Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஐந்தே ஆண்டுகளில் அதிவேக வளர்ச்சி - ரூ.966 கோடி கட்சி நிதி அளித்த 'மேகா இன்ஜினியரிங்' நிறுவனத்தின் பின்னணி என்ன? பட மூலாதாரம்,PPREDDYOFFICIAL/INSTA படக்குறிப்பு, பாமிரெட்டி பிச்சிரெட்டி, மேகாவின் நிறுவனர் மற்றும் செயல் தலைவர். கட்டுரை தகவல் எழுதியவர், பல்லா சதீஷ் பதவி, பிபிசி செய்தித் தொடர்பாளர் 16 மார்ச் 2024 தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்தல் பத்திர விவரங்கள் குறித்து நாடு முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிகளுக்கு அதிக நன்கொடை அளித்த கட்சிகளின் பட்டியலில், ஹைதராபாத்தில் உள்ள மேகா இன்ஜினியரிங் நிறுவனம் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனம் அரசியல் கட்சிகளுக்கு ரூபாய் 966 கோடி நன்கொடை அளித்துள்ளது. சிறிய நிறுவனமாக ஹைதராபாத்தில் தொடங்கப்பட்ட மேகா இன்ஜினியரிங் இவ்வளவு பெரிய தொகையை அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கும் பெரிய நிறுவனமாக மாறியது எப்படி? இந்த நிறுவனத்திற்கு தொடர்ந்து அரசு ஒப்பந்தப் பணிகள் கிடைப்பது எப்படி? மேகா இன்ஜினியரிங் நிறுவனத்தின் பின்னணி என்ன? ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனம், சிறு ஒப்பந்ததாரர் என்ற நிலையில் இருந்து படிப்படியாக வளர்ந்து இப்போது அரசு ஒப்பந்தப் பணிகளையே பிரதானமாக செய்து வருகிறது. தெலுங்கானாவில் உள்ள காலேஸ்வரம் லிப்ட் பாசன திட்டத்தின் பெரும்பாலான பகுதி இந்த நிறுவனத்தால் கட்டப்பட்டது. சுமார் 14,000 கோடி ரூபாய் மதிப்பிலான மகாராஷ்டிராவின் தானே-போரிவலி இரட்டை சுரங்கப்பாதை திட்டமும் இந்த நிறுவனத்தின் கைகளில் உள்ளது. நீர்ப் பாசனம், போக்குவரத்து, மின்சாரம் என பல துறைகளில் இந்த நிறுவனம் வணிகம் செய்து வருகிறது. சுமார் 15 மாநிலங்களில் தாங்கள் செயல்படுவதாகக் இந்நிறுவனம் கூறுகிறது. ஓலெக்ட்ரா (Olectra) மின்சார பேருந்துகளின் உற்பத்தியாளர்களும் இவர்கள் தான். தர வரிசைகளை வெளியிடும் பர்கண்டி பிரைவேட் ஹுருன் இந்தியா (The Burgundy Private Hurun India) என்ற அமைப்பின் அறிக்கையின்படி, இந்தியாவின் முதல் 10 மதிப்புமிக்க (பங்குசந்தையில் பட்டியலிடப்படாத) நிறுவனங்களில் மேகா இன்ஜினியரிங் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. அந்நிய முதலீடு இல்லாத பூட் ஸ்ட்ராப் செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலில் இது நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது. பட மூலாதாரம்,MEGHA ENGINEERING AND INFRASTRUCTURES LTD/FACEBOOK படக்குறிப்பு, அரசு ஒப்பந்தப் பணிகளையே பிரதானமாக செய்து வருகிறது மேகா இன்ஜினியரிங் நிறுவனம். நாடு முழுவதும் செயல்படும் நிறுவனம் ஆந்திரப் பிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில், விவசாய குடும்பத்தில் இருந்து வந்த பாமிரெட்டி பிச்சி ரெட்டி, 1989இல் இந்த நிறுவனத்தை தொடங்கினார். பிச்சி ரெட்டியின் உறவினர் புரிதிபதி வெங்கட கிருஷ்ணா ரெட்டி, இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். பத்துக்கும் குறைவான ஊழியர்களுடன் துவங்கப்பட்ட நிறுவனம், கடந்த ஐந்தாண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து, கணிசமாக விரிவடைந்துள்ளது. மேகா இன்ஜினியரிங் எண்டர்பிரைசஸ் என ஆரம்பிக்கப்பட்டு, 2006இல் மேகா இன்ஜினியரிங் மற்றும் உள்கட்டமைப்பு நிறுவனமாக மாறியது. 2019இல் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனைகள் மேகாவின் நிறுவனம் ஹைதராபாத்தில் உள்ள பாலாநகரில் தனது முதல் அலுவலகத்தைத் திறந்தது. தொடக்கத்தில் பைப் லைன் அமைக்கும் பணிகளை அதிகளவில் செய்து வந்தது. 2014க்குப் பிறகு இந்நிறுவனத்தின் போக்கு மாறியது. தெலுங்கானா உருவான பிறகு, பெரிய அளவிலான நீர்ப்பாசனத் திட்டங்கள் இந்த நிறுவனத்திற்கு கிடைத்தன. மெல்லமெல்ல ஆந்திரா, தெலுங்கானா மட்டுமின்றி வட இந்தியாவிலும் பல திட்டங்களை கையிலெடுத்தது. இப்போது இந்த நிறுவனம் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களைக் கடந்து நாடு முழுவதும் விரிவடைந்துள்ளது. ஒரு கட்டத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவராக அறியப்பட்டார் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா ரெட்டி. இப்போது அவர் பாஜகவுக்கும் மிகவும் நெருக்கமானவராக இருக்கிறார். அக்டோபர் 2019இல், மேகா குழும நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது. அமலாக்கத்துறையும் விசாரித்தது. ஹைதராபாத் உட்பட நாடு முழுவதும் உள்ள அந்நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு இடங்களில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. நிதியளித்த நிறுவனங்கள் எவை? தேர்தல் பாத்திரங்கள் மூலமாக மேகா நிறுவனம் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை கொடுத்துள்ளது என்ற விவரம் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. மேகா நிறுவனத்திற்கு அடுத்ததாக தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் 80 கோடியும், என்சிசி நிறுவனம் 60 கோடியும் நாட்கோ பார்மா 57 கோடியும் டிவிஸ் லேப்ஸ் 55 கோடியும் ராம்கோ சிமெண்ட்ஸ் 54 கோடியும் நன்கொடையாக வழங்கியுள்ளன. இது தவிர, சுமார் 30 தெலுங்கு நிறுவனங்களும், தெலுங்கு மாநிலங்களைச் சேர்ந்த 100,000க்கும் மேற்பட்ட தனிநபர்களும் இந்த தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதியளித்துள்ளனர். இந்த பட்டியலில் சிமென்ட் நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் உள்ளன. கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கும் பாரத் பயோடெக் போன்ற நிறுவனங்களும் இதில் அடக்கம். இவற்றில் பெரும்பாலானவை ஹைதராபாத்தில் உள்ளன. பட மூலாதாரம்,TELANGANACMO படக்குறிப்பு, அதிக நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பாரத் இராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) நான்காவது இடத்தில் உள்ளது. அதிக நிதி பெற்ற கட்சிகள் எவை? நாடு முழுவதும் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நன்கொடைகளைப் பெற்ற கட்சியாக பாஜக உள்ளது. மொத்தம் ரூபாய் 6 ஆயிரம் கோடியை பாஜக பெற்றுள்ளது. இது மொத்த தேர்தல் பத்திர நிதியில் கிட்டத்தட்ட பாதியாகும். பாஜகவைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் ரூபாய் 1,600 கோடியும், காங்கிரஸ் கட்சி ரூபாய் 1,400 கோடியும் பெற்றுள்ளன. அதிக நிதி பெற்ற கட்சிகளின் பட்டியலில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் பாரத் இராட்டிர சமிதி (பிஆர்எஸ்) நாட்டிலேயே நான்காவது இடத்தில் உள்ளது. பிஆர்எஸ் கட்சிக்குப் பிறகு, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஏழாவது இடத்தில் 337 கோடி நிதியையும், 8வது இடத்தில் உள்ள தெலுங்கு தேசம் 219 கோடி நிதியையும், 15வது இடத்தில் உள்ள ஜன சேனா 21 கோடி நிதியையும் நன்கொடையாகப் பெற்றுள்ளது. ஆனால், தேர்தல் குழுவிற்கு எஸ்பிஐ வங்கி வழங்கிய தகவல்கள் முழுமையானதாக இல்லை. யார், எந்த நாளில் எவ்வளவு நிதியை டெபாசிட் செய்தார்கள்? யார், எந்த நாளில் எவ்வளவு நிதியைப் பெற்றார்கள்? போன்ற தகவல்கள் இல்லை. அசல் பட்டியல் கொடுக்கப்பட்டதால், நூற்றுக்கணக்கான பக்கங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பத்திகள் தகவல்கள் உள்ளன. பணம் கொடுப்பவர்கள், பெறுபவர்கள் என இரு பட்டியல்கள். அவர்களை எவ்வாறு இணைக்க வேண்டும் என்ற கேள்வி உள்ளது. நிறுவனங்கள் நன்கொடைகள் வழங்கிய தேதிகளை வைத்து, தொடர்ந்து அந்த நிறுவனங்கள் பெற்ற லாபம் என்ன அல்லது அதற்கு முன்பாக அந்த நிறுவனங்கள் சந்தித்த வழக்குகள் எவை என்பதை ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் பரபரப்பான விவாதங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தத் தரவுகள் துல்லியமாகவும் தெளிவாகவும் ஒருங்கிணைக்கப்படும் வரை, யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்பது புதிராகவே இருக்கும். இந்த விவகாரத்தில் சிபிஎம் கட்சி மட்டுமே தேர்தல் பத்திரங்களை நிராகரித்தது. நாங்கள் தேர்தல் பத்திரங்களை தீவிரமாக எதிர்க்கிறோம் என்று கூறிய அக்கட்சி, அதன் மூலமாக இதுவரை ஒரு ரூபாயைக் கூட பெறவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES பத்திரங்களின் வரிசை எண் இல்லாததால் சிக்கல் ஸ்டேட் வங்கி வழங்கிய தகவல்களில் நன்கொடை வழங்குபவரின் பெயரைத் தவிர பத்திரங்களின் வரிசை எண் இல்லை. பத்திரம் வாங்கிய நிறுவனங்களின் பட்டியலில் எந்த நாளில் எவ்வளவு பத்திரங்கள் வாங்கப்பட்டது என்பது உள்ளது. அதேபோல் இரண்டாவது பட்டியலிலும் பத்திர வரிசை எண் குறிப்பிடப்படவில்லை. இந்த இரண்டு பட்டியலிலும் பத்திர வரிசை எண்கள் கொடுக்கப்பட்டிருந்தால், எந்தெந்த கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடை அளித்தார்கள் என்பதை, பத்திர வரிசை எண்களின் அடிப்படையில் தெரிந்து கொள்ள முடிந்திருக்கும். பத்திர வரிசை எண்களை பொருத்தும் பணியை முடிக்க நீண்ட காலம் எடுக்கும் என எஸ்பிஐ வங்கி நீதிமன்றத்தில் தெரிவித்தது. அந்த வரிசை எண்களை எஸ்பிஐ வங்கி கொடுத்திருந்தால், ஊடகங்களும், தொண்டு நிறுவனங்களும், ஆர்வமுள்ள தரப்பினரும் அவற்றைப் பொருத்திப் பார்த்து, எந்தக் கட்சி யாரிடம் நன்கொடை பெற்றது என்பதைக் எளிதாகக் கண்டுபிடித்திருக்கலாம். https://www.bbc.com/tamil/articles/c4nl0qgn6w8o
  2. 17 MAR, 2024 | 01:10 PM முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவி விலகல் தவறானது என அவரது முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனை கூறியுள்ளார். அரச எதிர்ப்புப் போராட்டங்களின்போது புலனாய்வுப் பிரிவினர் தமது கடமைகளை சரியாக செய்யவில்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால், ஒட்டுமொத்த பாதுகாப்புத்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அவர் வலியுறுத்தினார். முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட மிக நெருக்கமான அதிகாரிகள் பலர் தமது பொறுப்புக்களை புறக்கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் திகதி மிரிஹானவில் உள்ள கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டபோது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டாபய வீட்டில் இருந்தார். இதன்போது அவர்கள் இருவருக்கும் இடையில் தனிப்பட்ட கலந்துரையாடல் இடம்பெற்றது. வீட்டினருகே போராட்டம் நடத்த சுமார் 150 பேர் வருவார்கள் என உளவுத்துறையினர் தகவல் வழங்கியிருந்தனர். ஆனால், அங்கு வந்தவர்களின் எண்ணிக்கை 2,500 பேருக்கு மேல் இருக்கும். பேராட்டக்காரர்களை கட்டுப்படுத்த கலவரத் தடுப்புப் பிரிவினரை அழைப்பதிலும் தாமதம் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்களை வெளியேற்றுவதற்கு பாதுகாப்புப் படையினர் அரை மணித்தியாலம் தாமதித்திருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவைக் கொல்ல திட்டமிட்டிருப்பார்கள் என்று அவர் வெளிப்படுத்தினார். முஸ்லிம் சமூகத்தினரே இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை தாங்கியதாகவும் கோட்டாபய ராஜபக்ஷவை பதவியில் இருந்து நீக்கியதன் பின்னணியில் கத்தோலிக்க திருச்சபை, முஸ்லிம் சமூகம் மற்றும் புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் இருப்பதாகவும், சிங்கள பௌத்த சக்திகள் அவர்களில் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178937
  3. வாசிப்புப் பழக்கமே அருகி வருகிறது. குறிப்பாக பத்திரிகை, புத்தகங்கள் வாசிப்பது இளையோரிடம் குறைந்துவிட்டது.
  4. பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 கட்டுரை தகவல் எழுதியவர், லுக்ரேசியா லோசா பதவி, பிபிசி செய்தியாளர் 16 மார்ச் 2024 செயற்கையாக கட்டப்பட்ட அணைகள் நீண்ட காலமாக ஐரோப்பாவின் நீர்வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன. இந்த பழைய அணைகள் காலப்போக்கில் பலவீனமடைந்து, தகர்க்கப்படும் போது, ஆறுகள் தாங்கள் இழந்த வழித்தடங்களை அணைத்துக் கொள்கின்றன. ஆறுகளின் வழித்தடங்களை மீட்கும் திட்டங்கள் தற்போது ஐரோப்பாவில் அதிகரித்து வருகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, பின்லாந்தில் உள்ள ஹிடோலான்ஜோகி ஆற்றில் உள்ள அணைகளை கட்டுமானத் தொழிலாளர்கள் இடிக்கத் தொடங்கியபோது, சால்மன் மீன்கள் நீரில் செல்வதைக் கண்டு ஆச்சரியப்பட்டனர். அழிந்துவிட்டதாக நம்பப்பட்ட சால்மன் மீன்கள் பல வருடங்களுக்கு பிறகு ஆற்றில் காணப்பட்டன. சுற்றுச்சூழல் மேம்படுவதற்கான ஒரு அறிகுறியாக இதைப் பார்க்கிறார் பாலினா லூஹி. "அதில் பெரிய மீன்கள் மட்டுமல்ல, பல சால்மன் குஞ்சுகளும் இருந்தன," என்று ஃபின்லாந்தின் சூழலியல் நிபுணர் லூஹி ஆர்வத்துடன் கூறுகிறார். "அவை ஏற்கனவே ஆற்றின் ஆழமான பகுதியில் முட்டையிட்டுக் கொண்டிருந்தன. அணையை அகற்றிய பிறகு அந்த இடம் எப்படி இருந்தது என்பதைப் பார்த்தபோது, உண்மையில் என் கண்களில் கண்ணீர் வந்தது." எனக் கூறுகிறார் லூஹி. பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 மீட்கப்படும் நதிகளின் வழித்தடங்கள் லடோகா ஏரியிலிருந்து பின்லாந்துக்கு இடம்பெயரும் நன்னீர் சால்மன் மீன்களுக்கு இந்த நதி ஒரு முக்கிய பாதையாக இருக்கிறது. ஆனால் 1911 மற்றும் 1925க்கு இடையில் முன்னெடுக்கப்பட்ட நீர் மின்சாரம் உற்பத்தி செய்யும் மூன்று அணைகளின் கட்டுமானம், சால்மன் மீன்கள் மற்றும் அவற்றின் முட்டையிடும் இடங்களுக்கு இடையில் புதிய தடைகளை உருவாக்கியது. சால்மன் மற்றும் பிற மீன்களான பழுப்பு ட்ரவுட் போன்றவை ஆற்றின் மற்றொரு பக்கத்தில் சிக்கிக்கொண்டன. இன்று அணைகள் அகற்றப்பட்ட நிலையில், உயரமான மரங்களால் சூழப்பட்ட புதிதாக கட்டப்பட்ட ரேபிட்கள் வழியாக மீண்டும் தண்ணீர் ஓடுகிறது. ஒவ்வொரு முறை அணை அகற்றப்படும்போதும், சால்மன் மீன்கள் ஆற்றின் புதிய பகுதியை "தழுவிக் கொள்கிறது" என்கிறார் தென் கரேலியன் ரிக்ரியேஷன் ஏரியா அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ஹன்னா ஒல்லிகைனென். பழைய அணைகளை கையகப்படுத்தி, அதை சுற்றுச்சூழல் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பயன்படுத்தும் பொறுப்பு இந்த அறக்கட்டளையின் கைகளில் உள்ளது. 2021ஆம் ஆண்டில் முதல் அணை அகற்றப்பட்ட பிறகு, மீன்களின் ஐந்து முட்டையிடும் கூடுகள் நீரில் காணப்பட்டன. ஒரு வருடம் கழித்து, 2022 இலையுதிர் காலத்தில் ஒரு ஏக்கருக்கு 200 சாலமன் மீன்கள் (0.4 ஹெக்டேர்) என்ற சாதனையை எட்டியது. 2023 டிசம்பரில் ரிடகோஸ்கி என்ற மேல் அணையை இடிக்கும் பணி முடிந்ததும், சாலமன் மீன்களால் ஆற்றின் மேல் பகுதிகளுக்கும் அதன் துணை நதிகளுக்கும் செல்ல முடிந்தது. ஆற்றின் ஆரோக்கியம் மட்டுமல்ல, பொருளாதார சூழலையும் கருத்தில் கொண்டு பல பத்தாண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட பணியின் விளைவாக மூன்று அணைகளும் அகற்றப்பட்டன என்கிறார் ஒல்லிகைனென். இந்த அணைகளின் பராமரிப்பு செலவுகள் மற்றும் கட்டாய சுற்றுச்சூழல் பாதுகாப்புகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அணைகளால் மின் உற்பத்தி நிலைய உரிமையாளர்களுக்கு லாபமில்லை என்று மதிப்பீடுகள் முடிவு செய்தன என ஒல்லிகைனென் கூறுகிறார். அதனால் அணைகள் அகற்றப்பட்டன. எவ்வாறாயினும், மூன்று ஃபின்னிஷ் அணைகளின் அகற்றம் என்பது ஒரு தனிப்பட்ட வழக்கு அல்ல. ஐரோப்பா முழுவதும், பல பழைய அணைகள் அவற்றின் முடிவை நெருங்கி வருகின்றன அல்லது அவற்றின் பராமரிப்பு செலவுகள் அவை வழங்கும் லாபத்தை விட அதிகமாக உள்ளன. இது போன்ற பெரிய அணைகள் மட்டுமல்ல, லட்சக்கணக்கான சிறிய அணைகளும் ஐரோப்பிய நதிகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளன. பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 பெரிய அணைகளால் தொடரும் பிரச்னை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா போன்ற அதிக தொழில்மயமான பகுதிகளில் உள்ள ஆறுகள் பல நூற்றாண்டுகளாக, சாலைகள் கட்டமைத்தல், விவசாயத்திற்கான நீர் எடுத்தல், நீர் ஆலைகள் மற்றும் மின்சாரம் உற்பத்தி செய்யும் கட்டமைப்புகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆராய்ச்சியாளர்களின் மதிப்பீடுகளின்படி, உலகின் மூன்றில் ஒரு பங்கு ஆறுகள் மட்டுமே அதன் முழு வழித்தடத்தில் 1,000 கிமீக்கும் (621 மைல்கள்) அதிகமான தூரத்திற்கு சுதந்திரமாக பாய்கின்றன. இத்தகைய தடைகள் தொடர் பிரச்னைகளை உருவாக்கியுள்ளன. அவை பல்லுயிர் இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மீன் மற்றும் நுண்ணுயிரிகளை பாதிக்கிறது. மேலும் ஆறுகளின் வளங்கள் மற்றும் வண்டல்கள் கீழ்நோக்கி பாய்வதைத் தடுக்கிறது. இதனால் மீன்வளம் மற்றும் அவற்றைச் சார்ந்த வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. அணைகள், ஆற்று நீரில் உள்ள வண்டல்களைத் தடுப்பதால், கீழ்நிலை நீரும் அதிக அரிக்கும் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. நதியின் வழித்தடத்தில் ஏற்படும் இந்த துண்டிப்பு, நீர்வாழ் உயிரினங்களை பாதிக்கிறது. ஆற்றின் இயக்கவியல் மற்றும் வெப்பநிலையை மாற்றியமைக்கிறது என சான் பிரான்சிஸ்கோ எஸ்டூரி இன்ஸ்டிடியூட்டில் உள்ள மீள் நிலப்பரப்பு திட்டத்தின் அறிவியல் இயக்குனர் மெலிசா ஃபோலே விளக்குகிறார். பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 அழிவின் விளிம்பில் நன்னீர் மீன் இனங்கள் இனப்பெருக்கம் செய்ய இடம்பெயரும் உயிரினங்களுக்கும் பல தடைகளை உருவாக்குகின்றன அணைகள். குறிப்பாக மீன்களின் எண்ணிக்கையில் ஏற்படும் தாக்கம். ஐநாவின் COP28 காலநிலை மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கையில், உலகின் 25% நன்னீர் மீன் இனங்கள் அழியும் அபாயத்தில் இருப்பதாகவும், மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளான 45% நன்னீர் மீன் இனங்கள் அணைகள் மற்றும் நதியிலிருந்து நீர் எடுப்பதால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்கின்றன என தெரிவிக்கப்பட்டது. இது புலம்பெயர்ந்த மீன்களை மட்டுமல்ல, நீர்வழிப்பாதையில் வாழும் சிறிய மீன்களை கூட பாதிக்கிறது. பல்லுயிர் இழப்புக்கான ஐந்து முக்கிய காரணங்களில் பிராக்மெண்டேஷன் (Fragmentation) செயல்முறை கூட உள்ளது என்று ஆராய்ச்சி காட்டுகிறது. 36 ஐரோப்பிய நாடுகளில் குறைந்தது 1.2 மில்லியன் தடைகள் நதி ஓட்டத்தைத் தடுக்கின்றன எனவும், அதில் சுமார் 68 சதவீத தடைகள் 2 மீட்டருக்கும் குறைவான உயரம் கொண்டவை என ஆராய்ச்சி காட்டுகிறது. "20 செ.மீ அளவுக்கு சிறிய தடைகள் கூட சில உயிரினங்களின் இயக்கத்தை பாதிக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்" என்கிறார் ஸ்வான்சீ பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரியலில் பேராசிரியரும், அம்பர் ஒருங்கிணைப்பாளருமான கார்லோஸ் கார்சியா டி லீனிஸ். 2016ஆம் ஆண்டு முதல், ஆம்பர் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து கார்சியா டி லீனிஸின் ஒருங்கிணைக்கப்பட்ட குழு ஐரோப்பா முழுவதும் 2,000 கிமீ (1,243 மைல்) ஆறுகளின் வழித்தடங்களில் பயணம் செய்து, அவற்றின் துண்டிப்புகளை, தடைகளை வரைபடமாக பதிவுசெய்தது. அவர்கள் அணைகள் மட்டுமல்லாது, மதகுகள், பிற சிறிய தடுப்பணைகளையும் பதிவு செய்துள்ளனர். பயனற்ற 150,000 அணைகள் உண்மையில் ஒரு அணை அல்லது தடையை அகற்றும் போது, பல காரணிகளை கருத்தில் கொள்ள வேண்டும். உரிமம் மற்றும் மாநில சட்டங்கள், பொறியியல் பணிக்கான நிதி மற்றும் சாத்தியக்கூறுகள் வரை. ஐரோப்பாவின் 150,000 நீர்வழித் தடைகள் இப்போது பயனற்றுப் போனதாகக் கருதப்படுகிறது. பழைய அணைகளுக்கு அதிக பராமரிப்பு தேவைப்படுகிறது, மேலும் அவை இடிந்து விழும் அபாயத்தில் உள்ளன. ஐரோப்பாவில் ஆயுட்காலம் முடிந்துவிட்ட, காலாவதியான அணைகளுக்கு பல எடுத்துக்காட்டுகள் உள்ளன, அவற்றின் பராமரிப்பு செலவுகள் இப்போது ஆற்றல் உற்பத்தியின் நன்மைகளை விட அதிகமாக உள்ளன, 2016 இல் நிறுவப்பட்ட 'ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழுவின்' மேலாளர் பாவோ பெர்னாண்டஸ் கரிடோ விளக்குகிறார். ஐரோப்பாவின் அணை அகற்றும் திட்டக் குழு 2022இல் குறைந்தது 325 தடைகளை அகற்றியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 36% அதிகம். அணைகள் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை ஒப்புக்கொள்வதால், ஆற்றல் உற்பத்தியில் நீர்மின்சாரத்தின் நன்மைகளை புறக்கணிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. "பயன்பாட்டில் உள்ள அணைகளை தகர்க்கவோ அல்லது அகற்றவோ யாரும் நினைப்பதில்லை" என்று கார்சியா டி லீனிஸ் தெளிவுபடுத்துகிறார். "நாங்கள் காலாவதியான அணைகளை அகற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டுள்ளோம். அதனால் இனி சமூகத்திற்கு எந்த பயனுமில்லை மற்றும் நதியின் ஓட்டத்தை தடுக்கின்றன" நாட்டிற்கு நாடு வேறுபட்டாலும், அணையை அகற்றும் செயல்முறைக்கு சட்டம் உதவும். ஐரோப்பாவில் அணைகளை அகற்றுவதில் ஸ்பெயின் நாடு முன்னணியில் உள்ளது. 2022இல் 133 அணைகள் தகர்க்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஸ்வீடன் மற்றும் பிரான்ஸும் இதை முன்னெடுக்கின்றன. நதிகள் இணைப்பு என்பது ஐரோப்பிய ஆணையத்தின் இயற்கை மறுசீரமைப்புச் சட்டத்தின் மையப் பொருளாகவும் உள்ளது. நவம்பர் 2023இல், ஐரோப்பிய உறுப்பு நாடுகள் தற்காலிக உடன்படிக்கைக்கு முன்வந்தன. 2030க்குள் ஆறுகளுக்கு 25,000 கிமீ (15,530 மைல்கள்) தடைகளற்ற நீர் வழித்தடத்தை சாத்தியமாக்க, மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகளை அகற்றுவதற்கான கடமையும் அடங்கும். இந்தச் சட்டம் பிப்ரவரி 27 அன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது. ஐரோப்பாவில் மட்டும் இந்த பணிகள் நடக்கவில்லை. ஐரோப்பாவின் இத்தகைய முயற்சிகளுக்கு அமெரிக்காவில் நடைபெற்று வரும் அணைகள் தகர்ப்பு வேலைகளே முன்னுதாரணம் என பெர்னாண்டஸ் கரிடோ கூறுகிறார். அமெரிக்காவில் சராசரியாக 62 ஆண்டுகள் பழமையான 92,000 அணைகள் உள்ளன. 1999ஆம் ஆண்டு கென்னபெக் ஆற்றின் மீது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதே அமெரிக்காவின் முதல் பெரிய அணை அகற்றப்பட்ட சம்பவம். 1837இல் கட்டப்பட்ட அந்த அணையின் உரிமம் 1997இல் காலாவதியானபோது, ஃபெடரல் எரிசக்தி ஒழுங்குமுறை ஆணையம் அதை புதுப்பிக்கவில்லை. ஆற்றின் சுற்றுச்சூழல் நன்மைகளுக்கு அது முன்னுரிமை அளித்தது. இதுவரை கிட்டத்தட்ட 2,000 அணைகள் அமெரிக்க நதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளன. அதாவது எட்வர்ட்ஸ் அணை அகற்றப்பட்டதிலிருந்து 76% அணைகள் அகற்றப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 அணைகள் இடிக்கப்படுவது எப்படி? அணைகள் வெடிப்பொருட்கள் மூலமாக உடனடியாக உடைத்துவிட முடியாது. மாறாக, அணையை அகற்றுதல் என்பது நுட்பமாக திட்டமிடப்பட்ட ஒரு பொறியியல் பணி. ஹைடோலான்ஜோகி ஆற்றில், புல்டோசர்கள் படிப்படியாக கான்கிரீட் சுவர்களை உடைத்தன. இதனால் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டது. "அணைக்கு பின்னால் என்ன இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்வது செயல்முறையின் ஒரு பகுதியாகும். வண்டல் எங்கே முடிகிறது? வண்டல் அனைத்தும் தோண்டி எடுக்கப்படுகிறதா? பாதிப்பைக் குறைக்கும் உத்திகள் என்ன? என அனைத்தையும் ஆராய்வோம்" என்று ஃபோலி கூறுகிறார். இன்றுவரை மிகப்பெரிய நதி மறுசீரமைப்பு திட்டங்களில் ஒன்று பிரான்ஸின் நார்மண்டியில் உள்ள செலூன் ஆற்றில் நடந்துள்ளது. 2019 மற்றும் 2023க்கு இடையில் இரண்டு பெரிய அணைகள் அகற்றப்பட்டு, ஆற்றின் 60 கிமீ (37 மைல்) நீர்வழித்தடம் திறக்கப்பட்டது. 1920களில் இருந்து செயல்படும் இரண்டு அணைகளும் ஒரு நூற்றாண்டு காலமாக அட்லாண்டிக் சால்மன், லாம்ப்ரேஸ் மற்றும் ஐரோப்பிய ஈல்கள் போன்ற மீன்களின் இடம்பெயர்வை முற்றிலும் தடுத்துவிட்டன. "கனரக பொறியியல் பணிகள் மூலம் நீர் மெதுவாக வெளியேற்றப்பட்டதால், அணையின் பின்புறம் குவிந்திருந்த வண்டல் மண் கரைகளை மீண்டும் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்டது. தாவரங்கள் மிக விரைவாக மீண்டும் வளர்ந்தன, உண்மையில் வண்டல் அதிக வளங்கள் நிறைந்ததாக இருந்தது. தாவரங்கள் கரைகளை உறுதிப்படுத்த உதவியது மற்றும் நிறைய உயிரினங்களுக்கு நிழல் மற்றும் தங்குமிடம் உருவாக்கவும் அது உதவியது" என்று திட்டத்தைக் கண்காணித்து வரும் இன்ரேயில் உள்ள செலூன் அறிவியல் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் லாரா சொய்சன்ஸ் கூறுகிறார். அணையை அகற்றுவதற்கான இயற்பியல் கூறுகளை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. அணைகள் அமைந்திருக்கும் நிலப்பரப்புகளுடன் உள்ளூர் மக்களுக்கு வலுவான தொடர்புகள் இருக்கும் என்பதால் அணைகள் அகற்றப்பட்டதன் பின்னணியில் உள்ள காரணங்களை அவர்களிடம் தெரிவிப்பதும் முக்கியம் என்று செலூன் திட்டம் அறிவுறுத்துகிறது. "இந்த அணைகள் நீண்ட காலமாக இருக்கும் போது, ஒரு நதி சுதந்திரமாக ஓடுவது எப்படி இருக்கும் என்பதை மக்களுக்குக் காண்பிப்பது சவாலாக இருக்கும்" என்கிறார் ஃபோலே. செலூன் ஆற்றில் அணை அகற்றும் பணிக்கு முன்பு, உள்நாட்டில் வசிக்கும் மக்கள் அணைகளுக்குப் பின்னால் உள்ள ஏரிகளை படகு சவாரி மற்றும் மீன்பிடித்தல் போன்ற பல நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தினர். ஆனால் நீர்த்தேக்கங்களில் நச்சு சயனோபாக்டீரியா வளர்ந்து கொண்டிருந்தது. இறுதியில் அந்த நடவடிக்கைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. " என இன்ரே செலூன் அறிவியல் திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குனர் ஜீன்-மார்க் ரூசல் கூறுகிறார். டென்மார்க்கின் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் மீன் சூழலியல் நிபுணர் கிம் பிர்னி-கௌவின் மற்ற அணைகளை அகற்றும் விஞ்ஞானிகளுடன் செலூன் ஆற்றுக்குச் சென்றபோது, உள்ளூர் மக்கள் மிகுந்த வருத்தமாக இருந்ததைக் கண்டனர். ஆனாலும் கூட, ஒருவருக்கு அதில் சந்தோஷம் இருந்ததாக பிர்னி-கௌவின் நினைவு கூறுகிறார். "அணை கட்டப்பட்டபோது அவரது தாத்தாவுக்கு அதில் ஈடுபாடு இல்லை. அந்த பகுதியின் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றத்தை அவரது தாத்தா விரும்பவில்லை" என்று பிர்னி-கௌவின் கூறுகிறார். பட மூலாதாரம்,MIKKO NIKKINEN / STORYMAKERS 2021 அமெரிக்கா, ஐரோப்பாவில் அடுத்தடுத்து தகர்க்கப்படும் அணைகள் அணைகளை அகற்றுவதால் அட்டகாசமான மாற்றங்கள் ஏற்படுகின்றன. செலூனில் தாவரங்கள் மீண்டும் வளர்ந்தது மட்டுமல்லாமல், மீன்கள் கூட மீண்டும் தென்பட்டன. இரண்டாவது அணை அகற்றப்பட்டதைத் தொடர்ந்து மேலும் சில சால்மன் மீன்கள் ஆற்றின் மேற்பகுதிக்கு வந்தன. இதேபோல், ஐரோப்பிய விலாங்கு மீன்களும் இப்போது முழு நீர்ப்பிடிப்பையும் மீண்டும் ஆக்கிரமித்துள்ளன மற்றும் கடல் லாம்ப்ரே எனப்படும் மீன்களும் புதிய வாழ்விடங்களை முட்டையிடும் இடங்களாகப் பயன்படுத்துகின்றன. மக்களுக்கும் அணையை அகற்றுவது நல்ல மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீரின் நச்சுத்தன்மையை நீக்குவதுடன், மீட்டெடுக்கப்பட்ட ஆறுகளால் சுற்றுலா வாய்ப்புகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஹிடோலான்ஜோகி ஆறு ஒரு சுற்றுலாத் தலமாக மாற தயாராக உள்ளது என்று ஒல்லிகைனென் கூறுகிறார். இதேபோல் அமெரிக்காவில் அணைகளை அகற்றுவதால் மக்கள் நதிக் கரைகளுக்குத் திரும்புகின்றனர். மைனே மாநிலத்தில் பெனோப்ஸ்கோட் நதியின் அணை அகற்றப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, நீரின் தரம் மற்றும் நீச்சல், படகு சவாரிகள் மற்றும் வனவிலங்குகளைப் கண்டுகளிப்பது போன்ற நடவடிக்கைகளில் அதிகரித்துள்ளதாக ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. மேலும், அணையை அகற்றுவதற்கு ஆதரவான முக்கிய பங்குதாரர்களில் ஒருவரான பெனோப்ஸ்கோட் இந்திய தேசத்துடன் ஆற்றின் சுதந்திரமான பாயும் நிலையை மீட்டெடுப்பது பெரும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்தது . ஆரம்பத்தில் அணையை அகற்றும் திட்டம் சில சந்தேகங்களை ஏற்படுத்தியது என்றும் உள்ளூர் மக்கள் சிலர் கவலை தெரிவித்தனர் என்றும் ஆனால் இப்போது நீர் விளையாட்டு மைதானமாக மாறிவிட்டது, கயாக் போட்டிகள் நடத்தப்பட்டது. மக்கள் ஆற்றை இன்னும் அதிகமாக நேசிக்கிறார்கள் என்றும் கூறுகிறார் மூத்த விஞ்ஞானி ஜோசுவா ராய்ட். ஐரோப்பாவும் அமெரிக்காவும் நதிகள் இணைப்பை மீட்டெடுக்க அணைகளை அகற்றுவது ஒரு சாத்தியமான வழியாக இருக்கும் என்று நிரூபித்து காட்டினாலும், இதில் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. அமேசான், காங்கோ மற்றும் மீகாங் படுகை போன்ற முக்கிய நதிகளில் புதிய அணைகள் கட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கவலைப்படுகின்றனர். இதேபோன்ற கவலைகள் பால்கன் பகுதியிலும் உள்ளது. அங்கு ஏராளமான சிறிய நீர்மின் நிலையங்களை உருவாக்குவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. உலகில் வேறு எங்கும் சிறிய, குறைந்த திறன் கொண்ட நீர்மின் அணைகள் கட்டப்பட்டால் ஐரோப்பாவில் உள்ள அணைகளை அகற்றுவதில் அர்த்தமில்லை என்கிறார் கார்சியா டி லீனிஸ். "நாம் சற்று விரிவாக யோசிக்க வேண்டும். சிறிய அணைகள் ஒருபோதும் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யப் போவதில்லை, அவை மேலும் அதிக சேதத்தை ஏற்படுத்தப் போகின்றன. அதற்காக அணைகளே வேண்டாமென்று சொல்லவில்லை, ஆனால் நல்லதை விட சுற்றுச்சூழலுக்கு அதிக சேதத்தை ஏற்படுத்தும் பழைய அணைகளே எங்கள் இலக்கு" என்கிறார் கார்சியா டி லீனிஸ். https://www.bbc.com/tamil/articles/cndjyxprkw6o
  5. திருமணமானால் கணவன் மேல் சந்தேகமும் வந்துவிடும் போல?! உங்கள் தொடருக்கு மிக்க நன்றி சுவி அண்ணா.
  6. Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 11:33 AM 2024 ஜனாதிபதி தேர்தலில் நான் தோற்றால் அது இரத்தக்களறியை ஏற்படுத்தும் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்ச்சை கருத்தினை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவிற்கு வெளியே தயாரிக்கப்பட்ட கார்களிற்கு 100 வீத வரியை விதிப்போம் என தெரிவித்துள்ள டிரம்ப் நான் தெரிவு செய்யப்பட்டால் அந்த வெளிநாட்டு கார்களை விற்கமுடியாத நிலையேற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை டிரம்பின் இந்த கருத்து அவர் மற்றுமொரு ஜனவரி ஆறாம் திகதியை விரும்புகின்றார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது என ஜனாதிபதி ஜோ பைடனின் பிரச்சார பிரிவின் பேச்சாளர் ஜேம்ஸ் சிங்கெர் தெரிவித்துள்ளார். அமெரிக்க மக்கள் டிரம்பின் தீவிரபோக்கினை தொடர்ந்து நிராகரித்துவருவதால் நவம்பர் தேர்தலில் அவர்கள் அவரை நிராகரிக்கப்போகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் அமெரிக்க மக்கள் அவரின் வன்முறை மீதான விருப்பம் பழிவாங்கும் குணம் ஆகியவற்றை நிராகரிக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178924
  7. Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 12:00 PM தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதியை சேர்ந்தவர்களும் இடம்பெற்றிருப்பார்கள் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க வவுனியாவில் தெரிவித்துள்ளார். தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் நாங்கள் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எதிர்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடக்கை சேர்ந்தவர்களும் இடம்பெறவேண்டும் தீவிரவாதபோக்கற்ற இனவாதமற்ற மிதவாத தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு நாங்கள் தயார் அவர்கள் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஒருபகுதியாகவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மொழி பற்றும் காணி பிரச்சினைகளிற்கு தேசிய மக்கள் சக்தி தீர்வை காணும் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை உறுதி செய்ய அரசமைப்பில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மொழிப்பிரச்சினைக்கு தீர்வை காண்பதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம் என உறுதிமொழி வழங்குகின்றோம்,உங்கள் மொழியில் கருமங்களை ஆற்றுவதற்கான உரிமையை உறுதி செய்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/178928
  8. அரசாங்கம் 1500 பக்க ஆவணங்களை மறைத்துவிட்டது - மர்ம லொறியொன்றை சோதனையிட வேண்டாம் என தற்போதைய பொலிஸ்மா அதிபர் உத்தரவிட்டார் - கர்தினால் மல்கம் ரஞ்சித்தின் புதிய குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 17 MAR, 2024 | 11:27 AM அரசாங்கம் திருச்சபைக்கு வழங்கிய உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் முக்கியமான 1500 பக்கங்கள் காணப்படவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஆறு சிடிக்களில் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை வழங்கியது நாங்களும் சட்டத்தரணிகளும் அதனை ஆராய்ந்தோம் 70,000 பக்கங்கள் உள்ளன எனினும் அரசாங்கம் 1500 பக்கங்களை எங்களுக்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். ஜஹ்ரான் ஹாசிமின் மனைவி மற்றும் சாரா ஜெஸ்மின் போன்ற முக்கிய சாட்சியங்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அடங்கிய ஆவணங்களையே அரசாங்கம் எங்களிடம் வழங்காமல் தான் வைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்கொலை தாக்குதலில் ஈடுபட்ட குழுவினருடன் நெருங்கிய தொடர்பிலிருந்தவர் என கூறப்படும் ஜாரா ஜஸ்மின் வழங்கிய வாக்குமூலம் குறித்த அறிக்கைகளை அரசாங்கம் எங்களிற்கு வழங்கவில்லை என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முழுமையாக வழங்கவேண்டும் என நாங்கள் பல முறை கடிதங்களை எழுதிய பிறகு அரசாங்கம் ஆறுசிடிக்களை வழங்கியது என தெரிவித்துள்ள கர்தினால் முழு அறிக்கையையும் வழங்கிவிட்டதாக ஊடகங்களிற்கு தெரிவித்தது எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைச்சர்கள் அதிகாரிகள் 99 வீத விசாரணைகள் முடிவடைந்துவிட்டன என தெரிவிக்கின்றனர் எனினும் நாங்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைகளை ஆராய்ந்தவேளை அது உண்மையில்லை என்பதை உணரமுடிந்தது எனவும் குறிப்பிட்டுள்ள கர்தினால் ஜஹ்ரானை அவரின் குழுவை சேர்ந்தவர்களை தெரிந்த 23 முஸ்லீம்களிற்கு எதிராக தற்போது வழக்குதாக்கல் செய்துள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தாக்குதல் குறித்த அனைத்து விடயங்களையும் விசாரணை செய்வதை தவிர்த்துள்ள அரசாங்கம் தற்போது இவர்களை பலிகடாக்களாக்க முயல்கி;ன்றது எனவும் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்று இந்த வருடத்துடன் ஐந்து வருடங்களாகின்றன நாங்கள் புதிய சுயாதீன விசாரணைகளை கோரிவரும் நிலையில் அதிகாரிகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் திட்டங்களை முன்வைக்கின்றனர் என தெரிவித்துள்ள கர்தினால் மல்கம் ரஞ்சித் இதேவேளை ஆசாத் மௌலானா போன்றவர்கள் வெளியிட்ட தகவல்கள் மூலம் வெளியான புதிய ஆதாரங்கள் குறித்து எந்த விசாரணைகளும் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அவ்வேளை இராணுவபுலனாய்வு பிரிவின் இயக்குநருக்கும் ஜஹ்ரான் குழுவினருக்கும் இடையில் தொடர்பினை ஏற்படுத்துவதில் தான் ஈடுபட்டமை ஆசாத்மௌலானா உறுதி செய்துள்ளார் இராணுவ புலனாய்வு பிரிவினர் வழங்கிய நிதியை பிள்ளையான் ஊடாக பெற்றுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார் எனவும் கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இராணுவபுலனாய்வு பிரிவின் தலைவராக செயற்பட்டவருக்கும் ஜஹ்ரான் காசிம் குழுவினருக்கும்இடையி;ல் சந்தி;ப்பு இடம்பெற்றது என்ற புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன தென்பகுதி அதிவேக நெடுஞ்சாலையி;ல் கௌனிஹமவில் சந்தேகத்திற்கு இடமான பொருட்களுடன் காணப்பட்ட லொறியை சோதனை செய்யாமல் விடுமாறு தற்போதைய பொலிஸ்மா அதிபர் அவ்வேளை உத்தரவு பிறப்பித்துள்ளார்,எனவும் தெரிவித்துள்ள கர்தினால் அந்த லொறி கோட்டபயவுக்கு நெருக்கமான அவன்ட் கார்டே நிறுவனத்திற்கு சொந்தமானது எனவும் குறிப்;பிட்டுள்ளார். அந்த லொறியில் வெடிமருந்துகள் காணப்பட்டிருக்கலாம் என ஆசாத்மௌலானா தெரிவித்திருந்தார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/178922
  9. 17 MAR, 2024 | 10:28 AM தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது. இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு செய்யப்பட்டதுடன், கட்சியின் செயலாளராக ஆனந்த சங்கரி தெரிவுசெய்யப்பட்டார். இதன்போது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 7ஆம் திகதி திருகோணமலையில் நடத்தப்படவுள்ள கட்சியின் மாநாடு தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/178916
  10. அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் பாரிய சூழல் பாதிப்பு - திட்டத்தை இடைநிறுத்தவேண்டும் என்கிறது சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் 17 MAR, 2024 | 10:24 AM (நா.தனுஜா) இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் மன்னாரில் முன்னெடுக்கப்படவிருக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் அச்சூழலுக்கும், மக்களுக்கும் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்படும் எனவும், ஆகவே இத்திட்டத்தை இடைநிறுத்த வேண்டும் எனவும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருக்கும் அதானி கிரீன் எனேர்ஜி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சாகர் அதானி மற்றும் அதானி எனேர்ஜி சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம செயற்பாட்டு அதிகாரியுமான அனில் சர்தானா ஆகியோருடன் மன்னார் மற்றும் பூநகரியில் 484 மெகாவோற் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்துக்கான மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தம் குறித்த இருதரப்பு பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அவரது எக்ஸ் தளப்பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் பல்வேறு சூழலியல் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரும் எனவும், ஆகவே இதனை உடனடியாக இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் வலியுறுத்தி மன்னார் மாவட்டத்தை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சிவில் சமூகப் பிரதிநிதிகள் சிலர் கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையத்துடன் இணைந்து கடந்த 5ஆம் திகதி மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் வெனுர பெர்னாண்டோவிடம் கடிதமொன்றைக் கையளித்தனர். அத்தோடு, இவ்விவகாரம் தொடர்பில் அவர்கள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு அளித்தனர். சுமார் 43,000 குடும்பங்களைக் கொண்டிருக்கும் மன்னாரில் 250 மெகாவோற் காற்றாலை மின் உற்பத்திக்கென 52 டேர்பைன்களைப் (விசைப்பொறி / விசையாழி) பொருத்துவதால் பறவைகளின் வாழிடங்கள் அழிக்கப்பட்டு, அவை வேறு பகுதிகளுக்கு இடம்பெயரல், பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் பாதிப்படைதல், பனை மரங்கள் சேதமடைதல், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படல் போன்ற பல்வேறு சூழலியல் மற்றும் அது சார்ந்த சமூக பிரச்சினைகள் ஏற்படும் என அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். அதேவேளை பறவைகளின் இடப்பெயர்வு, வெள்ளப்பெருக்கினால் ஏற்படக்கூடிய பாதிப்பை அதிகப்படுத்தல், கடற்சூழல் பாதிப்புக்கள் என்பன உள்ளடங்கலாக இக்காற்றாலைத் திட்டத்தினால் ஏற்படக்கூடிய சூழல் பாதிப்புக்களை சுட்டிக்காட்டியிருக்கும் சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம், இத்திட்டத்தின் விளைவுகள் தொடர்பில் முறையான சூழலியல் மதிப்பீடு மேற்கொள்ளப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி இத்திட்டமானது உள்நாட்டு வலுசக்தி உற்பத்தி இயலுமையை கேள்விக்குள்ளாக்கும் என சுட்டிக்காட்டியிருக்கும் அந்நிலையம், பிரேரிக்கப்பட்டுள்ள காற்றாலையானது நகர அபிவிருத்தி அதிகார சபையின் அபிவிருத்தித் திட்டத்துக்கு அமைவானதாக இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆகவே நேர்மறையான விளைவுகளை விட சூழலுக்கும், மன்னார் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தக்கூடிய இந்தத் திட்டத்தை தாம் முழுமையாக எதிர்ப்பதாக சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178915
  11. வெடுக்குநாறி மலை விவகாரம் : முறைப்பாடின்றி கைதிகளை பார்வையிடும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு உண்டு - அம்பிகா சற்குணநாதன் 17 MAR, 2024 | 10:02 AM (நா.தனுஜா) வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களை முறைப்பாடளித்ததன் பின்னரும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் இன்னமும் சென்று பார்வையிடாத நிலையில், இவ்வாறான சம்பவங்களில் முறைப்பாடின்றியே கைதிகளை பார்வையிடுவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு உண்டென முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டியுள்ளார். வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் உள்ள ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த 8ஆம் திகதி சிவராத்திரி தினத்தன்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடச் சென்ற பக்தர்களுக்கு பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டதுடன், இரவு வேளையில் அங்கு வழிபாடுகளைத் தொடர முற்பட்டோர் அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். அதுமாத்திரமன்றி, ஆலய பூசகர் உள்ளடங்கலாக 8 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேர் கடந்த 5 தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த கைது சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய அலுவலகத்திலும், அதனைத் தொடர்ந்து கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்திலும் முறைப்பாடு அளித்த போதிலும், ஆணைக்குழு அதிகாரிகள் எவரும் கைது செய்யப்பட்டவர்களை வந்து பார்வையிடவில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கஜேந்திரன் குற்றஞ்சாட்டியிருந்தார். இது குறித்த தெளிவுபடுத்தலை பெற்றுக்கொள்வதற்காக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளர் நீதியரசர் (ஓய்வுபெற்ற) எல்.ரி.பி.தெஹிதெனியவையும், வவுனியா பிராந்திய அலுவலகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரோஹித பிரியதர்ஷனவையும் தொடர்புகொள்ள முற்பட்ட போதிலும், அது சாத்தியமாகவில்லை. அதனையடுத்து, ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான பேராசிரியர் ரி.தனராஜிடம் வினவியபோது, இது பற்றிய தகவல்களை நாளைய தினம் அறியத்தருவதாக உறுதியளித்தார். இந்நிலையில் மேற்குறிப்பிட்டவாறான சம்பவங்களின்போது இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு செயற்படவேண்டிய விதம் மற்றும் அதற்கு வழங்கப்பட்டுள்ள ஆணை தொடர்பில் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஐக்கிய நாடுகள் நிதியத்தின் உறுப்பினருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனிடம் வினவினோம். முதலாவதாக கைது இடம்பெறும்போது அதற்குரிய தெளிவான காரணம் காணப்படல், அக்காரணத்தை கைது செய்யப்படும் நபரிடம் கூறுதல், கைதுசெய்யப்படுபவர்களில் பெண்களும் உள்ளடங்கும் பட்சத்தில் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் கட்டாயமாக இருத்தல், கைதுசெய்யப்படும் நபர் எங்கு அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது பற்றி அவரது குடும்பத்தாருக்கு அறியத்தரல், அழைத்துச்செல்லப்பட்ட இடத்துக்கு வருகைதரும் குடும்பத்தார் கைதுசெய்யப்பட்ட நபரை பார்வையிடுவதற்கு இடமளித்தல் என்பன உள்ளடங்கலாக உரிய செயன்முறை பின்பற்றப்படவேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தினார். அதுமாத்திரமன்றி, வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கைதுசெய்யப்பட்டவர்கள் மீது அநாவசியமான அழுத்தம் மற்றும் அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டமையும், அங்கு வைக்கப்பட்டிருந்த பூஜை பொருட்கள் தட்டிவிடப்பட்டமை போன்ற நடவடிக்கைகளும் ஏற்புடையவையல்ல எனவும் அம்பிகா சற்குணநாதன் சுட்டிக்காட்டினார். மேலும், இவ்வாறான சந்தர்ப்பங்களில் எந்தவொரு தரப்பினரும் முறைப்பாடு அளிக்கப்படாமலேயே சிறைச்சாலைக்கு சென்று கைதுசெய்யப்பட்டவர்களை பார்வையிடுவதற்கும், அவர்களுடன் கலந்துரையாடுவதற்கும், அவர்கள் தாக்கப்பட்டிருப்பின் நீதிமன்ற மருத்துவ அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துமாறு வலியுறுத்துவதற்கும் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/178914
  12. என்னைத் திணற வைத்த மக்கள் 🔥 | சாதியே இல்லை, தமிழன்டா | Pavaneesan
  13. யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்தி கொல்லப்பட்ட சம்பவம் : மேலும் ஒருவர் கைது 17 MAR, 2024 | 11:50 AM யாழில் இளம் குடும்பஸ்தர் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தோடு தொடர்புடைய மேலும் ஒருவர் இன்றைய தினம் (17) யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (11) தனது மனைவியுடன் காரைநகர் பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டு, தமது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த கணவன், மனைவி இருவரையும் பொன்னாலை பாலத்தினருகே உள்ள கடற்படை முகாமுக்கு அருகாமையில் வன்முறை கும்பலொன்று வாகனத்தில் கடத்திச் சென்றது. அதன் பின்னர், கணவர் மிக மோசமாக சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அத்தோடு, கடத்திச் சென்ற மனைவியை சித்தங்கேணி பகுதியில் இறக்கிவிட்டு அந்த வன்முறை கும்பல் தப்பிச் சென்றிருந்தது. அந்த கும்பல் தம்மை வழிமறித்து, தாக்கி கடத்த முற்பட்ட வேளையில், தாம் உதவி கோரி கடற்படை முகாமுக்கு சென்றபோது, அங்கிருந்த கடற்படையினர் தம்மை தாக்கி விரட்டியதாகவும், தனது கணவரின் படுகொலைக்கு கடற்படையினரும் காரணம் என படுகொலை செய்யப்பட்ட கணவரின் மனைவி தெரிவித்திருந்தார். இந்நிலையில், பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், கடற்படை முகாமில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கமரா காணொளிகளை புலனாய்வாளர்கள் பெற்று விசாரணைகளை முன்னெடுத்தனர். காணொளியில், கணவரும் மனைவியும் தஞ்சம் கோரி முகாமுக்கு ஓடி வருவதும், அங்கு கடற்படையினர் அவர்களை தாக்குவதும், வன்முறை கும்பல் கடற்படையின் கண் முன்னே முகாம் பகுதியில் வைத்து கணவன், மனைவி இருவரையும் கடத்திச் செல்வதும் பதிவாகியுள்ளது. கடற்படையினர் துப்பாக்கிகளுடன் கடத்தல்காரர்களுக்கு உதவி செய்வது காணொளியில் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில், கடத்தலுக்கு கடற்படையினர் உதவியதாக தெரிவித்த மனைவியின் குற்றச்சாட்டுக்கு காணொளி வலு சேர்த்துள்ளது. கடந்த நாட்களில் இந்த கொலையுடன் தொடர்புடைய 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம் மேலும் ஒருவர் கைதாகியுள்ளார். https://www.virakesari.lk/article/178927
  14. சென்னையில் 2025 ஜூனில் 2-ம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு 16 MAR, 2024 | 12:34 PM தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்ற முத்தமிழுடன் இன்று கணித் தமிழும் இணைந்து நற்றமிழாக நானிலமெங்கும் சிறப்புடன் திகழ்கின்றது. தமிழ் மொழி; தொன்மை – தனித்தன்மை – பொதுமைப் பண்பு - பண்பாடு – உயர்ந்த சிந்தனை – இலக்கியத் தனித்தன்மை பங்களிப்பு ஆகிய உயர்ந்த கோட்பாடுகள் அனைத்தையும் ஒருங்கே பெற்றதுடன், செம்மொழி என்ற தனித்தகுதியை பெற்றுள்ள அரும்பெரும் மொழியாகும். தமிழை, உயர்தனிச் செம்மொழி என்று முதன்முதலில் முன்மொழிந்தவர் தமிழறிஞர் பரிதிமாற்கலைஞர் ஆவார். வளம்பெற்ற நம் மொழிக்குச் செம்மொழித் தகுதியைப் பெற்றுத்தந்து தமிழர்களின் நூற்றாண்டுக் கனவை நனவாக்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. கழக அரசு பொறுப்பேற்ற கடந்த மூன்றாண்டுகளாக தமிழக அரசு தனிப்பெரும் நிலையில் தகுதிவாய்ந்த தமிழறிஞர்களுக்குப் பல்வேறு விருதுகளை வழங்குவதோடு, நாடறிந்த தமிழறிஞர்களின் நூல்களை நாட்டுடைமையாக்குவதும், பண்டையத் தமிழர் பண்பாட்டையும், பழங்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, நாகரிக வாழ்வு முறைமைகளை நுண்மையோடு பறைசாற்றும் வகையில் கீழடி அருங்காட்சியகத்தை அமைத்து, அதன் தொடர்ச்சியாக பொருநை அருங்காட்சியகத்தையும் அமைத்து வருவது தமிழ்ப் பண்பாட்டின் மணிமகுடங்களாகும். "பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்” என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில், அறிவியல், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், வேளாண்மை மற்றும் பல்வேறு துறை சார்ந்த பாடநூல்களை தமிழில் மொழிபெயர்க்கும் பெரும் பணியினைச் செய்து வருவதும், செயற்கை நுண்ணறிவைப் போற்றும் வகையில் கணித் தமிழ் மாநாடு 24 நடத்தியதும், தாய்த்தமிழை உயிர்ப்போடும் வனப்போடும் வளர்த்தெடுக்கும் கழக அரசின் முயற்சிகளாகும். மேலும் உலகெங்கிலும் வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும் அயலகத் தமிழர் தினமாக ஜனவரி-12-ஆம் நாளினை தமிழ் வெல்லும் என்னும் கருப்பொருளை மையமாக 2024-ஆம் ஆண்டு அயலகத் தமிழர் மாநாட்டினை வெற்றியோடு நடத்தியதும், பார்போற்றும் வகையில் பன்னாட்டு புத்தகக் கண்காட்சி நடத்தியதும்; தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு அரசுப் பணியில் முன்னுரிமை வழங்குவதும், திருக்கோயில்களில் தமிழ் வழிபாட்டினை முன்னிறுத்துவதுமான ஆகச்சிறந்த பல்வேறு தமிழ்ப் பணிகளை ஆற்றி வருகிறோம். “இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்பார் பாவேந்தர். நம் உயிருக்கு இணையான தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் இரண்டாம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, சென்னையில் வரும் 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் ஐந்து நாட்கள் சீரோடும் சிறப்போடும் சிந்தனைச் செயல்திறத்தோடும் மாபெரும் அளவில் நடத்தப்படும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/178854
  15. எல்லை தாண்டி மீன் பிடித்த 21 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கைது! 17 MAR, 2024 | 09:31 AM எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2 படகுகளுடன் இன்று (17) அதிகாலை கைது செய்யப்பட்டனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்தே இலங்கை கடற்படையினரால் இந்த 21 பேரும் கைதாகியுள்ளனர். தொடர்ந்து, கைதான மீனவர்கள் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர். நீரியல் வள திணைக்களத்தினர் கைதான மீனவர்கள் மீது ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/178911
  16. தம்பி பவனீசன் வருத்தப்படத் தேவையில்லை. உங்கள் பணிகளைத் தொடருங்க.
  17. மனிதாபிமான பொருட்களுடன் காசாவை சென்றடைந்தது கப்பல் - மனிதாபிமான நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்கு தொடர்ந்தும் முயற்சி Published By: RAJEEBAN 16 MAR, 2024 | 12:22 PM காசாவின் கடற்பகுதிக்கு சென்றுள்ள முதலாவது மனிதாபிமான கப்பல் மனிதாபிமான பொருட்களை தரையிறக்கியுள்ளது. ஸ்பெயினை சேர்ந்த ஓபன் ஆர்ம்ஸ் என்ற கப்பலே காசாவின் கரையோர பகுதிக்கு சென்றுள்ளது. பட்டினியின் பிடியில் காசா சிக்குண்டுள்ளதாக ஐநா எச்சரித்துள்ள நிலையில் சைப்பிரசிலிருந்து இந்த கப்பல் 200 தொன் மனிதாபிமான பொருட்களுடன் செவ்வாய்கிழமை புறப்பட்டது. தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஜெட்டிகளை பயன்படுத்தி கிரேன்களில் இருந்து பொருட்கள் இறக்கப்பட்டு லொறிகளில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. காசாவிற்குள் தரைமார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் மனிதாபிமான பொருட்களை விநியோகிப்பது கடினமானதாக காணப்படுகின்ற நிலையில் இந்த முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. உணவுகளை வழங்கிய வேர்ல்ட் சென்ரல் கிட்ச்சன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. காசாவில் இயங்கும் துறைமுகம் இல்லாததால் தற்காலிக இறங்குதுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும் உணவு விநியோகம் எவ்வாறு இடம்பெறும் என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை. 12 லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/178850
  18. அதிக வெப்பநிலையால் பாடசாலைகளில் விளையாட்டுப்போட்டிகள் ஒத்திவைப்பு! - கல்வி அமைச்சு 17 MAR, 2024 | 10:57 AM அதிக வெப்பநிலை நிலவுவதால் விளையாட்டுப் போட்டிகளை ஒத்திவைக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த பாடசாலை அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கடும் வெப்பநிலை நிலவுவதன் காரணமாக பிள்ளைகளின் பாதுகாப்புக் கருதியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/178919
  19. https://seatreservation.railway.gov.lk/mtktwebslr/ அண்ணை தினக்குரல் செய்யாவிட்டாலும் நாங்கள் தேடி எடுத்துப் போடுவோம் எல்லோ...
  20. சுழிபுரம் விக்டோரியா கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றையதினம் நடைபெற்றது. போட்டிகளின் இறுதி போட்டியாக பழைய மாணவர்களின் ஓட்டப் போட்டி நடைபெற்றது. இதில் 76 வயதுடைய மூதாட்டி ஒருவரும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்மணிகள் இருவரும் என, மொத்தமாக ஐவர் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தினர். பாடசாலையில் கல்வி கற்ற நினைவுகளை மீட்டிப் பார்ப்பதற்கும், அதில் பங்கெடுக்கவும் வழி சமைக்கும் ஒரு முக்கிய நிகழ்வாக இல்ல மெய்வல்லுனர் போட்டியின் பழைய மாணவர்களுக்கான நிகழ்வு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/295984
  21. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்காக 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் மற்றும் பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் அகியோரின் தலைமையில் இந்த துரித இலக்கம் இன்று அறிமுகம் செய்யப்பட்டது. 24 மணித்தியாலங்களும் செயற்பாட்டில் இருக்கும் 107 என்ற துரித இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி முறைப்பாடுகளை செய்ய முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவை முற்றிலும் தமிழ் மொழியில் செயற்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/296023
  22. இணையவழி ஆசன ஒதுக்கீடு : ரயில்வே திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு! இணையவழி ஊடாக ரயில்களில் ஆசன ஒதுக்கீடு செய்யும் முறைமையில் தொழில்நுட்ப சிக்கல்கள் காணப்படுமாயின் அவை அடுத்த சில நாட்களில் நிவர்த்தி செய்யப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆசனங்களை ஒதுக்கீடு முறைமையில் ஏற்பட்டுள்ள தொழிநுட்ப சிக்கல்களை நீக்கி தொடர்ந்தும் அந்த முறைமை முன்னெடுக்கப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் எம்.ஜி.இந்திபொல தெரிவித்துள்ளார். இந்த முறைமை நாடளாவிய ரீதியில் முதன்முறையாக அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் என்பதனால் தொழில்நுட்பச் சிக்கல்கள் இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இணையத்தின் ஊடாக ரயிலில் ஆசனத்தை முன்பதிவு செய்திருந்தாலும் சில பயணிகளுக்கான ஆசனம் அவர்கள் ரயில் நிலையத்திற்கு பிரவேசித்த பின்னரும் ஒதுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. https://thinakkural.lk/article/296015
  23. 16 MAR, 2024 | 04:01 PM கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை (15) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்த கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. நிலைபேறான கடல் மற்றும் கரையோர வலயத்தை உறுதி செய்யும் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களும் சமுத்திரம் மற்றும் கரையோரத்தின் தூய்மையைப் பேணுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, அந்த செயற்பாடுகளை இலகுபடுத்துவதற்கு இந்த புதிய செயலி உதவும் எனவும் குறிப்பிட்டார். கரையோரத் தூய்மைத் திட்டங்கள் மற்றும் கரையோரத் தூய்மையைப் பேணுதல் தொடர்பாக தற்போது நடைமுறைப்படுத்தப்படும் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, கடலோர பகுதிகளில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் திட்டத்திற்கு இது நல்ல பங்களிப்பாக அமையும் என்றார். ஆறுகள் மற்றும் கால்வாய்களில் இருந்து வெளியேறும் கழிவுகள் மற்றும் கழிவுநீர் மற்றும் கழிவு நீர் நீண்ட வெளியேற்ற குழாய்கள் மூலம் வெளியேற்றப்படுவதாலும் மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் பிற கடல் நடவடிக்கைகள் மூலம் கடற்கரை மற்றும் கடல் வளங்கள் கடுமையாக மாசுபடுவதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியது. பல்வேறு அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் தலையீட்டுடன் துப்புரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டதுடன், இந்த தொலைபேசி செயலியை இப்பணியின் சரியான ஒருங்கிணைப்புக்கு பயன்படுத்த எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. சுற்றாடல் அமைச்சின் செயலாளர் பிரபாத் சந்திரகீர்த்தி, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் டபிள்யூ.எஸ். சத்யானந்த உள்ளிட்ட அரச அதிகாரிகள், கடற்படைத் தளபதி, பொலிஸ் மா அதிபர் உட்பட பாதுகாப்புப் பிரிவின் தலைவர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/178881
  24. Akira Toriyama: காமிக்ஸ் உலகில் நீண்ட நாட்களாக ஆதிக்கம் செலுத்தி வரும், உலக அளவில் பிரபலமான ஜப்பானிய மாங்காக்களில் ஒன்றான ட்ராகன் பால் என்ற மாங்கா தொடரை உருவாக்கிய அகிரா டொரியாமா கடந்த மார்ச் 1ஆம் தேதி தனது 68வது வயதில் உயிரிழந்தார். ஒருவகையான மூளை ரத்தக்கசிவு நோயால் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததாக கடந்த வெள்ளிக்கிழமை தகவல் வெளியிடப்பட்டது. தங்கள் குழந்தைப் பருவத்தின் ஓர் அங்கமாக மாறிப்போன கதாபாத்திரங்களை உருவாக்கிய அகிரா டொரியாமாவுக்கு உலகம் முழுவதும் உள்ள அனிமே ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர். உலகம் முழுவதும் பிரபலமான டிராகன் பால் இரு நாடுகளிடையே ராஜ்ஜிய ரீதியிலான சச்சரவு ஏற்படக் காரணமாக இருந்தது என்பதை உங்களால் நம்ப முடிகிறதா? அகிரா டொரியாமா டிராகன் பால் கதையை உருவாக்கியது எப்படி? காமிக் ரசிகர்கள் இடையே அது ஏற்படுத்திய தாக்கம் என்ன? போன்றவற்றை இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.
  25. எங்கட மாமாவுக்கும் இரவில் தான் திருமணம் நடந்தது! தொடருங்கோ சுவி அண்ணா.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.