Everything posted by பாலபத்ர ஓணாண்டி
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
உங்க பதிவ பாக்குரப்ப என் ரத்தமெல்லாம் கொதிக்குது... என்னை அறியாமல் எனக்குள்ள ஒரு வெறி வருது..நானும் உங்கள போல பெரிய போராளியா ஆவனும்னு ஒரு வெறி... நாடி,நரம்பு,ரத்தம்,சதை எல்லாத்திலையும் போராளி வெறி ஊறி போன ஒருத்தரதாலதான் இப்படி போராட முடியும்...நீங்க இன்னும் பெரிய போராளியாக என் வாழ்த்துக்கள்...., 😂😂 🏃🏃🏃
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
சீமான் என்டு எழுதி ஒரு துண்டை குடுத்தா நையிட்டு தின்னுட்டு.. காலைல... பஸ் புடிச்சி வந்துடுவாங்கள்... இன்னும் ஒன்டு தா எண்டு...🤣
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
சவுக்கு சங்கர் வழக்கு: நீதிபதிக்கு அழுத்தம் கொடுத்த இருவர் மீது நடவடிக்கை கோரி வழக்கறிஞர் கடிதம் By ஆர்.பாலசரவணக்குமார் Modified: 27 May, 24 11:16 am சென்னை: சவுக்கு சங்கர் வழக்கு விசாரணை தொடர்பாக நீதிபதி சுவாமிநாதனை நேரில் சந்தித்து அழுத்தம் கொடுத்த இரு அதிகாரமிக்க நபர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், சிபிஐ விசாரணை கோரியும் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் என்பவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளார். யூடியூபர் சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவை எதிர்த்து அவரது தாய் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இந்த வழக்கை தகுதி அடிப்படையில் விசாரிக்க வேண்டாம் எனக் கூறி, இரு அதிகாரமிக்க நபர்கள் தன்னை அணுகியதாகவும், அதனால் தான் வழக்கை உடனடியாக இறுதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார். நீதி பரிபாலனத்தில் தலையிடும் இந்தச் செயல் நீதிமன்ற அவமதிப்பு என்பதால், அந்த இரு நபர்களையும் அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்புவழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். https://www.hindutamil.in/amp/news/tamilnadu/1255270-savukku-shankar-case-lawyer-s-letter-seeking-action-against-two-who-pressured-the-judge.html உச்ச நீதிமன்றம் சீமானுக்கு சாதகமாக பாஜாக ஊடாக முடிவெடுக்கும் என்று சீமானோ பாஜாகவோ உச்ச நீதிமன்றமோ தமிழ்நாடு பொலிசோ அரசோ சொல்லாததை றோ தலைமை அதிகாரி நீங்கள் சொல்லி அழவில்லையா.. அது மாதிரித்தான்..🤣🤣
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
குறைந்த அளவு மத்திய அரசின் அழுத்தம் ஆனால் கூடிய அளவு மாநில அரசின் அழுத்தம் உள்ளவர்கள் உயர்நீதிமன்ற நீதிபதிகள்.. உயர் நீதிமன்ற நீதிபதியே சவுக்கு வழக்கில் சொல்லி இருக்கிறார் தன்னை அரச உயர்மட்டத்தில் இருந்து இருவர் சந்தித்து அழுத்தம் தந்ததாக.. ஆக சீமான் மாநில அரசின் அழுத்தம் அதிகமுள்ள உயர்நீதிமன்றத்தில் எப்படி நீதியை எதிர்பார்க்கமுடியும்..?
-
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
யாருக்காவது நீதி வாங்கிக்கொடுக்க வேண்டும் என்றே சீமான் வீட்டு வாசலில் பாயப்போட்டு படுத்திருக்கிறார்கள்... யாரும் சிக்கவில்லை என்றால் அந்த தெருவால் போகும் பால் பக்கட் போடுபவர், காய்கறி வண்டி தள்ளுபவர், பேப்பர் போடுபவர் என்று இப்படி யாரையாவது பிடித்து வந்து நீதி வாங்கி கொடுப்பார்கள்..🤣🤣
-
நடிகை புகார்: `சீமான் மீதான விசாரணைக்கு இடைக்காலத் தடை’ - உச்ச நீதிமன்றம் கூறியதென்ன?
றோ எங்கப்பா.. ? றோ என்ன தக்காளி தொக்கா..??🤣🤣
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
இதில் மட்டுமல்ல இன்னும்பல இடங்களில் நான் அவதானித்திருக்கிறேன்.. சீமானுக்கெதிரான ஒருசார்பு நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்கள் என நினைக்கிறேன்.. பெரியமனம் பண்ணி சீமான் திரிகளில் நம்மள கருத்தெழுத விட்டதே பெரியகாரியம்..🤣 நன்றி நிர்வாகம்..🙏
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
மிகச்சரியான கருத்து.. இதுதான் என் கருத்தும்.. ஆனால் யாழில் சீமான் அப்படி நடத்தப்படவில்லை என்பதால் தான் நான் எதிர்த்து எழுதுகிறான்( சீமானுக்கு ஆதரவாக எழுதும் மற்றவர்கள் பற்றி தெரியாது).. மற்ற அரசியல்வாதிகள் என்னமோ புனிதர்கள் போலும் சீமான் மட்டும் மிகக்கேவலமானவர் என்பது போலும் பலர் எழுதுகிறார்கள்.. அந்த இடங்களில் அவர்கள் தலையில் குட்டி இல்லை சீமானும் மற்ற அரசியல்வாதிகள் போலத்தான் என்று எழுதவேண்டி இருக்கிறது( கோசான் மட்டும் சற்று விதிவிலக்காக மற்றவர்கள் போலத்தான் என்று அவ்வப்போது எழுதுபவர் என்று நினைக்கிறன்..) உதாரணத்துக்கு உதயநிதி நடிகை அண்டிரியாவை கர்ப்பமாக்கி கருவைக்கலைத்தது மட்டுமன்றி ஆண்டிரியா தன்னை ஏமாற்றியவரின் பெயர் தான் எழுதிய புத்தகத்தில் உள்ளது வெளியிடும்போது எல்லோருக்கும் தெரியவரும் என்று கூறிய நிலையில் உதயநிதியின் பெயர் குறிப்பிட்டு எழுதிய சுயசரிதையை வெளியிடும் தேதியும் சொன்னபின் அதை பயமுறுத்தி தடுத்து சிகரெட்டினால் சுட்டு துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய இன்றுவரை அந்த நூல் வெளியாகவில்லை என்று சொல்லப்படுகிறது.. ஆக மொத்தம் எல்லோரும் ஒன்றுதான் அவர்களுக்குள் யாரை நமக்கு ஓகேயோ அவரை ஆதரிக்கவேண்டியதுதான்.. ஏதோ சீமான் மட்டும்தான் கேவலம்கெட்ட அரசியல்வாதி என்று எழுதப்படுவதுதான் தவறு.. அதை எழுதுபவர்களில் 90வீதமானவர்களுக்கு சீமான் மீது அல்ல பிரச்சினை அவர்பேசும் தமிழ்தேசியம் மீதுதான் கடுப்பு.. ஏற்கனவே இவர்கள் புலிகள் பற்றி புறங்கூறிய பலர்தான்..
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
பழைய நெனப்புடா.. பேராண்டி பழைய நெனப்புடா..👇 உனக்கொரு நியாயம் எனக்கொரு நியாயமோ..? –—— நடிகைகள் ஆண்ட்ரியா,ஸ்ரீரெட்டி உதயநிதி ஸ்டாலினை மறைந்திருந்தே தாக்கும் மர்மம் என்ன?... Muthurama Lingam Published: Nov 14, 2019, 3:55 PM IST சினிமாவை விட்டு ஓரளவு ஒதுங்கி, பேரளவில் அரசியலும் செய்துவரும் உதயநிதி ஸ்டாலினுக்கும் தனக்கும் உள்ள தொடர்புகள் குறித்துப் பேச மிக விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தவிருப்பதாக பிரபல சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பதிவில் மிரட்டியுள்ளார். திமுகவின் இளைஞரணித் தலைவர் பதவி கிட்டியவுடன் சினிமாவிலிருந்து பெருமளவில் ஒதுங்கிய உதயநிதி ஸ்டாலின் தற்போது கவனம் செலுத்தி வரும் ஒரே படம் பி.சி.ஸ்ரீராம், இளையராஜா கூட்டணியுடன் மிஷ்கின் இயக்கியிருக்கும் ‘சைக்கோ’மட்டுமே. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நடிகை ஆண்ட்ரியா, உதயநிதியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், ஆனால் எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி, அவரை யூகிக்கும் வகையில் ஒரு அவதூறுச் செய்தியை தொடர்ந்து பரப்பி வருகிறார். அவருக்குப் பின்னால் பிஜேபி இருப்பதாகச் சொல்லப்பட்டது. அதன் தொடர்ச்சியாகத் தற்போது களம் இறங்கியிருக்கும் பரபரப்பு நடிகை ஸ்ரீரெட்டி, உதயநிதி ஸ்டாலின் ‘கதிர்வேலனின் காதல்’காலத்து ஹைதராபாத் ராத்திரி நேரத்து சம்பவம் ஒன்றை நினைவூட்டி,...அப்ப சொல்லிட்டு இப்ப வரைக்கும் ஒரு படத்துல கூட சான்ஸ் தராம இருக்கீங்க. இது நல்லா இல்லையே பாஸ்’என்கிற தொனியில்,... விரைவில் நான் உதயநிதி ஸ்டாலின் குறித்து பேசியே ஆகவேண்டும். அதற்கான பிரஸ் மீட் நடக்கவிருக்கிறது ...ஒரு நாள் மட்டும் பொறுத்திருங்கள்’என்று பகீர் கிளப்பியிருக்கிறார். அந்த ஹைதராபாத் சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் விஷால் என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டிருக்கிறார் ஸ்ரீரெட்டி. https://tamil.asianetnews.com/amp/cinema/actress-sri-reddy-blames-udhayanidhi-stalin-q0yfmh —-————————-— உதயநிதி மீது நடிகை குற்றச்சாட்டு – பின்னணியில் பாஜக? உதயநிதி திரைப்பட நடிகராக மட்டுமின்றி அரசியல்வாதியாகவும் மாறிவிட்டார். திமுக என்கிற மிகப்பெரிய கட்சியின் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் இருக்கிறார். இந்நிலையில், அவர் குறித்து அவதூறு செய்திகள் அடிக்கடி வந்துகொண்டிருக்கின்றன. சிலநாட்களுக்கு முன்புவரை, நடிகை ஆண்ட்ரியா, சூசகமாகச் சொன்ன ஒரு விசயத்தை வைத்துக் கொண்டு உதயநிதி மேல் குற்றம் சாட்டப்பட்டது. சிலநாட்கள் பேசப்பட்ட அந்தச் செய்தி ஓய்ந்துபோனது. இப்போது சர்ச்சைக்குரிய நடிகை ஸ்ரீரெட்டி,உதயநிதி குறித்து ஒரு செய்தியை வெளியிட்டு,அதுகுறித்து விரைவில் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்துவேன் என்று சொல்லியிருக்கிறார். உதயநிதி நடிகராகவும் தொடர்வதால் நடிகைகளுடன் இணைத்துப் பேசப்பட்டால் அது உண்மை போலவே இருக்கும் என்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு இம்மாதிரி செய்திகள் வருகிறதோ? என்கிற ஐயம் ஏற்படுகிறது. அதேசமயம், இதுபோன்ற செய்திகளை அன்றாடம் வெளியிட்டு இதை வெகுசன விவாதப் பொருளாக மாற்றிவிட்டால், பொருளாதார சீரழிவு போன்ற அடிப்படைச் சிக்கல்களிலிருந்து மக்களைத் திசைதிருப்பி விடலாம் என்கிற ஆளூம்கட்சியின் கருத்தின்படி இவை நடக்கின்றன என்கிறார்கள். இக்கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக, பாஜகதான் இப்படி நடிகைகளை விலைக்கு வாங்கி உதயநிதி மேல் அவதூறு பரப்ப வைக்கிறது, நீங்கள் நன்றாகக் கவனியுங்கள் ஆளும் பாஜக மேலோ அதிமுக மேலோ சொல்லப்படுகிற குற்றச்சாட்டுகளை விட திமுக மேல்தான் அதிக அளவில் குற்றச்சாட்டுகள் வருகின்றன என்கிறார் ஓர் அரசியல் விமர்சகர். இந்த வியூகங்களை திமுக எப்படி எதிர்கொள்ளப் போகிறது? https://www.tamizhvalai.com/archives/23750
-
சீமான் வீட்டில் காவல்துறை சம்மன் ஒட்டிய போது நடந்தது என்ன?
ஒரு பெண் திருமண வாழ்க்கையில் வெற்றிகரமாக பதினைந்தாவது வருடத்தை கடத்தி குழந்தைகள் வளர்ந்து குடும்பமாக சமுதாயத்தில் வளர்ந்து நிற்கும்போது பதினைந்து வருடங்களுக்கு முன்பான காதலன் வந்து அப்பெண்ணின் வாழ்க்கையில் தொந்தரவு கொடுத்தால் என்ன செய்ய வேண்டும்.....? பதினைந்து வருடங்களாக தொழிலில் தோற்று நாலைந்து பெண்களோடு வாழ்ந்து அதிலும் தோற்று உறுவுச்சிக்கல்களினால் மனப்பிறழ்ந்து தன் முதல் காதலியின் வெற்றிகரமான வாழ்க்கையில் ரீ எண்ட்ரி கொடுத்தால் அது எப்படியாக இந்த சமுதாயம் பார்க்கும்.....? தன் முன்னாள் காதலியின் குடும்பமே அவளோடு கூட நின்றாலும் மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை முன்னாள் காதலன் டார்கெட் செய்தால் சமுதாயம் யாரோடு நிற்க வேண்டும்.....? பணத்திற்காக என்னோடு இருந்தாள் அவள் இப்போது வேறொருவனோடு இருக்கிறார் என்று அபாண்டத்தை சுமத்தினால் யாரோடு நிற்க வேண்டும்....? சீமான் திருமணம் முடிந்து பதினைந்து வருடமாகிறது...... துணை நடிகை விஜயலட்சுமி சீமான் மேல் புகார் கொடுக்கும் காலக்கோடுகளை போட்டு பார்த்தால் தெரியும் அவர் வரும் நேரங்கள் எப்படியான நேரங்கள் என்று.....? தேர்தலுக்கு தேர்தல் அல்லது சீமான் எதாவது ஒரு முக்கியமான பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்தால் உடனே விஜயலட்சுமி வந்துவிடுகிறார். அவரது நூற்றி எத்தனையாவது வரவு என்று தெரியவில்லை இந்த இடைத்தேர்தலுக்கு பின்பான அவரது வரவு...... ஒருமுறை புகார் இல்லைனு எழுதிகொடுத்துவிட்டு போகிறார் அடுத்தமுறை மீண்டும் வருகிறார் எதையாவது பேசுகிறார் பின்பு காணாமல் போகிறார்.இது மீண்டும் மீண்டும் என்று நடந்து கொண்டிருக்கிறது........ சீமானை தாக்குபிடிக்க முடியாமல் தன்னை இங்கே அழைத்து வருபவர்கள் யாரென்றும் யார் வீடியோ போட சொன்னார்கள் எவ்வளவு பணம் தந்தார்கள் மணம் தராமல் ஏமாற்றினார்கள் என்று அவர் பேசிய வீடியோவும் இருக்கிறது. இந்த பதினைந்து வருடங்களில் அவர் சீமானின் மேல் புகார் சொன்னதுபோல் மூன்று பேர் மேல் புகார் சொல்லி ஒருவரிடம் லம்பாக பணமும் வாங்கியிருக்கிறார்..... அவரது சில வீடியோக்களில் சீமானை இழிவுபடுத்துகிறேன் என்று தேடுனியா மகன் தேடுனியா மகன் என்று சீமானின் ஒட்டுமொத்த குடும்பத்தயும் தெருவுக்கு இழுக்கவும் செய்திருக்கிறார்....... இதில் சீமானின் தவறு ஒன்றுதான்.... ஆமா நாங்கள் லிவிங்டுகெதரில் இருந்தோம் சரியாவரலை இப்போது பிரிந்துவிட்டோம் எனக்கு திருமணமாகிவிட்டது என்று போயிருந்தால் இத்தனை பெரியதாக இது இழுத்திருக்காது........ சரி சீமான் இந்த விடயத்தில் தொடக்கம் முதலே விஜயலட்சுமியை தவறாக பேசினாரா என்றால் இல்லை கவனமாக வார்த்தை பிரயோகங்களைத்தான் கடந்த பதினான்கு வருடங்களாக உபையோகித்திருக்கிறார் ஆனால் இந்த முறை அவரை அவரால் கட்டுபடுத்த முடியவில்லை....... காரணங்கள் பதினான்கு வருடமாக இல்லாமல் அவர் எப்ஐஆரை க்வாஷ் செய்ய சொன்ன வழக்கு வரும்போது என்னை அவர் ஏழுமுறை கருக்கலைப்பு செய்தார் என்ற அபாண்டத்தை தூக்கி வீசுகிறார் விஜயலட்சுமி ...... சீமானின் எதிர் அரசியலை தாக்குபிடிக்க முடியாமல் ஒட்டுமொத்த மீடியாவும் அவரது வழக்கை நடிகை பாலியல் பலாத்கார வழக்கு என்று தவறாக குறிப்பிடுகிறது..... நேற்று ஒரு இடதுசாரி மலையாள பெண் அரசியல் வாதி அவரை ரேப் அக்யுஸ்ட் என்கிறு குறிப்பிட்டு எழுதுகிறார்..... ஒரு மாதர் சங்க லெட்டர் பேட் அமைப்பு அவரை பாலியல் வண்புணர்வு குற்றவாளி என்கிறுது...... தமிழக முதல்வர் கையில் பரிசில் பெற்ற முக்தார் எனும் ஊடக எச்சை ஒட்டுமொத்த நாதக மகளிர்களயும் சீமானயும் இணைத்து ஸ்லைடு போட்டு கேவலபடுத்துகிறான்......... இதற்குமேலும் சீமான் ஏன் கண்ணியம் காக்கவேண்டும்....? அவர் வார்த்தைகளில் வெடிக்கிறார்...... அவர் வார்த்தையில் வெடிப்பதை மீண்டும் அரசியலாக்குகிறார்கள் அதனால் சீமான் அமைதி காக்க வேண்டும்......நாவை அடக்க வேண்டும்....... சீமான் பேசும் தமிழ்தேசிய அரசியலில் ஏற்புடயதா இல்லையா அவரை நான் ஏற்கிறோமா எதிர்க்கிறோமா என்பதை தாண்டி சீமான்தான் இன்றைய தமிழ்தேசிய அரசியலின் வாக்கரசியல் முகம். அந்த வாக்கரசியல் முகத்தை ஒரு நடிகையின் ப்ளாகமெயில் வழக்குக்கு பதில் பேசுகிறேன் என்ற பெயரில் தரம் தாழ்த்த அனுமதிக்க முடியாது........ அப்புறம்... விஜயலட்சுமியும் ஒரு பெண்தானே என்று பக்கமாக எழுதி தள்ளும் திடீர் பெண்ணியவாத லும்பச்சிகளை என்ன சொல்ல.. தமிழ்நாட்டில் கடந்த மூன்றுமாதங்களில் நடந்த எந்த ஒரு பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிர்வினையாற்றாத , மீசை பாண்டி வகையறா மேல் இருக்கும் அடுக்கடுக்கான பாலியல் பஞ்சாயத்துகளுக்கு சப்பை கட்டுற இந்த லும்பச்சிகள் அல்ல தமிழ்நாட்டின் மனசாட்சி.......... இந்த லும்பச்சிகள் சீமானை திட்டுவதற்கு முன்பு விஜயலட்சுமி என்ற பெண்ணின் மனச்சிதைவை அரசியலாக்கி சீமானுக்கு எதிராக தேர்தல் காலங்களில் பயன்படுத்திய திராவிட லும்பன்களின் மேல் கல்லெறிந்துவெட்டு சீமானை திட்டட்டும் அவருக்கு நாவடக்க பாடம் எடுக்கட்டும்....... அப்படியே இணையத்தில் சீமானை பாலியல் குற்றவாளி என கூச்சலிடுபவர்களுக்கும்.. இன்னொன்றையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.. நான்காம் கலைஞர் எனப்படும் இன்பநிதி ஒரு வெள்ளைக்கார பெண்ணுடன் லிவ்விங் ருகெதரில் இருக்கிறார்.. அந்த படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தது ஞாபகம் இருக்கும்.. நாளை அவர் தமிழ்நாட்டின் முதல்வர் என்பதால் இந்தியா பெண்ணைத்தான் திருமணம் செய்வார்.. இந்த உறவுதான் சீமானுக்கும் விஜலட்சுமிக்குமென்பதை திமுக உடன்பிறப்புகளுக்கு நாம் தமிழர் விளக்கட்டும்..
-
அமெரிக்காவுடனான உக்ரேனின் கனிம ஒப்பந்தம்!
உக்கிரேனினதும் அதன் மக்களதும் துரோகிகள் இருவர்.. ஒருத்தன் செலன்ஸ்கி மற்றையவன் டிரெம்ப்.. ஒருத்தன் உக்கிரேன் மக்களை ஏமாற்றி உக்கிரேனை விற்றுவிட்டான் இன்னொருத்தன் உக்கிரேன் மக்களை முதுகில் குற்றி உக்கிரேனை வாங்கிவிட்டான்..
-
காணாமல்போன மகனைத் தேடி போராடி வந்த ‘மாரி அம்மா’ காலமானார்
ஆழ்ந்த அனுதாபங்கள் அம்மா.. இந்த அம்மாபோன்றவர்களின் பின்னால் இருக்கும் கதையை கோட்டின் அந்தப்பக்கம் இருக்கும் சோபசக்தி வகையறாக்கள் யாரும் சிறுகதையாக நாவலாக எழுதமாட்டார்கள்.. அதனால்.. கோட்டின் இந்தப்பக்கம் இருக்கும் தமிழ்நதி வகையறாக்கள் கண்டிப்பாக எழுதவேண்டும்.. எதிர்கால சந்ததிக்கு விட்டுச்செல்ல..
-
காளியம்மாள் .... கழகத்துக்கு?
நன்றி வணக்கம்.. நாம் தமிழர்.. உன்னுடைய 6 வருட கடின உழைப்பிற்கு பிறகு உன்னால் வேறு எந்த கட்சியிலும் ஆத்மார்த்தமாக கௌரவமாக செயல் பட முடியாது… தமிழ் தேசியத்திற்காக நீ பேசிய வார்த்தைகள் அனைத்தையும் நீயே எதிர்த்து பேச வேண்டிய நிலை உருவாகும்... அப்படி பேச கூடிய நிலை வரும்போது இன்று உன் பால் அன்பு கொண்ட அனைவரும் உன்னையே கதறி குதறி விடுவார்கள்… அரசியலே வேண்டாம் என்று துறந்து செல்வது,அல்லது சில காலம் அமைதியாக இருப்பது, இதுதான் நீ செய்ய வேண்டியது காளியம்மா.…
- IMG_2617.jpeg
- IMG_2614.jpeg
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
பேசாமல் நானும் சீமானை கைவிடுவது நல்லதுபோல.. எப்படி நஞ்சும் நக்கலும் என்று புரிகிறது அந்த ஜேர்மன் தலைவரின் கேள்வியில்..
-
ஜெர்மனி தேர்தல்: எதிர்க்கட்சியான கன்சர்வேடிவ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு! வெளியான Exit Poll ரிசல்ட்!
பிரான்சிலும் தற்பொழுது இதைத்தான் செய்கிறார்கள் என நினைக்கிறேன்.. அதாவது பெரும்பான்மை அற்ற அரசு இரண்டாவது பெரும்பான்மையானவலதிசாரிகளின் மறைமுக ஆதரவுடன் ஆட்சி அமைத்தபடி அவர்களை தாஜபண்ண குடியேற்ற விதிகளை இறுக்குகிறார்கள்.. இந்த தேர்தலில் இரண்டாவதாக இந்த நாடுகளில் வந்த வலதுசாரிகள் அடுத்து முதலாவதாக வர ரொம்பகாலம் எடுக்காது.. ஏனெனில் முன்னர் எல்லாம் இவர்கள் எல்லாம் இருக்கிறார்களா என்றுகூட தெரியாத அளவுக்கு வாக்கு வாங்குபவர்கள் இன்று இரண்டாம் இடம்.. நாளை..? அப்படி எல்லாம் சந்தோசப்பட ஒன்றும் இல்லை.. 20 வீதம் என்பது வலதுசாரிகளிற்கு வெற்றிக்கு சமம்.. நாட்டின் மிகப்பெரிய மக்கள் கூட்டம் எமக்கு எதிராக என்பதுதான் அதன் அர்த்தம்.. நாளை..? இதுதான் உங்கள் நாட்டின் நிலையும்.. வலதுசாரிகளுக்கு “நான் வளர்கிறேனா மம்மி” காலம்.. டிரம்ப் காலம்..
-
விசேட தேவையுடைய மாணவர்களின் உயர் கல்வியில் சிறப்பு கவனம்!
மிகச்சிறந்த முன்னெடுப்பு..
-
சீனாவின் விண்வெளி சாதனை: பூமியில் இருப்பவரின் முகத்தை கண்டறியும் புதிய கேமரா..!
சீனாவின் Chinese space research teams அண்மையில் ஒரு புரட்சிகரமான ஒளிப்பட தொழில்நுட்ப சாதனையை அறிவித்துள்ளன… இக்கேமரா, விண்வெளியில் இருந்து பூமியை நோக்கி இயங்குவதால், பூமியில் உள்ள எந்த நபரின் முகம்மும் மிகத் தெளிவாகப் பதிவு செய்யக்கூடியது என்று கூறப்படுகிறது... இந்த கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பத்தில் ஒரு அற்புத முன்னேற்றமாகும் என்பதுடன், அதன் செயல்பாடு மற்றும் பயன்பாடுகள் பல துறைகளில் புரட்சியைக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது… தொழில்நுட்ப முன்னேற்றம்! இந்த புதிய கேமராவை வடிவமைப்பதில் பயன்படுத்தப்பட்டுள்ள தொழில்நுட்பம் மிகவும் முன்னேற்றமடைந்தது… High Resolution: அதிநவீன ஒப்ரிக்கல் சென்சார்களைப் பயன்படுத்துதல், நுணுக்கமான மிரர் அமைப்பு மற்றும் கணினி ஆட்டிபிசியல் இன்ரெலிஜன்(AI) அல்கோறித தொழில்நுட்பங்களின் உதவியுடன், இந்த கேமரா மிகச்சிறிய விவரங்களைக் கூட மிகத் தொலைவில் இருந்து படம்பிடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது... பரந்த coverage : பூமியின் பரப்பளவை விரிவாக கவர் செய்யும் விதமாக, கேமரா பல்வேறு ஸ்கேல் மற்றும் கோணங்களில் இயங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது… ஆர்.சி.சி மற்றும் செயற்கை நுண்ணறிவு(Real-Time Processing): capture செய்த படங்களை உடனடியாக கணினி அல்கோரிதம்கள் மூலம் பகுப்பாய்வு செய்து, நுட்பமான முக அம்சங்கள் மற்றும் பிற விவரங்களை விவரிக்கக் கூடிய தனித்துவமான செயல்முறைகளை கொண்டுள்ளது… பயன்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள்.. இந்த சாதனையின் முக்கிய பயன்பாடுகள் பல துறைகளில் எதிர்பார்க்கப்படுகிறது: நகர்ப்புற மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு: பூமியின் பரப்பில் நிகழும் இயற்கை நிகழ்வுகள், பருவநிலை மாற்றங்கள் மற்றும் பிற சூழல் மாற்றங்களை மேலும் நுணுக்கமாக கண்காணிக்க உதவும். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு: விண்வெளியில் இருந்து உயர் தெளிவுத்திறன் கொண்ட முகப் படங்களைப் பிடிக்கும் இதன் திறனானது பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்தி, சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் அல்லது தனிநபர்களை விரைவாக அடையாளம் காண உதவும். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிகள்: விண்வெளியில் இருந்து நேரடி தரவுகளை பெறுவதன் மூலம், பூமியின் நிலவரம், நகரங்களின் வளர்ச்சி மற்றும் பிற பல துறைகளில் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வாய்ப்பு உள்ளது.:. சமூகப் பார்வையும் சர்வதேச விவாதமும்..! இத்தகைய சாதனைகள் பாராட்டுதலையும், அதே சமயம் பலவகை சர்ச்சைகளையும் உண்டாக்கும்… தனியுரிமை மற்றும் பாதுகாப்பு: ஒருவரின் முகத்தை விண்வெளியில் இருந்து தெளிவாக பதிவுசெய்யக் கூடிய திறன், தனியுரிமை மீறலுக்கான அபாயத்தை உண்டாக்கும் எனக் கருத்துக்கள் எழுந்துள்ளன… சர்வதேச ஒத்துழைப்பு: இதுபோன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களை சர்வதேச அளவில் பகிர்ந்து, அவற்றை எந்த வகையில் ஒழுங்குபடுத்துவது என்பது முக்கியமான கேள்வியாக மாறியுள்ளது… எதிர்காலத்தில் சாத்தியமான தாக்கங்கள்..! சீனாவின் இந்த சமீபத்திய தொழில்நுட்ப சாதனை பொறியியலில் ஒரு மாபெரும் பாய்ச்சல் - இது அறிவியல், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஆகிய துறைகளில் புதிய விவாதங்களையும் களங்களையும் திறக்கிறது: தொழில்நுட்பம்,ஒழுங்கு முறை கட்டமைப்புக்கள் மற்றும் சட்டங்கள்: மேம்பட்ட கண்காணிப்பு தொழில்நுட்பங்கள் அதிகமாகப் பரவி வருவதால், தனியுரிமை மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதோடு புதுமையான விஞ்ஞான தொழில்நுட்ப கண்டுபுடிப்புகளின் பாவனைகளை சமநிலைப்படுத்தும் வலுவான சட்ட கட்டமைப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது… சீனாவின் இந்த புதிய கேமரா கண்டுபிடிப்பு, விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் அதன் பயன்பாடுகளில் ஒரு மிக முக்கியமான மைல்கல் என கருதப்படுகிறது. இது விஞ்ஞான உலகிற்கும், சமூக பாதுகாப்பிற்கும் புதிய உத்தேசங்களை அளிக்கும் அதேவேளை, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு சார்ந்த சிக்கல்களையும் உருவாக்கும்... எதிர்காலத்தில் இந்த சாதனையின் பயன்கள் மற்றும் அதன் ஒழுங்குபடுத்தல் குறித்து சர்வதேச மன்றங்களில் விசாரிக்கப்பட்டு, தேவையான விதிமுறைகள் உருவாக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது… இக்கேமரா கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப முன்னேற்றத்தின் அடையாளமாக மட்டுமின்றி, சமூகத்தில் புதிய விவாதங்களையும், மாற்றங்களையும் உருவாக்கும் என நம்பப்படுகிறது… மேலும் தகவலுக்கு 👇
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
நீங்கள் நாங்கள் எழுதும் கருத்துக்கள் போலத்தான் வீடியோக்களும்.. இதுகருத்துக்களம்.. கருத்தெழுத, பேச, வீடியோ மூலம், படம்மூலம் கருத்தை சொல்ல இருக்கும் களம்.. செய்தித்தளங்கள் வேறு இருக்கின்றன.. நீங்கள் பந்தியில் பொங்குவதை அவர்கள் வீடியோவில் பொங்குகிறார்கள்.. அவ்வளவுதான்.. வேணுமென்றால் பொறமைப்படாமல் ஒரு யூரியுப் திறந்து இங்கு பந்தியில் எழுதுவதை பேசிக்கொண்டுவந்து இணையுங்கள்.. யாழை மட்டுமல்ல யாழை பார்க்காதவர்களையும் அது சென்றடையும்.. அவர்களைப்பர்த்து பொறாமைப்படாமல் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பழகுங்கள்.. இளைய தலைமுறையுடன் இணந்து பயணம் செய்ய பழகிக்கொள்ளுங்கள்.. இல்லை என்றால் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டவேண்டியதுதான்.. பொறாமை ஒரு பொல்லாத நோய்..
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
ஜேர்மனியின் பெண்கிட்லர்…
-
ஜேர்மனியில் இருந்து யூதர்களைப்போல் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..?
ஜேர்மனியில் இருந்து நவீன நாஸிக்களான வலதுசாரிகளால் துரத்தப்படுவார்களா தமிழர்கள்..? இது இன்று தேர்தல் நடக்கப்போகும் ஜேர்மனுக்கு மட்டுமல்ல வாற வருடம் தேர்தல் நடக்கப்போகும் பிரான்ஸ் மற்றும் அடுத்து தேர்தலைகளை எதிர்கொள்ளவிருக்கும் பெரும்பாலானா ஜரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும்.. அப்படி ஒரு நிலமை வந்தால் உலகமெங்கும் அலைந்த யூதர்கள்போல் புலம்பெயர்ந்த தமிழர்கள் அங்க இங்க என்று மறுபடியும் இன்னொரு புது நாட்டுக்கு அலைவதை விட்டு உடனும் நேராக தாய்மண்ணுக்கு வந்து புல்லுசெருக்கி வீடுவாசலை துப்புரவுசெய்து புள்ளகுட்டி பெத்து தமிழர்களின் எண்ணிக்கையை தாயகத்தில் அதிகரித்து உங்கள் பிரதேசங்களை கட்டி எழுப்ப உதவுவது நல்லது.. செத்தாலும் தன் மண்ணில் சாவதே சுதந்திரம்.. சரி இப்போ ஜேர்மன் நிலமையை பார்ப்போம்..👇
-
BBC தமிழோசை ஆனந்தி சூரியபிரகாசம் அவர்கள் காலமானார்!!!
‘தமிழோசை ஆனந்தி' என தமிழ் உலகம் அறிந்திருக்கும் பி.பி.சி தமிழோசை ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்கள் 21/02/2025 அன்று லண்டனில் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது… எனக்கு தெரியவே ஒரு தசாப்தமாக ஒலித்த குரல் ஓய்ந்தது.. எனது பதின்மகாலங்களின் புலிகள் இருந்த காலங்களில் மாலைப்பொழுதுகளில் பெரும்பாலான நாட்கள் பிபிசியின் செய்திகேட்பதிலேயே கழிந்திருக்கும்.. அதில் ஆனந்தி அக்காவின் குரல் மறக்கமுடியாதது.. தாயகத்தில் எமது அவலங்களை தமிழ்பேசும் சொந்தங்கள் வாழும் தமிழகம் சிங்கப்பூர் மலேசியா என்று உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்ததில் அவரும் பெரும் பங்காற்றியவர்.. யாழ்ப்பாணம் சாவகச்சேரியைச் சேர்ந்தவரான ஆனந்தி சூர்யப்பிரகாசம் அவர்கள்.., அவரின் இளமைக்கால்ங்களில் இலங்கை வானொலியில் சனா அவர்களின் தயாரிப்பில் உருவான பல நாடகங்களில் நடித்துப்புகழ்பெற்றார் என்று சொல்லப்படுகிறது.. சமகாலத்தில் அறிவிப்பாளராகவும் திகழ்ந்தாராம்.. பின்னர் 1970 காலகட்டத்தில் இங்கிலாந்தை வந்தடைந்து பி.பி.சி தமிழோசையின் பகுதிநேர அறிவிப்பாளராக பணியாற்றிவந்திருக்கிறார்... பின்னர், நிரந்தர அறிவிப்பாளராகிப் பொறுப்புகள் ஏற்றுச் செயற்பட்டவர், மூன்று தசாப்தங்களாக பி.பி.சி தமிழோசையில் பணியாற்றி ஓய்வு பெற்றார்… உடல் நலக்குறைவுக்குள்ளாகியிருந்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது... ஆழ்ந்த துயரஞ்சலிகள்..
- IMG_2596.jpeg
-
'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
நேற்று ஒரு கட்டுரை பார்த்தேன்.. பிரான்ஸ் ஜேர்மனி பிரித்தானியா இன்னும் ஒரு ஜரோப்பிய நாடு(அல்லது ஒட்டுமொத்த ஜரோப்பாவோ) இவை எல்லாம் ஒன்று சேர்ந்தால்கூட ஒரே ஒரு அமெரிக்காவின் ஜிடிபிக்கு கிட்டவும் வரமுடியாது என்று.. அமெரிக்கா ஒரு பொருளாதார திமிங்கிலம்.. வரப்போகும் 30 வருசத்துக்கு இப்பவே திட்டமிட்டு இருப்பவர்கள்.. ஜரோப்பா கிட்டவும் நெருங்க முடியாது..அமெரிக்கவின் காலில் நெடுஞ்சான் கிடையாக விழுந்துகிடப்பதை தவிர..