Everything posted by Kapithan
-
தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
இலங்கைத் தமிழர் இந்தியாவின் பங்குதாரர் அல்ல.
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
100% ✅
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
முயற்சிகளுக்கே இப்படிப் பயந்தால் ... 🤣
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
நீங்கள் எதை கூறினாலும் முடிவெடுக்கும் அதிகாரம் நிலத்திலுள்ள மக்களுக்கு மட்டுமே இருக்கிறது. பொருளாதார அகதிகளுக்கு அல்ல. புதிய புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும். என்றோ ஒருநாள் முயற்சி கைகூடும். உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. 😉
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
எது தவறு?
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
உங்கள் ஊர்க் கட்டுப்பட்டை நீங்கள் மீறினால் அதற்கு எதிர் விளைவுகள் உண்டு. அதற்குத் தாங்கள் உடன்படவில்லையென்றால் ஊரைவிட்டு வெளியேற வேண்டும், எங்களைப்போல (அகதிகளாக 😉). அத்துடன், ஊருக்கு ஊர் (ஊர் நலனை முன்னிட்ட) கட்டுப்பாடுகள் வேண்டும் என்பது என் நிலைப்பாடு.
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
இந்த முயற்சி தோற்றால் இன்னும் பல புதிய நூறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ,மேற்கொள்ளப்படுகின்றன. இங்கே கேள்வி புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படலாமா என்பதுதான். அதற்குப் பதில் ஆம் என்பதே. அவை எல்லாம் வெற்றிபெறுமா? முயற்சிகள் எல்லாமே வெற்றிபெறும் என்று கூற முடியாது. ஆனாலும் தொடர்ந்து முயற்சிக்கப்படும். 13ம் திருத்தம் +இந்திய இலங்கை உடன்படிக்கை + விபு காலத்திலான சமஸ்டி என்பன முயற்சிகளின் பலன்களே. பலனை அறுவடை செய்யத் தெரியாமல் கோவணத்தையும் களற்றிக்கொடுத்ததற்கு மிகவும் முக்கிய காரணம் புலம்பெயர் பொருளாதார அகதிகளே. 😏
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
1) ""நீங்கள்சிறுபான்மையினர் எமது அனுமதி இன்றி செய்ய முடியாது என்று கூறப்படடதாம்"" இப்படி நீங்களே எழுதினீர்கள. தற்போது அதனை மறுப்பதும் தாங்களே. 2) நாங்கள் என்று கூறுகிறீர்களே, யார் யாரெல்லாம் அந்த "நாங்கள் " என்பதற்குள் அடங்குகின்றனர்? ஊர்க் கட்டுப்பாடு தொடர்பாக எனது கருத்திற்கு தாங்கள் எதுவும் கூறவில்லையே,.... ஏன்?
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
நிலத்திலுள்ள மக்களுக்கு நன்மை நடக்குமானால் எந்த முயற்சியும் வரவேற்கத் தக்கதே. முயற்சிகளைத் தடுக்கும் எந்த உரிமையும் புலம்பெயர் டமில்ஸ்சுக்கு இல்லை. தனக்கு எது தேவை என்பதை நிலத்தில் உள்ளவர்களே தீர்மானிக்க வேண்டும். தீர்மானிப்பார்கள். (அல்லது தீர்மானித்து வைக்கப்படும்). அந்த உரிமை பொருளாதார அகதிகளுக்கு இல்லவே இல்லை. அதிலும் குறிப்பாக, போராட்டத்திற்குச் சேகரிக்கப்பட்ட பணத்தை பதுக்கு வைத்திருக்கும் எலிகளுக்கு அப்படி ஒரு உரிமையும் இல்லை. 👍
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
தனிமரம் தோப்பாகாது 🤣
-
தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட இமயமலைப் பிரகடனத்திற்கு சுவிட்ஸர்லாந்து நிதியுதவி.
குரைக்கிற நாய் கடிக்காது என்பது பேச்சு வழக்கு. ஆதலால் அதிகம் யோசிக்க வேண்டியதில்லை. 🤣 இராசதந்திரமா ? அப்படீன்னா என்னா ? ""தமிழர்களால் நிராகரிக்கப்பட்ட"" நிராகரித்த தமிழர்களா? யாரப்பா அந்த நிராகரித்த டமில்ஸ்? தலயங்கமே அமர்க்களமாக இருக்கிறது. 🤣
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
எப்படி? தலை கீழாகவா? 😀
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
எனது கேள்விகள் எனக்கு மூக்கு போனாலும் பிரச்சனை இல்லை, எதிரிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் எனும் ஆட்களுக்கு எரிச்சலை மூட்டுவதாய் இருக்கும் என்பது மட்டும் நிச்சயம். 🤣
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
கேள்வி கேட்பவரின் commonsense மற்றும் அரசியல் அறிவு என்பன பிரமிக்க வைக்கிறது. ஊடகத்துறையில் உள்ள ஒருவரது நிலைமையே இப்படி இருக்கும்போது, எந்த ஒரு நன்மையும் இலங்கைத் தமிழருக்கு கிடைத்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கும் வெளிநாடு வாழ் கனவான்களின் நிலைமையை நொந்து என்ன பயன்? 😏
-
வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
அதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. ஆனால் அதற்கு முன்னர் சிங்களப் பொதுமக்கள் முழங்காலில் இருத்தி எழுப்பப்பட வேண்டும். தவிர, வெளிநாடு வாழ் ஈழத்தமிழ் கடும்போக்குவாதிகளின்(யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாத) குரலும் மட்டுப்படுத்தப்பட வேண்டும்.
-
வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
மேற்கு நாடுகளின் நிர்வாகக் கட்டமைப்பிற்கான அடிப்படை மாற்றங்கள் எல்லாம் படிப்படியாக அங்கே கொண்டுவரப்படுவதற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே ஆரம்பமாகிவிட்டன. இதில் தாங்கள் குறிப்பிடும் Social Insurance Number அங்கே நிச்சயமாக வரும். தற்காலிகமாக அதற்காக NIC இலக்கத்தை பாவிப்பது என்பதுதான் தீர்மானம்.
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
ஊர்க் கட்டுப்பாடு என்று வரும்போது மன்னாரில் அது மிகவும் அதிகம். ஊர்க்கட்டுப்பாட்டை மீறும்போது எலஎல்லாம் சாத்தியம்தான். அதற்காக தமிழ் மக்களுக்கான மறைந்த இராயப்பு அடிகளாரின் சேவையை குறைத்து மதிப்பிட முடியாது.
-
இந்திய உணவு விநியோக ஓட்டுநர் குதிரைக்கான வழக்கமான போக்குவரத்து முறையைத் தள்ளிவிட்டார்.
அவர்களின் உணவே சட்னியும் சாம்பாரும் தானே? 🤣
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
தமிழ்த் தேசியம் தொடர்பான ஆயரின் செயற்பாட்டில் தங்களுக்கு சந்தேகம் இருக்கிறது? இந்தச் சம்பவம் உண்மையில் நடைபெற்றதா என்று அவரது கல்லறையைத் தட்டித்தான் கேட்க வேண்டும். ஏனென்றால் அந்தச் சம்பத்தில் ஆயரின் பதிலை மூன்றாந் தரப்பினூடாகத்தான் தாங்களும் கேட்டிருக்கிறீர்கள்.
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
நீங்கள் கூறும் விடயம் பெண்களின் மேலுதட்டிற்கும், மேலுதட்டுக்கு மேலிருக்கும் பூனை மயிர் மீசைக்கும் இடையிலான இடைவெளிதான். இதனை மிகவும் அவதானமாகத்தான் கையாள வேண்டும். 😉 👇 விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்குத் தடையேதும் இல்லை. ஆனால் வன்முறைக்கு ஆதரவளிக்கும் செயற்பாடுகளிற்கு ஆதரவளிக்க முடியாது என்பதுதான் அவர்கள் நிலைப்பாடு.
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
இதுவும் ஒரு நோக்கமே.
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
கப்பலில் வந்த பலரின் நிலை இப்படித்தான். கப்பலில் பயணிகளுக்கு பரஸ்பரம் உதவியோரின் நிலையும் இதுதான். தேனீருக்கு சுடுதண்ணீர் வைத்தோர், பரஸ்பரம் உதவியோர் பலர் ஆட்கடத்தலுக்கு உடந்தை என்று குற்றச்சாட்டின் கீழ் பிரச்சனைகளை எதிர் கொண்டனர். உண்மை. ஆனாலும் நான் விபு வில் இருந்தேன், அவர்களது போராட்ட வழிமுறையை ஆதரித்தேன் என்று பகிரங்கமாக அல்லது மறைமுகமாகக் கூறினால் அவர்களது அகதிக் கோரிக்கையில் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும்.
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
இது பரவலாக எல்லோராலும் கூறப்படும் ஒரு குற்றச்சாட்டாயினும் (நானுட்பட ), அதற்கு போதிய ஆதாரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.
-
ஈழத்தமிழா, என்னதான் தீர்வு?
சாதி மத பேதங்கள் என்பன ஒற்றுமைக்கு முன்மாதிரியானவையா?
-
விடுதலைப்புலிகள் செயற்பாட்டாளர்கள் கனடாவில் தஞ்சம் கோருவதில் சிக்கல்.
மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சைப் போடாதேயுங்கோ, புண்ணியமாப் போகும். 🙏