற்கு சில நாட்களுக்குப் பிறகு, அதாவது நவம்பர் நான்காம் தேதி பரந்தூர் விமான நிலையம் ஏன் அவசியம் என ஒரு அறிக்கை தமிழக அரசிடமிருந்து வெளியானது. அடுத்த சில நாட்களில் இந்தத் திட்டம் அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. இந்தத் திட்டத்திற்கான Techno - Economic ஆய்வு மேற்கொள்ள ஒப்பந்தப்புள்ளிகளைக் கோரியது டிட்கோ நிறுவனம். இதையடுத்து விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தினர். அரசு மீண்டும் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. ஆனால், அதில் பெரிய முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை. இதற்குப் பிறகு, பரந்தூரில் விமான நிலையம் வந்தால் இந்தப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் கடுமையாக பாதிக்கப்படும் என்ற எதிர்ப்புக் குரல் எழுந்த நிலையில், அது குறித்து ஆராய ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மச்சேந்திரநாதன் தலைமையில் ஒரு நிபுணர் குழு கடந்த ஆண்டு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை இப்போதுவரை வெளியாகவில்லை. ஏகனாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள்தான் போராட்டத்தைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர். இதற்குக் காரணம், 908 ஏக்கர் பரப்பளவும் 2,400 பேர் மக்கள் தொகையும் கொண்ட இந்த கிராமம், இந்தத் திட்டத்திற்காக முழுமையாக எடுத்துக்கொள்ளப்படவிருக்கிறது. அச்சத்தில் கிராம மக்கள் அரசு எவ்வளவு இழப்பீடு அளித்தாலும் இந்த இடத்தை விட்டுப் போக முடியாது என்கிறார் அந்த கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ. "நாங்கள் பிறந்த பூமி இது. மூன்றரை மடங்கு இழப்பீடு தருவதாகச் சொல்கிறார்கள். இந்தப் பகுதியில் ஒரு சென்ட் நிலம் 13 ஆயிரம் ரூபாய் என வழிகாட்டு மதிப்பீடுகள் சொல்கின்றன. ஆனால், பக்கத்திலேயே ஒரு சதுர அடி நிலம் 4 ஆயிரம் ரூபாய்வரை விற்கிறது. ஆக இழப்பீடு என்பதை எந்த அடிப்படையில் தருவார்கள்?" எனக் கேள்வி எழுப்புகிறார் இளங்கோ. ஏகனாபுரம் கிராமத்தில் சுமார் 600 வீடுகள் இருக்கின்றன. 800 ஏக்கர் நன்செய், புன்செய் நிலங்கள் உள்ளன. 1,700 வாக்காளர்கள் இங்கே இருக்கிறார்கள். இந்தத் திட்டத்தை அரசு தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வது இவர்களுக்கு அச்சமளிக்கிறது. படக்குறிப்பு, பண்டேரி தேர்தல் புறக்கணிப்பு ஏகனாபுரத்தைச் சேர்ந்த பண்டேரிக்கு இங்கே மூன்று ஏக்கர் நிலம் இருக்கிறது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டதிலிருந்து தனக்கு தூக்கமே வருவதில்லை என்கிறார். "நான்கு தலைமுறையாக இந்தப் பகுதியில் நாங்கள் விவசாயம் செய்துவருகிறோம். எனக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றன. வீட்டை வேறு கடன் வாங்கிக் கட்டிவிட்டோம். நிலத்தையும் வீட்டையும் எடுத்துக்கொண்டால் அம்போவென போய்விடுவோம். இதையே நினைத்துக்கொண்டிருப்பதால் இரவெல்லாம் தூக்கமில்லை. இதுவரை அரசாங்க அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ வந்து எங்களைப் பார்க்கவில்லை. கொரோனா காலகட்டத்தில்கூட நிலமிருந்ததால் பசியில்லாமல் இருநதோம். எங்களை இங்கிருந்து அடித்து விரட்டினாலும் செத்துப் போவோமே தவிர, ஊரைவிட்டுப் போகமாட்டோம்" என்கிறார் அவர். இவ்வளவு நாட்களாகப் போராடியும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் போன்ற மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்காக குரல் கொடுக்கவில்லையே என்ற வருத்தம் இவர்களுக்கு மிகக் கடுமையாக இருக்கிறது. அந்தப் பகுதியின் சட்டமன்ற உறுப்பினரான கு. செல்வப்பெருந்தகை, இந்த விவகாரம் குறித்து சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார் என்றாலும், அது தொடர்பாக வேறு எந்த நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை என்கிறார்கள் கிராம மக்கள். அந்தத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர். பாலு, இதுவரை இந்தப் பக்கமே வரவில்லை என்பது இவர்களை வெகுவாக ஆத்திரப்படுத்தியிருக்கிறது. இப்போது நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியிருக்கும் நிலையில், தேர்தலைப் புறக்கணிக்கும் மனநிலைக்கு இப்பகுதி மக்கள் வந்திருக்கின்றனர். "மக்கள் பிரதிநிதிகளைப் பொறுத்தவரை இங்குள்ள உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கட்சி பேதமற்று சேர்ந்து போராடுகிறோம். எம்.எல்.ஏ. செல்வப்பெருந்தகை எப்போதாவது குரல் கொடுப்பார். போராடத்திற்கு வரமாட்டார். நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு இந்தப் பகுதிக்கு வந்ததே கிடையாது. ஓட்டுக் கேட்கும்போது, நான் எம்.பியானால் இந்தத் திட்டம் வராது என்று வாக்களித்தார். அப்படிச் சொல்லிவிட்டுப் போனவர்தான். ஒரு அறிக்கைகூட விடவில்லை. மக்களைச் சந்திக்கவும் இல்லை. மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று கேட்கக்கூட வரவில்லை. இந்த முறை நாங்கள் தேர்தலை முற்றிலுமாக புறக்கணிக்கப்போகிறோம். விவசாயிகளை மதிக்காவிட்டால், விவசாயிகள் ஓட்டு மட்டும் அவர்களுக்கு ஏன் தேவைப்படுகிறது? ஜனநாயகத்தை மதிக்காதவர்கள், வாக்காளர்களின் உரிமையை என்ன மதிக்கப்போகிறார்கள்? அதனால் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்" என்கிறார் பரந்தூர் பசுமை விமான நிலைய எதிர்ப்புக் குழுவின் செயலாளர் சுப்பிரமணியன். இந்தப் புதிய விமான நிலையத் திட்டத்தில் 13 கிராமங்களின் நிலம் கையகப்படுத்தப்படும் என்றாலும் ஏகனாபுரம், நாகப்பட்டு, நெல்வாய் ஆகிய மூன்று கிராமங்களில்தான் எதிர்ப்பு தீவிரமாக இருக்கிறது. படக்குறிப்பு, சுப்பிரமணியன் நெல்வாய் கிராமத்தைப் பொறுத்தவரை, சுமார் 900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படவிருக்கிறது. இதில் சுமார் 600 ஏக்கர் விவசாய நிலமாகவும் 300 ஏக்கர் நிலம் அரசின் புறம்போக்கு நிலமாகவும் உள்ளது. இங்கிருக்கும் விவசாயிகளும் தேர்தலைப் புறக்கணிக்கப்போவதாகச் சொல்கிறார்கள். "எம்.எல்.ஏ., எம்.பி. என யாரும் இதுவரை இங்கே வந்து கேட்கவில்லை. அரசும் சரி, அரசியல்வாதிகளும் வந்து எதுவும் கேட்கவில்லை. அவர்களாக சர்வே எண்ணை குறிப்பிட்டு, அந்த நிலங்களை எடுக்கப்போகிறோம், ஆட்சேபணை தெரிவியுங்கள் என்கிறார்கள். நாங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப்போகிறோம். நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் கண்டிப்பாகத் தேர்தலைப் புறக்கணிக்கப்போகிறோம்" என்கிறார் நெல்வாயைச் சேர்ந்த விவசாயியான குணசேகரன். படக்குறிப்பு, குணசேகரன் சிறு அளவில் நிலங்கள் தேவைப்படும் சிறுவள்ளூர், அக்கமாபுரம், பொடவூர் ஆகிய இடங்களில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கிடையில் இந்தத் திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை, காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு அளித்த விண்ணப்பத்தை டிட்கோ நிறுவனம் திரும்பப்பெற்றிருக்கிறது. ஆனால், தேர்தல் முடிந்த பிறகு மீண்டும் டிட்கோ விண்ணப்பிக்கக்கூடும் என்ற அச்சம் மக்களிடம் இருக்கிறது. ஆகவே, மிகவும் பாதிப்பிற்குள்ளாகக்கூடிய சில கிராமங்கள் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கலாம். இங்கு வாக்காளர் எண்ணிக்கை குறைவு என்பதால், தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், மக்களிடம் தங்கள் கொண்டு சேர்க்க இது உதவும் என நம்புகிறார்கள் இப்பகுதி மக்கள். https://www.bbc.com/tamil/articles/cxrzdvevq4wo
-
ஈஸ்டர் தாக்குதலை யார் மேற்கொண்டது என்பது எனக்குத் தெரியும் – மைத்திரி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையில் யார் மேற்கொண்டது என்பது தனக்குத் தெரியும் எனவும் நீதிமன்றம் கோரிக்கை விடுத்தால், அதனை வௌிப்படுத்துவதற்கு தான் தயார் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டியில் இன்று அது தொடர்பில் தௌிவுபடுத்தினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் எவ்வாறு நடைபெற்றது என்பது தனக்குத் தெரியும் எனவும் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படும் பயங்கரவாதிகள் தொடர்பிலான விடயம் சரியானது எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார். தன்னால் கைது செய்யப்பட்டவர்களே நீதிபதிகள் குழாத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை உண்மையாகவே யார் செய்தார் என்பதனை எவரும் இன்னும் கூறவில்லை என தெரிவித்தார். இது தொடர்பில் கருத்துக் கூறுமாறு நீதிமன்றம் தன்னிடம் கோரிக்கை விடுத்தால், அல்லது உத்தரவு பிறப்பித்தால், யார் இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலை மேற்கொண்டார்கள் என்பதனை கூறுவதற்கு தான் தயாராகவுள்ளதாக அவர் கூறினார். எவ்வாறாயினும், அதனை மிகவும் இரகசியமாக பேணுவது நீதிபதிகளின் பொறுப்பு எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். https://thinakkural.lk/article/296776
-
ஆழ்கடல் சுரங்கம்: கனிமங்களை கைப்பற்றி வல்லரசு நாடுகளை முந்த முயலும் இந்தியா
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆழ்கடல் சுரங்கம் கட்டுரை தகவல் எழுதியவர், நவீன் சிங் கட்கா பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர் , பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தூய ஆற்றலுக்கான எதிர்காலத்தை நோக்கி உலக நாடுகள் அனைத்தும் பயணித்துக் கொண்டிருக்கின்றன. அதில் முக்கிய அங்கமாக இருக்கும் ஆழ்கடல் கனிமங்களைக் கண்டறியும் முயற்சியில் இந்தியா மற்றொரு படியை எடுத்து வைத்துள்ளது. கடலுக்கு அடியில் உள்ள முக்கியமான தாதுப் பொருட்களைப் பாதுகாப்பதில் உலக வல்லரசுகளுக்கு இடையே போட்டி அதிகரித்து வருகிறது. இந்நிலையில், இந்தியப் பெருங்கடலில் ஏற்கெனவே இரண்டு ஆழ்கடல் ஆய்வுக்கான உரிமங்களைக் கொண்டுள்ள இந்தியா, மேலும் இரண்டுக்கு விண்ணப்பித்துள்ளது. சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடலின் மேற்பரப்பில் இருந்து ஆயிரக்கணக்கான மீட்டர்கள் கீழே உள்ள கோபால்ட், நிக்கல், தாமிரம், மாங்கனீசு போன்ற கனிம வளங்களின் மிகப்பெரிய இருப்பை அடைய போட்டியிட்டு வருகின்றன. காலநிலை மாற்றத்திற்கு எதிராகப் போராட புதுப்பிக்கத்தக்க ஆற்றல்களான சூரிய மற்றும் காற்றாலை மின்சாரம், மின்சார வாகனங்கள் மற்றும் பேட்டரி தொழில்நுட்பம் ஆகியவற்றை உற்பத்தி செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன. ஐக்கிய நாடுகள் சபையோடு இணைந்த சர்வதேச கடற்பரப்பு ஆணையம் (ISA) இதுவரை 31 ஆய்வு உரிமங்களை வழங்கியுள்ளது, அவற்றில் தற்போது 30 ஆய்வுகள் செயலில் உள்ளன. இந்த அமைப்பின் உறுப்பு நாடுகள் இந்த வாரம் ஜமைக்காவில் கூடி சுரங்க உரிமம் வழங்குவது தொடர்பான விதிமுறைகள் குறித்து விவாதிக்க உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடல்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்கும் போட்டியில் இந்தியா பின்வாங்க விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. இந்தியாவின் புதிய விண்ணப்பங்களை ஐஎஸ்ஏ அங்கீகரிக்கும் பட்சத்தில், அதன் உரிம எண்ணிக்கை ரஷ்யாவுக்கு இணையாகவும், சீனாவைவிட ஒன்று குறைவாகவும் இருக்கும். இந்தியாவின் விண்ணப்பங்களில் ஒன்று, மத்திய இந்தியப் பெருங்கடலின் கார்ல்ஸ்பெர்க் ரிட்ஜ் பகுதியில் உள்ள செம்பு, துத்தநாகம், தங்கம் மற்றும் வெள்ளி ஆகியவற்றைக் கொண்ட நீர்வெப்ப துவாரங்களுக்கு அருகில் உள்ள பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆராய முயற்சி செய்வதாகும். பிபிசி பார்த்த ஆவணங்களின்படி, ஐஎஸ்ஏவின் சட்ட மற்றும் தொழில்நுட்ப ஆணையம் இதுகுறித்த கருத்துகள் மற்றும் கேள்விகளின் பட்டியலை இந்திய அரசுக்கு அனுப்பியுள்ளது. மத்திய இந்தியப் பெருங்கடலில் உள்ள அஃபனசி-நிகிடின் கடல் பகுதியில் கோபால்ட் நிறைந்த ஃபெரோமாங்கனீசு மேலோடுகளை ஆராய்வதற்காக அளிக்கப்பட்ட மற்றொரு விண்ணப்பத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, பெயர் குறிப்பிடப்படாத மற்றொரு நாடு ஒன்று இந்தியா விண்ணப்பித்த அதே கடற்பரப்பை உரிமை கோரியுள்ளது என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதற்கு இந்தியாவிடம் பதில் கேட்டுள்ளது. விண்ணப்பங்களுக்குக் கிடைக்கும் முடிவு எதுவாக இருந்தாலும், கடல்களின் அடிப்பகுதியில் உள்ள முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்கும் போட்டியில் இந்தியா பின்வாங்க விரும்பவில்லை என்பது மட்டும் தெளிவாகிறது. "இந்தியப் பெருங்கடல் மிகப்பெரிய அளவில் வளங்களின் இருப்புகளை உறுதியாகக் கொண்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் விரிவு இந்திய அரசை அறிவியல் பூர்வமாக கடலின் ஆழத்தை ஆராய்வதற்கு ஊக்கமளித்துள்ளது" என்று அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் புவிசார் அரசியல் மற்றும் விநியோகச் சங்கிலி நுண்ணறிவு வழங்கும் நிறுவனமான ஹொரைசோன் அட்வைசரியின் இணை நிறுவனர் நாதன் பிகார்சிக் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா சில பாலிமெட்டாலிக் பாறைகளை (மாங்கனீசு, கோபால்ட், நிக்கல் மற்றும் தாமிரம் நிறைந்த கடற்பரப்பில் காணப்படும் உருளைக்கிழங்கு வடிவ பாறைகள்) சேகரித்தது. இந்தியா, சீனா, ஜெர்மனி, தென் கொரியா ஆகிய நாடுகள் ஏற்கெனவே இந்தியப் பெருங்கடல் முகடு பகுதியில் பாலிமெட்டாலிக் சல்பைடுகளை ஆய்வு செய்ய உரிமம் பெற்றுள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய கடல் தொழில்நுட்ப நிறுவனம், மத்திய இந்தியப் பெருங்கடல் படுகையில் 5,270 மீட்டர் ஆழத்தில் அதன் சுரங்க சோதனைகளை நடத்தியது. அதில் சில பாலிமெட்டாலிக் பாறைகளை (மாங்கனீசு, கோபால்ட், நிக்கல் மற்றும் தாமிரம் நிறைந்த கடற்பரப்பில் காணப்படும் உருளைக்கிழங்கு வடிவ பாறைகள்) சேகரித்தது. இந்தியாவின் ஆழ்கடல் சுரங்கத் திட்டங்கள் தொடர்பான பிபிசியின் கேள்விகளுக்கு புவி அறிவியல் அமைச்சகம் எந்தப் பதிலும் அளிக்கவில்லை. "உச்சகட்டமாக இந்தியா தன்னை அதிகார மையமாக காட்டிக்கொள்ள நினைத்தாலும், தனது எல்லைகளைத் தாண்டி அது மேலோங்கி நிற்காமலும், அதேநேரம் ஆழ்கடல் என்று வரும்போது சீனாவைவிட பின்தங்கவில்லை என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தவும் முயலக்கூடும்," என்கிறார் ஜெர்மனியின் போட்ஸ்டாமில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் கடல் நிர்வாகத்தில் பணிபுரியும் பிரதீப் சிங். ஐ.எஸ்.ஏ உருவாகக் காரணமாக இருந்த ஐ.நா. கடல் சட்டத்தின் உடன்படிக்கைக்கு அமெரிக்கா ஒப்புதல் அளிக்காததால், சர்வதேச கடல் பகுதியில் நிலவும் சுரங்கப் போட்டியில் அந்நாடு பங்கேற்கவில்லை. அதற்குப் பதிலாக, அதன் உள்நாட்டு கடற்பரப்பில் இருந்து கனிமங்களைப் பெறுவதையும், அதன் கூட்டாளிகளால் சர்வதேச கடலில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டவற்றைச் செயலாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2030ஆம் ஆண்டிற்குள் தனது புதுப்பிக்கத்தக்க திறன்களை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா குறுகிய கால இலக்கைக் கொண்டுள்ளது ஆழ்கடல் ஆய்வுக்கான ஆதரவாளர்கள் இதுகுறித்துக் கூறுகையில், நிலத்தில் சுரங்கம் தோண்டுவது ஏறக்குறைய போதுமான அளவை எட்டியுள்ளது. இதன் விளைவாக குறைந்த தரமுள்ள உற்பத்தியே நடைபெறுகிறது. மேலும் பல கனிம வளப் பகுதிகள், மோதல் அல்லது சுற்றுச்சூழல் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளன என்று கூறுகின்றனர். ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், பூமியின் கடைசி எல்லையான ஆழமான கடற்பரப்பு பெரும்பாலும் ஆய்வு செய்யப்படாத மற்றும் மனிதர்களால் தீண்டப்படாத இடமாகவே உள்ளது. மேலும் தேவை எவ்வளவு தீவிரமானதாக இருந்தாலும், அங்கு சுரங்கங்களைத் தோண்டுவது மீண்டும் சரிசெய்ய முடியாத சேதத்தை ஏற்படுத்தக் கூடும் என்கின்றனர். இங்கிலாந்து , ஜெர்மனி, பிரேசில், கனடா உட்பட சுமார் இரண்டு டஜன் நாடுகள் ஆழ்கடல் சுரங்கப் பணிகளை நிறுத்த வேண்டும் அல்லது தற்காலிக இடைநிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோருகின்றன. தூய எரிசக்தி தொழில்நுட்பங்களுக்கான தேவையைப் பூர்த்தி செய்ய 2050ஆம் ஆண்டுக்குள் முக்கியமான கனிமங்களைப் பிரித்தெடுக்கும் பணியை ஐந்து மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று உலக வங்கி கணித்துள்ளது. 2030ஆம் ஆண்டிற்குள் தனது புதுப்பிக்கத்தக்க திறன்களை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க வேண்டும் என்று இந்தியா குறுகிய கால இலக்கைக் கொண்டுள்ளது. மேலும் 2070ஆம் ஆண்டிற்குள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைய வேண்டும் என்ற நீண்டகால இலக்குடன், அதன் ஆற்றல் தேவைகளில் 50% புதுப்பிக்கத் தக்கவற்றில் இருந்து பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளது. இந்தியா இந்த இலக்குகளை அடைய, ஆழ்கடலின் அடிப்பகுதி உட்பட அனைத்து சாத்தியமான மூலங்களில் இருந்தும் கிடைக்கும் முக்கியமான கனிமங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தற்போது, ஒரு சில நாடுகள் மட்டுமே நிலத்தில் இருந்து எடுக்கப்படும் முக்கியமான கனிமங்களின் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த வரிசையில் ஆஸ்திரேலியா முக்கியமான லித்தியம் உற்பத்தியாளராக உள்ளது. அதேநேரம் தாமிரம் வழங்குவதில் சிலி நாடு முதலிடத்தில் உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனா பல தசாப்தங்களாகவே தன்னுடைய செயலாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தி வந்துள்ளது. சீனா முக்கியமாக ஸ்மார்ட்போன்கள், கணினிகளில் பயன்படுத்தப்படும் கிராஃபைட் மற்றும் பூமியின் அரிய தனிமங்களை (rare earths) உற்பத்தி செய்கிறது. ஆனால், இந்த கனிமங்கள் விநியோகச் சங்கிலியில் நுழைவதற்கு முன்பு அவற்றைச் செயலாக்கம்(Processing) செய்வதில் நிலவும் சீனாவின் ஆதிக்கம் குறித்து புவிசார் அரசியல் கவலைகள் உள்ளன. சீனா பல தசாப்தங்களாகவே தன்னுடைய செயலாக்க தொழில்நுட்பங்கள் மற்றும் நிபுணத்துவத்தை மேம்படுத்தி வந்துள்ளது. சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் தகவல்படி, சீனா தங்களது தொழில்நுட்பம் மூலம் தற்போது 100% இயற்கையான கிராஃபைட் மற்றும் டிஸ்ப்ரோசியம், 70% கோபால்ட் மற்றும் கிட்டத்தட்ட 60% அனைத்து லித்தியம் மற்றும் மாங்கனீசு ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிறது, அதுமட்டுமின்றி பெய்ஜிங் அதன் சில செயலாக்க தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்துள்ளது. ஆகஸ்ட் 2023இல் முக்கியமான கனிமங்கள் மற்றும் தூய எரிசக்திக்கான உச்சி மாநாட்டில் பேசிய அமெரிக்க எரிசக்தி செயலாளர் ஜெனிபர் கிரான்ஹோம், "அரசியல் ஆதாயத்திற்காக சந்தை அதிகாரத்தை ஆயுதமாக்கத் தயாராக இருக்கும் ஒரு மேலாதிக்க விநியோகஸ்தருக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம்," என்று தெரிவித்தார். கடந்த 2022ஆம் ஆண்டில் சீனாவை எதிர்க்கவும், "பொறுப்பான மற்றும் முக்கியமான கனிம விநியோகச் சங்கிலிகளில் முதலீட்டை" ஊக்குவிப்பதற்காகவும், அமெரிக்காவும் பல மேற்கத்திய நாடுகளும் இணைந்து கனிம பாதுகாப்புக் கூட்டாண்மையைத் தொடங்கியுள்ளன. இதில் இந்தியாவும் தற்போது உறுப்பினராக உள்ளது. அதேபோல், ஆழ்கடல் சுரங்க தொழில்நுட்பத்தை உருவாக்க ரஷ்யாவுடனும் இந்தியாவும் ஒப்பந்தம் செய்துள்ளது. "அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் ஆற்றல் பறிமாற்றம் ஆகியவை முக்கியமான தாதுக்களைப் பிரித்தெடுக்க, செயலாக்க மற்றும் பயன்படுத்துவதற்கான தேவையை வேகப்படுத்துகின்றது" என்று பிகார்சிக் கூறுகிறார். https://www.bbc.com/tamil/articles/crg4kdvw89ro
-
சீனி, வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது. அதன்படி 12 பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் வாடிக்கையாளர்கள் இன்று முதல் புதிய விலையில் பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்றும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது. குறைக்கப்பட்ட பொருட்களின் விலைப்பட்டியல் பின்வருமாறு, பெரிய வெங்காயம் 100 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 550 ரூபா. சிவப்பு கௌபி 52 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 998 ரூபா. வெள்ளை கௌபி 50 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 1,100 ரூபா. பாஸ்மதி அரிசி 20 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 650 ரூபா. பெரிய வெங்காயம் 10 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 350 ரூபா. வெள்ளை சீனி 5 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 265 ரூபா. சிவப்பு சீனி 5 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 425 ரூபா. சோயா மீட் 5 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 595 ரூபா சிவப்பு அரிசி 2 ரூபா குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 168 ரூபா பண்டிகை காலத்தில் வழங்கப்படும் 4,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் தற்போது 3,480 ரூபாவுக்கு அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் கொள்வனவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்த பொருட்கள் பொதியில் நூடுல்ஸ் பக்கட், இடியப்ப மா, அப்பளம், வினாகிரி, கிரீம் கிரேக்கர் பிஸ்கட், சோயா மீட், 400 கிராம் பால்மா, தேயிலை தூள் பக்கட், டின் மீன், 2 கிலோகிராம் வெள்ளை அரிசி மற்றும் 500 கிராம் பருப்பு ஆகியன உள்ளடக்கப்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/296682
-
நாட்டில் வேகமாக பரவி வரும் தோல் நோய்!
நாட்டில் தற்போது டினியா (Tinea Infection) எனப்படும் தோல் நோய் வேகமாக பரவி வருவதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பெரியவர்கள் மற்றும் சிறுவர்கள் இடையே இந்த நோய் பரவி வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தோல் நோய் நிபுணர் வைத்தியர் ஜானக அகரவிட்ட தெரிவித்துள்ளார். தோலில் அரிப்பு ஏற்படுவதே இதன் பிரதான அறிகுறி. அதிக வியர்வை மற்றும் ஈரளிப்பான இடங்களில் இந்த நோய் வேகமாக பரவும். தொழில் செய்யும் இடங்களிலும் வீட்டில் உள்ளவர்களிடையேயும் ஒரே உடையை மாற்றி அணிபவர்களிடையேயும் இத்தொற்று வேகமாக பரவக்கூடும். இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த முறையான சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் எவைும் நோய் நிலைமை குறைவடையாத பட்சத்தில், வைத்தியசாலைக்கு சென்று, இதுவரை எடுத்துக்கொண்ட சிகிச்கைகளின் விபரங்களை வழங்கி சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளவது சிறந்தது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/296779
-
'பெரியாரைப் பாடும் டி.எம். கிருஷ்ணாவுக்கு சங்கீத கலாநிதி விருதா?’ - இசையுலகில் எதிர்ப்பு ஏன்?
பட மூலாதாரம்,TM KRISHNA/FACEBOOK படக்குறிப்பு, டி.எம். கிருஷ்ணா கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர். சென்னையில் கர்நாடக சங்கீதத்தின் மரியாதைக்குரிய அமைப்பாகத் திகழும் தி மியூசிக் அகாடமி, ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக இசையில் சிறந்த இசைக் கலைஞர்களைத் தேர்வுசெய்து பல்வேறு விருதுகளை வழங்கிவருகிறது. சங்கீத கலாநிதி, சங்கீத கலா ஆச்சார்யா, டிடிகே விருது, மியூசிகாலஜிஸ்ட் விருது, நிருத்ய கலாநிதி ஆகிய விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருது டி.எம். கிருஷ்ணாவுக்கும் சங்கீத கலா ஆச்சார்யா விருது பேராசிரியர் பரசால ரவி, கீதா ஆச்சார்யா ஆகியோருக்கும் டிடிகே விருது திருவையாறு சகோதரர்கள், ஹெச்.கே. நரசிம்மமூர்த்திக்கும் மியூசிகாலஜிஸ்ட் விருது டாக்டர் மார்க்ரெட் பாஸினுக்கும் நிருத்ய கலாநிதி விருது டாக்டர் நீனா பிரசாதுக்கும் வழங்கப்படுவதாக மார்ச் 17ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. ஆனால், சங்கீத கலாநிதி விருதை டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கியதை பல கர்நாடக இசைக் கலைஞர்கள் ரசிக்கவில்லை. வயலின் மற்றும் வாய்ப்பாட்டு கலைஞர்களான ரஞ்சனியும் காயத்ரியும் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதைக் கடுமையாக எதிர்த்தனர். இது தொடர்பாக, தி மியூசிக் அகாடமிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினர். அந்தக் கடிதத்தை புதன்கிழமையன்று ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர். பட மூலாதாரம்,RANJANI-GAYATRI/FACEBOOK படக்குறிப்பு, ரஞ்சனி-காயத்ரி எதிர்ப்புக்கான காரணம் அந்தக் கடிதத்தில், 2024ஆம் ஆண்டின் மியூசிக் அகாடமியின் மாநாட்டில் இருந்து விலகிக் கொள்வதாகவும் டிசம்பர் 25ஆம் தேதி நடத்த வேண்டிய தங்களுடைய இசை நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என்றும் தெரிவித்திருந்தனர். மேலும், "இந்த மாநாட்டிற்கு டி.எம். கிருஷ்ணா தலைமை தாங்குவார் என்பதால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம். கர்நாடக இசை உலகிற்கு அவர் மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த சமூகத்தின் உணர்வுகளை அவர் வேண்டுமென்றேயும் மகிழ்ச்சியுடனும் புண்படுத்தியிருக்கிறார். தியாகராஜர், எம்.எஸ். சுப்புலட்சுமி போன்ற மதிப்பிற்குரிய அடையாளங்களை அவமதித்திருக்கிறார். கர்நாடக இசைக் கலைஞராக இருப்பது அவமானத்திற்குரிய விஷயம் என்பதைப் போன்ற உணர்வை இவரது நடவடிக்கைகள் ஏற்படுத்தியிருக்கின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர். இது தவிர, டி.எம். கிருஷ்ணா பெரியாரைப் புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் விட முடியாது என்றும் கூறியிருந்தனர். "பிராமணர்களை இனப் படுகொலை செய்ய வேண்டுமென வெளிப்படையாக பேசிய, இந்த சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு பெண்ணையும் இழிவுபடுத்திய, சமூகத்தில் மோசமான மொழியைப் பயன்படுத்துவதை சாதாரண விஷயமாக்கிய ஈ.வெ.ரா என்ற பெரியாரை டி.எம். கிருஷ்ணா புகழ்ந்துவருவதை கண்டுகொள்ளாமல் இருப்பது அபாயகரமானது. கலை, கலைஞர்கள், வாக்கேயகாரர்கள், ரசிகர்கள், அமைப்புகள், நம்முடைய வேர், கலாச்சாரம் ஆகியவற்றை மதிக்கும் ஒரு அமைப்பை நாங்கள் நம்புகிறோம். இவற்றையெல்லாம் புதைத்துவிட்டு, இந்த ஆண்டு மாநாட்டில் இணைவது, ஒரு தார்மீக மீறலாக அமைந்துவிடும்" எனக் குறிப்பிட்டனர். பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER படக்குறிப்பு, சித்ரவீணா ரவிகிரண் மியூசிக் அகாடமியை புறக்கணிக்கும் கர்நாடக இசை உலகம் இது கர்நாடக இசை உலகிலும் இசை உலகைக் கவனிப்பவர்களிடமும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. அடுத்தடுத்து பல கலைஞர்கள் டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். 2017ஆம் ஆண்டில் சங்கீத கலாநிதி விருதைப் பெற்ற சித்ரவீணா ரவிகிரண் அந்த விருதையும் விருதுத் தொகையும் திருப்பி அளிக்கப்போவதாகத் தெரிவித்தார். தவறான தகவல்களின் அடிப்படையில் இசை உலகை பிளவுபடுத்தியதாக டி.எம். கிருஷ்ணா மீது அவர் தனது கடிதத்தில் குற்றம்சாட்டியிருந்தார். பட மூலாதாரம்,CHITRAVINA RAVIKIRAN/TWITTER படக்குறிப்பு, சித்ரவீணா ரவிகிரணின் பதிவு வாய்ப்பாட்டுக் கலைஞர்களான திருச்சூர் சகோதரர்களும் இந்த ஆண்டு தி மியூசிக் அகாடமியின் விழாவில் பங்கேற்கப்போவதில்லை என அறிவித்தனர். பட மூலாதாரம்,TRICHUR BROTHERS/TWITTER படக்குறிப்பு, திருச்சூர் சகோதரர்களின் கடிதம் ஹரிகதா சொல்பவரான துஷ்யந்த் ஸ்ரீதரும் மியூசிக் அகாடமியின் இந்த ஆண்டு நிகழ்விலிருந்து விலகிக் கொள்வதாக அறிவித்தார். மியூசிக் அகாடமி விளக்கம் இந்த நிலையில், ரஞ்சனி - காயத்ரியின் கடிதத்திற்கு தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி பதிலளித்தார். அந்தக் கடிதத்தில், அவர்களது கடிதம் கிட்டத்தட்ட அவதூறு என்று சொல்லத்தக்க வகையில் இருந்ததாகவும் மூத்த, சக இசைக் கலைஞர் மீது மிக மோசமான தாக்குதலை நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. "தி மியூசிக் அகாடமியால் 1942ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டுவரும் சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசையின் மிக உயரிய விருது. ஒவ்வொரு ஆண்டும் யாருக்கு விருதை வழங்க வேண்டும் என முடிவுசெய்வது மியூசிக் அகாடமியின் முற்றுரிமை. இசைத் துறையில் குறிப்பிட்ட காலத்திற்கு, தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக செயல்பட்ட கலைஞர்களே மிகக் கவனத்துடன் இந்த விருதுக்கு தேர்வுசெய்யப்படுகிறார்கள். மியூசிக் அகாடமியின் நிர்வாகக் குழு இந்த ஆண்டு இந்த விருதுக்கு டி.எம். கிருஷ்ணாவைத் தேர்வுசெய்தது. நீண்ட காலமாக இசையுலகில் மிகச் சிறப்பாக செயல்பட்டவர் என்பது கவனத்தில் கொள்ளப்பட்டதே தவிர, வேறு புறக் காரணிகள் எங்கள் தேர்வின் மீது தாக்கம் செலுத்தவில்லை. உங்களுக்குப் பிடிக்காத இசைக் கலைஞர் ஒருவருக்கு விருது அளிக்கப்படுகிறது என்பதால், இந்த ஆண்டு விழாவிலிருந்து விலகிக்கொள்ள முடிவெடுத்திருப்பதும் மோசமாக விமர்சிப்பதும் கலைஞர்களுக்கு உரிய பண்பல்ல. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட கடிதத்தை நீங்கள் சமூக வலைதளத்தில் பகிர்ந்திருக்கிறீர்கள். இது மரியாதைக் குறைவானது என்பதோடு உங்கள் கடிதத்தின் நோக்கம் குறித்த சந்தேகத்தையும் எழுப்புகிறது. எனக்கும் அகாடமிக்கும் எழுதப்பட்ட இதுபோன்ற கடிதத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட பிறகு, அதற்கு பதில் அளிப்பது தேவையில்லைதான். ஆனால், கர்நாடக இசை உலகிற்கு உங்களுடைய பங்களிப்பை மனதில்கொண்டு, இந்த மரியாதையை மறுக்க நான் விரும்பவில்லை" என்று குறிப்பிட்டிருக்கிறார். பட மூலாதாரம்,MADRASMUSICACADEMY/INSTAGRAM படக்குறிப்பு, தி மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளியின் கடிதம் யார் இந்த டி.எம். கிருஷ்ணா? டி.எம். கிருஷ்ணாவுக்கு விருது வழங்கப்பட்டதற்கு இசைக் கலைஞர்களின் எதிர்ப்பு, அதற்கு தி மியூசிக் அகாடமியின் பதில் என சலசலப்பு எழுந்திருக்கும் நிலையில், புயலின் மையப் புள்ளியான டி.எம். கிருஷ்ணா, விருதுக்கு நன்றி தெரிவித்ததோடு வேறு எந்தக் கருத்தையும் தெரிவிக்கவிரும்பவில்லை. சென்னையில் இசை பாரம்பரியமுடைய ஒரு குடும்பத்தில் பிறந்த டி.எம்.கிருஷ்ணா, சீதாராம ஷர்மா, செங்கல்பட்டு ரங்கநாதன், செம்மங்குடி ஸ்ரீநிவாஸ ஐயர் ஆகியோரிடம் சாஸ்த்ரீய சங்கீதத்தைப் பயின்றவர். மிகப் பெரிய கலைஞர்களிடம் பயின்றிருந்தாலும், தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டவர். "கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை உடைத்து, அந்த இசையை எல்லாத் தரப்பினருக்கும் கொண்டுசெல்ல வெண்டும்" என்பது குறித்துத் தொடர்ந்து பேசிவந்தார் டி.எம். கிருஷ்ணா. இதற்காக செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமனுடன் சேர்ந்து சென்னை ஊரூர் ஆல்காட் குப்பத்தில் சாஸ்த்ரீய இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். அதேபோல சமூக சீர்திருத்தவாதியான நாராயண குருவின் பாடல்களை கர்நாடக இசையில் பாடியிருக்கிறார். மேலும், எழுத்தாளர் பெருமாள் முருகனின் பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடினார் டி.எம். கிருஷ்ணா. வைக்கம் நிகழ்வின் நூற்றாண்டை ஒட்டி, பெரியார் குறித்து பெருமாள் முருகன் எழுதிய "சிந்திக்கச் சொன்னவர் பெரியார்" என்ற ஒரு பாடலையும் டி.எம். கிருஷ்ணா பாடியிருந்தார். பெரியார் குறித்த டி.எம். கிருஷ்ணாவின் இந்த பார்வையே பல கலைஞர்களை ஆத்திரப்படுத்தியிருப்பது அவர்களது குறிப்புகளில் இருந்து தெரிகிறது. மியூசிக் அகாடமி மீதான சர்ச்சை "டி.எம். கிருஷ்ணாவுக்கு கர்நாடக சங்கீத கலைஞர் என்ற அடிப்படையில் சங்கீத கலாநிதி விருது அளிக்கப்பட்டது. இது இசை சார்ந்த விருது. இதில் அவரது அரசியல் கருத்து தொடர்பான விஷயத்தைக் கொண்டுவர வேண்டிய அவசியமே கிடையாது. அவர் எந்த அரசியல் தலைவரை விரும்புகிறார் என்பதை பார்க்க வேண்டியதே இல்லை. இது அவர்களது அறியாமையைத்தான் காட்டுகிறது. டி.எம். கிருஷ்ணா பெரியார் மட்டுமல்ல, அம்பேத்கரையும் பாடியிருக்கிறார். தேவையில்லாத ஒரு சர்ச்சையை ஏற்படுத்த நினைத்து இப்படிச் செய்கிறார்கள்" என்கிறார் பெருமாள் முருகன். தி மியூசிக் அகாடமி இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. கர்நாடக இசையுலகின் மிக உயரிய அமைப்பாக விளங்கும் தி மியூசிக் அகாடமியின் துவக்கம் 1927வாக்கில் அமைந்தது. அந்த ஆண்டு சென்னையில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டை ஒட்டி வரிசையாக சில இசைக் கச்சேரிகள் நடத்தப்பட்டன. அதற்கு நல்ல வரவேற்பும் கவனிப்பும் இருந்த நிலையில், அதேபோல ஒவ்வொரு ஆண்டும் நிகழ்ச்சிகளை நடத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி 1929ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இசை தொடர்பான ஆய்வரங்குகளும் கச்சேரிகளும் நடந்து வருகின்றன. ஆனால், துவக்கப்பட்டதில் இருந்தே, கர்நாடக இசை உலகில் உயர்சாதியினரின் ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வருவதாக விமர்சனமும் இந்த அமைப்பின் மீது இருந்து வருகிறது. இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமி எடுத்துள்ள நிலைப்பாடு இசை உலகில் சிலரது எதிர்ப்பைச் சந்தித்தாலும் சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பட மூலாதாரம்,NITYLISTS/INSTAGRAM படக்குறிப்பு, நித்யானந்த் ஜெயராமன் "தனி மனிதர்களின் நிலைப்பாடே முக்கியம்" "இந்த விவகாரத்தில் நான் மிக முக்கியமானதாகப் பார்ப்பது தனி மனிதர்கள் இதில் என்ன நிலைப்பாட்டை எடுக்கிறார்கள் என்பதல்ல. மாறாக, மேட்டுக்குடி அடையாளத்தைப் பெற்ற ஒரு அமைப்பு மிகத் துணிச்சலான முடிவை எடுத்திருப்பதுதான் கவனிக்க வைக்கிறது. இந்த முடிவினால் வரக்கூடிய விளைவை எதிர்கொள்ள அவர்கள் தயாராக இருக்கிறார்கள். டி.எம். கிருஷ்ணாவின் சாதனைகள் ஒரு புறம் இருந்தாலும், தி மியூசிக் அகாடமி இதுபோன்ற ஒரு நிலைப்பாட்டை எடுத்திருப்பது மிக முக்கியமானது" என்கிறார் செயற்பாட்டாளர் நித்யானந்த் ஜெயராமன். 2014ஆம் ஆண்டு முதல் டி.எம். கிருஷ்ணாவும் நித்யானந்த் ஜெயராமனும் வேறு சிலருடன் இணைந்து ஊரூர் ஆல்காட் குப்பம் இசை விழாவை நடத்திவருகின்னர். இதுவரை ஐந்து முறை இந்த விழா நடைபெற்றிருக்கிறது. "கர்நாடக இசை ஒரு தரப்பினரிடம் மட்டும் கேட்கப்படுவதைத் தாண்டி, வேறு காதுகளுக்கும் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இந்த விழா துவங்கப்பட்டது. அவர்களுடைய குரல்கள், இந்த கலையை, இசையை வலுப்படுத்தும் என நம்பினார் டி.எம். கிருஷ்ணா. அப்போதுதான் சாதாரண மக்களுக்கும் என்னைப் போன்ற கர்நாடக இசையே தெரியாதவர்களுக்கும் அதனை ரசிக்கும் வாய்ப்புக் கிடைத்தது" என்கிறார் அவர். டி.எம். கிருஷ்ணா கர்நாடக இசை உலகின் புகழைச் சிதைத்துவிட்டதாகச் சொல்வதை ஏற்க முடியாது என்கிறார் அவர். "ஊரூர் ஆல்காட் குப்பம் மேடையில் அவர் பாடும்போது கிடைக்கும் வரவேற்பை அங்கே வந்து பார்க்க வேண்டும். கிருஷ்ணாவின் முயற்சியால், கர்நாடக இசையை ரசிப்பவர்களின் எண்ணிக்கை மிகப் பெரியதாகியிருக்கிறது" என்கிறார் நித்யானந்த். படக்குறிப்பு, எழுத்தாளர் பெருமாள் முருகன் ”மீடூ-வின் போது ஏன் எதிர்ப்பு இல்லை?” பெரியார் பிராமணர்களை மோசமாகச் சித்தரித்தார் என்றும் அதனால் அவரை ஏற்கும் டி.எம்.கிருஷ்ணாவுக்கு விருது வழங்கக்கூடாது என்று சொல்வது சரியல்ல என்கிறார் பெருமாள் முருகன். "இந்த இசை பிராமணர்களுக்கு மட்டும் சொந்தமான இசையல்ல. எம்.எம். தண்டபாணி தேசிகரைப் போல, மதுரை சோமுவைப் போல பிராமணரல்லாத இசைக் கலைஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்கள். கர்நாடக இசை ஏதோ தங்களுடைய சொத்து என கருதி இப்படிச் சொல்வது மிகத் தவறானது" என்கிறார் பெருமாள் முருகன். 2024ஆம் ஆண்டு கர்நாடக இசை விழாவில் இருந்து பல இசைக் கலைஞர்கள் பின்வாங்குவது, விருதுகளைத் திருப்பி அளிப்பது அந்த அமைப்பிற்கு பின்னடைவாக இருக்குமா? "நிச்சயமாக இருக்காது. தங்கள் மீது 'Metoo' குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டபோது விருதைத் திரும்பத் தராதவர்கள், இப்போது அந்த முடிவை எடுக்கிறார்கள். ஆனால், அவர்கள் இப்போதாவது அந்த முடிவை எடுக்கிறார்களே என சந்தோஷப்பட வேண்டியதுதான். மியூசிக் அகாடமியின் நிலைப்பாட்டால் அதற்கான வரவேற்பு அதிகரிக்கும். ரசிகர்களின் பன்முகத் தன்மையும் மேம்படும்" என்கிறார் நித்யானந்த் ஜெயராமன். இந்த விவகாரத்தில் தி மியூசிக் அகாடமியின் உறுப்பினர்கள் பலர், அகாடமியின் அதிகாரபூர்வ கருத்தைத் தாண்டி எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. https://www.bbc.com/tamil/articles/c2v98z8xgx1o
-
இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்தும் ஆதரவளிக்கும்
வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்பும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவைப் பெற்றுக் கொடுப்பதாக ஜப்பானிய தூதுவர் மிசுகோஷி ஹிடேயாகி (MIZUKOSHI Hideaki) தெரிவித்தார். “ஜப்பானிடம் இருந்து இலங்கை கற்க வேண்டிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் நவீனமயமாக்கல் பாடங்கள்” என்ற தலைப்பில் “Geopolitical Cartographer” சர்வதேச ஆராய்ச்சி அமைப்பினால் ஜனாதிபதி தலைமையில் நேற்று (21) கொழும்பு கிரான்பெல் ஹோட்டலில் நடைபெற்ற கலந்துரையாடலிலேயே ஜப்பானிய தூதுவர் இதனைக் குறிப்பிட்டார். “ஜப்பானின் நவீனமயமாக்கல் மூலம் இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் நிர்வாகத்திற்கு கற்க வேண்டிய பாடங்கள்” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றிய தூதுவர், ஜப்பானின் வரலாற்றில் கடந்து வந்த சவால்களுக்கு ஈடுகொடுத்து, நவீன மாற்றங்களுக்கு ஏற்றவாறு விரைவான வளர்ச்சியை நோக்கி நகர்ந்த அனுபவங்களை இதன்போது விவரித்தார். “Geopolitic Cartographer” என்பது இந்து சமுத்திரத்தை மையமாகக் கொண்ட ஒரு சர்வதேச ஆராய்ச்சி அமைப்பாகும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அதன் நிறுவனர் ஆவார். உலக அரசியல் ஒழுங்கை மறுவடிவமைக்கும் இந்து சமுத்திரம், பசுபிக் கடல் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிராந்தியங்களில் புவிசார் அரசியல், புவிசார் பொருளாதார மற்றும் கடல்சார் வளர்ச்சிகள் பற்றிய ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுகளை ஆய்வு செய்தல், மேம்படுத்துவதே “Geopolitical Cartographer” அமைபின் நோக்கமாகும். இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஜப்பான் சர்வதேச அளவில் எதிர்கொள்ள வேண்டியிருந்த சவாலான சூழ்நிலையை தூதுவர் தனது உரையில் நினைவு கூர்ந்தார். உலகமே ஜப்பானுக்கு எதிராக நின்றபோது, மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்த்தனவின் கூற்று காரணமாக, போருக்குப் பின்னரான காலப்பகுதியில் ஜப்பான் மீண்டும் சர்வதேச சமூகத்துடன் இணைவதற்கு வழியமைத்ததையும் தூதுவர் நன்றியுடன் நினைவு கூர்ந்தார். இந்த சந்தர்ப்பத்தை ஜப்பான் அந்நாட்டின் முன்னேற்றம் மற்றும் மீள் கட்டமைப்புக்காக பயன்படுத்திக் கொண்டதெனவும் கூறினார். அன்று தொடக்கம் இன்று வரையில் ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையில் நட்புறவு காணப்படுவதோடு, அந்த நட்புறவை இருநாட்டு தலைவர்களும் மேலும் வலுவாக முன்னெடுத்துச் செல்வதாகவும் ஜப்பான் தூதுவர் சுட்டிக்காட்டினார். சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்திற்கு அமைய பொருளாதார சீர்திருத்தங்களுக்காக அர்பணிப்புடன் செயற்பட்டுவரும் இலங்கை, ஜப்பானை முன்மாதிரியாக கொண்டு நாட்டில் சாதகமான முன்னேற்றத்தை ஏற்படுத்த முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜப்பானை போன்று போட்டித் தன்மை மிக்க தொழில்துறையை கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய தூதுவர், போட்டித் தன்மை நிறைந்த ஏற்றுமதி கைத்தொழில்களை உருவாக்குவதற்காக தொழில் கொள்கைகளை தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும், அதன் கீழ் நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைந்துகொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் ஊழல் தடுப்பு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்த மிசுகோஷி ஹிடேயாகி, அந்த முயற்சிகளுக்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவளிக்கும் என்றும் குறிப்பிட்டார். இலங்கையின் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவை வலுப்படுத்த ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் வேலைத் திட்டத்தின் கீழ் ஜப்பான் உதவிகளை வழங்கும் என்றும், இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் உட்பட பல்வேறு முயற்சிகளுக்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) உள்ளிட்ட நிறுவனங்களின் ஊடாக ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்காக ஜப்பானின் முதலீடுகளை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/296768