Jump to content

பசுவூர்க்கோபி

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    425
  • Joined

  • Last visited

Everything posted by பசுவூர்க்கோபி

  1. அருமை அருமை அழகாக முடித்துவிட்டீர்களே இந்திய படகுகளின் உண்மைத்தன்மைகளும் உள்ளுக்குள் வந்து போனதும் சிறப்பு வாழ்த்துக்கள் அண்ணா
  2. ஏணியை பிடிகின்றேன் நீ ஏறு என்பது போல் உங்கள் ஆதரவுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் அக்கா
  3. உங்களின் வார்த்தைகள் எங்களை ஊக்கப்படுத்துகின்றது.அன்புடையாருக்கு உளமார்ந்த நன்றிகள்
  4. நன்றிகள் சுவி அண்ணா உங்களின் பதிவு எனக்கு ஊக்கம் தருகிறது.நன்றிகள் அண்ணா
  5. 18.03.2021அன்று எனது கவி வரிகளில் உருவான இந்த பாடலை யாழ் இணையத்துள் பகிர்ந்து கொள்வதில் மகிழ்சி அடைகின்றேன். உங்களின் ஆதரவையும் வேண்டி நிற்க்கின்றேன். நன்றிகள். அன்புடன் பசுவூர்க்கோபி-
  6. நன்றிகள் ஐயா அருமையாக சொன்னீர்கள் நன்றிகள் புங்கையூரன் அவர்களே
  7. உங்களின் வார்த்தைகள் என்னை மென் மேலும் உயரவைக்கும் உண்மை. உளமார்ந்த நன்றிகள் நிலாமதி அக்கா.
  8. அருமை தொடருங்கள்.. அழகான அந்த ஊரை கற்பனையும் உண்மையும் கலந்து வர்ணனையாக கடலில் மிதந்து தாலாட்டுகிறது உங்கள் படைப்பு.(பழய காற்றுப்போல் இல்லாமல்) வாழ்த்துக்கள்.தொடர்ந்து வாசிக்க காத்திருக்கிறேன்.
  9. அசரீரி..! ******* மனிதா... உலகம் உனக்கென யாரவர் சொன்னார் உயிரினம் யாவையும் உந்தனின் படைப்பா இயற்கையின் அழகை எப்படி அழிப்பாய்-உன் இறப்புக்குள் மட்டுமா உலகத்தை படைத்தான். பிறப்புக்கு முன்னே எத்தனை கோடி-உன் இறப்புக்கு பின்னாலும் எத்தனை கோடி வாழ வருகின்ற உயிரினமுண்டு-உன் வாழ்க்கைக்கு மட்டுமா வையகமுண்டு. உன்னையே நீயே வெறுக்கின்ற காலம் உன்னால் தானே உருவானதிங்கு-நீயோ விண்ணையும், மண்ணையும் விஞ்ஞானமென்று அன்னையின் கண்ணையே அபகரித்தாயே. ஒவ்வொரு உயிரினம் வாழ்வதற்க்கேற்ப ஒவ்வொரு நிலமாக பிரித்துமே தந்தான் ஒவ்வொரு நிலத்தையும் உன் நிலமாக்கி-மற்ற உயிரினம் அனைத்தையும் அழிய நீ வைத்தாய். மனிதனாய் வாழவே உன்னை படைத்தான் மனிதநேயமும் உன்னுக்குள் வைத்தான் பொது நலம் தவிர்த்து நீ சுயநலமானாய்-பூமி பொறுமை இழந்துமே போராளியானாள். அன்புடன் -பசுவூர்க்கோபி- 16,03.2021
  10. சுதந்திரமாய் வாழ நினைத்தோமே சுவாசத்தை அடுத்த தலைமுறைக்கு கடத்திவிட முயன்றோமே யூதாசும்,ப்ரூட்டசும், எட்டப்பனும் காக்கை வன்னியனும், கருணா நிதியும் நிதிக்காகவே அலைவார்களா --- நிகரில்லா சுதந்திரத்தை விற்பார்களா காலங்கள் தோறும் பிறந்து வருவார்களா அருமை யான கவிதை. மண்மீட்ப்புக்காய் சென்று விதையாகிப்போன அத்தனை தியாக தீபங்களையும் வணங்குகின்றேன். பல பிரிவுகளாக இருந்தாலும் நோக்கம் ஒன்றாகத்தான் ஆரம்பிக்கப்பட்டது.பின்பு எனோ இந்தநிலை.
  11. எனது கவிதையை உள்ளடக்கி சொல்லப்பட்ட வார்தைதைகள் அருமை அக்கா நன்றிகள்
  12. இன்று சிங்களத்தின் தேசீய கொடி, நாளை புத்த பிரானின் திருவுருவம் அடுத்தவர்களின் காலில் மிதி படும் போது, பொத்திக் கொண்டு இருக்க வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு உள்ளது! அருமையாக சொன்னீர்கள்.நன்றிகள் உண்மையே.. புரட்சிகர தோழருக்கு நன்றிகள்.
  13. மொழி ஆதிக்கம்..! ************ சிங்கள நகரமெல்லாம் சீன எழுத்துக்கு முதலிடமா.. சிங்களம் ஆங்கிலம் அதற்கு கீழே இருப்பது சிரிப்பைத் தருகிறது. ஊர் பலகையில்-தமிழ் மொழி இல்லையென்று உனக்கு மகிழ்வு இருந்தால் விரைவில்.. உன் மொழியும் அழிந்து உலக மொழியொன்று வியாபிக்கும்.. இது உண்மை. அப்போதும் உணருவாயோ தெரியவில்லை ஏனென்றால் இப்போது தேசத்தின் கீதம் கூட குயிலாக இருந்தாலும் மயிலாக இருந்தாலும் சிங்கம் போலத் தான் கர்ச்சிக்க வேண்டுமாமே. உன்நாட்டில்.. அன்புடன் -பசுவூர்க்கோபி-
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.