Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. அடுத்தது என்ன? ஒன்றும் இல்லை. காணிக்காரர், உரித்து கொண்டாடுபவர்கள், ஆட்டையை போட பார்ப்பவர்கள் இவர்கள் எல்லாரும் சேர்ந்து கும்மி அடிக்க வேண்டியதுதான். ஆமிக்காரன் காணிகளை விட்டு போவதும் சரி எங்கடையதுகள் அதற்குள் செய்யும் தில்லுமுல்லுகள், காணிபிடித்தல், எல்லை விரித்தல், பொது ஒழுங்கை என ஐயையோ.. இடையில் ஏன் இவ்வளவு போர், போராட்டம், அழிவு என்றுதான் விளங்கவில்லை.
  2. பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு அத்தாட்சி பத்திரத்தையே நேர காலத்திற்கு வழங்க முடியாத நாடு பிறப்பு விகிதம் குறைவடைந்துள்ளது பற்றி கவலைப்படலாமா?
  3. அரசாங்கம் எல்லாவிதமான வழிகளிலும் மக்களிடம் வசூல் அடிக்கப்பார்க்கின்றது. எத்தனைபேர் வரி கட்டுவார்கள் என்பது ஒருபுறம் செல்ல; வாடகை வீடுகளிற்கு வரி கேட்டால் வீட்டு வாடகைகள் இன்னும் ஏறப்போகின்றதே.
  4. வானவில் பற்றிய கருத்துடன் உடன்பாடு இல்லை எனினும் தூண்டப்படுதல் எனும் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன். சிகரெட், குடி, போதை போல ஒருபால் உறவுநிலைகள், இயற்கையில் அரிதான (இயற்கைக்கு முரணான எனும் பதம் பொருந்தவில்லை என நினைக்கின்றேன்) உறவுநிலைகள் மற்றவர்களிடையே ஊக்குவிக்கப்படுகின்றன (தொற்ற வைக்கப்படுகின்றன) என்பது உண்மை. முடியுமானால் கீழுள்ள காணொளியில் இதுபற்றி கூறப்படும் சில விடயங்களை கேட்டுப்பாருங்கள்.
  5. இந்த ஊடகவியலாளர் எந்த நிறுவனத்தில் வேலை செய்கின்றார் அல்லது யூரியூப்பரோ? அவர் என்ன கருத்தை கூறினார் என்பதை அறியத்தரலாமே?
  6. ஒரு மருத்துவர் என்றால் திருமணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவித்து எத்தனை பெண்கள் வரிசையில் நிற்பார்கள். எத்தனை பெற்றோர் தமது பிள்ளையை கட்டிக்கொடுக்க வரிசையில் நிற்பார்கள். ஆனால், இந்த தம்பி தான் கண்டபெண்ணை மட்டுமே உலகம் என நினைத்து வாழ்ந்துவிட்டாரோ என்னமோ. ஒரு மனுசனுக்கு மருத்துவ கல்வி புகட்டும் பாடத்தை விட இந்த இலக்கியம், சினிமா, கவிதை, பாடல், ஜோடி, சமூகம் காதல் பற்றி உசுப்பேத்திவிடும் கனம் அதிகம். இங்கு இந்த தம்பி விடயத்தில் மருத்துவ கல்வி தோற்றுள்ளது.
  7. எல்லாரும் மனுசர் தானே ஐயா. முதலில் மனுசர் அதன் பின்பே மருத்துவர். நீங்கள் படித்து ஒரு மருத்துராக பணியாற்றினால் அதன்பிறகும் மனுசர் தானே. இன்னோர் வலைத்தள செய்தியின் பிரகாரம் காதல் திருமணம் சம்மந்தமான நிச்சயமற்ற தன்மையே/குழப்பமே அவர் வாழ்வை முடித்துக்கொள்ள காரணம் என சொல்லப்படுகின்றது. உண்மை பொய் தெரியாது.
  8. மருத்துவருக்கு என்ன மன அழுத்தமோ. ஆழ்ந்த இரங்கல்கள்!
  9. சம்பந்தன் பேச்சை நம்பக்கூடாது என்பதே பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேணும் என்பதற்கான காரணம் போலும்.
  10. ஒரு பகுதி சொல்கின்றது: ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கவும். இன்னோர் பகுதி சொல்கின்றது: தமிழ் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்தவும். பிரிதோர் பகுதி சொல்கின்றது: தமிழ் பொது வேட்பாளரை புறக்கணிக்கவும். தமிழ் மக்களுக்கு உள்ள தெரிவுகள் இவ்வளவு தானா ஆக? வேற…? அவ்வப்போது ஜனாதிபதி ஆட்சிமுறையையே இலங்கையில் இல்லாது ஒழிப்போம் என பல அரசியல் பிரமுகர்கள் கூறினார்கள். அதை கிடப்பில் போட்டாயிற்றா?
  11. இது என்னைய்யா புதுசாய் உள்ளது. மிக நீண்ட படகு பயணமாக அமையுமோ? வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் அடிக்கடி மையம்கொண்டு நகரும் பாதையில் படகு சேவை கடந்து செல்லுமோ? படகில் ஏறினால் கவனமாக முழுசாக கொண்டு வந்து சேர்ப்பார்கள் என்றால் விமானசீட்டை டாக்காவுக்கு எடுக்கலாம். 😁
  12. பணயக்கைதுகள் விடயத்தில் இஸ்ரேல் மூர்க்கத்தனமாக செயற்படும் என்பதே நான் கூறவந்த விடயம். பணயக்கைதுகள் மூலம் இஸ்ரேலை அடிபணிய வைக்கலாம் அல்லது அழுத்தம் கொடுக்கலாம் என்பது தவறான ஒரு நோக்கு. இங்கு ஓர் வரலாற்று சம்பவத்தையும் பார்க்கலாம். அது 1976ம் ஆண்டு இடம்பெற்ற விமான கடத்தல். இங்கு இஸ்ரேலிய பணயக்கைதிகள் எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்பது இஸ்ரேல் எப்படியான கடும்போக்குடையது என்பதற்கு நல்லதொரு வரலாற்று சான்று. இந்த தாக்குதலை தலமையேற்று நடாத்திய படை அதிகாரி வேறு யாரும் அல்ல. அவர் தற்போதைய இஸ்ரேலிய பிரதமரின் சொந்த அண்ணர். வெற்றிகரமான இந்த தாக்குதலில் அவர் நெஞ்சில் சூடுபட்டு உகண்டா விமானதளம் ஒன்றில் இறந்தார். ஒபரேசன் ஜொனாதன் என அழைக்கப்படுகிறது இந்த மீட்பு முயற்சி.
  13. “பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம்.” எனக்கு இஸ்ரேல் பாலஸ்தீனம் பிரச்சனைகள், முன்னைய சம்பவங்கள் பற்றி ஓரளவு தெரிந்தபடியாலே இவ்வாறு கூறினேன்.
  14. நீங்கள் வைத்த வாதம் தவறு என உங்களுக்கு புரிகின்றது போலும். இதனால் நான் வக்காலத்து வாங்குவதாக கூறுகின்றீர்கள். உங்களுக்கு என்ன எழுதினேன் என புரிந்ததை கூறுங்கள் போதும். நான் உங்களிடம் ஆரம்பத்தில் கேட்ட வினாவுக்கு ஆம் அல்லது இல்லை என ஒரு பதில் தரலாமே? பதில் இல்லை என்றால் சிரித்துவிட்டு தலையை சொரியலாம்.
  15. விடுதலை புலிகள் சிங்கள பிரதேசத்துக்குள் ஊடுறுவல் செய்து சிங்களவர்களை பணயக்கைதிகளாக பிடித்து தமது பகுதிக்குள் கொண்டுவந்து சிறை வைத்தார்கள். எனவே, சிங்கள பணயக்கைதிகளை விடுவிக்கும் நோக்கத்துடன் சிறீ லங்கா படை தாக்குதல் செய்து அதில் தமிழ்மக்கள் பழியானார்கள்? ஹமாஸ் இஸ்ரேலினுள் தாக்குதல் செய்ததும், இஸ்ரேலியர்களை பணயக்கைதிகளாக சிறைபிடித்ததும் சரினானது என நீங்கள் எண்ணுகின்றீர்கள் போல? உங்கள் வாதப்படி இப்படித்தான் பேரம் பேசலாம் என பார்த்தால் இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்குள் புகுந்து செய்த அட்டூழியமும் ஹமாஸ் தாக்குதலும் சமன் ஆகின்றது போல?
  16. பாலஸ்தீன மக்களில் உண்மையான அக்கறை என்றால் இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஹமாஸ் முன் நிபந்தனை இல்லாமல் விடுவித்து இருக்கலாம்.
  17. கண்ணாடி வீட்டுக்குள் கல்லெறிய தொடங்கி உள்ளார்கள் என பொருள் கொள்ளலாமா? டொனால்ட் டிரம்ப் இற்கு மணி கட்டிவிட முயற்சி செய்தது ஒரு ஆரம்பமே. இது இனி எவ்வாறான பல சம்பவங்களுக்கு முன்னோடியாக அமையும் என்பது எதிர்காலத்தில் தெரியும். அமெரிக்காவில் நீதித்துறை அடிப்படையில் இரு கட்சிகள் சார்ந்து இயங்குகின்றது எனும் தோற்றப்பாடு அண்மையில் தெளிவாக முழு உலகுக்கும் புலப்படும்படி சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பைடன் ஐயா (அவசர அவசரமாக?) அண்மையில் ஏராளம் நீதிபதிகளை நியமித்தார். தனது பதவி முற்றுப்பெற முன் இன்னும் எத்தனை பேருக்கு நியமனம் கொடுப்பாரோ தெரியாது. நியமனம் பெறுபவர்கள் விசுவாசத்தை காட்டமாட்டார்கள் என கூறமுடியாது. டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் இரண்டு முன்னாள் அமெரிக்க நீதிபதிகளின் உரையாடல் பார்த்தேன். இங்கு இவர்களின் இலக்கு நீதி நிலை நாட்டப்படவேண்டும் என்பதை விட டிரம்ப் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு முட்டுக்கட்டை போடவேண்டும். தேர்தலில் போட்டியிட்டாலும் வெற்றி பெற முடியாதவாறு செய்யவேண்டும் எனும் சூக்குமங்களின் அடிப்படையில் இயங்குவது தெளிவாகின்றது. தீர்ப்பு கூறும்போது அவர்களின் உள்ளார்ந்தம் இந்த சூக்குமங்களின் அடிப்படையிலேயே கையாளப்படும் என்பது எனது ஊகம்.
  18. நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் விழுந்துள்ளன. இந்திய அரசியல் பற்றி அதிகம் அறியாததால் அதிகம் ஆராய்ந்து பார்க்க முயற்சி செய்யவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாளவன் பாரிய வெற்றி பெற்றுள்ளார். இவரின் இலங்கை தமிழர் பற்றிய தற்போதைய நிலைப்பாடு என்ன?
  19. அமெரிக்கன் பிராண்ட் குத்துக்கரணம் அடிக்கின்றது. டொனால்ட் டிரம்ப் ஒரு யோக்கியர் என்று எவரும் நம்புவார்கள் என நான் நினைக்கவில்லை. இங்கு நீதி பரிபாலனம் எப்படி கையாளப்படுக்கின்றது என்பதை கண்ணுற்றே பலர் விமர்சனம் வைக்கின்றார்கள். டொமோகிராட்டிக் தரப்பு உள்ளடி வேலைகள் நல்லாய் செய்கின்றார்கள். ஒரு காலத்தில் சீ என் என் செய்தி சேவை சொல்வதை வேத வாக்காக கேட்டு நம்பியதும் உண்டு. இப்போது எப்படி மாவரைக்கின்றார்கள் என கொஞ்சம் புரிகின்றது. அமெரிக்க சாம்ராச்சியத்தின் எழுச்சியும், வீழ்ச்சியும் அதன் பல பாகங்கள் எமது காலத்திலேயே நடந்தேறுகின்றன போல. அங்கு நடைபெறும் நிகழ்வுகள் அதை கட்டியம் கூறுகின்றன.
  20. இதை கண்டறிய வழி உள்ளது. நேரம் மினக்கட்ட வேலை சில தொகுதிகள் முடிவு தருகின்றேன். முடிவு அறிவிக்கப்பட்ட தொகுதிகளில் கட்சிகளின் வெற்றி எண்ணிக்கை இலக்கம் உள்ள இணைப்பை அழுத்தி நாம் தமிழர் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் விழுந்துள்ளன, எத்தனை வாக்குகளினால் தோற்றார்கள் என பார்க்கலாம். கீழுள்ள டேபிளை தொடருங்கள். சகலதையும் கூட்டி எத்தனை வீதம் கிடைத்துள்ளது என பார்க்கலாம். Party Wise Results Party Won Leading Total Total 39 0 39 Dravida Munnetra Kazhagam - DMK 22 0 22 Indian National Congress - INC 9 0 9 Viduthalai Chiruthaigal Katchi - VCK 2 0 2 Communist Party of India - CPI 2 0 2 Communist Party of India (Marxist) - CPI(M) 2 0 2 Marumalarchi Dravida Munnetra Kazhagam - MDMK 1 0 1 Indian Union Muslim League - IUML 1 0 1 35 - RAMANATHAPURAM (Tamil Nadu) Lost 97672 ( -411992) DR CHANDRA PRABHA JEYAPAL Naam Tamilar Katchi 22 - DINDIGUL (Tamil Nadu) Lost 97845 ( -572304) KAILAI RAJAN D Naam Tamilar Katchi 32 - MADURAI (Tamil Nadu) Lost 92879 ( -337444) SATHYADEVI T Naam Tamilar Katchi
  21. இது உத்தியோகபூர்வ தளம் என நினைக்கின்றேன். இங்கு தமிழ்நாட்டில் கட்சிவாரியாக எத்தனை சதவீதம் வாக்குகள் விழுந்துள்ளன என உள்ளது: https://results.eci.gov.in/PcResultGenJune2024/partywiseresult-S22.htm
  22. ராதிகா சரத்குமார் மூன்றாவது இடத்தில் உள்ளார். விஜயகாந்த் மகன் இரண்டாவது இடத்தில் உள்ளார். விருது நகரில் விஜயகாந்த் மகன் சிலது வெல்கின்றாரோ தெரியாது.
  23. பிரதிட்டை செய்வது உடலுக்கு நல்ல உடல்பயிற்சி. மனைவி மீது இவ்வளவு பக்தியா? உண்மையான அன்பை கிண்டல் செய்யக்கூடாது.
  24. கொஞ்சம் ஆழமாக சிந்துத்து பார்க்கின்றேன். நிச்சயதார்த்தம் எனும் ஓர் பதம் உள்ளது. இது கிட்டத்தட்ட ஒருவிதமான Appointment. ஆனால் Appointmentஐ நிச்சயதார்த்தம் என அழைப்பது சரிவராது. உதாரணமாக மருத்துவ நிச்சயதார்த்தம்/அரச அலுவலக நிச்ச்சயதார்த்தம்/வங்கி நிச்சயதார்த்தம் இப்படி புகுத்தினால் அது எடுபடுமோ தெரியாது. ஆயினும் நாள் குறித்தல் எனும் பதம் உள்ளது. இது கிட்டத்தட்ட அருகாக வரும் Appointment இற்கு நிகரான ஒரு அர்த்தம். நான் நினைக்கினறேன் திட்டமிட்ட சந்திப்பு/சந்திப்பு தீர்மானம்/ இவை கிட்டமுட்டவான அர்த்தங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.