Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. என் பார்வை எல்லாம் சரியாகவே உள்ளது. சம்பவம் பற்றி அறிந்தது தொடக்கம் பல்வேறு ஊடகங்களின் செய்திகளை பார்க்கின்றேன்.
  2. டொனால்ட் டிரம்ப் அவர்களை சிறைக்கு அனுப்பி அங்கே அவர் கொலை செய்யப்படக்கூடும் என ஒரு கருத்து நிலவியது. சீ. என். என் செய்தி ஊடக தளத்தை பார்த்தால் இஸ்ரேல் செய்தி முதலாவதாகவும், டிரம்ப் பற்றிய செய்தி இரண்டாவதாகவும் உள்ளது. இதன் பின்னால் எப்படிப்பட்டவர்கள் பங்கு உள்ளது என்பது ஊகிப்பதற்கு கடினமானது அல்ல.
  3. மருத்துவர் அர்ச்சனா கொஞ்சம் அவசரப்பட்டு உள்ளார் என நினைக்கின்றேன். முக்கியமாக சமூக ஊடகங்களில் எதேச்சையாக தனது கருத்துக்களை (உணர்ச்சிகளை) சாவகச்சேரி வைத்தியசாலை சம்மந்தமாக கூறியவை அவருக்கே பல சட்ட சிக்கல்களை கொண்டு வரலாம். இது ஒன்றும் சினிமா இல்லை. சினிமாவில் நடிகர் அர்ச்சுன் மூன்று நாள் முதல்வராக வந்து தமிழ்நாட்டை மாற்றி அமைத்தார். இங்கே அர்ச்சனா அப்படி சினிமா பாணியில் செயற்படுவது பலருக்கும் பல தீங்குகளை கொண்டுவரும். இலங்கை ஒரு மூன்றாம் உலக நாடு. மனித உரிமைகளில் பின் தங்கி உள்ள ஒரு நாடு. ஊழல்கள் மலிந்த நாடு. அரசாங்க அமைச்சரே மருந்து ஊழல் காரணமாக உள்ளே போனார். அர்ச்சனா நினைப்பது போல் குட்டையை கிளறுவதால் தீர்வு கிடைக்காது. இன்னும் குழப்பங்களே அதிகமாகும். தனியொருவர் முழு வைத்தியசாலை ஊழியர்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினால் அதனால் வரக்கூடிய தீமைகளே அதிகம். கடந்த சில நாட்களாக இந்த பிரச்சனை சம்மந்தமாக நிறைய காணொளிகள் பார்த்தேன். எல்லாரும் சேர்ந்து ஒரு குழுவாக ஒற்றுமையாக பணி ஆற்றினால்தான் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். அனைவரும் விரைவில் சமாதான பேச்சுக்களில் ஈடுபட்டு, சமரசம் கண்டு மேற்கண்ட வைத்தியசாலையை நல்ல முறையில் இயங்க வைப்பார்க என எதிர்பார்ப்போம்.
  4. யாராவது மருத்துவர்கள் இலங்கையில் வேலை பார்த்தவர்கள் கருத்துக்களத்தில் உறுப்பினர் என்றால் உங்கள் கருத்துக்களை கூறலாமே? வைத்தியர் அர்ச்சனா குட்டையை கிளறி உள்ளார் போல் தோன்றுகின்றது.
  5. என்னை பொறுத்தவரை டிரம்ப் அவர்கள் தேர்தலில் நிற்க முடியாதபடி உள்ளடி வேலைகள் பார்த்ததும் தவறு. இவ்வாறே பைடனை வயசை, முதுமையை காரணம் காட்டி கேவலப்படுத்துவதும் தவறு. இங்கு சீ என் என் ஊடகம் வெகு மட்டமான வேலைகளை இரண்டு பேருக்கும் எதிராக செய்கின்றது. மிகப்பெரியதொன்றானதும், உலக நாடுகளுக்கு முன்னோடினானதும், வழிகாட்டியானதுமான ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடைபெறும் விடயங்கள் மிக தவறானவையும், தவறான முன்னுதாரணங்களும் ஆகும். இதை அமெரிக்காவில் ஜனநாயக கோட்பாட்டின் தோல்வியாக கருத முடியுமா என்பதற்கு எதிர்காலம் பதில் கூறும்.
  6. வேற என்ன செய்ய முடியும். ஊருக்கு போனால் ஊரில் உள்ள சொந்த காணியையே காபாத்த முடியவில்லை. கள்ள உறுதி போட்டு காணி களவு போகப்போகிது யாருக்காவது வித்துவிடு என்று அறிவுரை கூறப்படுகிறது. நாங்கள் ஒரு கற்பனை உலகத்தை உருவாக்கி அதற்குள் வாழ்ந்துவிட்டு சாக வேண்டியதுதான். பேச்சு பல்லக்கு தம்பி காநடை என்பது போலத்தான் நமது சீவியம். அக்கம் பக்கத்து நமது ஆட்களிடம் இருந்து காணியை காப்பாற்றுவதே ஒரு போராட்டம். சிங்களவனிடம் இருந்து மண்ணை மீட்க முடியுமா என்பது…?
  7. அதுக்கென்ன. தமன்னாவை பொதுவேட்பாளராக நிறுத்தினால் வெற்றி நிச்சயம். மகாகவி பாரதியாரை இறந்தபிறகு தூக்கிக்கொண்டு போகவும் நான்கு பேர்தானாம் என்று கேள்விப்பட்ட நினைவு. சம்பந்தர் ஒரு காலத்தில் கொண்டாடப்படலாம். யார் கண்டது.
  8. இது கருத்துக்களம். இங்கு பல்வேறு விடயங்கள் பற்றி கருத்துக்களை பகிர்கின்றோம். சம்பந்தனை நையாண்டி செய்து ஒரு கருத்தை நானும் நீங்களும் வைத்துவிட்டு செல்லவில்லை. இல்லாவிட்டால் இரண்டு பக்கங்களில் இந்த உரையாடல் மற்றைய செய்திகளினுள் காணாமல் போயிருக்கும். சம்பந்தர் போனால் என்ன இனி துவம்சம் செய்யப்படுவதற்கு சுமந்திரன் உள்ளார். சுமந்திரனை தூற்றுவதுடன் இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் போய்விடும்.
  9. சம்பந்தரின் தொகுதி யாழ்ப்பாணமா? திருகோணமலையில் உடலை காவிச்செல்ல நான்குபேர் வருவார்கள். நீங்கள் கவலைப்படாதீர்கள். சாந்தனின் மரணத்திற்கு வந்தவர்களை விட கில்மிசாவின் வெற்றிவிழாவை தேரில் இழுத்து கொண்டாட வந்தோர் அநேககர். எனவே கில்மிசாவை அடுத்த தேர்தலில் நிறுத்தலாம்.
  10. 2009 இன் பின் மக்கள் பல விடயங்களில் விழித்து விட்டார்கள். விடுதலை புலிகள் அமைப்பினை பாவித்து தங்கள் சொந்த லாபங்களை காண்பவர்கள் பற்றி இப்போது அதிக எச்சரிக்கை உள்ளது. 2009இன் பின் முன்பு போல் மக்கள் நிகழ்வுகளுக்கு ஒன்று கூடுவது இல்லை. காரணம் நிஜம் எது நிழல் எது என மக்கள் மட்டுக்கட்ட தொடங்கிவிட்டார்கள். கட்டுக்கோப்பாக இயங்கிய அமைப்பு, தலைவரையே பேக்காட்டலாம், சுத்தலாம் என்றால் இப்படிப்பட்ட வேலை பார்த்தவர்களின் நிகழ்ச்சி நிரல்களுக்கு பின்னால் ஆட்கள் அணி திரளுவது என்பது கடினமே. நீங்கள் குறிப்பிடும்படியாக புலிகளை தூற்றியவர்கள் புலிகளுடன் சம்பந்தப்படாதவர்கள் என்று கூட அனுமானிக்க தேவை இல்லை. அவர்கள் தில்லாலங்கடிகளை உணர்ந்து எச்சரிக்கை அடைந்தவர்களாக காணப்படலாம்.
  11. தமிழ்வின் செய்தி தளத்தில் இந்த செய்தி உள்ளது. ஆனால், இது துர்க்காபுரத்தின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் விடுதியாக கூறப்படவில்லை. செய்தியை இணைத்தவர்கள் முடியுமானால் செய்தியின் உண்மை தன்மையை தெளிவுபடுத்தவும். இங்கு பொதுவான ஒரு விடயத்தை கூற விரும்புகின்றேன். இலங்கையில் க.பொ.த சாதாரணம் கற்றுவிட்டு க.பொ.த உயர்தரம் கற்கச்செல்லும் மாணவர்கட்கு பல இடர்ப்பாடுகள் உள்ளன. குறிப்பாக நன்றாக படிக்கக்கூடிய பல மாணவிகள் உயர்தரத்திற்கு இடம்/பாடசாலை மாறவேண்டி உள்ளது. வீட்டு சூழ்நிலை இடம்கொடுக்காத நிலையில் (தங்கும் இடம் வாடகை, உணவு செலவு, ரியூசன் செலவு: ஒரு பாடம் கிட்டத்தட்ட மாதம் 1,250 ரூபா கட்டணம், போக்குவரத்து செலவு) இலவச விடுதிகளில் விலை குறைவான இடங்களில் சென்று தங்கவேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
  12. துர்க்க துரந்தரி தங்கம்மா அப்பாக்குட்டி காலத்தில் பெண்கள், குழந்தைகளுக்கான பராமரிப்பு இல்லம் ஆரம்பிக்கப்பட்டது என நினைக்கின்றேன். அந்த காலத்தில் இயக்கமும் இயங்கியது. சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி தனது முயற்சி, மற்றும் அவருக்கு ஒத்தாசை வழங்கியவர்கள், நன்கொடை வழங்கியவர்கள் ஆதரவில் சிறப்பாக கோயிலையும், இதர நிர்வாகத்தையும் நீண்டகாலம் கொண்டு சென்றார். இங்கு செய்தியின் உண்மைத்தன்மை, விரிவான பின்புலம் தெரியாமல் ஆறு திருமுகனை நோக்கியதாக காழ்ப்புணர்வில் கருத்துக்கள் வைக்கப்பட்டு உள்ளன. துர்க்காபுரமோ, அதன்பாற்பட்ட செயற்பாடுகளோ ஆறு திருமுகன் மட்டும் சம்மந்தப்பட்டது இல்லை. கால ஓட்டத்தில் அவர் கட்டுப்பாட்டுக்குள் துர்க்காபுரம் சென்றுள்ளது. ஆனால், கோயில், அதன்பாற்பட்ட விடயங்களில் பலருக்கும் பங்கு, அக்கறை உள்ளது. தமது சமய நம்பிக்கைகளுக்கு அப்பால் யாழ்கருத்துக்களத்தில் சிலருக்கு சைவம், கோயில், கோயில் சம்மந்தப்பட்ட விடயங்கள் என்றாலே அடி வயித்தில் புளிக்காய்ச்சல் வருவதுகும் வேறுபட்ட விடயங்களை அதற்குள் இழுத்துக்கொண்டு வருவதுகும் கருத்துக்களத்தில் வழமையாக நடைபெறும் விடயங்கள். இது ஏற்கனவே ஒரு சிலரினால் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. பெண்கள் விடுதிக்கு பொறுப்பாக அனுபவம் வாய்ந்த பெண் ஒருவர் பொறுப்பெடுத்து சிவத்தமிழ்செல்வியின் பணியை சிறப்பாக தொடர வேண்டும்.
  13. வெளிநாட்டு கோஸ்டிகளின் நிகழ்ச்சி நிரல்களிற்கு ஒத்திசைவாக அவர்களின் கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து சம்பந்தர் ஐயா தாயகத்தில் பணி ஆற்றினாரா என்பது சந்தேகமே. 2009 இன் பின் அவரை கறிவேப்பிலை போல பயன்படுத்த முடியாது போனது பற்றிய கோபம் நியாமானதுதான்.
  14. இவரை உங்களுக்கு தெரியுமா? நான் அறிந்தவரை ஆயுதங்கள் கடைசியாக மெளனிக்கப்பட முன்னர் தமிழீழ விடுதலை புலிகள் தலைமை இவரையே தமது பிரதிநிதியாக நியமனம் கொடுத்தார்கள். சம்பந்தர் இங்கு வெளி ஆள். அமைப்பினுள் உள்வாங்கப்பட்ட ஒருவர் அல்ல. LTTE appoints Pathmanathan as head of international relations [TamilNet, Friday, 30 January 2009, 23:51 GMT] The leadership of the Liberation Tigers of Tamileelam (LTTE) has recently named Selvarasa Pathmanathan, a high profile representative of the movement, as the Head of a newly established Department of International Relations, sources close to the LTTE said on Saturday. Mr. Pathmanathan will be representing the movement in any future peace initiatives and will be the primary point of contact for engaging with the international community, according to a letter sent to the various international actors by the LTTE's Department of International Relations. Pathmanathan will be working abroad with required mandate from the LTTE leadership, according to the letter. LTTE's Poltiical Head B. Nadesan, when contacted by TamilNet, confirmed that Mr. Pathmanathan has already begun corresponding with international actors. https://tamilnet.com/art.html?catid=13&artid=28224
  15. அவர் போயிட்டார். உங்களிடம் 2009 தொடக்கம் இன்றுவரை என்ன நிகழ்ச்சி நிரல் காணப்பட்டது. இனி என்ன உள்ளது? 2009இன் பின் புலிகள் இயக்கத்திலேயே 108 பிரிவுகள். ஆளாளுக்கு தேசியத்தை உரிமை கொண்டாடுகின்றார்கள். எந்த கோஷ்டி எந்தப்பக்கத்தால எப்போது யாருக்கு ஆதரவு கொடுக்கும் என்ன செய்யும் என்று எவருக்கும் தெரியாது. தலைவர் வரப்போறார் வரப்போறார் வந்திட்டார் என்று 15 வருடங்களாக இன்னோர் தில்லாலங்கடி விளையாட்டுக்கள். கடைசியில் தலைவர் புதல்வி துவாரகாவின் மாவீரர் தின உரை. இங்கே பொதுநலத்தின் உச்சத்தை நாங்கள் காண்கின்றோம். தலைவர் அண்ணா மகன் சித்தப்பா இல்லை நம்புங்கள் என உரையாற்றுக்கின்றார். யாராடா நீ புதுசாய் முளைத்து உள்ளாய் என்று தடக்குப்படக்கு கருத்துக்கள். 2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகள் சார்ந்தோருக்கு ஏதாயினும் ஒற்றுமையான நிகழ்ச்சிநிரலோ செயற்பாடோ உள்ளதா? இங்கே சம்பந்தரை கழுவி ஊத்த முன் சம்பந்தப்பட்டோர் தங்கள் ஊத்தைகளை கழுவி சுத்தம் செய்யலாமே. அடிப்படையில் 2009இன் பின் தமிழீழ விடுதலை புலிகளுக்கு உரித்துடையவர்கள் யார் எனும் பிடுங்குப்பாடு நடக்கின்றது. அது இலங்கை தமிழர்களை தாண்டி உரிமை கொண்டாடும் போட்டி இந்தியாவரை சென்றுள்ளது. கொஞ்சம் புத்திசாலிகள் விடுதலை புலிகளை போற்றி புழந்து சொத்து சேர்த்துவிட்டார்கள். இன்னும் சிலர் வெளிநாட்டில் தமிழ் ஓட்டுக்கள் மூலம் அரசியலில் இடம்பிடிக்க முயற்சித்தார்கள். ஆக மொத்தத்தில் புலிகள் நாமம் சொல்லி ஆளாள் தாங்கள் பிழைக்கும் வழியை பார்த்தார்கள். இந்த குழப்பத்தில் குட்டையில் காலை விடாமல் சற்று தள்ளி நின்று சம்பந்தர் அரசியல் செய்தது ஒரு விதத்தில் பார்த்தால் சரியாகவே தோன்றுகின்றது. மேலே ஓர் காணொளி பார்த்தேன். அதில் சம்பந்தர் மலையாளி எனவும் ஒரு தமிழின துரோகி எனவும் இந்திய தமிழர் ஒருவர் யூரியூப்பில் வகுப்பு எடுக்கின்றார். ஒளிமயமான எதிர்காலம் தெரிகின்றது.
  16. மக்கள் ஏன் அவருக்கு பல தடவைகள் வாக்களித்து வெற்றியடைய வைத்தார்கள்? அவர் சுயநலமானவர் என உங்களைப்போல் அவர்களால் இனம்காண முடியாமல் போய்விட்டதா? எங்கள் சமூகம் சுயநலம் பாராமல் இயங்குகின்றது என்பதை நான் நம்பிவிட்டேன். எங்கள் சமூகத்தில் உள்ள பல்வேறு துறைசார் நிபுணர்கள் சுயநலம் பாராமல் சமூக முன்னேற்றத்தை மட்டும் முன்னிருத்தி சேவை ஆற்றுகின்றார்கள் எனவும் நான் ஊகிக்கின்றேன். எங்கள் சமூகத்தில் இல்லாத ஒன்றை சம்மந்தர் மூலம் நிறுவ வேண்டிய அவசியம் இல்லை. தன்னை காப்பாற்ற முடியாதவன் சமூகத்தை காப்பாற்ற முடியுமா? என்னைப்பொறுத்தவரை சம்பந்தர் ஐயா தலையில் வைத்து கொண்டாடப்படவேண்டிய ஒரு அரசியல்வாதி இல்லை. அதேசமயம் தூற்றப்படவேண்டிய ஒருவரும் இல்லை.
  17. அவரவர் தமது மன அழுத்தங்களை கொட்டுகின்றார்கள். நாம் இப்போது புதிய உலகில் வாழ்கின்றோம். தவிர இங்கு நாம் எழுதுபவற்றை தமிழ்மொழி அல்லாதவர்களும் பொழிபெயர்ப்பு செயலிகள் மூலம் வாசித்து விளங்கக்கூடிய அளவுக்கு விஞ்ஞானம், தொழில்நுட்பம் முன்னேறிவிட்டது. இங்கும் பல்வேறுவிதமான கருத்துக்கள் உள்ளன. கருத்துக்கள் எழுதியவர்களில் எத்தனை பேருக்கு சம்மந்தரை நேரில் சந்தித்த/உரையாடிய/பணியாற்றிய அனுபவம் உள்ளதோ தெரியாது. அது எனக்கு இல்லை. அதற்காக தெரியாத விடயங்களை நேரில் பார்த்ததுபோல எழுத முடியாது. லங்கா வெப் எனும் ஒரு தளத்தில் சம்பந்தர் ஐயா பற்றி விலாவாரியாக எழுதி ஒரு கட்டுரை போட்டுள்ளார்கள். எத்தனை ஆண்டுகளுக்கு முன்னம் அது பதிப்பிக்கபட்டது என தெரியவில்லை. அதில் பிரிவினைவாதியாக, தமிழ் தனிநாட்டு வாதத்திற்கு கடும் ஆதரவு கொடுத்தவராகவே, தமிழ் இனவாதியாகவே சம்மந்தரை இனம் காட்டி உள்ளார்கள். இதன்படி பார்த்தால் சம்மந்தருக்கு மாமனிதர் பட்டம் கொடுக்கப்படுமோ?
  18. தாயக தமிழ் அரசியல் வெறுமை : வரட்சி : இடைவெளி : இயலாமை : நம்பிக்கையீனம் இப்படி பல பதங்களை அடுக்கிக்கொண்டு போகலாம். இவற்றுக்கு சம்பந்தர் காரணமாக முடியாது. பொறுப்பு கூறவேண்டியவர்கள் ஆயுதங்களுடன் மெளனித்துவிட்டார்கள். மூழ்கிய கப்பலுக்கு சம்பந்தரை கப்டனாக போட்டுவிட்டு கப்பலை சரியாக ஓட்டவில்லை என குறை கூறலாமா? தமிழர் தாயக சரித்திரத்தில் சம்பந்தர் ஐயா ஒரு வழிப்போக்கன். சுமந்திரன், சிறீதரன், மாவை இவர்களும் இந்த பட்டியலிலேயே அடங்குவார்கள். மக்களுக்கு அரசியலில் நம்பிக்கை உள்ளதா என்பதே சந்தேகம். இப்போதைக்கு தமிழ் அரசியல்வாதிகள் செய்யக்கூடியது மக்களின் அன்றாட, நாளாந்த பிரச்சனைகள் தீர்க்கப்படுவதற்கு தம்மாலான உழைப்பை வழங்குவதே. பெரிய விடயங்களான தேசிய பிரச்சனைகள், தீர்வு, சமத்துவம், சுய உரிமை இவற்றுக்கான நடைமுறை சாத்தியங்கள், சூழ்நிலை இலங்கையில் உள்ளதாக தெரியவில்லை. இதை இன்னும் ஒரு பத்து இருபது ஆண்டுகளில் தாயக தமிழ் அரசியல்வாதிகள் தீர்த்து வைப்பார்கள் என்றும் நம்பிக்கை இல்லை. அதுவரை உள்ள கோமணம் கழன்று விழாமல் பிடித்துக்கொள்ள வேண்டியதுதான். உலக அரசியல், உலக ஒழுங்கு, போக்கில் வரக்கூடிய எதிர்கால மாற்றங்கள் இலங்கை தமிழர் விடயத்தில் ஏதாவது நல்லதை செய்தால்தான் உண்டு.
  19. சம்மந்தர் ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்! அவரது ஆத்மா சாந்தியடையட்டும்! ஆயுத போராட்ட காலத்தில் இலங்கையில் அரசியலில் தமிழ் அரசியல்வாதிகள் செல்லாக்காசுகளே. இந்த காலத்தில் ஆயுதங்களே பேசின. நடைபெற்ற தமிழ் அரசியல் ஆயுத முனையிலேயே நடைபெற்றது. இந்தவகையில் பார்த்தால் சம்மந்தன் ஐயா தன்னால் முடியுமான அரசியலை தாயகத்தில் செய்துள்ளார்.
  20. பினாமி என்பது உங்கள் ஊகம். முதலீட்டாளர்கள் கொடுத்தார்கள் என்பது எனது ஊகம். மனைவியின் சொத்து என்பது இன்னொருவர் ஊகம். என்னால் முடியாத ஒன்றை அவர் செய்கின்றார். அதற்காக அது சட்டவிரோதமானது என நான் நினைக்க தேவை இல்லை.
  21. பிரபலமான புள்ளியான அவர் பல முதலீட்டாளர்களை அணுகி பணத்தை வசூல் செய்வது கடினமானது இல்லை. தகப்பனாரின் விசுக்கோத்து நிறுவனம் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் வருமானம் கிடைத்ததோ?
  22. ஓ இவர்தான் பாஞ்ச் ஐயாவா. நான் இவர் தமிழ்சிறி என நினைத்தேன். துயரமான சம்பவம். நினைத்து பார்க்க திகிலாக உள்ளது. கடற்கொள்ளையர்கள் இலங்கயரா இந்தியரா அல்லது வேறு நாட்டவரா? எங்கள் ஆட்கள் இப்படி கடலில் கொலை செய்து கொள்ளை அடித்த சம்பவங்கள் ஊரில் சொல்ல கேட்டுள்ளேன்.
  23. உதுகளுக்குள் வாழ்ந்துவிட்டுதானே நாங்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறினோம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.