Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. இந்த தடவை ஒலிம்பிக் பதக்க பட்டியலில் பல மாற்றங்கள் தெரிகின்றன. வழமையாக தங்கங்களை அள்ளும் அமெரிக்கர்கள் இந்த தடவை பின்னிற்கின்றார்கள். நோர்வே நாட்டுக்கு இன்னும் ஒரு பதக்கம்தானும் கிடைக்கவில்லை. பிரான்சில் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றாலும் ஐரோப்பிய நாடுகள் சிறப்பாக பங்கேற்பதாக தெரியவில்லை. பிரான்ஸ் மட்டும் விதிவிலக்காக உள்ளது.
  2. உங்கள் சிந்தனையில் எங்கடையதுகள் குண்டியை ஒழுங்காக கழுவாவிட்டாலும் அதன் காரணம் சிங்களவன் தண்ணீர் கொடுக்கவில்லை என்பதாகத்தான் அமையும். இலவசமாக மருத்துவம் படித்து மருத்துவர்களான எங்கடை மருத்துவர்கள் அரசாங்க வைத்தியசாலைகளில் எப்படி வேலை செய்யிதுகள் என நீங்கள் நேரில் சென்று பாருங்கள்.
  3. வெளிநாடுகளில் காற்றாடி கோபுரங்களை அமைத்து காற்று மூலம் மின் உற்பத்தி நடைபெறுகின்றது. அதில் விவசாயமும் நடைபெறுகின்றது. மட்டக்களப்பில் மேற்கண்ட பிரதேசத்தில் சூரிய கலங்களின் தட்டுக்கள் தனியார் காணிகள் வைக்கப்படுகின்றனவா? வேறு ஒரு இடமும் இல்லாமல் இங்கே கொண்டுசென்று வைத்தால் பாதிக்கப்படும் மக்களின் நலன்களை கவனிக்கவேண்டியது திட்டத்துடன் சம்மந்தப்பட்டவர்களது கடமை தானே.
  4. வெற்றி பெற்ற அணிக்கு ஒரு இலட்சம் அமெரிக்க டாலர்கள், ஆட்ட நாயகிக்கு 25,000 அமெரிக்க டாலர்கள் என்பது சரியான தகவலா? இவ்வளவு தொகை கொடுக்கின்றார்களா? கொடுத்தால் ஆச்சரியம் தான்.
  5. ஆண்கள் அணி சோபை இழந்துள்ளது. பெண்கள் அணி களை கட்டி உள்ளது. வாழ்த்துக்கள்!
  6. தாங்கள் பொல்லு எடுத்து கொடுத்தாயிற்று. இனி அடிவாங்க வேண்டியதுதான் பாக்கி?
  7. சொந்த புத்தி இல்லாத வேட்பாளருக்கு மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்?
  8. கமலா அக்காவின் வருகை போட்டியில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தும். ஆனால் கமலா அக்கா ஜனாதிபதி ஆக முடியுமா என்பது சந்தேகமே. வெறும் ஆள் மாற்றம் ஜனாதிபதி போட்டியில் வெற்றி பெற போதுமானது என நான் நினைக்கவில்லை. பைடன் ஆட்சியில் கமலா அக்கா உப அதிபர். பைடன் ஆட்சி ஒரு தோல்வி என கருதினால் இங்கு கமலா அக்காவின் பங்கும் தோல்வியில் உள்ளது. எனவே, சிங்கமே வெற்றி வாகை சூடுவார் என நான் ஊகிக்கின்றேன்.
  9. வினா: குளிக்கும்போது எதிர்பாராத விதமாக சிறிதளவு அல்லது அதிகளவு தண்ணீர் மூக்கினுள் சென்றால் என்ன (முதலுதவி உட்பட) செய்ய வேண்டும்? ••••••• ♻️
  10. படித்தவர்கள், சமூக அக்கறை உள்ளவர்கள் அரசியலுக்கு வருகின்றார்கள் இல்லை. ஒதுங்கி நிற்கின்றார்கள் என நீண்டகாலமாக எல்லோரும் குறைப்படுகின்றோம். இந்த தம்பி யாழ் மருத்துவபீடத்தில் கற்ற பட்டதாரி என ஆட்கள் கதைக்க கேட்டேன். தவிர அரச மருத்துவ அதிகாரியாக நியமனம் பெற்ற ஒருவர். இவரில் சிறிய குறைபாடுகள், அனுபவம் அற்ற தன்மை காணப்படலாம். இது யார் என்றாலும் இயல்பு தானே. அவர் தன்னை காத்து கொள்வது அவரது இருப்பை தக்கவைப்பது அவர் கெட்டித்தனம். ஆனால், உதவி கொடுப்பது நமது தார்மீக கடமை.
  11. அவ்வப்போது மருத்துவர் அர்ச்சனா பற்றிய செய்திகளை பார்க்கின்றேன். கட்சி தொடங்குவது என அவர் முடிவெடுத்து நிதி ஆதரவு கேட்டால் எனது சிறிய பங்களிப்பை வழங்க தயாராக உள்ளேன். சாவகச்சேரி/தென்மாராட்சிக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினரை; மக்கள் மக்களின் தேவைகளுக்கு உழைக்கக்கூடிய ஒருவரை தெரிவு செய்ய வேண்டும் என ஏற்கனவே கூறி உள்ளார். இவர் போன்று துணிவாக கதைக்கக்கூடிய, வீதியில் இறங்கி போராடக்கூடிய ஒருவர் கட்சி தொடங்கினால் அதற்கு நாம்ஆதரவை வழங்குவது சிறப்பு. மக்களின் அடிப்படை தேவைகள் பற்றி இங்கே உண்மையான கரிசனை கொண்ட ஒருவர் உழைக்கின்றேன் என திடசங்கற்பம் செய்யும்போது நாம் அதை நையாண்டி செய்தால் எங்களில் ஏதோ குறைபாடு உள்ளது என்பது தவிர வேறு ஏதும் இல்லை.
  12. இலங்கையில் பணியாற்றும் மருத்துவர் ஒருவருடன் இன்றும் மருத்துவர் அர்ச்சனாவின் முறைப்பாடுகள் சம்மந்தமாக உரையாடினேன். மருத்துவர் அர்ச்சனா சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் நடைபெற்றுவந்த முறைகேடுகளை துணிகரமாக செயற்பட்டு வெளி உலகுக்கு கொண்டு வந்துள்ளார். இங்கே அவர் புகழுக்காகவும், பேஸ்புக் லைக்ஸ் இற்காகவும் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக கருத்து தெரிவிக்கின்றார் எனும்படியாக பின்னூட்டங்கள் உள்ளன. உண்மையில் அவரது நிலையில் நின்று பார்த்தால் தனது இருப்பை தக்க வைக்க சமூக ஊடகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பை பேணவேண்டியது தனிப்பட்ட பாதுகாப்பு உத்திகளில் ஒன்றாகவும் காணப்படலாம். அவருக்கு எதிராக எத்தனை எதிரிகள் உள்ளார்களோ தெரியாது. இந்தவகையில் பார்த்தால் சமூக ஊடகத்தில் தொடர்ச்சியாக பதிவுகளை அவர் இடுவதும், நேரலைக்கு வருவதும் தவறாக தெரியவில்லை. சமூகத்திற்காக குரல் கொடுக்க வந்த ஒருவரை பைத்தியக்காரன், தலை சுகமில்லாதவர், அங்கோடை கேஸ் என சிலர் விளிப்பது, கதை கட்டிவிடுவது எமது சமூகத்தின் தரத்தை காண்பிக்கின்றது. காலங்காலமாக தாத்தா, பாட்டா, அம்மா, அப்பா என சாகவச்சேரி ஆதார வைத்தியசாலையில் குழந்தைகள் பிறந்த சரித்திரம் மாற்றப்பட்டு ஆறு மாதங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய பிரசவங்களே நடந்தன எனும்போது இந்த அசமந்த போக்கை, அக்கறையீனத்தை மருத்துவர் அர்ச்சனா சுட்டிக்காட்டியது பலருக்கு கெளரவ பிரச்சனையாகிவிட்டது. தமது கெளரவங்களை காப்பாற்றிக்கொள்ள மருத்துவர் அர்ச்சனாவிற்கு தலை சுகம் இல்லை, இவர் புகழிற்கு அடிமையாகிவிட்டார் என பிரச்சாரம் செய்தால் தாம் தப்பிக்கொள்ளலாம் என தவறுகள் செய்தவர்கள் நினைக்கின்றார்களோ என்னவோ.
  13. இலங்கையில் நம்மவர் கேட்கும் பண உதவிகளில் அதி முக்கிய இடத்தை இந்த நகை அடகு பெறுகின்றது. அடகு காசு கட்ட வேணும் இல்லாவிட்டால் நகை போய்விடும் என்று கேட்பது ஒன்று. அடகு வைத்ததை வெளியில் எடுக்க உதவி செய்யுங்கோ என்பது இன்னொன்று. அண்மையில் என்னிடம் இன்னும் ஒரு படி சென்று நுட்பமான உதவி கேட்கப்பட்டது. தான் சொந்தக்காரர் ஒருவர் ஒப்படைத்து சென்ற நகையை அடகு வைத்ததாகவும் காசு கட்டாவிட்டால் நகை போய்விடும் என்றும் நகை போய்விட்டால் சொந்தக்காரருக்கு அவர்கள் வந்து கேட்கும்போது என்ன பதில் சொல்வது என்றும் கூறி உதவி கேட்கப்பட்டது. அரசாங்கத்தின் இந்த திட்டம் அல்லது சலுகை நல்லவிடயமாகவே தெரிகின்றது. ஆனால் இது எல்லா அடகுபிடிக்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தாது போல் உள்ளதே.
  14. ஸ்டார்லிங்க் மூலம் இணைய இணைப்பு கிடைப்பது தற்போது இணைய இணைப்பு கிடைக்க முடியாத அல்லது மந்த சேவையை பெறும் பிரதேச மக்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஆனால், கட்டணங்கள் கட்டுபடியாகுமா என்பது தெரியவில்லை. நாட்டில் ஏற்கனவே உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இது போட்டியாக அமையுமா அல்லது அவற்றுடன் இணைந்து/அனுசரணையுடன் இணைய சேவை வழங்கப்படுமா தெரியவில்லை.
  15. ஐயாவின் பேச்சை இன்னொரு அர்த்தத்திலும் விளங்கிக்கொள்ளலாம். சிறீதரன் அவர்கட்கு மூளை இல்லை அவர் செய்வது வெறும் உணர்ச்சி அரசியல் என ஐயா விளம்புகின்றார். மக்களின் தெரிவு அறிவுள்ளவரா அல்லது உணர்ச்சி உள்ளவரா?
  16. அந்தக்காலத்தில் ஒரு இயக்கத்தினர் வீடுகளுக்கு வந்து வீட்டில் உள்ள வாகனங்களை தமது பாவனைக்கு கேட்டார்கள். அந்த இயக்கமோ? பேசாமல் நல்லபிள்ளையாக லண்டனில் கற்கைநெறியை பூர்த்தி செய்து செட்டில் ஆகாமால் இலங்கை சென்று பத்தில் பதினொன்றாக இயக்கமும் நடத்தி, எயார் லங்காவுக்கு குண்டு வைக்கப்போய் தமிழ்நாட்டில் குண்டை வெடிக்க வைத்து.. ஆழ்ந்த இரங்கல்கள்!
  17. நான் அரசியல் ரீதியான கண்ணோட்டத்தில் கூறவில்லை. இலங்கையின் பொருளாதாரம் நிமிர்ந்தால் எமது மக்களின் வாழ்க்கைத்தரமும் சற்று முன்னேறும். கமலா அக்கா தான் இனி பந்தயக்குதிரை எனும்படியாக செய்திகள் உலாவுகின்றன. சுண்டுக்குளி, மானிப்பாய் என இரு தரப்பார் கமலா அக்காவின் அடிக்கு சொந்தம் கொண்டாடுகின்றார்கள். இனி என்ன டமில்ஸ் போ கமலா ஹரிஸ் என இன்னோர் கோசத்தை போடவேண்டியதுதான்.
  18. சீ என் என் ஐ பேக் மீடியா என டிரம்ப் அவர்கள் எப்பவோ முத்திரை குத்திவிட்டார். அப்போது நாம் அதை உணரவில்லை. காலம் கடந்து உணர்கின்றோம். மேலே @nochchi அமெரிக்க அரசியல் பற்றி நாம் அலட்டுவான் ஏன் எனும் தொனியில் கருத்து இட்டுள்ளார். பைடனின் தலைமைத்துவத்தின் தோல்வியாகவே நாம் காசா மற்றும் உக்ரைன் அழிவுகளை பார்க்கலாம். தமிழ் மக்களுக்கு நேரடியாக இல்லாவிட்டாலும் அமெரிக்க அரசியலில் ஸ்திரத்தன்மை காணப்படும்போது மறைமுகமாக பல அனுகூலங்கள் கிடைக்கலாம். இங்கு இன்னோர் விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டும். காசா அழிவுகள், முள்ளிவாய்க்கால் அழிவுகள் வந்தபோது அமெரிக்காவை கோலோச்சுபவர்கள் யார் என்பதையும் எண்ணிப்பார்க்க வேண்டும். டிமோகிராட்ஸ் வந்தால் எமக்கு நல்லது என்பது ஒரு பிரமையே தவிர அதில் உண்மை ஏதும் இல்லை தானே? டமில்ஸ் போ ஓபாமா என கூவித்திரிந்தவர்கள் இப்போது என்ன செய்கின்றார்களோ?
  19. அண்மைக்காலமாக கருத்துக்களத்தை வழமைபோல் பார்க்க முடியவில்லை. மற்றைய தளங்கள் மின்னல் வேகத்தில் வருகின்றன, தெரிகின்றன. யாழ் கருத்துக்களம் பெரும்பாலான சமயங்களில் மிக மெதுவாக உள்ளது. பல சமயங்களில் பார்க்கவே முடிவதில்லை. எனக்கு மட்டும்தான் இப்படியா அல்லது உங்கள் எவருக்காவது இந்த சிக்கல் உள்ளதா?
  20. அவர் தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக கூறி உள்ளார். இதில் தவறு ஏது? தம்மை அதி தீவிர புலி ஆதரவாளர்களாக காட்டிக்கொண்டு தமது சொந்த நிகழ்ச்சி நிரல்களையும், சுய லாபங்களையும் கவனத்தில் எடுப்பவர்களுடன் ஒப்பிடும்போது இவர் எவ்வளவோ மேல் போல் உள்ளதே. டக்லஸ் ஆதரவு இவருக்கு உள்ளது என்றால் பிறகு ஏன் சாகவச்சேரியில் வழக்கு தொடுக்கப்பட்ட பின்னர் பகிரங்கமாக உதவி கேட்கின்றார். தனக்கு யாராவது உதவி செய்யக்கூடிய வழக்கறிஞர் தேவை என ஏன் அறிவித்தார்? இவருக்கு ஏன் வழக்கறிஞர் கிடைக்கவில்லை? எமது சமுதாயத்திற்காக குரல் கொடுக்க வந்ததுதான் இவர் செய்த தவறா? நீங்கள் சொல்வதுபோல் வாயை மூடிக்கொண்டு தனது பதவியை தக்கவைக்க தவறிவிட்டார்.
  21. இங்கே மிகப்பெரியதொரு அடி என்ன என்றால் எலான் மாஸ்க் மாதம் நாற்பது மில்லியன் டாலர்கள் டொனால்ட் டிரம்ப் அவர்கள் வெற்றி பெறுவதற்கு ஒதுக்குவதாக அறிவித்தமை. இதுபற்றி சீ என் என் ஏமாற்றத்துடன் ஒரு ஒப்பீட்டை செய்துள்ளது. கொள்கையளவில் எதிரும் புதிருமாக உள்ளவர்கள் எப்படி கைகோர்க்கமுடியும் எனும் அளவில் அவர்கள் ஆய்வு அங்கலாய்க்கின்றது. இடது சாரிகளின் கடும்போக்கு அதாவது வலதுசாரிகளையே மிஞ்சும் அளவிலான கடும்போக்கு எலான் மாஸ்க் முடிவில் செல்வாக்கு செலுத்தலாம். இவர்கள் பெரிய பயம் என்ன என்றால் நிதி ஆதரவு ஒரு பக்கம் போக மாஸ்க்கின் ஆதரவாளர்கள் எக்ஸ் தளத்தில் பின்தொடரும் 175 மில்லியன் பயணர்கள் ஆதரவும் டொனால்ட் டிரம்ப் பக்கம் திரும்பும் என்பதும் ஆகும். மாஸ்க் இற்கு எந்த குதிரை வெற்றி பெறும். எந்தக்குதிரைக்கு பந்தயம் கட்டவேண்டும் என்பது விளங்கிவிட்டது.
  22. நான் வலதுசாரி, இடதுசாரி, நடுவில் நிற்பவை, மதில் மேல் பூனை.. எல்லா விதமான ஊடகங்களையும் பார்ப்பது, வாசகர் கருத்துக்களும் பார்ப்பது. 20 வயது கொலையாளி; இந்தப்பையன் பற்றி பல தகவல்கள் வருகின்றன. இவன் இப்படியொரு முடிவு எடுத்ததன் பின்னால் இடது சாரி ஊடகங்கள் டொனால்ட் டிரம்ப் மீதான வெறுப்புணர்வை வளர்த்துவிட்டமை, வெறுப்பை தூண்டியமை காரணம் இல்லை என உங்களால் மறுக்க முடியுமா?
  23. சீ. என். என் இப்போது நல்லாய்த்தான் முக்குகின்றது. 😁 கடந்த பல மாதங்களாக அமெரிக்காவில் என்ன நடைபெற்று வருகின்றது என்பது உன்னிப்பாக அவதானிக்கும் அனைவரும் அறிந்ததே. டொனால்ட் ரிரம்ப்பை படு கேவலப்படுத்தினார்கள். தொடர்ச்சியாக வழக்குகள் தொடுத்தும் குற்றம் சுமத்தியும் அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப்பை ஓரம் கட்டினார்கள். ஒதுக்கப்படவேண்டிய கீழ்த்தரமான மனுசன் என நிறுவ படாதபாடு பட்டார்கள். அவர் குடும்பமே வியாபாரம் செய்ய முடியாத அளவுக்கு எல்லாவற்றையும் முடியுமான அளவு முடக்கினார்கள். இவ்வளவற்றையும் தாண்டி சிங்கம் கர்ச்சித்து எழுந்தது. இப்போது டொனால்ட் டிரம்ப் அவர்களுக்கு அமோக ஆதரவு கிடைக்க தொடங்கி உள்ளது. எலான் மாஸ்க் மாதம் 40 மில்லியன் டாலர்கள் தொகையை டிரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஒதுக்கி உள்ளார். டொனால்ட் டிரம்ப் மீது வெறுப்பை தூண்டியதில் சீ. என். என் ஊடகத்திற்கு மிகப்பெரிய பங்கு உள்ளது. அவரை கொலை செய்ய முயற்சித்த குற்றவாளி சீ. என். என். போன்ற இடது சாரி ஊடகங்களினால் மண்டை கழுவப்பட்ட ஒருவராக விளங்க வாய்ப்பு அதிகம். இப்போது தாம் நல்ல பிள்ளை ஆட்டம் காண்பிக்க ஈரான் கதை அளக்கின்றார்கள். எவ் பி ஐ தாங்கள் ஏன் டிரம்ப் அவர்கள் சுடப்பட்ட, கொலையாளி உட்கார்ந்த கூரையை கண்காணிக்கவில்லை என்பதற்கு தகுந்த பதில் இல்லை. டிரம்ப் அவர்கள் பாதுகாப்பு விடயத்தில் வேண்டுமென்றே உதாசீனம் செய்யப்பட்டுள்ளது என்றே கருதவேண்டி உள்ளது. இனி ஈரானை இதற்குள் செருகி அதற்குள் ஒளிந்து கொள்ள வேண்டியதுதான். ஆனால் ஒன்று ஜனாதிபதியாக சிங்கம் மீண்டும் வந்ததும் டிரம்ப் அவர்களுக்கு எதிராக கூடி நின்று கும்மி அடித்தவர்கள் அனைவரும் துண்டை காணோம் துணியை காணோம் என்று கால் பிடரியில் அடிக்க ஓடப்போகின்றார்கள்.
  24. இது மிகவும் சிக்கலான பிரச்சனை. மருத்துவர் அர்ச்சனா தவறானவர் என கூறுவதற்கில்லை. இங்கு சம்மந்தப்பட்டுள்ள பல்வேறு விடயங்களை அணுகுவதில், கையாள்வதில் பலருக்கும் அனுபவம் இல்லை. சமூக ஊடகம் சம்மந்தமாக தெளிவான வரையறைகள் சட்டத்தில் உள்ளதா தெரியவில்லை. சமூகத்தில் ஏற்கனவே புரையோடிப்போயுள்ள காயத்திற்கு அர்ச்சனா ஒரு தனி ஆளாக மருந்து கட்ட முடியாது. இன்று அர்ச்சுனாவிற்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன என செய்தி பார்த்தேன். பொதுநலன் கருதி மக்கள் நலனுக்காக குரல் கொடுத்த ஒருவர் தண்டிக்கப்பட்டால் எதிர்காலத்திலும் அர்ச்சுனா போன்று மற்றையவர்கள் குரல் கொடுக்க முன்வரமாட்டார்கள். எல்லோரும் தான் உண்டு தன் குடும்பம் உண்டு என வாழ்ந்தால் ஊழல்களை ஒழிக்க முடியாது.
  25. சாவகச்சேரி மருத்துவமனை விவகாரம் சம்மந்தமாக இலங்கையில் பணியாற்றும் ஒரு மருத்துவ நண்பரிடம் வினாவிய போது மருத்துவர் அர்ச்சனா கூறுவது 100% உண்மை என தெரிவித்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.