Everything posted by Kapithan
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
உண்மைச் சம்பவம். 👇 அவர் ஒரு ஆரம்பகால ஆயுதப் போராட்டத்தின் முக்கியஸ்தர்களில் ஒருவர். சுற்றிவளைப்பில் கைதுசெய்யப்பட்டு, ஆனையிறவு, பலாலி, குருநகர் ஐந்து மாடி இராணுவ முகாம்களில் வைத்திருந்து, வெலிகடைக்கும் இறுதியில் மகசின் சிறைச்சாலையில் என ஏறக்குறைய ஐந்து வருடங்கள் சிறையில் கழித்தவர். பின்னர் இடயில் கைவிடப்பட்ட கல்வியைத் தொடர்ந்து ஒரு நல்ல நிலைக்கு வந்திருந்தார். மீண்டும் உயிராபத்து காரணமாக 2000களில் வட அமெரிக்காவிற்கு புலம்பெயர்ந்திருந்தார். அவர் வட அமெரிக்கா வந்து சில மாதங்களில் அவர் தங்கியிருந்த வாடகை வீட்டைத் தட்டிய போராட்டத்திற்கு பணம் சேகரித்த சிலர் போராட்டத்திற்கு பண உதவி செய்யும்படி இவரை கேட்டிருக்கின்றனர. அவரோ, தான் இங்கே வந்து சில மாதங்களே ஆகியிருக்கின்றன. ஆதலால் தன்னால் தற்போது உதவி செய்ய முடியாது என மறுத்திருக்கிறார. வந்தவர்களோ விட்டபாடாயில்லை. தாங்களே ஆயுதம் தூக்கி அடிபட்ட ஆட்கள் என்கிற வகையில் அவிழ்த்துவிட்டதுடன் ஒருவகையில் மிரட்டவும் செய்திருக்கின்றனர். இறுதியில் அவர் தனது சுயரூபத்தைக் காட்டியவுடன் ஓடியவர்கள்தான் இன்றுவரை திரும்பி வரவேயில்லை. 🤣 விசுகர், பத்து பிள்ளை பெற்றவளுக்கு ஒரு பிள்ளை பெற்றவள் முக்கிக் காட்டிய கதைதான் உங்கள் எழுத்தைப் பார்த்தவுடன் நினைவிற்கு வந்தது. ஆமை நூறு முட்டையிட்டும் அமைதியாகச் செல்லுமாம் ஆனால் ஒரு முட்டையிட்ட கோழி கொக்கரித்து ஊரெல்லம் காட்டிக் கொடுக்குமாம். 😏
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) சமஸ்டி தொடர்பாக பேசப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டமைக்கு நன்றி. 2) கருணா உங்களுடன் இருந்தார் /இல்லை, உங்களுடன் என்ன பேசினார் என்பது இங்கே விவாதிக்கப்படவில்லை 3) இதுவும் எங்கள் கரிசனைக்கு உட்பட்டதல்ல. விதைத்து, காவல் காத்து, விளைச்சலை அறுப்பது வீட்டிற்கு கொண்டுவருவதற்கே. இடைவழியில் கள்ளன் அறுத்துவிட்டான், சூட்டிற்கு நெருப்பு வைத்துவிட்டான் என்று கூறுவது கமக்காறனுக்கு அழகல்ல. (கமக்காறன்= ஈழத் தமிழர்)
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) யாரும் போராட்டத்தையோ அதன் வழிமுறையையோ குற்றம் சொல்லவில்லை 2) இலங்கை அரசைத் தவிரஉ வேறு யாரும் இல்லை என்று நினைக்கிறேன். வேறு யாராவது இருக்கின்றனரா? 3) உங்கள் வயதிற்கு ஏற்ற நகைச்சுவை இது அல்ல என்பது என் அபிப்பிராயம்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
ஒஸ்லோ பேச்சின் பின்னணியில் கருணா சமஸ்டியை ஏற்றுக்கொள்ள விரும்பியதாகவும் பேச்சுவார்த்தை நடைபெற்று hotel திரும்பி இலங்கையில் தலைமையுடன் தொடர்புகொண்டபோது கருத்து வேறுபாடு எழுந்தது என்று கதைகள் உலாவியதாக ஞாபகம். (இப்ப நீங்கள் தாழிச்சுக் கொட்டுங்கோ) கந்தையர் நாய் கறிச்சட்டியை கவ்விக்கொண்டு கொல்லையைச் சுத்தி ஓடுறமாதிரி ஓடுவாரே தவிர, ஒரு உருப்படியா ஒன்றையும் சொல்ல மாட்டார்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
கந்தையா போராட்டமும் வேண்டாம், பேச்சுவார்த்தையும் வேண்டாம், சும்மா குந்தொயிருப்போம் என்கிறீர்கள். 😩
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
""புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியது இலங்கை அரசாங்கம் தீர்வுகள் தரமாட்டார்கள் என்பதை சர்வதேசத்துக்கு எடுத்து காட்டவே "" இது தாங்கள் எழுதியது 👆 பாம்புக்கு வாலும் மீனுக்குத் தலையும் காட்டுவோர் போராட்டத்தைப்பற்றிக் கதைக்கவே தகுதியில்லை என்பது என் கருத்து
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
புலனாய்வு பல்வேறு படிநிலைகளைத்தாண்டி எங்கோ சென்றுவிட்டது. அம்பானியிடம் சென்றால் என்ன லைக்காவிடம் சென்றால் என்ன அவற்றிடையே பாரிய மாற்றன்கள் ஏது இல்லை என்பது என் கருத்து. ஆனால் இந்தத் துறைகளைப் பயன்படுத்தித்தான் பல colour revolution களை செய்கிறார்கள் என்பது உண்மை. இதனால் சிறிய நாடுகள் தொலைத்தொடர்புத்துறையை தங்களின் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான் பாதுகாப்பானது.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
வெளி உலகத்துக்கு காட்டுவதற்குத்தான் போராட்டமா? 😏
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
(தேவையற்ற) குற்றவுணர்ச்சி/பயம் ? வேறு எதுவாக இருக்க முடியும்? ஆரோக்கியமான ஆய்வுக்கு எல்லோரும் உண்மைகளையும் தங்கள் கருத்துக்களையும் வெளிப்படையாகக் கூற வேண்டியது அவசியம்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
இத்தனை தியாகங்களைச் செய்தவர்கள் மீது யாரும் குற்றம் சொல்லிவிடக்கூடாது என்கிற நியாயமான பயம் இருப்பது புரிந்துகொள்ளக் கூடியதே.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) மெலிதாகக் கிளறுவதுதானே ...🤣 2) நாங்கள் யார்? சிங்களத்தை முட்டாள் என்று சொல்லிக்கொண்டே ஏமாறும் ஆட்களெல்லோ நாங்கள் 🤣
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) இந்த ஆலோசனைகளை யார் விபு க்களுக்குக் கொடுத்தது (நிச்சயம் இலங்கையில் உள்ளவர்கள் அல்ல) 2) முதல் இரு பேச்சுவார்த்தைகளின் பின்னரும் ஆயுத, தளபாட பண வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தவர்களின் பின்ணனியில் இருந்தவர்கள் யார்? 3) இது விபு க்களுக்குத் தெரியாதா? சாதாரண பொதுமக்கள் உணரத் தலைப்பட்ட ஒரு விடயத்தை போராளிகள் உணரவில்லை என்று கூறுவதுபொருத்தமற்றது. அப்படியாயின் போராளிகளை இந்த முடிவிற்குத் தள்ளியது யார்?
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
ஏமாத்திவிட்டார்களென்றால் நாங்கள் ஏமாளிகள் என்று பொருள். ஏற்றுக்கொள்கிறீர்களா? "சிங்கலெயா மொடயா, கவும் கன்ட ஜோதயா" என்று கூறிக் கூறியே எம்மை நாம் முட்டாளாக்கியதுதான் இறுதியில் நாம் கண்டது.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
1) நீங்கள் சேர்ந்து நடந்தவர் என்பதால் பிறரைச் சேர்ந்து நடக்காதவர் என்று தீர்ப்பிடும் தகுதி உங்களுக்கு இல்லை 2) நீங்கள் யார் அதைத் தீர்மானிக்க? 3) தீர்மானம் எடுக்கும் அதிகாரம் உங்களுக்கு ஒருவராலும் வழங்கப்படவில்லை. கோபத்தில் நிதானம் இழப்பது மூத்தவரிற்கு அழகு அல்ல.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
உங்கள் வயதுக்கும், அனுபவத்திற்கும், உங்களுக்கு இருக்கும் பொறுப்பிற்கும் உங்களின் எழுத்துக்கும் தொடர்பேயில்லை.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
பிரச்சனையின் ஆரம்பமே நீங்கள்/நாங்கள் மட்டுமே விடுதலைப் போராட்டத்தின் மொத்த குத்தகைக்காறர் எனும் சிந்தனைதான். விபு க்களுடன் பேச்சுவார்த்தை குழுவினருக்கு நெருக்கமாக இருந்தவர் என்று கூறியபடியால்தான் உங்களிடம் கேட்டேன். அதற்கு பதில் தரக்கூடிய ஆளுமை/விபரம் உங்களிடத்தில் இல்லை என்றால் விட்டுவிடுங்கள்.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
தமிழ்த் தேசியப் போராட்டத்தை தமிழ்த் தேசியப் போராட்டமாகப் பாருங்கள். விபு களின் போராட்டமாகச் சுருக்காதீர்கள். விபு கள் என்பதற்கு வெளியே பாருங்கள். புண்ணியமாகப்போகும். உண்மையப் பேசுங்கள். அது உங்கள் கடமை.
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
தொலைத் தொடர்பு தேசிய பாதுகாப்புக்கானது எனும் கருதுகோள் பழையதாகிவிட்டது.
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
என/எங்கள் பார்வை பிழையாக வாய்ப்பு இருப்பதனால்தான் உங்கள் நேர்மையான பார்வையைக் கேட்கிறேன் / கேட்கிறோம். உண்மையைச் சொல்ல வேண்டியது உங்கள் கடமை. கேட்கபது எங்கள் உரிமை. (அடிச்சா மோட்டை , விட்டா குடும்பி என்கிற ரீதியில் போகிறது உங்கள் கருத்து. )
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
உங்கள் கூற்றைப் பார்த்தால் பேச்சுவார்த்தை என்பது இனப்பிரச்சனையை தீர்க்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக இரு தரப்பும் தங்களை equal ஆக நடாத்தப்பட வேண்டும் என்பதில்தான் அதிக கவனம் செலுத்தினார்கள் என்பது போல இருக்கிறது.
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
குட்டு வேண்டினாலும் மோதிரக் கையால் குட்டு வேண்ட வேண்டும். 😁
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
பேச்சுவார்த்தைக் குழுவினரோடு நேரடித் தொடர்பிலிருந்த விசுகு அவர்கள் தயவு செய்து நேர்படப் பேச வேண்டும்.
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
போட்டி லைக்காவிற்கும் அம்பானிக்கும்தான். லைக்கா வெற்றி பெறுகிறதோ இல்லையோ லைக்காவுடன் அம்பானி போட்டிக்கு வந்ததே பெரிய விசயம்தானே 🤣
-
பிக்குகள் மாத்திரம் காவி உடையணியும் சட்டம் வேண்டும்: ஒரு சில தேரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது! - உதய கம்மன்பில
அது வேற இது வேற ....😁
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
லைக்கா பாஸ்கரனைக் கூப்பிடுங்கள்.