Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ஊரில் சிலர் இருப்பார்கள்.. நல்ல ஒரு வாக்குவாதம் நடந்து கொண்டிருக்கும்.. வாக்குவாதம் எஙகையோ போய்க்கொண்டிருக்கும்.. திடீர் எண்டு நடுவில் புகுந்து வாக்குவாதத்தின் ஆரம்பத்தில் கதைக்கப்பட்டதைப்பற்றி முதல்ல இருந்து ஆரம்பிப்பார்கள்.. அதேபோல் முன்னர் விடிய விடிய ராமயண கதாபிரசங்கம் நடக்குமாம்.. விடிய கதை எல்லாம் முடிஞ்சு சனம் வீட்ட போற கட்டத்தில கூட்டதில இருந்து ஒருத்தன் ஒழும்பி தான் சீரியசா கதைப்பதாக நினைத்துக்கொண்டு ராமன் சீதைக்கு என்ன முறை என்பானாம்.. இப்படிப்பட்டவர்களை ஊரில் விளக்கம்கெட்டவர்கள் என்று சொல்லுவார்கள்.. ஜயா சாமி.. நான் ஒரு விளக்கம் கெட்டவன்.. என்னால் சிலருக்கு பதில் அளிக்க முடியாது.. என்ன விட்டுருங்க.. நான் பாவம்..🤣🤣🤣🤣
-
இசைஞானி இளையராஜா- சீமான் திடீர்சந்திப்பு..
- சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இவர்கள் போன்றவர்கள் எல்லாம் “கரிசனை”க்கு உரிய பெண்கள் அல்ல.. « Cunning Women «- சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
உண்மைதான் இந்த சட்டங்கள் அதுவும் பெண்களை முதன்மை படுத்தும் சட்டங்கள் உருவாக்கப்பட்டது உண்மையில் துன்புறுத்தப்படும் உதவி அற்ற பெண்களுக்காக.. ஆனால் இந்த சட்டங்களின் நன்மைகள் கிராமப்புறங்களில் குடித்து விட்டு வந்து தினம் தினம் கணவன்மாரால் துன்புறுத்தப்படும் சீதனக்கொடுமை மாமியார் கொடுமை என்று துன்புறுத்தப்படும் படிக்காத கிராமப்புற பெண்களை சென்றடைவதில்லை மாறாக நகர்ப்புறங்களில் பணக்காற, சினிமா போன்ற புகழ்பெற்ற மற்றும் படித்து நல்ல நிலையில் சம அந்தஸ்த்துடன் வாழும் பெண்களால் தவறாக பயன்படுத்தப்படவே இப்பொழுது எல்லாம் அதிகம் பயன்படுகிறது.. மறுவளமாக விஜலட்சுமியும் ஏன் வாபஸ் வாங்கி வாபஸ் வாங்கி விளாடுரார்..? உறுதியாக நின்று கேசை நடத்தலாமே..? ஆக அவர் நோக்கமும் நீதி பெறுவதல்ல நிதி பெறுவதே.. ஆகவே இந்தமாதிரியான சந்தர்ப்பங்களில் மூன்றாம் நபராகிய நாம் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு “பாலியல்குற்றவாளி” என்று தீர்ப்பெழுதாமல் நீதிமன்றத்திடம் விட்டுவிட்டு மூடிட்டு இருப்பதுதான் சரியாக இருக்கும்..- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு முன் மற்றும் பின் கட்டப்பட்ட முக்கிய அணைகளின் எண்ணிக்கை பற்றிய விவரங்களை இங்கே சுருக்கமாக வழங்குகிறேன்: சுதந்திரத்திற்கு முன் (1947க்கு முன்பு) கட்டப்பட்ட அணைகள்: 1. பெரியாறு அணை - 1895 2. முல்லைப் பெரியாறு அணை - 1895 3. மேட்டூர் அணை - 1934 4. சேவூர் அணை - 1910 சுதந்திரத்திற்குப் பிறகு (1947க்கு பிறகு) கட்டப்பட்ட அணைகள்: 1. பவானிசாகர் அணை - 1955 2. அழியார் அணை - 1969 ஆக எப்படி நீங்கள் முட்டுக்குடுத்தாலும் காமெடி என்று நினைத்து உங்கள் பதிலில் கூறிய கலிங்கர் வெள்ளை x,y,z என்று அணைவரும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்துள்ளனர்.. வாழ்க அவர் புகழ்..- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இந்த பதிவுகளில் இருக்கும் அடர்த்தியான ஆளம்மிக்க கருத்து செறிவின் காரணமாக என்னால் படிக்கமுடியாமல்.. ஊரில் உள்ளவர்கள் அக்கம்பக்கத்தார்களிடம் காட்டி விளக்க சொன்னேன், ஊரே அடிக்க வந்துருச்சு.., அதனால துபாய் பக்கம் ஓடியாந்திடாலாம்னு இருக்கிறன்..🤣🤣🤣- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
அநேகமாக “றோ” வின் சதியாக இருக்கும்..🤣🤣🤣- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நிச்சயமாக இருக்கு.. நீங்கள் பெரிய காமெடி விடுகிறேன் என்று நினைத்துக்கொண்டு சொன்னாலும் வரலாற்றை சிந்தித்து பார்க்கும்போது உண்மை என்று தெரிகிறது.. பல குளங்கள் (கல்லணை உட்பட) கட்டியது இவர்கள்தான்.. இவர்களால்தான் தஞ்சாவூர் டெல்ற்றா பகுதிகளை தென் இந்தியாவின் நெற்களஞ்சியம் என்று உவமானத்துக்கு சொல்கிறார்கள்.. அப்புறம் அவர்களுக்கு பின் வந்த மாநில அரசுகள் இவற்றை திருத்தித்தான் இருக்கின்றன ஒழிய இவற்றைப்போல் பேர் சொல்லும் எந்த அணையையும் கட்டியதாக வரலாறு இல்லை.. ஆக இவர்களும் மாபெரும் செல்வாக்கு செலுத்தி இருக்கிறார்கள் வளர்ச்சியில்.- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
உறவே அதிமுக என்பது பெயரில் மட்டுமே திராவிடத்தை வைத்துள்ள கட்சி என்பதை நினைவில்கொள்க.. தமிழ் நாட்டு திராவிடர்களிடம் இது திராவிடக்கட்சியா என்று கேட்டால் இது இட்லி என்றால் சட்னிகூட நம்பாது என்பார்கள்.. அப்புறம் அண்ணண் ஜஸ்றின் பேசுவது ஸ்டாலினின் ஆட்சி மட்டுமே சொந்தம் கொண்டாடும் “திராவிடமாடல்” பற்றி..- சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இந்த விவாதத்தினுடைய நீட்சி உங்களுக்குத்தான் விளங்கவில்லை என்ன நினைக்கிறேன்.. அவர் சொல்ல்கிறார் பாலியல் குற்றவாளி என்று. நாங்கள் சொல்கிறோம் நீதிமன்றில் நிறுவாதவரை யாருமே குற்றவாளி இல்லை என்று.. அது நீதி மன்றின் வேலை.. நீங்கள் யார் தீர்ப்பெழுத என்று.. என்ன ஆதாரம் என்று.. அவர் சொல்கிறார் சீமானே கொஞ்சிக்குலாவிய வீடியோ இணையத்தில் என்று ஒரு மொன்னை விளக்கம்.. அப்போ கொஞ்சிக்குலாவியவன் எல்லாம் பாலியல் குற்றவாளியா என்பது கேள்வி.. பாலியல் குற்றம் என்று நீங்கள் பட்டியலிடுவதில் மாற்றுக்கருத்தில்லை.. இப்போ சீமான் பாலியல்குற்றவாளி என்பதுதான் கேள்வி.. சீமான் சம்மதம் இல்லாமலோ அல்லது திருமணம் செய்கிறோன் என்று சொல்லியோ உறவு வைத்தாரா என்பது எப்படி இவருக்கு தெரியும்..? கொஞ்சிக்குலவின வீடியோ என்கிறார்.. உடலுறவு வைத்துக்கொள்பவர்கள் யார்தான் கொஞ்சிக்குலவுவது இல்லை.. இதெல்லாம் ஒரு காரணமா..? திருமணம் செய்கிறேன் என்று சொன்னதற்கு அல்லது கோயிலில் மாலை மாற்றியதற்கு பொதுவெளியில் ஆதாரம் உண்டா..? இவரிடம் உண்டா..? இல்லைத்தானே.. அப்போ அதைக்கண்டுபிடிக்க வேண்டியது நீதிமன்றம்.. அதற்கு முன்னம் பாலியல் குற்றவாளி , பாலியல் குற்றவாளி என்று சொல்ல என்னகாரணம்..? காழ்ப்புணர்ச்சி.. காழ்ப்புணர்ச்சியுடன் முன்முடிபுடன் அனுகினால் இப்படித்தான் உங்கள் எல்லோரின் பதிலும் இருக்கும்..- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
உங்கள் பதிலைப் பார்க்கும்போது, “திராவிட மாடல் மட்டும் தான் வளர்ச்சிக்கு காரணம்” என்று நான் வாதிட்டேன் என்று நினைத்துவிட்டீர்கள் போல... ஆனால், என் வாதம் இதுதான்: திராவிட மாடல் ஒரு பங்கு வகிக்கிறது, ஆனால் வளர்ச்சி பல காரணிகளின் விளைவு.. நீங்கள் சொல்வது சரி – திராவிட கொள்கைகள் தமிழ்நாட்டில் சமூக மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை (stability) உருவாக்கியதில் முக்கிய பங்கு வகித்திருக்கலாம். ஆனால, இது மட்டும்தான் வளர்ச்சிக்கான “critical factor” என்று சொல்ல முடியாது. நீங்கள் “பீகார், உத்தரப் பிரதேசம் போல பிஜேபி ஆட்சி இருந்தால் தமிழ்நாடு வளர்ந்திருக்காது” என்று கூறுகிறீர்கள். சரி, ஆனால் அதே நேரத்தில் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களும் தமிழகத்திற்குப் போன்றவே வளர்ச்சியடைந்துள்ளன, ஆனால் அங்கு “திராவிட மாடல்” இல்லை… என் கேள்வி இதுதான்: 1. திராவிட மாடல் இல்லாத மாநிலங்களில் வளர்ச்சி நடந்துள்ளது – அவை எப்படி? • மகாராஷ்டிரா (மும்பை, புனே) • கர்நாடகா (பெங்களூரு – இந்தியாவின் முன்னணி IT நகரம்) • கேரளா (அதிக மனித வள மேம்பாடு, நல்ல மருத்துவம், கல்வி) இவை “திராவிட மாடல்” இல்லாமல் வளர்ந்துள்ளன, இதன் பொருள் என்ன..? 2. மத்திய அரசு, உலகளாவிய முதலீடு, தொழில்துறை வளர்ச்சி – இவை புறந்தள்ள முடியாத காரணிகள் அல்லவா? • மத்திய அரசின் GST, Make in India, Foreign Direct Investment (FDI) போன்ற திட்டங்கள் இந்தியாவிலேயே தொழில்களை வளர்த்துள்ளன… • உலகளாவிய சந்தையில் சீனா, அமெரிக்கா, ஐரோப்பா முதலிய நாடுகளின் எதிர்கால தொழில்துறை தீர்மானங்களும் ஒரு மாநிலத்தின் வளர்ச்சியை பாதிக்கின்றன.,. 3. சமூக முன்னேற்றத்தால் மட்டும் பொருளாதார வளர்ச்சி நடக்குமா..? • தமிழகத்தில் அதிகபட்ச தொழில் வளர்ச்சி இருக்கிறது, ஆனால் இது மட்டும் திராவிட மாடலால் தான் வந்தது என்று சொன்னால, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலுங்கானா வளர்ந்ததற்கு என்ன காரணம்..? • பெண்கள் கல்வி, சாதி எதிர்ப்பு போன்றவை சமூக முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். ஆனால, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான தொழில், முதலீடு, தொழிலாளர் திறன் ஆகியவை இதில் எப்படி இணைக்கப்படுகின்றன? இறுதியாக: நீங்கள் சொல்வது தவறானது என நான் வாதிக்கவில்லை... திராவிட மாடல் ஒரு பங்கு வகிக்கிறது, ஆனால் அது மேலே நீங்கள் சிலாகித்து புளங்காகிதம் அடைந்திருப்பதுபோல் பொருளாதார முன்னேற்றத்துக்கான பெரிய ஒரு காரணம் அல்ல என்பதே என் வாதம்… உங்கள் லாஜிக்கை நீட்டித்துப் பாருங்கள்: • திராவிட மாடல் இல்லாத மாநிலங்களில் வளர்ச்சி எப்படி நடந்தது..? • திராவிட மாடல் இருந்தாலே வளர்ச்சி நடந்துவிடுமா..? (அந்தக் காலத்தில் தமிழகத்தில் தொழில்துறை ஊக்குவிக்கப்படாதிருந்தால், தற்போது இருக்கும் வளர்ச்சி ஏற்பட்டிருக்குமா?) • பொலிற்றிக்கல் ஸ்திரத்தன்மை இருந்தாலே வளர்ச்சி வந்துவிடுமா? (அதற்கு தென்னிந்திய மாநிலங்களில் எல்லாம் ஒரே மாதிரி வளர்ச்சி காணப்படவேண்டும் அல்லவா..?) எனவே, வளர்ச்சி ஒரு தனி கொள்கையின் விளைவு அல்ல – பல காரணிகளின் கூட்டு. திராவிட மாடலும் ஒரு சிறு காரணியாக இருந்திருக்கலாம், ஆனால் அது மட்டுமே வளர்ச்சிக்கு காரணம் இல்ல…- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
முதலில், திராவிட மாடல் குறிப்பிடும் சில முக்கிய அம்சங்களை நீங்கள் பட்டியலிட்டுள்ளீர்கள், அவை தமிழ்நாட்டின் வளர்ச்சியில் பங்காற்றியிருப்பது உண்மைதான்... மதச்சார்பின்மை, பெண்கள் கல்வி, சாதி எதிர்ப்பு கொள்கைகள், முதலீட்டு நட்பு சூழல் ஆகியவை நிச்சயமாக வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்றன…. ஆனால், இவற்றை மட்டுமே காரணமாகக் காட்டுவது பொருளாதார வளர்ச்சியின் முழுமையான விளக்கமாகாது… உங்கள் கூற்றின் அடிப்படையில், திராவிட கொள்கைகள் நிலைத்த வளர்ச்சியை (stability) உருவாக்கியதால் முதலீடுகள் அதிகரித்தது என்பது உண்மையாக இருக்கலாம்... ஆனால், அதே நேரத்தில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் மத்திய அரசின் கொள்கைகள், உலகளாவிய சந்தை நிலைமை, தமிழகத்திற்கேற்ப உள்ள தொழில்துறை சுற்றுச்சூழல், ஏற்றுமதி சந்தையின் நிலை போன்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும்... எந்தவொரு பொருளாதார வளர்ச்சியும் ஒரு தனிப்பட்ட முறைமையின் விளைவாக மட்டுமே அமையாது... உங்கள் கண்ணோட்டத்தில், மத்திய அரசின் திட்டங்களை “பொதுக்காரணி” (common denominator) என குறிப்பிடுகிறீர்கள், ஆனால் மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் ஒரே மாதிரியான விளைவை எல்லா மாநிலங்களிலும் ஏற்படுத்தாது... இதற்கு மாநிலத்தின் கொள்கைகள் மட்டுமல்ல, அதன் நிலை, வளம், மக்கள் உழைப்பு, முதலீட்டு சுதந்திரம் போன்றவை இணைந்து செயல்படுகின்றன... இதைப் பார்க்கும் வழிகள்: 1. சென்னையில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் அதிகம் என்பதற்கான காரணம் திராவிட கொள்கைகள் மட்டுமல்ல, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவின் தென்னக மாநிலங்களை முதலீட்டுக்கு ஏற்ற இடமாக பார்க்கும் காரணங்களைப் புரிந்துகொள்ள வேண்டும்... 2. பெண்கள் கல்வி வளர்ச்சி, அவர்களது தொழில் பங்கேற்பு என்பவை தமிழகத்தில் சிறப்பாக உள்ளன, ஆனால் இது திராவிட மாடலுக்கும், சமகாலத்தில் தொழில் வாய்ப்புகளுக்கும், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், மாற்று அரசியல் சிந்தனைகளுக்கும் இணைந்த ஒரு விளைவு... உங்களுடைய வாதம் ஒரு முக்கியமான அம்சத்தை காட்டுகிறது – தமிழகத்தின் வளர்ச்சி திராவிட கொள்கைகள் மூலமாக நிலைத்தன்மை அடைந்திருக்கலாம்... ஆனால், அதை மட்டும் காரணமாக காட்டி மற்ற சக்திகளை புறக்கணிக்க முடியாது... கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியல் வெவ்வேறு தலைவர்களால் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது – அப்போது கூட பெரிய மாற்றங்கள் இல்லாமல் வளர்ச்சி தொடர்ந்து நடந்திருக்கிறது... இது ஒரே ஒரு கொள்கை மட்டுமே காரணம் அல்ல, பல காரணிகளின் கூட்டு விளைவாகும்... எனவே, வளர்ச்சி என்பது ஒரே ஒரு காரணத்தால் அமையாது... திராவிட மாடல் ஒரு முக்கிய பங்காற்றியிருக்கலாம், ஆனால் அதன் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருக்கின்றன என்பதை ஏற்க வேண்டும்...- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
தமிழ்நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு தயாரிப்பு (GSDP) 2023-24ஆம் ஆண்டில் 8.23% வளர்ச்சி பெற்றுள்ளது என்பது உண்மை.. இந்த வளர்ச்சியின் காரணமாக “திராவிட மாடல்” மட்டும்தான் என்று குறிப்பிடுவது சரி அல்ல… பொருளாதார வளர்ச்சி என்பது பல காரணிகளின் அடிப்படையில் அமைகிறது, அதில் முன்னைய அரசின் கொள்கைகள், மத்திய அரசின் திட்டங்கள், உலகளாவிய பொருளாதார நிலைமைகள், முதலீடுகள், தொழில்துறை வளர்சசி, விவசாயம், சேவைத் துறை வளர்ச்சி போன்றவை அடங்கும்… எனவே, பொருளாதார வளர்ச்சியை ஒரு குறிப்பிட்ட மாடலுக்கு மட்டுமே ஒதுக்கி விடுவது சரியான அணுகுமுறை அல்ல... அதனால், “திராவிட மாடல்” மட்டுமே தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு காரணம் என்பதை ஏற்றுக்கொள்வது தவறாகும்…- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
சீமான் ஒரு வெத்து வேட்டு ஆசாமி என நீங்கள் சொல்ல, அதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறதா..? இருந்தால் ஆதாரங்களை கொடுங்கள்… அதுவுமில்லாமல் வெறும் உணர்ச்சி வெறி மற்றூம் காழ்ப்பின் அடிப்படையிலான விமர்சனங்கள் எதற்கும் பயன்படாது… மற்ற கட்சிகள் போராட்டம் செய்ததாக நீங்கள் சொல்கிறீர்கள்... அவர்களின் போராட்டங்கள் எங்கே? கூடவே மத்திய அரசை நேரடியாக எதிர்த்த எந்த கட்சி உண்மையாக போராடியது…? பாஜகவுடன் மறைமுக உடன்படிக்கையில், திமுக, அதிமுக, பாமக, விசிக உட்பட அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து செயல்படவில்லை என்று நிரூபிக்க முடியுமா..? தொடர் போராட்டங்கள் இல்லாமல் எப்படி ஒரு கட்சி தனது அடிப்படை நிலைப்பாட்டை நிலைநாட்ட முடியும்..? நீங்கள் கூறும் லாஜிக்கால், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சியும் போராடவில்லை என்பது தான் முடிவு ஆகும்... அப்படி இருந்தால், அவர்கள் அனைவரும் வெத்து வேட்டு ஆசாமிகள் தான் அல்லவா…? சீமான் தான் ஒரு வெத்து வேட்டு அரசியல்வாதி என்றால், மத்திய அரசை நேரடியாக எதிர்த்த மற்ற கட்சிகள் யார்..? அவர்கள் எப்படி போராடினார்கள்..? அவர்கள் மத்திய அரசுக்கு எதிராக எந்த அளவுக்கு செயல்பட்டார்கள்..? உண்மையில் நீங்கள் கொடுக்கும் ஆதாரங்கள் இல்லாமல் ஒரு குற்றச்சாட்டு போடுவது, ஒரு அரசியல் ஆய்வை விட, ஒரு உணர்ச்சி வசப்பட்ட விமர்சனமாகவே தெரிகிறது… நீங்கள் சொன்னதற்கான ஆதாரங்களை கொடுங்கள்... அல்லது, ஒரு வெற்று விமர்சனமாக நீங்கள் எழுதியதை ஒப்புக்கொள்ளுங்கள்… அத்துடன் உங்கள் நாட்டில் ஒரு அஞ்சாறு தமிழ் அரசியல் கட்சிகள் இருக்கிறார்கள்.. சீமான் போல் தமிழ்தேசியம் பேசுகிறார்கள்.. அவர்கள் எதற்கு அரசியலில் இருக்கிறார்கள்..எத்ற்கு உங்கள் மக்கள் வாக்குப்போடுகிறார்கள் 95வீதத்துக்கும் அதிகமாக.. அரசியலில் சில நெளிவு சுழிவுகள் இருக்கத்தான் வேண்டும்.. அப்பத்தான் கொஞ்சமாவது இன அக்கறை உள்ள கட்சிகள் தன் மக்களுக்கு ஏதாவது செய்ய முடியும்.. இல்லை என்றால் இனத்தை அடைவைக்கும் கட்சிகள் வந்து கோவணத்தையும் உருவி விடுவார்கள்..- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
நாதக எதிர்ப்பு என்றுதான் தெரிவித்து உள்ளார்கள் அத்துடன் தனியாக போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார்கள்.. தமிழக அரசு மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொண்டு தமிழகத்துக்கு எதிரான எல்லாதிட்டங்களையும் மத்திய அரசுக்கு கையெழுத்து வைத்து நிறைவேற 39 உறுப்பினர்கள் ஆதரவையும் தெரிவித்துக்கொண்டு இங்கு தேர்தல் நாடகத்துக்கு கூட்டங்கள் நடத்துவதால் தனியாக போராட உள்ளதாக சீமான் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவுத்துள்ளார்..- சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இது நான் முதலே சொல்லிவிட்டேன்… நாம் லிவிங்கி ருகெதரில் இருந்தோம் செட்டாகவில்லை பிரிந்துவிட்டோம் என்று அப்பவே சீமான் சொல்லி இருந்தால் இன்று பலரின் நேரம் மிச்சமாகி இருக்கும்…- சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
கொஞ்சிக் குலாவுவதற்கு பேர் பாலியல் பலாத்காரமா..? அப்போ இவ்வளவு நாளும் நாம எல்லாம் வீட்டில் பாலியல் பலாத்காரமா பண்ணீட்டு இருந்திருக்கிறோம்..? பரலோகத்தில் இருக்கும் பரம பிதாவே இவ்வளவு நாளும் பாலியல் குற்றவாளியாக வாழ்ந்த இந்த பாவியை மன்னித்திவிடும் ஜேசப்பா…🙏 🤣🤣 இவர் பாடும் துதியை கவனித்தீர்களா..? “றோ”வை விட்டு விட்டாரய்யா…🤣🤣🤣- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
இதற்கு ஆதாரங்களுடன் மேலே நான் சொன்ன பதிலில் இருந்து ஒரு துண்டு..👇 நான் சொன்னது மாதிரியே வான்கோழி முருக்க மரத்தில் ஏறியபோது..👇🤣🤣- சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
ரெண்டு பிளக் மெயிலேர்ஸ் ருடே..👇- நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
தமிழ்நாட்டில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி (ந.த.க) மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. சில முக்கியமானவை: 1. நீட் தேர்வு எதிர்ப்பு: • தேதி: செப்டம்பர் 17, 2017 • இடம்: சென்னை • விவரம்: நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு அநீதி எனக் கருதி, சீமான் தலைமையில் ந.த.க சென்னை மெரினா கடற்கரை அருகே போராட்டம் நடத்தியது. • மூலச்செய்திகள்: 16/09/2020 போராட்டம் - 2. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை எதிர்த்து: • தேதி: ஏப்ரல் 11, 2018 • இடம்: திருச்சி • விவரம்: மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து, ந.த.க திருச்சியில் போராட்டம் நடத்தியது. • மூலச்செய்தி: 3. பாலஸ்தீனத்திற்கு ஆதரவு: • தேதி: மே 20, 2021 • இடம்: சென்னை • விவரம்: இஸ்ரேல்-பாலஸ்தீன் மோதலில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து, ந.த.க சென்னை அமெரிக்க தூதரகம் அருகே போராட்டம் நடத்தியது. • மூலச்செய்தி: The Hindu - Naam Tamilar Katchi protests in support of Palestine மத்திய அரசின் கல்வி கொள்கைகள்: • மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைகள் மாநிலங்களின் கல்வி துறையின் சுயாதீனத்தை பாதிக்கின்றன என்று கருதி, ந.த.க எதிர்ப்பு தெரிவித்துள்ளது… பஞ்சாப் உழவர்கள் மேல் மத்திய அரசு செய்த ஒடுக்குமுறைக்கு எதிராக மக்களை திரட்டி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 19/12/2020 சனிக்கிழமை போராட்டம் மூலம் மக்களை திரட்டி நாம் தமிழரால் நடத்தப்பட்ட இந்தி இந்தி எதிர்ப்புபோராட்டம் மூலம் இந்த போராட்டங்கள், மத்திய அரசின் கொள்கைகளை எதிர்த்து, தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டவை.. இதைப்போல் எண்ணற்ற போராட்டங்கள்… இணையம் எங்கும் கொட்டிக்கிடக்கின்றன தகவல்கள்.. தலையை சுடுமணலில் புதைத்திருக்கும் வான்கோழிகள் மறுபடியும் குறுக்கால ஒடிவருங்கள் இன்னும் புதுப் புது குற்றச்சாட்டுகளுடன்.. வான்கோழிகளுக்கு பிரச்சினை சீமான் அல்ல.. அவன் பேசும் தமிழ்த்தேசியம்தான்..அதனால் இந்த வேதாளங்கள் தமிழ்தேசியம் ஒழியும் வரை முருங்கை மரத்தை விட்டு இறங்கப்போவதில்லை…- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
திங்கக்கிழமையில இருந்து ஞாயித்துக்கிழமை வரை நாம் தமிழர் கட்சியை திட்டுவதையும் அங்கிருந்து ஆட்கள் விலகிக்கொண்டிருக்கிறார்கள் என்று விளம்பரம் செய்வதிலும் திமுக மற்றும் சீமான் போபியாக்கள் ஈடுபட்டுக்கொண்டிருக்க தலைவன் தன்வழியில் அரசியல்கூட்டங்கள் மக்கள் போராட்டங்கள் என்று மக்களோடு பிஸி.. நேற்றும் ஒரு இடத்தில் சீமான் கொலமாஸ் என்ரி குடுத்த தருணம்.. மக்கள் விரும்பி அழைக்கிறார்கள்..கூட்டம் அள்ளுது..சீமான் போபியாக்கள் வயிறு எரியுது..🤣🤣- சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
இலங்கை அரசினர் இன அழிப்பு , இந்திய இராணுவம் ஈழத்தில் செய்த வன்கொடுமை இரண்டையும் நாங்கள் மட்டுமல்ல உலகமே பக்கத்தில் படுத்துக்கிடந்து பார்த்தது.. ஏனெனில் இது ஒரு பெட் ரூமுக்குள் இரண்டு பேருக்கு நடுவே மட்டும் நடைபெற இல்லை.. எங்கள் வீடு உங்கள் வீடு பக்கத்துவீடு என்று எல்லோருமே இதனால் பாதிக்கப்பட்டோம்.. வாழும் சாட்சிகள்.. ஆனால் லிவ்விங் ருகெதர் ஆக வாழ்ந்த காலப்பகுதியில் சீமானுக்கும் விஜலட்சுமிக்கும் இடையே நடந்ததை,தனிப்பட்ட இரண்டு நபர்களுக்கு நடுவே இருந்த உறவை, நீதிமன்றம் கண்டுபுடிக்கும் முன்னமே ஒரு சிலர் பாத்திருக்கிறார்கள்.. பாலியல் வல்லுறவு என்பதை கண்டிருக்கிறார்கள்.. அப்படி எனில் அவர்கள் ஒன்றில் இந்த இருவரும் அந்த காலப்பகுதியில் வாழ்ந்த பெட் ரூமில் விளக்கு பிடிப்பவர்களாக அல்லது மாமா வேலை பார்ப்பவர்களாக அல்லது அடுத்தவன் பெட் ரூமில் கமெரா வைத்து அந்த வீடியோக்களை பார்த்து ரசிக்கும் சைக்கோக்களாகத்தான் இருந்திருக்க வாய்ப்புள்ளது..- "சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
இப்பொழுது இதை வாசித்தபின் என் ஆழ்மனதில் இருந்து ஒரு சத்தம் கேட்கிறது.. .. 🤣🤣🤣- சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
1. நீதிமன்ற அழைப்பாணை (Court Summons): • ஒரு நபரை நீதிமன்றத்தில் ஆஜராக அழைக்க நீதிமன்றம் வழங்கும் உத்தரவு. • இது குற்றவியல் வழக்குகளிலும், சிவில் வழக்குகளிலும் வழங்கலாம். 2. போலீஸ் அழைப்பாணை (Police Notice): • CrPC (Criminal Procedure Code) 41A, 160 ஆகிய பிரிவுகளின்படி, போலீஸ் விசாரணைக்கு தேவையான நபர்களுக்கு அழைப்புநோட்டீஸ் (Notice) அனுப்பலாம். • இது நீதிமன்ற ஆணை அல்ல, ஆனால் காவல் நிலைய விசாரணைக்காக அழைக்கும் நோட்டீஸ் ஆகும். முக்கிய வித்தியாசம்: • Summons என்பது நீதிமன்றத்தால் வழங்கப்படும் உத்தரவு. • Police Notice என்பது விசாரணைக்காக போலீசாரால் வழங்கப்படும் அழைப்பே, ஆனால் இது சட்டப்படி கட்டாயமாக ஆஜராக வேண்டிய உத்தரவு அல்ல.. இதில் சீமானுக்கு வழங்கப்பட்டது இரண்டாவது.. கோர்ட் ஓடர் அல்ல..- "சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
இதைப்போல இன்னுமொரு விடயம் இருக்கு.. ஒரு ஆண் பொய்யாக குற்றஞ்சாட்டப்பட்டு பின் தவறு என்று நிரூபிக்கப்பட்டது.. மார்கெஸ் டிக்ஸ்டீன் வழக்கு (Marcus Dixon Case) என்பது ஒரு புகழ்பெற்ற வழக்காகும், இதில் அமெரிக்கன் காலேஜ் மாணவரான மார்கெஸ், அவனுக்கு எதிராக தவறான பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. பின்னர் நீதிமன்றத்தில் உண்மை வெளிச்சத்திற்குக் கொண்டு வரப்பட்டு, அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டார்... எனவே ஆணோ பெண்ணோ நீதிமன்றம் முடிவு செய்யனும்.. இங்கு சீமானுக்கு பல நீதவான்கள் தீர்ப்பெழுதுகின்றனர்.. ஆணோ பெண்ணோ நீதி ஒன்றுதான்.. - சீமானை தண்டிக்காவிட்டால், அது சட்டத்தின் தோல்வியாகும்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.