Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாலபத்ர ஓணாண்டி

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by பாலபத்ர ஓணாண்டி

  1. நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடித்தது.. வேலை வாழ்க்கை என்று எல்லா துன்பங்களிலும் உழன்றுவிட்டு எனக்கென்று இருக்கும் கொஞ்ச நேரத்தில் மனதை இறுக்கத்தை போக்கி சந்தோசமாக இருக்க கிடைத்த இடம் யாழ்.. அதில் கிடைக்கும் நேரம் எல்லாம் இனிமேல் நெடுகமூஞ்சைய தூக்கிகொண்டு இருக்காமல் சந்தோசமா இருப்பம் எண்டு அப்பப்ப நகைச்சுவையாக எழுதுவன்.. அதுவும் எனது பழைய ஜடியில் என்ன கூத்து எல்லாம் அடிச்சு இருப்பன்.. உதாரணதூக்கு ஒண்டு..👇 // நெடுக்ஸ் நிகழ்ச்சியில் வாசித்த உரை...[/size] [size=4]அனைவருக்கும் வணக்கம்.[/size] [size=4]பெண்கள் பக்கம் இருந்து வணக்கம் சுணக்கமாக வருவதை கண்டித்துக்கொண்டு நான் எனதிந்த சிற்றுரையை ஆரம்பிக்கிறேன்.[/size] [size=4]பெண்கள் என்றால் யார்..? சாறி உடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? சட்டை போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? தோடு குத்தினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வளையல் போட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வகுடெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வாய்க்கால் கட்டினால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?வரப்பெடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?நாத்து நட்டால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..?இல்லை [size=4]வயலில் களை எடுத்தால் மட்டும் பெண்கள் ஆகிவிடமுடியுமா..? [/size][/size] [size=4][size=4]மானங்கெட்டவளவையே..உங்களுக்கு மஞ்சல் அரைத்து கொடுப்பது யார்..? அஞ்சு முளத்தில் பூ வாங்கிக்கொடுப்பது யார்..? பிஞ்சிலையே உங்களால் வெம்பிப் பழுப்பது யார்..?கெஞ்சவும் கொஞ்சவும் கடையில் நல்லாய்த் திங்கவும் வைப்பது யார்..?திண்ட பின் உங்கள் நண்பிகளுக்கும் சேத்து பில் கட்டுவது யார்..?இதையெல்லாம் செய்வது யார்..? யார்..? யார்...? [/size][/size] [size=4][size=4]( என்று நெடுக்ஸ் உணர்ச்சிவசப்பட்டு எப்பவோ கேட்ட கட்டபொம்மன் வசனங்களை எல்லாம் பிளைபிளையாய் பேசி முடிக்க பெண்களால் நொந்து போய் இருந்த சுண்டால் கூட்டத்தில் இருந்து பாய்ஞ்சு வந்து மேடையில் ஏறி நெடுக்ஸை கட்டிப்பிடித்து எங்கள் தன்மான சிங்கம்,எங்கள் அடிமைத்தனம் ஒளிக்க வந்த கட்டப்பொம்மன் 2 வாழ்க வாழ்க என்று கத்துகிறார்.. இவற்ரை அவதானித்துக்கொண்டிருந்த கனடா மகளீர் அணித்தலைவி சகாற கடும் சினத்துடன் தன் தலையில் குத்தியிருந்த கிளிப்பை கழட்டி நியக்கிளிப்பை எறிவதாக நினைத்துக்கொண்டு வாயால் டமார் எண்டு சத்தம்போட்டபடி சுண்டலை நோக்கி எறிகிறார்.. [/size][/size] [size=4][size=4]சகாறாவை பின்பற்றி பெண் உறுப்பினர்கள் எல்லாம் தங்கள் கொண்டையில் குத்தியிருந்த கிளிப்பையும் கொண்டை வைக்காத இளம்பெண்கள் தங்கள் கைகளில் போட்டிருந்த வளையல்களையும் சுண்டலையும் நெடுக்ஸையும் நோக்கி கூச்சல் இட்டபடி வீசி எறிகின்றனர்.. [/size][/size] [size=4][size=4]நெடுக்ஸ் தான் பேசிக்கொண்டிருந்த மைக் இருந்த ரேபிலுக்கு பின்னால் நிலையெடுத்து இந்த தாக்குதலில் இருந்து தன்னை தற்காத்து கொள்ள சுண்டலோ இவற்றை பற்றி எல்லாம் கவலைப்படாமல் வந்து விழுந்த கிளிப்புகளுக்கும்,வளையல் துண்டுகளுக்கும் நடுவே இளம்பெண்களின் வளையல்களை மட்டும் முமுரமாக பொறுக்கி சேகரித்துக்கொண்டிருக்கார்.. [/size][/size] [size=4][size=4]நிலமை கட்டுக்கடங்காமல் போவதை அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி மைக்கை கையில் எடுத்து பெண்கள் அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமைதியாக இருந்தால் போகும்போது எல்லாருக்கும் ஏசியன் கடையில் எடுத்த சாறியும் யன்னல் வைத்த பிளவுசும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்க பெண்கள் பக்கம் இருந்து குண்டூசி விழுந்தால் கூட கேட்கும அளவுக்கு அமைதி நிலவுகிறது... [/size][/size] [size=4][size=4]இதனால் சந்தோசம் அடைந்த தமிழ்சிறி நெடுக்ஸ் பக்கம் திரும்பி "இப்பதாண்ட ஒருமாதிரி நிலமையை கட்டுக்கை கொண்டுவந்திருக்கன் அதைக்கெடுத்துப்போடதையெடாப்பா"என்ன்று கெஞ்சுவது போல் பார்க்கிறார்..எதைப்பற்றியும் கவலைப்படாமல் நெடுக்ஸ் மைக்கை எடுத்து தொடர்கிறார்..)[/size] [/size] [size=4]நண்பர்களே,தோழர்களே...இந்தப் பெண்களைப் பேய்கள் என்றும் சொல்லலாம்..பெண்களை பேய்கள் இல்லை என்றும் சொல்லலாம்..பேய் என்று சொல்வதெல்லாம் பேயாகிவிடாது..அங்கு பெண்களும் இருக்கின்றனர்..அதே போல் பெண் என்று சொல்வதெல்லாம் பெண் ஆகிவிடாது..அங்கு பேய்களும் இருக்கின்றன..பேய்களிடம் இருந்து ஆண்களை காப்பாற்றுவதே தற்பொழுது எனது முதல் பணியாக எடுத்து செய்து கொண்டிருக்கிறேன்.. [/size] [size=4]இந்தப் பணியில் நான் பல சவால்களையும்,தடைகளையும் எதிர்கொண்டாலும் முருங்கை மரத்தில் இருந்து விழுந்த விக்கிரமாதித்தன் போல பேய்களை எதிர்த்து யாழ் உள்ளவரை நான் கீ போட்டில் போராடிக்கொண்டிருப்பேன்..இது என் கீபோட்டின் மேல் சத்தியம்..சத்தியம்..சத்தியம் [/size] [size=4]( எண்டு ஆவேசம் கொண்டவரைப் போல் நெடுக்ஸ் ஒலிவாங்கி மேசையில் கையால் அடித்துக் கத்துகிறார்.. ஆண்கள் பக்கம் இருந்து பலத்த கரகோசமும் விசில் சத்தமும் வானைப்பிளக்கிறது..[/size] [size=4]சுண்டல் பொறுக்கமுடியாமல் கூட்டத்தின் நடுவே தான் மட்டும் தனிய எழுந்து நிண்டு கைதட்டுகிறார்..இதை தூரத்தே மேடையின் பின்னால் இருந்து அவதானித்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தமிழ்சிறி குறுக்காலபோவான் திரும்ப கூட்டத்தை குழப்பபோறான் போல கிடகே எண்டு பதற்றத்துடன் காணப்படுகிறார்.. [/size] [size=4]ஆனால் ஏசியன் சாறியையும் யன்னல் வைத்த யாக்கெட்டையும் பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்த பெண்கள் அணி இவற்றினால் எந்த சலனமுமடையாமால் சாறியே குறி என்று அமைதியாக இருக்கின்றனர்.. நெடுக்ஸ் இந்த அமைதியை வாய்ப்பாக பயன்படுத்தி தொடர்கிறார்..) [/size] [size=4]நாங்கள் கேட்கிறோம்..தெளிவாகக் கேட்கிறோம்...பெண்களை ஏன் இந்த மூடர்கள் கண்கள் என்கிறார்கள்..? ஆண்களுக்கும் கண்கள் இருக்குத்தானே..? எங்கள் கண்கள் மிக அழகானவை..அவற்றின் மூலமே நாம் வண்டுகளையும் பூக்களையும் பார்க்கிறோம்..[/size] [size=4]நான் பல காலத்துக்கு முன்னரே பூக்களை நின்று பார்க்க வெளிக்கிட்டிட்டன்.ஆனால் என்னைப் பிடிக்காத எனது எதிரிகள் சிலர் நான பூக்களை பார்க்கும் சாட்டில் பெண்களையும் பார்ப்பதாக அபாண்டமாக சொல்லித்திரிகிறார்கள்..!அவர்களின் கண்கள் அழுகிப்போக..[/size] [size=4]பூக்களைத்தான் பறிக்காதீங்க[/size] [size=4]என் பூக்காதலைத்தான் பிரிக்கதீங்க..[/size] [size=4](என்று கோரசாக இழுத்து பாடுகிறார்.. அப்பொழுது அவர் கண்ணில் இருந்து சிலதுளிகள் விழுகின்றன..எல்லோரும் பார்க்கும் வகையில் கைக்குட்டையை எடுத்து தன் கண்ணீரை துடைத்துவிட்டு நான் யாரும் பார்க்க என் கவலைகளை நினைத்து அழுவதில்லை என்று சொல்லிவிட்டு தன் பேச்சை தொடர்கிறார்.. ) [/size] [size=4]பூக்கள் அழகானவை..பூக்களைமொய்க்கும் வண்டுகள் அதைவிட அழகானவை..ஆகையால் பூக்களை இந்தக்கண்களலேயே ரசிக்கிறோம்..பிறகெதற்கு இந்த மாங்காய் மடையர்கள் கவிதை என்ற பேரில் பெண்களை மட்டும் கண்கள் என்கிறார்கள்..?இது சுத்த ஆணடிமைத்தனமே அன்றி வேறுதுவும் இல்லை.. ஆகையால் இனிமேல் கவிஞர்கள் ஆண்களையும் கண்கள் என்று சொல்லவேண்டும் என்று ஆண்களின் சார்பில் இந்த இடத்தில் வன்மையாகக் கேட்டுகொள்கிறேன்.. [/size] [size=4]சிலபலவருடங்களுக்கு முன்னர் நானும் ஓடினேன்.. பெண்கள் இருகண்கள் என்று பாடினேன்..அவள் ஒரு ரோசாப்பூ..வாடாத ரோசாப்பூ..எங்கள் காதல் ஒரு கைபடாத சீடி.. ஆனால் கடைசியில் போடா போடி.. ஆதலால் சொல்கிறேன் ஆண்களே கரண்டுக்காரன் வெட்டி வைத்த குழியில் விழுந்தாலும் காதலில் விழுந்துவிடாதீர்கள்.. [/size] [size=4]உங்களுக்கு காதலிக்கவேண்டுமென்றால் என்னைப்போல் பூக்களை கதலியுங்கள்..இல்லையெண்டால் புழுவையெண்டாலும் காதலியுங்கள்.. ஆனால் பெண்களை மட்டும் காதலித்துவிடாதீர்கள்..காதலித்துவிடாதீர்கள்..காதலி....த்..து(எனும்போது நெடுக்ஸிற்கு உணர்ச்சிவசப்பட்டதால் பேச்சுவருகிறது இல்லை..கூட்டத்தில் எல்லாரும் அமைதியாக இருப்பதை அவதானித்த குட்டி உடனே எழுந்து நின்று நான் இதை லைக் பட்டினை அமத்தி லைக் பண்னுறன் எண்டு பெரிதாக சொல்லவும் நெடுக்ஸ் உற்சாகம் அடைந்தவராக தொன்டையை சரி செய்துகொடு மீண்டும் பேசத் தொடங்குகிறார்..) [/size] [size=4]நண்பர்களே..எனக்கு நீண்டகாலமாக ஒரு சந்தேகம் இருக்கிறது..சோத்து ஆன்ரிகள் சோத்தை சாப்பிட்டதால் அன்ரிகள் ஆனார்களா இல்லை அன்ரிகள் ஆனதால்தான் சோற்ரை சாப்பிடுகிறார்களா என்பதுதான் அது... இதை நான் எங்கள் யூனியில் இருந்த எல்லாப் புத்தகங்களிலும் தேடிப்பார்த்துவிட்டேன்..ஆன்ரிகள் நிறையப்பேர் சிக்கிவிட்டனர்.. ஆனால் விடைதான் சிக்கவில்லை...என் தலையில் இருக்கும் முடி எல்லாம் போனாலும் இதற்கு நான் விடைகாணாமல் ஓயமாட்டேன்.. [/size] [size=4](அப்பொழுது ரதி தன் கான்ட் பாக்கில் இருந்த உதட்டுச்சாயத்தை எடுத்து உதட்டில் நன்றாக அப்பிவிட்டு எழுந்து நின்று நெடுக்சின் கருத்துக்கு தான் சிவப்பு புள்ளி குத்துவதாகவும் இதை யாழின் பதிவில் இருந்து தூக்கும்படி இணையவனுக்கு றிப்போட் பட்டினை அமத்தி றிப்போட் பண்ணுவதாகவும் தெரிவிக்கிறார்.. அப்பொழுது பக்கத்தில் இருந்த அலைமகள் ரதியை இழுத்துப்பிடிச்சு கீழே இருத்தி அநியாயமாக ஏசியன் கடை சாறியை மிஸ்பண்ணவேணுமோ எண்டு கேட்க ரதி நான் சாறி கட்டுவதில்லை ஒன்லி குட்டைப்பாவாடைதான் அதாலை தனக்கு கவலை இல்லை எண்டு கூறி மீண்டும் உதட்டு சாயத்தை சரிபார்க்கிரார்.. [/size] [size=4]ரதியைக் கண்ட உற்சாகத்தில் கிருபன் பக்கத்தில் இருந்த இன்னுமொருவனின் காதில் "நட்பார்க்கும் நட்பாய நட்பல்ல நட்பாகும் நிப்பார்க்கும் போவார்க்கும் நடுவில் போகாமல் எப்போதும் நிண்டு" என்று புதுக்கவிதை சொல்கிறார். .ரதியைக் கன்ட நெடுக்காலபோவானுக்கும் புது வேகம் பிறக்க தன் சிற்ருரையை தொடர்கிறார்..) [/size] [size=4]என்னைப்பொறுத்தளவில் பெண்கள் பாதிக்கண்கூட இல்லை..பிறகு எதற்கு வெட்டியாக இருகண்கள் மூண்டு கண்கள் எண்டு பேசிக்கொண்டு..கண்கள் எப்பவும் நாங்கள்தான்..நாங்கள் கண்ணெடுத்து சுட்டால் பெண்கள் காணாமல் போய்விடுவார்கள்..எப்பவும் பேரில் முன்னெழுத்து நாங்கள்தான்..பெண்கள் கார் போல..அதை ஓட்ட எப்பவும் ஒரு ட்ரைவர் வேணும்..அதுதான் நாங்கள்..எங்களின் துணையில்லாமல் பெண்களால் வாழவும் முடியாது சாகவும் முடியாது..ஆனால் நாங்கள் தனியே வாழமுடியும் [/size] [size=4]( என்று நெடுக்ஸ் சொல்லவும் ஆத்திரம் கொண்ட சகாரா ஏசியன் சாறியும் மயிரும் என்று கத்தியபடி எழும்பி தன்ர குதி உயர்ந்த செருப்பை கழட்டி கையில் எடுத்துகொண்டு மேடையை நோக்கி ஓடிவரவும் மற்ர பெண்களும் சகாறாவை பின் தொடர்ந்து மேடைக்கு ஓடுகின்றனர்.. [/size] [size=4]இதைக்கண்ட தமிழ் சிறி அப்படியே பாய்ந்து வந்து நெடுக்ஸை பிடித்து இழுத்துக்கொண்டு மேடைக்கு பின்னால் ஒடுகிறார்...நெடுக்ஸ் கையில் அகப்படாத ஏமாற்றத்துடன் பெண்கள் அணி திரும்பிச்செல்ல தமிழ் சிறி நெடுக்ஸை பாதுகாப்பாக ஒருகாரின் பின்னால் ஒளித்துவைத்துவிட்டு வந்து மைக்கை பிடித்து இடையில் ஏற்பட்ட தடங்கலுக்கு வருந்துகிறோம்..நிகழ்ச்சிகள் சிறிய இடைவேளையின் பின் அறிவித்தபடி தொடரும் என்று சொல்லிவிட்டு பெல்ற்றை அவிட்டுக்கொண்டு பல்லை நெருமியபடி மேடையை விட்டு விறுக்கு விறுக்கெண்டு இறங்கி நெடுக்ஸிடம் செல்கிறார்.. ) [/size] // அது ஒரு காலம்.. ஒரே பகிடிதான்.. இனிமேல் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் இயன்றளவு அரசியலை விட்டு யாழில் நகைச்சுவையாக எழுதவேணும் எண்டு முடிவெடுத்திருக்கிறன்.. அதுகும் உந்த கோதாரிவிழுவான் அர்ச்சுனாவை ஏன்ரா ஆதரிச்சன் எண்டுற அளவுக்கு ஆனதுக்கு பிறகு அரசியலே வேண்டாம் எண்டாகிப்போச்சு.. விழுவான் அண்மையில் மலையக மக்களை பற்றி சொன்ன கருத்துக்கு பிறகு அந்த பரதேசியை இனிமேல் ஆதரிப்பது இல்லை என்று பகிரங்கமாக அறிவிக்கிறேன்.. இந்த வருசம் பிறந்தது எனக்கு அரசியல் விடயங்கள் சரிவராது போல கிடக்கு.. ஒரே அசிங்கமா இருக்கு.. இனி காமெடிதான் இயன்றளவு.. எனிவே.. என்றைக்கும் என்னை மறக்காமல் நியாபகம் வைத்திருக்கும் தலைவர் கோசானுக்கு என்ன கைமாறு செய்வனோ தெரியா.. அந்த அன்புக்கு என்றும் நன்றியும் பாசமும்.. அதேபோல் ரசோ அண்ணாவுக்கும் சுவி அண்ணவுக்கும்.. ஜ லவ்யூ..
  2. தல பாட்டாவே படிச்சுட்டாப்ள.. 😂😂😂 எனக்கும் அழுவ அழுவையா வருது.. 😂😂😂 சட்ட கிளிஞ்சிருந்தா தச்சி முடுச்சிறளாம் நெஞ்சு கிளிஞ்சிருச்சி இத எங்க முறையிடலாம்..😂😂😂
  3. நரியன் BAR சிறிக்கும் 120 கோடி இனப்படுகொலை ஆதார அழிப்புக்கும் ஆறு வித்தியாசங்கள் தருக…?
  4. நானும் தேடு தேடெண்டு தேடிப்பாத்திட்டன்.. 2011 களில் ரெண்டு ஜடி இருந்திருக்கவேண்டும்.. ஒண்டின்ர பேரையும் மறந்துபோனன்.. ஆனால் நான் சொல்வது உண்மை.. இது நடந்த சம்பவம்.. என்னால் இன்றைக்கும் இது தொடர்பாக அமரதாசுடன் உரையாடமுடியும்.. நிழலி விரும்பினால் யாழுக்கு வெளியே அமரதாசுடனான உரையாடலில் நிழலியையும் இணைத்துக்கொள்ளதயார்.. அது நிற்க.. யாழில் நான் சொன்ன சொல்லை காப்பாற்ற முடியாததால் இணைப்பை காட்டமுடியாததால் இதற்கு அனைவரிடம் பகிரங்கமாக மன்னிப்புகேட்டுகொண்டு இனிமேலும் எனது எழுத்துகளுக்கு கிரெடிற் இருக்காது என்பதால் யாழில் இருந்து விடைபெறுகிறேன்.. மனம் பாரமாக அல்லது வெறுமையாக இருக்கும் நேரங்களில் இங்குவந்து எல்லாவற்றையும் மறந்து கொஞ்ச நேரம் இளைப்பாறிபோக இடம்தந்த ஆலமரம் யாழிற்கு நன்றி..நன்றி.. அனைவருக்கும் மீண்டும் நன்றி.. யாழிற்கு என்றென்றும் அன்பும் நன்றியும்..🙏🙏
  5. சீமான் பெரியார் பிரச்சினையில் முத்துக்குமாரை படிக்கபோய் என் மனதில் மிகப்பெரிய கீறோவாக உயர்ந்து நிற்கிறார் முத்துக்குமார்.. தமிழ்தேசியத்துக்காக எந்த சமரசமும் செய்துகொள்ளாத உன்னதமான ஒரு போராளி.. அவர் கொல்லப்பட்ட இடத்து காணியை வாங்கியவரிடம் முத்துக்குமாரின் நண்பர்கள் ஒரு தூபி அமைக்க திரும்ப அந்தக்காணியை விலைக்கு கேட்டபோது அந்த காணியை வித்தால் உன்னை குடும்பத்தோடு அழித்துவிடுவோம் என்று உளவுத்துறையினர் மிரட்டி இருக்கின்றனர்.. இப்போ புரியுது எதனால் சீமானால் முத்துக்குமாரை பற்றி பேசவோ நினைவுத்தூபி அமைக்கவோ அவர் படங்களை மாட்டவோ முடியாது என்று.. அப்போ யார் சமரசமில்லாத போராளி..? முத்துக்குமார்..🙏
  6. நாம் தமிழர் ஆரம்பித்தது 2010/2011 களில் என்று நினைக்கிறன்.. அப்ப இருந்து நீங்கள் நாம் தமிழர் சம்பந்தமாக எதையுமே பார்க்கவில்லை கண்ணையும் காதையும் இறுக்கமூடிவைத்திருந்திருக்கிறியள் எண்டு நினைக்கிறன்..
  7. இல்லை ஏதும் கிடைக்குமா எண்டு நாக்க தொங்க போடுற ஆக்களும் முக்காடு போட்டிருக்கிறவை..அதான் சொன்னன்..🤣
  8. கோபம் இல்லை.. றீல் அறுந்து விட்டதால் மேற்கொண்டு எதுவும் வராது என்பதால் முக்காடுபோட்டுகொண்டு முழிச்சிருப்பது வீண் அதான் படுக்க சொன்னான்..🤣
  9. லிங் தரமுடியாது.. உங்கட அவசரம் விளங்குது ஏனென்டு🤣.. நிழலிக்கு இணையவனுக்கு மோகனுக்கு தெரியும் நான் இனைச்சனா இல்லையா எண்டு.. லிங் எடுத்தாலும் போடவேண்டாம் என்டு கேட்டுக்கொள்கிறேன் நிர்வாகத்தை.. அது எனது மற்ரைய ஜடியில் இருப்பதால் நான் விரும்பவில்லை.. அவ்வளவுதான்.. வேறு காரணங்கள் இல்லை.. மற்ரது அமரதாஸ் விரும்பினால் நான் அவருடன் பேசிக்கொள்கிறேன் அப்போ அவருக்கு தெரியும்..
  10. இதில் முதலாவது மாநில ஒருங்கிணைப்பாளர் என்று எங்குள்ளது..? முன்னனி மானில ஒருங்கமைப்பாளர் என்றுதானே உள்ளது..? அதிலும் தலைமை மாநில ஒருங்கமைப்பாளர் சீமான் என்றே உள்ளது.. ஆக பல மாநில ஒருங்கமைப்பாளர்கள் இருந்திருக்கிறார்கள்.. அவர்களில் முத்துக்குமாரும் ஒரு மாநில ஒருங்கிணைப்பாளர்.. இவர்களை எல்லாம் ஒருங்கினைக்கும் பிரதான ஒருங்கினைப்பாளராக சீமான் இருந்திருக்கிறார்.. அப்படித்தானே வருகிறது இதன்படி பார்த்தால்..? 2011 களில் என்று நினைக்கிறன்.. சீமானின் பெரியார்பற்றிய ஒரு உரையை கேட்டே பெரியாரைப்பற்றி தேடிப்படித்தேன் முதன்முதலில் அப்போழுது.. அன்றிலிருந்துதான் பெரியாரின்மேல் பேர் ஈர்ப்புக்கொண்டவன் ஆனேன்.. அதில் எனக்கு பிடித்தது.. “மூத்திரச்சட்டியை சுமந்துகொண்டு எம்மீது வீசப்பட்ட சூத்திரப்பட்டத்தை துடைக்கபோராடியவர் ஜயா பெரியார்.. கண்ணாடிக்கு மேல் ஒரு பெரிய கண்ணாடியை போட்டுக்கொண்டு குனிந்து குனிந்து எமது எதிர்காலத்தை தேடியவர் ஜயா பெரியார்..”
  11. நாம் தமிழரின் முதலாவது மாநில ஒழுங்கமைப்பாளர் முத்துக்குமார் என்பது எங்குள்ளது..? நான் பார்த்த பழைய வீடியோக்களில் எல்லாம் முத்துக்குமார் பக்கத்தில் நிக்கவே நாம் தமிழர்கட்சியின் முதன்மை ஒருங்கினைப்பாளர் சீமான் என்றே குறிப்பிடுகிறார்கள்.. அப்போ முத்துக்குமார் உயிருடன் இருக்கும்போதே சீமானுக்கு பதவி மாற்றிக்கொடுக்கப்பட்டதா..?
  12. அடப்பாவிகளா.. ஒரு மனுசன் விழுந்து முறிஞ்சு போய் கிடக்குறான்.. ஆள் தப்புமா தப்பாதா எண்டு பெட் கட்டி பாக்குரானுவள்.. கல் நெஞ்சக்காரனுவள்..😂😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.