Everything posted by Kapithan
-
சிறீதரனுக்கு சுமந்திரன் அனுப்பிய கடிதம்
- ‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. தென்னாசியாவில் மெல்ல மெல்லத் தீவிரமாகிவரும் மத சகிப்புத்தன்மை இன்மைக்கு இந்தத் தீர்ப்பு ஒரு முன்னுதாரணம்.- வெளிநாட்டுக் குடியுரிமை வழங்குவது குறித்து இலங்கை பரிசீலிக்க வேண்டும்- மனோ கணேசன்
ஏற்கனவே உள்ள இரட்டைக் குடியுரிமை முறைக்கு என்ன பிரச்சனை?- கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
பப்புவா நியூகினியாவிற்கு ...😁- ‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
நாகரீக வளர்ச்சியில் நிற்பவர்கள் சுனி முஸ்லிம்கள்தான் கடைக்கோடியில் நிற்கிறார்கள் என்று பார்த்தால் இந்திய இந்துக்கள் அவர்களுடன் போட்டி போடுகின்றனர். 🤨 சைவ சமயத்திற்கும் தடையா? 🥺- கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
முகப்புத்தகச் செய்திதானே .....😏 இப்படியான நடவடிக்கைகள் தொடர்ந்தால் உலகத் தமிழர்களாக ஒன்றுபட்டு என்ன விலை கொடுத்தாவது அதை முறியடிப்போம். கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத கனேடிய டமில்ஸ் வானம் ஏறி வைகுண்டம் போவது என்பது சும்மா பேச்சுக்குத்தான் ....😏- கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
எல்லாமே மோடர் கூடம். கனடாவிற்கு வந்தும் திருந்தாத கூட்டத்தின் அங்கத்தவர் எண்ணிக்கை மிக மிக அதிகம். ☹️ இந்த எரிப்பு செயற்கையாக இருக்குமானால் அது, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்ள எத்தனிக்கும் அனைவருக்குமான எச்சரிக்கையாகத்தான் இருக்க முடியும். இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை ஒன்று ஆரம்பமானால் அதனால் யாருக்கு நட்டம். ?- மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
1) ஓரளவு உண்மை. மேற்குலகு மனித உரிமையை தனது தேவைக்காக மட்டுமே பாவிக்கிறது என்பது நூறு வீதமும் உண்மை. ஆனால் மனித உரிமையை நாம் எமக்கான ஆயுதமாக ஓரளவிற்க்கேனும் பாவிக்க முடியும். 2) ஒரு சிங்கள அமைச்சராக இருந்திருந்தால் நாம் இவ்வாறு எதிர்வினையாற்றுவோம?- மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம் - அமைச்சர் டக்ளஸ்
1) இலங்கை அரசின் அமைச்சர் ஒருவர் வேறு எப்படிக் கூற முடியும்? சர்வதேச விசாரணையை ஆதரித்து அறிக்கை விட்டிருந்தால்தான் அது செய்தி. 2) அவரை நாங்கள் தமிழராக மட்டும் பார்ப்பதால்தான் இவ்வாறு எதிர்வினையாற்றுகிறோம்.- ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
1) ✅ 2) ✅ ஆனாலும் இது அவருடைய தலைமைத்துவத்திற்கு தகுதியற்ற செயல்.- கனேடிய தமிழர் பேரவை அலுவலகம் மீது தாக்குதல்...! விசாரணை தீவிரம்
Suren Surenthiran London ல் இருப்பதால் அவர் தப்பிப் பிழைத்தார். யாழ் களத்தில் துரோகியாக முத்திரை குத்தப்படுபவர்களின் நிலை ......🥺- ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு 115-வது இடம்
தற்போது இலங்கையில் இருந்து கனடாவிற்கு Visit visa வில் பயணம் செய்யும் ஒவ்வொருவரையும், குறிப்பாக தனியாகச் செல்லும் இளைஞர் யுவதிகள் எல்லோரையும் மிரட்டிக் கப்பம் பெறும் செயற்பாட்டில் இலங்கைக் குடியகல்வு குடிவரவு அலுவலர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.- இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ச்சும்மா .....😁 Indian Army massacre at Jafana Hospital Sri Lanka: look back after 36 years Sri Lankan government officially categorized the Jaffna Massacre as grave crime against humanity | SAMAA WEB DESKOct 21, 2023 Photo: File Stay Connected, Stay Informed - Follow SamaaTV on Whatsapp for Real-time Updates! It's been 36 years since the Indian military carried out a horrifying massacre at Jaffna Hospital in the city of Jaffna, Sri Lanka on October 21, 1987. According to eyewitness accounts cited by Tamil Guardian, Indian troops systematically conducted the massacre within the hospital premises, resulting in the tragic deaths of 47 innocent Tamil patients and 21 doctors, all of whom were ruthlessly killed. In 2008, the Sri Lankan government officially categorized the Jaffna Massacre as a grave crime against humanity. Prior to this event, in 1987, the Indian military had been involved in similar incidents, such as the killing of 64 civilians in Welikada, 40 in Chavakachcheri in 1988, and over 40 innocent individuals in Kokkuvil in 1989. The Tamil community, in response to these brutal actions, referred to the Indian Peace Keeping Force as the "Indian People Killing Force." These atrocities ignited a wave of anger, leading the Tamil people to seek retribution and ultimately compelling the Indian military to withdraw from the country. In 1991, the individual who attempted to assassinate Rajiv Gandhi was Kalaivani Rajaratnam, who was of Tamil descent and had been ganged raped by Indian military, Tamil Guardian reports. Tamil Guardian also reported that the Indian military's involvement in Sri Lanka resulted in severe human rights violations, including incidents of looting, massacres, and various social injustices, leaving a lasting scar on their reputation. https://www.samaa.tv/208733006-indian-army-massacre-at-jafana-hospital-sri-lanka-look-back-after-36-years- ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!
Passport க்கு வழி பாருங்க அப்பு. மிகுதியை பின்னர் பார்க்கலாம். NEED தேர்வுகளை நீக்கும்படி தமிழ்நாடு மாநில அரசு மத்திய அரசுக்கு கடிதம் எழுதும் விளம்பர யுக்தியை இவர் தொட்டிருக்கிறார்? முன்னாள் தலைமை நீதிபதி விக்கியர், கொலைக் குற்றவாளி பிறேமானந்தாவை விடுதலை செய்யும்படி மோடிக்குக் கடிதம் எழுதும்போது சிறீதரன் எம்மாத்திரம்? 😏- மகாத்மா காந்தியின் 76 ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிப்பு!
மகாத்மா காந்திக்கும் மட்டக்களப்புக்கும் என்ன சம்பந்தம் ?- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
https://www.nillanthan.com/180/ அரசியல் கட்டுரைகள் By Nillanthan - 10 years ago 714 Less than a minute Google+WhatsappShare via Email சிங்கள மக்கள் மத்தியில் அதிகம் பிழையாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு வார்த்தை சமஷ்டி எனலாம். அதுபோலவே தமிழர்கள் மத்தியில் சரியாகப் புரிந்துகொள்ளப்படாத ஒரு வார்த்தை தேசியம் எனலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் இரண்டு கட்சிகளின் பெயர்களில் தேசியம் என்ற வார்த்தை உண்டு. இப்பொழுது மாகாண சபைத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போதும் தேசியம் என்ற வார்த்தை அடிக்கடி பிரயோகிக்கப்படுகின்றது. இதில் கூட்டமைப்பில் உள்ள தீவிரமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் பற்றிக் கதைக்கிறார்கள். மிதமானவர்கள் போலத் தோன்றுபவர்களும் தேசியம் கதைக்கின்றார்கள்.குறிப்பாக இணையத் தளப் பிரசாரங்களில் ‘‘தேசியம் வெல்ல வாக்களிப்போம்” என்றெல்லாம் சுலோகங்கள் வருகின்றன. சில மாதங்களிற்கு முன்பு எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நினைவு நாள் கொண்டாடப்பட்டபோது யாழ். நகரில் அவருடைய நினைவுத்தூபியைச் சுற்றியிருக்கும் மதிலில் கட்டப்பட்டிருந்த ஒரு பதாகையில் ‘‘தேசியத் தந்தை” என்று எழுதப்பட்டிருந்தது. எனக்குத் தெரிந்த சில இளம் ஊடகவியலாளர்களிடம் ஒரு நாள் கேட்டேன், உங்களுடைய ஊடகக் கொள்கை எது என்று. தேசியத்தைப் பாதுகாத்தால் சரி என்று சொன்னார்கள். நான் தொடர்ந்து கேட்டேன், ‘‘தேசியம்” என்றால் என்ன? என்று. அவர்களால் துலக்கமான பதிலைச் சொல்ல முடியவில்லை. அவர்கள் மட்டுமல்ல இன்று தமிழ் மக்கள் மத்தியில் உள்ள தீவிர தேசியவாதிகள் என்று அடையாளப்படுத்தப்படும் பலரிடமும் இக்கேள்வியை நான் கேட்டிருக்கிறேன். தேசியம் என்றால் என்ன? என்று. அவர்கள் கூறிய பதில்கள் வருமாறு…….. ஒரு பகுதியினர் சொன்னார்கள் அது ஒரு இனமான உணர்ச்சி என்று. இன்னொரு பகுதியினர் சொன்னார்கள், அது அடக்குமுறைக்கு எதிரான இன எதிர்ப்புணர்ச்சி என்று. வேறு சிலர் சொன்னார்கள் அது தம்மை ஒரு தேசமாகக் கட்டமைத்துக் கொள்ள முற்படும் ஒரு மக்கள் கூட்டத்தின் திரட்டப்பட்ட உணர்ச்சி என்று. மேற்கண்ட பதில்களனைத்தையும் தொகுத்து அவற்றின் சாராம்சத்தின் அடிப்படையிற் கூறின் தேசியம் என்று அவர்கள் விளங்கி வைத்திருப்பது இனமானம் சார்ந்த ஒரு கூட்டு எதிர்ப்புணர்ச்சிதான். இது சரியா? அல்லது தேசியம் எனப்படுவது அதைவிட அழமானதா? தேசியம் எனப்படுவது அதைவிட ஆழமானதுதான். அது அதிக பட்சம் அறிவுபூர்வமானது. அதைவிடக் குறைந்த அளவே உணர்சசிகரமானது. ஆனால், பிரயோக நிலையில் அது அதிகபட்சம் உணர்ச்சிகரமானதாகவே காணப்படுகிறது. இக்கட்டுரையானது தேசியம் தொடர்பான புலமைசார் கோட்பாடுகளிற்குள் அதிகம் இறங்கப்போவதில்லை. ஒரு வாரப் பத்திரிகை அதற்குரிய இடமுமல்ல. பதிலாக, தேசியத்தை அதன் பிரயோக வடிவத்தில் வியாக்கியானம் செய்யும் அல்லது வரை விலக்கணம் செய்யும் ஒரு முயற்சியே இது. தூயதேசியம் பற்றியல்ல பிரயோக தேசியம் பற்றியே இங்கு உரையாடப்படுகின்றது. ஒரு தொடர் விவாதத்திற்கான தொடக்கப்புள்ளியாக இதை எடுத்துக் கொள்ளலாம். சரி. தேசியம் என்றால் என்ன? தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுப் பிரக்ஞை ஆகும். எந்தவொரு பொது அடையாளத்தின் நிமித்தம் ஒரு மக்கள் கூட்டம் பெருமைப்படுகின்றதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பேரால் ஒரு மக்கள் கூட்டத்தை ஒரு அரசியற் சக்தியாகத் திரட்டக் கூடியதாக உள்ளதோ அல்லது எந்தவொரு பொது அடையாளத்தின் பெயரால் ஒரு மக்கள் திரள் ஒடுக்கப்படுகின்றதோ அல்லது அவமதிக்கப்படுகின்றதோ அந்த ஒரு அல்லது பல பொது அடையாளங்களின் பாற்பட்ட ஒரு கூட்டுப் பிரக்ஞையே தேசியம் என்பதாக பிரயோக நிலையில் காணப்படுகின்றது. 19ஆம் நூற்றாண்டின் மேற்கத்தையே நாகரிகத்தை அங்கு தோன்றிய தேசிய அலைகளே பெரிதும் வடிவமைத்தன. கைத்தொழில் புரட்சியின் விளைவாக ஏற்பட்ட தொடர் வளர்ச்சிகள் காரணமாக போக்குவரத்துத் துறையில் வசதிகள் பெருகின. இதனால் வாழ்க்கை இலகுவாக்கப்பட்டது. சமுகம் ஒன்று திரட்டப்பட்டது. அச்சு இயந்திரத்தின் வருகையோடு அறிவும் தகவல்களும் முன்னெப்பொழுதையும்விட அதிகரித்த அளவிலும் அதிகரித்த வேகத்திலும் பரிமாறப்பட்டன, மக்கள் மயப்பட்டன. இவ்விதமாக தகவலும், அறிவும் மக்கள் மயப்பட்டு வந்த ஒரு பின்னணியில் சமூகமானது விரைவாக ஒன்று திரட்டப்பட்டு, சமூக ஊடாட்டம் முன்னெப்பொழுதையும் விட வேகமாக நிகழ்ந்தபோது அங்கெல்லாம் தேசிய அலைகள் எழுச்சி பெறலாயின. அதாவது மக்களின் கூட்டுப் பிரக்ஞையானது விழிப்படைந்து சிலிர்த்தெழலாயிற்று. அமெரிக்க சுதந்திரப் போர், பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாகத் தோன்றிய மூன்றாவது நெப்போலியனின் ஆட்சிக் காலம், இத்தாலியின் ஒருங்கிணைப்பு, ஜேர்மனியின் ஒருங்கிணைப்பு மற்றும் ரஷ்யாவில் மேற்கொள்ளப்பட்ட நவீன மயமாக்கல் செயற்பாடுகள் போன்ற திருப்பகரமான மாற்றங்கள் எல்லாவற்றையும் அங்கு தோன்றிய தேசிய அலைகளே பெரிதும் வழி நடத்தின. ஒருங்கிணைக்கப்பட்ட ஜேர்மனியும், இத்தாலியும் ஐரோப்பாவில் இரு பெரும் புதிய சக்திகளாக எழுச்சி பெற்றன. இதனால் ஐரோப்பாவின் வலுச் சமநிலை குலையலாயிற்று. இருபதாம் நூற்றாண்டில் வெடித்த இரு உலகமகா யுத்தங்களிற்கு இதுவும் ஒரு காரணம். மேலும் நாஸிஸம், பாஸிஸம் போன்ற விகார வளர்ச்சிகளையும் இந்தப் பின்னணியில் வைத்து வியாக்கியானம் செய்வோரும் உண்டு. மேற்கைரோப்பாவானது பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஏற்பட்ட யுத்தங்களிற்; கூடாக தேசிய அலைகளைக் கடந்து வந்தபோதிலும்கூட அதை அதன் சரியான பொருளிற் கூறின் இரண்டாம் உலக மகா யுத்தத்துடன்தான் அது பெருமளவுக்குச் சாத்தியமாகியது எனலாம். ஆனால், கிழக்கைரோப்பாவானது அதற்கும் பல தசாப்தங்களின் பின்னரே அதைக் கடந்தது. மார்க்சியத்தின் எழுச்சியையடுத்து தேசிய அரசுகளைக் கடந்து சர்வதேசியம் பற்றிய ஒரு சிந்தனை பலமாகவும் தூலமாகவும் ஸ்தாபிக்கப்பட்டுவிட்டதற்கும் பின்னரே கிழக்கைரோப்பா அதன் தேசிய அலைகளைக் கடந்துவந்தது. கெடுபிடிப் போரின் முடிவையடுத்து கிழக்கைரோப்பாவில் தோன்றிய தேசிய அலையானது ஒருபுறம் அங்கே புதிய அரசுகளைத் தோற்றுவித்தது. மறுபுறம் மிகப்பயங்கரமான கொலைக் களங்களைத் திறந்துவிட்டது. முடிவில் நேட்டோ விரிவாக்கத்தின் பின்னணியில் அங்கு பெருமளவிற்குத் தேசிய அலைகள் கடக்கப்பட்டுவிட்டன. ஆனால், அமெரிக்க ஐரோப்பிய அனுபவமும் ஆசிய, ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க அனுபவங்களும் ஒன்றல்ல. ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பலவற்றில் இப்பொழுதும் தேசிய உணர்ச்சிகள் எரிபற்று நிலையிற்தான் காணப்படுகின்றன. ஐரோப்பாவின் தேசிய அலையெனப்படுவது அதன் இயல்பான சமூகப் பொருளாதார வளர்ச்சிப் போக்கில் திரண்டெழுந்த ஒன்றாகும். ஆனால், ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகளின் நிலைமை அவ்வாறில்லை. இங்கெல்லாம் இருபதாம் நூற்றாண்டின் தேசிய எழுச்சிகளில் அநேகமானவை வெளியாரின் ஆக்கிரமிப்புக்கு எதிரானவைதான். அதாவது காலனிய ஆதிக்கத்திற்கு எதிரான சுதந்திரப் போராட்டங்கள்தான். ஆசிய ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க அனுபவங்களைப் பொறுத்தவரை இங்கு தோன்றிய அநேகமான தேசிய எழுச்சிகள் ஏகாதிபத்தியத்துக்கு எதிரானவை அல்லது ஒடுக்குமுறைக்கு எதிரானவை என்பதற்காக முற்போக்கானவைகளாகக் கருதப்பட்டன. எனினும்;, தேசிய எழுச்சிகளுக்குப் பின்னாலிருந்த கூட்டுப் பிரக்ஞைகள் யாவும் எல்லாக் களங்களிலும், எல்லாக் காலங்களிலும் எல்லா நிலைமைகளின்போதும் முழு அளவிற்கு முற்போக்கானவைகளாகத்தானிருந்தன என்பதற்கில்லை. ஏனெனில், ஒரு மக்கள் திரளின் கூட்டுப் பிரக்ஞையானது அதன் வேர் நிலையில் முற்போக்கானதாகத்தான் இருக்க வேண்டும் என்பதிற்கில்லை. அது குறிப்பிட்ட சமூகத்தின் சமூகப் பொருளாதார, பண்பாட்டு வளர்ச்சிகளின் பாற்பட்ட ஒன்றாகும். சில சமூகங்களில் அக்கூட்டுப் பிரக்ஞையானது ஒரு இனப்பிரக்ஞையாகவோ அல்லது மொழிப் பிரக்ஞையாகவோ இருந்தது. சில சமூகங்களில் அது மதப் பிரக்ஞையாகவோஅல்லது பிராந்தியப் பிரக்ஞையாகவோ காணப்பட்டது.அதன் வேர்கள் மிகப்புராதன காலமொன்றின் இருண்ட இடுக்குகளிற்குள்ளிருந்து புறப்பட்டு வரக்கூடும். அந்தந்தக் களத்திற்குரிய தனித்துவமான தேசிய சூழலுக்குட்பட்டு சில சமயங்களில் அது இனவெறியாகவோ, மொழிவெறியாகவோ அல்லது மதவெறியாகவோ அல்லது வேறெந்த வெறியுமாகவோ உருவாக முடியும். ஒரு சமூகத்தின் சமூகப் பொருளாதார பண்பாட்டுச் சூழலே அதைப் பெரிதும் தீர்மானிக்கின்றது. ‘‘கருத்து மக்களைப் பற்றிக் கொண்டால் அது சக்தியாக உருவெடுக்கும்” என்று மார்க்சியர்கள் கூறுவார்கள். ஆனால், கசப்பான யதார்த்தம் எதுவென்றால், கருத்து மக்களைப் பற்றிக்கொள்ள முன்பு, மதம், மொழி, இனம் போன்ற இன்னோரன்ன எப்பொழுதும் எரிபற்று நிலையிலிருக்கும் விவகாரங்கள் விரைவாக பொதுசனங்களைப் பற்றிக் கொள்கின்றன என்பதுதான். குறிப்பிட்ட சமூகத்தின் அகஜனநாயகச் சூழல் பண்பாட்டுச் செழிப்பு மற்றும் அடக்கு முறையின் தீவிரம், அனைத்துலகச் சூழல் போன்ற காரணிகள் இதைப் பெரிதும் தீர்மானிக்கின்றன. எனவே, ஒரு தேசிய பிரக்ஞையானது பொதுவாக அதன் வேரில் அதிகபட்சம் உணர்ச்சிகரமான விவகாரங்களால் கட்டமைக்கப்பட்டிருக்கக்கூடும். இந்த இடத்தில்தான் குறிப்பிட்ட தேசிய பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்பு அல்லது கட்சியின் முக்கியத்துவம் பற்றிக் கூறவேண்டியிருக்கிறது. பொதுசனங்கள் எப்பொழுதும் உணர்ச்சிகரமான விவகாரங்களின் பின்தான் செல்கின்றார்கள். சிக்கலான கோட்பாடுகளை விடவும் உணர்ச்சிகரமான சுலோகங்கள் அவர்களை இலகுவாகப் பற்றிக்கொள்கின்றன. இடதுசாரி அரசியலிலும் இதுவே நடந்தது. ஆனால், அந்த அரசியலுக்குத் தலைமை தாங்கும் அமைப்பும், அதன் பிரதானிகளும் கோட்பாட்டு விளக்கத்துடனிருக்க வேண்டும். கோர்பச்சேவ் ஒரு முறை சொன்னார். லெனினிற்குப் பின் சோவியத் யூனியனின் உயர் பீடத்தில் லெனின் அளவுக்கு புத்திஜீவிகள் தலைமைப் பொறுப்பிலிருக்கவில்லை என்று. இந்த உலகத்தின் அறிவனைத்தையும் கிரகித்துக் கொண்டால் தவிர ஒரு மார்க்சிஸ்டாக இருக்க முடியாது என்று மாரக்;சிய மூலவர்கள் கூறுவதுண்டு. சாதாரண ஜனங்களால் இது முடியாது. அவர்களை இயன்றளவுக்கு அரசியல் மயப்படுத்தலாம். ஆனால், தலைமைத்துவம் கட்டாயமாக கோட்பாட்டுத் தெளிவுடன் இருக்க வேண்டும். பிளாட்டோ இதைத்தான் வேறு வார்த்தைகளில் ‘‘ஞானிகளே தலைவர்களாக இருக்க வேண்டும்” என்றார். எனவே, ஒரு சமூகத்தின் தேசியப் பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்பானது குறிப்பிட்ட கூட்டுப் பிரக்ஞை அதன் வேர் நிலையில் எவ்வளவுதான் பிற்போக்கானதாக காணப்பட்டாலும் அதை முற்போக்கானதாக பண்பு மாற்றம் செய்ய வேண்டும். அதாவது கிழிருந்து மேலெழும் உணர்ச்சிகரமான அடி நிலைத் தேசிய உணர்வை மேலிருந்து கிழிறக்கப்படும் ஜனநாயக ஒளியின் மூலம் இருள் நீக்கம் செய்ய வேண்டும். வேர் நிலை உணர்ச்சிகரமான மூலக் கூறுகளை சாத்தியமான அளவு ஜனநாயக உள்ளடக்கத்தால் பிரதியீடு செய்யவேண்டும். அதாவது, மேற்கத்தைய அறிஞர்கள் கூறுவதுபோல், ‘‘தேசியததின் உள்ளடக்கம் ஜனநாயகமாக இருக்க வேண்டும்”. இதை இன்னும் அழுத்தமாக செய்முறை விளக்கமாகக் கூறின் ஒரு சமூகத்தின் தேசிய அரசியலை முன்னெடுக்கும் அமைப்பு அல்லது கட்சியானது அந்த அரசியலின் அடித்தளம் ஜனநாயகமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தேசியப் பிரக்ஞையும் அதன் வேரில் இனமானம், இனத்தூய்மைவாதம்,இன மேலாண்மை வாதம், இனவீரம், இன எதிர்ப்பு, மொழித்தூய்மை, மதத் தூய்மை, சாதி அசமத்துவம், பால்அசமத்துவம் போன்ற இன்னோரன்ன உணர்ச்சிகரமான அம்சங்களின் சிக்கலான கலவையாகவே காணப்படுவதுண்டு. ஆனால், இந்த உணர்ச்சிகரமான அம்சங்களை அறிவினால் அதாவது சாத்தியமான அளவு ஜனநாயகத்தால் பிரதியீடு செய்ய வேண்டிய பொறுப்பு, அத்தேசியப் பிரக்ஞைக்குத் தலைமை தாங்கும் அமைப்புக்கே உரியது. நோய்க்கூறான அம்சங்களை ஒரு ஜனநாயக இடை ஊடாட்டப் பரப்பிற் கூடாகத்தான் கடந்து செல்ல முடியும். அத்தகைய ஜனநாயகத்தை உள்ளடக்கமாகப் பெற்ற ஒரு தேசிய அரசியல்தான் அதன் ஒரு கட்ட முதிர்ச்சிக்குப் பின் சர்வதேசியமாக விரியும். இல்லையெனில் அது தானே தன்னுள் உட்சுருங்கும் குறுத்தேசிய வாதமாகத் தறுக்கணித்துப்போய்விடும். இதெல்லாம் குறிப்பிட்ட தேசிய உணர்சசிக்குத் தலைமை தாங்கும் அமைப்பு அல்லது கட்சியின் ஜனநாயக உள்ளடக்கத்திற்தான் பெருமளவுக்குத் தங்கியிருக்கின்றது. அந்தக் கட்சியிடம் இல்லாதது அது முன்னெடுக்கும் அரசியலிலும் இருக்காது. இந்த விளக்கத்தின் பின்னணியில் வைத்தே தமிழ்த் தேசியத்தையும் பார்க்க வேண்டும். இந்த விளக்கத்தின் அடிப்படையில் இறந்த காலத்தையும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அதிலிருந்து பாடங்களைக் கற்கத் துணிய வேண்டும். தேசியத்திற்கும் ஜனநாயகத்திற்குமிடையிலான பிரிக்கப்பட முடியாத வேர் நிலை உறவு குறித்து தமிழில் மிக அரிதாகவே நூல்கள் வெளிவந்துள்ளன. இவற்றுள் 1999இல் மு. திருநாவுக்கரசு எழுதிய நூலைத் தமிழ்த் தேசியர்கள் அவசியம் வாசிக்க வேண்டும். ‘‘தேசியமும் ஜனநாயகமும்” என்ற அந்த நூல் ஈழத்தமிழ் வாசகர்களை அதிகம் வந்தடையவில்லை என்றே தெரிகிறது. அந்நூலில் மு. திருநாவுக்கரசு பின்வருமாறு கூறுகிறார். ‘‘தேசியம் என்பது வரலாற்றில் ஒரு புது அம்சமாக பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் எழத்தொடங்கியது. அதாவது இனம் பழையது அது முன்னரே இருந்தது. மொழி பழையது அதுவும் முன்னரே இருந்தது. அவ்வாறு முன்னரே பழமையதானதாயிருந்த அந்த இனத்தோடு அல்லது மொழியோடு ஜனநாயகம் எனும் புதிய அம்சம் சேரும்போது அது தேசியம் என்றாயிற்று. அதலால் தேசியம் என்பது ஜனநாயகம் என்னும் புதிய அம்சத்தின் வரவைத் தன் உள்ளடக்கமாகக் கொண்ட ஒரு புரட்சிகர வரலாற்று அம்சமாகும். ஜனநாயகத்திற்கான பயணத்தில் தேசியவாதம் ஒரு கட்டம் ஆகும். தேசிய வாதமானது ஜனநாயகத்தை அடைவதற்கான ஒரு வடிவமும் ஜனநாயகத்தைக் காவிச் செல்லும் ஒரு வாகனமும் ஆகும்” எனவே, தேசியம் தொடர்பில் உணர்ச்சிகரமான ஒரு சித்திரத்தை வரைந்து வைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் குறிப்பாக, அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள், ஆய்வாளர்கள், ஊடகவியலாளர்கள், படைப்பாளிகள் போன்ற அபிப்பிராயத்தை உருவாக்கவல்ல தரப்பினராகக் காணப்படும் அனைவரும் தமிழ்த் தேசியம் தொடர்பில் அதிக பட்சம் அறிவுபூர்வமான விவாதக் களங்களைத் திறக்க முன்வர வேண்டும். அவை விவாதக் களங்களாகவும், அதேசமயம் பிரேத பரிசோதனைக் களங்களாகவுமிருக்க வேண்டும். ஏனெனில், இறந்த காலத்தை வெட்டித் திறந்து பார்க்கவில்லை என்றால், இறந்த காலத்திலிருந்து பாடங்களைக் கற்கவில்லையென்றால் தமிழ்த் தேசியம் எனப்படுவது செயலுக்குப் போகத் திராணியற்ற நடிப்புச் சுதேசிகள் பயன்படுத்தும் வெற்றுச் சுலோகமாகச் சுருங்கிப்போய்விடும். 15-08-2013.- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
All the Roads Leads to Rome- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
""இழந்துபோன சந்தர்ப்பங்களில்"" இருந்து ......... இணைந்த வடக்கு கிழக்கில்,......(வடக்கு கிழக்கு மாகாண சபை?) தலைவர் தெரிவு சனநாயக முறைப்படி,....செயலாளர் தெரிவு மரபு முறையில்,......(🤣) இந்தியத் தூதுவரிடம் ஆசி பெற்றிருக்கிறார் (சந்தித்திருக்கின்றார் ) ஆனால் இந்தியா தனது தெரிவில் செல்வாக்குச் செலுத்தவில்லை. (நம்பிட்டோம்,😁) இணைந்த வடக்கு கிழக்கில் சமஸ்டி ஜெனிவா, ஒஸ்லோவில் பேசப்பட்டட,......(சமஸ்டி?) உடன்பாட்டுக்கு வந்திருக்கிறோம்,...- வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
எப்படியான பங்களிப்பை பயங்கரவாதம் என்றும் பயங்கரவாதம் அல்லாத பங்களிப்புகள் என்று வரையறை செய்வீர்கள்?- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
அவர் தன்னை ஒருபோதும் விரிவுரையாளர் என்று கூறவில்லை. எமது ஊஊஊஊஊடகங்கள்தான் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள். சிறீதரன் தமிழ்த்தேசியத்தைக் காப்பாரென்று நம்புகிறீர்களா?- தமிழரசுக் கட்சியின் மூடிய அறைக்குள் நடந்த விடயம்! அம்பலமாகும் பல இரகசியங்கள்
மாணிக்கவாசகர் இளம்பிறையன் யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் என்பது பிழையான தகவல. அவர் ஒரு Football & Weightlifting (Men) INSTRUCTOR- தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
தமிழ் இனத்தை சரியாக தூர நோக்குடன் எடைபோட்டதன் காரணமாகத்தான் அவர் "தமிழரை இனிக் கடவுள்தான் காப்பாற்ற வேண்டும் " என்று கூறினார் என்றே நான் கருதுகிறேன். தலைமைத்துவப் பண்புகளில் ஒன்று தூரநோக்கோடு எதிர்வு கூறுதல்.- இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
- தமிழரசை சாகடிக்கும் தலைமைகள்…!
“தமிழ்மக்ளை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்” தமிழரின் ஒற்றுமையின்மையையும், ஒழுக்கமின்மையையும், அதிகாரத்திற்குச் சோரம்போகும் தன்மையையும் மிகவும் ஆழமாக உணர்ந்துதான் திரு செல்வநாயகம் அவர்கள் இவ்வாறு கூறினார்களோ? - ‘தமிழக கோயில்களில் இந்துக்கள் அல்லாதவர்களை அனுமதிக்கக் கூடாது’- பழநி கோயில் வழக்கில் ஐகோர்ட் உத்தரவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.