Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. அட கெதியெண்டு எழுதப்பா மிச்சத்தை.. அடுத்த வீட்டு புதினம் கதைக்கிறதெண்டாலே அன்னம் தண்ணி இல்லாமல் திண்ணையில இருக்கிற ஆக்கள் நாங்கள்..
  2. சுமோ தொடர்ந்து எழுதுங்கள்.. யாழில் நீண்டகால்ங்களுக்கு பிறகு ஒரே மூச்சிலும் அடுத்த பாகங்களுக்கு காத்திருந்து படிக்கும் பகுதி ஆகிவிட்டது உங்கள் தொடர்.. வெளிநாட்டுக்காரர் விலாசாம் காட்டும் இடங்களாகவும் பூசாரிகள் வயிறு வளர்க்கும் மற்றும் காசு பார்க்கும் இடமாக கோவில்கள் மாறி இருப்பதாலும் கோயிலில் சாதி குறைந்தவர்களை வேலை செய்யவோ கோயிலில் முக்கியமான இடங்களில் எதையாவது தொடவோ அனுமதிப்பது இல்லை என்பதாலும் பிற்போக்குதனங்களையும் தன் சக மனிதர்களில் ஏற்றத்தாழ்வுகளையும் கற்பிக்கும் இப்படியான பெரிய கோவில்களுக்கு நான் என் குழந்தைகளை கூட்டிப்போவதில்லை நானும் போவதில்லை.. என் பிள்ளைகளும் இப்படியான பழக்கங்களை பழகக்குடாது என்பதில் கவனமாக உள்ளேன்.. ஊரில் ஒதுக்குப்புரமாக உள்ள இந்த பிராமண பூசாரிகளின் கால்தடம்படாத அண்ணமார் வைரவர் போன்ற கோவில்களுக்கு கூட்டி சென்று இவைதான் தமிழர்களின் சாமிகள் இதுதான் உண்மையான பழந்தமிழர்களின் வழிபாட்டு முறை ஆகமப்பூசைகள் சமஸ்கிருதத்தில் சொல்லி ஊரை ஏமாற்றி காசு புடுங்கும் கோவில் வழிபாட்டு முறை வேற்று மதத்தவர்களினது என்று சொல்லி வைத்திருக்கிறேன்...
  3. சுப்பிரமணியம் பிரபா சுமந்திரன் வலது கை எல்லோ.. கலியாண வீடெல்லாம் முன்னிண்டு நடத்தினவர் சும்ச்ந்திரன்.. பேஸ்புக்கில் மகா உத்தமன் வேடம்போடுவான் எல்லாரையும் குற்றம் சாட்டுவான்.. அவனை எல்லாம் நம்பி காசு அனுப்பின சுமேக்கு காலுக்கு கீழ அலம்பல் சுள்ளியால மனுசன்காரனும் மகளும் சுபிரமணி வீட்டுல வச்சு குடுத்திருக்கோணும்..
  4. சரி கொஞ்ச நாளைக்கு சண்டை அடிபிடி எண்டு யாழ்களை கட்டப்போகுது.. இனி நானும் அடிக்கடிவரோனும் சண்டை பாக்க.. தொடருங்கள்.. ஆவலுடன்
  5. நாங்கள் சிறீலங்லாவிலயே பிறந்து வளருவம் பிறகு நல்ல நிலைக்கு வந்த உடன சிறீலங்கா எண்டா ஒத்து வராது..
  6. இப்பிடியே சொல்லிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்.. ஆடத்தெரியாதவன் மேடை சரி இல்லை எண்டமாதிரிதான் போகவிருப்பமில்லாதவன் கூறும் ஒவ்வொரு சாட்டும்.. ஏதோ அமெரிக்கா ஜரோப்பாவில் வாழுறவன் மட்டும் நூறு இரு நூறு வயசு வரையும் வாழுறாங்கள் சிறிலாங்காவில் இருப்பவன் அஞ்சு வயதில் மருந்து இல்லாமல் சாகிறான்.. இஞ்ச யாழ்ப்பாணத்தில சகல மருந்தும் இருக்கு.. காசிருந்தா சரி.. ஒரே ஒரு காரணத்தை சொல்லுங்கோ எனக்கு பொருளாதாரம் போதுமானதா இல்லை அதால சிறீலங்கா வந்து செற்றிலாக விருப்பமில்லை எண்ட உண்மைக்காரணத்தை.. மற்றதெல்லாம் சும்மா சப்பை கட்டு.. காசு இருந்தா ராஜவாழ்க்கை சிறீலங்காவில.. காசில்லாட்டி பிச்சைக்கார வாழ்க்கை பிரித்தானியா கனடாவிலையும்.. தற்ஸ் ஆல் யுவரானர்.. உதாரணத்துக்கு எவ்வளா காசிருந்தாலும் வெளிநாட்டில் டிறைவர் வீட்டு வேலை சமையலுக்கு ஆள் வைக்கேலா.. தன் வேலைய தான் தான் செய்யோணும்.. சம்பளம் குடுத்து கட்டாது.. ஆனால் இலங்கையிலோ தமிழ் நாட்டிலோ ஒரு வைத்தியர் அல்லது பொலிஸ் அதிகாரி அல்லது பிஸினஸ்மான் வீட்டில் இதுக்கு எல்லாத்துக்கும் ஆள் இருக்கும்.. அதுக்குத்தான் சொன்னன் காசுஇருந்தா இங்கைதான் சொர்க்கம் வெளிநாட்டில் அல்ல.. அங்கு பிச்சைக்கார வாழ்க்கை.. அவசர சிகிச்சைக்கு அப்பலோவுக்கு கூட போகலாம்.. அதால ஊருக்கு போய் இருக்க என்னட்ட காசில்லை எண்டு நேர்மையா சொல்லுங்கோ.. அதவிட்டிட்டு மற்றதெல்லாம் உங்களை நீங்களே ஆறுதல்படுத்த சொல்லிக்கொளவது..
  7. நானும் பச்சை போட்டு விட்டு காத்திருக்கிறேன் ஜயா..
  8. நன்றி தலைவரே இந்த கண்கொள்ளா காணொளிக்கு… ஞான் முக்தி அடைஞ்சு..😂
  9. வாவ்.. நன்றி இணையவன்.. இவ்வளவு ஆழமாக தெளிவாக விளக்கியமைக்கு.. இப்பதான் விளங்குது..❤️
  10. இணையவனின் உதவியுடன் ஒரு அக்கவுண்ட் திறந்து இதில ரெண்ட வாங்கிபோட்டன்… இங்க என்ன நடக்கு எண்டு ஒண்டும் விளங்குதில்லை.. யாராவது விளங்கப்படுத்த முடியுமா..? இன்னொரு கேள்வி commodities க்கும் stocks க்கும் இடையில் என்ன வித்தியாசம்..? Stocks அதை விற்கும் நிறுவனத்தால் ஒழுங்கு படுத்தப்படும் commodities யார் ஒழுங்கு படுத்துவது..? நான் பொருளாதாரத்தில் சுத்த சூனியம் என்பதால் பொருத்தருளுக இப்படியான சில்லறை கேள்விகளுக்கு..🙏
  11. முதல்தரம் எழுதுரன் எண்டுறியள் ஆனால் பலநாள் எழுதியவர்கள் போல் எழுத்தில் நேர்த்தி இருக்கிறது.. உங்களைப்ப்போல்தான் கோமகன் என்ற உறவு யாழில் முதன்முதல் தன் அனுபவத்தை நெருடிய நெருஞ்சி என்ற தொடராய் எழுத ஆரம்பித்து பின்னாளில் பெரிய எழுத்தாளர் ஆகிவிட்டார்.. கேட்கிறேன் என்று குறை நினைக்க்காதையுங்கோ டாக்டருக்கு படிச்சிட்டு ஏன் அம்புலன்ஸ் ஓடுறியல் கனடாவுல..?😢
  12. ரஷ்ய சார்பு உக்ரேன் கட்சிதலைவரை உக்ரேனும் மேற்குலக நாடுகளும் பிடித்து வைத்திருக்கின்றன.. அவரைப்போல் ரஷ்ய சார்பாளர்கள் பலர்.. போர் நடந்த பகுதிகளில் சுட்டுக்கொல்லப்பட்டு தெருக்களில் கிடக்கும் பலர் ரஷ்யசார்பானவர்கள் என்று சொல்கப்படுகிறது.. ரஷ்யாவுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட ஒரு அதிகாரியை கூட உக்ரைன் மிருகத்தனமாக சுட்டு படுகொலை செயதது அனைவரும் அறிந்ததே.. இது எல்லாம் மனித உரிமை மீறலுக்குள் வராது.. ஏனெனில் இவற்றை செய்வது மேற்குலகும் அவர்களுக்கு சார்பானவ்ரகளும் அல்லவா.. அதனால் குருக்கள் செய்வது குற்றமாகாது..
  13. பிந்திக்கிடைத்த செய்தி— மூண்டு விமானத்தில ஒண்டு அம்பாந்தோட்டையில் இருந்து சீனக்காரன் அடிச்ச ஏவுகணையில தரை இறங்க முன்னமே விழுந்து நொருங்கிப்போச்சு..
  14. கணணியுடனான எனது ஆரம்பகால நினைவுகளையும் ஞபகப் பரணில் இருந்து கிளறிவிட்டது உங்க பதிவு.. பருவகால நினைவுகளின் சுமை தாளாமல் தள்ளாடுகிறது மனம்..
  15. அதெல்லாம் முடியாது.. கருத்து எல்லாம் எழுதாம இருக்கமுடியாது.. நாலுபேர் வந்து சொல்லுவினமாம் நாங்கள் கருத்து எழுதாமல் இருக்க யாழ் என்ன அந்த நாலுபேர் வீட்டு அப்பன் ஆத்தா சொத்தா..? நிர்வாகம் அடிச்சுக்கலைக்கும் வரை நாங்கள் கருத்து எழுதிக்கொண்டேதான் இருப்பம்.. கப்பித்தன் அப்படி எல்லாம் அவசரப்பட்டு கருத்து எழுதமாட்டன் எண்டு வார்த்தையை விடாதேங்கோ.. அப்புரம் இவர்கள் உருட்டுற உருட்டை எல்லாம் வாசகர்களுக்கு மறுத்து எழுதுறது ஆராம்.. அதமாரி நாம உருட்டரப்போ மற்றவர்களும் எழுதோனும்.. அப்பதான் கருத்துக்களம் உசிரோட இருக்கும்.. சரியெண்டா சரியெண்டு சொல்லி பாராட்டுவம் தவறு எண்டால் தவறை சுட்டி காட்டி எழுதுவம்.. நாலுபேர் நாலுகருத்து எழுதி விவாதிக்காட்டி ரஞ்சித்தின்ர திரி ஒரே ஆமாப்பாட்டில சப்பெண்டு போயிடும்.. ஒருத்தனும் வாசிக்க வரான்.. இந்த ஆமாம் சாமியளை பக்கத்தில வச்சிருந்தா எப்பவும் வச்சிருக்கிறவருக்கு ஆபத்துதான்.. அதெல்லாம் முடியாது எழுதாமல் இருக்க..
  16. அரபுநாடுகள் ரஷ்யாவை விட மிகப்பெரியது.. வளமானவை.. ஆனால் அவற்றைத்தான் அமெரிக்கா தலைமையில் மேற்குலகு ஒன்று சேர்ந்து ஒவ்வொன்றாக அழித்து ஒழித்து ஒடுக்கி வருகிறது.. இன்று அரபுதேசங்கள் நாளை ரஷ்யா அதன் பின் சீனா தேவைப்பட்டால் இந்தியாவைக்கூட… வாஸ்கொடகாமா காலத்தில் இருந்தே கீழைதேச தேசங்களை அடக்கியும் ஒடுக்கியும் அடிமைப்படுத்தியும் சீரழித்தும் வரலாற்றை ஒவ்வொரு முறையும் மேற்குலகுதான் எழுதுகிறது.. இப்பொழுது ஜனநாயகம் பேசிக்கொண்டுபோய் ஆக்கிரமித்து பொருளாதாரத்தின் மூலம் அடிமைப்படுத்துகிறார்கள்.. அதற்கு வெட்கமே இல்லாமல் கீழைத்தேசத்தில் இருந்து போன அடிமைகள் முட்டுக்குடுக்கின்றனர்.. ஒவ்வொரு முறையும் காக்கைவன்னியர்கள் கீழைத்தேசத்தில் இருப்பதால்தான் அவர்கள் எம்மை அடிமை ஆக்கமுடிகிறது..
  17. கூகிள் பே, ஆப்பிள் வாலட், மாஸ்டர் கார்ட், விசா...எல்லாம் ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது.. ஏடி எம் வங்கிகள் முடங்கி உள்ளன.. கிரடிட் கார்ட், டெபிட் கார்ட் வேலை செய்யாததால் சாதாரண அன்றாடம் காச்சி ரஷ்ய மக்கள்தான் தம் வாழ்நாள் சேமிப்பை பயன்படுத்த முடியாமல் துன்பப்படுபவர்கள்.. ரஷ்ய பக்கத்து செய்திகளை பேஸ்புக்கும், ட்விட்டரும் சென்சார் செய்து வெளியிடுகின்றன.. யூடியுப் ரஷ்ய பக்கத்து செய்திகளை முடக்கி உள்ளது.. ரஷ்ய ஊடகங்களை மேற்கு தடை செய்து விட்டது.. ஆக முதலாளித்துவம், உலகமயமாக்கல் என இந்த கம்பனிகள் பேசினாலும் இவை உலகமயான கம்பனிகளாக செயல்படவில்லை. ..அமெரிக்க கம்பனிகளாக தான் செயல்பட்டுள்ளன. வாடிக்கையாளர் சேவையே உயிர்மூச்சு என பேசி ஆசைகாட்டி வங்கி அட்டைகளை விற்ற மேற்குலக கம்பனிகள் மீது அழுத்தம் பிரயோகித்து நம்பி வாங்கிய போருடன் சம்பந்தப்படாத சாதாரண அப்பாவி வாடிக்கையாளர்களை வங்கியில் பணம் எடுக்கவிடாமல் முடக்கியுள்ளது மேற்குலகு… ரஷ்யாவுக்கும் உக்ரெய்னுக்கும் இருக்கும் பிரச்சனையில் நீங்கள் எந்த பக்கம் வேண்டுமானாலும் இருக்கலாம்... நீங்கள் ரஷ்ய அரசியல்வாதிகளை அவர்களின் சொத்துக்களை தடை செய்யுங்கள் ஆனால் பாவம் அன்றாடங்காச்சி ரஷ்ய மக்கள் என்ன செய்தார்கள்..? நாளை உங்கள் நாடு (அது எதுவாக இருப்பினும்) அங்கு வசிக்கும் சாதாரண மக்களை கொல்லப்போகும் அதன் பொருளாதாரத்தை இந்த முதலாளித்துவ நாடுகளால் எந்த காரணத்தை காட்டியும் முடக்க முடியும் அதற்கு பெயர் ஜனநாயகம்.. முக்கியமான பிரச்சனைகளில் இப்படி இவை செயல்படுவது நியாயம் என ரஞ்சித் வகையறாக்களை போல சப்பை கட்டு கட்டலாம். ஆனால் நாளை இலங்கையில் ஒரு பிரச்சனை என சொல்லி உங்கள் உறவுகள் கிரடிட் கார்டை முடக்கி உங்கள் உறவுகளை பணம் எடுக்கவிடாமல் செய்தால் எப்படி இருக்கும்? உங்கள் ஓய்வுகால சேமிப்பின் மதிப்பு 90% ஆக சரிந்தால் எப்படி இருக்கும்..? சீனா பேஸ்புக்கையும், ட்விட்டரையும், யூடியூபையும்,...ஏன் கூகிளை கூட தன் நாட்டில் தடுத்தது எத்தனை தொலைநோக்கான விசயம் என இப்போது தெரிகிறது.. கருத்து சுதந்திரம் என அலறும் இந்த மேற்குலகும் அதன் நிறுவனங்களும் ரஷ்ய பக்கத்து செய்திகளை முடக்கியது எவ்வகை சுதந்திரம் என தெரியவில்லை.. தப்பு நடக்கும் இடமெல்லாம் ஆஜராகி தட்டிகேட்கும் உத்தமர்கள் என்றால் நாளை எதாவது பிரச்சனை என்றால் அமெரிக்காவில் அல்லது ஜரோப்பாவில் ஆஸ்ற்றேலியாவில் கனடாவில் கிரடிட் கார்டு, டெபிட் கார்டை முடக்கும் தைரியம் இவர்களுக்கு உள்ளதா? அவர்களின் செய்திச்சேவைகளை முடக்குவார்களா..? பொருளாதாரத்தை முடக்குவார்களா? நிச்சயம் செய்யமாட்டார்கள். இதுதான் இவர்கள் பேசும் கருத்து சுதந்திரம்.. மேற்குலகுக்கு முட்டு குடுப்பவர்களின் எஜமானர்கள் பேசும் ஜனநாயகம்.. இங்கு யாழில் இவர்களை ஆதரிக்கும் ரஞ்சித் சசிவர்ணம் நீர்வேலியான் போன்றவர்கள் மாற்றுகருத்து எழுதும் எம்போன்றவர்களை இங்கு எதுவும் எழுதாதே வெளியபோ என்று மீண்டும் மீண்டும் எழுதுகிறார்கள்.. தமக்கு எதிரான கருத்துக்களை ஜீரணிக்க திராணி அற்றவர்கள்.. இதுதான் மேற்குலகை ஆதரிக்கும் வெள்ளைத்தோல் மோக அடிமைகள் பேசும் ஜனநாயகம்.. எஜமானார்கள் எவ்வழியோ அவர்கள் அடிமைகளும் அவ்வழியே..
  18. அமெரிக்கன் வேணுமெண்டு ஜரோப்பாவில் வந்து நிண்டுகொண்டு புடினை பற்றி கெட்டவார்த்தைகள் பேசுவது சூழ்ச்சிகள் நிறைந்த திட்டமிட்ட செயல்.. இதை அவர்கள் தவறுதலாக செய்யவில்லை திட்டமிட்டுத்தான் செய்திருக்கிறார்கள்.. ஜரோப்பாவையும் ரஷ்யாவையும் கோத்துவிட அமெரிக்கா படாத பாடுபடுகிறது.. உக்கிரேனை வச்சு றைபண்ணி இப்ப ஜரோப்பாவையும் கோத்துவிடுகிறார்கள்.. கெட்டசாமான் ஒண்டு அமெரிக்கா.. உடம்பு பூரா விசம்கொண்ட கொடிய விசப்பாம்பு.. ஜரோப்பா இப்பொழுது அமெரிக்காவின் கெட்ட எண்ணம்களை புரிந்து கொள்ளதொடங்கிவிட்டதன் அறிகுறிதான் மக்ரோனின் கோபமான உரை.. அமெரிக்காவுக்கு வெள்ளை அடிக்கும் யாழ்கள உறுப்பினர்களுக்குத்தான் வெக்கமே இல்லை..

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.