Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. ஐரோப்பிய பாதுகாப்பு மாநாட்டில் கூட ஐரோப்பிய ஒற்றுமையை காண முடியவில்லை…சில நாடுகள் அழைத்து கொள்ளப்படவில்லை… ஐரோப்பா சிதைவடைய ஆரம்பித்து விட்டதாக நோக்கர்கள் கூறுகிறார்கள்…அமெரிக்க அதிபர் ஐரோப்பாவை கணக்கில் எடுப்பதாக தெரியவில்லை…அதாவது இன்று ஐரோப்பாவில் ஜக் சிராக்குக்கு பின்னர் ஆளுமை மிக்க தலைவர்கள் யாரும் இல்லை… தற்போதைய பிரான்ஸ் தலைவர் தன்னை ஒரு பலமிக்க தலைவராக காட்ட முனைகிறார்… அவரால் தனது நாட்டை கூட சரியாக வழிநடத்த முடியவில்லை... இதற்க்குள் ஐரோப்பாவை எப்படி காப்பாற்றுவது… நேட்டோ அமைப்பில் அமெரிக்கா இல்லை என்றால் அதோ கதிதான்... ட்ரம் சொல்வது போல் உக்ரைனை காப்பாற்ற வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்கிறார்... முன்னதாக பைடன் அவர்கள் ஐரோப்பாவோடு இணைந்து இறஸ்சியாவை யுத்தம் மூலம் பலவீனம் செய்ய நினைத்தார்... ட்ரம் மாறாக புற்றினுடன் கை கோர்த்து சீனா, ஈரான், வடகொரியா நாடுகளை அடக்கி ஆழுவதும் உக்ரைனில் இருந்து கனிமவளத்தை அபகரிப்பதுமே நோக்காக உள்ளது… அமெரிக்கா பிரித்தானியாவை கூட மதிக்கவில்லை… அமெரிக்க துணை ஜனாதிபதி பிரித்தானியா வெகு விரைவில் முஸ்லிம் நாடாக மாறும் என்று தெரிவித்துள்ளார்… இப்படியே ஆளாளுக்கு போட்டு தாக்கி ஒட்டு மொத்த ஐரோப்பாவும் வீழ்ச்சி காணப்போகிறது... அமெரிக்க உதவி இல்லாத போருக்கு குறிப்பாக பிரான்ஸ், ஜேர்மனி அதிக நிதியை ஒதுக்க நேர்ந்தால் பாரிய பண வீக்கத்தால் ஐரோப்பா தலைகீழாக மாறும்... அதன் பின்னர் போர் உக்ரைனை கைப்பற்றுவதோடு நிற்க்கப்போவதில்லை… ஐரோப்பாவில் தற்போது நிலை கொண்டுள்ள அமெரிக்க படைகள் விரைவில் வாபஸ் பெற படப்போகிறார்கள்.:. வரும் வாரங்களில் ட்ரம் - புற்றினுடன் சந்திப்பு நடைபெறும்... அதன்பிறகு செலன்ஸ்கி சமாதானம் நோக்கி செல்லவில்லை என்றால் இது எல்லாம் சாத்தியமாகும்… அமெரிக்கா இதுவரை 500 பில்லியன் டொலர்களை உக்ரைன் யுத்தத்திற்கு வழங்கி உள்ளது... இனிமேல் அந்த பணமோ அல்லது ஏவுகணைகளோ கிடைக்காது… ஐரோப்பாவை யாரும் காப்பாற்ற முடியாமல் போகும்…
  2. அப்படி இருக்காது என்று நினைக்கிறேன்.. இப்பொழுது எல்லாம் நாம் தமிழர் மேடைகளில் புதுப்புது முகங்கள் பல நாள் அனுபவமுள்ள அரசியல்வாதிகள் போல் பேசுவதை அவதானிக்கிறேன்.. இன்றும்கூட பழனிபாப நினைவுநாள் நாம்தமிழர் நேரலை போய்க்கொண்டிருக்கிறது.. எத்தனையோ புதுமுகம்கள்.. பிச்சு உதறுகிறார்கள்.. எங்கிருந்து வருகிறார்கள் எப்படி உருவாக்குகிறார்கள் என்றுதான் தெரியவில்லை.. அதனால்தான் மீண்டும் சொல்கிறேன்.. நாம் தமிழர் மெதுவாக அகலக்கால் ஊன்றி ஆழமாக வளர்கிறது.. நாம் எம் சந்தோசத்துக்கு கேலிகிண்டல் பண்ணலாம்.. ஆனால் யதார்த்தம் வேறாக இருக்கிறது..
  3. வைகோ பதினொரு மாவட்ட செயலாளர பிரிச்சிட்டு போய் கட்சிய பொளந்த போது திமுகவுக்கு எந்த சேதாரமும் வரவில்லை.... காளியம்மாளைவிட நட்சத்திர ஆட்களாக இருந்தவர்கள் பணம் படைத்தவர்கள் வெளியப்போயும் நாதகவுக்கு சறுக்கல் வரல....... காளியம்மாள் வெளிய போனால் கட்சிக்கு இழப்பு வராது காளியம்மாளுக்கும் இழப்பு வராது....... அவர்களுக்கு இழப்பு வருவதற்கு காரணங்கள் வேறு அதை அவர்கள் உணர்ந்து கொண்டார்களானு தெரியல..... தமிழ்நாட்டில் நாதக வளர்வது ஜெட் வேக வளர்ச்சி அதை நாதக காரர்களுக்கு எழுதி நரேட்டிவ் செட்ட பன்ற அளவுக்கு திறன் இல்லை........... உருட்டுனு நெனச்சா நெனச்சிட்டு போங்க.... கல்யாணசுந்தரம், ராசீவ்காந்தி போன பின் தான் நாம்தமிழர் கட்சி 36லட்சம் வாக்குகள் வாங்கியது.. இந்த வாக்குகள் சீமான் என்ற தனிமனிதனுக்காக வந்த வாக்குகள் அல்ல... தமிழ்தேசியம் தேவை கருதி அந்த தத்துவத்தின் அருமை கருதி தன்னை தமிழனாக உணர்ந்தவர்கள் ஒன்றுபட வந்த வாக்குகள்..இதை சீமானே பலமுறை சொல்லிருக்கிறார்…பிறர் கட்சிக்கு யார் போனாலும் அவர்களின் தனிப்பட்ட வாழ்வு வளம் பெருமே தவிர அதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் இல்லை… சீமானை தனிமனிதன்கட்சி சர்வதிகாரி என்று விளங்கமறுப்பான் போன்று சொல்பவர்களுக்கு.. எடப்பாடிக்கு முன்பான அதிமுகவுக்கும் ஒரு தனி மனித கட்சி தான்.. அண்ணாதுரைக்கு பின்பான திமுகவும் ஒரு மனித கட்சிதான்.... தவெகவும் ஒரு மனித கட்சிதான்... தாவாகாவும் ஒரு மனித கட்சிதான்.... சீமானுக்கு கட்சியில் இருந்து யாராவது வெளியேறும்போதோ அல்லது வெளியேற்றும்போதோ அதை சரியாக ஹேண்டில் செய்ய தெரியவில்லை... தவெக வில் கூட அவரைத் தவிர யாரும் பெரியதாக அறியப்படவில்லை..ஆனால் நாம் தமிழர் தொகுதிக்கு சிலர் பேர் அனைவராலும் அறியப்பட்டவர்களாக இருக்கிறார்கள்..
  4. காளியம்மாள் விலகல்.. சீமான் பரபரப்பு பேட்டி..
  5. கழகம் இரண்டு இலக்க 'சி' யில் பேசியதாக தகவல்கள் இருவாரத்திற்கு முன்பே வந்தது... பனையூரில் இருமுறை அண்ணாவயும் சந்தித்திருக்கிறார்… ஒரு பக்கம் அதிமுகவிலும்..... விஐயும் அதிமுகவும் சரியான முடிவை தரலை போல பாப்போம்..... அவரை இழப்பது சீமானுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது மாயைய்த்தான். ஆனால் அவர் சரியான இடத்திற்கு போனால் மட்டுமே அவரது பொட்டன்சியலுக்கு நல்லது.... எங்கிருந்தாலும் தமிழர்களுக்காக செயல்படட்டும்...
  6. தன்னை திருமணம் செய்து கொள்வதாக நடிகை விஜயலட்சுமி சீமான் மீது தொடுத்த வழக்கில் தற்போது சீமான் மீது எந்த காதலும் இல்லை குடும்ப பிரச்சனை திரைத்துறை பிரச்சனையால் சீமானை விஜயலட்சுமி குடும்பம் அணுகியது தெரிய வந்திருப்பதாக ஹைகோர்ட் கூறியிருக்கிறது…. நாம் தமிழர் கட்சியினுடைய ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் வழக்கு தொடர்ந்திருந்தார்.. அந்த வழக்கைத்தான் ரத்து செய்ய முடியாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் சீமான் மனுவை அண்மையிலே தள்ளுபடி செய்திருந்தது இந்த நிலையில்தான் அந்த வழக்கினுடைய விரிவான தீர்ப்பை நீதிபதி இளந்திரன் வழங்கி இருக்கிறார்.. அதுல வந்து மிரட்டலினுடைய அடிப்படையில சீமானுக்கு எதிரான புகாரை தான் நடிகை விஜலட்ச்சுமி திரும்ப பெற்றுள்ளது தெளிவாகிறது என்று அவர் வந்து திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார்.. குறிப்பாக இந்த பாலியல் வன்கொடைமை புகார் என்பது தீவிரமானது என்றும் அதை வந்து தன்னிச்சையாக திரும்ப பெற முடியாது என்றும் மேலதி நீதி இளந்தரையன சுட்டிக்காட்டியிருக்கிறார்… நடிகை விஜயலட்சுமி வாக்குமூலத்தில் கூறியுள்ள புகார்கள் சீமானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.. சீமான் வற்புறுத்தலினால் ஆறு ஏழு முறை விஜயலட்சுமி கருக்கலைப்பு செய்துள்ளதும் விஜயலட்சுமிடமிருந்து பெருந்தொகையை சீமான் பெற்றுள்ளதாகவும் விஜயலட்சுமி புகாரில் தெரியவந்துள்ளதாகவும் அந்த தீர்ப்புல சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.. வழக்கை ஆராய்ந்தபோது நடிகை விஜயலட்சுமிக்கு சீமான் மீது எந்த காதலும் இல்லை என்றும் குடும்ப பிரச்சனை மற்றும் திரைத்துறை பிரச்சனை காரணமாகத்தான் சீமானை விஜயலட்சுமி குடும்பத்தினர் அணுகி உள்ளனர் என்றும் அப்போதுதான் திருமணம் செய்து கொள்வதாக கூறி நடிகை விஜயலட்சுமியுடன் சீமான் உறவு வைத்துள்ளதாகவும் அந்த நீதிபதி அந்த தீர்ப்பில் குறிப்பிட்டு அந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்..
  7. சமூகச் சிந்தனையாளர் பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள் யாராகினும், அவரின் வழியொற்றி நீங்கள் வாழாதிருப்பின் உங்களுக்கு ஒன்று சொல்வேன் உங்களது வேலிக்குள் உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு எல்லா ஆடுகளுக்கும் சுதந்திரம் வேண்டி நீங்கள் ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம் எதுவென்பதை நானறிவேன். அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை அதுதான் அடைந்து கிடக்கிறது நான் என் செய்வேன் என்பவர்க்கு நானின்றொன்று சொல்வேன் உன் சொந்தப்பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் உன் ஆட்டுக்கு விடுதலை பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில் வேறெந்த ஆட்டுக்கும் நீ விடுதலை உபதேசம் செய்யாதே. விடுதலை பெற எண்ணும் ஆடுகளை வேட்டையாடும் நோக்கம் மட்டுமே உன்னுடையது என்பதை எவரும் கண்டு கொள்வார்கள். . முதலில் உன்பட்டியின் ஆட்டை, ஆடுகளை விடுதலை செய். 20.02.2025 வாசு
  8. சீமானுக்கு எதிராக திமுக காழ்ப்புணர்வுடன் அவதூறைகளை பேசிக்கொண்டிருக்க இன்றைய திருமாவின் பேட்டி கருத்தியல் ரீதியான பேச்சாக மிகவும் கவனிக்ககூடியதாக நியாயமான கேள்விகளுடன் அமைந்தது.. பார்க்கலாம் நாளை சீமானின் பதிலை.. திருமா பேசியது 👇 சீமான் ரொம்ப குதர்க்கவாதம் பேசுறாரு.. ஒரு கருத்தியல் விவாதம்னா நம்ம வரவேற்கலாம்.. பெரியாரை வந்து விமர்சிக்க கூடாதுன்னு எல்லாம் கிடையாது.. பெரியாரே சொல்லி இருக்கிறாரு என் கருத்தை ஒருத்தன் வந்து மறுத்து பேசினான்னா அது முற்போக்கானதா இருந்தா அதை நான் வரவேற்கிறேன்னு சொல்லி இருக்கிறாரு..என்னுடைய கருத்தை நான் சொன்னேங்குறதுக்காக யாரும் ஏத்துக்க கூடாது அதுல எது சரின்னா ஏத்துக்கோ அப்படிங்கிறதுதான்… அது பெரியாரே ஒப்புக்கொண்ட ஒரு விஷயம் அது.. அதனால பெரியார் வந்து விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. அம்பேத்கரும் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவர் கிடையாது.. ஆனா சீமான் பேச்சு பெரியாரை கொச்சைப்படுத்துவதாகவும் அவதூறுபரப்புவதாகவும் தான் இருக்கு.. அவர் வந்து கருத்தியல் ரீதியா கடவுள் இல்லைன்னு ஏன் சொன்னாரு கடவுள் இருக்கிறார் அப்படின்னு பேசுங்க.. பார்ப்பன எதிர்ப்பு ஏன் வைத்தார்.. பார்ப்பன எதிர்ப்பு தப்பு.. அவங்க சிறுபான்மையினர்.. சிறுபான்மை துவேஷம் கூடாது.. பார்ப்பனர்கள் என்ன ஆதிக்கம் பண்ணிட்டாங்க இவர் வந்து பார்ப்பனர்களை எதிர்க்கிறார்.. இது ஒரு சமூகத்துக்கு எதிரான வெறுப்பு அரசியல் தானே.. அப்ப பெரியார் பேசுறது ஒரு துவேஷ அரசியல்.. அதனால நான் எதிர்க்கிறேன் அப்படின்னு பேசுங்க நம்ம விவாதிப்போம்.. ஆனா பெரியார் பேசின அரசியல்தான் தமிழ் தேசியத்திற்கு எதிராய் இருக்கு அப்படின்னு சொல்றதும் பிறமொழி வெறுப்பை வந்து விதைப்பதும் எல்லாம் டோட்டலா அவர் வந்து தமிழ் தேசியம் பேசல.. அவர் வந்து ஒரு வெறுப்பு அரசியலை பார்ப்பன அரசியலுக்கு அல்லது இந்த சனாதன அரசியலுக்கு துணை போகக்கூடிய ஒரு அஜெண்டாதான் அவர்கிட்ட இருக்குது.. அவர் பேசுறது தமிழ் தேசியமே கிடையாது..தேசியம்ங்கிற சொல்லே முதல்ல தமிழ் சொல் கிடையாது.. அப்படி பார்த்தா தூய தமிழ் வரணும்னா தேசியம்ங்கிற சொல்லே தமிழ் சொல் கிடையாது.. தமிழ் தேசம் அப்படிங்கறது தமிழரசன் பேசின அரசியல்.. அது தமிழ் தேசியம்.. எங்களுக்கு தனி தமிழ்நாடு வேணும்.. நாங்க இந்திய பேராதிக்கத்தின் கீழ இருக்க மாட்டோம்.. எங்களுக்கு இந்திய தேசியம் வேண்டாம்.. நாங்க வந்து தனி தமிழ்நாடு கோறுகிறோம் என்பதுதான் தமிழ்நாடு தமிழரசன் பேசின அரசியல்.. தனி தமிழ்நாடு கோரிக்கை தான் தமிழ் தேசியமா இருக்க முடியும்.. இப்ப நாம பேசுறது வந்து மொழி உரிமையும் இன உரிமையும் உள்ளடங்கிய இந்திய தேசத்திற்குள் கட்டுப்பட்ட ஒரு அரசியல்… இப்ப இவர் வந்து தேர்தல்ல நிக்கிறார்…அப்படின்னா இந்த எலக்டோரல் சிஸ்டத்தை ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிறார்.. அப்படின்னா இந்த இந்தியாவையும் ஏத்துக்கிறாரு.. அப்ப இந்தியாவை ஏத்துக்கிட்டாருன்னா இந்திய தேசியத்தை ஏத்துக்கிட்டாருன்னா தமிழ் தேசியம் எங்க இருக்கும்..? தமிழ்தேசியம்ங்கிறது சிங்கள பேரினவாதத்தை மட்டுமே எதிர்க்கல.. எங்களுக்கு வெறும் எங்க தமிழ் மொழியையும் ஆட்சி மொழியா வச்சு அவங்க கோரிக்கை வைக்கல.. எங்களையும் ஒரு தேசிய இனமா அங்கீகரிச்சு எங்களுக்கு அமைச்சர் பதவி கொடுங்கன்னு அவரு கேக்கல..முதலமைச்சர் பதவி கொடுங்கன்னு கேக்கல.. முதலமைச்சர் தரேன்னு சொல்லவே வேணான்ட்டாருல.. அவரு அதை வடக்கு கிழக்கு மாகாணத்தை ஒரே ப்ராவின்ஸா மாற்றி அந்த ப்ராவின்ஸ்க்கு அவரை முதலமைச்சர் ஆக்குறோம்னு தானே சொன்னாங்க.. அதுதானே 13 அமெண்ட்மென்ட்.. அதை அவர் ஏத்துக்கல.. அப்ப அவருடைய கோரிக்கை என்ன..? நாங்க வேற நீங்க வேற.. எங்களுக்கு தனியா எங்க தாயகத்தை பிரிச்சு கொடுங்க.. அதான் தாயகம் தேசியம் தன்னுரிமைங்கிறது.. தன்னாட்சிங்கிறது.. தாயகம் தேசியம் தன்னாட்சி.. எங்கள் நிலப்பரப்பை எங்கள் தாயகமா ஏத்துக்குங்க.. எங்களுடைய அரசியல் எங்களை வந்து ஒரு தேசியமாகவும் தேசிய இனமாகவும் ஏத்துக்குங்க.. அதனால எங்களை நாங்களே ஆண்டுகொள்வதற்கான இறையாண்மையை எங்கள்ட்ட ஒப்படைங்க.. இதுதான் வந்து தமிழ் அரசியல்.. தமிழ் தேசிய அரசியல்.. இப்ப இவங்க அதை வைக்கிறாங்களா..? தாயகம் தேசியம் தன்னாட்சிங்கிறதை வைக்கிறாங்களா..? வெறும் மொழி உணர்வையும் இன உணர்வையும் பேசிட்டு இருக்காங்க.. தெலுங்கு எதிர்ப்பை முன் வைக்கிறாங்க தெலுங்கர்களால் தான் இங்க எல்லாமே போச்சுன்றாங்க.. அந்த வரிசையில பார்க்கும்போது பெரியார் வந்து ஒரு கன்னடர்.. அவரு அந்த கட்சியில இருந்தவங்க எல்லாம் தெலுங்கர்கள்.. அதனால இங்க தெலுங்கர்களால்தான் நாங்க அழிஞ்சு போயிட்டோம் அப்படிங்கிறார்கள்.. இது வந்து கருத்தியல் ரீதியாவே வரலாற்று தவறு.. வரலாற்றுப் பிழை இந்திய தேசியம் தான் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியும்.. தெலுங்கு தேசியம் தமிழ் தேசியத்திற்கு எதிரா இருக்க முடியாது.. டெல்லியில் இருக்கிறது ஹிந்தி பேசக்கூடிய ஆட்சியாளர்கள் தான் இருக்குறாங்க.. தெலுங்கு பேசக்கூடிய ஆட்சியாளர்கள் அங்க இல்லை.. எந்த வகையில வந்து தமிழ் தேசியத்திற்கு வந்து பெரியார் முட்டுக்கட்டையா இருந்துட்டாரு..? தமிழ்ங்கிற உணர்வையும் தமிழன் என்கிற உணர்வையும் அவர் சைமல்டேனியஸா சமகாலத்துல முன் வச்சிருக்கிறாரு.. தமிழை ஏன் பழிச்சாருன்னா தமிழ்ல வந்து அறிவார்ந்த செய்திகள் இல்லை.. எல்லாம் புராண குப்பைகள் இருக்குன்றதுனால ஆத்திரப்பட்டாரு..காட்டுமிராண்டி காலத்துல இருந்த அதே மொழியாதான் இது வளர்ச்சி இன்னும் வளர்ச்சி அடையல.. ஒரு நவீனமா அப்டேட் ஆகல சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இதுக்குள்ள வரல.. அதுக்கான டெர்மினாலஜி அதுக்கான சொல்லகராதிகள் இதுல இல்ல அப்படிங்கிற ஆத்திரத்துல அவர் சொன்னாரு.. ஒரு விரக்தியின் விளிம்புல இருந்து அதை சொன்னாரே தவிர கன்னட பற்று வைத்துக்கொண்டு தமிழை வந்து அவர் பழிக்கல.. சீமான் என்ன தோற்றத்தை உருவாக்குறாருன்னா அவர் கன்னடரா இருந்ததுனாலதான் தமிழர்களை கொச்சைப்படுத்தி இருக்கிறாருன்றாரு:: தமிழ் அறிஞர்கள் பங்களிப்புங்கிறது வேற..ஒரு அரசியல் களத்தில் நின்னு ஒருத்தர்செய்யக்கூடிய பங்களிப்புங்கிறது வேற.. அண்ணா பேசுனது எல்லாரும் தமிழறிஞர்கள் பேசி இருக்காங்க.. ஆனா அண்ணா ஏன் நம்ம ஒரு ஐக்கனா பார்க்கிறோம்னா அவர் அரசியல் களத்தில் நின்னு பேசினார்.. அதே மாதிரி அம்பேத்கர் பேசின அரசியலை அதுக்கு முன்னாடி எவ்வளவு பேர் பேசி இருக்காங்க.. ஆனா அம்பேத்கர் அரசியல் களத்தில் நின்று செஞ்சதுனால நம்ம வந்து தூக்கி பிடிக்கிறோம்.. அரசியல் களத்தில் நின்னு செய்யறவங்களுடைய பங்களிப்பையை நம்ம இலக்கிய தளத்தில் நின்னவங்கள கூட வந்து ஒப்பிடக்கூடாது.. மாபோசி காலத்துல பேசின அரசியல் வந்து அவங்களும் அன்னைக்கு வந்து திராவிட வெறுப்புங்கிறதை முன்னிறுத்தி தான் பேசுனாங்களே தவிர தனித்தமிழ்நாடு கோரிக்கை யாரும் வைக்கலையே.. மாபோசி தனி தமிழ்நாடு கோரிக்கை வச்சாரா அல்லது வேற யாராவது தனி தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா இப்ப இவங்களே தனித்தமிழ்நாடு கோரிக்கை வைக்கிறாங்களா..? வைக்க முடியாது இல்லையா..? அப்ப முடியாதுன்னா நீ பேசுறது தமிழ் தேசியம் கிடையாது.. அது மொழி உரிமை.. இன உரிமை.. அவ்வளவுதான் நீங்க கான்ஸ்டிடியூஷன் ஏத்துக்கிட்டு எலக்சன்ல நிக்கிறீங்கன்னு சொன்னா நீங்க பேசுறது போலி.. அது தமிழ் தேசியமா இருக்க முடியாது.. நீங்க தமிழ் தேசியம் பேசுறதுனா இந்த கான்ஸ்டிடியூஷன் நான் ஏத்துக்கல இந்த எலக்சன்ல நான் நிக்க மாட்டேன் எங்க தமிழ்நாடு தனி நாடு.. எங்களை இந்த இந்தியாவுக்குள்ள வச்சிருக்காதீங்க நாங்க தனி தமிழ்நாடு வென்றெடுப்போம்னு சொல்லுங்க.. யாரும் சொல்ல முடியாது.. அப்படி வெளிப்படையா சொல்ல முடியாது அப்ப எதுக்காக நீங்க பெரியாரை கொச்சைப்படுத்துறீங்க..? பெரியார் எப்படி தமிழ் தேசத்துக்கு முட்டுக்கட்டையா இருக்க முடியும்..? பெரியாருடைய அரசியல் முழுக்க முழுக்க பார்ப்பனிய எதிர்ப்பு,பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு, சனாதன எதிர்ப்பு.. அதனாலதான் திராவிடம் என்கிற சொல்லாடலே வருது.. திராவிடத்தை பெரியார் கண்டுபிடிக்கல திராவிடம் என்கிற சொல் வந்து பண்டிதர் அயோத்தியதாசரால தான் இங்க முழக்கத்துக்கே வருது..அவர்தான் திராவிடம் என்கிற சொல்லை முதல்ல கையாளுறாரு அதுக்கு முன்னாடி எத்தனையோ பேர் பயன்படுத்தி இருக்கலாம் ஆனா ஆரியத்திற்கு எதிரான ஒரு சொல்லாடலா திராவிடத்தை கையாண்டவர் பண்டிதர் அயோத்தியதாசர்.. அப்படி துணிச்சல் இருந்தா நீங்க பண்டிதர் அயோத்திதாசர் விமர்சனம் பண்ணுங்க.. திராவிடத்தை அவர்தான் முதல்ல அறிமுகப்படுத்தினார்.. ஆதி திராவிடம் என்கிற சொல்லை இவர் இரட்டமலை சீனிவாசன் அறிமுகப்படுத்தினார்.. ரெவரன் ஜான் ரத்தினம் திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் 1880களில் அல்லது 82, 83… அவர் இந்த அமைப்பை உருவாக்கும் போது பெரியாருக்கு மூணு வயசு நாலு வயசு.. திராவிடர் கழகம் என்கிற பெயரிலேயே ஒரு அமைப்பு உருவாக்கினார் அப்ப அவங்க எல்லாம் வந்து தமிழ் தேசியத்துக்கு எதிராக இருந்தாங்களா..? அன்னைக்கு மதராஸ் மாகாணத்துல எல்லா மொழியும் பேசக்கூடியவங்களா இருந்தாங்க அந்த காலத்துல நாம பிறந்திருந்தாலும் அப்படித்தான் இயக்கத்தை உருவாக்கி இருப்போம்.. இன்னைக்கு திராவிடர் என்கிற சொல்லு தேவையில்லை தமிழன்னு சொன்னா போதும் தமிழர் தேசியத்தை பேசினா போதும்னா அது ரைட்.. நமக்கு திராவிடம் என்கிற சொல் தேவையில்லைன்னா அத சொல்லலாம்.. ஆனா அதுதான் தமிழ் தேசிய தேசியத்தையே வந்து முட்டுக்கட்டையா இருந்துச்சு.. பெரியாரால தான் அங்க தமிழர்களே எழுச்சி பெறாமல் போனாங்க.. பெரியாரை ஒழிச்சாதான் தமிழ் தேசியத்தை கொண்டு வர முடியும்ங்கிறது தவறு.. மேலும் அவர் பேசியது 👇
  9. ஈழத்தில் பெரியார் சிலை நிறுவ இயக்குநர் ராஜ்குமார் நன்கொடை. ----------------------------------------------------------- இலங்கையில், ஈழத்தில், சாதி வெறியின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் பெரியார் சிலை ஒன்றல்ல பல நூறு நிறுவப்படும் . இந்தியாவில் இருந்து அண்மையில் இலங்கை வந்திருந்த வெங்காயம்,பயாஸ்கோப் போன்ற படங்களின் இயக்குநரும் பெரியாரிஸ்ட்டுமான ராஜ்குமார் அவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள யாழ்/ பெரியார் படிப்பு வட்டம் மற்றும் அம்பேத்கர் இயக்கம் ஆகியவற்றின் எமது அலுவலகத்தில் எம்மைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இலங்கையில் எமது தலைமையில் நிறுவப்பட இருக்கும் பெரியார் சிலை அமைப்பிற்கு தனது தனிப்பட்ட பங்களிப்பாக ஒரு தொகை பணத்தினை நன்கொடையாக வழங்கி வைத்தார். அருண் சித்தார்த் பெரியார் படிப்பு வட்டம் ஈழத்தில் பெரியார் சிலை நிறுவப்படும். --------------------------------------------------------- ஈழத்தில் இலங்கையில் சாதிய ஒடுக்குமுறையின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் தாவடியில், கே.கே.எஸ்.வீதியில் எனது அலுவலகத்திற்கு முன்னால் 10 அடி உயரத்தில் தந்தை பெரியார் சிலையும் , அண்ணல் அம்பேத்கர் சிலையும் சமூக நீதி, சமதர்மம், பகுத்தறிவு, சுயமரியாதை , பெண்விடுதலை, சாதி ஒழிப்பு, சீதனமுறை ஒழிப்பு, போன்ற உயரிய மேன்மையான சிந்தனை முறையை பறைசாற்றும் நோக்கில் நிறுவப்படும். சிலைகள் நிறுவப்படும் திகதிகள் விரைவில் பொதுவெளியில் அறிவிக்கப்படும். இந்தச் சிலைகள் இரண்டும் ஈழத்தில் தந்தை பெரியாருக்கும் , அண்ணல் அம்பேத்கருக்கும் நிறுவப்படும் முதலாவது சிலைகளாக வரலாற்றில் பதியப்படும். பின்குறிப்பு- ஈழத்து, இந்திய, புலம்பெயர் தேசத்து சாதிய சண்டியர் அனைவரும் வரவேற்கப்படுகின்றீர்கள். ஒடுக்கப்பட்ட மக்களைக் காலங்காலமாக சுரண்டி வாழ்ந்த, இன்றும் வாழ்ந்து வரும் சனாதன சாதிய சங்கிகளுக்கும், சைமனின் வியாபார, புரட்டுத் தேசிய ஆமைக் குஞ்சுகளுக்கும் அருண் சித்தார்த் என்கின்ற ஈழத்துப் பெரியாரிஸ்ட்டின் அறைகூவல் இது. முடிந்தால் இந்த சிலைகளில் கை வைத்துப் பாருங்கள். அருண் சித்தார்த் பெரியார் படிப்பு வட்டம் இல.238, கே.கே.எஸ்.வீதி தாவடி, கொக்குவில், யாழ்ப்பாணம். தொ.இல.94774842464
  10. இந்த நிலைவரக்குடாது எண்டுதான் நான் ஊரில் இருக்கும் முடிவை எடுத்திருப்பது..
  11. சரி கதை.. விளையாட்டு திரியையும் முடிச்சுவிடப்போறாங்கள்..🤣 நாங்கள் மற்ற திரியளில அடிச்சுக்கொண்டு கிடக்கிறம் இஞ்ச உங்களுகு விளையாட்டு திரி கேக்குதோ..🤣🤣 நம்மளும் நிம்மதியா இருக்க கூடாது..யாரையும் நிம்மதியா இருக்க விடக்குடாது..🤣🤣
  12. யோவ்.. நான் எங்கப்பா எழுதின்னான் புதிசு எண்டு.. நான் எப்பகூட சொல்லுறன் பழசு வேற ஜடில எழுதின்னான் எண்டு.. புதிசு புதிசா புரளிய கிளப்பிவிடுறது..😀
  13. றோ.. ஓணாண்டி றோ. சீமான் றோ.. கபொஇத்தன் றோ.. உங்கட வீட்ட புள்ளகுட்டியையும் றோ எண்டுவியள் இன்னும் கொஞ்சநாள் போக.. 🤣🤣 இந்தாளுக்கு றோ விசர் புடிச்சிருக்கு..🤣🤣 இரவும் பகலும் கம்பியூட்டர்ல இதையே எழுதிக்கொண்டிருந்தா அடுத்தது வீட்டில மனுசியயும் நீ றோ ஆள்தான எண்டு கேக்குற நாள் கனதூரம் இல்ல..🤣🤣 புல்லா மேல்வளம் தட்டப்போகுது துலைவார் றோவால..🤣🤣
  14. சரி சரி ரெண்டுபேரும் வீடியோவபாத்திட்டு டின்குவில எண்ணெய தடவிட்டு படுங்கோ… ஜயோ..எரியுதடி மாலா..🤣🤣
  15. 2009 அழிவுடன் இருந்த ஆத்திரத்தில் ஏதாவது செய்யவேண்டும் என்று அலைந்த நாட்களில் 2011 இலிருந்து சிலகாலம் இவருடன் தொடர்பில் இருந்தேன்.. காலம் எல்லாவற்றையும் அடித்துக்கொண்டுபோய்விடும்.. இவரின் கைது வருத்தமான செய்தி.. இவரைப்பற்றி பின்னர் சிலகாலம் இணையங்களில் தவறாகவும் எழுதப்பட்டதாக ஞாபகம்.. சாத்திரியோ அல்லது வேறு யாரோ யாழிலும் எழுதியதாக ஞாபகம்.. அமரதாஸ் கதைபோல் ஆகக்கூடாது என்பதால் என்னால் சரியாக நாபகம் இல்லை தவறாகவும் இருக்கலாம் என்பதை கூறிக்கொள்கிறேன்.. வரமாட்டார்கள்.. ஆனால் தமிழ்தேசியத்தை சீமான் உருவாகுவதற்கு முன்னரே யாழில் எதிர்த்தவர்கள் பலர் சீமானின் திரிகளில் தமிழ்தேசியத்தை தாம் சீமானிடம் இருந்து காக்கப்போவதாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவகள் எப்பொழுதும் தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை.சீமானை வீழ்த்தியதும் மறுபடியும் முதலில் இருந்து புலிகளை விமர்சிக்கிறோம் என்று தமிழ்தேசியத்தை கழுவி ஊத்தும் வேலையை ஆரம்பிப்பார்கள்.. இதற்குதான் தமிழில் “நீலிக்கண்ணீர் வடிப்பது” என்று கூறுவார்கள்.. “ ஆடு நனையுது என்று ஓநாய் அழுகிறது” என்றும் கூறுவார்கள்..
  16. விகடன் இணையத்தை முடக்கிய பாஜக.. பாஜாகவுக்கு எதிராக ஒரு முழு பத்திரிகையாளர் சந்திப்பையே நடத்திய சீமான்.. தகுதி உள்ள ஒரே ஆள் சீமான் - சவுக்கு
  17. தமிழ் நாட்டை பொறுத்தவரை இது ஒரு பொல்லாப்பும் இல்லை.. அங்கால திமுக அதிமுக பாமக etc.. சாதிவெறியை பரப்புகிறார்கள்.. இவர் இனவெறியை பரப்புகிறார் என்கிறீர்கள்.. ஆக மொத்தத்தில் வெறி.. வெறி.. அதில அவரவர்க்கு புடிச்ச வெறியை அவரவர் எடுக்கிறார்கள்.. அப்படியே அதை வெளிய இருந்து எட்டிப்பார்க்கும் நாமும் உள்ள பேயில் ஓரளவு நல்லபேயாய் நமக்கு தெரிவதை ஆதரிக்கிறம்.. இதில் நீங்கள் கிட்லர் பட்லர் எண்டு எழுதிக்கிளிக்கிற அளவுக்கு தமிழ்நாட்டு அரசுக்கு ஒரு அதிகாரமும் இல்ல.. திமுக அதிமுக பாமாக விசிக நாம்தமிழர் எல்ல்லாரும் றோவுக்கு கீழதான் .. றோ சொல்றததான் கேக்கனும்.. கருணாநிதியே றோ சொல்றதகேட்டுத்தான் 2009 இல் இருந்தவர் .. உண்ணாவிரதமும்.. ஆதலால் ஒரு பொல்லாப்பும் இல்லை நமக்கு..
  18. இந்த மனிதனை ஏன் அவரை நேசிக்கும் மக்களுக்கு பிடிக்கிறது என்பதற்கும் ஏன் அவரை எதிர்ப்பவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார் என்பதற்கும்..
  19. அது ஒரு துன்பியல் சம்பவம்- அன்ரன் பாலசிங்கம்.. சரி வாங்கோ பழகலாம்..
  20. இன்னொன்று👇😂 ” யமனாக நிழலியும், சித்திரகுப்தனாக தமிழ் சிறியும், யமதூதர்களாக தூயவன்,நிர்மலன்,புத்தன்,தும்பளையான்,ஜீவா ஆகியோரும் நந்தனாக நந்தனும் கலந்து சிறப்பிக்கும்... எமலோகத்தில் நந்தன் நாடகம் இதோ...[/size] ______________________________________________________________________________________________________________________________ 2054 ஆம் வருடம்,மார்கழி மாதம்,அதிகாலையில் தூக்கத்தில் ஆழ்ந்துருந்திருக்கிறார் நந்தன்.அப்போது பார்க்க பயங்கரமான,விகாரமான தோற்றம் உடைய சிலர் அவரிடம் வருகிறார்கள். அவர்கள் "வா எங்களுடன்", என்று கூறி நந்தனை தர தரவென இழுத்துச் செல்கிறார்கள். (உரையாடல் முழுதும் வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்). காட்சி௧ள் (வானவீதியில்) நந்தன்: ஆமாஆஆஆ நீங்கெல்லாம் யாருப்பா..? யமதூதர்கள்: நாங்கள் யமதூதர்கள். உன் உயிரைப் பறித்துப் போகின்றேம். நந்தன் : என்னாது... என் உயிரை எடுத்துட்டீங்களா,சொல்லவேயில்லை. யமதூதர்கள்: சொல்லிட்டுச் செய்ய நாங்க என்ன தமிழ் சினிமா ஹீரோவா, பஞ்ச் டயாலக் பேசி உயிரை எடுக்க...பொத்திக்கொண்டு இருடா டுபாக்கு... நந்தன் : ஆமா யமதூதா..., ரம்பா,ஊர்வசி,மேனகா எல்லாம் அங்கிட்டு நல்லா இருக்காங்களா. யமதூதர்கள் : நீ கொஞ்ச நேரம் வாயை அடைத்துக் கொண்டு வருகின்றாயா கிராதகா..? நந்தன் : என்னது நீங்க மட்டும் வந்துருக்கிங்க, தேவதூதர்கள்,புஷ்பக விமானம் எல்லாம் நமக்கு வராதா? யமதூதர்கள்: அடேய் நீ பண்ணிய பாவங்களுக்கு,கெட்ட கேட்டுக்கு அவங்க எல்லாம் வரனுமா?.சும்மா பிணாத்தாம வாடா. நந்தன்: ஆமா எவ்வளவு தூரம் போகனும்?...இப்பிடி ரொம்பத்தூரமின்னு தெரிஞ்சிருந்தா வரும்போது வீட்டிலிருந்து கொஞ்சம் வொட்காவை எடுத்துவந்திருப்பனே.. யமதூதர்கள்: அடேய்,எங்க பொறுமையை சோதிக்காதே. பேசாம வருகிறாயா நரனே. நந்தன்: இங்கை திண்ணையும் இல்லை..போகின்ற வழிக்கு பொழுது போகனும் இல்லை... யமதூதர்கள்: சூலாயுத்தால் வாயில் இடித்து,இப்ப நீ வாயை மூடலைன்னா,அடிச்சே கிழிச்சுடுவேம்.எப்பிடி வசதி. நந்தன் : அய்யோ, ஆத்தாடி, என்று கப்சிப். காட்சி - 2 (எமலோகத்தில் எமனது இறுதி தீர்ப்பு வாசிக்கப்படுகின்றது). சித்ரகுப்தன்: மன்னா,இவன் ஒரு ஜெகஜாலக் கில்லாடி, நல்லவன் போல நடிப்பவன். இவனை எமலோகத்தில் விட்டு அனைத்து தண்டனைகளும் தரவேண்டும். யமன்: அது என் வேலை, நீ முதலில் இவனது குற்றங்களைப் படி. நந்தன் : அடப்பாவிகளா, இங்கனயும் பதவிப் போட்டியா?. யமதூதர்கள்:உஷ் வாயை மூடிக்கொள். இல்லை என்றால் உன் தண்டனை இரு மடங்கு ஆகிவிடும். நந்தன் : சரி அப்பு. சித்ரகுப்தன்: மன்னா சொல்ல அசிங்கம், இவன் பள்ளியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது..... யமன் : சரி,சரி, இரகஸ்யங்களை சப்தம் போடாதே. வாலிபக் குறும்பு. இதுக்கு தண்டனையா, இவனை தகிக்கும் தங்க பதுமையைக் கட்டி அனைக்கச் சொல்லி வறுத்து எடுப்போம். நந்தன் : அடப்பாவமே, நான் எப்பவும் தங்கம் என் உடம்பில் கூடப் போட்டதே கிடையாது. கட்டிக்க தங்கப் பதுமையா?. பூலோகத்தில் அப்புறம் ஏன் தங்கம் விலை ஏறாது. சரி இங்கனயாவது போட்டுக்குவேம். யமதூதர்கள்: அடேய் அது சூடான கொதிக்கும் தங்கப் பதுமைடா. சித்ரகுப்தன்:அதுமட்டும் இல்லை இவன் திண்ணையில் குடித்துவிட்டு, ஒருமுறை....... யமன்: அடேய்,கஸ்மாலம், கேப்மாரி,முடிச்சவிக்கி, உன்னை.... சித்ரகுப்தன்: மன்னாஆஆஆ.. என்ன ஆச்சு தங்களுக்கு உளறுகின்றீர்கள். யமன்(சுதாரித்து): ஒன்றுமில்லை,திண்ணை என்றவுடன் அங்கு இவர்கள் வெள்ளிக்கிழமைகளில் வெறியில் பேசிக்கொள்ளும் பாசை ஒட்டிக் கொண்டது.இதுக்கு தண்டனையாக இவனை நாலு யமதூதர்களை விட்டு முள்ளுச் சவுக்கால் பரேட்டாவைப் போல அடித்து புரட்டி எடுங்கள். சித்ரகுப்தன்: மன்னா இதையும் கேளுங்கள்,லண்டனில் இவன்........ யமன்: அடேய் போதும், போதும் இந்தக் குற்றத்திக்கே இவன் நரகத்தில் பல ஆண்டுகள் தண்டனை அனுபவிக்க வேண்டும்.இதுக்கு தண்டனையாக இவனை எண்ணைச் சட்டியில் போட்டுப் பொறிக்க வேண்டும். சித்ரகுப்தன்:இது மட்டும் அல்ல மன்னா, யாழில் இவன் பதில் எழுதுறன் எண்ட பெயரில் கண்டதையும் எழுதி,தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்பி உள்ளான்.ஒரு முறை இவன் களௌறவுகளிடம்...... யமன் : அடேய்ய்ய், மேலே சொல்லதே,என் வாயில் கெட்ட வார்த்தை வந்துவிடும்,இதுக்கு இவன் நாவை அறுத்துச் வறுவல் பண்ணுங்கள். நந்தன்: என்னது இது சின்னப்புள்ளைத்தனமா இருக்கு. இதுக்கு முன்னால இவரு புரோட்டாக் கடையில் மாஸ்டரா இருந்தாரா?. வறுக்கனும்,பொறிக்கனும்,வடகம் போடனும்,வறுவல் போடனும் அப்படின்னு தீர்ப்பு சொல்றார்....? யமன் : அடேய் நரனே. என்ன தைரியம் இருந்தால் என்னை புரோட்டா மாஸ்டர் என்பாய். இதுக்கு உனக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும். யமதூதன்: கேட்டாயா, வாயை வைச்சுக் கிட்டு சும்மாயிருந்தா,இப்படி நடக்குமா? நந்தன் : இல்லைனாலும்,அடப்போய்யா.. நாங்க எல்லாம் எத்தனை பேரைப் பார்த்துருக்கேம். சித்ரகுப்தன்: மன்னா,என்ன ஆழ்ந்த யோசனையில் ஆழ்ந்து விட்டீர்கள். யமன்: இந்த நரனுக்கு கடுமையான தண்டனை கொடுக்கவேண்டும், என்ன தண்டனை என்ற குழப்பத்தில் உள்ளேன். நந்தன்: அப்பாடா, வந்த வேலை முடிஞ்சது. எதே நம்மளால முடிஞ்சது. குழம்பி தீர்வதுக்குள் எஸ் ஆகனும். எப்படிய்ய்ய். சித்ரகுப்தன்: மன்னா, இந்த மூன்று தண்டனைகளும் ஒரே காலத்தில் கொடுப்போம். அல்லது தண்டனைக் காலத்தை இன்னமும் அதிகரிப்போம். நந்தன்: அடடா, மன்னர் குழம்பினாலும் இந்த அல்லக்கைகள் விடாது போல இருக்கே. சரி சமாளிப்போம். எவ்வளவோ பார்த்துட்டேம்,இது என்ன.. யமன்: மிக மிக கடுமையான தண்டனையாக இருக்கவேண்டும்,அதைப் பார்த்து எவனும் என் முன் வாயைத் திறக்கக் கூடாது. நந்தன் : பேசாமல் எல்லாரையும் மன்மோகன் ஆக்கிடுங்க...யாரும் வாயைத் தொறக்க மாட்டாங்க... யமதூதன்: அடேய் உன் தப்புக்கள் எண்ணிக்கை கூடிக் கொண்டே போகின்றது.வாயை மூடு. யமன்: ஆகா கண்டுபிடித்து விட்டேன், மிக கொடுமையான தண்டனை, யாரும் வழங்காத தண்டனை. அற்புதமான, ஆளைப் பையித்தியம் பிடிக்க வைக்கும் தண்டனை. சித்ரகுப்தன் : ஆவலுடன் மன்னா என்ன அது மன்னா, சொல்லுங்கள். நந்தன்: அடாடா,வில்லங்கமா இருக்கும் போல, சரி பொறிக்கறது வீட பெரிசா என்ன தண்டனையைத் தரப்போறானுங்க. யமன்: டேய் நரனே, அடுக்கடுக்காய் பாவங்கள் பண்ணியது இல்லாமல்,என்னையே கிண்டல் பண்ணத் துனிந்த உனக்கு அதிக பட்ச தண்டனை வழங்குகின்றேன். இதை அனுபவித்து நீ பைத்தியம் பிடித்து அனு அனுவாய் சித்தரவதைப் படுவாய். நந்தன் : என்ன தண்டனைன்னு சொல்லாம, புதிர் போட்டா எனக்கு என்ன ஜோசியமா தெரியும். யமன்: கோபமாக,சத்தமாக எழுந்து நின்று, அடேய் நரனே, உனக்கு இந்த தண்டனைதான் பொருத்தம். நீ இங்கு இருக்கும் காலம் எல்லாம் தினமும், நீ நெடுக்காலபோவான் எழுதிய பதிவுகள் எல்லாத்தையும் நீயே உக்காந்து படிக்க வேண்டும். இதுதான் நான் உனக்கு வழங்கும் தண்டனை. நந்தன் : பதட்டமாக, சத்தம் போடத்துவங்கியபடி....அய்யோ அய்யோ அது மட்டும் வேண்டாம், நீங்க சொன்ன எல்லா தண்டனைகளும் ஒட்டு மொத்தமாக தாருங்கள், ஆனா இந்த தண்டனை மட்டும் வேண்டாம் என்று கத்திக்கொண்டு கண்விழிக்கிறார்.... _____________________________________________________________________________________[size=6] [/size] [size=6]நந்தன் கண்விழிக்கவும்..நாடகம் இனிதே நிறைவேறுகிறது...நன்றி வணக்கம் உறவுகளே..நிழலி மட்டும் தான் போட்டிருக்கும் வாடக்கைக்கு எடுத்த எமதர்மன் உடுப்புகளை தரமாட்டன் என்டு மண்டபத்தின் பின்னால் அடம்பிடிக்கிறார்..இப்பிடியே இருந்து யாழுக்கை வெட்டப்போறாராம்... [/size] “

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.